பகவத் விஷயம் காலஷேபம் -166- திருவாய்மொழி – -8-7-1….8-7-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

இருத்தும் -பிரவேசம்

கீழ் அடைய இத் திருவாய் மொழியில் பேற்றுக்கு கிருஷி செய்தபடி –மேல் இப் பேற்றுக்கு வேலியாய் இருக்கிறது
இத் திருவாய்மொழியில் செய்கிறது என் என்னில் –
தாம் அனாதிகாலம் புத்தி பூர்வகமாக செய்து போந்த பாவங்கள் முழுதுதினையும் மறந்து-
தம்மாட்டு பத்தி பிறந்த பின்பு-
அறியாமலே செய்து போந்த பாவங்களை காணா கண்ணிட்டு-
இவர் தம்முடைய பேற்றுக்கு அவன் தானே முயற்சி செய்து-இவருக்கு பிறந்த விடாய் தீரும்படி கலந்து
இது தான் இவருக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே தன் பேறாய் இருக்கிறபடியை -நினைத்து
தானே விரும்பினவனாய்-தன் பேறாக வந்து கலந்தவனை-
நாம் இரப்பாளராகக் கூப்பிட்ட இடம்-ஏன் செய்தோம் ஆனோம் என்று நாணம் கொண்டு-
ஒரு சம்சாரி சேதனன் பக்கல் சர்வேஸ்வரன் செய்யும் அங்கீகாரம் இருக்கும்படியே இது -என்று வியப்பு அடைந்தவர் ஆயினார்-

அங்கனம் வியப்பு அடைந்தவராய்-பகவத் அங்கீ காரத்தால் பெற்ற பேற்றுக்கு த்ருஷ்டாந்தம் –
இராகவன் அபயத்தைக் கொடுத்த அளவிலே இராவணன் தம்பியான விபீஷணன் வணங்கினான் -என்றபடியே
– ராகவேண அபயம் தத்தே சமந்த ராவணானுஜ விபீஷண மகா பிராஞ பூமிம் சமவலோகயன் -யுத்தம் -1901-
இராவணன் பின் பிறந்த நாம் இரகு குலத்தில் உள்ளார்க்கு ஆளாக புக நின்றோமே -என்று இருந்தவன்
பெருமாள் பாடு நின்றும் அருள்பாடிட்டு வந்தவாறே-என்னையே இப்படி கைக் கொண்டு அருளுவது –
அவன் பின் பிறந்த தண்மை எங்கே போயிற்று -என்று
வேர் அற்ற மரம் போலே கூட வந்த நால்வரோடும் திருவடிகளிலே வந்து தரைப் பட்டாப் போலேயும்-

இராம குணங்கள் நடையாடாத அசோக வனத்திலே திருவடி சென்று சேர்ந்து கேட்ட போதே-
இனிமையான வார்த்தையை வைதேகிக்கு சொன்னார் -என்றபடியே-
ஏவம் பஹூவிதம் சிந்தாம் சிந்தயித்வா மகாகபி சம்சரம்வே மதுர வாக்கியம் வைதேஹ்யா வ்யாஜகாரா ஹா -சுந்தர -31-1-
பிராட்டி உள்ளாம்படி இராமநாம சந்கீர்தனத்தை செய்ய –இந்நிலத்தில் இது நடப்பது ஓன்று அன்று –
இது மனத்தின் விகாரத்தால் வந்த மயக்கமோ அன்று
காற்றின் செயலால் வந்த மயக்கமோ – அன்று
இது பிரிந்தாருக்கு வந்த மயக்கமோ – அன்று
அனைவருக்கும் வரும் கானல் நீர் போன்ற மயக்கமோ என்று பல படிகளால் ஐயம் கொண்டு
முன்னே நின்று வார்த்தை சொல்லா நின்றான்-
இது கேட்டு நாம் வேறுபடுகிற தன்மையும் உண்டு – ஆனபின்பு இது மெய்யாம் இத்தனை -என்று-
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள்-தெளிந்து ஹ்ருஷ்டை யானால் ஆனால் போலேயும் –
கிம் து ஸ்யாத் சித்த மோஹ அயம் பவேத் வாத்கதி து இயம் உன்மாதஜ விகாரோவா ஸ்யாத் இயம் ம்ருகத்ருஷ்ணினா -சுந்தர -34-25-

ஆழ்வார் சங்கித்து அங்கன் அல்ல மெய் தான் ப்ரீதராய்
அத்வேஷம் பிறப்பித்து -த்வேஷம் இல்லாமை முதல் படி வெறுப்பு இல்லாமை
ஆவி முக்கியம் உண்டாக்கி –
தன்னால் அல்லாது செல்லாமையை பிறப்பித்து
மேன்மை பாராமல் தாழ நின்று கலந்து
தாழ நின்று பரிமாறும் ஆஸ்ரித பாரதந்த்ர்யம் -ஹ்ருஷ்டர் ஆக பேசுகிறார்

உயர்ந்த திருவாய்மொழி -இது என்பர்–இதுக்கு ஒத்த திருவாய்மொழி இல்லை என்பர்-
நமக்கு ஆசை அதிகம் நினைத்தோம்
எம்பெருமான் தமக்கு செய்யும் உபகாரம் துடிப்பை – சந்தோஷமாக அருளிச் செய்த திருவாய்மொழி-
ரத்னம் போலே இது -மேம் பொருள் மேக விட்டு -த்வயார்த்த பிரதி பாதித்த படியால் -மேலே மூடி -கீழே போட்டி போலே

——————————————————————————

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-

நான் அர்த்தித்த –கூப்பிட்டு அழைத்த -விடாய் தீரும் படி தான் அர்த்தித்து-நெஞ்சிலே பெறாப் பேறு பெற்றானாய் புகுந்து இருந்தான்-
இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
தன்னை ஒழிய செல்லாமை கொண்ட என்னை பிராவண்ய அதிசயம் -நிரதிசய போக்யமான திருவடிக்கு கீழ் இருத்த
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு-அர்த்தித்து கூப்பிட்டேன் பல நாள் -ஒருபடிப்படை நாள் தோறும்
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்-பிராவண்யம் மிக்கு -மகா பலி யஞ்ஞா வாதம் புகுந்தால் போலே
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-நெஞ்சிலே ஸூஸ் ஸ்திரமாக -பேரேன் என்று -என்னிலும் தனக்கு
அபி நிவேசம் மிக்கு -வேறு பாடு தோன்ற பூர்ண அவலோகநாம் செய்து இருந்தானே

இத் திருவாய் மொழியிலே தமக்கு உண்டான லாபத்தை-சுருங்க அருளிச் செய்கிறார்

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் -என்று
என்னைத் தன் பொன்னடிக் கீழ் -வியந்து -இருத்தும்-என்று –
தன் வாசி அறியாமல்-
ஐம்புல இன்பங்களிலே நோக்கு உள்ளவனான என்னை-
ஸ்லாக்கியமான தன் திருவடிகளின் கீழே-
மகாத்மாவானான ஒருவன் இவ்வுலகில் கிடைப்பது மிகவும் அரிது -என்று-கை வாங்கி இருக்கும் சம்சாரத்திலே-
நம்மை விரும்புவான் ஒருவன் உண்டாவதே -என்று ஆச்சர்யப்பட்டு-வியந்து -இருத்தும்-
பஹூனாம் ஜன்ம நாமந்தே ஜ்ஞானவான் மாம் பிரபத்யதே-வாசுதேவ சர்வம் இதி ஸ மகாத்மா ஸூ துர்லப -ஸ்ரீ கீதை -7-19-
இனி ஒரு நாளும் பிரியாதபடி இருத்தி அடிமை கொள்ளும் –கருத்தை யுற வீற்றிருந்தான்-

இதனால்
பிராப்ய பிராபகங்களைச் சொல்லுகிறது –
யாங்கனம் எனின் –
தன் பொன்னடி -என்று பிராப்ய ஸ்வரூபம் சொல்லிற்று-
இருத்தும் -என்று-பிராபகனும் அவனே என்று சொல்லிற்று-
வியந்து இருத்தும் -என்று தன் பேறாக இருத்தும் –

அருத்தித்து –
சேதனனான வாசிக்கு இத்தனையும் வேண்டும் அன்றோ –இத்தனை யாவது – வேண்டும்-

தெனைத்தோர் பல நாள் –
நாள் நாளும் –திருவாய்மொழி -8-5-8-என்றதனைச் சொல்லுகிறார் –

அழைத்தேற்கு –
என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால் -திருவாய் மொழி -8-5-6- என்றதனைச் சொல்லுகிறார் –
இவன் காதலை அறியாதே தாழ்த்தான் ஆகவும்-நாம் காதலை உடையோமாகவும்-
நினைத்துக் கூப்பிட்டு என்ன கார்யம் செய்தோம் -என்கிறார் காண் -என்று பிள்ளான் பணிப்பர்
அத்தலையில் காதலை நினைத்தால்-விரும்புதலும் கூட அன்றோ மிகையாய் இருப்பது –
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு-எழுதும் -என்னுமிது மிகையாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்-தழுவுமாறு அறியேன் உன தாள்களே -திருவாய்மொழி -9-3-9-
அழைக்கவும் கூட மாட்டாத இவனையே நாம் அழைத்தது –

பொருத்தமுடை –
இப்படிப் பொருத்தமுடையவனையே-இதுவோ பொருத்தம் -திருவாய்மொழி -8-5-8- என்றது –

வாமனன் –
தன் உடைமை பெருகைக்காக-தான் இரப்பாளன் ஆனவனை-நான் விரும்பிய இடம் என் செய்தேன் ஆனேன் –

தான் புகுந்து –
என்னைத் தான் புகுகைக்கு இரப்பாளனாக வந்து புகுந்து –

என்தன்கருத்தை யுற –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்னும்-என் நினைவைத் தான் கைக் கொண்டான் –

வீற்றிருந்தான் –
இவரைப் பெற்றதால் உண்டான வேறுபாடு வடிவிலே தோற்ற-கிருதக்ருத்தியனாய் இரா நின்றான் –

கண்டு கொண்டே –
பெரிய நோய்க்கு தப்பின புத்திரனை-தாய் தந்தையர்கள் பார்த்துக் கொண்டு இருக்குமா போலே
மாயக் கூத்தா -என்ற திருவாய்மொழி யிலே
விடாய்க்கு தப்பினவர் என்று பார்த்துக் கொண்டே இருந்தான் –

—————————————————————————————–

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-

விரோதியான இந்திரியங்களின் பல ஷயம் பிறக்கும் படி என் நெஞ்சில் வீற்று இருந்து -உதவியை என்ன வென்று சொல்வேன்
இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்-சபலமான எனது நெஞ்சை -தங்கள் இட்ட வழக்கம் படி ஆட கொண்டு பொருவதாய்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி-நியமிக்க முடியாத அத்விதீயமான இவற்றை -நலியும் படி ஸூ ஸ்திரமாக நெஞ்சிலே புகுந்து
-நிதி எடுத்து கண்டு கொண்டால் போலே இதில் -ஆபத்தில் பிழைத்த குழைந்தை முன் பாசுரம்
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்-பெரிய கால்களை உடைய ஆனைக்கு அருள் செய்த –
ஒரு முதலை -ஆயிரம் ஆண்டுகள் ஆணுக்கு -குளத்தில்
இங்கு ஐந்து முதலை -அனாதி காலம் -அபலைக்கு சம்சார பிரளயம்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-அது சத்ருசம் இல்லையே –

நான் இந்த்ரியங்களுக்கு கட்டுப்பட்டு இருந்த தன்மையை-தன் அழகாலே தவிர்த்து
என்னை அங்கீகரித்த உபகாரத்துக்கு ஒவ்வாது-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத்தை நீக்கிய தன்மையும்-என்கிறார்–உம்மைத்தொகை –
-இந்திரியங்கள் அழகிலே ஈடுபட்டு நலிவதால் அழகைக் கொண்டே விஷயீ கரித்து அருளினான் –

இருந்தான் கண்டு கொண்டே-
கண்டு கொண்டே-இருந்தான்-
வறிஞன் செல்வப் பேறு உண்டானால் பார்த்துக் கொண்டு இருக்குமா போலே-பார்த்த படியே இரா நின்றான் –
தத ஸூ ப்ரீத மனசௌ தௌ உபௌ கபிராகவென-அன்யோன்யம் அபி வீஷந்தௌ ந த்ருப்திம் உபஜக்மது -கிஷ்கிந்தா -5-18
லோக நாதா புரா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி -சுக்ரீவனும் ஸ்ரீ ராம பிரானும் ஆகிய இவர்களும்
மிகுந்த களித்த மனமுடையவர்களாய்-ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மன நிறைவு பெற்றார்கள் -என்கிறபடியே-
அங்கு அந்யோன்யம் இருக்க தம்மை சொல்லாதது -சொல்ல எதிர்தலையான தம்மை காண்கின்றிலர்-
மொத்தமாக ஆழ்வாரை விழுங்கி -அசத்சமமாக திருவடிக்கு கீழ் சேர்த்துக் கொண்டானே —

எனதேழை நெஞ்சாளும்-
எனது ஏழை நெஞ்சு ஆளும் –
கண்டன எல்லா வற்றிலும் ஆசை கொள்ளுகின்ற-என்னுடைய மனத்தை –
அதுவே பற்றாசாக இந்திரியங்கள் பொதி எடுக்கத் தொடங்கிற்று -என்றது-
ஒரு பிரபலனைப் பற்றாதே-விஷயங்களில் உள்ள ஆசையால்-நடுவே நின்றவாறே பணி கொள்ளத் தொடங்கிற்று – என்றபடி-

திருந்தாத –
வரம்பு இல் ஆற்றலை உடைய சர்வேஸ்வரனாலும்-பலகாலும் திருத்தப் போகாதபடி அன்றோ
இவற்றின் வன்மை இருப்பது –
ஓர் ஐவர் –
இனி இப்படி ஓர் ஐவரை தேடப் போகாது-இவற்றால் பட்ட நலிவின் மிகுதியாலே-
ஐவர் -என்று உயர் திணையாக கூறுகிறார்-

தேய்ந்தற மன்னி இருந்தான் –
கண்களுக்கு இலக்கான உலக விஷயங்களிலே பற்று நேராக அழியும்படி-
தன் வடிவு அழகைக் காட்டிக் கொண்டு புகுந்து இருந்தான் –
வேறு விஷயங்களிலும் வடிவு அழகில் அன்றோ இவன் இவன் துவக்குண்டு இருப்பது-
அரசர்கள் பகைவர்கள் ஆசன பலத்தாலே வெல்லுமாறு போலே-
இருப்பாலே இந்த்ரியங்களை வெல்ல வேண்டும் என்று வந்து புகுந்து இருந்தான்
போதரே என்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பால்-ஆதரம் பெருக வைத்த அழகன் -திருமாலை -16 -அன்றோ-

பெருந்தாட் களிற்றுக்கு
பெரிய தாள்களை உடைய களிற்றுக்கு-அருளின சர்வேஸ்வரன்
வடிவில் கனமும் நோவில் பாடு அற்ற ஒண்ணாமைக்கு-காரணம் ஆதலின் -பெரும் தாள் -என்கிறார் –

அருள் செய்த பெருமான் -தருந்தானருள் தான்-
பெருமான் தான் தரும் அருள் தான் –
தரும் என்கிற இது – தந்த -தருகின்ற -தரும் -என-முக்காலத்திலும் சொல்லலாய் இருக்கையாலே-தரும் அருள் -என்கிறார்
அடியாருக்கு செய்ததும் தமக்குச் செய்ததாக அன்றோ இவர் நினைத்து இருப்பது-
ஆதலின் -கொடுத்த என்னாது -தரம் -என்கிறார்-

இனி யானறியேனே
எனக்கு உதவின பின்பு-நான் அதனை ஒன்றாக நினைத்து இரேன்
யான் நோவு பட்டது பல ஆண்டுகள்-அகப்பட்ட பொய்கை அளவுக்கு உட்பட்டது
முதலை ஓன்று
காலம் அநாதி
அகப்பட்டது பிறவிப் பெரும்கடல்-குட்டத்து கோள் முதலை அது
முதலை ஐந்து
இதனை மீட்டுக் கொண்ட மகா குணத்துக்கு-ஒரு குணமாய்ற்றதோ
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே செய்த அருளை இட்டு-புறம்பு உள்ளாரைப் பிரித்து வேறு படுத்தினார்-
தமக்குச் செய்த அருளை இட்டு அதனையே பிரித்து வேறுபடுத்துகிறார்-

————————————————————————————————-

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

அவித்யாதி ரூபமான இருள் போகும் படி –உபகரித்து அருளினான்
இது அவனுக்கு பெறாப் பேறு என்று இருந்தானே -இது பிரமமோ மா மாயமோ
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்-அத்யந்த பிராவண்யம் -கொண்டவன்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்-அஞ்ஞானம் தொலைத்தது மட்டும் இல்லை
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல-இதுவே புருஷார்த்தம் என்று இருந்தான் -த்ரிவித சேதனம் அசேதனங்களும்
பொருளாக கருத வில்லையாம் அவனுக்கு –மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே-கனவா மருட்சியா
இது அசம்பாவம் அன்றோ -சம்சாரி உள்ளத்துக்குள் வந்து இப்படியா -ஆச்சர்யம் -பிரமிக்கும் படி சேஷ்டிதங்கள் —

எல்லாவற்றாலும் நிறைவுற்றவனாக இருக்கின்றவனான சர்வேஸ்வரன்
தம் பக்கல் இப்படி காதலைச் செலுத்துவது கூடாதது ஓன்று என்று-ஐயம் கொண்டு
இவ்வனுபவம் மயக்கம் முதலானவைகளாலே பிறந்ததோ -என்கிறார்-

அருள் தான் இனி யான் அறியேன் –
நான் இந்த்ரியங்களுக்குக் கட்டுப்பட்டு இருத்தலைத்-தவிர்த்த இது தன்னையும் இப்போது ஒன்றாக நினைத்திரேன்
எதனைப் பற்ற என்னில் –

அவன் என்னுள் இருள் தானற வீற்றிருந்தான் –
அவன் என் மனத்திலே அறிவின்மை யாகிற இருள் எல்லாம் புகும்படி-
பெறாப் பேறு பெற்றானாய்-அவ்வேறுபாடு தோற்ற இரா நின்றான்-இனி எனக்கு வேறு ஓன்று தோற்றுமோ-

இதுவல்லால் பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல –
இதற்கு திருமலை ஆண்டான் பணிக்கும் படி –
உலகத்தார் செல்வங்களில் தலையாக சொல்லுவது-மூன்று உலகத்து செல்வதை அன்றோ –
அதுவும் எனக்கு ஒரு சரக்கு அன்று -என்கிறார் -எனபது-ஆழ்வாருக்கு -என்றவாறு –
அங்கன் அன்றிக்கே
என்னுடைய மனத்திலே புகுந்து எழுந்து அருளி இருக்கிற இருப்பு ஒழிய
வீற்றிருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல இருக்கும் இருப்பும்
தனக்கு ஒரு ஐஸ்வர்யமாக நினைத்து இருக்குமோ என்று பார்த்தால்
அதுவும் ஒரு சரக்காக நினைத்து இருக்கின்றிலன் எம்பெருமான் –என்று எம்பெருமான் அருளிச் செய்வர் –
இதுவே -சர்வேஸ்வரனின் காதலின் பெருக்கைக் கூறும் -இடத்துக்கு பொருந்துவது –

மருள் தானீதோ –
ஒரு சம்சாரி சேதனனை பெற்று சர்வேஸ்வரன் இப்படி இருந்தான் என்னுமது கூடுவது ஓன்று அன்று
இது என் அறிவு கேட்டால் சொல்லுகிறேனோ –

மாய மயக்கு மயக்கே –
அன்றிக்கே
அவன் தன்னுடைய ஆச்சர்யமான மயக்கத்துக்கு சாதனங்களாய் இருப்பவற்றைக் கொண்டு மயங்கச் செய்தானோ-
நெடுநாள் இந்த சரீரத்தைக் கொடுத்து அறிவு கொடுத்தான் –பிராமாயன் சர்வ பூதாநி யந்த்ரா ரூபாயா மாயையா —
இப்போது தன்னுடைய காதலாலே என்னை மயங்கச் செய்தான் –

—————————————————————————————-

மாய மயக்கு மயக்கான்என்னை வஞ்சித்து
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்
தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-8-7-4-

தத்வம் ஒன்று -ஒன்று தான் உண்மை கிருஷ்ணனா அர்ஜுனனா -பொய்யான சிஷ்யனுக்கா உபதேசிப்பார் -தனக்குத் தானே உபதேசித்திக் கொள்கிறாரா –
ஆச்சார்யர் போய் என்றால் உபதேசம் எதுக்கு -விகல்பம் வைத்து தேசிகன் -ச குண பிரஹ்மம் -விவகாரத்துக்கு குண ப்ரஹ்மம்
-அத்வைதிகள் -ஐக்கிய ஞானம் அத்வைதி -பிரமிப்பித்து இருக்க மாட்டார் அர்ஜுனன் தன்னை இவன் இடம் சமர்ப்பித்தால் போலே
வி லக்ஷண விக்ரகம் என்னுள் வைத்தான் ஆதலால் பிரமிக்க வில்லை
மாய மயக்கு மயக்கான்என்னை வஞ்சித்து-தன்னை ஒழிய அறியாத என்னை -ஙாஸ்ரீதரை செய்தது போலே வஞ்சித்து மயக்க மாட்டான்
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்-இடையர்களுக்கு பவ்யன் -பாமரர்களுக்கு சிங்கம் போலே அபரிச்சேதய மேன்மை
பரத்வம் ஸூ லப்யம் பிரகாசிப்படுத்திய ஸ்வாமி -தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-தேச பிரசித்தம் -அது உஜ்வலம் தேஜோ விக்ரகம் பிரதிஷ்டித்தமாக -தூய்மை -நிர் மலம் –

அவன் என்னை மயங்கச் செய்தான் அல்லன்
என் உள்ளே கலந்து அருளினானே-இதிலே ஓர் ஐயம் இல்லை -என்கிறார்-
வைகலும் வெண்ணெய் கை கலந்து -உண்டு -என் மெய்யுள் கலந்தானே

மாய மயக்கு மயக்கான்என்னை வஞ்சித்து –
என்னை வஞ்சித்து-மாய மயக்கு மயக்கான்-
அடியார் அல்லாதாரான துரியோதனாதியர்களைக் குறித்து-
ஆயுதம் எடேன் -என்று ஆயுதம் எடுத்தும் –பகலை இரவாக்கியும்
வஞ்சித்தான் இத்தனை அல்லது-பாண்டவர்கள் விஷயத்தில் அதனைச் செய்தானோ
ஆகையாலே தனக்கே பரமான என்னை வஞ்சித்து-ஆச்சர்யமான மயக்கத்துக்கு உரிய சாதனங்களாலே-மயங்கச் செய்யான் –
காரணம் -என் -என்ன –
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான் –
நித்ய சூரிகளுக்கு அவ்வருகான ஏற்றத்தை உடையனாய் வைத்து
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
என்னுடைய அடிமையை நிர்வகித்த-பரம ஆப்தன் -என்னை வஞ்சித்து மாய மயக்கு மயக்கான் –திரு மோகூர் ஆப்தன் -வழித்துணை பெருமாள் –
ஆனால் இப் பேறு வந்தபடி தான் என் என்ன –

தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான் தேசந்திகழும் தன் திருவருள் செய்தே
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்-
உலகு எல்லாம் அறியும்படி-என் பக்கலிலே காரணம் இல்லாமலே திருவருள் செய்து-
தெற்கு நோக்கி தேசமே தொழுமே தென் குருகூர் என்றதும் –
குற்றங்கட்கு எல்லாம் எதிர்தட்டாய்-வேறுபட்ட சிறப்பினை உடைய ஒளி உருவமாய்
சுத்த சத்வ மயமாய்-தனக்கே உரியதான வடிவை என்னுள் வைத்தான்-இச்சா க்ருஹீத அபிமத திவ்ய மங்கள விக்ரஹம் –
புறம்பு ஒருவருக்கு இன்றிக்கே
தனக்கே உரியதான அருள் ஆதலின்-தன் திரு வருள் -என்கிறார் –
தான் வேறு ஒரு சாதனத்தைக் கொண்டு சாதித்துக் கொள்ளப் படாதவன் –
என்னும்படியைக் கொண்டு என் உள்ளே பிரகாசிப்பித்தான்
ஆதலின் -என்னுள் வைத்தான் -என்கிறார்
நாயமாத்மா ப்ரவசனேனே-யமைவேஷ வ்ருணுதே தேன லப்ய-தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம்-கட உபநிஷத் -2-என்கிறபடியே
பரமாத்மா எவனை விரும்புகிறானோ அவனாலேயே அடையத் தக்கவன்
அவனுக்கு இந்த பரமாத்மா தன் ஸ்வரூபத்தைக் காட்டுகிறான் -என்றபடி-

———————————————————————————

திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தானது காட்டித் தந்து என்னுள்
திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே–8-7-5-

நெஞ்சுக்கு உள்ள அசல பிரதிஷ்டிதனாக நின்றதே -அவனுக்கு புகழ் -இதுவே -வேறு ஒன்றும் இல்லை
திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்புகழும் புகழ் -தான் காட்டித் தந்து–ஆழ்வார் உள்ளத்தில் புகுந்ததை உலகோர் புகழ
-அந்த புகழை பிரகாசிப்பித்து -இரண்டையும் –நிர்ஹேதுகம் நிரவதிகம்-என்பதால் – இருவருக்கும் உஜ்வலமாய் -பிரசித்தமான புகழ் –
என்னுள்திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்-
விளங்கா நிற்கின்றான் -மணிக் குன்ற பெருமாள் தஞ்சை மா மாணிக் கூடம் -குன்றம் நகராதே -உஜ்வலம் மணிக் குன்றம் –
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே-இந்த நிலை ஒழிய மற்ற புகழ் புகழ் அல்ல -புகழும் நல் ஒருவன் என்கோ
பரத்வம் பஜனீயத்வம் ஸூ லப்யம் அபராத சஹத்வம் போன்றவை புகழாக பட வில்லை இப்பொழுது –

ஒருவர் பெரும் பேறே என்று உலகம் அடங்க கொண்டாடும்படி-
என் உள்ளே வந்து நின்று அருளினான்
அதனால் வந்த புகழை அல்லது-
இவனுடைய மற்று உள்ள புகழையும் ஒன்றாக மதியேன் -என்கிறார்-

திகழும் தன் திருவருள் செய்து –
பிறர் உடைய அளவுக்கு உட்பட்ட அருள் போலே அன்றிக்கே
இரண்டு தலைக்கும் நிறமாம்படியான-தன் திருவருளை என் பக்கலிலே செய்து –
நிர்ஹேதுகம் ஆனதால் அபேஷா நிரபேஷம் அவனுக்கு –
அத்யந்த பரதந்த்ரம் சித்திக்கும் இவருக்கு –

உலகத்தார் புகழும் புகழ் தானது காட்டித் தந்து –
உலகத்தார் புகழும் தான் புகழ் அது காட்டித் தந்து –
நான் பெற்ற பேற்றினைக் குறித்து-உலகத்தார் செய்யும் தோத்திரத்தை தான் காட்டித் தந்தான் -என்றது
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -1-5-11-என்று
உலகமாகக் கொண்டாடும்படி செய்கையைக் காட்டித் தந்தான்-என்றபடி-
இமௌ முனீ பார்த்திவ லஷணா ன்விதௌ-குசலீவௌ சாபி மகா தபஸ்வி நௌ
மமாபி தத் பூதிகரம் ப்ரவஷ்யதே-மகாநுபாவம் சரிதம் நிபோதாதா -பால -4-32-
இவர்கள் முநிவேடம் தரித்தவர்கள் ஆயினும்-இராஜ சின்னங்களோடு கூடி உள்ளார்கள்
பாடகர்கள் ஆனாலும் பெரும் தவம் உடையவர்களாய் இருக்கிறார்கள் -என்றாப் போலே
உலகம் முழுவதும் புகழா நின்றது -என்றபடி –
மிதிலைச் செல்வி உலகு உய்ய திரு வயிறு வாய்த்த வர்கள் என்று மக்கள் புகழும் படி -போலே
பாடின பேரைக் கொண்டாடினத்துக்கு உப லக்ஷணம் –

என்னுள் திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
என் உள்ளே வந்து புகுந்து-பெறாப் பேறு பெற்றவனாய்
நிலை பெற்று புகர் உடையானாய்-கால் வாங்கிப் போக மாட்டாதே
விளங்கா நின்றுள்ள ஒரு ரத்ன மலை போலே நின்றான் –

புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே –
என் உள்ளே நின்ற இம் மகா குணத்தை அல்லது-மற்று உள்ள புகழை ஒரு புகழாக மதியேன் –
நான் இந்த்ரியங்கட்கு கட்டுப் பட்டு நிற்கும் நிலையைப் போக்கினான்-
என்று நான் சொன்னதை ஒரு சரக்காக நினையேன் -என்றபடி-

—————————————————————————————-

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6-

அவனைக் கேட்க்காதே இழந்து போகும் சம்சாரிகள் -அகவாயில் நின்ற உபகாரம் -நிரதிசய போக்யன் -ஸுந்தர்ய விசிஷ்டன் -தன்னைத் தந்தான்
பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்-மற்றும் உள்ள புருஷார்த்தபின்கள் தன்னில் -எனக்கும் ஒன்றைத் தந்தான் ஆகில்
நிரதிசய புருஷார்த்தமான தன்னை -தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்-யாருக்கு கொடுக்கும் -புறம்பு கொள்வான்
இல்லாமையை மறந்தான் அல்லனே -கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்-காடு அலர்ந்தால் போலே
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே-செவ்வி உடைய திரு அங்கங்கள் –

எனக்கு தன்னை ஒழிய வேறு ஒன்றனைத் தந்து விட்டால்-
புறம்பு தன்னை வேறு ஒருவர் கொள்வார் இல்லாமை எனக்குத் தந்தானோ-
என் பக்கலிலே காதலால் தந்து அருளினான் -என்கிறார்

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் –
பேறுகளில் வேறே கனத்தது ஒரு பேற்றினை-எனக்கு தந்து விட்டால்

பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் –
பின்னை இப்பொருள் கடிதாக கை கொள்வார் உளரோ-
என் -கைக் கொள்வார் இலரோ -என்னில் –
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல் திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே –என்றது
இவ் வேப்பங்குடி நீரை புறம்பு பருகுவார் உளரோ -என்றபடி-வ்யதிரேக லக்ஷணை பரம போக்யம் என்றவாறு –
கரு மாணிக்க குன்றம் -திரு மேனிக்கு திருஷ்டாந்தம்
தாமரை போல் -அவயவ சோபைக்கு திருஷ்டாந்தம்
திரு மார்வு -புருஷகாரமான பிராட்டி எழுந்து அருளி இருக்க்கிற திரு மார்வு
கால் -அச் சேர்த்திக்கு தோற்று விழும் திருவடிகள்
கண் -திருவடிகளில் விழுந்தாரை குளிர நோக்கும் கண்
கை -அவர்களை எடுத்து அணைக்கும் கை
செவ்வாய் -இன்சொற்களைச் சொல்லும் திரு அதரம்
உந்தி -அனுபவிக்கத் தக்க திரு உந்தி –
உந்தி மேலதன்றோ –அமலனாதி -3-என்னக் கடவது அன்றோ

—————————————————————————————————

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-

இந்த அழகுடன் என்னுள்ளே இருந்து முறுவல் செய்து -இத்தையே நான் அறிவேன் -வேறே ஆகாரங்கள் அறியேன்
தோற்ற துறை இது –
செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு-சிவந்த –வெளுத்த பல -குண்டலங்கள்
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள-எல்லா அவயவ தேஜஸ் -சொல்லாத அவயவங்கள் தேஜஸ்
-ஒன்றுக்கு ஒன்று போட்டி போட -முட்டாக்கு இட்டு ஆழ்வாரை கபளீ கரம் பண்ண
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த-திரு உள்ளத்துக்கு உகப்புக்கு பிரகாசகமான முறுவல் -தேஜஸ் சமூகம்
ஆழ்வார் உள்ளம் புகுந்து அழுக்கு போக்கி புன் முறுவல் செய்து –
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே-இந்த பிரகாரமே அறிவேன்

அவன் தம்மோடு கலந்த கலவியினாலே உவகையனாய்-
அது தன் பேறாக முறுவல் செய்த திருப் பவளத்தை-அனுபவித்துப் ப்ரீதர் ஆகிறார் –

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு –
சிவந்த திரு அதரம்
திரு உந்தி
வெளுத்த திரு முத்து
புகரை உடைத்தான திரு மகரக்குழை
இவற்றோடே கூட –

எவ்வாய்ச் சுடரும் –
மற்ற எல்லா இடத்திலுமுண்டான
ஒளியும் –
வாய் -இடம் –

தம்மில் முன் வளாய்க்கொள்ள –
ஒன்றுக்கு ஓன்று நான் நான் என்று-தம்மில் தாம் முற்பட்டு ஆழ்வாரை வளைத்துக் கொள்ள –
அதாவது
நான் நான் என்பதற்காக முற்பட்டு ஆழ்வாரை வளைத்துக் கொள்ள -என்னுதல்-
அன்றிக்கே
முற்பட்டு என்னை வளைத்து கொள்ள -என்னுதல் –

செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த –
அவாகீ -அநாதர -என்று இருக்கக் கூடிய பரம்பொருள்-
இவரைப் பெற்று இது தன் பேறு என்று தோற்ற-முறுவல் செய்தபடி-
பூ அலரும் பொது எங்கும் ஒக்க செவ்வி பிறக்குமாறு போலே-
திவ்ய அவயவங்கள் தோறும் ஒரு வேறுபாடு பிறக்கும்படி யாயிற்று புன் முறுவல் பூத்தது –

அவ்வாயன்றி –
அவ்விடம் அன்றி -என்றது
புன் முறுவல் செய்து கொண்டு இருந்த இருப்பு அல்லது -என்றபடி –
புன் சிரிப்பை உடையவளான சீதை -என்று பிராட்டியின் இயற்கையைச் சொல்லி-
சிரித்துக் கொண்டு -என்றதே அன்றோ -அப்போதை உவகையால் உண்டான வேறுபாடு என்னும் இடம் தோற்ற –
முகமும் முறுவலும் -ஸ்வரூபம் -அன்று வந்த கன்றை கண்டு சிரிப்பதுக்கு வாசி உண்டே –
அஸ்மின் மயா ஸார்த்தம் உதார சீலா–சிலாதலே பூர்வம் உபோபவிஷ்டா
காந்த ஸ்மீதா லஷ்மண ஜாதஹாசா–த்வாம் ஆஹ சீதா பஹூவாக்யஜாதம் -ஆரண்ய -63-12-
செவ்வாய் -இயல்பு
செவ்வாய் முறுவல் -ப்ரீதியாலே புன் முறுவல் -என்றபடி

யானறியேன் மற்றருளே –
மற்று அருள் யான் அறியேன் –
மற்று உண்டான அருளை யான் அறியேன்
இதுவே அமையும்-மற்று ஓன்று வேண்டா -என்கை-

———————————————————————————

அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–

ஸூத்ரனான என் நெஞ்சிலே பூர்ணரான -மூன்று லோகமும் பிரளய ஆபத்தில் வைத்து ரஷித்தவர் –நிர்ஹேதுகமாக உபகரிப்பவர்
-சாதனம் எதிர்பார்க்காமல் தான் திரு உள்ளம் பட்டவர்களுக்கு –
சாதனமாக ஒன்றும் எதிர் பார்க்க மாட்டார் -அதிகாரி ஸ்வரூபம் வேண்டுமே -பல அனுபவ யோக்யதை -உண்பதற்கு பசி போலே
-போஜனத்துக்கு ஷூத்து போலே -வரிக்கப் படுகிறார்கள்
அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்-வேறு உபகாரமாக நினைத்து இல்லை
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து-திரு உள்ளம் நினைந்து நிர்ஹேதுகமாக பிரதம அனுக்ரகம் -ருசி வளர்த்துக் கொள்வது நமது கர்தவ்யம்
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன-எனக்கு செய்து அருளினார் -ஆசை மட்டுமே -அதி ஷூத்ரன்
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே-ரக்ஷகன் ரஷகம் முறை தப்பாமல் -ரஷித்து அருளினவன் –
நெறி உடன் இருப்பவர் நெறி இல்லாமல் தகுதி இல்லாமல் வந்து அருளினார் என்கிறார்

அவன் தம்மோடு வந்து கலக்கைக்கு அடி-அவனுடைய திருவருள் காரணம்-என்கிறார்

அறியேன் மற்றருள் –
மற்று அருள் அறியேன்
வேறு ஒரு அருளும் அறியேன் –

என்னை யாளும் பிரானார் –
என்னை அடிமை கொள்ளுகிற உபகாரகர் ஆனவர் –

வெறிதே யருள் செய்வர் –
நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –

யாருக்கு என்னில் –
செய்வார்கட்குகந்து –
செய்வார்கட்கு –
எவனைப் பரம்பொருள் விரும்புகிறானோ –
யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே
தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு
தாம் தாம் ஓன்று செய்வார்க்கு -என்னில்
வெறிதே -என்னக் கூடாதே அன்றோ –
ஆயினும் ஒரு காரணம் வேண்டாவோ அருள் செய்வதற்கு -என்னில் –
ஈஸ்வரனுடைய உகப்பே ஆயிற்றுக் காரணம் –
விரும்பப் படுவான் அன்றோ பற்றப் படுவான் -ஆகிறான் என்னக் கடவது அன்றோ –
பிரியதம ஏவ ஹி வரணீயோ பவதி -ஸ்ரீ பாஷ்யம்-
அவனே எல்லாமாக நினைத்து வேறு ஒன்றையும் கெடுக்காத அநந்ய பிரயோஜனர் பிரிய தமர் -அவர்களை வரிப்பான் –
ருசி உண்டானாலும் இவன் சேதனனான வாசிக்கு அறிவின் காரணமான-தன்மை என்று அதனைக் கொள்ளலாம் –
ஹேது வேண்டாம் -அதிகாரம் வேண்டாம் சொல்ல வில்லையே -ஹேது அவன் உகப்பு -ஆசை அதிகாரி யோக்யதை –
அத்தனை அல்லது-பேற்றுக்கு சாதனமாக சொல்ல ஒண்ணாதே அன்றோ –

காரணம் இல்லாமலே செய்யப்படும் அருளை -நிர்துஹேக கிருபையை –
இப்படி வேறு எங்கு கண்டீர் -என்ன
புறம்பு தேடித் போக வேணுமோ –

சிறியேனுடைச் சிந்தையுள் –
மிகச் சிறியேனான என்னுடைய மனத்துக்குள்ளே –

மூவுலகும் தன நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே
மூன்று உலகும் தம் வயிற்றில்-நெறியாகக் கொண்டு-நின்று ஒழிந்தார்
உடையவன் உடைமையை நோக்குவது முறையாலேயாய்-இருக்கும் அன்றோ –
தம்மாலே பாது காக்கப் படுகின்ற பொருளை முறையாலே நோக்குகிறவர்-
என்னுடைய மனத்திலே பொருந்தி முறை கெட பரிமாறா நின்றார்-
தம்மை சிறுமைக்கு எல்லையாக நினைத்த படியாலே-முறை கேடாக தோற்றா நின்றதாயிற்று இது
அவன் இதுவரை மூவுலகுக்கும் அவ்வருகாகா நினைத்திரா நின்றான்-
இவர் தம்மை மூவுலகுக்கும் இவ்வருகாக நினைத்திரா நின்றார்-

—————————————————————————-

வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே—8-7-9-

சர்வ பிரகார ரக்ஷணத்வம் ஸூ ஸ்திரமாக வைத்தேன் -எனது நெஞ்சிலே -மாறாமல் –
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்-ஷத்ரியர்கள் -தாய் போல் நோக்கி -வசிஷ்டாதிகள் -ரக்ஷகர்களாக நின்றவர்களை
-அவர்களுக்கும் மேலான ப்ரஹ்மாதிகள் -இஷுவாகு -வம்சம் வசிஷ்டர் என்றவாறு –
வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் தம்-ஸ்வரூப ஏக தேவத்தில் கொண்டு -ஜகத் த்ரயத்தையும்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
திரு வயிற்றில் பிரளயம் -சொல்லலாம் என்றாலும் -தன் சங்கல்ப ஏக தேசத்தில் -தாங்குகிறார் என்றவாறு –
யதா பூர்வ அவஸ்த்திதியாக நின்ற -விகாரம் இல்லாமல் -சர்வாதிகன்- மால் -மிக மேம்பட்டவன்
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே-இசைவித்து என்ற அவன் அருளினை மதியால் -அனுமதியாலே புத்தியால்
விலக்காத படி உள்ளத்திலே மன்னும் படிக்கு வைத்தேன் –
அவன் அங்கு இங்கு சலிக்காத படி பேராத படி வைத்தேன்

இப்படி அவன் அங்கீகரித் ததற்கு நீர் செய்தது என் என்னில் –
அனுமதி மாத்ரம் செய்தேன் இத்தனை -என்கிறார் —
நிர்ஹேதுகமான விஷயீ காரத்துக்கு -அனுமதி மாத்திரமே வேண்டுவது –
அத்வேஷம் ஒன்றுமே வேண்டுவது இதுவே தானே பத்துடை அடியவர்க்கு எளியவன் பார்த்தோம் –

வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் –
தாயானவள் குழந்தையை வயிற்றில் வைத்து நோக்குமாறு போலே
உலகத்தைப் பாதுகாக்கும் அரசர்கள் முதலாயினார்களையும் –

யவரும் –
இந்த அரசர்கள் தங்களையும் நோக்கிக் கொண்டு போருகிற
அந்தணர் முதலாயினார்களையும் –

வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் –
அந்தணர் முதலாயினார்களையும் -அரசர் முதலாயினார்களையும் -தன்னுள்ளே கொண்டு இருந்துள்ள
மூன்று உலகங்களையும் –

தம் வயிற்றில் கொண்டு –
தம்முடைய நினைவில் ஆயிரத்தில் ஒரு கூற்றாலே நடத்திக் கொண்டு என்னுதல் –
அன்றிக்கே –
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரையும் யாவரையும்-தம் வயிற்றில் கொண்டு-
நின்ற ஒரு மூவுலகையும் தம் வயிற்றில் கொண்டு –என்று பிரித்துச் சொல்லுதல் –

நின்ற வண்ணம் நின்ற மாலை –
இவற்றை அடைய தன் வயிற்றில் கொண்ட இடத்திலும் ஒரு விகாரம் இன்றிக்கே நின்ற சர்வேஸ்வரனை –

வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் –
உலகத்தை உடையனான சர்வேஸ்வரனை–என்னுடைய மனத்திலே பேராதபடி வைத்தேன் –
விகாரம் இல்லாத சர்வேஸ்வரனை -பிரகாரங்கள் உடன் மன்ன வைத்தேன் –

மதியாலே –
இதற்கு -இவன் படியை அறிந்து கொண்டேன் -என்கிறார் என்று அம்மாள் பணிப்பர்-
-நிர்ஹேதுகமாக அருள் செய்வார் -நின்ற வண்ணம் -விகாரம் இல்லாமல் -பிரகாரங்கள் உடன் தான் சேர்ந்து இருந்தான்
-சர்வ பிரகார ரக்ஷகன் -என்கிற ஞானத்தால்-இருதயத்தில் வைத்தேன் -என்றபடி –
அன்றிக்கே
மதி -அனுமதி -என்று ஆக்கி–அனுமதி மாத்ரத்திலே -என்பர் பட்டர் -என்றது
அவன் புகுகிற இடத்தில் விலக்கு அற்றிலன் -என்றபடி-அனுமதி அதிகாரி ஸ்வரூபம் –
மதியால் இசைந்தோம் என்னும் அனுமதி இச்சைகள் இருத்துவம்
என்னாத என்னை இசைவித்த என் இசைவினது -ஆசார்ய ஹிருதயம் ஸ்ரீ சூக்தி-

————————————————————————————————

வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10-

சர்வ ஸ்மாத் பரன் ஷீராப்தி நாதன் -ஸுஹார்த்தம் -வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் பாஞ்ச ராத்ரம் -ஸ்ரீ ரெங்கம்
-என் நெஞ்சுக்குள் வைத்து இடை விடாமல் அனுபவிப்பேன் -வைத்ததுக்கு பலன்
வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே -மீண்டும் சொல்லி அனுமதி முக்கியம் என்பதை காட்டி –
என் உணர்வில் உள்ளே நிறுத்தினேன் -அதுவும் அவனது இன்னருள் -ராஷா பேஷாம் ப்ரதீக்ஷிதே
-எதிர் பார்க்கிறான் -உபாயம் இல்லை -அதிகாரி ஸ்வரூபம்
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும் -இனி துன்பம் இல்லையே எப்பொழுதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால் -செறிந்து -அனுரூபமான திரைகள் –சிரமஹரமான-
பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே-பர வா ஸூ தேவன் -பைந்நாகப் பனை -விரிந்த பணங்கள்-
ச்வா பாவிக தேஜஸ் உடைய திரு அனந்த ஆழ்வான் -நம் சேஷி அனுமதியாலே உள்ளத்து அகத்தே
-எல்லா திவசத்திலும் பிரிந்து துன்பப படாமல் -விஸ்லேஷித்து கிலேசம் இல்லை நினைவில் தவிரேன் -சம்ச்லேஷம்

எம்பெருமான் சபரிகரமாக என்னுள் புகுந்தான் -பாற் கடல் -பாம்பணை –
அவனை நான் இனி ஒரு நாளும் விஸ்லேஷித்து துக்கப் படேன் -மாயக் கூத்தாவில் பெரிய சிரமம் பட்டார் –

வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே –
அனுமதி மாத்ரத்துக்கு இத்தனை பலம் உண்டாவதே –
அவனே பலாத்காரமாக வரலாம் -ராசிக்காதே –
கண்ணனை ஆண்டாள் பலாத்காரித்து அனுபவிக்கலாம் -அவன் எதிர் பார்க்கிறான் -புருஷ சாபேஷமும் புருஷகார சாபேஷமும் எதிர் பார்ப்பான் –
அதிகாரி வேண்டுமே -புருஷ சப்தம் ஆத்மாவாசி -பாபங்கள் பார்த்து சீற்றங்கள் குறைக்க பிராட்டியும் வேண்டுமே –
பிரார்த்தனை -ப்ரீதி காரித கைங்கர்யம் கேட்டு வர வேண்டுமே -பசி சொல்லி தானே தாய் குழந்தை –வேறே புருஷார்த்தங்கள் கெடுக்காமல்
-அசேதனம் இருந்து வேறு பாடு தோன்ற பிரார்த்தனை வேண்டுமே –
ஸ்ருஷ்டி அவதாரத்தால் பண்ணிய கிருஷி பலனே இந்த அனுமதி -பலிக்க காரணம் -இழந்தோம் என்றால் கர்மத்தால் -பெற்றால் -அவன் கிருபையால் தானே
பேற்றுக்கு அடி கிருபை -இழவுக்கு அடி கர்மம்
கர்மமும் கிருபையும் அனுபவித்துத் தானே தீர வேண்டும்
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
இனி கிலேசப் பட மாட்டேன்
இவ்வார்த்தை எத்தனை குளிக்கு நிற்கும்
என்றும் -எல்லா திவசத்திலும் எல்லா அவஸ்தைகளிலும்

மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
திரண்டு தகுதியான திரைகள் –
மெல்லியதான திரை -மார்த்வம் பார்த்தால் பாறாங்கல் போலே தோன்றுமே இவருக்கு -ஸுகுமார்யம் -படுத்தும் பாடு
பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே
திரைகள் திரு மேனியில் படாமல் விகசிதமான –
பகவத் அனுபவத்தால் வந்த தேஜஸ் -தெய்விக தேஜஸ் –
கண் வளர்ந்து அருளுவதால் வந்த ஏற்றம்
நம் பராத்பரனையே மதியால் வைத்தேன்
சுடர் பாம்பணை பள்ளியாக கொண்ட மேன்மை
புண்டரீகாக்ஷத்வம் –சிக்கென செங்கண் மாலே -திருவடியால் அளந்தோமே என்று சேர்த்துக் கொண்டான் –
தாவி –கொண்டோம் – சேவியேன் உன்னை அல்லால் -விட மாட்டேன் என்றதும் பிறந்த செங்கண் மால் -இப்பொழுது மலர்ந்த –
–ஸ்ரீ யபதித்தவம் -இத்யாதி எப்பொழுதும் பரத்வம் -இங்கு திரு அநந்த ஆழ்வான் மேலே சயனித்ததால் வந்த பரத்வம்
இத்தை நமக்கு பிரகாசிப்பித்தவன் -பரன் –

வ்யூஹ மூர்த்தி வடிவைக் காட்டி -கண் முன்னே அருளினான் –
அரவித்தமளி -படுக்கை உடன் -அழகிய பாற் கடல் -உடன்அரவிந்த பாவையும் தானும் புகுந்து –

——————————————————————————————–

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-

ஜென்ம சம்பந்த நிவ்ருத்தி –
சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை-நிரவாதிக தேஜஸ் -அந்யோன்யம் ஏற்றம் -ஸ்பரிசத்தால் வந்த -ஸ்ரீ யபதி
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்-திருவடிகளில் சேரும் படியை தலைக்கட்டி -அடைந்து -நிரதிசய சம்பத் உள்ள திவ்ய தேசம்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்-இந்த திருவாய் மொழி பகவத் அனுபவ பிரதிபந்தகமான ஜன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே-பாசுரம் -சேதன சமாதியால் அருளி -கண்கள் சிவக்கும்
-இனி பிறக்காமல் இருக்க -ஜன்மங்கள் தேய்ந்து போகும் படி –
ஆழ்வார் பாட அவன் பார்த்துக் கொண்டே இருக்க -அவனை பார்த்து ஆழ்வார் பாட -ராகம் -சிவந்து -இந்த காதலே உஜ்ஜீவனம்
காரியவாகிப் -புடை -நீண்ட அப்பெரிய வாய கண்கள் -தஜ் அநுராகம் –
அற -மிகவும் / தேய்ந்து -ஷயித்து -/ விட -வசிக்கும் படி /சிவந்து நோக்கும் -புருஷ சமாதியால் சொல்கிறார் -ஜென்ம விநாச ஹேதுத்தவத்தால்-

நிகமத்தில்
இப்பத்தானது தன்னைக் கற்றவர்கள் உடைய-பிறவிக்கு த்ருஷ்ட்டி விஷம் –
சன்மம் தேய்ந்து அற-கண்கள் சிவந்து நோக்கும் -விடம்
நோக்கும் விடம் -த்ருஷ்ட்டி விஷம் —கண்ணில் விடமுடைய தொரு பாம்பு போலே-
திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை-விட்டிலையோ இது விதியின் வண்ணமே -கம்பர் கும்பகர்ண வதைப் படலம் -60

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை –
இப்பத்தும் கற்றார்க்கு-பிறவி அறுகை அன்றோ பலமாக சொல்லுகிறது
அதனால் சென்று அனுபவிக்கும் பேற்றினைச் சொல்லுகிறது –
பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே-திரு வநந்த ஆழ்வான் மடியிலே-இஷ்ட பிராப்தியும் உண்டு -என்கிறார் -திருமால் -பரன் -சர்வாதிகன்-
பெரிய பிராட்டியார் உடன் எழுந்தருளி இருக்கக் கண்டு அனுபவிக்கை அன்றோ-முக்தனாலே அடையப் படுகின்ற இன்பம் தான் –

அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன் –
திருவடிகளில் சேருகையே தமக்கு ஸ்வாபாவமாக உடைய ஆழ்வார் –வகை -ஸ்வ பாவம் -முடிப்பான் -முடிக்கைக்காக –
அன்றிக்கே –
அடிச்சேர் வகை முடிப்பான் -என்றுமாம் –சேர்வதில் கால விளம்பம் இல்லாமல் என்றபடி –
ஞான ஆநந்தங்கள் அன்று இவருக்கு நிரூபகம்-அடிமையே ஆயிற்று-
அடிச்சியாம் அடியோம் -சேஷத்வமே ஸ்வரூப நிரூபகம் ஆழ்வாருக்கு -எல்லா அவஸ்தைகளிலும் –என்பரே-
மாணிக்கம் -சேஷத்வம் -சிறந்த பெட்டி வேணுமே -அசித்தில் சேஷத்வம் இருந்தும் அறிய முடியாதே –வீண் –
அறிந்து சந்தோஷம் பலிக்க வேண்டுமே அறியாவிடில் அசித்ப்ராயர் ஆவோம் -பிரளயம் போலே –
இத்தை மாற்றி நமக்கு காட்டிக் கொடுத்து அருளியவர் ஆழ்வார் -அடியேன் உள்ளான்
-நாம் அடியேன் சொன்னால் நான் அர்த்தம் -ஆழ்வார் நான் சொன்னாலும் அடிமை தன்மை மாறாதே

முடிப்பான் சொன்ன வாயிரத்து –
சம்சார சம்பந்தத்தை அறுக்கைக்காக சொன்ன ஆயிரத்து –

இப்பத்தும் சன்மம் விட தேய்ந்தற நோக்கும் –
பிறவியானது விட்டுப் போம்படியாக நோக்கும்-அது செய்யும் இடத்தில்-தன் கண்கள் சிவந்து நோக்கும் விடம் –
அதாவது
இப்பிறவிக்கு இப்பத்தும் திட்டி விடம் -என்கை-என்றது
இப்பத்துக்கும் பிறவிக்கும் ஒரே இடத்தில் இருக்கக் கூடிய-தன்மையில் விரோதம் உண்டு -என்றபடி –
கண் கொத்திப் பாம்பு போலே கண்களில் விஷம் வைத்துக் கொண்டு இந்த திருவாய் மொழி முடிக்கும் –

————————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

மத் விப்ர யோகம் அசகன்
ஸ்வயம்சேவ அர்த்தி
முதம் அபாஷத
ஸவ்ரி இதி மதி விப்ரமம் கிம்
மாம் அல்ப கைக நிலையம் -சிறியேன் உடை சிந்தையுள்
பஹு மன்யமாகா
நிர்ஹேதுக விஷயீகாரத்வம் -வெறிதே உக்காந்து அருள் செய்வார் செய்வார்கட்க்கு

—————————————————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பவ்யத்வாத் -பொருத்தம் உடை வாமனன்
ரக்ஷகத்வாத்–களிற்றுக்கு அருள் செய்தான்
த்ரி ஜகத் அதிக காருண்யத்வாத் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
கோப பாவாத்ஆயன் அமரர்க்கு அரி ஏறே
நீல அஸ்மா அத்திரி பாவாத் -மணிக் குன்றம்
ஸ்வ ஜன க்ருத நிஜ ஆத்ம பிரதநா பிரபுத்வத்த — தன்னையே தரும் கற்பகம் –
மூல மந்த்ரத்தை -தம்மையே நல்கும் தனிப் பெரும் பதம் -கம்பர் –
மந்தஸ் ஸ்மிதம்
ஹ்ருதி ஸூ ஹ்ருதி
ச்வா நாம் சித்தம் அநபாயாத மன்ன வைத்தேன் மதியால்
ஸ்வ ஜன ஹ்ருதி ரஸ-

—————————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 77-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம்
திருந்த விவர் தம் திறத்தே செய்து -பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு ————-77-

—————————————————————————–
அவதாரிகை –

இதில்
இவர் கருத்தைத் தான் கைக் கொண்டு
இவருடனே கலந்த படியைப் பேசின ஆழ்வார் பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இவர் -வெள்ளக் கேட்டாலே அழியாதபடி
திருக் கடித் தானத்தே இருப்பைக் காட்டி
சம்ச்லேஷ ரசத்தை சாத்மிப்பித்த –
அநந்தரம்-
ஸ்வவிஷயத்தில் அர்த்தித்வ பிரமுகரான இவர்
மநோ ரதத்தை எல்லாம் தான்
இவர் பக்கலிலே பண்ணிக் கொண்டு
இவரோடு பூர்ண சம்ச்லேஷம் பண்ணி
அந்த சம்ச்லேஷ
ஜனித
ஹர்ஷ
பிரகர்ஷத்தாலே
புதுக்கணித்த
திவ்ய அவயவங்களையும்
நீல பர்வதம் போலே ஒளி இருக்கிற வடிவையும் இருக்கிறபடியை
மண்டி அனுபவித்து
ஹ்ருஷ்டராய் செல்லுகிற -இருத்தும் வியந்தில் அர்த்தத்தை
இருந்தவன் தான் வந்து -இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————————————————

வியாக்யானம்–

இருந்தவன் தான் வந்து –
திருக் கடித் தானத்திலே இருந்த
தான்
இவர் இருந்த அளவும்
மெல்ல வந்து –

இங்கு இவர் எண்ணம் எல்லாம் திருந்த விவர் தம் திறத்தே செய்து —
இவர் எண்ணம் ஆவது –
என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் -என்று
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்ற
ஆழ்வார் திரு உள்ளக் கருத்தைத்
தான் கைக் கொண்டான் -என்கை –

திருந்த விவர் தம் திறத்தே செய்து —
தனக்கு ஆஸ்ரித பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆகையாலே-
நன்றாக இவர் விஷயத்திலே செய்து-
தன்னை முற்றூட்டாக அனுபவிக்கும் படி செய்து

பொருந்தக் கலந்து –
நாம் நித்ய சூரிகளுக்கு அவ்வருகாய் இருப்புதோம் –
இவர் நித்ய சம்சாரிகளுக்கு இவ்வருகாய் எண்ணி இருப்பார் என்ற வாசி வையாமல்
சிறியேனுடைச் சிந்தையுள் -என்றும்
தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் -என்றும்
என்னும்படி ஒரு நீராகக் கலந்து –

இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
திகழு மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் -என்றும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்-திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே -என்றும்
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய்அன்றி யான் அறியேனே -என்றும்
இப்படி ஆயிற்று
பெறாப் பேறு பெற்றானாய்
இனியனாய்
இருந்தபடி -என்கை

கண்ட சடகோபர் –
இப்படி அவன் இனியனாய்
இருந்த படியைக் கண்டு
அனுபவித்த ஆழ்வார் –

கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு
அவன் தம்முடனே வந்து கலந்தபடியை
திரு உள்ளத்தாலே கண்டு அருளிச் செய்தார் –
கலக்கைக்கு அவன் கிருபையே உபாயம்
இத்தலையில் உள்ளது அனுமதி மாத்ரமே –
கலந்த நெறி கட்டுரைக்கை யாவது –
அந்யோந்யம் அபி வீஷந்தௌ-என்னும்படி
கண்டு கொண்டு –இருந்தான் -என்றும்
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேன் -என்றும்
கிந்துஸ் யாச்சித்த மோஹயம்-என்னும்படி
மருள் தான் ஏதோ -என்றும்
மாய மயக்கு மயக்கான் -என்றும்
திகழும் தன் திருவருள் செய்தே -என்றும் –
வெறிதே அருள் செய்வர் -என்றும்
அருளிச் செய்தவை என்கை-

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: