பகவத் விஷயம் காலஷேபம் -165- திருவாய்மொழி – -8-6-1….8-6-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

எல்லியும் பிரவேசம் –
மாயக் கூத்தா -திருவாய்மொழி யிலே
ஆழ்வார் தமக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் ஆகையாலே பேசினார் –
சர்வேஸ்வரனுக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசிற்று இல்லை-
ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே-
இத்தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68-
சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷனமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-

மாயக் கூத்தா என்கிற திருவாய் மொழியிலே-இவருக்கு ஓடின விடாய்க்கு உதவப் பெற்றிலோம்-
என்னுமதனாலே தபிக்கக் பட்டவனாய் -ஆகுலத்தை உடையவனாய் -பிற்பாட்டுக்கு
உங்களுக்கு வருகையினாலே நான் மிக்க நாணத்தை அடைந்தேன் -என்றபடி நாணி
ப்ரசீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷோ ஹி மமாதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபஸ்த்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-
இனி நாம் கடுக முகம் காட்டில் பிரீதியாலே உடைகுலைப்படுவர்-ப்ரீதியைப் பொறுப்பித்து உளர் அக்கி-
பரிமாற-வேண்டும் -என்று நாளை வதுவை -நாச்சியார் திருமொழி –சாத்மிப்பித்து-
பதினான்கு ஆண்டு பிரிவாலே நொந்த ஸ்ரீ பரத ஆழ்வானைத் தரிப்பித்து-
முகம் காட்டுகைக்காக திருவடியைப் போக விட்டு ஸ்ரீ பரத்வாஜ பகவான் ஆஸ்ரமத்தில் இருந்தாப் போலேயும் –
பாண்டவர்களுக்காக தூது போகிற போது அன்பினால் பரவசப் பட்டிருக்கிற ஸ்ரீ விதுர ஆழ்வான்-
முதலாயினோர்கள் பிரீதியைக் குறைத்து முகம் காட்டுகைக்காக
குசத் ஸ்தலத்திலே தங்கி உள்ளான் -அவன் காலையிலே இங்கு வருவான் -என்கிறபடியே-
உபப்லாவ்யாத் இஹ சத்த உபயாதோ ஜனார்த்தன-குசஸ் ச்தலே நிவசதி ச பிராதா இஹ ஏஷ்யதி -உத்தியோக பர்வம் -86-1-
குசஸ் ஸ்தலத்தில் விட்டுக் கொண்டு இருந்து பிற்றை நாள் அஸ்தினாபுரத்துக்கு-எழுந்தருளினாப் போலேயும்-
தூது போனதே ஸ்ரீ விதுர ஆழ்வானுக்காக ஆனால் போலே -அன்றோ
எண்ணாயிரத்து எச்சான் -வீட்டுக்கு போகாமல் பருத்திக்கு கொல்லை அம்மையார் திரு மாளிகைக்கு போனார் ஸ்வாமி –
தம்மோடு கலவியிலே நோக்குள்ளவனான சர்வேஸ்வரன்-
தம்முடைய ப்ரீதியைப் பொறுப்பித்து தம்மோடு கலக்கைக்காக-
திருக் கடித்தானத்திலே எழுந்தருளி இருந்து தம் பக்கல் செய்கிற வ்யாமோகத்தை இனியராய்-
அதனைப் பேசி அனுபவிக்கிறார் –

மேல் திருவாய்மொழியில் துக்கத்து காரணமான நினைவு தானே இப்போது-உஜ்ஜீவனம் ஆம்படி செய்தான்-
செறுவாரும் நட்பாகுவார் அன்றோ செங்கோன் அருள் பெற்றவாறே-திருவிருத்தம் -27-

38 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம் நம்மாழ்வார் –
12 -மலையாள திவ்ய தேசங்கள் -திரு வித்துவக் கூடு -குலசேகர பெருமாள் -மட்டும் மங்களா சாசனம் –
சாத்ய ஹ்ருதி ஸ்த்தானாயும் சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்தா கந்தம் தாயப்பதியிலே –
ஸ்ரீ அற்புத நாராயணன் – ஸ்ரீ கற்பக வல்லி தாயார் –
திருக் கொடித்தானம் -சிதைவு
பரிமளம் கொண்ட ஸ்தானம் -ஆழ்வார் திரு உள்ளம் ஆத்மகுண பூர்த்தியால் பரிமளம் –
இங்கே தவம் புரிந்தது ஆழ்வார் திரு உள்ளம் பெற்றான் –
தாயப்பதி விசேஷ விசேஷண அசாதாரண க்ஷேத்ரம் இது –
அற்புதன் நாராயணன் -ஆழ்வார் திரு உள்ளம் புக தபஸ் -இதுவே அத்புதம் தானே –

———————————————————————–

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-

நிரதிசய உபகாரம் பண்ண வந்தவன் திவ்ய தேசம் இது –
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ-இரவு பகல் வேறுபாடு இல்லாமல் -ஸ்மரித்து உஜ்ஜீவிக்கும் படி
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்-நிர்ஹேதுகம் -நல்ல அருள்கள் -அருள் புரிவார் -பிரசாதம் நமக்கு கிடைக்க
அருள் வேணுமே -ஆகமான ஆஸக்தி -விரோதி நிவர்த்தன் அனுபவம் இவற்றுக்கு அடியான –
நமக்கே -குழந்தை எனக்கே எனக்கே சொல்வது போலே -இவரால் தனக்கு மட்டும் வைத்துக் கொள்ள முடியாதே என்பதை அறிவான்
-இடைவிடாமல் மேலும் அருள் செய்து
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்-இவர் ஆசைப் பட்ட படி -துளசி மாலை தரித்து -சேஷி அப்பன் உபகாரகன்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே-பகவத் கைங்கர்ய செல்வம் -அனுபவ விச்சேதம் இல்லாமல் வாழும் -வர்த்திக்கும் திவ்ய தேசம் –
சாதமிக்க சாதமிக்க அவன் அருளியது போலே ஆழ்வாரும் படிப்படியாக பாசுரம் தோறும் அருளிச் செய்து மேலே இந்த சாதனத்தையும்
-ஆழ்வார் திரு உள்ளம் பெற்ற சாத்யத்தையும் அருளிச் செய்கிறார்

என்னுடைய துன்பத்தை தீர்த்து அருளுவான் சர்வேஸ்வரனே–
அவன் ஊர் திருக் கடித்தானம் -என்கிறார்-

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ –
பகல் இரவு என்னும் வேறுபாடு இன்றிக்கே-
எல்லா காலத்திலும் உபகாரகனான தன்னை-நினைத்து உஜ்ஜீவிக்கும்படி –

நல்ல வருள்கள் –
என் குற்றத்தை யாதல்-
தன்னுடைய சர்வஞ்ஞதவம் ஆதல் பாராமல்-
தன் பேறாக பண்ணின அருள் –
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியிலே-விடாய்க்கு அருளினான் என்று இருக்கின்றிலர்-
என் வருத்தத்துக்காக அருளினார் என்றால் கிஞ்சித் ஸ்வாதந்த்ரய சாதனத்வம் கிட்டுமே-

நமக்கே தந்தருள் செய்வான் –
பலர் அடியார் முன்பு அருளிய -திருவாய்மொழி -7-10-5–என்கிறபடியே-
நித்ய சூரிகளும் தாம் பெற்ற பேறு பெற்றிலர் என்றாயிற்று நினைத்து இருப்பது –

அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பன் –
மேல் திருவாய் மொழியிலே-
மொய் பூம் தாமம் தண் துழாய் கடி சேர் கண்ணிப் பெருமானே -என்று
இவர் ஆசைப்பட்டபடியே காட்டிக் கொடுத்தான் –

ஊர்-
இப்படி உபகாரனானவன் வாசம் செய்கையாலே
நமக்கு அடையத் தக்க பூமி திருக் கடித்தானம் -என்கிறார் –

செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே –
மாயக் கூத்தனும்-
எல்லியும் காலையும் வேண்டாமலே-
அனுபவத்தோடு காலம் கழிக்கிறார்கள்-
லஷ்மணன் கைங்கர்ய இலஷ்மியோடு கூடினவன் -என்கிறபடியே இருப்பார் சிலர் –
சர்வ ப்ரியகர தஸ்ய ராமச்யாபி சரீரத-லஷ்மணோ லஷ்மி சம்பன்ன பஹி பிராணா இவாபர -பால -18-28

செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே –
அருள் செய்வானாகிற அப்பனுடைய ஊராகும்
அன்றிக்கே
அருள் செய்வானாகிய அப்பனுடையதாய்ச்–செல்வர்கள் வாழும் ஊர் திருக் கடித்தானம் -என்னுதல்
அன்றிக்கே
தண் அம் துழாய் முடி அப்பன்-எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ
நல்ல அருள்கள் நமக்கே அருள் செய்வான் –அவன் ஊர் – செல்வர்கள் வாழும் திருக் கடித்தானம் -என்னுதல் –

ஆழ்வார் ஆற்றாமை தீர தன்னை காட்டி அருளி–ஆழ்வாரை உளராக ஆக்க
கொஞ்சம் கொஞ்சம் சாத்மிக்க சாத்மிக்க போக பிரதத்வம்-இந்த திருவாய் மொழியிலும்-

———————————————————————————————

திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2-

சக்கரவர்த்தி திருமகனாகவே -அனுபவிக்கிறார் -அசேஷ விரோதி நிவர்த்தன சாமர்த்தியம்
திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்-இரண்டையும் -சமமாக பாவித்து -இதில் –
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை-வர புல புஜ பலம் -செருக்கு விஞ்சி -நீரிலே நெருப்பு எழுமா போலே
சீற்றம் கொண்ட அன்று -அபராதம் பண்ணிய –
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே-அழிந்து பின்னமாம் படி -ஏக வீரன் கிடீர் இவனே

என்பக்கல் வருகைக்கு உள்ள தடைகளையும் தானே போக்கி–
திருக் கடித்தானத்திலும் என் மனத்திலும்-
ஒக்கக் காதல் கொண்டு உள்ளே வசிக்கிறான்-என்கிறார்

திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து –
ஒருக்கடுத்து – ஒருங்க அடுத்து என்றது ஒக்க நினைக்கை-
திருக் கடித் தானத்தையும் என் மனத்தையும் ஒக்க விரும்பி –
கங்கை காவேரி -பொதுவான நமஸ்காரம் -யாருக்கு -சமம் -முதலில் -கங்கையில் புனிதமாக்க
-அடி வருட பண்ணிய பின்பு -இதே போலே -இங்கும் -சமம் -பின்பு ஆழ்வார் திரு உள்ளம் மிக்கு –

உள்ளே உறையும் பிரான் கண்டீர் –
மனத்திலே நித்ய வாசம் பண்ணா நின்றான் –காமாதி விரோதி செய்தது என் என்னில்
அது அரக்கர்கள் பட்ட பாட்டினைப் பட்டது -என்கிறார்-

செருக்கடுத்து –
போரிலே கண்டூதி எடுத்து

அன்று –
ஒருவரையும் வணங்கேன் -என்ற அன்று
த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் து கஸ்ய சித்-ஏஷமே சஹஜ தோஷ ஸ்வபாவ துரதிக்கிரம -யுத்த -36-11-

திகைத்த வரக்கரை –
சக்கரவர்த்தி திருமகனை வெல்லலாம் என்று நினைத்த மதி கேடரான இராக்கதர்களை –

உருக்கெட –
சின்னங்களாகவும் பின்னங்களாகவும் அம்புகளால் கொளுத்தப் பட்டவைகளாக –
சின்னம் பின்னம் சரை தக்தம் பிரபக்னம் சஸ்த்ர பீடிதம்-பலம் ராமேண தத்ரு ஸூ ந ராமம் சீக்ர காரிணம்-யூத -94-18-

வாளி பொழிந்த –
அம்பு மழையை பெய்தார் அன்றோ -என்றபடியே-
ததோ ராமோ மகாதேஜோ தநுராதாய வீர்யவான் த்ருஷ்ட்வா ராசாச ச சன்யம் தத் சரவர்ஷம் வவர்ஷ ஹ -யுத்த – 94-18

வொருவனே –
ஏக வீரன் ஆனவன்-அநபாய ஸாஹஸன்-
கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவா -கம்ப நாட்டாழ்வார்-

—————————————————————————————-

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்
திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை
மறவி யுறைகின்ற மாயப்பிரானே–8-6-3-

பராக்கிரம -வீர ஸ்ரீ விசிஷ்டன் -குணவான் உடனே கஸ்ய வீர்யவான் -ஆரம்பம் -முடிவில் -நியதோ வீர பாவோ நான்யத்ர கச்சதி –
ராமத்வம் பார்க்கட்டும் – வீரத்வமே -சன்னிஹிதனாய் -கண்ணனுக்கு -ஆஸ்ரித பாரதந்த்ரன் -சத்ய பிரஞ்ஞானாக இருந்தும் அசத்தியம் பேசுவான்
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று-வேகம் கூட கூட -கண்ணால் பிடிக்க முடியாதே -மூல பலம் அழித்து-ஆனை ஆயிரம்
-தநுஸ் கணீல்-கபந்தம் -1000 ஆட ஒரு தடவை -7.5 நாழிகை ஆடின 3.5 மணி நேர சண்டை -கிள்ளிக் களைந்தான் -கைப்பிடித்தவள் –
பிரதமம் ஒருவர் –அத்விதீயமாக-உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்- ரூபம் கரந்து இந்திரிய அவிஷயமாகக் கொண்டு –
வீர ஸ்ரீ உடன் -இலங்கையிலே இருந்து நேராக இங்கே –
திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை-ஸ்ரீ லஷ்மி வாசம் செய்யும் -திரு மார்பன்
மறவி யுறைகின்ற மாயப்பிரானே-இனியன் ஆகா நிற்கிறான்

பிராட்டியோடு கூடி திருக் கடித் தானத்திலே-
நித்ய வாசம் செய்கிற ஆச்சர்யத்தை உடையனான உபகாரகன்-
நினைக்கும் தோறும் இனியன் ஆக நின்றான் -என்கிறார்-

மேல் பாசுரத்தில் கூறிய வாறே வாளி பொழிந்த படி எங்கனே -என்ன –இங்கனே என்கிறார்
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கரந்து –
ஒருவராய்த் தோன்றி –
இருவராய் தோன்றி –
மூவராய் தோன்றி-
பின் கட்புலனாலே காண முடியாதவாறு சாரிகை வந்து-ஒருவர் இருவர் மூவர் என நின்று-உருவு கரந்து-
செருக்கடுத்து அன்று திகைத்த அரக்கரை-உருக்கெட வாளி பொழிந்த ஒருவன்-
திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும்-ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் –என மேல் பாசுரத்தோடே சேரக் கடவது –
மூலபலம் சாம்படி அருளுகிற அன்று –
சாரிகையில் வேகம் மிக மிக இருவர் மூவருமாகத்
தோன்றி -வேகம் மிக்க வாறே-இந்த்ரிய சம்யோகத்துக்கு இடம் இல்லாமையாலே
ரூபக்ரஹனம் அரியதாய் உருக்கெட வாளி பொழிந்த ஒருவன் -24000 படி-
ஒருவர்
திருவமர் மார்பன்-
குற்றம் செய்யாதவர் யாவர் -என்னும் பிராட்டியோடேகூட
ஆயிற்று வந்தது –
திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை மறவி யுறைகின்ற மாயப்பிரானே உள்ளும் தோறும் தித்திப்பான்
பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்கிற திருமார்வினை
உடையனாய்
திருக் கடித்தானத்தை மருவி உறையா நின்று கொண்டு
என் பக்கலிலே ஆச்சர்யமாம்படி
ஈடுபட்டு இருக்குமவனாவன் நினைக்கும் தோறும் புதியனாய்–இனியன் ஆகா நின்றான்-
வீர ஸ்ரீ ஸ்ரீ சீதா பிராட்டி இருவர் உடன் வந்து என் விரோதிகளை போக்கி கைங்கர்யம் கொள்ளும் மிதுனம் என்கிறார் –

————————————————————————————–

மாயப்பிரான் என் வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்
தேசத்தமர் திருக் கடித் தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே-8-6-4-

திவ்ய வாசஸ் ஸ்தானம் –செய்து -என் பிரபல வினைகளை போக்கி -நித்ய வாசஸ் ஸ்தானமாக என் திரு உள்ளத்தைக் கொண்டான்
மாயப்பிரான் என் வல்வினை மாய்ந்தற-பிரபலமான பாபங்கள் நசித்து போம் படி
நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்-நெஞ்சை நாடாகக் கொண்டு -திவ்ய தேசம் -சிறிய ஸ்தானம்
அபி நிவேசம் கொண்டு நெஞ்சாகிய விஸ்தீர்ண பூமியை வாசஸ் ஸ்தானம் கொண்டான் –
தேசத்தமர் திருக் கடித் தானத்தை-ஸூரிகளுக்கு -பகல் ஓலக்கம் –
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே-பரிமள உத்தரமான சோலைகள் சூழ்ந்த
திவ்ய தேசத்தை வாசஸ் ஸ்தானமாகக் கொண்டவனானான

திருக் கடித்தானத்தை-பகல் இருக்கை மாத்ரமாகக் கொண்டு-
அன்பின் மிகுதியாலே என் மனத்தையே
எப்பொழுதும் வசிக்கும் இடமாகக் கொண்டான் -என்கிறார்-

மாயப்பிரான் –
ஆச்சர்யமான குணங்களையும் செயல்களையும்
உடைய உபகாரகன் –

என் வல்வினை மாய்ந்தற-
தன்னைப் பிரிந்து நான் பட்ட கிலேசம் எல்லாம் நசித்துப் போம் படி -என்றது
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியில்
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து-பட்ட விடாய் எல்லாம் வாசனையோடே போம்படி -என்றபடி
மாய -மட்டும் இல்லை மாய்ந்து அற –மறுகல் இடாதபடிக்கு

நேசத்தினால் –
தான் என் பக்கம் செய்த அன்பினாலே –

நெஞ்சம் நாடு –
கலவியலும் பிரிவினாலும்-ஒரு பரமபதத்தைப் போலே-ஆக்கினான் ஆயிற்று -இவர் திரு உள்ளத்தை –
நெஞ்சு ஸூ ஷ்மம்-நாடாகுமோ -விஸ்லேஷம் சுருங்கி -சம்ச்லேஷம் வளர்ந்து ஊதி ஊதி பெருக்கி -நாடாக்கினான் -என்றவாறு –

குடி கொண்டான் –
பரிகரங்களோடு நித்ய வாசம் பண்ணா நின்றான் –
அரவத்து அமளியினோடும் -பெரியாழ்வார் திருமொழி -5-2-10-என்ற பாசுரப் படியே –
சர்வ மங்கள விக்ரகாய — ஸமஸ்த பரிவாராயா -ஸ்ரீ மதே நாராயாணாயா –

தேசத்தமர் திருக் கடித் தானத்தை –
நித்ய அனுபவம் பண்ணுகையாலே உண்டான-ஒளியை உடைய நித்ய சூரிகளுக்கு-அடையத் தக்கதான திருக் கடித் தானத்தை

வாசப் பொழில் மன்னு –
வாசத்தை உடைய சோலையோடு கூடின –

கோயில் கொண்டானே
தேசத்து அமரர் திருக் கடித்தானத்தை கோயில் கொண்டான் –
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடி கொண்டான் -என்க —உரிமை அங்கு -பாசம் அபி நிவேசம் இங்கே –

————————————————————————————————

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-

பிராப்யமான ஸ்ரீ வைகுந்தம் வர்த்திப்பவன் திருக் கடித் தானத்துடனே ஆழ்வார் நெஞ்சில் குடி புகுந்தான் -இதில்
ஆழ்வார் இடம் இவன் கொண்ட அதீத -நேசம் -பற்றியே நாம் இருக்க வேண்டும்
கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை-அசாதாரணமான திவ்ய தேசம் கொண்டான்
கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம்-இத்தையும் பாய் போலே சுருட்டிக் கொண்டு ஆழ்வார் திரு உள்ளம் புகுந்தான்
-இவர் இடம் கொண்ட நேசத்தால் அத்தைக்கு கொண்டு வந்தான் -க்ருதஞ்ஞதையால் -என்கிறார்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ-விலக்ஷண விமானம் கொண்ட விஷ்வக் சேனர்-சாம்யா பத்தி உண்டே இவர்களுக்கும் –
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே-பிறப்பிய தேசம் வாசஸ் ஸ்தானம் கொண்டு -ஆஸ்ரித அர்த்தமாக அவதரித்து மநோ ஹாரா சேஷ்டிதம் –
என் பக்கல் கொண்ட மிக்க காதலாலே–திருக் கடித் தானத்தோடே கூட
என் மனத்திலே புகுந்து அருளினான் –என்கிறார்-

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை-
திருக் கடித் தானத்தை தன் கோயில் கொண்டான் –
திருக் கடித் தானத்தை தனக்கு அசாதாரணமான கோயிலாகக் கொண்டான் –

கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம் –
அதனோடும் என்நெஞ்சம் கோயில் கொண்டான் –
செருப்பு வைத்து திருவடி தொழுவாரைப் போலே ஆக ஒண்ணாது -என்று
திருக் கடித் தானத்தோடே கூட வந்து என் நெஞ்சில் புகுந்து அருளினான் –

கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட-
ஒரோ கோயில்கள் உண்டாய் இருக்கும் அன்றோ –
திருவடி திரு வநந்த ஆழ்வான் சேனை முதலியார் இவர்களுக்கு –
இவர்கள் தொழும்படி ஸ்ரீ வைகுண்டத்தை தனக்குக் கோயிலாகக் கொண்ட சர்வேஸ்வரன் –

குடக் கூத்த வம்மானே –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து-குடக் கூத்து ஆடினவன் –
குடக் கூத்து ஆடின அந்த சிரமம் எல்லாம் ஆறும்படி-திருக் கடித் தானத்தை கோயிலாக கொண்டான் –
அதனோடு கூட என் மனத்தினை தனக்குக்-கோயிலாகக் கொண்டான்
அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும்
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானைப்
பரவுகின்றான்விட்டு சித்தன் பட்டினம் காவற் பொருட்டே -என்கிறபடியே –
திருக் கடித் தானத்தில் நிலை-என்னைப் பெறுகைக்கு ஆகையாலே
சாத்தியம் கை பட்டால் சாதனத்தில் இழிவார் இல்லையாய் இருக்க-
என்னைப் பெற்றது அத் தேசத்தில் நிற்கையாலே என்று-அத் தேசத்தோடு வந்து புகுந்தான் -என்கிறார்-

——————————————————————————————-

கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த வம்மான் மது சூத வம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தை
ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே–8-6-6-

விரோதி நிரசன ஸ்வ பாவன் வர்த்திக்கும் -திவ்ய தேசமே -சமன் கொள் வீடு தருமே –
கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும்-மநோ ஹாரா சேஷ்டிதங்கள் -ஸ்வாமி -பல காலும் கூப்பிட்ட கொடியேன்-
மாய்த்த வம்மான் மது சூத வம்மான் உறை-விரோதிகளை போக்கி
பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தைஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே–
ஏத்த -இடர் நில்லா -குறிக் கொள்மின் -குறித்துக் கொள்ளுங்கோள்

தம்முடைய மிக்க ப்ரீதியாலே-திருக் கடித் தானத்தை எல்லாரும் அடையும் கோள்-என்கிறார்-

கூத்த வம்மான் –
மனத்தினைக் கொள்ளை கொள்கின்ற-செயல்களை உடைய சர்வேஸ்வரன்

கொடியேன் –
மகா பாவியான என்னுடைய

இடர் முற்றவும் மாய்த்த வம்மான் –
தன்னைப் பிரிந்து நான் பட்ட கிலேசம் எல்லாம்-வாசனையோடே போக்கின-என்னுடைய ஸ்வாமி –

மது சூத வம்மான் உறை-
பகைவர்களை அழிக்கும் தன்மையனான சர்வேஸ்வரன்-நித்ய வாசம் செய்கின்ற தேசம் –

பூத்த பொழில் –
அவன் நித்யவாசம் செய்கையாலே-எப்போதும் மலர்களோடு கூடின பொழில் –
திருவருள் ஆகிய மழை மாறினால் அன்றோ-பூக்கள் மாறுவது –நித்ய வசந்தம் –

தண் திருக் கடித் தானத்தை –
சிரமத்தைப் போக்குகிற திருக் கடித்தானத்தை –

ஏத்த இடர் நில்லா –
இனியதனைச் செய்ய-இடரானது நமக்கு இது தேசம் அன்று என்று-
சும்மனாதே கை விட்டோடும் -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-
போக்யத்தையினால் ஸ்தோத்ரம் பண்ணினார் -வியாதி போகுமோ –
ராஜா வித்யா ராஜா குஹ்யம் -ஸூ சுகம் கர்த்தும்-ஆரம்ப தசையில் இனிமையாய் இருக்குமே –

குறிக் கொண்மின் –
இதனை ஓலைக்க வார்த்தை என்று இராதே-புத்தி பண்ணும் கோள் –

கூத்தனார் வரில் கூடிடு கூடலே
பூத்த நீள் கடம்பேறி
அத்தனை செடிகளும் காஞ்சு போக இது மட்டும்-கண்ணபிரான் திருவடி ஸ்பர்சத்தால் பூத்து இருக்க –
திருக்கண் கடாஷத்தால் முன்னமே பூத்தது-நெறிஞ்சி காடு பிருந்தாவனம் தளிரும் முறியுமாயிற்று
வனம் போக விருஷங்கள் வாட-திரும்பியதும் பூத்து குலுங்கிற்றே-ஸ்ரமஹரமான திவ்ய தேசம்

——————————————————————————–

கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே-8-6-7-

தேச ஸ்ம்ருதி மாத்திரமே நினைத்தாலே போதும் -ஸ்தோத்ரமும் பண்ண வேண்டா -உள்ளத்தில் கொண்டாலே இடர்கள் கெடும்
கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்-சர்வ சுலபம் வர்த்திக்கும் தேசம் நினைமின்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை-ஒன்று விடாமல் அளந்த -நிரதிசய போக்யன்
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்துநண்ணு திருக் கடித் தான நகரே-அசாதாரணம் என்று தொழ-
சீலாதிக்யம் அனுபவிக்க இங்கே வருவார்கள் -நகரை நினைத்தால் இடர் கெடலாமே

உங்கள் துன்பம் நீங்குவதற்கு ஏத்த வேண்டா
திருக் கடித்தானத்தை நெஞ்சாலே நினைக்க அமையும் -என்கிறார்

கொண்மின் இடர்கெட திருக் கடித் தான நகரே -உள்ளத்துக் கொள்மின் –
இடர் கெட -திருக் கடித்தான நகர் உள்ளத்துக் கொள்மின்
உங்கள் எல்லாத் துன்பங்களும் போகும்படியாக-திருக் கடித்தானத்தை மனத்தாலே நினையும் கோள் –

கோவிந்தன் –
சர்வ சுலபன் ஆனவனுடைய –

மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை –
ஒரு தாமரைப் பூவை கொண்டாயிற்று–பூமியையும் வான் உலகத்தையும் அளந்து கொண்டது –

மண்ணவர் தாம் தொழ –
இடக்கை வலக்கை அறியாத பூமியில் உள்ளார் தொழ-
பரமபதம் நித்ய சூரிகளுக்கே யாக இருக்குமா போலே-உகந்து அருளின தேசம் சம்சாரிகளுக்கு ஆகவேயாய் இருக்கை

வானவர் தாம் வந்து நண்ணு –
சம்சாரிகட்கு முகம் கொடுத்துக் கொண்டு நிற்கும் நீர்மையை-நினைத்து நித்ய சூரிகளும் வந்து கிட்டுகிற-

திருக் கடித்தான நகரை-கொண்மின் இடர் கெட உள்ளத்து –
இங்கு உள்ளார் அங்கு போவது மேன்மையை அனுபவிக்க-
அங்கு உள்ளார் இங்கே வருவது சீல குணத்தை அனுபவிப்பதற்கு-

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு திரு மலை போலே-

———————————————————————————-

தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8-

சகாதேவன் பிரதிஷடை -திருக்கடித்தானாம் –
தெற்கே மூன்று
வடக்கே நான்கு
நடுவில் ஆறு திவ்ய தேசங்கள் –
ருக்மதான் -ஏகாதேசி அனுஷ்டித்த -பெண்மணி -நாரதர்க்கு புஷப மாலை சமர்ப்பிக்க -இந்திரனுக்கு கொடுக்க -ஒற்றர் மூலம் பறித்து செல்ல –
கண்டங்கத்திரி பூ கொண்டு தீ மூட்டி -புகை பட்டு -தெய்வ சக்தி -பலி பீடம் மிளகு சேர்த்து வைத்து கூற நாராயண ஜீயர் பிடித்தால் போலே
பதினெட்டாம் படி கருப்பும் இப்படியே –
விரத பலன் பெற்று தேவ லோகம் -மூதாட்டி கொடுக்க -சுவர்க்கம் -போகும் பொழுது அற்புத நாராயணன் சேவிக்க
மாதவி -உடன் கட்டை ஏறின ஐ திக்யம் -தர்ம புத்திரர் மனைவி என்பர்
கார்த்திகை 9 நாள் உடன் கட்டை எரிய உத்சவம் தீபக் களா உத்சவம்
திருக் கொடுத் தானம் மருவி
கடிகா நாழிகை இருந்தால் வினை விலகும் -திருக் கடிகை போலே –
சங்கு கை பிடித்த மூன்று அடி உயரம் -அரசன் -வர சங்கு ஊதி திறக்க முயல உயிர் அத்ரி கீழே விழுந்தானாம் –
சமயம் பார்த்து சேவிக்க வேண்டும் என்று காட்டி அருள –
பரம பதாதி ஸ்லாக்க்யமான ஸ்தானங்கள் இருக்க ஆழ்வார் திரு உள்ளமும் திருக் கடித் தானமும் இருந்தன
தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்-ஸ்தான நாகர்கள் -இருப்பிடங்கள் -சிறந்த சிறப்புக்கள் உண்டே
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே-ஆச்சர்ய பூதன் -ஞானம் சேஷ்டிதங்கள் கொண்டவன்
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்தான நகரும் தனதாய்ப் பதியே-நாயனார் -இத்தையே -சீர் தூக்கிப் பார்த்து விலக்ஷணமான தேசம் –
ஸ்ரீ ரெங்கம் பாட வந்தவர் திருமலை பாடினால் போலே ஆழ்வார் திரு உள்ளம் வர தங்கும் திவ்ய தேசம்
-உயர்ந்த -தேசம் -சாதனம் அனுஷ்ட்டித்து வர வேண்டும் -நேராக வந்தால் சத்மிக்காதே

நகரங்கள் பலவும் உண்டாய் இருக்கச் செய்தேயும்–என்னுடைய நெஞ்சையும் திருக் கடித் தானத்தையும்
தாயத்தால் கிடைத்த இடமாக விரும்பி-இருக்கிறான் -என்கிறார் –
ரதிங்கத -ஆசைப்பட்டு வந்ததால் ஸ்ரீ ரெங்கம் இதி –
பண்டிதம் புண்டரீகம் -சடாரி தலையில் -வேதாந்தம் தலையில் -ஹஸ்தி கிரியிலும் இருப்பீர் -கூரத் ஆழ்வான்- –

வான் இந்நிலம் கடல் எங்கு எங்கும் தலை சிறந்த தானம்-நகர்கள் முற்றும் எம் மாயற்கே ஆன விடத்தும் –
மேலில் உலகங்களும்-
பூமியிலும் கடலிலும்-
கண்ட இடம் எல்லாம்-
சிலாக்கியமான இருப்பிடமான-நகரங்கள் முற்றும்
என் பக்கலிலே காதலை உடையனான ஆச்சர்யத்தை உடையவனுக்கு-ஆக இருக்கச் செய்தேயும் –

என் நெஞ்சும் திருக் கடித் தான நகரும் தான தாயம் பதியே –
என் நெஞ்சும் திருக் கடித் தான நகரும்
தனக்கு தாய பாகமாகக் கிடைத்த இடமாக
விரும்பி இரா நின்றான்

தாயப்பதி பரம்பரை சொத்து-இயற்கையாக-தாயாதி தாயத்தை ஆளுகிறவர்கள்-தானே வரும் –
ஹச்திசைலே–பித்ருரார்ஜிதம் -கிஞ்சித் வைராக்ய பஞ்சகம்
மலை மேல் தாய பிராப்தம் பிதாமகர் சம்பாதித்த தனம்-நான் சம்பாதிக்க வில்லை -அனுபவம் அவகாசம் இருக்காதே
ந பித்ரார்ஜிதம் -தகப்பனார் இஷ்டம் வேண்டுமே அனுபவிக்க-பைதாமகம் -தகப்பனாரும் கேட்க முடியாதே
birth right உண்டே –தாயப்பிராப்தம் இது தான்

————————————————————————————————

தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை
தேசத்தமரர் திருக்கடித் தானத்துள்
ஆயர்க்கதிபதி அற்புதன் தானே–8-6-9-

நித்ய வாசம் செய்யும் ஆச்சரிய பூதன் -ஸ்ரீ கிருஷ்ணன் தானே -அல்லாத ஸ்தானங்களில் உள்ளான் –
தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்-அசாதாரணமான பதிகள்-பூ மண்டல அர்ச்சா ஸ்தலங்கள்
சீலாதி குண சம்பத் கொண்டு
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை-ஆச்சர்ய ஸூந்தர்ய விக்ரக விசிஷ்டன் குண விசிஷ்டன் பொருந்தி
பர வ்யூகத்திகளில் காட்டி வாசி -வீறு பட எழுந்து அருளி இருந்தான்
தேசத்தமரர் திருக்கடித் தானத்துள்-தேஜஸ் மிக்க அமரர்
ஆயர்க்கதிபதி அற்புதன் தானே-ஆச்சர்ய சேஷ்டிதங்கள் -கோப குமாரர்களுக்கு ஸ்வாமி -சகாதேவன் சம்பந்தம் உண்டே
-பரிமாற்றம் -தூது நடந்த -பொழுது சம்வாதம் -உன்னை சிறை வைத்தால் சண்டை நடக்காதே -கட்டி வைத்து -அவனே விடுவிக்க –
அக்ர பூஜை பொழுதும் -ஒரு பிறவியில் இரு பிறவி ஆனார் இருவர் திரு மழிசை ஆழ்வார் -ஸ்ரீ கிருஷ்ணன் –
ஆஷேபம் அக்ர பூஜை பொழுது இருவருக்கும் அங்கு பெரும் புலியூர் அடிகள் இங்கு சாகா தேவன் -சொல்ல பூ மாரி பொழிய
-பீஷ்மர் துரோணர் மேலே விழ வில்லை -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை என்றவன்

அல்லாத திருப்பதிகளும் எல்லாம் அவனுக்கு அப்படியே -தாயப்பதிகள்-அன்றோ -என்னில்
அது அப்படியே யாகிலும்-
என்னோடு கிட்டுகைக்கு உறுப்பான நிலம் என்று திருக் கடித் தானத்திலே மிக்க காதலன் ஆனான்-என்கிறார்-
இங்கு மாயத்தினால் வீற்று இருந்தான் என்றது சாதனமாக இருந்ததால் என்றபடி –

தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்-
மிகவும் வேறுபட்ட சிறப்பினை உடையதாய்-பழையதாய் வருகிற தலங்கள் எங்கும் –

மாயத்தினால் –
காதலாலே -என்னுதல்–அபி நிவேசம் /மோகம் வ்யாமோஹம் /பரிவு -பொங்கும் பரிவு /மால் நெடுமால்
இச்சையாலே -என்னுதல்
மாயா வயுனம் ஞானம் -நிகண்டு

மன்னி வீற்று இருந்தான் –
விரும்பி-தன் ஐஸ்வர்யம் எல்லாம் தோற்றும்படி-இருந்து அருளினவன் –
அன்றிக்கே
ஐஸ்வர்யத்தால் வந்த வேறுபாடு தோற்ற இருந்தவன் -என்றுமாம் –

உறை-
நித்ய வாசம் செய்கிற –

தேசத்தமரர் திருக்கடித் தானத்துள் –
ஒளியை உடைய நித்ய சூரிகளுக்கு-அடையத் தக்க பூமியான-திருக்கடித் தானத்துள் –

ஆயர்க்கதிபதி –
ஆயர் குலத்தினனாய் வந்து அவதரித்து-அவர்களில் தலைவன் ஆனவன்-
கோப சஜாதீயனாய் அவதரித்து -யாதவர்கள் -யாது குலம் ஷத்ரியன் -முடி இழந்த வம்சம் -இடையனாக மாடு மேய்த்தான்
-யாதவர் என்றால் இடையர் என்பது இல்லை -வம்ச பூமிகளை உத்தரிப்பிக்க வராக கோபாலர் யயாதி சாபம் –

அற்புதன் –
ஆச்சர்யமான படிகளை உடையவன் –
தானே
உகந்தருளின தேசங்கள் எல்லாவற்றிலும் விருப்பம் உண்டாகிலும்
என்னைப் பெறுவதற்காக திருக் கடித்தானத்திலே-தன் மேன்மையும் நீர்மையும் எல்லாம்-பிரகாசிக்க நின்றான் -என்கை –
தேசத்தமரர் -மேன்மை -ஆயருக்கு அதிபதி நீர்மை -இரண்டையும் காட்டிய அற்புதன் -தாமோதர நாராயணன் போலே –

————————————————————————————————-

அற்புதன் நாரணன் அரி வாமனன்
நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே-8-6-10-

நிதான பாசுரம் -நெஞ்சுக்கு வருவதற்காக -உச்சியில் வர சாதமிக்க -1-9- போலே இங்கும் –
அற்புதன் நாரணன் அரி வாமனன்-அனுபாவ்யமான சேஷ்டிதங்கள் -அனுரூபமான சம்பந்தம் உடையவன் -அனுபவ விரோதி நிரசன சீலன் -ஹரிஹரதி பாபாநி –
அர்த்தியாய் வந்து அனுபவிப்பவன் -இந்திர கார்யத்துக்கே போனவர் தமது கார்யம் செய்ய
நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்-சாத்ய ஹிருதயம் மேவுதல் ஆழ்வார் திரு உள்ளம் -சாதன பூமி இது -நிற்பது -உறுப்பாக
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்-நல்ல புகழ் -வேத கோஷம் -அநந்ய பிரயோஜனர் — புகழ்
கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே-கற்பக வல்லி நாயகி சமேத அற்புத நாரணன் -காட்டி அருளுகிறார் –
ஸ்பஷ்டம் திரு நாவாயில் தான் தனி சந்நிதி —
புஷ்கரம் -வன ரூபம் நைமிசாரண்யம் -அங்கும் திரு நாமம் உண்டே பெருமாளுக்கும் தாயாருக்கும்
நிற்பது திருக் கடித் தானம் -மேவி இருப்பது என் நெஞ்சகம் -முதல் வேற்றுமை –
இருந்தாலும் இதற்காக அது -என்று கொள்ள வேண்டும் -சப்தமியாக கொண்டு –

என்னைப் பெருமளவும் திருக் கடித் தானத்தில் நின்றான்-
என்னைப் பெற்ற பின்பு நிற்பதும் இருப்பதும்-என் நெஞ்சிலே -என்கிறார்

நாரணன் –
தன் உடைமையை வீட்டுக் கொடாத வத்சலன்-பஹு வரீஹி சமாசம் —

அரி –
அடியவர்கள் விரோதிகளை-அழிக்கின்ற ஆற்றலன் –

வாமனன் –
தன்னைச் சிறுகவிட்டு-அடியார்கள் விருப்பங்கள் அனைத்தையும்-முடிக்குமவன்

அற்புதன்-
இப்படிகளாலே-ஆச்சர்யத்தை உடையவன் –

நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே –
அநந்ய பிரயோஜனர் என்னும் புகழை உடைய-வைதிகராலே உச்சரிக்கப் படுகின்ற
நாலுவகை வேதங்களும் முழங்கா நின்றுள்ள-
கற்பக வனத்தை உடைய-திருக் கடித் தானத்திலே அவன் நிற்பது –
மேவியிருப்பது என்னெஞ்சகம்-நிறைய விசேஷங்கள் சொல்லி என் நெஞ்சகம் அருகே சாம்யமாக சொல்ல என்றபடி –
அன்றிக்கே –
திருக் கடித் தானத்து நாராயணன் அரி வாமனன் அற்புதன் நிற்பதும் என்னெஞ்சகம்–மேவி இருப்பதுவும் என்னெஞ்சகம் -என்னுதல் –
திருக் கடித் தானம் -எனபது ஏழாம் வேற்றுமை பொருளில் வந்த முதல் வேற்றுமை-

—————————————————————————————-

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-

பரமபத பிராப்தி பலன்
சோலைத் திருக் கடித் தானத்துறை திருமாலை மதிட் குருகூர்ச் சடகோப சொல்-ஸ்ரீயப்பதியைப் பற்ற -பற்றி அருளிச் செய்த –
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்-கலந்து -பாலும் அமுதும் -வாசகம் பொருள் –
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-அற்புதன் நாரணன் வியந்து இருத்தும் -என்று தருவித்திக் கொள்ள வேண்டும் –
உத்துங்க தேசம் பரமபதம் பிரதிஷ்டை ஆக்குவான்
மாயக் கூத்தன் விஸ்லேஷம் எல்லியும் காலையும் சம்ச்லேஷம் மாரி வந்தால் போலே இல்லாமல் —

நிகமத்தில்
இத் திருவாய்மொழி கற்றவர்களை-இது தானே திரு நாட்டில் கொடு போய் விடும் -என்கிறார்

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு மாலை –
சிரமத்தைப் போக்குவதாய்-காட்சிக்கு இனியதான-சோலையை உடைய திருக் கடித் தானத்திலே
நித்ய வாசம் செய்கிற திருமகள் கேள்வனை –

மதிட் குருகூர்ச் –
சம்சாரம் காரணமாக உண்டாகிற-பாப கூட்டங்களுக்கு புக ஒண்ணாத-அரணை உடைய திருநகரி –

சடகோப சொல் –
ஸ்ரீ வால்மீகி முனிவராலே சொல்லப் பட்ட ஸ்ரீ ராகவனுடைய சரிதை –ரகுவர சரிதம் முனிப்ரணீதம் -பால -2-43-என்னுமாறு போலே –

பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும் –
பாலோடு அமுதன்ன ஆயிரம் என்னுதல்-
பாலோடு அமுதன்ன இப்பத்து என்னுதல்-
வாச்சிய வாசகங்களின் சேர்த்தி இருக்கிறபடி –
பால் -என்றது-சோலைத் திருக் கடித் தானத்துறை திருமாலை–அமுது -என்றது-சடகோபன் சொல் வாசகத்தை –
இது ஆளவந்தார் நிர்வாஹம் –

இப்பத்தும் வியந்து மேலை வைகுந்தத்து இருத்தும் –
சம்சாரத்தில் இதனைக் கற்பவன் ஒருவன் உண்டாவதே-என்று ஆச்சர்யப் பட்டு
எல்லா உலகங்கட்கும் மேலான பரம பதத்தில் கொடு போய் வைக்கும் -என்றது
மாயக்கூத்தா -என்ற திருவாய் மொழியில் உண்டான விடாய்-நடையாடாத தேசத்திலே வைத்து
ஒரு நாளும் பிரியாத அனுபவத்தைக் கொடுக்கும் -என்றபடி-அதிஷ்டான தேவதை எம்பெருமான் கொடுக்கும் என்றபடி –
சாம வேத சமம் -திருவாயமொழி -நடையாடுமே -அங்கும் வைகுந்தம் காண்மினே -குருகூர் ஈரரசு பட்டு இருக்குமே –
தெள்ளியீர் அனுபவம் இங்கே போலே மாயாக் கூத்து விஸ்லேஷ அனுபவம் இங்கே –

—————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சத்யக-சடக்கென
ஸூ சங்கம் அக்ருதவ்
ப்ரீதி சமிதி திவா ராத்ரி
ஹரி மாம் ஆப்து ஸநைக்கி மன
வைகுண்டதோ அதிகதவாம்
பஹுமதிம் கொசித் ஸ்தானே
மதி மித்யாம் அவன்யாம்

——————————————————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பாதத்வாத் ஸ்ரீ துளசியா
ஆஸ்ரித ஹ்ருத சயநாத்
ஸ்ரீ வத்சத பாவாத்
ஆச்சர்ய உபக்ரமத்வாத்
சுர கான பஜானாத்
வைரி நிரசனா
கோவிந்தத்வாத்
அசேஷ அபிமத -விஷய தகா அபீஷ்ட சச்சித்தகத்வாத் -8/9
சார்வாகாரத் வாத்
கிருஷ்ணம் -ஆயர்கள் அதிபதி –

—————————————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 76-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என -நல்லவர்கள்
மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து———-76-

———————————————————————–

அவதாரிகை –
இதில்
இவர் விடாய் தீர்
அடுத்து அணித்தாய் வந்திருந்து
பின்பு தம்முடனே கலந்தபடி பேசின ஆழ்வார் பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இவருடைய பெரு விடாய் கெடும்படி
இவரோடு வந்து சம்ச்லேஷிக்கக் கோலி
அடுத்து அணித்தாக திருக் கடித் தானத்திலே வந்திருந்து
தம் பக்கலிலே அத்ய அபி நிவிஷ்டனாய் இருக்கிறபடியை
அவன் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டர் ஆகிற
எல்லியும் காலையில் -அர்த்தத்தை
எல்லி பகல் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————————————————-

வியாக்யானம்–
எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு மெல்ல வந்து தான் கலக்க வேணும் என –
ராத்ரிந்திவம் அனுவர்த்தித்த
ஆர்த்தி
சமிக்கைக்கு
மந்த கதியாய் வந்து அனுபவிக்க வேணும் என்று நினைத்து
முந்துற
பரத்வாஜ ஆஸ்ரமம் கத்வா -என்னுமா போலே –

நல்லவர்கள் மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு –
நற்புகழ் வேதியர் நான்மறை நின்று எதிர்-கற்பகச் சோலை திருக் கடித் தானம் -என்றும்
செல்வர்கள் வாளும் திருக் கடித் தானம் -என்றும்
தேசத் தமரர் திருக் கடித்தானம் -என்றும்
அங்குற்றைக்கு அனுகூலர் ஆனவர்கள்-நித்ய வாசம் பண்ணும் திருக் கடித் தானத்திலே
தம்மை விஷயீ கரிக்க சர்வேஸ்வரன் வந்து இருக்க-
அவ்விருப்பைக் கண்ட ஆழ்வார் –
இந்நிலையைச் சொன்னான் இருந்து –
அதாவது –
திருக் கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் -என்றும்
உள்ளம் தோறும் தித்திப்பான் திருவமர் மார்வன்-திருக் கடித்தானைத்தை மருவி உறைகின்ற மாயப் பிரான் -என்றும்
தேசத் தமரர் வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே -என்றும்
நேசத்தினால் நெஞ்சு நாடு குடி கொண்டான் -என்றும்
கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை-கோயில் கொண்டான் அதனோடு என் நெஞ்சகம் -என்றும்
என் நெஞ்சும் திருக் கடித் தான நகரும் தனதாயப்பதியே -என்றும்
அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பது-கற்பகச் சோலை திருக் கடித் தானம்-மேவி இருப்பது என் நெஞ்சகம் -என்றும்
இப்படி
இங்குற்றை இருப்பு
தம்மை விடாய் கெட விஷயீ கரிக்கைக்காக என்றும்
இஸ் ஸ்வபாவத்தை பொருந்தி இருந்து-அருளிச் செய்தார் -என்கை
அவன் வரவாற்றாலே –
மாயக் கூத்தனில் விடாய் தீர்ந்து-
பொருந்தி இருந்து
அருளிச் செய்தார் -என்கை-

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: