பகவத் விஷயம் காலஷேபம் -164- திருவாய்மொழி – -8-5-1….8-5-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

மாயக் கூத்தா பிரவேசம் –
மேல் இரண்டு திருவாய் மொழிகளிலுமாக
பகவான் ஆகிய பரம்பொருள் -பகவத் தத்வம் -பிறராலே அழியப்புகுகிறது -என்று வெறுத்தார் –
இங்கு ஓர் பரிவர் இல்லையே என்று அஞ்சி -8-3-கம்சாதிகளுக்கு அஞ்சி -8-4- –
இதில் தம்முடைய-ஆர்த்த நாதம்- துயர ஒலியாலே அவனை அழிக்கப் பார்க்கிறார் –

மேல் திருவாய் மொழியில் அவனுக்கு பரிவர் உளர் என்று பயமும் தீர்ந்து-வடிவு அழகினை அனுபவித்தாராய் நின்றார் –
அவ் வழகு நெஞ்சிலே -திகழ என் சிந்தையுள் இருந்தான் -8-4-3-என்றபடி ஊற்றிருந்து–
பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை -புறக் காட்சியிலே விருப்பம் பிறந்து –அது பெறாமையாலே
மேலே பட்ட கிலேசங்கள் எல்லாம் ஒன்றும் அல்ல-வாளேறு காண தே ளே று கழியுமா போலே அவை அஸத் சமம் என்னும் படி –
இதற்கு அது ஒரு கலை மாத்ரம் -என்னும்படி நொந்து-
காட்டுத் தீ கதுவினாரைப் போலே தாபத்தை உடையராய்
தம்மில் காட்டிலும்-கண்ணும் வாயும் துவர்ந்து – விடாய்த உறுப்புகளை உடையராய் –
என் விடாய் எல்லாம் தீரும்படி திவ்ய உறுப்புகளோடு வர வேண்டும் -பவள வாயும் நாலு தோளும்
அழகிய திரு முடியோடு வர வேண்டும் -முடி சேர் சென்னி –
மேகம் போலே வர வேண்டும் -தூ நீர் முகில் –
அழகிய வடிவோடு வர வேண்டும் -கொண்டல் வண்ணா-
உதய காலத்தில் சூர்யனைப் போலே பெரிய புகரோடே வர வேண்டும் -கரு நாயிறு உதிக்கும்
-இள நாயிறு இரண்டு போல் –அபூத் இல் பொருள் உவமை
என்றாப் போலே கூப்பிட்டு–
பின்னையும் அவன் வந்து முகம் காட்டாமையாலே –
எங்கே காண்கேனே –
நாம் இந்த கிலேசத்தோடே முடிந்து போம் இத்தனை ஆகாதே -என்று இழவோடே தலைக் கட்டுகிறது-

—————————————————————————-

மாயக் கூத்தா வாமனா
வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே
ஒரு நாள் காண வாராயே-8-5-1-

நிரதிசய அனுபாவ்யமான –வடிவு அழகை உடைய வாமனன் -வாமானி சுகானி நயன -சிரமஹரமான-பிராதுர்பாவம் -அனுசந்தித்து
– பத்ம தடாகம் -நடந்து வர வேணும் என்கிறார்
5-6 முகில் வண்ணன் ஏறக் கொலோ -பேசும் மேகம் அங்கே –
மாயக் கூத்தா வாமனா-ஆச்சர்யமான சீல -வாமனன் சீலன் -சீரை -ராமானுஜன் -வியாபாரங்கள் -உடைய
மநோ ஹாரி சேஷ்டிதங்கள் உடையவன் -மகா மேரு மஞ்சாடி போலே சுருக்கி -திரட்டுப்பால் -போக்யமான வாமன வேஷம்
வினையேன் கண்ணா கண் கை கால்-சேவிக்க முடியாத பாவியேன் -விருப்பப்பட்ட படி அனுபவிக்க முடியாமல் –
கண்ணா ஆசன்னனாய் பிறந்து வைத்து -த்வாபர யுகத்திலே வந்தும் -பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே -கை நீட்டலுக்குத் தாண்டி
அனுபவிக்க ஆசைப் படும் திருக்கண்கள் -அபய பிரதானமான திருக் கைகள் -ஆஸ்ரயணீயமான திருவடிகளை
தூய செய்ய மலர்களா-அழுக்கு அற்ற -செவ்வி மாறாத தாமரை போலே
சோதித் செவ்வாய் முகிழதா-மொட்டு போலே மந்த ஸ்மிதம் உஜ்வலமான-மலராமல் புன் சிரிப்பு –
சாயல் சாமத் திருமேனி-ஒளியை உடைய ஸ்யாமளமான
தண் பாசடையா தாமரை நீள்-பச்சைப்பாசி -பத்ம தடாகம் -புண்டரீக தடாகம்
வாசத்தடம் போல் வருவானே-பெரிய பரிமள உத்தரமான
ஒரு நாள் காண வாராயே-ஒரு நாள் காணும்படி வந்து அருளாயே –

என் விடாய் எல்லாம் தீரும்படி ஒரு தாமரைத் தடாகம் போலே
வந்து தோற்றி அருள வேண்டும் -என்கிறார்-

மாயக் கூத்தா –
ஆச்சயர்யங்களையும்-
மனத்தினைக் கொள்ளை கொள்ளுகிற செயல்களையும்-உடையவனே
இந்த்ரனுடைய இரப்பைத் தலைக் கட்டுக்கைக்காக
அன்றே பிறந்து – அன்றே வளர்ந்த – அன்றே இரப்பிலே அதிகரிக்கையும் –
மகாபலியினுடைய வேள்விச் சாலை அளவும் காட்சிக்கு இனியதாம்படி நடந்து சென்று –
மாவலி -என்றாப் போலே சில மழலைச் சொற்களை சொல்லுதல்-முக்த ஜல்பிதம் –
முதலான முதலான மனத்தினைக் கொள்ளை கொள்கின்ற செயல்களையும் உடையவனே –
நடந்து சென்ற நடை வல்லார் ஆடினாப் போலே இருக்கிறதாயிற்று இவர்க்கு–அதனால் கூத்தா -என்கிறார் –
தாண்டவம் பண்ணுவது போலே நம் பெருமாள் -திருவடிகள் பட்டர் –

வாமனா –
இரந்தும் இரந்தவர்க்கு ஈகை தானே பிரயோஜனமாக இருக்கின்றவன் காண்-
தன்னை காண்கையே பிரயோஜனமாக இருக்கிற என்னை-இரப்பாளனாக்கி இரங்காது இருக்கிறான் –
நடந்ததே கூத்து -நடை உக்த்யாதிகளுக்கும் உப லக்ஷணம் -ஆர்த்தி உடன் பிரபந்தம் -வாமனா என்னுமது
-பிரயோஜ நாந்தரர்களுக்கும் கொடுப்பவன் அன்றோ

வினையேன் கண்ணா –
ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்தது இந்தரனுக்கு ஆனாப் போலே-கிருஷ்ணனாய் வந்து அவதரித்தது தமக்காக என்று இருக்கிறார் –
அன்றிக்கே
எல்லாருக்கும் பொதுவானவனுடைய அவதாரம் ஆகையாலே-
உகந்தவர்களுக்கு எல்லாம் -எனக்கு -என்னலாய் இருக்கையாலே சொல்லுகிறார் -என்னலுமாம்-
மற்றை அவதாரங்களில் காட்டில் கிருஷ்ணாவதாரம் அண்ணிமையாலே சொல்லுகிறார்–
பல்லிலே பட்டுத் தெரித்தாற் போலே அவதாரத்துக்கு பிற்பட்ட படியாலே தன்னை -வினையேன் -என்கிறார் –

கண் கை கால் தூய செய்ய மலர்களா –
கிட்டினாரோடு முதல் உறவு பண்ணும் கண்-
நோக்குக்கு தோற்றவர்களை அணைக்கும் கை-
பரிசத்துக்கு தோற்று விழும் திருவடிகள்-
அங்கே கிடந்து– தலை எடுத்து அனுபவிக்குமதாய்-கண்ட போதே– விடாய் தீரும்படியான
கரியதான திருமேனிக்கு பரபாகமான நிறத்தை உடைத்தான தாமரைப் பூவாக –

சோதிச் செவ்வாய் முகிழது வா –
புகரை உடைத்தாய் –
சிவந்து இருக்கிற திரு அதரமானது அதில் அரும்பு ஆக –
உரையாடாதவன் விருப்பம் இல்லாதவன் -என்று -அவாக்யா அநாதரக -சாந்தோக்யம் -என்னப்படும் இறைவன் ஆகையாலே-
மிக்க கம்பீர்யத்தாலே புன்சிரிப்பு மலர்ந்து தோன்றும் அளவே அன்றோ இருப்பது -ஆகையாலே -அரும்பு -என்கிறது

சாயல் சாமம் திருமேனி தண் பசுமை அடையா –
ஒளியை உடைத்தாய்-கரிய நிறமான திருமேனி-குளிர்ந்த பச்சிலையாக –
புருஷா புண்டரீகாயா ரூபம் தத் பரமாத்மனா -வராஹ புராணம்
பரமாத்வான புருஷன் தாமரை இலை நிறம் போன்றவன் -என்றும் –
அக்கமலத்து இலை போலும் திருமேனி -திருவாய்மொழி -9-7-3-என்றும் வருகின்றபடி

தாமரை நீள் வாசம் தடம் போல் வருவானே –
பரப்பு மாறாத் தாமரை மலர்ந்து இருப்பதாய்-
-ஏகார்ணவத்தை -மகா பிரளயத்தை ஒரு தடாகம் ஆக்கினாப் போலே பரந்து இருப்பதாய்-
அப்பரப்பு அடங்கப் பரிமளத்தால் நிரம்பி இருப்பது ஒரு தடாகம்-
நடந்து வருமாறு போலே ஆயிற்று –
பரிமளம் முன்பே அலை எறிய வரும்போது இருப்பது –
சர்வகந்த -என்னக் கடவது அன்றோ –

வருவானே-
வரும் தன்மையானே-முன்பு தம் பக்கல் வரும்படியை உபகாரத்தின் நினைவாலே சொல்லுகிறார்-

ஒரு நாள் –
ஒரு கால் நாக்கு நனைக்க என்பாரைப் போலே-

காண-
வந்தால் கொள்ளும் பிரயோஜனம் காணும் இதுவே-
ஒரு தேச விசேஷத்திலும் எப்போதும் காண்கையே அன்றோ இருப்பது-
சதா பஸ்யந்தி சூரயா –அப்பேறு பெறும்படி

வாராய் –
அததலையாலே வரக் காண இருக்குமவர் அல்லீரோ-
தான் விரும்பிய ஜீவனுக்கு இந்த பரமாத்வாவானவன் தனது திருமேனியைக் காட்டுகிறான்–என்கிறபடியே-
தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம் -முண்டக -2-3-
அன்றிக்கே தாம் கிட்டிக் காணுமது ஸ்வரூப விரோதமாய் இருக்கும் -என்னுதல்-

ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோஷ்மி -வெய்யில் காலத்தில் தடாகம் போலே-தாப த்ரயங்கள் அடங்க பரமாத்மா அனுபவம் –

———————————————————————

காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால்
இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும்
கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி
முடிசேர் சென்னி யம்மானே–8-5-2-

தர்ச நீயமான மயிர் முடி கேச பாசம் -கிலேசம் தீரும் படி வந்து அருள வேணும் -கேசம் கண்டு கிலேசம் தீரும் படி –
காண வாராய் என்று என்று-வடிவைக் காண பல காலும் கூப்பிட்டு
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்-உலர்ந்து -பசை அற
நாணி நன்னாட்டலமந்தால்-விபரீத லக்ஷணை நல் நாடு -லஜ்ஜித்து -சுவ அபிமதம் பெற்று உகந்து இருக்கும் நல் நாடு
-சம்சாரிகள் உண்டியே உடையே உகந்து -அவர்கள் அபிப்ராயத்தால் -சேஷத்வம் நிரூபணமாக உள்ள அடியேன் – -சம்பந்தம் உணர்ந்த நான் -அலமந்து
இரங்கி யொருநாள் நீ யந்தோ-கிருபை பண்ணி -உன்னைக் கண்ணாடி புறத்தில் பார்த்து இருந்தால் நீ அறிவாய்
-நொடி பிரிந்தாலும் தரிக்க முடியாமல் -வர வில்லையே அந்தோ -ஆசைப் பட்டு கூப்பிட்டாலும் வரலாகாதோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும்-அபூத உவமை
கருமா மாணிக்கம்-மகத்தான பர்வதம் -உதய கிரி ரத்னம் போலே -நீல ரத்னம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி-கரடுமுரடான மலை இல்லை -நாள் பூ போலே புதுமை மாறாத மலை -திருக் குழல் கறுப்பு
சூரியன் -திரு மேனி மலை போலே
செவ்வி அழியாத -மலை என்றபடி -தேஜஸ் உடைய மயிர் முடி
முடிசேர் சென்னி யம்மானே-சேர்ந்த உத்தம அங்கம் உடைய ஸ்வாமி –

என் விடாய் கெடும்படி-
அழகிய மயிர் முடியுடன் வந்து தோன்றி அருள வேண்டும்-என்கிறார் –

காண வாராய் என்று என்று –
ஒருகால் காண வாராய் -என்றால்
வரக் காணாவிட்டால் -ஆறி இருக்க வல்லர் அல்லீரே –
பின்னையும் காண வாராய் காண வாராய் -என்பார் ஆயிற்று-
காரார் திருமேனி காணும் அளவும் -சீரார் திருவேங்கடம் -எங்கும் போவார் –

கண்ணும் வாயும் துவர்ந்து –
எங்கனே வரும் என்று அறியாமையாலே திக்குகள் தோறும் பார்த்து கண்கள் பசை அற உலர்ந்தன என்றது –
கண்ணநீர் கைகளால் இறைக்கும் -திருவாய்மொழி -7-2-1-என்னும் நிலையும் கழிந்தது -என்றபடி –
கூப்பிட்டு வாயும் பசை அற உலர்ந்தது –

அடியேன் நாணி –
அத்தலைக்கு வரும் குற்றம் நம்மது ஆம்படியான சம்பந்தம் உடைய நான் நாணி -என்றது
இவனை உலகத்தார் என் சொல்லுவார்களோ -என்று அதற்காக நாணி -என்றபடி –
அன்றிக்கே –
பிரயோஜனத்தின் பொருட்டு கூப்பிடுகை அன்றியே-முறை அறிந்து காண்கைக்கு கூப்பிட்ட நமக்கு தன்படி
அழகியதாய் இருந்தது -என்று நாணி -என்னுதல் –

நல் நாடு –
எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் இருப்பிடம் ஆகையாலே விபரீத லஷணையால் சொல்லுகிறார் –
அன்றிக்கே
ஐம்புல இன்பங்களின் அனுபவத்தாலே மக்கள் களித்து வசிக்கும் தேசம் ஆகையாலே சொல்லுகிறார் ஆதல் –
அன்றிக்கே
பிள்ளான் -எம்பெருமானைப் பெற்று அனுபவிக்கும் நாடு காண் -என்பாராம்–இல்லையாகில் கூப்பிட்டார்களோ -என்று-
விபரீதமாக -குத்தலாக -கூப்பிடாமல் உண்டியே உடையே உகந்து போகிறார்களே -கூப்பிட வில்லை என்றால் அடைந்தார்கள் அன்றோ –

அலமந்தால் –
தடுமாறினால் –

இரங்கி-
உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் பிறர் கேட்டிற்கு இரங்க வேண்டாவோ -என்றபடி-
முனிவர்களுக்கு உள்ள இரக்கமும் இல்லையோ -என்றபடி-வால்மீகி -ஆன்ரு சம்சயம் -சீதை படும் பாட்டு கண்டு கூட்டிப் போனார் –

யொருநாள் –
பலநாள் வேண்டும் என்கிறேனோ –

நீ –
சதா பஸ்யந்தி ஸூரய– நெடு நாள் கண்டுகொண்டு நிற்க வேண்டும்படி வேறுபட்ட சிறப்பினை உடைய நீ –

யந்தோ –
ஹந்த -ஐயகோ -உன் வேறுபட்ட சிறப்பினை அறியாது ஒழிந்தால்–என் துயரத்தையும் அறியாது ஒழிவதே –

காண வாராய் –
பிரயோஜனத்தின் பொருட்டு அழைக்கிறேனோ-காண்கையே பிரயோஜனம் –

கரு நாயிறுதிக்கும்-
கரு நாயிறு உதிக்கும் –
கரிய நிறத்தின் உடைய சூரியன் தோன்றுகிற-

கருமா மாணிக்கம் நாள் நன்மலைபோல் –
அந்த சூர்யன் உதிக்கிற உதயகிரி இருக்கிறபடி –
நீலமாய்
பெரு விலையதான இரத்னமலை போலே
நாள் பூ என்னுமா போலே புதியதாய் காட்சிக்கு இனியதான மலை ஆதலின் நாள் நல் மலை -என்கிறது-
அன்றிக்கே
கரு மா மாணிக்கம் நல் மலை மேலே
கரு நாயிறு உதிக்கும் பொழுது போலே-
முடி சேர் அம்மான் -என்று கூட்டிப் பொருள் கோடலுமாம் –
நாள் -பொழுது –

சுடர்ச் சோதி முடி-
மிக்க புகரை உடைய முடி

கரு நாயிறு உதிக்கும் -என்கிற திருஷ்டாந்த பலத்தாலே முடி என்றது மயிர் முடியைக் காட்டுகிறது –கிரீடம் -செந்நாயிரு –

சேர் சென்னி –
அதற்குப் பற்றுக் கோடான திருமேனி இரத்தின மலை போலே யாயிற்று இருப்பது –சென்னி -திரு மேனிக்கு உப லக்ஷணம் –

யம்மானே –
சர்வேஸ்வரனே –
சம்சாரி முத்தனாய்ச் சென்றால் தாபத்தைப் போக்குவதற்காக இவனால் செய்யப்படுவது-
திருக் குழலை பேணுதல் இத்தனை –
கேசவன் கிலேசத்தை போக்குகிறவன்-என்றே அன்றோ இருப்பது-
கிம் த்வயா நார்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -எனபது பிரமாணம்-
நரகே -பரிபாஷிதா -யமன் -பேசி -கேசவன் திருவடிகளில் ஒரு நாளாவது புஷபம் போட முடிய வில்லையே –சம்சாரம் வெளி ஏற இதுவே வகை —
கேசம் காணாத கிலேசம் போக்கவும் இதே வேணுமே –

———————————————————————————————

முடி சேர் சென்னி யம்மா
நின் மொய் பூந்தாமத் தண் துழாய்
கடி சேர் கண்ணிப் பெருமானே
என்று என்றே ஏங்கி அழுதக்கால்
படிசேர் மகரக் குழைகளும்
பவளவாயும் நால் தோளும்
துடி சேரிடையும் அமைந்ததோர்
தூ நீர் முகில் போல் தோன்றாயே–8-5-3-

ஆபரண அவயவ சோபை உடைய மேகம் போலே -வள்ளல் தன்மை பிரகாசிக்கும் படி
முடி சேர் சென்னி யம்மா-உபய விபூதி நாதத்வம் -சென்னி கிரீடம் -ஆதி ராஜ்ய ஸூ சகம் -மௌலி -ஸ்வாமி
நின் மொய் பூந்தாமத் தண் துழாய்-உனக்கு அசாதாரணமான தர்ச நீயமான ஒளியை உடைய குளிர்ந்த
கடி சேர் கண்ணிப் பெருமானே-துளசி தரித்து -வாசனை மிக்கு -சர்வாதிகன்
என்று என்றே ஏங்கி அழுதக்கால்-அழுது பிரார்த்தித்தால் -நீயே வர இருக்க அழுத்தும் வராமல் அவத்யம் அன்றோ
படிசேர் மகரக் குழைகளும்-திருமேனியில் சேர்ந்த காது குண்டலங்கள்
பவளவாயும் நால் தோளும்-திரு ஆதாரம் திருத்த தோள்கள்
துடி சேரிடையும் அமைந்ததோர்-உடுக்கை போலே சிறுத்த இடை
தூ நீர் முகில் போல் தோன்றாயே-மேகம் போலே -உதார ஸ்வ பாவம் -உடன் வருகையை பிரயோஜனம்
நிர்மலமான நீர்மையால் பூர்ணம் -அபூத பூர்வம் -தோன்ற வேண்டும் -விதி வினை -சொல்

தெளிந்த நீரைப் பருகின காளமேகம் போலே ஸ்ரமத்தைப் போக்குகிற வடிவோடே–
என் துயரம் தீர வந்து தோற்ற வேண்டும் –என்கிறார்-

முடி சேர் சென்னி யம்மா –
ஆதிராஜ்ய சூசகமான திருமுடி சேர்ந்த சென்னியை உடைய
சர்வேஸ்வரனே –
நிவந்த நீள் முடியன் -உலகு அளந்த திருவடி உபய நாதன் -என்று கொள் சொல்லிக் கொடுக்கும் -ஜல்பித
-நீர் வேத வேள்வியில் வந்து சுலபம் சொல்ல திரு அபிஷேகம் பரத்வம் காட்டுகிறதே

நின் மொய் பூந்தாமத் தண் துழாய் கடி சேர் கண்ணிப் பெருமானே –
உனக்குத் தகுதியாய்–செறியத் தொடுக்கப் பட்டு–கலம்பகம் மாலை போலே –
மனத்துக்கு இன்பத்தைக் கொடுப்பதாய்-
ஒளியை உடைத்தாய்-
சிரமத்தைப் போக்கக் கூடியதாய்-
நாட் செல்ல நாட் செல்ல பரிமளம் மிக்குச் செல்கிற
திருத் துழாய் மாலையை உடைய
சர்வேஸ்வரனே –

என்று என்றே-
ஒரு கால் சொல்லி ஆறி இருக்கிறேனாய்த் தான் ஆறி இருக்கிறாயோ –

ஏங்கி அழுதக்கால்-
பொருமி அழுதக்கால் –
என் அழுகைக் குரலின் தளர்த்தியைக் கேட்டால் சடக்கென வந்து-கொடு நிற்க வேண்டாவோ –

படிசேர் மகரக் குழைகளும்-
படியாய் சேர்ந்த -என்னுதல்
படியிலே சேர்ந்த என்னுதல்
இயல்பாகவே சேர்ந்த -என்னுதல்
திரு மேனியில் சேர்ந்த -என்னுதல் -என்றபடி –
படி கண்டு அறிதியே –முதல் திருவந்தாதி -85-என்னக் கடவது அன்றோ –

பவளவாயும் –
உறவு எல்லாம் தோற்றும் திருப் பவளமும் –

நால் தோளும்-
அணைக்கைக்கு கற்பகத்தரு பணைத்தால் போலே இருக்கிற நான்கு தோள்களும் –

துடி சேரிடையும் அமைந்ததோர் தூ நீர் முகில் போல் –
துடி போலே இருக்கிற இடையுமாய்க் கொண்டு சமைந்தது-ஒரு முகில் போலே ஆயிற்று வடிவு இருப்பது –

இந்த விசேஷணங்கள் கேவலம் முகிலுக்கு இல்லாமையாலே
அபூத -இல்பொருள் -உவமை
தூ நீர் முகில்-
தெளிந்த நீரை முகந்த முகில் –

தோன்றாயே –
அகவாயில் தண்ணளி -கிருபை -எல்லாம்–வடிவிலே காணலாம்படி வந்து தோற்ற வேண்டும்-

———————————————————————————–

தூ நீர் முகில் போல் தோன்றும்
நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா
மாநீர் வெள்ளி மலை தன்மேல்
வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே-8-5-4-

ஆஸ்ரித அர்த்தமாக ஷீரார்ணவம் கண் துயின்று -அழகுடன் உள்ளத்தில் நிறைந்த -பிரகாரம் சொல்ல மாட்டேன்
தூ நீர் முகில் போல் தோன்றும்நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்-தேஜஸ் -பக்குவ பலம் போல வாயும்
தே நீர்க் கமலக் கண்களும்-தன்மை -தண்ணீர் -தேன் போன்ற இனிமை -என்றுமாம் -சிரமஹரமான திருக் கண்கள்
வந்தென் சிந்தை நிறைந்தவா-நிறைந்த வாறு -வந்ததா -ரீதி பங்கமா -இல்லை அழுது கொண்டு இருப்பவர் –
மாநீர் வெள்ளி மலை தன்மேல்-பெரிய நீர் –நீலா கடல் வெ ள்ளி மலை -கறுப்பு மேகம் -ஆதி சேஷன் மேல் இவன் கண் வளர
வண் கார் நீல முகில் போலே-காள மேகம் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே-தண்ணீர் -ஆதி சேஷன் அத்யாகாரம் தருவித்திக் கொண்டு -உவமேயம் பாட்டில் இல்லை
ஓங்கின திரு அரவணை மேல் -வெளுத்தவன் -ஓங்கின ஷீரார்ணவம் -என்றுமாம் -வெள்ளி மலை என்றது –
எந்தாய் சொல்ல மாட்டேனே -பாசுரம் இட்டு சொல்ல மாட்டேன் -மனசில் நிறைந்து அத்தால் நலிகிற படி சொல்ல முடியாதே என்கிறார் –

உன்னுடைய வடிவழகு வந்து என் மனத்திலே நிறைந்து-
நலிகிறபடி என்னால் பேச முடிகிறது இல்லை –
என்கிறார் —

தூ நீர் முகில் போல் தோன்றும் –
கண்ட போதே விடாய் கெடும்படியான-கார்காலத்திலே தோன்றுகிற மேகம் போலே ஆயிற்று தோன்றுவது –

நின் சுடர் கொள் வடிவும் –
சுத்த சத்வமயம் ஆகையாலே-எல்லை அற்ற ஒளி உருவமான விக்கிரகத்துக்கு
அன்னலும் துன்னலுமாய் –
அன்னலும் = புகையும்
துன்னலும் = சிறு திவலையும்
திரண்ட மேகத்தை ஒப்பாகச் சொல்ல ஒண்ணாதே அன்றோ –
ஒண் சுடர்க் கற்றை -திருவாய்மொழி -1-7-4-அன்றோ –தேஜஸாம் ராசா மூர்த்த்யே-

கனி வாயும் –
கண்ட போதே நுகரலாம் கனி போலே இருக்கிற வாயும்

தே நீர்க் கமலக் கண்களும் –
தேனாகிற நீரை உடைய தாமரைப் பூ போலே இருக்கிற-திருக் கண்களும் –இதனால் செவ்வியை நினைக்கிறது –
அன்றிக்கே
தேனின் உடைய நீர்மை வாய்ந்த திருக் கண்கள் -என்றுமாம்-
அதாவது கண்ணாலே பருகலாம் படி இருக்கிற இனிமையைத் தெரிவித்த படி –

வந்தென் சிந்தை நிறைந்தவா –
மற்றைய விஷயங்கள் அனுபவித்து விட்டால் மறக்கக் கூடியவாய் இருக்கும் –
இவ்விஷயம் அனுபவித்து பேர நின்றாலும் நெஞ்சிலே ஊற்று இருக்கும்-
சிந்தை நிறைந்தவா -என்னுமதனை பின்னே வருகின்ற சொல்ல மாட்டேன் என்னுமதனுடன் கூட்டுக –
இதர விஷயம் போலே அன்றியே பகவத் விஷயம் -மறந்து போகும் விஷயம் இல்லையே –அனுபவித்து -விஸ்லேஷித்தாலும்
-நெஞ்சிலே நினைந்து நலியும் படி அன்றோ இருக்கும் ஊற்று மிக்கு

மாநீர் வெள்ளி மலை தன்மேல் –
மிக்க நீர் வெள்ளத்தே
ஒரு வெள்ளி மலையின் மேலே –

வண் கார் நீல முகில் போலே –
வள்ளல் தன்மை உடையதாய்-
கறுத்து நெய்த்து இருப்பது ஒரு முகில் படிந்தாப் போலே -என்னுதல் –

தூ நீர்க் கடலுள் துயில்வானே –
தூய்மை பொருந்திய தண்ணீரிலே-திரு வநந்த ஆழ்வான் மேலே-திருக் கண் வளர்ந்து அருளுகிறவனே-
வெள்ளி மலை -என்ற உவமையால் –அரவணை -என்ற உபமேயத்தினை அமைத்துக் கொள்ளும் இத்தனை –

எந்தாய் –
மேலே கூறிய வேறுபட்ட சிறப்பு இல்லையேயாகிலும்
விட ஒண்ணாத சம்பந்தம் இருக்கும் படி –

எந்தாய் -வந்து என் சிந்தை நிறைந்தவா சொல்ல மாட்டேன் –
மனத்திலே பிரகாசிக்கின்ற பிரகாசம் துக்கத்துக்கு காரணம் ஆகா நின்றது –இதற்கு ஒரு பாசுரம் அறிகின்றிலேன்-
விரக நிலையிலே குணங்களைச் சொல்லுதல் துக்கத்துக்கு காரணமாம் அத்தனை அன்றோ –
தூ நீர்க் கடலுள் துயில்வான் -என்றதனால்–காண வேண்டும் என்னும் விருப்பம் இல்லாதார்க்கு-
முற்பாடனாய் வந்து சாய்ந்த படி சொல்லுகிறது-
கூப்பீடு கேட்க்கும் இடம் -பிரயோஜ நாந்த பரர்களுக்கு நடந்தும் கடைந்து செய்பவனே –
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த -திருவே -அடியேற்கு இரங்காயே –இது போராது–போலே –

————————————————————————–

சொல்ல மாட்டேன் அடியேன்
உன் துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லையில் சீரிள நாயிறு
இரண்டு போல் என்னுள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு
உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுதுண்ட
மா நீர்க் கொண்டல் வண்ணனே-8-5-5-

ஆபத்சகன் -உன்னுடைய திருவடிகள் -பால ஆதித்யர்கள் போலே -நெஞ்சில் பிரகாசியா நின்றன -சந்தோஷப் படும் இடத்தில் துக்கம்
-பாஹ்ய சம்ச்லேஷம் கிட்டி அனுபவிக்க பெறாமல் -கிலேசியாத படி –மறக்க உபாயம் ஏதோ என்கிறார் –
சொல்ல மாட்டேன் அடியேன்-உன் ஆபத் சகத்துக்கு தோற்று அடிமைப் பட்ட நான் அகவாயில் பிரகாசத்துக்கு பிரகாரம் -பாசுரம் இட்டு சொல்ல மாட்டேன்
உன் துளங்கு சோதித் திருப்பாதம்எல்லையில் சீரிள நாயிறு
இரண்டு போல் என்னுள்ளவா-பால ஆதித்யர் போலே -பிரகாசிக்க -மநோ பூர்வ வாக் உத்தர -காயம் அனுபவிக்க வேண்டாமோ
பிரிந்து கிலேசிக்கிறேன் -கண்டு கிட்டி அனுபவிக்க பெறாமல் கிலேசிக்கிறேன்-
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு-மறந்து விடுகை யாகிற இருள் -சம்சாரிகள் போலே இருக்க -கொண்டாட வில்லை -அல்லல் ஆபத்து என்று அறிந்தும் –
அடையாமல் இருக்கும் வருத்தம் தீர -அடைய வேண்டும் இல்லாது மறக்க வேண்டும் –
உபாயம் என்னே ஆழி சூழ்-சமுத்திரம் சூழ்ந்த
மறப்பாகிய இருள் -துக்க ரூபம் -கிட்ட உபாயம் -ஆனந்தமாக பிரகாசிக்க வெளியில் கட்டி அனுபவிக்கப் பெறாமல் -மறைக்கை உத்தேச்யம் –
பூர்வ உத்தர பாசுரங்கள் ஆர்த்தி போலே இதுவும் -கொள்ள வேண்டும்
மல்லை ஞாலம் முழுதுண்ட-வளப்பம் லோகம் -உண்டு ரக்ஷித்தாய் -பிரளயம் கொள்ளாமல்
மா நீர்க் கொண்டல் வண்ணனே-காள மேகம் -வடிவை உடையவனே -தன்மை உதார ஸ்வ பாவம் –
உண்ட -பெருமாளுக்கு விசேஷணம் -மா நீருக்கு ஏகார்ணவம் பிரளய காள சமுத்திரம் உண்டது என்றுமாம் –

உன்னுடைய அழகு என் மனத்திலே நினைவுக்கு விஷயமாய்-நலியா நின்றது
இது மறக்க ஒரு விரகு சொல்ல வேண்டும் -என்கிறார்-

சொல்ல மாட்டேன் –
என் உள்ளத்தில் நின்று நலிகிற படிக்கு பாசுரம்-இடப் போகிறது இல்லை –

அடியேன் –
சம்பந்தத்தால் தவிர மாட்டுகின்றிலேன் –

உன் துளங்கு சோதித் திருப்பாதம் –
மாட்டாத பிரகாரம் ஏது -என்ன –விளங்கா நின்றுள்ள ஒளியை உடைய உன் திருவடிகள்

எல்லையில் சீரிள நாயிறு இரண்டு போல் என்னுள்ளவா-
அளவிறந்த அழகை உடைய-இளம் சூரியர் இருவர் போலே-என் உள்ளத்தே நின்று நலிகிற படி-
கண்களால் பருகலாம் படி இருக்கையாலும்
வருத்தத் தொடங்கின இத்தனை என்று தோற்றுகையாலும்-இள நாயிறு -என்கிறார்-
அன்றிக்கே –
இள நாயிறு -என்பதற்கு
என்னை வருத்த வருத்த இளமை மிகுகிறபடி -என்னலுமாம்
என் உள்ளவா சொல்ல மாட்டேன் -என்று கூட்டுக –
மீனோடு ஆமை –இன்னம் கார் வண்ணனே -அவதரித்து அவதரித்து இளகிப் பதித்த படி —
யுவ குமாரா என்னுமா போலே இள நாயிறு -சேவை சாதிக்காமல் ஆழ்வாரை துடிக்கப் பண்ணப் பண்ண -இளமை கூடி
வா போகு-சக்கரவர்த்தி பஞ்ச விம்சதி போலே

அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு உபாயம் என்னே –
இதற்கு -உன்னைக் காட்டாதே அருமைப் படுத்தப் பார்த்தாய் ஆகில்-
நாட்டார் -தண்ணிது-என்கிற அஞ்ஞானம் வருவதற்கு ஒரு உபாயம் ஏதோ -என்று அருளிச் செய்வர் பட்டர் –
அப்போது மறந்து பிழைக்கலாம் என்னுமதனாலே –
அன்றிக்கே
என் திருவடிகள் என் உள்ளத்திலே பிரகாசியா நிற்க துக்கத்துக்கு காரணமான-
அறிவின்மை வருவதற்கு உபாயம் உண்டோ -என்று அருளிச் செய்வர் அம்மாள் –பிரிநிலை ஏகாரம் -உபாயம் இல்லை என்றவாறு –
உண்டாகில் உண்டு உடுத்துத் திரியலாமே உலகத்தாரைப் போன்று –
சூர்யன் இருக்க இருள் வராதே -தேஜஸ் இருள் சேராதே பால ஆதித்யர் -உதித்த பின்பு -அல்லல் -துக்கம் என்றவாறு –

ஆழி சூழ் மல்லை ஞாலம் முழுதுண்ட மா நீர்க் கொண்டல் வண்ணனே –
கடல் சூழ்ந்த மிகப் பெரிய பூமி முழுதினையும் பிரளயத்தில் அழியாமல்-வயிற்றிலே வைத்துக் காத்த-ஒப்பு உயர்வு அற்ற வள்ளலே-
அன்றிக்கே –
ஆழி சூழ் மல்லை ஞாலம் முழுதுண்ட மா நீர்-என்பதற்கு பிரளயம் என்று பொருள் உரைத்து-
அப் பிரளய நீர் முழுவதையும் பருகின மேகம் போலே-இருக்கிற வடிவை உடையவன் -என்னுதல் –
மல்லை ஞாலம் -மிகப் பெரிய பூமி-
புள்ளின் வாய் -கீர்த்திமை -பகாசுரன் -ராமனையும் கிருஷ்ணனையும் பாட -ராமனாக இருந்தவன் கிருஷ்ணன் -வரவு
-திருவேங்கடம் சொல்லி திருவரங்கம்
புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கன் -ஜடாயு பக்ஷி வாயை கிண்டிய ராவணன் –
ராம விருத்தாந்தம் மட்டுமே போலே -விசேஷணம் மா நீருக்கு போலே

———————————————————————————-

கொண்டல்வண்ணா குடக்கூத்தா
வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண் மேல்தான்
விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண
ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-

பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை தசைகளில் எங்காவது வந்து ஒரு நாள் தோன்றி அருளாயோ –
ஸுந்தர்யம் அகப்பட்டு கூப்பிட்டு ஏதேனும் ஒரு முகத்தால் –
கொண்டல்வண்ணா குடக்கூத்தா-சிரமஹரமான -அழகு மட்டும் இல்லை மநோ ஹராமான சேஷ்டிதங்கள்
வினையேன் கண்ணா கண்ணா –கண்டு அனுபவிக்கப் பெறாத பாபிஷ்டன் -கண்களுக்கு போலே உள்ளவனே -கண்ணை இழந்தேன் -என்கிறார் –
ஆஸ்ரித பவ்யன் கிருஷ்ணன் -கண்ணா திரு நாமம் -அடுத்து -குத்தலாக -அருளிச் செய்கிறார் –
என்அண்ட வாணா வென்று என்னை-பிராப்ய பூதன் -பரம பத-வாழ் நல்ல நல்ல வாழ்வு -பர வாசுதேவன் நிர்வாகன்-என் -இதுவும் தனக்காக
-முன் கண்ணா என் -சொல்ல வில்லை
அடியேன் பரம பதத்துக்காக காத்து இருக்கிறார் -பலகாலம் உன் ஸ்வ பாவங்கள் சொல்லி ஆர்த்தி அதிசயத்தால்
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்-கூப்பிட்டு -கைங்கர்யம் கொடுக்க அழைத்துக் கொள்ள வேண்டும் ஆழ்வார் கதற –
கூப்பிட்டு அழைத்தக்கால் மீமிசை -காள மேகம் போலே
விண் தன்மேல் தான் மண் மேல்தான்-பரம பதம் மேலோ அவதாரம் அர்ச்சை ஸ்தலம் பூமி
விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்-மூலம் ஷீரார்ணம் மாற்று அகவாயில் அந்தர்யாமி
தொண்டனேன் உன் கழல் காண-அதி சபலனான நான்
ஒரு நாள் வந்து தோன்றாயே-காணும்படி ஒரு முகத்தால் தோன்றி அருளாயோ

உன் வனப்பு முதலானவற்றை நினைத்து –காண வேண்டும் என்று கூப்பிடுகிற நான் காணும்படி ஏதேனும்
ஓர் இடத்திலே வந்து தோற்றி அருள வேண்டும் –என்கிறார் –

கொண்டல்வண்ணா –
காணவே விடாய் ஆறும்படியான வடிவை உடையவனே –

குடக்கூத்தா –
மனத்தினை கொள்ளை கொள்ளும்படியான செயல்களை உடையவனே –

வினையேன் கண்ணா கண்ணா –
எனக்கு கண்களாய் இருக்கிறவனே -கிருஷ்ணனே –
கண்ணை இழந்து இருக்கும்படியான பாவத்தைச் செய்தவன் -என்பார் -தம்மை -வினையேன் -என்கிறார் –

என் அண்ட வாணா வென்று –
என்னை இலக்கு ஆக்கிக் கொள்ளுவதற்க்காக-அண்டத்துக்கு அதிபதி ஆனவனே -என்று
உபய விபூதி நாதத்வமும் தனக்காக என்கிறார் -இங்கே திருத்தி -உள்ளே புக வைத்து கைங்கர்யம் கொள்ள –
தத் தவம் அசி -தத் சப்தம் பிரஹ்மம்-சகல ஜகத்துக்கு நாதன் -தவம் -ஸ்வேதகேதுக்கு அந்தராத்மா ஆகிற ப்ரஹ்மம் -என்றவாறு –
எனக்கு உள்ளே இருப்பவனே உபய விபூதி நாதன் -என்னைப் பிடிக்க ஊரை வளைப்பாரைப் போலே என்கிறார் இவர் –

கல்யாண குணங்களை உடைத்தாய் இருத்தல் –
அடியார்களுக்காக இருக்குமாறு போன்று-விபூதியை உடைத்தாய் இருக்கிற இருப்பும் தமக்காக என்று இருக்கிறார் –
உபய லிங்கமும் உபய விபூதி நாதத்வம் போலே தமக்கு என்கிறார் –

என்னை ஆளக் –கூப்பிட்டு அழைத்தக்கால்–
வேறு பிரயோஜனதுக்காக அழைக்கிறேனோ-
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி என்னை வழுவிலா-அடிமை கொள்ள வேண்டும் -என்று அன்றோ அழைக்கிறது-

கூப்பிட்டு அழைத்தக்கால்-
கிரமப் பிராப்தி பொறுக்க வல்லேனாய் தான் தாழ்க்கிறாயோ –
பரபரக்கிறார் -என் துயர ஒலி கேட்டால் -கிரமத்தில் வருகிறோம் -என்று ஆறி இருக்கலாய் இருந்ததோ –

விண் தன்மேல் தான் –
மா நீர்க் கொண்டல் சஞ்சரிக்கும் ஆகாசத்தில் தோற்றவும் அமையும்-
அன்றிக்கே
பரமபதத்தில் இருக்கிற இருப்போடே வந்து தோற்றவும் அமையும் –

மண் மேல்தான் –
அவதரித்துத் தோற்றவுமாம்-

விரி நீர்க் கடல் தான் –
திருப் பாற்கடலிலே திருக் கண் வளர்ந்து அருளுகிறபடி வந்து தோற்றவுமாம் –

மற்றுத் தான் –
தூணிலே வந்து தோன்றினால் போதே யாதல்-
யானைக்கு வந்து தோற்றினால் போதே யாதல் தோற்றவுமாம் –

தொண்டனேன் –
உன் திருவடிகளில் கைங்கர்யத்தில் ஆசை கொண்ட யான்-

உன் கழல் காண –
எனக்கு உய்விடமான திருவடிகளைக் காண –

ஒரு நாள் வந்து தோன்றாயே –
பல நாள் வேண்டும் -என்று நிர்பந்திக்கிறேனோ-
என் ஆத்துமா கிடக்கைக்கு ஒரு நாள் வந்து தோற்றி அருள வேண்டும்-

——————————————————————————————-

வந்து தோன்றாயன்றேல்
உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி
அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7-

அசேஷ சம்ச்லேஷ ஸ்வ பாவனாய் -அதி ரமணீய ஸூந்தரன் -குண அனுபவம் -கைங்கர்ய அனுபவம் -பரதன் இளைய பெருமாள் –
வந்து தோன்றாயன்றேல்-வந்து தோன்றாய் –எளியவன் அன்றோ -அன்றேல் –
உன் வையம் தாய மலரடிக் கீழ்-வரையாமல் ஸம்ஸலேஷித்த -விகசித்த தாமரை திருவடிக்கு கீழ்
முந்தி வந்து யான் நிற்ப-முற்பாடானாய் -தரித்து நின்று -திரிவிக்ரமன் திருவடிகளின் கீழ் -அஹம் பூத்வா -நாரதர் தரித்து –
பெருமாள் குணம் அருளியது போலே -சென்று நின்று ஆழி தொட்டான் அன்றோ –
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்-விதி வினைகள் -பரத்வன் அன்றோ அதற்குத் தக்க -திரு முன்பே அழைத்து கைங்கர்யம் கொள்ள வேணும்
செந்தண் கமலக் கண் கை கால்சிவந்த வாயோர் கரு நாயிறு-அல் பூ உவமை -சிவந்த குளிர்ந்த -அவயவங்கள் கொண்ட
-நீல நிற ஆதித்யன் -அந்தமில்லா -சகஸ்ரம் இல்லை
அந்தமில்லாக் கதிர் பரப்பி-முன்பு பால ஆதித்யன் –
அலர்ந்தது ஒக்கும் அம்மானே–விஸ்தீரணம் -வடிவு அழகு உடன் ஸ்வாமி -சூர்ய சரீரகன் -மத்திய வர்ட்த்தி

இங்கு வந்து தோற்றி அருளுதல்-அது திரு உள்ளம் அன்றாகில்-
அங்கே அழைத்து அடிமை கொள்ளுதல்-செய்து அருள வேண்டும் -என்கிறார் –

வந்து தோன்றாய்-
என் கண் வட்டத்திலே வந்து தோற்ற வேண்டும் –
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றலை அன்றோ வந்து தோன்றாய் – பெரிய திருமொழி -8-5-1-என்கிறது

யன்றேல்-
என் துன்பத்தைப் பார்த்து-உன்னுடைய கிருபையாலே வந்து முகம் காட்டப் பார்த்திலையாகில்-
அன்றிக்கே
உன் நிறைவினையும் என் சிறுமையும் பார்த்து முகம் காட்டப் பார்த்திலை யாகில் –திரு விருத்தம் -பாசுரம் 33 -படி -என்றுமாம் –

உன் வையம் தாய மலரடிக் –
வசிஷ்ட சண்டாள வேறுபாடு பாராத திருவடிகள் –சைதன்யம் முக்கியம் இல்லை என்பதால் வையம் -என்கிறார் –
தாய் மலரடி –ஒரு செவ்விப் பூவைக் கொண்டாயிற்று காட்டையும் ஓடையும் அளந்தது –

மலரடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப –
தனக்கு மேல் ஒன்றில்லாத இனிய பொருளான-திருவடிக் கீழே-முற்பாடனாய் வந்து நிற்கும்படியாக

முகப்பே –
கண் வட்டத்திலே-

கூவிப் பணி கொள்ளாய் –
சோற்றை இட்டுப் பணி கொள்வாய்-
திரு மிடற்றின் ஓசை இனிமையாக இருக்கையாலே கூவிப் பணி கொள்ள வேண்டும் என்கிறார்-
அன்றிக்கே
பணி செய்வாய் என்று என்னை சொல்வீராக -என்னும் படி
கிரியதாம் இதி மாம் வத- கண் முகப்பே அடிமை கொள்ள வேண்டும் -என்னவுமாம்–போக்யம் பிராப்தம் –
குணஞானத்தால் தரித்து இருக்கும் ஸ்ரீ பரத ஆழ்வான் தன்மையன் அல்லன் –
தண்ணீரின் நின்றும் மேலே எடுக்கப் பட்ட மீன்களைப் போன்றவர் -என்னும் இளைய பெருமாள்
தன்மையனான என்னை அடிமை கொள்ள வேணும் என்பார் –திருப் புளி கீழ் இருந்தாலும் -இவர் மநோ ரதம் இருந்த படி –
பணி கொள்ளாய் -என்கிறார் –
நச சீதா த்வயா ஹீ நா நச அஹம் அபி ராகவ-முஹூர்த்தம் அபி ஜீவாவ ஜலாத் மத்ஸ்யாவிவ உத்ரு தௌ-அயோத்யா -53-31-
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1–என்றும்
நின்னலால் இல்லை -2-3-7- என்றும்
இட்டு வைத்த இடத்தில் கிடக்க மாட்டேன்-நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் –8-1-9-என்னுமவர் அன்றோ –
வழுவிலா அடிமை -சயமே அடிமை -பிரியா அடிமை -மூன்றும் அடியார்க்கு செய்ய அன்றோ பாரிக்கிறார் –
பிரியல் இலேன் என்பதற்கு அக்குளத்தில் மீன் இறே இவரும் –

செந்தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு –
சிவந்து குளிர்ந்த தாமரை போலே–கண்ணையையும் கையையும் காலையையும் உடையவனாய்
சிவந்த வாயையும் உடையவனாய்–நீலமான நிறத்தையும் உடையவனான–ஒரு சூரியன்

அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் –
ஆயிரம் என்னும் ஒரு கணக்கு இன்றிக்கே அளவிறந்த-கிரணங்களைப் பரப்பிக் கொண்டு
மலர்ந்தாப் போலே வந்து தோற்ற வேண்டும் –

அம்மானே –
பரத்வம்- ஸ்வாமித்வம்
பரத்வம் -உன் மேன்மையைப் பார்த்து அங்கே அழைத்து அடிமை கொள்ளுதல் –
அன்றிக்கே –
ஸ்வாமித்வம் -உன் உடைமை நசியாமைக்கு விரைவு உண்டாகில் இங்கே வந்து அடிமை கொள்ளுதல்-செய்து அருள வேண்டும் -என்னுதல் –

—————————————————————————————–

ஒக்கும் அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாணாளும்
தொக்கமே கப்பல் குழாங்கள்
காணும் தோறும் தொலைவன் நான்
தக்க வைவர் தமக்காயன்று
ஈரைம்பதின்மர் தாள் சாய
புக்க நல் தேர்ப் தனிப் பாகா
வாராயிதுவோ பொருத்தமே-8-5-8-

ஸ்ரீ கிருஷ்ணனாய் பஞ்ச பாண்டவர் -சண்டைக்களம் வருவீர் விருப்பக் களம் வரமாட்டீர் -எதிரி நூறு -ஐந்து -பிரயோஜன பரர் -உத்தர பாரதம் –
போலி -தொக்க மேக பல கூட்டங்கள் -நலியா நிற்க ஆஸ்ரித பக்ஷ பாதியாய் இருக்க -தோன்றாயே
ஒக்கும் அம்மான் உருவம் என்று-உள்ளம் குழைந்து நாணாளும்-திரண்ட மேகம் பார்த்து -கிலேசியா நிற்பன்
-நாள் நாளும் –பார்க்கும் தோறும் -உள்ளம் குழைந்து-தொக்கமே கப்பல் குழாங்கள்
காணும் தோறும் தொலைவன் நான்
தக்க வைவர் தமக்காயன்றுஈரைம்பதின்மர் தாள் சாய-எல்லா உறவுமாய் -தகுதி படைத்த -குத்தலாக
–கிருஷ்ணாஸ்ரய- கிருஷ்ண பல -கிருஷ்ண நாத பாண்டவர் வார்த்தைக்கு-சஹ்ருதயமான -இவ்வளவும் –
இந்திர பிரஸ்தம் இருந்து துவாரகை போக வில்லை -இவனே வந்து அன்றோ அருளினான் -ஏவலாளாய் -கொண்டு
-பாரத யுத்தம் அன்று -நூற்றுவரும் கால் அற்று உயிர் அற்று போம் படி
புக்க நல் தேர்ப் தனிப் பாகா-சேனை மத்யத்தில்-பீஷ்ம துரோணர் பிரமுகர் முன்பே -இவன் இருப்பதால் நல் தேர் -ரதி அவன் -அத்விதீய சாரதி
வாராயிதுவோ பொருத்தமே-இந்த அழகுடன் வந்து சேவை சாதிக்க வில்லையே -இதுவோ பொருத்தம் -பக்தாநாம் என்று இருக்க வேண்டாவோ –

உனக்குப் போலியான மேகத்தின் காட்சியாலே-நோவு படா நிற்க
வந்து முகம் காட்டுகின்றிலை-இதுவோ உன் சார்வின் தன்மை -என்கிறார்-

ஒக்கும் அம்மான் உருவம் என்று –
சர்வேஸ்வரன் வடிவு மற்ற பொருள்கள் எல்லா வற்றிலும் வேறு பட்டது –என்று என்னா நிற்கச் செய்தே
புகையும் ஒளியும் தண்ணீரும் காற்றும் ஆகிய இவற்றின்-கூட்டமான மேகத்தை ஒப்பு என்று மயங்குவர் –
தூம ஜ்யோதி சலில மருதாம் சந்நிபாத கவ மேக -மேக சந்தேசம் -1-5- காளி தாசன் –

உள்ளம் குழைந்து –
இது -மேக கூட்டத்தை கண்டதுக்கம் -தோற் புரையே அன்றி மனமும் அழிந்தது –

நாணாளும்-
நாள் நாளும்-
இந்த அழிவு ஒரு நேரத்தில் வருதல் இன்றிக்கே-இடைவிடாமல் செல்லுகை –

தொக்கமே கப்பல் குழாங்கள் –
தொக்க மேகம் பல் குழாங்கள்-மேகங்களின் துண்டங்களுக்கு இடையார்-திரண்ட மேகக் கூட்டங்களை காணும் தோறும்-
ஆய்ச்சியர் வெண்ணெய் -கொள்வான் பிராமணர்கள் வெண்ணெய் கொள்வான் அன்றோ –
நாள் நாளும் தொலைவன் –
தர்மிலோபம்-ஆத்மாவுக்கு நஷ்டம் மரணம் – பிறக்கிறதும் இல்லை-வாழ்ந்து இருக்கவும் பெறுகின்றிலேன் –

நான் –
மேகத்தை காணுதல் உலகத்தாருக்கு தளர்ச்சி நீங்குவதற்கு காரணம் அன்றோ –உலகத்தாரோடு வேறு பட்ட நான் –

தக்க வைவர் –
எந்த மேகத்தை காண்பதற்கு இடைந்தார்கள் –அதற்காக பாண்டவர்களை நோக்கிற்று-
பந்துக்கள் ஜீவிக்க வேண்டும்-எங்களுக்கும் ஐந்து குடிக்காடு -குப்பம் -கிராமம் -அமையும்-
என்னும் தக்கோர்மையை உடைய ஐவர்

தமக்காயன்று
தமக்காய்-
இரண்டு சேனைகளுக்கு நடுவில் என் தேரைக் கொடு போய் நிறுத்து -என்னும்படி கையாளாய்
சேனையோ உபயோ மத்யே ரதம் ஸ்தாபாய மே அச்யுத – ஸ்ரீ கீதை -1-21-
அன்று
அவர்கள் தனியரான அன்று –

ஈரைம்பதின்மர் தாள் சாய –
பந்துக்கள் ஜீவியில் ஜீவியோம் -என்று நூற்றுவரும் கால் அறும்படியாக-

புக்க –
தூசித் தலையிலே புக்க –

நல் தேர்ப் –
இவனை சாரதியாக உடையது ஆகையாலே மிக்க மேம்பட்ட தேர் –

தனிப் பாகா –
தனியே நிர்வாஹகன் ஆனவனே –இரதியைக் காண்கின்றிலர்
கிருஷ்ணா வெற்றியை யாவது-இராச்சியத்தை யாவது-சுகத்தை யாவது
நான் விரும்ப வில்லை -என்றவனை சேமம் சாத்தி வைத்து தானே செயலை செய்கையாலே

ந கான்க்ஷே விஜயம் கிருஷ்ண நச ராஜ்ஜியம் ஸூகா நிச
கிம் ந ராஜ்யென கோவிந்த கிம் போகை ஜீவே தேன வா -ஸ்ரீ கீதை – 1-32-சாரதியை யாயிற்று இவர் காண்கிறது –

வாராய் –
இரண்டு சேனைகளின் நடுவே தேரைக் கொடு போய் நிறுத்து -என்ன
இரண்டு சேனைகளின் நடுவே தேரை நிறுத்தின நீ
அந்த தேரை இந்த மேகங்களின் நடுவே நிறுத்தினால் ஆகாதோ –
ஐவருமாய் எதிரிகளின் அளவுக்கு உட்பட்டவர்களும் ஆனாலோ உதவலாவது-
அங்கே நூற்றுவரை முடிக்க -இங்கே 25 -ஐ ஐந்து முடிப்பான் -அசேதன அனுபவம் கைவல்ய அனுபவம் அழிக்க
தனியனுமாய் மேகக் கூட்டங்களின் அளவுக்கு உட்படாதவை யானால் உதவலாகாதோ
இதுவோ பொருத்தம் –
அடியார்களோடு முன்பு நீ பொருந்திப் போந்த படி இதுவோ -என்றது
அடியார்களுக்காக தூது சென்றும்
தூது சென்றும்
சாரதியாய் நின்றும்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்தும்
பகலை இரவு ஆக்கியும்
ஒரு சார்வாகக் கார்யங்களைச் செய்தது பொய்யோ -என்றபடி
நான் இந்த நாராயணன் சரிதையைச் சொல்லப் போகிறேன் -என்றவனும்
நமோ பகவதே தஸ்மை வ்யாசாய அமித தேஜஸே-யஸ்ய பிரசாதாத் வஹ்யாமி நாராயணா கதாமிமாம் –
கைக் கூலி கொண்டு புலமை பாடினான் ஆகாதே என்கிறார் -என்றது-இப்போது தமக்கு உதவில் அவை மெய்யாவன என்று இருப்பர் -என்றபடி
வாராய்
எனக்கு இவை எல்லாம் வேண்டுமோ-
முகம் காட்ட அமையாதோ –

ஹரியானா ஹரி உடைய யானம்-ஹரி விருப்பம் படும் போது போன தேசம் -இது வழியாக இந்திர பிரஸ்தம் துவாரகை இருந்து போனான்
குரு காவ் துரோணாச்சார்யருக்கு பாண்டவர்கள் கொடுத்த இடம் –அங்கு இடங்கள் எல்லாம் மகா பாரத சம்பந்தம் பெற்ற இடங்கள் –

—————————————————————————————————-

இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய்
ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே
என்று என்று ஏங்கி யழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை
உத்தர மதுரைப் பிறந்த மாயனே-8-5-9-

சுவர்க்கம் போனவர்கள் உடன் பொருந்தியது முன்பு -இங்கு நித்ய ஸூ ரிகள் உடன் பொருத்தம் -கூப்பிட்டு ஸ்வ பாவம் உடையவனே
-என்று ஏங்கி அழுதால் -என்னவாறு திரு உள்ளம் கொள்வான் –
ஆஸ்ரிதரை அநேக வித கைங்கர்யம் கொள்ளும் பிரகாரம் நினைத்து கூப்பிட்டால் -அடியேனையும் கொள்ள வேண்டாமோ
-ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்காக அவதரித்தவர் என் நினைப்பான்
இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய்-விழிச் சொல்
ஏறு மிருஞ் சிறைப்புள்-அதுவே கொடியா வுயர்த்தானேபெரிய திருவடி -கருடப் புட்கொடி சக்கரப்படை -இவர்கள் அளவிலும் பொருத்தம் இருந்தபடி
என்று என்று ஏங்கி யழுதக்கால்எதுவேயாகக் கருதுங்கொல்-என்னவாக கருதுவான் -வருவதற்காக -கூப்பிட்டு அழியட்டும்
-சிவிட்க்கு கோபம் கொள்வானோ -மூன்றும் –
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான்–பூ பாரம் தீர்ப்பதற்காக
மதுவார் சோலைஉத்தர மதுரைப் பிறந்த மாயனே-விழிச் சொல் சர்வேஸ்வர ஸூ சக சிஹனங்கள் உடன் திரு அவதரித்து –
சதுர் புஜம் உடன் -மின் ஆ ழி ப் படையனாகவே பிறந்தான் அத்புதம் பாலகம் சங்க சக்கர -ஆவீர் பூதம்

இறுதிக் காலத்தில் ஸ்வர்க்கத்து ஏறப் போன இவர்கள் நிற்க –
திருவாழி யாழ்வான் முதலான நித்யரோடும் பொருத்தம் இதுவோ –என்று தமக்குள்ளே விசாரிக்கிறார் –
அன்றிக்கே –
இருந்ததே குடியாக காப்பாற்ற வந்த ஸ்ரீ கிருஷ்ணன் தன்னை-காண்கையே தேட்டமான
எனக்கு என் செய்ய நினைக்கிறான் -என்கிறார் ஆகவுமாம் –

இதுவோ பொருத்தம் –
இப்படிக் கூப்பிடச் செய்தேயும் வரக் காணாமையாலே-கண்ணாஞ் சுழலை இட்டு
மீண்டும் இதுவோ பொருத்தம் -என்கிறார் –

மின்னாழிப் படையாய் –
மேகத்திலே மின்னினாப் போலே அடியார்கள் உடைய-விரோதிகளை அழித்தலையே இயல்பாக உடைய
திரு ஆழியைப் படையாக உடையவனே -என்றது-
அத் திரு ஆழியைக் கொண்டு என்னுடைய தடைகளின் மேலே
செலுத்தினால் ஆகாதோ -என்றபடி –

ஏறு மிருஞ் சிறைப்புள் அதுவே கொடியா வுயர்த்தானே –
ஏறக் கடவ பெரிய சிறகை உடைய கருடப் பறவை தன்னையே-கொடியாக உடையவனே
அடியார்களை எல்லா அடிமைகளையும் கொள்ளுமவன்-தாஸ ஸஹ ஸ்லோகம் –

அன்றோ -என்று என்று ஏங்கி யழுதக்கால் –
இப்பாசுரம் மாறாதே பொருமி பொருமி அழா நின்றால் –

எதுவேயாகக் கருதுங்கொல் –
இக் கூப்பீட்டுக்கு முகம் காட்ட நினைக்கிறானோ-
கூப்பிட்டே போவான் என்று இருக்கிறானோ-
அன்றிக்கே
இக் கூப்பீட்டுக்கு அவன் திரு உள்ளம் எங்கனே புண் படுகிறதோ -என்னுதல் –

இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் –
இந்த பெரிய பூமியினுடைய பாரதத்தைப் போக்குகைக்காக –

மதுவார் சோலை –
தேன் பெருக்கு எடுக்கின்ற சோலையை உடைய –

உத்தர மதுரைப் –
வடமதுரையில் –

பிறந்த மாயனே –
பகைவர்களான கஞ்சன் முதலியோர் நடுவே பிறந்த மாயோனே –
தோன்றுதல் அன்றிக்கே –அதன்பின் பன்னிரண்டாம் மாதத்தில் -என்கிறபடியே-
ததஸ்த த்வாதஸ மாஸே சைத்ரே நவாமிகே திதௌ-பால -18-10-கர்ப்ப வாசம் செய்து பிறந்த ஆச்சர்யத்தை உடையவன்
ஆதலின் -பிறந்த மாயனே -என்கிறார் –
பூமியின் பாரத்தை போக்குதல் என்னும் வ்யாஜ்யத்தாலே-தனக்கு வேறுபட்ட சாதியினை உடையவனாய்
வந்து அவதரித்து அடியார்கள் உடைய விரோதிகளைப்-போக்கும் தன்மையானவன்
நம் கூப்பீட்டுக்கு என் நினைத்து இருக்கிறான் -என்கை-
இத்தனையும் நம்பி -விரோதி நிராசனம் -பரத்வ ஸூ சகம் இருக்க மேலும் திரு -அவதரித்து -கூப்பிடுவேன்
-அவன் திரு உள்ளம் என்ன வாகுமோ என்றவாறு

——————————————————————————————-

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா
நீ யின்னே
சிறந்த கால் தீ நீர் வான்
மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இறந்து நின்ற பெருமாயா
உன்னை எங்கே காண்கேனே-4-5-10-

சர்வாத்மாவாக இருந்தும் -யோகிகள் -உணரலாம் -ஸ்ரோதவ்யோ-இத்யாதி -அவதார பிரயக்த ஸுலப்யயத்துக்கு
பிற்பட்டு-இழந்து -அர்ச்சைக்கு கால் தாழ்ந்து -ஐந்து பிரகாரங்களை முடியா விட்டாலும் நிராங்குச ஸ்வ தந்த்ரன் -சர்வ சக்தன்
-தமர் உகந்த இவ்வுருவம் அவ்வருவம் தானே -தூணுக்குள்ளும் -மடுக்கரையிலும் தோன்றி
எங்கும் -கறந்த பாலுள் நெய் போலே -தோன்றி அருள வேணும்
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா-அஜோபிசன் -பெருமைகளில் ஒன்றும் குறையாமல் -பிறப்பாதவனாக இருந்து கொண்டே பிறந்து
-ஈஸ்வரனாக இருந்து கொண்டே பிறந்தார் -அவ்யகதாத்மா வளரவும் தேயவும் இல்லாமல் பிறந்து வளர்ந்து -விசித்திர சங்கல்ப சக்தியால்
-கிருபாதீனமாக -ஆஸ்ரய அர்த்தமாக மகா பாரதம் -ஆயுதம் எடேன் -பகல் இரவாகி -இத்யாதி
நீ யின்னே-சுலபனாக இருக்கச் செய்தே -சிறந்த கால் தீ நீர் வான்-ஜகத் ஹேது-பஞ்ச பூதங்கள் –
மண் பிறவுமாய பெருமானே-ஸமஸ்த பதார்த்தங்கள் -அனைத்தும் பிரகாரம் -சர்வாதிகான்
கறந்த பாலுள் நெய்யே போல்-மறைந்து இருப்பது போலே மதித்து -கடைந்து காண்பாருக்கு ஒழிய
இவற்றுள் எங்கும் கண்டு கொள்-தியானித்து யோகத்தால் காண்பாருக்கு ஒழிய
இறந்து நின்ற பெருமாயா-அப்பால் நின்று -அதீந்த்ரியனாய்
உன்னை எங்கே காண்கேனே-அத்யாச்சர்ய பூதனான உன்னை எங்கே காண்பேனோ –

அவதாரத்துக்கு பிற்பாடனாய்-
அந்தர்யாமித்வம் கண்களுக்கு புலப்படாதவாறு ஆயின பின்பு-
உன்னை நான் எவ்விடத்தே காண்பது -என்கிறார் —

பிறந்த மாயா –
கர்மங்கட்கு கட்டுப் படாதவனாய் வைத்து –
பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்ய திருமேனியை தனக்கு-வேறுபட்ட சாதியை உடையதாக்கி அவதரித்த
ஆச்சர்யத்தை யுடையவனே –

பாரதம் பொருத மாயா –
பிறந்தால் போலே இருப்பது ஒன்றாய் ஆயிற்று இவ் ஆச்சரியமும் -என்றது-
சத்தியத்தை மேற் கொண்ட இறைவன் அசத்தியத்தை மேற்கொண்டவனான -ஆச்சர்யம் -என்றபடி –
அதாவது
ஆயுதம் எடேன் -என்று ஆயுதம் எடுக்கையும் –
பகலை இரவு ஆக்குதலும் –
முதலாயின –

நீ யின்னே-
நீ இப்படி சுலபனாய் இருக்கச் செய்தே –

சிறந்த கால் தீ நீர் வான் மண் –
காரணமான மண் முதலான முதலான பூதங்கட்கும்-

பிறவும் –
அவற்றின் கார்யமான தேவர் முதலான பொருள்களுக்கும் –

ஆய பெருமானே –
ஆத்துமாவான சர்வேஸ்வரனான-காற்றுக்கு சிறப்பாவது -காரணமாம் தன்மை ஒத்து இருக்க
தரிக்கும் தன்மையால் வந்த ஏற்றம் –

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏகவர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதிவாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –
காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

உன்னை எங்கே காண்கேனே –
பரம பதத்தில் காட்சிக்கு சரீர சம்பந்தம் அற வேண்டும்-
அவதாரத்துக்கு பிற்பாடன் ஆனேன்-
அர்ச்சாவதாரம் நான் நினைத்த படி கிடையாது-
அந்தர்யாமித்வம் கண்களுக்கு விஷயம் அன்று-
இனி இவ் இழவோடே நான் முடிந்து போம் இத்தனையே அன்றோ –

—————————————————————————————

எங்கே காண்கேன்
ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்
எல்லியும் காலையே-8-5-11-

வருத்தத்துடன் முடியும் திருவாயமொழி -வியசனம் தொடர்ந்து -8-6 ஆனந்தம் -நடுவில் பெருமாள் இவரை முடிக்கலாகாது என்று
திரு உள்ளம் கொள்வான் -சம்சாரத்திலே சதா பகவத் அனுபவ பலம் சித்திக்கும்
எங்கே காண்கேன்ஈ-ன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று-நிரதிசய போக்யன் -ஆர்த்தி அதிசயித்த நான் -பல காலும்
அங்கே தாழ்ந்த சொற்களால்-சேஷித்வம் -போக்யத்தில் தாழ்ந்த -பிராவண்யம் அன்பு தோய்ந்த சொற்களால் –
அந்தண் குருகூர்ச் சடகோபன்செங்கேழ் சொன்ன வாயிரத்துள்-தர்ச நியாமான சிரமஹராமான –பகவத் ஸ்வ பாவங்களை பிரதிபாதிக்க
-நேர்மை ஆர்ஜவம் -உடன் அருளிச் செய்த -இவையும் பத்தும் வல்லார்கள்-இவை பத்தையும் பாவ வ்ருத்தி உடன் அப்யஸிக்க வல்லார்கள் –
ஆழ்வார் திரு உள்ளக கருத்தை அறிவதே கார்ய கரமாகும் -இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்
எல்லியும் காலையே-இரவும் பகலும் திவா இராத்திரி விபாகம் இல்லாமல் இங்கேயே இப்பிறப்பே கண்டு மகிழ்வர்
-சதா பஸ்யந்தி இங்கு இப்பிறப்பே கிட்டும் -மனைவி பார்த்தா -கோபம் -ஆழ்வாருக்கு கிட்டாமல் -குழந்தை இடம் பிரியமாக நடந்து
மனைவி கோபம் போக்க அருளுவான் –பராங்குச நாயகி நம் தாயார் என்றே அறிய வேண்டியது நம் க்ருதவ்யம் –
அன்னையாய் அத்தனாய் -என்றார் இ றே மதுரை கவி ஆழ்வார் -ஆழ்வார் அனுபவம் கிடைத்தால் பகல் –இல்லையேல் இரவு –
உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல் அற்ற பொழுதானது எல்லியாம்–திருவாய் மொழி நூற்றந்தாதி-75–மா முனிகள் –
-உதார வள்ளல் தன்மை ஆழ்வார் பிரபாவம் அறிய வேண்டுமே -தென் திசை நோக்கிக் கை கூப்பி கிருதஞ்ஞதை சொல்லிக் கொள்கிறோம்
திருவாய் மொழிக்குள் கண்ணி நுண் சிறுத்தாம்பும் இராமானுஜ நூற்றந்தாதி நாலாயிரம் இதனால் தானே பூர்வர்கள் அருளிச் செய்து உள்ளார்கள் –
வைத்தியர் விசுவாசித்து உள்ளது போலே பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -பா மன்னு மாறன் அடி பணிந்து உயந்த இராமானுசன்
சரணாராவிந்தம் நாம் மன்னி வாழ்ந்து – பணிந்து உஜ்ஜீவிப்போம் –பகவத் அனுபவ ஜநித ப்ரீதி கார்ய கைங்கர்யம் கிட்டப் பெறுவோம் –

நிகமத்தில்
இத் திருவாய்மொழி வல்லார்-தாம் பட்ட துக்கம் படாதே
இந்த உலகத்தில்-இப் பிறப்பிலே-அவனைப் பெற்று
எப்பொழுதும் இன்பத்தை அனுபவிப்பர் –என்கிறார்

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் –
ஈன் துழாய் அம்மான் தன்னை யான் எங்கே காண்கேன்-
இறைமை தன்மைக்கு அறிகுறியான திருத் துழாய் மாலை உடைய-சர்வேஸ்வரனை
கண்டு தரிக்க மாட்டாதபடி ஆசை உடையனனா-யான் எங்கே காணக் கடவேன் –

என்று என்று –
பரத்வம் முதலானவற்றை பெறாத நான்–
உன்னை எக்காலத்திலும் சொல்லி-ஒரு கால் சொல்லி ஆசையை வெளிப்படுத்தினோம் அன்றோ-என்று ஆறி இருக்கிறார் அல்லரோ
இலாபத்து அளவும் சொல்லும் இத்தனை அன்றே-ஆதலின் என்று என்று -என்கிறார் –

அங்கே தாழ்ந்த சொற்களால் –
தோளும் தோள் மாலையிலும் அந்த இறைவன் தன்மையில்-ஈடுபட்ட சொற்களாலே –

அந்தண் குருகூர்ச் சடகோபன் –
எல்லா நோய்களும் என்னை வந்து அடையட்டும்-
நான் விஷ்ணுவினுடைய அந்த பரம பதத்தை கடன் கழிந்தவனாக சொல்லப் போகிறேன்-என்கிறபடியே
பீஷ்மர் -வசனம் -அனைத்து வியாதிகளும் -தனது சரீரத்தில் அடங்க -ஆடல் கொடுத்த ஆழ்வார் -ஆளவந்தார் நிர்வாகம் –
உபதிஷ்டந்து மாம் சர்வே வியாதய பூர்வ சஞ்சிதா-அன்ருண அஹம் கமிஷ்யாமி தத் விஷ்ணோ பரமம் பதம் -மகா பாரதம்
தனக்கு கிலேசம் உண்டானால் கர்ம பலம் கிருபா பலம் என்றாதல் பிறக்கும் பிரீதியும் -ஸ்ரீ வசன பூஷணம்
சலியாது இருக்கையாலே ஊரும் தழைத்தது-இவ்வாற்றாமைக்கு எல்லாம் ஆடல் கொடுத்த ஆழ்வார் -இடம் கொடுத்த ஆழ்வார் -ஆளவந்தார் நிர்வாஹம்-
பிரபன்ன ஜன கூடஸ்தர் -சலியாமல் தரித்து இருந்தாரே -அத்தை நினைத்து -உகந்து-குருகூர் அம் தண் குருகூர் ஆனது என்றவாறு –

செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும்-
மனம் வாக்கு காயம் என்னும் இம்மூன்றும் ஒரே–தன்மையராய்ச் சொன்ன-ஆயிரத்திலும் இப்பத்தையும் –

வல்லார்கள்-
கர வல்லவர்கள் –

இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-
இங்கே விப் பிறப்பே எல்லியும் காலையேகாண மகிழ்வர் –
இந்த உலகத்திலே–இப்பிறப்பிலே–பகல் இரவு என்ற வேறுபாடு இன்றிக்கே
பகவத் அனுபவம் பண்ணி மகிழப் பெறுவார்-
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்-என்று கூப்பிட-வந்து முகம் காட்டாத தாழ்வினை
இப்பத்தினை கற்று வல்லவர்களோடு-கடுக வந்து முகம் காட்டி தீருமாயிற்று ஈஸ்வரன் –
மனைவியோடு வெருப்புண்டானால் அவள் பக்கல்-முகம் பெறுகைக்காக குழந்தைகளைக் கொண்டாடுவாரைப் போலே —

———————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஸூ ஷேம சுந்தர தனு
பஹு பிரகார அஜுவ் ஹாவோ ஸவ்ரி ஈசம் கூப்பிட்டார்
பரி லிப்சுக்கு
முனி சோசன்
தஹன லீட அதி தப்த காட்டுத் தீ கதுவினால் போலே
ஏஹ்யேஹ் ஹி -ஏஹி ஏஹி வா வா என்று

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஜீவா அபேஷா -பிரதேஷா தீக்ஷிதன் அனுக்ரகம் எதிர்பார்த்து -இருப்பான் பேற்றுக்கு தரிக்க வேண்டுமே -இதுவே இத்திருவாயமொழிக்கு தாத்பர்யம் –
ஆச்சர்ய சேஷ்டிதங்கள்
சுப மகுட தயா
ஸ்வாம்யதா
அபியைசத்வாத்
ஜீவாமோத ஸ்யாமளத்தவாத
ஆஸ்ரித ஸூ லபன்
பத்ம ஸூ ர்ய அங்கத்வாத்-
பாண்டு ஸூ நோ சாரத்வாத்
அவணி பர க்ருதேகே
அந்தராத்மத்வ யோகாதி –

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 75-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

மாயன் வடிவு அழகைக் காணாத வல் விடா
யாயது அற விஞ்சி அழுதலுற்றும் தூய புகழ்
உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல்
அற்ற பொழுதானது எல்லியாம்—————75-

——————————————————————————

அவதாரிகை –

இதில்
அவனுடைய வடிவு அழகை அனுபவியாமல்
அழுத ஆழ்வார்
ஆர்த்தி அதிசய ஸூசக ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழே ப்ரஸ்துதமான அனுபவம் மானச அனுபவ மாத்ரமேயாய்
பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே
மிகவும் நோவு பட்டு
காட்டுத் தீ கதுவினால் போலே
பரிதப்த சித்த காத்ரராய்
அவயவ சோபை
ஆபரண சோபை
ஒப்பனை அழகு
இவற்றுக்கு ஆஸ்ரயமான விக்ரஹம்
இவற்றின் உடைய வைலஷண்யத்தை
பல படியாக வர்ணித்துக் கொண்டு
பெரும் கூப்பீடாக கூப்பிடுகிற மாயக் கூத்தனில் அர்த்தத்தை
மாயன் வடிவு அழகை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————————————————-

வியாக்யானம்–

மாயன் வடிவு அழகைக்-
சௌந்தர்ய
சீலாதிகளால்
ஆச்சர்யமான அவன்
விக்ரஹ சௌந்தர்யாதிகளை –
கர்மாபிதப்தா பர்ஜந்யம் ஹ்லாதயந்த மிவப்ரஜா -என்னும்படி அனுபவிக்க —

காணாத வல் விடாய்-
கனை கழல் காண்பது என்று கொல் கண்களே -என்றும்
மெய்க் கொள்ளக் காண விரும்பும் என் கண்களே -என்றும்
இப்படி பாரிப்பை யுடைய கண்களின் விடாய் தீரப் பருகப் பெறாமையாலே –
பிரத்யஷமாகக் காணப் பெறாமையாலே
மிக்க விடாயை யுடையராய் –

யது அற விஞ்சி –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும்
துவர்ந்து
பசை அற்று –
கீழில் விடாய் -எல்லாம் குளப்படி -என்னும்படி
கடல் போலே
அது அபி விருத்தமாய் –

அத்தாலே
அழுதலுற்றும் –
அழுது
அலற்றும் –
பிறந்த விடாய் தீர வந்து கலவாமையாலே
பாலரைப் போலே அழுது
அடைவு கெடக் கூப்பிடும் –
அதாவது –
வாசத் தடம் போல் வருவானை ஒரு நாள் காண வாராய் -என்றும்
கரு மா மாணிக்க நாள் நல் மலை போலே சுடர்ச் சோதி முடி சேர் சென்னி யம்மானே
இரங்கி ஒரு நாள் நீ அந்தோ காண வாராய் -என்றும்
முடி சேர் சென்னி யம்மா -என்று தொடங்கி பெருமானே என்று என்று ஏங்கி அழுதக்கால்-
படி சேர் மகரக் குழைகளும் -என்று தொடங்கி -தூ நீர் முகில் போல் தோன்றாயே-என்றும்
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்–தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே -என்றும்
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்றும்
நல் தேர் தனிப் பாகா வாராய் இதுவோ பொருத்தம் -என்றும்
இருஞ்சிறைப் புள்ளதுவே கொடியா உயரத்தானே –உன்னை எங்கே காண்கேனே -என்றும்
இப்படி
கதா த்ரஷ்யாமி ராமஸ்ய வதனம் புஷ்கரேஷணம் -என்னும்படி

அழுது அலற்றி -தூய புகழ் உற்ற –
சௌந்தர்யாதிகளை
அனுபவிக்கப் பெறாமையாலே
அழுது
அலற்றும் புகழை யுடையராய் –

இதர விஷய அலாபத்தாலே கிலேசிக்கை அயசஸ்சாய்
பகவத் அலாபத்தால் கிலேசிக்கை ஸ்லாக்கியமான
யசஸாய் இறே இருப்பது –

தூய புகழ் உற்ற –சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல் –
இப்படியான யசஸை யுடையரான
ஆழ்வாரை
நாம்
அநந்ய பிரயோஜனராய் கிட்டி நின்று
அனுபவிக்கும் காலம்
பகலாய் இருக்கும் –
வகுள பூஷண பாஸ்கரர் -பராங்குச ஆதித்ய சந்நிதி -இறே

அற்ற பொழுதானது எல்லியாம்-
அவருடைய
அனுபவ
விச்சேத காலமானது
சம்சாரம் ஆகிற காள ராத்ரியாம் –

————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: