பகவத் விஷயம் காலஷேபம் -163- திருவாய்மொழி – -8-4-1….8-4-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

வார் கடா அருவி -பிரவேசம்
சர்வேஸ்வரன் சம்சாரிகள் உடைய விருப்பையே பற்றுக் கோடாகக் கொண்டு
சம்சாரத்திலே வந்து அவதரித்து தனியே உலாவா நிற்கும் –
சம்சாரிகளும் தாங்கள் தாங்கள் விரும்பினவற்றை பெறுமதற்கு கிட்டுமது ஒழிய
இவன் வாசி அறிந்து பரியக் கூடிய சம்சாரிகள் இலர் –
என் புகுகிறதோ -என்று அஞ்சின இவர்க்கு அச்சம் தீரும்படி நமக்கு பரிவர் உளர் –
ஒருவர் பரிய வேண்டாதபடியான மிடுக்கும் நமக்கு உண்டு –
என்று தன் படிகளைக் காட்டி சமாதானம் செய்ய-சமாதானத்தை அடைந்தவராய் நின்றார் மேல் –

இத் திருவாய்மொழியில் –
இவர் ஆகிறார் காதலையே இயல்பாக உடையவராய் இருப்பர்-
காதல் மையல் ஏறி கலங்கி-முத்தரும் நித்தியரும் இங்கு இலரே-
சனகன் முதலான முமுஷுக்கள் -நல்ல தவத்தையும் மனனத்தையும் தியானத்தையும் விட மாட்டார்கள்-
கடல் கடைந்தது தெய்வப் பிறப்பில் அன்றோ -என்று கலங்குவர்-
இன்னம் இவருக்கு இது மறுவல் இடக்கூடும் என்று பார்த்து–மறுவல் இடாதபடி தன்னுடைய சூரத்தன்மை-
வீரத் தன்மை முதலான குணங்களையும் -சீர்கொள் சிற்றாயன்-பாசுரத்தில் –
படைத்தல் முதலான ஆச்சர்யமான சேஷ்டிதங்களையும் -படைத்து அளித்து அழிக்கும் –
எதிரிட்ட பகைவர்களை கூட்டத்தோடு வேரோடே வாங்கிப் பொகட வல்ல ஆற்றலையும் காட்டிக் கொடுத்து -கஞ்சனைத் தகர்த்த –
அதுக்கு மேலே
மேம்பட்ட ஞானத்தையும் சக்தியும் உடையவர்களாய்-தனக்கு பரிவராய் இருப்பர் –
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் -மனக்கொள் சீர் மூவாயிரவர் –
மூவாயிரம் பிராமணர் உளர் -என்று
காட்டிக் கொடுக்கக் கண்டு கிருதார்த்தராய்
அவன் வடிவு அழகிலும்-திருச் செய்ய கமலக் கண்ணனும் –நெஞ்சு சென்று அனுபவித்து இனியர் ஆகிறார்

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இராகவனைச் சரணம் அடைந்தவன் ஆகிறேன் -என்று விழுந்த போது
சோஹம் பருஷித தேன தாசவச்ச அவமானித-த்யக்த்வா புத்ராம்ச ஸதாராம்ச ராகவம் சரணம் கத -யுத்த -17-14
மகா ராஜர் பெருமாள் பக்கலில் பிரேமத்தால் கலங்கி துணுக்கு என்று
இவன் கூறிய சொல் பெருமாள் திருச் செவியில் படுமாகில் சாலத் தப்பாம் -என்று
நாயந்தே
ராவணனுடைய தம்பி-ராஷச சாதி–அவன் புகுரக் கடவன் அல்லன் -என்ன
இவர் நம் பக்கல் பரிவாலே சொல்லுகிற வார்த்தை நம் மிடுக்கைக் காட்டவே தெளிவர் என்று பார்த்து –
பிசாசான் தானாவான் யஷான் ப்ருதிவ்யாம் ஸ ஏவ ராஷசான்
அங்குள் அக்ரேன தான் ஹன்யம் இச்சன் ஹரி கணேஸ்வர -யுத்த -18-23
வானரக் கூட்டத்துக்கு அரசனான சுக்ரீவர்
பிசாசர்களாயும் அசுரர்களையும் யஷர்களாயும் பூமியில் இருக்கிற இராக்கதர்களை
விரல் நுனியாலே விரும்பினவனாய்க் கொல்லுவேன் -என்பன போன்ற வார்த்தைகளால்
தன மிடுக்கைக் காட்டக் கண்டு அவர் அச்சம் தீர்ந்து
கிம் அத்ரசித்ரம் தர்மஜ்ஞ லோகநாத ஸூகாவஹா-யத் த்வம் ஆர்யம் பிரபாஷேதா சத்வவான் சத்பதே ஸ்தித -18-36-
தேவரீர் கூறிய வார்த்தையில் என்ன ஆச்சர்யம் -என்று இனியர் ஆனால் போலேயும்

மல் போரில்
பூமிஸ் தஸ்ய ஸ ராமஸ்ய ரதஸ் தஸ்ய ஸ ராஷச-ந சமம் யுத்தம் இத்யாஹூ தேவ கந்தர்வ தானவ -யுத்த 103-5-
தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும் தரையில் இருக்கிற பெருமாளுக்கும்
தேரின் மீதே இருக்கும் அரக்கனுக்கும் நடக்கும் இந்த போரானது ஒத்தது அன்று-என்று கூறினார்கள் -என்றபடியே –
கூறிய பக்கத்தில் உள்ளவர்கள் உடைய அச்சத்தை அவர்கள் முன்னிலையிலே-
மல்லர்களை அழியச் செய்து தீர்த்து அருளினாப் போலேயும்
தம்முடைய அச்சத்தை போக்கி அருள–அதனால் கிருத்தாரத்தராய்-
நம்முடைய உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும்-எல்லாம் இவன் அல்லது இல்லை -என்று ப்ரீதராய்
முன்பு அழகினைக் கண்டு பரிவாலே அஞ்சினவர்
அழகிலே நெஞ்சு சென்று அனுபவித்து கிருத்தார்தராய்த் தலைக் கட்டுகிறார்-

செங்கணாஞ்சேரி -ஆரம் உளா -ஆரு திவ்ய தேசங்கள் சேர்ந்த இடம் –
-இமையவர் அப்பன் -தர்ம புத்ரன் –புனர் நிர்வாணம் செய்த திவ்யதேசம் சிற்றாறு –
மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் ஸுர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும் -விது ரஸ்ய மஹா மதி —
ஸுர்ய வீர்ய பராக்ரமங்கள் -குணவான் -வீர்யவான் -அடுத்து -பெருமாள் குணங்கள்
எதிரிகள் சேனை கண்டு கலங்காமல் வீரன் –
உள்ளே புகுந்து கலக்குபவன் – ஸூரன்-
தனக்கு விகாரம் இல்லாமல் கலக்குபவன் பராக்ரமன் –

——————————————————————————————

வார்கடா வருவி யானை மா மலையின்
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட
மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-

ரங்கம் கத-நம்பி மூத்த பிரான் உடன் நடந்தான் – -பத்து ஆகாரங்கள் –நந்த கோபனுக்கு மகன் கோபிகளுக்கு புருஷோத்தமன் -கம்சனுக்கு மிருத்யு –
செங்கனூர் -திரு வல்ல வாழ் நடுவில் -மருத நிலம் நதியும் நதி சார்ந்த இடம் –
அக்ரூரர் -வருஷிக்க வம்சம் -மூலம் சந்த்ர வம்சம் -யயாதி -யது -மூத்த பிள்ளை –புரு கடைசி -பாண்டவர்கள்
-வம்ச பூமிகளை உத்தரிக்க வராக கோபாலர் -போஜர்கள் யாதவர்கள் வ்ருஷ்ணிகள் -என்பர் இவர்களை –
அம்பஷ்டன் -பாகனுக்கு பெயர் -முடித்து –
குவலயா பீடம் முதலான விரோதி நிரசன –இவர் வர்த்திக்கும் திவ்ய தேசம் -நிர்பயமான ஆச்ரயணீய ஸ்தலம்
வார்கடா வருவி யானை மா மலையின்-பாய்ந்து ஓடும் மத ஜலம் -நாலுகின்ற வாய் -மூன்று மத நீர் பெருகுமே
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி-கொம்பு இரட்டை சிகரம் இறுத்து உருட்டி -வேழ போதகம் இவன் -தந்தம் செய்த கட்டில் நப்பின்னை பிராட்டிக்கு
-கோட்டுக்கு கால் கட்டில் -வீர பத்னி -அன்றோ –
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து-அடுத்து பாகன் -அம்பஷ்டன் -இறந்த யானையை நடத்த வல்லவன் -திண்மை -பிராணனை அழைத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்-முஷ்டிக சாணூரர்-ரெங்க மத்யகத்தார்-மச்சுக்களில் -மல்லரை மாட்டிய தேவாதி தேவன் –
அரசர்கள் வில் விழா பார்க்க வந்தவர்கள் -பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட-பிறக்கிட்டு போம்படி
மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த-உத்துங்க மாடத்தில் மேல் மாடத்தில் -பசலைக் குடம் பச்சை மண் குடம் போலே தகர்த்து
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்-ஸுர்ய வீரிய பராக்ரமம் கொண்ட இளம் பிள்ளை கண்ணன் -சிறிய பாலகன் ஆயன்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே-கேசவன் தர்மருக்கு பின் தமியர் அல்லர் -பிராப்யமும் பிராபகமும் அவனே –இதுவே ஆச்ரயணீய ஸ்தலம் –
ஜரா சாந்தன் பெண்கள் இவன் மனைவி -18 தடவை யுத்தம் பண்ண வந்த பொழுது துவாராபதிக்கு -சென்று காலயவனன்-

குவலயாபீடம் முதலான விரோதிகளை அளித்த சீர் கொள் சிற்றாயன் உடைய
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு-எங்களுக்கு அச்சமில்லாத புகலிடம் -என்கிறார்-

வார்கடா வருவி யானை மா மலையின்-
வாரா நின்றுள்ள மத நீராகிய அருவியை உடைய யானையாகிற மா மலையினுடைய
கடா -மதம்
மதத்தை உண்டாக்குகிற பொருள்களை தீற்றிப் பிச்சேற்றி புகுகிற வாசலிலே நிறுத்தினான்-
பிரமாதத்தாலே -அஜாக்ரதையாலே -வந்தது என்று மாதுலனாய் கண்ணநீர் விழவிட்டு தான் இருப்பானாக –
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதான் -பெரிய திருமொழி -6-5-6-என்னக்கடவது அன்றோ-
மருப்பிணைக் குவடிறுத்து-
மருப்பு இணைக் குவடு இறுத்து –
மருப்பாகிற இணைக் குவடுகளை இறுத்து-கொம்பாகிற சிகரங்களை வருத்தம் இன்றியே முரித்து என்றபடி
அம்மலையிலே இரண்டு சிகரங்களை ஒடித்தால் போலே ஒடித்து -என்றபடி –
உருட்டி –
கொம்புகளைப் பறித்தவாறே-உளுக்காந்து-திருவடிகளாலே வருத்தம் இல்லாமலே தள்ளி

ஊர் கொள் திண் பாகன் –
உயிர் உள்ள பொருளை நடத்துமாறு போலே நடத்த வல்லன் ஆயிற்று பயிற்சியின் பலத்தாலே-அதனாலே -ஊர் கொள்-என்கிறார்
திண்ணியனாய் யானையை நடத்துகிற பாகன்-
உயிர் செகுத்து-அதனை தள்ளினாலும் இவன் உயிர் போகாத அன்று அதனை முடித்தது ஆகாது காணும்

அரங்கின் மல்லரைக் கொன்று –
யானையின் கொம்புகள் இரண்டினையும் இருவரும் கொண்டு சபையின் நடுவில்-
புக்க அளவிலே -அச் செருக்கு பொறாமையாலே–போரிலே நோக்குள்ளவர்களாய் வந்த சானூர முஷ்டிகர்களைக் கொன்று-
யானை விலங்கு ஆகையாலே விரகு அறியாதே பட்டது-
அது போயிற்று ஆகிலும் மல்லர் உளர் -என்று-கஞ்சன் நினைத்து இருந்தவர்களை அழியச் செய்தபடி –

பூமிஸ் தஸ்ய ஸ ராமஸ்ய ரதஸ் தஸ்ய ஸ ராஷச-ந சமம் யுத்தம் இத்யாஹூ தேவ கந்தர்வ தானவ -யுத்த 103-5-
தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும் தரையில் இருக்கிற பெருமாளுக்கும்
தேரின் மீதே இருக்கும் அரக்கனுக்கும் நடக்கும் இந்த போரானது ஒத்தது அன்று–என்று கூறினார்கள் -என்றபடியே –
அருகில் உள்ள பெண்கள் முதலானவர்கள் அடங்க கூப்பிட்டு அஞ்சினவர்கள் ஆன சமயத்தில்
அவர்கள் அச்சம் எல்லாம் போம்படி வருத்தம் இல்லாமல் மல்லரைக் கொன்று -என்றுமாம்
சாந்தணி மேல் சதுரன் மலை -கயல் விழி வேல் விழி மான் விழி வில் விழி அழியாமல் -பொருத சதுரன் –

சூழ் பரண் மேல் –
சுற்றிலும் இருக்கிற மஞ்சத்தின் மேலே நின்று-
போர் கடா வரசர் புறக்கிட –
கெடு படையை வெற்றி உண்டாகும்படி கடாவி பொரும் அரசர்-
அபியாதா ப்ரஹர்தாச சேனா நய விசாரத-அப்ரத்ருஷ்யச்ய சன்க்ராமே க்ருத்தைரபி ஸூரா ஸூரை-அயோத்யா 1-29-
சேனையை நடத்துவதில் ஆற்றல் வாய்ந்தவன்-என்கிறபடியே
தூசித் தலையிலே வெற்றியோடு அல்லாத மீளாத படை பொருத்தி-போற்றி நடத்த வல்ல அரசர்கள் முது காட்டி ஒடும்படியாக
மாடமீ மிசைக் –
உயர்ந்த கட்டிலிலே இருந்தான் -என்றபடியே –
க்ருத கம்சேன கம்சோபி துங்க மஞ்சே வ்யவஸ்தித -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-26-
உயர்ந்த மாடத்திலே இருக்கிற -என்றது
தனக்கு அச்சம் எத்துணை உண்டு-அத்துணையும் உயர்த்தினான் ஆயிற்று மாடத்தை -என்றபடி
கஞ்சனைத் தகர்த்த –
அவன் இருக்கிற இடத்தளவும் எழப் பாய்ந்து-கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் –எரிய திருமொழி -3-10-3-என்கிறபடியே
மயிரைப் பிடித்து கீழே விழவிட்டு மேலே பாய்ந்து பசலைக் கலம் போலே உடைத்தான்-
பின்பு கிருஷ்ணனால் அலட்சியமாக கொல்லப்பட்ட கஞ்சனைக் கண்டு -என்றும்-
வில் பெரும் விழவும் -எல்லாம் ஒரே வேகத்தில் செய்து அருளினான் -என்பதால் -சேர்த்து அருளிச் செய்கிறார் –

அவஜ்ஞயா ஹதம் த்ருஷ்ட்வா கிருஷ்னேன மதுரேச்வரம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-91-என்றும்
கேசேஷூ ஆக்ருஷ்ய விகளத்கிரீடம் அவ நீதலே-ஸ கம்சம் பாதயாமாஸ தஸ்ய உபரி பாபாத ஸ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-86-
அந்த கண்ணபிரான் கஞ்சனுடைய கிரீடத்தை கீழே தள்ளி-மயிரைப் பிடித்து இழுத்து அவனைப் பூமியிலே தள்ளினார்-
அவன் மேலே விழுந்தார் -என்றும் வருகின்றபடியே–
இராசத துரோகிகளை கொல்லும் போது இராச சின்னங்களை-வாங்கிக் கொல்லுமாறு போலே-
தான் கொடுத்த முடியை வாங்கிக் காண் கொன்றது -என்று-அம்மங்கி அம்மாள் பணிப்பர்-
சீர்கொள் சிற்றாயன் –
சிற்றாயன் சீர் கொள்
பருவம் நிரம்பாது இருக்கச் செய்தே-வீர லஷ்மியால் குறைவற்று இருக்கிறவன்-
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு –
புலி நின்ற நூறு போலே பகைவர்களுக்கு அஞ்ச வேண்டும் ஊர்-
எங்கள் –
மகா ராஜர் -பெரியாழ்வார்- ஸ்ரீ விதுரர் –தாம்-பிள்ளை உறங்கா வல்லி தாசர்–இன்னோர் அன்ன பரிவர்-
செல் சார்வே –
அச்சம் இல்லாத இடம் என்று புகும் புகல்-
மேல் இவர்க்கு ஓடின அச்சம் நீங்கிற்று என்னும் இடம் இயல் தழைப்பிலே தெளிந்து இருக்கிறபடி கண்டதே-
இயல் ஓசையிலே தெளிய வேண்டுமே –

————————————————————————————————

எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2-

அசேஷ ஜகத் விஷயமாக -ஸ்ருஷ்டியாதி ஸமஸ்த விஷயமாய் -இவனே சார்வு
எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்-புகலாக மட்டும் இல்லை -போக்யமாக –
இமையவரப்பன் என்னப்பன்-நித்ய சூ ரிகள் நழுவாத ஞானம் -எனக்கும் ஸ்வாமி
பொங்கு மூவுலகும் படைத்தது அளித்து அழிக்கும்பொருந்து மூவுருவன் எம்மருவன்-உபகாரகன் -லோக த்ரயத்தையும் படைத்து
-மூர்த்தி த்ரயம் -இணைவனாம் -பொருந்திய -ஆகாரங்கள் எனக்கு பிரகாசகமாம் படி -தெளிவு படுத்திய
-அமலன் ஆதி பிரான் -ஜகத் காரணன் என்று உபகரித்தது போலே
எம் அருவன் அந்தராத்மாவாக இருந்து பிரகாசப் படுத்தி அருளினவன் –
முகம் பார்க்காமல் இல்லாத படி கண்டு அனுபவிக்கும் படி
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்-இளமையாய் கயல்கள் மருத நிலம் -பணை நீர் நிலம்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறுஅங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்-சகல சத்தா ஹேது புதன்
யாவர் மற்றென்னமர் துணையே-யார் தான் அனுரூபமான -வகுத்த சேஷி ஆவார் –

உலகத்தை படைத்தல் முதலாயின வற்றில் வல்லவனாய்–
திருச் செங்குன்றூரிலே நின்று அருளினவன்–
அல்லது எனக்கு நல் துணை இல்லை என்கிறார்–

எங்கள் செல் சார்வு –
அனுகூல்யராய் இருப்பார்க்கு எல்லாம் அஞ்ச வேண்டாத புகல்-
யாமுடையமுதம் –
புகல் மாத்ரமேயாய் இனிய பொருள் வேறே தேட வேண்டாதபடி இருக்கை-அனுபாவ்ய போக்ய வஸ்து –
எங்கள்
யாம் எனப் பலர் உளரே–கேசவன் தமர்க்கு பின் தனியர் அல்லரே-
குன்றம் எடுத்த பிரான் அடியரோடும் ஒன்றி நின்ற சடகோபன் -7-4-11-என்று
அவர்களோடு ஒன்றி நின்று சொல்லுகிற சொல் அன்றோ-
கஞ்சன் முடித்த பின்பு அந்தப் பட்டவர்கள் உடன் ஒன்றி நிற்கிறார் ஆழ்வார் இப்பொழுது –
தன்னே ராயிரம் பிள்ளைகள் உடன் -மங்களா சாசன பார்த்தார்கள் உடன் கூடி என்றுமாம் –

இமையவரப்பன் என்னப்பன் –
நித்ய சூரிகளை அடிமை கொண்டால் போலே என்னை அடிமை கொண்டான் -என்றது
குறைவு அற்றாருக்கும் சத்தைக்கு காரணமாய்-
குறைவுக்கு எல்லையான எனக்கும் சத்தைக்கு காரணமானவன் என்றபடி-

பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பரந்தவையான மூன்று உலகங்களையும்-
உண்டாக்கி
காத்து
அழிக்குமவன்

பொருந்து மூவுருவன் –
இச் செயல்களுக்கு பொருந்தின மூன்று வடிவை உடையவன் –
பிரமனுக்கு அந்தர்யாமியாய் நின்று படைப்பான்-
ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் நின்று அழிப்பான்-
தனது உருவமாகவே நின்று காப்பாற்றுவான்-
விஷ்ணு அவதாரமே பிரதம அவதாரம் -பிரதமஜ–
அன்றிக்கே
பொருந்துகையாவது
ராஜச குணத்தால் மிக்க பிரமனோடும்-
தாமச குணத்தால் மிக்க சிவனோடு-
திவ்ய மங்கள விக்ரகத்தோடு வாசி அற்று இருக்கை-

எம்மருவன் –
மற்று எல்லார் உடைய காரியமும் நம் புத்தி அதீனமாய் இருக்கும் அல்லது நம்
கார்யம் அல்லாதார் நினைவின் படி அல்ல காணும் இருப்பது-என்று எனக்கு அறிவித்து
என் அச்சத்தை நீக்கி-
எனக்கு தாரகன் ஆனவன்-
படைத்தல் அளித்தல் அழித்தல் என்னும் மூன்றுக்கும் காரணமானவரும்-
தமக்கு ஒரு காரணம் இல்லாதவரும்-சர்வேஸ்வரருமான-பகவானைச் சரணம் அடைமின் -என்றபடி
பராவரேசம் சரணம் வ்ருனுத்வம் அசூரார்தனம்-உத்பத்தி ஸ்திதி நாசானாம் அஹேதும் ஹேதும் ஈஸ்வரம் -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -1-9-36-என்றபடியே
தன்னின்று வேறு பட்ட எல்லா பொருள்களும் தன நினைவிலேயாய்–
தான் ஒருவன் நினைவின்படி அன்றிக்கே இருக்கிறபடியைக் காட்டி என்னைத் தரிப்பித்தவன்-

செங்கயல்களும் –
யௌவனத்தாலே சிவந்த கயல்கள் களித்து வாழ்கின்ற தேசம்
பரிவர் இல்லை என்று முன்பே வருந்தி
பின்பு -வார்கடா வருவியாய் -இருக்கிறபடியைக் கண்டு ப்ரீதராக வேண்டாதே
எல்லா பொருள்களும் களித்தே வாழ்கின்ற தேசம் -என்கை –

தேம் பணை புடை சூழ் –
தேனை உடைத்தான நீர் நிலங்கள் சூழ்ந்த -என்னுதல்
மருத நிலத்தாலே சூழப் பட்ட ஊர் -என்னுதல்-நதி தீரம் –

திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு-அங்கு அமர்கின்ற –
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாசம் செய்கிற ஊர்-

ஆதியான் –
எல்லா பொருள்களுக்கும் காரணம் ஆனவன் என்னுதல் –என்னுடைய சத்தைக்கு காரணமானவன் -என்னுதல்
குழந்தைக்கு மிக அண்மையில் வசிக்கும் தாயைப் போலே-என் சத்தையே நோக்கிக் கொண்டு இருக்கிறவன்

அல்லால் யாவர் மற்றென்னமர் துணையே-
அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே –இவனை ஒழிய எனக்கு சேர்ந்த துணை இல்லை-
அல்லாதார் கழுத்து கட்டியாதல்-துணை என்ற பேராய் ஆபத்தில் கூட அழுதல் செய்வர் இத்தனை-

————————————————————————————————

என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே–8-4-3-

வராஹ ரூபி -பிரளய ஆபத்தில் ரஷித்தவன் திருவடிகளே சார்வு -கிருஷ்ணன் -விஷ்ணு -முதல் இரண்டாலும் சொல்லி –
என்னமர் பெருமான் இமையவர் பெருமான்-அனுரூப நாயகன் -சேஷ புதன் நான் சேஷி நீ -நித்ய சூரிகள் நாயகன்
இருநிலம் இடந்த வெம்பெருமான்-ஸ்ரீ வராஹ நாயனார்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள-ஒரே செயல் பாட்டில் நசிக்கும் படி
என்னை யாள்கின்ற வெம்பெருமான்-என்னை ஆளும் ஸ்வாமி
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரைமீ பால்-மேற்குப் பக்கம் -நின்ற நிலை அழகில்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே-அடிமை சாசனம் -நினைப்பிலும் -மநோ ரத திசையிலும் வேறே புகல் இல்லை -நான் கண்ட நல்லது
-ஞானப் பிரானை அல்லால் இல்லை -பட்டர் கௌசிக புராணம் அவதாரங்களில் காட்டில் ஸ்ரீ வராஹ நாயனாரை பற்ற அருளிச் செய்தார் –

ஸ்ரீ வராஹமாய் பிரளயம் கொண்ட பூமியை எடுத்தருளி-
திருச் செங்குன்றூரிலே நின்றவனுடைய திருவடிகள் அல்லது-
வேறு புகலிடம் எண்ணத்திலும் கூட எனக்கு இல்லை

என்னமர் பெருமான் இமையவர் பெருமான்-இமையவர் பெருமான் என்னமர் பெருமான் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்-எனக்கு அமர்ந்த ஸ்வாமியாய் உள்ளான் – என்றது
நித்ய சூரிகள் தனக்கு பரிவராய் இருக்கும் இருப்பைக் காட்டி-நான் அஞ்சாதபடி செய்து-
என்னுடைய அடிமையாம் தன்மையை நிர்வஹித்தவன் -என்றபடி-

இருநிலம் இடந்த வெம்பெருமான் –
பிரளயம் கொண்ட பெரிய பூமியை எடுத்த தன் ஆற்றலைக் காட்டி என்னை அடிமை கொண்டவன் -என்றது
பிரளயம் கொண்ட பூமியைப் போன்று எல்லாரும் தனக்கு-குழைச் சரக்காய் இருக்கிற படியைக் காட்டி
தம் அச்சத்தைக் கெடுத்தான் என்கை-

முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள – என்னை யாள்கின்ற வெம்பெருமான் –
பழையனவான பிரபலமான கர்மங்களை–வாசனையோடே போக்கி – என்னை அடிமை கொள்ளுகிற ஸ்வாமி–
அன்றிக்கே
சூரம் வீரம் முதலியனவற்றைக் காட்டி–மேல் எனக்கு பிறந்த அச்சம் எல்லாம் போம்படி என்னை அடிமை கொண்டவன் -என்னுதல் –
வல்வினை -என்கிறது பக்தியினால் பரவசப்பட்டு இருக்கும் தன்மையை-
அதுவே அன்றோ -வரம்பில் ஆற்றலை உடைய இறைவனுக்கு என் வருகிறதோ என்னும் அச்சத்தைப் பிறப்பித்தது-
வாராயோ என்றாற்கு சென்றேன் என் வல் வினையால் -மன்றமர கூத்தாடி மகிழ்ந்தான் -குடக் கூத்து பார்க்கப் போனது
கிருஷ்ண பக்தி என்னும் வினையால் -சத்ருகன் அனக-நித்ய சத்ரு –

தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரை-
ஆரியர்கள் இகழ்ந்த பூமியான தெற்கு திக்குக்கு ஆபரணமான ஊர் –

மீ பால் நின்ற வெம்பெருமான் –
மேலைத் திக்கில் நிலையும் உயர்வுக்கு காரணமாய்–இவருக்கு அச்சம் நீங்குவதற்கு உடலாய் இருக்கிறது
திசைகளைப் பற்றி அன்றோ பரத்வம் இருப்பது –மேலைத்திக்கில் மேம்பட்டவர் நிற்கிறார் என்றவாறு –

அடியல்லால் சரண் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே
அவன் திருவடிகளை ஒழிய மற்று புகலிடமாய் இருப்பது–ஒரு பொருள் எண்ணத்திலும் இல்லை

——————————————————————————–

பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்
அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4-

ஆஸ்ரித அர்த்தமாக -த்ரிவிக்ரம -சமுத்திர மதன ரூபமான –அதிதன்-திருநாமம் –
பிறிதில்லை எனக்குப் பெரிய மூ வுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த-வளர்ந்த -மிகப் பெரிய உருவமாக -ஆகாசப் பரப்பு அடங்கல் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த—அதி குள்ளம் கோஷிக்கும் கடல் –
கோல மாணிக்கம் என்னம்மான்-பிரகாசிப்பித்த ஸ்வாமி
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்-தோப்புக்கள் நிறைந்த
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு-திவ்ய தேசத்தில்
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்-உள்ளபடி அறியும் படி -வாமன திரிவிக்ரம அமுத மதன வ்ருத்தாந்தங்கள்
அறியும் படி -அடி இணைய யல்லதோர் அரணே-திருவடிகளை ஒழிய வேறே ரக்ஷணம் இல்லை

மகா பலியை வென்றும் — கடலைக் கடைந்தும் — அடியார்கள் உடைய ஆபத்தைப் போக்கி-
திருச் செங்குன்றூரிலே நின்றருளினவன் திருவடிகள் அல்லது-வேறு அரண் இல்லை -என்கிறார்

பிறிதில்லை எனக்குப் –
எனக்கு பிறிது இல்லை –அவனை ஒழிய வேறு ரட்ஷகர் எனக்கு வேறு இல்லை –

பெரிய மூவுலகும் நிறையப் பேருருவமாய் நிமிர்ந்த –
பிரமலோகம் முடிய ஆகாசத்தில் இடம் முழுதும் விம்ம வளர்ந்து -என்றது-தொடங்கின கார்யம் வென்ற பிரீதியால் வளர்ந்த படி

குறிய மாண் எம்மான் –
வளருகுகைக்கு உடலாகக் கொண்ட வாமன வேடத்தையும் -இரப்புத் தன்மையும் காட்டி -என்னை அடிமை கொண்டான்
மகா பலியைக் வெல்லுக்கைக்கு கொண்ட வடிவைக் காட்டி–அச்சத்தைக் கெடுத்தபடி –

குரை கடல் கடைந்த –
பெரிய ஒலி எழும்படி கடலைக் கடைந்தவன்-

கோல மாணிக்கம் –
பெரிய விலையதான இரத்தினம் போலே இருக்கின்ற அழகிய வடிவைக் கொண்டாயிற்று கடலைக் கடைந்தது –

என்னம்மான் –
கடல் கடைந்த ஆற்றலையும் அழகையும் காட்டி என்னை அடிமை கொண்டவன் –
தேவர்கள் அசுரர்கள் சக்யம் -மந்தரம் கூர்மம் -பல வியாபாரங்கள் கொண்ட சாமர்த்தியம் -மோஹினி திரு ரூபம் அழகு –

செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ் திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு –
செறிந்த குலையை உடைத்தான வாழை–அப்படிப் பட்ட தெங்கு கமுகு
இவற்றின் திரளாலே சூழப் பட்ட ஊர்
ஊரின் சிறப்பு என்றும் அரண் என்றும் இரண்டு இல்லை –
செறிந்த குலைகளாலும் திரண்டு சூழ்ந்து இருக்கையாலும்-உகாதாவருக்கு புகுர ஒண்ணாதபடி இருக்கை
திருச்சிற்றாறு -அறிய –
திருச் சிற்றாறில் உள்ளார் சர்வேஸ்வரன் என்று அறியும் படியாக –
மஞ்சா க்ரோசித்த -கட்டில்கள் கூப்புடிகின்றன -போலே ஆகு பெயர்
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்-யோஹம் யஸ்ய யதாஸ் சாஹம் பகவான் தத் ப்ரவீது மே-யுத்த -120-11-
ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ-அஹம்வோ பாந்தவோ ஜாதோ ந ஏதத் சிந்த்யம் இத அந்யதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12-

மெய்ம்மையே நின்ற வெம்பெருமான் –
நான் என்னை மனிதனாகவே நினைக்கின்றேன் -என்றும்
உங்களுக்கு உறவினனாகவே பிறந்து இருக்கிறேன் -என்றும்
மறைக்க வேண்டாதபடி–பத்தம் பத்துமாக நின்ற என் ஸ்வாமி-
பத்து அவதானங்கள் பத்து பாசுரங்களில் அருளிச் செய்யும் படி அருளினான் –

அடி இணைய யல்லதோர் அரணே-
அவன் திருவடிகள் அல்லது ஒரு பாதுகாவல் இல்லை –
அடி இணை அல்லது ஓர் அரண் பிறிது இல்லை எனக்கு —

———————————————————————————-

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5-

அர்ச்சா ஸ்தலாந்தரங்களும் -அவனை ஒழிந்து இராது இருக்க -இங்கு நிலை ஒழிய -அடியேனுக்கு பொருந்துகிறது இல்லை
அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை-அர்ச்சா ஸ்தலங்களில் புகலாக வேறுஇல்லை
அது பொருளாகிலும் அவனை-இதுவே அர்த்தஸ்திதி -பாவோ நான்யத்ர கச்சதி -யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த-அன்பு பக்தி தாத்பர்யம் பிரேம பூயிஷ்டர் யாகாதிகளில்
நறும் புகை விசும்பொளி மறைக்கும்-ஹோமப்புகை தனி வாசனை –ஆகாசத்தில் ஆதித்யாதி தேஜஸ் மறைக்கும் –படியாய்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்-நீண்ட மாடங்கள் உள்ள திவ்ய தேசம் –
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-நிர்பயமான புகல் இடம் -கீழ் திருவடிகளே உபாயம் -அல்லாத கர்மாதி உபாயாந்தரங்களும்
தத் சம்பந்திகள் தானே -அவனை ஒழிந்து இருப்பது இல்லையே -விஷயம் அவனே தானே -பல பிரதாதாவும் அவன் –
– போக்தா பிரபுரேவச அஹம் -வேதாந்த சித்தார்த்தம் இதுவாக இருந்தாலும் -அத்வாரகமாய் அவனை நேராகப் பற்றியே -கொள்வேன்
நமஸ்காரங்கள் கேசவன் குறித்து ஓடும் -நதிகள் கடலை நோக்கி போவது போலே
அதனால் தான் எங்கும் போகிறேன் என்பர் விதண்டா வாதிகள் –அத்வாரம் இருக்க எதுக்கு சத்வாரம் -ஆழ்வார் நிலை
-மூக்கை நேராக தொடாமல் சுத்தி தொடவோ –அவன் வர்த்திக்கும் இந்த அர்ச்சா ஸ்தலமே எனக்கு புகலிடம் –

அல்லாத உகந்தருளின தேசங்களும் உண்டாய் இருக்க-திருச் செங்குன்றூரில் நீர் மிக்க விருப்பத்தைச் செலுத்தி
வற்புறுத்துவதற்கு காரணம் என் -என்ன –
அது அங்கனே இருக்கச் செய்தேயும் திருச் செங்குன்றூரில்-அல்லது என் மனம் சேர்ந்து அணையாது -என்கிறார் –

எம்பெருமானார் உய்யக் கொண்டாருக்கு சொல்லும் வார்த்தை சமரிப்பது -பக்தி நிஷ்டர் –
-பிரபத்திக்கு பெருமாள் அனுக்ரகம் இல்லையே போலே -உண்மை இதுவானாலும் நெஞ்சம் படி தானே லௌகிக விஷயத்தில் செய்கிறோம் –

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை –
அல்லாத இடங்களும் அவனுக்கு புறம்பாக இருப்பது இல்லை –

அது பொருளாகிலும் –
பொருள் அது -பொருளின் உண்மை அது –ஆகிலும் –இங்கனே இருந்தது ஆகிலும் –

அவனை யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது –
திருச் செங்குன்றூரில் நின்று அருளினவனை அல்லது-என் மனமானது சேர்ந்து அணையாது –
ஸ்ரீ வைகுண்டநாதன் ஈஸ்வரன் அல்லாமையும் சம்பந்தம் இல்லாமையுமோ-
திருவடி -வேறு ஒன்றினை என் மனம் விரும்புகிறது இல்லை -என்றது –பாவோ நாந்யாத்ர கச்சதி -உத்தர -40-15-அப்படியே இவரும்-
அமர்ந்து அணைகை –
உள் வெதுப்பு அற்று பொருந்துகை

ஆதலால் –
இப்படி ஆகையால்-

அவனுறைகின்ற-
அவன் நித்ய வாசம் செய்கிற –
உறைகின்ற என்பதனை பின் வருகின்ற திருச் செங்குன்றூர் -என்றதனோடு கூட்டுக –

நல்ல நான் மறையோர்-
அவனை அல்லது வேறு பிரயோஜனத்தை கருதாத பிராமணர் –

வேள்வியுள் மடுத்த நறும் புகை –
யாகங்களில் உண்டான அவிர்பாகத்தின் வாசனையோடு கூடிய தூமம் –
அவனை அல்லது வேறு ஒரு பிரயோஜனங்களில் விரும்பாதவர்கள் ஆகில் இவர்கள்-செய்யும் யாகத்துக்கு பயன் என் என்னில்
யாகம் செய்வதே பிரயோஜனம் ஆதல் –
பகவானுக்கு விரோதிகளாக உள்ளவர்கள் அழியச் செய்யும் அபசாரம் பலமாதல்-
எம்பெருமானாரைப் போலே ஆயிற்று அவ் ஊரில் பிராமணர்களும் –
கிருமி கண்டனுக்காக அபிசரித்த ஹோமம் -தேவதையையோ குருவையே நிந்தித்தால் -தலையை இருப்பதே கருமம் கண்டாய்
-சுதர்சன சதகம் கூர நாராயண ஜீயர் கைங்கர்யத்துக்கு ஏற்ற சரீர சக்தி பெறுவதற்கு பயன் படுத்தினால் போலே –
மணல் திரிக்க நிழல் போலே கூரத் ஆழ்வான் பெரிய நம்பி பின் நிழல் போல போன ஐதிகம்
விசும்பொளி மறைக்கும் –
ஆகாசத்தில் ஒளி உள்ள சூர்ய சந்த்ரர்களை மறைக்கும் என்னுதல்-
விசும்பு தன்னில் ஒளியை மறைக்கும் என்னுதல் –

நல்ல நீள் மாடத் –
ஓர் கர்மமும் வேண்டா-ஊர் அரண் தானே பகைவர்களுக்கு அடைய முடியாததாய் இருக்கும்-

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு –
மாட மா மயிலை திருவல்லிக்கேணி -என்னுமாறு போலே –
மாட மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேனே போலே -ஊரும் கிராமமும்
-படை வீடு போலே மயிலை -திருப்பதி திருவல்லிக்கேணி -போலே

எனக்கு நல் அரணே-
அஸ்த்தானே பய சங்கை பண்ணும் எனக்கு அச்சம் நீங்குகின்ற தேசம் அது அல்லது இல்லை-
திருச் சிற்றாறு என்று திருப் பதிக்கும் பேர் -ஆற்றுக்கும் பேர் –

————————————————————————————-

எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடல் பள்ளியம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-

சர்வ பிரகார உபகாரகன் ஷீராப்தி நாதன் -பரிவர் நிறைந்த திவ்ய தேசம் –
எனக்கு நல்லரணை எனதாருயிரை-நிர்பயமான -சத்தா தாரகம்
இமையவர் தந்தை தாய் தன்னை-நித்ய சூரிகள் சத்தைக்கும் வ்ருத்திக்கும் ஹேது பூதன் –
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்-சர்வஞ்ஞன் தனக்கும் அறிய முடியாதே -ஆஸ்ரித ரக்ஷணம் அர்த்தமாக
தடங்கடல் பள்ளியம்மானை-விஸ்தீரணம் கூப்பிடு கேட்க்கும் இடம் -சர்வேஸ்வரன்
மனக்கொள் சீர் மூவாயிரவர்-லோக க்ஷேமார்த்தமாக வாழ்பவர்கள் -நெஞ்சில் பகவத் குணங்களை அனுசந்தித்து இருக்கும் மூவாயிரம் பேர்களும்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்-மூவருக்கும் சமமான -ஓர் ஒருவரே ஜகத் ஸ்ருஷ்டி யாதிகள் மூன்றையும் பண்ணும் திறமை இருந்தாலும்
–வேத வியாசர் ஜகத் வியாபார வர்ஜம் என்பதால் செய்ய மாட்டார்கள் -சக்தி உண்டு பிராப்தி இல்லை என்றவாறு -பகவத் அனுபவமே வாழ்வாக கொண்டு
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்-திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே-வி லக்ஷண திவ்ய தேசத்தில் காணப் பெற்றேன் –

நித்ய சூரிகளுக்கு எல்லாவிதமான உருவுமாய்–பிரமன் முதலாயினோர்கட்கு அடையபடுபவனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற இவனை-தனக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாதபடி
அச்சம் அற்ற திருச் செங்குன்றூரில் காணப் பெற்றேன் -என்கிறார்

எனக்கு நல்லரணை –
பின்னர் -உபாசகனான அவன் பயம் அற்றவனாக ஆகிறான் –
அதஸ அபயங்கதோ பவதி -தைத்ரியம் –
என்கிற விஷயத்துக்கு என் வருகிறதோ என்று பயப்படிகிற எனக்கு அச்சம் அற்ற அரண் ஆனவனை –

எனதாருயிரை –
தன்னுடைய காக்கும் தன்மையைக் காட்டி எனக்கு தாரகம் ஆனவனே –

இமையவர் தந்தை தாய் தன்னை –
அஸ்த்தானே பய சங்கை பண்ணும் நித்ய சூரிகளுக்கு எல்லாவிதமான உறவுமானவனே-
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு -என்னக் கடவது இறே-

தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்-
இயல்வாகவே சர்வஞ்ஞன -முற்றறிவனனான தன்னாலும் தன்னை அளவிட அறிய முடியாது
முதலிலே அச்சத்துக்கு இடம் இல்லை –
ஒரு பொருளை அளவிட்டு அறிந்து நலிய வேண்டுமே –

தடங்கடல் பள்ளியம்மானை –
ஸ்வேத தீபத்தில் வசிக்கின்றவர்கள் பற்றுதற்கும்–
மது கைடபர் முதலானோரை அழிப்பதற்கும்-
பிரமன் முதலானோர் பரிகைக்கும்-
திரு பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனை-

மனக்கொள் சீர் மூவாயிரவர் –
பகவத் குணங்களை மனத்திலே கொண்டு
இக் குணாதிகனுக்கு என் வருகிறதோ -என்று அஸ்த்தானே பய சங்கை பண்ணிக் கொண்டு
வசிக்கின்றவர்கள் மூவாயிரம் பிராமணர்கள் உண்டு –
இவ் ஊரிலும் பிராமணர்களும் இவர் கோடியிலே ஆயிற்று
பரத்வாஜ முனிவரை ஒரு நிலைப் பட்ட மனம் மொழி மெய்களை உடைய ஸ்ரீ ராமபிரான் வணங்கினார் –
பூர்ணே சதுர்தசே வர்ஷே பஞ்சம்யாம் லஷ்மண க்ரஜ-பரத்வாஜ ஆஸ்ரமம் ப்ராப்ய வவந்தே நியதோ முநிம் – யுத்த -127-
என்கிற பரத்வாஜ மகா முனிவரோடு ஒத்து இருக்குமவர்கள் –மனன சீலர்கள் –
தன்னைப் பிரிந்த அன்று முதல் ராவணனை கொன்று மீளும் அளவும் செல்ல
இவர்களுக்கு என் வருகிறதோ என்று இதனையே நினைந்து இருந்தவர் அன்றோ ஸ்ரீ பரத்வாஜ முனிவர்

வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் –
மூவர் செய்யும் கார்யங்களும் ஓர் ஒருவரே செய்ய வல்லராய் இருப்பார்கள் –
அதிகாரி புருஷர்களில் இவர்களுக்கு உண்டான ஏற்றம் –

கனம் கொள் திண் மாடத் –
இவர்களும் மிகை –ஊர் அரண் தானே சிலருக்கு புகுவதற்கு போகாது –

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே –
அஞ்சின தேசத்தில் அச்சம் நீங்கினாப் போலே சம்சாரத்தில் பயம் அற்றதாய் இருப்பது-
ஒரு தேசம் கண்டாய் -அதிலே காணப் பெற்றேன் –

————————————————————————————————

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத்திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-

அதிசயித அவயவ ஆபரண ஆயுத சோபை -உடன் உள்ளத்தில் இருப்பதால் பயம் தீர்ந்தேன் -நித்ய சந்நிஹிதன் ஆகா நின்றான் –
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத்திருவடி என்றும்-திவ்ய தேசத்தில் கண்ட ஸ்வாமி -திருவடி தான் நாமம் ஸ்வாமி போலே -தாதபாதர் அப்பா போலே
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்-சிறந்த கமலம் போலே
செவ்வடியும் செய்ய கையும்திருச் செய்ய கமல வுந்தியும் -திருக் கமலம் உடைய உந்தி உ ய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்திருச் செய்ய முடி-எப்பொழுதும் திகழும் படி -என்றும் உள்ளான் -விலகாமல் -திவ்ய தேசம் விட்டு இங்கே வந்தால் போலே இல்லாமல் –

திருச் செங்குன்றூரில் நின்று அருளின சீர் கொள் சிற்றாயன்-
தன் அழகோடு என் நெஞ்சிலே வந்து புகுந்தான் -என்கிறார்-
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு -வந்தான் -முன்பு இங்கு அனைத்துடன் வந்து மறக்க முடியாமல் புகுந்து உள்ளான் –

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட அத்திருவடி –
அச்சம் அற்ற இடமான திருச் செங்குன்றூரில்திருச் சிற்றாறாலிலே காணலாம் படி நின்ற ஸ்வாமி-
திருவடி -ஸ்வாமி

திருச் செய்ய கமலக் கண்ணும் –
அழகியதாய் சிவந்து இருப்பதாய் மலர்த்தி செவ்வி முதலானவற்றாலே தாமரை போலே இருக்கிற திருக் கண்களும் –
தூது செய் கண்கள் பிரதம கடாக்ஷம் முதல் உறவு பண்ணி அருளும் –

செவ்வாயும் –
நோக்காலே பிறந்த முதல் உறவைக் கிரயம் செலுத்திக் கொடுக்கும் புன்முறுவலும்-

செவ்வடியும் –
புன்முறுவலுக்கு தோற்று விழும் திருவடிகளும் –

செய்ய கையும் –
திருவடிகளிலே விழுந்தாரை எடுத்து அணைக்கும் திருக்கைகளும் –

திருச் செய்ய கமல வுந்தியும் –
அணைத்தார்க்கு எப்பொழுதும் அனுபவிக்கத் தக்கதாய் –
அழகுக்கு எல்லையாய் –
எல்லா பொருள்கட்கும் பிறப்பிடம் என்று தோன்றும் படி இருக்கிற திரு நாபியும் –

செய்ய கமலை மார்பும் –
பகவான் உடைய சம்பந்தம் இல்லார்க்கும் -சம்பந்த ஞானம் -இல்லாதார்க்கும் -பற்றாசான-பிராட்டிக்கு இருப்பிடம் ஆகையாலே
சிவந்த திரு மார்பும்
கமலை -என்றுமாம் –நீல மேனி -மாற்றி சிவந்ததாக ஆக்கி அருளும் செய்யாள் இருப்பதால் –

செய்ய வுடையும் –
திருமேனிக்கு பரபாகமான தன்மையைக் குறிப்பதான
திருப் பீதாம்பரமும் –

திருச் செய்ய முடியும் –
அப்படி திரு மேனிக்கு பரபாகமாய்
அச்சம் தீரும்படி காப்பதற்கு அறிகுறியான திரு முடியும் –

ஆரமும் –
பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு -மூன்றாம் திருவந்தாதி -55 -என்கிறபடியே
திருமார்புக்கு தகுதியான திரு ஆரமும் –

படையும் –
வினைத் தலையில் ஆயுதமாய்–
போக நிலையில் ஆபரணமாய்–
இருந்துள்ள திவ்ய ஆயுதங்களும் –ஜாதி ஏக வசனம் –

திகழ –
தண்ட காரண்யம் முழுதும் அழகிய சோபை விளங்கச் செய்து -என்றபடியே–
சோபயஸ் தண்டகாரண்யம் தீப்தேன ஸ்வேன தேஜஸா அத்ருச்யத் ததா ராமோ பால சந்திர இவோதித -ஆரண்யம் -38-15-
என்கிறபடியே -விளங்க –

என்றும்வென்ன சிந்தை யுளானே –
அவன் என்றும் ஒக்க என் சிந்தையிலே வசிக்கையாலே
அச்சத்துக்கு ஒதுங்க இடம் இல்லை –
அழகுடன் மறக்க ஒண்ணாத படி நெஞ்சில் புகுந்தான்

————————————————————————–

திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8-

ஜகத் காரண வஸ்து -ஜென்மாதி காரணன் -புகழுமாறு அறியேன்
திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்-உஜ்ஜவலமாம் படி
செழு நிலைத் தேவர் நான்மறையோர்-வி லக்ஷணர் பூமி தேவர்கள் -நான்கு வேதங்களுக்கும் நிர்வாகர்கர்கள்
திசை கை கூப்பி ஏத்தும்-திக்குகள் தோறும்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை-பிறருக்கு ஆஸ்ரய ணீயத்தயா ஒளி உண்டே தேவர்களுக்கு -அவர்களுக்கும் ஆஸ்ரய நீயனாக-
அசுரர் வன்கையர் வெங்கூற்றை-அவர்களுக்கு விரோதிகள் பிரபல விரோதிகள் -அசுரர்க்கு மிருத்யு –
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்படைப்பொடு கெடுப்புக் காப்பவனே-இவ்வளவு பெருமை –
பொருந்து- பிரித்து ஸ்திதி இல்லா மூ உலகம் -இன்ன ஆகாரத்தால் வகை அறிந்து புகழுமாறு அறியேன் –

இப்படி நிறைவாக அனுபவித்த சீர் கொள் சிற்றாயன் உடைய-
விலஷணமான குணங்களிலும் அழகிலும் அழுந்தி-
அவனைப் புகழும்படி அறிகின்றிலேன் -என்கிறார் –

திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்
இதுவும் இவருக்கு ஓர் அச்சம் நீங்குவதற்கு காரணம் –
தம் நெஞ்சிலே இருக்கையாலே ஒரு அரணுக்கு உள்ளே இருக்கிறாப் போலே இருக்கிறது ஆயிற்று –
உகவாதார் நெஞ்சிலே இருக்கிற அச்சமும் போயிற்று –
இனிப் போய் பிறர் ஒருவர் வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன் -பெரிய திருமொழி -7-2-7-என்னுமவர்களே அன்றோ –

செழு நிலைத் தேவர் நான்மறையோர் திசை கை கூப்பி ஏத்தும் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை –
நான்மறையோர் செழு நிலத்தேவர்-
நான்கு வகைப் பட்ட வேதங்களும் கை வந்து-விலஷணராய் பூ தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
திசை கை கூப்பி ஏத்தும் திருச் செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை யானை —
திக்குகள் தோறும் நின்று கை கூப்பி ஏத்தா நின்றுள்ள திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரையில் வசிக்கிறவனை-
உகவாதாருக்கு கிட்ட ஒண்ணாதபடி அரணான ஊரிலே நிற்கிறபடி –

புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை –
தங்களை ஒழிந்தாருக்கு எல்லாம் புகலிடமாய் இருப்பவர்கள் ஆகையாலே வந்த-
ஒளியை உடையரான பிரமன் முதலானவர்களுக்கும் ஆபத்து வந்தால் புகலிடமாய் உள்ளவனை –

அசுரர் வன்கையர் வெங்கூற்றை –
முன்கை மிடுக்கரான அசுர கூட்டத்துக்கு-
அந்தகன் தண்ணீர் என்னும்படி வெவ்விய குற்றமாக உள்ளவனை –

புகழுமாறு அறியேன் –
அவனுக்கு ஒரு குறை இல்லை –என் குறை தீரப் புகழ்வது ஒரு பிரகாரம் அறிகின்றிலேன்
புகழாது ஒழியவும் மாட்டுகின்றிலன்
ஆனால் செய்ய அடுப்பது என் -என்னில் –

பொருந்து மூ வுலகும்படைப்பொடு கெடுப்புக் காப்பவனே –
தனக்கு வசப் பட்டு இருக்கின்ற எல்லா உலகத்தின் உடைய-படைத்தல் முதலானவற்றை செய்யுமவன்
என்று திரளச் செய்யும் அத்தனை-
பிரித்து வகை இட்டு சொல்லப் புக்கால் சொல்லி முடிக்கப் போகாது -என்றது
சுருங்க சொல்லுதலே சொல்லுவது அத்தனை -என்றபடி-
தென் அரங்கன் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே என்று திரள செல்வத்தைச் சொல்லுமா போலே –
விபூதி அத்யாயம் அருளிச் செய்தால் போலே –
ஏ பாவம் பரமே -தலையில் கை வைத்து -சொல்ல முடியாமல் சங்க்ரஹமாக அருளிச் செய்தானே

——————————————————————————————

படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–8-4-9-

ச நாதன் -ஸ்ரீ நாதன் -அநாதைகள் இல்லை -சர்வாத்ம பூதன் -சர்வ ஸ்வாமி -கர்த்தா -கர்மாக்கள் பிரிவு இல்லாமல்
-அனைவருக்கும் அந்தராத்மா -அனைத்துக்கும் –
படைப்பொடு கெடுப்புக் காப்பவன்-ஜகத் -அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே-மனுஷ்யாதி அபேஷ்ய -பரரான இந்திராதி தேவர்களுக்கும் -பரன் –
மனுஷ்யர்க்கு தேவர் போலே தேவர்களுக்கும் தேவன் –
பிரமாகவும் சிவனாகவும் இவனே -அந்தராத்மா வாக -பிரம பரம்பரன் அவனே -சிவன் பரன் அவனே –
பிரகார பிரகாரி பாவம் -சாமானாதிகாரண்யம் –
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே-இடையிலே ரக்ஷகனாய் புகுந்து -பதார்த்தங்கள் ஒன்றையும் ஒழியாமல்
-இவனை ஆத்மாவாகக் கொள்ளாத வஸ்து இல்லையே
ஸ்ருஷ்ட்டி சம்ஹார பாலனம் -கர்த்தா -சுருஷ்யம் சம்ஹாரயாம் பாலனம்தானே
புகழ்வில்லை யாவையும் தானே-அர்த்த வாதம் இல்லை -இதுவே உண்மை
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்-வித்யா தா நாத்திகளால் பெற்ற புகழ் -அநேகர் –
தான் என்னும் படி சமான வைபவம் -ஞான சக்தாதிகளில் பூர்ணர்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்-ஸூ ஷ்ம அவகாகி யான ஞானம் -கொண்டவர்கள் -அனுஷ்டானம் கொண்டவர்கள்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்-நித்ய திருவாராதனம் -இயற்கையாக -பலி -மலையாள பாஷை
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே-நின்ற ஸ்வாமி

பிரமன் முதலான எல்லாப் பொருள்களினுடைய படைத்தல்-முதலானவைகளைச் செய்கின்றவன்
திருச் செங்குன்றூரில் நின்றருளினவன் என்னும் இடம்-புனைந்துரை அன்று மெய் -என்கிறார்-

படைப்பொடு கெடுப்புக் காப்பவன் –
படைத்தல் அழித்தல் காத்தல் இவை எல்லாம்-தன் உரிமையாக உடையவன்

பிரம பரம்பரன் –
மனிதர்களைக் காட்டிலும் இந்த்ரன் முதலானவர்கட்கு உண்டான ஏற்றம் போலே
அந்த இந்த்ரன் முதலானவர்களில் ஏற்றம் உடையனான-பிரமனாகிற பரனில் பரன் –

சிவப் பிரானவனே-
அப்படியே தேவர்களில் தலை வலித்தானாய் இருக்கிற சிவன் –பிரதானவன் என்றபடி -அவர்களும் இவன் இட்ட வழக்கு
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே –
இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவில்லை அவனே –
நடுவே புகுந்துள்ள ஒரு பொருளும் ஸ்வ தந்த்ரமாய் இருப்பது இல்லை –முழுதும் சரீரமாய் தான் ஆத்துமாவாய் இருக்கும் –

யாவையும் தானே –
இங்கன் பிரித்து சொல்லுகிறது என் –சேதனம் அசேதனம் என்னும் வேறுபாடு அற அவனுக்கு உரிமை ஆகும் –
சர்வ சப்த வாச்யன் அவனே -சர்வம் கல் இதம் ப்ரஹ்ம -வேதம் தமிழ் செய்த மாறன் -பிரகார பிரகாரி பாவம் —

புகழ்வில்லை-
இதில் புனைந்துரை இல்லை-
பிரமன் முதாலனவர்க்கும் இவ் வேற்றங்கள் சொல்லக் கடவர்-அது உபசாரம்
இவ் விஷயத்தில் புனைந்துரை என்ற ஐயமும் இல்லை –
இப்படி எல்லாம் தனக்கு உரிமைப் பட்டவை என்னும்படி இருக்கிறவன் யார் -என்ன
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே -என்கிறார் மேல்

கொடைப் பெரும் புகழார் –
அவ் ஊரில் உள்ளார் கொடையால் வந்த பெரும் புகழை உடையார் -என்றது –
எதிரிகளையும் கொடையால் வசீகரிக்க வல்லராய் இருக்கையைத் தெரிவித்த படி –
தானமும் சாமம் முதலானவைகளில் ஓன்று அன்றோ –
அன்றிக்கே
பெரும் புகழாவது
ஞானத்தை கொடுத்ததால் உண்டாகும் புகழ் -என்னவுமாம்
கல்வித் தானம் மிக உயர்ந்தது என்னக் கடவது அன்றோ –
வித்யா தானம் -கன்யா தானம் பூ தானம் மூன்றையும் சொல்லி -கொடுமின் கொள்மின் -வித்யா தானம் பெரும் புகழ் —

இனையர் –
இன்னார் இன்னார் என்று பிரசித்தராய் இருக்குமவர்கள் என்றது -மற்றைய தேசங்களில் கூட
எங்கும் பிரசித்தமானவர்கள் என்கிறபடியே –
விதே செஷ்வபி விக்யாதா சர்வதோ புத்தி நிஸ்தயாத்-சந்தி விக்ரஹ தத்வஞ்ஞா ப்ரக்ருத்யா சம்பதன்விதா -பால -7-15-
பகைவர்கள் தேசத்திலும் பிரசித்தமாய் இருப்பவர்கள் ஆகையாலே
பகைவர்கள் அங்கே சென்றால் மீளப் போகாது என்று இங்கு வர நினையாது இருக்கையை தெரிவித்த படி –
சத்ருக்கள் அங்கே சென்றால் மீள போகாது என்று வரமாட்டார்கள் -பூதனை -முதல் கேசி வரை சென்று அழிய அழைத்து அழிக்க
-வார் கெடா அருவி பாசுரம் -இந்த ஊரின் பெருமை அன்றோ -அனுபவிக்கப் பண்ணும் அனுகூலரை -பிரதி கூலரை நுழைய விடாமல் பண்ணுமே
எனையர் -என்ற பாடமும் உண்டு
அப்பொழுது இப்படி இருப்பார் பலர் -என்ற பொருள் –

தன்னானார் –
தன்னோடு ஒத்தவர்கள் -என்றது
அவனைப் போலே எடுத்த கார்யத்தில் வெற்றி கொண்டு அல்லது மீலாதவர்கள் என்றபடி –

கூரிய விச்சை யோடு ஒழுக்கம் –
நல்ல ஞானமும்-
ஞானத்துக்கு தக்கவாறு நல்ல ஆசாரங்களும் என்றது
எதிரிகளை அறிந்து பரிகரிக்க வல்ல ஞானமும்
எதிரிகளுக்கு நலிய இடமான ஒழுக்கக் கேடு இல்லாமையும் தெரிவித்த படி –
இந்த்ரன் கருவினை அழிப்பதற்கு ஒழுக்கக் கேடு அன்றோ இடம் ஆயிற்று
நல்ல ஒழுக்கத்தோடு இருப்பது பகைவர்களுக்கு தண்டனை -என்னக் கடவது இறே
ஜ்வர தண்டோ பவாசஸ்ஸ பார்யா தண்ட ப்ருதக்சய-ஆம்நாய சந்தஸாம் தண்ட சத்ரு தண்ட ஸூ வ்ருத்ததா -எனபது பிரமாணம்
காலில் நீண்ட கூந்தல் பட்டதால் ஆச்சார குறைவு -இந்திரன் -ஏழாக கூறாக்கி மேலும் ஏழு 49 மருத்துக்கள் -ஆனார்கள் —
ஜுர தண்ட உபவாச -சுரத்துக்கு உபவாசம் செய்து தண்டிக்கலாம்
பார்யா தண்டா -தனியாக விடுவது
ஆம்நாயக சந்தசாம் தண்ட -வேதம் -சந்தஸ் -நினைவு சுத்தி ஆகும்
சத்ரு தண்ட சுக்ருத -நல்ல நடத்தையால் சத்ருக்களை தண்டிக்கலாம்
ஒழுக்கம் இருந்தால் -சத்ருக்கள் -அழிக்கும்

நடைப்பலி –
நித்யமான பகவானுடைய ஆராதனம்-
நடை -எப்பொழுதும் இடையறாது இருத்தல்-
பலி -பூசை-

இயற்கைத் –
இதுவே பொழுது போக்காக இருக்குமவர்கள் –

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே –
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு திவ்ய தேசத்தில் எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனே
சர்வேஸ்வரன் படைப்பொடு கெடுப்புக் காப்பவன்-

அப்படிப்பட்டவன் இங்கே எழுது அருளி இருக்கிறான் என்றது
அர்த்தவாதம் புகழ்ச்சி ஸ்தோத்ரம் இல்லை மெய் என்கிறார்-

—————————————————————————————

அமர்ந்த நாதனை யவரவராகி
அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி
அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை
நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-

நிருபாதிக சேஷி -அவாந்தர சேஷிகள் ப்ரஹ்மாதிகள் -சத்தையும் -தான் இட்ட வழக்கு -தத் பிரயோஜனம் தனக்காம் படி –
அந்தராத்மாவாக இருப்பதும் -சுய நல பிரதானம் அன்றோ அவன் -இத்தையே நம்பி இருக்கிறோம் –அனைத்தும் அவன் சரீரம் தானே
-போது நலம் செய்ய வாய்ப்பு இல்லையே –ஆச்சர்ய பூதன் -விபூதி பிரதன் -பொருத்தப் பெற்றேன்
அமர்ந்த நாதனை யவரவராகி-பொருத்தமாக ஸ்வாமி -சகல சேதன நிர்வாகம் என்றால் இவனுக்கே பொருந்தும் -நிருபாதிக சேஷி
அவரவர்கருளும் அம்மானை-உபாதியால் வந்த சேஷி ப்ரஹ்மாதிகளுக்கு சத்தா பூதன் -தத் தத் அந்தராத்மாவாய்க் கொண்டு –
ஸூ விபூதியை அர்த்தித்து பெற்று உகக்குமா போலே ஆகி -அவர்கள் உடன் ஏகி பவித்துக் கொண்டு -அபீஷ்ட பல பிரதத்வம்
-மக்களுக்கு அருளும் சக்தியை அருளி –
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்-செறிந்து நீர் நிலை வாய்ப்பு சிரமஹரமான
திருச் சிற்றறாங்கரையானைஅமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி-வாசல் ஸ்தானம் -ஆத்மகுணங்கள் நிரம்பிய பூ ஸூரர் நிலாத் தேவர்
அவனிதேவர் வாழ்வுஅமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை-பூ லோக தேவர்கள் இங்கே வந்து இதே வாழ்வு -பகவத் அனுபவமே வாழ்வு -தம் பதி
நான்முகனை யமர்ந்தேனே-பொருந்தி வர்த்திக்கும் ஸ்வாமி -ஆச்சர்ய பூதன் இடம் அநந்ய ப்ரயோஜனனாய் பொருந்தினேன் –
அனுபவிப்பித்த சேஷ்டிதன்

சர்வேஸ்வரனாய் வைத்து-எல்லாப் பொருட்கட்கும் பற்றப் படுமவன் ஆகைக்காக-
திருச் செங்குன்றூரில் நின்று அருளினவனை-அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார்

அமர்ந்த நாதனை –
உபய விபூதிகட்கும் காரணம் பற்றாத சேஷி என்றால் போரும்படி இருக்கிறவனை
எந்த நாதனால் மூன்று உலகங்கட்கும் நல்ல நாதனை உடையன ஆகுமோ -என்ற பிரமாணம் படி
மூன்று உலகங்களையும் பெருமாளுக்கு கை யடைப்பு ஆக்கினாலும்
பின்னையும் காக்கப் படும் பொருள்கள் சுருங்கி காப்பாற்றுகின்ற துடிப்பே விஞ்சி இருக்கும் –

யவரவராகி-
இரவலர் கிட்டினால் அவர்கள் தம் தாமுக்கு நல்லவர் ஆம்போலே அவர்களுக்கும் நல்லனாய் இருக்குமவன் -என்றது
அவர்கள் -இது நமக்கு வேண்டும் -என்று இருக்குமாறு போலே
இவர்களுக்கு இது வேண்டும் -என்று இவன் இருக்கையைத் தெரிவித்தபடி –
அங்கன் அன்றிக்கே –
அவர்களுக்கு பெறுகையிலே விருப்பம்
கொடுக்க கொடுக்க அவர்கள் கொள்ளுகையிலே விருப்பம் இவனுக்கு -என்றது
பெற்றோம் என்ற உவகை அவர்களுக்கு
கொடுக்கப் பெற்றோம் -என்ற உவகை இவனுக்கு -என்றபடி –
அவரவர்கருளும் –
அவர்க்கு அருள் அருளும் –
அவர்கள் விரும்பினவற்றைத் தன் பேறாகக் கொடுக்கை
கொள்ளுகிறவனுடைய இரப்பை தான் உடையனாய் கொடுக்கை –
அத மத்யம கஷ்யாயாம் சமாகம்ய ஸூ ஹ்ருஜ்ஜனை-ஸ சர்வான் அர்த்தின த்ருஷ்ட்வா சமேத்ய பிரதினந்த்ய ச – அயோத்யா -16-27-
அந்த ஸ்ரீ ராம பிரான் பிரார்த்திக்கின்ற எல்லாரையும் கண்டு-
அருகில் சென்று ஆனந்தத்தை உண்டாக்கியும் இருந்தார் -என்கிறபடி –

அம்மானை –
சர்வேஸ்வரனை –
நிறைந்தவனை -என்னுதல்-
சம்பந்தம் உடையவனை -என்னுதல்
அர்த்திகள் உடைய அர்த்தித்தவம் கொடுக்க இவனுக்கு பூர்ணம் இருக்க வேண்டும் -நம் இடம் ஒன்றும் இல்லை கேட்க்கிறோம் –
பூர்த்தி அர்த்தித்தவத்துக்கு- ஹேது -பகவானுக்கு –
சம்பந்தம் -இழவு பேறு தம் பேறாக கொடுக்க –
இதனாலே அம்மான் -பூர்ணன் -சம்பந்தம் உடையவன் –

அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை –
சேர்ந்து குளிர்ந்த நீர் நிலங்களை உடைய திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையில் நின்று அருளினவனை –

அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி –
சேர்ந்த குணங்களை உடைய மூவாயிரம் பிராமணர்-சேஷியாம் தன்மைக்கு அவன் தக்கி இருக்குமா போலே
சொன்ன சொன்ன ஏற்றம் எல்லாம் தகும்படி இருக்குமவர்கள் -வேதியர்கள் தம் பதி –
மூவாயிரவர் அளவு அன்றிக்கே பிராமண சாதிக்காக வசிக்கும் இடம் –

அவனிதேவர் வாழ்வு –
பூ தேவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடையத் தக்க பூமி –

அமர்ந்த மாயோனை –
அத்தேசத்தில் நித்யவாசம் செய்கிற ஆச்சர்யத்தை உடையனான சர்வேஸ்வரனை –

முக்கண் அம்மானை நான்முகனை
பிரமன் சிவன் இவர்களுடைய இருப்பு முதலானவற்றுக்கு நிர்வாஹகன் ஆனவனே-
பிரமன் சிவன் -இவர்களை பலகால் சொல்லுகிறது–
இவனுடைய நிர்வாஹக தன்மை தோற்றுகைக்காகவும்
நிர்வஹிக்கப்படும் பொருள்களில் ஒன்றால் நலிவு உண்டாகை கூடாது என்கைக்கும்
அன்றிக்கே
அமர்ந்த மாயோன் -என்று வைத்து இவர்களைச் சொல்லித் தலைக் கட்டுகையாலே
சாமாநாதி கரணத்தைக் காட்டுகிற சொற்கள் விசேடியத்தில் சென்று சேரக் கடவை ஆகையாலே
சரீரியாய் இருக்கிறவனை என்றுமாம் –

யமர்ந்தேனே —
கிட்டப் பெற்றேன் என்கிறார் –
பூதங்கள் எல்லாம் விஷ்ணு -உலகங்கள் எல்லாம் விஷ்ணு -வானங்கள் எல்லாம் விஷ்ணு -என்னக் கடவது அன்றோ –
பூதாநி விஷ்ணு புவநானி விஷ்ணு வாநானி-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-38-

சர்வேஸ்வரனாய் வைத்து –
சகல ஜந்துக்களும் ஆஸ்ரய நீயனாக ஆவதற்கு நித்ய வாசம் செய்பவனை
அவனை அனுபவிப்பப் பெற்றேனே-

—————————————————————————-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

ஜென்ம நிவ்ருத்தி விசிஷ்டமான பரமபத பிராப்தி பலம்
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்-எல்லா ரசம் -சேர்ந்த தேன்-ஸ்வ பாவிக ரசம் பால் -பருவம் அனுபவிக்க கரும்பு –
முடிந்த உயிரை பிழைப்பிக்கும் அமிர்தம்
திருந்துலகுண்ட வம்மானை-ஏழு லோகங்கள் திருந்திய -பிரளயத்தில் அமுது செய்து நோக்கின ஸ்வாமி
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்மலர்மிசைப் படைத்த மாயோனை-சத்ய லோகம் -உந்தித்தாமரையில் -படைத்து –
அதனாலே கோனை சர்வ ஸ்வாமி
கோனை வண் குருகூர் சடகோபன்-நிரவதிக சம்பத்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்-கைங்கர்ய சாம்ராஜ்யம் அருள்
பிறவி மா மாயக் கூத்தினையே-சம்சார பந்தம் -மா மா கூத்து ஆச்சர்ய கூத்து –முடி சூட்டி சிறை விடுவிப்பார் போலே
வானில் ஏற்றி -ஸ்வ தந்த்ரன் அன்றோ -நித்ய ஸூரிகள் நினைவு படுத்த மா மாயக் கூத்து அறுத்து அருளுவானாம் –

நிகமத்தில்
இத் திருவாய்மொழியை கற்றவர்கட்கு இது தானே முதலில்
பரமபதத்து ஏறக் கொடுபோய்
பின்பு சம்சாரம் ஆகிய மகா நாடகத்தினை அறுக்கும் -என்கிறார்-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் –
இவர் ஐயம் கொண்டு அஞ்சுதற்கு உரிய காரணங்கள் சொல்லப் படுகின்றன-
அவனுடைய இனிமை அன்றோ இவரை அஞ்சப் பண்ணுகிறது –
எனக்கு எல்ல வித இனிய பொருள்களும் ஆனவனே-
சர்வ ரச -என்னக் கடவது அன்றோ –
மேலே அச்சம் நீங்குவதற்கு உரிய காரணங்கள் சொல்லப் படுகின்றன –

திருந்துலகுண்ட வம்மானை –
கட்டளைப் பட்ட உலகத்தை பிரளயத்தில் அழியாதபடி
திரு வயிற்றிலே வைத்து பாதுகாத்த பெரியோனே –

வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை –
வானிலே இருக்கிற பிரமனை படைப்பிற்கு தகுதியாக
செவ்வியை உடைத்தாய் திரு நாபி கமலத்தில் படைத்த
ஆச்சர்யத்தை உடையவனை –

கோனை –
காரணம் பற்றாத தலைவனை –
மேலே பிரமன் சிவன் இவர்களுக்கு சொன்ன ஐக்யம் ஸ்வரூபத்தால் அன்று –
கார்ய காரண பாவத்தால் சொல்லிற்று என்னும் இடம் இங்கே தெளிவாகும் –
ஆபத்துக்கு துணைவனாய் -உலகு உண்ட அம்மானாய் –
அழிந்தவற்றை உண்டாக்க வல்லனாய் -மலர்மிசை படைத்த மாயோனாய் –
சம்பந்தத்தை உடையவனாய் -கோனை –என்கை
வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து -பிறவி மா மாயக் கூத்தினையே -முடிக்கும் –
அராஜகம் ஆனால் அரச புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமாறு போலே-
இப்பத்து தானே முந்துற பரம பதத்தைக் கொடுத்து
பின்பு சம்சாரம் ஆகிற மகா நாடகத்தை அறுக்கும் –

—————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

க்ஷேமம்
நிர்பீ அகாரீ
ஸூ ஸுர்யம் அதிகம்
க்ராமஞ்ச காஞ்சன
நிஜ வாசஸ் ஸ்தானம்
விமத்தை அத்ருஷ்யம் கிராமம்
தத்ர சமான்-ஹரிஹித ப்ரதஸ்ய

—————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

துர்த்தாந்த ஏவ பைந்தரம் பங்காத்
ஸூ ப நிலயத்தையா
சாம்யாதாகா க்ஷேத்ரம்
ஸம்பதா
சத் சங்கை
சூர ஜனகதையா
பாணாத்-
தேவ த்வத் த்வேஷி
ஜகத் உதயாதி க்ருதே
தேவதாத்மா முக்யைதி
ஸ்ரீ மான் வைகுண்ட நாதா

————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 74-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் பயம் மறுவல் இடாதபடி தன் சௌர்ய வீர்யாதிகளையும்
சாபா நுக்ரஹ சமர்த்தர் சஹவாசத்தையும் காட்டக் கண்ட படி-பேசின ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
இன்னமும் இவருக்கு நம் பக்கல் பரிவின் கனத்தாலே பயம் மறுவல் இடக் கூடும் என்று விசாரித்து
ப்ரதிகூலர்க்கு கணிசிக்க ஒண்ணாத படி அரண் உடைத்தான ஸ்ரீ திருச் செங்குன்றூரிலே
ஸ்ருஷ்டி ஸ்திதியாதிகளை நிர்வஹிக்க வல்ல சக்திமான்களாய்-சாபா நுக்ரஹ ஸ்மர்த்தரான
மூவாயிரம் ப்ராஹ்மணர் பரிந்து நோக்க
அவர்களும் குழைச் சரக்காம் படி
பிசாசான் தானாவான் அங்குல் யக்ரேணதான் ஹன்யாமிச்சன் ஹரி கணேஸ்வர -என்று
சௌர்ய வீர்ய பராக்ரமாதிகளோடே தான் எழுந்து அருளி இருக்கும் நிலையை
ஸ்ரீ சர்வேஸ்வரன் காட்டிக் கொடுக்க -அத்தாலே அச்சம் கேட்டு அவன் வடிவு அழகிலே நெஞ்சை வைத்து
அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிற -வார்கடாவருயில் அர்த்தத்தை -வாராமல் அச்சம் இனி -என்று
தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் -பாரும் எனத்
தானுகந்த மாறன் தாள் சார் நெஞ்சே சாராயேல்
மானிடவரைச் சார்ந்து மாய்—74-

————————————————-

வியாக்யானம்–

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும் –
வார்கடா வருவி -என்று தொடங்கி —
கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் –என்னும் அளவும் சொன்ன
சௌர்ய வீர்யாதிகள் முதலான தன் சக்தி யோகத்தையும் –

சீரார் பரிவருடன் சேர்த்தியையும் –
அத்தாலே
அசுரர் வன்கையர் வெம் கூற்றத்தை -என்னும் தன் மிடுக்கையையும் –
நல்ல நான்மறையோர் -என்றும்
மனக் கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தான் ஒப்பார் வாழ -என்றும்
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதியவனி தேவர் வாழ்வமர்ந்த மாயோனை என்றும்
ஜ்ஞானாதி குண பரிபூர்ணராய் இருக்கிற மூவாயிரம் ப்ராஹ்மணர் பரிய இருக்கிற இருப்பையும் தர்சியும் என -தர்சித்து –
தேம் பணை புடை சூழ் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும்
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும் –
நல்ல நீண் மாடத் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும்
கனக் கொள் திண் மாடத் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும்
கூரிய இச்சையோடு ஒழுக்கம் நடைப் பலி இயற்கைத் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே என்றும்
இப்படி அரணை யுதைத்தான ஊரில் இருப்பையும் அனுசந்தித்து
நிர்ப்பயராய்
திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -அதனுள் கண்டவத் திருவடி -என்று தொடங்கி
திகழ என் சிந்தை உளானே -என்னும்படி வடிவு அழகிலே நெஞ்சை வைத்து அனுபவித்து

ஹ்ருஷ்டராய்
தேனை நன்பாலை கன்னலை அமுதை -என்று அவன் ரச்யதையும் அனுபவித்து

தானுகந்த மாறன் –
நின் கோலம் கார் எழில் காணல் உற்று ஆழும் -என்று அழகிலே கலங்கினவர்
இப்போது அவ் அழகை அனுபவித்து ஹ்ருஷ்டரான ஸ்ரீ ஆழ்வார் –

தாள் சார் நெஞ்சே –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை அபாஸ்ரயமாக ஆஸ்ரயி-நெஞ்சே –

சாராயேல் –
ஆஸ்ரயியாது இருப்புதி யாகில் –

மானிடவரைச் சார்ந்து மாய் –
பிரகிருதி வச்யரான மனுஷ்யரை ஆஸ்ரயித்து நசித்துப் போ –

ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ஆஸ்ரயணம் உஜ்ஜீவன ஹேது
தத் இதர ஆஸ்ரயணம் நாச ஹேது-என்றது ஆயிற்று –

———————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: