பகவத் விஷயம் காலஷேபம் -162- திருவாய்மொழி – -8-3-1….8-3-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

அங்கும் இங்கும் -பிரவேசம் –
– மேல் திருவாய் மொழியிலே பத்தாம் பாசுரத்தில்
ஒரு கோல நீல நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று வடிவு அழகை அனுசந்திதவாறே-
தாம் பட்ட கிலேசத்தை மறந்து -சிலர் விரும்பியதுவே காரணமாக-இவ்வடிவோடே சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து உலாவா நிற்பன் –
பகைவர்களும் -நடுநிலையரும்-பிரயோஜனங்களை விரும்புகின்றவர்களாயும்-
இவனுக்கு பரிவுடையார் ஒருவரும் இன்றக்கே இருக்கிற சம்சாரத்திலே-
அடியார்கள் விரும்பினவற்றைத் தருவதற்காக சம்சாரிகள் இனத்தனனாய்-
சிலருக்கு பரதந்தரனாயும்-
அவதாரத்துக்கு பிற்பட்டாருக்கு கோயில்களிலும் வீடுகளிலும் அண்மையினில் இருப்பவனாயும்-
இருந்துகொண்டு இருக்கிற இவனுடைய சௌகுமார்யம் அறிந்து பரியக் கூடியவர் ஒருவரும் இலர்-
நானும் உதவப் பெறுகின்றிலேன் என்று அவன் தனிமைக்கு–வெறுத்து அஞ்சினாராக
நமக்கு பரிவர் இலர் -என்று அஞ்ச வேண்டா
முமுஷுக்களும் முக்தரும் நித்தியரும் -கலக்க மில்லா நல் தவத்தர்-கரை கண்டோர் -ஆகிய இவர்கள்
நம் மேல் பரிகையே யாத்ரையாக இருக்குமவர்கள் அல்லரோ –
அன்றியும் நமக்குத் தான் வேறே சிலர் பரிய வேண்டி இருந்ததோ என்று சர்வேஸ்வரன்-
தன் வரம்பில் ஆற்றல் உடைமையைக் காட்டி-மா கடல் தன்னை கடைந்ததைக் -காட்டி அருள சமாதானம் செய்ய-
சமாதானம் அடைந்தவராய் உவகையர் ஆகிறார் – –
அதுக்கு மேலே பரியாமல் போனால் சேஷத்வம் போகுமே என்ற கவலை பட்டார் –

அன்றிக்கே –
சர்வேஸ்வரன் மேல் பரிகைக்கு தமக்கு கூட்டு ஆவார் இல்லை என்று தம் தனிமைக்கு-வெறுக்கிறார் என்றும் சொல்வார்கள்
நித்ய சூரிகள் பகவத் விஷய அனுபவத்தில் நோக்கு உள்ளவர்கள்-
சம்சாரிகள் ஐம்புல இன்பங்களிலே நோக்கு உள்ளவர்கள் –
பிரமன் சிவன் முதலானவர்கள் தங்களுக்காக–
நீள் நகர் நீள் எரித்து அருளாய் -திரு விருத்தம் -92–என்று அவனை அம்புக்கு இலக்காக்குதல் –
ஏவிக் கார்யம் செய்து கொள்ளுதல் செய்பவர்கள் –
ஆகையால் பரிகைக்கு தமக்கு ஒரு துணை இல்லை என்று தன் தனிமைக்கு வெறுக்கிறார் -என்றபடி
சேஷமாக உள்ள இவ் வாத்மவஸ்துவுக்கு-சேஷியே ரட்ஷகன்-என்னும் வெளிச் சிறப்பு –அறிவுக்கு முதல் அடி –
சேஷவஸ்து ஆகில் சேஷிக்கு அதிசயத்தை விளைத்து தன் ஸ்வரூபம் பெறுமது ஆகையாலே
அவன் காப்பாற்றப்படுமவன் நாம் காப்பாற்றுமவர்
என்னும் அளவும் செல்ல அறிக்கை -ஸ்வரூபத்தை உள்ளபடி உணருகையாவது-
அர்த்திக்கும் அளவும் ஒழிய பரியத் தேடுவது என் –பிரார்த்தனைக்கு மட்டும் இல்லையே அவன் -மங்களா சாசனமே ஸ்வரூபம் —

இத்திருவாய்மொழி நம் ஆழ்வார் உடைய திருப் பல்லாண்டு என்று அருளிச் செய்வர்-
வீற்று இருந்த போற்றி -சப்தத்தால் அங்கு திருப்பல்லாண்டு –

———————————————————————————————

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

நிரதிசய போக்யதையை அறியாமல் -உனது சக்தி யோகத்தை சொல்லி -அனுகூல பிரதி கூல விபாகம் அற-அபிமத சாதனமாக
கொள்கிறார்களே -அபிமதம் அவன் அபிமத சாதனம் இல்லை -இதுவே ஆழ்வார் கொள்கை –
அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்-பரம பதம் -யாவரும் நம் போல்வாரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி-அனுபாவ்ய மகிஷிகள் உடன் கூடி -தங்கள் கார்யம் கொள்ள –
ஆதி -சங்கு சக்கரங்கள் -ஆபரண ஆயுதங்கள் இப்படி போக்யன் என்று அறியாமல் –
ரக்ஷணம் ஒன்றே பிரார்த்தித்து -அதற்கு ஏகாந்தமான சக்திகளை
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்-கந்தவாதி பாக்யத்தை -அனுபவிக்க -ஆபி ஜாதியை ஆதிக்யம் கொண்ட நப்பின்னை
-ஸுந்தர்ய ஸுகுமாரியாதிகளில் அகப்பட்டு
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-சரணம் என்பார்கள் எல்லாரும் -சாதனம் ஆக்குவதே -போக்கிய பூதன் என்று அனுபவியாதே
புருஷகார பூதன் அபீஷ்ட பல பிரதன் என்பர்
சேஷித்வம் சாதாரணம் -அசுரர்களுக்கும் -சேஷி -சாமான்யம் அதி தைவதம் தேவானாம் தானவானாம் பொது நின்ற பொன்னம் கழல்-
பிரயோஜனாந்த பரர்களும் இப்படியே

இதில் சௌகுமார்யத்தை அறிந்து–பரிதல் இன்றிக்கே-
தாங்கள் விரும்பியவற்றை அடைவதற்கு சாதனம் -என்று இருப்பவர்கள் -என்று-
ஐஸ்வர்யங்களை விரும்புகின்றவர்கள் உடைய செயலைக் குறித்து குறை கூறுகிறார் –

அங்கும் இங்கும் –
மேல் உலகங்களிலும் பூமியிலும்
எங்கும் –
சொல்லப்படாத பாதாளம் முதலிய உலகங்களிலும்
வானவர்-
அனுகூலர்
தானவர் –
பிரதி கூலர் –
யாவரும் –
இரண்டு வகையினாருமான மனிதர் முதலானவர்களும்
இனையை யென்றுன்னை –
உன்னைஇனையை என்று –சர்வேஸ்வரனான உன்னை இப்படிப்பட்டவன் என்று -என்றது
நிரதிசய சௌகுமார்யத்தை உடையவன் என்று -என்றபடி –இவர் நெஞ்சில் அவன் சௌகுமார்யமே ஆயிற்று உறைத்து இருப்பது
இனையை-அறியகிலாது –
கருமுகை மாலை போலே இருக்கிற உன் படி அறியாதே –பரிய அறியாமைக்கு
அனுகூலரான தேவர்களோடு-பிரதிகூலரான அசுரர்களோடு-இவ்விரண்டும் கூடின மனிதர்களோடு-வாசி இல்லை –
அவனைப் பரியக் கண்டவர்கள் எல்லாரும் என்று இருக்கிறார் ஆயிற்று இவர்-
பிரதிகூலர் பரிய யோக்யதை உண்டோ என்னில்-யோக்யதை உள்ள தேவர்கள் புரியாதது போலே
இவர்களும் பரிய வில்லை -என்று அருளிச் செய்கிறார் –
பரிந்த அசுர ராக்ஷஸர்கள் உண்டே பிரகலாதன் விபீஷண ஆழ்வான் போல்வார் உண்டே

அலற்றி –
எவன் எல்லாவற்றையும் முழுதும் உணர்ந்தவனோ–எல்லாவற்றையும் தனித் தனியாக உணர்ந்தவனோ -என்றும்
இவனுடைய ஆற்றல் உயர்ந்தது -பலவகையாக கேட்கப் படுகின்றன –இவனுடைய ஞான பல கிரியைகள் இயல்பானவை -என்றும்
தங்கள் உடைய ரஷணத்துக்கு உடலான வார்த்தைகளை–கதறா நிற்பார்கள்-
ய சர்வஞ்ஞ சர்வவித் -முண்டகம் -1-1-
பராஸ்ய சக்தி விவிதைவ ஸ்ருயதே-ஸ்வாபாவி கீ ஜ்ஞான பல கிரியாச -ச்வேஸ்வதார உபநிஷத் -6
நீ பாதுகாக்கப் படுமவன் -என்று அறியார்கள்-
சௌகுமார்யத்தையும் அழகையும் சொல்லுகிறது இதற்கு மேல்
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள் –
பூ மகள் மணமகள் ஆய்மகள் அங்கம் சேரும் –
அவனை அடைவதற்கு புருஷாகாரமாக பிராட்டிமார்–உண்டு என்பார்கள் என்றது –
யாவன் குற்றம் செய்யாதவர் -என்பாரும்
குற்றத்தை உணருகிறது என் பொறுக்கும் இத்தனை அன்றோ என்பாரும்
முதலிலே குற்றம் காணாதபடி தன் இனிமையை முன்னிடுவாரும்-அங்கே உண்டு என்பார்கள் -என்றபடி –
வடிவாய் உன் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்று-அச் சேர்த்திக்கு மங்களா சாசனம் செய்வார் இலர் –
சங்கு சக்கரம் –கையவன்-
கையும் திருவாழியுமான அழகை-அனுபவிக்கைக்காக இழிவார் இலர் –
நம் விரோதிகளை துண்டிக்கைக்கு கையில் திவ்ய ஆயுதங்களை உடையவர் என்பர்-
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்ன வேண்டி இருக்குமே இவர்களுக்கு-
சரணம் என்பர்
விரும்பினவற்றைப் பெறுதற்கு சாதனம் என்பர்
விரும்பத் தக்கது என்று அறிவார் இலர்–சுகுமார விஷயம் என்று அறிவார் இலர் -என்றது
முன்தானை ஏற்றல்-த்வித ஐஸ்வர்ய காமர் -என்றபடி —

அஸஹாயனாக பெருமாள் எழுந்து அருளி இருக்க கவலைப் பட்டு பரியாமல் -இருப்பதே –
அபிமதமாக கொள்ளாமல் அபிமத சித்திக்கு சாதனமாக கொள்ளுகிறார்கள் -ஆர்த்தோ -அர்த்தார்த்தி இருவரும் முன் தானை நீட்டி கேட்டு எழுவார்கள் –
கைவல்யார்த்திகள் ஆத்மசுத்தி பெற்று விடை கொள்ளுகிறார்கள் –
தனிமை -போக்க கியாதி லாப பூஜைக்கு உபதேசிக்காமல் -மங்களா சாசனம் பண்ண ஆள்கிட்டும் என்றே உபதேசிப்பது ஆச்சார்யர்கள் க்ருத்யம் –
மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் இல்லை –ஸ்ரீ வசன பூஷணம்
சக்கரவர்த்தி –ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் –ஸ்ரீ கௌசல்யார் –ஜடாயு -பிள்ளை உறங்கா வல்லி தாசர் -10 பேர் போல்வார் இடம் காணலாம் –
பலராமன் எதிர்க்க -சக்கரவர்த்தி -மயங்கி –எழுந்து -புனர் ஜாதம் -மறு பிறவி போலே பிள்ளைகள் பெற்றதாக
பல்லாண்டு -மே ராகவா ராஜீவ லோசன–நங்கள் பஞ்சித் திருவடி
ஸ்ரீ -சீதா பரிந்து-பார்த்தாராம் அசி தேசஷணா மங்களானாம் குபேரன் -யமன் இந்திரன் வருணன் ரக்ஷிக்கட்டும் –
ஜனக ராஜன் -பத்ரம் -இயம் சீதா -மம சுதா சக தர்ம சாரினாம் -பத்ரம் தே -பாணினாம்-
அஹம் வேதமி-அறிந்த விசுவாமித்திரர் -தாடகை -பார்த்து ஆயுஷ்மான் –
ஸ்ரீ தண்ட காரண்ய வாசி ரிஷிகள் -மங்களானி-ஆடவர் பெண்மையை அளாவும் தோளினாய்-
திருவடி -சர்வ பூஷண கிம் அர்த்தம் நஹி பூஷணா -அலௌகிக அழகுக்கு தோ
ஸூ க்ரீவன் -அஸ்மாத் துலயோ பாவத் கடைசியில் சொல்பவர் -முதலில் அதிசங்கை பண்ணி
ஜடாயு -ஆயுஷ்மன் –
ஸ்ரீ கௌசல்யார் -விநதா போலே மங்களம் ஸூ பர்ணஸ்ய ததே பவது மங்களம்
அயோத்யா வாசிகள் இச்சா மோஹி -ராமோ ராமோ -ராம பூதம் -ஸர்வான் தேவன் நமஸ்யந்தி
குகன் -குகை பரிகாரங்கள் -ஒரு நாள் முகத்தில் விழித்தாரை வடிவு அழகு படுத்தும் பாடு
பரிய வேண்டாத பெருமாளுக்கே இப்படி -ஆனால் கிருஷ்ணன் -ஆண்டாள் போற்றி ஆறு தடவை –
ஜாதோசி -உபஸம்ஹர -அத்புதம் பாலகம் -தேவகி வசுதேவர்
நந்த கோபர் யசோதை -கோ புச்சம் -கொழு மோர் -அச்சுத்தாலி ஆமைத்தாலி -கூர்ம வியாக்ர நக ஐம்படைத்தாலி தாயத்து
விதுரர் -ஆசனம் -மஹா மதி -தடவி பார்த்து -தோல்களை கொடுத்து –
பிள்ளை உறங்க வல்லி தாசர் -திருமேனிக்கு ஆபத்து வந்தால் -மல்லர்-வீரர் -குத்திட்டு கொன்று கொள்வோம் –
முதலானோர் பக்கலிலே காணலாம் –
ஸ்வரூப அனுரூபம் மங்களா சாசனம் என்றவாறு -பெரியாழ்வாருக்கு நித்யம் -மற்றவர்களுக்கு காதாச்சித்தம் –

———————————————————————————————————–

சரணமாகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2-

விரோதி நிரசக பரிகாரவானாகக் கொண்டு -ஜரா மரணாதி நிவ்ருத்தியை மட்டும் பிரார்த்தித்து பெற்று போகும் கைவல்யர்
-கூட நின்று வெறுக்கிறார் -சேஷத்வம் சாதாரம்யம்-இருந்தும் இழப்பதே
சரணமாகிய நான்மறை நூல்களும் சாராதே-சாதன பிரதிபாதமான வேதம் -முக்குண மக்களுக்கும் நான்கு புருஷார்த்தங்களுக்கும் –
-மேல் எழ தோன்றும் -பலன்கள் வேதாந்தம் முமுஷைர் -பாராமல் -நடுவில் –
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி-சத்ரு சேனைகள் ஓடும் படி -ஷட் பாவ விகாரங்கள் கழித்து -கைவல்ய மோக்ஷம் பெற்று
ஆழ்வார் போலே சேஷ பூதராக இருக்க தாதர்த்தம் ஸ்வரூபமாக இருக்க சுவார்த்ததா -தங்கள் பிரயோஜனத்துக்காக இருப்பதே
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே-க்ஷேமம் கரமான-சேஷ பூதராக-அதிசயம் பண்ணி பரியாமல்

ஐஸ்வர்யம் போலே நிலை இல்லாத ஓன்று அன்றே இது-
நித்யமாய் இருப்பது ஓன்று அன்றோ -என்று-ஆத்தும லாபத்துக்காக வணங்குகிற கேவலர் வந்து தோற்ற
அவர்கள் செயலைக் குறித்து குறை கூறுகிறார் -என்றது-
சத்துவம் முதலான குணங்களை உடையாரை விஷயமாகக் கொண்ட வேதங்கள் –
த்ரைகுண்ய விஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுனா-ஸ்ரீ கீதை -2-45-
ஐஸ்வர்யத்தையும் அதற்கு உரிய சாதனங்களையும் தெரிவிக்கிற முற்பகுதியில் இழியாமல் விட்டு–
நெறியைத் தெரிவிக்கிற பிற்பகுதியில் நின்று இறைவனை அடைந்து பிறப்புப் பற்றை மாய்த்தோம்–
அன்றோ நாம் -என்று கேவலர் செயலுக்கு இரங்குகிறார் இவர் இதில் என்றபடி

சரணமாகிய –
ஐஸ்வர்யங்கள் விஷயமாகவும்-அவற்றைப் பெறுவதற்கு உரிய சாதனங்கள் விஷயமாகவும்
உள்ள ஞானங்களுக்கு சாதனமான-
நான்மறை நூல்களும் ––
நான்கு வேதங்கள் ஆகிற சாஸ்திரங்கள்–நூல் -சாஸ்திரம்
அன்றிக்கே
நான்மறைகளும் நூல்களும் -எனப் பிரித்து–நூல்கள் -ஆகமம் முதலானவைகள் -என்று பொருள் கூறலுமாம் –
நான்மறையாகிற சாஸ்திரம் -என்றே ஜீயர் அருளிச் செய்வர்
வேத சாஸ்த்ரா விரோதினா -என்னக் கடவது அன்றோ –
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம் –
பிறப்பு இறப்புகள்–பிரபலமான வியாதி–மூப்பு தொடக்கமான ஆறு விதமான விகாரங்களை
மறுவல் இடாதபடி கழித்துக் கொண்ட இத்தனை அன்றோ நாமும் செய்தது–மாய்த்தோம் -என்று உயர்வு நிந்தையிலே–

கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி-
குதிரை தேர் யானை காலாள் என்பனவாய்-
பலவகைப் பட்ட பகைவர்கள் சேனையானது அடியோடு ஓடும்படி ஒளி வீசுகின்ற திரு ஆழி
அன்றிக்கே
கரணங்களின் கூட்டங்களை விஷயங்களின் நின்றும் அடியோடே பற்று அற ஓடும்படி ஒளி வீசுகின்ற திரு ஆழி-என்னுதல் –

அரணத்தின் படை –
அரணம் திண் படை-
அடியார்களுக்கு அரணாய்–பகைவர்களால் வேறு படுத்த ஒண்ணாத படியாய் இருக்கை-
அன்றிக்கே
ஈஸ்வரன் விடினும் அடியார்களை விடாத திண்மையை உடைய படை ஆதலின் திண் படை -என்கிறார் என்னலுமாம்
ஏந்திய ஈசற்காளாயே-
திரு ஆழியை ஏந்துகையாலே சர்வேஸ்வரன் ஆனவனுக்கு-ஆளாயே –
அவர்கள் ஆள் ஆகையாவது என் -என்னில்
பகவானை அடைய விரும்புவனைப் போன்று–பகவானை வணங்குதலும்-
அந்திம ஸ்ம்ருதியும் உண்டு -ஆகையாலே சொல்லுகிறது
ஆளாய் -மரணம் தோற்றும் வான் பிணி மூப்பு என்ற இவை மாய்த்தோம்-

——————————————————————————–

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

அழும் தொழும் ஸ்நேக பாஷ்ப அஞ்சலி யோடே ருசிரா சாதுக்களின் கோவிக் கொள்ளும் பிரியா வடிமைக்குச் சரணே சரண்
என்று வாழும் வில்லும் கொண்டு பந்துவும் பிதாவும் அவரே என்கையும் –சூர்ணிகை -127 –
விரோதி பூயிஷ்டமான ஜகத்தில் -சஹாயாந்தரா ராஹித்யம் -சஹாயாந்தர நிரபேஷ்யம் இத்தை கொண்டே பிர பத்திக்கு ஏற்றம்
-இத்தையே குறையாக -ஆழ்வார் -அடிமை செய்யும் படி காணப் பெருகிறிலேன்
ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-பரிவராக ஆட்களை வைத்துக் கொள்ளாமல் -அடுத்துப் பார்க்கப் பொராத
-ஸுகுமார்யம் கொண்ட திருமேனி -மலை எடுத்தால் போலே வகிப்பார் -அவன் ஏந்துவான் புஷபம் போலே -இவருக்கு இப்படி எண்ணம் –
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-அப்படி ஆனாலும் நந்தகம் ஸ்ரீ சார்ங்கம் -கொண்டு –
இளைய பெருமாளை போலே மற்று வேறு ஒருவர் இல்லை -உன் பெருமைக்கு இரண்டாவது ஆள் கூடாதோ
-அடியேனுக்கு அருள் செய்து கூவிப் பணி கொள்ள வேண்டும்
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்-மத்த மாதங்கம் போலே நடந்து -தோளுக்கு கீழே உலகமே அடங்கும்படி
-கைகளால் ஆராத் தொழுது பூர்த்தியாக
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே-ராவண துரி யோதன சமரான வர்கள் -சேஷத்வ ஸ்வரூபம் –
பசியால் சோறு தேடுவது போலே -தேடித் கொண்டே இருப்பதோ

வேறு பிரயோஜனங்களை விரும்புவர் கட்காக தன் வாசி அறியாதே
எதிரிட வல்ல சம்சாரத்திலே தனியே வசிக்கின்றான்
-அங்குத்தைக்கு காவலாக நான் உதவப் பெறுகின்றிலேன் என்று இன்னாதார் ஆகிறார் –

ஆளுமாளார் –
இரண்டு உலகங்களிலும் பரிகைக்கு ஆள் இல்லை-தனியே ஒருவரே ஆள வேண்டும் என்று இருக்கிறார்
நித்ய சூரிகள் பகவத் அனுபவத்தில் நோக்கு உள்ளவர்கள்-
ஆழியும் சங்கும் சுமப்பார்
ஆபரணமான திவ்ய ஆயுதங்கள் -அவனுடைய மிருதுத் தன்மையினாலே
மலை எடுத்தாப் போலே சுமையாகத் தோன்றுகிறது இவர்க்கு
பகைவர்களுக்கு ஆயுதங்களாய் -அனுபவிப்பார்க்கு ஆபரணமாய் இருக்கிறவை –
தாம் —
தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டாவோ
எப்போதும் கை கழலா நேமியான் அன்றோ –
அவனுக்கு நிரூபகங்களான இவை சுமையோ -என்ன-
இவருக்கு அடையாளமாகவும் தோன்றும் -இப்படி சுமப்பதாகவும் பண்ணும் -நீயே தான் இப்படி எல்லாம் பாட வைக்கிறாய்
அது தான் செய்கிறது –
வாளும் வில்லும் கொண்டு-
எதற்கு பஞ்சாயுதங்கள் -பரம ஸ்வாமி கொண்டாட்டம் வாங்கிக் கொள்ளவோ –
இளைய பெருமாளைப் போலே ஒருவர் பின்னே கொடு சென்றால் ஆகாதோ-
ஆளுமாளார் -சுமப்பார் -தாம்– பின் செல்வார் மற்றில்லை -என்கிறது
பரிவரான நீர் அவற்றுக்கு அன்றோ -என்று தம்மை ஏவுக்கைக்காக

தாளும் தோளும் –
நடக்கும் போது நடைச் சக்கரவத்து -விருது-பிடிக்கும்படி ஆயிற்று -மாறி இடும் திருவடிகள் இருப்பது
ஸ்ரீ ராம பிரான் முன்னே எழுந்து அருளினார்
அக்ரத பிரயயவ் ராம சீதா மத்யே ஸூ மத்யமா-பருஷ்டதஸ்து தநுஷ்பாணி லஷ்மண அனுஜாகம -ஆரண்ய -11-1-
என்னக் கடவது அன்றோ –
அதனையும் வீசு தோள்களையும்-கைகளை யாரத் –வயிறு ஆர உண்ண-என்பாரைப் போலே
தொழக் காணேன்
தொழுகையும்
பரிதலும்
பர்யாயம் போலே காணும்–தொழக் காணப் பெறுகின்றிலேன்
நம -என்பதனால் எனக்கு அன்று அவனுக்கு என்று அன்றோ சொல்லுகிறது
தொழுதாலும் நம என்பதும் பர்யாயம் அன்றோ

நாளும் நாளும் நாடுவன் –
அவன் தனிமையை நினைத்து–அவனுக்கு என் வருகிறதோ என்று நாள் தோறும் ஆராயா நிற்பன்
சம்பந்தம் நித்யமானால்-அதன் கார்யமான பரிவும் நித்யமாக கடவதே அன்றோ –
அடியேன் –
ஸ்வரூப ஞானம் உடைய நான் -என்றது
சேஷிக்கு மேன்மையை விளைக்கையே சேஷ வஸ்துவுக்கு-ஸ்வரூபம் என்று அறிந்த நான் -என்றபடி –
ஞாலத்தே-
பரமபதத்தில் இருந்து அஸ்தானே பய சங்கை பண்ணுகிறேனா-
பிரம்மாஸ்திரம் விடுவார் நாக பாசத்தை இட்டுக் கட்டுவார்
அழைத்து வைத்து மல்லரை இட்டு வஞ்சிக்க தேடுவர்
பொய்யாசனம் இடுவார்
ஆகிய இவர்கள் இருக்கிற தேசத்தில் வாழா நின்றால் நான் அஞ்சாது செய்வது என் –

—————————————————————————————

ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற்றா ழும் கொடியேற்கே–8-3-4-

வட தள சாயி -அழகு -ஆபி ரூப்பியம் -என்ன பிரமாதம் கவனக் குறைவு வருமோ
ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி-போனகமாக அமுது செய்து -அதி சைவம் –
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே-ஆலிலை பேர் சொல்லும் படி -வயிற்றில் இடம் இருக்கும்
-இலையில் இடம் இல்லையே -இடம் வலம் கொண்டு கண் வளர்ந்து -திருப் பாற் கடல் போலே திரு உள்ளம்
சாலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் உன்-கார் -காள மேகம் எழில் போன்ற உன் வடிவு –
பேர்வது-மாறுவது வினாடி எல்லாம் ஊழி-பகல் ஊழி காலம் வேற இடங்களில் இங்கு நொடிப் பொழுதும்
-க்ஷனாந்தரம் பேருகிற காலமும் -கோலம் காரெழில் காணலுற்றா ழும் கொடியேற்கே-உலக பயத்துக்கு உம்மைப் பற்றி போக்குவேன்
-உம்மைப் பற்றிய பயம் போக்க முடியாத பாவி அன்றோ -ஆழ்ந்து போன கொடியேன் –
அழகை காண ஆசைப் பட்டு ஆழ்ந்து –
அகடிதகடநா சாமர்த்தியமும் -ரக்ஷகத்வம் -சக்தி அன்றோ என்னில் இவையே இவருக்கு அஞ்ச ஹேதுக்கள் ஆனதே

அழிவு காலத்திலே அவ் ஆபத்தின் நின்றும் உலகத்தை எடுத்து வயிற்றில் வைத்து நோக்கினவன் அன்றோ நான் –
நீர் நம்மை நோக்கி அஞ்சி வேண்டாம் காணும் என்று-
தான் எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுவானாக இருக்கும் இருப்பைக் காட்டினான் –
எல்லாரையும் இரட்சிக்கின்ற வஸ்து அன்றோ பிரளயத்தில் அகப்படப் புக்கது -என்று அதற்கும் அஞ்சுகிறார்-

ஞாலம் போனகம் பற்றி –
இது நமக்கு அறாது -என்று அறியாமல் பூமிப்பரப்பை அன்றோ வயிற்றில் எடுத்து வைத்தது
வெண்ணெயும் ஜீவியாது என்று அன்றோ இவர் இருப்பது –
ஓர் முற்றா வுருவாகி –
ஒரு கொறுட்டிலே தெரித்தால் மற்றை கொறுட்டாலே பால் பாயும் பருவமாயிற்று பருவம் –
அன்றிக்கே –
யசோதையின் குழந்தையாகிய கிருஷ்ணனுக்கும் கீழாய் அன்றோ இருப்பது -இந்த இளமை -என்னுதல்-
பிரளய ஆபத்தாலே வரையாதே பாதுகாத்த பாதுகாப்பும்-அகடிதகடநா சாமர்த்தியமும் இவர் நெஞ்சில்-படுகின்றன இல்லை –
சௌகுமார்யமே ஆயிற்று இவருக்கு தோற்றி இருப்பது –
ஆலம் பேரிலை –
அங்கு ஓர் தொட்டிலிலே கிடக்கப் பெற்றது-
இங்கு ஓர் இளம் தளிரான ஆல் இலையிலே ஆயிற்று திருக் கண் வளர்ந்து அருளுகிறது –
பேரிலை
பெயருகிற இலை-அதாவது
முகிழ் விரிகிற இலை -என்றபடி –
உலகங்கள் எல்லாம் அழிந்து இருக்கும் காலத்தில்
ஆலமரத்தின் உடைய கிளையிலே ஓர் தளிரிலே–இக் குழந்தை படுத்துக் கொண்டு இருக்கிறதே -இது என்ன ஆச்சர்யம் –
இளம் தளிரிலே கண் வளர்ந்த -பெரிய திருமொழி 2-10-1–என்றபடி –
அன்றிக்கே
ஆலம் பேரிலை
ஆலிலை என்ற ஓர் பெயர் மாத்ரமான இலை -என்னுதல்
அன்றிக்கே
பெரிய இலை என்று விபரீத லஷணையாய்-சிற்றிலை -என்னுதல் –

அன்ன வசம் செய்யும் –
உணவுக்கு ஈடாக இடம் வலம் கொள்ளும் -என்றது
யசோதை பிராட்டி தொட்டிலில் செய்யும் செயல்கள் அத்தனையும் செய்யும் ஆயிற்று –
அதற்குள்ளே -கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் அதில் –பெரியாழ்வார் திருமொழி -1-1-9-என்றபடி –
தனக்கு ஜீரணம் ஆகாத பூமியை உண்டலும்
ஜீரணம் ஆகாது -என்று அறியாத இளைஞன் ஆகியும் –
பிரளயத்தில் சிறிய இடத்தை உடைய ஆல் இலையிலே திருக் கண் வளர்ந்து அருளுகையும் –
அதிலே கிடந்த இடத்தில் கிடைக்காமல் விளையாடுகையும் –
இவை எல்லாம் பயத்துக்கு இடங்களாய் இருக்கிற தாயிற்று இவருக்கு –
அம்மானே –
எல்லாரையும் காபபாற்றுகிறவன் ஆனவனே-ஒரு சிறிய மனிதனுக்கு வந்தது ஓன்று அன்றிக்கே –
எல்லாரையும் காப்பாற்று கின்றவனானவனுக்கு வந்தது என்ற இதுவும் அச்சத்துக்கு இடம் ஆகிறது இவர்க்கு –
சாலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் –
பேர்வது ஓர் காலம் ஓர் கார் இருள் ஊழி ஒத்து உளதால் –
உன் தனிமையை நினைக்க நினைக்க
ஒரு கணத்தின் நின்றும் மற்று ஒரு கணத்துக்கு பேருகிற நடுவிலே சந்திக்கிற நேரமானது
மகா அந்தகாரமான கல்பமாய்க் கொண்டு நெடுகா நின்றது எனக்கு –
உன் கோலம் காரெழில் காணலுற்று-
உன் கார் எழில் காலம் காணலுற்று
உன்னுடைய கறுத்த எழிலான திரு மேனியைக் காணலுற்று -என்னுதல் –
அன்றிக்கே –
மேகத்தினுடைய எழில் போலே இருந்துள்ள அழகு -என்னுதல் –
காணலுற்று ஆழும் கொடியேற்கே –
மங்களா சாசனம் செய்கைக்கு உன் அழகிய வடிவைக் காண ஆசைப் பட்டுப் பெறாதே-
ஆழும் -நித்தியமாக அனுவர்த்திக்கும் பாவம் -ரக்ஷகனுக்கு என் வருகிறதோ -என்பதால் இதுவும்
விக்ரக வை லக்ஷண்யம் நித்யம் போலே நித்யம் -என்றவாறு

—————————————————————————————

கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

முசியாதே கண் வளர்ந்து -எத்தனை நாள் கிடத்தி -இரண்டு கிடந்த சேவை -ஆச்ரித விரோதி நிவர்த்தனம் -த்ரி விக்ரம அவதான ஆயாசமோ –
விரோதிகள் காணும் படி -கொடி இறக்கி வைக்காமல் இருக்க வேணுமோ –
கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்-செறிந்த மாடங்கள் –
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்-மீளாமல் திரும்பாமல் -உகந்து கிடந்தது -நேற்று வருந்தினால் தானே இன்று மகிழ்வாய்
அடியார் அல்லல் தவிர்த்த வசவோ அன்றேலிப்-துக்கம் தீர்த்த அலைச்சலோ
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே-திரு மிடற்று ஓசை அழகைக் காணும் படி -அருளாய் -ஓசையின் வாசியால் அறிவேன் –
அளந்த திருவடி பிடிக்கவோ -ஏய்த்த திருத்த தோள்களை பிடிக்கவோ இவருக்கு உத்தேச்யம்

பிரளய ஆபத்தில் தனியாக கண் வளர்ந்து அருளுகிறவன் என்று-பயப்பட்டவர் உடைய அச்சம் தீர
பரிவரும் உண்டாய்-அச்சம் இல்லாதவையான திருக்கோளூர் திருப் புளிங்குடி தொடக்கமான
இடங்களில் கண் வளர்ந்து அருளுகிறபடியைக் காட்டிக் கொடுக்க
அது தானும் இவர் அச்சத்துக்கு காரணம் ஆயிற்று –

கொடியார் மாடக் கோளூரகத்தும் –
கொடி மிக்க மாடங்களை உடைய திருக் கோளூரிலும்

பகைவர்கள் கிடந்த இடம் அறிந்து அபசரிக்கும்படி கொடிகட்டிக் கொண்டு கிடக்க வேண்டுமோ-
கொடிக்கு பயப்பட வல்லார் இவரைப் போன்றார் இலர் –கொடி இடை மடவாருக்கு பயப்படுவார் –
கம்ச பயத்தால் ஒளித்து வளர்ந்தாப் போல் இருத்தல் ஆகாதோ –
இந்த அச்சம் இல்லை அன்றோ மேல் பாட்டில்
அனுகூலர் என்றும் பிரதி கூலர் என்றும் வேறுபாடு அற தன்னோடு கலந்து கிடைக்கையாலே
புளிங்குடியும்-
இதுவும் இவர் அச்சத்துக்கு காரணம்
பல இடங்களிலும் படுக்கை படுக்கிறது சிரமித்தின் மிகுதி என்று இருக்கிறார் –
மடியாது –
இடம் வலம் கொள்ளாமல்
அன்றிக்கே
மடியாது -என்று சோம்பாய் -சோம்பாதே -என்னுதல் -என்றது
நமக்காக இவன் கிடக்கிறான் -என்று அறிந்து-பரிதலுக்கு ஒருவரைப் பெற்றிலோம் -என்று இளகாது ஒழிதலை குறித்தபடி –
இன்னே-
இப்படியே
கிடந்ததோர் கிடக்கை -திருமாலை -23-என்னும் இத்தனை ஒழிய பாசுரம் இடப் போகாது இருக்கை –
நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் –
அவிகாரியாய் இருக்கிற நீ -ஒருபடியே கண் வளர்ந்து அருளி-
அதனாலே இனியன் ஆகைக்கு காரணம் என் –
இவன் முகத்தில் தெளிவு உண்டாய் இருந்தது அதுக்கடி முன்பே ஸ்ரமம் உண்டாகை அன்றோ -என்று இருக்கிறார்-
சிரமம் உடையாருக்கு உறங்க உறங்க முகம் தெளிந்து வரக் காண்கையாலே-
அடியார் அல்லல் தவிர்த்த வசவோ –
திருவடிகளில் சரணம் புகுந்த இந்த்ரன் முதலானவர்கட்காக–இராவணாதிகளை அழியச் செய்து
அவர்கள் துக்கங்களை கெடுத்த இளைப்போ –
அன்றேல் –
அன்றாயின்
இப்படி தான் நீண்டு தாவிய வசவோ-
நீண்டு இப்படிதான் தாவிய அசைவோ –
அன்றே பிறந்து அன்றே வளர்ந்து மிருதுவான திருவடிகளைக் காடும் ஓடையும்
அளந்து கொள்ளுகையாலே திருவடிகள் நொந்ததோ
பணியாயே
தோள் நொந்தோ-திருவடிகள் நொந்தோ-அருளிச் செய்யாய் -என்றது –
தோள் நொந்தது என்னில் தோளைப் பிடிக்கவும்–தாள் நொந்தது என்னில் தாளைப் பிடிக்கவும்
அருளிச் செய வேண்டும் -என்றபடி
அன்றிக்கே
வார்த்தைகளின் ஓலியின் தளர்ச்சியைக் கொண்டு அறியலாம் என்று கேட்கிறார் -என்னுதல்
உகந்து அருளின இடங்களிலும் செய்ய முடியாதன இல்லை-
சொல்ல நினையாமல் இருக்கிறான் இத்தனை -என்று இருக்கிறார்

————————————————————————————–

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

நித்ய ஸூ ரிகளுக்கு அனுபாவ்யமான – நிரதிசய போக்ய திரு மேனி கொண்டு –பிரதிவர்க்கல் பூயிஷ்டமான ஜகத்தில்-
-அவதரித்து -இத்தை அறிவித்து – என் நெஞ்சு கலங்கும் படி
அசுணமா முடியுமா போலே தன்னைப் போலவே இவனும் என்ற திரு உள்ளமாய் ஆழ்வார்
பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்- ந்கிங்கர – வனங்கள் கூடாதவர்களுக்கு பணியா -உபாதிக்ம் ஆனாலும்
-ஞான பிரேமாதி ஸ்வரூப ஸ்வ பாவங்களுக்கு தாமே விஷயமாம் படி –
சாமா நாதி காரண்யம் சொல்ல வர வில்லை –
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்-ஆபரண ரூபமான -திரு ஆழி திருச் சக்கரம் ஏந்தி -அவர்களுக்கு அனுபாவ்யமான
-அவர் கிடீர் -அவரோ என்னில் -அப்படி பரிவர் அங்கே இருக்கச் செய்தே
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல-அதிசயித்த பரிதாப ஹேதுவான
-அவித்யா கர்மா ருசி வாசனை -உடம்பே நோய் -களைப்பதற்காக
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–நித்ய -ஸூ ரிகளுக்கு அனுபாவ்யமான
நிரதிசய போக்யத்துடன் எனது மனசு கிலேசிக்கும் படி வர வேணுமோ

நீர் இங்கனே கிடந்து படுகிறது என்-
எல்லாரையும் காபபாற்றுகிறவன் அல்லனோ அவன் -என்ன-
நித்யசூரிகள் பரிய இருக்கக் கூடிய அவன்-
சம்சாரத்தில் அவ்வடிவோடே வந்து உலாவா நின்றால் நான் இப்படி படாதே செய்வது என் என்கிறார் –

பணியாவமரர் –
வேறே சிலரை பணிவதற்கு காரணம் இல்லாத நித்ய சூரிகள் -என்றது
முன்பு சேவிக்கத் தகாதார் காலிலே குனிந்து -அஸேவ்ய சேவை -சொன்னால் விரோதம் –ஒரு நாளிலே ஞானம் பிறந்து
அழுக்கு உடம்பு எச்சில் வாய் -என்று கழிந்ததற்கு வருந்தி
-உடம்புக்கு அழுக்கு –பிறரை வணங்குதல்-/ வாய்க்கு எச்சில் -பிறரை துதித்தல்
ஆவியை அரங்கமாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் -திருக் குறுந்தாண்டகம் -12
பின்பு வகுத்தார் காலிலே குனிந்தவர்கள் அல்லர்-
பணித்தல் பணிதல் செய்யாதவர்கள் என்றபடி-துதித்தாலும் வணங்குதலும் இன்றி –
இதனால் முக்தரை வேறுபடுத்துகிறது –
பணிவும் பண்பும் தாமேயாம் –
அவர்கள் பணிவுக்கும் ஞானம் முதலான குணங்களுக்கும் தாமே விஷயமாக இருக்குமவர்-
-பணிவு —நீர்மை /பண்பு -ஞானாதி குணங்கள் –

அணியாராழியும் சங்கமுமேந்தும் –
எல்லா ஆபரணங்களும் தாமே யாகப் போரும்படியான திவ்ய ஆயுதங்களைத் தரித்து நித்ய சூரிகளுக்கு
காட்சி கொடுத்தால் அவர்களும்- அஸ்த்தானே பயத்தால் சங்கை பண்ணி மங்களா சாசனம் பண்ணும்படி
ஆயிற்று இருப்பது -அவர்களுக்கும் நான் பட்டது பட வேண்டும்-விஷய வை லக்ஷண்யத்தாலே அன்றோ பயம் –
அவர் -காண்மின் –
அவர் கண்டீர் -அச்சம் உள்ள இடத்தில் வந்து பிறக்கிறார்
தமக்கு ஒரு பிரயோஜனத்துக்காக வருகிறாரோ என்னில்-
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் –
உலகில் தணியா வெம் நோய் தவிர்ப்பான் -வருகிறார்
தணியா வெம் நோய் ஆவது -ஒரு நாளும் முடியாத தாப த்ரயங்கள் முதலானவை
திரு நீல மணியார் மேனியோடு –
நீல மணி போலே ஸ்ரமத்தை போக்கக் கூடியதாய் சுகுமாரமான வடிவோடு-
இங்கே வர வேண்டுமானால் அவ்வடிவோடே வர வேண்டுமோ-
அத்தை கழற்றி வைத்து வரக் கூடாதோ -இச்சா க்ருஹீதாம் அன்றோ -வடக்கே அதனால் வெள்ளை திருமேனி பரிவு அதிகம் என்பதால்

என் மனம் –
அந்த சுகுமாரமான வடிவோடு சம்சாரத்தில் உலாவுகிறான்-என்று அறிந்த என் மனம் ஆனது
சூழ வருவாரே –
சுழன்று வரும்படி வருகிறவர்
அன்றிக்கே
தணியா வெம் நோய் தவிர்ப்பான் உலகில் வருகிறவர் -என்றுமாம்

————————————————————————————–

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

-ஸ்ரம மனம் சூழும் ஸுகுமார்ய பிரகாசம் ஆய்ச்சேரியிலே –சூர்ணிகை -173-மனம் சூழும் படி ஸூ குமார்யம் பிரகாசிப்பித்தானே
ஒரே பாசுரம் -மங்களா சாசனம் –
மாயக் கூத்தன் -சாதாரரைப் பரிசு அழிக்கும் சேஷ்டித்த ஆஸ்ச்சர்யம் குளத்தே கொடி விடும் சூர்ணிகை -173-அங்கே யும் ஒரே பாசுரம் –
உடைய நங்கையார் -பிறந்த திவ்ய தேசம் -ஆய்ச்சேரி
கிஞ்சித் கரிக்கைக்கு பிராட்டி உடன் இருக்க -திரு வாழ் மார்பன் -திரு நாவாய் தனித் தாயார் சந்நிதி அங்கு மட்டும் மலையாள தேசத்தில்
-உமக்கு பரிவராக ஒருவர் உள்ளார் என்று சொல்ல -கிஞ்சித் கரிக்கைக்கு –
வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
அங்கு நின்றும் வந்தும் -இங்கு நின்றும் செல்வார் -வி லக்ஷண சம்பந்தம் -ஸ்ரீ மானுக்கு
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்-திருப்பதி சாரம் -திரு வண் பரி சாரம்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு-ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-இந்த விபூதியில் பார்ஸ்வத்திலே வார்த்தைக்கும்
-அத்விதீயன் -என் நிலையை உரைக்க ஆள் இல்லை
வருவார் என்னைக் கூட்டி அவனுக்கு திருக் கல்யாணம் -செய்ய வேண்டாமோ –
அவனை அழைத்து வராமலும் அவன் வார்த்தை கொண்டு வராமலும்
இவர்கள் போக்கு வரத்து தனக்காக என்ற திரு உள்ளம் -இனி -இவர்கள் சொல்லா விடிலும் அவன் அறியும் படி சொல்வது எங்கனம் –
புரிவதே வண்மை என்பதால் திருப்பரி சாரம் என்ற பெயரே நிலைத்து இன்றும் -அங்கே –

இங்கே வந்து திருப் பரிசாரத்திலே எழுந்தருளி இருக்க-
நான் உதவப் பெறாமல் துன்புற்றவனானால்-
ஓர் அடியானும் உளன் -என்று அவனுக்கு அறிவிப்பாரையும் பெறுகின்றிலோம் -என்கிறார்-

வருவார் செல்வார் –
திருநகரி யினின்றும் திருப் பரிசாரத்துக்கு பெருவளியாக இசங்கா நிற்கும் என்றது
இயக்கம் அற்று இருக்கிறது அன்று கண்டீர் -என்றபடி –
அன்றிக்கே
தங்கள் கார்யத்தாலே விரைந்து போவாரை தம் நிலை அறிவிக்கப் போகிறார்கள் என்றும்
அங்கு நின்றும் வருவாரை தம்மை அழைக்க வருகிறார்கள் என்றும் இருப்பார் -என்னுதல் –

வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்வற்கு –
திருப்பரி சாரத்தில் இருப்பவர்க்கு பரிய வேண்டும்–அதற்கு மேல் பிராட்டி உடைய சேர்த்திக்கு பரிய வேண்டும்
அன்றிக்கே
சீதா பிராட்டியார் உடன் கூடிய தேவரீர் மலை அடிவாரத்தில் உலாவும் பொழுது-
நான் தேவரீருக்கு எல்லா நிலையிலும் எல்லா அடிமைகளையும் செய்வேன் ஆக -என்ற இளைய பெருமாளைப் போலே
பவாமஸ்து சஹ வைதேஹ்யா கிரிசா நுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதஸ் சதே -அயோத்யா -31-25
தொடர்ந்து போய் அடிமை செய்ய வேண்டும்படி யாயிற்று இங்கு இருக்கும் இருப்பு -என்னுதல்-

என் திறம் சொல்லார் –
சொன்ன வார்த்தையை கேட்ப்பிப்பார் இல்லாமை சொல்லாது ஒழிகிறார் அல்லீர் கண்டீர் –
என் திரு வாழ் மார்பற்கு –
என் பிராட்டி சந்நிதி ஆகையாலே -சொன்ன வார்த்தை விலை செல்லும் கண்டீர் –
ஸ்ரீ பீடம் -ருக் வேதம் ஸ்ரீ நிவாஸன் –ஸ்ரீ பீடஸ்ய -க்ரீம் கச்ச -என்று சொல்லுமே

செய்வதென் –
இதற்கு மேல் என்னால் செய்யலாவது என் -தாங்கள் தங்கள் கார்யத்தின் நிமித்தம் போவார்கள் ஆகில்
நன்று அவர்கள் அங்கு போனால் சொல்லும் பாசுரம் யாது என்ன

உருவார் சக்கரம் சங்கு சுமந்து –
அழகு மிக்கு இருந்துள்ள ஆழ்வார்களை விருப்பத்தோடு தரித்து
அன்றிக்கே
திருமேனிக்கு எல்லாம் வேறு ஒரு ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமாக போம்படியான ஆழ்வார்களைத் தரித்து -என்னுதல்

இங்கு –
பரிவர் இன்றிக்கே இருக்கிற இவ் உலகத்தில் –

உம்மோடு ஒருபாடு உழல்வான் –
இடைவிடாதே ஒரு பக்கத்தைப் பற்றி திரிவான்–ஒரு பக்கத்துக்கு இளைய பெருமாள் உளர் அன்றோ

ஓரடியானும் உளன் என்றே –
வேறு பிரயோஜனத்தை கருதாவனாய் இருப்பான் ஒருவன் உளன் என்று -என்றது
அந்த மகாத்துமாவானவன் கிடைத்தற்கு மிகவும் அரிது என்றபடியே –
பஹூனாம் ஜன்ம நாமந்தே ஜ்ஞானவான் மாம் பிரபத்யே-வாசுதேவ சர்வம் இதி ஸ மகாத்மா ஸூதுர்லப -ஸ்ரீ கீதை -7-19-
ஒருவர் இலர் என்று கை வாங்கி இருப்பர்-அது வேண்டா-
ஒருவன் உளன் என்று என் இடையாட்டம் சொல்லுகின்றிலர்கள் -என்கிறார் -என்றபடி –செய்வது என் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றே இருக்கும் ஒருவன் உளன் என்று சொல்லார் செய்வது என் –

———————————————————————————————-

என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-

-அடிமை செய்யும் படி அங்கீ கரிப்பது என்றோ
கொண்டு அருளி -பாட பேதம் –
என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்–பரிந்து கொண்டு -சேஷத்வ ஞானம் கொண்ட என்னை
ஸுகுமார்ய சோபை கொண்ட -ஸ்வ பாவிக்க ஸூந்தர்ய திருவடிக்கு கீழே
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்-பிரியாமல் இருந்து -ஸ்ரீ யபதித்தவ ஸுகுமார்யத்துக்கு ஏற்ற
மங்களா சாசனம் பண்ணி அடிமை செய்யும் படி அங்கீ கரித்து -சங்கல்பித்து -என்றாக–என்று நினைவில் கொள்ளப் போகிறாய்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்-குல பர்வதங்கள் –ஏழு கடல்கள் -பூமி முதலான லோகங்கள்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-திருவடிக்கு கீழ் இட்டுக் கொண்டு -சர்வேஸ்வர ஸூ சகம் திரு வாழி

பிறரை விடீர்–
உம் திருவடிக் கீழ் பரிகைக்கு நிலை ஆளாக என்னைக் கொள்வது என்று–அவனைக் கேட்கிறார்-
சர்வஞ்ஞன் -மடி பிடித்துக் கேட்க்கிறார் –

என்றே –
உம்முடைய கார்யம் கார்யம் செய்கிறோம் அன்றோ -என்ன
அது தான் என்று என்கிறார் –
என்னை-
உன்னிடத்தில் பரிந்து அன்றி உளேன் ஆகாது இருக்கிற என்னை –
உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ் –
அழகு மிக்க -ஒப்பனை திருந்தின உன் திருவடிகளின் கீழே -என்றது
மங்களா சாசனம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத திருவடிகள் -என்றபடி-
நின்றே ஆட்செய்ய –
எனக்கு கொடுப்பாய் உனக்கு கொடுக்கிறேன் -என்று பிரயோஜனைத்தைக் கொண்டு போகை- அன்றிக்கே
தேஹிமே ததாமி தே -யஜூர் வேதம் –எழுவார் விடை கொள்வார் போலே இல்லாமல் –விடாமல் அடிமை செய்ய
நீ கொண்டருள –
நான் கிடந்தானைக் கண்டு ஏறுகை அன்றிக்கே–அடிமை செய்வான் என்று திரு உள்ளத்தே கொண்டு அருள-
நினைப்பது தான் –
அவன் நினைவிற்கே பலத்தோடு சம்பந்தம் உள்ளது–தம்முடைய காதல் பலத்துக்கு காரணம் அன்று என்று இருக்கிறார் –
பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –
வண் பரிசாரத்து இருந்த -என்ற எழுந்தருளி இருக்கிற இருப்பு தனக்கு பரிய வேண்டி இருக்க–
மனிச செயல்களுக்கு அப்பால் பட்ட செயலைச் செய்தால்–மங்களா சாசனம் செய்து நிற்க வேண்டாவோ -என்கிறார் மேல்-
இருந்த திருக் கோலம் -ஈரடிக்கு பாடினால் மூவடிக்கு -பாட வேண்டாவோ –இருந்தவனுக்கு பாடினால் நடந்தவனுக்கு பாட வேண்டாவோ

குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-
ஏழு குல மலைகள் என்ன / ஏழு தீவுகள் என்ன / அவற்றைச் சூழ்ந்து இருந்துள்ள ஏழு கடல்கள் என்ன-
இப்படி ஏழு வகைப் பட்ட பூமியை அடைய நின்ற நிலையிலே நின்று அளந்து கொண்டு அருளும்படி–
நீண்ட திருவடிகளை உடையையாய்-கையும் திருவாழியுமான திருமகள் கேள்வனே -என்றது –
சங்கு சக்கரம் முதலிய திவ்ய ஆயுதங்கள் உடைய திருமகள் கேள்வனாய் வைத்து-காடும் ஓடையுமான பூமியை முழுதும் நின்ற நிலையிலே–
மெல்லிய திருவடிகளைக் கொண்டு–அளந்த சிரமம் தீரக் குளிர்ந்த உபசாரம் செய்யப் பெறும் நாள் என்று -என்றபடி-
மேலைத் தண் மதியும் -கதிரவனும் தடவவோடு -அங்கும் சிசிரோபசாரம் -கீழே கதிரவன் தோற்றும் மேலைத் தண் மதி என்பதால் –
அன்றிக்கே
அரியன செய்ய வல்ல நீ–நான் உன் திருவடிகளை கிட்டி நின்று அடிமை செய்யும்படி-நினைத்து அருள வேண்டும் -என்கிறார் -என்றலுமாம்-
உன் திருவடிக்கு கீழே பரிகைக்கு நிலை ஆளாக அடியேனைக் கொள்ள வேண்டும் -என்று என்று நாள் குறித்து அருள வேண்டும்

——————————————————————————————

திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-

அதிசயித்த ஞானாதிகர் ப்ரஹ்மாதிகளும் பரியாமல் -உன் சவுந்தர்யாதிகள் அறியாமல் –நான் கலங்கும் படி -அலற்றி –
திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்–திருமாலே என்று சம்போதித்து -வை லக்ஷண்யம் கொண்டவன்
-ஸ்ருஷ்டியில் பஹு முக வியாபாரம் கொண்ட நான் முகன்-சடை முடி தபஸ் வேஷம் பலம் தேடி -ருத்ரன் -பிரசித்தர்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்-சவுந்தர்யா ஸுகுமார்யாதி ஸ்வ பாவிக தன்மையை அறியாமல்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை-அத்விதீயமான -பரம காரண பூதன்-ஸ்ருஷ்டமான ஆத்மாக்களுக்கு
காலா அனுரூபமான உபகாரகன் – என்னை அடிமை கொண்ட வி லக்ஷணம்
கருமா மேனியன் என்பான் காதல் கலக்கவே-மனம் சுழல முன்பு -பிரமிக்க போலே இங்கு காதலும் கலக்கும் படி
-திரு மேனி -ஸுகுமார்யம் பாராமல் மதுரமான -உபகாரகனாய் வியாபாரித்து -என் போல்வாரை அங்கீ கரிக்க
திவ்ய மேனிகள் உடன் வந்து -என்ன பாசுரம் இட்டு சொல்ல முடியும் –

நம்மிடத்தில் பரிவு கொள்ளுவதற்காக பிரமன் முதலானோர் இருக்க-நீர் இங்கன் அஞ்சுகிறது என் -என்ன
அவர்கள் உன் சௌகுமார்யத்தை அறிவார்களோ -என்கிறார்-

திருமால்-
திருமால் என்று பிரித்து விளிக்கிறார்
நீயும் பிராட்டியுமான சேர்த்திக்கு மங்களா சாசனம் செய்வார்களோ அவர்கள்-
நான்முகன் –
படைப்புக்கு உறுப்பான பல முகங்களை உடையவனாய்-அதிலே நோக்கு உள்ளவன் –
செஞ்சடையான் –
சாதக வேஷம் தோன்ற நிற்கிற சிவன் -என்றது-தான் விரும்பிய பலத்தை அடைவதில் நோக்கு உள்ளவன் -என்றபடி
எம்பெருமான் தன்மையை –
சர்வேஸ்வரனான உன்னுடைய சௌகுமார்யத்தை-யார் அறிகிற்பார் –சிலராலே அறியலாய் இருந்ததோ –
அநந்ய பிரயோஜனராலும் அறியலாய் இருந்ததோ –
பேசியென் –
இது சொல்லி என்ன பிரயோஜனம் உண்டு -என்றது-
அவர்களைப் பரிவர் ஆக்கவோ-
உன் சௌகுமார்யத்தை அளவுக்கு உட்பட்டு ஆக்கவோ -என்றபடி
அவர்கள் நம்மை அறிய மாட்டார்கள் ஆகில்-
அறிந்த நீர் பேசிக் காணீர் -என்ன
என்னால் தான் பேசலாய் இருந்ததோ என்கிறார் மேல் –
ஒரு மா முதல்வா –
விலஷணமான பரம காரணம் ஆனவனே-
ஊழிப் பிரான் –
காலத்தால் சம்பந்தப் பட்ட எல்லா பொருட்கட்கும் ஸ்வாமி ஆனவனே-
என்னை யாளுடை கருமா மேனியன் –
புறம்பே ஈடுபட்டு இருந்த என்னை -உன் இடத்திலே ஈடுபடும்படி செய்த வடிவை உடையவனே-
என்பன் –
இவ்வளவே அன்றோ என் அளவும்-
எல்லா பொருள்கட்கும் நிர்வாஹகனாய்-
வடிவு அழகாலே என்னை சேர்த்துக் கொண்ட இது அன்றோ என்னை கலங்கப் பண்ணிற்று-
என் காதல் கலக்கவே –
என்னுடைய காதலானது நான் அஞ்சும்படி கலக்கப் பண்ண-
உன் வடிவு அழகிலும் மேன்மையிலும் கலங்கிச் சொன்ன அத்தனை போக்கி
உன் சௌகுமார்யத்தை எல்லை கண்டு சொன்னேன் –
இவ்வளவே என்னளவும் என்றது -உன் ஸூகுமார்யத்துக்கு தக்க படி சொல்ல வல்லேன் அல்லேன் —
அல்லேன் என்றபடி –
வேறு பிரயோஜனங்களை விரும்புகிறவர்களான பிரமன் சிவன் முதலானோர்கள் பரிவும் உனக்கு ஒத்தது அன்று –
காதலால் கண் இல்லாதவனான என் பரிவும் உனக்கு ஒத்தது அன்று என்றதாயிற்று-

————————————————————————————————

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-

பரிய-இவர்கள் உளரே -முமுஷுக்கள் நித்யர் முக்தர் -பரிய –நானும் சக்திமானாயும் இருக்க நீர் கலங்க வேண்டாமே -ஸமஹிதர் ஆகிறார்
ஆஸ்ரித ஜன ஸாமக்ரியைதையும் -கருவிகள் -அதிசயித்த சக்தி யோகத்தையும் -அனுசந்தித்து ஸமாஹிதர் ஆகிறார் –
கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்-ப்ரஹ்ம பாவ நிஷ்டர் -ஸ்வேத தீபம் -ஆர்த்த ஹிருதயம் படைத்தவர்கள் –
சனகாதி -நாரதர் ஸ்தோத்ரம் கேட்டு -புறச்ச சோலையில் தங்கி வேத ஒலி ஆழ்வார் கேட்டால் போலே நாரதரும் –
உத்சவ கோஷ ஒலி கேட்டு காவேரி வெள்ளத்தால் ஸ்ரீ ரெங்கம் போகாமல் கிலேசப் பட்டால் போலே
நஞ்சீயர் கிலேசப்பட்டால் போலே -நாரதர் ஜிதந்தே ஸ்தோத்ரம் கேட்டார் -முக்தர் கரை ஏறி –
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்-அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தர் -துளக்கம் கலக்கம் சலனம் இல்லாமல் நித்யர் -பரிவர்கள்-
மங்களா சாசனம் -அபிமதமாக தொழுவார்கள் -அபிமத சாதனமாக இல்லை –
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை-அபரிச்சின்னமான -கடலை கலங்கும் படி கடைந்து
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே-முடியக் கண்டு -புகழ வல்லோம் ஆகிற இது கிட்டுமோ
-லௌகீகர் பார்த்து சொல்கிறார் -அசம்பவம் என்றபடி

இவருடைய அச்சத்தைப் போக்குகைக்காக–
நம்மிடையே சனகன் முதலான முனிவர்கள் -முக்தர்கள் -நித்யசூரிகள் –இவர்கள் கிட்டி நின்று தொழுகின்றார்கள்-
நாம் தான் அரிய செயல்களும் செய்ய வல்லோம்-ஆனபின்பு நீர் நம் பொருட்டு அஞ்ச வேண்டாம் காணும் -என்ன-
முன்பு அச்சங்களுக்கு காரணங்களாக இருந்தவை தாமே-அச்சம் நீங்குவதற்கு காரணமாக
அதனை நினைத்து இனியர் ஆகிறார்-
இவர் தமக்கு இன்ன போது இன்னது அச்சத்துக்கு காரணமாம்-இன்ன போது இன்னது பரிகாரமாம் என்று தெரியாதே அன்றோ-

கலக்கமில்லா நல் தவ முனிவர் –
தங்கள் ஞானத்து விஷயங்களால் வரும் கலக்கம் அன்றிக்கே
மிக்க தவங்களை உடையராய்
மனன சீலரான சனகன் முதலானோர்
கரை கண்டோர் –
முக்தர்
துளக்கமில்லா வானவர்
சம்சாரத்தின் சம்பந்தம் இல்லாத நித்ய சூரிகள் –
அன்றிக்கே
துளக்கம் -சலனம் -அதாவது ஞானக் குறைவு -அது இல்லாத நித்ய சூரிகள் என்னவுமாம்
எல்லாம் தொழுவார்கள் –
முமுஷுக்களும் முக்தரும் நித்ய சூரிகளுமான இவர்கள்-அடிமை செய்கிறவர்கள்
அடிமையாவது ஸ்வாமிக்கு அதிசயத்தைப் பண்ணுமது ஆகையாலே-மங்களா சாசனமே அன்றோ –
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை-
மிகப் பெரியதான கடலைக் கலக்கும் படி கடைந்த பெரு மிடுக்கன் -என்றது
பரிகிறவர்கள் தாங்களும் -குழை சரக்காம் படி பெரு மிடுக்கன் என்கை-
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே-
அவன் படியை நேராக அறியாத நாம் பரிவிலே இழந்து முடியப் பேசப் புக்கது-
என் செய்தோம் ஆனோம் -சொல்லீர் கோள்
முன்பு தன் மிடுக்கைக் காட்டின இடங்களில் அதனை நினையாதே-அதனையே சொல்ல இப்போது
சமாதானத்தை அடைந்தவர் ஆயினர்-இது –
இப்பிரபந்தம் தலைக் கட்டக் கடவது ஆகையாலே யாதல்-
ஈஸ்வரனுடைய ஜீவன அதிர்ஷடத்தாலே யாதல்-

———————————————————————————-

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-

சம்சார நிவ்ருத்தி பலம் கிட்டும்
உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை-வாசா மகோசாரமாம் படி -ஸுகுமார்யாதிகளுக்கு என் வருகிறதோ என்ற அதி சங்கை
-பிறப்பித்து -பரிதாப ஹேதுவான –கிரீடம் விபூதி பூர்த்தி -சக்தி பூர்த்தி காட்டி -சர்வாதிகா சேஷி
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்-செறிந்த மலைகள் போலே -மாடங்கள்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்-யுக்தி பிரகாரம் -செறிந்த சப்த சந்தர்ப்பம் -அடைவு பட சொல்ல வல்லார்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே-விஸ்தீர்ணமான -சம்சாரத்தில் பிறவாதார் -பரிய இல்லாத இடத்தில் பிறவார்

நிகமத்தில்
இத்திருவாய்மொழி கற்பவர்கள்-அவன் தனிமை கண்டு பயப்படும் சம்சாரத்தில்-பிறவார் -என்கிறார் –
பயம் ஊட்ட வல்ல சம்சாரம் -என்றபடி –

உரையா வெந்நோய் –
சொல்லுதற்கு முடியாததாய் -மிகக் கொடியதான நோய்–
தம் அளவில் பொறுத்தல் அன்றிக்கே–உபய விபூதி நாதனுக்கு என் வருகிறதோ என்று அஞ்சின நோயே அன்றோ –
தவிர அருள் நீண் முடியானை –
இது போகும்படிக்கு தகுதியாக திருவருள் புரியும் தன்மையனான-உபய விபூதி நாதனை –
இவர் அச்சம் போகும்படி -நீர் விரும்பிய காரித்தைச் செய்கிறோம் என்று தலையை துலுக்கினான் போலே காண் –
என்று அம்மங்கி அம்மாள் அருளிச் செய்வர்-
கிரீடம் தாழ்ந்தே -தொழுது எழும் நீண் முடி இவருக்கு — அவனுக்கு அருள் நீண் முடி
அன்றிக்கே-
இவ் ஆழ்வார் உடைய பயம் நீங்கிய பின் பாயிற்று உபய விபூதிக்கும்
இரட்ஷகனாய் சூடிய முடியும் நிலை நின்றதாயிற்று -என்ற படியுமாம்
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன் –
இவர் அச்சம் நீங்கின வாறே நிறைவு பெற்றதுமாய் நிலை உள்ளதுமாயிற்று திரு நகரியும்
உரையேய் சொல் தொடை ஓராயிரம் –
சொற்களால் சேர்ந்த சொல் தொடையை உடைத்தாய்-
விலஷணமான ஆயிரம் –
இப்பத்தும் நிரையே வல்லார் –
இப்பத்தை அடைவு தப்பாமல் கற்க வல்லவர்கள்
தமக்கு பிறந்த கலக்கத்தாலே இதில் இழிவாருக்கும் அடைவு பட சொல்ல ஒண்ணாது என்று இருக்கிறார்-
நீடுலகத்தப் பிறவாரே –
இப் பூமிப் பரப்பை அடைய நினைத்தால்-பரப்பேயாய்-
சர்வேஸ்வரன் தனிமைக்கு பரிய ஒருவரைக் கிடைக்காத-இத் தேசத்தில் பிறவார்கள்
ஒரு நாடாக மங்களா சாசனம் செய்கிற தேசத்திலே சென்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பிரேம அதிகேந விவசய
ஸூ குமார மூர்த்தயே க்ஷேமாயா
கின்ன ஹ்ருதய
புருஷோத்த மஸ்ய
தத் தர்சித
ஆத்மபர-நித்ய முமுஷு முக்தைகி
கிஞ்சித் ஸமாஹிதா மன –
சடஜித் த்ருதீயே

—————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்ரீ பூமி நாயகத்வாத் –
அரி சுகரத்தயா –
ஏகாகி-தனியாக ஆழும் ஆளார் –பின் செல்வார் மற்று இல்லை
கல்ப சிந்து சிசுவத்வாத்-
ஸ்ரீ ஸ்தானே சந்நிதாநாத் -திவ்ய தேசங்களில் –
சுரஹித காரணாத்
ஸ்ரீ பதோ-ஸ்ரீ நிவாஸத்தை யோகாத்
விக்ராந்த் விஷ்ட பாதாம்
விதி துரதி கமநாத்
ஸ்வேஷூ ஸுலப்ய பூம்னா
ஸ்ரீ தர ப்ரதிபாதயாத்
8-3-ஸூ குமார மூர்த்திமத்வம்
8-1- சங்கா ஜனகத்வம் -ஸூ விஷய -சர்வாதிகானா ஆஸ்ரயித்த சுலபனா
8-2-ஆஸ்ர யித சங்கா -பிராப்யாந்தர ப்ராபகாந்தர-சம்பந்தம் இல்லை என்று காட்டி அருளினார்

———————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 73-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அங்கு அமரர் பேண அவர் நடுவே வாழ் திரு மாற்கு
இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச -எங்கும்
பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்———–73-

———————————————————————————-

அவதாரிகை –

இதில்
பரிவர் இல்லை என்று கலங்க
பரிவர் உளர் என்று தேற்றின பாசுரர்த்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஒரு கோல நீல நன்னெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று கீழே
அனுசந்தித்த அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ வைலஷண்யத்திலே திரு உள்ளம் சென்று
இப்படி சௌந்தர்ய சௌகுமார்யங்களுக்கு கொள்கலமான இவ் வடிவோடே
பிரயோஜனாந்தர பரர்களான தேவர்கள் கார்யம் செய்கைக்காக
பிரதிகூலர் வர்த்திக்கிற இஸ் சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து சஞ்சரியா நின்றான்
எங்கே என்ன தீங்கு வரத் தேடுகிறதோ என்று -இவர் வயிறு எரிந்து பயப்பட
நமக்கு
முமுஷூக்களும்
நித்தியரும்
முக்தரும்
உண்டு-
நாம் கடலை குளப்படி போலே கலக்க வல்ல பெறு மிடுக்கர் ஆகையாலே
நமக்கு ஒரு குறைகளும் இல்லை -என்று அவன் அருளிச் செய்ய
அச்சம் தீருகிற அங்கும் இங்கும் -அர்த்தத்தை
அங்கு அமரர் பேண -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————————————————————

வியாக்யானம்–

அங்கு அமரர் பேண –
ஆங்கு ஆராவாரம் அது -என்னுமா போலே
தேசம் -அது
தேசிகர்கள் -அவர்கள்
பரிவின் மிகுதி -அது
நித்ய விபூதியிலே பணியா அமரரான நித்ய சூரிகள் நித்ய மங்களா சாசனம் பண்ண
அவர்கள் நடுவே வாழ்கிற ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுக்கு
அப்படி -பரமாத்துமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பலர் இருக்க

அவர் நடுவே வாழ் திரு மாற்கு
ஒருவரும் இல்லை என்று பயப்பட –
அதாவது –
அங்கும் இங்கும் -என்று தொடங்கி –
அங்கம் சேரும் பூ மகள் மண் மகள் ஆய்மகள் –சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே -என்றும்
கனலாழி யரணத்தின் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே —
மரணம் தோற்றம் வான் பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம் -என்றும்
இச் சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணாதே

பரிவர் இல்லை என்று அஞ்ச
ஐஸ்வர்யகாமரும்
ஆத்மானுபவ காமருமாய் போருகையாலே
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வர் மற்று ஒருவரும் இல்லை -என்கிறது –

இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச –
அதாவது –
உன் கோலம் கார் எழில் காணலுற்று ஆழும் கொடியேற்கு -என்றும் –
திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே -என்றும்
கருமா மேனி அன்பன் என் காதல் கலக்கவே -என்றும்
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -என்றும்
தநுராதாய சகுணம்க நித்ரபிட காதர -என்றும்-ப்ருஷ்ட தஸ்துத நுஷ்பாணிர் லஷ்மணோ நுஜகாமாக -என்னும்படி
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கும் உம்மோடு ஒரு பாடு உழல்வான் அடியானும் உளன் என்றே -என்றும்
என் திறம் சொல்லார் செய்வது என் -என்றும்
என்றே என்னை உன் ஏரார் கோலத்து இருந்து அடிக் கீழ் நின்றே ஆட்செய்ய நீ கொண்டு அருள நினைப்பது தான் -என்றும்
மங்களா சாசன ரூப கைங்கர்யம் கொண்டருள-
நினைப்பிட்டு அருளுவது என்று அவனைக் கேட்டும்
இப்படி கலக்கத்தாலே அஞ்ச-

எங்கும் பரிவர் உளர் என்னப் –
இங்கும்
அங்கும்
எங்கும்
நமக்கு பரிவர் உளர் என –
அதாவது –
கலக்கமில்லா நல் தவ முனிவர் -என்று தொடங்கி -என் செய்வது உரையீரே என்று இப்படி
நம்மை பரிகைக்கு
முமுஷூக்களும்
நித்தியரும் ‘
முக்தரும்
உண்டு –
நாம் தாம் தரத்தைக் கொண்டு ஷீர சிந்துவை ஷூபிதமாம் படி
கடைந்த மகா பாஹூகம் என்று தன மிடுக்கைக் காட்ட –

பயம் தீர்ந்த மாறன் வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார் –
ஆழ்வாரைப் போலே
பயமும்
பய நிவ்ருத்தியும் இன்றிக்கே
ஆழ்வார் உடைய
வரியை உடைத்தான வீரக் கழலோடு கூடின திருவடிகளைச் சேர்ந்தவர்கள்
நிர்ப்பயமாய் வாழப் பெறுவார்கள் —

ஆழ்வார் இப்ப்பாசுரத்தாலே
பயம் தீர்க்கையாலே
இவர்களுக்கு வாழ்வேயாய் இருக்கும் –

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: