பகவத் விஷயம் காலஷேபம் -161- திருவாய்மொழி – -8-2-1….8-2-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

நங்கள் வரி வளை–பிரவேசம்
மேல் திருவாய்மொழி பிராபகத்தில் நோக்கு -இத் திருவாய்மொழி பிராப்யத்திலே நோக்காய் இருக்கிறது –
மேலே அவன் குணங்களிலும் ஸ்வரூபத்திலும் ஐயம் கொண்டு தெளிந்து
வணங்குமாறு அறியேன் -என்று தம் தலையிலே ஒரு சாதனத்தை செய்வதற்கு உரிய தகுதி இல்லாமையை தெரிவித்து
யானும் நீ தானே யாவதோ மெய்யே -என்று தம் பாரத்தை அவன் பக்கலிலே வைத்தமையைச் சொல்லி
இப்படி பிராசங்கிகமாக-அவனே பிராபகன் என்னும் இடத்தை அறுதி இட்டார் –
அவனே பிராபகனாம் இடத்தில் பேற்றுக்கு கால தாமதத்துக்கு–காரணம் இல்லையாய் இருக்க –
அவன் வந்து முகம் காட்டாது ஒழிதற்கு காரணம் உண்டாக வேண்டும் என்று பார்த்தார் –
அதில் அவன் பக்கல் பார்க்கலாவது ஒன்றும் இல்லை-இதுக்கடி நம் பக்கலிலே ஆக வேண்டும் என்று பார்த்தார்
என்னுடைய பாபமே சொல்ல முடியாதபடி மிகுதியும் இருக்கிறது -இதில் சந்தேகம் இல்லை -என்றாளே அன்றோ பிராட்டி –
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி நசம்சய-சமர்தாவபி தௌ யன்மாம் நாவே ஷேதே பரந்தபௌ-சுந்தர -38-48
இவரும் அப்படியே பல நாள் அலைந்து திரிந்து–கண்டவை எல்லாவற்றிலும் ருசி பண்ணிப் போந்தோம்-
நம்முடைய முன்னைய செயல்களையும் நமக்கு இப்போது உள்ள அளவையும்
சர்வஞஞனான சர்வேஸ்வரன்-அறியாமை அல்லை –
பூர்வ ஸூஹ்ருதம் -நாமும் அறியாமல் -சாஸ்திரமும் அறியாதே கிடப்பது ஈஸ்வரன் அபிப்ராயத்தால்
மாடி மாங்காய் இட்டு யாதிருச்சிகம்-போலே –
நாம் அறியாது இருக்க–அவன் அறிய — அவன் பக்கல் ருசியிலே நமக்கு குறை உண்டாக வேண்டும்-என்று பார்த்து
அது உண்டாகவுமம் இல்லையாகவுமாம் –
புறம்பு உண்டானவற்றில் ருசி இல்லை என்னும் இடத்தை அவன் திரு உள்ளத்தில் படுத்துவோம் -என்று பார்த்து –
பிராப்யத்துக்கு தடையாக உள்ளவற்றிலும் -கிளி முதலானவை —
பிராபகத்துக்கு தடையாக உள்ளவர்கள் இடத்திலும் -தாயார் முதலானோர்–
பிராப்ய பிரதானம் தானே இது –பிராபக விரோதித்வம் -தத் சிசுரூஷைகளால் பலன் கிட்டும் -அதனால் தாயார் பிராபக விரோதி என்றவாறு
தமக்கு ருசி இல்லாமையை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
சர்வேஸ்வரனோடு கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி–அவன் தானே வரக்கண்டு இருக்கை அன்றிக்கே-
அபசாரிகையாய் –அபி நிவேசத்துடன் -அவன் இருந்த தேசத்துக்கு ஏறப் போவதாக ஒருப்பட-
இதனை நினைத்த தோழிமார் தொடக்கமானார்–உனக்கு இது ஆகாது காண் -என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க-
அவர்களைக் குறித்து
தோழிமார் தொடக்க மானவர்களிலும்–மற்றும் உள்ளவர்களிலும்–நசை இல்லாமையை அவர்களுக்கு அறிவிக்க பாசுரத்தாலே-
தமக்கு நசை இல்லாமையை அவன் திரு உள்ளத்திலே படுத்துகிறார் –

—————————————————————————

நங்கள் வரி வளை யாயங்களோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

சர்வ சுலபன் சர்வேஸ்வரனை அபி நிவேசித்து -ஸ்ரீ வைகுண்ட விரக்தன் -ஆபரண சோபையுடன் -ஆபீ ரூப்யம் -அவயவ ஸுந்தர்யம்
சமுதாய சோபை அழகு இழந்தேன் -தோழிகளுக்கு அறிவிக்கிறான்
நங்கள் வரி வளை யாயங்களோ-வரிகளை உடைய -நங்கள்-வளைக்கும் தோழிகளுக்கும் -சமான சுக துக்கிகள் -போலே இல்லாமல்
நம்முடை ஏதலர் முன்பு நாணி-ஏதலர் விரோதிகள் -தாய் -ஹித வசனம் பண்ணி மீட்க நினைப்பதால் -முன்பு சொல்ல வெட்க்கி –
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்-அந்தரங்கை உங்களுக்கு சொல்வதற்கு -தேடித் பார்த்தேன் –
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்-எங்கும் காண மாட்டிற்றிலேன் -இந்த விகார ஹேது -நிலை சொல்ல முடியாதே –
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்-சங்கு வளைகள் கழன்றன -தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்-பசலை நிறம்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்-காய்ச்சின பறவை -ஆஸ்ரித விரோதிகளை அழிய செய்யும் -இத்தை காட்டி எனக்கு ஸ்வாமி
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே-சுலபன் -இந்த ஆகாரங்களை ஆசைப்பட்டு -அபி நிவேசம்மிக்கு –
நீர் தோஷ பிராமண ஆரூடன் -வேதா ஸ்வரூபி -எம் கோன் நிருபாதிக சம்பந்த உக்தன் நிரவதிக சுலபன் –

தோழிமார்கள் -உகவாதார் முன்பே அன்றோ நாண வேண்டுவது -எங்கள் முன்னே நாண வேண்டுமோ –
உனக்கு ஓடுகிற நிலையைச் சொல்லு என்ன –
பிறருக்கு மறைத்து உங்களுக்கு சொல்லலாம் வார்த்தை-பார்த்த இடத்து ஒன்றும் காண்கின்றிலேன் -என்கிறாள் –
நங்கள் வரிவளை –
முன்பு உங்களோடு என்னோடு வாசியற எல்லார்க்கும் உண்டான வளை-என்னுதல் –
அன்றிக்கே
இன்ப துன்பங்கள் நம் இருவருக்கும் ஒன்றே -என்கிறபடியே
த்வம் வ்யச்ய அஸி மே ருத்ய ஹி ஏகம் துக்கம் சுகம் ச நௌ-சுக்ரீவோ ராகவம் வாக்யம் இதி உவாச ப்ரக்ருஷ்டவத் -கிஷ்கிந்தா 5-18-
இன்ப துன்பங்கள் ஒன்றாக சொல்லிப் போந்த நீங்கள் அனுஷ்டானத்தில் வந்தவாறே வேறுபடுவதே -என்கிறாள் -என்னுதல்
இப்போது செய்கையில் வேற்றுமை என் என்ன –
கை மேலே கண்டிலேமோ -நான் சங்கை அற்று இருக்கிறேன்–நீங்கள் சங்கை உடையீர் கோளாய் இருக்கின்றீர் கோள் அல்லீரோ –
இவள் முன்பு பட்ட அதி சங்கை தவிர்ந்து அன்றோ இருந்தாள் –
வரி வளை
வரியை உடைய வளை -என்னுதல் -அழகிய வளை -என்னுதல் –
இவளைத் தரிப்பிக்கைக்காக அவர்களும் வருந்தி தரித்து இருப்பார்கள் அன்றோ –
பிராட்டியை பிரிந்த இடத்தில் பெருமாளைக் காட்டிலும்–தம்முடைய காவல் சோர்வாலே வந்தது என்று தளர்த்தி-இவர்களும் தரித்து இருப்பார்கள் வளையை –

ஆயங்காளோ –
தோழி மாரிலும் தரம் உண்டாய் இருக்க இப்போது எல்லாரும் ஒருபடிப்பட்டு இருக்கிறார்கள் -தோழிமீர்காள் –
ஒ காரம் துக்கத்தின் மிகுதியைக் குறிக்க வந்தது –
அவர்களை விளித்தவள் வார்த்தை சொல்லுவதற்கு முன்பே-
துக்கம் உற்றவள் ஆகிறாள் –
இந்தத் துக்கத்திற்கு காரணத்தை புறம்பு உள்ளாருக்கு மறைத்தாய் ஆகிலும் எங்களுக்கு சொல்ல வேண்டாவோ –
உனக்கு ஓடுகிற நிலையைச் சொல்லாய் -என்ன–
நம்முடைய ஏதலர் முன்பு நாணி –
பகைவர்கள் முன்பு நாணம் கொண்டு –
தோழி மார்கள் இப்போது ஹிதம் சொல்லி மீட்கப் பாரா நின்றார்கள் ஆகிலும்-
பெரும் இடத்தில் விழுக்காட்டில் ஒத்து இருக்கிறார்கள் ஆகையால் -நம்முடைய ஏதலர் -என்று உளப்படுததுகிறாள் –
இவளுக்கு பகைவர் இலர் அன்றோ–
ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கிற தாய்மார்கள் அல்லவோ பகைவர்கள்
ஏதலர் -பகைவர் –
நுங்கட்கு
தோழி மாரான உங்களுக்கு
யான் ஓன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன்-
நான் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று ஆராய்ந்து பாரா நின்றேன்–
எங்கும் காண மாட்டேன்
இதற்க்கு ஒரு பாசுரம் இட்டு சொல்ல வேண்டும் என்று பார்த்த இடத்து-ஒரு படியாலும் காண்கின்றிலேன்
மாட்டேன் -என்கிறது என் -சிலருக்கு மறைத்து நம்பத் தக்கவர்கட்கு சொல்லத் தட்டு என் -என்ன –
சங்கம் சரிந்தன –
நான் இத்தை யாருக்கு மறைத்து யாருக்கு வெளி இடுவது-
உலகமே அழிந்தது என்றது போலே காணும் இருக்கிறது –
இவளைக் கிடையாத போதை நாயகன் இலன்-
நாயகன் இல்லாத போது உபய விபூதியும் இல்லை -என்றது
இவள் கையும் வளையுமாக இராத அன்று நாயகன் உளனாக மாட்டான் –
இருவருமான சேர்த்தியில் உண்டாகக் கூடிய உபய விபூதியும் அழியும் என்றபடி –
சாய் இழந்தேன் –
அவனோடு கலந்து பெற்றதாய்
அவன் வரும் அளவும் தரிக்கைக்கு கை முதலான -சமுதாய சோபையும் – எழிலையும் இழந்தேன்-
தட முலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்-
அவன் வந்தாலும் பிரயோஜனம் இல்லாதபடி அவன் கைம்முதலும் அழிந்தது –
அனுபவிக்கும் நாயகனால் உண்டு அறுக்க ஒண்ணாத பரப்பை உடைய முலை யாதலின் தட முலை -என்கிறது –
பொன் நிறம் -பசலை நிறம்-
நல்ல நிலம் மணலீடாய் போமாறு போலே-
இழந்தவை வந்தாலும் தொங்குகைக்கு ஆஸ்ரயம் இல்லை -என்பாள் -தளர்ந்தேன் -என்கிறாள்

வெம் கண் பறவையின் பாகன் எம் கோன்-
இழந்த இழவுக்கு காரணம் சொல்லுகிறது-
வெம் கண் பறவை -வெவ்விய கண்களை உடைய பெரிய திருவடி –
வரும் இடத்தில் உண்டாகும்தடைகளையும் போக்கிக் கொடு வரும்-என்னுதல்
கலவிக் காலத்தில் பிரித்துக் கொடு போம் என்னுதல்–
அக்ரூரர் குரூரமனத்தை உடையவன் -என்னுமாறு போலே –
பறவையின் பாகன் எம் கோன் –
பெரிய திருவடி முதுகில் இருந்த இருப்பைக் காட்டி ஆயிற்று என்னை அனன்யார்ஹை ஆக்கிற்று –
வேங்கட வாணனை –
பரம பதத்தில் இருப்பை ஆசைப் பட்டேன் அல்லேன்
நமக்கு காட்சி தருகைக்கு வர நின்ற இடத்தே–
வேண்டிச் சென்று -நம்மை வேண்டி வந்தவனை நாம் வேண்டிச் சென்று –
நாம் ஆசைப்பட்டு சென்று -என்றபடி –
அவன் தான் வரக்கண்டு இருக்கை அன்றிக்கே–
அவன் இருந்த தேசத்து அளவும் சென்று விரும்பியவை பெறாமையாலே சங்கம் சரிந்தன-
பிடிவாதமாக போனேன் -நீங்கள் போக்க கூடாது என்று சொல்லியும் -சென்று சங்கம் இழந்தேன் -அவனைப் பெறாமையாலே
அன்றிக்கே-
சென்று –
பால் சென்றாப் போலே சென்று அற்று -என்றுமாம்-அவன் பால் சென்று -இளைத்தேன் -அழிந்தேன் என்றபடி –

—————————————————————————————————-

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-

அனுபாவ்ய ஆகார விசேஷியம் -வடிவு அழகு உடையவன் -அபகரித்த –உங்களுக்கு சொல்லும் விரகு அறியேன் -எத்தனை காலம் கிலேசிக்கிறேன்–
வேண்டிச் சென்று ஓன்று பெறுகிர்பாரில்-சென்று -இவன் பாடே சென்று ஒன்றைப் பிரார்த்தித்து –
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்-அசாதாரண தோழிமார்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ-இந்த துன்ப ஹேதுவை
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்-சொல்லும் விரகு அறியேன் -ஆற்றாமை சொல்லி -ஆற வேண்டி இருக்கச் செய்தே
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்–விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்-பார்வையால் பவ்யத்தைக் காட்டி
சர்வ ஸ்வதானம் பண்ணிய கள்வன் -நித்ய ஸூரிகள் அடங்க லற்றப் பண்ணுபவன்
வேங்கட நாயகன் -ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாய -அமலன் ஆதி பிரான் -விண்ணவர்கோன் -இவனே அவன்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்-திரண்டு கூட்டமாக -காந்தம் கொண்டு இரும்பு தூள்களை கொள்வாரைப் போலே
-காண் தகு தாமரைக்கு கண்ணைக் காட்டி -ஈண்டிய -ஸ்த்ரீத்வாதி பூர்த்தியும்
எத்தனை காலம் இளைக்கின்றேனே-தளர்ந்து கிலேசிக்கின்றேன்

இப்படி ஆனாலும் அந்தரங்க மானவர்களான எங்களுக்கு நோவில் சொல்லலாகாதது உண்டோ -சொல்லாய் -என்ன –
துக்க அனுபவத்தால் வந்த இளைப்பின் மிகுதியாலே உங்களுக்கு சொல்லும் பாசுரம் அறிகின்றிலேன் -என்கிறாள்-

சென்று வேண்டி ஓன்று பெறு கிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும் –
என் பக்கலிலே வந்து ஒன்றை விரும்பிப் பெருமவர்களில்–
தலையான வரிசையை உடைய தோழி மாரான உங்கட்கு ஆகிலும்-
என்னுடைத் தோழியர் -என்றது உயிர்த் தோழியரை
சென்று -என்றது -வந்து என்றபடி-
அங்கன் அன்றிக்கே
வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பார் இல் -என்று பதத்தை பிரித்து நிறுத்தி
அவன் இடத்தில் ஓன்று விரும்பிச் சென்றாரில் விரும்பியது ஒரு பொருளைப் பெற்றார் இலர் -என்று பொருள் கூறி-
எல்லா பலன்களையும் கொடுக்கிறவர் அன்றோ விஷ்ணு -என்றும்–
வேண்டிற்று எல்லாம் தரும் –திருவாய்மொழி -3-9-5-என்றும் வருகிற இடம் எல்லாம் வார்த்தை அளவே ஆம் என்று-
ஒரு தமிழன் பொருள் கூறினான் –வெறுப்பில் சொல்லும் வார்த்தை –
ஈண்டு –
இப்போது-முன்பு எல்லாம் சொல்லிப் போந்தேனே யாகிலும் இப்போது-சொல்லலாவது காண்கின்றிலேன்
இது -எல்லா வற்றையும் பாசுரம் இட்டு சொல்லிப் போந்தேனே யாகிலும் — இது சொல்லுகைக்கு பாசுரம் காண்கின்றிலேன்-
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் கோஷித்தவர் -இப்பொழுது இத்தை சொல்ல முடிய வில்லை என்கிறார் –
உரைக்கும்படியை
நெஞ்சிலே விஷம் ஊர்ந்தாப் போலே ஊரா நின்றது–பாசுரம் சொல்லலாவது இல்லை –
அந்தோ காண்கின்றிலேன் –
எனக்கு ஓடுகின்ற நிலையை உங்களுக்கு சொல்லி–அகஞ்சுரிப் படுத்தி தரித்து இருப்பதற்கு கேட்கிற உங்களிலும்-
எனக்கு தேட்டமாய் இருக்க–பாசுரம் காண்கின்றிலேன்–
பிரலாபத்தாலேயே தரிக்கப் படுத்தல் -என்கிறபடியே–
இடராட்டியேன் நான்
-நோவாட்டியேன் நான் என்றது-
என் இடருக்கு அன்றிக்கே- சொல்லு சொல்லு என்று அலைக்கிற உங்களுக்கு அன்றிக்கே -துக்கப் படுகிற நான் -என்றபடி-

காண் தகு தாமரைக் கண்ணன்
காணத் தக்கு இருந்துள்ள திருக் கண்களை உடையவன் -என்றது–எப்பொழுதும் காண்பதற்கு உரிய கண்கள் -என்றபடி –
மலர்த்தி செவ்வி குளிர்த்தி நாற்றம் இவற்றால் தாமரைக்கு ஒத்தனவாய் இருக்கை –
கள்வன் —
-நோக்காலே தன் செல்லாமையைக் காட்டி என் ஆத்துமாவையும் ஆத்துமாவோடு–சம்பந்தப் பட்ட பொருள்களையும் கொள்ளை கொண்டவன் –
விண்ணவர் கோன் நங்கள் கோனை –
நித்ய சூரிகளைப் போலே என்னைத் தனக்கு உரியவனாம்படி ஆக்கினவன் –
என்றது -ஒரு விபூதியாக படுத்தின பாட்டைக் கண்டீர் என் ஒருத்தியையும் படித்திற்று என்றபடி –
கண்டால் -காணப் பெற்றால்
ஈண்டிய சங்கும் -திரண்ட வளையையும்
ஒரு வலம்புரி கிடந்த இடத்தே ஆயிரம் சங்குகள் சேரும்–
பக்தன் சங்கு வடிவம் கொண்டு சங்கு அணித்துறை -சங்கம் -போலே –சுத்த சத்வ பிரபன்ன ஜன கூடஸ்தர்கள் பலரும் இங்கே வந்து சேர்ந்ததால் –
வலம் புரி ஆழியன் வேங்கட வேதியன் -அன்றோ –
நிறைவும் -அடக்கத்தையும் கொள்வான் -கொள்கைக்காக
தன் பக்கல் தொங்காதவை எல்லா வற்றுக்கும் புகல் அங்கே என்று இருக்கிறான் –
இவளுக்கு கை முதல் அங்கே அன்றோ–
சங்கு தங்கு முங்கை நங்கை– ஸ்வ ரஷணம் ஸூவான்வயம் போனதே -அவன் இடம் சேர்ந்ததே -அவனே சித்த உபாயம் என்றபடி
இது வாகில் உன் துணிவு காலம் சென்றவாறே நீயே இளைத்து மீளுகிறாய் -என்ன
எத்தனை காலம் இளைக்கின்றேனே–இது சொல்லி பகட்டக்-பிரமிக்க-கேட்பேனோ–இந்த ஆசையோடு எத்தனை காலம் உண்டு இளைத்துப் போகிறது-

———————————————————————————-

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !
இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-

மநோ பாவம் எளிமையாக வெளியிட்டு அருளுகிறார் -அதிசயித்த ஆபீ ரூப்பியம் -சென்று கிட்டு -திரும்பிப் பெற -எத்தனை காலம்
-கழற்றுவதையும் கழற்ற முடியாத நாணம் இத்யாதிகளை –
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்தநீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட-வண்ணன் -முகில் வண்ணன்
-நீல -மலர் -நெடும் சோதி -சூழ்ந்த -நீண்ட இத்தனை விசேஷணன்கள்-சொல்லி
கோல வளை யோடு மாமை கொள்வான்–திரும்பிப் பெற போக -கடல் கொண்ட வஸ்து மீட்கப் போகாதே -சமுத்ரை இவை காம்பீரம்
வளை-கோலம் ஒன்றே -ஏத்தி சொல்ல வேண்டாமே -இவளை சொல்லு உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -அவள் நின் ஆகத்து
பல விசேஷணன்கள் இவளுக்கு குவளை அம் கண்ணி ஒன்றே
எத்தனை காலமும் கூடச் சென்றே-காலம் கழியிலும் விட்டேன் -கூடச் சென்றே ஆகிலும் –
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான்-நீங்கள் சொன்னாலும் -பட்ட பரிபவம் சொல்லிக் கொள்கிறாள்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்-துர்லபம் என்றாலும் -அவனை விட மாட்டாத பாபிஷ்டன் -பிரத்யஷித்து பார்க்கலாம்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !-லோகப் பிரசித்தம் -அழகிய நெற்றி படைத்த
இனி நாணித் தான் என் ?-இனி வெட்கப்பட்டு என்ன பயன் -முக்காடு எடுத்து போவேன் -வாசவதத்தை போனாள்
-போகாதே என்பர் போனால் காதல் வாழ்க என்பார்கள் –

நாங்கள் சொல்ல மீண்டிலை யாகிலும்–எட்ட ஒண்ணாத விஷயம் ஆகையாலே-நாள் சென்றவாறே நீயே மீளுதீ
எங்கள் வார்த்தைக்கு மீண்டாயாக அமையாதோ -என்ன
காலம் என்னும் ஒரு பொருள் முடிவு பெறிலும் நன் அவனைக் கண்டு கொண்டு அல்லது விடேன் -என்கிறாள் –

காலம் இளைக்கில் அல்லால் –
பெரிய காலமானது நித்யமாகும் இதுக்கு முடிவு இல்லை –
அநாதிர் பகவான் கால நான் தோசய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23
என்கிற காலம் முடிந்து போம் இத்தனை அல்லது–நான் இளைத்து மீளுகிறேன் அல்லேன்
பரம பதத்தில் இந்த காலம் பிரபு ஆக வில்லை – என்கிறபடியே
ந கால தத்ர வை பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -10-9-
காலத்துக்கும் அவ்வருகான விஷயத்தை விளாக்குலை கொண்ட காதலை உடைய நான் மீளுவேனோ -என்பாள்
முழுவதும் பாடி அகப்படுத்தி -ஆராத காதல் —
நான் இளைக்கின்றிலன் -என்கிறாள்
கிடைக்க மாட்டாது என்றாலும் மீள ஒண்ணாத விஷயத்தில்–கை வைக்கும்படியான பாபத்தைப் பண்ணினேன் -என்பாள்
வினையேன் -என்கிறாள் –
அன்றிக்கே-
நீங்கள் சொல்லும் வார்த்தை நெஞ்சில் படாத படியான பாபத்தை செய்தேன் என்பாள் -வினையேன் -என்கிறாள் -என்னுதல் –
இப்போது இங்கனே சொன்னாயே யாகிலும் நீயே மேல் செய்யப் போகிறாய் என்ன –
கண்டு கொண்மின்-
நேரே காணக் கூடிய பொருளை பிறர் பக்கலிலே கேட்டு அறிய வேண்டுமோ –
உன் துணிவு இதுவான பின்பு எல்லாரும் ஒரு சேரப் பழி சொல்வார்களே -என்ன
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் –
இன்றோ நான் பழி சுமந்தது-
நாடும் இரைக்கவே-திருவாய்மொழி -5-3-10-என்ற அன்றே பழி சுமந்திலேனோ-
பழி சுமந்தேன் என்னுமது வார்த்தையோ-
பெண் தன்மைக்கு உரியதான நாணத்தை நோக்க வேண்டாமோ என்ன-
நல் நுதலீர் இனி நாணித் தான் என் –
நம் அழகும் அழிவதற்கு முன்பே அன்றோ அது நோக்க வேண்டுவது –
உலகத்தில் பிரசித்தமாய் விட்டதாகில் இனி நாணி என்ன பிரயோஜனம் உண்டு-
உங்கள் முகத்தில் எழில் அழியாது இருக்க என் முகத்தில் எழில் குடி போன படி கண்டீர்களே-
இந்த நெடு வாசியைப் பார்த்து அன்றோ வார்த்தைசொல்லுவது-
அது கிடக்க–
அவன் அழகு நம்மை நினைத்தபடி செய்ய ஒட்டா நின்றதோ -என்கிறாள் மேல்
நீலமலர் –
நீலமான நிறத்தை உடையதாய் -பரந்ததாய்
நெடு –
அளவிடற்கு அரியதாய்-
சோதி சூழ்ந்த
பேரொளியாலே சூழப் பட்டு-
நீண்ட முகில் வண்ணன்
அளவிடதற்க்கு அரியதாய் இருப்பது ஒரு காள மேகத்தின்–நிறம் போலே இருக்கிற நிறத்தை உடையவனாய் இருக்கிற-
கண்ணன் கொண்ட –
அவ்வடிவை பிறர்க்கே ஆக்கி வைக்கும்-பக்தாநாம் -பரார்த்தமாக இருக்க –
அவன் கவர்ந்த கோலம் வளை யோடே மாமை கொள்வான்
அழகிய வளையோடே கூட அவன் வாய் புலற்றும் நிறத்தையும் மீட்டுக் கொள்ளுகைக்காக
எத்தனை காலமும் கூடச் சென்று –
காலம் எல்லாம் கூடச் சென்றும் –
ஞாலம் அறியப் பழி சுமந்தேன்-
நன்னுதலீர் இனி நாணித் தான் என் -என்க
அன்றிக்கே
நெடும் காலம் கலவியின் பொருட்டு சென்று நாணித்தான் என் -என்னுதல்-

—————————————————————————

கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-

ஆஸ்ரித அநிஷ்ட நிவர்த்தகமான ஆயுதாதி பூர்த்தி -வாஹனம் ஆயுதம் -உடையவனைக் கிட்ட -சர்வ ஸ்வ அபகாரம் –
கொடுத்த நான் இனி என்ன உள்ளது கொடுக்க –
கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன்-சம்ச்லேஷிக்க போனேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்பாடற்று ஒழிய இழந்து வைகல்-என் பாக்கள் இருந்தவை -மிச்சம் இல்லாமல் இழந்தேன்
துளக்கம்-துவக்கு சம்பந்தம் அறுத்தேன் என்றுமாம்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்-ஸ்வ பாவம் அழிந்து -நான் இருக்க -வைகல் -நித்தியமாக பல வளை கள் அணிந்த
மாடக் கொடி மதிள் தென் குளந்தைவண் குடபால் நின்ற மாயக் கூத்தன்-மங்களா சாசனப் பாசுரம் பெரும் குளத்துக்கு–ஒரே பாசுரம் இது
வேத சாரன் -சாயுஜ்யம் -வேண்டி தவம் -குமுதா வல்லி -கமலாவதி பெண் குழந்தை -தபஸ் -நீயே வேண்டும் -கொடுத்ததும் தபஸ் –
தான் திருமாகவர்ந்து போக -ஆடல் பறவை -சென்று வலக்கை ஆழி-கொண்டு மீட்டு வர -அசுரனை அழித்து-சோரன்
-சோர நாயன் மாயக் கூத்தன் – -உத்சவ மூர்த்தி பெரிய திருவடி –
-மாடங்கள் -தென் நன்றாக -மேற்குப் பக்கம் -குடபால் -நின்ற ஆச்சர்ய சேஷ்டிதங்கள்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்ஆழி வலவனை யாதரித்தே-தர்ச நீய கதி பெரிய திருவடி மேல் –வல்லமை -வலப்பக்கம் -என்றுமாம் –
உன் துணிவு இதுவாக இன்னம் உள்ளவை முழுவதும் இழக்கிறாய் அன்றோ என்ன-இனி நான் எதனை இழப்பது என்கிறாள் –

கூடச் சென்றேன் –நான் முடிந்து ஒரு தலையே யாம்படி கிட்டினேன் -என்னுதல் –நித்ய விபூதிக்கு -சாம்யாபத்தி அடைய
அன்றிக்கே
கலவியின் பொருட்டு சென்று கிட்டினேன் என்னுதல் –

இனி என் கொடுக்கேன் –
பண்டே எல்லாம் இழந்தபின்பு இனி எதனை இழப்பது –
கோல் வளை நெஞ்சம் தொடக்கம் எல்லாம் பாடு அற்று ஒழிய இழந்து –
அழகிய வளை –நெஞ்சு -தொடக்கமானவற்றை எல்லாம் என்பாடு அற்று வாசனையோடு போம்படியாக இழந்து–
அவன் விபூதியைப் போலே யாகும் இவள் பரிகரத்தின் பரப்பும்–ஆதலின் எல்லாம் என்கிறது

வைகல் பல் வளையார் முன் பரிசு இழந்தேன் –
கழற்றிப் பூணும் ஆபரணமும் இழவாதவர்கள் முன்பே கழற்ற வேண்டாத ஆபரணமான பரிசு உண்டு -பிரகாரம் -நாணம் -அதனையும் இழந்தேன்
மாடம் கொடி மதிள் தென் குளந்தை-
மாடங்களையும் கொடியோடு கூடின மதிளையும் உடைத்தான தென் குளைந்தையிலே
வண் குடபால் நின்ற –
அழகிதான மேலைப் பக்கத்தில் நின்ற -இதுவும் ஒரு பரத்வத்துக்கு காரணம் போலே-கருட வாஹனத்வம் சக்கராயுத தாரி போலே –
மாயம் கூத்தன் –
ஆச்சர்யமான செயல்களை உடையவன்–
ஆடல் பறவை உயர்த்த–
சர்வேஸ்வரன் வாஹனம் என்னும் உவகையின் மிகுதியாலே–களித்து ஆடா நின்றுள்ள பெரிய திருவடியாலே–தாங்கப் பட்டு இருப்பவனே
வெல் போர் ஆழி வலவனை ஆதரித்து
புக்க போரிலே வென்று அல்லாது மீளாத திரு ஆழியை வலவருகே உடையவனாய் இருக்கிற சர்வேஸ்வரனை ஆசைப் பட்டு-

மாடக் கொடி மதிள் தென் குளந்தை வண் குடபால் நின்ற-ஆடல் பறவை உயர்த்த வெல் போர் ஆழி
வலவனான-மாயக் கூத்தனை ஆதரித்து கூடச் சென்றேன்-
கோல் வளை நெஞ்சம் தொடக்கம் எல்லாம் பாடு அற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன்பு-
பரிசு இழந்தேன்-இனி என் கொடுக்கிறேன் -என்று கூட்டுக-

——————————————————————————

ஆழி வலவனை ஆதரிப்பும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ ?இங்கரியது தான்
ஊழி தோறூழி யொருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழலுடைய சுடர் கொளாதித்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5-

தத்வ ஞ்ஞாராய் இருப்பார்க்கும் -உணர முடியாத அவன் -அதிசயித்த உஜ்வலமுடையவன்–
நினைக்கும் காலே–ஆராய்ந்து பார்க்கும் கால் பரத்வம் சௌலப்யம் இரண்டு ஆகாரங்களை உண்டே
ஆழி வலவனை ஆதரிப்பும்ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?-சரணம் என்போம் -நமக்கு அவர்கள் போலே தகுதி இல்லை என்றாலும் உடனே
கருடாரூடனாக வருவான் -அங்கு ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்த மாயன் அன்றோ –
சதா பஸ்யந்தி -பார்த்துக் கொண்டே இருக்க வெண்ணய்க்கு ஆடும் பிள்ளையாக வந்தானே –
ஆஸ்ரயிக்கும் அளவில் சர்வ ஸ்மாத் பரன்-ஸுசீல்யம் உடன் நம் பக்கல் வருவான் -அபேக்ஷித்ங்களை அளிப்பான் –
நீங்களும் என்னைப் போலே இத்தை அறிவீர்கள் –
சொல்லுவதோ ?இங்கரியது தான்-ஸுலப்யன்-கூடவே உள்ளதே விட முடியுமோ -துர்லபம் சொல்வதோ –
ஊழி தோறூழி யொருவனாகநன்கு உணர்வார்க்கும் உணரலாகா-நன்றாக -அதிசயித்த தத்வ ஞானம் உள்ளார்க்கும் உணர முடியாதே
-ஏவம் விதம் என்று அறிய முடியாதே சூழலுடைய சுடர் கொளாதித்தொல்லை யஞ்சோதி -பரஞ்சோதி அன்றோ
-சூழ் -ஆஸ்ரிதர் அகப்படுத்தும் சேஷ்டிதங்கள் -ஸ்வரூப பரிணாமம் -இல்லாத உபாதான –நிமித்த சஹகாரி காரணம்
–சிதசித் பரிணாமம் தட்டாமல் -வியாபகத தோஷம் இல்லாமல் –நித்ய அசாதாரணம் -அப்ராக்ருத தேஜோ மாய ரூபன் –

வாக்குக்கும் மனசுக்கும் எட்ட ஒண்ணாத விஷயத்திலே மிக்க ஈடுபாடு உடையையாய் எதற்கு துக்கப் படுகிறாய் -என்ன
ஆனாலும் அவனை அடைதலும் -அவனாலே ஏற்றுக் கொள்ளப் படுபவர் ஆதலும் ஆன இம் மரியாதை
நம்மை தோற்றி உண்டாயிற்றோ -தொன்று தொட்டே வருவது அன்றோ -என்கிறாள் –

ஆழி வலவனை ஆதரிப்பும் –
திரு ஆழியை வலவருகே உடையவனானவனை அடைதலும்–
ஆங்கு –
அடைகிற நிலையிலே –
அவன் –
மேன்மையைப் போன்று நீர்மையையும் உடையவன் ஆனவன்-
நம்மில் வரவும் எல்லாம் –
அடைந்த நாம் இருந்த இடங்களிலே வந்து ஏற்றுக் கொள்ளுகையும் ஆகிற இவை எல்லாம் –
தோழி யர்காள் –
என்னைப் போன்று இவ் விஷயத்தில் அவஹாகத்தீர்களே அல்லீர்கோள் –
நம் உடையமே தான் –
நம் அளவதோ -அவனை அடைதலும் -நாம் விரும்பியதை அவன் செய்கையுமாய் போகிற இது
நம்மைத் தோற்றி புதியதாக விட்டது ஒரு மரியாதையோ –18 நாடார் பெரும் கூட்டம் — நாயனார் –
சொல்லுவதோ இங்கு அரியது தான் –
பொருளின் தன்மை ஏதேனுமாய் இருக்க -தோற்றிற்று சொல்லுகையோ அரியது -என்றது –
தடை செய்வார் இலர் என்னா தோன்றினவற்றை சொல்லக் கடவதோ -என்றபடி –
அவன் கிட்ட அரியவனாய் இருக்கிறமை இல்லையோ – என்ன-அது தானும் நான் சொல்லக் கேட்க வேண்டாவோ உங்களுக்கு
நன்கு உணர்வார்க்கும் ஊழி தோறு ஊழி ஒருவன் என்று உணரல் ஆகா –
எத்துனையேனும் அளவு கடந்த ஞானத்தை உடையராய் இருப்பார்க்கும்–காலம் எல்லாம் கூடி அறியப் புக்காலும் அறியப் போகாது-

இந்த விதமான சிறப்பை உடையவன் என்று
சூழல் உடைய
கிட்டினாரை அகப்ப்படுதிக் கொள்ளுக்கைக்கு ஈடான விரகுகளை உடையவனாய் இருக்கும்
சுடர் கொள்
ஒளி முதலான எல்லை இல்லா குணங்களை உடையவன்
ஆதி
உலகத்துக்கு காரணன் ஆனவன் –
தொல்லை அம் சோதி –
இயல்பிலே அமைந்ததாய்-எல்லை இல்லாத ஒளி உருவமாய் -மற்ற இனங்கட்கு வேறு பட்டதான திவ்ய விக்ரகத்தை உடையவனாய் இருக்கும்
நினைக்கும் கால்
அவன் பெருமையை ஆராயப் புகில்-
நினைக்கும் கால் நன்கு உணர்வாருக்கும் -ஒருவனாக ஊழி தோறு ஊழி உணரல் ஆகா –
சூழல் உடைய சுடர் கொள் ஆதித் தொல்லை அம் சோதி ஆழி வலவனை —
ஆதரிப்பும்–ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம்–
தோழியர்காள் நம் உடையமே தான்– சொல்லுவதோ இங்கு அரியது தான் -என்று கூட்டுக
என்றது -விலஷண வஸ்துவே சுலபன் ஆனால் பற்ற அடுக்குமோ விட அடுக்குமோ -என்கிறாள் -என்றபடி–

——————————————————————————-

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்
என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6-

சத்ய காமத்வம் வெளியிட்டு அருளுகிறார் எட்டாம் பத்தில் –
அதிசயித்த ஞானம் உணர இயலாதவன் சம்சய ஜனகன் -நம் உடன் ஸம்ஸலேஷித்து ஈடு படுத்திய பின்பு யார்க்கு
-பிராபகாந்தரம் இல்லை வேறே ரக்ஷகன் இல்லை -அனுபவிக்க கை பிடித்தவன் இருக்க -ப்ராப்யாந்தரம் இல்லை என்றுமாம் –
தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்-ப்ரஹ்மாதிகளுக்கும் நிஷுகர்ஷிக்க முடியாதே
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்-சந்தேகம் ஏற்படுத்தி -அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்-மேன்மை ஆகாரம் இருக்க
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்-திருத்த துழாய் மாலை பிரசாதம் தர வில்லை
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்-நலிந்த அவன் ஒழிய -யார் வேறு ஒருவர் இருப்பதாக கூப்பிடுவோம்
உறவு செய்த விட்டவன் இருக்க உறவு இல்லாதாரைக் கூப்பிடவோ
வல்லி வள வயல் சூழ் குடந்தைமா மலர்க்கண் வளர்கின்ற மாலே-திருக்குடந்தை -38 திவ்ய தேசங்கள் இவரால் மங்களா சாசனம்
-பதிகம் அருளிய நிறைய -இது போலே சில இடங்களில் ஒரே தனி பாசுரம் –
அம்மா மலர்க்கன் வளர்க்கின்றானே -அங்கு -அதே போலே -ஆஸ்ரித வ்யாமோஹன் -நிறம் அபகரித்தான்

நீ சொல்லுகிற படி எளியன் அல்லன் -அரியன் -என்ன
எளியனாகிலும் அரியனாகிலும் தன்னை ஒழிய-செல்லாதபடி நம்மை புகுர நிறுத்தினவன் வாசலிலே கூப்பிடாதே-
சம்பந்தம் இல்லாததோர் வாசலிலேயோ கூப்பிடுவது -என்கிறாள் –

நினைக்கும் கால் தொல்லை அம் சோதி –
ஆராயப் புக்கால் மற்றைய இனங்கட்கு எல்லாம் வேறு பட்ட விக்ரகத்தை உடையவன்-
என் சொல் அளவு அன்று அவன் வைலஷண்யம்–என்னுடைய பேச்சின் அளவு அன்று என்றது-
நான் ஒரு அபலை இருந்து சொல்லும் அளவோ அவன் பெருமை -என்றபடி –
இமையோர் தமக்கும் எல்லை இலாதன கூழ்ப்புச் செய்யும் –
எத்துணை யேனும் மேம்பட்ட ஞானத்தை உடையரான பிரமன் முதலானோர்கட்கும்–அளவிறந்த ஐயங்களைச் செய்யா நிற்கும்–
இந்த பிரமனும் எந்த பரம பதத்தை அறியாது இருக்கிறானோ -என்றும்
என்நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி பரமம் பதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-59-
ஓர் இடத்திலும் ஒருவனாலும் அறியப் படுகிறான் இல்லை -என்றும் –
தவாந்தராத்மா மம ச யே சான்யே தேஹி சம்ஜ்ஞகா
சர்வேஷாம் சாஷி பூதோ சௌ ந க்ராஹ்ய தேன கித் கிவசித் -பாரதம் மோஷ தர்மம் 179-4 ருத்ரனுக்கு பிரமன் கூறினது–
அன்றிக்கே
இமையோர் என்கிறது நித்ய சூரிகளேயாய்
அவர்கள் சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி நிற்க–
தான் ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போரும் -திருவிருத்தம் -21–படியை என்னவுமாம்–
அத்திறம் நிற்க என் மாமை கொண்டான் –
அம் மேன்மையும் கிடக்கச் செய்தே -தன் அழகு முதலானவற்றைக் காட்டி என் நிறத்தைக் கொண்டான்
என்னோடே இட்டீடு கொண்டு அல்லது தரியாதானாய் நம்முடைய நிறத்தை கொண்டது–தன்னுடைய வைலஷண்யத்தை பாராதே அன்றோ–
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான் –
நம் நிறத்தைக் கொண்டால் தன்னோடு சம்பந்தம் உள்ளது ஒன்றைத் தந்து–உஜ்ஜீவிப்பகலாம் அன்றோ -அது செய்கின்றிலன்
அது செய்தான் ஆகில் பூவுக்கு இட்டோம் போலும் என்று இருக்கலாமே-காமுகர் காமினிக்கு இட்டால் போலே -சங்கேத சொல் –
தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் என்றவரே -என்னுடைய ஸ்பர்சம் உள்ளதைக் கொண்டு -அல்லி மலர்த் தண் துழாயும் தாரான் –-

இனி பூசல் ஆருக்கு இடுகோ சொல்லீர் –
நம்மை நலிந்தவன் வாசலில் கூப்பிடாமல் யார் வசாலிலே கூப்பிடுவோம் -சொல்லீர் கோள்-
வல்லி வளம் வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மால் –
பூம்கொடி படர்ந்த சோலைகளும் -வளவியமான வயல்களும் சூழ்ந்த திருக் குடந்தையிலே திருக் கண் வளர்கின்ற சர்வேஸ்வரன்–
மா மலர்க்கண் வளர்கின்ற மால்–
சம்பந்தம் உள்ளவன்–மலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற கண் என் அளவில் அலரக் காண்கிறிலேன் -என்றது-
விசேஷ கடாஷம் செய்யக் காண்கிறிலேன் -என்றபடி-எங்கும் பக்க நோக்கு அறியான் என்றவாறெஇப்பொழுது இத்தைச் சொல்கிறார் –
கூக்குரல் கேட்க அண்மையில் இருப்பவன் ஆதலின்–குடந்தை மலர்க் கண் வளர்கின்ற -என்கிறாள் –

வல்லி வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மால் தொல்லை அம் சோதி -என்று தொடங்கி
ஆர்க்கு இடுகோ இனிப் பூசல் சொல்லீர் -என்று முடிக்க –

————————————————————————————————-

மாலரி கேசவன் நாரணன்
சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை
உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

அபி நிவேச ஜனகமாய் –காலம் பல -சென்றே யாகிலும் – அல்லது விட்டேன் -காரார் திருமேனி காணும் அளவும் போய்
அங்கே இடம் -ஆஸ்ரித உபகாரகன் ஆகாரங்கள் -கண்டு அல்லது விட்டேன்
–இவற்றுக்கு தளமான நிருபாதிக சம்பந்தம் உடையவன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று-லஷ்மீ பதி என்பதாலே இதற்கு –
ஒன்றுக்கு பத்தாக வளர்ப்பவன் -இந்த குணங்கள்
நிறம் படும் படி பிறந்து -கோவிந்தன் -சபலமாம் படி -ஆஸ்ரித பவ்யன் -தனது சமயப்பத்தி கொடுத்து -அருளுபவர் –
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு-பரிபூர்ணன் -இங்கும் அங்கும் இல்லாமல் கத்தப் பண்ணி -கார்யார்த்தம் இல்லாமல் -புலம்ப
-இதுவே ஸ்வ பாவமாகப் பண்ணி -அடையாளமே இதுவாயிற்றே –
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்- பொகட்டு-கிட்ட அடையாளமும் காட்டாமல் -விலக்க உத்தேசித்து
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !-சிரமஹரமான பரிமளம் –
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?-அசாதாரணமான தோழிகள் -ஈடு படுத்தி முகம் காட்டாது போன பின்பு –
என்னால் செய்யலாவது என்று சொல்லி பிரிந்தான் -வியாபார நிமித்தம் –
காலம் பல சென்றும் காண்பதாணை-கால தத்வம் உள்ளதனையும் காண்பேன் –
உங்களோடும் எங்களிடை இல்லையே-சம்பந்தம் இல்லை வெட்டி விடுகிறாள் -ஆணை -அவன் பேரிலே -கைப்பிடித்தவன் பேரைச் சொல்லவோ
–உறவு இல்லாதார் இவர்கள் மேல் ஆணை இடக் கூடாதே –

அவனைக் கண்டு முடிதல் அரிது -விடவல்லையே -என்று உறவு முறையார் அலைக்க
அவன் குணங்களிலே அகப்பட்ட நான் காலம் எல்லாம் கூடும் ஆகிலும் அவனை கண்டு அல்லது விடேன்
அதற்க்கு விரோதிகளான உங்களுடைய சம்பந்தம் எனக்கு வேண்டா என்கிறாள் –

மால் –
அடியார்கள் பக்கல் வ்யாமோகமே வடிவாய் உடையவன்–
பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வரக் கூப்பிடச் செய்த வியாமோகம்–
அரி –
விரோதிகளை அழிக்கும் தன்மையன்–
கேசவன்
காலம் எல்லாம் அனுபவியா நின்றாலும் மீள ஒண்ணாத செறிந்த நீண்ட மயிர் முடியை உடையவன்-
நாரணன் –
அடியார்கள் இடத்தில் அன்பை உடையவன்
சீ மாதவன் –
அதற்க்கு அடியான திருமகள் கேள்வன் ஆனவன்-சுவையன் திருவின் மணாளன் —
கோவிந்தன்
அவளுடைய சேர்த்தியாலே அடியார்கட்கு கையாளாய் இருக்குமவன்
வைகுந்தன்
இவற்றுக்கு எல்லாம் அடியான மேன்மையை உடையவன்
என்று என்று
எப்பொழுதும்
ஓலம் இட
கார்யப்பாடு அற கூப்பிடும்படி
என்னை பண்ணி
ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாசாயா ஸ்வநுரக்த ஸூஹ்ருஜநே–ராமே பிரமாதம் மாகார்ஷீ புத்ர ப்ராதரி கச்சதி -அயோத்யா -40-5-

வனத்தில் வசிப்பதற்காகவே படைக்கப் பட்டாய் -என்றபடி –
இதுவே யாத்ரையாகச் செய்து
விட்டு -என்னை தன் பக்கலில் நின்றும் பிரித்து
இட்டு -அறிவு இல்லாத பொருளைப் போலே பொகட்டு
ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் –
தன் வடிவைக் காட்டுகின்றிலன்-தான் இருந்த இடத்துக்கு ஓர் அடையாளமும் காட்டுகின்றிலன் -என்றபடி
தாஸாம் ஆவீர் பூத் -வடிவு காட்டினான் -கோபிகைகள் நடுவே தோன்றினான் -என்கிறபடியே வடிவைக் காட்டுதல்
ஸ்ரீ ராமன் உடைய ஆஸ்ரமத்திலே ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு ஓமப் புகைகள் முதலானவைகள் -சுவடு-அடையாளமாகப் போனாப் போலே
இருந்த இடத்துக்கு ஓர் அடையாளமும் காட்டுதல் செய்கின்றிலன் -என்றபடி –
ஏலம் மலர் குழல் அன்னைமீர்காள்
நீங்கள் பண்டு இருக்குமா போலே நான் உங்களை என்று காணக் கடவேன்
ஏலம் மலர்-ஏலம் போன்று கமழுகின்ற வாசனையை உடைய மலர்
என்னுடைத் தோழி யர்காள் –
உங்களுக்கு ஹிதம் சொல்லி மீட்குமது இல்லை–என் பிரியமே அன்றோ உங்களுக்கு உத்தேச்யம்
என் செய்கேன்
ஒரு அடையாளமும் காணாத நான் இனி என் செய்கேன்
எங்களைக் கேட்கில் விட அடுக்கும் என்ன
காலம் பல சென்றும் காண்பது
காலம் எல்லாம் கூட வாகிலும் கண்டு அல்லது மீளேன்–அது செய்ய தலைக் கட்டலாவது ஓன்று அன்று காண் -என்ன
ஆணை
விடுகிறவர்கள் மேல் ஆணை இடல் அன்றோ–பற்றுகிறவன் மேல் ஆணை இடுகிறாள்
இப்படி துணிய செய்தேயும் ஹிதம் சொல்லத் தொடங்கினார்கள்
உங்களோடு எங்கள் இடை இல்லை
உங்களோடு எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை–எனக்கு நீங்கள் ஹிதம் சொல்ல வேண்டா -என்கிறாள்-

————————————————————————————————-

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்
அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவனவை காண் கொடானே–4-2-8-

நிஸ்ஸங்கர்க்கு அல்லது -பற்று இல்லாதவர் -அவன் சுலபன் ஆக மாட்டான் -பந்து வர்க்கத்தில் சங்க ராஹித்யம்
சொல்லி தனது லீலா உபகரணங்களில் -சங்க ராஹித்யம்
இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !-பறவை வர்க்கம் -அவகாசம் வாய்ப்பு சம்பந்தம் இல்லை
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்-மிச்சம் இல்லாமல் கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்-எட்டாத ஸ்ரீ வைகுண்டம் -ஷீராப்தி -திருவேங்கடம் -பெருமாள் தான் சேரும் பிராப்ய ஸ்தலங்கள்
அஞ்சன வெற்புமவை நணிய-கிட்டி அணுக குறை இல்லை
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றிஅவனவை காண் கொடானே–போக ஸ்தானங்களை காணக் கொடுக்க மாட்டான்
மாய மானைக் கேட்டதுக்கு -அம்மான் பத்து மாசம் பிரிந்தான் –சவாசனமாக விட்டால் தான் காணக் கொடுப்பான்

கிளிகள் தொடக்கமான விளையாட்டு கருவிகளிலே தனக்கு உண்டான விருப்பம் இன்மையைச் சொல்லுகிறாள்-

இடை இல்லை-
என் பக்கல் உங்களுக்கு ஓர் இடம் இல்லை
யான் வளர்த்த கிளிகாள்
பழைமை கொண்டு பின்னாட்டு கின்றீர்கள் அன்றோ நீங்களும்
பூவைகாள் குயில்காள்
முன்பு இவள் ஆதரித்தவை அவனுடைய விளையாட்டு கருவிகளிலும் குவால் அன்றோ–அவை எல்லாவற்றிலும் நசை அற்ற படி
எல்லாவற்றிலும் நசை அற்ற படிக்கு காரணம் சொல்கிறாள் மேல்
உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய ஒட்டாது கொண்டான்
நம்முடையவான நிறமும் வளையும் நெஞ்சும் ஆகிய–புறப் பொருள்களோடு உட் பொருள்களோடு வாசி அற
நம் பக்கல் ஒன்றும் எஞ்சாதவாறு கைக் கொண்டான்-
அடையும் வைகுந்தமும்
சேரும் பரமபதமும்
இத்தலையில் உள்ள எல்லாமும் நேராகக் கொண்டு–எட்ட ஒண்ணாத நிலத்தில் போய் பாரித்து வெற்றி கொண்டாடி-இருந்தான் -என்கை
பாற் கடலும்
அதனோடு தோள் தீண்டியான திருப் பாற் கடலும்
அஞ்சன வெற்பும்
திருமலையும்
பரம பதத்தோடு ஒக்க சொல்லலாய் இருக்கிற தாயிற்று-கல்லும் கனை கடல் வைகுந்த வானோடும் –
அவை நணிய
பிராப்ய பூமியானவை கிட்டிற்றன
ஆனால் அனுபவிக்க தட்டு என் என்ன
அவன் சுனை உடையவன்–புறம்பேயும் ஒரு விஷயத்தில் நசை கிடக்க தனது அனுபவத்தைக் காட்டிக் கொடான்

கடை அறப் பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவன் அவை காண் கொடான்
பின்னாட்டாதபடி வாசனையோடு புறத்திலே உள்ள ருசி போனால் அல்லது போக ஸ்தானங்களைக் காட்டிக் கொடான்
மேலே
வணங்குமாறு அறியேன் என்று பிராபக ஆபாசங்களை விட்டார்–இங்கே பிராப்ய ஆபாசங்களை விடுகிறார்

————————————————————————————————-

காண்கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-

வாமன வேஷம் காட்டி என்னை எழுதிக் கொண்டு -அநந்யார்ஹை -பூர்த்தி லஜ்ஜை இழந்தேன்
காண்கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்-ஸூ யத்னத்தால் காண பார்ப்பார்க்கு காணக் கோடான
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்-ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு இரண்டு உருவை மகா பலிக்கு காட்டினான்
கை செய்யப் பாலதோர் மாயம் -ஓவியத்து எழுத ஒண்ணாத உருவத்தாய் வாலி பெருமாளை -படி எடுத்துக் காட்டும் படி அல்லனே அவன்
-ராமன் கமலா பத்ராஷா-கை செய்ய அப்பால் -மாண் குறள் கோல வடிவு காட்டி-அர்த்தியான வாமன வேஷம் காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த-பூமியும் ஊர்த்த லோகமும் -விஸ்தீர்ணன் திருவடி தாமரை மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த-சகஸ்ர சீர்ஷ புருஷ -சகஸ்ராஷா சகஸ்ர பாத் –
தேவ பிராற்கு என் நிறைவினோடு-தேவதேவன் -உபகாரகன் அதிபதி -ஸ்த்ரீத்வ பூர்த்தியும்
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்-லஜ்ஜையும் கொடுத்த பின்பு
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்-குறைவற்றவர்களே -எனக்கு வேண்டியவர்கள் -ஸ்வரூபம் ஸ்வ பாவம் இழந்த பின்பு இனி எத்தை கொடுப்பேன்

இதுவே துணிவாகில் ஆத்மாவையும் ஆத்மாவுடன் சம்பந்த பட்ட பொருள்களையும் நேராக இழக்கிறாய் அன்றோ –
என்ற தாய்மாரைக் குறித்து
முன்பே அடைய இழந்திலேனோ-இனி எதனை இழப்பது -என்கிறாள்-

ஆர்க்கும் தன்னைக் காண் கொடுப்பான் அலன் –
தம் முயற்சியாலே காண நினைப்பார் எத்தனையேனும் அளவற்ற ஞானத்தை-உடையவரே ஆகிலும் தன்னைக் காட்டும் தன்மையன் அல்லன் –
மாயம் தன்னால் கை செய் அப்பாலது ஓர் கோலம் மாண் குறள் வடிவு காட்டி –
மாயத்தால் -கை செய்கைக்கு அப்பாலதான வடிவழகை உடைய வாமன வடிவைக் காட்டி
மாயமாவது -உபய விபூதிகளையும் உடையனான தான் ஒன்றும் இல்லாதவனாய் வருகையும்-திருமகள் கேள்வனான தன்னை
இரப்பாளானாக ஆக்கியும்–சிறுகாலைக் காட்டி பெரும் காலால் அளந்து கொள்ளுகையுமாம்
மாயம் -வஞ்சனை
கை செய்கை -எனபது கை செய் -என்று கடை குறைந்து நிற்கிறது
அளவிடற்கு அரிய பெருமை உடைய தான் இரப்பிலே–தகண் ஏறின வாமன வேடத்தைக் கொண்டான்
ஆதலின் மாண் குறள் வடிவு என்கிறார்
இப்படி அழிவுக்கு இட்ட வடிவுக்கு ஆலத்தி வழிக்க வேண்டி இருத்தலின் -கோல வடிவு -என்கிறார்
மகாபலியை வஞ்சிக்கைக்காக இயற்கையான அழகை உடைய மாண் குறளான வடிவைக் காட்டினான் –ஆதலின் -காட்டி -என்கிறார் –
இனி மாயம் தன்னால் -என்பதனை -கோலம் -என்பதற்கு அடை மொழி ஆக்குதலுமாம்

இனி கை செயற்பாலது ஒரு கோல வடிவு -என்பதற்கு–சித்திரம் உயிர் பெற எழுதினாப் போலே இருந்துள்ள கோல வடிவு என்றும் பொருள் கூறலுமாம் –
கை செயல் -அப்பால் -சித்திரம் வரைய முடியாமல் என்றுமாம் -செயல் கிருத்ரிமம் வடிவு அக்ரித்ரிமம் –
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த –
கையிலே நீர் விழுந்த உடனே எல்லா உலகங்களும் விம்ம வளர்ந்த-
சேண் சுடர் தோள்கள் பல தழைத்த –
நீண்டு ஒளியை உடைத்தாய் –கற்பகத் தரு பணைத்தாப் போலே பல தோள்களை உடையவன் –
தேவ பிராற்கு –
இந்த்ரன் இழந்த ராஜ்யத்தைக் கொடுத்து தேவர்களுக்கு உபகாரத்தை செய்தவனுக்கு-
என் நிறைவினோடு நாண் கொடுத்தேன் –
நான் இரண்டு ராஜ்ஜியம் இழந்தேன் –
இந்த்ரன் ராஜ்ஜியம் பெற்றுப் போந்தான்-
மகாபலி ஔதார்யம் பண்ணிப் போந்தான்-
ஆஸ்ரித பரதந்த்ரன் ஸுலப்யன் பட்டம் பெற்றான் அவன் –
நான் எனக்கு எல்லா செல்வமான அடக்கத்தையும் நாணத்தையும் இழந்தேன்–
இனி என் கொடுக்கேன் –
இனி எதனைக் கொடுப்பேன்-
என்னுடைய நல் நுதல் நங்கை மீர்காள்-
துக்கம் அறியாமையாலே அழகிலும் குறைவற்று–எல்லாம் நிறைந்தவர்களாய்—எனக்கு ஹிதம் சொல்லலாம் அன்றோ உங்களுக்கு-
மேலே நான்காம் பாசுரத்திலே -இனி என் கொடுக்கேன் -என்று சொல்லிற்று-
அதற்கும் இதுக்கும் வாசி என் என்னில்
பெரிய திருவடி முதுகில் இருப்பிலும் -கையும் திரு ஆழியுமான சேர்த்தியிலும் தோற்று-மாயக் கூத்தனை ஆதரித்து -கலக்கச் சென்று
கிட்டாமையாலே வந்த இழவு அதலில் –
ஸ்ரீ வாமனின் உடைய அழகிலும் சீலத்திலும் தோற்ற மகா பலியைப் போலே–எல்லா வற்றையும் இழந்தேன் என்கிறார் இப் பாசுரத்தில் –

—————————————————————————————

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்
யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-

மநோ ஹாரியாய் -உத்துங்க வடிவு அழகை உடைய அவன் திருவடிகளில் நெஞ்சு என்னை விட்டு சேர்ந்ததே –
நீங்கள் நியமிப்பதற்கு என்னால் இனி செய்வது என்
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை-மே த்ருஷ்ட்டி ராமம் அனுகதா
-கடல் கொண்ட வஸ்து மீளுமோ -உமக்கு கரணம் இல்லை என்று அகன்று -பூர்ணம் -குண பூர்த்தி –
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி-ஈடுபட்ட நான் இனி -நெஞ்சை இழந்த பின்பு அஸஹாயமான பின்பு உங்கள் நியமனத்தால் என்ன செய்வேன்
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டுபன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு-சந்திரன் ஸூ ரியன் போலே -திருப்பி பாஞ்ச ஜன்யம் திரு ஆழி
பால் மதி ஏந்தி யோர் கோல நீல-கொடு முடி மேல் ஏந்திக் கொண்டு
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்-தாது கொண்ட நல்-வை லக்ஷண்யம் உத்துங்க மலை நடந்து வருவது போலே
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-ஆஸ்ரிதற்கு தோற்றும் நாள் -அன்று மலர்ந்த தாமரை திருவடிகளை அடைந்தது

எல்லாம் செய்தாலும் உன்னுடைய ஹிதத்தை நாடுகின்றவர்களான எங்கள் உடைய வார்த்தைகளைக் கேட்க வேணும் காண் -என்ன
நீங்கள் சொல்லும் வார்த்தைகளை கேட்கைக்கு நெஞ்சு வேண்டுமே -அது அவன் பக்கலிலே போயிற்று -என்கிறாள்-

என்னுடைய நல் நுதல் நங்கை மீர்காள் –
எனக்கு உறவு முறையரான நீங்கள் வடிவு அழகிலும் பெண்மையிலும் குறைவற்று இருக்கையாலே
துக்கம் இல்லாதவர்களாய் இருந்தீர் கோள்-
யான் –
எல்லாம் இழந்த துக்கம் உடையளாய் இருக்கிற நான்-
இனி செய்வது என்
இப்படி ஆனபின்பு எதனைச் செய்வேன்
இவற்றை மீட்கவோ
அவனை நியமிக்கவோ
எல்லா அளவிலும் தரித்து இருக்க வேண்டாவோ -என்ன
அதற்கு நெஞ்சு வேண்டாவோ என்கிறாள் –
என் நெஞ்சு
எல்லா நிலைகளிலும் எனக்கு அடங்கி இருக்கிற நெஞ்சு
என்னை
தன்னைக் கொண்டு பிழைக்கிற என்னை
நின் இடையேன் அலேன் என்று நீங்கி –
உன்னோடு எனக்கு அடைவு இல்லை என்று அகன்று –
ராவணனுக்கு பின் பிறந்த விபீஷணன் இவ்விதமாக கடும் சொற்களை ராவணனைப் பார்த்து கூறி
எவ்விடத்தில் இலக்குவனோடு ராமன் கூட இருந்தானோ-அவ்விடத்தில் சிறிது காலத்தில் வந்து சேர்ந்தான் -என்கிறபடியே
இதி உக்த்வா புருஷம் வாக்யம் ராவணம் ராவணானுஜ-ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராம ச லஷ்மணா – யுத்த -17-1-
செய்து போயிற்று சம்பந்தம் சொல்லி மீட்க ஒண்ணாத படி –என்னாலே நன்கு விடப்பட்டது -என்று போயிற்று
சந்யச்தம் மயா-போலே-உங்களுக்கு நான் நின்ற நிலை அன்றோ-என் நெஞ்சு எனக்கு அவ்வருகு போனபடி –
நேமியும் சங்கும் இரு கைக் கொண்டு பல நெடும் சூழ் சுடர்–ஞாயிற்றோடு பால்மதி ஏந்தி ஓர் கோலம்
நீலம் கல் நெடும் குன்றம் வருவது ஒப்பான நாள் மலர்ப் பாதம் அடைந்தது-
பின் தொடர ஒண்ணாதபடி கடலிலே ஆயிற்று புக்கது
நேமியும் சங்கும் இரு கைக் கொண்டு
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கிற–இரண்டு கைகளிலும் ஆழ்வார்களைத் தரித்து
பல நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால்மதி ஏந்தி –
பலவாய் தூரப்போய் எங்கும் ஒக்க பரவக் கூடியனவான-ஒளிகளை உடைய சூரியனோடு
பாலோடு ஒத்த ஒளியை உடைய சந்த்ரனை ஏந்தி
ஓர் கோலம் நீலம் நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் –
அந்த ஒளிகளுக்கு பரபாகமாய்–மற்றை இனங்கட்கு வேறு பட்டதாய்-கண்டார் கண் குளிரும்படி நீலமாய்
மற்றும் சொல்லப்படாத அழகுகளை உடைத்தாய் –நல்-அளவிடதற்கு அரியதாய்
இருப்பது ஒரு மலை -நடந்து வருமாறு போலே ஆயிற்று–ஆழ்வார்களை ஏந்திக் கொண்டு உலாவும்படி
நாள் மலர்ப் பாதம் அடைந்ததுவே
செவ்விப்பூவிலே வண்டு படிந்தாப் போலே சேர்ந்தது-
யான் இனிச் செய்வது என் –

—————————————————————————————–

பாதமடைவதன் பாசத்தாலே
மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-

இசை உடன் அப்யஸிக்க வல்லார் உபய விபூதியில் பகவத் அனுபவத்தில் பரி பூர்ணர் ஆவார்
பாதமடைவதன் பாசத்தாலே-அவன் திருவடிகளின் மேல் ஆசை வைக்க -மால் பால் மனம் வைக்க -அபி நிவேசத்தால்
மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு-மங்கையர் தோள் கை விட்டு -பிரபல -புறம்புள்ள –வாசனைகளை விட்டே பற்ற உபதேசம்
-நடைமுறையில் இப்படி தானே –உபாய பாவம் திருவடிகளுக்கு உபதேசிக்க விட்டே பற்ற -இதர சங்கை அறுகையால்
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்வண் குருகூர் சடகோபன் சொன்ன—கோது-குற்றம் -திருவடிகள் மேல்
பாவ வ்ருத்தியை -பிரபந்ததீ கரித்த-பர உதாரர் -தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்-தீது -அர்த்தாந்தர-பிரஸ்தாபம் –
எச்சில் வாய் பூசல் பட்டோலை போலே இல்லாமல் -கடலில் முத்து பட்டால் போலே
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்-ஆயிரமும் அத்விதீயம் இந்த பத்தும் பிராப் யாந்தர சம்பந்தம் இல்லை என்றதால்
ஆதுமோர் தீதிலராகி-குற்றம் -அவித்யா -கர்ம வாசனை ருசி -பிரகிருதி சம்பந்தம் -ரூப தோஷங்களில் ஒன்றும் இல்லாமல்
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே-இந்த விபூதியிலும் -துஷ்யந்திச்ச ரமந்திச்ச-மத் சித்தா -அவாப்த ஸமஸ்த காமர்
-எல்லா படிகளாலும் பரி பூர்ணர் ஞானாதி கைங்கர்யம் -இவற்றால்

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழி வல்லார்–அறிவின்மை முதலிய எல்லா குற்றங்களும் நீங்கி
இவ் உலகத்திலும் மேல் உலகத்திலும் தாங்களே-கிருதக்ருத்யர் ஆவார் -என்கிறார் –

பாதம் அடைவதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு –
திருவடிகளை கிட்டுகையில் உண்டான விருப்பத்தாலே புறம்பு உண்டான வலிய பற்றுக்களை அடியோடே விட்டார்
இது வாயிற்று இத் திருவாய் மொழியில் சொல்லிற்று ஆயிற்று-என்றது-
புறம்பு உண்டான பற்றுக்களை அற்று திருவடிகளை ஆசைப் பட்டவர் அல்லர் –
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14 என்றபடியே-
திருவடிகளின் பற்றாலே -ஒரு காரணம் பற்றி வந்த புறம்பு உண்டான பற்றினைத் தவிர்ந்தவர் -என்றபடி
கோது இல் புகழ் –
திருவடிகளில் பற்றுக்கு காரணம் அவனுடைய கல்யாண குணங்கள் –
குணங்களுக்கு கோதாவது-தன்னை ஒழிய புறம்பேயும் நசை செய்யும்படி இருக்கை–
கண்ணன் தன் அடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன –
இப்புகழ்களை உடைய கிருஷ்ணன் திருவடிகளில் ஆயிற்று சொல்லிற்று–
பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த
தீதில் அந்தாதி –
பிரபந்தத்துக்கு தீதாவது வேறு கதைகளை எடுத்து கூறுதல் என்றது–
ஸ்ரீ ராம சரிதம் சொல்லப் புக்கு முருகனுடைய பிறப்பு புஷ்பக விமான வர்ணனம் என்னும்–
இவை தொடக்க மானவற்றினிலே இழிந்து பேசுதலை தெரிவித்தபடி–
இந்த நாராயணன் உடைய சரித்ரத்தை சொல்லப் புகுகின்றேன் -என்று தொடங்கி-நாராயண கதாம் இமாம் –
போரின் வகை முதலானவற்றைச் சொல்லுதல்

ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார் –
ஒப்பற்றவையான ஆயிரம் திருவாய்மொழியில் இப்பத்தையும்-மிக்க பிரீதியோடே சொல்லுமவர்கள்
ஆதுமோர் தீதிலராகி –
அறிவின்மை முதலான குற்றங்களும் நீங்கப் பெறுவார்-
புறம்பு உள்ள நசை அற்று இருக்கச் செய்தே பிரபந்தம் தலைக் கட்டுகைக்காக இருக்குமதுவும் இவர்களுக்கு இல்லை –
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் –
இவ் உலகத்தோடு மேல் உலகத்தோடு வாசி அற குறை அற்று இருப்பார்கள் -என்றது
இவ் உலகத்தில் செய்ய வேண்டியதை செய்து முடித்தவர்கள்-
யமனை எதிர் பார்த்து இருக்கிறார்கள் -என்ற படியே
கிருதக்ருத்யா ப்ரதீஷ்ந்தே ம்ருத்யும் ப்ரியம் இவாதிதிம் -பாரதம் –
மேல் உலகத்தில் -நான் எல்லா அடிமைகளும் செய்வேன் -என்று குறைவு அற்று இருப்பார்கள் –
பவாம்ச்து சஹ வைதேஹ்யா கிரிசா நுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத சவபதஸ் தே – அயோத்யா 31-25
தாமே-
ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டா –
உபய விபூதியிலும் தாங்களே முதன்மை பெற்றவர்கள் ஆவார்கள்-
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -அநிஷ்டம் தொலைந்தால் இஷ்ட பிராப்தி தன்னடையே வருமே
-தடங்கல் விலகினால் தானே கிட்டும் -பிராப்யாந்தர சம்பந்தம் அறுத்த பின்பு தன்னடையே வருமே
-சபரி பெருமாள் இடம் கைங்கர்யம் செய்த பின்பு ஆச்சார்யர் சொன்ன வழியிலே போனாளே-தானே வைகுந்தம் தரும் –

—————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

விபு -ஸம்ப்ராபகன் -நிஜ வாஞ்சி தார்த்தம் – பிராப்தி -விகாதே
இதரேஷூ ஸ பாச லேச-சங்கித மன -சுவஸ்ய
ஸ்வஸ்மின் அபி ஸ்வ கீதேபி வர்க்கே -ஆத்மாத்மீயங்களில்
பிரணவாதிதம்
ப்ராணாவதாம் முமுஷே

—————————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

தார் ஷோத்யுத் வாஹநத்வாத்
சுப நயன தயா
நீல மேகா ஆக்ருத்வாத்
ஆச்சரியோ சேஷ்டிதத்வாத் மாயாக் கூத்தன்
துர் அவதார தயா யோகி அபி துர் அவபோதம்
ஸ்வேஷூ வ்யாமுக்த பாவாத்
பிரதிஹதி வ்ரஹாத்
துர்ஜன அத்ருச பாவாத் -8/9
நிஸ் சங்கானாம் –
இதி பிராஹா

————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 72-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய
இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால்
தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான்
அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு ————–72-

————————————————————————————

அவதாரிகை –

இதில் –
ஆழ்வார் ஆத்மாத்மீயங்களில் நசை அற்ற
நங்கள் வரிவளையை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
அதிசங்கை தீர்த்த மாத்ரமாய்
ஸ்வ அபேஷிதமான பாஹ்ய சம்ச்லேஷம் பிறவாமையாலே கலங்கி
அவச்தாந்தரா பன்னராய்
சர்வஞ்ஞனான அவன் அறிய
நாம் அறியாதே இருக்க
நமக்கு சம்சாரத்தில் நசையும் யுண்டாக வேனும என்று பார்த்து
ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியை
அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற
நங்கள் வரிவளையில் அர்த்தத்தை
நம் கருத்தை -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை —

———————————————————————————–

வியாக்யானம்–

நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய –
நம்முடைய ஹ்ருதயத்தை நன்றாக ஆராய்ந்து போரும் மால் அறிய -என்னுதல்
நம்முடைய ஹ்ருதயத்தை நன்றாக விரும்பி வர்த்தித்துப் போரும் சர்வேஸ்வரன் -என்னுதல் –
உள்ளத்தே உறையும் மால் -இறே –
இவர் கருத்தையும் வீற்று இருந்தாலும் –
இப்படி சர்வஞ்ஞனான சர்வேஸ்வரன் அறியும் படி

இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால் –
இந்த விபூதியிலே –
பாசங்கள் நீக்கி -என்னும்படி
பண்டே
ஏறாளிலும்-
மாலுக்கு வையத்திலும் கை கழன்ற இவற்றில் ஆசை –
அவற்றை உபேஷித்து இருக்கிற நமக்கு
நாம் அறியாமல்
தான் அறிந்ததாக
சிறிது அபேஷை யுண்டு என்று
நினைத்து இருக்கிறான் என்கிற சங்கையினால்

தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான் அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு –
ஆத்மாவிலும்
அதுக்கு அசலான ஆத்மீயங்களிலும்
நசை அற்ற ஆழ்வார்
அந்த ஸ்வபாவத்தை ஆராய்ந்து
அருளிச் செய்தார் அத்தசையிலே —

அதாவது –
ஹன்யாமஹா மிமாம் பாபாம் –என்று
தாயோடு உறவு அறுத்து
ராஹ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்றும்
நைச்சத் ராஜ்ஜியம் -என்றும்
நசை அற்று
சித்ரகூடத்திலே சென்று
சிரஸா யாசித்து பாதுகைகளைப் பெற்றால் போலே
இவரும்-
வேங்கட வாணனை வேண்டிச் சென்று சங்கம் சரிந்தன சாயிழந்தேன் -என்றும்
கோல்வளையோடு மாமை கொள்வான் –என்றும்
கோல்வளை நெஞ்சத் துடக்கம் எல்லாம் பாடு அற்று ஒழிய விழந்து
வைகல் பல்வளையார் முன் பரிசு அழிந்தேன் -என்றும்
கோலம் பலன் என்றும் காண்பதர்னை யுங்களோடு எங்கள் இடை இல்லையே -என்றும்
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி யவனவை காண் கொடானே -என்றும்
நான் கொடுத்தேன் இனி என் கொடுக்கிறேன் -என்றும்
நின்னடையேன் அல்லேன் என்று நீங்கி -என்றும்
பாதமடைவதன் பாசத்தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு
என்றும் இப்படி யாயிற்று
அந்நிலையை ஆராய்ந்து உரைத்த படி-

——————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: