பகவத் விஷயம் காலஷேபம் -160- திருவாய்மொழி – -8-1-6….8-1-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—8-1-6-

கார்ய காரண சகல பதார்த்தங்களும் நீ இட்ட வழக்கு -சர்வாத்ம புதன் -எங்கே வந்து கிட்டுவின் -கீழ் பாசுர விளக்கம்
எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே-இவ்வளவும் செய்து உபகரித்தவனே -சாதன அனுஷ்டானம்
பண்ணும் ஸ்தானம் -பிரப்யமும் நீயே -ஸ்வர்க்கம் -போவாரும் உண்டே -பித்ரு லோகம் -பிண்ட பிரதானம் –
செய்வது பித்ருக்கள் அடைந்த கர்மானுகுணமான பிறவிக்கு அனுகுணமான உணவாக போகுமாம்
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே-பல பிரதர் -ஆராத்யர் -அமைத்த தெய்வமும் நீ இட்ட வழக்கு
-அந்த தெய்வ விஷய யாகங்களும் நீ இட்ட வழக்கு –
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்-தாண்டி உள்ள ஆவரணங்கள்
-மகதாதி ஸமஸ்த பதார்த்தங்கள் -மகான் அஹங்காரம் ஆகாசம் வாயு தண்ணீர் -ஆறு ஆவரணங்கள்-முதல் நிர்வாகம்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே-அவ்யக்தம் -இதில் மங்கலாக அருவாய் ஸம்ஹ்ருத் அவஸ்தை
நாம ரூபம் இல்லா ஸூஷ்ம சித்அசித்க்கள்
அதீந்த்ரமான முத்தர்கள் வான் வைகுந்தம் -நீ இட்ட வழக்கு -சர்வாத்மா -த்வத் ஏக நிர்வாக்யம் நான் எங்கே வந்து கிட்டுவேன்

சொல்லிய பொருளை விவரிக்கிறார் இதிலும் –

எங்கு வந்து உறுகோ –
மேருவின் சிகரத்தில் நிற்கிறான் ஒருவனை ஒரு முடவன் வந்து கிட்டவோ
என்னை ஆள்வானே
இவ்வளவும் வர -உன் பக்கல் ருசி பிறக்கும் அளவும் வர -நின்றேன் நான் ஆகில் அன்றோ மேலும் நான் வந்து கிட்டப் பார்ப்பது-
ஏழு உலகங்களும் நீயே –
எல்லா உலகங்களும் நீ இட்ட வழக்காம்படி இருக்கிறவனே –
உன்னை அடைய வேண்டும் -என்னும் விருப்பத்தை உடையனாய் இருக்கும் என்னை ஒழிய-
விருப்பம் இல்லாதார் தாமே சுவாதீனராய் இருக்கிறார்கள்-
பிரமித்து அவர்கள் இருக்க மயர்வற மதி நலம் அருள பெற்றதால் நான் அது இல்லாமல் பரதந்த்ரனாய் உள்ளேன் –
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே –
அவர்களை குடிமை கொள்ளுகிற தெய்வங்களும் நீ இட்ட வழக்கு-
அவற்று அவர் கருமமும் நீயே –
அந்த அந்த தெய்வங்கள் உடைய படைத்தல் முதலான செயல்களோ தாம் அவர்கள் பக்கல் கிடக்கின்றன-
ஆக -இவ்வருகு உண்டான கார்ய வர்க்கம் உன்னுடைய ஆதீனம் என்னும் இடம் சொல்லிற்று –

பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும் அவையும் நீயே –
ஒன்றுக்கு ஓன்று விரிந்ததாய் -அண்டத்துக்கு புறம்பாய்
அதுக்கு காரணமான மகத்து முதலான தத்துவங்கள்
என்று சில உளவாகில் -அவையும் உன் ஆதீனம்–
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே –
கார்யமாகிற தன்மை முழுதும் அழிந்து சூஷ்ம நிலையை அடைந்து இருக்கிற அவ்யக்தமும் நீ இட்ட வழக்கு-
வான் புலன் இறந்ததும் நீயே
இவற்றின் படி அன்றிக்கே
அவ்யக்தத்தையும் வியாபிக்க கடவதாய்
கண் முதலான கரணங்களுக்கு புலப்படாததாய்
இருந்துள்ள காரணமான ஜீவர்களின் தொகுதியும் நீ இட்ட வழக்கு -என்றது –
பத்த ஆத்ம ஸ்வரூபம் நீ இட்ட வழக்கு -என்றபடி
இன்னே ஆனால் எங்கு வந்து உறுகோ
அர்த்த தத்வம் இதுவான பின்பு எங்கே வந்து கிட்டக் கடவேன் –

மங்கிய அருவாம் நேர்ப்பமும் -என்பதற்கு பக்த ஆத்மாக்களின் தொகுதி என்றும்-அசித் சமமாக ஞானம் மழுங்கி இருப்பதால்
வான் புலன் இறந்தது -என்பதற்கு -முத்த ஆத்மாக்களின் ஸ்வரூபத்தை சொல்லுகிறது என்று பிள்ளான் பணிப்பர்
அப்போது இல்லாததுக்கு சமமாய் சூஷ்மமுமான ஆத்மாக்களின் தொகுதி என்பதும்
பரமபத்திலேயாய் கண்களுக்கு புலப்படாத முக்தாத்மா ஸ்வரூபம் என்பதும் பொருளாம்
இதனால் என் சொல்லியவாறோ எனின் –
காரிய நிலையோடு -காரண நிலையோடு -முக்தனான நிலையோடு
வாசி அற உன் கை பார்த்து இருக்க வேண்டின பின்பு
நான் என் கார்யத்துக்கு கடவேன் ஆதல் எனபது ஒரு பொருள் உண்டோ -என்பதனைச் சொல்லியபடி –

———————————————————————————————

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-

சர்வ பிரகார போக்ய பூதனாய் இருக்கும் -நீ –
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்-இப்படி ஆனால் -கால த்ரயமும் -கால உபாதி-தேச உபாதி
ஸமஸ்த பதார்த்தங்களும் -நீயாய் இருக்க அடியேன் கிட்டாதது எதனால் –
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்-அதுவும் இதுவும் உதுவும் நீயே என்கிற
அறிவு வந்தது -அதிலும் சங்கை -இத்தை காரணம் -கால த்ரயமும் காரியமும் என்றுமாம் –தேச உபாதி –
இதிலும் சங்கை வந்ததே அடியேன் உன்னைக் கிட்டப் பெறாமல் –
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்-இயற்க்கை பாலின் சாராம்சம் —நெய்யின் இனிய ரசம்
-திவ்ய போக்யம்-கடலில் பிறந்த அமிர்தம் –
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா-அதில் உத்பன்னமான இன் சுவை -இனிமையால் பிறந்த
பிரயோஜன சுகமாய் -அமரத்துவம் -இவை எல்லாம் பிராகிருதம் -இதுக்கும்
மேலே அநந்ய பிரயோஜனர்க்கு அதிசய போக்யமாம் படி -நப்பின்னை திருத் தோள் அணைந்த -பேர் ஆயனே –
வினையேன் -இந்த பாக்யம் இழந்த பாபிஷ்டன் -இதனால் வந்த அநர்த்தம்-சங்கை -பிரகார பிரகாரி பாவத்தில் -கொண்டேனே –
கால உபலஷித பதார்த்தங்கள் -பூத பவ்ய பவத்து-பிரபு போலே -தூரஸ்தம் சந்நிஹிதம்-தேச உபலஷித சகல பதார்த்தங்களும் –
நீ இட்ட வழக்கு -அறிந்த தத்வ ஞானம் குலைய புகுகிறதோ என்று சங்கியா நிற்பான்

எல்லா பொருள்களும் பிரகாரமாய் இருப்பதனால் சேஷமாய்–நீ பிரகாரியாய்-
நீயே அவற்றுக்கு நிர்வாஹகன் என்னும் அறிவு ஒன்றும் கொண்டு தரித்து இருக்கிற நான்-
என் பாவத்தால் அதிலும் ஐயம் கொள்ளா நிற்கிறேன் -என்கிறார்-

இறந்ததும் நீயே -எதிர்ந்ததும் நீயே – நிகழ்வதோ நீயே –
இக்காலத்துக்கு நான் கடவேன் -மற்று ஒரு காலத்துக்கு வேறு சிலர் கடவர் -என்று தான் உன்னாலே சொல்லலாமோ –
இறந்த காலத்தில் உள்ளாரோடு -வரும் காலத்தில் உள்ளாரோடு -நிகழ காலத்தில் உள்ளாரோடு –
வாசி அற எல்லாரும் உனக்கு அதீனப் பட்டவர்கள் –
இன்னே யானால்
இப்படி யானால்
1-இன்னே யானால் என்பதனை -எங்கு வந்து உறுகோ -என்ற மேல் பாட்டோடு கூட்டிப் பொருள் கொள்க
அன்றிக்கே
2-அது இது உது சிறந்த நின் தன்மை இன்னே ஆனால் இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதும் நீ -என்று கொண்டு கூட்டி
தூரத்தில் உள்ளதாயும் -அண்மையில் உள்ளதாயும் -இரண்டும் இல்லாத நடு இடத்தில் உள்ளதாயும் உள்ள-
எல்லா பொருள்களுக்கும் சேஷியான தன்மையாலே சிறந்து இருந்து உள்ள உனக்கு பிரகாரமாய்-
முடிந்தால் முக்காலமும் வாழ்கின்ற பொருள்களும் நீ இட்ட வழக்கு எனப்படுகின்றன -என்னுதல்-
அன்றிக்கே
3-இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதும் நீ இன்னே ஆனால்-
அது இது உது சிறந்த நின் தன்மை -என்று கொண்டு கூட்டி-
இப்படி முக்காலங்களிலும் வாழ்கின்ற பொருள்களும் நீ இட்ட வழக்கு ஆகையாலே-
எல்லா பொருள்களும் உனக்கு பிரகாரம் என்னப்படுகின்ற-என்னுதல்-
என்ற அறிவு ஒன்றும் சங்கிப்பன் –
தன்னை ஒழிந்த அடங்கலும் தனக்கு பிரகாரமாய் தான் பிரகாரியாய் இருக்கையாலே
இவற்றுக்கு வந்தது தனக்கு வந்ததாக நினைத்து இருப்பான் ஒருவன்
என்கிற அறிவாயிற்று இவர் உயிர் வாழ்வதற்கு காரணம் –
அது ஒன்றிலும் ஐயம் கொள்ளா நின்றேன்-
அது என் கார்யத்தை செய்யாமை யாலே –

வினையேன் –
கலக்கத்தாலே நான் ஐயப்பட்ட மாத்ரத்திலே அவன் ஸ்வரூபம் இல்லை என்று ஆகாதே அன்றோ –
எனக்கு இப்புத்தி பிறந்ததுக்கு அடி என் பாபம் அன்றோ -என்கிறார் –
என்புண்ணியக் குறைவால் அருள் இல்லாதவர் பெருமாள் என்று ஐயப் படுகிறேன் -என்று பிராட்டி கூறினது போன்று –
சங்கே மத்பாக்ய சங்ஷயாத்
நாலாம் பாட்டில் ஐயப் பட்டத்துக்கும் இதுக்கும் நெடு வாசி உண்டு
அடியாருக்கு பரதந்த்ரப் பட்டவன் என்ற தன்மையிலே ஐயப்பாட்டால்
திருவருள் செய்யாமை நம்முடைய ஆஸ்ரயணத்தில் குறையாலே என்று நினைத்து இருக்கலாம்-ஸ்வபாவ சங்கை அது –
இப்பாசுரத்தில் அவனுடைய சத்பாவத்தில் அன்றோ ஐயம்-ஸ்வரூப சங்கை இது –
பிரகாரியாய்க் கொண்டு அன்றோ அவனுடைய சத்தை-
அவன் நின்றும் வேறு பட்ட பொருள்கள் அவனுக்கு பிரகாரமாய்க் கொண்டே அன்றோ உண்டாவது-
இப்படி ஸ்வரூபத்தில் ஐயம் கொள்ளுகைக்கு அடி என் என்னில்-
ஐயம் கொள்ளுகைக்கு காரணம் சொல்லுகிறது மேல்-

கறந்த பால் –
கறந்த போதை ரசத்தை நினைக்கிறது
இன்றேல் கறவாத பால் இல்லை அன்றோ –
வேறு ஒரு காரணத்தால்-காய்ச்சுதல் போல – வந்த ரச விசேஷத்தை வேறுபடுத்துகிறது –
நெய்யே –
அதில் சாராம்சம்
நெய்யின் இன் சுவையே
நெய்யில் இனிய சுவை ஆனவனே –
கடலினுள் அமுதமே –
மகா சமுத்ரத்தை கலக்கி அதில் சாராம்சம் ஆக வாங்கின அமிர்தம் போலே இனியன் ஆனவனே
அமுதினில் பிறந்த இன் சுவையே
அதில் ரசத்தின் தன்மையைச் சொல்லுகிறது –
சுவையது பயனே
ரசத்தை அனுபவித்ததால் வந்த சுக ரூபம் ஆனவனே
ஒன்றில் ஓன்று மேற்பட்ட ரசத்தின் தன்மைகளைச் சொல்லி
அது போராமையாலே தன்னையே சொல்லுகிறது மேல் –
பின்னை தோள் மணந்த பேராயா –
ஒரு மிதுன அனுபவம் ஆயிற்று இவருக்கு போக்யம்-
சம்சாரியை அவன் ஆனந்திபிக்குமாறு போலே ஆயிற்று
ஆனந்தமே உருவமாய் இருக்கிற அவனை இவள் உகப்பிக்கும் படி –
இவருடைய சேர்த்தி அழகாயிற்று இவருடைய போக்யம் –
இத்தால் பிரியில் உலகம் அழியும் என்று நினைக்க வேண்டும்படியான
அவனது இனிமையின் மிகுதியே ஐயத்திற்கு காரணம் என்பதாயிற்று –

——————————————————————————————————-

மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-

ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமாகவும் -அநிஷ்ட நிவ்ருத்திக்காகவும் -ஷீராப்தி நாதன் -கரணங்களும் கரணியும் நீ இட்ட வழக்கு
-நான் வணங்குவேன் என்பது உண்டோ
மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற-ஆச்சர்ய சேஷ்டிதங்கள் -அபிமதை உடன் சேர்ந்த –
சம்ச்லேஷம் பெறாத பாவியேன்
குணங்களை யுடையாய் !அசுரர் வங்கியர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !-சீலம் ஸூலப்யம் ஸுந்தர்யம்-ஸ்வ பாவகமாக உடையாய்
-அசுரர்களுக்கு கூற்றம் -கொற்றப் புள்-கறை அணிந்த மூக்கு -கோடியாக வாகனமாகவும் கொண்டு
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !-ஜகத் ரக்ஷணம் -அதி விஸ்தீரணம் -ஷீராப்தி சேர்ந்து
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே-அனைத்தும் நீயே -உனக்கு பிரகாரம் என் கரணங்கள்
மனசு -வாசகம் –லக்ஷணை -வாக் -நாக்கு -சீயக்காய் -லக்ஷணை -சரீரம் கரணீ -நீயும் – வணங்க கர்த்தாவும் கரணங்களும் அறியேன் –

ஏதேனும் செய்தாலும் பேறு உம்மதாய்-அடைவதற்கு காரணங்களும் உமக்கு உண்டானால்
நீரே முயற்சி செய்ய வேண்டாவோ -என்ன –
ஆத்மாவும் ஆத்மாவோடு சம்பந்தப் பட்ட பொருள்களும் ஆகிய அனைத்தும் உன் அதீனமான பின்பு என்னால் செய்யலாவது ஒன்றும் இல்லை
நீயே பாதுகாக்க வேண்டும் -என்கிறார்-

மாயத்தால் மணந்த பேராயா-
காதலாலே நப்பின்னை பிராட்டி தோள்களோடு கலந்த பேராயனே –
நப்பின்னை பிராட்டியைக் காட்டிலும் அச் சாதிக்கு உரிய குணங்களில் கிருஷ்ணனுக்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறது-பேராயா -என்று-
அவள் ஆயர் குல மடந்தை -இவர் பேர் ஆயன் —
வல்வினையேனை முழுதும் ஈர்க்கின்ற குணங்களை உடையாய்-
சில குணங்கள் ஈர — சில குணங்கள் தாரகமாகை அன்றிக்கே-எல்லாம் ஒக்க ஈரும்படியான குணங்களை உடையவனே –
உன் குணங்கள் ஆகையும் நான் ஆகையும் நோவு படுக்கைக்கு அடி–சிலர் குண ஞானத்தால் வாழ்ந்து இருக்க
ஒளி வண்ணம் வலை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் இட்டு என்னை ஈடு அழிய போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே -நாச்சியார் திருமொழி –
அதுவே பாதகமாம்படி பாபத்தைப் பண்ணினேன் –என்பார் தம்மை வல்வினையேன் என்கிறார் –
நலிந்ததாய் விடுகிறது இல்லை -ஆதலின் ஈர்க்கின்ற என்கிறார்
அம்பு பட்ட புண் மருந்து இட்டு ஆற்றலாம்–குணத்தால் வந்த நோய்க்கு பரிகாரம் இல்லையே–
வன்கையர் அசுரர் கூற்றமே –
முன்கை மிடுக்கரான அசுரர்க்கு அந்தகன் தண்ணீர் என்னும்படி கூற்றம் ஆனவனே-
கொடிய புள் உயர்த்தாய்
கண்ட போதே பகைவர்களை மாய்க்க வல்ல பெரிய திருவடியை கொடியாக உடையவனே-
பகைவர்களை முடிப்பதற்கு தான் வேண்டா
கொடியை காண அமையும் -ஆதலால் உயர்த்த -என்கிறார் –
பணங்கள் ஆயிரம் உடைய பைம் நாகணைப் பள்ளியாய் –
பணங்கள்- தன்னுடைய ஸ்பரிசத்தாலே விரிந்த படங்களை உடையவனாய்
ஆயிரம் உடைய–பகவானை அனுபவித்தால் உண்டான உவகைக்கு போக்குவீடாக பல தலைகளை உடையவனாய்
பைம் நாகணைப்–சர்வேஸ்வரனுக்கும் பிராட்டிமாருக்கும் நினைத்த படி பரிமாற தகுதியான பரப்பை உடையவனாய்
ஆயிற்று திருவநந்த ஆழ்வான் இருப்பது–அப்படிப் பட்டவனை படுக்கையாக உடையவனே
பாற் கடல் சேர்ப்பா
அடியார்கள் கூக்குரல் கேட்க்கைக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனே
வணங்குமாறு அறியேன்
பரம பதத்தை விட்டு திருப் பாற் கடலிலே சாய்ந்து என்னை பாதுகாக்க
முற்பாடனாய் இருக்கிற உனக்கு நான் ஒரு கைங்கர்யத்தை செய்தேன் ஆகைக்கு–ஒரு விரகு அறிகின்றிலேன் –
அறியாது ஒழிகின்றது என் –
உமக்கே மனம் வாக் காயம் என்ற கரணங்கள் உண்டு-
அவற்றை உபயோகப் படுத்துவதற்கு நீர் உண்டு –
வணங்கத் தட்டு என் -என்ன –
மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே-
எனக்கு ஆய் இருப்பது ஒரு நெஞ்சும் வாக்கும் செய்கையும்-
எனக்கு ஆய் இருப்பது ஒரு நானும் உண்டாக வேண்டுமே –
எல்லாம் நீ இட்ட வழக்காய் அன்றோ இருக்கின்றன-
வணங்க வேண்டும் என்ற நினைவு உண்டு-
வணங்கும் வகை அறிகின்றிலேன் –

————————————————————————-

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-

இவ்வறிவுடன் எங்கு இருந்தாலும் குறைவற்று இருக்க -அனைத்தும் நான் என்கிறீரே -துக்காத்மகம் சம்சாரம் -பிரகாரம் என்னும்
எண்ணமே போகுமே என்று அஞ்சுகிறேன் -நிரதிசய புருஷார்த்தம் பிராப்யா தேச வர்த்தி உன் திருவடிகளைத் தந்து அருள வேணும்
யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்-அஹம் புத்திக்கு விவகார -நீ தவம் தான் -அப்ருதக் சித்த விசேஷணம் –
பிராமண பிரசித்தம் உண்மை தான் -துஷ்க்கரம் துக்கோத்தமம் சாம்ராமும் தத் பிரகார பூதங்கள் -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்-ஆனபின்பு விலக்ஷணம் உனக்கு சேஷமான ஆத்மாவுக்கு அனுரூபம்
பரம பதம் பெற்றாலும் -மற்றை எதிர் தட்டான நரகம் -துக்கோத்தரம் -ஸ்வ தந்திரம் -சம்சாரம் அடைந்தாலும் -என்றாலும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்-யான் நீ பிரகாரம் -ஞான ஆனந்த லக்ஷணம்
அஹம் அர்த்தம் அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை ஏக தானம் -நீ -என்று
உணர்ந்த பொழுது எல்லாம் -சம்சாரம் இருப்பில் அஞ்சுகிறேன் -ஸ்ரீ கௌஸ்துபம் சேற்றில் புதைத்தால் போலே –
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே-பரம வ்யோம சப்த வாஸ்யம் பரம பதத்தில்
அவாங்மனஸ் கோசாரமான -சேஷி வியாவ்ருத்தம் தோன்ற இருக்க -திருவடிகள் தந்து அருள வேண்டும்

எல்லா பொருள்களும் நீ இட்ட வழக்கு -என்கிற ஞானத்தோடு இருக்கும் இடத்தில்-
சம்சாரத்தோடு பரமபதத்தோடு வாசி இல்லை ஆகிலும்-
இந்த ஞானத்துக்கு விரோதியான சம்சாரத்தில் இருக்க அஞ்சுகிறேன் –
-இதற்க்கு தகுதியான பரம பதத்தில் என்னைக் கொண்டு போக வேண்டும் என்கிறார் –

யானும் நீதானே ஆவதோ மெய்யே –
நான் நீ என்ற சொல்லுக்குள்ளே அடங்கும்படி உனக்கு பிரகாரமாய்
நான் ப்ரஹ்ம சப்தத்துக்கு பொருளாம்படி இருக்கிற இந்த அர்த்தமோ அது சத்தியம் –
ஆத்துமா என்ற த்யானம் செயக் கடவன் -ஆத்மேத்யேவ து கிருஹணியாத்
நான் மனு நான் சூர்யன் -அஹம் மனுபவம் சூர்யச்ய –என்பன அன்றோ முக்தர்கள் பாசுரம்
மெய்யே
அதில் ஐயம் இல்லை
அரு நரகு அவையும் நீ-
எனக்கு பொறுக்க ஒண்ணாத கால் வாங்கி அல்லது நிற்க ஒண்ணாத படியான சம்சாரமும் நீ இட்ட வழக்கு–
இது இப்போது சொல்லுகிறது நீ நினைத்த அன்று கழித்து தர வல்லை என்கைக்காக–
ஆக நானும் எனக்கு விரோதியான சம்சாரமும் உனக்கு பிரகாரம்
ஆனால் இருக்கின்ற உண்மை இது வானால்
வான் உயர் இன்பம் எய்தில் என்
சேஷத்வ ஞானத்தோடு திரு நாட்டிலே போய் நிரதிசய ஆனந்தைப் பெற்று இருக்கில் என்-
மற்றை நரகம் எய்தில் என் –
சுகத்துக்கும் சேஷத்வ ஞானத்துக்கும் எதிர் தட்டான சம்சாரத்தில் இருக்கில் என்-
எனினும் உடையவன் வைத்த இடத்தில் கிடக்கும் அத்தனை அன்றோ என்று ஓர் அர்த்த தத்வம் உண்டு
இந்த உண்மை இப்படி இருந்தாலும் — யானும் நீதானாய் தெளிதொறும்-
இந்த சம்சாரம் உனக்கு புறம்பு என்கிற தன்மையால் அன்றிக்கே
நான் உனக்கு அத்யந்த சேஷமாய் இருப்பவன் என்கிற தெளிவு பிறக்க பிறக்க
நரகம் நான் அடைதல் நன்றும் அஞ்சுவன்
சேஷத்வ ஞானம் உண்டான பின்பு–சேஷமாய் இருக்கும் பொருள்–சேஷி செய்தபடி கண்டு
அவன் எல்லைக்குள் கிடக்கும் இத்தனை அன்றோ–நம்மை நிர்பந்திக்கக் கடவதோ-
என்பதே அன்றோ தேவர்க்கு நினைவு-
உனக்கு இது நினைவு ஆனாலும் இந்த சம்சாரத்தில் இருப்பை நான் மிகவும் அஞ்சா நின்றேன்-
அடிமை என்கிற எண்ணத்துக்கு விரோதி ஆகையாலே–சேஷத்வ பிரதிபத்தியே குலையும் படி அன்றோ இங்கு உள்ளது –
நீர் அஞ்சிய மாத்ரத்தில் நம்மால் செய்யலாவது உண்டோ என்னில்–
வான் உயர் இன்பம்,மன்னி வீற்று இருந்தாய் –
நின் தாள்களை எனக்கு அருளு -இதுவே அன்றிக்கே–
நித்ய விபூதியிலே நிரதிசய ஆனந்தத்தை உடையனாய்–உன்னுடைய சேஷியாம் தன்மைக்கு உரிய வேறுபாடு தோற்ற
இருப்பதோர் இருப்பு உண்டு -அவ் இருப்பில் என்னை அழைத்து–அசாதாரணர்களுடைய கைங்கர்யத்தை எனக்குத் தர வேண்டும்

————————————————————————————————–

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

உயிரான பாசுரம் -ஆத்ம சமர்ப்பணம் -அருள் என்றார் -ஆசைக்கு அனுரூபமாக அருளினார் -உபகாரத்துக்கு -பிரதியுபகாரம் -செய்தார்
-அது கண்டு –அத்தலையில் பிறந்த உஜ்வல்யம் அதிசய வைபவம் அருளிச் செய்கிறார் –
தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா-ஆசைக்கு ஈடாக எனக்கே -அசாதாரணமாக
-சேஷத்வ ஆச்ரயண கைங்கர்ய -பத த்ரயம் -பிரதி சம்பந்தி -பிரணவம் -சேஷத்வ -நமஸ் ஆச்ரயண -நாராயண கைங்கர்யம்
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ-பிரதியுபகாரம் -அமூர்த்தமான ஆத்மாவுக்கு கை தோள் முளைத்து
-பெண்ணை தந்தை கல்யாணம் பண்ணிக்க கொடுப்பது போலே -உபகார ஹர்ஷ அதிசயத்தால் -அத்யாதரம் பண்ணி இஷ்ட விநியோக அர்ஹம்
-கிரய விக்ரய-பண்ணும் படி செயதேன்-பண்ணின -உடன் சோதி -பெறாத ஒன்றைப் பெற்றால் போலே -தன்னதேயான ஆத்மவஸ்துவை –
நூதன வஸ்து பெற்றால் போலே -இவர் பித்தாக அவனத்தை கொடுக்க -அவனும் இவரது என்று பிரமித்து -சோதி மிக்கு –
அதுவும் மாற்று அங்கு அது என்று மீளாமல் -கலங்கி இவர் கொடுக்க –
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !தேஜஸ் தோள்களில் பஹு முகமாக
-சகஸ்ர சீர்ஷா புருஷா சகஸ்ராஷா தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! சகஸ்ர பாத் -நாம சகஸ்ரவான் –
தமியனேன் பெரிய வப்பனே-அறிவையும் சங்கிக்கும் படி தனியனாக -உன் பெருமைக்கு ஈடாக அபகரித்து அருளினாய் –

தாம் நினைத்த படியே திருவடிகளைத் தந்து அருளின மகா உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக-
இந்த ஆத்மவஸ்துவை உனக்கு தந்தேன் என்கிறார் –
இப்போது திருவடிகளைக் கொடுக்கையாவது-
சம்சாரத்தோடு பொருந்தாத படியையும்-தன்னை ஒழிய செல்லாத படியையும்-
தமக்குப் பிறப்பித்த நிலையைப் பிரகாசிக்கை-

தாள்களை எனக்கே தலைத் தலை சிறப்பத் தந்த –
பலர் அடியார் முன்பு அருளிய -திருவாய்மொழி -7-10-5–என்கிறபடியே ஸ்ரீ வால்மீகி பகவான் முதல் ஆழ்வார்கள்
தொடக்கமானவர்கள் உளராய் இருக்க-என் பக்கலிலே விசேஷ கடாஷம் பண்ணி மிக சிறக்கும் படி தந்த -என்றது
பூரணமாக தந்த -என்றபடி –
பேருதவி –
கொள்ளுகிற தம் திறத்தில் அன்றிக்கே -அவன் தரத்தில் தருகை
கைம்மாறா
பிரத்யுபகாரமாக
தோள்களை ஆரத் தழுவி –
ஒருவனுக்கு ஒருவன் கன்னியை அணைத்து கொடுக்குமாறு போலே இங்கும் அணைத்து கொடுக்கலாம் படி-
உருவம் இல்லாத ஆத்மவஸ்து தாளும் தோளுமாக பணைத்தது ஆயிற்று உபகாரத்தை நினைத்த நினைவாலே-

எனது ஆவி ஆவியும் நீ –எனது ஆவி யார் யான் யார் -திருவாய்மொழி -2-3-4-
மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே -திருவாய்மொழி -8-1-8-
என்பன போன்றவற்றை மறந்தார் உவகையின் மிகுதியாலே
என் உயிரை அறவிலை செய்தனன் –
என்னுடைய ஆத்மவஸ்துவை தேவரீருக்கு அனன்யார்ஹமாம் படி அறவிலை செய்து தந்தேன்-
சோதீ –
இவர் தம்மது அல்லாத ஒன்றை தம்மதாக மயங்கி கொடுத்தாப் போலே-
அவனும் தன்னது அல்லாத ஒன்றைப் பெற்றாப் போலே மயங்கி பேர் ஒளியன் ஆகா நின்றான்-
விஜுவரன்-பால -1-85 என்னும்படி நின்றான் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்
முன்பு இழவாலே கூப்பிட்டவர் தரித்து பிரத்யுபகாரத்தில் இழிந்ததைக் கண்டு
அதனாலே அவனுக்கு பிறந்த பௌஷ்கல்யத்தை பேசுகிறார் –
உபகாரத்தின் நினைவாலே இவர் உடைய ஆத்மவஸ்து தாளும் தோளுமாக தளிர்த்தாப் போலே
எப்பொழுதும் ஒரே தன்மையான அவன் வடிவும் நூறு கிளைகள் ஆயிற்று
பிறப்பு இறப்புகளில் உழன்று திரிகின்ற ஒரு ஆத்மாவைப் பெற்றதனால் அவாப்த சமஸ்த காமனான அவன்
இப்படி உவகை ஆனான் என்கிற இது கூடுமோ -என்னில்
சக்ரவர்தியான ஷத்ரியனுக்கு னொரு உயர்த்தி உண்டு என்னா
தன் காதலுக்கு உரிய மனைவியின் பக்கலிலே ஆசை இன்றிக்கே ஒழியுமோ –
அவாப்த சமஸ்த காமனாய் இருக்கும் தன்மையும் பிரமாணத்தால் சித்தித்ததாய்-
அடியார்கள் இடம் வாத்சல்யமும் பிரமாண சித்தம் ஆனால்-அப்படியே கொள்ளுமத்தனை அன்றோ –
எனக்கு உவகையைப் பிறப்பித்து-அந்த உவகையைக் கண்டு அதனாலே தான் இப்படி-
விரிந்தவன் ஆவதே -என்று கொண்டாடுகிறார் –
தமியனேன் –
இவன் ஸ்வரூபத்திலும்-அடியார்கட்கு பரதந்த்ரனாம் தன்மையிலும் ஐயம் கொண்ட போதை வெறுமையை நினைத்து சொல்லுகிறார் –
பெரிய அப்பனே
செய்த உபகாரம் ஒரு அளவு பட்டு இருந்தது இல்லையே –
அன்றிக்கே
என் பக்கல் ஒரு நன்மை உண்டாய் செய்தாய் அல்லை அன்றோ –
சம்பந்தத்தால் செய்தாய் அத்தனை அன்றோ -என்னுதல்-

—————————————————————————————

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-

ஆத்ம உஜ்ஜீவன ஹேது-இத் திருவாய்மொழி
பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருதிரனப்பனை –
சர்வாதிகா ஸ்வாமி -ப்ரஹ்மனுக்கு உத்பாதகன் -சம்ஹார கர்த்தா ருத்ரனுக்கு உத்பாதகன்
முனிவர்க்குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை-சனகாதிகளுக்கு அசாதாரண உரிய சேஷி
-தேவர்களுக்கு உத்பாதகன் -சகல லோகத்துக்கு அத்விதீய பெரிய நாயகன் –
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்-சம்பத்தை உடைத்த திரு நகரி -பிரபந்த உதாரத்தால் அருளி
அத்யந்த அபி நிவேசத்துடன் அருளிச் செய்த -பகவத் போக்யதாதி குணம் -சர்வ பிரகார போக்யத்வம்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே-சப்த சந்தர்ப்பங்கள் –
-அநாதி காலம் அந்நிய பரரான நமக்கு உஜ்ஜீவிக்கலாம்

நிகமத்தில் -இத் திருவாய்மொழியில் சொன்ன அர்த்தத்தை சுருக்கமாக சொல்லி
இதனை கற்கின்றவர்கள் சர்வேஸ்வரனை அடைந்து உஜ்ஜீவிக்கலாம் -என்கிறார்-

பெரிய அப்பனை –
உபய விபூதிகளையும் உடையவனை
பிரமன் அப்பனை –
பதினான்கு உலகுக்கும் ஈச்வரனான ப்ரஹ்மாவுக்கும் தந்தை யானவனே
உருத்திரன் அப்பனை –
பிரமன் புத்ரனான உருத்திரனுக்கும் நிர்வாஹகன் ஆனவனே –
நான்முகனை நாராயணன் படைத்தான் நான் முகனும்
தான் முகமாய் சங்கரனைத் தான் படைத்தான் –
மலர் வந்த நான்முகன் திருமைந்தன் அவன் மைந்தன் மதி சூடி –
சனகன் முதலிய மகரிஷிகளுக்கு ப்ரஹ்ம பாவனையே ஆகையாலே முனிவர்க்கு உரிய அப்பனே -என்கிறது
உரிய -என்று அணுமையைச் சொன்னபடி-
பரம சேஷி -பெரிய அப்பன் -உரிய அப்பன் -சேஷி -பாவம் -ப்ரஹ்ம ஏக பாவனை உடையவர்கள் –
மற்றவர்கள் உபய பாவம் -கர்ம ப்ரஹ்ம பாவனையில் இருப்பிற்கு உத்பாதகன் –
அமரர் அப்பனை –
தேவர்களுக்கு தந்தை யானவனை
உலகிற்கு ஒரு தனி அப்பன் தன்னை
இப்படி பிரித்து சொல்லுகிறது என் -எல்லா உலகங்கட்கும் ஒரே நிர்வாஹகன் ஆனவனை
எல்லா பிராணிகட்கும் அழியாத தந்தை என்று அன்றோ இருப்பது
இப்போது இவை சொல்லுகிறது என் என்னில்
பெரிய நிதி எடுத்தவன் இன்னது கண்டேன் இன்னது கண்டேன்-
என்னுமா போலே –
ஸ்வரூபத்திலும் குணத்திலும் ஐயம் கொண்ட போது இழந்தாராய் இருந்தனவற்றைப் பெறுகையாலே இவற்றைப் பிரித்து சொல்லுகிறார்-
முனிவர்க்கு உரிய அப்பனை என்றதனால் அடியார்க்கு பரதந்த்ரப் பட்டு இருக்கும் தன்மையை சொல்லுகிறது-சாமீப்யம் –
ஸ்வ பாவம் சங்கை உரிய சேஷி என்பதால் தீர்ந்தமை -பெரிய அப்பன் இத்யாதியால் ஸ்வரூபம் சங்கை தீர்ந்தது –

பெரிய வண் குருகூர் –
காப்பவன் தாழ்ந்தவாறே ஐயம் கொள்ளுகையும்–
செய்நன்றி நினைவாலே உவகையர் ஆகையும் ஆகிற இவற்றுக்கு அடி -அவ் ஊரில் பிறப்பு என்கை-
வண் சடகோபன் –
மானச அனுபவ மாத்ரமாய் விடாதே -பிரபந்தமாக செய்து கொடுத்த ஔதார்யம்–
பேணின ஆயிரத்துள்ளும் உரிய சொல் மாலை இவையும் பத்து –அவனைத் தாம் ஆசைப்பட்ட படியைச் சொன்ன பத்து–
வேத வாக்குகள் எந்த ஆனந்த குணத்தின் நின்றும் சொல்ல மாட்டாது மீண்டனவோ -என்கிறபடி
யதோவாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ -என்று தைத்ரியம் -9-1-
மீளுகை அன்றிக்கே பகவான் உடைய குணங்களுக்கு நேரே வாசகமாக இருத்தலின் -உரிய சொல் மாலை -என்கிறது
தொண்டீர் நங்கட்கு இவற்றால் உய்யலாம்
அநாதி காலம் பகவான் இடம் விருப்பு இல்லாதவர்களாய் –வேறு விஷயங்களில் ஈடுபட்டவர்களாய் –
அசந்நேவ ஸ பவதி அசத் ப்ரஹ்மேதி வேதசேத்–அசதி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது இதி -தைத்ரியம் -6
இல்லாதவன் ஆகிறான் என்கிறபடியே–இல்லாதவர்களைப் போலே இருக்கிற நுங்கட்கு –இருக்கின்றவனாக அறிகிறார்கள் -என்றபடியே உஜ்ஜீவிக்கலாம்
இது போலே நங்கட்கு என்பதை நுங்கட்கு அர்த்தமாக கம்பரும்
செங்கயல் போல் கரும் நெடும் கண் தேமரு தாமரை உறையும்
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன -சூர்பணகை படலம் -119-

——————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

யதேஷ்ட சித்திம் அப்ராப்ய
கின்ன மதி
ஆஸ்ரித பாரதந்த்ரம் ஸர்வேச்வரத்வம் அபி
சங்கிதவான் சடாரி
ஈஸ்வரத்வ புனரேவ விபோதி தஸ்ய –

——————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்ரேயாத் பத்னியாதி மத்வாத்
ரகு யது குலையாத உத்பவாத்
ச்வா ஆஸ்ரித சுவாசரித இச்சா அநு ரூப வியாபாராத் விக்ரகாத் 3/4
சகல சித்அசித் அந்தராத்மா
ஸ்வாமித்த்வாத் -ஸ்வாதுத்வாத் -இனிமை 6/7
ஸ்வ ஆஸ்ரித வேத்ய அகில குண-தயா —வல் வினையேனை ஈர்கின்ற குணங்கள்
ஞானி அபி –ஸ்தானே அச்சாத்9/10-அஞ்சுவன் நரகம் அடைதல்
ஹரீர் பதம் தரிசன சுதிர் –

——————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 71-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்
அவனுடைய குணங்களிலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கித்த அதி சங்கியைப் போக்கின படியை
பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இவர் மநோ ரதித்த படியே அத் தேசத்திலே புக்கு ஸ்ரீ திருவாய் மொழி கேட்ப்பித்து
அடிமை செய்யப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய் –
அவன் ஆஸ்ரித பர தந்த்ரன் –சர்வ நிர்வாஹகன் என்று இருந்தோம் இவையும் நம்மைத் தோற்றிப் பொய் ஆகிறதோ -என்று
இவர்-அவன் குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ண கீழ் தம்மைக் கொண்டு ஸ்ரீ திருவாய் மொழி பாடுவித்துக் கொண்ட
யுபகாரத்தை ஸ்மர்ப்பித்து அவன் தம் அதி சங்கையைப் போக்க அத்தை அனுசந்தித்து அதி சங்கை தீருகிற
தேவிமாரில் -அர்த்தத்தை-தேவனுறை பதியில் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————-

தேவனுறை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தா
னாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த மாறன் பால்
மா நிலத்தீர் நாங்கள் மனம் —-71-

——————————————————

வியாக்யானம்–

தேவனுறை பதியில் -சேரப் பெறாமையால்-
கீழே-தன்மை தேவ பிரான் அறியும் -என்னும்படியான-தேவர்க்கும் தேவன் ஆனவன்
ஸ்ரீ திவ்ய மஹிஷியோடு நித்ய வாசம் பண்ணுகிற-ஸ்ரீ திரு வாறன் விளையிலே
புக்குப் பாடி அடிமை செய்யப் பெறாமையாலே -என்னுதல் –
அன்றிக்கே
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ -மற்று அமரர் ஆட்செய்வார் -அப்பனே காணுமாறு அருளாய் –
என்று என்றே கலங்கி-என்று அவசன்னராய் -என்னுதல்-

மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தானாம் நிலையும் சங்கித்து –
தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற ததீய பரதந்த்ரனாம் நிலையிலும்
சேத அசேதனங்கள் எல்லாம் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும்படியான நிலையிலும் அதி சங்கை பண்ண –
அதாவது –
க்யாத ப்ராஜ்ஞ சங்கே மத்பாக்ய சங்ஷ்யாத் -என்னும்படி
உமருகந்த உருவம் நின்னுருவமாகி -என்று தொடங்கி-அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் -என்றும் –
இறந்ததும் நீயே -என்று தொடங்கி -அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் -என்றும் –
இப்படி-ஸ்வரூபத்திலும்-குணத்திலும்-அதிசங்கை பண்ணின படியை அடி ஒற்றின படி -என்கை –

தெளிந்த
இப்படி-ஆஸ்ரித பாரதந்த்ர்யத்திலும்-சர்வ நிர்வாஹகத்வத்திலும் பிறந்த இஸ் சங்கை நிவ்ருத்த மாம்படி
பூர்வ யுபகாரத்தை ஸ்மரிக்கும் படி –
மலரடிப் போதுகள் எந்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன்பு அருளிய -என்று
உபகரித்ததை ஸ்ம்ருதி விஷயமாம் படி பிரகாசி ப்பிக்க
அத்தை-தாள்களை எனக்கே தலைச் தலைச் சிறப்பத் தந்த பேருதவி என்று அனுசந்தித்து ப்ரீதராய் தெளிந்து -என்கை-

தெளிந்த மாறன் பால் மா நிலத்தீர் நாங்கள் மனம் –
இதர விஷயங்களிலே மண்டி இருக்கிற மகா ப்ருதிவியில் உள்ளவர்களே உங்களைப் போலே அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் நம்முடைய மனஸ்ஸூ — உங்களுக்கு இதர விஷயத்திலேயாய் இருக்கும்
ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்
உபய வ்யாவ்ருத்தரான எங்களுக்கு ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் மனஸ்ஸூ —

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: