பகவத் விஷயம் காலஷேபம் -159- திருவாய்மொழி – -8-1-1….8-1-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

முதல் பத்தால் பகவத் கைங்கர்யம் புருஷார்த்தமஎன்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார்
மூன்றாம் பத்தால் -அந்த களை அறுக்கப் பட்ட கைங்கர்யம் ஆனது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார் –
நான்காம் பத்தால் -இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் என்றார்
ஐந்தாம் பத்தால் அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தல் விரோதிகளைப் போக்குமவனான சர்வேஸ்வரன் திருவடிகளில் சரணம் புகுந்தார்
ஏழாம் பத்தால் இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்
தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியைக் கண்டு நோவு பட்டார் –
இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே தகத பட நியாயம் போலே நம்மை விடாமலே தொடருகிறது –
நமது ஆத்மாவிலும் ஆத்மா சம்பந்தப்பட்ட பொருள்களிலும் நசை அறாத படியாலே என்று பார்த்து
அவற்றில் ஒரு நசை இல்லை என்கிறார் இந்த எட்டாம் பத்தில்

சர்வ சக்தன் -ஏழாம் பத்தில்
சத்ய காமத்வம்-எட்டாம் பத்தில்
ஆபத் சஹத்வம் ஆர்த்தி ஹரத்வங்கள் -9/10-பத்தும் பத்தாக்கி –
ஞப்தி பல முக்தி பல வ்ருத்தி -முதல் மூன்றும்
விரக்தி -நாலாம் பத்தில்
பக்தி ராகம் கழிய மிக்கு -பேரமர் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல்
பிரபத்தி ஆறாம் பத்தில்
சக்தி வெளியிட்டு ஏழாம் பத்தில்
பிராப்தி -எட்டாம் பத்தில்
பூர்த்தி -ஒன்பதாம் பத்தில்
ஆர்த்தி ஹரத்வம் -பத்தாம் பத்தில்

கிருதஞ்ஞாதா பலம் பிரதிக்ருதமானம் உணர்ந்து – -நின்ற உன்னை உணர்ந்தேன் -தோள்களை ஆரத் தழுவி தாள்களை –பேர் உதவிக்கு கைம்மாறா –
கண்கள் சிவந்து –நின்ற உன்னை உணர்ந்தேன் -அநந்யார்ஹ சேஷ பூதன் அடியேன் உள்ளான்-சேஷம் பிரதானம்

பிராட்டிமாரோடே நித்ய பரிகாரம் சேவிக்க
பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே
திரு வனந்த ஆழ்வான் மேலே சர்வேஸ்வரன் நாம் பாடின திருவாய்மொழி
கேட்க்கைக்காக திரு வாறன் விளையிலே எழுந்து அருளி இருந்தான்
நாம் அங்கே சென்று திருவாய்மொழி கேட்ப்பித்து அனுகூலமான கைங்கர்யங்களையும் செய்து அனுபவிப்போம் என்று பாரித்தார் –
அது எண்ணம் மாத்ரமேயாய் நினைத்தபடி தலைக்கட்ட பெற்றது இல்லை –
பிராட்டிமார் -எழில் மலர் மாதரும் -அருகே எழுந்து அருளி இருக்க-தேவிமார் ஆவார் திருமகள் பூமி
நித்ய சூரிகள் -யாவரும் வந்து வணங்கும் -உளராய் இருக்க-ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-
நினைத்த படி கார்யம் செய்து தலைக்கட்டுக்கைக்கு தகுதியான ஐஸ்வர்யம் குறைவற்று இருக்க-மேவிய வுலகம் மூன்றவை யாட்சி
அடியார்கள் உகந்தனவற்றை தனக்கு திரு மேனியாக கொண்டு உதவும் தன்மையனாய் இருக்க-வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்-
நான் ருசியில் குறைவற்றவனாய் இருக்க -காணுமாறு அருளாய் –
நினைத்த கார்யம் பெறாமல் ஒழிவோமே என்று வெறுத்தார் –
இவர் தாம் சர்வேஸ்வரன் பக்கல் தமக்கு தஞ்சமாக நினைத்து இருப்பது இரண்டு தன்மைகளை –
அவை -அடியார்களுக்கு பரதந்த்ரனாய் இருக்கும் இருப்பும் –உமர் உகந்து உகந்த உருவம் –
தனக்கு வேறு பட்ட எல்லா பொருள்களும் தனக்கு பிரகாரமாய்–தான் பிரகாரியாய் –
இவற்றுக்கு வந்த வ்யசனம் தனக்கு வந்ததாக நினைக்கும் சம்பந்தமும்
வ்யசுகேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கிதா
உச்த்வேஷு ச சர்வேஷூ பித்தேவ பரிதுஷ்யதி -அயோத்யா 2-40-
அவை இரண்டும் தனக்கு கார்யகரமாக கண்டிலர்
நான் ஒருவன் தோன்றி சர்வேஸ்வரனுக்கு இவையும் பொய்யாக புகுகின்றனவோ -என்று ஐயம் கொண்டார்
குண ஞானத்தாலே ஜீவிக்குமவர் குணங்களில் –அதிசங்கை -ஐயம் கொண்டால் ஜீவிக்க மாட்டாரே
இவர் தம்மை நாம் இழக்க ஒண்ணாது
இவரை சமாதானம் செய்யும் விரகு ஏதோ -என்று பார்த்து
வாரீர் -நீர் கண்டது எல்லாவற்றிலும் –அதிசங்கை -ஐயம் கொள்கிறது ஏன்
நாம் உமக்கு ஒன்றும் செய்திலமோ
இவ்வளவாக உதவிய நாம் மேலே உள்ளனவற்றையும் செய்வோம் காண்
நீர் இங்கனே ஐயம் கொள்ள வேண்டா என்று
நம்பத் தக்கவனாக இருக்கை முதலான தன்னுடைய கல்யாண குணங்களையும் -பெரிய அப்பனை -பாசுரம்
தான் இவ்வளவாக செய்த உபகாரங்களையும் காட்டி -தாள்களே எனக்கே தலைத்தலை சிறப்பத் தந்த பேருதவி –
இவருடைய ஐயத்தை தீர்த்து சமாதானம் செய்ய
சமாதானம் அடைந்தவராய்
அதனை அனுசந்தித்து – இனிதர் ஆகிறார்

ப்ராஜ்ஞ -விரும்பினவற்றை தம்மாலே பெற இருப்பார் அறிவில் குறையாலே இழக்க வேண்டாதபடி தம்
அளவையும் அவர்கள் அளவையும் அறிக்கைக்கு தகுதியான அறிவை உடையவர்
க்ருதஜ்ஞஸ்ச –
கிட்டுமவன் தன் பக்கல் முகம் பாராமை பண்ணுமது தவிர்ந்து ஓர் அடி வர நின்ற எல்லையும் அறிவர் –
ஸாநு குரோஸஸ்ச-
அறிவு கொண்டு கார்யம் கொள்ளவும் அறியாதே இருக்கும் அவர்களுக்கு
அவர்கள் இழவை நினைந்து ஐயோ என்று இரங்குமவராய் இருப்பர்
ராகவ –
இது இவர் தம்மை தோற்றி வந்தது அன்று -குடிப்பிறப்பாலே
சதவ்ருத்த
பிறருடைய நன்மையே தன் பிரயோஜனமாக கொண்டு இருப்பவர்
க்யாத
இப்படி பகைவர் கோஷ்டியிலும் பிரசித்தமானவர்
நிரநுக்ரோச சங்க
இந்த குணங்களை உடைய பெருமாளை
இந்நிலைமையில் எனக்கு முகம் காட்டக் காணாமையாலே
இந்த குணங்களில் ஒன்றும் இல்லாத அருள் அற்றவரைப் போன்றவராக ஐயப்படா நின்றேன் –
சுந்தர காண்டம் -26-13-
அவர் குணங்களை உடையவர் அன்றோ
மத்பாக்ய சங்க்ஷயாத்
எனக்கு புண்யம் இல்லாமை யாலேயாம் அத்தனை அன்றோ
அறிவு ஒன்றும் சங்கிப்பேன் -வினையேன் -திருவாய்மொழி -8-1-7-என்றார் அன்றோ இவரும் –
இத் திருவாய்மொழிக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் ஸ்லோகம் இது-

—————————————————————————————————–

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-

நிரவதிக விபூதி உக்தன் -விஸ்லேஷத்தில் தரியாத படி பண்ணும் போக்யதை
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-அழகுக்கும் பெருமைக்கு தக்க -நிரதிசய சம்பத் ரூபை –
ஸமஸ்த விபூதி அபிமானினி -அதுக்கு மேலே நியோகிக்க -ஏவும் படி -கூவிப் பணி கொள்ள கிரியதாம் -நித்ய ஸூ ரிகள் கைங்கர்யம்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்-அபிருத்தாக் சித்தமாம் படி பொருந்திய பிரதான புருஷ கால
-பிரதான புருஷ ஈஸ்வர -த்ரைவித்யத்தை-ஆணைக்கு உட்பட்டு நடக்கும் -தத் தத் அனுரூபமான உருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே-உபய விபூதி நிர்வாகம் காட்டும் அளவு அன்றிக்கே
-இவ்வாகாரம் அனுபவிக்கப் பெறாத பாவியேன் -நிரதிசய போக்யம்-கமல கண்ண விளிச் சொல் என்றுமாம் அதர சோபை -நீல ரத்னம் போலே தர்ச நீயன்
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு -பிராணன் போலே தாயகம் -அழிந்த சத்தை உண்டாக்கும் அமுதே
-அநவரத போக்யம்-உப்புச் சாறு -அதிசயித சக்தன் உபகாரம் அருளாயே-காணுவதே புருஷார்த்தம் -அருளாய் உபாயம் -கடல் கடைய வேண்டாம்

பிரியில் தரிக்க ஒண்ணாதபடி நிரதிசய போக்யனான நீ உன்னை நான் காணும்படி திருவருள் செய்து அருள வேணும் என்கிறார் –

தேவிமார் ஆவார் திருமகள் பூமி –
எவன் குற்றம் செய்யாதவன் -என்பாரும் அருகே இருக்க நான் வருந்த வேண்டிய காரணம் ஏன் –
பாபாநாம்வா சுபாநாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம்
கார்யம் கருணம் ஆர்யேன நகச்சின்னா பராயதி-யுத்த 116-44
மித்ரம் ஔ பயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா
வதம் தா நிச்சதா கோரம் த்வயா அசௌ புருஷர்ஷப -சுந்த -21-20

ராவணன் பிராட்டி முன் நின்று ஜல்பிக்க புக்கவாறே -பிரஜை நலிந்தால் தாய் சீறாள்- அன்றோ
தாயான முறையாலே அவன் கேட்டினைக் கண்டு ஹிதம் செய்து அருளுகிறாள்–
சரணாகத வத்சலன் -சரணாகதன் சொல்லாமல் மித்ரன் -என்றாவது போக ஹிதம் செய்து அருளுகிறாள்–
அவர் திருவடிகளிலே சரணம் புகு என்றால் அவன் தாழ்வாக நினைத்து இசையான் என்பதாலே -தோழமை கொள் என்கிறாள் –
அன்றிக்கே அவர் -தோழைமை -என்ற அளவாலே -என்றார் ஆதலின் -இவள் -தோழமை கொள் -என்கிறாள் என்னுதல்
அவ்வருகு போனாலும் பரம சாம்யா பத்தியை தான் அவன் கொடுப்பது-

எனக்கு பகைவராய் இருப்பாரோடு உறவு செய்ய வேண்டுகிறது என் என்னுமே
ஸ்த்தானம் பரீப்சதா -கெடுவாய் வழி பரிப்பாருக்கும் தரையிலே கால் பாவி நின்று கொள்ள வேணுமே –
ஆதலால் உன் குடி இருப்பை ஆசைப்பட்டாயாகில் இத்தனையும் செய்ய வேண்டும்–
எனக்கு ஒரு குடி இருப்பு வேண்டுமோ
ஆகாசத்தில் சஞ்சரிக்கிறவனாய் அன்றோ இருப்பது நான் என்பது–ராவணனுக்கு கருத்தாக அருளிச் செய்கிறாள்
வதம் சா நிச்சதா –கோரம்
அவர் அம்புகள் ஆகாசத்தில் நடவாவோ -என்கிறாள்
கோரம் -சிங்க விளக்கை எரித்து கொல்லாதே நற்கொலையாக கொல்லும் போதும்–அவரைப் பற்ற வேண்டும் காண் –
த்வயா
பல சொல்லி என் உனக்கு அவர் வேண்டும்
அசௌ
அவர்படி உனக்கு தோற்றுகிறது இல்லையா
உரு வெளிப்பாட்டிலே முன்னிலை இவளுக்கு–அச்சத்தாலே முன்னிலையாக தோற்றும் அவனுக்கு
தீரக் கழிய அபராதம் செய்து நிற்கும் என்னைக் கை கொள்ளுவாரோ -என்ன
புருஷ ரிஷப –
நீ செய்தவற்றை ஒன்றாக நினைத்து இருப்பவர் அல்ல –புருஷோத்தமன் காண் -என்கிறாள்-

தேவிமார் ஆவார் திருமகள் -திவு கிரீடா விஜிகீஷிர் -தாது
அவர்கள் புருவம் நெறித்த இடத்தில் உனக்கு கார்யம் செய்யும்படி–வல்லபைகளாய் இருக்கிற பெரிய பிராட்டியாரும் ஆண்டாளாரும்-என்றது
குற்றம் செய்யாதவன் யாவன் -என்று பொறைக்கு உவாத்தாய் இருக்கும் ஒருத்தி-பொறுப்பது எதனை – குற்றம் தான் உண்டோ என்று
அந்த பொறை விளையும் பூமியாய் இருக்கும் ஒருத்தி என்ற படி-ஆக -அவர்கள் இங்கே இருக்க எனக்கு இழக்க வேண்டுகிறது என்
ஏவ –
கைங்கர்யம் தான் உத்தேச்யம் போன்று ஏவிக் கொள்ளுகையும் உத்தேச்யம் என்கை-
செய் என்று என்னை நியமித்து அருள வேணும்
பாவான் அஸ்மி காகுஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே-ச்வயக்து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத-ஆரண்ய -15-7-
மின்னி முழங்கி வில்லிட்டு மழை பெய்யும் மேகத்தின் ஒலி போலே-கம்பீரமாய் அன்றோ திரு மிடற்றின் ஓசை இருப்பது –
மற்று அமரர் ஆட் செய்வார்
இச் சேர்த்தியில் கிட்டி நின்று அடிமை செய்வார் நித்ய சூரிகள்–மற்று -என்று ஒத்த விகற்பத்தை கூறுகிறது என்றது
திரு மார்பிலே அணைந்தால் பிராட்டி மாருக்கு உண்டான இனிமை
இச் சேர்த்தியில் அடிமை செய்யப் பெருகையால் இவர்களுக்கு உண்டாம் -என்றபடி
வனத்திலே மூவரும் களிக்கின்றவர்களாய் இருந்தார்கள் –ரம்யம் ஆவசாதம் க்ருத்வா ரமமாணா வனே த்ரய -சங்ஷேப ராம -31
அவர் அவர்கள் உடைய ஸ்வரூபங்களுக்கு தக்கவாறு அன்றோ சுகங்கள் இருப்பன
பெருமாளுக்கும் பிராட்டிக்கு பரஸ்பரம் கல்வியால் பிறக்கும் ரசம்–இருவருமான சேர்த்தியை காண்கையாலே பிறக்கும் இளைய பெருமாளுக்கு என்றபடி
அமரர் ஆட் செய்வார் –
வேதம் வல்லார்களைக் கொண்டு -திருவாய் மொழி -4-6-8-என்றபடியே அவர்களும் புருஷகாரத்தை செய்பவர்களாய் அன்றோ இருப்பது
கைங்கர்யமும் புருஷகாரமும் துல்ய விகல்பம்-

பிராட்டிமாரும் அருகே உளராய்-
மற்று என்று அவர்களோடு ஒக்க விகற்பித்து சொல்லலாம்படியான நித்ய சூரிகளும் உளராய் ஆனாலும்
ஐஸ்வர்யத்தில் குறை உண்டாகில் கார்யம் செய்ய ஒண்ணாதே அன்றோ என்னில் –
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி
கீழும் மேலும் நடுவுமான உலகங்களை இவன் ஆளுகின்றவன் என்றால் அதுக்கு தகுந்தபடி இருப்பவன் என்றது –
இதனுடைய எந்த நாதனால் இந்த மூன்று உலகங்களும் நல்ல நாதனை உடையவன் ஆகுமோ -என்றபடியே
அனுரூபா சவை நாதோ லஷ்மீவான் லஷ்மணக்ரஜா
த்ரைலோக்யம் அபி நாதேன யேன ஸுயாத் நாதவத்தரம் -அயோத்யா -2-15
மூன்று உலகங்களையும் கை யடைப்பு ஆக்கினாலும்
பாதுகாக்க படும் பொருள் சுருங்கி பாது காக்கின்ற தன்மையின் பாரிப்பே விஞ்சி இருக்கும் -என்றபடி –
இனி மூன்று வித செதனர்களையும்

இவன் பாது காக்கின்ற்றவன் என்றால் அதற்க்கு தக இருப்பவன் என்னுதல் –
இனி -ராஜ்ஜியம் தான் பொருந்தி இருக்கும் என்னுதல் –
வேண்டு வேண்டு உருவம் நின் உருவம் –
அந்த ரட்ஷணத்துக்கு வேண்டின வண்டின உருவம் நின் உருவம் –
அன்றிக்கே
இச்சையால் கொள்ளப்படுகின்ற உருவம் நின் உருவம் என்னுதல் –
அன்றிக்கே
அடியார்கள் உகந்தவற்றையே தனக்கு திருமேனியாக கொள்ளும் உருவம் நின் உருவம் என்னுதல் –
பாவியேன் தன்னை –
புருஷகாரம் உண்டாய்
விபூதியை உடையவனாய்
அடியாருக்கு அதீனமான விக்ரகத்தை உடையவனாய்-
இருக்க இழக்க அடியான பாபத்தை செய்த என்னை –
அன்றிக்கே –
அந்த இல்லற தர்மத்துக்கு புறமபாவானே -என்னுதல்
அடுகின்ற
முடிக்கின்ற
கமலம் கண்ணது ஓர்
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணனே -பெரிய திருமொழி -7-1-9-
பவளம் வாய்
அழகிய முறுவலைக் கொண்டு உள்ள முகத்தாமரையை தரித்தவனே -ஸ விலாஸ ஸ்மிதாதாரம் பிப்ராணாம் முக பங்கஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-21-
என்கிற புன்சிரிப்பை உடையவனே
மணியே
விடாயர் முகத்தே குளிர் நீர் வெள்ளத்தை வெட்டி விட்டாப் போலே சிரமத்தை போக்குகிற வடிவை உடையவனே
இவை கண்டீர் எனக்கு பாதகம் ஆகின்றன
ஆகவே இவருக்கு பிராணன் ஒரு வாயு விசேஷம் அன்று –
நாய்ச்சிமாரோடும் நித்ய சூரிகளோடும் கூடிய கண்ணும் வாயும் வடிவும் ஆயிற்று–இவருடைய உயிர் இருப்பது
அமுதே
தரித்து கொண்டு இருப்பதான பிராணனாய் இருக்கை அன்றிக்கே–இனிய பொருளை புறம்பே தேட வேண்டாதே இனிய பொருளும் தானேயாய் இருக்கை
அலை கடல் கடைந்த அப்பனே –
வேறு பிரயோஜனங்களை விரும்புவர்கட்கும் அறியான செய்து விரும்பின பொருட்களைக் கொடுக்கும்–உபகாரகனே
என்றது என் சொல்லியவாறோ என்னில்
இனிய பொருளும் தான்
ஆனால் சாதித்துக் கொள்வார் வேறு ஒருவர் ஆதல் அன்றிக்கே–உபாயமும் தானே இருக்கை தெரிவித்தபடி –
நன்று உமக்கு செய்ய வேண்டியது என் என்ன
காணுமாறு அருளாய் –
எனக்கு கடல் கடைய வேண்டா–அவ்வடிவைக் காட்ட அமையும்—வடிவை காண்கை பிராப்யம்
அருள் பிராபகம்
பிராப்ய பிராபகங்கள் நீயே -என்று இருப்பார் கார்யம் செய்யலாகாதோ

——————————————————————————————————————————————————————–—————————

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

இரக்கம் உபாயம் -காணுதல் தர்சனம் புருஷார்த்தம் -வேண்டும் உருவம் நின் உருவம் -அவதாரம் விக்ரக போக்யத்தை அனுசந்தித்து
கிலேசிக்காமல் அருள வேண்டும்
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்-வீப்ஸை-அவதாரணம் -இரண்டும் -பல காலும் சொல்லி
-ஈட்டில் ஏவ காரார்த்தம் -பரவும் கண்ண நீர்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ-ஆறு பிரகாரம் -வழிகள் எல்லாம் முயன்று –
கிடைக்காமல் பிதற்றவே -நீ ஆதரியா அளவில் ஆசைப் பட்டும் –
ஆத்மாத்மீயங்களை இழந்தும் – பல காலும் ஐந்து தடவை சரண் அடைந்தும் – மூ வாறு மாசங்கள் மோஹித்தும் – – தூது விட்டு மடல் எடுத்து-
ஊடி-இவை எல்லாம் செலுத்தும் உபாய புத்தியில் இல்லை ருசி இருப்பதைக் காட்டியே -பிதற்றும் படி அருள வேணும் -பிரார்த்தனை இல்லை
-கிருபை செய்தவை பிதற்றுமாறு தான் -வேடிக்கை பார்த்து முடிக்காமல் -ஐயோ
ஆசா லேசம் உள்ளாறும் அநவரதம் அனுபவிக்க எனக்கு இப்படி ஆனதே அந்தோ –
நிரம்ப பக்தி உள்ளவர் என்று சொல்லிக் கொள்ள வில்லை -உடையவனிடத்தில் பிச்சை கிடக்கிறார் –
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !ஆனபின்பு -காணும் படிக்கு சேவை சாதிக்க
காட்டோடு நாட்டோடு காட்சி கொடுத்தாய் -காகுத்தா -பொது நின்ற பொன் அம் கழல் –நீர்-மணி வல்லி பேச்சு வந்தேறி இல்லையே –
பெண் பிறந்தார் எல்லாரும் காணும் படி எளியனாய் -சபலனாய் -அனுபவிக்க நப்பாசை -நீயே உன்னை பிரகாசிப்பித்த உதாரனே -பக்குவ பலம் போலே –
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா-ஆசை உடையோருக்கு சத்தா ஹேது -நித்ய போக்யதை -பிரளயத்தில் இடந்த- எடுத்த பேராளா-அநாயாசேனே-முழுக்கவும் மீட்கவும் இல்லாமல் -இது எல்லாம் எனக்கு செய்ய வேண்டாம் காணுமாறு அருளாய்

காண வேண்டும் -என்று மிகவும் நோவு பட்டு இருக்கும் இருப்பேயோ -என் திறத்து செய்து அருளப் பார்த்தது –
நான் இங்கனம் படாமே உன்னைக் காணும்படி திருவருள் செய்து அருள வேணும் –என்கிறார் –

காணுமாறு அருளாய் -ஒரு கால் காணுமாறு அருளாய் -என்றால்
அப்போதே செய்யக் காணா விட்டால் -நாமே முயற்சி செய்யப் பெறுகிறோம் -என்று இருக்குமவர் அன்றோ –
மழைத் தாரையால் அல்லது தரியாத சாதகம் போலே–அவன் அருளே பார்த்து இருக்குமவர் ஆகையாலே மீண்டும் காணுமாறு அருளாய் என்கிறார் –
என்று என்றே -பல காலும் வார்த்தை இதுவே –புறம்பேயும் ஒரு புகல் உண்டு என்று இருக்கில் அன்றோ அதனைப் பற்றுவது –
அருளாய் -ஒரே வார்த்தையையே மீண்டும் மீண்டும் சொல்வேன் என்றபடி –
கலங்கி -கலக்கமே யாயிற்று ஏறி வருவது
சடையை உடையவர் மர உரியை உடையவர் என்னும் ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே
ஜடிலம் சீரவசனம் ப்ராஞ்சலிம் பதிதம் புவி-தாதார்ச ராமோ துர்த்தர்சனம் யுகாந்தே பாஸ்கரம் யதா -அயோத்யா -100-1-
கண்ணீர் அலமர –
நிரம்பின ஏரிகள் உடைந்து பெருக்கு எடுத்து ஓடுமா போலே
கலங்கின கலக்கம் உள் அடங்காமல்–கண்ண நீராக வெள்ளம் இடா நிற்கும்
வினையேன் –
இதற்கு முன்பு இந்த பொருளைக் காண ஆசைப் பட்டாரில் கலங்கி கண்ண நீர் பாய்ந்து அறிவார் இல்லை கண்டீர் –
காண வேண்டும் என்னும் ஆசை சிறிது உடையாருக்கு தன்னைக் காட்டி-கஜேந்திர ஆழ்வான் கோப ஸ்த்ரீகள் -போல்வாருக்கு –
அவர்கள் கண்ண நீரையும் துடைக்குமவனை ஆசைப்பட்டு கிடையாதே கண்ணும் கண்ண நீருமாம் படியான-பாபத்தைச் செய்தேன் –
பேணுமாறு எல்லாம் பேணி –
பேணி -ஆசைப்பட்டு
முதலிலே தாழ்ந்தவன் என்று அகன்றும் -வளவேழ் உலகில் –1-5-
அவன் விரும்பாத நானும் என் உடைமையும் எனக்கு வேண்டா என்று கூறியும் -ஏறாளும் இறையோனும் –4-7-
ஆற்றாமையாலே மடல் எடுக்கையிலே கை வைத்தும் -மாசறு சோதி –5-3-யாம் மடலூர்தம் ஒருப்பட்டார்-இவர்
பலபடியும் சரணா கதி செய்தும் -நோற்ற நோன்பிலேன் -5-7-தொடக்கமாக நான்கு திருவாய்மொழியிலும் உலகம் உண்ட பெரு வாயா விலும் –6-10-
பிரணய ரோஷம் தலை எடுத்து கிலாப்யது செய்த இடத்திலும் -மின்னிடை மடவார் –
எனக்கு அருள் நின் பெயரே பிதற்றுமாறு நீ எனக்கு அருளப் பார்த்தபடி நின் பெயரே பிதற்றுமாறாய் விட்டது -என்றது
உன்னை பெறாத வ்யசனத்தாலே உன்னுடைய திரு நாமங்களைச் சொல்லி-அடைவு கேடாக கூப்பிடும் படியோ நீ எனக்கு

விரும்பிய பொருள்களில் ஆசை என்ற பல வழிகளும் உண்டு –
செய்யும் திருவருள் என்றபடி –
அற்ப விஷயங்களை ஆசைப்பட்டு கூப்பிடுமது தவிர்ந்து –
நம் பேரைச் சொல்லி கூப்பிடும் படி செய்தோம் ஆகில் இனி என் -என்று இருக்கிறாயோ
சம்சாரிகளில் வேறுபாடோ எனக்கு வேண்டுவது –நான் விரும்பியதைப் பெற வேண்டாமோ -என்கிறார் –
வினையேன் பேணுமாறு எல்லாம் பேணி –
ஆசைப்படும் வழி எல்லாம் ஆசைப்பட்டு –பேணுதல் உபாயம் இல்லை –
பல வழி உண்டோ ஆசைப் பாட்டில் -என்னில்
பிராப்தம்- வகுத்த விஷயத்தில் ஆசை -அபிமத -விரும்பிய பொருள்களில் ஆசை என்ற பல வழிகளும் உண்டு
இவருக்கு வகுத்த விஷயம் விருப்பமாய் இருக்கும் –கடமை இனிமை இரண்டும் ஒன்றே –
பிராப்தம் -வகுத்த விஷயத்தில் ஆசை கிரமமாக இருக்கும் –
அபிமத -விரும்பிய பொருள்களில் ஆசை வரம்பு அழிந்து இருக்கும் –வகுத்த விஷயத்தில் ஆசைக்கு அவனை கால் கட்டக் கிடைக்கும் –
அதுவும் செய்தாரே அன்றோ
நோற்ற நோன்பு -ஆரா அமுதே -மானேய் நோக்கு -பிறந்தவாறும் -உலகம் உண்ட பெரு வாயா -என்னும் திருவாய் மொழிகளிலே-
விரும்பிய பொருள்களில் ஆசைக்கு காதலன் பாடே தூது விடுகை தொடக்கமாக மடல் எடுக்கை ஈறாக துணிதல்-
இவற்றை எல்லாம் செய்தாரே அன்றோ
அஞ்சிறைய மட நாராய் -தொடக்கமாக-மாசறு சோதி–வைகல் பூம் கழிவாய் –பொன்னுலகு ஆளீரோ -என்பன போன்ற திருவாய் மொழிகளிலே –
இப்படி பேணுமாறு எல்லாம் பேணியும் — நின் பெயரே பிதற்றுமாறோ நீ எனக்கு அருளும் அருள் -என்கிறார் –
அந்தோ-
உன்னை நீ பிரிந்து அறியாய் –
பிரிந்தாரை கண்டு அறியாய் -என்றது
நித்ய சூரிகள் பிரிந்து அறியார்கள் –சம்சாரிகள் பிரிவு அறியார்கள் –ஆதலால் இந்த ஆற்றாமை உடையவன் நான் ஒருவனே ஆயிற்று -என்ற படி
சேஷத்வம் மறந்தால் நம்மை நாம் பிரியலாம் -சேஷித்வம் மறவானே அவன் –
காணுமாறு அருளாய் –
திருவாறன் விளை என்னும் திவ்ய தேசத்தை அணித்து ஆக்குதல்–
அன்றிக்கே –
எனக்கு அவ்வளவும் கால்நடை தருதல் செய்யும்படி பண்ணுவாய் -என்னுதல் –
நன்று இப்படி எங்கு அருளக் கண்டு நீர் நிர்பந்திக்கிரீர் -என்ன-
காகுத்தா
ககுஸ்த வம்சத்தில் பிறந்தவன் அன்றோ –
ககுஸ்த வம்சத்தில் பிறந்து இருந்தால் ஆசைப் பட்டவர்கள் உடைய ஆசையை தீர்த்து வைக்க வேண்டுமோ என்ன –
ஒரு கார்யத்தை உத்தேசித்து வந்தவர்கள் ககுஸ்த வம்சத்தில் பிறந்த அரசர்கள் இடத்தில்
பலன் பெறாதவர்களாய் திரும்புகிறார்கள் இல்லை -என்பதே அன்றோ பிரமாணம் –
நஹி அர்த்தித்ய கார்யவசாப்யு பேதான்–ககுஸ்த வம்சே விமுகா ப்ராயந்தி -விஷ்ணு புராணம் -4-2-77-
நன்று அப்படி யாருக்கு காட்டினோம் -என்ன
ரூப சம்ஹனனம் -திருமேனியை
லஷ்மீம் -சமுதாய சோபையை
சௌகுமார்யம்–அனுகூலருக்கும் அடுத்துப் பார்க்க பொறாது இருக்கை-
ஸு வேஷதாம் -தாபத வேடம்
தத்ரூஸூ விஸ்மித ஆகார -ஆச்சர்யத்தோடு கூடிய அந்தக் கரணங்களை உடையவர்களாயக் கொண்டு கண்டார்கள் –
யார்தாம் என்னில்–வனவாசிநாம்–ராமஸ்ய ஆரண்ய காண்டம் -1-13
படை வீட்டில் உள்ளார் காணப் பெறாததை–சருகு இலை தின்று தூற்றிலே கிடந்தவர்கள் பெற்றார்கள் –
அது ஒருகாலம் அங்கனே செய்து போனோம் ஆகில் அது கொண்டு வளைக்கிறீரோ -என்ன –

கண்ணா–
இருடிகளுக்கே அன்றிக்கே–அப் பெண்களுக்கு நடுவில் வந்து தோற்றினான் -என்றபடியே
தாஸாம் ஆவிர்பூத் சௌரி ஸ்மயமான முகாம்புஜ–பீதாம்பரதர ச்ரக்வீ சாஷாத் மன்மத மன்மத -ஸ்ரீ பாகவதம் -10-32-2-
ஆயர்களுக்கும் ஆய்ச்சிகளுக்கும் காட்டிற்று இல்லையோ–
புறம்பு போக தேடுகிறது என் –
தொண்டனேன் கற்பகக் கனியே-
ஐம்புல இன்பங்களிலே நோக்கு உள்ளவனாய்–அவற்றிலே சபலனாய் திரிகிற எனக்கு
அதனைத் தவிர்த்து உன்னை –சர்வ ஸ்வதானம் -முற்றும் கொடுத்தவன் இலையோ –
பேணுவார் அமுதே –
நீயே வந்து மேல் விழா நின்றால் அல்லோம் என்னார்க்கு நிரதிசய போக்யன் ஆனவனே-விலக்காமையே அத்வேஷம் பேணுகை –
பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா –
யார் உன்னைப் பேண பிரளயம் கொண்ட உலகத்தை எடுத்துக் காத்தாய் –
பிரளயம் சமுத்ரம் சூழ்ந்த பெரிய உலகத்தை அதில் நின்றும் எடுத்து தரிப்பித்த பெரியோனே -என்றது
உன்னை ஆசைப்படுதல் ,ஆபத்தை அறிவித்தல் செய்ய மாட்டாத உலகத்தை அன்றோ காத்தாய் -என்றது
அதாவது
நீ அறிய ஆபத்து உண்டாம் அத்தனை அன்றோ காத்தற்கு வேண்டுவது –
இரட்ச்சகனுடைய பாரிப்பு இரட்சிக்கப் படுகின்ற பொருள்களின் அளவுக்கும் விஞ்சி இருத்தலின்
பேராளா -என்கிறார்-

———————————————————————————————–

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-

ஆஸ்ரித பவ்யன் -அநிஷ்டம் நிவர்த்திப்பிக்கும் -என் அவஸ்தா அநு ரூபமாக என்னை ரக்ஷிக்கா விடில் உன்னை எங்கனம் நம்புவார் –
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு-தரித்ரன் மகா நிதி எடுத்தால் போலே -நந்த -ஆனந்தம்
-வ ஸூ சொத்து- இரண்டும் சேராதே -நிரதிசய போக்யன் பிராணன் -விட -பவ்யன் -அத்யந்த சைஸவம் –
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !-யசோதைக்கு -தேவகிக்கு பெற்று விட்டாள்
-இவள் -தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்-நிரதிசய ஆனந்தாவாஹம் -யானைக்கு கன்று போலே -வேழ போதகம்
-செருக்கனாக வர்த்திப்பானாய் -உன் பெருமையைக் காட்டி பெரிய அம்மானே -கிட்ட முடியாமல் -தாய் தந்தை போலே என்னை கொள்ள வேண்டாமோ
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !-பிரபலமாய் -யுத்த கண்டூதி விஞ்சி தினவு -ஆஸ்ரித விஷய வாத்சல்ய ஜலதி யானவனே
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே-ஒரு விஷயத்தில் உதவாமல் இருந்தால் உன்னை தஞ்சம் என்று இருப்பர் எங்கனே விசுவாசிப்பர்
அடுத்ததோர் உரு-நரசிம்ம உருவு போலே என்றுமாம்

அடியாருக்கு எளியனாய் இருக்கிற நீ –
இன்று வந்து என் ஆபத்தை நீக்காது ஒழியின்–உன் குணமே ஜீவனமாக இருக்கும் அடியவர்கள்
உன்னை எங்கனே நம்பும்படி -என்கிறார்
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன் உயிர் சிறுவனே –
நிதி எடுத்துக் கொண்டாப் போலே உன்னை எடுத்துக் கொண்ட புண்ணியத்தின் மிகுதியை உடையவனே –
இருவரும் ஒக்க நோன்பு நோற்க -வசுதேவர் பெற்றும் முகத்தில் விழிக்கப் பெறாத போர விட்டு இருக்க–
நிதி எடுத்தாப் போலே எடுத்து புத்திரன் முகம் கண்டவர் அன்றோ –
முன்பு தரித்ரனாய் போந்தவன் சிறக்க வாழப் புக்கவாறே -இவன் எடுத்து எடுத்தான் -என்பார்கள் அன்றோ –
பேராளன் -பெரியோன்
நந்த கோபாலன் பெருமையோபாதியும் போரும் கண்டீர் என் சிறுமையும் –
நீ மகனாக வேண்டும் என்பார்க்கோ முகம் காட்டலாவது –
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம் -ஜகத்தே ராமனுக்கு கர்ப்பம் -அறிவேன் -உனக்கு கர்ப்பம் என்று நினைக்கிறாய் நீ –
ஸ்ரீ நந்தகோபனின் நல் ஜீவன் கண்ணுக்கு தோற்ற ஒரு வடிவு கொண்டு திரிகிறது இத்தனை –இவன் ஜீவனே கண்ணன்
அசோதைக்கு அடுத்த–
ஒக்க நோற்கச் செய்தேயும் கிலேசம் மிக்கு இருக்கும் அன்றோ -தேவகி உடம்பு நொந்து பெற்றவள் ஆகையாலே –
யசோதை பிரசவ வேதனை அனுபவியாது இருக்க பெற்றுக் கொடு நின்றாள் இத்தனை –
கிட்டிக் கொண்டு கண்டது இத்தனையே ஆதலின் -அடுத்த -என்கிறார் –அவர் எடுத்தார் -இவளுக்கு கிடைத்தது —
தெளிந்தவளான அந்த யசோதை யானவள் நீலோற்பல இதழ் போன்று கரிய நிறத்தோடு பிறந்த அந்த குழந்தையை கண்டாள் –
அக்காலத்திலேயே மிக்க மகிழ்ச்சியை அடைந்தாள் -என்கிறபடியே
ததர்ச ச ப்ரபுத்தா ச யசோதா ஜாதாம் ஆத்மஜம்–நீலோத்பல தளச்யாமம் ததா அத்யர்த்தம் முதம் யயௌ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-4-23
பேரின்பம் –
-நிரதிசய சுகத்தை விளைத்தவள் –தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே -பெருமாள் திருமொழி -7-8-என்னும்படி
இவளுக்கு எல்லை இல்லாத ஆனந்தத்தை விளைத்தான் ஆயிற்று –அந்தமில் பேரின்பத்தை சிற்றின்பம் ஆக்கினான் –

குலம் இளம் களிறே –
ஆயர் குலத்துக்கு யானைக் கன்று போலே ஸ்லாக்கியம் ஆனவனே-
அன்றிக்கே
நல் குலத்தில் தோன்றியதாய்-பருவத்தாலே மனத்தை கவரக் கூடியதாய் -இருப்பது
ஒரு மத யானை போலே யசோதை பிராட்டிக்கு பிடி கொடாதே திரியுமவனே என்னவுமாம் –
அகப்பட்டாலும் யானைக் கன்று போலே ஆயிற்று இருப்பது–
தறியார்ந்த கரும் களிறே போல் நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை –பெரிய திருமொழி -2-10-6-
ஒரு கம்பத்தோடு சேர்ந்த களியானை போலே யாயிற்று கட்டுண்டு நிற்கும் போது இருக்கும்படி –ஆயர் பெண்களுக்கு களிறு போலே –
தென்னானாய் –ஆழ்வார்களுக்கு யானை களிறு -யசோதைக்கு இளம் களிறு –
தடம் கண்கள் பனி மல்க –
இவள் ஆற்றல் இருந்தால் போய் காண் என்றால் -பின்னை அவனுக்கு கண்ணீர் பாய்கைக்கு மேற்பட இல்லை –
யதிசக்நோஷி கச்ச த்வம் அதி சஞ்சல சேஷ்டித-இத்யுக்த்வா அத நிஜம் கர்ம சா சகார குடும்பி நீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் – -5-6-115
சர்வ சக்தன் ஆற்றல் இல்லாதவன் போலே தோற்ற இருக்கை அன்றோ-இவள் நியமிக்க வல்லள் ஆகிறது-
தன்மையானை –
அடியார்கள் இட்ட வழக்கு ஆகையே தன்மையாக உடையவனே-
அடியனேன் பெரிய அம்மானே-
உன்னை மகன் என்று இருப்பார்கோ உதவல் ஆவது –
முறை உணர்ந்து இருப்பார்க்கு உதவல் ஆகாதோ –தேவ தேவோ ஹரி பிதா -பிதாச்ச-நவ வித சம்பந்தம் –

நான் முறையில் நின்றவாறே நீயும் முறையிலே நில்லா நின்றாய் -என்றது
அடியேன் என்று நான் சொல்ல நீ ஈச்வரனாய் இரா நின்றாய் என்றபடி-
போர் கடுத்த அவுணன் உடல் இரு பிளவா –
யுத்த கண்டூதியை -தினவை -உடையனான இரணியன் உடலை இரண்டு பாதியாகும்படியாக –
கை உகிர் ஆண்ட –
படை ஆண்டான் என்னுமா போலே-
எம் கடலே-
மகா விஷ்ணும் என்னும்படி –
உகரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம்-நருசிம்ஹம் பீஷணம் பத்தாம் ம்ருத்யு மிருத்யும் நமாம் யஹம் -அனுஷ்டுப்பு
பெரிய கிளர்தியோடே வந்து பிரகலாதனுக்கு உதவின அது தம் பேரே இருந்த படி
அடுத்தது ஓர் உருவாய் –
இவன் எங்கே காட்டப் புகுகிறான் என்று அறியாமையாலே எங்கும் ஒக்க சினைத்துக் கொடு நின்றான் –சினை -கர்ப்பம் –
ஒன்றனை அறுதி இட்டு தோற்றப் பற்றாதபடி அவன் மிகைக்கையாலே-
அப்போதைக்கு தகுதியான வடிவைக் கொண்டு –
அன்றிக்கே-
மனித வடிவம் பாதியாகவும் சிங்க வடிவம் பாதியாகவும் கொண்டு அவதரித்தவர் -என்கிறபடியே
நாச்யார்த்த ததும் க்ருத்வா சிம்ஹச்யார்த்த தானும் ததா -மகா பாரதம் -ஜன்ம ரகசியம் –
அவன் வரத்தில் அகப்படாத வடிவைக் கொண்டு -என்னுதல்
என்றது -பதற்றத்தாலே ஒன்றின் உடலையும் ஒன்றின் தலையையும் சேர்த்துக் கொண்டு வந்தான் -என்றபடி –
அடுத்தது ஓர் உருவாய் ஆயிற்று–கடுத்த போர் அவுணன் உடல் பிளந்தது-
இன்று நீ வாராய் –
அன்றும் இன்றும் ஆயிற்று உதவ வேண்டியது–
அன்று உதவினாய் -இன்று உதவுகின்றது இல்லை–
விபரீத ஞானம் உடையாருக்கு உதவினாய்-
உண்மை ஞானம் உடையாருக்கு உதவினாய்–
இந்த இரண்டு கோஷ்டிக்கும் புறம்போ -நான் -என்றது–
மகன் -என்று கலங்கினவனுக்கு உதவினாய் –
என்னிடம் இருந்தே எல்லாப் பொருள்களும் தோன்றுகின்றன –
என்னிடமே எல்லா பொருள்களும் லயம் அடைகின்றன -என்னும் தெளிவை உடையவனுக்கு உதவினாய் –
மத்த சர்வம் அஹம் சர்வம் மயி சர்வம் சநாதனே-அஹம் ஏவ அவ்யய அநந்த பரமாத்மா ஆத்ம சம்ஸ்ரய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-86-

என்று என்றே கலங்கி –
என்ற கலக்கம் உடைய எனக்கேயோ உதவல் ஆகாதோ என்றபடி-
நீ வாராது ஒழிந்தாலும் ஜீவிக்க ஆசை உடையார்க்கு அன்றோ உன்னை காற்கட்ட வேண்டுவது-
அது கிடக்கிடீர் -ஆனால் நீர் படுகிறது எற்றுக்கு என்ன –
எங்கனம் தேருவீர் உமரே–
இவ்வளவில் நீ முகம் காட்டாவிடில் உன் குண ஞானத்தாலே ஜீவிக்குமவர்கள் பிழைப்பார்களோ–உன் தமர் – உமர்
அன்றிக்கே
உன் குணங்களே தஞ்சம் என்று இருக்கிறவர்கள் எங்கனே உன்னை நம்பும்படி -என்னுதல்-

————————————————————————————————————-

உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4-

ஆஸ்ரித அநாச்ரித விஷயங்களில் அனுகூல பிரதிகூல -இருக்கையால் உன்னுடைய ரூப குண சேஷ்டிதங்கள் ஆஸ்ரித பரதந்த்ரம்
என்பதில் சங்கை -சர்வ அனுகூலர் என்ற நினைவுக்கு சங்கை -அடியேன் அனுகூலரோ பிரதி கூலரோ சங்கை -சம்பந்தம் பொதுவாக இருக்க
-இரண்டாக இருப்பது ஏன்உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
உனக்கு அசாதாரண உன் தமர் சேஷ பூதர்-உகந்த ரூபமே நின் ரூபம் -உகந்து உகந்து -நெடிய காலம் உகந்து -ஆஸ்ரிதர்
உகப்பையே தான் உகந்து -என்றுமாம் – இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்-
அன்பர் ஆசைப் பட்டு கைங்கர்யம் செய்ய விரும்பி -ஈர்க்கும் சேஷ்டிதங்கள் மாயை -ஆஸ்ரித பரதந்த்ரன் -ஒரே அறிவு
-அல்ப அறிவு -நான் அறிந்தேன் -அத்தையும் சங்கிப்பேன் -தஞ்சமான இதிலே சங்கை பண்ணும் படி வினையேன் -ஓ
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே-தூத்யாதி -அது அமர் பண்ணி -அந்த யுத்தம் -லோக பிரசித்தம் யுத்தம் உண்டாக்கி –
பூமி பரப்பு அடங்கல்-அவித்த நசிப்பித்த ஸ்வாமி
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ-அநு கூலர் -அதிசயித்த போக்யம் -பிரதி கூலருக்கு பிராண விநாசம் நஞ்சு –
இஷ்டம் கொடுப்பாய் அநிஷ்டம் தவிர்ப்பாய் என்பதால் எனக்கு உயிர் போலே -தாரகன் –

உன்னை அடியார்கள் இட்ட வழக்கு ஆக்கி வைப்புதி -என்னும் அறிவு ஒன்றாலுமே தரித்து இருக்கிற
அதுவும் பொய்யோ என்று ஐயப்படா நின்றேன் -என்கிறார் –

உமர் உகந்து உகந்து உருவம் நின் உருவம் ஆகி –
உனக்கே உரியராய் இருக்கும் அடியார்கள் மாறாதே உகந்த வடிவை உனக்கு திருமேனியாக கொள்ளுதி -என்னுதல்
அன்றிக்கே
உனக்கு நல்லவராய் இருக்குமவர்கள் உகந்ததனாலே நீ உகந்து–அதையே உனக்கு வடிவமாக கொள்ளுதி -என்னுதல்
ஒ அர்ஜுனா எவர்கள் என்னை எவ்விதமாக வணங்கு கிறார்களோ-அவர்களுக்கு அவ்விதமாகவே நின்று நான் அருள் புரிகிறேன் -என்றும்
யே யதா மாம் ப்ரபத்யந்தே தான் ததைவ பஜாமீ அஹம்-மம வர்த்ம அனுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த சர்வச -ஸ்ரீ கீதை -4-11-
தமர் உகந்தது எவ்வுருவம் -முதல் திருவந்தாதி -44-என்றும் -வருகின்ற படியே

உன் தனக்கு அன்பரானவர் அவர் –
உன் பக்கலிலே பக்தியினாலே பரவசப் பட்டு இருக்குமவர்கள் –
உகந்து –
மிக ஆதரித்து
அமர்ந்த செய்கை உன் மாயை –
ஒருவகையான பிரயோஜனத்தையும் விரும்பாமலே கிட்ட வேண்டும் செயல்கள்-உன்னுடைய ஆச்சர்யமான செயல்கள்-
அநந்ய பிரயோஜனராக தூண்டும் அவன் சேஷ்டிதங்கள் எல்லாம் –
அறிவு ஒன்றும் சங்கிப்பன் –
இந்த ஒரு குணத்தையும் பற்றின அறிவு ஆயிற்று இவர் உடைய இருப்புக்கு காரணம்-
அதிலே ஆயிற்று இவர்க்கு இப்போது ஐயம் தொடர்கிறது –
வினையேன் –
நான் ஒருவன் கண்ணாஞ்சுழலை இட்டு-ஐயப்படும் காட்டில்-
ஸ்வரூபத்தை பற்றி இருக்கிற குணங்கள் இல்லை யாகாதே யன்றோ –
அந்த குணத்தில் ஐயப்பாடு நான் செய்த பாபத்தால் அன்றோ –
பெருமாள் குற்றம் உடையவர் பக்கலிலும் குணத்தையே காண்கின்றவர் -செய்ந்நன்றி அறிகின்றவர் –
அருளோடு கூடினவர் -நன்னடத்தை உடையவர் என்று சொல்லப் பட்டவர் ஆயினும்
என் புண்ய குறையினாலே அருள் இல்லாதவர் என்று ஐயப்படுகிறேன் -என்கிறபடியே
இப்படிப்பட்ட குணங்களை உடையவர்க்கு நான் ஐயப்படும் காட்டில்
அவை இல்லை ஆகா அன்றோ -நான் ஐயப்படு வதற்கு காரணம் என் புண்ய குறைவே அன்றோ -என்றால் பிராட்டி –
அமரது பண்ணி
அடியார்கள் மாட்டு பஷ பாதத்தை உடையவர் என்னும் இடத்துக்கு உதாரணம் காட்டுகிறார் –
அந்த அமரைப் பண்ணி மகா பாரதம் அன்றோ –

அகல் இடம் புடை சூழ் அடுபடை அவித்த–
பூமிப் பரப்பு அடைய நெளியும்படி எல்லா திக்குகளிலும்–ஆக வந்து சூழ்ந்து கொண்டு கொல்ல வந்த சேனையை-அவித்த என்றது
தீயோர் கூட்டம் முழுதும் காட்டுத் தீ கிளர்ந்தாப் போல் கிளர்ந்து–சாரதி சாரதி -என்று வாய் பாரிக் கொண்டு வந்த தோற்ற-
அவர்கள் கிளர்தியை அவித்தான் -என்ற படி –
மழை கொலோ வருகின்றது -பெரியாழ்வார் திருமொழி -3-4-1–என்று சொல்லுகிற கிருஷ்ணன் ஆகிற காளமேகம் அன்றோ ஏறி அவித்தது –
அம்மானே –
எல்லார்க்கும் ஸ்வாமியாய் இருந்து வைத்து–
அடியார் மாட்டு உள்ள பஷபாதத்தாலே அடியார் அல்லாதாரைக் கிழங்கு எடுத்து பொகட்டான் இத்தனை –
அமரர் தம் அமுதே –
தேவர்களுக்காக அமரர்களோடே அம்பு ஏற்று செய்த செயல்களாலே அவர்களுக்கு-நிரதிசய போக்கியனாய் இருக்கும் படி-
அசுரர்கள் நஞ்சே-
பிறவியால் அசுரர்களையும் ஸ்வாபவத்தாலே அசுரர்களையும் உள்ளவர்களுக்கு ஆற்ற ஒண்ணாத நஞ்சு ஆனவனே –
என்னுடைய ஆர் உயிரேயோ-
நான் தரித்து இருப்பதற்கு காரணம் ஆனவனே-
தேவர்களுக்கு இனியனாய்–அசுரர் கூட்டத்துக்கு நஞ்சாய் இருக்கிற இருப்பு-தம்முடைய இருப்புக்கு காரணமாய் இருக்கிறபடி-

அம்மானே-
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த –
உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான-இவர் உகந்து அமர்ந்த செய்கை
யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்-
என்று அந்வயம்

————————————————————————–

ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

சர்வ பிரகார ரக்ஷகன் -உன்னை எத்தனம் பண்ணி அடைவது எங்கனம் -சரீரம் -பிரகாரம் -நான் ஆத்மா நீ பிரகாரி நீ
கரணங்கள் கர்த்தா கர்மா என்னது இல்லையே எல்லாம் உம்மது
ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த-ஆர் உயிரேயோ -பிராணங்களுக்கு உயிர் அவனே
விஸ்தீர்ணமான ஜகம் -படைத்து -அந்யாபிமானம் அறும் படி அளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த-பேர் உயிரேயோ-சர்வ சேஷி -ஏகார்ணவம் படைத்து -ஆப
-தானே கண் வளர்ந்து -கடைந்து -கடல் கார்யம் பாற் கடல் -சேது பந்தனம் -அடைத்து -தானே உடைத்து -தனுஷ்கோடியாலே
-எங்கே எப்பொழுது வால்மீகி ராமாயணம் இல்லை -அதி சாகச செயல் கோதண்டம் -சம்சாரிகளுக்கு தீர்த்தம் புனித ஸ்தலம் ஆகும் படி
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !-சீரியரேயோ -ஆத்மாவோ பாதி ஆத்ம ரக்ஷணத்தில் சிறப்பு
மநுஷ்யர்களுக்கு தேவர் போலே தேவர்களுக்கு உத்தேச்யதயா ஆஸ்ரய நீயன்
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ-ஓர் உயிரேயோ-பிராண கம்ய சகல பதார்த்தங்களும் –
ஏகாத்ம -சரீரத்துக்கு ஆத்மா போலே -தானே ஆத்மாவை ரஷிக்காதே –
நீயே தாரகன் -சேஷி ஸ்வாமி- பரிவன்-உத்தேச்யம் -ஸ்வரூப பேதம் இல்லாத படி -கர்மாதீனம் இல்லையே -இந்த வாசி உண்டே
-ஓர் உயிரேயோ-என்கிறார் -ஏக நியாந்தா -உன்னை ஒழிய -த்வத் ஏக தார்யம் சேஷயம் ரக்ஷகம் ஆஸ்ரயம் நி
-யத்னம் பண்ணுவதோ -ஓ -அத்தலை இத்தலை ஆவதே -வெறுப்பை காட்டுகிறார் –

சாஸ்திரம் பயன் பெறுவது செய்யும் கர்த்தா -பிரயத்தனம் உண்டான போது -என்கிறபடியே
பேறு உம்மதானால் சாதனம் உம்முடைய தலையில் ஆக வேண்டாவோ -என்ன
நான் முயற்சி செய்து வந்து காண என்று ஒரு பொருள் இல்லை -காண் என்கிறார் –
பேறும் என்னது இல்லையே -உம் பேற்றை நீர் அடையாததால் தான் கதறுகிறேன்-சேதனன் என்பதால் –
ஞான கார்யம் -சரணாகதி -உபாயம் இல்லை -ராஜ்யஞ்ச அஹஞ்ச -பரதன் -சொல்லாது ராஜ்யம் -சொல்லுவது சேதனன்

ஆர் உயிரேயோ –
ஸூ விஷய -சர்வ விஷய — என்னை ஆளி-அரங்கமாளி–மம நாத அரங்க நாத-ஆர் உயிரேயோ – -ஓர் உயிரேயோ
உயிர் நீராய் இருக்க நான் என்ன சாதனத்தை செய்து வந்து கிட்டுவேன் -என்றது –
சரீரத்தை காப்பது ஆத்மாவின் ஆர்யம் அன்றோ-
சரீரம் தன்னை தானே பாதுகாத்துக் கொள்ளவா -என்றபடி –
சம்பந்தம் மாத்ரமேயோ -அனுஷ்டானமும் இல்லையோ -என்கிறார் -மேல் –
அகல் இடம் முழுதும் படைத்து-இடந்து -உண்டு -உமிழ்ந்து -அளந்த பேர் உயிரேயோ –
பஹுச்யாம் -தைத்ரியம் –பல பொருள்களாகக் கடவேன் –என்று பூமிப் பரப்பு அடங்கலும் உண்டாக்கி
பிரளயத்தில் நோவு பட மகா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி –
மீண்டும் பிரளயம் வர வயிற்றில் வைத்து நோக்கிக் கொண்டு –
உள்ளே கிடந்தது தளராதபடி வெளி நாடு காண உமிழ்ந்து-
மகா பலியாலே கவரப்பட்ட நிலையிலே எல்லை கடந்து நடந்து மீட்டு-
இப்படி அந்த துர்தசையிலே என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்புவார் இல்லாது இருந்தும்-
உணர்ந்து நோக்கும் நீயே இது கிட்டும் விரகு பார்க்க வேண்டாமா-
பெரியோனே -பேர் உயிரேயோ -பெரியோன்

பெரிய நீர் படைத்து -அங்கு உறைந்து -அது கடைந்து -அடைத்து -உடைத்த சீரியரேயோ –
எல்லார் விஷயமாக செய்யும் செயலோடு -பிராட்டிமாருக்கு செய்யும் செயலோடு வாசி அற அற்று இருக்கிறபடி –
ஏகார்ணவத்தை படைத்து-
படைப்பின் பொருட்டு அதில் கண் வளர்ந்து –
பிராட்டியைப் பெருகைக்காக அதைக் கடைந்து –
அவளுடைய கலவிக்காக அதை அடைத்து –
அவ்வருகு உண்டான இராக்கதர்கள் வந்து அடியார்களை நலியாதபடி அதை உடைத்த–சீர்மையை உடையவனே-
இங்கே சீர்மை என்றது -பிராட்டியாரோடு அல்லாதாரோடு வாசி அற அங்கீகரிக்கும் தன்மையினை –
மனிசர்க்கு தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ –
ஐஸ்வர்யத்தாலும் பெருமையாலும் மனிதர்களுக்கு தேவர்கள் இருக்கும் போலே ஆயிற்று-
அந்த தேவர்களில் காட்டில் சர்வேஸ்வரன் இருக்கும்படி –

உலகங்கட்கு எல்லாம் ஓர் உயிரேயோ –
ஹிதத்தை சிந்தனை செய்வது கேவலம் சரீரமோ ஆத்மாவோ –
நான் உன்னைப் பெறுகைக்கு சாதனத்தை செய்கிறேன்-
உன்னைப் போல் இருப்பது வேறு ஒரு பொருள் உண்டாகில் சொல்லிக் காண் –
உயிராய் இருக்கிற உன்னை சரீரமாக இருக்கிற நான் என்ன சாதனத்தை செய்து வந்து கிட்டுவேன் –
ஆத்துமா சரீரத்துக்கு வேண்டிய ஹிதம் சிந்தனை செய்யுமது ஒழிய-
சரீரம் தன்னை தான் காத்துக் கொள்ளுவது என்று ஓன்று உண்டோ-
ஆதாரமாய் -நியமிக்கிறவனாய் -சேஷியாய் இருக்கிற நீ ஒழிய-
ஆதேயமாய் நியமிக்கப் படும் பொருளாய் சேஷமான இது தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்ளவோ –
ஆதார ஆதேய -நியந்த்ரு நியாமய – பாவங்களால் சரீர லஷணம் இந்த உலகுக்கு உண்டான பின்பு-
சிறிது அறிவும் -நீயே கடவாய் -என்கிற எண்ணத்துக்கு கண்ட இத்தனை அன்றி-
ஒரு சாதனத்தைச் செய்யக் கண்டதோ –

———————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: