பகவத் விஷயம் காலஷேபம் -158- திருவாய்மொழி – -7-10-1….7-10-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

சர்வேஸ்வரன் தம்மைக் கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்கொண்ட மஹோபகாரத்துக்குப் பிரதியுபகாரம்
தேடிக்காணாமை தருமாறினார், மேல் திருவாய்மொழியிலே;
இவர்தாம் தம்முடைய மயக்கத்தாலே பிரதியுபகாரந்தேடித் தடுமாறினார்த்தனை போக்கி இவர்தம்மால் கொடுக்கலாவது ஒன்றும் இல்லை;
அவன் ஒன்று கொண்டு குறைதீரவேண்டும் விருப்பமுடையன் அல்லன்;
இவர் தம்முடைய உபகார ஸ்மிருதி இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே செய்தது ஒன்றே அன்றோ?
ஆனாலும், ஆறி இருக்கமாட்டாரே! இனி, நாமும் அவனுக்கு ஒன்று கொடுத்தோமாய்,
அவனும் நம் பக்கல் ஒன்று பெற்றானாகச் செய்யலாவது ஒன்று உண்டு.
அவன், தனக்கு வகுத்த கைங்கரியத்தைச் செய்யவே, அதனைத் தனக்குப் பிரதியுபகாரம் செய்ததாக நினைத்திருக்கும் தன்மையனாய் இருந்தான்;
ஆன பின்பு, உம்முடைய சொரூபத்திற்குத் தகுந்ததான ஆத்துமா உள்ள அளவு உளதான அடிமையிலே அதிகரிப்போம்’ என்று பார்த்தார்.

இனித்தான் வேத வாக்கியங்களும் ‘தனது இயல்பான வடிவினை அடைகிறான்’ என்று
சொரூபத்தின் அடைதல் அளவும் சொல்லவே, அதற்கு அப்பால் கைங்கரியமானது அவகாத ஸ்வேதம் போலே
தன்னடையே வரும் என்று ப்ரஹ்மத்தினை அடைதல் அளவும் சொல்லிவிடும்.
ஸவேந ரூபேண அபிநிஷ்பத்யதே’-என்பது, சுருதி.
அவகாத ஸ்வேதம் – நெல் முதலியவற்றைக் குற்றும் போது சரீரத்தில் தோன்றும் வியர்வை.
ஆழ்வார்கள் ‘வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்’ என்று அதுதன்னையே சொல்லாநிற்பார்கள்;
அடைந்தன் பலமான கைங்கரியத்தில் ருசியாலே.
‘சம்சாரம் தியாஜ்யம்; சர்வேஸ்வரன் உத்தேசியன்’ என்கிற ஞானம் பிறந்து, பகவானை அடைந்தவர்கள்,
‘பகவானை அடைதல் (பிறவிப் பிணிக்கு) மருந்து’ என்று பகவானை அடைதல் அளவிலே நின்றார்கள்;
பேஷஜம் பகவத் ப்ராப்தி:’ என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 59.-
அவர்களைக்காட்டிலும்’ மயர்வற மதிநலம் அருளினன்’ என்கிறபடியே, பகவானுடைய திருவருளாலே
அடைந்த ஞானத்தையுடையரான இவர்களுக்கு வாசி இதுவாயிற்று.
இனி, அடிமை செய்யுமிடந்தன்னில் ‘சரீர சம்பந்தம் அற்றுப் பரமபதத்தை அடைந்தால் பின்பு செய்யுகிறோம்’ என்று
அவ்வளவும் ஆறியிருக்கும்படியன்றே, செய்ந்நன்றி நினைவு இவரை நலிகிறபடி?
ஆகையாலே, ‘ஸ்ரீவால்மீகி பகவான் பாடின ஸ்ரீராமாயணம் கேட்கைக்குத் திருவயோத்தியையிலே
திருத்தம்பிமாரும் தாமுங்கூடப் பெருமாள் பேரோலக்கம் இருந்தாற்போலே,
சர்வேஸ்வரனும் நாம் பாடின திருவாய்மொழி கேட்கைக்காகத் திருவாறன்விளியிலே
பரியங்க வித்தியையிற்சொல்லுகிறபடியே திருவனந்தாழ்வான் மேலே நாய்ச்சிமாருடனே கூடி
நித்திய பரிஜனங்களோடே கூட எழுந்தருளியிருந்தான்’ அங்கே சென்று திருவாய்மொழி கேட்பித்து அடிமை செய்வோம்,’ என்று எண்ணுகிறார்.
அங்ஙனம் எண்ணுமிடத்திலும், சர்வேஸ்வரன் அடையத் தக்கவனானால் அர்ச்சிராதி கதியோடு
தேசவிசேடத்தோடு வாசி அற அடையத்தக்கதில் சேர்ந்த தேயாமன்றோ? என்றது,
‘முன்பு அடையப்படாதனவாய்ப் பின்பு உபாயத்துக்குப் பலமாய் வருவன யாவை சில?
அவையெல்லாம் அடையத்தக்கதில் சேரக் கடவனவாம் அன்றோ?’ என்றபடி.அப்படியே,
‘திருவாறன்விளையிலே எழுந்தருளியிருக்கிற சர்வேஸ்வரன் திருவடியிலே போய் அடிமை செய்யக் கடவோம்.
அதுதானும் வேண்டா; அந்தத் தேசத்தை அடைதல்தானே அமையும். அதுதானும் வேண்டா;
இங்கே, இருந்தே அங்கு ஏறப்போவதாக எண்ணுகிற அவ்வெண்ணந்தானே அமையும்.
இனி, நாம் அத்தேசம் அடையத் தக்கது என்று புத்தி பண்ணிப் போருவதைப் போன்று,
அவனும் நாம் இருந்த தேசத்தைக் குறித்து வரக்கடவன்:
அவ்வளவிலும் நாம் அவனைத் தொடர்ந்து சென்று விட்டு நாம் அத்தேசத்திலே போய்ப் புகக்கடவோம்;
அத்தேசமே நமக்கு அடையத் தகுந்தது; அங்கே போய்ப் புகவே, நம்முடைய கைங்கரிய விரோதிகள் அனைத்தும் கழியும்.
இனி, நான் வேறு ஒன்றிலே இச்சை பண்ணினாலும், என் நெஞ்சமானது அத்தேசத்துக்கு ஒழிய ஒரு தேசத்துக்கு ஆளாக மாட்டாது;
‘என்னுடைய மனமானது வேறு ஒன்றிலும் செல்லுவது இல்லை’ என்கிறபடியே.
’ பாவோ நாந்யத்ர கச்சதி’ என்பது, ஸ்ரீராமா. உத்தர. 40 : 15
ஆக, திருவாறன்விளையிலே புக்கு அடிமை செய்யக்கூடிய படிகளை எண்ணி இனியர் ஆகிறார்.
ஸ்ரீ ராமாயணத்தைக்காட்டிலும் இதற்கு வாசி, பாடினாரே கேட்பிக்கையும், பாட்டுண்டாரே கேட்கையுமாயிற்று.

சீதையின் மஹத்தான சரிதம்’ என்னாநிற்கச்செய்தே,
கவி பாட்டுண்டவளை ஒழியத் தானே அன்றோ கேட்டது? பாடினான் ஸ்ரீவால்மீகி பகவான்; கேட்பித்தாரும் குசலவர்கள் அல்லரோ?

வன்னி பழம்-அர்ஜுனன் சம்பந்தம் -பாம்பை ஆற்றங்கரை -இன்றும் இங்கே பிரசாதம் –
ஆகிஞ்சன்யம் இவருக்கு -அவனுக்கு பூர்த்தி -அவாப்த ஸமஸ்த காமன் -பிரதியுபகாரம் இங்கும் அங்கும் இல்லை என்றவர்
-வகுத்த கைங்கர்யம் உண்டு என்று கண்டு பிடித்தார்
ஸ்வரூப சித்திக்கு செய்வதை பிரதியுபகாரம் என்று அவன் திரு உள்ளம் பித்தன் அன்றோ-
துணைக் கேள்வி -இங்கு -நம்மைப் பார்க்கும் வேகத்தில் பாசுரம்விடாதீர் -திருக் குறள் அப்பன் –
32 நாள் லவ குசர் ஸ்ரீ ராமாயணம் அருளி -சிலர் நைமிசாரண்யத்தில் என்பர் -இங்கு ஈட்டில் திரு அயோத்யையில் என்று தெளிவாக உள்ளதே –

————————————————————————————————

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-

சேஷி -ஸ்ரீ லஷ்மி உடன் -பகல் ஓலக்கம் -கைங்கர்யம் செய்யும் காலம்
இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை -ஸுந்தர்யாதி-பத்ம வாசித்தவத்தால் வந்த போக்யத்வம் –
அவள் அகலகில்லேன் இறையும் என்னும் படி தானும் -திருக் குறள் அப்பன் -பரஸ்ப ஆனந்த வ்ருத்தி
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்-போக சாரஸ்யம் -சர்வ சேஷி வியாவ்ருத்தி தோன்ற வீற்று இருந்து
வியக்த அவ்யக்த -கால சுத்த சத்வம் பக்தாதி த்ரிவித சேதனர் -எங்களை வாசிக்க கைங்கர்யம் கொண்ட உபகாரகன்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை -அடிமை கொள்ள ஏகாந்த ஸ்தலம் –உகந்து-தர்ச நீயமான
-பிரயோஜ நாந்தரங்களை கொண்டு அகலாமல்
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?-ஆசை உடன் இருந்து -அர்ஜுன ஸ்தலம்
பொருந்தி -ஸ்வரூப அனுகூல பிரத்யக்ஷணம் பத்தாஞ்சலி-வாசா கைங்கர்யம் செய்யப் பெறுவோமோ

அழகிய தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியாரும் தானும் இன்பம் பிறக்கும்படியாக இனிதாக ஒரு சேர எழுந்தருளியிருந்து.
இந்த ஏழ் உலகங்களை இன்பம் பிறக்கும்படியாக ஆள்கின்ற எங்கள் பிரானானவர் அன்போடு மனம் பொருந்தி எழுந்தருளியிருக்கின்ற
அழகிய சோலைகள் சூழ்ந்த திருவாறன்விளை என்னும் திவ்விய தேசத்தை அன்போடு மனம் பொருந்தி வலம் செய்து
கை தொழுகின்ற நாள்களும் உண்டாகுங் கொல்?
‘எழில் மலர் மாதரும் தானும் இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து இவ்வேழ் உலகை இன்பம் பயக்க ஆள்கின்ற எங்கள் பிரான்
உறைகின்ற திருவாறன் விளையை வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொல்?’ என்க, பிரான் – உபகாரகன்.

‘திருவாறன்விளையிலே புக்கு உவகையினராய்க் கொண்டு அடிமை செய்யுங்காலமாகவற்றே?’ என்று எண்ணுகிறார்.

இன்பம் பயக்க –
எப்பொழுதும் துக்கத்தையே அடைந்து கொண்டிருக்கிற சம்சாரி சேதனனுக்குத் தன்னுடைய சேர்த்தியாலே
.ஆனந்தம் உண்டாமாறு போலே ஆயிற்று பிராட்டியுடைய சேர்த்தியாலே
‘ஆநந்தமய:’ என்கிற வஸ்துவான அவன் தனக்கும் ஆனந்தம் உண்டாம்படியும்;
‘அல்லி மலர்மகள் போக மயக்குகளாகியும் நிற்கும் அம்மான்’ திருவாய். 3. 10 : 8.என்று
பிராட்டியுடைய சேர்த்தியாலே பிச்சு ஏறி இருக்குமாயிற்று.
‘ராம: – ஸ்ரீபரசுராமாழ்வானைச் செருக்கு வாட்டிப் படை வீட்டிலே வந்து புகுந்து சக்கரவர்த்தியையும்
மஹரிஷிகளையும் பின் பற்றித் தர்மத்தையே மிகுதியாக நடத்திப் போந்தவர்.
து – தமப்பனுக்குச் செய்ய வேண்டிய குற்றவேல் முதலியவைகளைச் செய்து பின்பு பிராட்டியுடைய ரசதாரையிலே இழிந்த பின்பு,

‘ராமஸ்து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹூந் ருதூந் மநஸ்வீ தத்கத: தஸ்யாநித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 25.

‘இதற்கு முன்பெல்லாம் வாத்ஸ்யாயநம் கற்றுக் காம தந்திரமே நடத்திப் போந்தாரித்தானையோ!’ என்னும்படி வேறுபட்டார். என்றது,
‘முன்பு போருகிற நாளில் ‘இவர் இதற்கு முன்பு காம ரசம் புதியது உண்டு அறியாரோ?’ என்னும்படி போந்த இவர்,
இப்போது ‘இதற்கு முன்பு தருமத்தின் உண்மையைப் புதியது உண்டு அறியாரோ?’ என்னும்படி வேறுபட்டார்,’ என்றபடி.

ஸீதயா ஸார்த்தம் – அயோநிஜையாய்ப் பரமபதத்தில் தானும் அவனுமாய் இருந்து கலந்த போதைச் செவ்வியில்
ஒன்றும் குறையாமல் இருந்தவள் அன்றோ பிராட்டி? இப்படி இருக்கச் செய்தேயும், தம்மை அழிய மாறி மற்றைச் சாதியினரோடு
ஒத்தவராக அவதரித்தாரேயாகிலும், போகத்தில் வந்தால் அவளுங்கூடப் பிரதானம் அற்றவளாம்படி அதில் தலைநின்றார்.
‘அதற்கு அடி என்?’ என்னில், இராசபுத்திரரான ரசிகத் தன்மையால் வந்த ஏற்றத்தாலே.
விஜஹார – பாரிப்பே ஒழியப் போகத்தில் இழியப் பெற்றிலர்; தொடக்கத்துக்கே பணி போந்ததித்தனை. என்றது,
‘உபோத்காதத்துக்கே காலம் போந்ததித்தனை’ என்றபடி.
பஹூந்ருதூந் – ‘ஸமாத்வாதஸ தத்ராஹம’ என்கிறபடியே.

‘ஸமாத்வாதஸ தத்ராஹம்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 17.
‘நான் அங்குப் பன்னிரண்டு வருடங்கள் முடிய’ என்பது இதற்குப் பொருள். இது, பிராட்டியின் வார்த்தை.

பன்னிரண்டு ஆண்டு ஒரு படிப்பட அனுபவிக்கச்செய்தேயும், ‘ருது’ சப்தத்தாலே சொல்லுகிறான் ஆயிற்று,
அவ்வவ காலங்களுக்கு அடைத்த மலர் முதலான உபகரணங்களைக்கொண்டு கால அவயவங்கள் தோறும்
அனுபவித்துப் போந்தமை தோற்ற. என்றது,
‘குளிர் காலத்துக்கு அடைத்தவைகொண்டு பரிமாறியும் வெயில் காலத்துக்கு அடைத்தவைகொண்டு பரிமாறியும்
அனுபவித்தமை தோற்றச் சொல்லுகிறான்’ என்றபடி.
மநஸ்வீ – பிரணயதாரையில் வந்தால், அவள் பாரித்த பாரிப்புக்கு எல்லாம்
யானைக்குக் குதிரை வைக்கைக்கு ஈடான நெஞ்சில் அகலமுடையவராயிற்று.

தத்கத: திரவியம் திரவியத்தோடு சேர்ந்தாற்போல அன்றிக்கே, சாதி குணங்கள் திரவியத்தோடு சேர்ந்தாற்போலே சேர்ந்தார்;
‘நான் பெருமாளோடே கூடியே இருப்பவள்’ என்றும், ‘சீதை என்னோடு கூடியே உள்ளவளன்றோ?’ என்றுமன்றோ

அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா’-என்பது, ஸ்ரீராமா. சுந். 21 : 16. இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா’ ஸ்ரீராமா. யுத். 122 : 19. இது,
இராவணவதத்தின் பின் வந்து கூடிய பிரமன் முதலிய தேவர்களைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது.

இருவர் வார்த்தைகளும்? தஸ்யாநித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித: – இதில் இழிவதற்கு முன்பு இவரை அறிந்திருக்குமவளாகையாலே,
‘அப்படிப் பெரியவர் இப்போது என் பக்கலிலே தாழிநிற்பதே இப்படி இது ஒரு நீர்மையே!’ என்று
எப்போதும் இந்த நினைவே செல்லுகை ஆகையாலே, வேறு ஒன்றும் நெஞ்சிற்படாதே அவள்.
தன்னைத் தம் பக்கலிலே பொகடும்படி ஆனார்.
தத்கத – என்கையாலே, இவர் தம்மை அவள் பக்கலிலே ஓக்கினபடி சொல்லிற்று
‘நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’ என்கையாலே. அவள், தன்னை இவர் பக்கலிலே ஓக்கினபடி சொல்லுகிறது.
இப்படி இருவருமான சேர்த்தியிலே, இதற்கு முன்பு ஆனந்தம் புதியது உண்டு அறியாதான்
ஒருவனுக்கு ஆனந்தம் உண்டாமாறுபோலே ஆயிற்று, கணந்தோறும் உண்டாம்படி.’

எழில் மலர் மாதரும் –
‘ராகவன் வைதேவியை ஒக்கின்றான்’ என்னுமாறு போலே ஆயிற்று இத்தலை.
தானும் –
‘எவனுக்குச் சீதை மனைவியாக ஆவாளோ’ என்றும்
‘ஜனகனுடைந பெண்ணாகிய சீதை எவனுடைய மனைவியோ’ என்றும் சொல்லலாம்படி ஆயிற்று.
ராகவோர்ஹதி வைதே ஹீம்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 5.
‘யஸ்ய ஸீதா பவேத் பார்யா’-என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 34 : 18.
‘யஸ்ய ஸா ஜநகாத்மஜா’-என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 37 : 18.

ஆக, ‘ராகவோர்ஹதி’ என்கையாலே, ‘எழில் மலர் மாதர்’ என்று பிராட்டி வைலக்ஷண்யமும்,
‘யஸ்ய ஸீதா பவேத் பார்யா’ என்று ‘பார்யா’ என்கையாலும், ‘யஸ்ய ஸா ஜநகாத்மஜா’ என்பதில் ‘யஸ்ய’ என்பது,
அடிமைப்பொருளில் ஆறாம் வேற்றுமையாகையாலும், ‘தானும்’ என்று பெருமாள் வைலக்ஷண்யமும் சொல்லுகிறது என்றபடி
‘இத்தலை’ என்றது, பிராட்டியை. ‘அத்தலை’ என்றது, பெருமாளை.

‘நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்; கொம்பினைக் காணுந் தோறும் குரிசிற்கும் அன்ன தேயாம்’-
என்ற செய்யுளை இங்கு நினைவு கூர்க. கம்பரா.

அத்தலை. இவ்வேழ் உலகை இன்பம் பயக்க –
‘இராமர் சீதையைப் பெற்றுப் பின்னர் இராச்சியத்தை அடைந்தார்; உலகம் மிக்க உவகையை அடைந்தது’ என்கிறபடியே
, தந்தை தாயார் இருவரும் சேர இருந்து பரியப் புக்கால் குழந்தைகளுக்கு ஒரு குறையும் பிறாவாதே அன்றோ?

‘ராம: ஸீதாம் அநுப்ராய ராஜ்யம் புந: அவாப்தவாந் ப்ரஹ்ருஷ்டமுதிதோ லோக:
துஷ்ட: புஷ்ட: ஸூதார்மிக:’-என்பது, சந்க்ஷேப ராமா. 1. : 89. 2
ஆக, இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தம் உண்டாக, அச்சேர்த்தியைக் காண்கையாலே
உலகத்துக்கு ஆனந்தம் உண்டாக, அதனைக் கண்டு குழந்தை பால் குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப்போலே
இவர்களுக்கு உண்டான பிரீதியைக் கண்டு அதனாலே தாங்ஙள் இனியராய் இருப்பர்களாயிற்று.
இனிது உடன் வீற்றிருந்து ஆள்கின்ற –
தன் சந்நிதியாலே உலகம் அடையத் தளிரும் முறியுமாம்படி இருக்கிறவன், தான் பெறாப்பேறு பெற்றாற்போலே,
‘திருவாய்மொழி கேட்கைக்குத் தகுதியாக இருப்பது ஒரு தேசம் பெற்றோம்’ என்று விரும்பி வசிக்கிற தேசமாயிற்று.
எங்கள் பிரான் –
‘கேசவன்தமர்’ என்ற திருவாய்மொழிக்குப் பின்பு இவர்தாம் தனியார் அல்லர் அன்றோ?
என்னை இடுவித்துத் திருவாய்மொழி பாடுவித்துக்கொண்ட உபகாரகன்.

அன்புற்று –
‘திருவாய்மொழி கேட்கலாய் இருப்பது ஒரு தேசம் பெறுவோமே!’ என்று அங்கே அன்பினை வைத்து.
அமர்ந்து –
அந்தத் தேச வாசத்துக்கு மேற்பட ஒரு பிரயோஜனத்தைக் கணிசியாதே விரும்பி.
உறைகின்ற –
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே, நித்தியவாசம் செய்கிற.
அணிபொழில் சூழ்திருவாறன்விளை –
‘பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருப்பதாய், அவன் தனக்கும் உலகத்துள்ளார்க்கும் இருந்து
திருவாய்மொழி கேட்கைக்குத் தகுதியான பரப்பையுடைத்தாய்.
காட்சிக்கு இனியதாய் இருக்கிற பொழிலாலே சூழப்பட்ட திருவாறன்விளையை.
‘அதனால் அந்த மக்கள் அவனைப் பின் தொடர்ந்தார்கள்’ என்கிறபடியே,

ஸர்வேஷாம் ஹி ஸதர்மாத்மா வர்ணாநாம் குருதே தயாம் சதுர்ணாம் ஹி வயஸ்தாநாம்
தேநதே தம் அநுவ்ரதா:’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 17 : 15..
அவனுக்கு உத்தேசியமான இடமும் இவனுக்கு உத்தேசியமாகக் கடவது அன்றோ?
அன்புற்று –
‘திருவாய்மொழி கேட்கைக்குத் தக்கதான தேசம் பெற்றோம்’ என்று அவன் விருப்பத்தை வைத்தாற்போலே,
‘திருவாய்மொழி கேட்பிக்கைக்குத் தக்கதாய் இருப்பது ஒரு தேசத்தைப் பெறுவோமே!’ என்று அத்தேசத்திலே விருப்பத்தை வைத்து.
அமர்ந்து –
அத்தேச வாசத்துக்கு அப்பால் ஒரு பிரயோஜத்தை விரும்பாமல்.
வலஞ்செய்து –
வலம் வருதல் முதலானவற்றைச் செய்து.
கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ –
‘அந்தக் காலம் இந்த நாளாக வேண்டும்’ என்றாரே ஸ்ரீகௌசல்யையார்.
‘போய் வருகை தவிராராகில் மீண்டு புகுரும் நாள் இன்று ஆயிற்றாகிலோ’ என்றார்போலே,
‘அபீதாநீம் ஸகால: ஸ்யாத் வநாத் ப்ரத்யாகதம் புந: யத்த்வா புத்ரக பஸ்யேயம் ஜடாமண்டல தாரிணம்’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 24 : 37.

இந்த எண்ணத்திற்கு அடைத்த காலமே அனுபவத்துக்கு அடைத்த காலமாகப் பெற்றோம் ஆகிலோ?’ என்கிறார்.

——————————————————————————————————-

ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–7-10-2-

ஆனந்த வ்ருத்தி -கல்யாண குணம் -நீள் நகரிலே -பிரவண சித்தம் பரத்வ விமுகம் ஆக்கும் -நாயனார் –
அநந்யார்ஹத்வம் -ஆபாதகம் த்ரிவிக்ரம் அவதானம் -நித்ய வாசம் -வாச நீர் கொண்டு -திரு அலகிட்டு-மநோ ராதிக்கி
-கொள்வன் மா வலி மூவடி -கேட்டதுக்கு -திருவாய்மொழி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு திருக் குறள் அப்பனுக்கும் பிராட்டிக்கும் –
இரண்டு அடிக்குள் அடங்கும் படி ஈரடியால் அடக்கிக் கொண்ட முக்கியம் -இது சக்யமோ என்று பார்த்தவர்களுக்கு சங்கை –
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்-அவதார ஸ்தலம் -உபேந்த்ரன் தேவ லோகம் விட இங்கு விரும்பி
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை-மகத்தான -கம் -மாக வைகுந்தம் -ஆகாசம்
-சுகம் கம் மே கம் -கம் மே கம் -சுகம் ஆகாசம் போலே அபரிச்சின்ன -உயர்ந்த கொடிகள் மாடங்கள்
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ-விலக்ஷணமான கந்த நீர் கொண்டு தூவி அஞ்சலி -கூடும் கொலோ –
சங்கை ஒன்றும் இன்றி மேலே கூட்டவுமாம் -ஆலப்புழா -பம்பை நீர் -வடக்குப் பக்கம் திரு வண் வண்டூர் -இந்த திவ்ய தேசம் இந்தப்பக்கம்

ஆகுமோ!’ என்ற சந்தேகம் ஒரு சிறிதும் இல்லாமல் அகன்று உலகமனைத்தும் இரண்டு திருவடிகளுக்குள்ளே ஆகும்படி வளர்ந்த அழகிய
வாமனனாகிய உபகாரன் பொருந்தி எழுந்தருளியிருக்கின்ற, பெரிய ஆகாசத்திலே விளங்குகின்ற கொடிகளையும் மாடங்களையும்
நீண்ட மதிள்களையுமுடைய திருவாறன்விளை என்னும் திவ்விய தேசத்தை, சிறந்த வாசனை பொருந்திய தண்ணீரைக்கொண்டு
தூவி வலம் வந்து கையால் தொழுவதற்குக் கூடுமோ?
‘அப்பன் உறையும் திருவாறம்விளை’ என்க. ‘திருக்குறள்’ என்னும் இவ்விடத்தில், திருவள்ளவனார் தம்முடைய நூலுக்குத் ‘திருக்குறள்’ என்று
பெயர் வைத்திருத்தலை நினைவு கூர்தல் தகும்.

‘திருவாறன் விளையிலே மிக்க வாசனையையுடைத்தான நீரைக்கொண்டு
திருநீர் விட்டு வலம் வந்து கையாலே தொழவும் கூடவற்றே!’ என்கிறார்.

ஆகுங்கொல் ஐயம் ஒன்று இன்றி –
இது அநுபாஷணம் ஆகாநிற்கச் செய்தே, ஆதரத்தின் மிகுதிக்குச் சூசகமாயிருக்கிறது.
ஒரு சந்தேகம் இன்றிக்கே நமக்கு இது கூடவற்றோ?
‘அன்றிக்கே, ஆகுங்கொல் என்ற ஐயமுங்கூட இன்றிக்கே ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்தான்’ என்று மேலே கூட்டவுமாம்.
எல்லாம் செய்தாலும் ‘நமக்கு இது கூடுமோ, கூடாதோ!’ என்று இருந்தானாயிற்று இளமைப்பருவத்தாலே.
அகல் இடம் முற்றவும் –
பரப்பையுடைத்தான பூமியும், புவர்லோகம் முதலானவைகளும் எல்லாம்.
ஈர் அடியே ஆகும் பரிசு நிமிர்ந்த –
இரண்டு அடியே ஆகும் பரிசு நிமிர்ந்த; என்றது, ‘இரண்டு அடிகளாலே பூமியையும் மேல் உலகங்களையும் அளந்தானாயிற்று,
ஓர் அடிக்கு இவளைச் சிறையிட்டுவைக்க நினைத்து’ என்றதனைத் தெரிவத்தபடி. -பரிசு பிரகாரம்
திருக்குறள் அப்பன் –
ஸ்ரீ வாமனனான மஹோபகாரகன்.-அழகைக் காட்டியஉபகாரகன்
அமர்ந்து உறையும் –
இந்திரனுக்கு இராச்சியத்தை வாங்கிக் கொடுத்துத் திருப்பாற்கடலிலே போய்ச் சாய்கை அன்றிக்கே,
அவன் வந்து நித்தியவாசம் செய்கிற.
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை –
அவன் திருவடியால் அளந்த ஆகாசப்பரப்பு அடங்கலும் பரந்துள்ள கொடிகளையுடைத்தான மாடங்களை,
ஓங்கியிருந்துள்ள மதிள்களையுமுடைத்தான திருவாறன்விளையை. -கொண்டைக் கோல் நாட்டிய இடம் இது
மா கந்தம் நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல் –
‘பூமியை அடங்கலும் பனி போன்ற குளிர் நீரால் நனைக்கட்டும்’ என்று ஸ்ரீ நந்திக்கிராமம் தொடங்கி
ஸ்ரீ பரத்துவாச பகவான் ஆஸ்ரமத்தளவும் வர, பனி நீராலே விடுவித்தான் ஸ்ரீசத்துருக்நாழ்வான் என்றது அன்றோ?

ஸிஞ்சந்து வஸூதாம் க்ருத்ஸ்நாம் ஹிமஸீதே நவாரிணா’-என்பது, ஸ்ரீராமா. யுத். 130. 6.

அப்படியே, மா கந்த நீர் கொண்டு தூவி அநுகூலமான காரியங்களைச் செய்து கைதொழக் கூடவற்றேயோ?

—————————————————————————————–

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

ஆஸ்ரித ரக்ஷணம் அர்த்தமாக -ஆகாரம் உடைய -பெரிய திருவடி வாஹனன் -சேவித்து திவ்ய தேசம் நித்யாமாக தொழ வாய்க்குமோ –
ஸ்ரீ பலி -உத்சவர் நித்யம் எழுந்து அருளி –
கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை-கோ ரக்ஷணம் -மதுவை அழித்து -அத்யுஜ்வல தேஜோ ரூபா சிம்மம் –
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்-தர்ச நீய கதி–அனுபவித்து – கும்பீடு காட்டுவதைக் காட்டிலும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்-அவன் நித்ய வாசம் செய்யும் -குணங்களை பாடும்
பெருமை கொண்ட நான் மறை பிரதிபாத்ய வைபவம் -பஞ்ச மஹா யஜ்ஞ்ஞ ங்ள் -சீஷாதி அங்கங்கள் விரித்து-விளக்கமாக அறிந்து
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே-நித்தியமாக இவை கிட்டுமோ -அவன் உபாயம் -திவ்ய தேச வாசம் பிராப்யம்

நாள்தோறும் இப்படிக் கூடவற்றோ? கோவிந்தனும் மதுசூதனனும் மிடுக்கையுடைய நரசிங்கமானவனுமான எம்பெருமானை,

வெற்றி பொருந்திய கருடப்பறவையின்மேலே கண்டு கைகூப்பித்தொழுதலே அல்லாமல், அவன் எழுந்தருளியிருக்கின்ற.
பேசப்படுகிற பெரிய புகழையுடைய நான்கு மறைகளையும் ஐந்து யாகங்களையும் ஆறு அங்கங்களையும் நன்கு கற்று ஓம்புகின்றவர்களான
அந்தணர்கள் வாழ்கின்ற, நீண்ட சோலைகள் சூழ்ந்த திருவாறன்விளை என்னும் திவ்விய தேசத்தைத் தொழுவதற்கு எப்பொழுதும் வாய்க்குமோ?
‘அவன் உறையும் திருவாறன்விளை; பன்னினர் வாழ் திருவாறன்விளை’ என்க. ‘புகழ்’ என்பதனை, ‘பன்னினர்க்கு’ அடையாக்கலுமாம்.

‘திருவாறன்விளையில் எம்பெருமான் பெரிய திருவடிமேல் ஏறி எழுந்தருளக்கண்டாலும்,
அதனைத் தவிர்ந்து திருவாறன்விளையைத் தொழக் கூடவற்றே?’ என்கிறார்.

கூடுங்கொல் வைகலும் –
இதுவும் அநுபாஷணமாய், ‘நாள்தோறும் நமக்கு இது கூடவற்றேயோ?’ என்கிறார்.
கோவிந்தனை மதுசூதனைக் கோள் அரியை –
அங்கு நிற்கிறவனைக் கண்டால் மூன்று படி தொடை கொள்ளலாய் இருக்கும்.
ஆஸ்ரித வாத்சல்யம், ஆஸ்ரித விரோதி நிரசின சீலதை, அடியர் அல்லார்க்குக் கிட்டுதற்கும் அரியன் என்னும் இவை.
‘ஜ்வலந்தம் – விளங்குகின்றவனை’ என்கிறபடியே, ‘கோளரி’ என்கிறார்.
ஆடுபறவை மிசைக்கண்டு –
வெற்றிப் புள்ளின்மேலே கண்டு. ஆடு – வெற்றி.
அன்றிக்கே, சர்வேஸ்வரன் வாகனம் என்கிற உவகையின் மிகுதியாலே கட்குடியர் போன்று
களித்து ஆடாநின்றுள்ள திருவடி திருத்தோளிலே கண்டு என்னுதல்.
நாம் திருவாறன்விளையைப் பிராப்பியம் என்று போகிறதைப் போன்று,
அவனும் திருநகரியை’உத்தேசியமாம் என்று வாராநிற்கும் அன்றோ?
கண்டு – நடுவழியிலே கண்டால்.
கைதொழுது – காரியங் கொண்டிலோமே ஆகிலும், கிட்டினால் கைதொழுகைக்குச் சம்பந்தம் உண்டே அன்றோ?
ஆகையாலே முறை தப்பாமல் பணிதல் செய்து. அன்றி – அவனை விட்டு.
அவன் உறையும் –
அவன் இராத் தங்கும் ஊரிலே போய்ப் புகக் கடவோம்;
சர்வேஸ்வரன் பிராப்பியன் ஆகாநிற்கச் செய்தே ஒரு தேச விசேடத்திலே போய் அனுபவிப்பதாக ஒரு நியதி உண்டு அன்றோ?

பாடும் பெரும்புகழ் நான்மறை –
அவனுடைய கல்யாண குணங்களைப் பாடாநின்றுள்ள நான்கு வகைப்பட்ட வேதங்கள்.
வேள்வி ஐந்து –
ஐந்து பெரிய யாகங்கள்.
ஆறு அங்கம் –
அங்கங்கள் ஆறும்.
இவற்றைப் பன்னினவர்கள் –
எஃகிக்கரை கண்டு இருக்குமவர்கள்.
‘ஓருவர்க்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு’ என்னும்படி, அவ்வூரிலுள்ளாரோடு சென்று கூடவேணும்.
வாழ் –
வேததாத்பரியனானவனைக் கண்களாலே கண்டு அனுபவித்து வாழாநின்றுள்ள.
நீடு பொழில் திருவாறன்விளை தொழ –
ஓக்கத்தையுடைத்தான பொழிலையுடைய திருவாறன்விளையைத் தொழ.
வாய்க்குங்கொல் நிச்சலுமே –
அங்குத்தை ஸ்ரீவைஷ்ணவர்களோடே கூடி நித்தியானுபவம் பண்ணக் கூடவற்றேயோ?

———————————————————————————————————

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

மநோ ரதப் பாசுரம் -நீடித்திக் கொண்டே இருக்க வேண்டும் -பாரிப்பே போதுமே – அநு பாவ்ய விக்ரக விசிஷ்டன் -நெஞ்சால் நிரந்தரமாக நினைக்க கிட்டுமோ
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற-இங்கேயே இருந்து -மன விருப்பம்
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை-சம்ருத்தமாய் -கரும்பினிலும் இனியன் -அவனே -நெல்லும் கரும்பும் சேர்ந்து
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த-த்ரிவித-சேதன அசேதனங்களுக்கு ஈசன் -ஸ்வாமி -அபி விருத்தமான புகழ் -ஆஸ்ரித ரக்ஷணம் -அவதரித்து
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?-நீல ரத்னம் -மகா உபகாரகன் -விகசிதமான திருவடித் தாமரை

தகுதியான கரும்புகளும் பெரிய செந்நெற்பயிர்களும் பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருவாறன்விளை என்னும் திவ்விய தேசத்தில்
எழுந்தருளியிருக்கின்ற, பொருந்திய பெரிய புகழையுடைய மூன்று உலகங்கட்கும் தலைவனும், வடமதுரையிலே அவதரித்த,
பொருந்திய நீலமணி போன்ற நிறத்தையுடைய கண்ணபிரானுமான எம்பெருமானது தாமரை மலர் போன்ற திருவடிகளை,
இங்கே இருந்து கொண்டே மனத்திலே நினைப்பதற்கு எல்லா நேரத்திலும் நாடோறும் வாய்க்குமோ?
‘மலர் அடிப் போதுகளை ஈங்கு மனத்து நினைக்கப்பெற எப்பொழுதும் நிச்சலும் வரய்க்குங்கொல்?’ என்க.

இதில் ‘அங்குச் சென்று அனுபவிக்க வேண்டா, இங்கே இருந்து அங்குத்தைப் பரிமாற்றங்களை
என்னுகின்ற எண்ணம் நமக்குக் கூடுவதுகாண்!’ என்கிறார்.

வாய்க்குங்கொல் நிச்சலும் –
நமக்கு இப்பேறு நாள்தோறும் கூடவேணும்.
எப்பொழுதும் –
அதுதன்னிலும், நித்திய அக்நிஹோத்திரம் போலே ஒரு காலவிசேடத்திலேயாய்ப் போக ஒண்ணாது,
எல்லா நிலைகளிலும் உண்டாக வேணும்.
மனத்து ஈங்கு நினைக்கப் பெற –
அங்குச் சென்று அனுபவிக்க வேண்டா. இங்கே இருந்து நெஞ்சாலே அங்குத்தைப் பரிமாற்றங்களை நினைக்கப்பெற அமையும்.
‘பெற’ என்கையாலே, இந்த எண்ணத்துக்கு அவ்வருகு ஒரு பேறு இல்லை என்று இருக்கிறார் ஆயிற்று இவர்.
‘துர்க்கதாவபி -மரண தசையிலே வருவது ஒரு துர்க்கதி உண்டு, அதனைப் போக்கித் தரவேணும் என்று பிரார்த்திக்கிறேன் அல்லேன்;

துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத்கதோ மநோரத:
யதி நாஸம் நவிந்தேத தாவதாஸ்மி க்ருதீ ஸதா’-என்பது, ஜிதந்தா.

ஐயார் கண்டம் அடைக்கிலும் நின்கழல் எய்யாது ஏத்தும்படி செய்தருள வேணும்.-திருவாய். 2. 9 : 3.-
த்வத் கதோ மே மநோரத: – எனக்கு இது கூடும் என்று தோற்றி இருந்ததோ உனக்கு?
யதிநாசம் நவிந்தேத – இப்படி இருக்கிற இந்த எண்ணத்திற்கு அழிவு வாராதாகில்.
தாவதாஸ்மி க்ருதீஸதா – உலகத்தார், எண்ணம் என்றும் அனுபவம் என்றும் இரண்டாக அன்றோ சொல்லிப் போருவது?
எனக்கு இவை எல்லாம் வேண்டா; இந்த எண்ணம் மாத்திரத்தாலே கிருத கிருத்தியன் நான்.
ஸதா – சரீர சம்பந்தம் அற்றுப் பரமபதத்திலே சென்று ஏற்றமாக அனுபவிக்குமதனைக்காட்டில்,
நான் பேறாக நினைத்து இருப்பது இதனையே’’ என்பது, ஜிதந்தா.
இதுக்கு மேலே யோக்யதை எதிர்பார்க்க மாட்டானே -ஆசை உடையார்க்கு எல்லாம் என்று இதனாலே எம்பெருமானார் வரம்பு அறுத்தார் –

முற்காலத்தில் இடையாற்றுக்குடி நம்பி என்பார் ஒருவர் இருந்தனர்;
அவர் திருநாள்கள்தோறும் வந்து பெருமாளைச் சேவித்துப் போனால்,
மறித்துத் திருநாள் வருந்தனையுப் அதனையே போது போக்காக நினைத்துக்கொண்டு இருப்பாராயிற்று;
ஒருநாள் ஒரு திருநாளின் வைபவத்தை நினைத்திராநிற்கச் செய்தே, ‘அமுது செய்கைக்குப் போது வைகிற்று’ என்றார்களாக,
‘ஆகில் வருகிற திருநாள் அணித்தாகிறது’ என்றாராம்.
அவர் நூறு வயதும் புகுகையாலே வலிமை குன்றித் திருமுளைத்திருநாளில் பெருமாள்புறப்பட்டருளுகைக்கு உதவ வந்து புகுரப்பெற்றிலர்:
பெருமாளும் தேடியருளக்காணாமல், ‘நம் இடையாற்றுக்குடியான் வந்திலன்’ நங்கண்ணாலம் அல்லவோ!’ என்று திருவுள்ளமானாராம்.
அவர்தாம் ஆறாந்திருநாளிலே சேவித்திருக்கச் செய்தே, ‘நாம் உனக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்று கேட்டருள,
‘தேவரீர் தந்தருளின சரீரத்தைக் கொண்டு போரக் காரியம் கொண்டேன்; இனிப் போக்குவரத்துக்குத் தகுதி இல்லாதபடி போர இளைத்தது’ என்ன,
‘வாராய், மெய்யே இளைத்தாயாகில்: இங்ஙனே இரு’ என்று அருளிச்செய்தார்;
பெருமாள் நடுவில் திருவாசலுக்கு அவ்வருகே எழுந்தருளுங்காட்டில் அவர் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திருவாறன் விளை –
இட்டவை முழுதும் நிறைந்து இருப்பதான தேசமாயிற்று வாய்த்த கரும்பும்,
அதற்கு நிழல் செய்யும்படியாக வளர்ந்த செந்நெலுமான வயலாலே சூழப்பட்ட திருவாறன் விளையிலே.
வாய்க்கும் பெரும்புகழ் –
இட்டவை முழுதும் நிறைந்து இருப்பதான தேசமாகையாலே அத்தேசத்தை விரும்பி இருப்பவனுக்கும்
கல்யாண குணங்களும் நிறைந்து இருக்குமாயிற்று.
மூன்று உலகு ஈசன் வடமதுரைப் பிறந்த –
எல்லா உலகங்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து வைத்து, நல்லார்களை நலம் புரிந்து காத்தல் நிமித்தமாக
ஸ்ரீமதுரையிலே வந்து அவதரித்த.
வாய்க்கும் மணி நிறம் கண்ணபிரான் –
தன் பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய திருமேனியை அன்றோ இதர ஸஜாதீயம் ஆக்கிற்று?
ஆகையாலே, அழகிய நீலமணி போன்ற திருநிறத்தையுடைய உபகாரத் தன்மையனான கிருஷ்ணனுடைய
மலர்ச்சி பொருந்திய திருவடிகளாகிற செவ்விப் பூக்களை ஈங்கு மனத்து நினைக்கப்பெற வாய்க்குங்கொல். நிச்சலும் எப்பொழுதும்.

———————————————————————————-

மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5-

ஆஸ்ரித அனுபவ அர்த்தமாக அனந்த சாயி -வார்த்தைக்கும் -திவ்ய தேசம் புகழை பாட பாபங்கள் சவாசனமாக போகுமே
மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்-விகசிதமான திருவடித் தாமரைகள் -நிறுத்தி உகந்து வணங்கி
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்-ஸூ ரிகள்-பராசாராதிகள் -பகவத் பக்தர்கள் -முதல் ஆழ்வார்கள்
-அர்ச்சகர் முகேன-அருளிய -ஏகாந்தமாக இல்லை -சதஸில் -ஆஸ்ரித சம்ச்லேஷத்தால் சுகப்படும் -அமர்ந்து –
அந்நிய பரை அற்று -இன்பம் அருளி திவ்ய தேச -வாசமே பிரயோஜனம் –
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை-புஷப உபகாரங்கள் -ஓங்கிய மாடங்கள்
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே-லோகத்தில் மிக்க புகழ் -பிரசித்தம் –
உகப்புடன் பாட தன்னடையே புக்க இடம் தெரியாமல் வினைகள் போகுமே

மலர்ந்த திருவடித் தாமரைகளை என்னுடைய நெஞ்சத்திலே இருத்தி எப்பொழுதும் வணங்கும்படியாக, அடியார் பலர் முன்பு திருவருள் செய்த
ஆதிசேஷ சயனத்தையுடைய எம்பெருமான் மனம் பொருந்தி எழுந்தருளியிருக்கின்ற பூக்கள் நிறைந்த அழகிய நீண்ட மாடங்களையும் நீண்ட மதிள்களையுமுடைய திருவாறன்விளை என்னும் திவ்விய தேசத்தினது உலகம் எங்கும் நிறைந்த புகழை நாம் பாட, நம்மிடத்துள்ள வினைகள் ஒன்றும் நில்லாமல் கெட்டவிடும்.
‘வணங்க அருளிய அப்பன்’ என்க, ‘அப்பன் உறையும் திருவாறன் விளை’ என்க.

திருவாறன்விளையிலே புக்கு அடிமை செய்கைக்கு விரோதியானவை எல்லாம்
அவனுடைய மிக்க புகழைப் பாடப் பறந்துபோம்’ என்கிறார்.

மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க –
மலர்ந்திருந்துள்ள திருவடிகளாகிற செவ்விப்பூக்களை என்னுடைய மனத்திலே எப்போதும் இருத்தி,
அந்நினைவு போய்க்கனக்க அதனாலே செருக்கு அற்றவனாய்க்கொண்டு திருவடிகளிலே விழும்படியாக.
பலர் அடியார் முன்பு அருளிய –
ஸ்ரீ வேதவியாச பகவான், ஸ்ரீ வால்மீகி பகவான், ஸ்ரீ பராசர பகவான், ‘இன்கவி பாடும் பரமகவிகள்’ என்று சொல்லப்படுகிற
முதலாழ்வார்கள்எல்லாரும் உளராயிருக்க, என் பக்கல் விசேட கடாட்சம் செய்வதே!
‘பின்பு ஸ்ரீ ராகவர் சந்தோஷத்தினால் இன்புற்றவராய்க் கொண்டு அனுமானை மிக்க பெருமையோடு பார்த்தார்’ என்கிறபடியே,
முதலிகள் எல்லாரும் இருக்கச்செய்தே திருவடி பக்கலிலே விசேஷ கடாட்சம் செய்தாற்போலேயாயிற்று,
பலரும் உளராய் இருக்க இவரை அங்கீகரித்தபடி.

‘ப்ரீத்யா ச ரமமாண: அத ராகவ: பரவீரஹா
பஹூமாநேந மஹதா ஹநூமந்தம் அவைக்ஷத’-என்பது, ஸ்ரீராமா. சுந். 64 : 39.

கிழக்குத்தை இராசாக்கள் பொல்லாங்காலே இங்கே நலிவு பிறக்குமளவிற்செய்வது என்?’ என்று
எம்பெருமானார் அதனை நினைந்தருளி, ‘இத்தேசத்தை விடாதே நோக்கிக்கொண்டு கிடந்தோம்;
இவ்விடத்துக்கும் அழிவு வரும்படி ஆசுரவர்க்கம் மேலிடாநின்றது; மேல் செய்ய அடுப்பது என்?’ என்று பெரிய நம்பிக்கு அறிவிக்க,
‘நான் பெருமாளுடைய திரு எல்லையிலே ஒரு பிரதக்ஷணம் வரும்படியாக உம்முடைய சிஷ்யர்களிலே ஒருவரைப் போர விடுவது’ என்ன
‘அதற்கு ஆவார் ஆர்?’ என்ன, ‘என் பின்னே போராநின்றால் ‘ஒருவன் பின்னே போகாநின்றேன்’ என்று
தன் நெஞ்சிற்படாதே சாயை போலே என்னைப் பின் செல்வான் ஒருவனாக வேணும்’ என்ன,
கச்சதா மாதுல குலம்-உடை வாள்-அனகா- நித்ய சத்ருக்ந ப்ரீதி உடன் போனது போலே –
‘அதற்கு ஆவார் அர்?’ என்ன,‘ஆழ்வானைப் போக விடலாகாதோ?’ என்றாராம்.
ஆக, பல முதலிகள் இருக்க, ஆழ்வானைக் கொடுத்தாற்போலே என்றபடி.

பாம்பு அணைய அப்பன் அமர்ந்து உறையும் –
பரியங்க வித்தியையிற் சொல்லுகிறபடியே திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய சர்வேஸ்வரன்,
அப்படுக்கையைக்காட்டிலும் விரும்பி வசிக்கும் தேசமாயிற்று.
மலரின் மணி நெடுமாடங்கள் –
தேவர்கள் பெய்த மலர்களோடு கூடி, மணிமயமான ஓக்கத்தையுடைத்தாய், ஓங்ஙின மதிளையுமுடைத்தான திருவாறன்விளை.

உலகம் மலி புகழ் பாட –
ஈண்டின இடத்தில் வெள்ளம் போலே உலகத்தில் அடங்காதபடியான அவனுடைய
கல்யாணகுணங்களைப் பிரீதியினாலே தூண்டப்பட்டவராய்க்கொண்டு பாட.
நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடும் –
பாபம் போகைக்காகத் தனித்து ஒரு முயற்சி செய வேண்டா;
பால் குடிக்க நோய் தீருமாறு போலே நம்முடைய பாபங்கள் தாமே நசித்துப் போம்

——————————————————————————————–

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-

அநிஷ்ட நிவ்ருத்தி பண்ணி அபிமதை பிராட்டி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணன்
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!-அனுபவ சாபல்யம் உள்ள அடியார் -பாபங்கள் சர்வமும் நசித்தே போகும்
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்-சிசுபாலன் -ருக்மிணி -அங்கு -சோணித புரம்-
பீஷ்மகன் தந்தை -ஐந்து பிள்ளைகள் ஒரு பெண் -பூசலில் வென்று -பரி பூர்ண நங்கை-அதிசத்திய போக்யமான -திருத் தோள்கள் -பார்த்தாராம் பரிஷஷ்வஜே
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்-ஒரு க்ஷணமும் ஒழியாமல் -அகவாயிலே இருக்கும் மகா உபகாரகன்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே-கண்டு அனுபவிக்க நித்ய வாசம்
நாயனார் -பிரணவ சித்தம் –ஆனந்த வ்ருத்தி பரத்வம் விமுகம் ஆக்கும் நீள் நகரத்தில்

உருக்குமிணிப்பிராட்டி காரணமாகச் சிசுபாலன் போருக்கு வந்த அக்காலத்தில் போரிலே அவனை வென்று உருக்கு மிணிப் பிராட்டியினது
அழகிய நீண்ட தோள்களைச் சேர்ந்தவனும், எல்லாக் காலத்திலும் எல்லா நேரத்திலும் என் நெஞ்சமானது துதிக்க என் மனத்திற்குள்ளே
எழுந்தருளியிருக்கின்ற உபகாரகனுமான எம்பெருமான் நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருக்கின்ற அழகிய திருவாறன்விளை என்னும்
பெரிய நகரத்தைத் தொண்டீர்! நினைத்து வணங்குங்கோள்; தீவினைகள் ஒன்றும் நில்லாவாய் முழுவதும் அழிந்துவிடும்.
‘நீள் நகரமது தொண்டீர், தொழுமின்; தீவினை முற்றவும் கெடும்,’ என்க.

‘எம்பெருமான் பக்கல் ஆசையுடையீர்! உங்களுடைய எல்லாத்துக்கங்களும் போம்படி
திருவாறன் விளையை நெஞ்சாலே நினையுங்கோள்,’ என்கிறார்.

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை –
இவன் தான் போக்கப் பார்க்கும் அன்று அன்றோ, புதுப்புடவை அழுக்குக் கழற்றுமாறு போலே சிறிது கிடக்கச் சிறிது போவது?
அங்ஙன் அன்றிக்கே, வரம்பில் ஆற்றலையுடை இறைவன் போக்கும் அன்று வாசனையோடே போமே அன்றோ?
‘மேரு மந்தரமாத்ரோபி – மேருவையும் அதன்மேலே மந்தரத்தையும் வைத்தாற்போலே இருக்கிற கனத்த பாவங்கள்,

மேரு மந்தரமாத்ரோபி ராஸி: பாபஸ்ய கர்மண
கேஸவம் வைத்யம் ஆஸாத்ய துர்வியாதிரிவ நஸ்யதி’-என்பது, விஷ்ணு தர்மம், 78.

உண்மையாக, மருத்துவமனைக் கிட்டின கெட்ட வியாதிகள் நசிக்குமாறு போலே,-உற்ற நல் நோய் கிட்டுமே-இவனால் –
மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணனைக் கிட்டின பாபங்கள் நசிக்கும்,’ என்னாநின்றது அன்றோ?
‘எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்’ என்றான் அன்றோ?
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி’-என்பது, ஸ்ரீ கீதை, 18 : 66.

‘எல்லாப் பாபங்களும் நாசம் அடைகின்றன’ என்னாநின்றதே அன்றோ?

ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே’-என்பது, சாந் உப 5 : 24.–இது தேசத்துக்கும் உபலக்ஷணம்.
உள்ளித் தொழுமின் தொண்டீர் –
அதனை நினைத்துப் பற்றப் பாருங்கோள், பகவத் விஷயத்தில் ஆசையுடையீர்!
அன்று –
சிசுபாலன் சுயம்வரத்திலேமுடுகி இருக்கிற அன்று.
அங்கு –
இவன் விரையாநின்றான், உடையவன் வந்து கைக்கொள்ளானோ என்று இருக்கிற அளவிலே,
தூணிலே தோற்றினாற்போலே தோற்றினான் ஆயிற்று. -குண்டின புரம் -ருக்மிணி தேவி சந்நிதி உண்டு –தாருகன் தேரோட்டி –
அங்கே அவன் வீயத் தோன்றியது போலே -மடுத்தூதிய சங்கு ஒலி கேட்டு மகிழ்ந்தாள் –
அமர் வென்று –
அவளுக்காக மார்விலே அம்பு ஏற்று.
உருப்பிணி நங்கை –
எல்லாம் படவேண்டும்படி ஆத்தும குணங்களாலே நிறைந்தவளாய் இருக்கும்படி.
அணி நெடுந்தோள் புணர்ந்தான் –
தனக்குத்தானே ஆபரணமாய், இனிமை அளவு இறந்துள்ள தோள்களோடே கலந்தவன்.
இதனால், ‘விரும்பினவர்கள் விரும்பும் சமயத்திலே வந்து தோன்றுமவன்’ என்பதனைத் தெரிவித்தபடி.

என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் –
எல்லாக் காலத்திலும் எல்லா நிலைகளிலும் என்னுடைய மனமானது துதிக்கும்படி என் நெஞ்சிலே இருக்கிற உபகாரகன்.
உருக்குமிணிப்பிராட்டியினுடைய கல்யாண குணங்களேகாணும் இவர் நெஞ்சிலே பட்டுக் கிடப்பன.
நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரமது –
பிரகாசியாநிற்கச்செய்தேயும் கண்களுக்கு இலக்கு ஆகாதபடி இருக்கை அன்றிக்கே,
‘இவன் நமக்கு உளன்’ என்று அச்சந்தீரும்படி கண்களாலே கண்டு அனுபவிக்கும்படி நிற்கிற
அழகிய திருவாறன்விளையாகிற மஹா நகரத்தை.
உள்ளித் தொழுமின் தொண்டீர்! –
‘தாம் அடிமை செய்ய நினைக்கிறாகில் ‘உள்ளித் தொழுமின்’ என்கிற பரோபதேசத்துக்குக் கருத்து என்?’ என்னில்,
இவர்க்குச் சுவானுபவந்தான் பரோபதேசத்தை ஒழிந்து இராது; நெஞ்சினை விளித்ததோடு ‘தொண்டீர்’ என்றதனோடு வாசி இல்லை.
நெஞ்சு போல்வாரை தொண்டீர் -என்கிறார் சுய அனுபவ ஹானி இல்லையே –
————————————————————————————–

நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-

ப்ராக் ஜோதிஷ் புரம் -கிழக்கு கடல் கரை -சோணித புரம் -அனிருத்னுக்கு பிரதிபந்தம் பாணனை -ஸஹாயமான
-தேவர்களை விரட்டி -பாஹு வானம் சேதித்த்து –
நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை-அயோத்தியை போலே ஸ்ருதி பிரசித்தம் -அபராஜிதா –
மகா நகரம் அதுவே யாம் படி -திவ்ய தேசம்
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன் -மகா உபகாரம் ஆஸ்ரித வ்யாமுக்தன் கண்ணன் -நித்ய சூரி சேவ்யன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து-சக்தி ஸூ சகம் த்ரி நேத்ரம்
-ஈச்வரத்வ அபிமானி -ஆஸ்ரித ரக்ஷணம் -உபரம ஓய்வு அடையும் படி –
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே-உபாய பூதன் உடைய திருவடிகளே -சரண்

நீண்ட நகரம் அதுவே என்னும்படி மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருவாறன்விளை என்னும் பெரிய நகரத்திலே நின்ற திருக்கோலமாக
எழுந்தருளியிருக்கின்ற உபகாரகனும், நெடுமாலும், விண்ணவர்கோனும், வாணாசுரனுடைய நகரத்திலே புக்கு, சிவபெருமான் தோற்கும்படி கொடிய
போர்களைச் செய்து வாணாசுரனுடைய ஆயிரம் தோள்களையும் துணித்தவனுமான கண்ணன் திருவடிகள் அல்லாமல் வேறு கதியுடையோம் அல்லோம்.
‘தொலையப் போர்கள் செய்து துணித்தானாகிய கண்ணனுடைய சரண்’ என்க.

‘திருவாறன்விளையே பிராப்பியம் என்னாநின்றீர்; அவன் அன்றோ பிராப்பியன்?’ என்ன,
‘அன்று என்ன வல்லேனோ? என் சித்தாந்தம் இருக்கும்படி கேட்கலாகாதோ?’ என்கிறார்.
‘உபாசனத்தின் பலமாய் வருமவையெல்லாம் பிராப்பியத்திலே சேர்ந்தனவாகக் கடவன;
அன்றிக்கே, ‘சாத்தியத்தின்வளர்சிக்கு உடலாய் வருமவையெல்லாம் பலத்துக்கு உடலாகக் கடவன,’ என்னுதல்,
ஆகையாலே, பிராப்பிய பூமி அந்தத் தேசமே; அங்கே கொடு போய்ச் சேர்க்கும் கடகன் அவன்; இது என் சிந்தாந்தம் இருக்கும்படி’ என்கிறார்.

-பிராப்யனாவனை ஒரு தேச விசேஷத்தில் தானே அடைய வேணும் -தேசமும் பிராப்யம்-சரமாவதி -திவ்ய தேசம்
-கைங்கர்யம் வளர்வதற்கு உறுப்பாகுமே-அதனால் முக்கியம் -திவ்ய தேச வாசமே பிராப்யம்–
அவன் சாதனம் -அவனும் ஆசைப் பட்டு உகந்து அருளின திவ்ய தேசம் அன்றோ -இதுவே ஆழ்வார் சித்தாந்தம் –

நீள் நகரம் அதுவே –
கலங்காப் பெருநகரமாய், புக்கார்க்கு ‘மீண்டு வருதல் இல்லை’ என்கிறபடியே
ஒரு நாளும் மீட்சி இல்லாதபடி எப்பொழுதும் அனுபவம் பண்ணும் பிராப்பிய தேசம் அதுவே.
மலர்ச்சோலைகள் சூழ் திருவாறன்விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் –
‘அவனுக்குக்கூடப் பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருக்குமாயிற்று.
ஸ்ரீ வைகுந்த நாதன் இத்தை பிராப்யம் என்று அன்றோ உகந்து நித்ய வாசம் செய்கிறான் –
நித்திய வசந்தமான பொழிலாலே சூழப்பட்ட திருவாறன்விளையாகிற மஹா நகரத்திலே வந்து வசிக்கின்ற உபகாரன்.
நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன் வாணபுரம் புக்கு முக்கட்பிரானைத் தொலைய வெம்போர்கள் செய்து –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து, சம்சாரத்தில் தன்பக்கல் ருசியுடையரானவர்கள் பக்கல்
வியாமோகத்தாலே கிருஷ்ணனாய் வந்து அவதரித்து, ஒரு கடலினின்றும் ஒரு கடலிலே எடுத்துவிட்டு,
மேற்கு கடல் கரை துவாரகை -கிழக்கு கடல் கரை -வாணனை தொலைக்க —
ஈஸ்வரன் என்ற எண்ணமுடையவனாய்‘இவன் காரியத்துக்கு எல்லாம் நானே கடவன்’ என்று
இருக்கிறவனுடைய செருக்கு எல்லாம் தொலைந்து, ‘நான் இனி ஒரு தேவதையாய் ஒருவன் காரியத்துக்குச் செருக்குற்று இரேன்’ என்னும்படி
கொடிய போர்களைச் செய்து.
‘கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ – ‘யானைக்கும் தனக்குத் தக்க வாதம்’ என்னுமாறு போலே,

‘க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்
பரேஸம் பரமாத்மாநம் அநாதி நிதநம் பரம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 33 : 41.

தேவதைகளுக்கு நம்மைக்காட்டிலும் அறிவு கேடு விஞ்சியிருக்கும். –
ஆரோக்யம் பாஸ்கரன் -ஞானம் சங்கரன் -அவ்வளவு ஞானம் தக்க அஞ்ஞானம் தமஸ் மிக்கு இருப்பதால்
ஒரு வில்லை முரித்த போதாக ‘விஷ்ணுவை அதிகனாக எண்ணினர்’ என்கிறபடியே இருப்பர்களாயிற்று,–தேவசாதியாக.
அதிகம் மேநிரே விஷ்ணும்’-என்பது, ஸ்ரீராமா, பால. 75 : 19.

வாணனை ஆயிரம் தோள் துணித்தான் –
‘உஷை தந்தை இல்லாதவள் ஆகவொண்ணாது,’ என்று பார்த்து, உயிர் இருக்கத் தோளைக் கழித்துவிட்டானாயிற்று.
சரண் – அவன் கடகன்; திருவாறன்விளையே பிராப்பியம்.
பிராப்பியனானவன் வந்து எழுந்தருளியிருக்கும் தேசம் ஆகையாலே அவனுடைய சம்பந்தத்தாலே
அத்தேசமும் பிராப்பியம் என்கைக்குத் தட்டு இல்லை.
ஓர் அறப்பெரியவன் உபாயமாய்ப் பலத்தைக் கொடுக்கிறவனாக வேணுமே:
ஆகையாலே, அவன் உபாயம்; அத்தேசம் பிராப்பியம்.
அன்றி மற்று ஒன்று இலமே –
இங்ஙன் அல்லது உபேய உபாயங்கள் மாறாடக்கடவோம் அல்லோம்.

———————————————————————————————

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8-

திருவடிகளை ரக்ஷகமாக ஸ்ரீ கஜேந்திரன் கூப்பிட -ஆஸ்ரித ஆந்திர துக்க நிவர்த்தகன் இந்த திவ்ய தேசம் ஆஸ்ரயிக்க -நெஞ்சில் பாபம் நில்லாதே
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்-விசாலமான ஆழ்ந்த
செவ்வித் பூவை சாத்த பெற்றிலோமே -நெஞ்சில் இது அன்றோ இடர் –
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை-உதவ அங்கே சென்று -இனி இடர் தீர்க்க இங்கே
வந்து பரம போக்யமாய் வர்த்திக்கும்
-பிரதஷிண நமஸ்காரங்கள் செய்ய கூடிற்றாகில் தீவினைகள் பொருந்தவே -உடையன அல்ல -யுக்தி பிரகாரம் -ஒன்றி வலம் செய்ய இவை கிட்டாது

‘உன்னுடைய திருவடிகளே அல்லாமல் வேறு ஒரு உபாயத்தையுடையோம் அல்லோம்’ என்று, அகன்ற பெரிய பொய்கையிலே தன்னுடைய
நீண்ட திருவடிகளைத் துதித்த யானையினது மனத்தின்கண் இருந்த துன்பத்தை நீக்கிய உபகாரகனானவன் அங்குச் சென்று
எழுந்தருளியிருக்கின்ற வளப்பம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவாறன்விளை என்னும் திவ்விய தேசத்தைப் பொருந்தி
வலம் வருதல் கூடுமோ? கூடுமாயின், தீவினைகள் உள்ளத்தின் பொருத்தத்தையுடையன அல்லவாம்.
‘சென்று’ என்றது, ‘அடியார்களுக்குத் திருவருள் செய்வதற்காகச் சென்று’ என்றபடி.

‘திருவாறன்விளையிலே புக நம்முடைய எல்லாத் துக்கங்களும் போம்,’ என்கிறார்.

நின் சரணே அன்றி மற்று ஒன்று இலம் என்று –
உன் திருவடிகளை அல்லது வேறு ஒரு பற்று உடையேன் அல்லேன் என்று. என்றது,
புறம்பே சிலர் இரட்சகராக மயங்கி இருக்குமதுவும் தவிர்ந்து,
‘யானை கரையில் இழுக்கின்றது; முதலை நீரில் இழுக்கின்றது’ என்கையாலே,
‘கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே’-என்பது, விஷ்ணு தர்மம், 68.

தான் தன்னை இரட்சகமாக நினைத்திருக்குமதுவும் தவிர்ந்து.
‘மனத்தால் எண்ணிற்று’ என்கையாலே, ‘கூப்பிடுங்காரியகரமாம் எல்லையுங்கழிந்தது’ என்றபடி
‘பரமாபதம் ஆபந்ந: மநஸாசிந்தயத் ஹரிம்
ஸது நாகவர: ஸ்ரீமாந் நாராயண பாராயண:’-என்பது, விஷ்ணு தர்மம், 68.

அவனைப் பார்த்தால் தானும் அல்லாதாரைப் போன்று புறம்பாய்க் கடக்க நிற்கும்படியாய் அன்றோ சம்பந்தம் இருக்கும்படி?
ஆகைச் சுட்டி அன்றோ பிரணவத்தில் நடுப்பதம் கிடக்கச்செய்தே அன்றோ திருமந்திரத்தில் நடுப்பதம் ஜீவிக்கிறதும்?

‘ஆகைச்சுட்டி’ என்றது, ‘தன்னுடைய இரட்சணத்தில் தனக்குச் சம்பந்தம் இல்லாமையாலே அன்றோ?’ என்றபடி.
பிரணவத்தில் நடுப்பதம், உகாரம், திருமந்திரத்தில் நடுப்பதம் ‘நம:’என்பது, ‘இத்தால் (உகாரத்தால்) தனக்கும் பிறர்க்கும் உரித்தன்று என்கிறது.’ 65.
‘நமஸ்ஸூ, ந என்றும், ம: என்றும் இரண்டு பதம்.’ ‘ம:என்கிற இத்தால் தனக்கு உரியன் என்கிறது. ‘ந’ என்று அத்தைத்தவிர்க்கிறது.’
‘ஆக, நம: என்கிற இத்தால், தனக்குரியன் அன்று என்கிறது,’78-80.
ஈஸ்வரன் தனக்கேயாயிருக்கும்; அசித்துப் பிறர்க்கேயாயிருக்கும்;
ஆத்துமா தனக்கும் பிறர்க்கும் பொதுவாயிருக்கும் என்னும் முற்பட்டநினைவு;
அங்ஙனன்றிக்கே அசித்துப்போலே தனக்கேயாக எனைக்கொள்ளவேணும் என்கிறது நமஸ்ஸால்’ 91.
என்பன போன்ற சூத்திரங்களைஇங்கு அநுசந்திக்கத் தகும். முழுக்ஷூப்படி, திருமந்திரப் பிரகரணம்.

செய்யுமித்தனை போக்கி, தான் வேறு ஒரு கரை காண மாட்டான் ஆகாதே.
அகல் இரும்பொய்கையின்வாய் நின்று –
அச்சமுள்ள இடத்தே அச்சமில்லாத இடத்திற்போலே நிற்கும்படியாயிற்றுச் செயல் மாட்சி.
அகலமும் ஆழமும் -கடி கொள் -பூம் பொழில் -காமரு பொய்கையை-அவனுக்கு சத்ருசமான -தாமரை இருப்பதால்
சம்சார சாகரம் கோரம் அனந்தகிலேச பாஜநம் –
முதலை நீரிலே இழுக்க, யானை கரையிலே இழுக்க, இரண்டனுடைய செயலுமாய்ச் செல்லுகை தவிர்ந்து
ஒன்றனுடைய செயலேயாய் நிற்கை.
தன் நீள் சுழல் –
எதிர்த்தலையின் செயல் மாட்சியே எல்லையாக வளரும் திருவடிகள்.-
அன்றிக்கே, ‘முதலைவாயிலே அகப்பட்டு நிற்கச் செய்தேயும், அவனை நினைத்தால் அச்சங்கெட்டு
இருக்கலாம்படி அன்றோ தான் இருப்பது?’ என்னுதல்,
திருக்கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளே நின்றனவே –
‘இறைவனுடைய ஆனந்தத்தை அறிந்தவன் அஞ்சுகின்றான் இலன்’ என்னக் கடவது அன்றோ?

‘ஆனந்தம் பிரஹ்மணோ வித்வாந் ந பிபேதி,’ என்பது, தைத். உப. ஆனந்.

‘குதஸ்சந’ – பிரமாதிகத்துக்கு அன்றியே புத்தி பூர்வமாகப் பண்ணினதற்கும் அஞ்சவேண்டாத படியாயிருக்கும். ‘

‘குதஸ்சந’ என்பது, தைத். உப. ஆனந்.–பிரபன்னன் எப்போதும் எதனாலும் பயப்பட வேண்டாம் –

செய்தாரேல் நன்று செய்தார்’ -பெரியாழ்வார் திருமொழி, 4. 9 : 2.என்றால், இவன் எதற்கு அஞ்ச வேண்டும்?
புத்தி பூர்வமாகச் செய்வனவற்றிற்கு அஞ்சவேண்டாவிட்டால் பிராமாதிகத்துக்கு அஞ்சவேண்டா என்னு

அகல் இரும்பொய்கையின்வாய் –
அகலத்தையும் ஆழத்தையும் சொல்ல வேண்டுமளவிலே, அகலத்தைச் சொல்லி ‘இருமை’ யைச் சொல்லுகையாலே
அது ஆழத்தைச் சொல்லிற்றாகக் கடவது.
‘இப்போது அகலமும் சொல்லுகிறதற்குக் கருத்து என்?’ என்னில்,
அவன் உபாயமாய்க் காத்தல் இல்லையாகில் முடித்தல் என்னும் இடம் சொல்லவேண்டுமோ?
பிராமாதிகத்துக்கு அஞ்சவேண்டாமை பத்தி யோகத்துக்கு உண்டு அன்றோ?
வாரணம் காரணம் நாரணம் -மூன்று வார்த்தையில் -அகாரம் உகாரம் மகாரம் -நாத முனி யமுன முனி ராமானுஜ முனி -பிரணவம் –

ஏத்திய –
முட் பாய்ந்தால் ‘அம்மே!’ என்பாரைப்போலே, வாசனையாலே சொன்ன இத்தனை.
ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான் –
துதிக்கை முழுத்தின இடரே அன்றோ? நீண்ட கை குறுகும் அளவுமன்றோ பார்த்து நின்றது?
இவன் கை விட்டால் கைக்கொள்ளாநின்றானித்தனை அன்றோ?
பரித்யஜ்ய பின்பு -சரணம் வ்ரஜ —நன்மையால் மிக்க நான் மறையாளர் புன்மையாகக் கருதுவர்
ஆதலின் அன்னையாய் அத்தனாய் கைக்கு கொண்டார் –கை விட கை கொண்டார்
அன்றிக்கே, ‘இந்தப் பூவின் செவ்வி மாறுவதற்கு முன்னே திருவடிகளிலே சார்த்தப் பெறுகின்றிலோம்!’
என்னும் இடரைப் போக்கினான் ஆயிற்று.
அன்றிக்கே, ‘நம் காரணமாகச் சர்வேஸ்வரனுக்கு ஒரு தாழ்வு வருகிறதோ?’ என்னும் இடராதல். என்றது,
‘இவன் இப்படி வருந்த அவன் காத்தபடி அழகியதாய் இருந்தது!
இவனையோ நாம் இப்படிக் காப்பவன் என்று நினைத்திருந்தது?’ என்று
உலகத்தார் இவனை இப்படி நினைக்கின் செய்வது என்?’ என்று துன்புற்ற துன்பத்தைத் தெரிவித்தபடி.
‘இரண்டும் போய் இரண்டின் வீடி’இது, நான்முகன் திருவந். 12.-என்கிறபடியே இரண்டற்கும் இடர் வாராதபடி ஒன்றுக்கே
இடர் வரும்படி கரையிலே கொண்டு ஏறி, பின்னர் முதலை வாயினைக்கிழித்து யானையின் இடரை நீக்கினானாயிற்று.
இங்கே, ‘இராசபுத்திரனைச் சிறையிலே இட்டு வைத்தால் கைக்கூட்டனுக்கும் பாலுஞ்சோறும் இடுவாரைப்போலேகாண்,’ என்று
இதற்குப் பட்டர் அருளிச்செய்வர். இரண்டும் மோட்சத்தைப் பெற்றதே!
முதலை சாப மோட்சமும், ஸ்ரீகஜேந்திராழ்வான் சாக்ஷாத் மோட்சமும் பெற்றமையைத் தெரிவித்தபடி.

பிரான் –
யானையின் இடரைப் போக்கின இதுவும், அதற்கு அன்றித் தமக்கு உதவி செய்தானாக நினைத்திருக்கிறார்காணும் இவர்.
இவ்வெண்ணத்தை உடையவனாகை அன்றோ ஒருவன் வைஷ்ணவன் ஆகையாவது? என்றது,
அநுகூலரிலே ஒருவனுக்கு ஒரு நன்மை உண்டானால் அது தன்னதாக நினைத்திருக்கையும் கேடு வந்தால்
அதனைத் தனக்கு வந்ததாக நினைத்திருக்கையுமாகிற இவ்விரண்டும் உண்டானால் அன்றோ வைஷ்ணவத்துவம் உண்டாயிற்றவது?’ என்றபடி.
சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில் சூழ் திருவாறன்விளை ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ –
இவன் உதவாத அன்று அவ்யானைக்கு உள்ள இடரைப் போன்று போருமாயிற்று.
அத்தேசத்தை அடையாத போது சர்வேஸ்வரனுக்கு உண்டான இடரும்.
அவன் வந்து தன் ஆதரம் எல்லாம் தோன்ற வசிக்கின்ற அழகிய பொழிலாலே சூழப்பட்ட திருவாறன்விளையைக் கிட்டி
வலஞ்செய்தல் முதலானவற்றைச் செய்யக் கிட்டுமோ?
தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே –
அப்போது தீவினைஉள்ளத்தின் சார்வு ஆகாது.
‘ஒளியும் இருளும் சேர்ந்து இருத்தல் உண்டோ?’ என்றது,
‘அவன் வந்து நித்தியவாசம் செய்யத் தீவினை ஒதுங்க இடம் உண்டோ?’ என்றபடி.

————————————————————————————————

‘தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-

பாப நிவ்ருத்தி பிறந்து -பிராப்ய பூமி கிட்டி -இருக்காமல் இங்கேயே நித்ய வாசம் செய்யப் பெறுவேனோ
‘தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்-சேர்த்தி அற்று இருந்தால் -உடனே ஸ்வரூப பிரகாசம்
பிறக்கும் படி தெளிவு ஏற்பட்டு பரம பதம் கிட்டினாலும்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று-வாக்கு மனஸ் காயங்கள் -பிரவ்ருத்தியில்-சேர்ந்த
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை-நித்ய ஸூ ரிகள் -சம்சாரிகள் யாவரும் வந்து -போக்யத்தை மிக்கு இருக்கும் திவ்ய தேசம்
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல் ?’ என்னுமென் சிந்தனையே.–இங்கே இறுக்கப் பெறுவோமோ என்று நினைக்கின்றதே

தீய வினைகள் ஆத்துமாவைத் தீண்டாதனவாகி நீங்க, பரமபதத்தை அடையலுற்றாலும், நாவாலும் மனத்தாலும் பொருந்திய தொழிலாலும்
பயின்று யாவரும் வந்து வணங்குகின்ற சோலைகள் சூழ்ந்த திருவாறன்விளை என்னும் திவ்விய தேசத்தைப் பொருந்தி வலம் வந்து
கையால் தொழுவதற்குக் கிட்டுமோ?’ என்று நினையாநின்றது என் மனமானது.
‘என் சிந்தனை, ‘தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவாகத் தெளிவிசும்பு ஏறல் உற்றால், திருவாறன்விளையதனை மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னும்,’ என்க. தெளிவிசும்பு – பரமபதம். ‘நாவினுள்ளும் உள்ளுத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும்’ என்றது, மனம் வாக்குக் காயங்களைக் குறித்தபடி.

‘எனக்கு ஸ்ரீவைகுண்டமும் திருவாறன்விளையும் இரண்டும் கிடைப்பதானால், ஸ்ரீவைகுண்டத்தை விட்டுத்
திருவாறன்விளையே அமையும் என்னும் என் நெஞ்சம்’ என்கிறார்.

இங்கு இருந்த நாள் உண்டான சங்கோசத்தாலே ‘திருவாறன்விளையே பிராப்பியம்’ என்று சொல்லுகிறீர்:
சங்கேயம் கழிந்தவாறே பரமபதத்திலே தோள் மாறுகிறீர்,’ என்ன,
‘அது வேண்டா; சங்கோசம் கழிந்தால் நான் இருக்கும்படியைக் கேட்கல் ஆகாதோ? என்கிறார்:
தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவாகி –
பண்டு செய்த அவித்தியை கர்மம் வாசனை ருசி என்னும் இவைகள், ஆத்துமாவைத் தீண்டாதனவாய்க் கொண்டு.-உள்ளம் -உள்ளில் இருக்கும் ஆத்மா என்றபடி –
தெளிவிசும்பு ஏறல் உற்றால் –
திருநாடு ஏறப்போக உத்தேசித்தால்.
யாவரும் வந்து உள்ளத்தினுள்ளும் நாவினுள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று வணங்கு பொழில் சூழ் திருவாறன்விளையதனை –
எத்தனையேனும் உயர்ந்த ஞானத்தையுடையரான திருநாட்டிலுள்ளாரும் வந்து மனம் வாக்குக் காயம் என்னும் இவற்றாலே
பயின்று அடையும்படி எல்லையற்ற இனிய பொருளான திருவாறன்விளையை.
மேவி வலஞ்செய்து –
அத்தலத்தை நான் சென்று அடைந்து அநுகூலமான கைங்கரியத்தைச் செய்து
கைதொழக் கூடுங்கொல் என்னும் என் சிந்தனை –
என் நெஞ்சு எனக்கு அடங்கியது அன்று; ‘வேறு ஒன்றிலும் என் மனம் செல்லுவது இல்லை,’ என்கிறபடியே.-பாவோ நான்யத்ர கச்சதி -போலே –

————————————————————————————————–

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-

நிதானப் பாசுரம் -பகவான் இடம் ஈடுபட்ட பின்பு -திவ்ய தேசம் விட்டு பேரேன் என்பதை அவனே அறிவான்
-உள்ளுவார் உள்ளத்தில் உடன் இருந்து அறிவான்
சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை –உத்தேச்யம் இதுவே -வேறு ஒன்றில் ஈடுபடாத ஸ்வ பாவத்தை
தேவபிரான் அறியும்-இந்த தன்மைக்கு இவனே சாக்ஷி -இவனே இங்கு வந்து நித்ய வாசம் செய்கிறான் –
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை -செய்யப்பட்ட மாயங்கள் அவனுக்கு தெரியாதது ஒன்றும் இல்லையே –
சர்வஞ்ஞன் அன்றோ -எண்ணம் -மாயங்கள் -அவன் அறியான் என்று நாம் நினைப்பதால் –
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்-மநோ வாக் காயங்கள் -பாகவதர் குழு இங்கு முமுஷுக்கள் அனுபவிக்கும் படி
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே–தீர்த்தான் புனிதன் -அற்ற பின்பு அநந்யார்ஹ சேஷ பூதன்
-போக்தாக்கள் நெஞ்சை மகிழும் படி இங்கே நித்ய வாசம் செய்யும் பரம பாவனன்–தூய்மை ஆக்குபவன்

‘பூதேவர்களான பாகவதர்களாலே சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் வணங்கப்படுகின்ற, சிந்தையை மகிழச் செய்கின்ற திருவாறன்விளை
என்னும் திவ்விய தேசத்திலே எழுந்தருளியிருக்கின்ற பரிசுத்தனான சர்வேஸ்வரனுக்கே அடிமை என்று அறுதியிட்ட பின்பு,
என் மனமானது வேறு ஒன்றினை உத்தேசியமாக நினைத்திராத தன்மையைச் சர்வேஸ்வரன் அறிவான்;
சிந்தையினால் நினைக்கப்படுவனவான வஞ்சனைகள் அவன் அறியாதன ஒன்றும் இல்லை ஆதலால்,’ என்றவாறு.
‘நிலத்தேவர் குழு, சிந்தையினார் சொல்லினால் செய்கையால் வணங்கும் திருவாறன்விளை’ என்க. இதனால், மூன்று கரணங்களாலும்
வணங்குதலைக் குறித்தபடி. குழு – கூட்டம்,
‘திருவாறன் விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின் சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாமை தேவபிரான் அறியும்’ என்க.
‘சிந்தையினால் செய்வ மாயங்கள் தான் அறியாதன ஒன்றும் இல்லை,’ என்க. நினைத்தலும் செய்கையோடு ஒக்குமாதலின், ‘செய்வ’ என்கிறார்.

‘இதுதான் ஒரு வார்த்தை மாத்திரமேயாய் உம்முடைய நெஞ்சு பரமபதத்தை விரும்பினாலோ?’ என்ன,
‘அதனை. என் நினைவிற்கு வாய்த்தலையிலே-மூலம் – இருக்கிற சர்வேஸ்வரனைக் கேட்டுக்கொள்வது’ என்று இங்ஙனே அருளிச்செய்வர் சீயர்.
அன்றிக்கே, ‘நீர் திருவாறன்விளையை பிராப்பியம் என்று இருக்கிறீர்; ஈஸ்வரன் சுவதந்திரன் அல்லனோ?
அவன் பரமபதத்தைத் தரிலோ?’ என்ன, ‘அவன் முற்றறிவினன் அல்லனோ? அறியானோ?’ என்கிறார் என்று பிள்ளான் பணிப்பர்;
புருஷார்த்தத்தைக் கொடுப்பவன் அல்லனோ? புருஷன் விரும்பியதனையன்றோ கொடுப்பது?

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத் தன்மை தேவபிரான் அறியும் –
நெஞ்சானது பரமபதம் என்று பேச்சுதன்னையும் நினையாதது சர்வேஸ்வரன் அறியும். தன்மை – சுபாவம்.
பரமபதம் என்ற பெயர் சொல்லுதலுங்கூடத் தமக்கு விருப்பமின்மையின், ‘மற்று ஒன்று’ என்கிறார்.
‘உம்மைக் கேட்கச் சர்வேஸ்வரனைச் சான்றாகச் சொல்லுவதற்குக் கருத்து என்?’ என்னில்,
சிந்தையினால் செய்வதான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை –
அவன் நினைத்தால் இவன் பின்னர் நினைக்க வேண்டியிருக்க, அவன் அறியாதது உண்டோ?
உள்ளுவார் உள்ளத்தெல்லாம் உடனிருந்து அறியுமவன் அன்றோ?

‘உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வொன் றில்லாக்
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி என்று
வெள்கிப்போய் என்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே.’-என்பது, திருமாலை, 34.

‘கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று தேடினேன் நாடிக் கொண்டேன்
உள்குவார் உள்கிற் றெல்லாம் உடனிருந் தறிதி என்று
வெள்கினேன் வெள்கி நானும் விலவறச் சிரித்திட் டேனே.’-என்னும் அப்பர் தேவாரமும் இக்கருத்தே பற்றி வந்தது.

அவன் நினைப்பிட்டால் அன்றோ இவனுக்கு நினைக்கலாவது?
நெஞ்சால் செய்யப்படுவனவற்றில் அவன் அறியாத வஞ்சனங்கள் ஒன்றும் இல்லை.
சிந்தையினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் –
நித்தியசூரிகளைப் போன்று முழுக்ஷூக்களும் வந்து அடையும் படியான தேசமாயிற்று.
மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றாலும் பூதேவரான ஸ்ரீவைஷ்ணவர்கள் திரண்டு வந்து அடையும்படியான தேசமாயிற்று.
கார்ய காரண விசாரம் -சிந்தித்தல் மனசின் கார்யம் போலே
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை –
திருவாறன்விளையிலே வந்து வசிக்கிற சர்வேஸ்வரனைக் கேட்டுக்கொள்வது.
யாரேனுமாகப் புக்காரை எல்லை இல்லாத ஆனந்தத்தையுடையவர்களாகச் செய்யும் தேசம் ஆதலின், ‘சிந்தை, மகிழ் திருவாறன் விளை’ என்கிறார்.
இதனால், பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி.
‘உமக்கு இத்தெளிவுதான் என்று தொடங்கி வந்தது?’ என்ன,
தீர்த்தனுக்கு அற்றபின் –
அவன் தன்னுடைய இனிமையின் மிகுதியாலே எனக்குப் புறம்பு உண்டான பற்றைத் தவிர்த்துத் தனக்கே
அநந்யார்ஹனாம்படி செய்துகொண்ட அன்று தொடங்கி;
உஜ்ஜீவிக்கப் பண்ணின அன்று தொடங்கி; நடுவே உஜ்ஜீவியாதே கிடந்து போந்ததே பல காலம்.
விசேஷ கடாக்ஷத்துக்கு முன்புள்ள காலம் -உகாரார்த்தம் அர்த்தம் அறிந்த பின்பு -உ ஜீவியாத காலம்

—————————————————————————————–

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-

நித்ய ஸூ ரிகள் சிலாகிப்பார்கள்
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே-உபாய உபதேஷுடன் -அநந்யார்ஹன் -சர்வ பாப விமோசனன்-
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன-அறுதி இட்ட நெஞ்சை
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்-புனிதமான -வித்யா ஸ்தானங்கள் இவை தனித் தனியே -நித்யஸூரிகள் சர்வ காலமும்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.-பஹு மானமாக சம்சாரம் போக்கும் பவித்ர பூதர் என்பர்

‘தூயோனான சர்வேஸ்வரனுக்கே அடிமை,’ என்று அறுதியிட்ட பின்பு வேறு ஓர் உபாயம் இல்லை என்று நினைத்து,
அந்தச் சர்வேஸ்வரனுக்கே அறுதியிட்ட மனத்தையுடையவராகி, செழுமை பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபராலே
சொல்லப்பட்ட ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும்
கற்று வல்லவர்களைத் தேவர்கள் எப்பொழுதும் பூசித்துத் தங்களுடைய தேவிமார்கட்கு
‘இவர்கள் பரிசுத்தர்கள்’ என்று விரும்பிச் சொல்லா நிற்பார்கள்’ என்றவாறு.
‘தேவர் தம் தேவியர்க்கு இவை பத்தும் வல்லார்களைப் பூசித்து நல்கித் தீர்த்தங்களே என்று உரைப்பர்,’ என்க.

முடிவில், ‘இத்திருவாய்மொழி கற்றவர்கள் அயர்வறும் அமரர்களுக்குச் சிலாகிக்கத் தக்கவர்கள்,’ என்கிறார்.

தீர்த்தன் –
இன்னார்க்குத் தீர்த்தன் என்னாமையாலே தன்னினின்றும் வேறுபட்டவர்க்கு எல்லாம் தீர்த்தன் ஆயிற்று.
தீர்த்தமாவது, தான் பரிசுத்தமுமாய், தன்னைத் தீண்டினாரையும் பரிசுத்தராம்படி செய்யுமதாயிற்று.
தீர்த்தன் உலகளந்த சேவடியைப் பிரமன் விளக்க.
அந்தத் தீர்த்தத்தைப் பரிசுத்தத்தின் பொருட்டுச் சடையின் மத்தியில் தரித்தான் சிவன்.
‘ஆறு பொதி சடையோன்’ –திருவெழுகூற்றிருக்கை.–என்னக்கடவது அன்றோ? ‘கங்காதரன்’ என்றே பெயர் அவனுக்கு.
அந்தக் கங்கைக்கு அடியை ஆராய்ந்து கொள்ளுகை அன்றோ இனி உள்ளது?
ஆராய்ந்தவாறே அது அடிப்பட்டு இருக்குமே; கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய கண்ணன் அன்றோ?

‘அங்கையால்அடி மூன்று நீர் ஏற்று அயன்
அலர்கொடு தொழுதேத்தக்
கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய
கண்ணன்வந் துறை கோயில்’-என்பது, பெரிய திருமொழி, 4. 2 : 6.

அண்ட கோளகைப் புறத்ததாய் அகிலமன் றளந்த
புண்ட ரீகமென் பதத்திடைப் பிறந்துபூ மகனார்
கொண்ட தீர்த்தமாய் அரன்கொளப் பகிரதன் கொணர
மண்ட லத்துவந் தடைந்ததிம் மாநதி மைந்த!’-என்பது, கம்பராமாயணம், அகலிகைப்பட. 60.

அன்றிக்கே, தீர்த்தனுக்கு அற்றபின் –
‘தன்னுடைய இனிமையின் மிகுதியாலே தன்னை ஒழிந்த விஷயங்களில் உண்டான ருசியைக் கழித்தவனுக்கு அற்ற பின்’ என்றுமாம்.
மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி – அவனை ஒழிய இரட்சகர் இலர் என்று தெளிந்தார் ஆயிற்று.
தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனன் ஆகி –
புறம்பு உண்டான விஷயங்களிலே ருசியைப் போக்கினவனுக்கே அறுதியாக எழுதிக் கொடுத்த நெஞ்சை உடையவராய்
‘மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு’ –மூன்றாந்திருவந். 14.என்றும்,
‘பரமாத்துமா விஷயத்தில் அன்புடையர் அன்னிய விஷயத்தில் அன்பிலர் ஆவர்,’-
‘பரமாத்மநி யோரக்த: விரக்த; அபரமாத்மநி’ என்பது, பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.- என்றும் சொல்லுகிறபடியே,
தன் பக்கல நெஞ்சினை வைத்தால் பின்பு புறம் போக ஒட்டாதே அழகு;
‘மனைப்பால், பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதாராத் தோள்,’ –இரண்டாந்திருவந். 42.என்கிறபடியே,
மனைப்பால் பேரின்பத்திலே கைகழிய ஒட்டாதே.
செழுங்குருகூர்ச் சடகோபன் சொன்ன –
அதற்கு அடியான ஜன்மபூமியையுடைய ஆழ்வார் அருளிச்செய்த.
தீர்த்தங்கள் ஆயிரம் –
ஆயிரம் பாசுரங்களும் ஆயிரம் தீர்த்தங்கள் ஆயின.
இவை பத்தும் வல்லார்களை –
இந்தப் பத்தைக் கற்க வல்லவர்களை.
தேவர் தீர்த்தங்களே என்று தம் தேவியர்க்குப் பூசித்து நல்கி உரைப்பர் –
திருவடி, திருவனந்தாழ்வான், சேனை முதலியார் தொடக்கமானார், இவர்களை ‘நாள்தோறும் தூயர் ஆவார்’ என்று
ஆதரித்துக்கொண்டு போந்து. தங்கள் மனைவிமார்களைச் சினேகித்துக் கொண்டாடும் தசையிலே சொல்லுவார்கள்.
நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே –
மனைவிமார்களும் தாங்களுமாக ஸ்ரீவைகுண்டநாதனுக்கு அடிமை செய்து, மனைவிமார்கள் எடுத்துக் கை நீட்டின
பிரீதியின் மிகுதியாலே ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளுமளவானவாறே, அவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்துக் கனக்கத்
தங்கள் பிரபாவத்தைச் சொல்லும்படியாகப் பெறுவர்.
ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் தசையாகிறது, பகவத் விஷயத்தில் கைங்கரியம் செய்யும் போது எடுத்துக் கை நீட்டுகை அன்றோ?’
‘சரம்ஸ்லோகம் இரட்சித்துக்கொண்ட அளவு போலே இருக்கும் அளவுகளிலே,’ என்றபடி.
உடையவர் –திருக் கோஷ்டியூரில் -சரம ஸ்லோகார்த்தம் வெளியிட்டால் போலே –
‘பருவம் அல்லாத மற்றைக் காலங்களில் கடல் தீண்டலாகாது,’ என்றாற்போலே, அதற்கு ஒரு நியதி இல்லை ஆதலின்,
‘வைகலும் பூசித்து என்கிறார். வைகல் – காலம்.
‘ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி’ –திருவாய். 3. 3 : 1.-என்று அவன் விஷயத்தில் இவர் பிரார்த்தித்ததை
இது கற்ற அடியார் விஷயத்திலே நித்தியசூரிகள் அடிமை செய்வார்கள் என்றபடி.

——————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

திவ்ய தேசே யாத்ரா மநோ ரதம்
தத் ஆதரண சாலின
ஆனந்த ஆகலயிதம் கமலா சகன்
தத் கருணையா ஸூ க்ருதம் பிரபந்தம் ஸம்ஸராவ்ய
ஆனந்த வ்ருத்தி -நீள் நகரிலே –

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

வைகுண்டே நித்ய யோகாத்
ஸ்ரீ த விவிசத்தயா -ஆஸ்ரித பவ்யன் -திருவடி தீண்டிய திருக் குறள் அப்பன்
அனந்த கீர்த்தி உஜ்வலாத்
கீர்த்தி உஜ்வலேனா –
சேஷே சாய்த்தவ
ருக்மிணி அபிமத
ஸூ ரஜித் பாணன் கண்டனாத்
அபி ருசித்த விஜயே சந்நிஹிதான்
சுசித்வாத் -தீர்த்தன்
தீர்த்த பாதோப்யதாதி-

சாட்யா சாங்கா ஸஹிஷ்ணும் –
ப்ரஸிமித ஜனதா கரஹணம் -முகில் வண்ணன் அடி அடைந்து
ஸ்பஷ்ட ரக்ஷம்-திருப் பேரியில் சேர்வன் நானே
வ்யாகுர்வந்தம் சு ரஷாக்ராந்தம்-ஆழி எழ
அகில ஜன ஸ்னேஹிதாம் தர்சயந்தம்
ஸியாத் கிரந்த சிதக்ரம் சிதோக்தம்
ஸ்மரண சுவிசதம்
விஸ்மய அர்ஹ விபூதி -விசித்திர விவித விபூதிமான்
ஸ்தோத்ரே விஞ்சுதமாக
ஸ்துதி கருத் அதகரம்
அநிஷ்ட சோரம் சப்தமே

——————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 70-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் -துன்பமறக்
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு —————70-

———————————————————————————————–

அவதாரிகை –

இதில்
திருவாய் மொழி பாடி அடிமை செய்யப்
பாரித்த
திவ்ய ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தாம் பாடின திருவாய் மொழியைக் கேட்கைகாக
பெரிய பிராட்டியார் உடன் பேர் ஒலக்கமாக
திரு வாறன்விளையிலே அவன் வந்து எழுந்து அருளி
இருக்கிற படியை
அனுசந்தித்து
நாம் அங்கே சென்று
திருமாலவன் கவி -என்ற வாயோலைப் படியே
அவனும் அவளுமான சேர்த்தியிலே
திருவாய் மொழியை அவர்கள் இருவரும் உகந்து
திருச் செவி சாத்தும்படி கேட்ப்பித்து
அடிமை செய்யப் பெறுவது எப்போதோ –
என்று மநோ ரதிக்கிற -இன்பம் பயக்க -வில் அர்த்தத்தை
இன்பக் கவி பாடுவித்தோனை -என்று
அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————————————–

வியாக்யானம்–

இன்பக் கவி பாடுவித்தோனை –
இன்கவி பாடிய ஈசனை -என்றும் –
இன்கவி என் பித்து -என்றும் –
என் நா முதல் வந்து புகுந்து நல் ஈன் கவி -என்றும்
திருந்து நல் ஈன் கவி -என்றும்
வண் தீன் கவி -என்றும்
சீர் பெற இன்கவி -என்றும்
உறப் பல இன் கவி -என்றும்
பதவியவன் கவி பாடிய வப்பன் -என்றும்
நிரதிசய போக்யமான திருவாய் மொழியை
என்னைக் கொண்டு பாடுவித்த உபகாரகனை-

இந்திரையோடு அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் –
பெரிய பிராட்டியாரோடு கூட
திருவாய் மொழி கேட்கைக்கு பங்கான இடம் -என்று
அத்ய ஆதாரத்தைப் பண்ணி
வாழ்ந்து கொடு போருகிற திரு வாறன் விளையில்

அன்றிக்கே
இந்திரையோடு அன்புற்று -என்று
பெரிய பிராட்டியார் இடத்தில் ச்நிக்தனாய் -என்றுமாம் –
இத்தால் -இன்பம் பயக்க -என்கிற முதல் பாட்டை
கடாஷித்து அருளிச் செய்த படி –
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-என்றும்
ராமஸ் சீதாம் -நுபிராப்ய ராஜ்ஜியம் புநரவாப்தவான் பிரஹருஷ்டம் உதித்தோ லோகே – -இறே-
திரு வாறன் விளையில் துன்பமறக் கண்டு –
ஏழையர் ஆவியில்
துக்கம் எல்லாம் தீரக் கண்டு –

அடிமை செய்யக் கருதிய –
கண்டால் செய்யும் கார்யமான
கைங்கர்யம் செய்கையிலே
மநோ ரதிக்கிற –
அதாவது –
அன்புற்று அமர்ந்து வலம் செய்து கை தொழ நாள்களும் ஆகும் கொலோ -என்றும்
மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்து கை தொழக் கூடும் கொலோ -என்றும்
நீடு பொழில் திரு வாறன் விளை தொழ வாய்க்கும் கொள் நிச்சலுமே -என்றும்
வட மதுரைப் பிறந்த வாய்க்குல மணி நிறக் கண்ணபிரான் தன
மலரடிப் போதுகள் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப் பெற
வாய்க்கும் கொல் நிச்சலுமே -என்றும்
மதிள் திரு வாறன் விளை உலக மலி புகழ் பாட -என்றும்
திரு வாறன் விளை என்னும் நீண் நகரம் அதுவே -என்றும்
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றிலமே -என்றும்
திரு வாறன் விளை ஒன்றி வலம் செய்ய -என்றும்
திரு வாறன் விளை அதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனையே -என்றும்
திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின்
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாததன்மை –என்றும்
இப்படி யாயிற்று அவருக்கு இவ் விஷயத்தில்
கைங்கர்ய மநோ ரதம் நடந்த படி -என்கை-

உபகார ச்ம்ருதியோடே
தன் சரிதை கேள்வி யாகாமல்
இன்பம் பயக்க விருந்த
நிலத் தேவர் குழுவிலே
பாட்டு கேட்பிப்பதாக
கான கோஷ்டியையும்
தேவ பிரான் அறிய மறந்தவர்–என்று இறே
ஆச்சார்ய ஹிருதயத்தில் நாயனார் அருளிச் செய்தது –
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே திண் திறலோர் யாவர்க்கும் தேவு –
தர்சன அனுபவ கைங்கர்ய
அனுபவ மநோ ரதத்தை யுடைய ஆழ்வார் திருவடிகளே
திருட அத்யாவச்ய உக்தராய் உள்ளவர்க்கு எல்லாம் பர தேவதை –

ஆழ்வாரும் வேண்டா –
நமக்கு உத்தேச்யம் ஆழ்வார் திருவடிகளே -அமையும்

அன்றிக்கே –
மாறன் கழல் சேர் திண் திறலோர் -உண்டு
திருட அத்யாவசாய உக்தரான
மதுரகவி நாத முனி பரப்ரக்ருதிகளாய் உள்ளவர்கள் –
மற்றும் அத்யாவசாய யுக்தராய் உள்ளார்
எல்லாருக்கும்
குல தைவம் என்றாகவுமாம் —
அவன் விட்டாலும் அவள் விடாள் அவள் விட்டாலும் விடாத திண்ணிய கழல் -நமது ஆச்சார்யர்கள்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாருக்கும் -நம் போலே அத்யாவச்யம் இல்லாதவர்களுக்கும் —

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: