பகவத் விஷயம் காலஷேபம் -157- திருவாய்மொழி – -7-9-1….7-9-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

மேலே பலகாலும், ‘சர்வேஸ்வரன், தன்னைப் பெறுவார்க்குத் தடைகள் உண்டாய் இருந்தாலும்
தானே தன்னைத் தரப்பார்க்கும் அன்று தகைய வல்லது ஒரு தடை இன்றிக்கே இருக்க,
‘தன்னாலே பேறு’ என்று இருக்கிற என்னை இங்கே வைத்தது என்?’ என்று கேட்டுப் போருவார் ஒருவர்.
அவனும், இதற்கு நேரான பரிகாரத்தைப் பண்ணாதே ஏதேனும் ஒரு குணத்தைப் பிரகாசப்படுத்தி
வேறொன்றிலே நோக்கைப் பண்ணுவிப்பான் ஒருவன், இவர்க்கு இதிலே நெஞ்சு செல்லாதபடி.
இனி, மேல் திருவாய்மொழியிலும் ‘சம்சாரத்திலே பொருந்தாமை உண்டாய், உன்னை ஒழியச் செல்லாமை உண்டாய்,
நீயே உபாயமாய் இருக்க, பின்னையும் என்னை இங்கே வைத்து ஜீவிப்பித்துக் கொடுபோருகிற ஆச்சரியம் இருந்தபடி என்?
இதனை எனக்கு அருளிச்செய்ய வேணும்,’ என்ன,
‘கண்டீரேதான் இது ஓர் ஆச்சரியம் இருந்தபடி? என்று அவ்வழியாலே தன்னுடைய ஆச்சரியமான உலகமே
உருவமாக இருக்கும் தன்மையைக் காட்டிக்கொடுத்து அதனோடே பணி போரும்படி செய்தான்.
இவரும் அப்போது அத்தனையும் அதனைச் சொல்லி, அது தலைக்கட்டினவாறே பின்பு பழையபடியே கேட்கத் தொடங்குமவர் அல்லரோ?

இச்சம்சாரத்திலே பொருந்தாது இருக்கிற என்னை இங்கு வைத்ததற்குக் காரணம் என்?’ என்ன,
‘நம்மை இதற்கு ஒரு காரணத்தை நிர்பந்தித்துக் கேட்கவேணுமோ?
கண்டன எல்லாவற்றிலும் நாக்கு நீட்டி அவற்றிலே ருசி பண்ணிப் போந்தீராகில்,அதற்கு அடியான கர்மத் கிடந்ததாகில்,
வாசனை ருசி கிடந்தனவாகில், அவற்றாலே இருந்தால் ஆகாதோ?’ என்ன,
‘அவையும் கிடக்கச்செய்தே, அவற்றையும் பாராதே எனக்கு மயர்வு அற மதி நலம் அருளிப் பாசங்கள் நீக்கி
என்னை உனக்கே அறக் கொண்ட பின்பு நீ சொல்லுகிற இது பரிகாரம் அன்று;
ஆகையாலே, என்னை இங்கு வைக்கிறது என்?’ என்று வடிம்பிட்டுக் கேட்க,
‘நீர்தாம் உம்மை நமக்காக ஓக்கி வைத்ததாகச் சொன்னீரே, ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ –திருவாய். 2. 9 : 4.-என்று!
ஆன பின்பு நாம் வேண்டினபடி உம்மைக் காரியங் கொள்ளக்கடவோம் அன்றோ?
ஆன பின்பு, நமக்கு அதிசயத்தைப் பிறப்பிக்கை உமக்குச் சொரூபமாய் இருக்குமன்றோ?
ஆன பின்பு, உம்மைக்கொண்டு, ஸ்ரீ வீடுமரைப் பாணங்களாகிய படுக்கையிலே இட்டு வைத்து
நாட்டுக்கு வெளிச்சிறப்பைப் பண்ணிக்கொடுத்தாற்போலே,
நமக்கும் நம்முடையார்க்கும் போது போக்காகச் சில பிரபந்தங்கனைப் பண்ணுவிக்கப் பார்த்தோம்:
அது தலைக்கட்டுந்தனையுங்காணும் உம்மை இங்கு வைப்பது,’ என்று நேரான பரிகாரத்தை அருளிச்செய்தான்.
உடையவருக்கும் -உரு பெரும் செல்வமும் -நெறி தரும் செந்தமிழ் ஆரணமே -போது போக்காகச்-கால ஷேபமே -உயர்ந்த பிரயோஜனம் –

‘கண்டு கொண்டு என் கண்ணிணை ஆரக்களித்துப்
பண்டை வினையாயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மா லைகள் சொன்னேன்
அண்டத் தமரர் பெருமான் அடியேனே.’–என்பது, திருவாய். 9. 4 : 9.

அருளிச்செய்ய, இவரும் அதனை அநுசந்தித்து.
சர்வேஸ்வரனாய் அவாப்த சமஸ்தாகமனாய்ச் சர்வ பிரகார பரிபூரணனாய் இருக்கிற அவன்
, தனக்கு ஒரு குறை உண்டாய். அக்குறை கின்னைத் தம்மைக் கொண்டு தீர்ப்பதாகச்சொன்ன வார்த்தையைப் பொறுக்கமாட்டிற்றிலர்.
‘தனக்குச் சில பிரபந்தங்கள் வேண்டினால், அதற்குத்தகுதியான ஞானத்தாலும் சத்தியாலும் குறைவற்ற ஸ்ரீவேதவியாச பகவான்,
ஸ்ரீவால்மீகி பகவான் ஸ்ரீபராசர பகவான் தொடக்கமானார்,
‘செந்தமிழ் பாடுவார்’ –பெரிய திருமொழி, 2. 8 : 2.-என்று சொல்லப்படுகிற முதலாழ்வார்கள், இவர்கள் எல்லாரும் உண்டாயிருக்க,
அநாதிகாலம் சம்சாரத்திலே பழகி ஐம்புல இன்பங்களிலே ஈடுபட்டவனாய்,
‘அவன் இல்லாதவன் ஆகவே ஆகிறான்’ என்கிறபடியே -‘அஸந்நேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத்’என்பது, தைத்திரீய. ஆன. 6.
-அசத்தைப் போன்றவனாய் உருமாய்ந்து போன என்னைக்கொண்டு
தனக்குத் தகுதியாகக் கவி பாடுவித்துக்கொள்ளவதாகச் சொன்ன வார்த்தை என்ன வார்த்தை!
இது ஒரு நீர்மை இருக்கும்படியே! இது என்ன நீர்மை!’ என்று,
சர்வேஸ்வரன் தம் திறத்தில் செய்த உபகாரத்தை அநுசந்தித்து, அதற்கு ஒரு பிரதியுபகாரம் காணாமையாலே தடுமாறிச் சொல்லுகிறது.

——————————————————————————————————————–

என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-

நிரூபாதிக சேஷி என்னைக் கொண்டு தன்னைக் கவி பாடிக் கொண்ட ஒஜ்வல்யம்
என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய–யவாதாத்மபாவி அங்கீ கரித்து- பிரதம அங்கீ காரம் -விசேஷ கடாக்ஷம் பண்ணி -ஆசையினால் –
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை-தனக்கே யாகும் படி -2-9- தனக்கே யாக என்னைக் கொள்ளும்
-பிராரத்த படியே -ஞானாதிகள் இல்லாத என்னை -காலத்துக்கு அப்பால் -வேதங்களும் பிற்காலிக்கும் படி யதோ வாசோ நிவர்த்தந்த
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்-சப்தம் தானே நிரதிசய – ரசமாய் கேட்டாரார் வானவர்கள்
-தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் அன்றோ -சர்வாதிகாரமாக தமிழ்
-நிரு பாதிக சேஷி -மூல பூதனாய் நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ-அதனால் நிலை பெற்ற
-உஜ்வலா விக்ரஹம் -எனக்கு பிரகாசப்படுத்தி -எத்தை சொல்லி தரிப்பேன்
பிரதமம் ஆபி முக்கியம் பண்ணும் படி அங்கீ கரித்திலனோ
அத்தை முழுக்க நடத்த வில்லை என்பேனோ
என்னை தனக்கே ஆக்கிக் கொள்ள வில்லை என்பேனோ
நான் பாடினேன் பாடி தான் பாடிற்றிலேன் என்பேனோ
அத்தால் உஜ்வலனாய் ஆக வில்லை என்பேனோ

காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் உஜ்ஜீவிக்கத் தகுதியாம்படி அங்கீகரித்துக் கழிகிற நாள்கள்தோறும் என்னைத் தனக்கு அடிமை ஆக்கி,
என்னால் தன்னை இனிய தமிழ்ப் பாசுரங்களைப் பாடுவித்துக் கொண்ட ஈசனை, காரணமாய் நின்ற என் சோதியை என்ன என்று சொல்லித் தரிப்பேன்?
பாடிய-பாடுவித்துக்கொண்ட. இத்திருவாய்மொழி, கலிவிருத்தம்.

‘மிகச்சிறியேனான என்னை ஞானம் சத்தி முதலியவைகளையுடையேனாம்படி செய்து, என்னை யிட்டுத்திருவாய்மொழி
பாடுவித்துக்கொண்ட உபகாரத்தைச் சொல்லித் தரிக்க மாட்டுகின்றிலேன்,’ என்கிறார்.

‘இப்படி நீர் படுகைக்கு அவன் செய்த நன்மைதான் யாது?’ என்ன, ‘இது’ என்கிறார்:
போகிய அன்றைக்கு அன்று — என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு –
சர்வேஸ்வரன் ஒரு நாள் ஒருவனை அங்கீகரித்தால், பின்னர் அவ்வங்கீகாரந்தன்னையே காலம் என்னும்
ஒரு பொருள் உள்ளதனையும் சொல்லி உஜ்ஜீவக்கலாயிற்று இருப்பது.
‘கண்ணபிரானுடைய அந்த விஸ்வரூபத்தையும் நினைக்க எனக்கு வியப்பானது அதிகமாய் உண்டாகிறது!
பின்னும் பின்னும் சந்தோஷம் அடைகிறேன்!’ என்கிறபடியே
, தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபம் அத்யத்புதம் ஹரே:
விஸ்மயோ மே மஹாந் ராஜக் ஹ்ருஷ்யாமி ச புந : புந:’-என்பது, ஸ்ரீ கீதை, 18 : 77

பின்னர் என்றும் ஒக்க அதனை நினைத்துத் தரிக்கலாம்படியாயிற்று இருப்பது.
‘ஸ்ரீராம பிரானுடைய பாணங்களை நினைத்துக்கொண்டு வருத்தம் உற்றான்’ என்கிறபடியே
,‘ப்ரஹ்மதண்ட ப்ரகாசாநாம் வித்யுத் ஸத்ருச வர்ச்சஸாம்
ஸ்தரந் ராகவ பாணாநாம் விவ்யதே ராக்ஷஸேஸ்வர:’-என்பது, ஸ்ரீ ராமா. யுத். 60 : 3.

அம்புக்கு இலக்கானார் அலற்றுமாறுபோலேயாயிற்று, குணத்துக்கு இலக்கு ஆனாரும் அலற்றும்படி.
அம்பு பட்ட புண் மருந்து இட்டு ஆற்றலாம்; குணத்தால் வந்த புண்ணுக்கு மாற்று இல்லை அன்றோ?
ஆக, சர்வேஸ்வரன் ஒரு நாள் ஒருவனை அங்கீகரித்தால், அது தன்னையே என்றும் ஒக்க நினைக்கலாம்படி இருக்குமாயிற்று.
‘இப்படிப்பட்ட அங்கீகாரத்தை ஒருகால் செய்துவிட்ட இத்தனையோ?’ என்னில்,
போகிய அன்றைக்கு அன்று-
கழிகிற நாள்தோறும் நாள்தோறும் இப்படியே ஆயிற்று அங்கீகரித்தது.
இதுதான் இருவர் படிகளாலும் ஆற்றப்போகாது. அவனுடைய அங்கீகாரத்துக்கு இலக்கான இவர் படியைப் பார்த்தால்,
அதனை இவர் தாம் பொறுக்க வல்லர் அல்லர்; அவனோ என்னில்,
தன்னை நம்பி உடனே கிடந்தவனை மடி தடவினவன் ‘என் செய்தோமானோம்!’ என்று வருந்துமாறு போலே,
எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதானாய் ‘இவனுக்கு என் செய்வோம்!’ என்று இருக்கும் ஒருவன்.

என்னைத் தன்னாக்கி –
‘அறிவிலேன்’ -திருவாய், 5 7 : 1-என்கிறபடியே அறிவின்மை, ஆற்றல் இன்மை இவைகளுக்கு இலக்காய் இருக்கிற எனை,
தன்னோடு ஒக்க ஞானம் சத்தி முதலானவைகளையுடையேனாம்படி செய்து.
அன்றிக்கே, ‘என்னைத் தன்னுடையேனாம்படி செய்து’ என்னுதல்.
என்னால் தன்னை –
தன்னாலே சத்தியைப் பெற்றவனான என்னாலே, வேதங்கள் ஸ்மிருதிகள் இதிகாசங்கள் முதலானவைகட்கும்
அறிய முடியாதவனாய் இருக்கிற தன்னை.
‘அந்த ஆனந்த குணம் ஒன்றினின்றும் எந்த வேத வாக்குகன்
‘யதோவாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ’-என்பது, தைத்திரீய. ஆன. 9.-
திரும்பினவோ?’ ‘என்னால் அறிய முடியாது என்று இருக்குமவனுக்கு அறியப்படுவது,
அறிந்தேன் என்று இருக்குமவர்கட்கு அறியப்படாதது’ என்கிறபடியே
,‘யஸ்யாமதம் தஸ்யமதம் அவஜ்ஞாதம் விஜாநதாம்’-என்பது, கௌஷீதகீ உபநிடதம்.
பிரமாணங்களால் அறியமுடியாமல் இருக்கிற தன்னை.

இன் தமிழ் பாடிய –
இதுதன்னில் ஓடுகிற அர்த்தமும் பரிமாற்றமும் கிடக்கச் செய்தே, சொல்லில் இனிமை தானே கவர்ச்சிகரமாய் இருக்கிறபடி.
பாடிய –
‘என்னைக் கொண்டு பாடுவித்தான்’ என்னுதல்;
பாடினான் என்னுதல்.
‘இந்த ஸாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறான்’ என்று முத்தன் ஸாமகானம் பண்ணுமாறு போலே,
அவனும் இவருடைய அனுபவத்தால் வந்த உவகைக்குப் போக்கு விட்டுத் ‘தென்னா’ என்று பாடுமாயிற்று.
ஏதத் ஸாமகாயந் நாஸ்தே’ என்பது, தைத். பிரு. 10. ‘தென்னா’- என்பது, திருவாய். 10. 7 : 5.
‘இப்படி இனிய இது உண்டானபடி எங்ஙனே?’ என்னில், ஈசனை-சொல்ல வேணுமோ?
சர்வேஸ்வரன் செய்யமாட்டாதது உண்டோ? அரிதோ அவனுக்கு?
‘கவி பாடினது நீராய் இரா நின்றீர்; அவனைப் பாடினானாகச் சொல்லாநின்றீர்; இதுதான் செய்தபடி என்?’ என்ன,
ஆதியாய் நின்ற-
‘நான் கவி பாடுகைக்குக் காரணமாய் நின்றான். அவன் அடியாக நான் கவி பாடினேன்,’என்றபடி.
‘காரணமானபடிதான் என்?’ என்னில்,
என் சோதியை –
பிடாத்தை விழவிட்டுத் தன் வடிவழகைக் காட்டினான்.
‘திருத்திரை எடுத்தாற் கூப்பிடுமாறு போலே கூப்பிட்டேன்; அது கவியாய்த் தலைக்கட்டிற்று.
அன்றிக்கே, தன் வடிவழகைக் காட்டியாயிற்றுக் கவிக்கு உள்ளுறை கொடுத்தது,’ என்னுதல்.
‘நீரும் கவி பாடினீராகில் பின்னை இப்படிக் கிடந்து படுகிறது என்?’ என்ன,
என் சொல்லி நிற்பனோ –
‘நானும் பாதி வழி வந்து அவனாலே அங்கீகரிக்கப்பட்டவனாய் இருக்கிறேனோ?
அன்றிக்கே, பெற்ற பேறுதமான் அளவுபட்டு ஆறி இருக்கிறேனோ?’ என்றது,
‘ஒரு சாதனத்தைச் செய்தார்க்குப் பலம் தப்பாமையாலே, நானும் இப்பேற்றுக்குச் சில செய்தேனாய் இது தக்கது என்று இருக்கிறேனோ?
பெற்ற பேறுதான் பொறுக்குமதாய் ஆறி இருக்கிறேனோ? எதனைச் சொல்லித் தரிப்பது?’ என்றபடி.
‘கிருஷ்ணத்வைபாயநர் என்னும் பெயரையுடைய வியாசரைச் சுவாமியான நாராயணன் என்று தெரிந்துகொள்;
செந்தாமைரக் கண்ணனான அவனைத் தவிர வேறு யார்தான் மஹாபாரதம் செய்தவர் ஆவார்?’ என்றாற்போலே இருக்கிறதாயிற்று.

‘க்ருஷ்ணத்வைபாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும்
கோஹ்யந்ய: புண்டரீகாக்ஷாத் மஹாபாரதக்ருத் பவேத்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 3. 4 : 4.

இதற்கு ஆளவந்தார் அருளிச்செய்யும்படி: ‘சர்வேஸ்வரன் செய்யப் புக்கால் அரியதும் ஒன்று உண்டோ?’ என்றாம்.
அங்ஙன் அன்றிக்கே, எம்பெருமானார், ‘இவர் தாம் சொன்னாராகிலும் ஒருபடி போகச் சொல்லித் தலைக்கட்டுவர்:
அவனும் தானே சொன்னானாகில் ஒரு குற்றுமும் இல்லாதபடி தலைக்கட்டுவான்:
சிறு குழந்தை எழுத்திடப் புக்கார் தானே ஏதேனும் ஒருபடி இட்டுத் தலைக்கட்டும்;
தந்தையாதல் உபாத்யாயனாதல் இடப்புக்கால்தானே எழுத்தாய் இருக்கும்?
அங்ஙன் அன்றிக்கே, இவன் கையைப் பிடித்து இடுவிக்கப் புக்கவாறே, இவன் ஓரிடத்தே இழுக்க
அவன் ஓரிடத்தே இழுக்கக் குதறிக் கொட்டியாய் உருவம் அழிந்து சிதறிப்போம்;
அப்படியே, என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடாநிற்கச் செய்தேயும,
என்னால் வரும் குற்றம் தன் பக்கல் தீண்டாதபடி பாடுவித்தான் என்கிறார்’ என்று அருளிச்செய்வர்.

இதற்கு-இத்திருப்பாசுரத்துக்கு. ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்துக்கு, ‘இன்தமிழ்பாடிய ஈசன்’ என்றதிலே நோக்கு. ஈசன் – ‘சமர்த்தன்’ என்றபடி.
எம்பெருமானார் நிர்வாஹத்துக்கு ‘என்னால் தன்னை இன்தமிழ் பாடியஈசனை’ என்றதிலே நோக்கு. ஈசன்-குற்றங்கட்கு எல்லாம்
எதிர்த்தட்டானவன். மேலே காட்டிய ‘கிருஷ்ணத்வைபாயநம்’ என்ற திருஷ்டசாந்தம், ஸ்ரீஆளவந்தார் நிர்வாஹத்திற்கு.

—————————————————————————————————–

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-

பிரதம பிரவர்த்தகன் -தன்னை கவி பாட -நான் பாடினேன் என்று உலகத்தில் பிரசித்தம் ஆக்கி -எது சொல்லி தரிப்பேன்
என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்-விஷயாந்தரம் போன எனது ஆத்மாவை இன்று
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்-
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்-தன்னுடைய வார்த்தையால் கர்த்தா அவனே விஷயம் அவனே -மாயன் –
தானே பாடி சொல்லும் தனதே விஷயமும் தானே என்கிற மாயம்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே-எனக்குள் இருந்து முன் சொல்லி -திரிபுரம் -ஸ்ருஷ்டிக்க அந்தர்யாமியாக இருந்தால் போலே ஏகி பவித்து –

என்னுடைய இனிய உயிரானது இன்று ஒரு பொருளாகும்படி, என் சொல்லால் யான் சொன்ன இனிய கவி என்பதாகப் பிரசித்தமாக்கித் தன் சொல்லால்
தானே தன்னைப் புகழ்ந்து பாடிய ஆச்சரியத்தையுடையவனும், எனக்கு முன்னே சொல்லுகின்ற, மும்மூர்த்திகளின் உருவமாய் இருக்கிற முதல்வனுமான
எம்பெருமானை எந்தக் காரணத்தைச் சொல்லித் தரித்திருப்பேன்?
‘ஒன்றாய் இன் கவி என்பித்துத் தன்னைக் கீர்த்தித்த மாயன், என்முன் சொல்லும் மூவுருமாம் முதல்வனை என் சொல்லி நிற்பன்?’ என்க. ஒன்றாய்-ஒன்றாகும்படி.

‘தான் தன்னைக் கவி பாடி, நான் பாடினேன் என்று உலகத்தில் பிரசித்தம் ஆக்குவதே! ஒருவனுடையபடி இருந்தபடி என்!’ என்று
அவனுடைய ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்.
‘அநாதிகாலம் யான் எனது என்னும் செருக்காலே, இல்லாதவனுக்குச் சமமாய்த் தன் பக்கல் முகம் பாராதே போந்த என்னை,
நான் ஆபிமுக்கியம் பண்ணும்படி நிர்ஹேதுகமாக அவன் அங்கீகரித்தபடியை அநுசந்தித்தால் எதனைச் சொல்லி நான் தரையில் கால் பாவுவது?’ என்கிறார்.

உடையவன் உடைமையை கொண்டு போனான் -தான் விஷயீ கரித்தானாய் இருக்கை அன்றிக்கே
இவர் வாக்காலே இவர் கவி பாட தானும் உளனாய் தன் விபூதியும் உளனாக அன்றோ கருதினான்
திவ்ய தேசம் அருளிச் செயல் பெற்றதால் அன்றோ -ஆகையால் தரிக்கைக்கு இயலாமல் உள்ளேன்
இன்று -மயர்வற மதி நலம் அருளினை இன்று
இன்னுயிர் –
அவன் அங்கீ காரம் இலக்காக ஆனதால்
விபரீத லக்ஷணை என்றுமாம்
இன்று தானே வஸ்துவானதே
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
சர்வ ஸ்வாமி உடைய சப்தம் -ஸூத்ரனான சம்சாரிக்கு இல்லை
சேதனனுக்கு தனித்து பிரவ்ருத்தி நிவ்ருத்தி இல்லையே
ஸ்வரூப ஸ்திதியாதிகள் அவன் அதீனம்
இனி இனிய கவி என்று நாட்டில் பிரசித்தம் ஆக்கினான்

என் சொல்லி நிற்பன் –
‘அவன் என்னை அங்கீகரித்த அங்கீகாரம் காரணம் இல்லாதது என்னவோ, காரணத்தோடு கூடியது என்னவோ?
இத்தலையை ஆராய்ந்து பார்த்த இடத்து ஒரு காரணத்தைக் காண்கின்றிலர்;
அத்தலையை அநுசந்தித்துப் பார்த்த இடத்து ஒரு காரணத்தைக் காண்கின்றலர்;
அநாதிகாலம் கைவிட்டதற்கு ஒரு காரணத்தைக் காண்கின்றிலர்; இன்று
இனி, சேதனனுக்குத் தனித்து ஒரு காரியத்தைச் செய்தலுக்கும் செய்யாமைக்கும் யோக்கியதை இல்லை அன்றோ,
சொரூபம் ஸ்திதி முதலானவைகள் அவன் அதீனமாய் இருக்கையாலே?
இதனை இனிய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கினான்.
‘பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம்’ என்கிறபடியே.
தான் வென்று மற்றையாரோடு ஒருசேர நின்று அருச்சுனனைப் புகழுமாறு போலே.
செங்கண் அலவலை’ – அவாக்ய அநாதரா -‘உரையாடதவன் விருப்பமற்றவன்’ என்று இருக்கக்கூடிய அவன்,
அது முழுதும் அழிந்து ஏத்தத் தொடங்கினான் ஆயிற்று.‘மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும்

பலர்குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தன்
சிலைவளையத் திண்தேர்மேல் முன்நின்ற செங்கண்
அலவலைவந்து அப்பூச்சி காட்டு கின்றான்;
அம்மனே அப்பூச்சி காட்டு கின்றான்.’–என்பது, பெரியாழ்வார் திருமொழி. அலவலை-பலவாறாகப் பேசுகின்றவன்.

‘இன்கவி என்பித்து’ என்னா நின்றீர்; இங்ஙன் அன்றோ?’ என்னில், அன்று; ‘பின்னைச் செய்தபடி என்?’ என்னில்,
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த –
சொல்லும் தன்னது: சொன்னவனும் தான்; சொல்லிற்றும் தன்னை. -தன் சொல்லால் தன்னை தான் கீர்த்தித்த-மூன்றுமே அவனது-
கவிபாட்டுண்டேன் நானாகில் அன்றோ கவிபாடினேன் நானாவது
தான் தன்னைக் கவி பாடானானாகில், நீர் கவி பாடினீர் என்று நாட்டிலே பிரசித்தமாக்கினபடி எங்ஙனே?’ என்னில்,
மாயன் –
சொல்ல வேணுமோ? ஆச்சரியமான சத்தியோடு கூடினவன் அன்றோ?

என்னைக் கருவி்யாகக் கொண்டு தானே கவி பாடினான்.
‘உம்மைக் கருவியாகக் கொண்டு கவி பாடினபடி எங்ஙனே?’ என்ன,
என் முன் சொல்லும் –
அவன் முன்னே சந்தையிடப் பின்னே நான் சொன்னேன்.
தான் சொன்னான் ஆகில் ஸ்ரீகீதையைப் போன்று வறுமுறுகலாய்ப் போம் அன்றோ?
நம்பி திருவழுதிநாடு தாசர், ‘ஸ்ரீகீதை போவான் ஒருவன் சந்தியா சதஸ்ஸிலே வந்து கண்டால்,
பின்னை இவனுக்கு உழக்கு அரிசியைக் கொடுப்பித்துவிடு மத்தனைபோக்கி அங்கு அவர்கள் உள்ளிடம் கொடார்கள்;
திருவாய்மொழி கற்றவன் ஒரு விண்ணப்பன் செய்வான் சென்றால், சர்வேஸ்வரனும் கிராமத்திலுள்ளாரும் புறப்பட்டு
எதிர்கொண்டு தங்கள் இருப்பிடத்தை ஒழித்து அவனுக்குக் கொடுத்து ஆதரியாநிற்பார்கள்,’ என்று அருளச்செய்வர்.
‘அதுதான் என் போல?’ என்றால், ‘மூவுருவாம் முதல்வனே-பிரமனைப் படைத்து அவனை அத்தியயனம்
செய்வித்தித் தேவர்களுக்கு வெளிச்சிறப்பைச் செய்வித்து அது தன்னைப் ‘பிரமன் செய்தான்,’ என்று அவன் தலையில் ஏறிட்டும்,
சிவனுக்கு அந்தராத்துமாவாய்ப் புக்கு நின்று முப்புரங்களை எரிவித்துச் ‘சிவன் செய்தான்’ என்று அவன் தலையிலே ஏறிட்டும்
விருது பிடிக்கப் பண்ணினாற்போலே, தானே பிரபந்தத்தைச் செய்து, நான் செய்தேன் என்று என் தலையிலே ஏறிட்டு எனக்கு ஒரு பிரசித்தியைத் தந்தான்.

தானே காரியம் செய்து பிறர் தலையிலே ஏறிடுதல் அவனுக்குப் பண்டே சுபாவங் கண்டீர்!
‘எந்த ஸ்ரீமந் நாராயணன் உலகங்களைப் படைப்பதற்கு முன்னே நான்முகனைப் படைத்தான்?
எவன் அவனுக்கு வேதங்களையும் உபதேசம் செய்தான்?’ என்பது உபநிடதம்.
‘அளவிட முடியாத ஆற்றலையுடையவனும் பூசிக்கத் தக்கவனுமான சிவனுக்கு விஷ்ணு அந்தராத்துமாவாய் இருக்கிறார்;
அப்படி விஷ்ணு சிவனுக்கு அந்தராத்துமாவாய் இருப்பதனாலே அந்தச் சிவன் வில்லை வளைத்து
நாண் ஏற்றுதலாகிற அந்தக் காரியத்தைப் பொறுத்துக்கொண்டான்’ என்பது பாரதம்

யோபிரஹ்மாணம் வி்ததாதி பூர்வம் யோவை
வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை’-என்பது, ஸ்வேதாஸ்வதரம்.

‘விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய அமிததேஜஸ:
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸவிஷேஹே மஹேஸ்வர:’-என்பது, பாரதம், கர்ணபர்வம்.

‘இப்போது தானே நடத்திக்கொண்டது என்?’ என்றால், தன் உருவமாக இருந்து காரியம் செய்யுமாறு போலே,
பிரமன் சிவன் முதலானோர்களைத் தனக்குச் சரீரமாகக் கொண்டு நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து
அவர்கள்மேல் ஏறிட்டாப் போலே கண்டீர், என்மேலே ஏறிட்டுக் கவிபாடினேன் நானாகச் சொல்லித் தலைக்கட்டினபடியும்,’ என்கைக்காகச் சொல்லிற்று.

———————————————————————————————–

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3-

தொண்டர்க்கு அமுது உண்ண -பக்தாம்ருதம் -உபகாரகனை மறக்க விரகு உண்டோ
ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்-முதல்வன் இவனாம் -தரிசன பிரவர்த்தகர் -பிரபன்ன ஜன கூடஸ்தர் –
-இவனே காரண புதன் -இவனே கவிக்கு விஷயம் -காரண பூதனை -வாக்குக்கும் மனசுக்கும் நினைத்தே பார்க்க முடியாமல் இருப்பவனை
-தன்னை என் பக்கலில் நான் தேறும் படி பண்ணி
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி-அதுக்கு ஈடாக நாவில் புகுந்து அர்த்த சப்தம் குறை இல்லாமல் சந்தர்ப்ப சாரஸ்யம் உள்ள கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்-சத்வ சுத்தி -ரஜஸ் தமஸ் இல்லாமல் -பக்தி குணம் யோகம் உள்ளவர்க்கு -அனுபவிக்க –
அமலன் ஆதி பிரான் -தானே ஆதி என்று பிரகாசிப்பித்த உபகாரகன் -அதே போலே -தூ முதல் பத்தர் -அநந்ய பிரயோஜனர் என்றுமாம்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ-வாக் விருத்திக்கு முதலான உபகாரகன் -என்று மறப்பேன் -வாய்த்த முதல் -என்றுமாம்
உபகாரத்வம் மறந்தால் அன்றோ இத்தை மறப்பேன் -காரணத்துவம் -உபகாரகத்வம் -நன்றி சொல்வதும் நித்தியமாக போகும்

‘கவி பாடுகைக்கு முதல்வன் ஆவான் இவன் என்று தன்னை நான் தெளியும்படி செய்து,
முதலிலே என் நாவிலே வந்து புகுந்து நல்ல இனிய கவிகளை.
முதன்மை பெற்ற பரிசுத்தரான அடியார்கட்குத் தானே தன்னைச் சொன்ன என் வாக்கிற்குக் காரணனான அப்பனை
இனி ஒருநாளும் மறக்க உபாயம் இல்லை,’ என்றபடி.
‘இவன் ஆம் முதல்வன் என்று தன் தேற்றி, வந்து புகுந்து, இன் கவி பத்தர்க்குச் சொன்ன வாய் முதல் அப்பன்? என்க.

‘கைம்மாறு செய்யாதொழியவுமாம் கண்டீர், நான் மறந்து பிழைக்கப் பெற்றானாகில்!’ என்கிறார்.

ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி-
‘முதல்வன் ஆம் இவன்,’ என்று தன் பக்கலிலே எனக்குத் தெளிவு உண்டாம் படியாகச் செய்து: என்றது,
‘காரண வாக்கியங்களில் உபாசிக்கத் தக்கவனாகச் சொல்லப்படுகிறான் தானே என்று தன் பக்கலிலே நான் தெளியச்செய்து,’ என்றபடி.
அன்றிக்கே, ‘பரமபதத்தைப் போன்று, சம்சாரத்தையும் திருத்த நினைத்தோம்.
அதற்கு அடி ஆம் இவன், என்று என்பக்கலிலே தன் சொரூபம் முதலானவைகளைத் தெளியச் செய்து என்னுதல்.

இங்கே அருளிச்செய்யும் வார்த்தை: ‘திருப்புற்றுக்குக் கிழக்கே கரியமாணிக்காழ்வார் திருமுன்பின் படிக் கட்டிலிலே
ஆளவந்தார் எழுந்தருளியிருக்க, உடையவர்திருப்புற்றுக்குக் கிழக்காக எழுந்தருளி நிற்கிறவரைக் கண்டு,
‘ஆம் முதல்வன் இவன்’ என்று அருளிச்செய்தாராம்’ என்பது.
என் நா முதல் வந்து புகுந்து –
சர்வேஸ்வரன் பிரமனுக்குத் திருவருள் செய்ய, அவன் பின்னர் ‘முனிவரே! இந்தச் சரஸ்வதியானது என்னுடைய அருளாலேயே
உமக்கு உண்டாயிற்று; நீர் இராமசரிதம் முழுதினையும் செய்யும்,’ என்கிறபடியே

மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குரு த்வம் ரிஷிஸத்தம’-என்பது, ஸ்ரீராமா. பால. 2 : 31

அவன் சரஸ்வதியை ஏவி, இப்படி நாலிரண்டு நிலை நின்றே அன்றோ ஸ்ரீவால்மீகி பகவானைப் பேசுவித்தது?
அங்ஙனம் ஓர் இடையீடு இன்றிக்கே, என்னுடைய நாக்கிலே முற்பாடனாய் வந்து புகுந்து.
அன்றிக்கே, ‘என் நாவுக்கு அடியாய் வந்து புகுந்து’ என்னுதல்.

நல் இன் கவி –
இலக்கணங்கள் எல்லாம் நிறைந்தவனாய், அந்த இலக்கணங்கள் கிடக்கச்செய்தே, சொல்லில் இனிமை தானே
கவர்ச்சிகரமாம்பாடி இனியவான கவிகளை.
தூ முதல் பத்தர்க்கு –
சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத நித்தியசூரிகளுக்கு, ‘கேட்டு ஆரார் வானவர்கள்’ திருவாய். 10. 7 : 11.-என்கிறபடியே
அவர்கள் கொண்டாடும்படி சொன்ன.
அன்றிக்கே, ‘சம்சாரத்திலே தலை நின்ற முழுக்ஷூக்களுக்கு’ என்னுதல்.
தான் தன்னைச் சொன்ன –
தானே சொல்லுதல், நானே ஒருபடி சொல்லுதல் செய்கை அன்றிக்கே,
என் நா முதல் வந்து புகுந்து தான் தன்னைச் சொன்னான் ஆயிற்று.
என் வாய் முதல் அப்பனை –
எனக்கு வாய்த்த காரணனான மஹோபகாரகளை.
அன்றிக்கே, ‘என் நா முதல்’ என்றது தன்னையே பின் மொழிந்து, ‘என் வாக்குக்கு முதலான அப்பனை’ என்கிறார்.என்னுதல்.
என்று மறப்பேனோ –
‘முன்பு அநாதி காலம் மறந்து போந்ததாகில் இனிமேல் நினைக்கைக்குக் காரணமான காலத்தை எல்லாம்
மறக்கைக்கு உடலாக்கினால்தான் மறப்பனோ?’ என்றது,
‘முன்பு நினைக்கையில் உள்ள அருமையோபாதியும் போரும் இனி மறக்கையில் உள்ள அருகையும்:
இனி ஏதேனும் ஒரு நாள் தான் என்னாலே மறக்கப்போமோ?’ என்றபடி.

———————————————————————————————

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4-

விரோதிகளை பாராதே விரும்பி என்னைக் கொண்டு தப்பாமல் கவி பாடுத்திக் கொண்ட உபகாரகன்
அப்பனை என்று மறப்பன் என் ஆகியே–என் இடத்தில் தானாகி -உபகாரகன் –
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி-விடாமல் என்னைக் கொண்டு
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு-நிகரற்றவினையேன்-அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரைப் போலே
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–ஆர்ஜவம் -அபகாரி ஆனாலும் மறக்க மாட்டேன் –

‘என்னைக் கருவியாகக்கொண்டு தவறுதல் இல்லாமல் தன்னையே தான் கவி சொல்லி, ஒப்பு இல்லாத தீய வினைகளையுடையேனான நான்
உய்யும்படி அங்கீகரித்து. செவ்வையான காரியங்களையே செய்து போகின்ற சீலத்தைக் கண்டு வைத்தும், என் அப்பனை மறக்கப்போமோ?’ என்றபடி.
‘தீவினையேனை உய்யக் கொண்டு என்னாகித் தனைக் கவிதான் சொல்லிச் செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டும் அப்பனை மறக்கப்போமோ?’ என்றபடி.

‘தானே தன்னைக் கவிபாடிக் கொண்டனாகில், ஓர் ஆச்சரியம் இல்லை; அதற்குத் தகுதி இன்றிக்கே இருக்கிற
என்னைக்கொண்டு தப்பாமே கவிபாடின இந்த உபகாரத்தை இனி மறக்க உபாயம் இல்லை,’ என்கிறார்.

அப்பனை என்று மறப்பன்
-உபகாரன் ஆனவனை நான் என்று மறப்பன்?
இனி, அவன் அபகாரம் செய்தால் தான் மறக்கப்போமோ? நீர் மறக்க ஒண்ணாதபடி அவன் செய்த உபகாரம் யாது?’எனின்,
என் ஆகிய தப்புதல் இன்றித் தனைக்கவி தான் சொல்லி –
என்னைக் கருவியாகக்கொண்ட கவிபாடுகிற இடத்து, என்னுடைய சம்பந்தத்தால் வந்த குற்றமும் தட்டாதபடி கவி பாடினான்.
என் ஆகியே –
‘என் பக்கலிலே தானாய்’ என்றவாறு.
இவ்விடத்தில் ‘தான் பாடினானாகில் ஒரு குற்றமும் இல்லாமல் தலைக்கட்டும்; நான் பாடினேனாகிலும் வருந்தி ஒருபடி தலைக்கட்டுவேன்;
என்னைக் கருவியாகக் கொண்டு கவி பாடாநிற்கச்செய்தேயும் என்னுடைய சம்பந்தத்தால்
வந்த குற்றம் தட்டாதபடி கவி பாடித் தலைக்கட்டினான்’ என்று எம்பார் அருளிச்செய்வர்.
விஷயத்துக்குத் தகுதியாகக் கவி பாடினான் ஆதலின், ‘தனைக் கவி தான் சொல்லி’ என்கிறார்.

ஒப்பு இலாத் தீவினையேனை உய்யக்கொண்டு –
என்னைக் கருவியாகக் கொண்டு இப்படிக் கவி பாடுவித்தது, முன்பு நின்ற நிலையைக்காட்டிலும் நான் எவ்வளவு புகுர நின்றேனாக;
நான் முன்புற்றையிற்காட்டில் ஓர் அடி வர நின்றது உண்டோ?
முற்றறிவு, வரம்பில் ஆற்றலுடைமை முதலானவைகளுக்கு ஒப்பு இல்லாதவாறு போலே ஆயிற்று,
அறிவின்மை ஆற்றலின்மை இவைகளுக்கு எனக்கு ஒப்பு இல்லாதபடியும்;
ஆதலின், நானும் அவனுக்கு ஒப்பன் என்கிறார் என்றபடி.
உய்யக்கொண்டு –
‘இருக்கிறவன் என்று இவனை அதனால் அறிகிறார்கள்’ என்கிறபடியே,
‘ஸந்தம் ஏனம் ததோவிது:’ என்பது, தைத்திரீய. ஆன. 6.
நான் உஜ்ஜீவிக்கும் படி என்னைக்கைக்கொண்டு.
செப்பமே செய்து திரிகின்ற –
வஞ்சனை பொருந்திய மனத்தையுடையேனாய் இருக்கிற என்னோடே,
சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்தியசூரிகளோடு பரிமாறுமாறு போலோ, என்னுடனே செவ்வையே பரிமாறினான்.
அன்றிக்கே, ‘எனக்குக் காப்பினைச் செய்துகொண்டு போருகிற’ என்னுதல்.
சீர் கண்டே
-இப்படி இருக்கிற சீலம் முதலான குணங்களை அநுசந்தித்து.
அப்பனை என்று மறப்பன்?

—————————————————————————————-

சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5-

கவி படுக்கைக்கு யோக்கியதையும் உண்டாக்கி தானே தன்னை கவி
சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி-பிரதிபாத்யமான அவன் குணங்களை -அபரோக்ஷித்து -அனுசந்தித்து -பிரதிபாதகமாம் படி –
சப்த அர்த்த லக்ஷனோபேதமாய்-
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்-சம்ஸரவே மதுரமான கவி -திருவடி போலே -ஞான சக்தாதிகள் இல்லா விடிலும்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்-இல்லாமையால் -அஸத்ருசனான-தனது பக்கல் ஞானம் ப்ரேமம் உடையனாக ஆக்கிக் கொண்டு
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.-பூ புகழும் படி -பரமர் -தன்னைத் தானே பாடுத்திக் கொண்டதால் -என்னை வைத்தே பாடிக் கொண்டதாலேயே பரமர் –

‘தன்னுடைய கல்யாண குணங்களைக் கண்டு கொண்டு. திருந்திய நல்ல இனிய கவிகளைத் தகுதியாக யான் சொல்லும் ஞானம். எனக்கு இல்லாமையினால், தகுதி இல்லாத என்னைத் தன் பக்கலிலே பத்தியுடையேனாம்படி செய்து. என்னால் தன்னைப் பூவுலகமெல்லாம் துதிக்கத் தக்க கவிகளைப் பாடுகின்ற பரமன் ஆவான்,’ என்கிறார்.
‘சீர்கண்டு கொண்டு சொல்லும் நீர்மை இலாமையின்’ என்க. ‘ஆக்கி என்னால் தன்னைப் பாடும் பரமர்’ என்க.

‘தன்னைக் கவி பாடுகைக்குத் தகுதியான நீர்மையும் இன்றிக்கே இச்சையும் இன்றிக்கே இருக்கச் செய்தே.
உலகம் எல்லாம் கொண்டாடும்படியான கவியை என்னைக் கொண்டு பாடுவதே! என்ன சர்வேஸ்வரனோ!’ என்கிறார்.

சீர் கண்டுகொண்டு –
கல்யாண குணங்களை நன்கு அறிந்து,
திருந்து நல் இன்கவி-
கட்டளைப்பாட்டு எல்லா இலக்கணங்களும் நிறைந்தனவாய் இனியனவான கவிகளை.
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில் –
இவை ஒன்றும் இல்லையாகிலும், சொல்லுகிறவனுடைய நன்மையாலே வருவது ஒரு நன்மையும் உண்டே அன்றோ கவிக்கு?
அப்படி வாய்க்கச் சொல்லும் சுபாவத்தை நான் உடையேன் அல்லாமையில்.
ஏர்வு இலா என்னை-
அழகு இல்லாத என்னை. ‘ஏர் – அழகு.
தன் ஆக்கி –
தன்னோடு ஒக்கச்செய்து.
அன்றிக்கே, ‘தனக்கு ஆக்கி’ என்னுதல்.
என்னால் தன்னைப் பார் பரவு இன் கவி பாடும் –
என்னைக் கருவியாகக் கொண்டு பாரில்உள்ளார் அனைவரும் தன்னைப் பரவும்படி இனிய கவிகளைப் பாடினான். என்றது
‘விசேஷஜ்ஞர், விசேஷஜ்ஞர் அல்லாதார் என்னும் வேற்றுமை இன்றியே எல்லாரும் கொண்டாடும்படி செய்தான்,’ என்றபடி.
மண் மிசை–ராமானுஜன் பிறந்த பின்பே–அப்பொழுதே மாதவனுக்கு ஆளானார்கள்
பரமரே –
‘அவனோடு ஒத்தவர் இல்லை’ என்கிற வாக்கியம்கொண்டு இவனுடைய உயர்வு அறியவேண்டா;
என்னை இடுவித்துக் கவி பாடுவித்துக்கொண்ட இதுவே போரும் அவனுடைய உயர்வு அறிகைக்கு.

நதத் ஸமஸ்ச’ என்பது, ச்வேதா. உப. பரமன்-சர்வாதிகள்.

————————————————————————————-

இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6-

பெரியவர்களை கொண்டு கவி பாடிக் கொள்ளாதே —என்னைக் கொண்டு பாடுவித்துக் கொண்டு ஸ்ரீ வைகுண்ட நாதனாக
இன் கவி பாடும் பரம கவிகளால்தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று-வால்மீகி -பராசரர் –
நிரதிசய மதுர கவிகள் -முதல் ஆழ்வார்களாலும் -பாடுவியாமல் –
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை-அபிசந்தி உடன் வந்து -நான் பாடும் படி செய்து அருளி
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே-பெருமைக்குத் தக்கபடி -பாடா நிற்கும்
தன்னை கவி என்று சொல்லாமல் உபகரணமாக கொண்டு பாடுவித்தானே –

‘இனிய கவிகளைப் பாடுகிற உயர்ந்த புலவர்களால் தனக்குத் தகுதியான கவிகளைத் தான் தன்னைப் பாடுவித்துக் கொள்ளாமல். என் வைகுந்தநாதன், இன்று வந்து, என்னைத் தன்னோடு ஒத்தவன் ஆக்கி, என்னால் தன்னைச் சொற்செறிவு பொருட்செறிவுள்ள கவிகளை நன்றாகப் பாடாநின்றான்,’ என்கிறார்.
‘என் வைகுந்தநாதன், பரம கவிகளால் தன்னைப் பாடு வியாது, இன்று வந்து என் உடன் ஆக்கி. என்னால் தன்னை வன்கவி நன்குபாடும்,’ என்க.

‘வியாசர் பராசரர் வால்மீகி முதலான கவிகளைக் கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளாமல்,
என்னைக் கருவியாகக் கொண்டு கவி பாடுவதே!’ என்று பிரீதியையுடையராகிறார்.

இன் கவி பாடும் பரம கவிகளால். . .என்னால் தன்னை வன்கவி பாடும் –
‘பின்னைத் தான் தனக்குச் சில கவிகளைப் பாடவேண்டினால், அதற்குத் தகுதியாக இருப்பார்
ஸ்ரீ வேதவியாசபகவான். ஸ்ரீ பராசரபகவான், ஸ்ரீ வால்மீகி பகவான் இவர்கள் உளராய் இருக்க.
மற்றும்வேணுமாகில், ‘செந்தமிழ் பாடுவார்’ என்று சொல்லப்படுகிற முதல் ஆழ்வார்கள் எல்லாரும் உளராய் இருக்க
என்னைக்கொண்டு கவி பாடுவித்துக்கொண்ட இதுவும் ஒரு நீர்மையே!’ என்கிறார்.
முதல் ஆழ்வார்களிலே ஒருவரை ‘ஒரு கவி சொல்லிக் காணீர்’ என்ன,
‘பெருகு மதவேழம்.. . . . . . . . வான்கலந்த வண்ணன் வரை’ என்றே அன்றோ அவர் பாடுவது?
‘பெருகு மத வேழம் – ஆற்றுப் பெருக்குப்போலே பெருகாநின்றுள்ள மதத்தையுடைய யானையானது,
மாப்பிடிக்கு முன் நின்று – மதித்து முன்னடி தோற்றாதே வருகிற இதனையும் தனக்குக் கையாள்
ஆக்கிக்கொள்ளவற்றாய் ஆயிற்று இதனுடைய சீர்மை இருக்கிறபடி.
‘நான் இங்குத்தைக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்று ஏவிற்றுச் செய்கைக்குக் காலத்தை
எதிர் நோக்கி நிற்கின்றதாதலின், ‘முன்னின்று’ என்கிறது.
இரு கண் இள மூங்கில் வாங்கி – இரண்டு கண்ணேறி அதற்குத் தக்க முற்றனவும் இன்றிக்கே இருக்கிற மூங்கிற்குருத்தை வாங்கி; என்றது,
தான் மதித்து முன்னடி தோற்றாதே திரியச்செய்தேயும் பிடியின் பக்கல் உண்டான அன்பின் மிகுதியாலே
குறிக்கோளோடே ஆதாரத்தோடு வாங்குதலைத்தெரிவித்தபடி.
அருகு இருந்த தேன் கலந்து –
திருமஞ்சனத்துக்கு உபகரணங்கள் சமைந்திருக்குமாறு போலே, அருகே மலை முழைஞ்சுகளிலே நிரம்பியிருக்கிற
தேன்களிலே வாங்கித் தோய்த்து. மூங்கிற்குருத்தையும் நீர்ப்பண்டத்தைப்போன்றதாக அருளிச்செய்கிறார்.
நீட்டும் –
இதுதான் இரந்து கொடாநிற்க, அதனை, அது ‘உனக்கு வேண்டுவார்க்குக் கொடாய்’ என்று நிற்குமாயிற்று.
மா பிடி -சிலாக்கியதை —பிடிங்கி -என்னால் -வாங்கி -ஜாக்ரதைஆதரம் உடன் –
த்வயார்த்தம் -ராமானுஜர் சிஷ்யர்களுக்கு -திரு மந்த்ரம் சரம ஸ்லோகார்த்தம் கலந்து அருளுவார் –
வான் கலந்த வண்ணன் வரை –
மூங்கிற்குருத்தும் தேனும் கலந்தாற்போலே ஆயிற்று, மேகமும் அவன் திருநிறமும் கலந்திருக்கும்படி.

தன் கவி தான் தன்னைப் பாடுவியாது –
கவியும் தன்னது; பாடினாலும் தான்; கவிகட்குப் பொருளாயுள்ளவனும் தான்.
அவர்களைக் கொண்டு, தன்னுடையதான சொல்லாலே, அதற்குப் பொருளாயுள்ள தான் தன்னைப் பாடுவியாதே.
இன்று நன்கு வந்து –
இன்று நான் இங்ஙனே உஜ்ஜீவிக்கும்படிக்குத் தகுதியாக வந்து.
அன்றிக்கே, ‘நான் உவந்து’ என்று பிரித்து, ‘நன்றாக உவந்து’ என்றும்,
‘இக்கவி பாடுகைதானே பிரயோஜனமாக உவந்து’ என்றும் பொருள் கூறலுமாம்.
என் உடன் ஆக்கி –
என்னைப் பிரியாத கருவியாகக் கொண்டு.
வன்கவி பாடும் –
சொற்செறிவு இன்றி இருக்கை அன்றிக்கே, 5
மொய்ய சொல்லால்’ இது, திருவாய். 4. 5 : 2.என்கிறபடியே, சொற்செறிவையுடைத்தாய் இருக்கை,

‘சேராதன உளவோ பெருஞ் செல்வர்க்கு வேதம்செப்பும்
பேராயிரம்திண் பெரும்புய மாயிரம் பெய்துளவத்
தாரார் முடியா யிரம்குரு கூர்ச்சட கோபன்சொன்ன
ஆரா வமுதக் கவியா யிரம்அவ் வரியினுக்கே.’-என்பது, சடகோபரந்தாதி, 45.

என் வைகுந்தநாதனே –
அழியாததான கலங்காப் பெருநகரத்தை இருப்பிடமாகவுடையோமாய் இருப்பதைப்போன்று,
அழியாத வேதம் போலே நித்தியமாய் இருக்கிற ஆயிரம் பாசுரங்களைப் பாடுவிக்க வேணும்’ என்று பார்த்தான்.
அன்றிக்கே, ‘பரமபதத்தை இருப்பிடமாகவுடையனாகையாலே வந்த ஏற்றத்தைப் போன்றதாக நினைத்திராநின்றான் ஆயிற்று,
இக்கவிபாட்டுடையான் ஆகையால் வந்த ஏற்றத்தையும் என்னுதலுமாம்.

————————————————————————————–

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7-

விரோதியைப் போக்கி -தனது பெருமைக்கு ஈடாக கவி பாடுவித்திக் கொண்ட
வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்-பிரபல பிரதிபந்தகங்களை போக்கி
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை-எனது வார்த்தைக்கு விஷயமாகி -உபகரணமாக கொண்டு
வைகுந்தனாகப் பகழ் வண் தீங்கவி-வி குந்தகம் -குறைவு இல்லாத சர்வ ஸ்வ பாவம் -உபகார ஸ்வ பாவம் -பாசுரம் பாடுவித்த -குந்தன் இங்கு
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ-குந்தன் முகுந்தன் -உள்ள நாள் நினைத்தாலும் ஆற்றாமல்-
சுத்த ஸ்வ பாவந் குருந்த பூ வெண்மை -குந்தம் ஆயுதம் -கொண்டு விரோதி போக்கும் –

ஸ்ரீ வைகுண்டத்திலே எழுந்தருளியிருப்பவனும், என்னுடைய வலிய கொடிய வினைகள் எல்லாம் அழிந்து அற்றுப் போகும்படியாகச் செய்கின்ற தூயோனும்,
என்னைத் தனக்கு உரியவனாக்கி என்னால் தன்னை வைகுந்தநாதனாகப் புகழ் வளவிய இனிய கவிகளைச் செய்யும் குந்தன் என்னும்
திருநாமத்தையுடையவனுமான எம்பெருமானை எத்தனை நாள் சிந்தித்தாலும் மனம் நிறைவு உண்டாகுமோ?
குந்தன் – முகுந்தன் என்ற திருநாமத்தின் சிதைவுமாம்; அன்றிக்கே, ‘குந்தம் என்னும் ஆயுதத்தையுடையவன்’ என்னவுமாம்.
‘தன்னை என்னாக்கி’ என்ற இடத்தில் ‘என்னைத் தன்னாக்கி’ என்று பிரித்துக் கூட்டுக. ‘புகழச் செய் குந்தன்’ என்க.

பரம உதாரமாய் எல்லை அற்ற இனியனவான கவிகளை என்னைக் கொண்டு பாடுவித்துக்கொண்டே மஹோபகாரத்துக்கு,
காலம் என்னும் ஒரு பொருள் உள்ளதனையும் இவனை அனுபவித்தாலும் நிறைவு பெற்றவன் ஆகின்றிலேன்,’ என்கிறார்.

ஏஷ தத்வாச வித்தாநி ப்ராப்யச அநுத்தமம் யஸ:
லோகநாத: புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 18. இது, திருவடியைப் பார்த்து இளையபெருமாள் கூறியது.

வைகுந்தநாதன் –
உதவி செய்தவன் என்னோடு அணைய நின்றான் ஒருவனாய் நான் ஆறி இருக்கிறேனோ?
அயர்வு அறும்அமரர்கள் அதிபதி ஒரு சம்சாரி பக்கலிலே மேல் விழாநின்றால் எங்ஙனே ஆறி இருக்கும்படி?
‘முன்னே உலகங்களுக்கு எல்லாம் நாதனாய் இருந்தும், சுக்கிரீவனைத் தனக்கு நாதனாக இச்சிக்கிறார்,’ என்கிற
இதற்கும் அவ்வருகே இருக்கிறது அன்றோ இது? -இங்கு வைகுந்த நாதன் -அதனாலே லோக நாதனுக்கு மேலே என்ற படி –
ஸ்ரீசுக்கிரீவ மஹாராஜரை நாதராக உடையர் ஆகைக்கு யோக்கியதை சம்பாதித்தபடியாயிற்று, -லோக நாதம் புரா பூத்வா -இதுக்கு தபஸ் போலே
முன்பு உலகநாதரானது. பெறுவார், பெறாது ஒழிவார்: முன்னம் இச்சியாநின்றார்.
கிடையாததிலே அன்றோ இச்சைதான் செல்லுவது? -நாதம் இச்சதி –
‘அப்படிப்பட்ட ஸ்ரீராமபிரான் சுக்கிரீவனுடைய அருளை நல்ல மனத்தோடு இச்சிக்கிறார்’ என்றது போலே ஆயிற்று.

‘யஸ்ய ப்ரஸாதே ஸததம் ப்ரஸீதேயு: இமா: ப்ரஜா:
ஸராமோ வாநரேந்த்ரஸ்ய ப்ரஸாதம் அபிகாங்க்ஷதே’=என்பது, ஸ்ரீராமா, கிஷ். 4 : 21.

வல்வினை போக வேணும் என்று இராத என்னுடைய,
‘மயர்வுஅற மதிநலம் அருளினன்’ என்ற இத்தனை அன்றோ எனக்கு அருளினன்?’ என்கைக்கு,
அருளுவதற்கு முன்புதாம் ஒருவர் உளராகக் கண்டிலர் அன்றோ?
‘அவன் இல்லாதவன் ஆகவே ஆகிறான்’ என்னும் நிலையன்றோ முன்? அஸந்நேவஸபவதி’ என்பது தைத்திரீயம்.
உபாயத்தில் சொல்ல யோக்யதை இல்லை -அதனால் எனக்கு அருளினான் என்று சொல்ல வில்லை
பிராப்யத்தில் சொல்ல அவகாசம் இல்லை -அதனால் அருளினான் எனக்கு என்று சொல்ல வில்லை -உபகார கௌரவம் -கைங்கர்யத்தில் ஆழ்ந்தேன்
சர்வசத்தியான தன்னாலேதான் இது செய்யலாமோ என்பார், ‘வல்வினை’ என்கிறார்.

மாய்ந்து அறச் செய்குந்தன் –
என்னுடைய பிரபல விரோதியைப் போக்கின சுத்தியையுடையவன்;
‘அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய் குந்தா’ திருவாய். 2. 6 : 1.-என்னக்கடவது அன்றோ?
அடியார்கள் பக்கல் அன்பு வைத்து அவர்கள் செய்த பாபங்களை அடியர் அல்லாதார் பக்கல் அசல் பிளந்தேறிடும்படியான்
சுத்தி யோகத்தை அன்றோ அவ்விடத்திற்சொல்லுகிறது?
அன்றிக்கே, ‘முகுந்தன்’ என்ற பெயர் ‘குந்தன்’ என்று முதற்குறையாய்க் கிடக்கிறது என்னவுமாம்.
அன்றிக்கே, ‘குந்தன்’ என்று திருநாமம் ஆகவுமாம்;
‘குமுத: குந்தர: குந்த:’ என்று குந்தன் என்றே திருநாமம் ஆயிற்று அன்றோ?
குமுத: குந்தர: குந்த,’ என்றது, ஸஹஸ்ரநாமம்.-
தன்னை என் ஆக்கி –
என்னைத் தன்னோடு ஒக்கச் செய்து.
அன்றிக்கே, ‘தனக்கு ஆம்படி செய்து’ என்னுதல்.
என்னால் தன்னை வைகுந்தனாகப் புகழ –
தந்தையானவன் மகனுக்கு ஒரு பசுவை நீர் வார்த்துக் கொடுத்து மீண்டு அவன் பக்கலிலே
பசுவை நீர் ஏற்றுப் பெறுமாறு போலே இருப்பது ஒன்றாயிற்று இதுவும்.
அது நித்திய விபூதி அன்றோ? இங்ஙனே இருக்கச் செய்தேயும் இவர் புகழ்ந்த இதனாலே தனக்கு அவ்விபூதி
உண்டாயிற்றதாக நினைத்து இராநின்றான் ஆதலின், ‘வைகுந்தனாகப் புகழ்’ என்கிறது.
ஆத்தும வஸ்து நித்தியமாக இருக்கச்செய்தே ‘அவன் இல்லாதவனாகவே ஆகிறான்’ என்றும்,
‘இவனை இருக்கிறவனாக அறிகிறார்கள்’ என்றும் சொல்லாநிற்பதைப் போன்றது ஆயிற்று.

அஸந்நேவ ஸபவதி அஸ்த்ப்ரஹ்மேதி வேதசேத்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத ஸந்தமேநம் ததோவிது:’-என்பது, தைத்திரீயம்.
‘இன்னான் வாக்காலே கவி பாடின பின்பு அவன் வாழ்ந்தான்’ என்னக் கடவது அன்றோ?
அப்படியே, புகழ்ந்த பின்பு தனக்கு அவ்விபூதியில் இருப்பு உண்டாயிற்றதாக நினைத்து இராநின்றான் அவன்.
‘தாழாது,
செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுள னாயின் நன்றுமன் என்றநின்
ஆடுகொள் வரிசைக் கொப்பப்
பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்பே’
‘ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை’-என்பன புறநானூறு, 53, 72.

வண் தீம் கவி செய் குந்தன் –
வளவியனவாய் இனியனவாய் இருந்துள்ள கவிகளைப் பாடி, அதுத்தனைத் தன் பேறாக நினைத்திருக்கும் தூய்மையையுடையவன். என்றது,
‘துயர் அறு சுடர் அடி’ என்பது போன்று, இவரைக்கொண்டு கவி பாடின பின்பு தன் துயர் தீர்ந்தானாய் இருக்கிறபடியைத் தெரிவித்தவாறு.
இவர் துயர் போன பின்பு, தனக்கு ஒரு துயர் உண்டாய் அது போனாற்போலே நினைத்து இராநின்றானாயிற்று.
சரீரத்துக்கு வந்த வியாதி அனுபவிப்பான் சரீரி அன்றோ?
‘வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் -திவ்விய அந்தப் புரத்திலுள்ளர்க்காதல் திருத்தாய்மார்க்காதல் ஒரு துன்பம்
வந்தாலோ துக்கத்தையுடையவராவது? என்றால்,
மநுஷ்யாணாம் ப்ருஸம் துக்கிதோ பவதி – துக்கத்தையுடையவனான அளவன்றிக்கே, யானை அளறுப்பட்டாற்போலே நோவுபடுவார் ஆயிற்று,

‘வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருஸம் பவதி துக்கித:
உத்ஸவேஷூ ச ஸர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி’-என்பது, ஸ்ரீ ராமா. அயோத். 2 : 40.

இன்று ஒரு படியாய், பிற்றை நாள் ஒரு படியாய், பின்னர் ஆறிப் போம் இவர்களுக்கு;
இவர்கள் துக்கத்தில் நாள்தோறும் புதியராய் இருப்பர் ஆதலின். ‘துக்கிதோ பவதி’ என்கிறது.
‘வியஸநம் இவனதானால் துக்கமும் இவனதாகவேண்டி இருக்க, இவர் துக்கத்தையுடையர் ஆதற்குக் காரணம் என்?’ என்னில்,
‘இவன் படுகிற கிலேசம் இவன் காவற்சோர்வால் வந்தது ஒன்று அன்றே, நம் காவற்சோர்வாலே வந்தது ஒன்று அன்றோ?’ என்று
காவலர் ஆகையாலே நாள்தோறும் புதியராய் இருப்பர் என்க.

‘மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ?’–பெரிய புராணம், திருநகரச் சிறப்பு, 36.-

‘இது எனக்கு மிகவும் நாணமாய் இருக்கின்றது; நீங்கள் என் குற்றத்தைப் பொறுக்க வேண்டும்,’ என்னுமவர் அன்றோ?

‘ப்ரஸீதந்து பவந்த: மே ஹ்ரீ: ஏஷாஹி ம்ம அதுலா
யத் ஈத்ருஸை: அஹம் விப்ரை: உபஸ்த்தேயை: உபஸ்தித:’-என்பது, ஸ்ரீ ராமா. ஆரண். 10 : 10.

இவன்அளவு அல்லவாயிற்று, பிற்பாட்டிற்கு அவன் நாணம் உறும்படி.
எந்நாள் சிந்தித்து ஆர்வனோ –
செய்த உபகாரம் கனத்து இராநின்றது; உபகாரத்தை நினைப்பதற்குக் காலம் போருகிறது இல்லை’ நான் என் செய்வேன்?
சரீரம் பிரிந்த பின்பு வாய்புகு நீர் ஆகையாலே சொல்லுகைக்குக் காலம் இல்லை;
இங்கு இருக்கும் நாள் காலம் போருகிறது இல்லை; செய்த உபகாரமோ, கனத்து இராநின்றது. நான் என் செய்கேன்?
கால தத்வம் உள்ள அளவும் அனுபவித்தாலும் திருப்தி கிடையாதே எனக்கு என்கிறார் –

———————————————————————————————-

ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8-

ஸமஸ்த விபூதியில் உள்ள ஆகாரங்கள் சேர்ந்து -நீயே பார் விண் நீர் என்றுமாம் -உபகார பரம்பரையை சொல்லி முடிக்க முடியாதே –
ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்-உறவை காட்டி அருளி -குணப் புகழை
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்-பூமி -உப லக்ஷணம் அனைத்து இடங்களும் -பர ஸ்தலம் -நித்ய விபூதி
-அவதார பரதவ வ்யூஹ -சேதனர் அனைவரும் கலந்தாலும் -அனுபவித்தாலும் திருப்தி பிறக்காதே –
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்-ஞான சக்தாதிகள் இல்லாத என்னை தனது விஷய ஞான சக்தாதிகளை கொடுத்து அருளி
-அத்வைதி போலே இவரே அவன் என்று சொல்ல வில்லை -அநந்யார்ஹ சேஷ பூதன் ஆக்கி –
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ?-சீல குணம் -பிரகாசிப்பித்து

‘தகுதி இல்லாத என்னைத் தனக்கு உரியவனாக்கி என்னால் தன்னைச் சிறப்புப்பெற இனிய கவிகளைச் சொன்ன பிரகாரத்திற்கு,
சக்கரத்தைத் தரித்த எம்பிரானுடைய கல்யாண குணங்களை, பூமியிலுள்ளார் ஆகாயத்திலுள்ளார் தண்ணீரிலுள்ளார் ஆகிய
எல்லாரோடும் கலந்து அனுபவித்தாலும் நிறைவு பெற்றவன் ஆவேனோ?’ என்கிறார்.
‘சொன்ன திறத்துக்கு, எம்பிரான் புகழைக் கலந்து பருகிலும் ஆர்வனோ?’ என்க.

‘நான் ஒருவனும் இருந்து ஜீவிக்கும் நாள் உபகாரத்தை நினைப்பதற்குக் காலம் போராது என்று நோவுபடுகிறேனோ?
என்னுடைய செய்ந்நன்றியறிதலையும் விருப்பத்தயுமுடையராய்க்கொண்டு புறம்பே வேறு விஷயங்களிலே
நோக்குள்ளவர்களாகவும் பகவத் விஷயத்திலே நோக்கு இல்லாதவர்களாகவும் இருக்கிற எல்லா ஆத்துமாக்களும்
என்னுடனே கூடி நெடுங்காலமெல்லாம் நானும் அவர்களும் கூடி நின்று அனுபவித்தால்தான் நிறைவு பெற்றவன் ஆவேனோ?’ என்கிறார்.

ஆழி அம் கை எம் பிரான் புகழ் பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் ஆர்வனோ –
ஆழி அம் கை எம்பிரான் புகழைப் பாரிலுள்ளாரும் விண்ணிலுள்ளாரும் நீரிலே உள்ளாரும் பாதாள உலகத்திலுள்ளாரும்
மற்றும் எல்லாரும் கலந்து பருகிலும் நான் ஆர்வனோ?
தன்னுடைய சொரூப ரூப குண விபூதிகளை என்னுடைய கவிக்கு விஷயமாக்கின மஹோபகாரகனுடைய புகழை.
‘வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்;
ஆய்கொண்ட சீர் வள்ளல் ஆழிப்பிரான் எனக்கே உளன்,-திருவாய். 3. 9 : 9.-’ என்றார் அன்றோ?
அன்றிக்கே, ‘பாரிலுள்ளார், விண்ணிலுள்ளார், நீரிலுள்ளாரான இவர்கள் எல்லாருடைய வாக்கு முதலான
கருவிகளையும் அனுபவிக்கின்ற சத்தி விசேடங்களையும் உடையேனாய்க்கொண்டு காலம்
எல்லாம் நின்று அனுபவித்தாலுந்தான் நான் ஆர்வனோ?’ என்னுதல். கலக்கை – அவற்றோடே சேர்க்கை.
அன்றிக்கே, ‘பார் விண் என்றதனால் உபய விபூதிகளையும் சொல்லி, நீர் என்றதனால் தன்மையைச் சொல்லி,
உபய விபூதிகளிலும் உள்ளோர் அனுபவிக்கும் சத்தி சுபாவத்தையுடையேனாய்க் கொண்டு அனுபவித்தாலும் ஆர்வனோ என்கிறார்,’ என்னுதல்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு -என்று மனுஷ்ய தேவ ப்ரஹ்மாதிகளைக் கூட்டி
காலம் பெருக்கி ஆராத பெரியாழ்வார் போலே -இவரும் இங்கே –
‘நீர் இப்படி எல்லாருடைய உபகரணங்களையும் உடையீராய்க் கொண்டு காலம் எல்லாம் அனுபவியாநின்றாலும்
ஆராமைக்கு அவன் செய்த உபகாரந்தான் யாது?’ எனின், அருளிச்செய்கிறார் மேல்:

ஏர்வு இலா என்னைத் தன் ஆக்கி –
மேலே, ‘கவி பாடுகைக்கு இடமான இச்சையும் இல்லை’ என்றார்;
இங்கு ‘அவ்விச்சைக்கு அடியான தகுதியும் இல்லை’ என்கிறார். இதனால், நன்மை இல்லாமையைச் சொன்னபடி.
‘பிராமணர்கள் இந்தப் பிரமத்தை அறிய விரும்புகிறார்கள்,’ என்னாநிற்கச்செய்தேயும்,
‘யாகத்தாலும் தானத்தாலும் தவத்தாலும் உபவாசத்தாலும்’ என்று யோக்கியதையைச் சொல்லிற்றே அன்றோ?

தம் ஏதம் வேதாநுவசநேந ப்ராஹ்மணா விவிதிஷந்தி
யஜ்ஞேந தாநேந தபஸா அநாஸகேந’-என்பது, பிருக உபநிடதம், 6 : 4.

இச்சை -யோக்யதை -ஸூ ஹ்ருதம் –இல்லை என்கிறார் -வேதிதம் இஷ்யந்தி இச்சை -பலம் -தபசாதிகள் சாதனம்
-அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் வருமே –
விருப்பம் இருந்தால் தான் இவற்றுக்கு வருவார் -அத்தை சம்பாதிக்க இவை வேண்டுமே –
மனசு கட்டுப்பட்டு யோகம் -போலே -யோகத்துக்கு மனசு கட்டுப்பட -ஸூ பாஸ்ரயம் திரு மேனி தியானித்து அங்கே –
அதனால் -வேதனம் பலமாக்கி -வேதிதம் இச்யந்தி-அதுக்கு சாதனம் இவை -ப்ரஹ்மம் -அறிந்து கொள்ளுவதற்கு இவை வேண்டும் –
இச்சை -முதல் படி -தபஸ் -அடுத்து -வேதனம் பலம் -சுத்த பிரகாசர் -அருளி –
கத்தியால் வெட்டி -கருவி தானே கத்தி -விருப்பம் இருந்தது வெட்டிற்று இல்லையே -வெட்டுதற்கு சாதனம் போலே
பசாதிகள் ஞானத்துக்கு சாதனம் என்றவாறு –
ஸ்ரீ பாஷ்யத்தில் இச்சை என்கிறாரே –லகு சித்தாந்தத்தில் -யுத்த உத்தர இச்சை -பிறக்கும் -பிரதமத்தில் கொஞ்சம்
இச்சை வேண்டுமே -தபசாதிகள் செய்யச் செய்ய இச்சை மிகுந்து வேதனம் பிறக்கும் –
அஞ்ஞாத ஸூஹ்ருத்த விசேஷத்தால் -ஈஸ்வர அபிப்ராயத்தாலே -தானும் அறியாமல் சாஸ்திரத்திலும் விதிக்காதே -முதலில் இச்சை பிறக்கும் –

அதுவும் இன்றிக்கே இருக்கிற என்னை என்கை.
என்னால் தன்னைச் சீர் பெற –
எல்லாக் கல்யாண குணங்களையுமுடையவனான சர்வேஸ்வரன்.
இக்கவிகளாலே தனக்கு நிறமாம்படியாகச் சொன்ன.
நான் கவி சொல்லச் சர்வேஸ்வரனான தனக்கு இதனாலே நிறமாம்படி நினைத்திராநின்றான்.
இச்சீர் இழக்க வரினும் விட ஒண்ணாதபடியாயிற்றுக் கவியின் இனிமை.
இன்கவி சொன்ன திறத்துக்கு –
இப்படி இனிய கவிகளைச் சொன்ன பிரகாரம் ஒன்றுக்கும்.
மற்றைக் குணங்கள் குமர் இருந்து போமித்தனை.
இப்பிரகாரம் ஒன்றுக்கும் ஆழி அம் கை எம் பிரான் புகழைப் பார் விண் நீர் முற்றுங்கலந்து பருகிலும் ஆர்வனோ?

—————————————————————————————————-

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-

சர்வ சேதன சக்தி விசிஷ்டானாய்க் கொண்டு -சர்வ கால அனுபவம் பண்ணினாலும் ஆர்வேனோ
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை-நினைத்ததே இல்லையே -நினைவு என்று இருப்பதே அறியாததால்
மறப்பு இல்லை என்கிறேன் –தன் பக்கல் மறப்பு இல்லாதான் படி -நினைத்துக் கொண்டே மறப்பு இல்லாத படி
இடை வெளி இல்லாத வாசகமாய்
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கேதிறத்துக்கே -இழிந்த காரியத்துக்கு அனுரூபமாக -தொடங்கின காரியத்துக்கு -எந்த சக்தி
துப்பரவாம் திரு மாலின் சீர்-உதவித்திறம்-துப்புரவு -சக்தி -ஓவ்தார்யாதி குணங்களை
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?-பூர்வ உத்தர கால வர்த்திகள் சக்திகளைக் கொண்டாலும் -ஆர்வேனோ

‘மறப்பு இல்லாதவனான என்னைத் தனக்கு உரியவனாக்கி என்னால் தன்னைப் பொருந்தும்படி பல கவிகளைக் கூறிய உபகாரத்துக்கு எல்லா
வகையாலும் வலியோனான திருமாலினுடைய கல்யாணகுணங்களை மூன்று காலங்களிலும் அனுபவித்தாலும் நிறைவு பெற்றவன் ஆகேன்,’ என்றவாறு.
‘தன்னை உறச் சொன்ன உதவிக்கு’ என்க.

‘என்னைக்கொண்டு கவி பாடுவித்துக்கொண்ட மஹோபகாரகனை, எல்லாச் சேதனர்களுடைய அனுபவ சத்திகளை
யுடையேனாய்க்கொண்டு காலம் எல்லாம் அனுபவித்தாலும் ஆரேன்,’ என்கிறார் இதில்.

திறத்துக்கே துப்பரவாம் திருமாலின் சீர் –
ஏதேனும் ஓர் காரியத்தில் வந்தால், ஒரு துரும்பைக் கொண்டு காரியம் கொள்ளப் பார்த்தால் அதனைக்கொண்டே
காரியத்தை அப்படித் தலைக்கட்டிக் கொள்ளுதற்குத் தகுதியான ஆற்றலையுடையனான.
வல்லவனுக்கு புல்லும் -அடியேன் புல் போலே-

நாகம் ஒன்றிய நல்வரை யின்தலை மேனாள்
ஆகம் வந்தெனை அள்ளுகிர் வாளின் அளைந்த
காக மொன்றை முனிந்தயல் கல்எழு புல்லால்
வேக வெம்படை விட்டதும் மெல்ல விரிப்பாய்.’-என்ற கம்பராமாயணச் செய்யுளை இங்கு நினைவு கூர்க.

‘அதற்கு அடி என்?’ என்னில், திருமகள் கேள்வன் ஆகையாலே,
நினைத்த காரியம் செய்து தலைக்கட்டுகைக்குத் தகுதியான ஆற்றலையுடையனான திருமகள் கேள்வனுடைய கல்யாண குணங்களை.
ஒருவன் செய்தது வாய்த்து வரப் புக்கவாறே
‘அவன் குப்பைக்காலன்காண், ஸ்ரீமான் செய்தன எல்லாம் நன்றாய் வருங்காண்’ என்னக்கடவது அன்றோ?
இறப்பு எதிர்காலம் பருகிலும் ஆர்வனோ –
‘எல்லாச் சேதநர்களுடையவும் வாக்கு முதலான கருவிகளையும் அனுபவித்தல் முதலான சத்திகளையும்
நான் உடையேனாய் அனுபவிக்கப் புக்காலும் உயிர் வாழ்வதற்கு அடியான ஆயுள் அற்பமாகையாலே
உபகாரத்தை நினைப்பதற்குக் காலம் போருகிறது இல்லை.
‘எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?’ என்ன வேண்டாதே,-தனிமையில் இல்லாமல் -7 பாசுரம் – அவ்வவர்களுடைய உபகரணங்களையுமுடையேனாய்,
போன காலமும் மேல் வரக்கூடிய காலமும் எல்லாம் அனுபவியாநின்றாலுந்தான் ஆர்வனோ?
ஆர்வோமோ -எல்லா காலங்களிலும் அனுபவித்தாலும் -என்றபடி

‘எல்லாருடைய உபகரணங்களையும் கொண்டு காலம் எல்லாம் அனுபவித்தாலும்
நீர் ஆராது ஒழிகிறது அவன் செய்த எந்த உபகாரத்தை நினைத்து?’ என்ன. அருளிச்செய்கிறார் மேல்:
மறப்பு இலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை உறப் பல இன்கவி சொன்ன உதவிக்கு –
மறப்பு இல்லையான என்னை.
மறப்புக்கு முன் கணத்தில் நிகழக்கூடியதான நினைவும் எனக்கு இல்லை என்கைக்காக, ‘மறப்பிலா’ என்ற சொல்லாலே அருளிச்செய்கிறார்
‘’மறப்பு இலா’ என்ன வேண்டுவான் என்?’ என்னில், நினைவு உள்ள இடத்திலே அன்றோ மறப்பு உள்ளது?
ஆக, ஏதேனும் ஒரு காலத்தில் உண்டாகிற நினைவுங்கூடத் தமக்கு இல்லை என்கிறார் என்றபடி.
மறப்பு இலா என்னைத் தன்னாக்கி –
ஏதேனும் ஒரு காலத்தில் நினைத்துப் பின்னை ஒருகால் மறப்பு உண்டாய்,
அதனை காணாக் கண்ணிட்டுதான் இப்படி அங்கீகரித்தானோ?
முதலிலே தன் பக்கலிலே நினைவு இன்றிக்கே இருக்கிற என்னைத் தன்னாக்கி.
என்னால் –
‘மறந்தேன் உன்னை முன்னம்’ பெரிய திருமொழி, 6. 2 : 2.-என்கிற அநுதாபமுங்கூட இன்றிக்கே இருக்கிற என்னைக்கொண்டு.
தன்னை உறப் பல இன்கவி சொன்ன –
‘சொல்ல மாட்டாது அந்த ஆனந்த குணத்தினின்றும் எந்த வேத வாக்கியங்கள் மீண்டனவோ’ என்கிறபடியே,
‘வேதங்கள் மீண்ட விஷயத்தை மறுபாடு உருவச் சொன்ன’ என்று சீயர் அருளிச்செய்வர்.
அன்றிக்கே, ‘சர்வேஸ்வரனுக்குச் சால உற்றது என்கிறார்’ என்று பிள்ளான் அருளிச்செய்வர்.
பல இன்கவி சொன்ன –
‘வால்மீகி முனிவர் இருபத்து நாலாயிரம் சுலோகங்களையும், ஐந்நூறு சர்க்கங்களையும்,
ஆறு காண்டங்களையும், உத்தர காண்டத்தையும் சொன்னார்,’ என்னுமாறு போலே,

‘சதுர்விம்ஸத் ஸஹஸ்ராணி ஸ்லோகாநாம் உக்தவாந் ரிஷி:
ததா ஸர்க்க ஸதாந்பஞ்ச ஷட்காண்டாநி ததோத்தரம்’ -என்பது, ஸ்ரீராமா. பாலா. 4 : 2.

‘சம்சாரத்திலே இப்படி விலக்ஷணமாய் இருக்கும் பாசுரங்கள் ஆயிரம் பாடுவதே!’ என்கிறார்.
உதவிக்கு –
இனிய கவிகளைச் சொன்ன இந்த உபகாரத்துக்குத் திருமாலின் சீர் இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?

——————————————————————————————————–

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10-

உபகாரத்துக்கு பிரதியுபகாரம் ஒரு பிரகாரத்தில் இல்லை
உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்-ஆத்மா
பிரதியுபகாரமோ என்னில்-அத்தை சிக்கென நிரூபித்து பார்க்கில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்-அந்த பிரதி உபகார அவஸ்தையில் -பரபரப்பில் -செய்ததும்
-மேலும் அநுதபித்தும் -அசாதாரணமான சேஷ வஸ்து
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு-மிருதுவான -பதவிசு -இனிய கவி -பாடிய உபகாரத்துக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.-ஞானம் பிறந்தால் நித்யம் பர சேஷ வஸ்துவுக்கு இங்கும் அங்கும் இல்லை
-அங்கே அனுபவம் -முக்தமுமுஷு தசையில் -சுவீக்கியத்வ அஞ்ஞானம் உள்ளது இங்கே

அவன் செய்த உபகாரத்துக்குப் பிரதி உபகாரமாக என்னுடைய உயிரை அவனுக்கு உரியது ஆக்கலாம் என்று பொருந்தி நினைத்தால்
அந்த உயிரும் அவனுடையதே; ஆதலால், என்னைக் கொண்டு மிருதுவான இனிய கவிகளைத் தன்னைப் பாடிக்கொண்ட அப்பனுக்கு
என்னால் செய்யத்தக்கது இவ்வுலகத்திலும் அந்த உலகத்திலும் யாது ஒன்றும் இல்லை.
‘அப்பனுக்குச் செய்வது இங்கும் அங்கும் எதுவும் ஒன்றும் இல்லை’ என்க. பதவிய – மிருதுவான; ‘திராக்ஷாபாகமான கவிகள்’ என்றபடி.

‘உபகாரத்தை நினைப்பதற்குக் காலம் போருகிறது இல்லை என்று நீர் புண்படாநில்லாமல்,
உம்மதாய் இருப்பது ஒரு வஸ்துவை அவனுக்குப் பிரதியுபகாரமாகக் கொடுத்துப் பிழைத்துப் போக மாட்டீரோ?’ என்ன.
‘அப்படிச் செய்யலாமே அன்றோ ஈஸ்வரனைப்போலே நானும் எனக்கு உடைமையாய் இருப்பது ஒரு வஸ்துவைப் பெற்றேனாகில்?’ என்கிறார்.
இத்திருப்பாசுரக் கருத்தோடு ‘எனதாவியுள் கலந்த’ (திருவாய். 2. 3 : 4.) என்றதிருப்பாசுரக் கருத்தை ஒப்பிட்டுக் காணல் தகும்.

உதவிக் கைம்மாறு –
உபகாரத்துக்குப் பிரதியுபகாரமாக.
என் உயிர் என்ன –
‘நித்தியமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய்ச் சீர்மையையுடையதாய் இருப்பது ஒன்று உண்டே அன்றோ,
ஆத்மவஸ்து? அதனைக் கொடுத்தாலோ?’ என்ன அது செய்யலாமே அன்றோ,
அடியிலே மயர்வுஅற மதிநலம் அருளிற்றிலன் ஆகில்? முன்னரே அதனைக் கொடுத்து வைத்தானே!
‘மயங்கி இருக்குங் காலத்தில் ஆத்தும சமர்ப்பணம் போலே இருப்பது ஒன்றாயிற்று,உபகாரத்தின் நினைவாலே
பிரதியுபகாரம் தேடிக் கலங்குகிற இது.’
மயங்கி இருக்குங்காலத்தில் ஆத்தும சமர்ப்பணந்தான் வேணும்:
தெளிந்த பின்னர், ‘என்னுடைய பொருளை அவனுக்குக் கொடுத்தேன்’ என்று இருக்கக்கடவன் அல்லன்;
ஆத்துமா என்னுடையது என்று பல காலமாக எண்ணிப் போந்த அதிலும் கடையாயிற்று,
தெளிந்த பின்னர் ‘நான் என்னுடைய பொருளை அவனுக்குத் தந்தேன்’ என்று இருக்குமாகில்.
பின்னையும் பழைய அபகாரமே தொடர்ந்தது ஆகுமே! ஞானம் பிறந்தமை அன்றோ?
சர்வமுத்தி பிரசங்கம் வாராமைக்காக ஆத்தும சமர்ப்பணந்தான் வேண்டிவரும்;
நெஞ்சிலே வெளிச்சிறப்பு உண்டானால் அவனுடைய பொருளினை அவனதாக இசைந்திருக்கக் கடவன்.
‘என்னால் கொடுக்கப் பட்டது அன்றி, உனக்கு யாது கொடுக்கிறேன்?’ என்னாநின்றது அன்றோ?

‘வபுராதிஷூ யோபி கோபி வா குணத: அஸாநி யதாததாவித:
ததயம் தவபாத பத்மயோ: அஹம் அத்யைவ மயா ஸமர்ப்பித:’-என்பது, ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்த தோத்திரரத்நம் 52.

‘எனது ஆவி தந்தொழிந்தேன்’ என்னா,
எனதாவி’ என்றது, திருவாய். 2. 3 : 4. ஆக, ‘மயங்கி இருக்குங் காலத்தில் ஆத்தும
சமர்ப்பணம்போலே’ என்றதனை விரித்து அருளிச்செய்து, பின்னர், ‘உபகாரத்தின்
நினைவாலே பிரதி உபகாரம் தேடிக் கலங்குகிற இது’ என்றதனை விரித்து
அருளிச்செய்யக் கோலி, அப்படி உபகாரத்தின் நினைவாலே கலங்கி ஆத்துமாவைச்
சமர்ப்பித்து, தெளிந்த பின்னர் அநுதபித்த இடம் உண்டோ?’ என்னும் சங்கைக்கு
விடை அருளிச்செய்கிறார், ‘எனதாவி’ என்று தொடங்கி.

‘எனதுஆவி யார் யான் ஆர்?’ என்றார் அன்றோ?
சொரூப ஞானம் பிறந்தால் பேற்றின் அளவும் செல்ல, இவ்விரண்டு தன்மையும் தொடரக்கடவதாக இருக்கும்.
ஆக, ஆத்தும சமர்ப்பணத்துக்கும் செய்ந்நன்றி அறிதலுக்கும் தனித்து இவனுக்குச் சம்பந்தம் இல்லாத படியான
இவனுடைய அத்தியந்த பாரதந்திரியத்தைச் சொல்லுகிறது.
பிரபத்தி சமயம் -ஆத்மீய பரந்யாசம் -பிராந்தி சமயமா இது -சமர்ப்பித்த அனந்தரம் அனுதபிப்பதால் –ஆகில் வேண்டாவோ என்னில்
-வேணும் -சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்கு –
பின்பு சமர்ப்பித்தது என் வஸ்து என்று நினைத்தால் முன்பு விட தாழ்வு உண்டாகும் -அதனால் செய்த அநந்தரம் அனுதபிக்க வேண்டும் –
ஆளவந்தார் ஆழ்வார் போலே -இரண்டு ஆகாரமும் உண்டு -ஜீவாத்மாவுடைய பாரதந்த்ர ஸ்வரூபம் அறிந்து கொள்ள வேண்டும் –

உற்று எண்ணில் –
ஆராயாதே மேல் எழ நின்று கொடுக்கில் கொடுக்கலாம்;
நெஞ்சிலே சிறிது வெளிச்சிறப்புப் பிறந்து இதனுடைய கொடுக்கத் தகுதி இல்லை.
அதுவும் – ஆத்துமாவும். மற்று – அப்படிப்பட்ட ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும்.
ஆங்கு அவன் தன்னது – பிரதியுபகாரம் செய்து தரிக்கவேண்டும் நிலையில் அவனதாய் இராநின்றது.
என்னால் தன்னை –
செய்ந்நன்றி அறிதலுங்குங்கூடத் தகுதி இல்லாத என்னாலே மஹோபகாரகனாய் இருக்கிற தன்னை.
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு –
கவிபாட்டுண்கிறவனுக்கு இக்கவி பாட்டாலே பண்டு இல்லாத நீர்மை உண்டாம்படியாகக் கவி பாடின உபகாரனுக்கு.
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது –
ஏதேனும் ஒன்றும் செய்யலாவது இல்லை.
‘இங்கு இருக்கும் நாள் ஞானக் குறைவினாலே செய்யலாவது ஒன்று இல்லையாகிலும், ஞானக்குறைவு அற்று முத்தனானால்,
பிரதியுபகாரம் செய்யத் தட்டு என்?’ என்னில்,
இங்கும் அங்கே –
‘இங்கு ஆனால், தேக ஆத்துமா அபிமானத்தாலே ‘நான், என்னது’ என்று போய்க் கால் கட்டித் திரிகையாலே,
செய்யலாவது உண்டோ?’ என்று பிரமிக்கவுமாய் இருக்கும்;
அதுவும் இன்றிக்கே, ஞானக்குறைவு கழிந்த அளவிலே, தான் செய்யலாவது ஒன்று இல்லை என்னும் இடம்
சொல்ல வேண்டா அன்றோ?
‘தனது இயல்பான வடிவைப் பெறுகிறான்’ என்கிறபடியே,
ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே’-என்பது, சாந்தோக். உப.

———————————————————————————————————-

இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11-

ஏ ந கேனாபி த்வயம் -போலே -இதுவும் தீர்க்க சரணாகதி -தன்னுடன் அந்வயித்தற்கு இது திருவாய் மொழி நிரதிசய ஆனந்தம் கிட்டும்
இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு-ஆச்ரயண திசையிலும் கைங்கர்ய திசையிலும் பூர்வ உத்தர வாக்ய ஸ்ரீ யபதித்தவம்-அனுசந்தித்து –
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன் அந்த பிரகாரத்தை -ஆழ்வார் -உதார ஸ்வபாவர்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து-உபகார ஸ்ம்ருதி ஸ்வரூப -நன்றி உணர்வு இல்லாமல்
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே-ஆழ்வார் வைபவத்தாலும் இது திரு வாய் மொழி -பகவத் அனுபவ நிரவாதிக போக்யத்தை கிட்டும்

‘இந்த உலகத்திலும் அந்த உலகமாகிய பரமபதத்திலும் திருமாலை அல்லாமல் இல்லாத தன்மையைப் பார்த்து, அந்தத் தன்மையையுடையராய்
வண்மை பொருந்திய திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபராலே இந்த வகையாலே அருளிச்செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள்
இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் எந்த வகையில் சொன்னாலும் இன்பத்தைக் கொடுக்கும்,’ என்றபடி.
‘கண்டு சொன்ன ஆயிரம்’ என்க.

முடிவில், ‘இத்திருவாய்மொழி, ஏதேனும் ஒரு படி சொல்லிலும் ஆனந்தத்தை உண்டாக்கும்,’ என்கிறார்.

இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு –
சாதனத்தைச் செய்கின்ற காலத்தோடு பேற்றினை அடைந்த சமயத்தோடு வாசி அற,
இந்த உலகம் பரமபதம் என்ற இரண்டிலும் திருமகள் கேள்வன் அல்லது போக்கி,
இவ்வாத்தும வஸ்துவுக்குத் தஞ்சமாக இருப்பார் வேறு இலர் என்னுமதனைச் சொல்லி;
‘பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து’ திருவாய் 9. 2 : 1.
-என்கிறபடியே, கைங்கரியம் செய்யுமிடத்திலும் அவள் முன்னாகச் செய்யவேணுமன்றோ?
அவனைப் பற்றுகிற வேளையிலும் அவள் முன்னாக வேணுமன்றோ? ஆதலின் ‘திருமால்’ என்கிறது.
‘ஹதே தஸ்மிந் ந குர்யு: – அவன் கொல்லப்பட்ட பின் செய்யமாட்டார்கள்’ என்கிறபடியே,
‘இராவணன் சொல்லுகையாலே அன்று இருந்து நலிந்தார்களாகில், இராவணன் பட்டுப் போன இப்போதும் நலிவார்களோ?’ என்று
அவர்கள் பக்கலிலும் குணத்தை ஏறிட்டுச் சொல்லும் நீர்மையையுடையவளாயிற்று.

ஹதே தஸ்மிந் நகுர்யு: ஹி தர்ஜநம் வாநரோத்தம!’-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 41.

‘அன்னை அஞ்சன்மின் அஞ்சன்மின் நீரெனா
மன்னு மாருதி மாமுகம் நோக்கிவேறு
என்ன தீமை இவர்இழைத் தார்அவன்
சொன்ன சொல்லினது அல்லது தூய்மையோய்!’-என்பது, கம்பராமாயணம்.

அங்ஙனே வண்குருகூர்ச் சடகோபன் –
நமக்கும் நல்லாசிரியன் அருகே இருந்து ‘திருமகள் கேள்வன் ஒழிய இவ்வாத்துமாவுக்குத் தஞ்சமாய் இருப்பார் இலர்,’ என்று
உபதேசித்தால், அத்தனை போதும்அப்படியே’ என்று இருக்குமது உண்டே அன்றோ?
இவர் அங்ஙனம் அன்றிக்கே, அந்நினைவுக்குத் தகுதியான செயலையுமுடையவராய் இருப்பாராயிற்று.

‘ஆனால், மனம் வாக்குக் காயங்கள் என்னும் மூன்றும் ஒருபடிப்பட்டிருக்குமோ?’ என்னில்,
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து –
இந்த எண்ணத்தோடு சொல்லிற்றாயிற்று ஆயிரம் திருப்பாசுரங்களும்.
‘நீர், மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றிலும் ‘திருமகள் கேள்வனே இவ்வாத்தும வஸ்துவுக்குத் தஞ்சம்’ என்று அறுதியிட்டு
அருளிச்செய்த இப்பாசுரங்களைக் கற்பார்க்கு,
மனம் வாக்குக் காயம் என்னும் இம்மூன்றும் புறத்து விஷயங்களினின்றும் மீள வேணுமோ?
நீர், சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்தவராய் இராநின்றீர்;-திருவாய். 6. 5 : 11.
-இவர்களுக்கு எல்லாம் பின்னை இப்படி வேணுமோ?’ என்னில்,
‘அத்தேவைகள் எல்லாம் நம்மோடே: இது கற்பார்க்கு அது வேண்டா,’ என்கிறார்:
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்கும் –
ஏதேனும் ஒரு படி சொல்லிலும் இன்பம் உண்டாம்.
இவர்தம்முடைய பாசுரத்தைக் கற்றவர்கள் என்றே அன்றோ ஈஸ்வரன் இவர்களைக் கடாட்சிப்பது?
இல்லையாகில், இவர் தம்மைப்போலே மனம் வாக்குக் காயம் என்னும் இவற்றினுடைய நியதி உண்டாய்
அனுபவிக்கப்பெறில் அழகிது; அது இல்லாத போதும் பலம் தவறாது என்கைக்காகச் சொல்லிற்றத்தனை

இது. இன்பம் பயக்குமே –
‘இந்த இறைவனே ஆனந்தத்தைக் கொடுக்கிறான்’ என்கிறபடியே,
ஏஷஹ்யேவ ஆநந்தயாதி’ என்பது, தைத். ஆன.
எப்பொழுதும் பகவானுடைய அனுபவத்தாற்பிறக்கும் ஆனந்தமானது உண்டாம்.

——————————————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ப்ருஷ்டக பலம் சுவ வஸதே ஹே இஹ துஸ்
ஸ்வேன பிரபந்த ரசனாம் பலம்
அன்யேஷூ சத் தேசூ அபி
அத்ப்ரத்யுபக்ரியம் பவாந்தம்
ஸோ அபேக்ஷமானம்
ஸ்வயம்
அப்ரத்யுபக்ரித்மாம் -திருக் கல்யாண குணம்

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

விஷ்ணு அப்ருதுபக்ரித்வாத்
ஸ்வாமித்த்வாத்
ஆச்ரய பாவாத் யபி-மாயன்
கருணையா தத்த வாக் ஜ்ரும்பணம்த்வாத்
உஜ்ஜீவ ஆபாத கத்வாத்
அகதி கட நா சக்தி -ஏர்விலா என்னைத் தன்னாக்கி
வைகுண்ட யோகாத்
சுத்த சுவாந்தத்வத்வம் -குந்தம்
சக்ராயுத -ஆழி அம் கையன்
ஜலதி சுதா வல்லபாத் -திருமாலின் சீர்
பித்ருத்வாத் –இந்த கவி பாடுவித்த அப்பனுக்கு
ஸ்வே ஸ்தோத்திரி

——————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 69-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

என்தனை நீ யிங்கு வைத்தது ஏதுக்கு என மாலும்
என்தனக்கும் எந்தமர்க்கும் இன்பமதா -நன்றுகவி
பாட வெனக் கைம்மாறிலாமை பகர் மாறன்
பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் ———-69-

————————————————————————————-

அவதாரிகை –

இதில்
அவன் திருவாய் மொழியை பாடுவித்த படியை அனுசந்தித்து
ஈடுபடுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்-
எனக்கு ருசி இன்றிக்கே இருக்க சம்சாரத்தில் என்னை
வைத்ததுக்கு ஹேது என் என்று கேட்க –
உம்மைக் கொண்டு
நமக்கும்
நம்முடையாருக்கும்
அனுபவிக்கலாம் படி விலஷணமான
திருவாய் மொழி பிரபந்தத்தைப் பாடுவித்து கொள்ள வைத்தோம் காணும் -என்று
நேர் கொடு நேரான பரிஹரத்தை அவன் அருளிச் செய்ய –
வேதங்கள்
வ்யாசாதிகள்
முதல் ஆழ்வார்கள்
இவர்கள் யுண்டாய் இருக்க
அத்யந்த ஹேயனான என்னைக் கொண்டு
வேதங்களாலும் எல்லை காண ஒண்ணாத
தன் வைபவத்ததுக்கு தகுதியாக
விலஷணமான திருவாய் மொழியை பாடுவித்துக் கொண்ட
இந்த மகா உபகாரத்துக்கு
உபய விபூதியிலும் சத்ருசமாக செய்ய தக்கதொரு
பிரத்யுபகாரம் இல்லை
என்று தலை சீய்த்துப் படுகிற
என்றைக்கும் என்னையில் அர்த்தத்தை
என்தனை நீ -இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை-

———————————————————————————

வியாக்யானம்–

என்தனை நீ யிங்கு வைத்தது எதுக்கு என –
அவன் காட்டினதாகையாலே
விசித்திர விபூதியை அனுபவித்து
மீளவும்
பூர்வ பிரக்ருதமான தம்முடைய சங்கையை
பாசங்கள் நீக்கி என்னை யுனக்கே அறக் கொண்டிட்டு நீ வாச
மலர்த் தண் துழாய் முடியானே அருளாய் -என்று கேட்க –
என்தனை நீ –
சம்சாரத்தில் பொருந்தாத என்னை -நீ –
சம்சாரத்தில் பொருந்தாதாரை
ஏற விடுகைக்கு
சர்வ சக்தி உக்தனான நீ —

இங்கு –
இருள் தரும் மா ஞாலமான
இவ் விபூதியிலே

வைத்தது ஏதுக்கு என –
பிரயோஜன நிரபேஷமாய் இருக்க
என்ன பிரயோஜனத்தைப் பற்ற
வைத்தது -என்ன –
மாலும் -என்தனக்கும் எந்தமர்க்கும் இன்பமதா -நன்றுகவி பாட வெனக் –
திருமாலான எனக்கு இனிதாகவும்
திருமால் அடியாரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனிதாகவும்
விலஷணமாய்-
கவி யமுதம் -என்னலாம் படியான இனிய கவிகளைப் பாட
வைத்தோம் என்ன –
தன்னை கவி பாடுகைக்கு
வேதங்களும்
அத்தைப் பின் சென்ற வைதிகரான
வியாச வால்மீகி பரபருதிகளான பரம ருஷிகளும்
செந்தமிழ் பாடுவாராய்
பெரும்தமிழன் அல்லேன் பெரிது – -என்று
பிரசம்சிப்பாருமான முதல் ஆழ்வார்களும் யுண்டாய் இருக்க –

கவி பாட என கைம்மாறிலாமை –
கவி பாட வைத்தோம் என்ற இந்த
யுபகாரத்துக்கு பிரத்யுபகாரம்
இல்லாமையை –

பகர் மாறன் –
அருளிச் செய்த ஆழ்வார்
அதாவது –
என்றைக்கும் –என் சொல்லி நிற்பேனோ -என்றும்
என் சொல்லி நிற்பன் –என் முன் சொல்லும் மூவுருவா முதல்வன -என்றும்
ஆ முதல்வன் இவன் என்று –என் வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ -என்றும்
செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டு —அப்பனை என்று மறப்பன் -என்றும்
சீர் கண்டு கொண்டு –பார் பரவின் கவி பாடும் பரமரே -என்றும்
இன்கவி பாடும் பரம கவிகளால் தன கவி தான் தன்னைப் பாடுவியாது –
வன்கவி பாடும் என் வைகுந்த நாதனே -என்றும் –
வைகுந்த நாதான் -எந்நாள் சிந்தித்து ஆர்வனோ -என்றும்
ஆர்வனோ –சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே-என்றும்
திறத்துக்கு –உறப்பல இன் கவி சொன்ன உதவிக்கே -என்றும்
உதவிக் கைம்மாறு என்னுயிர் –எதுவும் ஒன்றும் செய்வது இல்லை இங்கும் அங்கும் -என்றும்
இப்படி உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே
ஈடுபட்டு அருளிச் செய்தவை -என்கை —

என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும்
என்கிற வதில்
உபகார ச்ம்ருதியோடே-என்று இறே நாயனாரும் அருளிச் செய்தது –

சதுர விம்சத் சஹஸ்ராணி ஸ்லோகா நாமுக்த வான்ருஷீ -என்னும்படி –
பாலோடு அமுதம் அன்னவான
இங்கனே சொன்ன ஓர் ஆயிரமான
உறப்பல வின்கவிகளை பாடுவிக்கையாலே இவர்க்கு
ஈடுபாடாய் இருக்கிறது –

கைம்மாறு இலாமை பகர் மாறன் -பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் –
இப்படி க்ருதஞ்ஞாரான
ஆழ்வார்
பரிசர வர்த்திகளாம் படி
கிட்டுவார்க்கு ஆனந்தம் யுண்டாம் –
எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே -என்கிற நிர்பந்தமும் வேண்டா
கேவலம் -கிட்டவே அமையும்-

———————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: