Archive for July, 2016

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த -அருளிச் செயல் ரகஸ்யம்-சரம ஸ்லோக பிரகரணம் -பூர்வார்த்தம் -ஸ்ரீ உ .வே .வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ரகஸ்ய பூஷணம் –

July 31, 2016

பத விபாகம்
பதினோரு பதமான இதில்
முதல் பதம் விடாய் படுகிற உபாயங்களை சொல்லுகிறது –
(யாதவ சிம்மம் இது -ஆறும் ஐந்தும் -உக்ரம் -அது ஐந்தும் ஆறும்
உபாயம் என்று பிரமித்த அர்ஜுனன் புத்தியால் இந்த சப்த பிரயோகம்
தர்ம சப்தமும் அர்ஜுனன் பிரமித்ததால் தானே – )

—————————————————–

மேலே பத சங்க்யா நிர்தேச பூர்வகமாக பிரதம பதார்த்தத்தை அருளிச் செய்கிறார் -பதினோரு -இத்யாதிநா –
பூர்வார்த்தம் -ஆறு பதம் -உத்தரார்த்தம் ஐந்து பதம் என்றபடி –
இத்தால் ஸ்ரீ நரசிம்ம சரம ஸ்லோக வ்யாவ்ருத்தி சொல்லிற்று ஆயிற்று –
அங்கு பூர்வார்த்தம் ஐந்து பதம் -உத்தரார்த்தம் ஆறு பதம் இறே

மாஸூச என்பது ஒரே பதம் என்று இவர்கள் திரு உள்ளம் –
ஸஹ -பாணினி -2-1-4-இதி யோக விபாகாத்-பர்ய பூஷயத் -இதிவத் –
ஸமாஸ-நாஸ் நீதி ஏகம் பதம் இதி வ்யவஹார தர்ச நாத் இதி ததாசய-இத்யாதி நிர்வாகங்களை கண்டு கொள்வது –

சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற ஸ்லோகத்தில் சொல்லுகிற தர்ம பரித்யாகம்
சாஸ்திர விரோதத்தாலும் –
அனுஷ்டான விரோதத்தாலும்
பிரகரண விரோதத்தாலும் அயுக்தம் –

யாவஜ்ஜீவம் அக்னி ஹோத்ரம் ஜுவ் ஹுயாத்- என்றும் –
தர்மேண பாபம் அப நுததி-என்றும் –
யஜ்ஜேன தானேன தபஸா அனாசகேஸேன ப்ராஹ்மணா விவிதி ஷந்தி -என்றும் –
சர்வ அபேஷா ச யஜ்ஞாதி ஸ்ருதே அஸ்வவத் -என்றும்
ஞான சாதனமாக கர்மத்தை அவஸ்ய அநுஷ்டேயமாக ஓதுகையாலும்-

(கீழே கர்ம யோகம் அவசியம் -மேலே ஞான யோகம்/பக்தி யோகம் அவசியம் பிரமாணங்கள் )

ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -என்றும்
ப்ரஹ்ம வேத ப்ரஹ் மைவ பவதி -என்றும்
ததா வித்வான் புண்ய பா பே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்றும் –
அஸ்தி ப்ரஹ் மேதி சேத் வேத சந்த மேனம் ததோ விது-என்றும்
வித்யாத் து புருஷம் பரம் -என்றும்
வேதன விசேஷத்தை பகவத் பிராப்தி சாதனமாக விதிக்கையாலும் –

யமேவ ஏஷ வ்ருணுதே தேன லப்ய தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே-தநூம் ஸ்வாம் -என்றும்
பக்த்யா ச த்ருத்யா ச சமா ஹிதாத்மா ஞான ஸ்வரூபம் பரிபஸ்ய தீஹ -என்றும் –
ஹ்ருதா மநீஷா மனஸா அபி க்லுப்த-என்றும்-
பிராப்தி சாதனமாக பக்தியை விதிக்கையாலும் -இவற்றினுடைய தியாகம் சாஸ்திர விருத்தம் –

ஸூகோ முக்த வாம தேவோ முக்த -என்று முக்தராக ஸ்ருதரான ஸூகாதிகளோடு
உபமானம் அசேஷாணாம் சாதூனாம் என்னப் பிறந்த ப்ரஹ்லாதனோடு
பரத சவ்பரி ப்ரப்ருதிகளான அல்லாத முமுஷுக்களோடு வாசி அற (ஆதி ஜடபரதரைச் சொல்லுகிறது)
கர்ம ஞானாதிகளையே அனுஷ்ட்டித்துப் போருகையாலே-தர்ம தியாக விதி அனுஷ்டானத்தோடும் விரோதிக்கும் –

நியதம் குரு கர்ம த்வம்-என்றும் –
கர்ம ஜியாகோ ஹ்ய கர்மண -என்றும் –
கர்மணைவ ஹி சம்சித்தம் ஆஸ்திதா ஜநகாதாய -என்றும்
சர்வம் கர்ம அகிலம் பார்த்த ஞானே பரி சமாப்யதே-என்றும்
ந ஹி ஞானேன சத்ருசம் பவித்ரம் இஹ வித்யதே -என்றும்
ஞாநாக்நி சர்வ கர்மாணி பஸ்ம சாத்க்ருதே அர்ஜுனா -என்றும்-
போக்தாரம் யஞ்ஞா தபஸாம் சர்வ லோக மஹேஸ்வரம் ஸூஹ்ருதம் சர்வ பூதானாம் ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி- என்றும்
பக்த்யா மாம் அபி ஜா நாதி -என்றும் –
பக்த்யா த்வன் அந்யயா ஸக்ய -என்றும் –
மத் பக்திம் லபதே பராம் -என்றும் –
மன்மனாபவ மத்பக்த -என்றும்
சாதரமாகவும் சவிஸ்தரமாகவும் பதினெட்டு ஒத்தாலும் உபதிஷ்டமான கர்மாதி தியாகம் பிரகரண விருத்தம் –

ஆக -சாஸ்திர விரோதமும் -கர்ம ஞான அனுஷ்டான விரோதமும் -பிரகரண விரோதமும் பிறக்கையாலே
இஸ் ஸ்லோகத்துக்கு இவற்றோடு சேர்ந்த அர்த்தம் அர்த்தமாம் அத்தனை –
விருத்தமான தியாகம் அர்த்தம் ஆக மாட்டாது என்று சிலர் சொன்னார்கள் –
சாஸ்திர விரோதமும் அனுஷ்டான விரோதமும் பிரகரண விரோதமும் பிறவாமையாலே அது அர்த்தமாக மாட்டாது –

யோ பிரஹ்மாணாம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை -தம் ஹ தேவம் ஆத்மபுத்தி
பிரசாதம் முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
தஸ்மான் ந்யாஸ மேஷம் தபஸாம் அதிரிக்த மாஹு என்றும் நியாஸ இதி ப்ரஹ்மா -என்றும் –
தேவா நாம் குஹ்யம் ய ஏவம் வேத ப்ரஹ்மணோ மஹிமா நமாப் நோதி-என்றும் –
தாவதார்த்தி ததா வாஞ்சா தவான் மோஹ ததாஸ் ஸூ கம் -என்றும்
யாவன் நயாதி சரணம் த்வாமஸேஷ அகநாசனம் -என்றும்
சரண்யம் சரணம் யாத கோவிந்தம் நாவ சீதாதி -என்றும் –
வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஜென்ம சந்ததி -தஸ்யா மன்யதமம் ஜென்ம சஞ்சித்ய சரணம் வ்ரஜ –
தேஷாம் து தபஸாம் ந்யாஸம் அதிரிக்தம் தப ஸ்ருதம் -என்றும்
சா தேவா அஸ்மின் ப்ரயுஜ்யதாம் -என்றும் சர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக அநுஷ்டேயையான ப்ரபத்தியையும்
பகவத் பிராப்திக்கு ஸ்வ தந்த்ர சாதனமாக சாஸ்திரத்தில் விதிக்கையாலே சாஸ்திர விரோதம் இல்லை –

கர்ம ஞானாதி விதாயக சாஸ்திரங்களுக்கும் தத் தியாக பூர்வகமாக அநுஷ்டேயமான ப்ரபத்தியை விதிக்கிற
சாஸ்திரங்களுக்கும் விரோதம் சொல்லப் பார்க்கில் –
ஸ்யேன விதிக்கும் காமநா விதிக்கும் மோக்ஷ விதிக்கும் அந்யோன்யம் விரோதம் பிறக்கையாலும்
ப்ரஹ்ம சர்யம் கார்ஹஸ்த்யம் வானப்ரஸ்த தர்மம் பிஷூ தர்மம் இவற்றுக்கு அந்யோன்யம் விரோதம் பிறக்கையாலும்
ந ஹிம்ஸ்த்யாத் சர்வா பூதாநி -என்று பூத ஹிம்சையை நிஷேதித்து வைத்து பஸூ விசஸனத்தை விதிக்கையாலும்
யாவஜ் ஜீவம் அக்னி ஹோத்ரம் ஜுவ்ஹூ யாத்-என்று அக்னி ஹோத்ர ஹோமத்தை விதித்து வைத்து
தத் தியாகத்தை சன்யசேத் சர்வ கர்மாணி -என்று விதிக்கையாலும் –
கர்மத்தை அநுஷ்டேயமாகச் சொல்லி வைத்து தத் தியாக பூர்வகமாக ஞான யோகத்தை விதிக்கையாலும்
உபாஸ்ய வஸ்துவை -யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -என்று ச குணமாகச் சொல்லி வைத்து
நிர்குணம் நிரஞ்சனம் என்று குண விதுரமாகச் சொல்லுகையாலும் –
ஆக இவ்வோ முகங்களாலே ஆபாத சூடம் பரஸ்பர விருத்தமாகத் தோற்றுகையாலே சாஸ்திரமாக த்யாஜ்யமாம் –

இவ்விரோதத்தை
குண பேதத்தாலும் -வர்ண பேதத்தாலும் -ஆஸ்ரம பேதத்தாலும் -பாக பேதத்தாலும் – ருசி பேதத்தாலும் –
அதிகாரி பேதத்தாலும் பிறக்கையாலே பரிஹரிக்கிறாவோபாதி
இதுவும் அதிகாரி பேதத்தாலே பரிஹ்ருதம் –
ஆகையால் சாஸ்திர விரோதம் இல்லை –

கர்ம ஞானாதிகளை அனுஷ்டித்த ஸூகாதிகளோபாதி –
கண்டு முசுகுந்த பரப்ருதிகளான முமுஷுக்களோடு –
துர்வாஸஸ் சாப தூஷிதரான தேவதைகளோடு –
வாசி அற பிரபத்தி அனுஷ்டானம் பண்ணி பலிக்கக் காண்கையாலே
அனுஷ்டான விரோதம் இல்லை –

கர்ம யோகாதிகளுக்கு ஸஹ அனுஷ்டானம் இல்லாமையால் பாக க்ரம நிபந்தமான
அதிகாரி பேதத்தாலே பரிஹரிக்கிறாவோபாதி
இதுவும் அதிகாரி பேதத்தாலே பரிஹ்ருதம் –
ஆகையால் பிரகரண விரோதம் இல்லை

———————————————————————————————–

சர்வ தர்ம சப்தார்த்தம் ..
சர்வ தர்மான் -எல்லா தர்மங்களையும் –
தர்மம் என்கிறது , ஆசைப் பட்டவை கை புகுகைக்கு நல் வழியாக சாஸ்திரங்கள் சொல்லுமத்தை

இவ் இடத்தில் தர்மம் என்கிறது –
மோஷம் ஆகிற பெரிய பேறு ,பெருகைக்கு ,சாஸ்த்ரங்களிலும் , பதினெட்டு ஒத்திலும் ,சொல்லப் பட்ட
கர்ம ஞானங்களை பரிகரமாக உடைய ,பக்தி ஆகிற சாதனத்தை
(வேத போதக இஷ்ட சாதனங்கள் தானே தர்மங்கள்)

தர்மான் -என்கிற பஹு வசனம் ,
அற முயல் ஞான சமயிகள் பேசும் ( திரு விருத்தம் -44 ) வித்யா பேதங்களான –

ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை ( பெரியாழ்வார் திருமொழி 1-1-3 ) என்கிற புருஷோத்தம வித்யை
(தொட்டில் குழந்தையை பார்த்தே புருஷோத்தமன் என்று அறிந்த கோபிகள்
அவதார ரஹஸ்ய ஞானமும் புருஷோத்தமன் ஞானமும் உள்ள பக்தனுக்கு அந்த பிறவியிலே பேறு உண்டே )

பிறவி அம் சிறை அறுக்கும் (திரு வாய் மொழி 1-3-11)
நிலை வரம்பு இல்லாத (திரு வாய் மொழி 1-3-2) அவதார ரஹஸ்ய ஞானம்

(நிலை இல்லை வரம்பு இல்லை -இன்ன அவதாரம் இன்ன சேஷிடிதம் என்று இல்லாமல் –
அந்த சமயத்திலும் பரத்வம் காட்டுவான் -இது தான் வரம்பு இல்லாதவன்
யதோ உபாசனம் தத் பலம் -கட்டுண்டான் என்று அனுசந்தித்து உபாஸிக்க சம்சாரக் கட்டு அவிழ்கிறதே –
நியாய சாஸ்திரம் வெட்க்கி ஒழிந்ததாம் )

நற்பால் அயோத்யை ( திரு வாய் மொழி 7-5-1-) தொடக்கமான க்ஷேத்ர வாசம்

பாடீர் அவன் நாமம் (திரு வாய் மொழி 10-5-5-) என்கிற திரு நாம சங்கீர்த்தனம்

கடைத்தலை சீய்க்கை (திரு வாய் மொழி 10-2-7 )
மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்கை -( திருவாய் மொழி 7-10-2 )
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் கொண்டு (திரு வாய் மொழி 5-2-9 )
நெறிமையால் மலர்கள் தூவி பூசனை செய்கை (திரு வாய் மொழி 10-2-4 ) தொடக்கமாக
சாதன புத்தியோடே செய்யும் அவற்றைக் காட்டுகிறது –

நெறி எல்லாம் எடுத்து உரைத்த (திரு வாய் மொழி 4-8-6 ) -என்கையாலே அவையும் தனித் தனியே ஸாதனமாய் இருக்கும் இறே ..

(ஆகவே தர்மான்-பஹு சப்தம்
உபாய புத்தியா பேற்றுக்கு சாதனமாக செய்யாமல் இதுவே பேறு-கைங்கர்ய புத்தியாக செய்ய வேண்டும்
உபாசகனுக்கு தானே இவை சாதனம் -பிரபன்னனுக்கு அவனே உபாயம் )

சர்வ சப்தம் –
யஜ்ஞம் /தானம் /தபஸ் /தீர்த்த சேவை முதலானவை கர்ம யோக்கியதை உண்டாகும் படி சித்தியை விளைவிக்கும்

ஓதி உரு எண்ணும் அந்தி (யால் யாம் பயன் என் கொல்-புந்தியால் சிந்தியாது-முதல் திரு வந்தாதி -33 )

ஐந்து வேள்வி (திருச் சந்த விருத்தம்-3- / பெரிய திரு மொழி-5-9-9-/6-7-7-) தொடக்கமானவற்றைச் சொல்லுகிறது –

தர்மத்திலே சொருகாமல் , இவற்றை சர்வ சப்தத்துக்கு பொருளாக தனித்து சொல்லுகிறது –
பிரபத்திக்கு யோக்யதை தேட வேண்டாம் –
இவனையும்
இவன் உடைய ஸ்த்ரீ யையும் போல ,
நீசர் நடுவே கேட்கவும் -அநுஷ்டிக்கவுமாய்
குலங்கள் ஆய ஈர் இரண்டில் ( புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனேதிருச் சந்த விருத்தம் -90)
பிறவாதாரும் இதிலே அந்வயிக்கலாம் -என்று தேறுகைக்காக

முத்து விளக்கி ,முழி , மூக்கு புதைத்து- கிழக்கு நோக்கி கும்பிட்டு ,கீழ் மேலாக புற படுத்து ,
நாள் எண்ணி ,குரு விழி கொண்டு ,சாதனாந்தரங்களிலே நினைவாய் கிடந்ததிறே ..

இவை ஒன்றும் செய்யாதே
சரணா கதனாய்
இக் கரை ஏறினவன் (பெரியாழ்வார் திருமொழி 5-3-7 ) உபதேசிக்கக் கேட்டு
சரணாகத ரக்ஷணம் பண்ணின குலத்தில் பிறந்து ,
உறவை உட்பட கொண்டாடுகிறவர்க்கு ,
பிரபத்தி பழுத்துப் போய் ,அக்கரைப் பட ஒண்ணாது ஒழிந்தது
நன்மை தீமைகள் தேடவும் பொகடவும் வேண்டா ..
இவை விலக்கும் பற்றாசுமாய் இருக்கும் என்று இருக்கையே அதிகாரம் ..

(ஆண்டாள் அர்ஜுனன் திரௌபதி சரணாகதர் குலம் –
உன் தன்னைப் பிறவி புண்ணியம் யாம் உடையோம்
உன் தன்னோடு உறவேல் இங்கே ஒழிக்க ஒழியாதே-
உம்பி எம்பி -ஐவரானோம் இத்யாதி
நன்மையை தேடவும் வேண்டா தீமையும் பொகடவும் வேண்டா
தன்னால் வரும் நன்மை தீமையோ பாதி விலக்காய் ஆகுமே
ஆகவே நன்மை விலக்காய் இருக்கும் தீமையே பற்றாசாக இருக்கும் என்று இருக்கையே அதிகாரம்)

——————————————————

பிரதம பாதத்தை உபாதானம் பண்ணுகிறார் -சர்வ தர்மான் -என்று –
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -எல்லா தர்மங்களையும் என்று –

அது தான் தர்ம பதமும் பஹு வசனமும் -சர்வ சப்தமுமாய் -த்ரி பிரகாரமாய் இருக்கையாலே
இம் மூன்றுக்கும் அர்த்தம் அருளிச் செய்வதாக
பிரமம் தர்ம லக்ஷணத்தை அருளிச் செய்கிறார் –தர்மம் என்கிறது என்று தொடங்கி –

இங்குள்ள தர்ம சப்தம் தர்ம சாமான்ய பரம் அன்று –
தர்ம விசேஷ பரம் -என்று அருளிச் செய்கிறார் -இவ்விடத்தில் -இத்யாதி நா –

பல சாதன தர்மம் தான் –
தர்ம -பர தர்ம -பரம தர்ம -என்கிற பேதத்தால் மூன்று வகைப் பட்டு இருக்கும் –
அதில் அதர்ம வ்யாவருத்தமான ஸ்வர்க்காதி ஷூத்ர புருஷார்த்த சாதனம் தர்மம் ஆகிறது –
பரதர்மம் -ஆகிறது விமோசகம் ஆகையால்
பந்தகமானத்தில் காட்டில் விலக்ஷணமான பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷ சாதனம் –
பரம தர்மம் ஆகிறது –
தர்மம் போலே-ஷூத்ர புருஷார்த்தத்தையே சாதித்தல்-
பர தர்மம் போலே சேதன யத்ன சாத்யமாதல் ஆகை யன்றிக்கே
சித்தம் ஆகையால் -பரம பிரயோஜன சாதகம் ஆகையால் தனக்கு அவ்வருக்கு இல்லாத பகவத் விஷயம் –

இந்த தர்ம சப்தத்துக்கு இவை மூன்றுமே அர்த்தம் ஆகையால் இப்போது பர தர்மத்தில் நோக்காகக் கடவது –
இங்கனே ஒதுக்கித் தருவார் ஆர் என்னில்-
அடியிலே முமுஷுவான போதே ஷூத்ர பல சாதனமான தர்மம் கழிகையாலும்-
பரம தர்மத்தை கோபலீ வர்த்த ந்யாயத்தாலே மேலே ஸ்வீ காரியமாக விசேஷிக்கையாலும்
த்யாஜ்யதயா பர தர்மத்தையே உபாதானம் பண்ணுகிறது –

பஹு வசன அர்த்தத்தை அருளிச் செய்கிறார் -தர்மான் -என்கிற இத்யாதி நா –

சர்வ சப்தத்தை அருளிச் செய்கிறார் -சர்வ சப்தம் -என்று
பிரபத்தியின் தேச கால அதிகாரி பல பிரகார நியம அபாவ வைசிஷ்ட்யத்தைப் பற்ற அருளிச் செய்கிறார் –
பிரபத்திக்கு என்று தொடங்கி –

இவன் அர்ஜுனன் -இவன் ஸ்த்ரீ -திரௌபதி -இவர்கள் இருவரும் பிரபத்தி ஸ்ரவண அனுஷ்டான கர்த்தாக்கள் இறே –
ஸூத்தனுக்கு அஸூத்தி சம்பாதிக்க வேண்டா -அஸூத்தனுக்கு ஸூத்தி சம்பாதிக்க வேண்டா –
இருந்தபடியே அதிகாரியும் அத்தனை -என்கிற சத் சம்பிரதாய நிஷ்கர்ஷம் நிரூபிதம் ஆயிற்று –
இவ்விடத்தில் ஸ்ரீ வேல் வெட்டிப் பிள்ளை ஸ்ரீ நம்பிள்ளை சம்வாதத்தை அனுசந்திப்பது
( ஸ்ரீ வசன பூஷணம் -31-/ இதுவே ஸ்ரீ வார்த்தா மாலை -63-இது உண்டே )

(கண்ணன் கழலிணை நண்ணும்)மனம் உடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு
நானும் நமரும் என்னும்படி சர்வரும் அதிகாரிகள் –
போதுவீர் -என்று இறே -ஸ்ரீ ஆண்டாள் அதிகாரத்தை அறுதி இட்டது –
நன்மை தீமைகள் -இத்யாதி -நன்மை தேட வேண்டா -அது விலக்கு-
தீமை பொகட வேண்டா -அது பற்றாசு என்றபடி

தோஷத்தையும் குண ஹானியையும் பார்த்து உபேக்ஷியாத அளவு அன்றிக்கே அங்கீகாரத்துக்கு
அவை தன்னையே பச்சை யாக்கை இறே -சேஷி தம்பதிகளின் சாதாரண வைபவம் –
பாபத்தோடே வரிலும் அமையும் என்றான் ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்
புண்ணியத்தை பொகட்டு வா என்றான் ஸ்ரீ கிருஷ்ணன் –

ஆக பகவானுடைய நிரபேஷ உபாயத்வம் நிரூபிக்கப் பட்டதாகிறது –

————————————————————————————————————————–

பரித்யஜ்ய பதார்த்தம் –
பரித்யஜ்ய -என்று இந்த உபாயங்களை விடும் படியைச் சொல்லுகிறது-
த்யாகமாவது -விடுகை
பரி த்யாகமாவாது -பற்று அற விடுகை
உபாயம் அல்லாதவற்றை உபாயமாக நினைத்தோம் என்று -சிப்பியை வெள்ளி என்று எடுத்தவன் லஜ்ஜித்து
பொகடுமாப் போல புகுந்து போனமை தெரியாத படி விட வேணும் ..
பித்தேறினாலும் அவற்றில் நினைவு செல்லாத படி -விட்டோம் என்கிற நினைவையும் கூட விடச் சொன்ன படி –

தர்ம தேவதை இத்தை பாதகம் என்பது –
ஆழ்வார் –
எய்தக் கூவுதல் ஆவதே (திரு வாய் மொழி 5-7-5) -என்று
புலை அறங்களோ பாதியாகிற (திருமாலை-7- )
இதை தர்மம் என்று விடச் சொல்லுகிறது –

பூசலை அதர்மம் என்றும்
இவற்றை தர்மம் என்றும் பிரமித்த அர்ஜுனன் நினைவாலே ..
நிஷித்தம் செய்கை அசக்தியால் அன்றிக்கே ஆகாதே என்று விடுமா போல
உபாயாந்தரங்களை ஸ்வரூப விருத்தம் என்று இறே –

தபோதனரான ரிஷிகளும்
நெருப்பை நீராக்குகிற தேஜஸ்ஸை உடைய பிராட்டியும் –
ஸ்வ ரக்ஷணத்திலே இழியாதே கர்ப்பத்தில் இருப்பாரைப் போலே இருந்தது –

நாண் தழும்பால் தீ விளையாத விட வாயும் வல் வாயும் ஏறி பர லோகங்களிலே சென்று
படை துணை செய்து அரிய தபசுக்களைச் செய்து வெறுத்துவர் சபையிலே வில் இட்டு அடித்து ஊர் வாசியை முறை கூறுகிறவன்
கர்ம ஞானங்களில் இழிய மாட்டாமை அன்றோ -கலங்குகிறது ..
ஸ்வரூப பாரதந்த்ரயத்தைக் கேட்ட படியாலே இறே –
தன்னை ராஜ மகிஷி என்று அறிந்தவள் உதிர் நெல் பொருக்கவும் ,கோட்டை நூற்கவும் ,குடம் சுமக்கவும் ,லஜ்ஜிக்கும் இறே ..
இவன் தான் சுமப்பேன் என்றான் –( கீதையில் அனைத்தையும் நானே தூங்குகிறேன் -பார்த்தா என்றானே )
இவனை எடுத்தினான் இத்தனை இறே

இவ் உபாயத்தில் ,இழியும் போது உபாயாந்தரங்களை அதர்மம் என்று விட வேண்டும் என்று சாஸ்திரங்கள் பலவும் சொல்லுகையாலும்
உத்தம ஆஸ்ரமத்தில் புகும் அவனுக்கு முன்பில் ஆஸ்ரம தர்மங்களை விடுகை குறை இல்லாமையாலும்
தர்மங்களை விடச் சொல்லுகை தப்பு அல்ல ..

————————————————————

அநந்தரம் த்வதீய பதார்த்தம் அருளிச் செய்கிறார் – பரித்யஜ்ய -என்று தொடங்கி –
இதுவும் தியாகமும் -ல்யப்பும்-உப சர்க்கமுமாய்-த்ரிபிரகாரமாய் இருக்கையாலே –
அதில் தியாகத்தை முந்துற அருளிச் செய்கிறார் -தியாகம் ஆவது -என்று தொடங்கி –

உபசர்க்க அர்த்தத்தை அருளிச் செய்கிறார் -பரித்யாகமாவது -என்று தொடங்கி –
தியாக வேஷத்தை அருளிச் செய்கிறார் -உபாயம் அல்லாத -என்று தொடங்கி

அத பாதக பீதஸ் த்வம் -என்ற தர்ம தேவதா வசனத்தையும் உட்க்கொண்டு அருளிச் செய்கிறார் -தர்மதேவதை இத்யாதி –

தர்ம அதர்ம தியா குலம் -என்ற ஆளவந்தார் திரு வாக்கைத் திரு உள்ளத்தே கொண்டு அருளிச் செய்கிறார் பூசலை இத்யாதி –

ப்ரபாகாந்தர பரித்யாகத்துக்கு அஞ்ஞான அசக்திகள் அன்று பிரதான ஹேது-என்றத்தை திரு உள்ளத்தே கொண்டு
சத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் -நிஷித்தம் என்று தொடங்கி -ஆகாதே -என்று -அப்ராப்தம் -என்றபடி –

இத்தால் நித்தியமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு இவை நாசகங்களாய்க் கொண்டு ஸ்வரூப விருத்தங்கள் என்ன ஒண்ணாது –
ஆகையால் ஆத்ம ஸ்வரூபத்தை பற்ற உபாஸனாதிகளுக்கு -நாஸகாத்வ அசம்பாவிதத்வ -அனர்த்த-அவஹத்வங்கள் இல்லாமையால்
ஒருபடியாலும் ஸ்வரூப விரோத பிரசங்கம் இல்லை -என்கிற பக்ஷம் நிரஸ்தம் –
அப்ராப்தம் -பகவத் அத்யந்த பாரதந்தர்யம் ஆகிற ஸ்வரூபத்துக்கு சேராது என்றபடி –

ஸ்வரூப விரோதம் என்கிற இடத்தில் ஸ்வரூப சப்தம் தர்மியைக் குறிக்குமது அல்ல
அசாதாரண தர்மத்தைக் குறிக்கும் என்றபடி –
சீதோ பவ என்ற பிராட்டி -நஷ்டோ பவ -என்னாதது அபிராப்தியை கணிசித்து இறே –

இங்கே –
அர்த்த ராத்திரியிலே தனி வழி போகா நிற்க துஷ்ட மிருகங்களால் மிடைந்த தொரு காட்டிலே முன்னடி தோற்றாத படி இருண்டு
வர்ஷமும் -இடியும் உண்டாய் -கண்ணுக்கு உள்ளே கொள்ளியை வீசினால் போலே மின்னிக் கொண்டு வாரா நிற்க
அவ் வவஸ்தையிலே
திரு நாம உச்சாரணம் பண்ணாது ஒழிகை பிரபன்ன லக்ஷணம் – பட்டர் சம்வாதம் -வார்த்தா மாலை -417-அனுசந்தேயம்-

கர்ப பூத தபோ தனா-என்றத்தை உட் கொண்டு அருளிச் செய்கிறார் தபோத நரான -இத்யாதி

சீதோ பவ -என்றத்தை உட் கொண்டு அருளிச் செய்கிறார் நெருப்பை -இத்யாதி –

கீதை கேட்ட அர்ஜுனன் கலக்கத்தை உபபாதிக்கிறார் -நாண் இத்யாதி
சரம ஸ்லோகத்தில் கழிக்கிற சோகம்
யதா வஸ்தித ஆத்ம உபதேசாதிகளாலே கழிந்த பந்து வதாதி நிமித்தமான பழைய சோகம் அன்று –
பிரகரண அனுகுண சோகாந்தரம் -எங்கனே என்னில் –
தைவீ சம்பத் விமோஷாய நிபந்தயா ஸூரீ மதா-16-5-என்று பிரித்துச் சொன்ன வாறே
நாம் ஆஸூர ப்ரக்ருதிகள் ஆகில் செய்வது என் -என்று சோகித்த அர்ஜுனனைப் பற்ற –

மாஸூச -சம்பதம் தைவீம் அபிஜாதோ அஸி பாண்டவ -16-5-என்றால் போலே
இங்கே கீழே உக்தங்களான உபாயங்கள் அனுஷ்ட்டிக்க அஸக்யங்கள் என்றும்
ஸ்வ சரீரத்வ கத நாதிகளாலே ப்ரதிபாதிக்கப் பட்ட பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு
ஸ்வ யத்ன ரூபங்களான இவை விரோதிகள் என்றும் புத்தி பண்ணி –
இவற்றால் எம்பெருமானைப் பெற என்பது ஓன்று இல்லை -இனி இழந்தே போம் அத்தனை ஆகாதே என்கிற சோகம் –

ஜிதேந்த்ரியரில் தலைவனாய் ஆஸ்திக அக்ரேசரனாய்-கேசவஸ்ய ஆத்மா -என்ற ஸ்ரீ கிருஷ்ணனுக்கு தாரகனாய்
இருந்துள்ள அர்ஜுனனுக்கு இப்போது சோகம் –
உபாயாந்தரங்கள்– பகவத் அத்யந்த பாரதந்தர்யம் -பகவத் சரீரத்வம் -ஆகிற ஸ்வ ஸ்வரூபத்துக்கு சேராதவை ஆகையால்
நாம் பகவத் விஷயத்தை இழந்தோம் அத்தனை -என்கிற மஹா ஸோஹம் என்றபடி –

உபாயாந்தர அனுஷ்டான உபயிக ஞான சக்த்யாதிகளை அர்ஜுனனுக்கு உபபாதிக்கிறார் –
நாண் -என்று தொடங்கி –
உத்தம ஆஸ்ரமத்தில் -இத்யாதி -ஜாதி ஆஸ்ரம தீஷைகளில் பேதிக்கும் தர்மங்கள் -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதய
ஸ்ரீ ஸூக்தியை அனுசந்திப்பது –

———————————————————————————————

தியாக விதி –
பரித்யஜ்ய என்கிற இது
விட்டால் அல்லது பற்ற ஒண்ணாது என்னும் இடத்தைக் காட்டுகிறது –
குளித்து உண்பான் என்றால்
உண்டு குளிக்கையும் குளியாமே உண்கையும் தப்பு இறே –

பற்றுகைக்கு அங்கமான போது இறே விடுகையும் நன்மை யாவது –
இவைதான் சுமந்தான் விழ உறங்குவான் கைப்பண்டம் போலே ஆமவை இறே

இவற்றைப் பேற்றுக்கு என்னாதே பேறு என்ற போது
கைங்கர்யத்திலும்
ஸ்வரூப ஞானத்திலும்
ப்ராப்ய ருசியிலும் சொருகும் இறே –

(இந்த தர்மங்களை -பேற்றுக்கு என்று உபாயமாகக் கொள்ளாதே -இவையே
பிரயோஜனம் -புருஷார்த்தம் என்ற பொழுது
கர்ம யோகம்-கைங்கர்யத்திலும்
ஞான யோகம் ஸ்வரூப ஞானத்திலும்
பக்தி யோகம் ப்ராப்ய ருசியிலும்
பிரபத்தி ஸ்வரூப யாதாம்ய ஞானத்திலே புகும் சொருகும் இறே –
விட்டே பற்ற வேண்டும் -சசால சாபஞ்ச வீர -வில் கை வீரனாக இல்லாமல் –வெறும் கை வீரன் ராவணன் -போலே –
ராவணன் இடம் தோற்க ராமனுக்கு பாக்யம் இல்லை -வியாக்யானம்-)

——————————————————————

இனி ல்யப்புக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -பரித்யஜ்ய -என்று தொடங்கி –
ஸ்நாத்வா புஞ்சீத -என்றத்தை உட் கொண்டு அருளிச் செய்கிறார் -குளித்து -இத்யாதி –
அதாவது –
த்யஜ்ய -என்கிற ல்யப்பாலே –
புக்த்வா சந்த்ராயணம் சரேத் —
விளக்கு அணைந்த பின்பும் உண்டால் சாந்த்ராயணம் பிராயச்சித்தம் பண்ண வேண்டும் -என்னுமா போல் அன்றிக்கே —
ஸ்நாத்வா புஞ்சீத –என்கிற விதி –
புஜிக்கும் அளவில் ஸ்நானம் பண்ணியே புஜிக்க வேணும் -என்கிற நியமத்தை சொல்லுமா போலே –
சித்த உபாயத்தை பரிக்ரஹிக்கும் அளவில் த்யாஜ்யமான
உபாயாந்தரங்களை த்யஜித்தே பரிக்ரஹிக்க வேணும் என்கிற நியமத்தை சொல்லுகிறது என்கை –
இத்தால் தியாக அனுவாத பக்ஷம் அநாதரணீயம்-என்றதாயிற்று –

கைங்கர்யத்திலும் இத்யாதி –
இத்தால் கர்மம் கைங்கர்யத்தில் புகும் –
ஞானம் ஸ்வரூப பிரகாசத்தில் புகும் –
பக்தி ப்ராப்ய ருசியில் புகும் –
பிரபத்தி ஸ்வரூப யாதாம்ய ஞானத்திலே புகும் -என்ற வேதாந்த சார வேத்ய சாரதம நிஷ்கர்ஷம் நிரூபிதம் ஆயிற்று –

இங்கே தியாக சப்தத்தால் சொல்லுகிறது
தர்ம ஸ்வரூப தியாகத்தையோ –
தர்ம பலாதி தியாகத்தையோ –
தர்மத்தில் உபாயத்வ புத்தி தியாகத்தையோ -என்னில் –
இவ்வதிகாரிக்கு யாவச் சரீர பாதம் கால ஷேபத்துக்காக பகவத் சந்தோஷ ஹேது பூதமானவை அநுஷ்டேயம் ஆகையால்
தர்ம ஸ்வரூப தியாகம் ஆக மாட்டாது
பலாதிகள் சாதகனுக்கு கூட த்யாஜ்யமாக கீழே யுக்தமாகையாலே பலாதி தியாகத்தை இங்கே சொல்லுகிறது ஆக ஒண்ணாது –
ஆக இங்கு தர்மங்களினுடைய உபாயத்வ புத்தி தியாகத்தை சொல்லுகிறது –

அந்த உபாயத்வ புத்தி தியாகம் ஆவது –
மோக் லாப ஹேதுவான பகவத் ப்ரீதிக்கு சாதனம் என்கிற பிரதிபத்தியைத் தவிருகை
ஆகையால் ஸ்வரூப தியாகத்தால் வந்த குறையும் –
பலாதி தியாகத்தை சொல்லுகிறது என்கிறதால் வரும் புனர் யுக்தி இன்றியிலே ஒழியும்-
அவன்-உபாசகன்- உபாய புத்தியா அனுஷ்ட்டிக்கும் -இவன்-ப்ரபன்னன்- போக புத்தியா அனுஷ்ட்டிக்கும் –
அவன் விதி பிரேரிதனாய் அனுஷ்ட்டிக்கும் -இவன் ராக பிரேரிதனாய் அனுஷ்ட்டிக்கும்
அவனுக்கு வர்ணாஸ்ரம தர்மம் நியாமேன அனுஷ்ட்டிக்க வேணும் -இவனுக்கு வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானமாகவுமாம் –
வைஷ்ணவ கிஞ்சித் காரகமாகவுமாம்
பிராதி கூல்ய நிவ்ருத்தியிலே நியமம் -ஆனு கூல்யங்களில் ஏதேனுமாம் –
ஆகை இறே நம் ஆச்சார்யர்கள் இவற்றை அனுஷ்ட்டிப்பாரும் அனுஷ்டியாதாருமாய் போருகிறது
ஆகை இறே ஆனு கூலஸ்ய சங்கல்பம் பிராதி கூலஸ்ய வர்ஜனம் என்று ஆனு கூல்ய சங்கல்பத்தோபாதி
பிராதி கூல்ய நிவ்ருத்தியையும் -அவகாகித ஸ்வேதம் போலே -சம்பாவித ஸ்வ பாவமாக சொல்லுகிறது
ஆக காம்ய கர்மத்தோபாதி மோக்ஷ சாதன தர்மமும் இவனுக்கு த்யாஜ்யம் ஆகையால்
சாங்கமான அந்த தர்ம தியாகத்தை தியாக சப்தத்தால் சொல்லிற்று ஆயத்து-

தியாக விசேஷணமான -பரி சப்தம் –
பரி சாகல்யே-என்கிறபடியே -சாகல்ய வாசியாய்க் கிடக்கிறது –
(சகல -சாகல்யம் -அனைத்தும்)
சாகல்ய சப்த வாஸ்யம்– வாசனையாய் சவாசன தியாகத்தைச் சொல்லுகிறது-
அதாவது லஜ்ஜா புரஸ் சர தியாகம் –
ஸ்வ ரக்ஷண அர்த்தையான ஸ்வ ப்ரவ்ருத்தி ஸ்வரூப ஹானி என்று அறிந்தால் –
நெடுநாள் ஸ்வரூப ஹானி யான வற்றை யாகாதே உபாயமாக நினைத்து இருந்ததே -என்ற லஜ்ஜை பிறக்கக் கடவது இறே –
பர்த்ரு போகத்தை உதர போஷணத்துக்கு உறுப்பு ஆக்குகை யாகிறது
பதி வ்ரதைக்கு ஸ்வரூப ஹானி யாமா போலே இறே –
போக ரூபமான ப்ரவ்ருத்தியை சாதனம் ஆக்குகை யாகிறது –

த்யஜ்ய என்கிற ல்யப்பாலே
தர்ம தியாகம் சுவீகாரத்துக்கு அங்கமானவன்று கர்தவ்யம் -அல்லாத போது அயுக்தம் -என்னும் இடத்தைக் காட்டுகிறது
தர்மத்தை விட்டு சுவீகாரத்தில் இழியாதே இருக்குமாகில் உபய பிரஷ்டன் ஆகையால் நாசமே பலமாய் அறும் இறே –
இத்தை பற்ற இறே –
நஞ்சீயர் -ஒன்றில் நாராகிகளுக்கு மூர்த்த அபிஷிக்தன் ஆதல் -இல்லை யாகில் பரமபதம் என் சிறு முறிப்படியே செல்லுதல்
செய்யும் படி இறே நான் நிற்கிற நிலை – என்று அருளிச் செய்தது –
அதாகிறது
தர்ம தியாக பலமான பாபம் மேலிட்டு நரகம் வஸ்த்வய பூமி யாதல் -தியாக பூர்வகமாக ஸ்வீக்ருதமான உபாயம் பலித்தது
பரமபதம் வஸ்த்வய பூமி யாதலாம் இத்தனை இறே என்கை –

ஆக ல்யப்பாலே மேல் சொல்லப் போகிற சுவீகாரம் தியாக அங்ககம் என்னும் இடம் சொல்லிற்று ஆயத்து-

ஸ்வ ஸ்வரூபத்தைப் பார்த்தாலும் சாதனாந்தரங்களை விட வேண்டி வரும் –
அவற்றினுடைய ஸ்வரூபங்களைப் பார்த்தாலும் சாதனாந்தரங்கள் த்யாஜ்யமாய் அறும்
பற்றப் புகுகிற உபாய ஸ்வரூபத்தைப் பார்த்தாலும் சாதனாந்தரங்கள் த்யாஜ்யமாய் அறும்-

ஸ்வ ஸ்வரூபத்தை பார்த்தால்
நமஸ் சப்தத்தில் சொல்லுகிற படியே -ஸ்வ ரக்ஷண வியாபாரத்தில் இழிகை ஸ்வரூப ஹானியாம் படி
அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கும் –

அவை தன்னைப் பார்த்தால்
பஹு யத்ன சாத்தியம் ஆகையால் துஷ்கரமுமாய்-
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதிபி-என்று
சிரகால சாத்யமுமாய்-இந்திரிய ஜயாதிகள் அபேக்ஷிதம் ஆகையாலும்-
ஆதிபரதாதிகள் ப்ரஷ்டராகக் காண்கையாலும் (மான் குட்டி பார்த்து இழந்தார்)
ஸாபாயமுமாய் பிராரப்த கர்ம வாசனை அபேக்ஷம் ஆகையால் விளம்பிய பல பிரதமுமாய் இருக்கும்

உபாயத்தைப் பார்த்தால்
நித்ய அநபாயினியான பிராட்டியும் ஸஹ காரியாக சஹியாதபடி
சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே நிரபேஷமாய் இருக்கும்

ஆக
தான் அநந்ய சாதனன் ஆகையாலும் –
அவை துஷ் கரத்வாதி தோஷ தூஷிதம் ஆகையாலும் –
உபாயம் ஸஹ காரி நிரபேஷம் ஆகையாலும் –
தர்ம தியாகம் உபாய ஸ்வீகாரத்துக்கு அங்கமாகக் கடவது –
இப்போது இறே ஆகிஞ்சன்ய ரூப அதிகார சித்தி உண்டாவது –

——————————————————————————————————–

மாம் -சப்தார்த்தம் ..
மாம் -என்று பற்றப் படும் உபாயத்தைச் சொல்லுகிறது ..
மாம் -என்னை —
அறம் அல்லனவும் சொல் அல்ல (நான்முகன்–72 ) -என்னும் கழிப்பனான தர்மங்கள் போல் அன்றிக்கே
கைக் கொள்ளப்படும் நல் அறத்தைக் காட்டுகிறான்

வேதத்தில் இரண்டு கூற்றிலும் அறிவுடை யார்க்கும் நல் அறமாக சொல்லுவது
பறை தரும் புண்ணியனான ( திருப் பாவை -10 ) கிருஷ்ணனை இறே-
தர்மங்களை நிலை நிறுத்தப் பிறந்தவன் தானே
தர்மங்களை விடுவித்து ,
அவற்றின் நிலையிலே தன்னை நிறுத்துகையாலே நேரே தர்மம் தான் என்னும் இடத்தை வெளி இட்டான் ஆயிற்று ..

அல்லாத தர்மங்கள்
சேதனனாலே செய்யப் பட்டு ,பல கூடி ஒன்றாய் ,நிலை நில்லாதே ,
அறிவும் மிடுக்கும் அற்று , இவன் கை பார்த்து- தாழ்ந்து – பலிக்கக் கடவனாய் இருக்கும் ..

இந்த தர்மம் –
அறம் சுவராக நின்ற (திரு மாலை -6) என்று
படி எடுத்தார் போல கோயிலாம் படி சித்த ரூபமாய் ,
ஒன்றாய் , நிலை நின்று , ஞான சக்திகளோடு கூடி ,ஒன்றால் அபேக்ஷை அற்று , தாழாமல் பலிக்குமதாய் இருக்கும்

என்னை என்று
வைகுந்தம் கோவில் கொண்ட ( திரு வாய் மொழி 8-6-5 ) என்றும் –
வேலை வாய் கண் வளரும் (பெரிய திரு வந்தாதி -85 ) என்றும் –
ஒழிவற நிறைந்து நின்ற (திரு வாய் மொழி 3-2-7 ) என்றும் –
எம் மாண்பும் ஆனான் ( திரு வாய் மொழி 1-8-2 ) என்கிற தன்னுடைய
பரத்வாதிகளை கழித்து ,கிருஷ்ணனான நிலையைக் காட்டுகிறான் ..

பால பிராயத்தே (பெரியாழ்வார் திரு மொழி 2-6-6 ) இவனைக் கைக் கொண்டு-
(பார்த்ததற்கு அருள் செய்த கோலப் பிரான்–அழகைக் காட்டி கைக் கொண்டு )
ஓக்க விளையாடி ஒரு படுக்கையிலே கிடந்து ஓர் ஆஸனத்திலே கால் மேல் கால் ஏறிட்டு இருந்து
ஓர் கலத்திலே உண்டு ,காட்டுக்கு துணையாக கார்ய விசாரங்களைப் பண்ணி
ஆபத்துக்களிலே உதவி நன்மைகளைச் சிந்தித்து

மண்ணகலம் கூறிடுவான் (பெரிய திருமொழி 11-5-7) ஓலை கட்டி தூது சென்று
ஊர் ஓன்று வேண்டி பெறாத உரோடத்தால் பாரதம் கை செய்து (ரோஷத்தால் -பெரியாழ்வார் திரு மொழி 2-6-5 ),
தேசம் அறிய ஓர் சாரதியாய் ( திரு வாய் மொழி 7-5-9 -சர்வ லோகம் சாக்ஷியாக நடந்த நல்வார்த்தை அறிந்தவர் மாயற்கு அன்று ஆவரோ )
அவர்களையே என்னும் படியான ,
இவனுடைய குற்றங்களைக் காணாக் கண்ணிட்டு நலமான வாத்சல்யத்துக்கு இறை ஆக்கி
சீரிய அர்த்தங்களை வெளி இட்டு

தேவர் தலை மன்னர் தாமே (நான்முகன் திரு வந்தாதி -16-மாற்றாக -பாண்டவர் விரோதி -மம பிராணன் போலே என்பதால்)
என்னும் படியான ஸ்வாமித்வத்தை பின் விஸ்வ ரூப முகத்தாலே காட்டி
பாங்காக முன் ஐவரோடு அன்பளவி ( பெரிய திருமொழி 2-4-4 )
என்னும் படி சௌசீல்யம் தோற்றும் படி புரை அறக் கலந்து

பக்கமே கண்டார் உள்ளார் (பெரியாழ்வார் திருமொழி 4-1-8 ) என்னும் படி சுலபனாய்

கார் ஒக்கும் மேனியைக் ( திரு வாய் மொழி 9-9-7 ) கண்ணுக்கு இலக்கு ஆக்கிக் கொண்டு போருகிறவன் —

சேனா தூளியாலே புழுதி படிந்த கொத்தார் கரும் குழலும் (பெரியாழ்வார் திரு மொழி 2-1-7 )
குறு வேர்ப்பு அரும்பின கோள் இழையாயுடை கொழுஞ்சோதி வட்டம் கொல் கண்ணன் கோள் இழை வாள் முகமாய் ( திரு வாய் மொழி 7-7-8 )
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் (திரு மார்பும்- பெரியாழ்வார் திருமொழி 1-2-10 )
திரு மார்வணிந்த வன மாலையும் ( நாய்ச்சியார் திரு மொழி 13-3 )

இடுக்கின மெச்சூது சங்கமும் (-மெச்சு ஊதுதல் -பெரியாழ்வார் திரு மொழி 2-1-1 )
அணி மிகு தாமரைக் கையாலே ( திருக் கையே ஆபரணம் -சர்வ பூஷண பூஷார்ஹம் -திரு வாய் மொழி 10-3-5) கோத்த சிறு வாய்க் கயிறும்
முடை கோலும்
அர்த்த பிரகாசமான ஞான முத்திரையும் ,

கட்டி நன்கு உடுத்த பீதக ஆடையும் (பெரியாழ்வார் திரு மொழி 3-6-10 )

சிலம்பும் செறி கழலும் ( -மூன்றாம் திரு வந்தாதி -90 )
வெள்ளித் தளையும் (பெரியாழ்வார் திரு மொழி 1-2-3 )
சதங்கையும் கலந்து ஆர்ப்ப (பெரியாழ்வார் திரு மொழி 1-2-20 )
தேருக்குக் கீழே நாட்டின
கனை கழலுமாய் ( திரு வாய் மொழி 3-6-10 ) நிற்கிற நிலையை -மாம் -என்று காட்டுகிறான் ..

————————————————————–

அநந்தரம் த்ருதீய பதார்த்தம் அருளிச் செய்கிறார்
மாம் என்று தொடங்கி –
சர்வேஸ்வரனுடைய நிருபாதிக தர்மத்வத்தை உபபாதிக்கிறார்
அறம் என்று தொடங்கி –
இங்கே ராமோ விக்ரஹவான் தர்ம -சாது சத்ய பராக்ரமா
கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் –
அதாதோ தர்ம ஜிஜ்ஞாச -இத்யாதி வசனங்களை அனுசந்திப்பது –

வேத வித -அத்யாத்மவித-என்ற பதங்களைக் கடாக்ஷித்து அருளிச் செய்கிறார் –
வேதத்தில் இரண்டு கூற்றிலும் -என்று தொடங்கி –
(கர்ம காண்டம் ப்ரஹ்ம காண்டம் இரண்டையும் அறிந்தவர்கள் )

தர்மங்களை எல்லாம் விட்டு தன்னைப் பற்றச் சொல்லுகையாலே பலிதமான தொரு அர்த்த விசேஷத்தை அருளிச் செய்கிறார் –
தர்மங்களை நிலை நிறுத்த -இத்யாதி நா –
இப்படிச் சொன்ன இத்தால் கீழ் விட்ட சாதனங்களில் காட்டில் இந்த சாதனத்துக்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறது
அது தான் எது என்ன அருளிச் செய்கிறார் -அல்லாத -என்று தொடங்கி -அதாவது
ஸித்தமாய்-பரம சேதனமாய் -சர்வ சக்தியாய் -நிரபாயமாய் -ப்ராப்தமாய் -சஹாயாந்தர நிரபேஷமாய் இருக்கும் என்றபடி –

மாம் என்று ஸ்ரீ கிருஷ்ண ரூபத்தைக் காட்டுகையாலே வ்யாவர்த்திக்கப் படுகிறவற்றை அருளிச் செய்கிறார் –
என்னை -என்று தொடங்கி-
இத்தால் தேச விப்ரக்ருஷ்டத்தையாலே காணவும் கிட்டவும் ஒண்ணாதபடி இருக்கிற பர வ்யூஹங்களையும் —
அசாதாரண விக்ரஹ உக்தம் இன்றிக்கே
உபாயாந்தர நிஷ்டருக்கு உத்தேசியமாய் இருக்கிற அக்னி இந்திரியாதி தேவதாந்த்ர அந்தர்யாமித்வத்தையும் -வ்யாவர்த்திக்கிறது என்கை –

அவதாரங்களின் ஸுலப்யம் பரத்வம் என்னலாம் படி இறே ஸ்ரீ கிருஷ்ணன் உடைய ஸுலப்யம் –
அத்தைப் பற்ற
விபவாந்தரங்களும் கழி உண்ணுமத்தை அருளிச் செய்கிறார் எம் மாண்பும் ஆனான் என்று –

இனி இப்பதத்திலே
ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதகங்களான குண விசேஷங்களை எல்லாம் பிரகாசிக்கிற படியை அருளிச் செய்கிறார் –
பாலப் பிராயத்தே என்று தொடங்கி –
இத்தால் மாம் என்று ஆஸ்ரயணீயமான வியக்தியைச் சொல்லுகையாலே
ஆஸ்ரயண உபயோகியான –
நிகரில் புகழாய்-உலகம் மூன்று உடையாய் – என்னை ஆள்வானே -திரு வேங்கடத்தானே -என்று முதல்வரான ஆழ்வாரும்
அனுஷ்டித்த அனுஷ்டான வாக்கியத்தில் நாராயண பதத்தில் அனுசந்தேயங்களான
வாத்சல்யாதி குண சதுஷ்ட்யங்களும் அனுசந்தேயம் என்கை –

வாத்சல்யம் ஆவது -அன்று ஈன்ற கன்றின் பக்கல் தாய் பண்ணும் வியாமோஹம்
ஸ்வாமித்வம் ஆவது ஆஸ்ரிதர் உடைய பேறு இழவுகளிலே உண்டான ஸூக துக்கங்கள் அவர்களுக்கு அன்றிக்கே
தனக்கே யாம் படி அவைகளை உடையனாகை-
ஸுசீல்யமாவது -ஷூத்ர சம்சாரிகளான சேதனரோடு கலக்கும் போது-அவன் சிறுமை யாதல் தன் பெருமை யாதல்
நெஞ்சில் படாதபடி புரை யறக் கலக்கை-
ஸுலப்யமாவது-அதீந்தர்யன் ஆனவன் எல்லாருடைய கண்ணுக்கும் இலக்காய்க் கொண்டு ஸூலபனாய் இருக்கை-

இவை எல்லாவற்றிலும் வைத்துக் கொண்டு மிகவும் அபேக்ஷிதம் ஸுலப்யம் ஆகையால் –
அவதார ப்ரயுக்தமான ஸுலப்யத்வம் அளவன்றிக்கே
சாரத்ய அவஸ்த்திதனாய் நிற்கிற ஸுலப்ய அதிசயத்தை தர்சிப்பித்தமையை அருளிச் செய்கிறார் -சேனா தூளி இத்யாதி –

இத்தால்
சேனா தூளி தூ சரிதமாய் அலைகிற திருக் குழல் கற்றையும்-
ஸ்வேத பிந்து ஸ்தபகிதமான திரு மூக்கும் –
ஆஸ்ரித விரோதி தரிசனத்தால் சீறிச் சிவந்து சீதளமாய் சிதற அலர்ந்த தாமரைத் தடாகம் போலே
கண்டவிடம் எங்கும் அலை எறிகிற திருக் கண்களும்-
காள மேகம் போலே இருண்டு குளிர்ந்த திரு மேனியும் –
அதுக்கு பரிபாகம் ஆம்படி சாத்தின திருப் பீதாம்பரமும் –
தேருக்கு கீழே நாற்றின திருவடிகளை –
அதிலே சாற்றினை சிறு சதங்கைகளும் -தூக்கின உழவு கோலும் –
பிடித்த சிறு வாய்க் கயிறுமாகிய நிற்கிற நிலையை காட்டுகையாலே
விலக்ஷண விக்ரஹ யோகம் தோற்றுகிறது-

தன் சிறுமை கண்டு இறாய்க்க வேண்டா -அவன் ஸூசீலனாகையாலே –
துர்லபம் என்று இறாய்க்க வேண்டா -அவன் ஸூலபன் ஆகையால்-
தன் தோஷம் கண்டு இறாய்க்க வேண்டா அவன் வத்சலன் ஆகையால் –
அப்ராப்தன் என்று இறாய்க்க வேண்டா -சர்வ ஸ்வாமி யாகையாலே –
ஆஸ்ரயிக்கைக்கு ஸூபாஸ்ரயம் ஏது என்று கலங்க வேண்டா -விலக்ஷண விக்ரஹ உக்தன் ஆகையால்

இந்த விலக்ஷண விக்ரஹ யோகத்தை
அந்த விக்ரஹத்துக்கு நிரூபக பூதையாய்-அகலகில்லேன் இறையும்-என்று திரு மார்பிலே எழுந்து அருளி இருக்கிற
பிராட்டியையும் சொல்லிற்றாய் அறுகையாலே
இவனுடைய பூர்வ அபராதத்தை பொறுப்பித்துச் சேர விடுகைக்கு புருஷகார யோகமும் சொல்லிற்று ஆயத்து என்கை –

ஆக -மாம் என்று –
ஸ்ரீ மானுமாய் நாராயணனுமாய் இருக்கிற என்னை -என்றபடி –

இத்தால் அனுஷ்டான வாக்கியத்தில்
ஸ்ரீ மத் சப்தத்தையும் நாராயண சப்தத்தையும் ஸ்மரிப்பிக்கிறது-
அதுக்கு ஹேது விதி அனுஷ்டானங்கள் இரண்டும் ஏகார்த்தம் ஆகையால்
ஆகையால் இத்தால் ஸ்ரீ மானான நாராயணனே சரண்யன் என்றதாயிற்று –
இவ்விசிஷ்ட வேஷத்தில் ஆஸ்ரயித்ததால் ஆயிற்று பல சித்தி உள்ளது –

பிரிய ஆஸ்ரயிக்கை யாவது தேவதாந்தரத்தை ஆஸ்ரயித்த வோபாதி இறே-
அனுசந்தான ரகஸ்யத்தில் ஸ்ரீ மத் பதம் இருக்கக் காண்கையாலே
ஐகார்யத்தைப் பற்ற இந்த விதி ரகஸ்யத்திலும் ஸ்ரீமத்வம் அனுசந்தேயமாகத் தட்டில்லை என்றபடி –

இங்கு மாம் -அஹம் -என்கிற பதங்களுக்கு-அடைவே
அவதார ரகஸ்யத்திலும் புருஷோத்தமத்வ ப்ரதிபாதன பிரகரணத்திலும் சொல்லுகிறபடியே
ஸுலப்யத்திலும் ஸ்வாதந்தர்யத்திலும் பிரதான்யேன நோக்கு –

அவதாரஸ்ய சத்யத்வம் அஜஹத் ஸ்வ ஸ்வபாவதா -ஸூத்த சத்வ மயத்வம் ச ஸ்வேச்சா மாத்ர நிதானதா-
தர்ம க்லா நவ் சமுதய-சாது சம்ரக்ஷணர்த்ததா -இதி ஜென்ம ரகஸ்யம் -யோ வேத்தி நாஸ்ய புனர் பவ-
இவ்வவதார ரகஸ்ய ஞானம் சத்வாராக பிரபத்தி நிஷ்டனுக்கு உபாய பூரகம்

ஸ்வ தந்த்ர பிரபத்தி நிஷ்டனுக்கு ஸ்வ தந்த்ரனுடைய ஸுலப்யத்தைக் காட்டும் –
இப் பிரகரணங்கள் இரண்டிலும் ஸித்தமான ஸுலப்யமும் ஸ்வாதந்தர்யமும்
ஒன்றுக்கு ஓன்று துணையாய் இருக்கும் –

(ஸ்ரீ கீதை -4-அத்தியாயத்தில் அவதார ரஹஸ்யம் -15-அத்தியாயத்தில் புருஷோத்தம வித்யை
பக்தி தொடங்க உள்ள விரோதி போக்கி பக்தி செய்து அதனால் முக்தி-இது சத்வாராக பிரபத்தி
அத்வாரக பிரபத்தி-ஸ்வ தந்த்ர பிரபத்தி -கீழே போலே பக்திக்கு அங்கம் இல்லை )

ஸ்வதந்த்ரஸ் யாபி நைவ ஸ்யாத் ஆஸ்ரயோ துர்லபஸ் யது -அஸ்வதந்த்ராத் பலம் ந ஸ்யாத் ஸூலபா தாஸ்ரிதாதபி
அஸ்வதந்த்ர ந கைங்கர்யம் ஸித்தயேத் ஸ் வைர பிரசங்கத-துர்லபே ஸாத்ய மப்யேதத் ந ஹ்ருதயம் லோக நீதித-
ஆகையால் கேவல ஸூலபமான த்ருணாதிகளைப் போலே அன்றிக்கே –
சிலாக்யனுமாய் துர்லபமான மேருவைப் போல் அன்றிக்கே
ஸூலபனுமாய் பரனுமான சரண்யன் ஆஸ்ரயணீயனுமாய் ப்ராப்யனும் ஆகிறான் –

இவ்விரண்டு பதத்தாலும்
சர்வ ரக்ஷகனான சர்வ சேஷி ரக்ஷணத்துக்கு அவசரம் பார்த்து நிற்கிற நிலையும் தோற்றுகிறது –

இப்படி அவசர ப்ரதீஷனான ஈஸ்வரன்
ரஷாபேஷம் ப்ரதிக்ஷதே -என்கிறபடியே –
என்றோ இவர்கள் நம்மை அபேக்ஷிப்பது -என்கிற அபிப்ராயத்தாலே அபிமுகனாய் நிற்கிற நிலை மாம் என்கிற பதத்தில் ஸூசிதம்

என்று நாம் இவர்களை அழுக்கு கழற்றின ஆபரணத்தைப் போலே அங்கீகரிப்பது -என்கிற அபிப்ராயத்தாலே
ஸத்வரனாய் தன் பேறாக பலம் கொடுக்க நிற்கிற நிலை -அஹம் -என்கிற பதத்தில் காட்டப் படுகிறது —

இங்கு மாம் என்று -நீ உனக்கு போக்யமான சப்தாதி விஷயங்களை புஜிக்கையாலே உன் உடம்பில் புகரைப் பாராய் –
எனக்குப் போக்யமான உன்னை அனுபவிக்கப் பெறாமையாலே என் உடம்பில் வெளுப்பைப் பார் -என்று
சட்டையை அவிழ்த்துக் காட்டுகிறான் -என்று எம்பார் அருளிச் செய்வார் –

மாம் -என்று தன் வ்யாமோஹத்தைக் காட்டுகிறான் என்று நம்பிள்ளை அருளிச் செய்வார் –
அதாவது
வைகுண்டே து பரே லோகே -இத்யாதிகளில் படியே
பக்தை பாகவதை சக -என்கிற வைகுந்தத்து அமரரும் முனிவருமான அயர்வறும் அமரர்கள் உடன்
ஸ்ரீ பூமி நீளைகள் உடன் எழுந்து அருளி இருந்து நிரந்தர பரிபூர்ண அனுபவம் நடக்கச் செய்தேயும்
லீலா விபூதியில் உள்ளார் உடைய இழவே திரு உள்ளத்தில் பட்டு –
ச ஏகாகீ ந ரமேத -என்று
அவ்வனுபவம் உண்டது உருக்காட்டாதே திரு உள்ளம் புண்பட்டு
இவர்களையும் அவ்வநுபவத்திலே மூட்டலாமோ என்னும் நசையாலே அவதரித்து
தாழ நின்று
அவன் கால் தன் தலையிலே பட நின்று வியாபாரித்த
தன் வ்யாமோஹம் எல்லாம் தோற்றும்படி இருக்கை –

இத்தால்
நீ விமுகனான திசையிலும் அந்தர்யாமியாய் நின்று சத்தையை நோக்கியும் –
கரண களேபர விதுரனாய் அசிதவிசேஷித்தனான வன்றும் என் பக்கலிலே ஏறிட்டுக் கொண்டு நோக்கியும் –
பின்பு நீ அபிமுகனாய் உஜ்ஜீவிக்கக் கூடுமோ என்று கரண களேபர பிரதானம் பண்ணியும்
பின்பு அவற்றைக் கொண்டு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பண்ணுகைக்காக அநு பிரவேசித்து –
என்னைப் பெறுகைக்கு உடலாய் இருபத்தொரு ஞான விசேஷம் உண்டாமோ என்னும் நசையாலே வேதங்களை பிரவர்த்திப்பித்தும் –
அவதரித்ததும் திரிகிற தன் வியாபாராதிகளைக் காட்டுகிறான் -என்றதாயிற்று

ஆக
ஆஸ்ரித சேதனனுடைய ஸ்வ அபராத பய நிவ்ருத்தி ஹேது பூத
புருஷகாரமும்-
வாத்சல்யாதிகளும் –
விலக்ஷண விக்ரஹ யோகமும்
மாம் என்று ஆஸ்ரய நீய வஸ்துவின் பக்கலிலே அனுசந்தித்தது ஆயிற்று –

———————————————————————————————————

ஏக சப்தார்த்தம் ..
புற பகை அறுத்துக் காட்டின உபாயத்துக்கு -ஏகம் – என்று உட்பகை அறுக்கிறது ..
இந்த உபாயத்தை சொல்லும் இடங்களிலே –
களை கண் நீயே (பெரிய திரு மொழி 4-6-1 ) என்றும்
(மாம் ஏகம் என்று நீ சொன்னதையே உனக்கு நான் நினைவூட்டி சொல்ல வேண்டி உள்ளதே காவளம் பாடி கண்ணா )
சரணே சரண் ( திரு வாய் மொழி 5-10-11 ) என்பதொரு நிர்பந்தம் உண்டு ஆகையாலே
என்னையே என்று –
விரஜ -என்று சொல்லப் படுகிற ஸ்வீகாரத்தில் உபாய புத்தியைத் துடைத்து
உபாயத்தை ஓட வைக்கிறது

(ஸ்வீ காரத்தில் உபாய புத்தி தவிர்க்கிறது -காம்பற தலை சிரைத்து
கேவலம் மதியயைவ தயையால் -மட்டுமே -என்றும் சொல்லி என்னுடைய தயையாலேயே –
உள் பகையும் தவிர்த்து தன்னை சுட்டிக் காட்டி அருளுகிறார்)

அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் (திரு வாய் மொழி 9-3-2 ) என்றும்
அவனே அரு வரையால் ஆநிரைகள் காத்தான் (மூன்றாம் திரு வந்தாதி -51 ) என்னும் படி
ஒன்றிலும் ஒரு சகாயம் பொறாதே -வேறு ஒன்றை காணில் சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே
தன்னைக் கொண்டு நழுவும் படி இறே உபாயத்தின் சுணை உடைமை –

(அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-அடி தோறும் அவனே )

(அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——51-அடி தோறும் அவனே–

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்–வர்ஷத்தாலே நோவுபட்ட பசுக்கள் தம்முடைய ரக்ஷணத்துக்குத்
தாம் ப்ரவர்த்தித்தது யுண்டோ -அவனே யன்றோ -என்று சஹஹாரி நைரபேஷயத்தைச் சொல்கிறது
அவனே அணி மருதம் சாய்த்தான் –நிரபேஷமாக மருதத்தைச் சாய்த்தானும் அவனே
அவனே-கலங்கா பெரு நகரம் காட்டுவான் -பரம பதம் அவனே காட்டக் காணும் அத்தனை –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்குக் காணப் போகாது –
கண்டீர்-இலங்கா புரம் எரித்தான் எய்து ——லங்கையை அழித்து பிராட்டியைப் பெறுகைக்கு யத்னம் பண்ணினானும் தானே –
அறிவில்லாத பசுக்களோடு அறிவில் தலை நின்ற பிராட்டியோடு ஒரு வாசி இல்லை
அறிவுக்கு பிரயோஜனம் தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கை
அறியாமைக்கு பிரயோஜனம் -பண்ணுகிற ரக்ஷணத்தை விலக்காமை என்றபடி –
ஒருவர் கூறை எழுவர் குடுக்கிற சம்சாரத்தில் உள்ள கலக்கம் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற
பெரிய ராஜ தானியான பரம பதத்தை நீ கண்டு கொள் என்கிறபடியே அகிஞ்சனரான நமக்கு காட்டித் தருவானும்
நிரபேஷ உபாய பூதனான அவனே கிடீர்)

அதுவும் அவனது இன் அருளே (திரு வாய் மொழி-8-8-3 )–என்று இத்தலையில் நினைவுக்கும் அடி அவன் ஆகையாலே
நீ என்னைக் கைக் கொண்ட பின் ( பெரியாழ்வார் திருமொழி 5-4-2 ) என்னும் படியான
அவனுடைய ஸ்வீகாரம் ஒழிய தன் நினைவாலே பெற இருக்கை ….
என் நினைந்து இருந்தாய் (பெரிய திரு மொழி 2-7-1 ) என்கிற அதிகாரிக்கு கொத்தை இறே ..

விட்டோம்
பற்றினோம்
விடுவித்து பற்று விக்கப் பெற்றோம்
என்கிற நினைவுகளும் உபாயத்துக்கு விலக்கு இறே –

( பெருமாள் ஸ்வாமி தனது சொத்தை தானே தன்னிடம் சேர்த்துக் கொண்டார் –
நமது சைதன்யத்துக்கு பலம் நாம் அவன் சொத்து என்கிற நினைவு ஒன்றே –
படியாய்க் கிடந்தது பவள வாய் காண வேண்டுமே – )

—————————————————————–

அநந்தரம்-சதுர்த்த பதார்த்தம் அருளிச் செய்கிறார் -புறப் பகை -இத்யாதி —
அதாவது உபாயாந்தரங்கள் வ்யாவர்த்தமாம் அளவில் புனர் உக்த்யம் பிரசங்கிக்கையாலும்
தேவ தாந்த்ரங்கள் வ்யாவர்த்தமாம் அளவில் மாம் என்று அசாதாரண ஆகாரத்தைச் சொல்லுகையாலே –
அது கீழே சித்தம் ஆகையால் –
இந்த அவதாரணத்தால்
வ்ரஜ என்று மேல் சொல்லுகிற ஸ்வீ காரத்தில் உபாயத்வத்தைக் கழிக்கிறது -என்கை –

(இது எல்லாம் உபாயம் அல்ல நான் உபாயம்–மாம்
நீ பண்ணும் -வ்ரஜ -ப்ரபத்தியும் உபாயம் அல்ல நானே உபாயம்-ஏகம் என்றவாறு )

இந்த ஸ்வீகாரம் தானும் அந்வய வ்யதிரேகத்தால் சாதனம் என்று நினைக்கலாய் இருக்கையாலே –
(சர்வ தர்மான் பரித்யஜ்ய -வ்யதிரேகம்/ மாம் ஏவம் சரணம் வ்ரஜ-அன்வயம்-பற்றின செயலும் உபாயம் இல்லை -)
இந்த சாதனத்வம் அவசியம் கழிக்க வேணும் இறே-

1-சிலர் ஏகம் என்கிற இதுக்கு பொருள் -கர்த்தாவான என்னை -என்றபடி என்றார்கள் -அதாவது
பராத்து தத் ஸ் ருதே -என்று
ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் பகவத் அதீனமாய் இருக்கும் என்கை –
(கர்த்தா சாஸ்த்ரவத்வாத் -சாஸ்திரம் விதிப்பதால் நானே கர்த்தா தோன்றுவதை மாற்ற இந்த ஸூத்ரம்-கர்த்ருத்வமும் அவனது அதீனம் )

2-சிலர் ஏக சப்தம் சத்ருக் ப்ரபத்தியைச் சொல்லுகிறது என்றார்கள் –
(ஏகம் சரணம் -ஒருமுறையே ஸக்ருத் வேண்டுவது )

3-சிலர் உன்னுடைய இச்சை ஒழிய நானே ரக்ஷகன் என்கிறான் என்றார்கள் –

4-சிலர் உபாயம் உபேயம் இரண்டும் ஓன்று என்கிறது என்றார்கள் –
( ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் -சத் ஏவ ஏகம் ஏவ அத்விதீயம் -நிமித்த உபாதானம் சஹகாரி மூன்றுமே அவனே –
அபின்ன நிமித்த காரணம் -உபேயமே அவன்- கரு முகை மாலையை சும்மாடு ஆக்குவது போலே உபாயமாக்குகிறோம் – )

5-சிலர் சரண சப்தத்துக்கு விசேஷணம் ஆக்கி அத்விதீயமான உபாயம் என்கிறது என்றார்கள் –
(ஏகம் சரணம் -அத்விதீயம் தன்னிகர் அற்றது )

ஏக சப்தம் அவதாரண அர்த்தமாய் ஒன்றே உபாயம் என்கிறது என்று நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்வார்கள்
ஏக சப்தம் அவதாரண அர்த்தம் என்பது ஸ்தான ப்ரமாணத்தால் இறே –
(ந்யாஸம் சரணாகதி பிரபத்தி எல்லாம் ப்ரஹ்மத்தையே குறிக்கும்)
அதற்கு பிரமாணம் காட்டுகிறார் -களை கண் -இத்யாதியால் –

ஈஸ்வரன் சர்வ ஆத்மாக்களுக்கு ஸ்வரூப ஆவிர்பாவத்தை உண்டாக்குவதாக பூர்வமேவ சிந்தித்து –
அவசர பிரதீஷனாய் இருக்கையாலே –
அவனுக்கு பிரசாத ஜனகமாக செய்ய வேண்டுவது ஒன்றும் இல்லை –
உண்டு என்று இருக்கில் –
1- தன் ஸ்வரூப பாரதந்தர்யத்தையும் அழித்து-
2-அவனுடைய ரக்ஷகத்வத்தையும் சோபாதிகம் ஆக்குகிறான் அத்தனை –

ஆனால் பிரபத்தி உபாயம் -என்று வ்யவஹிக்கிறது எப்படி எனில் –
பிரபத்தி யாவது -த்வமேவ உபாய பூதோ மே பவ இதி பிரார்த்தனா மதி சரணாகதி – என்று
சேதனனுடைய பிரார்த்தனா ரூப ஞானமாய் இரா நின்றது –
(பிரார்த்தனா கர்ப்ப ஞானம் -அவனே உபாயம் என்ற ஞான மாத்திரம் இல்லை –
அடியேனுக்கு உபாயமாக இருக்க வேணும் என்கிற பிரார்த்தனையை உள் அடக்கிய ஞானமே இது என்றவாறு)

எம்பெருமான் ஆகிறான் பிரார்த்த நீயானாய் இருப்பான் ஒரு பரம சேதனனாய் இரா நின்றான்
ஆகையால் இரண்டுக்கும் நியாஸ சப்த வாஸ்யத்வமும் – உபாயம் என்னும் வியாவஹாரமும் கூடும் –
எங்கனே என்னில்-
பராமருஷ்ட லிங்கம் அனுமானமாய் இருக்க –
லிங்க பராமர்சம் அனுமானம் -என்று பராமர்ச ப்ராதான்யத்தைப் பற்ற உபசாரிகமாக பராமரஸ்யத்தைச் சொன்னால் போலேயும்-

(பராமர்சம் -அறிவு -ஞானம் என்றபடி
மலை பர்வதா -புகை தெரிவதால் நெருப்பு -பக்ஷம் மலை -அதில் சாதிக்க
சாத்தியம் -நெருப்பை வஹ்னி அக்னி
எதனால் ஹேது -புகை -இதுவே அடையாளம்
இது இருக்கவே நெருப்பு -என்கிறோம்
ஞானம் புகையையும் நெருப்பையும் சேர்த்து பார்த்து -புகை இருந்தால் நெருப்பு இருக்கும்
புகை ஹேதுவா ஞானம் ஹேதுவா -புகை இல்லாமல் இருந்தால் நெருப்பு இல்லை
பிரதான ஹேது புகை -அறிவின் பேரிலும் ஹேது -இதுவும் என்று சொல்லுவோமே )

நீலம் ஞானம் பீதம் ஞானம் என்ற விஷய பிரதான்யத்தைப் பற்ற
விஷயியான ஞானத்திலே நைல்ய பீதிமாதிகளை உபசரிக்குமா போலேயும் –
(பீதம் மஞ்சள் ஸ்வதம் வெளுப்பு-பந்தின் நிறம் பார்த்து ஞானத்தின் தலையில் ஏற்றிச் சொல்வது போலே )

ஸ்வீகார ப்ராதான்யத்தைப் பற்ற
ஸ்வீகார விஷயமான பகவத் உபாயத்வ விவகாரத்தை விஷயியான ஸ்வீகார ரூப பிரபத்தி ஞானத்திலே உபசரித்துச் சொல்லுகிறது –
(இது -ஸ்வீகாரம் -செயல் அல்ல அறிவு-ஞானம் -மதி – தானே)
ஆகையால் விரோதம் இல்லை –

இந்த அவதாரணத்தில் வ்யாவர்த்திக்கப் படுகிறது
வ்ரஜ என்று விஹிதமான ஸ்வீகாரத்தின் உடைய அங்க பாவம் -ஸ்வீகாரத்தை ஒழிய அவனுடைய உபாயத்வம் ஜீவியாமையாலே
ஸ்வீகாரத்திலே ஸ்வீகாரத்தில் அங்க புத்தி பிறக்க யோக்யதை உண்டு –
யோக்யதை உண்டாகில் அங்க பாவம் கழிகிற படி என் என்னில் –

அங்கமாவது அங்கிக்கு கிஞ்சித் காரம் ஆவது இறே –
அந்த கிஞ்சித்காரம் தான்
1-ஸ்வரூப உத்பாதக த்வாரத்தாலே யாதல்
2-உத்பன்னமான ஸ்வரூபத்துக்கு வர்த்தகமாயாதல் –
3-வர்த்தித்ததுக்கு பல பிரதான சக்தி முகத்தாலே யாதலாய் இருக்கும் –

அதில் பக்திக்கு சாத்யம் ஆகையால் உத்பத்திய அபேக்ஷை உண்டு –
அஹரஹர் ஆதேய அதிசயம் ஆகையால் வ்ருத்ய அபேக்ஷை உண்டு
தான் சேதனம் அல்லாமையாலே பல பிரதான வேளையிலே சேதன அபேக்ஷை உண்டு –
ஆகையால் அதுக்கு கர்மா ஞானாதி அங்கங்கள் அபேக்ஷிதமாகக் கடவது

இந்த உபாயம் சித்தம் ஆகை யால் உத்பத்திய அபேக்ஷை இல்லை –
ஏக ரூபம் ஆகையால் வ்ருத்த்ய அபேக்ஷை இல்லை
பரம சேதனம் ஆகையால் பல பிரதானத்தில் அந்நிய சாபேஷத்தை இல்லை –

ஆக
அங்கங்களைக் கொண்டு கொள்வதொரு கார்யம் இவ்வுபாயத்துக்கு இல்லாமையால்
இந்த ஸ்வீகாரம் அங்கம் ஆக மாட்டாது

ஸ்வரூப உத்பத்தி யாதிகளிலே அங்க நிரபேஷம் ஆகில் –
இவ்வுபாயம் என்றும் ஓக்க ஜீவிக்கை ஆகாது ஒழிகைக்கு ஹேது என் என்னில் –
உபாயத்வம் ஆவது —
ஒருவனுடைய அநிஷ்டத்தை கழிக்கையும் -இஷ்டத்தை கொடுக்கையும் ஆகையால் ஒரு அதிகாரி அபேக்ஷிதம்
அது பெறாமையாலே உபாயத்வம் ஜீவிக்காது ஒழிந்தது –

அதிகாரி ஆகில் அபேக்ஷிதம் ஸ்வீகாரம் செய்கிற கார்யம் என் என்னில்
ஐஸ்வர் யார்த்தியிலும் –
கைவல்யார்த்தியாலும் –
பகவத் சரணார்த்தியாய் சாதனா அனுஷ்டானம் பண்ணுமவனில் காட்டிலும்
இவ்வதிகாரியை வியாவர்த்தன் ஆக்குகிறது

பகவல் லாபார்த்தமான இந்த ஸ்வீகாரம் -ஆகையால்
அருணயா ஏக ஹா யன்யா பிங்காஷ்யா சோமம் க்ரீணாதி-என்கிற இடத்திலே
அருணத்வ பிங்காக்ஷத்வாதிகள் சோம க்ரயத்துக்கு உறுப்பான பசுவுக்கு பசுவாந்தரத்தில் காட்டில்
(சிகப்பாக உள்ள பசு -ஒரு வயசு பசு -சிவந்த கண் உள்ள பசு )
வியாவர்த்தக விசேஷணம் ஆனால் போலே
இதுவும் அதிகாரிக்கு வ்யாவர்த்தக விசேஷணமாய்க் கிடக்கிறது –

இனி அதிகாரி அங்கமாம் அன்று –
தத் விசேஷணமான இந்த ஸ்வீகாரமும் அங்கமாகக் கடவது –
நநு-
சித்த மேவ ஹி ஸர்வத்ர நியோஜ்யஸ்ய விசேஷணம் –ஆகம ப்ராமாண்யம் -என்பதால்
நியோஜ்யஸ்ய விசேஷணம்-அதிகாரி விசேஷணமாய் இருப்பது -ஸித்தமாகவே இருக்க வேணும் -என்று ஏற்படுவதால் –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று விதேயமாக சொல்லுவது கூடாதே என்னில்
அந்த நியமம் ஸாத்ய உபாய விஷயம் ஆகையால் சித்த உபாய விஷயத்தில் விரோதிக்காது —

அல்லாமல் சித்த உபாய விஷயத்திலும் அதிகாரி விசேஷணம் ஸித்தமாகவே இருக்க வேணும் என்னில்
உபாயமும் ஸித்தமாய் அதிகாரமும் ஸித்தமாய் இருக்கும் பக்ஷத்தில்
சர்வமுக்தி பிரசங்கம் ஏற்படும் ஆதலால் -அது கூடாது –
ஆக அதிகாரி விசேஷணமான ஸ்வீகாரம் விதேயமாகக் தட்டில்லை

ஷூத்து அன்னத்துக்கு சாதனமாம் அன்று இறே இந்த ஸ்வீகாரத்துக்கு சாதனத்வம் உண்டாவது –
ஸ்வீகாரத்துக்கு அங்க தயா உபாயத்வம் கொள்ளப் பார்க்கில் –
த்வமேவ உபாய பூதோ மே பவ இதி பிரார்த்தனா மதி சரணாகதி -என்று
அவனையே நிரபேஷ உபாயமாகப் பற்றுகை -என்கிற லக்ஷண வாக்யத்தோடு விரோதிக்கும் –

ஆகையால் ஈஸ்வரன் கார்யம் செய்கைக்கு ஆபி முக்ய ஸூசகமாய்க் கிடக்கிறது –
இது சர்வ முக்தி பிரசங்க பரிஹாரார்த்தம் –
புத்தி சமானாதார்த்தம் –
சைதன்ய கார்யம் –
ராக பிராப்தம் –
ஸ்வரூப நிஷ்டம் –
அப்ரதிஷேத த்யோதகம் – என்றபடி –
(விலக்காமையை அறிவிப்பதே ஸ்வீ காரம் )

கீழை மேலை வடக்கில் அவை புறம்பாக தன் பற்று உள்ளசல் -என்று இறே
இவர் ஆச்சார்ய ஹிருதயத்தில்-141- அருளிச் செய்தார் இறே –
(கர்ம ஞான பக்தி யோகம் வெளிப்பகை -இது-தன் பற்று- உள் பகை )

————————————————————————————————-

சரண -சப்தார்த்தம் ..
சரணம் -என்று பற்றும் படியைச் சொல்லுகிறது ..
சரணம் -உபாயமாக
இதுக்கு பல பொருள்களும் உண்டே ஆகிலும் இவ் விடத்தில் -விரோதியைக் கழித்து பலத்தைத் தரும்
உபாயத்தைக் காட்டக் கடவது –
மாம் ஏகம் சரணம் -என்கையாலே உபேயமே உபாயம் என்னும் இடம் தோற்றும் —

(சரணம் -உபாயம் க்ருஹம் ரக்ஷணம்-மூன்று அர்த்தங்கள் இருந்தாலும் பற்றும் படி -உபாயமாக புத்தி பண்ணுவது
பறவைகள் சரணாலயம் க்ருஹம் -உம் திருவடியே சரண் -ரக்ஷகம் )

———————————————————————-

இனி பஞ்சம பதார்த்தம் அருளிச் செய்கிறார் -சரணம் என்ற இது –
சரண சப்தம் இந்த ஸ்தலத்தில் உபாயத்தையே காட்டுகிறது
சர்வ தர்மங்களையும் விட்டு தன்னையே பற்றச் சொல்லுகிற பிரகரணம் ஆகையால்
கீழ் உடன் சேர வேண்டுகையாலே -என்றபடி

இப்போது சரண சப்தம்
உபாய வாசகமாய் –
மாம் -என்று ஸுசீல்யாதி விசிஷ்டமாகச் சொன்ன வஸ்துவுக்கு –
சோஸ்னுதே ஸர்வான் காமான் சக ப்ரஹ்மணா விபஸ்ஸிதா-என்றும்
சதா பஸ்யந்தி -என்றும்
ஸ்ரியா ஸார்த்தம் ஆஸ்தே -என்கிறபடியே –
உபேய பாவத்திலும் அந்வயம் உண்டாகையாலே அத்தை வியாவர்த்தித்து உபாய பாவத்தில் ஒதுக்கித் தருகிறது

கீழ் சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற இடத்தில் பிரஸ்துதமான
சாதனாந்தரங்களே இத்தை உபாய பாவத்தில் ஒதுக்கித் தாராதோ என்னில் –
அர்த்த ஸித்தமாய் வருகிறதில் காட்டில் -சப்த ஸித்தமாய் வருமது அழகியது ஆகையால்
ஆற்றுக்கு அக்கரைப் பட்டால் அதுக்கு நிஸ்தரண பரிகரமான தெப்பம் அநபேஷிதம் ஆமா போலே –
சாத்திய பாவே மஹா பாஹோ சாதனை கிம் பிரயோஜனம் -என்று
சாத்யம் சித்தித்தால் சாதனத்தைக் கொண்டு அபேக்ஷிதம் இல்லாமையால்
சாதன தியாகமும் ப்ராப்ய அம்சத்தில் அந்விதம் ஆகையாலேயும்
உபாயத்வத்தில் ஒதுக்கித் தர மாட்டாது –

——————————————————————————————————————-

விரஜ – சப்தார்த்தம்
விரஜ -என்று ஸ்வீ காரத்தைச் சொல்லுகிறது ..
விரஜ -அடை –புத்தியாலே அத்யவசி என்ற படி ..

உன்னை என் மனத்து அகத்தே திறம்பாமல் கொண்டேன் (-திரு விண்ணகரானே-பெரிய திரு மொழி 6-3-2 ) என்கிறபடியே
இவ் உபாயத்துக்கு இவன் செய்ய வேண்டியது
நெஞ்சாலே துணிகை இறே –

(கத்யர்த்தா புத்த்யர்த்தம்-பிரார்த்தனா மதி மானஸ வியாபாரம் )

(துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே
அறந்தானாய்த் திரிவாய் யுன்னை என் மனத்தகத்தே
திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே -6-3-2-

துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம்-சர்வ தர்மான் பரித்யஜ்ய
துறந்தமையால்-மீண்டும் சொல்வது பரித்யஜ்ய முக்யஸ்த்வம்
அறந்தானாய்த் திரிவாய் யுன்னை-சாஷாத் தர்மம் அவனே
திருமாலே-புருஷகாரமாகப் பற்றி -புருஷனான நான் வந்து உன் தடுமாற்றம் தவிர்த்தேன்
கொண்டேன் -மறுக்காமல் விலக்காமல் இருந்தேன் )———————————————————–

இனி ஷ்ஷட பதார்த்தம் அருளிச் செய்கிறார் -வ்ரஜ -என்று இதி –

———————————————————————————————————————

பூர்வ வார்த்த அர்த்த ஸங்க்ரஹம்..
ஆக முற்கூற்றால் –
தவம் செய்ய வேண்டா (பெரிய திருமொழி 3-2-1 ) -என்றும் –
சிந்திப்பே அமையும் ( திரு வாய் மொழி 9-1-7 )-என்கிற படியே

உன் தலையால் உள்ள வற்றை உதறி என்னையே தஞ்சமாக நினை –
விரகு தலையரைப் போலே அலமாவாதே
மாணிக்கம் பார்ப்பாரைப் போல உன் கண்ணை கூர்க்க விட்டு இரு ..
பதர் கூட்டை விட்டு பர்வதத்தைப் பற்று வாரைப் போல –
அசேதன கிரியா -கலாபங்களை விட்டு –
தேர் முன் நின்று காக்கிற ,கரு மாணிக்க மா மலையான -(பெரிய திருமொழி-9-9-8-}தம்மைப் பற்று என்று
அதிகாரி தொழிலை சொன்னான் ஆயிற்று —

பார்த்தன் தன் தேர் முன் நின்றான்–2-3-1-

ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-

தவம் செய்ய வேண்டா-சிற்ற வேண்டா- சர்வ தர்மான் பரித்யஜ்ய
சிந்திப்பே -மாம் ஏகம் வ்ரஜ -இங்கும் ஏவகாரம்

———————————————————————————————-

பூர்வர்த்த அர்த்தங்களை சங்க்ரஹிக்கிறார் –
ஆக -என்று தொடங்கி –
தர்ம தியாகம் ஸ்வீகாரத்துக்கு அங்கமாகக் கடவது –
தியாக விசிஷ்டமான ஸ்வீகாரம் அதிகாரி விசேஷணமாகக் கடவது –
ஸ்வீகார விசிஷ்டனான அதிகாரிக்கு வாத்சல்யாதி குண விசிஷ்ட வஸ்து உபாயமாகக் கடவது –

ஆக இப்படி பூர்வார்த்தம் அதிகாரியினுடைய க்ருத்யம்சத்தை சொல்லிற்று -என்றபடி –

———————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த -அருளிச் செயல் ரகஸ்யம்-சரம ஸ்லோக பிரகரணம் -அவதாரிகை -ஸ்ரீ உ .வே .வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ரகஸ்ய பூஷணம் –

July 31, 2016

( மந்த்ர ரஹஸ்யம் -விதி ரஹஸ்யம் -அனுஷ்டான ரஹஸ்யம் -அனுசந்தான ரஹஸ்யம் என்றுமாம் –
பூர்வ வாக்கியம் சரணாகதி அனுஷ்டானம் உத்தர வாக்கியம் கைங்கர்ய பிரார்த்தனை -த்வயம் -இரண்டு வாக்கியங்கள்
சரம ஸ்லோகம் -இரண்டு அர்த்தங்கள் –
த்வயம் சொல்லி சொல்லி உதடு துடித்துக் கொண்டே இருக்க வேண்டும் –
கால ஷேபம்- த்வயம் அர்த்த அனுசந்தானம் செய்து கொண்டே இருக்க வேண்டும் –
ஸக்ருத் உச்சாரணம் -முதல் தடவை மட்டும் உபாய புத்தி பண்ணி சரணாகதி –
அப்புறம் ரசத்துக்காக ஆனந்தத்துக்காக–)

(திரு மந்த்ரம் சொல்வது ஸ்வரூபத்தை பகவத் -அநந்யார்ஹ சேஷ பூதன் –
கண்ணபுரம் உடையானுக்கு அடியேன் -ஸ்வரூப பிரதானம்
ப்ராப்ய பிரதானம் -த்வயம் -கண்ணன் விதி வாக்கியம் படி நடந்து -சரண் அடைந்து -முன் வாக்கியம் –
பின்பு அவனுக்கு நாம் சொல்லும் மா ஸூச -உத்தர வாக்கியம் -நித்யம் இயைந்து வாழ்க்கையில் –
திரு வாராதனம் சுத்திக்கும் உத்தர வாக்கியம் -ஸ்ரீ மதே நாராயண நம -கைங்கர்ய பிரதானம் –
ப்ராபக பிரதானம் -சரம ஸ்லோகம் –உபாய பிரதானம் -பகவானே உபாயம் -பரித்யஜ்ய -வ்ரஜ -மா ஸூச -)

(ஆத்மாவால் பேறு-திரு மந்த்ரம்
சரம ஸ்லோகம் -ஈஸ்வரனாலே பேறு -மாம் அஹம் -எல்லாம் அவனாலே –
த்வயம் -பெரிய பிராட்டியாலே பேறு
புருஷகார சாபேஷமுமாய் புருஷ சாபேஷமுமாய் அவன் உபாயம் -இந்த சிறப்பு சொல்ல வந்தது த்வயம் –
அதனாலே இவளால் பேறு என்கிறது -பரம்பரயா பேறு என்றவாறு –
புருஷ சாபேஷமாய் இருப்பதால் ஆத்மாவால் பேறு என்று திரு மந்த்ரம் சொல்வதாக அருளிச் செய்கிறார்
இதனாலே தான் ரஹஸ்ய த்ரயமும் பேறு அவனாலே இவை இரண்டும் சா பேஷமாய்
உபாயம் -பேறு-என்பதைச் சொல்ல வந்தவை -)

(ஸாஸ்த்ர ருசி பரிக்ருஹீதம் திரு மந்த்ரம் -மூன்று வ்யாக்ருதிகள் -பிறந்ததே வேதங்களில் இருந்து தானே –
ஈஸ்வர ருசி பரிக்ருஹீதம் சரம ஸ்லோகம்
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் த்வயம் -ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் )

(விவரண பாவங்கள்
ஓங்காரத்தில் உகாரம் விளக்க ந ம வந்தது -அவனுக்கே அநந்யார்ஹத்வம் -நம்மைக் கழிக்க வேண்டுமே –
த்வயம் பூர்வ வாக்கியம் ந ம விளக்கம் எனக்கு உரியவன் அல்லேன் -பகவத் சரண வரணம் அனுஷ்ட்டிக்க வேண்டுமே –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -விட்டே பற்ற வேண்டும் என்று சரம ஸ்லோகம் பூர்வ அர்த்தம்
விட்டே என்னை உபாயமாகப் பற்ற வேண்டும் -விளக்கி காட்டுமே –

ஆய ம -அவனுக்கு சேஷன் -சேஷத்வம் சித்திக்க கைங்கர்யம் -விளக்கம் நாராயணாயா –
இப்படி மந்த்ரமும் மந்த்ர சேஷமும்
மிதுனத்தில் கைங்கர்யம் த்வயத்தில் உத்தர வாக்கியம்-
பிரதிபந்தகங்கள் கழிந்து தானே நித்தியமான கைங்கர்யம் -இது சரம ஸ்லோக உத்தர அர்த்தம் காட்டும் -)

அவதாரிகை
சரம ஸ்லோகம் முன்னாக த்வயமும் –
த்வயம் முன்னாக சரம ஸ்லோகமும் ஆகிற இரண்டு பிரகாரமும் அருளிச் செய்யலாய் இருக்கும் –
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்ரீ ஜீயர் முதலானோர் த்வயம் முன்னாக சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தை அருளிச் செய்தார்கள் –
இப்பிரபந்தத்தில் ஸ்ரீ நாயனார் சரம ஸ்லோகம் முன்னாக த்வயார்த்தங்களை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ பிள்ளை உலகாரியன் இரண்டு பிரகாரமும் அருளிச் செய்துள்ளார் –
(முமுஷுப்படி-த்வயம் முன்னாக
யாதிருச்சிக்கப்படி பரந்த படி ஸ்ரீபதிப்படி -இவற்றில் சரம ஸ்லோகம் முன்)
இவ்விரண்டு பிரகாரங்களுக்கும் கருத்து என் என்னில்-

சரம ஸ்லோகம் முன்னாக த்வயத்தைச் சொல்லுகிறது –
விதி அனுஷ்டான ரூபங்களாய் இருக்கும் இவ்விரண்டில்
விதி முன்னாக அனுஷ்டானத்தை சொல்லுகை ப்ராப்தமாய் இருக்கையாலும்
திருமந்திரம் ப்ராப்ய பரமாய் –
சரம ஸ்லோகம் ப்ராபக பரமாய் –
த்வயம் உபயத்தினுடையவும் அனுஷ்டான ப்ரதிபாதகமாய் இருக்கையாலும் –

த்வயம் முன்னாக சரம ஸ்லோகத்தைச் சொல்லுகிறது –
திருமந்திரத்தில் மத்யம த்ருதீய பதங்களுக்கு வாக்ய த்வயம் விவரணமாய் –
அது தனக்கு சரம ஸ்லோகத்தில் அர்த்த த்வயம் விவரணமாய் இருக்கும் ஆகாரத்தாலே –
ஆன பின்பு இரண்டு பிரகாரமும் அனுசந்திக்கத் தட்டு இல்லை –

ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே
வ்ரஜ என்று விதிக்கையாலே உபாய வரணம் ததபிமதம் என்னுமத்தையும் –
வரண அங்கமான சாதநாந்தர பரித்யாகத்தையும்
வரணத்தில் சாதநத்வ புத்தி ராஹித்வத்தையும் சாப்தமாக பூர்வ அர்த்தத்தாலே ப்ரதிபாதிக்கிறது –

(பகவத் சரணம் வரணமே சரணாகதி -பற்றினதும் உபாயம் ஆகாது -திருவடிகளே உபாயம் –
காம்பற தலை சிரைத்து -திருவடிகளே உபாயம் -சாத்தனாந்தரங்களை விட்டது –
பற்றினதும் சாதனம் இல்லை என்பதை காம்பற சப்தம் காட்டும் –
அதுவும் அவனது இன்னருள் -மாம் ஏகம் -வாழும் சாம்பாரை உகப்பானே )

கைங்கர்யத்துக்கு பூர்வபாவியான பிராப்தி பிரதிபந்தக சகல பாப விமோசனத்தை
உத்தர அர்த்தத்தாலே ப்ரதிபாதிக்கிறது –

பஞ்சம வேத சாரபூத ஸ்ரீ கீதா உபநிஷத் தாத்பர்யமாய் –
சரம ரகஸ்யமாய் இருந்துள்ள -சரம ஸ்லோகத்தின் உடைய அர்த்தத்தை
சம்சய விபர்யயம் அற அருளிச் செய்கிறார் ஸ்ரீ நாயனார் இப் பிரகரணத்தில் –

இதில் அர்த்தம் கேட்க்கைக்காக இறே ஸ்ரீ எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம்
ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி பக்கல் எழுந்து அருளிற்று –
ஸ்ரீ நம்பி தாமும் இதில் அர்த்தத்தை உடைய கௌரவத்தையும் –
இதுக்கு அதிகாரிகள் இல்லாமையும் பார்த்து இறே
இவருடைய ஆஸ்திக்ய ஆதர பரீஷ அர்த்தமாக பலகால் நடந்து துவள பண்ணி
சூளுறவு கொண்டு மாச உபவாசம் கொண்டு
அருமைப் படுத்தி அருளிச் செய்து அருளிற்று –

நிஷ்க்ருஷ்ட சத்வ நிஷ்டனாய்-பரமாத்மனி ரக்தனாய் -அபாரமாத்மனி வைராக்யம் உடையவனாய் -பிராமண பரதந்த்ரனாய்
ஸ்ரீ பகவத் வைபவம் -ச்ருதமானால் அது உபபன்னம் என்னும் படியான விஸ் ரம்ப பாஹுள்யம் உடையனாய்
ஆஸ்திக அக்ரேசரனாய் இருப்பான் ஒருவன் உண்டாகில்
அவன் இந்த ஸ்லோகார்த்த ஸ்ரவண அனுஷ்டானத்துக்கு அதிகாரி ஆகையால் –
அதிகாரி துர் லபத்துவத்தாலும் -அர்த்த கௌரவத்தாலும் -இத்தை வெளியிடாதே
மறைத்துக் கொண்டு போந்தார்கள் ஸ்ரீ எம்பெருமானார்க்கு முன்பு உள்ளார் –

சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாத படி க்ருபை கரை புரண்டு இருக்கையாலே –
அர்த்தத்தின் சீர்மை பாராதே அநர்த்தத்தையே பார்த்து வெளியிட்டு அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் –
(வெளியிட்டு அருளியதாலேயே ஸ்ரீ எம்பெருமானார் திரு நாமம் சூட்டப் பெற்றார் அன்றோ )

அப்படி உபதேசித்து விடுகிற மாத்ரம் இன்றிக்கே இவ்வர்த்தத்தை எல்லாரும் அறிந்து
உஜ்ஜீவிக்க வேணும் என்னும் பரம கிருபையால் இறே
இவ்வர்த்தத்தை ஸ்த்ரீ பாலர்களுக்கும் அதிகரிக்கலாம் படி தெளிய அருளிச் செய்கிறார்
ஸ்ரீ நாயனார் இப் பிரபந்தத்தில் –

————————————————————————

சரம ஸ்லோக பிரகரணம் ..
அவதாரிகை
மூல மந்த்ர சரம ஸ்லோக பவ்ரவபர்யம்..
(பூர்வ அபரம்–முன்னும் பின்னும் என்றபடி)

திரு மந்த்ரத்தை நரனுக்கு உபதேசித்து –
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணன் (நாச்சியார் திருமொழி 2-1 )
பாரோர் புகழும் வதரியில் (வட மதுரை- சிறிய திரு மடல் -74) நின்றும் ,
வட மதுரை ஏற வந்து ஸ்ரீ கிருஷ்ணனான நிலையிலே நரனுடைய அம்சமாய் ,
நம்பி சரண் ( பெரியாழ்வார் திரு மொழி 1-9-4- ) என்று சிஷ்யனான அர்ஜுனனைக் குறித்து ,
திரு மந்திரத்தில் ஸ்வரூபத்துக்குச் சேர அறுதி இட்ட புருஷார்த்தத்துக்கு ,தகுதியான சாதனத்தை ,
சரம ஸ்லோக முகத்தாலே ,வெளி இட்டு அருளினான் ..

(ஏஷ நாராயண ஸ்ரீ மாந் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் யத்ஸ்ருஜ்ய ஆகதோ மதுராம் புரீம்
வதரி -வட மதுரை சேர்ந்தே திரு மடலில்
அநந்யார்ஹ சேஷ பூதனாகிய ஸ்வரூபத்துக்கு சேர்ந்த-
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் பெற -சாதனம் இதில்
ஸ்வரூபத்துக்கு தகுந்த புருஷார்த்தம் -புருஷார்த்தத்துக்கு தகுந்த சாதனம் -ஸ்வரூபத்துக்கு தகுந்த உபாயம்
பாரதந்தர்யத்துக்கு தக்க சாதனம் சித்த உபாயம் தானே )

——————————————————-

பிரதம ரகஸ்யமான திரு மந்திரத்தின் உடைய அர்த்தத்தை அருளிச் செய்த அநந்தரம் –
சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தை அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி
பிரதமம் திருமந்திர சரம ஸ்லோகங்களின் பவ்ர்யாபர்ய ஹேதுவை அவதார
ரகஸ்ய கதன பூர்வகமாக அருளிச் செய்கிறார் -திரு மந்த்ரத்தை -என்று தொடங்கி –

ஸ்வரூப புருஷார்த்த பரம் -திருமந்திரம் –
தத் அநு குண சாதன பரம் சரம ஸ்லோகம் என்னும் இவ்வர்த்தத்தை –
இவற்றுக்கு மந்த்ர விதி அனுசந்தான ரகஸ்யங்களோடே சேர்த்தி –

அளிப்பான் அடைக்கலம் சூடிய பொய்யாதானும் அழுந்தார் என்று ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும் –
தாமரை யுந்திப் பெரு மா மாயன் ஆளாகவே வாழிய என்று ப்ராப்ய பலன்களையும் –
நெறி காட்டி மனத்துக்கு கொண்டு கண்ணனால் அடித்து கண்டிலமால் யாதாகில் என்று
உபாயத்தை சொன்னவை மந்த்ர ஸ்லோகங்களோடே சேரும் -209-என்று
இவர் தாமே ஆச்சார்ய ஹ்ருதயத்திலே அருளிச் செய்தார் இறே –

நம்மாழ்வார் பிரபந்தங்கள் நாலுக்கும்-சகல சாஸ்திர தாத்பர்யமான அர்த்த பஞ்சகத்தையும்
சம்சய விபர்யயம் அற ப்ரதிபாதிக்குமதான-சர்வம் அஷடார ந்தஸ்ஸ்தம் -என்னும்படி
சகல சாஸ்திர சங்க்ரஹமான திரு மந்த்ரமும் –
விதித்த உபாய வரணத்தை ச அங்கமாக விதிக்கிற சரம ஸ்லோகமும் –
உபாய உபேய வரண பிரார்த்தனைகளை ச க்ரமமாக பிரகாசிப்பியா நின்று கொண்டு
கால ஷேபத்துக்கும்
போகத்துக்குமாக
சாரஞ்ஞாராலே சதா அனுஷ்டானம் பண்ணப் படும் த்வயமும் ஆகிற
ரகஸ்ய த்ரயத்தோடே சேர்த்தி என்றபடி –

சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாய் -ஞானா நந்த லக்ஷணமாய் –
ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கும் ஆத்ம ஸ்வரூபத்தையும் –
சம்சார ஹேது பூத அவித்யாதிகளான விரோதிகளுடைய நிவ்ருத்தியையும்
பிரதிபாதிக்கிற திரு விருத்தம்

பிரதம மத்யம பதங்கள் இரண்டோடும் சேர்ந்து இருக்கையாலும் –
ப்ராப்ய பலன்கள் இரண்டையும் பிரதிபாதிக்கிற திருவாசிரியம்
ப்ரக்ருதி ப்ரத்யய அம்சங்களால் தாதுபய ப்ரதிபாதகமான த்ருதீய பதத்தோடே சேர்ந்து இருக்கையாலும்
இரண்டு பிரபந்தமும் திரு மந்திரத்தோடே சேரும் –

உபாய ப்ரதிபாதிகமாய் இருந்த பெரிய திருவந்தாதி சரம ஸ்லோகத்தோடே சேரும் என்றபடி

ஆக
ஸ்வரூபமும் –
ஸ்வரூப அனுரூபமான பிராப்யமும் –
மூல மந்த்ர ப்ரதிபாத்யம் என்றும் –
ஸ்வரூப ப்ராப்ய உபய அனுகுண உபாயம் சரம ஸ்லோக ப்ரதிபாத்யம் என்றும்
திருமந்திர சரம ஸ்லோகங்களுக்கு உண்டான பவ்ர்வாபர்ய ஹேது நிரூபிதம் ஆயிற்று –

——————————————————————————————-

பரம பிராப்ய பிராபக நிர்ணயம் ..
ஆத்ம பரமாத்ம சம்பந்தத்தை உணராதே –உடம்பையே தானாக நினைத்து
அதைப் பற்றி வருகிற பந்துக்களுக்கு ஸ்நேகித்து –அவர்கள் ஸ்நேஹம் பொறுக்க மாட்டாதே
தன்னுடைய (ஷத்ரிய )தர்மத்தைப் பாபம் என்று கலங்கின அர்ஜுனனை —
செம் கண் அலவலையான ( பெரியாழ்வார் திரு மொழி 2-1-2 ) கிருஷ்ணன்

(புண்டரீகாக்ஷன் -அப்பூச்சி காட்ட -எம்பார் ஐதி க்யம்–அலவலை -அவனுடைய விஜயத்தை சொல்லும் புகழும் அவன் –
அவன் பக்கல் வாத்சல்யம் தோன்ற கடாக்ஷித்து -அவாக்ய அநாதரன் அங்கு –இப்படி கல கல என்று பேசுகிறான்
காண்டீபம் கீழே போட்டு -யுத்தம் செய்யாமல் -சண்டை போட வைக்க கீதை சொன்னதும் அலவலை)

அமலங்களாக விழிக்கிற ( திரு வாய் மொழி 1-9-9) நோக்காலும் ,
தூ மொழிகளாலும் (திரு வாய் மொழி 9-9-9 )
உரு மகத்தே விழாமே குரு முகமாய் (பெரியாழ்வார் திருமொழி 4-8-3 ),
அறியாதன அறிவித்து ( திரு வாய் மொழி 2-3-2 ) ,

உடம்பையும் ஆத்மாவையும் பற்றி வருகிற
ஐம் கருவி கண்ட இன்பம் தெரி வரிய அளவிலா சிற்று இன்பம் ( திரு வாய் மொழி 4-9-10 ) என்கிற
ஐஸ்வர்ய கைவல்யங்களுடைய பொல்லாங்கையும் ,
(அணுவான ஆத்மா பற்றிய இன்பம் சிற்று இன்பம் )

இன்பக் கதி செய்து (திரு வாய் மொழி 7-5-11 ),
(தெளிவுற்ற கண்ணன் -இவன் ஏதேனும் செய்து விலகினாலும் விடேன் என்று திருத்தி இன்பக் கதி செய்யும் கண்ணன் )
தொல்லை இன்பத்து இறுதி ( பெருமாள் திருமொழி 7-8 ) காட்டுகிற தன்னை மேவுகை ஆகிற
மோஷத்தினுடைய தன்மையையும் அறிவித்து

( இது வரை பரம ப்ராப்ய நிர்ணயம் -மேல் பரம ப்ராபக நிர்ணயம் – )

பெறுகைக்கு வழியாக கர்ம ஞான பக்திகளை அருளச் செய்யக் கேட்ட அர்ஜுனன்

ஊன் வாட (பெரிய திருமொழி 3-2-1 -உடம்பு தேயும் படி )
நீடு கனி உண்டு (பெரிய திருமொழி 3-2-2 )
பொருப்பு இடையே நின்று ( மூன்றாம் திருவந்தாதி -76)
இளைப்பினை இயக்கம் நீக்கி விளக்கினை விதியில் கண்டு (திருக் குறும் தாண்டகம் -18-யமாதி அஷ்டாங்க யோகம் )
குறிக்கோள் ஞானங்களால் (திரு வாய் மொழி 2-3-8-வேதன த்யான நிதித்யாசன உபாசனை )
ஊழி ஊழி தோறு எல்லாம் (திருச் சந்த விருத்தம் -75 )
யோக நீதி நண்ணி (திருச் சந்த விருத்தம் – 63 )
என்பில் எள்கி நெஞ்சு உருகி உள் கனிந்து (திருச் சந்த விருத்தம் -76 )
ஜன்மாந்தர சகஸ்ராந்தங்களிலே செய்து முடிக்க வேண்டின அந்த உபாயங்களின் உடைய அருமையும் ,

மெய் குடியேறி குமைத்து (பெரிய திருமொழி 7-7-9 ) ,
வலித்து எற்றுகிற (திரு வாய் மொழி 7-1-10 ) இந்த்ரியங்களுடைய கொடுமையும்

ஐம்புலன் கருதும் கருத்துள்ளே-(பெரிய திருமொழி 1-1-8 ) மூட்டப் பட்டு
நின்றவாது நில்லா நெஞ்சின் (பெரிய திருமொழி 1-1-4 ) திண்மையும்

செடியார் ( திருவாய் மொழி 2-3-9) ,
கொடு வினை தூற்றுள் நின்று ,வழி திகைத்து அலமருகின்ற-(திருவாய் மொழி 3-2-9 )
தன்னால் அறுக்கல் அறாத (திரு வாய் மொழி 3-2-3 )-பழ வினையின் கனத்தையும்

தன் உள் கலவாதது (திருவாய் மொழி 2-5-3 ) ஒன்றும் இல்லை என்னும் படி ,
முற்றுமாய் நின்று ( திரு வாய் மொழி 7-6-2) ,சர்வ பூதங்களையும் மரப்பாவை போல , ஆட்டுகின்றவன் ,
வேறு வேறு ஞானமாய் (திருச் சந்த விருத்தம் -2 ) உபாயாந்தரங்களுக்கு உள்ளீடாய் ,நிற்கிற நிலையையும் ,

என் ஆர் யுயிர் நீ ( திரு வாய் மொழி 7-6-3) என்னும் படி தன் காரியத்தில் தான் இழிய ஒண்ணாத படி உபதேசித்த
ஸ்வரூப பர தந்தர்யத்தையும் ,அனுசந்தித்து –

நாம் இவ் உபாயங்களைக் கொண்டு நம் விரோதிகளைக் கழித்து அவனைக் கிட்டுகை கூடாது ,
உனக்கு ருசித்த ஒன்றைச் செய் என்ற போதே -தமயந்திக்கு அல் வழி காட்டிய நளனைப் போல ,
இவனும் நம்மை நெறி காட்டி நீக்கினான் அத்தனை ( பெரிய திரு வந்தாதி -6) என்று வெறுத்து

என் உடைக் கோவலனே –என் உடைய ஆர் வுயிராய் எங்கனே கொல் வந்து எய்துவர் ( திரு வாய் மொழி 7-6-5 ) -என்றும் –
என்னை நீ புறம் போக்கல் உற்றால் (திரு வாய் மொழி 10-10-5 )
என் நான் செய்கேன் ( திரு வாய் மொழி 5-8-3) என்று
கண்ணும் கண்ணீருமாய் ,கையிலே வில்லோடு சோர்ந்து விழ

மண்ணின் பாரம் நீக்குதற்கு தான் (திரு வாய் மொழி 9-1-10 )
இருள் நாள் பிறந்த (பெரிய திருமொழி 8-8-9 ) காரியம் இவனைக் கொண்டு தலைக் கட்டவும் ,

பரிபவ காலத்தில் ,தூர வாசியான தன்னை நினைத்த
மைத்துனமார் காதலியை மயிர் முடிக்கும் படி (பெரியாழ்வார் திருமொழி 4-9-6 )
பாரதப் போர் முடித்து (இராமானுஜ நூற்றந்தாதி-51 ) திரௌபதியின் உடைய ,
அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிறும் ,எய்தி நூல் இழப்ப ( பெரிய திரு மொழி 2-3-6)
வென்ற பரஞ்சுடராய் ( பெரிய திரு மொழி 1-8-4) தன் ஸ்வரூபம் பெறவும் இருக்கிற ஸ்ரீ கிருஷ்ணன்
(ஆஸ்ரித ரக்ஷகத்வம் செய்யப் பெற்றோமே என்று ஸ்வரூபம் நிலை பெற்றதே)

இவனுக்கு இவ்வளவும் பிறக்கப் பெற்றோமே என்று உகந்து அர்ஜுனனைப் பார்த்து –
கீழ் சொன்ன உபாயங்களை விட்டு ,என்னையே உபாயமாகப் பற்று ,
நான் உன்னை விரோதிகளில் நின்றும் விடுவிக்கிறேன் ,
நீ சோகியாதே கொள் -என்று ஸ்வரூப அனுரூபமான உபாயத்தை வெளி இடுகிறான் ..

——————————————————————

திருமந்திரத்தில் அறுதியிடப் பட்ட ப்ராப்யத்தின் பரமத்வத்தையும் –
சரம ஸ்லோகத்தில் அறுதியிடப்படுகிற பிராபகத்தின்
பரமத்வத்தையும் அருளிச் செய்கிறார் -ஆத்ம பரமாத்ம-இத்யாதி –

(தத்வம் ஆத்மா ப்ரஹ்ம ஜ்யோதி -நான்குக்கும் -நாராயணனே இவற்றில் பரமம் -மேலானது இல்லை –
அது போலே பரமமான ப்ராப்யமும் பிராப்பகமும் இங்கு)

அதாவது
இந்த ஸ்லோகத்துக்கு கீழே அநேக அத்யாயங்களிலே கர்ம ஞானாதிகளான சில உபாய விசேஷங்களை
ஸ்வ பிராப்தி லக்ஷண மோக்ஷ சாதனமாக விஸ்தரேண உபதேசிக்கக் கேட்டருளி –
காய கிலேச ரூபம் ஆகையால்
இந்திரிய ஜெயம் அரிதாகையாலும் –
சாதனமாக -சாவதானமாக -சிரகாலம் சாதிக்க வேண்டி இருக்கையாலும் –
( ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான சாமாப்யதி-செய்து பக்தி ஆரம்ப விரோதி போக்கி )
அவை அனுஷ்ட்டிக்க அஸஹ்யங்கள் என்றும்
ஸ்வ சரீரத்வ கத நாதிகளாலே ப்ரதிபாதிக்கப் பட்ட பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு
ஸ்வ யத்ன ரூபங்களான இவை விரோதிகள் என்றும் புத்தி பண்ணி –

(பக்தியை உபாயமாக நினைத்து செய்தால் ஸ்வரூப விருத்தம் –
ப்ராப்ய அந்தர்கதமாக கைங்கர்யம் இனிக்க செய்வது ஸ்வரூப அநு ரூபமாகும்-
பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-திரௌபதி லஜ்ஜையை விட்டாள் -சக்தி இருக்கவுமாம் இல்லையாம்
அவனே உபாயம் என்று இருக்க வேண்டுமே –
என் நான் செய்கேன் -ஸ்வரத்தாலே என்னால் முடியாது என்றும் -நான் எதுக்கு பண்ண வேண்டும் -இரண்டும் உண்டே -)

இவற்றால் எம்பெருமானை பெற என்பது ஓன்று இல்லை -இனி இழந்தே போம் அத்தனை ஆகாதே -என்கிற சோகத்தால்
ஆவிஷ்டனான அர்ஜுனனைக் குறித்து
அந்த சோகம் போகைக்காக-ஸூ சகத்வத்தாலும் -ஸ்வரூப அனுரூபதயையாலும்
இனி இதுக்கு மேல் இல்லை என்னும்படியான சரமமான உபாயத்தை இந்த ஸ்லோகத்தாலே வெளியிடுகிறேன் -என்றபடி –
(கீழே பல ஸ்லோகங்கள் மூலம் வந்த சோகம் போக்க சரம ஸ்லோகம் )

பக்தியிலும் பிரபதிக்கு நெடு வாசி உண்டு –
ஆச்சார்ய ருசி பரிக்ரகம் –
சர்வாதிகாரம் –
தேஹ வாசா நத்திலே பலம்
அந்திம ஸ்ம்ருதி வேண்டா –
பரம சேதனம் சித்த ஸ்வரூபம் –
சஹா யாந்தர நிரபேஷம் –
அவிலம்பிய பலப்ரதம் –
ஸ்வரூப அனுரூபமான உபாயம் -ப்ராப்ய அனுரூபமான உபாயம் -என்றபடி –

பிரணவ யுக்த பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ஞானவானாய் –
அதாவது –
அதில் அகாரத்தில் தாத்வார்த்தத்தாலே ப்ரதிபாதிக்கிற பகவன் நிருபாதிக ரக்ஷகத்வத்தையும் –
தத் விஷயமாய் தத் ஏக ரஷ்யமான ஸ்வரூபத்தையும் –
அதில் விபக்தியாலே ப்ரதிபாதிக்கிற தத் இஷ்ட விநியோக அர்ஹ சேஷத்வத்தையும் –
அந்த ஸ்வரூபத்துக்கு அனுரூபமாக நமஸ் சப்த யுக்தமான அத்யந்த பாரதந்தர்யத்தையும்
ச விபக்திக நாராயண பத யுக்தமான பகவத் (குண) அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யத்தில்
ஸ்வ பிரயோஜன விதுர பகவத் பிரயோஜன ஏக ரசிகத்தவ ரூபமான தத் ஏக போகத்வத்தையும்
யாதாவாக அனுசந்தித்தவனுக்கு (தான் போக்தா அல்ல அவனுக்கு போகம் என்றே அனுசந்தித்தவனுக்கு )

மத்யம பதமான நமசில் பிரதிபாதிக்கிற பாரதந்தர்ய அனுரூபமாக பிரதிபாதிக்கிற சித்த உபாயத்தை
உபாயமாக வரிக்கிறவனுடைய உபாய வரணத்தை
தத் அங்கமான கர்மா ஞானாதி சாதனாந்தர தியாக பூர்வகமாக விதித்து
(தியாகமே அங்கம் – விட்டே பற்ற வேண்டும் )

திருமந்திரத்தில் சரம பத யுக்தமான உபேய பிரார்த்தனையையும்
நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தனுக்கு அல்லது கூடாமையாலே –
பகவத் பிராப்தி விரோதி சகல பாபங்களையும் நிஸ் சேஷமாக நிவர்த்திப்பிக்கிறேன் -என்று
சொல்லித் தலைக் கட்டுகையாலும்-
சரம ஸ்லோக ப்ரதிபாதித சரம உபாயம் ஸ்வரூப பிராப்ய அனு ரூப உபாயம் -என்றபடி –
(ஸ்வரூப அநு ரூபமான உபாயம் என்றும் ப்ராப்ய அநு ரூப உபாயம் என்றவாறு )

கீதை பதினெட்டு ஒத்துக்களின் அர்த்தத்தையும் சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –
பந்துக்களுக்கு -இத்யாதி –
இவ்விடத்தில்
அஸ்தானே ஸ்னேஹ காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்-பார்த்தம் ப்ரபந்ந முத்திஸ்ய சாஸ்த்ர அவதரணம் க்ருதம் -என்ற
ஆளவந்தார் கீதார்த்த ஸங்க்ரஹ ஸ்லோகத்தை அனுசந்திப்பது –

பார்த்தம் உத்திஸ்ய -வ்யாஜீ க்ருத்ய -என்றபடி –
அகல் ஞாலத்தவர் அறிய என்று இறே ஆழ்வார் அருளிச் செய்தது –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன-நாக பர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஹயாகாதோ மதுராம் புரீம் -என்கிறபடியே
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் சாது பரித்ராண துஷ்க்ருத் விநாச தர்ம ஸம்ஸ்தாபனங்களுக்காக –
வண் துவராபதி மன்னனாய் வந்து அவதரித்து அருளி சர்வ ஸூ லபனாய்-
(சர்வ உபநிஷத் -சர்வ வித்யைகளை காட்டும் ஸ்ரீ மன்னார் குடி ராஜ கோபாலன் -32-திருக் கோலம் காட்டி அருளுகிறார் )
திரௌபதியா சஹிதா சர்வே நமஸ் சக்ரு ஜனார்த்தனம் -என்கிறபடியே
சரணாகதரான பாண்டவர்களுக்கு இன்னார் தூதன் என நின்று
அர்ஜுனனை ரதியாக்கி தான் சாரதியாய் அவனுக்கு விதேயனாய் நின்ற அளவிலே –

இவ்வர்ஜுனன் தன்னை நிமித்த மாத்ரமாகக் கொண்டு சர்வேஸ்வரன் தன் பிரதிபக்ஷங்களை நிரசிக்க நின்ற நிலையைக் கண்டு
பந்து விநாசம் சித்தம் என்று நிச்சயித்து –
அஸ்தானே ஸ்நேஹத்தால் பிறந்த சோகத்தாலும்
அஸ்தானே கிருபையால் – ஆச்சார்யாதிகள் யுத்த உன்முகரே யாகிலும்
அவர்கள் வதத்தாலே பாபம் வருகிறது என்கிற பயத்தாலும் கலங்கி –
எது ஹிதம் -என்று தெளிய வேணும் என்று பார்த்து –
(யுத்தத்தில் ஸ்திரமாக இருந்ததால் யுதிஷ்ட்ரன் )

யஸ் ஸ்ரேய ஸ்யான் நிச்சிதம் ப்ரூஹி தன்மே சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம் 2-7–என்று விண்ணப்பம் செய்ய –
அவனுடைய சோகத்தை நிவர்திப்பிக்கைக்காக –
தேஹாதி விலக்ஷணமாய் -பர சேஷத ஏக ரசமான நித்யாத்ம ஸ்வரூபத்தையும்
இஸ் ஸ்வரூபம் தெளிந்தவனுக்கு பரம புருஷார்த்த லாபத்துக்கு உபாயங்களான கர்ம ஞான பக்தியாதிகளையும் உபதேசிக்க

தத் ஸ்ரவண ஜெனித நிரதிசய சோகா விஷ்டனான இவனுக்கு ஸ்வரூப அனுரூபமான சரம உபாயத்தை
உபதேசிக்கிறார் இச் சரம ஸ்லோகத்தில் -என்றபடி –

அசித் தத்வ அனுபவம் ஐஸ்வர்யம் -சித் தத்வ அனுபவம் கைவல்யம் -என்றதை பற்ற
உடம்பையும் ஆத்மாவையும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
புருஷார்த்தங்களில் அதமம் ஐஸ்வர்யம் -மத்யமம் கைவல்யம் -உத்தமம் பகவத் அனுபவ கைங்கர்யம் -என்ற
நஞ்சீயர் வார்த்தையை நினைப்பது –

பொல்லாங்கு -இத்யாதி -ஐஸ்வர் யத்துக்கு பொல்லாங்கு அஸ்திரத்வம் –
ஸ்திரமான கைவல்யத்துக்கு பொல்லாங்கு அல்பத்தவம்
இரண்டுக்கும் பொதுவான தீமை ஸ்வரூப அநநரூபத்வம்-
இவை இரண்டும் -நாராயணாய பத யுக்தமான அநந்ய பிரயோஜனத்வ ரூபமான ஸ்வ ஸ்வரூபத்துக்கு விருத்தம் இறே

நன்மை -இதி -ஸ்வரூப அனுரூபம் நன்மை என்றபடி –
அநந்தமாய் ஸ்திரமாய் ஸ்வரூப அனுரூபமாய் இறே பகவத் அனுபவம் இருக்கிற படி –
சகஸ்ர யுக பர்யந்தம் -ஆ ப்ரஹ்ம புவ நால் லோகா -மாம் உபேத்ய -இத்யாதி -கீதா வசனங்களிலே
ப்ராப்யாந்தரத்தின் பொல்லாங்கும் ( சத்ய லோகம் -50-கோடி யோஜனை -500-கோடி மைல் தூரம் )
பகவத் அனுபவத்தின் நன்மையையும் கூறப்பட்டது அனுசந்தேயம்-

ஆக இவ்வளவால் ப்ராப்யத்தின் பரமத்வம் நிரூபிதம் –

ப்ராபகத்தின் பாரம்யத்தை உபபாதிக்கிறார் -பெறுகைக்கு என்று தொடங்கி –
ஸூ சவ் தேசே -6-11-
யுத்தா ஹார விஹாரஸ்ய -6-17-இத்யாதி ஸ்ரீ கீதா ஸ்லோகங்களை திரு உள்ளத்தே கொண்டு அருளிச் செய்கிறார்

ஸூசௌ தேஷே ப்ரதிஷ்டாப்ய ஸ்திர மாஸந மாத்மந-
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜி நகுஸோத்தரம்—৷৷6.11৷৷

யுக்த ஹார விஹாரஸ்ய யுக்த சேஷ்டஸ்ய கர்மஸு.—
யுக்த ஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி துக்கஹா—-৷৷6.17৷৷

உபாயங்களினுடைய அருமை -என்று
யாததோ ஹ்யபி-2-60-
சஞ்சலம் ஹி மன -6-34-
அஸம்சயம் மஹா பாஹோ-6-35- இத்யாதி ஸ்ரீ கீதா ஸ்லோகங்களைத் திரு உள்ளத்தே கொண்டு அருளிச் செய்கிறார் –

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித.–
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந—৷৷2.60৷৷

சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்—-
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸு துஷ்கரம்–৷৷6.34৷৷

ஸ்ரீ பகவாநுவாச–
அஸம்ஸயம் மஹா பாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம் —
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே—৷৷6.35৷৷

இந்த்ரியங்களினுடைய கொடுமை நெஞ்சின் திண்மை என்று –
கர்மங்களின் பாஹுள்ய ப்ராபல்யங்களை அருளிச் செய்கிறார் -செடியார் என்று தொடங்கி –
பூமிராபி -7-4
ஸர்வஸ்ய சாஹம் -16-15-
ஈஸ்வர சர்வ பூதானாம் -18-61-இத்யாதி ஸ்ரீ கீதா வசனங்களை திரு உள்ளத்தே கொண்டு அருளிச் செய்கிறார் –
தன்னுள் -இத்யாதி –

பூமிராபோநலோ வாயுகம் மநோ புத்திரேவ ச.–
அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா৷৷—-7.4৷৷

ஆட்யோபி ஜநவாநஸ்மி கோந்யோஸ்தி ஸத்ருஸோ மயா–
யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத் யஜ்ஞாந விமோஹிதா–৷৷16.15৷৷

யதா தாரு மயீ யோஷித் ந்ருத்யதே குஹகேச்சயா -ஏவம் ஈஸ்வர தந்தரோ அஹம் ஈஹதே
ஸூ க துக்கயோ -ஸ்ரீ பாகவதம் -10-54-12-
என்பதையும் உட்க்கொண்டு அருளிச் செய்கிறார் -மரப்பாவை -என்று தொடங்கி –

அர்ஜுனனுடைய மஹா சோக ஹேது நிரூபணம் –
என்னாருயிர் நீ –என்னும் படி–என்று தொடங்கி -உனக்கு ருசித்தது ஒன்றத்தைச் செய் -என்று
இங்கு யத்தேச்சசி ததா குரு -18-63-என்ற ஸ்ரீ கீதா வசனம் அனுசந்தேயம் –

இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத் குஹ்ய தரம் மயா–
விம்ருஸ்யை தத ஸேஷேண யதேச்சஸி ததா குரு–৷৷18.63৷৷

விஸ்ருஜ்ய சசரம் சாபம் ரதோபஸ்த உபாவிச்த-1-47-இத்யாதி ஸ்ரீ கீதா வசனத்தை உட்க்கொண்டு அருளிச் செய்கிறார்
கண்ணும் கண்ணீருமாய் கையில் வில்லோடு சோர்ந்து விழ-என்று

——————————————————————————–

சரம உபாயம் ..
இது ஒழிந்த உபாயங்களிலே பரந்தது ,இப் பாகம் பிறந்தால் அல்லது இவ் உபாயம் வெளி இடல் ஆகாமையாலே
முத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றி ( திருச் சந்த விருத்தம் -68) வழி கெட நடக்கிறவர்களையும்
(வாணியம்-வாணிபம் பலம் முக்குணத்தினால் பெரும் பலன்களில் இரண்டாக ரஜஸ் தமஸ்ஸுக்களின் பலன்களில் ஒன்றி )
வாத்சல்யத்தின் மிகுதியாலே

பித்தனைத் தொடரும் மாதா பிதாக்களைப் போல ,மீட்கவும் பார்க்கிற சாஸ்திரம் ,
கோடிய மனத்தால் சினத் தொழில் புரிகிற (பெரிய திரு மொழி 1-6-6 ) நாஸ்திகனுக்கும் ,
சத்ருவை அழிக்கைக்கு , அபி சாரமாகிற வழியைக் காட்டி ,
தன்னை விஸ்வசிப்பித்து ,
த்ருஷ்ட போகத்துக்கு ,வழிகளை இட்டு , தன்னோடு இணைக்கி
ஸ்வர்காதி பலன்களுக்கு வழி காட்டி ,
தேக ஆத்ம அபிமானத்தைக் குலைத்து ,
ஆத்ம போகத்துக்கு வழி காட்டி ,
அந்நிய சேஷத்வத்தை அறுத்து ,
பரமாத்ம போகத்துக்கு வழி காட்டி
ஸ்வாதந்த்ரயத்தைப் போக்கி ,
ஸ்வரூப பாரதந்த்ரயத்தை உணர்த்தி
சித்தோ உபாயத்தில் மூட்டுமா போலே –

முந்தை தாய் தந்தை (திரு வாய் மொழி 5-7-7 ) யான இவனும்
நெறி உள்ளி ( திரு வாய் மொழி 1-3-5 )
எல்லா பொருளும் விரிக்கிறான் ( திரு வாய் மொழி 4-5-5 ) ஆகையாலே

பூசலுக்கு ஏறி -கொலைக்கு அஞ்சி -வில் பொகட்ட வனுக்கு தன்னைப் பெறுகைக்கு தானே உபாயம் என்கை சேராது என்று
புறம்பே பரந்து மோஷ அதிகாரி ஆக்கி ,

உபாயங்களை கேட்டு கலங்கின அளவிலே
இவனை உளன் ஆக்குகைக்காக பரம ரஹஸ்யத்தை வெளி இட்டு அருளினான் –
(ஸ்திதோஸ்மி என்று தானே சொன்னானே )

————————————————————————-

இது ஒழிந்த இத்யாதி -புறம்பு பிறந்தது -பரந்தது -எல்லாம் இவன் நெஞ்சைச் சோதிக்கைக்காக –
என்று இறே உலகாரியன் அருளிச் செய்தது –
அதாவது –
யச்ஸ்ரேய ஸ்யான் நிச்சிதம் ப்ரூஹி தன்மே சிஷ்யஸ் தேஹம் சாதி நாம் த்வாம் ப்ரபன்னம் -2-7-என்ற இவனுக்கு

கார்பண்ய தோஷோபஹத ஸ்வபாவம் -ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம் மூடசேதா–
யச்ச்ரேய ஸ்யாந் நிஸ்சதம் ப்ரூஹி தந்மே—ஷிஷ்யஸ்தேஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்—৷৷2.7৷৷

உபாய உபதேசம் பண்ணத் தொடங்குகிற அளவிலே முதலிலே இத்தை உபதேசியாதே
உபாயாந்தரங்களை பரக்க நின்று உபதேசித்தது எல்லாம் அவ்வளவில் பர்யவசித்து விடுமோ –
அவற்றினுடைய தோஷ தர்சனத்தாலே இவ்வுபாய உபதேசத்துக்கு அதிகாரியாமோ என்று
இவனுடைய ஹ்ருதயத்தை சோதிக்கைக்காக என்றபடி –

முத்திறத்து -இத்யாதி
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் -4-5-5-என்று இறே ஆழ்வார் அருளிச் செய்தது –
எல்லா பொருளும் விரித்தானை -4-5-5–என்று
முதல் வார்த்தையிலே -தர்மா தர்மங்கள் இன்னது என்று அறிகிலேன் –
உனக்கு நான் சிஷ்யன் -ப்ரபன்னனான எனக்கு நல்லதைச் சொல்லுவாய் -என்ற அர்ஜுனனுக்கு –
பிரகிருதி புருஷ விவேகத்தைப் பிறப்பித்து –
கர்ம யோகத்தை விதித்து –
அது தன்னை கர்த்ருத்வத்தைப் பொகட்டு-
பல அபிசந்தி ரஹிதமாக அனுஷ்டி-என்று அநந்தரம்

ஆத்ம ஞானத்தைப் பிறப்பித்து –
அநந்தரம் பகவத் ஞானத்தைப் பிறப்பித்து

அனவரத பாவனா ரூபமான உபாசன க்ரமத்தை அறிவித்து இவ்வளவும் கொண்டு போந்து
(தைலதாராவத் -ஸ்ம்ருதி –ஸ்நேஹ பூர்வம் அநு த்யானம் -தொடர்ந்து த்யானம் -அநவரத பாவனா ரூபம் -தானே பக்தி )
இதன் அருமையை இவன் நெஞ்சில் படுத்தி
இவை சக்யம் என்று சோகித்த அநந்தரம் –
ஆகில் என்னைப் பற்று நிர்ப்பரனாய் இரு -என்று தலைக் கட்டுகிறான் என்றபடி –

இவ்விடத்தில் மஹாக்ரம -676- என்ற திரு நாமத்தின் வ்யாக்யானமான –
பரமதுங்கம் ஆத்மாநம் பரம நிம்ந பவ பாதாளாத் ஜீவன் ஆரோஹயத-மஹதீ ஆரோஹண சோபாந
பர்வ ஆநு பூர்வீ அஸ்ய இதி மஹா க்ரம
யதா ஜன நீ ஸ்தநந்த்யம் ஆதவ் ஸ்தன்யம் தாபயதி அத துக்தம் அத ஆஹாரம் அத போகான்
கமயதி ஏவமயம்
ஸூக்ருதிநம்
அத்வேஷ ஆஸ்திக்ய ஆபிமுக்ய அனுவர்த்தன ஞான பக்தி விஸ்ரம்ப க்ரமேணைவ ப்ராப்யதி
அப்யுத்தா நார்த்தம் சந்த அனுவர்த்த நார்த்தம் ச -என்ற பட்டர் பாஷ்யத்தையும் –

தத் தத் அதிகாரி விசேஷ அபேக்ஷயா புருஷார்த்தம் அஸ்தி –பஷ்ய விசேஷை பாலா நிவ சடான் வசீ கர்த்தும் -என்ற
வேதார்த்த சங்க்ரஹ தாத்பர்ய தீபிகா வாக்யத்தையும் –

தம பிரசுராணாம் ரஜ பிரசுராணாம் சத்வ பிரசுராணாம் ச வத்சலதர தயைவ ஹிதம்
அவபோத யந்தி வேதா -என்ற ஸ்ரீ கீதா பாஷ்ய வாக்யத்தையும்

தாம்பூலாத் யர்த்தி ந புத்ரா பித்ராதிபி தத் பிரதாந அபாவே ஸுர்யாதி நா ப்ரணச்யந்தி
ததா அத்ராபி -என்ற தாத்பர்ய சந்திரிகா வாக்யத்தையும்

சாஸ்திரமானது வத்சலதரம் ஆகையால் –அவர்கள் அபேத ப்ரவ்ருத்தராய் நசிக்க விட ஷமம் அல்லாமையாலே —
கொள் கொம்பிலே யேற்றுகைக்கு சுள்ளிக் கால் நட்டுவாரோபாதி–
இவ்வோ முகங்களாலே தன்னுடைய தாத்பர்ய அம்சத்தில் ஆரோபிக்கைக்காக ப்ரவர்த்திப்பிக்கிறது -என்ற
ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஸூக்தியையும் கண்டு கொள்வது –

வத்ஸலையான மாதா பிள்ளை பேகணியாமல் மண் தின்ன விட்டு ப்ரத் ஒளஷதம் இடுமா போலே
எவ்வுயிர்க்கும் தாயாய் இருக்கும் வண்ணமான இவனும் ருசிக்கு ஈடாக பந்தமும்
பந்தம் அறுப்பதோர் மருந்தும் காட்டும் இறே –
அது தானும் ஆஸ்திக்ய விவேக அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்தர்ய நிவ்ருத்தி
பாரதந்தர்யங்களை உண்டாக்கின வழி -என்று இறே இவர் தாமும் ஆச்சார்ய ஹிருதயத்தில்-41- அருளிச் செய்தது

—————————————————————————————————–

சரம ஸ்லோகார்த்தம் பரம ரஹஸ்யம் ..
ஐந்தாம் வேதத்துக்கு உபநிஷத்தான ஸ்ரீ கீதையிலே பரக்கச் சொல்லி
குஹ்ய தமம் -என்று
தலைக் கட்டின பக்தி யோகத்துக்கு மேலாக
ஒரு வார்த்தையாகச் சொல்லி ,
ஒருத்தியுடைய சரணாகதி நம்மை நெஞ்சை அழித்தது என்கிற துணுக்கத்தோடே
இது ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று மறைத்த போதே
இது பரம குஹ்ய தமம் -என்று தோன்றும் –

(ஸர்வ குஹ்ய தமம் பூயஸ் ஸ்ருணு மே பரமம் வச–
இஷ்டோஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்–৷৷18.64৷৷

மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு–
மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே–৷৷18.65৷৷

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷

இதம் தே நா தபஸ்காய நா பக்தாய கதாசந–
ந சாஸூஷ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோப்யஸூயதி–৷৷18.67৷৷)

சரம ஸ்லோகார்த்த வைபவஞ்ஞர் ..
இதன் ஏற்றம் அறிவார் –
பரமன் பணித்த பணி வகையே (விண்டே ஒழிந்தன வினை யாயின எல்லாம் -திரு வாய் மொழி 10-4-9) -என்றும் –
பொன் ஆழிக் கையன் திறன் உரையே (சிந்தித்து இரு -இருப்பை பெற -முதல் திருவந்தாதி -41 ) -என்றும் –
மெய்ம்மைப் பெரும் வார்த்தை (விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர்- நாய்ச்சியார் திருமொழி 11-10) -என்றும் –
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளது எனக்கு (நான் முன் திருவந்தாதி -50 ) -என்றும்
இருக்கும் வார்த்தை அறிபவர் ( திருவாய் மொழி 7-5-10)- இறே –

சரம ஸ்லோகார்த்த கெளரவம் ..
இதுக்கு அதிகாரிகள் கிடையாமையாலே
தேர் தட்டினையும் –
சேர பாண்டியனையும் சீர் தூக்கி
செய்ய அடுப்பதென் என்று
பல கால் நடந்து-நொந்து- துவளப் பண்ணி
சூழ் அரவு கொண்டு
மாச உபவாசம் கொண்டு
மூன்று தத்துக்கு பிழைத்தல் சொல்லுகிறோம் என்றும்
இவனுக்குச் சொல்ல இழிந்தது காண் என்றும் நம் முதலிகள் பேணிக் கொண்டு போருவார்கள் ..

சரம ஸ்லோக அதிகாரிகள் ..
இதில் சொல்லுகிற அர்த்தம்
எவ் வுயிர்க்குமாய்–( 1-5-3–திசைகள் தாயோன் பரத்வம் -எல்லா வுயிர்க்கும் தாயோன் ஸுலப்யம்) இருந்ததே ஆகிலும்
முக் குணத்து இரண்டு அவை அகற்றி (திரு எழு கூற்று இருக்கை –9 )
பரம சாத்விகனாய் மால் பால் மனம் சுழிப்ப (மூன்றாம் திருவந்தாதி -14 ) சம்சாரத்தில் அருசியை உடையனாய்

திரு அரங்கர் தாம் பணித்தது என்றால் (நாய்ச்சியார் திருமொழி 11-10 )
துணியேன் இனி ( பெரிய திருமொழி 11-8-8) என்னும் படி வியவசாயம் உடையவனாய்

நாஸ்திகனும் ஆஸ்திக நாஸ்திகனும் அன்றிக்கே
(நீர் பணித்த அருள் என்னும் )ஒள் வாள் உருவி எறியும் படி (பெரிய திருமொழி 6-2-4 -சரம ஸ்லோகமே அருள் என்னும் ஒள் வாள் )
ஆஸ்திகர்க்கே சரண் ஆவான் இதுக்கு அதிகாரி யாம்படியாய் இருக்கும் —

சரம ஸ்லோக வாக்யார்த்தம்
கீழே உபாயங்களை வெளி இட்டு
அவற்றுக்கு உள்ளீடாய் நின்று காரியம் செய்கிற தன்னை உபாயமாகச் சொல்லி
மேலே ஒரு உபாயம் சொல்லாமையாலே
சரம ஸ்லோகம் என்று பேரான இது
இந்த உபாயத்துக்கு இவன் செய்ய வேண்டும் அவற்றையும் ,
இவ் உபாயம் இவனுக்கு செய்யும் அவற்றையே சொல்லுகிறது ..

சரண்ய சரணாகத க்ருத்யம் ..
1-விடுவித்துப்
2-பற்றுவித்து ,
3-விலக்கடி அறுக்கை உபாய க்ருத்யம் ..

1-விட்டுப்
2-பற்றி
3-தேறி இருக்கை அதிகாரி க்ருத்யம் –

அவதாரிகை முற்றிற்று ..

————————————————-

சரம ஸ்லோகத்தின் பரம ரகஸ்யத்தை அருளிச் செய்கிறார் -ஐந்தாம் வேதத்துக்கு என்று தொடங்கி –
கோவிந்தேதி-ஸ்லோக அர்த்தத்தை உட்க்கொண்டு அருளிச் செய்கிறார் -ஒருத்தி -இத்யாதி -துணுக்கத்தோடே -என்று
இங்கே மால் என்கோ-3-4-6- என்கிற இடத்து ஈடு அனுசந்தேயம் –

இதம் தே நாத பஸ்காயா-18-67-என்றத்தையும் உட்க்கொண்டு அருளிச் செய்கிறார் –
இது ஒருவருக்கும் சொல்லாதே கொள் -என்று -தே -த்வயா என்றபடி –

சரம ஸ்லோகார்த்த வைபஞ்ஞர் இன்னார் என்பதனை அருளிச் செய்கிறார் –
இதின் ஏற்றம் அறிவார் -இத்யாதி —

ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ முதலியாண்டான் போன்ற மஹாச்சார்யர்கள் சரிதத்தை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் இதுக்கு இத்யாதி
மாச உபவாசம் இத்யாதி –
ஸ்ரீ ஆழ்வான் சரித்ரத்திலே மாச உபவாசம் கொண்டதும் –
ஸ்ரீ ஆண்டான் சரித்ரத்திலே மூன்று தத்து இத்யாதியும் பிரசித்தம்
(அடியேன் -தாசாரதி என்ன- மூன்றும் தொலைத்து வாரும் என்றார் ஸ்ரீ நம்பி
மூன்றும் இல்லா விடில் ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்வார் என்று சொல்லி நம்பி திருவடி தலை மேல் வைத்து அருளினார் )
மூன்று தத்து -வித்யா -தன -ஆபீ ஜாத்ய மதங்கள்-

இது தனக்கு அதிகாரிகள் இன்னார் என்னுமத்தை -அருளிச் செய்கிறார் இதில் என்று தொடங்கி –

விட்டு சித்தர் கேட்டு இருப்பர் -என்கிறபடியே அதிகாரிகள் நியதர் -அதாவது
செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை
விட்டு சித்தர் கேட்டு இருப்பர் -நாச் -11-10-என்று கரண த்ரயத்தாலும் செவ்வியராய்
அது தன்னை அர்த்த க்ரியா காரியாய்க் கொண்டு கோயிலிலே சாய்ந்து அருளினவர் தாம் –

அர்ஜுனன் வ்யாஜத்தாலே திருத் தேர் தட்டிலே நின்று அருளிச் செய்த -யதார்த்தமுமாய் -சீரியதுமாய் -ஸூலபமுமான
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -18-66- என்கிற வார்த்தையை பெரியாழ்வார் கேட்டு -தன் நிஷ்டராய் இருப்பர் என்கிறபடி –
(மெய்ம்மை -பெரு -வார்த்தை –மூன்று சொற்களின் அர்த்தம் )
இவ்வர்த்தத்துக்கு அதிகாரிகள் இது கேட்டால் இதின் படியே நியதராய் இருக்குமவர்கள் என்றபடி –

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷

சரம ஸ்லோக நாம நிர்தேச ஹேதுவை அருளிச் செய்கிறார் -கீழே -என்று தொடங்கி –
சரம ஸ்லோகத்தின் வாக்யார்த்தத்தை அருளிச் செய்கிறார் -இவ்வுபாயத்துக்கு என்று தொடங்கி –
பூர்வ அர்த்தத்தாலே அதிகாரி க்ருத்யத்தையும் –
உத்தர அர்த்தத்தாலே உபாய க்ருத்யத்தையும் அருளிச் செய்கிறான் -என்றபடி

உத்தர அர்த்தத்தில் அதிகாரி க்ருத்ய அம்ச லேசமும் கூறப்படுவதாக பரந்த ரகஸ்யம் கூறுகிறது –
(ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை -மாஸூச -சோகம் இல்லாமல் இருப்பது)
சரண்ய சரணாகத க்ருத்யங்களை அருளிச் செய்கிறார் -விடுவித்து என்று தொடங்கி

—————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவெழு கூற்றிருக்கை -ஸ்ரீ உ . வே . P.B.A ஸ்வாமிகள் வியாக்யானங்கள் —

July 29, 2016

ஸ்ரீ மன் நாதமுனிகள் வகுத்து அருளினை அடைவிலே
மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் எட்டாவது பிரபந்தமாக அமைந்தது இது –

——————-

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர்  வாழ் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல் —தனியன்

—————–

அவதாரிகை –

வென்றியே வேண்டி வீழ் பொருட்க்கு இரங்கி வேற் கணார் கலவியே கருதி நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் -என்றும்
சாந்து ஏந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்பத்து வெள்ளத்து ஆழ்ந்தேன் -என்றும்
தாமே அருளிச் செய்தபடி
விஷய பிரவணராய் திரிந்து கொண்டு இருந்த இவ்வாழ்வார்

தம்மை எம்பெருமான் திருத்திப் பணி கொள்ளத் திரு உள்ளம் பற்றி விஷயங்களில் ஆழ்ந்து திரிகிற இவரை
சாஸ்த்ரங்களைக் காட்டித் திருத்த முடியாது –
நம் அழகைக் காட்டியே மீட்க வேணும் என்று கொண்டு தன் அழகைக் காட்டிக் கொடுக்க

ஆழ்வாரும் அதைக் கண்டு ஈடுபட்டு –
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது -அடியேன் நான் பின்னும்
உன் சேவடி அன்றி நயவேன் -என்னும்படி அவகாஹித்தார் –

இவர் இப்படி தன் பக்கல் அவகாஹிக்கக் கண்ட எம்பெருமான் –
இப்போது இவருக்கு நம் இடத்து உண்டான பற்று
மற்ற விஷயங்களை போல் அல்லாமல் சம்பந்த உணர்ச்சியை முன்னிட்டுப் பிறந்ததாக வேணும் –
இல்லையேல் இப்பற்று இவருக்கு நிலை நிற்காது ஒழியினும் ஒழியும் என்று எண்ணி

எல்லா பொருள்களையும் விளக்குவதான திரு மந்திரத்தையும்
தனது ஸுசீல்யம் முதலிய திருக் குணங்களையும் திரு மந்த்ரார்த்துக்கு எல்லை நிலமான திவ்ய தேசங்களையும்
ஆழ்வாருக்கு காட்டிக் கொடுக்க –

அவரும் வாடினேன் -வாடி -என்று தொடங்கி
எம்பெருமான் உகந்து அருளின இடமே பரம ப்ராப்யம் என்று அனுபவித்தார் –

இங்கனம் அனுபவித்த ஆழ்வாருக்கு இவ்வனுபவம் நித்யமாய்ச் செல்லுகைக்காக
இவரைத் திரு நாட்டில் கொண்டு போக வேணும்
எனக் கருதிய எம்பெருமான் இவர்க்கு ஜிஹாசை பிறக்கும்படி அதனுடைய தண்மையை அறிவிக்க

அறிந்தவர் அஞ்சி நடுங்கி -மாற்றம் உள -என்னும் திரு மொழியிலே –
இரு பாடு எரி கொள்ளியின் உள் எறும்பே போல் -என்றும்
பாம்போடு ஒரு கூரையில் பயின்றால் போல் -என்றும் –
வெள்ளத்து இடைப்பட்ட நரியினம் போலே -என்றும்
தமது அச்சத்துக்கு பலவற்றை த்ருஷ்டாந்தமாகச் சொல்லிக் கதறினார் –

இப்படி இவர் கதறிக் கதறி –
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -என்றும்
அந்தோ அருளாய் அடியேற்கு உன் அருளே -என்றும் -சொல்லி வேண்டின இடத்தும்
சிறு குழந்தைகள் பசி பசி என்று கதறி அழுதாலும்
அஜீரணம் முதலியவை கழிந்து உண்மையான பசி உண்டாம் அளவும்
சோறிடாத தாயைப் போலே எம்பெருமான் –
இவருக்கு முற்ற முதிர்ந்த பரம பக்தி பிறக்கும் அளவும் நாம் முகம் காட்டுவோம் அல்லோம்-
என்று உதாசீனனாய் இருக்க –

ஒரு க்ஷணமும் அவனைப் பிரிந்து இருக்க மாட்டாத ஆழ்வார் மிகுந்த தாஹம் கொண்டவர்கள்
நீரிலே விழுந்து -நீரைக் குடிப்பதும்
நீரை வாரி மேல் இறைத்துக் கொள்வதும் செய்யுமா போலே அவ்வெம்பெருமானை
வாயாலே பேசியும் –
தலையாலே வணங்கியும் –
நெஞ்சால் நினைத்தும் -தரிக்கப் பார்த்தார் –
திருக் குறும் தாண்டகம் என்னும் திவ்ய பிரபந்தத்தில் –

தாஹம் அளவற்றதாய் இருக்க சிறிது குடித்த தண்ணீர் திருப்தியை உண்டு பண்ணாமல்
மேலும் விஞ்சிய விடாயை பிறப்பிக்குமா போலே
இவர் திருக் குறும் தாண்டகத்திலே அனுபவித்த அனுபவம்
பழைய அபி நிவேசத்தை கிளப்பி பெரிய ஆர்த்தியை உண்டாக்கவே –
நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையோ –என்று
ஆர்த்தராய் சரணம் புகுகிறார் –
இத் திரு வெழு கூற்று இருக்கை -என்னும் பிரபந்தத்தில் –

——————————————————–

ஆசு கவி –
அருமைப் பட்டு சொற்களை சேர்த்து மஹாப் பிரயாசமாகப் பாடுகை இன்றிக்கே –
பல நிபந்தனைகள் உடன் கூடிய பாடல்களையும் -விரைவில் பரவசமாக பாடுதல்-

மதுரகவி –
சொற்சுவை பொருள்சுவை விளங்க பல வகை அலங்காரம் பொலிய பாடுவது

விஸ்தார கவி –
கலி வெண்பா முதலியவற்றால் விஸ்தரித்து பாடுவது

சித்திர கவி –
சக்ர பந்தம் -பத்ம பந்தம் -முரஜ பந்தம் -நாக பந்தம் -ரத பந்தம் –

எழு கூற்று –
முதல் கூறு மூன்று அறைகள்
இரண்டாம் கூறு ஐந்து அறைகள்
மூன்றாம் கூறு ஏழு அறைகள்
நான்காம் கூறு ஒன்பது அறைகள்
ஐந்தாம் கூறு 11 அறைகள்
ஆறாம் கூறு 13 அறைகள்
ஏழாம் கூறு 13 அறைகள் –

இதே போலே மேலும் கீழும் இரண்டு பாகங்கள் கொண்டதே –

அர்த்த சக்தியாலும்
சப்த சக்தியாலும் நினைப்பூட்டும் சொற்கள் கொண்டு நிறைக்க வேணுமே

ஒரு பேர் உந்தி இருமலர்த் தவசில் -இரு -இரண்டு பெருமை என்ற பொருள்களில் –

ஒன்றிய -அஞ்சிறை -நால் வாய் -இரு நீர் -ஓன்று -ஆறு பொதி –போன்ற இடங்கள் போலே
அர்த்த சப்த சக்தியாலும் காட்டலாம் –

எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றை விசதமாக அனுபவித்து –
அவ்வனுபவம் உள் அடங்காமல் வழிந்து புறப்பட்ட ஸ்ரீ ஸூ க்திகளிலே –
இது போன்றவை அமைந்தவை –

ஸ்ரீ வால்மீகி பகவான் -வாயினின்றும் வெளி வந்த
மா நிஷாத ப்ரதிஷ்டாம் -நான் முகன் பிரசாதத்தால் லக்ஷணம் குறை இன்றி அமைந்தால் போலே –
இதுவும் ஸ்வ பிரயத்தன பூர்வகமான பிரபந்தம் இல்லாமல்
ஸ்ரீ யபதி திருவருளால் அவதரித்த பிரபந்தம் -என்றால் சொல்ல வேண்டாவே –

—————————————–

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்  ஒரு முறை யானை ஈன்றனை -தவிச்சு-ஆசனம் –

விலக்ஷணமாய் பெருமை பொருந்திய திரு நாபியில் உண்டான பெரிதான தாமரைப் பூ வாகிற-
ஆசனத்தின் மீது ஒரு கால் பிரமனை படைத்து அருளினாய் –

உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான் முகனை -பெரியாழ்வார்

உத்பத்திக்கு ஹேதுவான நீயே ரஷித்து அருள வேணும் -என்கைக்காக
முதலிலே இத்தை அருளிச் செய்கிறார் –

—————————–

ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-

ஸ்ரீ ராமனாய் அவதரித்த காலத்தில் –
சந்த்ர ஸூரியர் அச்சத்தால் மேலே சஞ்சரிக்க ஒண்ணாதததும் –

பகலவன் மீதி யங்காத இலங்கை -பெரிய திருமொழி -5-8-7- –

நீர் மலை வன துர்க்கங்கள் ஆகிற அரண்களை உடையதுமான இலங்கா புரியை
இரண்டு நுனியும் வளைந்த ஒப்பற்ற சார்ங்க வில்லில் பொருந்தியதும்
இரண்டு பற்களை உடையதும்
நெருப்பை கக்குகிற வாயை உடையதுமான அம்பினால் நீராக்கினாய் –

ஈர்கின்ற எயிற்றை உடையது என்றுமாம் –

——————————————————————-

ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப் பொரு மாணாகி-
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-

மாவலியிடம் சென்று மூன்று அடி நிலத்தை யாசித்து –

நானிலம் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் –பூமியிலே
யஜ்ஜோபவீதத்தோடே கூட கிருஷ்ணா ஜினமும் விளங்கா நின்ற திரு மார்பை உடைய

இரு பிறப்பு ஒரு மாண் ஆகி – ஒரு ப்ராஹ்மண ப்ரஹ்மச்சாரியாகி

மான் கொண்ட தோல் மார்பின் மாலையாய் -பெரிய திருமொழி –

த்விஜ -ஜன்மனா ஜாயதே -சூத்ர கர்மணா ஜாயதே த்விஜ –
முதலில் யோனியில் பிறந்து –
வேதம் ஓத இரண்டாம் பிறப்பு

ஒரு காலத்தில் இரண்டு திருவடிகளாலே மூன்று லோகங்களையும் அளந்து கொண்டாயே
கீழே அம்பால் செய்த கார்யம் அருளிச் செய்து
இதில் அழகால் செய்த கார்யம் அருளிச் செய்கிறார் –

பாலை நிலம் -பிராணிகள் சஞ்சரியாத நிலம் –
நான்கு வகை தன்மை இல்லாததே பாலை என்பதால் அத்தை சொல்ல வில்லை –

————————————————–

ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-நாற்றிசை நடுங்க–அஞ்சிறைப் பறவை ஏறி
நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-

கருடாரூடனாய் -வந்து அருளினான்
நாலுவாய் தொங்குதல் -மும்மதம் -இரு செவி –
இது ஒரு கால் அழகே
கை அழகே
தலை அழகே என்று
தாய் குழந்தையை -அழகில் ஆழ்ந்து அவன் அருளிச் செய்ததை ஆழ்வார் அருளிச் செய்கிறார்

பிரஜை கிணற்றில் விழுந்தால் –
காதும் கண்ட வாளியும்-காலும் தலையும் -வடிவும் இருக்கும் படி காண் -என்பாரைப் போலே
இடர்ப்பட்ட இதனுடைய அவயவங்கள் அவனுக்கு ஆகர்ஷகம் ஆனபடியாலே சொல்லுகிறது –

ஒரு தனி வேழம் –
தொழும் காதல் களிறு அன்றோ ஒப்பற்ற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்

அரந்தை- துன்பம் –

———————————————————————–

ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-முத்தீ நான்மறை ஐவகை வேள்வி
அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை-

நான்குடன் -அடக்கி –
உண்ணுதல் உறங்குதல் அஞ்சுதல் விஷய போகம் செய்தல் போன்றவை அடங்க இல்லை செய்து –

ஆஹார நித்ரா பய மாய்த்து நா நி சாமான்ய மேதத் பசுபிர் நராணாம் —

இரு பிறப்பு அறுப்போர் –
நீண்ட சம்சார துக்கத்தை நீக்கிக் கொள்ள வல்ல மகான்களாலே

————————————————————–

ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை-
முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-
ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-
கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை-
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை
சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண-
நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின்-
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை-

நாம் முக்கண் உடையோம் -அரவம் பூண்ட பெருமை உடையோம் நாகாபரணன் —
கங்கை நீர் தரித்த வலிமை உடையோம் -என்று மேனாணித்து இருந்தாலும்

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்வார் வெள்கி நிற்ப –

தன்மை பெருமையுள் நின்றானை –
சிவனாலும் அறியப் போகாத தன்மையை உடையனாய் இருக்கிற பெருமை பொருந்தியவன்

நின்றனை –
முன்னிலை ஒருமை வினை முற்று –

அச்சுவை கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ –
பரம போக்யன் –

அறு சுவைப் பயனும் ஆயின –

வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி –

பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் –

உறங்குவான் போல் யோகு செய்யும் துயில் –

அமர்ந்தாய்
முன்னிலை வினை முற்று –

———————————————————

ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் -முப்பொழுதும் வருட
அறிதுயில் அமர்ந்தனை-
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை
மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-
அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை –
அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை-
ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை –
அறமுதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை-

ஐம்பால் ஓதியை -மென்மை குளிர்ந்து நறு மணம் கருமை நெடுமை –
ஐந்து லக்ஷணங்கள் உடைய கூந்தலை உடைய பிராட்டியை

அறுபதம் -ஷட்பதம் -வண்டு

ஒன்றாய் விரித்து நின்றனை-
ஸூ ஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் –

மாயா வாமனனே மது ஸூ தா நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாயத்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்ற வாறு இவை என்ன நியாயங்களே –

————————————————————————–

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை வரு புனல் பொன்னி
மா மணி யலைக்கும் செந்நெல் ஒண் கழனித் திகழ் வன முடுத்த
கற்போர் புரி செய் கனக மாளிகை-நிமிர் கொடி –
விசும்பில் இளம் பிறை துவக்கும் செல்வம் மல்கு
தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம-
நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

திகழ் வன முடுத்த கற்போர் புரி –
விளங்கும் வனங்களை நான்கு புறங்களிலும் உடையதும் –
வித்வான்கள் உடைய நகரமாகச் செய்யப் பெற்றதும் –

புரி செய் -புரிசை பாட பேதம் –
வித்வான்கள் படுகாடு கிடைக்கும் நகரி என்றவாறு –

புரிசை –
மதிள்களை உடைத்ததாய் என்றபடி –

கனக மாளிகை-நிமிர் கொடி –
பொன் மயமான மாளிகைகளின் நின்றும் மேல் முகமாக ஓங்கும் த்வஜங்கள் –

ஒரு பேர் உந்தி -தொடங்கி-ஒன்றாய் விரித்து நின்றனை -என்னும் அளவும் –
ஆஸ்ரிதர்களை ரஷித்து அருளும் ஸ்வரூப ஸ்வ பாவங்களை பரக்கத் பேசி
இந்த திருக்குணங்கள் செவ்வனே விளங்க திருக் குடந்தையில் கிடக்கிற கிடையிலே ஈடுபட்டு அங்கே-
சம்சார தாபங்களை தீறும்படி அருள் புரிய வேணும் என்று ஆர்த்தராய் சரணாகதி பண்ணித் தலைக் கட்டுகிறார் –

தம்முடைய ஆர்த்தி எல்லாம் தோற்ற திருவடிகளில் தீர்க்க சரணாகதி பண்ணியும் –
இன்னும் இவரைக் கொண்டு
திவ்ய பிரபந்தங்களை வெளியிடுவித்து நம்மை வாழ்விக்க
திரு உள்ளம் பற்றி திரு முகம் காட்டாது ஒழியவே-இவர் மடலூரப் பெற்று
நாம் சிறிய திருமடல் பெரிய திரு மடல் பெறப் பெற்றோமே -என்று சங்கதி –

————————————————————————–

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –

ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி பெறாமல் இருப்பதை-
ஆழ்வார் அனுசந்திப்பதாக ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த -அருளிச் செயல் ரகஸ்யம்-திருமந்திர பிரகரணம் -ஸ்ரீ உ .வே .வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ரகஸ்ய பூஷணம் –

July 28, 2016

ஸ்ரீ யபதியான -சர்வேஸ்வரனாலே-சகல ஜகத் உஜ்ஜீவன அர்த்தமாக திருவவதரித்து அருளின
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் –
சம்சார சேதனர்க்கு தத்வ ஞானம் பிறந்து -அவர்களுக்கு உஜ்ஜீவிகைக்கு உடலாக
தம்முடைய பரம கிருபையாலே -அருளிச் செயல் ரகஸ்யம் -என்று பிரசித்தமான
ஸ்ரீ ரகஸ்ய த்ரய வியாக்யானத்தை அருளிச் செய்தார் –

அதற்கு பூர்வர்கள் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே பூஷணம் -என்ற விவரணம் அருளிச் செய்து உள்ளார் –

தனியன்கள் –

திராவிடம் நாய ஹ்ருதயம் குரு பர்வ க்ரமாகதம்
ரம்யஜா மாத்ரு தேவேந தர்சிதம் கிருஷ்ண ஸூ நா-

அவிட்டம் -திரு நக்ஷத்ரம்
திராவிடம் நாய ஹ்ருதயம்-எல்லா ஆழ்வார்களுடைய ஹ்ருதயம் இங்கு
கீழே ஆச்சார்ய ஹ்ருதயம் -நம்மாழ்வார் திரு உள்ளக் கருத்து
குரு பர்வ க்ரமாகதம்
ரம்யஜா மாத்ரு தேவேந தர்சிதம் கிருஷ்ண ஸூ நா-ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை திருக்குமாரர்

மா முடும்பை அண்ணலோடு சேமமுடன் வைகுந்தம் சென்றக்கால் மாம் என்று தொட்டு உரைத்த சொல்லும்
த்வயம் தன்னின் ஆழ் பொருளும் எட்டு எழுத்தும் சொல்லுவார் யார் –ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்

தலையான வெட்டெழுத்தில் பிறந்து சரணாகதித்தாய்
முலை யாரமுதில் வளர்ந்த பிரான் முடும்பைக்கு அதிபன்
மலையார் திருபுயத்தான் மணவாளன் மலர் அடிக்கே
நிலையான நெஞ்சம் பெற்றே யும்பர் வாழ்வு நிலை பெற்றதே–

ஸ்ரீ யபதியாய் ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -நித்ய முக்த அனுபாவ்யனாய் –
நிரதிசய ஆனந்த யுக்தனாய்–இருக்கிற சர்வேஸ்வரன் –
(பத்தர்களுள் இங்கேயே அனுபவிக்கும் ஆசை கொண்டவர்கள் தானே -முமுஷுக்கள்)
அந்த நித்ய ஸூரிகளோபாதி-தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்ய ரசராய் வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும்
அத்தை இழந்து அசந்நேவ-என்கிறபடியே (ப்ரஹ்மம் அசத் என்றால் இவனும் அசத் – சத் என்று அறிந்தால் வாழ்கிறான் )
அசத் கல்பராய் கிடக்கிற சம்சார சேதனர் உடைய இழவை அனுசந்தித்து
அத்யந்த வியாகுல சித்தனாய் (காருண்யத்தால் வந்த கலக்கம் )

இவர்கள் கரண களேபரங்களை இழந்து இறகு ஒடிந்த பஷி போலே கிடக்கிற தசையிலே
கரணாதிகளைக் கொடுத்து அவற்றைக் கொண்டு வியபசரியாதே தன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கைக்கு உடலாக
அபௌருஷேயமாய் -நித்ய நிர்தோஷமாய்-ஸ்வத பிரமாணமான வேதத்தையும் –
தத் உப ப்ரஹ்மணங்களான ஸ்ம்ருதி இதிகாச புராணாதிகளையும்
பிரவர்த்திப்பித்த இடத்திலும்

அந்த சாஸ்திர அப்யாசத்துக்கு அநேக யோக்யதை வேண்டுகையாலே -அவ்வழியாலே ஜ்ஞானம் பிறந்து
சேதனர் உஜ்ஜீவிக்கை அரிதாய் இருக்கிறபடியைத் திரு உள்ளம் பற்றி
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் ஸூக்ரஹமாக இவர்கள் அறியலாம்படி பண்ண வேணும் என்று
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய பிரதிபாதகமான ரகஸ்ய த்ரயத்தையும்
ஸ்வயம் ஏவ ஆச்சார்யனாக நின்று பிரகாசிப்பித்தது அருளினான் –

(மூன்று விஷயங்களை அறிந்து கொள்ள ரஹஸ்ய த்ரயம்
திரு மந்த்ரம் -ஸ்வரூபம் விளக்கும் / சரம ஸ்லோகம் உபாயம் விதிக்கும் / த்வயம்-புருஷார்த்தம் கைங்கர்யம் பிரார்த்தனை
தானே வெளியிட்டு -ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய பதவி –
உபதேசம் பண்ணினவன் ஒருவன் -வெவ்வேறே காலம் வெவ்வேறே தேசம் வெவ்வேறே அதிகாரிகளுக்கு )

அதில் ஸ்ரீ திருமந்த்ரத்தை பத்ரிகாஸ்ரமத்திலே ஸ்வ அம்ச பூதனான நரன் விஷயமாகப் பிரகாசிப்பித்தான்
ஸ்ரீ த்வயத்தை விஷ்ணு லோகத்திலே ஸ்வ மஹிஷி விஷயமாக -பிராட்டி விஷயமாக பிரகாசிப்பித்தான்
ஸ்ரீ சரம ஸ்லோகத்தை திருத்தேர் தட்டிலே ஸ்வ ஆஸ்ரிதனான அர்ஜுனன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
ஆகையால் இறே-ஸ்ரீ லஷ்மீ நாத சமாரம்பம் என்று குரு பரம்பர ஆதியிலே ஈஸ்வரனை அனுசந்திக்கிறது –

முமுஷு வாகிறான் -அவிச்சின்ன பகவத் அனுபவ பிரதிபந்தக சம்சார நிவ்ருத்தியில் இச்சை யுடையான் ஒருவன் –
இவனுக்கு ரகஸ்ய த்ரய ஜ்ஞானம் அவஸ்ய அபேஷிதம்
இனி இந்த ரகஸ்ய த்ரயம் தான் சப்தம் ஸூக்ரஹமாய் இருந்ததே யாகிலும் அர்த்தம் உபதேச கம்யம் ஆகையாலும்
அத்தை அறிந்தே எல்லாரும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும்
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் பூர்வாச்சார்யர்களுடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை
சர்வர்க்கும் ஸூக்ரஹமாகவும் ஸூ வ்யக்தமாகவும் அழகிய மணவாள பெருமாள் நாயனார்
தம்முடைய பரம கிருபையாலே இப் பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –

இப் பிரபந்தத்தில் இவர் அருளிச் செய்கிற வாக்யங்களில் எல்லாம் அருளிச் செயல் சந்தைகளையே சேர்த்து அருளிச் செய்கிறது
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் பேசின திவ்ய ஸூக்திகள் ஆகையாலே ஆப்த தமமுமாய் அத்யந்த போக்யமுமாய்
இருக்கிற இதுவே நமக்கு அநவரதம் அபிமதம் ஆகையாலும்
முகம் அறிந்தவன் கோத்த முத்து பெரு விலையனமாம் போலே சந்தைகளை தாம் சேர்த்த
சாதுரியாலே அருளிச் செயலில் ரசஜ்ஞ்ர்க்கு இதில் அர்த்தத்தில் காட்டிலும்
சப்தம் தானும் மிகவும் இனிதாய் இருக்கும் என்னும் அபிப்ராயத்தாலும் –
ஆகையால் இப்பிரபந்தம் சப்தம் அர்த்தம் ஆகிய இரண்டின் ரசத்தாலும் விசேஷ ஜன மநோ ஹரமாய் இருக்கும் –
இன்னமும் பிரபந்தாந்தரங்களில் அனுக்தமான அர்த்த விசேஷங்களும் இப்பிரபந்தத்தில் உண்டாகையாலும்
இது எல்லாருக்கும் ஆதரணீயமாய் இருக்கும் –
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இப்பிரபந்தம் வெளியிட பிரதான ஹேது காருண்யம் ஆகும் –

(ரஹஸ்யம் -சரம விஷயம் -ரக்ஷித்து அனுஷ்டானம் -மிக வீர்யம் உள்ளவை –
அனைவருக்கும் அதிகாரம் -பூர்வர்கள் பேணி அருளுவார்கள்
பாசுரப்படி ராமாயணம் -ஆச்சார்ய ஹ்ருதயம் போலவே அருளிச் செயல்களைக் கொண்டே இந்த பிரபந்தம்
அமலனாதி பிரான்- திருப்பாவை -கண்ணி நுண் சிறுத் தாம்பு -வியாக்யானங்களும் நாயனார்
அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூக்திகளை பிரதானமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்
சொல்லின் இனிமை அர்த்தத்தை சீர்மை இரண்டும் உண்டே இதில் –
அல்லும் பகலும் அனுசந்திப்பாருக்கு
சொல்லும் பொருளும் தொகுத்து உரைத்தான் நல்ல
மணவாள மா முனிவன் மாறன் மறைக்குத்
தணவா நூற்று அந்தாதி தான்-திருவாய் மொழி நூற்று அந்தாதி தனியன்- )

இப்பிரபந்தத்தை வெளியிட்டு அல்லது தரிக்க ஒண்ணாதபடி விசரிப்பித்த சம்சாரி சேதனர்கள் உடைய
ஸ்வரூப பிராப்த பரம புருஷார்த்த அனுபவத்துக்கு இடைச்சுவரான
அப்ராப்த அநந்த அபுருஷார்த்தங்கள் உடைய அநாதி கால அனுபவமும்
அதனுடைய அநாகத (அநகாத காலம் -வரும் காலம்) அநந்த கால அனுவர்த்த அநார்ஹதையும்
ஆகிற அனர்த்தங்களையும் பிரகாசிப்பித்துக் கொண்டு
சர்வாத்மாக்களின் உடையவும் பரம புருஷார்த்த அனுபவ யோக்யதா ஹேதுவை
ச பிரமாணமாகவும் ச த்ருஷ்டாந்தமாகவும் அருளிச் செய்கிறார் -ஒரு கடல் -என்று தொடங்கி –

——————————————————-

1-திருமந்திர பிரகரணம் –
அவதாரிகை –
1-1-ஆத்ம த்ரைவித்யம் –

ஒரு கடல் துறையிலே படுகிற முத்து மாணிக்கங்களில் சில ஒளி வுடையவாய் ,
சில கோது பெற்று ,அவற்றிலே சிலவற்றைக் கடைந்து , சேர்ந்தவாறே — நல்லவற்றோடு ஒரு கோவை ஆம் போல ,-
பெரும் புறக் கடலான – (பெரிய திரு மொழி 7-10-1 )-நாராயணனுடைய சங்கல்பத்தாலே சத்தையைப் பெறுகிற ஆத்மாக்களிலே

(பிருஹத் பஹுத் சிந்து–திருப் பாற் கடலில் இருந்து வெளி வந்ததால் புறம் -தேனீ கூட்டம் தேவர்கள்
திருப் பாற் கடலில் இருந்து வெளி வந்ததால் புறம் -தேனீ கூட்டம் தேவர்கள்
முத்தின் திரள் கோவையை — பத்தராவி பெருமாள்-உத்சவர் திரு நாமம் -ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்
சர்வ பதார்த்தங்களையும் தன்னுள்ளே வைத்து ரஷிக்கும் கடல் -அடங்குக உள்ளே -சம்பந்தம் விலக்காமமையே வேண்டியது )

சிலர் —துளங்கு ஒளி சேர் தோற்றத்து நல் அமரர் (இரண்டாம் திருவந்தாதி -3)-என்னும் படி நித்யராய்

சிலர் -வன் சேற்று அள்ளலிலே- (திரு விருத்தம் -100) -அழுந்தி அழுக்கு ஏறி ஆப்புண்டு – (திரு விருத்தம் -95 )..பத்தராய் ,

(பிறப்பாம் பொல்லா அரு வினை மாய -கர்மா வாசனை ருசி -பொய்ந் நிலம்-அடி காணா பிறப்பு சூழல் – தானே வன் சேற்று அள்ளல்
ஆப்புண்டு –வலையுள் பட்டு அழுந்தி –விடில் செய்வது என் என்றே தெரியாமல் சம்சாரத்தில் உழன்று -ஆப்பு அவிழ்ந்து –
மூதாவியில் தடுமாறி -ஸூஷ்ம சரீரத்தில் தடுமாறி -பாஞ்சாக்னி வித்யை மூலமே -அடுத்த பிறவி -நடுவில் தடுமாறி –
யாதானும் பற்றி ப்ரஹ்மத்தின் இடம் நீங்கும் விரதம் நாம் கொண்டு -திருமாலோ நல் வீடு செய்யும் மாதா பிதா
ஸூஷ்ம சரீரம் கழிந்து -ஸ்வரூப ஆவிர்பாவம் -அப்கராக்ருத திருமேனி பெற்று -ஓளி கொண்ட சோதியோடே -)

அவர்களில் சிலர் –மலம் அறக் கழுவி மாசு அறுக்கப் பட்டு – (திருவாய் மொழி -1-3-8 )..
ஒளி கொண்ட சோதியோடே –(திருவாய்மொழி -2-3-10 )..வானத்து அணி அமரர் ஆக்குவிக்க – (இரண்டாம் திருவந்தாதி -2 ).
வானவர்க்கு நற் கோவையாம் –(திருவாய்மொழி -4-2-11 )-படி முக்தராக கடவர்கள் ..

(பகவத் விஸ்லேஷத்தால் -விடாய்க்க சம்பாவனை இல்லாத சம்சாரத்தில் -விடாய்த்த ஆழ்வார் –
அங்கு விடாய்க்க சம்பாவனை இல்லை -விஸ்லேஷம் இல்லை -அங்கும் விடாய்ப்பார் –
கைங்கர்ய ஹானி வரக் கூடாதே -விஷய வைலக்ஷண்யம் படுத்தும் பாடு –
அவர்களும் அனுபவிக்க முடியாமல் தவிப்பது -ஆரா அமுதன் அன்றோ
மலி புகழ் -விசேஷணம் ஆழ்வாருக்கும் வானவருக்கும் இந்த பாசுரத்தில் உண்டே )

நல் சரக்கு ஒளியின் வுடைய மிகுதி குறைவால் உள்ள பெருமை சிறுமை ஒண் பொருள் ஆன – (திரு வாய் மொழி -1-2-11 )..
ஆத்மாவுக்கும் எந்த ஞானத்தின் வுடைய ஏற்ற சுருக்கத்தாலே வுண்டாகக் கடவது ..

(பிறர் நன் பொருள் -மதுர கவி ஆழ்வார்
கர்மத்தால் ஞானம் ஏற்றமும் தாழ்வும் -ஞானத்துக்கு அனுகுணமான பிறவி -இப்படித் தானே பிறவி சுழல்-
கர்மம் தொலைய ஸ்வரூப ஆவிர்பாவம் – )

—–

அதாவது -கடல் -திருஷ்டாந்தம் -சர்வேஸ்வரன் தார்ஷ்டாந்திகம் –
முத்து மாணிக்கங்கள் -திருஷ்டாந்தம் –ஜீவாத்மாக்கள் தார்ஷ்டாந்திகம் –
முத்து மாணிக்கங்களில் த்ரை விதயம் போலே ஜீவாத்ம த்ரை விதயம்
முத்து மாணிக்கங்களில் சில ஸ்வத ஒளி யுடையன – அவ்வோபாதி ஜீவாத்மாக்களில் நித்யர்கள் ஸ்வ பாவத ஸூ த்தர்கள் –
முத்து மாணிக்கங்களில் சில கொத்தை பற்றியவை -அஸூத்தங்கள் -அவ்வோபாதி ஜீவாத்மாக்களில் சம்சாரிகள் அஸூத்தர்கள் –
முத்து மாணிக்கங்களில் சில கடையப் பட்டு ஸூத்தி அடைந்து நல்லவற்றோடு ஒரு கோவையாக சேர்க்கப் பட்டவை –
அவ்வோபாதி பத்தர்களிலே சிலர் அஜ்ஞநாதிகள் கழியப் பெற்று நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக சேர்க்கப் பட்டவர் முக்தர் -என்றபடி
ஆத்ம ஸ்வரூபம் நிர்விகாரம் -சங்கோச விகாச பாஜனம் அல்ல என்று சித்தாந்தம் ஆகையாலே ஜீவாத்மாக்களுக்கு
சிறுமை பெருமை தர்ம பூத ஜ்ஞான த்வாரா என்று திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் –
இந்த ஞானத்தின் உடைய ஏற்றச் சுருக்கத்தாலே -என்று –

(நான் ஞானம் தர்மி ஞானம் -இது சுருங்கவோ மலரவோ செய்யாது -என்னுடைய ஞானம் -தர்ம பூத ஞானம்
நான் அடிமை என்பதால் பரமாத்மா இல்லை – அறிவாளி என்பதால் அசேதனம் தேகத்தை விட வேறே
ஞாத்ருத்வம் -அசித் விலக்ஷணன் – சேஷத்வம் -பரமாத்மா சேஷி )

———————————–

1-2-சம்சாரிகளின் பகவத் அனுபவ யோக்யதை –

சம்சாரிகளின் பகவத் அனுபவ யோக்யதை
அயர் வறும் அமரர்களான (1-1-1-) நித்யரும் ,
கரை கண்டோர் (திரு வாய் மொழி 8-3-10 ) என்கிற முக்தரும் ,
எம்பெருமானையும் தங்களையும் உள்ள படி உணர்ந்து , அறிவுக்குச் சேர்ந்த போகமும் அடிமையும் பெற்று
பெரு மக்கள் உள்ளவர் (திரு வாய் மொழி 3-7-5 ) என்னும் படி உள்ளாராகிறாப் போல ,

(நீதி வானவர் -சேஷத்வ பாரதந்தர்யம் -நிறைந்த சத்துக்கள் -உள்ளவர் -நித்யர்
போகமும் அடிமையும் பெற்று-அறிவுக்கு வடிகால் போகம் -அறிவு மட்டும் இருந்தால் அஹங்காரம் –
அடிமைத் தனமும் வேண்டும் -இரண்டையும் அறிந்து இரண்டையும் பெற்றவர் )

மறந்தேன் உன்னை (பெரிய திருமொழி 6-2-2 )
யானே என்னை அறிய கில்லாது ( திரு வாய் மொழி 2-9-9 ) என்னும் படி இரண்டு தலையையும் மறந்து
(இரண்டு பாசுரங்கள் இருவரையும் மறந்ததுக்கு பிரமாணங்கள் )

மறந்த மதி (பெரிய திருமொழி -6-2-2 )யும் இன்றிக்கே ,
(மனத்தால் இறந்தேன் -மனம் தானே ஊற்றுவாய்-மறந்த மதி இல்லாமல் அசன்நேவ
தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து கைங்கர்யமும் இழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே )
அகங்கார மம காரங்களும் ,
ராக த்வேஷங்களும்
புண்ய பாபங்களும்
தேஹ சம்பந்தமும் ,
பந்து சங்கமும் ,
விஷய (விஷயாந்தர)-பிராவண்யமும் ,
அர்த்த ஆர்ஜனமும் ,
தேஹ போஷணமும் ,
பிரயோஜனந்த ஸ்ரயத்தையும் ,
தேவா தாந்த்ர பஜனமும் ,
சமயாந்தர ருசியும் ,
சாதனாந்தர நிஷ்டையுமாய்

ஸ்வர்க நரக கர்பங்களிலே வளைய , வளைய வந்து
வழி திகைத்து (திரு வாய் மொழி 3-2-9 )
நின்று இடறி (திரு வாய் மொழி 4-7-7 )
அனர்த்தக் கடலில் அழுந்தி ( பெரியாழ்வார் திருமொழி -5-3-7 )
நானில்லாத முன் எல்லாம் ( திரு சந்த விருத்தம் -65 )
பொருள் அல்லாத என்னும் படி ( திரு வாய் மொழி 5-7-3 )
என்னும் படி உரு அழிந்த

மா நிலத்து வுயிர்களான ( திரு மாலை -13 ) சம்சாரிகளும்
எம்பெருமான் சேஷியாய் தங்கள் அடியராய் இருக்கிற
ஒழிக்க ஒழியாத உறவை ( திருப் பாவை -28 -நவவித சம்பந்தம் உண்டே ) உணர்ந்து
ஆம் பரிசான ( திரு மாலை -38 ) அனுபவமும் அடிமையும் பெற்றால் இறே –
அடியேனை பொருள் ஆக்கி ( திரு வாய் மொழி 10-8-9 )
யானும் உளன் ஆவன் ( பெரிய திருவந்தாதி -76 ) என்கிற படி சத்தை பெற்றார்கள் ஆவது ..

(போகமும் அடிமையும் உபக்ரமித்து -ஆம் பரிசான அனுபவமும் அடிமையும் நிகமிக்கிறார்-மிக உணர்ந்து –
உணர்ந்து அசித் விருத்தி ஞாத்ருத்வத்தால் -மிக உணர்ந்து என்றது சேஷத்வ ஞானம் பெற்று என்றவாறு –

அடியேனைப் பொருளாக்கி -9-8-8–
பொருளாக்கி என்னை உன் பொன் அடிக் கீழ்ப் புக வைப்பாய் -மருளே இன்றி என்னை உன் நெஞ்சத்து இருத்தும்
தெருளே -தரு தென் திரு நாவாய் – ஞானம் பெற்றதும் அடியேன் –

இன்று என்னைப் என்னைப் பொருளாக்கி 10-8-9-ஆழ்வார் நான் என்றாலே அடியேன் தானே
திருத்தின பின்பே நான் -மாறி அடியேன் ஆகும் -தூதோஹம் ராமஸ்ய தாஸோஹம் கோசலேந்ரஸ்ய மாறினதே
பிராட்டி கடாக்ஷம் பெற்றதும் -)

—————————–

ஒரு நிலத்திலே ஒரு கூறு உவர்ந்து கிடக்க மற்றைக் கூறு விளைவது அறுப்பது ஆம் போலே –
நித்ய விபூதியும் நித்ய ஸூரிகளும் பகவத் அனுபவமே யாத்ரையாகச் செல்லா நிற்க
நித்ய முக்தரோபாதி பகவத் அனுபவ யோக்யதை இருக்கச் செய்தே சம்சாரம் ஆகிற பாலை நிலத்தில் உள்ளார்
சப்தாதி விஷயங்களில் பிரவணராய்-இவற்றின் உடைய லாப அலாபங்களே பேறும் இழவுமாய்-
பகவத் விமுகராய் -பகவத் அனுபவத்தை இழந்து கிடக்கிறபடியை அருளிச் செய்கிறார் -அயர்வறும் என்று தொடங்கி –
இரண்டு தலை -ஜீவ பரர்கள்
சத் சப்த வாச்யனான ஆத்மாவுக்கு ஆம் பரிசு என்று கைங்கர்யம் பெற்றால் தானே சத் பெறுவான் –

——————————————————————–

1-3-பகவத் க்ருஷி ..
இந்த மெய் ஞானம் இன்றி ,வினையியல் பிறப்பு அழுந்துகிற -திரு வாய் மொழி-3-2-7- இவர்களுக்கு
தாமரையாள் கேள்வன் ஒருவனையே (முதல் திருவந்தாதி -67 ) நோக்குகிற ஞானத்தை அறிவிக்கைக்கு

(உணர்வு -ஆத்ம ஞானம் -மிதுனமே உத்தேஸ்யம் -பாஸ்கரனும் பிரபையும் போலே –
ஒருவனையே -அப்ருத்க் சித்த விசேஷம் ஆத்மா
நக நதி பதி கடல் -பெயரும் கரும் கடலே நோக்கும் ஆறு -நதி)

நீர்மை யினால் அருள் செய்த (பெரிய திரு மொழி 2-8-5 )
சரணமாகிய நான்முறை நூல்களும் – ( திரு வாய் மொழி 8-3-2 )-வேத சாஸ்திரங்கள்-
(கைவல்யார்த்தி பற்றி இப்பாசுரம் -எல்லா புருஷார்த்தங்களுக்கும் வேதமே சரணம் -ஸாஸ்த்ர யோநித்வாத் )
நூல் கடல் ( மூன்றாம் திரு அந்தாதி -32-வித்யா சமுத்திரம் என்றவாறு -வேதம் உச்சாரணமாகவே வருமே
வட தள- தேவகி ஜடரா -சடகோப வாக் ரெங்க க்ருஹே- வேத சிரஸ்-பக்தர் உள்ளம் -இடமாகக் கொண்ட கோபாலன் )
என்னும் படி பரந்து

மன்னா இம் மனிசப் பிறவியுள் (பெரிய திருமொழி 1-10-6 -மன்னா -நிலை யில்லாத மனிசப் பிறவி என்றபடி
தன்னாக்கி -ஸாம்யபத்தி இன்னருள் செய்யும் திரு வேங்கடம் மேய என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே )
மதி இல்லா மானிடங்களான (திரு மாலை -9 ) இவர்களுக்கு (ஆயுளும் இல்லை – புத்தியும் இல்லை – அதுவோ கடல் )
கரை காண ஒண்ணாமை யாலே ,

ஒத்தின் பொருள் முடிவை ஒத்தின் சுருக்காய் இருப்பது ஒன்றாலே அறிவிக்க வேண்டும் என்று
(இரண்டாம் திருவந்தாதி -39-ஒத்தின் பொருள் முடிவும் அத்தனையே மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு
திருமந்திரம் விவரணம் த்வயம் -ஆகவே நாராயணன் சொல்லி ஸ்ரீ மந் நாராயணன் -மாதவன்
வேதத்தால் நானே சொல்லப்படுகிறேன்
வேதம் என்னை சொல்லி அல்லது நிற்காது
வேதத்தாலேயே நான் சொல்லப்படுகிறேன் –ஸ்ரீ கீதா ஸ்லோகம் -15-15-)

தெய்வ வண்டாய் ( திரு வாய் மொழி 9-9-4 )
அன்னமாய் ( பெரிய திரு மொழி 5-7-3 -அன்னமாய் அங்கு அன்று அருமறை பயந்தான்
அரங்க மா நகர் அமர்ந்தான் -64-வித அபிமானம் அரையர் சேவை உண்டே )
அமுதம் கொண்ட ( பெருமான் திரு மார்பன்-பெரிய திருமொழி 6-10-3 -அமுதம் உப்புச்சாறு
தேவதாந்தரங்களுக்கு கொடுத்து ஆய்ச்சி வெண்ணெய் உண்ட திருமால் அன்றோ இவன்)
மைத்த சோதி (பெரிய திரு மொழி 1-3-6 ) எம்பெருமான்
வேத சாகை களிலும் ,

(அத்தன் எந்தை ஆதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த மைத்த சோதி எம்பெருமான்
வதரி வணங்குதுமே -திருமந்திரம் இங்கே தானே சிங்காமை விரித்தான் )

ஓதம் போல் கிளர் ( திரு வாய் மொழி 1-8-10 -கல்யாண குணங்களை ஓதம் போலே வேதம் கிளருமே-)
நால் வேத கடலிலும் ( பெரிய திரு மொழி 4-3-11 ) ,
தேனும் பாலும் அமுதுமாக (-திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே
பெரிய திரு மொழி 6-10-6 ) சேர்த்து பிரித்து எடுத்து

அற நூல் சிங்காமை விரித்தவன் ( பெரிய திரு மொழி 10-6-1-சிங்காமை விரித்தவன் -சங்கோசம் இல்லாமல்
அற நூல் திரு மந்த்ரம் -வேதங்களில் உள்ள ஸமஸ்த அர்த்தங்களும் இதிலே உண்டே ) என்னும் படி
நர நாராயண ரூபத்தைக் கொண்டு சிஷ்யாச்சார்யா கிரமம் முன்னாக
பெரு விசும்பு அருளும் ( பேர் அருளாளன்-வதரி யாச்சிரமத்து உள்ளான்–பெரிய திருமொழி 1-4-4 –
விசும்பு சுவர்க்கம் -அருளும் அருளாளன் -பரம பதம் அருளும் பேர் அருளாளன் ) பேர் அருளாலே
பெரிய திரு மந்த்ரத்தை ( திரு நெடும் தாண்டகம் -4 ) வெளி இட்டு அருளினான்

——————————

காருணிகனான சர்வேஸ்வரன் நீர்மையினால் சத்வாரகமாகவும் அத்வாரகமாகவும்
வெளியிட்டு அருளின பிரமாணங்கள் பல பல –
அவற்றில் முனிவரை இடுக்கி வெளியிட்டு அருளினவை -வேத வேதாந்தங்களும் –
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களும் -திவ்ய பிரபந்தங்களும் ஆகும் –
முந்நீர் வண்ணனாய் வெளியிட்ட சாஸ்திரம் ரகஸ்ய த்ரயம் ஆகும் –

சம்சாரிகளுக்கு தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய பிரதிபாதமாக வெளியிடப்பட்ட சாஸ்த்ரங்களில் வேதங்களின்
தத்வ ஜ்ஞான அப்ரயோஜகத்வத்தை அருளிச் செய்கிறார் -வேத சாஸ்திரங்கள் -என்று தொடங்கி

ஒத்தின் பொருள் முடிவை -ஒத்தின் சுருக்காய் -இருப்பது ஒன்றாலே -என்றது
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே -மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -என்கிறபடியே
வேதாந்த தார்பர்யமாய் -ருசோ யஜூம்ஷி சாமா நி ததைவாதர்வணா நிச -சர்வம் அஷ்டாந்தர அந்தஸ்ச்தம்-என்கிறபடியே
சகல வேத சங்க்ரஹமான திரு மந்த்ரத்தாலே -என்றபடி –

தெய்வ வண்டாய் -இத்யாதி வேத சாரமாய் –தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் என்னும் படி
(மாதவன் என்பதால் திருமால் )
இருக்கிற இத்தை வேதத்தில் நின்றும் அவன் க்ரஹிக்கிற போது-கிரஹித்த பிரகாரத்தை
த்ரி பிரகாரமாக வர்ணித்து அருளிச் செய்கிறார்

அதாவது -தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு ஆகையாலே –
ஷட் பதமானது சாகா சஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமா போலே
சார பூத சம்ஸ்த்தார்த்த போத கதயா
சர்வ ரசமான தேன் போலே இருக்கிற இத்தை வேத சாகைகளிலே கிரஹித்த படியும்

அன்னமாய் அங்கு அருமறை பயந்தான் என்கிறபடியே ஹம்ச ரூபியானவன் ஆகையாலே –
அன்னமானது நீரிலே கலந்து கிடக்கிற பாலை விவேகித்து எடுக்குமா போலே
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்னும் படி -இருக்கையாலே சர்வாதிகாரமான பால் போலே இருக்கிற இத்தை

(தீர்த்தம் -சர்வாதிகாரம் இல்லை -அரிசி வாங்குகிறோம் ஜலம் சேர்த்து அன்னம் -சர்வாதிகாரம் இல்லை -வேதம் போலே –
பால் தானே சர்வாதிகாரம் -ஆழ்வார்கள் அருளிச் செயல்களும் திருமந்திரம் போலே)

ஓதம் போல் கிளர் வேத நீரில் நின்றும் க்ரஹித்த படியும்
அமுதம் கொண்ட பெருமான் என்கிறபடியே அஸூர பய பீதராய் -அமரத்வ சாபேஷரான தேவர்களுடைய ரஷணமர்த்தமாக
விலஷண போக்யமாய் விநாச ஹரம் ஆகையாலே அம்ருதம் போல் இருக்கிற இத்தை
(சம்சார பீதராய் இருக்கும் நமக்கு அம்ருத்த்வம் அருள )
நால் வேதக் கடலிலே க்ரஹித்த படியையும் சொல்லுகிறது -அற நூல் சிங்காமை விரித்தவன் என்னும் படி –இத்யாதி

ஆக -இப்படி வேத சாரமான இத்தை ஸ்வ மேய எடுத்து
அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் வதரியாச்சிரமத்து உள்ளான் என்கிறபடியே –
நித்ய ஸூரிகளுக்கு போக்யமாய் பரம ஆகாச வாச்ய சப்தமான பரமபதத்தைக் கொடுப்பதான நிர்துஹேக கிருபையாலே
நர நாராயணனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் -என்கிறபடியே
ஸ்வரூப சாஸ்திரம் சங்குசிதம் ஆகாமல் உபதேச அனுஷ்டங்களாலே விஸ்த்ருதமாம் படி பண்ணினான் -என்கை-

(புகை நெருப்பு -கண்ணாடி அழுக்கு -கர்ப்பக்குடம் -தோல் கர்ப்பம் மூடுவது போலே மூன்று த்ருஷ்டாந்தம்
சார்ந்த இரு வல்வினை பிரியாமல் புகை / கண்ணாடி அழுக்கு மீண்டும் மீண்டும் பிராயச்சித்தம் பண்ணி
போக்கிக் கொண்டாலும் மீளவும் -அம்மா பார்த்து உந்த தான் குழந்தை வெளி வரும் –
தெய்வம் மாம் ஏவ -அவன் மூலமே வெளி வரலாம்
அதே போலே வண்டு-தேன்/ அன்னம்-பால் / அமுதம் கொடுத்தது இங்கு
சிங்காமை -சுருக்கம் இல்லாமல் -வேதங்களில் உள்ள சகல அர்த்த ப்ரதிபாதிதம் இதுக்கு உண்டே )

————————————————————————————————–

1-4-ஸ்ரீ மூல திரு மந்திரத்தின் ருஷி / சந்தஸ் / தேவதைகள் -பெருமை ..

இது தனக்கு அந்தர் யாமியான நாராயணன் ருஷி ..
தேவி காயத்ரி சந்தஸ் ஸூ ..
பரமாத்வான நாராயணன் தேவதை
பிரணவம் பீஜம் ..
ஆய சக்தி .. சுக்ல வர்ணம் ..
மோஷத்தில் விநியோகம் .

(ருஷியும் தேவதையும் நாராயணனே இதுக்கு -முந்நீர் வண்ணன் தானே வெளியிட்டு அருளினான் அன்றோ
பிரகர்ஷேன மிகுதியாக ஸ்தூலதே பகவான் அநேந -ஸ்தோத்ரம் செய்யப்படுகிறார் -ஆகையால் பிரணவம்
பிரார்த்தனாயாம் சதுர்த்தி -இதுவே இந்த மந்திரத்துக்கு சக்தி )

சிந்தை பிரியாத ( பெரியாழ்வார் திரு மொழி 2-3-2 ) பரமாத்மா என்கிற படியே
அந்தர் யாமியும் பர மாத்மாவுமான தானே இதுக்கு ருஷியும் தேவதையுமாய் –
(நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா -அநந்ய ப்ரயோஜனராய்-
ருஷியும் தேவதையுமாய் அந்தர்யாமிக்கும் பரமாத்வாவுக்கும் இந்த ஒரே பாசுரம்
பிரமாணம் தத்வம் நாராயண பர என்பதால் பரமாத்மா -)

வைப்பும் தங்கள் வாழ்வும் ஆனான் ( பெரிய திரு மொழி 1-3-7 ) என்னும் படி
பிரம குருவாய் ( பெரியாழ்வார் திருமொழி 5-2-8 ) ஞானத்தைக் கொடுத்து
உபாயமாய்
தனி மா தெய்வமாய் (திரு வாய் மொழி 8-10-7 ) மோஷத்தைக் கொடுத்து
பிராப்யனுமாய் இருக்கையாலும் ,

(நிஷேப வித்தன் புதையல் வைப்பு சாதனம் / வாழ்வு ப்ராப்யம்
ஞானத்தை கொடுத்து உபாயம் என்பதற்கு பிரம குருவாய் ப்ரஹ்மம் உபதேஷ்டா-ப்ரஹ்மமே உபதேசித்தான் திமிர் இருக்குமே
குருவாக அதனால் வந்தான்-பட்டினம் காப்பு என் திரு உள்ளமே உனக்கு காப்பு –
பல்லாண்டு பாடி நான் உன்னை ரஷிப்பேன்
ஸ்ருஷ்டிக்கு பலன் அவன் தளிர் திருவடிக்கீழ் புகுதல் -தனி மா ஓத்தார் மிக்கார் இலையாயவன் -ப்ராப்யம் )

நாராயண பரங்களான வேதங்களும் ,
அதுக்கு பொருள் சொல்லக் கடவ மந்த்ரைக சரணரான ருஷிகளும் ,

(ஆழ்வார்கள் தாமே முனிகள் ரிஷிகள்-நமோ நாராயண ஸர்வார்த்த சாதகம்
மா கதிக் கண் செல்லும் வழி நாராயணா என்பதே -நாவில் தழும்பு எழும் படி நாராயணா என்று
ஓவாதே-பொருளை சம்பாதிக்கும் நேர பகல் -சந்தோஷிக்கும் நேரம் இரவு -இரண்டு பொழுதும் –
சாதனமும் சாத்தியமும் நாராயணனே அழைத்து –தீ கதிக் கண் செல்ல அகங்கார மமகாரங்கள் )

நா வாயில் வுண்டே என்றும் ( முதல் திரு அந்தாதி -95 )
நா தழும்பு எழ ( பெருமாள் திரு மொழி 2-4 )
நல் இருள் அளவும் பகலும் (பெரிய திரு மொழி 1-1-5 )
ஓவாதே நமோ நாராயணா (பெரியாழ்வார் திரு மொழி 5-1-3 ) என்றும்
நாராயண தமரான ( திரு வாய் மொழி 10-9-1 )ஆழ்வார்களும்

வைதிக விதிகளும் தங்கள் நினைவைப் பின் செல்லும் படியான
ஆழ்வார்களை அடி ஒற்றி திராவிட வேதத்துக்கு கருத்து அறிவிக்கும் நம் ஆச்சார்யர்களும்
இத்தையே ஒரு மிடறாக விரும்புகை யாலும் –

நம்பி நாமம் ( பெரிய திரு மொழி 6-10-10 ) எ ன்னும்படி அர்த்த பூர்த்தியை உடைத்தாய் ஆகையாலும் ,
முமுஷு களுக்கு கழிப்பனான ஸூத்ர மந்த்ரங்களிலும்
ஓக்க ஓதா நிற்க ,
ஓடித் திரியும் யோகிகளாலே ( திரு வாய் மொழி 8-8-9 ) விரும்பப் பட்டு ,
அர்த்த பூர்த்தியை உடைத்தல்லாத மற்ற மந்த்ரங்களிலும் ஏற்றத்தை உடைத்தாய் ,

(பூரணமான நாமம் -பூர்ணணைப் பற்றியது -நாமும் நம்பி சொல்லலாமே-வியாபக மந்திரங்களிலும் ஸ்ரேஷ்டம்
ஓடித் திரியும் யோகிகள் விஷ்ணு நாமம் சொல்லி கைவல்யம் போன்றதை பெறுவார்கள் என்றவாறு
மூன்று வியாபக மந்திரங்களும் ஸ்ரீ விஷ்ணு காயத்ரியின் ஓக்க ஓதுமே
எதுக்காக வியாபகம் -யார் வியாபிக்கிறார் -எதை வியாபிக்கிறார் –
எப்படி -வியாபிக்கிறார் -எதுக்கு வியாபிக்கிறார் -பூர்ணம் நாராயணா மட்டுமே )

குலம் தரும் (பெரிய திரு மொழி 1-1-9 ) என்கிற படியே
தர்மம் , அர்த்தம் , இஹ லோக பர லோக போகம் , ஆத்ம பரமாத்மா பாகவத அனுபவங்கள் , என்கிற
புருஷார்த்தங்களையும் சாதித்துக் கொடுக்கக் கடவதாய் ,

(விபீஷணன் இஷுவாகு குலம் -விதுரர் தர்மபுத்திரர் ஈமச் சடங்கு பண்ணும் குலம் பெற்றார் –
கௌசிக பண் கொண்டு ப்ரஹ்ம ராக்ஷஸ்ஸூ பாணர் குல நம்பாடுவானால் குலம் பெற்றான்
நாராயண மந்த்ரம் ஸர்வார்த்த சாதகம் – )

எட்டினாய பேதமோடு ( திருச் சந்த விருத்தம் -77 )என்றும் –
ஆர்வமோடு இறைஞ்சி நின்று ( திருச் சந்த விருத்தம் -78 ) என்கிற படியே
அல்லாத உபாயங்களுக்கும் துணை செய்யக் கடவதாய் ,

(எட்டினாயா பேதமோடு -சாஷ்டாங்க பிராணாமம் -சாதனங்களுக்கு உப லக்ஷணம் –
நலம் கழல் ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் -வாரமாக ஓதி -பற்றுக்கொம்பு திரு மந்த்ரம்
ஏஷ நாராயண ஸ்ரீ மான்-நீர் அரவணைக் கிடந்த ஷீராப்தி நாதனின் கழல் )

சித்த உபாயத்தில் இழிவாருக்கு —
அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே ( திரு வாய் மொழி 2-3-6 ) என்கிற படியே , ஸ்வரூப ஞானத்துக்கும் ,
தொழில் எனக்கு ( நான் முகன் திரு வந்தாதி -85 ) என்கிற படியே பொழுது போக்குக்கும் ,
மந்திரத்தால் மறவாது (திரு நெடும் தாண்டகம் -4 ) என்கிற படியே இங்கு உற்ற அனுபவத்துக்கும் பரி கரமாய்ப்

(சேர்ந்தார் -மரக்கலம் கரை சேர்ந்தால் போலே இவனை அடைந்தார்களுக்கு-தீ வினைகட்க்கு அரு நஞ்சை –
முன்னமே அடைந்ததற்கு -திண் மதியை -மஹா விசுவாசம் -அம்பரீஷன் இந்திரன் வேஷம் கொண்டு பரீஷை-
அற்றுத் தீர்ந்தார்களுக்கு உயிர் போலே -அக்குளத்து மீன்-
அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே -முன்பு இழந்த காலம் நினைவுக்கு வராதபடி அன்றோ இப்பொழுது பூர்ணம் அனுபவம்
ஸ்வரூப ஞானம் பெற்றதும் திரு நாம சங்கீர்த்தனமே பொழுது போக்கு –
மந்த்ரத்தை மந்திரத்தால் மறவாது -அந்தணர் மாடு -தனமான- வேதாந்தத்தில் மறைந்து உள்ள அவனை மறவாமல் திரு மந்த்ரம் ) –

பெற்ற தாயினும் ஆயின (பெரிய திரு மொழி 1-1-9 ) செய்யுமதான படியாலே ,
இடறினவன் அம்மே என்னுமா போலே
நானும் சொன்னேன் (பெரிய திருமொழி 6-10-6 ) என்னும் படி சர்வாதி காரமாய் ,

(ஸ்ரேஷ்டமான ஜென்மம் திருமந்திரம் கொடுக்கும் -உடல் பிறவி தாய் -ஞானப்பிறவி இது –
சம்சாரத்தில் இடறி திருமந்திரம் -மாதா நாராயணா -பிதா நாராயணா –
தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திரு நாமம் -சர்வ வித போக்யம்-
தெய்வ வண்டு ஹம்சம் அமுத ப்ரதன்-அருளிய திருமந்திரம் அன்றோ –
ஆண்டான் -புருஷகாரம் -அடிமை சேஷத்வ ரசம் -மூன்றும் சேர்ந்து ஏக ரசம் –
அ உ ம -சேர்ந்து பெருமாள் பிராட்டி இளைய பெருமாள் போலே
ரிஷிகள் கோஷ்ட்டி ஆழ்வார் கோஷ்ட்டி எல்லாம் இதுவே
ஓர் ஆயிர நாமம் ஒள்ளியவாகப் போக–ஆயிர நாமங்களுக்கு சத்ருசம் )

ஓவாது உரைக்கும் உரை ( முதல் திரு வந்தாதி -95 ) என்னும் படி சொல்லி இளைப்பாறலாய் ,
வாயினால் நமோ நாராயண ( பெரியாழ்வார் திரு மொழி 4-5-2 ) என்கிற படியே
துஞ்சும் போதைக்கு ( பெரிய திருமொழி 1-1-10) மோர் குழம்பு போல இளைப்பாறலாய் ,

செல் கதிக்கு நல் துணையா (பெரிய திருமொழி 1-1-8 ) என்கிற படியே
அர்ச்சிராதி கதிக்கு பொதி சோறாய்

(ஒருவன் தனக்கு பகவத் சம்பந்தம் உண்டு இல்லை என்பதை தானே அறியலாம் –
ஐயோ என்று இரங்கினால் உண்டு என்றும் -அத்தனையும் வேண்டும் என்று இருந்தான் ஆகில்
சம்பந்தம் இல்லை ஆகும் வியாக்யானம் -)

நமோ நாராயணா ( திருப் பல்லாண்டு -11 ) என்கிற படியே
தெளி விசும்பில் ( திருவாய்மொழி 9-7-5 ) போகத்தையும் வளர்க்கக் கடவதாய் –

(நல்வகையால் நமோ நாராயணா -அநந்ய ப்ரயோஜனராக ஸ்வயம் பிரயோஜனமாக சொல்வது
சேஷத்வம் அநாதி -திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன் –
ஆத்மா நித்யம் அறிபவன் சேஷத்வ ஞானம் இல்லா விட்டால் அசத் தானே
மேகத்தை தூது -9-7–திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்க்கு – )

தேனாகி பாலாம் திரு மாலான அவன் உள்ளீடு போலே ( முதல் திருவந்தாதி -92)
தேனும் பாலும் அமுதுமாய் திருமால் திரு நாமு மாய் (பெரிய திருமொழி 6-10-6 )
எப்பொழுதும் தித்திக்கக் கடவதாய் ( பெரிய திருமொழி 7-4-5 )

(தேன் பால் திரு மால்-நித்ய விபூதியில் திருவே தேன் அவனே மால் -த்ருதீய விபூதி நாதன் –
அத்தை விட விரும்பி ஆனாய்ச்சி வெண்ணெய் இது அன்றோ சதுர்த்தி விபூதி அவனுக்கு —
நஞ்சீயர் ஈடுபட்டு அருளிச் செய்யும் பாசுரம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வார் என்று
பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார் )

மற்று எல்லாம் பேசிலும் ( பெரிய திருமொழி 8-10-3 ) என்கிற படியே
அறிய வேண்டும் அவை எல்லாம் உடைத்தாய் ,

எம்பெருமான் ( பெரிய திரு மொழி 2-2-2 -எந்தை ஜனகன் -வைத்ய வீரராகவன் -எம்பெருமான் -ஸ்வாமி )
தெய்வத்துக்கு அரசு ( பெரிய திரு மொழி 7-7-1 -அழுந்தூர் தேவராஜ பெருமாள் மூலவர் ஆ மருவி அப்பன் -உத்சவர்) என்னும் படி
கழி பெரும் தெய்வமாய் ( திரு விருத்தம் -20-இளம் தெய்வம் அன்று இது -சஹி வெறி விலக்கு பாசுரம் ) இருக்கிறாப் போல ,
மந்த்ராணாம் மந்த்ர ராஜா என்கிற படியே எல்லா மந்த்ரங்களிலும் மேலாய்
பெரும் தேவன் ( திரு வாய் மொழி 4-6-4 -சஹி வெறி விலக்கு திருவாய் மொழி ) பேரான பெருமையும் உடைத்தாய் இருக்கும் .

(ஆலி நாட்டு அரசு -தெய்வத்துக்கு அரசு -அரசமரம் அடியில் -மந்த்ர அரசு -மந்திரராஜா திருமந்திரம் )

பொருள் இல்லாத கடல் ஓசையில் பக்ஷிகள் சொல் மேலாய்
அதில் நாட்டு வழக்கு சொல் மேலாய்
அதில் தொண்டரைப் பாடும் சொல் மேலாய்
அதில் இஷ்ட தேவதைகளை ஏத்தும் சொல் மேலாய்
அதில் வேதார்த்தம் சொல்லுவது மேலாய்
அதில் வேதம் மேலாய்
அதில் வேதாந்தம் மேலாய்
அதில் நாராயண அனுவாகம் மேலாய்
அதில் பகவத் மந்த்ரங்கள் மேலாய்
அதில் மற்றை இரண்டும் கடல் ஓசையோபாதி யாம் படி மேலாய் இருக்கும் ..

வளம் கொள் பேர் இன்பமான பெரிய மந்த்ரம் ( பெரிய திரு மொழி 4-3-9 ) என்றும் –
(பாசுரத்தில் பேர் இன்பம் பெருமாளைச் சொல்லும் -செம் பொன் செய் கோயில் பதிகம் –
பக்தர்கள் உள்ளத்தில் ஊறிய தேன் -பேர் இன்பம் வளர்ந்தது -அபரிச்சின்ன ஆனந்த ஸ்வரூபன் – )

தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படி ( திரு வாய் மொழி 8-10-7 ) என்கிற படியே
தான் அறிந்த உறவாலே எல்லார் பக்கலிலும் நடக்கிற சௌஹார்த்ததாலே
பொருள் என்று ( திரு வாய் மொழி 2-10 -11 ) சரீரங்களைக் கொடுத்து

ஒழிவற நிறைந்து ( திரு வாய் மொழி 3-2-7 ) அந்தர் யாமியாய் சத்தையை நோக்கி
(அந்தர்யாமி இரண்டு வகை உண்டே –
வஸ்துத்வம் நாம பாக்த்வம் இருக்க உள்ளே இருக்க வேண்டும்
அதிஷ்டான ஆத்மாவுக்கு சிந்தித்து தியானத்துக்கு -திரு மேனி உடன் சேவை –
அது போலே கல்லுக்குள்ளும் மட்டைக்குள்ளும் இல்லையே
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவான் என்று உள்ளே இருந்து நல்லது பண்ண அன்றோ உள்ளே உள்ளான் )

ஜன்மம் பல பல செய்து ( திருவாய் மொழி 3-10-1 )
கண் காண வந்து ( திரு வாய் மொழி 4-7-2 -சகல மனுஷ நயன விஷயாந்தகரனாக )
ஆள் பார்த்து ( நான் முகன் திரு வந்தாதி -60 ) அவதரித்து
(ஜென்ம கர்ம மே திவ்யம் -அவனுக்கும் திவ்யமாக -பூரி ஜகந்நாதன் தன் சரிதை
யோகினி தாய் பத்னிமார்களுக்கு சொல்வதைக் கேட்டு விரிந்த கண்களுடன் சேவை
அவன் சொன்னாலும் பஹு நீ என்றே சொல்லும் படி பல பல உண்டே –
செய்து -பன்னிரு திங்கள் மணி வயிறு வாய்த்து- அத்தத்தின் பத்தாம் நாள் வந்து தோற்றி –
உன்னை ஈயாயே-என் கண் காண வந்து ஈயாயே -4-7-2-நெஞ்சு என்னும் உள் கண்ணால் இல்லை
கட் கண்ணால் பார்க்கும் படி )

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் ( இரண்டாந் திருவந்தாதி-59 ) வைத்து

முகம் மாறுகிற சேதனரைச் சேர விட்டுக் கொள்கைக்கு இடம் பார்க்கிற எம்பெருமான் வுடைய
உய்வதோர் பொருளான ( பெரிய திருமொழி 1-1-1 )
அருளாலே (இரண்டாந் திருவந்தாதி- -41 ) யாரேனும் ஒருவருக்கு
(உய்வதோர் பொருள் -கிருபை இரக்கம் ஒன்றே உபாயம் – -அருளாலே யாரேனும் ஒருவருக்கு )

பொய் நின்ற ஞானத்துக்கு ( திரு விருத்தம் – 1 ) அடியான
முக் குணத்து இரண்டு அவை அகற்றி ( திரு எழு கூற்று இருக்கை )
( பொய் நின்ற ஞானத்துக்கு பீஜம் முக்குணம் )

உய்யும் வகை ( திருவாய் மொழி 5-2-5 ) உணரும்-
ஒன்றினில் ஒன்றி ( திரு எழு கூற்று இருக்கை )
உணர்வு எனும் பெரும் பதம் நாடி (பெரிய திருமொழி -1-1-1-இரக்கத்தால் மதி நலம் அருள பெறுவோம் )
அறியாதன அறிவிக்கும் ( திருவாய் மொழி 2-3-2 -நீ செய்தன அடியேன் அறியேன் -நீ ஸ்வாமி என்பதால் செய்தாய் -)
ஞானத் துறையான ( திரு விருத்தம் -93 ) ஆசார்யனைக் கிட்டினால் ,

அவன் செயல் நன்றாக திருத்தி ( கண்ணி நுண் சிறுத் தாம்பு -10 )
(செயல் நன்றாக -ஆச்சார்யன் செயல் -சிரவணம் மனனம் மஹா விசுவாசம் வர வைக்கிறார் –
சத் அனுஷ்டானம் -நன்றாக பணி கொள்வான் -திருந்து சொல்லாமல் திருத்தி -ஆச்சார்யர் க்ருத்யம் -)
பிறர் கேட்பதன் முன் ( பெரிய திருமொழி 2-4-9) என்று தனி இடத்தே கொண்டு இருந்து

உள்ளம் கொள் அன்பினோடு (பெரிய திரு மொழி 5-8-9 ) இன் அருள் சுரந்து
(உளம் கொள் அன்பு- ஹிதம் சொல்லப் போகும் ப்ரீதி யுடன் -பெற்ற தாய் பிறப்பித்த தந்தை -திருவேங்கடமுடையான் )
பாடி நீர் உய்மின் ( பெரிய திருமொழி 1-1-7) என்று அருளிச் செய்யும்
இந்த திரு மந்திரத்தினுடைய ஏற்றத்தை அறிந்து

பேணி அதுக்கு உள் ஈட்டான
அந்தணர் மாட்டு அந்தி வைத்த ( திரு நெடும் தாண்டகம் -4 )
மந்திரத்தில் பக்தியைப் பண்ணி ,

இத்தை உபகரித்தவன் பக்கலிலே நீ செய்தன ( திரு வாய் மொழி 2-3-2 ) என்று
க்ருதஜ்ஞனாய் போரும் அவனுக்கு உஜ்ஜீவநம் உண்டாகக் கடவது ..

————————————————

அவிதித்வா ருஷிம் சந்த-என்கிற ஸ்லோகத்திலே சொன்னபடி பாபாதிகள் ஒன்றும் வாராமைக்கு திரு மந்த்ரத்தின் உடைய
ருஷிச் சந்தோ தேவதா பீஜ சக்தி வர்ண விநியோக ஸ்தான ந்யாசாதிகள்-
அவ்வோ கல்ப சம்ப்ரதாயங்களுக்கு ஈடாகக் கண்டு கொள்ள வேணும் –

திருமந்தரம் தன்னை அனுசந்திப்பார்க்கு ப்ரதிபாத்யமான வஸ்துவோ பாதி
ருஷிச் சந்தோ தேவதைகளும் -பீஜ சக்திகளும்
சோஷண தாஹ நாதிகளும்-(உலர்த்தல் எரித்தல்) ஆகிய இவை எல்லாம் அனுசந்தேயமாகக் கடவது –
அது வேண்டுவான் என் என்னில் –
நமோ நாராயணாய வென்று பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் -என்று –
இம் மந்திர அனுசந்தானம் பண்ணுவார் நித்ய ஸூரிகளாய்-அவர்களுடைய யாத்ரை யாயிற்று இது –
அத்தை இறே குண த்ரயாத்மிகையான பிரகிருதி வச்யனான இவன் அனுசந்திக்கப் பார்க்கிறது –
ஆகையாலே ஒரு பாவனையாலே அவர்களோபாதியாக தன்னுடைய சரீரத்தையும் பாவித்து அனுசந்திக்கைக்காக
சோஷணாதிகள் வேண்டுகிறது –

இனி ருஷிச் சந்தோ தேவதைகளை அனுசந்திக்கிறது -இம் மந்த்ரத்தில் உண்டான ஆதர அதிசயத்தாலே –
பீஜ சக்திகளை அனுசந்திக்கிறது -மோஷ ப்ரதம் என்று அவ்வழியாலே இவனுக்கு இதில் விஸ்வாசம் பிறக்கைக்காக-
இவை இத்தனையும் திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் —
இது தனக்கு அந்தர்யாமியான நாராயணன் ருஷி -என்று தொடங்கி-

திரு மந்த்ரத்துக்கு உண்டான பரிக்ரஹ அதிசயத்தை அருளிச் செய்கிறார் –நாராயண பரங்களும் -என்று தொடங்கி –

திரு மந்த்ரத்தின் உடைய அர்த்த பூர்த்தியையும் மந்த்ராந்தரங்களின் அர்த்த அபூர்த்த்யாதிகளையும்
அருளிச் செய்கிறார் -நம்பி நாமம் -என்னும் படி -என்று தொடங்கி –

ஷூத்ர மந்த்ரங்களிலும் -பகவன் மந்த்ரங்களை -ஷூத்ர மந்த்ரங்கள் என்கிறது பல த்வாரா –
அர்த்த காம புத்ர வித்யாதி ஷூத்ர பலங்களை கொடுக்கிற வழியாலே என்கை-

ஒக்க ஓதா நிற்க -விஷ்ணு காயத்ரியில் -நாராயணாய வித்மஹே என்று தொடங்கி -விஷ்ணு வாசுதேவ சப்தங்கள்
நாராயண சப்தத்தோடு ஒக்க ஓதப்படா நின்றது இறே

ஓடித் திரியும் யோகிகள் -நிர்விசேஷ சின் மாத்ர வஸ்து வாதிகளான குத்ருஷ்டிகள் –
நாராயண சப்தம் போலே ஸ்வரூப ரூப குணாதி களை எல்லாம் பிரதிபாதியாதே
ஸ்வரூப மாத்ரத்தை பிரதிபாதிக்கையாலே விஷ்ணு சப்தம் குத்ருஷ்டிகளாலே ஆதரிக்கப் படுகிறது –

அர்த்த பூர்த்தியை உடைத்து அல்லாத வாஸூ தேவ மந்த்ரம் வ்யாப்ய அத்யாஹாராதி சாபேஷதையாகிற அபூர்த்தியை யுடையது –
ஷடஷரி -வியாப்த பதார்த்தங்களையும் -வியாபன பிரகாரத்தையும் -வியாப்தி பலத்தையும் –
வியாபகனுடைய குணங்களையும் சொல்லாதே
வியாப்தி மாத்ர பிரகாசகம் ஆகையாலே அபூர்ணம் –
வியாபன பிரகாரத்தைச் சொல்லா நிற்கச் செய்தேயும் வியாப்ய பதார்த்தங்களுக்கு வாசக சப்தம் அல்லாமையாலும்
சர்வம் வசதி -என்று அர்த்த பலத்தாலே -சர்வ சப்தம் -புகுந்தாலும் -அதில் குணம் அன்வயியாமையாலும் –
இனி குண சித்திக்காக பகவச் சப்தத்தை கூட்டிக் கொள்ள வேண்டுகையாலும் –
வியாப்தி பலத்தை சொல்லாமையாலும் திருத் த்வாதசாஷரியும் அபூர்ணம் –

மற்ற மந்த்ரங்களிலும் ஏற்றம் -என்றது -இம்மந்த்ரம் அவை போல் அன்றியிலே –
வ்யாப்த பதார்த்தங்களோடு -வியாபன பிரகாரத்தோடு-
வியாப்தி பலத்தோடு -வியாபகனுடைய குணங்களோடு வாசி அற சாப்தமாகக் காட்டுகையாலே
அவற்றில் காட்டில் இதுக்கு அர்த்த பௌஷ்கல்ய நிபந்தனமான ஆதிக்யம் உண்டு என்றபடி –

திரு மந்த்ரத்தின் உடைய வைபவத்தை பல படியாக அருளிச் செய்கிறார் –
குலம் தரும் என்கிறபடியே -இத்யாதி –
மந்திர மந்த்ராந்தங்களின் ராஜத்வத்தை அருளிச் செய்கிறார் -எம்பெருமான் தெய்வத்துக்கு அரசு -இத்யாதி –
சப்த சாமான்யத்தில் திரு மந்த்ரத்தின் சீர்மையை விவரித்து அருளிச் செய்கிறார் -பொருள் இல்லாத -இத்யாதி –
வதரியாஸ்ரமித்துள்ளான் திருமந்த்ரத்தை வெளியிட்டு அருளினாலும் அதனை நாம் பெறுவது ஓர் ஆச்சார்யன் மூலமாக இறே –
அது பெறாமல் விலகிப் போருகிற நம்மை சர்வேஸ்வரன் நல் வழிப்படுத்தி ஆச்சார்ய சம்பந்தத்தை உண்டாக்கும்
சோபனா க்ரமத்தை அருளிச் செய்கிறார் -தனி மாப் புகழே-என்று தொடங்கி –

இவ்விடத்தில்
1-ஈச்வரஸ்ய ச சௌஹார்த்தம்
2-யத்ருச்சா ஸூ ஹ்ருதம்
3-ததா -விஷ்ணோ கடாஷம் –
4-அத்வேஷம்
5-ஆபிமுக்யம் ச
6-சாத்விகை – சம்பாஷணம் ஷடேதா நி ஹ்யாசார்யா ப்ராப்தி ஹேதவே-என்கிற வசனம் அனுசந்தேயம்
மந்த்ரே தத் தேவதாயாம் ச ததா மந்திர ப்ரதே குரௌ–என்கிற வசனத்தையும் –
மந்த்ரத்திலும் மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்திர பிரதனான ஆச்சார்யன் பக்கலிலும்
பிரேமம் கனக்க உண்டானால் கார்யகரம் ஆவது -முமுஷுப்படி -சூர்ணிகை 4-என்கிறவற்றையும்
அடி ஒற்றி அருளிச் செய்கிறார் –
இத் திருமந்த்ரத்தின் உடைய ஏற்றத்தை -என்று தொடங்கி

——————————————————————————————

திரு மந்த்ரத்தில் அர்த்த பஞ்சக பிரதிபாதனம்

திரு மந்திரத்தில் அர்த்த பஞ்சக பிரதி பதனம் ..
எம்பெருமானோடு
இவ் வாத்மாவுக்கு
உண்டான உறவை அறிய (ஞானமே உபாயம் -திருவடியே தான் உபாயம் என்ற ஞானமே வேண்டுவது
பழ அடியேன் – அநாதி ஸித்தமான சேஷத்வம் அறிவதே வேண்டியது –
ஞானாந் மோக்ஷம் அஞ்ஞானம் சம்சாரம் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -ப்ரஹ்ம ஞானமே பகல் )
அறிய ஒட்டாத விரோதியை
ஒரு வழியாலே கழித்து பெரும் பேற்றை இது வெளி இடுகையாலே
முமுஷுக்கு அறிய வேண்டும் அஞ்சு அர்த்தமும் இதுக்குள்ளே உண்டு ..

அர்த்த பஞ்சக பிரதி பாதன பிரகாரம் ..
இதில் ஸ்வரூபம் சொல்லுகிறது -பிரணவம் ..
விரோதியையும் அது கழிக்கைக்கு உபாயத்தையும் சொல்லுகிறது -நமஸ்ஸூ
பர ஸ்வரூபம் சொல்லுகிறது -நாரயண பதம்
புருஷார்த்தம் சொல்லுகிறது -சதுர்த்தி –
(நாராயணாய பவேயம் -சகல கைங்கர்யங்களும் செய்யப் பெற வேண்டும் -பிரார்த்தனா சதுர்த்தி )

பிராப்யமும் விரோதியும் உபாயமும் பலமும்
ஆத்மாவுக்கு ஆகையாலே ஸ்வரூபம் சொல்லுகையிலே இதுக்கு நோக்கு ..

(ஸ்வம் ரூபம் ஸ்வரூபம்- தானான தன்மை -தானே ஸ்வரூபம் தான் –
மல்லிகைப் பூவின் ஸ்வரூபம் மல்லிகைப்பூ தானே
அசித்துக்கு தான் ஸ்வரூபமே மாறும் -சேதனனுக்கு ஸ்வரூபம் மாறாது -ஸ்வ பாவம் மாறும்
ஸ்வரூபம் சொல்லுகையிலே இதுக்கு நோக்கு-நான் யார் புரிவதே வேண்டியது-
பிரணவம் நம்மை பற்றியே சொல்ல வந்தது -ஜீவாத்ம ஸ்வரூபமே பிரதானம் -இதை அறிந்த பின்பு தானே மற்றவற்றால் பலன் )

(ஓர் சம்ஹிதா ஆகாரம் -ஓர் எழுத்து / மூன்று எழுத்து அசம்ஹிதா ஆகாரம்
இரண்டு அர்த்தங்கள் வருமே –
ஓம் ஒரே பதம்- ஒரே எழுத்து-
பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ஆஸ்ரயா ஜீவன் -ஓர் எழுத்து அர்த்தம் -நமக்காக உபதேசம் –
இதுவே குணம் அடையாளம் -வேறே ஒருவருக்கு ஆழ் படாமல் அவனுக்கே அடிமை -பண்பு இதுவே –
சேஷ சேஷி பாவம் சரீர சரீரீ பாவத்துடன் அவனுடன் ஒட்டிக் கொண்டே இருக்கிறோம் –
குணம் ஜாதி கிரியா மூன்றும் ஒரு வியக்தியை-த்ரவ்யத்தை – ஆஸ்ரயிக்கும்–தனியாக இருக்காதே –
ஜீவாத்மா ஞானம் ஆனந்தம் சேஷத்வம் மூன்றும் கொண்டவன் –
அசேஷ சித் அசித் வஸ்து சேஷிநே சேஷ சாயிநே -நிர்மல ஆனந்த கல்யாண நிதி-சொத்தான தன்மை அறிந்து
கைங்கர்யம் செய்து சேஷியின் அதிசயத்துக்காகவே இருக்க வேண்டும் –
அநந்யார்ஹ சேஷ பூதன் அடியேன் என்கிற ஞானமே ஞானம்-இத்தை சொல்ல வந்ததே பிரணவம் -இதுவே ஸ்வரூபம்
ஸ்வரூப நிரூபக தர்மம் -விசேஷணம் -நிரூபித்த ஸ்வரூபத்தை விளக்கும் –
சாமந்தி பூ -பூக்கள் இல்லாவற்றிலும் வேறுபடுத்தி -பூ நிரூபக தர்மம் –
சாமந்தி -விசேஷணம் -மல்லிகை போல்வன இல்லை என்பதைக் காட்டுமே
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –பரம் பரன் -ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும்
மணத்தைக் கொண்டு பூவையும் ஒளியைக் கொண்டு மாணிக்கத்தையும் ஆதரிப்பது போலே -)

—————————————————–

மற்று எல்லாம் பேசிலும் -என்கிறபடியே -அறிய வேண்டும் அர்த்தங்கள் எல்லாம்
இதுக்கு உள்ளே உண்டு என்கிறார் -எம்பெருமானோடு -என்று தொடங்கி

எம்பெருமானோடு என்ற பர ஸ்வரூபமும் —
இவ்வாத்மாவுக்கு என்று ஸ்வ ஸ்வரூபமும் –
உண்டான உறவை அறிய -என்று அநாதி சித்த சம்பந்தத்தைப் பற்றின ஜ்ஞானம் ஆகிற உபாயமும்
(ஞானாந் மோக்ஷம் அஞ்ஞானம் சம்சாரம் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -ப்ரஹ்ம ஞானமே பகல்)
அறிய ஒட்டாத விரோதி என்று விரோதி ஸ்வரூபமும் –
கழித்துப் பெரும் பேற்றை என்று அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்ட பிராப்தி ரூப புருஷார்த்த ஸ்வரூபமும் பிரதிபாதிதம் –
திருமந்த்ரத்தின் உடைய ஜ்ஞாதவ்ய பஞ்சக பிரதிபாதன பிரகாரத்தை அருளிச் செய்கிறார் -இதில் -என்று தொடங்கி –
திரு மந்த்ரத்துக்கு அர்த்த பஞ்சகத்தில் இன்னதில் நோக்கு என்கிறார் பிராப்யம் -என்று தொடங்கி

———————————————————————————

திரு மந்திரத்தின் வாக் யார்தம் ..
சேஷத்வம் போலே ,அவனே உபாயமும் , உபேயமும் என்று இருக்கை ஸ்வரூபம் ஆகையாலும்,
அந்நிய சேஷத்வமும் , ஸ்வ ஸ்வா தந்திரியமும் ,குலைகை கைங்கர்யம் போலே பேறு ஆகையாலும் ,
ஸ்வ ஸ்வரூபத்தையும் சொல்லி புருஷார்த்ததையும் சொல்லுகிறது என்று வாக் யார்தம் ..

( சேஷத்வம் போலே என்றது பிரணவ அர்த்தம் -உபாயம்-நமஸ் அர்த்தம் -உபேயம் -நாராயணாயா அர்த்தம் )

திரு மந்திரத்தின் அக்ஷர பத ஸங்க்யைகள்
பேசுமின் திரு நாமம் எட்டு எழுத்தும் (பேசும் இன்-பெரிய திருமொழி 1-8-9-அம்மே குழந்தை சொல்வது போலே ) என்கிற படியே
இது எட்டு திரு எழுத்தாய் –
ஓம் -என்றும் -1- திரு எழுத்தாய்
நம -என்றும் -2-திரு எழுத்தாய்
நாரயண -என்றும் -5- திரு எழுத்தாய்
மூன்று பதமாய் இருக்கும் ..

பிரணவ அர்த்தம் ..
இதில் முதல் பதமான -பிரணவம் -அ -என்றும் -உ -என்றும் -ம -என்றும் மூன்று திரு எழுத்தாய் ,
நால் வேதக் கடல் அமுது ( பெரியாழ்வார் திருமொழி 4-3-11 ) என்னும் படி வேத சாரமாய் ,
மூன்று எழுத்தாகி ( பெரியாழ்வார் திரு மொழி 4-7-10 )என்கிறபடியே மூன்று பத மாய் ,
மூன்று பொருளை வெளி இடக் கடவதாய் ,

(மர்யாதா புருஷோத்தமன்–மூன்று வியாக்ருதிகள் -விசேஷ வியாகாரம்-அ உ ம – பூ புவ சுவ-பிறக்கும் –
நிருத்தம் ஒரு அங்கம் -மூன்று எழுத்து அதனால் -மூன்று எழுத்தாக்கி -இதை நம்பி உள்ளாருக்கு-
அசம்ஹிதா ஆகாரம்-)

மூலமாகிய ஒற்றை எழுத்தாய் (பெரியாழ்வார் திரு மொழி 4-5-4 )
ஒரு பதமாய் ,ஒரு பொருளைக் காட்டக் கடவதாய் , இருக்கும் –
(சம்ஹிதா ஆகாரம் -பகவத் அநந்யார்ஹ சேஷத்வம் ஜீவன் )

சப்த அர்த்தங்கள் என்ற இரண்டாலும் , ஜீவ பர பிரதான்யம் கொள்ளக் கடவது இறே ..
ஓங்கார ரதம்- பார்த்த செல்வத் தேர் போல ( பெரிய திரு மொழி 2-10-8 ) இறே இருப்பது ..

அடியேன் அடி ஆவி அடைக்கலம் ( திரு விருத்தம் -85 ) என்கிற படியே ,
ஆத்ம சமர்பணத்திற்கு மந்திரமாய் ,
(அவனுக்கு சொத்து என்று உணர்கிறார் -உணர்த்தியே சரணாகதி
த்வமேவ உபாய பூத மே பவ இதி-பிரார்த்தனா மதி சரணாகதி
அநந்ய சாத்தியே ஸ்வ ஆபீஷ்ட்ய -மஹா விஸ்வாச பூர்வகம் ததேவ உபாயம் என்ற யாசகமே பிரபத்தி)

சந்தஸ்ஸூ வேதங்களில் பிரணவம் நான் என்ற மூன்று எழுத்தாய் ( பெரியாழ்வார் திரு மொழி 4-10-4 )
முதல்வனோடே வேறு செய்யாமல் ( திரு சந்த விருத்தம் -116 ) ஒரு பேரிலே இரு பாகு ஆகையாலே ,
இரண்டு பங்குக்கு ஒரு மூல பிரமாணம் போலேயாய்

வேதத்துக்கு கீழும் மேலும் செப்பும் மூடியும் போல ,
செம்சொல் மறைப் பொருளை (பெரியாழ்வார் திரு மொழி 4-10-7 ) இது சேமித்துக் கொண்டு இருக்கும் ..

(திருட்டு பஞ்சம் நோய் -திரு மந்த்ரம் அறிந்தால் -பிரணவம் அறிந்து திருட்டு போகும் –
நமஸ் அர்த்தம் அறிந்து பஞ்சம் தீர -நாராயணாயா அர்த்தம் அறிந்து அறிந்து நோய் போகுமே-
ஸ்ரீ கௌஸ்துப ஸ்தானம் -பர ப்ரஹ்மம் சொத்து -ஆத்ம அபகாரம் பெரிய களவு –
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –
வேதங்களுக்கு சுருக்கம் -மங்களம் கொடுக்கும் -பிரணவம் –
உலகு எல்லாம் நீயே யாகி -த்ரிவித காரணமும் நீயே -மூன்று எழுத்தாய முதல்வனேயோ –
அகர முதல் எழுத்து எல்லாம் – போலவே – வாஸ்யங்களுக்கு காரணம் ப்ரஹ்மம் வாசக காரணம் அகாரம் –
ஒரு பேரிலே இருவருக்கும் இருப்பு -ப்ரணவத்திலும் நாராயணாயா இரண்டிலும் இருவருமே உண்டே
பிரதானம் ஒவ் ஒருவருக்கேயாக இருந்தாலும் –
வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் -இத்தையே வேறு செய்யாமல் -நாயனார்
செஞ்சொல் -ஆராதனத்துக்கும் ஆராதனத்துக்கு விஷயம் -உபாயம் உபேயம் அவனே -பூர்வ பாகம் உத்தர பாகம் –
மறையின் பொருளாக நின்று-அரங்கத்தம்மானை -சொல்லாகவும் அர்த்தமாகவும் -அ சப்த காரணம் அதனால் –
இது சேமித்துக் கொண்டு இருக்கும் -வேதத்தையும் அவனையும் -பிரணவம் சேமித்துக் கொண்டு இருக்குமே -)

————————————-

திருமந்த்ரார்த்தத்துக்கு வாக்யார்த்தம் அருளிச் செய்கிறார் -சேஷத்வம் -என்று தொடங்கி –
இங்கே இது தன்னில் சொல்லுகிற அர்த்தம்
ஸ்வரூபமும் ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யமும் -முமுஷுப்படி -சூர்ணிகை -26-என்கிற
உலகாரியன் திரு வாக்கும் –
இம்மந்திரம் தன்னில் சொல்லுகிற அர்த்தம் இவ்வாத்மாவினுடைய சேஷத்வ பாரதந்தர்யங்கள் ஆகிற ஸ்வரூபமும்
அந்த ஸ்வரூபத்துக்கு அனுரூபமாய் இருந்துள்ள கைங்கர்யம் ஆகிற ப்ராப்யமும் -என்கிற
மா முனிகள் திருவாக்கும் அனுசந்தேயங்கள்
ப்ராப்யத்தின் ஸ்வரூப அனுரூபவத்வம் ஆவது -சேஷத்வ பாரதந்தர்யங்களுக்குத் தகுதியாய் இருக்கை
அதாவது ஸ்வ ப்ரயோஜநத்வ ஸ்வ கர்த்ருத்வ பிரதிபத்தி கந்த ரஹிதமாய் இருக்கை –
அதாவது அவன் முக மலர்த்திக்கு உறுப்பாக அவன் நியமித்தபடி பண்ணுகை –
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலம் –
பராதீன ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகத்வம் பாரதந்தர்யம் -என்று இறே பூர்வர்கள் அருளிச் செய்தது

(பரகத அதிசய ஆதானேச்சயா-சேஷ லக்ஷணம் -சேஷிக்கு பெருமை சேர்ப்பதே செய்வது சேஷ பூதனுக்கு கர்த்தவ்யம் –
பாரதந்தர்யம் -அவனே பிரதானம்-பர தந்திரம் -யாருக்கு பகவான் பிரதானமோ யஸ்ய அவன் பரதந்த்ரன்
ஸ்வம் பிரதானம் யஸ்ய ஸ்வதந்த்ரன் –
செய்விக்கப்பட்டு செய்கிறோம் -கர்த்தா நாம் இல்லை -அவன் அதீனம் நம் பிரவ்ருத்திகளும் நிவ்ருத்திகளும்
சேஷத்வம் புரிய அவன் ஆனந்தத்துக்கு மட்டும் செய்வது -ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி
பாரதந்தர்யம் புரிய ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி
அவன் முக மலர்த்திக்கு உறுப்பாக அவன் நியமித்தபடி பண்ணுகை-இதுவே சேஷத்வமும் பாரதந்தர்யமும் -)

திரு மந்திரத்தின் உடைய அக்ஷர ஸங்க்யையும் பத ஸங்க்யையும் ஸ பிரமாணமாக அருளிச் செய்கிறார் –
பேசுமின் -என்று தொடங்கி –

இனி பிரணவத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி அதனுடைய அக்ஷர த்ரயாத்மகதையை
அருளிச் செய்கிறார் -இதில் முதல் பதமான -என்று தொடங்கி –

இவர் தாமே உபய பிரதானமான பிரணவம் -ஆச்சார்ய சூர்ணிகை -161- என்று இறே அருளிச் செய்தது –
ஓமித் யாத்மாநம் யுஜ்ஜீத -என்றும் –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் சொல்லுகிறபடியே
சப்தார்த்தங்களினுடைய ப்ராதான்யத்தாலே
ஜீவ ஈஸ்வரர் இருவருக்கும் வாசகமாய்க் கொண்டு இருவருடைய பிரதான்யம் தோன்றுவிக்கிற பிரணவம் போலே -என்றபடி –

அர்ஜுன ரதம் போலே பிரணவம் சேஷ பிரதானம் ஆகையால் –
ராஸ மண்டலம் போலே நாராயண சப்தம் சேஷி பிரதானம் ஆகையால் புநக்ருதி இல்லை –
திருவல்ல வாழ் உறையும் கோனாரை அடியேன் -திருவாய் -5-9-1-என்று இறே ஆழ்வார் அருளிச் செய்தது –
நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும் போலே இந்த நிர்த்தேசம் –
அவனைச் சொல்லும் போது தம்மை இட்டு அல்லது சொல்லப் போகாது –
தம்மைச் சொல்லும் போதும் அவனை இட்டு அல்லாதது சொல்ல ஒண்ணாது –
கோனாரை என்ற இடம் நாராயண சப்தார்த்தம் –
அடியேன் என்ற விடம் ப்ரணவார்த்தம் –

பிரணவம் ஜீவ பிரதானம் –
நாராயண சப்தம் ஈஸ்வர பிரதானம் –
பிரணவம் தன்னுள் சாப்த பிரதான்யம் ஜீவனுக்கு ஆனாலும் ரக்ஷகனான சேஷிக்கே ஆர்த்த பிரதான்யம் –

பிரணவத்துக்கு ஆத்ம சமர்ப்பணமும் அர்த்தம் ஆகையால் அத்தை அருளிச் செய்கிறார்
அடியேனடியாவி -என்று தொடங்கி –

பிரதம அக்ஷரத்தில் சதுர்த்தி ஸம்ப்ரதானத்திலேயாய் –
ப்ரஹ்மணே த்வா மஹஸே -ஓமித்யாத்மநாம் யுஞ்ஜீத-அடியேனடியாவி யடைக்கலமே-என்கிறபடியே
விரோதி பயத்தால் கலங்கின தசையில் செய்யப்படும் ஆத்ம சமர்ப்பணம் -என்றபடி
(சதுர்த்தி நாலாம் வேற்றுமை -சம்பிரதாயம்- சமர்ப்பித்து -கொடுத்து ஓம் சொல்லி ஆத்மாவை சமர்ப்பித்தல் என்றபடி
அதவா கிந் னு சமர்ப்பிக்க அதுவும் அவனதே என்று தெளிந்து )

பிரணவத்தின் சகல வேத சங்க்ரஹத்தை அருளிச் செய்கிறார் -சந்தஸ் -என்று தொடங்கி –

கீழும் மேலும் செப்பும் முடியும் போலே -என்றது –
ப்ராஹ்மண ப்ரணவம் குர்யாத் ஆதாவந்தே ச ஸர்வதா -ஸ்ரவதி அநோங்க்ருதம் பூர்வம் பரஸ்தாச்ச விசீரியதே -என்று
வேதம் கீழ் ஒழுகிப் போகாமைக்காகவும் மேல் சிதறிப் போகாமைக்காகவும் –
கீழும் மேலும் செப்புப் போலே மூடிக் கொண்டு கிடக்கத் தக்கதாய்
சகல மந்திரங்களுக்கும் ஸ்வ சம்பந்தத்தால் உன்மேஷ கரமாய் இருக்கும் என்றபடி –

——————————————————————————————————————–

அ -கார அர்த்தம் ..
ஓர் எழுத்து ஓர் உரு (பெரிய திருமொழி 6-1-5 ) என்னும் படி
(வாசக ஜாதத்துக்கு- சொற்கள் கூட்டத்துக்கு பிரதானம் அகார சப்த வாஸ்யனே-அகாரத்துக்கு உருவமானவனே )
இதுக்கு பிரக்ருதியாய் -(பகுதி விகுதி -பிரகிருதி விக்ருதி -)
முதல் எழுத்தாய் , எல்லா வற்றிலும் ஏறி ,சொல் நிறப்பத்தை வுண்டாக்குகிற
துளக்கமில் விளக்கான (திருக் குறும் தாண்டகம் -18 ) அகாரம் ..
நான் மறையின் சொல் பொருளுக்கு அடியாய் (நாச்சியார் திருமொழி 11-6)
அவை அவை தோறும் ( திரு விருத்தம் -96 )
(சமயங்கள் பல பல நின் மூர்த்தி -அந்தர்யாமியாகி பரப்பி வைத்து -நின் கண் வேட்க்கை எழுவிப்பேன்)
நிறைந்து நின்ற (திருவாய் மொழி 3-2-7 )
அக்ஷரங்களில் அகாரம் நான் என்று
மேல் இருந்த விளக்கான (பெரியாழ்வார் திருமொழி 4-3-11 )
எம்பெருமானைக் காட்டுகிறது ..
(நாலிரு மூர்த்தி -அஷ்டாக்ஷரமாகவே-மேல் இருந்த விளக்கு–
ஷரம் பிரதானம் -சேதனம் -இரண்டையும் ப்ரேரிரிக்கும் பரமாத்மா )

(காரணத்வம் -ரக்ஷகத்வம்-சேஷி -ஸ்ரீ யபதித்தவம் நான்கையும் அகாரம் சொல்லும் என்பதை மேலே விளக்குகிறார்
1–ஸ்வரூபத்தால் காரணத்வம்
2–தாது அர்த்தத்தால் ரக்ஷகத்வம்
3–ப்ரத்யயம் ஆய-லுப்த சதுர்த்தி – சேஷி -அவனுக்கு அகார வாச்யனுக்கு நான் அடிமை –
4–ஸ்ரீ யபதித்தவம்–காரணத்துக்கும் ரக்ஷகத்வத்துக்கும் சேஷியாவதற்கும் ஸ்ரீ யபதித்வம் வேண்டுமே -இது ஆர்த்தமாக சித்தம்
இன்றியமையாத அடையாளம் -ஸ்வரூப நிரூபக தர்மம் -விசேஷணங்கள் வியாவ்ருத்தம்-காட்டவே –
அவன் திரு மார்பில் விட்டுப் பிரியும் அன்று தான் இவ் வஷரத்தில் நின்றும் பிரிவாள் )

இது அவ ரக்ஷண -என்கிற தாதுவிலே பதம் ஆகையாலே , இந்த ரஷகம் ஆகிற தொழில்
காக்கும் இயல்வினனான ( திரு வாய் மொழி -2-2-9 ) சர்வேஸ்வரன் பக்கலிலே கிடக்கை யாகையாலே ,
(காப்பவன் -என்று சொல்லாமல் -காக்கும் இயல்வினன் -ரக்ஷகத்வம் சர்வேஸ்வரன் பக்கலிலே மட்டுமே கிடக்கும்
ஈஸ்வரனை அல்லால் ரக்ஷகர் அல்ல பிரபந்த பரித்ராணாம் சொல்லுமே )

மூவாத் தனி முதலாய் மூ வுலகும் காவலோன் ( திருவாய் மொழி 2-8-5 ) என்கிற படியே
காரண வஸ்துவே ரஷகமும் என்று தோன்றும் ..

தேச கால அவஸ்த பிரகார அதிகாரிகளை இட்டு ரஷணத்தை சுறுக்காமை யாலே ,-
துளிக்கின்ற வான் இன் நிலம் ( திரு வாய் மொழி 2-3-10 )-என்றும் –
வரும் காலம் நிகழ் காலம் கழி காலமாய் ( திரு வாய் மொழி 3-1-5 ) -என்றும் –
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் ( திரு வாய் மொழி 6-9-3 )-என்றும் –
மன் உயிர்க்கு எல்லாம் அரணாய (முதல் திரு வந்தாதி -60 ) என்கிற படியே –
எல்லாத் தேசத்திலும் , எல்லாக் காலத்திலும் ,எல்லா அளவிலும் , எல்லா வழியாலும் ,
எல்லோரையும் ரஷிக்கும் படியைக் காட்டுகிறது ..(ஐந்துக்கும் ஐந்து பாசுரங்கள் )
(சாலப் பல நாள் உகந்து உயிர்கள் காப்பான்-6-9-3- -ஐந்தையும் காட்டுமே -சர்வ பிரகார ஸர்வதா ரக்ஷகன் )

அருளால் அளிப்பார் யார் ( திரு வாய் மொழி 2-2-2 )-என்றும் –
உவந்து எம்மைக் காப்பாய் ( நான் முகன் திரு வந்தாதி -19 ) -என்கிற படியே
அருளையும் உகப்பையும் பரிகரமாகக் கொண்டு ,
(காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ -ரக்ஷகனும் ரக்ஷிக்க மநோ ரதிப்பவனும் நீ
காக்க வேண்டும் விருப்பம் கொண்டவனும் நீயே )

மலர் கதிரின் சுடர் உடம்பாலும் (திரு வாய் மொழி 3-1-5 )
விகஸ்வர கிரண தேஜோ ரூபம்–மலர்-விகஸ்வர – கதிர்-கிரண -தேஜோ -சுடர்-ரூபம் – உடம்பு-
மலர்ந்து கொண்டே இருப்பதைச் சொல்லும் -விபீடணர்க்காக மலர் கண் வைத்து -மலர்க்கண் இல்லை )
வருந்தாதே ஞானத்தாலும் ( திரு வாய் மொழி 3-1-5 )

எழுவார்க்கு (முதல் திரு வந்தாதி -26 ) உடம்பைப் பூண் கட்டியும் ,
விடை கொள்வார்க்கு ( முதல் திரு வந்தாதி -26 )
செடியார் ஆக்கை கழித்தும் ( திரு வாய் மொழி 1-5-7 )
வழுவா வகை நினைந்தார்க்கு ( முதல் திரு வந்தாதி -26 ) தன் தாளின் கீழ் சேர்த்தியை (திருவாய்மொழி 7-5-10-) உண்டாக்கியும் ,
(பிறப்போடு நோயோடு மூப்பொடு இறப்பிவை பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித்
தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி -கீழே ஆக்கையை மட்டும் நீக்கி )
சேர்ந்தார்களை (முக்தர்களை – திரு வாய் மொழி 2-3-6 ) என்றும் மகிழப் பண்ணியும்
பிரிந்து கூடாதார் பணிவும் பண்பும் தாமேயாயும்-(பிரிந்து கூடாதார்-நித்யர்களுக்கு இந்த சப்தம் -திரு வாய் மொழி -8-3-6 )
பண்ணும் ரஷணம் சேதனர் நின்ற அளவுக்கு ஈடாய் இருக்கும் ..

அகாரார்த்தம் -ஸ்ரீ யபதியே-
திருவுக்கும் திருவாகிய செல்வன் -பெரிய திருமொழி -7-7-1-
( ஸ்வ வியதிரிக்த சமஸ்தருக்கும் ஸ்ரீ இவளே -அவனும் இதிலே அடங்கும்-இதனாலேயே தெய்வத்துக்கு அரசு -காரணத்வம் அவனுக்கு )
திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் –திருவாய்மொழி -10-6-9–என்று அவனுக்கு நிரூபகம் ஆகையால்
(ஸ்ரீ மத்வம்-காரணம் அடியாக உபாதியால் வந்தது இல்லை -நிருபாதிகம்–இவள் திரு மார்பில் இல்லாத அன்றும்
திரு மார்பு திகழ்கின்றதாம் -இல் பொருள் -இல்லாத அன்றும் -இப்படி இருக்க
திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமால் -யதார்த்த ஸ்ரீ மத்வம் )

த்யு மணியையும் ( சூரியனையும் ) மாணிக்கத்தையும் பூவையும் விடாத ப்ரபையும் ஒளியும் மணமும் போலே
மணியை யணி யுருவில் -( பெரிய திருமொழி-8-9-2-)-என்னும் படியே
தன்னோடும் பிரிவில்லாத திரு மகள் -( பெரிய திருமொழி–4-5-5-/-5-6-7-)ஆகையால்
(சிந்தாமணி இவனே -வரு மானம் தவிர்க்கும் -அவமானம் தவிர்க்கும் அணி யுருவில் திருமாலை –
பிரிவில்லாத திரு மகள் மூன்று பாசுரங்களில் உண்டு )
ஊழி ஊழி தலையளிக்கும் திருமால் – (திருவாயமொழி-10-7-6–என்னும் படி ரக்ஷண தர்மத்துக்கு
இவள் தர்ம பத்னி யாகையாலும்

திருமாலே நானும் உனக்கு –திருப்பல்லாண்டு -11-
திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட -பெரிய திருமொழி-6-3-9- -என்னும்
( சொல்லாய் திரு மார்பா -இவன் தான் பண்ணின பாபம் அனுபவிக்கட்டும் என்று ஆறி இருக்க
நான் ப்ரஹ்மச்சாரி நாராயணனையா பற்றினேன் )
ஆத்மாவுக்கு மிதுன சேஷத்வம் ஸ்வரூபம் ஆகையாலும்
ஸ்வரூப ரூப விபவங்களைப் போலே
( அகாரத்தில் இந்த மூன்றும் )ப்ரக்ருதி ப்ரத்யய தாதுக்களையும் விடாமையாலே
( பிராட்டியினுடைய ப்ரமேய த்ரய சம்பந்தம் போலே உள்ள பிராமண த்ரய சம்பந்தத்தை அருளிச் செய்கிறார்
ஸ்வரூப நிரூபக தர்மம்- திரு மார்பை விட்டு பிரியாமல் ரூபம் –ரஷிக்க இவள் வேண்டுமே விபவம்-
அகார ஸ்வரூபம் ரூபம் விபவம்-காரணத்வம் ரக்ஷகத்வம் சேஷித்வம் மூன்றும் )
இதிலே ( அகாரத்திலே )ஸ்ரீ சம்பந்தமும் அனுசந்திக்கப்படும்

—————————————————-

இவ்வக்ஷர த்ரயத்துக்கும் அடைவே அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி பிரமம் அகரார்த்தத்தை
அருளிச் செய்கிறார் -ஓர் எழுத்து என்று தொடங்கி –
அக்ஷராணாம் அகாரோஸ்மி-என்றத்தையும் பற்ற அக்ஷரங்களில் அகாரம் நான் -இத்யாதி –

இவ்வாகாரத்தில் பிரக்ருத் யர்த்தமான காரணத்வமும் -தாதவர்த்தமான ரக்ஷகத்வமும் இறே சொல்லப் படுகிறது –
இதனை அருளிச் செய்கிறார் -இது அவ ரக்ஷணே -என்று தொடங்கி –
இந்த ரக்ஷகத்வம் அவச்சேதகம் இல்லாமையால் –
அநுபாதிக நிர்தேச ஹி அசங்ககோசோ மநீஷீணாம் கத்யதே -என்கிற நியாயத்தாலே சர்வ விஷயம் –
இது தன்னை அருளிச் செய்கிறார் -தேச கால -என்று தொடங்கி –

ரஷா பிரகாரங்கள் விஷயங்கள் தோறும் பிரமாணங்கள் காட்டின படியில் விசித்ரங்களாய் இருக்கும்
இது தன்னை அருளிச் செய்கிறார் -அருளால்-என்று தொடங்கி –
எழுவார் -ஐஸ்வர்யார்த்திகள்
விடை கொள்வார் -கைவல்யார்த்திகள்
வழுவா வகை நினைந்து இருப்பார் -பகவத் சரணார்த்திகள்
சேர்ந்தார் -முக்தர்
பிரிந்து கூடாதார் -நித்ய ஸூரிகள்
இங்கே இவை இரண்டும் சேதனர் நின்ற அளவுக்கு ஈடாய் இருக்கும் -முமுஷுப்படி -37-என்ற
உலகாரியன் திரு வாக்கு அனுசந்தேயம் -(இவை இரண்டும் விரோதியைப் போக்குகையும் அபேக்ஷித்தத்தைக் கொடுக்கையும் )

இனி இப்பதத்தில் அர்த்த பலத்தால் அனுசந்திக்கப்படும் ஸ்ரீயபதித்வத்தை அருளிச் செய்கிறார் –
திருவுக்கும் -என்று தொடங்கி –
அநன்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண பிரபாயதா-என்றும்
அநன்யா ராகவேணாகம் பாஸ்கரேண பிரபாயதா -என்றும்
இருவர் வாக்காலும் இருவரும் இருவருக்கும் ப்ருதக் ஸ்திதி இல்லை என்னும் இடம் சித்தம்
பிராட்டிக்கு உண்டான அந்நயத்வம் உபய சம்மதம் இறே-

இந்த அப்ருதக் சித்தியை த்ருஷ்டாந்த த்ரயத்தாலே நிரூபிக்கிறார் த்யுமணி என்று தொடங்கி –
பாஸ்கரேண பிரபாயதா -என்கிற ஸ்ரீ ராமாயண வசங்களை அடியொற்றி த்யுமணி த்ருஷ்டாந்தம் –
ப்ரஸூ நம் புஷ்யந்தீம் –ஸ்வயா தீப்தயா ரத்னம் -என்ற பட்டர் திரு வாக்கை அடியொற்றி
மாணிக்க புஷ்ப்ப த்ருஷ்டாந்தம் —

இத்தால்
பிராட்டிக்கு பகவத் ஸ்வரூப நிரூபகத்வமும் –
பகவத் அப்ருதக் சித்தியும் –
பகவத் பத்நீத்தவமும் –
சேஷத்வ பிரதி சம்பந்தித்தவமும் ப்ரகடிதம்-

பிராட்டியினுடைய ப்ரமேய த்ரய சம்பந்தம் போலே உள்ள பிராமண த்ரய சம்பந்தத்தை அருளிச் செய்கிறார் –
ஸ்வரூப என்று தொடங்கி –
இருவரையும் பிரித்து விரும்பினால் ராவண ஸூர்ப்பணகைகளைப் போலே அநர்த்தமே பலிக்கும் இத்தனை-
இருவரையும் பற்றினால் இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே வாழல் ஆவது –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ஸ்ரீ ரெங்க விமான லாபத்துக்கு மேல்பட வாழ்ச்சி இல்லை இறே

—————————————————————————————————-

(அகார வாச்யனான நாராயணனுக்கு ஜீவாத்மா அடிமை -க்கு -லுப்தம் -லுப்த சதுர்த்தி –
ஏறிக் கழிந்த சதுர்த்தி – நாராயணாயா வியக்த சதுர்த்தி -)

(வியாபக மந்த்ரம்
வியாப்தி நிறைந்து இருத்தல் -எதை வியாப்யம்- எப்படி வியபான பிரகாரம் எதுக்காக வியாபியா பலம்-வியாபன குணம்
ஓம் நமோ விஷ்ணோ -வியாபிக்கிறார் இதி விஷ்ணு –
வாசு தேவ -ஸர்வத்ர வசதி அத்யாஹாரம் பண்ணி எத்தை வியாபிக்கிறார் -பிரகாரம் வாஸூ வசிக்கிறார் –
எதற்க்காக இல்லை -வியாபகம் குணம் -பகவதே சப்தம் சேர்த்து சொல்லும்
நாராயணாய -ஐந்தும் உண்டே -நாரங்களை வியாபிக்கிறார்-அந்தர்யாமியாக வியாபிக்கிறார் –
பலம் -உபாயமாக புருஷார்த்தமாக -குணங்கள் நார சப்தத்தில் உண்டே -)

( ஓம் -அ ஆய உ ம் / நமஸ் / நாராயணாயா
ரக்ஷகன் கர்த்தா காரணம் சேஷி நான்கும்
ஆய -தாதர்த்தே சதுர்த்தி -தத் அர்த்த பிரயோஜனம் -அவனே பிரயோஜனம் யாருக்கோ –
நாலாம் வேற்றுமை உருபு -தாதார்த்தம் அவனுக்காக -அவன் பிரயோஜனத்துக்காக என்றவாறு –
தாதர்த்த ஸ்வ பாவம் தன்மை தாதார்த்யம்-
ச ஏவ யஸ்ய அர்த்தம் பிரயோஜனம் –
அகார வாஸ்யனையே தனக்கு பிரயோஜனமாகக் கொண்ட மகார வாஸ்யன் –
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி -இதுவே சேஷத்வ பலன்
அகார மகார சம்பந்தம் சொல்ல வேற்றுமை உருபு -நாராயணாயா -இதுக்கு விவரணம் –
ஆகவே நான்காம் வேற்றுமை உருபு -இதுக்கு பொருள் தாதர்த்யம்
அவ்வானவருக்கு அடிமை என்று ஆச்சார்யர் உபதேசம்
நடுவில் உகாரம் –
அகாரத்துக்கே -அடிமை -கீழே சேஷத்வம் -இங்கு அநந்யார்ஹ சேஷத்வம் -யாருக்கும் தகுதி இல்லாத சேஷத்வம் சொல்ல வந்தது –
உகாரம் -ஏவ
பரமாத்வுக்கே ஜீவாத்மா அடிமை என்று பிரணவம் சொல்லும் -அ ஆய உ ம -நான்கும் வேண்டுமே இத்தைச் சொல்ல –
ஆய இல்லா விடில் ஸ்வரூப ஐக்கியம் அகாரம் மகாரம்
உகாரம் அவனுக்கே அடிமை சொல்ல வந்தது )

லுப்த சதுர்த்தி யர்த்தம் ..
இதில் ஏறிக் கழிந்த சதுர்த்தி -ரஷிக்கப் படுகிற வஸ்துக்கள் அடைய அவனுக்கு சேஷம் என்று
கண்ட வாற்றால் தனதே வுலகு (திரு வாய் மொழி 4-5-10 ) என்னும் படி
ரஷிக்கைக்கு அடியான உறவை அறிவிக்கிறது ..

(தனதே உலகு– தான் அ– தனது ஆய- தனதே உகாரம் அவதாரணம்- உலகு -பிரணவம் கண்டவாற்றாலே அறிகிறோம்
அகாரம் மகாரம் சமா நாதி கரண்யத்தில் படிக்காமல் -நம் சித்தாந்த பிரதிதந்தரம் –
இத்தைக் கை விளக்காகக் கொண்டு ஸ்வரூபத்தால் வேறே வேறே தத்வம் –
இஹ நாநா அஸ்தி -இரண்டாக பார்த்தால் மிருத்யு சம்சாரத்தில் உழன்று
சத் ஏவ ஏகம் ஏவ அத்விதீயம்
இதம் சர்வம் கலு ப்ரஹ்மம்-அபேத சுருதிகள்
போக்தா போக்யம் ப்ரேரிதா பேத சுருதிகள்
தானே உலகு எல்லாம் -தானே உண்டு உமிழ்ந்து என்றும் பாசுரங்கள் உண்டே
இரண்டு வாக்கியங்களும் உண்டே
ஸ்ரீ கஜேந்திர தாசர் -அஹம் ஏவ பர தத்வம் -தர்சனம் பேத ஏவ ச -ஆறு வார்த்தைகள் –
கூடிற்றானால் –அது அதுவே -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
கார்யம் காரணம் நிபந்தமான சாமா நாதி கரண்யம் -மண் குடம் தங்கச் சங்கிலி போலே உலகமே ப்ரஹ்மம்
விசிஷ்ட ப்ரஹ்மம் -இவரைப் போலே இரண்டாவது இல்லை அத்விதீயம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
இது சர்வம் ஸம்ஞ்ஜயம்-கடக சுருதிகள் கொண்டு -ஆழ்வார்கள் அருளிச் செயல்களைக் கொண்டு ஒருங்கே விட்டு ஸ்ரீ பாஷ்யம் -)

ரக்ஷிக்கிறவன் ஸ்வாமியாய் /ரக்ஷிக்கப் படுகிறவர்கள் தாச பூதராய் இருக்கை இறே
இரண்டு தலைக்கும் நிலை நின்ற ஸ்வரூபம் ..

அடியேன் என்று இசையாதவனை ( திரு வாய் மொழி 8-8-2) ஆத்மாவை இல்லை செய்த
கள்ளனாக -விறே சொல்லுவது ..
( என்னுள்ளான் என்று இருந்தால் -சேஷத்வம் அறியாமல் -அடியேன் உள்ளான் -ஆத்மாவுக்குள் உள்ளான் –
தாஸ்யம் இசைந்து அடியேன்
அடிமைத் தானம் இல்லாய் என்பவன் ஆத்மாவை இல்லை என்கிறான்
ஒளி இல்லா மாணிக்கம் -மணம் இல்லாத பூ -போலே ஆகுமே )

——————————————-

இனி மேல் இதில் விபக்தி தன்னை நீர்த்தேசித்து விபக்த்யார்த்தம் அருளிச் செய்கிறார் —
இதில் ஏறிக் கழிந்த சதுர்த்தி -இத்யாதியால் –
இவ்விடத்தில் சதுர்த்தீ விபக்தி கொள்ள பிராப்தம் –
பிரதம த்ருதீய அக்ஷரங்களை சாமாநாதி கரணங்களாகக் கொண்டு
ஜீவ பரமாத்மாக்கள் உடைய ஸ்வரூப ஐக்யம் இங்கே சொல்லப் படுகிறது என்னும்
குத்ருஷ்ட்டி பக்ஷத்துக்கு
பஹு பிராமண விரோதமும்
சமபி வ்யாஹ்ருத நமஸ் சப்த நாராயண சப்த வ்யக்த சதுர்த்தியில் உடைய ஸ்வ ரஸார்த்த விரோதமும் வரும் –

அதாவது —
சதுர்த்த்யந்தம் ஆகாதே ப்ரதமாந்தமாய்-தத்வமஸி போலே ஆத்ம பரமாத்மாக்களுடைய ஐக்ய பரமாகிறது -என்னும்
சதுர்த்யந்தமான நாராயணாயா என்னும் விவரணத்தோடே விரோதிக்கும் –

அதுக்கு மேலே நாராயண பதத்தில் சொல்லுகிற சரீராத்ம பாவத்தோடும் விரோதிக்கும் –

அஹமபி நமம பகவத ஏவ அஹமஸ்மி -என்று ஸ்வ ஸ்வாதந்தர்ய நிவ்ருத்தி பூர்வகமாக
பகவத ஏக பாரதந்தர்யத்தை சொல்லுகிற நமஸ் சப்தத்தோடு விரோதிக்கும் –

பதிம் விஸ்வஸ்ய –
ஜ்ஞாஜ்ஞவ் த்வ அஜவ் ஈஸநீசவ்-
ஷராத்மாநவ் ஈசதே தேவ ஏக –
யஸ் யாஸ்மி -(நான் யாருக்கு உரியவனாக இருக்கிறேனோ )
பரவா நஸ்மி –
தாஸ பூதா ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மான
பரமாத்மனா
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம்
தாஸோஹம் வாஸூ தேவஸ்ய
உத்தம புருஷஸ் த்வந்ய-என்று
ஈஸ்வரனுடைய சேஷித்வத்தையும் சேதனனுடைய சேஷத்வத்தையும் சொல்லுகிற ஸ்ருதி ஸ்ம்ருதிகளோடே விரோதிக்கும்

ஆக
அகார விவரணமான நாராயண பதம் சதுர்த்யந்தம் ஆகையால் சங்க்ரஹமான இதுவும்
சதுர்த்த்யந்தம் ஆகவேண்டும் என்றபடி

விபக்த்யர்த்த்தை அருளிச் செய்கிறார் -உறவை -என்று –
ஸ்வ விஷயக பகவத் சேஷத்வ ஞானம் இல்லாத போது ஆத்ம அபஹார ரூபமான ஸ்வாதந்தர்ய புத்தி நடக்கையாலே
ஸ்வரூபம் அழிந்து விடும் என்று அருளிச் செய்கிறார் -அடியேன் -என்று தொடங்கி –

ஆக –
ப்ரக்ருத்யர்த்தமான ஈஸ்வரனுடைய காரணத்வமும்
தாத்வர்த்தமான ரக்ஷகத்வமும்
அர்த்த பலத்தால் வந்த ஸ்ரீ யபதித்வமும்
ப்ரத்யய ஸித்தமான சேதன சேஷத்வ பிரதி சம்பந்தியான சேஷித்வமும்
ஆகிற அகாரார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

——————————————————————————————-

உ -காரர்த்தம் ..
உ காரம் அறுதிப் பாட்டைக் காட்டுகை யாலே ,எம்பெருமானுக்கே சேஷம் என்று பிறர்க்கான நிலையைக் கழிக்கிறது ..
ஒருவனுக்கு அடிமையான க்ருஹ க்ஷேத்ரம் முதலானவை பிறர்க்கு ஆக்கலாம் படி வந்தேறியாய் ,
நிலை நில்லாதே கழிகிறாப் போல அன்று இறே ஆத்மாவின் சேஷத்வம் –

(ஸ்தான ப்ரமாணத்தால் அவதாரண அர்த்தம் -அநந்யார்ஹத்வத்தைச் சொல்லும் )

சாயை போல ( பெரியாழ்வார் 5-4-11 )
நிழலும் அடி தாறும் ( பெரிய திருவந்தாதி -31 ) என்னும் படி
நிழல் போல்வனரான ( திரு விருத்தம் -3 ) நாய்ச்சிமாருடைய சேஷத்வம் போல , அநந்யார்ஹமுமாய் இருக்கும் –

( ஸ்ரீ ராமானுஜ பதச்சாயை-ஸ்ரீ எம்பார் -பாட வல்லார் -சாயை போலே அணுக்கர் ஆவார் -என்றவாறு
ஸ்வாமி திருவடி நிழலே நமக்கு நிழல் -நிழல் அநந்யார்ஹம் சொல்ல வேண்டாமே
அடி தாறு -ஸ்ரீ பாத ரேகை -இதுவும் அநந்யார்ஹம் தானே
மூவருமே அவனுக்கு நிழல் -என்றும் பூமி தேவி நீளா தேவி இருவரும் ஸ்ரீ தேவி நிழல் போல என்றும் வியாக்யானம் )

பிறர்க்கு அடைந்து தொண்டு படுகை ஆத்ம நாசமாய் ( பெரிய திரு மொழி 2-5-2 )
புறம் தொழாது ஒழிகை தேட்டம் ஆகையாலே ( நான் முன் திருவந்தாதி -68 )
மற்றானும் அல்லனே ( சிறிய திரு மடல் -54 ) என்று தேறும் படி
அவன் முகத்து அன்றி விழியேன் ( நாச்சியார் திரு மொழி 12-4 )
(கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா கொங்கைத் தலம் இவை )என்று இருக்கை ஆயிற்று ஸ்வரூபம் –

என்னை முற்றும் உயிர் உண்டு ( திரு வாய் மொழி 10-7-3 ) என்னும் படி எம்பெருமானுக்கு
வாய் புகு சோறான ஆத்மாவை பிறர்க்கு ஆக்குகையாவது –
மறையவர் வேள்வியில் புரோடாசத்தை நாய்க்கு இடுமா போல ( நாச்சியார் திரு மொழி 1-5 ) இருப்பது ஓன்று இறே

—————————————-

அநந்தரம்
மத்யம அக்ஷரமான-உகாரத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -உகாரம் -என்று தொடங்கி –
அதாவது -அவதாரண வாசகமான -இவ்வுகாரத்தில் கீழ் ஈஸ்வர சேஷமாக சொன்ன இவ்வாத்ம வஸ்து
அந்நியருக்கு சேஷம் அன்று என்னும் இடத்தைச் சொல்லுகிறது -என்கை –

(பிராட்டி நித்ய முக்தர் ஆச்சார பாகவதர்கள் -அவனுக்கு சரீர பூதர் -கைங்கர்யம் அவனுக்கு ப்ரீத் அர்த்தமாகவே
வேறே பிரயோஜனாந்தரத்துக்கு இல்லாமல் -இதுவே அநந்யார்ஹத்வம்)

சதுர்த்தியாலே
ஈஸ்வர சேஷத்வம் ப்ரதிபாதிதமாகச் செய்தே-அந்நிய சேஷத்வம் பிரஸ்துதம் ஆமோ என்னில்
லோகத்தில் ஒருவனுக்கு சேஷமான க்ருஹ க்ஷேத்ர புத்ர தாஸாதிகள் வேறேயும் சிலருக்கு சேஷமாய் இருக்கக் காண்கையாலே
அப்படிப்பட்ட அந்நிய சேஷத்வம் இந்த ஸ்தலத்திலும் உண்டோ என்ற ஒரு சங்கை உதிக்கும் இறே-
ஆகையால் தாத்ருசமான அந்நிய சேஷத்வம் இங்கு இல்லை என்னும் இடத்தை பிரதிபாதிக்கிறது உகாரம் –

வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி-இத்யாதியை
உட்க்கொண்டு அருளிச் செய்கிறார் -மறையவர் -என்று தொடங்கி
அதாவது –
ஆராத்யரான இந்திராதி தேவர்களுக்கு போக்யதா சேஷமாக கல்பிதமான புரோடாசத்தை தர்சன ஸ்பர்ச நாதிகளுக்கு
அநர்ஹமாம் படி நிஹீனமாய் இருக்கிற நாய்க்கு இடுமா போலே இருபத்தொன்று –
பிராப்த சேஷியான ஈஸ்வரனுக்கு சேஷமான ஆத்ம வஸ்துவை சர்வ பிரகாரத்தாலும் ஹேயரான
சம்சாரிகளுக்கு சேஷமாக்குகை -என்கை –

ஈஸ்வரனுக்கு இவ்வாத்ம வஸ்து சேஷமாய் இருக்கும் இடத்தில்
ஷேத்ராதிகளைப் போலே அன்றியிலே கிரய விக்ரய அநர்ஹமாய் இருக்கும் –
புத்ராதிகளைப் போலே சர்வ சாதாரணம் அன்றியிலே அநந்ய சாதாரணமாய் இருக்கும் –
பார்யையைப் போலே ஓவ்பாதி சம்பந்தம் அன்றியிலே ஸ்வ பாவிக சம்பந்தத்தை உடைத்தாய் இருக்கும் –
தேகத்தோபாதி பிறர்க்கு ஆக்கலாய் இருக்கை அன்றியிலே ஒழிக்க ஒழியாத சம்பந்தத்தை யுடைத்தாய் இருக்கும் –
குணங்கள் போல் அன்றியிலே குணியாய் அநந்யார்ஹ சேஷமாய் இருக்கும் –

க்ருஹ ஷேத்ராதிகள் ப்ருதக் ஸ்திதி யோக்யமான த்ரவ்யம் ஆகையால் க்ரய விக்ரயாதி களாலே
அநந்யார்ஹம் ஆகைக்கு யோக்யதை உண்டு
இங்கு ப்ருதக் ஸ்தித் அயோக்ய த்ரவ்யம் ஆகையால் அநந்யார்ஹம் ஆகைக்கு யோக்யதை இல்லை –

ஆக
அகாரத்திலும் சதுர்த்தியிலும் உகாரத்திலும்
ஈஸ்வரனுடைய ரக்ஷகத்வமும் -சேதனனுடைய ரஷ்யத்வமும்
ஈஸ்வரனுடைய சேஷித்வமும் சேதனனுடைய சேஷத்வமும்
சேஷத்வத்தினுடைய அநந்யார்ஹதையும் சொல்லிற்று ஆயிற்று

ஆக
உகார அர்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

(பொருள் விளக்கம் -இலக்கண விளக்கம்
ஓம் -அ ரக்ஷகன் கர்த்தா சேஷி
ஆய -தாதர்த்தம்-மகாரத்தின் சேஷத்வம்
ஸூ ப்ரயோஜன நிவ்ருத்தி
உ காரம் -அவனுக்கே இவன்
இலக்கண குறிப்பு –
அ முதல் -அவ ரஷனே தாது -அவ ரக்ஷணம் வ வ் அ சேர்ந்து -அ லோபம் -அவ் தான் இருக்கும் –
தாதுவுக்கு மேல் ப்ரத்யயம் வந்தால் க்ருதந்தம் வரும் –
ஆய நான்காம் வேற்றுமை உருபு -இதில் மேல் வரும் -சதுர்த்தி ஏக வசனம் -ப்ரத்யம் ஜே -லோபம் –
சூத்ரம் படி -லுப்த சதுர்த்தி அந்தமாக இருக்கும்
விஜ் ப்ரத்யயம் ஆஸ்ரயம் கர்த்தா -ரக்ஷகனுக்கு -என்ற பொருள்
உ காரம் -இரண்டாம் பதம் ஸ்தான பிரமாணத்தால் இது அவதாரண அர்த்தம்
ததேவ பூதம் -அவனே -தது சந்த்ர-ஏவ தானே து -என்றபடி –
அறுதி இடுதல் பொருளில் வரும்
அர்த்த பின்னமாய் -து -லோபம் அடைந்து உ மட்டும் இருக்கும் -அவனுக்கே சேஷம்
அ உ சேர்ந்து ஓ -சந்தி-குண சந்தி-அ எ ஓ -மூன்றும் ஆகலாம்
ஓ ஆவதுக்கு-கண்டம் இருந்து உச்சரிப்பு
உ உதடு இருந்து உச்சரிப்பு-
அ -தொண்டை -உ உதடு -சேர்ந்து அ எ ஓ -அ மட்டும் இருந்தால் கண்டம் மட்டும் இருக்கும்
ஓ கண்டோக்தம் -தொண்டையிலும் உதட்டிலும் -இதுவே உசிதம் என்றவாறு
அகாரம் உகாரம் மகாரம் -ரிக் யஜுர் சாம -பூ புவ சுவ -கடைந்து எடுத்து உருக்கி பொன் போலே அருளி –
தானே உலகு தனதே உலகு -அபேத பேத சுருதி இரண்டையும் அருளிச் செய்து –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் – கடக சுருதியும் அருளிச் செய்கிறாரே -ஆழ்வார் – )

———————————————————————————————————-

மகார அர்த்தம் ..
மகாரம் – ககாரம் முதலான 24 எழுத்தும் ,
பாரு நீர் எரி காற்றினோடும் ஆகாசமும் ( பெரிய திரு மொழி 1-8-7 )
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும் ( திரு வாய் மொழி 7-8-9 )
செவி வாய் கண் மூக்கு உடல் (முதல் திருவந்தாதி -12 )
உன்னு சுவை ஒளி யூறு ஒலி நாற்றம் ( திரு வாய் மொழி 7-8-9)
பிரகிருதி மானாங்கார மனங்கள் ( திரு வாய் மொழி 10-7-10 ) என்கிற 24 தத்துவங்களையும் காட்டி ,

தான் 25 தத்வமான ஆத்மாவைக் காட்டக் கடவ தாகையாலும் ,-

மன -ஞானதே -என்கிற தாது
ஞானத்துக்கு இருப்பிடமான ஆத்மாவைக் காட்டுகையாலும் ,

(மந ஞாநே – ஞான மயம்–ஞான ஸ்வரூபம் என்றும் –ஞானத்துக்கு ஆஸ்ரயமாயும்-
ஞானம் என்ற குணத்துக்கு இருப்பிடமாயும்- ஞானி -ஞான குணகன் –
ஞானம் மாத்திரம் அன்றிக்கே நிலை நின்ற-நித்தியமான- ஞாதாவாய் ,
ஞானம் க்ஷணிகம் -அநித்தியம்- ஆகந்துகம் -இயற்க்கை எல்லை -என்ற பக்ஷங்கள் உண்டே )

சென்று சென்று பரம் பரமாய் ( திரு வாய் மொழி 8-8-5-நின்ற ஓன்று -தேக இந்திரிய மன தீப்த அந்யமான ஆத்மா
அன்னமய பிராண மய மன மய விஞ்ஞான மய ஆனந்த மய -இப்படி மேலே மேலே சென்று
நன்றாய் ஞானம் கடந்து -இந்த்ரியங்களால் காண முடியாமல் ) என்னும் படி

முன் உருவில் பின் உருவாய் (திரு நெடும் தாண்டகம் -1 )
விஞ்ஞானம் என்னும் படி அறிவால் மிக்கு ,
(ஆத்மா விஞ்ஞாதா -ஞானம் உடையவரையே விஞ்ஞானம் என்று சொல்லலாம்படி
அறிவாளி -இவரே அறிவு என்று சொல்லும்படி -அதீத கோபமுடையவரை கோபமே இவர் என்னுமா போலே )
ஞானம் மாத்திரம் அன்றிக்கே ,

உணர்ந்து உணர்ந்து (திரு வாய் மொழி 1-3-6 ) என்னும் படி
நிலை நின்ற ஞாதாவாய் ,
(உணர்வு -ஞப்தி-மாத்திரம் என்று இல்லாமல் -உணர்ந்து -விஞ்ஞானம் என்று சொல்லும் படி விஞ்ஞாதா )

தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகி தித்தித்து ( திரு வாய் மொழி 8-8-4 ) என்னும் படி
ஆனந்த ரூபமான ஆத்ம வஸ்துவை

பிறர்க்கு உரித்து அல்லாத படி ,சேஷமாகச் சொல்லப் பட்டது என்கிறது ..

(ஆனந்த ரூபம் என்றாலே ஞான ரூபம் என்பது சித்தம்-அநிஷ்ட நிவ்ருத்தி மட்டும் முக்தி -கல் போலே என்ற பக்ஷம் ஒவ்வாது
இஷ்ட பூர்த்தியும் வேண்டும் -அனுகூல ஞானம் தான் ஆனந்தம் -பிரதிகூல ஞானம் தான் துக்கம்-
பகவானுக்கே உரித்தான அநந்யார்ஹ சேஷ பூதன் -அசேதனமும் இதுக்குள்ளே படிக்க வேண்டியதாய் இருந்தாலும்
தனக்கு சொத்தாக இருப்பதால் அவனுக்கு ஸந்தோஷம் சேதனன் உணர்ந்தால் தானே –
ஜடப்பொருள் போலவும் இல்லாமல் அவனைப் போலே ஸ்வ தந்த்ர புத்தியும் இல்லாமல் இருக்க வேண்டும் –
பகவத் கல்யாண அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யமே புருஷார்த்தம் அன்றோ —
அனுகூல ஞானத்தால் ஆனந்தம் -ஆனந்தத்துக்கு பிரயோஜனம் கைங்கர்யமே –
ஞாத்ருத்வ ஆனந்தத்ருத்வ சேஷத்வ பலன் இது என்றவாறு )

கண்கள் சிவந்த தின் படியே –திருவாய்மொழி- 8-8 ) ஞான ஆனந்தாதி களுக்கு முன்னே சேஷத்வம் சொல்லிற்று ..

(அடியேன் உள்ளான் -8-8-2-ஞாத்ருத்வம் ஜடப் பொருள்களின் வியவ்ருத்தி
பரமாத்மாவுக்கே சேஷன் ஜீவாத்மா -என்று ஓ -காரத்தாலே–பரமாத்வாவுக்கு அநந்யார்ஹ சேஷத்வம் என்று
சொன்ன பின்பு தான் அந்த சேஷிக்கு சேஷன் ம காரம் என்கிறது –)

மணத்தையும் ஒளியையும் கொண்டு விரும்பப் படும் பூவும் மாணிக்கமும் போல ,
அவனுக்கு ஆன போது விரும்பப் பட்டு
பிறர்க்கு ஆன போது ஏறாளும் இறையோனில் ( திரு வாய் மொழி 4-8 ) படியே கை விடப்படும்
ஆத்மா என்று தோற்றுகைக்காக

அடியோம் என்று ( திருப் பல்லாண்டு -10 ) எழுத்துப் பட்ட அன்று சேஷத்வம் எல்லோருக்கும் பொதுவாகையாலே
ஆத்மாக்கள் திரளையும்

ஆத்மாக்கள் என் வுடைமையையும் ( பெரியாழ்வார் திரு மொழி 5-4-1 ) என்னும் படி
ஆத்மாவுக்கு சேஷமான அசித்தையும் இம் ம -காரம் தான் காட்டக் கடவது .

(ஞானம் உடைய சேஷன் -ம காரம்-என்று இல்லாமல் -சேஷத்வமுடைய ஆத்மா ஞானமும் உடையவனும் என்கிறது )

—————————–

அநந்தரம் த்ருதீய அக்ஷரமான மகாரத்தின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார் -மகாரம் -என்று தொடங்கி –
ககராதி மகாராந்தமான அக்ஷரங்களில் மகாரம் இருபத்தஞ்சாம் அக்ஷரம் ஆகையால் தத்துவங்களில் இருபத்தைந்தாம்
தத்துவமான ஆத்மாவைக் காட்டும் –

முதல் இருபத்து நாலு அக்ஷரங்களும் இருபத்து நாலு அசேதன தத்துவங்களைக் காட்டும் –

இவ்விடத்தில்
பூதாநி ச க வர்க்கேண
ச வர்க்கேண இந்திரியாணி ச – ( கர்ம இந்திரியங்கள் -)
ட வர்க்கேண த வர்க்கேண ஜ்ஞான கந்தாத யஸ் ததா-
மன பகா ரேணை வோக்தம்
பகாரேண த்வஹன்ருதி-
பகாரேண பகாரேண மஹான் ப்ரக்ருதி ருச்யதே
ஆத்மா து ச மகாரேண பஞ்ச விம்ச ப்ரகீர்த்தித-என்கிற பாத்திமா உத்தர புராண வசனம் அனுசந்தேயாம்

ஜீவாத்மாக்களுடைய ஸ்வரூபமான ஞாத்ருத்வ சேஷத்வங்களிலே சேஷத்வமே பிரதானம் –
ஆகை இறே ஆழ்வார் ஆத்ம ஸ்வரூபத்தை அடியேன் -8-8-2- என்று நிர்த்தேசித்தார்

இங்கே
அஹம் ப்ரத்யய வேத் யதவாத்
மந்த்ரே பிரதம மீரணாத்
பாஷ்ய காரஸ்ய வஸனாத்-
இத்யாதி பூர்வர்கள் வசனம் அனுசந்தேயம்

ஜீவாத்மா ஸ்வரூப பரமான நான்கு திருவாய்மொழிகளில் ஒன்றான ஏறாளும் இறையோனில் ஸ்ரீ ஆழ்வார்
ஏறு திருவுடையை ஈசன் உகப்புக்கு வேறு படில் என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா -திருவாய்மொழி நூற்றந்தாதி -38-என்று அருளிச் செய்கிறார் –

(பயிலும் -பாகவதருக்கு சேஷம் /அடுத்து அவனால் விரும்பப்படாதவை த்யாஜ்யம் /
கண்கள் சிவந்து -பிடித்தது என்றால் ஸ்ரீ கௌஸ்துபம் போலே / கரு மாணிக்க அநந்யார்ஹத்வம் -இப்படி நான்கும் )

சேஷத்வ பஹிர்ப்பூதம் அஸஹ்யம் -என்று இறே
ஸ்ரீ எதிகட்க்கு இறைவன் ஸ்ரீ யமுனைத் துறைவன் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்ன நிஷ்கர்ஷம்-
(அணைய-இத்யாதி -பெருமக்கள் பரிக்ரஹித்தது -பார்த்தோம் )
இவற்றை அருளிச் செய்கிறார் -கண்கள் சிவத்தில் படியே -என்று தொடங்கி –

சேஷத்வம் சர்வ ஆத்ம சாதாரணம் ஆகையால் மகாரம் ஆத்ம சாமான்ய பரம் என்கிறார் அடியோம் என்று தொடங்கி –
தத் உபகரணம் வைஷ்ணவ மிதம் -அஷ்ட ஸ்லோகீ-1-என்ற ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்தியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார்
அசித்தையும் காட்டக் கடவது -என்று –
அதாவது பிரதானரான சேதனரைச் சொன்ன போதே அவர்களுக்கு
போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபேண சேஷமான அசித் வர்க்கமும்
பகவத் சேஷத்தயா இப்பதத்தில் அனுசந்தேயம் என்றபடி –
(சேதனனுக்கு சேஷம் இல்லை -பகவத் சேஷமாகவே நமது சரீரம் இத்யாதிகள் )

சேதனத்வாரா அசித்தை உபலஷிக்கும் படி சேதன வாசியான பதத்தை எடுக்கிறது
அந்த அசித்தில் காட்டிலும் சேதனனுடைய ப்ராதான்யம் தோற்றுகைக்காக –

ஆக
பத த்ரயாத்மகமான ப்ரணவத்தில்-
பிரதம சரம பதங்கள் சம்பந்தி த்வய விசேஷத்தைச் சொல்லிற்று –
மத்யம பதம் அவற்றினுடைய சம்பந்த விசேஷத்தைச் சொல்லிற்று

(இலக்கண குறிப்பு
ம் மூன்றாவது பதம்
மந ஞாநே தாது -அ லோபம் -அந் லோபம் -ஞானத்துக்கு ஆஸ்ரயம் -அறிவை உடையவன் என்ற அர்த்தம் தேறும் )

———————————————————————————-

( 1–நம பிரத்வீ பாவம்-பணிவுடன் வணக்கம் -மனசாலும் வாயாலும் காயிகத்தாலும்–
நீயே உபாயம் -வேறே புகல் இல்லை -உபாயத்தை சொல்லும் –
பிரணவம் ஸ்வரூபம் சொல்லி -அதுக்கு அநு ரூபமான -ஏற்ற -ஒப்பதான- உபாயத்தை இது சொல்லும் –
2–ஸ்வரூப விரோதங்களான அகங்கார மமகாரங்களைத் தொலைத்து கொடுக்கும் என்றுமாம் –
3–ததீய சேஷத்வம் பாரதந்தர்யம் -அடியார்க்கு அடியான்-உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
4-அவனே உபாயம் என்னும் இடத்தையும் ,வெளி இடுகிறது -நமஸூ-)

நமஸ் – சப்தார்த்தம் ..
சர்வ ரக்ஷகனான ஸ்ரீயபதிக்கு அநந்யார்ஹ சேஷமாகை யாகிற நிலை நின்ற உறவை
ஆத்மாவை அறிய ஒட்டாத விரோதியை -நம -என்று கழிக்கிறது ..

(சர்வ ரக்ஷகனான ஸ்ரீ யபதிக்கு-அ காரமும் லுப்த சதுர்த்தியும் -அநந்யார்ஹ சேஷம் உகாரம் –
நிலை நின்ற உறவு ஆத்மா மகாரம் -பிரணவ அர்த்தம் பார்த்ததை சுருக்கமாக இங்கே அருளிச் செய்கிறார்
அகண்ட நமஸ் -சகண்ட நமஸ்-இரண்டும் உண்டே -நான் எனக்கு உரியவன் அல்லேன்-
சொன்னாலே தேவரீருக்கு உரியவன் அர்த்தம் சித்திக்கும் –
அல்லேன் எனக்கு நான்-என்று நிஷேதம் -முன்னாக வீடு மின் முற்றவும் போலே –
கண்டனன் கற்பினுக்கு அணியை த்ருஷ்டா சீதா -போலே -)

நமஸ் ஸூ -ந என்றும் ம -என்றும் இரண்டு பதமாய் இருக்கும் ..
ம -என்கிற இத்தை ந – என்று கழித்து – வீடுமின் முற்றத்தின் ( திரு வாய் மொழி 1-2 ) -போல
கழித்துக் கொண்டு ..கழிக்கப் படும் அத்தைக் காட்டுகிறது ..

அவன் உடையவனாய் , தான் உடமை -யானமை நிலை நிற்பது –
தனக்குத் தான் கடவ னாகவும் ,
தன்னது அல்லாத ஆத்மாத்மீயங்களை -என்னது -என்று நினைக்கிற
அகங்கார மமகாரங்களை
வேர் முதல் ( திரு வாய் மொழி 1-2-3 ) மாய்த்தா ல் ஆகையாலே
உ -காரத்திலே கழிவுண்ட பிறரிலே சொருகின தன்னை -நம -என்று வெளியாக கழிக்கிறது —

சம்சாரத்துக்கு விதையாய் ,காட்டுத் தீயும் மிருத்யுவும் போல , ஸ்வரூபத்தை சுட்டு உரு அழிக்கிற –
நான்- எனது -என்கிற கழித்தல் இறே ஸ்வரூப சித்தி உள்ளது ..

தனக்கும் , பிறர்க்கும் ஆளானானால் ,அவனுக்கும் அவன் வுடையார்க்குமாக வேண்டுகையாலே ,
பகவத் சேஷத்வம் ,பிராட்டி அளவும் சென்றார் போல ,மிதுன சேஷத்வமும் ,
திரு மாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் ( திரு வாய் மொழி 6-9-11 ) அளவும் ஓடி ,
மெய் அடியார்கள் தம் எல்லையில் அடிமையையும் ( பெருமாள் திரு மொழி 2-10 ) இது காட்டக் கடவது .

ஒருவன் தனக்கு என்று எழுதிக் கொண்ட அடிமையும் , காணியும் ,
பார்யா புத்ராதிகளுக்கும் விற்று விலை செல்லும் படி ஆக்கினால் ,
அவனுக்கு நிலை நின்றதாம் போலே ,
அற விலை செய்த ( திரு வாய் மொழி 8-1-10 )
அடிமை அறக் கொண்ட ( திரு வாய் மொழி 4-9-6 )
ஆத்ம ஆத்மீயங்களை எந்தம்மை விற்கவும் பெறுவார்கள் ( பெரியாழ்வார் திருமொழி 4-4-10 )..
ஈது எல்லாம் உனதே ஆக ( திரு நெடும் தாண்டகம் -27 ) என்னும் படி
அடியார்க்கு ஆட்படுத்தால் இறே ( திருப் பள்ளி எழுச்சி )
அவன் நிலை ஆளாக ( பெரிய திரு மொழி 3-6-9 ) உகந்தான் ஆவது–
( ஸ்வரூபத்துக்கு நிலை பெற்று இருப்பது அடியார்க்கு ஆட்பட்டால் அன்றோ )

எல்லாரும் தாச பூதராய் இருக்க ,
அவர்கட்கு அஙகு அருள் இல்லா ( பெரிய திரு மொழி 5-6-8 ) என்னும் படி சிலரை த்விஷத்துக்கள் என்று
அழல விழித்து ( பெரியாழ்வார் திரு மொழி 1-8-5 )
சிலர் பக்கலிலே என்றும் அருள் நடந்து ( பெரிய திரு மொழி 3-10-1-ஷிபாமி என்று சொல்ல வேண்டாத அடியார் – )
என் தமர் ( பெரிய திரு மொழி 10-6-5 -நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் )
என் அடியார் (பெரியாழ்வார் திரு மொழி 4-9-2 )
என்னுடைய பிராணங்கள் ,(மம பிராணா பாண்டவர் )
என்னுடைய ஆத்மா ,
இரண்டாம் அந்தராத்மா , என்று அவன் விரும்புகையாலே
அவனை உள்ளத்து ( பெரிய திரு மொழி 11-6-7 ) எண்ணாதே இருப்பாரோடு ( பெரிய திரு மொழி 2-6-1 ) உறவு அறவும்
எண்ணும் நெஞ்சு வுடையாருக்கு ( பெரிய திரு மொழி 2-6-2 ) அடிமைப் படுகையும்
ஸ்வரூபம் என்னும் இடத்தை
உ -காரமும் நமஸ்ஸூம் அறிவிக்கிறது என்று இறே ..

திரு எட்டு எழுத்தும் கற்ற ஆழ்வார் –
மற்று ஓர் தெய்வம் உள்ளது என்று இருப்பாரோடு வுற்றிலேன்
வுற்றதும் உன் அடியார்க்கு அடிமை ( திரு வாய் மொழி ( பெரிய திரு மொழி 8-10-3 ) என்றது —

ஆத்மாவினுடைய சேஷத்வம் இவ்வளவும் சென்று நிலை நின்றால் போல ,
அவனுடைய ரஷகத்வமும் நிலை நிற்பது ..ஸ்வ ரஷணத்திலே தான் அந்வயியாது ஒழிந்தால் ஆகையாலே
இந்த ஸ்வாதந்த்ரயத்தை அறுத்து ,அவனே உபாயம் என்னும் இடத்தையும் ,வெளி இடுகிறது -நமஸூ ..

சரணம் புகச் சொல்ல -நமஸ்ஸைப் பண்ணினார்கள் -என்கிற வழியாலே
உபாயத்தைக் காட்டுகிறதாகவும் சொல்லுவார்கள் —

(ஸ்தான பிரமாணம் -இந்த இடத்தில் நம சொல்வதே சரணாகதி என்றவாறு –
நெறி வாசல் தானேயாக நின்றானை-ஸ்வ தந்த்ரனான அவனே ரக்ஷகன் அவனே உபாயம் –
சேஷத்வம் சொல்ல வந்தது ஓங்காரம்
பாரதந்தர்யம் சொல்ல வந்தது நமஸ்ஸூ
இஷ்ட விநியோக அர்ஹத்வம் சேஷத்வம்
இஷ்ட வினியுஜ்யமாநத்வம் பாரதந்தர்யம் -)

நடுவே கிடந்து ,ஸ்வரூபத்துக்கும் ,உபாயத்துக்கும் ,பிராப்யத்துக்கும் , களை அறுத்து ,
நல் வகையால் ( திருப் பல்லாண்டு -11 )
வேம்கடத்து உறைவார்க்கு ( திரு வாய் மொழி 3-3-6 )
மேலைத் தொண்டு உகளித்து ( திரு வாய் மொழி 10-8-7 ) என்று
ஸ்வரூபமும் ,உபாயமும் , பிராப்யமும் தானாய்-

( தீய வகை — நமோ சொல்லாமல் நாராயணாய -ஸ்வரூபம் சிக்ஷிக்கிறது
வேங்கடத்து உறைவார்க்கு -சதுர்த்தியில் அர்த்தம் –நம-என்னலாம் கடமை -உபாய பாவம் என்னிடத்தில் இல்லை –
அவனுக்கே சொத்து நான் -எனக்கு அன்று -உபாய பாவம் இல்லை –
திருப்பேர் நகர் -இறுதி பதிகம் பெற்ற திவ்ய தேசம் –
தொழும் சொல் -அதுக்கும் மேல் அந்தி தொழும் சொல் -நம இத் ஏவ வாதிந –
திருவாய் மொழி ஆகிய சொல் -தான் அந்தி தொழும் சொல் -நம அர்த்தமே இது – )

உற்று எண்ணில் ( திரு வாய் மொழி 7-9-10 ) ஆத்ம சமர்பணத்துக்கும் தான் வுரியன் அல்லாத
பார தந்த்ரியத்தின் மிகுதியை
எனது ஆவியும் உனதே (திரு வாய் மொழி 5-7-10 )
என் உடைமையும் நீயே (திரு வாய் மொழி 2-9-9 ) என்கிறபடியே காட்டி ,
ஸ்வரூபத்தை ஓட வைக்கையாலே இத்தை ( நமஸ்ஸை ) ஆந்தராளிக வைஷணவ பதம் என்று
பூர்வாசார்யர்கள் விரும்புவார்கள் ..

(ஞானம் வந்த பின்பும் ஆத்ம சமர்ப்பணம் -உற்று எண்ணில் -சிந்தித்துப் பார்த்தால் முன்பு செய்த பெரிய களவுக்கு ஒக்குமே
ஓட வைக்கையாவது ஒவ் ஒன்றிலும் ந ம சேர்த்து அர்த்தம் புரிந்தால் தானே என்றபடி )

( ஓம் ந ம–நம ந ம -நாராயாணாயா ந ம -என்று மூன்றுடன் அன்வயித்து அர்த்தங்கள் உண்டே
மத்திமாம் பதம் போலே நடு நக்ஷத்ரம் -ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் ஸ்ரீ அனந்தாழ்வானும் திரு அவதாரம்
பிரிந்து உள்ள ந ம ஸ் -நடுவில் இருப்பதால் இது ஸ்வரூபம் கதி கம்யம் மூன்றும் சிஷிதம் -அழுக்கு எடுக்கப்படும்
புரதா ஈஷிதா ஓம் ந ம ஸ்வரூபம் சிஷிதம்-எனக்கு சேஷன் அல்லேன் என்று காட்டும் -முதல் அழுக்கு போகும் –
ஸ்தான தகா -உபாயம் சிஷிதம்-உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -சமித்து பாதி சாவித்ரி இல்லாமல் –
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் முதலில் சொல்லி
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -தெளிவாக அருளிச் செய்தார் –
பச்சாத் அ பி -நாராயணாய ந ம-புருஷார்த்த சிஷிதம் –
அவன் ஆனந்தத்துக்காகவே -என் ஆனந்தத்துக்காக இல்லை என்று அழுக்கு கழித்து சிஷை )

————————————————————

இனி திருமந்திரத்தில் மத்யம பதமான நமஸ்ஸூக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -சர்வ என்று தொடங்கி –
அதில் அவாந்தர பத பேதத்தை அருளிச் செய்கிறார் -நமஸ் ஸூ என்று தொடங்கி –
வீடுமின் முற்றவும் -என்னுமா போலே -நம-என்று நிஷேத பூர்வகமாக நிஷேத்யத்தைச் சொல்லுகிறது –

இதில் மகாரம் -மன ஞானே-என்கிற தாதுவிலே -ஷஷ்ட்யந்தமாய் -எனக்கு நான் உரியேன் -என்கிறது
நகாரம் இதை நிஷேதித்து -யானே நீ என்னுடைமையும் நீயே -2-9-9–என்கிறபடியே –
தன்னுடைய மமதா நிவ்ருத்தியையும் -மமதைக்கு ஊற்றான அகங்கார நிவ்ருத்தியையும் அனுசந்திக்கிறது –

கீழே சதுர்த்தியில் சொல்லுகிற பாரதந்தர்யத்தாலே ஸ்வதந்தர்யம் கழி உண்டு இருக்க -இங்கு நிவ்ருத்தம் ஆகிற
அஹங்காரம் மமகாராம் ஆகிறது என் என்னில்-
அங்கு பகவத் பாரதந்தர்ய விரோதியான ஸ்வ ஸ்வா தந்தர்யத்தை கழிக்கிறது –
இங்கு ஸ்வ ரக்ஷணத்தில் தான் இழிகை இறே அதுக்கு விரோதியாய் அறுவது –

அதாகிறது –
ஸ்வ ரக்ஷணமாக சாதன அனுஷ்டானம் பண்ணுகை -அது ஸ்வரூப ஹாநியாய் இறே இருப்பது –
பர்த்தாவுக்கு சேஷமான சரீரத்தை அவகாதாதி வியாபாரங்களாலே பதி விரதை ரஷிக்கை யாகிறது
பர்த்தாவுக்கு ஸ்வரூப ஹானியாய்-தனக்கும் ஸ்வரூப ஹானியாய் இறே இருப்பது –
ஆகையால் நவ த்வார புரமான லங்கா புரத்திலே நிருத்தையான பிராட்டி -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று
சக்கரவர்த்தி திருமகன் பக்கலிலே ந்யஸ்த பரையாய் இருந்தால் போலே இருக்கை இவனுக்கு ஸ்வரூபம் –

ஆக இத்தால்
ஸ்வ ரக்ஷணத்தில் இழிகை ஸ்வரூப ஹாநியாம் படி ஈஸ்வரனுக்கு அத்யந்த பரதந்த்ரம் இந்த ஆத்ம வஸ்து என்றதாயிற்று –

ஸ்வ ரக்ஷண ஷமனான பர்த்தா இருக்க -ஸ்வ ரக்ஷணத்தில் நின்றும் பதி விரதை கை வாங்கினால்
பர்த்தாவே ரக்ஷகனாய் அறுமோ பாதி
இவனும் அத்யந்த பரதந்த்ரனாய் அற்றால் ஈஸ்வரனே இறே ரக்ஷகனாய் அறுவான்-
ஆகையால் ஈஸ்வரனுடைய உபாய பாவமும் ஆர்த்தமாகச் சொல்லிற்று ஆயிற்று –

நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று திரு மங்கை ஆழ்வார் அனுசந்தித்து
அருளிச் செய்கிறார் -தனக்கும் பிறர்க்கும் -என்று தொடங்கி –

ஈஸ்வரனுக்கு இவன் அத்யந்த பரதந்த்ரனாவது -அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹன் ஆகில் இறே –
அவனுக்கு இஷ்டர் ஆகிறார் -ஞானி த்வாதமைவ மே மதம் -என்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் இறே –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகிறார் -ஜங்கம ஸ்ரீ விமாநானி-என்கிறபடியே –
ஈஸ்வரனுக்கு திவ்ய மங்கள விக்ரஹத்தோபாதி சரீர பூதராய் அறுகையாலே-
( ஜங்கம -நடமாடும் -திவ்ய விமானம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -)
பர்த்ரு சரீரத்தில் மேல் விழுகிற ஸ்த்ரீக்கு பாதி வ்ரத்ய பங்கம் இல்லாதவோபாதி
அநந்யார்ஹ சேஷத்வத்துக்கு பங்கம் வாராது -( அவனது பிரசாத பாத்திரமான ஸ்ரீ வைஷ்ணவர்கள் தானே அவனது சரீரம் -)

அநந்யார்ஹ சேஷத்வத்தினுடைய அப்ரசுயுத்திக்கு சரீரத்வம் ப்ரயோஜகம் ஆகில் -சேதன அசேதன விபாகம் அற-
சர்வமும் சரீரமாய் அன்றோ இருப்பது –
ஆனால் சரவர்க்கும் சேஷ பூதனாக வேண்டி வந்ததீ என்னில் -அவனுக்கு பிரசாத பாத்ரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
சேஷமாய் இருக்கும் இருப்பு சரீரத்வ சாமான்யத்தாலே வியபிசரியாது-
பர்த்தாவோடு பார்யைக்கு அவ்யவதாநேநா சம்பந்தம் உண்டாகா நிற்கச் செய்தேயும் -ஆர்த்தவாதி தோஷ தூஷிதை யானவன்று –
பர்த்தாவோடு ப்ரஜைகளோடு வாசி அற எல்லார்க்கும் அஸ்புருசையாய்-
குளித்தவாறே ஸம்ஸ்லேஷிக்கலாம்படி இருக்கிறாப் போலே
அகங்கார மமகராதிகள் உண்டான வென்று த்யாஜ்யமாய் -அவை போன வன்று இவை தானே உபேதாயமாகக் கடவது –

ஆக பிரயோஜகமாய் அற்றது -ஈஸ்வரனுக்கு பிரசாத பாத்ரமான சரீரம் உத்தேச்யமாகக் கடவது –
நிக்ரஹ பாத்ரமான சரீரம் த்யாஜ்யமாகக் கடவது -இத்தை அருளிச் செய்கிறார் -எல்லாரும் -என்று தொடங்கி –

நமஸ் சப்தத்தால் ( பாரதந்தர்ய )ஸ்வரூபம் சொல்லப் பட்டால் போலே உபாயமும் சொல்லப்படுகிறது –
இது தன்னை அருளிச் செய்கிறார்
ஆத்மாவினுடைய என்று தொடங்கி –
கச்சத்வம் ஏனம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா-என்று சரணம் புகுறுங்கோள் -என்று உபதேசிக்க
திரௌபதியா சஹிதா சர்வே நமஸ் சக்ரு ஜனார்த்தனம் -என்று அனுஷ்டான வேளையிலே
நமஸ்காரத்தை பண்ணினார்கள் -என்கிற
ஸ்தான பிரமாணத்தாலே நமஸ் சப்தம் சாப்தமாகவே உபாய வாசகமாகக் கடவது –
இத்தை அருளிச் செய்கிறார் -சரணம் என்று தொடங்கி-
( ஆக ஆர்த்தமாகவும் சாப்தமாகவும் நமஸ்ஸூ காட்டும் )

ஆக
பிரணவத்தாலும் -நமஸ் -சப்தத்தாலும் –
ஸ்வரூபமும் ஸ்வரூப அனு ரூபமான உபாயமும் சொல்லிற்று ஆயிற்று –

மந்த்ர ப்ரஹ்மணி-என்கிற பட்டர் ஸ்ரீ ஸூக்தியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் –
நடுவே கிடந்தது -என்று தொடங்கி –
காகாஷி நியாயத்தாலே நமஸ்ஸூ – கீழும் -மேலும் -ஸ்வ ஸ்தானத்திலும் அன்வயித்து
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களை சிக்ஷிக்கிறது என்று இறே பட்டர் அருளிச் செய்தது –

இத்தால் பிரதம பதத்தில் சொன்ன ஸ்வரூபத்துக்கு விரோதியும் –
நம பதத்தில் அர்த்தமாக சித்திக்கிற உபாயத்துக்கு விரோதியும்
உத்தர பதத்தில் சொல்லுகிற ப்ராப்யத்துக்கு விரோதியும் கழிக்கக் கடவதாய் இறே இருப்பது என்றபடி –

ஆத்மாத்மீயங்கள் இரண்டும் அத்தலைக்கு ப்ரகார தயா சேஷம் -என்றும் –
துக்கத்தை போக்குவாய் போக்காது ஒழிவாய் -வேறு ஒரு ரக்ஷக வஸ்துவை உடையேன் அல்லேன் என்றும் –
உன் உகப்புக்கு புறம்பான எங்களுடைய ஆசையைப் -போக்கு என்றும்
நமஸ் சப்தத்தாலே சொல்லிற்று ஆயிற்று என்றபடி –

(அப்ருதக் சித்த விசேஷணம் பிரகாரம் -விட்டுப் பிரியாமல் சார்ந்தே இருக்கும்
மாணிக்கம் ஒளி –பூ மணம்-போலே )

ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் மூன்றுக்கும் விரோதி அகங்கார மமகாரங்கள் ஆகையால்
தன் நிவ்ருத்தியைச் சொல்லுகிறது -நமஸ் சப்தம் என்றதாயிற்று –

( இப்படி மூன்று இடங்களிலும் விரோதியாக இருப்பதால் நீர் நுமது என்ற இவை வேர் முதல் சாய்க்க வேண்டும்
ந ம -விளக்கம்
புராதா அன்வயம் ஓம் ந ம -ஸ்வரூபம் சிஷிதம் -எனக்கு நான் அல்லேன் -நான் எனக்கு அடிமை அல்லேன் –
ஸ்வா தந்தர்யம் பகவானுக்கே -நாம் பரதந்த்ரர்கள்
ஸ்தான தயா அன்வயம் -நம ந ம -என்னை ரஷிக்கும் பொறுப்பு – கதி உபாயம் என்னது இல்லை -என் முயற்சி லேசமும் இல்லை –
பஸ்ஸாத் அன்வயம் நாராயணாயா ந ம-காம்யம் புருஷார்த்தம் சிஷிதம் -அவன் ஆனந்தமே பலம் -என் மகிழ்ச்சி பலம் ஆகாது –
உன் ஆனந்தத்துக்குக்கவே கைங்கர்யம்
இப்படி ந ம மூன்று இடங்களிலும் மூன்று அர்த்தங்கள் -வருமே
மூன்று சேர்க்கை -நாராயணனுக்கே உரியவன் -எனக்கு சேஷம் அல்லேன் –
உபாயத்தில் நம் முயற்சி இல்லை -ஸ்தானத்தில் அன்வயம் –
நமக்கும் அவனுக்கும் ஆனந்தத்துக்காக -களை -விட்டு -மற்றை நம் காமங்கள் மாற்று –
படியாய் கிடந்தது பவள வாய் காண வேண்டுமே

———————————————————————————————————-

நாராயண பதார்த்தம் –
நாராயண –
பதம் தன்னை அடியானாக உணர்ந்தவன் சேஷி பக்கல் அடிமையை இரக்கும் படியைச் சொல்லுகிறது ..

நாராயணன் என்றது அ – காரத்தில் சொன்ன சேஷியை வெளி இடுகிறது –
நர /நாரா நாராக / என்றும் அழியாத சேஷ வஸ்துக்களின் திரளைக் காட்டுகிறது –

நரன் என்று சொல்லப் படுகிறவன் பக்கல் நின்றும் பிறந்த வற்றையும் ,
தத்வங்களிலே முற்பட்ட பிரதானமான அப்புக்களையும் நாரங்கள் என்னக் கடவது-

என்றும் உண்டாய் ,
ஒரு படிப் பட்டு
ஆவது அழிவது ஆகா நிற்க ,ஸ்வரூப நாசம் இன்றிக்கே இருக்கிற
இரண்டு விபூதியில் உள்ள வற்றை எல்லாம் சொன்ன படி –

இனன் உணர் முழு நலம் ( திரு வாய் மொழி -1-1-2-) என்கிற ஞான ஆனந்தாதிகளும் ,
(முழு உணர்வு முழு நலம் -கட்டடங்க ஞானம்-சர்வஞ்ஞத்வம் -கட்டடடஙக ஆனந்தம் – )

மழுங்காத ஞான (திரு வாய் மொழி 3-1-9 )
உயர்வற உயரும் (திரு வாய் மொழி 1-1-8 ) என்கிற ஞான சக்தி யாதிகளும்

ஆசறு சீலாதிகளும் ( திரு வாய் மொழி 5-3-1)
(மாசறு சோதி குற்றம் அற்ற திரு மேனி-பக்தாநாம் என்று இருக்கை –
ஆசறு சீலன் -குற்றமற்ற சீல குணம் -தனது பேறாக கலக்கும் ஸ்வ பாவம்
உணர் முழு நலன் -ஸ்வரூபம் ஞான ஆனந்த மயன்-
சங்கல்ப ரூப ஞானம் -ஞானம் உடையவன் -ஞான குணத்வம் சொல்லும்
பகவான் -ஷட் குணம் -ஞானம் பலம் ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் -அந்தரங்க குணங்கள் -ஸ்ருஷ்டிக்கு உபயோகிகள்
சீலாதி குணங்கள் – இவை அடுத்த நிலையான குணங்கள் -)

இவற்றை வெளி இடுகிற
மணி உருவில் பூதம் ஐந்தான (திரு நெடும் தாண்டகம் -1-)
நீல சுடர் விடு மேனியும் (திரு விருத்தம் –14-)

(அப்ராக்ருதம் -பஞ்ச உபநிஷத் சக்தி மயமான திரு மேனி -மணி உருவம் –
மாலே மணி வண்ணா -உள்ளே இருப்பதைக் காட்டும் -நம் சரீரம் ஸ்வரூபம் திரோதானம் –
இதுக்கு எதிர் தட்டான சுத்த சத்வம் -எனவே மறைக்காதே –
மணி உருவிலும் இருப்பான் பூதம் ஐந்திலும் இருப்பான் என்றுமாம் –
மாணிக்கச் செப்பிலே பொன் போலே தனக்கு ஆஸ்ரயமான குணங்கள் -ஸ்வரூபம் பார்க்க முடியாது
குணங்கள் தனியாக அனுபவிக்க முடியாது திருமேனி தானே இவற்றை வியக்தமாகக் காட்டும் )

வெறி கொள் சோதி மூர்த்தி (திரு வாய் மொழி-6-9-8- )
மலர் புரையும் ( திரு நெடும் தாண்டகம்-5-) என்கிற சௌகந்த்ய சௌகுமார்யாதிகளும்

முகச் சோதி மலர்ந்ததுவோ ( திரு வாய் மொழி 3-1-1 ) என்னும் படியாய் இருக்கிற
சென்னி நீண் முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன் ( திரு வாய் மொழி 5-5-9 ) பூஷணங்களும்

அம் தாம வாள் முடி சங்காழி நூலாரம் ( திரு வாய் மொழி-2-5-1-) என்கிற ஆபரணங்களோடு
ஒரு கோவையான ஆயுதங்களும்

பார் மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சஙகு இரு பால் ( பெரிய திரு மொழி -2-10-9- ) என்னும் படி
ஆழ்வார்களோடு ஓக்க அனுபவிக்கிற நாய்ச்சிமார்களும் ,

திரு மகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் ( திரு வாய் மொழி 8-1-1 ) என்ற சேர்த்தியிலே
ஏவிற்றுச் செய்கிற நித்ய ஸூரிகளும் (பெரியாழ்வார் திரு மொழி 4-2-6-)

அடியோரோடு இருந்தமை ( திரு வாய் மொழி-10-9-11-) என்னும் படி இவர்களோடு சாம்யம் பெற்ற முக்தரும் ,

சென்றால் குடையாம் ( முதல் திருவந்தாதி -53 ) என்று அவர்கள் உபகரண ரூபமாகக் கொண்ட
சத்ர சாமராதிகளும் ,(ரூபமாகக் கொண்ட – நித்ய ஸூரிகளே இவை )

தேவர் குழாத்துக்கு இருப்பிடமான ( திரு வாய் மொழி -5-5-10- ) திரு மா மணி மண்டபமும்

அத்தைச் சூழ்ந்த கொடி அணி நெடு மதிள் கோபுரமும் ( திரு வாய் மொழி 10-9-8-)

அதில்
வாசலில் ( வழியில்-அர்ச்சிராதி கதி மார்க்கத்தில் மாதவன் தமர் இவர்கள் என்று அந்தப்புர பரிகரம் என்று சத்கரிப்பார்கள் )
வானவரும் ( திரு வாய் மொழி 10-9-5)

மீட்சி இன்றி வைகுந்த மா நகரும் ( திரு வாய் மொழி -4-10-11 )

கோவில் கொள் தெய்வங்களினுடைய திவ்ய விமானங்களும் ( திரு வாய் மொழி 8-6-5 )

மாட மாளிகை (நாச்சியார் திருமொழி 4-5)என்னும்படி
(விதி வகை புகுந்தனர் என்று )நல் வேதியர் ( திரு வாய் மொழி 10-9-10 ) பதிகளைச் சூழ்ந்த
ஆராமங்களும் (சிறிய திரு மடல் -71 )

(திரு மால் திருக் கோளூரில் )அந்த பூ இயல் பொழிலைச் சூழ்ந்து (திரு வாய் மொழி 6-7-5 ) வளர்கிற
ஒத நெடும் தடங்களும்
(தடாகங்களும் என்றவாறு திருவாய் மொழி 5-9-7-ஐரம்வத தீர்த்தம் உண்டே அங்கு- விராஜை நதி -இது தடாகம் )

அவற்றுக்கு அடியான விரஜையும் ,

வைகுந்த வானாடும் ( பெரிய திருவந்தாதி -68 )

சூழ் பொன் விசும்பான பரம ஆகாசமும் ( திரு வாய் மொழி 10-8-11 )
(ஆண்மின்கள் வணக்கம் ஆழியான் தமர் என்று -ஸ்ரீ பரமபதம் -விண்ணோர் நாடு தானே –
தொண்டர் ஆள்வது -நிரதிசய தேஜோ மயமான -பொன் -)

(இது வரை நித்ய விபூதி -மேலே லீலா விபூதி )

சுரர் அறிவரு நிலையான ( திருவாய் மொழி 1-1-8 ) மூல பிரக்ருதியும் ,
(விண் முதல் முழுவதும் -ஆகாசத்தை சொல்லி -உண்டையும் பாவும் போலே கோக்கப் படுவதால்
பிரக்ருதியை இச்சப்தம் சொல்லும்)

மங்கிய வருமான ( திருவாய் மொழி 8-1-6-சம்சாரத்தில் சிறைப்பட்ட ) பக்த வர்க்கமும் ,

கால சக்கரமும் (திரு வாய் மொழி 4-3-5 ) ,
(கண்ணன் எம்பிரான் அம்மான் கால சக்கரத்தானுக்கே
ஆழி கொண்டு மறைத்து -இருளை ஓட்டும் அருளார் திருச் சக்கரம் ஏந்தியவன் என்றுமாம் )

மானாங்காரம் ( திரு வாய் மொழி 10-7-10/11) முதலான தத்துவங்களும் ,

அவற்றாலே சமைந்த பத்தினான் திசைக் கண் நின்ற ( திரு சந்த விருத்தம் -79-பதினான்கு ஈர் ஏழு லோகங்களில் வாழ்பவர் )
புற இமையோர் ( திருவாய்மொழி 4-9-8 ) வாழ் தனி முட்டை கோட்டையும்
( சதுர் தச புவனங்களும் அவற்றைச் சூழ்ந்த தச அண்டங்கள் -அண்டம் முட்டை தானே –
கோட்டை வெளி போக முடியாதே அவன் அருள் அன்றி )

மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமான பதார்த்தங்களும் ( திருவாய்மொழி 3-6-1 ),
(ஸ்தாவர ஜங்கம -அதுக்குக் காரணமான பஞ்ச பூதங்கள் -அதுக்குக் காரணம் -முற்றுமாக )

எண் மீது இயன்ற ( திருவாய் மொழி 6-9-5 ) புற அண்டங்களுமாக சொல்லப் படுகிற இவை
நாரங்கள் ஆகின்றன ..

நலம் திகழ் நாரணன் ( பெருமாள் திரு மொழி 1-11-ஞானம் ஆனந்தம் )
வண் புகழ் நாரணன் ( திரு வாய் மொழி 1-2-10 -கல்யாண குணங்கள் )
வாழ் புகழ் நாரணன் ( திரு வாய் மொழி 10-9-1- சீலாதி குணங்கள் )
நன் மேனியினன் நாராயணன் ( திருவாய்மொழி -9-3-1- திருமேனி )
பல் கலன் நடையா உடை திரு நாரணன் (திருவாய் மொழி 3-7-4-திவ்ய ஆபரணங்கள் )
தெய்வ நாயகன் நாரணன் (திருவாய்மொழி 5-7-4 )
நாராயணனுக்கு (திருவாய்மொழி 5-7-1 )
நாராயணனுக்கு ( பெரியாழ்வார் திருமொழி 3-7-11 -ஆலிலை துயின்ற )
ஏக மூர்த்தி இரு மூர்த்தி ( திருவாய் மொழி 5-3-3 ) என்று தொடங்கி ,

நடுக் கடலுள் துயின்ற நாராயணன் (திருவாய் மொழி 4-3-3 )
தானாம் அமைவுடை நாரணன் ( திருவாய் மொழி 1-3-3 )
நாரணன் எம்மான் பார் அணங்கு ஆளன் ( திருவாய் மொழி 10-5-2 )
நாராயணன் நங்கள் பிரான் (திரு வாய் மொழி 9-3-1 )
நீரார் பேரான் ( பெரிய திருமொழி 2-4-6 -நீரார் பேரான் நெடுமாலுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே)

என்று பல இடங்களிலும் நாரங்களாக தோற்றுகிறவற்றை

பொங்கு புணரி கடல் சூழ் ஆடை (பெரிய திருமொழி 6-10-9 ) என்கிற பாட்டிலே திரள அருளிச் செய்து அருளினார் –-

(பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா மகள் மலர் மா
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய
எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம்
நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே -6-10-9-உபய விபூதி நாதனின் திரு நாமம் திரு அஷ்டாஷரம்)

—————————————————–

அநந்தரம் -நாராயண பதார்த்தத்தை அருளிச் செய்கிறார் -நாராயண பதம் என்று தொடங்கி –
அகார நாராயண பதங்களுக்கு உண்டான சங்க்ரஹ விஸ்தர பாவத்தை அருளிச் செய்கிறார் —
நாராயணன் என்றது தொடங்கி –
அகாரத்தை விவரிக்கிறது நாராயண பதம்-சுருங்கச் சொன்ன அர்த்தம் தன்னை
அஞ்ஞானம் சம்சயம் விபர்யயங்கள் கழியும் படி முகாந்தரத்தாலே தெளிவிக்கை விவரணம் –
இஸ் சங்க்ரஹ விவரண பாவம் பிரதம அக்ஷரம் முதலாக யதா சம்பவம் கண்டு கொள்வது –

உகாரத்தை விவரிக்கிறது நமஸ் ஸூ –
அகாரத்தை விவரிக்கிறது நாராயண பதம் –
மகாரத்தை விவரிக்கிறது சதுர்த்தி
நார பதம் -என்றும் சொல்லுவார்கள் -என்றபடி –

ரஷ்ய அம்சமும் ரக்ஷண பிரகாரமும் இறே அகாரத்தில் விவரணீயமான அம்சம் –
அதில் நார சப்தத்தாலே ரஷ்ய அம்சத்தை விவரிக்கிறது –
நாராயணன் என்கிற ஸமஸ்த பதத்தாலே ரக்ஷண பிரகாரத்தை விவரிக்கிறது
(அயனமாகவும் ஆதாரமாகவும் இருக்கும் பிரகாரம் )

அதில் ரஷ்ய விவரணம் பண்ணுகிறது நார பதம் –
ரிங்ஷயே -என்கிற தாதுவிலே -ர-என்ற பதமாய் -க்ஷயிக்கும் வஸ்துவைச் சொல்லி
நகாரம் அத்தை நிஷேதித்து –
நர -என்று ஷயம் இல்லாத நித்ய வஸ்துவைக் காட்டி
ஸமூஹ அர்த்தத்தில் அண் பிரத்யமும் ஆதி வ்ருத்தியுமாய் -நார என்று நித்ய வஸ்து சமூகத்தைச் சொல்லி –
நாரா -என்று பஹு வசனம் ஆகையால் ஸமூஹ பாஹுள்யத்தைச் சொல்லுகிறது-
இத்தை அருளிச் செய்கிறார் -நர -நார நாரா -என்று தொடங்கி

இங்கு சொல்லப்படும் நித்யத்வம் ஸ்வரூபேண நித்யத்வம் -ப்ரவாஹ ரூபேண நித்யத்வம் என்று த்விவிதம் –
ஸ்வரூபேண நித்யத்தை யாவது -சத்தான பதார்த்தத்தை உடைய உத்பத்தி விநாச அத்யந்த அபாவம்-
பிரவாஹா ரூபேண நித்யத்தை யாவது -உத்பத்தி விநாச யோகியா நிற்கச் செயதேயும்
பூர்வ காலத்தில் உண்டான நாம ரூப லிங்காதிகள் உடைய அநந்யதாபாவம் –
ஆக நாரா என்று நித்ய பதார்த்தங்களின் சமூகங்களை சொல்லுகிறது –

ஸ்ருஷ்ட்வா நாரம் -என்கிற ஸ்ரீ வராஹ புராண வசனத்தையும் –
ஆபோ நாரா -என்கிற ஸ்ரீ மனு வசனத்தையும் உட்க்கொண்டு
அருளிச் செய்கிறார் -நரன் -என்று தொடங்கி –
அப்புக்களை எடுத்தது ததவாந்தரங்களுக்கும் உப லக்ஷணம் என்னும் இடம்
நராஜ் ஜாதானி -( பாரதம் ) -இத்யாதிகளாலே சித்தம் –

இந்த பஹு வ்ரீஹி சமாசமான நிர்வசனத்தில்
நாராயணன் உடைய சர்வவித காரணத்வமும் –
அயன சப்தத்தில் –
ஈயத இத்யயனம்-என்கிற கர்மணி வுயத்பத்தியாலே இவற்றை
வியாப்பியமாக வுடையவனுடைய சர்வ வியாபகத்வமும் –
அதுக்கு உபயுக்தமான நிரதிசய ஸூஷுமத்வமும் சொல்லிற்று ஆயத்து –

இப் பொருள்கள் -ஈயதே அஸ்மின் -என்கிற அதிகரண வுயுத்பத்தியாலும் வரும் –
ஆகாசம் கடாதிகளாலே வியாபிக்குமா போலே தன் ஸ்வரூப ஏக தேசங்களாலே வியாபிக்கை அன்றிக்கே-
ஜாதி வியக்தி தோறும் வியாபிக்குமா பாதி சமாப்ய ஆத்மதயா வியாபித்து தரிக்கும் என்கிறது நாராயண பதம் –
இந்த அந்தர் வியாப்தியையும் பஹிர் வியாப்தியையும் நினைத்து இறே அனோர் அணீயான் மஹதோ மஹீயான் -என்றது –

(ஆதார ஆதேயத்வம் தூண் உத்தரம் போலே இல்லாமல் -எல்லாமாகவும் அவனே -முழுவதுமாக தாங்குகிறார் –
இதனால் தான் ஸ்வரூப ஏக தேச வியாபிக்கை அன்றிக்கே-ப்ரஹ்ம பகுதி தான் ஒவ் ஒன்றிலும் இருக்குமோ என்றால்
முழுவதுமாக -குடத்துக்குள்ள ஏக தேச ஆகாசம் போலே இன்றிக்கே -கோத் வம் ஜாதி–பசுவின் முழுவதும் வியாபிக்கும் -அதே போலே
இதுக்கு உவமானம் காட்ட முடியாதே -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ
அணுவுக்குள் அணு-பெரிய வற்றையும் பெரியதாக -இவை இரண்டையும் –உள்ளே வெளியே வியாபிக்கிறார் -)

நித்ய வஸ்துக்களை ஸ பிரமாணமாக அருளிச் செய்கிறார் –
உணர் முழு நலம் -என்று தொடங்கி –
பிராட்டியினுடைய -நார கோடி கடிதத்வத்தை அருளிச் செய்கிறார் -பார் மகள்-என்று தொடங்கி –
உடையவரும் கத்யத்திலே இங்கனே இறே அருளிச் செய்தது –
( பிராட்டியும் நார கோஷ்டி என்றவாறு )
இத்தால் நாராயண பதத்தில் கைங்கர்ய பிரதிசம்பந்தி ஒரு மிதுனம் என்றதாயிற்று –

————————————————————————

அயன சப்தார்த்தம் ..
அயனம் -என்று இருப்பிடமாய் ,
1-நாரங்களுக்கு இருப்பிடம் என்றும் ,
2-நாரங்களை இருப்பிடமாக உடையவன் என்றும் சொல்லக் கடவது ..

நான் உன்னை அன்றி இலேன் –கண்டாய் நாரணனே- நீ என்னை அன்றி இல்லை ( நான்முகன் திருவந்தாதி -7 ) என்று
ஒன்றை ஓன்று குலையில் இரண்டு தலையும் இல்லை யாம்படி இருக்கையாலே ,
(உன் கிருபைக்கு வேறு விஷயம் இல்லை -உன் கடாக்ஷம் இல்லாமல் எனக்கு சத்தை இல்லையே
நின் அருள் என் கண் அன்றி புகல் ஒன்றும் இல்லை நின் அருளுக்கும் அஃதே புகல்- இருவருக்கும் பயனான பின்பு )

தன் உள் அனைத்து உலகும் நிற்க –நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் ( திரு வாய் மொழி 9-6-4 )

என்கிற மேன்மையும் நீர்மையும் சொல்லிற்று ஆயிற்று ..

1-எல்லா வற்றுக்கும் காரணமாய் ,
2-அந்தராத்மாவாய் ,
3-அவற்றின் தோஷம் தட்டாமே நின்று ,
4-நியமித்து ,
5-தான் ஒளியை வுடையானாய் ,
6-ஸ்வாமியாய் ,
7-எல்லா உறவுமாய் ,
8-உபாயமுமாய் ,
9-உபேயமுமுமாய் ,
இருக்குமது எல்லாம் இதிலே தோற்றும்..

(சமாசங்கள் —சொற்கள் சேர்த்தியை விளக்கும்
முதல் சொல்லுக்கு முக்யத்வம் -இரண்டாவது சொல்லுக்கு முக்யத்வம்–இரண்டுக்கும் இல்லாமல் வேறே ஒன்றுக்கும் –
இரண்டுக்கும் பிரதானம் -இப்படி நான்கும் –
தத் புருஷ சமாசம்–உத்தர பதார்தகம் போதகம் -ராஜ புருஷன் -வேலையாளுக்கு முக்கியம்
பஹு வ்ருஹீ சமாசம் -அந்யா பதார்த்த போதகத்வம் -சாஷாம்–பீதாம்பர-பீத மஞ்சள் -அம்பர ஆடை –
இரண்டையும் குறிக்காமல் தரித்த அவனைச் சொல்லும்
அவ்யயயீ பாவம் -முன் சொல் முக்யத்வம் -உப கங்கா -கங்கையின் கரை -பூர்வ பதார்த்த போதகத்வம்
த்வந்த சமாசம் -இரண்டுக்கும் சமமாக பிரதானம் -ராம கிருஷ்ணர் வந்தார்கள் ஆகதவ்-இருவருக்கும் முக்யத்வம்

நாராணாம் அயனம் ஆஸ்ரயம் யாகா யாரோ அவன் நாராயணன் -தத் புருஷ சமாசம் -அயனத்துக்கு முக்யத்வம் இதில்
நித்ய வஸ்துக்களுக்கு இருப்பிடம்-உத்தர பதார்த்த போதகத்வம் இங்கு-

நாரா அயனம் யஸ்ய சக -யாருக்கோ அவர் நாராயணன் -நாரங்கள் இவனுக்கு இருப்பிடம் –
இவற்றுக்கு-நாரங்களுக்கும் அயனத்துக்கும் முக்யத்வம் இல்லை – -நாரங்களை ஆச்ரயமாகக் கொண்டு உள்ள
மூன்றாவதான நாராயணன் -பஹு வ்ருஹி சமாசம் -பீதாம்பரம் போலே –

எல்லாவற்றுக்கும் ஆஸ்ரயமாக தாங்கி பரத்வம் -உபாயமும் ப்ராப்யமும் என்றுமாம்

நாரங்களுக்குள் இருப்பதால் அந்தர்யாமித்வம் -ஸுவ்லப்யம் வெளிப்படும் -ஜுகுப்ஸை இல்லாமல் உகந்து உள்ளான் –
இத்தை விட்டு எதுக்கு ஸ்ரீ வைகுண்டம் –

ர -அழியும் பொருள் -ந நிஷேதம் -நர அழியாத பொருள் -அணு ப்ரத்யயம் வர ஆதி தீர்க்கமாகி நார பன்மையால் நாரா-
அயனம் -அஸ்மின் ஈயதே இதில் அடைகின்றன ஆஸ்ரயம்

தத் புருஷ சமாசம் -அனைத்துக்கும் ஆதாரம் -மேன்மை சொல்லும்-எளிமையும் சொல்லும்

தாழ்ந்த பொருள்களுக்கும் இருப்பிடம் எளிமை -வசிஷ்டர் முதல் நம் பர்யந்தம் -பரத்வமும் இதில் உண்டே

அய கதவ் செல்விடம்–நாரங்களுக்கு கதியாக இருப்பவர் நாராயணன் -கதி உபாயமும் உபேயமும்
நாரங்களுக்கு உபாயமாகவும் உபேயமாகவும்
கருவி கரனே உத்பத்தி -ஆல் மூன்றாம் வேற்றுமை -நாரங்கள் இவனால் அடைகின்றன -கத்தியால் பழத்தை நறுக்கி —
உபாயம் காட்டும் -இவர் மூலம் அடைகிறோம்

கர்மணி உத்பத்தி -இரண்டாம் வேற்றுமை -இத்தை அடைகிறார்கள் -உபேயத்வம் –
செயல் படும் பொருள் –

நாரங்களால் அடையைப் படுகிறான் –
இவனை அடைகின்றன -ப்ராப்யத்வம்

ஆதாரம் –ஆஸ்ரயம் -அனைத்துக்கும் –
உபாயம் உபேயம் -மூல ப்ரக்ருதிக்கு இல்லையே -ஞானம் உடைய சேதனனுக்குத் தானே
அசித் விட வேண்டும் இங்கு–

ப்ராப்யம் என்று சொல்லும் பொழுது பிராட்டி வாத்சல்யாதி குணங்களும் சேரும் -இவற்றுக்கும் ப்ராப்யத்வம் உண்டே
உபாயத்வம் -அவன் மட்டுமே -மற்றவற்றுக்கு அர்த்த சங்கோசம் கொள்ள வேண்டும்

இனி பஹு வ்ருஹி சமாசம்
விபுவான தான் அனைத்துக்குள்ளும் புகுந்து இருப்பதால் ஸுவ்லப்யம்
அந்தர்யாமியாக அனைத்தையும் நியமிப்பதால் பரத்வமும் இங்கே உண்டே
நாரங்களுக்குள் புகுகிறான் என்னும் பொழுது குணங்களைச் சேர்க்க முடியாதே -அர்த்த சங்கோசம் கொள்ள வேண்டும் –
வியாபக மந்த்ரங்கள் -எதை எதற்க்காக யாரை எப்படி எந்த குணத்தோடு -ஐந்து விஷயம் பார்த்தோம் -நாராயண பூர்த்தி
பகவதே சொல் தருவிக்க வேண்டாமே இங்கு
நார சப்தத்துக்கு குணங்களும் உண்டு -வியாபிக்கும் அவனுக்கும் குணங்கள் உண்டே –
ஆத்மாஸ்ரய தோஷம் கூடாதே -தானே தனக்கு இருப்பிடம் ஆகாதே – தன் கழுத்தில் தானே என்ற முடியாதே –
சில குணங்களை வியாப்யம் என்று கொஞ்சம் பிரித்து சொன்னால் அநவஸ்தா தோஷம் வரும்
ஆக குணங்களைத் தவிர என்றே கொள்ள வேண்டும்

உள்ளே வியாபித்து -ஆதாரமாக இருப்பது எப்படி
ஆத்மா ஸூஷ்மம்–ஆறு பக்கம் அற்றது இடைவெளி இல்லையே – ஒளி மயமானது -தடுக்க முடியாது
ஜன்னல் சூர்ய வெளிச்சம் -விளக்கு வெளிச்சம் எல்லாம் போகலாமே -தடை இருக்காதே -அதே போலே ஞானம்
ஞான ஸ்வரூபன் இருவரும் -தடை இல்லையே -அந்தர் வியாப்தி ஒக்கும் -)

—————————————————————–

தத்புருஷ பஹு வ்ரீஹீ சமாஜ த்வயத்தை அருளிச் செய்கிறார் -அயனம் -என்று தொடங்கி –
தன் குணங்களில் ஈஸ்வரன் வியாபிக்கும் போது குண விசிஷ்டானாயே வியாபிக்க வேணும் –
நிர்குணமாய் வஸ்து இராமையாலே –
அப்போது வ்யாப்ய குணங்களே வ்யாபகங்களாய் -வியாபக குணங்களே வ்யாபயங்களாய் வருகையால்
ஆத்ம ஆஸ்ரய தோஷம் உண்டாகும் –

அதுக்கு மேலே தன் குணங்களில் குணி வியாபிக்க வேணும் என்று புக்கால்
தத் ஆஸ்ரயமான குணங்களையும் குணி வியாபிக்க வேணும் -ஆகையால் அனவஸ்தா துஸ்தமாம் –
ஆகையால் நாரங்களுக்கு ஆஸ்ரயம் என்கிற இடத்தில் குணங்களையும் சொல்லிற்றே யாகிலும் –
நாரங்களை ஆஸ்ரயமாக உடையவன் என்கிற இடத்தில் குணங்களை ஒழிய சொல்ல வேணும் என்றதாயிற்று

ஆக
ஸமஸ்த கல்யாண குணாத்மகத்வம் –
உபாயவிபூதி நாதத்வம் –
சர்வ ஸ்மாத் பரத்வம் –
சர்வ சரீரத்வம் –
உள்ளிட்டவை யுக்தமாய் நின்றது –

ஸமாஸ த்வயத்தாலும் பலித்த அம்சத்தை அருளிச் செய்கிறார்-நான் உன்னை -என்று தொடங்கி –
அந்தரத்தில் அந்தணனை -என்றும் –
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன்-என்றும்
சர்வ பூத அந்தராத்மா -அபஹத பாப்மா -இத்யாதி
பிரமாணங்களை உட் கொண்டு அருளிச் செய்கிறார் –

அந்தராத்மாவாய் அவற்றின் தோஷம் தட்டாமே நின்று -என்று –
அதாவது வியாப்யகத தோஷை-அச்மஸ்ப்ருஷ்ட ஸ்வ பாவன்-என்றபடி –

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –
சேலேய் கண்ணியரும்-
பிராதா பர்த்தா ச –
மாதா பிதா -என்றத்தை உட் கொண்டு அருளிச் செய்கிறார் -எல்லா உறவுமாய் -என்று –

இண்-க தவ்-என்கிற தாதுவிலே யாதல் -அய-கதவ்-என்கிற தாதுவிலே யாதல் –
ஸித்தமான அயன பதத்தில் -கரனே வ்யுத்பத்தியாலும் –கர்மணி வுயுத்பத்தியாலும்
ப்ரகாசிதமான உபாயத்வ உபேயத்வங்களை அருளிச் செய்கிறார் –
உபாயமுமாய் உபேயமுமாய் -என்று –

பஹு வ்ரீஹீ யோஜனை கொள்ளுகிற இடத்தில்
யோக்யதா அனுகுணமாக நார சப்தத்தை குணங்களை ஒழிந்த வஸ்துக்களுக்கு
வாசகமாக கொண்டால் போலே –

தத் புருஷ யோஜனையிலும் அயன சப்தத்தை உபாய உபேய வாசியாகக் கொள்ளும் அளவில்
யோக்யதா அனுகுணமாக நார சப்தத்தை அசேதனங்களை ஒழிந்த சேதன வஸ்துக்களுக்கு
வாசகமாகக் கொள்ளக் கடவது –

நாரஸ்த் விதி சர்வ பும்ஸாம் சமூஹ பரிகத்யதே-கதி ராலம்பாநம் தஸ்ய தேன நாராயண ஸ்ம்ருத -என்றும்
நார சப்தேன ஜீவா நாம் சமூஹே ப்ரோச்யதே புதை -தேஷாம் அயன பூதத்வாத் நாராயண இஹோச்யதே-என்றும்
இத்யாதிகளாலே இவ்வர்த்தம் சொல்லப் படா நின்றது இறே

——————————————————————————————————

வ்யக்த சதுர்த்தி அர்த்தம் ..
ஆய -என்று-
ம -காரத்தில் சொன்ன ஆத்மாவுக்கு
அ -காரத்தில் சொன்ன சேஷத்வம் நிலை நிற்பது
கைங்கர்யத்தில் தான் அந்வயித்தால் ஆகையாலே ,அடிமையில் இரப்பைக் காட்டுகிறது ..
(லுப்த சதுர்த்தி தாதர்த்தம் -இங்கு பிரார்த்தனா சதுர்த்தி )

தொடர்ந்து குற்றேவல் ( திரு வாய் மொழி 9-2-3)
(திருப் புளிங்குடி கிடந்தான் -எழுந்து -தொழ இருந்து -இவனே நின்றும் இருந்தும் சேவை சாதிக்க பிரார்த்தனை
தொடர்ந்து குற்றேவல் -இத்தலையில் இப்படி செய்ய அடுப்பது-தொல் அடிமை -)

ஆட் செய் எக்காலத்தும் (திரு வாய் மொழி 2-9-4 -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே) –
சென்றால் இருந்தால் நின்றால் (முதல் திரு வந்தாதி -53 )
ஊரும் புள் கொடியும் அஃதே ( திரு வாய் மொழி 10-2-3) என்கிற படியே
(நித்ய சூரிகள் ஒவ் ஒருவரையும் பல கைங்கர்யங்கள் கொண்டு அருளுவதுக்கு த்ருஷ்டாந்தம் -அஹம் சர்வம் கரிஷ்யாமி )

எல்லா தேசங்களிலும் திரைக்குள்ளோடு புறம்பற வாசி அற எல்லா அடிமைகளையும்
முகப்பே கூவிப் பணி கொண்டு அருள ( திருவாய் மொழி 8-5-7) வேணும் என்கிற இரப்பை
ஒழிவில் காலத்தில் (திரு வாய் மொழி 3-3-1 ) படியே காட்டக் கடவது

—————————————————–

இனி இதில் விபக்தி அம்சத்தாலே கைங்கர்யத்தை பிரார்த்திக்கிற படியை ச பிரமாணமாக அருளிச் செய்கிறார் –
ஆய -என்று தொடங்கி

நா கிஞ்சித் குர்வத சேஷத்வம் –என்றத்தை உட்க்கொண்டு -சேஷத்வம் இத்யாதி அருளிச் செய்கிறார்
ஆக –
லுப்த வ்யக்த சதுர்த்தி அர்த்தங்கள்
நிரூப்ய நிரூபக பாவம்
நிரூபிதம் –

—————————————————————————————————————-

மூல மந்த்ர ஸங்க்ரஹம் ..
ஆக ,
இந்த திரு மந்த்ரம் ,
சர்வ ரக்ஷகனான ஸ்ரீய பதிக்கு ,-(அகாரார்த்தம் -)
அநந்யார்ஹ சேஷ பூதனாய் ,-(உகார அர்த்தம் லுப்த சதுர்த்தி அர்த்தம் -)
சரீர இந்திரயாதிகளில் வேறு பட்டு ,ஞான ஆனந்த மயனாய்
ஸ்வதந்த்ரன் இன்றிக்கே , சர்வ பிரகார பர தந்த்ரனான ,நான் ,-(மகார அர்த்தம் )
உபய விபூதி நாராயணனுக்கு
சர்வ வித கைங்கர்யங்களிலும் ,அந்வயிக்க பெறுவேனாக ,வேணும் என்று இருக்கை ,(நாராயணாயா -அர்த்தம் )
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்கிறது ..

——————————————————-

இனி இம் மந்திரத்தால் ப்ரதிபாதிக்கப் பட்ட அர்த்தங்களை சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –
ஆக என்று தொடங்கி -அதாவது
1-சேதனனுடைய ப்ரக்ருதே பரத்வமும் —
2-ப்ரக்ருதே பரனுடைய சேஷத்வமும் –
3-சேஷத்வத்தினுடைய அநந்யார்ஹதையும் –
4-அநந்யார்ஹ சேஷத்வ பிரதிசம்பந்தியையும் –
5-அநந்யார்ஹ சேஷ பூதனுடைய அஹங்கார மமகார நிவ்ருத்தியையும் –
6-தன் நிவ்ருத்தமான ஸ்வரூபத்தின் உடைய அத்யந்த பாரதந்தர்யத்தையும் –
7-பாரதந்தர்ய காஷடையான-ததீய சேஷத்வத்தையும் –
8-பரதந்த்ரனுக்கு அனுரூபமான உபாயத்தையும் –
9-உபாய பலமான கைங்கர்யத்தையும் –
10-கைங்கர்ய பிரதி சம்பந்தியையும் சொல்லுகிறது -என்றபடி

ஆக –
திருமந்த்ரத்தால் –
1-பிராணவத்தால் சேஷத்வம் சொல்லி –
2-நமஸ் சப்தத்தால் தத் விரோதியான ஸ்வாதந்த்ரன் உடைய நிவ்ருத்தி சொல்லி
3-நாராயண பதத்தாலே அந்த சேஷத்வத்தை சரீர ஆத்ம பாவ சம்பந்த முகேன த்ருடீ கரிக்கையாலே
திருமந்திரம் ஸ்வரூப யாதாம்ய பரமாய் இருக்கும் –

——————————————————————————————–

திரு மந்திரத்தின் ஆபத் நிவர்த்தன பிரகாரம் ..
எம்பெருமானை ஒழிந்த பிறரை ரஷகர் என்று இருந்தால் ,
தேக ஆத்ம அபிமானம் ,
அந்நிய சேஷத்வம் ,

ஸ்வ ஸ்வா தந்தர்யம் –
மமகாராம் நடத்தல் ,
ஸ்ரீ வைஷ்ணவர்களை சஜாதியர் என்று இருத்தல் ,
தன் பேற்றுக்கு தான் யத்தனித்தல்

பகவத் விபூதியில் சிலரோடு வெறுப்பு நடத்துதல் ,

சம்சாரிகளை உறவு என்று இருத்தல் ,
ஷூத்ர போகங்களிலே நெஞ்சு கிடத்தல் ,-செய்யில் திரு மந்திரத்தில் – அன்வயம் இல்லையாகக் கடவது ..

(பட்டர் அஷ்ட ஸ்லோகி நான்காம் ஸ்லோகார்த்தம் இது )

———————————————–

தேஹா சக்தாத்ம புத்தி -என்கிற பட்டர் திருவாக்குப் படி -சம்சாரிகள் ஸ்வரூப அனுபந்திகளான ஆபத்துக்களையும்
திரு மந்திரத்துக்கு உண்டான தன் நிவர்த்தகத்வத்தையும்
வியதிரேக முகத்தால் அருளிச் செய்கிறார் -எம்பெருமானை -என்று தொடங்கி –

———————————————————————————————————————

மூல மந்த்ர அர்த்த நிகமனம் ..
மூன்று எழுத்து (பெரியாழ்வார் திருமொழி-4-7-10-மூன்று அக்ஷரங்கள்)
விடை ஏழ் அன்று அடர்த்து ( திரு வாய் மொழி 8-9-3 -கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர் உரியேனோ )
யானே என்னை ( திரு வாய் மொழி 2-9-9 -யானே நீ என் உடைமையும் நீ அஹங்காரம் மமகாராம் போனதை சொல்லும் ந ம )
எண் பெருக்கு அந் நலம் ( திரு வாய் மொழி 1-6-10-நாராயணன் நாமம் நிர்தேசம் )
எம்பிரான் எந்தை (பெரிய திருவந்தாதி 1-1-6-நாராயணன் சப்தார்த்தம் )
ஒழிவில் காலம் ( திரு வாய் மொழி 3-3-1 -பிரார்த்தனாயாம் சதுர்த்தி அடிமை செய்ய வேண்டும் -தந்தைக்கே )
வேங்கடங்கள் ( திரு வாய் மொழி 3-3-6-உபாயம் பகவான் தனி சிறப்பு )
நாட்டினாய் என்னை ( பெரிய திரு மொழி 8-10-9) என்கிற பாட்டுக்களை
(உனக்கு முன் தொண்டாக நாட்டினாய் -நம்முடையான் என்று அங்கே நாட்டுங்கோள் -அடிமை கொள்ளும்
கணக்கு புஸ்தகத்தில் –எட்டு எழுத்திலே நீ எனக்கு அடிமை -அநந்யார்ஹ சேஷ பூதரில் நீயும் ஒருவர் -)
திரு மந்த்ர அர்த்தமாக பூர்வர்கள் அனுசந்திப்பார்கள் ..

திருமந்திர பிரகரணம் முற்றிற்று –

———————————————————————–

திருமந்திர ப்ரதிபாதகமான பாசுரங்களைக் காட்டி நிகமிக்கிறார்-மூன்று எழுத்து என்று தொடங்கி –
இத் திருமந்த்ரத்தில் –
தெளிவுற்று வீவின்றி நின்றவர் -என்கிறபடியே பாஹ்ய குத்ருஷ்ட்டி மதங்களால் கலக்க ஒண்ணாத
தெளிவும் நிஷ்டையும் உடையவனை ஆதரிக்கும் தேசத்திலும் கூட
யத்ர அஷ்டாக்ஷர சம்சித்த மஹா பாகோ மஹீயதே -ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா -என்கிறபடியே
த்ருதீய பதார்த்த விரோதியான விஷயாந்தர ருசி ரூப வியாதியும் –
மத்யம பதார்த்த விரோதியான ஸ்வ ரஷனே ஸ்வ அந்வய ரூப துர் பிஷமும்
பிரதம பதார்த்த விரோதியான ஆத்ம அபஹார ஹேது அஹங்காராதி ரூப மஹாதஸ்கரனும் -ஆகிற
தோஷங்கள் நடையாடா என்றதாயிற்று –

(பிரணவம் -அவனுக்கு சொத்து அறிந்து திருட்டு போகும்
ந ம -பஞ்சம் இல்லை -துர் பிக்ஷம்
நாராயணாயா -ஐச்வர்யம் கைவல்யம் வியாதிகள் போகுமே )

ஆக –
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியில் வாழலாம் என்றதாயிற்று
(திரு நெடும் தாண்டகம் )

——————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பகவத் விஷயம் காலஷேபம் -192- இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–64/76/88/98/105/106/107/108–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 27, 2016

பெரிய ஜீயர் அருளிய உரை –
-அவதாரிகை –
அறுசமயச் செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து -என்று
பாஹ்ய மத நிரசன அர்த்தமாக -எம்பெருமானார் எழுந்து அருளின பிரகாரத்தை யனுசந்தித்தார்-கீழில் பாட்டில் .
அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற வாதிகளைப்-பார்த்து -இராமானுச முனி யாகிற யானை
உங்களை நாடிக் கொண்டு பூமியிலே-வந்து எதிர்ந்தது -உங்கள் வாழ்வு இனிப் போயிற்று -என்கிறார் -இதில் .

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64- –

வியாக்யானம்
எங்களுக்கு விதேயமாய் இருக்கும் இராமானுச முனி யாகிற யானை –
பண்ணார் பாடல் -திருவாய் மொழி – 10-7-5- -என்னும்படி ஆழ்வார் பண்ணிலே-உபகரித்து அருளின செவ்வித் தமிழான
திருவாய் மொழியால் விளைந்த ஆனந்தமானது –ஒழுகா நின்றுள்ள -மாதமாய்க் கொண்டு -விஸ்த்ருதமாக -வேத நூலோதுகின்றதுண்மை – என்னும்படி
யதாபூத வாதித்வத்தால் வந்த மெய்ப்பாட்டை உடைய விலஷன வேதமாகிற எழில்-தண்டையும் ஏந்திக் கொண்டு
–நீங்கள் தன்னரசாக நடத்துகிற பூமியிலே ஒருவருக்கும்-நேர் நிற்க ஒண்ணாதபடி -தள்ளிக் கொண்டு வந்து உங்கள் மேலே எதிர்ந்தது –
வாதிகளாய் உள்ளீர் -சிஷ்யர்களும் பிரசிஷ்யர்க்களுமாய் பல்கிப் பணைத்து இருந்த-உங்களுடைய சம்பத்து முடிந்ததே –
லோகம் பிழைத்ததே -என்று கருத்து .
ஏகாரம் ஈற்றசையாய் உங்கள் வாழ்வு முடிந்தது என்று தலைக் கட்டவுமாம் .
பண்டரு மாறன் பசும் தமிழ் -என்றதுக்கு பண்டே உள்ளதாய் -பெறுதற்கு அரிதாய் –இருந்துள்ள மாறன் பசும் தமிழ் -என்று பொருள் ஆனாலோ என்னில்
-அது ஒண்ணாது .பண்டு என்கிற சொல்லு பூர்வ கால வாசி இத்தனை அல்லது பூர்வ காலீன வஸ்து வாசி-யல்லாததினாலே.
பசுமை -செவ்வி / விள்ளுதல் -விரிதலாய் விஸ்ருதயைச் சொல்லுகிறது /மண்டுதல்-தள்ளுதல் -விரிதலுமாம்–

————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை –
அறுசமய செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து -என்று பாஹ்ய மத-நிரசன அர்த்தமாக எம்பெருமானார்
எழுந்து அருளின பிரகாரத்தை அனுசந்தித்தார் கீழ் –
அந்த ப்ரீத்தி-பிரகர்ஷத்தாலே பாஹ்ய குத்ர்ஷ்டிகள் ஆகிற வாதிகளைப் பார்த்து -ராமானுச முனியாகிற யானை –
வேதாந்தம் ஆகிற கொழும் தண்டத்தை கையிலே எடுத்துக் கொண்டு -உங்களை நிக்ரஹிக்கைக்காக-
இந்த பூமியிலே நாடிக் கொண்டு வந்தது-இனி உங்களுடைய வாழ்வு வேரோடு அற்றுப் போயிற்று என்கிறார் –

வியாக்யானம் –
எங்கள் இராமானுச முனி வேழம் –
எங்கள் இராமானுசன் -எம் இராமானுசன் -என்னை ஆள-வந்து இப்படியில் பிறந்தது -என்று பாட்டுத் தோறும் இப்படி அருளிச் செய்தது –
அவருடைய விக்ரக விஷய-பிரேம அதிசயம் காணும் –
எங்களுக்காக வவதரித்த எம்பெருமானாராகிற மத்த கஜம் -லோகத்தில் பிராக்ர்த்த கஜம் போலே –ஞான சந்கோசமாய் -இருக்கை அன்றிக்கே
-சர்வதா அபதே ப்ரவர்த்தான ஹீனரை நிரசிக்கைக்கும் -அவர்களுக்கு-உபதேசித்து சன் மார்க்கத்தில் நிறுத்துகைக்கும்
-அனுகூலரை ரஷிக்கைக்கும் -மனனம் பண்ணுக்கைக்கும் உடலான-ஞான விகாசத்தோடே இருக்கும் ஆனை –
இப்படி அப்ராக்ருதமான ஆனைக்கு உண்டான ஞானம் அதுக்குத் தக்கதாய்-இருக்கும் இறே
-கஜமாக உத்ப்ரேஷிக்கிறது -விபஷிகளை சித்ரவதம் பண்ணவும் -தாம் பரிக்கிரகித்தவர்களை-பட்டாபிஷேக யோக்யராம்படி செய்யவும் வல்லவர் ஆகையாலே
-பண்டரு மாறன் பசும் தமிழ் –
எழுத்து அசை சீர்-பந்தம் அடி தொடை நிரை நிறை ஓசை தளை இனம் யாப்பு பா துறை பண் இசை தாளம் முதலான செய் சொல்லும்
இதுக்கு உண்டாகையாலே -யாழினிசை வேதத்தியல் -என்று காநோ பலிஷிதங்களான -சகல லஷணங்களும்-
அனுசந்தாக்களுக்கு தெளிந்து -அனுபவிக்கும்படியாய் இருக்கிற –
அன்றிக்கே பண்டு அரு என்ற பதச் சேதமாகில்-
பண்டு என்கிற பதம் காலபரமே யானாலும் -கங்கா யாகோஷம் – என்கிற இடத்தில் கங்கா சப்தம் தீர வாசகம் ஆனால் போலே –
லஷணையாய் இச் சப்தம் காலீன வஸ்து வாசகம் என்று சொல்லலாம் இறே -அந்த பஷத்தில்
-பிரதித்வாபராந்தரத்திலும்-வியாச அவதாரம் பண்ணி -சம்ஸ்ர்க வேதங்களை சர்வேஸ்வரன் தானே வ்யவசிக்குமா போலே பிரதி கலி யுகத்திலும்
ஜ்ஞான யோகியாய் அவதரித்து த்ரமிட வேதங்களை சர்வேஸ்வரன் வெளி இட்டு போகிறான் என்று –
பிரம்ம பார்க்கவா-வ்ர்த்தபாத்மாதி புராணங்களிலே சூபிரசித்தமாக சொல்லுகையாலே -நித்தியமாய் -அ பௌருஷேயமாய் இருந்துள்ள-திருவாய் மொழி –
பாகவதர்கு ஒழிய -அந்யருக்கு வாக் மனச்சுக்களாலே ஸ்பரசிக்கவும் கூட அரிதான -என்றபடி –
மாறன் -நம் ஆழ்வாருக்கு பிரதம உபாத்தமான திரு நாமம் –
பசும் தமிழ் -அவராலே கட்டப்பட்டு -அசந்கலிதமான-சுத்த திராவிட பாஷையாய் விளங்குகிற திருவாய்மொழி –
மாறன் பணித்த தமிழ் மறை -என்றும் -ஈன்ற முதல் தாய் சடகோபன் -என்றும் -சொல்லுகிறபடியே-நம் ஆழ்வார் சம்பந்தியான திருவாய் மொழி என்றபடி –
ஆனந்தம் பாய் மதமாய் –
லஷ்மி நாதாக்ய சிந்தவ்-சடரிபுஜலத ப்ராப்ய காருண்ய நீரம் நா தாத்ரா வப்யஷி சத்த நுர குபதாம்போஜா சஷூர் ஜ்ஜ்ராப்யாம் –
கத்வாதாம்ய மு நாக்யாம் சரிதம நுய தீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் சம்பூர்ய ப்ரானிசச்யே ப்ரவஹதி நிதராம்-தேசிகேந்திர பிரமௌநை –என்கிறபடியே
-ஸ்ரீ ய பதி யாகிற கடலில் நின்றும் -ஆழ்வார் ஆகிற முகில் –
பெரும் கருணை யாகிற நீரை முகந்து -பெரிய முதலியார் ஆகிற குன்று தன்னிலே வர்ஷிக்க -அக் கருணை யானது
மணக்கால் நம்பி உய்யக்கொண்டார் -ஆகிய திரு வருவியாய் -பரம ஆசார்யரான ஆள வந்தார் -ஆகிற
ஆற்றிலே சென்று -எம்பெருமானார் ஆகிய பொய்கையை பூரித்து -பூர்வாச்சார்யர்கள் ஆகிற மடையாலே
தடையறப் பெருகி -சம்சாரி சேதனராகிற பயிரை நோக்கி -ரஷித்தது என்று சொல்லுகையாலே –
கவியமுதம் -என்றும் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலை -என்றும் ஸ்லாக்கிக்கும்படி-சர்வருக்கும்-அமுதமயம் ஆகையாலே
-ஆனந்தாவஹமான திருவாய் மொழியாலே விளைந்த ஆனந்த மானது –இவ்வளவாக பெருகி வாரா நின்றுள்ள -அம்ர்தமாய்க் கொண்டு
-விண்டிட –
எல்லா காலத்திலும்-எல்லா இடத்திலும் விஸ்த்ரமாய் இருக்க -விள்ளுதல்-விரிதலாய் -விஸ்த்ரியை சொல்லுகிறது –
மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்தி –
மெய்ம்மை -சத்யம் -அதாவது-வேத நூல் ஓதுகின்றது உண்மை -என்னும்படியான யதாபூதவாதித்வம் -இப்படிப்பட்ட
மெய்ப்பாட்டை உடைத்தாய் இருக்கையாலே சகல பிரமாண விலஷணமான வேதம் -நன்மை வை லஷண்யம் –
சத்யம் ஞானம் அநந்தம் பிரம்மம் -என்கிற பரத்வத்தை பிரகாசிக்குமதான வேதம் -என்றபடி –
பராவர தத்வா நியாதாவத்-வேதய தீதி வேத -என்று இறே இதுக்கு வுயுத்பத்தி இருப்பது –
மெய்ம்மை கொண்ட -என்ற விசேஷணத்துக்கு தாத்பர்யம்
ரஜ்ஜாவயம்சர்ப்ப -என்கிற ப்ரமத்துக்கு-இயம் ரஜ்ஜு ரேவ ந சர்ப்ப -என்கிற ஞானம் நிவர்த்தகமாம் போலே –
அநாதி அஞ்ஞான மூலங்களாய் ஸ்வ கபோல கல்பிதங்களாய்-பாஹ்ய குத்ர்ஷ்டி சமயங்களுக்கு -யதா பூதார்த்த வாதியான
வேதம் நிவர்த்தகமாய் இருக்கும் என்று -ஆகையாலே பிரதிவாதிகளுடைய நிரசனத்துக்கு உறுப்பான
-வேதமாகிற-அழகிய தண்டையும் ஏந்திக் கொண்டு
-கொழுமை -பெருமை -அன்றிக்கே -இங்கு சொன்னது சம்ஸ்க்ருத வேதமானாலும் –கீழ் அருளிச் செய்த த்ரமிட வேதத்தோடு கூடின வேதம் என்றுமாம்
-அப்படிப்பட்ட வேத ரூபமாய் -மகத்தாய் -அழகிதான –கதையை -கையிலே எடுத்துக் கொண்டு -என்றபடி –
ச காரத்தாலே கையிலே தண்டத்தை ஏந்திக் கொண்டு நின்ற-மாத்ரம் அன்றிக்கே – அத்தால் பர்யாப்தி பிறவாமல் -காலாலே மிதித்தும் –
கொம்பாலே குத்தியும் பிரதிவாதிகளை சித்ரவதம் பண்ணுகைக்கு வந்தபடியை அருளிச் செய்கிறார் –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -என்கிறபடி சர்வேஸ்வரன் -எப்போதும் திரு வாழியையும்-திருச் சங்கையும் ஏந்திக் கொண்டு இருக்கிறாப் போலே
-இவரும் வேத ரூபமான பெரும் தண்டை-ஏந்திக் கொண்டு இருந்தார் காணும் -குவலயத்தே மண்டி வந்து ஏன்றது –
நீங்கள் தன்னரசு நாடாக எண்ணி நடத்துகிற-ஆசேது ஹிமாசலமாக -வேங்கடாசல -யாதவாசல -சாரதாபீடாதி திவ்ய ஸ்தலங்களிலே எதிர்கொண்டு
பிரத்யவச்த்தானம்-பண்ணின வாதிகளை கட்டடங்க நிரசித்துக் கொண்டு வந்து -உங்கள் மேலே எதிர்த்தது -மண்டுதல்-தள்ளுதல்-யேன்றுதல்-எதிர்த்தல் –
வாதியர்காள்-
பாஹ்ய குத்ர்ஷ்டி சமய நிஷ்டராய் கொண்டு வாதியர்களாய் உள்ளீர் –
உங்கள் வாழ்வு அற்றதே
-சிஷ்யர்களும் பிரசிஷ்யர்க்களுமாய் பணைத்து இருந்த உங்களுடைய சம்பத்து முடிந்ததே –
சிஷ்ய பிரசிஷ்ய பர்யந்தமாகக் கொண்டு வர்த்திக்க வேணும் என்று நீங்கள் நினைத்து இருந்த உங்களுடைய-துர்மதங்கள் அடங்கலும் விநஷ்டமாய் போயின என்றபடி
-சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிராபகர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்னச் சதுர்மறை வாழ்ந்திடும் நாள் -என்று இவ்வர்த்தத்தை ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
கணதா பரி பாடிபி -என்கிற ஸ்லோகமும் -காதா தாதா கதானாம் -என்கிற ஸ்லோகமும் இவ் வர்த்தத்துக்கு பிரமாணமாக-அனுசந்தேயம் –

—————————————————————————————————————-

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை –
பகவத் வைலஷண்யம் காணாமையாலே தேவரீரை ஒழிய அறியேன் என்று இருக்கிறேன் அல்லேன் –
கண்ட காலத்திலும் நான் தேவரீரை ஒழிய அறியேன் என்றார் கீழ் .
இப்படி இவர் விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானார் மிகவும் உகந்து அருளி
இவர்க்கு எத்தைச் செய்வோம் என்னும் இடம் தோற்ற எழுந்து அருளி இருக்கிற படியைக் கண்டு
தம்முடைய ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அபேஷிக்கிறார் இதில் .

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

வியாக்யானம்
காதா சித்கம் அன்றிக்கே ஒருபடிப்பட்டு நின்ற அழகிய கீர்த்தியும்-
வார் புனல் அம் தண் அருவி -திருவாய் மொழி – 3-5 8- – என்னுமா போலே –
ஒழுகுடைய புனலும் நிறைந்து இருப்பதாய் -திருவேம்கடம் என்னும்-திரு நாமத்தை உடைத்தாய் -ச்ப்ருஹணீயமான திருமலையும் –
ஸ்ரீ வைகுண்டம் ஆகிற திரு நாடும் –ஆர்த்தர ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற இடம் என்று
விசேஜ்ஞ்ஞர் எல்லாம் கொண்டாடும் திருப்பாற்கடலும் –தேவரீருக்கு யாதோரளவு ஆனந்தத்தை விளைக்கும் –
தேவரீருடைய -சேர்த்தி அழகை உடைத்தாய் -போக்யமாய் -இருந்துள்ள-திருவடிகள் எனக்கும் அவ்வளவான ஆனந்தத்தை உண்டாக்கும் .
ஆன பின்பு தேவரீர் திருவடிகளை எனக்கு தந்து அருள வேணும் –
குலவுதல்-கொண்டாட்டம் / ஈதல் -கொடுத்தல் .
பாட்டு கேட்க்கும் இடமும் கூப்பீடு கேட்க்கும் இடமும் குதித்த இடமும் ஊட்டும் இடமும் வளைத்த இடமும் வகுத்த இடமான ஆச்சார்யர் திருவடிகளே –

—————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை –
கீழ் பாட்டில் பும்ஸா சித்த அபஹாரியான சர்வேஸ்வரன் -சமஸ்த திவ்ய பூஷணம் களாலும்-சமஸ்த திவ்ய ஆயுதங்களாலும் ஒப்புவித்துக் கொண்டு வந்து
-என் முன்னே நின்று-உன்னை நான் விடுகிறேன் அல்லேன்என்று பலாத்காரம் பண்ணினான் ஆகிலும்
-குணைர் தாஸ்யம் உபாகத -என்றால் போலே தேவரீர் உடைய கல்யாண-குணங்களிலே ஈடுபட்ட அடியேனை அக் குணங்கள் தானே
தேவரீருக்கு அனந்யார் ஹனாம் படி பண்ணிற்றன என்று-விண்ணப்பம் செய்ய கேட்டருளி –
இவருடைய பாவ பந்தம் எங்கனே -என்று மிகவும் உகந்து -இவருக்கு நாம் எத்தை செய்வோம்-என்னும் இடம் தோற்ற
-அவர் எழுந்து அருளி இருக்கிற படியைக் கடாஷித்து -தேவரீருக்கு அபிமதங்களாய் இருந்துள்ள –
தண்ணார் வேங்கடமும் -வைகுந்த மா நகரும் -திருப்பாற்கடலும் -யாதொரு ஆனந்தத்தை விளைக்குமோ-
அப்படியே -தேவரீருடைய பரம போக்யமான திருவடிகளும் அடியேனுக்கு அவ்வளவு ஆனந்தத்தை உண்டாக்கும் –
ஆகையாலே அவற்றைத் தந்தருள வேணும் என்று அபேஷித்து அருளுகிறார் -இப்பாட்டில்

வியாக்யானம் –
நின்ற வணகீர்த்தியும்
-ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி -என்கிறபடியே -காதாசித்கம் அன்றிக்கே -கால த்ரய வர்த்தியாய்
-அழகியதாய் -தெழில் அருவித் திரு வேங்கடம் -என்றும் -பரன் சென்று சேர்-திரு வேங்கட மா மலை -என்றும்
-வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -என்றும் –
வில்லார் மலி வேங்கட மா மலை -என்றும் -ஆழ்வார்கள் ஈடுபடுக்கைக்கு உடலான குணவத்தா ப்ரதையையும் –
நீள் புனலும் –
வார் புனல் தண அருவி வட திரு வேங்கடம் -என்றும் -குளிர் அருவி வேங்கடம் -என்றும் –
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேங்கடம் -என்றும் -சொல்லுகிறபடி அநவரதம் பாயா நின்று உள்ள- நீண்ட திரு அருவிகளும்
-நிறை வேங்கடப் பொற் குன்றமும் –
இவை இரண்டாலும் நிறைந்து இருப்பதாய்-தெள்ளியார் வணங்கும் மலை திரு வேங்கடம் -என்கிறபடியே –
திரு வேங்கடம் என்னும் திரு நாமத்தை உடைத்தாய் –எம்பெருமான் பொன் மலை -என்கிறபடியே அத்யந்த ச்ப்ர்ஹநீயமாய் –
பரன் சென்று சேர் திரு வேங்கடம் –என்கிறபடியே வகுத்த சேஷியான சர்வேஸ்வரன் உகந்து அருளின நிலமான திரு மலையும் –
வைகுந்த நாடும்
-யத்ர பூர்வே சாத்த்யாஸ் ஸந்தி தேவா -என்றும் -விஷ்ணோர் யத் பரமம் பதம் -என்றும் –
தேவாநாம் பூரயோத்வா -என்றும் -அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்த்தானம் விஷ்ணோர் மகாத்மன-என்றும் –
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ யா சார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்தயாத்மா பக்தைர் பாகவதைஸ் சஹா –என்றும் -சொல்லுகிறபடியே
-அந்தமில் பேர் இன்பத்து அடியாரான நித்ய சூரிகளுக்கு இருப்பிடமாய் –
சர்வேஸ்வரனுக்கு போக விபூதியான -நலமந்தம் இல்லாதோர் நாடாய்-ஸ்ரீ வைகுண்டம் என்னும்-பேரை உடைத்தான பரம பதமும்
-குலவிய பாற்கடலும்
-பாற்கடலில் பையத் துயின்ற பரமன் அடிபாடி –என்கிறபடி ஆஸ்ரிதரான தேவர்கள் உடைய கூப்பீடு கேட்பதாக சர்வேஸ்வரன் வந்து கண் வளர்ந்து
அருளுகிற இடம் என்று விசேஷஞ்ஜர் எல்லாரும் கொண்டாடும்படியாய் இருந்துள்ள திருப்பாற் கடலும் –
குலவுதல் -கொண்டாட்டம் -இப்படிப் பட்ட உகந்து அருளின நிலங்கள்
-உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் –
ஆநந்த நிலயே சேஷ தல்பே வேங்கட பூதரே -இத்யாதிகளிலும் -ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவே நிகேதன –
நாக பர்யங்க முத்சர்ஜ்ய ஹ்யாகதோ மதுராம்புரிம் -இத்யாதிகளிலும் கௌ ஷீதகீ பிராமணத்தில் பர்யங்க வித்தையிலும்-சொல்லுகிறபடியே –
திரு வேங்கடமுடையானுக்கும் திரு பாற்கடல் நாதனுக்கும் -வான் இளவரசு வைகுந்த-குட்டனுக்கும் -பர்யங்கமாய் இருக்கிற தேவரீருக்கு
எவ்வளவு ஆனந்தத்தை கொடுக்கும் –இப்படி அவ்வவ-ஸ்தலங்கள் தோறும் ஸ்ரீ ய பதியினுடைய திவ்ய மங்கள விக்ரகத்தாலே வந்த ஆனந்தத்தை அறியுமவர்
இவர் ஒருவருமே இறே -ரம்மணாவ நேத்ராய -என்றிவர் தம் அவதாரத்துக்கு பூர்வ அவதாரமான இளைய பெருமாளுக்கு
அந்த திவ்ய தம்பதிகளுக்கு உண்டான ஆனந்த்ததோடு ஒத்த ஆனந்தம் உண்டாய்த்து என்று சொன்னான் இறே-ரிஷியும் –
உன் இணை மலர்த் தாள் –
அநந்தம் பிரதமம் ரூபம் -இத்யாதிகளில் படியே -சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைய-சோதியிலே -வான் இள வரசு வைகுந்த குட்டன் விஷயமாக
-நிவாஸா சய்யாசன பாதுகாம் ஸூ கோ பதா ந-வர்ஷாதப வாரணாதிபி-சரீர பேதைஸ் தவ சேஷ தாங்கதைர்ய தோசிதம் சேஷ இ தீரி தேஜ நை -என்கிறபடியே
அநேக சேஷ வ்ர்த்திகளிலும் அந்வயித்து -சேஷன் -என்னும் திரு நாமத்தை உடையராய் –
பால்யாத் ப்ரப்ர்தி ஸூ ஷ் நிக்த -என்கிறபடியே அவதார தசையிலும் பால்யம் தொடங்கி பெருமாள் திருத் தொட்டிலோடு
இணைத் தொட்டில் இடாத போது பள்ளி கொண்டு அருளாதே -அவர் பக்கலிலே அதி வ்யாமுக்தராய் –
முஹூர்த்தம்-அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்ய விவேர்த்த்ர்ரௌ-என்று பிரியில் தரியாமையை விண்ணப்பம் செய்து மகா ஆரண்யமான
தண்ட காரண்யத்தில் சென்று -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பிரார்தன பூர்வகமாக வழு இலா அடிமைகள் செய்து
நம்பி மூத்த பிரானாக அவதரித்த தசையிலும் அவனை அனுவர்த்திதுக் கொண்டு போந்து -அங்குத்தைக்கு அந்தரங்கராய் –
இருந்துள்ள தேவரீர் உடைய பாவநத்வ போக்யத்வங்களுக்கு ஒன்றுக்கு ஓன்று போலியாய் -சேர்த்தி அழகை உடைத்தாய்
புஷ்பஹாச ஸூ குமாரமாய் பரம போக்யமாய் இருந்துள்ள திருவடிகள் -என் தனக்கும் அது -கீழ் சொன்னபடியே அந்தரங்கராய்
சர்வஜஞ்ராயிருக்கிற தேவரீருக்கு அவ்வவ விஷயங்களிலே எத்தனை ப்ரீதி உண்டோ –
அப்படியே இவ்வளவும் விமுகனாய்-அஞ்ஞா னாய்ப் போந்த அடியேனுக்கு ஸ்வ விஷயமாய் இருந்துள்ள அவ்வளவு ஆனந்தத்தை உண்டாக்கும்
-எம்பெருமானார் உடைய-ஆனந்தம் பிரதம பர்வ விஷயம் ஆகையாலே -அரையாறு பட்டு
-அமுதனார் உடைய ஆனந்தம் சரம பர்வ விஷயம் ஆகையாலே-கரை புரண்டு காணும் இருப்பது –
இராமானுச –
-எம்பெருமானாரே –
இவை ஈந்து அருளே
-எனக்கு புருஷார்த்தம் தேவரீர் உடைய-திருவடிகளே யான பின்பு -அவற்றை தேவரீர் தாமே பரகத ச்வீகாரமாக கொடுத்து அருள வேணும் ஈதல்-கொடுத்தல் –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -நின் செம்மா பாத பற்புத் தலை மேல் சேர்த்து ஒல்லை -கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -என்று பிரதம பர்வத்தில் நம் ஆழ்வாரும் இப்படியே அபேஷித்து அருளினார் இறே –
அங்கும் மூன்றை தவிர்த்து ஒன்றைக் கேட்டார் -த்யாஜ்ய அம்சத்தில் வாசி உண்டே –

———————————————————————————————————————

பெரிய ஜீயர் அருளிய உரை –
-அவதாரிகை –
எம்பெருமானார் உபகரித்த ஜ்ஞானத்தில் அந்வயம் இல்லாதாரை-கலி தோஷம் நலியும் என்றார் கீழே .
அந்த ஜ்ஞானத்தை வுபகரிக்கைக்காக அவர் வந்து அவதரித்த படியை யனுசந்தித்து –
எம்பெருமானார் ஆகிற சிம்ஹம் குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளை-நிரசிப்பதாக-லோகத்திலே வந்த பிரகாரத்தை சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணக் கடவேன் -என்கிறார் -இதில் –

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமைபோற்றுவனே – – 88- –

வியாக்யானம்
உழுவது -நடுவது -அறுப்பதாக செல்லுகிற ஆரவாரத்தால் மிக்க செந்நெற்கள் விளையா நின்றுள்ள
வயல்களை உடைய -திருக் குறையலூருக்கு நிர்வாஹகராய் –இரும் தமிழ் நூல் புலவராகையாலே -பெரிய திரு மொழி -1- 7-10 -சாஸ்திர ரூபமான
பிரபந்தங்களை செய்து அருளின வைபவத்தை வுடையரான -திரு மங்கை ஆழ்வார் உடைய –
ஒலி கெழு பாடல்-பெரிய திரு மொழி -11-4 10- -என்னும்படி மிக்க த்வனியை உடைத்தான-திருமொழியை தாரகமாகவும் -போக்யமாகவும் -அனுபவித்து –
தம்முடைய திரு உள்ளம் பூரித்து -அத்தாலே
பிரதி பஷ தர்சநத்தை சஹியாதபடி – – அதி பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற எம்பெருமானார் –
பாஹ்யரைப் போல் அன்றிக்கே -வேதங்களை அங்கீகரித்துக் கொண்டு நின்று –வாதங்களைப் பண்ணி -லோகத்தை நசிப்பிக்கிற குத்ருஷ்டிகள் ஆகிற புலிகள்
மிக்கதென்று -சாது மிருகங்களை நலியா நின்றுள்ள -துஷ்ட மிருகமான புலி மிக்க-காட்டிலே அவை தன்னை நிரசிக்க வற்றான தொரு சிம்ஹம் வந்து தலைப் படுமாலே –
சன்மத தூஷகரான குத்ருஷ்டிகள் வர்த்திக்கிற இந்த பூமியிலே-தன்மத தூஷகராய் வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன்
கலி -ஆரவாரம் மிடுக்குமாம் / அப்போது பூ சரத்தை சொல்லுகிறது / கழனி -வயல் /சீயம் -சிம்ஹம் / போற்றுதல் -புகழ்தல்–

———————————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் உபதேசித்த ஞானத்தில் அந்வயம் இல்லாதவரை கலி-பிரயுக்தமான தோஷம் ஆக்கிரமித்து நலியும் என்று சொல்லி –
இதில் -அந்த ஞானத்தை லோகத்தார் எல்லாருக்கும்-உபதேசிக்கைக்காக –
அவர் விண்ணின் தலை நின்றும் -மண்ணின் தலத்து உதித்தபடியை அனுசந்தித்து -செந்நெல்-விளையா நின்றுள்ள வயல்களை உடைய
திருக் குறையலூருக்கு ஸ்வாமியான திரு மங்கை ஆழ்வாருடைய-திவ்ய பிரபந்தமாகிற பெரிய திரு மொழியை அனுபவித்து களித்து –
பிரதி பஷிகளுடைய கந்தத்தையும் சகிக்க மாட்டாதே –பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற எம்பெருமானார்
-வேத பாஹ்யர் போல் அன்றிக்கே -வேதத்தை பிரமாணமாக-இசைந்து -அதுக்கு விபரீத அர்த்தங்களை சொல்லி
-லோகத்தை நசிப்பித்த குத்ருஷ்டிகள் ஆகிய புலிகள்-தன்னரசு நாடாக கொண்டு தடையற நடமாடா நின்ற
-அவர்களுடைய மதங்களை நிரசிக்கைக்காக அவர்கள்-நடையாடும் இந்த பூமியிலே வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன் என்கிறார் –

வியாக்யானம் –
கலி மிக்க செந்நெல் கழனி
-உழுவது நடுவது அறுப்பதாய் கொண்டு சர்வ காலத்திலும் செல்லுகிற-ஆரவாரத்தாலே மிக்க செந்நெல்லை உடைத்தான கழனி களுடைய
-கலி-ஆரவாரம் -அன்றிக்கே -கலி -என்று மிடுக்காய்-சாரவத்தானே பூமியிலே விளைந்த செந்நெல் என்னுதல் –
கழனி -வயல் -குறையல் கலை பெருமான் -இப்படிப் பட்ட-செந்நெல் களோடு கூடின வயல்களை உடைத்தாய் ஆகையாலே –
மன்னிய சீர் தேங்கும் குறையலூர் –என்கிறபடியே சகல சம்பத்துக்களையும் உடைத்தான திருக் குறையலூருக்கு நிர்வாஹராய்
-இரும் தமிழ் நூல்-புலவன் -என்கிறபடியே சாஸ்திர ரூபங்களான திவ்ய பிரபந்தங்களை செய்து அருளி -உபகரித்த மகா உபகாரரான
திரு மங்கை ஆழ்வார் உடைய–குறையல் பிரான் அடிக் கீழ் -என்று இப் பிரபந்தத்திலேயும் இவருடைய உபகாரத்தை அனுசந்தித்தார் இறே –
செய் -தவம்சத்தில் கிருதஜ்ஜராய் போருகிறவர் இவரும் அவருமே காணும்-
ஒலி மிக்க பாடல்
-இம்மாகா உபகாரத்தால் அருளிச் செய்யப்பட திரு மொழி -திரு குறும் தாண்டகம்-திரு நெடும் தாண்டகம் -தொடக்கமான திவ்ய பிரபந்தங்களை
-இன்பப் பாடல் -என்கிறபடியே அனுசந்திக்கப்-புக்கவர்களுக்கு -அர்த்த ரசத்தாலும் போக்யதையாலும் ஆனந்தம் மிகுதியாய் கரைபுரண்டு இருக்கையாலே
மிகுந்து -கலியனது ஒலி மாலை -என்கிற படியே பெரு மிடறு செய்து அனுசந்திக்க வேண்டுகையாலே-
மிக்க த்வனி யை உடைத்தான திவ்ய பிரபந்தங்கள்-மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூறுவதாக பண்ணி
அருளின திவ்ய பிரபந்தங்கள் என்றபடி
-ஒலி த்வனி -அந்த பிரபந்தங்களை தாரகமாகவும்-போஷகமாகவும் போக்யமாகவும் நினைத்துக் கொண்டு முற்றூட்டாக அனுபவித்து –
தன்னுள்ளம் தடித்து –
அந்த அனுபவ ஜனித ப்ரீதியாலே தம்முடைய திரு உள்ளம் பூரித்து -இவ் வனுபவத்தாலே காணும் பிரதி பஷ-நிரசனத்துக்கு தகுதியான மிடுக்கு
அவருக்கு உண்டானது -தடித்தல் -பூரிக்கை-அதனால்
வலி மிக்க சீயம் –
அந்த-பரி பூர்ண ஞானம் ஆகிற மிக்க பலத்தை உடையராய் –சிம்ஹம் போலே இருக்கிற இராமானுசன் -எம்பெருமானார் –
பிரதி பஷ தர்சனத்தை சகியாதே அவர்களை பக்னராய் பண்ணுமவர் ஆகையாலே -வலி மிக்க சீயம் -என்கிறார்
வலி -பலம் -சீயம் -சிம்ஹம் -மறை வாதியராம் -வேத அப்ராமான்ய வாதிகளான பௌத்தாதிகளை போல்
அன்றிக்கே -வேதத்தை பிரமாண மாக அங்கீ கரித்து வைத்து -அதுக்கு அபார்த்தங்களை சொல்லி -இவற்றைக் கொண்டு
துர்வாதம் பண்ணி லோகத்தார் எல்லாரையும் பிரமிக்க பண்ணி நசிப்பித்து கொண்டு போகிற குத்ர்ஷ்டிகள்
ஆகிற -புலிமிக்கதென்று -புலி கள் மிக்கது என்று -நிவாரகர் இல்லாமையாலே அவை தனிக்கோல் செலுத்தா நின்றன என்று –
இப்புவனத்தில் வந்தமை-சாது ம்ர்கங்ககளை நலியா நின்றுள்ள துஷ்ட ம்ர்கமான புலி மிக்க காட்டிலே
அவை தன்னை நிரசிக்க வற்றான தொரு சிம்ஹம் வந்து தலைப்படுமா போலே -சந்மத தூஷிகரான குத்ர்ஷ்டிகள்
வர்த்தித்து தனிக்கோல் செலுத்துக்கிற இந்த பூமியிலே தன்மத தூஷகராய் கொண்டு
-விண்ணின் தலை நின்று –வந்து அவதரித்த பிரகாரத்தை போற்றுவனே -ஸ்துதிக்க கடவேன் –
போற்றுதல் -புகழ்தல் -குரும் பிரகாச எத்தீ மான் –என்கிறபடியே அவர் தம்முடைய குண சேஷ்டிதங்களை புகழக் கடவேன் என்று அருளிச் செய்தார் ஆய்த்து –

————————————————————————————————————————————

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை –
இப்படி எம்பெருமானார் செய்த உபகாரத்தை பேசினவாறே-இவர் திரு உள்ளமானது –
நிருபாதிக பந்துவான ஈஸ்வரன் அநாதி காலம் ஸ்வர்க்க நரக கர்ப்பங்களிலே-தட்டித் திரிய விட்டு இருந்தது -கர்மத்தை கடாஷித்து அன்றோ –
பிரகிருதி சம்பந்தம் கிடக்கையாலே துர் வாசனை மேலிட்டு-விபரீதங்களிலே போகவும் யோக்யதை உண்டே –
இன்னும் ப்ராப்தி பர்யந்தம் ஆனால் இறே என்று தளர –எம்பெருமானார் தன்னை சரணம் என்றால் -அப்படி ஒன்றிலும் விட்டுக் கொடார்
ஆகையாலே ப்ராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டா -என்கிறார் .

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே – – -98 – –

வியாக்யானம் –
தம்மை உத்தரிப்பிக்கைக்காக வந்து அவதரித்த எம்பெருமானார் –தேவரே சரணம் -என்று ஓர் உக்தி மாதரம் பண்ணினால் –
-பிரகிருதி வச்யருக்கு-சப்தாதி போக விஷயங்களாலே இனிதாக தோற்றி இருக்கும் ஸ்வர்க்கத்திலே இட்டு வைப்பாரோ –
தம் திருவடிகளைப் பற்றின பின்பும் நரகத்திலே இட்டு வைத்து தபிப்பிப்பரோ –
அந்த ஸ்வர்க்க நரக அனுபவத்துக்கு ஈடான கர்மம் ஜென்மத்துக்கு உருப்பாகையாலே –
அவற்றை அநுசரித்து கொண்டு இருப்பதாய் -அநாதியாய் -வளைய வளைய வரா நின்றுள்ள-ஜன்மத்திலே நிறுத்துவரோ –
மேலுள்ள காலம் நம்மை நம்முடைய ருசி அநு குணமாக விடுவரோ –
ஆன பின்பு ப்ராப்தி நிமித்தமாக-நெஞ்சே சிதிலமாகாதே கொள் –
மேவுதல்-பொருந்துதல் -அதாவது ப்ராபித்தல் /
சோற்றுக்கு கரையாதே கொள் -என்றால் சோறு நிமித்தமாக கரையாதே கொள் -என்னுமா போலே –
/மேவுதற்கு நையல் -என்றது மேவுதல் நிமித்தமாக -என்றபடி /நடுதல்-ஸ்த்தாபித்தல்–

——————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை
-இப்படி எம்பெருமானார் தம்முடைய சர்வ உத்கர்ஷ்டமான அதிகாரத்திலே மூட்டின-உபகாரத்தை அனுசந்தித்து ஹ்ர்ஷ்டரானவாறே –
இவருடைய திரு உள்ளமானது -நீர் இப்படி சொன்னீரே யாகிலும் –
சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன் -அநாதி காலம் தொடங்கி -தத் தத் கர்ம அனுகுணமாக பலத்தை
கொடுப்பதாக சங்கல்பித்துக் கொண்டு இருக்கிறான் ஒருவன் ஆகையாலே
-இவ்வளவும் ஸ்வர்க்க நரக-கர்ப்பங்களிலே இடைவிடாது அடைவே தட்டித் திரிய விட்டு இருந்து -நம்முடைய கர்மத்தை-கடாஷித்து அன்றோ –
அக் கர்மங்களை உண்டாக கடவதான பிரகிருதி சம்பந்தம் நமக்கு இன்னும் கிடைக்கையாலே
துர்வாசனை மேலிட்டு திரும்பவும் நிக்ரஹத்துக்கு உடலான துஷ்கர்மங்களிலே அன்வயிக்கவும் -யோக்யதை-உண்டே
-ப்ராப்தி பர்யந்தம் ஆனால் இறே -நீர் இப்படி நிர்பரராய் சொல்லக் கூடுவது என்று தளரா நிற்க –
எம்பெருமானார் தம்மை சரணம் என்றால் அப்படி ஸ்வர்க்க நரகாதிகள் ஒன்றிலும் விட்டுக் கொடுக்கும்-ஸ்வபாவர் அல்லர் ஆகையாலே –
இனி பிராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டாம் என்கிறார் –

வியாக்யானம் –
மனமே –
இப்படி அதி சங்கை பண்ணா நிற்கிற நெஞ்சே –
எம் இராமானுசன் –
சாஷான் நாராயணோ தேவ க்ர்த்தவா மர்த்த்யமயீம் தநும் -மக்னா நுத்தரதே லோகன் காருண்யாஸ் சாஸ்திர பாணி நா –என்றும் –
பாபத்வாந்த ஷயாயச -ஸ்ரீ மான் ஆவிரபூத் பூமவ் ராமானுஜ திவாகர -என்றும் சொல்லுகிறபடியே
எங்களுடைய முன்னை வினை பின்னை வினை யார்த்தம் என்று மூன்று வகைப் பட்டு இருக்கிற வினைத் தொகை-அனைத்தும் நசிப்பித்து –
சம்சார கர்த்தத்தில் நின்றும் உத்தரிப்பிக்க வேணும் என்று தீஷித்துக் கொண்டு –இக்கொடு உலகத்தில் திருவவதரித்து அருளின எம்பெருமானார் –
சரணம் என்றால்-ராமானுஜச்ய சரணவ் சரணம் பிரபத்யே -என்றும் சரணமேமி ராமானுஜம் -என்றும் –
இராமானுசா உன் சரணே கதி -என்றும்
-மூலே நிவேச்ய மஹதாம் நிகமத்ருமாணாம் முஷ்ண ந ப்ரதாரக பயம்-
த் ர்த நைக தண்ட -ரங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ஸோ ராமானுஜஸ் சரணமஸ்து முநிஸ் ஸ்வயந்ர – என்றும்
ராமானுஜாய முநயே நம உக்தி மாதரம் காமாதுரோபிகுமதி கலயன்ன பீஷணம் -யாமாம நந்திய மிநாம்
பகவஜ் ஜாநாநாம் தாமேவவிந்தித கதிம் தமஸ பரஸ்தாத் – என்கிறபடியே-
தேவரீரே சரணம் -என்கிற ஒரு-உக்தி மாத்ரத்தை பண்ணினால் –
இனிய ஸ்வர்க்கத்தில் –
பிரகிருதி வச்யராய் இருப்பார்க்கு -சப்தாதி போக விஷயங்களாலே அத்யந்தம்-போக்யமாய் தோற்றுகிற ஸ்வர்க்கத்திலே -இனிமை -போக்யதை
-ஸ்வர்க்கமாவது -த்ரைவித்யாமாம்-சோம பர பூத பாபா -யஜ்ஞை ரிஷட் வாஸ்வர்காதிதம் ப்ரார்த்தயந்தே -தே புண்யமாசாத்யா ஸூ ரேந்த்ரலோகம்
அஸ் நந்தி திவ்யான் திவிதேவ போகான் –தேதம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புன்யே
மர்த்த்யலோகம் விசந்தி -என்கிறபடியே -நச்வரமாய் சோபாதிகமாய் இருப்பதொரு ஸூக விசேஷம்-இறே இப்படி பட்ட ஸ்வர்க்கத்தில்
–இடுமே –
இட்டு வைப்பாரோ –தந்தும் கேன சம்பின்னம் -இத்யாதிப்படியே அதுக்கு இதோபி விலஷனமாய் இருந்ததே ஆகிலும் –
முமுஷுக்கு நரக கல்பமாயும் -பிரதி கூலமாயும் இறே இருப்பது –
தேவேந்திர த்வாதி கம்பதம் ஏதேவைநிரயாஸ் ததாஸ் த்தா நஸ்ய பரமாந்தமான –ஷேத்ராணி மித்ராணி தனானி நாத புத்ராச ச தாரா
பஸவொக்ரஹாநித்வத் பாத பத்ம ப்ரவனாத்மாவர்த்தேர்ப்பவந்தி சர்வே பிரதி கூல ரூபா -என்னக் கடவது இறே
பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ -போர வைத்தாய் புறமே -நெறி காட்டி நீக்குதியோ –
அற்ப சராசரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –
என்று ப்ராக்ர்த்த ஸூகத்தை கட்டடங்க பிரதி கூலமாகவும் ஸ்வரூப நாசககமாகவும் நம் ஆழ்வார்-அனுசந்தித்து அருளினார் இறே –
இன்னும் நரகில் இட்டு சுடுமே
-உபாய உபேய பாவேன தத்வதஸ் சர்வே தேசிகை -ஸூ நிச்சிதான்க்ரி பத்மாய –என்கிறபடியே –
தன திருவடிகளையே உபாயம் உபேயம் என்று அத்யவசித்து -அனந்யார்ஹராய் போன பின்பு
கேட்ட உடனே அஞ்சும்படி -அதி துஸ் சகங்களான ரௌவராதி நரகங்களிலே விழ விட்டு தஹிப்பிப்பாரோ-
கர்ச்ச்ரென தேஹான் நிஷ்க்ராந்திம் யாம் யகிங்கர தர்சனம் -யாத நாதேக சம்பந்தம் யாம்யபாசைஸ் ச கர்ஷணம் –
உக்ர மார்க்க கதின்லேசம் யமச்ய புர தஸ்திதம்–தன்னி யோகேன தாயாதா யாதனாச்ச சகஸ்ரசா -ஸ்ருத்வாஸ்
ம்ர்த்வாச தூயேஹம் தத் ப்ரேவேச பயாகுல -என்றும்
-கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர்-கொடுமிறைக்கு அஞ்சி – என்றும் –
எண்ணிறந்த துன்பம் தரு நிரயம் பல -என்றும் சொல்லப்பட்ட நரகங்களிலே சென்று-துக்கப்ப்படும்படி உதாசீனராய் இருப்பாரோ -என்றபடி
அவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில் சுடுமே
-கர்ம பிரம்மோத் த்பவம் வித்தி -என்கிறபடி –
அந்த ஸ்வர்க்க நரகாதிகளுக்குஈடான புண்ய பாப் ரூப கர்மார்ஜனத்துக்கு -பிரம சப்த வாச்யமான சரீரம்-
ஹேதுவாய் இருக்கையாலே அத்தை அனுசரித்து கொண்டு இருப்பதாய்
-தொன் மாயப் பல் பிறவி –
என்கிறபடி -அநாதியாய் -ஏவம் சம்சர்த்தி சக்ரச்தே ப்ராம்ய மானே ஸ்வ கர்மபி -என்றும் -மாறி மாறி-பல பிறப்பும் பிறந்து -என்றும் சொல்லுகிறபடி
-சக்ரம் போல் சுழன்று வாரா நின்றுள்ள ஜன்ம பரம்பரைகளில்-நிறுத்துவாரோ -அவற்றில் அன்வயிக்கும்படி பிரவர்த்திப்பிப்பாரோ என்றபடி
-நடுதல் -ஸ்தாபித்தல் –
இனி நம்மை நம் வசத்தே விடுமே –
-எம்பெருமானார் திருவடிகளுக்கு நிழலும் அடிதாறும் போல் அத்யந்த-
பரதந்த்ரராய் போந்த நம்மை மேல் உள்ள காலம் எல்லாம் ஸ்வ தந்த்ரராக்கி -நம்முடைய ருசி அனுகுணமாக
ச்வைர சம்சாரிகளாய் போகும்படி விட்டு விடுவாரோ
-எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயித்து-
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஏதே -என்னும்படியான நிஷ்கர்ஷத்தைப் பெற்ற அடியோங்களை –
அப்ராப்தமானவை ஒன்றும் தட்டாதபடி பண்ணி அருளுவார் -என்று கருத்து-
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரம்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலி ந -என்றும்
மதன கதனைர் நக்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா -என்னக் கடவது இறே
-மேவுதற்கு –
அடியார் குழாம் களை உடன்-கூடுவது என்று கொலோ – என்றும் -ராமானுஜச்ய வசக பரிவர்த்தி ஷீய -என்றும் சொல்லுகிறபடியே -நம்மால்
பிரதி பாதிக்க படுகிற ப்ராப்தி நிமித்தமாக -நையல் -சிதிலமாகாதே கொள் -மேவுதல் -பொருந்துதல் -அதாவது ப்ராபித்தல் –
சோற்றுக்கு கரையாதே கொள் என்றால் -சோறு நிமித்தமாக கரையாதே கொள் என்னுமா போலே
மேவுதற்கு நையேல் என்றது –
மேவுதல் நிமித்தமாக நையல் வேண்டா -என்றபடி -ந புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -அவசியம் அனுபோக்தவ்யம் க்ர்தம் கர்ம ஸூ பா ஸூ பம் –
என்கிற சாஸ்த்ரத்தை உட் கொண்டு சர்வேஸ்வரன் சம்சாரத்தில் மூட்டும் ச்வாபவனாய் விட்டாப் போலே
எம்பெருமானாரும் தம் சாஸ்திர மரியாதையை உட் கொண்டு உதாசீனராய் இருப்பாரோ என்று அதி சங்கை
பண்ணின நெஞ்சைக் குறித்து -எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பும் -பிரபன்னராய் -சரம பர்வ நிஷ்டராய் இருக்கும்
நம்மை உபாசகரைப் போலே ப்ராப்ய அவசான பர்யந்தம் சம்சார வெக்காயம் தட்டும்படி காட்டிக் கொடார் -என்றது ஆய்த்து –
மனமே நையல் மேவுதற்கே –
என்று சேதன சமாதியால் அருளிச் செய்கிறார் -அசித்தை கூட திருத்தும் படி காணும்
இவர் உபதேசம் இருப்பது -நகலு பாகவதாய மவிஷயம்கச்சந்தி -பரிஹர மது ஸூ தன பிரபன்னான் பிறப்பு ரஹமன்ய நிர்னாம்
-த்யஜபட தூரதரென தானபாபான் -என்னக் கடவது இறே –
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே – என்று-
இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் திரு மழிசைப் பிரானும் அருளிச் செய்தார் இறே –

——————————————————————————————————————-
பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை
எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் பரம பதம் உபாதேயம் என்று அறுதி இட்டு-வஸ்தவ்யதேசம் அதுவே என்று அங்கே போக ஆசைப்படா நிற்க –
நீர் பரம பதத்தையும் சம்சாரத்தையும் சஹபடியா நின்றீர் –
உமக்கு வஸ்தவ்ய தேசமாக நீர் தாம் அறுதி இட்டு இருப்பது எது -என்ன-அருளிச் செய்கிறார் –

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 – –

வியாக்யானம் –
அழகிய திரைகளை வுடைத்தான திருப்பாற் கடலிலே –கடலோதம் காலலைப்ப கண் வளரும் -திருவந்தாதி – 16- என்கிறபடியே-
துடைகுத்த உறங்குவாரைப் போலே -அத்திரைகளானவை திருவடிகளை அநு கூலமாக அசைக்க-
கண் வளரா நிற்பானாய் – உறங்குவான் போல் -திருவாய்மொழி -5 4- 11- – யோகு செய்கிற
ஆச்சர்யத்தை உடையவனான சர்வேஸ்வரனுடைய குணத்தில் ஈடுபட்டு –ஜிதந்தே -என்று
திருவடிகளின் கீழே விழுந்திருந்த ஸ்வபாவத்துக்கு ஒருகாலும் சலனம் அற்று இருக்கிற
கலக்கமில்லா நல் தவ முனிவரும் -திருவாய் மொழி -8-3 10–
இது ஒரு ஞான வைபவமே-என்று இத்தையே பல காலும் ஸ்லாகித்துக் கொண்டு போருகையாலே -அவர்கள் நெஞ்சிலே
மேவப்பட்ட விலஷணமான ஜ்ஞானத்தை உடையவராய் -பரம வைதிகரானவர்கள்
ப்ராணாமாத்ய அநு வர்த்தங்களைக் பண்ணா நின்றுள்ள திருவடிகளை வுடையரான-எம்பெருமானாரை
நித்யாஞ்சலி புடாஹ்ருஷ்டா -பார மோஷ -என்கிறபடியே சதா அனுபவம் பண்ணா நின்று உள்ள-வைபவத்தை உடையவர்கள் –
அவ் அனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே உடம்பு இருந்த இடத்தில் இராதே
கிளர்ந்து கடல் இரைத்தால் போலே இரைத்துக் கொண்டு சசம்பிரம வியாபாரங்களை பண்ணும் இடம்-அவர்கள் அடியானான எனக்கு வஸ்த்வ்ய தேசம்
செழுமை -அழகு பெருமையுமாம் / பாற்கடல் பள்ளி கொள் மாயன் -என்றும் பாடம் சொல்லுவர்–

—————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை –
கீழே -எம்பெருமானார் தமக்கு பண்ணி அருளின உபகாரத்தை அனுசந்தித்து-மகா உதாரரான எம்பெருமானாரே -என்று அவரை சம்போதித்து-
தேவரீர் சுலபனான கிருஷ்ணனை-கரதலாமலகமாக பண்ணிக் கொடுத்தாலும் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரம பதத்தை கொடுத்தாலும் –
அவனுக்கு கிரீடாகந்துக ஸ்தாநீயமான இந்த லீலா விபூதியைக் கொடுத்தாலும் -தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரக-அனுபவம் ஒழிய
அவற்றில் ஒன்றும் எனக்கு வேண்டுவது இல்லை -ஆகையால் இவ் அனுபவம் எனக்கு எப்போதும்
நடக்கும்படி கிருபை பண்ணில் தரிப்பன் – இல்லை யாகில் ஜலாதுத்தர்த்த மத்ஸ்யம் போலே தரிக்க மாட்டேன் என்ன –அத்தைக் கேட்டவர்கள்
-ஜ நிம்ருதி துரித நிதவ் மே ஜகதி ஜிஹா சாந்த்ரஜாம் பிதா பவத -பவ நு ச ந பசி பரஸ்மின் நிரவதிகா-நந்த நிர்ப்ப ரெலிப்ச – என்கிறபடியே
லோகத்தார் எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் என்றும் -பரம பதம் உபாதேயம் என்றும் -அறுதி இட்டு அங்கே போக ஆசைப்படா நிற்க
-நீர் இவ்விரண்டையும் சஹ படித்து சொன்னீர் –இனி உமக்கு வஸ்தவ்ய தேசமாக அறுதி இட்டு இருப்பது என் என்று கேட்க –
திருப்பாற் கடலிலே-கண் வளர்ந்து அருளின சர்வேஸ்வரனுடைய குணங்களில் ஈடுபட்டு -கலக்கமில்லா நல் தவ முனிவராலே
விரும்பப்பட்ட விலஷண ஞானத்தை உடையரான -பரம வைதிகராலே – தொழுது முப்போதும் -என்கிறபடியே
அநவரதம் சேவிக்கப் படா நின்றுள்ள திருவடிகளை உடைய எம்பெருமானாரை -தேவும் மற்று அறியேன் –
என்று சதா அனுபவம் பண்ணிக் கொண்டு இருக்குமவர்கள் எழுது அருளி இருக்குமிடம் அவர்கள் அடியேனான
எனக்கு வஸ்தவ்ய தேசம் என்று கீழே தாம் சொன்ன ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –

வியாக்யானம் –
செழும் திரை பாற்கடல் கண் துயில் மாயன்
-செழும் என்றது -திரைக்கு விசேஷணம் ஆகவுமாம்-கடலுக்கு-விசேஷணம் ஆகவுமாம் –திரைக்கு விசேஷணம் ஆனபோது
-செழுமை -அழகியதாய் -பால் கிளருமா போலே-ஒன்றுக்கு ஒன்றாக திரண்டு வருகிற இவற்றினுடைய சமுதாய சோபையை சொன்னபடி –
கடலுக்கு-விசேஷணம் ஆன போது-செழுமை -பெருமையாய் -நளி நீர் கடலைப் படைத்து தன் தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -என்கிறபடி
-சர்வேஸ்வரனுக்கு இடங்கை வலங்கை கொண்டு கண் வளருகைக்கு-ஈடான பரப்பை உடைய கடல் என்றபடி –
அன்றிக்கே -செழுமை மாயவனுக்கு விசெஷணம் ஆகவுமாம் –இப்படிப் பட்ட திரு பாற் கடலிலே -கடலோதம் கால் அழைப்ப கண் வளரும் -என்கிறபடி
துடைகுத்த-உறங்குவாரைப் போலே -திரைகளானவை திருவடிகளை அனுகூலமாக அலைக்க – ஊஞ்சலிலே-கண் வளருமவனைப் போலே –
கண் வளரா நிற்பானாய் -உறங்குவான் போலே யோகு செய்கிற -ஆச்சர்யத்தை-உடையனான சர்வேஸ்வரன்
-ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -ஷீரார்ணவ நிகேதன -என்றும் -வெள்ளத்தரவில்-துயில் அமர்ந்த வித்தினை -என்றும் சொல்லுகிறபடி –
அநந்த அவதார கந்தமாய்க் கொண்டு திருப்பாற்-கடலிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன் -என்றபடி
-செழும் திரை பாற்கடல் பள்ளி கொள் மாயன் –என்றும் பாடம் சொல்லுவார்கள் –
திருவடிக் கீழ் விழுந்து இருப்பார் –
பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைந்து –என்கிறபடியே அப்படிப் பட்ட சர்வேஸ்வரனுடைய கல்யாண குணங்களை அனுபவித்து -அவற்றிலே
ஈடுபட்டு -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றபடி -அவனுடைய திருவடிகளின் கீழே நிழலும் அடி தாறும்
போலே பிரியாதே விழுந்து இருக்குமவர்களான – கலக்கமிலா நல் தவ முனிவராலே –நெஞ்சில் மேவும்-நல் ஞானி -இது ஒரு ஞான வைபவமே என்று
இத்தையே பலகாலும் அவர்கள் ஸ்லாகித்துக் கொண்டு –போருகையாலே அவர்கள் நெஞ்சிலே வைக்கப்பட்ட ஞான வைலஷண்யத்தை உடையவராய் –
மேவுதல் -விரும்புதல் –
நல் வேதியர் –
பரம வைதிகர் ஆனவர்கள் -தொழும் திருப் பாதன் -லஷ்மணாய முநயே தஸ்மை நமஸ் குர்மஹே-என்றும்
–தஸ்மை ராமானுஜார்யாய நம பரம யோகினே -என்றும் – பிரமாணம் லஷ்மண முநி ப்ரதி க்ர்ஹ்ணா து மாமாம் –என்றும்
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்றும் சொல்லுகிறபடியே பிரணமாத்ய அனுவர்த்தனந்களை-பண்ணா நின்றுள்ள திருவடிகளை உடையனான
-இராமானுசனை
-எம்பெருமானாரை -தொழும் பெரியோர் –நித்யாஞ்சலி புடா ஹ்ர்ஷ்டா -என்றும் -புணர்த்தகையனராய் – என்றும் -கைகள் கூப்பிச் சொல்லீர் -என்றும் –
சொல்லுகிறபடியே சர்வ காலமும் சேவித்துக் கொண்டு இரா நின்றுள்ள பெருமையை உடையவர்கள் –
எழுந் திரைத்தாடுமிடம்
-அவ அனுபவ ஜநிதமான ஹர்ஷம் உந் மஸ்தகமாய் -அத்தாலேஉடம்பு இருந்த இடத்தில் இராதே கிளர்ந்து கடல் இரைத்தால் போல் இரைத்துக் கொண்டு –
சசம்ப்ரம வியாபாரங்களை பண்ணுமிடம்-
அடியேனுக்கு இருப்பிடமே –
தன்னை உற்றாட் செய்யும் தன்மையினோர்-மன்னு தாமரைத் தாள் தன்னை உற்றாட் செய்ய என்னை உற்றான் -என்கிறபடியே
அவர்களுக்கு-சரமாவதி தாசனான அடியேனுக்கு வஸ்தவ்ய தேசம்
-சிரீதரன் தொல் புகழ் பாடி கும்பிடு-நட்டமிட்டாடி கோகுகட்டுண்டு உழலுகிற -பிரதம பர்வ நிஷ்டரைப் போலே -இச் சரம பர்வதத்திலும்
எழுந்து இரைத்து ஆடுமவர்கள் இருக்குமிடம் அடியேனுக்கு இருப்பிடம் என்கிறார் –
யா வைகுண்ட கதா ஸூ தாரச புஜாம் ரோசேத நோ சேதசே-என்றும் -வாஸ ஸ்தானம் ததிஹ க்ர்தி-நா பாதி வைகுண்ட கல்பம் –என்றும்
-வஸ்தவ்யம் ஆசார்ய சந்நிதியும் -என்னக் கடவது இறே-

—————————————————————————————————–

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை –
இப்படி இவர் தமக்கு -தம் பக்கல் உண்டான அதி மாத்திர ப்ராவண்யத்தை கண்டு –
எம்பெருமானார் -இவர் திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள –அத்தைக் கண்டு உகந்து அருளிச்-செய்கிறார் .

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் -அவை தன்னொடும் வந்
திருப்பிடம் மாய னிராமானுசன் மனத்துன்றவன் வந்
திருப்பிடம் என் தனி தயத்துள்ளே தனக்கின்புறவே – – 106- –

வியாக்யானம்-
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் – ஆச்சர்ய பூதனான சர்வேச்வரனுக்கு வச்தவ்ய தேசம்-
ஸ்ரீ வைகுண்டமும் -வடக்குத் திரு மலையும் -திரு மால் இரும் சோலை என்று பிரசித்தமான -திருமலை யாகிற –ஸ்த்தலமுமாக-
வைகுந்தம் கோயில் கொண்ட –திருவாய் மொழி – 8-6 5- வேங்கடம் கோயில் கொண்டு -திருவாய்-மொழி – 2-1 7-
அழகர் தம் கோயில் -திருவாய்மொழி – -2 9-3 – என்று- சொல்லா நிற்பவர்கள்-பகவத் தத்வத்தை சாஷாத் கரித்து இருக்கிற விலஷணரானவர்கள் —
அப்படி பட்டு இருந்துள்ள சர்வேஸ்வரன் -அழகிய பாற்கடலோடும் -பெரிய திருமொழி 5-2 10– என்கிறபடியே
அந்த ஸ்த்தலங்கள் தன்னோடே கூட வந்து எழுந்து அருளி இருக்கிற ஸ்த்தலம்-என்னுடைய ஹ்ருதயத்துக்குள்ளே –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை –
திருவடிகளை ஆஸ்ரயித்த மகாத்மாக்கள் -அவர் தம்முடைய குண அனுபவ ஜனித
ஹர்ஷ பிரகர்ஷத்தாலே களித்து சசம்ப்ர்ம ந்ர்த்தம் பண்ணும் இடம் தமக்கு வாசஸ்தானம் என்று கீழ்ப்-பாட்டில் அருளிச் செய்து –
இப்பாட்டிலே -வேத -தத் உப பிரமனாதிகளாலே பரிசீலனத்தை பண்ணி இருக்குமவர்கள்
சர்வேஸ்வரனுக்கு உகந்து அருளின நிலங்களாக சொல்லுகிற -ஸ்ரீ வைகுண்டம் வட திருமலை தென் திருமலை
தொடக்கமான திவ்ய தேசங்களோடு கூட எம்பெருமானாருடைய திரு உள்ளத்திலே அவன் மிக விரும்பி-வர்த்திக்குமா போலே –
இப்போது -அந்த திவ்ய தேசங்களோடும் – அந்ததிவ்ய தேசங்களுக்கு நிர்வாஹனான-
சர்வேச்வரனுடனும் கூட வந்து எம்பெருமானார் தாமும் நிரதிசய சுகமாக எழுது அருளி இருக்கிற ஸ்தலம்-
தம்முடைய திரு உள்ளம் என்று அனுசந்தித்து பிரீதர் ஆகிறார் –

வியாக்யானம்-
வைகுந்தம் –
அவ்யாஹதளம் கல்பம் வஸ்து லஷ்மி தரம் விது -என்கிறபடியே சமஸ்த சங்கல்ப்பங்களும்
மாறாதே செல்லுக்கைக்கு உடலான தேசமாய் -நலமந்த மில்லதோர் நாடு -என்று ஸ்லாக்கிக்கப் படுமதான-ஸ்ரீ வைகுண்டமும் –
அன்றிக்கே -தர்ம பூத ஞானத்துக்கு திரோதானம் இல்லாத தேசம் என்னுதல் –
வேங்கடம் –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பு -என்றும்
பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை -என்றும் சொல்லுகிறபடியே -இரண்டு பிரஜையை பெற்ற
மாதாவானவள் இருவருக்கும் முலை கொடுக்க பாங்காக நடுவே கிடைக்குமா போலே –நித்ய சூரிகளுக்கும்-நித்ய சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கைக்காக –
அவன் நின்று அருளின திரு மலையும் மாலிரும் சோலை என்னும் பொருப்பிடம் -புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில் -என்றும் –
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை -என்றும் -கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க-வளர் ஒளி மால் சோலை மழை -என்றும் சொல்லுகிறபடியே
-திருமால் இரும் சோலை என்னும்-பேரை உடைத்தாய் -ஆழ்வார் பிராரத்து அருளின படியே உகந்து வர்திக்கைக்கு ஏகாந்த ஸ்தலம்
என்று அவன் விருப்பத்தோடு வர்த்திக்கிற தென் திருமலை ஆகிய ஸ்தலமும் –
பொருப்பு
-பர்வதம்-இருப்பிடம் -ஆவாஸ ஸ்தானம் -மாயனுக்கு -யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா -என்றும்
நமே விதுஸ் ஸூ ர கணா-என்றும் -பிரபவன்ன மகர்ஷய -என்றும் -யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் –
என்றும் சொல்லுகிற படியே அசிந்த்ய ஸ்வபாவனாய்-ததை ஷத பஹூச்யாம் பிரஜாயேயேதி-என்றும்
தான் ஒரு உருவாய் தனி வித்தாய் -என்றும் -சொல்லுகிறபடியே சர்வ காரண பூதனாய் -ஸ்வரூப ரூப
குண விபூதிகளால் ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனுக்கு
-நல்லோர் –
மகாத்மா ந சதுமாம் பார்த்த-தைவீம் ப்ரகர்தி மாஸ்திதா -பஜன்த்ய நன்ய மனசொஜ்ஞாத்வா பூதாதி மவ்யயம் -என்கிறபடியே பரா வரதத்வயா
தாத்ம்ய விதக்ரே ஸ்ரரான மக ரிஷிகள் -என்பர் -சொல்லுவார்கள்
-வைகுண்டேது பார் லோகே ஸ்ரீ யா சார்த்தம்-ஜகத்பதி -ஆச்தே விஷ்ணுர சிந்த்யா த்மா பக்தைர் பாகவதஸ் சஹா -இத்யாதியாலே பிரதிபாதிப்பர் -என்றபடி
அன்றிக்கே -நல்லோர் -மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்வார்கள் என்றுமாம் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் -திரு மால் வைகுந்தம் என்றும் –
தெண்ணல் அருவி மணி பொன் முத்து-அலைக்கும் திரு வேம்கடத்தான் -என்றும் –
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில் வளர் இளம் பொழில் சூழ்-மால் இரும் சோலை -என்றும்
-விண் தோய் சிகரத் திருவேங்கடம் -என்றும் -சீராரும் மால் இரும் சோலை -என்றும் –
வேங்கடத்து மாயோன் -என்றும் -விரை திரை நீர் வேங்கடம் -என்றும் -மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தான் -என்றும் –
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் -என்றும் இத்யாதிகளாலே அருளிச் செய்வார்கள் -என்றபடி –
அவை தன்னொடும் –
அந்த வைகுண்டம் வேங்கடம் மால் இரும் சோலை தொடக்கமான திவ்ய தேசங்களோடு கூட-வந்து –
அழகிய பாற்கடலோடும் -என்கிறபடியே அந்த திவ்ய தேசங்களில் -அவரைப் பெறுகைக்கும்
ஜகத் ரஷணம் பண்ணுகைக்கும் -உறுப்பாகையாலே அந்த கிருதக்ஜ்ஜையாலும் தனக்கு பிராப்யரான
இவர் தம்முடைய ப்ரீதி விஷயங்கள் ஆகையாலும் -அவற்றை பிரிய மாட்டாதே -அந்த திவ்ய தேசங்களோடு கூடே தானே வந்து –
மாயன் –
சுவையன் என்னும்படி நிரதிசய போக்யனான சர்வேஸ்வரனுக்கு – ஜ்ஞாநீத்வாத் மைவமே மதம் -என்று
அவன் தானே சொல்லும்படி -தாரகராய் இருக்குமவர் -அன்றிக்கே -ஏன் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்கிறபடி
சர்வேஸ்வரன் தானே வந்து உபகரித்து -படாதன பட்டு -உபதேசித்தாலும் திருந்தாத ப்ராக்ருத ஜனங்களை எல்லாம்
அனாயாசேன திருத்திப் பணி கொண்ட ஆச்சர்ய பூதர் -என்னுதல் -இராமானுசன் -இப்படிப் பட்ட எம்பெருமானாருடைய –
மனத்து –
திரு உள்ளத்திலே வாசஸ்தானமாக எழுந்து அருளி இருந்தார் -என்றபடி –
இன்று-
அடியேனை-அந்தரங்கராக கைக் கொண்ட இப்போது -என் தன் இதயத்து உள்ளே – தம்முடைய திரு உள்ளம் போல் பக்தி ரச
சந்துஷிதமாய் -நிச்ச்சலமாய் – விஷய விரக்தமாய் -இருக்கை அன்றிக்கே -கஷ்கமாய் -சஞ்சலமாய் -விஷய சங்கியான –என்னுடைய ஹ்ருதயத்திலே
-தனக்கு இன்புறவே –
அந்த எம்பெருமானார் தமக்கு -யமைவைஷ வர்நுந்தேதேலப்ய – என்னும்படி நிரவதிக பிரீதி யோடு-எழுந்து அருளி இருக்கும் இடம் –
காமினி உடம்பில் அழுக்கை காமுகன் உகக்குமா போலே என் பக்கல்-
வ்யாமோஹத்தாலே என் ஹ்ர்தயத்தை விட்டு மற்று ஒன்றை விரும்பார் என்றபடி -உச்சி உள்ளே நிற்கும் –
என்னும் படி சர்வேஸ்வரன் ஆழ்வார் திரு முடிக்கு அவ்வருகு போக்கு இல்லை என்று அங்கே தானே-
நின்றால் போலே எம்பெருமானாரும் இவர் திரு உள்ளத்துக்கு அவ்வருகே போக்கு ஓன்று இல்லை என்று திரு உள்ளமாய் –
அங்கே தான் ஸ்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருந்தார் காணும் –

——————————————————————————————-

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை
இப்படிதம் பக்கலிலே வ்யாமோஹத்தை பண்ணா நிற்கிற-எம்பெருமானார் உடைய திரு முகத்தைப் பார்த்து –
தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு -என்று-தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம் செய்கிறார் –

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107- –

வியாக்யானம் –
எத்தனையேனும் தண்ணியனான என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து –அது தன்னைப் பெறாப் பேறாக நினைத்து –
ஆநந்த நிர்பரராய் -எழுந்து அருளி இருக்கிற சௌசீல்யத்தை உடையவரே –
இப்படி இருக்கிற தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது-ஒரு கார்யம் உண்டு –அது ஏது என்னில் –
ஐயார் கண்டமடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த –என்னுமா போலே -திரு வாய் மொழி -2 9-3 – –
தோற்புரையே போமதன்றியிலே அஸ்த்திகதமாய் இன்று நலிய கடவ-வியாதிகளுக்கு பாஜனமான சரீரங்கள் தோறும் -ஜநிப்பது மரிப்பதாய் –
அசந்க்யேய துக்கங்களை அனுபவித்துமுடியிலும்-சர்வ காலத்திலும் -சர்வ தேசத்திலும் -தேவரீருக்கு அனந்யார்ஹ்ராய் இருக்கும்
அவர்களுக்கே மாறுபாடுருவின ச்நேஹத்தை உடையேனாய் இருக்கும்படியாக செய்து-என்னை அவர்கள் திருவடிகளிலே அடிமையாம்படி பண்ணி யருள வேணும் .
இதுவே அடியேனுக்கு புருஷார்த்தம் -என்று கருத்து .
இன்பு -சுகம்
சீலமாவது -பெரியவன் தண்ணியன் உடன் புரையறக் கலக்கும் ஸ்வபாவம்
என்பு -எலும்பு
துன்பு -துக்கம் –

—————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை
கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்து நிரதிசய ப்ரீதி யோடு கூட
நித்ய வாசம் பண்ணா நின்றார் -என்று தம் அளவிலே அவர் பண்ணின விஷயீ காரத்தை அனுசந்தித்து – இதிலே
அப்படி பட்ட வியாமோஹத்தையும் நிரவதிக சௌசீல்யத்தையும் உடையவரே என்று சம்போதித்து –
அஸ்திகதமாய் நின்று நலிய கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரங்கள் தோறும் ஜநிப்பது மரிப்பதாய் கொண்டு –
அசந்க்யேயமான துக்கங்களை அனுபவித்து உரு மாய்ந்து முடியிலும் -சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்
தேவரீருக்கு அனந்யார்ஹராய் இருக்குமவர்கள் பக்கலிலே அதி வ்யாமுக்தனாய் -அவர்களுக்கு க்ரய விக்ரய அர்ஹனாய்
கொண்டு அடிமைப் படும் படி அடியேனைப் பண்ணி அருள வேண்டும் என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம்-செய்கிறார் –

வியாக்யானம்
-இன்புற்ற சீலத்து இராமானுசா –
திரு வேம்கட முடையானுக்கும் திரு குறும்குடி நம்பிக்கும்-திரு இலச்சினையும் -ஸ்ரீ பாஷ்யதையும் பிரசாதித்த ஆசார்யராகவும் –
செல்லப் பிள்ளைக்கு பிதாவாயுமாய் இருக்கிற-தேவரீருடைய மதிக்கையும் -அத்யந்த பாபிஷ்டனான என்னுடைய தண்மையையும் பாராதே -என்னை
தேவரீருக்கு அவ்வருவாக எண்ணி -என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து -அது தன்னையே பெறா பேறாக நினைத்து –
ஆனந்த நிர்பரராய் எழுந்து அருளி இருக்கிற சௌசீல் யத்தை உடைய எம்பெருமானாரே
-இன்பு -ஸூ -கம்
சீலமாவது பெரியவன் தண்ணியரோடு புரை யறப் பரிமாறும் ஸ்வாபம் -இப்போதாக காணும் இவருடைய
சீலம் அமுதனாருக்கு வெளியாகத் தொடங்கிற்று –
சொல்லுவது ஓன்று உண்டு
-சர்வஞ்ஞாரான தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு –
நத்வே வாஹம் -என்று தொடங்கி- கர்ம ஞான பக்திகளை பரக்க உபதேசித்து கொண்டு போந்து -சர்வ குஹ்ய தமம்
பூய ஸ்ருணுமே பரமம் வச -என்று உபதேசிக்கும் போது கீதச்சர்யன் அருளிச் செய்தால் போலே இவரும் –
இராமானுசா இது என் விண்ணப்பமே -என்கிறபடியே இவ்வளவும் தம்முடைய அபிநிவேசம் எல்லாம் விண்ணப்பம் செய்து-
இப்பாட்டிலே தம்முடைய அபேஷிதத்தை நிஷ்கரிஷித்து அருளிச் செய்கிறார் –
-அங்கு சேஷி உடைய உக்தி –இங்கு சேஷ பூதனுடைய அபேஷிதம் -ஒரு பிரயோஜனம் உண்டு என்றீர் அது என் என்ன
-என்புற்ற நோயுடல் தோறும்-பிறந்து இறந்து எண்ணரிய துன்புற்று –
-நோய் -வியாதி -அதாகிறது -ஆத்யாத்மிகாதி துக்கங்கள் -அந்த நோயானது-
அந்தர்பஹிந்திரிய வியாபார ரூப ஸ்வ க்ரத கர்ம பலம் ஆகையாலே தோற்புரையே போம் அது அன்றிக்கே –
அஸ்திகதமாய் கொண்டு இருக்கையாலும் ஆத்மா நாசகம் ஆகையாலும் -என்புற்ற -என்று விசேஷிக்கிறார் –
என்பு -எலும்பு -உறுகை -அத்தைப் பற்றி நிற்கை -உடல் தோறும் -அப்படி அஸ்திகதங்களாய் கொண்டு நலியக்
கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரம் தோறும் -துர்வார துரித மூலம் துஸ்தர துக்காநாம் பந்த நீ ரந்தரம்வபு –என்னக் கடவது இறே –
அன்றிக்கே – நோயெல்லாம் பெய்ததோர் ஆக்கை -என்கிறபடியே அந்த வியாதி
தானே உருக் கொண்டு இருக்கிற -தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சரீரங்கள் என்று என்னுதல் –
ஜன்ம பரம்பரைகள் தோறும் -என்றபடி-பிறந்து இறந்து என்ற இது மற்ற அவஸ்த தாந்தரங்களுக்கும் உப லஷணம் –
இறப்பு -நாசம் -பிறந்து இறந்து எண்ணற்ற துன்புற்று வீயினும்
-அவ்வவ ஜன்மங்களிலே ஜநிப்பது-மரிப்பது தொடக்கமான அவஸ்தா சப்தகத்திலும் விரலை மடக்கி ஓன்று இரண்டு என்று எண்ணப் புக்கால்
அது கால தத்வம் உள்ள அளவும் எண்ணினாலும் எண்ணித் தலைக் கட்ட அரிதான துக்கங்களை ஒன்றும்
பிறிகதிர் படாதபடி அனுபவித்து முடியிலும் -போற்றலும் சீலத்து இராமானுச -என்கிறபடியே தேவரீர் உடைய
சீல குணத்தை அளவிட்டு சொல்லினும் -இஸ் சரீர அனுபந்தியான துக்கத்தை அளவிட்டு சொல்ல
ஒண்ணாது என்கிறார் காணும் -துன்பு -துக்கம்
-என்றும் -எல்லா காலத்திலும் -எவ்விடத்தும் -எல்லாஇடத்திலும் -உன் தொண்டர் கட்கே
-பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இராதே மோஷ-பிரதான தீஷிதராய் அன்றோ -இவ்வளவாக திருத்தி என்னுடைய
ஹிருதயத்திலே புகுந்து நித்ய-வாசம் பண்ணா நிற்கிற தேவரீருக்கு அனந்யார்ஹா சேஷமாய் இருக்கும் அவர்களுக்கே –
அவதாரணத்தாலே -அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகிறார் -உனக்கே நாம் ஆட செய்வோம் —
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே — ஆறேனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் – என்றும்
தமேவசாத்யம் புருஷம் பிரபத்யே -என்றும் பிரதம பர்வத்தில் சொல்லுகிறபடியே –
குருரேவ பரம் பிரம்ம -என்றும் -உபாய உபேயே பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்றும்
தேவு மற்று அறியேன் -என்றும் தீதில் சரணா கதி தந்த தன் இறைவன் தாளே அரணாக மன்னுமது –
என்றும் சரம பர்வத்தில் சொல்லுகிறபடியே சொல்லுவித்தார் -இறே
-அன்புற்று இருக்கும் படி –
-நிரவதிக-பிரேம யுக்தனாய் இருக்கும்படி -அன்பு -ச்நேஹம் –
என்னை ஆக்கி –
-தேவரீருக்கு கிருபா விஷய பூதன் ஆகும் படி-என்னைப் பண்ணி –
அங்கு ஆள்படுத்தே –
பவதீயர் திருவடிகளில் விஷயமான எல்லா அடிமைகளிலும் அன்வயித்து-க்ர்த்தார்த்தனாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார்
-ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் நீங்காது ஏத்த-அருள் செய் எனக்கே என்று இப்படியே ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே –

—————————————————————————————————————

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை –
நிகமத்தில்
இப்ப்ரபந்த ஆரம்பத்திலே
-இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ -1 – என்ற ப்ராப்யம்-தமக்கு யாவதாத்மபாவியாம்படி கை புகுருகையும் –
அந்த ப்ராப்ய ருசி ரூப பக்தி பௌஷ்கல்யமே தமக்கு அபேஷிதமாகையாலே –
தத் உபய சித்யர்த்தமாக ஸ்ரீ ஆகையாலே –
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி-100 –
என்கிறபடியே சர்வாத்மாக்களுக்கும் என்றும் ஒக்க சார்வாய் -சம்பத் ப்ரதையான-பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம்-என்கிறார் .

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

வியாக்யானம் –
நெஞ்சே -பக்தி தத்வமானது நிரவசேஷமாக -நம் அளவிலே குடி கொண்டது என்னும்படி
சம்ருத்தமாய் விஸ்ருதையான கீர்த்தியை உடைய ரான எம்பெருமானார் உடைய-திருவடிகள் ஆகிற செவ்விப் பூ –
மயிர் கழுவிப் பூ சூட விருப்பாரைப் போலே எப்போதோ என்று-ஆசைப் பட்டு இருக்கிற நம் தலை மேலே நித்ய வாசம் பண்ணும்படியாக –
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கம் -திரு வாய் மொழி -7 2-1- -என்கிறபடியே
ஜல சம்ருதியாலே அழகிய கால்கள் உகளா நின்றுள்ள -வயல்களை உடைத்தாய் –
தர்சநீயமான கோயிலையே தமக்கு நிரூபகமாக உடையரான பெரிய பெருமாளுடைய
அழகிய திரு மார்விலே -இறையும் அகலகில்லேன் -திரு வாய் மொழி -6 10-10 – என்று நித்ய வாசம்
பண்ணா நிற்பாளாய்–ஸ்லாக்கியமான தாமரைப் பூவை பிறப்பிடமாக வுடையாளாய் –நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை வுடையாளான
ஸ்ரீ ரங்க நாச்சியாரை ஆஸ்ரயிப்போம் ..
போற்றுதல் -வணங்குதல் புகழ் தலுமாம்
அடியில் பூ மன்னு மாது – 1-என்றார் –இங்கே பங்கய மா மலர் பாவை -108- என்றார்
அங்கே பொருந்திய – – என்றார் –இங்கு -அணியாகமன்னும் — – என்றார்
அங்கு -இராமானுசன் உன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -1- – என்றார் – இங்கு -தலை மிசையே இராமானுசனடிப் பூ மன்ன – 108- என்றார் .
அங்கு நெஞ்சே – 1- என்று திரு உள்ளத்தையும் கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் –
இங்கு –நெஞ்சே – 108- என்று திரு உள்ளத்தோடு கூட அனுசந்தித்து தலைக் கட்டினார் .
இத்தால்
ப்ராப்ய ருசி வ்ருத்தியும்–ப்ராப்ய சித்தியும் ஆகிற –ஸ்வரூப அநு ரூப சம்பத் சித்திக்கடி –
சகல ஆத்மாக்களுக்கும் -தத் தத் அதிகார அநு குணமாக அபேஷித்த சம்பத் விசேஷங்களை-
ஸ்வ கடாஷ விசேஷங்களாலே உண்டாக்கி யருளும் –பெரிய பிராட்டியார் என்றும் –ப்ராப்யம் தான் ஆசார்ய சரணாரவிந்தம் -என்றும் –
அத்ரபரத்ர சாபி நித்யம் -ஸ்தோத்ர ரத்னம் – 2- என்கிறபடியே-யாவதாத்மம் விச்லேஷம் அற்று இருக்கை என்றும் –
இதுக்கு அதிகாரிகளும் இந்த ப்ராப்யத்தில் சஹ்ருதயமான ப்ராவண்யம் உடையவர்கள் என்றும் சொல்லிற்றாயிற்று –

——————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
-ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ர முநயே விததே நம
யச்மர்திஸ் சர்வ ஸித்தீ நாமந்தராய நிவர்ரணே –
அவதாரிகை
-நிகமத்தில் -கீழ் இரண்டு பாட்டிலும் எம்பெருமானார் தம்மை நிர்ஹேதுகமாக-அபிமானித்து
தம்முடைய திரு உள்ளத்திலே எழுந்து அருளி இருந்து நித்ய வாசம் பண்ணுகிற-படியையும் –
அநந்தரம் தமக்கு ததீய பர்யந்தமாக ப்ரேமம் பிறந்து -அவர்கள் விஷயத்தில் அசேஷ சேஷ-வ்ர்த்திகளும் பண்ணிக் கொண்டு போரும்படி
என்னை கடாஷித்து அருள வேணும் என்று தம்முடைய-அபிமத்தை அருளிச் செய்து –
இப்பாட்டிலே -எம்பெருமானார் திருவடிகள் ஆகிற செவ்விப்பூவை-நம்முடைய தலை மேலே கலம்பகன் மாலை அலங்கரிப்பாரைப் போலே அலங்கரித்து
ஸ்தாவர-பிரதிஷ்டையாக நிறுத்தி அருளினார் ஆகையாலே -அந்த பரிக்ரஹா அதிசயத்தை கொண்டு திவ்ய தம்பதிகளான
ஸ்ரீ -ஸ்ரீயபதிகளை மங்களா சாசனம் பண்ணுவோம் என்று பக்தி தத்வம் எல்லாம் தன்னளவிலே-குடி கொண்டது என்னும்படி
அத்ய அபி வர்த்தமான தம்முடைய திரு உள்ளத்தோடு கூடி-பலத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வியாக்யானம் -நெஞ்சே –
இப் பிரபந்த ஆதியிலே தமக்கு உசாத் துணையாக தம்முடைய மனசைக் கூட்டிக் கொண்டு –
எம்பெருமானார் உடைய திரு நாமத்தை சொல்லுவோம் வா என்று -உத்யோகித்தபடியே செய்து –
அத்தாலே தமக்கு பலித்த அம்சத்தை -இருவர் கூடி ஒரு கார்யத்தை பண்ண ஒருப்பட்டு –
அது தலைக்கட்டினவாறே அதிலே ஒருவன் தனக்கு தோழனான இரண்டாம் அவனுக்கு அந்த செய்தியை சொல்லுமா போலே
இவரும் தமக்கு சகாவான திரு உள்ளத்தை சம்போதித்து சொல்லுகிறார் –
-அடியிலே நெஞ்சு என்னும் திரு உள்ளத்தைக்-கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் ஆகையாலே -இங்கே நெஞ்சே என்று தம் திரு உள்ளதோடு கூடி
அனுபவித்து தலை கட்டுகிறார் –
பத்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து நெஞ்சே –
-பக்தி சப்த வாச்யம் எல்லாம்-ஏக ரூபமாய் கொண்டு உன்னளவிலே சேர்ந்து குடி கொண்டு இருந்தது என்னும் படி சம்ர்த்தமாய்-இருக்கிற நெஞ்சே
-போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -உனதடிப் போதில் ஒண் சீராம்
தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்பால் -என்று இவர் தாமே தம்முடைய திரு உள்ளம்
பக்த பரிதம் என்னும் இடத்தை கீழே அருளிச் செய்தார் இறே –
அன்றிக்கே -பக்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து -என்கிற இத்தை எம்பருமானார் திருவடிகளுக்கு-விசேஷணம் ஆக்கவுமாம்-
-பக்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து
-சஹ்யத்தில் ஜலம் எல்லாம்-கீழே குதித்து ஒரு மடுவாகத் தங்கினால் போலே -என்னுடைய பக்தி ரசம் எல்லாம் பரம பக்தி ரூபமாய்க் கொண்டு
பரி பக்குவமாய் படிந்து -எம்பெருமானார் திருவடிகளிலே தங்கிற்று -என்னும் படி தழைத்து இருக்கிற –
பொங்கிய கீர்த்தி
–ஏய்ந்த பெரும் கீர்த்தி -என்கிறபடியே பரம பதத்தின் அளவும் வளர்ந்து கொண்டு ஓங்கி இருக்கிற-கீர்த்தியை உடையரான
-இராமானுசன் –
எம்பெருமானாருடைய –
உபக்ரமத்திலே -பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன் -என்கிறார் ஆகையாலே -இங்கு பொங்கிய கீர்த்தி-இராமானுசன் -என்கிறார்
-அடிப்பூ–
கீழ் சொன்ன தழைப் பதோடு கூடி இருக்கிற எம்பெருமானாருடைய-திருவடித் தாமரைகள் –
அடியிலே சரணாரவிந்தம் -என்கிறார் ஆகையாலே -இங்கே அடிப்பூ என்கிறார் –
மன்னவே
-யாவதாத்மபாவி ஸூபிரதிஷ்டமாய் இருக்கையாலே
–அம் கயல் பாய் வயல் தென்னரங்கன்-அணி யாகம் மன்னும் -செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் -என்கிறபடியே உபய காவேரி களினுடையவும்
ஜல சம்ர்த்தியாலே வளர்ந்த மத்ச்யங்கள் உகளா நின்றுள்ள -கேதாரங்களாலே சூழப்பட்டு -அத்யந்த
தர்சநீயமான -அரங்கத்துக்கு நிர்வாஹனாய் -அத்தையே நிரூபகமாக உடையரான -பெரிய பெருமாளையும் –
அவர் தம்முடைய அழகிய திரு மார்பிலே அலங்கார பூதையாய் -இறையும் அகலகில்லேன் -என்றும்
அப்ரமேயம் ஹிதத் தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே பிரபையும் ப்ரபாவனையும் போலே –
அப்ர்தக் சித்தையாய்-ஸ்வரூப நிரூபகையாய் -கொண்டு நித்ய வாசம் பண்ணுமவளாய் —
உபக்ரமத்திலே -பொருந்திய மார்பன் -என்றார் ஆகையாலே -இங்கே மன்னும் -என்கிறார் –
அம் -அழகு கயல்-மத்ஸ்யம் -பாய்தல்-சலித்தல் வயல்-கழனி அணி -அலங்காரம் -ஆகம்-மார்பு
மன்னுதல் -பொருந்துதல்
-பங்கய மா மலர் பாவையை
-தாமரை மலரிலே பெரிய பிராட்டியார் அவதரிக்கையாலே
அத்தை கடாஷித்து அதற்கு ஒரு மகத்வத்தை சொல்லுகிறார் – அப்படிப்பட்ட தாமரைப்பூவை பிறப்பிடமாகவும்
நிரூபகமாவும் உடையவளாய் -பால்ய யவன மத்யச்தையான ஸ்ரீ ரெங்க நாயகியாரையும் -அலர்மேல் மங்கை
என்னக் கடவது இறே –
பாவை -ஸ்திரீ -அடியிலே பூ மன்னு மாது என்றார் ஆகையாலே இங்கு-பங்கய மாமலர் பாவையை -என்கிறார்
-போற்றுதும் -இப்படி இருந்துள்ள திவ்ய தம்பதிகளை –மங்களா சாசனம் பண்ணுவோம் -போற்றுதல்-புகழ்தல்
-ஆசார்யன் சிஷ்யனை திருத்துவது –சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு -என்கிறபடியே –
பகவத் விஷயத்திலே யாவதாத்மா பாவியாக-மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு போருகை -இறே
-உகந்து அருளின நிலங்களிலே-ஆதர அதிசயமும் -மங்களா சாசனமும் சதாசார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக்-கொண்டு போர்க் கடவன்
-என்று ஸ்ரீ வசன பூஷணத்திலே பிள்ளையும் அருளிச் செய்தார் இறே –
ஆக இத்தாலே -எம்பெருமானார் தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே பரகத ஸ்வீகார பாத்ரனான-பின்பு -அதற்கு பலமாக
-இப்படி மங்களா சாசன பரராய் இருந்தோம் என்று -தாம் பெற்ற பேற்றை
தம் திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்து -இப்பிரபந்தத்தை தலை கட்டி அருளினார் ஆய்த்து –
திருப்பல்லாண்டு -ஆரம்பித்து -போற்றுதும் -மங்களா சாசனத்தில் நிகமித்து அருளிச் செயல்கள் உள்ளனவே —

—————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம் –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -191- இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-1/2/7/16/18/19/20/25/31/44–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 27, 2016

ஸ்ரீ யபதி அவதாரங்கள் -ஆழ்வார்கள் அவதாரங்கள் -ஆச்சார்யர்கள் -அவதாரங்கள் –
ஒரு சேர -ஸ்ரீ பகவத் ராமானுஜர் – ஸ்ரீ ஆதி சேஷ -அடையார் கமலத்து -பஞ்ச திவ்ய ஆயுதங்கள் சக்தி உடன் -கழியும் கெடும் கண்டு கொண்மின் –
செய்ய திருவாதிரை -ஆதி கேசவ பெருமாள் அனுக்ரகம்
அனந்தம் பிரதம ரூபம் -இளைய பெருமாள் -பல பத்ரன் -ராமானுஜர் —
பகுமுகம் கைங்கர்யம் -கிரந்த நிர்மாணம் -திருக் கோயில்கள் கைங்கர்யம் -அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே –
பெரிய கோயில் நம்பி -திருவரங்கத்து அமுதனார் -பங்குனி ஹஸ்தம் திருவரங்கம் -ரெங்கார்ய ஸ்வாமி திருக் குமாரர்
சதுரா சதுரக்ஷரீ -ராமானுஜர் -பிரபன்ன காயத்ரி –
சப்தாவரணம் -ராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே நம்பெருமாள் கேட்டு அருள -திருச் செவி சாதிக்க வாத்யத்தையும் நிறுத்தி –நிதானமாக செவி சாய்த்து அருளி-
திருவேங்கடமுடையான் -தனியாக 22 நாள் அத்யயன உத்சவம் அனந்தாழ்வான் விண்ணப்பம் படி -தண்ணீர் அமுது திருத்தும் உத்சவம் 23- தாதா கூட்டு –
உய்வதற்கு ஒரே வழி உடையவர் திருவடிகளே -எம்பெருமானார் திருவடிகளே சரணம் –
பகவத் பவிஷயம் பகவானுக்கு பிடித்த விஷயம்
-திருப்பல்லாண்டு -கண்ணி நுண் சிறுத்த தாம்பு -ஆச்சார்ய அபிமானம் -பக்தாம்ருதம் -ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி –
-அவன் ப்ரீதி அடைவது கண்டு நாமும் உகக்க-இந்த நான்கும் அனுபவிக்கிறோம் –

——————————————————————————-

வேத பிரான் பட்டர் அருளிய முதல் தனியன்-

முன்னை வினை அகல மூங்கில் குடி அமுதன்
பொன் அம் கழல் போது இரண்டும் என் உடைய
சென்னிக்கு அணியாக சேர்த்தினேன் தென் புலத்தார்க்கு-
என்னுக்கு கட வுடையேன் யான்….

பெருமாள் -ஆழ்வார்கள் -ராமானுஜர் -அமுதனார் -நாம் -திருவடிகள் -தாங்கும் – பரம்பரை -விஸ்வம் பரா -பாதுகை பெருமை போலே
அரங்க மா நகர் உளானே -நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் -நமன் தமர் தலைகள் மீதே -நாவலிட்டு
உழி தருகின்றோம் ( திருமாலை -1 – )என்றும்
அரங்கம் என்று அழைப்பராகில் பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் ஒழிந்து ஒழியும் அன்றே ( திருமாலை -13 – )என்றும்
அரங்கத்து அமுதனார் என்றால் சொல்ல வேண்டாமே
ராமானுஜர் பத்து மடங்கு பெருமாள் இடம் ஸ்ரீ பரத ஆழ்வான் கொடுத்தால் போலே -செல்வம் முற்றும் திருத்தி -மாதவனுக்கு ஆள் ஆக்கினார்
-கைகேயியும் கூட திருந்தி பெருமாள் மேலே காதல் மிக்கு இருக்க -பெருமாள் ராஜ்ஜியம் வண்ணான் குறை உண்டே

—————————————-

நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது என்று நண்ணினார் பால்
சயம் தரு கீர்த்தி இராமானுசமுனி தாள் இணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத் தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை யந்தாதி யோத விசை நெஞ்சமே –

நல்ல நெஞ்சே -தொழுது எழு -நீயும் நானும் நேர் நிற்கில் – நெஞ்சைக் கூட்டிக் கொள்ள வேண்டுமே -மன ஏவ காரணம் பந்த மோக்ஷம் –
இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் –

——————————————————————————————-

அமுதனார் அருளி-செய்த தனியன்-அபியுக்தர் அருளி செய்த-தனியன்-என்றும் சொல்வர்

சொல்லின் தொகை கொண்டு உனதடிப்போதுக்கு தொண்டு செய்யும்
நல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என் தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அரு சமய
வெல்லும் பரம இராமானுச இது என் விண்ணப்பமே –

நாமம் எல்லாம் -சங்கல்பித்து -மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று சகஸ்ர நாமங்கள் போலே
இவர் ராமானுஜர் திரு நாமங்கள் பலவற்றுக்கும் -சொல்லி இருப்பார்
சதா சொல்லும் ராமானுஜர் -அல்லும் பகலும் -சாமர்த்திய திரு நாமம் -நெறி முறைப்படுத்தி சமுதாயம் முழுவதுக்கும் –
மா முனிகள் ஆஞ்ஜை திருக் குருகூரில் –
ஆறு சமய செடி அதனை அறுத்து -சங்கர பாஸ்கர –நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன -சஞ்சீவினீம் -சிம்ஹாசனத்தில் ஸ்தாபித்து -அருளினார் –

——————————————————————————

பெரிய ஜீயர் அருளி செய்த உரையின் அவதாரிகை –

சகல சாஸ்திர சந்க்ரஹமான திரு மந்த்ரத்தின் உடைய தாத்பர்யமாய் —பகவத் ஆகஸ்மிக க்ருபா லப்த பரிசுத்த ஜ்ஞானரான –
ஆழ்வார்களுடைய திவ்ய பிரபந்த சாரார்தமாய் —பரம காருணிகரான நம் ஆழ்வார் உடைய – பரி பூர்ண கடாஷ பாத்ர பூதரான-
ஸ்ரீ மதுரகவிகள் உடைய–உக்த்யனுஷ்டங்களாலே ப்ரகடிதமாய் –ஆழ்வார் தம்மாலே நாத முனிகளுக்கு அருளி செய்யப் பட்டதாய் –
–அவர் திருவடிகளை ஆஸ்ரயித்த யோக்ய விஷயங்களுக்கு உபதேசித்து அருள —அவர்கள் தாங்களும் அப்படியே உபதேசிக்கையாலே –
-உபதேச பரம்பரா ப்ராப்தமாய்–அகில சேதனருக்கும் ஸ்வரூப உபாய புருஷார்த்த -யாதாத்ம்ய ரூபேண அவஸ்ய அபேஷிதமாய்–
பரம ரகஸ்யமாய் இருந்துள்ள -சரம பர்வ நிஷ்ட பிரகாரத்தை-
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்னும் இத்தையே -இவற்றுக்கே முன்புள்ள விசேஷணங்கள் –
-எம்பெருமானார்–கேவல கிருபையாலே தம்மை ஆழ்வான் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பித்து—தந் முகேன உபதேசித்து அருள கேட்டு –
—அவ்வர்த்தங்களை யதா தர்சனம் பண்ணி —அனவரதம் எம்பெருமானார் திருவடிகளை சேவித்துக் கொண்டு —போரா நின்றுள்ள பிள்ளை அமுதனார்–

அவருடைய திவ்ய குணங்களை தம்முடைய பிரேமதுக்கு போக்கு வீடாக பேசி-அனுபவிக்கும் படியான தசை தமக்கு விளைகையாலும்–
இவ்வர்த்த ஞானம் அப்பொழுதே –சேதனர்க்கு சூக்ரஹமாம் படி பண்ண வேணும் என்கிற பரம கிருபையாலும்–
தாம் எம்பெருமானாருடைய திவ்ய குணங்களை -பிரேம அநு குணமாக பேசுகிற பாசுரங்களாலே –
—தத் பிரபாவத்தை எல்லார்க்கும் பிரகாசிப்பியா நின்று கொண்டு-
–முன்பு ஆழ்வார் திருவடிகளுக்கு அனந்யார்ஹமான ஸ்ரீ மதுர கவிகள்–ஸ்வ நிஷ்டா கதன ரூபேணவும் –
-பர உபதேச ரூபேணவும் – உஜ்ஜீவன அர்த்தத்தை–லோகத்துக்கு வெளி இட்டு அருளினால் போலே-
-தாமும் ஸ்வ நிஷ்ட கதன ரூபத்தாலும் -பர உபதேசத்தாலும் – அவரைப் போலே சங்கரஹேன பத்துப் பாட்டாக அன்றிக்கே- பரக்கக் கொண்டு
-ஆசார்ய அபிமான நிஷ்டர்க்கு ஜ்ஞாதவ்யங்களை எல்லாம் – இப்ப்ரபந்த முகேன அருளி செய்கிறார் –

எம்பெருமானார் திருவடிகளில் ப்ரேமம் உடையவர்களுக்கு சாவித்திரி போலே இது நித்ய அனுசந்தேய விஷயமாக வேணும் -என்று ஆயிற்று
-பாட்டு தோறும் திரு நாமத்தை வைத்து நூற்று எட்டு பாட்டாக அருளி செய்தது -ஆகையால்
இத்தை பிரபன்ன சாவித்திரி என்று ஆயிற்று நம்முதலிகள் அருளி செய்தது-

பத்துப் பாட்டாக அன்றிக்கே- பரக்கக் கொண்டு-ஓன்று பத்தாக்கி பிராட்டி நடத்துமா போலே –

—————————————————————————————————–

பெரிய ஜீயர் அருளி செய்த உரை-

முதல் பாசுரம்-
தம் திரு உள்ளத்தை குறித்து -எம்பெருமானார் உடைய திருவடிகளை நாம் பொருந்தி-
வாழும் படியாக அவருடைய திரு நாமங்களை சொல்லுவோம் வா -என்கிறார்

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –

பூ மன்னு மாது
மாது பொருந்திய மார்பன்
மார்பன் புகழ் மலிந்த பா –புகழ் -கல்யாண குணங்கள்
பா மன்னு மாறன்
மாறனடி பணிந்து உய்ந்தவன் –
உய்ந்தவன் -பல்கலையோர்-தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்-
விராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ –
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே-

பத்மேஸ்த்திதாம்-ஸ்ரீசூ -என்கிறபடியே தாமரைப் பூவை இருப்பிடமாக வுடைய பெரிய பிராட்டியார்-
இந்த போக்யதையைக் கண்ட பின்பு அதை யுபேஷித்து-இறையும் அகலகில்லேன் – திருவாய் மொழி -6 10-10 – -என்று
நித்ய வாசம் பண்ணும் திரு மார்பை வுடையவனுடைய கல்யாண குணங்களால் சம்ருத்தமாய்-இருந்துள்ள திரு வாய் மொழியிலே –
கவியமுதம் நுகர்ச்சி யுறுமோ முழுதும் -திருவாய் மொழி -8-10 5- -என்னும்படி திரு உள்ளத்தில்-
ஊற்றத்தை உடையரான ஆழ்வார் உடைய திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தவராய் –
அநேக சாஸ்த்ரங்களை அதிகரிக்க செய்தேயும்
-தத்வ ஹித புருஷார்த்த நிர்ணயம் பண்ண-அறியாதே ஒன்றிலும் ஒரு நிலை அற்று இருக்கும் அவர்கள் –
அவற்றின் உடைய யாதாம்ய வேத நத்தாலே ஸூ ப்ரதிஷ்டிதராம்படியாக வந்து அவதரித்த-
எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை -இதுவே ப்ராப்யம் -என்று அறிந்த நாம்-
பொருந்தி வாழும்படியாக நெஞ்சே அவருடைய திரு நாமங்களை பேசுவோம்-

தாம் மன்ன என்றது தாங்களே வந்து ஆஸ்ரயிக்கும் படி என்றுமாம்-
நாம் -என்றது அநாதி காலம் இதர விஷயங்களின் கால் கடையில் துவண்ட நாம் என்னவுமாம்
மன்னுதல் -பொருந்த்தமும் நிலைப்பாடும் –

—————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

பிள்ளை அமுதனார் -தமக்கு ஆசார்ய பிரசாதத்தாலே -லப்தமாய் –
மந்திர ரத்ன கண்ட த்வயார்த்த யாதாத்ம்ய ஜ்ஞான ரூபமாய் –
பரம ரகஸ்யமாய் இருந்துள்ள -அர்த்த விசேஷங்களை -ஏகஸ் ஸ்வா து ந புஞ் ஜீத –
என்கிறபடியே கிண்ணத்தில் இழிவார்க்கு -துணை தேட்டமாமாப் போலே –
எம்பெருமானருடைய கல்யாண குண சாகரத்திலே -இழிவதுக்கு துணைத் தேட்டமாய் –
உபய விபூதியிலும் ஆராய்ந்தால் –நித்ய விபூதியில் உள்ள நித்ய சூரிகளும் முக்தரும் -சதா பஸ்யந்தி -என்கிறபடியே –
பரத்வத்தை முற்றூட்டாக அனுபவித்து -சாம கானம் பண்ணிக் கொண்டு களித்து –
நோபஜன ஸ்மரன் நித சரீரம் -என்கிறபடியே -லீலா விபூதியிலே -கண் வையாதே-இருந்தார்கள் ஆகையாலும் –
லீலா விபூதியில் உள்ள சம்சாரி ஜனங்கள் ப்ராக்ர்தத்வேன அஜ்ஞ்ஞர் ஆகையாலே –
நந்தத்த்யுதித ஆதித்ய நந்தன் த்யச்தமி தேரவவ் -என்றும்
உண்டியே உடையே உகந்தோடும் இம் மண்டலம் -என்றும்
சொல்லுகிறபடியே உண்டு உடுத்து -புறமே புறமே யாடி -என்கிறபடி
லீலா விபூதியிலே -ஸௌ ரி சிந்தா விமுகராய் -விஷயாந்தரந்களிலே மண்டி இருக்கையாலும் –
எம்பெருமானார் சம்பந்தம் உடைய ஜ்ஞாநாதிகர் எல்லாரும் -பாலே போல் சீர் -என்கிறபடியே
பரம போக்யமான அவருடைய கல்யாண குணங்களை -அனுபவித்து -காலாழும் நெஞ்சழியும் –
இத்யாதிப் படியே அவ் அனுபவத்தில் ஆழம்கால் பட்டு -குமிழ் நீருண்டு நின்றார்கள் ஆகையாலும் –
இந் நால்வரும் துணை யாகாது ஒழிகை யாலே –
தம்முடைய சுக துக்கங்களுக்கு எப்போதும் பொதுவாய் இருக்கிற தம் மனசே துணையாக வேண்டும் என்று
திரு உள்ளம் பற்றி -அது தன்னையே சம்போதித்து சொல்லுகிறார் .

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் –
பத்மேஸ்திதாம் -என்றும் -மலர் மேல் மங்கை என்றும் -அரவிந்த வாசிநீ-என்றும் சொல்லுகிறபடியே –
ஸௌ கந்த ஸௌ குமார்யங்களாலே -அத்யந்த போக்யமான தாமரைப் பூவின்-பரிமளம் தானே ஒரு வடிவு கொண்டாப் போலே –
அதிலே அவதரித்த பெரிய பிராட்டியார்-ஸ்வயம் பத்மினி -என்கிற பேரை உடையளாய் -அவ்வீட்டின் போக்யதையாலே அத்தை விட மாட்டாதே –
இருப்பிடமாக அதிலே இருந்து -அதுவே நிரூபகமாக சொல்லப் பட்ட பின்பு –
சாஷான் மன்மத மன்மதமான -நாராயணன் தனக்கு பத்நியாக பரிணயித்து பரிஷ்வங்கம் பண்ணவே –
அவன் திரு மார்பை அனுபவித்து -அந்த போக்யதையிலே ஈடு பட்டு நின்ற பின்பு -தாமரைப் பூவின்-போக்யதையும் அருவருத்து –
ஒருக்காலும் அத்தை ஸ்மரியாதே- இறையும் அகலகில்லேன் -என்று-நித்ய வாசம் பண்ணப் படுகிற திருமார்வை உடையனான சர்வேஸ்வரனுடைய –
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -என்று விசேஷ்ய பூதனான சர்வேஸ்வரனுடைய-நாம நிர்த்தேசம் பண்ணாதே
-அமுதனார் விசேஷண பூதையான பெரிய பிராட்டியாரை-மாத்ரமே அருளிச் செய்தது
-அகஸ்த்யப்ராதா – என்றால் போலே-மாமான் மகளே போலே – இருக்கிறது காணும் –
அப்படியே இறே ச்ருதி ஸ்ம்ருதிகளிலும் -ச்ரத்தயா தேவோ தேவத்வமச்னுதே -என்றும்
அப்ரமேயஹிதத்தேஜோ யச்யாசாஜன காத்மஜா -என்றும் இவளை இட்டே அவனுடைய-அதிசயம் சொல்லப்படுகிறது –
-பிதுச்சத குண மாதா கௌ ர வேணா த்ரிச்யதே -என்று-பர்த்தாவுக்கு இப்படியே பிரபத்தி வுண்டாக வேண்டி இருக்கும் இறே –

புகழ் மலிந்த-
உயர்வற உயர் நலம் உடையவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –உபய லிங்க உபய விபூதி விசிஷ்டன்
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை-படர் பொருள் முழுவதும் ஆய் அவை அவை தொறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரன் –
-நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென -என்றும்-வியாபகத்வம்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும்- காரணத்வம்
உலகமுண்ட பெருவாயா வுலப்பில் கீர்த்தி யம்மானே –என்றும் –
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -என்றும்-வீர தீர பராக்ரமம்
நோலாதாற்றேன் உனபாதம் காண வென்று நுண்ணுர்வில்
நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் -என்றும்
செந்தாமரைக்கண் செங்கனிவாய் நால் தோள் எந்தாய் எனது உயிரே -என்றும்-ஸுந்தர்யம்
முனியே நான்முகனே முக்கண் அப்பா -என்றும்-சர்வ சரீரத்வம்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர் சோதீயோ –
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ -என்றுதலைக் கட்டுகையாலே
உயர்வற -என்று தொடங்கி-உயர்ந்தே -என்னும் அளவும் -ஆதி மத்திய அவசானங்களிலே-ஒருபடிப்பட்ட கல்யாண குணங்களால் ஏற்பட்ட –

பா –
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை உள்ளபடி விசததமா வனுபவிக்க வனுபவிக்க-அது உள்ளடங்காமே –
பக்தி பலாத்காரத்தாலே வந்ததானாலும் –
பாதபத்தோஷ ரசமச்தன் த்ரீலய சமன்வித -என்னுமாபோலே- நிர்ஹேதுக பகவத் விஷயீகாரத்தாலே-சர்வ லஷனோபேதமாய்
கவியமுதம் -என்றும்-தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் –
தாமே ஸ்லாக்கிக்கும்படியான திருவாய் மொழியிலே –

மன்னு
சர்வதா நிச்சலராய் இருந்துள்ள-மாறன்
அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன்
குழல் மலிய சொன்ன ஓர் ஆயிரம் இறே –
கர்ப்பம் போலே திருவாய்மொழி மன்னி இருந்ததே –

மாறன்
இது வாய்த்து பிரதம உபாதானமான திரு நாமம் .
விநாசாய சதுஷ்க்ர்தாம் -என்னுமா போலே பாஹ்ய குத்ர்ஷ்டிகளை சிஷித்து-அவர்களுடைய சம்சார நாசகர் ஆனவர் –
மாறன்
அஞ்ஞானத்துக்கு மாரகர்-
அன்றிக்கே
சாஷான் மன்மத மன்மத -என்கிறவனும் பிச்சேறி ஊமத்தங்காய் தின்றவனைப் போலே
மின்னிடை மடவாரில் வ்யாமுக்தனாம் படி பண்ண வல்லதாய் பெண் பிள்ளைத் தனத்தையும் –
ஊனில் வாழ் உயிரிலே ஒரு நீராக கலந்து வ்யாமுக்தனாம்படி பண்ண வல்ல ஜ்ஞாநாதிக்யத்தை-வுடையவர் ஆகையாலே
-மாறன் -என்னவுமாம்-இப்படிப் பட்ட ஆழ்வாருடைய-

அடி
ஆழ்வார் பர்யந்தம் அல்ல இவர் தம்முடைய ச்வாமித்வ அத்யாவசயம்-
ஆக -தமக்கு நிருபாதிக ஸ்வாமி யானவன் -என்னுதல்-
தம்மை வசீகரிக்கைக்கு மூலமானவன் என்னுதல் -இப்படிப் பட்ட திருவடிகளை-

பணிந்து-
ஆஸ்ரயித்து -ஸ்ரீ மத் ததன்க்ரி உகளம் ப்ரணமாமி மூர்த்த்னா -என்று ஆளவந்தார் அருளிச் செய்தது –
அடியிலே இப்படி அருளிச் செய்கையாலே -இப் ப்ரபந்தம் சரம பர்வ நிஷ்டர் விஷயம் என்று தோற்றுகிறது –

உய்ந்தவன் -உஜ்ஜீவித்தவன்
இவருக்கு உஜ்ஜீவனம் அன்ன பாநாதிகளாலே அன்று காணும் .
-ஆழ்வார் தம்முடைய திருவடிகளை-இவருக்கு படியாக விட்டுப் போந்தார் இறே-
அவ் ஆழ்வார் திருவடிகளைப் பணிந்த பின்பு இவர் அவை தன்னையே-அனுபவித்து போந்தார் –
ஆழ்வாருக்கும் இவர்க்கும் கால விப்ரக்ர்ஷ்டமானாலும் –
-முதலிலே ஆழ்வார் நாதமுனிகளுக்கு-உபதேசம் பண்ணும் போது -இவரை த்யானம் பண்ணி
-யஸ்வாப காலே கருணா கரஸ் சந் பவிஷ்யதாசார்யா வர ஸ்யரூபம்
சந்தர் சயாமாச மகானுபாவ தகாரி சூனு சரணம் பிரபத்யே -என்கிறபடியே-
இவருடைய பவிஷ்யதாசார்யா விக்ரகத்தை ஸ்வப்ன முகேன நாதமுனிகளுக்கு கொடுத்திட்ட படியை-அபிமானித்து –
பரகத ச்வீகாரத்தாலே அவருக்கு ஆசார்யர் ஆகையாலே இவரும் அவ் ஆழ்வார் திருவடிகளைப் பற்றி –
அவர் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் -என்று
அத்யவசித்த பகவத் பிரபாவத்தை -ஸ்ரீ பாஷ்ய முகேன -பெருமையையும் பக்தி மஹாத்ம்யத்தையும் –பிரகாசிப்பித்தது-
-வேங்கடாசல யாதவாசல ஸ்தலங்களை –
குத்ருஷ்டி குஹ நாமுகேனி பதத பர பிரமண சுரக்ரஹா விசஷனே ஜயதி லஷ்மனோயமுனி-என்கிறபடியே
நிர்வகித்து -சகல திவ்ய தேசங்களையும் திருத்தி -இதுவே உஜ்ஜீவனமாய் இருக்கிறவர் -என்றபடி –

பல் கலையோர்-
சகல சாஸ்திர பாரீணரான-கூரேச குருகேச கோவிந்த தாசரதி முதலான முதலிகளும் –பிரத்யவச்தானம் பண்ணி –
பிரசங்கித்த பின்பு -எம்பெருமானார் தம்முடைய விஷயீகாரத்தாலே-
தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய ஞானத்தைப் பெற்ற -யாதவ பிரகாச- யஜ்ஜமூர்த்யாதிகளும் –

தாம் மன்ன-
யதாவஸ்த்தித ஞானத்தினாலே சூப்ரதிஷ்டராம் படி -மன்னுதல் -பொருத்தமும் -நிலைப்பாடும்-
வந்த
பரம பதத்தினின்றும் சர்வேஸ்வரன் உடைய நியமனத்தாலே எழுந்து அருளின-
இராமானுசன்
இவர் சக்கரவர்த்தி திரு மகனை அனுசரித்து ஜனித்தார் காணும் –
அவன் -அபயம் சர்வ பூதேப்யோ-ததாம்யே தத் வ்ரதம் மம -என்று சர்வர்க்கும் அபாயப் பிரதானம் பண்ணினாப் போலே -இவரும்
மோஷ உபாயமான மந்த்ரத்தை பூரிதானம் பண்ணினார் இறே -இப்படிப் பட்ட எம்பெருமானார் உடைய –

சரணாரவிந்தம்
அரவிந்தம் என்கிற மன்மத பானம் போலே தம்மை மோஹிப்பித்தவை யாகையாலே –
-சரணங்களுக்கு-அரவிந்தத்தைப் போலியாக சொல்கிறார்
-ஆஸ்ரிதற்கு பாவனத்வ போக்யதைகளாலே -ஏக ரூபமாய் இருக்கையாலே-ஏக வசன பிரயோகம் பண்ணுகிறார்-
மன்னி
ஆஸ்ரயித்து -நிச்சலமாக -த்ரட அத்யாவச்யத்தை பண்ணி நாம் வாழ-
நான் ஒருத்தனுமே ஆஸ்ரயிக்க -என்னுடைய சம்பந்தி சம்பந்திகள் எல்லாம்-உஜ்ஜீவிக்கும்படியாக-
வாழ
ஸ்ரீ மதே ராமானுஜாய நாம -என்றபடி-
நெஞ்சே
ஒரு மகா நிதி லாபத்தால் அந்தரங்கராய் இருப்பார்க்கு சொல்லுவார் லவ்கிகர்-
அப்படியே தனக்கு அந்தரங்கமான மனசை சேவித்து தாம்பெற்ற பேற்றை சொல்லுவதாக சம்போதிக்கிறார்-
சொல்லுவோம் அவன் நாமங்களே
நாம் இருவரும் கூடி அவன் திரு நாமங்களை சொல்லுவோம் –வாசா தர்ம மவாப்நுஹி-என்கிறார் –
ஒரு உக்தி மாத்ரத்திலே பிராப்ய ப்ராபகங்கள் இரண்டும் -தர்ம பூதமான சரணார விந்தத்திலே-
அத்திருநாமம் தானே நம்மைச் சேர்க்கும் -ரச்யமான பதார்த்தம் லபித்தால் – இனியது தனி அருந்தேல் –
அன்யோன்யம்-ரசித்து கொண்டு அனுபவிக்கக் கடவோம் -என்றபடி-

அவன் நாமங்களே –
தேவு மற்று அறியேன் -என்று அநந்ய பரராய் கொண்டு அவருடைய திரு நாமங்களைச் சொல்லுவோம் –
த்ரிவித கரணங்களால் இல்லையாகிலும் -நாம சங்கீர்த்தனம் மாத்ரமே அமையும் –
குரோர் நாம சதா ஜபேத் -என்னக் கடவது இறே –
நெஞ்சே சொல்லுவோம் -என்றது தமக்கு உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்து சேதன சமாதியாக சொல்லுகிறார் –
நசேத் ராமானுஜேத் ஏஷா சதுரா சதுரஷரீ-காமஹச்தா ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ர்சா -என்றான் இறே ஆழ்வான்-
வேதம் ஒரு நான்கினுள் உள் பொதிந்த மெய்ப் பொருளும் -கோதில் மனு முதல் கூறுவதும் –
தீதில் சரணாகதி தந்த தன் இறைவன் தாளே -அரணாகும் என்னும் அது -என்று-அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்தார் இறே –
பூ மகள் கோன் தென்னரங்கன் பூம் கழற்கு பாதுகமாய்
தாம் மகிழும் செல்வச் சடகோபர் தேமலர்தாட்கு ஏய்ந்து
இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை வாய்ந்து எனது
நெஞ்சமே வாழ் -என்று இறே ஜீயரும் அருளிச் செய்தது –

————————————————————————————–

பெரிய ஜீயருரை

என்னுடைய நெஞ்சானது எம்பெருமானாருடைய சீல குணம் ஒழிய-வேறு ஒன்றை நினையாத படி யாயிற்று
–இது எனக்கு சித்தித்த பெரு விரகு ஒன்றும் அறிகிலேன் என்கிறார் –

கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத வன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஓன்று அறியேன் எனக்குற்ற பேர் இயல்வே – 2-

மது மிக்க பொழிலை உடைத்தாய் -தர்சநீயமாய் இருந்துள்ள கோயிலிலே –கண் வளர்ந்து அருளுகையாலே
-அத தேச சம்பந்தத்தை இட்டுத் தம்மை நிரூபிக்கலாம் படி இருக்கிற –
பெரிய பெருமாளுடைய விகாசாதிகளால் தாமரை போலே போக்யமான திருவடிகளைத் தங்கள் மனசிலே
ஒரு காலும் வையாதே -சாஸ்திர வச்யமான ஜன்மத்திலே பிறந்து வைத்து நிர் பாக்யராய் இருக்கும் அவர்களை விட்டு
அகன்று திருக் குறையலூரை திரு அவதார ஸ்தலமாக உடையவராய்-
-திவ்ய பிரபந்த நிர்மாண முகத்தாலே லோக உபகரகாரகரான திரு மங்கை ஆழ்வாரை உடைய-
திருவடிகளின் கீழ் விண்டு நீங்காத சிநேகத்தை உடையராய் இருந்துள்ள-
எம்பெருமானார் உடைய நிரவதிகமான சீல குணத்தை ஒழிய என்னுடைய நெஞ்சானது-வேறு ஒன்றையும் சிந்திக்கிறது இல்லை –
விள்ளுதல்-நீங்குதல்
இயல்வு -விரகு

——————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை

அவதாரிகை-
கீழில் பாட்டில் -நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று தம்முடைய மனசோடு கூடி உபதேசித்த வாறே
மனசானது அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் பட்டு -அநந்ய சிந்தயந்தோமாம் -என்கிறபடியே-
அவர் திருவடிகளை அனுபவித்துக் கொண்டு -தத் வ்யதிரிக்தமானவற்றை விரும்பாதே இருந்தது –இது என்ன ஆச்சர்யம் -என்கிறார் .
திருமங்கை ஆழ்வார் அடிக் கீழ் மாறாத காதல் இன்றும் ஸ்ரீ ராமானுஜர் திரு உருவம் –
திருநகரியில் திருமங்கை ஆழ்வார் திருவடியில் சேவை உண்டே –

வியாக்யானம்-
கள்ளார் பொழில் –
மது இருந்து ஒழுகின மா மலர் எல்லாம் -கொழும் கொடி முல்லையின் கொழு மலர் அணவிக் கூர்ந்தது –
குணதிசை மாருதும் இதுவோ -எழுந்தன மலர் அணைப் பள்ளி கொண்ட அன்னம் ஈர் பனி நனைந்த –
தமிரும் சிறகு உதறி -பைம்பொழில் கமுகின் மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது
மாருதம் இதுவோ -என்றும்-
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் -என்றும்
பூகி கண்ட த்வய சசரசஸ் நிக்த நிரோபகண்ட ஆவிர் மோதாஸ் திமிதச குநா நுதி தப்ரம்மகோஷாம்-என்றும்-சொல்லுகிறபடி –
மதுச்யந்தியான புஷ்ப விசெஷங்களால் வ்யாப்தங்களான உத்யானங்களாலே சூழப்பட்ட-
தென்னரங்கன் –
அத்தாலே தர்சநீயமான திருவரங்கமே தனக்கு நிரூபகமாம்படி நித்ய வாசம் பண்ணுகிற ஸ்வாமி உடைய-திருப்பதி – என்றபடி –
இவ்விடத்துக்கு இது முக்யமான திரு நாமம் -காணும் –
கமலப்பதங்கள் –
கமலப்பதம் -தீர்த்த வாசகமாய் -பாவனமான -என்னுதல்-
சம்சார தாபதப்தனுடைய ஸ்ரமஹரமான -என்னுதல் –
பாத கமலம் -என்னாதே- முந்துற முன்னம் கமலம் என்றது -சர்வேஸ்வரன் திருவடிகளை சேவிக்கும் போது
பாவநத்வாதிகளுக்கு முன்பே போக்யதையைக் கண்டு முற்றூட்டாக அனுபவித்தவர் ஆகையாலே –
நெஞ்சில் கொள்ளா மனிசரை –
விசித்ரா தேக சம்பந்தி ரீச்வராய நிவேதிதும் பூர்வமே வக்ர்தா பிரம்மன் ஹஸ்த பாதாதி சாயுதா -என்கிறபடியே-
அலாப்யலாபமாக பகவச் சரண கமல பரச் சரணத்திற்கு இட்டு பிறந்த மனுஷ்ய தேகத்தை பெற்றும் –
திருவடிகளை நெஞ்சில் கொள்ளாதே இருக்கிற -கர்ப்ப நிர்பாக்யர் கோஷ்டியில் -நின்றும்-
நீங்கி
அகன்று – சர்வரும் ஸ்லாகிக்கும்படி -பாஹ்ய குத்ருஷ்டிகளை பராஜிதமாக பண்ணுவித்து குறையல் பிரான் –
திருக் குறையலூரில் அவதரித்து -திவ்ய பிரபந்த நிர்மாணத்தாலும் –
-திரு அத்யயனத்துக்கு-ஏகாதசியிலே திரு நாள் நடப்பித்த படியாலும் –
அவ்விடத்திலே பெருமாளுக்கு அரணாக திரு மதிளை-நிர்மாணம் பண்ணி வைத்த படியாலும்
-ருத்ர பஷபாதிகளான குத்ருஷ்டிகளுடன் தர்க்கித்து அவர்களை ஜெயித்து –
அவர்களாலே பழிக்கப் பட்ட திவ்ய தேசங்களை நிர்வஹித்த படியாலும் -இப்படிகளாலே-உபகாரகரான திரு மங்கை ஆழ்வார் உடைய –

இவ்விடத்திலே இன்னும் ஒரு யோஜனையும் உண்டு –
குறையல் பிரான் -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்கிறபடியே ஹேய பிரத்யநீகனான கோவிந்தன் –
கோவர்த்தநோதாரணம்இந்திரன் கோவிந்த பட்டாபிஷேகம் பண்ணினவாறே பண்ணின போது –
கோப கோபி ஜனங்களை ரஷித்த உபகாரகன் -அந்த அவதாரத்திலே பூதனா சகட யமளார்ஜுன வரிஷ்ட
ப்ரலம்ப தேனுக காளிய கேசி குவலயாபீட சாணூர கம்சாதிகளை நிரசித்து -ஸ்வ ஆஸ்ரிதர்களான
பாண்டவர்களுக்கு தூத்ய சாரத்யங்களை பண்ணி -தத்வ உபதேசம் பண்ணியும் பண்ணியும் -இப்படி
நிகில மனுஜ மநோ நயன ஹாரி திவ்ய சேஷ்டிதங்களை பண்ணின உபகாரகன் –
இதில் சரம ஸ்லோகத்தை உபதேசிக்கை உபகாரங்களில் பிரதானம் –
இப்படி ஒரு அர்த்த விசேஷம் தோன்றினாலும் நம் ஆசார்யர்கள் திரு மங்கை மன்னன் விஷயமாக
அருளிச் செய்கையாலே -பேசிற்றே பேசுகையே அவர்களுக்கு ஏற்றம் என்று முதல் சொன்ன-பொருளே சங்கதமாக கடவது –
அடிக்கீழ்
திரு மங்கை ஆழ்வார் உடைய திருவடிகளின் கீழே –
விள்ளாத அன்பன் –
இவ் ஆழ்வார் பிரதம பர்வ நிஷ்டர் ஆகையாலே -அணி பொழில் திருவரங்கத்து அம்மானை பிரார்த்தித்துக் கொண்டே- இருப்பர் –
இவ் எம்பெருமானார் சரம பர்வத்தில் ஊற்றமுடையவர் ஆகையாலே அவ் ஆழ்வாருடை திருவடிகளிலே –
ஒருக்காலும் விடாதே சக்தமான பக்தியை உடையராய் இருப்பர் .
விள்ளுதல் -நீங்குதல் -அன்பு -பக்தி –
இராமானுசன் –
பூர்வ அவதாரத்திலே ராம அனுவர்த்தனம் பண்ணின வாசனை இப்போதும் அநுவர்த்திக்கையாலே-
இதுக்கு சரம பர்வமான இதிலே ஈடுபட்டார் காணும் –
மிக்க சீலமல்லால் –
தாம் மகானுபவராய் இருந்து வைத்தும் -என் போலாம் மந்த மதிகளோடே -புரையறக் கலந்து-
பரிமாறின சீல குணம் ஒன்றிலே ஈடுபட்டு -அது ஒழிய வேறு ஒன்றிலும் போக மாட்டாது-
உள்ளுதல் -சிந்தித்தல்
என் நெஞ்சு-
என் மனசு -என்னாலே உபதேசிக்கப் பட்ட நெஞ்சு-
ஓன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே-
என்ன ஆசார்யம்-இப்படி ப்ரவணனாய் ஆகுகைக்கு விரகு ஒன்றும் அறிகிலேன்
எனக்கு –
பகு ஜன்மங்கள் தன்னில் தபோ ஜ்ஞான சமாதிகளை பண்ண வேண்டி இருக்க -அங்கன் இன்றிக்கே-
சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று அத்யாவாஸ்யம் மாத்ரம் பண்ணின படி -எனக்கு –
பகவத் பிரசாதம் -கர்மா ஞான ஸ்தானங்களில் ஆழ்வாருக்கு -இவருக்கு ராமானுஜர் நாமமே -என்றவாறு –
உற்ற -சித்தித்த
பேர் இயல்வே -சமஸ்த உபாயங்களை காட்டிலும் -பெரியதாய் விலஷணமான உபாய விசேஷம் –ஓன்று அறியேன் –
எத்தாலே இந்த சொல் சேர்த்தி லபித்தது –நான் ஒன்றும் அறிகிலேன் –
முந்துற்ற நெஞ்சே -நீ அறிந்தே ஆகில் சொல்லிக் காண்-
நிர்ஹேதுகமாக சித்தித்த ஒன்றாய் ஆய்த்து-இயல்வே -விரகு –

——————————————————————————————————

ஏழாம் பாட்டு –
பெரிய ஜீயர் உரை –
அவதாரிகை –
இப்படி தம்முடைய அயோக்யதையை பார்த்து -நமக்கு இது துச்சகம் -என்று மீள நினைத்தவர் –
ஆழ்வான் திருவடிகளில் சம்பந்தமுண்டான பின்பு எனக்கு அசக்ய அம்சம் ஒன்றும் இல்லை -என்று-ஸ்தோத்ரத்திலே பிரவ்ருத்தர் ஆகிறார் –

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே -7-

பேச்சுக்கு நிலம் இல்லாத பெரிய புகழை உடையராய் -ஆத்ம அபஹாரத்தை விளைப்பதாய் —
தனித் தனியே பிரபலமாய்க் கொண்டு மூலை அடியே நடத்துவதான –
அபிஜன / வித்யா / வ்ருத்தங்கள்-ஆகிற படு குழியைக் கடந்து இருப்பாராய்-
நமக்கு நாதரான கூரத் ஆழ்வான் உடைய திருவடிகளை ஆஸ்ரயித்த பின்பு-
பழி போலே அவஸ்யம் அனுபோக்த்யமான பாப கர்மங்களிலே மக்னர் ஆகாதபடி-
நிஸ்தரிப்பிக்கும் எம்பெருமானார் உடைய திவ்ய குணங்களை ப்ரீதி ப்ரேரிரிதராய் கொண்டு-பாடி
ஸ்வரூபம் அனுரூபம் இல்லாத மார்க்கங்களை தப்புகையாலே எனக்கு இனி ஒன்றும்-அருமை இல்லை –
குழியைக் கடத்தும் -என்று பாடம் ஆன போது தம்முடைய அபிமான அந்தர்பூதரையும்-இப் படு குழியில் விழாமல் கடத்தும் அவர் -என்கை –
எம் கூரத் ஆழ்வான் -என்றும் பாடம் சொல்லுவார்கள்-

———————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–
அவதாரிகை -கீழ்ப் பாட்டிலே-ஆறாம் பாட்டில் – ஞான பக்த்யாத்யா அனுபவ ரூபமான தம்முடைய அயோக்யதையை-
நினைத்து பிரபந்த ஆரம்பத்திலே பிற்காலித்து-இப்பாட்டிலே
ஆழ்வான் திருவடிகளின் சம்பந்தம் ஆகிய ராஜ குல மகாத்ம்யத்தை அனுசந்தித்து –
இப் பிரபந்த உத்யோகம் கடினம் அல்ல — சுலபமாயே யாய் இருக்கும் என்று-அதிலே ஒருப்படுகிறார் .
வியாக்யானம் –
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் –
-ஒரு சப்தத்தை இட்டு வர்ணிக்க அரியதாய் -நித்ய அபிவ்ர்த்யங்களாய்-கொண்டு –
-பரம பதத்தளவும் பெருகி வருகிற கல்யாண குணங்களை உடையவன் –வாசா மகோசரம் –
ஆச்சார்ய லக்ஷண பூர்த்தியையும் சிஷ்ய லக்ஷண பூர்த்தியையும் பூர்ணமாகக் கொண்டவர் அன்றோ –
வஞ்ச முக்குறும்பாம் -வஞ்சக ஹேதுக்களாய்-ததீய விஷயத்திலே ஸ்வ சாம்ய புத்திகளையும்
ஸ்வ ஸ்மின் ஆதிக்ய புத்திகளையும் பிறப்பித்து -ஸ்வரூப நாசங்களாய் இருந்துள்ள –
அபிஜன வித்யா வ்ர்த்தங்கள் ஆகிற அஹங்கார த்ரயமும் -ஜகத் பிரதாரகங்களான இம் மூன்றும் ஆகிற-
குழியை கடத்தும் -தம்முடைய அபிமான அந்தர் பூதரை அந்த படு குழியில் விழாதபடி தம்முடைய-உபதேசத்தாலே –
தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய ஞானத்தை பிறப்பித்து -அதில் நின்றும்-கடத்துமவன் -கடத்துகை -தாண்டுவிக்கை –
குழியைக் கடக்கும் -என்று பாடமான போது -இம் மூன்றுமாகிய படு குழியை கடந்து இருக்குமவர்-என்றபடி –
நம் கூரத் ஆழ்வான் -நம்முடைய கூரத் ஆழ்வான் -இவரை உத்தரிப்பிக்கைக்கு காணும்-அவருடைய அவதாரம் –
ஆகையால் இறே நம் கூரத் ஆழ்வான் என்கிறார் .கூரம் என்னும் திவ்ய தேசத்துக்கு
நிர்வாஹரான ஸ்வாமி உடைய திரு நாமத்தை வஹித்தவர் -எம் கூரத் ஆழ்வான் -என்றும் பாடம் சொல்லுவார்கள்-
சரண் கூடிய பின் –
இப்படிப் பட்ட வைபவத்தை உடையரான -ஆழ்வான் உடைய திருவடிகளை –
ஆஸ்ரயித்த பின்பு -இப்படிப் பட்ட ராஜ குல மகாத்ம்யத்தை நான் பெற்ற பின்பு –
பழியை கடத்தும்
-இவ்வளவாக நான் மூலை யடியே நடந்து போகையாலே வந்தேறியாய் –
லோக கர்ஹிதமாய் -தம்முடைய குண கீர்த்தனம் பண்ணுகைக்கு விரோதியான என்னுடைய-
பாபத்தை சவாசனமாக நிவர்திப்பிக்கீம்
-இராமானுசன் –
எம்பெருமானார் உடைய –புகழ் பாடி –
-ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிவன்-தமிழ் மறைகள் ஆயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் -இராமானுசன்-
என்னும்படியான-அவருடைய கல்யாண குணங்களை -இப் ப்ரபந்தம் முகேன கீர்த்தனம் பண்ணி –
அல்லா வழியை கடத்தல் –
என்னுடைய அபத ப்ரவர்தியை தப்புகை – அன்றிக்கே -கர்ப்ப-யாம்ய தூமாதிகளை ஆக்ரமிக்கையால் என்னுதல் –
எம்பெருமானார் உடைய திருவடிகளைக் கிட்டி அனுபவிக்கையில் -என்றபடி –
எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே –
-எனக்கு இனி -இப்படி எம்பெருமானார் உடைய-கைங்கர்யத்தில் அதி கரித்து க்ர்தார்த்தனான எனக்கு –
-இத்தனை நாளும் சில உபத்ரவம்-உண்டாய் இருந்தாலும் -இன்று முதலாக மேலுள்ள காலம் எல்லாம்-
யாதும் -எந்த விஷயத்திலே யாகிலும் /வருத்தம் அன்றே -அசாத்தியமானது இல்லை-
அல்லா வழியை என்று -அம் மார்க்கங்கள் அதி ஹேயங்கள் ஆகையாலே -திருப் பவளத்தாலே-இன்னது என்று நிர்தேசிக்க அருவருத்து –
-சாமான்யேன அருளிச் செய்கிறார் .
அல்லா வழியை கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே –
சகல பாப விமோஷன பூர்வகமான பரம பதத்தை பெருகையிலும் இவருக்கு ஒரு-கண் அழிவு இன்றிக்கே
அத்யந்த சுலபமாய் காணுமிருப்பது –
வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்னக் கடவது இறே –

—————————————————————————————–

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை-
இப்படி ஸ்வ லாப அனுசந்தானத்தாலே ஹ்ருஷ்டரானவர் -எல்லாரும் தம்மைப் போலே-
தத் விஷய பிரவணர் ஆகைக்கு உறுப்பாக -பகவத் வல்லபையான ஆண்டாள் உடைய-
ப்ரஸாத பாத்ரமான எம்பெருமானார் லோகத்துக்கு செய்த உபகாரத்தை அருளி செய்கிறார் –

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –

பெரிய பெருமாள் உடைய திருமுடியை -சூழா நின்று உள்ள திரு மாலையை -தன்னுடைய திருக் குழலிலே சூடி-
வாஸிதம் ஆக்கிக் கொடுத்த வைபவத்தை உடையளான ஆண்டாள் உடைய ஸ்வாபாவிகமான கிருபையையே-
விளை நீராக வாழா நிற்பவராய் –பரம ஒவ்தாரராய் -முனி ஸ்ரேஷ்டரான -எம்பெருமானார் –
நித்யத்வ -அபௌருஷேயத்வ -பிரயுக்தமாய் -பிரத்யஷாதி பிரமாண விலஷணமாய் -யதாபூதவாதயாய் –
இருக்கையாலே -ஸ்வ பிரமாண்யத்தில் -ஒரு குறை வற்று இருக்கிற வேதமானது
-பாஹ்ய குத்ருஷ்டிகளாலே –அபிபூதமாய் கொண்டு -இழிவு பட்டு -தீப சங்கோசத்திலே திமிர வ்யாப்தி போலே பூமி எங்கும் கலி யுகமானது-
தனிக்கோல் செலுத்துகிற காலத்திலே-அபேஷா நிரபேஷமாய் வந்து -அந்த வேதத்தை உத்தரிப்பித்து –லோகத்தை ரஷித்து அருளினவர் காணும் கோள்–
ஆதலால் நீங்களும் என்னைப் போலே அவரை அல்லாது-அறியோம் என்று இருக்கை அன்றோ அடுப்பது என்று கருத்து –

என்றும் -பாட பேதம் –

————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழ்ப் பாட்டிலே பெரியாழ்வார் சம்பந்தத்தை இட்டு எம்பெருமானாரைக் கொண்டாடி –
இப்பாட்டிலே -அந்த ஆழ்வாருடைய பெண் பிள்ளையான ஆண்டாளுடைய ஸ்வபாவிக கிருபையாலே
வாழ்ந்து கொண்டு -பரமோதார ஸ்வபாவராய்-அத்தாலே எல்லார்க்கும் பரம பதத்தை கொடுக்கைக்கு
மனனம் பண்ணிக் கொண்டு போருகிற எம்பெருமானார்
-வேத மார்க்கம் எல்லாம் அழிந்து -பூ மண்டலம்-எங்கும் ஒக்க -வியாபித்து காலியானது -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில்
-விண்ணின் தலை நின்றும் –மண்ணின் தலத்து உதித்து -எல்லாரையும் ரஷித்து அருளின நல்லன்பர் என்று சர்வரும் தம்மைப் போலே
தத் விஷய ப்ரவணர் ஆகைக்கு உடலாக அவர் செய்து அருளின உபகாரத்தை அருளிச் செய்கிறார் –

வியாக்யானம் –
அரங்கர் மௌலி
-கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் தானே-
ஸ்ரீ வில்லி புத்தூரிலே வட பெரும் கோவில் உடையான் என்னும் திரு நாமத்தை உடையராய் கொண்டு
கண் வளர்ந்து அருளுகையாலே -அவரை -அரங்கர் -என்று அருளிச் செய்கிறார் -அப்படி பட்ட ஸ்வாமி உடைய-உத்தமாங்கத்துக்கு –
சூழ்கின்ற மாலையை –
அலங்கரிக்கத் தக்க புஷ்ப மாலையை -சூடிக் கொடுத்தவள்-முந்துற முன்னம்-
தாழ் குழலாள்-என்னும்படியான தன்னுடைய திருக் குழலிலே அலங்கரித்துக் கொண்டு -அது தன்னை களைந்து
ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கும்படி கொடுத்தவள் -இப்படி யாகையாலே இவளுக்கு -சூடிக் கொடுத்தவள் -என்று அதுவே நிரூபகமாய்
ஆய்த்து -சூடிக் கொடுத்த சுடர் கொடியே -என்னக் கடவது இறே –
தொல் அருளால்
-உததி பரம வ்யேம் நோர்க்கவிஸ் ம்ர்த்யமாதர்ச ரேஷன ஷமமிதிதி யாபூயஸ் ஸ்ரீ ரங்க தாமனி மோதசே –என்றும்
-அனுக்ரஹா மயீம் வந்தே நித்ய அஞ்ஞான நிக்ரஹம் -என்றும் சொல்லுகிறபடி-இயற்கையான அருள் என்றவாறு –
அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –
வாழ்கின்ற –
அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –
ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்க செய்தே –
பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே
-வள்ளல்-
இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை-இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –
காலத்ர யேபி கரண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவ –
சரஸ்த்வைகமலா ரமேனேர்த்திதா யத்ஷேமஸ் யேவஹீயதேந்திர பவத்ச்ரிதானாம்-என்று இந்த சௌந்தர்யத்தை –ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
என்றும் மா முனி –
-இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித-ரஷனத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற
-இராமானுசன் –
எம்பெருமானார் –
தாழ்வு ஒன்றும் இல்லா மறை
-வேதத்துக்கு தாழ்வு ஒன்றும் இல்லாமையாவது –
ப்ரமப்ரமாத விப்ரலம்பாதி தர்ம விசிஷ்டத்வம் புருஷ ப்ரநீதத்வம் -ஸ்வ ப்ராமான்யே அந்ய சாபேஷத்வம்-
அநித்யத்வம் -தொடக்கமான வற்றில் ஓன்று இன்றிக்கே -யதா பூதவாதியாய் -அபௌருஷேயமாய்-நித்யமுமாய் இருக்கை-
மறை தாழ்ந்து
-இப்படிப் பட்ட வேதமானது -ஈர்ஷ்யாடம்பரான பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆதல் –கலி தோஷத்தாலே யாதல் -அபிபூதமாய்க் கொண்டு இழிவு பட்டு
-கலி யுகமானது வேதத்தை-சங்கோசிப்பித்து அழித்தபடி
-ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீ மத் பாகவதத்திலும் விஸ்த்ரென-உபபாதிக்கப் பட்டது இறே –
கலவ் ஜகத்பதிம் விஷ்ணும் சர்வஸ்ரஷ்டாரமீச்வரம் -நார்ச்சயிஷ்யந்தி
மைத்ரேய பாஷண்டோ பகதாஜன -என்றும் -அந்தஸ் சக்தாம் -பஹிஸ் சைவம் சபரமேத்யதுவைஷ்ணவம்
கலவ் கஷ்டா ப்ரவர்த்தந்தே வர்ணாஸ்ரம ஜனாமுனே கலவ் கார்த்த யுக தர்மம் கர்த்தும் இச்சதி யோ நர
ச்வாமித்ரேர் ஹீதிதம் மத்வா தஸ்மை பிரத்விஷதே கலி -என்றும் சொல்லுகிறபடி
-நிஷித்த-மார்க்கத்தை நடப்பித்துக் கொண்டு -போருகிற கலி தோஷத்தாலே -வேத மார்க்கமானது மூலையடியே நடந்து –
தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் –
தீப சங்கோசத்தில் -திமிரவ்யாப்தி போலே -இருள் தரும் மா ஞாலமான-பூமிக்கு -கலி யுகமானது தனிக் கோல் செல்லும்படி
-சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் –தேச காலங்கள் சமீசீநங்களானால் திருத்தி ரஷிக்கலாம்–
அப்படி இன்றிக்கே தேசமோ அநேக பூயிஷ்டமானது –காலமோ தத் வசருக்கு வர்த்தகமானது –
வந்து
-இப்படி அதி க்ரூரங்களான தேச காலங்களிலே பரம பதத்தில்-நின்றும் இந்த விபூதியிலே -ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து
அருளி -அளித்தவன் காண்மின் –
உத்தரிப்பித்து இந்த-லோகத்தை ரசித்தவர் காணும் கோள்-எல்லாரும் இவரை ரஷகர் என்று தெளிந்து -ஆஸ்ரயித்து உஜ்ஜீவியும் கோள்-என்று கருத்து –
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னக் கடவது இறே –

——————————————————————————————————————

பெரிய ஜீயர் அருளிய உரை –
பதினெட்டாம் பாட்டு-அவதாரிகை-
நம் ஆழ்வாரைத் திரு உள்ளத்திலே வைக்க அநுரூப வைபவரான ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்
குணங்களை சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்காக உபகரிக்கும் எம்பெருமானார்-எனக்கு ஆன துணை -என்கிறார் –

எய்தற்குஅரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –

துஷ் ப்ராபங்களான வேதங்களை –
பிரவணம் போலே சுருங்கி இருத்தல்-
வேதம் போலே பரந்து இருத்தல் -செய்கை அன்றிக்கே -ஆயிரம் பாட்டாகவும்-அது தான் சாரமாகவும்
ஸ்திரீ பாலர்களுக்கும் கற்கலாம் படி யான பாஷையிலே செய்து அருளுகைக்கு லோகத்திலே வந்து-அவதரித்து அருளினவராய் –
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிய சடர்க்கு பிரதிபடராய் இருக்கையாலே –சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையவரான ஆழ்வாரை –
தம் திரு உள்ளத்திலே வைக்கைக்கு-தகுதியாய் இருந்துள்ள -பிரபாவத்தை உடையரான ஸ்ரீ மதுர கவிகள் உடைய -ஜ்ஞாநாதி குணங்களை-
சகல ஆத்மாக்கள் உடையவும் உஜ்ஜீவன அர்த்தமாக உபகரித்து அருளா நிற்கும் -எம்பெருமானார் –எனக்கு சீரிய துணை
அதவா
சடகோபனை சிந்தை உள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் -என்று-
ஆழ்வாரை அல்லது அறியோம் என்று இருக்கும் அவர் எல்லோரையும் சொல்லவுமாம்-

—————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழில் பாட்டுக்களில் பிரதி பாதிக்கப் பட்ட ஆழ்வார்களில் வைத்துக் கொண்டு –பிரதாநராய் -சர்வாதிகார்ரராம் படி –
திருவாய்மொழி என்கிற பிரபந்தத்தை அருளிச் செய்கைக்காக-அவதரித்து அருளின நம் ஆழ்வாருக்கு —
அனந்யார்ஹரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடைய -கல்யாண குணங்களை-சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்காக –
உபகரித்து அருளின எம்பெருமானார் -எனக்கு சகாயம் என்கிறார் .
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் எதிராசராம் இவர்கள் வாழ்வாக வந்து உதித்த மாதங்கள் நாள்கள்
தம்மின் வாசியையும் இந்த உலகோர்க்கு உரைப்போம் நாம் -சரம பர்வ நிஷ்டர்கள் மூவரும் –

வியாக்யானம் –
எய்தற்கு அரிய மறைகளை –
அநந்தாவை வேதா – என்கிறபடி ஒரு சங்கையை இட்டு –சொல்லப் போகாத படி ஒரு அபரிமிதங்களாய்
-சர்வோப ஜீவியங்கள் ஆகாதே -அதிக்ர்த்தாதிகாரங்களாய்-அந்யோப மரத்தக வாக்யங்களாலே –
-ஸ்வார்த்தத்தை தெளியும் போது -எத்தனையேனும் அதிசய-ஞானர் ஆனவர்களுக்கும் அருமைபடுத்த கடவதான சம்ஸ்க்ருத வேதங்களை –
ஆயிரம் இன் தமிழால் –
வரணாதி நியதி இன்றிக்கே -ருசி பிறந்தவர்கள் எல்லாரும் அதிகரிக்கும் படியாய் –
ஆயிரம் என்ற ஒரு சங்கையுடன் கூடி இருப்பதாய் -உயர்வற உயர்நலம் -என்று தொடங்கி -உயர்ந்தே -என்னும் அளவும் –
ஆதி மத்திய அவசானங்களிலே -பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் -சேதன அசேதன ரூப ச்வபாவங்களையும் –
சேதனருடைய சம்சார பந்த ஹேதுக்களையும் -தந் நிவர்தன உபாயமான தத் விஷய ப்ரீதி ரூபாபன்ன ஞானத்தையும் –
ஜகத் காரண வஸ்து நாராயணனே என்று -தேவதா வஸ்து விசேஷ நிர்த்தாரணத்தையும் -அவனுடைய சமஸ்த கல்யாண குணாத் மகத்வத்தையும்
-அநந்த கருட விஷ்வக் சேநாதி திவ்ய சூரி பரிசர்யமான நளினனாய்க் கொண்டு நின்ற படியையும் –
தாம் அனுபவித்த படியே எல்லாரையும் அனுபவிப்பைக்காக -தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே –
லவ்கிகரைக் குறித்து உபதேசித்த படியையும் -தம்முடைய அபிநிவேசம் எல்லாம் தீரும்படி அவனை ப்ராபித்த படியையும்
-விசதமாக பிரதிபாதிப்பதாய் -ஸ்வா ர்த்தத்தை எல்லாம் சூஸ்பஷ்டமாகவும் ஸூக்ரஹமாகவும் தெரிவிக்குமதாய் –
அத ஏவ அத்யந்த சுலபமாய் -பக்தாம்ர்தம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள் –என்னும்படி –
அநு போக்தாக்களுக்கு அத்யந்தம் போக்யமாய் -நடை விளங்கு தமிழான -த்ரமிட-பாஷையாலே -திருவாய் மொழி என்கிற பிரபந்த ரூபேண
-செய்தற்கு
-அவதரிப்பிப்பதர்க்கு –ஆவிர்பாவத்தை பண்ணுவதற்கு -என்றபடி –
உலகில் –
அசுத்தாஸ் தேசமஸ்தாஸ்து தேவாத்யாம-கர்ம யோநயா ஆவிரிஞ்சாதி மங்களம் – என்றும்
-இருள் தரும் மா ஞாலம் -என்றும் –
கர்ம ஜன்மாத்யவஸ்தாச-துக்கமத்யந்த துச்சகம் -ந கிஞ்சித் கணயன் நித்யம் சராமீந்த்ரிய கோசர -என்றும் –
சொல்லப்படுகிற-இந்த லீலா விபூதியிலே -வரும் சடகோபனை –
வரும்
என்ற வர்த்தமான நிர்தேசத்துக்கு –அவருடைய திவ்ய-மங்கள விக்ரகம் -சமஸ்த திவ்ய தேசங்களிலும்
சமஸ்த பிரபன்ன ஜனங்களுடைய திரு மாளிகைகளிலும் –நவம் நவமாய்க் கொண்டு ஆராத்யமாகையும் -அவருடைய திவ்ய சூக்திகள்
-இந்த லோகத்தில் இவ்வளவும்-இன்னும் உள்ள காலத்திலும் நடை யாடிப் போருகையும் பொருளாகக் கடவது
-சடகோபனை –
சடராவார் –ஸ்வரூப ஞானம் இல்லாத சம்சாரிகள் -அவர்களைக் குறித்து -ஒரு நாயகத்திலும் -நண்ணாதார் முறுவலிலும் –பருஷம் பண்ணினவனை
-பாஹ்ய குத்ர்ஷ்டிகள் ஆகிற சடர்க்கு பிரதிபடர் ஆனாரை -என்னுதல் .-இப்படிப்பட்ட நம் ஆழ்வாரை
-சிந்தை உள்ளே
-தம்முடைய திரு உள்ளத்திலே -பெய்தற்கு -தமக்கு பர தேவதையாய்-ஆராத்யராய் இருக்கும்படி வைக்கைக்கு
-இசையும்-
வுபயுக்தமான பிரபாவத்தை உடைய -மேவினேன் அவன் பொன்னடி-மெய்ம்மையே தேவு மற்றறியேன் -என்றும்
-மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் –என்றும் -இறே இவர் தாம் அருளிச் செய்த படி –
பெரியவர்
-உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார்-
பத்துப் பேர் உண்டு இறே -அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடக் கடவது –
அவர்களைச் சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே -அவர் பாசுரம் கொண்டு இவ் வர்த்தம் அறுதிஇடக் கடவோம் -என்று
ஸ்ரீ வசன பூஷணத்தில் சொல்லுகிறபடியே-
யஸ்மாத் ததுபதேஷ்டா ஸௌ-தஸ்மாத் குருதரோ குரு – அரச்ச நீயச்ய சவந்த்யஸ்ச -இத்யாதி சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட
சரம பர்வ-நிஷ்டராயும் -தத் ப்ரவர்த்தகராயும் -இருக்கை யாகிற மகா பிரபாவத்தை உடையவர் ஆகையாலே
சர்வாதிகரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் உடைய –
சீரை –
மாறன் சடகோபன் வண் குருகூர் எங்கள் வாழ்வாம்-என்று ஏத்தும் மதுரகவியார் யம்மை யாள்வார் அவரே அரண் -என்றும்
-பார் உலகில் மற்று உள்ள ஆழ்வார்கள்-வந்து உதித்த நாள்களிலும் -உற்றது எமக்கு என்று நெஞ்சே ஓர் -என்று இப்படி ச்லாக்கிக்கப்பட்ட
கல்யாண குணங்களை –
உயிர்கள் எல்லாம் –
வர்ணாஸ்ரம குண வ்ருத்தாத் உத்கர்ஷ்ட அபகர்ஷ்ட விபாகம் அற –ருசி உடையரான சகல சம்சாரிகள் உடையவும்
-உய்தற்கு –
உஜ்ஜீவன அர்த்தமாக -இது ஒழிந்த உபாயங்கள்-எல்லாம் உஜ்ஜீவன ஹேதுக்கள் அன்று காணும் -இந்த வமுதனாருடைய திரு உள்ளத்தில் ஓடுகிறது –
உதவும் –
உபகரித்து அருளும் -எல்லாருக்கும் மோஷ உபாயமான திரு மந்திர அர்த்தத்தை உபதேசிக்கும் வேளையிலே
அர்த்த விசேஷங்கள் எல்லாம் ததீய பர்யந்தமாக அனுசந்திக்க வேணும் -என்னும் மதுரகவி ஆழ்வாருடைய நிஷ்டையே காணும்-
எம்பெருமானார் உபதேசிப்பது –
இராமானுசன் எம் உறு துணையே –
இப்படிப் பட்ட எம்பெருமானார் எனக்கு த்ர்டமான துணை –
துணை-
சகாய பூதர் -உறு -த்ர்டம் -இத்தால் பரம பதத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்றபடி –
அன்றிக்கே -பெரியவர் என்ற பதத்துக்கு –
ஆழ்வாருடைய திருவடிகளை தம் திரு உள்ளத்திலே நிறுத்திக் கொண்ட-ஸ்வாமிகள் எல்லாரும் -என்று பொருள் ஆகவுமாம்-

———————————————————————————————–

பெரிய ஜீயர் உரை
-அவதாரிகை –
ஐஸ்வர்யாதி பர தேவதா பர்யந்தமான அபேஷித வஸ்துக்கள் எல்லாம் திருவாய் மொழியே –
என்று ஜகத் பிரசித்தமாக நின்ற எம்பெருமானார் எனக்கு நிரதிசய போக்யர் -என்கிறார் –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-

ஸ்வ சம்பந்தத்தை வுடையவர்களுக்கு இன்னார் என்னும் மதிப்பை கொடுக்குமதாய்-
ஹித பரமுமாய் -ப்ரியகரமுமாய் -அஞ்ஞாத ஜ்ஞாபகமுமாய் -பிராப்ய ப்ராபகங்களுமாய்-இருக்கையாலே –
சீரியதாய் -நிரவதிகமான சம்பத்தும் -பிதாவும் -மாதாவும் -சதாசார்யனும் –
பரிமளிதமான புஷ்பத்தை பிறப்பிடமாக உடைய பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான சர்வேஸ்வரனும் –
ஆழ்வார் பகவத் ப்ரசாதத்தாலே தமக்கு பிரகாசித்த -பரபக்தி -யாதி –ச்வபாவங்களின் உடைய அடைவிலே –
உபகரித்து அருளின -திராவிட வேதமான திருவாய் மொழியே-என்று –
இம் மகா ப்ருதிவியில் உள்ளார் அறியும்படி நின்ற எம்பெருமானார் எனக்கு-நிரதிசய போக்யர் –
அதவா
விளங்கிய சீர் நெறி தரும் என்றது -சீர்த் தொடை யாயிரம் -திருவாய் மொழி -1 2-11 – –
என்னும்படி தமக்கு பிரகாசித்த பகவத் குணங்களை அடைவே உபகரித்து அருளின -என்னவுமாம் –

————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
ஐ ஹிக ஆமுஷ்மிக சமஸ்த சம்பத்தும் -சர்வவித பந்துக்களும் -வகுத்த சேஷியானஸ்ரீயபதியும் –
நம் ஆழ்வார் -தமக்கு பகவத் நிர்ஹெதுக கிருபையாலே பிரகாசியா நின்று உள்ள அர்த்த விசேஷங்களை
அடைவே அருளிச் செய்த த்ரமிட உபநிஷத்தே என்று சகல ஜனங்களுக்கும் உபதேசிக்கிற எம்பெருமானார்
எனக்கு நிரதிசய போக்யர் – என்கிறார்-

வியாக்யானம்
-உறு பெரும் செல்வமும்
-அவிந்தந தனஞ்சய பிரசமதம் தனம் தந்தனம் -என்கிறபடியே-அப்ராப்தமான சம்பத் அன்றிக்கே –
-தனஞ்சய விவர்த்தனம் தனமுதூட கோவர்த்தனம் சூசாத நம பாதநம்-சூ மனசா சமாராதனம் -என்றும்
-ஸாஹி ஸ்ரீ ர்ம்ர்தாசதாம் -என்றும் -முக்த ஐச்வர்யத்துக்கு உடல் ஆகையாலே –
ப்ராப்தமாய் –பெரும் -ஷீணே புன்யே மர்த்த்ய லோகாம் விசந்தி -என்றும்
-ஒரு நாயகம் ஓட வுலகுஉடன் ஆண்டவர்-கரு நாய்கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெரு நாடு காண இம்மையிலே
பிச்சை தாம் கொள்வர் -என்றும்-சொல்லுகிறபடியே அதி ஸ்வல்பமாய் -அநித்யமாய்-இருக்கை அன்றிக்கே -கொள்ளக் குறைவற்று இலங்கி –
கொழுந்து விட்டோங்கிய -என்கிறபடியே – கொள்ளக் கொள்ள பெருகி வரக் கடவதாய் இருக்கிற –
செல்வமும் -சம்பத்தும் -அளவியன்ற யந்தாதி யாயிரம் இறே -இது
-தந்தையும் தாயும் –
மாதா பித்ர் சஹஸ்ரேப்யோ-வஸ்தலதரம் சாஸ்திரம் -என்று -சகல ஜன உஜ்ஜீவன ப்ரவர்த்தமாய் இறே
-வேதத்வ சாமான்ய விசிஷ்ட வேதம்-எல்லாரும் விரும்புவது -அப்படியே -திராவிட வேத சாகரம் -என்று இத்தை வேதமாக நிதர்சிக்கையாலே –
சகல ஜன உஜ்ஜீவன ஏக ப்ரவர்த்தம் ஆகையாலும் -பக்தாம்ர்தம் விஸ்வ ஜன அநு மோதனம் -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் சொல்லுகிறபடியே பிரியத்தையே-நடத்தக் கடவதாகையாலும் –
திரு வாய் மொழியிலே -வீடு முன் முற்றவும் -என்று தொடங்கி -கண்ணன் கழலினை –என்னும் அளவும்
ஆதி அந்தத்திலே ஹிதத்தையே போதிக்கையாலே – ஹிதத்தை நடத்தக் கடவதாகையாலும்-தாயும் தந்தையுமாய் இருக்கும் என்றபடி –
உயர் குருவும் –
-புத்ரான் பந்தூன் சகீன் குருன் -சர்வ தர்மாம்ச சம் த்யஜ்ய – என்று த்யாஜ்ய கோடியிலே-பரி கணிக்கப்பட்ட -குரு அன்றிக்கே –
அத்ர பரத்ர சாபி – என்கிறபடியே உபய விபூதியிலும் இச் சேதனனுக்கு-உபாதேய தமனாய் –
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -அஞ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணின சதாசார்யனும் –
இவ் உபகார ஆதிக்யத்தாலே காணும் இவன் பரித்யாஜ்யனாகாதே ஒழிந்தது -உயர்த்தியை உடையனானதும் –
சேதனருடைய அஞ்ஞான அந்தகாரத்தை நிவர்த்திப்பவன் ஆகையாலே குரு -என்கிறார் –
-அந்தகார-நிரோதித்வாத் குரு ரித்யபி தீயதே -என்னக் கடவது இறே –
வெறி தரு பூ மகள் நாதனும் –
வெறி -பரிமளம் -இந்த பதம் புஷ்பத்துக்கு விசெஷணமாய்-பரிமளமான-புஷ்பத்தை பிறப்பிடமாக உடையளான பெரிய பிராட்டியாருக்கு
-பூ மகளார் தனிக் கேள்வன் -என்கிறபடியே-வல்லபனான சர்வேஸ்வரன் -என்றபடி –
–அன்றிக்கே -வெறி தரு பூ மகள் -வெறி -என்கிற பதம் பிராட்டிக்கு-விசேஷணமாய் -கந்தத்வாரம் – என்கிறபடியே
-திவ்ய கந்த பிரதமான திரு மேனியை உடைய பெரிய பிராட்டியார்-என்னவுமாம்
-அன்றிக்கே -வெறி தரு பூ மகள் நாதனும் -வெறி -என்கிற பதம் ஈஸ்வரனுக்கு விசேஷணமாய் –
சர்வ கந்த -என்கிறபடியே -திவ்ய பரிமள ஸ்வரூபனான ஸ்ரீ யபதி என்றும் சொல்லவுமாம் –
இவ் அபிநிவேசம் எல்லாம் இவருக்கு எவ் விஷயத்தை பற்ற -என்றால்
-மாறன் விளங்கிய சீர் நெறி-தரும் செந்தமிழ் ஆரணமே –
என்று -மாறன் -நம் ஆழ்வார் உடைய -பிதாவான காரியாலே சமர்ப்பிக்கப் பட்டதிரு நாமம் ஆய்த்து -இது
-இப்படிப் பட்ட நம் ஆழ்வாருக்கு -விளங்கிய -பிரகாசித்த -சர்வேஸ்வரன் தன்னுடைய நிர்ஹேதுக
கிருபையாலே உபய விபூதி வ்ருத்தாந்தகளை எல்லாம் -அடைவே அறியலாம்படி -மயர்வற மதிநலம் அருளப் பெற்ற –
நம் ஆழ்வாருக்கு -ஏவம் நித்யாத்ம பூகாதாஸ் சடகோப ப்ரனேஷ்யதி – என்கிறபடி நித்ய அபௌருஷேயமாய் இருக்கிற இது –
அவர் தம்மாலே உண்டாக்கப் பட்டது என்று –தோற்றும் -பிரகாசித்தது -என்றபடி -ஆகையாலே இறே விளங்கிய –
என்று அருளிச் செய்கிறார் .
சீர் நெறி தரும் –
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி ஸ்ரீ யை எல்லாம் -எல்லாரும்-அறியும் படி -சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்குமதாய்
-நெறி -ஒழுக்கம்-அதாகிறது சாத்மிக்க -என்றபடி –
அன்றிக்கே -மாறன் விளங்கிய சீர் நெறி தரும் -ஆழ்வார் பகவத் பிரசாதத்தாலே தமக்கு பிரகாசித்த
பர பக்தியாதி ச்வபாவங்களின் உடைய அடைவிலே உபகரித்து அருளின என்று யோஜிக்க்கவுமாம் –
அங்கன் அன்றிக்கே –
சீர் நெறி தரும் –
அகஸ்த்யோ பகவான் சாஷாத் தஸ்ய வியாகரணம் வ்யதாத்-சந்தஸ் சாஸ்திர அநு சாரனே வ்ர்த்தானா அபி லஷணம்-
உக்த மந்யைஸ் சதாசார்யை த்ராமிடச்யமகாமுனே-சம்ச்கர்தச்ய யதாசந்தி பாட்யபந்த ச்ய சர்வத லஷணா நிதாதே -சாந்தி திராமிட ஸ்யாபி பூதலே -என்கையாலே
எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை நிரை பா -என்று சொல்லப் படுகிற பிரபந்த லஷண பேதமாய் இருக்கும் என்னவுமாம் –
சீர் -என்கிற இது -எழுத்து அசை தொடக்கமானவற்றுக்கு உப லஷணமாக கடவது –
நெறி -ஒழுக்கம் அதாவத்-ஸ்வபாவமாய்-லஷணம் -என்றபடி -தருகை -உடைத்தாகை
-செந்தமிழ் ஆரணமே என்று –
ஆதி மத்திய-அவசானங்களிலே ஏக ரூபமாய் திராவிட பாஷா ரூபமான உபநிஷத்தே -என்று -அவதாரணத்தாலே –
அனநயோக வியவச்சேதம் பண்ணுகிறது -இது காணும் எம்பெருமானாருடைய பிரதி பத்தி –
எம்பெருமானார்-தமக்கு ஐஸ்வர்யாதி பரதேவதா பர்யந்தமான புருஷார்த்தங்கள் எல்லாம் திரு வாய் மொழியே அன்றி
வேறு ஒன்றை அத்யவசித்து இரார் -என்றபடி
-இந் நீணிலத்தோர் அறிதர நின்ற –
இவ் அர்த்தத்தை விச்தீர்னையான-இந்த ப்ர்திவியில் உள்ள சேதனருக்கு
அஞ்ஞான ஜ்ஞாபனம் பண்ணுகைக்கு நின்று அருளின –
அன்றிக்கே -இவ் அர்த்தத்தை மகா ப்ர்த்வியில் உள்ளோர் எல்லாரும் அறியும் படி நின்று அருளின -என்னவுமாம் –
ஏதத் வ்ரதம் மம – என்கிறபடியே பக்த கங்கணராய் இருக்கிற என்றபடி
-இராமானுசன்
-எம்பெருமானார் –எனக்கு ஆரமுதே -அடியேனுக்கு அபர்யாப்த்தாம்ர்தம் -நிரதிசய போக்யர் -என்றபடி –

———————————————————————————————————————

பெரிய ஜீயர் உரை
அவதாரிகை –
நாதமுனிகளை தம் திரு உள்ளத்திலே அபிநிவேசித்து அனுபவிக்கும் எம்பெருமானார்
எனக்கு பரம தனம் -என்கிறார்-

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம்கோல் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20 –

சந்தனச் சோலைகளை உடைத்தாய் -தர்சநீயமான திருநகரிக்கு நாத பூதரான ஆழ்வார் உடைய-
பரம போக்யமான திருப் பவளத்தில் பிறந்த ஈரப் பாட்டை உடைத்தான திரு வாய் மொழி இன் இசையை-
அறிந்தவர்களுக்கு ச்நிக்தராய் இருக்கும் அவர்கள் உடைய குணங்களிலே செறிந்து –
தன் சத்தை பெறா நிற்கும் -ஸ்வபாவத்தை உடையரான நாதா முனிகளை பெரு விடாயர்
மடுவிலே புகுந்து வாரிப் பருகுமா போலே தம் திரு உள்ளத்தாலே அபிநிவிஷ்டராய்க் கொண்டு
அனுபவிக்கும் எம்பெருமானார் எனக்கு அஷயமான நிதி –
ஆரம்-சந்தனம்–

—————————————————

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
தர்சநீயமான திரு நகரிக்கு நிர்வாஹரான நம் ஆழ்வார் உடைய அமிர்தமய திவ்ய சூக்தி
ரூபமாய் இருந்துள்ள -திருவாய் மொழியை சார்த்தமாக அப்யசிக்க வல்லார் திரத்திலே -அதி ப்ரவணராய்
இருக்குமவர்களுடைய -கல்யாண குணங்களிலே சக்தராய் -உஜ்ஜீவிக்கும் ஸ்வபாவத்தை உடையரான
ஸ்ரீமன் நாதமுனிகளை -தம்முடைய மனசாலே அனுபவிக்கும் எம்பெருமானார் அடியேனுக்கு- மகா நிதியாய் இருப்பார் என்கிறார் –

வியாக்யானம் –
ஆரப் பொழில் தென் குருகை
-திருத் தாம்ரபர்ணீ தீர்மாகையாலும் -நீர் வாசியாலும்-நித்ய அபி வர்த்தங்களான சந்தன சோலையாலே சூழப்பட்டு
தர்சநீயமான திருக் குருகூருக்கு –ஆரம்-சந்தனம்
பிரான்
-சர்வர்க்கும் சேவ்யமாம் படி உபகாரகர் -குயில் நின்று ஆல் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்று ஸ்ரீ மதுரகவி-ஆழ்வார் அருளிச் செய்தார் இறே
-குருகை பிரான் –
திருக் குருகையிலே அவதரித்து -சகல ஜனங்களுக்கும்-திருவாய் மொழி முகத்தாலும் -நாத முனிகளுக்கு சகல அர்த்தங்களையும் -உபதேசித்து
சம்ப்ரதாயத்தை நடத்தின படியாலும்-உபகாரகர் -என்றபடி
-அமுதத் திருவாய் ஈரத் தமிழின்
-இப்படிப் பட்ட நம் ஆழ்வாருடைய -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்-மாலைகள் சொன்னேன் -என்கிறபடியே பரம போக்யமாய் கொண்டு
-திருப் பவளத்திலே பிறந்ததே -ஸ்வ நிஷ்டரான-சேதனருடைய சம்சார தாபம் எல்லாம் ஆறும் படியாக ஈரப் பாட்டை உடைத்ததாய்
-த்ரமிட பாஷா ரூபமான-திருவாய் மொழி யினுடைய -இசை -கானம் ராகாதி லஷனன்களோடு கூடி -உணர்ந்தோர்கட்கு
-அப்யசித்து-பின்னையும் ஆவர்த்தி பண்ணி -அதிலே பூர்ண ஜ்ஞானம் உடையவர்களுக்கு –
ஸ்ரீ மன் மதுர கவிகள் -திரு மங்கை ஆழ்வார்-முதலானவர்களுக்கு -என்றபடி –
இனியவர் –
அவர்களுக்கு அத்யந்தம் பிரிய தமராய் -ஸ்ரீ மன் நாத முனிகளுக்கு -கண்ணி நுண் சிறுத் தாம்பினை-உபதேசித்து அருளின
-ஸ்ரீ பராங்குச நம்பி -இனியர் தம் சீரைப் பயின்று -அவர்களுடைய கல்யாண குணங்களை-
சர்வ காலமும் அனுசந்தித்து -அவர் செய்த உபகாரத்தை விஸ்மரியாதே -க்ர்த்கஞராய்க் கொண்டு –
பயிலுதல் -அனுசந்திக்கை -உய்யும் -அவ்வளவாக இவருக்கு உஜ்ஜீவனம் இல்லை -அந்த மதுரகவி ஆழ்வார் உடைய
சம்ப்ராயச்தரான ஸ்ரீ பராங்குச நம்பி உபதேசித்த அநந்தரம் -அவர் பக்கலிலே க்ர்த்கஞராய் போந்த பின்பு -காணும்-இவர் உஜ்ஜீவித்தது
-சீலம் கொள் நாத முனியை –
இப்படி உஜ்ஜீவனமே ஸ்வபாவமாக உடையரான-ஸ்ரீ மன் நாத முனிகளை-ஸ்ரீ ரங்க நாதருடைய திருநாமத்தை வகித்து
-ஆழ்வார் தமக்கு உபதேசித்த-அர்த்தங்களை அடைவே சர்வதா -மனனம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கிற-ஸ்ரீ மன் நாதமுனிகளை -என்றபடி
நெஞ்சால் வாரிப் பருகும் –
சமான காலமானால் -காயிகமாகத்-தழுவி -முழுசிப் பரிமாறி அனுபவிப்பார் காணும் –அத்யந்த கால வ்யவதானமாக இருக்கையாலே-அந்த ஸ்ரீ மன் நாதமுனிகளை
-நெஞ்சாலே அள்ளிக் கொண்டு –
பிறி கதிர் படாதபடி விக்ரக குணங்களோடு-கூட அனுபவிக்கை -பருக்கை-அனுபவிக்கை –
இராமானுசன் –
-எம்பெருமானார் –
என் தன் மா நிதியே
-லோகத்தார் எல்லாருக்குமாக அவதரித்தார் ஆகிலும் அமுதனாருடைய-அத்யாவசாயம் -தமக்கேயாக அவதரித்தார் என்று காணும்
-என் தன் மாநிதி –
அடியேனுடைய மகா நிதி –நவநிதியான தனங்களும் -தைனம்தினய பிரளயத்திலும் அழிவு உண்டு –
அப்படி அன்றிக்கே அவற்றைக் காட்டில்-விலஷணமாய் அப்ராக்ருதமான நிதி -என்றபடி –
-அத்ர பரத்ர சாபி நித்யம் யாதிய சரணவ் சரணம் மதீயம்-என்று அருளிச் செய்தார் இறே ஆள வந்தாரும் .

—————————————————————————————————————–

பெரிய ஜீயர் அருளிய உரை –
-அவதாரிகை –
எம்பெருமானார் தம் பக்கல் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து அத்தாலே அவர் திருமுகத்தை
பார்த்து -தேவரீர் உடைய க்ருபா ஸ்வபாவம் இந்த லோகத்தில் யார் தான் அறிவார் என்கிறார் –

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுத்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

வியாக்யானம் –
ஜல ஸ்தல விபாகம் பாராதே வர்ஷிக்கும் மேகம் போலே சர்வ விஷயமாக உபகரிக்கும்
கிருபையை உடையவரே –
துக்கத்துக்கு நேரே ஆவாச பூமியே இருப்பானொருவன் நான் –
இப்படி இருக்கிற என்னை தேவரீர் தாமே வந்து ப்ராபித்து அருளின பின்பு தேவரீர் உடைய
கல்யாண குணங்களே ஆத்மாவுக்கு தாரகமாய் -அடியேனுக்கு இன்று ரசியா நின்றது-
தேவரீர் உடைய கிருபையின் ஸ்வபாவத்தை இக்கடல் சூழ்ந்த பூமியில் யார் தான் அறிவார் –
காரேய் கருணை -என்றது -கார் ஏய்ந்த கருணை என்றபடி –
ஏய்கை-ஒப்பு–

ஊமைக்கு திருவடி அருளி /கொங்கு பிராட்டிக்கு இரண்டு தடவை த்வயார்த்தம் சாதித்து அருளி /ஷீராப்தி செய்தி
/ப்ரஹ்ம ரஜஸ் /வீடு தந்தோம்-நீட்டும் இடத்தில் பரம் பொருள் / /கிரந்த நிர்மாணம் /ஆசை உடையார்க்கு எல்லாம் /
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ/ஸ்ரீ பாஷ்யம் அருளி /ஸூ கம்பீரம் –

————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை-
அவதாரிகை –
-மேகம் போலே சர்வ விஷயமாக உபகரிக்கும் க்ர்பையை உடைய எம்பெருமானாரே –
சதுஸ் சமுத்திர பரிவேஷ்டிதமான இந்த பூ பிரதேசத்திலே -தேவரீர் உடைய கிருபா ஸ்வபாவத்தை
தெளிந்தவர் யார் -சகல துக்கங்களுக்கும் சாஷாதாகரமான என்னை தேவரீரே எழுந்து அருளி-
அங்கீ கரித்த பின்பு -தேவரீர் உடைய கல்யாண குணங்கள் -என்னுடைய பிராணனுக்கு பிராணனாய் –
அடியேனுக்கு ரசியாது நின்றது என்று -எம்பெருமானார் திரு முகத்தைப் பார்த்து -நேர் கொடு நேரே
விண்ணப்பம் செய்கிறார் –

வியாக்யானம் –
காரேய் கருணை –
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷூ கவலாஹகம் போலே –
அனலோசித விசெஷா லோக சரண்யமான – க்ர்பை -சித்தே ததீய சேஷத்வே -சர்வார்த்தாஸ் சம்பவந்திஹி –என்னக் கடவது இறே –
-கார் -மேகம் ஏய்கை -ஒப்பு -இப்படிப் பட்ட க்ர்பையை உடைய -இராமானுச -எம்பெருமானாரே –
இக் கடல் இடத்திலே –
சதிஸ் சமுத்திர பரி வேஷ்டிதமான -இந்த -இருள் தரும் மா ஞாலத்திலே –
நின் அருளின் –
பர துக்க அசஹிஷ்ணுத்வ நிராசி கீர்ஷத்வாதி லஷணங்களோடு கூடி இறே கிருபை இருப்பது –
அப்படிப் பட்ட கிருபைக்கு நின் அருளின் என்று ஆஸ்ரிய ப்ராபல்யத்தாலே வந்த வெளிச் செறிப்பு
ஸ்வர்ணத்துக்கு பரிமளம் வந்தால் போலே-காணும் -இருப்பது –
தன்மை
-இப்படிப் பட்ட கிருபை ஸ்வபாவத்தை –
ஆரே அறிபவர் –
தெளிந்தவர் தான் யார் –
நித்ய விபூதியில் இருந்தவர்கள் ஆகில் -சதா பச்யந்தி -என்றும் -விப்ராச -என்றும் -ஜாக்ர்வாசா -என்றும் –
சார்வஜ்ஞம் உடையவர் ஆகையாலே -அறியக் கேட்டவர்கள் இத்தனை
-யாநிசா சர்வ பூதாநாம் தஸ்யா ஜாகர்த்தி சமயமி –என்னும்படி அஜ்ஞானத்தை விளைப்பிக்கும் பூலோகத்தில் இருந்தவர் தெரிகிலர்-என்றபடி –
அல்லலுக்கு –
-கர்ப்ப ஜன்மாத்யவச்தாஸ் துக்கம் அத்யந்த துச்சகம் -என்னும் படியான துக்கங்களுக்கு –
நேரே உறைவிடம் நான் –
-சாஷாத் ஆவாச பூமியாய் இருப்பான் ஒருவன்நான் – சரீர சம்பந்திகளுக்கு
வந்த துக்கங்கள் எல்லாம் தத் சம்பந்தத்தாலே -எனக்கு ப்ராப்தமானால் சிறிது இலகுவாய் இருக்கும் –
அப்படி அன்றிக்கே சாஷாத் எனக்கு வந்தது ஆகையாலே அவற்றுக்கு எல்லாம் நான் த்ர்டமான ஆஸ்ரயமாய்-இருந்தேன் -என்றபடி –
வந்து நீ –
நீ வந்து -தேவரீர் பர துக்க அசஹிஷ்ணுவாகையாலே -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய- ஆர்த்த த்வனி கேட்டவாறே
சர்வேஸ்வரன் அரை குலைய தலை குலைய வந்தால் போலே -பரம பதத்தின் நின்றும்-இவ்வளவாக எழுந்து அருளி
-என்னை
-துக்க ஆஸ்ரயமான என்னை –
உற்ற பின் –
த்வயாபி லப்த்த பகவன் நிதா நீ மனுத்த-மாம்பாத்ரம் இததயாயா -என்றால் போலே அலாப்ய லாபமாக என்னைப் பெற்றபின்பு –
உன் சீரே
-தேவரீர் உடைய கல்யாண குணங்களே – குணா நாமா கரோ மஹார் -என்றால் போலே சீர் என்னும்படியான-வாத்சல்ய சௌசீல்யாதி குணங்களை
-உயிர்க்கு உயிராய்
-ஆத்மாவுக்கு தாரகமாய் -லோகத்தில் எல்லாருக்கும் தம் தாமுடைய பிராணன் ஜீவன ஹேதுவாய் இருக்கும்
-இங்கு அப்படி அன்றிக்கே இவருடைய பிராணனுக்கு பிராணனாய்-காணும் அவருடைய சீர் இருப்பது
-அடியேற்கு
-சேஷ பூதனான எனக்கு -இன்று -இன்று -ரசஹ்யே வாயலப்த்த்வா நந்தீ பவதி -என்றும் –
சோச்நுதே சர்வான் காமான் சஹா -என்றும் –சொல்லப்படுகிற பிரம்மத்தின் உடைய கல்யாண குண அமர்த்த அனுபவமும்
-அடியார்கள் குழாம் களை-உடன் கூடுவது என்று கொலோ -என்று ததீயர் உடன் கூடிப் பண்ணக் கடவேன் என்று பிராத்தித்தபடி
தலைக் கட்டுவது பரம பதத்திலே யாய் இருக்கும் -அப்படி அன்றிக்கே எனக்கு இந்த பந்த -பத்த -தசையிலே தானே –
தித்திக்குமே –
ரச்யமாய் -ஆனந்த அவஹமாய் இருக்கும் என்று ஆய்த்து -தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித்
தித்தித்தால் போலே ஆய்த்து -என்றபடி -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே – என்னக் கடவது இறே—

————————————————————————————–

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை –
அநாதி காலம் அசங்க்யாதமான யோநிகள் தோறும் தட்டித் திரிந்தநாம் இன்று-நிர்ஹேதுகமாக
எம்பெருமானரை சேரப் பெற்றோமே என்று -ப்ரீதி பிரகர்ஷத்தாலே –திரு உள்ளத்தை குறித்து அருளி செய்கிறார் –

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-

வியாக்யானம் –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கையாலே இரண்டு தசையிலும் கூடி நிற்கிற நெஞ்சே –
தினமாய்-மாசமாய் -சம்வத்சரங்களாய் -கொண்டு வர்த்தியா நின்றுள்ள -காலம் எல்லாம் –
தேவாதி பேதத்தாலும் -அதில் அவாந்தர பேதத்தாலும் -பரிகணிக்க ஒண்ணாதபடி -திரண்டு-பல வகைப்பட்ட -யோநிகள் தோறும் –
ஒரு கால் நுழைந்த இடத்தே -ஒன்பதின் கால் நுழைந்து-தட்டித் திரிந்த நாம்-இன்று ஒரு நினைவு இன்றிக்கே இருக்க செய்தே
-காணத் தகுதியாய் இருந்துள்ள-திருத் தோள்களை உடையராகையாலே -ரூப குணத்தாலும் உத்தேச்யராய் -நமக்கு வகுத்த சேஷிகளாய் –
தர்சநீயமான திரு வத்தியூரிலே -நித்ய வாசம் பண்ணுகையாலே -அவ்வூரைத் தமக்கு நிரூபகமாக-உடைய பேர் அருளாள பெருமாள் உடைய –
பரஸ்பர சத்ருசமான -திருவடிகளின் கீழே -பிணிப்புண்ட-சிநேகத்தை உடையரான -எம்பெருமானாரை சேர்ந்து கொண்டு நிற்கப் பெற்றோம் –
நிகழ்தல்-வர்த்தித்தல் / ஈண்டுதல்-திரளுதல் /யோனி-ஜாதி–

—————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
லோகத்தில் ஒருவனுக்கு ஒரு நிதி லபித்தால் தன்னுடைய அந்தரனுக்கு சொல்லுமா போலே –
இவரும் தம்முடைய பந்த மோஷங்களுக்கு எல்லாம் பொதுவான மனசை சம்போதித்து கலா முகூர்த்தாதி
ரூபமாய்க் கொண்டு வர்த்திக்கும் காலம் எல்லாம் தேவாதி தேகங்கள் தோறும் சஞ்சரித்து இவ்வளவும் போந்தோம் –
இப்போது ஒரு சாதனம் இன்றிக்கே -சுந்தர பாஹுவாய் -தமக்கு உபாகரகரான பேர் அருளாளன் திருவடிகளின் கீழே
அங்குத்தைக்கு -ஒரு ஆபரணம் போலே இருந்துள்ள பிரேமத்தை உடையரான எம்பெருமானாரை சேர்ந்து கொண்டு-
நிற்கப் பெற்றோம் கண்டாயே -என்று சொல்லி ஹ்ர்ஷ்டர் ஆகிறார் –

வியாக்யானம் –
ஆண்டுகள் நாள் திங்களாய் –
நிகழ் காலம் எல்லாம் -கலா முகூர்த்தம் க்ர்ஷ்டாச்சா ஹோராத்ரச்சா-சர்வச -அர்த்தமாசாமா சாரிதவத்சம் வத்சரஸ் சகல்பதம் -என்றும் –
நிமேஷோ மாநுஷோயோசவ் மாத்ரா மாத்ர ப்ரமாணாத –தைரஷ்டாதசபி காஷ்டாத்ரி சத்காஷ்டா கலாச்ம்ரத்தா –
நாடிகாது பிரமானே னகலா தசசபஞ்சச -நாடிகாப்யா மதத்வ்யாப்யோ-முஹூர்த்தொர்விஜச த்தம -அஹோராத்ரா முஹூர்த்தாஸ்து
த்ரிம்சன்மாசாஸ் துதைச்ததா -மாசைர்த்வாதச பிர்வர்ஷா-மகோராத்ரம் துதத்வி -என்றும் சொல்லப்படுகிற – சர்வ காலமும்
-ஆண்டுகள்-வத்சரங்கள் -நாள்-தினம் -திங்கள்-மாசம் –நிகழ்தல் -வர்த்தித்தல்
ஈண்டு பல் யோனிகள் தோறு உழல்வோம் –
தேவ மனுஷ்யாதி ஜாதிகள் -ஒவ் ஒன்றிலே தானே அநேகம் அநேகமாக-அவாந்தர ஜாதிகள் உண்டு -அவை எல்லாவற்றிலும்
ஒருக்கால் புகுந்ததிலே ஒன்பதின் கால் புகுந்து –மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்கிறபடியே அநாதிகாலம் பிடித்து
-சஞ்சரித்து போந்தோம் -ஈண்டுதல் -திரளுதல் -யோநி-ஜாதி -உழலுகை -தட்டித் திரிகை
-மனமே –
-பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் -அறிவுக்கு பிரசவ த்வாரமான-நீ அறிந்தாய் என்று -அந்தரங்கமான மனசை சம்போதித்து அருளிச் செய்கிறார்
-ஏவம் சம்ஸ்ர்தி சக்ரச்தே பிராமய மானேஸ்-ச்வகர்மபி ஜீவேது காகுலே -என்கிறபடி இவ்வளவும் சஞ்சரித்துப் போந்தோம்
-இன்று-
இப்போது-
ஓர் எண் இன்றியே –
-நான் ஒன்றை எண்ணிக் கொண்டு இராதே இருக்க –எம்பெருமானார் திருவடிகளிலே-ஒரு சைதன்ய கார்யத்தையும் பண்ணாதே இருக்க –
காண் தகு தோள் அண்ணல் –
ஆயதாஸ்ஸ சூவ்ர்த்ததாச சபாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா -என்கிறபடியே இருந்துள்ள-
திருத் தோள்களை உடையவராய் -விந்த்யாடவியில் நின்றும் காஞ்சி புரத்துக்கு துணையாக வந்து –
அஹம் ஏவ பரதத்வம் -என்று திரு கச்சி நம்பி மூலமாக உபதேசித்த உபாகாரகனாய் –
தென் அத்தியூர் –
தர்சநீயமான –நகரேஷு காஞ்சி -என்னப்பட்ட காஞ்சி புரத்திலே -ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்வல பாரிஜாதம் -என்று தாமே அருளிச் செய்யும்படி
ஹஸ்த கிரியில் எழுந்து அருளி வகுத்த சேஷியான பேர் அருளப் பெருமாள் உடைய –
-கழல் இணைக் கீழ் –
-பாவனத்வ-போக்யத்வங்களுக்கு பரஸ்பர சதர்சமான திருவடிகளின் கீழே பூண்ட அன்பாளன் -சிரோ பூஷணமான-
திரு அபிஷேகத்தை அலங்கரிக்கும் அவர்களைப் போலே தம்மாலே அலங்கரிக்கப்பட்ட-பக்தி பிரகர்ஷத்தை உடையரான –
இராமானுசனை –
-எம்பெருமானாரை –
பொருந்தினமே –
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே-என்றும் -ராமானுஜ பதாச்சாயா -என்றும் சொல்லுகிறபடியே பொருந்தி விட்டோம் கண்டாயே -என்று
தாம் பெற்ற வாழ்வுக்கு ஹர்ஷித்துக் கொண்டு நின்றார் ஆய்த்து –

—————————————————————————————————-

பெரிய ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை-
இப்படி உபதேசித்த விதத்திலும் ஒருவரும் இதில் மூளாமையாலே-அவர்கள் உடைய படியை அனுசந்தித்து இன்னாதாகிறார் –

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே – -44 –

விச்தீர்னையான பூமியில் உள்ளோர் புருஷார்த்தம் எது என்று இச்சியா நிற்பார்கள் –
சொல் நிரப்பத்தை உடைத்தாய் -அத்விதீயமாய் -இயல் இசை நாடக சம்பந்தத்தாலே-மூன்று வகைப்பட்டு இருந்துள்ள தமிழும் –
ருகாதி சதுர்வேதங்களும் -அசங்யேயமான -தர்ம மார்க்கங்களான சகலமும் -அலகலகாக ஆராய்ந்து இருக்குமவராய் –
எண்ணப் புக்கால் எண்ணித் தலைக்கட்ட வரிதான கல்யாண குணங்களை உடையவராய் –
சத்துக்களுடைய ப்ரீதி பிரகர்ஷத்தாலே அடைவு கெட ஏத்தும்படியாய் இருக்கிற-
எம்பெருமானாருடைய -திரு நாமத்தை -நான் சொன்ன வார்த்தையை -விஸ்வசித்துக் கற்கிலர்கள் .
ஐயோ இவர்கள் அளவு இருந்தபடி என் என்று கருத்து –
எண்ணரும் சீர் -என்கிற இது நல்லாருக்கு விசெஷணம் ஆகவுமாம் –
நம்புதல்-விருப்பமுமாம் –

———————————————————————————————

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழ் பாட்டில் லோகத்தார் எல்லாருக்கும் அவருடைய அதிகார நதிகார விபாகம் பாராதே அத்யந்த விலஷணமான
உபாயத்தை உபதேசித்ததாலும் -அத்தை அத்யவசிக்க மாட்டாதே புருஷார்த்தம் எது என்று சந்தேகியா நின்று கொண்டு –
சிஷிதமான சப்த ராசியால் நிறையப் பட்டதாய் –அத்விதீயமாய் இயலும் இசையும் சந்தர்ப்பமும் கூடிய விலஷணமான
இப் பிரபந்தமும் -ரிகாதி வேத சதுஷ்டயமும் -அபரிமாய் தத் உப பிரஹமணமான தர்ம சாச்த்ரமாகிற இவற்றை
அடைவே ஆராய்ந்து இருக்குமவராய் -சத்துக்களாலே அடைவு கெட ஸ்துதிக்கும்படியாய் இருக்கிற எம்பெருமானாருடைய
திருநாமத்தை அப்யசியாதே போனார்களே என்று இன்னாதாகிறார்-

வியாக்யானம் –
அகலிடத்தோர் –
அநந்தா என்றும் விபுலா என்றும் பேரை உடைத்தான இந்த மகா ப்ர்த்வியில் உள்ள சேதனர்கள்-
எது பேறு என்று காமிப்பர்-நான் இவர்களது இழவைக் கண்டு பொறுக்க மாட்டாதே
-மந்த்ரம் யத்நேன கோபயேத்-என்கிற-சாஸ்திரத்தையும் அதிக்ரமித்து -அத்யந்த சுலபமாய் குரோர் நாம சதா ஜபேத் -என்கிறபடியே
-ததீய சேஷ தைகரஸ்-ஸ்வரூப அநு ரூபமாய் -பரம போக்யமான சதுரஷரியை உபதேசித்தாலும் -அதிலே நிஷ்டர் ஆகமாட்டாதே
அறிவு கெட்டு -பின்னையும் -நமக்கு ஓர் சரணம் எது என்று இங்கும் அங்கும்நாடி -அந்த இச்சையோடு காலம் எல்லாம் இப்படியே
வ்யர்தமாகப் போக்குகிறார்கள் -ஐயோ இவர்கள் ப்ராப்தத்தின் உடைய க்ரௌர்யம் இங்கனே யாய் தலைக்கட்டிற்று-என்று இன்னாதாகிறார்
ஆனால் அத்யயனம் பண்ணுவிக்கும் அவர்கள் மந்த மதிகளுக்கு பின்னையும் ஒரு சந்தையை சொல்லி
அவர்கள் தரிக்கும் அளவும் க்ர்ஷி பண்ணுவார்கள் இறே-அப்படியே நீரும் செய்ய வேண்டாவோ என்ன –
யச்சகிம் கிஞ் ஜகத் சர்வம் த்ர்சயதே ச்ருயதேபிவா -அந்தர்பகிச்த தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்த்தித -என்றும்-
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -என்றும் பிரபாவ புரச்சரமாக
அந்த மந்த்ரத்தை உபதேஸித்தால் போலே -இவரும் தாம் முன்பு அருளிச் செய்த சதுரஷரி மந்த்ரத்தை எதிரிட்டு
பிரபாவ வர்ணன பூர்வகமாக அருளிச் செய்கிறார் –
-சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் –
சீர் தொடை ஆயிரம் -என்றும்-சடகோப வாங்மயம் -என்றும் சொல்லுகிறபடியே கோமளங்களாய்-
தத்வார்த்த நிச்சாயகங்களான சப்தங்களாலே நிறையப்பட்ட-தமிழ் என்று -திரு வாய் மொழி –
ஒரு
என்ற சப்தம் காகாஷி நியாயேன பூர்வ உத்தர பதங்களிலே அன்வயிக்கும் -லோகத்திலும்-வேதத்திலும் அதுக்கு சதர்சமான பிரமாணம் இல்லை என்ற படி –
மூன்றும் -அதுக்கு மூன்று பிரகாரமாக கணிசிக்க தக்கதாய்-அத்விதீயமான மற்ற மூவாயிரப் பிரபந்தமும்-
-இப்படி ஆழ்வார் பதின்மராலும் செய்யப்பட சமஸ்த திவ்ய பிரபந்தங்களும் –
அன்றிக்கே ஒரு மூன்று என்றது திருவிருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி யும் பொருள் ஆகவுமாம்.
அன்றிக்கே சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் -சொல் நிரப்பத்தை உடையதாய் -அத்விதியீமாய் –
இயல் இசை நாடக சம்பந்தத்தாலே மூன்று வகைப்பட்டு இருந்துள்ள தமிழ் என்னவுமாம் –
ஸ்ருதிகள் நான்கும் –
பிரமானாந்தரன்களைப் போலே அநித்யுமுமாய் சாபேஷையுமாய் இருக்கை-
அன்றிக்கே -வாசாவிருபு நித்யா -என்றபடி நித்தியமாய் அபௌருஷேயுமாய் சவாத பிரமாண முமாய்-புஸ்தக நிரீஷனாதி சாத்தியம் அன்றிக்கே
-ஸ்வாத்யா யோத்யே தவ்ய-என்கிறபடியே -ஆசார்ய உச்சாரண-அநு உச்சாரண மகாத் அயன சாத்தியமாய்
-ரிசோ யஜூ சி சாமானி ததைவா தர்வணாநிச -என்னும்படியான-பேர்களை உடைத்தாய் கொண்டு நாலு வகைப்பட்ட வேதங்களும்
-எல்லை இல்லா அற நெறி –
அந்த வதந்களிநிடைய-அர்த்த பிரகாசங்களாய் தொகை இட்டு சொல்ல ஒண்ணாதபடி -அனந்தமான தர்ம மார்க்கங்களை –
யாவும் தெரிந்தவன்
-வேத மார்க்க பிரதிஷ்டாப நாசார்யா – உபய வேதாந்த சார்யர் -ஆகையாலே-இவை எல்லாவற்றையும் அலகலகாக ஆராய்ந்து இருக்குமவராய்
-எண்ணரும் சீர் –
இவர் பகவத் அவதாரம் ஆகையாலே-சங்க்ய அனும் நை வசக்யந்தே குணா -என்னும்படி அனந்த கல்யாண குனாகரராய்
-நாதச்யேச கஸ்ய நதஸ்ய நாம மகத்யச –என்னும்படியான அவனுடைய கீர்த்தியை பரிச்சேதிக்கிலும்-இவருடைய கீர்த்தியை பரிச்செதிக்க ஒண்ணாது காணும் –
அன்றிக்கே -எண்ணரும் சீர் -என்றது -நல்லோர் என்ற பதத்துக்கு விசேஷணம் ஆகவுமாம் -அப்போது
-வாசா மகோசர-மகா குணா தேசிகாக்ர்ய கூராதி நாத -என்னும்படி எண்ணித் தலைக் கட்ட அரிதான கல்யாண குணங்களை உடையவரான
ஆழ்வான் பிள்ளான் எம்பார் தொடக்கமானவர் -என்றபடி
-நல்லார் பரவும்
-ஜயதி சகல வித்யா வரஹி நீ ஜன்ம சிலோ –இத்யாதியாலும் -காதா தாதா கதானாம் -இத்யாதியாலும் -வாழி எதிராசன் -இத்யாதியாலும்
–அந்த சத்துக்கள் உடைய-பிரதி பிரகர்ஷத்தாலே அடைவு கெட ஏத்தும்படி இருக்கிற –
இராமானுசன் திருநாமம் –
எம்பெருமானாருடைய திருநாமம் –ராமானுசன் என்கிற இத் திருநாமத்தை
-நம்பிக் கல்லார் –
இவருடைய பிரபாவத்தை அறிந்து விச்வசித்து -இவருக்குதிருநாமமான சதுரஷரி மந்த்ரத்தை -அப்யசியாதே போனார்கள்
-குரங்கானாலும் மகாராஜர் ப்ரத்யயம் பண்ணின பின்பு-விச்வசித்தார் இறே -இவர்கள் சதசத் விவேசனம் பண்ணுகைக்கு
-யோக்யரான மனுஷ்யராய் இருந்தும் –நம்மை-எம்பெருமானார் விஷயீ கரித்ததை தெளிவித்து ப்ரத்யயம் பண்ணிக் கொடுத்தாலும்
-இவர்கள் விச்வசிக்க-மாட்டாதே போனார்கள் -இவர்கள் அபாக்யத்தின் க்ரௌர்யம் என் என்று இன்னாதாகிறார் —

————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம் –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -190- திருவாய்மொழி – -10-10-6….10-10-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 26, 2016

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

பிராட்டி பக்கல் பிரணயி போலே நிரதிசய பிரணயித்தவம் போக்யத்தை காட்டி அருளினாய் -மேலும் -முழுக்க நிர்வகிக்க வேணும்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்-காயாம்பூ தன்னிலம் -புண்டரீகம் போலே திருக்கண்கள்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் -தாமரை மலரால் -பத்மாலயா பத்மாசனம் -நிரதிசய போக்யதை பூதை
மணம் பரிமளம் உருவெடுத்தால் போலே -ஆத்மகுணம் கொண்ட
அன்பேயோ-அன்பே யாகவே தர்மமாகவே -அன்பே வடிவமாகக் கொண்ட -எனக்கு
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
-நிரதிசய போக்யத்தை ஹேயமான எனது பிரக்ருதியை -விலக்ஷண ஆத்மாவையும் -ஆவி சரீரம்
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
திருப்தி பெறாத படி விரும்பி அனுபவித்து -இனி குறையும் புஜிப்பித்தே விட வேண்டும் -அவன் புஜித்து-அவன் ஆனந்தம் கண்டு
நாம் மகிழும் படி -உனது அவனுக்கு நிருபாதிக போக்த்ருத்வம் சேதனனுக்கு போக்யமும் -அனுபவ ஜெனித ப்ரீதி கண்டு
ஜீவன் ஆனந்தம் -அஹம் அன்னம் ஸ்வரூபம் -ஞானத்துக்கு வடிகால் வேண்டுமே -கைங்கர்யம் பண்ணி அவன் அனுபவிக்க –
அவன் ஆனந்தம் கொண்டு நாம் ஆனந்தம் -அப்ரதானம் என்றபடி –

பெரிய பிராட்டியார் பக்கல் போலே-என் பக்கல் மிக்க காதலை உடையவனாய்
என் சரீரத்திலும் ஆத்மாவிலும் மிக்க விருப்பத்தைச் செய்து-அனுபவித்த நீ
என்னைக் கைவிடாமல் ஈண்டென-அங்கீ கரித்து அருளாய் –என்கிறார்-

எனக்கு ஆரா அமுதமாய் –
தேவசாதியினுடைய உப்புச் சாறு போலே அன்றியே-
எப்பொழுதும் அனுபவிக்கத் தகுந்ததாய்-நித்ய சூரிகள் கூட அனுபவிக்கும் உன்னை-
பிறவியிலே உழந்து திறக்கிற எனக்கு தந்தாய் –

எனது ஆவியை –
என்னுடையது என்னுமதுவே காரணமாக-
காதலியின் அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே-என் உடம்பை விரும்பினாய் –

இன்னுயிரை –
பகவான் உடைய அபிப்ராயத்தாலே-
தவதவ நாறுகிற படி –
தவ -பாரதந்த்ர்யம்
மற்றொரு தவ -உரிச் சொல்
அன்றிக்கே
செவ்வாய் கிழமை மங்கள வாரம் என்னுமா போலே –
சரீரத்தோடு சேர்ந்து இருக்கையாலே தண்ணிது -என்று சொல்கிறார் -என்னவுமாம்-

மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் –
மனத்துக்கு அமையாமையாலே-எக்காலத்தும் அனுபவித்தாய் –

இனி உண்டு ஒழியாய்-
நீ தொடங்கின கார்யத்தையும்-நடுவே குறை கிடக்க விடாதே-அங்கீ கரித்து அருளாய் -என்றது
நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் துணை செய்தது உண்டோ –திருவிருத்தம் தொடங்கி அனுபவித்தாயே –
உன் கார்யத்துக்கு உன்னை வேண்டிக் கொள்ள வேண்டுமோ-
இவருடைய அமுதத்துக்கு அனுபவிக்கும் தன்மை உண்டு காணும் –போக்த்ருத்வம் உண்டே –

இவ்வாத்மாவையும்-இதனுடைய சரீரத்தையும் விரும்புகை உனக்குச் சேருமோ-
நீ உகந்தாருக்குச் சேருமோ –
புனக்காயா நிறத்த-
தன்னிலத்தில் அலர்ந்த-காயம் பூ போலே ஆயிற்று -வடிவு இருப்பது –

புண்டரீகக் கண் –
வாத்சல்யம் ஆகிற அமுத மழையைப் பொழியும்படி-ஆயிற்று கண்கள் இருப்பன –

செங்கனி வாய் –
சிவந்து கனிந்து ஆயிற்று-முறுவல் இருப்பது-பிராட்டி விரும்பும் துறைகள் அல்லவோ இவை-
அக்காயா தாமரை பூத்துக் கனியப் பழுத்தால் போலே ஆயிற்று-
திரு மேனியும் திருக் கண்களும் திருப் பவளமும் -இருப்பது-

உனக்கு ஏற்கும் கோலம் –
இவனைப் போன்று வார்த்தையால்-
கசக்குதற்கும் பொறாத மிருதுத் தன்மை உடையவள்-
இப்படிப் பட்ட உனக்கு ஒத்த அழகினை உடையளாய்-

மலர்ப் பாவைக்கு அன்பா –
மலரில் மணத்தை வடித்து வகுத்தால் போலே -வடிவை ஆக்கினால் போலே –இருக்கிற பிராட்டிக்கு அன்பனே
உனக்கு ஏற்கும் கோலம் -என்று-அவ் அழகினை இங்கே ஏறிடுகிறார் -நியாயாதிதேசம் –
அதிதேசம் = ஏறிடுதல்
ஸ்வரூப அதிதேசம் இல்லை இங்கு -முற்றுவமை இல்லை-
நியாய அதிதேசம் -அது போன்று இது -சிறப்புடைத்து –
காயம் பூ பொருந்தாதே ஹிரண்ய வர்ணை அன்றோ -அதனால் பெருமை பொருந்தும் -அவனைப் போன்ற அழகு உடையவள் என்றபடி —

கோலம் மலர்ப் பாவைக்கு அன்பா -என் அன்பேயோ-
அவள் பக்கல் அன்புடையவன் -என்று தோற்றி இரா நின்றது-
தம் பக்கல் -அன்பு என்றும் -அது உடையவன் என்றும்-தெரிக்க போகிறது இல்லை –
ஞானத்தை உடையவனை ஞானம் என்ற சொல்லால் கூறுவது போன்று-
தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -சாரீரக மீமாம்சை-2-2-20-
ஞானத்தை முக்கிய குணத்தை உடையவன் ஆகையாலே
ஜீவன் ஞானம் என்று இறைவனைப் போன்று கூறப்படுகிறான் –

——————————————————————————————————————-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

ஆச்ரித ரக்ஷகனான உன்னை பெற்று வைத்து இனி விடுவேனோ -வராஹ நாயனாரை பெற்றதும் –
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ-வடிவு அழகு -போக்யத்தை-உடைய பிராட்டிக்கு உகப்பான வைத்தாலே ஏன் பாக்கள் அதி பிறாவண்யம் -அந்தப்புர பரிகாரம் என்பதால்

நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்-கடலில் -நீல ரத்ன கிரி -சந்திரர்கள் ஒட்டி -கோரைப் பற்கள் சந்திரர்கள்
-அழுக்கு போலே பூமா தேவி ஒட்டிக் கொண்டு
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
வி லக்ஷணமான வடிவை -ஸ்ரீ பூ வராகன் ஸ்ரீ மூக்ஷணம் -அத்விதீயமான -மஹா வராஹா பெரும் கேழலார்
-புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -விஷயீ கரிக்க தேடி ஆழ்வாரை பிடித்து -எங்கும் பக்க நோக்கு அறியான் பைம் தாமரைக்கு கண்ணன்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ–இறுதி இனி -வராஹ அவதாரம் சொல்லி நியமிக்கிறார்
-ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே திரு விருத்தத்திலும் -நிகமித்தார்
பூமியை பிரளயத்தில் புக்கு முழுகி எடுத்து திருமுடியில் வைத்து -இத்தால் சம்சாரத்தில் இருந்து என்னை எடுத்துக் கொண்ட
சம்சார ஆர்ணவம் -ஸூ சிப்பிக்கவே இந்த திருவவதாரம் –
உன் வடிவில் நிழலீட்டாலே -நீலக் கடல் -பாற் கடல் -ஸ்ரீ தேவிக்காக -நீல ரத்னங்கள் உள்ள கடல் -நீல மூலிகைகள் இருந்து நீலம் என்றுமாம்
மூன்றாவது இத்திரு -அருமை தொழில் செய்து ஆஸ்ரிதரை ரஷித்தவனே -புருஷகார பூர்வகமாக எனக்கு நல்லையாய்
-உன்ன பெற்று லபித்து க்கை புகுந்த பின்பு நழுவ விடுவேனோ

நான் பெரிய பிராட்டியாரை சார்ந்தவன் ஆகையால்-பிரளயத்தில் மூழ்கின ஸ்ரீ பூமிப் பிராட்டியாரை எடுத்து
அவளோடு கலந்தால் போலேயும்-
கடலைக் கடைந்து பெரிய பிராட்டியாரோடு கலந்தால் போலேயும்-பிறவிக் கடலில் மூழ்கின என்னை எடுத்து
என்னோடு கலந்தருளி-
என் பக்கல் மிக்க காதலைச் செய்த-உன்னைப் பெற்று வைத்து இனி தப்ப விடுவேனோ-என்கிறார்-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ –
பிராட்டி பக்கல் உள்ள அன்பின் மிகுதியாலே-அந்த அன்பே காரணமாக அவளால் அங்கீ கரிக்கப் பட்ட-
என் பக்கலிலே மிக்க அன்புள்ளவன் ஆனவனே-
ரிஷிகளை ரக்ஷித்து அன்றோ பிராட்டியால் ஆலிங்கனம் பெற்றார் பெருமாள்
பட்டர் தம்முடைய அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை-
பெரிய பிராட்டியார்க்கு அன்பன் ஆகையாலே-அவளால் அங்கீ கரிக்கப் பட்ட நமக்கும் அன்பனாம் என்று
இப்பாட்டினை-நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -என்பது -என்று ஜீயருக்கு அருளிச் செய்தார் –
திரு மால் என்னை ஆளும் மால் -10-7-5-என்னும்படியே-
தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ –என் அன்புக்கு அடி இல்லையோ –
திருவுக்கு பரிகரமான என்னிடமும் மால் -மால் நடுவில் -திரு என்னை இரண்டு பக்கமும் –
திரு மால் இடம் பேசி இருவருமாக என்னை ஆள்வார்கள் -கைங்கர்யம் கொள்ளுவார்கள் -என்றபடி –

நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் –
ஒரு நீல மலை-இரண்டு பிறையைக் கவ்வி-நிமிர்ந்தால் போலே-
பிறையில் மறுவைப் போன்றதாயிற்று -திரு எயிற்றில் கிடந்த பூமி –

கோல வராகம் –
மாசு உடம்பில் நீர் வாரா நின்ற நிலை அன்றோ-இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயம் ஆயிற்று-
அன்றிக்கே-
பாசி தூரத்து கிடந்த பார் மகள் -என்கிறபடியே-
காதலி அழுக்கோடு இருக்க-தாமான படியே வருவார் ஆகில்-காதலுக்கு குறைவாம் இத்தனை அன்றோ –என்னுதல்-
அவன் அழிவுக்கு இட்ட வடிவிற்கே அன்றோ இவர் ஆலத்தி வழிக்கிறது-
மாசுடம்பின் நீர் வாரா மானமிலா பன்றி இவர் கண்ணுக்கு கோலா வராஹம் -ஆலத்தி எடுக்கும் படி –
பிரணயித்துவுக்கு நமஸ்காரமாகுமே அலங்கரித்து வந்தால் -தாம் தாமான படியில் வரக் கூடாதே -ராஸிக்யம் பூர்த்தி –

ஒன்றாய் –
வராகத்த்தின் இனத்தோடு சேர்ந்ததாய் -என்னுதல்-
மூன்று உலகங்களையும் கண் செறி இட்டால் போலே -மறைத்தால் போலே-விம்ம வளர்ந்த படியாலே ஒப்பு அற்றதாய் -என்னுதல்-
நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் –
பிரளயம் கொண்ட பூமியை அண்டத்தின் உடைய சுவரிலே புக்கு-திரு எயிற்றிலே கொண்டு எடுத்தால் போலே-
பிறவிக் கடலிலே மூழ்கின என்னை எடுத்தவனே –

நீலக் கடல் கடைந்தாய் –
பிராட்டியைப் பெறுகைக்காக-கடலைக் கடைந்தவனே-கடைகிறவனுடைய நிழலீட்டாலே-நீலக் கடல் -என்கிறார் –
அன்றிக்கே –
எல்லா மருந்துகளையும் போகடுகையாலே வந்த-நிற வேறுபாட்டாலே சொல்லுகிறார் -என்னவுமாம்-
அன்றிக்கே-
நீலம் -எனபது நீல இரத்தினத்தைச் சொல்லிற்றாய்-அவை மிக்கு இருந்த காரணத்தால்-
இரத்தினாகரம் -என்ற பெயரை நோக்கி கூறுகின்றார் என்னவுமாம் –

உன்னைப் பெற்று இனி போக்குவனோ –
ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-
பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து-
என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ-
நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-

————————————————————————————————-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8-

துர் அவகமானான் அறிய அறிய ஸர்வதாத்மா மறைந்து இருந்து தாரகனாக உன்னைப் பெட்ரா பின்பு க்கை விடுவேனோ
பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்-புண்ய பாபங்களை நிர்வாகன்-கர்மாவைஷ்யனான ஆத்மாவுக்கு நியாந்தா
-கர்மங்களால் உண்டான சுக துக்கம் பிரதனானாக
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-அடக்கி உள்ள மூல பிரக்ருதியை பிரகாரமாக கொண்டு -கர்மா நிபந்தமாக புகுந்த
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-வித்து தனி வித்து முதல் வித்து -ஸூ சங்கல்பத்தால்
ஸ்வ தந்த்ரனாக சங்கல்ப ஆதீனத்தால் பிரவேசித்து -அறிய ஒண்ணாதபடி அதி சூஷ்மமாக
எனக்கு அடைய பிரதம ஸூ ஹ்ருத் நீயே தானே -அத்விதீய காரணம் -வித்து -காரணம் -தனி அத்விதீயம் –
எனக்கு நிரூபணம் அபரிச்சின்ன பிராண பூதன்-மூன்றையும் சேர்த்து -தனி -பேர் உயிர் -மூன்றையும் உவமானம் இல்லாமல் –
-அபரிச்சின்ன -பிராணன் -உன்னை விடில் முடியும் அவஸ்தை பிறந்த பின்பு விட முடியுமோ –
ஓ பயத்தால் -துக்கம் -விட்டால் என்ன செய்வேன் –

சிறிதும் அறிய முடியாதவனான உன்னை-பெற்று வைத்து-இனி விட உபாயம் -இல்லை-என்கிறார்-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை –
ஓர் அச்சு இல்லாக் காசாய் போகிற்றாகில் போகிறது-என்று இருக்கிறேனோ-
அன்றிக்கே-உன்னை நீ அறியாயோ -என்னுதல்
மிக மிகத் தாழ்ந்தவனாய் இருந்த எனக்கு-மிகவும் தாரகனான உன்னைப் பெற்று வைத்து-
இனி நான் உன்னை விடுவேனோ –

என் தனிப் பேர் உயிரை –
வரில் போகடேன் -கெடில் தேடேன் -என்று-இருக்கிற ஆத்மாவின் அளவேயோ-
இயம் சீதா -ப்ரதீச்ச -பத்ரம் -மேல் விழுந்து அங்கீ கரிக்க வேணும் -என்றார் ஸ்ரீ ஜனக மகாராஜர் –
உன்னை -என்றதனை விவரிக்கிறார் -மேல்
உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரேயோ -8-1-5-என்கிறபடியே-
எல்லா ஆத்மாக்களுக்கும் ஆத்மாவான உன்னை –
பெற்று இனிப் போக்குவேனோ -என்றது -மற்றைய இலாபங்களில் வேறு பாடு-இஹ பார லோக ஐஸ்வர்யம் போலே இல்லையே –
என் தனிப் பேர் உயிரை -என்றது தம்மில் வேறுபாடு –கைவல்யத்தில் இருந்து மாறுபாடு –

உற்ற இரு வினையாய்-
ஆத்மாவைப் பற்றிக் கிடக்கிற நல்வினை தீவினை கட்கு நிர்வாஹகன் ஆனவனே-
உன்னை ஒழிய வேறு சில கர்மங்களை-தனித்து இயலும் தன்மையை உடையவனாய்-
நினைத்து இருந்தேன் ஆகில் அன்றோ உன்னை விடல் ஆவது –

உயிராயப்-
நல்வினை தீ வினைகளைச் செய்கிற ஆத்மாவுக்கு-நிர்வாஹகனாய்-
அந்த இரு வினைகளைச் செய்கிறவன் தான் உனக்கு உரியவன் அன்றாகில் அன்றோ உன்னை விடலாவது –அனுஷ்டாதாவும் உன் ஆதீனம் —

பயன் ஆயவையாய் –
அக் கர்மங்களின் உடைய பலத்துக்கு நிர்வாஹகனாய்-நல்வினை தீ வினைகளின் பலன் உன்னை ஒழிய-
வேறு சிலரால் கிடைக்கின்றது என்று-இருந்தேன் ஆகில் அன்றோ விடலாவது-

முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-
இவை எல்லாம் ஆகிய த்ரை லோக்யம் ஆகிய தூற்றை -அனுஷ்டாதா கர்மம் கர்ம பலன்கள் -பிரகிருதி
த்யாஜ்யம் ஆகிய சம்சாரம் உன்னை ஒழிய வேறு இல்லையே –
பெரும் தூறு சம்சாரம் புக்க இடமும் போந்த இடமும் தெரியாத படி அன்றோ சம்சாரம் -அறிய முடியாதபடி என்றவாறு –
புக்கு -அநாயாசேன தேவரீர் புக்கு –
தூறாய் -உபாதான காரணமாக இருந்து உண்டாக்கி -கடல் ஞாலம் செயதேனும் யானே என்னும் –
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-
நீ வியாபியாது இடம் உண்டாகில் அன்றோ விடுவது -வியாப்பியங்கள் அறியாத படி அன்றோ நின்றாய்
கண்ணுக்கு விஷயம் ஆனாய் ஆகில் பிழையேனோ -மறைந்து அன்றோ உள்ளாய்
அல்லாதாருக்கு வெளியிடாமல் இருந்து என் முதல் தனி வித்து –
அறிவித்து அருளி -பிரதம ஸூ ஹ்ருத் நீ அன்றோ –
நான் ஓர் அடி விட நின்றேன் ஆகில் ஆறி இருப்பேன் –

—————————————————————————————-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

ருசி வளர்ந்ததை யம் – -பிரகார பிரகாரி பாவம் /சரீர சரீரி பாவம் /காரண கார்ய பாவம் நினைவு படுத்தி யும் –
ஆர்த்தி துடிப்பையும் – அறிவிக்கிறார் –
காரண கார்ய அவஸ்தை -சூஷ்ம ஸ்தூல -உபய அவஸ்தையிலும் -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம்
-ஒரே இடத்தில் பர்யவசாயம் ப்ரஹ்மம் -ஒன்றே -உன்னை -விசேஷயம்-
பிரகாரி பிரதானம் -தத் தத் வியா வ்ருத்தமான-விலக்ஷண ஸ்வரூபம் குணாதிகளை -தனிச் சிறப்பு -உன்னை என்று வந்து கிட்டுவின்
முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்-உபாதானம் நிமித்த காரணம் -முதல் நிமித்த -தனி -உபாதான -அபின்ன நிமித்த காரணம் –
வியஷ்ட்டி சிருஷ்டியை சொல்லி
ஸமஸ்த வஸ்துக்களுக்கு எல்லாம் -பிரதான நிமித்த காரணம் -சஹகாரி நிரபேஷமான உபாதான காரணம்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு-கரந்து வியாபித்து -மஹான் அஹங்காரம் விகாரம் அடைந்து –
அண்டத்துக்கு உள்ளும் வெளியிலும் அத்விதீய காரணம்
அண்டத்துக்கு அந்தர்கதமாயும் -பூர்ண ஸமஸ்த பதார்த்தங்களில் வியாபித்து -நியாந்தா தாராகம் -அத்விதீய காரணம்
வாழ் பாழாய்-பிரகிருதி -/போக மோக்ஷம் இரண்டுக்கும் /வாழ்வதற்கு இடம் கொடுக்கும் பாழ் /விளை நிலம் -மூலப் பிரகிருதி மண்டலம்
பிராகிருத பூமிக்கு நியாமகன்
முதல் தனி -நியந்த்ருத்வம் -பிரதானம் –போகத்துக்கும் மோக்ஷத்துக்கும் -அபேஷா நிரபேஷமாக தன் பேறாக கொடுப்பவன் –
அசித் ஸ்வ பாவ வியாவருத்தியால் -ஸ்வரூப விகாரம் இல்லை -உவமானம் இல்லாமல்
சித்தை போலே ஸ்வ பாவக விகாரம் இல்லை –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ-அவி நாசி ஆத்ம சமஷடிக்கு நிர்வாஹன் -ஆத்மதத்வம்
-ஒவ் ஒன்றாய் ஒன்றுக்குள் வியாபிக்கும் அணு தானே ஆத்மா -கோடானு கோடி ஆத்மா -தர்ம பூத ஞானத்தால் பரவி –
ஆத்ம வர்க்கத்துக்கு நியாந்தா -பத்து திக்கிலும் ஞானம் -இப்படிப்பட்ட தேவரீரை
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்-ஜெகதாகாரம் அன்றியே -அத்யந்த விலக்ஷணன்
-உன்னை உன்னை -நீ யாகிய உன்னை -சேதன அசேதன விசிஷ்டம் நீ குற்றம் தட்டாத உன்னை –
ஸ்வரூப ரூப குணங்கள் -பெரும் விடாய் பட்ட நான் என்று வந்து கூடக் கட வேன் –

தானி சர்வாணி தத் வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-86-அவை யாவும் அவனுடைய சரீரம் என்றும்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ரதிவி சரீரம் -அந்தர்யாமி ப்ரஹ்மணம்-எவனுக்கு ஆத்மாக்கள் சரீரமோ எவனுக்கு மண் சரீரமோ -என்றும்
தத் சர்வம் வை ஹரே தாணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-38-அது முழுதும் அவனுடைய சரீரம்-என்றும்-சொல்லுகிறபடியே எங்கும் வந்து முகம் காட்டலாம்படி-
உலகத்தை உருவமாகக் கொண்டு இருக்கும்-இருப்பைக் காட்டித் தந்தோம் அன்றோ -என்ன-
அது உகந்தார்க்கும் உகவாதார்க்கும் பொதுவாய் இருந்தது-
வேறு உருவம் இல்லையாகில் அன்றோ-அதுவே அமையும்-என்று ஆறி இருக்கலாவது-
பரம பதத்தில் வேறுபாட்டோடு கூடியதாய்-எல்லாம் நிறைந்ததாய் இருக்கும் இருப்பை-காண வேண்டும் –என்கிறார் –

முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தேயோ –
மூன்று உலகங்கள் தொடக்கமான-எல்லாவற்றுக்கும்-மூன்று விதக் காரணங்களும் ஆனவனே-
இதனால் -காப்பாற்ற என்று புக்கால்-காப்பாட்ட படுகின்ற பொருள்களின்-துணை வேண்டாதவனே -என்பதனைத் தெரிவித்த படி –
முதல் -நிமித்த காரணம்-
தனி -துணைக் காரணம்-
வித்து -முதல் காரணம்-

முதல் தனி உன்னை –
முதன்மை பெற்றவனாய்-ஒப்பற்றவனாய்-குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்து இருக்கின்ற நீயான உன்னை-
தனி -சஹகாரி வேண்டாதவன் – ஸூய ரக்ஷணம் – அவனது உணவை பறித்தால் போலே –

எனை நாள் வந்து கூடுவன் நான் –
என்று வந்து கூடுவேன்-
அவன் கொடுத்த ஞானத்தாலே ஸ்வரூபத்தை-உணர்ந்தாருக்கு-
தன்னை பிராட்டிமாரோடே சேர்ந்து பேசலாம் படியாய் இருக்கையால் -வந்து கூடுவேன் – -என்கிறார்-
நான் -பரம பதத்தில் சுவடு அறிந்த நான் -என்றது-
உனக்கு உரியதான விக்ரகத்தை காண ஆசைப் பட்ட நான் -என்றபடி-

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உரு வாழ் பாழ் ஆய் –
முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்-அங்கும் இங்குமான மகத்து முதலான தத்வங்கள்-முழுவதிலும் எங்கும் ஒக்கப் பரந்து-
ஆத்மாக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும்-விளைக்கும் விலை நிலமாக-இருக்கிற மூலப் பகுத்க்கு ஆத்மா ஆனவனே-
உன்னை உன்னை -சேதன அசேதன விசிஷ்டனான உன்னை –
உபய விபூதி நாதத்வம் -உபய லிங்க வைசிஷ்ட்யம் -அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை ஏக நாதன் –

நடுவில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருள-மீண்டும் அவதாரிகையும்-வியாக்யானமும் அருளுகிறார் –
மூன்று ஸ்ரீ யபதி படி -ஆரம்பத்திலும் இங்கே போலே பலர் வர மீண்டும் அருளிச் செய்தால் போலே -இங்கும் வந்தார்கள் சாத்துமுறை அன்று —
முதல் தனி வித்தேயோ –
முதல் -நிமித்த காரணம்-
தனி -துணைக் காரணம்-
வித்து -முதல் காரணம்-
முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் –
மூ உலகு என்கையாலே-
கிருதகம்- அக்ருதகம்-கிருதகாகிருதகம் – என்று-மூன்று வகைப்பட்ட அண்டத்தைச் சொல்லுகிறது-
கல்பாந்தக காலத்தில் அழிவதும் அழியாததும் -அழிந்தும் அழியாமலும் இருப்பதும் –மகர் லோகம் -நெருப்பால் கதுவப் படும் -மேலே போவார்களாம் –
அண்டாநாம் து சஹாஸ்ரானாம் சஹாஸ்ராணி அயுதாநிச-ஈத்ருசாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27
அந்த மூலப் பகுதியில் ஆயிரம் அண்டங்கள் உடைய ஆயிரமும்-பதினாயிரமும்-
இப்படிப் பட்ட அண்டங்கள் பல கொடிகள் இருக்கின்றன -என்று சொல்லப் பட்ட-
எல்லை இல்லாத அண்டங்களைச் சொல்லுகிறது -ஆதி -என்கையாலே-
இவ் வண்டங்கட்கு காரணமான ஆவரணங்களை-மதிள்களைச் சொல்லுகிறது-
ஆக மூன்று உலகங்கள் தொடக்கமான ஓன்று ஒழியாமல் எல்லாவற்றுக்கும்-மூன்று வித காரணங்களும் -ஆனவனே என்றபடி-
முதல் தனி உன்னை –
மேலே நீயான உன்னை -உலக உருவான உன்னை–இனி உன்னை உன்னை -பரம பதத்தில் உள்ள-முதல்வனாய்-
ஒப்பு இன்றிக்கே-குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்த வனாய்-உலகத்தை உருவகமாக கொண்டு இருக்கிற உன்னை-

ஜெகதாகாரமாக இருப்பைச் சொல்லி மேலே அசாதாரண விக்ரக விசிஷ்டனை அருளிச் செய்கிறார் –

ஆக- இத்துணையும் லீலா விபூதியோடு கூடி இருக்கிற இருப்பை சொல்லிற்று –
நித்ய சூரிகளுக்கு இனியனாய் இருக்கும் வடிவு அழகினை-கண்டு அனுபவிக்க வேண்டும் என்கிறார் மேல்-
உன்னை-
பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைச் சொல்லுகிறது-
உன்னை என்ற அளவில் பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைக் காட்டுமோ என்னில் –காட்டும்-
ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்க கண்ட சதிர் -4-9-10-என்கிறபடியே-
அவனையும் அவளையும் சொல்லவே பரமபதமும் அடங்கிற்றே அன்றோ–
ஸ்ரீ தேவி பூமா தேவி நடுவில் நின்ற நிலையை அன்றோ இந்த பதிகத்தில் சொல்லிக் கொண்டே வருகிறார் –
உன்னை
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ –8-1-1-என்று ஐயுறும்படி இருக்கும் திரு முடியும்-
மாயன் குழல் –7-7-9-என்னும்படியான திருக் குழலும்-
கோளிளைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்-
கோளிளைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்-
கோளிளை யாவுடைய கொழும் சோதி வட்டம் கொல் -7-7-8-என்னும்படியான-அழகிய திருமுகமும்-
நாய்ச்சிமார் உடைய திருக் கரங்களின் ஆபரணங்களால் அடையாளம் செய்யப் பட்டதாய்-கனக வளையா முத்ரா –
கமுகினுடைய இளம் கழுத்தையும் சங்கையும் ஒத்ததாய் இருந்துள்ள திருக் கழுத்தும்-
கற்பகம் கா அன்ன நற் பல தோள்களும் -6-5-8-
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாக -என்றும் அனுபவித்துக் கொண்டு-
இருக்கச் செய்தேயும் அகலகில்லேன் -என்று அவள் பிச்சேற்றும் படி -லஷ்மீ லலித க்ருஹம் -கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம் —
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பும் -1-8-10-
உள்ளத்துள் நின்று நிலாவுகின்றதே -அமலனாதி பிரான் -4–என்கிறபடியே
நித்யர் முக்தர் இவர்கள் உடைய உள்ளங்களிலே அழகு செண்டு ஏறுகிற -வையாளி கண்டு அருளும் -திரு உதர பந்தமும்-
வனப்பாகிற வாரிதி இத்தலப் பட்டு சுளித்தால் போல் இருக்கிற திரு உந்தியும்-தாமோதரத்வம் பிரதம தர விபூஷணம் —
ஒரு அடை மொழி இட வேண்டாதே -அல்குலும் -5-5-8- என்னும்படி இருக்கிற அல்குலும் -சிற்றிடையும்-
மாலைக் காலத்தில் தோன்றுகிற செந் நிறத்தாலே அழகு பெற்ற ஆகாசம் போலே இருக்க-
திரு அரை பூத்தால் போல் இருக்கிற -அந்தி போல் நிறத்தாடையும் –
வாழை மரம் முதலானவற்றைப் போன்ற கம்பீரமான திருத் தொடைகளும்-
தாமரை நாளம் போலே -பிராட்டி மார் தீண்டுவதால் மயிர் செறித்து-முட்களோடு கூடிய திருக் கணைக் கால்களும்-
சங்கு-சக்கரம் கற்பகம் கொடிதாமரை அங்குஜம் வஜ்ரம் ஆகிய-அடையாளம் பண்ணப் பட்டதாய் –
நாய்ச்சிமாரும் கூட கூசித் தொட வேண்டும்படி மெல்லடியாக –
தேனே மலரும் -என்கிறபடி எல்லை இல்லாத இனியவான திருவடிகளையும் உடையையாய்-
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து அருளுகிற உன்னை –

எனை நாள் வந்து கூடுவன்-
என்று வந்து கிட்டக் கடவேன்-
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே பிராட்டிமாரைப் போன்று பேசலாய் இருக்கிறபடி-

நான்-
அவ் வடிவு அழகினைக் காண ஆசைப் பட்ட நான்-

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ பாழ் ஆய் –
முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்-
அங்கும் இங்குமான மகத் தத்துவங்கள் முழுவதிலும் பரந்து-
மக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான-கருநிலமாய் உள்ள மூலப் பகுதிக்கு ஆத்மாவாய்-
ஆய் -சரீர ஆத்மா காரண கார்ய நிபந்தமான சாமா நாதி கரண்யம் –

முதல்-
மூலப் பகுதியை நோக்க -தான் முதன்மை பெற்றதாய்-நியமிக்க கூடியதாய்-

தனி-
உபமானம் இல்லாததாய்-

சூழ்ந்து-
மூலப் பகுதியிலும் மூலப் பகுதியால் ஆன பொருள்களிலும் பரந்து –

அகன்று ஆழ்ந்து உயர்ந்த –
பரந்து இருக்கும் இடத்தில்-ஞானத்தாலே பத்து திக்குகளிலும் பரந்த-

முடுவிலீயோ –
அளவிட்டு அறிய முடியாததான-ஆத்மா தத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே-
முடிவு -எனபது அழிவினைக் குறிப்பதாகக் கொண்டு-
சரீரத்தை போன்று அழிந்து போவது அன்றிக்கே-என்றும் உள்ளதான ஆத்ம தத்துவம் -என்னவுமாம் –

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்-முழு உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தாய்-
முதல் தனிச் சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலியாய்-இருக்கிற முதல் தனி உன்னைக் கண்டேன்-
பரம பதத்தில் நித்ய சூரிகளுக்கு இனியனாய் இருக்கிற-உன்னை எனை நாள் வந்து கூடுவேன் நான்-

காரண கார்யங்கள் ஆன இரண்டு நிலைகளை உடைய-சித்துக்கும் அசித்துக்கும் நிர்வாஹகனாய்-
இருக்கிற இருப்பைக் காட்டி அனுபவிப்பித்த இவ்வளவும் போராது-
உனக்கே உரிய விக்ரகத்தை உடையவனாய்-பரம பதத்தில் இருக்கும் இருப்பைக் கண்டு-அனுபவிக்க வேண்டும் -என்றதாயிற்று-

———————————————————————————————

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

தத்வ த்ரயத்துக்கும் அவ்வருகான-கபளீ கரம் பண்ணும் படி -அபி நிவேசம் -அவா -காதல் பக்தி -சர்வ பிரகார
பரி பூர்ணனாக கொண்டு ஸம்ஸலேஷித்து சாயுஜ்யம் – சோஸ்ச்னுதே ஸர்வான் காமான் –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ-பிரகிருதி -அகன்று -ஆழ்ந்து உயர்ந்து ஆகையால் சூழ்ந்து
-விஸ்தீர்ணமாய் வியாபித்து -பத்து திக்கிலும் சந்நிஹிதமாய்-பிரக்ருதிக்கு கீழ் எல்லை இல்லை உத்பத்தி விநாச ரஹிதம் நித்யம்
-தத்வ த்ரயமும் நித்யம் -நிலை மாறும் அவஸ்தா பேதம் -ஸமஸ்த காரியங்களுக்கும் அவ்வருகு பெரும் -இவற்றை பிறப்பிக்கும் –
அபரிச்சின்னமாய் போக மோக்ஷங்கள் விளை நிலம் –
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-தத் ஞானத்தால் வியாபித்து மேலாய் ஸ்வயம் பிரகாசத்தால் –
அணு -சூஷ்மம் -ஞானத்தால் பெருத்ததால் -சூழ்ந்து -நல்ல ஞானம் உடைய
மலர் விகாசம் அடைந்த சோதி ஞான வடிவம் -ஏக ரூபாத்வாதிகளால் மேலால் -ஞான பிரபையை உடைய -ஆத்மதத்வம் பிரகாரமாக கொண்டு
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-கல்யாண குணங்களால் உஜ்வலமான-சுடர் ஞான இன்பம் –
ஞானம் ஆனந்தம் கட்டடங்க உணர் முழு நலம் முழு உணர்வு முழு நலம் -முன்பே பார்த்தோம் -அத்தையே ஞானம் இன்பம் இங்கும்
-சுடர் வளர்ந்து கொண்டே -லக்ஷணம் ஸ்வரூபம் –
ஆத்மா ஞானத்தால் -ப்ரஹ்மம் ஞானம் ஆனந்தங்களாலே ஆக்கப் பட்டது –
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே-தத்வ த்ரயங்களையும் வளைத்துக் கொண்டு அதுக்கு அவ்வருகு -சமிக்கும் படி
அவன் -தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் திருமேனி விபூஷணம் மஹிஷீ பரிஜன ஸ்தான விசிஷ்டானாய் கொண்டு பரி பூர்ணனாய் -சூழ்ந்து –
பரஞ்சோதி -வடிவுடன் -ஆழ்வார் காதல் தனக்கு உள்ளே ஆகும் படி சாயுஜ்யம் அளித்து –
சேர்ந்து இருந்து குணானுபவம் பண்ணும் பேறு– ஓ அதிசயம் ஒவ் ஒரு இடத்திலும் அடி தோறும் ஹ்ருஷ்டர் ஆகிறார் -பேர் ஆனந்தம் பெற்றார் –

எம்பெருமானுக்கு இவர் விரும்பிய கார்யத்தை செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி-
பெரிய பிராட்டியார் ஆணை இட்டுத் தடுத்து-மிகப் பெரிய துன்பத்தோடு கூப்பிட்டு-இவர் வேண்டிக் கொண்ட படியே-
எல்லா வற்றாலும் நிறைந்தவனாய் கொண்டு வந்து கலந்து அருளக் கண்டு-
அளவிட முடியாததான மூலப் பகுதி தத்வத்தாலும்-ஆத்ம தத்வத்தாலும்-
உன்னுடைய நினைவின் உருவமான ஞானத்திலும்-பெரியதான என் விடாய் எல்லாம் தீர-வந்து -என்னோடு -கலந்தாய்-
என்னுடைய விருப்பமும் ஒருபடி முடியப் பெற்றது-என்கிறார் –
இனி இல்லை -என்னும்படி என்னை விடாய்ப்பித்து-அதற்கு அவ்வருகான விடாயை உடையனாய்க் கொண்டு-என்னோடு வந்து கலந்து-
உன்னுடைய விடாயும் ஒரு படி நீங்கியதே -என்கிறார்-என்னவுமாம் –
அங்கே பாரதம் ஆரோப்ய முனின பரிஷச்வஜே -யுத்தம் -180-39-பரதனை மடியிலே வைத்து சந்தோஷத்துடன் தழுவினார் -என்னும்படியே-
க்ருதக்ருத்ய ததா ராமா விஜுரஹ பிரதமோதக —

துயர் ஆறு சுடர் அடி -அறுக்கும் அறும் சுடர் அடி -இரண்டு நிர்வாகம் போலே –
ஆழ்வார் விடாயைத் தீர்த்து அவன் விடாயும் தீர பெற்றான் என்று நிகமிக்கிறார் –

தம்முடைய அபி நிவேசம் பெருத்த படியை இவற்றின் பெருமையை சொல்லி –ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லையே
அப்ரஹமாதமக தத்வம் இல்லையே -அதனால் இவற்றை சொல்கிறார் அவனையே சொல்லலாம் படி –

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ-
தன்னிடத்தில் உண்டான மகத்து முதலான தத்துவங்களை-பத்து திக்கிலும் புக்கு-எங்கும் ஒக்கப் பரந்து-
என்றும் உள்ளதாய் -அளவிட முடியாததாய்-
மக்களுக்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான-மூலப் பகுதிக்கு ஆத்மா ஆனவனே –

சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-
அதற்குள்ளும் பரந்து-அதனைக் காட்டிலும் பெரியதாய்-அதனை ஏவுகின்றது ஆகையாலே மேலாய்-
விகாரம் முதலானவைகள் இல்லாமையாலே சிறந்ததாய்-
மலர்ந்த ஒளி உருவமான ஆத்மா வஸ்துவுக்கும்-ஆத்மா ஆனவனே –
பேறு பெறுகிற இப்பொழுது-மூலப் பிரக்ருதியையும் ஆத்மாவையும் சொல்லுகிறது-
கீதையில் ஆத்மாவை -சர்வ கதம் -வெல்வேறு ஜீவாத்மாக்கள் -மூலம் வியாப்தி -என்றபடி –
தம்முடைய காதல் பெரியவற்றிலும் பெரியது என்கைக்காக –
அவற்றுக்கும் ஈஸ்வரனை ஒழிய-தோன்றுதல் நிலைத்தல் இல்லாமையாலே அவ்வளவும் சொல்லுகிறது –

சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ –
சுடர் இன்ப ஞானமேயோ -ஞானத்துக்கு இருப்பிடம் ஆனவனே-
சுடர் -சங்கல்ப ரூபமான -தடை இல்லாததால் சுடர் என்கிறார்-
அவை இரண்டினையும் தன்னுள் அடக்கிக் கொண்டு-அவற்றுக்கு நிர்வாஹகனான-நினைவின் உருவகமாய்-
சுகத்தின் உருவமான ஞானத்தை உடையவனே என்று-நினைவின் உருவமான ஞானத்தினைச் சொல்லுதல்-
அன்றிக்கே
சுடர் ஞான இன்பமேயோ என்று-ஒளி உருவனும் -இன்பத்தின் உருவனும் ஆனவனே -என்று எம்பெருமானைச் சொல்லுதல் –
அனுகூல ஞானமே ஆனந்தம் –

சூழ்ந்து –
மேலே கூறிய மூன்று தத்துவங்களையும்-விளாக்குலை கொண்டு –

அதனில் பெரிய –
அவை குளப்படியாம் படி பெரிதான –

என் அவா –
என்னுடைய காதலை

அறச் சூழ்ந்தாயே-
அதனிலும் பெரிய உன் காதலைக் காட்டி வந்து கலந்தாயே –என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஒவும்படி பண்ணிற்றே-
பரதனை மடியில் ஏற்றுக் கொண்டு மகிச்சி உற்றவராய் தழுவினார் -என்கிறபடியே-மீண்டு புகுந்து-
ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து-உச்சியை மோந்து உகந்து-அணைத்தால் போலே -ஆயிற்று-
இவருடைய விடாய் கெடும்படி கலந்தது –
அற -வஸ்து அல்பம் -என்கிறார் அபாவம் என்கிறார் இல்லை -சங்கல்பம் தடுக்க முடியாத ஞானம் –
-அனுகூலமானதால் ஆனந்தம் -ஆஸ்ரயம் ஞானமேயோ-ஞானத்துக்கு ஆஸ்ரயம் ஞாதா என்றவாறு –
மேரு மலை மேல் கீழே உள்ள கடுகு பார்த்து அல்பம் என்னுமா போலே -அல்பத்தவம் என்றவாறு –

——————————————————————————————————-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

பல அவாப்த்தி பிரகாரம் பிரதிபாதித்துக் கொண்டு -வீடு பெட்ரா -பலமாக ஞானம் உடையவர் ஜென்ம உதகர்ஷம் அருளிச் செய்கிறார்
உயர்ந்தே பிறந்தார் என்றவாறு -உயர்ந்தவர்களாகவே பிறப்பார்கள்
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி-ஆச்ரித அபி நிவேசம் -தீரும் படி நிரவதிக சம்ச்லேஷ அனுபவம்
விஸ்லேஷ துக்கம் தீரும் படி –
கார்யந்து ஜைமினி -காரணம் தியானிக்க -ஹிரண்ய கர்ப்பம் பூர்வ பஷிதயா சங்கீதா நான்முகன் -ந பிரம்மா ந –
இத்யாதி இவர்களும் ஸ்ருஷ்ட்யர் -ஏகோகை நாராயண ஆஸீத் –
சைவர் காபாலிகர் பாசுபதர் -அந்தராத்மா பரம ப்ராப்யம் இவனே -கார்ய காரண நிபந்தனை சாமா நாதி கரண்யம்
த்வரையாலே கூப்பிட்டு
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்-பிராப்தி சித்தி பெற்று
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த-அதி பரம பக்தி ரூபமான சரம பக்தி பரம பக்தி முடிந்த அவா –
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே-இந்த பத்தும் அனுசந்தித்து -உயர்ந்தே பிறந்தார்
அவா அற -மூன்று தத்துவங்களையும் கபளீ கரித்து
வஸ்ய புத்தி பண்ணும் படி அவா அறும் படி குணங்களால் அபஹரித்துக் கொண்டு –

அர்த்த பஞ்சகம் –
ஸ்ரீ யபதி நாராயணன் -சர்வ பிரகார சேஷ பூதனுடைய -உபாயத்வேந பிரவ்ருத்தனாய் -அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி
மஹா வாக்கியம் -அவாந்தர -ப்ராப்ய பிரம்மா ஸ்வரூபம் -ஆதிகளாய் அர்த்த பஞ்சகம் –
முதல் இரண்டு பத்தால் ரக்ஷகத்வம் -போக்யத்வ விசிஷ்டமான சேஷித்வம் -அகாரார்த்தம்
அநந்யார்ஹ சேஷ பூதன் -மூன்றாம் நான்காம் பத்தில் ததேக அனுபவம் ததேக பிரிய -மகார்த்தம்
இந்த நாலும் -பிரதம அக்ஷரத்தில் சேஷித்வம் சேஷத்வ ஆஸ்ரயம் சொல்லி-
அவதாரண உகாரத்தால் சம்பந்தம் அநந்யார்ஹத்வம் -பிரணவ அர்த்தம் சொல்லி –
உபாய ஸ்வரூபம் ஐந்தாம் பத்தால்
உபாய வரணம் ஆறாம் பத்தால்
ஏழாம் பத்தில் விரோதி ஸ்வரூபம்
எட்டாம் பத்தில் தத் நிவ்ருத்தி
சாப்தமாகவும் ஆர்த்தமாகவும் -நமஸ் அர்த்தம் அருளிச் செய்து –அகங்கார மமகார நிவ்ருத்தி
சர்வ வித பந்துத்வ பிரதி சம்பந்தத்வம் ஒன்பதாம் பத்தாம் பத்தில் அருளிச் செய்து -நாராயணாய அர்த்தம்
-கைங்கர்ய பிரதிசம்பந்தி -விசிஷ்டமான பல அவாப்த்தி -சரம பதார்த்தம்
முதல் பாட்டில் உயர்வற -உயர்நலம் -சங்க்ரஹமான –
உத்கீத ப்ரணவம் மாறாடி -பத்து பத்திலும் விரித்து –
மீண்டும் சங்க க்ரஹமாக சொல்லி
பிரதமத்வத்தில் ஸ்ரீ யபதித்தவ நாராயண -கோலத் திரு மகள் உடன் – -சீல ஸுலப் யாதிகளை சொல்லி
கிரியா பாதத்தால் பிரபத்யே -பகவத் கைங்கர்யம் சொல்லி வாக்ய த்வயம் -பின் மூன்று பூர்வ -முதல் மூன்று உத்தர வாக்கியம்
–சரணாகத ஸ்வரூபம் விகசித்து அருளினார்
தத் இதர தர்மங்களை விட -பரித்யஜ்ய மாம் -உபாய வரணம் –
உபாய பூதன் அத்விதீயம் மாம் ஏக்கம் -பிரதிபாதித்து
ஸமஸ்த விரோதிகள் நிவ்ருத்தி பல சித்தி நினைப்பித்தன தாதார்த்யம் சரம ஸ்லோகார்த்தம் வீசாதீ கரித்து
சர்வ பிரகார சேஷ பூதன்
அநந்ய பிரயோஜனம்
அநந்ய யாரஹருக்கு -ரகஸ்ய த்ரயமும்
நித்ய அனுசந்தேயம் சாத்விக அக்ரேஸருக்கு –

நிகமத்தில்
அகில ஹேய பிரத்யநீகனாய்-கல்யாண குண ஏக நாதனாய்-
ஞான ஆனந்தஙகளே வடிவு உடையவனாய்-உயர்வற உயர்நலம் உடையவனாய்-
வனப்பு முதலாயின வற்றுடன் திவ்ய மங்கள விக்ரகத்தை உடையவனாய்-
அளவிறந்த திவ்ய ஆபரணங்களை உடையவனாய்-
திருமகள் மணமகள் ஆய்மகள் மூவருக்கும் நாயகனாய்-
அஸ்தானே பயசங்கை செய்யும் நித்யசூரிகள் -திரு வநந்த ஆழ்வான் -பெரிய திருவடி
எப்பொழுதும் அடிமை செய்யும் திருவடித் தாமரைகளை உடையவனாய்-
ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனாய்-சர்வேஸ்வரனாய்-
தன்னாலே ஏவப்படும் பரமன் முதலாயினவர்கட்கும் அந்தராத்மாவாய்-
தன்னைக் காண வேண்டும் என்று விடாய் கொண்டு அடைகின்ற அடியவர்கள் விடாய்-தீரக் கலக்கும் தன்மையான
எம்பெருமானைக் காண வேண்டும் என்று கூப்பிட்டு-
அவனைப் பெற்று துக்கம் அற்றவராய்-எல்லா தடைகளும் நீங்கினவராய்-
ஆழ்வாரின் பக்தியின் தூண்டுதலால் பிறந்த-ஆயிரம் திருவாய் மொழியும்-அவற்றில் வைத்துக் கொண்டு-
மேலே கூறிய படி அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி-
பரமபக்தியால் பிறந்த அந்தாதியான-இத் திருவாய்மொழி வல்லார்-
சம்சாரத்தில் பிறந்து வைத்தே-அயர்வறும் அமரர்களோடு ஒப்பர்-என்கிறார்-

அவா அறச் சூழ் அரியை –
விரும்பியவற்றை எல்லாம் அருளும் சர்வேஸ்வரனை –தம்முடைய காதல் கெட வந்து கலந்த படியாலே-
ஒரு அடைவு கொடாதே அது தன்னையே சொல்கிறார் –
அவா அறச் சூழுகையாவது-
தன்னைக் காண வேண்டும் என்னும் விடாய் உள்ள-அடியவர்களின் விடாயை தீர கலக்கை –

அயனை அரனை அலற்றி-
தன்னுடைய ஏவல் ஆள்களான பிரமன் சிவனுக்கும் அந்தராத்மாவானவனை-
அயனை அரனை -என்கிற சாமாநாதி கரண்யத்தால்-
பிரமன் சிவன் போல்வார் ஈஸ்வரர் ஆவார்களோ என்னும் மக்கள் கொள்ளும் ஐயத்தை அறுக்கிறார்-
அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் சர்வேஸ்வரன் அதீனமாய்-
இருப்பதாலே அவர்களுக்கு பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் –தலைவர்களாய் இருக்கும் தன்மை அவர்கள் செயல்கள் காரணமாக வந்த இத்தனை –
இச் சாமாநாதி கரண்யத்தை அறியும் தன்மை இன்றியே எளியராய் இருப்பார்-அறியத் தகும் முறையிலே கூறப்படும் வகைகளும் உண்டு-
அவை
அயனை அரனை அவா அற்று-அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -ஒரு வகை –
அயனை அரனை அவா அறச்-சூழ் அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் –மற்று ஒரு வகை-

அலற்றி அவா அற்று வீடு பெற்று –
கூப்பிட்டு அவனைப் பெற்று எல்லா தடைகளும் நீங்கியவர்-ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த-

அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் –
பக்தியின் தூண்டுதலாலே பிறந்த ஆயிரம்-
இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று –
ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே –
அன்றிக்கே-
அவா உபாத்தியாராக நடத்த -நடந்த ஆயிரம் -என்னுதல்-
ஆழ்வாருக்கு பிறகு நூறாயிரம் கவிகள் பேரும் உண்டானார்கள்-
அவர்கள் கவிகளோடு கடல் ஓசையோடு வாசி அற்று-அவற்றை விட்டு இவற்றைப் பற்றுகைக்கு அடி-
இவருடைய காதல் பெருக்கு வழிந்து புறப்பட்ட சொல் ஆகை அன்றோ –
-பக்தர்களுக்கு ஹிதமாக-பராங்குசர் அருளிச் செய்தவை –

நாவலம் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலம் தீவது போலவ வல்லார் குருகூர்ப் புலவன்
கேவலம் தீம் கரும்பாம் கவி போல் எங்கும்
கூவலம் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோள் இழைத்தே-சடகோபர் அந்தாதி -58
உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றும் இன்றி
விரிக்கும் தொறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரிக்கின்ற நுண்மணல் ஊற்று ஒக்கும் தொண்டர் சுரத்தலினே -சடகோபர் அந்தாதி -68

முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து
தரிக்க ஒண்ணாத படியான-பரம பக்தியால் பிறந்த தாயிற்று-இத் திருவாய்மொழி
இந்த அவாவிற்கு உதவிற்றிலன் ஆகில்-ஈஸ்வரனுக்கு சைதன்யம் இன்றிக்கே ஒழியும் –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழிக்கு முன்பு-பர பக்தியாலே சென்றது –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழி -பர ஞானத்தால் சென்றது
இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே –
பகவானுடைய திருவருள் பாதியும்-தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு-
சரீரத்தின் முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்-
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே-எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின –

கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற பக்தியினுடைய இடத்திலே-
சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க – அது அடியாக பிறந்த-பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது –

அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இதனை அறிந்தவர்கள்-இவ் உலகத்தில் பிறந்து வைத்தே-நித்ய சூரிகளோடு ஒப்பர் –
பிறந்தே உயர்ந்தார் –
சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம்-இவர்களுடைய பிறப்பும் –
பிறக்க பிறக்க அவனுக்கு உதகர்ஷம் உண்டானாப் போலே -அனுக்ரஹ நிபந்தனம் சர்வேஸ்வரன் அவதாரம் —

அவா -சாமான்யம் -தத் தத் அதிகாரி அனுகுணமாக -உண்டே –
மோக்ஷம் பெற அவா -என்னால் முமுஷுவாக ஆழ்வாருக்கு
அயன் அரன் போல்வாருக்கு மோக்ஷம் அபேக்ஷை இல்லையே
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி ஆபத் விமோசனம் அவா அவர்களுக்கு போக்கி அருளினான் –
ஸூ விபூதி பூதர்-அவர்களுக்கு பார தந்தர்யம் சொல்வது -சரீரமாக இருந்து -பிரகாரத்தால் –
சகல அபேக்ஷித பிரதன்-ஸம்ஸலேஷிக்கும் ஹரி –
விஸ்லேஷ துக்கம் அபகரிக்கும் ஹரி
அவா அறச் சூழ் அரி -நாராயணன் என்னால் -இதுவே நிரூபணம் –
அரன் அயன் இவர்கள் இடம் அவா இல்லாமல் அரியை அலற்றி -என்றுமாம்
ஸ்ரீ மைத்ரேயர் கேட்க கேட்க சொன்னது போலே ஆழ்வாருக்கு பக்தி உந்த அருளிச் செய்கிறார் என்றவாறு –
பக்தி பூர்வகமாக பிறந்த பிரபந்தம் -பரமபக்தி அளவும் -வேதத்துக்கும் பரிக்ரகம் கிடைத்ததே ஆழ்வார் வாயனவாய் ஆனதால்
பொற்குடம் ஆனதே சர்வரும் அனுபவிக்கும் படி –

————————————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தத் தர்ச நஞ்ச மனசையைவ ஸஷு
தைவ இதி பக்த்யாதயா பரமயா அச்யுதபாதம்-
நச புன பார்த்ததே மாந்த்யம்
பத்தமாஞ்ஞாஜாய பகவதா பரிக்ருதயா

ஆச்சாரயோதயா பந்தாதி த்ராவிட நியாயம் சங்கதி
அப்யதா து அபிராம வராமர் வராஹயத்

——————————————————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ப்ரஹமே ச அந்தர் பிரவேசத் வாத் ஜல நிதி சுதயா ஸந்நிரோதபவ்ய பாவாத்
திவ்ய ஸ்ரீ விக்ரஹத்வாத் அகில தனு தயா அத்ருப்த்ய பீயூஷா பாவாத்
பத்மா பந்துத்வாத் பூம் உத்தரணாத் புண்ய பாப ஈஸி தத்வாத்
முக்தேகே தாதா அனுபாவாத்யாத் சடஜித் முக்திமான –

1–ப்ரஹமே ச அந்தர் பிரவேசத் வாத்–முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா

2–ஜல நிதி சுதயா -ஸந்நிரோதபவ்ய பாவாத் –மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்

3–திவ்ய ஸ்ரீ விக்ரஹத்வாத்–என் பொல்லாக் கருமாணிக்கமே ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன்

4–அகில தனு தயா–உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ

5–அத்ருப்த்ய பீயூஷா பாவாத்–தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே

6–பத்மா பந்துத்வாத்–உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ

7–பூம் உத்தரணாத்–கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ

8–புண்ய பாப ஈஸி தத்வாத்–உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்

9-முக்தேகே தாதா அனுபாவாத்யாத்–முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்

10-சடஜித் முக்திமான – சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்

——-

ஏவம் ஸ்வாநாம் கதிம் வியத்வஜ துரித ஹராஸ்தான சங்கார்ஹ ராகம்
சுப்ராபம் பக்தி பாஜாம் பஹுவித போஜன ப்ரக்ரியாம் ஸ்ரீ சடாரி
தீவ்ரோ த்யோகம் ஸ்வ தானே ஸ்வ ஜன தனு க்ருதார்த்யாதரம் பிராஹ காந்தே
ஸ்வேச்சா துஷ்டாம் சுக அர்ச்சீர் முகாஸ் சரணிமுக்தாம் மோஷாதம் முக்த போக்யம் –ரத்னாவளி –124-

அவனே அர்ச்சிராதி வழித் துணை ஆப்தன்

————

இத்தம் சேவ்யம் ஸூ போக்யம் ஸூபாஸ் உபகதனும் சர்வ போக்ய ப்ரக்ருஷ்தே
ஸ்ரேயஸ் தத ஹேது பூதம் பிரபதன சுலபம் ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஜிஷ்ணும்
பக்த சந்த அநு க்ருதம் நிருபாதிக ஸூ ஹ்ருதம் சத் பத அவ்யய ஸஹாயம்
ஸ்ரீ சம் பிராஹ ஸ்வ சித்தே ஸ்வயம் இஹ கரணாம் ஸ்வ பிரபந்தே சடாரி –ரத்னாவளி -125-

ஆத்யே ஸ்வ பிரபந்தே சதஜித பிதாதே ஸம்ஸரதேர் துஸ் சஹத்வம்
த்வைதிகே ஸ்வரூபாத்ய அகில மத ஹரேர் அனுவபூத் ஸ்பஷ்ட த்ரஷ்டாம்
தார்த்திகே ஸு க்யம் பகவத் அநுபவே ஸ்போரயாம்ஸ தீவ்ரம்
அசாம் துர்யே யதேஷ்டம் பகவத் அனுபவா தாப முக்திக்கு சடாரி –ரத்னாவளி –126-

திரு விருத்தத்தில் சம்சார சுழல்களால் வரும் துரிதங்களையும் -அதில் இருக்க மாட்டாமையையும் -அருளிச் செய்து
திருவாசிரியத்தில் ஜீவ பர ஸ்வரூப குணாதி களை அருளிச் செய்து
பெரிய திருவந்தாதியில் -தனது மானஸ அனுபவத்தையும் -பாஹ்ய சம்ச்லேஷத்தில் ஆர்த்தியையும் வெளியிட்டு அருளி
திருவாய் மொழியிலே அவா அற்று வீடு பெற்றதை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் கிமிக ந சுலபம் க விபதிர் பவித்ரி
கஸ்யான் யஸ்யா தர்மனா வயமிதி விதிஷாமாக துங்கத்வ மந்தே–ரத்னாவளி -127-

ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர – கல்யாண குணக்கடல் –கருணா சாகரம் —
உலோகரை எல்லாம் திருவடியால் தீண்டி அணைக்கும் தாய் —
இப்படி உணர்ந்தோர் மார்பில் கை வைத்து-உபாயமாக ஒன்றுமே செய்யாமல் கைங்கர்யமாக
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே செய்வது தானே அடுத்து —
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் – இவ்வாறு உள்ளோரால் செய்ய முடியாதது தான் எது –
துக்க கேசமும் இவர்களை அணுகாவே -வேறே எவருக்கும் பணியா அமரர்கள் ஆவார்கள்

——–

இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-

———

சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-

——-

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

உதந்தை இத்யேவம் நிருபாதிக ஸு ஹார்த்தபி சுனை
உதந்தயாம் உத்வேலாம் உபஜனித்தவந்தம் நிஜபதே
த்ரை வர்க்காதி க்ராந்த ஸ்திர நகரி கந்தா பத கதே
சஹாயி குர்வாணா சரம சதகே விந்தத்தி முநி –21-

———————————–

கதிம் வ்யாத்வக்லே சச்சிதாம் பத ஸங்காஸ் பத ரசம்
பஜத்பி சுப்ராபம் விதித்த பஜன ப்ரக்ரியமிக
பலே தீவ்ரத் யோகம் ஸ்வ விஷய க்ருதாத்யா தரமகாத்
யதர்ச்சா துஷ்டம் சத்சரநிமா புனர் ஜன்ம சாயுஜ்யம் –22-

———-

பரம் ப்ராப்யம் பஸ்யன் பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன்
பரிஷுக்குருவன் அஞ்ஞானம் அனிதர சரண்ய சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன்
முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக பேஜே முனிவரா -23-

பரம் ப்ராப்யம் பஸ்யன் பரம புருஷார்த்தம் இவனே —
பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன் – கைங்கர்யம் கொண்டு அருள உபாயமும் அவனே —
பரிஷுக்குருவன் அஞ்ஞானம்-சர்ம ஸ்லோகப்படி சர்வ தர்மான் பரித்யஜ்ய– செய்தால் —
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -செய்பவனும் அவனே
அனிதர சரண்ய சரண்யன் -புகல் ஒன்றும் இல்லாத அனன்யா கதிகளுக்கு அவனே சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன் முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக–
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் மிதுனமே ஒரே நிருபாதிக ரக்ஷை –

——-

புரா சோகா ஸ்லோகா பவதிதி நயாதிதி உபநிஷத்
முநே புண்யா ஸ்லோகாத ஜநி பர பக்தே பரிணாதி
வ்யாபோக்ய ஸ்வாம் பாவம் ஹரி சரணா சந்தான லிகாம்
அவிக்ஷத் யோகி யஸ்தனுமதனு காருண்ய விவசா –24-

வால்மீகி சோகத்தால் பிறந்த ஸ்ரீ இராமாயண ஸ்லோகங்கள் —
சடகோப முனி ஆழ்ந்த பக்தியால் பிறந்த தமிழ் உபநிஷத்தான திருவாய் மொழி
கருணைக் கடலுள் ஆழ்ந்து -அவனையே நினைந்து அவன் அருளாலே அவனை அடைந்தார்

சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-

——-

சதாம் இத்தம் சாரம் த்ராமிட நிகமஸ் யான்வகதயத்
பஹு நாம் வித்யா நாம் பஹு மதி பதம் வேங்கடபதி
திசா சவ்தா ஸ்ரேநீ த்ர்தா கதிதா ஜைத்ர த்வஜ பதி
பராமர் ஸப்ரஸ்யாத் ப்ரதிமத நிராபாத நிகம–25-

இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-

——-

மனு வியாச ப்ராசேதச பரிஷ்தர்ஹா க்வசிதியம்
ஸூதாஷிக்த ஸூக்தீ ஸ்வயம் உதயமனவிச்சதி ஜநே
ந்ருந்த்யுஹ்கே விந்த்யாசல விகத ஸந்த்யா ந தஜ
தாபரிப்ராந்தா பங்கோ உபரி யதி கங்கா நிபததி –26-

இந்த பிரபந்தம் மஹா முனிகளான மனு பகவான் வியாச பகவான் வால்மீகி ரிஷி போன்றார் கூட்டங்களாலே கேட்கத் தக்கது-
அவனது நிருபாதிக ஸூ ஹ்ருதம் அடியாகவே பிறந்தது –
விந்தியமலை சாரல் -கங்கா நதி -திருச்சித்ர கூடம் -உண்டாக்கி அருளினால் போலே
அடியேனையும் ஆக்கி இப் பிரபந்தம் அருளப் பண்ணினான்

————————————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 100-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் – ஸ்ரீ பரம பத்தியாலே-பர ப்ராப்தியான படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் சூழ் விசும்பு அணி முகிலிலே ஸ்ரீ பரம பதத்திலே புக்கு நிரதிசய ஆனந்த உக்தராய்
நித்ய சூரிகள் திரளிலே இருக்கிறாராக-தம்மை அனுசந்தித்த இது
ஜ்ஞான அனுசந்தானம் மாத்ரமாய் பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே
மேரு சிகரத்திலே ஸூ கோத்ரமாக இருந்தவன்
பேர் ஆழமான பள்ளத்திலே தலை கீழாக தள்ளுண்டு-விழுந்து நோவு படுமா போலே
அனந்த கிலேச பாஜனமான சம்சாரத்தில்-தாம் இருக்கிற படியைக் கண்டு
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு
பண்டு போலே ஒரு குணாவிஷ்காராதிகளால் பரிஹரிக்க ஒண்ணாத படி ஆற்றாமை தலை எடுத்து
ஒரு தூத ப்ரேஷாணாதிகளால் இட்டு நீட்டுகையும் இன்றிக்கே
தாமே அவன் முகத்தைப் பார்த்து
தம்மால் இது பரிஹரித்துக் கொள்ளப் போகாது இருக்கிறபடியும்
சாதநாந்தரங்களை அனுஷ்டித்தாலும் அவன் கை பார்த்து இருக்க வேண்டி இருக்கும் படியையும் சொல்லிக் கொண்டு
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டு-தடுத்தும்-வளைத்தும் அவனைப் பெற வேண்டும்படியான பரம பக்தி தலை எடுத்து
நிர்க்குணர் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும் படியாகவும்
அவனுக்கும் தம் கார்யம் செய்து அல்லது ஸ்ரீ திரு நாட்டிலே குடி இருப்பு அரிதாம்படியாகவும்
பெரும் மிடறு செய்து கூப்பிட்டு பெரிய ஆர்த்தியோடே திருவடிகளிலே சரணம் புக
ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட இவர் அபேஷித்த படியே ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து தோற்றி
கால் கட்டான பிரகிருதி சம்பந்தத்தையும் அறுத்து
ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய சூரிகளோடே ஒரு கோவை யாக்கி-நித்ய கைங்கர்யம் கொண்டருள-
அத்தாலே-தாம் நிரஸ்த பிரதிபந்தகராய் பிராப்த சமஸ்த மநோ ரதரான படியை-சொல்லித் தலைக் கட்டுகிற
முனிய நான் முகனே யில் அர்த்தத்தை
முனி மாறன் இத்யாதியாலே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் -என்கை –

————————————————-

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-

————————————————-

வியாக்யானம்–

முனி மாறன்
ஸ்ரீ சர்வேஸ்வரன் -முனியே -என்னும்படி சதவஸ்தமான சம்ஹ்ருதி சமயத்தில் சர்வ சேதன ரஷணத்திலே
த்யாநாந்தஸ்தனாய் இருக்குமா போலே
இவரும்
நித்ய சம்சாரிகளாய் சம்சாரித்து
அசித் ப்ராயரான ஆத்மாக்கள் விஷயத்திலும் ரஷண சிந்தை பண்ணிப் போருகையாலே முனி -என்கிறது –
அன்றிக்கே –
பகவத் விஷயத்தில்-எண்ணா தனகள் எண்ணும் நல் முனிவர்-என்னுதல் –
அன்றிக்கே
பிரக்ருததுக்குச் சேர-ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்-பரம பக்தி பர்யந்தமாக
நிரந்த சிந்தா உக்தராய் இருக்குமவர் -என்னுதல் –
இப்படி மனன சீலராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் —

முன்புரை செய் முற்றின்பம் நீங்கி –
அதாவது
களிதாகி சிந்தையனாய் களிக்கின்றேன் -என்றும்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே -என்றும்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை-மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லும் பெற்றேன் -என்றும்
கண்ணுள் நின்று அகலான் -என்றும்
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -என்றும்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில்-பேரின்பத்து அடியரோடு இருந்தமை -என்றும்
இப்படி
முன்பு பேற்றை பெற்றதாக அருளிச் செய்த சமஸ்த ஆனந்தமும் நிரஸ்தமாய்ப் போய்
அது எல்லாம் மானச அனுபவ மாத்ரமாய்-பிரத்யஷ சாஷாத் காரத்திலே அபேஷை யுடையவராய்
அத்தை அப்போதே பெறாமல்
மீளவும் அஜஞாநாவஹமான சம்சாரத்த்லே இருக்கக் கண்டு
பூர்வத்தில் ஆனந்தமும் அபூர்வமாம்படி கழிந்தது -என்கை –

தனியாகி நின்று தளர்ந்து –
அந்தமில் பேர் இன்பத்து அடியாரான-ஸூரி சங்கங்கள் உடனே இருந்தும்
ஸ்வப்ன கல்பமாய் பழைய சம்சாரத்தில் தனிமையே சேஷித்து
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திரு அயோத்யையிலே ராவாணந்தகரான ஸ்ரீ பெருமாளை
பரமனும் தம்பி சத்ருக்னனும் இலக்குமனோடு மைதிலியும் -என்னும்படி சேர்த்தியாய் இருந்து அனுபவித்து
பின்பு பிரிந்து
காந்தார மத்யே விஜகே விஸ்ருஷ்டா பாலேவ கன்யா விலலாப சீதா -என்னும்படி
தனியே நின்று கூப்பிட்டாப் போலே
தனியேன் ஆர் உயிரே -என்று
தனியாகா நின்று தளர்ந்து மிகவும் அவசாதத்தை உடையவராய் தரைப்பட்டு-

அதாவது –
கனிவாய்த் தாமரை கட்கரு மாணிக்கமே –மாயம் செய்யேல் என்னை -என்றும்
மாயம் செய்யேல் என்று தொடக்கி –திரு வாணை நின் ஆணை-கண்டாய் –கூ விக் கொள்ளை வந்து அந்தோ -என்றும்
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அல்லால் அறிகின்றிலேன் நான் -என்றும்
உம்பர் பரம் தண் பாழேயோ–என்னைப் போற விட்டிட்டாயே -என்றும்
எனக்கு ஆரா வமுதானாயே -என்றும்
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுன்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய் -என்றும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ-உன்னைப் பெற்று இனி போக்குவேனோ -என்றும்
முதல் தனி உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் -என்றும்
இப்படி ஆற்றாமையாலே-அவசன்னராய்க் கூப்பிட்டு -என்கை –

நனியாம் பரம பக்தியால் நைந்து —
அதனில் பெரிய அவா -என்னும்படி
தத்வ த்ரயங்களிலும் பெரியதாய்-முடிந்த அவாவான பரம பக்தியாலே-பரிபக்வராய் –
நனி -பெருமை

அன்றிக்கே
பரம பக்தியால் அலைந்து -என்ற பாடமான போது
அவா வாகிற அமுத வெள்ளமான-ஆனந்த சாகரத்திலே மக்னராய் -அலைந்து -என்றுமாம் –

பங்கயத்தாள் கோனை –
அந்த பரம பக்திக்கு விஷயமான-ஸ்ரீயபதியை –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –
உன்னைப் பற்றி இனி போக்குவேனோ -என்று அருளிச் செய்தவனை
உத்தர வாக்யத்தில் கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஸ்ரீயபதியை –

ஒருமையுற்று
வீடு திருத்தி -என்றும்
விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னுள்ளே ஒட்டி -என்றும்
த்வரிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு உள்ளத்தோடு சேரும்படி
இவர் திரு உள்ளமும் த்வரித்து -ஒரு தளைத்து -என்னுதல்-

அன்றிக்கே
பர பக்தி
பர ஞான
பரம பக்தி
உக்தராய்-பேற்றுக்குத் த்வரித்து
அவாவாலே கூப்பிட்டுப் போந்த இவர் திரு உள்ளமும் –

முதித பரிஷச்வஜே -என்னும்படி
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று
இவர் அபி நிவேசம் தீரும்படி சம்ஸ்லேஷிக்கையாலே
அவா அற்று வீடு பெற்ற பிரகாரத்தை-ஆகவுமாம்-

பங்கயத்தாள் கோனை –ஒருமை யுற்று –உயர்ந்து -சேர்ந்தான் –
அதாவது
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -என்கிற-இழவு தீர
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-ஒரு தலைத்த பரமபக்தி உக்தராய்
அத்தால்
நித்ய சூரிகள் ஆச்சார்யத்தை-இங்கே யுடையராய்
பிரத்யஷ சாஷாத்காரமாம் படி கிட்டி-இருவருமான சேர்த்தியிலே
அடிமை செய்வார் திரு மாலுக்கே -என்னும்படி –
அடிமை செய்யப் பெற்றார் –
அங்கே
பரதமாரோப்ய முதித பரிஷச்வஜே -என்று-இவரைப் பெற்று ஹ்ருஷ்டனாக
இவரும்
அத்தலையில்-முகோல்லாசத்தைப் பெற்று -அனுபவித்து-ஹ்ருஷ்டரானார் –
அத்தை யாயிற்று-ஒருமை யுற்றுச் சேர்ந்தான் -என்கிறது –

இத்தால்
அவா அற்று
வீடு பெற்ற
குருகூர் சடகபன் –
என்றத்தை நினைக்கிறது-

சாஷாத் கரித்த பரம பிராப்திக்கு தலை மிசையாய் வந்து-தாள்களைப் பூண்டு-போகாமல் தடுத்து
திரு வாணை இட்டு-கூசம் செய்யாதே-செய்திப் பிழை யற்று
கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும் பழி-புறம்பு போனால் வரும் இழவு உண்டிட்ட முற்றீம்பு
அன்பு வளர்ந்த அடி யுரம்-உயிர் உறவு முதல் அளவு துரக் கைகளாலே
பெறா வாணை அல்லவாக்கின-பேரவா-குளப்படியாம்படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து
தாபங்களை ஹரித்தமையை-வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் -என்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தார் –

கண்டு களிப்பளவும் -பரஞ்ஞான கர்ப்ப பரபக்தி
இருந்தமை -என்றது பூர்ண பரஞ்ஞானம்
முடிந்த அவா என்றது பரமபக்தி

இவை
ஞான
தர்சன
பிராப்தி
அவஸ்தைகள் -என்று
இந்த பரபக்தியாதி பேதத்தையும் அருளிச் செய்தார் —

ஏவம்விதமான
பரமபக்தியாலே-பரிபக்வராய்-பலத்தோடு சேர்ந்தார் -என்கிற
ஸ்ரீ திருவாய்மொழியில் அர்த்தத்தை-இப்பிரபந்தத்தில்-இப்பாட்டாலே சேகரித்து அருளினார் ஆயிற்று —

————————————————————————————

உயர்வே பரன்படியை யுள்ளதேல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு

—————————————————————————–

மாறன் -1/2/3/4/5/6/7/8/9/10/11/12/13/14/
சடகோபன் –15
மாறன் –16/17/18/19/20/21/
குருகையர் கோன் -22
மாறன் –23/24/25/26/27/28
குருகூர் மன்-29
மாறன் -30/31-
குருகூரில் வந்து உதித்த கோ -32
மாறன் -33/34/35/36
குருகூர் ஏறு -37
மாறன் -38/39
மொய்ம் மகிழோன் -40
மாறன் -41/42/43/44/45/46/47/48/49/50
காரிமாறன் -51
குருகையர் கோன் -52
மாறன் -53
பராங்குசன் -54
மாறன் -55/56/57/58
காரிமாறன்-59
மாறன் -60/61/62
சடகோபர் -63
மாறன் -64/65
அண்ணல் -66
மாறன் -67/68/69/70/71/72/73/74
சடகோபன் -75
மாறன் -76
சடகோபர் -77
காரிமாறன் -78
மாறன் -79/80/81/82/83/84/85/
மாறன் -86/87/88/89/90/91/92/93/94/95/96/97/98
ஞான முனி -99
முநி மாறன் -100-

மாறன் -1/2/3/4/5/6/7/8/9/10/11/12/13/14/-16/17/18/19/20/21/—-23/24/25/26/27/28–30/31—33/34/35/36–
-38/39—41/42/43/44/45/46/47/48/49/50–53–55/56/57/58—60/61/62–64/65–67/68/69/70/71/72/73/74–76-
–79/80/81/82/83/84/85/ -86/87/88/89/90/91/92/93/94/95/96/97/98
சடகோபன் –15–75
குருகையர் கோன் -22–52
குருகூர் மன்-29
குருகூரில் வந்து உதித்த கோ -32
குருகூர் ஏறு -37
மொய்ம் மகிழோன் -40
காரிமாறன் -51–59-78
பராங்குசன் -54
சடகோபர் -63–77
அண்ணல் -66
ஞான முனி -99
முநி மாறன் -100

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -189- திருவாய்மொழி – -10-10-1….10-10-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 26, 2016

முனியானே -பிரவேசம் –

பரமபதத்திலே புக்கு-அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை -என்கிறபடியே
எல்லை இல்லாத ஆனந்தத்தை உடையராய்-
அத் திரளிலே இருந்த இருப்பு நினைக்கக் கூடிய ஞானமே மாத்ரமாய்-
புறம்பே கண்டு அனுபவிப்பதற்கு தகுதி இன்றிக்கே இருந்தது –அதற்கு மேலே-
இல்லை கண்டீர் இன்பம் -9-1-6–என்றும்
பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம் -திரு விருத்தம் -100-என்றும்
தாம் பிறருக்கு உபதேசிக்கிற இவ் உலகத்திலே சரீரத்தோடு கட்டுப் பட்டவராய்-
இருக்கிற படியையும் கண்டார் –
கண்டு -மேருவின் உச்சியில் துக்கம் இல்லாதவனாய்-மேலான சுகத்தை உடையவனாய் இருக்கிறான் ஒருவன்-
பல பல துக்கங்களை உடையதாய்-தாண்ட முடியாததாய்-பேர் ஆழமாய்-
ஓர் இடத்திலும் நிலை இன்றிக்கே இருக்கும்படியான பாதாளத்திலே-
விழுந்து நோவு படுமாறு போலே துக்கம் கொண்டவர் ஆனார் –

அதற்கு மேலே
பண்டு அவன் தமக்கு கை வந்த படியையும் -என்னை உயிர் வேறு அன்றி ஒன்றாக –
தன்னைப் பெறுகைக்கு உபாயம் தானே அல்லது வேறு இன்றிக்கே இருக்கிற படியையும்-
ஆவிக்கு ஒரு பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் –
தன் தலையிலே ஒரு உபாயத்தை ஏறிட்டுக் கொண்டு ஒழுகுமவனுக்கும் -மேவித் தொழும் பிரமன் சிவன் –
தன் கை பார்த்து இருக்க வேண்டும் படி-
எல்லா பொருள்களையும் காப்பாற்றுகின்றவனாய்-இருக்கும் படியையும் நினைந்து-
அக்கணத்தில் பெறாமையாலே-
இப்படி இருக்கிறவன் நம்மை இங்கனே நோவு பட விட்டு வைப்பதே என்று-மிகவும் துக்கம் கொண்டவர் ஆனார்-

அங்கனம் துக்கம் கொண்டவர் -தாய் தந்தையர்கள் முன்னே இருக்க பசியாலும் தாகத்தாலும்-
நோவு படுகிற சிறு குழவியானது துன்பத்தின் மிகுதியாலே தாய் பேரைச் சொல்லிக் கூப்பிடுமாறு போலே-
வள வேழ் உலகின் -என்ற திருவாய் மொழியில் கூறிய தன்மையை உடைய தாம்-
தம் தன்மையை நினைக்க ஆற்றல் இல்லாதவராய் –
தூதர் மூளவும் அறிவிக்கவும் இயலாதவராய்-
அவனே எதிரே நின்று பிராட்டி ஆணை இட்டு தலக்கு -நாணம் -அற்றுச் சொல்லும்படியான ஆற்றாமையோடு-
இரக்கம் இல்லாதவர் உடைய மனங்களும் இரங்கும்படியாக-
அவனுக்கு தம்மைக் காப்பாற்றி அல்லது பரம பதத்தில் இருப்பு அரிதாம் படியாகவும்-
காற்றுத் தீயிலே அகப்பட்டாரைப் போலே துயர ஒலியோடு பெரு மிடறு செய்து கூப்பிட்டு-

தே யத்யமானா பதிதா சவிரா ந நத்யமானா பயசல்யவித்யா
சாகா ம்ருகா ராவணா சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -50-45
வானரங்கள் ராவணனுடைய அம்பால் துன்பம் உற்றவனாய் ஓடின
புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்கிறபடியே
தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக்கார்

இவர் சரணம் புக
அவன் அருள்கடல் ஆகையாலே-இவரை இப்படி நோவுபட இட்டு வைத்தோமே அன்றோ -என்று
இவரைக் காட்டிலும் தாம் நொந்து
கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே –
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து –
பிராட்டிமாரோடே பெரிய திருவடி மேலே இவர் விரும்பியபடியே எல்லாவற்றாலும் நிறைந்தவனாய் வந்து தோற்றி
இவருடைய சரீர சம்பந்தத்தையும் அறுத்து
அடியார்கள் குழாம களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே
அத்திரளிலே புகப் பெற்று-
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும்
இவர் தாமே சொல்லலாம்படி இவர் விடாயும் தீர
இவர் விடாய்க்கு அவ்வருகான தன்னுடைய விடாயும் தீரும் படி கலந்து அருளினான் -என்கிறார்-

இப் பிரபந்தத்துக்கு தலைவன் சர்வேஸ்வரன் -பிரமேயம் –
இப்பிரபந்தம் -அவாவில் அந்தாதி -பிரமாணம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் கவி பாடினார் -பிரமாதா
இனி இவருடைய அவதாரம் தான்-சர்வேஸ்வரனுடைய அவதாரத்தைப் போன்று
சாதுக்களின் உடைய புண்ணியத்தின் பலம்
பிரமேய பிரமான பிரமாதா வைலஷணயத்தையும்
இவர் அவதார வைலஷணயத்தையும்
அருளிச் செய்கிறார் –

ஷேமுசி பக்தி ரூபா -பக்தி ரூபாபன்ன -மதி நலம் -பக்தி பூமா என்றுமாம் –
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்க-ஆதி லீலே-
உலகம் யாவையும் -தாம் உளவாக்கலுக்கும் நிலை பெறுத்தலும் நீங்கலும் நீங்கலா -அலகிலா விளையாட்டுடை அண்ணல் அவன் –

—————————————————————————————————————

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

ஸ்ருஷ்டியாதி முகத்தால் அடியே பிடித்து உபகாரகனாய் போந்து -வடிவு அழகைக் காட்டி -ருசியைப் பிறப்பித்து -உன்னை ஒழிய தரியாதபடி ஆக்கி –
இனி குண அனுபவம் கொடுத்து பிரிக்காதே –
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்-நாம ரூப விபாக அநர்ஹமாய் -சித்த அசித்- அவிசேஷமாய் -ஒன்றும் தேவும் இத்யாதி
-இதம் அக்ரே –சதேவ ஏக மேவ அத்விதீயம் ஆஸீத் -ஏகி பவித்து -அபின்ன நிமித்த -விசித்ரா தேக சம்பந்தி ஆச்ரயண அர்த்தமாகக் கொண்டு
-சேதன வர்க்கத்துக்கு -கரண களேபரங்கள் கொடுப்பவனாக தயாமானாவானாகக் கொண்டு -தாய் தன பேராக குழந்தையை அணைத்து
-சிருஷ்ட்டி பிரகாரம் மனனம் பண்ணி
மஹத்தாதி சமஷ்டி ஸ்வயம் ஏவ ஸ்ருஷ்டித்து -பஞ்ச பூதம் –அண்ட கடாகங்கள் -அண்டாந்தர வர்த்தி – ஸ்ருஷ்ட்டி பண்ண
-பிரஜாபதி உன்னை சரீரமாகக் கொண்டு பண்ணுவேன்
ஸம்ஹ்ருதி -சரஷ்ஷடமான ஜகத்தின் உப சம்ஹார அர்த்தமாக த்ரி நேத்ரம் -சம்ஹார சக்திக்கு அடையாளம்
அப்பா -உபகாரகன் -அழித்து-மேல் பாபங்கள் சேர்க்க முடியாதே -அதிபிரிவர்த்த கரணங்கள் முடித்து
இருவர் நடுவில் ரக்ஷகனான தசையில்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா-ருசி பிறக்கைக்கு அடியான பக்குவ பலமான -போக்யமாய் -ஆதாரம்
-தாமரைப் பூ போலே தர்ச நீயமானதுளையாத கரிய மாணிக்கம் -முழுவதாக -அநாதி ஆத்ம அபகாரம் பண்ணி சோரனான
என்னையும் வஞ்சித்து அபகரித்து -நின்றார் அறியா வண்ணம்
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு-அபிராப்த பலம் என்பதால் தனிமைப் பட்ட எனக்கு குணங்களைக் காட்டி தரிக்காமல்
-பரி பூர்ணனான -தான் ஏறி தலை மிசையாய் பிராணன் போலே
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே-சம்சார தோஷம் -அறிந்து -புருஷார்த்தமும் காட்டி அருளி
-ஆர்த்தியையும் அபி நிவேசமும் ஜெநிப்பித்த பின்பு -நான்கையும் அருளிய பின்பு
முன்பு போலே நீ அகன்று போக ல் ஓட்டேன் -இது 19 வைத்து இனி -3 தடவை 17 தடவை -இன்னும் ஒரு இனி தான் உண்டு
உன் த்வரையும் அறிந்த பின்பு -உன்னைப் பெறாவிடில் முடியும் நிலையில் உள்ள என்னை -சம்சார தசையில் விஷயாந்தரங்கள் காட்டி
பல நீ காட்டி படுத்த மாயம் ருசி பிறந்த பின்பு குணங்களைக் காட்டி பராக்கு பார்க்க வைத்தாய் -ஆசுவாசிப்பித்தாய் முன்பு
-அது போலே இனி மேல் மாயம் இனி செய்யேல் -என்னை -வஞ்சியாதே கொள்ள வேண்டும் –
நிர்ஹேதுகமாக-உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி-உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து
நிர்ஹேதுகமாக-உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி-உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து-
பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்துநீ சென்று பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க-
விட ஒண்ணாது-என்கிறார்-
பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்து – நீ சென்று -பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க-விட ஒண்ணாது-என்கிறார்-

நிர்ஹேதுகமாக-உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி-உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து
பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்துநீ சென்று பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க-
விட ஒண்ணாது-என்கிறார்-

முனியே –
பஹுஸ்யாம் -சங்கல்ப -முனி -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் –
பஹு பாவன சங்கல்ப விசிஷ்டன் -நிமித்த கார்யம் சித்திக்க
சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -உபாதான காரணம் –
விகாரத்வம் வருமோ -அவிகாராயா சுத்தாயா –
சரீராத்மா பாவம் -சொல்லி -ஆத்மாவுக்கு நிர்விகாரத்வம் சித்திக்கும் –
ப்ரஹ்மத்துக்கு அம்சம் -அறிந்து நிர்பரராய் -பொறுப்பாய் -இருப்போமே-
விசிஷ்ட ப்ரஹ்மம் சொல்லி -பல பிரமாணம் சொல்லி –
முனியே –
பஹூச்யாம் –
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் இதி –
அவன் இடத்தில் பிறக்கையாலும்
அவன் இடத்தில் இலயிக்கையாலும்
அவனாலே காக்கப் படுகையாலும்
இப்பொருள்கள் யாவும் அவனே -என்றும்
விஷ்ணுவானவன் சூஷ்மமான சித் அசித்துகளுடன் கூடின தன்னை படைப்பில்-
ஸ்தூல சித் அசித்துகள் உடன் கூடினவனாக படைக்கிறான்-
காப்பாற்றப் படுகின்ற பொருளான தன்னைக் காப்பாற்றுகிறான் –
பிரளய காலத்தில் தான் அழிக்கப் படுகிறான் தான் அழிக்கிறான்-என்றும்-
இதம் சர்வம் -கார்ய தசை –
காரண தசை சேதனம் அசேதனம் –
ப்ரஹ்மம் ஒன்றே இரண்டு தசைகள் – ஸ்தூல சூஷ்ம சேதன அசேதன விசிஷ்டம் -ப்ரஹ்மம் –
விசேஷணம் மாறி விசேஷயம் ஒன்றாக இதம் சர்வம் -காரியம் -ப்ரஹ்மம் காரணம் -என்றவாறு
இதம் சர்வம் ப்ரஹ்ம-ஒன்றாக ஹிந்து தஜ்ஜலான் -என்கிறது –
சதேவ -சத்தாகவே ஸ்ருஷ்டிக்கு முன்னால் இருந்தது -ஏக மேவ ஒன்றாகவே இருந்தது

ஸ்ருஷ்டௌ ஸ் ருஜதிசை ஆத்மாநாம் விஷ்ணு பால்யஞ்ச பாதிச-உப சம்ஹ்ரியதே சாந்தே சம்ஹர்த்தாச ஸ்வயம் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-67-
ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ் ச ஸ்ர்க்க கர்த்தா-ஸ ஏவபாதி அத்திச பால்யதி-ப்ரஹ்மாதி அவஸ்தாபி அசேஷ மூர்த்தி-விஷ்ணு வசிஷ்ட வரத வரேண்ய-
வசிஷ்ட வரத வரேண்ய-சேஷித்வம் சரண்யத்வம் பிராப்யத்வம்
அவனே படைக்கப் படுகிறான் -அவனே படைக்கிறான் -அவனே பாதுகாக்கின்றான் அழிக்கின்றான்
அவனே பாதுகாக்கப் படுகின்றான்
பிரமன் சிவன் முதலிய நிலைகளோடு கூடி எல்லாப் பொருள்களையும் சரீரமாக உடையவனாய்
மேம்பட்டவனாய் சிறந்த வரங்களைக் கொடுப்பவனாய் இருப்பவன் விஷ்ணுவே -என்றும்
மமைவ அம்ஸ ஜீவலோகே ஜீவபூத சனாதன-மன ஷஷ்டாதி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தாதி கர்ஷதி -ஸ்ரீ கீதை -15-7-
என்னுடைய சரீரமாயும் அநாதியாயும் இருக்கின்ற உயிரானது மாயையில் அடங்கி இருக்கிற
மனத்தினை ஆறாவதாக உடைய இந்த்ரியங்களை-இவ் உலகத்தில் இன்பத்தின் பொருட்டு இழுக்கிறது -என்றும்
அம்ஸ நானா வ்யபதேசாத் அந்ய தாச-அபிதாச கிதவாதித்யம் அதீயதே ஏக -சாரீரக மீமாம்சை -2-3-42
அம்சம் -ஜீவாத்மா பரமாத்மாவுக்கு -நாநா-வெவ்வேறாக -என்றும் ஓன்றும் என்றும் சொல்லி – பேத அபேத சுருதிகள் இரண்டையும் சேர்த்து கடக சுருதி
பிரியாமல் இருப்பதால் ஓன்று -தனித்த தனி தத்வங்கள் அதனசால் நாநா -அம்ச அம்சி பாவம் என்றதாயிற்று -ஈசன் அநீசன் இரண்டும் உண்டே –
ப்ரஹ்மமே தாசர் ப்ரஹ்மமே கிதவத்ய -/தத்வம் அஸி -அபேத சுருதி
பிருத்தாகாத்மானம் பிரேரிராத் தாஞ்ச மத்வ -பேத சுருதி –

உயிர் பரம் பொருளின் கூறே யாகும்-அது பரம் பொருளின் வேறாகவும் ஒன்றாகவும்-
ஸ்ருதிகளிலே சொல்லப் பட்டு இருக்கிறது -என்றும் சொல்லுகிறபடியே-
சித் அசிதுக்களோடு கூடின தானே படைத்தலையும் அழித்தலையும் செய்கிறான்–

ப்ருத்வீ அப்ஸூ ப்ரலீயதே-ஆப தேஜச லியந்தே
தேஜோ வாயோ லீயதே-வாயு ஆகாசே லீயதே
ஆகாசம் இந்த்ரியேஷூ-இந்த்ரியாணி தன்மாத்ரேஷூ
தன்மாத்ரேஷூ பூதாதௌ லியந்தே-பூதாதி மஹதி லியதே
மஹான் அவ்யக்த லீயதே-அவ்யக்தம் அஷரே லீயதே
அஷரம் தமசி லீயதே-தம பரதேவ ஏகீபவதி-சுபால உபநிஷதம் –
படைத்தல் அழித்தலை முன்னிட்டு கொண்டு உள்ளது ஓன்று ஆகையாலே
முந்துற அளிக்கும் முறையை அருளிச் செய்கிறார்
ஆகையாலே பூமி தண்ணீரிலே மறைகிறது -தண்ணீர் நெருப்பிலே மறைகிறது
நெருப்பு காற்றிலே மறைகிறது காற்று ஆகாசத்தில் மறைகிறது
ஆகாசம் -இந்த்ரியங்கள் -தன் மாத்ரைகள் –அஹங்காரம் -மஹத் தத்வம் -அவ்யக்தம் -அஷரம் -தமஸ்
பரம் பொருளில் மறைகிறது -என்கிறபடியே-தன்னிடத்தில் மறைந்து இருக்கிற இதனை
பஹுச்யாம் பிரஜாயேயேதி -தைத்ரியம் -என்று நினைந்து விளங்கச் செய்து –
தமஸ் -அஷரம் -அவ்யக்தம் -மஹான் அஹங்காரம் –தன்மாத்ரைகள் -உண்டாக்கி
அவற்றை பூதங்களாக முற்றுவித்து அண்டத்தை படைத்தல் முடிவாக உதிய உலகத்தினை படைத்தல்
செய்கிற திவ்ய சங்கல்ப்பத்தினை உடையவனாய்
பகவான் என்ற சொல்லால் சொல்லப் படுகின்ற பரப் ப்ரஹ்மம்-பரமாத்மா போன்ற பல
சொற்களால் வேதாந்தங்களில் சொல்லப் பட்ட-ஸ்வரூபத்தால் நிலை பேறு உடையனாய் இருந்த பரம புருஷன் -என்றபடி-

ஆகாசத்துக்கு இந்திரியங்கள் காரணம் இல்லாமையால் -இதர பூத சதுஷ்டயம் -இந்திரியங்களுக்கு ஆப்யாயகமாகக் கொண்டு
ஆகாசம் -சப்தம் -காதுக்கு /வாய் -ஸ்பர்சம் -தொக்கு /பிருதிவி -கந்தம் –
இந்திரியங்களுக்கு தன்மாத்திரைகள் பூத சூஷ்மம் காரணம் இல்லாமையால் -ஆப்யாயகம் -அனுபவிப்பதால் –
சப்தம் தன்மாத்திரை -ஆகாசமும் ஸ்பர்ச தன்மாத்திரை பிறக்கும் -இதனால் பூதங்களுக்கு தன்மாத்திரை காரணம்
அவ்யக்தம் -அக்ஷரம் -தமஸ் மூன்று நிலைகள் /விதை -பருத்து -வெடிக்கும் முளை விடும் -மூன்று தசைகள் –
அவ்யக்தம் தெளிவு இல்லாமல் மஹான் தெளிவு பிறக்கும் -மேலே அஹங்காரம் -பூத தன் மாத்திரைகள் -பூதங்கள் –

அன்றிக்கே
ஸ ஏவாகி ந நமேத -வெறுத்தவன் துறந்தவன்-
அப்பரம புருஷன் தன்னம்தனியே இருந்த காலத்தில் மகிழ்ச்சி கொண்டான் இலன் -என்கிறபடியே-முனிதல் கோபித்தல் –
எல்லா பொருள்களும் தம் தம் பெயரையும் உருவத்தையும் இழந்து-
பரம் பொருளின் பெயரும் உருவமுமேயாய் அசித் கல்பமாய் கிடந்தால் போலே-
ஜலத்தின் நாமரூபமேயாய் லயித்தால் போலே -காரணதசையில் லயித்தால் போலே குடம் மண்ணேயாய் என்றவாறு –
எப்பொழுது பரதன் சத்ருக்கனன் இளைய பெருமாள் உடன் கூடுவேனோ -கூடவே இருந்தாலும் அசத்சமம் என்றவாறு –
சர்வேஸ்வரனும் தானும் இவற்றைப் பிரிந்து அசித்தைப் போன்ற தன்மை உடன் இருந்தான் என்பதை சொல்கிறது-
தத ராவண நீதாயா சீதையா சத்ரு கர்ஸன-இயேஷ பதம் அந்வேஷ்டும் சரனாசரிதே பதி-சுந்தர -1-1-
ஜாம்பவானால் புகழ்ந்து பேசப் பட்ட பின்னர் பகைவர்களை அழிக்க வல்ல அனுமான்-
இராவணனால் கொண்டு போகப்பட்ட பிராட்டி இருக்கும் இடத்தை தேடுவதற்கு-
தேவர்கள் சஞ்சரிக்கிற ஆகாசம் வழியாக செல்வதற்கு விரும்பினார் -என்கிறபடியே –
சிறை புகுந்தவள் ஏற்றம் -வலிய அன்றோ சிறை புகுந்தாள்-கண்டு பிடிக்க திருவடி திரு உள்ளம் கொண்டால் போலே
சர்வேஸ்வரன் நம்மை – கடல் கொண்ட பொருளை நாடுவதற்கு திருவடி இச்சித்தால் போலே-
உரு மாய்ந்த மக்களை உண்டாக்க நீ மனனம் பண்ணிற்று –
நான் இல்லாத அன்று ஒரு காரணம் இல்லாமல் என்னை உண்டாக்கின நீ-
நான் உண்டாய் நோவு படுகிற இன்று எனக்கு உதவ வேண்டாவோ-
முனியே
அம்மே -என்பாரைப் போலே -என்றது
உறுப்புகளும் சரீரமும் கரண களேபரம் இல்லாதவாய் இவை கிடந்த அன்று உண்டாக்கினாய்-
ஆசைப்பட்ட எனக்கு இன்று உதவல் ஆகாதோ -நீ நினைக்கும் அன்றோ உதவல் ஆவது-
நான் நினைக்கும் அன்று உதவல் ஆகாதோ -என்றபடி-
இனி
சாகா ம்ருகா ராவண சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -60-45
வானரங்கள் ராவணன் உடைய அம்பால் துன்புற்று ஓடின
புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்றும்
ராஷச ஸ வத்யமானனாம் வானரானாம் மகா சமு-சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம் -யுத்தம் -94-17-
அரக்கர்களால் துன்புறுத்தப் பட்ட வானரர்கள் உடைய பெரிய கூட்டமானது-
காப்பாற்றுகின்றவனான ஸ்ரீ ராமனை புகலாக அடைந்தது என்றும் சொல்லுகிறபடியே-
உன்னை ஒழிய ஒரு புகல் இல்லாதவருக்கு உதவுமவன் அன்றோ-

நான்முகனே –
வ்யஷ்டி சிருஷ்டிக்கு தகுதியாக-சமஷ்டி புருஷனான பிரமனுக்கு அந்தராத்மாவாக
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச்ச ப்ரஹினொதி தஸ்மை –
முதல் முன்னம் பிரமனை எவன் படைத்தானோ -என்கிறபடியே பிரமனைப் படைத்து-
அவன் ஆத்மா வழியாக அவன் சரீரத்திலே அனுபிரவேசித்து-
சேதனர் அசேதனமான தங்கள் சரீரங்களைக் கொண்டு
தங்கள் தங்கள் நினைவுக்கு தக்கபடி போதல் வருதல்-முதலிய செயல்களை செய்யுமாறு போலே-
தன்னுடைய சரீரமாய் இருக்கிற பிரமனுக்கு அந்தர்யாமியாய்-அவனைக் கொண்டு மற்றும் நினைவுக்கு தகுதியாக
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர உருவமான உலகத்தை படைத்த படியைச் சொல்லுகிறது-
இதனால் இவன் நினைத்த அன்று ஏதேனும் கொண்டு கார்யம் கொள்ள வல்லவன் -என்பதனைத் தெரிவித்த படி –
இருந்து படைக்கும் ஆசனத்தைப் போன்றவன் பிரமன் –
அசேதன பொருள்களான மகத்த முதலான தத்வங்களைக் கொண்டு படைத்ததோடு-
அறிவுள்ளவனான பிரமனைக் கொண்டு படைத்ததோடு வேறு பாடு இல்லை அவனுக்கு –
சேதன பொருள்கள் -அசேதனப் பொருள்கள் என்று தம்மில் தாம் வேற்றுமை உண்டாகிலும்-
அவனைக் குறிக்க பரதந்த்ரம் ஆகும் இடத்தில் இரண்டும் ஒக்கும் –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய –
தேவர் மனுஷ்யர் திர்யக் -என்றும்
பிராமணன் ஷத்ரியன் வைஸ்யன்-என்றும் அந்த அந்த சரீரங்களை காட்டும் சொற்களாலே-
அவற்றில் வேறாய் இருந்துள்ள அவர்களும் சொல்லப் பட்டால் போலே -இங்கும் –
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ரத்வி சரீரம் –என்றும் –
ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யம் தே வசூதாதலம்-அக்னி கோப பிரசாத தே சோம ஸ்ரீவஸ்த லஷனை-யுத்தம் -118-80-–என்றும் –
தஸ்ய ஸ்ருஜ்யச்ய சம்பூதௌ தத் சர்வம் த