பகவத் விஷயம் காலஷேபம் -156- திருவாய்மொழி – -7-8-1….7-8-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

மேல் திருவாய்மொழி, உருவு வெளிப்பாடாய்ச் சென்றது.
கைக்கு எட்டாமையாலே உருவு வெளிப்பாடு என்று அறிவர் அன்றோ?
இனி. சர்வேஸ்வரன் தான் நினைத்த காரியம் செய்து தலைக்கட்டிக்கொள்ளுமளவும் நம்மை இங்கே
வைத்திருப்பான் என்னும் இடமும் அறிவரன்றோ? ஆகிலும், அவனை ஒழியத் தரிக்க மாட்டாதவர் ஆகையாலே,
இதனை நினைத்து ஆறி இருக்கவுதம் மாட்டாரே! ‘விரோதியைப் போக்கித் தரவேணும்’ என்று இவர் விரும்பினாலும்,
அவனும் இவரைக்கொண்டு தான் நினைத்த பிரபந்தங்களைத் தலைக்கட்டிக்கொள்ளாமளவும் இவர் விரும்பியதைச் செய்யானே!
இவர் விரும்பியதைச் செய்யாதிருக்கச்செய்தேயும், இவரை இங்கே வைத்து வாழ்விக்கும் உபாயங்களும் அறிந்திருக்குமே!
ஆகையாலே, சில பொருள்களை –மத்ஸ்யங்களை -உயிர் போகாதபடி ஒன்றிலே கோத்திட்டு வைக்குமாறு போலே,
முடியவும் ஒட்டாதே வாழவும் ஒட்டாதே நடுவே இருத்தி நலிகிறபடி நினைத்து,
‘எனக்கு இதில் பொருந்தாமை உண்டாய் இருக்கச் செய்தேயும் இச்சம்சாரத்திலே வைத்து என்னை நடத்திக்கொடு
போருகிற இவ்வாச்சரியத்தை எனக்கு அருளிச்செய்ய வேண்டும்,’ என்ன ஒன்றைக் கேட்க,
வேறே சிலவற்றைச் சொல்லுவாரைப் போலே, ‘இது ஒன்று கண்டோ நீர் ஆச்சரியப்படுகிறது?
இவ்வளவு அல்லாத நம்முடைய விசித்திர உலக உருவமாய் இருக்குந் தன்மையைப் பாரீர்!’ என்று
தன்னுடைய ஆச்சரியமான உலக உருவமாய் இருக்குந் தன்மையைக் காட்டிக்கொடுத்தான்.
அங்ஙனம் காட்டிக்கொடுத்த அதுதானும் இவர் நினைத்தது அன்றேயாகிலும், அவன் காட்டிக்கொடுத்தது ஆகையாலே.
அதுவும் இவருடைய பிரீதிக்குக் காரணமாக இருக்கும் அன்றோ?
ஆக, இவர் ஒன்றைக் கேட்க, -அதை தவிர -அவன் பல ஆச்சரியங்களைக் காட்டிப் பரிகரித்தான்.

அக்குரூரன், யமுனையிலே புக்கு முழுகினவாறே பிள்ளைகளை நீருக்குள்ளே கண்டு அஞ்சிக் கரையிலே பார்த்தான்:
அங்கேயும் கண்டான்;

நீரிற் புகுங்கண்டு தேரினைப் பார்க்கும் நிறுத்தியபொன்
தேரில் தொழும்பின்னை நீரினில் காணும் சிறந்தபச்சைக்
காரில் திறம்மெய் யரங்கனும் சேடனும் கஞ்சவஞ்சன்
ஊரிற் செலஉடன் போம்அக்கு ரூரன்தன் உண்மகிழ்ந்தே.’-என்ற திருவரங்கத்துமாலைச் செய்யுள் நினைத்தல் தகும்.

‘ஓ கிருஷ்ணனே! இந்த உலகமானது, மஹாத்துமாவான எவனுடைய மிகப்பெரிய ஆச்சரிய சொரூபமாயிருக்கிறதோ,
அப்படிப்பட்ட மிகப்பெரிய ஆச்சரியச் செயலையுடைய உன்னோடு சேர்ந்தேன்,’ என்று கொண்டு

ஜகத் ஏதத் மஹாஸ்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத்மந:
தேந ஆஸ்சர்யவரேண அஹம் பவதா க்ருஷ்ண ஸங்கத:’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 19 : 7.

கண்டு,அவன் ஆச்சரியப்பட்டாற்போலே, இவரும்
அவனுடைய விசித்திரமான உலக உருவமாய் இருக்குந்தன்மையை அருளிச்செய்து ஆச்சரியமடைந்தவராகிறார்.
விஸ்மயம் வியப்பு விஸ்ம்ருதி மறப்பு

புகழும்நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியும், ‘நல்குரவும் செல்வும்’ என்ற திருவாய்மொழியும், இத்திருவாய்மொழியும்
பொதுவாக நோக்க ஒன்றாக இருந்தனவேயாகிலும் ஒவ்வொன்றற்கும் வேறுபாடு சிறிது உண்டு என்க.
‘புகழும் நல்ஒருவன்’ என்ற திருவாய்மொழி ஐயத்திலே – நோக்கு.–ஜெகதாகாரத்வம் –
‘நல்குரவும், செல்வும்’ என்ற திருவாய்மொழி மாறுபட்டஐஸ்வர்யத்திலே நோக்கு- -விருத்த ஆகாரம் அங்கு
இத்திருவாய்மொழி ஆச்சரியமாக உலக உருவமாய் இருக்குந்தன்மையிலே நோக்கு.-விசித்திர ஆகாரம் இங்கு

—————————————————————————————-

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-

காரண கார்ய வர்க்கங்கள் -சகல பதார்த்தங்களும் விபூதியாக கொண்ட பிரகாரம் -ஆச்சரிய ரூபன் நீயே அருளிச் செய்ய வேண்டும்
மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்- ஸ்வாபாவிக ஆச்சரிய சக்தன் -அதுக்கு அநு ரூபமாக
மகா மேருவை மஞ்சாடி கூழாம் கல்லை போலே சுருக்கி -சங்கை தீர்த்து –
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்-அண்ட காரணம் பூத பஞ்சகம் -சாமா நாதி கரண்யம் சரீராத்மா நிபந்தம்
-வ்ருத்த ஸ்வ பாவம் இவை -இருந்தாலும் இவை எல்லாம் சரீரம் அவனுக்கு -என்ன ஆச்சர்யம் –
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்-ஸமஸ்த பதார்த்தங்கள் -காரிய வர்க்கங்கள் –
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே-பிரகாரங்கள் -தத் பிரகார விசிஷ்டன்
-நீ யாய் -உனக்கு அசாதாரண ஆகாரமும் உண்டே -கூரார் ஆழி –இத்யாதி
உபபக்தி பொருத்தம் புரிய வில்லை -நீயே அருளிச் செய்ய வேணும் –
சர்வாத்மகன் தான் -தத் கத தோஷம் இல்லாமல் -உள்ளாய் –
வேதாந்த ரகசிய பொருத்தங்களை நீயே அருளிச் செய்ய வேணும்

மாயவனே! வாமனனே! மதுசூதனனே! தீயாகி நீராகி நிலனாகி ஆகாசமாகிக் காற்றாகித் தாயாகித் தந்தையாகி மக்களாகி மற்றைய
உறவினர்களாகி மேலும் சொல்லப்படாத பொருள்களுமாகி உனது உருவுமாகி நீ நின்றபடிகள் தாம் இவை என்ன படிகள்?
இத்திருவாய்மொழி, கலைநிலைத்துறை.

விசித்திரமான காரிய காரணங்களை எல்லாம் விபூதியாகவுடையனாய் இருக்கிற இருப்பை அநுசந்தித்து,
‘இவை என்ன படிகள்!’ என்று ஆச்சரியப்படுகிறார்.

மாயா –
‘மாயா!’ என்கிற இது, இத்திருவாய்மொழிக்காகச் சுருக்கமாய் இருக்கிறது.
மாயனை மன்னு-அங்கும் 30 பாட்டிலும் மாயன் அர்த்தம் கோத்து அர்த்தங்கள் உண்டே –
வாமனனே – ‘மாயன் என்கிற பதத்திற் சொல்லுகிற ஆச்சரியத்தினை அறிகிற இடமாய் இருக்கிறது. என்றது,
அன்றே பிறந்து அன்றே வளர்ந்து –பெரியதிருவந்தாதி.-
மஹாபலி பக்கலிலே சென்று. அவன் முன்னே நின்று, தான் சொன்னவை எல்லாம் செய்யவேண்டும்படி வார்த்தை அருளிச்செய்து,
சிற்றடியைக் காட்டிப் பெரிய அடியாலே அளந்துகொண்டு,
இப்படிச் செய்த செயல்கள் அனைத்தையும் முன்னோட்டுக்கொண்ட வாமனனே!’ என்கிறார் என்றபடி.
மதுசூதா –
ஆச்சரியமான செயல்களுக்கு எல்லாம் ஸ்ரீ வாமனனைப் போலேயாயிற்று, பகைவர்களை அழிப்பதற்கு மதுசூதனன் என்கிறது.
மதுசூதா நீ அருளாய் –
மது என்னும் அசுரனை அழித்தாற்போலே, எனக்கு ஓடுகிற ஐயத்தையும் நீயே போக்கித்தந்தருள வேணும்.
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய் –
காரியத்தைப்பற்றி இருக்கிற விசித்திரத் தன்மை காரணத்திலேயும் உண்டாய் இருக்கும் அன்றோ?
மேலும், ஒன்றின் படியாய் இராதே அன்றோ மற்றையது?
இப்படி வேறுபட்ட பிரகாரங்களையுடையனவான ஐம்பெரும்பூதங்களுக்கும் நிர்வாஹகனாய்.
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் –
காரியவர்க்கத்திலும் தாய் செய்தது தமப்பன் செய்யமாட்டான்;
தமப்பன் செய்யும் உபகாரங்கள் மக்கள் செய்யமாட்டார்கள்;
மக்கள் செய்யும் உபகாரம் உறவினர்கள் செய்யமாட்டார்கள்;
இப்படி எல்லாவிதமான உறவினர்களுமாய்.
முற்றுமாய் –
சொல்லப்படாத தொடர்பு பெற்றவைகளாயுள்ள சேதன அசேதனங்கள் எல்லாவற்றிற்கும் நிர்வாஹகன் ஆனவனே!

நீயாய் –
உலக உருவமாய் இருக்கும் அளவு அன்றே தனக்கே உரியதான விக்கிரகத்தோடு கூடி இருக்கும் இருப்பு?

இவர்க்குப் பரமபதத்திலே நித்தியசூரிகளுக்கு இனியனாய் இருக்கும் இருப்போடு,
உலக உருவமாக நிற்கும் நிலையோடு வாசி அறப்போக்கியமாம்படி அன்றோ இவர்க்குப் பிறந்த ஞானத்தின் தெளிவு இருக்கிறபடி?
நீ நின்றவாறு-
இப்படி இவை எல்லாமாய்க்கொண்டு நீ நின்ற பிரகாரம்.
இவை என்ன நியாயங்கள்-
இவை என்ன படிகள்தாம்?
முதல் திருவாய்மொழியிலே இவனுடைய இறைமைத் தன்மையை அனுபவித்திருக்கச்செய்தேயும்,
இதற்கு முன்பு கண்டறியாதாரைப் போலே புதியராய் அனுபவிக்கிறாராயிற்று.
குணானுபவத்தில் கணந்தோறும் புதுமை பிறந்து அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமாய் –திருவாய் 2. 5 : 4.-
அனுபவிக்குமாறு போலேயாயிற்று, விபூதி அனுபவத்திலும் புதியராய் அனுபவிக்க வல்ல படி.
இவை என்ன நியாயங்கள் நீ அருளாய்-
இதனை அருளிச்செய்யவேணும்.
‘ஏ கிருஷ்ணனே! என் சந்தேகத்தை அடியோடு போக்குதற்கு நீதான் தக்கவன்;
இந்த சந்தேகத்தை நீக்குகின்றவன் உன்னை ஒழிய வேறு ஒருவன் இலன்,’ என்கிறபடியே,
அருச்சுனனுடைய சந்தேகத்தைத் தீர்த்தாற்போலே, என்னுடைய ஐயத்தையும் தீர்த்தருள வேணும்.

‘ஏதம் மே ஸம்ஸயம் க்ருஷ்ண சேத்தும் அர்ஹஸி அஸேஷத;
த்வத் அந்ய: ஸம்ஸயஸ்ய அஸ்ய சேத்தா ந்ஹ்யுபப்த்யதே’-என்பது, ஸ்ரீ கீதை, 6 : 39.

————————————————————————————————

அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!-7-8-2-

நியாயங்கள் முடிந்து -இங்கு -அபிமத சித்தியால் வந்த பூர்த்தியால் -அச்சுதன் -மிக உயர்ந்த சகல தேஜஸ் பதார்த்தங்கள் விபூதி -விசித்திரம்
அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்-அம் கள்-இங்கு -மதுவை உடைய பூவை –கை விடாதே -சேஷித்வ பூர்த்தியால் -ஆழ்வாரைப் பெற்றதால்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்-தேஜஸ் பதார்த்தங்கள் பிராணிகளுக்கு பதார்த்த தர்சனம் பண்ண முடியாத இருள்
பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ-வளர வேண்டிய மழை-செழிப்பாக -தர்மம் -புகழ் -துர் வியோகம் பாத்திரம் வரும் பழி
-பகவானுக்கும் பிறக்கும் என்றால் புகழ் இங்கே பரம பதம் –
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே-பழி மிக்கு இருந்தால் -சீற்றம் மிக்கு -முடித்து -உபசம்ஹரித்து
-க்ரூர கண் க்ரூர ஸ்வபாவம் என்ன விசித்திரமான பிரகாரங்கள்

அழகிய தேனோடு கூடிய மலர்களையுடைய குளிர்ந்த திருத்துழாயை முடியிலேயுடைய அச்சுதனே! சந்திரனும் சூரியனுமாகி அழகிய
பல வகையான நக்ஷத்திரங்களாகி இருளாகியும், மிகுதியாகப் பெய்கின்ற மழையாகிப் புகழாகிப் பழியாகி. அதற்கு மேலே
தறுகண்மையும் கொடுமையுமுடைய யமனுமாய் இருக்கின்ற இவை என்ன ஆச்சரியம்! அருளிச்செய்வாய்.

சந்திரன் சூரியன் முதலான பொருள்கள் முழுதும் தனக்கு விபூதியாகவுடையனாய் இருக்கிற படியை அருளிச்செய்கிறார்.

அம் கள் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே –
அழகிதாய்த் தேனோடு கூடின மலரையுடைத்தாய்க் குளிர்ந்திருந்துள்ள திருத்துழாயைத் திருமுடியிலேயுடையையாய்,
அந்த ஒப்பனையால் வந்த அழகுக்கு ஒரு நாளும் ஒரு வேறுபாடும் இன்றிக்கே என்றும் ஒக்க நித்தியாம்படி இருக்கிறவனே!
வைத்த வளையத்தைப் போன்றும் போக்கியமாகிறதாயிற்று விபூதி அனுபவம் இவர்க்கு. -இது ஒரு வளையமே -கங்குலும் பகலில் பார்த்தோம் –
‘மேல் திருவாய்மொழியிலே ‘விள்கின்ற பூந்தண் துழாய் விரை நாற வந்து’ என்று சொன்னதை நினைக்கிறார்’ என்று. பிள்ளான்பணிப்பர்.
மாயன் குழல் விள்கின்ற பூந்தண் துழாய் உருவு வெளிப்பாடாய்த் துன்புறுத்தல் தவிர்ந்து, நேரே கண்டு அனுபவிக்கிறார் அன்றோ?

உருவ வெளிப்பாடும் அவனைப் பார்க்க வேண்டும் -இப்பொழுது விபூதியைப் பார்க்கிறார் -துளசி கண்ணால் பார்க்கலாமே –
இதற்கு அந்தராத்மா என்று அன்றோ பார்க்கிறார் -அதனால் பாதிப்பு இல்லை -இதில் -ப்ரீதி அப்ரீதிகள் மாறி மாறி தானே இவருக்கு வரும் –

திங்களும் ஞாயிறுமாய் –
‘சூரியகிரணங்களால் உண்டான தாபத்தைச் சந்திரன் நீக்கினான்,’ என்கிறபடியே,

‘ஸூர்யாம்ஸூ ஜநிதம் தாபம் நிந்யே தாராபதி: ஸமம்
அஹம் மாநோத்பவம் துக்கம் விவேக: ஸூமஹாந் இவ’-என்பது ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 10 ; 13.

சூரியனுடைய கிரணங்களாற்பிறந்த வெப்பம் எல்லாம் போம்படி குளிர்ச்சியைச் செய்யக்கூடியதான சந்திரனும்
அவனால் வந்த குளிர்ச்சியை அறுத்துக்கொடுக்கும் சூரியனுமாய்.
செழும் பல் சுடராய்-
சேதநர்க்கு வரும் லாபாலாபங்களை அறிதற்குத் தகுதியான சஞ்சாரத்தையுடைய நக்ஷத்திரங்ளுமாய்.

இருளாய் –
சேதநர்கட்கு இன்ப நுகர்ச்சிக்கு உரியதான இருளாய்.
பொங்கு பொழி மழையாய் –
எல்லாப் பிராணிகளும் உயிர்வாழலாம்படி பயிர்களை உண்டாக்கும் மழையுமாய்.
புகழாய் –
எல்லாரும் ஆசைப்படும் கீர்த்தியாய்.
பழியாய்-
எல்லாரும் வருந்தியும் நீக்கக் கூடியதான பழியாய்.
பின்னும்-
அதற்கு மேலே.
வெங்கண் வெங் கூற்றமுமாம் –
‘முன்னே இளகின மனத்தையுடையவரும் புலன்களை அடக்கியவரும் எல்லாப் பிராணிகளுக்கும் நலத்தைச் செய்வதில்
விருப்பமுடையவருமாய் இருந்துவிட்டு இப்போது சீற்றத்தை அடைந்து இயல்பான தன்மையை விடத் தக்கவர் அல்லர்’ என்கிறபடியே,

‘புரா பூத்வா ம்ருது: தாந்த: ஸர்வபூத ஹிதேரத:
ந க்ரோதவஸம் ஆபந்ந: ப்ரக்ருதிம் ஹாதும் அர்ஹஸி’-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 65 : 4.

இவை மிகுதியுற்றவாறே குளிர நோக்குமது தவிர்ந்து, வெவ்விதான நோக்கினை யுடையையாய்.
அன்றிக்கே,வெங்கூற்றம்-
அந்தகன் ‘தண்ணீர்’ என்னும்படி வெவ்விய கூற்றமுமாம். என்றது,
அழித்தல் தொழிலில் உருத்திரனுக்கு அந்தர்யாமியாய் இருக்கும் தன்மையைச் சொன்னபடி.
இவை என்ன விசித்திரமே-இவை என்ன ஆச்சிரயந்தான்! அருளாய்.

—————————————————————————————-

சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3-

கால உபலசித்தமான -ஆஸ்ரித பரதந்த்ரன் -உத்துங்கன் -யுகம் தோறும் மாறாமல் -தொற்று அற்று நீ இருக்கும் வைஷம்யம்
சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்–தேரோட்டி -விசித்ரமாம் படி -அவஸ்த்தை அனுரூபமாம் படி நடத்தி
-அந்த வைச்சித்ரம் போலே பகலை இரவாக்கும் பரிகரம் உடைய
எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்-அத்விதீயமான யுகங்களுக்கு நிர்வாகன்-கால காலயமா கொண்டு -பிரிவுடன் –
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்-ஞான ஏக ஆகாரத்தயா ஒத்து ஞான ஸ்வரூபத்தால் சமம் -ஸ்வயம் பிரகாசம்
-கர்மானுகுணமாக சிக்குண்டு -ஞாத்ருத்வம் ஸ்வ பாவம் -தர்மிக் ஞானம் -தர்ம பூத ஞானம் புத்தி -ஏகோ பஹு நாம் –
ஸ்வரூப பேதம் -பின்னம் உண்டு சமமான ஆகாரம் -உலப்பு இல்லா எண்ணில் அடங்காமல் -சாமியாகார திரோதாகாரம்
வியவு வேறுபாடு தேவாதி -இவற்றுக்கும் நிர்வாககனாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே-என்னிடத்தில் அவை இல்லை அவை இடத்தில் நான் இல்லை கீதை
-ஆதார ஆதேய பாவம் -உள்ளே இருந்தாலும் -ஆத்மா சரீரத்துக்கு போலே -ஆத்மாவுக்கும் இவனே ஆதாரம் –
பஸ்யமே யோகம் ஐஸ்வர்யம் -தத் கத தோஷ அஸ்ப்ருஷ்டன் -இவை என்ன வைஷம்யங்கள்

‘அழகிய தேரை நடத்தியவனே! அழகிய சக்கரத்தையுடையவனே! யுகங்கள் அவையுமாகி, அவற்றுள் நடக்கின்ற ஒத்தனவாயும் ஒள்ளியவாயும்
எல்லையில்லாதனவாயும் இருக்கின்றவாகிய பல பொருள்களாகியும் அவற்றின் வேறுபாடுகளாகியும் ஆச்சிரயப்படத்தக்கவனாய் நீ நிற்கின்றாய்;
இவை என்ன வேறுபாடுகள்! அருளிச்செய்ய வேண்டும்,’ என்கிறார்.
‘எத்தனையோர் உகம் அவையுமாய்’ எனப் பிரித்துக் கூட்டுக. ‘ஒத்த ஒண் உலப்பு இல்லன பல்பொருள்களாய்’ என்க. வியவு – வேறுபாடு, விடமம் – வேறுபாடு.

‘கிருதயுகம் முதலான யுகங்களையும், அந்த அந்தக் காலங்களில் உண்டான தேவர் மனிதர் முதலான
பொருள்களையும் விபூதியாகவுடையவன்,’ என்கிறார்.

சித்திரம் தேர் வலவா –
விசித்திரமாம்படியாகத் தேரை நடத்த வல்லவனே!
விசித்திரமாவது, துரோணன் கையும் அணியும் வகுத்து வாசலைப் பற்றி நிற்க,
அவனை வளைந்து அவனுக்கு அவ்வருகே தேரைக் கொடுபோய் நிறுத்தி, அவன் போர் செய்தற்கு இடம் அறுத்தல்.
அன்றிக்கே, ‘வீடுமன் கையில் அம்பு தூரப்போய்விழும்; அருச்சுனன் கையில் அம்பு இவ்வருகே விழும்;
ஆகையாலே, அவன் அம்பு விடப் புக்கவாறே தேரைப் பின்னே கழலக் கொடுபோயும்,
இவன் அம்பு விடப் புக்கவாறே தேரைக் கிட்ட நிறுத்தியும், இப்படித் தேரை நடத்தும்படியை நோக்கி’ என்னவுமாம்.
திருச்சக்கரத்தாய் –
பகலை இரவாக்கும் பரிகரத்தையுடையவனே!
எத்தனையோ உலமுமவையாய் –
கிருத்யுகம் முதலான யுகங்களுக்கெல்லாம் நிர்வாககனாய்.
அவற்றுள் இயலும் –
அவற்றுக்குள்ளே வாழ்கிற.
ஒத்த வியவாய் ஒண்பல் பொருள்கள் உலப்பில்லனவாய் –
ஓர் ஆகாரத்தாலே ஒத்தும், வேறு ஆகாரத்தாலே வேறுபட்டும் இருப்பனவுமாய்,
விலட்சணமுமான பல வகைப்பட்ட பொருள்கள் பலவற்றையுடையையாய். என்றது,
‘தேவர் மனிதர் முதலிய சாதியாலே ஒத்தும், வடிவு வேறுபட்டாலே வேறுபட்டும் இருக்கிற பல பொருள்களுமாய்’ என்றபடி.
அன்றிக்கே, எல்லா ஆத்துமாக்களும் ஞானத்தாலே ஒத்திருக்கச் செய்தேயும் நான் நீ முதலிய வேறுபாட்டாலே
வேறுபட்டவர்களாய் இருப்பர்கள் அன்றோ? அவற்றைத் தெரிவித்தபடி ஆகலுமாம்.
வித்தகத்தாய் நிற்றி நீ –
இப்படி ஆச்சரியப்படத் தக்கவனாய்க் கொண்டு நில்லாநின்றான் நீ.
இவை என்ன விடமங்களே –
இவை என்ன சேராச் சேர்த்தியான செயல்கள்தாம்?
ஒத்தும் வியவ்வாயும் -உலப்பில்லா ஒண் பொருள்களை -சித்தியும் -பல பொருள்கள் -அசித்தையும்

——————————————————————————————————

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4-

பரத்வ ஸுலப்யம் போக்யத்வம் தோற்றும் படி -புண்டரீகாக்ஷன் -நித்யம் அநித்தியம் -உள்ளதும் இல்லதுமாய்-
ஒருபடிப்பட இருக்காதே -அசித் -ஸமஸ்த பதார்த்தங்களும் பிரகாரமாகக் கொண்டு
கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்-நீ நினைக்கும் ரக்ஷணம் உபாயங்கள்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்-அவஸ்தை மாறாத சித்துக்கள் அவஸ்தாந்தர பேதம் உள்ள அசித்துக்கள்
-எண்ணிக்கை இல்லாத -அவாந்தர பேதங்கள் கொண்ட -பட்டாம் பூச்சி 27 லக்ஷம் உண்டே –
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி-ரசிப்பதற்கு திருப்பாற் கடலில் -விரோதிகளுக்கு கிட்டே வரமுடியாமல்
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!-ரக்ஷணம் உபாயங்களை சிந்தியா நின்றாய்
-அவதரண -அநிஷ்ட நிவாரண இஷ்ட பிராப்தி ஆஸ்ரித சம்ச்லேஷ உபகார பரம்பரைகள் சிந்தித்து –

‘தேனோடு மலர்கின்ற தாமரை போன்ற திருக்கண்களையுடைய கண்ணனே! அழிதல் இல்லாததாய் இருக்கின்ற சித்து ஆகியும்
, அதினின்றும் வேறுபட்டதாய் இருக்கின்ற அழிந்துபோகின்ற அசித்தாகியும், திருப்பாற்கடலில் விஷம் பொருந்திய ஆதிசேஷ சயனத்தின்மேல் பொருந்தித்
திருவுள்ளத்தில் பல விதமான காக்கும் உபாயங்களைச் சிந்தனை செய்கிறாய்; இவை என்ன விரகுகள் தாம்! எனக்கு ஒன்று அருளிச்செய்யவேண்டும்,’ என்கிறார்.
‘உலப்பு இல்லன உள்ளதுமாய், வியவாய் இல்லதுமாய்’ என்க. உள்ளது-ஆத்துமா. இல்லது – அசித்து.

உலகத்தில் நித்திய அநித்தியமான பொருள்களை விபூதியாகவுடையனாய் இருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.

கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே –
அப்போது அலர்ந்த தாமரைப்பூப்போலே இருக்கின்ற திருக்கண்களையுடையவனாய்ப் பவ்யனாய் இருக்கிறவனே!
அவனுடைய திருக்கண்கள் போலே ஆயிற்று, இவர்க்கு விபூதியும் கவர்ச்சியாய் இருக்கிறபடி.
அன்றிக்கே, ‘திருக்கண்களைப் போன்று துன்பத்தைச் செய்வதாகா நின்றது ஆயிற்று விபூதி அனுபவமும் இவர்க்கு,’ என்னுதல்.
‘துன்பத்தைச் செய்வதாவது என்?’ என்னில், ‘இன்னது’ என்று நிச்சயிக்கமாட்டாதே ஐயுற்றுப் பட்டது ஒரு துக்கம் உண்டே அன்றோ?
அதுவும் துன்பத்தைச் செய்வதாக இருக்குமே? அதனைச் சொல்லுகிறது. முடிச்சோதி யாய் -சங்கை போலே -பாதிப்பு -சம்சயித்து பட்ட கிலேசம் –
அன்றிக்கே, ‘மேல் திருவாய்மொழியிலே, ‘சூழவும் தாமரை நாண்மலர்போல் வந்து தோன்றும்’ என்றதனை நினைக்கிறார,்’ என்று பிள்ளான் பணிக்கும்.
அதனைச் சீயர் கேட்டருளி, ‘மேலே ஓடுகிற ரீதியின்படியே இதுவும் ஆகப்பெற்றதாகிர் அழகிது!
அங்ஙன் அன்றிக்கே, இது வேறு ரசமாய் அறிவுண்டான பின்பு இவ்விடத்தோடு பொருந்தமாட்டாது’ என்று அருளிச்செய்தாராம்.
உள்ளதும் இல்லதுமாய் உலப்பு இல்லனவாய் வியவாய் –
உலப்பு இல்லனவாய்க் கொண்டு உள்ளதுமாய், வியவாய்க்கொண்டு இல்லதுமாய் இருக்கின்ற சேதந அசேதநங்களுக்கு நிர்வாஹகனாய்.
‘அரசனே! எது எந்தக் காலத்திலும் வளர்தல் குறைதல் முதலிய வேறுபாடுகளை அடைவது இல்லையோ,
அதுதான் வஸ்து; ‘அது எது?’ என்று ஆராயந்து பார்,’ என்கிறபடியே,-ரைக்குவர் -விருத்தாந்தம் –

‘யத்து காலாந்தரேணாபி ந அந்ய ஸம்ஜ்ஞாம் உபைதி வை
பரிணாமாதி ஸம்பூதாம் தத்வஸ்து ந்ருப தச்ச கிம்’-என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 2. 13 : 96.

அசித்து அழிந்து போவதாய் இருக்கையாலே ‘இல்லது’ என்று சொல்லலாய் இருக்கும்;
ஆத்துமவஸ்து ஒரே தன்மையாக இருக்கையாலே ‘உள்ளது’ என்கிறது.

வெள்ளம் தடம் கடலுள் விடம் நாகணைமேல் மருவி –
திருப்பாற்கடலில், பிரதிகூலர்க்குக் கிட்ட ஒண்ணாதபடி விஷத்தை உமிழா நின்றுள்ள திருவனந்தாழ்வான்மேலே பொருந்தி.
‘ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும். பூங்கார் அரவணையான்’ நான்முகன் திருவந். 10.-என்கிறபடியே,
இடம் அல்லாத இடத்திலும் அச்சத்தாலே சங்கைகொண்டு அழல் உமிழுமவன் அன்றோ?
உள்ளப்பல் யோகு செய்தி –
திருவுள்ளத்திலே இரட்சணசிந்தை பல செய்யாநிற்றி. ஆத்துமாக்கள் பல்வேறு வகைப்பட்டிருத்லைப்போலும் போருமாயிற்று,
அவன் செய்யும் இரட்சண சிந்தையில் பரப்பு.
இப்போது இது முன்னும்பின்னும் சேருமாறு யாங்ஙனம்?’ எனின், அசித்தாவது, அழிவதாய்க் கொண்டு விடக்கூடியதாக இருக்கும்;
ஆத்தும வஸ்து ஒரே தன்மையதாய்க் கொண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும்;
இவை இரண்டையும் நியமிப்பவனாய் இருப்பான் ஈஸ்வரன்:
‘இச்சேதனன்தானும், தான் செய்தது ஒரு கர்மமும் தனக்கு என ஒரு ருசியுமாய் இருக்கையாலே,
இவன், தனக்கு என்ன ஓர் இச்சை பிறக்கில் அல்லது நம்மைப் பெற விரகு அற்று இருந்தது;
இவனுக்கோ, அது இல்லையாய் இருந்தது; இனிச் செய்யும்படி என்?’ என்று, இவன்,
‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்றால் செய்யுமதனை, இவன் தலையிலே இசைவு இன்றிக்கே இருக்கச் செய்தே,
‘இவன் நம்மைக் கிட்டினானாம் விரகு ஏதோ?’ என்று அதற்கு உறுப்பாக உபாய சிந்தை செய்து திருக்கண் வளர்ந்தருளுகிறபடி’ என்க.
இவை என்ன உபாயங்களே –
சேதநர் பலரானால் அவ்வவருடைய இரட்சணங்களும் பலவாயே அன்றோ இருப்பன?
அதற்குத் தகுதியாக உபாயங்களையும் அறியுமே முற்றறிவினன் ஆகையாலே. இவை என்ன விரகுகளே!

——————————————————————————————

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-

நிதானப் பாசுரம் -ஆச்சரிய ஜனதா காரம் அனுபவிக்கிறார்
அநந்ய பிரயோஜனமாம் படி ஆக்கி -அதிசய போக்யத்தைக் கொண்டு -சரீராத்மா சம்பந்தம் -நீ இட்ட வழக்கு –
கர்மானுகுணமாக -உத்பத்தி வி நாசமும் நீ இட்ட வழக்கு -இவை பிரமிக்கும் படி மயக்குகின்றன -அகப்படுத்தி வைக்கும் பிரகாரம் புரிய வில்லையே
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ-த்வத் ஏக சேஷமாக -உனக்கே ஆட்பட்டு -உதவாத சங்கங்கங்கள் -நீக்கி
தனக்கே யாக என்னைக் கொண்டு -வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்-பரிமள பிரசுரம் -இத்தைக் காட்டியே
அடிமை ஆக்கிக் கொண்டாய் -ரக்ஷகன் போக்யன் –
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ-சரீரம் ஆத்மாவும் -பந்தாக சரீரம் -பந்தப்பட்டு இருக்கும் ஜீவன் நீ இட்ட வழக்கு
-விநாச உத்பத்திகளும் -நீ இட்ட வழக்கு மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே-அவித்யா கர்மா ருசி வாசனைகள் –
உள்ள சம்சாரத்தில் இன்னும் வைத்து இருக்கிறாயே -இது என்ன மாயம் -அருளிச் செய்ய வேண்டும்

‘சரீரமும் ஆத்துமாவுமாகியும். இறப்பாகிப் பிறப்பாகியும் இருக்கின்ற வாசனை பொருந்திய மலர்களையுடைய குளிர்ந்த திருத்துழாயினைத்
தரித்த திருமுடியையுடைய மாயவனே! நீ என்னுடைய பாசங்களை எல்லாம் நீக்கி என்னை உனக்கே அடிமையாகக் கொண்டும்,
அதற்கு மேலே நீ இச்சரீரத்தோடே பொருத்தி வைத்திருக்கின்றாய்; இவை என்ன மயக்கங்கள்? அருளிச்செய்ய வேண்டும்’ என்கிறார்.
‘கழிவாய்ப் பிறப்பாய் இருக்கின்ற முடி மாயவனே!’ எனக் கூட்டுக. ‘நீக்க அறக்கொண்டிட்டும் பின்னும் வைத்தி,’ என்க.

இத்திருவாய்மொழிக்கு நிதானமான பாட்டாயிற்று இது.
அதாவது, ‘மயர்வற மதிநலம் அருளி, பின்னையும் எனக்குப் பொருந்தாததான சம்சாரத்திலே என்னை வைத்து
வாழ்வித்துக்கொடு போகிற இவ்வாச்சரியம் இருந்தபடியை எனக்கு அருளிச்செய்ய வேணும்,’ என்கிறார்.

பாசங்கள் நீக்கி –
மயர்வை அறுத்து; என்றது, ‘அவித்தியை முதலானவைகளைப் போக்கி’ என்றபடி.
பல செய்வினை வன்கயிற்றால் சூழ்த்துக்கொண்டதனை நீக்கி. –திருவாய். 5. 1 : 5.-
என்னை-
வேறு விஷயங்களிலே கார் தாழ்ந்திருக்கிற என்னை.
உனக்கே அறக்கொண்டிட்டு-
துயர் அறு சுடர் அடி தொழும்படியாகச் செய்து.
‘பாசங்கள் நீக்கிற்றும் தனக்கே அறக்கொண்டதும் எதனைக்காட்டி?’ என்னில்,
வாசம் மலர்த் தண்துழாய் முடி மாயவனே –
வைத்த வளையத்தில் அழகைக் காட்டியாயிற்று,புறம்பு உண்டான பற்று அறுத்ததும்,
தனக்கேயாம்படியாகச் செய்ததும்.
அருளாய் –
இவ்வளவு புகுரநின்ற என்னை இங்கே இட்டுவைத்து நலியவோ?
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் –
சரீரமும் ஆத்துமாவுமாய், பிறப்பு, இறப்புகளுமாய்.
பின்னும் நீ மாயங்கள் செய்து வைத்தி-
உன் பக்கலிலே அறிவைப் பிறப்பித்து, பின்னையும் இதிலே பொருந்தாதபடியான என்னைச் சம்சாரத்திலே வையாநின்றாய்.
இவை என்ன மயக்குகளே-
இவை என்ன தெரியாத செயல்கள்தாம்!
புறம்பு உண்டான பற்றை அறுத்து உன் பக்கலிலே அன்பைப் பிறப்பிக்கையாலே நீ அங்கீகரித்தாயோ என்று இராநின்றேன்;
பின்னையும் இச்சம்சாரத்திலே வைக்கையாலே கைவிட நினைத்தாயோ என்று இராநின்றேன்; இது என்ன மயக்கம்!

———————————————————————————————

மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே.–7-8-6-

மாயா வாமனன் தொடங்கினார் -பிரமிக்கும் படி சேஷ்டிதங்கள் உடைய வாமனன் -விஸ்ம்ருதி யாதி மறக்கும் படி விசித்ரனாய் கொண்டு
-அயர்ப்பு -மறதி -கிலேசங்கள் -எத்தனை
மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்-பிரமிக்கும் படி -அழகாலும் -நடத்தையால் -சேஷ்டிதங்கள் -பேச்சாலும்
-நெஞ்சு பிரமிக்கும் -கலக்கம் தீரும் படி அருளிச் செய்ய வேண்டும்
கலங்குபவர் ஆத்மா உண்டு -கலக்கும் அசித்தும் உண்டே -கலக்குபவரும் உண்டே -தெளிவிக்கும் ஆச்சார்யர் தெளிந்தவன் சேதனன்
-தெளிந்தே இருப்பவர் ஈஸ்வரன் –அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்-மறுப்பும் -வியவு விஸ்மயம் -நீ இட்ட வழக்கு
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ-விஜயம் வினை பயன்கள் புண்ய பாப பலன்கள் நீ இட்ட வழக்கு -அந்தராத்மாவாக இருப்பதால்
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே-சேதனர் கலங்கும் கலக்கமும் நீயாய் -லீலா ரசிகனாய் நிற்கும் -பிரகாரம் என்னே -கிலேசமாக இருக்கின்றன –

‘மயக்குகின்றவனே! வாமனனே! நான் தெளியும்படி ஒன்று அருளிச்செய்ய வேண்டும்; மறப்பு ஆகித் தெளிவு ஆகி வெப்பமாகிக் குளிர்ச்சியாகி
ஆச்சரியமாகி ஆச்சரியப்படத்தக்க பொருள்களுமாகி வெற்றிகளுமாகி இரு வினைகளாகி இருவினைப் பயன்களுமாகி அதற்கு மேலே உன்னை அடைந்த
அடியவர்களும் மதி மயங்கும்படி நீ செய்துகொண்டு நின்ற விதம் எங்களுக்குத் துக்கத்தைத் தருகின்றனவாய் இராநின்றன, ‘என்றவாறு.

மறதி தொடக்கமான மாறுபட்ட பொருள்களை விபூதியாக உடையனாய் இருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.

மயக்கா
-இன்னார் என்று இன்றிக்கே, யாரேனுமாகக் கிட்டினாரை மயங்கச் செய்யுமவனே! ‘அது எங்கே கண்டோம்?’ என்னில்,
வாமனனே –
காரியம் செய்யப்போந்த நீ, அந்தத் தேவர்களை நெருக்கின மஹாபலி தானே நெஞ்சு நெகிழ்ந்து
உன் கையிலே நீரை வார்த்துத் தானே இசைந்து தரும்படி மயங்கச் செய்தவனே!
‘மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி’ பெரிய திருமடல், 109.-என்கிறபடியே.
மதியாம் வண்ணம் ஒன்று அருளாய் –
அநுகூலர் பிரதிகூலர் என்ற வேற்றுமை இல்லாமல் மயங்கச் செய்யாதே, நான் தெளிவையுடையேனாம்படி செய்தருளவேணும்.
அயர்ப்பாயத் தேற்றமுமாய் –
நினைவும் ஞானமும் மறப்பும் என்னிடமிருந்து உண்டாயின’
ஸர்வஸ்யச அஹம் ஹ்ருதி ஸந்நி விஷ்ட:
மத்த: ஸ்மிருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச’-என்பது, ஸ்ரீகீதை, 15 : 15.–என்றான் அன்றோ தானே,
மறதியும் தெளிவுமாய்?
இவ்விடத்தில் மாறுபட்ட தன்மையைச் சொல்லுகிறது அன்று, விசித்திரமான தன்மையைச் சொல்லுகிறது.
அழலாய்க் குளிராய்-
சீத உஷ்ணங்களாய்.
வியவாய் வியப்பாய் –
ஆச்சரியமும் ஆச்சரியப்படத்தக்க பொருள்களுமாகி.
வென்றிகளாய் –
வெற்றிகளாய்.
வினையாய்ப் பயனாய் –
புண்ணிய பாப கர்மங்களாய் அவற்றினுடைய பலங்களுமாகி.
பின்னும் நீ துயக்கா –
அதற்கு மேலே, உன்னை அடைந்தவர்களும் மதி கலங்கும்படி,
அந்யதா ஞானம் விபரீத ஞானம் இவற்றை உண்டாக்கி.
நீ நின்றவாறு –
நீ நின்ற பரிகாரம்.
இவை என்ன துயரங்களே –
உனக்கு இவற்றில் அருமை இன்றியே விளையாட்டாய் இராநின்றது;
எங்களுக்கு அவைதாம் துக்கத்தைக் கொடுக்கக் கூடியவையாய் இராநின்றன.

—————————————————————————————–

துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே.–7-8-7-

கர்ம அனுகுணமாக துக்கம் -துக்க ஹேது துர்மானம் -விபூதியாக கொண்டு சேதனரை துக்கிப்பியா நின்றாய்
லீலார்த்த ஸூ வார்த்த -பிரவ்ருத்தி சம்பந்த உறைப்பால்-சொல்லுகிறார் இப்படி –
துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்-அவதார திசையிலும் பரத்வ திசையிலும் துயரங்கள் செய்யும்
-புண்ய பாப பலன்களை கொடுத்து -துக்க ரூபமாகவே இருந்தால் அனைவரும் முமுஷுக்கள் ஆவார்கள் -இன்ப ருசி கண்டு –
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்-துர்மானம்-துக்க ஹேது பூதம் -அபிஜனம்-வித்யா சொத்து தனம்-ஆபிரூபியாம்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்-அபிநிவேசம் -அதனால் வரும் துயரம் பதார்த்த த்ருஷ்ணா ரூபம்
-துலை தராசு -ஸ்திதி கமனங்கள்-ஸ்தாவர ஜங்கமங்கள்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே-இவை என்ன ஆச்சார்யம் -பர துக்கம் பாராத ஸூ வார்த்த பிரவர்த்திகள்

துன்பங்களைச் செய்கின்ற கண்ணனே! பிரகாசம் பொருந்திய நீண்ட திருமுடியையுடையவனே! துன்பங்களைச் செய்கிற சாதி முதலானவை
பற்றி வருகின்ற மானங்களாகியும், செருக்காகியும், மகிழ்ச்சிகளாகியும், துன்பங்களைச் செய்கின்ற காமங்களாகியும், அளவாகியும்,
நிற்றலாகியும், நடத்தலாகியும் துன்பங்களைச் செய்து வைத்தாய்; இவை என்ன சுயநலக்காரிங்கள்? அருளிச்செய்ய வேண்டும்.

துயரங்கள் செய்யும் கண்ணா-துக்கங்களைச்செயக்கூடிய கிருஷ்ணனே! ‘எதனாலே நலிவது?’ என்னில்,
‘முடிச்சோதி’ என்ற திருவாய்மொழியிற்கூறியபடியே திருமுடியில் அழகைக் காட்டியாயிற்று.

சுடர் நீள் முடியாய்-
விபூதியைச் சொல்லுவதும் திருமுடியைப் போன்று பாதகம் ஆகாநின்றதாயிற்று.
நிற்றி முற்றத்துள்’ (7. 7 : 10.) என்ற திருப்பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி.-
அன்றிக்கே, ‘‘முற்ற இம்மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே ஒற்றுமை கொண்டது’ என்றது, ‘பின்னாட்டுகிறது,’ என்று பிள்ளான் பணிப்பர்.
அருளாய் –
அவனைக் கேட்டு அறிய வேண்டுகையாலே பாதகமாம் அன்றோ?
துயரம் செய் மானங்களாய் –
‘அடியவனான நான்’ என்கிற அபிமானம் அடிக்கழஞ்சு பெற்றிருக்கும்.-இன்பம் செய்யும் மானம் அன்றோ இது -சோஹம்-கூடாதே /தாஸோஹம் -கூடுமே
அங்ஙனன்றிக்கே, ஸோஹம் – அந்த நான்’ என்று துக்கங்களைச் செய்யும் அபிமானங்களாய்.
மதனாகி உகவைகளாய் –
களிப்பும் அதற்கு அடியான உகவையுமாய்.
துயரம் செய் காமங்களாய் –
‘பொருளின் தொடர்பினால் அப்பொருளில் விருப்பம் முதலியன உண்டாய்ப் புத்தி கெட்டுக் கெடுகின்றான்’ என்கிறபடியே,
‘ஸங்காத் ஸம்ஜாயதே காம: புத்திநாஸாத்ப்ரணஸ்யதி’-என்பன, ஸ்ரீகீதை, 2. 62 : 63.

கேட்டினை எல்லையாகவுடைய காமங்களாய்;
அங்ஙன் அன்றே, பகவத் காமம்? –கண்ணனுக்கு ஆமது காமம்
துலையாய் – பிரமாணமாய்; நிறுக்குமதாய்.
நிலையாய் நடையாய் –
தாவரங்களும் சங்கமங்களும்.
அன்றிக்கே, நிற்றல் நடத்தல்களைச் சொல்லுதலுமாம்.
துயரங்கள் செய்து வைத்தி –
இப்படித் துக்கங்களைச் செய்வியாநின்றாய்.
இவை என்ன சுண்டாயங்கள்-
உனக்கு விளையாட்டாக இராநின்றது, எங்களுக்குத் துக்கத்திற்குக் காரணமாக இராநின்றது.

————————————————————————————————–

என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8-.

அதிசயித்த ஞாநர்க்கும் -அவபோதக்கைக்கு அரியனாய் சகல ஜகத்துக்கும் ஸ்ருஷ்ட்டி அநு பிரவேசம் வியாபித்து நியமித்து-இருக்கும் பிரகாரங்கள் –
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!-பவ்யனான கிருஷ்ணன் –
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை-இப்படிப் பட்ட ஸ்வ பாவன் -அபரிச்சின்ன -நிர்ணயித்து காட்ட அரிய
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்-பிரவாஹ அநாதியாய் இருப்பதாய் -க்ருதகம் அகிருதகம் க்ருதாக்ருதகம்
–சரீரமாக கொண்டு ஸ்ருஷ்டித்து பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே-அந்தர்பவித்து நியமிக்க
-வெளியில் வியாபித்து ஆதாரம் -ஸ்திதிக்கும் சத்தைக்கும் -இது என்ன ஸ்வ பாவிக ஸ்வ பாவம் –

என்னை ஆளுகின்ற கண்ணனே! என்ன விளையாட்டு களையுடையையாய் நிற்கிறாய்? இப்படிப்பட்ட தன்மையையுடையை என்று உன்னைத்
தெளிந்துகோடற்கு எத்தகைய ஞானிகட்கும் அரியவனாய் இருக்கின்றாய்; பழைமையான மூன்று உலகங்களுமாகியும் அவற்றைப் படைத்தும்
அதற்கு மேலே பொருள்கட்கு உள்ளும் இருக்கின்றாய்; புறத்தும் இருக்கின்றாய்; இவை என்ன தன்மைகள்? அருளிச்செய்ய வேண்டும்.
தேற அரியை-தேற்றரியை. முன்னிய-பழைமையான.

‘எல்லா உலகங்களையும் படைத்து உள்ளும் புறம்பு பரந்து இப்படி நிர்வகித்து வைத்து அறிய
முடியாதவனாய் இருக்கிற இது என்ன ஆச்சரியம்!’ என்கிறார்.

என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா –
என்ன விளையாட்டுகளையுடையையாய் நிற்கிறாய், என்னை அடிமை கொள்ளுகிற கிருஷ்ணனே!
இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற அரியை –
எங்கனே நின்றிட்டாய் -பெரியவாச்சான் பிள்ளை
இன்ன படிப்பட்ட தன்மையையுடையை என்று, எல்லாப் பொருள்களுக்கும் காரணனாய் இருக்கிற உன்னை,
எத்தனையேனும் மிகுதியுற்ற ஞானத்தையுடையவர்களாலும் அறிய ஒண்ணாதபடி நிற்புத்தி:
‘பிரமனும் அவனுடைய தன்மையை மிக வருந்தியும் சிறிதும் அறியமாட்டான்,’ என்கிறபடியே.‘ப்ரஹ்மாபி நவேத்தி அல்பம் ப்ரயத்நத:’ என்பது.

முன்னிய மூவுலகும் அவையாய்-
பிரவாஹ ரூபத்தாலே பழையதாகப் போருகிற மூவுலகுக்கும் கடவையாய்.
மூவுலகு –
மூன்று வகைப்பட்ட ஆத்துமாக்கள்; அல்லது, மூன்று உலங்கள்.
அவற்றைப் படைத்து –
‘உலகமானது போது, அவற்றை உண்டாக்கி’ என்கிறது.
‘ஆத்துமாக்களான போது, அவர்களுக்கு ஞானத்தின் மலர்ச்சியை உண்டாக்கி’ என்னுதல்.
பின்னும் உள்ளாய் புறத்தாய்-
உள்ளும் புறம்பும் பரந்திருக்கின்றாய்!
இவை என்ன இயற்கைகளே-
உனக்கு இவைதாம் விளையாட்டாக இராநின்றன; எங்களுக்கு இவைதாம் ஆச்சரியமாக இராநின்றன

—————————————————————————————————————-

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9-

வேதைக வேதியன் -ஸூஷ்ம சேதன அசேதன விசிஷ்டமாய் இருப்பானே –விபு ஸூஷ்மம் – -இந்த்ரியங்களால் அரிய முடியாமல் -மஹத் –
அறிவுக்கு அப்பால் பட்டவன் -காரணங்கள் -விஷயங்கள் அனைத்தையும் வியாபித்து -சூஷ்மத்தால் தான் அறிவுக்கு அப்பால் பட்டவன் என்கிறார்
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா -உன் ஆகாரங்களைக் காட்டி என்னை அடிமை கொண்ட கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்-கர்ம ஞான இந்திரியங்கள் சரீரம் உடம் ஒட்டிக் கொண்டு
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே-சப்தாதிகள் ஸ்பர்ச ரூப கந்தம் -அந்தர்யாத்மா
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே-அணிமா -சூஷ்மங்களுக்குள் சூஷ்மம் -முடிவே இல்லையே

‘என் கண்ணா! எவ்வகையான இயற்கைகளோடு கூடி என்ன பிரகாரத்தால் நிற்கிறாய்? செறிந்திருக்கின்ற கை கால் முதலான
எல்லா அவயவங்களும் நீயே; நினைக்கப்படுகின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படுகிற புலன்கள் முழுதும் நீயே;
உன்னை அறியல் உற்றால் நுணுக்கங்கள் எல்லை இல்லாதவனாய் இருக்கின்றனு,’ என்க.

ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஐம்புலன்களும் அவனுக்கு விபூதியாக இருக்கிற இருப்பை அருளிச்செய்கிறார்.

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா-
என்ன தன்மைகளையுடையையாய்க்கொண்டு என்ன பிரகாரத்தாலே நிற்கிறாய்?
எனக்குப் பவ்யனான கிருஷ்ணனே!
துன்னு கர சரணமுதலாக எல்லா உறுப்பும் –
நெருங்கி இருந்துள்ள கைகள் கால்கள் தொடக்கமான எல்லா அவயவங்களுக்கும்,நினைக்கப்படுவனவாய் ஆசைப்படப்படுவனவாய்
இருக்கின்ற ஐம்புலன்களுக்கு கடவையாய் இருந்தாய்.
உன்னை உணர உறில் –
உன்னை அறியப்புகில்.
உலப்பு இல்லை நுணுக்கங்களே –
உன் வைலக்ஷண்யங்களுக்கு முடிவு இல்லை, ‘நுண்பொருளாய் உள்ளவனை’ என்கிறபடியே,
‘அசித் வஸ்துவான சரீரத்தில் சூக்கும ரூபத்தாலே எங்கும் புக்குப் பரந்திருக்கும் ஆத்துமவஸ்து,
இவ்விரண்டிலும் சூக்கும ரூபத்தோடு பரந்திருப்பாய் நீ’ என்றபடி.

‘நாராயணம் அஸேஷாணாம் அணியாம்ஸம் அணீயஸாம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 8 : 40.

‘ப்ரஸாஸிதாரம் ஸர்வேஷாம் அணீயாம்ஸம் அணீயஸாம்’-என்பது, மனு தர்மம், 1 : 22.

——————————————————————————————————

இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம்
தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே!
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே –7-8-10-

வேதம் உன்னை சொல்ல -விலஷணன்-என்று -அதுவே -பிரிநிலை ஏகாரம் -எவ்வளவு சொன்னாலும் -உன்னை சொல்லி முடிக்காதே
-அடியேனும் முடிந்த அளவு சொன்னாலும் அதுவே தனக்கு என்று ஏற்றுக் கொள்கிறாய் இது என்ன ஆச்சர்யம் -தேற்று ஏகாரம் -தன்னேற்றம் நிச்சயம் –
நித்யம் -சூஷ்ம சித்அசித் மூல பிரக்ருதியும் ஸூ ஷ்மம் இந்த்ரியங்களால் கிரகிக்க முடியாதே -பிரகாரமாக கொண்ட நீ
வாக்காலும் மனசாலும் -சொல்ல முடியாதே இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம்-
இத்தை விட சூஷ்மம் இல்லையே -அவ்யக்தம் தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே-புருஷனால் சொல்லப்படாத
வேத சாஸ்திரம் -சமஷ்டி சேதன அசேதனம் -சதேவ ஸோமயே –ஏகமேவ அத்விதீயம் நீயே இருந்தாய் -சரீரியாய்
அல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே!-பூம் தாரை உடைத்தாய் -அப்ரச்சுதா நழுவல் இல்லாத ஸ்வ பாவன் –
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே -சர்வ பிரகார -ஆற்றல் மிக்க -வேதாதிகள் சொன்னாலும்
-உனக்கு அதுவே பிரகாரமாம் படி -ஆஸ்ரித பவ்யனாய் இருப்புதியே

‘இதனைக்காட்டிலும் வேறு நுணுக்கங்கள் இல்லை,’ என்னும் வண்ணம் பழையதான சிறந்த வேதத்தில் சொல்லப்பட்ட அசித்தும் சித்தும் நீயே;
அகவிதழையுடைய திருததுழாய் மாலையை அணிந்த திருமார்பினையுடையவனே! என் அச்சுதனே! வல்லது ஒரு வண்ணம் சொன்னால்
உனக்கு ஆம் வண்ணம் அதுவேயாம்.
‘இதனில் நுணுக்கங்கள் பிறிது இல்லை என்னும் வண்ணம்’ என்று மாற்றுக. அல்லி – பூந்தாதுவுமாம்.

வேதங்களாலேயே அறியப்படுமவனாய்க் காரணாமாய் அதிசூக்ஷ்மமாயிருந்துள்ள சேதனங்களையும் அசேதனங்களையும்
விபூதியாகவுடையவனாய் இருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.

இதனின் பிறிது நுணுக்கங்கள் இல்லை என்னும் வண்ணம் –
இதனைக்காட்டிலும் வேறு சூக்ஷ்மமாய் இருப்பது இல்லை என்னும்படி.
அதாவது, இவற்றுக்குத் தனக்கு என்று ஒரு நாமமும் உருவமும் இன்றிக்கே பிரமத்தினுடைய
நாமத்தையும் உருவத்தையும் இட்டுப் பேச வேண்டும்படி,
காரண நிலையிலே இருக்கிற சேதனங்களும் அசேதனங்களும் நீ இட்ட வழக்கு.
தொல்லை நன்னூலில் சொன்ன உருவும் அருவும் நீயே –
‘முதன்முதலில் ‘சத்’ என்ற ஒன்றே இருந்தது’ என்றது அன்றோ?

ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம்’-என்பது, சாந்தோக்யம், 6. 2 : 1.

ஆக, உலகமே உருவமாய் இருக்கும் இருப்பைச் சொல்லிற்று.
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப-
பரமபதத்தையுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
அல்லியையுடைத்தான திருத்துழாய் மாலையாலே அலங்கரிக்கப்பட்ட திருமார்பினையுடையவனே!
அச்சுதனே –
அவ்விருப்புக்கு ஒரு நாளும் அழிவில்லாதபடி பரமபதத்திலே எழுந்தருளியிருக்கிற இருப்பை எனக்குப் பிரகாசிப்பிக்கிறவனே!

வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணம் –
இதற்கு இரண்டு படியாக அருளிச்செய்வர்:
‘இவன், தனக்கு உள்ள அளவு எல்லாம் கொண்டு பேசினால், உன் பக்கல் சொல்லிற்றாமத்தனை போக்கியல்லது,
உனக்கு ஓர் அளவு இல்லையே அன்றோ?’ என்னுதல்;
அப்போதைக்கு, அதுவே உனக்கு ஆம் வண்ணம்? – -‘அது அன்று என்கிறது’ என்னுதல்.
அன்றிக்கே, உன் பக்கல் அன்புள்ளவர்களாய் இருப்பார் எத்தனையேனும் அளவுஇன்றிக்கே, இருந்தாகளாகிலும்,
அவர்கள் ஒன்றைச்சொன்னால், ‘ஸ்ரீவைகுண்டத்திலே நித்தியசூரிகள் நடுவே அவர்களுக்குங்கூடப் பேச்சுக்கு நிலம் அன்றிக்கே
இருக்கிற நம்மைச் சம்சாரத்திலே மிகத் தாழ்ந்தவனாய் இருக்கிற இவன் அறிந்தானாகச் சொல்லுவதே?’ என்று சீறுகை அன்றிக்கே,
இவன் சொன்னதுவே தனக்கு அளவாக நினைத்திருக்கும் என்னுதல்.

—————————————————————————————-

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11-

யவாதாத்மபாவி பகவத் அனுபவத்துக்கு அற்று தீர்வார்
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை-இன்னதாம் அவன் வண்ணம் என்று அறிவது அரிய -சர்வேஸ்வரன்
ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த-மயர்வற மதி நலம் அருள பெற்றதால் அருளிச் செய்த
-இதுவே வண்ணம் என்று -உள்ளபடி அறிந்து -அங்குத்தைக்கு அனுரூபமாக
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்-சந்தஸ் உடைத்தாய் -சர்வாதிகாரம் தமிழ்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.-தங்கள் பிரகாரத்துக்கு ஏற்ற படி சொல்லுவார்
-என்றைக்கும் -யாவதாத்மா பாவி -சமைந்தார் ஆவார்

‘உண்டான பிரகாரம் இன்னபடிப்பட்டது ஒன்று,’ என்று அறிதற்கு அரிய சர்வேஸ்வரனை, ஆகின்ற தகுதியால் திருக்குருகூரில் அவதரித்த
ஸ்ரீசடகோபர் அறிந்து அருளிச்செய்த பொருந்திய ஓசையையுடைய அழகிய தமிழ்ப் பாசுரங்கள் ஆயிரத்துள் இப்பத்துப் பாசுரங்களையும்
தங்களுக்குத் தகுந்த முறையால் சொல்ல வல்லவர்கள், தாங்கள் என்றைக்கும் ஈஸ்வரனுடைந அனுபவத்துக்குச் சமைந்தார்கள் ஆவார்கள்.

முடிவில், ‘அங்குத்தைக்குத் தகுதியாக ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரம் திருவாய்மொழிகளிலும்
தங்கள் தகுதிக்குத் தக்கவாறு சொல்ல வல்லார் என்றைக்கும் கிருத்தியர்,’ என்கிறார்.

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
-இன்னபடிப்பட்டது ஒரு தன்மையையுடையவன் என்று கொண்டு யாவராலும் அறிய அரியனாய் இருக்கிற
சர்வேஸ்வரனை ஆயிற்றுக் கவி பாடிற்று.
‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மீண்டனவோ?’ என்கிறபடியே,

‘யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மாஸாஸஹ’-என்பது, தைத்திரீய. ஆனந். 9 : 1.

வேதங்களும்மீண்டவனை ஆயிற்றுப் பேசிற்று.
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த-
அவனுக்குத் தகுதியாம்படி ஆழ்வார் அருளிச்செய்த. ‘அறிவது அரிய அரியை’ என்றதாகில்,
‘ஆம் வண்ணத்தால் உரைக்கையாவது என்? முரண் அன்றோ?’ என்னில், ‘அறிந்து உரைத்த’ என்கிறார்; என்றது,
‘அவன் மயர்வற மதிநலம் அருள ஆயிற்று இவர் பேசிற்று. தன் முயற்சியால் அறியப் பார்க்கில் அன்றோ அரிது?’ என்றது,
அவன் கொடுத்த அறிவு கொண்டு அறிவார்க்குக் குறை இல்லை அன்றோ?
‘நெறிவாசல் தானேயாய் நின்றனை ஐந்து. பொறி வாசல் போர்க்கதவம் சார்த்தி அறிவானாம்’ நான்முகன் திருவந்தாதி.-என்று
ஆக்ஷேபிப்பது, தம் முயற்சியாலே அறியப் பார்ப்பாரை அன்றோ?

ஆம் வண்ணம் ஒண் தமிழ்கள் –
‘அவனுக்குத் தகுதியாம்படி இருக்கிற அழகிய தமிழ்’ என்னுதல்;
‘தகுதியாக இருக்கிற பாசுரங்களையுடைத்தாய், சர்வாதிகாரமாகிற நன்மையையுடைத்தான தமிழ்’ என்னுதல்.
வண்ணம் –
பா.
அன்றிக்கே, வண்ணம் என்று ஓசையாய், ‘நல்ல ஓசையையுடைய செந்தமிழ்’ என்னுதல்.
தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும் –
தமிழாக இருந்துள்ள இவை ஆயிரத்துள் இப்பத்தையும்.
ஆம் வண்ணத்தால் உரைப்பார் –
‘பின்னை, இதனைச் சொல்லுமவர்களுக்கும் மயர்வு அற மதி நலம் அருளப்பெற்று
அவனுக்குத் தகுதியான சொல்லாலே சொல்ல வேணுமோ?’ என்னில்,
அத்தேவை எல்லாம் ஆழ்வார்தம்மோடே; இவர்களுக்குத் தாங்கள் வல்ல அளவும் சொல்ல அமையும்.
அமைந்தார்தமக்கு என்றைக்கும் –
அவர்களுக்கு இவ்வாத்துமா உள்ளதனையும், ஈஸ்வரன் முழங்கைத் தண்ணீர் வேண்டா;
ஆழ்வார்அங்கீகாரத்துக்கு விஷயமானதுவே போரும். என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே அமைந்தார்களாய் இருப்பர்கள்.

————————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சங்கம் நிவர்த்ய மம ஸம்ஸ்ருதி மண்டலேமாம் ஸம்ஸ்தாபயன்
ஹரிநா சுசம் விஸ்மரித்த -சோகம் மறக்கடிக்கப் படுகிறது
கதம் அபி வியசனம்
ஆச்சரிய லோகம் தனு தாம் தர்சயித்வா –

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்ரீ மான் ஆச்சரிய நாணய வைபவம்
பூதைகை
சந்த்ரார்யம் மாத்தியை
சகல யுகத்தைபி வஸ்துபி
சேதனாதியை
தேஹாத்ம காயமும் சீவனுமாய்
ஸ்வைர் லோகாநாம்
ஸ்மரண தத் இதரம்-அயர்ப்பாய் தேற்றமாய்
மாமனாத்யை-துயரம் உள்ள துர்மானம்
துர் ஞானே யேத்வாத் அரிய முடியாதவனாய்
ஸூ பாஜாம் பஹு சுப கரணாத்
வேத சமவேத்ய பாவாத்

——————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 68-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை

இதில் ஸ்ரீ எம்பெருமான் காட்டின விசித்திர ஜகதாகாரதையை அனுபவித்து
விஸ்மிதராய் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
ஏழையர் ஆவியில் உருவு வெளிப்பாட்டாலே நோவு படும்படி ஆற்றாமை கரை புரண்டு இருக்கச் செய்தேயும்
தம்மை அறியாத படி வைத்து நோக்கிக் கொண்டு போருகிற இவ் வாச்யர்த்தைக் கண்டு இவர் விஸ்மிதராக
இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மயப் படுகிறது என்று
தன்னுடைய ஐஸ்வர்ய ஜகதாகாரத்தைக் காட்டிக் கொடுக்க-அத்தை அனுபவித்து விஸ்மிதராக
இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மயப் படுகிறது
என்று தன் ஐஸ்வர்ய ஜகதாகாரத்தைக் காட்டிக் கொடுக்க அத்தை அனுபவித்து விஸ்மிதர் ஆகிற
மாயா வாமானனில் அர்த்தத்தை-மாயாமல் தன்னை வைத்த இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————

மாயாமல் தன்னை வைத்த வை சித்திரியாலே
தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு ஆயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த மாறனை நாம்
ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று –68-

மாயாமல் தன்னை வைத்த-தம்முடைய சேஷத்வ ஸ்வரூபம் மாயாமல் தம்மை வைத்த

——————————————————

வியாக்யானம்–

மாயாமல் தன்னை வைத்த வைசித்திரியாலே-
அதாவது-சரண்யனான யுனக்கு அஞ்ஞான அசக்திகள் ஆகிற தோஷம் இன்றிக்கே
சர்வஞ்ஞதவாதி குணங்களும் உண்டாய் இருக்க
சரணாகதனான எனக்கு ஆகிஞ்சன்ய அனந்யகத்வம் ஆர்த்தியும் உண்டாகையாலே
அதிகாரி மாந்த்யமும் இன்றிக்கே இருக்க
வைத்த இதில் பொருந்தாத என்னை-வைத்து நடத்திக் கொண்டு போருகிறதுக்கு ஹேது என் என்று –
பாசங்கள் நீக்கி -என்று தொடங்கி மாயவனே அருளாய் -என்று அவன் தன்னைக் கேட்க
அவனும் அதுக்கு நிருத்தனாக
இது ஓன்று இருந்த படி என் –என்று-இவ் வாச்சர்யத்தில் இவர் விஸ்மிதர் ஆக
அவன் அவற்றைக் கண்டு வைத்து
இது ஓர் ஆச்சர்யமோ -என்று-தன் விசித்திர ஜகதாகாரயதையைக் காட்ட –

தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு-
மாயா வாமனனே -என்று தொடங்கி-இவை என்ன விசித்ரமே -என்றத்தை பின் சென்று அருளிச் செய்தபடி –
தீ யாதியாக பஞ்ச பூதங்களும்-ஒன்றின் கார்யம் ஒன்றுக்கு இன்றிக்கே விவிதாகாரமாய்
சேதன வர்க்கங்களும் அப்படியே விவிதாகாரம் ஆகையாலே விசித்திர மாயச் சேர்ந்த பதார்த்தங்களோடு –

ஆயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் –
அவற்றின் தோஷங்களை ஆராயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் –

ஓயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் -என்ற பாடமாம் போது
நிரந்தரமாகச் சேர்ந்து நிற்கும் -என்றாகவுமாம்–
பொருந்தி நிற்கும் ஆச்சர்ய சக்தி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
மாயா -என்றத்தைப் பேசின படி –

வளமுரைத்த –
விபூதி விச்தாரத்தை அருளிச் செய்த –
அதாவது –
புரா பூத்வாம்ரு துர்த்தாந்த நகரோ தவசமாபன்ன -என்னும்படி –
அம் கண் மலர்த்த்ண் துழாய் முடியானே அச்சுதனே அருளாய் —
பின்னும் வெம் கண் வெம் கூற்றமுமாய் இவை என்ன விசித்ரமே -என்றும்
சித்திரத் தேர் வலவா–வித்தகத்தால் நிற்றி நீ -என்றும்
கள்ளவிழ் தாமரைக் கண்ணனே -உள்ளப் பல் யோகு செய்தி -என்றும்
பாசங்கள் நீக்கி என்னை –இவை என்ன மயக்குகளே -என்றும்
மாயக்கா வாமனனே –இவை என்ன துயரங்களே -என்றும்
துயரங்கள் செய்யும் கண்ணா -இவை என்ன சுண்டாயங்களே -என்றும்
என்ன சுண்டாயங்களால் எங்கனே நின்றிட்டாய்–இவை என்ன இயற்கைகளே -என்றும்
என்ன இயற்கைகளால் நின்றிட்டாய் –உலப்பில்லை நுணுக்கங்களே -என்றும்
இல்லை நுணுக்கங்களே அச்சுதனே –அதுவே உனக்காம் வண்ணமே -என்றும்
இப்படி அவன் விசித்திர விபூதி விஸ்தார உக்தனாய் இருக்கிறபடியை அருளிச் செய்தவை-என்கை-

மாயன் வளம் உரைத்த மாறனை-
இப்படி விசித்திர ஜகதாகாரனானவன் சம்பத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வாரை –

நாம் ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று —
நாம் கிட்டி அவர் திரு நாமங்களைச் சொல்லி வாழும் காலம் ஆக வற்றோ-
அன்றும் ஒரு நாளாக ஆகவற்றோ -என்றபடி –

———————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: