பகவத் விஷயம் காலஷேபம் -155- திருவாய்மொழி – -7-7-1….7-7-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

மேல் திருவாய்மொழியிலே ‘மல்கு நீலச் சுடர் தழைப்பச் செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்,
அந்தரமேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய், செஞ்சுடர்ச்சோதி விட உறை என் திருமார்பனையே’ என்று
அவன் வடிவழகினைச் சொன்னார்; அவ்வடிவழகுதானே நெஞ்சிலே ஊற்றிருக்க, அதனையே பாவித்த காரணத்தாலே,
அந்த பாவனையின் மிகுதியாலே கண் கூடாகக் காண்பதே போன்றதாய்,
பின்பு கண் கூடாகப் பார்ப்பதாகவே நினைத்து அணைக்கக் கணிசித்துக் கையை நீட்டி. அப்போதே பெறாமையாலே
தமக்கப் பிறந்த ஆற்றாமையை, எம்பெருமானோடே கலந்து பிரிந்து உருவு வெளிப்பாட்டாலே நோவுபடுகிறாள்.
ஒரு பிராட்டி பாசுரத்தாலே அருளிச்செய்கிறார்.

சர்வேஸ்வரனோடே கலந்த பிரிந்து தளர்ந்து உருவு வெளிப்பாட்டாலே நோவுபடுகிறாள் ஒரு பிராட்டி.
ஒருவர் ஒருவரோடு கலக்கும் போது காட்சி முன்னாகப் பின்பே அன்றோ மற்றைப் பரிமாற்றங்களை ஆசைப்படுவது?
ஆகையாலே, திருக்கண்களின் அழகைக் கூறி, அவ்வழியாலே திருமுகத்தில் அழகைக் கூறி
பின்பு அவ்வருகே சில பரிமாற்றலகளை ஆசைப்பட்டு அப்போதே அது கைவாராமையாலே நோவுபட;
இவள் நிலையைக் கண்ட தோழிமாரும் தாய்மாரும், ‘உனக்கு ஓடுகிறது என்? என்று கேட்க,
ஆற்றாமை பிரசித்தமாயினபடியால் சிலர்க்குச் சொல்லிச் சிலர்க்கு மறைக்கும்படியான நிலை இல்லையே!
ஆகையாலே, அவர்களைக் குறித்து, ‘அவனுடைய திருமுகத்தில் அழகானது தனித்தனியும் திரளவும் வந்து நலியாநின்றது’ என்ன,
‘நீ இங்ஙனே சொல்லுமது உன்னுடைய பெண்மைக்குப் போராது; அவனுடைய தலைமைக்கும் போராது;
நீதான் எங்களை நோக்கக் கடவதாய் இருப்பது ஒரு தன்மை உண்டே அதுக்கும் போராது;
ஆன பின்பு, இதனைத் தவிர்,’ என்று ஹிதம் சொல்லுவாரும் பொடிவாருமாக;
‘நீங்கள் பொடிகிற இதனைக் கேட்டு மீளும் அளவு அன்று அது என்னை நலிகிறபடி;
இனித்தான் ஏதேனுமாக உறைத்ததிலே ஊன்றி நிற்குமத்தனை அன்றோ?
ஆன பின்பு, நீங்கள் என்னை விட்டுப் பிடிக்க அமையும்,’ என்று அவர்களுக்குத் தன் பக்கல் நசை அற வேண்டும்படி
தனக்குப் பிறந்த ஆற்றாமையை அறிவிக்கறாளாய் இருக்கிறது.

‘இவர்க்குத் திருவாய்மொழி எங்கும் ஓடுகிற தன்மைகள் சர்வேஸ்வரனுடைய குணங்களை ஆசைப்படுகையும், அதுதான்
மானஸ அனுபவமாய் இருக்கையும், அனுபவித்த குணங்கள் ஒழிய மற்றைய குணங்களிலே விருப்பம் செலுத்துதலும்.
அதுதன்னில் கிரமப் பிராப்தி பற்றாமையும், அதுதான் மேல் நின்ற நிலையை மறக்கும்படி செய்கையும் ஆகிற இவையே அன்றோ?
அவற்றைக் காட்டிலும், உருவு வெளிப்பாடாகச் சொல்லுகிற இதில் ஏறின அமிசம் என்?’ என்னில்
, ‘முன்பு பிறந்த தெளிவும் கிடக்கச் செய்தே மேலே விருப்பத்தை உண்டாக்குமது அன்றோ உருவு வெளிப்பாடாகிறது?
மற்றைய இடத்தில், முன் பிறந்த தெளிவை அழித்தே அன்றோ மேலில் விருப்பம் பிறப்பது?

‘எங்ஙனேயோ?’ என்ற திருவாய்மொழியிலும் பெரும்பாலும் இதுவே அன்றோ ஓடுகிறது? அதில் இதற்கு வாசி என்?’ என்னில்,
அதில் பிரீதியும் பிரீநி இன்மையும் சமமாக இருக்கும்; இங்குப் பிரீதி இன்மை மிக்கிருக்கும்.
திருக்கண்களில் அழகை ‘இணைக்கூற்றங்கொலோ!’ என்னும்படியாயிற்று இங்குத் தீங்கு செய்வதில் உறைப்பு இருக்கும்படி.

———————————————————————————————

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-

திருக்கண்கள் நலியும் படி –
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்-சபாளைகள் பெண் பிள்ளைகளை கிரசிக்கக் கடவதாய்-சேர்த்தியான இரட்டை -மிருத்யுவோ அறியேன்
பாதகத்வாலே கண் என்ன அறுதி இட மாட்டிற்றுஇலேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்-ரத்நாகரம் போலே அபரிச்சின்ன விலக்ஷண ஸ்வ பாவன்-தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி –பிரதமத்தில் விதேயமாய் உபகரித்தவன் -ஸம்ஸலேஷித்து பவ்யனாக -இருந்தவன் -தர்ச நீயும் மிருத்யு என்று சொல்ல மாட்டிற்று இலேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்-அகலப் போக ஒண்ணா போலே -பாருமின்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே-இருவரையும் -அந்தரங்கள் ஆந்திர கிலேசம் அறியாத -பெற்று வளர்த்த தாய் -ஸ்வயம் வேத்யமான -வேத வேதியன் அவன் -ஸ்வயம் வேதியன் இவள் -என்ன பரிகாரம்
தோன்றும் கண்களை மறைக்க மாட்டேன் -அடைந்து அனுபவிக்க மாட்டிற்று இலேன்

தோழிமீர்காள்! அன்னைமீர்காள்! கடல் போன்ற நிறத்தையுடைய அழகிய கண்ணபிரானுடைய திருக்கண்கள், பெண்களினுடைய உயிர்களை
உண்ணும்படியான இரண்டு கூற்றங்கள் தாமோ? அறியேன்! அல்லது, திருக்கண்கள்தாமோ? அறியேன்! அத்திருகண்கள் நான்கு புறங்களிலும்
அன்று மலர்ந்த மலர்கள் போன்று வந்து தோன்றாநின்றன; வருத்தத்தையுடைய யான் என்ன செய்வேன்?
கூற்றம் – உயிரையும் உடலையும் கூறுபடுபடுத்துமவன்; யமன். கண்டீர் – முன்னிலையசை.
இத்திருவாய்மொழி கலிநிலைத்துறை.

‘இம்முகத்துக்குக் கண்ணாக இருப்பவர் நாம் அன்றோ?’ என்று முற்படத் திருக்கண்களின் அழகு
வந்து தம்மை நலிகிறபடியை அருளிச்செய்கிறார்.
முகத்துக்கு கண் -பிரதேசத்துக்கு பிரதான -நலிவதில் முற்பட்டவை –

ஏழையர் ஆவி உண்ணும் இணைக்கூற்றங்கொலோ அறியேன்-
ஒவ்வொரு விஷயத்திலே விருப்பத்தைச் செய்து, அவை பெறாவிடில் தரிக்கமாட்டாத பலம் இல்லாத பெண்களுடைய
பிராணன்களை முடிக்கிற கூற்றுகள் இரண்டோ?
பிரிந்து ஆற்றாமையை விளைத்தவனுக்கும் அன்றிக்கே, ‘இது ஆகாது’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கும் பருவம்
கழிந்த தாய்மார்க்கும் அன்றிக்கே, அபலைகளையே முடிப்பன இரண்டு கூற்றமோ!
தன் கண் அழகு தான் அறிகின்றிலனே! தன்னையும் நலிந்ததாகில் வாரானோ?
கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியானோ? இராமபாணம்போலே, ஒப்பனை குறி அழியாதே இருக்க
உயிரை முடியாநின்றது ஆதலின், ‘ஆவிஉண்ணும்’ என்கிறது.
கூற்றுவர் இருவர் தங்களிலே கிருத சங்கேதராய் வந்தாற்போலே காணும் திருக்கண்களில் அழகு பாதகமாகின்றன
என்பாள், ‘இணைக் கூற்றங்கொலோ’ என்கிறாள்.
‘‘அறியேன்’ என்பான் என்? ‘கூற்றம்’ என்று அறுதியிட்டாலோ?’ என்னில்,
கூற்றுவர் இருவர் கிருத சங்கேதராய் வந்தாலும் அபலைகளையே நலியவேண்டும் நிர்ப்பந்தமில்லையே!
‘ஆடவர்களுடைய கண்ணையும் மனத்தினையும் கவர்கின்றவர்’ அன்றோ? அதனாலே ‘அறியேன்’என்று சொல்லுகிறது.

ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்கொலோ அறியேன் –
அன்றிக்கே, பெண் பிறந்தாரையே நலிக்கூடியவைகள் தாமேயோ?
அற்பம் அண்ணியாரே பாதகராம் அன்று தப்ப விரகு இல்லை; இப்படி முதலுறவு பண்ணிப் பொருந்தவிட்ட இத்திருக்கண்கள் தாமேயோ? .
உபகாரம் செய்தலையே சுபாவமாகவுடைய கிருஷ்ணனுடைய கடல் போலே திருக்கண்கள் என்னுதல்;
அன்றிக்கே, ‘கடல் போன்ற சிரமஹரமான வடிவையுடைய உபகாரசீலனான கிருஷ்ணனுடைய திருக்கண்கள்’ என்னுதல்.
அறியேன் –
இதற்கு முன்பு பிரிந்து அறியாமையாலே திருக்கண்கள் பாதகமாம் என்று அறியக் காரணம் இல்லை.
சற்று தள்ளி இருந்து -பிரதி கூலன் விரோதி யானால் உபாயத்தால் தப்பலாம் -அநு கூலன் பாதகமானால் தப்ப முடியாதே
-உபகார வேஷத்துடன் வந்த பாதகன் அன்றோ –
‘உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக்கண்’-பெரிய திருமொழி, 7. 1 : 9- என்றே அன்றோ கேட்டிருப்பது?
இக்கடாக்ஷமே தாரகமாக அன்றோ உலகம் அடைய ஜீவிப்பது?
நாம் கேட்டிருந்தபடி அன்றிக்கே இராநின்றது, இப்போது காண்கிறபடி. ‘ஆனால், தப்பினாலோ?’ என்னில்,

சர்வாதிகாதவமும் ரக்ஷகத்வமும் திருக்கண்கள் -நம் கண் அல்லாதது கண் அல்ல -கப்யாசம் புண்டரீகாக்ஷன் –
வெருவ நோக்கி -அழல விழித்து -தாமரைக்கு கண்கள் கொண்டு ஈர்த்தியாலோ -மது சூதனன் ஜயமான கடாக்ஷம்
-பெரும் கேழலார் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -அந்நோக்கும் தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்
பூதராக்கும் நெடும் நோக்கு சிரமணி சபரி விதுரர் ரிஷி பத்நிகள்-நெடு நோக்கு கொள்ளும் பத்ம விலாசன்
-தாமரைக்கு கண்களால் நோக்காய் -செங்கண் சிறுச் சிறிதே எம்மேல விழியாவோ
-விஷ்ணோர் கடாக்ஷம் -அனைத்தையும் பண்ணுமே திருக்கண்கள்

சூழவும் தாமரை நாண்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் –
மூலபலத்தின் அன்று பார்த்த இடமெல்லாம் பெருமாளே ஆனாற் போலே ஆயிற்று;
இராம பாணத்துக்கு இராக்கதர்கள் தப்பலாம் அன்றாயிற்று, இக்கண்களின் அழகின்கீழ் அபலைகளாய் இருப்பார்க்குத் தப்பலாவது?
‘புண்டரீக நெடுந்தடங்கள் போலப் பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும்’ –திருவிருத்தம், 39.-என்னக் கடவது அன்றோ?
பாம்பைக் கண்ட அச்சம் போலே இருக்கை. இறாய்க்க நினைத்த இடம் எங்கும் தானேயாய் இராநின்றது.
‘இப்போது ‘தாமரை நாண்மலர் போல்’ என்பான் என்?’ என்னில்,
‘பூஜிக்கத்தக்கபிராட்டியே! அந்தப் பெருமாள் தேவரீரைப் பார்க்காத காரணத்தால் மிகப்பெரியதாயும் எரிந்துகொண்டு
இருக்கிற நெருப்பினாலே சூழப்பட்ட நெருப்புமாலை போன்று பரிதபிக்கிறார்,’ என்றும்,
‘நைவதம் ஸாந் ந மஸகாந் –
‘ஸ தவ அதர்ஸநாத் ஆர்யே ராகவ: பரிதப்யதே
மஹாத ஜ்வலதா நித்யம் அந்நிநேவாக்நிபர்வத:’-என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 44.
நைவ தம்ஸாந் நமஸகாந் ந கீடாந் ந ஸரீஸ்ருபாந்
ராகவோபநயேத் காத்ராத் த்வத் கதேநாந்தராத்மநா’-என்பது, ஸ்ரீராமா, சுந். 36 : 42.
அதற்கு-துடைக்க அறியாமல் இருந்ததற்கு. ‘என்றான்’ என்றது, ஸ்ரீ வால்மீகியை.

‘கன்மத்தை ஞாலத் தவர்ஆர் உளரே கடப்பார்?
பொன்மொய்த்த தோளான் மயல்கொண்டு புலன்கள் வேறாய்
நன்மத்தை நாகத் தயல்சூ டியநம்ப னேபோல்
உன்மத்த னானான் தனைஒன்றும் உணர்ந்தி லாதான்.’-என்பது, கம்பராமா. உருக்காட்டுப்பட. 84.

பெருமாள் ஊர்ந்ததும் கடித்ததும் துடைக்க அறியார்’ என்றும் சொல்லப்படும் நிலை அன்றோ அவருடை நிலை?
‘நன்று; அதற்கு அடி என்?’ என்ன,
‘த்வத்கதேநாந்தராத்மநா-உன்னிடத்தில் வைத்த மனத்தையுடையவராதலாலே’ பெருமாள் இங்கே குடி போர,
அங்கு இவை யார்தான் அறிவார் என்றான் அன்றோ?
பிரிவில் இவ்வளவு அன்று அன்றோ அத்தலைக்கு ஆற்றாமை? அதனை அறிகிலலே இவள்.
தன்னோடே வந்து கலந்த விளைநீர் அடைத்துக்கொண்டு -பூர்ண அனுபவம் -பிரிகிற போதைச் செவ்வி அன்றோ இவள் அறிவது?
அதுவே அன்றோ இவள் நெஞ்சில் பட்டுக் கிடப்பது? பின்பு அவன் பட்டது அறியாளே;
ஆகையாலே, தாமரை நாண்மலர் போல்’ என்று சொல்லுகிறாள்.
வந்து தோன்றும் –
பிரித்தியக்ஷத்திலே அத்தலையாலே வரவு ஆனாற்போலே உருவு வெளிப்பாட்டிலும் அத்தலையாலே
வந்து தோன்ற ஆயிற்றுத் தான் அறிகிறது.
கண்டீர் –
உங்களுக்கு இது தோற்றுகிறது இல்லையோ?
தோழியர்காள் அன்னைமீர் –
சிலர்க்குச் சொல்லிச் சிலர்க்கு மறைக்கும்படியன்றே இவள் நிலை? என்றது,
‘தோழிமார்க்குச் சொன்ன இதனைத் தாய்மார்க்குச் சொல்லுவோம் அல்லோம்,’ என்று மறைக்கும் அளவு அன்று ஆயிற்று,
இவளுக்குப் பிறந்த நிலை விசேடம்,’ என்றபடி.
என்செய்கேன் –
இதனைத் தப்பப் பார்ப்பதோ, அனுபவிக்கப் பார்ப்பதோ? எதனைச் செய்கேன்?
துயராட்டியேனே –
‘இறைவனுடைய ஆனந்தத்தை அறிந்தவன் எப்பொருளினின்றும் அஞ்சான்,’ என்று இருக்க வேண்டி இருக்க,
அங்ஙன் அன்றிக்கே, ‘அவசியம் அனுபவிக்கத் தக்கது’ என்கறிபடியே,பழைய கிலேசமே அனுபவிக்கும்படி ஆயிற்றே.

‘ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந் நபிபேதி குதஸ்சந’-என்பது, தைத்திரீ.

‘இடராக வந்தென்னைப் புன்சிறு தெய்வங்கள் என்செயுமான்
இடராக வன்பிணி மாநாக மென்செயும் யான்வெருவி
இடராக வன்னி புனல்இடி கோள்மற்றும் என்செயும்வில்
இடராக வன்அரங் கன்திருத் தாள்என் இதயத்ததே.’-என்ற திருவரங்கத்தந்தாதிச்செய்யுள், மேற்சுலோகப்பொருளோடு ஒப்பு நோக்கல் தகும்.

———————————————————————————————————–

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2-

ஆஸ்ரித த்ரவ்ய அபி நிவேசம் -நாஸா தண்டம்
ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?-பிரிய பரை தாய் -ஹிதம் சொல்லி இருந்த இடத்தில்
இருக்க ஒட்டாமல் பழி சொல்லியும் நலிந்து -பலியாமைக்கு அடி
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்-பரிசரத்தில் ஓங்கி உள்ள கற்பகத்தின் கொடியோ கொழுந்தோ -அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே-திரட்டி வைத்த வெண்ணெய் -உண்டான் திரு மூக்கில் ஒட்டிக் கொண்டு -தூண்டப்பட்டு
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–வலியதே- ஸ்திரம் -நின்று எரியும் -தூண்டப்பட்டு பெரியதாக எரியும் –
தீப ஜ்வாலை போலே பிரகாசியா நின்றது –
ருஜு வாகையால் கொடி-வல்லி–என்னலாம் -அசைந்து ஓங்கின தலை இருப்பதால் கொழுந்து என்னலாம்–மாட்டிய – தூண்டிய
ஸ்ரீ சுந்தர பாஹு ஸ்தவம்
கண் கடல் -பிரேம அமிருதம் பூர்ணம் -பரிவாஹி-மத்யே -சேது
தடுப்பு அணை -ஸூ ந்தர புஜ-கல்ப திரும அங்குரா-வன சைல பத்ரு
புருவம் மூக்கு காது தடுப்பு அணை –மேலும் வலப்பக்கமும் இடப்பக்கமும் -கீழே வராதே –

தாய்மார்களே நீங்கள், என்னை வருத்தியும் பழி மொழிகளைக் கூறியும் நின்று நலிவதனால் பயன் யாது? திரட்டிய வெண்ணெய்
உண்டவனான கிருஷ்ணனது அழகிய மூக்கானது, பக்கத்தில் உயர்ந்து விளங்குகின்ற கறபகத்தின் கொடியோ? அல்லது, கொழுந்தோ? அறியேன்;
அது, என்னுடைய உயிருக்குள்ளே ஏற்றிய வலிய விளக்கினது சுடராய் நிற்கும் பெருமையையுடையது.
‘திருமூக்கு வல்லியோ, கொழுந்தோ அறியேன்; திருமூக்குச் சுடராய் நிற்கும் வாலியது,’ என்க.

‘இரண்டுக்கும் நடுவே நாம் இருக்க, இவை முற்படுகையாவது என்? அத்தனையோ நம் மூக்கு வலி?’ என்று
திருமூக்கில் அழகு நலிகிறபடியைச் சொல்லுகிறது.–மூக்கு வலி -பிராணன் -ரஸோக்தி மூச்சு வலி -என்றபடி –

ஆட்டியும் தூற்றியும் –
ஆட்டுகையாவது, தாம் தாம் பழி சொல்லி அலைக்கை. தூற்றுகையாவது, பிறரும் அறியப் பழி சொல்லுகை நின்று –
‘அச்சம் உறுத்தி மீட்கலாமோ?ய என்று ஒருகால் அலைக்கை இயல்பே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே, முன்பு செய்ததற்கு ஒரு பிரயோஜனம் காணாதிருக்கச் செய்தேயும் விடாதே நின்று.
அன்னைமீர் என்னை நீர் நலிந்து என் –
ஹிதத்திலே நடக்கும் தமப்பனைப் போலே, என் பிரியத்திலே நடக்கும் நீங்கள் என்னை நலிகிறது என்?
என் உகப்பே பேறாக நினைத்திருக்கக்கூடிய நீங்கள் நலிகிறது என்?
அந்த உருவு வெளிப்பாட்டைத் தடைசெய்யலாம் என்றோ, என்னை மீட்கலாம் என்றோ?
ஒரு பிரயோஜனம் இல்லாததிலேயும் முயற்சி செய்யக் கடவதோ?’ என்பாள், ‘நலிந்து என்’ என்கிறாள். என்றது,
‘அவனுடைய மூக்கு வலி இருக்கிறபடியையும் அறிந்து நீங்கள் என் செய்யப்படுகிறீர்கோள்?’ என்றபடி.

‘நாங்கள் சொல்லுகிற ஹித வசனத்துக்கு ஒரு பிரயோஜனம் இல்லையாகில், என் செய்தால் பிரயோஜனம் உண்டு?’ என்ன,
மாடு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் –
வல்லீர்கோளாகில் இந்தச் சந்தேகத்தை அறுத்துத் தாருங்கோள்.
ஒரு கடல் அருகே அக்கடல் ஊற்றே தாரகமாக வளருகிறது ஒரு கொடி போலே ஆயிற்று.
திருக்கண்களுக்கு அருகே திருமூக்கு இருக்கிறபடி. மாடு – அருகு.
‘உந்நஸம் – உயர்ந்த மூக்கையுடைய’ என்கிறபடியே‘உயர்’ என்கிறது. ‘
ஸூசி ஸ்மிதம் கோமள கண்டம் உந்நஸம் லலாட பர்யந்த விலம்பிதாலகம்’-என்பது, தோத்திரரத்தினம், 32.

ஒழுகு நீட்சியாலே கொடி என்னவுமாய், ஊக்கம் மாறாமையாலே கொழுந்து என்னவுமாய் இராநின்றதாதலின், ‘வல்லியோ கொழுந்தோ’ என்கிறது.
‘இன்னது’ என்று நிச்சயிக்க அரிதாக இருக்கையாலே‘அறியேன்’ என்கிறது.
‘முற்றுவமை இருக்கிறபடி, எங்களுக்கு அறியப்போமோ? இதிலே உட்புகநின்று அனுபவிக்கிற நீ பின்னைச் சொல்லாய்’ என்ன, சொல்லுகிறாள் மேல்:

ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு –
அநுகூலர்களுடைய சம்பந்தமுடைய திரவியத்தால் அல்லது தரிக்க மாட்டதே வெண்ணெய் களவு காணப் புக்குக்
கொண்டியிலே பிடி உண்டு, பின்பு அதனை இல்லை செய்கைக்காக முகத்திலே தடவிக்கொள்ளுமே;
அவ்வெண்ணெயிலே முடை நாற்றமும் உருவு வெளிப்பாட்டிலே தோற்றுகிறதாயிற்று இவளுக்கு.
அப்போதை முடைநாற்றம் தோற்றும்படியாயிற்று உருவு வெளிப்பாட்டில் மெய்.-வாசனை உடன் அன்றோ காட்டி அருளுகிறார் –
கையும் களவுமாக பிடிப்பேன் என்பார்கள் கையை மூக்கில் தடவிக் கொண்டு கையில் இல்லை என்பான் –
‘நீ காண்பதாகச் சொல்லுகிற இது எங்களுக்குத் தெரிகிறது இல்லையே!’ என,
எனது ஆவியுள்ளே –
என் மனதிற்குள்ளே. மாட்டிய – ‘சுடர்வெட்டிய’ என்னுதல்: ‘ஏற்றிய’ என்னுதல்,
வல் விளக்கின் சுடராய்-
விரக தாபத்தாலே அவியாத விளாக்காயிற்று.
‘‘ஏற்றிய பெருவிளக்கு’ என்று ஒருதமிழ்புலவன் இட்டு வைத்தான்’ என்று அருளிச்செய்வர்.
நிற்கும் வாலியதே –
வலிதாய் நின்று நலியாநிற்கும்.
‘விளக்காகிறது தான் சிறிது நேரம் இருப்பதுமாய் ஓர் இடத்திலே இருப்பதுமாய் அன்றோ இருப்பது?
இது அங்ஙன் அன்றிக்கே, எப்போதுமாய் எங்கும் உண்டாய் இராநின்றது:
பாதகத்துவத்தில் உறைப்பை நினைத்துச் சொல்லுகிற வார்த்தை அன்றோ இது?

—————————————————————————————————–

வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோஅறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-

ஸ்யாமளமான வடிவுக்கு அதர சோபை -பரிபாகம் -நீளம் -சிகப்பு -பார்த்த பார்த்த இடம் தோற்றா நின்றது
வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்?-நேரம் கடத்தாத கனி -பூ காய் பழம் போலே இல்லையே
-போது செய்யாத நன்மை மென்மை நிறம் இவற்றால் கனி -அப்பொழுதே அனுபவிக்க முடியாத
பாவ பலமோ -பக்குவ பலமோ பாவ பலமோ -ஈஸ்வர ப்ரீதி புண்ணியம் அப்ரீதி பாபம் -அனுபவித்து கழிக்க அரிய பாவம்
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோஅறியேன்
சுந்தரம் ஸூ லபம் ஸுகுமாரம்-ஸூ லப்யம் ஸுகர்யம்-முழு பவளம் அழுக்கு படியும் -துண்டம் புது சிகப்பாய் இருக்கும் –
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்-ஸ்யாமளம் -கூட்டுப்படை -திரு மேனி -தொண்டைப் பழம் சிகப்பான பழம் –
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே-திசைகள் எல்லாம் பாட பேதம் -பார்த்த திசைகள் எல்லாவற்றிலும் -தோன்றுமே

நீல நிறம் பொருந்திய பெரிய முகில் போன்ற திருமேனியையுடைய அம்மானது கொவ்வைக்கனி போன்ற திரு அதரமானது, தூய்மையையுடையதான
ஒப்பற்ற பழநீதானோ? தீவினையேனாகிய என்னுடைய கொடிய தீவினைதானோ? அழகிய திரண்ட பவளத்தினது கொழுவிய துண்டுதானோ? அறியேன்;
தப்புவதற்குத் தகுதியான திக்குகளில் எல்லாம் எனது இனிய உயிரைக் கொள்ளை கொள்ளுவதற்கு வந்து தோன்றாநின்றது.
‘அம்மான் தொண்டைவாய் கனிகொல்? வினைகொல்? கொழுந்துண்டங்கொலோ? அறியேன்; திசையுள் எல்லாம் வந்து தோன்றும்’ என்க.

அது தன் மூக்கு வலி காட்ட நாம் பேசாதே இருந்தால், ‘அத்தனையோ இதன் வாய் வலி’ என்று நம்மை ஏசுவர்கள்
என்று திருப்பவளத்தின் அழகு வந்து நலிகிறபடியை அருளிச்செய்கிறார்.

வாலியது ஓர் கனிகொல் –
முன்பு பிஞ்சாய், பின்பு பக்குவமாய், பின்பு அனுபவயோக்கியம் அன்றிக்கே போவன சில பழங்கள் -எட்டிப் பழம் போலே -உளவே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே, என்றும் ஒக்க ஒரே தன்மையாய் இருப்பது ஒருகனியோ?
அத்தலையில் இனிமை போது செய்யாமையாலே இத்தலையில் ஆற்றாமையும் போது செய்யாதே!
வினையாட்டியேன் வல்வினைகொல் –
இனிய பொருள் தீயது ஆயிற்று. அனுபவிக்கின்றவர்கள் செய்த பாபத்தாலே அன்றோ? அமிருதமே விஷமாம்படியான பாவத்தைச் செய்தேன்.

கொஞ்சுகிளி அன்னமொழி குமுதஇதழ் அமுதால்
எஞ்சினன் நராதிபதி ஈதொரு வியப்போ!
அஞ்சுதரு தீவினையின் ஆரமுதும் நஞ்சாம்;
நஞ்சும்அமு தாம்உரிய நல்வினையின் மாதோ,’-என்பது, வில்லி பாரதம்.

பாவத்தைச்செய்த என்னுடைய பாபமானது பலத்தைக் கொடுப்பதாய்க் கொண்டு அங்கே குடி ஏறிற்றோ?
அங்கே கிடந்தே அன்றோ இங்கே அனுபவிப்பிப்பது? என்றது,
‘பகவத் விஷயத்தில் தண்டனை உருவமாகக் கிடந்தே அன்றோ இங்கு அனுபவிப்பிப்பது?’ என்றபடி.
செய்த செயலாகையாலே செய்த போதே நசித்துப் போமே?
இவன் செய்த பாபத்துக்கு, தானே சுவதந்தரமாய் நின்ற பலத்தைக் கொடுப்பதற்குத் தகுதி இல்லையே!
அனுபவித்தாலும் அழியாத பாவம்’ என்பாள், ‘வல்வினை’ என்கிறாள்.

கோலம் திரள் பவளம் கொழுந்துண்டங்கொலோ அறியேன்-
அழகு திரண்டிருந்துள்ள பவளத்தினுடைய அன்பினையுடைத்தான முறியோ? அறிகிலேன்.
புழுதி புடைத்திராமைக்கு ‘முறியோ’ என்கிறது;
முறித்த வாயானது ஒளி உண்டாய் நெய்த்திருக்கும் அன்றோ?
நீல நெடுமுகில் போல் திருமேனி அம்மான் –
இதுதான் என்றும் உண்டாய் இருக்கச் செய்தே, இதற்கு முன்பு பாதகமாயிற்று இல்லை அன்றோ?
கூட்டுப்படை நின்றவாறே வலியாநின்றதாயிற்று.
நீலமாய் இனிமை அளவு இறந்துள்ள முகில் போன்ற வடிவையுடைய சர்வேஸ்வரனுடைய.
தொண்டை வாய்-
கொவ்வைப்பழம் போலே கனிந்து நெய்த்து அன்றோ திருப்பவளந்தான் இருப்பது?தொண்டை-கொவ்வை.
தன்னில்தான் உண்டான பகை பார்த்திருக்கிறது இல்லையாயிற்று, இவளை நலிகிறவிடத்தில்.
‘இரண்டுக்கும் சேர வன்னியம் இல்லை அன்றோ?
அவை நலிந்துகொடு தோற்றா நின்றதாகில் தப்பப் பார்த்தாலோ?’ என்ன, ‘வாய்வலி தப்பலாயோ இருக்கிறது?’ என்கிறாள் மேல்:
ஏலும் திசையுள் எல்லாம்
-நானும் இவை நலியாத இடம் தேடித் தப்ப விரகு பாராநின்றேன்:
அவ்வவ்விடங்களிலே வந்து தோன்றாநின்றது. என்றது, ‘பாரத்த இடமெல்லாம் தானேயாய் இராநின்றது,’ என்றபடி.
‘தோன்றுகிறதற்குக் கருத்து என்?’ என்னில்,
என் இன் உயிர்க்கே-
என்னுடைய நற்சீவனை முடிக்கைக்காக.

——————————————————————————————-

இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர்மதனன் கருப்புச்சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண் ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.–7-7-4-

காம உத்பாதகன் காமனார் தாதை -திருப்புருவம் நலியா நின்றன
இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்-பிராணனை அபகரிக்க -சபலை பெண் பிறந்தார் மேல்
-இரண்டு வில் -இரண்டு புருவங்கள்
மன்னிய சீர்மதனன் கருப்புச்சிலை கொல்?மதனன்-காம தேவன் கரும்பு சிலை -ஸ்திர சவுந்தர்யாதி குண உக்தன் -காமுகரை நலியும்
தன்னுயிர்த் தாதை கண் ணப் பெருமான் புருவம் மவையே-சத்தா பிரதன்-சர்வாதிகான் -தன் கை சார்ங்கம் அதுவே போன்ற –
அவதாரணம் -பாதகத்வம் கனத்து -த்ருஷ்டாந்தங்களை விட அதிக துன்பம் -கொடுப்பதால் -வில்லும் -கரும்பு வில்லும் விட இவை மிகவும் நலிய
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே-ஆத்மா மேல் அபி நிவேசம் -ஆபி முக்கியம் கொண்டு -ஒருப்படிப் படி நின்று நலியா நின்றன –
ப்ரஹ்ம தேவன் வராத ராஜன் -கேசம் -வரைய -தீற்றி பார்த்ததே திருப்புருவம் -அலகாலி சிகீரஷ்ய லலாட பட்டே நெற்றி துணி
சாப த்வயம் சகஸ்ர தளதாமரை காவலுக்கு வில் -கூரத் ஆழ்வான்

மன்மதனுக்கு உயிர் போன்ற தந்தையாகிய கண்ணபிரானுடைய புருவங்களானவை, இனிய உயிர்களைக் கவர்வதற்காகப் பெண்கள்மேல் வளைகின்ற
நீல நிறம் பொருந்திய விற்கள்தாமோ? அன்றிக்கே, நிலைபெற்ற கீர்த்தியையுடைய மன்மதனுடைய கரும்பு வில்தாமோ என்னுடைய
உயிர் மேலனவாய் எப்பொழுதும் நிலை பெற்று வருத்துகின்றன?
‘கண்ணப்பெருமான் புருவமவை நீல விற்கொல்? கருப்புச் சிலைகொல்? என் உயிர் மேலனவாய் என்றும் நின்று அடுகின்றன,’ என்க.

‘என்தான்! இங்ஙனே கீழ் மேல் ஆயிற்றோ போய்?’ என்று திருப்புருவத்தில் அழகு
வளைந்துகொடு வந்து நலிகிறபடியை அருளிச்செய்கிறார்.

இன் உயிர்க்கு –
என்னுடைய நற்சீவனைக் கொள்ளுகைக்காக.
ஏழையர்மேல் வளையும் –
வளைப்பாரும் இன்றிக்கே வளைக்கைக்கு விஷயமுமின்றிக்கே, -வான வில் –
செயப்படுபொருள் இல்லாமலும் செய்பவன் இல்லாமலும் வளையாநின்றது.
வளைப்பார் இல்லாமையாலே கர்த்தா இல்லை;
விஷயம் இணை நீல வில்கொலோ –
ஏழையர்மேல் வளைகிற நீலமான இரண்டு விற்களோ? என்றது,
‘பகைவர்களை அழிக்கத் தக்க, இந்திரவில் போன்ற விற்களைப் பிடித்து’ என்னும் படியே என்றபடி.
ஸக்ரசாப நிபே சாபே க்ருஹீத்வா ஸத்ருநாஸநே’–என்பது, ஸ்ரீ ராமா. கிஷ்கிந். 3 : 9.

இந்திர வில்லுக்கு அபலைகளையே நலியவேணும் என்னும் நிர்பந்தம் இல்லை அன்றோ?
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலைகொல் –
பெண் பிறந்தாரையே நலியக் கூடியதான காமனுடைய வில்லுதானேயோ?
அதுதன்னிலும் சிவனாலே வடிவுஇழப்பதற்கு முன்புத்தை அவன் கையில் வில்லாக வேணும் கருப்புச் சிலைகொல்-
கண்ணுக்கு ஆபாசமாய்ப் பாதகம் உறைத்திருக்கிறபடி.

மதனன் தன் உயிர்த்தாதை கண்ணப்பெருமான் புருவம் அவையே-
அவனுடைய சம்பந்தத்தால் வந்த இராசகுலங்கொண்டு திரிகிறவன் கையில் வில்லுக்கு இத்தனை உறைப்பு உண்டாக மாட்டாது,
அவனுக்குங்கூடத் தந்தையான கிருஷ்ணனுடைய திருப்புருவங்கள்தாமே ஆகவேணும்.
தன் கைச்சார்ங்கமதுவே போல் புருவ வட்டம் அழகியவனுடைய புருவங்கள்தாமேயாக வேண்டும்.
ஆண்டாள் வார்த்தை இருக்கிறபடி அன்றோ? நாய்ச்சியார் திருமொழி. 14 : 6.-
தருமம் அறியாக் குறும்பனை – தருமம் அறியும் போது முடி சூடின க்ஷத்திரியன் வயிற்றிலே பிறந்தவனாக வேண்டாவோ?
யாதவர்கள் நேரே முடி சூடுவது இல்லை அன்றோ? இரக்கம் இருக்கும்படி முதலிலே புதியது உண்டு அறியாதவனாயிற்று.
ஸ்ரீநந்தகோபர், தம்முடைய இராச்சியத்திலே மூலையடியே நடந்தி திரிவான் ஒரு பிள்ளை யாயிற்றுப் பெற்றது.
தன் கைச் சார்ங்கம் – கையிலே வில்லைக் கண்டால், ‘முகத்திலே இருக்கக்கூடிய அது கையிலே இருந்ததே! என்னாலாம்படியாய் இருக்கும்;
முகத்திலே கண்டவாறே, ‘கையிலே இருக்கக்கூடிய இது முகத்திலே இருந்ததே!’ என்னலாய் இருக்கும்.
அதுவே போல என்கிறதாயிற்று, முற்றும் ஒத்திருக்கையாலே.
‘புருவ வட்டமழகிய’ என்றதனால் ‘தருமமறியான்’ என்று இழக்க ஒண்ணாதபடி யாயிற்று,வடிவழகு இருப்பது.
பொருத்தம் இலியை-சில பொருள்கள் உளவே அன்றோ,
நிறங்கள் அழகியனவாய்ப் பார்த்தாவாறே அனுபவிக்க யோக்கியம் அன்றிக்கே இருப்பன?
அவை போலே, வடிவழகேயாய், ஆசைப்பட்டார் பக்கல் ரசம் தொங்கிலும் தொங்கானாயிற்று.
கண்டீரே –
அவனுக்குப் பொருத்தம் இல்லாவிட்டால், நமக்குப் பொருத்தம் இல்லையாகில் அன்றோ விட்டிருக்கலாவது?
அவன் பொருந்தாமை தமக்குத் தொடர்ந்து திரியுமத்தனையாயிற்று.

புருவம் அவையே-
மேலே கூறிய அழகுகள்தாம் அநுகூலங்கள் என்னும்படியாகவாயிற்று, இவை பாதகமாகிறபடி.
என் உயிர் மேலனவாய்-
இருப்பன அங்கேயாய் இருக்கச் செய்தேயும், நோக்கு என்மேலேயாய் இராநின்றது.
எங்கும் பக்கம் நோக்கு அறியாமல் அன்றோ இருப்பது? திருவாய். 2. 6 : 2.
-அடுகின்றன –
கொல்லாநின்றன. என்றும் நின்றே-பாதகமாக நிற்கச்செய்தேயும் அழிந்து போகக் கூடியனவாய் இருப்பன சில பொருள்கள் உள அன்றோ?
இவை அங்ஙன் அன்றிக்கே என்றும் ஒக்க நின்று நலியாநின்றன.
என்னை நலிகைக்காக நித்தியமாய் இருக்கும் தன்மையை ஏறிட்டுக்கொண்டன;
நித்தியமாய் இருப்பதும் நித்தியமாய் இருக்கும் வடிவை ஏறிட்டுக் கொண்டதும்’ என்கிறதுதானே அன்றோ நலிகிறது?

———————————————————————

என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5-

மந்த ஸ்மிதம் -முகமும் முறுவலும்-ஸுசீல்ய ஸூ சகம் -சம்பாஷண மாவ இவ-ஸ்மிதம் நிர்ஜரிகா-தவ வத்ஸல -அருவி கொட்ட
-பூத்தலே விக்கீர்ணா-ரத்னம் ஹாரம் -முத்து ஹாரம் -ஒளி பட்டு -தேவ பெருமாள் திருவடி தொடும் படி பவள மாலை ஆடி இருக்குமே –
ஓடையாக சுழித்து வெளுப்பாக -உள் மல்லிகை மாலை -போலே ரம்பா ஸ்தம்பம் தொடைகளில் இறங்கி விரல் வெள்ளை நகம் வெளியே ஓடும் –
கோவர்த்தன உத்தாரணம் -பண்ணி புன்சிரிப்பு -செய்து அருளினான் -தாதகாலிக மந்த ஸ்மிதம் –
ஈட்டிய வெண்ணெய் தோய்ந்த மூக்கு போலே முன்பு -ஒதுங்கி பிழைக்க இடம் இல்லையே
என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?-திகழும் சிவக்க -அதரம்-தாய் -முத்து பல வரிசை –
-மின்னல் போலே -செக்கர் வானம் பிரசவித்த -பவளம் ஈன்ற முத்தோ
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்-32 அணி அணியாக நின்ற மகா உபகாரகன் –
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்-ரக்ஷித்ததால்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.-எங்கும் சென்று பிழைக்க இடம் இல்லை
அவயவங்கள் தனித்த தனியே நலியும் -பாதகம் எங்கும் -பெருமாள் திருமேனி ஒவ் ஒரு அழகும் பாதகம்

‘கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்த உபகாரகனான ஸ்ரீகிருஷ்ணனுடைய முறுவலானது, என்றும் நிலைபெற்று விளங்குகின்ற
செம்மையை வீசுகின்ற சுடரையுடைய வெண்மையான மின்னல்தானோ? அன்றி, என் உயிரை வருத்துகின்ற அழகிய முத்துகள்தாமோ?
அறியேன் எனது ஆவியை வருத்துகின்றது, அன்னைமீர்! நான் பிழைக்கும் இடத்தை ஒரு சிறிதும் அறிகின்றிலேன்,’ என்றபடி.
‘முறுவல், மின்னுக்கொல்’ முத்தங்கொல்’ அறியேன்; உய்விடம் ஒன்றும் அறிகின்றிலேன்,’ என்க.

முகத்தில் வாய்க்கரை நாம் இருக்க இவை முற்படப் போவதே -வாய்க்கரை -தொடக்கம்

என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக்கொல்-
என்றும் ஒக்க மாறாதே விளங்காநிற்பதாய், செய்ய சுடரை ஈனாநின்றுள்ள வெண்மின்னோ?
திருப்பவளத்திற் சிவப்பும் திருமுத்து நிரையில் வெளுப்புமாய்க் கலந்து தோற்றுகிற போது,
திருப்பவளத்தின் சிவப்பை அது ஈன்றாற்போலே ஆயிற்று இருக்கிறது. -அபூத உவமை -இல் பொருள் உவமை –
இதனை ‘அசிராம்ஸூ;’ என்பர்களே. பிறரை நலிய என்றவாறே பல் இறுகிக்கொண்டு வருகிறது காணும்.
புன்னகை எப்பொழுதும் நிற்காதே -நித்தியமாக நலிய நித்யத்வம் ஏறிட்டுக் கொண்டதே –
அன்றி என் ஆவி அடும் அணி முத்தங்கொலோ-
அன்றிக்கே, என் உயிரை முடிக்கிற திருமுத்து நிரைதானேயோ?
யானை அணி செய்து வந்து தோன்றினாற்போலே இருத்தலின், ‘அணிமுத்தம்’ என்கிற்று.
அன்றிக்கே, ‘அழகிய முத்தம்’ என்னுதல் –
மேலே ‘வெண்மின்னுக்கொல்’ என்ற இடத்தே திரு அதரத்தோடே கூடின சேர்க்கையாலே நலிந்தபடி சொல்லிற்று;
இங்குத் தனியே நலிகிறபடி சொல்லுகிறது.

குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்-
மலையை எடுத்து மழையிலே நோவுபடாதபடி பெண்களை நோக்கின உபகாரகனுடைய முறுவலானது,
என் ஒருத்திக்கும் பாதகமாகாநின்றது.
‘பசுக்களை அன்றோ தான் நோக்கிற்று?’ என்னில்,
‘‘கோ கோபீஜந ஸங்குலம், அதீவார்த்தம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு. புரா. 5. 11. 13.

மிக்க வருத்தம் அடைந்த பசுக்களின் கோபிமார்களின் கூட்டத்தைப்பார்த்து’ என்னக்கடவது அன்றோ?
மழையால் வந்த நலிவை மலையை எடுத்து நீக்கி, அவர்கள் துன்பம் எல்லாம் போம்படி புன்முறுவல் செய்துகொண்டாயிற்று நின்றது.
‘ஆனால், இது வாராதபடி இடம் தேடி உஜ்ஜீவிக்கப் பார்த்தலோ?’ என்ன,
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்விடமே –
‘எனக்குச் சென்று உஜ்ஜீவிக்கலாவது ஓரிடம் உண்டோ?’ என்று நானும் தேடா நின்றேன்;
‘இங்கு ஒதுங்குவதற்கு ஓரிடம் காண்கின்றிலேன்.
அன்றிக்கே, மேலே சொன்ன அழகுகள் பாதகமாகிற இத்தனை அல்லது. ஒதுங்க நிழலாய் இருப்பது ஓரிடம் காண்கின்றிலேன்,’ என்னுதல்.
சாதக அழகு ஒன்றும் இல்லை எல்லாமே பாதகம் தான்

—————————————————————————————————

உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே.–7-7-6-

கரண பூஷண -தோள்களுக்காக குழல்களுக்கா காதுகளுக்கா -மனசுக்கு இட்ட ஆபரணம் -நயன -மீன் -குண்டலம் மீன் –
சண்டை போடாமல் இருக்கே -சீறு பாறு-மின்னு மா மகர மா குண்டலங்கள் –
அவதார கந்தம்-பீஜம் -அனந்த சாயி -திரு மகர குழைகள்
உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்-யாருமே உய்ய முடியாதே -அடைய வில்லையே அபலைகள் -அநு கூலர் -பிரதி கூலர் விபாகம் இல்லாதபடி
எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல்?-ஆடி அசைந்து தேஜஸ் -மகராகாரம் மீன் வடிவம் கொண்டு தளிர் போல காது காப்புகள்
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே-ஸ்பரிசத்தால் விகஸித்த பணங்கள்-
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே-ஒரு பிரகாரத்தாலும் கை விடாமல் -நலிகின்றன –
போக்யமான -இவை -அஸக்யத்தையால் பாதகம் -காண்மின் -நீங்களும் பார்க்கலாமே

‘பெண்களுக்கும் அசுரர்களுக்கும் அரக்கர்கட்கும் உய்விடம் எங்கே?’ என்றுகொண்டு விளங்கி மகரத்தின் வடிவாகத் தழைக்கின்ற தளிர்கள்
தாமோ படத்தையுடைய விஷம் பொருந்திய பாம்பைப் படுக்கையாகவுடைய எம்பெருமானது குண்டலங்கள் தரித்த காதுகள்?
சிறிதும் விட்டு நீங்குதல் இன்றி என்னை வருத்துகின்றன காண்மின்கள்,’ என்கிறாள்.
‘குண்டலக் காதுகள், மகரம் தழைக்கும் தளிர்கொல்? ஒன்றும் கைவிடல் இன்றி அடுகின்றன காண்மின்கள்,’ என்க. மகரம்-மகரகுண்டலங்கள்.

‘நாம் செவிப்பட்டிருக்க இவற்றை முன்னே போகவிட்டிருந்தோம்’ என்று திருக்காதில் அழகுவந்து
நலிகிறபடியைச் சொல்லுகிறது. காதாட்டிக்கொண்டு சொல்லுவரே.

வேறும் ஒரு வகையாக ரசோக்தியாக அவதாரிகை அருளிச்செய்கிறார்,
‘காதாட்டிக்கொண்டு சொல்லுவரே’ என்று. ‘அவனுடைய திருமகரகுண்டலங்களும் திருக்காதுகளும் நலிகிறபடி சொல்லுகிறாள்’ என்பது,
இருபத்து நாலாயிரப்படி.

ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் உய்விடம் எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல் –
‘அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் பெண்களுக்கும் தப்பிப்போய்ப் பிழைக்கும் இடம் எவ்விடம்?’ என்று
விளங்குகின்றனவாய்க் கொண்டு மகரம் தழைக்கின்ற தளிரே?
அசுரரும் அரக்கரும் அழகு கண்டால் பொறுக்கமாட்டாமல் முடிவர்கள்; பெண்கள் அடையப் பெறாமல் முடிவர்கள்.
‘பெண்களை நலியுமாறு போலே அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் சினேகத்தை விளைத்துப் பாதகம் ஆகாநின்றன’ என்று
ஒரு தமிழன் கூறிவைத்தான் என்று கூறியதனைச் சீயர் கேட்டருளி,
‘இப்பொருள் அழகிது: ஆனாலும். அபக்ஷதர்மம்; அசுரர்களுக்கும் அரக்கர்களுக்கும் பாதகம் ஆகாநின்றது என்று
இப்போது இது சொல்லுகை, தேட்டம் அன்றே? ஆன பின்பு அது வேண்டா,’ என்று அருளிச்செய்தாராம்.
அசுரர் அரக்கர் பாதகம் போலே பெண்களுக்கும் பாதகம் என்பதே பிரகரணத்துக்கு சேரும் –
பை விடம் பாம்பு அணையான் திருக்குண்டலம் காதுகள்-
தன்னுடைய ஸ்பரிசத்தாலே விரிந்திருக்கிற படங்களையும்,
உகவாதார் முடியும்படியான விஷத்தையுமுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவனுடைய திருக்குண்டலக் காதுகளே.
‘திருக்காதுகளில் அழகு பாதகம் ஆமாறுபோலே ஆயிற்று, திருவனந்தாழ்வானுடைய சேர்த்தியும்பாதகம் ஆகிறபடி.
மூக்கு வெண்ணெய் -கோவர்த்தனம் புன்னகை போலே அரவணை -சேர்ந்து இவை -அநந்த எண்ணிறந்த புருஷகாரம்
அன்றிக்கே, ‘பெறுகைக்கு அநந்த புருஷகாரமுண்டாய் இருக்கக்கண்டீர், நான் நோவுபடுகிறது!’ என்னுதல்.
மேலே பாதகமாகக் கூறுப்பட்டவையும் ‘நன்று’ என்னலாம்படி இவை நலிகின்றனவாதலின், ‘காதுகளே’என்கிறாள். என்றது,
‘அவை, தண்ணீர்ப்பந்தல் வைத்தது என்னும்படியாக ஆயின,’ என்றபடி,
‘மாலை. . . . . . . நல்கிற்றை எல்லாம்’திருவிருத்தம், 35.-என்னுமாறுபோலே.
மனம் உடையோருக்கு -மாலை -திருடுவது போலே புகுந்து பணி வாடை வீசி சந்த்யா காலம் நல்லதாக்கிற்றே –
கைவிடல் ஒன்றும் இன்றி –
ஒருகாலும் கைவிடாதே; என்றது, ‘ஒருகால் விட்டுப் பற்றுமது அன்றிக்கே’ என்றபடி.
அடுகின்றன-
முடியாநின்றன.
காண்மின்களே –
அவர்களுக்கும் எல்லாம் உருவு வெளிப்பாடாய்த் தோற்றும் என்றிருக்கிறாள்;
‘வாயுந் திரையுகளில்’-நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே -என்ற ஆழ்வார் அன்றோ?

———————————————————————————————-

காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண்திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–7-7-7-

மகா புஜன் கிருஷ்ணன் திரு நெற்றி அழகு
காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!-பிரகாரம் அறியேன்
நாண் மன்னு வெண்திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்-அஷ்டமி சந்திரன் -சுக்ல பக்ஷம் -கலங்கம் இல்லாத சந்திரனோ
-ஆசைப்பட்டார்களுக்கு விஷ இலையோ
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?-ஓங்குதலை உடைத்தாய் நாலு வகைப்பட்ட
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–கோள் -மிடுக்கு மன்னி அவலம்பித்து அழகே பாதகமாம் படி -ஆத்மாவை நலியும்

‘தாய்மார்களே! பாருங்கோள் என்று காட்டுகின்ற தன்மையை அறியேன்; நீட்சி பொருந்திய வலிய நான்கு திருத்தோள்களையுடைய
கண்ணபிரானது அழகிய நெற்றியானது, எட்டாம் நாள் பிறைதானோ? அன்றி, விரும்பினவர்கட்கு நஞ்சு வடிவாக இருப்பது ஒரு இலைதானோ?
அறியேன்; கொடியேனாகிய என்னுடைய உயிரைக் கொள்ளுவதற்கு நினைத்து வலியோடு என் உயிரை வருத்துகின்றது,’ என்கிறாள்.
நாள் மன்னு வெண்திங்கள் – எட்டாம்பிறை. நச்சு – பெயர்ச்சொல்; விஷம். ‘கொடியேன் உயிர் கோள் இழைத்துக் கோள் மன்னி ஆவி அடும்,’ என்க.
கோள் – வலிமையும், கொள்ளதலும்.

‘இவை அவள் முன்னே நிற்க வல்லனவோ? இவற்றுக்கெல்லாம் தாம் நெற்றிக்கை அன்றோ?’ என்று
திருநுதலில் அழகு வந்து நலிகிறபடியை அருளிச்செய்கிறார்.

அன்னையர்காள்! ‘காண்மின்கள்’ என்று காட்டும் வகை அறியேன் –
‘இது நலியாநின்றது என்று சொல்லாநின்றாய்; எங்களுக்கு இது தெரிகிறது இல்லை;
எங்களுக்கும் தெரியும்படி சொல்லிக்காணாய்’ என்ன, ‘நீங்களும் இதனைக் காணுங்கோள்’ என்று,
உங்களுக்குக் காட்டும் பிரகாரம் அறிகின்றிலேன்.
என் கைக்குப் பிடி தருதல், உங்களுக்கு உருவு வெளிப்பாடு உண்டாதல் செய்யில் அன்றோ என்றார் காட்டலாவது?
ஆண்களுக்குக் காட்டில் அன்றோ பருவம் நிரம்பின உங்களுக்குக் காட்டலாவது?’ என்பாள், ‘அன்னையர்காள்’ என்கிறாள்.
நாள் மன்னு வெண்திங்கள் கொல்-
சுக்கிலபக்கத்து எட்டாம் நாள் சந்திரனோ?
இளகிப் பதித்திருக்கைக்கும், ‘காட்டு, காட்டு’ என்று வளருகைக்கும், காட்சிக்கு இனியதாய் இருக்கைக்கும்.
நயந்தார்கட்கு நச்சு இலை கொல்-
ஆசைப்பட்டார்க்கு நச்சுப்பூண்டோ?’ என்னுதல்;
அன்றிக்கே, ‘தன்னை ஆசைப்பட்டார்க்கு ஆசைப்பட வேண்டாதிருக்கிறதோ?’என்னுதல். -நச்சினால் இல்லை–இல்லாமல் போனாயோ –
‘நச்சு மா மருந்தம்’ திருவாய். 3. 4. : 5. -என்னுமவர் அன்றோ இப்போது கண்ணாஞ்சுழலை இட்டு இவ்வார்த்தை சொல்லுகிறார்?
‘இன்ன மலையிலே உண்டு’ என்று அங்கே சென்று தேடி வருந்தவேண்டாமல்,
ஆசைப்படுவதுமாய் மேல் காற்றிலே காட்டப் பரிகாரமுமாம் மருந்தாயிற்று இது.
அபத்தியத்தையும் பொறுத்துக்கொள்ளும் மருந்தாதலின். ‘மாமருந்தம்’என்கிறது.
இவன் தலையிலே பழி இட்டுக் கைவிடும் மருந்து அன்று;
வானமாமலையில் தலையான மருந்து அன்றோ. இப்போது இவளுக்கு நச்சுப் பூண்டு ஆகிறது?

சேண் மன்னும் நால் தடம் தோள் பெருமான்தன் திருநுதலே-
ஒக்கத்தையுடைத்தாய், கற்பகத்தரு பணைத்தாற்போலேயாய்ச் சுற்றுடைத்தாய் இருக்கிற திருத்தோள்களில்
அழகாலே என்னைத் தனக்கே உரியவளாகும்படி ஆக்கினவனுடைய திருநெற்றியே

‘ஆயதாஸ்ச ஸூவ்ருத்தாஸ்ச பாஹவ: பரிகோபமா:
ஸர்வபூஷண பூஷார்ஹா, கிமர்த்தம் ந விபூஷிதா:’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 3 : 14.

‘நீண்டு உருண்டு கணையங்கள் போன்ற அழகிய திருத்தோள்கள் அணிகளால் ஏன் மறைக்கப்படாமல் இருக்கின்றன? என்னும்படியே
திருவடி அகப்பட்ட துறையிலேகாணும் இவளும் அகப்பட்டது.
கொடியேன் உயிர் கோள் இழைத்துக் கோள் மன்னி ஆவி அடும்-
என் உயிரினுடைய அழகை அழித்துக்கொள்கையிலே விருப்பத்தைச்செய்து முடியாநின்றது.
அன்றிக்கே, ‘அழகு பாதகமாம்படி பாவத்தைச் செய்த என்னுடைய உயிரை முடிக்கையிலே துணிந்து,
அதிலே விருப்பத்தை வைத்து, உயிரை முடியாநின்றது,’ என்றுமாம்.

—————————————————————————————————

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-

சேர்ந்து -படைகள் திரண்டு -உத்தம அவயவ ஸுந்தர்யம் திரு முக ஸுந்தர்யம் -திரு முக சோபை
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்-கண்கள் /மூக்கு / அதரம் /புருவம் /-நெற்றி /கோள் மிடுக்கு -ஒளி
-இழை ஆபரணம் -ஒளியே ஆபரணம் இவற்றுக்கு –
த்ருஷ்டாந்தம் -மட்டுமே சொல்லி -உபமேயம் சொல்லாமல் முற்று உவமை -சாத்ருஸ்யம்-
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்-குளிர்ந்த முத்தம் -புன் சிரிப்பின் ஒளியும் -தந்த பந்த காந்தி தனியாக –
-தளிர் கர்ண பாசம் குண்டலங்கள் -சீதளம் தனக்கு ஆபரணமாக நெற்றியும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்-அழகை ஆபரணமாகக் கொண்ட பூரணமான ஜோதிர் மண்டலம் திரு முகம்
உபமேயமான திருக்கண்கள் –திரு நெற்றி –
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.-அழகால் நோவுபடும் பாவியேன் -பிராணனை அபஹரியா நின்றது

தன் ஒளியையே தனக்கு ஆபரணமாகவுடைய தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் தன் ஒளியையே தனக்கு ஆபரணமாகவுடைய
குளிரந்த முத்தமும் தளிரும் குளிர்ந்த பெரிய எட்டாம் பிறையுமாகிய இவற்றையெல்லாம் தன்னகத்தேயுடைய, கொள்ளப்பட்ட ஆபரணத்தையுடைய சோதி மண்டலமோ? கண்ணபிரானுடைய, தன்னழகே தனக்கு ஆபரணமாய் ஒளியையுடைத்தான முகமாய்க்கொண்டு கொடியேனுடைய உயிரைக் கொள்ளை கொள்ளுகின்றது.

‘கண்ணன் கோள் இழை வாள்முகம், தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் தண்முத்தமும் தளிரும் பிறையும் ஆகிய இவற்றைத் தன்னகத்தேயுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? அத்தகைய சோதி வட்டமானது, வாண்முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றது?’ என்று சொற்களைக் கொணர்ந்து கூட்டி முடித்து கொள்க.

‘தலையான பேரை நெற்றிக்கையிலே விட்டுக் காட்டிக்கொடுக்க ஒண்ணாது’ என்று, மேலே நலிந்தவை எல்லாம் சேர
ஒருமுகமாய் வந்து நலிகிறபடி சொல்லுகிறது. அங்கும் இங்கும் சிதறிக் கிடந்த படையைப் பகைவர்கள் வந்து முடுகினவாறே
ஒன்றாகத் திரட்டி ஒரு காலே தள்ளுவாரைப் போலே, தனித்தனியே நலிந்த அழகுகள் எல்லாம் திரள வந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள்.

கோள் இழைத் தாமரையும்-
சாதி ஒன்றாய் இருக்கச்செய்தேயும், ‘பொற்கால் தாமரை, நூற்கால் தாமரை’ என்பனவாகத் தாமரையில்
சில பேதங்கள் உள அன்றோ? அதில் நூற்கால் தாமரை என்னுதல்;
அன்றிக்கே, ‘கொள்கையிலே துணிந்திருக்கிற தாமரை’ என்னுதல்;
அன்றிக்கே, ‘தன்னழகே தனக்கு ஆபரணமாகவுடைய தாமரை என்னுதல்;
அன்றிக்கே, ‘ஒளியே ஆபரணமான தாமரை’ என்னுதல்.
திருக்கண்ணும்-
திருக்கண்களும்,
கொடியும் –
திருமூக்கும்.
பவளமும்-
திரு அதரமும்,
வில்லும் –
திருப்புருவமும்.
கோள் இழைத் தண்முத்தமும்-
தன் ஒளியே ஆபரணமாகவுடைய குளிர்ந்த பற்களின் நிரையும்.
அன்றிக்கே, ‘இழையிலே கோப்புண்ட முத்துப்போலே இருக்கிற குளிர்ந்த பற்கள்’ என்னுதல்,
‘தளிரும் –
திருக்காதும்.
குளிர் வான் பிறையும்-
திருநெற்றியும்.
‘ஆக, நேத்திரமானவரும் ‘மூக்கு வலியோம்’ என்றவரும், வாய்சொல்லிப் போனவரும்,
‘கீழ் மேல் ஆயிற்றோ’ என்று வளைத்துக்கொடுபோனவரும், வாய்க்கரையிலே இருந்தவரும்.
தாம் செவிப்பட்டவாறே போனவரும், ‘இவற்றுக்கு நெற்றி நாம்’ என்று போனவரும்
எல்லாம் ஒருமுகமாய்த் திரண்டு வந்து’ என்றபடி.

கோள் இழையாவுடைய கொழுஞ்சோதி வட்டம்கொல்-
கொள்ளப்ட்ட ஆபரணத்தையுடைத்தான ஜோதி மண்டலமோ உருவகம் இருக்கிறபடி?
அன்றிக்கே, ‘தன்னழகே தனக்கு ஆபரணமாய் இருக்கது ஒரு ஜோதி மண்டலமோ?’ என்னுதல்.
கண் கோள் இழை வாண்முகமாய்-
கண்ணனுடைய, தன்னழகே தனக்கு ஆபரணமாய் ஒளியையுடைத்தான முகம் என்று ஒரு வியாஜத்தை இட்டு.
கொடியேன் உயிர் கொள்கின்றதே-
வாழுங்காலத்தில் கெடும்படியான பாவத்தைச் செய்த என்னுடைய உயிரைக் கொள்கின்றது,
கோள் இழையாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்?
‘உயிர் பெறுங்காலத்திலே உயிர் இழக்கும்படியான பாபத்தைச் செய்தேன்’ என்பாள், ‘கொடியேன்’ என்கிறாள்.

——————————————————————————————

கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.–7-7-9-

ப்ரசஸ்த கேச பாசம் -திரு முகத்துக்கு முட்டாக்கு போல உள்ள திருக் கேசம் -ஜோதிஸ் ஸூ க்கு –
ஆச்சர்ய ரூபம் -கிருஷ்ணன் உவமானம் சொல்ல முடியாத திருக் குழல்
கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?-இரவு -அம்மாவாசை -மார்கழி நள் இருள் -காள ராத்திரி -பட்டையாக்கி நூலாக்கி -வெளுப்பு பாகம் கழற்றி -சாயம் தீட்டி –
சுகிர்தல் பன்னுதல் -சாரம் எடுத்து -திரட்டுப்பால் போலே -நீல நன்னூல் -அழகிய நூல் திரளோ
லோகம் முழுங்கும் கும் இருட்டு-கை படாமல் இந்த்ரம் -சுருட்டையாக இருக்காதே -சோழ தேச பெண்கள் பேசுவது போலே தேசிகன்
-குறுக்க குறுக்க பேசி –
அன்று மாயன் குழல்-இப்படி இல்லை என்று இதற்கு மட்டும் தான் -கிருத்ரிம மாகத் தானே இருக்கும் –
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்-விகசித்த புஷ்ப்பம்-திருத் துழாய் -இருந்து இருக்கலாம் -தளமே புஷ்ப்பம் என்றுமாம்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.ஏசுதல் குறை சொல்லுதல் -திருடி விடும் பிரகாரம் அறியார்
-தாய் மாறாக இருந்து அவஸ்தை அறியாதே நியமியா இருந்தீர்கள்

உலகத்தை எல்லாம் கொள்ளக்கூடியதான வலிய இருளை எஃகிய செறிந்த இருளின் உள்ளே கொள்ளப்பட்ட நீல நிறத்தையுடைத்தான
அழகிய நூலின் திரளோ? அன்று; மாயனுடைய திருக்குழல், மலர்கின்ற பூக்களையுடைய குளிர்ந்த திருத்துழாயினது வாசனையானது
பரவும்படி என் உயிரைக் கொள்கின்றவாற்றை அறியீர்கோள்; தாய்மார்களே! இடித்துக் கூறுகின்றீர்கோள்.
‘அன்னைமீர்! மாயன் குழல், உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்? அன்று; மாயன் குழல் என் உயிரைக் கள்கின்றவாறு அறியீர்; கழறாநிற்றீர்.’ என்க.

‘இச்சமயத்துக்கு அன்றோ நமக்குப் பூவும் புழுகும் இட்டுச் சிரஸாவஹித்துக்கொடு போந்தது?’ என்று
‘திருக்குழற்கற்றையில் அழகு வந்து நலியாநின்றது’ என்கிறாள்.

கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின் உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல் –
திருக்குழலின் அழகுக்கு ஓர் உவமானம் சொல்லப்புக்கு, அழகுக்கு அதுதான் நேர்கொடு நேர்
உபமானமாகப் போராமையாலே அதனைக் கிடந்து சிக்ஷிக்கிறது.
‘பிரளயகாலத்தில் பகல் இரவு என்னும் வேறுபாடு அற எங்கும் ஒக்கத் தானே யாம்படி பரந்து நின்றுள்ள, கோட்பாட்டையுடைய இருள்’ என்னுதல்.
‘கோள்’ என்று மிடுக்காய், ‘மிடுக்கையுடைய இருள்’ என்னுதல்.
அந்த இருட்டினைச் சுகிருவது -எஃகுவது: இப்படி எஃகி அதிலே கொழுவிதான அமிசத்தைத் திரட்டுவது,
அது தன்னிலும் உண்டான புற இதழைக் கழிக்க, அகவாயில் வயிரமாய் நீலமான
நிறத்தையுடையத்தாய் நன்றாய் இருந்துள்ள நூல் திரளோ? அன்று மாயன் குழல் –
இவள் நெஞ்சிலே அழகிதாக மயிர்பட்டது காணும்.
இத்தனை அடைமொழி கொடுத்துக் கூறினால் ஆயிற்று உபமானமாகப் போராது என்னலாவது.
பராசர பட்டர் ஆயிரம் நாக்கு வாங்கி அரங்கன் வைபவம் சொல்ல முடியாது என்றால் போலே –
பின்னையும், ஆச்சரியத்தை யுடையனான அவனுடைய திருக்குழல் என்னுமித்தனை. -மாயன் குழல் என்று சொல்லுவதே –
இத்தனை இடு சிவப்பானது அவனுடைய இயல்பிலே அமைந்ததான திருக்குழலுக்கு ஒப்பாகுமோ?

விள்கின்ற பூந்தண்துழாய் விரை நாற வந்து-
அலரா நிற்பதாய் அழகியதாய்க் குளிர்ந்திருந்துள்ள திருத்துழாயில் பரிமளமானது
முகத்திலே அலை எறியவாயிற்று வந்து தோற்றுகிறது.
திருக்குழலில் அழகுக்குத் திருத்துழாயில் பரிமளமானது தூசி ஏறி நடக்க ஆயிற்று வந்து பாதகம் ஆகிறது.
என் உயிரைக் கள்கின்றவாறு அறியீர் –
நீங்கள் எல்லாரும் சுகமே இருக்கச்செய்தே, என் ஒருத்தியுடைய ஆத்துமாவை வந்து களவு காண்கிற பிரகாரத்தை அறிகின்றலீர்கோள்.
கள்கின்ற –
களவு காண்கின்ற.
‘களவு காண்கையாவது என்?’ என்னில், இத்தலையில் இசைவு இன்றிக்கே இருக்கக் கைக்கொள்ளுதல்.
‘அவன் அன்றோ களவு காண்கிறான்?’

பண்டேஉன் தொண்டாம் பழவுயிரை என்னதென்று
கொண்டேனைக் கள்வன்என்று கூறாதே-மண்டலத்தோர்
புள்வாய் பிளந்த புயலே! உனைக்‘கச்சிக்
கள்வா!’ என்று ஓதுவதுஎன் கண்டு?’-என்பது, நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி.

இத்தலை அத்தலையானபடி.
சம்பந்தம் இல்லாதவன் அபகரித்தால் அதனைப் போக்கலாம்; சம்பந்தமுள்ளவன் அபகரித்தால் பரிகாரம் இல்லை அன்றோ?

‘த்வம்மே ஹம்மே குதஸ்தத் ததபிகுத:
இதம் வேத மூல ப்ரமாணாத்
ஏதச்சாநாதி ஹித்தாத் அநுபவவிபவாத்
ஸோபி ஸாக்ரோஸ ஏவ
க்வாக்ரோஸ: கஸ்ய கீதாதிஷூ மமவிதித:
கோத்ர ஸாக்ஷீ ஸூதீ: ஸ்யாத்
ஹந்த த்வத் பக்ஷபாதீ ஸஇதி
ந்ருகலஹே ம்ருக்ய மத்யஸ்த் த்வத்வம்’-என்று பட்டர் அருளிச்செய்த சுலோகம் அநுசந்தேயம்.

இது கைப்பட்டவாறே ஒரு பிரமாணம் கொடு நின்று வழக்குப் பேசத் தொடங்கும் அன்றோ அவன்?
அன்னைமீர் கழறாநிற்றிரே –
நீங்கள் வருந்தி இக்களவுக்கு நானும் பெருநிலை நின்று கூட்டுப் பட்டேனாகப் பொடியா நின்றீர்கோள்.
இந்த உருவு வெளிப்பாட்டைத் தடை செய்தலும் வேண்டாவோ?
ஒரு நியமித்தல் நியமிக்கப்படுதல் என்னும் தன்மையேயோ வேண்டுவது பொடிகைக்கு? கழறல் – நோவச்சொல்லுதல்.

—————————————————————————————-

நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச்சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?–7-7-10-

சர்வாதிகத்வ ஸூ சகம் திரு அபிஷேகம்
நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்-முற்றத்தில் நிற்கிறாள் என்று சூழ்ந்து பழி சொல்லி
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச்சோதி மணி நிறமாய்-உலகம் கபளீ கரிக்கும் சுடர் ஒளி
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே-த்ரிவித சேதன அசேதன -அடங்களும் வியாபிக்கும் தேஜஸ்
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?-ஒருமை பட்டது -வைக்கும் உங்களுக்கு -என்னிடம் என்ன பிரயோஜனம் –

‘முற்றத்திலே நிற்கின்றாய்’ என்று நெரித்த கையினையுடையவர்களாய்ச் சுற்றிலும் நின்றுகொண்டும், உங்களிலே விசாரித்துக்கொண்டும்
என்னை நீங்கள் வைகின்றீர்கள்; மூன்று உலகங்கள் முழுதும் சுடர்ச்சோதி மணி நிறமாய் விரிகின்ற சுடர் முடிக்கே என் உள்ளம் ஒருப்பட்டது;
‘அதுவாயிற்று’ என்றபடி. தாய்மார்களே! உங்களுக்கு என் பக்கல் விருப்பம் எதற்கு?
‘அன்னைமீர்! நீர் நெரித்த கையராய் என்னை வைதிர்; மூவுலகும் மணி நிறமாய் விரிகின்ற சுடர் முடிக்கே என் உள்ளம்
ஒற்றுமை கொண்டது; நுங்கட்கு நசை என்?’ என்க.

‘திருமகள் கேள்வனுங்கூட நம்மைத் தலைமேல் கொண்டு போருகிறது இவ்வவஸ்தைக்கு அன்றோ?’ என்று
திருமுடியில் அழகு வந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள்.

நிற்றி முற்றத்துள் என்று. . . . . . . . . .நுங்கட்கு நசை என் –
இத்தனையும் நசை அறச் சொல்லாவிடில் அவர்கள் விடார்கள் போலே.
நிற்றி முற்றுத்துள் என்று – ‘முற்றத்துள் நிற்றி’ என்பர்கள்.
படுக்கையினின்றும் எழுந்திருந்து எல்லாரும் காணும்படி முற்றத்திலே நிற்கைக்கு மேற்படப் பழி இல்லையாக நினைத்திரா நின்றார்கள்.
‘எவள் முன்பு ஆகாசசாரிகளான பிராணிகளாலும் பார்க்கப்படாதவளாய் இருந்தாளோ,
அத்தகைய சீதையைப் பெருந்தெருவில் செல்லும் மக்களும் கண்டார்கள்,’

‘யாந ஸக்யா புரா த்ரஷ்டும் பூதை: ஆகாஸகைரபி
தாமத்ய ஸீதாம் பஸ்யந்தி ராஜமார்க்ககதா ஜநா:’-என்பது, ஸ்ரீ ராமா. அயோத். 33 : 7.

என்றதைப் போன்று நினைத்திரா நின்றார்களாயிற்று இதனை.
முற்றித்திலே புறப்பட்டு நிற்கும்படி பிறந்த ஸாஹஸத்துக்கு நெரித்த கையராய்.
என்னை நீர் –
உருவு வெளிப்பாடு புறப்பட விடுவித்து நிறுத்த நிற்கிற என்னை, இதனால் நலிவு வாராதபடி புண்ணியம் செய்த நீங்கள். என்றது.
‘அவன் புறப்பட விடுவித்து நிறுத்த நிற்கிற என்னை, இதுகொண்டு காரியம் இல்லாத நீங்கள்’ என்றபடி.
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர்-
‘இவளைத் தப்புவித்தோமாம் விரகு என்?’ என்று நெஞ்சிலே விசாரிக்கையும், கால்வாங்கிப் பேர நிற்கவும்
ஒண்ணாதபடி சூழநின்றும் பொடியா நின்றீர்கோள்.
அன்றிக்கே, ‘போயும் வந்தும் பொடியா நின்றீர்கோள்’ என்னுதல்.

சுடர்ச்சோதி மணி நிறமாய் இம்மூவுலகும் முற்ற விரிகின்ற சுடர் முடிக்கே என் உள்ளம் ஒற்றுமை கொண்டது –
மிக்க புகரையுடைத்தான இரத்தினத்தினுடைய ஒளியையுடைத்தாய்க்கொண்டு கண்ட இடம் எங்கும் பரம்பா நின்றுள்ள
ஒளியையுடைய திருமுடியிலே ஒருமைப்பட்டது என்னுடைய உள்ளம்.
அன்றிக்கே, ‘அங்கே விலை செய்து கொடுத்தது’ என்னுதல். என்றது,-ஒருப்பட்டது தத்பரமானது -ஈடுபட்டு கிரயம் பண்ணிக் கொடுத்தது –
‘தப்புவிக்கைக்கு வார்த்தை சொல்லுகிற இவர்களைப் போலே ஓர் இடத்தில் அன்று அன்றே,
அகப்படுத்தி நலியக் கோலுகிற அது நிற்கும்படி?’ என்பதனைத் தெரிவித்தபடி.
அன்னைமீர் நசை என் நுங்கட்கே-
தாய்மாரான நீங்கள் என் பக்கல் நசை அற அமையும், தாய்மாராவார், பெற்று வளர்த்தப் போகத்திற்குத் தக்க பருவம்
பிறந்தவாறே கைப்பிடித்தவன் கையிலே காட்டிக்கொடுத்துக் கடக்க நிற்குமத்தனைபோக்கி, பொடியக் கடவர்களோ?
தக்க வந்து வந்தவர்களையும் பெற்ற சம்பந்தம் கொண்டு ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கக் கடவதோ?

———————————————————————————————

கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–7-7-11-

நித்ய ஸூ ரிகள் உடன் நித்ய சம்சலிஷ்டர் ஆவார் ஒரு கோவையாவார்
கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்-காண அரிய கிருஷ்ணனை
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன-மானஸ அனுபவம்
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்-ஸ்வரூபம் ரூபம் குணம் வைபவம் இவற்றை நன்றாக பிரதிபாதனம் பண்ணி
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.-சிரமம் பட மாட்டார்கள் -நிரந்தர பகவத் அனுபவ சக்தி உடைய நித்ய ஸூரிகள்
-சர்வ காலமும் -இருந்து -சம்சார பந்தம் இல்லாமல் -வி நாசம் இல்லாமல் இருப்பார்கள் –

மக்கள் கண்களால் காண அரிய பிரமன் என்ன, சிவன் என்ன, இந்திரன் என்ன, ஆகிய இவர்கட்கும் காண அரிய கண்ணபிரானைத் திருக்குருகூரில்
அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த மிடுக்கையுடைய ஆயிரம் திருப்பாசுரங்களுள் ஒப்பற்ற இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள்,
ஆற்றலையுடையவாரன நித்தியசூரிகளோடு ஒரு கோவையாய் எப்பொழுதும் பேரின்பத்தை அனுபவிக்கப் பெறுவர்கள்.
உட்கு – அச்சமுமாம். மாயார் – அழியார்; என்றது, ‘நித்தியானுபவத்தை அனுபவிக்கப்பெறுவர்’ என்றபடி.

முடிவில், ‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்கள், பகவானுடைய பிரிவால் வருந்தாமல்,
நித்தியசூரிகளோடே கூடி நித்தியானுபவம் பண்ணப் பெறுவார்கள்,’ என்கிறார்.

கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும் கட்கு அரிய கண்ணனை –
மக்களுடைய கண்களுக்குப் புலப்படாதபடி இருக்கிற பிரமன் சிவன் இந்திரன் என்னும் இவர்களுக்கும்
கண்களுக்குப் புலப்படாதபடி இருக்கிற கிருஷ்ணனை.
பிரமன் முதலானோர்களுடைய கண்களுக்குக் காண முடியாதவனாய் இருக்கிற கிருஷ்ணன்,
மறக்க ஒண்ணாதபடி உருவு வெளிப்பாடாய்த் தோன்ற, அதனாலே நலிவு பட்டு,
போன போன இடம் எங்கும் சூழ்ந்துகொண்டது என்னும்படி ஆயிற்று இவர்க்குப் பிரகாசித்தபடி.
அவர்கள் கண்களுக்கு அரியன் ஆனாற்போலே ஆயிற்று,
இவர் கண்களுக்குச் ‘சூழவுந் தாமரை நாண்மலர் போல் வந்து தோன்றும்’ என்னும்படி பிரகாசித்தபடி.
குருக்கூர்ச்சடகோபன் சொன்ன-ஆழ்வார் அருளிச்செய்த உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே –
சொல்லப்படுகின்ற பொருளை உள்ளபடி சொல்லவல்ல ஆற்றலையுடைத்தான ஆயிரத்திலும் வைத்திக்கொண்டு
இப்பத்தையும் கற்க வல்லவர்கள், நித்தியானுபவம் பண்ணாநின்றாலும் மேன்மேலெனப் பகவத்குணங்களைப் பூர்ணமாக
அனுபவிக்கைக்குத் தகுதியான யோக்கிதையயுடைய நித்தியசூரிகளோடு ஒரு கோவையாய் உருவு வெளிப்பாட்டாலே
நோவுபடாமல் அடியார்கள் குழாங்களை உடன் கூடி நித்தியானுபவம் பண்ணப்பெறுவர்.
மாய்கையும் உருவு வெளிப்பாடும் பரியாயம் என்று இருக்கிறார்காணும்.

அன்றிக்கே, ‘மாயார்’ என்பதற்கு, ‘பிரியார்’ என்னுதல்.
பகவத் அபசாரம் பாகவத அபசாரம் உண்டானால் வருமது போல அன்றே, -பகவானுடைய அங்கீகாரம் உண்டாய்
அது நிலை நில்லாமையால் படும் கிலேசம்? -பிரளயம் கோத்தாற்போலே, கண்ணைக்கண் கோத்து அன்றோ கிடக்கிறது?
தம்முடைய கண் அவன் கண் கோத்து கிடந்தது -என்றபடி -ரஸோக்தி -முகமே இப்படி படுத்திற்றே –
சூழவும் –
இவை எல்லாம் அவன் கழுத்துக்கு மேலே படுத்தின கிலேசம் அன்றோ?-மனஸ் சகாயம் இல்லாமல் -செய்து அருளினான் -என்றவாறு

——————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சக பீடாம் மஹதீம்
ஆலோக்ய கரே ந ஸம்ஸராபிஸ்மின்
தத் பிரார்த்தித்த அனுப்பி
பாவனா பூம்னா புரஸ்திதம் இவ

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

த்ருப்யாம் பத்மா க்ருத்ப்யாம்
அமர தரு லதா நாசிகா தக
அத ரே ந
ப்ருவாகன
ஸ்மிதேன
மகர லதா குண்டலாப்யாம் விசிஷ்டா
அஷ்டமி சந்திரன் -அர்த்த இந்து பாலின பாஸ்யாம் அமல முக சசிநான்
நேத்ர சோபாதி பாஸா
ஸ்ரீ மான் தேவக க்ரீடி
ஸ்ம்ருதி வீசத தனு

——————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 67-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் அவனுடைய உத்தம அங்கத்தில் அழகு ஒரு முகமாய் நலிகிறபடியைப் பேசுகிற
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மல்கு நீலச் சுடர் தழைப்ப -என்று கீழே பிரஸ்துதமான
ஸ்ரீ எம்பெருமான் உடைய அழகு திரு உள்ளத்திலே ஊற்று இருந்து அத்தையே இடைவிடாமல் பாவித்து
பாவனா பிரகர்ஷத்தாலே அவ் வழகு பிரத்யஷ சாமானாகாரமாகத் தோற்றி
தனித் தனியாகவும் திரளாகவும் ஒரு முகம் செய்து நலிய தாம் நலிவு பட்டு செல்லுகிற படியை
உருவு வெளிப்பாட்டாலே நோவு படுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி பாசுரத்தால் அருளிச் செய்கிற
ஏழையர் ஆவியில் அர்த்தத்தை-ஏழையர்கள் இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-என்கை –

———————————————–

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க -ஆழு மனம்
தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால்
மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –67-

—————————————–

வியாக்யானம்–

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு –
சபலைகளான-அபலைகள் யுடைய மனசை த்ரவிப்பிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய
ஸ்மயமான முகாம்புஜத்தில் நயன சௌந்தர்யம் –

சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க –
எங்கும் சூழ்ந்து-ஸ்ம்ருதி விஷயமாய் பாதகமாக இறே துக்கத்தை விளைப்பது –
அதாவது
வ்ருஷே வ்ருஷே ஹி பஸ்யாமி–பாச ஹஸ்த மிவாந்தகம்-என்னும்படி
ஏழையர் ஆவி யுண்ணும் இணைக் கூற்றம் கொலோ அறியேன் -என்கிற முதல் பாட்டின் அடி ஒத்தின படி-

ஆழு மனம் தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த-
வெண்ணெய் யுண்டான் திரு மூக்கென தாவியுள்ளே மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் -என்றும்
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டை வாய் ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் -என்றும்
கண்ண பிரான் புருவம் அவையே என்னுயிர் மேலென வாயடுகின்றன வென்று நின்றே -என்றும்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் என தாவி யாடும் -என்றும்
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டல காதுகளே கை விடல் ஒன்றும் இன்றி அடுகின்றன -என்றும்
பெருமான் திரு நுதலே கோள் மன்னி ஆவி ஆடும் -என்றும்–இப்படித் தனித் தனியும் –

கோளிழைத் தாமரையும் -இத்யாதிப்படியே ஒரு முகமாயும்

அதுக்கு மேலே
செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டு போலே பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப -என்றும்
லலாட பர்யந்த விளம்பிதாலகம் -என்றும் சொல்லும்படியாய்
மாயன் குழல் விள்கின்ற பூம் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரை கள்கின்றவாறு-என்றும்
அருளிச் செய்த இவை என்கை –

இப்படி துக்க மக்னமான மனஸ் உடனே
அவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –
நிரவதிக போக்யமான அந்த உத்தம அங்கத்திலே சௌந்தர்யத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
விஷயத்திலே பொருந்தி இருக்குமவர்களுடைய பிரபல ப்ரதிபந்தகம் நசித்து நிச் சேஷமாகப் போம் –

தீ வினை -துஷ்கர்மம்
மாறன் சொல் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து-என்ற பாடம் ஆனபோது
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியை மனசிலே பொருந்தி
அனுசந்திக்குமவர்கள் பிரதிபந்தகம் நிச் சேஷமாகப் போம் -என்றபடி –

————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: