பகவத் விஷயம் காலஷேபம் -153- திருவாய்மொழி – -7-6-1….7-6-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

இப்படித் தெளிந்தால், பின்னைச் செய்வது கூப்பிடுகை போலே காணும்;
இல்லையாகில் ‘சம்சாரம் நன்று’ என்று கலங்கினார் ஆவரே.
‘அம்மங்கி அம்மாள்’ இத்திருவாய்மொழியில் பாடக் கேட்டு அனுபவித்துப்போரும் இதற்கு மேற்பட,
இதில் ஓடுகிற ஆர்த்திக்கு நம்மாற்பாசுரம் இட்டச் சொல்லப் போகாது’ என்று பணிக்கும்’ என்று அருளிச்செய்வர்.
மேலே, ‘ஆழி எழச்சங்கும்’ என்ற திருவாய்மொழியிலே, சர்வேஸ்வரன் காட்டிக் கொடுத்த வெற்றிச் செயல்களை அனுபவிக்கைக்கு உறுப்பாக,
அவனுடைய வீரச்செயல்களை அருளிச்செய்தார்;
அருளிச்செய்த முகத்தாலே அவனுடைய அவதாரங்களையும் அதற்கு அடியான கிருபை முதலான குணங்களையும் நினைத்து,
‘இக்குணங்களும் நடையாடாநிற்க, இவற்றிலே சம்பந்தம் உண்டாய் இருக்க, தாங்கள் சேதநராய் இருக்க,
சம்சாரிகள் இதனை இழப்பதே!’ என்று ஆச்சரியப்பட்டார் மேல் திருவாய்மொழியில்.
‘அவர்கள் விருப்பம் இல்லாமையாலே இழக்கிறார்கள்; விருப்பமுடைய நாம இழப்போம் அல்லோம்;
அவனுடைய அவதாரங்களையும் வடிவழகையும் அனுபவிப்போம்,’ என்று பார்த்தவிடத்து,
அவற்றை அப்போதே கிட்டி அனுபவிக்கப் பெற்றால் மிகவும் துக்கித்தவராய்ச் சர்வேஸ்வரனுக்குப் பரமபதத்திலும் இருப்பு அரிதாம்படி ஆர்த்தியாலே நிரம்பிற்று.
ஒரு கடல் கையெடுத்துக் கூப்பிடுமாறு போலே கூப்பிடுகிற கூப்பீடு கேட்டு அவ்விருப்புக் குலைந்து வந்து முகங்காட்ட வேண்டும்படி,
அவன் பிராப்பியனாய் இருக்கிறபடியையும்-1-2-பாசுரங்கள் — பிராபகனாய் இருக்கிறபடியையும் -3-7–பாசுரங்கள் -விரோதிகளை அழிக்கும் தன்மையனாய்
இருக்கிறபடியையும் சொல்லி, கேட்டாரடைய நீராகும்படி பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்.

‘பஹவோ ந்ருப’ – சக்கரவர்த்தி, ‘பெருமாளைத் திருமுடிசூட்ட’ என்று கோலி,
‘அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை மேல் எழும்படியான இராச்சியத்தை வருந்தி ஒருபடி அடிப்படுத்தினோம்;
இதனை ஒரு சிறு பிள்ளையின் தலையிலே வைத்தால் பொறுக்குமோ, போறாதோ?’ என்று விசாரித்து,
‘இதனை உலகத்தோடே கூட்டிப் பார்ப்போம்’ என்று கோலி, அரசர்கள் எல்லாரையும் திரட்டி,
‘நான் இங்ஙனே பெருமாளைத் திருமுடிசூட்டப் பாராநின்றேன்: உங்களுக்கு இஷ்டமோ, இன்றோ?’ என்று கேட்க,
உடனே, ‘கிழவா! போகாய்’ என்ன, கிழவா போகாய்’ என்றது

‘அநேகவர்ஷ ஸாஹஸ்ரோ வ்ருத்தஸ்த்வம் அஸி பார்த்திவ
ஸராமம் யுவராஜாநம் அபிஷிஞ்சஸ்வ பார்த்திவம்’-(ஸ்ரீராமா. அயோத். 2 : 21 .) என்றதனைத் திருவுள்ளம் பற்றி.

‘கதம்நு மயி தர்மேண ப்ருதிவீம் அநுஸந்ஸதி
பவந்தோத்ரஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மஐம்’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 25.

நாம் ஒருப்பட்ட காரியம் நன்றாக விழுந்தது; அரசர்கள் கூட்டம் இப்படி விரையப்பெறுவதே!’ என்று
அதிலே மிகுந்த உவகையனாய், அந்த உவகையை நெஞ்சிலே இட்டுவைத்து,
‘அதனை இவர்கள் வாயாலே சொல்லக் கேட்கலாகாதோ?’ என்று நினைத்து,
‘வாரீர்கோள்! அறுபதினாயிரம் ஆண்டு அரசைச் செலுத்துகிற இடத்து. இற்றைவரை எனக்கு என்று ஒரு சுகத்தைக் கோலாதே
உங்கள் இரட்சணத்துக்கு ஆமவையே தேடிக்கொடு போந்த நான். ஒரு வார்த்தை சொன்னால்,
‘இப்போது நீ இருந்தாயாகில் வீகம் என்? கிரமத்திலே செய்து கொள்ளுகிறோம்,’ என்னதல்:
அன்றாகில், ‘உனக்குப் பிரியமாகில் அப்படிச் செய்யலாகாதோ?’ என்று ஒருவார்த்தை சொல்லி ஆறியிருத்தல் செய்கை ஒழிய,
படுகொலைக்காரர் கையிலே அகப்பட்டார், ‘தப்ப வேணும்’ என்று பார்க்குமாறு போலே நீங்கள் இங்ஙன் கூப்பிடுகைக்கு நான் செய்த குற்றம் என்?’ என்ன,

‘ஓஅரசனே! உன் பிள்ளையான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன’ என்கிறபடியே,

‘‘தே தம் ஊசு: மஹாத்மாநம் பௌரஜாபதைஸ்ஸஹ
பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.

எதிரிகள் அம்பால் அழியப்பெற்றது இல்லை உன்னுடைய தேசம்;
உன் மகனுடைய குணத்தாலே நாட்டைப் படுகொலைக்குத்தினாய்காண் நீ,’ என்றார்கள் ஆயிற்று. என்றது,
‘நாங்கள் குணங்களால் வெல்லப்பட்டவர்களாய் இவ்வார்த்தை சொன்னோமித்தனை அல்லது ஒரு காரியபுத்தியோடு
சொன்னோம் அல்லோங்காண்,’ என்றார்கள் என்றபடி.
‘தாதுக்களுக்கு இமயமலை போன்று குணங்களுக்குப் பிறப்பிடமாய் இருக்கின்றான்,
ஒருவராலும் அசைக்கக்கூடாத ஆற்றலையுடையனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே,

‘ஜ்ஞாந விஜ்ஞான ஸம்பந்நோ நிதேஸே நிரத: பிது:
தாதுநாம் இவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.

தாதுக்களானவை ‘இன்ன மலையிற்பொன்’ என்றவாறே விலை போமாறு போலே, புறம்பே குணங்கள் சிலவற்றைக் கண்டால்,
பெருமாள் பக்கல் குணம்’ என்று இட்டாயிற்று அங்கு விலை போவது,
‘இவ்வடித்தில் குணம்’ என்றாயிற்றுப் புறம்பு விலைபோவது; இப்படிப்பட்டவனுடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிடுகிறார்.

————————————————————————————————

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-

குணங்கள் இருக்க நான் இழக்கவோ இங்கு -முன்பு சம்சாரிகள் இழப்பதை சொன்னார்
காரணத்தவாதிகள் அசாதாரண சம்பந்தம் -படைத்த -அளந்த -ரக்ஷணம் -ஈரக்கையால் தடவி கடாக்ஷித்து
-திருவடியால் -உன்னை என்று கிட்டு அனுபவிப்பேன்
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!-பரப்பை உடைத்தாய் -மூ உலகம் பாட பேதம் -விரிந்த -க்ருதகம் -க்ருத அக்ருதக அக்ருதக மூன்றும் –
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!-அநந்யார்ஹம் ஆக்கி -அளந்த நிரதிசய போக்யத்தை
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!-கடாக்ஷித்து நோக்கி ரக்ஷித்து–ஸ்பர்ச சுகத்தால் ஆனந்திப்பிக்க -தொட்டு தொட்டு –
நானும் இவர்களில் ஒன்று தானே -விரோதி பூயஸ்தன் தனியேன்-நித்ய ஸூ ரீகல் போலவும் இல்லாமல் நித்ய சம்சாரிகளும் இல்லாமல்
-ஆளாகி கடவ ஸ்வாமி -விரோதி நிவர்த்தகத்தில் நீ அத்விதீயன் -தனி
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே-இப்படி பிராப்யன் -ரக்ஷகன் -போக்யனுமாய் -நாபி –
பிராப்தி -திருவடித்தாமரை போக்யம் -தாமரைக்கு கண்ணா ரக்ஷகத்வம் –

‘பரப்பையுடைய மூன்று உலகங்களையும் உண்டாக்கின திருவுந்தித் தாமரையையுடையவனே! பரப்பையுடையவான மூன்று உலகங்களையும்
அளந்து தாமரை போன்ற திருவடிகளையுடையவனே! தாமரை போன்ற திருக்கண்களையுடையவனே! தாமரை போன்ற திருக்கரங்களையுடைவனே!
தனியேனாய் இருக்கின்ற என்னைத் தனித்து ஆளுகின்றவனே! உன்னைச் சேர்வது என்றுகொல்?’ என்கிறார்.
பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனை’
‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி’–என்பது, சிலப்பதி. ஆய்ச்சியர் குரவை.

‘கரனிருந்த வனமன்றோ இவைபடவுங் கடவேனோ
அரனிருந்த மலையெடுத்த அண்ணாவோ அண்ணாவோ’-என்பது, கம்பராமா. சூர்ப்பணகைப்பட. 109.
பற்பநாபன், பற்பபாதன், தாமரைக் கண்ணன், தாமரைக் கையன்’ என்பனு, விளி ஏற்றலின் ஈறு கெட்டு அயல் நீண்டு ஓகாரம் பெற்று வந்தன.
ஓகாரங்கள், துக்கத்தின் மிகுதியைக் காட்ட வந்தன. ‘பத்மம்’ என்பது, ‘பற்பம்’ எனத் திரிந்தது.
இத்திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

‘உலகத்தைப் படைத்தல் முதலாயினவற்றைச் செய்து உபகரித்து எல்லையற்ற இனியனாய் இருக்கிற உன்னை,
உன்னாலே உபகாரம் கொண்டு உன் சுவடு அறிந்த நான் கிட்டுவது அன்றோ?’ என்கிறார்.

பாமரு மூன்று உலகும் படைத்த பற்பநாபாவோ –
பா என்பது, தேவர் மனிதர் முதலான பொருள்களைக் காட்டுவதாய், பா மருவி இருந்துள்ள;
அதாவது, ‘பொருள்களினுடைய நெருக்கத்தையுடையவான மூன்று உலகு’ என்னுதல்.
அன்றிக்கே, ‘பாபம் மருவி இருந்துள்ள மூன்று உலகு’ என்னுதல்: பாபம் என்றது, ‘பா’ எனக்கடைக்குறைந்து வந்தது.
அன்றிக்கே, ‘பா’ என்று பரம்புதலாய், ‘பரப்பையுடையவான மூன்று உலகு’ என்னுதல்.
‘மூன்று உலகு’ என்று, கீழும் மேலும் நடுவுமான உலகங்களைச் சொல்லுதல்.
அன்றிக்கே, கிருதகம், அகிருதகம், கிருதகாகிருதகம் என்று இவ்வகையிலே ஆக்கிச் சொல்லுதல்.
‘என் தாயே’ என்பாரைப் போலே ‘படைத்த பற்ப நாபாவோ!’ என்கிறார்.
இதனை உண்டாக்குகைக்கு அடியான சம்பந்தமேயாய், இனிமை இன்றிக்கே ஒழிந்ததாகில்தான் நான் ஆறி இரேனோ?
நீ இதனை வருந்திப் படைத்தது அழிக்கைக்காகவோ?
அன்றிக்கே, இல்லாத பொருள்களை உண்டாக்கக்கூடிய நீ, உள்ள பொருளை அழிக்கிறது என்?’ என்னுதல்.

பாமரு மூன்று உலகும் அளந்த பற்ப பாதாவோ –
இவற்றை உண்டாக்கி ‘மேல் பட்டது படுகிறது’ என்று இருந்தாயாகில்தான் ஆறி இரேனோ?
பெற்ற தாய் வளர்க்குமாறு போலே இவற்றைக் கண்களிலே வெண்ணெய் இட்டுக்கொண்டு நோக்குமவன் அல்லையோ?
மஹாபலி போன்றவர்கள் இறாஞ்சினாற்போலேஇதனைக் கவர்ந்து கொண்டால் எல்லை நடந்து மீட்டுக்கொள்ளுமவன் அன்றோ நீ?
‘படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ திருவாய். 9. 2 : 2.-என்று ஆசையுடைய நான் இருக்க,
இச்சை இல்லாதார் தலைகளிலே திருவடியை வைப்பதே!’ ‘அது செய்தமை உண்டு, உமக்கு இப்போது விருப்பம் என்?’ என்ன, அருளிச்செய்கிறார் மேல்:

தாமரைக் கண்ணாவோ –
‘கடாட்சித்தைத் தருதலாலே மறுபடியும் என்னைக் காப்பாற்றி அருளவேண்டும்,’ என்னமாறு போலே
அவலோகந தாநேந பூயோ மாம் பாலய அவ்யய’-என்றது, ஸ்ரீவிஷ்ணு புரா. 16. 20 : 1.

‘திருக்கண்களாலே நோக்கவேணும்’ என்கிறார்.
தோன்றுதலும், வளர்தலும், வாழ்தலும் எல்லாம் உன் பக்கலிலேயாயிற்று,
தனியேன் தனி ஆளாவோ –
ஆக, திருக்கண்களின் அழகை அநுசந்தித்தார்; அக்கண்ணழகே தாரகமாக இருக்கும் நித்தியசூரிகள் திரளிலே தம்மை இருக்கக் கண்டிலர்;
அதனாலே ‘தனியேன்’ என்கிறார்

கண்களின் அழகைச் சொன்னதன் பின், ‘தனியேன்’ என்றதற்கு பாவம்அருளிச்செய்கிறார், ’ஆக’ என்று தொடங்கி.
‘தாமரைக் கண்ணனை விண்ணோர்பரவும் தலைமகனை’ (திருவாய். 2. 6 : 3.) என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
‘அக்கண்ணழகே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

‘பெண்களுடைய நோக்கே தாரகமாக இருக்குமவர்களுடைய திரளுக்கும் கூட்டு அன்றிக்கே, உன் நோக்கே தாரகமாக இருக்கும்
அவ்விபூதியிலுள்ளாருடனும் கூட்டு ஆகாதே, என்னை மூன்றாம் விபூதியாக்கி ஆளுகிறவனே!’ என்பார், ‘தனி ஆளாவோ’ என்கிறார்.
அன்றிக்கே, ‘உன் கிருபையே தாரகமாக இருக்கிற என்னை உன் கிருபைக்கு என்னை ஒழிய வேறு விஷயம் இல்லையாம்படி ஆளுகிறவனே’ என்றுமாம்.
தாமரைக் கையாவோ-
அக்குரூரனைப் போன்று போரேனோ?
‘ஸோப்யே நம்’ திருக்கையில் அடையாள மித்தனையும் இலச்சினைப்படி அவன் உடம்பிலே காணலாம்படி
அவனைத் தீண்டி அவன் ஸ்பரிசத்தாலே செயல் அற்றவனாய் நிற்கையாலே கையைப் பிடித்து ஏறட்டு,
பின்னை அணைக்கைக்கு இருவரைக் கண்டது இல்லை-
பரதன் அக்ரூரர் மாருதி -அணைத்த –

ஸோபி ஏநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா
ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸூகாடம் பரிஷஸ்வஜே’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 18 : 2.

‘மிருதுவான கைகளால் கண்டாகர்ணனுடைய சரீரத்தையும் கூட எல்லாவிடத்திலும் தொட்டருளினார்,’ என்கிறபடியே.
பஸ்பர்ஸ அங்கம் ததா விஷ்ணு: பிஸாசஸ்ய அபி ஸர்வத:’
கரேண ம்ருதுநா தேவ: பாபந்நிர்மோசயந் ஹரி:’-என்பது, ஹரி வம்ஸம்.. 275 : 15.
உன்னை என்றுகொல் சேர்வதுவே –
‘பதினான்கு ஆண்டுகளும் முடிந்தபின் பஞ்சமி திதியில்’ என்று நாள் ‘பூர்ணே சதுர்த்தஸே வர்ஷே பஞ்சம்யாம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 127 : 1.

இட்டுக்கொடுக்கலாவது தம்பிமார்க்கோ? உனக்கே உரியரான அடியார் ஆனால் ‘இன்ன நாள் பெறக்கடவது’ என்று ஒருநாள்
இட்டுக் கொடுக்கல் ஆகாதோ?
அடியன் ஆகில் தலைவன் கொடுத்த நாள் பெறக்கடவதாய் அன்றோ இருக்க அடுப்பது?
அங்ஙனம் கிரமத்திலே அடைகிறோம் என்று பார்த்து ஆறி இருக்க மாட்டுகின்றிலேன்.
தனியேன் உன்னை என்று கொல் சேர்வதுவே –
நாராயணனை ஒழிந்து இருப்பது ஒரு நாரம் இல்லையே? இனிச் ‘சேருகையாவது, அடியார்கள் குழாங்களை உடன் கூடுகை அன்றோ?
‘உன்னை என்றுகொல் சேர்வதுவே’ என்னா நிற்க, அது சேரும்படி என்?’ என்னில்,
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்டு வைக்கயாலே, ‘உன்னைச் சேர’ என்ற போதே தன்னடையே வருமன்றோ?

——————————————————————————————————

என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர்எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-

ஆர்த்தியின் மிகுதியால் மீண்டும் –சர்வாந்தராத்மா ஆபத் சகன் -உன் திருவடிகளை என்று கிட்டுவின்
என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்யநின் திருப் பாதத்தை யான்? -தர்ச நீயமான
-அநந்ய பிரயோஜனம் -உள்ள எனக்கு கிட்ட கூப்பிட வேண்டுவதே -அந்நிய பரர்-ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் செய்யும் இவர்கள்
– பிரயோஜனாந்த பரர்களுக்கு -போலே இல்லாமல்
நிலம் நீர்எரி கால் விண்ணுயிர்-ஜீவ ராசிகள் -ஸமஸ்த பதார்த்தங்கள் தானானுமாய் சரீரமாய் பிரகாரமாய்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!-பாதகம் தீர குன்று எடுத்து ரக்ஷித்து மநோஹார
சேஷ்டிதங்ககள் பிரகாசிப்பித்து -பிராப்யத்வம் முன் பாசுரம் ஸ்ப்ருஹ நீயத்வம் இதில்

‘நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் ஆகாயமும் உயிரும் என்ற இவை முதலாக மற்றுமுள்ள எல்லாப் பொருள்களும் உனக்குச் சரீரமாக நின்ற எந்தையே!
பசுக்கூட்டங்களை மேய்த்து, மலையைத் தூக்கிப் பிடித்து அப்பசுக்களைக் காத்த எம் கூத்தனே! சிவனும் பிரமனும் ஏத்துகின்ற நின் செய்ய திருபாதத்தை
யான் சேர்வது என்றுகொல்? அந்தோ!’ என்கிறார்.
‘அந்தோ’ என்பது. இரக்கத்தைக் காட்டும் இடைச்சொல். ‘அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப்பாதத்தை யான் சேர்வது என்றுகொல்?’ என்க.
‘எந்தை, கூத்தன்’ என்பன, விளி ஏற்றலின் ஈறு திரிந்து ஓகாரம் பெற்றன.

’வேறு விஷயங்களிலே நோக்கு உள்ளவர்களாய்ப் புறம்பே தாரகம் முதலானவைகளாம்படி இருக்கின்றவர்களுக்குங்கூட
விரும்பும்படியாக இருக்கிற திருவடிகளை, வேறு ஒன்றிலும் நோக்கு இல்லாதவனாய்
இதுவே பிரயோஜனமாக இருக்கிற நான் என்று பெறக்கடவேனை?’ என்கிறார்.

என்றுகொல் –
திருக்கையில் ஸ்பரிச சுகத்தை விரும்பி, ‘என்றுகொல் சேர்வது?’ என்ற அளவே அன்றோ மேல்?
அதற்கு ஒரு மறுமொழி பெறாதே இருக்க, ‘என்றகொல் சேர்வது?’ என்கிறது என்ன நிலையோதான்!
அந்தோ –
இனி ‘என்றுகொல் சேர்வது?’ என்பாருங்கூட இன்றியே ஒழியக்காண் புகுகிறது; நான் முடிந்தேன் என்கிறார்.
‘அந்தோ’ என்பதனால், தம்முடைய ஆற்றாமையைத் தெளிவுபடுத்துகிறார்.
அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின்திருப்பாதத்தை –
அழிப்பாருடன் ஆக்குவாருடன் வாசி அற உகக்கும்படியான திருவடிகளை.
வேறு பிரயோஜனங்களை விரும்புகின்றவர்களுக்கும் கூட விரும்பத் தக்கனவாம்படி இருக்கிற திருவடிகளை
வேறு பிரயோஜனங்களை விரும்பாத நான் என்று பெறக்கடவேன்?
தங்கள் தங்கள் தொழில்களிலேயே நோக்குஉள்ளவர்கள் பிரமன் முதலாயினாரும் தத்தம் தொழில்களிலே
நோக்கு இல்லாதவர்களாய் ஏத்தும்படி விரும்பத் தக்கனவாய்ச் சிவந்திருந்துள்ள உன் திருவடிகளை,
வேறு ஒன்றிலும் நோக்கு இல்லாத நான் கிட்டப்பெறுவது என்றோ?
அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப்பாதத்தை யான் என்றுகொல் சேர்வது?

நிலம் நீர் எரி கால் விண் உயிர் என்ற இவை முதலா முற்றுமாய் நின்ற-
பெற்ற பின்பு நோக்குகை அன்றிக்கே, ‘குழந்தையைப் பெற வேணும்’ என்று ஏற்கவே வருந்தும் தாயைப் போலே,
படைப்பதற்கு முன்பே இவற்றை உண்டாக்குகைக்காகத் திருவ்ருத்கரணத்தை-தேஜஸ் அப்பு பிருத்வி மூன்றும் —
நினைத்துப் பஞ்சீகரணத்தைச் செய்து,-ரக்ஷணத்தில் உள்ள பாரிப்பால் –
இவற்றை அடையப் படைத்து,படைக்கப்பட்ட பொருள்கள் பொருளாந்தன்மையைப் பெறுதல், பெயரை அடைதல்
முதலியவைகளுக்காக உயிர் வழியாக அநுப்பிரவேசித்து, பின்னர், இவற்றைச் சொல்லுகிற சொற்கள்,
அசித்தும் அசித்தை விரும்பி நிற்கிற உயிரும் உயிருக்குள் உயிராய் இருக்கிற பரமாத்துமாவுமான இக்கூட்டத்தைச் சொல்லுகின்றன வாய்க் கொண்டு,
தன்னளவிலே வரும்படி நிற்கிற நிலையைச் சொல்லுகிறது, ‘முற்றுமாய் நின்ற’ என்னும் இதனால்.
முற்றுமாய் நின்ற என்றது -ஸ்வரூப ஐக்கியம் இல்லை -அனுபிரவேசித்து பெற்ற பிரகார பிரகாரி பாவம் அருளிச் செய்கிறார்
இவை அறியாது இருக்க, இவற்றின் பேற்றுக்கு அவன் வருந்த வேண்டுவதற்கு உரிய காரணத்தைச் சொல்லுகிறது, ‘எந்தாய்’ என்ற இதனால்.
என்றது, ‘அதற்கு அடியான சம்பந்தத்தைச் சொல்லுகிறது’ என்றபடி.
இவற்றை உண்டாக்கும் நாளிலே உண்டாக்கி,இனிமேல் வரும் ஆபத்தை இவை தாமே நீக்கிக்கொள்கின்றன,’ என்று
விட்டு வைக்கை அன்றிக்கே, அரியன செய்தும் நோக்குமவன் என்கிறார் மேல்:

குன்று எடுத்து –
மலையை எடுத்தே அன்றோ நோக்கிற்று?
ஆநிரை மேய்த்து-
நோக்குமிடத்து, வரையாதே பசுக்களை நோக்குமவனாயிற்று.
அவை காத்த எம் கூத்தாவோ –
மழையிலே நோவு படுகிற பசுக்களைப் பாதுகாப்பதற்காக மலையை எடுத்தான் அவன்;
அப்போது திரிபங்கியாய் நின்ற வடிவுதான் வல்லார் ஆடினாற் போலே தமக்குக் கவர்ச்சிகரமாயிருக்கையாலே, ‘எம் கூத்தாவோ’ என்கிறார்.

ஆக, இந்த இரண்டு பாசுரங்களாலும் அவன் விரும்பப்படுகின்றவனாக இருக்கும் தன்மையைச் சொல்லும் முகத்தால்,
பிராப்பியத்துவம் சொல்லப்பட்டது: மேல் ஐந்து பாசுரங்களாலே, அவனுடைய பிராபகத்துவம் சொல்லப்படுகிறது.

——————————————————————————————————–

காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன்மாரி தன்னைப்
பூத் தண் துழாய் முடி யாய்! புனை கொன்றை யஞ் செஞ்சடையாய்
வாய்த்த என் நான்முகனே! வந்து என் ஆருயிர் நீ ஆனால்
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப்பெய்வனே?–7-6-3-

சர்வ சுலபன் சர்வாதிகான் -எனக்கு தாரகனாம் படி செல்லாமை விளைந்து இருக்க நான் எங்கே கிட்டுவேன்
காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன்மாரி தன்னைப்-வல்லார் ஆடினால் போலே -நின்ற நிலை
பூத் தண் துழாய் முடி யாய்! புனை கொன்றை யஞ் செஞ்சடையாய் வாய்த்த என் நான்முகனே! -அசாதாரணமான சிஹ்னம்
-சிவனுக்கு அந்தராத்மா -நான் முகனுக்கு அந்தராத்மா –
ஸர்வேச்வரத்வ ஸூ சகம் -விகசித்தமான பூ தார் -குளிர்ந்த சிரமஹரமான–தன்னையும் ஈஸ்வரனாக அபிமானித்து
-ஈச்வரத்வ சாதகம் -சிவந்த சடை -மலர் சூடி அபிமானம் -சடை சாதனம் இரண்டும் உண்டே -மார்க்கண்டேயர் இடம் சடை பார் பூவைப் பார்க்காதே என்றானே
வாய்த்தது -அவனுக்கும் உத்பாதகன் தன் பக்கலிலே உத்பன்னனா-பிரகார பாவம் எனக்கு பிரகாசிப்பித்து
வந்து என் ஆருயிர் நீ ஆனால்-உபாய பாவம் இதில் இருந்து ஐந்து பாசுரங்களில் –
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப்பெய்வனே?-அந்த தேவதைகளும் ஸ்தோத்ரம் பண்ண அப்பால் உள்ளவன் –
ஸுலப்யம் பரத்வம் எல்லை கண்டு ஸ்தோத்ரம் பண்ண முடியாமல் -நான் பிரார்த்திக்காமல் -அபேஷா நிரபேஷமாக தாரகன் ஆனபின்பு
எங்கு நான் தலைப்பு பேய்வேன் -ஒரே ஓ கூத்தாவோ -இதில் -வாசி அறிந்த எனக்கு அரிதாவதே -நீ ஒருவனே தாரகன் என்று அறிந்த எனக்கு

‘மலையை ஏந்திக் கல்மழையைத் தடுத்துப் பசுக்களைப் பாதுகாத்த எம் கூத்தனே! குளிர்ந்த பூக்களையுடைய திருத்துழாயினைத் தரித்த
திருமுடியையுடையவனே! கொன்றை மாலையை அணிந்த அழகிய சிவந்த சடையையுடைய சிவபெருமானைச் சரீரமாகவுடையவனே!
படைக்கும் தொழிலையுடைய பிரமனைச் சரீரமாகவுடையவனே! நீயே விரும்பி வந்து என்னுடைய அரிய உயிரும் நீயே ஆயினாய்;
அப்படி ஆனால், துதிக்க முடியாத கீர்த்தியையுடையவனே! உன்னை எங்கே சேர்ந்து அனுபவிப்பேன்?’ என்கிறார்.

‘ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல்
மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ
நலமுழு தளைஇய புகர்அறு காட்சிப்
புலமும் பூவனும் நாற்றமும் நீ
வலனுயர் எழிலியும் மாக விசும்பும்
நிலனும் நீடிய இமயமும் நீ’-என்ற பரிபாடற்பகுதி ஈண்டு ஒப்பு நோக்குக.

‘பிரமன் சிவன் முதலானவர்களுக்கும் காரணனாய் இருக்கிற நீ, காரணம் இல்லாமலே வந்து நீயே தாரகனாம்படி செய்தருளினாய்;
ஆன பின்னர், நீயே குறையும் செய்தருள வேணும்,’ என்கிறார்.

காத்த எம் கூத்தவோ –
மேலே கிருஷ்ணனுடைய சரிதம் வந்ததே அன்றோ, ‘ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ’ என்று?
‘எத்திறம்’ என்றால், பின்னரும் ‘எத்திறம்’ என்று அதிலே போமித்தனை அன்றோ?
மேலே கூறியது வடிம்பிட்டு, திரியட்டும் ‘காத்த எம் கூத்தாவோ’ என்கிறார்.
அன்றிக்கே, ‘பசுக்கள், தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு மலையை எடுத்தனவோ?’ என்னுதல்.
மலை ஏந்திக் கல்மாரி தன்னை –
கல்லாலே பெய்தலாலே கல்லை எடுத்துப் பாதுகாத்தான்; நீராலே பெய்தானாகில் கடலை எடுத்து நோக்குங்காணும்.
பூத்தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செம் சடையாய் வாய்த்த என் நான்முகனே!-
அவர் அவர்களுடைய சொரூபங்களுக்கே உரியனவான இலட்சணம் சொல்லுகிறது
பூத்தண் துழாய் முடியாய் –
தனக்கே சிறப்பானதாய் இறைமைத் தன்மைக்குச் சூசகமான மாலையாயிற்று இது;
பதிம் விசுவஸ்ய ஆதமேஸ்வரீம் -தன்னுடைய சத்தை தன் அதீனமாம்படி இருக்கும் பொருளுக்கு இலக்ஷணமாயிற்று இம்மாலை,
‘இதனால் இவர் பெற்றதாயிற்றது என் இப்போது?’ என்னில்.
‘உன் சத்தை உன் அதீனமாக இருக்க, நான் எங்ஙனே உன்னைப் பெறுகைக்கு ஒரு சாதனத்தைச் செய்து காணும்படி?’ என்கை.
புனை கொன்றை அம் செம் சடையாய் –
பிறர் சத்தையோதான் உன் அதீனம் அன்றிக்கே இருக்கிறது?
பசுக்களின் சத்தை உன் அதீனமானாற்போன்று ஈஸ்வரர்களாகச் செருக்குற்றிருப்பார்களுடைய சத்தையும்
உன் அதீனமாய் அன்றோ இருக்கிறது?
புனையப்பட்ட கொன்றையையுடையதாய் அழகியதாய்ச் சிவந்திருந்துள்ள சடையையுடைய சிவனும் நீ இட்ட வழக்கு.

வாய்த்த என் நான்முகனே –
மேலே இரண்டு இடங்களிலும் சொன்ன மாலைகள் அவர் அவர்கட்கே உரியவனாய் இருக்குமாறுபோலே ஆயிற்று,
இவனுக்கும் தனக்கு அடைத்த காரியத்துக்கு நான்கு முகங்கள் சிறப்பாக இருக்கிறபடி.
இன்னமும், ஈஸ்வரன் தனக்கும் ‘இப்படி படைப்போம்’ என்றாலும் முடியாதபடியாயிற்று பிரமனுடைய படைப்பில் உண்டான வாய்ப்பு.
‘என்’ என்னும் சொல், விசேடியத்திலே ஊற்றமாகக்கடவது.
வையதிகரண்யத்தாலே சொன்னால் கழற்றிக்கொள்ளுகைக்கும் உடலாய், கேவலம் பேதத்தையே சொல்லுகிறது என்று மயங்குவதற்கும் உடலாய் இருக்கும்; சாமாநாதிகரண்யத்தாலே சொன்னால் சேஷ சேஷி பாவமாகிற பிரிவும் தோற்றி இருக்கும்.
நான் முகனை உடலாகக் கொண்டவனே -வையதிகரண்யம் -சொன்னால் கழற்ற உடலாகும்
நான் முகனும் -கேவல பேதம் சொல்லாமல்
பிரிந்து இருந்தால் சத்தை இல்லையே -அப்ருதக் சித்த விசேஷணம் -என்பதால்

ஆக, சாமாநாதிகரண்யம் வையதிகரண்யம் என்னும் இரண்டற்கும் பலம் எல்லாவற்றையும் நியமித்தலே அன்றோ?
ஆனாலும், சாமாநாதிகரண்யத்தாலே சொல்லுமதற்கு இத்தனை வாசி உண்டு.
ஸ்வம் உத்திஸய-தன்னை நோக்கியே அன்றோ இவற்றைத் தாங்கிக்கொண்டிருக்கிறான்?
‘திருவரங்கநாதனே! திருமால் தன்னை நோக்கியே சேதனகள் அசேதனங்கள் ஆகிய இவற்றினுடைய
சொரூபம் இரட்சணம் நியமணம் முதலானவற்றை ஏற்றங்கொள்ளுகிறான் என்று உபநிடதம் சொல்லுகிறது’ என்கிறபடியே,

‘உபாதத்தே ஸத்தா ஸ்திதி நியமநஆத்யை; சித்அசிதௌ
ஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீமாந் இதிவததி வாக் ஒளபநிஷதீ’-என்பது, ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2 : 87.

சத்தையே பிடித்து, அளித்தல் நியமித்தல் முதலியவைகள் அகப்பட அவன் அதீனமாயிருக்கையாலே,
பிரிய நின்று ஒரு சாதனத்தைச் செய்வதற்கு ஒரு தகுதி இல்லையாம்படி ஆயிற்றுப் பாரதந்திரியத்தின் எல்லை இருக்கும்படி.

வந்து என் ஆர் உயிர் நீ –
பிறர் பக்கல் செய்த உபகாரத்தைச் சொல்ல வேணுமோ? என் பக்கல் செய்த உபகாரந்தனோ அமையாதோ?
‘நீ ஒருவன் உளை’ என்று கனாக் கண்டும் அறியாதே புறம்பே பற்று உள்ளவனாய் இருக்கிற என்னை,
அதனைத் தவிர்த்து உன்படியை அறிவித்து உன்னை ஒழியத் தரியாதபடியான நிலையைப் பிறப்பித்தாய்.
ஆனால் – இப்படி இருந்த பின்பு.
ஏத்த அருங்கீர்த்தியினாய் –
நீ சத்தையை உண்டாக்க உன்னாலே சத்தையைப் பெற்று இருக்கிற நான் ‘ஏத்துவேன்’ என்றால்,
என்னாலேதான் ஏத்தலாம்படி இருந்ததோ?’ ஆனால் – உன்படி அது; என்படி இது;
இங்ஙனே இருந்த பின்பு, உன்னை எங்குத் தலைப்பெய்வனே-யான் ஓர் உபாயத்தைச் செய்து உன்னை எங்கே வந்து கிட்டப் புகுகிறேன்?
என்னாலே வந்து கிட்டுகை என்று ஒன்று உண்டோ?

————————————————————————————————-

எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–7-6-4-

சர்வ ஸ்மாத் பரன் -ஆஸ்ரித பவ்யனாய் -அதிசயித்த போக்யனாய் -மூன்றையும் சொல்லி –
எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே-தர்ச நீய வை லக்ஷண்யம் -எழிலே நீ -என்றபடி
-தண்ணீர் ரசம் நான் -கீதையில் சொன்னானே -இதனாலே உண்ணும் நீர் இத்யாதி –
கீழே பொருள்கள் சிவன் நான் முகன் அவன் அதீனம்-இதில் சக்திகளும் இவன் அதீனம்
தத் பிராப்தி ஹேது இல்லாத நான் உன்னை எங்கனம் கிட்டுவேன்
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ -ஞான சக்தாதிகளால் உயர்ந்த ஈஸ்வர அபிமானி -அவனையும் படைத்த ப்ரம்மா நீ இட்ட வழக்கு
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ -சத்ருக்களுக்கு -பயம் கொடுக்கும் வஜ்ரம் இந்திரன் தேவாதிகள் நீ இட்ட வழக்கு
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே-மதுவை உடைத்தாய் விகசித்தமான –அழகை பிரகாசிப்பித்த பவ்யன்

தேனோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடைய என்னுடைய கோபாலனே!
அழகிய மூன்று உலகங்களும் நீ இட்ட வழக்கே; அவ்வுலகங்களிலே ஞானம் சத்தி முதலியவற்றால் உயர்ந்த மூன்று கண்களையுடைய
சிவனும் அவனுக்குத் தந்தையாகிய பிரமனும் அவனும் நீ இட்ட வழக்கு; கொடிய கிரணங்களையுடைய வச்சிராயுதத்தைக்
கையிலேயுடைய இந்திரன் முதலான தெய்வங்களும் நீ இட்ட வழக்கு; இங்ஙனம் இருக்க, நான் உன்னை எங்கே வந்து கிட்டுவேன்?
‘பெருமானாகிய பிரமன் அவன்’ என்க, கோவலன் என்பது, ‘கோபாலன்’ என்ற சொல்லின் சிதைவு என்பர் அடியார்க்கு நல்லார்.

மேற்பாசுரத்தில், ‘அவர்கள் சொரூபம் அவன் அதீனம்’ என்றது; அந்தச் சொரூபத்தைப் பற்றி இருப்பன
சில உயர்வுகள் உளவே அன்றோ? அவையும் அவனுக்கு அதீனங்கள் என்கிறது இதில்.

எங்குத் தலைப்பெய்வன் நான் –
வலி இல்லாதான் ஒருவனை ‘மலையைத் தாங்கு’ என்றால், அவனாலே அது செய்து தலைக்கட்டப்போமோ?
எழில் மூன்று உலகும் நீயே-
மூன்று உலகங்களிலே உள்ள பொருள்களின் உயர்வுகளும் உன் அதீனம்.
அங்கு உயர் முக்கண்பிரான்-
அந்த அண்டத்தில் மற்றைத் தேவர்களைக் காட்டிலும் சிவன் பக்கல் வந்தவாறே ஓர் உயர்வு உண்டே அன்றோ?
அந்த உயர்வு உன் அதீனம்.
பிரம பெருமான் அவன் நீ-
அவனுக்கும் தந்தையாய்ப் பதினான்கு உலகங்கட்கும் ஈஸ்வரனாகையாலே வருவது ஓர் ஏற்றம் உண்டே அன்றோ பிரமனுக்கு?
அதுவும் நீ இட்ட வழக்கு.

எழில் –உயர் -பெருமான் -இத்யாதிகள் விசேஷணம் -இதிலே மாத்திரம் தாத்பர்யம் –
லோகம் -எழில் –
சிவன் -உயர்த்தி
நான் முகன் -பெருமான் –
கிழக்கு நோக்கி அமர்ந்து அன்னம் சாப்பிடு -வாக்கியத்தில் எதில் நோக்கம் -கிழக்கு நோக்கி உடகார்வதில் –
இதை தான் விதிக்கும் வேதம் -தானே நடப்பதை சொல்லாதே -குளித்தே சாப்பிட வேண்டும் என்பது போலே –
கீழில் ஸ்வரூபம் தத் அதீனம் சொல்லி -எழில் நீயே மூ உலகும் நீயே -இங்கு -அதனால் இந்த பாசுரத்தில் எழில் கருத்து என்றவாறு –

வெம் கதிர் வச்சிரம் கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ-
‘வச்சிரத்தைக் கையிலேயுடையவன் புரந்தரன் என்ற பெயரையுடையவன்’ என்கிறபடியே,
வெவ்விய கதிரையுடைத்தான வச்சிரத்தைக் கையிலேயுடையனாய் இருக்கிற இந்திரன் தொடக்கமான தேவதைகளுடைய உயர்வுகளும் நீ இட்ட வழக்கு.
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடைக் கோவலனே –
உன்னை ஒழிந்த பொருள்களினுடைய உயர்வுகளும் உன் அதீனமாம்படி இருக்கிற நீ,
உன்னுடைய உயர்வு நான் இட்ட வழக்காம்படி ஆனாய்.
தேனையுடைத்தாய் மலர்ந்த செவ்வித் திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட மயிர் முடியையுடையாய்,
அவ்வழகை எனக்குப் பிரகாசிப்பித்த அடியார்கட்கு அடக்கமுடையவனாய் இருக்கிற கிருஷ்ணனே!

‘கொங்கு அலர் தண் அம் துழாய் முடி’ என்கையாலே, இனிமையின் மிகுதி சொல்லிற்று;
‘என்னுடைக் கோவலனே!’ என்கையாலே, அடியார்கட்குப் பவ்யனாய் இருக்கும் தன்மையைச் சொல்லுகிறது.

————————————————————————————–

என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5-

நிரதிசய பிராப்ய பூதன் நீ -லௌகிக விஷயத்தில் ஆழ்ந்த முதலியார் என் ஆத்மா
என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!-ஆஸ்ரித பவ்யன் -துளையாத -நீல ரத்னம் போலே அவிகல போக்யன்
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து-நாபி கமலத்தில் –மலரும் மூன்று லோகங்கள் -குண த்ரய விபாகம்
-இதில் அன்றோ நான் ஈடுபட்டு உழன்று உள்ளேன் -தம்மை போக்தாவாக அபிமானம் பண்ணி -என்னுடைய ஆத்மாவானவர்
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு-வி லக்ஷண தேஜோ ராசி -ஸ்ரீ வைகுண்டம் –
ஆயிரம் கால் மண்டபத்தில் உன்னைக் கண்டு -நித்ய ஸூ ரிகள் போலே நிதி எடுத்துக் காண்பாரைப் போலே -என்கிற கணக்கிலே கண்டு கொண்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?-ஆத்மாவை ஆர் உயிர் -பூஜ்ய வாசகம் -வெறுப்பில் சொல்கிறார்
-இப்படிப் பட்ட பெரியவர் என்று எங்கு வந்து அடைவார்–சாம்சாரிக விஷயத்தில் ஆழ்ந்த என்னால் உன்னைக் கிட்டுவது என்றோ -எப்படியோ –
நான் உபாயம் செய்வது -பிராப்தி இல்லை -என்றார் -கீழே இனி சக்தி இல்லை என்கிறார் –

‘என்னுடைய கோபாலனே! என்னுடைய பொல்லாக் கருமாணிக்கமே! உன்னுடைய திருவுந்தித்தாமரையில் பிறந்த உலகங்களிலே
சத்துவம் இராஜசம் தாமதம் என்னும் முக்குணங்களைப் பற்றி வருகின்ற விஷயங்களிலே பரந்து அனுபவிக்கின்ற என் அரிய உயிரானவர்,
உன்னுடைய சோதி வெள்ளமான ஸ்ரீவைகுண்டத்திலே எழுந்தருளியிருக்கிற உன்னைக் கண்டுகொண்டு வந்து அடைவது எங்ஙனே கொல்?’ என்கிறார்.
‘மூன்று’ என்பது, முக்குணங்களைக் குறிக்கின்றது ‘பரந்து’ என்ற சொல்லுக்குப் பின் ‘அனுபவிக்கின்ற’ என்ற சொல்லைக் கொணர்ந்து கூட்டுக.
‘பரந்து அனுபவிக்கின்ற என் ஆர் உயிரார்’ என்க. உயிரார் – இகழ்ச்சிக்குறிப்பு.

‘எல்லாம் செய்தாலும் ‘சாஸ்திர பரம் பிரயோக்தரி’ அன்றோ? பலம் உம்மதான பின்பு நீரும் சிறிது முயற்சி செய்யவேணுங்காணும்,’ என்ன
, நீ படைத்த உலகங்களிலே விஷயங்கள்தோறும் அகப்பட்டுக் கிடக்கிற நான் உன்னைப் பெறுகைக்கு ஒரு சாதனத்தைச் செய்து
வந்து பெறுகை என்று ஒன்று உண்டோ?’ என்கிறார்.

என்னுடையக் கோவலனே –
பாண்டவர்களுடைய கோவலன் ஆனாற்போலே ஆயிற்று: இது சீலம் இருந்தபடி.
என் பொல்லாக்கருமாணிக்கமே
-இது வடிவழகு இருந்தபடி. ‘அழகிது’ என்னில், உலகத்தோடு ஒப்பாம் என்று பார்த்து,
வேறு சொல்லாலே சொல்லுகிறாராதல்;
அன்றியே ‘தொளையா மணி’ என்கிறாராதல். பொல்லல்-தொளைத்தல்.
‘அனுபவிக்கப்படாத இரத்தினம் போலே’ என்றபடி.
‘உன்னுடை உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து –
உன்படி இதுவாய் இருக்க, உன்னை ஒழிந்த விஷயங்களினுடைய வடிவழகிலும் குணங்களிலும்
கால் தாழ்ந்து போந்தவனாய் இருந்தேன் நான்.
உன்னடைய உந்தியிலே மலராநின்றுள்ள உலகங்கள் மூன்றிலும் உண்டான விஷயங்கள்தோறும்,
தனித்தனியே அற்றுக் கால் தாழ்ந்து போந்தவனாய் இருந்தேன் நான்.
நீ ஸர்வசத்தி யோகத்தாலே பரந்திருக்கும் இடம் முழுதும் நான் என்னுடைய ஆசையாலே கால் தாழ்ந்து திரிந்தேன்.
இது என் நிலை இருந்தபடி. அதற்கு மேலே நீ எட்டா நிலத்தை இருப்பிடமாகவுடையையாய் இருந்தாய்.

உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு-
உனக்கே சிறப்பாய் எல்லை அற்ற ஒளி உருவமாய்,
‘அத்யர்க்காநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோ: மஹாத்மந:
ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ்ப்ரேக்ஷம் தேவதாநவை;’-என்பது, பாரதம், ஆரண்ய பர். 163.

சூரியன் அக்கினி ஆகிய இவர்களின் ஒளியைக்காட்டிலும்அதிகமாக விளங்குகிற,
மஹாத்துமாவான நாராயணனுடைய வைகுண்டம்’ என்று சொல்லப்படுகிற ஸ்ரீவைகுண்டத்தை
இருப்பிடமாகவுடையையாய் இருக்கிற உன்னை, சரீரத்திலும் சரீரத்தோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் உண்டான சம்பந்தம் அற்று
நெடுந்தூரம் வழி வந்து அதற்குத் தக்கதாய் இருப்பது ஒரு சரீரத்தை மேற்கொண்டு பரமபதத்தை அடைந்தால் அனுபவிக்க வேண்டி இருந்தது;
ஆக, என் நிலை இருந்தபடி இது; உன் நிலை இருந்தபடி அது;
என் நெஞ்சில் ஈடுபாடு இருந்தபடி இது; ஆன பின்பு இந்த முதலியார் கடுக வந்து உன்னைக் கிட்டாரோ?
ஆக., சொரூபம் உன் அதீனமாய் இருந்தது, அவர் அவர்களுடைய உயர்வுகளும் உன் அதீனமாய் இருந்தன;
என் நிலை இது, உன் நிலை அது; என் நெஞ்சில் ஈடுபாடு இது;
ஆன பின்பு, நான் ஒரு சாதனத்தைச் செய்து வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்கிறார்.

———————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: