பகவத் விஷயம் காலஷேபம் -152- திருவாய்மொழி – -7-5-6….7-5-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.–7-5-6-

ஆகாரத்தை அழிய மாறின அளவும் அன்றியே ஆத்மகுணத்தை-மாற்றிக் கொண்டு இரந்து-அர்த்தித்தவ சாமர்த்தியம்
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு-ஒரு காலும் சுவராத உதாரன் -கொடுத்து நீண்ட -மாவலி -நலிய நலிந்த தேவர்கள் –
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய-கூட்டமாக -பரஸ்பர விரோதம் அற்று இதற்காக கூடி -சேர்ந்து திரண்ட தேவர்கள்
-உதார ஸ்வ பாவர்கள்-எழுந்து அருளிய இடம் இவர்கள் போக -மநோ துக்க நிவர்த்தகன் –
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.-உதாரமே பற்றாசாக அர்த்தியாக சென்று பல பிரதான திசையில் காட்டில்
-தானே வேண்டி -அழகிய திருக்கை வாமனன் குவிந்த அழகிய
நடப்பதே கூத்தாடுவது போலே இருக்குமே -கை குவித்திக் கொண்டே போனான் பழக்கம் இல்லையே -கிளம்பின இடத்திலே
-வரத ஹஸ்தம் வாங்கும் ஹஸ்தம் ஆனதே -திருக் கண்ண புரம் -வாங்கும் ஹஸ்தம் -கன்யா தானம் திருக் கண்ண புர நாயகி தானம் வாங்கும் ஹஸ்தம்
கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?-வசீகரித்தும் -வார்த்தையால் நெஞ்சை கலக்கி -வியாபாரித்தும் -வளர்ந்த பொழுதே அநாயாசேன-பிரத்யக்ஷ சமானாகாரமாக கண்டும் -புராணங்களில் கேட்டும் உணர்ந்தும் -அறிவுடையார் -பிரசாஸ்தா கேசம் கொண்ட கேசவன் அலைந்த குழல் உடன் நடந்து வந்த வாமனன் –
கைதி ப்ராஹ்மணோ நாம ஈசன் -இருவருக்கும் நியாந்தா -திருவடி விளக்க தலையில் தங்கி காட்டினார்கள் –

‘கொடுப்பதில் குறைவு இல்லாத கையையுடையமாவலி வருத்த வருந்தி, கூட்டம் கூட்டமாகச் சென்று இரந்தவர்களாகிய தேவர்களுக்குத் துன்பத்தை
நீக்கும்பொருட்டுக் கோட்டம் பொருந்திய கையையுடைய ஸ்ரீ வாமனனாகிச் செய்த செயல்களைக் கண்டும் கேட்டும் உணர்ந்தவர்கள்,
கேசவனுக்கு ஆள் ஆவரே அன்றி வேறு ஒருவர்க்கு ஆள் ஆவரோ?’ என்றபடி.
‘வண் (மையில்) வாட்டம் இல்லாத கை’ என்க. ‘கோட்டம் கை’ என்றது, வாங்கும்போது கை வளைந்திருத்தலைக் குறித்தபடி.
நீக்கிய ‘செய்யிய’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; நீக்கும் பொருட்டு வாமனன் ஆனான்.

‘மேலே கூறிய குணங்கள் தாம் ஓர் ஏற்றமோ, அலம் புரிந்த நெடுந்தடக்கையைக் கொண்டு திருநெடுந்தாண்டகம், 6.
-கோட்டம் கை வாமனனாய் இந்தப் பூமியைக் காப்பாற்றிய மஹா குணத்துக்கு?’ என்கிறார்.

கேட்டும் உணர்ந்தவர் –
ஓர் ஆசாரியன் ஓர் அர்த்தத்தை உபதேசித்தால் அதனைக் கேட்டு,
‘அறிந்து இதன்படி ஆகக்கடவன்’ என்கிறபடியே, பின்னை அந்த அர்த்தத்தைத் தெளிந்திருக்குமவர்கள்.
கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ –
புறம்பே அடையத்தக்கவர் இல்லாதபடி தானே அடையத் தக்கவனானவனுக்கு ஒழிய ஆள் ஆவரோ? ‘கேசவன்’ என்ற பெயர்
‘பிரமனும் ஈசனுமாகிய நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், கேசவன் என்ற பெயரையுடையரானீர்,’ என்கிறபடியேயாதல் அடர்ந்து நீண்ட மயிர்முடியையுடையவன் என்ற காரணத்தாலாதல் வந்தது.

இதி ப்ரஹ்மணோநாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்’-என்பது, பாரதம், ஹரிவம்ஸம், கைலாச யாத்திரை.

வெள்ளியை யாதல் விளம்பினை மேலோர்
வள்ளிய ராக வழங்குவ தல்லால்
எள்ளுவ என்சில? இன்னுயி ரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.’-என்பது, கம்பராமாயணம்.

வாட்டம் இலா வண் கை
கொடுத்து மாறக்கடவது அன்றியே, எப்போதும் கொடுக்கையிலே ஒருப்பட்ட கை.
இராவணன் முதலாயினோரைப் போன்று தலை அறுத்துப் போகட ஒண்ணாமைக்குக் காரணம் உண்டாகையாலே அழியச் செய்திலன்.

மாவலி வாதிக்க வாதிப்புண்டு-
இது பற்றாசாக அவன் நெருக்க நெருக்குண்டு.
ஈட்டம் கொள் தேவர்கள் –
கிராமணிகளைப் போலே, ஒருவர் உயர்வு ஒருவர் பொறாதே,
தலை அறுப்பாரும் தலை அறுப்பு உண்பாருமாய்த் திரியக் கடவ சாதி அன்றோ?
இப்படிச் சேராச் சேர்த்தியாய் இருக்கிறவர்கள் ஆபத்து மிக்கவாறே தங்கள் தங்கள் செருக்கினைப் பொகட்டு.
எல்லாரும் ஒரு மிடறாய் வந்து விழுந்தார்கள். ஈட்டம் – திரள்.
சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய –
மணியக்காரர் -கூறு செய்வானும் அம்பலத்தே இருந்தால் ‘ஈஸ்வரனும் நம்பக்கல் வரத் தட்டு என்?’ என்று இருக்குமாறு போலே,
‘எல்லாரும் நம்பக்கல் வரவேணும்’ என்று இருந்தவர்கள் தங்கள் ஆபத்தின் மிகுதியினால் அன்றோ
செருக்கு உற்றவர்களாய் இருக்கிறவர்கள் திரள வந்து இரந்தது?’ என்று திருவுள்ளத்தே கொண்டு அவர்கள் இடரைப் போக்கினபடி.
(‘பெரியவர் யார்?’ என்ற ஐயத்தினால் விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் போரை மூட்டிவிட விஷ்ணு ஜயித்ததனால் )
‘விஷ்ணுவை அதிகனாக எண்ணினார்கள்’ என்கிறபடியே, ‘அதிகம் மேநிரே விஷ்ணும்’-என்பது, ஸ்ரீராமா. பால. 75 : 19.
ஒரு சொத்தை வில்லை முரித்த போதாக எம்பெருமான் அறப்பெரியன் என்பது;
அல்லாது போது ‘ஈஸ்வரோஹம்’ என்பதான தேவசாதி பற்களைக் காட்ட, அவர்கள் இடரை நீக்கினபடி.

கோட்டம் கை வாமனனாய் –
நீர் ஏற்கக் குவித்த அழகிய கையையுடையவனாய்;
‘பொல்லாக் குறள் உருவாய்ப் பொன்கையில் நீர் ஏற்று’–நாய்ச்சியார் திருமொழி, 11 : 5.-என்கிறபடியே,
தேவர்களை நெருக்குகையாலே அழியச் செய்ய வேணும்; குண விசேடத்தாலே அழியச்செய்யமாட்டான்;
இனி, இரண்டற்கும் தக்கதாக ஒரு வழி இரட்சகனான தான் பார்க்குமித்தனை அன்றோ? பொற்கை – பொலிவு எய்தின கை;
‘அழகிய கை’ என்றபடி. கொடுத்து வளர்ந்த கை;
‘ஆயிரக்கணக்கான பசுக்களைத் தானம் செய்ததான பருத்து நீண்ட கை’ என்றும்,
‘சத்திய பராக்கிரமத்தையுடையவரான பெருமாள் கொடுப்பார்; வாங்கமாட்டார்’ என்றும் சொல்லுகிறபடியே.

கோ ஸஹஸ்ர ப்ராதாதாரம் உபதாய புஜம் மஹத்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 21:7.

‘தத்யாத் ந ப்ரதிக்ருஹ்ணீயாத்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 25.

செய்த கூத்துகள் கண்டுமே –
அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே இரப்பிலே மூண்டு, மஹாபலி வேள்வி செய்யும் இடத்தளவும் செல்ல,
பூமி நெளியும்படி பதறி நடந்து சென்று புக்கு, மான் தோலும் பூணு நூலும் தருப்பைப் புல்லுமான வணக்கமுள்ள
வடிவத்தோடு நின்று ‘கொள்வன் நான்’ திருவாய். 3. 8 : 9.-என்றாற் போலே சொன்ன பிள்ளைப்பேச்சுக்களும்
சிறுகாலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்ததும் ஆகிற இச்செயல்கள் அடங்கலும் இவர்க்கு வல்லார் ஆடினாற்போலே இருக்கிறபடி.

‘இறைமைத் தன்மைக்குரிய மேன்மையும் கிடக்கச் செய்தே, திருமகள் கேள்வனான தான் இரந்து தன்னை
அடைந்தாரைக் காத்த நீர்மைக்குப் பிரளயங்கொண்ட பூமியை எடுத்துக் காத்தது ஒரு குணமாயிற்றதோ?’ என்கிறார்.

—————————————————————————————————————-

கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7-

கேட்டதுக்கு மேலே தன்னிடமே வைத்துக் கொண்ட மகா உபகாரம் -தான் அர்த்தியாய்-வளர்ந்து தேவதைகள் திருவடிக்கீழ்
இருப்பது அன்றிக்கே தேவதாந்த்ர பஜனான மார்கண்டேயன்
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்-கர்ப்ப க்ருஹம் பிருகு மார்க்கண்டேயர் -புஷப மாலை -அனுபவிக்கும் –
இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்-போக்தா -உபாசகர் இரண்டு ஆகாரம் -சடை முடியில் புஷ்ப்பம் சாத்திக் கொண்டு
-ஈஸ்வர அபிமானி -ஆஸ்ரிதன் கூட்டிக் கொண்டு
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே-ரக்ஷணீயன் ஆக திரு உள்ளத்தில் கொண்டு தேவதாந்தர அந்வயம் கழித்து –
தன்னுடனே கூட்டிக் கொண்டு யாதவாதமாபாவி அவன் கூடவே இருக்கும் படி
கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
பிரத்யக்ஷமாக கண்டும் தெளிந்து – -விலக்ஷணர் புருஷர்கள் -ஆனந்தம் கொடுக்கும் சர்வேஸ்வரனுக்கு ஆளாகாமல் ஆவரோ –
கற்று தெளிந்து கண்டார் -என்று அந்வயம் உபநிஷத் த்ரஷ்டவ்ய -அர்த்த க்ரமம் சப்த க்ரமம் மாற்றி

‘வண்டுகள் தேனை உண்ணுகின்ற மலர்களால் கட்டப்பட்ட மாலையைத் தரித்த மார்க்கண்டேயனுக்கு வாழ்நாள் அளித்தல் சம்பந்தமாக,
பூமாலையைத் தரித்த சடைமுடியையுடைய சிவபெருமான், அவனைத் தன்னோடு அழைத்துக்கொண்டு, அறப் பெரியனான சர்வேஸ்வரன்
பக்கல் உசாவ வேண்டும் என்று செல்ல, அந்த நிலையிலேயே அவனைக் காக்க வேண்டும் என்று திருவுள்ளத்தே கொண்டு தன்னோடே
ஒத்த தன்மையையும் கொடுத்துப் பின் ஒரு நாளும் பிரியாதே சென்றபடியை உணர்ந்தமு கண்டும் தெளிந்தும் கற்றவர்கள்
கண்ணபிரானுக்கு ஆள் ஆவரே அன்றி, மற்று ஒருவர்க்கு ஆவரோ? ஆகார்,’ என்றபடி.
ஈசன் மார்க்கண்டேயனுக்கு வாழுநாளை உசாச்செல்ல. அங்குக் கொண்டு தன்னொடுங் கொண்டு உடன் சென்றதை உணர்ந்தும்
கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?’ எனக. இண்டை – மாலை.

‘திருமகள் கேள்வனான தன்னைத் தாழவிட்டு இரந்து பாதுகாத்து ஒரு பெரிய ஏற்றமோ,
வேறு தெய்வத்தைத் துதித்து வணங்கிய மார்க்கண்டேயனை அங்கீகரித்த இம்மஹாகுணத்துக்கு?’ என்கிறார்.

கண்டும் தெளிந்தும் கற்றார் –
கற்றுத் தெளிந்து கண்டார்; ஒருவன் பக்கலிலே ஓர் அர்த்தத்தைக் கேட்டு, அதிலே தெளிய வாசனை பண்ணி.
பின்பு நேரே அறிதல் பரியந்தமாக்கி வைப்பார்.
கேட்டல் தெளிதல்கள்தாம், நேரே பார்ப்பதற்குச் சமானமான ஆகாரத்தளவும் சென்று நிற்கும் அன்றோ?
கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ –
தியானிக்கின்றவர்கள். தியானிக்கப்படுகின்றபொருளை விட்டுப் புறம்பே போவாரோ?
வண்டு உண் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள் –
‘வண்டுகள் தேனைக் குடிக்கின்ற பூமாலையையுடைய ஸ்ரீ மார்க்கண்டேயனுக்கு வாழ்நாள் உண்டாகைக்காக’ என்னுதல்;
அன்றிக்கே. ‘வாழுநாள்’ என்பதனை, மேலே வருகின்ற ‘உசாச்செல்ல’ என்றதனோடு கூட்டலுமாம்.
தாய்தந்தையர்கள் மார்க்கண்டேயனை ஒப்பித்து விளையாட விட, அங்கே ஓர் அசரீரி வாக்கியம் ‘இவனுக்குச் சாக்காடு குறுகிற்று’ என்று சொல்ல,
அதனைக் கேட்டத் தாய்தந்தையர்கள் வெறுக்க, ‘இதற்கு நீங்கள் அஞ்ச வேண்டா; நான் போக்கிக்கொள்ளுகிறேன்,’ என்று
இவன் சென்று சிவனை அடைய, அவனும் பச்சை இடும் நாள் எல்லாம் இடுவித்துக்கொண்டு, ஒருநாளிலே வந்தவாறே
தலைக்கடையையும் புழைக்கடையையும் அடைத்துச் சடையை விரித்துக் காட்டி,
‘உன் காரியத்தைப் போன்றே ஆறல் பீறல்காண் என் காரியமும்: அருகில் மாலையைப் பாராதே
என் தலையில் சடையைப் புத்தி பண்ணாய்’ என்று காட்டி,
‘ஆனாலும் நெடுநாள் பச்சை இட்டு என்னைத் துதித்த நீ பேசாதே போக ஒண்ணாதே அன்றோ?
உனக்கு ஒரு பற்றுக்கோடு காட்டக் காணாய்!’ என்று, சர்வேஸ்வரனுடைய சௌலப்யம் முதலிய குணங்களையும்
மோட்சத்தைக் கொடுத்தல் முதலான குணங்களையும் சொல்லிக்கொண்டு சர்வேஸ்வரன் பக்கல் ஏறச்சென்றான்.

அங்குக் கொண்டு –
‘ஐயோ! மரண பயத்தையுடையனாய்க் கொண்டு வந்தாய் அன்றோ!’ என்று திருவுள்ளத்திலே கொண்டு:
‘நெஞ்சிற்கொண்டு’ என்னும்படியே.-சுமுகன் விருத்தாந்தம் -கலியன் பாசுரம் –
அன்றிக்கே, ‘செருக்கனான சிவன் கொண்டு வந்தான்’ என்று பாராமல்,
ஒரு பிராட்டி புருஷகாரமாக வருவாரைக் கைக்கொள்ளுமாறு போலே கைக்கொண்டு என்னுதல்.
தன்னொடும் கொண்டு-பெரிய திருமொழி, 5. 8 : 4.-இவன் வந்த காரியத்தை முடித்து, பின்பு தன்னுடன் ஒத்த தன்மையையும் கொடுத்து.
உடன் சென்றது உணர்ந்தும் –
ஒரு ‘கள்வன்கொல்’ பெரிய திருமொழி, 3 : 7.-என்ற திருமொழியில் பிராட்டியைக் கொடுபோமாறு போலே கொடு போனான்காணும்.
மன்னு மா முனி பெற்ற -மிருகண்டு பிள்ளை மார்க்கண்டேயர் ‘பின்னை என்றும்
நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய’ பெரிய திருமொழி. 5. 8. 6.-என்கிறபடியே
‘ஒரு வேறுபட்ட பொருள்’ என்று தோற்றாதபடி தன்னோடு விளைகிற ரசத்தை உண்பித்தபடியை நினைத்து,
கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ?

தன்னை அடைந்த இந்திரனுக்காத் தன்னைத் தாழவிட்டது ஓர் ஏற்றமோ?
‘என்னையே எவர்கள் சரணம் அடைகின்றார்களோ அவர்கள் இந்த மாயையினைத் தாண்டுகின்றார்கள்’ என்னக் கடவ அவன்,‘

மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரத்தி தே’-என்பது, ஸ்ரீ கீதை, 7 : 14.

வேறு தேவதையைத் துதிக்க, அதற்கு மேலே அவன் புருஷகாரமாகக் கொண்டு வந்து காட்டிக் கொடுக்க,
‘என்செய்வான், தன்னை அடைந்தவனை அழிய விடாதே புறம்பே யாகிலும் கொண்டு போய் இரட்சிப்பித்தான்’ என்னும் குணம் சிவனுக்கு உண்டாக,

மார்க்கண்டேயனைக் காத்த நீர்மைக்கு.
தாமத புருஷர்களுடைய சினேகம் சர்வேஸ்வரன் விடுகைக்குக் காரணம்;
சத்துவநிஷ்டருடைய சினேகம் அவன் அங்கீகரி்ப்பதற்குக் காரணம்;
இங்ஙனே இருக்கச் செய்தே அன்றோ சிவன் முன்னிலையாக வந்த மார்க்கண்டேயனுக்கும் காரியம் செய்தது!

——————————————————————————————

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரியுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8-

ஆஸ்ரித உபகார அர்த்தமாக துடிப்புடன் ஒன்றின் தலையும் ஒன்றின் உடம்புமாய் கூட்டின விக்ரகம் -ஆஸ்ரிய பக்ஷபாத மேன்மை
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை-தபஸால் வரம் பெற்று -அதனால் லோகம் பீடித்து
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை-குடி இருப்பு இழந்து நித்ய துக்கிகளாக-கிலேசம் பண்ணும் இரணியன் சரீரத்தை –
மல்லல் அரியுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே-அழகியான தானே அரி உருவானே -உக்ரம் –மகா விஷ்ணும் பெரிய உருவம் –
வரத்தில் வைத்த சிரத்தை வரம் கொடுத்தவனுக்கும் படைத்தவன் உள்ளான் என்று இல்லாமல் -மல்லல் அட்டகாசம் என்றுமாம்
அநாயாசேன கிழித்து -புராணங்கள் மூலம் அறிந்த பின்பும்
செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?-போக -சிறுவன் ஆசை -நான்முகன் வரப்படி -ஆழ்வார்களுக்கு ரூப சேவை
-ஆஸ்ரித பக்ஷபாதம் அவதார தாத்பர்யம் -செல்வன் -திருமேனி –நாரா சிம்ம வபுஸ் ஸ்ரீ மான் –புகழை தவிர வேறு ஒன்றை கற்பரோ

‘எல்லை இல்லாத பெரிய தவத்தினாலே, தேவர்களுக்குப் பல வகையாக மிக்க துன்பங்களைச் செய்யும் இரணியனுடைய சரீரத்தைப் பெரிய
நரசிங்கமாகிக் கிழித்த ஆச்சரியத்தை அறிந்தும், (ஐஸ்வரிய கைவல்யங்களிலே இழியாமல் பகவத் விஷயத்திலே இழிந்து, அது தன்னிலும்
அவதரித்த மேல்எல்லை அளவும்) செல்லும்படி அனுபவித்தவர்கள், ‘திருமகள் கேள்வனுடைய பொருள் சேர் புகழை அன்றி
மற்றையோருடைய பொருள் இல் புகழ்களைக் கற்பரோ? கல்லார்,’ என்றபடி.
மிறை – துன்பம்; மிறை அல்லல் – மிக்க துன்பம். அமரரை – வேற்றுமை மயக்கம். அரி – சிங்கம்.

வேறு தேவதையை வணங்கித் துதித்தவனை அங்கீகரித்த மஹா குணத்தைக்காட்டிலும் மனிதவடிவம் சிங்கவடிவம் என்னும்
இரண்டனையும் ஏறிட்டுக்கொண்டு தன்னை அடைந்தவனைப் பாதுகாத்த மஹாகுணத்தை அருளிச்செய்கிறார்.

செல்ல உணர்ந்தவர் –
போலியான ஐஸ்வரியம் கைவல்யம் என்னும் இவற்றின் அளவிலே முடிவு பெற்று நில்லாமல்,
எல்லை நிலமான பகவத் புருஷார்த்தத்தளவும் செல்ல உணர்ந்தவர். என்றது,
‘அவனுடன் நித்தியமான இன்பத்தை வேண்டி இருக்குமவர்கள்’ என்றபடி.
வாய்க்கரையான சரீரம் சரீர சம்பந்தப்பட்ட பொருள்கள் அன்றிக்கே, ஆத்துமாவினுடைய உண்மை ஞானம் முன்னாகப்
பகவானை அடைதல் அளவும் செல்ல உணர்ந்தவர்கள்.
செல்ல உணர்ந்தவர் -ஆஸ்ரித பக்ஷபாதம் -பன்னீராயிரப்படி –இங்கு பாகவத கைங்கர்யம் -பாகவத பாரதந்த்ரன் -புருஷார்த்தம் என்றபடி –
செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ –
ஸ்ரீமானுடய கல்யாண குணங்களை ஒழியக் கற்பரோ? ‘இன்னம் சொல்லாய் சீமானை’ என்னக் கடவது அன்றோ?
அர்ஜுனன்கீதாச்சார்யன் இடம் கேட்டால் போலே –
எல்லை இலாத பெருந்தவத்தால்-
அளவு இல்லாத பெரிய தவத்தாலே. வரத்தைக் கொடுத்த தேவசாதிக்கும் குடியிருப்பு அரிதாம்படி அன்றோ பலித்தது?
பல மிறை செய் அல்லல் அமரரைச் செய்யும் –
தேவசாதி கிடந்த இடத்தில் கிடவாதபடி பல மிறுக்குகளைச் செய்து,
துக்கத்தை உண்டாக்குகிற இரணியனுடைய சரீரத்தை. மிறுக்கின் காரியம் – துக்கம்.
மல்லல் அரி உருவாய்-மல்லல்-பெருமை. ‘மஹாவிஷ்ணும்’ என்கிறபடியே,‘
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஹிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்’
இரணியன் குளம்படியாம்படியாகப் பெரிய வடிவைக் கொண்டு.
அன்றிக்கே, மல்லல் என்று செல்வமாய், அதனால், இலட்சுமிநரசிம்மமாய்’ என்னலுமாம்;
‘நாராயணனே நரசிங்கன்’ அமரேஸ்வர்யான நீ சத்தி’ எனப்படுகின்றதே அன்றோ?
நாராயணோ ந்ருஹிம்ஹஸ்து ஸக்திஸ்த்வம் அமரேஸ்வரி’-இங்கு, ‘ஸக்தி’ என்றது, பிராட்டியை.
அவளை ஒழிந்திருப்பது ஒரு போதும் இல்லை அன்றோ?

செய்த மாயம் அறிந்துமே –
சிறுக்கனுடைய சூளுறுவு செய்த அக்காலத்திலே தோற்றி, இரணியனுடைய உடலை இரு பிளவு ஆக்கின இவ்வாச்சரியமான செயலை அறிந்தும்.

ஒருவன் புருஷகாரமாகக் கொடுவர் அவனைக் காப்பாற்றியது ஒரு குணமோ, தமப்பன் பகையாக,
முகம் ஒருவடிவம் திருமேனி ஒரு வடிவுமாகக் கொண்டு பாதுகாத்த குணத்துக்கு?’ என்கிறார்.
‘பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றனாய் வளர்த்து’ பெரிய திருமொழி.8. 9 : 7.-என்கிறபடியே
வந்து பாதுகாத்த குணம் அன்றோ?

————————————————————————————————–

மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமோ.–7-5-9-

கிட்டே நெருங்க முடியாத கோபம் -அனாபிபவ-அர்ஜுனன் -பரதந்த்ரன் -பவ்யதா பிரகாசகம் -தாழ நின்று அநிஷ்ட வர்க்கம் நிரசித்த குணாதிக்யம்
தேரோட்டி -இதில் -சரம ஸ்லோகார்த்தம் -அடுத்து -தூத்ய சாரத்யங்கள் பண்ணி -லோகமே பார்க்கும் அளவும் –
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்-பங்காளிச் சண்டை -தாயாதி -ராஜ்யாம்சத்தை செருத்துக் கைக்கு கொண்ட
– நைர் க்ருண்யம் இரக்கம் இல்லா -பரிபவ பிராண அபஹார பர்யந்தம் -சகல வித பந்துவாகி -மந்திரி ஸூஹ்ருத் –
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையைநாசம் செய்திட்டு-அனைவரும் அறியும் படி -பூ பாரம் குறைத்து
நடந்த நல் வார்த்தை அறிந்துமோ -பரமபதம் தன்னுடைச் சோதி நடந்த வார்த்தை -பாரதம் பஞ்சமோ வேத நல் வார்த்தை
-நமோ வியாச விஷ்ணவே -வேதம் தரைவர்ண -ப்ரஹ்ம சூத்ரம் சாதித்து -உப ப்ருஹ்மணம் -ஸ்த்ரீ பாலர்கள் கேட்க்கும் படி
-கங்கா காங்கேயன் பூசல் பட்டோலை -எச்சில் வாய் கழுவ -ஸ்ரீ மத பாகவத ரஸமால்யம் சாறு போலே
அவதாரம் ஆஸ்ரித பக்ஷ பாதம் -ரகஸ்ய த்ரயம் நம் ஆச்சார்யர்
மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?-தாத்பர்யம் -ஆஸ்ரித பவ்ய ரூபதயா ஆச்சர்யம் -பரதந்த்ரர்களுக்கு பரதந்த்ரர்
-அறிந்தவர் -பெருமை பாராமல் ஆஸ்ரிதற்கு இழி தொழில் செய்யும் ஆச்சர்ய பூதன்-
அவன் அன்றி மாற்று ஒருவருக்கு அடிமைத்தன்மை காட்டுவாரா

‘தாய பாகத்தைச் செறுத்துக் கைக்கொண்ட துரியோதனாதியர்கள் அழியும்படியாக, ஒப்பற்ற பாண்டவர்களுக்காகத் தேசம் எல்லாம் அறியும்படி
ஒப்பற்ற சாரதியாய்ச் சென்று, சேனையை அழித்துத் தன்னுடையச்சோதிக்கு எழுந்தருளின நல்வார்த்தையை அறிந்தும், அவனுடைய
ஆச்சரியமான செயல்களை அறிகின்றவர்கள் மாயவனுக்கு அடிமை ஆவரே ஒழிய வேறு ஒருவர்க்கு அடிமை ஆவரோ? ஆகார்,’ என்றபடி.
‘மங்கச் சாரதியாய்ச் சென்று நாசஞ்செய்திட்டு நடந்த நல்வார்த்தை’ என்க. மாயம் – தன்னை அடைந்தவர்கட்குச் சுலபனாய் இருக்கும் ஆச்சரியம்.

தன்னை அடைந்த பிரஹ்லாதனுக்காக நரசிங்கமான அதிலும் அதிக குணமான சாரதியாய் நின்ற செயலை அருளிச்செய்கிறார்.

மாயம் அறிபவர் –
அவனுடைய செயல்கள் முழுதும் தன்னை அடைந்தவர்களின்பொருட்டாய் ஆச்சரியமாய் இருக்கும் என்று அறியுமவர்கள்.
மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ-
அடியவர்கட்குப் பரதந்திரப்பட்டவனுக்கு அன்றி ஆள் ஆவரோ?
தாயம் செறும் ஒரு தூற்றுவர் மங்க –
தாயபாகம் சம்பந்தமாகச் செறுகிற துரியோதனாதியர்களான தீயோர் கூட்டம் மங்க.
தாயம் கொண்டு நெருக்கிற்றுத் தம்மையோ? அநுகூலரான பாண்டவர்களை நெருக்கிற்றுத் தம்மை நெருக்கிற்றாய் இருக்கிறபடி.
ஒரு நூற்றுவர், ஓர் ஐவர் –
நெருக்குகிறவர்களும் நெருக்குண்கிறவர்கள் இருக்கிறபடி.-பிரபல துர்பலர் –
உயிர் எழுத்துக்கு முன் ஓர் -ஒரு நூற்றுவர் இலக்கணப்படி
ஓர் ஐவர்க்காய் –
தீயோர் திரள் முழுதும் அங்கே திரண்டு ஒரு சாரதியை ஒழிய வேறு துணை இன்றிக்கே இருக்கிறவர்கள்.

‘தன்வழியே ஒழுகாதவர்களை அழியச்செய்து, தன்னை ஒழிய அறியாதவர்களுக்காகத் தான் தாழ நின்று நோக்கினான்.
அன்றிக்கே, சம்பந்தம் இரண்டு தலைக்கும் ஒத்திருக்க, தாழ்ந்த தலை கண்டு நோக்கினானித்தனை அன்றோ?’ என்னுதல்,
‘கண்ணனுடைய திருவடிகள் அருச்சுனனுடைய மடியில் இருப்பதைப் பார்த்தேன்;
‘அர்ஜூநாங்க கதௌ பாதௌ கேஸவஸ்ய உபலக்ஷயே
அர்ஜூநஸ்ய து க்ருஷ்ணாயா: ஸூபாயா: ச அங்ககாவுபௌ’-என்பது, பாரதம், உத்யோக பர்.
அருச்சுனனுடைய கால்கள் கற்புக்கரசியாக திரௌபதியினுடைய மடியில் இருப்பதைப் பார்த்தேன்,’ என்கிறபடியே,
ஒருவர்க்கு ஒருவர் கால்மேல் கால் ஏறட்டு ஒருநாளாக இருந்த சமயத்திலே ‘சஞ்சயன் வாசலிலே வந்தான்’ என்று சொல்ல,
‘அவனைப் புகுர’ விடுங்கோள்; இவ்விருப்புக் காண உகப்பான் ஒருவன்;
உகவாதார் நெஞ்சு உளுக்கச் சொல்ல வல்லான் ஒருவன்; ஆன பின்னர் அவனை அழையுங்கோள்,’ என்றான்.
உகவாதார் கண் படல் ஆகாதாவறு போன்று, உகந்தார் கண்பட்டால் உள்ள நன்மையும்;
இப்படி அன்றோ பாண்டவர்கள் விஷயத்தில் அவன் இருக்கும்படி?

தேசம் அறிய ஓர் சாரதியாய் –
‘அருச்சுனன் ரதியாகவும் தான் சாரதியாகவும் எல்லா உலகத்திலுள்ளவர் கண்களுக்கு இலக்கானான்’ என்னும்படியே, ‘

‘பார்த்தம் ரதிநம் ஆத்மாநம்ச ஸாரதிம் ஸர்வலோக
ஸாக்ஷிகம் சகார’-என்பது, கீதா பாஷ்யம்.

இன்னார் தூதன் என நின்றான்’ பெரிய திருமொழி, 2. 2 : 3.-என்கிறபடியே.
உலகத்தில் சுவாதந்திரியமும் பாரதந்திரியமும் முறை மாறின இடத்திலும் இரஹஸ்யத்திலே அன்றோ அவை நடப்பன?
கணவனும் மனைவியும் காலைப் பிடிப்பதும் இரஹஸ்யத்திலே அன்றோ?
இப்படி இருக்கச்செய்தே அன்றோ உலகப் பிரசித்தமாம்படி தன்னைத் தாழவிட்டது?
பார்த்த சாரதி -நின்ற திருக் கோலம் -அங்கே நடந்தும் தேர் ஒட்டியும் -பாண்டவ தூதன் நடந்தாலும் இன்று இருந்த திருக் கோலம் –
உபதேசத்தால் சேவித்தும் பிரயோஜனம் பெறுவோம்
சென்று சேனையை நாசம் செய்திட்டு –
‘இதுதானும் அருச்சுனன் முதலாயினோர் அம்புகளாலே அன்று’ என்றபடி.
‘ஆயுதம் எடுக்க ஒண்ணாது’ என்று வேண்டிக்கொண்டபடியாலே, சாரதியாயிருந்து தேர்க்காலாலே உழக்கிப் போகட்டான்.
நடந்த நல்வார்த்தை அறிந்தும் –
தன் மேலே அம்பு மழையாகப் பெய்கிற இத்தண்ணிய பூமியினின்றும் தன் வரவுக்கு எதிர்கொள்வார்
இருந்த இடத்தே போய்ப் புக்கான் என்கிற பெரிய வார்த்தையை அறிந்தும்.
‘நீண்ட கண்களையுடைய கண்ணபிரான் பூமியினுடைய பாரத்தைப் போக்கி உலகத்தை எல்லாம்
மோஹிக்கச்செய்து மேலான தம் இருப்பிடத்தை அடைந்தார்’ என்கிறபடியே,
துரியோதனாதியர்கள் இல்லாத இடத்தே போய்ப் புகப்பெற்றது அன்றோ?
‘க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந:
மோஹயித்வா ஜகத் ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநமுத்தமம்’-என்பது, பாரதம், மௌசல். பர்.
‘மேலே கூறிய செயல்கள் அடங்கலும் தன் சுவாதந்திரியம் கிடக்கச்செய்தே செய்தவை அன்றோ?
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதற்குத் திரு உகிராலும் உண்டே அங்கு; அவை போல அன்றே இங்கு?
தன்னை அடைந்தவர்க்குப் பரதந்திரனாய்த் தன்னை அழிய மாறி, பாண்டவர்களுக்கு உடம்புக்கு ஈடு இடாதே-ஈடு -கவசம் –
எதிரிகள் அம்புக்கு இலக்கு ஆக்கின இந்நீர்மைக்குப் போருமோ. மேலே கூறிய குணங்கள்?’ என்கிறார்.

————————————————————————————————-

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-

கீழ் சொன்ன ஒன்பதும் அசத்தசமம் -மகா பாரதம் -நல் வார்த்தை -ஐவர்க்கு -நல்லவர்க்கு -ராஜ்யம் -அங்கே
இங்கே அனைவருக்கும் நல்லார் தீயார் இல்லாமல் மோக்ஷ சாம்ராஜ்யம் –
சர்வ பூதங்களுக்கும் சரம ஸ்லோகம் –பேசி இருப்பனவும் -வராஹ -சரம ஸ்லோகம்-மெய்ம்மை பெரு வார்த்தை –
–கிருஷ்ண சரம ஸ்லோகம் –சொல்லும் -ராம சரம ஸ்லோகம் ஆண்டாள் –
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவைபேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித -ஐஸ்வர்யம் கைவல்யம் போக்கி
-சரீர உறை-ப்ரஹ்மாவை விரோதம் தடுக்கும் ஜென்மம் சரீர அனுபந்தி வியாதி -அபரிகாரமான மூப்பு -இறப்பில் முடியுமே
-ஷட் பாவ விகாரங்கள் -விட்டு கழியும் படி -அபரியந்த துக்கம் கர்ப்ப நன்றாக ஸ்வர்க்க மனுஷ்ய -சுழல் பெரும் துன்பம்
மூலமான கர்மங்களையும் போக்கி -கை வலய அனுபவமும் போக்கி
தன் தாளின் கீழ்ச்சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே–சேர்த்தி -பாட பேதம்
மாஸூச சோக நிவ்ருத்தி சேம வைப்பு நச புன ஆவர்த்ததே
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?-தெளிந்து -விரோதி தொலைத்து ஆச்ரயணீயன் -இவனைத் தவிர வேறு யாருக்கு ஆவார்

‘ஆத்துமசொரூபம் தெரியாதபடி மறைத்துக்கொண்டிருக்கிற பிறப்பும் நோயும் மூப்பும் இறப்பும் என்னும் இவற்றை நீக்கிப் பெரிய நரகத்துன்பத்தையும்
அடியோடு நீக்கித் தன் திருவடிகளின் கீழே நித்தியமான கைங்கரியத்தைக் கொடுத்து, அவன் செய்கின்ற சேமத்தை எண்ணித் தெளிவை அடைந்து,
அவனுடைய வார்த்தையை அறிகின்றவர்கள், அக்கண்ணபிரானுக்கு அடிமை ஆவரே அன்றி மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரோ?’ என்றபடி.
வார்த்தையாவது, ‘என்னையே சரணமாகப் பற்று; நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் நீக்குகிறேன்,’ என்ற பகவத் கீதை வாக்கியம்.
‘பேர்த்து நீக்கிச் சேர்த்துச் செய்யும் சேமம்’ என்க. ( அதனை) எண்ணித் தெளிவுற்று அறிபவர் என்க.

மேலே சேதநர்க்குச் செய்த உபகாரங்கள் எல்லாம் சம்சாரத்திலே இருக்கச்செய்தே செய்தவை அன்றோ?
அவை போன்றது அன்றி, சம்சாரம் மறுவல் இடாதபடி செய்து தன் திருவடிகளிலே சேர்த்துக்கொண்டது ஒரு மஹோபகாரத்தை அருளிச்செய்கிறார்.

‘ஸர்வ தர்மாத் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்ய; மோக்ஷயிஷ்யாமி மாஸூச:’-என்பது, ஸ்ரீ கீதை, 18 : 66.

வார்த்தை அறிபவர் –
மஹாபாரதம் எல்லாவற்றாலும் சொல்லிற்றாயிற்றது ஒருவார்த்தை அன்றோ?
வார்த்தையாவது, பிரயோஜனத்தோடு கூடி இருப்பது அன்றோ?
‘என் ஒருவனையே சரணமாகப் பற்று,’ என்றதனை அன்றோ இங்கு வார்த்தை என்கிறது?
மேலே சொன்னவை அடங்கலும் கடல் போலே; அதில் அமிருதம் போலே இது.-கீதையிலும் இத்திருவாய்மொழியிலும்
மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ-
அவன் ‘என்னையேபற்று’ என்று சொல்லாநின்றார், இவர்கள் அவனை ஒழியவும் பற்றுவார்களோ?
இரஹஸ்யங்கள் எல்லாவற்றையும் வெளியிட்டான் அன்றோ அவள் சூழல் முடிக்கைக்காக?

போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை –
பரணி, கூடு வரிந்தாற்போலே, இவ்வாத்துமாவை அறிய ஒண்ணாதபடி சூழப் பொதிந்து கிடக்கிற பிறவிகள்,
அவை புக்க இடத்தே புகக்கடவ நோய், அங்ஙனேயாகிலும் சிலநாள் செல்லாதபடி இடி விழுந்தாற்போலே நிற்கிற முதுமை,
அங்ஙனேயாகிலும் இருக்க உண்ணாதபடி இவனுக்கு விருப்பம் இல்லாத இறப்பு, இவற்றை எல்லாம்.
பேர்த்து –
ஈஸ்வரனுக்கு ஒரு விரகு பார்த்துத் தள்ள வேண்டும்படி அன்றோ அவற்றின் கனம், விரகர் நெடுஞ்சுவர் தள்ள மாறுபோலே தள்ளி?
பெருந்துன்பம் வேர் அற நீக்கி –
பிறவி போனால்பின் வரக்கூடியமான கைவல்யமாகிற பெரிய துக்கத்தை வாசனையோடே போக்கி.
‘முன்பு நின்ற நிலைதான் நன்று’ என்னும்படி அன்றோ இதன் தன்மை?
அதற்கு, பின்னை ஒரு சரீரத்தை எடுத்தாகிலும் பகவானை அடைவதற்குத் தகுதி உண்டே அன்றோ? இது எப்பொழுதும் அழிந்ததே அன்றோ?

தன் தாளின் கீழ்ச் சேர்த்து-பாதரேகைபோலே இருக்கத் திருவடிகளிலே சேர்த்து.
அவன் செய்யும் சேமத்தை எண்ணி –
பின்னை இவனுடைய மீட்சி தன் புத்தி அதீனமாம்படி பண்ணிவிடுகை. ‘

‘இமாந் லோகாந் காமாந்நீ காமரூப்யநுஸசஞ்சரந்.’ தைத்திரீ. பிரு.

இவன் நினைவோடு தன் சங்கற்பத்தோடு வாசி அறும்படி செய்தல்.
இவனும் சேதனனாய் இருக்கச் செய்தே, முத்தன் ஆனாற் கொள்ளும் பல வகையான நிலைகளும் அவன் புத்தி அதீனமாய் அன்றோ இருப்பவன்?’
இவன் கையிலே இவனைக் காட்டிக் கொடுத்தாலும் அவனுக்கு அஞ்ச வேண்டாதபடியாய் இருக்கை.
எண்ணித் தெளிவுற்று –
இதனை எண்ணித் தெளிந்து. அவன்-மாம் ஏகம் சரணம் வ்ரஜ ‘என்னையே பற்று’ என்றுசொன்னதில், தலையாடியிலே, -உத்தரார்த்தம் –
‘எல்லா விரோதிகளையும் நானே போக்கி என்னைத் தருவான்’ என்று சொன்னதனைத் தெளிந்திருக்குமவர்கள்;
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி தன்னடையே வரும் -வார்த்தை பூர்வார்த்தம் —
அவனுக்கு அல்லது ஆள் ஆவரோ?
மேலே கூறிய குணங்கள் எல்லாம், ‘மண் தின்ன வேணும்’ என்று அழுத குழந்தைக்கு அதனை இட்டு
அதற்குப் பரிஹாரம் பண்ணுமாறு போலே ஆயிற்று;
இங்கு, இவற்றினுடைய ஹிதமே பார்த்துச் சம்சாரம் தொடக்கமான எல்லாத் துன்பங்களும் மறுவலிடாதபடி
போக்கித் தன் திருவடிகளின் கீழே வைத்துக் காத்த பெரிய நீர்மைக்குப் போருமோ மேலே கூறியவை அடங்கலும்?

மேலே செய்த பரிஹாரங்கள் கிரந்தி கிடக்கச் செய்யும் பரிஹாரம் போலே சம்சாரம் கிடக்கச் செய்த பரிஹாரங்கள் அன்றோ?
அது புண் இல்லாதபடி அறுத்து நோக்குவாரைப்போலே இதிற் சொல்லுகிற குணம்.
மேற்கூறியவை சம்சாரிகள் இச்சையாலே செய்தவை; இது ஈஸ்வரன் தன்னிச்சையாலே செய்ததன்றோ?

————————————————————————————

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-

விசத தமமான ஞானம் கொண்ட சித்தம்
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்-உபாயம் உபேயம் அவனே என்ற தெளிவு -மோக்ஷம் கொடுக்கும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்-விடேன் என்று தெளிவு அவனுக்கு -இவன் கலங்கின அன்றும் -ஆஸ்ரித ஸூலபன்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்-சம்பந்திகளை தெளிவு படுத்தும்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.-பாபம் திரும்பி வரும் மூன்று உலகத்து உள்ளே –குண த்ரயம் -கர்ம நிபந்தம்
-ஸூத்த சத்வ ஞானம் கொண்ட சிந்தை –

ஞானத்தைப் பெற்று அந்த ஞானத்திற்கு இடையீடு இல்லாமல் நின்ற அடியார்கட்கு மோக்ஷ உலகத்தைத் தருகின்ற ஞானமே சொரூபமான
கண்ணபிரானை. அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட தெளிந்த ஆயிரம் திருப்பாசுரங்களுள் இவை
பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள், பரந்திருக்கின்ற மூன்று உலகத்திற்குள் தெளிந்த சிந்தையினையுடையராவர்.

முடிவில், ‘இத்திருவாய்மொழி கற்று வல்லவர்கள் சம்சாரத்துக்குள் இருந்து வைத்தே சுத்த பாவர்’ என்கிறார்.

தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு-
‘பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் அவனே’ என்று அறுதியிட்டு, பின்னர் நாட்டார் செயல்களைக் கண்டாதல்,
போலி வார்த்தைகளைக் கண்டாதல் பிற்காலியாதே நின்றவர்களுக்கு.

நாட்டார் செயல்களாவன, சாதன அநுஷ்டானங்கள். போலிவார்த்தைகளாவன: உபாயபல்குத்துவம் – சாதனம் சிறிதாய் இருத்தல்,
உத்தேஸ்யதுர்லபத்துவம் – பேறு கிடைத்தற்கு அரியதாய் இருத்தல்,
ஸ்வகிருததோஷபூயஸ்த்வம்-தன்னால் செய்யப்பட்ட பாவங்கள் பலவாக இருத்தல் என்னுமிவை.

பாரதப் போரிலே நின்று அருச்சுனனை நோக்கி, ‘நான் சொன்ன இது உனக்குத் தொங்கிற்றோ? எதிரே போந்ததோ?’ என்ன,
‘நிலைபெற்றேன்’ என்ன,
‘ஸ்த்திதோஸ்மி’ என்பது, ஸ்ரீ கீதை, 18 : 73.
‘கரிஷ்யே வசநம் தவ’ என்பது, ஸ்ரீ கீதை, 18 : 72.

அவன், ‘ஆனால் நம் காரியம் செய்யப் பார்த்தது என்?’ என்று கேட்க,
‘உன்னுடைய வார்த்தையின்படி செய்கிறேன்’ என்கிறபடியே, ‘தேவரீர் ஏவின அடிமை செய்யக் கடவேன்,’ என்றான் அன்றோ?
‘அருச்சுனன்தான் எம்பெருமானைப் பெற்றானோ,இல்லையோ?’ என்று நம்பிள்ளை சீயரைக் கேட்க,
‘உமக்கு அது கொண்டு காரியம் என்? இது சொன்னவன் எல்லார்க்கும் பொதுவானவனாகில்,
பகவானுடைய வார்த்தை என்னுமிடம் நிச்சயமாகில். தங்கள் தங்களுடைய கர்மங்கட்குத் தகுதியாகவும் ருசிக்குத் தகுதியாகவும் பெறுகிறார்கள்;
பெற்றவர்களை ஆராய்ந்து பார்த்து அதனாலே அன்றே நாம் பற்றப் பார்க்கிறது?’ என்று அருளிச்செய்தார்.
சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் இருந்தால், அது குடித்துத்தாகம் கெட்டவனைக் கண்டு அன்றே
தாகம் கொண்டவன் தண்ணீர் குடிப்பது?
இன்பக் கதி செய்யும் –
தனக்குமேல் ஒன்று இல்லாததான ஆனந்தத்தோடு கூடிய பேற்றினைப் பண்ணிக் கொடுக்கும்,
தெளிவுற்ற கண்ணனை
-இவன் தெளியமாட்டாத இழவு தீர இவனுக்கு நித்தியமான கைங்கரியத்தைக் கொடுக்கையிலே தான் தெளிந்தபடி
இருக்கும் கண்ணபிரானை. ‘நான் நினைக்கிறேன்’ என்பது போலே.

ஸ்திதே மநஸி ஸூஸ்வஸ்தே சரீரே ஸதி யோநர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்’
‘ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மித்பக்தம் நயாமி பரமாம் கதிம்’-என்பன, வராஹசரமம்.

தெளிவுற்ற ஆயிரம் –
மலையிலே கலங்கின நீரானது ஒரோ பிரதேசங்களில் வந்து தெளிந்து உபயோகத்திற்குத்தகுதியாமாறு போலே

‘மண்ணாடின ஸஹ்ய ஜலம் தோதவத்திச் சங்கணித் துறையிலே துகில்
வண்ணத் தெண்ணீராய அந்தஸ்தத்தைக் காட்டுமாபோலே அல்ப ஸ்ருதர்
கலக்கின ஸ்ருதி நன்ஞானத்துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை
அறிவித்தது,’ என்பது, ஆசார்யஹ்ருதயம், சூத். 71.

‘அந்த மிலாமறை ஆயிரத்து ஆழ்ந்த அரும்பொருளைச்
செந்தமி ழாகத் திருத்தில னேல்நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும்என் னாம்தமி ழார்கவியின்
பந்தம் விழாஒழு கும்குரு கூர்வநத பண்ணவனே.’-என்றார் கம்பநாடரும். சடகோபரந். 14.

ஒரு சிலரே ஓதத் தகுந்ததாய்க் கூளமும் பாலப்பசினும்போலே ஒன்றே அறுதியிட்டுப் பிரிக்க ஒண்ணாதபடியாயிருக்கிற
வேதார்த்தாமானது, எல்லாரும் படிக்கத்தகுந்ததாய் எல்லா ஐயங்களும் தீர்ந்து தெளிந்தது அவர் பக்கலிலே வந்தவாறே.
இவை பத்தும் வல்லார் அவர் தெளிவுற்ற சிந்தையர்-
இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள், இவ்வாழ்வார்தம்மைப் போலே தெளிவுற்ற நெஞ்சினையுடையராவர்.
‘அப்படித் தெளிவது தேச விசேடத்திலே போனாலோ?’ என்னில்,
பாமரு மூவுலகத்துள்ளே –
‘பாபம் நிறைந்திருக்கிற தேசத்திலே’ என்றபடி.
அவ்வருகே ஒரு தேச விசேடத்தே போனால் பெறக்கடவே தெளிவை அதற்கு எதிர்த்தட்டான இங்கே இருந்தேயுடையராவர்;
‘சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே தெளிவுற்ற சிந்தையர்:
குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த்தட்டான பரமாத்துமாவையும் தன் வழி ஆக்க வல்ல இவ்விபூதியிலே இருந்து வைத்தே சுத்த பாவராய் இருப்பர்.
பாபம் என்பது, ‘பா’ எனக் கடைக்குறைந்து நிற்கிறது.

—————————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சர்வ ஆஸ்ரித ரக்ஷண அவதார குணவத்வம் -அதி பஞ்சமம்
ஆதமைக்க ரக்ஷண பரான்
அவதார ஹேதூன்
அன்யாத கதம் மதி மதாம் யது அவ போதை நீயும்
இத்யான்ய பர்யம்
ததேக பரனாக இருக்க

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சர்வாஸ்ரயம் ஸ்நேஹம்
பிரகடயித்தி ஹரி
சாகேத -அயோத்யா ராமன் – முக்தி சிரசரா
சர்வசோ ரக்ஷகத்வாத்
சைத்யே சாயுஜ்ஜியே தாநாத்
ஜகத் உதய க்ருதே
பூமி தேவ்யா உத்த்ருதே
யாஞ்சார்த்தம் வாமனா
சிவ பஜக முனி மோஷார்த்தம் தாநாத்
சம்சாரம் அழித்து மீளா மோக்ஷம் அளித்து-

——————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 65-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் விஜயங்களுக்கு அடியான விபவங்களை இழப்பதே என்று வெறுத்த படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அதாவது
கீழ்ச் சொன்ன விஜய பரம்பரைக்கு அடியான விபவ குணங்களை அனுசந்தித்து
படுக்கைக்கு கீழே தனம் கிடக்க கால் வீங்கிச் சாவாரைப் போலே
இம் மகா நிதி யுண்டாய் இருக்க இவர்கள் இத்தை இழந்து அனர்த்தப் படுவதே
என்று சம்சாரிகள் இழவுக்கு வெறுக்கிற கற்பார் ராம பிரானில் அர்த்தத்தை
கற்றோர் கருதும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————-

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா –65-

———————————————–

வியாக்யானம்–

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம் பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து –
அதாவது –
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் கற்ற
ஸ்ரீ சக்கரவர்த்தி-ஸ்ரீ வசுதேவர் -ஸ்ரீ ஜாம்பவான்-ஸ்ரீ மகா ராஜர் -ஸ்ரீ திருவடி
முதலாய் உள்ள அவதார விஜய ஹர்ஷிகள் ஆனவர்கள் ஆதரிக்கும் விஜயங்களுக்கு எல்லாம்
ஆஸ்ரமாய் உள்ள அவதாரமான ஸ்ரீ விபவ குண ஸ்வ பாவங்களை —
அவதாரம் தோறும்-தத் அனுகுணமாக குணங்களும் இறே பேதித்து இருப்பது –
அவை தான் ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாகையாலே-அவற்றின் ஸ்வபாவத்தை உற்று உணர்ந்து
அவற்றின் படியை மேல் எழ அன்றிக்கே அந்தரங்கமாக ஆராய்ந்து –
அதாவது –
ராமோ ராமோ ராம இதி -என்றும்
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
நடந்தமை கேட்டும் நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும் –
தன்மை அறிவாரை அறிந்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பாரோ -என்றும்
தோற்றிய சூழல்கள் சிந்தித்து தன்மை அறிபவர் தாம் அவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
கேழல் திரு உருவாய் ஆயிற்று கேட்டும் உணர்ந்தவர்
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி ஆவரோ -என்றும்
கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டும் கேட்டும் உணர்ந்தவர்
கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
கொண்டு அங்கு தன்னோடும் கொண்டுடன் சென்றது உணர்ந்தும் கண்டும் தெளிந்தும்
கற்றார் கன்னற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
இரணியன் ஆகத்தை மல்லல் அரி உருவாய்ச் செய்த மாயம் அறிந்தும் செல்ல உணர்ந்தவர்
செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ -என்றும்
நடந்த நல் வார்த்தை அறிந்தும் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்று –மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
இப்படி பத்தும் பத்தாக ஆராய்ந்து -என்கை-

மண்ணில் உள்ளோர் தம் இழவை –
அவன் குணம் இப்படியாய் இருக்க இத்தை இழப்பதே -என்று
பூமியில் உண்டானவர்கள் உடைய ஸ்ரீ பகவத் குண அனுபவ அலாபத்தை –

வாய்ந்து உரைத்த மாறன் சொல் –
ஸூலபராய்க் கிட்டி நின்று அந்தரங்கமாக அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியானது-

பண்ணில் இனிதான தமிழ்ப் பா –
நட்ட ராகத்தோடு கூடி திராவிட சப்த ரூபமான சந்தஸ் ஸூ
இப்படி கானத்தோடு கூடின இதுவும் ஒரு சந்தஸ்ஸே என்று ஈடுபாடாய் இருக்கிறது-

——————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: