பகவத் விஷயம் காலஷேபம் -150- திருவாய்மொழி – -7-4-6….7-4-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6-

இரண்டு திரு மணத் தூண்களுக்கு நடுவில் அரங்கன் -ஒரு தூணிலே தோன்றிய நரசிம்மன் -எங்கும் உளன் கண்ணன்
-அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப்பிரான் -சிங்க வேள் குன்றம் -ஹிரண்ய வத விருத்தாந்தம்
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை-ஷயம் அடைந்த -திசை சூழ சிகப்பு -பொன் பெயரோன் -கோபம் ரத்தம் சிகப்பு
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை-கீழ்து பிளந்த சிங்கம் -புன் செக்கர் சந்த்யா காலம் ஓத்ததால் அப்பன்-மலை கீழே -பிளந்த சிங்கம் ஒத்ததாக
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.—மலை போன்ற ஹிரண்யனை கிளித்தான்-

‘பகற்காலம் நீங்கிய புல்லிய செவ்வானம் போலே, ஆகாயமும் திக்குகளும் சூழ எழுந்து இந்தப்பெருக்கு ஆகும்படியாக,
மலை கீழேயாகும்படி மேலே இருந்துகொண்டு பிளந்த சிங்கத்தின் செயலை ஒத்திருந்தது.
என்னப்பன் மிக்க துயரைச் செய்து அசுரனான இரணியனைக் கொன்ற தன்மையானது’ என்க.
செக்கர்-அந்தி வானம்; அந்தி நேரமுமாம். ‘புன்’ என்பது காலத்தின் சிறுமையைக் காட்ட வந்தது.
சூழ எழுந்து உதிரப் புனலாக அசுரரைக் கொல்லுமாறு ஒத்தது என்க.

இரணியனைக் கொன்ற செயலை அருளிச்செய்கிறார்.

போழ்து மெலிந்த-
‘பெரும்பாலும் பகற்பொழுது போயிற்று’ என்னுமாறு போலே, பொழுது போகாநிற்கச்செய்தே.
புன் செக்கரில்
-செக்கர்வானம் இடுகிற அளவிலே. என்றது, ‘அவன் வரத்தில் அகப்படாத சந்தியா காலத்திலே’ என்றபடி
‘இரவிலும் படகில்லேன்; பகலிலும் படகில்லேன்’ என்று வரங்கொண்டானே.
வான் திசை சூழும் எழுந்து உதிரப் புனலா-
பரப்பையுடைத்தான ஆகாசம் திக்குகள் அடங்கலும்,
பள்ளங்கொண்ட இடம் எங்கும் வெள்ளம் பரக்குமாறு போலே குருதியானது கொழித்துப் பரக்கும்படி.
மலை கீழ்து பிளந்து சிங்கம் ஒத்ததால் –
‘ஒரு மலையைக் கீழே இட்டுக்கொண்டு மேலே இருந்து அதனைப் பிளந்த சிங்கத்தை ஒத்தது’ என்னுதல்.
அன்றிக்கே, ‘கிழித்துப் பிளந்த சிங்கத்தை ஒத்தது’ என்னுதல்.
அன்றிக்கே ‘மகிழ்ந்து பிளந்த சிங்கத்தை ஒத்தது’ -என்னுதல்.
‘இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம்’ திருச்சந்த விருத். 62.எனக்கடவது அன்றோ?
மலையை கீழே விட்டு –
இரண்டாகா அநாயாசனே இரண்டு கூறாக –
மகிழ்ந்து கீழ்து -மரை இதழ் தாமரை இதழ் முதல் எழுத்து போனால் போலே தலைக்கு குறைத்தல் -மகரம் போய் நீட்டி கீழ்ந்து -நகர ஒற்று போய்

அப்பன் ஆழ்துயர் செய்து –
நரசிங்கத்தினுடைய மொறாந்த முகத்தைக் கண்டபோதே, மேல் போய் அனுபவிக்கக்கூடிய அனுபவமடைய
அப்போதே அனுபவித்து அற்றான். என்றது,
‘பல காலம் பகவத் பாகவத விஷயங்களிலே செய்து போந்த தீமை முழுதினையும் அரைக்கணத்திலே அனுபவித்து அற்றபடி.
மிகவும் துக்கத்தை விளைத்து.
அசுரரைக் கொல்லுமாறே-
அசுரனைக் கொன்றபடி. ‘இதனால், என் சொல்லியவாறோ?’ எனின்,
‘எல்லார்க்கும் பொதுவாளனாய் நிற்கும் நிலை ஒழிய. தாய்தந்தையர்கள் முகமாகக் குழந்தைகள் பக்கலிலே
வத்சலனாய் நிற்பது ஒரு நிலையும் உண்டு அன்றோ? அது குலைந்தால், அவன் பகைவனாயும் நிற்கும் அன்றோ?
அப்போதும் இவன்தான் முன்னின்று பாதுகாப்பான்’ என்பதனைத் தெரிவித்தபடி.
இத்தாலும் சொல்லிற்றாயிற்று, ஆபத்துக் கனத்ததனையும் கடுக வந்து இரட்சிக்கும் என்கை.
தமப்பன் பகையாக உதவினவன், அவனில் அண்ணியனான தான் தனக்குப் பகையானால் உதவச் சொல்ல வேணுமோ?
‘தனக்குத் தானே அன்றோ பகைவன்?’ என்கிறபடியே
,உத்தரேத் ஆத்மநா ஆத்மாநம் நஆத்மாநம் அவஸாதயேத்
ஆத்மைவ ஹி ஆத்மநோ பந்து; ஆத்மைவ ரிபு: ஆத்மந:’-என்பது, ஸ்ரீ கீதை, 6 : 5.

————————————————————————————————–

மாறு நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7-

லங்கா பங்கா பிரகாரம்
மாறு நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்-சாரிகை -ஏசல் போலே திரிந்து -எதிர் எதிராக -அம்புகள் ஆகாய பரப்பு அடங்க லும்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல் -மலை போலே -சவங்கள் புரண்டு விழா
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்-உதிர புனலால் ஆறு ஓடி கடலில் கலக்க -கடலே சிவந்து -கீழே புனலாக -ஹிரண்யன் –
ஆஸ்ரித உபகாரகன் சக்கரவர்த்தி திரு மகன் -நீறு பட இலங்கை செற்ற நேரே-பஸ்மாமாம் படி -செவ்வைப் போர்

‘எதிர் எதிராக நிரைத்து ஒலிக்கின்ற பாணங்களாலே இனம் இனமாக நூற்றுக்கணக்கான பிணங்கள் மலைகளைப் போன்று
புரண்டு விழவும் கடலானது இரத்தத்தாலே நிறைந்து ஆறுகளிலே புக அதனாலே ஆறுகள் எல்லாம் உதிரப்புனல் ஆகும்படியும்,
என்னப்பன் இலங்கையானது சாம்பலாகும்படி அழித்த நேர்மை இருந்தது,’ என்றபடி.
‘அப்பன் இலங்கை செற்ற நேர். பிணம் மலைபோற்புரளவும், கடல் ஆறு மடுத்து உதிரப்புனல் ஆகும்படியும் இருந்தது’ என்க.
‘(குருதியாகிய) ஆறு மடுத்துக் கடல் உதிரப்புனலா’ எனலுமாம்.

இராம விருத்தாந்தத்தை அருளிச்செய்கிறார்.

மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் –
சாரிகை வந்த சடக்கு, நாலு திசைகளிலும் விட்ட அம்புகள் எதிர் அம்பாய் ஒன்றோடு ஒன்று பொருது
கலார் கலார் என்று ஒலிக்கின்ற ஒலி, கடல் இரைத்தாற்போலே இராநின்றது.
சாரிகை வந்த சடக்கு, தன்னில்தான் எதிரம்பு கோத்ததுகாணும். -அஸ்தரம் –மந்திரித்து –சஸ்திரம் -மந்த்ரம் இல்லா அம்புகள் .
இனநூறு பிணம் மலை போல் புரள-
நூறு நூறாக இனம் இனமான பிணங்களானவை, அம்பு பட்டு உருவின சடக்காலே உயிர் ஓரிடத்து ஒதுங்கப்பெறாதே
இரண்டு துண்டங்களிலும் கலந்து மலை போலே கிடந்து துடிக்கிறபடி.
கடல் ஆறு மடுத்து உதிரப்புனலா –
‘ஆபூர்ய மாணம் அசலப்ர திஷ்டம்’-என்பது, ஸ்ரீகீதை, 2:70. ‘அசலப்ர திஷ்டம்’ என்றது, ‘கரையைத் தாண்டாது’ என்றபடி.

தண்ணீர் கூட்டம் தானாய் நிறைந்திருக்கிறதாயும் ஒரேவிதமாயும் இருக்கிற கடல்’ என்றபடியே,
புக்க எல்லாம் கொண்டிருக்கக்கூடிய கடல், இரத்த வெள்ளத்தாலே நிரம்பி ஆறுகளிலே மடுக்கும்படி.
‘வையமூடு பெருநீரில் மும்மை பெரிதே’பெரிய திருமொழி. 11. 4 : 4.- என்றார் அன்றோ?
நீறு பட ‘சுடுகாட்டுக்கு ஒப்பாக’ என்று சொன்னபடியே,
சிதா தூமாகுலபதா க்ருத்ர மண்டல ஸங்குலா
அசிரேணைவ லங்கா இயம் ஸ்ஸஸாந ஸத்ருஸூ பவேத்’என்பது, ஸ்ரீராமா, சுந். 26 : 26.

சாம்பலாகும்படியாக.
இலங்கை செற்ற நேரே –
இலங்கை செற்ற பொழுது. ‘நேர்’ என்பது, ‘நேரம்’ என்று காலத்தைக் காட்டுவதாம்.
‘இலங்கை செற்ற பொழுது மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்பது அந்வயம்.
அன்றிக்கே, ‘இலங்கையைச் செற்ற வாய்ப்பு’ என்னுதல்.
அன்றிக்கே, ‘மாயாப் பிரயோகத்தால் அன்று, செவ்வைப் பூசலிலே நின்றுகாண் இலங்கையை அழித்தது’ என்னுதல்.
நேர் – நேராக என்றபடி. அப்போது, ஏகாரம்: தேற்றகாரம். ‘நேர்மையாலே இலங்கை செற்றது’ என்றபடி.

——————————————————————————————-

நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8-

பாண யுத்த பிரகாரம்
நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்-கோழி மயில் அர்த்தம் -ஸ்கந்தன் தேவ சேனாபதி -கார்த்திகையானும் –வாணன் பிழை பொறுத்த
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்-ருத்ரன் -போலே அக்னி –ஜாதி ஏக வசனம் -மோடி கிருத்தியை
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்-அனிருத்ரனுக்கு உபகாரகன் -சிவன் -சக்தி அதிசயம் கொண்டவன் -முன் நிற்க மாட்டாமல் முதுகிட்டு போனான் –
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே-வர பலாதிகள் -துணித்த அன்றே -கண்டீர் பிரசித்தம் –

‘என்னப்பன், எதிரிட்டு வந்து தோற்ற வாணனுடைய வலிய தோள்களை அழித்த காலத்தில், கோழிக்கொடியையுடைய முருகன் எதிரிட்டுத் தோற்றான்;
அதற்குமேல், எரிகின்ற அக்கினி தேவனும் தோற்றான்; அதற்கு மேலே, மூன்று கண்களையுடைய சிவபெருமானும் தோற்றான்’ என்றபடி.
கண்டீர்-முன்னிலை அசைச்சொல், நேர் சரிதல்-எதிர்த்துத் தோற்றல். கோழிக்கொடி, முருகனுக்கு உரியது.

வாணன் திண்தோள்களைக் கோண்ட வெற்றிச் செயலை அருளிச்செய்கிறார்.

கோழிக்கொடி கொண்டான் நேர் சரிந்தான் –
மயிலைக் கொடியிலேயுடையனாய்த் தேவசேனாதிபதியாய் இளமறியாய்த் தூசித்தலையிலே நின்ற சுப்பிரமணியன்
தோற்றரவிலே கெட்டான்.
பின்னும் நேர் சரிந்தான் எரியும்அனலோன் –
அவ்வளவிலே நாற்பத்தொன்பது அக்கினிகளும் பெரிய கிளர்த்தியோடே எரிந்து தோன்றின:
49 மருத் கூட்டங்களும் உண்டே -ஜாடராக்கினி வயிற்றுக்குள்
அவையும் எல்லாம் பின்னிட்டன.
பின்னும் நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி –
‘மகன் கொடி கட்டிக்கொண்டு சென்று இளிம்புபட்டான்’ என்று தன் கொடியைப் பொகட்டு வந்து தோற்றின உடனேயே,
கண்ணைப் புதைத்துக் கெட்டு ஓடத் தொடங்கினான்.
அவன் மறைத்துக்கொண்டு போக, இவர், ‘முக்கண் மூர்த்தி கண்டீர்’ என்று கண்ணைக் காட்டிக் கொடுக்கிறார்.
எல்லாம் செய்தாலும் உடம்பில் அடையாளத்தை மறைக்கப் போகாதே அன்றோ?
‘வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள் அந்த அந்த ஆகுலம்’ என்கிறபடியே, பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாத வியாகுலம் அன்றோ அது?
புற முதுகு காட்டி ஓடி -ஸ்தோத்ரம் பண்ணி -போன்ற அந்தவந்த வியாகுலம்

அப்பன் –
காரணம் இல்லாமலே பாதுகாப்பவன்.
நேர்சரி வாணன் –
பிரதானனான வாணன் தான் வந்து தோற்றினான்;
அவனும் பின்னிட்டு ஓடத்தொடங்கினான் என்னுதல்;
அன்றிக்கே, ‘நின்றவிடத்தே நின்று முதுகு காட்டினான்’ என்னுதல்.
திண் தோள் கொண்ட அன்று –
கையில் ஆயுதம் போகட்டாரையும், மயிர் விரித்தாரையும் கொல்லக்கடவது அன்று.
தன்னோடு ஒக்க ஆறல்பீறலாய் இருப்பது ஒரு தேவதையைப்பற்றி, அரணுக்குள்ளே இருப்பாரைப் போலே
திண்ணியனாய் இருந்தானாயிற்று. புருடோத்தமனைப் பற்றி இருப்பாரைப் போலே, கபாலிகந்தரைப் பற்றி நிர்ப்பரனாய் இருந்தான்.
சர்வேஸ்வரனைப் பற்றி ‘எதினின்றும் அஞ்சுகிறான் அல்லன்’ என்று இருப்பாரைப் போன்று எண்ணினான்.

‘நபிபேதி குதஸ்சந;’ என்பது, தைத். உப. ஆநந்’.

‘இடராக வந்தென்னைப் புன்சிறு தெய்வங்கள் என்செயுமான்
இடாரக வன்பிணி மாநாக மென்செயும் யான்வெருவி
இடராக வன்னி புனல்இடி கோள்மற்று மென்செயும்வில்
இடராக வன்அரங் கன்திருத் தாள்என் இதயத்ததே.’-என்பது, திருவரங்கத்தந்தாதி, 39.

திண்தோள் கொண்ட –
‘உஷை தந்தை அற்றவள் ஆக ஒண்ணாது’ என்று கரத்தைக் கழித்துவிட்டான்.
‘கர பாதை அன்றோ இவனைக் கண்டார் கால்களில் எல்லாம் விழச் செய்தது’ என்று அவனுக்குள்ள கரத்தைக் கழித்து, இறையிலியாக்கிவிட்டான்.
‘எந்தக் கைகள் அந்தப் பகவானைப் பூஜிக்கின்றனவோ அவைதாம் கைகள்’ என்றும்
,‘ஸா ஜிஹ்வா யாஹரிம் ஸ்தௌதி தத்சித்தம் யத்ததர்பிதம்
தாவேவ ச கரௌ ஸ்லாக்யௌ யௌ தத் பூஜா கரௌ கரௌ’-என்பது, ஸ்ரீவிஷ்ணு தர்மம்

‘சர்வேஸ்வரனை வணங்கும்பொருட்டு விசித்திரமான இந்தச் சரீரமானது படைக்கப்பட்டது’ என்றும் விதித்துக் கிடக்கச் செய்தேயும்,
விசித்ரா தேஹஸம்பத்தி: ஈஸ்வராய நிவேதிதும்’ என்பது, ஸ்ரீவிஷ்ணு தர்மம்.
ஆயிரங்கைகளையும் கொண்டு சம்பந்தம் இல்லாத விஷயத்திலே காரியங்கொள்ளுகையாலே அவற்றையே கழித்துவிட்டான்.
அந்தத் தேவதைதானே வந்து, ‘வரம் தந்த நீயே அதனைக் கழிக்கவோ?
நீ இவனைக் கொல்லில் என் காலிலே குனிவார் இல்லை இனி’ என்று பல்லைக் காட்டுகையாலே விட்டான்.
‘கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ’- ‘‘க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம்
பரேஸம் பரமாத்மாநம் அநாதி நிதனம் பரம்’–என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 33 : 4

மஹாபாஹோ, த்வாம் புருஷோத்தமம்., ஜாநே’-என்று ‘தோள்வலி கண்ட பின்பு உன்னைச் சர்வேஸ்வரன் என்று அறிந்தேன்’
என்னும் சிவனுடைய மறுதலை எண்ணத்தால் தோன்றும் பாவத்தை அருளிச்செய்கிறார்,-‘தேவரை’ என்று தொடங்கி.

தேவரை உள்ளபடி அறியாதே அம்பை விட்டுக்கொண்டு நின்ற நிலையைக் கண்டு‘இதர ஸஜாதீயனோ!’ என்று இருந்தேன்;
‘கழுத்திலே கயிறு இட்ட பின்புகாண் நான் பூனை என்று அறிந்தேன்’ என்பாரைப் போலே.
‘இதனால் என் சொல்லியவாறோ?’ எனின், ஈஸ்வரனை ஒழிந்தார் அடங்கலும்,
தாங்கள் உளரான போது காப்பாற்றுகின்றவர்களாகச் செருக்குக்கொண்டு.
ஆபத்து வந்தவாறே இவர்களைக் காட்டிக் கொடுத்துத் தங்கள் தங்களைக்கொண்டு தப்புவர்கள்;
‘எல்லா நிலைகளிலும் தன்னை அழிய மாறியாயினும் அடியார்களைக் காப்பாற்றுவான் சர்வேஸ்வரன் ஆகையாலே,
அடையத் தக்கவன் இவனே; அல்லாதார் பற்றத்தக்கவர் அல்லர்,’ என்னும் இடம் சொல்லியபடி.

————————————————————————————–

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9-

ஸ்ருஷ்ட்டி தொடங்கி –ஜகத் ஸ்ருஷ்ட்டி பிரகாரம் அருளிச் செய்கிறார்
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்-பஞ்ச பூதங்கள் -ஹேது-காரணங்கள் -பர்வதாதி பதார்த்தங்கள் -கார்ய வர்க்கங்கள் –
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்-சந்த்ர ஆதித்யர்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்-மழை அதனால் வாழும் பிராணிகள் வர்ஷம் பிரதர் தேவதைகள் மற்றும் பிராணி பதார்த்தங்கள்
அன்று முதல் உலகம் செய்ததுமே.-பிரதமத்தில் லோகத்தை உண்டாக்கி
க்ரம ஸ்ருஷ்ட்டி -அன்று -ஆகாசம் தொடங்கி -சப்த தன்மாத்ராம் படைத்து ஆகாசம் -இடை வெளி இல்லாமல்
எல்லாம் யுக பத் ஏக கால ஸ்ருஷ்ட்டி -அனைத்தும் ஒன்றாக படைத்து –

அப்பன் உலகத்தைப் படைத்ததும் ஆதியான சிருஷ்டி காலத்திலே; பூமியும் தண்ணீரும் நெருப்பும் காற்றும் ஆகாசமும் மலை முதலான
பொருள்களும் ஆகிற இவற்றைப் படைத்ததும் அக்காலத்திலே; சூரிய சந்திரர்களையும். பிற பொருள்களையும் படைத்ததும் அக்காலத்திலே;
அதற்கு மேலே, மழையையும் உயிர்களையும் தெய்வங்களையும் பிற பொருள்களையும் படைத்ததும் அக்காலத்திலே.

படைப்பும் உலகத்தாரால் செய்யப்படுவது அன்றிக்கே வேறுபட்டது ஒரு செயல் ஆகையாலே,
அதனையும் வெற்றிச்செயலாக அருளிச்செய்கிறாராகவுமாம். -விசஜாதிய சேஷ்டிதம் -விஜய பரம்பரையில் இதுவும் —

அப்பன் முதல் உலகம் செய்ததும் அன்று –
மஹோபகாரகன் முதலிலே உலகத்தை உண்டாக்கிற்றும் ஆதியான படைப்புக் காலத்திலே.
அதற்குக் காரணமாக ‘மண் நீர்’ என்பது முதலாக அருளிச்செய்கிறார்.
அன்றிக்கே, முன்னும் பின்னும் கிருஷ்ணனுடைய செயலைப் பற்றி அருளிச்செய்கையாலே,
‘வாணனைத் தண்டித்த அன்று கண்டீர் உலகத்தை உண்டாக்கினான்’ என்று அதனையே பேசுகிறார் என்னுதல்.
பயிர் செய்கையே அன்றே வேண்டுவது? பயிர் அழியாமல் நோக்கின அன்றே அன்றோ – பயிர் செய்ததாவது?

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் –
காரணங்களோடு காரியங்களோடு வாசி அற உண்டாக்கினபடி.
சுடர் இரண்டு –
சந்திர சூரியர்களை உண்டாக்கினபடி.
பிறவும் –
மற்றும் உண்டான நக்ஷத்திரங்கள் முதலான ஒளிப்பொருள்களும்.
பின்னும் அன்று மழை உயிர் தேவும் மற்றும் –
அதற்கு மேலே மழை பெய்யக் கடவதான மேகம், மழையாலே உயிர் வாழக்கூடிய ஆத்துமாக்கள்,
மழையைத் தோற்றுவிக்கின்றவர்களான தேவர்கள், மற்றும் உண்டான திரியக்குத் தாவரங்கள் முதலானவைகள்.
அப்பன் –
எல்லாப்பொருள்களையும் தோற்றுவித்தவன்.
அன்று முதல் உலகம் செய்ததுமே –
‘தனித்தனியே சொல்லவேணுமோ?
வாணனைந் தண்டித்து ஈர்அரசு அறுத்த அன்றுகண்டீர் இவற்றை எல்லாம் படைத்தது?’ என்கிறார் என்னுதல்.
அன்றிக்கே, ‘பெயர் வடிவங்களை இழத்து,
‘‘சத் ஒன்றே’ இருந்தது என்கிற நிலையில் ‘பல பொருள்கள் ஆகக் கடவேன்’ என்று நினைத்த அன்று முதல்’ என்றுமாம்.

‘ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்’-என்பது, சாந்தோக்யம். 6. 2 : 1.

பஹூஸ்யாம்’ என்பது, சாந்தோ. 6. 2:3.

———————————————————————————

மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொ ரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–7-4-10-

முன்னும் பின்னும் கிருஷ்ணாவதாரம் -அதனால் சிருஷ்டியும் வாணன் முடித்த அன்று -என்று அருளிச் செய்தார் முன் பாசுரத்தில்
கோவர்த்தன உத்தரணம் அருளிச் செய்கிறார் -16 சக்கர வண்டி -திடலில் -சேர்த்து –
த்ரோணாச்சலம் பிள்ளை கோவர்த்தன மலை-கீழே வைத்தால் நகர மாட்டேன் -பிருந்தாவனம் அருகில் பாரம் மிக்கு –
கிருஷ்ணன் வருவார் என்றே முன்பே அமர்ந்ததே
திரை உங்கள் கண் என்றான் -அஹம் கோவர்தநோஸ்மி என்றான் -பரதேவதை இருக்க தேவதாந்த்ர போஜனம் பண்ணுவதோ
-அன்றதோர் பூதமாய் ஆயர் விழவின் கண் -ஆயர் அஞ்ச அஞ்சா முன் –
மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை-கீழ் மேல் எடுத்தபடியாக -அருவிகள் சுனைகள் பொழிய -பிளிறிச் சொரிய -ரக்ஷிக்கும் மழை இது
-யானை குதிரைகள் புரள வாய் நிறை நீர் பிளிறிச் சொ ரிய இன-கோஷத்துடன் சொரிய
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்-ஆயரையும் பசுத் திரளையும்-ஆபன் நிவாரகன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே-விநாசம் கொடுக்கும் மழை என்பதால் தீ மழை -கோவர்த்தனம் -எடுத்து ரக்ஷித்தான்

மேய்க்கின்ற பசுக்கூட்டங்கள் கீழே புகும்படியாகவும், மேலேயுள்ள விலங்குகள் புரண்டு விழும்படியாகவும், சுனைகளின் வாயளவும்
நிறைந்திருக்கின்ற தண்ணீரானது ஒலித்துக்கொண்டு சொரியும்படியாக, பசுத்திரளும் ஆயர்பாடியும் அங்கே ஒடுங்கும்படியாகவும், என்னப்பன்
கொடிய மழையினின்றும் பசுக்களையும் ஆயர்களையும் பாதுகாப்பதற்காகக் கோவர்த்தனம் என்னும் மலையைக் குடையாக எடுத்தான்.
‘புக, புரள, சொரிய, ஒடுங்க, குன்றம் எடுத்தான்’ என்க. பாடி-ஆயர் பாடி.

கோவர்த்தனத்தைக் குடையாகப் பிடித்துப் பாதுகாத்த செயலை அருளிச்செய்கிறார்.

மேய் நிரை கீழ் புக –
மேய்கிற பசுக்கள் புல்லும் உமிழாதே அசையிட்டுக்கொண்டு கீழே புகுர.
மா புரள –
மலையை எடுத்து மறிக்கையலே அங்கு வாழ்கின்ற மிருகங்கள் எல்லாம் புரண்டு விழ.
சுனை வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய-
சுனையிடத்து நிறைந்து நிற்கிற நீரானது, நிறைகுடத்தைக் கவிழப் பிடித்தாற்போலே ஒலித்துக்கொண்டு சொரிய.
ஒரு மழை காக்கப் புக்கு அங்கே பல மழையை உண்டாக்கினபடி.
இன ஆநிரை பாடி அங்கே ஒடுங்க –
பசுத்திரளும் திருவாய்ப்படியும் அங்கே ஒடுங்கவும்.
அப்பன்-
ஆபத்திற்குத் துணைவனான உபகாரகன்.
தீ மழை காத்து –
கேட்டினை விளைக்க வந்த மழையாகையாலே ‘தீ மழை’ என்கிறார்.
ஆயர்களும் பசுக்களும் அன்றிக்கே அன்று தாமே அன்றோ நோவுபட்டார்?
குன்றம் எடுத்தானே –
‘மலையை எடுத்துக் காத்த மஹோபகாரகன்’ என்கிறார்.
‘பசியினால் உண்டான கோபம் ஆறுந்தனையும் மழை பெய்து போவானுக்கு’ என்று ஏழுநாள் அன்றோ
மலையைத் தரித்துக்கொடு நின்று நோக்கிற்று?
கல் எடுத்து கல் மாரி காத்தாய் -சொல் எடுத்து பாடுவது அரிதானதே -சொல் எடுத்து தான் கிளியை சொல் என்று துணை மேலை மேல் சோர்கின்றாள்
இராவணன் முதலானோர்கள் ஆனால் அன்றோ அழியச்செய்யலாவது?
அநுகூலனால் வந்த கேடு ஆகையாலே செய்யலாவது இத்தனையே அன்றோ?
‘இதனால் என் சொல்லியவாறோ?’ எனின், அடியவன் தப்பினாலும் தான் பொறுத்துக் காப்பாற்றுவான் என்பதனைத் தெரிவித்தபடி.
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி ஊணை பறித்தோம் உயிரைப் பரிக்கக் கூடாது என்ற உதார குணத்துக்கு பல்லாண்டு –

—————————————————————————

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11- .

சர்வ பிரகார விஜயங்கள் பலன்
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்-கோவர்த்தன உதாரணம் -அசாதாரண சேஷ பூதர்கள்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்-ஏகி பவித்து -த்வாபர யுகத்தில் இருந்த கோபி ஜனங்கள் உடன்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவைவென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே-விஜய பரம்பரைகள் கிட்டும்

‘மலையை எடுத்த உபகாரகனான கண்ணபிரானுடைய அடியார்களோடும் பொருந்தி நின்ற ஸ்ரீசடகோபராலே அருளிச்செய்யப்பட்ட நன்மை பொருந்தி
ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இவை பத்தும் பொருந்திக் கற்பவர்கட்கு வெற்றியைக் கொடுக்கும்,’ என்றபடி.
‘இவை பத்தும் மேவிக் கற்பார்க்கு வென்றி தரும்’ என்க.

முடிவில், ‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்கட்கு இது தானே வெற்றியைத் தரும்,’ என்கிறார்.

குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல் –
கோவர்த்தனத்தை எடுத்துத் தரித்த நீர்மையிலும் அப்போதை அழகிலும் ஈடுபட்டு இருக்குமவர்களோடே கூடிநின்று தாமும் பிரீதராய்,
பிரீதிக்குப் போக்கு வீடாகச் சொன்ன பாசுரமாயிற்று.-த்ரிபங்கியாய் நின்ற அழகு –
நன்றி புனைந்து ஓர் ஆயிரம் –
சர்வேஸ்வரனுடைய பரத்துவ சௌலப்பியங்களை வகையிட்டுத் தொடுத்த ஆயிரம் நன்மையாவது,
சம்சாரி சேதனுக்கு, இவனே சர்வ ஸ்மாத்பரன் என்றும், சர்வ சுலபன் என்றும், சர்வ சமாஸ்ரயணீயன் என்றும் சொல்லுகை அன்றோ?
அவையே அன்றோ முதல் திருவாய்மொழி தொடங்கி அருளிச்செய்தது?
அன்றிக்கே, ‘எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களைத் தொடுத்துச் சொன்ன இப்பத்தும்’ என்னுதல்.
மேவிக் கற்பார்க்கு வென்றி தரும் –
ஆசையோடு கற்பார் யாவர் சிலர், அவர்களுக்கு வெற்றியைப் பண்ணிக் கொடுக்கும்.
செல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்குத் தடையாகவுள்ளனவற்றை வென்று கொடுக்கும்;
கேவலனுக்கு விரோதியைப் போக்கிக் கொடுக்கும்; பகவானைச் சரணம் அடைந்தவர்களில் உபாசகனுக்கு
ஐம்புலன்களையும் வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்;
பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்.

‘இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும்கொடுக்கும்’;
‘ஐஸ்வர்ய கைவல்ய பகவல்லாபங்களை ஆசைப்பட்டவர்களுக்குஅவற்றைக்கொடுக்கும்’;
‘கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்குவிரோதியைப் போக்கி அவற்றைத் தலைக்கட்டிக் கொடுக்கும்’;
‘பிரபத்தியிலேஇழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் காலக்ஷேபத்துக்கும்போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும்’ என்ற வாக்கியங்கள்
இங்கு அநுசந்தேயங்கள்.(முமுக்ஷூப்படி. திருமந்திரம். சூ. 18-21.)

—————————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆதந்வதா ஹிதம் ஆத்மதசா அனுரூபம் ஹிதம்
ஆவிஷகருத்தான்
அனுபமா புருஷோத்தமன்
ஆத்ம ஆபத்தான விபத்தால்
அதோ லபனீயத்தான்
அதஷயாந்தத் சடஜித்

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

விக்ராந்த-ஸ்ரீ சன்
விஷ்ண விக்ராந்த்யா –
அம்ருத மதநதக
பூத தாத் உத்ருத்யே
கல்பே லோக அதநாத் -அவாந்தர பிரளயம் -உண்டு
ஷிதி பர பரணாத்
தைத்ய ராஜ நிரசனவாத
லங்கா சங்கோசத்வாத்
அசுர பூஜை வன சேதநாத்
லோக ஸ்ருஷ்டே
கோவர்த்தன அத்ரு த்ருதே –

——————————————————————————–
திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 64-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் -விஜய பரம்பரைகளைப் பேசின படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
பக்தி அதிசயத்தாலே அவசன்னரான இவர் தளர்த்தியை மாற்றித் தரிப்பைக்கு
பேர் எயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -என்று பிரஸ்துதமான
அவதார சரிதமாய் யுள்ள ஸ்ரீ த்ரி விக்ரமணம் தொடங்கி ஸ்ரீ கோவர்த்தன உத்தாரணம் பர்யந்தமான விஜய பரம்பரைகளை
பத்தும் பத்தாக அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற
ஆழி எழ சங்கில் அர்த்தத்தை ஆழி வண்ணன் இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————–

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி
வாழிதனால் என்று மகிழ்ந்து நிற்க -ஊழிலவை
தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார்——64-

—————————————————————

வியாக்யானம்–

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி வாழிதனால் என்று மகிந்து நிற்க –
அதாவது –
கீழ்-ஆழி நீர் வண்ணனை அச்சுதனை -என்று ஸ்ரமஹரமான வடிவை யுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்
தன் விஜய பரம்பரைகளான சர்வ சேஷ்டிதங்களையும் இவருக்கு விஷயமாம்படி காட்டி
ஏவம் விதமான இவற்றாலே ஹ்ருஷ்டராய் வாழும் என்று சொல்லி
அவ்வாகாரங்களைக் காட்டிக் கொடு நிற்க –

சிர நிர்வ்ருத்தம் அப்யே தத் ப்ரத்யஷம் இவ தர்சிதம் -என்னும்படியே
ஆழி எழ -என்று தொடங்கி-அப்பன் ஊழி எழ யுலகம் கொண்டவாறே -என்று ஸ்ரீ த்ரிவிக்ரமணத்தையும்-
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி-என்று தொடங்கி – அப்பன் சாறு பட வமுதம் கொண்ட நான்றே -என்று
அம்ருத மதன வைசித்ரதையும்
நான்றில வேழ் மண்ணும் -என்று தொடங்கி
அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே -என்று பூமி உத்தாரண சக்தியையும்-
நாளும் எழ -என்று தொடங்கி அப்பன் ஊழி எழ உலகம் உண்ட ஊனே -என்று ஜகன் நிகரணத்தையும்
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி -என்று தொடங்கி – அப்பன் காணுடைப் பாரதம் கையறப் போழ்தே -என்று-
பாரத சமர அத்புதத்தையும்
போழ்ந்து மெலிந்த புன் செக்கரில் -என்று தொடங்கி – அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே -என்று
ஹிரண்ய விதாரண க்ரமத்தையும்-
நேர் செரிந்தான் -என்று -தொடங்கி அப்பன் நேர் சேரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே -என்று
பாண பாஹூ வனச் சேதன சேஷ்டிதத்தையும் –
அன்று மண் நீர் எரி கால் -என்று தொடங்கி அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே -என்று
ஜகத் சமஷ்டி ஸ்ருஷ்டிதையும்
மேய நிரை கீழ் புக -என்று தொடங்கி அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தானே -என்று
ஸ்ரீ கோவர்த்தன உத்தரண சாமர்த்தியத்தையும்
கண்டு அனுபவித்து-குன்றம் எடுத்த பிரான் அடியோரோடும் ஒன்றி நின்ற சடகோபன் -என்று
மகிழ்ந்து கால் தரித்து நின்றார் ஆயிற்று –
நந்தாமி பஸ்யன் நபிதர்ச நேன -என்னக் கடவது இறே –

ஊழிலவை தன்னை –
பழையதாய் கழிந்த அந்த அபதானங்களை-

இன்று போல் கண்டு-
பிரத்யஷமாக இன்று போல் அனுபவித்து –

தானுரைத்த மாறன் சொல் –
தாம் அனுபவத்துக்கு-போக்குவீட்டு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை –

பன்னுவரே நல்லது கற்பார் –
ஆராய்ந்து அனுசந்திக்கும் அவர்களே தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக
விலஷண சப்தங்களை அப்யசிப்பார் ஆவார் —
தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அறிந்து அனுசந்திக்குமவர்களே
எல்லாம் அறிந்து அனுசந்திக்குமவர்கள் -என்றது ஆயிற்று-

—————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: