பகவத் விஷயம் காலஷேபம் -148- திருவாய்மொழி – -7-3-6….7-3-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

காலம் பெற என்னைக் காட்டுமின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான்
நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த
நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6-

உதார ஸ்வ பாவன் சந்நிஹிதனாய் -சம்ச்லேஷ பிரதன் இல்லாமையால் -ஊற்று மட்டும் இல்லை அபிநிவேசம் கடலை விட
மேலே பஞ்ச பூதங்களையும் தாண்டும் -அவன் இருக்கும் தேசம் சடக்கென கூட்டிப் போமின்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான்நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்-காள மேக -ஸ்வ பாவன் உருவ வெளிப்பாடு –
பிரத்யக்ஷ சாமானம்-மேல் விழுந்து அணையாமல் மட்டும் இல்லாமை கைக்கும் எட்டாமல் தூரஸ்தன் மேகம் போலே -ஆகையால் -காதல் கடலின் மிகப் பெரிதால்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த-ஸ்ரீ வைகுண்ட நாதன் -வீறு தோற்ற –நான் மறை யாளரும் வேள்வி ஓவா -வைதிகர்கள் வாழும்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்கூடு புனல் திருப் பேரெயிற்கே-நீர் வளம்-விளம்பம் க்ஷமை இல்லாத என்னை -காலம் பெற என்னைக் காட்டுமின்கள்

‘நீலமுகில் போன்ற நிறத்தையுடைய எம்பெருமான் என் முன்னே வந்து நிற்பான்; ஆனால், கையால் அணைப்பதற்கு அகப்படான்’ ஆதலால்,
காதலானது கடலைக்காட்டிலும் மிகவும் பெரியதாய் இருக்கிறது; பூலோகத்திலே வந்து அவன் வீற்றிருந்த, நான்கு வேதங்களிலே வல்லவர்களான
பிராஹ்மணர்களும் அவர்களால் செய்யப்படுகின்ற யாகங்களும் நீங்காமல் இருக்கின்ற, அழகிய செந்நெற்பயிர்கள் சாமரையைப் போன்று வீசுகின்ற
சேர்ந்த தண்ணீர் நிறைந்திருக்கின்ற திருப்பேரெயில் என்ற திவ்விய தேசத்திற்குக் காலம் நீட்டிக்காமல் என்னைக் கொண்டுபோய் விடுங்கோள்,’ என்கிறாள்.
‘வீற்றிருந்த திருப்பேரெயில்’ என்றும், ஓவாத் திருப்பேரையில்’ என்றும், ‘கவரி’ வீசும் கூடு புனல் திருப்பேரெயில்’ என்றும் தனித்தனியே கூட்டுக.

‘நீங்களும் ‘கொடுபோவோமோ அல்லோமோ? என்று விசாரிக்கும் நிலை அன்றிக்கே,
எனக்குக் காதலானது அறமிக்கது;
எனக்கு இங்குத் தரிப்பு அரிது; ஈண்டென என்னைத் தென்திருப்பேரெயில் கொடுபுக்கு
மகர நெடுங்குழைக்காதனைக் காட்டுங்கோள்’ என்கிறாள்.

காலம் பெற என்னைக் காட்டுமின்கள் –
குடிக்குப் பரிஹாரம் இல்லையாகிலும் எனக்குப் பரிஹாரம் இது அல்லது இல்லை.
இனி என் மேல் குற்றம் இல்லை. ‘என்? இப்படிக் கடுக வேண்டுவான் என்?’ என்னில்,

காதல் கடலின் மிகப் பெரிதால் –
இந்தக் காதல் அளவுபட்டோ இருக்கிறது? முதலில் சொன்ன வார்த்தையைக் காணுங்கோள் நீங்கள் நினைக்கிறது.
‘கடல் புரைய’ திருவாய், 5. 3:4.-என்றாளே.
ஒரு காரியப் பட்டாலே விளைந்தது போலே அன்றே உகப்பாலே விளைந்திருப்பது?
‘ஆனாலும், காதலை அளவுபடுத்தி, நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேட்டு எங்களோடே ஒழுக வேண்டாவோ?’ என்ன,
கார்யார்த்தமாக விளைந்த சாதன பக்தி
கடல் போன்ற முன்னம் -இங்கே வளர்ந்த –
ஜகத்தை வைத்து திருத்த -கார்ய அர்த்தமாக முன்பு -ஈர நெல் வித்து -அன்னை நீர் -ஊரவர் கவ்வை
ராக பிராப்தமான காதல் -ஸ்வயம் வை லக்ஷண்யம் பார்த்து வளர்ந்த காதல் –

நீலம் முகில் வண்ணத்து எம்பெருமான் –
நான் உங்கள் வழியே போகவோ, இவன் வழியே போகவோ?
என்னை அப்படிச் சேர்த்துவிட வந்து முன்னே நிற்க, நான் மீளும்படி என்?
அப்படியாலே அவன் துவக்கா நிற்க, உங்கள் வார்த்தையைக் கேட்கவோ? -அப்படி -அவன் திருமேனியுடன் சேர்த்து –
சிரமத்தைப் போக்கும்படியான வடிவினைக் கொண்டு முன்னே நின்று காதலை வளர்க்கின்றவனாகா நின்றான்.
இக்காதலை ஒருபடியே -காரமர் மேனி-வளர்க்கிறது அன்றோ?
கடல் புரைய விளைவித்ததும் காரமர் மேனி அன்றோ? திருவாய். 5. 3 : 4.-நிற்கும் முன்னே வந்து –
இவன் கிட்ட நின்றிலனாகில் நான் உங்கள் வார்த்தையைக் கேட்டு மீளேனோ?
‘ஆனால் உனக்குப் பொல்லாதோ?’ என்ன, என் கைக்கும் எய்தான் – அழகிது அன்றோ,
எனக்கு இப்படித் தரப் பெறில்! வார்த்தை சொல்லுதல், அணைத்தல் செய்யாமையே அன்று;

என் கைக்கும் எட்டுகின்றிலன்.
‘இனி நீ செய்யப் பார்த்தது என்?’ என்ன,
‘உரு வெளிப்பாடு அன்றியிலே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் தேசத்திற்குப் போகப்பார்த்தேன்,’ என்கிறாள் மேல்:

ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த –
தூரத்தே சென்று காண வேண்டாதபடி பரமபதத்தில் ஐஸ்வரியம் எல்லாம் இங்கே தோற்றும்படி இருந்த.

நான்மறையாளரும் வேள்வி ஓவா –
வேதார்த்த வித்துகளும் சமாராதனத்திலே எப்பொழுதும் ஈடுபட்டவர்களானார்கள்.
என்னோடு ஒத்தவர்களும். தங்கள் தங்களுக்கு வகுத்த கைங்கரியம் பெற்று வாழாநிற்பார்கள்.

கோலம் செந்நெல் கவரி வீசும் கூடுபுனல் திருப்பேரெயில் –
மழை சோறு முதலியவைகள் விஷயமாக அங்குள்ளார்க்கு முயற்சி செய்ய வேண்டாமலே இருக்கை.
அவை ஆநுஷங்கிக பலமாய் வருமத்தனை; –
ஆழி மழைக்கண்ணா -வருண பகவானும் கைங்கர்யத்துக்கு கிஞ்சித் காரம் செய்வான் –
நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும்’ பெருமாள் திருமொழி, 5 : 9. -என்றும்,
‘அங்கங்கே அவை போதரும்’ பெரியாழ்வார் திருமொழி, 5. 1 : 4.-என்றும் சொல்லக் கடவதன்றோ?-கூறை சோறு முதலியன –
காட்சிக்கு இனிய செந்நெல்களானவை அங்குத்தைக்குக் கவரி வீசினாற்போலே அசையாநிற்கும்.
ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னும் இவை மூன்றும் கூடி இருக்கையாலே
தண்ணீர் நிறைந்திருத்தலின் ‘கூடு புனல் திருப்பேரெயில்’ என்கிறது.

திருப்பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமின்கள் –
என் விடாய் தீரச் சிரமத்தைப் போக்கும்படியான தேசத்திலே கொடுபோய்ப் போகடப் பாருங்கோள்.
அன்றிக்கே,
‘அங்குள்ள செந்நெல்லுக்குத் தண்ணீர் தாரகமாய் இருக்குமாறு போலே,
இவளுக்கும் அவ்வூரில் காட்சியே தாரகமாய் இருக்கிறபடி’ என்னுதல்.

———————————————————————————————–

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப்
பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங்குடையம் தோழீ!
என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே.–7-3-7-

பிராப்திக்கு பிரபல விரோதி இலங்கா நிராசன சீலன் இங்கே சந்நிஹிதன் -நானும் போகிறேன்
பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை-பெரிய மதிள்-சூழ்ந்த இலங்கை
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த-வீர ஸ்ரீ தோற்ற இருந்த –
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப்-நெஞ்சம் தேடி
பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;-திரும்பி வரக் காண மாட்டேன்
ஆரை இனி இங் குடையம் தோழீ!-சம துக்கியான தோழி
என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;-என் பேச்சை பேச துணை இல்லை -நெஞ்சும் உதவாமல்
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது?-நீயும் உதவாமல் யாரைக் கண்டு
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே-நெஞ்சு போன வழியே போவேன் என்று –

‘பெரிய மதில்கள் சூழ்ந்த கடலுக்கு நடுவேயுள்ள அழகிய இலங்கா நகரத்தை அழித்த பிரான் வந்து வீற்றிருந்த திருப்பேரெயில் என்ற
திவ்விய தேசத்திலே புக்கு எனது நெஞ்சமானது தேடி மீண்டு வருதலை எங்கும் காண்கிறேன் இல்லை;
தோழீ! இனி, இங்கு யாரை உடையோம்? சென்ற என் நெஞ்சினைக் கூவ வல்லாரும் இல்லை; இனி, யாரைக்கொண்டு
என்ன பிரயோஜனத்தைச் சாதிப்பது? என் நெஞ்சம் கண்ட விஷயத்தையே நானும் கண்டேன்,’ என்கிறாள்.

‘இலக்குமணன் சென்ற வழியை நானும் பின்பற்றுகிறேன்’ என்ற பெருமாளைப்போலே இந்தப் பிராட்டியும்
‘என் நெஞ்சு, தரிக்கைக்கு விரகு பார்த்துத் திருப்பேரெயில் புக்காற்போலே நானும் அங்கு புகுமத்தனை,’ என்கிறாள்.

‘அஹஞ்ச அநுகமிஷ்யாமி லஷ்மணேந கதாம் கதிம்’-என்பது, ஸ்ரீராமா, உத்தரகா.
மேல் பாசுரங்களில் கூறியவாறே முடிந்த பின்பு, ‘இனி, நான் செய்யப் பார்த்தது இது என்கிறாள்,’ என்னுதல்.

பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் –
மதிளுக்கு அழகாம்படி அம்மதிளைச் சூழ்ந்த கடலையுடைத்தாய், கேட்க அஞ்சும்படியான ஊரை
மூலை அடியே நடக்கச்செய்த உபகாரகன். பேர் எயில் – பெரிய மதிள்.

வந்து வீற்றிருந்த-
ராவண வத அநந்தரம் சீதைக்கு முகம் அன்று திருப்பிக் கொண்ட பெருமாள் இங்கே –
அப்போது முகம் மாற வைத்த இழவு தீர அணைக்கலாம்படி கிட்ட வந்திருக்கிற.
‘விமல சசாங்க நிபாநநா’ என்கிறபடியே, எப்போது பெருமாள் முகம் வைக்க ஒண்ணாதபடி கொடியராய் இருந்தார்,
‘வதாம்உதித பூர்ண’ சுந்த்ரகாந்தம் விமல ஸஸாங்க நிபாநநா ததாஸீத்’ -என்பது, ஸ்ரீராமா, யுத்,. 117 : 36.
அவ்வளவிலும் இவள் மறுவற்ற சந்திர மண்டலம் போலே முகத்தில் குளிர்ச்சி மாறாதே இருந்தாள்.
‘கண் நோய் கொண்டவனுக்கு விளக்குப்போன்று எனக்குப் பிரதிகூலமாய் இருக்கிறாய்; நிச்சயம்’ என்பது பெருமாள் திருவார்த்தை

‘தீபோ நேத்ராதுரஸ்யேவ ப்ரதிகூலாஸி மே த்ருடம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 118:17.

‘கண்களின் தோஷத்தால் வந்தது போக்கி, விளக்கின் தோஷத்தால் வந்தது அன்று,’ என்று இதற்கு ஆளவந்தார் அருளிச்செய்வார்.
பகைவர்களைக் கொன்று அதனாலே விடாய்த்து வந்திருப்பார்,
‘கணவனைத் தழுவிக் கொண்டாள்’ என்கிறபடியே,‘பர்த்தாரம் பரிஷஸ்வஜே’ என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய, 30 : 40.
குளிர்ந்த உபசாரங்களைச் செய்வதற்குப் போக வேணும்.

பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காணமாட்டேன் –
அவன் இருந்த திருப்பேரெயிலே புக்குத் தேடி என் நெஞ்சமானது ஓரிடத்திலும் மீண்டு வரக் காண்கின்றிலேன்.
மீள ஒண்ணாத இலங்கையிலே புக்க திருவடியும் மீண்ட வந்தான்;
அணித்தான இவ்வூரிலே புக்க என் நெஞ்சமானது மீண்டு வரக் காண்கின்றிலேன்!
நெஞ்சுங்கூட வாராத பின்பு அவன் வாராமை சொல்லா வேண்டா அன்றோ?
நெஞ்சினது வரவு பார்த்துக் கண் மறைந்துகாணும் இவள் நிற்கிறது.
அன்றிக்கே, ‘கண்டு ஜீவியாமல் நான் இங்ஙனே முடிந்து போமித்தனையன்றோ?’ என்னுதல்.

‘நாதன் வருந்துணையும், அவனுக்காக அவன் செயல்களைப் பாடிக்கொண்டு தரித்திருக்க வேண்டாவோ?’ என்னில்,
ஆரை இனி இங்கு உடையும் தோழீ! –
நெஞ்சும் இல்லாத அன்று இனியார் உளர்?
தோழீ –
‘நெஞ்சில் அண்ணியன் நானோ?’ என்றாயாகில், நீ நீ ஆனாயே.
‘இப்போது நான் இங்கு இல்லையோ? உன் நெஞ்சினை அழைத்துக் கொள்ளுவதற்கு என்?’ என்ன,

என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை –
நெஞ்சினை மீட்கைக்கு நீ வேணுமோ? நெஞ்சினை அவனுக்கு ஆக்கின நீ வேணுமே எனக்கு ஆக்கும் போதும்;
உன் நிலை இது; உனக்குக் கால்கள் நடை தாரா:
அல்லாதார்க்குக் ‘கூட்ட வேணும்’ என்னும் விரைவு இல்லை: யார் நெஞ்சினை அழைப்பார்?

ஆரை இனிக் கொண்டு என் சாதிக்கின்றது-
யாரைக் கொண்டு தான் சாதிப்பது? இனிச் சாதிக்க வேண்டுவது தான் ஏது?
நெஞ்சும் அவனும் வந்தால் இனி நான் தான் உண்டாக வேணுமே?
இங்கு வெறுந்தரையாய் அன்றோ கிடக்கிறது?

‘ஆனால், செய்யப் பாரத்தது என்?’ என்னில், என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே
மீளாதே நெஞ்சு போன வழியே போகப் பார்த்தேன்.
‘நான் இப்பொழுதே இலக்குமணன் சென்ற வழியிலேயே செல்லப் போகிறேன்’ என்கிறபடியே,
‘நெஞ்சு சென்ற வழியே செல்லப் பார்த்தேன்’ என்கிறாள்.

—————————————————————————————-

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக்
கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும்
நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த
தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8-

காதல் சர்வ லோகத்தையும் விழாக்கோலை -பெறாமற் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல்
கடல் புரிய கடலில் மிகப் பெரிய -முன்பு -ஆனபின்பு அவன் சந்நிஹிதனாக உள்ள திவ்ய தேசம் புகுவேன்
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக்-மேனி வை வர்ணயம் கண்டதுவே -வெளி அடையாளம் பார்த்தே இப்படி -உள் நெஞ்சு
அவன் என்றே இருப்பதை அறியாமல் -தூங்காமல் அன்னை மாடி பிடிக்காமல் -வெளி அடையாளங்கள்
கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்-மேக ஸ்யாமளன் உடன் கூடி என் மனஸ் சிதிலம் –
கொண்டலர் தூற்றிற்றது முதலாக்-பழி தூற்றுவதை ஹேதுவாக
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!-இடம் கொண்ட அபி நிவேசம் -எருவாக கொண்டு வளர -பிரவர்த்தகை இதற்கு நீ தானே தோழி
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும்-கடலில் மிகப் பெரியதால் –கடலை விட பெரியது என்னும் அளவே அல்ல -பிருத்வி ஏழு கடல்கள்
மகா அவகாசம் விசும்பு -இவை இத்தனையும் தனக்கு உள்ளே யாம் படி பெரியதாக
நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த-தண்ணீரால் சொந்த -காதலை வளர்க்க சூழ்ந்து இருந்து வளர்த்தவன்
தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே-சந்நிஹிதனாக உள்ள திவ்ய தேசம் புகுவேன்

‘என் சரீரத்தில் கண்ட வேறுபாடு முதலியவற்றைக் கொண்டு, எல்லோரும் கூட்டம் கூடிக் கரிய கடல் வண்ணனோடு கூடியதால்
என்னிடத்திலுண்டான வேறுபாட்டினைக் காரணமாக்கொண்டு பழிச்சொற்கள் கூறிய அதனையே காரணமாகக் கொண்டு வளர்ந்த
என்னுடைய காதலை உரைக்குமிடத்து, தோழியே! அணுக்கள் செறிந்திருக்கின்ற இந்த உலகத்தையும், இதனைச் சூழ்ந்துள்ள ஏழு கடல்களையும்,
இவற்றை எல்லாம் தனக்குள் அடக்கிக்கொண்டிருக்கின்ற ஆகாசத்தையும்விட மிகமிகப் பெரியதாகும்; தெளிந்த அலைகளையுடைய தண்ணீரானது சூழ.
அவன் எழுந்தருளியிருக்கின்ற தென்திருப்பேரெயில் என்ற திவ்விய தேசத்திற்குச் சென்று சேர்வேன்,’ என்கிறான்.

‘கொண்டு கூடி என் திறத்துக்கொண்டு அலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட காதல்’ என்க. தூற்றிற்றது – தூற்றியது. முதல் – காரணம்.
சூழ்ந்த – சூழ -எச்சத்திரிபு. ‘சூழ இருந்த திருப்பேரெயில்’ என்க.

எனக்கு ‘அவனைக் காணவேணும்’ என்னும் காதல் கடலின் மிகப் பெரிது’ என்னுமளவு அன்றிக்கே,
அற மிக்கது, ஆன பின்பு, நீங்களாக இசையீர் கோளாகில், தன் வேண்டற்பாடு தோன்ற
எழுந்தருளியிருக்கிற தென்திருப்பேரெயிலை நான் சென்று சேர்வன்’ என்கிறாள்.

கண்டதுவே கொண்டு –
அவன் பேர் சொல்லுதல்,
‘தலையில் வணங்கவுமாங்கொலோ?’ திருவாய். 5. 3 : 7.-என்று ஒரு வணக்கஞ்செய்தல் செய்யுமன்றோ?
அவ்வளவினையே கொண்டு;
புற இதழ் கண்டு படுகிறபடி இதுவானால், அகவாயில் ஓடுகிறது அறியில் என்படுவார்கள்?

எல்லாரும் கூடி –
பரிவரோடு, நலத்தை விரும்புமவரோடு, ‘இவை இரண்டுந்தான் என்?’ என்று இருப்பாரோடு வாசி அறக்கூடி.
பிறரைப் பழி சொல்ல என்னில், தம்மில் தாம் சேராதவர்களும் சேர்வார்கள் அன்றோ?

கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக் கொண்டு –
இவள் நிறம் பசலை நிறமாம் போது, அவன் திறத்தே இழந்ததாக வேண்டாவோ?
கடல் ஏறி வடிந்த இடம் என்று தோற்றுகிறது இல்லையோ?
என் செயலைச் -பாரிப்பை -சிரமத்தைப் போக்குகிற நிறத்தையுடையவனோடே கூட்டி.

அலர் தூற்றிற்றது முதலாக்கொண்ட என் காதல் உரைக்கில் –
இவர்கள் பேசாமலே இருந்தார்களாகில் நானும் சுகமே இரேனோ?
நான் பழிக்கு அஞ்சி மீளுவேன் என்று காணும் இவர்கள் பழி சொல்லப் புக்கது.
அலர் தூற்றிற்று – அலர் தூற்றினார்கள்.
அது முதலாக் கொண்ட என் காதல் -அதுதானே அடியாகக் கொண்ட என் காதலானது நூறு கிளைகளாகப் பணைக்கப் புக்கது.
‘ஊரவர் கவ்வை’- என்றி திருவாய்மொழிப் பாசுரம் 5. 3 : 4 நினைவு கூர்க.

‘ஊரவர் கவ்வை எருவாக அன்னைசொல்நீராக நீளுமிந் நோய்.’-என்பது திருக்குறள்.

தன் காதலைத் தன்னாலும் சொல்ல ஒண்ணாத ஆதலில் ‘காதல் உரைக்கில்’ என்கிறாள்.
‘எதனின்று வேதங்கள் மீள்கின்றனவோ என்கிற விஷயத்தைச் சொல்லிலும் இவள் காதல் பேச்சுக்கு நிலம் அன்று.’ என்றபடி.
‘யதோவாசோ நிவர்த்தந்தே’ என்பது, தைத்தீரியம்.
இந்தக் காதலுக்கு விஷயமாக இருக்கிறவனையும் விளாக்குலை கொள்ளவற்றான காதல் அன்றோ?
‘சுடர் ஞான இன்பம்’திருவாய். 10. 10 : 10.- என்று பகவானுடைய ஆனந்தத்தைச் சொல்லி வைத்து,
‘அதனிற்பெரிய என்னவா’ என்றார் அன்றோ?

தோழீ –
‘இந்தக் காதலை விளைக்கைக்கு நீ செய்யும் கிருஷி அறிதி அன்றோ? இது இருந்தபடி பாராய்.

மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிது –
‘காதல், கடலின் மிகப்பெரிதால்’ என்ற இடம் ஓராதே சொன்னோம்;
‘ஆனால், எங்ஙனே சொல்லும்படி?’ என்னில், பெரியவற்றில் பெரியது என்னுமித்தனை யல்லது,
ஒரு பாசுரமிட்டுச் சொல்லலாவது இல்லை.
மண்ணாலே நெருங்கின பூமியும், அதனைச் சூழ்ந்த கடல் ஏழு, அவற்றுக்கெல்லாம் இடம் தருகின்ற ஆகாசமும்
என்னுமிவை இத்தனைக்கும் அவ்வருகுப்பட்டிருக்கை.
‘இப்படிக் காதல் கரைபுரண்டால் செய்யப் பார்த்தது என்?’ என்ன,

தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சென்று சேர்வான் –
இந்தக் காதல் மறுநனையும்படியான விஷயம் இருந்த இடத்தே போய்ப்புகுமத்தனை.
தெளிந்த திரைகளாலே சூழப்பட்டு அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயிலே போய்ப்புகுமத்தனை.
‘பலவித மலர்களினுடைய சிறந்த வாசனை நிறைந்த அந்தச் சித்திரகூடமலையில் பல உத்தியானங்களில்
விளையாடி அதனால் வியர்வை யடைந்து வாட்டமுடையவளாய்த் தேவரீருடைய மடியில் படுத்துக்கொண்டேன்’ என்கிறபடியே,
‘தஸ்ய உபவந ஷண்டேஷூ நாநா புஷ்ப ஸூகந்திஷூ
விஹ்ருத்ய ஸலிலக்லிந்நா தவாங்கே ஸமுபாவிஸம்’-என்பது, ஸ்ரீராமா, சுந். 38 : 14.

அனுபவத்திற்குத் தகுதியான தேசத்திலே போய்ப் புகக் கடவோம்.

சேர்வன் சென்றே –
இனிப் பகட்டால் தீராது, புக்கு அல்லது விடேன்.
ஆள் விடுதல்,
அவன் வரவு பார்த்திருத்தல் செய்யேன்.

சென்று சேர்வன் –
இனி எதிரே அவன் வரிலும் மீளேன்.
அவனைச் சேர்தல் அன்று உத்தேசியம்,
அங்கே சென்று கிட்டகை.

—————————————————————————-

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்!
அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத்
தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9-

பிரளய ஆபத்சகன் வர்த்திக்கும் தேசம் புகுவேன் -தவிரேன் -தேற்றி உரைப்பதில் பிரயோஜனம் இல்லை –
சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்!-சமான துக்கிகள் ஹிதம் சொல்ல உருப்பட்ட தோழி
அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;-ஹித பரர்கள்-அன்னைமீர் -இந்த அவஸ்தையில் இருந்து தேறும்
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?-என்ன வார்த்தைகள் பேசுகிறீர்கள் -அனர்த்தம் வருமே –போகாமல் -எனக்கு சேஷத்வ நாசம் –
அவனுக்கும் சேஷித்வ நாசம் உங்களுக்கும் ஸ்வரூப நாசம்
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;-மனஸ் -தேறுவதற்கு அடி இல்லையே -பூர்த்தியும் இல்லை
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட-சியாமள வடிவால் -ஆபத்சகன் -வடிவுடன் சேவை சாதித்த ஸுலப்யம் -சர்வ ஸ்வ தானம் பண்ணி
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த-ஆஸ்ரித உபகாரகன் -பவ்யன் -வீறு தோற்ற -காகுத்தா கண்ணன் போலே முன் பாசுரம் பெருமாள் இங்கே கண்ணன் –
ஏர்வள ஒண் கழனிப் பழனத்-நீர் வளம் மிக்கு
தென் திருப் பேரெயில் மாநகரே.-சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் –
ஸுந்தர்யம் மா நகரில் கோஷிக்கும் -அவயவ சோபை -லாவண்யம் ஸுந்தர்ய சோபை –

‘என்னுடைய தோழிமீர்காள்! அன்னையர்காள்! என்னைத் தேற்ற வேண்டா; இந்த நிலைக்கும் நீங்கள் சொல்லுகிற வார்த்தைக்கும்
என்ன சம்பந்தம் உண்டு? நெஞ்சம் நிறையும் எனக்கு இங்கு இல்லை; மேகம் போன்ற நிறத்தை யுடையவனும் கரிய கடல் சூழ்ந்த
உலகத்தைப் புசித்த கண்ண பிரானுமான எம்பெருமான் வந்து எழுந்தருளி யிருக்கின்ற அழகிய வளப்பம் பொருந்திய பார்ப்பதற்கு
இனிய வயல்கள் சூழ்ந்த மருதநிலங்களையுடைய தென்திருப்பேரெயில் என்னும் மாநகரைச் சென்று சேர்வன்,’ என்கிறாள்.
‘வீற்றிருந்த திருப்பேரெயில்’ என்க. ‘நீர்கள்’ என்பதில் ‘கள்’ அசை நிலை.

‘நீங்கள் இனி என்னைத் தேற்றிப் பிரயோஜனம் இல்லை; தென் திருப்பேரெயிலைப் போய்ப் புகக் கடவேன்,’ என்கிறாள்.
சாஹசவத்தில் துணிவது ஸ்த்ரீத்வத்துக்கு சேராது -தலைக்கட்டவும் முடியாது போன்ற வார்த்தைகள் -சொல்லிப் பிரயோஜனம் இல்லை

சேர்வன் சென்று –
‘உன் ஆற்றாமையாலே சில சொல்லுகிறயாகில் இது கடைப் படவற்றோ?’ என்ன,
‘அவசியம் அங்கே புக்கு அல்லது விடேன்!’ என்கிறாள்.

என்னுடைத் தோழிமீர்காள் அன்னையர்காள் –
எனக்காக இருப்பாரும், என்னைத் தங்களுக்காக நினைத்திருப்பாரும் ஒன்றும் சொல்ல வேண்டா.
தோழிமாரோடு தாய்மாரோடு வாசி இல்லை காணும் இவளைத் தேற்றப் போகாமைக்கு.
அறிவில்லாத மாக்களோ ஞானிகளை உபதேசத்தால் மீட்கப் பார்ப்பார்?
விஷயம் காரணமாக வருகின்றதனைச் சாதனத்தில் செலவு எழுதுகின்றவர்களோ எனக்கு வார்த்தை சொல்லுவார்?
விஷயம் காரணமாக’ என்னும் இவ்விடதில் 5-ஆம் பத்து 5-ஆம் திருவாய்மொழி, வியாக்கியானம் பார்க்க.

இவள்,தன்னை மறந்து, அவனையே பார்த்துப் பேசுகிறாள்;
அவர்கள் அவனை மறந்து, தங்கள் தங்களையே பார்த்து மீட்கத் தேடுகிறார்கள்.
உபாயத்தில் கண் வைக்காமல் பிராப்ய ஏக பரராகவே இருக்க வேண்டுமே
பற்றிற்று எல்லாம் பற்றி அவனை பற்றுதல் பக்தி யோகம் உபாயாந்தரம்
விடுவது எல்லாம் விட்டு தம்மையும் விடுகை பிரபத்தி -நாம் பற்றும் பற்றும் பற்று அல்லவே –

நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு – கலங்கினாரோ தெளிந்தாரைத் தேற்றுவார்?
நீங்கள் நிற்கிற நிலை எது? என் நிலை எது? போகையிலே துணிந்திருக்கிற என்னை,
‘புறப்படுகை பழி’ என்று இருக்கின்ற நீங்கள் சொல்லுவது என்? இதற்கு – எனக்கு ஓடுகிற நிலைக்கு.

‘ஆனாலும், நெஞ்சும் அடக்கமுமுடையார்க்கு இது வார்த்தையோ?
நாங்கள் சொன்னபடி செய்து எங்கள் வழியே ஒழுக வேண்டாவோ?’ என்ன,
‘நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
அது வேணுமாகில் அங்கே போய்ச் சொல்லுங்கோள்.
மனமும் அடக்கமும் அவன் பக்கலின், நிறைவு – அடக்கம். நெஞ்சு – அது இட்டுவைக்கும் கலம்.
நெஞ்சும் நிறைவும் எனக்கு ஆம்படியோ அவன் படி -திருமேனி அழகு -இருக்கிறது?

கார் வண்ணன் –
தாய்மார் தோழிமாரானவர்கள் வார்த்தை கேளாதபடியாக வடிவைப் படைத்தவன்.
‘வெறுவடிவழகேயோ உள்ளது?’ என்னில்,

கார்க்கடல் ஞாலம் உண்ட –
‘தளர்ந்தார் தாவளம்,-ஆதாரம் – ஆபத்து வந்தால் காப்பாற்றிவிடும் அத்தனையோ?’ என்னில்,

கண்ணபிரான் –
தன்னைப் பிறர்க்கு ஆக்கி வைக்கும் உபகாரகன்.

வந்து வீற்றிருந்த-
தன் செல்வம் எல்லாம் -அழகு ஆபத் சகத்வம் ஸுலப்யம் உபகாரத்வம் -தோற்றும்படி இருந்த.

ஏர்வளம் ஒண் கழனிப் பழனம் தென்திருப்பேரெயில் மாநகரே –
ஏரினுடைய நிறைவினையுடையனவாய், அழகியனவான கழனிகளையும் நீர்நிலங்களையுமுடைய

திருப்பேரெயிலாகிற மாநகரிலே சென்று சேர்வேன்.
உங்கள் தடைக்கு மீளுதல், அவ்வழியில் நிற்றல் செய்யேன். என்னைத் தேற்ற வேண்டா.’ வளம் – மிகுதி.

—————————————————————————————-

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!
சிகர மணி நெடு மாட நீடு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்று வரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்
நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10-

நிதானப் பாசுரம் -மங்களா சாசனப் பாசுரம் -பூர்த்தி இந்த பாசுரம் வைத்து –
ஆஸ்ரித விரோதி நிரசன சீலன் என் நெஞ்சை என்றோ அபகரித்தார்
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்-எங்கும் தெரிவேன் லஜ்ஜை இல்லை
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!-ஹிதம் சொல்லி தடுக்கப் பார்க்கும்
சிகர மணி நெடு மாட நீடு-சிகரம் மணி மாடு -நீடு -வெகு காலம் நிலைத்து இருக்கும்
தென் திருப் பேரெயில் வீற்றிருந்தமகர நெடுங்குழைக் காதன் மாயன்-காரண பாசங்கள் -ஆபரண குணங்கள் சேஷ்டிதங்கள் உடையவன்
நூற்று வரை யன்று மங்க நூற்ற-துரியோத நாத்திகளை வென்று -சங்கல்பித்து
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்-உத்சவர் திரு நாமம் -ஆழி ஏந்தி தொடங்கி நேமியான் -சக்ர தரித்தவம் ஈடுபாடு
ஆஸ்ரிதர் விரோதி முடிந்த பின்பு பெற்ற ஓளி
நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே-ஆஸ்ரித சம் ரக்ஷணம் பரிகரம் நேமியான் கொண்டவன் -நிகரில் முகில் வண்ணன்
ஆஸ்ரிதர்களுக்கு வழி அல்லா வழி போக -அவனை அடைய வழி அல்லா வழி நான் போகக் கூடாதோ
எத்தனை கல்பங்களாக என்னை கவர்ந்தான் இவற்றைக் கொண்டு

என்னுடைய தோழிமீர்காள்! நகரங்களிலும் நாடுகளிலும் பிற இடங்களிலும் தேடுவேன்; எனக்கு நாணம் இல்லை; ‘என்னை?’ எனின்,
சிகரங்களையுடைய அழகிய நீண்ட மரடங்கள் நிலைத்திருக்கின்ற தென்திருப்பேரெயிலில் எழுந்தருளியிருக்கின்ற மகர நெடுங்குழைக்காதனும்
மாயனும் துரியோதனாதியர்கள் அன்று அவியும்படியாபக மந்திரித்த ஒப்பில்லாத முகில் வண்ணனும் நேமியானுமான எம்பெருமான்
என் மனத்தினைக் கொள்ளைக்கொண்டு எத்தனை ஊழிக் காலத்தையுடையான்?

‘மகர நெடுங்குழைக்காதன்’ என்பது, அந்தத் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற
இறைவன் திருப்பெயர்.
‘எனை ஊழியான்’ என்பது,
‘அவன் என் மனத்தினைக் கவர்ந்து எத்தனை ஊழிக்காலமாயிற்று?’ என்றபடி.

‘இருந்ததே குடியாக உலகத்தார் உன்னைப் பழி சொல்லார்களோ?’ என்று தோழிமார்கள் சொல்ல
‘அவர்கள் அன்றோ எனக்குத் தேட்டம்?’ என்கிறாள்.

நகரமும் நாடும் பிறவும் தேர்வன்-
‘உன் துணிவாக, நாட்டார் நகரத்தார் மற்றுமுள்ளாரும் எல்லாரும் அறிந்து பழி சொல்லுகிறார்களே!’ என்ன,
‘எனக்குதான் தேட்டம் அவனேயோ? நகரம், நாடு பத்தநம் முதலானவைகள்,
இவற்றிலுள்ளாருடைய பழியேயன்றோ எனக்குத் தேட்டம்? ‘தேர்வன்’ ‘தேடுகிறேன்’ என்றபடி.

நீங்கள் சேர்க்கிலீர்கோளாகில்,
அவன் தானாக வாரானாகில்,
அவனுடனே கூட்டிப் பழி சொல்லுகிற இவர்கள் அன்றோ என் ஆத்மாவை நோக்குகிறார்கள்?
‘அலர் எழ ஆருயிர் நிற்கும்’ -திருக் குறள் என்றான் அன்றோ?

பிறவும் –
மற்றுமுள்ளனவும்.

நாண் எனக்கு இல்லை –
நாணம் இங்கு இல்லாமையே அன்று;
அங்குப் போனாலும் இல்லை.
இந்தச் சரீரத்தில் முதலிலே இல்லாமை.

என் தோழிமீர்காள் –
இது நான் உங்களுக்குச் சொல்லி அறிய வேண்டுபடி ஆவதே!

சிகரம் மணி நெடு மாடம் நீடு தென்திருப்பேரெயில் வீற்றிருந்த –
மலைகளின் சிகரங்களைக் கொடுவந்து வைத்தாற்போலே ஓக்கமுடைத்தாய்,
இரத்தின மயமான மாடங்களையுடைய பெரிதான தென்திருப்பேரெயில் வீற்றிருந்த.

மகர நெடுங்குழைக்காதன் –
மகரத்தின் வடிவமான பெரிய ஆபரணத்தையுடைய கர்ணபாசங்களையுடையவன்.
தோள்கண்டார் தோளே கண்டார்; தொடுகழற் கமல மன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்; தடக்கைகண் டாரும் அஃதே;
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?
ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரை ஒத்தார்.’-என்ற கம்பராமாயணச் செய்யுளை ஒப்பு நோக்குக.

அவனுடைய ஒரோ அவயங்களில் படிந்தாரை மீட்கலாயோ இருப்பது?
மாயன் –
சொல்லிச் சொல்லாத தேக காந்தியையும் ஆத்தும குணங்ளையும் நினைக்கிறது.
அன்றிக்கே,
மாயன் – ‘அடியார்களிடத்தில் பக்ஷபாதத்தையுடையவன்’ என்னுதல்.

நூற்றுவரை அன்று மங்க நூற்ற –
சிலரை அழிக்க நினைத்தால் ஒருவரும் தப்பாதபடி அழிக்குமவன்.-தேர்ப்பாகன்
துரியோதனன் முதலாயினோர்களைப் பாரதப்போர் உண்டான அன்று நசிக்கும்படி மந்திரித்த.

நிகர் இல் முகில் வண்ணன்-
ஒப்பில்லாத காளமேகம்போலே இருக்கிற வடிவழகு.
இதனால், ‘விரோதியை வளர்த்தாலும் விட ஒண்ணாத வடிவழகு’ என்கை.

நேமியான் –
அடியார்களுடைய விரோதிகளைப் போக்கும் போது பகலை இரவு ஆக்கும் பரிகரத்தையுடையவன்.
திருவாழியைக் கொண்டு வீடுமன் முதலாயினோர்களையும் தொடரா நிற்பன் அன்றோ?

நிகர் இல் முகில் வண்ணன் நேமியான் –
துரியோதனன் முதலாயினோர்கட்கு மின்னும் இடியுமாய்,
பாண்டவர்கள் துன்பம் தீர மழைபெய்து நின்றபடி.
‘அவன் உன் விரோதிகளைப் போக்கிக்கூட நினையாத பின்பு,
அவன் தானே வந்து உன் காலிலே விழும்படி மந்திரத்தாலோ?’ என்ன,

என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே –
அதற்கு ஈடான பரிகரத்தை நான் இழந்து எத்தனை காலம் உண்டு?
வடிவழகையும் ஆயுதச் சேர்த்தியையும் காட்டி என் நெஞ்சினைக் கவர்ந்து போய் எத்தனை காலத்தான்?

எனை ஊழியானே –
பல கல்பங்கள் உண்டு.
துரியோதனன் முதலாயினோரை வெல்ல எண்ணினார்போலே,
என் நெஞ்சினைக் கவர்வதற்கு எத்தனை காலம் எண்ணினானோ!

—————————————————————————————

ஊழிதோறு ஊழி உருவும் பேரும்
செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள்
இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார்
அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–7-3-11-

பகவத் கைங்கர்யம் அவகாஹித்து இருப்பர்
ஊழிதோறு ஊழி உருவும் பேரும்-திரு நாமங்கள் திரு மேனி
செய்கையும் வேறவன் வையம் காக்கும்-சேஷ்டிதங்கள் -நாம ரூப சேஷ்டிதங்கள் எல்லா யுகங்களில் உண்டே -வெவ்வேறாக
ஜகத் ரக்ஷணம் காரணமாக -வேறு பட்டு இருப்பவன்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை-சமுத்திர நீர் போலே பசுமை அசாதாரண விக்ரக
அணி குருகூர்ச் சடகோபன் சொன்னகேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள்-ஒப்பில்லாத அந்தாதி
இவை திருப் பேரெயில் மேய பத்தும்-இந்த திருவாயமொழி
ஆழி அம் கையனை ஏத்த வல்லார்-திருவாழியும் கையுமாக உள்ளவனை ஸ்துதித்து
அவர் அடிமைத் திறத்து ஆழியாரே-அடிமைத் திறத்தில் கைங்கர்யத்தில் ஆழ்ந்து இருப்பர்

கல்பந்தோறும் வடிவும் பேரும் செயலும் வேறுபடக் கொள்ளுமவனும், பூலோகத்தைப் பாதுகாக்கின்ற கடல் வண்ணனும் அச்சுதனுமான
எம்பெருமானை, அழகிய திருகுருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த ஒப்பில்லாத அந்தாதி ஓராயிரத்துள், திருப்பேரெயில்
என்னும் திவ்விய தேசத்தைச் சேர்ந்த இவை பத்தும் கொண்டு, திருவாழியை அழகிய கையிலேயுடைய மகரநெடுங்குழைக்காதனைத்
துதிக்க வல்லாராகிய அவர்கள் அடிமை விஷயத்திலே திருவாழியின் தன்மையையுடையவர்களாவார்கள்.
அச்சுதன் – அழிவில்லாதவன்; ‘அடியார்களை நழுவ விடாதவன்’ என்னலுமாம். திருப்பேரெயில் மேய இவை பத்தும் என்று கூட்டுக.
ஆழியார்-மூழ்கினவர்கள் என்னலுமாம்.

‘இத்திருவாய்மொழி கற்றார், பகவானுடைய கைங்கரியத்திலே மிகவும் மூழ்கினாரேயாவர்,’ என்கிறார்.

ஊழிதோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன்-
அடியார்களைக் காப்பாற்றும் பொருட்டுக் கல்பந்தோறும் கல்பந்தோறும்
திருமேனியும் திருப்பெயரும் செயல்களும் வேறுபடக் கொள்ளமவன்.
‘இதற்குப் பயன் என்?’ என்னில்,

வையம் காக்கும்
உலகத்தைக் காப்பாற்றுதல்.
அப்படியே காத்திலனாகில் இப்படி நம்புவார் இல்லையே, இவனை ‘இரட்சகன்’ என்று,
அந்த பிரகாரத்தில் -அந்த திருமேனி காட்டி -அப்படி பூமியை -பாரம் போக்கி அருளி -என்றுமாம் –
ஆஸ்ரித ரக்ஷகத்வம் -வையம் காப்பதற்காக -ஜகத்துக்குள் துரியோதனாதிகள் உண்டே –
சங்கோசப்படுத்தி ஆஸ்ரிதர் -என்று காட்டி அருளுகிறார் –

ஆழி நீர் வண்ணனை –
நோக்காதே படுகொலை அடிக்கிலும் விட ஒண்ணாத வடிவு. -அழகு படுத்தும் பாடு –
வேறுபடாதே அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கும் அசாதாரண விக்கிரகத்தைச் சொல்லுகிறது.

அச்சுதனை –
அவ்வடிவு தனக்கு ஒருநாளும் அழிவு இல்லை என்னுதல்.
பற்றினாரை ஒரு நாளும் விடான் என்னுதல்.
சுதி இல்லாதவன் -தான் நழுவாமல் -தன்னைப் பற்றினார்களை நழுவ விடாதவன் -இரண்டும்
பச்சை -மா மலை போல்மேனி அச்சுதன் பவளவாய் அச்சுதன் -ஒவ் ஒன்றிலும் சேர்த்து
பற்றிய அமரர்களை நழுவ விடாதவன்

அணி குருகூர் –
ஆபரணமான திருநகரி.

கேழ் இல் அந்தாதி –
ஒப்பு இல்லாத அந்தாதி.
தம்மாலும் பிறராலும் மீட்க ஒண்ணாதபடி பகவத் விஷயத்தில் உண்டான உறுதியைச் சொன்ன பத்து ஆகையாலே,
ஒப்பு இன்றிக்கே இருக்கிறபடி.

ஓர் ஆயிரத்துள் திருப்பேரெயில் மேய இவை பத்தும் –
ஒப்பு இல்லாத ஆயிரத்துள் திருப்பேரெயிலிலே சேர்ந்த இப்பத்தைக் கொண்டு.

ஆழி அம் கையனை ஏத்த வல்லார் –
‘இவை எல்லாவற்றாலும் என் சொல்லியவாறோ?’ எனின், கையும் திருவாழியுமான
அழகிலே இவர் அகப்பட்ட படியைத் தெரிவித்தபடி.
அல்லாத அழகுகள் ஒருபடியும் இது ஒரு படியுமாய் இருக்கை;
இது கை மேலே அனுபவித்துக் காணலாமே.

அவர் அடிமைத் திறத்து ஆழியாரே –
அடிமைக் கூட்டத்தில் திருவாழியின் தன்மையை யுடையவர் என்னுதல்;-திறம் -வர்க்கம் சமூகம் என்றபடி –
அடிமை இடையாட்டத்தில் ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட்புகுவர் என்னுதல்.திறம்-யத்னம் –ஊற்றம்-என்றபடி

————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஸ்ரீ ரெங்க பத்ரு அசரண்ய சரண்ய பாவம்
பிரஸ்தாபம் பஹுளா அதி ருசி
அவாரிய ஆஸீத் ஸ்வஸ்மின் ஸ்வ ப்ரியா ஹித
இதர நிர்விசேஷர் உதாசீன ச பூய

அவாரிய ஆஸீத் -நிவாரகர் இல்லாத படி ஆனார்-

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்வாந்த காந்த்யா ஸ்வேஷூ ஸ்வம் போக்த்ருபாவம் பிரகடயிந்தி
ஹரி பத்மா ஷியேதவேன ஹ்ருதயத் சக பரமாகாச ஸூ
உபகாரி விகர்ஜ சங்காதஅநிஷ்ட பிரகர்த்தா ஆதார விலசன க்ருத
ரக்ஷக அம்போதி த்ருச்ய ஆபத் சம் ரக்ஷத்ய ஸ்ரீ மகர வர லஸ குண்டலயா –

1–ஸ்வாந்த காந்த்யா –வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!

2-ஸ்வேஷூ ஸ்வம் போக்த்ரு பாவம் –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே-

3–பிரகடயிந்தி ஹரி –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு

4- பத்மா ஷியேதவேன ஹ்ருதயத் சக –தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்

5–பரமாகாச ஸூ உபகாரி –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே

6–விகர்ஜ சங்காத–முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்-

7-அநிஷ்ட பிரகர்த்தா –முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்

8–ஆதார விலசன க்ருத –காதல் கடலின் மிகப் பெரிதால் நீல முகில் வண்ணத்து எம்பெருமான்

9–ரக்ஷக –தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த பேரெயிற்கே புக்கு

10-அம்போதி த்ருச்ய –கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க்கடல் வண்ணனோடு

ஆபத் சம் ரக்ஷத்ய –கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான்

ஸ்ரீ மகர வர லஸ குண்டலயா –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக் காதன் மாயன்

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 63-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்-ஸ்ரீ தென் திருப் பேரிலே அபஹ்ருத சித்தர் ஆனபடியை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
கீழ் –
தம் தசை தாம் வாய் விட்டு பேச மாட்டாதே மோஹித்துக் கிடந்தவர்
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு நாம பிரசங்கமே-சிசிரோப சாரமாக-அத்தாலே ஆஸ்வச்தராய் யுணர்ந்து
தத் வைலஷ்ய அனுசந்தானத்தாலே அப்ருஹ்ய சித்தராய்
ஸ்ரீ பெரிய பெருமாள் எழுந்து அருளி இருக்கிறது
ஸ்ரீ தென் திருப் பேரிலே போவதாகப் பதறிப் புறப்பட இப்படி பதறுகை நம் ஸ்வரூபத்துக்கு சேராது
அவர் தாமே வரக் கண்டு
நம் சேஷத்வத்தை நோக்கிக் கொண்டு-பாடாற்றிக் கொண்டு இருக்க வேண்டாவோ என்று பரிசர வர்த்திகள் நிவாரிக்க
சர்வதா நான் அங்கே போய் சேருகை தவிரேன் -என்று தம் துணிவை அவர்களுக்கு சொல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற-வெள்ளிச் சுரி சங்கில் அர்த்தத்தை
வெள்ளிய நாமம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம்
தெள்ளிய மால் தென் திருப்பேர் சென்று புக -உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு
அற்றவர்கள் தாம் ஆழியார் —63-

———————————————

வியாக்யானம்–

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் -மோகம் –
வெள்ளிய நாமம் கேட்டு -மோகம் -விட்டகன்ற பின் –
பாவநத்வ-போக்யத்வ-தாரகத்வாதி குணங்களை யுடைய முகில் வண்ணரான
ஸ்ரீ பெரிய பெருமாள் யுடைய திரு நாமங்களை பாட்டுத் தோறும் திருத் தாயார் சொல்லக் கேட்டு
கீழில் மோஹமானது விட்டுப் போன பின்பு –

தெள்ளியமால் தென் திருப்பேர் சென்று புக –
ஆஸ்ரித ரஷணத்திலே விவேகஜ்ஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் வர்த்திக்கிற ஸ்ரீ தென் திருப் பேரிலே
தென் திருப் பேரையில் சேர்வன் நானே -என்றும்
திருப் பேரையில் சேர்வன் சென்றே -என்றும்-சென்று புகுவதாக ஒருப்பட இவ் வதிபிரவ்ருதியை
தாய் மாறும் தோழி மாறும் தடஸ்தராய் உள்ளாறும் கண்டு இப்படி சாஹசத்தில் ஒருப்படுகை உக்தம் அன்று
என்று நிஷேதிக்க –

உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் –
திரு உள்ளம் தம்மை ஒழியவும்-முந்துற்ற நெஞ்சாய்- வீற்று இருந்த இவ்விஷயத்தில்
மாறுபாடு உருவ ஊன்றி நின்ற ஸ்வபாவத்தை நிஷேதிப்பாருக்கு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –
அதாவது –
நானக் கருங்குழல் தோழி மீர்காள் அன்னைமீர்காள் அயர் சேரி யீர்காள்
நான் இத்தனை நெஞ்சம் காக்க மாட்டேன் -என்று தொடங்கி
கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே -என்றும்
செங்கனி வாயின் திறத்ததாயும்-என்று தொடங்கி –
நாங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ நாணும் நிறையும் இழந்ததுவே -என்றும்
இழந்த எம்மாமைத் திறத்து போன என் நெஞ்சினாறும் அங்கே ஒழிந்தார் -என்று தொடங்கி
அன்னையார்கள் என்னை என் முனிந்தே -என்றும்
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் —
காலம் பெற என்னைக் காட்டுமினே –
காலம் பெற என்னைக் காட்டுமின்கள் -என்றும்
பேரையிற்கே புக்க என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே -என்றும்
நெஞ்சு நிறைவும் எனக்கு இங்கு இல்லை -என்றும்
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே-என்றும்
இப்படி தாம் அங்கே பத்த பாவரான படியை-பத்தும் பத்தாக அருளிச் செய்தவை -என்கை –
அச்யா தேவயா மனஸ் தஸ்மின் -என்னக் கடவது இறே-

அன்றிக்கே
வெள்ளிய நாமம் கேட்டு விட்டு அகன்ற பின் மோகம் தெள்ளியமால் தென் திருப் பேர் சென்று புகுந்து
உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் -என்று ஏக வாக்யமாக யோஜிக்கவுமாம் –

உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு அற்றவர்கள் தாம் ஆழியார் –
இத் திருவாய் மொழி முகேன தம் திரு உள்ளம் ஸ்ரீ திருப் பேரில் இருப்பிலே அபஹ்ருதமான படியை அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே தேவு மற்று அறியேன் -என்றவர்கள்-

தாம் –
இப்படியான பெருமையை யுடைய தாங்கள் –

ஆழியார் –
அவர் அடிமைத் திறத்து ஆழியார் -என்னும் அவர்களிலும் இவர்களே அகாத பகவத் பக்தி சிந்துவான
ஸ்ரீ நாத முனிகளைப் போல மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருளை அறிய வல்லரான
அகாத ஜ்ஞான பிரேமங்களை யுடையார் –

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: