பகவத் விஷயம் காலஷேபம் -146- திருவாய்மொழி – -7-2-6…7-2-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

‘மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள்பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6-

ஆஸ்ரித சம் ரக்ஷணம் அர்த்தமாக ஆயுத பூர்த்தி -இவளை அலற்ற வைத்து –இவள் திருத்து அருளாய் –
இப்பாசுர வினைச் சொல் முன் பாசுரத்துடன் சேர்த்தே பொருள்
மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;-உன்னுடைய பவ்யத்தையாலே என்னை
மையல் கொள்ளப் பண்ணி -ஆச்சர்ய சேஷ்டிதங்கள் உடையவன் -ரிஷிகளுக்கு மாயம் -இவளுக்கு மா மாயம்
இவள் திருவடியே வாசஸ் ஸ்தானம் என்று அருளிச் செய்வான் –பவ்யத்தை உக்தியால்
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;-ஸ்புரிக்கும் திரு அதர அழகும்
-நைவளமும் –இதே ரீதியில் -பாடி -நம்மை நோக்கா -இறையே நயங்கள் செய்யும் அளவில் -கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் -போலே
இது அன்றோ எழில் ஆலி என்றானே -பவ்யதா பிரகாசகம் -மணி போலே முடிந்து ஆளலாம் படி சுலபன்-குளிர்ந்த –
தாபம் தீர காவேரி சூழ்ந்த -சன்னிஹிதன் எனக்காக
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;-விரோதி நிரசனா -பிரணத ரக்ஷ விளம்பம் பொறாமல்
-ஏந்திக் கொண்டே -அழகை ஸூ ரிகளுக்கு அனுபவிப்பித்து -சத்தா ஹேது வானவன்
பைகொள்பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே-சயனத் திருக் கோலம் -பெரிய பெருமாள்
-சேஷசாயித்தவம் சொல்ல வில்லை -திரு விருத்தம் –62 -இந்த பதிகம் முழுவதிலும் –கானம் கூட்டி -ருக் பரிணமித்து சாமம்
-அரவணைப்பு பள்ளி கொண்ட முகில் வண்ணா –
இங்கு தாயார் வார்த்தை -இவளது விளிச் சொல் -இது -என்னும் -இல்லை -மகள் வார்த்தையாக -5-8-சரணாகதி த்வயம் போலே
இல்லை பார்த்தோம் நான்கும் -அங்கே பிரியா அடிமை என்னைக் கொண்டாய் திருமாலே -பிராப்ய பரமான வார்த்தை -என்பதால் –
விரியும் பணங்கள்-ஸ்பரிசத்தால் மெய் சிலிர்த்து -ஜாதி பிரதியுக்தமான -மென்மை குளிர்த்தி நாற்றம் -வெளுத்து நிரதிசய போக்யமான –
படுக்கை உறங்குமா -ஊம்பியும் நீயும் உறங்கேல் -இவள் திறத்து -இது பொருந்துமோ -இவள் துடித்து இருக்கும் பொழுது
-தரைப் பட்டு கிடந்து அழற்றுவதே -பாவியேன் -இவள் விஷயத்தில் -என்ன பண்ணுவேன் சொல்லி அருள வேண்டும்
நீ அநாதரித்த அளவில் என்னால் செய்யலாவது ஒன்றும் இல்லையே –

‘மயக்கத்தைச் செய்து என்னுடைய மனத்தைக் கொள்ளை கொண்டவனே!’ என்பாள்; ‘மாமாயனே!’ என்பாள்;
‘சிவந்த திருவதரத்தையுடைய மாணிக்கமே!’ என்பாள்; குளிர்ந்ததண்ணீர் சூழ்ந்த திருவரங்கத்தில் உள்ளவனே!’ என்பாள்;
‘வெம்மை பொருந்திய வாள், தண்டு, சங்கு, சக்கரம், வில் என்னும் ஐந்து ஆயுதங்களையும் தரித்திருக்கின்ற விண்ணோர் முதல்வனே!’ என்பாள்;
படத்தைக் கொண்டுள்ள ஆதிசேடனைப் படுக்கையாக வுடையவரே! இவள் விஷயத்தில் திருவருள் புரிகின்றீர் இலீர்;
அது பாவியேனுடைய செயலிடத்தது’ என்கிறாள். என்றது, ‘இவள் பக்கலிலும் குறை இல்லை; உம்முடைய பக்கலிலும் குறை இல்லை;
இருவருமான சேர்த்தி பெற இருக்கிற என் பாபமன்றோ இதற்குக் காரணம்?’ என்றபடியாம்.: மூன்றாம் அடியில், பஞ்சாயுதங்கள் கூறப்பட்டிருக்கின்றன.

‘இவள் இவ்வளவு ஆபத்தை அடைந்தவளாயிருக்க, இவள் துயரத்தைத் தீர்த்து
அருளாதொழிகைக்குக் காரணம் என்னுடைய பாபமே’ என்கிறாள்.

மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும்-
உணர்த்தி உண்டாகில் நெஞ்சு இழவாள்காணும்.பகைவர்ளுடைய சமயம் பார்த்திருந்த அவர்களை கோட்டை கொள்ளுவாரைப் போலே.
கடலைத் தரை கண்டான் என்னமாறு போலே இருத்தலின், ‘என்னை’ என்கிறது.
புழுகூற்றிச் சட்டம் பொகடுவாரைப் போலே இருத்தலின், ‘மனம் கவர்ந்தான்’ என்கிறது.
அத்வேஷம் -தொடங்கி -உபகார பரம்பரைகள் -பலவும் செய்து -வெண்ணெய் விழுங்கி வெறும் காலத்தை பொகட்டு போவது போலே
கொன்று கிழிச்சீரை அறுப்பாரைப் போலே இருத்தலின், ‘மையல் செய்து மனம் கவர்ந்தான்’என்கிறது.-சாராம்சம் மனசை அபகரித்து -பிராந்தி விளைவித்து
மா மாயனே என்னும்-
மையல் செய்த பிரகாரங்கள், என்றது,‘கலக்கிற சமயத்தில் தாழ நின்று கையைக் காலைப் பிடித்த
பரிமாற்றங்காணும் இவள் மனத்தில் பட்டுக் கிடக்கிறது’ என்றபடி.
‘இயல்பாயுள்ள மேன்மை போன்றதன்றே, காதலால் தாழ நின்ற நிலை’ கலவிக் காலத்தில்
ஆச்சரியமான செயல்களையுடையவனே!’ என்னும்.
செய்ய வாய்-
இதுவும் அந்த மாயங்களிலே ஒன்று. தைரியக் குறைவு உண்டாய் ‘நான் உன் சரக்கு அன்றோ?’ என்று
சொல்லுகிற போதை அதரத்தில் பழுப்பு இருக்கிறபடி.
‘அழகிய முறுவலையுடைய முகத்தாமரையைத் தரித்தவனை’ என்னக்கடவதன்றோ? -அங்கே அவாக்ய அநாதரா –
மணியே-
புஷ்பம் மலருகிற போது எங்கும் ஒக்க ஒரு செவ்வி பிறக்குமாறு போலே,
புன் முறுவல் செய்யும்போது வடிவிலே எங்கும் ஒக்க ஒரு செவ்வி பிறந்தபடி.
தண்புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும்-
புன்முறுவலில் உண்டாகும் குளிர்த்தியைப் போலாயிற்று ஊரில் குளிர்த்தியும்.
அகவாயில் குளிர்த்தி போலேயாயிற்று இவ்வாயில் குளிர்த்தியும்.–வாய் இடம் வாசல்
‘ஸவிலாஸ -முக பங்கஜம் ஸ்மிதாதாரம் ’ என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 17:21.
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்-
திவ்ய ஆயுதங்கள் பகைவர்களை அழிப்பதற்கு உடலாக இருக்குமாறு போலே
காதலிகளை அழிக்கைக்கும் உடலாக இருக்குமன்றோ உகப்பாரையும் உகவாதாரையும் ஒக்கத் தோற்பிக்குமவை?
முன்னே கை கண்டு வைக்கிறவை அன்றோ?
காணவே பகைவர்கள் மண்ணுண்ணும்படியான திவ்ய ஆயுதங்களைத் தரித்திருக்கிற நீ
என் விரோதிகளைப் போக்கி முகங்காட்டாது ஒழிவதே!
திவ்விய ஆயுதங்களினுடைய சேர்த்தியால் வந்த அழகினைக் காட்டி நடத்த, அதுவே ஜீவனம் ஆயிற்று அந்நாடு கிடப்பது.
இல்லையாகில், அங்கே வினை உண்டாகத் தரித்திருக்கிறான் அன்றோ?
பை கொள் பாம்பு அணையாய் –
புன்சிரிப்போடு. திவ்ய ஆயுதங்களோடு, நித்திய விபூதியை யுடையனாயிருக்கிற இருப்போடு,
திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்தருளினதோடு வாசி அற எல்லாம் உத்தேசியமாக இருக்கிறபடி.
பகவானுடைய திருமேனியின் ஸ்பரிசத்தால் உண்டான உவகையாலே மலரந்த படங்களையுடையனான
திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவரே!
தனிப்படுக்கையிலே சாய்வதே நீர், இவள் தரைக்கிடை கிடக்க?
இவள் திறத்து அருளாய் –
படுக்கையில் சேர்த்தி பெறாவிட்டால், உலகத்தாருக்குச் செய்யும் அருளும் இன்றிக்கே ஒழியவேணுமோ?
இவள் திறத்து – பாடோடிக் -துக்கப்பட்டு -கிடக்கிற இவள் திறத்து.
அருளாய் – அருள்கொள்வார் தேட்டமான நீர், அருள் பெறில் ஜீவிக்கும் இவளை இப்படித் தரைக்கிடை கிடக்கவிட்டு வைப்பதே!
பாவியேன் –
நீர் அருளாதவர் அல்லீர்; இவள் அது பெறாவிடில் ஜீவிப்பாள் அல்லள்;
இதற்கு அடி நான் செய்த பாபம் அன்றோ? ‘என் பாபமே இந்த விஷயத்தில் காரணம் ஆயிற்று’ என்னமாறு போலே,
செயற்பாலது –
என்னுடைய செயலிடத்தது அருளாமைக்கு அடி; என்றது,
‘இவள் பக்கலிலும் குறை இல்லை; உம்முடைய பக்கலிலும் குறை இல்லை;
இருவருமான சேர்த்தியைக் காண இருக்கிற என் பாபம் அன்றோ இதற்குக் காரணம்?’ என்றபடி.
இதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘என் பாபமே’ என்று தொடங்கி.
‘மத்பாபமேவாத்ர நிமித்தம் ஆஸீத்’-என்பது, ஸ்ரீராமா, அயோத். இது, ஸ்ரீபரதாழ்வான் கூற்று.
‘கொன்றே னான்என் தந்தையை மற்றுள் கொலைவாயால்
ஒன்றோ கானத் தண்ணலை உய்த்தேன் உலகாள்வான்
நின்றேன் என்றால் நின்பிழை யுண்டோ பழிஉண்டோ?
என்றே னுந்தான் என்புகழ் மாயு மிடமுண்டோ?’-என்பது, கம்பராமாயணம்.

நிரதிசய வ்யாமோஹன் -மா மாயன் -அருளாதது உம் குறை இல்லை –
இவள் மயங்கி இருக்க -தப்பு இவளது இல்லை -பிறாவண்யம் மிக்கு
பாவியேன் -மத்பாபம் காரணம்

———————————————————————————————————————-

‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!
பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட
கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’
என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-

நிறைய விளிச் சொற்கள் -ஏழும் மகளது-திருத்த தாயார் -இவள் திறத்து என் செய்ய இருக்கிறாய் போலே -வார்த்தை இல்லையே இதில்
அன்றிக்கே முதல் இரண்டு வார்த்தைகள் திருத் தாயார் சம்போதானம் –இப்படி இருக்கிறாள் தன் மகள் இப்படி என்று அறிவிக்கிறான் என்று -நிர்வாகம் –
ஆச்ரித சம் ரக்ஷணம் அரணவ சாயி குணங்களை சொல்லி
‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!
பற்றிலார் பற்ற நின்றானே!-பால இடம் -தோறும் அநாச்ரிதற்கு துன்பம் ஆஸ்ரிதற்கு இன்பம்
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட
கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;-மாசம் ருது அயனம் -பிராப்தி காலம் நீ இட்ட வழக்கு -கடலில் கடல் சாய்ந்தால்
போலே குணக் கடல் ஷீரார்ணவம் விட்டு -ஏஷ நாராயணா –மதுராம் புரம்
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’-பிறபாடற்கு சந்நிஹிதன்
என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;-புனிதன் ஸுலபன்-இந்த ஆர்த்த த்வனிகளுக்கும் வர வில்லையே
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்-தர்ச நீயமான-கண்ணீர் மல்க நிரவியாபாரியாய் இருக்கும்
என்னுடையக் கோமளக் கொழுந்தே.-கொடி போலே -தாயார் தான் இரங்கி பேசி -நாயகி நிலைமை அறிவிக்கிறான்

‘என்னுடைய அழகிய கொழுந்து போன்ற பெண்ணானவள், ‘பகுதிப்பட்ட துன்பங்களையும் இன்பங்களையும் படைத்தவனே!’ என்பாள்;
‘ பற்று இல்லாத பரம ஞானிகள் பற்றும்படி நின்றவனே!’ என்பாள்; ‘கால சக்கரத்தையுடைவனே!’ என்பாள்;
‘திருப்பாற்கடலை இடமாகக் கொண்ட கடல் வண்ணனே!’ என்பாள்; ‘கண்ணனே!’ என்பாள்; ‘சேல் மீன்கள் தங்கியிருக்கின்ற
குளிர்ந்த நீர் சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே!’ என்பாள்; ‘என்னுடைய தீர்த்தனே!’ என்பாள்;
அழகிய பெரிய குளிர்ந்த கண்களில் நீர் மிகும்படி இருப்பாள்,’ என்கிறாள்.
பால் – பகுதி; இடமுமாம், தீர்த்தன் – பரிசுத்தான்; பாவத்தைத் தீர்க்கின்றவனுமாம். ‘தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும்’ எனபது தொல்காப்பியம்.
கோமளம் – மிருதுத் தன்மையுமாம்.

‘அவர் அவர்களுடைய அளவுகளை நினைந்து, பொறுக்கும் அளவுகளிலே அன்றோ சுக துக்கங்களைச் சுமத்துவது?
இப்படி என்னைப் படுத்தலாமோ?’ என்னாநின்றாள் என்கிறாள்.
அன்றிக்கே, அடியார்களை வாழ்விக்கையும் அடியார் அல்லாதாரை நலிகையும் அன்றிக்கே,
இப்போது விபரீதமாயிற்றோ உம்முடைய படி என்கிறாள்’ என்று பிள்ளான் பணிக்கும்.
பால -முறை என்றும் இடம் என்றும் இரண்டு நிர்வாகங்கள் –
அன்றிக்கே, ‘இக்கோமளக் கொழுந்துக்குக் கைம்முதல் ஒன்றுமில்லாதார் பற்றினால் பாதுகாக்கக்கடவ
நீர்மையையுடையவன் சந்நிதியிலே இவை எல்லாம் படவேண்டுகிறது, என்னுடைய சம்பந்தம் என்று எண்ணுகிறாள்’ என்னுதல்.

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்
-இடம் அறிந்து சுக துக்கங்களைப் படைத்தவனே! ‘பால்’ என்றது, இடம் என்றபடி
அப்பால் இப்பால் என்றால், அவ்விடம் இவ்விடம் என்றபடியன்றோ?
பாலவாக – அந்த இடத்தே அந்த இடத்தேயாக.
உம்மைப் பிரிந்தார் எல்லாருமனுபவிக்கும் துக்கத்தை இவள் ஒருத்தியுமே அனுபவிக்கப் பார்த்தால் இவளால் பொறுக்கப் போமோ?
அன்றிக்கே, அடியார்கள் வாழவும் அடியார் அல்லதார் கெடும்படியாகவுமன்றோநீ செய்து வைத்தது?
பால் – முறை. பண்டு கட்டின மரியாதையும் இவளுக்கு இல்லையோ?
‘செய்குந் தாவருந் தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தன் அன்றோ? திருவாய். 2. 6 : 1.
‘பால்’ என்பதற்கு, பாகம், இயைபு, இடம், நியாயம் என்பன பொருளாம்.
‘தங்கள் தங்களால் பொறுக்க ஒண்ணாதனவற்றைத் தாங்கள் தாங்களே ஏறிட்டுக்கொள்ளும்
போது நம்மால் செய்யலாவது உண்டோ? நம்பக்கல் குறை இல்லை;
பேறு தங்கள் தங்களதானால் தாங்களும் சில செய்யவேணும் என்று அவனுக்குக் கருத்தாக, அதற்கு விடை அருளிச்செய்கிறாள் மேல்:
பற்றிலார் பற்ற நின்றானே –
‘ஒரு கைம்முதல் இல்லாதார்க்காக அன்றோ இங்கு வந்து சாய்ந்தருளிற்று?
இந்தக் கிடை நித்தியசூரிகளுக்காகவோ? உம்முடைய பக்கல் பற்று அறுத்துக்கொண்ட
ஜயந்தன் போல்வார்க்கும் பற்றாய் இருக்குமவர் அன்றோ நீர்!’
‘அந்தப் பெருமாளையே சரணமாக அடைந்தான்’ என்றே அன்றோ கூறுகிறது ஸ்ரீராமாயணம்?
‘தமேவ ஸரணம் கத;’ என்பது, ஸ்ரீராமா, சுந். 38:34

‘அது உண்டானலும் அதற்கு ஒரு காலம் உண்டே?’ என்ன,
காலசக்கரத்தாய் –
‘அந்தக் கலாசக்கரம் நீ இட்ட வழக்கன்றோ?
அடியானுக்காகப் பகலை இரவாக்கினவன் அன்றோ?
அன்றிக்கே, தடைகள் உண்டே?’ என்ன, ‘தடைகளுக்குக் கூற்றுவனான திருவாழி அன்றோ நீ தரித்திருக்கிறது?’ என்னுதல்.-காலம் -கூற்று
‘பரிகரம் உண்டானாலும் நான் சேய்மையில் இருப்பவன் அன்றோ?’ என்ன,
‘அங்ஙனம் சொல்ல ஒண்ணாதே?’ என்கிறாள் மேல்:
கடல் இடங்கொண்ட கடல் வண்ணா –
‘நீ எங்களைக் காலம் பார்த்தன்றோ கிட்டக் கிடக்கிறது?
ஒரு கடல் ஒரு கடலிலே சாய்ந்தாற்போலே அணித்தாகத் திருப்பாற்கடலிலே சாய்ந்திருக்கிறாய் அன்றோ?’
‘ஆயின், அங்கே வரலாகாதோ?’ என்ன,
அவ்வலையலைக் கேட்கமாட்டாத -வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி அலைவலை -ஆயர்கட்கும் ஆய்ச்சியர்கட்குமாகக்
கிருஷ்ணனாய் வந்து உதவினாய் அன்றோ?’ என்கிறாள் மேல்:
அலவலை-கௌதம புத்திரர் -யாகம் பண்ண -த்ருதர் செந்நாய் கண்டு -ஓடி கிணற்றில் விழ ஏகதர் தவிதர்-
கிணற்றில் உள்ளவை கொண்டு -சுவர்க்கம் லோகம் வரை போகும் தொனி-அலவலை தேவர்கள் கேட்ட கதை –
ஹவுஸ் வாங்க வந்த கதை
கண்ணனே என்னும்
–‘ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷிரார்ணவ நிகேதந:
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகதோ மதுராம்புரீம்’-என்பது, பாரதம். ஹரிவம்ஸம், 113:62
‘திருவனந்தாழ்வானாகிற கட்டிலைத் தனக்கு முன்னே சென்று அவதரிக்கும்படி போகவிட்டு
மதுரை என்ற நகரத்திற்கு எழுந்தருளினார் அன்றோ?’ என்கிறபடியே,
அந்தக் கிடையை விட்டு இடையிலே வந்து உதவினாய் அன்றோ? அது தப்பிற்றே?’ என்ன,
‘அந்த அவதாரம் பரத்துவம் என்னும்படி அன்றோ கோயிலிலே வந்து சாய்ந்தருளிற்று?’ என்கிறாள் மேல்:
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் –
‘தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன்கள் போன்றவர் அன்றோ?’ என்றது,
‘ ‘ஜலாத் மத்ஸ்யாவிவ உத்த்ருதௌ’ என்பது,
ஸ்ரீராமா. அயோத். 53:31.-தண்ணீரில் சஞ்சரிக்கின்ற மீன் முதலான பொருள்கள்
தண்ணீரைப் பிரிந்து தரிக்கில் அன்றோ இவள் உம்மைப் பிரிந்து தரிக்கவல்லளாவது?’ என்றபடி.
‘அந்த ஊரில் வசிக்கிற உமக்குத் தக்கதாமோ இவளுக்கு முகங்காட்டாது ஒழிகிற இடம்?’
என் தீர்த்தனே என்னும் – -பாவனத்வமும் ஸுலப்யமும் –
‘நீ உபேக்ஷித்தாலும் உன்னை ஒழிய எனக்குச் சொல்லாதபடி செய்தவனே!’ என்கிறாள் என்னுதல்,
அன்றிக்கே, ‘நான் இழிந்தாடும் துறை’ என்னுதல்.

கோலம் மா மலர்க்கண் பனிமல்க இருக்கும் –
காட்சிக்கு இனியானவாய்ப் பரந்து. சிரமஹரமான கண்கள் நீர் மல்க இராநின்றாள்.
கண்ணும் கண்ணநீருமான அழகு, காட்டில் எறித்த நிலா ஆவதே!
இக்கண்ண நீருக்குச் சாதனத்தைச் செய்து பல வேளையிலே இழப்பதே!
என்னுடையக் கோமளக்கொழுந்து –
கலக்கப் பொறாத மிருதுத் தன்மையையுடைவள் பிரியப் பொறுக்குமோ?
‘தசை முறுகினால் வைத்தியர்கள் முகம் பாராதவாறு போலே, மகள் அவஸ்தையைக்கண்டு தளர்ந்து
பெரிய பெருமாள் முகம் பாராமலே வார்த்தை சொல்லுகிறாள்’ என்று அருளிச்செய்வர் சீயர்.
கொழுந்து –
கொள் கொம்பு தேட்டமான அளவிலே தரையிலே படர விடுவதே.
‘நாயகனுடைய கலவிக்குத் தகுந்த என்னுடைய வயதை’ என்கிறபடியே,
‘பதி ஸம்யோக ஸூலபம் வய;’என்பது, ஸ்ரீராமா. அயோந். 118 : 34.
இப்பாசுரத்தில் ஒரு தலைக்கட்டு இன்றிக்கே இருக்குமிதற்குக் கருத்து,
‘பரிஹரிக்கும் எல்லை கழிந்தாள், நாம் இவர்க்குச் சொல்லுவது என்?’ என்று
தன்னிலே நோவு படுகிறாள் என்று வங்கிப்புரத்து நம்பி பணிக்கும்

————————————————————————————-

‘கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக்
கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்;
‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்!
என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-

அதிமானுஷ சேஷ்டிதங்களில் அகப்பட்டு –
‘கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக்
கோ நிரை காத்தவன்!’ என்னும்;-ஸீரோ பூஷணம் -மேன்மை உடன் அவதரித்து மலையை அநாயாசேன ஏந்தி
-தன் விஷயத்தில் பர்யவாசியாமல் அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்;
‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;-பக்தர் போலே அழுதும் பிரபன்னர் போலே தொழுதும் -இரண்டும் பலியாமையாலே
ஆத்மா-அதாக்யம்-தக்தமாம் படி வெவ்விதிதாக மூச்சுவிடும்
மைப்படி குளிர்ந்த வண்ணம் வைத்து சுட வைத்தான் -இக்குரலைக் கேட்டு வராகி கூடும் என்று
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;-மேலே நோக்கி -இமைக்காமல் கண்ணை அழுத்திப் பார்த்து –
எப்படி எந்த பிரகாரத்தால் காண்பேன்
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்!-கோயிலிலே சந்நிஹிதன்
என் செய்கேன் என் திரு மகட்கே?-லஷ்மி துல்ய -ஆர்த்திக்கு அடியானை பிராவண்யம் குறைக்கவோ
உன்னை வர பண்ணவோ இரண்டும் முடியாதே

‘நித்தியசூரிகளுக்குக் கொழுந்து போன்றவனே!’ என்பாள்; ‘மலையைக் தூக்கிப் பிடித்துப் பசுக்கூட்டங்களைக் காத்தவனே!’ என்பாள்;
அழுவாள்; தொழுவாள்; உயிரும் வேகும்படியாக வெப்பத்தோடு மூச்சு விடுவாள்; ‘அஞ்சன வண்ணனே!’ என்பாள்;‘
அஞ்சன வண்ணன்என் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனை யால்அர செய்திய மன்னரும் வந்தாரே’என்பது, கம்பராமா. குகப்படலம்.
எழுந்து நின்று மேல் நோக்கிக் கண்களை இமைக்காதவளாகி இருப்பாள்; ‘எந்த வகையால் உன்னைக் காண்பேன்?’ என்பாள்;
செழுந்தடம் புனல் சூழ்ந்த திருவரங்கத்தாய்! என் திருமகள் விஷயமாக என்செய்வேன் நான்’ என்கிறாள்.

‘இவளுக்கு மேன்மேலென வருகிற நோவுகள் தீர்க்கைக்கு நான் செய்வது என்?’ என்கிறாள்.

வானவர்கட்குக் கொழுந்து என்னும் –
‘நித்தியசூரிகளுக்கும் தலையானவனே!’ என்னும்.
அன்றிக்கே, அவர்கள் வேராகத் தான் கொழுந்தானவன் என்னுதல். -அவர்களால் லப்த சத்தாவானே –
குன்று ஏந்திக் குளிர்மழை -கோ நிரை-காத்தவன் என்னும் –
‘வேறு உலகத்தில் பரிமாற்றம் தேடவேணுமோ?
பசுக்களுக்கும் பசுவின் தன்மையரான ஆயர்கட்கும் உதவினவன் அன்றோ?
கோ நிரை பசுக்கூட்டம் பசுபிராயரான இடையர்கள்
மேன்மை இல்லாமல் இழக்கிறேனோ, நீர்மை இல்லாமை இழக்கிறனோ?’ என்னும்.
அழும் –
மலையைத் தரித்து ஒரு மழையைத் தடுத்த நீர். இந்த மழையைத் தடுத்தல் ஆகாதோ?’ என்றது,
‘பல விதமாக இடைவிடாமல் துக்கங்களாகிய மழையைப் பெய்கிற என்கிற இதனைத் தடுத்தல் ஆகாதோ?’ என்றபடி.

பஹூதா ஸந்தத துக்க வர்ஷிணி’-என்பது, ஸ்தோத்திரரத்நம், 49.
‘இந்திரன், சோனை மாரி விலக்கி விட்டவர்
சொரிகண் மாரி விலக்கிலார்’-என்பது, திருவரங்கக் கலம்பகம்.
அழும் –
‘பாலர் செய்யுமதனையும் செய்யும்’ என்னுதல்.
சினேகத்தையுடையவர்கள் செய்யுமதனையும் என்னுதல்.
தொழும் –
‘புகல் அற்றார் செய்வதைச் செய்யும்’ என்னுதல்.
‘வேதாந்த ஞானமுடையார் செய்வதைச் செய்யும்’ என்னுதல்.
உபாசகர் -அஞ்சலி பரமாம் முத்ரா வேதாந்தி அபராதர் -தொழும்-பிரபன்னர் யோக நிஷ்டன் –
ஆவி அனல வெவ்வுயிர்க்கும் –
தொழுதவுடனே வரக்காணாமையாலே, ‘பிரஹ்மாஸ்திரம் வாய் மடிந்தது’ என்று,
எரிக்க முடியாத ஆத்துமாவானது நெருப்பு மயமாம்படி ‘நீண்ட வெம்மையான மூச்சை விட்டும்’
தீர்க்கம் உஷ்ணஞ்க நிஸ்வஸ்ய’-என்பது, ஸ்ரீராமா. யுத். 117:6.-என்கிறபடியே, நெடுமூச்சு எறியும்.

அஞ்சன வண்ணனே என்னும் –
‘நெருப்பிலே நீரைச் சொரிந்தாற்போலே அக்குளிர்ந்த வடிவைக் கொண்ட வந்து தோற்றவல்லையே!’ என்னும்.
மேகஸ்யாமம் -மேகம்போல் கருநிறத்தனை’ என்னும் வடிவே அன்றோ?
‘மேக ஸ்யாமம் மஹா பாஹூ’ என்பது, ஸ்ரீராமா. அயோத். 83:8.

கைகேயி வார்த்தையால் பிறந்த தாபமுடைய ஆறுங்கண்டீர் அவ்வடிவழகிலே விழிக்கப் பெற்றோமாகில்’ என்றார்களே அன்றோ?
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் –
வடிவினை நினைத்தாவாறே தரித்து எழுந்திருந்து வருவதற்குத் தகுதியுள்ள திக்கினைப் பார்த்து,
முதலில் புறப்படும் இடமே தொடங்கிக் காணவேணும்’ என்று இமை கொட்டாதே பார்த்துக்கொண்டிருக்கும்
. எங்ஙனே நோக்குகேன் என்னும் –
தான் பார்த்த திக்கில் வரக் காணாமையாலே, ‘பின்னோக்கி வந்து கட்டிக்கொள்ளும்’ என்று புரிந்து பாராநிற்கும்.
அன்றிக்கே, வடிவினை நினைத்தவாறே தளர்த்தியிலே எழுந்திருந்து,
ஆனைக்கு உதவினாற்போலே வரக்கூடும் என்று மேல் நோக்கிப் பார்த்து ‘முதலில் புறப்படும் இடமே தொடங்கிக் காணவேணும்’ என்று
இமை கொட்டாதே இருக்கும் என்னலுமாம்.
அன்றிக்கே பின்னையும் தோற்றக் காணாமையாலே, ‘நான் உன்னைக் காணும் விரகு ஏது?’ என்னும் என்னுதல்.
செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் –
அழகியதாய்ப் பெருத்த நீர் சூழ்ந்த கோயிலை இடமாகவுடையவனே!
இப்படிச் சிரமத்தைப் போக்கக்கூடிய தேசத்திலே நீர் வந்து சாய்ந்தது இவள் வரவு பார்த்தன்றோ?
அத்தலை இத்தலை ஆயிற்றோ? -கோரமாதவம் செய்தனன் கொல் –
என் செய்கேன் –
‘செய்யவேண்டுவன அனைத்தையும் தானே செய்தாள், நான் இனிச் செய்வது என்?
அன்றிக்கே, வேறு உபாயங்களால் சாதித்துக்கொள்ளத் தக்கதோ உம்முடைய தரிசனம்?’ என்னுதல்.
என் திருமகட்கே –
இவளை இழக்கலாமோ உமக்கு? உம்மை ஒருவரையும் ஆசைப்பட்ட ஏற்றமன்றோ அவளது?
உம்மையும் அவளையும் சேர ஆசைப்பட்ட ஏற்றமுடையவள் அல்லளோ இவள்?
சாக்ஷாத் லக்ஷ்மியோடு ஒக்கச் சொல்லலாம் அன்றோ இவளை!

—————————————————————————————–

‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

லஷ்மி பூமா நீளா நாயகன் உன் பிரணயித்தவ அதிசயத்தாலே
தன்னிடம் தப்பாதே என்று இருக்கும் இவள் -அவளும் நின் ஆகத்து இருப்பது அறிந்தும் ஆகிலும் ஆசை விடாலாள்-
கார்யம் தலைக்கட்ட இருக்கும் படி எங்கனே என்கிறாள்
‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;-எனக்கு ஸ்வாமி நியான லஷ்மி -சேர் -தனக்கு அபிமத ஸ்தானம்
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;-சேர்த்தி அழகுடன் எனக்கு தாரகம்-மிதுனம் –
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்;-நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப -இத்யாதி –
-திருக் -கோரைப் பற்களால் -இடந்து எடுத்து அபிமதையாகக் கொண்ட -பெருமைக்கு ஈடாக உள்ள நாயகன்
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்;-நப்பின்னை பிராட்டிக்கு கன்யா சுல்கம்-நியமித்த அன்று –
உரு -ரிஷபம் -பெரும் சப்தம் -இடி போன்ற பயாவஹத் தொனி-தழுவி -அநாயாசேன-அபிமத விஷய கண்ட ஆஸ்லேஷம் போலே
நிதி எடுத்தால் போலே சுவீகரித்துக் கொண்ட சத்ருச கோப குளம் -பவ்யன் ஆனவன்
செல்வம் -செல்வம் விளையும் பூமி –செல்வம் அனுபவிக்கும் இவள் -ஸ்ரீ யபதி வேதாந்தம் கோஷிக்கும் -போஷிப்பவள் பூமா தேவி
-யுத்த உத்தர உத்க்ருஷ்டம்
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே-பிரணயித்தவம் பிரகாசித்தால் போலே
இவளுக்காக இங்கே சந்நிஹிதன்
தென் கட்டளை பட்ட -வாசல் ஸ்தானமாக கொண்டவனே
ஆர்த்தி முடியுமா-சம்ச்லேஷம் ஆகுமா — -ஆர்த்தியாலே இவள் முடிவாளா -விஸ்லேஷம் தொடர்ந்து இவள் முடிவாளோ

‘என் திருமகள் சேர்ந்திருக்கின்ற மார்பையுடையவனே!’ என்பாள்; ‘என்னுடைய உயிரே!’ என்பாள்; ‘உன்னுடைய அழகிய
தந்தத்தினாலே இடந்து எடுத்து உன் காதலுக்குரியவளாகக்கொண்ட பூமிப்பிராட்டிக்குக் கணவனே!’ என்பாள்;
‘கிருஷ்ணாவதாரத்தில் அஞ்சத்தக்க இடபங்கள் ஏழனையும் தழுவி உன் காதலுக்கு உரியவளாகக் கொண்ட
நப்பின்னை பிராட்டிக்கு அன்பனே!’ என்பாள்; அழகிய திருவரங்கத்தைக் கோயிலாகக் கொண்டவனே! இவளுடைய துயரத்திற்கு முடிவு அறிகின்றிலேன்.
எயிறு – கோரப்பல், உரு – அச்சம்; அது இங்கு அச்சத்தை உண்டாக்குகின்ற இடபங்களுக்கு ஆயிற்று. தென் – தெற்குத் திசையுமாம்.

‘இவள் துக்கத்துக்கு ஒரு முடிவு காண்கிறிலேன்,’ என்கிறாள்.

என் திருமகள் சேர் மார்பனே என்னும் –
‘என் பேற்றுக்குப் புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ?’ என்னும்.
‘என்’ என்பது திருமகளுக்கு அடைமொழி. மார்பனுக்கு அடைமொழி ஆக்கலாகாது.
அனந்தாழ்வான் தன் பெண்பிள்ளையை‘என் திருமகள்’ என்று திருநாமம் சாத்தினான்.
பட்டர், பெருமாளிடத்தில், ‘அடியேனை ‘ஸ்திரீதனமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திருவுள்ளம் பற்றவும்;
நானும், ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று அவ்வழியே
‘அழகிய மணவாளப் பெருமாள்’ என்று நினைத்திருக்கவுமாக வேணும்,’ -மாதர் லஷ்மி -என்று வேண்டிக்கொண்டார்,
‘சேர்மார்பன்’ என்பது,
நிகழ்கால வினைத்தொகையாலே இரஹஸ்யத்தில் நித்திய யோகத்தைச் சொல்லுகிறது: என்றது,
‘அவள் ஒரு கணம் பிரியஇருக்கில் அன்றோ எனக்குப் பேறு தாழ்க்க வேண்டுவது?’ என்கிறாள் என்றபடி.
புராண ஸ்லோக அர்த்த உபன்யாச யுக்தமாக -புராணிகர்-புரோகிதர் -கட்டியம் -சேவிக்க -அருளிச்செயல் சந்தை -சேர்த்து
-மூலம் கேட்க்கைக்காக இயல் -சப்தம் -தாம் அமுது செய்யா நிற்க -அவர் சொல்ல கேட்டு –
‘பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்யுமவை கேட்கைக்காக நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுது
செய்யா நிற்கச்செய்தே இத்திருவாய்மொழி இயலைக் கேட்டருளாநிற்க, இப்பாட்டளவில் வந்தவாறே
‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே என்னும்’ என்று இயலைச் சேர்த்து அருளிச்செய்ய,
அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீரங்கநாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச்செய்வர்.
‘அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு,
‘இவர்க்குப் பகவானை அடைவது அணித்தாகிறதோ?’ என்று அஞ்சியிருந்தேன்,’ என்று சீயர் அருளிச்செய்வார்.
இவர்க்குப் பிரமாணம் ஒரு காற்று விசேடம் அன்று: ஒரு மிதுநமாயிற்று.
‘திருமகள் சேர் மார்பனாய்க்கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.

நின் திரு எயிற்றார் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே என்னும் –
‘காதலிமார்கட்குக் காரியம் செய்யும் போது உன்னை அழிய மாறியன்றோ காரியம் செய்வது?
ஸ்ரீ பூமிப்பிராட்டி பக்கல் முகம் பெறலாவது, -அவள் விபூதியைத் தன் முகத்தால் நோக்கினால் அன்றோ
‘நின் திரு எயிறு’ என்னும் இத்தனை அழகுக்கு? இடந்து நீ கொண்ட –
நீ இடந்துகொண்ட ஸ்ரீ பூமிப்பிராட்டிக்கு வல்லபனானவனே!
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே என்னும் –
‘ஒரு நாள் உதவின நீ. இன்று உதவினால் ஆகாதோ?’
அன்றிக்கே, நப்பின்னைப் பிராட்டியுடைய நிலையை ‘அன்று’ என்னுமித்தனை என்னுதல்.
ஒன்று இரண்டு அன்றிக்கே இருக்கிற இடபங்கள் ஏழனையும் தழுவி.
அவள் திருமுலைத் தடத்தை அணைத்தாற்போலே இருக்கிறதாயிற்று, அவளைப் பெறுகைக்கு உபாயமாகையாலே.
உருவென்பது – இடி. ‘இடிபோலே பயங்கரமான குரலையுடைய ஏறு’ என்னுதல்.
அன்றிக்கே, உருவென்று மிடுக்காய், மிடுக்குத்தான் வடிவு கொண்டாற்போலே என்னுதல்.
‘உருவுட்கு’ என்பது உரிச்சொல்.
நீ கொண்ட –
நீ கைக்கொண்ட.
ஆய்மகள் அன்பனே என்னும் –
‘என்னைக் கைவிட்டு என் ஸ்வாமிநிகள் பக்கலிலே எங்ஙனே முகம் பெற இருக்கிறாய்?’ என்னும்.
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே –
தெற்குத் திசைக்குச் சிறப்பைத் தருகின்ற திருவரங்கம் என்னம் திருப்பதியை வசிக்குமிடமாக வுடையவனே!
‘எருது ஏழ் அடர்த்த அவதாரத்தில் முகங்காட்டப் பெற்றதில்லை’ என்னும் குறை உண்டோ?
அவதாரங்கள் போல அன்றியே நித்தியவாசம் செய்கிறது பிற்பாடர்க்கு உதவ அன்றோ?
‘தன்னுடைய மேலான இடத்தை அடைந்தான்’ என்ன வேண்டாதபடி கோயில் கொண்டானாயிற்று.
மண்ணின் பாரம் நீக்கி மோஹம் இத்வா ஜகத் சர்வம் -‘கத: ஸ்வம் ஸ்த்தாநம் உத்தமம்’-என்பது பாரதம்.

தெளிகிலேன் –
-தென் திருவரங்கம் கோயில் கொண்டானே-அங்குக் குறை அற்ற பின்பு ‘தப்பாது’ என்று தெளிய அன்றோ அடுப்பது?
அது மாட்டுகின்றிலேன்.
‘மாஸூச;- துக்கப்படாதே’ என்றதனை அநுஷ்டான பரியந்தமாக்கிக்கொண்டு நீ கிடந்தால்,
‘ஐயங்கள் எல்லாம் நீங்கி நிலைபெற்ற எண்ணமுடையவனானேன்’ என்று இருக்க அன்றோ அடுப்பது?
ஸ்த்திதோஸ்மி கத ஸந்தேஹ:’ என்பது, ஸ்ரீகீதை, 18:73.
அது மாட்டுகின்றிலேன்.
இவள்தனக்கு முடிவு தெளிகிலேன் –
இவள் நிலை இதுவாக இருக்க, ஒரு ஞான லாபத்தாலே ஆறி இருக்கப்போமோ?

————————————————————————————–

‘முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்;
‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;
‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;
‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10-

ஈஸ்வர அபிமானிகளுக்கும் அந்தராத்மா -சர்வேஸ்வரன் -சீல-அதிசயம் ஒவ்தார்யம் வடிவு அழகாலும் ஆந்திர சம்ச்லேஷம்
-விஸிலேஷித்து பிரகாசிப்பிக்க அத்தால்பிறந்த விசுவாசம் தாயார் அருளிச் செய்கிறார்
முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்;
‘மூவுல காளியே!’ என்னும்;-இவள் படும் –இவள் தனக்கு முடிவு அறிய வில்லை – -இவள் –தனக்கு ஒரு முடிவு தெரிய வில்லை
-என்கிறாள் மக்கள் வார்த்தை தாயார் வார்த்தை –
த்ரிலோக்ய ஈஸ்வரன் இந்திரனுக்கு அந்தராத்மா
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;-பரிமளம் பிரவாஹி கொன்றை தாரை ஜாடை உடைய ருத்ரனுக்கு -ஈச்வரத்வத்துக்கும்
உபாஸகத்வத்துக்கும் அந்தராத்மா
‘நான்முகக் கடவுளே!’ என்னும்;-இவர்களுக்கு சேஷி ப்ரஹ்மாவுக்கும் அந்தராத்மா -பிரயோஜ நயன்தாரா -ஈஸ்வர அபிமானிகளுக்கும்
சீலத்துக்கும் மேலே -லீலா விபூதி சொல்லி மேலே
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;-தன்னுடன் லப்த சாரூப்பியம் கொண்ட முக்தர் நித்யர் -நித்ய விபூதி சொல்லி -மேன்மையை சொல்லி
‘வண் திரு வரங்கனே!’ என்னும்;-எளிமை சொல்லி -ஆசைப் பட்டார்க்குதன்னைக் கொடுக்கும் -ஒவ்தார்யம் -அந்த மேன்மை உடன்
இங்கே வந்து கொடுத்து -மேன்மை நீர்மை ஒவ்தார்யம் அனுசந்தித்து ஈடுபட்டு
அடி யடையா தாள் போல் இவள் அணுகி-அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.-ஜல ஸ்தல விபாகம் இல்லாமல் பொலியும் அபகரிக்கும் காள மேகம்
-உபகாரத்வ அதிசயம் -திருவடிகளை அணுகி பிராபித்தாள்-
அவன் உபகாரத்வ அதிசயம் ஒன்றே பிராபகம்-தான் சொத்தை தான் சேர்த்துக் கொண்டான்
பிராப்தாவும் பிராக்கணும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -மார்பிலே கண் வைத்து உறங்குவதே பிராப்தி -உபாய அம்சத்தில்
கைங்கர்யத்தில் இதுவே என் பணி என்னாது அதுவே ஆடச்செய்து இருப்பதே ஈடே

‘இவள், தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்கிறாள்; ‘மூன்று உலகங்களையும் ஆளுகின்ற இந்திரனுக்கு அந்தராத்துமாவாக
இருக்கின்றவனே!’ என்கிறாள்; ‘வாசனை வீசுகின்ற கொன்றைப் பூமாலையைச் சடையிலே தரித்தவனான சிவபெருமானுக்கு
அந்தராத்துமாவாக இருக்கின்றவனே!’ என்கிறாள்; ‘நான்முகனான பிரமனுக்கு அந்தராத்துமாவாக இருக்கின்றவனே!’ என்றகிறாள்;
‘தன்னோடு ஒத்த வடிவையுடைய நித்தியசூரிகளுக்குத் தலைவனே!’ என்கிறாள்; ‘வளப்பம் பொருந்திய திருவரங்கத்தில்
எழுந்தருளியிருக்கின்றவனே!’ என்கிறாள்; அவன் திருவடிகளை அடையாதவளைப் போலே இருந்த இவள்
முகில் வண்ணனாகிய அவன் திருவடிகளைக் கிட்டி அடைந்தாள்’ என்றவாறு.

‘இனிக் கிட்டமாட்டாளோ!’ என்னும்படி துக்கத்தை அடைந்திருந்த இவள்,
பெரிய பெருமாள் திருவடிகளைக் கலக்கப்பெற்றாள் என்கிறாள்.

இவள்தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்னும் –
பெண்பிள்ளை வார்த்தையைத் திருத்தாயார் அநுபாஷிக்கையாலே,
‘இவள் – தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன்’ என்னா நின்றாள் என்கிறாள்.
‘இந்தத் துக்கக் கடலைக் கரை காணும் விரகு அறிகிலேன்’ என்னுதல்
அன்றிக்கே, ‘முடிந்து பிழைக்கும் விரகு அறிகிலேன்’ என்னுதல்.
மூவுலகாளியே என்னும் கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் நான்முகக் கடவுளே என்னும் வடிவுடைவானோர் தலைவனே என்னும் –
இதனை ‘மூவுலகாளியே! கடிகமழ் கொன்றைச்சடையனே! நான்முகக் கடவுளே’ என்று சொல்லப்படுகிற,
வடிவுடை வானோர்க்குத் தலைவனே!’ என்னும் என்று,
திருமலையாண்டான் வையதி கரண்யமாக்கிப் பொருள் நிர்வஹிப்பர்.-வானோர் வார்த்தை என்று-நிர்வஹிப்பர்
‘என்னும்’ என்பதற்கு ‘என்னுமவனாய்’ என்பது பொருள். இதனை எம்பெருமானார் கேட்டருளி,
ஸாமாநாதி கரண்யாத்தாலே அருளிச்செய்தருளினார்:
‘மூன்று உலகத்திற்கும் உரியனான இந்திரனுக்கு அநதர்யாமியாய் நின்று அவனுடைய அதிகாரத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்:
‘வாசனையையுடைத்தான கொன்றையைச் சடையிலேயுடைய சிவபிரானுக்கு அந்தர்யாமியாய் நின்று
அவனுடைய பதத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்; ‘அவர்களோடு இவ்வருகுள்ளரோடு வாசி அற
எல்லார்க்கும் நிர்வாஹகனாயிருக்கிற நான்முகனாகிய தெய்வத்துக்கு அந்தர்யாமியானவனே!’ என்னும் என்று.

வடிவுடை வானோர் தலைவனே என்னும்-
பகவானுடைய அனுபவத்தால் வந்த உவகை வடிவிலே தோற்றும்படி இருக்கிற நித்தியசூரிகளுக்கு நாதனானவனே’ என்னும்.
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்றதனோடு, ‘மூவுலகாளியே!’ என்றதனோடு,
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்றதனோடு, ‘நான்முகன் கடவுளே!’ என்றதனோடு
வாசியற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு:-புண்டரீகாக்ஷனே நால் தோள் அமுதே -போலே வேதாந்த வாசனை மாறாமல்
மயர்வற மதிநலம் பெறுகையாலே;
விசேஷணாம்சத்தில் நிற்கின்ற வரல்லரே; சர்வ நிர்வாஹகன் என்று உணர்ந்திருக்குமவராயிற்று இவர்.
மூ உலகு ஆளியே -பாட்டுத் தோறும் சம்போதானம் -வர வேண்டுமே -இந்திரன் என்று வானோர் சொல்வதாகக் கொண்டால் ரீதி பங்கம் வருமே –
என்னும் -தாயார் அனுபாஷணம் பண்ண வேண்டுமே –
திருமாலை ஆண்டான் நிர்வாகத்தில் லீலா விபூதி நாதத்வம் மட்டுமே வரும் -அதனால் எம்பருமானார் நிர்வாகம் ஸ்ரேஷ்டம்
வண்திருவரங்கனே என்னும் –
நித்தியசூரிகள் மாத்திரம் அனுபவித்துப் போகை அன்றிக்கே, நித்திய சம்சாரிகளும் இழவாமைக்கு அன்றோ
இங்கு வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறது? ‘இங்குச் சாய்ந்தருளின தன் பலம் நான் பெறவேண்டாவோ?’ என்னும்.
வண்மையாவது, ஆசைப்பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் ஒளதர்யம்.

அடி அடையாதாள் போல இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே-
‘ஜீவிப்பாரைப் போல இருந்து கடுக முடிந்துகொடு நின்றாள்’ என்று நிர்வஹிப்பாருமுளர்;
‘அப்போது மேலே பிரபந்தம் நடவாதாகையாலே திருவடிகளைக் கிட்டாதாரைப் போலே இருந்து
கிரமத்திலே கிட்டிக்கொண்டு நின்றாள்’ என்று அருளிச்செய்யும்படி. -பிரத்யக்ஷமாக அடைய வில்லை –
இதுதான், மானச அனுபவித்தில் ஒரு தெளிவினைச் சொன்னபடி.
அடி அடையாதாள் போல – இவள் இப்போதே திருவடிகளைச் சேரமாட்டாள்:
இன்னும் சில காலம் இருக்கும் என்று போலே இருந்தது, முடிந்துகொடு நின்றாள் என்னுதல்.
இனி, ‘கலக்கப் பெறாளோ?’ என்று தோற்றும்படி துக்கத்தையடைந்தவளான இவள்,
கிட்டிக் கலந்து அனுபவிக்கப் பெற்றாள் காளமேகம் போன்ற நிறத்தையுடைய பெரிய பெருமாள் திருவடிகளையே என்னுதல்.

———————————————————————————-

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-

ஸூ ரிகள் நடுவில் ஆனந்த நிரபரராய் இருப்பர்
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்-உதார மேக ஸ்வபாவர் -அடி அடைந்தது -அவன் – கிருபையால் -உஜ்ஜீவித்து -மிக்க நீர் வளம்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குரு கூர்ச் சட கோபன்-பரிசுத்த -பர்யந்த பிரதேசம் -மது புஷப ஸம்ருத்தி உடைய -ஆழ்வாரை செல்வமாகக் கொண்ட
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.-வைகுந்தத்தில் மேகம் உண்டோ –வண்ணம் உண்டே -வர்ணம் கொண்ட அவன் உண்டே
-அதனால் பரம பதம் நிழல் யீட்டால் -நிரதிசய ஆனந்த சாகரம் மதியத்தில் இருப்பர்

‘முகில் வண்ணரான பெரிய பெருமாள் திருவடிகளை அடைந்து திருவருளைப்பெற்று உய்ந்தவரும், துகிலின் வண்ணத்தைப் போன்ற
பரிசுத்தமான தெளிந்த தன்மையையுடைய மிகுந்த நீர் நிறைந்த தாமிரபரணித் துறைவரும், வளப்பம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த
வண்மையையுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபருமான நம்மாழ்வார், முகில் வண்ணன் திருவடிகளின்மேலே
அருளிச்செய்த சொல்மாலை ஆயிரத்தில் இந்தப் பத்தையும் வல்லவர்கள், முகில் போன்ற நிறத்தையுடைய பரமபதத்திலே
நித்தியசூரிகள் சூழும்படி பேரின்ப வெள்ளத்தில் இருப்பர்,’ என்க.
‘துகில் வண்ணத் தூநீர் மொய்புனல் பொருநல் சேர்ப்பான்’ எனக் கூட்டுக.
அன்றிக்கே, ஆற்றொழுக்காகப் பொருள் கோடலுமாம். சேர்ப்பன் – இடத்தையுடையவன்.

‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள், இவர் பட்ட கிலேசம் படாமல் திருநாட்டிலே
பேரின்ப வெள்ளத்தினையுடையவராய், நித்தியசூரிகள் சூழ இருக்கப் பெறுவர்,’ என்கிறார்.

முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் –
பெரிய பெருமாள் திருவடிகளைக் கிட்டி அங்குத்தைத் திருவருளைப் பெற்றுத் தரித்தர்.
முன்னைய நிலையில் சத்தையும் அழியும்படியாய் இருக்கையாலே உய்ந்தவன் என்கிறது .
மொய்புனல் பொருநல் துகில் வண்ணம் தூநீர்ச் சேர்ப்பன் –
வலியையுடைத்தான தண்ணீரோடு கூடின தாமிரபரணியில் துகிலினுடைய வண்ணத்தை யுடைத்தான தூநீர்த் துறைவன்.
‘மொய்’ என்பதற்கு; ‘மிகுதி’ என்பதும், ‘வலி’ என்பதும் பொருளாம்.
இங்கே, நீரோட்டத்தால் வந்த வலியை நினைக்கிறது.
சேர்ப்பன் – துறைவன்: நெய்தல் நிலத்தின் தலைமகன். -திருச் சங்கணித் துறைவன்
‘மொய்ப்புனல்’ என்னாநிற்கவும், ‘தூநீர்’என்கிறது, பெருவெள்ளமாய் இருக்கச்செய்தே தெளிந்திருக்கும் படியைப்பற்ற.
‘அழுக்கு அற்ற, தெளிந்த நீரையுடைய, அழகிய, பெரியோர்களுடைய மனம் போன்ற இந்தத் தீர்த்தத்தைப் பாரும்,’ என்கிறபடியே.

‘ரமணீயம் ப்ரஸந்நாம்பு ஸந்மநுஷ்ய மநோ யதா’-என்பது, ஸ்ரீராமா. பால. 2:5.

‘சவியுறத்தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவியெனக் கிடந்த கோதாவிரியினை வீரர் கண்டார்’-என்பது, கம்பராமாயணம், சூர்ப்பணகைப் படலம், 1. 9

வண் பொழில் சூழ் வண் குருகூர் சடகோபன் –
காண்பதற்கு இனியதான பொழிலையுடைத்தாய் வண்மையையுடைய திருநகரிக்கு நாதன்.
முகில் வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார் –
காளமேகம் போன்று மிக்க பேரெழிலை யுடையரான பெரிய பெருமாள் விஷயமாக அருளிச்செய்த
சொற்களையுடைய மாலை ஆயிரத்து இப்பத்தையும் கருத்தோடு கற்க வல்லவர்கள்.
‘பெரிய பெருமாள் திருவடிகளிலே, திருவாய்மொழி ஆயிரமும் சொல்லிற்று;
‘திருமோகூர்க்கு ஈத்து பத்து’.திருவாய். 10.1:11-
‘திருவேங்கடத்துக்கு இவை பத்து’ திருவாய். 6.10:11.-என்று
பிரித்துக்கொடுத்த இத்தனை;
பெருமாள் திருப்பலகையில் அழுதுபடியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்கட்கும் அளந்து கொடுக்குமாறு போலே’
என்று பிள்ளை அருளிச்செய்வர்.
முகில் வண்ணம் வானத்து-
அங்கு இருக்கிறவனுடைய நிழலீட்டாலே அவன்படியாய் இருக்கிற வானம் என்னுதல்;
முகில் வண்ணனுடைய வானம் என்னுதல்
இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே-
இவள் மோகித்துக் கிடக்கத் திருத்தாயார் தனியே இருந்து கூப்பிட்ட எளிவரவு தீர,
நித்தியசூரிகள் திரள இருக்க, அவர்கள் நடுவே ஆனந்தத்தை யுடையவர்களாய் இருந்து அனுபவிக்கப் பெறுவார்கள்.

பத்து பத்துக்களின் அர்த்தம் இதில் உண்டே
பரத்வம் -வடிவுடை வானோர் தலைவனே என்னும்
காரணத்தவம்-முன் செய்து இவ்வுலகம் படைத்து
வியாபகத்வம் -கடக்கிலி
நியந்த்ருத்வம் -கால சக்கரத்தாய்
காருணிக்கத்வம் -இவள் திறத்து அருளாய்
சரண்யத்வம் -பற்றிலார் பற்ற நின்றானே
சக்தித்வம் -அலை கடல் கடைந்த ஆராவமுதே
சத்ய காம்தவம் -என் திருமகள் மார்பனே என்னும் என்னுடை ஆவியே என்னும்
ஆபத் ஸகாத்வம் உண்டு உமிழ்ந்து அளந்து
ஆர்த்தி ஹரத்வம் -அடி அடைந்து உயந்த

பரத்வாதி பஞ்சகம்
பரத்வம் -வடிவுடை வானோர் தலைவனே
வ்யூஹம் -கடல் இடம்
வைபவம் -காகுத்தா –கண்ணனே
அந்தர்யாமி -கடக்கிலி
அர்ச்சை -வண் திருவரங்கா

——————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆத்ம பிரபந்தம் அசமாப்யா
ஹித ஜனானாம்
ஆத்மேஷ்ட்டம் ஹரிநாம் பிராதாம் a
அரதி மாப
மூணு த்வதீய
ஸ்ரீ ரங்க நாபி அஸூசகம்
ப்ரசமார்த்த சிந்தாம் பூயஸ்தராம்

வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதான்யம் -ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஆகமம் இங்கும் ஷீராப்தியிலும் –
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் –யதிருச்சா ஸூஹ்ருதம் விஷ்ணோ கடாக்ஷம் -அத்வேஷம் ஆபி முக்கியம் -தொடர்ந்து ஆறு படிகள் –

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

தீ மான் சடாரி
ஸ்ரீ ரெங்கே சன்னிஹீதானாத்
நிகில ஜகத் அநு சுரேஷ்ட்ருதாத் -2/3-அவதாரம்
சுசித்வாத் -சிஷ்டன் ஸ்ரீ இஷ்டம்
விவாதவ அநிஷ்ட பாவாத் -அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே
உரக்க சயனதயாத் பை கொள் பாம்பிணை
பும்சு கர்ம அனுரூபம் சரமா அஸ்ரம பிரதானயாத்
ஜலத்தை தனு தயாத்
உபகரியா தத் பராயத்தாத்– குன்று ஏந்து கோ நிரை
ஸ்வாமி விகாரமாம்

———————————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 62-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து -இங்கு இவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன்
அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்———-62-

அரதி -ஆற்றாமை
உற-அனுசந்திக்க

தூய்மை உபாயாந்தர பிராப்யாந்த்ர சம்பந்தம் இல்லாமை -சுவீகாரமும் உபாயம் இல்லை –
ஸ்வ போக்த்ருத்வ புத்தி இல்லாமல் -நான்கும் காட்டி அருளி -ஆழ்வார் திரு உள்ளம் போலே வெள்ளை ஆகுமே

————————————————————————————–

அவதாரிகை –

இதில்
அரத்தியால் அலற்றின படியை பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அதாவது
உண்ணிலாவியில் ஆர்த்தராய் கூப்பிடுகிற தம்மை
பரிகரிக்கும் விரகு சிந்தித்துக் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் நினைவை அறிந்து
அவர் பரிஹரிக்கும் அளவும் ஆறி இருக்க வேண்டி இருக்க
அவர் தம்மை உபேஷித்தாராய் கொண்டு
கலங்கி
மோஹித்து
இவர் கிடக்க
பார்ஸ்வத்தரான பரிவர்
பெரிய பெருமாள் உடைய
அசரண்ய சரண்யத்வாதி குணங்களை சொல்லிக் கொண்டு
இவர் திறத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிறபடியை
பெரிய பெருமாளோடு கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி
ஆற்றாமையாலே
அழுவது
தொழுவது
விழுவது
எழுவது
அலற்றுவதாய்ப் படுகிற அரதியை
திருத்தாயார்
அவர் திரு முகத்தைப் பார்த்து சொல்லி பிரலாபிக்கிற
பாசுரத்தால்
அருளிச் செய்கிற
கங்குலும் பகலுமில் அர்த்தத்தை
கங்குல் பகலரதி -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————————————–

வியாக்யானம்–

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற –
அதாவது –
ப்ருசம் விசம்ஜ்ஞா கதா ஸூகல்பேவ-என்றும்
சிரேண சம்ஜ்ஞாம் பிரதிலப்யசைவ -என்றும்
ராமம் ரக்தாந்தனய நம பச்யந்தீ ஸூ துக்கிதா -என்றும் சொல்லுகிறபடியே
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -என்றும்
இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் -என்றும்
சிந்திக்கும் திசைக்கும் -என்றும்
இத்யாதிப்படியே
திவா ராத்திரி விபாகம் அற
அழுவது
தொழுவது
மோஹிப்பது
பிரலாபிப்பது
அடைவு கெடப் பேசுவது
நெடு மூச்சு எறிவது-
அது தானும் மாட்டாது ஒழிவது-
ஸ்தப்தையாய் இருப்பது –
இப்படி அரதி விஞ்சி
மோஹத்தை பிராப்தையாக-
அங்கதனைக் கண்டு
தன் பெண் பிள்ளையின் இடத்தில்
அத்தசையைக் கண்டு –

ஒர் அரங்கரைப் பார்த்து —
ஆர்த்தி ஹரதையிலே
சிந்தித்துப் போருகிற
அத்விதீயரான
பெரிய பெருமாளைப் பார்த்து –

இங்கு இவள் பால் –
இத்தசையில்
இவள்
இடையாட்டமாக –
என் செய்ய நீர் எண்ணுகின்றது –
ஆஸ்ரித ரஷண சிந்தை பண்ணுகிற தேவர்
ரஷக அபேஷை யுடைய இவள் திறத்து
எது திரு உள்ளம் பற்றி இருக்கிறது –
எடுக்கவோ
முடிக்கவோ
ஒன்றும் தெரிகிறது இல்லை
எல்லா தசையிலும் இவள் பேற்றுக்கு –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே
அத்தலையில் நினைவே இறே உபாயம்
இத்தலையில் உள்ளது எல்லாம் ஆற்றாமையிலே முதலிடும் அத்தனை –
இவள் திறத்து என் செய்கின்றாயே –
இவள் திறத்து என் செய்திட்டாயே –
இவள் திறத்து என் சிந்தித்தாயே -என்றத்தை பின் சென்ற படி –

என் செய்ய நீர் எண்ணுகின்றது -என்னு நிலை சேர் மாறன் –
த்வர அஜ்ஞ்ஞானத்தாலே தலை மகள் என்ற பேரை யுடைய
தாம் மோஹித்துக் கிடக்க –
இந்த மோஹாதிகளும் உபாயம் ஆகாமல்
அத்தலையில் நினைவே சாதனம் என்னும்
அத்யாவச்ய ஜ்ஞானத்தாலே தாயார் என்ற பேரை யுடையராய்
தெளிந்து இருந்து தெரிவிக்கும் தசையை அடைந்த
ஆழ்வார் யுடைய-

அஞ்சொலுற –
அஞ்சொல் உற
அழகியதான
இத் திருவாய் மொழியை ஆதரித்து அனுசந்திக்க –

நெஞ்சு வெள்ளையாம் –
உபாயாந்தரமான விஷயமான
மநோ மாலின்யம் நிவ்ருத்தமாய்
தத் ஏக உபாயத்வ அனுசந்தானத்தாலே
மனஸ் ஸூத்தி பிறக்கும் –

கங்குல் பகலரதி —இத்யாதி -வெள்ளையாம்
உபாயாந்தர விஷயமாக
ஓர் அரங்கரைப் பார்த்து
ஒருகிற அரங்கரைப் பார்த்து
அதாவது –
உலகமுண்ட பெரு வாயனிலே -அகலகில்லேன் -என்று
பூர்ண பிரபத்தி பண்ணின இடத்திலும் பலித்ததில்லை என்று
உண்ணிலாவிலே
அப்பனே என்னை ஆள்வானே -என்று
நின்ற இடத்தில் நிற்க ஒட்டாமல் கூப்பிட
திருவேங்கடத்து என்னானை என் அப்பன் –
அரங்கநகர் மேய அப்பனாய்
மந்தி பாய் -இத்யாதிப் படியே
பைத்த பாம்பணையானவன்-
அரங்கத்து அரவின் இணை யானாய் –
பைகொள் பாம்பணையாய் இவள் திறத்து அருளாய் –
இவள் திறத்து என் சிந்தித்தாய் –
என்று கேட்கும் படி
உறங்குவான் போல் யோகு செய்து
யோக நித்தரை சிந்தை செய்து
இவர் ரஷண சிந்தை பண்ணிக் கொண்டு
அறலைக்கக் கிடக்கிறவரை பார்த்து என்ற படி-
தொடங்கின கார்யம் தலைக் கட்டும் தனையும் பற்றாது போலே இருந்தது இவள் ஆற்றாமை
இதுக்கு என் செய்வோம் -என்று அவர் ஆராயப் புக்கார்
அங்கு -அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றத்தை
இங்கு -என் திரு மகள் சேர் மார்பனே -என்றார் –
வண்ணமருள் கொள் அணி மேக வண்ணா -என்றத்தை
முகில் வண்ணன் -என்றார்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றத்தை
அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்றார்
துளங்கு நீண் முடி -திருவரங்க பாசுரம் திருவேங்கட சரித்திரம் சொல்லி -துளங்கு நீண் முடி-என்று தொடங்கி
ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்று இறே
ஐக்யமாக அருளிச் செய்தது
சென்னி யோங்கு தண் திரு வேங்கட முடையானே இறே
பொன்னி சூழ் திருவரங்கனாக கண் வளர்ந்து அருளுகிறது –

இவர் ரஷண சிந்தைக்கு பாங்கான தேசம்
பாற்கடல் அரங்கம் போலே –

—————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: