பகவத் விஷயம் காலஷேபம் -145- திருவாய்மொழி – -7-2-1….7-2-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

‘உண்ணிலாவிய’ என்ற திருவாய்மொழியில், ‘நம:’ என்ற சொல்லின் பொருள் பல வகையாலும்,
‘தொண்டர் தொண்டர் தொண்டன் தொண்டர் சடகோபன்’ என்று ததீய சேஷத்துவ பரியந்தமாக உள்ளபடி அநுசந்தித்தாராயற்றது.
‘உலகமுண்ட பெருவாயா’ என்ற திருவாய்மொழியில், பெரியபிராட்டியார் முன்னிலையாகத்திருவேங்கமுடையான்
திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கார்;

இரண்டு சங்கதி
என் திருமால் சேர் மார்பன் -ஸ்ரீ மத் பதார்த்தர்த்தம் ஸூசகம்
புகல் ஒன்றும் இல்லா அடியேன் -6-10 -பிரணவம் அர்த்தம்
7-1- விரோதி நிவர்த்தகம் -நமஸ்
7-2- நாராயண அர்த்தம்
அன்றிக்கே
6-10- பூர்வ வாக்கியம் அர்த்தம்
7-1- உத்தர வாக்கியம் -நமஸ்
7-2- ஸ்ரீ மத்நாராயண
அர்த்தம் பலம் -விரோதி நிவர்த்தகம் பூர்வகமாக கைங்கர்யம் சித்திக்க வேண்டுகையால் –
நமஸ் -ததீய சேஷத்வம் -தொண்டர் தொண்டர் -சடகோபன் சாதித்தார் -என்பதால் உத்தர வாக்கியம் நமஸ் சொல்லாதே
-அதனால் திரு மந்த்ர நமஸ் மத்திய பதார்த்தம்
சதுர்த்யர்த்தம் கைங்கர்யம் -பிரார்த்தநாயாம் சதுர்த்தி -அனுபவ ஜனித்த ப்ரீதி கார்ய கைங்கர்யம்
பிராவண்யம்-இதிலே சொல்லுகையாலே திருத் தாயார் பாசுரம் –

‘விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற சம்சாரத்திலே வைத்த போதே தன் பக்கலினின்றும்
நம்மை அகற்றப் பார்த்தானே அன்றோ?’ என்று கூப்பிட்டார் ‘உண்ணிலாவிய’ என்ற திருவாய்மொழியில்.
பலத்தோடே கூடியுள்ளதாயும், காலதாமதம் இன்றிப் பலிக்கக் கூடியதாயும் இருக்கிற சாதனத்தைப் பற்றின பின்பும்
அது பலியாவிட்டால் அவன் தன்னையே இன்னாதாய்க்கொண்டுகூப்பிடுமத்தனை அன்றோ?
‘இப்படிக் கண்ணழிவற்றது பின்னையும் பலியாது ஒழிவான் என்?’ என்னில், அது பலியாநிற்க,
கிரமப் பிராப்தி பொறுக்காமாட்டாமல் படுகிறார்;
ஈஸ்வரனுடைய முற்றறிவிற்கும் அவ்வருகான இவருடைய மிருதுத்தன்மையின் சொரூபம் இருக்கிறபடி.
பிராட்டியைப் போலே ‘அவ்வாறு செய்தல் அவருக்கு ஒத்தாகும்’ என்று இருக்கமாட்டார்,
ருசி அளவு இல்லாமையாலே‘தத் தஸ்ய ஸத்ருஸம்பவேத்’ என்பது, ஸ்ரீராமா. சுந். 39;30.. 4–
சம்சாரத்தினுடைய தோஷத்தையும் நினைத்து, எம்பெருமானுடைய குணங்களின் உயர்வையும் நினைத்தால் ஆறி இருக்கப் போகாதே அன்றோ?
பகவத் விஷயம் அறியாத சம்சாரிகள் இவர்க்குக் கூட்டு அல்லர்;
பகவானுடைய பிரிவு அறிய வேண்டாத நித்தியசூரிகளும் இவரக்குக் கூட்டு அல்லர்;
பிரிவில் நோவுபடுகைக்கு இவர் ஒருவருமே உள்ளார்.

பட்டர், இத்திருவாய்மொழி அருளிச்செய்யும் போதெல்லாம் ‘ஆழ்வார்க்கு ஓடுகிற நிலை அறியாதே
அவருடைய உள்ளக்கிடையும் இன்றிக்கே இருக்கிற நாம் என் சொல்லுகிறோம்?’ என்று திருமுடியிலே கையை வைத்துக்கொண்டிருப்பார்.
அவனும்,இவர் நமக்கே பரம் என்று அறிவித்தாராகில், நாமும் இவர் காரியம் செய்வதாக அற்ற பின்பு செய்து முடித்ததேயாமன்றோ?
இவர் அங்குப் போய் அனுபவிக்கும் அனுபவம் இங்கே இருந்தே குறை அற அனுபவியா நின்றாரகில்,
‘விரோதி போயிற்றில்லையே’ என்று இவர் கொள்ளுகின்ற ஐயமும் போக்குகிறோம்;
நான்கு நாள் முற்பாடு பிற்பாடன்றோ? இதில் காரியம் என்?’ என்று இருந்தான்.
‘பிற்பாடு பொறுக்கமாட்டாத இவரை வைக்கப் போருமோ?’ என்னில், குழந்தைகளைப் பட்டினி இட்டு வைத்தும்
வந்த விருந்தினரைப் பேணுவாரைப் போல, ‘இவர்தாம் நான்கு நாள்கள் நோவு பட்டாராகில் படுகிறார்;
இவருடைய பிரபந்தத்தைக் கொண்டு உலகத்தை வாழ்விப்போம்,’என்றிருந்தான்.
இவர் ஒரு முகூர்த்த காலம் இருப்பதானது, தன்னாலும் திருத்த ஒண்ணாத சம்சாரம் திருந்தி வாழும்படியாயிருந்தது என்றதற்காக வைத்தான் அவன்;
இவர், ‘நம்படி அறிந்தானாகில், தனக்குச் சத்தியில் குறை இல்லையாகில், இது பொருந்தாத நம்மை இட்டுக் காரியம் கொள்ள வேணுமோ?
இவ்விருப்பில் பொருந்துவார் ஒருவரைத் திருத்திக் காரியங் கொள்ளத் தட்டு என்?’ என்றிருந்தார்.
‘இவ்விருப்பில் பொருந்துவார்’என்றது, திருமழிசைப் பிரான் போல்வாரை.-
அவனும், ‘அது பொருந்தாதாவரைக்கொண்டே காரியம் கொள்ள வேணும்’ என்றே அன்றே இருக்கிறது?
தேசிகரைக்கொண்டுகாரியம் கொள்ள வேணுமே.
சம்சார தோஷமும் பகவத் வைலக்ஷண்யம் அறிந்தவர்கள் தேசிகர் –
பொருந்தி வாழ்வார் உபதேசம் செய்தால் தனக்கு என்று ஒன்றும் பிறர்க்கு ஒன்றும் சொல்வதால் விச்வாஸம் பிறக்காதே –
செய்த சரணாகதி சடக்கெனப் பலியாதொழிந்தது, பிரஹ்மாஸ்திரம் வாய் மடிந்த மாத்திரம் அன்றோ?

இனித்தான் அவனும்,-பெருமாளும் — ஸ்ரீ பரதாழ்வான் மாதுல குலத்தினின்றும் வந்து தாயாரை வணங்க,
அவள், ‘ராஜந்’ என்ற வெம்மை பொறுக்கமாட்டாமல் பெருமாள் திருவடிகளிலே தன் ஆற்றாமையோடே விழுந்து சரணம் புக்கு,
‘தேவரீர் மீண்டருள வேணும்’ என்ன, பெருமாளும், மீளாமைக்குக் காரணமாயிருப்பன பலவற்றை அவனுக்குச் சொல்லி,
‘பிள்ளாய்! நீ நிர்ப்பந்திக்கக் கடவையல்லை: உன்னைச் சுவதந்திரனாக்கி வார்த்தை சொன்னார் எதிரே,-கைகேயி வைஸிஷ்டர் போல்வார் முன்னே –
உன் சொரூபத்திற்குத் தகுதியான பாரதந்திரியத்தைப் பெற்று நீ போ,’ என்று சொன்னாற்போலே,
இவர் விரும்பியது ஒழிய ஏதேனும் ஒன்றனைக் கொடுத்துப் போகட்டுப் போக வல்லான் ஒரு சுவதந்திரன் அல்லனோ?
இவர் அபேக்ஷித்தது மோக்ஷம் -அவன் கொடுத்தது திருவேங்கடத்தான் திருவடிகளில் கைங்கர்யம் –
ஆகையாலே, தான் நினைத்த போது காரியம் செய்யக் கடவனுமாய் இருப்பன் அன்றோ?
முற்றறிவினனான சர்வேஸ்வரன் இவர்க்கு ஒடுகிற தசையை அறிந்து, தன்னுடைய வரம்பில் ஆற்றலைக் கொண்டு
இவர்க்கு ஒரு பரிகாரம் செய்ய ஒண்ணாதபடி இவருடைய நிலை விசேடம் இருக்கிறபடி.

இவர்தாமும் ‘விண்ணுளார் பெருமானேயோ’ என்றும் ‘முன் பரவை கடைந்து அமுதங்கொண்ட மூர்த்தியோ!’ என்றும்,
‘பல முதல் படைத்தாய்!’ என்றும் சொல்லுகிறபடியே, பரத்துவம், அவதாரம், உலகத்திற்குக் காரணமாய் இருக்குந் தன்மை
இவற்றைச் சொல்லியன்றோ கூப்பிட்டது?
அவற்றுள், பரத்துவம் வேறு உலகம் ஆகையாலே, ‘கிட்டப் பெற்றிலோம்’ என்று ஆறியிருக்கலாம்;
அவதாரம் வேறு காலமாகையாலே, ‘அக்காலத்தில் உதவப் பெற்றிலோம்’ என்று ஆறியிருக்கலாம்;
உலகத்திற்குக் காரணனாய் இருக்குந்தன்மை, தான் அறிந்து செய்யுமது ஆகையாலே,
‘நம்மால் செய்யாலாவது இல்லை’ என்று கொண்டு ஆறியிருக்கலாம்;
அந்த இழவுகள் எல்லாம் தீரும்படி எப்பொழுதும் அண்மையிலிருந்து கொண்டு கோயிலிலே –
மாத்ருஸ -ரக்ஷணம் -ஜனனி –பரம பதம் ஷீராப்தி மறந்து ஆசைப்பட்டு -நமக்கு என்று ரதிங்க -ஹரி இரண்டு திருமணத் தூண்கள் -நடுவில்
திருக்கண்வளர்ந்தருளகிற பெரிய பெருமாள் திருவடிகளிலே விழுந்து தாம் விரும்பியவை பெறாவிட்டால் தரிக்க ஒண்ணாதே அன்றோ?
விஷயம் அண்மையில் இல்லாமலிருத்தல், ஞானத்திலே சொத்தை உண்டாதல் செய்யிலன்றோ? தரித்திருக்கலாவது?
நீர்மையில் கண்ணழிவுண்டாயாதல், மேன்மையில் கண்ணழிவுண்டாயாதல் இழக்கின்றார் அன்றோ?

இப்படி இருக்கச்செய்தேயும் அவன் திருவடிகளிலே தமக்கு நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே தாமான தன்மை போய்
ஒரு பிராட்டி நிலையை அடைந்தாராய் அவ்வளவிலும் தமக்கு ஓடுகிற நிலையைத் தாம் அறிந்து கூப்பிடப் பெறாமல்,
திருத்தாயார் கூப்பிடும் படியாய் விழுந்தது.
கலவியிலும் பிரிவிலும் பிறக்கும் லாபாலாபங்களாலே தாம் பிராட்டிமார் நிலையையுடையராகிறார்;
‘திருத்தாயாரான நிலை விளைந்தபடி எங்ஙனே? விளைந்ததாகில் இவருடைய காதலுக்குக் குறைவு வாரோதோ?’ என்ன,
கிண்ணகம் பெருகி ஓடாநின்றால் இரு கரையும் ஆறுகளாகப் பெருகிப் போகாநிற்கச் செய்தேயும்
கடலிற்புகும் பாகம், குறையாமல் போய்ப் புகுமாறு போலே ஆயிற்று, இவருடைய ‘அதனிற்பெரிய என் அவா’ என்கிற பேரவாக் குறையாது இருக்கிறபடி.
ஆகையாலே, இவரக்கு எல்லார் பேச்சும் பேசக் குறை இல்லை.
‘ஞானத்தில் தம் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு,’ தேறும் கலங்கி என்றும்தேறியும் தேறாதும் ஸ்வரூபம் குலையாது.’
‘பெருக்காறு பலதலைத்துக் கடலைநோக்குமாபோலே நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப் பெருகுகாதல் கடல் இடங்கொண்ட
கடலை பஹூமுகமாக அவகாஹிக்கும்’ என்றும்ஸ்ரீசூக்திகள் இங்கு அநுசந்தேயம். (ஆசார்யஹ்ருதயம், துவிதிய பிரகரணம்,சூ.32,33,45.)

இப்பெண் பிள்ளை மோகித்துக் கிடக்க, இவளைக் கண்டு உறவு முறையார் அடங்கலும் மோகித்துக் கிடக்க;
பெருமாளைக் காட்டிலும் இளையப்பெருமாளுக்குத் தளர்த்தி உண்டாயிருக்கச் செய்தே,
பெருமாளுடைய இரட்சணத்துக்காக இளையப்பெருமாள் உணர்ந்திருக்குமாறு போலே,
திருத்தாயாரும் இவளுடைய இரட்சணத்துக்காக உணர்ந்திருந்து, எந்த நிலையிலும் தங்கள் காரியம் தலைக்கட்டும் குடியாகையாலே,
பெரிய பெருமாள் திருவடிகளிலே இவளை இட்டு வைத்துக்கொண்டிருந்து,
‘இவள் அழுவது, தொழுவழு. மோகிப்பது, பிரலாபிப்பது, அடைவு கெடப் பேசுவது, நெடுமூச்சு எறிவது,
அது தானும் மாட்டாது ஒழிவது, தன்னை மறந்திருப்பது, இப்படி அரதி விஞ்சிச் செல்ல நின்றது;
இவள் திறத்தில் நீர் என் செய்யக் கடவீர்?’ என்று கூப்பீடாய்ச் செல்லுகிறது, எல்லா அளவிலும் அவனையே பரிகாரம் கேட்கும் குடியே அன்றோ?

ஆண்டாள் ஒரு நாள் ஆழ்வானுக்கு, ‘பிள்ளைகள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள்:
இவ்விடையாட்டம் ஒன்றும் ஆராயாதிருக்கிறது என்?’ என்ன,
‘பகவத் குடும்பத்துக்கு என்னை இன்று இருந்து கரையச் சொல்லுகிறாயோ? நாளை நான் வாசித்துச் சமையக் கொள்ள,
அங்கே வரக் காட்டு, என்ன, பட்டரையும் சீராமப் பிள்ளையையும் கொடுத்துப் போகவிட, வாசித்துச் சமைந்து பெருமாள் திருவடிகளிலே நிற்க,
‘ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே’ என்று திருவுள்ளமாக,
‘இவர்கள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள் என்னாநின்றார்கள்’ என்று விண்ணப்பம் செய்ய,
‘எல்லாம், செய்கிறோம்’ என்று திருவுள்ளமானார்; பிற்றைநாளே மன்னியைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
அகளங்க பிரஹ்மராயர் அடையவளைந்தான் செய்யாநிற்கச் செய்தே மதிள்போக்குகைக்காக இளையாழ்வான் அகத்தை வாங்கப்புக,
பட்டர் அதனைக் கேட்டருளி, ‘வாரீர் பிள்ளாய்! நீர் செய்கிற மதிள் பெருமாளுக்கு இரட்சகம் என்று இராதே கொள்ளீர்;
இங்குக் கிடக்கும் நான்கு குடிகளுங்காணும் பெருமாளுக்குக் காவல்;
ஆன பின்பு நீர் செய்கிறவை எல்லாம் அழகிது; இவை எல்லாம் நாம் செய்கிறோம் என்றிராதே, பெருமாள் செய்விக்கிறார் என்று இரீர்;
உமக்கு நல்வழி போக உடலாங்காணும்’ என்று அருளிச்செய்தார்.

இத்திருத்தாயாரும் எல்லாப் பாரங்களையும் அவன் தலையிலே போகட்டுப் பெண்பிள்ளையைத் திருமணத் தூணுக்குள்ளே
பொகட்டுப் பற்றிலார் பற்ற நிற்றல் முதலாகிய அவனுடைய குணங்களை விண்ணப்பம் செய்யாநின்றுகொண்டு,
ஒரு கால நியதியாதல், ஒருதேச நியதியாதல், அதிகாரி நியதியாதல் இன்றிக்கே எல்லாரும் சென்று பற்றலாம்படி இருக்கிறபடியை நினைத்து,
தன் பெண்பிள்ளையினுடைய நிலையைத் திருவுள்ளத்திலே படுத்துகிறாள் இத்திருவாய்மொழியாலே.

வேர் பற்று -திருவரங்கம் -அடியார்கள் வாழ -அனைத்து உலகும் வாழ –மணவாள மா முனி நூறாண்டு வாழ வேண்டும் –
பத்துப் பத்து கல்யாண குணங்களும் -பரத்வம் காரணத்வம் –ஆர்த்தி ஹரத்வம் -இவை பத்தையும் கங்குலும் பகலில் வைத்து அருளுகிறார்
ஸ்ரீ ராம ராம ராமேதி -போலே –
32 அர்ச்சைகளுக்கு-திவ்ய தேசங்களுக்கு பல்லாண்டு -அற்ற பற்றர் சுற்றி வாழும் அரங்கனூர்
தென் அரங்கம் –இருப்பாக பெற்றோம் -சடகோபர் திருவாயமொழி உணவாக கொண்டு மதுரகவி நிலையைப் பெறுவோம்
தெற்கு திக்கு நோக்கி கை கூப்புவோம் நம்மாழ்வார் நினைத்து -நிகம பாசுரங்கள் தோறும் –
6-10-ஆணாக ஆனந்தம் – தொடங்கி –அடுத்து -7-1-ஆணாக துக்கம் –7-2–பெண்ணாக துக்கம்–7-3- பெண்ணாக ஆனந்தம் –
திருமங்கை ஆழ்வார் 2-7- இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -இவரும் 7-2- இங்கு
இரக்கம் உபாயம் / முக விலாசம் பிராப்தம்

——————————————————————————————–

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

அனுபாவ்யமான அசாதாரணமான சின்னங்களை சொல்லி -கடல் ஞாலம் -அனுவாதம் அங்கு -இங்கு திருத் தாயார் விஷயம் சொல்லி –
இங்கும் சில இடங்களில் -சங்கு சக்கரங்கள் சொல்லி மீதம் சொல்லி முடிக்காமல் கை கூப்புகிறாள் என்கிறார்
தாமரைக்கு கண் என்று சொல்லி யுக்தி மாத்ரத்தாலே தளர்கிறாள் –
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு -அவள் வார்த்தை அனுவாதம்
மூன்று வகை -இவள் வார்த்தை -அவள் செயல் -அனுவாதம் –
இவர் ஆரத்தை ஆகா நின்றாள் -இவள் அளவில் என் செய்யுமாறு திரு உள்ளம்
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்-நாட்டார் தூங்கும் இரவும் -காமினிகள் உறங்கும் பகலும் -இரண்டும் அறியாமல் –
துயில வேண்டும் என்ற வாஸ்து ஞானமே அறியாள் -கொள்ளாள் இல்லை –
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;-இவள் கண் வட்டத்தில் -உறக்கம் வாராத படி -கண்ணை நீரை மாற்றுவதாக
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;-இதற்கு இரங்கி வரக் கூடும் -சங்கு சக்கரம் என்று சொல்லி கை கூப்பினாள்-
நம்பெருமாள் -பொறுக்க மாட்டான் -சங்கு சக்கரம் உடன் வருவான் என்று நினைத்து கை கூப்புவதில் தெளிவு
அடியோம் அடிச்சியோம்-மாயோன் திறத்தனளே இத்திரு
கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வரக் கூடும் -இவள் அபேக்ஷித்த படியே -6-9- பிரார்த்தனை –
கிரமம் மாறி -சங்கம் குளிர்ந்து -பர கத சுவீகாரம்
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;வரும் பொழுது தூது -கடாக்ஷம் -சொன்னதுக்கு மேலே பேச முடியாமல்
பெறாமையாலே தளரும் -என்று சொல்லியே தளரும் -அங்கு கை கூப்பினாள்
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;-ஆயுத அவயவ சோபை உடைய உன்னை விட்டு
இரு நிலம் கைதுழா இருக்கும்;-துழாவுதல்-அவன் திருவடி பட்ட இடம் என்று கைகளால்
இருக்கும் -கையால் செய்த கார்யம் -அதற்கும் சக்தி இல்லாமல் -மயங்கி இருக்கும் –
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!-இளமையால் சிவந்த மீன்கள் உகளித்து பாயும் -சந்நிஹிதனாக இருக்க
இவள் திறந்து என் செய்கின்றாயே?—அதிசய விகாரம் கொண்ட இவளை –நீரைப் பிரிந்த மீன் போலே
இவள் ஆர்த்தியை அதிகாரிப்பாயோ தீர்ப்பாயோ

இரவும் பகலும் தூங்கி அறியாள்; கண்களினின்றும் பெருகுகிற நீரைக் கைகளால் இறைப்பாள்; ‘சங்கு சக்கரங்கள்’ என்று சொல்லிக்
கை கூப்பி வணங்குவாள்; ‘தாமரை போன்ற திருக்கண்கள்!’ என்றே தளர்வாள்; ‘உன்னைப் பிரிந்து எப்படித் தரித்திருப்பேன்!’ என்பாள்’
பெரிய நிலத்தைக் கையால் துழாவிப் பின் அதுவும் செய்யமாட்டாது இருப்பாள்; சிறந்த கயல்மீன்கள் பாய்ந்து செல்லுகின்ற
தண்ணீர் நிறைந்த திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருப்பவனே! இவள் சம்பந்தமாக என்ன காரியத்தைச் செய்யப் போகின்றாய்?
‘இறைக்கும், கைகூப்பும், தளரும், என்னும், இருக்கும்’ என்பன, செய்யும் என் முற்றுகள்.
இத்திருவாய்மொழி. எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

பேச்சுக்கு நிலம் அன்றிக்கே இருக்கிற இந்தப் பிராட்டியுடைய நிலையைப் பெரிய பெருமாளுக்கு அறிவித்து,
‘இவள் திறத்துச் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்கிறாள்.

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்-
இவளை எப்போது கண் துயிலப் பண்ண இருக்கிறீர்?
விரஹிணிகளுக்கு ஓடுகிறவியசனம் மாற்றுகைக்காக ‘இரவு, பகல்’ என்று ஒரு வரம்பு கட்டின இத்தனை அன்றோ?
அது இவளுக்குக் காரியமாகிறது இல்லை; இரவில் விஷயலாபத்தாலே போது போக்கவும்,
பகலில் இந்திரியங்களானவை வேறு விஷயங்களிலே கொடுபுக்கு மூட்டி,
‘அப்போது ஆயிற்று, இப்போது ஆயிற்று’ என்று காலத்தைக் கழிப்பதற்கு உடலாயிருக்கவும் ஆமன்றோ?
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்று சொல்லுகையாகலே, இவளுக்கு அங்ஙன் ஒன்று சொல்லித் தரிக்க ஒண்ணாதே.
ஆகையாலே, தனக்கு ஆறியிருத்தற்குக் காரணமாகச் செய்து வைத்த இரவு பகல் என்ற வேறுபாடும் அறிகின்றிலள்.
பகலும் இரவோடு ஒக்க உறங்கக் கண்டது அன்றோ? ‘யாங்ஙனம்?’ எனின்,
‘யௌவனம் குடி புகுந்தால் இரவில் நாயகனுக்கு அலை கொடுக்கையாலே உறக்கம் இல்லை;
அந்த இழவுக்கும் எற்றி உறங்குவது பகல் அன்றோ! அதுவும் பெறுகிறது இல்லை’ என்றபடி.
‘பெருமாள் எப்பொழுதும் உறக்கம் இல்லாதவராய் இருக்கிறார்,’‘அநித்ர: ஸததம் ராம:’ என்பது, ஸ்ரீராமா. சுந். 36:44. என்கிறபடியே,
இவளையும் தன் படி ஆக்கினான். என்றது,
மேலான ஒப்புமையை அடைகிறான்’ ‘பரமம் ஸாம்யம் உபைதி’ என்பது, முண்டகோபநிடதம்.-என்கிறபடியே,
தம்மோடு ஒத்தபடியைக் கொடுத்தபடி.
கலவியில் அவன் உறங்க ஒட்டான்; பிரிவில் விரஹநோய் உறங்க ஒட்டாது;
ஆகையாலே, இவளுக்கு இரண்டுபடியாலும் உறக்கம் இல்லாமையாலே
‘கண் துயில் கொள்ளாள்’ என்னாமல்,‘கண்துயில் அறியாள்’ என்கிறாள்.
‘இவள் கலந்த அன்று உறங்கினாலும், இவள் இப்போது படுகிற நோயினை அனுபவித்த திருத்தாயார்க்கு அது ஒன்றாகத் தோற்றாதே!’ என்றது,
‘இந்த நோய்க்குப் பூர்வாங்கமாய் வந்தது ஒன்றாகையாலே அதனை ஒன்றாக நினைக்கின்றிலள்’ என்றபடி.
-பூர்வ ரெங்கம் -ஒத்திகை போலே -பாவி நர்த்தன ஸூசக பூர்வ பாவி பொம்மலாட்டம் போலே –
என்றும் சிறைக்கூடத்திலே பிறந்து வளர்ந்தாரைப் போலே பிரிந்த நாள்களில் இழவேகாணும் இவள் நெஞ்சிலே பட்டுக்கிடக்கிறது.
அறியாள் –
உறக்கம் ஒக்க இருக்கச்செய்தே‘கைங்கரிய விரோதி’ என்று கைவிட்டவரைக்காட்டிலும் இவளுக்கு உண்டான
வாசியைத் தெரிவிப்பாள், ‘அறியாள்’என்கிறாள்.
முன்பு இல்லையாகிலும் இப்பிறவியில் மெய்ப்பாட்டால் பற்றி விடவேண்டிற்று.
ஆதி சேஷன் நித்ய ஸூ ரிகளில் தலைவர் -அநிமிஷர் அதனால் முன்பு நித்திரை இல்லை யாகிலும் -இந்த லஷ்மண ஜென்மத்தில்
மெய்ப்பாடு -மனுஷ்ய ஜென்மத்தில் பிறந்து 24 வருஷம் தூங்க வேண்டும் -மனுஷ்ய கிங்கரர் என்று காட்ட -என்ற படி

கண்ணநீர் கைகளால் இறைக்கும்-
தன் கையாலே கண் நீரை இறைக்கப்பாராநின்றாள்.
இவளுக்கு இந்த அறியாமை எங்கும் ஒக்கத் தொடரப்பெற்றதில்லை!
‘இந்த ஆற்றாமையில் எப்படியும் நாயகன் வாராது இரான்’ என்று பார்த்து, அப்போதாகப் பகை கொண்டாட ஒண்ணாது;
முதல் நடை தொடங்கிக் காணவேணும்’ என்று கண்ணநீரை மாற்றப் பாராநின்றாள்.
‘இது என்ன சாகஸந்தான்! இது, தன்னால் இயலும் என்று தொடங்கினாளோ.
கடல் கொண்ட கண்ணீர் அன்றோ?திருவிருத்தம், 18.
கடல் கொண்ட-கடலோடு ஒத்த.-
கோகுள் இலையைக்கொண்டு கடலை வற்ற இறைப்பதாக நினைப்பாளே!
‘தேவரீர் கண்களிலிருந்து சோகத்தால் உண்டான நீர் எதற்காகப் பெருகுகிறது?’ என்னும்படி காணும் இருக்கிறது.
‘கிமர்த்தம் தவ நேத்ராப்யாம்’ என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 4. இது பிராட்டியைப்பார்த்துத் திருவடி கூறியது.-
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்-
கண்ணநீரை மாற்றினால் கண்களாலே காண வந்து தோற்றும் படியை நினையாநின்றாள்.
சொல்லா நின்றாள் என்ன வில்லை –விலக்கின பின்பு சேவை சாதிப்பானே -அத்வேஷம் மாத்திரம் போதுமே –
‘தவள ஒண்சங்கு சக்கரம்’ திருவாய்மொழி, 6. 5:1.-என்று திவ்விய ஆயுதங்களோடு காண அன்றோ இவள்தான் ஆசைப்பட்டிருப்பது!
‘தேநைவ ரூபேண சதுர்ப் புஜேந’ என்பது, ஸ்ரீகீதை, 11.46.

‘கையினார்சுரி சங்கு அனல் ஆழியர் நீள்வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடி எம்
ஐயனார் அணியரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்
செய்யவாய் ஐயோ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.’–என்பது, அநுசந்தேயம். ( அமலனாதிபிரான்.7.)

உகவாத கம்ஸன் முதலாயினோர்களுக்கு அன்றோஇரு தோளனாக வேண்டுவது’
‘நான்கு தோள்களையுடைய அந்த உருவமாகவே ஆகக் கடவீர்’ என்றான் அன்றோ காண ஆசைப்பட்ட அருச்சுனன்?
‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய். என்னக் கணிசித்து,திருவாய். 6. 9:1. கணிசித்து-விரும்பி.-
வலி இல்லாமையாலே தலைக்கட்ட மாட்டாதே, விடாயன் கையை மடுத்துத் தண்ணீரை வேண்டுமாறு போலே,
குறையும் அஞ்சலியாலே தலைக்கட்டாநின்றாள்.சங்கு சக்கரங்கள் ஏந்தி வாராய் முடிக்க முடியாமல் –
சங்கு சக்கரம் சொல்லி தாமரைக்கு கண் -திரு மேனி முழுவதும் திருக் கண் கள் அகப்படுத்த -சர்ச்சை அன்றோ —

தாமரைக்கண் என்றே தளரும் –
அவ்வாழ்வார்கள் அளவு வந்து அலை எறிகிற கண்களின் அழகினைச் சொல்லப் புக்கு, நடுவே தளராநின்றாள். என்றது,
‘உன் தாமரைக் கண்களால் நோக்காய்’திருவாய். 9.2.1. என்று சொல்லப் புக்கு, நடுவே தளராநின்றாள் என்றபடி.
‘கடையில் செந்நிறம் பொருந்திய கண்களையுடைய ஸ்ரீராமபிரானைப் பாராதவளான காரணத்தால் மிக்க துக்கமுடையவளானேன்’ என்னுமாறு போலே.
‘ராமம் ரக்தாந்த நயநம் அபஸ்யந்தீ ஸூதுக்கிதா’-என்பது, ஸ்ரீராமா. சுந். 26:37.

‘தளருகிறது என்? வேறு ஒன்றாலே போது போக்கினாலோ?’ என்பார்களே!
உன்னை விட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும்-
பரத்துவம் வியூகம் விபவம் என்னுமிவற்றில் ஆசைப்பட்டேனாய் ஆறி இருக்கிறேனோ?
உறக்கத்தாலே, சூது சதுரங்கத்தாலே போது போக்கலாம் விஷயத்திலேயோ அகப்பட்டது என்னும்.
‘உம்முடைய வைலக்ஷண்ய நீர் அறிந்தால், நம்மைப் பிரிந்தார் தரிக்கமாட்டார்கள்’ என்னுமிடம் நீரே அறிய வேண்டாவோ?
உன்னைக் கண்ணாடிப் புறத்திலேயும் கண்டு அறியாயோ? கண்டாயாகில் பிரியாய்;
பிரிந்தாயாகில் இவள் பட்டது படுவுதி. ‘எங்ஙனே தரிக்கேன்?’ என்ற உடனே வரக்காணாமையாலே,
இருநிலம் கைதுழா இருக்கும் –
பெரிய நிரமானது ஒரு பீங்கானுக்கு உட்பட்ட சந்தனக்குழம்பு பட்டது படாநின்றது.
கண்ணை நீர் மணலில் விழுந்து -சந்தனம் போலே ஆனதே -மகா பிருத்வி திரிவிக்ரமன் திருவடிகளில் பட்டது போலே –

செங்கயல் –
அவ்வூரில் வசிக்கிற திரியக்குகளின் தன்மை இவளுக்கு அரிதாவதே!
அவை தம் நிறம் பெற்று வாழ்கின்றன; இவள் நிறம் இழந்தாள்.
நாரத்தைப் பற்றினது களித்து வாழா நின்றது. நாராயணனைப் பற்றிய இவள் துக்கிப்பதே?
ஆபோ நார-நாரங்களில் ஒன்றே தண்ணீர் –
செங்கயல் –
அழகிய கயல். அக்கயல் தண்ணீரைப் பிரிந்து தரிக்கில் அன்றோ இவள் உன்னை விட்டுத் தரிக்க வல்லது?
‘தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன்கள் போன்று கணநேரமே பிழைத்திருப்போம்’ என்னக்கடவதன்றோ
‘ஜலாத் மத்ஸ்யா விவோத்த்ருதௌ’–என்பது, ஸ்ரீராமா, அயோத். 53:31. இது பெருமாளை நோக்கி இளையபெருமாள்கூறியது.

இவளையும்? இவள் திறத்து –
‘சரீரங்களைப் பார்க்க வேண்டும் எழுந்தருள வேண்டும்’ ‘ஏஹி பஸ்ய ஸரீராணி’என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 6:16.
என்னுமாறு போலே,இவள்படி பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே காட்டுகிறாள். என்றது,
பின்னை கொல் திருமா மகள் கொல் -உனக்கு அநந்யார்ஹ சேஷ பூதை-இவள் –
‘இராக்கதர்கள் தின்ற உடம்பைக் காட்டினாற்போலே, விரஹம தின்ற உடம்பைக் காட்டுகிறாள்’ என்றபடி.
என் செய்கின்றாயே –
இவள் திறம் செய்யப்பார்த்தது என்?
உம்முடைய ஊரில் இருக்கும் பொருள்கள் பெற்றதும் பெற வேண்டாவோ, உம்மை ஆசைப்பட்ட இவள்?

———————————————————————————————–

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-

சர்வ பிரகார ரக்ஷகன் நீ இவள் பிரகாரம் விஷயத்தில் என்ன வாய்ப் போகும்
என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!-பிரதமத்தில் அநந்யார்ஹம் ஆக்கி ருசி விளைத்து பரம போக்யன்
அனுபவம் கொடுக்கப் பார்க்கிறாயா –
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்-அதுக்கு மறு மாற்றம் கிடைக்கையாமையாலே கண் நீர் சுவரி துளும்பும் படி
-சஞ்சார க்ஷமை இல்லாமல் இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!-கோயிலில் சன்னிஹிதன் -சக்தம் சுலபம் நீ -அசக்தை அஞானை நான் எத்தை செய்வேன் என்று கூறும்
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்-பலகாலம் பரிதபித்து உருகா நிற்கும் -கண் நீர் மூச்சு காற்று உஷ்ணத்தால்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்-கர்மம் சேர்த்து வைத்த நான் -வினைகளே முன்னால்-கிலேச மிக்கு சேதன சமாதியால் சொல்லுகிறாள்
-அதுவும் அவன் இட்ட வழக்கு தெளிவு பிறந்த பின்பு
முகில்வண்ணா! தகுவதோ என்னும்-மேக ஸ்வ பாவன்-தாக்காதே -உபகாரகத்வம் பலமாம் படி
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!-பிரதமத்தில் ஸ்ருஷ்டித்து உண்டு அந்நிய அபிமானம் போகும் படி அளந்து
என் கொலோ முடிகின்றது இவட்கே-உன்னை விட்டு தரியாத இவளுக்கு
ரஷ்ய வர்க்கத்தில் அந்தர் பாவிப்பாளா -வ்யாபியமாய் முடியும் படி இவனை அடையாமல் வெளியே இருப்பாளோ

‘என் தாமரைக்கண்ணா! என்ன செய்ய நினைக்கிறாய்?’ என்பாள்; கண்களில் நீர் நிறையும்படி இருப்பாள்; ‘அலைகள் வீசுகின்ற நீர்
சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே! என்ன செய்வேன்?’ என்பாள்; வெம்மை தோன்றப் பலகாலும் மூச்சு விட்டு உருகுவாள்;
‘முன்னே செய்த பாவமே முகம் தோற்ற நில்லாய்’ என்பாள்; முகில்வண்ணா! தக்கதாமோ?’ என்பாள்; ‘இந்த உலகங்களை எல்லாம்
முன்னே படைத்துப் பின்பு உண்டு உமிழ்ந்து அளந்தவனே! இவளுக்கு முடிகின்றது என்கொலோ?’ என்கிறாள்.

‘இப்பெண்பிள்ளையினுடைய நிலை என்னாய் விளையக்கடவது?’ என்கிறாள்.

என் செய்கின்றாய் –
ஆற்றாமை மிகமிக அவனைக் கேட்குமித்தனை அன்றோ?
என் தாமரைக் கண்ணா என்னும் –
‘ஒரு நீர்ச்சாவியான பயிருக்கு ஒரு பாட்டம் மழை பெய்யக்கடவதன்றோ?’ என்கிறாள்.
‘தேவனே! அடைந்தவர்க்கு அருள் செய்பவனே! கேசவனே! அருள்புரிவாய்; அச்சுதனே!
பார்வையாலே மறுபடியும் என்னைக் காப்பாயாக,’ என்னக் கடவதன்றோ’
‘அவலோகந தாநேந பூயோமாம் பாலய’ என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1.20:16.

என் தாமரைக் கண்ணா என்னும் –
‘தாமரைக் கண் என்றே தளரும்’ என்றது; உணருகிற போது கண்களை வாய் வெருவிக்கொண்டாயிற்று உணர்ந்ததும்.

தளர்வதற்குக் காரணமும், தளர்ச்சி நீங்கித் தெளிவதற்குக் காரணமும் இக்கண்களே என்றுகொண்டு அருளிச்செய்கிறார்,
‘தாமரைக் கண் என்றே தளரும் என்றது’என்று தொடங்கி. என்றது,
மேல் திருப்பாசுரத்தில் ‘தளரும்’ என்று மோஹத்தைச்சொல்லி, இத்திருப்பாசுரத்தில் ‘என் தாமரைக்கண்ணா என்கையாலே,
இது உணர்த்தியில் வார்த்தை என்றபடி. “தாமரைக்கண் என்றே தளரும்’ என்று தளர்த்திக்கு உடலானது இப்போது தாரகமாய்ச் சொல்லுகிறது.

‘நீர் ஏறுண்டார்க்கு அந்நீரைத் தெளித்து ஆஸ்வஸிப்பிக்குமாபோலே, எனக்கு ஆற்றாமையை விளைத்த கண்களாலே என்
ஆர்த்தி தீர்க்கப் பார்த்தாயோ, இல்லையோ? கண்களாலே பிறர்க்கு ஆகாதபடி பண்ண அமையுமோ?
ஸதார்சனத்தையும் பண்ணி வேண்டாவோ?’ என்பது –இருபத்து நாலாயிரப்படி.

கிட்டின காலத்தில் ‘நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கன்றோ?’ என்றது கண்களாலே அன்றோ?
அக்கண்களிலே அன்றோ இவள் எழுதிக்கொடுத்தது?
கண்களாலே நோக்கி அணைக்கும் படியை நினைத்து, அந்த பாவனையின் மிகுதியாலே கலந்து பிரிந்தாற்போலே கண்ணீர் மல்க இருக்கும்.
என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய் என்னும் –
‘என் தாபம் ஆறும்படி அவ்வலை ஏற்றிலே கொண்டபோய்ப் பொகடவல்லீர்கோளே’என்னும்.
‘திருப்பொருநலில் தண்ணீர், பிரிந்தார்க்கு நிலாப்போலே சுடுகின்ற நீராய் இராநின்றது போலேகாணும்.
உன்னைக் கிட்டுகைக்கு நான் செய்வது என்?’ என்பாள், ‘என்செய்கேன்’ என்கிறாள்.
அப்போதே கிட்டப் பெறாமையாலே, ‘ஆசைப்பட்ட நாம் அழகியதாகப் பெற்றோம்’ என்று
நெடுமூச்சு எறியாநிற்கும்
‘தளிர்களைத் தரித்திருக்கின்ற மரங்களைத் தன் மூச்சுக் காற்றினால் எரிக்கின்றவளைப் போல இருக்கிறவளை’
பெருமூச்சாலே தன் பகை அறுக்கப் பாராநின்றாள். பல்லவங்களைத் தரித்தனவாயிருத்தல் இப்போது இவளுக்குப் பகை அன்றோ?
ஒரு படிப்பட நின்று நலிகிறபடி அன்றோ அவை? அரக்கியர்கள் உறங்கும் போதும் உண்டே அன்றோ!
உருவ இப்படியே நிற்கிற இத்தனை அவை, உருகும் – உருகுகிறபடியே நிற்குமத்தனை.
நெடுமூச்சு எறிகைக்குத் தர்மியும் இல்லையோ என்னும்படி உருகும். வெவ்விதாகப் பலகால் நெடுமூச்சு எறிந்து, அந்த வெப்பத்தாலே உருகாநிற்கும்.
‘தஹந் தீமிவ நிஸ்வானஸ: வ்ருக்ஷாந் பல்லவ தாரிகை;’-என்பது, ஸ்ரீராமா. சுந். 17:29
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் –
வலிக்கைக்கு விரகு பார்க்கிறபடி. ‘நான் முன்பு செய்த பாவமே, என் முன்னே வந்து நிற்க வல்லையே?’ என்னும்.
நீ முகங்காட்டினாயாகில். ‘தாமரைக்கண்ணா, என் செய்கின்றாய்?’ என்று அவனைக் கேளாது ஒழியலாயிற்றே. என்றது,
‘நான் செய்த வினையின் பயன் இதுவானபின்பு நாம் யாரை வெறுப்பது?’ என்று இருக்கலாயிற்றே என்றபடி.
ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கும் இவர்க்கும் உள்ளது ஒன்றாயிற்று; ‘நன்மை அவனாலே’ என்றும்,
‘தீமை தந்தம்மாலே’ என்றுமாயிற்று இருப்பது.
‘என்னுடைய பாவம் அதிகமாய் இருக்கிறது; சந்தேகம் இல்லை,’ என்றாள் அன்றோ?
‘மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந ஸம்ஸய:’-என்பது, ஸ்ரீராமா. சுந். 38:48.
யுகபத்யம் அனுகிரக கார்யம் ஸ்ருஷ்டித்ததே நன்மைக்காத்தானே-கொடுத்த கரண களேபரங்களை நாம் தான் தப்பாக பயன்படுத்துகிறோம் –

முகில் வண்ணா தகுவதோ என்னும் –
நான் செய்த பாவம் கிடக்கட்டும், கர்மங்கட்குத் தகுதியாகவோ நீர் காரியம் செய்யுமது?
தண்ணீர் என்றும் தரை என்றும் வேறுபாடு பாராமல் மழை பெய்வது போன்று,
திருவருள் செய்யும் உம்முடைய ஒளதார்ய குணத்துக்குப் போருமோ?’ என்னும்.
‘ஒரு வினைக்கு இத்தனை உயிர் உண்டோ? நான்காண் இது விளைத்தேன்,’ என்று அவ்வடிவைக் கொண்டு வந்து காட்ட வல்லையே’ என்னும்.
இது பத்தியின் காரியமேயாகிலும், பகவானுடைய அனுபவத்திற்கு விரோதி ஆகையாலே பாவம் என்கிறது.
விருப்பம் இல்லாததனைக் கொடுப்பது பாவம் இத்தனை அன்றோ?
சரணம் அடைந்த பின்பு சம்பத்தும் ஆபத்தும் அவன் தலையில் -ரஷா பரம் அவன் ஏற்றுக் கொள்வான் –

‘தகவிதோ’ என்ற பாடத்திற்கு,-தகவு – தயை
‘நான்செய்த பாவம் நானே அனுபவிக்க வேணுமாகில் உம்முடைய திருவருளுக்கு விஷயம் இன்னது என்று அருளிச்செய்ய வேண்டும்,’ என்னும்.
‘முன் செய்த வினையே முகப்படாய்’ என்கிற இடம், ‘கிரியை அத்ருஷ்ட ரூபத்தாலே நின்று பலத்தைக் கொடுக்கும்’ என்பார் வார்த்தை.-மீமாம்சகன் வார்த்தை
‘முகில் வண்ணா’ என்கிற இடம், ‘ஒரு பரம சேதனனுடைய திருவருளே பலத்தைக் கொடுப்பது’ என்றிருக்கும் வேதாந்திகள் வார்த்தை.
‘குற்றவாளர் இராம கோஷ்டிக்கு ஆள் அல்லர்’என்கிற மஹாராஜர் தொடக்கமானார் வார்த்தை போன்றது மேலே சொன்னது:
‘அவர்கள் குற்றவாளரேயாகிலும்’ என்ற இராம சித்தாந்தம் போலே ‘தகவிதோ’ என்கிறது
.‘தோஷோயத்யபி தஸ்ய ஸ்யாத்’ என்பது, ஸ்ரீராமா:யுத். 18:3

‘என்னை நமஸ்காரம் செய்’ என்றாற்போலே மேலே சொன்னது‘மாம் நமஸ்குரு’ என்பது ஸ்ரீகீதை, 9:34.;5‘
துக்கப்படாதே’ என்றாற்போலே ‘தகவிதோ’ என்கிறது.

‘முகில் வண்ணா’ என்கைக்கு, நம் ஒளதார்யம் எங்கே பலிக்கக் கண்டு சொல்லுகிறது?’ என்ன,
‘இவ்வுலகம் முன் செய்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்-
காரணம் ஒன்றும் இல்லாமலே முன்பு உலகத்தைப் படைத்தல் முதலானவைகளைச் செய்து ‘தகவிதோ’ என்கைக்கு
‘உபகரணம் இல்லாத அன்று இதனை உண்டாக்கி நோக்கினாய் நீ அன்றோ?’ என்றது,
‘கரணகளேபரங்கள் இல்லாமல் கிடந்த இதனை வெறும் உன் கிருபையாலே உண்டாக்கினாய் இத்தனை அன்றோ?
உண்டாக்கிவிட்ட அளவையோ? பிரளய ஆபத்து வயிற்றிலே வைத்துப் பாதுகாத்து, உள்ளே கிடந்து நோவுபடாதபடி புறப்படவிட்டு,
எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, எல்லாவிதமான பாதுகாத்தலையும் செய்தாய் அல்லையோ!’ என்றபடி.
என்கொலோ முடிகின்றது இவட்கே –
‘இவள் அளவில் தர்மிலோபமேயோ பலிக்கப் புகுகிறது?
நீர் பாதுகாக்கும் பூமிக்கும் இவளுக்கும் ஒரு வாசி உண்டாக நினைத்திருக்கின்றிலீரோ!
இவளுடைய பாபமோ, உம்முடைய திருவருளோ பலிக்கப் போகிறது?
இவள் இடையட்டத்தில் நீர் செய்யப் பார்த்தபடி எங்ஙனே?’ என்னுதல்.
‘இவளுடைய நிலை என்னாய் விளையக்கடவது?’ என்னுதல்.
என் செய்கின்றாய் -திருத் தாயார் வார்த்தை -ஆற்றாமை வளர மேல் மேல் கேள்வி கிடக்கிறாள்
தலை மகள் வார்த்தை -என்றுமாம்

————————————————————————————

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’
இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;-வட்க்கு -லஜ்ஜை -தாய் முன்னாலே அவன் அழகையும் பெயரையும் சொல்லி
-நீல ரத்ன ஸ்வ பாவனாய் -முடித்து ஆளலாம் படி பவ்யன் ஆனவனே
வானமே நோக்குமை யாக்கும்-ஆர்த்த தவணைக்கு வருவான் என்று பார்க்கும் -காணாமையாலே மயங்கி -பிரதிபந்தகங்கள் போக்கி –
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட-மிடுக்கு உடைய அசுரர் புராணங்களை கிரஸித்த
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;-அத்விதீயன் -உள்ளே உடையா நிற்கும் -ஆச்ரித நிரசன சீலத்தை நினைத்து
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்-ஸூ பிரயத்னத்தால் காண்பதற்கு அரிய நீ உன்னை உன் அனுக்கிரகத்தால் காணுமாறு
-உன்னை இல்லாள் தரிக்காத எனக்கு
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;-சக்ரவர்த்தி திருமகன் -பும்ஸாம் திருஷ்ட்டி சித்த அபஹாரினாம்-ரிஷிகள் –
மான் தோல் அலங்காரம் கண்டு ஆச்சர்யப்பட –
தாஸாம் ஆவீர் பூத –ஸவ்ரி ஸ்வயமானம் சாஷாத் மன்மத மன்மத பீதாம்பர சரக்வீ
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’-காலாந்தரம் அவை பிற்பாடாரும் இழவாத படி
இவள் திறத் தென் செய்திட்டாயே–இப்படி ஆரத்தை யாகி இவளுக்கு
வடிவு அழகு இப்படி மதி மயங்கப் பண்ணுமோ

‘சிறிதும் நாணம் இல்லாதவளாய் இருக்கின்றாள்; ‘மணிவண்ணா!’ என்கிறாள்; ஆகாசத்தையே நோக்குவாள்; மயங்குவாள்;
‘அச்சத்தை உண்டாக்குகிற அசுரர்களுடைய உயிர்களை உண்ட ஒருவனே!’ என்பாள்; மனம் உருகுவாள்;
‘கண்களால் காண்பதற்கு அரிய நீ, நான் பார்ப்பதற்குத் திருவருள் புரியவேண்டும்,’என்பாள்; ‘ஸ்ரீராமபிரானே! கண்ணபிரானே!’ என்பாள்;
‘திண்ணிய கொடிகள் கட்டிய மதில்கள் சூழ்ந்த திருவரங்கத்தாய்! இவள் விஷயத்தில் என்ன செய்தாய்?’ என்கிறாள்.
வட்கு – நாணம். இறை – சிறிது. உட்கு – அச்சம்; ‘உருவுட் காகும் புரையுயர் பாகும்,’ என்பது தொல்காப்பியம்.’
திண்’ என்பதனை, மதிட்கு அடைமொழியாக்கலுமாம்.

‘இவள் இந்த நிலையை அடைந்தவளாதற்கு இவள் விஷயத்தில் நீர் செய்தது என்?’ என்கிறாள்.

வட்கு இலள் இறையும் –
இதற்குச் சீயர் அருளிச்செய்வது. ‘இவள் முடிந்தாள்’ என்று.
நாணத்தைக்கொண்டே அன்றோ பெண்மையை அறிவது?
சொரூபத்தைப் பற்றி வரும் குணம் போனால் சொரூபமும் போயிற்றாமத்தனை அன்றோ?
நிரூபகத்தை ஒழிய நிரூபிக்கப்படும் பொருளின் சித்தி இல்லையே! இவள் நாணம் நீங்கினமைக்கு அறிகுறி என்?’ என்னில்,
மணிவண்ணா என்னும் –
கணவனுடைய திருப்பெயரைச் சொல்லாநின்றாள்.
பெற்ற தாய் முன்னே வடிவழகினைச் சொல்லாநின்றாள்.
நான் கேட்டாலும் மறைக்குமதனைத்தான் வெளியிடாநின்றாள்.
காதலி ஆசைப்படுவது வடிவழகினை அன்றோ? தான் அகப்பட்ட துறையினைச்சொல்லா நின்றாள்.
மெய்யே நினைத்து, மெய்யே சொல்லி, மெய்யே அனுபவிக்கை இவர்க்குத் தன்மையாய்விட்டதே!-மெய் -சாது திருமேனி -உண்மை –
‘உன் சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்திக் கைதொழவே அருள் எனக்கு,- திருவாய். 7.1:8.’ என்று
அவன்பாடு இவள் வேண்டிக்கொள்வதும் இதுவே அன்றோ?
மணிவண்ணா என்னும் –
வடிவழகினைச் சொல்லுதல், சௌலப்பியத்தினைச் சொல்லுதலாகாநின்றாள்.
‘இதற்கு முன் அறியாத துக்கத்தையுடையவளும் மென்மைக்குணமுடையவளும் ஆழ்ந்த மனமுடையவளுமான பிராட்டி,
அந்தத் துக்கத்தாலே அழுது கொண்டு என்னைப்பார்த்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை,’ என்கிறபடியே,
‘அத்ருஷ்ட பூர்வ வ்யஸநா ம்ருது ஸூலா மநஸ்விநீ
தேந துக்கேந ருததீ நைவம் ஆகிஞ்சித் அப்ரவீத்’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 58:35
எல்லா நிலைகளிலும் வாய்விடக்கூடியதன்றிக்கே இருப்பது ஒன்றே அன்றோ இது?
வானமே நோக்கும் –
‘மணிவண்ணா’ என்னும் துயர ஒலி கேட்டிருப்பதற்குச் சத்தன் அல்லன்,-ஸப்தஸஹ-சஹஸ்ரநாமம் –
ஒலி வழியே ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோன்றினாற் போலே தோன்றி யருள்வான் என்று ஆகாயத்தையே பாராநிற்கும்.
‘மிகப் பெரிய ஆபத்தையடைந்தவன்’ என்கிற அதற்கும் அவ்வருகே அன்றோ இவளுடைய நிலை?
‘பரமாப்தம் ஆபந்ந;’ என்பது, விஷ்ணு தர்மம், 68.-அங்கு வந்து தோன்றக் காணாமையாலே,
மையாக்கும் -மயங்காநின்றாள்; அறிவு கெடாநின்றாள்.-அங்கே சரீர நாசம் இவளுக்கு ஸ்வரூப நாசம் –

‘மயங்கத் தீருமோ? விரோதி கனத்திருக்கில்?’ என்ன,
உட்குடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனை என்னும் –
‘நான் வரப்பார்த்தால் அதற்குத் தடை உண்டு அத்தனையல்லது, நீயே வரப் பார்த்தால் தடை செய்வார் உளரோ?
எதிரிகள் மிடுக்கருமாய்ப் பலருமாமத்தனை அன்றோ வேண்டுவது அழியச் செய்கைக்கு?’ உட்கு -மிடுக்கு.
‘பிறகு அவனுடைய உள்ளத்தில் இருந்துகொண்டிருக்கிற பகவான், கோபமுடையவராய்,
அதிசோஷணம் என்ற அந்தக் காற்றினைவிழுங்கிவிட்டார்; அந்தக் காற்று நாசமடைந்தது’ என்னுமாறு போன்று,

‘ஹ்ருதயஸ்த: தத: தஸ்ய தம் வாயும் அதிஸோஷணம்
பபௌ ஜநார்த்ததா: க்ருத்த: ஸ யயௌ பவந: க்ஷயம்’–என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1.19:24.

‘உண்ட’ என்கிறது. வடிவழகிற்கு ஒப்பு உண்டாகிலும் வீரத்துக்கு ஒப்புச் சொல்லலாவதில்லையாதலின் ‘ஒருவனே’ என்கிறது.
தான் வீரபத்நி என்னுமிடம் தோன்றச் சொல்லுகிறாள் ‘உட்குடை அசுரர் உயிர் எலாம் உண்ட’ என்று.
‘பெருமாள் யானைப்போல எண்ணப்படுகிறார்; நீ அற்ப முயலைப்போல எண்ணப்படுகிறாய்’ என்னுமவள் அன்றோ?
‘தவம் நீசஸஸவத்’-என்பது, ஸ்ரீராமா. சுந்.22:16, இது பிராட்டி கூற்று.

உள் உருகும், –
‘இப்படித் தடைகளையெல்லாம் போக்குமவன் வரக் காணாமையாலே, என்ன குறை உண்டாய் இழக்கிறேன்?’ என்று மனம் உருகுவாள். என்றது,
‘காலம் நீட்டித்தலுக்குக் காரணம் இன்றிக்கே இருக்க, பலியாது ஒழிந்தாவாறே நீர்ப்பண்டம் போலே உருகுவாள்’ என்றபடி.
‘உருகின மாத்திரத்தில் கண்களால் காண முடியாத பொருள் கண்களுக்கு இலக்கு ஆமோ?’ என்பார்களே;
‘அருளாலே பெறுவார்க்கு அங்ஙன் ஒரு நியதி உண்டோ?’ என்னமாயிற்று இவள்.
‘கண்ணால் காண்கிறான் இல்லை’ என்கிறது, தாம் தாமே காண இழிவார்க்கு;
‘ந சக்ஷூஷாபஸ்யதி’ என்பது, தைத். நாரா.

‘தனது அருளுக்கு இலக்கானவனுக்கு இந்தப் பரமாத்துமா தனது வடிவை நன்கு காட்டுகிறான்,’ என்கிறபடியே
‘தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே ததும் ஸ்வாம்’ என்பது, உபநிடதம்.

அவன்தானே காட்டுமன்று அருமை இல்லை.
அருச்சுனன் முதலோர்க்கு ஞானக் கண்ணைக்கொடுத்துக் காட்டிற்றிலையோ?
கட்கிலீ –
‘கண்ணுக்கு இலீ!’ என்றபடி.
உன்னைக் காணுமாறு அருளாய் –
‘உன்னைக் காண அரிது தம் முயற்சியாலே பெற இருப்பாற்கே அன்றோ? -அருளாய் -உபாயம் -காணுமாறு -பிராப்யம்
உன் அருள் அடியாகக் காண்பார்க்கும் அரிதோ?’ நன்று; அருளாலே நாம் யார்க்குக் காட்டினோம்?’ என்ன,
காகுத்தா –
‘வடிவு உதாரத்தன்மை சீலம் ஆகியவற்றால் அனைவருடைய கண்களையும் மனத்தையுங் கவரக்கூடியவனை’ என்கிறபடியே,
நகரத்திலுள்ளவர்களுக்கும்,‘பெருமாளுடைய உருவத்தின் அமைப்பையும் அழகினையும் சுகுமாரத் தன்மையையும்
அழகிய அலங்காரத்தையும் வனத்தில் வசிக்கின்ற முனிவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்,’ என்கிறபடியே

‘சந்த்ர காந்தாநநம் ராம மதீவ ப்ரிய தர்ஸநம்
ரூப ஒளதார்ய குணை: பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்’-என்பது, ஸ்ரீராமா, அயோத். 3:29.

‘ரூபம் ஸம்ஹநநம் லக்ஷ்மீம் ஸௌகுமார்யம் ஸூவேஷதாம்
தத்ரஸூ: விஸ்மித ஆகாரா ராமஸ்ய வந வாஹிந;-என்பது, ஸ்ரீராமா. ஆரண், 1 : 1.

காட்டில் வசிப்பவர்களுக்கும் காட்டிக்கொடுத்திரிந்திலையோ?
‘ஒருகால் செய்தது கொண்டோ?’ என்ன,
கண்ணனே –
ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியர்களுக்கு உன்னைக் காட்டிற்றிலையோ?
‘தாஸாம் ஆவிரபூத் – ஒரு நீர்ச்சாவியிலே ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலே இருக்கை.
‘தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமாக முகாம்புஜ:
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத;’-என்பது, பாகவதம், 10. 32:2.

ஸ்மயமாநமுகாம்புஜ:-அவர்கள் முன்னே தோன்றின பின்பு வடிவில் பிறந்த செவ்வி.
பீதாம்பரதர: ஸ்ரக்வீ -பெண்கள் மனத்தில் மறத்தை மாற்றுவது, பரிவட்ட வாய்ப்பையும் தோள்களில் மாலையையும் காட்டியாயிற்று.
ஸாக்ஷாத் மந்மத மந்மத :-கீழை வீடு காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் –
வாராக வாமன னேயரங் காவட்ட நேமிவல
வாராக வாஉன் வடிவுகண் டால்மன் மதனும்மட
வாராக ஆதரம் செய்வன்என் றால்உய்யும் வண்ணமெங்கே
வாராக வாச முலையேனைப் போலுள்ள மாதருக்கே?’-என்பது, திருவரங்கத்தந்தாதி.

காமன் கையிலே உலகம் படுமதனைக் காமன் தான் படும்படி இருக்கை.
திண்கொடி மதிள்சூழ் திருவரங்காத்தாய் –
‘அவதார காலத்தில் உதவிற்றிலீரே!’ என்ன, அவதார காலத்தில் உதவப் பெறாதார் இழவு தீர்க்க அன்றோ இங்கு வந்து சாய்ந்தருளிற்று?
உகந்தார்க்குக் காட்சி கொடுக்கக் கொடி கட்டிக் கொண்டன்றோ கிடக்கிறது?
திண்ணிய மதிள் என்னுதல் – திண்ணிய கொடி என்னுதல்; அவழித்துக் கட்டாத கொடி என்கை.
வருவார் எல்லாரும் வாருங்கோள்’ என்று கட்டின கொடி.
இவள் திறத்து என் செய்திட்டாயே-
இவள் இப்படிப் பிச்சு ஏற என்ன மருந்திட்டாய்?
அவன் இவள் அறியாதபடி ஒரு முகத்தாலே மருந்து இடுமே?’ –முகத்தாலே-அம்மான் பொடி –
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரந் தான்கொலோ!’நாய்ச்சியார் திருமொழி, 2:4.- என்கிறபடியே,
தன் முகத்தைக் காட்டுகை அன்றோ அவன் மருந்து இடுகையாவது? இவள் கேட்கிறது என்?’ என்னில்,
அதுவாகில் அதற்கு மாற்றுச் செயலாக, மூன்று உலக இராஜ்யமும் உலக சப்தத்திற்குப் பொருளாகவுள்ள
எம்பெருமானும் சீதாபிராட்டியினுடைய ஒரு அமிசத்திற்கும் ஒப்பாகமாட்டார்கள்,’
‘த்ரைலோக்ய ராஜ்யம் ஸகலம் ஸீதாயா நாப்நுயாத் கலாம்’-என்பது, ஸ்ரீராமா. சுந்.16:14.
என்று சொல்லப்படுகிற இவளை அவன் முன்னே நிறுத்தி, இவள் பட்டன எல்லாம் அவனைப் படுத்துவாளாக நினைக்கிறாள்.

————————————————————-

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-

அபரிச்சின்ன மஹிமை -தீர்த்தம் ஸ்ரேஷ்டன் -இவளை பற்றி என்ன திரு உள்ளம்
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;-பெண்ணால் அசையக் கூட முடியாமல்-பரன் வசப்பட்டு -இட்டு வைத்த இடத்தே கிடைக்கும் கைகள் கைகள்
ஆர்த்தி முதிர்ந்த படியால் –
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;-தானே எழுந்து -பாரவஸ்யம் குலைந்து -உலாவா நிற்கும் -மோஹிக்கும்
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;-காலம் உணர்த்த மோஹம் தெளிந்து வருவான் என்று -கை கூப்பும் அஞ்சலி பண்ணும் -வராகி காணாமையாலே காதல் கஷ்டம் -தாயார் வார்த்தையே பெண் சொல்வதே -வெறுத்து மூர்ச்சிக்கும்
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;-ரக்ஷிக்கும் அபரிச்சின்ன ஆகாரம் ரத்னம் பவளம் மீன் திமிங்கிலம் பெரியது சிறிது நலியாமல் -வண்ணம் தான் கடல் ஸ்வ பாவம் இல்லையே –எனக்கு கடியவனாய் கொடுமை செய்பவனாய் இருக்கும்
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்-சர்வதோ முகமாய் வட்டம் கூர்மை -இளைப்பாறி
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;கையும் திரு வாழியுமாக வா என்று ஆவர்த்தித்து -வந்திடாய் -சொல்லி சொல்லி தளர்ந்து மயங்கி -மீண்டும் மீண்டும் அபேக்ஷை ஸ்வரூபம் இழந்தாள்-ஸக்ருத் தானே -ஆவர்த்தி பண்ணக் கூடாதே -அவன் வாராமையாலே அபிமதமும் இழந்தாள் -அறிவு அழிந்து –
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!-கிளேசித்திப்பித்து -சிஷ்ட பாவனை -மங்கள வாரம் போலே விபரீத லக்ஷணை
மித்ர பாவனை -சொன்னாய் சிஷ்ட பாவனை உடன் நீ இருப்பாயோ-நீர்க்கரையில் கிடந்து -அம்மா மண்டபம் கொள்ளிடம் –
இவள் திறத் தென் சிந்தித்தாயே-சிந்தனை இதில் -மோஹிப்பிக்கவே நினைத்து இருக்கிறாயா– தேற்ற நினைத்து இருக்கிறாயா

‘இட்டு வைத்த இடத்தே கிடக்கும்படியான கைகளையும் கால்களையுமுடையவளாய் இருப்பாள்; எழுந்து உலாவுவாள்; மயங்குவாள்;
கைகூப்பித் தொழுவாள்; ‘அன்பு துன்பத்தையே உண்டாக்குகின்றது,’ என்று மூர்ச்சிப்பாள்; ‘கடல்வண்ணா! நீ கொடியவன்காண்,’ என்பாள்;
‘வட்டமான கூர்மை பொருந்திய சக்கரத்தை வலக்கையிலுடையவனே!’ என்பாள்; ‘வந்திடாய்’ என்று என்றே மயங்குவாள்;
‘சிஷ்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்! இவள் விஷயமாக நீ சிந்தித்தது யாது?’ என்கிறாள்.
கட்டம்-கஷ்டம். உலாய் மயங்கும்-உலாவி மயங்குவாள் எனலுமாம். சிட்டன்-சிஷ்டன்.

உம்மை ஒழியப் பிழைக்க மாட்டாத இவள் திறத்துச் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்கிறாள்.

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் –
இவளுக்கு நீர் உடம்பு கொடுக்க வேண்டா;
இவள் அவயவங்கள் இவள் அதீனமாகச் செய்ய அமையும்.
‘தோழிகளால் பொகடப்பட்டுப் பரந்து
‘ஸகீபி: ந்யஸ்த ப்ரகீர்ண பரதந்த்ர விபாண்டுர அங்கீ’ என்பது.
இருப்பனவும் சுவாதீனம் அற்றனவும் மிக வெளுத்தனவுமான அவயங்களையுடையவள்’ என்கிறபடியே,
தோழிமார் பொகட்ட இடத்தே கிடக்குமித்தனை. சுவாதீனம் இல்லாமையாலே தோழிமார் இட்டு வைத்த காலும் கையுமாய் இருக்கும்.
எழுந்து உலாய் மயங்கும்-
அவியும் விளக்குக் கிளர்ந்து எரியுமாறு போலே அடி அற்ற எழுச்சியும் அடி அற்ற உலாவுகையுமாய் இராநின்றது;
அது கிளர்ந்து எழுந்தவுடனே அவியுமாறு போலே மயங்காநின்றாள்.
கை கூப்பும்-
உணர்த்தியில் தொழுமவள் அல்லள்; மயங்கினால் தொழாதிருக்க வல்லள் அல்லள்;
சாதனபுத்தியில் தொழுமது இல்லை; ஆற்றாமையாலே வருமது தவிரமாட்டாள்.
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்-
சாதன புத்தியால் தொழுதாளாகில் ‘கட்டமே காதல்’ என்னக் கூடாதன்றோ?
பிரிவு நிலையில் நலிவுக்குக் காரணமாகையாலே அன்பு தண்ணிது என்கிறாள்.
கடல் வண்ணா கடியைகாண் என்னும்-
‘கடல் எல்லாப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கி, ஒன்றை ஒன்று நலியாதபடி நோக்குமாறு போலே,
எல்லாப்பொருள்களையும் காப்பாற்றுகின்ற நீ அருள் இல்லாதவன் ஆனாய்’ என்னும்.
அன்றிக்கே, ‘பிரிந்தார்க்குத் தரிக்க ஒண்ணாதபடியான வடிவு படைத்த நீ கொலைஞன் ஆகாநின்றாய்’ என்னும் என்னுதல்.

வட்டம் வாய் நேமி வலங்கையா என்னும் –
‘சங்கு சக்கரங்கள்’ என்று சொல்லும் நிலையும் போயிற்று,
இப்போது கண்களுக்கு விஷயம் அன்றிக்கே இருக்கச்செய்தேயும், அவற்றினுடைய அமைப்பு, புத்தியிற்படிந்ததாய் இருக்கிறபடி.
பிடித்த இடம் எங்கும் வாயாக இருத்தலின், ‘வட்டவாய்’ என்கிறது.
இதனால், ‘விரோதியைப் போக்கப் பரிகரம் இன்றிக்கே இருக்கிறாய் அன்றே?’ என்கிறாள் என்றபடி.

வந்திடாய் என்று என்றே மயங்கும் –
ஒருகால் ‘வந்திடாய்’ என்றால் ஆறி இருக்க வல்லள் அல்லளே.
விடாய்த்தவன் தாகம் தீருநதனையும் ‘தண்ணீர்’ என்னும் இத்தனையன்றோ?
அப்படியே, ‘வந்திடாய், வந்திடாய்’ என்று உருவ அதனையே சொல்லும்;
மற்று ஒன்று அறியாள்.
வாசனையே உபாத்தியாயராகச் சொல்லுமத்தனை.
வெண்கலத்தின் ஒலி போலே சொல்லுக்குச் சொல் ஓய்ந்து வருகின்றதாதலின், ‘என்றென்றே’ என்கிறது.
சிட்டன்-திருமால். என்றது, ‘பிராட்டி விஷயத்தில் வியாமோகத்தையுடையவன்’ என்றபடி.
ஸ்ரீக்கு இஷ்டன் திருமால் -இஷ்டப்பட்ட வைக்கிறான் -வ்யாமோஹம் இருவருக்கும் –
அன்றிக்கே, ‘பிராட்டியைத் தன் பக்கலிலே பித்தாக்கித் துடிக்கப்பண்ணுமவன்’ என்னுதல்.
அன்றிக்கே, உம்முடைய படி சால அழகிதாய் இருந்தது;
உம்மைப்போலே சிஷ்டர்கள்சிலர் அமைந்தார்களே அன்றோ அபலைகள் குடி கெடுக்கைக்கு?
அழகிதாகத் திருவருளையே மிகுதியாகவுடையவராய் இருந்தீர்’ என்னுதல். என்றது,
‘பிரஹ்ம ஹத்தியைகளைச் செய்து பூணூலை வெளுக்கவிட்டுக் கையிலே பவித்திரத்தையுமிட்டு
ஓத்துச் சொல்லித் திரிவாரைப்போலே இருந்ததே உம்முடைய படி’ என்றபடி.
செழுநீர்த் திருவரங்கத்தாய் –
சிரமத்தைப் போக்கும்படியான நீரையுடைய கோயில்.
தண்ணீர்ப் பந்தலிலே கொலைஞர் தங்கினதைப் போன்றதேயன்றோ நீர் இவ்வூரில் சாய்ந்ததும்?
இவள் திறத்து என் சிந்தித்தாயே –
முற்றறிவினனுக்கும், இவளுக்கு ஓடுகிற நீலைக்குப் பரிஹாரம் சிந்திக்க வேணும் என்றிருக்கிறாள்;
திருத்தாயார் தெளிவு இருக்கிறபடி. ‘அவன் நினைவே காரியமாய்த் தலைக்கட்டுவது’ என்று அவனைக் காட்டிக் கேட்கிறாள்.
‘கேசவன் அநுகூலர் விஷயத்தில் மேன்மையைச் சிந்திக்கிறான்,’ என்கிறபடியே,
அனுகூல விஷயத்தில் சிந்திப்பானும் அவனே அன்றோ?
இங்ஙனே சிந்தித்தலாயே போமித்தனையோ, அறுதியிடல் முடிவாகக் கடவதன்றோ?
ஆகட்டும் பார்க்கலாம் -சிந்தித்தே பதில் -அது மட்டும் போதாது இரண்டு அர்த்தங்கள் –

————————————————————————————

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!
அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய் தானே!–7-2-5-

ஆஸ்ரிதர் அபேக்ஷிதம் செய்யும் படி பவ்யனாய்-இவள் பிரதி க்ஷணம் அவஸ்தா பேதம் நடக்கும் படி ஆரத்தியாய் –
ரதியினால் ஆசையால் அலற்றும் படி சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்–அவஸ்தா பேதங்கள்
-பூர்வ சம்ச்லேஷம் சிந்திக்கும் -அறிவு அழியா நிற்கும் -நினைத்தே பார்க்காமல் தெளிந்து
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;-சன்னிஹிதன் ஆனாயே என்னும்
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க-கை கூப்பும் -தலைக்கு மேலே சிரஸா நமஸ்காரம் சாஷ்டாங்க நமஸ்காரம்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;-வரக்காணாமையாலே
யுக்தி பல வியாப்தி ஆகாமையாலே மோஹிக்கும்
காமாதி விகாரங்கள் அனைத்தும் உண்டே இவளுக்கு -அஷ்டாக்ஷரீ -அஷ்ட அவஸ்தைகள் இதில் -இல்லாதது இல்லை
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!-அலைகடல் கடைந்த ஆர் அமுதே!-கால நியதியும் அன்றிக்கே பிரபல விரோதியும் இன்றியே
அரும் தொழில் செய்ய வேண்டாத படி
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த-உன்னை -உன் திருவடிகளில் சேர்வதே இவளுக்கு அபேக்ஷிதம் -சந்திப்பே அமையும் -சம்ச்லேஷம் அபேக்ஷிதம் –
சரணம் திருவடி சேர காத்து -முடிய காத்து இருக்கிறாள் –
தையலை மையல் செய் தானே-ஆந்திர அனுபவம் மாத்திரம் அன்றிக்கே
சிந்திப்பு மானஸ அனுபவம் -சந்திப்பு பாஹ்ய அனுபவம் –
வலித்த -உறுதியான முடிவு -சிக்கென –அனுபவிக்க -மதி கெடுத்தாயே -மையல்

‘அந்தி நேரத்தில் இரணியனது சரீரத்தைப் பிளந்தவனே! அலைகளையுடைய கடலைக் கடைந்த அரிய அமுதே! சேர்ந்து உனது திருவடிகளை
அடைவதற்கே உறுதிகொண்ட இந்தப் பெண்ணை மயங்கும்படி செய்தவனே! சிந்திப்பாள்; அறிவு கெடுவாள்; தெளிவாள்; கைகூப்பித் தொழுவாள்;
‘திருவரங்கத்தில் உள்ளவனே!; என்பாள்; தலையாலே வணங்குவாள்; அவ்விடத்திலேயே மழை போன்று தண்ணீர் பெருகும்படி
‘வந்திடாய்’ என்று என்று கூவிக் கொண்டே மயங்குவாள்,’ என்கிறாள்.

இவளுக்கு ஒவ்வொரு கணத்திலும் மாறபட்டு ஒன்றோடு ஒன்று சேராதே வருகிற நிலை வேறுபாடுகளை அறிவித்து,
‘இவளை இப்படிப் படுத்துதல் உம்முடைய நீர்மைக்குப் போருமோ?’ என்கிறாள்.

சிந்திக்கும் –
உம்முடைய அழகு முதலானவற்றையும் உம்முடைய கலவியையும் நினைக்கும்.
முன்பு இந்த நினைவும் இன்றிக்கேயாயிற்றிருந்தது; மோகத்தைப் போன்று இதுவும் ஒரு வேறுபாடாய் இருக்கிறபடி.
திசைக்கும்-
அப்போதே காணப்பெறாமையாலே மோஹிக்கும்,
முன்பு மோஹம் சித்தம் இப்பொழுது சிந்திக்கும் -திசைக்கும் -அறிவு கலங்கி மோகிக்கும் -மோஹம் சிந்தனை மோகம் மாறி மாறி -இருக்கும் –
தேறும் –
ஒரு காரணம் இன்றிக்கே இருக்கத் தெளிகின்றாள்.
இதுதானும் அச்சத்தைத் தருமதாய் இருக்கிறதாயிற்று; மோஹம் செல்லாநிற்க, விரும்பினதைப் பெற்றாரைப்போலே
தெளிதல் அச்சங்கொடுக்கும் அன்றோ? முடிவு காலத்தில் பிறக்கும் தெளிவிற்கும் அஞ்சவேணுமே?
உய்ந்த பிள்ளை பாடும் போது, ‘கெட்டேன், இவள் ‘தேறும்’ என்பதே’ என்று சீயர் அருளிச்செய்வராம்.
கைகூப்பும்-
இது இவளுக்கு இயல்பு. மேலே ‘மயங்கும் கைகூப்பும்’ என்றது;
இங்கே ‘தேறும் கைகூப்பும்’ என்றது: அல்லாதவை திரிதலாய்ச் செல்லாநிற்க, இது ஒன்றும் நிலையாய்ச் செல்லாநிற்கும்;
சொரூபத்தோடு சேர்ந்தது ஆகையாலே.
‘எப்பொழுதும் கைகூப்பிக்கொண்டே இருப்பவர்கள்’ என்னக் கடவதன்றோ?
மோஹத்திலும் உணர்த்தியிலும் சத்தை உண்டே; -சத்தை -ஆத்மா இருக்கு -சேஷத்வம் உள்ளது அஞ்சலி உண்டே –
‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்பதன்றோ நிலை நின்ற சொரூபம்?
தொடர்ந்திருப்பது ஆனதன்றோ உண்மையானது? -அனுவர்த்தம் ஆவது அபரமார்த்தம் -நித்யம் -ஆத்மதாஸ்யம் ஹ்ரீம் ஸ்வாம்யம் நித்யம் –
திருவரங்கத்துள்ளாய் என்னும்-
‘பெருமாளே என்னும்’ என்று சீயர் பணிப்பர்.
அவ்வூரில் சம்பந்தம் கொண்டு போலே காணும் அவரையும் விரும்பிற்று.
வந்திக்கும் –
‘திருவரங்கத்துள்ளாய்’ என்றது, நெஞ்சிலே வடிம்பிட்டு, ‘ஒருமுகமே, முறுவலே, ஒருவளையமே’ என்று துதிக்கின்றாள் என்னுதல்;
அன்றிக்கே, அபிமானம் நீங்கினவளாய்த் திருவடிகளிலே விழுந்து கிடக்கும்’என்னுதல்.
ஆங்கே-
அந்த நிலையிலேயே மழைக்கண் நீர் மல்க வந்திடாய் என்று என்கிற மயங்கும் –
குளிர்ந்த கண்ணீர் மல்க, வந்திடாய் என்று சொல்லி, அச்சொல்லோடே அறிவு கெடும்.

‘நினைத்த போதாத வராப்போமோ?’ என்ன,
அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே –
அவன் வரத்துக்கு மாறுபட்டதாய் இருப்பது ஒரு காலத்திலே, அசுரத்தன்மை வாய்ந்த இரணியனுடைய
சரீரத்தைப் பிளந்து பொகட்டிலையோ?
‘எல்லாப் பொருள்களும் என்னிடமிருந்தே உண்டாயின; எல்லாப்பொருள்களும் நானே’ என்று தெளிந்திருப்பார்க்கோ உதவலாவது?
மத்த: ஸர்வம் அஹம் ஸர்வம்’ என்பது,-விஷ்ணு புரா. 1. 19:85.அறிவு கெடுவார்க்கு உதவலாகாதோ?
தமப்பன் பகையானாலோ உதவலாவது? நீர் பகையானால் உதவலாகாதோ?
இவ்வளவில் உதவாமைக்கு மேற்படப் பகை இல்லை அன்றோ?
அது ஒருகால் சிறுக்கனுக்கு உதவின்மை உண்டு; அது தப்பியதே அன்றோ?’ என்ன, பின்போ நீ உதவாதது?
அலைகடல் கடைந்த –
வேறு பிரயோஜனங்களைக் கருதுகின்றவர்களுக்கும் அகப்படக் கடலைக் கடைந்து கொடுத்திலையோ?
உன்னைக்கொண்டு ஒரு பிரயோஜனம் கொள்வார்க்கோ உதவலாவது?
உன்னையே ‘பிரயோஜனம்’ என்றிருப்பார்க்கு உதவலாகாதோ?
ஆர் அமுதே ‑
இவருடைய அமுதத்தைக் கொண்டாயிற்று அவர்கள் கடல் கடைந்து.
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே –
‘உன்னைக் கிட்டித் திருவடிகளைச் சாரவேணும் என்று அறுதியிட்டவளாயிருக்கிற இவளை இப்படி அறிவுகெடுப்பதே!
அன்றிக்கே, உன்னைக் கிட்டிச் சந்நிதியிலே முடியுமித்தனை என்று உயிரைத் தரித்திருக்கிறவளை இப்படி அறிவு கெடுப்பதே!’ என்னுதல்.
‘என்னை அழைத்துக்கொண்டு போவதற்குறிய முயற்சியை எத்துணைக் காலத்திற்குள் கேட்பேனோ
அத்துணைக்காலம் வரை பிழைத்திருப்பேன்’ என்று காணும் இருக்கிறது.
‘உம்மை ஆசைப்பட்டவளுக்கும் மயக்கமேயோ பலித்து விட்டது?’ என்பாள், ‘மையல் செய்தானே’ என்கிறாள்.

‘தாவத்த்யஹம் தூத ஜிஜீவிஷேயம்
யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய’-என்பது, ஸ்ரீராமா. சுந். 36:30.

‘திங்கள் ஒன்றின்என் செய்தவம் தீர்ந்ததால்
இங்கு வந்திலனே எனின் யாணர்நீர்க்
கங்கை யாற்றங் கரை அடி யேற்குந்தன்
செங்கை யாற்கடன் செய்கென்று செப்புவாய்.’-என்பது கம்பராமாயணம்.

——————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: