பகவத் விஷயம் காலஷேபம் -144- திருவாய்மொழி – -7-1-6….7-1-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6-

அநிஷ்டமே கண்ணில் படாமல் -ஆண்டாள் -பாடி அருளுகிறாள் -உன்னை ஆர்த்தித்து வந்தோம் -வருத்தமும் தீர்ந்து –
விஞ்சி நிற்கும் தன்மை -ஜென்ம சித்த ஸ்த்ரீத்வம் உண்டே
மணி வல்லிப் பேச்சு வந்தேறி என்று காட்ட வேண்டும் படி அன்றோ மற்றவர்களுக்கு
சர்வ பிரகாரத்தாலும் ரக்ஷகன் -அருகில் நின்றால் இவை பயந்து ஓடும் -அளவுடையாரையும் நலியும்
விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை-சர்வாதிகான் -பரம பதத்தில் கைங்கர்யம் செய்யும்
வைனதேயாதிகள் நலியும் -அங்கே வேற்று நிலம்
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?-இங்கே –தங்கள் நிலம் இவற்றுக்கு – என்னை
-யானை நிலம் தன்னிலம் -முதலை நீர் தன்னிலம் -நித்ய ஸூ ரிகள் போலே பலவானும் இல்லை நான் -மேலே மூன்றாவது நீயும் கை விட்டால் –
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்-ஈடுபட்டுக் கூப்பிடும் என்னுடைய
-ஆர்த்த ஸ்வரம் இங்கே பண் -சொல்லிலும் உள்ளாய் -சப்த சந்தர்ப்பம் -பெண்ணுக்கு ஆஸ்ரயமான சொல் -பிரதி பாத்யனாய்
அதுக்கு மேலே பிறாவண்யம் விஷய புதன் -பக்தி -முதலில் சொல்லாமல் தலை கீழே —
பாவின் இன்னிசை குருகூர் நம்பி பா -கவி -இன்னிசை வரிசையாக அங்கே –
இசையில் உலகம் முதலில் ஈடுபட்டு -அதுக்கு மேலே கவி பின்பு தானே ஆழ்வார் பக்தி –
இவற்றை உனக்கு விதேயமாக வைத்த பின்பு -நியாமனான பின்பு இந்த்ரியங்களைக் கண்டு -என்னை நலியாவோ
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே-கண் நெஞ்சு வாக் இந்த்ரியங்களுக்குள் சந்நிஹிதன்
-வந்து தளர்த்தி நீங்க வந்து சொல்ல வில்லையே -பிரார்த்தனை இல்லை -கூவுகிறார்
விட்ட படியை உபபாதிக்கிறார் -கை விட்ட படியை -மாற்று நீ விட்டால் -என்றாரே
அராஜகம் உள்ள நாட்டில் குறும்பரை போலே அழித்து விடும் -இவை –

பண்ணில் இருக்கிறவனே! கவியில் இருக்கிறவனே! பக்தியில் இருக்கிறவனே! மேலான ஈசனே! எனது கண்ணில் இருக்கிறவனே!
நெஞ்சில் இருக்கிறவனே! சொல்லில் இருக்கிறவனே! நித்தியசூரிகளுக்குப் பெருமானான சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்கின்ற
வைந்தேயன் முதலாயினோரையும் இந்த உலகத்திலே வருத்துகின்ற ஐம்புலன்களாகின்ற இவை என்னைப்பெற்றால் என்ன காரியத்தைச் செய்யாமாட்டா?
அதற்குமேல் நீரும் கைவிட்டால் அவை என்ன செய்யமாட்டா? ஆதலால், என் தளர்த்தி தீரும்படி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.

‘செய்வாரையும்’ என்பதிலுள்ள உம்மை, உயர்வு சிறப்பு. ‘செய்வாரையும் மண்ணுள் செறும் ஐம்புலன்’ என்க.
அன்றிக்கே, ‘செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா?’ என
ஆற்றொழுக்காக்கொண்டு பொருள் கூறலுமாம். ‘வந்து ஒன்று சொல்லாய்’ என்று கூட்டுக.

‘அறிவிற் சிறந்தாரையும் வருத்துகின்ற ஐம்பொறிகள், நீயும் கைவிட்டால் பலமற்றவனான என்னை என்படுத்தா?’ என்கிறார்.

விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும்-
அயர்வறும் அமரர்கள் அதிபதிக்கு அடிமை செய்வாரையும் செறும். என்றது,
‘அயர்வறும் அமரர்கள் அதிபதியாயிருக்கிற சர்வேஸ்வரனுக்குச் சம்சாரத்திலே முமுக்ஷூக்களாய்க் கைங்கரியத்திலே மூழ்கி
இருக்கக் கடவரானவர்களையும் செறும்’ என்றபடி.
‘ஒரு விசுவாமித்திரன் சுக்கிரீவன் முதலாயினோர்களைக் கண்டோம் அன்றோ? என்றது,
ஞானத்தால் மேம்பட்டவனான விசுவாமித்திரன்அகப்பட ஒரு விஷயத்தின் காற்கடையிலே கிடந்தான் அன்றோ?
பெருமாளுக்குப் பரிவரன மஹாராஜர், பெருமாளை மின்னுக்கும் இடிக்கும் இரையாக நான்கு மாதங்கள்
விட்டுவைத்து இந்திரியங்களுக்குப் பரவசப்பட்டவராய் அல்வழி என்று நினைத்திலர் அன்றோ? இவற்றைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே, ‘விண்ணுளாராய்ப் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும்’ என்னுதல்.
ஒக்கப் பிறந்து இளையபெருமாளைப் போலே அடிமை செய்து திரிவார் உளர் அன்றோ?
கோபத்துடன் ஸூ க்ரீவன் காலம் தாழ்த்த வந்தவற்றை இங்கே சொல்ல வில்லை –
பெரிய திருவடியையும் அகப்பட ‘எனக்கு’ என்னப் பண்ணிற்றே அன்றோ? என்றது, இச்சரிதப்பகுதியை.
‘நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம்
வெருவி வந்துநின் சரணெனச் சரணா
நெஞ்சில் கொண்டுநின் அஞ்சிறைப் பறவைக்கு
அடைக்கலம் கொடுத்து அருள் செய்த தறிந்தும்’-என்னும் திருப்பாச்சுரத்தால் உணர்தல் தகும். பெரிய திருமொழி, 5. 8:4.

சுமுகன் என்கிற பாம்பு திருவடிகளிலே சென்று கிட்ட, பெரிய திருவடி ஓடிச்சென்று,
‘எனக்கு உணவாக இருக்கிற இதனைக் கைக்கொண்டு நோக்குவதே!’ என்று வெறுத்து,
‘தேவரீரையும் நாய்ச்சிமாரையும் நெடுங்காலம் தாங்கிக் கொண்டு திரிந்தேன்: நான் ஏன் பெற்றேன்?’ என்றதனைத் தெரிவித்தபடி.
இதுவன்றோ சம்சாரத்தின் தன்மை இருக்கிறபடி?
அவன் தான் அவதரித்துச் சோகிப்பது மோகிப்பதானாற்போலே ஆயிற்று இவர்களும்.
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா-
இவர்தாம் விண்ணுளாரில் ஒருவரே அன்றோ?
இவற்றுக்குத் தந்நிலமாவது, நான் இவை இருந்த இடம் தேடிச் சென்று கழுத்திலே கயிறு இட்டுக் கொடு நிற்கவல்லேன் ஒருவனாவது;
இங்ஙனே இருக்கிற என்னைப் பெற்றால் இவை என் செய்யா?
மற்று நீயும் விட்டால்.
விழுந்து தரிக்கும் பூமியான நீயும் விட்டால் -காகாசுரன் -ரக்ஷித்தாயே –
இரட்சகனான நீ விட்டிலையாகில், மஹாராஜர் வாலியை வென்றாற்போலே நானும் இந்திரியங்களை வெல்லேனோ?’
நாமி பலம் அங்கு நாம பலம் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாருக்கு –
‘அந்த மனத்தினை அடக்குதல் காற்றை அடக்க முடியாதது போலச் செய்ய முடியாத
காரியமாக நான் நினைக்கிறேன்,’ என்றான் அன்றோ? என்றது,
‘தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸூதுஷ்கரம்’-என்பது, ஸ்ரீகீதை, 6:34.
‘காற்றை ஓரிடத்தில் கட்டிவைக்கில்,’ அன்றோ மனத்தினை நியமிக்கலாவது?’ என்றபடி.
அன்றிக்கே, ‘இந்திரியங்களை அடக்குதல் அரிது’ என்று சொல்லுகிறாயாகில் நம் பக்கலிலே மனத்தினை வை’ என்று
அருளிச்செய்த நீயும் விட்டால்’ என்னலுமாம். -மத் பர -என்று அர்ஜுனனுக்கு சொல்லி அருளினாய் –
‘நான் விட்டிலேனே! உம்மைக் கைவிடுகையாவது என்?’ என்றான்.
‘ஆகில்,நீ அண்மையில் இல்லாமையினாலேயோ, உனக்குச்சத்தி இல்லாமையினாலேயோ நான் இழக்கிறது?’ என்கிறாய் மேல்.
பண்ணுளாய் –
என் துன்ப ஒலியைக் கேளாதிருக்கிறாய் அல்லையே.
கவிதன்னுளாய்-
என்னுடைய ஆர்த்தியை உட்கொண்ட சொற்களைக் கேளாதிருக்கிறாய் அல்லையே?
பத்தியினுள்ளாய்
-இப்படிச் சொல்லுவிக்கிற ஆற்றாமையை அறியாதிருக்கிறாய் அல்லையே?
பரம் ஈசனே-
உனக்கு முடியாதது ஒன்று உண்டாக அதனைச் செய்யாமாட்டாது இருக்கிறாய் அல்லையே? உன் சேஷித்துவம் ஏறிப் பாயாத இடம் உண்டோ?

‘இது கிடக்கிடு; நீதான் முன்பே செய்யாதது ஒன்று உண்டோ?’ என்கிறார்.
‘போன படைத்தலை வீரர்த மக்கிரை போதாவிச்
சேனை கிடக்கிடு தேவர் வரிற்சிலை மாமேகம்’-என்பர் கம்பநாட்டாழ்வார் (குகப்படலம்.20)

‘ஆனால், இனிச் செய்ய வேண்டுவது இல்லையே’ என்றான்;
‘நானும் செய்த காரியத்தில் குறை உண்டு என்கிறேன் அல்லேன்; நீ செய்யாத காரியத்தை அன்றோ சொல்லுகிறது’ என்கிறார்:
என் கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய்-
புறங்கரணகட்கும் அகக்கரணத்துக்கும் உன்னை ஒழிய விஷயம்உண்டோ?
நெடியானே என்று கிடப்பது, உன்னை மெய்கொள்ளக் காண விரும்புவது, வஞ்சனே என்பதாயன்றோ அவை இருக்கின்றன?
‘‘கவி தன்னுளாய்’ என்று பாசுரத்தைச் சொல்லிற்று;
‘சொல்லுளாய்’ என்று வாக்கு இந்திரியத்தைச் சொல்லுகிறது.
பரமீசன்-சக்தன் -பரமமான சேஷித்வம் -உன் சேஷித்துவம் ஏறிட்டு -முடியானே காண விரும்பும் என் கண்கள்
சந்நிஹிதன் -கண் உளாய்-செய்த அம்சங்கள்
வந்து ஒன்று சொல்லாயே -செய்யாத அம்சம்
‘ஆனால், நம்மைச் செய்யச் சொல்லுகிறது என்?’ என்ன.
வந்து ஒன்று சொல்லாயே-
எனக்காக நாலடி நடந்து வந்து, ‘நீ அஞ்சாதே கொள்’ என்று, என்னை,
மாசுச:- துக்கப்படாதே என்னவேணும்.
அன்றிக்கே, ‘உன் இருப்பில் எனக்கு ஐயம் உண்டோ?
என் கண் காண வந்து ஒன்று சொல்லுகை அன்றோ எனக்குத் தேட்டம்?’ என்கிறார் என்னுதல்.

——————————————————————————————-

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?
அன்று தேவர் அசுரர் வாங்க அலைகடல் அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ!–7-1-7-

ஆஸ்ரிதற்கு அரும் தொழில் செய்தும் அபேக்ஷிதம் தலைக்கட்டி -கிருபை -அடியேன் இடம் இல்லையாகில்
பிரபலமான இந்திரியங்கள் எப்படி வெல்லுவேன்
அன்று தேவர் அசுரர் வாங்க அலைகடல் அரவம் அளாவி ஓர்-நித்யத்வ ஸ்ரத்தையாலே உன்னை சரணம் புகுந்த அன்று
-வாசுகி பாம்பை -மந்த்ரபர்வம் -தன்னிகர் அற்ற -உபகாரத்வம் காட்டி அருளி
குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ–
பெரும் உபகாரத்வம் காட்டி எனக்கு ஸ்வாமி யானவனே தேவர்கள் உப்புச் சாறு -அடியேன் உன்னையே அமுதமாக கொள்வேன்
-இந்த நிர்பந்தத்தால் தானே இந்த பாடு படுகிறேன்
அந்த அம்ருதத்தில் பர்யவாசியாதே –நித்ய போக்யமாக இருக்கும் -கிருபை இல்லா விடில்
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை-ஒவ் ஒன்றும் ஒன்றினில் நில்லாமல் -ஓர் அனுபவம் பெற்று
திருப்தி அடையாமல் -சேராச் சேர்த்தியாய் தனித்த தனியே ஸ்வ தந்திரமாக -பரத நாட்டியம் கண்ணுக்கு செவிக்கு மனசுக்கு
வேலை உண்டே அதனால் ஆள் குறைவு -சொல்லார் தமிழ் மூன்றும் இயல் இசை நாட்டியம் அனுபவம் முத்திரை –
பொழுது போக்கும் அருளிச் செயலில் நம் பிள்ளை போல்வார் கான ரூபம் சொல் அர்த்தம் -நினைத்து உருகி –
பிரபல -பழகியும் முகம் அறியாத கயவர் –
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?-ஸ்வயம் அசக்தன் என்று -முன்பு மாட்டாதவோபாதி- வெல்ல முடியாதே

அக்காலத்தில் தேவர்களும் அசுரர்களும் பின் வாங்க, அலைகளையுடைய கடலிலே வாசுகி என்னும் பாம்பினைச் சுற்றி ஒப்பற்ற மந்தரம் என்னும்
மலையை வைத்த எந்தையே! கொடியேனாகிய அடியேன் பருகுவதற்குரிய அமுதாய் இருப்பவனே! ஒரு விஷயத்தைச் சொல்லி அந்த
ஒருமைப்பாட்டிலேயே நில்லாத ஒப்பற்ற ஐம்பொறிகளாகிய வலிய கயவர்களை, உன் திருவருள் இல்லையேல் என்றைக்கு யான் வெல்வேன்?
‘அளாவி வைத்த எந்தாய்’ என்க. ஒருத்து-ஒருமைப்பாடு. கயவர்-கீழ்மக்கள்.

‘நீ பாராமுகம் செய்தால், மிகுந்த கயமையையுடைய இந்திரியங்களை என்னாலே வெல்ல உபாயம் உண்டோ?’ என்கிறார்.

ஒன்று சொல்லி-
‘இராமன் இரண்டு பேசமாட்டான்,’ என்பாரைப் பற்றிப் பயம் கெட்டு இருக்கிறேனோ?
‘ராமோ த்வி: நாபிபாஷதே’ என்பது, ஸ்ரீராமா. அயோத். 18:30.
அங்ஙனேயாகில், ‘இது எனக்கு விரதம்’ என்றதும் தப்பாதே அன்றோ?
‘ஏதத் விரதம் மம’ என்பது, ஸ்ரீராமா. யுத். 18:33.

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத-
ஒரு வார்த்தையைச் சொல்லி அதற்கு ஈடாக ஓர் அர்த்தத்திலே நிற்கக் கடவதல்லாத. என்றது,
‘ஒரு விஷயத்தைச் சொல்லி, அது அனுபவிக்குந்தனையும் ஓர் இடத்திலே நில்லாத’ என்றபடி.
ஒருத்து –
ஒருமைப்பாடு.
ஓர் ஐவர்-
இப்படி இருப்பார் பலர்.
வன்கயவரை-
பழகப்பழக அன்பு இல்லாதவர்களாய் இருப்பவர்களை.
என்று யான் வெல்கிற்பன்-
என்று-‘இன்று இல்லையாகில் நாளை வெல்லுகிறான்,-என்றிருக்கிறாயோ?
யான்-தானே வென்று வருகின்றான்,’ என்றிருக்கிறாயோ?
உன் திருவருள் இல்லையேல்-
அவன் திருவருள் உண்டாகில் வெல்லுதலுமாம் அன்றோ?
‘அருள் என்னும் ஒள்வாள் உருவி எறிந்தேன் ஐம்புலன்கள்’பெரிய திருமொழி, 6. 2:4.- என்னக்கடவாதன்றோ?
உன்னை அண்டைகொள்ளாதே பாண்டவர்கள் துரியோதனனை வெல்லுமன்றன்றோ, நான் இந்திரியங்களை வெல்லுவது?
கிருஷ்ணனை அடைந்து அருச்சுனன் பகைவர்களை வென்றான் அன்றோ?
‘க்ருஷ்ணாஸ்ரயா: க்ருஷ்ணபலா: க்ருஷ்ண நாதாஸ்ச பாண்டவா;’–என்பது, பாரதம், ஆரண். பர். 18. 3:24.
‘பாண்டவர்கள் கிருஷ்ணனை அடைந்தவர்கள்;கிருஷ்ணனையே பலமாகக் கொண்டவர்கள்;
கிருஷ்ணனையே நாதனாகவுமுடையவர்கள்,’ என்கிறபடியே.

அன்று தேவர் அசுரர் வாங்க-
‘நம் அருள் பெற்று வென்றார் உளரோ?’ என்ன,
துர்வாச முனிவருடைய சாபத்தின் அன்று உன் திருவருளைப் பெற்றன்றோ தேவர்கள் கடலைக் கடைந்தது?
தேவர்களும் அசுரர்களும் கைவாங்கக் கடைந்தான் என்னுதல்.-கை வாங்க -ஒருவருக்கு ஒருவர் உதவியாக -ஓய்ந்து இவனே கடைய என்றுமாம் –
அன்றிக்கே, வாங்குதல்-வலித்தலாய், அவர்கள் தங்களுக்கே கடையலாம்படி செய்து கொடுத்தான் என்னுதல்.
அலைகடல் அரவம் அளாவி ஓர் குன்றம் வைத்த எந்தாய்-
பெரிய அலையையுடையத்தான கடலிலே, ஒரு சித்துப் பொருளான வாசுகியைக் கயிறாகக்கொண்டு,
சலிப்பிக்க ஒண்ணாதது ஒரு மலையை மத்தாக்கொண்டு,
அதனை வாசுகியை இட்டுச் சுற்றிவைத்த நொய்ப்பம் எல்லார்க்கும் கடையலாம் இருக்கை:
நமக்கும் கடையப் போம்படியாயிருக்கை. தாமும் ஒரு பிரயோஜனம் பெறப் பார்க்கிறராகையாலே
அது தம் பேறாய் இருக்கிறபடியைத் தெரிவிக்கிறார், ‘எந்தாய்’ என்று.
கொடியேன் பருகு இன்னமுதே-
கடைந்தனையே ஆசைப்படப் பெற்றிலேன்.
அன்றிக்கே, நீ செய்தது கொண்டு திருப்தனாகவேண்டி இருக்க, ‘அட்டது ஒழியச் சுட்டது கொண்டு வா,’ என்று
உன்னை நிர்ப்பந்திக்கும்படியான பாவத்தைச் செய்துள்ளேன் என்னுதலுமாம்.

நீ உபேஷித்தால் அதி பலமான இந்த்ரியங்களை என்னால் வெல்ல முடியுமோ என்கிறார் –

————————————————————————————————

இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர்தம் குலமுதலே!–7-1-8-

விஷய இந்திரியங்களை வென்று -அசாதாரண சின்னங்களை அனுபவிக்கும் படி -கிருபை பண்ண வேண்டும் –
இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த-அத்விதீயமான -மோஹிப்பிக்க நீ செய்து
-விஷம் அமுதம் போலே -பித்தளை ஹாடாகம் பித்தலாட்டம் -சர்வ சக்தன் நீ
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்-மாயா சப்த வாஸ்யம் சப்தாதிகள் ஸ்பர்ச ரூப கந்தம் –
அஜ்ஞ்ஞானம் கிளப்பி விடும் -வேர் உடன் கல்லி எரிந்து சம்சார பீதனான என்னை –
எண்ணிக்கையிலும் மாயம் முழுமையான மாயம் -பிரகிருதி என்றுமாம் -பிரகிருதி கார்யம் தானே சப்த ஸ்பர்ச ரூப கந்தம்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு-நெஞ்சால் நினைத்து வாக்காலே ஸ்துதித்து கையாலே தொழும் படி
என்னம்மா! என்கண்ணா!இமையோர்தம் குலமுதலே-அம்மே ஆகாரம் சேர்ந்தே அம்மா -நிருபாதிக ஸ்வாமி -அந்த சம்பந்தம் அடியாக
ஸுலப்யம் பிரகாசிப்பித்து கண்ணா -நித்ய ஸூ ரிகள் சங்கத்துக்கு சத்தாதி ஹேது புதன் -பகவத் நித்ய சங்கல்பத்தால் நித்யர்கள் –

என் அம்மா! என் கண்ணா! நித்தியசூரிகள் கூட்டத்துக்கு முதல்வா! ஒப்பற்ற ஐவராலே இனிய அமுதத்தைப் போன்று தோன்ற, அதனாலே
யாவரையும் மயக்க நீ வைத்த அநாதியான எல்லா மாயத்தையும் அடியோடு வேரை அரிந்து, நான் உன்னடைய சின்னங்களையும் அழகிய
மூர்த்தியையும் சிந்தித்து ஏத்திக் கையால் தொழும்படியாகவே எனக்குத் திருவருள் செய்யவேண்டும்.
‘தோன்றி மயக்க நீ வைத்த மாயம்’ என்க. தோன்றி-தோன்ற. ‘அரிந்து சிந்தித்து ஏத்திக் கைதொழ எனக்கு அருள்’ என்க.
இனி, அரிந்து-அரிய என்னலுமாம். ‘சிந்தித்து ஏத்திக் கைதொழ’ என்ற இடத்தில் முக்கரணங்களில் செயல் கூறப்பட்டது.

‘எனது பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து, நான் மனம் வாக்குக் காயம் இவற்றாலே உன்னை
எப்பொழுதும் அனுபவிக்கும்படி செய்தருற வேணும்’ என்கிறார்.

இன் அமுது எனத்தோன்றி-
முடிவில் பலிக்குமது முகப்பிலேயாகப் பெற்றேனாகில் கைவிடலாங்காண்.
‘விஷயேந்திரிய ஸம்யோகாத் யத்தத் அக்ரே அம்ருதோபமம்
பரிணாமே விஷமிவ தத்ஸூகம் ராஜஸம் ஸ்ம்ருதம்’-என்பது, ஸ்ரீகீதை, 18:38.
‘பொறிகள், புலன்களோடு பொருந்தியுண்ணும் இன்பமானது தொடக்கித்தில் அமிர்தம் போலாம்;
பரிணாம நிலையில் விஷத்தைப் போலாம் என்பது ‘இராஜச சுகம் என்று சொல்லப்படும்,’ என்கிறபடியே,
பரிணாமத்தில் விஷமேயன்றோ?
முடிவில் உண்டாமது முதலிலே தோன்றிற்றாகில் மேல் விழாது ஒழியலாயிற்று.
பழியும் தருமத்திற்குக் கேடுமாய், மேல் நரகமானாலுப் விடப்போகாதிருத்தலின், இன்னமுது’ என்கிறது.
சரீரத்துக்கும் சரீரத்தோடு சம்பந்தப்பட்ட பொருள்களுக்கும் இங்ஙனே ஒரு தன்மை உண்டு;
திருதராஷ்டிரனோடு ஒக்கும். ‘எங்ஙனே?’ என்னில், அகவாயில் தரும ருசி இன்றிக்கே இருக்கச் செய்தே,
வாயாலே அனுகூலம் போலே இருக்குமவற்றைச் சொல்லாநிற்பான் அவனும்.
ஓர் ஐவர்-
தனித்தனியே பிரபலமாய் ஒப்பற்றவையாய் இருக்கிற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் விஷயங்கள் ஐந்தும்.
யாவரையும் மயக்க-
அற்பரான மனிதர்களோடு, அளவுடையரான பிரமன் முதலான தேவர்களோடு வாசி அற அறிவு கெடுக்கும்படிக்கு ஈடாக.
நீ வைத்த-
சர்வசத்தியான நீ வைத்த.
தன்னாலே படைக்கப்பட்டது என்று அறியாமல், ‘அதிலே ஓர் இனிமை உண்டு’ என்று விருப்பத்தைச் செய்கிறான் அன்றோ பிரமனும்?
சரஸ்வதி -பெண்ணாக இருக்கச் செய்தே—தானே தான் ஸ்ருஷ்ட்டித்தான் -விரும்பினான் சதுர்முகன் –
முன்னம் மாயம் எல்லாம்-
அநாதியான சம்சாரத்தை எல்லாம்.
முழு வேர் அரிந்து-
வாசனையோடே போக்கி. என்னை-சம்சார பயத்தாலே பயந்திருக்கின்ற என்னை.
செய்த அமிசத்தே திருப்தனாய் இருக்குமன்றோ அவன்?
‘ஞானலாபம்பண்ணிக்கொடுத்தோம்,’ என்றே அன்றோ அவன் இருக்கிறது?
அது போராதே அன்றோ? சம்சாரத்தை வாசனையோடே போக்க வேண்டி இருக்குமன்றோ இவர்க்கு?

உன் சின்னமும் திருமூர்த்தியும்-
‘தவள ஒண்சங்கு சக்கரம் என்றும், ‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்’ என்றும்,
‘அரவிந்தலோசனன்’ என்றும் சொல்லுகிறபடியே, திவ்விய ஆயுதங்களையும் அவற்றுக்கு ஒப்பாயிருக்கிற திருமேனியையும்.
சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு-
இவற்றை நெஞ்சாலே நினைத்து’ உள்ளடங்காமல் வாய் விட்டுத் துதி செய்து,
பின்னைத் திருவடிகளில் விழுகைக்குத் தகுதியாக எனக்கு அருளவேணும். என்றது,
‘வாயாலே ஒன்று சொல்லாநிற்க, நெஞ்சு வேறே ஒன்று நினைத்தல்;
‘உனக்கு அடிமை’ என்று வேறே ஓர் இடத்தில் தொழில் செய்தல் செய்கை அன்றிக்கே.
மனம் வாக்குக் காயம் என்னும் இம்மூன்றும் உன் பக்கல் ஈடுபடும்படி செய்தருள வேணும்’ என்றபடி.
தொழவே -ஏகாரத்துக்கு-முக்கரணங்கள் ஒற்றுமையாக -என்றபடி –
என் அம்மா-
எனக்குத் தாய்போல் பரிவன் ஆனவனே! அழைக்கும் பெயராகையாலும் சேதநனைச் சொல்லுகையாலும்
‘அம்மே’ என்பது ஆகாரம் ஏற்று விளியாய் ‘அம்மா’ என்று கிடக்கிறது.
என் கண்ணா-
அந்தப் பரிவை அநுஷ்டான பரியந்தமாக்கினவனே!
இமையோர்தம் குலமுதலே-
ஒரு நாட்டுக்காக உன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்குமவனல்லையோ?
பலருடைய ஆசைப்பாடு ஒருவனுக்கு உண்டானால் கொடுக்காலாகாதோ? -அஸ்மாத் துல்யோ பவது -சுக்ரீவன்
என் அம்மா என் கண்ணா இமையோர்தம் குல முதலே-
எனக்குச் சுவாமியாய், ‘சொத்தை நசிக்கக் கொடுக்க ஒண்ணாது’ என்று கிருஷ்ணனாய்வந்து அவதரித்து என்னை நோக்கினவனே!
அவதாரம் எல்லார்க்கும் பொதுவாக இருக்கச்செய்தே, அவர் தமக்காகச் செய்தது என்று இருப்பரே?
மனம் வாக்குக் காயம் என்னும் இம்மூன்றும் ஒருங்கி உன் பக்கலிலே பிரவணமாம்படி
ஒரு நாட்டுக்குச் செய்து கொடுத்த நீ, அதனை என் ஒருவனுக்கும் செய்யத் தட்டு என்?

————————————————————————————-

குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9-

சகல ஜகத் உத்பாதகன் -எனக்கு பவ்யனாய் போக்யனாய் -விஷயங்களில் தள்ளும் இந்திரியங்களை வேர் உடன் சாய்த்து அருள வேணும்
குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை-மூல புருஷன் உடன் அழிக்கும்-வம்சத்தை அதிபதிக்கும் படி
-பாபம் தூண்டும் இந்திரியங்கள் -வலிய கரை என்ற ஒண்ணாத பல குழி
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்-பிரசாத பலம் -தந்து அருளி -அனுகிரக ரூப பலம் -வலம் பிரபலம்
லக்ஷணையால் பிரசாதம் -ஆனுகூல்யம் பிரசாதம் என்றுமாம்
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்-பிரதமத்தில் ஸ்தாவர ஜங்கமங்கள் உடன் படைத்து
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!-கண்ணன் -ஸுலப்யம் எனக்கு பிரகாசிப்பித்து -அனுபாவ்யன் -நிரதிசய தேஜஸ்

பூமி முதலாக மற்றும் எல்லா உலகங்கட்கும் தாவரம் ஜங்கமம் என்று சொல்லப்படுகின்ற பல பொருள்களையும் ஆதியில் படைத்தவனே!
என் கண்ணனே! என் பரஞ்சுடரே! குலத்தை அடியோடு கெடுக்கின்ற தீவினைகளாகிய கொடிய வலிய குழியிலே தள்ளுகின்ற
ஐந்து இந்திரியங்களினுடைய வலிமையை அடியோடு அழிப்பதற்குத் தக்க சிறப்பை எனக்குக் கொடுத்தருள்வாய்.
நிற்பன – சஞ்சரிக்காத பொருள்கள்; மரம் முதலியன. செல்வன -சஞ்சரிக்கின்ற பொருள். ‘ஐவரைக் கெடுக்கும் வரம்’ என்க. வரம் – பலமுமாம்.

‘விஷங்களிலே ஆத்துமாவைத் தள்ளும் இந்திரியங்கள் என்னை நலியாதபடி செய்யவேணும்,’ என்கிறார்.

குலம் முதல் அடும் தீவினைக் கொடுவன் குழியினில் வீழ்க்கும் ஐவரை-
ஒருவன் செய்த பாவம் அவன்றன்னளவிலே போகை அன்றிக்கே, குலமாக முதலற முடிக்கவற்றான பாவங்களை
விளைக்கக் கடவனவாய், கொடியனவாய்,அனுபவித்து முடிய ஒண்ணாதபடியாய், வலியனவாந்,
கால்வாங்க ஒண்ணாதபடியான ஐம்புலன்களாகிற குழிகளிலே தள்ளுகின்றனவான இந்திரியங்களை.
‘செய்யக்கூடியன அல்லாதனவாய், சொல்லுகிற பலத்தின் அளவல்லாத அபாயங்களையுடையனவாய், குலத்தை முதலற
முடிக்கக் கூடியனவான செயல்களிலே, உன் போல்வராயுள்ள அறிஞர்கள் செல்லார்கள் காண்!’ என்றான் அன்றோ மால்யவான், இராவணனுக்கு?
‘நஹி தர்மவிருத்தேஷூ பஹ்வபாயேஷூ கர்மஸூ
மூலகா திஷூ ஸஜ்ஜந்தே புத்திமந்தோ பவத்விதா:’–என்பது, ஸ்ரீராமா. யுத்.

வலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்-
இவற்றினுடைய வலிமையை முதலிலே வாராதபடி முடிக்கக்கூடியதான உன்னுடைய திருவருளைச் செய்தருள வேணும்.
‘நம்மாலே தனியே இங்ஙனே செய்யலாயிருக்குமோ?’ என்ன,
நிலம் முதல் எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப் பொருள் பல முதல் படைத்தாய்-
‘நீ, உலகத்தைப் படைத்தல் முதலாயினவற்றைச் செய்கிற போது உனக்கு ஆர் துணைப்படச் செய்தாய்?’ என்கிறார்.
அன்றிக்கே, ‘படைத்தலுக்குப் பயன் மோக்ஷம் அன்றோ? அது பெற வேண்டாவோ?’ என்னலுமாம்.
பூமி முதலாக மற்றும் இப்படி உண்டான எல்லா உலகங்களிலும் தாவர ஜங்கமங்களாகிற பல பொருள்களையும் முன்பே உண்டாக்கினாய்.
என் கண்ணா என் பரஞ்சுடரே-
அப்படிப் பொதுவான காத்தல் ஒழிய, கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு பவ்யனாய், வடிவழகினை எனக்கு உபகரித்தவனே!
ஒரு நாடாக அனுபவிக்கும் வடிவழகினை என்னை ஒருவனையும் அனுபவித்தவனே!
அழிந்த உலகத்தை உண்டாக்கின உனக்கு, உள்ளதற்கு ஒரு குணத்தைக் கொடுத்தல் அரிதோ?

நில முதல் –
குல முதல் அழிக்கும் இந்த்ரியங்கள் ஒருவன் பண்ணின பாபம் குலம் குலமாக முடிக்கும் கொடியது அனுபவித்து முடிக்க ஒண்ணாது
வலிய குழியாய் –
சப்தாதி விஷயங்கள் -இந்த்ரியங்களை
-மால்யவான் உபதேசம் செய்கிறான் ராவணனுக்கு
-புத்திமான் இறங்க மாட்டார்கள் -செய்யக்கடவது அல்லாத தர்ம வ்ருத்தம்
-ஹனுமான் வார்த்தையாக ஸ்ரீ ராமாயணத்தில் இருக்கிறது காஞ்சி ஸ்வாமிகள்-ஓலைசுவடியில் தப்பாக பிசகி இருக்கலாம்
-இவற்றின் பலத்தை முடிக்க கடவதான உனது பிரசாதம் அருள வேணும் –
எம்பெருமான் -ஜகத் சிருஷ்டி செய்ய யார் துணை கொண்டு செய்து அருளினாய்
பொருள் பல முதல் படைத்தாய் சிருஷ்டி பிரயோஜனம் மோஷம் சோம்பாது படைக்கும் வித்தா

————————————————————————-

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–

சாரமான அமிர்தம் -கொடுத்தாய் -அத்தை விட நிரதிசய சாரம் நீ -சாரா தர்மம் -இருக்க -சும்மாடு போன்ற சரீரம் –
விஷய பாரங்கள் -சும்மாடு பாரம் -இந்திரியங்கள் நலியும் படி -சரீரம் தந்தாயே
என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு-நிரதிசய போகும் -என் -ஓவ்ஜ்வல்யம்
-பிராவண்யம் அக்ரமாக கூப்பிட்டு பரஸ்பர சத்ருசமான திருவடிகளுக்கு உனக்கும் சாத்ருசம்
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய் -த்ரவீபயமாகி -ஆகாரம் -நிரதிசய சாரம் -அன்புருகி நிற்கும் அது –
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்-பிரபல விஷய பாருங்கள் -இந்திரியங்கள் தங்கள் அபிமத
திசைகளில் வலித்து -ஓ இது என்ன அநர்த்தம்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ-தேவாதிகளுக்கு கொடுத்து அமுதில் வரும் பெண்ணமுது கொண்ட உண்டாய் –

‘என் பரஞ்சுடரே! முற்காலத்தில் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதங்கொண்ட மூர்த்தியே!’ என்பதாக உன்னையே அலற்றி உனது இரண்டு
திருவடிகட்கு அன்போடு உருகி நிற்குமது ஒழிய, சரீரமாகிய சும்மாட்டைக் கொடுத்தாய்; ஐவர், வலிய விஷயங்களாகிய பாரங்களைச் சுமத்தித்
திக்குகள் தோறும் இழுத்துத் தாக்குகின்றனர்; அந்தோ!
சுமடு-சும்மாடு, ஐவர் – ஐம்பொறிகள், வலித்து – இழுத்து, ‘ஓ’ என்பது, துக்கத்தின் மிகுதியைக் காட்ட வந்தது.

‘அடிமைக்கு விரோதியாய் விஷய அனுபவத்திற்குப் பாங்கான உடம்பைத் தந்தாய்;
அதுவே காரணமாக ஐந்து இந்திரியங்களும் நலியாநின்றன;
அவற்றைப் போக்கியருளவேண்டும்!’ எனத் துயரத்தோடு கூப்பிடுகிறார்.

என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி –
‘எனக்கு உன் வடிவழகினைக் காட்டி உபகரிக்குமவனே!’ என்று உன்னைக் குறித்து அடைவுகெடக் கூப்பிட்டு.
உன் இணைத் தாமரைகட்கு அன்பு உருகி நிற்குமது நிற்க –
ஒன்றுக்கு ஒன்று ஒப்பாய் இருப்பன இரண்டு செவ்விப்பூப் போலே இருக்கிற உன் திருவடிகளில் இனிமையை நினைத்து
அன்பு வசப்பட்டவனாய் நெகிழ்ந்து நீராய் நிற்கை இவ்வாத்துமாவுக்குச் சொரூபமாகக் கடவது. சொரூபம் இதுவாக இருக்க,
சுமடு தந்தாய் –
உன் பக்கலினின்றும் அகற்றி விஷயங்களிலே கொடுபோய் மூட்டக் கூடியதான சரீரத்தைத் தந்தாய்;
என்னை அனுபவிக்கைக்கு உறுப்பாகச் சரீரத்தைத் தந்தாயானாய் நீ;
அதுதானே எனக்கு இழவுக்கு உடலாயிற்று.
இராஜபுத்திரன் தலையில் முடியை வாங்கிச் சும்மாட்டைக்கொண்டு வழியிலே நின்றால்,
அடி அறியாதார் சுமை எடுத்துக்கொண்டுபோமாறுபோலேயாயிற்று,
பகவானுடைய அனுபவத்துக்கு ஈடாகக் கொடுத்த சரீரம் இந்திரியங்களுக்குப் பணி செய்யும்படியாய்விட்டது.
சுமடு – சும்மாடு. சரீரமாகிற சும்மாட்டைத் தந்தாய்.

வன் பரங்கள் எடுத்து –
‘தகுதி இல்லாத விஷயத்திலே போனேன்’ என்றோ நான் இப்போது அஞ்சுகிறது?
பொறுக்கலாமளவு சுமை எடுத்ததாகில் நான் சுமவேனோ?
வலிய பாரத்தைச் சுமத்தி-கனத்த சுமையைச் சுமத்தி.
ஐவர்-
அவர்கள்தாம் ஒருவர் இருவராகில் நான் ஆற்றேனோ?
திசை திசை வலித்து-
இவர்கள் அனைவரும் ஒரு திக்கிலே போக இழுத்தார்களாகில்தான் மெள்ளப் போகேனோ?
எற்றுகின்றனர்-
உடையவனாகிலன்றோ போக்குவிட்டு நலிவது?
வலியில்லாதான் ஒருவன் தலையிலே மிக்க பாரத்தைச் சுமத்திச் சுற்றும் நின்று தந்தாம் வழியே
இழுத்துக்கொண்டுபோகத் தேடுமாறு போலேகாணும் இவையும்.
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தி-
கடலை நெருக்கி அதில் அமுதத்தை வாங்கி, வேறு பிரயோஜனங்களை விரும்புகிறவர்களுக்குங்கூடக் கொடுக்கக்கூடிய
பெரிய தோள்களையுடையவனே!
என்னுடைய இந்திரியங்களைப் பாற அடித்துப் பொகட்டு, கடல் கடைந்த போதை ஒப்பனையோடே கூடின வடிவினைக் காட்ட வல்லையே!

——————————————————————————————-

கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11-

அர்த்தத்துடன் ப்ரீதி உக்தராக பாடுவார்களுக்கு சர்வ பாபங்களும் போகும்
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்-அவர் அவர் குணங்களுக்கு தக்க மூர்த்தி -அத்விதீயாரான மூவர் –
முதலாம் திரு உருவம் மூன்று என்பர் ஒன்றே முதல் மூவர்க்கும் என்பர் -ப்ரஹ்மாந்தர்யாமியாய் படைத்து –
ஸூஅவதார விஷ்ணு ரூபமாய் காத்து ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் சம்ஹரித்து
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே-மூலம் பிராமண சித்தம் -அ அந்த நாபி கமலம் –
தண்ணீர் -காரண ஜலத்தில் பிரளய -பெரிய நீர் படைத்து -உபகாரகன்
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -சம்பந்தி சம்பந்தித்தாருக்கு சம்பந்தி —
சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே-ஆழ்வார் படும் விசனம் கண்டும் பாட வல்லார்
-இரவு பகல் என்னால் இந்திரியங்கள் வசனம் போகும்
அர்த்தம் உடன் பாட வல்லார் -சர்வ காலத்திலும் -பகவத் அனுபவ விரோதி பந்தகங்கள் போகும்

குணங்களைக் கொண்ட மூர்த்தி மூவராய்ப் படைத்துக் காப்பாற்றி அழிக்கின்ற, அந்தத் திருவுந்தித்தாமரையையுடைய, தண்ணீரிலே
திருக்கண்வளர்கின்ற அப்பனுக்குத் தொண்டுபட்டவர்களுக்குத் தொண்டுபட்டவரான ஸ்ரீ சடகோபராலே சொல்லப்பட்ட ஆயிரத்துன்
இந்தப் பத்தையும் பொருளைக் கொண்டு பாட வல்லவர்களுடைய வினைகள் எப்பொழுதும் நீங்காநிற்கும்.
‘குணங்கள் கொண்ட மூர்த்தி மூவர்’ என்க. கெடுத்தல்-அழித்தல். புண்டரிகம்-தாமரை. ‘கங்குலும் பகலும் வினைபோம்’ என்க.

‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்கட்கு இந்திரியங்களால் ஆத்துமாவுக்கு வரும் நலிவு போம்,’ என்கிறார்.

குணங்கள் கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்-
சத்துவம் முதலான குணங்களுக்குத் தகுதியான வடிவையுடைய மூவராய்.
குணங்கட்குத் தகுதியான படைத்தல் முதலிய தொழில்கள் அந்த அந்த உருவந்தோறும் நிறைந்திருக்குமன்றோ?
பிரமன் சிவன் என்னும் இரண்டு உருவங்களிலும் சீவனுக்குள் அந்தர்யாமியாய் நின்று, விஷ்ணு உருவத்தில் தானே நின்றபடி.
ஜெகதாதிஜா -விஷ்ணு -இணைவனாம் –
படைத்து அளித்துக்கெடுக்கும் –
ரஜோகுணத்தையுடையனாய்க்கொண்டு படைத்து, தமோ குணத்தையுடையனாய்க்கொண்டு அழித்து,
சத்துவ குணத்தையுடையனாய்க்கொண்டு இவற்றை அடையக் காத்துக் கொடு நிற்கிறபடி.
அப்புண்டரிகக் கொப்புழ்ப் புனல் பள்ளி அப்பனுக்கு-
இவை எல்லாவற்றையும் உண்டாக்குகைக்காக ஏகார்ணவத்திலே திருக்கண் வளர்ந்தருளினபடியைச் சொல்லுகிறது.
உலகம் தோன்றுவதற்குக் காரணாமாயிருத்தலின், பிரசித்தமான திருநாபிக் கமலத்தையுடையனாய்க்கொண்டு,
படைத்தலின் நோக்குள்ளவனாய் ஏகார்ணவத்திலே திருக்கண்வளர்ந்தருளின உபகாரகனானவனுக்கே.
‘அப்புண்டரிகக் கொப்பூழ்’ என்கையாலே, பிரமன் சிவன் முதலாயினோர் காரியம் என்னுமிடமும்,
அவன் காரணன் என்னமிடமும் சொல்லிற்று. -கொப்பூழ் அப்பன் -சாமா நாதி கரண்யம்-கார்ய காரண நிபந்தம் –
ஒருவனுடைய பிறப்பை அன்றோ சொல்ல வேண்டவது? ‘பிரமனுடைய ஜ்யேஷ்ட புத்திரனுக்கு, சிறந்தவனுக்கு’ என்கிறபடியே,
மற்றையோனான சிவனுடைய பிறப்பு, தன்னடையே வரும் அன்றோ? –
அஜஸ்ய ஜென்மாதி –அற்ற நாபி– ஏகம் கமலம் ஆவிர்பூதம் யஸ்மின் –அஜ நிஷ்டா –
‘நான்முகனை நாராயணன் படைத்தான்’ என்றால், மற்றையவன் பிறப்பும் உடனே சொல்லப்படும் அன்றோ?

‘பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல வுந்தியுடை விண்ணவனை’–என்பது, சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

‘இருபது மந்தரத் தோளும் இலங்கைக் கிறைவனசென்னி
ஒருபது மந்தரத் தேஅறுத் தோன்அப்பன் உந்திமுன்னான்
தருபது மம்தர வந்தன நான்முகன் தான்முதலா
வருபது மம்தரம் ஒத்தபல் சீவனும் வையமுமே.’–என்பது திருவேங்கடத்தந்தாதி.

‘ஒருநாலு முகத்தவனோடு உலகீன்றாய் என்பாஅதுன்
திருநாபி மலர்ந்ததல்லால் திருவுளத்தில் உணராயால்.’–என்பது, திருவரங்கக் கலம்பகம்.

‘நீனிற வுருவின் நெடியோன் கொப்பூழ்நான்முக ஒருவன் பயந்த பல்லிதழ்த்தாமரைப் பொகுட்டின்’
என்பது, பெரும்பாணாற்றுப்படை, அடி 402-404.

‘ப்ரஹ்மண: புத்ராயஜயேஷ்டாய ஸ்ரேஷ்டாய’ என்பது சுருதி.

‘’நான்முகனை நாரா யணன்படைத்தான் நான்முகனும்தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்’–என்பது நான்முகன் திருவந்தாதி.

இப்படி வேத வைதிகங்கள் சொல்லாநின்றான அன்றோ?

தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் –
விஷயங்களையும் இந்திரியங்களையும் நினைத்த நெஞ்சாரல் தீர, சேஷத்துவத்தினுடைய எல்லை நிலத்திலே போய் நிற்கிறார்;
தாபத்தாலே வருந்தினவன் மடுவிலே தாழ இழியுமாறு போலே.
கண்டு பாட வல்லார் –
இவருடைய நிலையை நினைத்தால் பாடப் போகாதே அன்றோ?
கண்டு – நமக்குத் தஞ்சம் என்று நினைத்து.
வினை போம் கங்குலுப் பகலே – இரவு பகலில் வினை போம்.
‘இராப்பகல் மோதுவித்திட்டு’ என்ற துயரம் போம்.-திவா ராத்திரி இந்திரிய வச ஹேதுவான பாபங்கள் போகும் –
நம்மை அறியாமலே இரவிலே பாபங்கள் போகுமே -கனவில் படும் சுகம் துக்கம் புண்ய பாப பயன் என்பர் –

படைத்ததே காரணம் -உறவின் நெருக்கத்தால் -தனது குழவி-கிணற்றில் -தாய் குற்றம் சொல்வது போலே –
மூன்று -தூமேன -நெருப்பு புகை -உள்ளே உள்ளது தெரியாத
காம க்ரோதம் போக்கினாலும் -காமம் தீ போலே கொண்டா -என்றே சொல்லுமே -கோபம் வந்தால்
குருவையும் கொல்ல பண்ணுமே -ஒரே தாய் வயிற்றில் பிறந்த விரோதிகள் இவை இரண்டும் –
கண்ணாடி மேல் அழுக்கு -கர்ப்பம் பனிக்குடம்- அல்பம் தாய் உந்தி தானே வெளி வரும்- பெருமாள் திருவடி கொண்டே வெளியே வர முடியும் –
இந்திரியங்கள்விட — மனஸ் பிரபலம் -அதுக்கு மேலே புத்தி தானே முடிவு எடுக்கும் -மனஸ் சிந்திக்கும் சபல புத்தி உண்டே
-உறுதியான முடிவு புத்தி -வலப்பக்கம் மூலை இடப்பக்கம் மூலை—நியாய சாஸ்திரம்- சாகுந்தலம் -கலை பொறி இயல் –
அதுக்கே -மேலே ஆத்மா -அது தான் புத்தியை வசப்படுத்த –
ஸாமக்ரியை -இந்திரியங்களுக்கு -வெளிச்சம் கண்ணுக்கு -வேறே எண்ணம் வராமல் இருக்க -வேண்டும் –
மனஸ் ஸாமக்ரியை வாஸ்து வை லக்ஷண்யம் -புத்திக்கு -ஆத்மாவுக்கு அனுரூபமான பகவத் அனுபவம் உத்தேச்யம் இதர த்யாஜ்யம்
-சத்வ குணம் -ரஜஸ் தமஸ் விலக்கி-
உன்னை பார்க்க ஒத்துழைக்காத இவற்றை எதற்கு கொடுத்தாய் என்னப் பண்ணுமே –
சாத்விக மனஸ் இந்திரியங்கள் ஆக்க நீ அருகில் இருந்தாலே போதுமே -ஆழ்வார் இத்தையே கேட்க்கிறார்
கரண-இந்திரியங்கள் மனஸ் – களேபரம் -சரீரம் கொடுத்ததும் அவனே

————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அவதத்-சப்தசமஸ்ய சாதகஸ்ய -முதலில் கூறினார்
ஸ்வ பீஈ -தன்னுடைய பயத்தை
விஷ்யேந்திரேப்பிய-தஸ்மை
தஸ்மிந் அபி பிரபாதனே வி பலே விஷண்ணா
ஈசேன பாதிதம் இவ
கர்ப்பே பாதயித்ருத்வம்-இந்த்ரியர்த்த –

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

நிஸ் சங்க்யா ஆச்சர்ய யோகாத்-எண்ணிலா பெரு மாயனே
அதி மதுர தயா
ஜகத் காரணத்த்வாத்
நியூக்ரோகாத்வ
த்ரி தசர்கள் பதித்தாயா
வாக் மனஸ் சந்நிதாயாத்
பூயூஷம் ஸ்பர்ச நாத் –
அகில பதிதயா
லோக சம்ரக்ஷகத்த்வாத்
ஸாத்யா சங்க்யாம் ஹீத
த்ரி தனு அசுர ஹா
சிந்தாஹத்யாதி –

———————————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 61-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில்
எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன் புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக் கங்குல்————–61-

——————————————————————————

அவதாரிகை –

இதில்
இந்த்ரிய பயா க்ரோசத்தை அருளிச் செய்த ஸூக்தியை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
உலகமுண்ட பெரு வாயனிலே
திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே ஆர்த்தி பரவசராய்
பூர்ண பிரபத்தி பண்ணினவர்
தொடங்கின கார்யம் தலைக் கட்டினால் அல்லது கார்யம் செய்யோம் -என்று இருக்கும்
நிரந்குச ச்வதந்த்ரனான ஈஸ்வரன் பழையபடியே தம்மை
சம்சாரத்திலே வைக்கக் கண்டு
சம்சாரம் ஆகிற சிறைக் கூடத்திலே
புண்ய பாபங்கள் ஆகிற இரு விலங்கை இட்டு
இந்த்ரியங்கள் ஆகிற படர் கையிலே
கண் பாராமல் நலியுங்கோள் என்று காட்டிக் கொடுத்து
நம் எளிவு கண்டு
சிரித்துக் கொண்டு
திரு நாட்டிலே தானும் நித்ய சூரிகளுமாக இருக்கிறான் என்று அனுசந்தித்து
தம்முடைய ஆர்த்தி அதிசயத்தையும்
ரஷகத்வ உபாய யோகியானவன் குணங்களையும்
அவன் திரு முகத்தைப் பார்த்து சொல்லா நின்று கொண்டு
கேட்டார்க்கு தரிப்பு அரிதாம் படி கூப்பிடுகிற
உண்ணிலாவிய -யின் அர்த்தத்தை
உண்ணிலா ஐவர் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————————————–

வியாக்யானம்–

உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில் –
இவ்வுலகில் -உண்ணிலா வைவருடன் யிருத்தி-
இருள் தரும் மா ஞாலமான சம்சாரத்திலே
ஆந்த்ர சத்ருக்களாய் வர்த்திக்கிற
ஐந்து இந்த்ரியங்களோடே இருக்கப் பண்ணி –
ஐம்புலன் இவை மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் -என்றத்தைப்
பின் சென்ற படி –

எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான் –
எண்ணிலா மாயன்-இவ்வுலகில் -உண்ணிலா வைவருடன் யிருத்தி-எனை நலிய -எண்ணுகின்றான் –
அசங்க்யாதமான ஐஸ்வர்ய சக்தி உக்தனான சர்வேஸ்வரன்
தமோபிபூதமானஇவ் விபூதியிலே
அஹம் அர்த்தமான ஆத்மாவை
அறிவு அழியப் பண்ணுமதான ஐந்து இந்த்ரியங்களும்
ஆத்மானுபந்தி என்னலாம் படி பொருந்தி இருக்கும்படி ஆக்கி
துர்பலனான என்னை
அவற்றைக் கொண்டு விஷயங்களிலே தள்ளி
பாதிக்கைக்கு கார்ய விசாரம் பண்ணா நின்றான்-

அதாவது
உண்ணிலாவிய வைவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் எண்ணிலா பெரு மாயனே -என்றும்
ஓர் ஐந்து இவை பெய்தி இராப்பகல் மோதிவித்திட்டு -என்றும்
ஐவரால் வினையேனை மோதுவித்து -என்றும்
ஓர் ஐவரைக் காட்டி -என்றும்
ஐவரை நேர் மருந்குடைத் தாவடைத்து -என்றும்
ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த -என்றும்
சுமடு தந்தாய் -என்றும்
அவன் இப்படி ஐவரைக் கொண்டு செய்வித்தான் என்று
அவன் மேலே பழி இட்ட படி -என்கை

எண்ணிலா மாயன் என்னை நலிய எண்ணுகின்றான் என்று நினைந்து –
சர்வஞ்ஞனாய்
சர்வசக்தியாய்
இருக்கிற ஈஸ்வரன்
அஜ்ஞனாய்
அசக்தனாய்
சரணம் புகுந்த என்னை
நலிந்தது போராமல்
இன்னும் நலிய எண்ணுகின்றான் என்று எண்ணி
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் எண்ணிலா பெரு மாயனே -என்றத்தைக் காட்டுகிறது
நலிய எண்ணுகின்றான் என்று நினைந்து ஓலமிட்ட –
பரமபத யதாவானவன்
நிர்த்த்தயரைப் போலே
தமிப்பிக்க
யத்னம் பண்ணா நின்றான் என்று எண்ணி ஓலமிட்ட –
எண்ணிலா பெரு மாயனே -என்றும்
கார் முகில் வண்ணனே -என்றும்
சோதி நீண் முடியாய் -என்றும்
வினையேன் வினை தீர் மருந்தே -என்றும்
விண்ணுளார் பெருமானேயோ -என்றும்
பத்தியின் உள்ளாய் பரமீசனே -என்றும்
கொடியேன் பருகு இன்னமுதே -என்றும்
என் அம்மா என் கண்ணா -என்றும்
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்றும்
இப்படி
இந்த்ரிய பயத்தாலே
ரஷகத்வாதி குணங்களுக்கு வாசகமான அவன் திரு நாமங்களைச் சொல்லி –
சாகாம்ருகா ராவண சாயகர்த்தா -என்றும்
ஹா ராம சத்யவ்ரத தீர்க்க பாஹோ பூர்ண சந்திர ப்ரதிமா ந்வக்த்ர-என்றும்
சாகா மிருகங்களைப்போலே இவரும் கண்வாளிக்குடைந்தடைந்தும்-கண் என்னும் வாளி -அம்புக்கு உடைந்து அடைந்து
ம்ருகீ சிம்ஹை ரிவாவ்ருதா -என்னும்படி
ம்ருகசாபாஷி யானவள் ராஷசிகள் மத்யம் அசஹ்யமாய்
அவர் குளிர்ந்த முகத்திலே விழிக்க ஆசைப் பட்டு கூப்பிட்டால் போலேயும் கூப்பிட்டபடி-
இன் புகழ் சேர் –
நாடடைய இந்த்ரிய கிங்கராய்
தத் லாபத்தாலே கூப்பிட
இவர் இந்த்ரிய பய குரோசம் பண்ணுகை யாயிற்று
இவருக்கு இன் புகழ் சேர்ந்தது
காமாத்மதகல்வபி நப்ரசச்தா -என்னக் கடவது இறே –

பாதம் அகலகில்லாத் தம்மை
அகற்றுவற்றின் நடுவே இருத்தக் கண்டு –
நலிவான் –
சுமடு தந்தாய் –
ஒ –
என்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே-
பழி இட்டு –
என்று இறே அழகிய பெருமாள் நாயனார் அருளிச் செய்தது

இன் புகழ் சேர் மாறன் என –
கேட்க்கைக்கு இனியதாய்
ஸ்லாக்கியமான
யஸஸை யுடைய
ஆழ்வார் -என்று அனுசந்திக்க –

குன்றி விடுமே பவக் கங்குல் –
இவ் உக்தி மாத்ரத்தாலே
சம்சாரம் ஆகிற காளராத்ரி நசித்து விடும்
இது நிச்சயம் –

குன்றுதல் -குறைதல்
ஆழ்வாரைப் போலே
அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்று கூப்பிடுகை அன்றிக்கே
அவர் திரு நாமத்தைச் சொல்லவே
விடியா வென்னரகான சம்சாரத்துக்கு விடிவு பிறக்கும் —

———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: