பகவத் விஷயம் காலஷேபம் -143- திருவாய்மொழி – -7-1-1….7-1-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம் பத்தால். அந்தக் கைங்கரியத்தில் களையறுத்தார்;
மூன்றாம் பத்தால், களையறுக்கப்பட்ட அந்தக் கைங்கரியமானது பாகவத சேஷத்துவ பரியந்தமான பகவத்கைங்கரியம் என்றார்;
நான்காம் பத்தால், இப்படிப்பட்ட கைங்கரியத்திற்கு விரோதிகள் ஜஸ்வரிய கைவல்யங்கள் என்றார்;
ஐந்தாம் பத்தால், அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்;
ஆறாம் பத்தால், விரோதிகளை அழிக்கும் இயல்பினனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார்;
இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாகச் சரணம் புக்கவிடத்திலும்,
தக்தப்பட நியாயம்போலே சம்சாரம் தொடருகிறபடியைக் கண்டு நோவுபடுகிறார் இந்த ஏழாம் பத்தால்.

தக்தபடம் – எரிந்துபோன வஸ்திரம். ‘மடிப் புடைவை வெந்தால் உண்டையும்பாவும் ஒத்துக்கிடந்கும்:
காற்று அடித்தவாறே பறந்துபோம்’என்பது, ஸ்ரீ வசனபூஷணம்,2-ஆம் பிரகரணம், சூ. 191.

‘அமர்ந்து புகுந்தேன்’ என்று தம்மால் ஆன அளவும் புகுர நின்றார். பின்பு அவனைப் புகுர நிற்கக் கண்டிலர்.
‘இனிக் கைவிடப் பார்த்தான் ஆகாதே’ என்று விழுந்துகிடந்து கூப்பிடுகிறார்.
விளம்பத்திற்குக் காரணம் இல்லாத சாதனத்தைப் பற்றி நின்றவன், அது பலத்தைக் கொடுக்குந்தனையும் கிடந்து
கூப்பிடுவானத்தனை அன்றோ?
இவர்தாம் மேலே செய்ததாயிற்றது, திருவேங்கடமுடையான் திருவடிகளிலே பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய
ஆகிஞ்சந்யத்தை விண்ணப்பஞ்செய்து கொண்டு சரணம் புக்காராயன்றோ இருக்கிறது?
அது, ‘மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே.’-என்பது, ஸ்ரீ கீதை, 7 : 14.
‘என்னையே எவர்கள் சரணம் அடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையினைத்தாண்டுகிறார்கள்,’ என்கிறபடியே,
கடுகப் பலித்துக்கொடு நிற்கக் கண்டிலர்.
இனி, ‘நம்மைக் கைவிடப் பார்த்தான் ஆகாதே’ என்று இன்னாதாகிறார்.

பக்தி-அங்க பிரபத்தி -கீதையில் -பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க -பிரபத்தி -ஸ்வ தந்த்ர பிரபத்தி -ஆர்த்தன் திருப்தன் இரண்டு வகை –
ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –பாப சப்தம் கீதைப்படி வேற ரகஸ்ய த்ரயப்படி வேறே -இங்கு மோக்ஷ விரோதி பாபங்கள் விவஷிதம்

‘சர்வேஸ்வரன் திருவருள் செய்வதற்கு வேண்டுவன, சம்சாரத்தினுடைய தண்ணிமை நெஞ்சிலே படுதல்
சர்வேஸ்வரனுடைய வைலக்ஷணயத்தை நினைத்தல், சரணாகதி செய்தல் என்னும் இவற்றிற்கு மேற்பட இல்லை அன்றோ?’ என்று
சம்சாரத்தின் சுபாவத்தை நினைத்துப் போக்கடி அற்று அவ்வடியைப் பற்றிச் சரணம் புக்கார்;
புக்க இடத்திலும் தாம் விரும்பிய காரியத்தைச் செய்யாமையாலே, சரணம் புக்கார் மேலே வேல்காரரை ஏவித் துன்புறுத்தும்
அருளற்றவரைப்போலேயாக அவனை நினைத்து அஞ்சினவராய்,
இவ்வளவிலும் பலிக்கக் காணாமையாலே, -இந்திரியங்கள்-வேல் என்றபடி –
‘வைப்பனாக வைத்த பிரஹ்மாஸ்திரம் வாய்மடிந்தது காண்! என்று கூப்பிடுகிறார்.

‘இனித்தான், ஷிபாமி -‘தள்ளுகிறேன்’ என்பதும். -தாதாமி ‘கொடுக்கிறேன்’ என்பதும். இரண்டேயன்றோ?-
அவற்றுள், ‘தள்ளுகிறேன்’ என்னுமளவிலேயன்றோ நாம்’ என்றிருந்தார்.
‘அது என்? இவர்க்குக் ‘கொடுக்கிறேன்’ என்ற புத்தி யோகத்தைச் செய்து கொடுத்தானே?’ என்னில்,
‘அதுவும் நோவுபடுகைக்கு உடலாகத் தந்தான்’ என்றிருக்கிறார். தம்முடைய சத்திகொண்டு பெற இருந்தார் அல்லர்;
அவனுக்குச் சத்தி இல்லாமல் இழக்கிறார் அல்லர்; பேற்றுக்கு வேண்டுவது முன்பே செய்து நின்றார்;
‘ஆன பின்பு,இவர்க்கு இப்போது இழக்க வேண்டுவது இல்லை அன்றோ? ஆயின், பலியாது ஒழிவான என்?’ என்னில்,
‘இவர் குறையால் வைத்தாலன்றோ பலித்தது இல்லையாவது?
நமக்காக இருக்கிற பின்பு இவர் இங்கே இருந்தால் நல்லது,’ என்றிருந்தான்.
அவனும் இவரைக் கொண்டு ஒரு காரியம் கொள்ள அன்றோ எண்ணி இருக்கிறது?
அதுவும் ஒழிய, இவருடைய திருமேனி இறுதியானதாகையாலே, இவர் சரணாகதி செய்த இடத்திலும்,
இவர் திருமேனியில் தனக்குப் பிராவண்யத்தாலே காரியம் செய்திலன்.
இவர் திருமேனியில் அவனுக்கு உண்டான பிராவண்யத்தைக் கண்டே அன்றோ ‘மங்க ஒட்டு’10. 7 : 10. என்று அவனைக் காற்கட்டிற்றும்?
மெய்யான பிரேமம் உண்டானால் இங்ஙன் அல்லது இராதே. இது பிரகிருதி ஆயிற்றே அவனுக்கு. -சாடு– ஸ்வபாவம் -மூல பிரகிருதி
அவன் தம்மைக்கொண்டு கொள்ள இருக்கிற காரியத்தை இதில் பொருந்துவாரைக் கொண்டு
கொண்டால் ஆகாதோ என்றாயிற்று இவர் நினைத்திருக்கிறது.
இதில் பொருந்துவாரை’ என்றது, திருமழிசைப்பிரான்போல்வாரை.-
‘செய்து கொடுத்த ஞானலாபம் இவர் தரித்திருப்பதற்குக் காரணமாம்,’ என்றிருந்தான் அவன்;
அதுதானே விரைவதற்குக் காரணமாயிற்று இவர்க்கு. ‘கிரமத்திலே காரியம் செய்கிறோம்’ என்றிருந்தான் அவன்;
அதுதன்னையே கொண்டு ‘நம்மைக் கைவிட நினைத்தான்’ என்றிருக்கிறார் இவர்.

நித்தியவிபூதியையும் திவ்விய மங்கள விக்கிரஹத்தையும் கண்ணாற்கண்டு,
‘அங்கே போய் அப்படியே அநுபவிக்கவேணும்’ என்னும் பதற்றத்தையுடைய இவர்க்கு.
சம்சாரம் ததீயமாயிருப்பதும் ஓர் ஆகாரம் உண்டு’ என்னும் ஞானமாத்திரத்தாலே தரித்திருக்கப் போகாதே.
‘யானும் நீ தானாய்த் தெளிதோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்’திருவாய்மொழி. 8. 1 : 9.– என்றே அன்றோ இவர் இருப்பது?

1-இப்படி இருக்கிற தம்மையும், 2-‘அவனுக்குப் பாதுகாக்கப்படும் பொருள் குறைவற்று இருக்கிறபடியையும்,
3- காக்கும் தன்மை சொரூபமாயிருக்கிறபடியையும், 4-காத்தற்குத்தொடர்பு இருக்கிறபடியையும்,
5-தமக்கு இவற்றில் தொடர்பு அற்று இருக்கிறபடியையும்,

1-ஆர்த்தி உடன் பிரபத்தி பண்ணிய தம்மையும்
2-உலகம் மூன்று உடையாய்
3-கடல் ஞாலம் காக்கின்ற
4-அண்ணலே
5-வலமுதல் கெடுக்கும் வரமே தந்து –

-சத்துவம் முதலான குணங்கள் அவற்றிற்கு அடியான
கர்ம தேஹ இந்திரியங்கள் இவற்றிற்கு அடியான மூலப்பகுதி மஹான் அஹங்காரம் அதன் காரியமான விஷயங்கள்
அவித்யை கருமம் வாசனை ருசி ஆகிய இவை எல்லாம் அவனுக்கு வசப்பட்டவைகளாய் இருக்கிறபடியையும் நினைத்து,
‘விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற சம்சாரத்தே வைத்தபோதே இவற்றுக்கு நம்மை இரையாக்கிப் போகட நினைத்தானித்தனை:
‘தள்ளுகிறேன்’ என்கிற கூட்டத்திலே புக்கோம்.
‘இனித்தான், இவன் பரிகரங்கள் கண்டதும் நம்மை அகற்றுகைக்கு உறுப்பாக.
அவற்றுள், நித்திய விபூதியில் ஓலக்கம் இருக்கிறது, நாம் படுகிற நலிவு கண்டு அங்குள்ளாருடனே கூடச் சிரித்திருக்கைக்கு;
லீலாவிபூதி கண்டது நமக்குச் சிறைக்கூடமாக.
மயர்வற மதிநலம் அருளிற்றும், அல்லாதாரைப் போன்று சுகமே இராமல் துடித்து நோவு படுகைக்காக’ என்று அறுதியிட்டு,
அவன் திருவடிகளிலே தலையை மடுத்து, கேட்டார் அடங்கலும் நீராம்படி கிடந்து கூப்பிடுகிறார்.

‘மின்னிடை மடவார்’ என்ற திருவாய்மொழியில், ஒரு பிராட்டியின் நிலையை அடைந்தாராய்ப் பிரணய ரோஷம்
தலை எடுத்துச் சொன்னவை எல்லாம் பிறர் வாயாலே சொன்னாற்போலே இருக்கையாலே,
ஆழ்வாரான தன்மையிலே நின்று இன்னாதாம்படியான நிலை விளைந்தது இவர்க்கு.
இவர். எல்லா அளவிலும் ஸ்ரீஜனகராஜன் திருமகளாரோடு ஒப்பார் ஒருவராயிற்று. என்றது,
அத்தலையில் குறை இடுவார் ஒருவர் அன்றிக்கே ‘இவற்றுக்கெல்லாம் அடி நம்முடைய பாபம்’ என்றிருப்பார் ஒருவர் என்றபடி.

இங்ஙனே இருக்கக்கடவ இவர், அவன் தலையிலே குறையை ஏறிட்டுக் கூப்பிடுகிறார் அன்றோ அந்த நிலை விளைகையாலே?
‘இவர் தாம் தம்மாலே வந்ததனை அவன் தலையிலே ஏறிடுவான் என்?’ என்னில்,
சம்பந்தத்தை உணர்ந்தால், இத்தலையாலே வந்ததனையும் அவன் பக்கலிலே ஏறிடலாய் இருக்கும் அன்றோ?
குழந்தை கிணற்றிலே விழுந்தால், ‘தாயானவள் தள்ளினாள்’ என்னக கடவாதாயிருக்கும். என்றது.
‘தாயானவள் கண்களிலே வெண்ணெய் இட்டுப் பார்த்திருந்தாளாகில் இக்குழந்தை விழுமோ?
இவள் நோக்காமை அன்றோ கேடுற்றது?’ என்று கொண்டு அவள் தலையில் குறை சொல்லக் கடவதாய் இருக்கும் என்றபடி.
உதங்கன் கிருஷ்ணன் பக்கலிலே வந்து, ‘உனக்கு இரு திறத்தாரோடும் சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே,
பாண்டவர்களை அழிக்காமல் துரியோதனாதியர்களை அழித்தாய்; இப்படிச் சார்வு செய்யப்போமோ?’ என்றாற்போலே
வார்த்தைகள் சிலவற்றை அவன் சொல்ல, கிருஷ்ணனும் அவர்கள் குறைகளை எல்லாம் சொல்லி,
‘அவர்கட்குத் தருமத்தில் ருசி இல்லைகாண் என்ன,
‘நீ பின்னை அவர்களுக்குத் தருமத்தில் ருசி உண்டாக்கிக் கொடாது ஒழிவான் என்?’ என்றான் அன்றோ?
பலநீ காட்டிப் படுப்பாயோ?’,
‘கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?’ திருவாய். 6. 9. 9. ஷ 6 9 : 8.-என்று சொல்லுகிறபடியே
அவற்றின் அண்மையும் சகிக்க முடியாதபடியாய், இனி, தாம் அறியாதிருக்கச்செய்தேயும்
பகவத் விஷயத்தில் பிரவணமான ‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறப்பட்ட உறுப்புகளையுடைய
இவர்க்கு இந்திரியங்கட்கு வசப்படுதல் உண்டு என்னுமிடம் மேலே கூறியதோடு முரணாகாதோ?’ என்னில்,
பக்கத்து வீடு நெருப்புப் பற்றி வேவாநின்றால், தமது தமது வீடுகளைப் பாதுகாத்துக்கொள்ளாமல் இருப்பவர் இலர் அன்றோ?
புற்றின் அருகே பழுதை கிடந்தாலும் ‘பாம்பு’ என்று நினைத்து மயங்கக் கூடியதாய் இருக்கும் அன்றே?
அங்குத்தைக்கும் இங்குத்தைக்கும் பொதுவான உடம்போடே இருக்கிறபடியைக் கண்டார்:
உலகத்தார் முழுதும் இந்திரியங்களுக்கு வசப்பட்டவராய்க் கிடந்து நோவுபடுகிறபடியையும் கண்டார்:
‘இது நம்மளவும் வரின் செய்வது என்?’ என்று அஞ்சிக் கூப்பிடுகிறார்.

ஸாகா ம்ருகா – பூசலிலே புக்கு அங்கு உண்டான பழக்கம் இன்றிக்கே இருக்கை.
பணையோடு பணை தத்தித் திரியுமவை அன்றோ? ராவண ஸாயகார்த்தா; –
‘தேவத்யமாநா: பதிதாக்ரய வீரா:
நாநத்யமா நாபய ஸல்ய வித்தா:
ஸாகாம்ருகா ராவண ஸாய கார்த்தா:
ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 59 : 45.
‘வாநரா:’ என்னாமல், ‘ஸாகா ம்ருகா:’ என்று விசேடித்ததற்கு பாவம் அருளிச்செய்கிறார்,

திசைப் பாலகர்களையுங்கூட அச்சமுறுத்தி வளர்ந்தவன் கையில் அம்புகள்.
ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம் – தங்களுடைய ஆபத்தை அறிந்து போக்கக் கூடியவனையும் பார்த்துப் பற்றினார்கள்.
‘அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட வானரங்களுடைய பெரிய கூட்டமானது,
பாதுகாக்கின்றவனும் சக்கரவர்த்தி திருமகனுமான பெருமாளைச் சரணமாக அடைந்தது,’ என்கிறபடியே,
‘ராக்ஷஸை: வத்யமாநாநாம் வாநராணாம் மஹாசமூ:
ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதா த்மஜம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.

முதலிகள் அடங்கலும் அரக்கர்கள் வாயிலே கிடந்து பெருமாளைச் சரணம் புக்காற்போலே,
இவரும் மனம் ஆளும் ஓர் ஐவர் வன்குறும்பரான இந்திரியங்களுக்குப் பயப்பட்டுக் கூப்பிடுகிறார்.
‘பிரியமான ஜனங்களைப் பாராதவளும், அரக்கியர்களின் கூட்டத்தைப் பார்ப்பவளும், தன் கூட்டத்தால் விடப்பட்டதும்
நாய்க்கூட்டத்தால் சூழப்பட்டதுமான பெண் மான் போன்றிருப்பவளும்’ என்கிறபடியே,
ப்ரியம்ஜநம் அபஸ்யந்தீம் பஸ்யந்தீம் யராக்ஷஸீகணம்
ஸ்வகணேந ம்குகீம் ஹீநாம் ஸ்வகணை; ஆவ்ருதாமிவ’-என்பது, ஸ்ரீராமா. சுந். 15 : 24.

‘மயிலி யற்குயின் மழலையாள் மானினம் பேடை
அயிலெ யிற்றுவெம் புலிக்குழாத் தகப்பட்ட தன்னாள்’-என்பது, கம்பரா. சுந். காட்சிப். 4.

ஸ்ரீஜனகராஜன் திருமகள் பட்டது படுகிறார்.
பிள்ளை திருநறையூர் அரையர் ‘இப்பாசுரங்களில் முன் அடிகள் இரண்டும், புலியின் வாயிலே அகப்பட்ட குழந்தை
தாய் முகத்திலே விழித்துக்கொண்டு புலியின் வாயிலே கிடந்து நோவுபடுமாறு போலே இருக்கிறது,’ என்று பணிப்பர்.
‘தாவத் ஆர்த்தி:’ என்ற சுலோகத்திற்படியே, சரணம் புக்கால் தம்மை இன்னாதாகச் சம்பந்தம் இல்லையே:
அவனை இன்னாதாமித்தனை அன்றோ?
திருமலையிலே புகுந்து கிட்டி நின்றதுவும் இவர்க்குப் பேற்றுக்குக் காரணமாதல் தவிர்ந்து கூப்பிடுகைக்குக் காரணமாயிற்றித்தனை அன்றோ?

பரமாத்மா ஸ்வரூபம் முதல் இரண்டும் -சேதன ஸ்வரூபம்ஸ்வ அடுத்த இரண்டிலும்
உபாயம் ஸ்வரூபம் அடுத்த இரண்டிலும் -அநிஷ்ட ஹானி விரோதி ஸ்வரூபம் 7/8 பதிகம்
இந்திரியங்கள் படுத்தும் பாடு இதில் அருளுகிறார் –
மேல் 9/10 பதிகம் இஷ்ட பிராப்தி –

—————————————————————————————————

உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-

விரோதி நிரசனத்துக்கு ஏகாந்தமான சம்பந்தம் -இந்திரியங்கள்
உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்-பிராப்தன் போக்யன் -ஆந்திர சத்ருக்கள் நலியும் படி –
பந்தம் -சேதனர் போலே உயர் திணை
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்-பல நீ காட்டிப் படுப்பாய் என்ற ஆர்த்தி பிறந்த பின்பும்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை-அனந்தன் -அசங்கயேய அபரிச்சின்ன – -ஆச்சர்ய -குணங்கள்
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தர் -ஸ்துதிக்கும் -த்ரி வித சேதனர்
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே-போக்யம்-உத்பத்தி தொடங்கி உபகாரகன் நிர்வகித்துக் கொண்டு போன பின்பு

எண்ணிறந்த காரியங்களையெல்லாம் உண்டாக்குகின்ற பெரிய மூலப்பகுதியைச் சரீரமாகவுடையவனே! நித்தியசூரிகளால் துதிக்கப்படுகின்ற
மூன்று உலகங்களையுமுடைய அண்ணலே! அமுதே! அப்பனே! என்னை ஆள்கின்றவனே! உள்ளே வசிக்கின்ற ஐந்து இந்திரியங்களால் நலிவுப்படுத்தி,
உன் திருவடித் தாமரைகளை நான் சேராதபடியே என்னை நலிவதற்கு இன்னம் எண்ணுகின்றாய்.
குமை தீற்றுதல் – துன்பத்தை நுகரச்செய்தல்.’ குமை தீற்றி’ நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்,’ என்க. நலிவான் – வினையெச்சம்.
‘உன் பாத பங்கயம் நண்ணிலாவகையே எண்ணுகின்றாய்,’ என்க. மாயன் -மூலப்பகுதியையுடையவன்.
இத்திருவாய்மொழி, ஆசிரியத்துறை.

‘உன்னால் அல்லது செல்லாதபடியாய் உன் திருவடிகளிலே சரணம் புகுந்த என்னை
இந்திரியங்களாலே நலியப் பாராநின்றாய்,’ என்கிறார்.

உள் நிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாதபங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் –
இரட்சகன் அண்மையில் இருத்தல் தவிர்ந்து கொலைஞர் அண்மையில் இருத்தலாயிற்றுக்காண்.
தேவா எனக்குப் பகை புறம்பிட்டு வருகிறது என்றோ இருக்கிறது?
உள்ளானாலும், போக்கு வரத்து உண்டாமாகில் படைப்போது அறிந்து இறாய்க்கலாம் அன்றோ?
நிலாவிய – இருக்கிற. ஆக, பாதகர் கூட்டம் அந்தரங்கமாய் நின்று நலிகிறபடியைத் தெரிவித்தபடி.
‘தேகத்திற்கு வேறுபட்டதாய் இருப்பது ஓர் ஆத்தும வஸ்து உண்டு,’ என்று அறிகிலர்;
இவையே உள்ளே இருக்கின்றன என்றிருக்கிறார்.
‘இப்படி நலியா நின்றாலும், ஒருவர் இருவராகில் அறிந்து விலக்கலாமன்றோ?’என்பார், ‘ஐவரால்’ என்கிறார்.
இவர்களிலே நால்வர் ஒரு முகமாய் நின்று நலிய, ஒருவர் உடலாந்தமாய் -த்வக் இந்திரியம் உடல் முழுவதும் -இருந்து நலிகிறபடி.
நான்கும் முகத்தில் -சாது -ஒன்று சேர்ந்து நலிய
இரட்சகன் ஒருவனாய் இருக்க, பாதகர் ஐவராய் இருக்கிறபடி.
இவை அறிவில் பொருள்களாய் இருக்கச்செய்தே, தீங்கு செய்வதில் ஊற்றங்கொண்டு
உயர்திணைப்பொருளைப் போன்று சொல்லுகிறார் ‘ஐவரால்’ என்று. என்றது,
‘ஆத்துமா என்று ஒன்று உண்டாய். அதனுடைய ஞானம் சொல்லுவதற்கு வழி மாத்திரம் மனமாய்.
அதற்கு இவை அடிமைப்பட்டவை என்று அறிகின்றிலர், என்றபடி.
குமை தீற்றி – நலிவுபடுத்தி. விடுநகம் கட்டுவாரை ‘நெகிழக்கட்டினாய்’ என்று உறுக்கிக் கட்டுவிப்பாரைப் போலே,
‘இந்திரியங்கள் தண்ணளி செய்யாமே ஒக்க இருந்து நலிவிக்கிறான்’ என்றிருக்கிறார்.
நலிகிற நலிவைக் கொண்டு, உயர்திணையைப் போலே சொன்னோமாகில், இவற்றின் பக்கல் குறை உண்டோ?
இவை நலிகிற போதும் இவன் இல்லாமை இலன் அன்றோ? இவைதாம் இவனுக்கு அடங்காமல் இருப்பவையும் அன்றே? இருடீகேசன் அல்லனோ!
ஜாமாதா பத்தாவது கிரகம் ஒன்பதுக்கு மேலே அழகிய மணவாளன் என்பர் –

என்னை –
‘பல நீ காட்டிப் படுப்பாயோ?’. ‘இன்னங் கொடுப்பாயோ?’திருவாய்மொழி. 6. 9 : 9. என்று
அவற்றின் காட்சியாலே முடியும்படியான என்னை.
உன் பாதம் பங்கயம் –
‘தாவி வையங்கொண்ட தடந்தாமரைகள்’ திருவாம்மொழி, 6. 9 : 9.என்றும்,
‘பூவார் கழல்கள்’ திருவாய்மொழி. 6. 10 : 4. என்றும் சொல்லுகிற திருவடிகளை.
‘என் ஆற்றாமை அன்றோ உனக்குச் சொல்ல வேண்டுவது?
சுக அனுபவத்திற்கு உரியனவான திருவடிகளையுடைய உன்னை நீ அறிதி அன்றோ?’ என்பார், ‘உன் பாத பங்கயம்’ என்கிறார்.
என்றது, ‘அடி அறியாமல்தான் அகற்றுகிறாய் அன்றே?
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலம் அன்றோ?’ பெரியாழ்வார் திருமொழி, 1. 2 : 1.என்பதனைத் தெரிவித்தபடி.
சம்சாரத்தில் அருசி பிறவாதார்க்கும் விட ஒண்ணாதபடி போக்கியமான திருவடிகளை.
தேனே மலரும் திருப்பாதம் அன்றோ?திருவாய்மொழி, 1. 5 : 5.

நண்ணிலா வகையே –
காதாசித்கமாகக் கிட்டாது ஒழிகை அன்றிக்கே, கிட்டாது ஒழிதலே சுபாவமாக. என்றது,
‘இனி நண்ணப் புகாநின்றேமோ?’ என்றிருக்கிறார் என்றபடி.
நலிவான் –
நண்ணாமை என்றும், நலிவு என்றும் இரண்டு இல்லை இவர்க்கு;
திருவடிகளைக் கிட்டாது ஒழிகையே இவ்வாத்துமாவுக்கு நலிவு. -தொழுகையே எழுகை போலே
இந்தக் கொடுமையான வகையே நலிவான்.
இன்னம் –
‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்’ என்ற பின்பும்.
எண்ணுகின்றாய்.
‘ஈஸ்வரனுக்கு வேறு வேலை இல்லை என்றிருக்கிறார்.
‘எந்தத் தருமபுத்திரனுக்கு, மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜநார்த்தனனுமான கண்ணபிரான்,
மந்திரியாயும் காக்கின்றவனாயும் சிநேகிதனாயும் இருக்கிறான்?’ என்கிறபடியே,
‘யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸூஹ்ருச்சைவ ஜநார்த்தந:
ஹரி: த்ரைலோக்ய நாத: ஸ: கிந்து தஸ்ய ந நிர்ஜிதம்’என்பது, பாரதம், ராஜசூயம்.

பாண்டவர்கள் காரியத்தை எண்ணினாற்போலே, இங்குக் காரியம் செல்லாநிற்கச்செய்தே, மந்திரமும் செல்லுகிறபடி.
‘இவரை நம் பக்கலினின்றும் பிரித்தோமாம் விரகு என்னோ?’ என்று சிந்திக்கிறான் என்றிருக்கிறார்.

எண் இலாப் பெருமாயனே –
‘ஈஸ்வரன் இந்த மூலப் பிரகிருதியினின்றும் இந்த உலகத்தைப் படைக்கிறான்,’ என்றும்,
‘என்னுடைய மாயை தாண்ட முடியாதது,’ என்றும் சொல்லுகிறபடியே,
‘அஸ்மாந்மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்’-என்பது, உபநிடதம்.
‘மம மாயா துரத்யயா’-என்பது, ஸ்ரீ கீதை, 7 : 14.

எண்ணிறந்த செயல்களைச் செய்யவற்றாய், நீ வேண்டாதாரைச் சிறை இட்டு நலியக்கடவதான பிரகிருதியைப் பரிகரமாகவுடையவனே!
அன்றிக்கே, ‘எண்ணிறந்த மஹா ஆச்சரியமான குணங்களையுடையவனே!’ என்று பிள்ளான் பணிக்கும்படி.
‘இப்படிக் குணவானாயிருக்கிற உனக்கு என்னை நலிகைக்கு என்ன சேர்த்திஉண்டு?’
விடுநகங்கட்டி நலியாநிற்கச்செய்தே ‘தண்ணீர்’ என்பாரைப்போலே, அவன் குணங்களைச் சொல்லுகிறபடி.
இமையோர்கள் ஏத்தும் –
‘தன்னால் அல்லது செல்லாதாரை ஒருவன் பொகட வல்லபடியே என்று’ கொண்டாட ஒரு விபூதி உண்டாவதே!
அவர்கள் முகங்கொடுக்கையாலன்றோ அவன் இங்கு வாராதிருக்கிறது?’ என்றிருக்கிறார்.
திரிசங்குவினுடைய ஓலக்கம் கிளர்ந்தாற்போலே கிளர்ந்ததாகில், அவனுக்கு என்னை விட்டிருக்கப்போமோ?

உலகம் மூன்றுடை அண்ணலே –
‘தான் நினைத்த போது காரியம் செய்கிறான்,’ என்று இவர் இருப்பதற்காகத் தன்னுடைய சேஷித்துவத்தைக் காட்டினான் அவன்;
‘இப்படி இரட்சிக்கறவன் நம்மை நலியுமோ?’ என்றிருக்கும்படி செய்து பின்னை நலிகைக்குக் காட்டினான் என்றிருக்கிறார் இவர்.
அமுதே –
அவன் தன்னுடைய இனிமையைக் காட்டிற்றும் தம்மை அனுபவிப்பிக்கைக்கு அன்று;
புறம்பு ஒன்று பொருந்தாதே நோவுபட என்றிருக்கிறார்.
அப்பனே –
‘இப்படி உபகாரகனானவன் நலியாநின்றானோ?’ என்று நம்பும்படி செய்து பின்பு அபகரித்தற்காகக் காட்டினான் என்றிருக்கிறார்.
என்னை ஆள்வானே –
பிராங்நியாயம் பலிக்கும் என்றிருக்கைக்காகக்காட்டினான் என்றிருக்கிறார்.
‘இதற்கு முன்பெல்லாம் நம்மை நிர்வஹித்துக்கொண்டு போந்தது நாமும் சில செய்தோ?
அப்படியே மேலும் நம் காரியம் அவன் செய்யும்,’ என்றிருக்கைக்காகச் செய்தானத்தனை;
நினைவு வேறே என்றிருக்கிறார். ‘என்னை ஆள்வானே! நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்’ என்கிறார்.

————————————————————————————–

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப்பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-

17 வகை அங்கம் -அங்கி பாவம் –மா முனிகள் -காட்டி அருளினார் -நாயகி பாவம் -தூது விடல்
–மடல் -எடுத்தல் அநுகாரம் இந்திரியங்களுக்கு பயப்பட்டு –
கடிவாளம் -முக்குணம் கொண்டு ஈஸ்வரன் -த்ருதீயே கர்ம கார்யம் -ஹ்ருஷீகேசன் அன்றோ அவன் –
சர்வ பிரகார போக்யனான நீ-பிரபல இந்த்ரியங்களைக் கொண்டு எலி எலும்பினை
என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப்பகல் மோது வித்திட்-இந்திரிய வசப்படுத்தி -ஏவிற்றுச் செய்யும் படிக்கு
-காரணத்தயா பரதந்தர்யமாக இருந்தும் அவை இட்ட -ஒன்றுக்கு ஒன்று அத்விதீயம் ஐந்தும் -கொடுமைக்கு ஒப்பு இல்லாமல்
சம பிரதான –பாதகமாக -இராப்பகல் ஓயாமல் -ஸ்வப்னத்திலும் –
டுன்னை நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்-பிரப்பியனாய் போக்ய பூதன் -உன் வாசி அறிந்த என்னை -விட்டு அகன்றாய்
கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற–சர்வதோ முக போக்யம் -சத்தா தாரகம் –
-இருப்புக்கே ஆதாரம் -ரஷகம்-சத்தா தாரக சாரஸ்யன்
-காள மேகம் போல தல ஸ்தல விபாகம் பார்க்காமல் அபகரித்த

மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே-கடல் சூழ்ந்த ஞாலம் ரக்ஷிக்கும் -கிட்ட முடியாத பாபிஷ்டன் –
-வேதைக சமைதி கம்யன் -பாபம் செய்தவனும் அறியும் முடி பிரபல -கிங்கரனான என்னை
கரும்புக்கட்டியே! அமுதே! கரியமுகில் வண்ணனே! கடலாற்சூழப்பட்ட உலகத்தை எல்லாம் காக்கின்ற மின்னுகின்ற சக்கரத்தையுடையவனே!
வினையேனுடைய வேதியனே! என்னை அடிமை கொண்டு ஆளுகின்ற வலிய சுவதந்தர புத்தியோடு கூடின ஒப்பற்ற ஐந்து இந்திரியங்களாகிற
இவற்றை என் சரீரத்திலே வைத்து இரவும் பகலும் இவற்றால் தாக்குவித்து உன்னை நான் வந்து கிட்டாதபடி செய்து முகம் தோற்றாதபடியே போகாநின்றாய்.
‘என்னை ஆளும் ஐந்து இவை,’ என்க. ‘பெய்து மோதுவித்திட்டுப் போதி’ என்க. ‘வேதியனே! அணுகா வகை செய்து போக,’ என்க.
கண்டாய் – முன்னிலையசை. கன்னல் – கரும்பு. ‘காக்கின்ற நேமி’ என்க.
அன்றிக்கே, ‘காக்கின்ற’ என்பதனை நேமியினானுக்கு அடையாக்கலுமாம். வேதியன் – வேதங்களால் பேசப்படுகிறவன்.

வலி இல்லாதவனான என்னை இந்திரியங்காளாலே காலமெல்லாம் நலிவித்து,
இந்த நோவை அறிவிக்க ஒண்ணாதபடி ‘போதி’ என்கிறார்.

என்னை ஆளும் வன் கோ –
என்னை நோக்குவாய் நீயாய், பணி கொள்வார் வேறே சிலர் ஆவதே! அத்தலை இத்தலை ஆயிற்றுக் காண்.
ஈஸ்வரன் என்பான் ஒருவன் உண்டாய், அவனுக்கு ஆத்துமா சேஷமாய், அவனுக்கு மனம் அந்தரங்கத் துணையாய்,
அதற்கு இந்திரியங்கள் சேஷமாகை தவிர்ந்து கலகத்தில் பள்ளிகள் போலே என்னை இந்திரியங்கள் ஆளும்படி ஆவதே!
வன்கோ –
பிரபலருமாய் வந்தேறிகளானவர்களுக்குப் பணி செய்து வெறுத்தேன்.
‘கோவாய் ஐவர் என்மெய் குடி ஏறிக் ‘கூறை சோறு இவை தா,’ என்று குமைத்துப் போகார்’ பெரிய திருமொழி, 7. 7 : 9.-என்கிறபடியே.
அன்றிக்கே, ‘ஒரு நீர்மையுடையவன் சேஷியாகை தவிருவதே’ என்னுதல். என்றது,
‘எல்லா நற்குணங்களையுமுடைய சர்வேஸ்வரன் சேஷியாகை தவிர்ந்து, குணம் இல்லாதவர்கள் சேஷிகள் ஆவதே?’ என்கிறார் என்றபடி.
ஓர் ஐந்து –
குணப்பிரதாந பாவத்தால் அன்றிக்கே, சமப்பிரதாநமாய் நலிகிறபடி.
கடவான் ஒருவனாய், பணி செய்வதும் அவனுக்கான நிலை குலைந்தது. என்றது,
‘பதிம் விஸ்வஸ்ய’ – ‘உலகத்திற்குத் தலைவன்’ என்றும். ‘அனைத்துலகுமுடைய அரவிந்த லோசனன்’ என்றும்
சொல்லுகிறபடியே ஒருவன் சேஷியாதல் தவிர்ந்ததன்றோ என்றபடி.
‘ஒருவனுக்குச் சேஷமாதல் தவிர்ந்தது’ என்பார், ‘ஐந்து’ என்கிறார்.

இவை பெய்து –
அவற்றின் பக்கல் குறை உண்டோ? அவற்றை இட்டு நலிவிக்கிறாய் நீ அல்லையோ?
ஸ்ரீபிரஹ்லாதனை பாம்புகளைக் கூட விட்டுக் கட்டி நலிந்தாற்போலே இருக்கிறதுகாணும், இவற்றை உண்டாக்கி என் பக்கலிலே நீ விட்டது.
இராப்பகல் மோதுவித்திட்டு –
காலத்துக்கு உபயோகம் இதுவே ஆவதே!
‘ஒழிவில் காலமெல்லாம்’ திருவாய்மொழி, 3. 3 : 1.-என்று அழகிதாக அடிமை செய்ய ஆசைப்பட்டேன்.
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்றுகொலோ!’ திருவாய்மொழி, 2. 3 : 9.-என்று ஆசைப்பட்ட எனக்கு
இவற்றினுடனே கூடும்படி ஆவதே!’
உன்னை நான் – பெற்றல்லது தரிக்க ஒண்ணாதபடியிருக்கிற உன்னைக் கிட்டி அல்லது பிழைக்க மாட்டாத நான். என்றது,
‘நிரதிசய போக்கியனான உன்னை, புசித்து அல்லது பிழைக்கமாட்டாத நான்’ என்றபடி.
அணுகா வகை செய்து –
கிட்டாதபடி செய்து.
போதி கண்டாய் –
உன்னை அனுபவிக்க வேணும் என்று போந்த பிராட்டியை மாய மானைக் காட்டிப் பிரித்து,
ஒற்றைக்கண்ணன், ஒற்றைக்காதள்இவர்களை கைகளிலே காட்டிக்கொடுத்து உன்னைக் கொண்டு அகன்றாற்போலேகாண் இதுவும்!
கன்னலே அமுதே –
ஒரு வகையால் வந்த இனிமையாகில் நான் ஆறி இரேனோ? ‘ஸாவகந்த: ஸர்வரச’ என்கிறபடியே,
எல்லா விதமான இனிய பொருள்களுமாய், அளவு இறந்து, கொள்ள மாளா இன்பவெள்ளமாய் இராநின்றதே.
‘அமுது’ என்பது, இனிய பொருளுமாய், சாவாமல் காக்குமதுவுமாய் இருப்பது.

கார்முகில் வண்ணனே –
அந்த இனிமையைத் தன் பேறாகத் தருமவன்; பரமோதாரன் என்றபடி.
அன்றிக்கே, ‘கார் காலத்தில் மேகம் போலே காண்பதற்கு இனியதான வடிவையுடையவனே!’ என்னுதல்.
கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய் –
‘போதி கண்டாய்’ என்று யார் கால் கட்ட நீ அன்று நோக்கிற்று!
‘இந்திரியங்களாலே நோவுபட்டோம்’ என்று இவர்கள் அபேக்ஷித்த போதோ நீ நோக்கிற்று!
நீ இனியன் என்று அறியாதரையுங்கூட நோக்குமவன் அல்லையோ?
கடலோடு கூடின பூமியைக் கண்களிலே வெண்ணெய் இட்டுக்கொண்டு நோக்கும் தன்மையன் அல்லையோ?
‘காத்தல்தான் காதாசித்கமோ உனக்கு?’ என்பார், ‘காக்கின்ற’ என்று நிகழ்காலத்தாற்கூறுகின்றார்.
மின்னு நேமியனாய் –
‘இயற்றி-யத்னம்- உண்டு என்னா, சங்கற்பத்தால் நோக்குமவனோ? ஆசிலே வைத்தகையும் நீயுமாயன்றோ நோக்குவது? -ஆசு -பிடி -ஆயுதம்
‘அருளார் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்,’ திருவிருத்தம், 33.– என்னக்கடவதன்றோ?
உருவின வாள் உறையில் இடாதே அன்றோ நோக்குவது? விளங்காநின்றுள்ள திருவாழி. -கிருபையால் மிக்கு இருக்கும் திரு ஆழி
வினையேனுடை வேதியனே –
‘தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்’ என்றும், ‘பொது நின்ற பொன்னங்கழல்’ என்றும் சொல்லுகிறபடியே,
‘தேவாநாம் தாநவாநாஞ்ச ஸாமாந்யம் அதிதைவதம்’-என்பது,
ஜிதந்தா. 1 : 2. ‘பொதுநின்ற பொன்னங்குழல்’ என்பது, மூன்றாந்திருவந். 88.
ஊர்ப்பொதுவாயிருக்கிற நீ. என்னளவிலே வந்தவாறே வேதங்களாலேயே அறியப்படுகின்றவனானாய்.
இன்று இருந்து ஓலைப்புறத்திலே கேட்கும்படியான பாபத்தைச் செய்வதே நான்!-சிசுபாலனுக்கு சஷூவுக்கு விஷயம் ஆனாயே

———————————————————————————————-

வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச்
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-

திரு நாம சங்கீர்த்தனம் சேர்த்து -சர்வ பிரகார ரக்ஷணம் பிரகாரமாக உள்ள நீ -இந்திரியங்களை வைத்து என்னை விலக்க வேண்டுமோ
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச் -உஊடுருவ நலியா நிற்க்க கடவ -ஐந்து இந்திரியங்கள்
-உனது ரக்ஷணம் இலக்காதபடி பாபம் பண்ணி
சாதியா வகை நீ தடுத்து என் பெருத்த அந்தோ -திருவடி அடையாத படி -ரக்ஷகன் பாதித்தால் யாரை நாடுவேன்
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட -காரணமாக -இருந்து சர்வ பிரகார ரக்ஷணம் –
அந்நிய அபிமானம் அறும் படி அளந்து -வராஹ ரூபியாய் இடந்து
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –ரக்ஷித்ததால் -ஒஜ்வல்யம் -உன்னை அனுபவிக்க சபல புத்தி -பிரதிபந்தகங்கள் அழித்து-

‘வினையேனை ஐவரால் மோதுவித்துச் சாதியா வகை தடுத்து என் பெறுதி?’ என்க.

‘உலகத்திற்கு எல்லா வகையாலும் இரட்சகனாயிருந்து வைத்து, என்னை உன் திருவடிகளிலே கிட்டாதபடி
இந்திரியங்களாலே நலிவித்தால் உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறார்.

வேதியா நிற்கும் –
அழகிதாக எல்லா நிலைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டேன்.
‘உடனாய் மன்னி’ திருவாய்மொழி, 3. 3 : 1.-என்று பாரித்த எல்லாம் இவற்றுக்குப் பணி செய்கைக்கு ஆவதே!
வேதியா நிற்கும் –
வேதனையே செய்யாநிற்கும்.
‘தான் உயிருடன் வாழும் வகையிலும் அக்நி ஹோத்திரம் செய்யவேண்டும்’ என்றால்,
‘யாவஜ்ஜீவம் அக்நி ஹோத்ரம் ஜூஹூயாத்’என்பது, யஜூர் வேதம்.-
‘ஸாயம் ப்ராத: – மாலை காலை’ என்று ஒரு காலத்திலே ஒதுக்கா நின்றதன்றோ?
அங்ஙன் அன்றிக்கே, எல்லா நிலைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டுச் சொன்ன எல்லாம்
இவற்றின் பக்கலிலே ஆனபடியைத் தெரிவித்தபடி.
வினையேனை –
போகத்துக்குப் பாரித்த எல்லாம் கிலேசப் படுகைக்குக் காரணம் ஆவதே!
உன் திருவடிச் சாதியா வகை நீ தடுத்து –
என்ன உறவின் கனந்தான்! தம்முடைய குற்றத்துக்கும் அவனை வெறுக்கும்படிகாணும் சம்பந்தம் இருக்கிறபடி.
சாதநாநுஷ்டானம் செய்து பலத்துக்குத் தடை செய்வாரைச் சொல்லுமாறு போலே சொன்னபடி பாரீர்.
உன் திருவடிகளைச் சாராதபடி தகைந்து,
என் பெறுதி –
என் சொரூபம் அழியுமித்தனையோ வேண்டுவது?
நான் படுகிற வியசனத்தால் உனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாகில் எனக்கு அதுவே அமையும்;
உனக்காக இருக்குமதன்றோ எனக்கு வேண்டுவது?
தண்ணீரின்றும் மேலே எடுக்கப்பட்ட மீனைப்போன்றவர்’ என்கிற இளையபெருமாள்,
‘ஜலாந் மத்ஸ்யாவி வோத்த்ருதௌ’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 53 : 31.
‘நீருள வெனின்உள மீனும் நீலமும்
பாருள வெனின்உள யாவும் பார்ப்புறின்
நாருள தனுவுளாய் நானும் சீதையும்
யாருள ரெனின்உளேம்? அருளு வாய்என்றான்’–என்பது, கம்பராமாயணம்.
துர்வாசர் வர, ‘பெருமாளுக்கு ஒரு துன்பம் வர ஒண்ணாது’ என்று தம் நோவு பாராதே விடை கொண்டார் அன்றோ?

என் பெறுதி –
நீ, சொன்ன சொல் தவறாதவன் ஆகைக்காக ஸ்ரீபரதாழ்வானைப் பிரித்து வைத்தாய்,
என் இருப்புக்கு உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?
அந்தோ –
தனக்கு ஒரு பிரயோஜனம் இன்றியிலே பிறர் கேடே பிரயோஜனமாக நலியும்படி பிறந்தேனே!
பாதுகாத்தலே பிரயோஜனமாக இருக்கிறவன், அருள் அற்றாரைப் போலே ஆவதே!
ஆதியாகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட சோதி நீள் முடியாய் –
உனக்கு ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருக்கச்செய்தேயும் பாதுகாப்பவன் அல்லையோ நீ!
ஆன பின்பு உனக்கு இது போருமோ?’
திருமுடி தொடக்கமான திவ்விய ஆபரணங்களைத் தரித்துக்கொண்டு நித்தியசூரிகள் நடுவே இருக்கக்கடவ நீ,
உலகத்திற்கு எல்லாம் காரணனாய்ப் பரப்பையுடைத்தான பூமியைப் படைத்து,
பின் பிரளய ஆபத்து வர வயிற்றிலே எடுத்துவைத்து, பின் வெளி நாடு காணப்புறப்பட விட்டு,
பின் மஹாபலி கவர்ந்துகொள்ள எல்லை நடந்து மீட்டுக்கொண்டு,
பின் நைமித்திகப் பிரளயத்திலே மஹாவராஹமாய் எடுத்துக்கொண்டு ஏறி,
இப்படிகளாலே எல்லா இரட்சணங்களையும் செய்யுமவன் அல்லையோ?
தொண்டனேன் மதுசூதனனே –
இவன் இரட்சகன் என்னுமிடத்துக்கு முன்னே ஒன்று தேடிச் சொல்ல வேணுமோ?
மதுவைப் போக்கினாற்போலே நான் இந்திரியங்கட்குக் கட்டுப்பட்டிருத்தலை இன்று இருந்து போக்கினவன் அன்றோ?
தன் படிகளைக் காட்டி எனக்குப் புறம்பு உண்டான வாசனையைப் போக்கி. இன்று கைக்கு எட்டாதிருக்கிற இதுவே அன்றோ குறை?

————————————————————————–

சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!–7-1-4-

அகடி கடநா சமர்த்தன் -இந்த்ரியங்களால் கலக்கி பரம போக்யமான உன்னை அணுகாமல் செய்தாயே
சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்-இந்த்ரியங்களைக் காட்டி
பரம புருஷார்த்த கைங்கர்ய ருசி அறிந்த நான் -சூது -பிராப்தம் இங்கும் விபரீத லக்ஷணை -உறுவது அறியாத படி விஷயங்களில் பிரமிக்கும் படி
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்-அதி போக்யமான உன் திருவடிகளை -அநந்யார்ஹன் அணுகா படி கடக்க நின்றாய்
யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை-சகல சேதன அசேதனங்களை ஏக தேசத்தில் ஒடுக்கி
-ஆலமரம் -நீள் இலை விபரீத லக்ஷணை-மீது சேர் குழவி!
வினையேன் வினை தீர் மருந்தே-அன்ன வசம் செய்த இடம் இலையாய் ஆனதே -பாபிஷ்டன்

அஃறிணைப்பொருள்களும் உயர்திணைப்பொருள்களும் ஒன்றும் இல்லாமல் எல்லாவற்றையும் உன் வயிற்றிலே ஒடுக்கிக்கொண்டு,
ஒப்பற்றதான ஆலினது முகிழ் விரிந்து நீளும்படியான இலையின் மேலே சேர்ந்து திருக்கண் வளர்ந்த குழவியே!
வினையேனுடைய வினைகளைத் தீர்க்கின்ற மருந்தே! ஒப்பற்ற ஐந்து இந்திரியங்களையும் காட்டி, உறுவதனை நான் அறியாத வகையாகச் சுழலச்செய்து,
உனது அழகிய திருவடித் தாமரைகளை நான் சேராதபடி செய்து கண்கள் காணாதபடி கடக்க நிற்கின்றாய்காண்.

‘ஒடுக்கிச் சேர் குழவி’ என்க. ஐவரைக் காட்டி அறியா’ வகை சுழற்றி அணுகா வகை செய்து போதி’ என்க. சூது – உறுவது.

‘நீயே இவ்வாத்துமாவுக்குத் தனக்கு மேல் ஒன்றில்லாததான புருஷார்த்தம் என்னமதை யான் அறியாதபடி
ஐம்புலன்களைக் காட்டி என்னை மயக்குவிக்கின்றாய்,’ என்கிறார்.

சூது –
‘இந்த ஆத்துமாவுக்கு விஷயத்தில் ஈடுபட்டிருத்தல் நாசத்திற்குக் காரணம்;
பகவானுடைய அனுபவம் உய்வதற்குக் காரணம்’ என்னும் உபாயத்தை.
சூது – உறுவது.
நான் அறியாவகை – இது நான் அறியாதபடி.
ஓர் ஐவரைக் காட்டி சுழற்றி-
நான் உறுவது அறியாதபடி –சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் விஷயங்களைக் காட்டி மயங்கச் செய்து. என்றது,
‘உன்மத்தங்காய் தின்னப்பண்ணி’ என்றபடி.
உன்னடிப்போது நான் அணுகா வகை செய்து –
உன் திருவடிகளாகிற செவ்விப்பூக்களை நான் கிட்டாதபடி செய்து. என்றது,
‘மயிர் கழுவி இருக்கிறவனைச்செவ்விப்பூச் சூடாமல் தடுப்பாரைப் போலே’ என்றபடி.-மயிர் கழுவி -பிரபத்தி செய்த பின்பு
போதி கண்டாய் –
கூட நிற்கில் இவை எல்லாம் பட வல்லேன்காண்!
‘கூடநிற்கில் கண்ணோட்டம் கிருபை -பிறக்கும்’ என்று கடக்கப் போவாரைப் போலே போனாள்.
‘நீர் சொல்லுகிறவை எல்லாம் நமக்குச் செய்ய அரிதுகாணும்’ என்ன,
‘ஓம்; நீ அரியவை செய்யமாட்டாய் அன்றோ?’ என்கிறார் மேல்.
யாது யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி ஓர் ஆலின் நீள் இலை மீது சேர் குழவி –
அறிவில் பொருள் அறிவுடைப்பொருள் என்னும் இவற்றில் ஒன்றும் பிறிகதிர்ப் படாத படி உன் வயிற்றிலே வைத்து,
ஒரு பவனாய் முகிழ் விரியாதது ஓர் ஆலந்தளிரின்மேலே,
உனக்கு இரட்சகர் வேண்டுவது ஒரு நிலையை அடைந்து திருக்கண் வளர்ந்தருளுவான் ஒருத்தன் அல்லையோ?
அரியவை செய்ய வல்லை என்னுமிடத்துக்கு ஒரு பழங்கதை சொல்லவேணுமோ?
வினையேன் வினைதீர் மருந்தே –
பாபமே நிரூபகமான என்னுடைய பாபத்தைப் போக்கும் மருந்தாம் வல்லவனே!
என்னுடைய ஐம்புல இன்பங்களில் உண்டாகும் ஈடுபாட்டினைப் போக்கி என்னை இப்படித் துடிப்பித்தவன் அல்லையோ?

செப்பு -தாமோதரனை செப்பினாலே போதும் -வாயினால் பாடி தூ மலர் தூவித் தொழுது -மனத்தினால் சிந்திக்க வேண்டாம்
-போய பிழையும் புகுதருவான் நின்றனவும் நில்லா –
அபுக்தம் கர்ம ந ஷீயதே -விரோதிக்குமே -நெருப்பு எரிக்கும் -நீர் அணைக்கும் இரண்டு வாக்கியங்கள்
பொருந்துமோ என்பதால் போலே -நெருப்புக்கு சக்தி உண்டு -கர்மத்துக்கு பாப புண்யம் பலம் கொடுத்தே தீரும்
தண்ணீர் நெருப்பை அணைப்பது போலே அவன் கருணை கர்மங்களை போக்கும் சரண் அடைந்தால் -என்றபடி –
பூர்வாகம் -உத்பத்தி சக்திகளை வெட்டி உத்தராகம் அவற்றின் பாதகம் விலக்கி-என்றபடி –
வினையேன் வினை தீர் மருந்தே என்கிறார்

—————————————————————————————-

தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-

பிரதிகூல நிரசன ஸ்வ பாவன் விஷய இந்த்ரியங்களைக் கொண்டு அகலப் பற்றினாய்
தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை-எனக்கு சாந்தி ஹேதுவான பிரதி ஒவ்ஷதம்-இல்லாத படி
-இந்த்ரம் -சரீரம் -ஆத்மாவை ஏற்றி சுழற்றி -பிரமிப்பியா நிற்கும்
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்-
ஒரு முகமாக வைத்து -தொக்கு இந்திரியம் உடல் முழுவதும் நிறுத்தி நாலா புறமும் -நேரும் பக்க வாட்டிலும் பின் புறத்திலும்
-நிறுத்தி நெகிழ சிதிலம் ஆக்குகிறாய்
நிவர்த்தகன் நீயே பிரவர்த்தகன் ஆனபின்பு இதுக்கு யார் மருந்து ஆவார்
நோயான விஷயங்கள் மருந்து ஆகுமோ
நோய் படும் நான் மருந்து ஆகுமோ
புலன்களும் மருந்து ஆகமுடியாதே
நிர்வாணம் பேஷஜாம் பிஜக் நீ
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்-ஆஸ்ரிதர் விரோதி நிராசன -ஆழி
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ-பக்க வேர் உடன் அறுத்து -பரமபத வாசிகளுக்கு -அதிபதி –
ஓ நித்ய ஸூ ரிகள் உடன் ஓக்க அனுபவிக்க பிராப்தமாக இருக்க நலிவு படுவதே

கொல்லுகின்ற சக்கரத்தை ஏந்தி வலிய அசுரர்களுடைய குலத்தைப் பக்கவேரோடு அறுத்தவனே! நித்தியசூரிகளுக்குப் பெருமானே!
வேறு பரிகாரம் இல்லாதபடி ஐம்புலன்களாகிய நோய்கள் வருத்துகின்ற சரீரமாகிற செக்கிலே இட்டு மயங்கச்செய்கின்ற ஐந்து இந்திரியங்களையும்
எதிரும் பக்கங்களுமாக அடைத்து நிறுத்தி நெகிழ விடுகின்றவரைப் போலே இராநின்றாய்;
இரட்சகனான நீ பாராமுகம் செய்தால் இனி உபகாரர் ஆவார் யாவர்?
‘இன்றி அடும் செக்கு’ என்க. இன்றி – இல்லாதபடி. ‘இட்டுத் திரிக்கும் ஐவரை அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்’ என்க.
நெகிழ்ப்பான் ஒக்கின்றாய் – ‘கைவிடுமாறு போலே இருக்கின்றாய்’ என்னுதலுமாம்.

‘மாற்றுச் செய்கை இல்லாதபடி விஷயங்களாலும் இந்திரியங்களாலும் நலிந்து என்னை நீ
கைவிட்டால் வேறு இரட்சகர் உளரோ?’ என்கிறார்.

தீர் மருந்து இன்றி-
வேறு பிரகாரம் உண்டாகிலும் ஆற்றலாம் அன்றோ?
சர்வசக்தியாலும் போக்கப் போகாதன்றோ?
ஐந்து நோய் அடும் செக்கில் இட்டு-
ஐம்புலன்களாகிற நோயாலே இவ்வாத்துமாவை முடிக்கும் சரீரமாகிற செக்கிலே இட்டு.
திரிக்கும் ஐவரை-
வருத்துகின்ற ஐம்பொறிகளை. என்றது,
‘சரீரத்திலே புகுவித்து ஓசை முதலிய புலன்களைக் காட்டி நெருக்குகிற செவி முதலிய பொறிகளை’ என்றபடி.
நேர்மருங்கு உடைத்தா அடைத்து-
எதிரும் பக்கங்களுமாக அடைத்து. என்றது,
‘அபிமந்யு என்ற ஓர் இளைஞனை நலிகைக்கு அதிரதர் மஹாரதர் என்னுமவர்கள் அடங்கலும் சூழப் போந்து அடைத்தாற்போலே,
இந்திரியங்களுக்குக்கையடைப்பாக்கி’ என்றபடி.
நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்-
இதுவோ தான் எனக்கு நிலைநிற்கப் புகுகிறது?
‘இங்ஙனே தான் செல்லுகிறதோ?’ என்று இருக்க ஒண்ணாதபடி உன் பக்கல் செய்த நம்பிக்கையையும் குலையாநின்றாய்.
இந்திரியங்கள் பாதகம் ஞானம் கொடுத்தேன் -இத்துடன் காலம் போனால் -என் செய்கேன் -திருவடி கிடைக்காமல் –
‘ஆனால், நம் படி இதுவாகில், உமக்கு ஒரு பரிகாரம் தேடிக்கொண்டாலோ?’ என்றான்;
ஆர்மருந்து இனி ஆகுவார்-
என் இடையாட்டம் பிறரைக்கொண்டு காரியம் இல்லை: நான் நோவுபடாநின்றேன்.
நீ கைவாங்கினாய். ஆன பின்பு எனக்கு ஒரு இரட்சகர் உளரோ?
நானும் பிறரும் இல்லாத அன்று நீ உண்டு: நீ விட்ட அன்று யார் உண்டு?
‘ஆனால் நீரோ?’ என்றான்; நானும் கையும் திருவாழியுமாய் இருந்தேனாகில் நான் என்னை நோக்கிக்கொள்ளேனோ?
மருந்தாம் போதும் ஒரு சேதநன் வேணுமன்றோ? -ஏது-சொல்லவில்லையே அசேதனம் கூடாதே –
மருந்தும் பொருளும் அமுதமும் அவனே அன்றோ இவர்க்கு?-மூன்றாந்திருவந்தாதி, 4.-
அநிஷ்டம் -சம்சாரம் -தொலைக்கும் -இஷ்டமான மோக்ஷம் கொடுக்கும் பொருளும் –போக்யமான அனுபவமும் நீயே
அடல் ஆழி ஏந்தி அசுரர் வன்குலம் மருங்கு வேர் அறுத்தாய் –
போரிலே முயற்சியையுடைய திருவாழியை ஏந்தி அசுரருடைய வலிதான குலத்தைப் பக்கவேரோடு வாங்கினவனே!
‘அந்த வாசனையௌ உம்மை நலிகிறது? பின்னையும் நலிகிறது உண்டோ?’ என்ன,
விண்ணுளார் பெருமானேயோ-
ஒருவன் சிறை இருக்க, தாயும் தந்தையும் உடன் பிறந்தார்களுமாய்க் கலியாணம் செய்யக்கண்டு
தான் கூடப் பெறாதே நோவுபடுமாறு போலே நித்தியசூரிகளும் அவனும் பிராட்டியுமாகப் பரமபதத்திலே இருக்கிறபடியே நினைத்து
அங்கே கேட்கும்படி கிடந்து கூப்பிடுகிறார். -பகல் ஓலக்கம் -சாம கானம் கேட்டு ரசிக்கவோ –
‘ஹா ராம! ஹா லக்ஷ்மண! ஹா ஸூமித்ரே!’ என்று பிராட்டி தனியே கிடந்து கூப்பிட்டாற்போலே,
பரமபதத்திலே இருப்பும் அணி கலங்கும்படி கூப்பிடுகிறார்.
‘ஹா ராம ஹா லக்ஷ்மண ஹா ஸூமித்ரே
ஹா ராமமாத: ஸஹமே ஜநந்யா’-என்பது, ஸ்ரீராம. சுந். 28:8.-வேணி கொண்டு -முடிக்கப் பார்த்து பிராட்டி கூப்பிட்டால் போலே

‘நிருதாதியர் வேரற நீண்முகில்போல்
சர தாரைகள் வீசினர் சார்கிலிரோ?
வரதா! இளை யோய்! மறு வேதுமிலாப்
பரதா! இளை யோய்! பழி பூணுதிரோ?’-என்பது, கம்ப, சடாயு உயிர் நீத்த பட. 79.

—————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: