பகவத் விஷயம் காலஷேபம் -142- திருவாய்மொழி – -6-10-6…6-10-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

அதிசயித ஞானிகள் நித்ய ஸூ ரிகளும் -சூரி சேவ்யத்வம் குணம் -நான் என்று கிட்டுவின்
எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று-லோகங்களையும் -சம்ச்லேஷித்த சீலஅதிசயம் உடைய தாமரைகள்
-முற்றுவமை -பரத்வய அனுபவம் செய்து கொண்டே இருக்கும் நித்ய ஸூ ரிகள் –
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்-கூட்டமாக -நின்று -கதா புனா -ஸுலப்யம் காண ஆசைப்படுவார்கள்
-நம்மாழ்வார் போலே அங்கும் என்னால் காலமே இல்லாத தேசத்தில் -திரள் திரளாக
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!-சரீரம் நா மனம் முக் கரணங்களால் அடிமை செய்யும்
மெய்ந்நாள் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே-அநந்யார்ஹ சேஷத்வம் உணர்ந்த அபி நிவேசம் உடைய நான்
-மெய்யே கண்டு ஸ்வப்னம் போலே மானஸ அனுபவம் போதாதே -என்று காண்பேன் –

உலகத்தை அளந்த இரண்டு திருவடிகளைக் காண்பதற்கு எந்த நாளையுடையோம் நாம் என்று தேவர்கள் கூட்டம்கூட்டமாக எப்பொழுதும் நின்றுகொண்டு
துதித்து வணங்கிச் சரீரத்தாலும் நாக்காலும் மனத்தாலும் வழிபாடு செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே!
அடியேனாகிய நான் உண்மையாகவே உன்னை அடைந்து உன் திருவடிகளை அடைவது எந்த நாள்? என்கிறார்.
இமையோர்கள், மண் அளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கு நாம் எந்நாளேம் என்று இனம் இனமாய் நின்று எந்நாளும் ஏத்தி இறைஞ்சி
மெய்ந் நா மனத்தால் வழிபாடுசெய்யும் திருவேங்கடம் என்க. “மெய்ந் நா மனத்தால்” என்றதனால், மனம் வாக்குக் காயங்களைக் கூறியவாறு.
அடியேன் நான் மெய் எய்தி உன்னடிகள் மேவுவது எந்நாள்? என்க.

“எந்நாள்” என்று ஐயுறுகிறது என்? அது ஒரு தேச விசேடத்திலேயே உள்ளது ஒன்று அன்றோ? என்ன,
அங்குள்ளாரும் இங்கே வந்து அன்றோ உன்னைப் பெற்று அநுபவிக்கிறது என்கிறார்.
அங்ஙன் அன்றிக்கே, வேறு பிரயோஜனங்களைக் கருதுகின்ற தேவர்களும்கூட வேறு பிரயோஜனங்களைக் கருதாதவரைப் போன்று
வந்து அடையும்படி நிற்கிற இடத்தே நான் இழந்து போவதே! என்கிறாராகவுமாம்.

மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு நாம் எந்நாளேம் என்று –
“எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே” திருவாய். 3. 2 : 1.– என்று இங்குள்ளார்
அங்கே சென்று அடிமைசெய்ய ஆசைப்படுமாறு போலேகாணும், அங்குள்ளாரும் இவனுடைய சௌலப்யத்தைக் கண்டு
அநுபவிக்கவேணும் என்று ஆசைப்பட்டு வரும்படி.
எல்லாருக்கும் சுலபமான திருவடிகளை நாம் காணப்பெறுவது என்றோ?
பூமியை யடங்கலும் வருத்தம் இன்றி அளந்துகொள்ளக் கண்ட காட்சியிலே தலைமேலே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் படியான
இனிமையையுடைய திருவடிகளை.
மற்றொருபோது வேறுஒன்றனைப்பற்றிப் போகிறவர்கள் அல்லராதலின் ‘எந்நாளும்’ என்கிறார்.

இமையோர்கள் இனம் இனமாய் நின்று எந்நாளும் ஏத்தி இறைஞ்சி –
நித்தியசூரிகள் காலமெல்லாம் நின்று துதிசெய்து பின்னைத் திருவடிகளிலே விழுந்து,
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே திரள்திரளாய்.
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தான் –
மனம் வாக்குக் காயங்களாலே அடைந்து அடிமை செய்யாநிற்பர்கள்.
அன்றியே, மெய்யான நாவாலும் மனத்தாலும் வழிபடுவர்கள் என்றுமாம்.
வழிபடுதலாவது, வேறு பிரயோஜனங்களுக்கு உறுப்பாகாத கரணங்களைக்கொண்டு அடைந்து வணங்குதல்.
நித்தியசூரிகளானபோது, கைங்கரியமாகக் கொள்க. பிரமன் முதலான தேவர்களானபோது, உபாசனமாகக் கொள்க.
மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிகள் அடியேன் மேவுவதே –
குணங்களின் பிரகாசத்தாலே மாநசாநுபவத்தைப் பண்ணுவித்துப் பகட்ட ஒண்ணாது;
நான் உன் திருவடிகளைப் பத்தும் பத்தாக வந்து கிட்டி, பின்னைப் பிரிவோடே கூடி இராதபடி பொருந்தப் பெறுவது என்றோ? என்கிறார்.
ஓர் அடி விடில் சத்தை நீங்கி அன்றோ இவர் இருப்பது.

——————————————————————————————–

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடுபுள் ளுடையானே! கோலக் கனிவாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர்மருந்தே! திரு வேங்கடத்தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-

சர்வ சாதாரணமான -என்னுடன் –நித்ய ஸூ ரிகளும் -ரசம் அனுபவிப்பித்து -உன்னை அனுபவிக்க சாதனம் அனுஷ்டியாமல் –
அனுஷ்ட்டித்தார் பலம் தாழ்ந்து -கேட்பது போலே கேட்க்கிறேன் -க்ஷணம் காலமும் பொறுக்க மாட்டேன்
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!-தேவர் அமுதம் இல்லை -நிருபாதிக சேஷத்வம் -நித்ய அனுபவம் போக்யம்-
அனுபவிப்பித்து -நிர்வகித்து
கொடியா அடுபுள் ளுடையானே! கோலக் கனிவாய்ப் பெருமானே!-ஆஸ்ரித விரோதி நிரசன சீலன் -போக்யதா -அமுதம்
அனுபவிக்க வர்க்கமான ஸுந்தரியாதி பக்குவ பலம் போலே சிவந்த அதர சோபை -எல்லை காண ஒண்ணாத பெருமை
செடியார் வினைகள் தீர்மருந்தே! திரு வேங்கடத்தெம் பெருமானே!-போக பிரதி பந்தகங்கள் அடர்ந்த -பாபங்கள் அவை அடியாக வரும் துக்கங்கள்
-அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் கொடுக்க -அமிர்தமே மருந்தும் விருந்தும் -சந்நிஹிதன்
நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேனே-உனது திருவடிகளைக் காண நோற்றாமல்-சாதன அனுஷ்டானம்
-பண்ணாமல் நோற்றாரைப் போலே ஆற்றுவேன் தவித்தேன் –க்ஷணம் மாத்ரமும் ஆற்ற மாட்டு கிறிலேன் –

அடியேன் அடைந்து அநுபவிக்கின்ற அமுதே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! பகைவர்களைக் கொல்லுகின்ற கருடனைக் கொடியில் உடையவனே!
அழகிய கோவைக்கனிபோன்ற திருவாயினையுடைய பெருமானே! தூறுமண்டிக் கிடக்கின்ற தீவினைகளைத் தீர்க்கின்ற மருந்தே!
திருவேங்கடத்து எம்பெருமானே! ஒரு சாதன அநுஷ்டானத்தைச் செய்யாதிருந்துங்கூட, உனது திருவடிகளைக் காண்பதற்குக் கணநேரமும் ஆற்றமாட்டேன்.
அடுபுள் கொடியா உடையானே! என மாற்றுக. நோலாது உனபாதம் காண்கைக்கு நொடியார் பொழுதும் ஆற்றேன் என்க.
நோற்றல்-அவனைக் காண்டற்குரிய சாதனங்களைச் செய்தல். நொடித்தல் – இரண்டு விரல் நுனிகளைச் சேர்த்துத் தெறித்தல்.

“மெய்ந் நான் எய்தி” என்ற இந்த ஞானலாபம் உமக்கு உண்டாயிற்று அன்றோ; அது பலத்தோடே கூடியல்லது நில்லாதே அன்றோ;
ஆனபின்பு, அவ்வளவும் நீர் ஆறி இருந்தாலோ? என்ன,
‘உன்னுடைய இனிமை, அத்துணை கிரமப்பிராப்தி பார்த்திருக்கப்போகிறது இல்லை’ என்கிறார்.
உன்தனை ஆறி இருக்க நான் மாட்டுகிறிலேன்.
இங்கே திருவேங்கடமுடையனாக சந்நிஹிதனாக இருந்து வைத்தும் என்னை அங்கீ கரிக்காமல் -இருப்பதோ –

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! –
தேவஜாதிகளுடைய உப்புச்சாறு போலன்று; ஒரு திரளாய் அநுபவிக்குமது அன்று;
வேறு பிரயோஜனத்தைக் கருதாதவர்கள் அநுபவிக்கும் அமிருதமாயிற்று.
அமர்கின்ற -அர்ச்சை
மேவி -மற்றவற்றை த்யஜித்து
இமையோர் அதிபதியே –
இதனை உண்பதற்குக் கூட்டாவது ஒரு திரள் அங்கே உண்டாயிருக்கிறபடி.
அடு புள் கொடியா உடையானே-
விரோதிகளை அழித்தலையே இயல்பாகவுடைய பெரிய திருவடியைக் கொடியாக உடையவனே!
கோலம் கனிவாய்ப் பெருமானே –
அழகியதாய்க் கனிந்துள்ள திருவதரத்தின் சிவப்பைக் காட்டி என்னை அடிமை கொண்டவனே!
வாய்க்கரையிலே தோற்றார்காணும்.
அடியார்கட்கு இவ் வழகை அநுபவிப்பிக்கைக்குக் கொடி கட்டிக்கொண்டிருக்கிறபடி.
செடியார் வினைகள் தீர் மருந்தே-
பாபத்தோடே பொருந்தின தீயவினைகளாலுண்டான துக்கத்தைப் போக்குகைக்கு மருந்தானவனே! செடி – பாவம்.
ஆர் செடி வினை –பூரணமான பாபத்தால் உண்டான துக்கங்கள்
அது உண்பிக்கைக்கு விரோதிகளைப் போக்கும்படி.
அன்றிக்கே, தூறு மண்டின பாவங்களைப் போக்குகைக்கு மருந்தானவனே என்னுதல்.
அந்த அமுதந்தானே காணும் மருந்தாகிறது.மூன்றாந்திருவந். 4. –
“மருந்தும் பொருளும் அமுதமும் தானே”திருவாய். 9. 3 : 4– என்றும்,-சம்சாரம் போக்கும் மருந்தும் -மோக்ஷம் கொடுக்கும் பொருள் -ஸ்வத போக்யமும்
“மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு” என்றும் கூறுகிறபடியே அவன் தன்னை ஒழிய வேறு மருந்தும் இல்லையே.
மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன் அன்றோ.பெரியாழ்வார்திரு. 5. 3 : 6.–

திருவேங்கடத்து எம்பெருமானே –
அவ் வமுதம், உண்பார்க்கு மலைமேல் மருந்து அன்றோ.
அவ் வமுதம், உண்பார்க்குச் சாய்கரகம்போலே உயரத்திலே அணித்தாக நிற்கிறபடி.
1-இமையோர் அதிபதியாய், 2-கொடியா அடுபுள் உடையானாய், 3-செடியார் வினைகள் தீர்மருந்தாய்,
4-திருவேங்கடத்து எம்பெருமானாய், 5-கோலக் கனிவாய்ப் பெருமானாய், 6-அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்.
1-பரத்வம் -சொல்லி -2-விரோதி நிரசன பரிகரம் சொல்லி -3-விரோதி நிரசனத்தை சொல்லி -4–ஸுலப்யம் சொல்லி –5-அழகை சொல்லி
6–போக்யனாய் இருப்பத்தைச் சொல்லுவதே அறு சுவை அமுது
பட்டர், “நித்தியத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும்போது தோத்திரத்தை விண்ணப்பம்செய்வது’ என்று இருக்கின்றதே,
என்ன தோத்திரத்தை விண்ணப்பம்செய்வது?” என்ன, “
‘அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலைபோல் மேனி’ என்பன போலே இருக்கும் திருப்பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச்செய்தார்.
நொடியார் பொழுதும் –
நொடி நிறையும் அளவும்.
உன பாதம் காண நோலாது ஆற்றேன்-
உன் திருவடிகளைக் காண்கைக்கு ஒரு சாதன அநுஷ்டானம் செய்யாதிருக்க, கண நேரமும் ஆற்ற மாட்டுகிறிலேன். என்றது,
சாதனத்தைக் கண்ணழிவு அறச் செய்து பலம் தாழ்ப்பாரைப்போலே படாநின்றேன் என்றபடி.
அது இல்லாமை அன்றோ இவர் இங்ஙனே கிடந்துபடுகிறது. தனியே ஒரு சாதனம் செய்யுமவனுக்கு,
‘அது முடிவு பெற்றவாறே பெறுகிறோம்’ என்றாதல்,
‘அதிலே சில குறைவுகள் உண்டானமையால் அன்றோ பலம் தாழ்த்தது’ என்றாதல் ஆறி இருக்கலாம்;
அவனே சாதனமான இவர்க்கு விளம்பித்தால் ‘அவன் திருவருளும் ஏறிப்பாயாத படியானேனோ?’ என்னும் அச்சம் அன்றோ தொடர்வது.

——————————————————————————————————

நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8-

சாவோரதாரனான ஈஸ்வர அபிமானிகளும் -வேத அபஹார குரு பாதக -தைத்ய பீடாதி -சாதர ஆஸ்ரயம் பண்ணும் படி
ஸூலபனாக நிற்கும் நீ கிருஷ்ணனாக வந்த படி என்னிடம் வர வேண்டும்
நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்–சர்வஜிஞ்ஞான் சூஷ்ம தர்சியாய் -ஆரோக்யம் -பாஸ்கரன் -சங்கர -ஞானம்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்-விஷ கண்டன் -ஜகத் பிரதானன ருத்ரன் -தாஜ் ஜனகன் ஸ்ருஷ்டுத்வாதி
ஞான பூர்த்தி நான் முக்கண் -தரை லோக்யாதிபதிபதி
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!-செல் மீன் வகை கண்ணை உடைய உமா சரஸ்வதி சசி
-காந்தசய –த்வத் தாசீ தாசீ கண -பரிசார வர்த்திகள்மா-லாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே-
கரிய நிறம் உடையவன் -சர்வரையும் மயக்கி -வந்தால் போலே உன்னை ஒழிய செல்லாத படி -அடியேன் இடம் வர வேண்டும் –

உனது திருவடிகளைக் காண்கைக்குரிய சாதனம் ஒன்றையும் செய்யாமலே வைத்தும் ஆற்ற மாட்டுகின்றிலேன் என்று, நுண்ணிய அறிவினையும்
விஷம்பொருந்திய கழுத்தினையுமுடைய சிவபெருமானும் குணங்கள் நிறைந்த பிரமனும் இந்திரனும் ஆகிய தேவர்கள்,
சேல்போன்ற கண்களையுடைய பெண்கள் பலரும் தங்களைச் சூழ்ந்து நிற்க வழிபாடு செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே!
எல்லாரையும் மயக்கிக் கிருஷ்ணனாய் வந்தாற்போலே அடியேன் பக்கலிலும் வரவேண்டும்.
நோலாது ஆற்றேன் உன பாதம் காண” என்பது, “நீலார் கண்டத்தம்மான்” முதலாயினோர்கட்கு அடைமொழி.
அம்மானும் நான் முகனும் இந்திரனும் பலர்சூழ விரும்பும் திருவேங்கடம் என்க. மால் – கருமை; ஈண்டு,
கரிய நிறத்தையுடைய கிருஷ்ணனுக்காயிற்று. மாலாய் வந்தாய்போலே அடியேன்பால் வாராய் என்க. வாராய்; விதிவினை.

‘உன்னைச்சேர்தற்கு என் தலையில் ஒரு சாதனம் இல்லை’ என்னாநின்றீர்;
‘இது ஒரு வார்த்தையோ! சாதனத்தைச் செய்தார்க்கு அன்றிப் பலம் உண்டோ?’ என்ன,
‘அவர் அவர்களுடைய விருப்பங்களைப் பெறுதல், சாதன அநுஷ்டானத்தாலே என்றிருக்கும் பிரமன் முதலாயினோர்களுக்கும்,
கிட்டினால் பாசுரம் இதுவே அன்றோ?’ என்கிறார்.
தந்தாமுடைய ஆகிஞ்சந்யத்தை முன்னிடுமத்தனைபோக்கி, ஒரு சாதனத்தைச் செய்து பெறலாம்படியோ நீ இருக்கிறது?

நோலாது ஆற்றேன் உனபாதம் காண என்று நுண் உணர்வின் நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் விரும்பும்திருவேங்கடத்தானே –
உன் திருவடிகளைக் காண்கைக்கு, சாதன அநுஷ்டானம் பண்ணாதே இருந்து வைத்து உன்னை ஒழிய ஆற்றமாட்டேன் என்றாயிற்று,
அவர்கள் தனித்தனியே சொல்வது. ஒரு வாணாசுரனுடைய போரிலே தோற்றுப் போக்கடி அற்றவாறே இங்ஙனே வந்து விழுவர்கள்.
இராசத தாமதகுணங்கள் தலை எடுத்தபோது ‘ஈசுவரோஹம்’ என்று இருப்பார்கள்;
முட்டினவாறே “கிருஷ்ண! கிருஷ்ண! உன்னைப் பிறப்பில்லாதவனாகவும் எல்லார்க்கும் மேலானவனாகவும்
புருடோத்தமனாகவும் அறிவேன்” என்று துதிசெய்யத் தொடங்குவர்கள்

க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்
பரேஸம் பரமாத்மாநம் அநாதி நிதனம் பரம்.-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.

போதகத் தானும்வெண் போதகத் தானும் புராந்தகனும்
தீதகத் தானது நீர்தரும் காலைத் திருவரைசேர்
பீதகத் தாய் அழ கா அரு ளாய்என்பர் பின்னைஎன்ன
பாதகத் தான் மறந் தோதனி நாயகம் பாலிப்பரே.– என்பது, அழகரந்தாறு, 90.

“ஓ நாதனே! அசுரசேனைகளால் வெல்லப்பட்ட எல்லாத் தேவர்களும் நமஸ்காரத்தைச் செய்கின்றவர்களாய் வந்து
உன்னைச் சரண் அடைந்தார்கள்” என்கிறபடியே
ப்ரணாம ப்ரவணா நாத தைத்ய ஸைந்ய பராஜிதா:
ஸரணம் த்வாம் அநுப்ராப்தா: ஸமஸ்தா தேவதா கணா:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 65
விஷத்தைக் கண்டத்திலே தரித்த ஆற்றலுடையவனாய் அதனாலே உலகத்திற்குப் பிரதானனாக அபிமானித்திருக்கும் சிவனும்,
அவனுக்கும் தந்தையாய் அவனிலும் ஞானத்திலும்சக்தியிலும் நிறைந்தவனான பிரமனும்,
மூன்று உலகங்கட்கும் அரசனான இந்திரனும்;
“அவன் பிரமன், அவன் சிவன், அவன் இந்திரன்” என்பது நாராயண அநுவாகம்.
“ஸபிரஹ்மா ஸ்ஸிவ: ஸேந்த்ர:” என்பது, நாராயணாநுவாகம், 11.
–இங்ஙனே இருக்கச் செய்தேயும், அஹிர்ப்புத்ந்ய ஸம்ஹிதையிலே இவர்களுடைய வாக்கியங்களைப்
பிரமாணங்களாகக் கொண்டு போராநின்றோமே? என்னில்‘இவர்களுடைய வாக்கியங்களை’ என்றது,
“அஹமஸ்மி அபராதாநாம் ஆலய:” என்பது போன்றவைகளை.
“சத்துவம் தலை எடுத்தபோது சொல்லுமவை எல்லாம் கொள்ளக்கடவமோம்; இவை கைக்கொண்டோம் என்னா,
இவர்கள் தாம் உத்தேசியர் ஆகார்கள்;

விலையான திலைஎன்று நீதந்த முத்தம்
வேய்தந்த முத்தாகில் வெற்பா வியப்பால்
இலையார் புனற்பள்ளி நாரா யணன்பால்
எந்தாய்! அரங்கா! இரங்காய் எனப்போய்த்
தலையால் இரக்கும் பணிப்பாய் சுமக்கும்
தன்தாதை அவர்தா மரைத்தாள் விளக்கும்
அலையாறு சூடும் புராணங்கள் பாடும்
ஆடும் பொடிப்பூசி ஆனந்த மாயே.–என்பது, திருவரங்கக்கலம்பகம், 61.

‘காக்கைவாயிலும் கட்டுரை கொளவர்’-பெரியாழ்வார் திருமொழி, 5. 1 : 1.- என்று உண்டே” என்று பட்டர் அருளிச் செய்வர்.

ஓர் ஆழ்வார்,
பிதிரு மனமில்லேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் – அதிரும்
கழற்கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழக்காதல் பூண்டேன் தொழில்.-என்பது, நான்முகன் திருவந்தாதி. 84.

‘பிதிரும் மனம் இலேன் – பேதிக்கப்பட்ட நெஞ்சினையுடையேன் அல்லேன்;
பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன் – சிவன் எனக்கு ஒத்தவன்;
அவன் எனக்கு நேரான் – அவனும் எனக்கு ஒத்தவன் அல்லன்; அது என்? என்னில்,
அதிரும் கழல் கால மன்னனையே கண்ணனையே நாளும் தொழக் காதல் பூண்டேன் தொழில் –
பகவத் விஷயத்தில் நெஞ்சை வைத்து அநுபவிக்கையே யாத்திரையான எனக்கு, அந்யபரனானவன் ஒப்பாகப் போருமோ?’
‘குறைகொண்டு – தன் வெறுமையைக் கைதொடு மானமாகக் — சகாயமாகக் -.கொண்டு,-இவர்களும் வெறுமையைக் கொண்டு — ஆகிஞ்சன்யம் –
நான்முகன் குண்டிகைநீர் பெய்து – நினைவறத் திருவடி சென்று கிட்டிற்று, உபகரணம் பெற்றிலன்,
தர்மதேவதையானது தண்ணீராய் வந்து தங்கிற்று, அதனைக்கொண்டு,
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி – வேதாந்தங்களில் பகவானுடைய பரத்துவத்தைச் சொல்லுகின்ற
–நாராயண அநுவாகம் புருஷ ஸூ க்தம் -மந்திரங்களைக் கொண்டு துதிசெய்து.
கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் – நான்முகன் திருவந். 9.

அடக்கமில்லாமல் செருக்குக்கொண்டு திரியும் பிள்ளைகள் தலைகளிலே ஸ்ரீ பாத தீர்த்தம்கொண்டு தெளிப்பாரைப் போலே’.
நுண் உணர்வில்-சத்துவம் தலையெடுத்தபோது சொல்லுவது இதுவே.
சத்துவகுணத்தினால் ஞானம் நன்கு உதிக்கின்றது என்பதே அன்றோ பிரமாணம்.
நீலார் கண்டத்து அம்மானும் –
விஷத்தைக் கண்டத்திலே தரிக்கையாலே ஈசுவரனாகத் தன்னை மதித்துக்கொண்டிருக்கின்ற சிவனும்.
நிறை நான்முகனும் – அவனுக்குந் தமப்பனாய் நிறைந்த ஞானத்தையுடையனான பிரமனும்.
இந்திரனும்-இவர்களோடு ஒக்கப் படைத்தல் அழித்தல்களில் ஓர் இயைப் இன்றிக்கே இருக்கச்செய்தே
“அவன் பிரமன், அவன் சிவன், அவன் இந்திரன்” என்று கொண்டு ஒக்க எண்ணலாம்படியான இந்திரனும்.

சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே –
தந்தாமுக்கு ஓர் உயர்த்தி உள்ளபோது பெண்கள் முன்னிலையில் ஓர் எளிமை தோற்ற இரார்களே அன்றோ;
ஆபத்து வந்தவாறே, மணாட்டியார் கழுத்திலும் தங்கள் கழுத்திலும் கப்படம் கட்டிக் கொண்டு வந்து விழத் தொடங்குவர்கள்.
“சிவபெருமான் இருகரங்களையும் கூப்பிக்கொண்டு விஷ்ணுவைப்பார்த்து
விஷ்ணுவின் பெருமையைப் பார்வதியோடுகூடச் சொல்லுதற்கு விரும்பினான்” என்றும்,
“அஞ்சலிம் ஸம்புடம் க்ருத்வா விஷ்ணு முக்திஸ்ய ஸங்கர:
உமயா ஸார்த்தம் ஈஸாநோ மாகாத்ம்யம் வக்துமைஹத”-என்பது, ஹரிவம்சம், 279 : 15 1/2.

“ஜகந்நாத! நாசம் அடைகின்ற எனக்குக் கிருபைசெய்யும்; இந்தக் காளியன் உயிரை விடுகிறான்;
எங்களுக்குக் கணவனுடைய பிச்சையானது கொடுபடவேண்டும்” என்றும்,
“தத: குரு ஐகத்ஸ்வாமிந் ப்ரஸாதம் அவஸீதத:
பிராணாந் த்யஜதி நாகோயம் பர்த்ருபிக்ஷா ப்ரதீயதாம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 7 : 57.

“நதிகளுக்குப் பதியாகிய சமுத்திரராஜன் தன்னைக் காண்பித்தான்” என்றும்,
தர்ஸயாமாஸ ச ஆத்மாநம் ஸமுத்ர: ஸரிதாம்பதி:”-என்பது, சங்க்ஷேப ராமா. 79.

“சக்கரவர்த்தியின் குமாரனே! கோபத்துக்குக் காரணம் என்ன?” என்றும் சொல்லுகிறபடியே
கிம் கோபமூலம் மநுஜேந்த்ரபுத்ர” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 33 : 40,

நீலார் கண்டத்து அம்மானும் –
விஷத்தைக் கண்டத்திலே தரிக்கையாலே ஈசுவரனாகத் தன்னை மதித்துக்கொண்டிருக்கின்ற சிவனும்.
நிறை நான்முகனும் – அவனுக்குந் தமப்பனாய் நிறைந்த ஞானத்தையுடையனான பிரமனும்.
இந்திரனும்-இவர்களோடு ஒக்கப் படைத்தல் அழித்தல்களில் ஓர் இயைப் இன்றிக்கே இருக்கச்செய்தே
“அவன் பிரமன், அவன் சிவன், அவன் இந்திரன்” என்று கொண்டு ஒக்க எண்ணலாம்படியான இந்திரனும்.
வந்து விழுவர்களே அன்றோ. அவர்களுக்கு அடையலாம்படி சுலபனாய்வந்து நிற்கிறானாதலின்,
‘திருவேங்கடத்தானே’ என்கிறார்.
மாலாய் மயக்கி –
“மயங்கல் கூடலும் கலவியும்”. ‘மாலாய்-நான் மயங்கும்படிக்குத் தகுதியாக வரவேணும் என்கிறார் என்றும்,
அன்றிக்கே, மாலாம்படி மயக்கிக்கொண்டு வரவேணும் என்கிறார்’ என்றும் சொல்லுவர்கள்;
-ஸம்ஸலேஷிக்கும் படி வர வேண்டும் -நீ வ்யாமோகத்துடன் வர வேண்டும் – வ்யாமோஹம் என்னிடம்உ ண்டாக்கிக் கொண்டு வர வேண்டும் –
அவை அல்ல பொருள். மால் என்று கருமையாய், அதனால் நினைக்கிறது கிருஷ்ணனை என்கையாய்,
கிருஷ்ணனாய்க் கொண்டு உன் குணங்களாலும் செயல்களாலும் அந்த அவதாரத்தில் உள்ளாரைப் பிச்சு ஏற்றிக்கொண்டு
வந்தாற் போலே எனக்காகவும் ஒருவரத்து வரவேணும் என்கிறார்;
“மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை” என்று சொல்லுகிறபடியே.-நாய்ச்சியார் திருமொழி, 14 : 3.
மாலேசெய்யும் மணாளனை – தன் வியாமோகத்தைக் காட்டி இத்தலைக்கு-வியாமோகத்தை விளைக்குமவனை. மாலாய் – கிருஷ்ணனாய்.-
பித்தே வடிவாக உள்ள குண பூர்ணன் -மாலாக்கி சாம்யா பத்தி அளிப்பான்-

———————————————————————————————

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய்போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-

அதிசயத போக்யமான திவ்ய அவயவ சோபை -க்ஷணமும் பிரிய மாட்டேன்
வந்தாய் போலே வாராதாய்! வாராதாய்போல் வருவானே!-
வைகுண்டம் நுழைந்து சேவிக்க போகிறோம் -சேவை கிடைப்பது அவன் திரு உள்ளப்படியே தானே –
அனாசரிதற்கு கை புகாமல் -ஆஸ்ரித விஷயத்தில் ஆகிஞ்சன்யம் காட்டி அதற்காகவே வந்து -இஷ்ட விநியோக அர்ஹமாம் படி –
மாலாகாரர்-கையாளாக இருக்கும் குறும்பு அறுத்த நம்பி –
இப்படி தான் நடப்பான் என்று கணிக்க முடியாத வியக்தி –
செந்தாமரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!-சிவந்த தாமரை -ஜிதம் என்னும் படி பண்ணும்
கனி போன்ற மாம் ஏகம் சரணம் வ்ரஜ -சொல்லும் திரு ஆதாரம்
ஆஸ்ரிதரை எடுத்து அணைக்கும் திருவடி அக்ரூரர் விதுரர் அணைத்த
நித்ய போக்யமான இருப்பை பிரகாசிப்பித்து தாரகன்
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திரு வேங்கடத்தானே!-ரத்னம் ஒளிகள்-இரவைப் பகல் ஆக்கி -இன்றும் காணலாம் –
அல்லும் இரவை -சந்நிஹிதன் ஆனவன்
அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே-நிரதிசய போக்யன் -அநந்ய ரக்ஷன் நான் அத்யந்த பரதந்த்ரன்
இறையும் அகல ஷமன் அல்லேன் ஆர்த்திக்கு மேலே அபேக்ஷிக்கவும் வேண்டுமோ -அந்தோ
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -இஷ்டம் கொடுப்பது என்றும் சித்தம் -அநிஷ்டம் தடையாய் இருந்ததே —

வந்தவனைப் போன்றிருந்து வாராமல் இருப்பவனே! வாராதவனைப் போன்றிருந்து வருகின்றவனே! செய்தாமரைமலர் போன்ற திருக்கண்களையும்
சிவந்த கோவைக்கனிபோன்ற திருவாயினையும் நான்கு திருத்தோள்களையுமுடைய அமுதம் போன்றவனே! என் உயிரானவனே!
சிந்தாமணி என்னும் இரத்தினங்களின் ஒளியானது இருட்டினை நீக்கிப் பகலாகச் செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே!
ஐயோ! அடியேன் உன்னுடைய திருவடிகளைச் சிறிது பொழுதும் நீங்கமாட்டுகின்றிலேன்.
சிந்தாமணி – ஒருவகை இரத்தினம். பகர் – ஒளி. அல் – இருள். இறையும் அகலகில்லேன் என்க. இறை – சிறிதுபொழுது.

தாம் விரும்பியபோதே காணப் பெறாமையாலே இப்போதே உன்னைக் காணாவிடில் தரிக்க மாட்டேன் என்கிறார்.

வந்தாய்போலே வாராதாய் –
மானச அநுபவத்தில் உண்டான கரைபுரட்சிதான் ‘புறத்திலே கலவியும் பெற்றோம்’ என்று கொண்டு மனநிறைவு பிறக்கும்படியாய்,
அதனை ‘மெய்’ என்று அணைக்கக் கணிசித்தால் கைக்கு எட்டாதபடியாயிருக்கை.
வாராதாய் போல் வருவானே –
ஒரு நாளும் கிட்டமாட்டோம் என்று இருக்கச் செய்தே கடுகக் கைப்புகுந்து கொடு நிற்கும் என்கை.
அன்றிக்கே, அடியர் அல்லாதார் திறத்தில் ‘கைப் புகுந்தான்’ என்று தோற்றி இருக்கச் செய்தே புறம்பாய்,
அடியார்கட்கு ‘இவன் கிட்ட அரியன்’ என்று இருக்கச்செய்தே உட்புகுந்து இருக்கும்படியைச் சொல்லிற்றாகவுமாம்.
செந்தாமரைக்கண் செம்கனிவாய் நால்தோள். அமுதே –
தாபங்கள் எல்லாம் ஆறும்படி குளிர்ந்த திருக்கண்களையுடையவனுமாய்,
சிவந்த கனிந்திருந்துள்ள திருவதரத்தையுடையனுமாய், கல்பக தரு பணைத்தாற்போலே இருக்கிற
நான்கு திருத்தோள்களையுடையனுமாய் இனியனு மானவனே!
எனது உயிரே –
இந்த வடிவழகை என்னை அநுபவிப்பித்து, பிரிந்த நிலையில் நான் உளன் ஆகாதபடி செய்தவனே!

சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே –
விலக்ஷணமான இரத்தினங்களினுடைய ஒளியானது அல்லைப் பகல் செய்யாநின்றதாயிற்று; என்றது,
இரவு பகல் என்ற வேறுபாட்டினை அறுத்துக்கொண்டிருக்கையைத் தெரிவித்தபடி.
“மணிகளின் ஒளியால் விடிபகல் இரவு என்றறிவரிதாய” – பெரியதிருமொழி, 4. 10 : 8.-என்னக் கடவதன்றோ.
இதனால்நினைக்கிறது, “அந்த விண்ணுலகில் காலமானது ஆட்சி புரிவதாய் இல்லை”
“ந கால: தத்ரவை ப்ரபு:”-எனகிற தேசத்தே சென்று அநுபவிக்கும் அநுபவத்தை இங்கே அநுபவிக்கக் காணும் நினைவு.
அந்தோ –
போக்கியமும் குறைவற்று, அவன்தானும் அண்மையனாய், எனக்கு ஆசையும் மிகுத்திருக்க,
கிட்டி அநுபவிக்கப்பெறாது ஒழிவதே என்கிறார்.
அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே –
என் சொரூபத்தைப் பார்த்து என் நிலையைப் புத்தி பண்ணாய்.
காணா நிற்கச்செய்தே, அது வளர்வதற்குக் கண்ணை மாற வைக்கிலும் பொறுக்க மாட்டேன்.

———————————————————————————————

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-

த்வயம் -குறைகளும் இல்லா சீர்மை -இரண்டு பதிகம் -இரண்டு பாசுரம் ஆண்டாள் -திருமாலை ஒரே பாசுரம் –
ஏகாந்தம் புருஷகார யோகம் -குண யோகம் -ஆஸ்ரய நீயத்துக்கு -இவை இரண்டும் வேண்டும்
அநந்ய கதி முன்னிட்டு -சக்ரமமாக சரணாகதி அனுஷ்டிக்கிறார்
அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!-பிரபா -பிரபாவான் -புரியாதா போலே ஸ்வரூப சம்பந்தம்
-போக்யதயாலும் -க்ஷணம் மாத்ரமும்-விஸ்லேஷிக்க -மணம் அழகு மார்த்தவ போக்யத்வம் உடைய பருவம் -மங்கை -வாலப்யாதி சாயம் -ஹரி வல்லபா –
தான் ஆபி ஜாதியமும் -சிறந்த ஆத்ம குணம் -ஆபி ரூப்யம் கிடக்கச் செய் தேயும் -ஸ்ரீ பீடம் ருக் வேதம் -ஏக தேசம் –
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!-இவளோட்டை சேர்த்தி அடியாக உதிக்கக் காட்டுவதாய் -ச்வாதந்தர்யம் விலக்கி
நிரவதிக வாத்சல்ய பிரபையை-ஆஸ்ரித தோஷம் பார்க்காமல் -குணாந்தரங்களில் சேர்க்க முடியாத புகழாய்-
சப்தமே இல்லாமல் -தப்பாக பாடினாலும் குணமாக்க கொள்ளும் ஸ்வ பாவந் என்று காட்ட –
ஸ்வாமி சொத்தை காக்க -பிராமண பிரசித்தமான த்ரிவித சேதன அசேதனங்கள் உலகம் மூன்று உடையாய்
மேன்மை மட்டும் இல்லாமல் அத்யந்த நீசனான -ஹேயனான என்னையும் ஸுசீல்யம் -அங்கீ கரித்து-சீலத்துடன் காணும் படி ஸுலப்யம் –
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!-ஞானம் பிரேமம்-இவற்றுக்கு நிகர் இல்லாத கைங்கர்ய நிஷ்டர்
குண நிஷ்டர் -மனன சீலர் -அபிநிவேசம் -வாத்சல்யாதி குணங்களை அனுபவிக்கும் விருப்பம்
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.-உபாயாந்தரங்கள் -ரக்ஷகாந்தரங்கள் -ஒன்றும் இல்லா –
அநந்ய சரண்யன் பரதந்தர்யன் -கீழ் யுக்தமான புருஷகார குண யோகங்கள் உடன் உடைய உன்னுடைய திருவடிகளின் கீழே
ரேகாவத் -பாத ரேகை போலே அந்தர் கதையாய் -அடிக்கீழ் -அநந்ய பிரயோஜனத்வ விவசாய விசிஷ்டானாய் ஆஸ்ரயித்து விட்டேன் –

அகலகில்லேன் -இறையும்– ஸ்ரீ சப்தம் -சேவாகரண -நித்ய அநபாயத்வம்
சேவ்யத்தைக்கு யோக்யதையான மார்த்தவாதி யோகம் -அலர் மேல் மங்கை
மங்கை -சேவாகரண அடியான வாலப்யம்
உறை மார்பா -மதுவின் அர்த்தம் நித்ய யோகம்
நிகரில் புகழாய் தொடங்கி –மாதா பிதா –நிவாஸா நாராயண சப்தார்த்தம் ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாத குணங்கள் -நாரா சப்தார்த்தம்
வாத்சல்யம் -ஸ்வாமித்வம் ஸுலப்யம் ஸுசீல்யம்
புகல் ஒன்று இல்லா -அதிகாரி விசேஷணம் ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் –
அடியேன் -பிரபத்யே -கிரியா பதம் உத்தமன் -பற்றுகிறேன்-அஹம் நான் அடியேன் ஆனேன் என்பதே சரணாகதன்
அடிமைத்தனம் அறிந்து புகுந்தேன் –
உன் அடிக்கீழ் -த்வயத்தில் இல்லையே -தவ -இதம் அஷ்ட பதம் -ஸ்ரீ மன் நாராயண -பிரித்து பார்த்து 8 பதங்கள் –
முன்னாடி வைத்து சம்போதானம் -தவ சப்தம் சேர்த்து
இங்கே சம்போதானம் சம்புத்யர்த்த யோஜனம் –
அடிக்கீழ் என்கையால் சரண சப்தார்த்தம் –
அமர்ந்து -கிரியா பதத்தில் உபாய உபேய அத்யாவசிய -உறுதி -உபசர்க்கம் பதயே -நிரம்ப பிடித்தேன் பிரபத்யே
புகுந்தேன் கிரியா ரூபம் பதயே -ஆச்ரயணம்
இறந்த காலம் -பூதார்த்த நிர்தேசம் -பிரபத்யே நிகழ் காலம்
ஸக்ருத் உச்சாரண பவத்
சம்சார பயத்தால் பூர்வ பிரபத்யே நினைக்க வேண்டும் என்று அர்த்தம் இழுத்து சொல்ல வேண்டாமே
பரம போக்கியத்துக்காக சொல்வேன் அனுஷ்டானாமாக இல்லை –
பூர்ண சரணாகதி -உத்தர வாக்யார்த்தம்
லஷ்மீ சம்பந்தம் குண யோகம் பிராப்ய அன்வயமாய் இருக்கையாலும் –
ஸ்ரீ மதே நாராயண -சப்தார்த்தம் -கைங்கர்யம் ஏற்றுக் கொள்ளவும் -ஆஸ்ரித கார்ய ஆபாதகம் குணங்கள்
அடியேன் -அநந்யார்ஹன் -சேஷன் அநந்ய சரண்யன் அநந்ய போக்யன் -சித்திக்கும் -ஆய அர்த்தம்
அமர்ந்து பிரயோஜன நாந்தரம் இல்லாமை —நிராசம் ஸூ சிதம்
புகுந்தேன் -கதி வசனம் -பிராப்தி -அடைந்தேன் -மன விருப்பம் அடைந்தேன் -கதி -புருஷார்த்தமாக அடைந்தேன் -பிராப்திக்கும் ஸூ சகம்
பிராதான உபாய வாக்யம் – வாக்ய சேஷ உத்தர வாக்கியமும் அந்தரகதம்
வாக்ய த்வயார்த்தம் பூர்ண சரணாகதி -ச பிரகாரமாக லஷ்மீ குண விசிஷ்டமாகசுவீ கரித்து அருளுகிறார் –

சிறிது நேரமும் விட்டுப் பிரியேன் என்று பெரிய பிராட்டியார் நித்தியவாசம் செய்கின்ற திருமார்பினையுடையவனே! ஒப்பில்லாத புகழையுடையவனே!
மூன்று உலகங்களையுமுடையவனே! என்னை ஆள்கின்றவனே! ஒப்பில்லாத நித்தியசூரிகளும் முனிவர்கள் கூட்டங்களும் விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! வேறுகதி ஒன்றும் இல்லாத அடியேன் உனது திருவடியிலே பொருந்தி அடைந்தேன் என்கிறார்.
அலர்மேல் மங்கை இறையும் அகலகில்லேன் என்று உறை மார்பா என்க.
அலர்மேல் மங்கை – தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியார். அமரர் – தேவர்களுமாம்.

தம்முடைய அபேக்ஷிதம் சடக்கெனச் சித்திக்கைக்காகப் பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக்கொண்டு
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
மேலே ஒன்பது திருப்பாசுரங்களாலும் சரண்யனான சர்வேசுவரனுடைய சொரூபத்தைச் சொன்னார்.
இதில் தம்முடைய சொரூபம் சொல்லிச் சரண்புகுகிறார்.
மேலே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய ஆகிஞ்சந்யத்தையும், சேஷத்துவத்தையும்,
அவனுடைய சரண்யதைக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடு போந்தார். -அசரண்ய சரண்யன் என்பதால் சொல்லி-
இங்கு அது தன்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லிச் சரணம் புகுகிறார். -புனருக்தி தோஷம் இல்லை –
பேற்றுக்கு உடல் -வெறுமை ஸ்வரூபம் -இரண்டும் பிரபத்திக்கு பரிகரம்–

இத்திருப்பாசுரத்திற் சொல்லப்படுகிற சரணாகதியினுடைய சீர்மையை அருளிச்செய்கிறார் ‘இத்திருப்பாசுரத்தை’ என்று தொடங்கி. என்றது,
“அலர்மேல்மங்கை” என்கையாலே, “ஸ்ரீ” என்ற சொல்லின் பொருளும்,
“அகலகில்லேன்” என்கையாலே, “மத்” என்ற சொல்லின் பொருளும்,
“உறைமார்பா” என்கையாலே, நித்திய யோகமும்,
“நிகரில் புகழாய்”என்றது முதல் “திருவேங்கடத்தானே” என்றது முடிய “நாராயண”என்ற சொல்லின் பொருளும்,
“புகல் ஒன்றில்லா அடியேன்”என்கையாலே, உத்தமனால் (உத்தமன் – தன்மையிடம்) போதருகின்ற அதிகாரியும்,
“உன்னடிக்கீழ்” என்கையாலே, “சரணௌ” என்ற சொல்லின்பொருளும்,
“அமர்ந்து புகுந்தேனே” என்கையாலே,“பிரபத்யே” என்ற சொல்லின்பொருளும் கூறியுள்ளதைத் தெரிவித்தபடி.
“சரணம்” என்ற சொல்லின் பொருளைத் தெரிவிக்கும் பதம்திருப்பாசுரத்தில் இல்லையே? எனின்,
“புகுந்தேன்” என்றதனால்“சரணம்” என்ற சொல் கோல்விழுக்காட்டாலே வருவது ஒன்றாம்ஆதலின், தனியே கூறிற்றிலர் என்க.
இப்பொருள் தன்னையே விவரணம்செய்கிறார் ‘“அகலகில்லேன் இறையும்” என்று’ என்றது முதல்‘பதத்தோடே சேரக்கடவனவாம்’ என்றது முடிய.

பிரியாமல் இருப்பதும் நித்ய யோகமும் கொஞ்சம் வாசி -கோயிலே கதி என்றால் -கோயில் சாத்தின பின்பு -இருக்க முடியாதே –
சரணாகதி பலித்தே தீரும் -பிராட்டி இருந்தால் தான் பலிக்கும் -எப்பொழுதும் பண்ணலாம் என்றால் நித்ய யோகம் இருக்க வேண்டுமே

இத் திருப்பாசுரத்தை, துவயத்தில்பதங்களோடு ஒக்க யோஜித்துத் தலைக்கட்டக்கடவது.
அதில் அர்த்தத்தால் பொதருகின்ற ‘அஹம்’ என்ற சொல்லின்பொருளை இங்கு ‘அடியேன்’ என்கிறது.-பிரபத்யே -ஆர்த்தமாக அங்கு –
அடியேன் -த்வயத்துக்கு அடையாளம் சொல்லும் ஸ்லோகத்தில் உண்டே -லக்ஷணம் ஸ்லோகம் –
அஹம் அஸ்மி அபராத ஆலய அகிஞ்சனன் அகதி த்வயமேய உபாய பூத பிரார்த்தனா மதி சரணாகதி –

அகலகில்லேன் இறையும் என்று –
இது, அகன்று இருந்து சொல்லுகிற பாசுரமும் அன்று; எப்பொழுதும் கூடியிருக்கச்செய்தே யாயிற்று
‘இறையும் அகலகில்லேன், இறையும் அகலகில்லேன்’ என்று உரைப்பது.
நித்தியாநுபவம் பண்ணுவார்க்கு எல்லாம் பாசுரம் இதுவே. ‘நித்தியாநுபவம்பண்ணுவார்க்கெல்லாம்’ என்றது,
“நச அஹம்அபி ராகவ – இராகவனே!உன்னைப் பிரிந்தால் நானும் இல்லை” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
நாட்டாருடைய அகலகில்லேன் போல் அன்று, இவளுடைய அகலகில்லேன்; அது கர்மங் காரணமாக வருவது;
இது விஷயங் காரணமாக விளையுமது.
அலர்மேல்மங்கை –
அவனை, “பிரிந்து கணநேரமும் ஜீவித்திருக்கமாட்டேன்” என்னப் பண்ணவல்ல இனிமையையும் பருவத்தையுமுடையவள்
“நஜீவேயம்க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10.-ஸ்ரீராமபிரான் கூறியது.
பரிமளந்தான் ஒரு வடிவு கொண்டாற்போலே இருக்கை.
உறை மார்பா –
இதனால், நித்திய யோகம் சொல்லுகிறது.
எனக்கு ஒருகாலம் பார்த்துச் சரணம் புகவேண்டும்படியாயோ இருக்கிறது? என்றது,
இத் தலையில் குற்றங்களையும் ஈசுவரனுடைய சுவாதந்திரியத்தையும் நினைத்துப் பிற்காலிக்க வேண்டாதபடியாயிருக்கையைத் தெரிவித்தபடி.

“ஒருநாள் பட்டர், பிள்ளை அழகிய மணவாள அரையர்க்குத் துவயம் அருளிச்செய்கைக்காக ‘எல்லாரும் செல்லுங்கோள்’ என்ன,
அஷட் கரணமாக சொல்ல வேண்டுமே -மூன்றாம் ஆள் கேட்க்க கூடாதே —
நஞ்சீயரும் எழுந்து சென்றுபோய், ‘நம்மை ‘இராய்’ என்றருளிச்செய்திலர்’ என்று வெறுத்திருக்க,
அப்பொழுதே ‘சீயர் எங்குற்றார்?’ என்று கேட்டருளித் தேடி அழைத்துக் கூட வைத்துக் கொண்டிருந்து
துவயத்தை அருளிச்செய்கையில் அருளிச்செய்தவார்த்தை” என்று சீயர் அருளிச்செய்வர்.
“இந்த ஆத்ம வஸ்து சேஷமாகில் அவன் சேஷியாகில் இங்குப் பிராட்டி சம்பந்தத்தால் செய்கிறது என்?” என்று கேட்க
“அது இருக்கிறபடி கேளீர், இராவணனுக்கும் காகத்துக்கும் சம்பந்தமும் செயலும் ஒத்திருக்க,
இனி, இராவணன் சாபத்தாலே கிட்டமாட்டாதே இருப்பது ஒன்று உண்டே அன்றோ;
அங்ஙன் அன்றிக்கே, தாய் பக்கல் குற்றத்தில் கைதொடனாயிருக்கத் தலைகொண்டு தப்பினான் அன்றோ, அவள் சந்நிதி உண்டாகையாலே.
அவள் கடக்க இருக்கையாலே இராவணன் தலை அறுப்புண்டான்.”
போக்கு அற்றுச் செயல் மாண்டு நின்ற நிலை அவனுக்கும் ஒக்கும் அன்றோ;
இங்ஙனே இருக்கச்செய்தேயும் காரியகரமாயிற்றது இல்லை அன்றோ, அவனுக்குப் பிராட்டி சந்நிதி இல்லாமையாலே.
இனித்தான், தாயும் தந்தையுமானால் தந்தையைப்போல் அன்றே, மக்கள் பக்கல் தாய் இருக்கும்படி;
இவன் செய்த குறைகளைத் தான் காணாக்கண் இட்டிருக்கை அன்றிக்கே, தந்தையிடத்தும் மறைத்துக் காட்டுவாள் ஒருத்தி அன்றோ.
ஆகையால் அன்றோ துவயத்தில் பின்பகுதியில்அவனோடு ஒப்புச்சொல்லி, முன்பகுதியில்,
புருஷகாரமாகையாகிற நீர்மையில் ஏற்றம் சொல்லுகிறது. தொட்டாரைத்தொட்டு “குற்றம் செய்யாதார் யாவர்” என்னக்கடவ இவள்,
“நகஸ்சிந் ந அபராத்யதி” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 44.-‘நம்மை ஒரு காரியத்தில் ஏவுவது காண்’ என்று
காலத்தை எதிர்நோக்கி இருக்குமவனைப் பெற்றால் விடாளே அன்றோ. தன் வார்த்தை கேளாதார்க்கும் கூட
“ஆடவர்களுள் ஏறு போன்றவரான இந்த இராமபிரான், இராச்சியத்தை விரும்புகிறவனாயிருக்கிற உன்னால்
சிநேகிதராகச் செய்து கோடற்குத் தக்கவர்” என்னக்கடவ இவள்,
தன் முகம் பார்த்து வார்த்தை கேட்குமவனைப் பெற்றால் விடாளே அன்றோ
. “மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்ராம: ஸ்தாநம் பரீப்ஸதா
வதம்ச அநிச்சதா கோரம் த்வயாஅஸௌ புருஷர்ஷப:”என்பது, ராமா. சுந். 21 : 19.3
“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுகிறேன்” என்றாளே அன்றோ.
என்றது, திருவடி, ‘அரக்கியர்களை என்கையில் காட்டித்தரவேணும்’ என்ன,
‘பிறர் கண்குழிவு காணப்பொறாத துர்ப்பலை காண் நான்’ என்றாள் அன்றோ என்றபடி.
ஈண்டு, “தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ துர்பலா”-என்பது, ஸ்ரீரா. யுத். 116 : 40.
“துர்ப்பலை” என்றது, இராவணன் பட்டானாகில், பெருமாளும் வெற்றியோடே நின்றாராகில்,
திருவடி வந்து முன்னே நின்றானாகில், வேறு ஒரு வலி இல்லாத தன்மை இல்லையாதலின்,
பிறர் நோவு காண மாட்டாமையாகிற துர்ப்பலத்தையே குறித்தபடி. துர்ப்பலம் – வலி இன்மை.

நிகரில் புகழாய்-
அதற்கு அடுத்த பதத்தின் அர்த்தம் சொல்லுகிறது.
தாமரையாளாகிலும் சிதகு உரைக்குமேல் ‘என்னடியார் அது செய்யார்’ பெரியாழ்வார் திருமொழி, 4. 9 : 2. என்னும் குணாதிக்கியம் சொல்லுகிறது.
உலகம் மூன்றுடையாய் –
தான் குணங்கள் இல்லாதவனேயானாலும் விட ஒண்ணாத -பிராப்தி -சம்பந்தம் -ஸ்வாமித்வம் – சொல்லுகிறது.
என்னை ஆள்வானே –
சம்பந்தத்தைக் கிரயம் செலுத்திக்கொடுக்கும்படி.
மோக்ஷத்தளவும்செல்ல நடத்திக்கொடு போந்து நடுவுள்ள அபேக்ஷிதத்தைக் கொடுக்கின்றவனாதல் அன்றோ ஆளுகின்றவனாவது.
அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி / ஸ்ரீ ரெங்க நாத மம நாத –
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே –
அப்பதத்தில் முடிகிற சௌலப்யம் சொல்லுகிறது.
நிகரில் புகழாய் வாத்சல்யம் – -உலகம் மூன்று உடையாய் சௌ சீல்யம் -என்னை ஆள்வானே -சௌ லப்யம்
-நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே – என்றவாறு
சௌலப்யம் சொல்லுகிறது.
புகல் ஒன்று இல்லா அடியேன் –
ஆகிஞ்சந்யமும் சொரூபமும் சரணாகதிக்குப் பரிகரங்களே அன்றோ.-ஸ்வரூபம் சேஷி சேஷி பாவ ஞானம் அடியாக வரும் அநந்ய கதித்வம்
உன்னடிக்கீழ் – “சரணௌ” என்ற பதத்தின் பொருள்.
அமர்ந்து – நடு ஓர் இடையீடு இன்றிக்கே இருக்கை.-இடைச்சுவர் பற்றுதல் உபாயம் சுவீகாரம் உபாயம் என்ற புத்தி தவிர வேண்டுமே –
புகுந்தேனே –
இந்த உறுதியும் — உபாயபாவத்தில் சேராமையாலும்,– செய்ந்நன்றியறிதல் சொரூபமாகையாலும்,
பற்றுதலும் அறிவினைப் பற்றிய செயலாகையாலும்,– இவை எல்லாம் அதிகாரிக்கு விசேஷணங்களாகச் சொல்லப்பட்டன அன்றோ. –

இவையெல்லாம் துவயத்தில் முடிகிற பதத்தோடே சேரக்கடவனவாம்.
அகலகில்லேன். . . . . . .புகுந்தேன் – இதில் உபாயத் தன்மை சொல்லச்செய்தே, உபேயவிஷயமும் சூசகமுமாயிருக்கிறது.
அதாகிறபடி எங்ஙனே? என்னில், இருவருமான சேர்த்தியிலே அன்றோ ஒருவன் அடிமைசெய்வது;
அச் சேர்த்தி தன்னையே அன்றோ உபாயமாகப் பற்றுகிறதும். இத்தால் சொல்லிற்றாகிறது, நித்தியப்பிராப்யத்வம் அன்றோ.
நித்யாபூர்வ விஷயமன்றோ நித்தியப் பிராப்யமாகவல்லது.
அகலகில்லேன் இறையும் என்று-இது அகன்று இருந்து சொல்லுகிற வார்த்தை அன்று.
தனக்கு அகலுகைக்குக் காரணம் இன்றிக்கே இருக்கச்செய்தேயும், அங்குத்தை இனிமையை நினைத்து,
கணநேரமும் நான் அகலுகைக்குச் சக்தியுடையவள் ஆகிறிலேன் என்னும்.
“வேறாகாதவள்” என்றும், “பிரியாதவள்” என்றும் சொல்லாநிற்கச்செய்தே சொல்லுகிற வார்த்தை அன்றோ இது;
“அநந்யா” என்பது ஸ்ரீராமா. சுந். 21 : 15. “அநபாயிநீ”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 8 : 17.

கணநேரமும் பிரியச் சக்தியுடையயேனல்லேன் என்று.
அலர்மேல் மங்கை – இங்ஙன் சொல்லுகிறவள் ஆர்? என்னில்,
தன் வடிவழகாலும் பருவத்தாலும் அவன்தனக்குங்கூட உத்தேசியமாயிருக்கிறவள். என்றது,
அவனை, “பிரிவில் கணநேரமும் பிழைத்திருக்கமாட்டேன்”
“நஜீவேயம்க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10.என்னப்பண்ணுமவள் என்றபடி.
உலகத்தார் அகலகில்லேன் என்பது போன்றதன்றே இவளுடைய அகலகில்லேன்;
அது கர்மங் காரணமாக வரும் அகலுதலேயன்றோ, இவளுக்கு அது இல்லாமையாலும், அவன்தான் மேல்விழும் சுபாவன் ஆகையாலும்,
அவனால் வரும் பிரிவும் இல்லை; தன்னால் வரும் பிரிவும் இல்லை; ஆனால், இந்த வார்த்தை சொல்லுவதற்குக் காரணம் என்? என்னில்,
அவனாகையாலே வந்தது; உலகத்தாருடைய பிரார்த்தனை கர்மம் அடியாக வருமது;
இவளுடைய பிரார்த்தனை விஷயத்திற்குக் கட்டுப்பட்டதாக விளையுமது.
உறை மார்பா –
முதற்பதத்தில் மதுப்பால் சொல்லுகிற நித்திய யோகத்தைச் சொல்லுகின்றது;
இதுவும் இங்ஙனே பலிக்கக் கண்டோமித்தனை. இச் சேர்த்திக்குப் பயன், அவனுடைய சுவாதந்திரியத்தை யாதல்,
தான் பிறவிப்பெருங்கடலில் பிறந்து உழன்று திரிந்து வருதலையாதல் நினைத்துக் கைவாங்க வேண்டாத படியாயிருக்கை. என்றது,
அவனுடைய முற்றறிவினையும் தன்னுடைய குற்றமுடைமையையும் நினைத்து அஞ்சவேண்டாதபடியாயிருக்கையைத் தெரிவித்தபடி.
அதாவது, இவனுடைய அபாரதகாலம் பார்த்து இருந்து எண்ணுவதற்கு அவனுக்குக் காலம் இல்லை, அவள் கூட இருக்கையாலே என்றபடி.
பிராட்டிபக்கல் அபராதம், காகத்துக்கும் இராவணனுக்கும் ஒத்திருக்கச் செய்தேயும், இவள் சந்நிதியாலே தலைபெற்றது காகம்;
அத்தனை அபராதம் இன்றியிலே இருக்க, இராவணன் தலை அறுப்புண்டான் அன்றோ இவள் சந்நிதி இல்லாமையாலே.
இத்தனை உண்டே அன்றோ இவள் அருஇல் இருப்பதற்கும் அருகில் இராமைக்கும் வாசி.
தமப்பன் பகையாக, தாய் அருஇல் குழந்தையை அழியச்செய்ய மாட்டாமையும் ஒன்று உண்டே.
அவன் செய்த குற்றத்திற்குப் பிரஹ்மாஸ்திரத்தை விட்டு, அது தொடர்ந்து கெரண்டு திரிந்தவாறே புகல்அற்று விழ,
இவளை நோக்கி, பிரஹ்மாஸ்திரத்திற்கு ஒரு கண்ணழிவு சொல்லிவிட்டான் அத்தனை அன்றோ.
“அந்தக் காகாசுரன் தமப்பனாலும் முனிவர்களாலும் தேவர்களாலும் விடப்பட்டவனாய் மூன்று உலகங்களிலும் நன்றாகத் திரிந்து
அந்தப் பெருமாளையே சரணமாக அடைந்தான்” என்றதுவும்,
“ஸபித்ரா ச பரித்யக்த: ஸுரைஸ்ச ஸமஹர்ஷிபி:த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம்கத:”
என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 33.
“த்விதா பஜ்யேயம் அபி ஏவம் நநமேயம்து கஸ்யசித்ஏஷ மே ஸஹஜோ தோஷ: ஸ்வபாவ: துரதிக்ரம:”என்பது, ஸ்ரீராமா. யுத். 36 : 11
“நான் வணங்கேன்” என்றதுவும் இரண்டும் பயன் அற்றவை. அது என்? என்னில்,
காகத்துக்கும் போகிறபோது மனத்தில் நினைவு அதுவே அன்றோ. அங்ஙன் அன்றாகில்,
“காகோ ஜகாம ஸ்வகமாலயம்”என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 32.
“தன் இருப்பிடத்தை அடைந்தான்” என்கிறபடியே, போகப் பாரானே;
செயல் மாட்சியாலே விழுந்ததித்தனை அன்றோ இது இராவணனுக்கும் உண்டாயிருக்கச் செய்தே காரியமாயிற்றது இல்லை அன்றோ,
இவள் அருஇல் இராமையாலே. மேலே கூறிய அர்த்தவிசேடங்கள் எல்லாம் துவயத்தில் முதற்பதத்தோடே அற்றது.

இனி, ‘நிகரில்’ என்று தொடங்கி ‘திருவேங்கடத்தானே” என்னுமளவும் வர, துவயத்தின் அடுத்த பதத்தின் அர்த்தம் சொல்லுகிறது.
நிகரில் புகழாய் – இப்படி இருக்கிறவள்தானே சிதகு உரைக்கும் அன்றும் அவளுடனே மன்றாடும் குணமிகுதியின் விசேடம் சொல்லுகிறது. என்றது,
‘என்னடியார் அது செய்யார்’ என்று என்னைப்பற்றினார்க்கு அது இல்லை காண் என்கிறது என்றபடி.
‘இல்லை, நான் இப்போது இன்ன குற்றம் செய்யக்கண்டேன்’ என்று காட்டிக்கொடுத்தாலும்,
‘ஆனால் என்? தர்மம் அதர்மம் பரலோகம் என்னும் இவற்றை இல்லை என்று செய்கிறார்களோ?
தங்களை அறியாதே நிகழும் குற்றங்கட்கு நாம் உளோம் என்றன்றோ செய்கிறது’ என்கை.
இவளுடைய உயர்வுக்கு அடி சொல்லும் போது அவனைப் பற்றிச் சொல்லலாம்;
அவனுடைய உயர்வுக்கு ஒன்று தேடிச் சொல்லலாவது இல்லையாதலின், ‘நிகரில்’ என்கிறது.
இதுவோ தான் பொருளின் தன்மை இருக்கும்படி.இத்தால் சொல்லிற்றாயிற்று, இவள் அவனுடைய சுவாதந்திரியத்தை நினைத்து
‘இவற்றின் பக்கல் என்னாய் விளைகிறதோ?’ என்றிருக்கையும்,
அவன் இவளுடைய மிருதுத்தன்மையையும் இளமையையும் நினைத்து ‘இவற்றின் பக்கல் எவ்வளவாய் இருக்கிறாளோ?’ என்றிருக்கையும்.
ஆக, ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணி நோக்கும் இருவர் நிழலையும் பற்றி அன்றோ உபயவிபூதியும் கிடக்கிறது என்றபடி.

உலகம் மூன்றுடையாய் –
தான் குணங்கள் இல்லாதவனாயினும் விடஒண்ணாத சம்பந்தத்தைச் சொல்லுகிறது.-பிராப்தி
“சிதகு உரைக்குமேல்” என்ற இடத்தில், அவளுக்குச் சொரூபத்திற்குத் தகுதியான குணங்கள் இல்லாதகாலத்திலே அன்றோ அவள் அது சொல்லுவது;
-ஸ்வரூப அனுரூப குணம் கிருபா -அப்படியே இவனுக்கும் இக் குணங்கள் இன்றிக்கே இருந்தாலும் விட ஒண்ணாத குடல்தொடக்கைச் சொல்லுகிறது.
அசம்பாவிதம் ஆரோபித்து சொல்லுதல் -நடக்காததை-
அவன் ‘அல்லேன்’ என்று கைவிடும் அன்றும் செங்கற்சீரைகட்டி வளைக்கலாம்படி அன்றோ இச் சம்பந்தம் இருப்பது.
இந்தச் சம்பந்தத்தைப் பார்த்தால், இருவராலும் விடஒண்ணாது என்கிறார்
‘அவன் அல்லேன்’ என்று தொடங்கி. ‘செற்கற்சீரை கட்டி வளைக்கலாம்படி’ என்றது, காஷாயவஸ்த்திரத்தை உடுத்து இரப்பதற்குப்
புகுகிறேன் என்று கூறி வளைக்கலாம்படி என்றபடி.

இனி, இவன் தான் யாதாயினும் ஒரு காலத்து வணங்குதலைச் செய்து, பின்பு கைகழியப் போகப் பார்க்கிலும்,
காலிலே விலங்கைத் தைத்துக் காரியம் கொள்ளலாம்படியான உரிமை சொல்லுகிறது மேல்;
என்னை ஆள்வானே –
அடிமையைக் கிரயம் செலுத்திக் கொடுக்கும்படி. என்றது,
‘அடிமையின் பொதுமையைப் பற்றிச் சொல்லுகிறீராகில் அவ்வளவே அன்றோ உமக்கும்’ என்ன ஒண்ணாதபடி,
என்னை மயர்வற மதிநலம் அருளி, இவ்வளவும் வர நிறுத்திப் பொகடப் போமோ? என்கிறார் என்றபடி.

மண்ணோர் விண்ணோர் வைப்பில் ஏழு உலகுக்கு உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் –

நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே –
அங்குள்ளாரும் விரும்பி வந்து அடிமைசெய்கிறதும் இங்கே அன்றோ.
“வைகுந்தத்தமரரும் முனிவரும்” திருவாய். 10. 9 : 9.என்று இரண்டு கோடியாயன்றோ இருப்பது;
குணநிஷ்டரும் கைங்கரிய நிஷடரும்.
திருவேங்கடத்தானே –
அதற்கு முடிந்தபொருள், சௌலப்யம் என்னக் கடவதன்றோ.
குணயோகமும், சேஷித்வமும், விசேஷகடாக்ஷமும், சௌலப்யமும் இவை இத்தனையும் உண்டு அன்றோ இப் பதத்துக்கு.
இவன் விரும்பியவை அனைத்தையும்இவனுக்குக் கொடுப்பதற்காக அந்தராத்மாவாக நிலைபெற்றிருக்கின்றான்
என்றே அன்றோ நாராயண பதத்திற் சொல்லுகிறது. -அந்தர்யாமித்வ ஸுலப்யம் -சதா சன்னிஹித ஆகாரம் அர்ச்சையிலும் உண்டே
அந்தச் சௌலப்யம், இங்கு எப்பொழுதும் நிலைபெற்று இருப்பதாலே திருவேங்கடமுடையான் பக்கலிலே கிடக்குமன்றோ.
இந்தச் சௌலப்யம் உபாயமாகிறபடி எங்ஙனே? என்னில், “மாமேகம் – என்னையே” என்ற இடத்தில்,
சாரதியாயிருக்கும் வேடத்தை அன்றோ காட்டுகிறது. இன்னமும் அவ்வளவு அன்றே இங்கு.
அதற்கு முன்பும் பின்பும் இல்லை அன்றோ அந்தச் சௌலப்யந்தான்.
எப்பொழுதும் நிலைபெற்று இருக்கிற இடம் அன்றோ இவ்விடம். அங்குத்தானும்
“பார்த்தனே! என்னிடத்தில் வைத்த மனத்தினையுடையையாய்” என்று ஒரு தேவை இட்டன்றோ சொல்லிற்று. அதுவும் இல்லை அன்றோ இங்கு.

இனித் தம் படி சொல்லுகிறார்:
புகல் ஒன்று இல்லா அடியேன் – மேலே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய
சேஷத்வத்தையும் ஆகிஞ்சந்யத்தையும் உருவச்சொல்லிக் கொடு போந்தார்.
இனித்தான், வெறுமையும், சொரூபமும், என்னும் இரண்டும் சரணாகதிக்குப் பரிகரங்கள் ஆதலின்,
அவற்றை இங்கேயும் அருளிச்செய்கிறார்; அவற்றைச் சரணாகதிக்கு அங்கமாகச் சொல்லவேணுமன்றோ.
அவற்றை இங்கே சொல்ல வேண்டுகிறது என்? என்னில், அவனுக்கு உபாயத் தன்மை சொரூபமானதைப் போன்று.
இவனுக்கும் இந்த நினைவு சொரூபமாகையாலே.
இவனுக்கு இது இல்லாதபோது சர்வமுக்தி பிரசங்கமாமே.
அடியேன் – துவயத்தில் “பிரபத்யே” என்ற சொல்லில் பொருளாலே கிடைத்த ‘அஹம்’ என்னும் சொல்லை,
இங்கு ‘அடியேன்’ என்ற சொல்லாலே சொன்னதுவே வாசி.
உன்னடிக் கீழ் – “சரணௌ” என்றது தன்னையே சொல்லுகிறது.
அவர், “தமையனாருடைய திருவடிகளை” என்றாற்போலே சொல்லக்கடவதன்றோ.
அமர்ந்து புகுந்தேனே –
“முமுக்ஷுவான நான் சரணம் அடைகிறேன்” என்னுமாறுபோலே. அவனுக்கு ஒரு துணைவேண்டுதல்,
தம் தலையிலே ஓர் உபாயத் தன்மை கிடத்தல் செய்யில் அன்றோ நடுவே ஓர் இடையீடு விளம்பங்கட்குக் காரணம்
உள்ளது என்பார் ‘அமர்ந்து’ என்கிறார்,
புகுந்தேன் –
போன எல்லை அளவு மன்றோ புகுருவதும்; முன்பும் அர்த்தத்தில் இழவு இல்லை அன்றோ.
இவனுடைய மாறான உணர்வு அன்றோ உள்ளது; அது போமித்தனை அன்றோ வேண்டுவது. அறுதியிட்டேன் என்கிறார்.
துவயத்தில் உள்ள “பிரபத்யே” என்ற நிகழ்காலம், நினைவின் தொடர்ச்சிபோல் அன்று;
துவயத்தில் “பிரபத்யே – அடைகிறேன்” என்று நிகழ்காலமாக இருக்க,
இங்கு, “புகுந்தேன்” என்று இறந்தகாலமாகச் சொல்லுவான் என்? என்ன,அது போக்கிய புத்தியாய்ச் சொல்லுகிறதித்தனை;
உபாயத்துக்கு ஒருமுறையே அமையும் என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார்‘துவயத்தில்’ என்று தொடங்கி. என்றது, நினைவின் தொடர்ச்சி போன்று,
சாதனமாகச் சொல்லப்பட்டதன்று; இனிமையாலே நிகழ்காலமாகச்சொல்லப்பட்டது அங்கு என்றபடி. இவர் “ஸக்ருத்கர்த்த: ஸாஸ்த்தார்த்த: –
ஒருவன் பிரபத்தியை ஒரு முறையே செய்யவேண்டும்” என்கையாலே,இறந்த காலமாகச் சொன்னார் என்றபடி. ‘சாஸ்திரார்த்தம்’ என்றது,பிரபத்தியை.

அதிகார சங்க்ரஹத்தில் –தூப்புல் பிள்ளை -ஸ்ரீ வேதாந்த தேசிகன் -ரகஸ்ய த்ரய சாரம் -தொடக்கத்தில் –
ஆகர்ணித்தோ-க்ருதக்ருத்யர்த்தர் ஆக்கும் கேட்டவர்களை-ஆம்ரேடிதம் -திரும்ப சொல்லி போக்யதா புத்தி
-பிரத்யூஷா விடியல் காலைக்கு தள்ளி -பத்மா ஸஹாய சரணாய மந்த்ரம் –
தர்க்கம் அப்ரதிஷ்டா -ஸ்ருதியோ வி பின்னம் –தர்மஸ்ய தத்வம் விகிதம் குஹாயம் -மகா ஜனோ -வேத வித்துக்கள் அனுஷ்டானம் போதுமே -ஆழ்வார்

ருசிகாரியமாய் வருகையாலே பேற்றினை அடையுமளவும் நிற்பது ஒன்றாம்எல்லாச் சாத்திரங்களிலும் பரந்திருப்பது ஒன்றாய்,
இச்சாத்திரங்களுக்கெல்லாம் அடியான வேதாந்தங்களுக்குக் கிழங்காய்,கிழங்காய் – சாரமாய்.
நம் ஆசாரியர்கள் எல்லாரும் ஒக்க ஆதரித்துப் போருவது ஓர் அர்த்த விசேடத்தை இப் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்.
ஆசாரியர்களுக்கெல்லாம் முதல்வருமாய், “மயர்வற மதிநலம் அருளினன்” என்கிறபடியே,
பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தின் தெளிவையுடையவருமான இவர் ஏற்றுக் கொண்டமையாலே வந்தது ஓர் ஏற்றமும் உண்டு இதற்கு.
இந்த உபாயத்தைப்பற்றி வேறு பிரயோஜனங்களைக் கொள்வாரும், வேறு சாதனங்களைப்பற்றி இவனையே
பிரயோஜனமாகப் பற்றுவாருமாய் இருப்பர்கள் புறம்புள்ளார்.
அங்ஙன் அன்றிக்கே, இவனையே பிராப்பியமும் பிராபகமுமாக அறுதியிட்டு இருக்கிற ஏற்றம் உண்டு இவர்க்கு.
பிராப்பியம் இவனேயாகில், வேறு சாதனங்களை மேற்கொண்டால் வரும் குற்றம் என்? என்னில்,
அவை சாத்தியமுமாய்ப் பலவுமாய்ச் செய்யமுடியாதனவுமாய்ச் சொரூபத்துக்குத் தக்கன அல்லாதனவுமாய் இருப்பனவாம்.
இப்படி இருக்கும் சாதனங்கள் பல. அவை யாவை? என்னில், கர்மயோக ஞானயோக பக்தியோகங்கள்.
கர்மயோகமாவது, ஆத்மாவை உள்ளபடி அறிகின்ற ஞானம் முன்னாகத் தன் சாதிக்கும் தன் ஆஸ்ரமத்துக்கும் தக்கதாய்
விதிக்கப்பட்ட கர்மத்தைப் பலத்தில் விருப்பமில்லாதவனாகியும் நாம் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாதவனாயும்
பற்றையும் விட்டவனாகிப் பகவானுக்குச் செய்யப்படும் ஆராதனம் என்ற எண்ணத்தோடு செய்தல்வேண்டும்;
அவ்வாறு செய்யவே விரோதியான பாபம் அழியும்; அது அழியவே மனம் மலம் அறும்;
அது அறவே சொரூபப் பிரகாசமும் உண்டாம்; அது உண்டாகவே பகவானை அறிகின்ற ஞானமும், அவனிடத்தில் பிரேமமும் பிறக்கும்;
பின்னர், பரபக்தி பரஞான பரமபக்தியாய்ப் பேற்றோடே சேர்ப்பிப்பது ஆம்.
ஞானயோகமாவது, இந்திரியங்களை நியமித்துக்கொண்டு சொரூபத்தை விஷயமாக்கினால் பகவானை அறிகிற ஞானமும்
அவன் விஷயமான பிரேமமும் பிறக்கும்; அவை பிறக்கவே பரபக்தி பரஞான பரமபக்திகளும் பிறக்க,
பின்பு பேற்றோடே சேர்ப்பிப்பது ஆம். அங்ஙன் அன்றிக்கே, மேலே கூறிய கர்மஞானங்கள் இரண்டனையும் பகவத் விஷயத்திலே யாக்குவது;
அங்ஙனமாக்கினால் “என்னிடத்தில் மனத்தை வைத்தவனாயும் என்னிடத்தில் பக்தியையுடையவனாயும்
என்னை ஆராதிக்கிறவனாயும்“
மந்மநாபவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”-என்பது, ஸ்ரீகீதை, 9 : 34.
ஆகக்கடவாய்; என்னை நமஸ்காரம் செய்வாய்” என்கிறபடியே, செய்ய, பரபக்தி பரஞான பரமபக்திகள் பிறக்கும்;
பின்பு, பெற்றோடே தலைக்கட்டுவது பக்தியோகம் எனப்படும்.

இவைபோல் செய்தற்கு அருமையுடையன அன்றிக்கே, திருநாமத்தை எளிதான உபாயமாக விதித்தது; எங்கே? என்னில்,
வீடுமர் தருமபுத்திரனுக்குப் பல தருமங்களையும் சொல்ல,
“தருமங்கள் பலவற்றிலும் எந்தத் தருமம் உம்மால் மேலான தருமமாகக் கொள்ளப் பட்டிருக்கிறது;
பிறவி எடுத்தவன் எதனை ஜபித்தால் பிறவியினின்றும் சம்சாரம் என்னும் தளையினின்றும் விடுபடுவான்” என்கிறபடியே,
உம்முடைய நெஞ்சால் அறுதியிட்டிருக்கும் மேலான தருமத்தைச் சொல்லவேணும் என்ன,
“இது, எல்லாத் தருமங்களிலும் மேலான தருமமாக என்னால் மதிக்கப்பட்டது; அது யாது? எனின்,
தாமரைக் கண்ணனான நாராயணனைப் பக்தியுடன் மனிதன் தோத்திரங்களால் எப்பொழுதும் அருச்சனை செய்தல்” என்று
மிக உயர்ந்த தருமம் திருநாமம் என்று சொன்னார் அன்றோ.
“கோ தர்ம: ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந்முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்சாரபந்தநாத்”-என்பது மஹாபாரதம் சஹஸ்ரநாம அத்.
“ஏஷமே ஸர்வதர்மாணாம் தர்ம: அதிகதமோ மத:யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவை: அர்சசேத் நர: ஸதா”என்பது, மஹாபாரதம் சஹஸ்ரநாம அத்.
‘திருநாமம்’ என்றது, திருநாமசங்கீர்த்தனத்தினை.

நன்று, திருநாமம் சாதனத்திற்கு அங்கம் அன்றோ? அது, தானே சாதனமாமோ? என்னில்,
“பிறவியினின்றும் சம்சாரமாகிற தளையினின்றும் விடுபடுகிறான்” என்று, விரோதி நீங்குதலையும்,
“நித்தியமான பரம்பொருளை அடைகிறான்” என்று, பலத்தை அடைதலையும் சொல்லித் தலைக்கட்டுகையாலே,
விரோதிகள் நீங்குதல் முன்னாக விரும்பப்படுகிற மோக்ஷத்தைப் பெறுதற்கும் திருநாமம் தானே சாதனமாம்.
“வாஸு தேவ ஆஸ்ரய: மர்த்ய: வாஸுதேவ பராயண:
ஸர்வபாப விஸு த்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம்”என்பது, மஹாபாரதம் சஹஸ்ரநாம அத்.
இந்தத் தேசம் பரிசுத்தமானது, மிக உயர்ந்தது, புண்ணிய கரமானது, விரும்பியவையனைத்தையும் கொடுக்கின்றது” என்று,
விரும்பினவற்றை எல்லாம் பெறுதற்குச் சாதனமாகத் தேசவாசத்தைச் சொல்லிற்று.
“எல்லா ஆராதனங்களுக்குள்” என்று தொடங்கிப் “பாகவதர்களை ஆராதிக்கின்ற ஆராதனமானது
மிகச் சிறந்தது என்று யாவராலும் கூறப் பட்டது” என்று முடிக்கையாலே,
விரும்பியவை அனைத்தும் பாகவதர்களை ஆராதிக்கவே கிடைக்கும் என்று சொல்லிற்று.
“பத்ரம் பத்ரப்ரதம் புண்யம் தீர்த்தாநாம் உத்தமம் விது:
பவித்ரம் பரமம் புண்யம் தேஸ: அயம் ஸர்வகாமதுக்”-என்பது காருடம்.

“ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோ: ஆராதநம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம்”-என்பது, பிரமாணம்.

அப்படிச்சொன்ன செய்தற்கு அரியனவான உபாயங்கள் எல்லாம் அகங்காரத்தின் சம்பந்தம் உடையனவாகையாலே
தியாச்சியமாகச் சொல்லப்பட்டன. ஒன்றாய் எப்பொழுதும் இருப்பதாய் செய்தற்கு எளியதாய்த் தக்கதாய்த்,
தனக்கு அவ்வருகு ஒன்று இன்றிக்கே, “ஆதலால், மேலே கூறிய தவங்களுக்குள் பிரபத்தி என்னும் உபாயத்தை
மிக மேம்பட்டதாகச் சொல்லுகிறார்கள்” என்கிறபடியே, சொல்லப்படுகிற பிரபத்தி உபாயத்தைச் சொல்லுகிறது இப் பாசுரத்தால்.
“தஸ்மாத் நியாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு:”என்பது, தைத். உப.

மேல் ஒன்பது பாசுரங்களாலும் சரண்யனான சர்வேசுவரன் சொரூபத்தையும் அதிகாரி சொரூபத்தையும் சொல்லி
, சரணாகதியின் பிரகாரத்தைச் சொல்லுகிறார் இப்பாசுரத்தால்.
சரண்யன் சொரூபமாவது, நிரதிசய போக்கியமுமாய் வகுத்த விஷயமுமாய் விரோதிகளைப் போக்கக்கூடியதுமாய்ச் சர்வ சுலபமுமாய் இருக்குமது.
அல்லாதவைபோல் அன்றிக்கே, பற்றுவதற்கு ஏகாந்தமாயிருப்பது சௌலப்யம். பரத்துவம், சேதனனுக்கு ருசி பிறந்தபோதே
பற்ற ஒண்ணாதபடி தூரதேசமாக இருக்கும். வியூகமும், பிரமன் சிவன் முதலான தேவர்களுக்காமத்தனை.
ஆகையாலே பரத்துவத்தைப் போன்றதேயாம். அவதாரங்கள், புண்ணியம் மிக்கவர்களாய் அக் காலத்தில்
உதவினார்க்கு ஒழியப் பிற்பாடர்க்கு உதவாமையாலே காலத்தாலே கழிந்தனவாய் இருக்கும்.
அக் குறைகள் இரண்டும் இன்றிக்கே எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் வந்து அடையலாம்படி,
“வானவர் வானவர்கோனொடும்” திருவாய். 3. 3 : 2.-என்கிறபடியே, நித்தியசூரிகளோடு, இவ்வருகுள்ள பிரமன்
முதலானோர்களோடு, இவ்வருகுள்ள மனிதர்களோடு கானமும் வானரமுமாய்க்கொண்டு மிக இழிந்த பிறவிகளிலே
ஆனார்களோடு வாசி அற எல்லார்க்கும் பற்றுமிடம் திருவேங்கடமுடையான் திருவடிகளே.
விடாத சுபாவமுடைய னாகையாலே விரும்பியவற்றைப் பெறுதற்குக்காரணங்களான ஞானம் சக்தி முதலான
எட்டுக் குணங்களையுமுடையன்; ஆகையாலே, எல்லாக் குணங்களாலும் நிறைவுற்றிருக்கின்றவனான திருவேங்கடமுடையான் சரண்யன்.

அதிகாரி சொரூபமாவது, அநந்யகதித்வமும் பிராப்பியருசியும் சொரூபப்பிரகாசமும் என்கிற இவையேயன்றோ.
திர்யக்குகளுக்கு இப்படி அடைதல் கூடுமோ? என்னில், ஸ்ரீகஜேந்திராழ்வான் பகவானை ஆராதனை செய்தானாகத்
துறைச் சுவடிகளிலே எழுதியிட்டு வைத்தும் சொல்லியும் கேட்டும் போரா நின்றோமே;
இங்கும், “வைப்பன் மணி விளக்காம் மாமதியை மாலுக்கென்று, எப்பொழுதும் கைநீட்டும் யானையை” என்றும்,
“புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந் தருவி, உகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன்,
விண்ட மலர்கொண்டு விறல்வேங் கடவனையே, கண்டு வணங்கும் களிறு” என்றும்,
வேறு இடத்திலே “புனத்தினைக் கிள்ளிப் புதுஅவி காட்டி உன் பொன்னடி வாழ்க என்று,
இனக்குறவர் புதியது உண்ணும் எழில் மாலிருஞ்சோலை எந்தாய்” பெரியாழ்வார்திருமொழி, 5. 3 : 3.-என்றும் ஆழ்வார்கள் அருளிச்செய்து வைத்தார்கள்.
இனி,அதைப் போலவாகிலும் இவற்றையும் நம்பவேண்டாவோ நமக்கு?
இனி சரண்ய விஷயத்தில் செய்யப்படும் சரணாகதி பலத்தோடு கூடியிருக்கும் என்பது போன்று,
ஆநுகூல்யம் முதலான குணங்களோடு கூடின அதிகாரி சரணம் புக்கால் பலத்தோடே கூடி இருக்கும் என்கிற அர்த்தத்தையும் சொல்லுகிறது.
‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா!’ என்கிற இதனாலே தம்முடைய
வெறுமையை முன்னிட்டுக் கொண்டு பெரிய பிராட்டியார் புருஷகாரமாக,
சர்வசுலபனான திருவேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார்.

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா-
நிரபேக்ஷமுமாய் சாபேக்ஷமுமாய் இருக்கும் இவ்வுபாயம்; தன்மை வேறுபாடுகளாலே.
ஸஹாயந்தர நிரபேஷம்-உபாயத்தை எதிர்பார்க்க மாட்டார் என்பதே
புருஷகார சாபேஷமாயும் -அதிகாரி சாபேஷமாயும் இருக்கும் –
நிரபேக்ஷமாகிறபடி எங்ஙனே? என்னில், ருசியைப் பிறப்பிக்கையும், பிறந்த ருசியை வளர்க்கையும், விரோதிகளைப் போக்குகையும்,
ஒரு தேச விசேடத்து ஏறக்கொண்டு போகையும், உரியதான அடிமையைக் கொள்ளுகையும் ஆகிற இந்த இடங்களில் நிரபேக்ஷமாகத் தானே செய்யும்;
துணைவேண்டா. இனி, சாபேக்ஷமானபடி எங்ஙனே? என்னில்,
அதிகாரி வேண்டப்படுவதாயும் புருஷகாரம் வேண்டப்படுவதாயும் இருக்கையாலே.
இவ்வுபாயம் ஆர்க்கு? என்றால், அதிகாரிக்கு என்கையாலே, அதிகாரி வேண்டப்படுகிறது;
அதிகாரி வேண்டப்படுவது போன்று புருஷகாரமும் வேண்டப்படுவதாம்; எங்ஙனே? என்னில், இந்த அதிகாரி,
முன்செய்த குற்றங்களையும் பார்த்து, அவனுடைய சுவாதந்திரியம் முற்றறிவுடைமை முதலியவைகளைப் பார்த்துப் பிற்காலிக்க,
‘அஞ்சாதே’ என்று புருஷகாரமானவள் சொல்ல வேண்டுகையாலே, அதிகாரி வேண்டப்படுவதுமாய்ப் புருஷகாரம் வேண்டப்படுவதுமாய் இருக்கும்.
அகலகில்லேன் இறையும் – ஒரு கணநேரமும் பிரிய ஆற்றலுடையவள் அல்லேன்.
இப்படிச் சொல்லுகிறவள் தான் யார்? என்னில், மூன்றுவித சேதனர்கட்கும் தலைவியுமாய்,
உபயவிபூதிநாதனையும் நியமிக்கின்றவளுமாய் இருக்குமவள் கண்டீர்.
மூன்றுவித சேதனர்கட்கும் தலைவி என்னுமதற்குப் பிரமாணம், “எல்லா ஆத்மாக்களுக்கும் ஈசுவரியாய் இருப்பவளை” என்னக் கடவதன்றோ.
உபயவிபூதி நாதனையும் நியமிக்கின்றவள் என்னுமதற்குப் பிரமாணம்,
“பும் ப்ரதாந ஈஸ்வர ஈஸ்வரீம்” என்று, பிரதான புருஷர்களுக்கு ஈசுவரன் அவன், அவனுக்கு இவள் ஈசுவரி என்று சொல்லுகையாலே.
“ஈஸ்வரீம் சர்வபூதாநாம்” என்றது, ஸ்ரீ சூக்தம்.
“பும்ப்ரதாந ஈஸ்வர ஈஸ்வரீம்” என்பது.
ஆக, எல்லாரையும் நியமிக்கின்றவள் என்னுமிடம் சொல்லிற்று.
இவள் நியமிக்கும் பிரகாரம் என்? என்னில், மூன்றுவித சேதநர்களையும் தாயாந்தன்மையாலே நியமிக்கும்,
ஈசுவரனைக் காதல்குணம் காரணமாக நியமிக்கும்.
தாயாந்தன்மை சொரூபத்தோடு கட்டுப்பட்டது; காதல் குணம் ஒவ்வொரு காலத்தில் உண்டாமது ஆகையாலே வந்தேறி ஆகாதோ? என்னில்,
ஆகாது. எங்ஙனே? என்னில், உபாதி நித்தியமாகையாலே அதுவும் நித்தியம்.
ஈசுவரன் படைத்தல் முதலாயினவற்றைச் செய்யும்போதும் இவள் நியமிக்கின்றவள் ஆவள்;
‘எவளுடைய முகத்தைப் பார்த்து அவளது கடைக்கண்ணின் நோக்கிற்கு வசப்பட்டவனாய் முழுவதையுஞ் செய்கிறான்” என்கிறபடியே,
அவள் கடாக்ஷம் அடியாகப் புருவநெரிப்பிற்குட்பட்டவனாய்க் கொண்டு படைத்தல் முதலியனவற்றைச் செய்யும். அது என்?
“யஸ்யா வீக்ஷ்ய முகம் ததிங்கித பராதீநோ விதத்தேகிலம்”-என்பது, ஸ்ரீஸ்தவம்.

“கரண களேபரை: கடயிதும் தயமாநமநா:”-என்பது, ஸ்ரீரங்கராஜஸ்தவம்.

“சரீர இந்திரியங்களோடு சேர்ப்பதற்குக் கருணையுள்ள மனத்தையுடையவன்” என்கிறபடியே,
தன் திருவருள் அடியாக அன்றோ படைப்பது என்னில்? அவற்றின் செல்லாமை பார்த்துப் படைக்கில் அன்றோ திருவருள் காரணமாவது;
தன் செல்லாமையாலே அவள் கடாக்ஷிம் காரணமாகத் தன் சத்தை உண்டாக, அவள் பிரேரிக்க அருள் பிறந்து,
அந்த அருள் காரணமாக அன்றோ அவன் படைப்பது.
நியமிக்குமிடத்தில்
அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ”-என்பது, நீளாசூக்தம்.
“விஷ்ணோ: ஸ்ரீ: அநபாயிநீ”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 8 : 17.
“இவ்வுலகிற்குத் தலைவியாய் விஷ்ணுவுக்குப் பத்தினியாய்” என்றும்,
“விஷ்ணுவை விட்டு நீங்காத பிராட்டி” என்றும் சொல்லுகிறபடியே, தன் சொரூபம் குலையாமே யன்றோ நியமிப்பது.
எங்ஙனே? என்னில், ஒளி, ஒளியையுடைய பொருளுக்குச் சேஷமாய் நின்றே அத் தலைக்கு நிறம் கொடுக்குமாறு போலவும்,
வாசனை, மலருக்குச் சேஷமாய் நின்று பெருவிலையன் ஆக்குமாறு போலவும்,
ஈசுவரன், சுவாதந்திரியம் குலையாமலே பரதந்திரன் ஆமாறு போலவும் அன்றோ,
இவளும் அத்தலைக்கு அநந்யார்ஹ சேஷமாய்க்கொண்டே நிறம் கொடுக்கும்படி.
பிரிவிற்குக் காரணம் கர்மம் அன்றோ? கர்ம சம்பந்தம் இன்றிக்கே இருக்க, இவள் ‘அகலகில்லேன்’ என்னப் போமோ? என்னில்,
கர்மத்தைப் போன்று, அவனுடைய வைலக்ஷண்யம் காரணமாகச் சொல்லுகிறாள்.
நன்று; வைலக்ஷண்யம் போக்கியமாமத்தனை அன்றோ? அது மேலும் மேலும் அநுபவிக்கும் இச்சையை விளைக்குமே ஒழிய
“இறையும் அகலகில்லேன்” என்னப் பண்ணுமோ? என்ன, விலை உயர்ந்ததான இரத்தினம் ஒன்று கிடைத்தால்
‘இது நமக்குத் தொங்குமோ?’ என்று துணுக்குத் துணுக்கு என்னுமவனைப்போலே
‘அவன் மார்விலே இருந்து அகலிற் செய்வது என்?’ என்று அஸ்தாநேபயசங்கை பண்ணுகிறாள்.
புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் பொறுக்கமாட்டேன் என்பாள் ‘இறையும் அகலகில்லேன்’ என்கிறாள். என்றது,
அவன் உபாயமாமிடத்தில் அங்கத்தைச் சஹியாத சுணையுடைமை போன்று, புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் பொறாத
மிருதுத் தன்மையைத் தெரிவித்தபடி. அவன் மார்விலே இருந்து அவன் முகத்தை நோக்கி,
‘உன்னைவிட்டு அகலச்சக்தியுடையவள் ஆகிறிலேன் என்று அவன் வைலக்ஷண்யத்தை அவனுக்குச் சொல்லுகிறாள்.
தனக்குத் தானே முற்றறிவினனாயிருக்கிறவனுடைய வைலக்ஷண்யம் அவனுடைய ஞானத்துக்கு விஷயமாமே;
இவள் சொல்ல அவன் அறியுமிடம் அவனுடைய ஞானத்துக்குக் குறைவு அன்றோ? என்னில்,
இவள் சொல்ல அறிந்திலனாகில் அவன் காதல் குணத்திற்குக் கொத்தையாமே.
அன்றிக்கே, “தனக்கும் தன் தன்மை அறிவரியான்” திருவாய். 8. 4 : 6.என்றும் சொல்லாநின்றது அன்றோ என்னுதலுமாம்.
உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் அல்லவோ ஞானத்துக்கு விஷயம்;
“ஞானமஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய்” திருவாய். 3. 10 : 8.என்றதே அன்றோ.
‘அகலகில்லேன் இறையும்’ என்றசொல்லும் சொல்ல மாட்டாத நிலை அன்றோ அவன் நிலை.
அவன் வைலக்ஷண்யங் கண்ட இவளிலும் அவனுக்கு உண்டான ஏற்றம், பிரிந்திருக்கும் நிலையில்
அவனுடைய சொற்களில் காணுமத்தனை அன்றோ. “ஒருமாதத்துக்கு மேல் பிழைத்திருக்கமாட்டேன்” என்றாள் இவள்;
“மாஸாத் ஊர்த்வம்ந ஜீவிஷ்யே” என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 10. பிராட்டி கூறியது.
“நஜீவேயம் க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா, சுந். 66 : 10. ஸ்ரீராமபிரான்கூறியது,

“ஒருகணநேரமும் பிழைத்திருக்கமாட்டேன்” என்றான் அவன்.
பரதந்திராயிருப்பார்க்கு உடையவன்வருந்தனையும் பொறுக்கவேணு மன்றோ; ஸ்வதந்திரனுக்கு அது வேண்டாமே.
இப்படி இரண்டு இடமும் விலக்ஷணமாயிருக்கிற இருவரையும் உத்தேசியமாகக் கொண்டிருக்கிற முமுக்ஷுக்களுக்கு ஒருகுறை உண்டோ?
இவர்களைத் தனித் தனியே பற்றினார்க்கு ஸ்வரூபத்தின் அழிவே அன்றோ.
‘மிதுனமே உத்தேசியம்’ என்று இருப்பார்க்கு ஆத்ம உஜ்ஜீவனமன்றோ. இராவணாதிகள் பக்கல் இவ்வர்த்தம் காணவுமாம்.

அலர்மேல்மங்கை –
மலரில் தள்ளத் தக்கனவான தாதும் சுண்ணமும் கழிந்த பரிமளமே வடிவானாற்போலே இருந்துள்ள மிருதுத்தன்மையும்,
எப்பொழுதும் அநுபவிக்கத் தக்கதான பருவமுமுடையவள்.
அவனை ‘அகலகில்லேன்’ என்னச் செய்யவல்ல பரிகரத்தையுடைய இவள், ‘அகலகில்லேன்’ என்கிறாள் அன்றோ.
அவன் மார்வின் சுவடு அறிந்த பின்பு, பிறந்தகமான பூவும் நெருஞ்சி முள்ளினைப் போன்றதாயிற்றாதலின் ‘உறைமார்பா’ என்கிறது. என்றது,
ஸ்ரீஜநகராஜன் திருமகள் பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீமிதிலையை நினையாதவாறு போலவும்,
முக்தன் “சனங்களின் சமீபத்திலுள்ள இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை” என்கிறபடியே,
சம்சாரத்தை நினையாதவாறு போலவும், அவன் மார்வில் இனிமை அறிந்த பின்பு பூவினை நினைத்திலள் என்றபடி.
சுருக்கமற்ற ஞானத்தினையுடையராயிருக்கச் செய்தே சம்சாரத்தைக் காணாத இடம் ஞானக் குறை அன்றே, இனிமையின் மிகுதி அன்றோ.
இவளும் இனிமையாலே அன்றோ காணாது ஒழிகிறது.
இவள் பூவினைக் காணாதவாறு போன்று திருமார்விற்கு அவ்வருகே வேறு அவயவங்களைக் காணாளாதலின் ‘உறைமார்பா’ என்கிறது.
மற்றுள்ள அவயவங்கள் குமர்கிடந்து போமத்தனை. இவ்வளவால் என் சொல்லியவாறோ? எனின்,
ஸ்ரீ என்ற சொல்லின் பொருளும் மதுப்பின் பொருளும் சொல்லியபடி.
ஸ்ரீ சப்தம், புருஷகாரம் வேண்டுகையாலே சொல்லிற்று; மதுப்பில் எப்பொழுதும் சேர்ந்திருப்பதற்குப் பிரயோஜனம் என்? என்னில்,
பற்றுகிற அடியார்கட்குக் காலம் பார்க்க்வேண்டாதபடி எப்பொழுதும் அண்மையில் இருத்தல் பயன்.

நிகர்இல் புகழாய் – நாராயண சப்தார்த்தம் சொல்லுகிறது.
உபயவிபூதிகளோடு கூடி இருத்தலும், “தத்துவங்கள் நரனிடமிருந்து உண்டாயின; ஆதலால், இவற்றை நாரங்கள் என்று அறிகிறார்கள்;
அவையே அவனுக்கும் இருப்பிடம்; ஆதலால், அவன் நாராயணன் என்று சொல்லப்படுகிறான்”
“நராத் ஜாதாநி தத்வாநி நாராணீதி ததோவிது:
தாந்யேவச அயநம் தஸ்ய தேந நாராயண: ஸ்மிருத:”-என்பது, பாத்மபுராணம்.
என்கிறபடியே,உலகத்திற்குக் காரணமாயிருத்தலும் இச் சொல்லுக்குப் பொருளாம்.
இங்ஙனமிருக்கச்செய்தே, நம் ஆசாரியர்கள் பற்றுவதற்கு அவசியமான சௌலப்யம் முதலான நான்கு குணங்களையும்
அர்த்தமாகச் சொல்லிப் போருவர்கள்; அக் குணங்களுக்கு முறை அருளிச்செய்கிறார் இவர்.
அக் குணங்களைச் சொல்லுகிற இடத்தில், வாத்சல்யம் முன்னாகச் சொல்லுவான் என்? என்னில்,
இவன் குற்றங்களோடு கூடியவனாகையாலே, இக் குற்றங்களைப் பொறுக்கைக்கு உறுப்பாகப் புருஷகாரம் வேண்டினால்,
உடனே இக் குற்றங்களைப் போக்கியமாகக் கொள்ளத் தக்கது ஒரு குணம் முன்னாக வேண்டுகையாலே. நன்று;
‘நிகரில் புகழாய்’ என்றால், வாத்சல்யத்தைக் காட்டுமோ? என்னில், இதற்குப் பொருள், சத்தியத்திலே
“எல்லை இல்லாத காருண்யம் சௌசீல்யம் வாத்சல்யம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமானவனே!” என்று
குணங்களோடு ஒரு சேர எடுத்து, “தன்னைச் சார்ந்தவனிடத்தில் வாத்சல்யத்திற்கு முக்கியமான சமுத்திரம் போன்றவனே!” என்று
“அபார காருண்ய சௌஸீல்ய வாத்ஸல்ய”என்பது, கத்யம்.
“ஆஸ்ரீத வாத்ஸல்யைக ஜலதே”என்பது, கத்யம்.-இந்தக் குணத்தை விசேடிக்கையாலே சொல்லிற்று.

உலகம் மூன்றுடையாய் –
மேலே கூறிய வாத்சல்யத்துக்கு அடியான குடல் துடக்கைச் சொல்லுகிறது.
தன் வயிற்றிற் பிறந்த காரணத்தாலே அன்றோ தாய் வத்சலை ஆகிறாள்.
என்னை ஆள்வானே –
இதனால் சௌசீல்யத்தைச் சொல்லுகிறது. வெறுமை முன்னாக அடைகிறவர் ‘என்னை ஆள்வானே’ என்று கைங்கரிய தசைபோலே,
உபகாரம் தோற்றச்சொல்லப் பெறுவரோ? என்னில்,புருஷகாரத்தைப் பார்த்து வார்த்தை சொன்னார் முதல் பதத்தில்;
பின்னர், உபாயத்தைப் பார்த்து வார்த்தை சொன்னார்; இதில், உலகத்தைப்பார்த்துச் சொல்லுகிறார். என்றது,
உலக விஷயங்களினுடைய லாபா லாபமே பேறு இழவாக இருக்கிறவர்களிலே வேறுபட்டவராயிருக்கிற தம்மை,
‘கர்மம் முதலான உபாயங்கள் சொரூப விரோதிகள்’ என்று அறியும்தனையும் வர நிறுத்தி,
பிராட்டி புருஷகாரமாகத் தானே உபாயமும் தானே உபேயமும் என்னும்படி செய்த உபகாரத்தைச் சொல்லுகிறார் என்றபடி.
இது சௌசீல்யமானபடி எங்ஙனே? என்னில், “சீலமென்பது, பெரியவனுக்குச் சிறியவர்களோடு கூட (உண்டான) நெருங்கிய கூட்டுறவு” என்கிறபடியே,
தன் மேன்மையையும் இவர் சிறுமையையும் பாராமல் ஒரு நீராகக் கலந்தான் ஆகையாலே என்க
“சீலம்ஹி நாம மஹதோ மந்தை: ஸஹநீரந்த்ரேண ஸம்ஸ்லேஷ:”
‘நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே’ என்றதனால், சௌலப்யம் சொல்லுகிறது.
“வைகுந்தத் தமரரும் முனிவரும்” 10. 9 : 9.என்றும்,
“பக்தர்களோடும் பாகவதர்களோடும் கூட” என்றும் சொல்லப்படுகையாலே இருவகையாக ‘அமரர் முனிக்கணங்கள்’ என்கிறது.
‘நிகர் இல்’ என்பான் என்? என்னில், இவர்களுக்கு ஒருவரும் ஒப்பு அல்லர்;
பிரகிருதி சம்பந்தத்தாலே சம்சாரிகள் ஒப்பு அல்லர்; பிரகிருதி சம்பந்தத்தினின்றும் விடுபட்டவர்களாகையாலே பக்தர்கள்ஒப்பு அல்லர்;
உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் உண்டாகையாலே, ஈசுவரன் ஒப்பு அல்லன்.
“உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் நீங்க” என்று விலக்கி,
“போக மாத்திரத்தில் ஒப்புள்ள அடையாளத்தாலும்” என்கிறபடியே.
“ஜகத்வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹிதத்வாத்ச”–என்பது, பிரம்ம சூத்திரம் உத்தரமீமாம்சை, 4. 4 : 17.

“போகமாத்ர ஸாம்யலிங்காத்ச”–என்பது, பிரம்மசூத்திரம் உத்தரமீமாம்சை, 4. 4 : 21.

பகவானுடைய அனுபவத்தில் மாத்திரம் சம்பந்தம் சொல்லுகையாலே. இருட்டு அறையிலே விளக்குப்போலே, பரமபதத்திற் காட்டிலும்
“கானமும் வானரமும்” -நான்முகன் திருவந். 47.என்கிறபடியே, எத்தனையேனும் தாழ்ந்தார்க்கும் முகம் கொடுக்கிற
சீலம் முதலான குணங்கள் இங்கே உள்ளன ஆகையாலே, அங்கே இல்லாததும் இங்கே பெறுகையாலே,
‘விரும்பும் திருவேங்கடத்தானே’ என்கிறது, சௌலப்யமாவது, உயர்ந்தாரோடு தாழ்ந்தாரோடு வாசி அறச் சர்வசுலபமான அர்ச்சக பராதீனத்வம்.

புகல் ஒன்று இல்லா அடியேன் –
“பிரபத்யே” என்கிற இடத்தில், தன்மை இடத்தால் வந்த அதிகாரி சொரூபத்தைச் சொல்லுகிறது.
அநந்யகதித்வமும், சொரூபப் பிரகாசமான அநந்யார்ஹ சேஷத்வமும் சொல்லுகிறது.
‘புகல் ஒன்று இல்லா’ என்றும், ‘அடியேன்’ என்றும் இரண்டும் சொல்லவேணுமோ?என்னில்,
பிரகிருமி சம்பந்தத்தில் பாரமார்த்தியத்தாலேயும், மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஞான வைபவத்தாலேயும் அருளிச்செய்கிறார்.
பிரபத்தி அதிகாரிகள் மூவர் -களைவாய் துன்பம் களை யாது ஒளிவாய் காலை கண் மாற்று இலேன் –
ஆகிஞ்சன்யம் மூன்று வகை -அஜ்ஞ்ஞானம் ஞானாதியம் பக்தி பரவஸ்யம்
புகல் ஒன்று இல்லா அஜ்ஞ்ஞானம் -அடியேன் -ஞானாதிக்யமும் பக்தி பாரவஸ்யமும் காட்டுமே –

உன் அடிக் கீழ் – “சரணௌ” என்ற பதத்தால் சொல்லப்படுகிற விக்கிரஹத்தைச் சொல்லுகிறது. யாங்ஙனம்? எனின்,
எளிதில் பற்றக்கூடியதாய், உலக விஷயங்களிலே அருசிமுன்னாகத் தன் பக்கல் ருசியையும் உண்டாக்கி,
பிறந்த உருசியையும் வளர்த்து, பேற்றிற்கு விரோதமாயுள்ளனவற்றையும் தவிர்த்து, ஒருதேச விசேடத்திலே போனால்
நித்தியமாகக் கைங்கரியத்தைச் செய்வதற்கு எதிர்த்தொடர்புள்ளதுமாய், எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமுமாவது
விக்கிரஹம் ஆகையாலே என்க.
முதல் முதலிலே, “துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச்செய்து,
தாம் பற்றுகிற இடத்தில் “உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும், “உன்னடிசேர்வண்ணம் அருளாய்” என்றும்,
உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும், “பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும்,
“உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும், “எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும்,
“நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும்,
“அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும், “உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடிவிடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!

அமர்ந்து – அமருகையாவது, வேறு உபாயங்களை விட்டதைப் போன்று வேறு பலன்களில் அருசியைச் சொல்லுகிறதோ? என்னில்,
அது இங்குச் சொல்லப்பட வேண்டியது இல்லாமையாலே பொருள் அன்று. இதற்குப் பொருள்,
“எல்லாத் தர்மங்களையும் விட்டு” என்றும், “பற்றுக்கோடாகப் பற்று” என்றும் சொல்லச்செய்தே
“ஏகம்” என்னும் சொல்லைச் சொன்னதைப்போன்று, திருவேங்கடமுடையான் திருவடிகளும் தம்முடைய தலையும்
கொக்குவாயும் படுகண்ணியும் போலே இடைவெளி இல்லாமல் பொருந்தினபடி சொல்லுகிறது.
புகுந்தேனே –
பிரிந்துநிற்றல் முதலானவைகள் இல்லாதபடி சரீரத்தைப் போன்று சேஷமான தமக்கு அந்தர்யாமியாய் நிற்கிறபடியை அறிந்திருக்கிற இவர்,
‘புகுந்தேன்’ என்கிற இது, ஒரு போக்கு வரத்து உண்டாய் அன்று;
அவனுடைய சர்வஜகத் காரணத்வத்தையும் ஸர்வாத்ம்பாவத்தையும் ஸர்வரக்ஷகத்வத்தையும் அறிந்து,
‘அவனே உபாயம்’ என்று அறுதியிட்டிருக்கிற அத்யவசாய ஞானத்தைச் சொல்லுகிறது.
“கதிவாசக சப்தங்கள் – புத்தி வாசங்கள்” என்கிறபடியே.
புகுந்தேன் – “பிரபத்யே-பற்றுகிறேன்”என்னும் நிகழ்காலம் முக்கியம் அன்று;
அடைந்தேன் என்பது போன்று ‘புகுந்தேன்’ என்கிற இதுவே முக்கியம்.

பிராட்டியாலே பேறு சொல்லும் த்வயம் -சரீரத்தால் பேறு வேதம் –ஆத்மாவால் பேறு திருமந்திரம் -ஈஸ்வரனால் பேறு சரம ஸ்லோகம் சொல்லும்
பாபாநாம் வா – பிராட்டியினுடைய அபயப்பிரதானம் இந்தச் சுலோகம்.
‘இராவணனும் பட்டு, பெருமாளும் வெற்றியோடு கூடியவரானார்’ என்று பெரிய பிரியத்தைப் பிராட்டிக்குத் திருவடி விண்ணப்பம் செய்ய,
பிராட்டியும் பிரீதியின் மிகுதியாலே விம்மல் பொருமலாய்ச் செயலற்றவளாயிருக்க,
இவனும் விக்கலுக்கு வெம்மாற்றம்போலே “ஏ தேவி! எண்ணுவது யாது? தேவரீர் என்னோடு ஏன் பேசவில்லை” என்கிறபடியே,
“கிம்நு சிந்தயஸே தேவி கிம் த்வம் மாம் நாபிபாஷஸே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 15.-

பெரிய பிரியத்தை வந்து விண்ணப்பம்செய்த எனக்கு ஒரு மறுமாற்றம் சொல்லாமல் தேவரீர் எழுந்தருளியிருக்கிற இருப்பு என்தான்? என்று
திருவடி விண்ணப்பம் செய்ய, பிராட்டியும் “உனக்கு ஒத்ததாகத் தரலாவது ஒன்று இல்லாமைகாண் நான் பேசாதிருந்தது” என்ன,
இவனும் “இவ்வளவிலே நம் விருப்பத்தை விண்ணப்பம் செய்துகொள்ள வேணும்” என்று பார்த்து,
“தேவரைச் சுற்றும் முற்றும் நலிந்த அரக்கியர்களாகிறார் கொடுமையுடையவர்களாய் அதற்குத் தக்க காரியங்களைச் செய்கிறவர்களாயிற்று;
இராவணனுக்கு முன்னரே கொல்லப்பட வேண்டியவர்கள் இப் பெண்பிள்ளைகளாயிற்று;
அவனும் இவர்களைப் போன்ற கேடன் அல்லன்; இவர்கள் இப்போது பாம்பு படம் அடங்கினாற்போலே இருக்கிறார்களித்தனையாயிற்று;
இவர்களைப்பலவகையாக வருந்துவதற்கு எண்ணங்கொண்டுள்ளேன்.
“கைகளாலே குத்தியும் கால்களாலே துகைத்தும் நகங்களாலே பிளந்தும் பற்களாலே கடித்தும் துண்டித்தும்”
“சிந்நபிந்நம்” என்கிறபடியே,“முஷ்டிபி: பாணிபி: சைவ சரணை: சஏவ ஸோபநே
இச்சாமி விவிதை: காதை: ஹந்தும் ஏதா: ஸுதாருணா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 33.
“சிந்நம் பிந்நம்” ஸ்ரீராமா. யுத். 94 : 22.

பெருமாள் திருச்சரங்கள் செய்தவை எல்லாம் நானே செய்ய எண்ணுகிறேன்;
பகவானுக்கு அபசாரம் செய்தவர்களையும் பாகவதர்களுக்கு அபசாரம் செய்தவர்களையும் தண்டிக்கும் முறையிலே
தண்டிப்பதற்குக் கோலாநின்றேன்; முன்பு வந்தபோது இடம் இல்லாமை விட்டுப்போனேன் இத்தனை,
இப்போது எனக்கு எல்லாக் கைம்மாறுகளையும் பண்ணியருளிற்று ஆகலாம்;
இவை இத்தனையும் திருவுள்ளமாகவேணும் என்தான்? என்ன, “பாபாநாம் வா” என்று அருளிச்செய்கிறாள்.

பாபாநாம் வா ஸுபாநாம் வா-இவர்கள் நீ நினைத்திருக்கிறபடியே பாவத்தைச் செய்தவர்கள் ஆகவுமாம்.
நான் நினைத்திருக்கிறபடியே நல்வினையைச் செய்தவர்கள் ஆகவும் அதுதானே அன்றோ உத்தேசியம்;
“அவனுக்குக் குற்றமிருந்தாலும் இருக்கட்டும்; நல்லோர்களுக்கு இது பழிக்கத்தக்கது அன்று” என்றாற்போலே.
“தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 3.

இன்றுவந் தான் என் றுண்டோ எந்தையை யாயை முன்னைக்
கொன்றுவந் தானென் றுண்டோ புகலது கூறு கின்றான்
தொன்றுவந் தன்பு பேணும் துணைவனு மவனே பின்னைப்
பின்றுமென் றாலும் நம்பாற் புகழன்றிப் பிறிதுண் டாமோ.-என்றார் கம்பநாட்டாழ்வார்.

அழுக்குடையவன் அன்றோ குளிக்கத் தகுதியுடையவன்; அவர்கள் பாபத்தைச் செய்தவர்களாகில் அன்றோ நாம் முகம் கொடுக்கவேண்டுவது.
நல்வினையராகில் உன் வால் வேணுமோ? அவர்கள் புண்ணியங்களே அவர்களுக்குக் கைகொடுக்குமே;
கோ தானம் பசுவின் வாலைப் பிடித்து தாங்களே தாண்டுவார்களே –
கைம் முதல் இல்லாதார்க்கு அன்றோ நாம் கைம்முதல் ஆகவேண்டுவது’ என்றாள்.
வதார்ஹாணாம் – தண்டிக்க வேண்டியவர்களைத் தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்மசாஸ்திரம்
தேவரைத் தொற்றிக் கிழித்துப் பொகடக்கடவதோ? என்ன,
‘சரண் அடைந்தவர்கள் யாவரேயாயினும் அவர்கள் காப்பாற்றப்படவேண்டும்’ என்கிற விசேஷ சாஸ்திரம்
உன்னைத்தொற்றிக் கிழித்துப் பொகடக்கடவதோ? என்கிறாள். “ஸரணம்” என்று வந்த ஸ்ரீ விபீஷணாழ்வான் தோஷவானேயாகிலும்
“நத்யஜேயம் – விடமாட்டேன்” என்று பெருமாள் கடற்கரையிற் சொன்னவார்த்தை கடல் ஓசையாகக் கடவதோ? என்கிறாள்.
பிலவங்கம-பின்னையும் இவன் புத்தியைத் திரியவிடாமையினாலே ஹரி! ஹரி! என்கிறாள்.
அன்றிக்கே, வசிஷ்டர் முதலாயினோர் இருந்து ஆலோசனை சொல்லும் குடியான இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்தாய் இல்லை;
யோகியான ஜனகன் குலத்தில் பிறந்தாய் இல்லை; காட்டிலே பணையோடு பணை தத்தித் திரியும் ஜாதியிலே அன்றோ பிறந்தது;
அங்ஙன் ஒத்தார்க்குச் சரணாகதியினுடைய தன்மை தெரியாதன்றோ என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே, நச்சினத்தை நச்சும் சாதியானமை கண்டோமே என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே, அரசருமாய் மூலையடியே நடக்கவுரியருமாயிருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்;
நீ வானரசாதியாயிருந்து வைத்து இங்ஙன் கோபிக்கக் கடவையோ? என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
‘வாநரோத்தம’ என்றவள் தானே அன்றோ ஹரி! ஹரி! என்கிறாள்.

கார்யம் கருணம் – இவர்கள் புண்ணிய பாவங்கள் கிடக்க; இப்போது ஓடுகிற தயைசெய்யத் தகுந்த தன்மையைப் பாராய். என்றது,
உன்கையிலே அகப்பட்டு ‘நாம் என்படக்கடவோம்’ என்று தியங்குகிறபடி பாராய் என்றபடி.
இவர்களுக்கு இரக்ஷகர் வேறு இலரே. இப்போது இவ்வளவில் நாம் இரங்கவேணுங் காண். ஆர்யேண – இவையெல்லாம் இப்போது நான் கற்பிக்க வேண்டும்

படியாவதே உனக்கு! ஆர்யேண – ஐந்திரவியாகரணபண்டிதன் என்கிறது பொய்யோ?
அவற்றையும் எல்லாம் கற்றுக் கேட்டிருக்கச் செய்தேயும், இப்போது இராமகோஷ்டியில் பழக்கம் பின்னாட்டின படியே யன்றோ.
அக் கோஷ்டியிற் பழக்கமன்றோ நீ இங்ஙன் சொல்லவல்லையாயிற்று.
“நான் போந்த பின்பு அக்கோஷ்டி இங்ஙனே நீர் அற்றதே அன்றோ” என்று கருத்து.
ந கஸ்சித் ந அபராத்யதி-சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார்!
திரை நீக்கிக் கடல் ஆடப்போமோ? நற்குரிரையாகப் பாவித்திருக்கிற பெருமாள் தாம் குற்றவாளர் அல்லரோ!
நான் தான் குற்றவாட்டி அல்லேனோ? நீ தான் குற்றவாளன் அல்லையோ?

பெருமாள் குற்றவாளரானபடி எங்ஙனே? என்னில், தாம் காடேறப் போந்தார்:
அவர் பின்னே மடல் ஊர்வாரைப் போலே இளையபெருமாளும் போந்தார்;
தம்மோடே ஏகாந்தமாக இன்பம் அநுபவிக்க வேண்டுமென்று இலையகலப்படுத்திக்கொண்டு நானும் போந்தேன்;
என்னைப் பிரிந்து பத்து மாதங்கள் இருந்தார்; தாம் வாராவிட்டால் தம்மது ஓர் அம்பு இசங்கமாட்டாமை இல்லை அன்றோ இவ்வழி;
இத்தனைநாள் பிரிந்திருக்க வல்லவரான போதே பெருமாள் பக்கலிலே யன்றோ குற்றம்?
பாரதந்திரியத்திற்குத் தகுதியாகப் பேசாது இராமல், அது தன்னைச் சொன்ன என்பக்கல் தன்றோ குற்றம்?
இனி, நாயகன் சொன்ன காரியம் செய்த அடியாரைத் தண்டிக்கப் பார்த்த அன்று,
பெருமாள் அருளிச்செய்த காரியம் செய்யப் போந்த உன்னை முற்படத் தண்டித்துக் கொண்டன்றோ

இராவணன் சொன்ன காரியங்களைச் செய்த இவர்களைத் தண்டிப்பது? ஆகையால், நீ அன்றோ குற்றவாளன்!
‘எல்லாப்படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு
நானும் அவர் வழிபோக வேண்டி இருந்த அன்றைக்கு நீ உண்டு’ என்றிருந்தேன்;
நீயும் இங்ஙனேயானால் அபராதம் செய்தார்க்குப் புகுவாசல் உண்டோ?’ என்கிறாள்.

ஒன்பது பாட்டாலும் சரண்யன் ஸ்வரூபம் சொல்லி-இதில் தம்முடைய ஸ்வரூபம் சொல்லி சரணம் புகுகிறார்-

————————————–

அகல கில்லேன் இறையும்என்று அலர்மேல் மங்கை உறைமார்பா!
நிகரில் புகழாய்! உலகமூன் றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல்ஒன் றில்லா அடியேன்உன் னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-

த்வயம் விவரிக்கும் -இதற்க்கு விஸ்தரனமான வியாக்யானம்
திருவாய் மொழி ஆகிறது இப்பாட்டு –
தம்முடைய அபேக்ஷிதம் சடக்கெனச் சித்திக்கைக்காகப் பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக்கொண்டு
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
மேலே ஒன்பது திருப்பாசுரங்களாலும் சரண்யனான சர்வேசுவரனுடைய சொரூபத்தைச் சொன்னார்.
சரண்யன் சொரூபமாவது, நிரதிசய போக்கியமுமாய் வகுத்த விஷயமுமாய் விரோதிகளைப் போக்கக்கூடியதுமாய்ச் சர்வ சுலபமுமாய் இருக்குமது.

அல்லாதவைபோல் அன்றிக்கே, பற்றுவதற்கு ஏகாந்தமாயிருப்பது சௌலப்யம்.
பரத்துவம், சேதனனுக்கு ருசி பிறந்தபோதே பற்ற ஒண்ணாதபடி தூரதேசமாக இருக்கும்.
வியூகமும், பிரமன் சிவன் முதலான தேவர்களுக்காமத்தனை. ஆகையாலே பரத்துவத்தைப் போன்றதேயாம்.
அவதாரங்கள், புண்ணியம் மிக்கவர்களாய் அக் காலத்தில் உதவினார்க்கு ஒழியப் பிற்பாடர்க்கு உதவாமையாலே
காலத்தாலே கழிந்தனவாய் இருக்கும். அக் குறைகள் இரண்டும் இன்றிக்கே எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் வந்து அடையலாம்படி,
“வானவர் வானவர்கோனொடும்” திருவாய். 3. 3 : 2.-என்கிறபடியே, நித்தியசூரிகளோடு, இவ்வருகுள்ள பிரமன் முதலானோர்களோடு,
இவ்வருகுள்ள மனிதர்களோடு கானமும் வானரமுமாய்க்கொண்டு மிக இழிந்த பிறவிகளிலே ஆனார்களோடு வாசி அற
எல்லார்க்கும் பற்றுமிடம் திருவேங்கடமுடையான் திருவடிகளே.
விடாத சுபாவமுடைய னாகையாலே விரும்பியவற்றைப் பெறுதற்குக்காரணங்களான ஞானம் சக்தி முதலான எட்டுக் குணங்களையுமுடையன்;
ஆகையாலே, எல்லாக் குணங்களாலும் நிறைவுற்றிருக்கின்றவனான திருவேங்கடமுடையான் சரண்யன்.

இதில் தம்முடைய சொரூபம் சொல்லிச் சரண்புகுகிறார்.

அதிகாரி சொரூபமாவது, அநந்யகதித்வமும் பிராப்பியருசியும் சொரூபப்பிரகாசமும் என்கிற இவையேயன்றோ-

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா!’ என்கிற இதனாலே
தம்முடைய வெறுமையை முன்னிட்டுக் கொண்டு பெரிய பிராட்டியார் புருஷகாரமாக,
சர்வசுலபனான திருவேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார்.

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா-
நிரபேக்ஷமுமாய் சாபேக்ஷமுமாய் இருக்கும் இவ்வுபாயம்; தன்மை வேறுபாடுகளாலே.
நிரபேக்ஷமாகிறபடி எங்ஙனே? என்னில், ருசியைப் பிறப்பிக்கையும், பிறந்த ருசியை வளர்க்கையும், விரோதிகளைப் போக்குகையும்,
ஒரு தேச விசேடத்து ஏறக்கொண்டு போகையும், உரியதான அடிமையைக் கொள்ளுகையும் ஆகிற இந்த இடங்களில் நிரபேக்ஷமாகத் தானே செய்யும்;
துணைவேண்டா.
இனி, சாபேக்ஷமானபடி எங்ஙனே? என்னில், அதிகாரி வேண்டப்படுவதாயும் புருஷகாரம் வேண்டப்படுவதாயும் இருக்கையாலே

மேலே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய ஆகிஞ்சந்யத்தையும், சேஷத்துவத்தையும்,
அவனுடைய சரண்யதைக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடு போந்தார். இங்கு அது தன்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லிச் சரணம் புகுகிறார்-

எல்லாச் சாத்திரங்களிலும் பரந்திருப்பது ஒன்றாய், இச்சாத்திரங்களுக்கெல்லாம் அடியான வேதாந்தங்களுக்குக் கிழங்காய்,கிழங்காய் – சாரமாய்.
நம் ஆசாரியர்கள் எல்லாரும் ஒக்க ஆதரித்துப் போருவது ஓர் அர்த்த விசேடத்தை இப் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்.
ஆசாரியர்களுக்கெல்லாம் முதல்வருமாய், “மயர்வற மதிநலம் அருளினன்” என்கிறபடியே,
பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தின் தெளிவையுடையவருமான இவர் ஏற்றுக் கொண்டமையாலே வந்தது ஓர் ஏற்றமும் உண்டு இதற்கு.

உபாயங்கள் எல்லாம் அகங்காரத்தின் சம்பந்தம் உடையனவாகையாலே தியாச்சியமாகச் சொல்லப்பட்டன.
ஒன்றாய் எப்பொழுதும் இருப்பதாய் செய்தற்கு எளியதாய்த் தக்கதாய்த், தனக்கு அவ்வருகு ஒன்று இன்றிக்கே,
“ஆதலால், மேலே கூறிய தவங்களுக்குள் பிரபத்தி என்னும் உபாயத்தை மிக மேம்பட்டதாகச் சொல்லுகிறார்கள்” என்கிறபடியே,
சொல்லப்படுகிற பிரபத்தி உபாயத்தைச் சொல்லுகிறது இப் பாசுரத்தால்.

இத் திருப்பாசுரத்தை, துவயத்தில்பதங்களோடு ஒக்க யோஜித்துத் தலைக்கட்டக்கடவது.
அதில் அர்த்தத்தால் பொதருகின்ற ‘அஹம்’ என்ற சொல்லின்பொருளை இங்கு ‘அடியேன்’ என்கிறது.

அகலகில்லேன் இறையும் என்று – இது, அகன்று இருந்து சொல்லுகிற பாசுரமும் அன்று; எப்பொழுதும் கூடியிருக்கச்செய்தேயாயிற்று
‘இறையும் அகலகில்லேன், இறையும் அகலகில்லேன்’ என்று உரைப்பது. நித்தியாநுபவம் பண்ணுவார்க்கு எல்லாம் பாசுரம் இதுவே. ‘

உலகத்தார் அகலகில்லேன் என்பது போன்றதன்றே இவளுடைய அகலகில்லேன்; அது கர்மங் காரணமாக வரும் அகலுதலேயன்றோ,
இவளுக்கு அது இல்லாமையாலும், அவன்தான் மேல்விழும் சுபாவன் ஆகையாலும், அவனால் வரும் பிரிவும் இல்லை; தன்னால் வரும் பிரிவும் இல்லை

இச் சேர்த்திக்குப் பயன், அவனுடைய சுவாதந்திரியத்தை யாதல், தான் பிறவிப்பெருங்கடலில் பிறந்து உழன்று திரிந்து வருதலையாதல்
நினைத்துக் கைவாங்க வேண்டாத படியாயிருக்கை. என்றது, அவனுடைய முற்றறிவினையும் தன்னுடைய குற்றமுடைமையையும் நினைத்து அஞ்சவேண்டாதபடியாயிருக்கையைத் தெரிவித்தபடி.
அதாவது, இவனுடைய அபாரதகாலம் பார்த்து இருந்து எண்ணுவதற்கு அவனுக்குக் காலம் இல்லை, அவள் கூட இருக்கையாலே என்றபடி

பரிமளந்தான் ஒரு வடிவு கொண்டாற்போலே இருக்கை. உறைமார்பா – இதனால், நித்தியயோகம் சொல்லுகிறது.

கணநேரமும் பிரியச் சக்தியுடையயேனல்லேன் என்று.இப்படிச் சொல்லுகிறவள் தான் யார்? என்னில்,
மூன்றுவித சேதனர்கட்கும் தலைவியுமாய், உபயவிபூதிநாதனையும் நியமிக்கின்றவளுமாய் இருக்குமவள் கண்டீர்

இவள் நியமிக்கும் பிரகாரம் என்? என்னில், மூன்றுவித சேதநர்களையும் தாயாந்தன்மையாலே நியமிக்கும்,
ஈசுவரனைக் காதல்குணம் காரணமாக நியமிக்கும்.

இவ்வுலகிற்குத் தலைவியாய் விஷ்ணுவுக்குப் பத்தினியாய்” என்றும், “விஷ்ணுவை விட்டு நீங்காத பிராட்டி” என்றும் சொல்லுகிறபடியே,
தன் சொரூபம் குலையாமே யன்றோ நியமிப்பது. எங்ஙனே? என்னில், ஒளி, ஒளியையுடைய பொருளுக்குச் சேஷமாய் நின்றே
அத் தலைக்கு நிறம் கொடுக்குமாறு போலவும், வாசனை, மலருக்குச் சேஷமாய் நின்று பெருவிலையன் ஆக்குமாறு போலவும்,
ஈசுவரன், சுவாதந்திரியம் குலையாமலே பரதந்திரன் ஆமாறு போலவும் அன்றோ,
இவளும் அத்தலைக்கு அநந்யார்ஹ சேஷமாய்க்கொண்டே நிறம் கொடுக்கும்படி.
அவனுடைய வைலக்ஷண்யம் காரணமாகச் சொல்லுகிறாள்.

விலை உயர்ந்ததான இரத்தினம் ஒன்று கிடைத்தால் ‘இது நமக்குத் தொங்குமோ?’ என்று துணுக்குத் துணுக்கு என்னுமவனைப்போலே
‘அவன் மார்விலே இருந்து அகலிற் செய்வது என்?’ என்று அஸ்தாநேபயசங்கை பண்ணுகிறாள்.
புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் பொறுக்கமாட்டேன் என்பாள் ‘இறையும் அகலகில்லேன்’ என்கிறாள். என்றது,
அவன் உபாயமாமிடத்தில் அங்கத்தைச் சஹியாத சுணையுடைமை போன்று, புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் பொறாத மிருதுத் தன்மையைத் தெரிவித்தபடி.
அவன் மார்விலே இருந்து அவன் முகத்தை நோக்கி, ‘உன்னைவிட்டு அகலச்சக்தியுடையவள் ஆகிறிலேன் என்று
அவன் வைலக்ஷண்யத்தை அவனுக்குச் சொல்லுகிறாள்.
தனக்குத் தானே முற்றறிவினனாயிருக்கிறவனுடைய வைலக்ஷண்யம் அவனுடைய ஞானத்துக்கு விஷயமாமே;

அலர்மேல் மங்கை – இங்ஙன் சொல்லுகிறவள் ஆர்? என்னில், தன் வடிவழகாலும் பருவத்தாலும் அவன்தனக்குங்கூட உத்தேசியமாயிருக்கிறவள்

அலர்மேல்மங்கை – மலரில் தள்ளத் தக்கனவான தாதும் சுண்ணமும் கழிந்த பரிமளமே வடிவானாற்போலே இருந்துள்ள மிருதுத்தன்மையும்,
எப்பொழுதும் அநுபவிக்கத் தக்கதான பருவமுமுடையவள். அவனை ‘அகலகில்லேன்’ என்னச் செய்யவல்ல பரிகரத்தையுடைய இவள்,
‘அகலகில்லேன்’ என்கிறாள் அன்றோ. அவன் மார்வின் சுவடு அறிந்த பின்பு, பிறந்தகமான பூவும் நெருஞ்சி முள்ளினைப் போன்றதாயிற்றாதலின்

உறைமார்பா’ என்கிறது. என்றது, ஸ்ரீஜநகராஜன் திருமகள் பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீமிதிலையை
நினையாதவாறு போலவும்,முக்தன் “சனங்களின் சமீபத்திலுள்ள இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை” என்கிறபடியே,
சம்சாரத்தை நினையாதவாறு போலவும், அவன் மார்வில் இனிமை அறிந்த பின்பு பூவினை நினைத்திலள் என்றபடி.
சுருக்கமற்ற ஞானத்தினையுடையராயிருக்கச் செய்தே சம்சாரத்தைக் காணாத இடம் ஞானக் குறை அன்றே,
இனிமையின் மிகுதி அன்றோ. இவளும் இனிமையாலே அன்றோ காணாது ஒழிகிறது.
இவள் பூவினைக் காணாதவாறு போன்று திருமார்விற்கு அவ்வருகே வேறு அவயவங்களைக் காணாளாதலின் ‘உறைமார்பா’ என்கிறது.
மற்றுள்ள அவயவங்கள் குமர்கிடந்து போமத்தனை.

நிகர்இல் புகழாய் – நாராயண சப்தார்த்தம் சொல்லுகிறது. உபயவிபூதிகளோடு கூடி இருத்தலும்,
உலகத்திற்குக் காரணமாயிருத்தலும் இச் சொல்லுக்குப் பொருளாம். இங்ஙனமிருக்கச்செய்தே, நம் ஆசாரியர்கள் பற்றுவதற்கு
அவசியமான சௌலப்யம் முதலான நான்கு குணங்களையும் அர்த்தமாகச் சொல்லிப் போருவர்கள்;
அக் குணங்களுக்கு முறை அருளிச்செய்கிறார் இவர். அக் குணங்களைச் சொல்லுகிற இடத்தில்,
வாத்சல்யம் முன்னாகச் சொல்லுவான் என்? என்னில், இவன் குற்றங்களோடு கூடியவனாகையாலே,
இக் குற்றங்களைப் பொறுக்கைக்கு உறுப்பாகப் புருஷகாரம் வேண்டினால், உடனே இக் குற்றங்களைப் போக்கியமாகக் கொள்ளத் தக்கது
ஒரு குணம் முன்னாக வேண்டுகையாலே. நன்று; ‘நிகரில் புகழாய்’ என்றால், வாத்சல்யத்தைக் காட்டுமோ? என்னில்,
இதற்குப் பொருள், சத்தியத்திலே “எல்லை இல்லாத காருண்யம் சௌசீல்யம் வாத்சல்யம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமானவனே!” என்று
குணங்களோடு ஒரு சேர எடுத்து, “தன்னைச் சார்ந்தவனிடத்தில் வாத்சல்யத்திற்கு முக்கியமான சமுத்திரம் போன்றவனே!” என்று
“அபார காருண்ய சௌஸீல்ய வாத்ஸல்ய”என்பது, கத்யம்.
“ஆஸ்ரீத வாத்ஸல்யைக ஜலதே”என்பது, கத்யம்.-இந்தக் குணத்தை விசேடிக்கையாலே சொல்லிற்று.

நிகரில் புகழாய்-அதற்கு அடுத்த பதத்தின் அர்த்தம் சொல்லுகிறது. தாமரையாளாகிலும் சிதகு உரைக்குமேல்
‘என்னடி யார் அது செய்யார்’ பெரியாழ்வார் திருமொழி, 4. 9 : 2. என்னும் குணாதிக்கியம் சொல்லுகிறது.

நிகரில் புகழாய் – இப்படி இருக்கிறவள்தானே சிதகு உரைக்கும் அன்றும் அவளுடனே மன்றாடும் குணமிகுதியின் விசேடம் சொல்லுகிறது. என்றது,
‘என்னடியார் அது செய்யார்’ என்று என்னைப்பற்றினார்க்கு அது இல்லை காண் என்கிறது என்றபடி.
‘இல்லை, நான் இப்போது இன்ன குற்றம் செய்யக்கண்டேன்’ என்று காட்டிக்கொடுத்தாலும்,
‘ஆனால் என்? தர்மம் அதர்மம் பரலோகம் என்னும் இவற்றை இல்லை என்று செய்கிறார்களோ?
தங்களை அறியாதே நிகழும் குற்றங்கட்கு நாம் உளோம் என்றன்றோ செய்கிறது’ என்கை.
இவளுடைய உயர்வுக்கு அடி சொல்லும் போது அவனைப் பற்றிச் சொல்லலாம்;
அவனுடைய உயர்வுக்கு ஒன்று தேடிச் சொல்லலாவது இல்லையாதலின், ‘நிகரில்’ என்கிறது.
இதுவோ தான் பொருளின் தன்மை இருக்கும்படி.இத்தால் சொல்லிற்றாயிற்று, இவள் அவனுடைய சுவாதந்திரியத்தை நினைத்து
‘இவற்றின் பக்கல் என்னாய் விளைகிறதோ?’ என்றிருக்கையும், அவன் இவளுடைய மிருதுத்தன்மையையும் இளமையையும் நினைத்து
‘இவற்றின் பக்கல் எவ்வளவாய் இருக்கிறாளோ?’ என்றிருக்கையும்.
ஆக, ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணி நோக்கும் இருவர் நிழலையும் பற்றி அன்றோ உபயவிபூதியும் கிடக்கிறது என்றபடி.

உலகம் மூன்றுடையாய் -மேலே கூறிய வாத்சல்யத்துக்கு அடியான குடல் துடக்கைச் சொல்லுகிறது.
தன் வயிற்றிற் பிறந்த காரணத்தாலே அன்றோ தாய் வத்சலை ஆகிறாள்.
தான் குணங்கள் இல்லாதவனேயானாலும் விட ஒண்ணாத சம்பந்தம் சொல்லுகிறது.

உலகம் மூன்றுடையாய் – தான் குணங்கள் இல்லாதவனாயினும் விடஒண்ணாத சம்பந்தத்தைச் சொல்லுகிறது.
“சிதகு உரைக்குமேல்” என்ற இடத்தில், அவளுக்குச் சொரூபத்திற்குத் தகுதியான குணங்கள் இல்லாதகாலத்திலே அன்றோ
அவள் அது சொல்லுவது; அப்படியே இவனுக்கும் இக் குணங்கள் இன்றிக்கே இருந்தாலும் விட ஒண்ணாத குடல்தொடக்கைச் சொல்லுகிறது.
அவன் ‘அல்லேன்’ என்று கைவிடும் அன்றும் செங்கற்சீரைகட்டி வளைக்கலாம்படி அன்றோ இச் சம்பந்தம் இருப்பது.
இந்தச் சம்பந்தத்தைப் பார்த்தால், இருவராலும் விடஒண்ணாது என்கிறார்

என்னை ஆள்வானே – சம்பந்தத்தைக் கிரயம் செலுத்திக்கொடுக்கும்படி.
மோக்ஷத்தளவும்செல்ல நடத்திக்கொடு போந்து நடுவுள்ள அபேக்ஷிதத்தைக் கொடுக்கின்றவனாதல் அன்றோ ஆளுகின்றவனாவது.
அடிமையைக் கிரயம் செலுத்திக் கொடுக்கும்படி. என்றது,
‘அடிமையின் பொதுமையைப் பற்றிச் சொல்லுகிறீராகில் அவ்வளவே அன்றோ உமக்கும்’ என்ன ஒண்ணாதபடி,
என்னை மயர்வற மதிநலம் அருளி, இவ்வளவும் வர நிறுத்திப் பொகடப் போமோ? என்கிறார் என்றபடி.

என்னை ஆள்வானே – இதனால் சௌசீல்யத்தைச் சொல்லுகிறது. வெறுமை முன்னாக அடைகிறவர் ‘என்னை ஆள்வானே’ என்று
கைங்கரிய தசைபோலே, உபகாரம் தோற்றச்சொல்லப் பெறுவரோ? என்னில்,புருஷகாரத்தைப் பார்த்து வார்த்தை சொன்னார் முதல் பதத்தில்;
பின்னர், உபாயத்தைப் பார்த்து வார்த்தை சொன்னார்; இதில், உலகத்தைப்பார்த்துச் சொல்லுகிறார். என்றது,
உலக விஷயங்களினுடைய லாபா லாபமே பேறு இழவாக இருக்கிறவர்களிலே வேறுபட்டவராயிருக்கிற தம்மை,
‘கர்மம் முதலான உபாயங்கள் சொரூப விரோதிகள்’ என்று அறியும்தனையும் வர நிறுத்தி, பிராட்டி புருஷகாரமாகத் தானே
உபாயமும் தானே உபேயமும் என்னும்படி செய்த உபகாரத்தைச் சொல்லுகிறார் என்றபடி.

நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே – அப்பதத்தில் முடிகிற சௌலப்யம் சொல்லுகிறது.
அங்குள்ளாரும் விரும்பி வந்து அடிமைசெய்கிறதும் இங்கே அன்றோ.
“வைகுந்தத்தமரரும் முனிவரும்” திருவாய். 10. 9 : 9.என்று இரண்டு கோடியாயன்றோ இருப்பது; குணநிஷ்டரும் கைங்கரிய நிஷடரும்.
திருவேங்கடத்தானே – அதற்கு முடிந்தபொருள், சௌலப்யம் என்னக் கடவதன்றோ.
குணயோகமும், சேஷித்வமும், விசேஷகடாக்ஷமும், சௌலப்யமும் இவை இத்தனையும் உண்டு அன்றோ இப் பதத்துக்கு.
இவன் விரும்பியவை அனைத்தையும்இவனுக்குக் கொடுப்பதற்காக அந்தராத்மாவாக நிலைபெற்றிருக்கின்றான் என்றே அன்றோ நாராயண பதத்திற் சொல்லுகிறது.
அந்தச் சௌலப்யம், இங்கு எப்பொழுதும் நிலைபெற்று இருப்பதாலே திருவேங்கடமுடையான் பக்கலிலே கிடக்குமன்றோ.
இந்தச் சௌலப்யம் உபாயமாகிறபடி எங்ஙனே? என்னில்,
“மாமேகம் – என்னையே” என்ற இடத்தில், சாரதியாயிருக்கும் வேடத்தை அன்றோ காட்டுகிறது.
இன்னமும் அவ்வளவு அன்றே இங்கு. அதற்கு முன்பும் பின்பும் இல்லை அன்றோ அந்தச் சௌலப்யந்தான்.
எப்பொழுதும் நிலைபெற்று இருக்கிற இடம் அன்றோ இவ்விடம். அங்குத்தானும்
“பார்த்தனே! என்னிடத்தில் வைத்த மனத்தினையுடையையாய்” என்று ஒரு தேவை இட்டன்றோ சொல்லிற்று. அதுவும் இல்லை அன்றோ இங்கு.

நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே’ என்றதனால், சௌலப்யம் சொல்லுகிறது.
“வைகுந்தத் தமரரும் முனிவரும்” 10. 9 : 9.என்றும், “பக்தர்களோடும் பாகவதர்களோடும் கூட” என்றும் சொல்லப்படுகையாலே இருவகையாக
‘அமரர் முனிக்கணங்கள்’ என்கிறது. ‘நிகர் இல்’ என்பான் என்? என்னில்,
இவர்களுக்கு ஒருவரும் ஒப்பு அல்லர்; பிரகிருதி சம்பந்தத்தாலே சம்சாரிகள் ஒப்பு அல்லர்;
பிரகிருதி சம்பந்தத்தினின்றும் விடுபட்டவர்களாகையாலே பக்தர்கள்ஒப்பு அல்லர்;
உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் உண்டாகையாலே, ஈசுவரன் ஒப்பு அல்லன்.

இருட்டு அறையிலே விளக்குப்போலே, பரமபதத்திற் காட்டிலும் “கானமும் வானரமும்” -நான்முகன் திருவந். 47.என்கிறபடியே,
எத்தனையேனும் தாழ்ந்தார்க்கும் முகம் கொடுக்கிற சீலம் முதலான குணங்கள் இங்கே உள்ளன ஆகையாலே,
அங்கே இல்லாததும் இங்கே பெறுகையாலே, ‘விரும்பும் திருவேங்கடத்தானே’ என்கிறது

புகல் ஒன்று இல்லா அடியேன் – ஆகிஞ்சந்யமும் சொரூபமும் சரணாகதிக்குப் பரிகரங்களே அன்றோ. உன்னடிக்கீழ் – “சரணௌ” என்ற பதத்தின் பொருள்.

மேலே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய சேஷத்வத்தையும் ஆகிஞ்சந்யத்தையும் உருவச்சொல்லிக் கொடு போந்தார்.
இனித்தான், வெறுமையும், சொரூபமும், என்னும் இரண்டும் சரணாகதிக்குப் பரிகரங்கள் ஆதலின்,
அவற்றை இங்கேயும் அருளிச்செய்கிறார்; அவற்றைச் சரணாகதிக்கு அங்கமாகச் சொல்லவேணுமன்றோ.
அவற்றை இங்கே சொல்ல வேண்டுகிறது என்? என்னில், அவனுக்கு உபாயத் தன்மை சொரூபமானதைப் போன்று.
இவனுக்கும் இந்த நினைவு சொரூபமாகையாலே. இவனுக்கு இது இல்லாதபோது சர்வமுக்தி பிரசங்கமாமே.
அடியேன் – துவயத்தில் “பிரபத்யே” என்ற சொல்லில் பொருளாலே கிடைத்த ‘அஹம்’ என்னும் சொல்லை,
இங்கு ‘அடியேன்’ என்ற சொல்லாலே சொன்னதுவே வாசி

உன்னடிக் கீழ் – “சரணௌ” என்றது தன்னையே சொல்லுகிறது. அவர், “தமையனாருடைய திருவடிகளை” என்றாற்போலே சொல்லக்கடவதன்றோ

உன் அடிக் கீழ் – “சரணௌ” என்ற பதத்தால் சொல்லப்படுகிற விக்கிரஹத்தைச் சொல்லுகிறது. யாங்ஙனம்? எனின்,
எளிதில் பற்றக்கூடியதாய், உலக விஷயங்களிலே அருசிமுன்னாகத் தன் பக்கல் ருசியையும் உண்டாக்கி,
பிறந்த உருசியையும் வளர்த்து, பேற்றிற்கு விரோதமாயுள்ளனவற்றையும் தவிர்த்து, ஒருதேச விசேடத்திலே போனால்
நித்தியமாகக் கைங்கரியத்தைச் செய்வதற்கு எதிர்த்தொடர்புள்ளதுமாய், எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு
விஷயமுமாவது விக்கிரஹம் ஆகையாலே என்க.
முதல் முதலிலே, “துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச்செய்து,
தாம் பற்றுகிற இடத்தில் “உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும், “உன்னடிசேர்வண்ணம் அருளாய்” என்றும்,
உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும், “பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும்,
“உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும், “எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும்,
“நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும், “அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும்,
“உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடிவிடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!

அமர்ந்து – நடு ஓர் இடையீடு இன்றிக்கே இருக்கை.
அவனுக்கு ஒரு துணைவேண்டுதல், தம் தலையிலே ஓர் உபாயத் தன்மை கிடத்தல் செய்யில் அன்றோ நடுவே
ஓர் இடையீடு விளம்பங்கட்குக் காரணம் உள்ளது என்பார் ‘அமர்ந்து’ என்கிறார்
திருவேங்கடமுடையான் திருவடிகளும் தம்முடைய தலையும் கொக்குவாயும் படுகண்ணியும் போலே இடைவெளி இல்லாமல் பொருந்தினபடி சொல்லுகிறது

புகுந்தேனே – இந்த உறுதியும் உபாயபாவத்தில் சேராமையாலும், செய்ந்நன்றியறிதல் சொரூபமாகையாலும்,
பற்றுதலும் அறிவினைப் பற்றிய செயலாகையாலும்,

புகுந்தேன் – போன எல்லை அளவு மன்றோ புகுருவதும்; முன்பும் அர்த்தத்தில் இழவு இல்லை அன்றோ.
இவனுடைய மாறான உணர்வு அன்றோ உள்ளது; அது போமித்தனை அன்றோ வேண்டுவது. அறுதியிட்டேன் என்கிறார்.
துவயத்தில் உள்ள “பிரபத்யே” என்ற நிகழ்காலம், நினைவின் தொடர்ச்சிபோல் அன்று
புகுந்தேனே – பிரிந்துநிற்றல் முதலானவைகள் இல்லாதபடி சரீரத்தைப் போன்று சேஷமான
தமக்கு அந்தர்யாமியாய் நிற்கிறபடியை அறிந்திருக்கிற இவர், ‘புகுந்தேன்’ என்கிற இது,
ஒரு போக்கு வரத்து உண்டாய் அன்று; அவனுடைய சர்வஜகத் காரணத்வத்தையும் ஸர்வாத்ம்பாவத்தையும் ஸர்வரக்ஷகத்வத்தையும் அறிந்து,
‘அவனே உபாயம்’ என்று அறுதியிட்டிருக்கிற அத்யவசாய ஞானத்தைச் சொல்லுகிறது.
“கதிவாசக சப்தங்கள் – புத்தி வாசங்கள்” என்கிறபடியே.
புகுந்தேன் – “பிரபத்யே-பற்றுகிறேன்”என்னும் நிகழ்காலம் முக்கியம் அன்று; அடைந்தேன் என்பது போன்று ‘புகுந்தேன்’ என்கிற இதுவே முக்கியம்.

இவை எல்லாம் அதிகாரிக்கு விசேஷணங்களாகச் சொல்லப்பட்டன அன்றோ.
இவையெல்லாம் துவயத்தில் முடிகிற பதத்தோடே சேரக்கடவனவாம்.

அஷ்ட ஸ்லோகி -பத்து அர்த்தங்கள்
நேத்ருத்வம்– புருஷகாரத்வம்
நித்ய யோகம் -மதுப்பு பிரத்யயம்
சமுச்சித குண ஜாதம் -நாரா -ஆச்ரயண ஸுகர்ய மாபாதக குணங்கள் -உபயோகி
தனு க்யாபானம் திருவடித்த தாமரைகளை
உபாயம் கர்தவ்ய பாவம்
மிதுன பிராப்யாம் ஏவ -பிரசித்தம் –ஸ்ரீ மதே நாராயணாயா -நான்காம் வேற்றுமை உருபு இரண்டிலும்
மிதுன பரம்
ஸ்வாமித்வம் -கீழே ஸ்வாமி விட மாட்டார் கிட்டலாம் -கார்யம் செய்யும் என்று துணிக்கைக்கு அங்கு
இங்கே கைங்கர்யம் பண்ண –
பிராரத்த நாஞ்ச -ஆய -மிதுனத்தில்
நாராயணாயா -பிரார்த்தநாயாம் சதுர்த்தி திரு மந்திரத்தில்
லுப்த சதுர்த்தி -தாதார்த்தயே சதுர்த்தி அவனுக்காகவே
பிரபல தர விரோதி -அவன் ஆனந்தத்துக்காக -சேஷத்வ பாரதந்தர்யம் அனுரூபம்
ஸூ பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ ஞானம் அறிந்த பலன்
ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி பாரதந்தர்ய ஞானம் அறிந்த பின்பு
ஓம் நம ஸ்வரூப சிஷை
நம நம உபாய சிஷை
நாராயணாயா நம -பிராப்தி சிஷை
வேய் மறு தோளிணை உம் தம் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -பரம பாத சோபனம் –8 அணா–திருப்பாவை 1 ரூபாய்
99 கட்டம் பெரிய பாம்பு -98 இரட்டை விழாமல் -இரண்டு நம -ஒன்று ம –
ஷேம கரம் இரு வார்த்தை சொல்லி -மந்த்ர ரத்னம் -இரு விலங்கை அறுப்போம் –
ஸ்தந்தய பிரஜைக்கு முலைப்பால் போலே -சாய்காரம் போலே எளிமை -ஆச்சார்ய பரிக்ரஹம்

திருவடிக்கீழ் அமர்ந்தே தென் திருவரங்கம் கோயில் கொண்டானே என்று கொக்கு வாயும் படு கண்ணியும் போலே பாத ரேகை போலே அமர்ந்தார்

——————————————————————–

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11-

பரம பதத்தில் வியா வ்ருத்தமாக வேறு பாடு தோன்ற -நித்ய வாஸம் செய்வார்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்-திருவடிக்கு கீழ் வாழலாம் –
அடியார் அடிக்கீழ் வாழ்மின் -மூன்று பதங்கள் இங்கும் -அநந்ய சாதனராய் அநந்ய பிரயோஜனராய் -என்று என்று –
உபாயாந்தர சம்பந்தம் அறுத்து -என்றும் உபேயாந்த்ர சம்பந்தம் அறுத்து என்றும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்-ஒப்பில்லா -சர்வாதிகன் -நீர் நிலங்கள் சிரமஹரமான
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்-கார்ய கரமாம் படி
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.-சப்தத்துக்கும் அர்த்தத்துக்கும் இரண்டு பிடித்தார்
-நிரதிசய மஹத்தை -பரமாகாசம் -மாக வைகுந்தம் –
இது திருவாய் மொழி சம்பந்தம் அடியாக வியாவ்ருத்தி தோன்ற இருப்பர் –
நிலாவுவர் –நிலை நிற்க நடத்தல் -காம ரூபன் சஞ்சரன்-பெருமாள் பின்பே தொடர்ந்து கைங்கர்யம் செய்யப் பெறுவர்
-பிடித்தாரை பிடித்தார் என்றுமாம் -பக்த பக்தர் -தொண்டர் தொண்டர் -தொட்டாரைத் தொட்டார்

அடியீர்! திருவடிகளிலே பொருந்தி புகுந்து வாழுங்கோள் என்று திருவருள் செய்கின்ற, இப்படிக்கு ஒப்பு இல்லாத திருவேங்கடமுடையானை,
வயல்கள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் முடிப்பதாக அருளிச்செய்த, ஆயிரத்திலே திருவேங்கடத்தைப் பற்றிய இப்பத்துத்
திருப்பாசுரங்களையும் கற்றவர்களைப் பற்றியவர்கள் அந்தமில் பேரின்பத் தழிவில் விட்டிலே சென்று பேரின்பத்தை அடைவார்கள்.
அடியீர் புகுந்து அமர்ந்து வாழ்மின் என்று அருள் கொடுக்கும் பெருமான் என்க. முடிப்பான்: வினையெச்சம்.

முடிவில், இத் திருவாய்மொழி கற்றார், பரமபதத்திலே சென்று அடிமையிலே முடிசூடினவராய்
அடிமை செய்யப் பெறுவர்கள் என்கிறார்.

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று-
சேஷபூதர்கள் -உங்கள் உத்தேசியம் கண்டீர்கோளே, இத் திருவடிகளைப் பற்றி ஆழ்ந்து கிருதக்கிருத்தியராய்ப் போங்கோள் என்று,
அருள் கொடுக்கும் படிக் கேழ் இல்லாப் பெருமானை –
அடியார்கள் விஷயத்தில் அருள்கொடுக்கும் சுபாவத்துக்கு ஒப்பு இல்லாத சர்வேசுவரனை.
“மாஸுச: – துக்கப்படாதே” என்ற கிருஷ்ணனும் ஒவ்வான் இவன் படிக்கு.
பழனம் குருகூர்ச் சடகோபன் –
நல்ல நீர் நிலங்களையுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும் –
“பல நீ காட்டிப் படுப்பாயோ” என்கிற சம்சார விரோதத்தை முடிக்கையிலே திருவுள்ளத்தாலே உத்சாஹம்கொண்டு
அருளிச்செய்த ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தும் திருமலைக்குச் சொல்லிற்றின.
“சுவாமி! இலக்ஷம் பசுவின் விலையை வாங்கிக் கொண்டு சபளை என்கிற காமதேநுவை எனக்குக் கொடுக்க வேண்டும்;
இந்தக் காமதேநு பசுக்களில் இரத்தினம் என்பது பிரசித்தம்;
கவாம் ஸத ஸஹஸ்ரேண தீயதாம் சபளா மம ரத்நம் ஹி பகவந் ஏதத் ரத்நஹாரீ ச பார்த்திவ:”- என்பது, ஸ்ரீராமா. பால. 53. 9.
தர்மசாத்திரப்படி இரத்தினத்தைக் கொள்ளுகிறவன் அரசன்” என்கிறபடியே.
பிடித்தார் பிடித்தார் –
பிடித்தவர்களைப் பிடித்தவர்கள்; பற்றினாரைப் பற்றினார். வீற்றிருந்து –
“அந்த முக்தன் சுவதந்திரனாகிறான், கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாக ஆகிறான்” என்கிறபடியே,
“ஸஸ்வராட்பவதி” என்பது, சாந். 7 : 25.-இருவர்க்கும் ஒக்குமன்றோ வீற்றிக்கை.
தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் சேஷமாகவுடையனாகையாலே வந்த ஆனந்தத்தையுடையனா யிருப்பான் அவன்;
“இவனேயன்றோ ஆனந்திப்பிக்கப்படுகிறான்” என்கிறபடியே, அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தத்தையடைகின்றவனாக இருப்பான் இவன்.
பெரிய வானுள் நிலாவுவரே –
“மஹாகம்” என்றும், “பரமாகாசம்” என்றும் சொல்லப்படுகிற பரமபதத்திலே வாழப்பெறுவர்கள்.
இந்திரன் முதலானோர் வாழும் இவ் வருகில் வெளியில் அன்று, மேல் வரும் அநுபவம் ஒழியப் பேற்றுக்குச் சரணம்புக
வேண்டாத தேசத்திலே போய்ப் புகப்பெறுவர்.
இவர் செய்த சரணாகதியே நமக்கும் எல்லாம்; தனித்து வேண்டா;
இத் திருப்பாசுரத்தைச் சொல்லிப் பலத்திலே சேர்தல் அத்தனை.
நற்கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாறு போலே, இவரை நினைத்து இப்பத்துங் கற்றார்பக்கலிலும் ஈசுவரன் பிரசந்நனாம்.
ஸ்ரீவிபிஷணாழ்வானோடு வந்த நால்வர்க்கும் அவன்செய்த சரணாகதியே அமைந்ததே அன்றோ.
‘இவன் உடையவன்’ என்று எதிர்த்தலைக்குத் தோற்ற இருக்குமத்தனையே வேண்டுவது.
பஞ்ச ஸம்ஸ்காரமும் ஞான அனுஷ்டானங்கள் வேண்டாவோ -இப்பத்தில் அந்வயமே போதுமோ -என்னில் –
வேணும் –இவை அந்தர்பூதங்கள்-ஆழ்வார் சம்பந்தம் என்று சொல்லும் பொழுதே

—————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆவிபித்யா
ஸ்வயம் ஆகிஞ்சன்யம்
ஸ்ரீ வெங்கடேச சரணம்
முனி ஆர்த்தே -ஸ்தாதாதய
அபிஜாவாசாம் -தாமரையாள்- பிராட்டி
சங்கடந கர்ம ஜாத ரூபாம் -புருஷகார கர்த்தவ்யத்தில் ஆழ்ந்து

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஆபத் சம் ரக்ஷணாத்
அரி உபகாரணத்தயா
மேக சாம்யாதி பூம்னா 3/4 -மேக வண்ணா -ஆதி -தீப்தமாதவம் திரு மாக்கள் கேள்வா தேவா
சுவானாம் விச்வாஸ தானாத்
ஸூ ரகண பஜ நாத் -6/7
திவ்ய தேச உபசத்தி-விரும்பும் திருவேங்கடத்தான்
பிராப்ய அப்ராப்யத்வ யோகாத்-வந்தாய் போலே வாராதாய் -வாராதாய் போல் வருவானே
சத் பிரபத்த்வய பாவாத் -10-
சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் -ஸ்ருதி சத விவஸிதம்

ஷஷ்டசதகம்
அபிகம்யன் -ஆச்சார்ய புருஷகாரமாக -சித்தம் சத்வாரா கம்யம்
ஸ்வயம் இதம் -மேல் விழுந்து மின்னிடை மடவார்
விருத்தங்கள் வஸ்துக்கள் சேர்ப்பித்து –அஸகஸ்தாயி யோஜநாரஹம்
ஸ்வ கீய சரித்திரம் சர்வ சித்த ஆகர்ஷந்தம்-குரவை —
விகடித விஜதம் -சோபாதிக பந்து ஜனம் பிரித்து –
ஆஸ்ரித அகங்கார மம கார மோசகம் ச்வான்வித
த்ருத்யாதீநாம் தைர்யம் -விஷலிஷ சமயத்திலும் நடக்க
ஆஸ்ரிதர் கடிப்பித்த விபூதி த்வயம் -கடக்க வச மகா விபூதி யுக்மம்
சடாரி வை கட்டிய சா அர்ஹம் -விஸ்லேஷத்துக்கு அர்ஹம் இல்லாமல் நீராய்
பிரபதனத்துக்கு ஸூ லபன்-

———————————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 60-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புக்க பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
ஆர்த்தி பாரவச்யத்தாலே கூப்பிடுகிற இவர்-பிராப்யாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை காற்கடைக் கொண்டு
ஸ்ரீயபதிகளின் திருவடிகளிலே பண்ணும் அடிமையே பரம பிராப்யம் என்று அறுதி இட்டு
அந்த பிராப்யத்தை பெறுகைக்காக-தேச காலாதி விப்ர க்ருஷ்டங்களான ஸ்தலங்களை விட்டு
கானமும் வானரமும் வேடும் ஆனவருக்கு முகம் கொடுத்துக் கொண்டு
சௌலப்ய சாம்ராஜ்யம் பண்ணுகிற ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே
ச பிராது -இத்யாதிப் படியே ஸ்ரீ பிராட்டியை முன்னிட்டு
சரண்ய குண பூர்த்தியையும்-சரண வரண உத்யுக்தரான தம் வெறுமையையும் அனுசந்தித்துக் கொண்டு
பூர்ண பிரபத்தி பண்ணுகிற உலகமுண்ட பெருவாயனில் அர்த்தத்தை
உலகு உய்ய மால் நின்ற -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————————

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் -மலரடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே
உன் சரணாய் நெஞ்சமே உள்—60-

——————————————————-

வியாக்யானம்–

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே –
சென்னி யோங்கு தண் திரு வேங்கடமுடையான் யுலகு தன்னை வாழ நின்ற நம்பி -என்று சொல்லுகிறபடியே
லோகமாக உஜ்ஜீவித்து வாழும்படி ஸ்ரீ சர்வேஸ்வரன் நின்று அருளின ஸ்ரீ திரு மலையிலே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே –என்றதிலே நோக்கு-

அலர் மகளை முன்னிட்டு –
திரு மா மகள் கேள்வா -என்றும்
அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்-ஸ்ரீ பெரிய பிராட்டியாரை புருஷகாரமாக முன்னிட்டு-

அவன் தன் -மலரடியே –
ஸ்ரீ திரு வேங்கடத்தானானவன் பூவார் கழல்களான- நாண் மலர் அடித் தாமரையையே –
அதாவது –
குலதொல் அடியேன் உனபாதம் -என்றும்
ஆறாவன்பில் அடியேன் உட் அடி சேர் வண்ணம் -என்றும்
அண்ணலே உன் அடி சேர -என்றும்
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு -என்றும்
திண் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் -என்றும்
எந் நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே -என்றும்
உன பாதம் காண -என்றும்
நோலாதாற்றே னுன பாதம் -என்றும்
அந்தோ அடியேனுன பாதம் அகலகில்லேன் -என்றும்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும் இப்படி-அடியே தொடங்கி-அடியைத் தொடர்ந்த படி-

அவன் தன் மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த –
ஸ்ரீ திரு வேம்கடத்தனான-அவன் மலரடியே
இத்தால்
நிகரில் புகழாய் -என்று தொடங்கி அனுசந்திக்கிற வாத்சல்யாதிகளும் ஸூசிதம்

அவன் தன் மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த -மகிழ் மாறன் –
திரு வேங்கடத்தானே புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
தம் வெறுமையை முன்னிட்டு-அவன் திருவடிகளிலே நிரபேஷ உபாயமாக
ஸ்வீகரித்த ஸ்ரீ ஆழ்வார் உடைய திருவடிகளே உனக்கு உபாயமாக ஸ்வீகரீ –

அகலகில்லேன் என்று பூர்வ வாக்கியம் அனுசந்தித்தார்-என்னும்படி
சக்ரமமாக-சரண வரணம் பண்ணுகையாலே சாத்தின திரு மகிழ் மாலையும் சம்ருதம் ஆயிற்று –

சரண்யன்-தண் துழாய் விரை நாறு கண்ணியனாப் போலே
சரணாகதரான இவரும் மகிழ் மாலையினரானார்
அது சேஷித்வ உத்தியோகம்
இது சேஷத்வ உத்தியோகம்
அவர் பூம் துழாயன் அடியைச் சேர்ந்தால் போலே
இவரும்-மகிழ் மாறன் தாளிணையே உன் சரணாய் நெஞ்சமே உள்-என்கிறார்

நெஞ்சே
வகுளாபிராமமான திருவடிகளை உனக்கு உபாயமாக அத்யவசித்துப் போரு-என்கிறார்

———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: