பகவத் விஷயம் காலஷேபம் -141- திருவாய்மொழி – -6-10-1….6-10-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

மேல் திருவாய்மொழியிலே, பிராப்பியத்தின் தன்மை இருக்கும்படி குறைவறச் சொன்னார்;
இத் திருவாய்மொழியில் பிராபகத்தின் தன்மை குறைவறச் சொல்லுகிறார்.
மேல் திருவாய்மொழியிலே உபாயத்தைப் பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராப்யம் பிரதாநமாகக் கடவது;
இத் திருவாய்மொழியில் உபேயத்தைப்பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராபகம் பிரதாநமாகக்கடவது.
மேல் திருவாய்மொழி திருமந்திரம் போலே. இந்தத் திருவாய்மொழி சரமஸ்லோகம்போலே –
இரண்டும் ஒன்றிலே உண்டே? என்னில், அது சக்தி யோகத்தாலே வருமது அன்றோ;
வெவ்வேறு நிலைகளைப்பற்றி வரும் இரண்டும் இரண்டாயே இருக்கக்கடவன.

கோல திரு மா மகள் -தடம் தாமரைகட்கே -பிராப்ய வேஷம் -பிராபக வேஷம் -அகலகில்லேன் –அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
பிராப்ய பிராப்பகங்கள் அவனே -பக்தனுக்கு பக்தி உபாயம் –
காப்பானே -கீழில்–பிராபகத்வம் -இங்கு நால் தோள் அமுது -பிரபாயத்வம் -இரண்டிலும் இரண்டு உண்டே -பிரதானம் –
பிரதான குணங்கள் திவ்ய தேசம் காட்டி நாயனார் அருளிச் செய்தது போலே –
பிராப்ய பிரதானம் திரு மந்த்ரம் –பிராபக பிரதானம் சரம ஸ்லோகம் –
பாலே மருந்துமாகவும் விருந்தாகவும் -உபாயம் உபேயம் -தன்மை மாற்றாதே -பிரதானம் சொல்வது எங்கனே –
சக்தி யோகம் -பாலுக்கு மருந்தாகும் சக்தி உண்டு –மருந்து பால் ஆகாதே -அவன் எப்போதும் அனுபவிக்க தக்க பிராப்யம் தான்
-வேற வழி இல்லாமல் அவனை உபாயம் -கரு முகை மாலையை சும்மாடு ஆக்குகிறோம்
நம்முடைய -வரண தசை –பிராப்தி தசை -இரண்டும்அவஸ்தா பேதம் -ஒன்று முடிந்து அடுத்து ஒன்று வருமே –
அதனால் இரண்டும் இரண்டாகவே இருக்க கடவது -என்றவாறு

மிகப்பெரிய துன்பத்தோடே பரமபதத்திலே கேட்கும்படி கூப்பிடச்செய்தேயும் சர்வரக்ஷகனானவன் வந்து
முகம் காட்டாமையாலே மிகவும் தளர்ந்தவராய், திருமகள்கேள்வனாய் எல்லா விருப்பங்களும் நிறைந்தவனாய்
உபய விபூதிகளோடு கூடினவனாய் எல்லா நற்குணங்களையு முடையவனாய் –
ஸ்ரீ யபதி — அவாப்த ஸமஸ்த காமன்– உபய உக்தன் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் –
“நினைவிற்கும் எட்டாத சொரூபத்தையுடைய உலகநாதனான விஷ்ணுவானவர் பிராட்டியோடும்
பக்தர்கள் பாகவதர்களோடுகூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற சிறந்த உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்”
‘வைகுண்டே து பரேலோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி:
ஆஸ்தே விஷ்ணு: அசிந்த்யாத்மா பக்தை: பாகவதை: ஸஹ”–லிங்க புராண ஸ்லோகம் -என்கிறபடியே, நித்தியசூரிகட்குக் காட்சி கொடுத்துக்கொண்டு
இருக்கக் கூடிய சர்வேசுவரன், பலரும் நம்மை இழக்க நாம் நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது என்று பார்த்தருளி,
இராமன் கிருஷ்ணன் முதலான அவதாரங்களைச் செய்து அந்தக் காலத்திலே உள்ளவர்கட்குத் தன் குணங்களையும் செயல்களையும் காட்டி அநுபவிப்பித்தான்;
அக் காலத்திலும் பிற்பாடரான சம்சாரிகளுக்கும் இழக்கவேண்டாதபடி ருசி உண்டாக்குகிறவனாய்க் கொண்டு வந்து
திருமலையிலே நாய்ச்சியாருடனே கூட நின்றருளினான்;
அதிகாரி நியதி, கால நியதி, அங்க நியதி என்றாற்போலே சொல்லுகிற நிர்ப்பந்தங்கள் ஒன்றும் இன்றிக்கே
அடையலாம்படி அங்ஙனம் நிற்கிற சௌசீல்யத்தைக் கண்டு, திருவேங்கடமுடையான் திருவடிகளிலே,
பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய வேறு கதி இல்லாமையை விண்ணப்பம் செய்து
சரணம்புக்குத் தம்முடைய எண்ணத்தை அறிவிக்கிறார்.

மேலேயும், பல இடங்களிலே சரணாகதி செய்தார்; அந்த அந்த இடங்களிலே
‘தர்மிபுக்க இடத்தே நிரூபக தர்மங்களும் புகக் கடவன’ என்கிற நியாயத்தாலே, லக்ஷ்மீ சம்பந்தம் சொன்னார்;
இங்கு அது தன்னையே வாய்விடுகிறார்.
மேலேயுள்ள சரணாகதிகள் திருமந்திரம் போலே; இது துவயம் போலே.
திருமந்திரத்திலும் லக்ஷ்மீ சம்பந்தத்துக்கு வாசகமான சொற்கள் உண்டாயிருக்கச் செய்தேயும், –
அகாரம் உகாரம் நார சப்தங்கள் ஸ்ரீ சம்பந்தம் சொல்லும் சப்தங்கள்
வெளிப்படையாகச் சொல்லிற்று துவயத்திலே அன்றோ; அதுபோலே இத் திருவாய்மொழி.
“தாவத் ஆர்த்தி:-“தாவத்ஆர்த்தி: ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா ஸுகம்
யாவந் நயாதி ஸரணம் த்வாம் அஸேஷாக நாஸநம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. பகவானைப்பார்த்துப் பிரமன் கூறியது
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு: அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரதர்ஷப”–என்ற ஸ்ரீகீதை இங்கு அநுசந்தேயம். 7 : 16.

‘இழந்ததுபெறவேணும்’ என்னுமதுவும் அவ்வளவே.
ததாவாஞ்சா-அப்ராப்த விஷயத்தில் செய்யும் சாபலமும் அவ்வளவே.
தாவந்மோஹ: – சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்றாக புத்திபண்ணுகை என்னும் அதுவும் அவ்வளவே.
ததாஸுகம் – “ஏஷஹ்யேவாநந்தயாதி – இவனேயன்றோ ( சீவனுக்கு ) ஆனந்தத்தைக் கொடுக்கிறான்” என்கிறதற்கு
விரோதமாக வரும் சுகங்களும் அவ்வளவே.
யாவந்நயாதிஸரணம் த்வாம் அஸேஷாகநாஸனம் – செல்வம் ஆத்ம்பிராப்தி பகவத்பிராப்தி விரோதி இவை எல்லாம்
உன்னைக்கிட்டுமளவே யன்றோ நிற்பது” என்கிறது.-சர்வ பல சாதகம் பிரபத்தி –

அவனை ஆஸ்ரயிக்கும் அளவே -இழந்தது பெறுவதும் -ஆர்த்தன்-வாஞ்சா -ஐஸ்வர்ய காமன் ஆசை -அர்த்தாத்தி -அபிராப்தி விஷய சாபல்யம் —
மோஹம்-அஜ்ஞ்ஞானம் -ததா சுகம் இஹ லோக சுகம் -விரோதிகள் -தொலைந்து -அபேக்ஷிதங்கள் பெறுவர் –
அனைத்துக்கும் தம் இடம் வரச் சொல்லி -திட்டம் -அழகு குணம் பார்த்து என்றாவது ஒரு நாள் வைராக்யம் பெற்று
பகவல் லாபார்த்தி ஆவார்கள் -கதி த்ரயத்வ மூலத்வாத்

இப்படியே தம்முடைய எல்லா விரோதிகளும் போய்த் தம்முடைய எல்லா அபேக்ஷிதங்களும் கிடைக்கைக்கு ஒரு குறை இல்லை என்று,
எப்பொழுதும் அண்மையில் இருக்கிற திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
இனித்தான், சரணாகதி பலத்தைக் கொடுப்பதாகுமிடத்தில், சரண்யன் பக்கலிலே செய்யவும்வேணும்; தான் அதிகாரியாகவும் வேணும்.
நற்குணங்கள் இல்லாதவர்களிடத்திலே செய்யுமிடத்தில் அதுதானே கொல்லுதலுக்குக் காரணமாகக் காணாநின்றோம் அன்றோ.
இங்ஙனே இருக்கச்செய்தேயும் அந்த அந்த இடங்களிலும் பலிக்கிற இது, இவ் விஷயத்தில் பலிக்கின்றது என்னுமிடம்
கிம்புநர் நியாயத்தாலே சித்திப்பதாம்.
இனி, அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்கவேணும்;
சரணம்புகா, பலித்தது இல்லை என்னா,
“இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது
“க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.

சரண்யன் ஸ்வரூபம் -உலகம் உண்ட பெருவாயா -குணாதிகன்-இடம் பண்ண வேண்டும் –
அதிகாரி ஸ்வரூபம் –குல தொல் அடியேன் –கார்யகரத்துக்கு இரண்டும் இங்கே உண்டே
குண ஹானி இடம் பண்ணி அனர்த்த ஹேது -சமுத்திர ராஜன் -பெருமாள் -பலராமன் -சக்கரவர்த்தி -இடம் பார்த்தோமே
சிபி புறா –கபோதம் -வேடன் -பலிக்க கண்டோமே -என்னில் -கிம் புனர் நியாய சித்தம் –

“மயர்வறமதிநலம் அருளினன்” என்னா,உடனே மடல் எடுத்துக்கொண்டு புறப்படுவார் வேணும்.
செய்த சரணாகதிக்குப் பலம் தாழ்த்தது என்னா, வேறே போக்கடியுடையார்க்குக் காரியகரம் ஆகாதே அன்றோ.
பெருமாள் போல்வார் இடம் இல்லாமல் ஆழ்வார் போல்வார் இடமே சரணாகதிக்கு பலம் கிட்டும் -என்றபடி
வேறே இடம் போகாமல் அவன் இடமே கார்யம் நிர்பந்தித்தாகிலும் அச்சம் கொடுத்தாவது கார்யம் கொள்வார் வேணும் –
ஸூ பிரவ்ருத்தியில் ஈடு படாமல் பர ப்ரவ்ருத்தி எதிர்பார்த்து -நான் பண்ண மாட்டேன் -உன்னை பண்ண வைப்பேன் என்றாரே

“சமுத்திரத்தை வற்றும்படி செய்யப்போகிறேன்; வானரவீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்”
“சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.
என்று அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு, மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு
காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ.-பஞ்ச பூதங்களில் ஒன்று போனால் என்ன நான்கையும் வைத்து காரியம் கொள்ளுகிறேன்
“க்ஷமயாஹி ஸமாயுக்தம் – ‘ஒரு பெண் பெண்டாட்டி எனக்கு என்றதனை நாம் விரும்புவது என்?’ என்று
இராஜ்யத்தைப் பொகட்டுப் பொறுத்துப் போந்தார்;
இங்கே வருணனை வழிவேண்டி அவன் முகங்காட்டிற்றிலன் என்னா, சீறிக் காலைக் கையைக் கட்டாநின்றார்;
வருண தேவன் கால் கை பிடிப்பது –வில் -வில் காலைப் பிடிக்கை -கை விரல் சரம் பிடிக்கை –
இது இருந்தபடி என்?” என்றாற்போலே இருந்தார்கள் வானர முதலிகள்.‘இவன் வந்திலன்’ என்று நாம் சீற ஒண்ணாதபடி,
வாலி புறப்படுகிறபோது தாரை வந்து காற்காட்டினத்தைப் போன்று, பொறை வந்து நம்மைக் காற்கட்டா நின்றது என்றார். –
கைகேயி அசமர்த்தனாக நினைக்க வில்லை –சமர்த்தன் சொன்னாலே சரணாகதன் லக்ஷணம் போகுமே –
அபலை ஆகையால் ராஜ்யம் விரும்பினால் ஆகையால் க்ஷமை பண்ணி வந்தோம் –
க்ஷமை கால் காட்டியதால் மூன்று நாள் பொறுத்து இருந்தார் பெருமாள் -முதலில் சமர்த்தன் என்று நினைக்க வில்லை
அப்புறம் தான் தெரிந்தது
மாம் என்கிற நாம் தாஸன் சொன்னதும் சரணாகதி பலிக்கும் -பெருமாள் தாஸன் சொல்லி பின்பு மாம் சொல்லியதும் பலிக்க வில்லையே

“மாம் – ‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே,
கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார்.
‘பிறர்கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு அன்று’ என்று இருக்கிறது இல்லை;- ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை.
அயம் – மஹோததி என்னும் பெருமையை நினைத்திராநின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது இல்லை.
மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக்காணும் தன்னை நினைத்திருக்கிறது;
தன்னை மீன்படு குட்டமாக அறிகிறது இல்லை.
அஸமர்த்தம் விஜாநாதி – செவ்வை கெடப் பரிமாறினாரையும் ஒக்கவிட்டுக் காரியம் கொள்ள வல்லோம் என்று அறிகிறது இல்லை.
இவ்வளவில் செய்ய அடுப்பது என்? என்னில்,
திக்க்ஷமாம் – இப்போது பொறையை வேண்டோம்.
விநியோகமுள்ள இடத்தே அன்றோ காரியம் கொள்ளுவது?
கோபத்தைப்போன்று, காரியகாலத்தே அழைத்துக் காரியம் கொள்ளப் பார்த்தோம்.
அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறைகொண்டு காரியம் கொள்ளவேண்டாவோ?
என்னில், ஈத்ருஸேஜநே – அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை.
இதுக்கு இங்குள்ளாருடைய சம்பந்தமே பலியாநின்றதே. -கரைக்கு அந்தப் பக்கம் உள்ள இராவணன் படி –
ஒன்பது பாசுரங்களாலும் சரண்யன்படி சொல்லி, பத்தாம் பாசுரத்தில் சரணம் புகுகிறார்.

அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆராவமுதே -அரங்கமேய அந்தணன் –
ஸ்வாமி புஷ்கரணி தடே -மந்தி பாய் –வானவர்கள் சாந்தி செய்ய நின்றான் –அரங்கத்து அரவிந் அணையான்
விண்ணவர் கோன்-விரையார் பொழில் வேங்கடவன் -நீள் மதிள் அரங்கத்து அம்மான் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -ஷீரார்ணவ நிகேதன் நாக பர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஆகாதோ மதுராம் புரிம்
திருப்பேர் நகரான் திரு மால் இரும் சோலை பொருப்பே உறை -பிரான் தனக்கு வேட்டை ‘இன்று வந்து இருப்பேன் -நெஞ்சு நிறைய புகுந்தான்
அயோத்தியை சித்ர கூடம் ஜடாயு இடம் இருக்க -இப்படி மூன்று ஸ்தானங்கள்
இரட்டைக் குழந்தை தாய் -விண்ணோர் மண்ணோர்-அனுபவிக்க திருமலை
ரிக்வேதம் -பத்து புராணங்கள் பேசும் -ரிஷபாச்சலம்-
வ்ருஷபாத்ரி அஞ்சனாத்ரி -சேஷாசலம் வெங்கடாச்சலம் -நான்கு யுகங்களாக காத்து இருந்த திருமலை
வேங்கடேச சம ஸ்தானம் நாஸ்தி கிஞ்சித் – ந பூதோ ந பவிஷ்யதி -வேங்கடேச இதிஹாச மாலை அனந்தாழ்வான் பணித்தது –
கரவீர புரம்-ப்ரஹ்மா பசு ருத்ரன் கன்று –
வேங்கடேசன்-மாட்டை அடித்த தால் சபிக்க -பிசாசாக -அடுத்த பிறவி ஆகாச ராஜன் -மகள் பத்மாவதி -தம்பி தொண்டைமான் சக்கரவர்த்தி
வேகவதி தானே பத்மாவதி தேவி -நாராயண புரம் -ஆகாச ராஜன் பிராரத்த படி -புரட்டாசி ஸ்ரவணம்-ஏகாந்தமாக சேவை –
கல்லும் கனை கடலும் -விண் மேல் இருப்பாய் மலர் சேர்ப்பாய் –திருச் சுகவனூர் -திருச்சானூர் மருவி -சுகாச்சார்யார்
நான்கு புருஷார்த்தங்கள் -அர்த்த பஞ்சகம் -ஆறு பாதங்கள் -ஏழு சமுத்திரம் போலே -அஷ்டாஷர விவரணம் நவ ரசம் சாந்தி கொடுக்கும் த்வயம் –
பாட்டுத் தோறும் திருவடி பிரஸ்தாபம் பதிகத்தில் –

——————————————————————————————————————————

உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர்சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1-

குண பூர்த்தி -உள்ளவன் இதன் சரணாகதி -முதலில் குணங்களை சொல்லி பின்பு அகலகில்லேன் -சரணம் அடைகிறார் –
ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் முன்பே வெளிட்டு அருளினார்-
நாலு தூத்திலும் பிராட்டி சம்பந்தம் வியக்தம் -முதல் நோற்ற நாளிலும் பிராட்டி சம்பந்தம் வியக்தமாக இல்லையே –
ஸ்பஷ்டம் -அடையாளம் -வாக்ய த்வயத்தில் -குண பிரஸ்தாபமும் திருவடி பிரஸ்தாபமும்
அகில ஜகத் ரக்ஷணம் ஸ்வ பாவன்-ஸ்வதா சித்த சேஷ புதன் -உன்னை அடைந்து கைங்கர்யம் செய்வது என்றோ –
ரக்ஷகத்வம் குணம் -அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் கொடுப்பது –
உபாயம் -பலத்துக்கு அருகில் சேர்த்து -பல பிரதன்-பிராப்யம் புருஷார்த்தம் — திருமலையில் ஸந்நிஹிதன் –
உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!-பிரளய ஆபத்தில் -பெரு -ரக்ஷணம் பாரிப்பு மிக்கு -ரஷ்யத்து அளவு அன்றிக்கே-
சிம்ஹிகை திருவடி வாய்க்குள் சென்று மீண்டது -உபகரணம் திருப்பவளம்
ரக்ஷணம் -ஞான சக்தி ஸமஸ்த கல்யாண குணங்கள் சேர்ந்து -ரக்ஷணத்துக்கு உபயுக்த குணங்கள்
நிருபாதிக சேஷித்வம் -ஸ்வரூபம் அம்மான் –
நிலவும் சுடர்சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!-அசாதாரண பரிகரம்-ஸ்வ பாவிக ஸு ந்தர்ய லாவண்ய அகில குண ஒஜ்வல்ய
– ரூப குணங்கள் -தேஜோ மயம் திரு மேனி உடன் வந்து ரக்ஷிக்கிறான் திரு வேங்கடத்து எம்பெருமான் அன்றோ
அபரிச்சேதம் -அளவுக்கு உட்படாத பெருமை -பஞ்ச பிரகார விசிஷ்டன் -ரக்ஷணம் ஞானம் சக்தி சேஷித்வம் -திவ்ய மங்கள விக்ரகம்
-அபரிச்சேத்யம்-பரி பூரணமான பிராண பூதன்
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!-முகம் தோன்றும் படி -சர்வ லோகத்துக்கும் சிரசாவாஹ்யம்
-ஸூ ஸ்திரமாக கண்ணுக்கு இலக்காக -அருளுவதில் உறுதி -பாபிஷ்டன் ஆனாலும் –
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே-சேஷித்வம் பிரகாசிப்பித்து நின்று -சேஷத்வம் அறிந்த ஏழு ஆள் காலம் பழிப்பு இலோம்
-பழைய அடியேன் -சேஷி ரக்ஷகன் போக்ய பூதன் -உன் திருவடிகளை பிறப்பிக்கும் வழியை கூற வேண்டும்
பிரளய ஆபத்தில் -விரஹ ஆபத்து -லோகமாக -ஒருவனை -ஆர்த்தி அறியாதார் -ஆர்த்தி அறிந்த என்னை ரஷிக்கலாகாதோ
அர்த்தித்தவம் இல்லா உலகம் -ஆசைப் பட்டாரை-ரஷிக்கலாகாதோ -அர்த்தித்தவம் ஆசா கார்யம்
வயிற்றில் வைத்து -வடிவு காட்டி ரஷிக்கலாகாதோ
அபி நிவேசத்தால் ரக்ஷித்தாய் நான் அபி நிவேசித்தால் ரஷிக்கலாகாதோ
வாயாலேயே ரசிக்க வேண்டுமோ வார்த்தையால் ரஷிக்கலாகாதோ
அபரியந்த குணங்களை அழிய மாறியோ ரஷிக்க வேண்டும் -அவற்றை அனுபவிப்பித்து ரஷிக்கலாகாதோ
உறவு அறியா லோகம் -உறவு அறிந்த என்னை –
வடிவில் வாசி அறியாத உலகம் -அறிந்த என்னை ரஷிக்கலாகாதோ -பெருமை உணராத லோகம்
வியதி ரேகத்தால் தரிக்கும் லோகம் -வாழ மாட்டேன் என்று இருக்கும் என்னை ரஷிக்கலாகாதோ
ஸுலப்ய ஞானம் இல்லா லோகம் -அன்ய சேஷம் -அன்ய கதி -பிரயோஜனாந்தர பரர்களை ரக்ஷித்தாயே
பிரிய நினைப்பார் -எழுவார் -வைகல் தொழுவார் வழுவா வகை நினைந்து
மகா வியாபாரம் செய்து ரஷிக்க -மா ஸூ ச சொல்லி ரஷிக்கலாகாதோ
ஏக பிரளயம் -பஹு நாம் அனுக்ரகம் நியாயம் -என் பிரளயம் மோசம் –
அசேதனம் -உலகம் -உண்டது முக்கியமா உலகத்தாரை ரக்ஷித்தார்-அசேதனம் போலே அன்றோ கிடந்தார்கள்

பிரளயகாலத்தில் உலகத்தை எல்லாம் புசித்த பெரிய திருவாயினையுடையவனே! அழிதல் இல்லாத கீர்த்தியையுடைய அம்மானே!
எப்பொழுதும் நிலைபெற்றிருக்கின்ற சுடர்கள் சூழ்ந்திருக்கின்ற ஒளியையுடைய மூர்த்தியே! நெடியோனே! அடியேனுக்கு அரிய உயிராக இருப்பவனே!
உலகத்திற்கெல்லாம் திலதம் போன்று நிற்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே!
தொன்று தொட்டே வருகின்ற தொண்டக்குலத்திலே பிறந்த அடியேன் உன்னுடைய திருவடிகளைச் சேரும்வகை கூறியருள வேண்டும்.
உலகுக்குத் திலதமாய் என் மாற்றுக.
இத் திருவாய்மொழி அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.

உன்னை ஒழிய வேறுகதி இன்றிக்கே இருக்கிற என்னை உன் திருவடிகளிலே சேரும்படி செய்தருள வேண்டும் என்கிறார்.

உலகம் உண்ட பெருவாயா –
தேவர் திருவடிகளைக் கிட்டாத அன்று எனக்கு உண்டான தளர்த்தி, பத்துப் பிரளய ஆபத்தைப்போன்றதேயா மன்றோ? –ஸ்வரூப நாசம் அன்றோ –
பாதுகாக்கப்படுகின்ற பொருள்களின் அளவன்றிக்கே இருக்கும் பாரிப்பையுடையவனே! -பாரிப்பின் அதிசயம் -சம்போதானம் –
உன் பாரிப்புக்கும் என் துயரத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு?
நீ, அறிந்த சம்பந்தமும் ஆபத்துமே கைம்முதலாகக் காப்பாற்றுமவன் அன்றோ! –குழந்தைக்கு தெரியா விடிலும் தாய் காப்பாள் –
ஒரு விபூதிக்காக ஆபத்து வரிலோ நோக்கலாவது! விபூதிக்காக உண்டான ஆபத்து என் ஒருவனுக்கும் உண்டானால் நோக்கலாகாதோ?
பிரளயார்ணவத்திலே அழுந்துவாரையோ நோக்கலாவது! சம்சார அர்ணவத்தில் அழுந்துவாரை நோக்கலாகாதோ?
அபேக்ஷிக்காதவர்களையோ நோக்கலாவது! அபேக்ஷித்தார்க்கு உதவலாகாதோ?
சரீரத்துக்கு வரும் ஆபத்தையோ நோக்கலாவது! ஆத்மாவுக்கு வரும் ஆபத்தை நோக்கலாகாதோ?
ஜலப்பிரளயத்தில் அகப்படிலோ நோக்கலாவது! விரஹ பிரளயத்தில் அகப்பட்டாரை நோக்கலாகாதோ?
பிறரால் வரும் ஆபத்தையோ நோக்கலாவது! உன்னால் வரும் ஆபத்தை நோக்கலாகாதோ?
‘சரணம்புகாதாரை ரக்ஷிக்கவேண்டும்7 என்கிற நியதி உண்டோ! சரணம்புக்காரை ரக்ஷிக்கலாகாதோ?
ரக்ஷித்துச் சமைந்து பின்னையும் ‘ஒன்றும் செய்யப்பெற்றிலோம்’ என்று இருக்கக்கடவ உனக்கு
என்னுடைய ரக்ஷணத்தில் கலவாமல் கைவாங்கி இருத்தல் போருமோ?
பிரளயாபத்தை ரக்ஷித்துப் பின்பும் ‘நாம் இவற்றுக்குச் செய்தது ஒன்று உண்டோ’ என்று உடன் கிடந்தாரை மடிதடவி,
பின்னர் ‘என் செய்தோமானோம்’ என்று தபிக்கின்றவர்களைப் போலே இழவுபட்டிருப்பான் ஒருவன் அன்றோ நீ!

பெருவாயா –
பாதுகாக்கப்படுகின்ற பொருள்களின் அளவு அல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பு இருக்கிறபடி. என்றது,
அவற்றின் பக்கல் உண்டான ரக்ஷணத்தில் பாரிப்போபாதியும் போரும், தம் பக்கல் உபேக்ஷை என்றிருக்கிறர் என்றபடி.
பெருவாயா –
திரௌபதி ‘சரணம்’ என்ற வார்த்தை இத்தனையும் திருவுள்ளத்தே கிடக்க, சபையில் துச்சாதனன் உண்டாக்கின மான பங்கத்தையும் நீக்கி,
துரியோதனாதியர்களையும் அழித்து, இவள் கூந்தலையும் முடிப்பித்து, தருமபுத்திரன் தலையில் முடியையும் வைத்துப் பின்பும்
“வட்டிக்கு வட்டி ஏறின கடனைப்போன்று என் மனத்தினின்றும் நீங்கவில்லை” என்று
கோவிந்தேதி யதாக்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூரவாஸிநம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் நஅபஸர்பதி”- என்பது, மஹாபாரதம், உத், 58 : 22.
குறைவாளனாய், பரமபதத்துக்கு எழுந்தருளுகிறபோதும்
“நாதிஸ்வஸ்த்தமநா: – நிம்மதியடையாத மனமுடையவனாய்” என்று திருவுள்ளத்தில் புண்ணோடே யன்றோ எழுந்தருளினான்.

உலப்பு இல் கீர்த்தி அம்மானே –
இவனுக்குக் காக்குந் தன்மை வந்தேறியாய்ப் போய், பழையது கொண்டு வளைப்பிடுகிறேன் அல்லேன்;
இப்படி உலகத்தைக் காப்பாற்றி ஈட்டிய புகழுக்கு முடிவில்லை என்கிறது.
பொழில் ஏழும் காவல்பூண்ட புகழே அன்றோ. திருநெடுந்தாண்டகம்,
இப் படிகளால் வந்த குணங்களுடைமையால் வந்த பிரசித்தியையுடைய சர்வேசுவரனே!
“அந்தப் பரமாத்மாவின் கீர்த்தி பெரியது” என்றும், “கீர்த்திக்குத் தானே இருப்பிடமாக இருப்பவர்”
“யஸஸ: ச ஏகபாஜனம்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 19.என்றும் உபதேசத்தால் அறிய வேண்டும்படி அன்றிக்கே,
“எல்லாராலும் அறியப்பட்டவர்”
“விதித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:” என்பது, ஸ்ரீராமா.சுந். 21 : 20.என்று பகைவர்கள் கூட்டத்திலும்
இப்படிப் பிரசித்தமாய் அன்றோ உன் புகழ் இருப்பது.
‘பாதகத்தின் சந்நிதியிலே பாதிக்கப்படும் பொருளும் ஜீவிக்கும்படி அன்றோ உன்னுடைய ஆணை இருப்பது.
அவன் நினைத்த அன்று பாதகந்தானே பாதிக்கப்படுகிற பொருளுக்குப் பால்ஊட்டி வளர்த்தா நிற்குமன்றோ.-பெரிய திருவடி சுமுகன் –
உலப்பு இல் கீர்த்தி அம்மானே –
“குணாநாம் ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.“குணங்களுக்கெல்லாம் நிலையமாக இருப்பவன்” என்றும்,
“அப்படியே அளவற்றவை இறைவனுடைய குணங்கள்” “ததா குணா: ஹி அநந்தஸ்ய” என்பது, மாத்ஸபுராணம்.என்றும்,
“ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய கல்யாணகுணங்கள் உலகமெல்லாம் சேர்ந்துகொண்டு பதினாயிரம் வருடங்கள்
கூறினாலும் முடிவு பெறுவன அல்ல” என்று
வர்ஷாயுதை: யஸ்ய குணா ந ஸக்யா:
வக்தும் ஸமேதைரபி ஸர்வ லோகை:
மஹாத்மந: ஸங்க சக்ராஹி பாணே:
விஷ்ணோ: ஜிஷ்ணோ: வஸுதேவாத்மஜஸ்ய”-என்பது, மஹாபாரதம் கர்ணபர்வம்.

“ஒ அரசனே! உன்னுடைய புதல்வனான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன”
பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.
என்றும் சொல்லுகிற குணங்களும் முடிவு இன்றிக்கே இருக்கை.
இவற்றை எல்லை காண நினைத்தால் கரைகண்டு மீள ஒண்ணாது. மதிக்குறைவாலே மீளுமத்தனை.

நிலவும் சுடர் சூழ் ஒளிமூர்த்தி –
பாதுகாப்பவன் அன்றிக்கே கொலைஞன் ஆனாலும் விடஒண்ணாத வடிவழகு இருக்கிறபடி.
ஒரு கருமம் காரணமாக வந்து அது வற்ற வற்றுவது அன்று ஆதலின் ‘நிலவும்’ என்கிறது.
உள்ளு மண்பற்றாய்ப் புறம்பு ஒளி ஊட்டியிருத்தல் அன்றிக்கே, “ஒளிகளின் திரள்” திருவாய். 1. 7 : 4.என்கிறபடியே,
ஒளிப்பொருள்களைத் திரட்டிப் பிடித்தாற்போலே இருத்தலின் ‘சுடர்சூழ்’ என்கிறது.
இராசத தாமதங்களால் கலந்தது அன்றிக்கே, சுத்த சுத்துவமயமாய் நிரவதிக தேஜோ ரூபமாய்,
நெய்திணுங்கினாற்போலே உள்ளும்புறம்பும் ஒக்க ஒளியேயாய் இருக்கையைத் தெரிவித்தபடி.

“உயர்வினையே தரும் ஒண்சுடர்க்கற்றை” என்னக்கடவதன்றோ.
திருமேனிதன்னைப் “பஞ்ச சக்தி மயம்” என்றும் சொல்லா நின்றார்கள்;
“ஷாட்குண்ய விக்ரஹம்” என்றும் சொல்லா நின்றார்கள்;
ஆராய்ந்து பார்த்தால் பொருளின் நிலைமைதான் “பஞ்சசக்திமயம்” என்றே இருக்கும்;
‘ஷாட்குண்ய விக்ரஹம்’ என்றது, திருமேனி தான் குணங்களுக்குத் திரோதாயகம் அன்றிக்கே பிரகாசகமாய் இருக்கையாலே.
“மன்மதன்போன்ற சுந்தரமான உருவமுடையவர்; கவர்ச்சிகரமான காந்தியுடையவர்”
“ரூபவாந் ஸுபக: ஸ்ரீமாந் தந்தர்ப்பஇவ மூர்த்திமாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 34 : 30.-என்றும்
“மன்மதனுக்கும் மன்மதனாக இருக்கின்ற அந்தக் கண்ணபிரான் அந்தக் கோபஸ்திரீகளுக்கு மத்தியில் தோன்றினான்”
“தாஸாம் ஆவிரபூத் சௌரி:. . . . . .ஸாக்ஷாத் மந்மதமந்மத:”-என்பது, ஸ்ரீபாகவதம், 10. 32 : 2.-என்றும் சொல்லுகிறபடியே யன்றோ இருப்பது.
மன்மதனும் மடல் எடுக்கும் படியான அழகன் அன்றோ –

நெடியாய் –
மேலேகூறிய குணங்களுக்கு எல்லை உண்டானாலும், சௌந்தரியம் லாவண்யம் முதலானவற்றிற்கு எல்லை காண
-நெடியாய்
-ஒண்ணாதபடியாயிருக்கை. “மஹாந்” என்கிறபடியே, தொட்ட தொட்ட துறைதோறும் தறை காண ஒண்ணாதிருக்கிறபடி.
அடியேன் ஆருயிரே–
வடிவழகையும் குணங்களையும் காட்டி, என்னை, உன்னைவிட்டுப் பிரியின் ஜீவியாதபடி செய்தவனே!
“திருவேங்கடத்து எம்பெருமானே” என்றதனோடு ஒக்க இதனைக் -அடியேன் ஆருயிரே-கூட்டக் கடவது.
திலதம் உலகுக்கு ஆய்நின்ற –
பெண்களுக்கு நிறைந்திருக்கின்ற ஆபரணம்போலே ஆயிற்று பூமிக்குத் திருமலை.
திருவேங்கடத்து எம்பெருமானே அடியேன் ஆர் உயிரே –
திருமலையில் நின்று என்னுடைய சேஷத்வ முறையை அறிவித்து, உன்னால் அல்லது செல்லாதபடி செய்தவனே!-
அடியேன் -சேஷத்வம் அறிவித்து ஆர் உயிரே -உன்னால் அல்லது செல்லாதபடி செய்தவனே–என்கிறார் –
எங்கும் திருவேங்கடத்தான் சந்நிதிகள் உண்டே –
இவ்வளவும் வர, அவனுடைய சொரூபம் சொன்னார்; இனி, தம் சொரூபம் சொல்லுகிறார்:
குல தொல் அடியேன் –
குலமாகப் பழையதான அடியேன்.-எந்தை தந்தை –முன்பே அருளி – இதனால் தமக்கு ஓர் உயர்வு சொல்லுகிறார் அல்லர்;
தம்முடைய அநந்யகதித்வம் சொல்லுகிறார் ஒருவர்க்கேயாய் இருப்பாரை வேறு சிலர் நோக்குதல் இல்லை அன்றோ.
உனபாதம் கூடுமாறு கூறாய் –
சொரூபம் இதுவான பின்பு, சொரூபத்திற்குத் தக்கதான பேற்றினைப் பெறும்படி செய்தருளாய்.
அடியேன் உனபாதம் கூடுமாறு –
அடியவன் உன்னைக்கூட என்னுமது ‘உன பாதம்கூட’ என்பதே அன்றோ.
உன பாதம் கூடுமாறு –
இவருடைய சாயுஜ்யம் இருக்கிறபடி.
கூறாய் –
உனக்கு ஒரு சொல்;
எனக்குச் சொரூப லாபம் கண்டாய்.
அவன் ஒரு வார்த்தை அருளிச்செய்ய, தளப்பம் தீரும் அன்றோ இவர்க்கு. “மாசுச: – துக்கப்படாதே” என்னவேணும்.

————————————————————————————————————————–

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-

அசேஷ விரோதி நிவர்த்த -ரக்ஷகத்வம் முதலில் சொல்லி -திவ்ய ஆயுத சேர்க்கை இங்கே -தொண்டைமான் சக்கரவர்த்திக்கு
சங்கு சக்கரம் கொடுத்து -ராமானுஜர் -அறிவோம் முன்பு ஆழ்வார் தீர்த்தம் சுரங்கம் இவன் சென்று அவன் இடம் பேசி வர -பிரார்த்தித்து பெற்றான் –
வில்வ புஷப அர்ச்சனை நாக பூஷணம் -தாழ் சடையும் பாசுரம் -நமாமி வில்வ நிலையாம் -லஷ்மிக்கு அர்ச்சனை
மாமனார் கொடுத்த ஆபரணம் -குமார தீர்த்தம் -ஸ்கந்த புராணம் -சிவன் சொல்லி தபஸ் பண்ணி அதனால் பெற்ற பெயர்
எம்பெருமானார் கொடுத்த பின்பு கழற்ற வில்லையே -அனந்தாழ்வான் தங்க கவசம் -இதையும் கழற்ற மாட்டார்கள் -அதுக்கும் மேலே கவசம் –
திருவடிக்கு கீழே பீறிட்டு தீர்த்தம் -ஸம்ப்ரோக்ஷணம் போது பார்த்தார்கள் -உயர் அழுத்த தீர்த்தம் –
ஆயுத ஒஜ்வல்யம் -அத்யந்த அபினிஷுடன் உன் திருவடி சேர வேண்டும்
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்-நாநா வாக சின்னமாய் –பஸ்மம் பொடி பொடி யாகி -நிலத்துடன் சேர்ந்து அழிந்து
-தரைப்பட்டு-போகி-போகும் படி சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
ஜ்வலியா நிற்கும் -விரோதி வர்க்கம் நிரசனம் பாரிப்பு -வீர ஸ்ரீ உடைய -அழகான -அடக்கி ஆள வல்ல சர்வ சக்தன்
வலப்பக்கம் கொண்டவன் என்றுமாம் –
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!-தாமரை பங்கஜம் நிமித்தம் சேற்றில் பிறந்த செந்தாமரை -ஆறாத கயம்-
-பங்காரு பாவி –பூல பாவி தோமாலை சேவை -மாலை ஜீயர் ஸ்வாமி மட்டும் -ஏகாந்த சேவை -பாபா நாசினி -ஆகாச கங்கை தீர்த்தம்
-தண்ணீர் அமுது திருத்தும் உத்சவம் இன்றும் உண்டு -தீ போன்ற சிவந்த தாமரை
ஆறா அன்பில் அடியேன்உன்னடி சேர் வண்ணம் அருளாயே.-ஒரு காலும் அளவு படாத அன்பு -ப்ரேமம் -இல்லமாகக் கொண்ட உடைய
-சேஷ பூதன்-திருவடி சேரும் படி அருள வேணும்

கொடிய வலிய அசுரர் கூட்ட முழுதும் கூறு கூறு ஆகிச் சாம்பலாகி மண்ணோடு மண்ணாகும்படியாகச் சீறி, ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற அழகிய
சக்கரத்தை வலக்கையில் தரித்திருப்பவனே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! சேறு பொருந்திய சுனைகளிலே தாமரை மலர்கள் சிவந்த நெருப்பினைப்போன்று
மலர்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! குறைவுபடாத அன்பினையுடைய அடியேன் உனது திருவடிகளைச் சேரும்படி திருவருள் புரியவேண்டும்.
அசுரர் குலம் எல்லாம் கூறு ஆய் நீறு ஆய் நிலனாகிச் சீறா எரியும் திரு நேமி என்க. ‘ஆகி’ என்பதனை ‘ஆக’ எனத் திரிக்க.
ஆகச் சீறி எரியும் என்க. அன்பில் – அன்பினையுடைய.

‘கூடக்கடவீர்; அதற்கு ஒரு குறை இல்லை; ஆனாலும், தடைகள் கனத்து இராநின்றனவே’ என்ன,
உன் கையில் திருவாழி இருக்க, நீ இங்ஙன் சொல்லலாமோ? என்கிறார்.

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் அசுரர் குலம் எல்லாம் சீறா எரியும் திருநேமி வலவா –
நீ கைகழலா நேமியானாய்இருக்கிறதற்கும் என் தீவினைகள் கிடக்கைக்கும் என்ன சேர்த்தி உண்டு?
தடை இல்லதா சக்தியையுடைய திவ்விய ஆயுதங்களானவை இவனுடைய பாபங்கள் எல்லாவற்றையும்
போக்கிக் காப்பாற்றக் கூடியனவாயிருக்கும்.
அவனாலே வருமவற்றையும் போக்கக் கூடியனவாயிருக்கும்.
“எல்லா ஆபத்துக்களினின்றும் காப்பாற்றுகின்றன” என்னப்படுவன அன்றோ.
“ஸகல” என்ற சொல்லுக்குள்ளே இவனும் உண்டே.
அவ்வியாகத்தானி ரஷந்தி சகல ஆபத்யாக -சகல சப்தத்தில் இவனும் -பரமாத்மாவும் உண்டே -நம்மால் வரும் ஆபத்துக்களையும் என்றுமாம் –
இனித்தான், பாவங்கள், “ஸம்ஸாரங்களில் பாபிகளான மனிதர்களைத் தள்ளுகிறேன்” என்கிறபடியே,
“ஸம்ஸாரேஷு நராதமாந். . .க்ஷிபாமி”-என்பது ஸ்ரீ கீதை, 16 : 19.

இவன் பக்கல் குற்றங்களைக் கண்ட அவனுடைய நிக்கிரஹத்தாலே வருமவை அன்றோ,
அங்ஙனே வருமவற்றையும் போக்கக்கூடியனவாயிருக்கும் இவை.
அதற்கு அடி, அவன் அடியில் செய்த அநுக்கிரஹதையே நினைத்திருக்கையாலே.
இனித்தான், ‘இவற்றின் தோஷங்களைக்கண்டு நாம் ஒரு காரணம்பற்றிச் சீறின போதும் நீங்கள் கைவிடாமல்,
நாம் அடியிற்செய்த நம்முடைய இயல்பான அருளைப்பார்த்து நீங்கள் காப்பாற்றுங்கோள்’ என்று
அவன் பக்கல் பெற்றுடையர்களாய் இருப்பர்கள் அன்றோ. அருளார் திருச்சக்கரம் அன்றோ-திருவிருத்தம், 33.-
அருளால் ஸ்ருஷ்டித்து அருளுவதற்காகவே ஸ்ருஷ்டித்த பின்பு –அனுக்ரகம் ஸ்வாபாவிகம் -நிக்ரகம் காரணம் பற்றி வருமதே –
பண்டே அவனைக் கை கண்டிருப்பவர்கள் அன்றோ. -வரம் ததாதி வரத–அவன் அருள் மறுத்தபோதும் இங்குத்தை அருள்மாறாதே அன்றோ இருப்பது.
ஆகையாலே, அவன் திருவருளைப் பெற்றவர்கள் திருவாழியில் கூர்மையை அன்றோ தங்களுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பது.

கூறாய் நீறாய் நிலனாகி-
திருச்சரம்போலே “சிந்நம் பிந்நம்”“சிந்நம்பிந்நம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.
என்கிற பரும்பணிக்கு விட்டுக்கொடாத திருவாழி. திருச்சரத்துக்கு, இதனை நோக்க ஒரு குணத்தின் சேர்க்கை உண்டு என்கிறார், -நாண் ஸ்பர்சம் -குணம் சாடு-
முற்பட, இருதுண்டமாக்கிப் பின்னை நீறாக்கிப் பின்னை அது காண ஒண்ணாதபடி வெறும் தறையாக்கும்.
ஆகி – ஆக்கி. அல்லது, ஆகும்படி என்றுமாம்.
கொடு வல் அசுரர் –
சீறுகைக்குக் காரணம் இருக்கிறபடி. கொடிய செய்லகளைச் செய்யக் கடவராய்,
ஒருவரால் வெல்ல ஒண்ணாதபடி வலியையுடையரான அசுரர்.
குலம் எல்லாம் –
ஒருவன்செய்த குற்றமே ஜாதியாக முடிக்கவேண்டும்படி இருக்கையாலே, ஒருவரும் தப்பாமல் கோலி முடித்தபடி.
அநுகூலரோடு பிரதிகூலரோடு வாசிஅற இவன் வளைவில் அகப்படாதார் இல்லை.
திரு நேமி -அழகு அனுகூலர்களுக்காக -கூர்மை பிரதி கூலர்களுக்கு -வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் –
“வளைவாய்த் திருச்சக்கரத்து எங்கள் வானவனார்” இது, திருவிருத்தம், 70.-என்று,
அவன் வளைவிலே அகப்பட்டுப் பின்பே யன்றோ மேல்போயிற்று.
கூறாய்நீறாய் நிலனாகைக்குச் செய்த செயல் ஏது?என்ன, ‘சீறா எறியும்’ என்கிறார். என்றது.
இவை முடிந்துபோகச் செய்தேயும் கொண்ட குதை மாறாமல், இரை பெறாத பாம்பு போலே ஒளி விடாநிற்கும்.
திரு நேமி வலவா –
நீ வலவருகே திருவாழியைத் தரித்திருக்க, நான் துக்கத்தைத் தரித்திருப்பதே!

தெய்வக் கோமானே –
இப்படி அடியார்களுக்காக வந்து படுகிறவன் ஆள் இல்லாதவன் அல்லன் கண்டீர்!
அயர்வறும் அமர்கள் அதிபதி கண்டீர். அங்குக் கையும் திருவாழியுமான அழகை அநுபவிப்பாரே அன்றோ உள்ளது;
இருதுண்டமாக விடுவதற்கு ஆள் உள்ளது இங்கே அன்றோ. இரண்டு விபூதியையும் ஆளுவது திருவாழியாலே.
‘அகல்விசும்பும் நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்’ திருவிருத்தம், 33.
என்கிறபடியே, அழகாலே அங்குள்ளாரை ஆளும்; கூர்மையாலே இங்குள்ளாரை ஆளும்.
அங்குக் கூர்மை குமர் இருக்கும்; இங்கு அழகு குமர் இருக்கும்.
அங்குள்ளார்க்குக் கைமேலே ஜீவனமாயிருக்கும்; இங்குள்ளார்க்கு விரோதியைப்போக்கிப் பின்னையாயிற்று ஜீவனம் இடுவது.
அங்குள்ளார் அவன் கையே பார்த்திருக்கையாலே;இவர்களுக்கு அது இல்லையே.-சுய பிரயத்தனம் இங்கு –
என்? நாம் இப்போது சேய்மையில் உள்ளோம் அல்லோமோ? என்னில், அதற்கு விடை அருளிச்செய்கிறார் மேல் :
சேறு ஆர் சுனைத்தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே –
சேறுகள் ஆர்ந்துள்ள சுனைகளிலே தாமரைகளானவை செந்தீப்போலே மலராநிற்கும்.
எண்ணெயாலே எரியும் விளக்கு ஒழிய, நீராலே எரியும் விளக்குக் கண்டு அநுபவிக்கக் காணும் இவர் ஆசைப்படுகிறது;
நீரிலே நெருப்பு எழுந்தாற்போலே காணும் இருக்கிறது.
ஆறா அன்பில் அடியேன் –
இவர்க்கு நிரூபகம் இருக்கிறபடி. சுனைகளில் நீர்வற்றில் ஆயிற்று இவருடைய அன்பு வற்றுவது.
மயர்வற மதி நலம் அருள அது அடியாக வந்த அன்பு அன்றோ. ஊற்றுடைத்தே.
கிரமப் பிராப்தி பற்றாதபடியான பிரேமம் அன்றோ.
உன் அடி சேர் வண்ணம் அருளாயே –
உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும்படி என் பக்கலிலே கிருபை பண்ணி அருளவேணும்.
நீ திருமலையிலே நிற்கிற நிலைக்குப் பிரயோஜனம் பெறப் பாராய்! என் அன்புக்கு இரை

————————————————————————————————————

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3-

ரூபம் குணம் இனிமை -கீழே ரக்ஷகத்வம் திவ்ய ஆயுத சேர்க்கை சொல்லி -ஸூரிகளுக்கு உத்துங்க-அனுபாவ்யம் -அபேஷா நிரபேஷமாக
-நீரே பிரார்த்தித்து கீழே வந்து –
கௌண்டின்யபூர் குண்டினபுரம் ருக்மிணி -சந்நிதி -கோலாப்பூர் -பத்மாவதி தாயார் சந்நிதி –
ஆஸ்ரய நீயாநானாக வந்தவோபாதி அடியேற்கு அருள வேண்டும்
வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!-ரூபம் -பிச்சேறும் படி அழகு –வர்ணம் -நிறம் -ஸ்வ பாவம்
ஆச்சர்யமான திருகி கல்யாண குணங்கள் சர்வாதிகான்
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!புஜிக்க ஒட்டாத படி -வாயில் புகும் அமுதம் இல்லை –
விக்ரக குண சாரஸ்யங்களை நித்ய ஸூ ரிகளுக்கு அனுபவிப்பிக்கும் மேன்மை
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!-தெளிந்த அழகிய –
பொன் முத்தும் –அரி உகிரும்- -திரு நறையூர் –காவேரி சீராக கொண்டு வருமே -சந்நிஹிதன்
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.-ஆ ஆ என்று ஆராய்ந்து அருளாயே -அசாதாரண சேஷி –
பிரகாசிப்பித்துக் கொண்டு நிற்கிறவனே -தனித்தன்மை -திருவடி -சேர அடியோர்க்கு -பாட பேதம் –சேஷ பூதர்களுக்கு இரங்கி அருள வேண்டும்
வண்ணம் அருள் -ஸ்வ பாவம் யதார்த்தம் -அருளையே வண்ணமாக ஸ்வ பாவமாக உடையவன் –பிரகாரம் -அருள் கொண்டு தர்ச நியாமான
மேகம் போன்ற வடிவு –வண்ணம் வடிவு கண்டார் நெஞ்சை இருளப்பண்ணுகை–மேகத்தின் அகவாய் கல் என்னும் படி இவரது அருள் -மூன்றும்

கண்டார் மனம் மயக்கத்தைக் கொள்ளுதற்குக் காரணமான வடிவையுடைய அழகிய மேகவண்ணா! ஆச்சரியத்தையுடைய அம்மானே!
மனத்திலே புகுந்து இனிக்கின்ற அமுதே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! தெளிந்த நல்ல அருவிகளானவை மணிகளையும்
பொன்னையும் முத்துக்களையும் கொழித்துக்கொண்டு வருகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! அண்ணலே!
உன் திருவடிகளைச் சேர்வதற்கு, உனக்கு அடிமைப்பட்ட எனக்கு ஐயோ! ஐயோ!! என்று திருவுள்ளம் இரங்கியருள்வாய்.
மருள்கொள் வண்ணம் என்க. “ஆஆ” என்பது, இரக்கக் குறிப்பு. என்னாய் என்பது, விதிவினை; இரங்கி யருளவேண்டும்.

“அருளாய்” என்றீர்; இங்ஙனே நினைத்தபோதாக அருளப்போமோ? என்ன :
வேறுபட்ட சிற்றின்பங்களில் போகாதபடியான ஞாரலாபத்தைப்பண்ணித் தந்த உனக்கு, பேற்றினைத் தருதல் பெரிய பணியோ? என்கிறார்.
என்றது, என்னால் வந்த குறை அறுத்த உனக்கு, உன்னால் வரும் குறை அறுத்தல் பெரிய பணியோ என்றபடி.

வண்ணம் அருள்கொள் அணி மேகவண்ணா –
வண்ணமானது – பிரகாரமானது, அருள்கொண்டிருப்பதாய், காண்பதற்கு இனிய மேகம்போன்ற வடிவையுடையவனே!
அன்றிக்கே, வண்ணமானது – வடிவமானது, கண்டார் நெஞ்சினை இருளப் பண்ணக் கூடியதாயிருக்கை என்றுமாம்.
“மைப்படி மேனி” திருவிருத்தம், 94.-அன்றோ.
அங்ஙனம் அன்றிக்கே, மேகத்தினுடைய அகவாய் கல் என்னும் படியாயிற்றுத் திருமேனியில் உண்டான
திருவருளின் மிகுதி இருக்கிறபடி என்னலுமாம்.
மாய அம்மானே –
வெறும் வடிவழகே அன்றிக்கே, ஆச்சரியமான குணங்களாலும் செயல்களாலும் பெரியன் ஆனவனே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே –
தெய்வப்பிறவியிலே பிறந்து ஒரு சாதனத்தைச்செய்து அதனாலே பெற்றுப் புஜிக்கும்போது இனிதாகை அன்றிக்கே,
இன்னார்க்கு என்று அன்றிக்கே நினைத்த மாத்திரத்தாலே தானே வந்து புகுந்து இனிதாகை.
உள்ளுந்தொறும் தித்திக்கும் அமுது அன்றோ.பிரகலாதன் விபீஷணன் போல்வாருக்கும் – நினைக்கும் தோறும் தித்திப்பவன்

இமையோர் அதிபதியே –
மதுவிரதம் போலே, இந்த அமிருதமே ஜீவனமாக இருக்குமவர்கள்.
தெள் நல் அருவி மணிபொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே –
தெளிந்து நன்றான அருவிகளானவை விலக்ஷணமான மாணிக்கங்களையும் பொன்களையும் முத்துக்களையும்
கொழித்து ஏறட்டுகிற திருமலையிலே நின்றருளுகிற சர்வேசுவரனே!
அண்ணலே –
திருமலையிலே வந்து நின்று எனக்கு உன் சேஷித்வத்தை உதறிப்படுத்தவனே! -ஸ்த்ரீகரணம் ஸ்தாபித்து நிஸ் சங்கையாக –
இமையோர் அதிபதியாயிருந்து வைத்து வண்ணமருள்கொள் அணிமேக வண்ணனாய் மாய அம்மானாய்த்
தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானாய் அண்ணலாய்க்கொண்டு,
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே என்கிறார்.
உன் அடிசேர அடியேற்கு ஆஆ என்னாய் –
கிட்டி நின்று முறையை அறிவித்த நீ, பேற்றினையும் செய்து தாராய்!
உன் திருவடிகளை அடையும்படி வேறு கதி இல்லாத எனக்கு ஐயோ ஐயோ என்று திருவருளைச் செய்தருளவேண்டும்.
உன்னடி அன்றோ? உபாயமுமாய் உபேயமுமாய்ப் போக்கியமுமான திருவடிகளைச் சேரும்படி கிருபை செய்தருளாய்.

————————————————————————————————–

ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திருமா மகள்கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4-

ஜகத்துக்கு விரோதி நிரசன சாமர்த்தியம் -இதில் -ரஷகத்வம் -திவ்ய ஆயுத சேர்த்தி பரிகரம் சொல்லி -அழகு பாக்யம் சொல்லி –
விரோதி நிரசனம் செய்யும் ஸ்ரீ உடைய -போக்யமான திருவடிகளை சேருமாறு அருள வேண்டும்
ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்–இரக்கம் இல்லாமல் -சம்சார துக்கத்துக்கு மேலே -நலிந்து
-அசுரர் ஆயுஸ்-பிராணன் -அழித்து
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திருமா மகள்கேள்வா!-அக்னி முகம் -அம்பு -உறுக்கிட வாளி பொழிந்த
–விரோதி நிராசனத்தால் மகிழும் பிராட்டி -வீர பத்னி -அனுரூப நாயகன் -துல்ய சீல வாயோ வ்ருத்தம்
தேவா! சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!-அத்தாலே உஜ்ஜ்வலம் -அடைந்த -இவன் காந்தி அவளாலே
-ஸ்ரத்தாயா தேவதா தேவத்வம் அஸ்னுதே –
இதனால் ரிஷிகள் மகிழ -சூரர்கள் முனிக் கணங்கள் இட்ட புஷபங்கள் -வானோர் வானவர் கோமான் சிந்து பூ மகிழும்
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே-பூலங்கி சேவை சாயங்காலம் -திருவடி சேவை -நிஜ பாத சேவை –பூக்களால் ஆர்ந்த திருவடி –
அந்த புஷபங்கள் பெற்ற பேற்றை நான் பெற வேண்டாமோ -அனுபவ யோக்யனாய் இருந்தும் இழக்கும் படி துஸ் தரண மாம் படி பாபங்கள்
-கிட்டும் பிரகாரம் கல்பித்து அருள வேண்டும் -கிட்டுமாறு அருள வேண்டும் என்றுமாம் –

ஐயோ! ஐயோ! என்று இரங்காமல் உலகத்திலுள்ளாரை வருத்துகின்ற அசுரர்களுடைய வாழ்நாளின் மேலே, நெருப்பினை வாயிலேயுடைய பாணங்களை
மழையைப்போன்று பொழிந்த வில்லையுடையவனே! திருமகள் கேள்வனே! தேவனே! தேவர்களும் முனிவர் கூட்டங்களும் விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே! போக்கற்கு அரிய வினைகளையுடைய அடியேன், உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பொருந்துமாறு கற்பிக்கவேண்டும்.
“வாணாள்மேல் தீவாய் வாளி பொழிந்த” என்றது, அவர்களைக் கொன்றமையைக் குறித்தபடி.
பூவார்கழல்கள் – பூக்கள் நிறைந்திருக்கின்ற திருவடிகள் என்னலுமாம்.

உன்னை அடைவதற்கு உறுப்பாக நீ கண்டு வைத்த சாதனங்கள் எனக்கு ஒன்றும் உடல் ஆகின்றன இல்லை;
ஆன பின்பு, தேவரை நான் அடைவதற்கு எனக்கு என்னத் தனியே ஒரு சாதனம் கண்டு தரவேணும் என்கிறார்.

நஞ்சீயரை, நம்பிள்ளை ஒருநாள் “பஞ்சமோபாயம் என்று கொண்டு ஒன்று உண்டு என்று சொல்லா நின்றார்கள்;
நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்று உண்டோ?” என்று கேட்டருள,
“நான் அறிகிலேன்; இனி, நான்காவது உபாயந்தான் பகவானேயாயிருக்க, ஆகாயமென்று கூறப்படுகிற நாராயணனுக்கும்
அப்பால் ஒன்றுண்டு என்று சொல்லுவாரைப்போல, அவனுக்கும் அவ்வருகே ஒன்று உண்டு’ என்கை அன்றோ,
அது நான் கேட்டு அறியேன்” என்று அருளிச்செய்தார்.

ஆகாயம் என்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்று உண்டு என்று சொல்லுவாரைப்போலே’ என்றது,
“தத்ராபிதஹரம்”என்கிறபடியே, நாராயணனைச் சொல்லி, “தஸ்மின் யதந்த:”என்கிறபடியே, அவனுக்கு அந்தர்யாமியாக இருப்பவன் சிவன் என்று
சொல்லுவாரைப்போலே என்றபடி. அங்ஙனம் சொல்லுபவர், சைவர்.

“ஆனால், ‘ஆவா’ என்கிற பாசுரம் அருளிச்செய்யும்போது, ‘எனக்குத் தனியே ஒரு சாதனம் கண்டு தரவேணும் என்கிறார்’ என்று
அருளிச்செய்கையாயிருக்குமே” என்ன, “அதுவோ! அது உன் நினைவின் குற்றங்காண்; அதற்கு இங்ஙனேகாண் பொருள்;
நீயும் உளையாயிருக்க, நான் இங்ஙனே இழப்பதே என்கிறார்காண்” என்று அருளிச்செய்தார்.

-தகராகாசம் -நாராயணனுக்கு உள்ளே இருப்பதை உபாசிப்பாய் வியோம அதீத -தாண்டி -தஸ்மிந் அந்தஸ்த உபாஸித்வயம்
-குணங்களை உபாசிக்கச் சொல்லிற்று -பசுபதி மதத்தார் உள்ளே உள்ள சிவன் என்பர் –
சுவ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் ஒழிய விரகு இல்லை-இதுவே உத்தாரகம் –
வ்யூஹம் -வாசுதேவன் -அந்தர்பூத்தம் ஆக்கி த்ரி வியூகம் சொல்வது போலே ஆச்சார்ய அபிமானம் ஸ்வ தந்த்ர உபாயம் ஆகிலும்
-காலைப் பிடித்து கார்யம் கொள்ளுவது போலே அந்தர்பூதம்-ஐஞ்சாம் உபாயம் என்கிறது அமோக பழுது ஆகாத பலன் என்பதால் –
உபாயாந்தர குற்றம் வராதே -ஆச்சார்யன் ஈஸ்வரனே -காருண்யத்தால் சஸ்த்ர பாணி -மோக்ஷ ஏக ஹேது-பரதந்த்ரன் -ஆச்சார்யர் –
பிராட்டி உபாயம் ஆக்க கூடாதோ -ஸ்வ தந்திரம் வருமே -அதனால் வாராது -ஆச்சர்யராக வருவதற்கு அவன் சங்கல்பித்தான் —
ஸ்வதந்த்ர உபாயம் இல்லை -தானே பரதந்த்ரம் -ஸ்வதந்திரம் அடியாக ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம் தானே ஆச்சார்ய ஜென்மம் –

“ஸாஹம் கேஸக்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவித்யபி ப்ரபோ – நீயும் உளையாயிருக்க, என் மயிரைப் பிடித்துச் சிலர் நலியும் படி
நான் மானபங்கம் செய்யப்பட்டவள் ஆவதே! உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு?
ப்ரபோ – நீயும் என்னைப் போன்று பெண்ணானாயாகில் நான் ஆறியிருக்க லாயிற்றே;
நீ பரிபவத்தைப் போக்கக்கூடியவனாய் இருக்கச்செய்தே நான் நோவுபடுவதே என்றாளன்றோ.

“ஸாஹம் கேஸக்ரஹம் பிராப்தா பரிகிலிஷ்டா ஸபாங்கதா பஸ்யதாம் பாண்டுபுத்ராணாம் த்வயி ஜீவத்யபி ப்ரபோ”–என்பது, மஹாபாரதம்.

கற்றைத் துகில்பிடித்துக் கண்ணிலான் பெற்றெடுத்தோன்பற்றித் துகிலுரியப் பாண்டவரும் பார்த்திருந்தார்
கொற்றத் தனித்திகிரிக் கோவிந்தா! நீ அன்றி அற்றைக்கும் என்மானம் ஆர்வேறு காத்தாரே.-என்பது, வில்லிபாரதம்.

நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே அடைந்த ஒருவன்,
‘;எம்பெருமானே உபாயமாகில் சரணாகதிகொண்டு இங்குச் செய்கிறது ஒன்றும் கண்டிலேன்’ என்ன, செவியைப் புதைத்து
‘நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரம ரஹஸ்யமாக உபதேசித்து ஓராண் வழியாய்க் கொண்டு போந்த இதனை,
இதன் சீர்மை அறியாத உனக்கு மஹாபாபியேன் இதனை வெளியிடுவதே!’ என்று திருமுடியிலே அடித்துக்கொண்டு–
திருப்பள்ளியறையிலே புக்கருளினார். –இவனை நிக்ரகிக்காதே என்று பிரார்த்தித்தார் —

திவ்வியமங்கள விக்கிரஹமும் விக்கிரஹ குணங்களும் திவ்வியாத்ம சொரூப குணங்களும்
நித்திய முக்தர்கட்குப் பிராப்யமானாற்போலே, முமுக்ஷுவாய்ப் பிரபந்நனான இவ்வதிகாரிக்குச் சரணாகதியே பிராப்பியமாய் இருக்கும் அன்றோ.
பண்ணும் பொழுது அதிகாரி விசேஷணமாய் இருக்கும் –விருப்பம் உள்ளவன் என்று காட்ட -ஓடத்தில் ஏறி அமர்ந்தது போலே –
விருப்பம் உபாயம் இல்லை -விஷ்ணு போதம் ஓடம் உபாயம் -பண்ணின பின்பு அதுவே ப்ராப்யம்

ஆ ஆ என்னாது –
ஈசுவரனுக்குப் பிரியம் செய்கையாகிறது, அவன் விபூதியிலே கிருபை செய்தலே அன்றோ;
நஞ்சீயர், “ஒருவனுக்கு, பிறர் துக்கத்தைக் கண்டால் சகிக்கமுடியாத தன்மை வந்ததாகில்,
‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று அறுதி இடலாம்; ‘அது தக்கது’ என்றிருந்தானாகில்,
‘நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை’ என்று தனக்கே கைவாங்க அமையும்” என்று அருளிச்செய்தார்.
பிறர் ஆகிறார் யார்? என்னில், தன்னினின்றும் வேறுபட்டவர். ஆனால், பிரதிகூலர்பக்கலிலும் கிருபையைச் செய்யவோ? என்னில்,
அப்படியே யன்றோ இவர்களுக்கு மதம். ‘கெட்ட வாசனை கழிந்து அநுகூலராகப் பெற்றிலோம்’ என்று இருக்க அன்றோ அடுப்பது.
அவன் “இராவணனே யானாலும்” என்றால்,
“விபீஷணோவா ஸுக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்”=என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 35.

அவன்உலகத்திலேயுள்ள இவனுக்கு இத்தனையும் வேண்டாவோ? ஆனால்,
“நண்ணா அசுரர் நலிவெய்த” திருவாய். 10. 7 : 5. என்ற இடத்தில், அது எங்ஙனே பொருந்தும்படி? என்னில்,
அதற்கு என்? நண்ணாமை நிலை நின்ற அன்று கொல்லத் தக்கவனாகிறான்.
யாக காரியங்களில் செய்கிற கொலையைப் போன்று அதுதானே நன்மை ஆகக் கடவது அன்றோ.
இவனுடைய தண்ணிய சரீரத்தைப்போக்கி நல்வழியே போக்குகின்றான் அன்றோ.
ஆஆ என்னாது உலகத்தை அலைக்கும் –
ஐயோ, ஐயோ, என்னவேண்டியிருக்க, அதற்குமேலே நலியா நிற்பார்கள்.
ஒருவனோடே பகைத்திறம் கொண்டானாகில்,
‘பொருளை இச்சித்த காரணத்தால் அன்றோ இது வந்தது, இருவரும் சபலர்’ என்றே அன்றோ இருக்கலாவது;
அங்ஙன் அன்றிக்கே, உலகத்தை அலைப்பர்களாயிற்று.
தம்மோடு ஒக்க உண்டு உடுத்துத் திரிகிற இதுவே காரணமாக நலியா நிற்பர்களாயிற்று.

அசுரர் –
அதற்குக் காரணம் அவர்கள் அசுரத்தன்மை வாய்ந்தவர்களாகையாலே.
வாணாள்மேல் –
இவர்கள் வீரக் கோலத்தால் வந்த ஒப்பனை குறி அழியாதே இருக்க, உயிரிலே நலிகை. என்றது,
இவர்கள் வாழ்வதற்குக் காரணமான காலத்தை நலிகை என்றபடி.
தீ வாய் வாளி –
பெருமாள் தொடுத்து விடும்போதாயிற்று அம்பு என்று அறியலாவது;
படும்போது நெருப்புப் பட்டாற்போலே இருக்கை.
ஸ்ரீகோதண்டத்தில் நாணினின்றும் கழிந்து செல்லும் போது காலாக்னி கவடுவிட்டாற் போன்று எரிந்துகொண்டு செல்லாநிற்கும்.
குணஹீநமானால் இருக்கும்படி அன்றோ இது. -குணம் -நான் சாடு -குண ஹீனம் -கிருபா ஹீனம் –
“தீப்த பாவக ஸங்காஸை: – படும்போது நெருப்பைப் போன்றிருக்கும்படி.
“தீப்த பாவக ஸங்காஸை: ஸிதை: காஞ்சநபூஷணை:
ந்த்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம்ஸரை:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 22. இராவணனைப் பார்த்து விபீடணன் கூறியது.

ஸிதை: பட்டமை தெரியாதே தொளை உருவி அவ்வருகே விழக் காணுமித்தனை.
காஞ்சநபூஷணை: – இவற்றுக்கு இருவகைப்பட்ட ஆகாரம் உண்டாயிருக்கிறபடி.
“சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது”பெரிய திருமொழி, 7. 3 : 4.– என்கிறபடியே,
அநுகூலர்க்கு அகப்படுகைக்கும் அதுதானேயாயிருக்கிறபடி.
நத்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் ஸரை: – இவ் வழகுக்கு இலக்காய் வாழ்ந்து போகலாயிருக்க,
எதிரிட்டு முடிந்துபோக நான் இச்சிக்கிறிலேன்.
நீ எண்ணி இருக்கிறது நான் அறிகிறிலேன் அன்றோ.
இருத்திப் பிடித்த வில்லும், தெரித்துப் பிடித்த பகழியுமாய்க் கொண்டு நிற்கும்போது அபிராமராய் அன்றோ இருப்பது;
அவ்வழகைக் கண்டு அநுபவிக்கமாட்டாமல், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து முடிவாரைப்போலே,
தயரதன்பெற்ற மரகத மணித்தடத்தை எதிரிட்டு முடிந்துபோக நான் காணமாட்டுகிறிலேன்.

வாளி மழை பொழிந்த சிலையா –
“அம்பு மழையைப் பெய்தாரன்றோ”
“ஸரவர்ஷம் வவர்ஷ ஹ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 18.
என்கிறபடியே, பாட்டம் பாட்டமாகப் பெய்தபடி.
திருமாமகள் கேள்வா –
விரோதிகளைப் போக்கினது கண்டு உகந்து அணைக்குமவளைச் சொல்லுகிறது.
“கணவனைத் தழுவிக்கொண்டாள்” என்னுமவள்.
“தம் ஸதருஹந்தாரம் த்ருஷ்டவா – வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கவேண்டும்படியான அழகினையுடையவரை,
எதிரிகளை வென்ற வீரக்கோலத்தோடே கண்டாள்.
ஸத்ருஹந்தாரம்-தம் திருமேனியிலே ஒரு வாட்டம் வாராமே, அவர்களைக் குற்றுயிராக்கிவிடுவதும் செய்யாதே,
துண்டித்து அடுக்கினவரை.
“தம் த்ருஷ்ட்வா ஸத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.

முன்பு திருவயோத்யையில் இருந்த நாள், ‘இவர் வேட்டைக்குச் சென்ற விடத்தே இன்னபடியும் இன்னபடியும் பொருதார்,
இன்ன புலியைக் குத்தினார், இன்ன சிங்கத்தைக் குத்தினார்’ என்றாற்போலே உறவினர்கள் சொல்லக் கேட்கு மத்தனை அன்றோ;
இங்குப் பூசலுக்குப் புகுகிறபோதே பிடித்து மேலுள்ள செயல்கள் அடங்கலும் கண்டாள்.
மஹர்ஷீணாம் ஸு காவஹம் – இருடிகளுடைய விரோதிகளைப்போக்கி அவர்களுக்குக் குடியிருப்புப் பண்ணிக் கொடுத்தவரை.
தங்கள் தவத்தின் வலிமையால் வெல்லலாயிருக்க, தங்கள் பாரத்தைப் பெருமாள் தலையிலே பொகட்டு
முறை உணர்ந்து கொண்டிருக்கு மவர்களுக்கு.
கர்ப்ப பூதா: தபோதநா:-தந்தாம் கைம்முதல் அழியமாறாதே இருக்குமவர்கள்
தபோதனராய் இருக்கச்செய்தே கர்ப்ப பூதராயிருப்பர்கள். என்றது,
தந்தாமுக்கென்ன இயற்றி உண்டாயிருக்கச்செய்தே, கர்ப்பாவஸ்தையில் தாய் அறிந்து ரக்ஷிக்குமத்தனை அன்றோ;
அப்படியே அவனே அறிந்து ரக்ஷிக்க இருக்குமவர்கள் என்றபடி-

வேண்டின வேண்டினர்க் களிக்கு மெய்த்தவம்
பூண்டுள ராயினும் பொறையி னாற்றலால்
மூண்டெழு வெகுளியை முதலில் நீக்கினார்
ஆண்டுறை அரக்கரால் அலைப்புண் டாரரோ.-என்பது, கம்பராமா. அகத்தியப்பட. 8.

அநுகூலர்களை ரக்ஷித்தலும் பிரதிகூலர்களை அழித்தலும் இவளுக்குப் பிரியமாகச் செய்யுமவை அன்றோ.
பபூவ – பதினாலாயிரம் முருட்டு இராக்கதர்களோடே தனியே நின்று பொருகிற இதனைக் கண்டு
அஞ்சி ‘இது என்னாய் விளையுமோ?’ என்று சத்தை அழிந்து கிடந்தாள்; இப்போது உளள் ஆனாள்.
பூ – ஸத்தாயாம். ஹ்ருஷ்டா – சத்தை உண்டானால் உண்டாமதுவும் உண்டாயிற்று.
வைதேஹீ – உபாத்தியாயர்கள் பெண்பிள்ளைகளுக்குச் செவி ஏற்றாலே ஓத்து போயிருக்குமாறு போலே,
வீரவாசி அறியும்குடியிலே பிறந்தவள் அன்றோ.
அன்றிக்கே, ஒரு வில்லு முறித்த இதற்கு உகந்து என்னைக் கொடுத்த எங்கள் ஐயர்,
பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று பொருது முடித்த இதனைக் கண்டால் என்படுகிறார்தான் என்னுதல்!
பர்த்தாரம் – முன்பு, இவர் சுகுமாரர் ஆகையாலே ‘குழைசரசகு’ என்றும்,
‘ஐயர் நம்மை இவர்க்கு நீர்வார்த்துக் கொடுக்கையாலே நாம் இவர்க்குச் சேஷம்’ என்றும்
அணைத்தாளத்தனை; ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது இப்போது.
பரிஷஸ்வஜே – இராவணனுக்கு ஒத்தவர்களாய், அவன் மதித்த வீரத்தையுடையவர்களாயிருப்பார் பதினாலாயிரம் பேரும்
விட்ட அம்புகள் முழுதும் இவர் மேலே பட்டு, கண்ட இடமெல்லாம் யுத்த வடுவாய் அன்றோ திருமேனி கிடக்கிறது;
அவ்வவ் விடங்கள் தோறும் திருமுலைத்தடத்தாலே வேது கொண்டாள்.

திருமாமகள் கேள்வா –
உன்னுடைய சக்திக்குக் குறைவு உண்டாய் இழக்கின்றேனோ? புருஷகாரம் இல்லாமல் இழக்கின்றேனோ?
தேவா –
இவள் அணைத்த பின்பு திருமேனியிற் பிறந்த புகர்.
அன்றியே, விரோதிகளைப் போக்குகையாலே வடிவிலே பிறந்த காந்தியைச் சொல்லவுமாம்.
சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே –
அநுகூலர் அடையத் திரண்டு படுகாடு கிடக்கும்தேசம்.
பூவார்கழல்கள் –
பூவால் அல்லது செல்லாத திருவடிகள் என்னுதல்.
பூவோடு ஒத்த திருவடிகள் என்னுதல்.
அருவினையேன் –
அவன் தடைகளைப் போக்க வல்லனாயிருப்பது, எனக்கு ஆசை கரைபுரண்டு இருப்பது,
திருவடிகள் எல்லை இல்லாத இனியபொருளாக இருப்பது;
இங்ஙனே இருக்கச்செய்தே, கிட்டி அநுபவிக்கப் பெறாத பாவத்தைப் பண்ணினேன்.
பொருந்துமாறு புணராயே –
அசோகவனத்திலே இருந்த பிராட்டியைப்போலே காணும் தம்மை நினைத்திருக்கிறது;
புணராய் –
உன்னைக்கிட்டும் வழி கல்பிக்கவேணும் என்னுதல்; நான் கிட்டும்படி செய்யவேணும் என்னுதல்.

——————————————————————————————————

புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-

ஆஸ்ரித ரக்ஷணம் அர்த்தமாக அநாயாசேன-வியாபாரங்கள் உடைய உன் திருவடிகள் என்றோ
புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!-திரளாக நின்ற மரங்கள் -அதி சங்கை பண்ணின அன்று விச்வாஸம் பிறக்க –
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!-நளகுபேரன் -சாபத்தால் -மரங்கள் -சிரிப்பு மாறாத உதடுகள்
-உட்க்கார்ந்த தொடைகள் -ஜகத்துக்கு காரண பூதன்
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!-செறிந்த மேகங்கள் -யானை போலே
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே-கை முழுவதும் நிறைந்த கோதண்டம் -சேர்ந்த உன் திருவடிகள் என்று சேர்வேன்

சேர்ந்து ஒன்றுபட்டிருந்த மராமரங்ள் ஏழனையும் சுக்கிரீவன் நிமித்தமாக அம்பு எய்த ஒப்பற் வில்வலவனே! சேர்ந்து பொருந்தி இருந்த இரண்டு
மரங்களின் நடுவே சென்ற முதல்வனே! திண்மைபொருந்திய மேகமோ என்று ஐயப்படும்படியாக யானைகள் வந்து சேர்கின்ற திருவேங்கடத்தில்
எழுந்தருளியிருக்கின்றவனே! திண்மை பொருந்திய கோதண்டத்தையுடைய உனது திருவடிகளை அடியேன் சேர்வது எந்த நாளோ?
வலவன் – வல்லவன்; எய்தவன் என்க. திணர் – திண்ணம். சார்ங்கம் – வில். ஓகாரங்கள் சேரப் பெறாததால் உண்டான துக்கத்தின் மிகுதியைக் காட்டுகின்றன.

நீர் இங்ஙனம் விரைகிறது என்? உம்முடைய அபேக்ஷிதம் செய்கிறோம் என்ன, அது என்று? என்கிறார்.

புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ –
க்ஷத்திரியர் விற்பிடிக்கிறது துயர ஒலி கேளாமைக்கு அன்றோ?
“வருந்துகிறார்கள் என்ற சப்தம் உண்டாகக்கூடாது என்று க்ஷத்திரியர்களால் வில்தரிக்கப்படுகின்றது” என்கிறபடியே.
“கிம்நு வக்ஷ்யாமி அஹம் தேவி த்வயைவ உக்தம் இதம் வச:க்ஷத்ரியை: தார்யதே சாபம் ந ஆர்த்தஸப்த: பவேத்இதி”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 10 : 3.

இலக்குக் குறிக்கப்போகாதபடி திரண்டு நின்ற ஏழுமராமரங்களை முஷ்டியாலும் நிலையாலும் நேர் நிற்கச்செய்து எய்த தனிவீரனே!
ஓ என்பது துக்கத்தின் மிகுதியைக் காட்டும் இடைச்சொல்.
ரக்ஷணத்தில் ஐயப்பட்டாரையும் நம்பும்படி செய்து காரியம் கொள்ளும் நீ, ஆசைப்பட்ட எனக்கு உதவ வாராது ஒழிவதே!
“மஹாராஜர் பெருமாள் விஷயத்தில் எப்பொழுதும் ஐயப்பட்டுக் கொண்டிருந்தார்”
“ஸு க்ரீவ: ஸங்கிதஸ்ச ஆஸீத் நித்யம் வீர்யேண ராகவே”-என்பது, சங்க்ஷேபராமா. 63.
என்கிறபடியே, பெருமாளைக் கண்ட அன்று தொடங்கி மராமரங்களைப் பிளக்க எய்யுந்தனையும் முடிய ஐயமுற்றே இருந்தார்.
அந்த ஐயத்தைப் போக்கிக் காப்பாற்றிய நீ, ஐயம் இல்லாமலே பற்றின என்னைக் காக்கவேண்டாவோ?
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ –
ஒரு நிரையாகச் சேர்ந்து நின்ற மருதமரங்களை ஊடு அறுத்து, ஒன்றிலே வெளிகண்டு போவாரைப்போலே போய்,
உலகத்திற்கு வேர்ப்பற்றான உன்னைத்தந்தவனே! பிரளயகாலத்தில் அன்று உலகத்தை உண்டாக்கியது இன்றாயிற்று.
அற்றைக்கு இவன்தான் உளனாகையாலே உண்டாக்கலாம்;
இங்கு நிரந்வயவிநாசம் அன்றோ பிறக்கப் புக்கது.
முதல்வாவோ –
உலகத்தை உண்டாக்கினவனே! உலகத்திற்கு வேர்ப்பற்றான தன்னை யன்றோ நோக்கித் தந்தது;
“படைப்புக்கு முன் சத் என்று சொல்லக்கூடிய இதுவே இருந்தது; வேறு பொருள் ஒன்றும் இல்லை” என்கிறபடியே.
“ஸதேவ ஸோம்ய இதமக்ரஆஸீத் ஏகமேவாத்விதீயம்”-என்பது, சாந்தோக்யம். 6. 2 : 1.
தான் உளனாகவே உண்டாகுமது அன்றோ உலகம். இப்படி இருக்கிற தன்னளவிலே வந்த ஆபத்தையோ நீக்கலாவது.

திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே –
திண்மை மிக்கிருந்துள்ள மேகம் என்னும்படி யானைகளானவை சேராநின்றுள்ள திருமலையிலே நின்றருளினவனே!
மேகங்களோடே எல்லாவகையானும் ஒப்புமை உண்டாகையாலே மேகங்களைக் கண்டபோது யானை என்னலாம்;
யானைகளைக் கண்டபோது மேகம் என்னலாயிருக்கும்.
“மதயானைபோல் எழுந்த மாமுகில்காள்” நாய்ச்சியார்திருமொழி, 8 : 9.-என்னக் கடவது அன்றோ.
சமான தர்மத்தால் வந்த ஐயம் இரண்டிடத்திலும் உள்ளது அன்றோ.
விஷயங்களால் வரும் அந்யதா ஞானத்தைக் கழித்து, அந்தத் தேசத்தே பிறக்கும் அந்யதா ஞானத்தை அன்றோ இவர் கணிசிக்கிறது.
அங்குள்ளவை எல்லாம் இனிய பொருள்களாகத் தோற்றுகிறபடி.
கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு -உங்களுக்கு அந்யதா ஞானம் விபரீத ஞானம்
உங்கள் முக ஒளி பிரதிபட்டு –கீழ்கா வானம்ந்தி வேல் என்பது அந்யதா ஞானம் – பாட்டி இருள் விளக்க எருமை என்கிறீர்கள் -விபரீத ஞானம் இது
திவ்ய தேசப் பிரபாவத்தால் வரும் அந்யதா ஞானம் விபரீத ஞானம் உத்தேச்யமே த்யாஜ்யம் இல்லை –

திணர் ஆர் சார்ங்கத்து உனபாதம் –
திண்மை மிக்கிருந்துள்ள ஸ்ரீ சார்ங்கத்தையுடைய உன்னுடைய திருவடிகளை.
“ரக்ஷகராய், சக்கரவர்த்தித் திருமகனான பெருமாளை ரக்ஷகமாக அடைந்தன” என்கிறபடியே,
ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதாத்மஜம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.
ரக்ஷகமான திருவடிகளை.
சக்கரவர்த்திப் பிள்ளைகள் எடுக்குமத்தனை காணும் வில்லு.
திணர் ஆர் சார்ங்கம் –
தன் வளைவிலே-மிடுக்கிலே – விரோதிகளைத் தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளுகை.
உன பாதம் –
அந்த வளைவுக்கு -மிடுக்கிலே -அகப்படாதாரை முதல் அடியிலே அகப்படுத்திக் கொள்ளுவது.
சார்ங்கத்தில் அகப்படுவார் பிரதி கூலர் அடியில் அகப்படுவார் அநு கூலர் -ஏழு ரிஷிகள் கன்னிகைகள் குல பர்வதங்கள் சமுத்திரங்கள் நடுங்கினவே
சேர்வது அடியேன் எந்நாளே –
கையில் வில் இருக்க இழக்கவேண்டா விரோதி உண்டு என்று; இனி உன்னைப்பெறும் நாளையாகிலும் சொல்லவேணும்.
கையில் வில் இருக்க விரோதி கண்டு என்ன பயம்
where there is will there is way

———————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: