பகவத் விஷயம் காலஷேபம் -140- திருவாய்மொழி – -6-9-6….6-9-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6-

யோக்ய அயோக்ய விபாகம் இல்லாமல் அசேஷ -கலந்த உன்னை காண அக்னி சாஹசம் மெழுகு போல
பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்-அடி பாய வைத்து -கடல் உடன் சேர்ந்த
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த-பூமியை தாண்டி -ஊர்த்த லோகம் தடவிய
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்-ஆச்சார்ய புதன் -எல்லா காலத்திலும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?—முடியவும் பெறாமல் காணவும் பெறாமல் ஆழமானது
தடவந்த -மேலே தடவிய -உள்ளே வளைத்து கொள்ளும் -என்றுமாம் –

ஒரு திருவடியைப் பரப்பிக் கடலால் சூழப்பட்ட உலகங்கள் எல்லாம் அத் திருவடியின் கீழே ஆம்படி தாவி அளந்து, மற்றொரு திருவடியால்
மேல் உலகங்கள் எல்லாவற்றையும் தடவின மாயோனே! உன்னைக் காணும்பொருட்டு வருந்தி எல்லாக் காலத்திலும்
தீயின் அருகில் சேர்ந்த மெழுகைப் போன்று உலகத்தில் திரியக் கடவேனோ?
ஓர் அடி பாய் வைத்து என்க. பாய் – பரப்பி. பாய், தாய் என்பன : வினையெச்சங்கள். தீயோடு – தீயின் ; வேற்றுமை மயக்கம்.

‘உம்முடைய அபேக்ஷிதம் செய்யக் கடவோம்; அதில் ஒரு குறை இல்லை;
ஆனாலும், பிரயோஜனம் உம்மதானபின்பு நீரும் சில முயற்சிகளைச் செய்யவேணும் காணும்’ என்ன,
இந்த மரியாதை என்று தொடங்கிக் கட்டிற்று என்கிறார்.
அன்றியே, காண்கைக்குத் தாம் தக்கவரல்லர் என்று உபேக்ஷித்தானாக நினைத்து, தகுதி தகுதி
இன்மைகளைப் பாராதே எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்த உன்னாலே இழக்கப்படுவோர் உளரோ? என்கிறார் ஆகவுமாம்.

ஓர் அடி பாய் வைத்து –
சேதனர்தலைகளிலே திருவடியை வைக்கிறபோது, அவர்கள் எவ்வளவு வருந்தினார்கள்? -சாதனம் பண்ணவில்லையே
வசிஷ்ட சண்டாள விபாகம் பாராதே வெறும் உன்கிருபையாலே செய்தருளினாய் அத்தனை அன்றோ.
ஓர் அடியைப் பரப்பிவைத்து.
அதன் கீழ் –
அத் திருவடியின் கீழே.
பரவை நிலம் எல்லாம் தாய் –
கடல் சூழ்ந்த பூமிப்பரப்படங்கலும் அளந்து.
சங்கல்பத்தாலே செய்தானல்லனே, திருவடிகளைப் பரப்பிப் பின்பே யன்றோ அளந்துகொண்டது.
பரக்கவைத்து அளந்துகொண்ட பற்பபாதன் அன்றோ-திருச்சந்தவிருத். 32.-.
ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த – மற்றைத் திருவடியால் பிரமலோகத்தளவும் சென்று தீண்டிய.
‘எல்லா உலகும்’ என்றது, நடுவே உள்ள உலகங்களை. தென்றல் உலாவினாற் போலே இருத்தலின் ‘தடவந்த’ என்கிறார்.
மாயோன் –
தன்னுடைமையைத் தீண்டுதற்குத் தான்வியாமோகம் செய்யுமவன்.
உன்னைக் காண்பான் வருந்தி –
என்னளவில் வந்தவாறே என்னை இரப்பாளன் ஆக்குகிறாயோ?
அத்தலை இத்தலை ஆயிற்றோ?
எனைநாளும் –
அநேக காலம்.
மயர்வற மதிநலம் அருளியபின்பு பேற்றின் அளவும் செல்ல இடையில் உண்டான நான்கு நாள்களும்,
அவன் எதிர்சூழல் புக்குத் திரிந்த நாள்களைப் போன்று பரப்பாகத் தோற்றுகிறபடி.
அல்ப காலம் -தென்றல் தடவியது போலே தடவ -தனது ஆர்த்தி சொல்லி -எனை நாளும் -மயர்வற மதி நலம் அருளி –
பிராப்தி 32 வருஷம் தானே -சஹஜ பக்தி -இடையில் உள்ள நாலு நாள் -எதிர் சூழல் புக்கு திரிந்த நாள்கள் பரப்பு போலே தோற்றும்
-கழிந்த போன துக்கம் முன்பு இல்லையே -இப்பொழுது நாள் போவது யுகம் போலே தோன்றுமே ஞானம் வந்த பின்பு
தீயோடு உடன்சேர் மெழுகாய்-
நெருப்பிலே பட்டுக் கரிந்து போகவும் பெறாதே, தூர இருந்து அழியாதிருக்கவும் பெறாதே, உருகுவது வலிப்பது ஆகிறபடி.
மானச அநுபவத்தாலே உருகுவது வலிப்பது, புறத்திலே காணுதல் பெறாமையாலே உருகுவது வலிப்பதாய்ச் செல்லுகிறபடி.
நசை வலிக்கப் பண்ண, ஆசை உருகப்பண்ணச் சொல்லுகிறபடி.
-நசை -கிடைக்குமோ கிடைக்காதோ சபல புத்தி –ஆசை –அனுபவ அலாபத்தில் கிலேசம்
உலகில் திரிவேனோ –
ஒன்றில் ஜீவித்தல், ஒன்றில் முடிதல் செய்யப்பெறாதே, குளிர்ந்த வழியில்லாத தேசத்திலே
யாதநா சரீரம் போலே நான் ஒருவன் இங்ஙனே திரிவதே!

—————————————————————————————–

உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்
உலகுக் கேஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து
அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவி லேனுக்கு அருளாயே.–6-9-7-

கர்த்ரு கிரியா ரூபமான -கர்மம் கார்யம் -உலகமாய் -கர்த்தா -இரண்டும் பகவத் அதீனம்-நிர்வாகன்-அந்தர்யாமி யாய் –
லௌகிக ஸமஸ்த வஸ்துக்களும் -பிறப்பிக்க விரகு அறியாத எனக்கு அருள வேணும் –
உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்-கார்ய ரூப உபாயங்களை நியமித்து– சாதகர் கர்த்தாக்களும் நீயே –
வேதாந்த காலஷேபம் இல்லை -எனக்கு பிரயத்தனம் எதற்கு -என்றார் கீழ் -இங்கு பிரயத்தனம் உண்டு அது உனக்கு என்கிறார் –
உலகுக் கேஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து-ஏக ஆத்மாவாக நீ –
அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ!-அலகிலா விளையாட்டுடை -எண்ணிக்கை இல்லாத -ஞான கர்மம் -வியாப்தமான முக்தாத்மாக்கள்
-அருவம் -ரூபம் இல்லா முக்தர்களை சரீரமாக -அண்டத்துக்கு புறமாய் இருப்பார்கள் -பக்தர் தானே அண்டத்துக்கு உள்ளே –
அண்டத்துக்கு புறம் பரம பதம் என்றுமாம் -ஸமஸ்த காரண காரிய -ஜாதம் தாண்டி -சப்த ஆவரணம் தாண்டி –
ஆத்மா விபு இல்லையே எப்படி வியாபியம் ஆகும் – -அவன் சூஷ்மம் விபு -சரீரம் ஸ்தூலம் -பெரியதாகவும் இருக்கும்
-தர்ம பூத ஞானத்தால் வியாப்தி உண்டே -பக்தாத்மா உடைய ஞானம் சரீரம் முழுவதும் வியாபிக்கும் -முக்தாத்மா -பத்து திசைகளும் வியாபிக்கும் –
அலகில் பொலிந்த அறிவி லேனுக்கு அருளாயே.-உன்னைப் பெற விரகு அறியாத எனக்கு நீயே உபாயம் உபேயம் ஓ ஆர்த்தி கூப்பாட்டு

உலகத்திலே சஞ்சரிக்கின்ற கருமங்களாகிற உபாயங்களாய், அந்த உபாயங்களைச் செய்கின்றவர்களுமாய், உலகத்திலேயுள்ள எல்லாப்பொருள்கட்கும்
ஓர் உயிர் ஆனவனே! அண்டத்துக்கு மேலே உள்ள கணக்கு இல்லாதவர்களாய் விளங்குகின்ற பத்துத் திக்குக்களிலும் பரந்திருக்கின்ற
முக்தர்களைப் பிரகாரமாகவுடையவனே! எண்ணிறந்து விளங்குகின்ற அறிவில்லாத எனக்குத் திருவருள்புரிய வேண்டும்,
கதி – உபாயம்; கருமமாகிய உபாயம். உலகம்-உயர்ந்தோர். உலகு – சராசரங்கள். அரு – முக்தாத்மாக்கள்.

‘“உலகில் திரிவேனோ?” என்ற உறைப்பால் உண்டான சுவாதந்திரியம் உம்முடைய தலையிலே கிடந்ததே!’ என்ன,
‘சாதனங்களும் அவற்றைச் செய்கின்றவர்களும் உனக்கு அதீனமான பின்பு,
இவ் ஆற்றாமை எனக்குச் சொரூபமாய்ச் சேருமித்தனை அன்றோ?’ என்கிறார்.
அன்றியே, ‘பேறு உம்மதான பின்பு நீரும் சிறிது முயற்சிசெய்யவேணும் காணும்’ என்ன,
‘எல்லாமும் உனக்கு அதீனமாயிருக்க, அவற்றிற்குப் புறம்போ நான் என்காரியம் செய்கைக்கு?’ என்கிறார் என்னலுமாம்.

உன் கிருபை பார்த்தால் சாதன அனுஷ்டானம் பண்ண வேண்டாம் என்றார் கீழ்
-சாதனம் பண்ண வேண்டி இருந்தாலும் அதற்கும் நீயே கதவை என்கிறார் இதில்

உலகில் திரியும் கரும கதியாய் –
உலகத்தில் பரிமாறுகிற கர்மமாகிற சாதனமாய்.
உன்னை ஒழியப் பலத்தைக் கொடுக்கக் கூடியது ஒன்று உண்டோ?
உலகமாய் –
அவற்றைச் செய்கின்றவர்கள் தாம் சுவதந்திரர்களாய் இருக்கிறார்கள்?
உலகம் என்பது உயர்ந்தோர்மாட்டு அன்றோ; உலகத்திலுள்ளார்க்கு என்றும் வரும் அன்றோ.
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் –
ஒரு தேகத்தை ஒரு சேதனன் ஆத்மாவாய் அபிமானித்திருக்குமாறுபோலே, எல்லாப் பொருள்களுக்கும் ஒரே ஆத்மா ஆனவனே!
“சேதனர்களுடைய உள்ளே வியாபித்தவனாய் நியாமகனாயும் சேதன அசேதனங்களுக்கு ஆத்மாவாயும் இராநின்றான்” என்பது உபநிடதம்.
அந்த: பிரவிஷ்ட: ஸாஸ்தா”என்பது உபநிடதம்.-பலமாக இருக்கிற தானே கர்த்தாவும் கர்மமும் உபகரணங்களுமாயிருக்கை.
இரண்டும் உன் தலையிலே கிடந்தால் உன்னை ஒழிய எங்ஙனே நான் ஜீவிக்கும்படி.

புற அண்டத்து –
அண்டத்துக்கு வெளியிலே என்றபடி.
அலகு இல் பொலிந்த திசை பத்தாய அருவேயோ –
கணக்கு இல்லாதவர்களாய், எம்பெருமான் சொரூபத்தாலே வியாபிக்குமாறுபோலே ஞானத்தாலே
பத்துத் திக்குக்களிலும் வியாபித்திருப்பாராய், உருவப் பொருள் போன்று கண்களுக்கு விஷயம் அன்றிக்கே
அருவாக இருக்கிற ஆத்மாக்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே!
இதனால், முக்தரோ தாம் சுவதந்திரராய் இருக்கிறார்கள் என்றபடி.
பரமபதத்திலும் பத்துத் திக்குக்களாய் இருக்குமோ? என்னில், இங்கே இருந்து நினைக்கிற இவர்க்குச் சொல்லத் தட்டில்லையே.
பரமபத நாதன் எந்த திக்கை நோக்கி வீற்று இருப்பார் -திக்குகள் இல்லையே அங்கு –
அங்ஙன் அன்றிக்கே,
முக்தர் லீலாவிபூதியை நினைக்கும்போது இங்குள்ளபடியே நினைப்பார்கள் அன்றோ.
அலகு இல் பொலிந்த அறிவிலேனுக்கு –
பகவானுடைய சொரூப ரூப குண விபூதிகளை அளவிடினும் தம் அறிவு கேடு எண்ணப் போகாது என்கிறார்.
மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் வார்த்தை அன்றோ.-ஆகிஞ்சன்ய புத்தியை அறிவில்லை என்கிறார் –
அருளாயே –
பரிகரம் உண்டானபின் அருளக்குறை என்?
“பகவானே! உன்னுடைய பேரருளுக்கு உத்தமோத்தமமான பாத்திரமாக இந்த வஸ்துவானது இப்போது உனக்குக் கிடைத்தது” என்னுமாறுபோலே.
“பகவந் இதாநீம் அனுத்தமம் பாத்ரம் இதம் தயாயா:”-என்பது, தோத்திர ரத்நம். 24.
ஆகிஞ்சன்யம் இல்லை என்ற உடன் -அருளத் தட்டு என் -தயைக்கு உத்தம பாத்திரம் நான் தான்

——————————————————————————————————-

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8-

தேஜோ மய விக்ரகம் உடைய நீ அவ்வடிவை அனுபவிப்பியாமல் –
அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!-தாரகன் -ஞானி ஆதமை மே மதம்
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!-மனம் சர்வ கந்தம் தேஜோ மயம் -உனக்கு அநந்யார்ஹன் சபலன் ஆகும் படி பண்ணி
-வ்யாமோஹம் செய்து அருளி -விளித்து அறிவிலேனுக்கு அருள வேண்டும் –
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?-வெளியில் புறத்து இட்டு இன்னம் கெடுக்காமல் -விரகால் ருசியை ஜெநிப்பித்து
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே-உன்னைத் தவிர ஒன்றும் அறியாமல் -கத்யந்தரம் அறியாமல்

ஞானிகளுக்கு உயிராக இருப்பவனே! வாசனையைக் கொண்டிருக்கிற ஒளிபொருந்திய விக்கிரஹத்தையுடையவனே! அடியேனுடைய நெடிய மாலே!
விரகு அறியாத எனக்குக் கிருபைசெய்தருள்வாய்; வேறு ஒன்றனையும் அறியாத அடியேனுடைய உயிரானது திகைக்கும்படியாக
வேறு உபாயங்களைச்செய்து என்னைப் புறத்திலே தள்ளி இன்னம் கெடுப்பாயோ? என்கிறார்.
வெறி – வாசனை. கிறி – விரகு. ஆவி திகைக்கக் கெடுப்பாயோ என்க.

“அருளாய்” என்ற வாயோடே வந்து அருளக் கண்டிலர்; தன் பக்கல் நின்றும் பிரித்து என்னைக் கைவிடப் பார்த்தானாகாதே என்கிறார்.
இத்தனை நாள் பட்டது கர்மாதீனம் இனி மேல் கிருபாதீனம் அறிவித்த பின்பு தள்ளி வைக்கவோ –

அறிவிலேனுக்கு அருளாய் –
“நின்னருளே புரிந்திருந்தேன்” –பெரியாழ்வார் திருமொழி, 5. 4 : 1.-என்னுமாறுபோலே
உன்னருள் ஒழிய வேறு ஒன்றை அறியாத எனக்கு அருளவேணும்.
“அவ்வருள் அல்லன அருளும் அல்ல” –முதல் திருவந். 15.-என்றேயன்றோ இவர் இருப்பது.
வையகத்துப் பல்லார் அருளும் பழுதே அன்றோ.
பொய் நின்ற ஞானம் எனக்கு ஞானப் பிரான் நீ -நீ தானே அருள வேண்டும்
அறிவார் உயிரானாய் – அறிவார்க்கு உயிர் ஆனவனே! என்னுதல்; அறிவாரை உயிராகவுடையவனே என்னுதல்.
“ஞானியானவன் எனக்கு உயிர் போன்றவன் என்பது என்னுடைய மதம்” என்கிறபடியே;
“என்னுடைய இரண்டாவது ஆத்மாவாக இருக்கிற உன்னை” என்கிறபடியே
.“ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்” என்பது ஸ்ரீ கீதை, 5 : 18.
“த்விதீயம் மே அந்தராத்மாநம் த்வாம் இயம்ஸ்ரீ: உபஸ்திதா”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 4 : 43.
இளைய பெருமாளே தனக்கு இரண்டாவது அந்தராத்மா என்கிறார் பெருமாள் –
என்னது உன்னதாவியில் அறிவாராத்மா என்று அவன் மதம் தோன்றும்

வெறி கொள் சோதி மூர்த்தி –
அருளாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவழகு. “சர்வகந்த:” என்னுமதன்றோ.
பரிமளத்தையுடைத்தாய், எல்லையற்ற தேஜசையுடைத்தான வடிவழகையுடையவனே!
அடியேன் நெடுமாலே –
எனக்கு இப்போது எட்டாது இருக்கிறவனே! என்னுதல் ;
வடிவழகைக் காட்டி எனக்கு வியாமோஹத்தை விளைத்தவனே! என்னுதல்.
கிறிசெய்து –
நீ இப்போது உதவாமையாலே, முன்பு செய்தவையெல்லாம் விரகு அடித்தாய் என்று தோற்றாநின்றது காண்?
விரகு அடித்தாய் -வீண் -கிறி செய்து -சம்சாரத்தில் பொருந்தாமல் நீயும் கிடைக்காமல்
என்னைப் புறத்திட்டு –
பிராட்டியை அசோக வனத்திலே வைத்தாற்போலே,பகவத்குணங்கள் நடையாடாதே ஐம்புல இன்பங்கள்
நடையாடுகிற சம்சாரத்திலே பொகட்டு இன்னம் கெடுப்பாயோ – முன்பு இழந்தது போராதோ?
“சம்சாரம் தியாஜ்யம்” என்றும், “பகவத்குணங்கள் நன்று” என்றும் அறிந்த பின்பும் கெடுப்பாயோ?
“நினைவு கெடுவதனால் புத்தி கெடுகிறது, புத்தி கெடுவதனால் நாசத்தை அடைகிறான்” என்பது ஸ்ரீகீதை.
“த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷு உபஜாயதே
ஸங்காத் ஸம்ஜாயதே காம: காமாத் க்ரோத: அபிஜாயதே”
“ஸ்மிருதி ப்ரம்சாத் புத்திநாச: புத்தி நாசாத் ப்ரணச்யதி”-என்பன, ஸ்ரீ கீதை. 2. 62 : 63.

பிறிது ஒன்று அறியா அடியேன் –
வேறு கதியில்லாதவனாய் வேறு ஒருவர்க்கு உரியன் அல்லாதவனாய் இருக்கிற என்னுடைய,
ஆவி திகைக்க –
மனம் கலங்கும்படி.
கிறிசெய்து என்னைப்புறத்திட்டு இன்னம் கெடுப்பாயே?
கிறிசெய்து என்னைப்புறத்திட்டு இன்னம் கெடுப்பாயே?என்று ஒன்று உண்டோ என்கிறார்.
என்னை இங்கே வைத்தபோதே, குழியைக் கல்லி மண்ணை இட்டு அமுக்கப் பார்த்தாயன்றோ என்கிறார்.
“என்னை துவேஷிக்கிறவர்களும் கொடியவர்களும் மனிதர்களில் கெட்டவர்களுமான அவர்களை நான்
பிறவிகளில் எப்பொழுதும் தள்ளுகிறேன்” என்னும்படியே
.“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாமி அஜஸ்ரமஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”-என்பது, ஸ்ரீ கீதை. 16 : 19.

—————————————————————————————-

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-

பலவாறும் நாயகி பாவனைகள் -ஆற்றாமை விஞ்சி -இந்த பதிகம் -சிதிலம் அதிகம் -இங்கே இருந்தே கூப்பிடுகிறார் –
அவனுக்கு அங்கே இருப்பு திரியாமல் –
குழல் ஓசையில் கோபிகள் பாடு இவர் குரல் ஓசையில் அவன் படும்படி -மேலே த்வயார்த்த பிரகிருதி சரணாகதி தான் வழி என்று உணர்ந்து
பூர்ண சரணாகதிக்கு அந்தப் பண்ணும் பதிகம் இது
பக்ஷிகள் -காலில் முதலில் விழுந்து பரம பாகவதர்கள் -வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் -பிராட்டி மூலமாக நாயகன் திருவடி போற்றுகிறார் –
சாரம் கட்டினது இது வரை -இதில் கலசம் ஏற்றுவதற்கு -பெருமானே என்னை தள்ளி விட்டு விடாதே என்கிறார் –
அனைவருக்கும் அந்தராத்மா உபநிஷத் சித்தாந்தம் -ஓரமாக வைத்து -தேசிகன் -வேதாந்தாச்சார்யர் -இது ஸ்ரீ கிருஷ்ணர் சித்தாந்தம்
ஞானி தான் எனக்கு ஆத்மா -என்கிறான் –
10 மாதம் சீதைக்கு -14 ஆண்டுகள் பரதனுக்கு -10 ஆண்டு தேவகி –கோபிகள் ஒரு பகல் -சொல்லிப் போனாயே
அயன காலம் வந்ததும் கூத்தாடி இடைச் சுவரில் ஒரு அயன காலம் கழிந்ததே என்று ஆனந்தம் பட்டார் எம்பெருமானார்
உனக்கு விதேயமான விஷயாந்தரங்கள் நடை யாடும் -வலை பின்னி -கண்ணி-வைத்து விஷய இந்திரியங்கள் -சப்த ஆதி -என்னை முடிக்க தேடுகிறாயோ
உன் திருவடிகளில் அணித்தாகும் காலம் குறுகாதோ
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்–மூச்சு விட முடியாமல் நசிப்பிக்கும் -நெய்க்குடம் -மொய்த்து -தா தா என்று ஐவர் குமைக்கும்
விஷய சாரஸ்யம் அல்ப அஸ்திரம் இது -அனந்த ஸ்திரம் பேரின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?-பகு முகமாக காட்டி கெடுக்கப் பார்க்கிறாயா -விசித்திரமான பல பிரகாசிப்பித்து
-பலவற்றை நீ காட்டி நீ கெடுப்பாயோ -நீ குத்தி காட்டுகிறார் -தடுக்க வல்ல சக்தனாகவும் இருந்து
இப்படி பண்ணலாமா -நிரதிசய ஆனந்த உக்தன் -நிரதிசய துக்க தேசத்தில் உழன்று
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே-பூமியை அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட நிரதிசய போக்யமான திருவடிகளில்
நான் அந்வயிக்கும் படி -முற்று உவமை பொருத்தமான -காமரு மானேய் நோக்கியார்க்கு பார்த்தோம்
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.-விஷயாந்தர ஸ்பர்சம் விநாச ஹேது என்று அறிந்த பின்பும் -இன்னம் -ஞானம் வந்த பின்பும் –

மனம் கலங்கும்படியாக ஐந்து இந்திரியங்களும் வருத்துகின்ற பலவகையான சிற்றின்பத்தை எனக்கு நீ காட்டிப் பாவியேனை அழிக்க நினைக்கின்றாயோ?
பூலோகத்தை அளந்துகொண்ட தாமரை போன்ற திருவடிகட்கு அழைத்துக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ? என்கிறார்.
ஐவர் ஆவி திகைக்கக் குமைக்கும் சிற்றின்பம் என்க. ஐவர்: இகழ்ச்சிக் குறிப்பு. ஆவி – மனம். சிற்றின்பம் பல நீ காட்டி என்க.
வையம் தாவிக் கொண்ட தாமரை என்க. தாமரை – உருவகம்.

உம்மை இங்குக் கெடுத்தது என்? என்ன, கண்ட காட்சியிலே இழுத்துக் கொள்ளக்கடவனவான விஷயங்கள்
பரிமாறுகிற இடத்தே வைத்தாயாகில், இனி, கெடுக்கை என்று ஒன்று உண்டோ என்கிறார்.
என்னை இங்கே வைத்தபோதே, குழியைக் கல்லி மண்ணை இட்டு அமுக்கப் பார்த்தாயன்றோ என்கிறார்.
“என்னை துவேஷிக்கிறவர்களும் கொடியவர்களும் மனிதர்களில் கெட்டவர்களுமான அவர்களை நான்
பிறவிகளில் எப்பொழுதும் தள்ளுகிறேன்” என்னும்படியே.
“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாமி அஜஸ்ரமஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”-என்பது, ஸ்ரீ கீதை. 16 : 19
பாவியேனை -பரமாத்மாவுக்கு விஷம புத்தி இல்லை -கர்மாதீனம் என்றவாறு-

ஆவி திகைக்க –
இந்திரியங்களுக்கு மூலமான மனம் கலங்க.
ஐவர் குமைக்கும் – ‘ஐவர்’ என்று உயர்திணையாகச் சொல்லுகிறார் நலிவின் மிகுதியாலே.
பல மில்லாத ஒருவனைப்பற்றி ஐந்து படர் நலியுமாறுபோலே ‘என் விஷயத்தைக் காட்டு காட்டு’ என்று தனித்தனியே நலிகிறபடி.
இப்படி நலிந்தாலும் சுவை உண்டாகில் ஆம் அன்றோ.
சிற்றின்பம் –
முள்ளிப்பூவில் தேன்போலே. அற்பசாரங்கள் அன்றோ.
சிற்றின்பம் –
முள்ளிப்பூவில் தேன்போலே. அற்பசாரங்கள் அன்றோ.- திருவாய். 3. 2 : 6.-என்றது, தேவரை அகற்ற வேண்டுவதுண்டாய்,
அநுபவிக்கலாவது ஒன்று இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.
பாவியேனை –
அந்த மில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்த நான் சிற்றின்பத்தில் சேரும்படியாவதே!
“வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன்”-திருவாய். 4. 5 : 3.- என்றவரன்றோ இங்ஙனே சொல்லுகிறார்.
பல – ஒன்றிலே கால் தாழப்பண்ணவல்ல விஷயமில்லையே.
நீ காட்டிப் படுப்பாயோ – ரக்ஷகனான நீ காட்டி முடிக்கப்பார்க்கிறாயோ?
நாட்டார் ‘காணாவிடில் பிழையோம்’ என்று இருக்கிற விஷயம் இவர்க்குக் கண்ட மாத்திரத்திலேயே
மோஹிக்கும் படியாக இருக்கிறதன்றோ; ஆகையால், ‘காட்டிப் படுப்பாயோ’ என்கிறார்.
அசுணமா என்று சில பறவைகள் உள்ளன; அவை பிடி கொடா ஒன்றுக்கும்;
அவற்றைப் பிடிக்க நினைத்தார் முற்படப் பாடுவார்கள்; அதுகேட்டு நெஞ்சு நெகிழும்;
பின்பு பறையை அடிப்பார்கள்; இதன் வன்மையாலே பட்டுக் கிடக்குமாம்.
அதுபோலே, இவர் பகவானுடைய குணங்களிலே நைந்தபடி. இதர விஷயங்களைக் கேட்ட அளவிலே முடியும்படி ஆனார்

.“மறக்கும் பதந்தியும் சேலும் அசுணமும் வண்டினமும்
பறக்கும் பதங்கமும் போலைவ ராற்கெடும் பாதகரே”-என்பது, திருவேங்கடத்தந்தாதி, 28.

நெடுநாள் அநுபவித்துப் போந்தாலும் கணக்க இருந்த அன்று ‘நாம் இன்னது அநுபவித்தோம்’ என்று
நினைப்பதற்கு ஒன்று இன்றிக்கே இருக்கும் அன்றோ;
இங்ஙனே இருக்கச் செய்தேயும் அவற்றில் ஆசைசெலுத்துவது பாவத்தின் மிகுதி அன்றோ.

தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –
வேறு ஒன்றைக் குறிக்கும் வாக்கியத்திலே வைத்துப் பேற்றினை அறுதியிடுகிறார்.
கால அவதி -கேட்க்கும் பிரகாரணத்தில் பிராப்யநிஷ்கரஷம் பண்ணுகிறார் –
‘தாவி வையம் கொண்ட தடம் தாமரை’ என்றதனால், நினைத்தது தலைக்கட்டவல்லன்என்னும் சத்தியோகம் கூறியபடி.
பூமிப் பரப்பு அடங்கலும் வருத்தம் இன்றி அளந்து கொண்டபடி.
இனிமை அளவிறந்த திருவடிகளாதலின் ‘தடம் தாமரை’ என்கிறது. இதனால் பிராப்யம் சொல்லுகிறது.
‘கூவிக்கொள்ளும் காலம்’ என்கையாலே பிராபகத்தின் தன்மை சொல்லுகிறது.
‘இன்னம் குறுகாதோ’ என்கையாலே, ருசியின் தன்மை சொல்லுகிறது.
இதர விஷயங்களின் காட்சி முடியும்படியாய், உன் திருவடிகளின் இனிமை அறிந்து – விடமாட்டாத அளவு பிறந்து பின்பு – இன்னம் தாழ்க்குமத்தனையோ?

பிள்ளானுடைய அந்திம தசையில் நோவு அறிய நஞ்சீயர் புக்கு இருக்க, ‘கூவிக்கொள்ளும்காலம் இன்னம் குறுகாதோ?’ என்று பலகால் சொல்ல,
இதனைக்கேட்டுச் சீயர் அழ, ‘சீயரே! நீர் கிடந்து அழுகிறது என்?
அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தான்.

————————————————————————————————————

குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.–6-9-10-

அல்பம் -ஸ்திரம் -கைவல்யம் –விலக்ஷணம் ஆத்ம அனுபவ லாபமும் அதிசயித்த உனக்கு
சேஷத்வ கைங்கர்யத்துக்கு லவலேசத்துக்கு ஒப்போ
குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி-சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்–கைவல்யம் சேர்ந்தாலும்
-சிற்றின்பம் ஒப்பிட்டால் இது பெரிய இன்பம் -இது சேர்ந்தாலும்
ஸ்வரூப சங்கோசம் -குறுகுதல்-விகாசம் இல்லாமல் -முடிவும் இல்லாமல் நித்தியமாக சர்வ காலத்திலும் -க்ஷய வ்ருத்திகளும் இல்லாமல் –
பரிச்சேத ரஹித இன்பம் –
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே–பகவத் அனுபவ ப்ரீதி காரித
கைங்கர்யத்தில் சிறு காலத்துக்கும் ஒப்பு ஆகாதே -மேலே கிடைக்கா விடிலும் -மறுகால் இன்றி -என்கிறார் –
ஒப்புமைக்காக இப்படி எடுத்து சொல்கிறார் -அல்ப காலம் -அனுபவமும் அதிசயத்தை விலக்ஷணம்மாகும் படி மாயவனின் குணம் –
அடியேனாகக் கொண்டு சேஷத்வ ரசத்தை -அல்ப காலத்துக்கு ஓவ்வாதே-அந்தோ -ஒவ்வாது என்று சொல்ல வேண்டி இருக்கிறதே
-புளிய மரத்தடியில் காரி மாறன் உபதேச முத்திரை வைத்து சொல்ல வேணுமோ
ஜெகதாச்சார்யர் யார் -சத்யம் யதி ராஜோ ஜகத் குரோ -கூரத் ஆழ்வான் -மண்டப யானையை தேடித் கண்டு பிடிக்க வேண்டுமோ அந்தோ விஷாதம்

மாயோனே! இயல்பாகக் குறைவதும் பெருகுவதும் இல்லாததும், முடிவு இல்லாததும், எத்துணைக் கற்பங்கள் சென்றாலும் கால வேறுபாட்டினால்
குறைவதும் பெருகுவதும் இல்லாததும் அளவு இல்லாததுமான சிற்றின்பமாகிய ஆத்ம அநுபவம் சேர்ந்தாலும், தெளிந்து பார்க்குமிடத்து
மறுபடியும் ஒருகாலம் இல்லாமல் உனக்கே கைங்கரியத்தைச் செய்கின்ற சிறிய காலத்தை அது ஒக்குமோ?
முதல் இரண்டு அடிகளில் கைவல்யம் கூறப்படுகிறது. குறுகா, நீளா, கூடா, சிறுகா என்பன; ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்;
குறுகா இன்பம் எனத் தனித்தனியே கூட்டுக. அந்தோ: இரக்கத்தின்கண் வந்த இடைச்சொல்

‘செல்வம் முதலானவை அல்பமானவை, நிலைஅற்றவை’ என்று ‘வேண்டா’ என்றீராகில், அவ்வளவினது அன்றே;
முடிவில்லாததுமாய் நிலைத்திருப்பதுமாய் இருக்குமன்றோ ஆத்மாநுபவம்; அதனை அநுபவித்தாலோ? என்ன,
‘நீ சொன்னது பொருத்தமுள்ளதாயின் செய்யலாயிற்று; ‘அவை அல்பம், நிலையற்றவை’ என்ற இடம் சொரூபத்தைச் சொன்னேனத்தனை:
உன்னுடைய இனிமையைச் சொன்னதும் சுவாபம் இருந்தபடி சொன்னேனத்தனை;
‘அது தீது’ என்று விட்டும், ‘இது நன்று’ என்று பற்றுகிறேனும் அல்லேன்;
உன்னைப் பற்றிற்றும் நீ -பிராப்த சேஷி யாகையாலே , அவற்றை விட்டதும் நீ -பிராப்த சேஷி – அல்லாமையாலே’ என்கிறார்.
பிராப்த-வகுத்த விஷயத்திலே குணம் அழகு முதலானவைகளும் உண்டாகப் பெற்றேனித்தனை.-இருப்பதற்காகப் பற்ற வில்லை -என்றபடி

குறுகா நீளா –
தன் இயல்பிலே குறுகுதலும் நீளுதலும் இன்றிக்கே இருக்கை.
இறுதிகூடா –
முற்றும் அழிவு இன்றிக்கே இருக்கை.
சரீர அன்வயம் இருக்கவே பால்யம் நாசம் -சான்வய நாசம் -குறுகா நீளா-
நிரன்வய நாசம் -உயிர் போன பின்பு -இறுதி கூடா –
எனை ஊழி சிறுகா பெறுகா –
கால வேறுபாடு பற்றிக் குறைதலும் விரிதலும் இன்றிக்கே இருக்கை.
அளவில் இன்பம் சேர்ந்தாலும் –
இங்ஙனே இருக்கையாலே முடிவின்றிக்கே இருக்கிற ஆத்ம அநுபவ சுகத்தை அடைந்தாலும்.
மறுகால் இன்றி –
பகவானுடைய அநுபவமானது ஒரு கால் அநுபவித்தால் மற்றைப்போது இன்றிக்கே இருப்பது.
மாயோன் –
மீண்டு இன்றிக்கே ஒழிந்தாலும் விடொண்ணாத கல்யாண குணயோகம் சொல்லுகிது.
உனக்கே ஆள் ஆகும் சிறு காலத்தை உறுமோ –
‘உன்திருவடிகளில் அடிமையே புருஷார்த்தம்’ என்று இருக்குமது, மறுத்து இன்றியிலே இருப்பது, அதுதான் கண நேரமாவது;
இங்ஙனே இருந்தாலும் அளவில் இன்பம் சேருகை உறுமோ? இதனைப் பார்க்க.
அந்தோ –
பர்த்தத்துக்கும் பரமாணுவுக்கும் இருந்த வேற்றுமையைச் சொல்லும்படி ஆவதே!
தெரியிலே –
தோற்றிற்றுச் சொல்லின் செய்யலாவது இல்லை;
ஆராய்ந்து சொல்லுமன்று இங்ஙன் அல்லது இல்லை. இந்தப் பொருளை உபதேசிக்கவேண்டுவது ஆவதே!

பிராப்த சேஷி -நீ -அபிராப்தங்கள் அவை -இதுவே சுவீகார தியாக ஹேது -மாயோன் என்று சொல்லுவான் என்னில்
என் அதிர்ஷ்டம் குணம் அழகும் இருந்ததே ‘
ஸ்வதா –என்கையால் சம்சார தசையில் பாலாதி -ஞான சங்கோசம் -உண்டாகும் இயற்கையில் ஆத்மாவில் இல்லையே
சான்வய விநாசம் இல்லை -குறுகா நீளா-சரீரத்துடன் அன்வயப்பட்டு இருந்தாலும் அவஸ்தா -பேதங்கள் –
நிரன்வய நாசம் இறுதி கூடா
இவ்வுபயமும் இல்லா விட்டால் காலாந்தரத்தில் உண்டோ என்றால் எனை ஊழி-என்று சங்கதி –

——————————————————————————————————

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11-

சர்வ ரக்ஷகனுக்கு அநந்யார்ஹ சேஷ பூதர் ஆவார் -உலகம் உண்டான் சர்வ ரக்ஷகன் –
தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு-த்ரஷ்டாவ்யோ -ஸ்ரோதவ்ய மந்த்வயா நிதித்யாசிதித்வய –
-நாதயாத்மா–பிரவசனேன லப்த-ப்ரீதி ரஹிதமான ஞானம் -கொண்டு நினைத்தால் எண்ணி அறிய முடியாதே
சிரவணம் தெளிந்து மனனத்தால் பிரதிடமாம் படி நித்யாஸனம் துருவ ஸ்ம்ரிதி தடை இல்லாமல்
அவிச்சின்ன ஸ்னேஹ பூர்வம் அனுதியானம் தைல தாராவத் -அன்பு இல்லாமல் வசப்படான் ஸ்ரீ யபதி
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்-அடியார் அடியார் சரமாவதி தாசன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்-பகவத் வைலக்ஷண்யம் மற்றவை வேறுபாடு அறிந்து அருளிச் செய்த
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.-மாயோன் -சொல்லி -பதில் சொல்ல வேண்டாம் உரிமை உடன் ஸ்வரூபம் பார்த்து
ஸ்வரூப க்ருத தாஸ்யம் கிட்டும் –அநந்யார்ஹ சேஷ பூதர் ஆக்கும் –

தெளிதல் நினைத்தல் தியானித்தல் ஆகிய இவற்றால் அறியமுடியாத திருமாலுக்கு உரிமைப்பட்ட தொண்டர்களுக்குத் தொண்டரான
ஸ்ரீ சடகோபராலே தெளியும்படியாகச் சொல்லப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களும்
உலகத்தையெல்லாம் உண்டவனான சர்வேசுவரனுக்கு உரிமைப்பட்ட தொண்டராகச் செய்யும்.

முடிவில் –இப்பத்தும் கற்றவர்கள் சர்வேசுவரனுக்கு அந்தரங்கமான தொண்டராவர் என்கிறார்.

தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு-
கேள்வி விமரிசம் பாவனை இவைகளால் அளவிடமுடியாத திருமகள் கேள்வனுக்கு.
“இந்தப் பரமாத்மாவானவன் மனனத்தாலும் தியானத்தாலும் கேள்வியினாலும் அடையத்தக்கவன் அல்லன்” என்கிறபடியே

“ந அயம் ஆத்மா ப்ரவசநேந லப்ய:
ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந
யம் ஏவ ஏஷ: வ்ருணுதே தேந லப்ய:
தஸ்யஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்ஸ்வாம்”-என்பது, முண்டகோபநிடதம்.

கேவலம் கேள்வி முதலானவைகட்கு அப்பாற்பட்டவனாயிருப்பான்;
அல்லாதபோது இவை தாம் அநுபவமாய்ச் சேருமன்றோ. இதற்கு அடி, திருமகள் கேள்வனாயிருத்தலாதலின் ‘திருமாலுக்கு’ என்கிறார்.
அதுவன்றோ சர்வாதிக வஸ்துக்கு அடையாளம்.
திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் –
திருமகள் கேள்வனான சர்வேசுவரனுக்கே அடிமைபட்ட ஆழ்வார்,
சம்சாரத்தின் தன்மையை நினைத்த கொடுமையாலும், பகவத்விஷயத்திலே மூழ்கின கனத்தாலும்,
பெருவிடாயன் மடுவிலே விழுமாறு போலே, சேஷத்துவத்தினுடைய எல்லையிலே விழுகிறார் ‘தொண்டர் தொண்டர் தொண்டன்’ என்று.
இது இவருடைய அகம்புத்தி இருக்கிறபடி. தேக ஆத்ம அபிமானியாம்போது தேகத்திலே அகம்புத்தியைப் பண்ணுவான்;
‘தேகத்திற்கு வேறுபட்டது ஒன்று உண்டு’ என்று அறிந்தபோது ஆத்மாவிலே அகம் புத்தியைப் பண்ணுவான்;
தன்னைப் பகவானுக்கு அடிமையாக நினைத்தபோது பிரகார மாத்திரத்திலே நின்று செல்வம் முதலானவற்றைக்கொண்டு போவன்;
‘அடிமையாக இருத்தலே பேறு’ என்று அறிந்தபோது தன்னை அடியார்கட்கு அடியவன் என்னுமளவாக அநுசந்திக்கக் கடவன்.
-ததீயசேஷ பூதன் – ஆத்ம -அஹமர்த்தம்
“பயிலும் சுடர் ஒளி” என்ற திருவாய்மொழிக்குப் பின்பு அடியார்கட்கு அடிமையாக இருத்தல் அளவாக ஆயிற்று,
இவருடைய அகம் என்ற சொல்லுக்குப் பொருள் இருப்பது. -இவ்வளவு வருகை அன்றோ அநந்யார்ஹ சேஷத்வமாவது.

மற்றுமோர் தெய்வம் உளதென் றிருப்பாரோடு
உற்றிலேன்; உற்றதும் உன்னடியார்க் கடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத்தும்
கற்று, நான் கண்ண புரத்துறை யம்மானே!-என்ற திருப்பாசுரம் நினைவு கூர்க. பெரிய திருமொழி.

தெரியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் –
பகவானுடைய வைலக்ஷண்யத்தையும் சம்சாரத்தினுடைய தோஷத்தையும் தெளிவாகச் சொன்ன இப்பத்தும்
உலகம் உண்டாற்கு உரிய தொண்டர் ஆக்கும்-
சர்வரக்ஷகனான சர்வேசுவரனுக்கு அநந்யார்ஹசேஷமாக்கும் இத் திருவாய்மொழி.
சம்சாரம் நன்றுமாய், பகவத்விஷயம் தீதானாலும் அதனை விடமாட்டாதவர்களாதலின் ‘உரிய தொண்டர்’ என்கிறார்.
“குணக்ருத தாஸ்யத்திலுங் காட்டில் ஸ்வரூபப்ரயுக்தமான
தாஸ்யமிறே பிரதானம்” என்பது, ஸ்ரீ வசன பூஷணம், பிரகரணம்,

————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆலோக-நேபி விஷய ப்ருசம்ச பக்ன
ரூபே ஹரே
சகல லோகே மயம் நிராசா
அப்ராக்ருத வபுஷி லோலா மனனா
பிரலாபம் உச்ச சுரத்தால்

——————————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சர்வாத்மாத்வாத்
ஜகத்யாத் க்ரமனாத
சம்ரக்ஷணாத்
சத்ரு தவம்சாத்
பரத்வாதி அபிமத தச பஞ்ச தா அவஸ்த்வாத்
நிர்வாகத் அண்டகோடியாத -5/6-பாசுரங்கள்
புத தய்யிதத்தாயா
சர்வ ஷீஷ்ண
மோக்ஷ இச்சா உத்பாதகதவாத
இதர புருஷார்த்த வைராக்யாத் பூர்வக
விஸ்லேஷ அநர்ஹத்வம் -கல்யாண குணம் –

——————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 59-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஒதிடவே யுய்யும் யுலகு————–59-

—————————————————————————–

அவதாரிகை –

இதில்
கேட்டார் அடைய நீராம்படி கூப்பிட்ட பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
தம் ஆர்த்த த்வனி கேட்டு கடகர் கால் நடை தந்து போகமாட்டாமல்
தரைப் பட்டுக் கிடக்கிற படியைக் கண்டு
அறிவிலிகளான இவர்கள் ஈடுபட்ட படி கண்டால்
சர்வஞ்ஞன் கேட்டால் பொறுக்க மாட்டாமல்
சடக்கென வந்து முகம் காட்டும் -என்று அறுதி இட்டு
திரு நாட்டு இருப்பும் அடி கலங்கும் படி
முழு மிடறு செய்து கூப்பிடுகிற
நீராய் நிலனாயில் அர்த்தத்தை
நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய -என்று தொடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————————–

வியாக்யானம்–

நீராகிக் கேட்டவர்கள் -நெஞ்சு அழிய-
கேட்டவர்கள் நீராய் –
நெஞ்சு அழியும்படியாகவும்
அசேதனங்களோடு
சைதன்ய லேசம் யுடையாரோடு
பரம சேதனனோடு
வாசி அற
கேட்டார் எல்லாம் நீர்ப்பண்டமாய்
நெஞ்சு அழியும்படியாக –

பாவைகளோடு
பஷிகளோடு
ரஷகனோடு
வாசி அற
எல்லாரும் த்ரவ்ய த்ரவ்யமாய்
ஹ்ருதய சைதில்யம் பிறக்கும் படி –

மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதா –
சர்வேஸ்வரனுக்கும்
அந்தாமமான பரமபதத்தில்
இருப்புப் பொருந்தாத படியாகவும்
விண் மீது இருப்பு அரிதாம் படி –
ஆராத காதலுடன் கூப்பிட்ட-
க்ரோசந்தீம் ராம ராமேதி -என்னும்படி
சமியாத அபி நிவேசத்துடன்
ஆக்ரோசம் பண்ணின –
அதாவது –
வாராய் -என்றும்
நடவாய் -என்றும்
ஒரு நாள் காண வாராய் -என்றும்
ஒளிப்பாயோ -என்றும்
அருளாயே -என்றும்
இன்னம் கெடுப்பாயோ -என்றும்
தளர்வேனோ -என்றும்
திரிவேனோ -என்றும்
குறுகாதோ -என்றும்
சிறு காலத்தை உறுமோ யந்தோ -என்றும்
ஆர்த்தியுடன் கூப்பிட்டவை என்கை –

ஆராத காதலுடன் கூப்பிட்ட-காரி மாறன் சொல்லை –
அத்யபிநிவேசத்தாலே
ஆர்த்தியை தர்சிப்பித்த
அபிஜாதரான
ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தியை-

ஒதிடவே யுய்யும் யுலகு –
இத்தை அப்யசிக்கவே
ஜகத்து உஜ்ஜீவிக்கும்
ஜகத்தில் யுண்டான
சேதனர்களும் உஜ்ஜீவிப்பார்கள் -என்றபடி –

———————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: