பகவத் விஷயம் காலஷேபம்- 138- திருவாய்மொழி – -6-8-6….6-8-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6-

சர்வ பிரகார பவ்யன் -திருத் துழாய் நமக்கு அன்றி தாரான் -நான் உங்களுக்கு கற்பித்த வார்த்தைகளை பூவை இடம் சொல்லி அனுப்புகிறாள் –
என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்-ஒப்பனை அழகன் -திரு மேனி அழகன் -சௌலப்யன்-மூன்றும்
திருமேனிக்கு பரபாக-மின்னு நூல் -என்னை அனுபவிப்பித்தவன் -என் மார்பன் – சமுதாயமான சியாமள விக்ரகம் -கொண்டவன்
-என்னை அனுபவிப்பித்து அடிமை கொண்ட ஸ்வாமி-எனக்கு சர்வ பிரகாரத்தாலும் அடிமை கொள்ளலாம் படி -நியமிக்கலாம் படி -ஆஸ்ரித பவ்யன் –
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்-கண்டிப்பாக கொடுத்து -தன் அனுபவம் கொடாமல் போக மாட்டான் -அனுபவிப்பான் –
ஆஸ்ரிதர் உள்ள இடம் அளவும் செல்லும் -திருக் கமல பாதம் வந்து -என் கண்ணினுள் உள்ளனவே –
தன் நீள் கழல் மேல் மன்னு திருத் துழாய் -என்று அந்வயம்-
ஸ்ரமஹரமான -நாராயணனே நமக்கே பறை தருவான் -பெண் பேச்சு -நமக்கு அன்றி நல்கான் -புண் படும் படி வார்த்தை -செயலை விஞ்சி இருக்கும் தன்மை
நமக்கு அன்றி -நமக்கே -இதில் நம்மையும் சேர்த்து இருவரும் அருளிச் செய்கிறார்கள்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச்-சொல்லிக் கொடுத்து வைத்த -முதல் இரண்டு வார்த்தைகளை
தான் முன்னால் கற்றுக் கொடுத்து வைத்து இருக்கிறார் –
கற்றுக் கொள்ளும் -என்று முக்தமாக செருக்கு அடித்து பராக்கு பார்த்து இருக்கும் உங்களை -நிர்பந்தித்து –
உங்களைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டிய நிலையில் –
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே-நான் உங்கள் கார்யம் செய்ய வேண்டி இருக்க -உங்கள் இடம் கார்யம் கொள்ள வேண்டிய பாவம்

தீவினையேன் வளர்த்த சிறிய பூவைகளே! என் மின்னு நூல் மார்பன், என் கரும்பெருமான், என்கண்ணன், தன்னுடைய நீண்ட
திருவடிகளின்மேலே பொருந்தியிருக்கின்ற குளிர்ந்த திருத்துழாயினை நமக்கு அன்றிக் கொடான்; கற்றுங்கொள்ளுங்கோள் என்று
உங்களை யான் கற்பித்து வைத்த வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு செல்லுங்கோள்.
மின்னுநூல் – பூணுநூல். நமக்கு : தனித் தன்மைப் பன்மை. உளப்பாட்டுப் பன்மையுமாம். கட்மின்கள், சென்மின்கள் என்பனவற்றில்
‘கள்’ அசைநிலை. சிறுபூவைகளே சொல்லிச் சென்மின்கள் என்க.

அடியார்களோடு ஏகரசன் ஆகையாலே நம் விருப்பத்தை முடித்துவைக்குமவன்பாடே சென்று இதுவோதக்கவாறு
என்னுங்கோள் என்று சில பூவைகளைக் குறித்துச் சொல்லுகிறாள்.

என் மின்னுநூல் மார்வன் –
தன் திருமேனியிலே சாத்தச் செய்தே என் மனத்திலே இட்டாற்போலே பிரகாசிக்கிற பூணுநூலைக் காட்டி-நெஞ்சிலே -அனுபவம் மானசம் என்றவாறு –
என்னைத் தனக்கே உரியவளாக்கினவன். என் சரக்கானவன் கடக்க இருக்குங்காட்டில் என் சரக்கைப் பிறர்க்கு ஆக்குமோ?
பூணுநூலின் அழகினை நினைவூட்டி என் நெஞ்சில் இருளை அறுத்தவன்.
தன் திருமேனியில் சாத்தின நூலைக் காட்டி என்னை நூலிலே வரச்செய்தான்.
என் கரும் பெருமான் –
மேகத்திலே மின்னினாற்போலே அந்தப் பூணுநூலுக்குப் பரபாகமான வடிவை எனக்கு ஆக்கி என்னை அடிமைகொண்டவன்.
என் கண்ணன் –
இப் படிகளாலே என்னைச் சேர்த்துத் தன்னை எனக்கு ஆக்கினவன்.
என், என், என் என்று பதங்கள்தோறும் சொல்லுகையாலே, ஒப்பனை அழகிலும்
வடிவழகிலும், சௌலப்யத்திலும் தனித்தனியே ஈடுபட்டபடி.
தன் மன்னு நீள் கழல்மேல் தண்துழாய் நமக்கு அன்றி நல்கான் –
எல்லாம் செய்தாலும் “அவன் திருமேனியும் பக்தர்களுக்காகவே இருக்கிறது”
“நதேரூபம் நசஆகார: நஆயுதாநி நசாஸ்பதம்
ததாபிபுருஷகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே”-என்பது, ஜிதந்தா. 5.
என்று இருக்கிற திருமேனியைப்பிறர்க்கு ஆக்கான்.
இத் திருவாய்மொழிக்கு, நிதானமான பாட்டு அன்றோ இது.
அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவனாகையாலே, ‘அடியார்கட்குச் செல்வமான பின்பு அறிவிக்க வரும்’ என்று
ஐகரஸ்யம் பற்றாசாகத் தூதுவிடுகிறாள்.
தன் நீள் கழல்மேல் மன்னு தண்துழாய் நமக்கு அன்றி நல்கான்-
இனிமை அளவிறந்த திருவடிகளிலே பொருந்திச் சிரமத்தைப் போக்கக்கூடிய திருத்துழாயை எவ்வகையிலும் பிறர்க்கு ஆக்கான்.

“ஓ நீண்ட கையையுடைய அநுமாரே! மஹாத்மாவாகிய ஸ்ரீராமனுக்கும் அவருடைய தம்பிமார்கட்கும்
அந்த அரச குலத்திற்கும் பிராணனானது என் அதீனமாக இருக்கிறது”
“மயி ஜீவிதம் ஆயத்தம் ராகவஸ்ய மஹாத்மந:
ப்ராத்ரூணாஞ்ச மஹாபாஹோ தஸ்ய ராஜகுலஸ்ய ச”-என்பது, ஸ்ரீராமா. சுந். 37 : 57.
என்றாள். என்றது, என்சொல்லியவாறோ? எனின், தம்மையும் தம்முடைமையையும் எனக்கு ஆக்கினவர் என்பதனைக் கூறியபடி.
இதுதான் தன் சுபாவம்கொண்டு சொல்லுகிறாள் அல்லள்; அவருடைய சுபாவ அநுசந்தானத்தாலே சொல்லுகிறாள்.
“ஓ வானரங்களுக்குத்தலைவனான சுக்கிரீவனே! அந்தப் புறாவானது தன் மனைவியை அபஹரித்தவனைத் தன்னைக்கொடுத்துக் காத்தது;
என்னைப் போன்றவர்கள் சரணாகதி செய்கிறவனைக் கைக்கொள்ளவேணும் என்பது சொல்லவும் வேணுமோ?”-கபோதன வியாக்யானம் –

“ஸஹிதம் ப்ரதிஜந்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதம்
கபோதோ வானரச்ரேஷ்ட கிம்புந: மத்விதோ ஜந:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 25.

பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்கவந் தடைந்த பேதை
வேடனுக் குதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டிப்
பாடுறு பசியை நோக்கித் தன்னுடல் கொடுத்த பைம்புள்
வீடுபெற் றுயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமி தன்றோ.-என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக். 112.

என்ற இடத்தில் சொல்லுவது ஒருவார்த்தை உண்டு.
அது, அருளாளப்பெருமாள் எம்பெருமானாருடைய அந்திம தசையிலே, ‘திருவுள்ளத்தில் ஓடுகிறது என்?’ என்ன,
‘ஒரு பறவை பெருமாளுடைய திருவுள்ளத்தைப் புண்படுத்தியபடி என் என்று கிடந்தேன்’ என்றார் என்பது.
இதற்குக் கருத்தாக நம்பிள்ளை அருளிச்செய்யும் வார்த்தை:
‘நாம் பண்ணின சரணாகதி, ஆகையாலே பலத்தோடு அவ்யபிசாரியாக மாட்டாது;
இனி, சரண்யன் நீர்மையின் ஏற்றத்தாலே நமக்கு ஒரு குறை இல்லை என்கிறது’ என்பது.
பெருமாளை புண்படுத்தியது யாவது -விபீஷண சரணாகதி உக்தி அநந்தரம் உடன் கொள்ளாமல் வார்த்தைகளைச் சொல்லி
கால விளம்பம் -புறா இது எல்லாம் செய்ய வில்லையே -பிராணான் பரித்யஜ்ய -புறா செய்ய -மேலே செய்ய வழி இல்லையே என்ற புண் என்றுமாம் –
சரண்யன் புறாவாலே பல சித்தி வேடனுக்கு –சரண்யன் குணத்தாலே தான் பலிக்கும் என்றவாறு –

நமக்கு அன்றி நல்கான் –
தனித்து, இனியது அடியார்களை ஒழிய அநுபவிக்கமாட்டான்.
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியாவைத்த மாற்றம் –
நெஞ்சு ஒழிந்தபோது -ஸ்வஸ்தமாக இருந்த பொழுது -தனக்குத் தாரகமானவற்றைக் கற்பித்துவைக்கும்;
நம் முதலிகள் ஒரோ சந்தானங்களாகச் ‘சிறியார், பெரியார்’ என்னாதே துவயத்தைக் கற்பித்து வைக்குமாறு போலே.
பாதுகாக்கப்படுகின்ற பொருள்களான உங்களைப் பாதுகாக்கின்ற நான் கற்பித்து வைத்த மாற்றம்.
மாற்றமாவது, ‘நமக்கு அன்றி நல்கான்’ என்று எல்லா நிலைகளிலும்உங்களுக்கு நான் சொல்லிவைத்ததாதல்;
‘இதுவோ தக்கவாறு என்று சொல்லுங்கோள்’ என்றதாதல்.
சொல்லிச் சென்மின்கள்-
அது வழிக்குப் பாதேயம் காணும். அங்கே போனால் சொல்லப் பார்த்திராமல் போகிறபோதே சொல்லிக்கொடு போங்கோள்.
அவனுடைய வை லஷண்யம் கண்டால் வாய் எழாமல் போனாலும் போகுமே -சொல்லிக் கொண்டே போமின்
அவனுக்கு மறு பேச்சு சொல்ல அவகாசம் கொடுக்காமல் -என்றுமாம்
தீவினையேன்
அவை கிடக்கிடுங்கோள்; என்னுடைய பாபம் இருந்தபடி பாருங்கோள்;
புத்திரனை விற்கின்றவர்களைப் போன்றவர்கள் ஆனேன்.
அவனும் நானும் கூட இருந்து உங்களைக்கொண்டாடுகை அன்றிக்கே,
உங்களைக்கொண்டு காரியம் கொள்ளும்படியான பாவத்தைச் செய்துள்ளேன்.
வயிற்றிற் பிறந்தாரை இடுவித்துக் காதலனை அழைத்துக் கொள்ளுதலைப் போன்ற புன்மை இல்லையே.

——————————————————————————————————————–

பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன்என் னாழிப்பிரான்
மாவைவல் வாயபிளந்த மதுசூதற்குஎன் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–6-8-7-

அபி ரூபனாய் அழகன் -அகிலாத்த்மா பூதனாய்-ஆஸ்ரித விரோதி நிரசன–ஆர்த்தி அதிசயத்தால் தனது பொம்மைகள் -அசித்தை பிரார்த்திக்கிறாள்
பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன்-காயம் பூ போல நிறத்தன்-பரபாகம் புண்டரீகாஷன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன்என் னாழிப்பிரான்-சகல அசேதனங்கள் சேதனங்களாய் நின்ற -சாமா நாதி கரண்யம் –
தத் கத தோஷ ரஹிதமாய் நின்ற -ஆச்சர்ய சக்தி உக்தன் -கலந்து கழன்று நிற்கிறானே -இத்தையே என்னிடமும் பண்ணிக் காட்டி அகன்று இருக்கிறான்
கையும் திரு ஆழியுமான வடிவு அழகைக் காட்டி மகோ உபகாரகன் -அடியிலே காட்டி அருளி
மாவைவல் வாயபிளந்த மதுசூதற்குஎன் மாற்றம் சொல்லிப்-விரோதி நிரசனம் இயற்க்கை -கர்ப்பியா வைத்த
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.-தீர்த்து கொடுமின் –பறந்து போய் அவர் கோஷ்டியில் சேரும் –
இதுவாவது கேட்டு என்னிடமே இருக்குமே -நீ படும் துக்கம் காண பேச முடியவில்லையே -என்று வாளா இருப்பதாக நினைக்கிறாள்
உங்களைக் கொண்டு கார்யம் செய்ய வேண்டிய பாபம் -நிறத்தின் பசுமை அழிந்ததே தீர்க்க வல்லீரோ

பாவைகளே! காயாம்பூவைப்போன்ற திருநிறத்தையுடையவன், செந்தாமரைமலர்போன்ற திருக்கண்களையுடையவன், அஃறிணைப் பொருளும்
உயர்திணைப்பொருளுமாகி நின்ற மாயவன், என் ஆழிப்பிரான், குதிரைவடிவம்கொண்டு வந்த கேசியினது வலிய வாயினைப் பிளந்த
மதுசூதனன் ஆன எம்பெருமானுக்கு நான்சொல்லிய வார்த்தையைச் சொல்லி வினையாட்டியேனுடைய துக்கத்தைத் தீர்க்கின்றீர்களா? என்கிறாள்.
பூவை – காயாம்பூ பாவைகள் : அண்மை விளி. பாசறவு-நிறத்தின் பசுமை அழிதல்; துக்கம்.

‘பரமசேதனன் பொகட்டுப்போனான்; சிறிது அறிவுள்ள பறவைகள் பறந்துபோவனவும் வேறு ஒன்றிலே நோக்குள்ளனவுமாயின;
இதற்குக் காரணம், அறிவுள்ளவைகள் ஆகையோ’? என்று பார்த்து, அறிவு இல்லாததான பாவையை இரக்கிறாள்.
அறிவில்லாத பொருளும்கூட எழுந்திருந்து காரியம் செய்யவேண்டும்படி காணும் இவள்நிலை.

பூவைகள்போல் நிறத்தன்-
ஆண் பெண்ணாம்படியான நிறம் படைத்தவன்.
“பார்க்கின்ற ஆடவர்களுடைய கண்ணையும் மனத்தையும் கவர்கின்றவன்” -ராம கமல பத்ராஷ சர்வ மநோ ஹரன் -அன்றோ -என்னும்படியே.
பேற்றுக்குப் பாவையின் காலிலே விழும்படியான வடிவுபடைத்தவன். பூவைப்பூ போன்ற வடிவையுடையவன்.
புண்டரீகங்கள் போலும் கண்ணன் –
ஒருபூ ஒருபூவினைப் பூத்தாற்போலே காணும் வடிவும் கண்ணும் இருக்கும்படி;
காயாம்பூ தாமரை பூத்தாற்போலே இராநின்றது.
அறிவுடைப் பொருள் அறிவில்லாப்பொருள் என்ற வேறுபாடுஅறக் காற்கீழே விழும்படியான திருக்கண் படைத்தவன்.
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் –
சிலரோடு கலக்கும்போது அவர்கள் தாங்களாய்க் கலக்குமவன்.
சேதன அசேதனங்களுக்கு ஆத்மாவாய் நின்றவன்.
“அவற்றை அநுப்பிரவேசித்துச் சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்”
–“தத்அநுப்ரவிஸ்ய ஸச்ச த்யச்ச அபவத்” என்பது, தைத்திரீய ஆனந். .-என்கிறபடியே.
புணர்ச்சிக் காலத்தில் ஒரே பொருள் என்னலாம்படி கலக்கவல்லவன்.

மாயன் –
அவர்களாய்க் கலவாநிற்கச்செய்தே, தனக்கு அங்கு ஒரு தொற்று அற்றுப் போருமவன்.
சர்வாந்தர்யாமியாய் இருக்கச் செய்தே, “கர்மபலத்தை அநுபவிக்காமல் வேறுபட்டு நிற்கிற ஈசுவரன் விளங்கிக்கொண்டிருக்கிறான்” என்கிறபடியே,
இவற்றின் குற்றங்கள் தன் பக்கல் தட்டாதபடி இருக்கை.
உலகமே உருவமாய்க்கொண்டு இவர்களோடு பிரித்து எண்ண ஒண்ணாதபடி நிற்கச்செய்தே,
அசித்தினுடைய பரிணாமமாதல், சித்தினுடைய இன்பதுன்பங்களாதல் தட்டாதபடி நிற்கை.
என்னோடே பரிமாறு போலே கண்டீர் எல்லாரோடும் கலந்துநின்றே ஒட்டு அற்று இருக்கும்படி
என்கைக்காக ‘யாவையும் யாவருமாய் நின்ற மாயன்’ என்கிறாள்;
இல்லையாகில், இப்போது இவ்விடத்திற்கு இது தேட்டம் அன்றே.
அழுக்குப் பதித்த உடம்பைக் காட்டில் பரஞ்சுடர் உடம்புக்கு உண்டான வாசி சொல்லுகிறது மேல் :
என் ஆழிப்பிரான் –
தன்னுடைய அசாதாரணமான விக்கிரஹத்தைஎனக்கு ஆக்கினவன்.
‘யாவையும் யாவருமாய் நின்ற மாயன்’ என்று உலகமே உருவமாய்க்கொண்டு நின்ற நிலையைச் சொல்லி
வைத்து, ‘என் ஆழிப்பிரான்’ என்கிறார் அன்றோ, அசாதாரணமான வடிவுக்குத் தாம் ஈடுபட்டபடி.
“நிராய் நிலனாய்” என்று வைத்து, “கூராராழி வெண்சங்கேந்திக் கொடியேன்பால் வாராய்” என்றாரே அன்றோ.
அவனுக்குப் புறம்பாய் இருப்பது ஒன்று இல்லை என்று சொல்லுவதற்காக,
ஜகச்சரீரன் என்ற அளவிலே அதனைப் போன்று இது உத்தேசியமாமோ?
“பரஞ்சுடர் உடம்பாய்” திருவாய். 6. 3 : 7.-என்றும்,
“அழுக்குப் பதித்த உடம்பாய்” என்றும் ஒன்றைக் குற்றங்கட்கெல்லாம் எதிர்த்தட்டானதாகவும்,
ஒன்றைக் குற்றம் கலந்ததாகவும் சொல்லிற்று அன்றோ.

மாவை வல்வாய் பிளந்த மதுசூதற்கு.
இவ் வடிவழகை அநுபவிப்பிக்கைக்கு விரோதிகளை அழியச்செய்தலானது இவனுக்கு எப்பொழுதும் உள்ளது ஒன்று கண்டீர்.
புழுக்குறித்தது எழுத்தாமாறுபோல் அன்றிக்கே, விரோதிகளை அழித்தல் நித்தியமாயிருத்தலின் ‘மதுசூதற்கு’ என்கிறது.
என்மாற்றம் சொல்லி-
‘கன்மின்கள்’ என்று உங்களுக்குச் சொன்னதைச் சொல்லி.
பாவைகள் தீர்க்கிற்றிரே –
பரம சேதநன்பொகட்டுப் போனான், சிறிது அறிவை யுடைய இவை போகிறன இல்லை;
இனி, நீங்கள் என் துக்கத்தைப்போக்க வல்லீர்கோளோ?
விலக்குதல் இல்லாத மாத்திரத்தைக் கொண்டு இவற்றைக் காரியம் கொள்ளப் பார்க்கிறாள்.
வினையாட்டியேன் –
உங்களைக் கொண்டாடுகை தவிர்ந்து, காரியம் கொள்ளும் படியான துக்கத்தை அடைந்தவளானேன்.
“மாசுச:” என்று சொன்னவன் விளைத்த சோகத்தை, அசேதனங்கொண்டு தீர்க்க இருக்கிற மஹாபாபியானேன். பாசறவு – துக்கம்.
பாவை பொம்மை தூது -அசேதனங்களை தூது விடுகிறாள்-
—————————————————————————————————————–

பாசற வெய்தி இன்னே வினையேன் எனைஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக்குருகே! அருள்செய் தொருநாள்
மாசறு நீலச் சுடர்முடி வானவர் கோனைக்கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.–6-8-8-

ஸூ ரி சேவ்யன் சர்வாதிகன் -உம்மை ஒழிய வேறு ஒரு பதார்த்தத்தில் கண் வைக்க மாட்டாள் -ஒரு நாள் கிருபை பண்ணி –
அருள வேண்டும் -குருகை -ஆச்சார்யாராய் அபேஷிக்கிறாள்-அருள் செய்து -இப்படி சொல் என்றுமாம்
பாசற வெய்தி இன்னே வினையேன் எனைஊழி நைவேன்?பசுமை நிறம் இழந்து
ஆசறு தூவி வெள்ளைக்குருகே! அருள்செய் தொருநாள்-உள்ளும் புறமும் வெளுத்து உள்ள உன்னை வைத்து உள்ளும் வெளியும் கறுப்பாக உள்ள அவன் இடம்
கமனத்தில் குறை வற்ற சிறகு -அகவாயில் சுத்திக்கும் பிரகாசகம் -விரஹம் முடிவு காணாத வினையேன்
மாசறு நீலச் சுடர்முடி வானவர் கோனைக்கண்டு-நீலச் சுடர் முடி சர்வாதிகன் கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே-பழிப்பு அற்ற -வேறு ஒன்றையும் பார்க்காமல் -ஏசுக்கு அப்பால் என்றுமாம்

குற்றம் நீங்கிய சிறகுகளையுடைய வெண்மைநிறம் பொருந்திய குருகே! உறவினர்கள் பக்கல் பற்று அற்று, இப்படியே எத்தனை ஊழிக்காலம்
வருந்துவேன் வினையேன்? குற்றம் நீங்கிய நீலச் சுடரையுடைய முடியைத் தரித்த நித்திய சூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானைக் கண்டு, குற்றம் நீங்கிய நும்மை அல்லாமல் பின்னர் வேறு ஒரு பொருளை மறித்துப் பார்ப்பது இல்லாதவளானாள் என்று என் மாட்டு அருள்செய்து ஒருநாள் கூறவேண்டும் என்கிறாள்.
குருகே! வானவர்கோனைக் கண்டு நும்மை அல்லால் பேர்த்து மற்று மறு நோக்கு இலள் என்று ஒருநாள் அருள்செய்து கூறுக என்று
‘கூறுக’ என்னும் வினையைக் கொணர்ந்து கூட்டிப்பொருள் முடிவு காண்க.

முன்பே நின்ற குருகினைக் குறித்து, நித்திய சூரிகளைப்போலே உம்மால் அல்லது செல்லாதே,
உம்மைப் பிரிந்து நோவுபடுகிறாள் என்று சொல் என்கிறாள்.

பாசறவு எய்தி இன்னே எனை ஊழி வினையேன் நைவேன் –
‘இன்னம் சிலகாலம் கழிந்தபின்னர் அறிவிக்கிறோம்’ என்னும் அளவாக இருந்ததோ என் நிலை?
பாசறவு எய்தி – பாசு என்று பசுமையாய், அதனால் நினைக்கிறது நீர்மையாய், அது அறுகையாவது, பசலை நிறத்தோடே முடிந்து நிற்றல்.
இன்னே – ‘எப்படி பசலை நிறத்தை அடைந்தது?’ என்னில், என்னைக் கண்ட உனக்குச் சொல்ல வேண்டாவே அன்றோ,
விஷயத்திற்கு முடிவு இருந்தால் அன்றோ இது அளவுபட்டிருப்பது? இதற்கு ஒரு பாசுரமிட்டுச் சொல்லப்போகாது;
உடம்பைக் காட்டுமித்தனை. பாசுரமிட்டுச் சொல்லப்போகாமையாலே படி எடுத்துக் காட்டுகிறாள்,
வினையேன் –
பிரிவும் கலவியைப் போன்றதாகப் பெற்றிலேன். என்றது, கலவி ஒவ்வொரு காலத்தில் நிகழ்ந்து கழிவதாக இருக்க,
இது எப்பொழுதும் நீடித்து நிற்கிறதே என்றபடி.
அன்றிக்கே, வினையேன்-கலக்கப் பெறாவிட்டால் மீண்டு கை வாங்க ஒண்ணாதபடியான பாவத்தைச் செய்துள்ளேன் என்னலுமாம்.
எனை ஊழி நைவேன் –
வருத்தத்தோடே எத்தனை கல்பம் சென்றது? முன்பு பிரிந்தார், பதினாலாண்டு ஆதல், பத்துமாதம் ஆதல்.
ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே – பழிப்பு அற்ற சிறகையுடைத்தாய், பிறருடைய துக்கத்தைப் பொறாமைக்கு
உறுப்பான மனத்திலே குற்றமற்ற தன்மையுடைத்தாயிருக்கிறபடி.
அவன் பிரிகைக்கு, புறத்தைப்போலே உள்ளும் கரியன் ஆனாற்போலே அன்றோ,
நீங்களும் கூட்டுகைக்கு உள்ளும் புறம்பும் நிர்மலமாயிருக்கிறபடி என்பாள் ‘வெள்ளைக்குருகே’ என்கிறாள்.

அருள்செய்து ஒருநாள் –
ஒருபோது கிருபைசெய்து. இவ்வளவில் முகம்காட்டுகை யாகிற இதுக்கு மேற்பட அருள் இல்லையன்றோ;
வெறும் உங்கள் கிருபையாலே செய்தீர்கோள் இத்தனை அன்றோ.
மாசு அறு நீலம் சுடர்முடி வானவர் கோனைக்கண்டு –
பழிப்பு அற்று நெய்த்திருந்துள்ள மயிர் முடியையுடையனாய், அம் மயிர்முடியை நித்தியசூரிகள் பேண இருக்கிறவனைக் கண்டு.
ஒரு நீர்ச்சாவி கிடக்கக் கடலிலே மழை பெய்கிறவனைக் கண்டு.
ஏசறும் –
கிலேசப்படாநின்றாள் என்னுதல்; நாட்டார் ஏசும் நிலையைக் கடந்தாள் என்னுதல்.
அன்றிக்கே, ஏசறுவாய்-வடிவைக் காட்டுவாய் என்னலுமாம். என்றது, என்னுடைய பசலை நிறத்தை நீ உன்னுடைய உடம்பிலே ஏறிட்டுக் காட்டுவாய் என்றபடி.

நும்மை அல்லால் மறுநோக்கு இலள் –
உம்மை ஒழிய வேறு குளிர்ந்த விழி இல்லை. நடந்ததைச் சொல்லிக்கொள்ளுவதற்கும்,
உம்மை ஒழிய வேறு ஒருவரையுடையள் அல்லள். “தோழிமாருடன் சுகமாக விருப்பாய்” என்னும் நிலையும் குலைந்தது.
அன்றிக்கே, நும்மை அல்லால் – ‘வாரா நின்றோம்’ என்று, ஸ்ரீ பரதாழ்வானைப் போலே ஆள் வரவிடத் தரியாது என்னுதல்.
அன்றிக்கே, சொரூபகுணங்களை நினைத்துத் தரித்திருக்கும் அளவல்லள் என்னுதல்;
அன்றிக்கே, உம்மை ஒழிய, பந்துக்களை நோக்கும் நிலைகழிந்தது என்னுதல்.
இப்பாசுரத்திற்கு முடிபு சென்ற பாசுரத்திலேயாதல், மேல் வரும் பாசுரத்திலே யாதல் கொள்க.
தமிழர், வினை, எச்சமாய்க் கிடக்கிறது என்று சொல்லுவர்கள். என்றது,
‘மறுநோக்கிலள், பேர்த்து மற்று, என்று சொல்லுவாய்’ என்னுமித்தனையும் இட்டுச் சொல்லவேண்டும் என்றபடி.

————————————————————————————————————

பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த்திரை மேல்உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன் விண்ணவர்கோனைக்கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9-

பரத்வம் -ஆஸ்ரித சௌலப்யன் -கண்டு வார்த்தை கேட்டு வந்து சொல்ல வேண்டும் -பெரு நாரைகள் –
பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்-உதவ பிராப்தனானவன் உதவாத படி பாபம் செய்த –
உங்களைத் தவிர ரசாக வஸ்து வேறே இல்லையே
நீர்த்திரை மேல்உலவி இரை தேரும் புதா இனங்காள்!–நீரின் அலைகள் மேலிடா வண்ணம் -நாரைகள் போலே புதா-குட்டிக்களுக்கு இரை தேடும் –
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன் விண்ணவர்கோனைக்கண்டு-கார் கால மேகம் போலே -அபி ரூபனாய் -அத்யந்த பவ்யனாய்
-அவதார முகத்தாலே –பரமபத வாசிகளுக்கு இந்த கண்ணன் அழகை அனுபவிப்பிக்கும் -சர்வாதிகன்
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே-அவன் அருளிச் செய்யும் வார்த்தைகளை -கொண்டு வந்து
-போத யந்த பரஸ்பரம் -செய்வோம் புதா போதா -பாட பேதம்

தீவினையேனாகிய நான் உங்களை ஒழிய வேறே ஒப்பற்ற பற்றுக்கோடு ஒன்றனை உடையேன் அல்லேன்; தண்ணீரின் அலைகளின் மேலே
சஞ்சரித்து இரையைத் தேடுகின்ற பெருநாரைக் கூட்டங்களே! கார்காலத்தில் எழுந்த திரண்ட பெரிய மேகம்போன்ற நிறத்தையுடைய
கண்ணனாகிய விண்ணவர்கோனைக் கண்டு, அவன் கூறுகின்ற வார்த்தைகளைக் கேட்டு, என் பக்கல் கிருபைசெய்து இங்கே
வந்திருந்து எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருங்கோள்.
வினையாட்டியேன் நான் பேர்த்து மற்று ஓர் களைகண் ஒன்று இல்லேன் என்க. புதா – பெருநாரை. அருளி வந்திருந்து வைகல் உரையீர் என்க.

சில புதா இனங்களைக் குறித்து நீங்கள் சென்றால் அவன் வந்திலனாகிலும் அங்குத்தை வார்த்தையைக் கொண்டுவந்து
என்னை எப்பொழுதும் பிழைப்பிக்க வேண்டும் என்கிறாள்.

பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன் –
தன் பரிகரங்களிலே ஒன்றைக்கொண்டு போது போக்குகிறாள் என்னும் நிலையும் குலைந்தது.
வெறுமையை முன்னிடுமத்தனை அன்றோ ததீயர் பக்கலிலும். உங்களை ஒழிய வேறு ஒரு ரக்ஷகரை யுடையேன் அல்லேன்.
ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -வெறுமை முன்னிட்டே -ஆச்சார்ய அபிமானத்துக்கு -ஸ்வ அபிமானம் குலைத்த நமக்கு –
பரதந்த்ரன் அபிமானமே உத்தாரகம் -ஆச்சார்ய உபதேசம் எதிர் பார்த்து அவன் கார்யம் செய்ய இவர் அதுவும் இல்லாமல் அருளுவாரே –
மற்றிலேன் என்னாமல் மற்று ஓன்று இலேன் என்பதற்குத் தாத்பர்யம் மேலே –
பிராட்டிக்கு இலங்கைக்குள்ளே ஒரு திரிசடையாகிலும் இருந்தாள்;
காட்டிலே விட்டுப் போந்த தனிமையிலே ஒரு வால்மீகி பகவானாகிலும் இருந்தான்;
கணவன் பொகட்டால் ஒரு தந்தையாகிலும் உண்டாகவேணுமன்றோ? அங்ஙனம் ஒருவரும் இலர் என்பாள் ‘ஓர் களைகண்’ என்கிறாள்.
வினையாட்டியேன் – நாயகன் தானே ரக்ஷகனாயிருக்குமன்றோ; அப்படிப்பட்டவன் கைவிட்டுப்போம்படியான பாபத்தைச் செய்தேன்.
நீர்த் திரைமேல் உலவி –
ஆவரணஜலம், விரஜை இவற்றை எல்லாம் கடந்து ஏறவற்றாயிருக்கை.
நிலத்திலே சஞ்சரிப்பதைப் போன்று நீரிலே சஞ்சரிக்கின்றனவாதலின் ‘திரைமேல் உலவி’ என்கிறது.
இரைதேரும் –
இவற்றின் நடையோடு ஒக்க இதுவும் ஒரு பௌஷ்கல்யமன்றோ இவளுக்கு.
நான் உபவாசத்தினால் இளைத்திருக்க உங்களுக்கு மிடற்றுக்குக் கீழ் இழியாதன்றோ;
என்னையும் உங்களைப்போலே ஆக்கினாலே அன்றோ ஜீவித்ததாவது. புதா – பெருநாரை.

கார்த்திரள் மா முகில்போல் கண்ணன் –
எல்லாவிடாயும் ஆறுங்கண்டீர் அவ் வடிவைக் காணப்பெறில். இவள் கண்களுக்குக் கருப்பாயிருக்கிறதன்றோ.
கருமையெல்லாம் திரண்டாற்போலே இருக்கிற மஹாமேகம்போன்ற வடிவையுடையவன்.
கார்காலத்தில் திரண்ட மஹாமேகம் என்றுமாம்.
அன்றிக்கே, மாமுகில்-மாறாதே கொடுக்க வல்லமுகில் என்றுமாம்.
கண்ணன் – அவ் வடிவுபோல் அன்று கண்டீர் அகவாயில் தண்ணளி இருக்கும்படி.
விண்ணவர்கோனைக் கண்டு விடாய்த்தார் இருக்க, மீனுக்குத் தண்ணீர் வார்த்து இருக்கிறவனை.
பிரிவதற்குச் சம்பாவனை இல்லாதார்க்குத் தன்னைக்கொடுத்துக் கொடு நிற்கிறவனைக் கண்டு.
வார்த்தைகள் கொண்டு –
வந்திலனாகிலும் சில வார்த்தைகள் சொல்லக்கடவன் அன்றோ.
காட்சிக்கு மேலே வார்த்தையும் கேட்க அன்றோ நீங்கள் புகுகிறது;
“பாவி நீ என்று ஒன்று சொல்லாய்” –திருவாய். 4. 7 : 3.-என்னுமவரன்றோ.
இப்போது இவர்க்கு ‘மாட்டேன்’ என்னும் வார்த்தையும் அமையும். வார்த்தை கேட்கைக்கும் முடியப் போய்த் திரியவோ? என்னில்,
வார்த்தைகள் கொண்டருளி வந்திருந்து வைகலும் உரையீர் –
ஒருகால்போய் அவன் வார்த்தையைக் கேட்டு, என் பக்கலிலே கிருபையைச்செய்து வந்திருந்து,
அதனை எனக்கு எப்போதும் சொல்லி என்னை உஜ்ஜீவிப்பியுங்கோள்.
அன்றிக்கே, விண்ணவர் கோமானான கண்ணனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு-“மாசுக:” என்று பலத்தோடே முடிவுபெற்றிருக்கிற
வார்த்தைகளைக் கொண்டு, என் பக்கலிலே கிருபையைச் செய்து வந்திருந்து வைகலும் உரையீர் என்றுமாம்.
வாரான் என்றோ பல வ்யாப்த வார்த்தை யாகவோ –மாட்டேன் என்கிற வார்த்தை -தனது சத்தை தரிக்க அவன் பக்கலில்
இருந்து ஏதேனும் -தாராயினும் –போலே -வேண்டும் –
ஜீவிஷ்ய பேஷஜம் போலே சீதை வார்த்தை சொல்லு அத்தைக் கொண்டு ஜீவிப்பேன் -என்றாரே பெருமாள் திருவடி இடம் –

———————————————————————————————————–

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!
என்திரு மார்வற்குஎன்னை இன்னவாறிவள் காண்மின்என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே.–6-8-10-

பரத்வ சௌலப்ய பிரகாசகம் -ஸ்ரீ யபதி -புருஷகார பூதையும் உண்டே -இருவருமான ஏகாந்தத்தில் இவள் படி இது என்று ஒரு
வார்த்தை சொல்லி மறுமாற்றம் சொல்ல வேண்டும் –
வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்-அபேஷா நிரபேஷமாக-அந்ய பரதை இன்றிக்கே ஆபி முக்கியம் பண்ணி
-பெண் அன்னம் -உடன் பேசி -ச்லாக்கியமான ஆன் அன்னம் -மற்றும் உள்ள பந்து வர்க்கங்கள்
-எல்லாம் -சப்தம் -புத்ராதி குடும்பம் பாகவத கைங்கர்யத்தில் ஈடுபட்டு –
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!-சம்ச்லேஷ ரசத்துக்கு இடையூறு இல்லாமல் –புஷ்பங்கள் மேல் உலாவும்
என்திரு மார்வற்குஎன்னை இன்னவாறிவள் காண்மின்என்று-நாரீனாம் உத்தமி -திரு மார்பில் கொண்டவனுக்கு இப்படி இவள் என்று நிலைமை சொல்லி
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே.-அவர்கள் ஏகாந்தமான தசையிலே -பேசி கார்யம் செய்ய -அவன் அருளிச் செய்யும் மறு மாற்றம் உரைமின்

உம்முடைய அழகிய சேவலும் பெண்ணாகிய நீரும் உம்முடைய உறவு முறையினரும் எல்லாரும்கூட இடையூறு சிறிதும் இல்லாமல் பூவின்மேலே
தங்கியிருக்கின்ற அன்னங்காள்! இங்கே வந்திருந்து என்னுடைய திருவை மார்பிலேயுடைய எம்பெருமானுக்கு என்னை இவள் இன்னவாறு ஆனாள்எ
ன்று தனி இடத்தில் ஒருவார்த்தை அறிவித்து அவர் கூறும் மறுமாற்றங்களை எனக்குச் சொல்லுங்கோள்.
வந்திருந்து அலர்மேல் அசையும் அன்னங்காள் என்க. அன்றிக்கே, வந்திருந்து மறுமாற்றங்கள் உரையீர் என்றுமாம். அந்தரம் – வேறுபாடுமாம். மந்திரம் – இரகசியம்.

ஆணும் பெண்ணும் கூடியிருக்கிற அன்னங்கள் சிலவற்றைக் குறித்து, பிராட்டியும் அவனுமான ஏகாந்தத்திலே
என்நிலையை விண்ணப்பம் செய்து மறுமாற்றம் வந்து சொல்லவேணும் என்கிறாள்.

வந்து இருந்து –
இது என்ன ஆபத்திற்குத் துணையாகும் தன்மைதான்! உங்களுடைய நல்லெண்ணம் இருந்தபடி என்தான்!
இளையபெருமாளை இடுவித்து வெதுப்பி அழைப்பிக்க வேண்டா திருக்கை.
வந்திருந்து-
மஹாராஜருடைய இடரைப் பெருமாள் வினவிக்கொண்டு சென்று தீர்த்தாற்போலே என் துன்பத்துக்கெல்லாம்உடன்கேடராயிருந்து.
உம்முடைய மணிச்சேவலும் நீரும் எல்லாம் –
பரமபதத்தில் ஆண்களும் பெண்களுமாக இருந்தாலும் அடிமைக்கு உறுப்பாக இருக்குமாறுபோலே,
இவற்றினுடைய இந்தப் பேதமும் தன்னுடைய காரியத்துக்குக் காரணம் என்றிருக்கிறாள்.
மணிச்சேவல் –
இதுவும் ஒரு சேவலேதான்! தன்னுடைய மணிச்சேவல் கடக்க இருந்து இவளை உடம்பு வெளுப்பித்துத் தான்
குறியழியாதேயன்றோ இருக்கிறது.
எல்லாம் –
“புத்திர பௌத்திரர்களோடு மற்றுமுள்ள கூட்டத்தோடு”
“ஸபுத்ர பௌத்ரஸ்ஸகண:”என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 99.-என்னுமாறு போலே.
மனைவி புத்திரர்கள் முதலாயினார்களோடே கூடப் பிறர் காரியம்செய்ய ஒருப்பட்டிருப்பாரைப்போலே.
அந்தரம் ஒன்றும் இன்றி –
என்னைப் போலே பிரிவோடேகூடி இருக்கிற கலவி இன்றிக்கே இருக்கப் பெறுவதே.
கலவியை வளர்க்கக்கூடியதான பிரிவும் இன்றிக்கே.
அலர்மேல் அசையும் அன்னங்காள் –
ஆணும்பெண்ணுமாகச் சேர்ந்திருப்பார்க்குப் பூவிலும் கால் வைக்கலாமன்றோ.
பூவிலே கால் பொருந்தும்படியான செருக்கு அன்றோ உங்களது? ‘குறைவு அற்றார் இருக்கும்படி இதுவன்றோ.

என் திருமார்வற்கு –
எனக்கு அங்கு ஓர் அடி இல்லாமை மிறுக்குப்படுகிறேனோ?
“பிராட்டி சந்நிதியில் ஸ்ரீராமபிரானைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்”
“ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத்”
என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.
-என்கிறபடியே, சொன்ன வார்த்தை விலைபோமவள் முன்னால் சொல்லுங்கோள்;
நான் பற்றின அடைவே பற்றுங்கோள் என்கிறாள்.
என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று –
பேச்சுக்கு நிலமன்று போலே காணும். என்னை – அச்சேர்த்தியிலே அடிமைசெய்ய ஆசைப்பட்டிருக்கிற என்னை.
‘இப்படி சீர்கேட்டினை அடைந்தாள் இவள் என்று,
இவள் பசலை நிறத்தைத் தம்முடம்பிலே காட்டவும் வற்றாகாதே இவை’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.
அன்றிக்கே, உம்முடைய தேவாரமோ! இவள் அந்தப்புர பரிகரம் அன்றோ என்னுங்கோள் என்னுதல்.
தேவாரம் -க்ருஹார்ச்சை -அர்ச்சை – அர்ச்சகர்கட்கு வசப்பட்டதன்றோ.
மந்திரத்து ஒன்று உணர்த்தி-ஓலக்கத்திற் சொல்லாதே கொள்ளுங்கோள்;
“கொல்லத் தக்கவன்” என்பார் இருக்கவும் கூடும். கொல்லத்தக்கவன்’ என்று கூறியவன், சுக்ரீவன். ஸ்ரீராமா. யுத். 17 : 27.
அன்றிக்கே, அவள் சொல்லே கேட்குமிடத்தே சொல்லுங்கோள் என்னுதல்.-போக தசையில் அர்த்தாந்தரம்-
கேவலம் ஏகாந்தம் ஆனால் மறுக்கவும் கூடும் -வில்லை வைக்க சொன்ன வார்த்தை கேட்காமல் ரிஷிகளை ரஷித்தார் பெருமாள்
-போக தசையில் தானே அர்த்திக்கும்- கர்ப்ப காலத்தில் ரிஷிகளுக்கு மத்யத்தில் இருக்க வேண்டும் என்றாளே
-வண்ணான் நிமித்தமாக -செய்து அருளினார் பெருமாள் –
உரையீர் மறு மாற்றங்களே –
அவன் கிரமப் பிராப்தி தோற்ற வார்த்தை சொல்லவும், அதுதான் ஒண்ணாது என்று “குற்றம் செய்யாதார் எவர்தாம்”
“நகஸ்சித்ந அபராத்யதி” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 44.-என்று விரைவுபடுத்துமவர் முன்னே சொல்லுங்கோள்.

மந்திரம் – பிரணவம். ஒன்று – அதில் நடுப்பதம். அதிற் சொல்லுகிறபடியே அநந்யார்ஹதையை விண்ணப்பம்செய்து.
உரையீர் மறுமாற்றங்களே –
முன்பு செய்துபோந்த குற்றங்களைப் பார்த்து அவன் சொல்லுகிற வார்த்தைகளையும், சம்பந்தத்தையும் நம் நிலையையும் பார்த்து
அவள் சொல்லும் வார்த்தைகளையும் கேட்டு வந்து சொல்லுங்கோள்.

————————————————————————————

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.–6-8-11-

அர்த்தத்தில் பிரேம பரவச்யத்தால் த்ரவ்ய ஸ்வ பாவர் ஆவார்கள் –
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்-வி லஷணம் சப்தங்கள் ஆராய்ந்து கொண்டு -ஞான ஹேது வேதம் அபஹரித்த
-மது சூதன் -உபகாரகன்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன-பரிமளம் மிக்க –பாஹ்ய குத்ருஷ்டி நிரசன சீலரான –
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்-வேத ஆவிர்பாவம் -பகவத் ஆவிர்பாவம் போலே இந்த பத்தும் –
பதிகங்கள் -அத்விதீயமான -பாவ சுத்தி உடன் அப்யசிக்க வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே-நீர் வசப்பட்டு உருகுமா போலே -ஆர்த்த்ரீ பவர் ஆவார்

வாசனையைக் கொண்டுள்ள அழகிய சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபர், சிறந்த வார்த்தைகளை ஆராய்ந்து கொண்டு
மதுசூதபிரானுடைய திருவடிகள்மேல் அருளிச்செய்த தாமே தோன்றிய ஆயிரம் திருப்பாசுரங்களுள் ஒப்பற்ற பத்துப் பாசுரங்களாகிறஇவற்றையும்
வல்லவர்கள் நீர் ஊறுகின்ற ஊற்றிலேயுள்ள நுண்ணிய மணல் போன்று நீராக உருகாநிற்பர்.
நாற்றம் – வாசனை; “பொன்மலர் நாற்றமுடைத்து” என்றார் பிறரும். சடகோபன் பிரான் அடிமேல் சொன்ன ஆயிரம் என்க. வல்லார் நீராய் உருகாநிற்பர் என்க.

முடிவில், இத் திருவாய்மொழியில் ஆழ்வாருடைய துன்பத்தை நினைத்தவர்கள் தாமும் உருகுவர் என்கிறார்.

மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு –
சுரம் ஏறுவாரைப்போலே, பக்தி பரவசராயிருப்பார்க்கு அடைவு படப் பாசுரமிட்டுச் சொல்லப் போகாதன்றோ;
இவ்வளவிலும் அவன் நினைவு மாறாமையாலே, சொற்கள் நேர்பட்டபடி; அவிஸ்தரம் ஸூ கம்பீரம் –
நல்ல சொற்களைத் தெரிந்துகொண்டு.
மதுசூதபிரான் அடிமேல் –
விரோதிகளை அழித்தலையே நிரூபகமாக வுடையவன் திருவடிகளிலே.
நாற்றம்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
‘தனி இடத்திலே ஆள் விடுகையினாலே வரவு தப்பாது’ என்று இவர் தரித்தவாறே, சோலைகளும் நித்திய வசந்தமான படி.
வாசனையை மிகுதியாகக்கொண்ட பூவையுடைத்தான பொழில்கள் சூழ்ந்த திருநகரி.
தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் –
“மனம் முன்னே வார்த்தை பின்னே” என்கிற அடைவால் சொன்னவையல்ல. என்றது, இவர் கலங்கிச்சொல்லச் செய்தேயும்,
பகவானுடைய அவதாரம்போலே தோன்றின என்றபடி. தோற்றம் – தோன்றுதல்.
மந்திரங்களை இருடிகள் காணுமாறு போலே. -பல அதிபலா மந்த்ரம் விஸ்வாமித்ரர் -காயத்ரி -வசிஷ்டர் த்ருஷ்டா ருஷி –
“சொல் பணி செய் ஆயிரம்” திருவாய். 1. 10 : 11.-என்று ஆழ்வாருடைய திருவாக்கிலே புக்கு
‘அங்கிட்டுப் பிறந்து நாம் தூயராய் அடிமை செய்யவேணும்’ என்று அச்சொற்கள் தாம்
‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று வந்து அடிமை செய்கிறபடி.
வைதிகர் அல்லாதாருடைய வாக்கில் புக்க தோஷம் தீர்ந்தது இப்போதே யன்றோ சொற்களுக்கு.
“போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” திருப்பாவை, 5.-என்கிறபடியே,
ஆழ்வார் திருவாக்கிலே பிறக்கையாலே முன்புள்ள தோஷமும் பின்புள்ள தோஷமும் தீர்ந்தது காணும் சொற்களுக்கு.
ஊற்றின்கண் நுண்மணல்போல் நீராய் உருகாநிற்பர் –
இவை கற்கப்படாதன என்கிறார். அதாவது, என் துயர ஒலியைக் காட்டி நாட்டினை அடைய அழித்தேன் என்கிறார்.
இவர் கிலேசம் அவன் முகம் காட்டத் தீரும்; இப் பாசுரம் நித்தியமாகையாலே, கேட்டார் தரிக்க மாட்டார்;
ஊற்றிடத்து உண்டான நுண்ணிய மணல்போலே உருகுகின்ற மனத்தையுடையராய் நீராய் உருகாநிற்பர்.
இதற்குப் பலமாகச் சொல்லப்பட்டது என்? என்னில், பகவானுடைய குணங்களிலே ஈடுபட்டவர்கள்
பாசுரம் கேட்டு அழிகையும் பேற்றிலே சேர்ந்ததாகையாலே இதுதானே பலம் என்கிறது.உருகிண்டே இருப்பதே பிராப்ய அந்தர்பூதம் –

————————————————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அப்யேவம் ஆத்ம பலதான விளம்பம் வந்தம்
சௌரிம் எத்ரச்ச குத்ரசாபி ஆலோக்ய
ஆவேப்ய
மத ச்திதிம்
அதீன விபூதி உக்மம்
ஆயாசத முனி

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

லோக ஸ்ருஷ்டுத்வ சக்த்யா
ஆயுத சுபதயகதா
ஜிஷ்ணு சாரத்திய யோகாத்
ஸ்ரக் ப்ராட் தேவேச பாவாத்
கருட ரததயாத்
ச்வாஸ்ரிதே பஷபாதாத்
காந்த்யா
சாம்ராஜ்ய யோகாத் –
அவதரண தச ஸ்பஷ்ட பாரம்ய தஸ்ய ச –
ஸ்வ கீய கடக்க ஜனங்கள் இட்ட வழக்காம் படி விபூதி த்வயம் உடையவன்
ஸ்வ கீய ஆய்த விபூதி த்வயமத்வம் –

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 58-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

பொன்னுலகு பூமி எல்லாம் புள்ளினங்கட்கே வழங்கி
என்னிடரை மாலுக்கு இயம்பும் என -மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர் போய் வணங்கும் நீர்————-58-

—————————————————————————–

அவதாரிகை –

இதில்
ஆர்த்தி பாரவச்யத்தாலே தூது விட்ட பாசுரத்தை
அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
உண்ணும் சோற்றில் ஆற்றாமையோடு
திருமாலான வைத்தமா நிதி திருக் கண்ணும் செவ்வாயும் கண்டு அனுபவிக்க வேணும்
என்று த்வாரா பரவசராய்ப் புறப்பட்டு
முட்டுப் போக மாட்டாமல்
எங்கனே புகும் கொல் -என்றதுவே பலித்து
விழுந்து
நோவுபடுகிற
தசையை
அவன் எழுந்து அருளி இருக்கிற பரம பதாதிகளிலே போய் அறிவியுங்கோள் என்று
பரிசர வர்த்திகளான கடகரை தாம் அர்த்திக்கிற பிரகாரத்தை
தூத பரேஷண வ்யாஜத்தாலே
அருளிச் செய்கிற பொன்னுலகு ஆளீரோவில் அர்த்தத்தை
பொன்னுலகு இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

——————————————————————————————

வியாக்யானம்–

பொன்னுலகு பூமி எல்லாம்- புள்ளினங்கட்கே வழங்கி
முதல் பாசுரத்தை முடியக் கடாஷித்து
அருளிய படி –

பொன்னுலகு பூமி எல்லாம்-
கச்ச லோகன் -என்னும்படி
நித்ய விபூதி லீலா விபூதி எல்லாவற்றையும் –

புள்ளினங்கட்கே வழங்கி –
பஷ பாதமுடைய பஷி சமூஹங்களுக்கே
தம்முடைய ரஷண அர்த்தமாக
வுபகரித்து –
வண் சடகோபன் -ஆகையாலே
மோஷாதி புருஷார்த்தங்களை வழங்க வல்லராய் இருக்கை-

வழங்கி -என்னிடரை மாலுக்கு இயம்பும் என –
உபய விபூதியையும் உபஹார அர்த்தமாக உபகரித்து
பிரிவால் உண்டான என்னுடைய பரிவை
சர்வேஸ்வரனுக்கு அறிவியுங்கோள் –
என்று
என் இடரை -என்னுடைய துக்கத்தை –
அதாவது –
என்நிலைமை -என்றும்
மெய்யமர் காதல் -என்றும்
பாசறவெய்தி -என்றும்
பேர்த்து மற்று ஓர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றும் இலேன் -என்றும்
இன்னவாறு இவள் காண்மின் -என்றும்
சொன்ன இவை -என்கை –

என்னிடரை மாலுக்கு இயம்பும் என-
அதாவது –
எந்நலம் கொண்ட பிரான் தனக்கு என்நிலைமை யுரைத்து -என்றும் –
மெய்யமர் காதல் சொல்லி -என்றும் –
யாமிதுவோ தக்கவாறு என்ன வேண்டும் -என்றும் –
எனக்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே -என்றும்
கற்பியா வைத்த மாற்றம் சொல்லி சென்மின்கள் -என்றும்
மது சூதற்கு என் மாற்றம் சொல்லி -என்றும்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனை கண்டு ஏசறு நும்மை அல்லால் மறு நோக்கிலள் என்று சொல் -என்றும்
விண்ணவர் கோனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் -என்றும்
மந்திரத்து ஓன்று உணர்த்தி உரையீர் -என்றும்
அருளிச் செய்தவை -என்கை –
மன்னு திரு நாடு முதல் தூது நல்கி விடும் –
திரு நாடு முதலா வது –
மூன்றாம் தூதுக்கு விஷயம் பரத்வ த்வயம் -என்கையாலே
திரு நாடும்
நெஞ்சு நாடும்
விஷயம் –
மா மதுவார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு -என்றும்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு -என்றும்
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு -என்றும்
எனக்குச் சென்றிலும் கண்டு -என்றும்
பரத்வ
அந்தர்யாமித்வ
விஷய தூது ப்ரேஷணமாய் இருக்கும் -இத் திருவாய் மொழி –

தூது நல்கி விடுகை யாவது –
விருப்பத்தோடு விடுகை –
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -என்று
ஐக ரஸ்யம் பற்றாசாக விடுகை -என்றபடி-

மன்னு திரு நாடு முதல் தூது நல்கி விடும் -மாறனையே –
நித்யமான திரு நாடு முதலான ஸ்தலங்களிலே
ஆதாரத்தோடு தூது விடும்
ஆழ்வாரையே –

நீடுலகீர் போய் வணங்கும் நீர் –
பிரவாஹ ரூபேண
நித்யமான சகத்திலே
வர்த்திகிறவர்களே
நீங்கள்
தூது விடுகை ஆகிற வருத்தம் இன்றிக்கே
நீங்களே நடந்து போய் சேவியுங்கோள் –

திருநாடு போலே நெடுகி இராதே
திரு நாட்டில் திரு நகரி கிட்டிற்றாய் இறே இருப்பது –

நீங்கள் புருஷகார
நிரபேஷராக
ஆழ்வாரை ஆஸ்ரயிங்கோள் –

————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: