பகவத் விஷயம் காலஷேபம் -137- திருவாய்மொழி – -6-8–1….6-8-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

மேல் திருவாய்மொழிகள் இரண்டும், மோஹமும் உணர்த்தியுமாய், இதில் தூதுவிடுகிறதாக அன்றோ இருக்கிறது;
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற இவர்க்கு “மரணத்தில் பாதி அவஸ்த்தை” என்னும் மோஹம் இல்லையே;

உலகத்திலே, ஒவ்வொருவருக்கும் நனவு கனவு சுஷுப்தி மூர்ச்சை மரணம்என்று சொல்லப்படுகின்ற ஐந்து அவஸ்த்தைகள் உண்டு;
அவற்றுள்,நனவாவது,-ஜாக்ரத் தசை – புறக்கரணங்களும் அந்தத்கரணமும் தனதுதனது விஷயங்களை அறிந்து பற்றுகிற நிலை.
கனவாவது, புறக்கரணங்கள்எல்லாம் அடங்க மனம் மாத்திரம் சஞ்சரித்துக்கொண்டிருக்க
, இந்தச்சரீரத்தோடு ஒத்த வேறு சரீரங்களையும் பகலில் காண்கிற விஷயங்களோடு ஒத்த விஷயங்களையும் ஈசுவரன் உண்டாக்க
,அதுகாரணமாக, முடிசூடுதல் முதல், தலை அறுப்புண்ணல் இறுதியாகக்காண்டல்.
சுஷுப்தியாவது, புறக்கரணங்களும் மனமும் அடங்க, உச்வாச நிஸ்வாசங்களாலே பிராணன் மாத்திரம் சஞ்சரித்துக் கொண்டிருக்க,
நனவிலே தன்தன் விஷயங்களிலே இந்திரியங்கள் பரந்திருந்த காரணத்தால் வந்த இளைப்பெல்லாம் மாறும்படி, புரீதத் என்கிற
நாடியிலே பரமாத்மாவின் சொரூபத்திலே சேர்ந்து சிரமம் எல்லாம் நீங்கி இருத்தல்.
மூர்ச்சையாவது, சூக்கும பிராணனோடும் சூக்கும சரீரத்தோடும்சம்பந்தப்பட்டிருக்கும் நிலை.
மரணமாவது, எல்லாப் பிராணன்களும் தேகசம்பந்தத்தினின்றும் நீங்குதல். இப்படிப்பட்ட ‘மரணத்துக்குப் பாதி
அவஸ்த்தையாயிருக்கும் மூர்ச்சை’ என்று வேதாந்தத்திலே சொல்லப்பட்டிருத்தலைத் திருவுள்ளம்பற்றி
‘மரணத்தில் பாதி அவஸ்த்தை’ என்கிறார். சாரீரகமீமாம்சை, அத். 3. பாதம். 2. சூத். 10.காண்க.

இனி இவர்க்கு மோஹமாவது, புறத்திலேயுள்ள பொருள்களை நினைத்தற்கும் இயலாதவராய் விஷயங்களினின்றும்
அந்தக் கரணம் விடுபட்டதாய், மனத்திற்கு அவனே விஷயமாய், அவன் குணங்களையே அநுபவித்தல்.
அதாவது, ஆத்மாவாய் இருப்பவனே ஞானத்திற்கு விஷயமாய்த் தன்னை மறக்கை.
மேல் திருவாய்மொழியில் நிலை “நான் மநு ஆகின்றேன்” என்றும்,
“அனந்தன் என்னும் திருநாமமுள்ள அப் பரம்பொருள் எங்கும் இருப்பதால் நான்
அப் பரம்பொருளாகவே இருக்கிறேன்” என்றும் சொல்லுகிற நிலைபோலே.
உணர்த்தியாவது, “அந்தப் பிரஹ்லாதன் மீண்டும் ஆகாசம் முதலியவற்றோடு கூடிய உலகத்தைப் பார்த்துத்
தனது தோற்றத்தால் தன்னைப் பிரஹ்லாதனாக நினைத்தார்” என்கிற பிரஹ்லாதனைப்போலே
“மாலுக்கு” என்ற திருவாய்மொழியிலும், “உண்ணுஞ் சோறும்” என்ற திருவாய்மொழியிலும் உண்டான மோஹத்தையும்,
உணர்ச்சியையும்திருஷ்டாந்தத்தோடு காட்டுகிறார் ‘மேல்’ என்று தொடங்கி.
‘மேல்திருவாய்மொழியில்’ என்றது, “மாலுக்கு” என்ற திருவாய்மொழியில்என்றபடி.
“அஹம் மனுரபவம்” என்பது, பிருகதாரண்யகம், 4-வது பிராஹ்மணம்.
“சர்வகத்வாத் அநந்தஸ்ய ஸ ஏவ அஹம் அவஸ்தித:”என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 19 : 85.
‘உணர்த்தியாவது’ என்றது, “உண்ணும் சோறும்” என்ற திருவாய்மொழியில்உண்டான உணர்த்தியாவது என்றபடி.
“த்ருஷ்ட்வாஸச ஜகத் பூயோ ககநாத்யுபலக்ஷணம்
ப்ரஹ்லாத: அஸ்மீதி ஸஸ்மார புந: ஆத்மாநம் ஆத்மநா”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா, 1. 20 : 7.
தம்மையும் உணரக்கூடியவராய் உலக விருத்தாந்தத்தையும் நினைக்கக் கூடியவராதல்.
நிர்க்குணமான விஷயத்திலே அன்றே இவர் மூழ்கியது, குணாதிக விஷயத்திலே யன்றோ.
சேஷிபக்கலிலே நினைவுண்டானால் சேஷபூதனான தன்னையும் காணும் அன்றோ.
மேல், நெடும் போது அவன் குணங்களை நினைக்கையாலே தரித்து வலிமை குறைவும் நீங்கிப் புறத்திலேயுள்ள
பொருள்களையும் நினைக்கக்கூடிய நிலையை அடைந்தார்;
அவ்வளவிலே, இவர் தரித்தவாறே பழையஅலாபமே தலையெடுத்து ஒரு பிராட்டியின் நிலையை அடைந்தவராய் அந்யாப தேசத்தாலே பேசுகிறார்.

மேல் திருவாய்மொழியில், திருத்தாயார் “எங்ஙனே புகுங்கொல்?” என்று நொந்ததுவே பலித்து,
தன் சாபலத்தாலே புறப்பட்டாள், முடியப் போய்ப் புக மாட்டாமல் தன்னுடைய நகரத்தை அடுத்த உபவனத்திலே விழுந்து கிடந்து,
அவ்வளவிலும் அவன் வரக் காணாமையாலே, கண்ட பறவைகளையெல்லாம் தூதுவிடுகிறாள்.
தனிவழியே புறப்பட்டுப் போம்படியாய் விழுந்த இவளுக்குத் தூது போவார் இலரே;
உண்டானாலும் இவள் தனக்கு முன்னே ஈடுபட்டுக் கிடப்பர்களே;
இனித் தன் பக்கத்தில் வசிக்கிற பறவைகளுக்கு மேற்படக் கால்நடை தந்து போகவல்லார் இலரே;
இவ்வளவிலே நீங்கள் என்நிலையை அறிவிக்கவேணும் என்று அவற்றின் காலிலே விழுகிறாள்.
“அஞ்சிறைய மடநாராய்” என்ற திருவாய்மொழியில் என்னை நினைத்தானத்தனை, தன்னை மறந்தான் என்றாள்;
இத் தலையில் அபராதம் பாராதே, அத் தலையில் அபராதத்தைச் சகித்துக் கோடல் பற்றாசாக,
அபராதத்தைச் சகித்துக்கொள்ளும் தன்மையைப் பார்த்து வருவது என்று ஆள்விட்டாள்.
“வைகல் பூங்கழி” என்ற திருவாய்மொழியில், மேலே, இருமுறை தூதுவிட்டாளே? அவற்றிற்கும் இதற்கும் வாசி யாது? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அஞ்சிறைய’ என்று தொடங்கி
.என்னை-பாபம்செய்த என்னை. தன்னை-அபராதங்களைப் பொறுக்கின்ற தன்னை.

“வைகல்பூங்கழிவாய்” என்ற திருவாய்மொழியின் முன்னுரையில், ‘அவ்விடங்களிலே துன்புறுவார் பலர்
உளராகையாலே அவர்கள்ரக்ஷணத்திலே ஒருப்பட்டு இத்தலையை மறந்தானித்தனை’ என்றார்;
இங்கு,‘இருவரையும் அவ்வூரில் உள்ள இனிமை மறக்கப்பண்ணிற்று என்றாள்’
என்கிறார்; இதுவும் ஒரு நிர்வாகம் என்று கண்டுகொள்வது.
‘இருவரையும்’ என்றது,பிரிந்தால் தரித்திருக்கப்போகாத வைலக்ஷண்யத்தையுடைய அவனையும்,
பிரிந்தால் தரித்திருக்க ஒண்ணாத துன்பத்தையுடையதன்னையும் என்றபடி.
‘விசேஷஜ்ஞனாகையாலே’ என்றது, தன்வைலக்ஷண்யத்தையும் இவளுடைய துன்பத்தையும் அறியுமவனாகையாலே என்றபடி.

இருவரையும் அவ்வூரில்உள்ள இனிமை மறக்கப்பண்ணிற்று என்றாள்;
விசேஷஜ்ஞனாகையாலே துன்பத்தை அறிவிக்க வரும் என்று ஆர்த்த ரக்ஷணம் பற்றாசாகத் தூதுவிட்டாள்.
இத் திருவாய்மொழியில், வாராமைக்கு அடி பரப்பனாகையாலே என்று பார்த்தாள்;
‘பரப்பனாகையாலே’ என்றது, இத்திருவாய்மொழியில் வருகிற“முன்னுலகங்கள் எல்லாம் படைத்த” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
“தன்மன்னு நீள் கழல்மேல் தண்துழாய் நமக்கு அன்றி நல்கான்”-திருவாய். 6. 8 : 6.– என்கிறபடியே,
அசாதாரணமானது அன்றே வடிவு; அடியார்களோடு ஏகரசன் ஆகையன்றோ என்று பார்த்து
ஐகரஸ்யம் பற்றாசாகத் தூதுவிடுகிறாள் என்று பட்டர் அருளிச்செய்வர்.
“பல பாசுரங்களிலும் ‘இதுவோ தக்கவாறு’ என்கையாலே,
உயிர்கள் மாட்டு அருளுடைமை பற்றாசாகத் தூது விடுகிறாள்” என்று பிள்ளான் பணிப்பர்.

“இராகவனுடைய மனையில் அனைத்துப் பொருள்களையு முடையவளாய்ப் பன்னிரண்டாண்டு தேவபோகங்களை
நுகர்ந்தவளான நான்”
“ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
புஞ்ஜாநா மாநுஷான் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ”-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 18.
என்கிறபடியே, பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த்துரும்பு அறக் கலந்து பிரிந்த பிராட்டியைப் போலே,
அங்கே புக்கு நெடுங்காலம் அவனை அநுபவித்துப் பிரிந்து தூது விடுகிறாள் என்று பிள்ளான் பணிப்பர்.
‘புறப்பட்டவள் முடியப் போகமாட்டாதே நகரத்தை அடுத்த வனத்திலே கிடந்து தூதுவிடுகிறாள்’ என்று பட்டர் அருளிச்செய்யும்படி.
“கீர்த்தியையுடைய ஸ்ரீராமபிரான் என்னைப் பிழைத்திருக்கின்றவளாக எப்படிக் கௌரவிப்பாரோ அப்படியே
உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது” என்கிறபடியே,தலைவனுடைய பேர்அருளையே பற்றாசாகக்கொண்டு தூதுவிட்ட பேர்
உளரோ? என்ன, ‘உளர்’ என்று, அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்‘கீர்த்தியையுடைய’ என்று தொடங்கி.
இது, பிள்ளான் நிர்வாஹத்தைப்பற்றியது.

“ஜீவந்தீம் மாம் யதா ராம: ஸம்பாவயதி கீர்த்திமாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 10.
பிறர் இழுக்கினைப் பொறாத குடிப்பிறப்புடையவரன்றோ. அதிலே தமக்கு வந்த துக்கத்தை நீக்குவதற்குச் சொல்லவேண்டாவே.
கடலை அணை செய்து இராவணாதிகளை அழித்துத் தாம் வரக்கொள்ள, இத்தலை வெறுந்தறையாய்க் கிடவாமே செய்ய
நினைத்தாராகில் ஏற்கவே நீக்கித் தம்புகழை நோக்கிக்கொள்ளச் சொல் என்று சொன்னாள் அன்றோ;
அப்படியே இவளும் தன் நிலையை அறிவித்து விடுகிறாளாயிருக்கிறது.

“தினைத்தனையும் விடாள்” என்ற திருத்தாயாருடைய விருப்பமே பலித்தது; அங்கே புக்கு அநுபவித்தாள் என்பது, பிள்ளான்நிர்வாஹத்திற்குக் கருத்து.
பட்டர் திருவுள்ளம், இத்திருவாய்மொழியின்முடிவிலே கலவி உண்டானால், “ஆடி ஆடி” என்ற திருவாய்மொழியின்ஈற்றிலே கலவி தோன்ற அருளிச்செய்து,
“அந்தாமத்து” என்றதிருவாய்மொழியிலே அதனை விரித்து அருளிச்செய்தாற்போன்று, மேல்திருவாய்மொழியிலே கலவியை விளக்கி அருளிச்செய்வர்;
அங்ஙனம்அருளிச்செய்யாமையாலே கலவி இல்லை என்பது. பட்டர் நிர்வாஹம்
“எங்ஙனே புகுங்கொல்” என்றதனை நோக்காகக்கொண்டு எழுகின்றது.“செல்ல வைத்தனள்” என்பதற்குச் செல்ல ஒருப்பட்டாள் என்பதுபொருள்.

6-3/6-4 -மட்டும் தானான நிலை –
அபராத சஹத்வம் /படைத்த பரப்பு முதல் இரண்டுக்கும் தூது
ஷமா -தீஷா -தம் பிழையை மறப்பித்தது ஷமா உணர்த்த வ்யூஹத்தில் தூது முதலில்
– சிறந்த செல்வம் -மறக்கப் பண்ணிற்று -தீஷா உணர்த்த விபவத்தில் தூது இரண்டாவதில்
இதில் -படைத்த பரப்பு மறக்கப்த பண்ண சாரச்யம்ம உணர்த்தி பரதவ த்வயத்தில் தூது –
அடுத்து தமரோட்டை சஹவாசம் மறக்கப் பண்ண
சௌந்தர்யம் உணர்த்தி அர்ச்சையில் தூது

———————————————————————————————————-

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-

தன்னுடைய காரணத்வாதி குணங்களைக் காட்டி என்னை வசீகரித்த -என்னுடைய அவச்யதையை சொல்லி –
பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?-நீங்களே கொள்ள வேண்டும் -கொடுத்தால் ஆகாதே ஆச்சார்யர்களுக்கு
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்-கார்யம் செய்ய அடியான விலஷணம்-பிரிந்து தூது விடும் படி -பாபம் செய்த –
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்-பிரதமத்தில் உலகம் பைத்து காத்த -ஜகத் காரனத்வன் -ஔதார்யன் –
ஆஸ்ரிதர்க்கு சுலபன் என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே
இவற்றால் என்னை ஸ்வ அதீனம் ஆக்கி -என்னிடம் நலன்களை கொண்ட உபகாரகன் -அவஸ்தை யை சொல்லி –
பரிசிலாக -பங்குனி உத்தரம் சேர்த்திக்கு-ச்ப்ருஹ நீயம் -பரம பதம் -லீலா விபூதியையும் -நீங்கள் இட்ட வழக்கு
சங்க பாஹூள்யம் -கார்ய உபயுக்தம் -புள்ளினங்காள்

சிறந்த குணங்களையுடைய பறவைக் கூட்டங்களே! தீவினையேனாகிய நான் உங்களை இரக்கின்றேன்; ஆதிகாலத்தில் எல்லாஉலகங்களையும்
படைத்த முகில்வண்ணனும் கண்ணபிரானும் என்னுடைய நலத்தை எல்லாம் கொண்ட உபகாரகனுமான எம்பெருமானுக்கு,
என்னுடைய நிலையைச் சொல்லுங்கோள்; அவ்வாறு சொல்லி, நீங்கள் செய்த உதவிக்குக் கைம்மாறாகப் பரமபதத்தையும்
மற்றுமுள்ள எல்லா உலகங்களையும் நான் கொடுக்க நீங்கள் ஆளுங்கோள் என்கிறாள்.
புள்ளினங்காள்! இரந்தேன்; என்நிலைமை உரைத்துப் பொன்னுலகு ஆளீரோ! புவனிமுழுது ஆளீரோ! என்க.

சில புள்ளினங்களைக் குறித்து, எம்பெருமானுக்கு என்நிலையை அறிவித்து
இரண்டு உலகங்களையும் நான் தர நீங்கள் ஆளவேணும் என்று இரக்கிறாள்.

பொன் உலகு ஆளீரோ –
1-ஈசுவரனுடைய விபூதியானது பிரிவு நிலையில் அவனையும் தன்னையும் சேர்த்தார்க்குப் பரிசிலாகக் கண்டது என்று இருக்கிறாள்.
2-இரண்டு விபூதிகளும் ஒரு மிதுனத்துக்கு அடிமை அன்றோ.
அந்த நிலை பிறந்தால் சொல்லலாம் அன்றோ.
3-சர்வேசுவரன் இருக்க இவ்விடம் அராஜகமாய்க் கிடக்கிறது என்றிருக்கிறாள்.
4-பிரகிருதி சம்பந்தம் அற்று ஒருதேச விசேடத்திலே போய் அநுபவிக்குமதனை இங்கே இருந்தே கொடுக்கிறாள்.
இப்படி இவள் கொடுத்தது போன்று, பெருமாளும் பெரியவுடையார்க்குக்கொடுத்தார் என்று கொண்டு, அவரைக்காட்டிலும் இவளுக்கு வாசி
அருளிச்செய்கிறார் ‘பிரகிருதியோடே’ என்று தொடங்கி. ‘பிரகிருதியோடேகொடுப்பார்” என்றது, ஆழ்வாரை. ‘அறுத்துக் கொடுப்பார்’ என்றது,பெருமாளை.
பிரகிருதியோடே கொடுப்பாரும் பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துக்கொடுப்பாருமாய் இருக்கிறபடி.
5-ஒருவரை ஒருவர் பிரிந்து துழாவுகிற சமயத்திலே கொடுக்கை இருவர்க்கும் ஒக்கும்.
சேர்க்கைக்காக உடம்பு இழப்பாரும் உடம்போடே கூடி நின்று சேரவிடுவாருமாய் அன்றோ இவர்கள் -ஜடாயு பஷிகள் -இருப்பது.
உங்கள் உலகமும் நான் பட்டது படவேணுமோ? என்பாள் ஆளீரோ என்கிறாள். -ஈவர விபூதி தான் வீணாக கிடக்க உங்கள் விபூதிகளும் வீணாக வேண்டுமோ
காதலனைப் பிரிந்து சேர்ப்பாரைத் தேடித் திரிகிற இவள், சேர்ப்பிப்பார்க்கு இரண்டு உலகங்களையும் கொடுக்கிறாள் அன்றோ,
அவனை நினைத்திருந்த கனம். கலந்தபோது தன்னுடைமையையும் தன்னையும் இவளுக்கு ஆக்கிப் பிரிந்தபோது
மாறுவான் ஒரு புல்லியனோடு அன்றே இவள் கலந்தது. தான் இல்லாத சமயத்திலும் இவள்தான் இப்படி
இரண்டு உலகங்களையும் இஷ்ட விநியோகார்ஹமாக்கும்படி அன்றோ, அவன் தன்னையும் தன்னுடைமையையும் இவளுக்கு ஆக்கிவைத்தபடி.

‘அருளாளப்பெருமாள் எம்பெருமானார் நோவிலே, பிள்ளையுறங்காவில்லிதாசரைக்கொண்டு ஆழ்வான் புக,
ஆழ்வான்செய்த நெஞ்சாறல் ஆறுவது ஆளவந்தார் ஸ்ரீபாதத்து ஏறப்போனால் அன்றோ’ என்ற வார்த்தையை நினைப்பது.
பொன்னுலகு ஆளீரோ புவனிமுழுது ஆளீரோ –
எம்பெருமானார் இங்கேயே இருக்க -ஆளவந்தார் திருவடி என்கிறார் -பரமபதம் போக ஆழ்வான் வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் என்றவாறு
ஒருவில் எருதுகளைப்போன்று இரண்டு உலகங்களும் தன்னைச் சேர்ப்பார்க்கு என்று இருக்கிறாள்.
வில்லும் எருதுகளும் சீதாபிராட்டிக்கும் நப்பின்னைப்பிராட்டிக்கும்கன்யா சுல்கமானாற்போலே, இரண்டு உலகங்களும் சேர்ப்பார்க்குச் சுல்கம்
என்று இருக்கிறாள் என்றபடி. சுல்கம் – பணமுடிப்பு.

ஆளீரோ –
தன்னுடைமை ஒருவர் பண்ணிக்கொடுக்க வேண்டாதிருக்கிறபடி.
“என்னாலே இவனுக்கு அபயம் கொடுக்கப்பட்டது” என்றாரே அன்றோ பெருமாள்.
“தத்தம் அஸ்ய அபயம் மயா” என்பது,ஸ்ரீ ராமா. யுத். 18 : 34. என்றது,
“மற்றொரு பொருள் உளதென்னின்,மாறிலாக் கொற்றவ! சரண்” என்ற போதே பெருமாளால்கொடுக்கப்பட்டது என்றபடி.

அப்படியே அவற்றுக்கும் ‘தூது போக’ என்று முகங்காட்டினபோதே கொடுத்தற்றது.
அவன் காரியம்செய்கிற இவற்றுக்கு அவனை அறிவித்துக் கொடுக்க வேண்டாவே அன்றோ.
இவள் தானும் அவன் காரியம் அன்றோ செய்கிறது. இவை போகவே தான் உளளாம்;
தான் உளளாகவே உலகத்தோடு கூடிய எம்பெருமான் உளனாம். இனி, இவள் தன் படுக்கைப் பற்றை அன்றோ கொடுக்கிறதும்.
இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே” (திருவாய்.1. 9 : 4.) என்றதனைத் திருவுள்ளம்பற்றிப் ‘படுக்கைப்பற்று’ என்கிறார்.
படுக்கைப்பற்று – சீதனம்.

ஆளீரோ-
உங்கள் காரியமே செய்ய ஒண்ணாது: என் காரியமும் செய்யவேணும். இவள் காரியம் செய்கையாவது, இவற்றை ஆளுகை அன்றோ.
‘இவள் தான் உபயவிபூதியையும் கொடாநின்றாளாகில், அவன் வந்தால் தானும் அவனும் எங்கே இருப்பது?’ என்ன,
‘இக் குருவி காட்டின இடத்தே’ என்று அனந்தாழ்வான் அருளிச்செய்வர்.

பொன்னுலகு ஆளீரோ புவனிமுழுது ஆளீரோ –
1-கைப்பட்டதனைக் கொடுத்தன்றோ மற்றொன்று தேடிக்கொடுப்பது.
2-தனக்கு ஆக்கின அடைவிலே கொடுக்கிறாள்.
நித்திய விபூதியைக் கொடுத்தே அன்றோ, லீலாவிபூதியைக் கொடுத்தது;
“அயர்வறும் அமரர்கள் அதிபதி” என்ற பின்பேயன்றோ, “இலன் அது உடையன் இது” என்று லீலாவிபூதியோகம் சொல்லிற்று.
இங்கே இருந்தாலும் ஞானம்பிறந்தால் அணித்தாகத் தோற்றுவது அவ்விடம் அன்றோ:
“அக்கரை என்னும் அனத்தக்கடலுள் அழுந்தி உன் பேரருளால் இக் கரைஏறி இளைத்து”-பெரியாழ்வார் திரு.5. 3 : 7. அது – பரமபதம்.- என்று
அது இக்கரையாகவும்,இது அக்கரையாகவும் சொல்லாநின்றார்கள் அன்றோ.
3-“மாகவை குந்தம் காண்பதற்கு என்மனம் ஏகம் எண்ணும்” – திருவாய். 9. 3 : 7.-என்றே அன்றோ இருப்பது.
பிராப்தி தசையிலும் முற்பட்டிருப்பது அவ்விடமே அன்றோ.
4-அவன் உடைமை என்னும் தன்மையாலே ஒருகால் உத்மேசியமாமது அன்றோ இவ்விடம்.
“முக்தன் ஜனங்களின் மத்தியில் இருந்த இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை” –
“நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்” என்பது, சாந்தோக்யம். 8. 12 : 3.-என்னாநிற்கச் செய்தேயும்,
அவனுடைய செல்வத்தில் குறை அநுபவிக்க ஒண்ணாது என்று அவன் உடைமை என்னும் தன்மையாலே
ஒருகால் பற்றத்தக்கது என்ற எண்ணம் உண்டு இத்தனை அன்றோ.
இல்லையாகில், வேறு ஒருவகையில் எண்ணம் உண்டாகில் ‘புவனி முழு தாளீரோ!’ என்று,
கட்டடங்க உத்தேஸ்யமாய்த் தோற்றாதே அன்றோ.
பொன்னுலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –
5-அடிமைக்கு அடைத்து ஏற்றலாயன்றோ இவ்விடந்தான் இருப்பது;
அவ்விடம் அடிமையால் அல்லது செல்லாத இடமாய் அன்றோ இருப்பது.
6- அன்றிக்கே, தூதுபோனாரது பரமபதம், அது உடையாரது லீலாவிபூதி என்னுதலுமாம்.

புவனிமுழுது ஆளீரோ –
7- உத்தேசியமான நித்தியவிபூதியைக் கொடுத்தவள், தியாச்சியமான லீலாவிபூதியைக் கொடுப்பான் என்?
என்னில், இவை செய்கிற உபகாரத்தை நினைத்து, ‘இன்னது கொடுப்போம்’ என்று அறியாமல் கலங்கி.
பண்டு கலங்கினாரும் இப்படியே செய்தார்கள்;
“திரும்புதலில்லாதவர்களுக்கும் பூமிதானஞ் செய்தவர்களுக்கும் எந்த எந்த கதிகளுண்டோ அந்த அந்த
மேலானவுலகங்களை என்னால் நீவிர் அநுமதிக்கப் பட்டவராய் அடைவீராக” என்று சொன்னார்கள்.
“யாகதி: யஜ்ஞஸீலாநாம் ஆஹிதாக்நே: ச யா கதி:அபராவர்த்திநாம் யாச யாச பூமிப்ரதாயிநாம்
மயா த்வம் ஸமநுஜ்ஞாத: கச்சலோகாந் அநுத்தமாந்”- என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 68. 29, 30. பெரிய உடையாரைக் குறித்துப் பெருமாள் அருளிச்செய்தது.

பிரீதி அளவு பட்டிருக்கிலன்றோ தெளிந்திருப்பது.
“வெள்ளி என்ன, தங்கம் என்ன, பலவிதமான இரத்தினங்கள் என்ன, மூன்று உலகங்களின் இராச்சியம் என்ன,
ஆகிய இவைகள் எல்லாம், நீ பேசிய இனிய வார்த்தைகளுக்குத் தக்கவையல்ல” என்று கலங்கினாள் அன்றோ.
“ஹிரண்யம்வா ஸுவர்ணம்வா ரத்நாநி. . . . . .அர்ஹதி பாஷிதம்” என்பது,ஸ்ரீராமா. யுத். 116 : 20.
இது, இராவணனைக் கொன்றபடி வந்து வெற்றியைக்கூறிய திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது. இச்சுலோகத்தில்,
“திரிஷு லோகேஷு ராஜ்யம்” என்றதிலே, வெள்ளி முதலானவைஅடங்கியிருக்கவும், பிரித்துச் சொன்னது கலக்கத்தின் காரியம் என்றபடி.

இருவரும் கொடுக்கலாம் படி ஒரு மிதுனத்துக்கு அடிமையாக அன்றோ உபயவிபூதியும் இருப்பது.

இவ்வளவில் இட்டு அழைக்கும்படி கடக்க இராதே நீங்கள் முன்னம் கிட்ட நின்று முகங்காட்டப் பெறுவதே!
உங்கள்படி -ஔதார்யம் -இருந்தபடி கண்டேனுக்கு எல்லாச் செல்வங்களையும் எனக்குத் தந்து தூது போம்படியாய் இருந்ததே!
‘அவனுக்குக் குணங்களில் ஏற்றம் ஆஸ்ரயத்தாலே’ என்று இருந்தோம்; அது உங்கள் பக்கலிலே அன்றோ என்கிறாள்.

சுக்ரீவனை இளைய பெருமாளை விட்டு அன்றோ அழைக்க வேண்டிற்று
அவனையே கொடுக்கும் ஔதார்யம்
குணங்களுக்கு பெருமாள் இடம் இருப்பதால் ஏற்றம் -அவற்றை-குண கூட்டங்கள் – ஆஸ்ரிதற்கு கொடுக்க வைத்த ஏற்றம் உங்களது அன்றோ –

“பிரதாபம் என்ன, பொறுமை என்ன, ஒளி என்ன, ஒரு நிலை என்ன, வணக்கம் என்ன, ஆகிய இவைகளும்,
மற்றும் பலவான குணங்களும் உன்னிடத்தில்தான் விளங்குகின்றன; இதில்ஐயமில்லை” என்னப்படுமவனும் புறம்பானான், உங்களைப்பார்க்க
தேஜ: க்ஷமா த்யுதி: ஸ்தைர்யம் விநீதத்வம் ந ஸம்ஸய:
ஏதேச அந்யேச பஹவோ குணா: த்வயிஏவ ஸோபநா:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 28.
இராவணனைக் கொன்றபின் வந்து சேர்ந்ததிருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது. என்னப்படுமவன் – திருவடி.

அறிவு மீதே உருவீதே ஆற்ற லீதே அரும்புலத்தின்
செறிவுமீதே செயலீதே தேற்ற மீதே தேற்றத்தின்
நெறியு மீதே நினைவீதே நீதி யீதே நினக்கென்றால்
வெறிய ரன்றோ குணங்களால் விரிஞ்சன் முதலா மேலானோர்.-என்பது, கம்பராமாயணம், உருக்காட்டுப்பட. 111.

“பிரதாபம் என்ன, பொறுமை என்ன, ஒளி என்ன, ஒரு நிலை என்ன, வணக்கம் என்ன, ஆகிய இவைகளும்,
மற்றும் பலவான குணங்களும் உன்னிடத்தில்தான் விளங்குகின்றன; இதில்ஐயமில்லை” என்னப்படுமவனும் -புறம்பானான், உங்களைப்பார்க்க.
த்வயிஏவ-என் பர்த்தாவை விட உன்னிடமே -திருவடியைச் சொல்லி -அவன் விட -தடங்கள் தாண்ட வேண்டாம்
வந்தவன் ஒருவனை தூது -இங்கு ஊராக திருத்தி -அங்கு தனிக்கட்டை -இங்கு புள்ளினங்காள் -பிரிவின் வருத்தம் அறியுமே –

உங்கள் நீர்மை அறியாதே, என் செல்லாமையாலே ‘அதனைக் கொள், இதனைக் கொள், என்று நலிந்தேன் அன்றோ!
உங்கள் தரத்துக்கு அது ஓர் அறுகும் தாளிப்பூவும் அன்றோ’ என்பராம் பிள்ளையமுதனார்.

உங்களுக்கு நான் சில செய்தேனோ! வெறும் உங்கள் நீர்மையாலே செய்தது அன்றோ.
பாண்டவர்களுக்குத் தூதுபோன கிருஷ்ணன்படியும், ஆளவந்தார்க்குப் பச்சை இட்ட மணக்கால்நம்பி படியும் போலே இருந்ததே உங்கள்படி!
நன்னலம் புள்ளினங்காள் –
அழகிய நீர்மையையுடைய புள்ளினங்காள் என்னுதல், மிக்க சிநேகத்தையுடைய புள்ளினங்காள் என்னுதல்.
இருவருமான சேர்த்தி ஒழிய வேறும் ஒன்றைத் தரவோ? என்று சிரித்திருந்தன.
“பகைவர்களைக் கொன்றவரும் வெற்றியோடு கூடியவரும் இப்படி இருப்பவருமான ஸ்ரீராமபிரானைப் பார்க்கிறேன் என்பது யாது ஒன்று
உண்டோ, பார்க்கிற அந்தப் பிரயோஜனத்தினால் தேவராஜ்யம் முதலான மேன்மைகள் என்னால் அடையப்பட்டன” என்றான் திருவடி
“அர்த்ததஸ்ச மயா ப்ராப்தா தேவராஜ்யாதய: குணா:
ஹதசத்ரும் விஜயிநம் ராமம் பஸ்யாமி ஸுஸ்திதம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 24. பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது.

நல் நலம் –
அஹம்ச-‘கண நேரமும் சீதையைப் பிரிந்து பிழைத்திருக்கமாட்டேன்’ என்னும் யானும்,
ரகு வம்ச: ச – என்னை ஒழிய ஜீவியாதபடி இருக்கிற பிள்ளை பரதனும்,
மஹா பல: லக்ஷ்மணஸ்ச – இருவர்க்கும் உஜ்ஜீனனத்திற்கு ஏதுவான பிள்ளை இலக்குமணனும்,
வைதேஹ்யா: – இவை எல்லாம் தகும் என்கைக்காக,
தர்மத: பரிரக்ஷிதா: – நீ செய்ததற்கு ஒரு பிரதி உபகாரம் செய்யலாமோ? வெறும் அறவனாகையாலே செய்தாயத்தனை;”
‘உனக்கு என்செய்தேன்’ என்று காலம் என்னும் ஒரு பொருள் உள்ளதனையும் உழைக்கும்படி அன்றோ நீ செய்தது என்றார் பெருமாள்.
“அஹம்ச ரகுவம்ஸ: ச லக்ஷ்மணஸ்ச மஹாபல:
வைதேஹ்யா தர்ஸநேந அத்ய தர்மத: பரிரக்ஷிதா:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 1 : 11. இது, திருவடியைப் பார்த்துப் பெருமாள்
கூறியது. உழைக்கும்படி – தடுமாறும்படி.

தீவினை யாம்பல செய்யத் தீர்விலா
வீவினை முறைமுறை விளைய மெய்ம்மையாய்!
நீஇவை துடைத்துநின் றளிக்க நேர்ந்ததால்
ஆயினும் அன்பினாய் யான்செய் மாதவம்.-என்பது, கம்பராமாயணம், மீட்சிப்பட, 330.

கிருபா -ஔதார்யம் குணக் கூட்டம் ச்நேஹம் நான்கும் நலன்கள்
நல் -நன்மை -அவனைக் காட்டிலும் மிக்கு இந்த நான்கிலும் -ஆச்சார்யர் ஏற்றம் சொன்னபடி –

புள் –
இந் நீர்மையில் ஏற்றமுடைய உங்களுக்கே பறப்பதற்குச் சாதனமான பக்ஷபாதம் உண்டாகப் பெறுவதே!
பிரிந்தாரைச் சேர்க்கை திர்யக்குக்களின் காரியம் என்று இருக்கிறாள், இராமாவதாரத்தில் வாசனையாலே.
“குற்றம் செய்யாதார்யாவர்” –நகஸ்சித் நாபராத்யதி” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 44.-என்பாரும்கூட
உண்டாயிருக்கிறபடியைத் தெரிவிப்பாள் ‘இனங்காள்’ என்கிறாள்.
அன்றிக்கே, உடலும் உயிரும் கூடக் கிடக்கப் பெறுவதே! என்பாள் ‘இனங்காள்’ என்கிறாள் என்னுதல்.
“ஓ இராகவனே, செல்ல அரிதான காட்டிற்கு உமக்கு முன்பு செல்வேன்”
“அக்ரத:தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குஸகண்டகாந்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 9. இது, பெருமாளைப் பார்த்துப் பிராட்டிகூறியது.
என்று முன் நடப்பாரும்கூட இருக்கிறபடி.
அன்றிக்கே, “எல்லாத் திக்குக்களிலும் தேடுகிறார்கள்” “திக்ஷு ஸர்வாஸு மார்கந் தே ஸேய மாஸாதிதா மயா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 30 : 3.
என்கிறபடியே, எல்லாத் திக்குக்களிலும் போகவிடலாம்படி திரள் இருக்கிறபடி என்றுமாம்.

வினையாட்டியேன் –
கைப்புகுந்தவனைக் கைகழிய விட்டு உங்கள் காலிலே விழும்படியான பாவத்தைச் செய்துள்ளேன்.
உங்களுக்குக் குணங்கள் சொரூபமானாற்போலே யன்றோ எனக்குப் பாவம் சொரூபமானபடி.
நான் –
“தர்மத்தால் காப்பாற்றப்பட்டோம்” என்று இருப்பான் அவன் கண்டீர்!
நான் இரந்தேன் –
அத் தலை இத்தலையானபடி. ஸ்ரீஜனகராஜன் திருமகளான வேண்டற்பாட்டோடே அன்றோ தான் தூதுவிடுகிறது இவள்!
இரந்தேன் –
மேலே, அவன் திருவடிகளிலே நான்குமுறை சரணம் புக்கார்; இப்போது அவன் அடியார்கள் பக்கலிலே சரணம் புகுகிறார்:
அது தப்பிலும் இது தப்பாதே அன்றோ. இதற்கு வேறு விலக்கடி இல்லையே.
பிரார்த்தித்தலாகிற புத்தியன்றோ சரணாகதி ஆகிறது. தப்புதல் இல்லாத உபாயத்தைப் பற்றுகிறாள்.
இனங்காள் இரந்தேன் –
மிதுனமாயிருப்பார்க்கு இரந்தார்வாசி தெரியுமன்றோ.
சரணாகதி செய்தவர்கட்குத் தன் உயிரைக் கொடுக்குமவையே. –சாஸ்திரம் புறா கதை –
நல் நலம் புள் இனங்களுக்கு அன்றியே படு கொலைக்காரர்க்கும் இரங்க வேண்டும்படி அன்றோ -என்னுடைய நிலை
நல் நலம் புள்ளினங்காள் இரந்தேன் –
சரணாகதி அடைதற்கு உரிய குணங்கள் உங்களிடம் குறைவற்றிருந்தபடி என்தான்!
நான் இரந்தேன் ‘சரணாகதி அடைதற்குரிய குணங்கள்’ என்றது,
“நலம்” என்றசொல், வாத்சல்யம் முதலிய குணங்களையும்,
“புள்” என்ற சொல்,(இருசிறகு) ஞான அநுஷ்டானங்களையும்,
“இனம்” என்ற சொல்,புருஷகாரத்தையும் கூறுகின்றன என்றபடி.

அவன் அன்றோ “சுக்கிரீவனைச் சரணமாக அடைந்தார்” என்று குரங்கின்காலில் முற்பட விழுந்தான்;
மேலே, ‘அத்தலை இத்தலையானபடி’ என்று கூறிய வாக்கியத்தை
விவரணம் செய்கிறார் ‘அவன் அன்றோ’ என்று தொடங்கி.

“பிதாயஸ்ய புராஹி ஆஸீத் சரண்ய: தர்மவத்ஸல:
தஸ்யபுத்ர: ஸரண்யஸ்ய ஸுக்ரீவம் ஸரணம்கத:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 19.

பின்பே அன்றோ இவள் “என்னிடத்தில் அப்படி அருளைச் செய்யும்”
“ஸம்ஸ்ப்ருஸேயம் ஸகாமாஹம் ததா குரு தயாம் மயி”-என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3.-என்றது.
வினையாட்டியேன் நான் இரந்தேன் –
எல்லாம் கொடுத்தாலும் அவற்றுக்கு ஒன்றும் செய்ததாகத் தோற்றாதே பல்காட்டுகிறாள்.
அவர்கள் செய்கிற உபகாரம்அளவுபட்டிருக்கில் அன்றோ ஒப்பாக ஒன்று தேடிக் கொடுக்கலாவது.
எல்லாம் கொடுத்தாலும் “பணிவிடை செய்யக்கடவன், உலக முழுதினையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஆசாரியன் செய்த
உபகாரத்திற்குக் கொஞ்சமும் ஒப்பாகமாட்டாது”
“யோ தத்யாத் பகவத்ஜ்ஞானம் குர்யாத் தர்மோபஸேசனம் க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யாத் ந தத்துல்யம் கதஞ்சந” என்பது, பாரதம்.
என்று, செய்தது போராது என்னும் இதுவே அன்றோ நெஞ்சில் பட்டுக் கிடப்பது.
‘அவருக்குத் துரோகம் செய்யக்கூடாது” என்னுமளவில் நிற்குமதன்றே;
“யஸ்மாத் தர்மாந் ஆசிநோதி ஸ ஆசார்யா: தஸ்மை ந த்ருஹ்யேத் கதாசந”- என்பது, ஆபஸ்தம்ப தர்ம சூத்.
“இவனுடைய உபகாரத்தை அறிந்தவனாய்” இருக்க வேண்டும்.
“க்ருதம் அஸ்ய ஜாநந்”என்பது, பாரதம் உத்யோகபர். திருதராஷ்டிரனைப் பார்த்துச் சனத் சுஜாதர் கூறியது.

அங்கு நின்றும் மீண்டாலன்றோ அதுதான் வேண்டுவது. என்றது, அவன்செய்த உபகாரத்தினின்றும் மீண்டாலன்றோ
துரோகம்கூடாது என்று சொல்லவேண்டும் என்றபடி. இவை எல்லாம் சொல்லவேணுமோ?
அவன்தான் வரும் சுபாவனாகில் அன்றோ நாங்கள் அறிவிப்பது? என்னில், என் பாவத்தாலே இழந்தேனத்தனை போக்கி,
அவன் படியைப் பார்த்தால் இழக்கவேணுமோ என்கிறாள்.
முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில்வண்ணன் –
அழிந்தனவற்றை அடியே பிடித்து உண்டாக்குமவன் கண்டீர்! இத்தலையும் அழிந்தன்றோ கிடக்கிறது.
யார் பிரிவுக்குச் சளைத்துத் தளர்ந்து தூதுவிட இவற்றை உண்டாக்கிற்று?
வெறும் தன் கிருபையாலே செய்தானித்தனை அன்றோ!
பண்டு இவனுக்கு ஆர்த்த ரக்ஷணம் செய்வதற்குத் தூதுவிடவேண்டா கண்டீர்!
தண்ணீர், தறை என்ற வேறுபாடு பாராதே “பல பொருள்களாக ஆகக்கடவேன்” “பஹுஸ்யாம்” என்பது, சுருதி.
-என்கிற சங்கல்பத்தாலே ஏற்கெனவே இவற்றை உண்டாக்கினவன்.
தரம் இட்டாலும் விட ஒண்ணாத வடிவு என்பாள் ‘முகில்வண்ணன்’ என்கிறாள்.
அன்றிக்கே, தன்பேறாகக் கொடுக்குமவன் என்னலுமாம்.
முகில்வண்ணன் கண்ணன் –
உலகத்திற்குக் காரணமாயிருக்குந் தன்மைக்கும் அவதாரத்துக்கும் அடியான ஒளதார்யம் முதலான குணங்களைச் சொல்லுகிறது.
அன்றிக்கே, பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்ய திருமேனியோடே வந்து அவதரித்தபடியைச் சொல்லிற்றாகவுமாம்.
என் நலம் கொண்ட பிரான் –
இது ஒரு பழங்கிணறு கண்வாங்குகிறது என்? என்னுடைய எல்லாச் செல்வங்களையும் கவர்ந்த உபகாரகன்;
உங்கள் காலிலே விழும்படி செய்தவன். இப்போது அகல இருந்தது ஒழியப்பண்டு செய்தவை எல்லாம் சால நன்று கண்டீர்!
எங்களோடு கலப்பதற்கு முன்பு போர நீர்மையுடையான்; இப்போது வடிவழகே கண்டீர் உள்ளது.
என் நலம் கொண்ட முகில் வண்ணன் –
அம்மேகம் பெய்யும் இடமாகாமல், முகக்கும் இடமானேன்.
நலம் கொண்ட படியாலே தான் முகில் வண்ணன் ஆனேன் என்கிறான் –

தனக்கு என் நிலைமை –
அவன் வருவானானாலும், நாங்கள் சொல்லுவது ஏது? என்னில், ‘என் நிலைமை’ என்று தன் வடிவைக் காட்டுகிறாள்.
“இந்த எங்களுடைய சரீரத்தைப் பார்த்தருள வேண்டும்” “ஏஹி பஸ்ய சரீராணி முநீநாம் பாவி தாத்மநாம்”
என்பது, ஸ்ரீராமா. ஆரண். ஸ்ரீராமனைப் பார்த்து முனிவர்கள் கூறியது.-என்னுமாறு போலே.
என்னைக் கண்ட நீங்களே பாசுரமிட்டுச் சொல்லுமத்தனை.
உலகத்திற்குக் காரணனாயிருத்தல், அவதாரம், தன்பக்கல் செய்த விசேஷகடாக்ஷம், இவை எல்லாம் கண்ணழிவறச் சொன்னாள்;
அவனுடைய குணங்களிலே மூழ்கின தன் படிகள் தன்னாலும் பேசப் போகிறதில்லை;
தனக்கும் தன் தன்மை அறிவரியானைப் போலே.
உரைத்து –
தனக்குங்கூட நிலமல்லாத தன்படியை இவை பாசுரமிட்டுச் சொல்லவற்றாகக் கொண்டிருக்கிறாள்.
கரைமேலே நிற்கையாலே அவற்றுக்குச் சொல்லலாமன்றோ. ‘உரைத்துக்கொண்டு வாருங்கோள்’ என்னாது ஒழிவான் என்? என்னில்,
‘ஈசுவரன் செயல் நமக்குப் பரமோ’ என்றுஇருக்கையாலே;
இவனுக்குப் பணி குறையை அறிவிக்கையே அன்றோ, மேல் உள்ளன எல்லாம் அவன் பணி அன்றோ.
என் நிலைமை உரைத்துப் பொன்னுலகு ஆளீரோ –
துயர ஒலி கேளாமல் ஜீவிக்கப் பாருங்கோள்! சக்கரவர்த்தி பெருமாளை முடிசூட்டப் பாரித்தபோது,
இருடிகள் இராக்கதர்களாலே நோவுபடுகையாலே, இராச்சியம் திருவுள்ளத்தில் பொருந்தாமை புறப்பட்டுப்போனார் அன்றோ;
அப்படியே, பெண்கொலையும் துயர ஒலியும் கேட்டால் இவை உபய விபூதியையும் ஆளமாட்டா என்று இருக்கிறாள்.

———————————————————————————————————

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-

சாமான்ய விழி கீழே -இங்கு கிளிகாள்-அனுபாவ்ய சிஹ்ன யுக்தன் -யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசாக –
சம்பாவனை பெற வேண்டும் –
என் ஆற்றாமை அறிவித்து -என் தோழிமார் முன் நான் உங்களுக்கு செய்யும் ஆதாரம் ஏற்றுக் கொள்ள வேண்டும்
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு–கையும் திரு ஆழியுமான சேர்த்தி -பக்வ பலமான -அனுபவ -அதர சோபை
-அடிமை கொண்ட ஸ்வாமி -முற்படக் கண்டு -குணம் பாடி ஆவி காத்து இருக்கும் அன்றிக்கே
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.-என் உடம்போடு சஹஜ காதல் -அவன் திருமேனி உடன் அணைக்கும்
அபி நிவேசம் -மெய்க்காதல் -உண்மையான அபிநிவேசம் என்றுமாம்
குணம் பாடி திருப்தி கொள்ளாமல் -பிரமாணம் மூலம் சரீரம் பாதுகாக்காமல் -அவன் ஆதரித்தான் என்று அவன் உடன் கூட வராமல் முன்னே வந்து –
சடக்கென வந்து -அவன் வந்தால் அவனுக்கு தான் பூர்ண கும்பம் நமஸ்காரம் -ஆச்சார்யர் தனியாக சேவிக்க வேண்டுமே –
உங்கள் வார்த்தைக்கு அனந்தரம் -அவன் வரவு நிச்சயம்
மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து-வடிவு அழகாலும் இரு தலைக்கும் -தோழிகள் அலங்கரித்து -விரைந்து ஓடு வருவதை
பார்த்த பின்பு தோழிகள் அலங்காரம்
த்ருஷ்ட்வா சீதா -சொன்னதும் பட்டினி கிடந்த முதலிகள் மது வனம் உண்டு ஆனந்தப் பட்டது போலே -சுக்ரீவன் மகிழ்ந்து –
இளைய பெருமாள் பெருமாள் -ராஜ கம்பீர நடை பார்த்து என்னுடைய களிப்பு கண்டு ஒப்பித்து இருப்பார் -பருவம் ஒத்த தோழிமார் –
அவர்கள் தாங்கள் ஆதரிக்க இருக்காமல் என் கையை -பெருமாள் தொட்ட கையில் உனக்கு ஆசை இருக்குமே
பிடித்தாரை பிடித்தார் கை -தோழிமார் -வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவாரே-
உங்களுக்கு பாத பீடம் -அவனுக்கு சிரசுக்கு அலங்காரமான எனது கை –
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?-மதுரமான அடிசில் -ஆச்சார்யர் சம்பாவனை –

கிளிகாள்! திருக்கையிலே பொருந்தியிருக்கின்ற சக்கரத்தையும் கோவைக்கனி போன்ற திருவாயினையுமுடைய என் பெருமானைக் கண்டு,
திருமேனியிலே அணையவேண்டும்படியான காதலைச் சொல்லி விரைந்து ஓடி வந்து, மைபொருந்தியிருக்கிற வாள்போன்ற நீண்ட கண்களையுடைய
பெண்களுக்கு முன்னே என் கையிலே தங்கியிருந்து, நெய்யோடுகூடிய இனிய உணவினைப் பாலோடுகூட நாள்தோறும் இருந்து உண்ணவேண்டும்.
கிளிகாள்! பெருமானைக் கண்டு காதலைச் சொல்லி ஓடி வந்து என்கை இருந்து அடிசிலைப் பாலோடு மேவீர் என்க. ‘மேவீரோ’ என்பதிலுள்ள ஓகாரம் அசைநிலை.

சில கிளிகளைக் குறித்து என் ஆற்றாமையை அவனுக்கு அறிவித்து வந்து, நானும் என் தோழிமாரும்
கொண்டாட அதனை அங்கீகரிக்கவேணும் என்கிறாள்.

முதற் பாசுரத்தில் ‘அவன் பதம் கொடுத்தாள்; அதற்கு மேலே ஒருபதம் தேடிக்கொடுக்கிறாள் இப் பாசுரத்தில்.
அவன் பதமாகிறது, உபய விபூதியையும் கொடுக்கை அன்றோ, அதற்கு மேலான பதமாகிறது, அவனாலே விரும்பப்படும் தன்னைக்கொடுக்கை.
தன்னைக் கொடுக்குமிடத்திலும், ‘பின்னை முன்னே’ என்னாதே, எல்லாரும் காணக் கைமேலே அன்றோ கொடுக்கப் புகுகிறது.

மை அமர்வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து-
அவன்பாடு தரம்பெற்றாரைக் கொண்டாடுவாரைப் போலேயோ, என்பாடு தரம் பெற்றாரைக் கொண்டாடுவார் இருப்பது!
அந்தப்புரத்தில் வசிப்பவர் எல்லாரும் ஒருபடிப்பட்டிருக்கிறபடி; ஒருகண் பார்வையாய் இருக்கிறபடி.
வானரர்கள் -கண் அழகு இருக்காதே -அவர்கள் திருவடியைக் கொண்டாட -இவள் தோழிகள் அஸி தேஷினை -கண் பார்வை இருக்கும் படி –
“தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஒக்க அருள்செய்வர்” –பெரிய திருமொழி, 11. 3 : 5.-என்கிறபடியே,
இவளும் தன்னோடு எல்லாவகையாலும் ஒப்புமை கொடுத்து வைத்தபடி.
மை அமர் – “கறுத்த கண்களையுடையவள்”-“அஸிதேக்ஷணா” என்பது, ஸ்ரீராமா. சுந். 6. 5 : 4.-,
“கருந்தடங்கண்ணி”-திருவாய். 6. 5 : 8.– என்று சொல்லுகிற ஏற்றமெல்லாம் இவளுக்கும் உண்டே அன்றோ.
தன்னைப்போலே கண்ணில் இயல்பாகவே அமைந்த கறுப்பைச் சொல்லிற்றாதல்;
அன்றிக்கே, மங்களத்தின் பொருட்டு இடும் மையைச் சொல்லிற்றாதல்.
இவள், கணவனைப் பிரிந்திருக்கிற காலத்தில் இவர்கள் மை எழுதி இருக்கக் கூடாதே அன்றோ;
நீங்கள் வந்தால் இவர்கள் கண்களில் இருக்கும்படி பாரீர்கோள்! வாள் – ஒளி. அதுவும் அழிந்தன்றோ கிடக்கிறது.
இவள் வடிவு புகர் அழிந்து கிடக்க, இவர்கள் கண்களில் ஒளி உண்டாகக் கூடாதே.
நெடும் கண் –
கண்ணில் பரப்பு அடங்கலும் பிரயோஜனத்தோடு கூடி இருப்பது அப்போதே அன்றோ.
இல்லையாகில், தலைச்சுமையைப் போன்றதே யாம் அன்றோ.
“காணாதார் கண் என்றும் கண்ணல்ல” – பெரிய திரு. 11. 7 : 1.-என்கிறபடியே.
மை அமர் வாள் நெடும் கண் –
உங்கள் வரவால் வந்த பிரீதியாலே ‘அவன்வரவு தப்பாது’ என்று நான் அலங்கரிக்க,
அத்தாலே அலங்கரித்து ஒளியை யுடைத்தாய்ப் பெருத்திருந்துள்ள கண்களையுடையவர்கள் என்னுதல்.
மங்கைமார் –
அவனுக்குத் தன்னேராயிரம் பிள்ளைகளைப்போலே இவளுக்குத் தன் பருவத்தில் தோழிமார் உண்டாயிருக்கிறபடி.
முக்தர் இருபத்தைந்து வயதினர்களாய் இருக்குமாறு போலே இவர்களும் எப்பொழுதும் மங்கைப் பருவத்தினராய் இருத்தலைத் தெரிவித்தபடி.
மங்கைமார் முன்பு –
பின்பு இருக்க ஒட்டார்களே! 4ஒருவர் இருவர் அன்றே. எல்லாரும் தனித்தனியே ‘என்முன்பே, என்முன்பே’ என்பர்களே.
“மஹாத்மாவான அநுமாரை மற்றை வாநரோத்தமர்கள் சூழ்ந்துகொண்டு நின்றார்கள்”
“தத: தே ப்ரீ தமநஸ: ஸர்வே வாநர புங்கவா:
ஹனூமந்தம் மஹாத்மாநம் பரிவார்ய உபதஸ்திரே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 3
என்கிறபடியே, ஓலக்கமாக இருந்து திருவடியைக் கொண்டாடினாற்போலே.
மஹாத்மாநம் – நான்குபேர் சூழ இருந்து கொண்டாடினார்கள் என்கிற இதுதான் தரமோ இவனுக்கு?
உபாயநாநி உபாதாய மூலாநிச பலாநிச-என்று கனி கிழங்கு முதலானவற்றைக் கொடுத்துப் பெருமைப் படுத்தினார்கள் அல்லவோ முதலிகள்.
“உபாயநாநி உபாதாய மூலாநி ச பலாநி ச
ப்ரத்யர்சயந் ஹரிஸ்ரேஷ்டம் ஹரயோ மாருதாத்மஜம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 33.
அப்படியே, நெய்யமர் இன்னடிசில் என்று இங்கும் எல்லாம் உண்டாயிருக்கிறபடி.
“பேஜிரே விபுலாநநா – பருத்த முகமுள்ளவர்களானார்கள்” உண்டே அன்றோ அங்கு;
“தத: அங்கதம் ஹனூமந்தம் ஜாம்பவந்தம் ச வாநரா:
பரிவார்ய ப்ரமுதிதா பேஜிரே விபுலாநநா:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 47.
இங்கும் மை அமர் வாள் நெடும் கண் எல்லார்க்கும் உண்டாயிருக்கிறபடி.

என் கை இருந்து-
“சுகதுக்கங்கள் நம் இருவர்க்கும் ஒன்றே” என்று, “ஏகம் துக்கம் சுகம்ச நௌ” என்பது, ஸ்ரீராமா. கிஷ்கிந். 5 : 18.

என்ற அக் குரக்கு வேந்தை இராமனும் இரங்கி நோக்கி
உன்றனக் குரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்னாள்
சென்றன போக்கி மேல்வந் துறுவன தீர்ப்பல் அன்ன
நின்றன எனக்கு நிற்கு நேரென மொழியும் நேரா.- என்பது, கம்பராமாயணம், மராமரப்படலம், 64.

ஒத்த சுகதுக்கங்களையுடையவர்களாய் இருந்தார்களேயாகிலும் பசித்தாரே உண்ணவேணும் அன்றோ!
அப்படியே, அவர்கள் ஓலக்கமிருக்குமத்தனை; இருப்பிடம் என் கையாகவேணும்.
அவன் திருமுடிக்கு ஆபரணமான என்னுடைய கையை உங்களுக்குப் பாதபீடம் ஆக்குகிறேன்.
“கிருஷ்ணனுடைய தோளில் கொடிபோன்ற தனது கையைக் கொடுத்தாள்” என்னுமாறு போலே,
அவனுக்கு எல்லாப்பொருள்களையும் கொடுக்கும் கை
“ததௌ பாஹு லதாம் ஸ்கந்தே கோபீ மதுநிகாதிந:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13. 54. என்றது, வைத்தால் என்னாமல்,
“ததௌ” என்கையாலே, பலகாலம் ஆசைப்பட்டவனுக்கு எல்லாச்சொத்துக்களையும் தானம் செய்தாள் என்பது போதரும்.

பரியங்க வித்யையிற் சொல்லும் படுக்கையிலே இருப்புப் போலும் அன்றே, இவள் கையில் இருப்பு.
இவள் “அணி மிகு தாமரைக் கை” என்னுமது அவனுக்கும் உண்டே அன்றோ.
மெய் அமர்காதல் சொல்லி, கிளிகாள்! விரைந்து ஓடிவந்து, என்கை இருந்து நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ! என்கிறாள்.
அது என்? போகிறபோதே லாலநம் பண்ணிவிட்டாலோ? என்னில்,
அதற்குக் கைம்முதல் உண்டாகவேணுமே? “துக்கத்தால் மிக இளைத்திருக்கிற அவயவங்கள்”
“யதா தம் புருஷவ்யாக்ரம் காத்ரை: சோகாபிகர்சிதை:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3.
என்றும், “இட்டகால் இட்டகையளாயிருக்கும்” – திருவாய். 7. 2 : 4.-என்றும் அன்றோ இவள் கிடக்கிறது.
இனித்தான் கொண்டாடுகைக்கு ஓலக்கம் இருப்பாரும் வேணுமே!
“எம்மின்முன் அவனுக்கு மாய்வராலோ” –திருவாய். 9. 9 : 5. அவர்களும் – தோழிமார்களும்.-என்றே அன்றோ அவர்களும் கிடக்கிறது.

நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ –
“இந்த உடலின் சேர்க்கை எல்லாப் பொருளுமாம்” என்று கொடுக்கைக்கு உடல் இல்லையே இவளுக்கு.-உடல் இவளது இல்லையே
“ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து”-என்பது, ஸ்ரீராமா. சுந். 4. 5 : 6. என்றது, அவன் ஸ்வதந்திரனாகையாலே
கொடுத்தான்; இவள் பரதந்திரப்பட்டவள் ஆகையாலே நாயகனுக்கு ஒழியப்பிறர்க்குச் சரீரத்தைக் கொடுக்கப் போகாதே அன்றோ என்றபடி.

நெய்யோடே கூடின இனிய அடிசிலை நாள்தோறும் பாலோடேகூட நான் தர, அதனை உண்டு நீங்கள் என்னை உஜ்ஜீவிப்பிக்கவேணும்.
“உண்ணும்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்று இருக்கக்கூடிய இவள்,
இவை உகப்பது தேடி இடுகிறாள் அன்றோ. இதனால், என் சொல்லியவாறோ? எனின்,
பகவத்விஷயத்தில் உபகாரபரராயிருப்பார்க்கு, ‘உண்பதில் ஒருகை பகுந்திட்டோமாகில் செய்யலாவதுஉண்டோ?’ என்று கைவாங்குமதன்று;
அவர்கள் விரும்பினவற்றையே தேடி இடவேணும் என்னும் விசேடப் பொருளைத் தெரிவித்தபடி.
“எந்தப் புருஷன் எதனை அன்னமாக உடையவனாயிருக்கிறானோ அவனுடைய தெய்வமும் அதனையே
அன்னமாக வுடைத்தாயிருக்கிறது”
“இதம் புங்க்ஷ்வ மஹாராஜ ப்ரீதோ யதஸநாவயம்
யதந்ந: புருஷோ பவதி ததந்நா: தஸ்ய தேவதா:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 103 : 30.
என்னலாவது அவன் பக்கல்.
நிச்சல் –
சேர்ப்பது ஒருநாளே, இவர்களுக்குப் பின்பு அநுபவம் நித்தியமாயிருக்கிறபடி.
“எந்த நாதமுனிகளுடைய இரண்டு திருவடிகள் இம்மை மறுமை என்னும் இரண்டு உலகங்களிலும்
எப்போதும் என்னைக் காப்பாற்றும் பொருள்களோ”
“நாதாய நாதமுநயே அத்ரபரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஸரணம் மதீயம்”-என்பது, தோத்திர ரத்தினம்,– 2.என்னுமாறு போலே.
கை அமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக்கண்டு –
உண்டாரை உண்ணுவிக்கத் தேடுகிறாள் அன்றோ. இதனால் என் சொல்லியவாறோ? எனின்,
இவர்க்கு முன்னே இவர் விரும்பிய பொருள், இவரைப் பற்றினார்க்கு முற்பட்டிருக்கிறபடியைத் தெரிவித்தபடி.
“வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்.- நான்முகன் திருவந். 18.-”
எப்போதும் கை கழலா நேமியானாய் இருத்தலின் ‘கையமர் சக்கரம்’ என்கிறது.
என் சக்கரத்து கனிவாய்-
கையும் திருவாழியுமான அழகினைக் காட்டுவது முறுவலைக் காட்டுவதாய் என்னைத் தனக்கே உரிமை ஆக்கினவன்.
பிரிந்துபோகிறபோது ‘இவள் சத்தை கிடக்கவேணும்’ என்று நினைத்துச் செய்த புன்முறுவலுக்காயிற்று இவள் தோற்றது.
என் கனிவாய் –
திருவாழிக்கு முற்றூட்டு ஆயிற்றுத் திருக்கை; தமக்கு முற்றூட்டு திருப்பவளம்.
அவன் ஜீவனத்தை நித்யமாக்கினான், என் ஜீவனத்தைக் காதா சித்கமாக்கினான்.
அவனுக்கே கையடைப்பு ஆயிற்றே. கைமேலே இடுமே.
கண்டு – எனக்குப் போலே நினைப்பிற்கு விஷயமாமளவு அன்றே உங்களுக்கு.
அன்றிக்கே, இவற்றைக் கண்களாலே காணுதல் என்னுதல். அன்றிக்கே, இவற்றைக்காணுதல் அன்றோ இவளுக்கு என்னுதல்;
தொட்டாரைத் தொடுதல், கண்டாரைக் காணுதல் அன்றோ இவளுக்கு.
“வாஹி வாத யத: காந்தா தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருஸ
த்வயி மே காத்ர ஸம்ஸ்பர்ச: சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:”
என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 9. என்றது, பிராட்டியினுடைய ஸ்பரிசம் காற்றுமூலமாக ஸத்வாரகமானாற்போலே, காட்சியும் ஸத்வாரகம் என்றபடி.

மெய் அமர் காதல் சொல்லி-
அவன் திருமேனியிலே நான் அணையவேண்டும்படியான காதல் என்னுதல்;
என்னுடம்போடேஅவன் அணையவேண்டும்படியான காதல் என்னுதல்.
“துக்கத்தால் அதிகமாக இளைத்திருக்கிற அவயங்களால் நன்றாகத் தொடும்படி” என்னக்கடவதன்றோ.
‘நம் சத்தை கிடக்கக் கிடக்கும் அன்றோ’ என்றாதல்,
‘குணஞானத்தாலே தரித்திருக்கிறாள்’ என்றாதல் நினைத்திருக்குமது அல்ல என்று சொல்லுங்கோள்.
அங்ஙனேயும் தரித்திருந்தார் உண்டே யன்றோ; மாயா சிரசைக் காட்டின அன்றும், பிராட்டி, உலகத்தாரோடு ஒக்கக் கண்ணநீர் விழவிட்டு,
‘அதுவேயானாலும் அவர் உளராகில் அல்லது நம்சத்தை கிடவாது’ என்று தன்னைக் கொண்டு அறுதியிட்டுத் தரித்திருந்தாள் அன்றோ.
“சூரியனிடத்துள்ள ஒளியைப்போன்று, நான் இராகவனை விட்டு நீங்கேன்” என்றாள் அன்றோ.
“ஸக்யா லோபயிதும் ந அஹம் ஐஸ்வர்யேண தநேந வா
அநந்யா ராகவேண அஹம் பாஸ்கரேண ப்ரபா யதா”-என்பது ஸ்ரீராமா. சுந். 21. 15
சூரியன் உண்டாகில் அல்லது ஒளியும் இல்லை அன்றோ.
இங்ஙனே இருக்கச் செய்தே சில காரணங்களாலே வரும் கூடுதல் பிரிதல்களே அல்லவோ உள்ளன.
திரிவியமாயிருக்கச் செய்தேயும் பிரகாரமாகின்ற தன்மை உண்டே;அப்படி அன்றே இங்கு;
ஜீவாத்மா அப்ருதக் சித்த விசேஷணம் பரமாத்மாவுக்கு -த்ரவ்யமாக இருந்தாலும் – –
உடம்பிலே அணைந்து பிரிந்தார்க்கு உடம்பை அணைத்து அல்லது நிற்க ஒண்ணாதே அன்றோ.
ஸ்வரூபத்தில் அணைந்து பிரிந்து இருப்பது சீதா பிராட்டி இவளோ ரூபத்தில் அணைந்து பிரிந்தவள் அன்றோ
மெய் அமர்காதல் –
‘தம்மைப்போலே பொய்யுமாய் நிலைநில்லாததுமான காதல் அன்று எங்களது என்று சொல்லுங்கோள்’ என்று பிள்ளான் அருளிச்செய்வர்.
சத்தியமான காதல் என்றபடி.
அன்றிக்கே, ஆத்மாவோடே ஒன்றுபட்டிருக்கின்ற காதல் என்றுமாம்.
மெய் என்று ஆத்மாவாய், ஆத்மாவோடே பொருந்தின காதல் என்றபடி.
“மெய்ம்மையே மிக உணர்ந்து” –திருமாலை, 38-என்கிற இடத்தில், மெய் என்றது, ஆத்மாவை அன்றோ சொல்லிற்று.
சொல்லி –
தந்தாமுக்கு இல்லாதவை பிறர்வாயிலே கேட்டறிய வேணுமித்தனை அன்றோ.
தமக்கு உண்டாகில் இப்படித் தூதுவிடப் பார்த்து இராரே. காட்சிக்கு மேலே ஓர் ஏற்றம்போலே காணும் தன் நிலையை அவனுக்கு அறிவித்தல்.

கிளிகாள் விரைந்து ஓடி வந்து –
பிராட்டியைக் கண்டு மீண்ட பின்பு முதலிகள் வந்து பெருமாளை உகப்பித்தாற்போலேயும்,
பெருமாள் மீண்டு எழுந்தருளுகிறபோது திருவடி முன்னே வந்து ஸ்ரீபரதாழ்வானை உகப்பித்தாற்போலேயும், நீங்கள் முன்னே வரவேணும்.
கிளிகாள் விரைந்து ஓடி வந்து –
அறிவித்துக் கூட வர இராதே கொள்ளுங்கோள்.
திருவடி பிராட்டியைத் தேடிப் போகிற போது மஹாராஜரோடே செய்த காலவரையறையை இக் கரையிலே கழித்துப் பின்பு
இலங்கையிலே போய்ப் புக்கு எங்கும் தேடி, அவளைக் கண்டு, பின்னர்
‘இக் காட்சியால் பிரயோஜனம் உள்ளது அவ் வுடம்பு உள்ளபோதே சென்று அறிவிக்கில் அன்றோ’ என்று ஒரு நாளே வந்தான் அன்றோ.
அதற்குக் காரணம், போகிறபோது இவர் ஆற்றாமையைக் காண்கையாலே, ‘நாம் வருமளவும் இவர் உயிர் தரித்திருத்தல் அரிது’ என்று இருந்தான்;
பெருமாள் தாமும், ‘பிள்ளாய்! நீ இருக்கிறபோதைத் தரிப்புக்கொண்டு நீ போனாலும் இப்படி இருப்பன் என்று இராதேகாண்;
என் அளவு அறிந்து காரியம் செய்’ என்றார் அன்றோ. அன்றிக்கே, விரைந்து ஓடி வந்து என்பதற்கு,
நீங்கள் முற்பட வந்த பிரீதி பொறுத்தால், பின்பு அவன் வரவாகவேணும் என்னுதல்.
அன்றிக்கே, அவனுடனே கூட வரில் வாய்புகுநீராய் உங்களைக் கொண்டாட ஒண்ணாது;
ஆன பின்பு நான் முறைகெடாமல் அநுபவிக்கும்படி வாருங்கோள் என்னுதல்.
உபகாரகரான உங்கள்காலிலே முற்பட விழுந்தபின்பு அவன் காலிலே விழும்படி பண்ணுங்கோள்.
ஆகையால் அன்றோ, நம்முதலிகள் குருபரம்பை முன்னாகத் துவயத்தை அநுசந்தானம் செய்கிறது
இனித்தான், சிஷ்யனானவன் ஆசாரியனுக்குத் தொண்டு செய்யலாவது, அவன் சரீரத்தோடு இருக்கிற நாள்களிலே அன்றோ;
பின்பு உள்ளன எல்லாம் பகவானுடைய அனுபவத்திலே சேருமே அன்றோ இருவருக்கும்.
அவன் ‘எனக்கு’ என்னும் நாளிலே அன்றோ, இவன் ‘உனக்கு’ என்று கொடுக்கலாவது?

இவள் பரதந்த்ரன் ஆகையால் நாயகனைத் தவிர வேறு எவருக்கும் உடம்பு கொடுக்கப் போகாதே
அவன் நிலை அப்படி இல்லையே -என் கை இருந்து -என் குழல் மேல் –ஊதீரே-என்றும் சொல்வது பொருந்துமோ என்னில்
தலை யல்லால் கைம்மாறு இல்லை -அவனை வணங்கும் தலையால் -தலையில் வணங்குமாம் கொலோ -போலே
நமஸ்கரித்ததையும் தலையால் வணங்கியதும் -சந்தேசம் கொடுத்த பிராமனருக்கு ஸ்ரீ ருக்மிணி பிராட்டி -நநாப -வணங்கி -போலே –
அன்யாபதேசத்துக்கு இதனால் விரோதம் இல்லை -ஸ்வா பதேசத்தில் -ஆச்சார்யருக்கு ஜீவன் உடம்பு கொடுக்கக் கூடாதா என்னில் –
சேதன ஈஸ்வரர்களுக்கு –ஆச்சார்யர்–ஈஸ்வரர் -இருவருக்கும் -ஆழ்வார்-நாயகி -கைங்கர்யம் -போக்யதை -தானே
சாஸ்திரம் சஸ்த்ரம் கொண்ட இருவருக்கும் கைங்கர்யம் பண்ணக் குறை இல்லையே

————————————————————————————————–

ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்
சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே.–6-8-3-

என் பக்கல் நின்றும் போகும் நீங்கள்
ஆஸ்ரித விரோதி நிரசன சீலன் கிருஷ்ணன் -சிரசா வஹித்த –
நான் அலங்கரித்து இருக்கும் பூவில் மதுவை குடிமின்
ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?-தேனைப் பருக வேணும் -திரும்பி வந்ததும் அவன் வருவான் விஸ்வாசம்-தேனும் பெருகும்
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்-வண்டினங்களும் கூட்டம் கூட்டமாய் -கிருஷ்ண அபிப்ராயத்தால் பாண்டவர்களே மன்னர்கள்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்-வெள்ளைப் புரவி -தர்ச நீய கதி -ஓடி -இல்லாமல் –
சித்திரை தேர் போலே கோ ரதம் சித்திரை தேர் -தை தேரில் தான் மிதுனம் –
குதிரைகள் ஆடும் குதிரை -போலே -ஓடுகிற ஓட்டம் ஆடுவது போலேவே இருக்கும் -சேனையை தூளி சேஷமாம் படி அழித்த பிரான் –மகோபகாரன்
சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே-அவன் திருத் துழாய் தேன் பருகிய வாய் மாறாமல் வந்து –
ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?-தேனைப் பருக வேணும் -திரும்பி வந்ததும் அவன் வருவான் விஸ்வாசம்-தேனும் பெருகும்
–அவனுக்கு சர்வ போக்யமான என் குழலில் மது பான உத்தியோகம் போலே ஊத வேண்டும்

சேர்ந்திருக்கின்ற வண்டுக்கூட்டங்களே! குருநாட்டினையுடைய பாண்டவர்களுக்காக, வெற்றிபொருந்திய குதிரைகள் பூட்டிய நீண்ட தேரினாலே
சேனைகள் சாம்பலாகும்படி அழித்த கண்ணபிரான் அணிந்து கொண்டிருக்கின்ற குளிர்ந்த திருத்துழாயிலேயுள்ள தேனைப் புசித்த பரிசுத்தமான
தேன் பொருந்திய வாய்களைக்கொண்டு, ஓடிவந்து என்கூந்தலின்மேல் உள்ள ஒளிபொருந்திய சிறந்த பூக்களில் ஊதுவீர்களாக.
வண்டு இனங்காள்! ஐவர்கட்காய்ப் படை நீறுஎழச் செற்ற பிரான் துளபம் உண்ட மது வாய்கள் கொண்டு ஓடி வந்து சூழல்மேல் மா மலர் ஊதீர் என்க,
வாய்கள்கொண்டு-வாய்களால்.

சில வண்டுகளைக் குறித்து அவனுக்கு என் நிலையை அறிவித்து என் தலைமேலே பொருந்தி வாழுங்கோள் என்கிறாள்.

ஓடி வந்து-
கடுக வரவேணும். என் அளவு கண்டு போகிற நீங்கள், நான் உள்ளபோதே வந்து உதவவேணும்.
என் குழல்மேல் –
பேரளவுடையார் படும் ஈடுபாட்டினைக் கண்டு, தன் குழலின் வீறுதான் அறிந்திருக்குமே.
‘சூடிய தண் துளபம் உண்ட தூ மதுவாய்கள் கொண்டு ஓடி வந்து என் குழல்மேல் ஒளி மா மலர் ஊதீரோ என்பான் என்?
காரியம் செய்து சமைந்தால் கைக்கூலி கொடுப்பாரைப்போலே? என்னில்,
இவற்றுக்கு இவள் குழலிலே விஷயம் உண்டாகவேணுமே. இப்போது மது மாறிச் சருகாய் அன்றோ கிடக்கிறது;
இவை மீண்டால் அன்றோ இத் தலையில் செவ்வி பிறப்பது.
என் குழல் மேல் –
அவனுக்குத் தூதுபோய் வந்தாரிற் காட்டிலும் இவளுக்குத் தூதுபோனார்க்கு உண்டான தன்னேற்றம் இருக்கிறபடி.
அங்கு மஹாராஜருடைய மதுவனம் அன்றோ அழிந்தது; இங்கு அவன் காவற்காட்டினை உங்களுக்குத் தருகிறேன் என்கிறாள்.
அளகாடவி அன்றோ. தலையான பரிசில் அன்றோ இதுதான். -தலைக் குழல் என்னும் காடு -தலையான பரிசு
ததிமுகன் முதலாயினோர்களுடைய விலக்குகையும் இல்லை அன்றோ இங்கு.
சாந்தனான திருவடி அன்றோ “நான் உங்களுடைய பகைவர்களைத் தடுக்கிறேன்” என்றான்
“அவ்யக்ரமநஸோ யூயம் மது ஸேவத வாநரா:
அஹம் ஆவாரயிஷ்யாமி யுஷ்மாகம் பரிபந்திந:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 62 : 2.

பிராட்டியைக்கண்டு வந்தமை அறியாதிருக்கச்செய்தேயும் மதுவனம் அழிந்தமையைக் கண்டு, மஹாராஜருடைய வால்
ருசியமூகமலையிலே அறைந்ததே அன்றோ. ‘நம்மோடு செய்துபோன காலம் கடந்திருக்கச்செய்தேயும் மதுவனம் அழிக்கும்போது
பிராட்டியைக் கண்டார்களாகவேணும்’ அன்றோ.
‘பிராட்டியைக் கண்டதனாலுண்டான உவகை, நடுவில் மதுவனம் இன்றாகில் இராஜபுத்திரர்கள் முதுகோடே போம்’ என்று பட்டர் அருளிச்செய்வர்.

என் குழல்மேல் ஒளி மா மலர் ஊதிரோ –
என்றும் இவள் குழலில் மதுபானம் செய்வன வண்டுகளே அல்லவோ.
தூவி அம் புள்ளுடைத் தெய்வ வண்டாதல்-திருவாய்.-9. 9 : 4.– இவை யாதல்.
அவனேயோ ஒத்த தரத்தைத் தரவல்லான், நானும் உங்களுக்கு அவனோடு ஒத்த தன்மையைத் தருகிறேன் என்கிறாள். என்றது,
“ஸோஸ்நுதே – அந்த முக்தன் பரமாத்வோடு அநுபவிக்கிறான்” என்கிறபடியே, உங்களையும் அவனையும்
ஒரு கலத்திலே ஊட்டுகிறேன் என்கிறாள் என்றபடி. தலையான ஊண் அன்றோ.
என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ –
உங்கள் வரவாலே தளிர்த்திருக்கிற என்னுடைய குழலில் ஒளியையுடைத்தாய் சிலாக்கியமான மலரில் மதுவைப் பானம் செய்யீரோ?
மதுவின் நிறைவாலே, கிண்ணகத்தில் இழிவாரைப் போலே தனித்து இழியமாட்டாமல் நின்று பறக்கிறபடியைத் தெரிவிப்பாள் ‘ஊதிரோ’ என்கிறாள்.
உங்கள் காரியமும் பிறரைப் பாதுகாப்பதுமானால் ஆறி இருக்கிறது என்? என்கை,
கூடிய வண்டினங்காள் –
மஹாராஜரைப்போலே படைதிரட்ட வேண்டாஅன்றோ உங்களுக்கு என்னுடைய ரக்ஷணத்திலே ஒருப்பட்டு முன்பே திரண்டிருக்கப் பெற்றது அன்றோ.
இளையபெருமாள் கிஷ்கிந்தா நகரத்தின் கோட்டை வாசலிலே சென்று குணகீர்த்தனம்செய்த பின்பன்றோ படை திரட்டிற்று.

குருநாடுடை ஐவர்கட்காய் –
பாண்டவருடைய மனைவி குழல் பேணாமையைக் கண்டு வருந்துமவன் கண்டீர்.
“மைத்துனன்மார் காதலியை மயிர்முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி” –பெரியாழ்வார் திருமொழி, 4. 9 : 6.-என்கிறபடியே,
இராச்சிய முடையார் பாண்டவர்களே; நாம் அவர்களுக்கு ஏவல் தேவை செய்து நிற்கிறோம் என்றாயிற்று அவன் நினைத்திருப்பது.
குருநாடுடை ஐவர் –
துரியோதனாதியர்கள் கிடந்தானை கண்டு ஏறினதைப்போன்றது அன்றோ.
“நாடுடை மன்னர்”-திருவாய். 6. 6 : 4.-என்கிறபடியே, இராச்சியம் அவர்களுடையதே,
‘துரியோதனாதியர்கள் இராச்சியம் பண்ணுகை வல்லடி’ என்றிருக்கும் பகவானுடைய அபிப்பிராயத்திலே சொல்லுகிறார்.
அவன் நினைவேயன்றோ இவர்க்கு நினைவு.
நாடுடையவர் -அவர்களோ -கிருஷ்ணன் அன்றோ -ராஜ்ஜியம் உடையார் பாண்டவர்களே –
குரு நாடு உடையவர்கள் துரியோத நாதிகள்-கிடந்த யானை மேல் ஏறி -ஓய்வு எடுக்க -அதின் மேல் ஏறி -அரசர் நான் என்று சொல்வது போலே –
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -ஆழ்வார் அபிப்பிராயமும் கிருஷ்ணன் அபிப்பிராயமே -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
ஆடிய மா நெடும் தேர்-
மனோகரமாம்படி சஞ்சரிக்கின்ற குதிரை பூண்ட பெரும் தேரினை உபகரணமாகக் கொண்டு. என்றது,
“பெரியதான தேரில் இருந்தார்கள்” “ததை: ஸ்வேதை: ஹயை: யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ”-என்பது, ஸ்ரீ கீதை, 1 : 14.
என்னும்படி இருக்கிற தேரைக்கொண்டு என்றபடி.
மாயப்போர் தேர்ப்பாகன் அன்றோ -போர்பாகு தான் செய்து ஐவரை வெல்வித்தானே -சித்திர தேர் வலவன் அன்றோ –
படை நீறு எழச்செற்றபிரான்-
ஆயுதம் எடாமைக்கு அநுமதி பண்ணுகையாலே, தேர்க்காலாலே சேனையைத் துகள் ஆக்கினான்.
தன்னை அழிய மாறியும் பரோபகாரம் செய்தலையே சுபாவமாகவுடையவன் ஆதலின் ‘செற்றபிரான்’ என்கிறாள்.
இதனால், தாழ்த்தது ஒளபாதிகம் என்று இருக்கிறாள் என்றபடி. அருச்சுனன் முதலாயினோர்களும் சஸ்திரங்களைப் போன்றவர்களே யாவர்
“ஏ அருச்சுனா! இவர்கள் முன்பே என்னாலேயே கொல்லப்பட்டுவிட்டார்கள்; நீ எனக்கு ஓர் ஆயுதம் போலே நிமித்தமாக இரு”

“தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யஸோலபஸ்வ
ஜித்வா ஸத்ரூந் புங்க்ஷ்வராஜ்யம் ஸம்ருத்தம
மயைவ ஏதே நிஹதா: பூர்வமேவ
நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசிந்”- என்பது, ஸ்ரீ கீதை, 11 : 33.–என்று தானே அருளிச்செய்தான் அன்றோ.

சூடிய தண் துளபம் உண்ட –
சாரதியாய் நின்று தேரினை ஓட்டுகிறபோது வைத்த வளையத்திலே மதுவைக் குடிக்கிற வண்டுகள்,
அவதாரங்களில் ஏதேனும் ஒன்றாலே வளையம்வைத்தாலும், அந்த நிலையை அடைந்து அநுகூலிக்கிறது திருத்துழாயாகக் கடவது,
தூமது வாய்கள்கொண்டே –
அவ்வளையத்தில் மதுவைக் குடித்துச் சுத்தமாய் இனிதான வாய்களைக் கொண்டு.
அன்றிக்கே, வாய்கள்கொண்டே என்பதற்கு, இனிதான பேச்சினைக் கொண்டு என்னலுமாம்.
தூ மது வாய்கள் கொண்டு ஓடி வந்து என்குழல்மேல் ஒளி மா மலர் ஊதீரோ –
பரிசுத்தமான -உண்ட உண்கையாலே-முதல் அர்த்தம் –மது இனிதான –
இனிதான பேச்சு -வந்து கொண்டே இருக்கிறார் -அனுகூல -ஐயன் வந்தனன் ஆர்யன் வந்தனன் -வாய்கள் -வார்த்தை லஷனை-
“வாஹி வாத யத: காந்தா தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருஸ த்வயி மே காத்ர ஸம்ஸ்பர்ச: சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:”-என்பது, ஸ்ரீ ராமா. யுத். 5 : 6.

“வாஹிவாத – பார்க்கப் படாமையாலே நீ பெற்ற பேறு என்?
த்வயி மே, காத்ர ஸம்ஸ்பர்ஸ:-நம்முடைய கரணங்களுக்குப் பரிசம் உன்பக்கலிலே ஆயிற்றே. நமக்குத் தொட்டாரைத் தொட்டாயிற்றே.
சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:-காணுதலோடு ஒத்ததன்றோ எனக்கு ஸ்பரிசமும்” -அற்றது பொருந்தும்படி வார்த்தை சொல்ல வல்ல வாயைக் கொண்டு.
“காணப்பட்டாள் சீதை” “த்ருஷ்டா ஸீதா” என்பது, ஸ்ரீராமா. சுந். 65 : 10.
என்றாற்போலே. என்னையும் மதுபானம் பண்ணுவித்து நீங்களும் மதுபானம் பண்ணுங்கோள்.
நிர்பயம் -காற்று காண முடியாதே -வாயு பகவான் போலே இல்லை -உன் மூலம் சீதையை அணைக்கப் பெற்றேனே
-சந்த்ரனை -உன்னைக் கண்டால் போலே -சொல்ல வேண்டுமே -காற்றை பார்த்து கண்டாரை கண்டால் போலே –
சந்தரன் தாரகம் போலே உன் ஸ்பர்சம் தாரகம் -ஸ்பர்சம் போலே தர்சனம் –வாயுவைத் திருஷ்டாந்தம் ஆக்கி -என்றுமாம் –
த்ரௌபதி வார்த்தையால் இற்று விழுந்த மாம்பழம் ஒட்டிக் கொண்டதே போலே –

———————————————————————————————–

தூமது வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!
பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற
மாமது வார்தண் துழாய்முடி வானவர் கோனைக்கண்டு
தாம்இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4-

ஸூ ரி போக்யமான -வைகுண்ட நாதன் கண்டு –
தூமது வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!வண்டுகள் -அவாந்தர பேதம் -தேனைக் கொண்டு நீயே பருகி
–தேன் வாயில் ஒட்டிக் கொண்டு இருக்கும் தும்பி நிரூபகம் –
பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற-விஸ்லேஷ ஹேது வான பாபங்கள்
மாமது வார்தண் துழாய்முடி வானவர் கோனைக்கண்டு-வைகுண்ட நாதன் -அடுத்த பாசுரம் எனக்குச் சென்றாகிலும் கண்டு அந்தர்யாமி
–பெரிய வெள்ளமான தேனை சொரியும் –
தாம்இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே-யாம் -பாட பேதம் -செய்வது தக்கவாறு தயை ஆன்ரு சம்சயம் –
இந்த அவஸ்தை கண்ட நீங்கள் -அவன் மேன்மைக்கு தக்கபடி -உபசரித்து -தர்ம சாஸ்த்ரம் -படி நடக்க -யாம் -உசத்தி பேச வேண்டுமே
-அப்பொழுது தான் இந்த முல்லையும் நானும் புதுக் கணிப்பு பெறுவோம் –

நான் வளர்க்கிற முல்லைகளின்மேலே தங்கியிருக்கின்ற தும்பிகளே! பூக்களிலேயுள்ள மதுவினை உண்ணுவதற்குச் சென்றால், பரிசுத்தமான இனிய
வார்த்தைகளோடு சென்று, தீயவினைகளையுடைய என்னிடத்தில் பொய்யான கலவிகளைச்செய்து நீங்கிய, சிறந்த மதுவானது ஒழுகுகின்ற குளிர்ந்த
திருத்துழாய்மாலையைத் தரித்த திருமுடியையுடைய நித்தியசூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானை நீங்கள் கண்டு, உமக்கு இதுவோ தக்கவாறு என்று கூறவேண்டும்.
தும்பிகாள்! நுங்கட்குச் செல்லில், வாய்கள்கொண்டு சென்று கண்டு நாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் என்க. மது – இனிமை. வாய்கள் – வார்த்தைகள்.
வந்து, என்பது, இடவழுவமைதி; சென்று என்பது பொருள்.
நாம் : ஈண்டு, முன்னிலைக்கண் வந்தது, நுங்கட்கு என்பதற்கு, நீங்கள் என்பது பொருள். கண்டீர்: முன்னிலையசைச்சொல்.

என்னை நோவுபடுத்திச் சென்று எட்டாநிலத்திலே ஓலக்கம் இருக்கை தக்கோர்மையோ என்று திருநாட்டிலே சென்று
சொல்லுங்கோள் என்று சில தும்பிகளைக் குறித்துச் சொல்லுகிறாள்.

தூமது வாய்கள்கொண்டு வந்து –
பரிசுத்தமாய் இனிதான பேச்சையுடைய வாயைக்கொண்டு சென்று. வந்து என்றது, சென்று என்றபடி.
அன்றிக்கே, துக்கத்தையுடையவர்களுக்கு உஜ்ஜீவனத்திற்குக் காரணமாய் இனிதுமான பேச்சினைக்கொண்டு என்னுதல்.
என் முல்லைகள்மேல் தும்பிகாள் –
உடன்கேடராய் ஒக்கப் பட்டினி விட்டுக் கிடப்பாரைப்போலே அன்றோ நீங்கள் கிடக்கிறது.
இவள் குழலில் பூவைப்போன்று, உத்தியானத்திலுள்ள பூக்களும் சருகாயன்றோ கிடப்பது;
“மரங்கள் எல்லாம் உலர்ந்து கிடந்தன” அபிவ்ருக்ஷா! பரிம்லாநா:” என்பது, ஸ்ரீராமா.அயோத். 59 : 4.-என்னுமாறுபோலே.
பூ மது உண்ணச் செல்லில் –
மதுவையே உண்பவைகள் ஆகையாலே பூக்கள் உள்ள இடம் தேடி மதுபானம் செய்யப்போகக் கடவீர்கோள் அன்றோ.
இவள் பக்கத்தில் உள்ளவை அன்றோ உறாவிக் கிடப்பன; அங்கு உள்ளவை எல்லாம் செவ்விபெற்றிருக்குமன்றோ;
மாமதுவார்தண்துழாய் முடி வானவர்கோன் அன்றோ. அவர்களில் இவனுக்கு வேற்றுமை,-வானவர்களில் கோனுக்கு -வாசி -கவித்த முடி -ஆதி ராஜ்ய சூசகம் –
கவித்தமுடியும் இட்ட மாலையுமே அன்றோ. இங்கு உள்ள வண்டுகள்போலே பட்டினி கிடக்கவேண்டா அன்றோ அங்கு உள்ளார்க்கு
மதுவார் தண் துழாய் –
விரஹத்திலும் ஊற்றுமாறாத இடம் காணும் அவ்விடம்.

பூ மது உண்ணச் செல்லில் –
இவள், தன்குழலிற் பூவும் வாடி மதுவும் வற்றினபின்பு இனி இந்த உலகில் உண்டாக மாட்டாது என்றிருக்கிறாள்;
இனி உலகத்தையுடைய சர்வேசுவரன் பக்கலிலே உண்டாகில் உண்டாமத்தனை என்று இருக்கிறாள்.
வினையேனை –
அவன் என்பக்கல் பேசின பேச்சுக்களையும் வியாமோகத்தையும் ‘மெய்’ என்று இருக்கும்படியான பாவத்தைச்செய்த என்னை.
வினையேனைப் பொய்செய்து –
‘கடுகப் பிரியில் இடிவிழுந்தாற்போலே இவள் முடியும்’ என்று பார்த்து,
‘நின்னைப்பிரியேன், பிரியிலும் ஆற்றேன்’ என்றாற்போலே இருக்க, அவன் பிரிவினை உணர்த்தினான் -தாத்பர்யம் அறியாமல் இருந்தேன் –
பொய்செய்து –
கலவிக் காலத்தில் குறைவு இருக்கிறபடி. பலகாலம் ஜீவிக்கச்செய்தேயும் ‘ஒரு கனவாய்ப் போயிற்று’ என்பர்களே அன்றோ,
பிரிவோடே முடிவு பெறுகையாலே. கனவு என்றும், இந்திரஜாலம் என்றும், பொய் என்றும் முடிவுபெறாத போகத்தைச் சொல்லக்கடவது.
சிரகாலம் கலந்து பிரிந்தான் -பிள்ளான் -எத்தனை வருஷம் கலந்தாலும் அபர்யார்த்தி பிறக்குமே
பொய்செய்து அகன்ற –
அகன்று போவதற்கு இட்ட வழி இருக்கிறபடி. என்றது, ‘கலவி’ என்று பெயரை இட்டு,-முடிவு போகக் கலவாதே வஞ்சித்து அகன்றான் என்றபடி.
மா மதுவார் தண்துழாய்முடி –
இங்கு உள்ளதும் அங்கே ஆகையாலே மது இரட்டித்திருக்கும் அன்றோ. தலையான மதுவுமே அதுதான்.
கலவியிலும் பிரிவிலும் ஒரு படிப்பட்டிருக்குமவனைக் கண்டு. -வானவர்கோனைக் கண்டு –
ராக த்வேஷம் தாண்டி அன்றோ இருக்கின்றான் -சுக துக்கம் சமே க்ருத்வா -அவிகாராய –சதைகரூபாயா —
தந்தாமைப் பேணுவார்க்கு உடம்பு கொடுத்திருக்குமவனைக் கண்டு. என்றது,
“த்வயி கிஞ்சித் ஸ்மாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம”-என்பது, ஸ்ரீராமா. யுத். 41 : 4
“நீ சிறிது ஆபத்தை அடைந்தாயாயின் சீதையால்தான்எனக்குப் பயன் யாது?” என்றமை தவிர்ந்து
பழைய உறவு கொண்டாடி இருக்குமவனைக் கண்டு என்றபடி.

நாம்-
குற்றத்தையுடையவனாகையாலே தன்குற்றத்தை நினைத்து, ஓலக்கம் இருக்கிறானாகப் பராக்கடித்து
நெருங்குவதற்கு அரியவனாயிருப்பான்; முதன்மை கண்டு கூசாதேநின்று, உம்மைக்காணும் என்பது
இப்படி விளித்தவாறே முகம் பார்க்கவேண்டிவரும்; அவன் பார்த்த முகம் மாறுதற்கு முன்னே, ‘இதுவோ தக்கவாறு’ என்பது.
“பிறர் துக்கத்தைப் பொறாமையாகிற மிக உயர்ந்த தர்மமானது தேவரீரிடமிருந்தே என்னால் கேட்கப்பட்டது”
“ஸ குருஷ்வ மஹோத்ஸாஹ க்ருபாம் மயிநரர்ஷப
ஆந்ருஸம்ஸ்யம் பரோ தர்ம: த்வத்தஏவ மயாஸ்ருத:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 41. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
என்னும்படி சிலர்க்குச் சொல்லிவைத்தீரே.
“காட்டுஈக்களையும், கொசுக்களையும், பாம்புகளையும் சரீரத்திலிருந்து ஓட்டமாட்டார்”,
“நைவ தம்ஸாந் – கீடாந் ந ஸரீஸ்ருபாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 42.3“
மாம்சத்தையும் புசிப்பது இல்லை, மதுவையும் குடிப்பது இல்லை” என்றவை எல்லாம் வடிவிலே கண்டோம் அன்றோ.
“அருந்து மெல்லட காரிட அருந்துமென் றழுங்கும்
விருந்து கண்டபோ தென்னுறு மோ என்று விம்மும்”- என்பது, கம்பராமாயணம்.

‘வடிவிலே கண்டோம் அன்றோ’ என்றது, மாமதுவார் தண்துழாய்முடியனாயிருக்கையைத் திருவுள்ளம்பற்றி.

இதுவோ தக்கவாறு –
பெண்கொலை புரிந்து வளையம்வைத்து ஓலக்கங் கொடுத்திருக்கையோ தக்கோர்மையாவது.
என்னவேண்டும் கண்டீர் –
இந்த ஓலக்கத்தையும் இவன் மேன்மையையும் கண்டு ‘இதனை எங்ஙனே அழிக்கும்படி?’ என்று நீங்கள் கிருபை கொள்ளலாகாது;
அவ்வளவில் என்னைப் பார்த்துச் சொல்லுங்கோள்.
நுங்கட்கே –
அவன் அல்லாத உங்களுக்கு இத்தனையும் செய்யவேணும். இல்லையாகில்,
இவ்வளவிலே முகங்காட்டின உங்களுக்கும் அவனுக்கும் வாசி இல்லை.
நுங்கட்கே –
என் முல்லைகள்மேல் தும்பிகள் அன்றோ! உங்கள் ஜீவனம் நீங்களே நோக்கிக் கொள்ளவேணும்.
அவன் பெண் கொலை புரிந்து சொரூபஹாநி பாராமல் ஓலக்கம் கொடுத்திருந்தான்;
நான் பாடோடிக் கிடந்தேன்; இனி உங்கள் சொரூபஹாநி நீங்களே போக்கிக் கொள்ளுங்கோள்.

————————————————————————————————-

நுங்கட்கு யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை
எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5-

பரத்வ த்வயம் -எங்குச்சென் றாகிலும் கண்டு -உதார ஸ்வ பாவன் -இதுவோ தகவு -அவன் பரிகரம் போலே செருக்கு அடிக்காமல்
-செங்கட் கருமுகிலைச் -அதி பரிச்சயத்தால் பராக்கு அடிக்காமல்
நுங்கட்கு யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!–உங்களால் பயன் -எனக்கு –
செங்கட் கருமுகிலைச் வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த-நானும் அறியாமல் சித்தம் கவர்ந்தான் -அபராத ஹேதுவான அந்த
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை-அழல விழிக்கும் -அழகைக் காட்டி அபஹரித்தான் –பரபாகம் -காள மேக
-பொன் மலை கருடன் -கார் முகில் அவன் -நினைத்தது முடித்த ப்ரீதியால் சிவந்த அதரம் –
தன் பேறாக கொண்டதால் -செழும் கற்பகம் -தன்னையே கொடுப்பானே
எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே-பர வ்யூஹ விபவ அர்ச்சை அந்தர்யாமி எங்கு சென்றாகிலும் –

யான் வளர்த்த கிளிகாள்! உங்களுக்கு யான் ஒன்று சொல்லுகிறேன் வாருங்கோள்; கொடிய கண்களையுடைய பெரிய திருவடியை ஊர்ந்து வந்து,
தீவினையேனாகிய என்னுடைய நெஞ்சினைக் கவர்ந்த சிவந்த திருக்கண்களையுடைய கரிய மேகம் போன்றவனை, சிவந்த திருவாயினையுடைய
செழுமைபொருந்திய கற்பகம் போன்றவனை எங்கே சென்றாகிலும் கண்டு, தகுதி இதுவோதான் என்று சொல்லுங்கோள்.
வெங்கண் – தறுகண்மையுமாம். ஊர்ந்து வந்து கவர்ந்த கருமுகில் என்க.

தன்னுடைய கிளிகளைக் குறித்து, எங்கேனும் சென்றாலும் அவனைக் கண்டு
இதுவோ உம்முடைய தக்கோர்மை இருக்கும்படி என்னுங்கோள் என்கிறாள்.

நுங்கட்கு யான் உரைக்கேன் –
யாருக்குச் சொல்லும் வார்த்தையை யாருக்குச் சொல்லுகிறது? தனக்கு முன்னே ஆற்றாமையோடே அன்றோ அவைதாம் இருக்கின்றன;
ஆற்றாமை சொல்லுவியாதது இல்லையன்றோ.
நுங்கட்கு யான் உரைக்கேன் –
உங்களுக்குச் சொல்லுமது அன்று; நான் சொல்லுமது அன்று. வியசனத்துக்கு உரியவர்கள் இருக்க, வேறே சிலர் வார்த்தை சொல்லுமாறு போலே
வம்மின் –
‘இவளைப் பிழைப்பித்தோமாம் விரகு ஏதோ?’ என்று சிந்திக்கிற உங்களுக்கு ஒரு விரகு சொல்ல வாருங்கோள்.
யான் வளர்த்த கிளிகாள் –
என்வயிற்றிலே பிறந்த உங்களுக்கு அவன் பரிகரம்போலே செருக்கு அடித்திருக்கக் காலம் உண்டோ?
செருக்கு அடித்திருக்கப் பிறந்தீர்கோளோ!
நுங்கட்கு –
“சுகமும் துக்கமும் நமக்குச் சமம்” ஏகம் துக்கம் சுகஞ்ச நௌ” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 5 : 18.-என்றிருக்கிற உங்களுக்கு.
யான் –
உங்கள்மேலே என்னுடைய எல்லாப் பாரங்களையும் வைத்திருக்கிற நான்.
உரைக்கேன் –
நீங்கள் அறியாதது உண்டாய்ச் சொல்லுகிறேன் அல்லேன்; ஆற்றாமையாலே சொல்லுகிறேன்.
வம்மின் –
முன்கை மூன்று காதமாய் இருக்கிறபடி. -வருக என்று கை கூப்பி வணங்கி -கிளி மிகவும் கிட்ட வர கேட்டது போலே –
யான் வளர்த்த –
நெய்யமர் இன் அடிசில் நிச்சல் பாலொடும் ஊட்டி வளர்த்த.
கிளிகாள் –
“வளர்த்ததனால் பயன் பெற்றேன்”திருநெடுந்தாண்டகம், 14.– என்கிறபடியே,
அவன் திருநாமங்களை நீங்கள் சொல்லக் கேட்டிருக்கவும் அமையும் அன்றோ;
அதுதானே “கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்” திருவாய். 9. 5 : 8-என்கிறபடியே,
ஆற்றாமைக்குக் காரணமாகையாலன்றோ உங்களை அவன்பக்கல் போக விடத் தேடுகிறது.

வெம்கண் புள் ஊர்ந்து வந்து –
வெவ்வியவான கண்களையுடைத்தான புள்ளை நடத்திக்கொண்டு வந்து.
வருகிறபோதே வழியில் விரோதிகளைப் போக்குகையிலே சினத்த கண்களை யுடையவனாதலின் ‘வெம்கண்’ என்கிறது.
அன்றிக்கே, பிரித்துக்கொண்டு போகிற போது கண்பாராதே பிரித்துக்கொண்டு போனவனாதலின் ‘வெம்கண்’என்கிறது என்னுதல்.
“அங்குரூரன் கொடிய மனமுடையவன்” என்னுமாறு போலே. “அக்ரூர: க்ரூரஹ்ருதய:” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 30.
-வெம்கண் புள் ஊர்ந்து வந்து –
பட்டம் கட்டின யானையிலே ஏறிக் காதலியைக் கிட்டும் இராஜபுத்திரனைப் போலே,
“அருளாழிப் புட் கடவீர் அவர் வீதி ஒருநாள்” திருவாய். 1. 4 : 6.-என்றே அன்றோ அடியிலே தூதுவிட்டது, அப்படியே வந்தபடி.
வினையேனை –
அவனைப் போலே இரண்டு மனம் படைக்கப்பெறாத பாவத்தைச் செய்தேன்;
புணர்ச்சிக் காலத்தில் அழிதற்கும், பிரிவு காலத்தில் தரித்திருக்கைக்குமாக இரண்டு மனம் உண்டாகப் பெற்றிலேன்.
நெஞ்சம் கவர்ந்த –
நாட்டார்க்கு மனம் மலர்தற்குக் காரணமான விஷயம் என் மனத்தை அழிக்கும்படி ஆவதே!
சாரத்தை எடுத்துக் கொண்டானாய்க் கோதை இட்டு வைத்துப்போனான்; பூக்கொண்டு புட்டில் பொகடுவாரைப்போலே.
அறமணத்தன்றோ இவர் மனம் இருப்பது; “பூசும் சாந்து என் நெஞ்சம்” திருவாய். 4. 3 : 2.-என்னும்படி.
செம் கண் கருமுகில் –
கண்களாலே குளிர நோக்கி, வடிவினை முற்றூட்டு ஆக்கிநின்ற நிலை.
அன்றிக்கே, இத் தலையோடே வந்து கலந்த பின்பு, அத் தலைக்கு வந்த நிறைவினைச் சொல்லவுமாம்.
அன்றிக்கே பிரிவினைப் பற்றிப் பேசிக் கண்களாலே குளிர நோக்கி, அவன் விளைநீர் அடைத்துக்கொண்டு நின்றபடி.

செய்ய வாய்-
நூற்றுக் கணக்கில் புனைந்துரைகளைச் சொல்லப்புக்குப் புன்சிரிப்பினைச் செய்கிற திருவாய்.
செழும் கற்பகத்தை –
விலக்ஷணமான கற்பகத்தை; வைலக்ஷண்யமாவது, தானே விரும்பித் தன்னைக் கொடுக்கை.
கற்பகம், தன்னைக் கொடுக்கவும்மாட்டாது விரும்பவும்மாட்டாதே; இவன், தன்னைக்கொடுக்க வல்லவன்அன்றோ
அன்றிக்கே, தான் கடக்க இருந்தாலும் தன் இரண்டு உலகத்தின் செல்வங்களையும் நான் நினைத்தார்க்குக் கொடுக்கும்படி எனக்குத் தந்தவனை என்னுதல்.
எங்குச் சென்றாகிலும் கண்டு –
‘ஆள் வாராநின்றது’ என்று கேட்டு ஓலக்கத்தைக் கிளப்பாக் கடக்கப் போய்த் திரை வளைத்துக்கொண்டிருப்பர்.
அன்றிக்கே, புகை புக்க இடம்-ஈஸ்வர கந்தம் -காரார் திரு மேனி காணும் அளவும் போய்-என்றவாறே எங்கும் புக்கு – எங்கும் புகுங்கோள் என்னுதலுமாம். என்றது,
பரத்துவம் வியூகம் விபவம் அர்ச்சாவதாரம் ஆகிய இவற்றைக் குறித்தபடி.
“அந்தப் பரமாத்வை ஆத்மா அறிகிறான் இல்லை” என்கிறபடியே, ஒளித்திருக்கும் இடம் எங்கும் புக்கு.
“இலங்கையில் அந்த ஜானகியைக் கண்டிலேனாகில் இந்த வேகத்தோடு கூடவே சுவர்க்கலோகத்திற்குச் செல்லுவேன்”
“நஹி த்ரக்ஷ்யாமி யதி தாம் லங்காயாம் ஜனகாத்மஜாம்
அநேநஏவ ஹி வேகேந கமிஷ்யாமி ஸுராலயம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 1 : 40.
என்கிறபடியே, ‘பரமபதத்தில் கண்டிலோம்’ என்று மீள ஒண்ணாதே.
இதுவோ தக்கவாறு. என்மின் –
இடபேதம் உண்டானாலும் பாசுரம் இதுவே.பிறர் மனத்தினையும் கவர்ந்து தன் மனத்தினையும் கொண்டு
கடக்க இருக்கையோ தக்கோர்மையாவது? அவனுக்கு அருள் இல்லை என்கையாவது,
தர்மியை இல்லை என்கை அன்றோ. தர்மியைச் சேர்ந்துள்ளதான கிருபையும் எங்கள் பக்கல் காணாமையாலே -அருள் அனைவர் இடமும் கிருபை அடியவர்கள் இடம்
தமக்கு அதுவும் இல்லை என்று சொல்லுங்கோள். நீர்மை கொண்டாடி இருப்பார்க்கு இது அல்லது மர்மம் இல்லை; இதனையே சொல்லுங் கோள்.

——————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: