பகவத் விஷயம் காலஷேபம் -136- திருவாய்மொழி – -6-7–1….6-7–11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

மேல் திருவாய்மொழியிலே, மோகித்துக் கிடக்கிற தன் மகளுடைய துன்பத்தைக் கண்ட திருத்தாயாரானவள்,
‘அது போயிற்றது, இது போயிற்றது’ என்று அவன் திருநாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டு இவள் தானும் மோகித்தாள்;
அவன் திருநாமத்தைச் சொல்லுகையாலே பெண்பிள்ளை உணர்ந்து எழுந்து புறப்பட்டுத் திருக்கோளூர் ஏறப்போனாள்;
திருத்தாயாரும் வாசனையாலே உணர்ந்து படுக்கையைப் பார்த்தாள்;
வெறும் படுக்கையாய்க் கிடந்தது; இனி,1- இவள் என் வயிற்றிற் பிறப்பாலும், 2-தன் தன்மையாலும்,
3-இங்கு இருந்த நாட்களில் தேகயாத்திரை இருந்தபடியாலும் இவள் திருக்கோளூர் ஏறப்புறப்பட்டுப் போயினாள் என்று அறுதியிடுகிறாள்.

வளையம் முதலாயினவற்றை எல்லாம் இழந்தாளேயாகிலும் நாம் இவளை இழக்கவேண்டி இராது என்றே இருந்தாள் மேல்திருவாய்மொழியில்.
இத் திருவாய்மொழியில், இவள் தன்னையும் இழந்தோம் என்று கூப்பிடுகிறாள்.
ஆளவந்தார் கோஷ்டியில், “உண்ணுஞ்சோறு” என்ற திருவாய்மொழியில் வருகின்ற பிராட்டிக்கோ அஞ்சவேண்டுவது” என்று கேட்க,
“இருவராகப் போனவர்கட்கு வயிறு எரியவேணுமோ? தனிவழியே போனவளுக்கன்றோ வயிறு எரியவேண்டுவது!” என்று
இருந்த முதலிகள் சொல்ல, “அங்ஙன் அன்று காணுங்கோள்! இருவராகப் போனவர்கள் ஆகையாலே, இருவர்க்கும் அஞ்சவேணும்;
“கள்வன்கொல்” என்றதுபெரியதிருமொழி, 3. 7 : 1. தனியே போனவளுக்கு அச்சம் உண்டோ?” என்று அருளிச்செய்தார்.
அதற்கு அடி, இருவரும் இருவர்க்கும் ஊமத்தங்காயாய், கடித்ததும் ஊர்ந்ததும் அறியார்கள்:
அகலகில்லேனிறையும்”, “பித்தர் பனிமலர்மேல் பாவைக்கு” என்பன ஈண்டு நினைக்கத்தகும்.

யதவாத் கிரி -சேர்ந்து புறப்பாடு -ஸ்ரீ பாஷ்யகாரர் கூடவே எழுந்து அருளுவார் -செல்லப் பிள்ளை -யதிராஜ சம்பத் குமாரர் பித்ரு ஸ்தானம்
-தானே கூடி சென்று ரஷித்து அருளுகிறார்
இன்றும் பரகாலன் குமுதவல்லி நாச்சியார் உடனே சேவை -நம்மாழ்வார் அன்றும் தனி இன்றும் தனி

இவள் அங்கே புக்கல்லது தரியாள் என்பதாம். “அள்ளல் அம்பூங்கழனி அணி ஆலி புகுவர்கொலோ!”
அன்றியே, இலங்கையின் வாசலிலே புகுவர்கொலோ! என்றே அன்றோ அங்கே வயிறு பிடி.
ஆனாலும், எங்கேும் போகிலும் இருவராயல்லது இராது அங்கு;
‘தனியே சென்ற இவள் என்படுகிறாளோ?’ என்று மிகவும் நொந்து கூப்பிடுகிறாள் இவளுடைய திருத்தாயார்.

அற்ப சாரங்களவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்” என்கிறபடியே,
‘பகவத்கோஷ்டிக்கு இனி ஆளாகமாட்டாரே!’ என்னும்படி ஐம்புல இன்பங்களிலே கைகழிந்த இவர்,
‘சம்சாரிகளுக்கு இனி ஆளாகமாட்டார்’ என்னும்படி நாட்டாரோடு இயல்வு ஒழிந்து,
கொள்ள மாளா இன்பவெள்ளத்தைப் புஜிக்கக் கைகழிந்த படி சொல்லுகிறது.

நரகத்திற்குக் காரணமான விஷயத்தைப் பற்றிப் பிறர் அறியாமலே போகக்கடவ இவர்,
சொரூபத்திற்குத் தகுதியான விஷயத்தைப் பற்றிப் பிறர் அறியாமலே போகும்படி விழுந்தது.

க்ஷுத்ரவிஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதே போகக் கடவ இவர், குணாதிக விஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதபடி ஆனார்.

அல்பம் -நரகாவஹம் -குணம் இல்லாமல் தோஷம் மிக்கு விஷயாந்தரங்கள் -மூன்றையும் காட்டி அருளினார் –

‘என்னுடைமை புக்க இடத்திலே நானும் போய்ப் புக்கு அல்லது நில்லேன்’ என்கிறாள். –திருத்தாயார் -அவள் உடமை பராங்குச நாயகி
“நான் இப்பொழுதே இலக்குமணனால் செல்லப்பட்ட வழியிலேயே செல்லப் போகிறேன்”
“ப்ரவேஸயத ஸம்பாராந் மாபூத் காலாத்யயோ யதா
அத்யைவ அஹம் கமிஷ்யாமி லக்ஷ்மணேந கதாம் கதிம்”-என்பது, உத்தரராமாயணம்.–என்றாற்போலே.
ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய – தான் பண்டு விரும்பியிருக்கும் அவற்றோடு பெற்றவர்களோடு வாசி அறப் பொகட்டுப் போனாள்.
‘மாண்டும் இவற்றிலே நசை பண்ணும்’
ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய பர்த்ருஸ்நேஹ பலாத்க்ருதா
அசிந்தயித்வா துக்காநி ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 19.
என்று தோற்றாதபடி விட்டாளாதலின் ‘பரித்யஜ்ய’ என்கிறது.
பர்த்ருஸ்நேஹ பலாத்க்ருதா – ஒரு விஷயத்தில் சிநேகமானது எல்லாவற்றையும் விடப் பண்ணும் அன்றோ.
தன்வசத்தால் போனாள் அல்லளாதலின் ‘பலாத்க்ருதா’ என்கிறது
அசிந்த யித்வா துக்காநி – விட்டனவற்றை நினையாவிட்டால், போய்ப் புகுகிற இடத்தில் மிறுக்கைத்தான் நினையாநின்றாளோ?
இவள் பெருமாளை ஒழியத் தன்னைக் காணில் அன்றோ துக்கத்தை நினைக்க வல்லளாவது.
ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம் – ‘போகத்துக்கு ஏகாந்தமான இடம்’ என்னுமதுவே கண்டீர் இவள் நெஞ்சிலே பட்டது.
“கன்னகு திரள்புயக் கணவன் பின்செல நன்னகர் ஒத்தது நடந்த கானமும்”-என்றார் கம்பநாடரும்.
புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான்.
ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி
புத்ரத்வயலிஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31.
குழைசரக்கு அறுத்துக்கொண்டு போனபடி.
அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் –
நிலவோடும் நக்ஷத்திர தாரா கணங்களோடும் கூட சந்திரன் குடிவாங்கின ஆகாசம்போலே கிடந்தது.
-சந்தரன் பெருமாள் -நிலவு -சந்தரன் ஒளி சீதை –நஷத்ரங்கள் லஷ்மணன் –
அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது.
“நல்லது ஓர் தாமரைப் பொய்கை” என்ற திருப்பாசுரத்திற் கூறியுள்ளபடியேயாயிற்று இவள் திருமாளிகை கிடக்கிறது.

நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர்மேல் பனிசோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறி ஓடிற்றாலோ என்மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின்போய் மதுரைப்புறம் புக்காள்கொலொ.-என்பது, பெரியாழ்வார் திருமொழி, 3. 8 : 1.

திருத்தாயாரும் இம்மாளிகையைக் கண்டுவெறுத்து, ‘போகக் கடவதாகத் துணிந்தால் என்னையும் கூட்டிக் கொண்டு போனால் ஆகாதோ?
தனிவழியே போவதே! நான் கூடப் போகாவிட்டால் அவனுடனே கூடப் போகவும்பெறாது ஒழிவதே!
இவள் தான் எங்ஙனே போகிறாளோ! நாடு அடங்க வாழ்வித்துக் கொண்டு போகிறாளோ!
அங்கே புக்கால் என்படுகிறாளோ! வழியிலுள்ளார் என் சொல்லுகிறார்களோ!
அங்கே புக்கால் அவ்வூரிற் சோலைகளையும் அங்குள்ள நீர்நிலைகளையும் அவன் குணங்களையும் கண்டு உகக்கிறாளோ!
கண்டு சிதிலை ஆகிறாளோ! இவை எல்லாம் தாம் அங்கே சென்று புக்கால் அன்றோ என்றாற்போலே மனோரதித்துக்கொண்டு,
தன்னைப் பார்த்தல் எங்களைப் பார்த்தல் செய்யாதே, இவற்றை எல்லாம் கடலிலே கவிழ்த்துப் போவதே!’ என்று திருத்தாயார் இன்னாதாகிறாள்.-

திருப் பொருநல் தென் கரை -வைத்த மா நிதிப் பெருமாள் -சயனத் திருக்கோலம் -திருக் கோளூர் -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவவதார திவ்ய தேசம்
நவ நிதிகள் -குபேரன் சிவ பக்தன் –சிவன் பார்வதி -சேர்ந்து இருக்க பார்த்தாதால் பார்வது சபிக்க -இழந்தான் –
ரஷிக்க-வைத்த மா நிதி -பெருமாள் -நிதிகள் ஸூ ரஷிதம் -குபேரன் -ஒரு கண் போனதே -மேனி விகாரம் -இவன் திருவடி பற்றி நிதி பெற –
குமுத வல்லி கோளூர் வல்லி -மரக்கால் -உடன் சேவை –
தர்ம தலை சாய –தர்மம் நிதியாக காத்து -தர்ம சம்ஸ்தாபனம் அர்த்தமாக -தர்ம தேவதை நீராடி -திருவடி பற்றி –
மதுரகவி ஆழ்வார் திரு பிறப்பித்து நம்மாழ்வார் திருவடி சேர்க்க அருள் செய்தார்
வியாசர் சந்நிதி தர்ம குப்தன் -சாபம் -தர்மம் செல்வம் இழக்க -பரத்வாஜர் குல ரிஷி சொல்ல இங்கே வந்து -ஸ்ரீ கர விமானம் -இழந்தது பெற்றான் –

கீழும் இதுவும் தாய் பாசுரம் -இதில் இவள் ஆற்றாமை விஞ்சி -இவளை இழந்தோம் -தனி வழியே போனாள்
என்று அன்றோ திருத் தாயார் நினைவு –
கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரில் சம்ருத்தம் –169-

———————————————————————————————-

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-

தாரகம் போஷகம் போக்கியம் -6-4 முதல் கண்ணன் சம்ச்லேஷம் தானே இவளுக்கு -வாழ் முதல் -வளர் முதல் மகிழ் முதல் –
அவன் நித்ய வாசம் திருக் கோளூர் தான்
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்-த்ருஷ்ணா சாந்திகரம் -ப்ரீதிக்கு ஹேது போக்கியம் -தாரகாதிகள்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி-வா ஸூ தேவ சர்வம் -என்று என்றே -இரவும் பகலும் அனுவர்த்தித்து
-அவன் அசந்நிதானத்தாலே கண்ண நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்-ஆஸ்ரித அர்த்தமாக -வந்த இந்த மண்ணில் -பிரணயித்வ சம்பத் -சீர்
-சௌலப்யாதி-பரி பூர்ணன் -ஊரையும் வினவி -3 மைல் தூரம் -சீரை விசாரித்துக் கொண்டு
அழகன் -சுலபன் -பேரைச் சொல்லாமல் -முழுக்கவே அழகன் சுலபன் சுந்தரன் -தான் அனுசந்திக்கும் அளவு அன்றியே -வினவி –
கேட்டார்களும் ஊரும் பேரும் தாரும் தன்னைப் போலே பிதற்ற -இதுவே முதல் தவழ்ந்து போனது -இவளுக்கு –
பகவத் விஷயம் உசாவாக அதுவே தாரகம் –
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே-என் பெண் பிள்ளை முக்தமான மான் போலே பேதை -தூரம் போக வல்லமை அல்லள்-
இள மான் -புகும் ஊர் திருக் கோளூர் இது திண்ணம் –

உண்ணுகின்ற சோறும் குடிக்கின்ற தண்ணீரும் தின்னுகின்ற வெற்றிலையும் எல்லாம் கண்ணனாகிய எம்பெருமான் என்று என்றே
கண்கள் நீராலே நிறைய, பூமியிலே அவனுடைய கல்யாண குணங்களையும் வளத்தால் மிக்கவனான எம்பெருமானுடைய திவ்விய தேசத்தையும்
கேட்டுக் கொண்டு, என்னுடைய இளமான் புகும் ஊர் திருக்கோளூர் என்னும் திவ்விய தேசமேயாகும். இது நிச்சயம்.
“உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை” என்று அவ்வவற்றிற்குரிய சிறப்புத் தொழிலாற் கூறப்பட்டுள்ளமை நோக்கல் தகும்.
என் இளமான் என்று என்றே கண்கள் நீர்மல்க, வளமிக்கவன் சீரையும் ஊரையும் விடவிப் புகும் ஊர் திருக்கோளூரே;
இது திண்ணம் என்க. வளமிக்கவன் : பெயர்.
இத்திருவாய்மொழி, கலி நிலைத்துறை.

தன் வயிற்றிற் பிறப்பாலும், இவளுடைய தன்மையாலும் இவள் இங்கு நின்றும் போய்ப் புகும் ஊர் திருக்கோளூர் என்று அறுதியிடுகிறாள்.

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் –
இவள் அவ்வருகே ஒரு வாய் புகுநீர் -உன்மத்தக அனுபவம் -தேடிப் போனாளோ. என்றது,-தேக யாத்ரை பார்க்க வேண்டுமோ இவள்
இங்கு இருந்த நாள் அந்நம் பானம் முதலியவைகளாலே தரித்து, அங்கே புக்கு அவனாலே தரிக்கப்போனாளோ என்றபடி.
“அஹம் அந்நம், அஹமந்நாதா: – நான் பகவானுக்கு இனியன், நான் பகவானாகிய இனிமையை அநுபவிக்கிறவன்” என்று
இருப்பார்க்கும் -இங்கேயே பெற்று இருப்பார்க்கு -அவ்வருகு போக வேணுமோ?
சோறு, நீர், வெற்றிலை என்ன அமையாதோ? ‘உண்ணுஞ் சோறு’ என்பது போன்ற அடைமொழிகட்குக் கருத்து என்? என்னில்,
வேட்ட பொழுதின் அவையவை போலுமே, தோட்டார் கதுப்பினாள் தோள்” என்று வள்ளுவனும் சொன்னான் அன்றோ;
அப்படியே, இவைதாமே, விருப்பம் இல்லாதவைகளாகவும் இருக்கும் ஒரோ நிலைகளிலே;
அதற்காக, விரும்புகிற சமயத்தில் இவைதாம் யாதொருபடியிருக்கும் அப்படியேயாயிற்று இவர்க்கு
எப்போதும் பகவத் விஷயம் என்கைக்காகக் கூறப்பட்டன என்க.
தாரக போஷக போக்கியங்கள் எல்லாம் “வாசுதேவஸ் ஸர்வம்”
“பஹூநாம் ஜந்மநாம அந்தே ஞானவாந் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவஸ்ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:”-என்பது ஸ்ரீகீதை, 7 : 19
என்று கொண்டு ‘எல்லாம் கிருஷ்ணன்’ என்று இருக்கும் என்பாள் ‘எல்லாம் கண்ணன்’ என்கிறாள்.
‘உண்ணும்சோறு’ என்ற நிகழ்காலத்தாலே, அல்லாதது உண்டு சமையும் சோறு என்கையும்,
இது மாறாதே உண்ணும்சோறு என்னுமதுவும் தோற்றுகிறது.
“கணைநாணில், ஓவாத் தொழில் சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, ஓவாத ஊணாக உண்” -பெரிய திருவந். 78.-என்னக் கடவதன்றோ.
மாறாதே உண்ணலாவதும், மாளாததும் இதுவே அன்றோ;
“அப்பொழுதைக் கப்பொழுது என் ஆராவமுதம்”-திருவாய். 2. 5 : 4.- என்றும்,
“கொள்ளமாளா இன்பவெள்ளம்” -திருவாய். 4. 7 : 2.-என்றும் அன்றோ இருப்பது.
இவற்றில் ஆகாதது ஒன்று இல்லை கண்டீர், இவை எல்லாம் வகுத்தவனேயா யிருக்கை என்பாள் ‘எம்பெருமான்’ என்கிறாள்.
இவள் சந்நிதியே அமையும் கண்டீர் எங்களுக்கு.

என்று என்றே –
இது ஒழிய வேறு ஒன்றனைத் ‘தாரகம்’ என்று இருக்கில் அன்றோ மற்று ஒன்றினைச் சொல்லுவது;
இது தன்னையே மாறாதே சொல்லி. என்றது, ஒருகால் இதனைச் சொல்லிப் பின்பு
ஊண் உறக்கத்தாலே போது போக்கலாம் விஷயம் அன்றே என்றபடி.
கண்கள் நீர்மல்கி-
இவர்களுடைய உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் இருக்கிறபடி.
இவர்கள் -தோழி உடன் தாய் -ஊரும் நாடும் உலகமும் திருத்தி -அனைவரும் ஒரே கோஷ்டி –
இவள் முகத்தாலே காணும் இவர்களுக்கு ஜீவனம். -ஆழ்வார் த்வாரா -ஆழ்வார் திரு முக மண்டலம் –
தன் ஜீவனத்துக்குப் போகிறவள் எங்கள் ஜீவனத்தைக் கொண்டு போக வேணுமோ?
ஒருவன் பகவத் குணங்களிலே ஈடுபட்டவனாய்க் கண்ணும் கண்ணநீருமாயிருக்க, அவனைக் கண்டுகொண்டிருக்கவன்றோ அடுப்பது.
‘அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ’ –திருவிருத்தம், பா. 2.-என்று சேதனராகில் மங்களாசாசனம் செய்யக்கடவது.
நஞ்சீயர், ‘பிள்ளை திருநறையூர் அறையரோடே மூன்று திருவாய்மொழி கேட்டேன். அதில் எனக்கு ஒரு வார்த்தையும் போகாது;
ஒரு திருவாய்மொழியைச் சொன்ன அளவிலே அவர் சிதிலராய்க் கண்ணும் கண்ணநீருமாய் இருக்கும் இருப்பை நினைத்திருப்பன்’ என்று அருளிச்செய்வர்.
ஆஹ்லாத ஸீதநே்த்ராம்பு:-
“ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான்
ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:”-என்பது, ஸ்ரீவிஷ்ணுதத்வம்.
விரகத்தாலே கொதித்துப் புறப்படும் துக்கக்கண்ணீர் போலன்றிக்கே,
பகவானை அநுபவிப்பதனால் உண்டான மிகுந்த உவகையினாலே குளிர்ந்த கண்ணீரையுடையனாவது
புளகீக்ருத காத்ரவாந் – உடம்பு முழுதும் மயிர் எறிந்து இருப்பது.
பரகுணாவிஷ்ட:-பகவானுடைய குணங்களாலே ஏறப்பட்டிருப்பவனாவது, தெய்வம் ஏறினவரைப்போலே.
அவன், ஸர்வதேஹிபி:-த்ரஷ்டவ்ய:-அவன் தேகத்தை எடுத்தவர்கள் எல்லாருக்கும் பார்க்கத் தகுந்தவன்.
சரீரத்தை எடுத்ததற்குப் பயன் இவனைக் காண்கையாயிற்று.
கண்ணன் பெருமாளும் இப்படிப் பட்ட பக்தனுக்கு அன்றோ ஆழ்ந்து போவார்கள் -தேக பரிக்ரகம் பண்ணினதால் –
ஸதா த்ரஷ்டவ்ய:-எப்பொழுதும் காண்கைக்கு ஒரு தேச விசேடம் தேடிப் போகவேணுமோ?
‘அளந்தாழ்வான் சோழ குலாந்தகனிலே பயிர்த்தொழில் செய்து கொண்டிருப்பவனான ஒரு ஸ்ரீவைஷ்ணவனைக் கண்டு,
உம்முடைய ஊர் எது’ என்று கேட்க, ‘என்னுடைய ஊர் திருக்கோளூர்’ என்ன,
‘அங்கு நின்றும் போந்தது என்?’ என்ன, ‘தேகயாத்திரை நடவாமே போந்தேன்’ என்ன,
அவ்வூரில் கழுதையை மேய்த்து ஜீவிக்க மாட்டிற்றிலையோ? நிலை நின்ற ஜீவனத்தை விட்டுப் போந்தாயே யன்றோ! என்றானாம்.

கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி-
இந்த பாவனையின் மிகுதியினாலே பெற்றாற்போலே இருந்து ஆனந்தக் கண்ணீர் புறப்படுகிறபடியாகவுமாம்;
இந்த அநுசந்தானத்தாலே கண்ணீர் மல்கி என்னவுமாம்.
மண்ணினுள். . . . . .புகும் ஊர்த்திருக்கோளூரே-
மண்ணினுள் புகும் ஊர் திருக்கோளூரே.
விண்ணில் ஓர் ஊர் விசேடிக்கவேண்டும்படியாய் இராதன்றோ.
அவன் சீர் வளம் மிக்கவன் ஊர்-
அவனுடைய கல்யாண குணங்களையும் தனக்குமேல் ஒன்று இல்லாததான செல்வத்தையுடையவனுடைய ஊரையும்.
“அந்த முக்தன் எல்லாக் கல்யாணகுணங்களையும் சர்வஜ்ஞனான பரமாத்மாவோடு அநுபவிக்கிறான்”
“ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹப்ரஹ்மணா”-என்பது, சுருதிவாக்கியம்
என்கிறபடியே, அவனோடு அவன் குணங்களோடு வாசி அறப் பிராப்யமாவதைப் போன்று,
அவன் விரும்பின தேசமும் பிராப்பியத்திலே சேர்ந்ததாகக் கடவது அன்றோ.
அவன் சீர் –
அவனுடைய கல்யாணகுணங்கள். அவையாவன: அவன் தன்திறத்தில் தாழநிற்கும் நிலைகள்.
வளம் மிக்கவன் ஊர் –
பரமபதம் கலவிருக்கையைப் போன்றது; உகந்த விஷயத்தைப் பெறும் இடன் அன்றோ ஊராகிறது.
‘எனக்குச் சீதையால் என்ன காரியம் உள்ளது’ கிம் கார்யம் சீதயா மம”-என்பது, ஸ்ரீராமா. யுத். 41 : 4.
என்பதே யன்றோ அவனுடைய திருவார்த்தை.

இந்நிலை விரைவின் எய்தாது இத்துணை தாழ்த்தியாயின்
நன்னுதற் சீதையால்என் ஞாலத்தாற் பயன் என் நம்பி
உன்னையான் தொடர்வன் என்னைத் தொடருமிவ் வுலகம் என்றால்
பின்னைஎன் இதனைநோக்கி விளையாடிப் பிழைப்ப செய்தாய்.–என்பது கம்பராமாயணம், மகுடபங்கப்படலம்.

பரமபதத்தைக் காட்டிலும் அடியார்கள் இருந்த இடம் அன்றோ ஊராகிறதும், அவன் திருவுள்ளத்துக்குப் பொருந்தியிருப்பதும்.
வளம் மிக்கவன் –
பிரணயதாரையில் சாமர்த்தியத்தையுடையவன் என்றுமாம்.
இப்போது சாமர்த்தியமாவது, தான் இருந்த இடத்தே இவள் வரும்படி இத்தலையை அழித்தது.

வினவி-
‘திருக்கோளூர் எத்தனை இடம் போரும்’ என்று எதிரே வந்தாரைக் கேட்டு,
அவர்கள் ‘இன்னதனை இடம் போரும்’ என்ன, அதுதானே வழிக்குத் தோட்கோப்பாகப் போகை.
“தாமரைக் கண்ணனாகிய எம்பெருமானுடைய திருநாம சங்கீர்த்தனமானது வழிக்குக் கட்டுச்சோறாகும்”
பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தநாம்ருதம்.-என்றார் பிறரும்.
பூ அலரும்போதைச் செவ்வி போலே ‘திருக்கோளூர் எத்தனை இட்ம போரும்’ என்று கேட்கும் போதைத் திருப்பவளத்தில்
செவ்வி காணப்பெற்றிலேன் என்று காணும் திருத்தாயார்தான் நோவுபடிகிறது.
என் இளம் மான் புகும் ஊர் திருக்கோளூரே –
என் வயிற்றிற் பிறப்பாலும் இவளுடைய தன்மையாலும் அவ்வூரில் அல்லது புகாள் என்கிறாளாயிற்று.
தாயின் வழியைக் கொண்டே தன்மைகளை அறுதியிடலாமே அன்றோ.
பெருமாளைக் கண்டல்லது தரிக்கமாட்டாதானாய் வருகிற ஸ்ரீபரதாழ்வானைக் கண்டு வைத்தேயும், முக்காலமும் உணர்ந்த முனிவரும்கூட,
“வருத்தம் இன்றிக் காரியம் செய்கிற ஸ்ரீராம பிரானிடத்தில் கெட்ட நினைவில்லாதவனாகிச் செல்லுகிறாயோ,
இந்தப் பெரிய சேனையானது எனக்குச் சந்தேகத்தை உண்டுபண்ணும் போலிருக்கிறது”
“கச்சிந் ந துஷ்டோ வ்ரஜஸி ராமஸ்ய அக்லிஷ்ட கர்மண:
இயம் தே மஹதீ ஸேநா ஸங்காம் ஜநயதீவ மே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 85 : 7. இது, ஸ்ரீ பரதாழ்வானைப் பார்த்து ஸ்ரீகுகப்பெருமாள் கூறியது.
இது, குகப்பெருமாளுடைய வார்த்தையாக இருப்பினும், இதனை இங்கே எடுத்தது, பரத்துவாச பகவானுக்கும் கருத்து இதுவாகையாலே.
என்கிறபடியே, தாயாரை இட்டு வழக்குப் பேசு வித்துக்கொண்டு இவரைக் காடு ஏறப்போக விட்டாயாகில், இன்னும்
‘பெருமாள் இருக்கில் கீழ்வயிற்றுக் கழலையாகிறது’ என்று அங்குப்போய் நலியத் தேடுகிறாய் அல்லை அன்றோ என்றான் அன்றோ.
“கச்சிந் ந தஸ்ய அபாபஸ்ய பாபம் கந்தும் இஹேச்சஸி
அகண்டகம் போக்துமநா ராஜ்யம் தஸ்யா நுஜஸ்ய ச”-என்பது (ஸ்ரீராமா. அயோத். 90 : 13,) போன்ற பரத்துவாச முனிவருடைய வார்த்தைகளைத் திருவுள்ளம்பற்றி.
அவன் படிகள் காணா நிற்கச்செய்தே தாய் சம்பந்தம் கொண்டு ஐயப்பட்டானே அன்றோ.
பொருள்களின் தன்மைகளைக்கொண்டு பத்தும்பத்தாக நிமித்தங்களை அறியக் கடவர்களாய் இருப்பர்கள் வேடர்கள்;
இங்ஙனே இருக்கச்செய்தேயும், தம் எல்லையிலே இவன் வந்து புகுந்ததற்கு மகிழ்ந்தவர்களாய் ‘அடிச்சேரியிலே வந்து புகுவதே!’ என்பது;
‘ஆனாலும், அரசர்களாயிருப்பார் வன்னியர் பற்றிலே புகுரும்போது கேள்விகொண்டன்றோ புகுருவது’ என்றாற்போலே
இருக்க வெளிறும் காழ்ப்புமாகச் சொல்லி, தாய் வழியை நினைத்து அசிர்த்தார் –சங்கித்தார்அன்றோ ஸ்ரீகுகப்பெருமாளும்.
அப்படியே, இவளும் தன்வயிற்றிற் பிறந்த சுத்தியே காரணமாகத் ‘திருக்கோளூரிலேபுகும்’ என்று அறுதியிடுகிறாள்.
இராம பாணம் இலக்குத் தப்புமோ! என் மகள் புகும் ஊர் அதுவே என்கிறாள்.
இளமான் –
இப் பருவத்தில் இவளைத் தல்கு -வெட்கம் -அறுக்கும்போது அவ்வூரில் அவனேயாக வேண்டாவோ?
என் இளமான் –
கிரமத்திலே அடைவதைப் பொறுக்காதவள். தன் மிருதுத்தன்மை பாராமல் பதறிக்கொண்டு போனாள்.
புகுமூர் –
காட்டுத் தீயிலே அகப்பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப் புகுமாறு போலே,
சம்சாரமாகிற பாலை நிலத்தில் காட்டுத் தீயிலே அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை பொய்கையும் பொழிலும் போலே அன்றோ.
புகும் ஊர் என்கையாலே, புக்கார் போகும் ஊர் அன்று என்கை.
எம்பெருமானார் தெற்கே எழுந்தருளாநிற்க, எதிரே வருகிறாள் ஒரு பெண் பிள்ளையைக் கண்டு ‘எங்கும் நின்றும்?’ என்ன,
‘திருக்கோளூரில் நின்றும்’ என்ன, ‘அவ்வூரில் புக்க பெண்களும் போகக்கடவராய் இருப்பர்களோ?’ என்று அருளிச்செய்தார்.
என் இளமான் மண்ணினுள் புகும் ஊர் திருக்கோளூரே, இது திண்ணம் –
இவள் போய்ப் புகும் ஊர் திருக்கோளூரே, இது நிச்சயம். இவ்வூரில் பிள்ளைகளைக் காணாவிட்டால், கோவிலுக்குள் தேடுமத்தனை அன்றோ.

———————————————————————————————-

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

கிளி -அவாந்தர பேதம் பூவை -சர்வ லோக பிரசித்தமாம் படி அவனுடைய திரு நாமாதிகளை -நிரதிசய போக்யமான திவ்ய தேசம்
புக்கு திரும்புவாலோ என்று அவள் லீலா உபகரணங்களைக் கேட்கிறாள் திருத்தாயார்
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய -தான் இருந்த திருக் குருகூர் -தமிழகம் -பிரபஞ்சம் -அவனுடைய
பேறும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி -பஹு முகமாக பிதற்றும் படி -வான் போலே கற்பு -அறிவை -இடரும் படி
-தாண்ட அளக்க முடியாதபடி –
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே -வி லஷணம் சம்ருத்தி -நீர் நில வாய்ப்பு –
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே -தன்னைப் பிரிகைக்கு ஈடான கொடியவள் -பாபிஷ்டை -உபக்ன அபேஷமான-
மால் தேடி ஓடும் மனம் -கோல் தேடி ஓடும் கொழுந்தே போலே -மீண்டு வருவாளா –
கொள் கொம்பும் அவன் கொடி இவள் -தாய் இடம் ரகஸ்யம் சொல்லதவள் -உங்களுக்கு தெரியுமே –

திருக் கோளூருக்கே சென்ற என் பெண் மீள வருமோ என்று ஒரு பஷி விசேஷம் இடம் கேட்கிறாள் –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே
இங்கு குறை உண்டால் அங்கு தேடித் போனாளோ-
போத யந்த பரஸ்பரம் ஆள் இல்லாமல் -யத்ர பூர்வே –சாத்யா சாந்தி தேவா -பரமபதம் சென்று அடியார்கள் குழாங்கள் தேட –
நிரஞ்சனம் சாம்யா பத்யா -அவன் பண்ணுவது போலே -கிட்டமும் வேட்டு வேளானும் போலே -இவரும் ஆக்கிய பின்பு –
அசேதனமும் இப்படி பண்ணுமே –
அசித் அயன சம்பந்தம் -அநந்த கிலேச பாஜனம் -நிரதிசய போக்யம்
இங்கு உள்ளாரை தன்னோடு -தான் பிறந்த ஊர் மட்டும் இன்றி
தோள் தீண்டியான நாடும் லோகமும் -ராமாவதாரம் உஊர் ஒன்றே திருந்திற்று -அயோத்தில் வாழும் சராசரம் முற்றவும்
இங்கு சம்சாரமாக திருந்திற்று -இன்று நம்மளவும் பாய்ந்து ஏறிப் பாயும் படி அன்றோ ஆழ்வார் சம்பந்தம் வெள்ளம் இட்ட படி
லோகே அவதீர்ண –நாத முனியே முதலான நம் தேசிகரை அல்லால் –
பரமார்த்த சமஸ்த பக்தி யோகம் -மேட்டில் ஏறும் படி அன்றோ –
காலை எழுந்து இருந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் பாடுதும் மெய்ம்மை கொலோ
ப்ரஹ்ம முகூர்த்தத்தில் திர்யக்குகளும் -அவன் இவள் பக்கல் பிச்சேரும் படியை சொல்லா நின்றன
தான் இருந்த இடத்தே செல்ல வேண்டுமவன் இவள் இருந்த இடத்தே வரும் படியைச் சொல்லி –

தன்னைப் போலே -அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக்
அவன் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அடி -இவரது -பிதற்றல் -ஒருவன் அழகில் ஒருத்தி ஈடுபட்டு அங்கு –
இவள் ஒருத்தி இடத்தில் சுவரி விட்டது சமாப்தி ஆனதே
இவள் மயர்வற மதி நலம் எல்லாருக்கும் -மிக்க நல்ல நோய் -தேறினோம்–
நினைத்து சொல்லுகை அன்றிக்கே -பகவத் குணங்களில் அவஹாகித்து -உணர்த்தி அற்று -பிதற்ற
சங்கு என்னும் சக்கரம்என்னும் துழாய் என்னும்–பேரும் தாரும் ஒரே பிரமாணம் –
தேவ தேவ பிரான் என்றும் விரை மலர்த் துழாய் -என்றும்
ஸ்ருதோய அர்த்த -ஜாமதக்னச்ய ஜல்பதக-ரிஷிகள் கூட்டத்திலும் -மோஷ தர்மம் –

கற்பு வான் இடறி
இந்த பிதற்றல் -வான் அளவுக்கு -கடக்க ஒண்ணாத -மேரு பர்வம் இடறுவது போலே -துச்சமாக மதித்து
பெரு வெள்ளம் -சிறிய கரை பெரிய கரைகள் உடன் வாசி இல்லாமல் அழிக்குமா போலே -அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எல்லாம் அழியும் படி
மரியாதை -ஸ்த்ரீத்வம்
பெரிய ஞானம் -வலிய அறிவு என்றுமாம் -கற்பு -கல்வி அறிவு
வான் பெரிய -அபி நிவேசம்
தத்வம் உபாசனம் என்றுமாம்
அபி நிவேசம் ஒரு அளவு உண்டால் இறே இதுவும் ஒரு அளவில் தடை பட்டு அடங்கும் -காதலுக்கு கண் இல்லை
எங்கும் காவலும் கடந்து –குழல் ஊதின -அன்று -கற்பு -காவல்
யயௌஜ-கா சித் பிரேமாந்தா –சிந்த யந்தி -வாசல் கடை பற்றி -துக்கமும் -சந்தோஷமும் -பாப புண்யங்கள் –
இவள் இடம் தான் பிரேமம் குறைவு -கிருஷ்ண அனுபவத்துக்கு புதியவள் -மாமியார் கண்ணில் பத்தாதே
இங்கு ஆழ்வார் உடன் சாம்யம் -தீர்க்க சிந்தயந்தி -நடந்தாள் -கற்பு வான் இடறி –
பிரேமத்தால் வந்த இருட்சி -அதுவே வழி நடத்த போனால்
தத்தானாம் விரஹாக்னி –கிம் கரிஷ்யந்தி -மூத்தோர் சொல் கேட்க்கப் பண்ணாதே -கிருஷ்ண காமம்
குருக்கள் -வெந்து விழ குட நீர் சொரிய வல்லார்களோ -வார்த்தை கோபம் மிக்கு –

சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
இங்கே அசல் காக்க -தோழி -மதுர கவி ஆழ்வார் போல்வார் –
வயிறு வளர்க்க போவதே -உண்ணும் சோறு
இங்கு பிறர் திருந்தும் படி இருக்கும் இவள் திருந்தின இடம் போவதே
தன்னைக் கண்டு பிறர் வாழ -அவனைக் கண்டு வாழ
சம்பத்து சேர்ந்த -சத்ருசமான நல்ல சம்பத்
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –
போவாளோ -தாயார் வார்த்தை
அன்றிக்கே -நெஞ்சு முற்பட்டு -காதல் -முந்துற்ற நெஞ்சு -அருணோதயம் -வழியில் உள்ள அனைத்தையும் பார்த்து
இவருக்கு சொன்னபடி -போருங்கொல் –
அன்றியே -மீண்டு புறப்பட்டு வர வல்லளோ
சேரும் நல் வளம் -போய்ச் சேர்வாளோ –

கொடியேன் –
உங்கள் இடம் என் பெண்ணைப் பற்றி கேட்கும் படி
உபனக்னம் -கோல் தேடி ஓடும் கொழுந்தே
பெற்ற என்னையும் விட்டு வேறு தேடி போகும் படி
பெற்ற தாய் விட்டு அகலுகை இந்த குடிக்கே ஸ்வ பாவம் போலே காணும்
கள்வன் கொல்-அணி யாலி புகுவர் கொலோ
நல்லதோர் தாமரை -பொய்கை -மதுரைப் புறம்-
பெற்ற தாயை விட்டாலும் -குழந்தை போலே பூவை வளர்த்தாளே -தான் பெற்றதை விடுவாளோ -உரையீர்
பிறந்தாரை கை விடப் போகாதே -தன்னை இட்டு பேசுகிறாள் –
உடைய நங்கை தாயாரை விட்டு பராங்குச நாயகியைப் பார்த்தால் போலே -தன்னை
போக்கு வரத்து -எனக்கு அன்றோ சொல்லல் ஆகாது -உங்கள் இடம் ஒதுக்காமல் மறைக்காமல் சொல்லுவாள் –
அவள் சொன்னாலும் இது மறைக்குமே -உரையீர்
போதுங்கோல்
பாவியேன் இருப்பதால் மீள மாட்டாளே -சங்கை
நீங்கள் இருக்கையால் மீளவும் கூடுமே
பாபமே பிரபலமாய் வாராது ஒழியுமோ
அறிவித்து -சென்றால் ராமாவதாரம் போலே -சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே -அறிவாளே-
நான் வரக் கூடாதே -லோகமாக பின் தொடரக் கூடாது என்று அன்றோ இவள் போனாள்

————————————————————————————-

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்என்
பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–6-7-3-

லீலா உபகரணங்கள் ரசம் எல்லாம் பகவத் திரு நாமம் உச்சாரண்த்தாலே பிறக்கும் படி -இவள் திருக் கோளூரில் புக்கு –
அவன் இவள் நினைவுக்கு ஈடாக பரிமாறாமல் கிலேசப் படுகிறாளோ
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்-உப காரணங்கள் -யாவற்றையும் திருமால் திரு நாமம் பேர் வைத்தே -முன் யோஜனை
-இவருக்கு வேறு ஒன்றும் கண்ணில் படாதே -இது பொருந்தாதே -பிரயோஜ நாந்தர சம்பந்தம் வருமே
அவையும் திரு நாமம் சொல்லும் படி -இரண்டாம் பூர்வ பஷம்–பந்து பேசாதே –
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்என்-எழும் உஜ்ஜீவிக்கும் படி
பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே-ஸ்வா கதம் சொல்லி ஆலோக ஆலாப ஆலிங்கனம் செய்து ஆஸ்வாசப் படுத்தாமல்
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ-அதரம் துடிப்ப -வர்ஷம் போலே கண்ண நீர் அருவி போலே -என் செய்கிறார்களோ

பூவையும் பசிய கிளிகளும் பந்தும் தூதையும் அழகிய பூக்கூடையுமாகிய இவை எல்லாவற்றாலும் உண்டாகும் இன்ப முழுதும் திருமால்
திருநாமங்களைச் சொல்லுவதனாலே உண்டாகும்படி அவன் திருநாமங்களைச் சொல்லி அதனாலே வாழ்வு பெறுகின்ற என் மகள், குளிர்ந்த வயல்களையுடைய திருக்கோளூர்க்கு இனிச் சென்று, கோவைக்கனி போன்ற வாய் துடிக்கும்படி தண்ணீர் நிறைந்த கண்களோடு நின்று என்ன செய்கிறாளோ? என்கிறாள்.
பெண்கள் பந்து விளையாடுதல் மரபு. தூதை – விளையாட்டுக்குரிய சிறிய மரப்பானை, புட்டில் – பூங்கூடை, போய் என்செய்யும்கொலோ? என்க.

திருக்கோளூர் அண்மையிலிருந்ததாகில் எங்ஙனே உடைகுலைப்படக்கடவள் என்கிறாள்.

பூவை. . . . . .எழும் என்பாவை –
வேறு ஒன்று கொண்டு பொழுதுபோக்கும் பருவத்திலும் திருநாமத்தையே கொண்டு ஜீவித்திருக்குமவள் கண்டீர் போனாள்.
இங்கு இருந்த நாள் மற்றொன்று தாரகமாய், அங்கே சென்று அவனாலே தரிக்கப்போனாளோ.
பூவை தொடக்கமான லீலையின் உபகரணங்களால் பிறக்கும் உவகை எல்லாம் துவயத்தின் படியே
ஸ்ரீய:பதி (திருமகள் கொழுநன்) என்கிற திருநாமத்தைச் சொல்ல அதனாலே உண்டாகா நின்றது.
“‘ஊரும்நாடும் உலகமும் தன்னைப்போல்’ என்கிறபடியே, இவை தாம் திருநாமத்தைச் சொல்லினவானால் ஆகாதோ’ என்று,
பெற்றி, நம்பிள்ளையைக் கேட்க, “அதற்குக் குற்றம் உண்டு, ‘பந்து தூதைபுட்டில்’ என்கிற விடத்தில் தட்டுப் பிறக்கும்” என்ன,
அங்ஙனேயோ என்று இசைந்து போனார்.
நன்று; அவன் திருநாமங்களை இவற்றிற்கு இட்டு அழைத்ததாகக்கொண்டாலோ? என்னில்
“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்” என்றிருக்கிற அளவுகடந்த ஈடுபாட்டிற்கு இதுசேராது.

பெற்றி என்னும் பெரியார் ஒருவருடைய நிர்வாகத்தையும், அவர் கூறும்நி ர்வாகம் பொருந்தாமையையும் காட்டுகிறார் ‘ஊரும் நாடும்’ என்று
தொடங்கி. பெற்றி நிர்வாகத்தில், “கூவி’ என்பதற்குக் கூவும்படி செய்து என்றும், “எழும்” என்பதற்குச் சந்தோஷிக்கும் என்றும் பொருள்.

அன்றிக்கே, பூவை பைங்கிளிகள். . . . . .எழும் என்பதற்கு, திருநாமச்சுவடு அறிந்த பின்பு
விளையாட்டுக்குரிய கருவிகளைப் பார்த்தல்இவளுக்குப் பொறுக்கக் கூடாத தாயிருக்கும் என்னுதல்.

திருமால்திருநாமங்களைக் கூவி, “மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர்தோள்கை விட்டு” என்கிறபடியே,
பூவை தொடக்கமான எல்லாவற்றையும் இகழும்எ-ன் பாவை என்றபடி. இங்கே, “எழும்” என்றதற்கு,
அவற்றை விட்டு எழும்என்று பொருள் கொள்க.-எழும் -த்வேஷிக்கும் -எழ்கல் இராகம் இலாதான் -என்றவாறு –

ஸ்ரீ பரதாழ்வானுடைய ராஜ்யதரிசனம் அவனுக்குப் பொறுக்க முடியாமற்போனது போலே.
சக்கரவர்த்திக்குச் சாஸ்திரார்த்தங்கள் செய்த அன்று நாயிறு பாடு, -இறுதி சடங்கு – விடியல் காலையில் –
‘கைகேசி செய்த குற்றத்துக்கு நாமும் கீழோலை இட்டோம் என்று நாட்டார் நினைத்திருப்பது ஒன்று உண்டு;
அந்தக் குற்றம் நமக்கு இல்லை என்று அறிவிக்கவேணும்’ என்று சபையை அடைந்தான்.
அரசர் கூட்டம் அடங்கலும் திரண்டு கர்த்தாவானவனை இழந்தோம்; பின்பு அதற்குரியவர் காடு ஏறப்போய்க் கொடு நின்றார்;
இனி, சக்கரவர்த்தி புத்திரர்களில் நின்றாரைக்கொண்டு நிர்வஹிக்கும் அத்தனை அன்றோ’

ஸபாஷ்ப கலயா வாசா கல ஹம்ஸ ஸ்வரோ யுவா
விலலாப ஸபாமத்யே ஜகர்ஹே ச புரோஹிதம்.”
“கதம் தசரதாஜ் ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக:
ராஜ்யம்ச அஹம் ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி”-என்பன, ஸ்ரீராமா. அயோத். 82 : 10, 12.
என்று பார்த்து, மங்களத்தைக்கொடுக்கிற பல்லியங்களை முழக்கிக்கொண்டிருந்தார்கள்.

இந்த முரச ஒலி செவிப்பட்டபோது “கருமாணிக்கமலை” என்னும் திருவாய்மொழியில் பிராட்டியின் சுயம்வரத்துக்கு
மண முரசு அறைந்தபோது தோழி பட்டவெல்லாம் பட்டான்.
விலலாப சபா மத்யே – தனி இடத்தில் அன்றோ பறிகொடுப்பது. தனக்குச் சேஷத்துவம் அன்றோ சொரூபம்;
சொரூபத்தை யன்றோ கொள்ள நினைக்கிறது.
ஜகர்ஹேச-சந்தியா வந்தனத்துக்குப் பிற்பட்டாரைப் பெரியோர்கள் பழிக்குமாறு போலே.
புரோஹிதம் – இந்தக் குடிக்கு நாங்கள் கைவாங்கியிருக்க, நீ முன்னோடிக் காரியங்கள் நடத்தக் கடவதாகச் சமைந்தபடி சால அழகியதாய் இருந்தது.
சபாமத்யே ஜகர்ஹே-“நிய மாதிக்ரமம் ரஹஸிபோதயேத்-ப்ரமாதாத் ஆசார்யஸ்ய புத்திபூர்வம்வா நியமாதிக்ரமம்ரஹஸி போதயேத்”-என்பது, ஆபஸ்தம்ப தர்மம்.

தவறான செயலைத் தனிமையில் தெரிவிக்கவேண்டும்” என்கிற நிலையைக் குலைத்தான்.
புரோஹிதத்வமாகிற காரணம் கழிகையினாலே. ராஜ்யஞ்ச அஹஞ்சராமஸ்ய-சேஷவஸ்துக்களில் ஒன்றனை ஒன்று ஆளுமோ?
அங்ஙனேயாமன்று, இராச்சியந்தான் என்னை ஆண்டாலோ?
தர்மம் வக்தும் இஹார்ஹஸி-உலகத்தில் தமப்பன்மாரையும் தமையன்மாரையும் அழியச்செய்து
தாம்தாம் இராச்சியத்தைக் கைக்கொண்டு போருவது ஒன்று உண்டு;
‘அதனை இவனும் செய்வான்’ என்று இராதே கொள்; என் தன்மை அறிந்து அதற்குத் தகுதியாக வார்த்தை சொல்லப் பாராய்.
கதம் தசர தாஜ் ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக:-
அவர் பிரிந்த உடனே முடியவல்லவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே?
அவர் பொகட்டுப்போன இராச்சியத்தை நான் அபஹரித்தால்.
நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி:-
தகுதி இல்லாத வார்த்தைகளை அவன்-வசிஷ்டர் – சொல்லச் செவிதாழ்த்ததனால் அபவாதத்துக்குப் பிராயச்சித்தம் செய்கிறான்.
“யத்ஹிமாத்ராக்ருதம் பாவம் நஅஹம் ததபி ரோசயே
இஹஸ்தோ வனதுர்க்கஸ்தம் நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி:”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 82 : 15.

என்பாவை இனிப்போய்-என்புத்திக்கு வசமான செயல்களையுடையவள் கண்டீர் என்னை ஒழியப் புறப்பட்டுப்போனாள்.
அன்றிக்கே, நிருபாதிகமான பெண்மையையுடையவள் என்னலுமாம். -மணி வல்லிப் பேச்சு வந்தேறி அல்ல –
விளையாட்டுப் பொருள்களால் கொள்ளும் காரியமும் அவனே யாம்படியான இந்த ஈடுபாட்டிற்கு மேலே
அங்குப் போய்ப் பெறுவது என்னாகப் போனாளோ? என்பாள் ‘இனிப்போய்’ என்கிறாள்.
தண் பழனம் திருக்கோளூர்க்கே –
சிரமத்தைப் போக்கக் கூடிய நீர் நிலங்களையுடைய திருக்கோளூர்க்கே.
கோவை வாய்துடிப்ப –
கோவைப்பழம் போன்ற சிவப்பையுடைத்தான அதரமானது துடிக்க.
“ ‘பிரியேன்’ என்று பிரிந்தாய்; ‘வருகிறேன்’ என்று வந்திலை; என்னைத் தனியே இட்டுவைத்தாய்;,
நான் வருமளவும் இருந்தாய்” என்பனபோலே இருக்கச் சில சொல்ல நினைக்குமே;
அது தோற்றும்படி உதடு நெளிக்கிறபடி. கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணோடு-
நினைத்தது சொல்லித் தலைக்கட்ட வொட்டாநின்றதோ கண்ணநீர்! உடைகுலைப்பட்டுக் கண்ணநீராலே தலைக்கட்டாநின்றாள்.
“தசரதபுத்திரனான ஸ்ரீபரதாழ்வான் தீன சுரத்தோடு ஒரு தடவை ‘ஆர்யா’ என்று சொல்லிப் பின்பு வேறு ஒருவார்த்தையும் சொல்லவில்லை”
“துக்காபிதப்தோ பரதோ ராஜபுத்ரோ மஹாபல:
உக்த்வா ஆர்யேதி ஸக்ருத்தீனம் புந: நோவாச கிஞ்சந”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 38.-என்பது போன்று.
என் செய்யும் கொலோ –
சொல்லமாட்டாள், தவிரமாட்டாள்; அழாதொழியமாட்டாள்; எங்ஙனே படுகிறாளோ?
நம்மையும் பிறரையும் விட்டு அவன் திருநாமங்களை அநுபவிக்கிற போதை அழகு காணப்பெற்றோம்;
அவனையே கண்டு அநுபவிக்கிற போதை அழகு காணப்பெற்றிலோமே.
நினைக்கும் வேளையில் போலே அன்று, கண்டால் பிறக்கும் விகாரங்கள்;
“காமன் உடல்கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டு அலம்பும் தார் அலங்கல் நீண்முடியான்தன்
பெயரே கேட்டிருந்து அங்கு ஆரலங்கல் ஆனமையால் கண்டு வணங்கினார்க்கு என்னாங்கொல்”- நான்முகன் திருவந். 78. என்றேயன்றோ இருப்பது.
காமாஸ்ரமம்-இன்றும் உண்டே -அனங்கன் ஆனான் -தமஸ் ரஜஸ் கொண்ட ருத்ரனுக்கே இப்படி என்றால் –
அலாபத்தோடே இருக்கும்இருப்புக்கண்டேன்; இலாபத்தோடே இருக்கும் இருப்புக் காணப்பெற்றிலேன் என்கிறாள்-

——————————————————————————————-

கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.–6-7-4-

நிரதிசய ஐஸ்வர்யம் விசிஷ்டன் -யார் என்ன சொல்வார்களோ
கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?-வரம்பை மீறி -வரம்பில் நின்றவள் -இரண்டும் சொல்லும் படி -கிரஹித்தும்-குணம் மிக்கவள்
அதிசயிதம் அநுரூப விஷயம் அறிந்து -பிராப்ய த்வரை உபாய அத்யாவச்யத்துக்கு மேலே என்று அறிந்து -கொண்டாடுவார்களோ -விஷாத சூ சகம்
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!-தம்மூர் பெண்கள் -வரம்பு மீறி -வெளியூரில் உள்ளார் குணம் மிக்கவள்
-சிலுகையே -சில் என்று அழைத்து குற்றம் சொல்லி குத்துவதே ஸ்வ பாவம் -இருவரும் இரண்டு விதம்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே-அதிசய ஐஸ்வர்யம் –
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.-பாதி வழியே போனாள் -என்ற வாறு -அடுத்த தூது -வெளியிலே இருந்து தூது
–5-9-திரு வல்ல வாழ் -போக முடியாமல் இங்கும்
முக்தமான -பல ஹானி பருவம் பாராமல் -போவதில் நெஞ்சம் வைத்து -நெஞ்சு பொருந்தி விட்டது

தோழியே! செல்வம் மிகும்படி அவன் சயனித்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்ய தேசத்திற்கு, என் இளமான் மெல்லிய இடையானது
அசையும்படியாகச் செல்லுதற்கு ஒருபட்டடாள்; பலவாறு பேசுகின்ற வாய்களையுடைய பெண்டுகளும் அயல் ஊரிலுள்ள பெண்டுகளும்
வரம்பு அழிந்த செயலையுடையள் என்பர்கொலோ? குணத்தாலே மேம்பட்டவள் என்பர்கொலோ?
கொல்லை – வரம்பு அழிந்த செயலையுடையவள்; உடையவன்: உயர்திணை இருபாற்கும் பொதுப்பெயர். சில்லை – பழிச்சொல்.
மல்கிக் கிடந்த திருக்கோளூர் என்க. மல்கி – மல்க. துடங்க மேவினள் என்க.

இவளைக் கண்ட நாட்டார் குணம் இல்லாதவள் என்பர்கொலோ?
குணங்களால் மேம்பட்டவள் என்று கொண்டாடுவர்களோ? என்கிறாள்.

கொல்லை என்பர்கொலோ –
இவள் வாசல் கடந்து புறப்படக்கடவதல்லாத மரியாதையைக் குலைத்தாள்:
இவள் விலக்கிய செயலை மேற்கொண்டாள்; இவள் வரம்பு அழிந்த செயல்களைச் செய்தாள் என்பர்களோ?
கொல்லை என்பது, வரம்பு இல்லாததற்குப் பெயர்.
குணம் மிக்கனள் என்பர்கொலோ –
குணாதிகவிஷயத்துக்குப் போரும்படி செய்தாள் என்பர்களோ?
கொல்லைஎன்பர் கொலோ குணம் மிக்கனள் என்பர் கொலோ –
இவள் விதியை மீறினாள் என்பர்களோ; அல்லது சித்தாந்தம் தன்னையே சொல்லுவர்களோ?

சித்தாந்தம் தன்னையே சொல்லுவர்களோ?’ என்றது, ‘ருசி சுபாவத்தாலும், விஷய சுபாவத்தாலும், ஆத்ம சொரூபத்தைப் பார்த்தாலும்’ என்று
சொல்லப்படுகின்ற இவளுடைய பிராவண்யத்தின் மிருதி, விஷய வைலக்ஷண்யம், சேஷத்வ சொரூபம் ஆகிற காரணம் மூன்றாலும் இது
தக்கது என்கிற சித்தாந்தந்தன்னையே என்றபடி.
ஓர் அளவிலே நின்று விலக்கியவற்றைக் கொண்டு, இது தகுதி இல்லாதது என்பர்களோ;
ருசி சுபாவத்தாலும் விஷய சுபாவத்தாலும் இது தக்கது என்பர்களோ?
சாதன விதியளவிலே நின்று தடுமாறுவர்களோ: ஆதம் சொரூபத்தைப் பார்த்துத் தெளிவர்களோ?
உபாய அம்சத்தைப் பற்றி நின்று, இது கடவது அன்று என்பர்களோ;
ஆத்மாவின் சொரூபத்தையும் பேற்றின் சொரூபத்தையும் பார்த்து, இது கடவதுஎன்பர்களோ?
பிற சாதனங்களை விலக்குதலை முன்னாகக்கொண்ட சொரூப ஞானம் பிறந்தால் பறப்படத் தகுதி இல்லை;
சொரூபத்திற்குத் தகுதியான கைங்கரியத்தினை நினைத்தால், போய்ப் புக்கு அல்லது நிற்க ஒண்ணாது.
விதியைப் பார்த்து நிந்திப்பர்களோ: காம வசனத்தைப் பார்த்து நன்று என்பர்களோ?
“விரக்தரான நீர் காமத்துக்குப் பரவசப்பட்டிருக்கின்ற எங்களை என்படுத்துகிறீர்” என்றாள் அன்றோ தாரை இளையபெருமாளைப் பார்த்து.

“ந காம தந்த்ரே தவ புத்திரஸ்தி
த்வம் வை யதா மந்யுவசம் பரபந்ந:
ந தேசகாலௌ ஹி நசார்த்த தர்மௌ
அபேக்ஷதே காமரதிர் மநுஷ்ய:”–என்பது, ஸ்ரீராமா. கிஷ். 33 : 55. இளையபெருமாளைப் பார்த்துத் தாரை
கூறியது. என்றது, நீர் காமசாஸ்திரத்தை அறிந்திருந்தால் அன்றோ நான்செய்தது நன்று என்று நினைப்பீர் என்றபடி.

தானே போகையாலே அநந்ய உபாயத்வ வ்ருத்த -ஸூ யத்ன சாத்ய உபாயாந்தர தியாக -சர்வ தரமான் பரித்யஜ்ய -விதியை அதிக்ரமித்தாளோ
பிராவண்யா அதிசயம் -ருசி ஸ்வ பாவத்தாலும் -விஷய ஸ்வ பாவத்தாலும் -ஸ்வ ஸ்வரூபத்தை பார்த்தாலும் -இதுவே பிராப்தம்
-இத்தைப் பார்த்து கொண்டாடுவார்களோ
ததேக உபாயத்வ ததேக ரஷகத்வம் -கொல்லை என்பர் மார்பிலே கை வைத்து உறங்க பார்க்கும் ஓர் அளவிலே நிற்பார்
ஸூ பிரவ்ருத்தி கூடாதே -என்பார் -ஓர் அளவில் கட்டுக்கு உட்பட்டு காதல் இருந்தால்
சித்தாந்தம் -ருசி ஸ்வ பாவம் -விஷய ஆதார அதிசயம் -குணாதிக விஷயம்
சாதனா விதி அளவில் நின்று தடுமாறுவார்களோ-ஸூ ஸ்வரூபம் -சேஷிக்கு அதிசய கரம் உணர்ந்து கொண்டாடுவார்களோ –
சேஷி விஷய பிராவன்யமே வடிவு -கொண்ட இவள் –
பாரதந்த்ர்யா ஸ்வரூபம் கை வைத்து உறங்க வேண்டும் –சேஷிக்கு அதிசயம் ஓட வேண்டும்

சில்லை வாய்ப் பெண்டுகள்-
சிலுகு சிலுகு என்னும் பெண்டுகள். விஷயத்திற்கு உட்பட்டு வருமதனையும் வசன சித்தம் என்றிருக்குமவர்கள்.
உபாயபுத்தியினாலே வருமவற்றில் அன்றோ விதிக்குவிஷயமுள்ளது;
குணங்களால் தூண்டப்பட்டுப் போமிடத்தில் விதி விஷயமாகாதே.
அயல் சேரியுள்ளாரும் –
இவள் இருந்த ஓர் ஊர் வாசியும் கூட இல்லாதவர்கள்.
எல்லே –
கீழில் அவர்களை விளிக்கிறாளாதல்; இஃது ஓர் ஆச்சரியம் இருந்தபடி என்! என்கிறாளாதல்.
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே –
அவன் வரவை வாராமைக்குச் சமம் ஆக்கினாள். முற்பாடனாய் வந்தவனை, தான் நாலடி இட்டுப் பிற்பாடனாம்படி செய்தாள்.
அவன் சொரூபத்தை அழித்தாள். பரத்துவம் வியூகம் முதலியவைகளை விட்டு இங்கு வந்து கிடக்கிறது இவளுக்கு முற்பாடனாய் உதவுகைக்கு அன்றோ.
தனக்குமேல் ஒன்று இல்லாததான செல்வமானது கரைபுரளும் படியாக அவன் வந்து திருக்கண்வளர்ந்தருளுகிற திருக்கோளூர்க்கே.
பாதுகாக்க வேண்டிய பொருள்களினுடைய பாதுகாத்தலைத் தொடங்கினாலன்றோ நியமிக்கின்றவனுடைய செல்வம் பிரகாசிப்பது!
அவன் வரவு பார்த்து இவள் இருக்கை அன்றிக்கே, இவள் வரவு பார்த்து அவன் காலம் பார்த்துக்கொண்டு கிடக்கிறான் ஆதலின் ‘அவன் கிடந்த’ என்கிறாள்.
ரஷகத்வம் – -அன்வயித்தால் தானே நியந்தா உடைய செல்வம் மல்கும் –ஸ்ரீ வைகுந்தம் செல்வம் மல்காதே –

மெல் இடைநுடங்க –
அவன் சொரூபஞானம் இல்லாவிட்டால், தன்னுடைய சொரூபஞானமோதான் இவளுக்கு உண்டாயிருக்கிறது.
இவளுக்கு விழுக்காடு அறியாமை எங்கும் ஒத்தது கண்டீர்! தன் இடையை அறிந்தாளாகில் தான் புறப்பட்டுப்போமோ?
நடுவே அறியாமல் புகுந்த பிழை அன்றோ. மிருதுவான இடையானது துவுளம்படியாக.
இந்த இடையைக்கொண்டு இவள் நடக்கப் புக்கால் எதிரே புறப்பட்டு வர வேண்டாவோ? -நமஸ் சப்தார்த்தம் அறியாமல் –
எதிரே புறப்பட்டு வராமல் செல்வக் கிடப்பாலே கிடந்தான் -குற்றம்
ரஷணம் முற்பாடனாய் இருக்க -நகராமல் கிடந்தது இருக்க வேண்டுமே -அவன் வரவு அசத்சமம் ஆக்கி -வந்தாளே-என்றுமாம்

இளமான் –
போகிற வழியில் மிறுக்கும், தன் தன்மையும் அறிந்து மீளவல்ல பருவம் அன்று கண்டீர்.
செல்ல மேவினளே-போக ஒருப்பட்டாள். இவள் கையிலும் இவர்கள் கைகளிலும் அன்றே பேறு கிடப்பது;
அது அவன் கையதன்றோ; இத் தலையில் துணிவே யன்றோ உள்ளது.
மேலே “போனாள்” என்றாள்; இங்கே, “போக்கிலே ஒருப்பட்டாள்” என்னாநின்றாள்;
இது, சேரும்படி என்? என்னில், இவள் போகையில் ஒருப்பட்டபோதே போய்ப்புக்காள் அன்றோ என்கிறாள்.

‘மேலே போனாள்’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து, பாதிவழி போனாள் என்பது. அது எங்ஙனே? என்னில், இத்திருவாய்மொழியின்
முன்னுரையிலே ‘படுக்கையைப் பார்த்தவிடத்தில் வெறும்படுக்கையாய்க்கிடந்தது’ என்கையாலும், “பொன்னுலகாளீரோ’ என்ற திருவாய்மொழியின்
முன்னுரையிலே. ‘புறச்சோலையிலே கிடந்து தூது விடுகிறாள்’ என்கையாலும், ‘ஒருப்பட்டாள்’ என்பதற்கு, பாதிவழி போனாள் என்பது பொருளாகக் கொள்க.

இளமான் செல்ல மேவினள், கொல்லை என்பர்கொலோ? குணம் மிக்கனள் என்பர்கொலோ? –
அவள் கைகழிந்து கொடுநின்றாள்: இனி இருந்த நாம் என்கேட்கிறோமோ?
இங்கு இருந்த நாள் நம்முடைய நல்வார்த்தையைக் கேட்கில் அன்றோ வழியிலுள்ளார் பழிகேட்பது அவள்.
இவள் வழிப்பட்டால் நல்வழியிலுள்ளார் வார்த்தை கேட்குமது ஒழியப் பெருவழியானார் வார்த்தை கேளாள்.

கொல்லை என்கிறவர்கள் சில்லை வாய் பெண்டுகள்
குணம் மிக்கார் அயல் சேரி என்றால் -இவள் இருந்த ஊர் வாசியும் இல்லாதவர்கள் அந்ய- மட்டம் தட்டுவது போலே -பொருந்தாதே –
இரண்டு திறத்தாரும் கொல்லை குணம் மிக்கவள் என்பார் என்றே கொள்ள வேண்டும் –
அத்யவசாய நிஷ்டர் -சில்லை வாய் பெண்டிர்
அயல் சேரி -அத்யவசாய நிஷ்டர்க்கு அசலான த்வரை மிக்கவர்கள் -ஊரில் இருந்த வாசியும் இல்லாதவர்கள் -பொருந்தாதே இங்கும் –
இவள் வழிப் பட்டால் நல் வழி உள்ளார் வார்த்தை கேட்பாள்
பெரு வழி போனார் –அயல் சேரி -பிராப்ய த்வரை வார்த்தை கேளாள்-பொருந்தாது
இதுக்கு பரிகாரம் யோஜித்துக் கொள்வது
24000 படி -நம் சேரியில் -அந்ய ஸ்திரீகள் -ஸ்வா பதேசம் -வசன பரர் -பரித்யஜ்ய -உபாய அத்யவசாய நிஷ்டர் என்றபடி –
சில்லை வாய் -இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவம் செய்வார்கள் பிரேம பரர் –
பெரு வழி -வார்த்தை கேட்காமல் நல் வழி -சிலுகு -அலவலை போலே கொண்டாடும் -நம் சேரி
விஷயாதீனம் -அயல் சேரி -பரிதாபம் பட்டு சொல்லாமல் —பெண்ணின் குணம் ஈடுபடாமல் என்றபடி

———————————————————————-

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-

ஸ்ரீ யபதி -வி லஷணம் போக ஸ்தானம் கண்டு
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்-சௌந்தர்ய சீலாதிகளை நெஞ்சாலே கிட்டி
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்-பருவம் நிரம்பாதே -தேவி -வாசி அறியும் படி திவ்ய -ஸ்வ பாவம் உடையவள்
-தன் திருமால் -தனக்காக சேர்த்தி அசாதாரானமான மிதுனம்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு-பூவே மலர்ந்து நிறைந்து சோலை தடாகம் -போக ஸ்தானம் -நினைத்து முன்பு சிதிலை ஆனவள்
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே-காணப் பெற்று -பிராண ஆஸ்ரமான நெஞ்சு -உகப்பாளோ-இல்லையோ –

என்னுடைய இளமைபொருந்திய பெண்ணானவள், அவனை மனத்தாலே அடைந்து அதனாலே மனமும் சரீரமும் உருகக் குலைந்து
விளையாடுதலைச் செய்யாள்; இனிச் சென்று, தனது திருமால் எழுந்தருளியிருக்கின்ற திருக்கோளூர் என்னும் திவ்விய தேசத்தில் இருக்கின்ற
பூக்கள் நிறைந்த சோலைகளையும் குளங்களையும் அவனுடைய கோயிலையும் உயிர் குளிரும்படியாகக் கண்டு இன்று எப்படி மகிழ்கின்றாளோ?
என் சிறுத்தேவி மேவி நைந்து விளையாடல் உறாள்; இன்றுபோய் ஆவி உள் குளிரக் கண்டு எங்ஙனே உகக்குங் கொல்? என்க.

திருக்கோளூரில் சோலைகளையும் அங்குள்ள பொய்கைகளையும் அவன் திருக்கோயிலையும் கண்டால்
எங்ஙனே உகக்குமோ? என்கிறாள்.

மேவி-
பகவானுடைய குணங்களிலே நெஞ்சினை வைத்து.
நைந்துநைந்து –
தான் பற்றியிருக்கும் பொருள்களை அழிக்கும்நெருப்புப்போலே குணங்கள்தாம் அழிக்குமே:
“நினைதொறும் சொல்லும்தோறும் நெஞ்சு இடிந்துகும்”- திருவாய். 9. 6 : 2.– என்பதேயன்றோ மறைமொழி.
இவள் மேவியது நிர்க்குணமாய் இருப்பது ஒரு விஷயத்தோடு அன்றே; உயர்வற உயர்நலமுடையவனோடே அன்றோ.
மேவி –
இங்கு இருந்த நாளும் எங்களோடே பொருத்தம் இல்லை கண்டீர்.
நைந்து நைந்து –
நைந்து மீளமாட்டாள்; தரித்திருக்க மாட்டாள்.
விளையாடல் உறாள் –
பருவத்துக்குத் தக்கதான விளையாடலை விட்டாள்.
விளையாடுகையைத் தவிர்ந்து மேவி நைந்தாள் அன்று கண்டீர்,
இந்த விஷயத்திலே மூழ்கி, புறம்புள்ளவற்றை விட்டாளத்தனை.
“மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு” – பகவானுடைய குணங்கள் கொண்டு மூழுக, புறம்புள்ளது கைவிட்டாள்.
நல்லதும் தீயதுமானால், தீயது போல் அன்றே நல்லது பண்ணிக்கொள்ளும்படி.
“எவன் ஒருவன் பரம்பொருளிடத்தில் மிகுந்த பக்தியுடையவனாய், பரம்பொருளுக்கு வேறான விஷயங்களில்
அன்பில்லாதவனா யிருக்கிறானோ அவன் எல்லாஆசைகளிலிருந்து விடுபட்டவனாய்ப் பிச்சை எடுத்து
உண்பதற்குத் தகுந்தவனாகிறான்”,
“மனைப்பால், பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதார் அத்தோள்” என்னுமாறு போலே.
மேவி நைந்து நைந்து விளையாடல் உறாள் –
பரமாத்மநி யோரக்த: விரக்த: அபரமாத்மநி
ஸர்வேஷணா விநிர்முக்த: ஸ: பைக்ஷம் போக்தும் அர்ஹதி”-என்பது, பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.
“மனைப்பால்” என்பது, இரண்டாந்திரு. 42.

இளமை மாறி முதியோளானாள் அல்லள்.
‘ஜம்புல இன்பங்கள் தாழ்ந்தவை’ என்று சாஸ்திரத்தாலே அறிந்து அவற்றை விட்டு, ‘பகவத் விஷயம் நன்று’ என்று கைவைத்தாள் அல்லள்.
இதர முமுஷுக்களில் வியாவ்ருத்தி -ஞானத்தால் பேச வில்லையே -பிரேமத்தால் பேசுகிறாள் இப்பொழுது –

என் சிறுத்தேவி –
தன் ‘திருமால்’ என்று மேலே பெரிய தேவியைச் சொல்லுகையாலே, ‘சிறுத்தேவி’ என்று விசேடிக்கிறாள்.
அன்றிக்கே, பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் பட்டம் கட்டின பெருந்தேவிகளோடு
ஒக்கச் சொல்லலாயிருக்கையாலே ‘சிறுத்தேவி’ என்கிறாள் என்னுதல்,
‘என்பெண் பிள்ளை’ என்கிற நினைவு இல்லைகாணும் இவளுக்கு.
“பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே” –, பெரிய திருமொழி.8. 2 : 9.—
இவளுக்கு நல் வார்த்தை சொன்ன நாக்கினைக் கழுவ வேணும் என்கிறாள்.
இனிப் போய் –
வேறே சில பொருள்கள் கொண்டு போது போக்கவேண்டும் பருவத்திலே, அவற்றை விடும் படியான பாகம் பிறந்த
இதற்குமேலே ஓர் ஏற்றஃகம் உண்டாகப் போனாளோ? என்றது,
இங்கே இருக்கச்செய்தே “ஜனங்களின் சமீபத்தில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினைக்கிறான் இல்லை”
“நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்” என்பது, சாந்தோக்யம்.-8. 12 : 3. என்றது, சம்சாரத்தை விட்டுப் பரமபதத்துக்குச் சென்ற
முக்தனுக்குப் பிறந்த ஞானம், இவளுக்கு இங்கே இருக்கச்செய்தே பிறந்ததானால், இனி அங்கே சென்று அநுபவிப்பது ஒன்று உண்டோ? என்றபடி.
என்ற நிலை பிறந்ததாகில், இனி, அங்குப் போய் அநுபவிப்பது உண்டோ?
தன் திருமால் திருக்கோளூரில் –
அவள் பக்கல் இருக்குமாறு போலே அன்றோ இவள் பக்கலிலும் அவன் இருக்கும்படி. -தன் மால் –தன் திரு -தன் திருமால்
உலகத்தில் சேஷசேஷி பாவம்போல் அன்றே காதலி பக்கல் பரிமாற்றம்.
ஆதலாலே, “உலகத்திற்குத் தலைவன்” என்கிறபடியே, பிரமாணத்தைப் பார்த்துப் பரிமாற ஒண்ணாது அன்றோ காதலர் விஷயத்தில்.
தனக்கு எல்லாச் செல்வமான திருமால் திருக்கண்வளர்ந்தருளுகிற ஊரிலே.

பூ இயல் பொழிலும் –
தழையும் தண்டும் கொம்பும் கொடியுமாய்த துரலாய் இராமல், வெறும் பூவேயாயிருக்கை.
நித்திய வசந்தமான சோலை. தடமும் – அந்தப்பொழிலை வளர்ப்பதாய்ப் பரப்பு மாறப் பூத்த தடாகமும்.
அவன் கோயிலும் கண்டு –
“மா மணிக் கோயிலே வணங்கி” – பெரிய திரு. 1. 1 : 6.-என்கிறபடியே,
அவனிலும் அவன் விரும்பி வாழ்கிற கோயிலையும் கண்களாரக் கண்டு.
திவ்யாத்ம சொரூபத்துக்குப் பிரகாசகமான திவ்வியமங்கள விக்கிரஹம்போலே, அவை இரண்டுக்கும் பிரகாசகமான கோயில்,
கோயிலைக் கண்ட போதே உள் உண்டான பொருளையும் அறுதி இடலாயிருக்கை.
உள்ளில் பொன்னுக்குத் தக்க செப்பாயிருக்கும் அன்றோ. கண்டுஇங்கே இருந்து
மானச அநுபவமாத்திரமேயாய்க் கிலேசப் பட்டவள் கண்ணாரக் கண்டு.
‘பிள்ளை திருநறையூர் அரையரும், பட்டருமாக உள்ளே பிரதக்ஷணம் செய்யாநிற்க, இட்டஅடி மாறி இட மாட்டாதே
கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்து வாழ்ந்து கொண்டு போகிறபடியைப் பின்னே நின்று கண்டு அநுபவித்தேன்’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.
ஆச்சானும் ஆண்டானுமாகக் கிழக்கே நடக்கிறபோது, திருப்பேர் நகருக்குக் கிழக்குப் போகவும் மாட்டாதே,
ஏறித் திருவடி தொழவும் மாட்டாதே, திருப்பேர் நகரான் கோயிலைப்பார்த்துக் கொண்டு இருந்தார்களாம்.

ஆவி உள்குளிர –
இவ்விடத்தைப் பட்டர் அருளிச்செய்யாநிற்கச்செய்தே மேல்எழ அருளிச்செய்தாராய்,
அங்கே இருந்தவரான சீராமப்பிள்ளை, ‘சீயா! எம்பார் அருளிச்செய்யும்படி கேட்டறிகை இல்லையோ?’ என்று அருளிச்செய்தார்.
கமர் பிளந்த பரப்பு அடங்கலும் மறு நனையும்படி யாயிருக்கை.
எங்ஙனே உகக்கும்கொல் –
இவள் பருவம் நிரம்பாதிருக்கச் செய்தே புறம் புள்ளவற்றை விட்டு அவனை நினைத்து உருக்குலைகிற போது
அவ்வழகு கண்டு அநுபவிக்கப் பெற்றேன்; அவனைக் கண்டு அநுபவிக்கிறபோதை அழகு நான் கண்டு வாழப்பெற்றிலேன் என்கிறாள்.
இன்றே –
எனக்குச் சோகத்தாலே சூந்யமாய்க் கிடக்கிற இன்று அவளுக்கு அநுபவத்தால் அடிக்கமஞ்சு பெற்றுச் செல்லுகிறதே!
ஒருநாளிலே இப்படி ஆவதே! நாள்வாசி அற்று இருந்ததே அன்றோ விஷயாதீனமாய் வருகையாலே.

நாள்வாசி – நாளின் குணம். ‘விஷயாதீனமாய் வருகையாலே’ என்றது, தனக்குப் பிரியமான பெண்ணைப் பிரிகையாலும்,
அவளுக்கு விருப்பமான நாயகனை அவள் பெறுகையாலும் என்றபடி.

————————————————————————————–

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6-

திரு அவயவ சோபை அனுபவித்து சிதிலையாம் இ றே -முன்பு ஆவி உள்- அங்கு கோயில் தடாகம் -இங்கு திருக் கண் செவ்வாய் –
இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்-கை கழிய -சிறு தேவி
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே-திலகம் போலே -அலங்காரமாக
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு-புக்க பின்பு -உற்றார் உடன் உறவு அறுத்த -தன் திருமால் –
ஸுவ அபிமத சம்ச்லேஷத்தை பிரகாசிப்பித்தது
சாதார அபி வீஷணம் பண்ணும்-ரச அநு நயமான –ரசம் இட்டு சொன்ன வார்த்தை -ஸ்வாகதம் – வசனம் உஜ்வல ரூபம்
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே-ஆனந்த அஸ்ரு பூரணமாம் படி ஹர்ஷ அதிசயம் சிதிலை யாகா நின்றாள்

இன்றையதினத்தில் எனக்கு உதவாமல் நீங்கிய என்மகளானவள், இதற்குமேல் சென்று தென்திசைக்குத் திலதத்தைப் போன்று விளங்குகின்ற
திருக்கோளூர் என்னும் திவ்வியதேசத்தை அடைந்து, தன் திருமாலினுடைய திருக்கண்களையும் சிவந்த திருவாயினையும் கண்டு,
நீண்ட தனது கண்களில் தண்ணீர் நிறையும்படியாக நின்றுநின்று வருந்தாநிற்பாள்.
இளமான் இனிப்போய்த் திருக்கோளூர்க்கே சென்று கண்டு பனிமல்க நின்று நின்று நையும் என்க.

அவனுடைய சிநேகத்தின் மிகுதியைக் காட்டுகிற திருக்கண்கள் முதலாயினவற்றைக் கண்டு உவகையின் மிகுதியாலே
உருக்குலைந்தவள் ஆவாள் அன்றோ என்கிறாள். இவள் தான் உகப்பது அங்கே புக்குத் தரித்து நிற்கவல்லவள் ஆனால் அன்றோ.
அன்றிக்கே, “எங்ஙனே உகக்கும்கொல்” என்றாள் மேல்திருப்பாசுரத்தில்; இங்ஙனே உகக்கும் என்கிறாள் இத் திருப்பாசுரத்தில் என்னுதல்.
மகள் காணப்புகுகிற விஷயத்தை நினைப்பது, தன்மகள் தன்மையை நினைப்பதாய்த் திருத்தாயார் படுகிறபாடு என்தான்!

இன்று எனக்கு உதவாது அகன்ற –
பிள்ளை பெற்று வளர்க்கிறது ஆபத்துக்கு உதவுகைக்கு அன்றோ? தன்னைப் பிரிந்த இத்தன்மைக்கும்,
இந் நிலைக்கும் மேற்பட எனக்கு ஓர் ஆபத்து உண்டோ? இன்று எனக்கு உதவாது ஒழிவதே!
“இந்த நிலையை அடைந்த நான் இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்த ஸ்ரீராமபிரானை இங்குக் காண்கிறேன் இல்லை;
இதைக் காட்டிலும் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம் வேறு யாது?”
“அதோ நு கிம் துக்கதரம் ஸ: அஹம் இக்ஷ்வாகுநந்தனம் இமாம் அவஸ்தாம் ஆபந்ந. நேஹ பஸ்யாமி ராகவம்”-என்பது,
ஸ்ரீராமா. அயோத். 59 : 26. இது, தசரதன் புலம்பல்.
என்றது, நான் நெடுங்காலம் கூடிவருந்தித் தம்மைப் பெற்றது, தம்மைப் பிரிந்து நான் இந்த நிலையை அடைந்த இற்றைக்கு அன்றோ?
இன்று தம்மை நான் காணாது ஒழிவதே என்றான் அன்றோ என்றபடி.
எனக்கு உதவாது –
சக்கரவத்த்தியில் தனக்கு உன்டான வாசி : “நின்று தூங்குகின்றேன்” என்னுமாறு
சக்கரவர்த்தியைக் காட்டிலும் இவளுக்கு வேறுபாடு, பிரிந்தவுடனே அவன்முடிந்தான்; இவள் முடியவும் பெறாதே தரிக்கவும் பெறாதே இருத்தல்.
இதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘நின்று தூங்குகின்றேன்’ என்று தொடங்கி. என்றது, கொன்றைமாலையாகையாலே அழகர்க்கும் ஆகாது;
அதுதான் திருமலையிலுள்ளதாகையாலே சைவரையும் பறிக்க ஒட்டார்கள்;ஆக, இரண்டு இடத்துக்கும் ஆகாமல் நாலுமாறுபோலே, நானும்,
தம்முடைய சம்பந்தமே காரணமாகப் பந்துக்களும் ஆகாமல், தாமும்அங்கீகரிக்கப் பெறாமல் நடுவே நின்று தடுமாறா நின்றேன் என்ற
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியைப் போன்று, இவளும் தன்னோடேகூட இருக்கவும் பெறாமல் முடியவும் பெறாமல் நோவுபடுகிறேன் என்கிறாள்
என்றபடி. மேலே காட்டிய திருப்பாசுரம், நாய்ச்சியார் திரு. 9 : 9.
போலே; அல்லாத தாய்மாரைப் போலேயோ நான் தனக்கு இருப்பது?
தன் உகப்பே எனக்கு உகப்பாக இருக்குமவளன்றோ நான். இவளுடைய காதலனுக்குக் கடகையும் தானே அன்றோ.
“பிரான் இருந்தமை காட்டீனீர்” என்கிறபடியே
“அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்” – பெரிய திருமொழி. 3. 7 : 7.—
பெயர் இட்டு -இரங்கி -பெருமாள் சக்கரவர்த்திக்கும் ஸ்ரீ கௌசல்யைக்கு இறங்கினால் போலே
பிள்ளைகாள்! பொகட நினைப்பார் பழி இட்டுப் போகவேணுமோ?
அடியாரை நியமிக்கிறவர்கள் என்ன வேணுமோ?
வழிக்குத் துணையாவாரை விலக்குகின்றவர்கள் என்று பொகடுவதே!

அகன்ற –
இப்படிக் கைகழியப்போவதே! ஒரு தேசத்தே நின்றுதான் உதவாது ஒழியப் பெற்றேனோ?
இளமான் –
‘பொகட்டது தாயை அன்றோ’ என்று அறிந்து மீளமாட்டாதபருவம் கண்டீர்! இவளை நான் வெறுக்கிறது ஏன்?
பருவம் அதுவானால் செய்யலாவது உண்டோ?
இனிப் போய் –
உறவு முறையாரில் தாய்க்கு மேற்பட்டார் இலர் அன்றே!
இப்படித் தாயுங்கூடப் புறம்பாம்படி அவன் பக்கலிலே பிறந்த பாவபந்தத்துக்கு மேலே
‘அவ்வருகே ஒன்று உண்டு’ என்னப் போனாளோ?
வந்தேறியைக் கைவிட்டால் எப்பொழுதும் சித்தமாயிருப்பதற்குச் செய்யவேண்டுவது ஒன்று உண்டோ?
ச்வதஸ் சித்தம் பகவத் கைங்கர்யம் -தேடித் போக வேண்டாம் என்றபடி –

தென் திசைத் திலதம அனைய திருக்கோளூர்க்கே –
‘தெற்குத்திக்கு’ என்று கொண்டு, ஆரியர்கள் இகழ்ந்த மிலேச்சபூமி அன்றோ:
இங்ஙனே இருக்கச்செய்தே, ஓர் ஆபரணம்தானே எல்லா ஆபரணங்களுக்கும் நிறம் கொடுக்குமாறு போலே,
திருக்கோளூர் உண்டாகையாலே திக்கு முழுதும் சிலாக்கியமானபடி;
“புண்ணியமான சரித்திரங்களையுடைய அகத்திய முனிவராலே தெற்குத்திசையானது அனைவருக்கும் புகலிடமாகச் செய்யப்பட்டது”
“தக்ஷிணா திக் க்ருதா யேந சரண்யா புண்யகர்மணா
தஸ்ய இதம் ஆஸ்ரமபதம் ப்ரபாவாத் அஸ்ய ராக்ஷஸை:
திக்இயம் தக்ஷிணா த்ராஸாத் த்ருஸ்யதே நோபபுஜ்யதே”–என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 82.
என்னுமாறுபோலே.
திருக்கோளூர்க்கே சென்று –
திருத்தாயார்க்கு அரிதாய்த் தோற்றுகிறபடி.
அவளுக்குவழிப்போக்கோடு, ஊரில் புகுதியோடு, அவன்தன்னைக் காணுமதனோடு,
அங்குப் புக்கால் எப்பொழுதும் தரிசனம் செய்யத்தக்கவனோடு வாசிஅற எல்லாம் உத்தேசியமாய் இருக்குமன்றோ.
அர்ச்சிராதி கதியோடு, பரமபதத்தோடு, அங்குப் புக்கால் எப்பொழுதும் தரிசனம் செய்யத்தக்கவனோடு
வாசியற பேற்றிலே சேர்ந்தனவாகக் கடவனவன்றோ.
பிராப்ய புத்தியாக பார்த்தால் எதுவும் ஸ்ரமம் இல்லையே -உபாய புத்தியாக பார்த்தால் சிறியதும் அரியதாய் இருக்குமே –

தன் திருமால் –
“உலகங்களில் இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும் திருமாலானவர் தந்தையும் தாயுமாக இருக்கிறார்”
ஸர்வேஷாமேவ லோகநாம் பிதா மாதாச மாதவ: கச்சத்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:–என்பது, பாரதம்.
என்கிறபடியே, இங்கு விட்ட உறவெல்லாம் அங்கே உண்டாயிருக்கிறபடி.-தன் மால் என்னாமல் தன் திருமால் –
அவனுடைய பிராப்பிய வேஷந்தான் இலக்ஷ்மீபதியாயன்றோ இருப்பது. –
நீயும் திரு மாலால் கோட்பட்டாயே -வஞ்சிக்கும் பொழுதும் மிதுனமே
விசிஷ்ட வேஷத்தில் அல்லது தன் எண்ணத்தைச் செலுத்த அறியாள்.
திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு –
‘இவள் முற்படும்படி நாம் பிற்பாடர் ஆவதே!’ என்று பொறை கொள்ளுகைக்குக் குளிர நோக்குகிற நோக்கும்,
சில சொல்லப் புக்குத் தடுமாறுகிற திருப்பவளமும் இருக்கிறபடி.
அவனுடைய கோவைவாய் துடிப்ப மழைக்கண்கள் இருக்கிறபடி.
நின்று நின்று நையும் –
நாட்செல்ல நாட்செல்ல இற்று இற்று விழும்.
கண்டால் முன்புத்தைப் பிரிவினை நினைக்க அறியாள் : எதிர்த்தலை படுகிறது கண்டு ஈடுபடுகிறபடி.
“காணுங்கால் காணேன் தவறான காணாக்கால், காணேன்தவறல்லவை”-திருக்குறள் – என்றே அன்றோ இருப்பது.
நெடும் கண்கள் பனிமல்கவே –
இக்கண்களில் பரப்பு அடங்கலும் பரப்பு மாறும்படி தண்ணீர் உண்டாவதே!
நின்று நின்று நையும் –
மாறாமல் உருக்குலையா நின்றாள். கிண்ணகத்தில் இளகின கரை போலே உடைகுலைப் படுகிறபடி.
நெடும் கண்கள் பனி மல்கவே –
நெஞ்சுக்கு உருகுதல் போலே காணும் கண்களுக்குக் கண்ணநீர். -நெஞ்சுக்கு சைதில்யம் போலே கண்ணுக்கு கண்ணநீர்
ஆனந்தக் கண்ணீரோடு சோகக்கண்ணீரோடு வாசி இல்லை அன்றோ. விலக்குமவை எல்லாம் பாதகமாகக் கடவது;
த்ரஷ்டவ்ய -ஆஹ்லாத -கண்ணா நீர் மல்க -தேகம் பெற்ற பாக்யம்-“காணத்தக்கவன்” என்னும் விஷயத்தை நான் அனுபவிக்கப் பெற்றிலேன்.

திவ்ய தேசம் கண்டாலே இப்படி நைந்து இருக்க-அவனை நேரில் கண்டால் என்ன ஆகுமோ என்கிறாள்-

——————————————————————————————

மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப்போய்ச்
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

இவள் காண்கைக்கு உகக்கைகும் அடியான அதிசய வியாமோஹம்-
மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்-விரஹத்தால் மிக்கு -கண்ண நீர் நெஞ்சில் காதல் –
வெளிக்கண் உள் கண் இரண்டும் இல்லாமல் -நிதானப் பாசுரம் -பிராவண்யா வாசன அதிசயம்
அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப்போய்ச்-நல்ல பகலும் நல்ல இரவும் -அதிசய வியாமோஹம் -நெடு மால் என்றே அழைத்து
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே-வளரும் ஐஸ்வர்யம்
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே-ஒடுங்கி தளர்ந்து அசைந்து நடந்து

என்னுடைய இளமான், பெருகுகின்ற தண்ணீரையுடைய கண்களோடு மயக்கம் பொருந்திய மனத்தினையுடையவளாகி நல்ல இரவும் நல்ல பகலும்
நெடுமால் என்று அழைத்துக்கொண்டு, அதற்குமேல், செல்வம் மிகும்படி அவன் சயனித்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்விய தேசத்திற்கு
வருந்தித் தளர்ந்து நடந்து சென்று எங்ஙனே புகுவாள் என்க.
அழைத்து, மனத்தினளாய்த் திருக்கோளூர்க்கு ஓல்கி ஒல்கி ஒசிந்து நடந்து போய் எங்ஙனே புகுங்கொல்? என்க,
செல்வம் மல்கிக் கிடந்த திருக்கோளூர் என்ற இடத்தில் “மல்கி” என்பது, செய என் எச்சத்திரிபு.

இவளுடைய உடலின் மிருதுத் தன்மையினையும் பிரிவினால் வந்த மெலிவினையும் நினைத்து,
இவை எல்லாம் அவ்வளவும் செல்லப் போகவல்லள் ஆனால் அன்றோ என்கிறாள். என்றது,
நாம் இலை யகலப்படுகிறோ மத்தனை -எதிர்பார்ப்பு -ஒழிய,- இவள்போய் முடியப்புகா நின்றாளோ? என்றபடி.

மல்கு நீர்க் கண்ணொடு மையல் உற்ற மனத்தினளாய் –
“என்றேனும் கட்கண்ணாற் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும்” என்னும் இரண்டும் ஒழிய,
இவள் எங்ஙனே போனபடி? கண், மல்குநீர்க் கண்ணாயிற்று; மனம், மையல் உற்ற மனமாயிற்று.
அகவாயும் இருண்டு, புறவாயும் இருண்டு இருக்க, இவள் எங்ஙனே போனபடி?
கண்ண நீராலே கண்தோற்றாது, அன்பினாலே மூடப்பட்ட தாகையாலே நெஞ்சு இருண்டு தோற்றாது.
இரண்டற்கும் இரண்டும் நிரூபக மாயிருத்தலின் ‘மல்கு நீர்க்கண் மையல் உற்ற மனம்’ என்கிறாள்.
மையல் உற்ற மனத்தினளாய் நெடுமால் என்று அழைத்து–தெஞ்சு ஒழியவே தான் கூப்பிட்டது.
நல் அல்லும் நல்பகலும் –
பகவத் விஷயத்திலே மூழ்கிக் கூப்பிடுகிற கால மாகையாலே, ‘நல்அல்லும் நல்பகலும்’ என்கிறாள்.
நாட்டார் க்ஷுத்ர விஷயங்களை ஆசைப்பட்டுக் கூப்பிடாநிற்க, ‘எல்லாம் கண்ணன்’ என்று கூப்பிடுகிற நாள் அன்றோ.
நெடுமால் என்று அழைத்து –
அவன் தன் பக்கல் பிச்சு எறியிருக்கும்படியைச் சொல்லிக் கூப்பிட்டு,
இனிப்போய் –
அவன் தன் பக்கல் செய்யும் வியாமோகத்தைச் சொல்லிக் கூப்பிடும் இதற்கு மேலே தன் வியாமோகம் காட்டப் போனாளே.
அன்றிக்கே, கண்ணும் தோற்றாமல் நெஞ்சும் பறியுண்டிருக்கும் இதற்கு மேலே, இனிப் போய், வேறே ஒன்று உண்டோ அநுபவிப்பது? என்னுதல்.

செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே –
எதிரே பாதி வழி வந்து முகத்திலே விழித்து உடம்பிலே அணைத்துக்கொண்டு போகாதே ஒழிந்தது செல்வச்செருக்கே அன்றோ;
செல்வத்தால் வந்த செருக்கு அன்றாகில் இவ்வரவு அவன் அன்றோ வருவான்?
வழியே பிடித்து வாழ்ந்துகொண்டு போகலாயிருக்க, செருக்காலே இழந்தான் என்கிறாள். -இவளை அணைப்பதை -இழந்தான் –
அன்றிக்கே, “சுகமாகத் தூங்கின ஸ்ரீமானாகிய அந்தப் பெருமாள் என்னால் உணர்த்தப்பட்டார்”-அழகுச் செல்வம் மல்க கிடந்தான்
“ஸமயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”–என்பது, ஸ்ரீராமா. சுந். 3 : 24. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
என்கிறபடியே, அழகு மிக்குக் கிடந்த என்னுதல்.
“சுகமாகத்தூங்கினவன்” என்ற கிடை அழகு காணவாயிற்று இவள் ஆசைப்பட்டுப் போயிற்று;
“கிடந்ததோர்கிடக்கை” –திருமாலை–.23.-என்னக்கடவதன்றோ.
அவன் கிடந்த –
அவன் வரவு பார்த்து இவள் இருக்கை அன்றிக்கே, இவள் வரவு பார்த்து அவன் கிடக்கும்படி ஆவதே!
ஒல்கி ஒல்கி நடந்து –
ஓர் அடியிலே பத்து அடி இடவேண்டும்படியாயிருக்கை. ஒசிந்து – துவண்டு.
சூல்கி ஒல்கி நடந்து ஒசிந்து எங்ஙனே புகுங்கொல் –
ஒடுங்கி ஒடுங்கி நடந்து, அது பொறாமல் துவண்டு, எங்ஙனே புகக்கடவளோ?
நடந்து எங்ஙனே புகுங்கொல் –
நடந்திலளாகில் போய்ப் புகலாம் என்றிருக்கிறாள் காணும்.
அன்னமென்னடைப் பூங்குழலி யாகையாலே, இவ்வன்ன நடைகொண்டு புகமாட்டாள் என்றிருக்கிறாள்.

————————————————————————————

ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண்மல ராள்கொழுநன திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே.–6-7-8-

ஓரடி வைக்கும் இடத்தில் பலவடி வைக்கும் படி சென்று -நிரதிசய போக்ய பூதனான லஷ்மிக்கு நித்ய அபிமதன்
–திவ்ய தேசத்தில் ஆசையால் -என்னை துரக்க- தத் சங்கமே தாரகமாக அங்கே சென்று புக வல்லளோ -அதிக பக்தி சேர்த்தாலும் சேர்க்கும்
-நடுவிலே தளர்ந்து நிற்கவும் வைக்குமே
ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து-பிரமரம் வண்டு -பங்கா வளி-புஷ்பா ஆவளி பூச்சரம்
–தேனை விட்டுக் கொடுக்க புதுமை கழிந்து துவளும் –
இவளும் அனைத்தையும் அவன் இடம் கொடுத்து -தெய்வ வண்டு -பருக -இவளும் துவள –
வை லஷண்யம் உடைய மலராள்-பத்மாசினிக்கு கொழுநன் -போகம் கொடுத்து பிராட்டி துவண்டு –
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?-நெஞ்சு -ஆர்த்தர நனைந்த சித்தரே -அபி ரூபை என் பெண் பிள்ளை –
ஒசிந்த ஒண்மல ராள்கொழுநன திருக்கோளூர்க்கே-கை தாங்க இடுக்கு வேண்டும் -இடுப்பு தானே சரீரம் தாங்க முடியாமல் -நொந்து நொந்து –
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே-நெஞ்சில் ஈரப்பாடே துணை -இதுவே அவளை சேர்க்குமோ அவன் இடம் –

இன்பத்தால் துவண்ட பெரிய பிராட்டியாருக்குக் கணவனாகிய எம்பெருமான் சயனித்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்விய தேசத்திற்கு,
அன்பு நிறைந்த நெஞ்சினையுடையவளாகி என்னை நீக்கிய என் பெண்ணானவள், தளர்ந்த நுண்ணிய இடையின்மேல் தன் கையை
வைத்துக்கொண்டு வருந்தி வருந்தி அன்பினால் நிறைந்த மனத்தினையுடையவளாகிக் கண்களிலே நீர் அலையும்படி சென்று சேர வல்லளோ? என்க.
காரிகை கையை வைத்து நொந்து செல்லுங்கொல் என்க. காரிகை – பெண். எம்மை : தனித்தன்மைப்பன்மை.
செவிலி முதலியோரையும் உளப்படுத்துமிடத்து உளப்பாட்டுத் தன்மைப் பள்மையாம்.

திருக்கோளூரில் அன்பினாலே, என்னைப் பொகட்டுப் போன என் பெண்பிள்ளை,
அந்த அன்பே துணையாகப் போய்ப் புகவல்லளேயோ? என்கிறாள்.

ஒசிந்த நுண் இடை –
இவள் நடவாதே இருந்தாலும், நினைத்தால் வயிறு எரியவேண்டும்படி காண் இடை இருப்பது!
நுண்ணிடைமேல் கையை வைத்து –
நடு ஒன்று இல்லை என்று அறிகின்றிலள். தன்கையை வைக்கவும் பொறாதே அன்றோ தன் இடைதான்;
“மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடயாள்” – பெரிய திருமொழி, 3. 7 : 7.-என்று,
அவன் கூடப் போகச்செய்தேயும் அஞ்சவேண்டும் படியான இடை அன்றோ. ஒசிதல் – துவளுதல். நுண்ணியதாய் தேரிதான இடை.
பல சொல்லி என்? இடை ஒன்று இல்லை என்கை. அதாவது, இற்றது முறிந்தது இப்போது, பின்னை’ என்று பயப்படவேண்டும்படியாய் இருக்கை.
ஒசிந்த நுண்இடைமேல் கையை வைத்து –
இப்படி விழுக்காடு அறியாதார் உளரோ! நாயகன் கை வைக்கப் பொறுக்குமத்தனை போக்கித் தன் கை வைக்கப் பொறுக்குமோ?
தொடுங்கால் ஒசியும் இடை அன்றோ –இது,திருவிருத்தம். பா. 37.– 2
அடியே பிடித்துக் கரோபத்ரவம் கனத்தே அன்றோ இருப்பது.–கர உபத்ரவம் -அடியே -பொய் நின்ற ஞானம் தொடங்கி-
அஷ்ட புஜ பெருமாள் ஓன்று பணித்தது உண்டு -நமஸ் சப்தம் ஆழ்ந்து அனுபவிக்க அவன் மேல் விழுந்து ரஷிப்பான்
கையுள் தன் முகம் வைக்கும் நையும் —
பர பிரயத்தனமும் கூடாது ஸுவ பிரயத்தனமும் கூடாது
‘கையை வைத்து’ என்கிறாள், மலையை வைத்து என்னுமாறு போலே.
நொந்து நொந்து –
கை வாங்கமாட்டாள்; நோவாதிருக்கமாட்டாள்; சஹஜமான பகைவர்களோடே கூடி ஜீவித்துக் கிடக்கலாம்;
வந்தேறிகள் கீழே பிழைக்க ஒண்ணாதே அன்றோ.
நொந்து நொந்து –
மிகவும் நொந்து. முதலிலே இல்லாமையிலே நிலையான இடையிலே தனபாரம்கொண்டு ஆற்ற ஒண்ணாதிருக்க,
வந்தேறியான கைகொண்டு பொறுக்க ஒண்ணுமோ?
பக்தி இயற்க்கை -சஹஜ சத்ரு -மார்பகம் -பக்தி தாங்க வேண்டும் -வைராக்கியம் இடை தாங்கித் தான் ஆக வேண்டும்
கைகள் வியாபாரம் தன் முயற்சி தாங்க வேண்டாமே
கசிந்த நெஞ்சினளாய் –
இடையினுடைய நொய்மை சொல்ல, நெஞ்சோதான் சாலப் பருத்திருக்கிறது?
நெஞ்சில் ஈரம் இருக்கிறபடி.
கண்ணநீர் துளும்ப –
இது தனக்கும் ஊற்றே அன்றே அது.
செல்லும் கொல் –
இனி எப்படியும் மீளாளே அன்றோ. வழியில் மிறுக்குக்கள் கழித்துப் புகவல்லளோ?

ஒசிந்த ஒண்மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே –
பிரிந்தார் துவட்சி சொல்லுகைக்குக் கலந்தாரோ தான் துவளாதே இருக்கிறார்?
வண்டாலே எடுக்கப்பட்ட சாரத்தையுடைய பூப்போலே காணும் நித்யசம்ச்லேஷத்தாலே துவண்டிருக்கும்படி.
ஒண்மலராள் கொழுநன் உண்டு, அவளுடைய வல்லபன்; அவனுடைய திருக்கோளூர்க்கே.
கசிந்த நெஞ்சினளாய் –
அன்போடு கூடின மனத்தையுடையளாய். பற்றுகைக்கு அவ்வூரே ஆக அமையும், விடுகைக்குத் தாயாக அமையும்.
ஒண்மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய் என்பதற்கு,
அவனுடைய காதல் குணத்திலே அகப்பட்டவள் இனி மீளப் புகுகிறாளோ? என்னுதல்.
ஒண்மலராள் கொழுநன் என்று அவனுக்கு ஏற்றம் இருக்கிறபடி என்னுதல்.
திருமகளார் தனிக்கேள்வன்-திருவாய். 1. 6 : 9.- என்னும்பெருமையுடைய பிரானாரே அன்றோ.
எம்மை நீத்த எம்காரிகை –
அவளுக்கு இங்குள்ள எனது என்னும் செருக்குக் கழியக் கழிய, அதுதானே காரணமாகாநின்றது திருத்தாயார்க்குப் பற்றுகைக்கு.
பகவத் விஷயத்திலே இறங்கி மூழ்குதலும், வேறுபட்ட பொருள்களை விடுகைக்கு எல்லை இவ்வளவாகையும்,
இப்படி விட்டால் பின்பு அவர்கள் தாங்களே உத்தேசியர் என்னும் இடமும் சொல்லுகிறது.
புறம்பே உள்ளவற்றை விடப் பண்ணுவித்துக்கொண்ட விஷயத்தில் ஞானலாபமேயன்றோ இவளுக்கு வேண்டுவது.
இவள் சம்பந்தமே அன்றோ திருத்தாயார்க்கு வேண்டுவது.
விடப்பட்டவர்களுக்கு விட்டவர்கள் உத்தேச்யர் –
பகவத் ஞான லாபம் வேண்டாவோ என்னில் -மகளுக்கு பகவத் ஞானம் உத்தேச்யம் -தாயாருக்கு மகள் உத்தேச்யம்
-அடியார்கள் கைங்கர்யம் பண்ணி அபிமானத்தில் ஒதுங்கினால் தன்னடையே உஜ்ஜீவிக்க ஹேது வாகுமே –
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகை திருக்கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல் –
இவள் என்னை விடும்படி செய்துகொண்ட விஷயத்தில் ஈடுபாடானது அவ்வூரில் புகுதலையும் செய்து கொடுக்கவற்றோ?
‘எம்மை நீத்த’ என்று நிச்சயித்தாள்; ‘செல்லும் கொல்’ என்று ஐயப்படா நின்றாள்; இதற்குக் காரணம் என்? என்னில்,
பிரேமம் இரண்டனையும் செய்து கொடுக்குமே அன்றோ.
பரவசப்படும் தன்மையை விளைத்து இடையிலே பொகடிலும் பொகடும்; அன்றிக்கே, கொண்டுபோய்ப் பொகடிலும் பொகடும் அன்றோ.

——————————————————————————————

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-

ஸ்வ தந்த்ரன் நடை -வேற பரதந்த்ரன் நடை உத்தேச்யம் -பக்தி ஞானம் வைராக்கியம் -ஆபரணம் -பூண்டு நடக்க -இத்தையே சேவித்து
பின் போக வேண்டும் -நல்லது கண்டால் தனக்கு சுலபனான கிருஷ்ணனுக்கு என்றே இருப்பாள் -ஊரார் பழி மதியாமல் -ஏறு
காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று-நல்ல புஷ்பாதிகள் -காணில் -எனக்கு பவ்யனான கிருஷ்ணனுக்கு —
ஈரியாய்-வேம்–காற்றும் கழியும் –பக்திமைக்கு வரம்பு இல்லை
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்-ஆர்த்த ஸ்வ பாவை -மெல்லிய ஆபரணம் -இது -பாவை –உண்ணும் சோறு
-கீழே சங்கல்பித்த விபூதி எல்லாம்இத்யாதி எல்லாம் ததர்த்தம் -அனைத்தையும் துரந்து
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே-சேரியில் உள்ளார் பழி தூற்ற -நடந்து நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.
-நினைக்காமல் -உஊரார் வார்த்தை போலவும் நினைக்க வில்லை உடன் பாடர் என்றும் நினைக்க வில்லை

என்நேரிழை, சிறந்த பொருள்களைக் கண்டால் என் கண்ணபிரானுக்கு என்று சொல்லிக்கொண்டு அன்புள்ளவளாய் இருப்பாள்; இவை எல்லாம் கிடக்க, சேரியிலுள்ளார் எல்லாரும் பலவகைப்பட்ட பழிகளைத் தூற்றி இரைக்கும்படியாக இனிச்சென்று திருக்கோளூர்க்கே நடந்தாள்; என்னைச் சிறிதும் நினைத்தாள் இல்லை என்கிறாள்.
நல்லனகள் காரியமவை என மாற்றுக. நல்லனகள் என்பதில் ‘கள்’ அசைநிலை. காரியம் – பொருள்கள். ஈரியாய் – அன்புள்ளவளாய்.
இது எல்லாம்: ஒருமை பன்மை மயக்கம். சேரி – தெருவு. தூஉய் – தூவி; தூற்றி. நேரிழை – பெண்; நேரிழை – ஆபரணங்களை அணிந்தவள்.

அவன் பக்கலிலே மிக்க ஈடுபாடுடையவளாயிருக்கிற இவள், சேரியிலுள்ளார் சொல்லும் பழியே
தோட்கோப்பாகத் திருக்கோளூர்க்கே போயினாள் என்கிறாள்.

நல்லனகள் காரியம் அவை காணில் என் கண்ணனுக்கு என்று ஈரியாய் இருப்பாள் –
முதலிலே காண்பது இல்லை; பொருள்களில் நல்லது காணில், தன்னை எனக்காக ஓக்கி வைத்த கிருஷ்ணனுக்கு
என்னப்புக்கு அந்த நிலையிலே நெஞ்சம் நெகிழ்ந்து, பின்பு அது தானும் மாட்டாதே இருக்கும்.
“பழத்தையாவது மலரையாவது மிகுதியாக மனத்தினைக் கவரக்கூடியதான வேறு பொருள்களையாவது பார்த்துப்
பலதடவை ஓ பிரியையான சீதையே! என்று இவ்விதமாகப் பெருமூச்சு விட்டுக்கொண்டு உம்மைப் பற்றியே பேசுகிறார்”
“த்ருஷ்ட்வா பலம் வா புஷ்பம் வா யத்வா அந்யத் ஸுமனோஹரம் பஹு ஸ: ஹாப்ரியேதி ஏவம் ஸ்வஸந் த்வாம் அபீபாஷதே”-என்பது,
ஸ்ரீராமா. சுந். 36 : 45. இது, பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது. ‘என்கிறபடியே,
அவன் சொல்லுமவையெல்லாம் இவள் சொல்லுகிறபடி.
நல்லது கண்டால், அவனுக்கு என்று இருக்குமதற்கு மேலே அவ்வருகே ஒன்று தேடிப் போனாளோ!
இவளுக்காகத் திருக்கோளூரிலே வந்து, தன்னை இவளுக்கு ஓக்கி வைத்தபடி.
இது எல்லாம் கிடக்க –
“எல்லாப் போகங்களையும் விட்டு” என்னுமாறு போலே.
அன்றிக்கே, உண்ணும்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் என்றலும்,
ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக் கற்புவான் இடறுதலும்,
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள் யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழுதலும்,
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று ஈரியாயிருத்தலும் இவை எல்லாம் கிடக்க என்னுதல்.
இது எல்லாம் கிடக்க – இந்த எல்லை இல்லாத செல்வங்கள் கிடக்க.-லீலா உபகரணங்கள் போக உபகரணங்கள் துரந்து –
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே-

இனிமேல் –
‘தனக்கு’ என்கிற எண்ணத்தின் அளவிலே உண்டறுக்க மாட்டாதவனுக்கு -திருப்தி படுத்தல் -ஒன்று கொடுத்துக் குறைதீரப் போனாளே.
“தே பூயிஷ்டாம்-உனக்கு அதிகமான ‘நம’ என்ற சொல்லைச் சொல்லுகிறோம்” என்றே அன்றோ அவன் இருப்பது.
அவன் படியை நினைத்தால் இவளுக்கு இங்கே இருக்க அமையாதோ?
சேரி பல்பழி தூஉய் இரைப்ப –
பொகடும் வழித்துணை பெற்றவாறே போனாளத்தனை.
ஒருவர் இருவர் அன்றே! இனி ஓருவர் சொல்லிற்று ஒருவர் சொல்லார்கள் அன்றோ.
பல் பழி தூஉய் இரைப்ப –
தன்னை அவனுக்கு ஆக்கிவைத்தாள்: பின்னை அதுதானும் மாட்டிற்றிலள்; புறப்பட்டுப்போனாள்; தாயைப் பார்த்திலள்; ஊரார் பழி பார்த்திலள்;
இத்தனையும் செய்தால் அவன்தான் எதிரே வரப்பெற்றது இல்லை என்று இப்புடைகளிலே ஒரு கோடியன்றோ சொல்லுவன.
“அலர் எழில் ஆருயிர் நிற்கும்” என்கிற படியே வழிக்குத் தாரகமாமன்றோ.
நேர் இழை நடந்தாள் –
கடைப் பணிக்கூட்டம் கண்டு கொண்டு பின்னே போகவன்றோ இவள் ஆசைப்படுகிறது.
நடந்தாள் –
தன் பெண்பிள்ளையே யாகிலும், ‘திருக்கோளூரிலே போக’ என்று நாலடி புறப்பட்ட இவளை இங்ஙனல்லது சொல்ல ஒண்ணாதே அன்றோ.
தன் மகளை எங்ஙனே கனக்க நினைத்திருக்கிறாள் தான்!
வயிற்றிற் பிறக்கவுமாம், சிஷ்யர்களாகவுமாம்: பகவத் விஷயத்தில் தொடர்புடையவர்கள் உத்தேசியராமித்தனை.

ஒருநாள் நம் பிள்ளையை, சீயர், கோஷ்டியிலே வைத்துப் போரக் கொண்டாடியருளி,
‘தன்சிஷ்யனைத் தான் கொண்டாட நின்றான்’ என்றிராதே கொண்மின்!
“கணபுரம் கைதொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே” –பெரிய திருமொழி, 8. 2 : 9.-என்று
பண்டு சொன்னாரும் உளர் காணுங்கோள் என்று அருளிச்செய்தார்.
அம்முணி ஆழ்வான், தன் சிஷ்யனைத் தான் தண்டன் இடாநிற்குமாம்; ‘இது என்?’ என்று கேட்க,
‘அல்லாத வைஷ்ணவர்களை ஒழுக்கத்தாலே அறியவேணும்; இவர் நான் அறிய வைஷ்ணவர் என்று ஆதரிப்பன்’ என்றான்.
எம்மை ஒன்றும் நினைத்திலளே –
வழிக்குத் துணையாகத்தான் கொடு போகாவிட்டால், நினைக்கத்தான் ஆகாதோ?
எதிர்கொள்வாரிலே சிலராகவாதல், வழித்துணையாவாரிலே சிலராக வாதல்,
ஏதேனும் ஓர் ஆகாரத்தாலே தான் நினைக்கலாகாதோ?என்பாள் ‘ஒன்றும் நினைத்திலன்’ என்கிறாள்.
‘அத்தலையில் நினைவே காரியகரமாவது’ என்றிருக்கிறாள். பகவானிடத்தில் சம்பந்த முடையாருடைய அபிமானமே உத்தேசியம்-
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் திருவிட வெந்தை பிரானே -ரசவாதி கையில் ரச குளிகை போலே -ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் –

———————————————————————————————–

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10-

நிதானமான பாசுரம் -அகில சுவாமி -ஏக தேசமும் விடாமல் குடி பழிக்கு அஞ்சாமல் புகுந்தாள்-நறையூரும் பாடுவாள்
நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் -இவளுடைய அதிப்ரவ்ருத்தி
இனிப்போய்-இவள் நெடும் கண் இள மான் -கரும் தடம் கண்ணி -ஏக தேசத்தில் கரிய –நீண்ட அப்பெரிய வாகிப் புடை பெற்யர்ந்த
-பெருமை எல்லாம் அகவாயில் அடக்கி
பருவம் முக்தம் -மான் போலே -இவர் கண் அழகு ஞானம் -இருப்பதால் -தேடித் போக வைக்குமே -ஞானம் வந்ததே போக வேண்டாமே
தாயார் வார்த்தை -அரவிந்த லோசனன் இடம் சேராமல் நீட்சி போகுமே
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை-புண்டரீகாஷத்வம் –
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே-அவன் வர்த்திக்கும் திவ்ய தேசத்துக்கு
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-லோக உக்தியால் கடுக-தூற்ற தூற்ற
-வேகம் அதிகம் -மாடு துரத்த ஓடுவது போலே பழி யாலே வேகம் –

தெய்வங்களே! என் மகளுடைய தன்மைகளை என்னால் நினைக்க முடியவில்லை; நீண்ட கண்களையுடைய இளமை பொருந்திய மான் போன்றவளான
என் மகள் இப்பொழுது சென்று, எல்லா உலகங்களையுமுடைய தாமரைக்கண்ணனாகிய எம்பெருமானைத் தினையளவு சிறிய பொழுதும் விடாதவளாகி,
அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்விய தேசத்திற்கே, குடிக்கு உண்டாகும் பெரிய பழியையும் நினையாதவளாகிச் சொன்றாள் என்க.
தெய்வங்காள்! நினைக்கிலேன்; இளமான் அரவிந்தலோசனனைத் தினைத்தனையும் விடாள்; மனைக்கு வான்பழியும் நினையாள்; திருக்கோளூர்க்கே இனிப்போய்ச் செல்லவைத்தனள் என்க. விடாள், நினையாள் என்பன : முற்று எச்சங்கள். தினை, பனை என்பனவற்றைச் சிறுமை பெருமைகட்கு எடுத்துக் கூறுதல் மரபு.
“தினைத்துணை நன்றிசெயினும் பனைத்துணையாக், கொள்வர் பயன் தெரி வார்” என்பது திருக்குறள்.

இந்தக் குடிக்கு வரும் பெரும் பழியை நினையாதே, திருக்கோளூரிலே புக்கு அவனை ஒருகாலமும் விடுகின்றிலள் என்கிறாள்.

நினைக்கிலேன் –
கடலைக் கரை காண ஒண்ணாதே அன்றோ.
தன்னைப் பொகட்டுப் போனபடி, வழியில் மிறுக்குகள், அங்குப் புக்கால் இவள் படும் பாடுகள் எனப் பலவேயா மன்றோ
தெய்வங்காள் –
இதனை, ‘கொல்லை’ என்பார் முகம் பார்த்துச் சொல்ல ஒண்ணாதே;
பழி சொல்லாமையையும், சிறை உறவு போலே தன்னோடு ஒக்க உறங்காமையையும் பார்த்துச் சொல்லுகிறாள்.
தெய்வங்காள் நினைக்கிலேன் –
செயல் அற்றுக் கை வாங்கிச் சொல்லுகிற வார்த்தை அன்றோ.
நெடும் கண் இளமான் இனிப்போய் –
விழுக்காடு அறியாமையாலே புறப்பட்டுப் போனாளத்தனை கண்டீர்!
இந்தக் கண்ணுக்கு இலக்கானவர்கள் சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் சுருண்டு வந்து விழுமாறு போலே,
தந்தாம் முதன்மையோடே வந்து விழவேணும் கண்டீர்!
இனிப்போய் –
யார் செய்யக்கூடியதை யார்தான் செய்கிறார்?
கண்படைப்பாளும் தானாய்ப் புறப்பட்டுப்போவாளும் தானாவதே!
இத்தலை செல்லாதிருத்தற்குச் சொரூப ஞானமே அமையுமேயன்றோ.-ததேக உபாயத்வம் -பாரதந்த்ர்யா ஞானம் கண் உடையவள்-போகலாமோ -தாய் –
நெடும் கண் -ஸ்வ யதன நிவர்த்தகம் அத்யந்த பாரதந்த்ர்ய ஞானம் -இவள் கண் அழகில் அன்றோ அவன் ஈடுபடுவது
அனைத்து உலகுமுடைய அரவிந்தலோசனனை –
இவ்வளவே காண் அவன் கண்ணுக்குத் தோற்றிருப்பது.
ஓர் உபய விபூதி மாத்திரம் கண்டீர் அவன் கண்ணுக்கு ஈடுபட்டிருப்பது ;
அவன் தன்னையும் தோற்பிக்கும் கண் அன்றோ இவளது. -அனைத்து லோகம் தானே -ஒரு உபய விபூதி தானே
-அவனையும் சேர்த்து அன்றோ இவளது –அவன் அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனன்;
இவள் நெடுங்கண் இளமான்.
அவன், தானும் தன் விபூதியும் இவள் கண்ணிலே ஒரு மூலையிலே அடங்கும்படி யாயிருக்கை.
கண்ணில் அல்லாத பரப்பும் இவள் பருவமும் குமர்கிடந்து போமத்தனை.-காலியாக உள்ள கண் இடம் அனுபவிக்க ஆள் இல்லை -நெடும் கண் –

தினைத்தனையும்விடாள் –
நெகிழ்ந்து அணைக்கவும் பொறாள். இங்கு இருந்து பட்ட கிலேசத்தாலே ‘நின்னைப் பிரியேன்’ என்று சொல்லவும் நெஞ்சுகொடாள்.
காரியப்பாட்டாலே பிரியிலும் நெஞ்சு ஒழிந்து கேட்கவேணுமே. மனைக்கு வான் பழியும் நினையாள் –
மனைக்கு வலியபழியும் நினைக்கின்றிலள்.
விருப்பத்தைப் பெறுதற்குச் சாதனம் அல்லாத அளவே அன்று, விரோதி என்றிருக்கிறாள்.
‘இத் தலையாலே செல்லுமது பழி’ என்றே இருந்தபடி பாரீர்.
அதபாதக பீதஸ்த்வம் ஸர்வ பாவேந பாரத “அதபாதகபீத: த்வம் ஸர்வபாவேந பாரத
விமுக்தாந்ய ஸமாரம்ப: நாராயணபரோ பவ”–என்பது, பாரதம். இது, தருமபுத்திரனைப் பார்த்துத் தர்மதேவதை கூறியது.
அடுத்து அடுத்து இராஜசூயமே செய்து போந்தவனுக்கு ஒரு தடவற் பொய்க்காக நரக தரிசனம் பண்ணுமளவாய் நின்றவனை யன்றோ இப்படி உபதேசிக்கிறது. நல்வினைகளோடு தீவினைகளோடு வாசி அற விரோதியாய், இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.–என்றார் தெய்வப்புலமைத் திருவள்ளுவனார்.

கிருஷ்ணனே பற்றுக்கோடு என்னுமிடத்தைத் தோற்றுவிக்கிறது.
விமுக்தாந்யஸமாரம்ப: – அசேதனமான கர்மங்களைப் பற்றிக்கொண்டு நாலாதேகொள்.
நாராயணபரோ பவ – உனக்கு வகுத்தவன் தன்னையே பற்றப்பார்.
செல்ல வைத்தனள் –
போதலில் நெஞ்சினை வைத்தாள் என்னுதல்; நாம் எல்லாம் காண அங்கே ஆனாள் என்னுதல்.
அதாவது, தான் அங்கே செல்ல ஒருப்பட்டாள் என்னுதல்; தான் மீளாதபடி புகுகையாலே நாம் அங்கே செல்லும்படி வைத்தாள் என்னுதல்.

————————————————————————————————–

வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-

சஹ்ருதயமாக சொல்ல வல்லவர்களுக்கு பலன் பரம பதம்
வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்-நிரதிசய பிராப்தம் -போக பிரதிபந்த விரோதிகளை நிரசித்து –
நிதி -ரஷகத்வம் -போக்யத்வம் -அலாப நிபந்தனமான ஆர்த்தியாலே அலற்றி
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன-சோலைகள் வாய்ப்பு
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே-ஓர் அர்த்த விசேஷங்களுக்கு வாசகம் -பிராப்ய த்வரை பிரகாசம் இப்பத்து
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.-வைகுந்தம் இவர்கள் இட்ட வழக்கு ஆகும் -பகவத் அனுபவ ஔஜ்வல்யம்
குறையாமல் ஸ்லாக்கியமான பரமபதம் தாங்கள் நினைத்த படி ஆள்வார்

சேமித்து வைத்த சேமநிதிபோன்ற மதுசூதனையேபற்றி பூங்கொத்துக்கள் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபராலே
அலற்றி அருளிச்செய்யப்பட்ட பத்து நூற்றுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூரிலேயே சித்தத்தை வைத்து
உரைப்பவர்கள் விளங்குகின்ற பரமபதத்தை ஆள்வார்கள் என்றபடி.
அலற்றிச் சொன்ன பத்து என்க. இப் பத்தை உரைப்பார் ஆள்வார் என்க.

இப் பத்தும் கற்றார் இட்ட வழக்கு திருநாடு என்கிறார்.

வைத்த மா நிதியாம் –
இவள் தனிவழி போகைக்கும், தாயாரை விடுகைக்கும் காரணம் இருக்கிறபடி.
செல்வம் சேர்த்து வைத்ததாக இருக்க, எடுத்து அழித்துக் கெடுத்து ஜீவியாமல் ஆறி இருப்பார் இலரே.
வைத்தமாநிதி –
எய்ப்பினில் வைப்பினைக் காசினை மணியை”-பெரிய திருமொழி. 7. 10 : 4.- என்கிறபடியே,
தளர்ந்தார் தாவளமாய், எய்ப்பினில்வைப்பாய், ‘உண்டு’ என்ன, உயிர் நிற்கும்படியாய்,
உடையவன் காலிலே எல்லாரும் விழும்படியாய், உடையவனுக்கு அறவிட்டு ஜீவிக்கலாய்,
‘அறவிட்டு ஜீவித்தான்’ என்று ஏசாதபடியாய், அவன் தனக்கு பெருமதிப்பைக் கொடுப்பதுமாய்,
உடையவனுக்கு ஒன்றுக்கும் கரைய வேண்டாதபடியாய், எல்லாம் தன்னைக்கொண்டே கொள்ளலாய்,
எல்லா ரசங்களும் போகங்களும் தன்னைக்கொண்டே கொள்ளலாய், இந்தவிதமான குணங்களையுடைத்தாயிருக்கையைப் பற்ற ‘நிதி’ என்கிறது.
மாநிதி என்றது, அழியாத நிதி என்றபடியாய், அத்தால், தன்னைக்கொண்டே எல்லாம் கொள்ளாநின்றால்
தனக்கு ஒரு குறை அற்று இருக்கை. அல்லாத நிதி மாண்டு நிற்குமே.
ஆபன்னர்க்கு ரஷணம்-அஸ்தி- நஷ்ட பிராணன் ஆன ஆத்ம சத்தை லாபம் பெறுமே-
உடையவன் -காலில் -தெய்வங்கள் -ப்ரஹ்மம் காலில் – -ப்ரஹ்ம ஞானம் உபதேசித்து -சிஷ்யன் உபகரித்து -அறவிற்று ஜீவிக்கை-

மதுசூதனையே அவற்றி –
இந்த நிதியைக் காத்து ஊட்டுவதும் தானே என்கிறது. உத்தேசியமானதுதானே விரோதியையும் போக்கி அநுபவிப்பிக்கவற்றாயிருக்கை.
கொத்து அலர்பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
“வீட்டில் எல்லாரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்”
“பங்கதித்த: உ ஜடில: பரத: த்வாம் ப்ரதீக்ஷதே பாதுகே தே புரஸ்க்ருத்ய ஸர்வஞ்ச குஸலம் க்ருஹே” என்பது, ஸ்ரீராமா. யுத். 127 : 5.என்னுமாறு போலே,
ஸ்ரீபரதாழ்வன் பெருமாள்ப க்கலிலே நெஞ்சினை வைக்க வைக்க, அதனைக்கண்டு, ‘அவர் வரவு அணித்து’ என்று
திருவயோத்தியை தளிரும் முறியுமானாற்போலே, விரஹத்தை நினைக்க ஆற்றலில்லாதபடி அவன் பக்கலிலே
ஏகாக்ர சித்தராகையாலே பிறந்த தோற்றத்தாலே, திருநகரியும் தளிரும் முறிவுமானபடி.
இத்தலையிலே இத்தனை விரைவு உண்டானால் அத்தலையால் வருகிற பலத்துக்குக் கண்ணழிவு உண்டோ?
“மரங்களும் உலர்ந்தன” என்கை தவிர்ந்து “காலமல்லாத காலத்தும் மரங்கள் பலத்தைக் கொடுத்தன” என்னும்படியாயிற்று.
“அபிவ்ருக்ஷா:” என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 5.
“அகால பலிநோ வ்ருக்ஷா:” என்பது, ஸ்ரீராமா. யுத். 127, 19.

பத்து நூற்றுள் இப்பத்து –
கடலில் அமுதம் போலே, ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்து.
அவன் சேர் திருக்கோளூர்க்கே சித்தம் வைத்து –
அவன் பொருந்தி வாழ்கின்ற திருக்கோளூர்க்கே நெஞ்சை வைத்து.
உரைப்பார் –
சொல்லுவார்.
திகழ் பொன்னுலகு ஆள்வாரே –
ஒருத்தி கூப்பிட, ஒருத்தி தனியே போகை அன்றிக்கே,
நித்தியாநுபவம் பண்ணலாம் நிலத்திலே புகப்பெறுவர்.
தனிவழி போகாதே, அர்ச்சிராதி கணம் சேவிக்க, விலக்ஷணமான தேசத்தே போய்ப் புகப்பெறுவர்

———————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

கிருஷ்னேன தாரயித் போஷாக போகய யோகி
அது த்வரித்த் தீ
அகிலான் விகாய
ஸ்யாத்-கொலோ
அலப்த பல –
இத்யவதியாமான பார்ச்வத் ஸ்திதி
இத் அவதீயகமன
முனி அபூத் அதி சப்தமம் சக

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பாரம்யாத் பவ்ய பாவாத்
ஸ்ரக் அபி ஹிதி முகத்
ஸ்ரீ சதைஸ்வர்யா பூம்னா -3/4/5/ 6–அர்த்தம் யூகித்து -யாவையும் திருமால் -செல்வம் மல்கி -இனி தன் திரு மால் -தன் திருமால் திருக்கண்
-ஸ்ரீ யபதி -யானபடியால் -செல்வம் நீர் நிலைகள் –நித்ய வசந்தம் -தடா -தத் சம்ச்லேஷத்தால் திவ்ய அவயவ சோபைகள்
ச்நேஹித்வாத் -நெடு மால் என்று அழைத்து இனிப் போய்
ஆபி ரூப்யாத்-வெறி மால் பூ மேல் இருப்பாள்
ஸ்ரீ தா பரவசத்தா -யீரியாய் –ஆஸ்ரித பரதந்த்ரை
சர்வ லோகேசதா -ஆதி -அனைத்து உலகம் -புண்டரீகாஷன் ஆதி சப்தத்தால்
ஆஸ்ரிதற்கு -விச்லேஷத்தில் -அபவாத பீதி இல்லாமல் தைர்யம் அருளுகிறான் –
த்ருத்யா தேகே ஆதி ஹேதும்-முறை- -வேதான் ஆகசய பாஷௌ
கை முதல் இழந்தார்க்கு-உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் -சங்கு -பிராப்ய பிராபக ஆபாசம் -இழந்தது சங்கே -சாதனங்கள் இல்லை
இப்படிப் பட்டவர்களுக்குத் தான் தன்னை ஆபத் சகன் என்று காட்டுவார் -சர்வ தரமான் பரித்யஜ்ய
உண்ணும் சோறு -இழந்ததுக்கு பதில்
புகுமூர் திருக் கோளூர்

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 57-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

உண்ணும் சோறாதி யொரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணினைகள் -மண்ணுலகில்
மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன்னடியே நந்தமக்குப் பொன்———–57-

——————————————————————————–

அவதாரிகை –

இதில்
திருக் கோளூர் ஏறப் போனபடியை அருளிச் செய்ததை
அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
திருத் தாயார் –
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு -என்று தொடங்கி
பொற்பமை நீண் முடி பூம் தண் துழாயற்கு -என்று
ஆபாத மௌலி பர்யந்த பர்யவசிதங்களானவன்
திரு நாமங்களைச் சொல்லிக் கூப்பிட்டு
பரவசையாய்க் கிடந்தது உறங்க
ம்ருத சஞ்ஜீவிநீ யான திருநாமத்தைக் கேட்டு
பெண் பிள்ளை யுணர்ந்து
எழுந்திருந்து
அவன் இருக்கிற திருக் கோளூர் ஏறப் போக
அநந்தரம்
திருத் தாயார் உணர்ந்து
பெண் பிள்ளையைப் படுக்கையிலே காணப் பெறாமையாலே
தன் வயிற்றில் பிறப்பாலும்
இவள் தன் ஸ்வபாவத்தாலும்
திருக் கோளூர் ஏறப் போனாள்-என்று
சோகிக்கிற அந்த திருத் தாயார் பாசுரத்தாலே
ஸ்வதசையை அருளிச் செய்கிற
உண்ணும் சோற்றில் அர்த்தத்தை
உண்ணும் சோறாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை —

————————————————————————————————————————————————

வியாக்யானம்–

உண்ணும் சோறு
பருகும் நீர்
தின்னும் வெற்றிலை
எல்லாம் கண்ணன்
என்கிற முதல் பாட்டு பிரதானமாய்
அத்தைப் பின் சென்று அருளிச் செய்தபடி –

உண்ணும் சோறாதி யொரு மூன்றும் –
அன்னாதியான தாரகாதி
த்ரயமும்

ஒரு மூன்றும் –
அத்விதீயமாய் இருக்கிற மூன்றும் –

எம்பெருமான் கண்ணன் என்றே –
எனக்கு ஸ்வாமியான கிருஷ்ணன்
என்றே அனுசந்தித்து –

நீர் மல்கிக் கண்ணினைகள் —
பாவனா பிரகர்ஷத்தாலே
கண் இணைகள் நீராலே நிறைந்து
கிருஷ்ண தருஷ்ணை
கிருஷ்ண அனுபவத்தாலே இறே
சமிப்பது –

மண்ணுலகில் மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன் –
இவ் விபூதியிலே
திருக் கோளூரிலே நித்ய வாசம் பண்ணுகிற
சௌந்தர்ய சீலாதிகளால்
ஆச்சர்ய பூதனான
வைத்திய மா நிதி பால் போம் ஆழ்வார் –
இறந்தால் தங்குமூர் விண்ணூர் ஆகையாலே விசேஷிக்க வேண்டா
நாட்டார் பொருந்தி இருக்குமூர் இவருக்கு நெருப்பாய் இருக்கையாலே
மண்ணினுள் புகுமூர் திருக் கோளூர் -என்று இறே விசேஷிக்க வேண்டுவது –
சர்வான் போகான் பரித்யஜ்ய -இத்யாதிவத்
தான் உகந்த ஊர் இறே இவருக்கு மண்ணினுள் புகுமூர்
திருக் கோளூரில் பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டால் இறே
இவர் ஆவி உள் குளிருவது –
பாலை கடந்த பொன்னே –கண்ணன் வெக்காவுது –எப்பாலைக்கும் சேமத்ததே -என்னக் கடவது இறே

மன்னு திருக் கோளுரிலே மாயன் பால் போகையாவது –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே
அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற
போரும் கொல் -என்றும்
திருமால் திரு நாமங்களே கூவி எழும் என் பாவை போய் -என்றும்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினாள் -என்றும்
ஆவியுள் குளிர எங்கனே உகக்கும் கொல் -என்றும்
தென் திசை திலதம் அனையத் திருக் கோளூர்க்கே சென்று -என்றும்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர் க்கே ஒல்கி ஒல்கி நடந்து -என்றும்
கசிந்த நெஞ்சினளாய் கண்ணநீர் துளும்பச் செல்லும் கொல் -என்றும்
என் கண்ணனுக்கு என்றே யீரியாய் இருப்பாள் இதுஎல்லாம் கிடக்க இனிப் போய் -என்றும்
திருக் கோளூர்க்கே நேரிழை நடந்தால் -என்றும்
மனைக்கு வான் பழியும் நினையாதே செல்ல வைத்தபடி இது வாயிற்று

இத்தால்
வழியில் உள்ளவர்களையும் வாழ்வித்து
அவனையும் வாழ்வித்து
தானும் வாழும்படி
போனாள்
என்றது ஆயிற்று –

இப்படி எல்லாரையும் வாழ்வித்து
வைத்த மா நிதியை நாடி
நடந்து போம் மாறன்
பொன்னடியே நந்தமக்குப் பொன்

அவருக்கு வைத்த மா நிதி அடியாய் இருக்கும்
நமக்கு வைத்த மா நிதி ஆழ்வார் அடியாய் இருக்கும் –

கைம்முதல் இழந்தார்
உண்ணும்
நிதியின்
ஆபத் சகத்வம்
புகுமூரிலே
சம்ருத்தம் —
என்று இறே ஆச்சார்யா ஹிருதயத்திலே நாயானார் அருளிச் செய்தது –

—————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: