பகவத் விஷயம் காலஷேபம் -135- திருவாய்மொழி – -6-6–1….6-6–11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

மேல் திருவாய்மொழியிலே இவளுக்குப் பிறந்த தசை முற்றி வியசனம் அதிகரிக்கையாலே மயங்கினவளாய்க் கிடக்க,
அது கண்டு ஆற்றாளாய் இவளுடைய தோழியும் மயங்க,
இந்த நிலையிலும் இவளைப் பிழைப்பதற்குரிய விரகுகளை எண்ணுகையாலே தரித்திருக்கிற திருத்தாயார்
இவளுடைய வளயம் முதலானவைகள் காணக் காண உருக்குலைகிறபடியைக் கண்டு, -அவற்றைத் தனித் தனியே சொல்லிக் கூப்பிடுகிறாள்.
ஒவ்வொரு நகரம் பத்தநம் முதலானவைகள்–ராஜ தானி -பட்டணம் -பேட்டை – வேவப்புக்கால், ‘ஒருமாடம் முறிந்தது, மாளிகை முறிந்தது’ என்பாரைப்போலே.
மேல் திருவாய்மொழியிலே பெறாத நிலைமையாய், ‘கிடையாது’ என்றாலும் விடமாட்டாதபடி
தம்முடைய மனம் வாக்குக் காயங்கள் அவ்விஷயத்திலே மிக்க ஈடுபாடு உண்டானபடி சொல்லிற்று;
இதில், அந்த அலாபத்தால் வந்த பரவசப்பட்ட தன்மையைச் சொல்லுகிறது.-பரனான சர்வேஸ்வரனுக்கு வசப்பட்டு -விஸ்லேஷ பதிகங்கள் இரண்டும் –
“நெடுமால் என்றே கூவுமால்” என்று தன்னுடைய வியாமோகத்தைக் காட்டியாயிற்று இவளை இப்படி விளைத்தது;
பெரியவன் தாழ நின்றால் பொறுக்கலாய் இராதன்றோ.
“பெருமாளால் அபயம் கொடுக்கப்பட்டபோது, இராவணன் தம்பியும் மஹாபுத்திசாலியுமான விபீஷணன்
பூமியைப் பார்த்துக்கொண்டு வணங்கினான்” –
ராகவேண அபயே தத்தே ஸந்நதோ ராவணாநுஜ:
விபீஷணோ மஹா ப்ராஜ்ஞோ பூமிம் ஸமவலோகயந்”- என்பது, ஸ்ரீராமா. யுத். 19 : 1.-என்று
இவன் தறைப்படும்படியன்றோ அவனுடைய வியாமோகம் இருப்பது.-உருகினான் இவன் பருகினார் பெருமாள் –

கரங்கள்மீச் சுமந்து செல்லும் கதிர்மணி முடியன் கல்லும்
மரங்களு முருக நோக்கும் காதலான் கருணை வள்ளல்
இரங்கினன் நோக்குந் தோறும் இருநிலத் திறைஞ்சு கின்றான்
வரங்களின் வாரி யன்ன தாளிணை வந்து வீழ்ந்தான்.–என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக்கலப். 140.

ஏறாளும் இறையோனில் -வேண்டாம் என்றாரே — ஆழ்வார் விரும்பியதை செய்து தலைக் கட்டுபவன் நெடு மால் அன்றோ –

த்வரை அநு குணமான -அனுபவ அலாபத்தால் -ஆற்றாமை முறுகி -கீழ்ச் சொன்ன தசையும் கலங்கி -சம்பந்த ஞானமும்
இது பிராப்ய த்வரையை தூண்டி விடும்-அத்யவசாயமும் உறுதிப் படுத்தும் – -இங்கு இவளுக்கு -ஆற்றாமை விஞ்சி
-தோழியும் மயங்கி -சம்பந்த ஞானம் தரிப்புக்கு உடலாய் இன்றிக்கே -இத்தனை சம்பந்தம் இருக்க துடிக்க விட்டானே -என்று -இருக்குமே
உபாய அத்யாவசாயம் நிமிர்ந்து -தோழியும் தலை மகளும் மயங்கி இருக்க -நமஸ் சப்தம் தானே -வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்யமாம் பதமே தாயார்
தன்னடையே-ஆத்மாத்மீயங்கள் விலகிப் போவதை கண்டு -தடுக்க முடியாதே -இவள் தாய் வசம் இல்லையே -பரண் வசம் அன்றோ -புலம்பத் தான் முடியும் –

————————————————————————————-

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-

நிரதிசய -போக்யமான வேஷம் இவள் -வ்யாமோஹனுக்கு -அவன் வியாபாரத்தில் இவள் -வளை இழந்தாள்
-வளை வீறு பெற்றதே பராங்குச பரகால நாயகியால் -நால்வர் -ஒருவரை -நசிக்க -குழல் -இவளுக்கு -அவனுக்கு பல சொல்லி –
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு-ஆஸ்ரித வ்யாமோஹ நிரூபித ஸ்வரூபன் -சௌசீல்யம் ராமர் -ஆஸ்ரித வ்யாமோஹம் கிருஷ்ணன்
அனன்யார்ஹம் ஆக்கி -அவதார பிரகாசப் படுத்தி தனக்கு போக்தா -போக வ்யாமோஹம் அடியாக
நீலக் கருநிற மேக நியாயற்கு-அனுபவித்து உலர்ந்த நாப்பசை ஈரப்பசை -கறுத்து-மேகம் சியாமள வர்ணன் -ஔதார்யம் -என்றுமாம் –
கோலச்செந் தாமரைக் கண்ணற்குஎன் கொங்கலர்-தார்ச நீயா ஆகாரம் -சிவந்த -தேனை உடைத்தாய் -மலரை உடைத்தாய்
ஏலக் குழலி இழந்தது சங்கே—ஏலம் போன்ற வாசனை ஸ்ரமஹரமான -குழலை உடையவள் –
அவனுக்கு தனித் தனியே அகப்படும் துறைகளை காட்டி அருளுகிறார் –

திருமாலுக்கு உலகத்தை எல்லாம் அளந்த மணவாளனுக்கு மிகக் கரிய நிறத்தையுடைய மேகம்போன்ற தன்மையனுக்கு
அழகிய செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடையவனுக்கு என்னுடைய தேனோடு மலர்ந்த பூக்களையுடைய வாசனைபொருந்திய
கூந்தலையுடைய மகள் இழந்தது சங்கவளையலேயாம்.
மேக நியாயன் – மேகம்போன்ற தன்மையன். ஏலம்-வாசனை. சங்கு – சங்கவளையல்.
இத்திருவாய்மொழி, கலிவிருத்தம்.

இவள் வாமன அவதாரத்தில் குணங்களிலும் செயல்களிலும் அகப்பட்டு வளை இழந்தாள் என்கிறாள்.

மாலுக்கு –
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, நீ எனக்கு வேண்டா என்ன,
நீ எனக்கு வேண்டும் என்று தடுமாறி நின்ற நிலையைக் காட்டியாயிற்று இவளை இப் பாடுபடுத்திற்று.
சர்வேசுவரனான உயர்வு தோற்ற நின்றானாகில் இப் பாடுபடாள் கண்டீர்!
வையம் அளந்த மணாளற்கு –
உகவாதாரையும் கூட விடமாட்டாத வியாமோகம்.
“அழித்தாய் உன் திருவடியால்” என்று இவளையும் தன் காற் கீழே இட்டுக்கொண்டான் அன்றோ.
அச்செயலுக்கு எழுதிக்கொடுத்தாள் இவள் ஒருத்தியுமே அன்றோ;
“மூவடிமண் கொண்டளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்” என்கிறாள். பெரிய திருமொழி, 9. 4 : 2.
இத் திருப்பாசுரத்துக்கு ரசோக்தியாக, பாவம்அருளிச்செய்கிறார் ‘அவன் இரந்து’ என்று தொடங்கி.
உரை என்றுமாற்றாய், மாற்று ஏறியிருக்கும் என்னுதல்; உரை என்றுகொண்டாட்டத்தைக் கூறுவதாய்,
உலகத்தாருடைய கொண்டாட்டத்தை யுடைத்தாயிருக்கும் என்னுதல்.
அவன் இரந்து மண் பெற்றான், இவள் உகந்து பொன் பெற்றாள். உகப்பாலே பெறுமது உரைப்பெற்றிருக்குமே.
மாற்று அற்ற செம் பொன் மணவாள மா முனி –ஆற்றில் கரைந்த புளி அல்லவோ –
மணாளன் –
அநுபவிக்கிறவன்.
நீலக் கருநிற மேக நியாயற்கு-
நெயத்துக் கறுத்த நிறத்தையுடைய மேகத்தைப் போன்ற தன்மையற்கு.
அன்றிக்கே, நியாயம் – சமம், ஒப்பு என்னுதல்.
வேறு பிரயோஜனம் கருதாது கொடுக்கையும், கொடுக்கப் பெறாத போது உடம்பு வெளுக்கையும்.
வியாமோகம் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவும் ஒளதார்யமும் இருக்கிறபடி.
நீலக் கரு நிற மேக நியாயற்கு –
மஹாபலியை வடிவைக் காட்டி அபகரித்தாற்போலே காணும் இவளையும் வடிவைக்காட்டி அபகரித்தபடி.
இவள் பிச்சு ஏறுகைக்கு இட்ட மை இருக்கிறபடி.
மைப் படி மேனி அன்றோ.-திருவிருத்தம், பாட்டு. 94.

கோலம் செந்தாமரைக் கண்ணற்கு –
காட்சிக்கு இனியவாய் வாத்சல்யத்தாலே சிவந்து, மலர்ச்சி முதலானவைகளையுடையவான திருக்கண்களையுடையவனுக்கு.
“தாமரைத்தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான்” என்று திருக்கண்களாலே யாயிற்று அகப்படுத்திக்கொண்டது.
விசேடணம் தோறும் அவனுக்கு என்று தனித்தனியே அகப்பட்ட துறைகளைச் சொல்லுகிறாள்.
‘மாலுக்கு’ என்று தொடங்கி, தன்மகள்மேல் பட்ட அம்புகளை எண்ணுகிறாள்;
இது ஒரு குத்து, இது ஒரு வெட்டு, இது ஒரு அம்பு என்று. –வ்யாமோஹகுணம் -சேஷ்டிதம்–விக்ரகம் -கண் அழகிலும் அகப்பட்டபடி –
என் கொங்கு அலர் ஏலம் குழலி –
தேன் பெருக்கு எடுக்கின்ற பூக்களையுடைத்தாய், நறு நாற்றத்தையுடைத்தான குழலையுடைய என்பெண்பிள்ளை.
கொங்கு – தேன், அலர் – பூ, ஏலம் – நறுநாற்றம்.
இவள் மயிர்முடி ஒன்றுக்குத் தோற்றுக் குமிழிநீர் உண்ணும் அவன் கண்டீர் இவளை அழித்தான்!
பங்களப்படைகொண்டு, தனிவீரம் செய்வாரை அழிக்குமாறுபோலே-
இழந்தது சங்கே – இவள் மயிர்முடி கண்டு அவன் இழக்கக்கடவதனை இவள் இழந்தாள்.

——————————————————————————————————-

சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்குஎன்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2-

போக்யமான ஆயுதாதி பூர்த்திகள் –
சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு-த்ரி விக்ரமன் -பஞ்சாயுதம் -ஆழி எழ -உச்சிர்தமாய் -கோஷம் -ததீயர் -எழுந்தான்
-வையம் அளந்த பொழுது -தாத்கால போக்தாகளுக்கு அனுபாவ்யம் –
செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு-சிவந்த கனி திரு அதரம் –
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்குஎன்-பரிமள விகாசியாய் -குளிர்ந்த ஸ்ரமஹர்ரம் தர்ச நீயம்
மங்கை இழந்தது மாமை நிறமே-ஸ்வா பாவிக நிறம் -ஈடுபடும் பருவம் -அசாதாராண நிறம் -கொங்கு வாசனை தேன்

சங்கம் வில் வாள் தண்டு சக்கரம் என்னும் ஐந்து ஆயுதங்களையும் தரித்த திருக்கரங்களையுடையவனுக்கு, சிவந்த கோவைக்கனி போன்ற
திருவதரத்தையும் செந்தாமரைபோன்ற திருக்கண்களையுமுடையவனுக்கு, தேனோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயைத் தரித்த
திருமுடியையுடையவனுக்கு, என் பெண்ணானவள் இழந்தது அழகிய நிறமேயாகும்.
கொங்கு – வாசனையுமாம். மாமை – ஒரு நிறவிசேடமுமாம். இத் திருப்பாசுரத்தில், பஞ்சாயுதங்களையும் ஒருசேர அருளிச்செய்திருத்தல் காண்க.

திருவுலகு அளந்தருளின காலத்தில் திவ்விய ஆயுதங்கள் முதலியவைகளின் அழகிலே அகப்பட்டுத்
தன்னுடைய அழகிய நிறத்தை இழந்தாள் என்கிறாள்.

சங்கு வில் வாள் தண்டு சக்கரம் கையற்கு –
ஸ்ரீபஞ்சாயுதங்களின் சேர்த்தி அழகிலே ஆயிற்று இவள் ஈடுபட்டது.
பரம ஸ்வாமி திருமால் இரும் சோலை மூலவர் பஞ்சாயுதம் உடன் சேவை உண்டே –
இவளுடைய ஓர் ஆபரணம் வாங்குகைக்கு எத்தனை ஆபரணம் பூண்டு காட்டினான்?
கைக்குமேல் ஐந்துங் காட்டிக்காணும் இவளுடைய ஆபரணம் வாங்கிற்று.
புரடு கீறி ஆடுகிற அளவிலே -தாயக் கட்டம் -அஞ்சுக்கு இலக்காக -ஒரு காய் இருக்க -கை மேல் அஞ்சு போட்டு வெட்டுகிறேன் போலே –
ஆபரணகோடியிலும் ஆயுதகோடியிலும் இருபுடைமெய்க் காட்டின அன்றோ இவைதாம்.–உபய கோஷ்டி –
செம்கனிவாய்ச்செய்ய தாமரைக்கண்ணற்கு-
கையிலே ஒன்றனைத் தரித்துக் காட்டிக் கவர்ச்சி செய்யவேண்டி இருந்ததோ?
ஸ்மிதம் -புன்சிரிப்பும் நோக்கும் அமையாதோ நலிகைக்கு?
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு –
தேன் பெருக்கு எடுக்கின்ற திருத்துழாய்மாலையை, ஆதிராஜ்ய சூசகமான திருமுடியிலேயுடையவனுக்கு.
வைத்த வளையத்தைக் காட்டிக்காணும் இவள் நிறத்தை அபகரித்தது.
ஆக, ஆபரணசோபை, அவயவ சோபை, ஒப்பனை அழகு என எத்தனை செய்யவேணும் இவள் நிறத்தினைக் கொள்ளுகைக்கு என்றபடி.
என்மங்கை –
தன்பருவத்தாலே இவற்றையடையத் தோற்பிக்குமவள் கண்டீர் நிறம் இழந்தாள்!
மாமைநிறம் – அழகிய நிறம். மாமை – அழகு.

—————————————————————————————-

நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங்கிளர் வாய்ச்சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கையவ னுக்குஎன்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–6-6-3-

வட தள சாயித்வம் -ரஷணம் பிரகாசத்வம் -இவள் ஈடுபட்டு -மதிப்பு இழந்தாள்
நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட-ஆலிலை -இளம் பச்சை -கடல் வர்ணம் -பரபாக -அமுது செய்த பிரகாரம்
திறங்கிளர் வாய்ச்சிறுக் கள்வ னவர்க்கு-உண்ட வாய்க்கு அடையாளம் -பிரகாரம் தோற்றும் –கள்வர் அவர்க்கு பாட பேதம்
-வடிவிலே சிறுத்து -லோகம் பெரியது -கள்வன் தானே அகதி கடா நா சாமர்த்தியம்
கறங்கிய சக்கரக் கையவ னுக்குஎன்-உண்டு உமிழ்ந்து -ஆஸ்ரித விரோதி நிரசனம் -சுழன்று வரும் -உத்தியோகம் –
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.-மதிப்பு மரியாதை -வளர்ந்து கதிர்த்த -பிரகாசமாய் -பெருமை பொருந்திய கூந்தல் என்றுமாம் –

கரிய நிறத்தையுடையவனுக்கு, பெரிய உலகத்தை உண்ட கூறுபாடு விளங்குகின்ற திருவாயினையுடைய சிறிய வடிவிலே பெரிய உலகங்களை
எல்லாம் அடக்கிய கள்வனுக்கு, சுழலுகின்ற சக்கரம் பொருந்திய கையையுடையவனுக்கு, என்னுடைய, விளங்குகிற கரிய கூந்தலையுடைய
பெண்ணானவள் பெருமையை இழந்தாள்.
பிறங்கிருங் கூந்தல் : அன்மொழித் தொகை. கறங்குதல் – கழலுதல்.

ஆலிலையில் சயனித்தவனுடைய படிகளிலே அகப்பட்டு இவள் தன் பெருமையை இழந்தாள் என்கிறாள்.

நிறம் கரியானுக்கு –
“இழந்தது மாமைநிறம்” என்றாள்;
அந்த நிறமும் அவன் பக்கலிலே கிடக்கையாலே இரட்டித்துக் காட்டிற்று வடிவு.
தன் நிறத்துக்கு மேலே ஒருநிறம் உண்டாயிற்று.
“நீலக் கருநிற மேக நியாயற்கு” என்ன வேண்டாவாயிற்று;
நிறத்துக்கு ஒப்பாக மாட்டாமையாலே. நெய்த்துக்குளிர்ந்து சிரமத்தைப் போக்குகின்ற வடிவினையே சொல்லுகிறாள்.
நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய் –
பரப்பையுடைத்தான பூமியைத் திருவயிற்றிலே வைத்த பிரகாரத்தைக் கோட் சொல்லாநின்ற திருவதரத்தையுடைய.
கிளருகை – சொல்லுகை. “வையம் ஏழும் கண்டாள் பிள்ளைவாயுளே”- பெரியாழ்வார் திருமொழி, 1. 1 : 6.– என்னக்கடவதன்றோ.
ரக்ஷிக்குந்தன்மையை விளக்கிக் காட்டுகின்ற திருவதரம்.
சிறுக் கள்வனவர்க்கு –
சிறுவயிற்றிலே பெரிய உலகங்களை வைத்து, அளவிட முடியாத செயலையுடையவனுக்கு.
நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய் –
வேறு ஒருவர்வாயாலே கேட்கவேண்டாதே, இவன் வாயாலே சொல்லக் கேட்கலாம்படி.
சிறுக்கள்வனவர்க்கு –
வடிவில் சிறுமையும் ரக்ஷிக்குந் தன்மையில் பாரிப்பும் இருக்கிறபடி.
தன்னுடைய ரக்ஷிக்கும் தன்மையையும் அகடிதகடநா சாமர்த்தியத்தையும் காட்டியாயிற்று இவளை அகப்படுத்திற்று.

கறங்கிய சக்கரக் கையவனுக்கு-
பகைவர்களை அழிக்கவேண்டும் விரைவாலே எப்பொழுதும் சுழலாநின்றுள்ள திருவாழியைத் திருக்கையிலேயுடையவனுக்கு:
தான் ரக்ஷகனான அளவன்றியே, பரிகரமும் ரக்ஷணத்திலே முயற்சியோடு கூடி இருக்கிறபடி.
அவன் கைப்பிடித்தார் எல்லாரும் ரக்ஷணத்திலே விரைவுடையராயன்றோ இருப்பது.
ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானும், “ஒரு வினை உண்டாகவற்றே, நாம் வாய்க்கரையிலே நின்று ஓசையை விளைத்து வினை தீர்க்க” என்று பிரார்த்தியாநிற்கும்.
என் பிறங்கு இரும் கூந்தல் –
சுற்றுடைத்தாய் ஒழுகு நீண்ட மயிர்முடியையுடையவள்.
அன்றிக்கே, மிகவும் பெரிய குழலையுடையவள் என்றுமாம். இருமை – பெருமை. இங்குப் பெருமையாவது, நீட்சி.
பிறங்குதல் – மிகுதல். கூந்தல் – மயிர். “கூந்தல் ஐம்பால். . . . . .குழல்” என்பது, திவாகரம், மக்கள் பெயர். -பிறங்குதல் -உருண்டு –மிகுதி –
எதிர்த்தலையைத் தோற்பிக்கும் குழலையுடையவள் கண்டீர் தன்பெருமையை இழந்தாள். பீடு – பெருமை.
“ஸ்ரீஜனக மகாராஜனுடைய புத்திரியான அந்தச் சீதா பிராட்டி’ யாதொருவருக்கு மனைவியாக இருக்கிறாளோ
அவருடைய பராக்கிரமும் அளவிட முடியாதது”
–அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜனகாத்மஜா ந த்வம் ஸமர்தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம்வநே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 37 : 18.
என்று அவனுக்கும் பெருமையைக் கொடுக்கும் பெருமையை அன்றோ இவள் இழந்தது.

————————————————————————————–

பீடுடை நான்முகனைப்படைத் தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–6-6-4-

ஸ்ரஷ்ட்ருத்வாதி சர்வ பிரகார -உபகாரத்வம் –ஈடுபட்டு அசாதாராண வைபவம் இழந்தாள்
பீடுடை நான்முகனைப்படைத் தானுக்கு-ஞானாதி குணம் -வைபவம்ஸ்ருஷ்டிக்கைக்கு உரிய –
மாடுடை வையம் அளந்த மணாளற்கு-மாடு தனம் -அந்தணர் மாடு -வ ஸூ மதி -தனம் உடைய பூமி –அனந்யார்ஹை ஆக்கும்
போக்தா வாய் -அதற்குத் தோற்று -மணாளன் -போக்தா போக்கியம் ப்ரேரிதா
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்-பாண்டவர்களுக்கு தூத க்ருத்யம் அனுஷ்டித்து -அத்தாலே பரி பூரணன் –
பாடுடை அல்குல் இழந்தது பண்பே-அசாதாராண ஸ்வ பாவம் பாடு -விஸ்தாரம் -அல்குல் உடைய பெண் -தன்அசாதாராண ஸ்வ பாவம் இழந்தாள்

பெருமைபொருந்திய பிரமனை உண்டாக்கினவனுக்கு, செல்வம்பொருந்திய பூமியை அளந்த மணவாளனுக்கு, உலகத்தையுடையவர்களான
பாண்டவர்களுக்குத் தூதுசென்ற நம்பிக்கு, என்னுடைய, பரப்புப் பொருந்திய அல்குலையுடைய பெண்ணானவள் பண்பினை இழந்தாள்.
மணாளன் என்பது, மணவாளன் என்பதன் திரிபு. பாடுடை அல்குல்: அன்மொழித் தொகை.

பிரமனைப் படைத்தவன் என்னும் மேன்மையைப்பாராதே தன்னை அடைந்தவர்களுக்காகத் தூதுசென்ற
மஹாகுணத்தையுடையவனுக்கு இவள் நீர்மையை இழந்தாள் என்கிறாள்.

பீடு உடை நான்முகனைப் படைத்தானுக்கு –
பதினான்கு உலகங்களையும் படைக்கவல்ல பெருமையையுடைய பிரமனைப் படைத்தவனுக்கு, பீடு – பெருமை.
மாடு உடை வையம் அளந்த மணாளற்கு –
திருவுலகு அளந்தருளின வஞ்சனை பொருந்திய செயலாலே 4தன்னை எனக்கே யுரியவனாகச் செய்தவனுக்கு.
மாடுடை – செல்வம் பொருந்திய என்னுதல்; ‘மாடு’ என்று இடமுடைமையாய், பரப்பையுடைய என்னுதல்.-அம் கண் மா ஞாலம் –
நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு –
நாடுடைய இராஜாக்களான பாண்டவர்களுக்குத் தூதுபோய் அதனாலே . -படைத்து -அளந்து -நடந்து -பூர்ணன் ஆனவனுக்கு
பகவத் அபிப்பிராயத்தாலே, அவர்களை ‘நாடுடை மன்னர்’ என்கிறார் காணும்.
“இருக்கைக்கு ஒரு குறிச்சியும் கொடோம்” என்று இராச்சியம் செய்கிறவர்கள் துரியோதனாதியர்களாக இருக்க.–குறிச்சி – குப்பம்; சிறிய ஊர்.
“ஈ இருக்குமிடமெனினும் இப்புவியில் யானவர்க்கு அரசினிக்கொடேன்”என்பது, வில்லிபாரதம். (கிருஷ்ணன் தூது.)

“ஸ்ரீராமபிரான், விபீடணனை இராக்கதர்களுக்கு அரசனாக இலங்கையில் முடிசூட்டிச் செய்யத்தக்க செயலைச் செய்து முடித்தவரானார்”
அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருதயஸ்ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”-என்பது, சங்க்ஷேப ராமாயணம். 85.
என்றது போன்று. ‘இன்னார் தூதன்’ என நின்ற செயலாலே, இட்ட சட்டை பீறும்படி இருத்தலின் ‘நம்பிக்கு’ என்கிறாள்.
அடியிலே உலகத்தை உண்டாக்கி, அபஹரித்தார் உளராகில் எல்லை நடந்து மீட்டுக்கொண்டு,
அதனைத் தன்னை அடைந்தவர்க்கு ஆக்குகைக்கு இழிதொழில் செய்த இந் நீர்மையையுங் காட்டி இவள் நீர்மையைக் கவர்ந்தான்.
என்பாடுடை அல்குல்
-இடமுடைத்தான நிதம்பப்பிரதேசத்தையுடையவள். பாடு – இடம்.
“திரௌபதியினுடைய நிதம்பப் பிரதேசத்தைக் கண்ட பெண்கள் மனத்தினாலே ஆண் தன்மையை அடைந்தார்கள்”
பாஞ்சால்யா: பத்மபத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா: ஜகநம் கநம்
யா: ஸ்திரியோ த்ருஷ்டவத்ய: தா: பும்பாவாம் மநஸா யயு:”-என்பது, பாரதம்.
என்பது போன்று, ஸஜாதீயரை அழிக்கும் வடிவழகைக் குறித்தபடி.
அவன், ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் அபஹரிக்கின்றவன் ஆனாற்போலே. பண்பு-நீர்மை.
புண்ணவாம் புலவு வாட்கை பொலன்கழல் புனைந்த பைந்தார்க்
கண்ணவாம் வனப்பி னாளைக் காமனே கண்ட போழ்தும்
பண்ணவாம் பவளச் செவ்வாய்ப் படாமுலைப் பரவை அல்குல்
பெண்ணவா நிற்கு மென்றால் பிணையனாட் குய்தல் உண்டோ?–என்பது, சிந்தாமணி. 1528.
“ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய்
தாடகை என்பதுஅச் சழக்கி நாமமே”-என்பது, கம்பராமாயணம்,
தாடகை வதைப்பட.அவன், ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் அபஹரிக்கின்றவன் ஆனாற்போலே. பண்பு-நீர்மை.
“பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 3 : 29.

——————————————————————————————————–

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்குஎன்
கண்புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-

வேத பிரதனாதி ரஷணம் பிரகாரம் –
பண்புடை வேதம் பயந்த பரனுக்கு-நான் முகன் -கீழ் -வேதங்கள் கொடுத்தான் -பிரமனை படைத்து வேதம் கொடுத்தவன் ஸ்ருதி
-பகவத் ஸ்வரூபாதிகளை யதாவத் பிரதிபாதிக்கும் வேதம் -ப்ரஹ்மாதிகளுக்கு உண்டாக்கி -தத் பிரதிபாத்ய பரனுக்கு-மேம்பட்டவன்
-சொல்லி முடிக்க முடியாதே -வேதம் மட்டும் சொல்லும் -சொல்லி முடிக்க முடியாதே –ஊற்றம் உடையாய் பெரியாய்
மண்புரை வையம் இடந்த வராகற்கு-மண்ணின் மிகுதி பூமி –
தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்குஎன்-தெளிந்த -புனல் ஏகார்ணவம்-ஜகத் ரஷணம் சிந்தை பண்ணி –எனக்கும் தேவர்களுக்கும் உபகாரகன்
கண்புனை கோதை இழந்தது கற்பே-அறிவுடைமை இழந்தாள் -பூப்புனை கோதை -கண் புனை கோதை -அழகை பார்த்தவர்கள் கண்கள்
-வைத்ததை மாறாமல் பார்ப்பதால் -அரவிந்த லோசனன் கண் -சம்பந்தம் -இவள் குழலை பார்த்தே -பதிந்ததே –
ஆழ்வார் -கொண்டை -மாலை – கண் -அவ்வளவும் -போக வேண்டும் –

வேத பிரதனாதி ரஷணம் பிரகாரம் –
பண்புடை வேதம் பயந்த பரனுக்கு-நான் முகன் -கீழ் -வேதங்கள் கொடுத்தான் -பிரமனை படைத்து வேதம் கொடுத்தவன் ஸ்ருதி –
பகவத் ஸ்வரூபாதிகளை யதாவத் பிரதிபாதிக்கும் வேதம் -ப்ரஹ்மாதிகளுக்கு உண்டாக்கி -தத் பிரதிபாத்ய பரனுக்கு-மேம்பட்டவன்
-சொல்லி முடிக்க முடியாதே -வேதம் மட்டும் சொல்லும் -சொல்லி முடிக்க முடியாதே –ஊற்றம் உடையாய் பெரியாய்
மண்புரை வையம் இடந்த வராகற்கு-மண்ணின் மிகுதி பூமி –
தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்குஎன்-தெளிந்த -புனல் ஏகார்ணவம்-ஜகத் ரஷணம் சிந்தை பண்ணி –எனக்கும் தேவர்களுக்கும் உபகாரகன்
கண்புனை கோதை இழந்தது கற்பே-அறிவுடைமை இழந்தாள் -பூப்புனை கோதை -கண் புனை கோதை -அழகை பார்த்தவர்கள் கண்கள்
-வைத்ததை மாறாமல் பார்ப்பதால் -அரவிந்த லோசனன் கண் -சம்பந்தம் -இவள் குழலை பார்த்தே -பதிந்ததே –
ஆழ்வார் -கொண்டை -மாலை – கண் -அவ்வளவும் -போக வேண்டும் –

பகவானுடைய தன்மைகளை உள்ளவாறே சொல்லும் பண்பினையுடைய வேதங்களைப் பிரமனுக்கு உபதேசித்த மேலானவனுக்கு, அணுக்கள்
செறிந்த உலகத்தை மேலே கொண்டுவந்த ஸ்ரீ வராகப்பெருமானுக்கு, தெளிந்த தண்ணீரையுடைய பிரளயவெள்ளத்திலே பள்ளிகொண்ட
எம் தேவபிரானுக்கு, என்னுடைய, கண்டார் கண்களைப் பிணிக்க வல்ல மயிர்முடியையுடைய பெண்ணானவள் கல்வியை இழந்தாள்.
மண் – அணுக்கள். “மண்திணிந்த நிலனும்” என்பது, புறம். (செய்-2.) கற்பு – கல்வி.

வேதங்களைக் கொடுத்தல் முதலான உபகாரங்களைச் செய்தவனுக்கு என்மகள் கல்வியினை இழந்தாள் என்கிறாள்.

பண்புடைவேதம் –
ஈசுவரனை உள்ளபடியே காட்டித் தரும்
நீர்மையையுடைய வேதம்.
பயந்த –
தூங்கினவன் எழுந்தான் என்ற கணக்கிலே பிரமனுக்குக் கற்பிக்கை.
இவ்விடத்தில்
ஸம்ஸ்காரம் ப்ரதி ஸஞ்சரேஷு நிததத் ஸர்கேஷு தத்ஸ்மாரிதம்
ரூபம்நாமச தத்ததர்ஹ நிவஹே வ்யாக்ருத்ய ரங்காஸ்பத
ஸு ப்தோத்புத்த விரிஞ்சபூர்வஜநதாம் அத்யாப் யதத்தத்திதம்
சாஸந்நஸ்ம்ருத கர்த்ருகாந் வஹஸி யத்வேதா: பிரமாணம் தத:–என்ற ஸ்ரீ ரங்கராஜஸ்தவம் உத்தரசதகம் 17-வது சுலோகம் அநுசந்தேயம்.
பரனுக்கு-“அந்தப் பகவான் உலகங்களைப் படைப்பதற்கு முன்பு பிரமனைப் படைத்து அவனுக்கு வேதங்களை உபதேசித்தார்”
யோபிரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை” என்பது. இது, ஸ்வேதாஸ்வதரம்.-
என்கிறபடியே, மேற்பாசுரத்தில், “யோபிரஹ்மாணம் விததாதி பூர்வம்” என்பதனையும்,
இப்பாசுரத்தில் “யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை”என்பதனையும் சொல்லுகிறது என்று அருளிச்செய்வர்

பிரமனுக்கு வேதங்களாகிய கண்களைக் கொடுக்கையாலும்,
வேதங்களிலேயே அறியப்படுகின்றவன் ஆகையாலும் எல்லோரைக்காட்டிலும் மேலானவனுக்கு.
அறிவு இழந்தாருக்கு அறிவு கொடுக்குமவன் கண்டீர் இவள் அறிவை அழித்தான்.
மண்புரை வையம் –
மண்மிக்க பூமி.
இடந்த வராகற்கு
ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதியோ நர:
தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமகம்.
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம்கதிம்.– என்பன வராக சரமம்.
மண்ணோடு விண்ணோடு வாசி அறத் தன்முகத்தால் ரக்ஷித்தபடி. –
மண்ணை –மண்ணோர் களை திரு வயிற்றில் வைத்து ரஷித்து
விண்ணை -விண்ணோர் களை -ஹமசாதி முகேன ரஷித்து
பிறருடைய சொரூப சித்திக்காகத் தன்னை அழியமாறுமவன்.
அழிவுக்கு இட்டவடிவுக்கு ஆலத்தி வழிக்கவேண்டும்படி யன்றோ இருப்பது.
“மானமிலாப் பன்றியாம்தேசு” –நாய்ச்சியார் திருமொழி, 11. 8,-என்னக் கடவதன்றோ.
“மண் மிகுதி சொல்லிற்று, எடுக்கையில் அருமை தோற்றுகைக்காக.
வராகற்கு அல்லாத ரக்ஷணம்போல் அன்றியே, எல்லார்க்கும் ஏற முக்கியமான ரக்ஷணம் இதுவன்றோ.
“எயிற்றிடை மணகொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான்” என்கிறபடியே,
பெரியாழ்வார் திருமொழி, 5. 2 : 3. ‘இவளைப் போன்றோர்க்கு’ என்றது, பெரியாழ்வாரை.
இவளைப் போன்றார்க்கு ஞானத்தைக் கொடுக்கிறவன் இவளை அறிவு அழித்தான்.
திரு வயிற்றில் வைத்து ரஷித்து மீண்டும் பிறவி கிட்டுமே -ஸ்ரீ வராஹ நாயனார் ரஷித்து நயாமி பரமாம் கதிம் –
-நான் கண்ட நல்லதுவே -ஞானப்பிரான் மற்று அல்ல -தேகத்தை பூண் கட்டிக் கொடுக்கை இல்லாமல் -எல்லாருக்கும் ஏற -இவன்

தெண் புனல் பள்ளி –
தெளிந்த புனலையுடைய ஏகார்ணவத்தைப் படுக்கையாகவுடையவன்.
அழிந்த உலகத்தைப் படைத்து, படைக்கப்பட்ட சேதநர்க்கு அறிவு கொடுக்கக் கிடக்கிறவனுக்கு.
சத்தையே பிடித்து உண்டாக்கி அறிவு கொடுக்கக்கடவ அவன்கண்டீர் உண்டான அறிவினை வாங்கிக்கொள்ளுகிறான்!
எம் தேவபிரானுக்கு –
பிரமன் சிவன் முதலானவர்கட்கும் உபகாரகனானவனுக்கு.
“ஈசுவரோஹம்” என்று இருந்தாளாகில் அறிவு இழக்கவேண்டா கண்டீர்! -தாசோஹம்-என்றாள் இவள் அறிவை இழந்தாள்
என் கண் புனை கோதை –
கண்டார் கண்கள் பிணிப்பு உண்கையாலே,-கட்டுண்டு – அவற்றை ஆபரணமாகவுடைய மயிர்முடியையுடையவள்.-

பண்புற நெடிது நோக்கிப் படைக்குநர் சிறுமை யல்லால்
எண்பிறங் கழகிற் கெல்லை யில்லையாம் என்று நின்றாள்
கண்பிற பொருளிற் செல்லா கருத்தெனின் அஃதே நீண்ட
பெண்பிறந் தேனுக் கென்றால் என்படும் பிறருக் கென்றாள்.-என்பது, கம்பராமாயணம், சூர்ப்பணகைப்படலம்.

அதாவது, வைத்த கண் வாங்க ஒண்ணாதிருக்கை, கண்களுக்கு விஷயம் தலையாய்விட்டது.
இழந்தது கற்பே –
எல்லார்க்கும் ஞானத்தைக் கொடுக்கக்கூடியவனான அவனுக்குங்கூட அறிவினைக் கொடுக்கும் இவள் கண்டீர் அறிவினை இழந்தது!
“இராஜாக்களின் இலக்ஷணங்களை அறிந்தவளே” அன்றோ.
தேவகார்யம் ஸ்ம ஸா க்ருத்வா க்ருதஜ்ஞா ஹ்ருஷ்ட சேதநா
அபிஜ்ஞா ராஜ தர்மாணாம் ராஜ புத்ரம் ப்ரதீக்ஷதே”–என்பது, ஸ்ரீராமா. அயோத். 26 : 4.

———————————————————————————————-

கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற்சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்குஎன்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6-

ஆகர்ஷகமான அவயவ சோபை -தோள் -முடி கை -தன்னுடைய ஸ்வாதீன சரீரம் இழந்தாள் -பராதீனம் பட்டு போனாள் –
ஏகார்ணவ-கீழே சொன்ன தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்கு-அவயவ சௌந்த்ர்யம் அகப்பட்டு -தன் அவயவங்களைக் காட்டி இவள் அவயவி கொண்டான்
கற்பகக் காவன நற்பல தேளாற்கு- -விலஷனமான பல தோள்கள் -நல் -கற்பக கா விட வியாவ்ருத்தி
பொற்சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு-நீண்ட பொன் மலை -ஒளி உடன் கூடி -பொன் மலை மாலையையும் சூடி -மலர் பாண்டியன் கொண்டை
-தர்ச நீயம் -திரு முடிக்கு அனுரூபம் திரு அபிஷேகம் -சிரஸ் சக்கரம் -பின் பக்கம் -குடுமி வெளியில் இறக்கி வைக்க -பொருந்தி –
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்குஎன்-செவ்வித்தாமரைப் போ -அன்று அன்று பூத்த –சத்யுகவிகாதி -நான் மலர் -தலைச் சங்க நாண் மதியப் பெருமாள் –
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே-சரீரம் தோற்றாள்-வில் போன்ற புருவம் -தோளில் வில் -இல்லை -வில் இல்லாத வீரன்
-வில் உடைய இவள் தானே தோற்றாள் -ஸ்வரூப ஸ்வ பாவங்கள் சௌந்தர்யத்தால்-திருப் புருவ நெறிப்பாலே சிருஷ்டி -இதுவே பிரமாணம் -பட்டர் –

கற்பகச்சோலையைப் போன்ற சிறந்த பல தோள்களையுடையவனுக்கு, பிரகாசம் பொருந்திய பொன்மலையைப் போன்ற அழகிய குளிர்ந்த
திருமுடியையுடையவனுக்கு, அன்று பூத்த அழகிய தாமரை மலர்கள்போன்ற திருக்கைகளையுடையவனுக்கு, வில்லினைப்போன்ற
புருவங்களையுடைய பூங்கொம்புபோன்ற என் பெண்ணானவள் தனது சரீரத்தினை இழந்தாள்.
கா – சோலை. அன்ன – ஒத்த. சுடர் பொற் குன்று என மாற்றுக.

பெரும் புறக்கடலிலே திருப்பள்ளி கொண்டவனுடைய அவயவ சௌந்தர்யத்திலே அகப்பட்டு
இவள் தன்னுடைய மெய்யினை இழந்தாள் என்கிறாள்.

கற்பகம் கா அன்ன நல் பல தோளற்கு –
தன் அவயவங்களைக் காட்டி இவளுடைய அவயவியைக் கொண்டான்.
கற்பகச்சோலை போலேயாய், அவ்வளவன்றியே விலக்ஷணமான பல திருத்தோள்களை யுடையவனுக்கு.
சுடர் பொன் குன்று அன்ன பூந் தண் முடியற்கு –
ஒளியையுடைய பொன்மலை போலேயாய்க் காண்டற்கு இனியதாய்த் திருமுடிக்குத் தகுதியான திருவபிடேகத்தையுடையவனுக்கு.
பூ என்பதற்கு, மாலைகளாலே அலங்கரிக்கப்பட்ட என்னலுமாம்.
திருமுடியைக் கூறியது, எல்லா ஆபரணங்களுக்கும் உபலக்ஷணம்.
நல் பல நாள் தாமரை மலர்க் கையற்கு –
நன்றாய்ப் பலவாய்ச் செவ்வித்தாமரைப் பூப்போலே இருக்கிற திருக்கைகளையுடையவனுக்கு.
என் வில்புருவம் கொடி –
வில்போலே இருக்கிற என்பெண்.
பிரஹ்மாஸ்திரத்தைக்கொண்டிருந்தும் பட்டுக் கிடப்பாரைப்போலே, வெற்றிக்குக் காரணமான பரிகரத்தைக் கொண்டிருந்தும் கண்டீர் தோற்றது!
தோற்றது மெய்யே –
“ஒரு மாதத்திற்கு மேல் பிழைத்திருக்க மாட்டேன்”
“ஜீவிதம் தாரயிஷ்யாமி மாஸம் தசரதாத்மஜ
ஊர்தவம் மாஸாத் ந ஜீவிஷ்யே ஸத்யே நாஹம் ப்ரவீமி தே”-என்பது, ஸ்ரீராரா. சுந். 40 : 10.
என்னப் பண்ணும் வடிவைக் காட்டி,
“கணநேரமும் பிழைத்திருக்கமாட்டேன்”
“சிரம் ஜீவதீ வைதேஹீ யதிமாஸம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”–என்பது, ஸ்ரீராரா. சுந். 66 : 10.
என்னப் பண்ணும் வடிவினைக் கண்டீர் கொண்டது.
தன்வசப்படாத சரீரத்தையுடையவளானாள் என்பது கருத்து.

————————————————————————————

மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7-

அநந்த சாயி உடைய -ஆபரண சோபையிலும் -கலன்-அரும் கலமே தேற்றமாய் வந்து திற -அரும் கலனே -சமுதாய சோபை இழந்தாள் –
மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு-திரு மணியுடன் பொருந்திய எண்ணிறந்த ஆபரணங்கள் -கச்சிதமாக -அமர்
-சாத்திய இல்லையே -தர்ச நீயம் -நன்கு அணிந்தான் –
அபய ஹஸ்தம் வரத ஹஸ்தம் -வசந்த உத்சவம் மாற்றி சாத்தி
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு-படுக்கையாகக் கொண்டவன்
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்-சிவந்த -ஆஸ்ரித பவ்யன் -உபகாரகன் -தர்சனம் காட்டி
தையல் இழந்தது தன்னுடைச் சாயே–லாவண்யம் -சமுதாய சோபை –அசாதாராணம் –

திருமேனிக்குப் பொருந்தின பலவகைப்பட்ட ஆபரணங்களைக் காட்சிக்கு இனியதாம்படி அணிந்திருப்பவனுக்கு, படத்தையுடைய ஆதிசேஷனைப்
படுக்கையாகவுடையவனுக்கு, திருக்கரங்களும் திருவடிகளும் செந்நிறத்தோடு கூடின கண்ணபிரானுக்கு, என் பெண்ணானவள் தன்னுடைய சோபையை இழந்தாள்.

திருப்பாற் கடலிலே திருக்கண் வளர்கின்றவனுடைய ஆபரணசோபை முதலானவைகளிலே அகப்பட்டு
இவள் லாவண்யத்தை இழந்தாள் என்கிறாள்.

மெய் அமர் பல் கலன் –
திருமேனியிலே பூத்தாற்போலே பொருந்தியிருந்துள்ள திருமுடி முதல் நூபுரம் ஈறாகவுள்ள திரு ஆபரணங்கள்.
நன்கு அணிந்தானுக்கு –
பூணவல்லபடியாலே வந்த அழகு.
பைஅரவின் அணைப் பள்ளியினானுக்கு –
தன்னுடைய பரிசத்தாலே விரிந்த படங்களையுடையவனாய்,-அரவை அணையாக என்றபடி –
நாற்றம் மென்மை குளிர்த்தி இவற்றை இயல்பாகவுடையவனைப் படுக்கையாகவுடையவனாய், அதிலே திருக்கண்வளர்ந்தருளுகிறவனுக்கு:
இதுவும் ஓர் ஆபரண விசேடம்போலே காணும்; அநந்த முகமான ஆபரணம் அன்றோ.
மேலே கூறிய ஒப்பனை நிறம்பெறும்படியான படுக்கை அன்றோ.
கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு –
திருமேனிக்குப் பரபாகமான சிவப்பையுடைய திருக்கைகளையும், திருவடிகளையுமுடையவனாய் உபகாரசீலனான ஸ்ரீகிருஷ்ணனுக்கு.
திருவனந்தாழ்வானுடைய சேர்த்தியாலே யாயிற்று அவயவங்கள் தொடக்கமானவை பூர்ணமாயின.
என் தையல் இழந்தது தன்னுடைச் சாய் –
என் பெண்பிள்ளை இழந்தது, மாணிக்கத்தின் ஒளிபோலே தனக்கு நிறங்கொடுக்கும் லாவண்யத்தை.
கழற்றிப் பூணும் ஆபரணத்தைக் காட்டிக் கழற்ற ஒண்ணாத ஆபரணத்தைக் கொண்டான். தையல் – பெண். சாய் – லாவண்யம்.

—————————————————————————————–

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்குஎன்
வாசக் குழலி இழந்தது மாண்பே.–6-6-8-

க்ரமம் மாற்றி -பூதனை -சகடம் -கருமம் -வில் பெரு விழவும் -கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ போலே -வார் கடா -சரியாக பேசி –
காட்டக் கண்டவர்கள் அதனால் -விரோதி நிரசன்னா ஸ்வ பாவன் -தன் ஸ்த்ரீத்வ வை லஷண்யம் இழந்தாள்
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு-குருந்த மரம் -தனி -தமி -அசாஹாய வீரன் -பலராமன் -கூட வல்லை –
நரகாசுரன் நிரசனம் சத்யா பாமை இருந்தால் போலே தான் இல்லாமல்
இதனால் அனந்யார்ஹை –
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு-போக்தாவானவன் -சகடம் மாய -மாய சகடம் என்றுமாம் -கிருத்ரிம சகடம்
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்குஎன்-மகா உபாகாரகன் –
வாசக் குழலி இழந்தது மாண்பே-ஸ்த்ரீத்வ வை லஷண்யம் -அழகு என்றுமாம் -கொங்கு அலர் ஏலக் குழலி -சொல்லி -பரிமளம் உயர்ந்த குழல்

குருந்த மரமானது சாயும்படி முறித்த தனிவீரனுக்கு, சகடாசுரன் இறக்கும்படியாக உதைத்த மணவாளனுக்கு, பூதனையானவள் பிணமாகும்படி
முலைப்பாலைக் குடித்த உபகாரகனுக்கு, என்னுடைய, வாசனை பொருந்திய கூந்தலையுடைய பெண்ணானவள் தன் மாண்பினை இழந்தாள்.
மாய – இறக்க. மாயம் என்று பிரித்து வஞ்சனையுடைய என்னுதல், பேயை : வேற்றுமை மயக்கம் குழலி – கூந்தலையுடையவள்.

கிருஷ்ணன், தன் விரோதிகளை அழித்த செயலுக்குத் தோற்று, இவள், தன்னுடைய பெண்மையை இழந்தாள் என்கிறாள்.

குருந்தம் சாய ஒசித்த தமியற்கு –
அசுர ஆவேசத்தாலே தழைத்துப் பூத்து நின்ற குருந்தத்தை வேரோடே சாய்ந்து விழும்படிமுறித்த தனியற்கு. என்றது,
நம்பிமூத்தபிரானை ஒழியவே தனிவீரம் செய்தவனுக்கு என்றபடி.
தான் அத்தனிமையிலே சென்று உதவக் காணும் இவளுக்கு நினைவு.
சாயை -நிழல் பெரிய தழைத்து பூத்த குருந்தம் என்றுமாம் –
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு –
வஞ்சனைபொருந்திய சகடம்என்னுதல்;
“தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாய் பிளந்து வீய” என்கிறபடியே,
சகடம் உருமாயும்படி என்னுதல்.
மணாளற்கு-
ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கு வில்லை முறித்தல்போலே, இந்தச் செயலினைக் காட்டியாயிற்று
இவளைத் தனக்கே உரியவளாக்கியது.-அங்கு கை வண்ணம் இங்கு கால் வண்ணம் -இவள் தாசர் -அவள் பட்ட மகிஷி –
பேயைப் பிணம் படப் பால் உண் பிரானுக்கு –
சூர்ப்பணகையைப் போலே ஒரு கேட்டினை விளைக்க உயிரோடே விடாதே, பூதனையைப் பிணமாய் விழும்படி
முலை உண்ண வல்ல மஹோபகராகனுக்கு.
என் வாசக்குழலி –
இயற்கையிலேயே வாசனைபொருந்திய குழலையுடைய என் பெண்பிள்ளை. -வாசனையே ஸ்வரூப நிரூபகம் —
அவனை, “சர்வகந்தா:” என்று சொல்லுகைக்கு அடி இத்தலையை இட்டு.
வாசஞ்செய் பூங்குழலாள் அன்றோ.-இது திருவாய்மொழி,- 10. 10 : 2.-
இழந்தது மாண்பே-
தன் ஆண் தன்மைக்குரிய செயல்களை எல்லாம் காட்டி, இவளுடைய பெண்தன்மையைக்கொண்டான்.
மாண்பு-மாட்சிமை; பெண்தன்மை. மாண்பு என்பதற்கு, அழகு என்றும் சொல்லுவர்.
கிருஷ்ணன் விரோதி நிரசனதுக்கு தோற்று தன்னுடைய ஸ்த்ரீத்வம் இழந்தாள்

———————————————————————————-

மாண்பமை கோலத்துஎம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்துஎம் காகுத்த நம்பிக்குஎன்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9-

அபேஷித சித்தியால் வந்த அத்யந்த -உச்ச்ராயம் -வாமனாதி அவதாரம் -அழகை இழந்தாள்
மாண்பமை கோலத்துஎம் மாயக் குறளற்கு-வஞ்சகன் -பேர் அழகு வடிவம் -எனக்கும் மாயம் –மறந்தாவது பிழைக்கா ஒட்டாத –
முடிந்து பிழைக்க ஒட்டாத -மின்னிடையார் -கூட அபேஷிதம்பெற்றார் மகா பலிக்கும் மாயம் –
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு-அபேஷித்த சித்தியால் -உயர்ந்த -தேஜோ மாயம் -மலை போன்ற ஒளி -திவ்ய மங்கள விக்ரகம்
காண்பெருந் தோற்றத்துஎம் காகுத்த நம்பிக்குஎன்-தோற்றம் வடிவம் அழகு அவதாரம் –அரிய-காணத்தக்க விபவம்
-தர்ச நீயமான -க்ரஹனத்துக்கு அப்பால் பட்ட அபரிச்சின்ன -வைபவம்
ஆவிர்பாவம் -திரிவிக்ரமன் -போன்ற பல -வமனாதி -நம் போல்வார் அனுபவிக்க -சக்கரவர்த்தி திருமகன் –
வஞ்சனை இல்லா நேர்மை உள்ள பூர்ணன்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே-அழகு இழந்தாள்- ஆபரண அணிந்து -விரஹ -சஹியாத மென்மை-

அழகுபொருந்திய வடிவத்தையும் வஞ்சனையையுமுடைய வாமனனாக அவதரித்தவனுக்கு, உயர்ந்த பிரகாசம்பொருந்திய மலைபோன்ற
சிவந்த ஒளியையுடைய திருமேனியையுடையவனுக்கு, காணத்தக்க பெரிய தோற்றத்தையுடைய ஸ்ரீராம்பிரானுக்கு என்னுடைய,
ஆபரணங்களைத் தரித்த மெல்லிய முலைகளையுடைய பெண்ணானவள் அழகினைத் தோற்றாள்.
தோற்றம் – தோன்றுதல்; அவதாரத்தைக் குறித்தபடி காகுத்தன் – ககுஸ்தவம்சத்தில் பிறந்தவன். நம்பி – பூர்ணன்.

ஸ்ரீ வாமனம் முதலிய அநேக அவதாரங்களிலே அகப்பட்டு இவள் தன் அழகினை இழந்தாள் என்கிறாள்.

மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு –
அழகு சமைந்த ஒப்பனையையுடையனாய், ஆச்சரியமான வேடத்தையுடைய ஸ்ரீ வாமனனுக்கு.
திரு யஞ்ஞோபவீதம்-முக்குணம் மூன்று புரி –மூன்று இழை -ஒவ் ஒன்றிலும் –
மூன்று கடன்கள் தேவ பித்ரு ரிஷி -அத்யாயனம் யாகம் தர்ப்பணாதிகள் –
மாண்பு – அழகு. மாயம் வஞ்சனையாகவுமாம்.
சேண் சுடர் குன்று அன்ன செம்சுடர் மூர்த்திக்கு –
அடியிலே நீர்வார்த்துக் கொடுத்தவாறே வளர்ந்தபடி. ஓங்கிய புகரையுடைய மலை போலே
அழகிய ஒளியையுடைய வடிவினை யுடையவனுக்கு. -ஆறு வார்த்தைக்கு ஆறு பொருள்-
காண் பெரும் தோற்றத்து –
கண்களுக்கு இனியதாய் அளவிடற்கரியதான இனிமையையுடைய தோற்றத்தையுடைய என்னுதல்; தோற்றம் – அழகு.
அன்றிக்கே, “ஸ்ரீராமபிரானுடைய மஹத்தான அவதாரம்” என்கிற அவதாரத்தின் மஹத்துவமாதல்
“ஜந்ம ராமஸ்ய ஸுமஹத் வீர்யம் ஸர்வாநுகூலதாம்
லோகஸ்ய ப்ரியதாம் க்ஷாந்திம் ஸௌம்யதாம் ஸத்ய ஸீலதாம்”–என்பது, ஸ்ரீராமா. பால, 3 : 10.

எம் காகுத்த நம்பிக்கு-
குணங்கள் நிறைந்த சக்கரவர்த்தி திருமகனுக்கு.
ஆந்ருஸம்ஸ்யம் அநுக்ரோஸ: க்ஷமா சத்யம் தமஸ்ஸம:
ராகவம் ஸோபயந்தி ஏதே ஷட்குணா: புருஷோத்தமம்”- என்றது, அநுசந்தேயம். ஸ்ரீராமா. அயோத். 33 : 12.
“தசரதற்கு மகன் தன்னை யன்றி மற்று இலேன்”-திருவாய். 3. 6 : 8.– என்னுமவராதலின் ‘எம் காகுத்தன்” என்கிறாள்.
“குணங்களுக்கு எல்லாம் நிலைக்களமானவர்”குணாநாம் ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.
ஆதலின் ‘நம்பி’ என்கிறாள்.
அஜோபிசன் -சம்பவாமி யுகே யுகே -பெருமைகளில் குறை இல்லாமல் அவதாரம் –
என் பூண் புனை மென்முலை –
ஆபரணத்தாலே அலங்கரிக்கப்பட்டனவாய் விரகத்தைப் பொறுக்கும் அளவில்லாத மெல்லிய முலைகளையுடையவள்.
தோற்றது பொற்பே –
“பூண்புனை மென்முலை” என்கையாலே, ஒப்பனையால் வந்த அழகினை இழந்தாள் என்கிறாள். பொற்பு – அழகு.
“மலராள் தனத்துள்ளான்”-மூன்றாந் திருவந். 3.- என்கிறபடியே,
அவனைத் தன்னழகாலே புறம்பு ஒன்று அறியாதபடி பண்ணி அநுபவிக்குமவள் கண்டீர் தோற்றாள் என்கை.

————————————————————————————————

பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.–6-6-10-

சேஷித்வ போக்யத்வ -விரோதி நிவர்த்தகன் -சர்வ சரீரன் -மரியாதை எல்லாம் இழந்தாள்
பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு-அழகு -நீண்டு உயர்ந்த -தர்ச நீயமான ஸ்ரமஹரமான -பரத்வ போக்யத்வங்கள் –
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு-பிரபல மல்லர் -சாந்து அழியாமல் -மல்லைப் பொருத-வஸ்த்ர சந்தன புஷ்ப அலங்காரம்
-காலார நடந்து -அலங்கார பிரயோ விஷ்ணு அபிஷேகப் பிரியன் சிவன் –
மதுரைப் பெண்களுக்கு அழகை உபகரித்தவன் -ஆச்சர்ய பூதன்
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்-பிரமாண சித்தம் ஸ்தைர்யம் -பல வகை -சரீரமாக -கொண்டு -ஸ்தாவர ஜங்கமங்கள் சரீரமாக என்றுமாம் –
நிற்கும் மாயன் தத்கத தோஷ ரஹிதனாய் நிற்கும் -தோஷங்கள் தீண்டாமல் நிற்கும் –
கற்புடை யாட்டி இழந்தது கட்டே-லோக மரியாதை ஸ்த்ரீத்வம் மரியாதை -கட்டடங்க -சாகல்யம் முழுதும் இழந்தாள்
கற்பு -அறிவு உடையவள் -இழந்தது ஸ்த்ரீத்வ மரியாதை

அழகுபொருந்திய நீண்ட திருமுடியிலே தரித்த அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடையவனுக்கு, சாணூரன் முஷ்டிகன் என்னும் மல்லர்களோடே
போர்செய்த தோள்களையும் ஆச்சரியமான செயல்களையுமுடைய உபகாரகனுக்கு, நிற்கின்றனவான பலவகைப்பட்ட பொருள்களையும் சரீரமாகவுடையவனாய்
அவற்றின் குற்றங்கள் தன்பக்கல் தட்டாமலே நிற்கின்ற மாயவனுக்கு, அறிவுடைய என் மகளானவள் மரியாதையை இழந்தாள்.
மல் – மல்லர்கள். கற்பு – கல்வி; அறிவு. கட்டு – உலக மரியாதை. பெண்களுக்குள்ள மரியாதையுமாம்.

பரத்துவம் என்ன, அவதாரம் என்ன, உலகமே உருவமாயிருக்கும் தன்மை என்ன இவற்றை யடங்கக் காட்டி
இவள் உடைமை எல்லாவற்றையும் கொண்டான் என்கிறாள்.

பொற்பு அமை நீள்முடி பூந்தண் துழாயற்கு-
அழகு சமைந்திருப்பதாய் ஆதிராஜ்யப் பிரகாசகமான திருமுடியின் மேலே இறைமைத்தன்மைக்கு அறிகுறியான
திருத்துழாய் மாலையை யுடையவனுக்கு;
தன்னுடைய பரிசத்தாலே பூத்துச் சிரம ஹரமாயிருத்தலின் ‘பூந்தண்துழாய்’ என்கிறாள்.
மல் பொரு தோளுடை மாயம் பிரானுக்கு-
வந்து அவதரித்து மற்பொரு தோளையுடையனாயிருக்கை.
சாத்தின சாந்து அழியாதபடி மல் பொருத ஆச்சரியத்தையுடையவனாதலின் ‘மாயப் பிரான்’ என்கிறாள்.
சாவத் தகர்த்த சாந்து அணி தோளன் – பெரியாழ்வார் திருமொழி, 4. 2 : 6.-அன்றோ.
ஸ்ரீ மதுரையிற் பெண்களுக்கு அழகினை உபகரித்தவனாதலின் ‘பிரான்’ என்கிறாள்.
அன்றிக்கே, மற்றும் ஆச்சரியமான உபகாரங்களைச் செய்தவனுக்கு என்றுமாம்.
நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு –
தாவர சங்கமங்களான எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் நிற்கச்செய்தே,
அவற்றின் தோஷங்கள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கிற ஆச்சரியத்தையுடையவனுக்கு.
என் கற்புடையாட்டி –
மிக்க அறிவையுடைய என்மகள்.
“என்னை அழைத்துக்கொண்டு போகும் அச்செயல் அவர்க்குத் தக்கதாம்” –
“தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30.
என்று இருக்குமவள் அன்றோ.
கற்புடை -மிக்க அறிவு -உடை மதுப்பிரத்யயார்த்தம் -பூமாவில் -ஸ்ரீ மான் -நிறைய முழுவதுமாய் மிக்க அறிவுடைய என்றவாறு
-அவனே உபாயம் -அத்யாவசாயம் -வேறு ஒன்றை நினையாமல் -பிரபன்னனுக்கு இதுவே கற்பு அறிவு –
இழந்தது கட்டே –
தனக்கு உள்ளவற்றை நேராகக் காட்டி இவள் பக்கல் உள்ளவற்றை நேராகக் கொண்டான். கட்டு – முழுதும்.
‘கட்டு’ என்று மரியாதையாய், உலக மரியாதையை இழந்தாள் என்றுமாம்

——————————————————————————————

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம்உண்பாரே.–5-6-11-

அப்யசிக்க வல்லவர் -நித்ய சூரிகள் உடன் கோவை ஆவர் –
கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்-சோலை உடைத்தாய் -சௌலப்யன்-காட்டிக் கொடுக்கும் -தர்ம தர்சனம் -நிர்வாகன் ஆனவன்
-திவ்ய தேசம் -பாசுரம் இல்லை –
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்-அரணை உடைத்தாய் -அழகு தர்ச நீயமான -ஆழ்வார் அருளிச் செய்த
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்-தொடை அழகை உடைத்தாய் -எதுகை மோனை சீர் இத்யாதி
கட்டெழில் வானவர் போகம்உண்பாரே-ஸ்வ சந்த – பெருமாள் திரு உள்ளப்படியே -மடக்கும் நித்ய ஸூ ரிகள் –கட்டுப்பாடு –
கட்டடங்க எழில் என்றுமாம் -நான்குக்கும் –

செறிவினையுடைய அழகுபொருந்திய சோலைகளாற் சூழப்பட்ட சிறந்த திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனை, அரண்களின் அழகையுடைய
தெற்குத் திக்கிலேயுள்ள திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட அழகிய தொடைகளையுடைய ஆயிரம் திருப்பாசுரங்களுள்
இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள் நித்திய சூரிகளுடைய அனுபவத்தை அனுபவிப்பார்கள்.

முடிவில், இத் திருவாய்மொழியினை வல்லவர்கள் நித்தியசூரிகள் அநுபவிக்கின்ற இன்பத்தினை அநுபவிப்பார்கள் என்கிறார்.

கட்டு எழில் சோலை –
பரிமளத்தையுடைத்தான நல்ல சோலை. கடி என்ற சொல், ‘கட்டு’ என்று வந்தது;
வலித்தல் விகாரம். கடி – வாசனை.
நல்வேங்கடம் – சேஷசேஷிகள் இருவர்க்கும் உத்தேசியமான திருமலை.
வாணன் –
நிர்வாஹகன்.
திருவேங்கடமுடையானை யாயிற்றுக் கவிபாடிற்று.
“திருவேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாக திருவாய்.- 3. 9 : 1.
என்னாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்” என்று இருக்கும் அவர் அன்றோ.
இவள் வர்ணம் அவன் இடம் சேர்ந்து –நீல கரு நிற மாயற்கு -நிறம் கரியான் மாறிற்றே -அனைத்தும் -அவனுக்கு கொடுப்பதாக
உணர்த்தியில் சொல்லி -இவள் ஆசைப்பட்ட படியே தானே நடக்கும் -இவள் இழந்தது எல்லாம் அவன் இடம் தானே
கட்டு எழில் தென்குருகூர்-
அரணையுடைய திருநகரி. கட்டு-அரண்.
கட்டு எழில் ஆயிரம் –
அழகிய தொடைகளையுடைத்தாயிருக்கை. கட்டு-தொடை.
கட்டு எழில் வானவர் –
கட்டடங்க நல்லவரான நித்திய சூரிகள்.
அன்றிக்கே, ‘கட்டு’ என்பது, போகத்திற்கு விசேடணமாகவுமாம். என்றது,
சம்சாரத்தில் போகங்கள் கர்மங் காரணமாக வருகையாலே அல்பமாய் நிலையற்றவையாய் இருக்கும் அன்றோ.
இது, சொரூபத்துக்குத் தக்கது ஆகையாலே நிறைந்ததாய் நித்தியமாய் இருக்கையைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே, நான்கு அடிகளிலுமுள்ள ‘கட்டு’ என்ற சொல்லிற்கு, முழுதும் என்றே பொருள் கோடலுமாம்.
நீர்மைக்கு எல்லையான திருமலை பற்றுதற்குரிய தலம்;
மேன்மைக்கு எல்லையான பரமபதம் அநுபவத்திற்குரிய தலம்.
ஒன்றி ஆக்கை புகாமை உய்யக்கொள்வான் நின்ற வேங்கடம் அன்றோ.-திருவாய். 9. 3 : 8.

அசித் அவிவிசேஷணம் –உஜ்ஜீவிப்பைக்காக -சரீர பிரவேசம் -ஆகாமைக்காக -கருக் குழியில் புகா வண்ணம்
காத்து அருள அவசர ப்ரதீஷனாய் நின்றபடி

—————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தஸ்மாத் முனி
பரஸ்மின்
ச்வீயத்வ புத்தி -அவசாத் கலீதா –தன்னடையே விலகிற்று
அஹங்காரம் மமகாரம் எப்போதே போனதே –
இதில் அவன் விரும்பிய ஆத்மீயங்கள் –
அவன் உகக்க வில்லை என்றால் ஆத்மாத்மீய வைராக்கியம் ஏறாளும் இறையோனில் பார்த்தோம் –
பிரவனதா விபவாத்
பரஸ்மின் பும்ஸ் ஏவ
புருஷார்த்த சாரம் -பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம்
புருஷோத்தமன் விரும்பிய புருஷார்த்தம்
ச்வச்ய ச்வகீய -விஷயேஷூ அகிலேஷூ –

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பாரம்யம் சர்வ ஸ்மாத் பரன்
பஞ்சாயுத விக்ருதி முகையி -மூன்றாம் பாட்டையும் -வாய் கிளர் -நீடு உலகு உண்ட -திறம் கிளர் வாய் -முக சப்தம்
ப்ரஹ்மண்ஸ் ஸ்ரஷ்டு பாவாத்
தேவானாம் ஸ்வாமி பாவாத்
அபி ஸூ பக்தம்-திவ்ய அவயவம் சௌபாக்யம்
அலங்க்ருதே
குந்த பங்காத்
ப்ராதுர் பாவச்ச்ய-ஆவிர்பாவம் ப்ராதுர்பாவம்
சர்வ அந்தர நிலயதயா
அஹங்கார மமகார தைர்யம் மாதுர்யம்
அஹம் மம -தைர்யம் சாதுர்யாதி அபஹரித் ஹரிர்

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 56-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்-தமக்கு உள்ளது அடையக் கை விட்டு போன படியைப் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ் பிறந்த சம்ஸ்லேஷம் மானச சம்ஸ்லேஷ மாத்ரமாய்-பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -என்கிறபடி மிகவும் அவசன்னராய்
அத்தாலே மோஹித்துக் கிடக்க
ஏறாளும் இறையோனில் தாம் விடப் பார்த்த ஆத்மாத்மீய பதார்த்தங்கள் அடங்கலும் தன்னடையே விட்டுக் கழன்று
சிதிலமாய்ச் செல்லுகிறபடியை-திருத் தாயார் தன் மகள் வளையாதிகள் போயிற்று என்று
அவனுரிச் சூறை கொண்ட பிரகாரத்தை பேசின பாசுரத்தாலே சொல்லிக் கூப்பிடுகிற
மாலுக்கு வையத்தில் அர்த்தத்தை-மாலுடனே தான் கலந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————-

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன்னுடைமை தானடையக் -கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊனமறு சீர் நெஞ்சே உண்—56-

தான் கோலி -அங்கே-ஏறாளும் இறையோனும் — -இங்கே -அவை முற்கோலி -தன்னடையே போயின –

———————————————–

வியாக்யானம்–

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்து சத்தை பெற்று உஜ்ஜீவியாமல்
கீழ்-அடிமை செய்வார் திருமாலுக்கு -என்றார் இறே-அத்தை அடி ஒற்றின படி

சால நைந்து –
மிகவும் அவசன்னராய் –தம் தசை தாம் பேச மாட்டாதே-திருத் தாயார் பேசும்படியாக தளர்ந்து –

தன்னுடைமை தானடையக் -கோலியே தான் இகழ வேண்டாமல் –
ஏறாளும் இறையோனில் அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத்மீயங்கள் அடையத் தாம் உத்யோகிக்க
வேண்டினால் போல் அன்றிக்கே

தன்னை விடல் சொல் மாறன் –
தன்னடையே அவை முற்கோலித்து- தம்மை கட்டடங்க விட்டகலும் படியை அருளிச் செய்த ஆழ்வார் –
அதாவது –
உத்தரீயம் தயாத்யக்தம் ஸூபாந் யாபரணான் யபி -என்னும் படி
ஏலக் குழலி இழந்தது சங்கே -என்றும்
என் மங்கை இழந்தது மாமை நிறமே -என்றும்
என் பிறங்கிரும் கூந்தல் இழந்தது பீடே -என்றும்
என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே -என்றும்
என் கண் புனை கோதை இழந்தது கற்பே -என்றும்
என் விற்புருவக் கொடி தோற்றது மெய்யே -என்றும்
என் தையல் இழந்தது தன்னுடைச் சாயே -என்றும்
என் வாசக் குழலி இழந்தது மாண்பே -என்றும்
என் பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே -என்றும்
என் கற்புடை யாட்டி இழந்தது கட்டே -என்றும்-அருளிச் செய்தவை என்கை –

தன்னை விடல் சொல் மாறன் –
கட்டெழில் தென் குருகூர் சடகோபன் சொல் -என்று அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் உடைய –

ஊனமறு சீர் நெஞ்சே உண் –
சீருக்கு ஊனம் ஆவது-ஸ்வாரத்தமாய் இருக்கை-
அப்படி அன்றிக்கே-பர அனுபவ யோக்யமாய் இருக்கை -ஊனம் அற்று இருக்கை –
இப்படி நிரவத்யமான கல்யாண குணத்தை நெஞ்சே உண் –

ஓவாத் தொழில் சாரங்கன் தொல் சீரை நன்னெஞ்சே
ஒவாத ஊணாக உண் -என்று ஸ்ரீ ஆழ்வார் அவன் குணங்களை புஜிககுமா போலே
நீயும் ஸ்ரீ ஆழ்வார் உடைய பக்த்யாதி குணங்களையே புக்தமாக புஜி-

———————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: