பகவத் விஷயம் காலஷேபம்- 134- திருவாய்மொழி – -6-5–6….6-5-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்குசெந்தாமரை
வாய்க்கும் தண்பொருநல் வடகரை வண்தொலைவில்லி மங்கலம்
நோக்குமேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–6-5-6-

சம்ருத்தமான திவ்ய தேசம் -கண்டால் வேறு ஒன்றும் காண மாட்டாதே -ஸூ க்ரஹ சௌந்தர்ய -எளிமை -அழகு
நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்குசெந்தாமரை-பல திக்கை நோக்கி தொழுதாள் கீழே -கரும்பு செந்நெல் தாமரை மலர்ந்து நிழல் கொடுக்க
வாய்க்கும் தண்பொருநல் வடகரை வண்தொலைவில்லி மங்கலம்-வடகரையில் -சம்பத்து நிறைந்த திவ்ய தேசம்
நோக்குமேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்-துடிப்பால் -அரதி-மற்ற ஒன்றில் ஆசை இல்லாமல்
அந்த திசையைத் தவிர வேறு ஒன்றையும் பார்க்காமல் -திருஷ்டி வியாபாரமும் – –
வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!-வாயால் பேசும் சப்தங்களும்முடிந்து ஆளலாம் படி
ஸூ க்ரஹமான-பித்தன் -மாலே மணி வண்ணா –சௌலப்ய சௌந்த்ர்யாதி பிரகாசங்கள் திரு நாமம் –

தாய்மார்களே! இவள், பார்க்கும் இடங்கள் தோறும் கரும்புகளும் செந்நெலும் உயர்ந்த செந்தாமரைகளும் நிறைந்திருக்கின்ற குளிர்ந்த தாமிரபரணியின்
வடகரையிலுள்ள திருத்தொலைவில்லி மங்கலம் என்னும் திவ்வியதேசத்தைப் பார்ப்பாளேயானால் அந்தத் திசையையே அன்றி வேறு ஒருதிசையையும்
பார்த்து அறியாள், கழிகின்ற நாள்தோறும் வாயிலே வைத்துப் பேசுகின்ற வார்த்தைகளும் நீலமணிபோன்ற நிறத்தையுடைய எம்பெருமானது திருப்பெயர்களேயாகும்.

வலிமை இல்லாமையாலே முதலிலே பார்க்கமாட்டாள், பார்த்தாளாகில் மற்று ஓரிடமும் பாராள் என்கிறாள்.
கண்ட கண்கள் -மற்று ஒன்றைக் காணா போலே –

நோக்கும் பக்கம் எல்லாம் –
பார்த்த பார்த்த இடமெல்லாம். “திருப்பொருநல் நோக்கும் பக்கமெல்லாம்” என்று கூட்டிப் பொருள் கூறுவாரும் உளர்.
கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை –
கரும்பும், அதனோடே இசலி வளர்கிற செந்நெலும், இரண்டற்கும் நிழல்செய்கின்ற செந்தாமரையும்.
வாய்க்கும் –
நிறைந்திருக்கும் என்னுதல்; இட்டன எல்லாம் நூறு கிளைகளாகப் பணைக்கும் என்னுதல்.பக்தி விதை கடல் புரைய விளைத்தால் போலே –
தண்பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம்–
சிரமஹரமான திருப்பொருநல் வடகரையிலேயான ஐசுவரியத்தையுடைய தொலைவில்லி மங்கலம்.
நோக்குமேல் அத்திசை அல்லால் மறுநோக்கு இலள் –
முதலிலே நோக்க வலியுடையள் அல்லள்;
வருந்திப் பார்த்தாளாகில் அத்திக்கை ஒழிய முகம் எடுத்துப் பார்க்கிறிலள்.
வைகல் நாள்தொறும்-
கழிகிற நாள்தோறும்.
வாய்க்கொள் வாசகமும்-
வாயாலே சொல்லுகிற சொலவும்.
மணிவண்ணன் நாமமே –
வடிவழகுக்கு வாசகமானவற்றையே சொல்லாநின்றாள்.
குண விஷயமாதல் விபூதிவிஷயமாதல் அன்றிக்கே, வடிவழகிற்குத் தோற்றமை தோற்றச் சொல்லாநின்றாள்.
இவள் நிலை எது? நம் நிலை எது? உங்களது சொரூப ஞானம்; இவளது உருவஞானம்.
நாரசிம்ஹவபு ஸ்ரீ மான் -அழகால் வந்த ஸ்ரீ மத்வம் போலே

—————————————————————————————–

அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-

இவள் வாக் விஷயம் -திரு நாமம் திவ்ய சிஹ்னம்
அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து-சொந்தம் கொண்டாடுகிறீர்கள் -பிறந்த ஸூ ஹ்ருதம் அறியீர் –
அழகிய நிறம் -அபி ரூபியையாய் -பரபாக-முக்தம் இளைமை மான் போலே -கை விஞ்சி
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்-இந்த திரு நாமம் ஒன்றையே -வேறு ஒன்றையும் கேட்கவும் மாட்டாள்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?-பூர்வ ஸூ ஹ்ருதம் -நிர்ஹேதுக பிரசாதம் -ஔதார்யம் -முகில் வண்ணன்
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே-வாயாரச் சொல்லி -அசாதாரண சின்னங்கள் -இவள் பேச்சே இவை தானே

தாய்மார்களே! அழகிய பெருமைபொருந்திய மயிலையும் இளையமானையும் போன்றவளான இவள், நம்மை விஞ்சித் திருத்தொலைவில்லமங்கலம்
என்ற பெயரையல்லாமல் வேறு எந்த வார்த்தையையும் கேட்கின்றாள் இல்லை; முற்பிறவிகளில் செய்த புண்ணியம்தானோ? முகில்வண்ணனான
எம்பெருமானுடைய மாயம்தானோ? அறியேன்; அவ் வெம்பெருமானுடைய சின்னங்களும் திருப்பெயர்களும் திருந்த இவள் வாயின ஆயின.
கைவலித்தல் – மீறுதல். வாயனகள்: 3கள், அசைநிலை, என்ன – என்னுடைய என்றலுமாம். கேட்க உறாள் என்பது, கேட்குறாள் என வந்தது;
விகாரம். கைவலிந்து தொலைவில்லி மங்கலம் என்றல்லால் என்ன வார்த்தையும் கேட்குறாள் என்க.

அவன் சின்னமும் திருநாமமும் இவள் சொல்லப்புக்கவாறே நிறம்பெற்றன என்கிறாள்.

அன்னைமீர்! –
இவள் பருவம் இது; நமக்கு அவ்வருகே போன ஆச்சரியத்தைப் பாரீர்கோள்.
‘மைத்ரேய’ என்னுமாறுபோலே, ‘அன்னைமீர்!’ என்கிறாள்.
அணி மா மயில் சிறுமான் –
அழகிய நிறத்தையுடைய பெண்பிள்ளை.-மாமை இல் –வர்ணம் உடையவள் -பற்றிலன் -பற்றை இல்லமாக கொண்டவன் போலே –
அன்றிக்கே, அழகியதாய்ச் சிலாக்கியமான மயில் போலே இருக்கிற பெண்பிள்ளை என்னுதல்.
அன்றிக்கே, அழகியதாய்ச் சிலாக்கியமான மயில் தோகை போலே கூந்தல் என்றுமாம் –
சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து –
நாம் கற்பித்த திருநாமங்களையும் சொப்படச் சொல்ல மாட்டாதவள் நமக்கு எட்டாதபடியானாள். கை வலித்தல் – கை கடத்தல்.-சொப்பட நீராட -நன்றாக என்றபடி
என வார்த்தையுங் கேட்குறாள் –
தன் நினைவினை யான் சொல்லிலும் மீட்பதற்கு நினைத்துச் சொல்லுகிறேன் என்று, என வார்த்தையையும் கேட்கை தவிர்ந்தாள்.
தொலைவில்லிமங்கலம் என்றல்லால் –
திருத்தொலைவில்லிமங்கலம் என்னில் நான் சொன்னதையும் கேட்பாள். என வார்த்தை – என்னுடைய வார்த்தை.

முன்னம் நோற்ற விதி கொலோ –
ஒக்கப் பிறந்து வளர்ந்தோம், பின்பு இது சாதிக்கக் கண்டிலோம்.
ஆதலால், முன்னரே செய்துவைத்த புண்ணியத்தின் பலமோ இது!
“புண்ணியமானது, விதி என்றும் விதானம் என்றும் சொல்லப்படுமன்றோ” என்னக்கடவதன்றோ.
இவளாலே செய்யப்பட்ட தர்மத்துக்கு இத்தனைபலம் கனக்க உண்டாகமாட்டாது; இது சித்த தர்ம பலமாகவேணும்;
ஆகையால், முகில்வண்ணன் மாயம்கொலோ –
பிடாத்தை விழவிட்டு வடிவினைக் காட்டினானோ? –பிடாம் -பச்சைவடம் -வஸ்த்ரம் -முகில் நகர்ந்து சந்தரன் காண்பது போலே –
இத்தலையாலே சாதித்தது ஓர் அசேதனமான கிரியைக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாமையாலே
‘முன்னம் நோற்ற விதிகொலோ?’ என்று ஐயப்பட்டாள்.
இப்படி முன்பு ஒருவடிவில் பலிக்கக் காணாமையாலே ‘முகில்வண்ணன் மாயம்கொலோ?’ என்று இங்கே ஐயப்படுகிறாள்.
அவன் சின்னமும் திருநாமமும் –
“தவளொண்சங்கு சக்கரம்” என்பதான அடையாளங்களும்,
“அரவிந்தலோசனன்”, “தேவபிரான்” என்பனவான திருநாமங்களும்.
இவள் வாயனகள் திருந்தவே – பண்டே திருந்தி இருக்கிறவை இவள் சொல்லப் புக்கவாறே உயிர்பெற்று இராநின்றன.
மூத்துவர் வேதம் இவள் வாயன்கள் ஆனவாறே சர்வருக்கும் ஆனதே -நாயனார்
பிராவண்யத்தால் சொன்னால் நிறம் பெறுமே
பட்டர் “அழகிய மணவாளப் பெருமாள்” என்றால் திருநாமம் நிறம்பெறுமாறு போலேயும்,
சோமாசியாண்டான்“எம்பெருமானார்” என்றால், திருநாமம் நிறம்பெறுமாறுபோலேயும்,
அனந்தாழ்வான் “திருவேங்கடமுடையான்” என்றால், திருநாமம் நிறம்பெறுமாறு போலேயும்;
திருமங்கைஆழ்வார் திருக் கண்ண புரம் என்றால், திருநாமம் நிறம்பெறுமாறு போலேயும்;
“எவை உம்மால் சொல்லப்பட்ட குணங்கள்” என்னுமாறுபோலே.
இதனை வால்மீகிபகவான் பக்கலிலும் காணலாம் என்கிறார் ‘எவை உம்மால்’என்று தொடங்கி.
“பஹவோ துர்லபா: சஏவயே த்வயா கீர்த்திதா குணா:
முநே வக்ஷ்யாமி அஹம் புத்வா தை: யுக்த: ச்ரூயதாம் நர:”-என்பது, சங்க்ஷேப ராலாயணம், 7. இந்தச் சுலோகத்தில் ‘கதிதா’ என்னாது,
“கீர்த்திதா” என்கையாலே, -புகழப் பெற்ற -என்றதால் -குணங்கள் நிறம்பெற்றன என்று தோற்றுகிறது.

வாங்கரும் பாத நான்கும் வகுத்தவான் மீகி என்பான்
தீங்கவி செவிக ளாரத் தேவரும் பருகச் செய்தான்
ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவ மாந்தி
மூங்கையான் பேச லுற்றான் என்னயான் மொழிய லுற்றேன்.-என்றார் கம்பநாட்டாழ்வாரும்.

வரையாழி வண்ணர் அரங்கேசர் ஈசன்முன் வாணன் திண்தோள்
வரையாழி யார்புள்ளின் வாகனத்தே வந்த நாடொடிற்றை
வரையாழிய துயராய்த் தூசும் நாணும் மதியும் செங்கை
வரையாழியும் வளையு மிழந்தாள் என்மடமகளே.-என்பது, திவ்விய கவியின் திருவாக்கு.-(திருவரங்கத். 58.)-

அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயால் சொல்வதே சிறப்பு–இவையும் மெருகு பெறுமே

—————————————————————————

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்மலிந்து
இருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-

அரவிந்த லோசனன் -தேவபிரான் -8/11 பாசுரம் -மங்களா சாசனம் -பண்ணும் பொழுது அருளிச் செய்வர் அரையர் –
திருவடி தொழுத அன்று தொடங்கி–திரு நாமம் சொல்லி சிதிலை ஆகா நின்றாள் –
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்மலிந்து-உம்மைத் தோகை -வேதம் -வேள்வி -பிராட்டி கடாஷம் –
செல்வம் சம்பத் பெற்றவர்கள் -வாழும் – பகவானை திருத்தமாக சொல்லும் வேத பிரமாணம் -வேதபிரதிபாத்யம் –
பகவத் ஆராதனா ரூபம் -யாகம் யஜ்ஞ்ஞாம் யஜ தேவ பூஜா -போக்தா பிரபுரேவச -போக்தா ஸ்வாமி புஜிப்பவன் அவனே
அதுக்கு அநுரூப சம்பத் அபிவர்த்திகை யான திரு மகளிர் -மலிந்து வாழும் -மூவரும் -சம்ச்லேஷத்தால் அபி வ்ருத்தி உடையவராய்
தாம் -ஈஸ்வரன் தன்னை -அரவிந்த லோசனன் -இருந்த திருக் கோலம் -தேவ பிரான் -நின்ற திருக்கோலம் -இருவரும் கிழக்கே நோக்கி -சேவை –
இருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்-வடகரையில்
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்-நாச்சியார் திரு நாமம் -பராங்குச நாயகி கை தோழா இங்கு
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே-பெருமாள் சேவித்த அந்நாள் -மயர்வற மதி நலன் அருளின அன்று முதல்
வருந்தி வருந்தி -கூப்பிட்டே நைந்து -சம்பாதித்து -ஆற்றாமை தாங்காமல் பல காலம் –

திருந்திய வேதங்களும் யாகங்களும் அழகிய செல்வமும் ஆகிய இவற்றால் நிறைந்திருக்கின்ற பிராமணர்கள் நிறைந்து இருந்து வாழ்கின்ற,
தாமிரபரணிக்கு வடக்கேயுள்ள வளப்பம்பொருந்திய திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்தை, கரிய விசாலமான கண்களையுடைய இவள் கைகூப்பி வணங்கிய அந்த நாள் தொடங்கி இந்த நாள்வரையிலும் இருந்து இருந்து தாமரைக்கண்ண! என்று என்றே உருக் குலைந்து மனமும் கரையாநின்றாள்.

அந்த ஊரைத் தொழுத அன்று தொடங்கி இன்று அளவும் உண்டான இவளுடைய உருக்குலைந்த தன்மையைச் சொல்லுகிறாள்.

திருந்து வேதமும் –
வேதம் கட்டளைப்பட்டது அவ்வூரிலுள்ளார் கைக்கொண்ட பின்பாயிற்று.
சொரூபம் ஞானமாத்திரம் என்கிற சுருதிகள், ஞாத்ருத்வ சுருதிகள், பேதாபேத சுருதிகள், சகுணசுருதிகள், நிர்க்குணசுருதிகள் இவை
அடங்க விஷய வேறுபாட்டாலே ஒருங்கவிட்டிருக்குவமர்கள்.

கட்டளைப்பட்ட பிரகாரத்தைக் காட்டுகிறார்
‘சொரூபம்’ என்று தொடங்கி .“ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் பிரஹ்ம”, “விஜ்ஞாநம் பிரஹ்ம திவ்ய ஞாநாத் ” என்பன போன்ற சுருதிகள்,
சொரூபம் ஞானமாத்திரமே என்பதனைத் தெரிவிப்பன.
“யஸ்ஸர்வஞ்ஞ: ஸர்வவித்” என்பது போன்றவைகள், ஞாத்ருத்வ சுருதிகள்.(ஞாத்ருத்வம் – அறிகின்றவனுடைய தன்மை.)
“த்வாஸுபர்ணா”, “நித்யோ நித்யாநாம்”, “பதிம்விஸ்வஸ்ய” என்பன போன்றவைகள்,பேத சுருதிகள்.
“தத்வமஸி”, “ஸர்வம் கல்விதம் பிரஹ்ம” என்பன போன்றவைகள், அபேத சுருதிகள்.
“ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந்”, “அபஹத பாப்மா” என்பன போன்றவை, சகுண சுருதிகள்.
“நிஷ்களம் நிஷ்க்ரியம்”, “நிர்குணம்”, “நிரஞ்ஜனம்” என்பன போன்றவைகள், நிர்க்குண சுருதிகள்.

‘இவையடங்க விஷய வேறுபாட்டாலே ஒருங்க விட்டிருத்தலாவது,
‘சொரூபம் ஞானமாத்திரமே’ என்றது, ஞாத்ருத்வத்தை விலக்க வந்தது அன்று;
“தத்குண சாரத்வாத் தத்வியபதேச: – ஞானமாகிற குணத்தைப்பிரதாநமாகவுடையதாய் இருக்கையாலே
ஞானம் என்று சொல்லப்படுகிறது”என்கிறபடியே, ஞானத்தின் மிகுதியைக் குறிப்பதற்காகவும்,
சொரூபம்சுயம்பிரகாசம் என்று தோற்றுகைக்காகவும் கூறப்பட்டது என்றும்,
பேதாபேத சுருதிகளில், பேத சுருதியே தத்துவார்த்தம்; அபேத சுருதி சரீர ஆத்ம்பாவம் தோற்றுகைக்காகச் சொல்லப்பட்டதித்தினை என்றும்,
சகுண நிர்க்குண சுருதிகளில், சகுண சுருதியே தத்துவார்த்தம்; நிர்க்குண சுருதி சரீரத்தைப்பற்றி
வருகின்ற தாழ்ந்த குணங்கள் இல்லாமையைச்சொல்லவந்தது;
கல்யாண குணங்களை விலக்க வந்தது அன்று என்றும்இப்படி விஷய வேறுபாட்டாலே நிச்சயித்தல் என்றபடி.

என் அன்பேயோ -அன்புடையான் -சொல்லாமல் -அன்பே உருவமாக -கிருஷ்ண த்ருஷ்ணா -காதலே இவள் —
ஞானம்மாத்ரமும் உண்மை -ஞாதா என்பதும் உண்மை -பேதமும் உண்மை அபேதமும் உண்மை –
ச குணமும் உண்மை நிர்குணமும் உண்மை இல்லை சொல்வதே பிரமாண வ்ருத்தம் ஆகும் –
ச குண ப்ரஹ்மம் உபாசித்து அனுக்ரகம் பெற்று நிர்குண ப்ரஹ்மம் அடைய வேண்டும் என்பர் அத்வைதி –

வேள்வியும் –
வைதிக சமாராதனமும்.
கற்ற கல்வி அநுஷ்டானத்திற்கு உறுப்பாய் இருக்கிறபடி.
திரு மா மகளிரும் தாம் –
ஆராதிக்கின்றவர்களுடைய நிறைவு இருக்கிறபடி. திருமாமகள் – செல்வம்.
அன்றிக்கே, ஆராதிக்கப்படுகின்ற பிராட்டியும் தானுமாகவுமாம். தாம் – தான்.
ஆக, பிரமாணம் பிரமேயம் பிரமாதாக்கள் குறைவற்று வாழ்கின்ற தேசம் என்றபடி.—அர்த்தாத் சித்தம் பிரமாதாக்கள் –
மலிந்து இருந்து –
பரமபதத்தில் உள்வெதுப்போடேபோலே யன்றோ இருப்பது.
பொருநல் வடகரை –
விரஜைக்கு அக்கரை என்னுமாறு போலே.
கரும்தடம் கண்ணி-
கண்ணழகில், -அஸி தேஷிணை-கறுத்த கண்களையுடைய பிராட்டியோடு ஒக்கும்.
தடம்கண்ணி –
அவளைக் காட்டிலும் வேறுபாடு. அவனை அநுபவிக்கையால் வந்ததன்றோ அவளுக்கு;
அவள் கண்களைக்காட்டிலும் ஏற்றம் உண்டன்றோ, அவர்கள் இருவரையும் அநுபவிக்கையாலே இவள் கண்களுக்கு;
தொழும்போதும் வடிவு அழகியராயிருப்பார் தொழவேணுமாகாதே.
கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும் –
திருவடி தொழுத அன்று தொடங்கி இன்றளவும் வர என்னுதல்;
தன்சத்தை உண்டான அன்று தொடங்கி இன்று அளவும் வர என்னுதல்.
“அஸந்நேவ – அசத்தைப்போல”, “அன்று நான் பிறந்திலேன்” – திருச்சந்த விருத்தம். 64.-இதுவன்றோ முன்புற்றை நிலை.
அவன் கையிலும் அன்றிக்கே, பிறர்கையிலும் அன்றிக்கே, தன் கையதாயிருந்தபடி என் தான் தன் சத்தை!
சொல் கற்கை -தொழுகை என்று இரண்டு இல்லையே -பால்யமே தொடங்கி பிராவண்யம் சத்தா பிரயுக்தம் —இவள் தானே தொழுகிறாள் –
நா கிஞ்சித் குர்வதஸ் ஸேஷத்வம் – கைங்கரியம் செய்யாதவனுக்குச் சேஷத்வம் இல்லை” என்கிறபடியே
“தொழுது எழு” அன்றோ.
இருந்து இருந்து அரவிந்த லோசந! என்று என்றே –
ஒருகால் அரவிந்தலோசந! என்னும் போது, நடுவே பதின்கால் பட்டைப்பொதிசோறு அவிழ்க்கவேணும்.
வலி இன்மையாலே சொல்லமாட்டாளோ? என்று இருக்கச் செய்தே, சொல்லித் தலைக்கட்டாநின்றாள்.
அவன் அரவிந்தலோசனன், இவள் கருந்தடங்கண்ணி.
இருவரும் ஒருமுகத்திலே காணும் அகப்பட்டது.–பரஸ்பரம் கண்களில் அன்றோ அகப்பட்டார்கள் –
நைந்து இரங்கும் –
உருக்குலைந்து அழியாநின்றாள். சரீரத்தளவும் அன்றிக்கே, நெஞ்சும் அழிகின்றது. இரக்கம் – ஈடுபாடு.

————————————————————————————–

இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.–6-5-9-

சௌந்தர்யாதி -மணி வண்ணா -திரு நாமம் கூப்பிட்டு விரோதி நிவர்த்தகன் -திவ்ய தேசம் சொல்லி –
இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர-பிராமணர் ஒத்து சொல்லுமா போலே -வாசனையால் -அலமந்து சுழன்று
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்-அசேதனம் மரங்களும் இரங்கும் படி -நீல ரத்னம் போலே
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்-குதிரை கேசி வாய் பிளந்த விரோதி நிரசகத்வம்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே-வ்ருத்த கடாநா பாந்தவம் அவ்வூரிலே த்விகுணம்
-நந்த கோபாலன் மருமகளே -அவன் பேர் பல காலம் சொல்லி இறுதியில் சொல்லாதவோ பாதி -தன் கைகளைக் கூப்பி தொழும் –

இவள் நாள்தோறும் இரங்கி வாய்வெருவிக் கண்களிலே நீர் தேங்கும்படியாக மரங்களும் இரங்கும்படி மணிவண்ணா! என்று கூவுகிறாள்;
பேசுதற்குக் கற்றுக்கொண்டபிறகு கேசி என்னும் அசுரனது வாயினைப் பிளந்த எம்பெருமான் நித்தியவாசம் செய்கிற
திருத்தொலை வில்லி மங்கலம் என்று சொல்லித் தன்னுடைய கைகளைக் குவித்துத் தொழுவாள்.
வெருவி – வெரீஇ; சொல்லிசையளபெடை. அலமருதல் – சுழலுதல். துரங்கம் – குதிரை. பிளந்தான்: வினையாலணையும் பெயர்.
திருநாமம் கற்றதற் பின்னை, காங்கள் கூப்பித் தொழும் என்க.

இவளுடைய மனம் வாக்குக் காயங்கள் மூன்றும் முதலிலே தொடங்கி அவன் பக்கலிலே ஈடுபட்டன ஆயின என்கிறாள்.

இரங்கி –
நெஞ்சு அழிந்து.
வாய்வெரீஇ –
அடியற்ற பேச்சாய் இராநின்றது.
“இராமா! என்றும் இராமா! என்றும் எப்பொழுதும் புத்தியினால் எண்ணி
அவனையே வாக்கால் சொல்லிக்கொண்டவளாய்” என்னுமாறுபோலே, மனத்தின் துணை இன்றிக்கே இருக்கை.
நாள்தொறும் –
“ராமேதி ராமேதி ஸதைவ புத்த்யா விசிந்த்ய வாசா ப்ருவதீ தமேவ தஸ்ய அநுரூபாம்ச கதாம் ததர்தாம்
ததைவ பஸ்யாமி ததா ச்ருணோமி”-என்பது, ஸ்ரீராரா. சுந். 32 : 11. சுலோகத்திலே
“ப்ருவதீ” என்ற பதத்தாலே,வாக்காலே என்னுமது போதரவும், “வாசா” என்று விசேடிக்கையாலே மனத்தின் துணை இல்லை என்றபடி.
நாவினால் நவிற்று போலே –
மயர்வறமதிநலம் அருளப்பெற்ற அன்றே அறிவு கேடும் குடிபுகுந்தது காணும்.
பக்தியின் உருவத்தை அடைந்த ஞானம்அன்றோ பெற்றது.–பக்திரூபாபன்ன ஞானம் -முற்றி போனதே –
இவள் கண்ணநீர்கள் அலமர –
கண்கள் வாய்வெருவுகிறபடி. –கண்கள் வாய் புலற்ற நீரைச் சொரியும் அன்றே –
‘நாள்தொறும் வாய்வெரீஇ’ என்றது, பொய்ந்நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வரக் கூப்பிட்ட கூப்பீட்டை அன்றோ.
மரங்களும் இரங்கும் வகை –
சேதனம் என்றும், அசேதனம் என்றும் வேறுபாடு அற அழியும்படி காணும், இவள் வாய்விட்டுக் கூப்பிடும் படி. –உம்மைத்தொகை -சேதனம் சமுச்சயம் –
எம்பாரை ‘மரங்களும் இரங்கக் கூடுமோ?’ என்று கேட்க,
இது அருளிச்செய்த அன்று தொடங்கி எத்தனை பாவசுத்தி இல்லாதார் வாயிலே புக்கது என்று தெரியாது;
இங்ஙனே இருக்கச்செய்தே, இயமம் நியமம் முதலிய யோக உறுப்புக்களாலே பதம்செய்யப் பார்த்தாலும்
சுக்கான்பருக்கை போலே நெகிழாதே இருக்கிற நெஞ்சுகளும் இன்று அழிகிறபடி கண்டால்
சமகாலத்தில் மரங்கள் இரங்கச் சொல்லவேணுமோ? என்று அருளிச்செய்தார்.
“மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர்கொம்புகள் தாழும்” -பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 4.-என்று
அவதாரத்தில் திருக்குழல் ஓசையில் பட்ட எல்லாம் இத் துன்ப ஒலியிலே படுமாயின;
“மரங்களும் வாடி நின்றன”-ஸ்ரீராமா. அயோத். 59 : 10.
“அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:”என்று, இராமனைப்பிரிந்த பிரிவில் பட்ட எல்லாம் இவள்பேச்சிலே படாநின்றன.
பகவானுடைய குணங்களைக்காட்டிலும் குணநிஷ்டர் பாசுரம் அழிக்கும் போலே காணும்.

மணிவண்ணவோ என்று கூவுமால் –
இவளையோதான் நீங்கள் மீட்கப்பார்க்கிறது! வடிவழகைச் சொல்லியன்றோ கூப்பிடுகிறது.
துரங்கம் வாய் பிளந்தான் உறை தொலைவில்லிமங்கலம் –
பண்டு உபகரித்தவன் இப்போது உபகரிக்கைக்கு வந்து இருக்கிற தேசம்.
கேசிவாயினை வருத்தம் இன்றியே கிழித்தவன் வாழ்கின்ற தேசம்.
தொலைவில்லிமங்கலம் என்று தன்கரங்கள் கூப்பித்தொழும்-
அத்தலை இத்தலை ஆவதே! என்கிறாள்.
தன் ஊரின் பெயரைச்சொல்ல எல்லாரும் கை எடுக்கும்படி பிறந்தவள் கண்டீர் தான் அவன் ஊரைச்சொல்லித் தொழுகிறாள்.
அன்றிக்கே, இக் கை கண்டார் தொழுமத்தனை என்று போலே காணும் இவள் இருப்பது என்னுதல்.
தான் தொழுவது பெண்மைக்குப் போராதேயன்றோ. இதுதான் என்று தொடங்கி? என்னில்,
அவ்வூர்த் திருநாமம் கற்றதன் பின்னை –
இவள் சொல் கற்ற பின்பு. திருநகரியிலுள்ளார் சொல் கற்பது, “திருத்தொலை வில்லிமங்கலம்” என்றுபோலே காணும்.
இவள் பேச்சுக் கற்கை என்றும், திருநாமம் சொல்லுகை என்றும் இரண்டு இல்லை.
கோயிலிலுள்ளார் “கோயில்” என்றும், “பெருமாள்” என்றும் கற்குமாறு போலே.
தோழி, தன்வாயாலே ‘திருத்தொலைவில்லிமங்கலம்’ என்றால், இவள்சொன்ன இனிமை பிறவாமையாலே,
‘அவ்வூர்’ என்கிறாள் காணும். என்தான்! முன்பு சொன்னாளே? என்னில், அது அப்படி இராமையால் அன்றோ ‘அவ்வூர்’ என்கிறது.

—————————————————————————–

பின்னைகொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-

அவனுடைய அதிசய வியாமோஹம் நெடுமால் -கூப்பிடா -ஊரைப் பார்த்து வணங்கி திரு நாமம் கேட்பது –
பின்னைகொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்-அதி பிராவண்யம் -அந்ய பரை யோ -இவளோ அவளோ
-தனித்தும் -மூவரும் இல்லாமலோ -பூமிக்கு நிர்வாகை-மிக உயர்ந்த -நிரதிசய சம்பத் ருபாய் -காருண்யம் ரூபையா-கிளப்பி விடும் அவள் –
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்-வியாமோஹா அதிசயம் -பக்தர் இடம் உள்ள காதல் –
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்-முற்பட-தேவ பிரானாக – அரவிந்த லோசனாக நின்று இருந்து –
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே -மற்றவர் சொல்ல கேட்பதும் இவளுக்கு அபிமதம் –

இப்படிப் பிறந்திருக்கும் இவள், நப்பின்னைப்பிராட்டி தானோ? பூமிப்பிராட்டிதானோ? பெரிய பிராட்டியார்தானோ? என்ன ஆச்சரியமோ?
இவள் நெடுமால் என்றே நின்று கூவாநிற்பாள்; முற்பட்டு வந்து அவன் நின்று இருந்து உறையும் திருத்தொலைவில்லிமங்கலம் என்னும்
திவ்விய தேசத்தைத் தலையால் வணங்குவாள்; அந்த ஊரின் திருநாமத்தைக் கேட்பதுவே சிந்தையாக இராநின்றாள்.

பின்னைகொல் பிறந்திட்டாள், நிலமாமகள்கொல் பிறந்திட்டாள், திருமகள்கொல் பிறந்திட்டாள் எனத்தனித்தனியே கூட்டுக.
அவன் முன்னி வந்து நின்று இருந்து உறையும் தொலை வில்லிமங்கலம் என்க.

அவனால் அல்லது செல்லாத இவளுடைய ஈடுபாட்டின் மேம்பாட்டினைக் கண்டு,
பிராட்டிமாரிலே ஒருத்தியோ? என்று ஐயப்படுகிறாள்.

பின்னைகொல் –
நப்பின்னைப் பிராட்டி பிறந்திட்டாளோ?
நிலமா மகள் கொல் –
அங்ஙன் அன்றியே, பூமிப்பிராட்டி பிறந்திட்டாளோ?
திருமகள்கொல் –
அங்ஙன் அன்றிக்கே, இந்த ஏற்றங்களைக் கொடுக்கும் பிராட்டி தானே பிறந்திட்டாளோ?
அன்றிக்கே, சர்வேசுவரனுடைய செல்வமாக இருக்குமவள் பிறந்திட்டாளோ?
அச்செல்வம் விளையும் பூமியாயிருக்குமவள் பிறந்திட்டாளோ?
அவ்விளைபூமியினுடைய பல ரூபமாயிருக்குமவள் பிறந்திட்டாளோ என்னுதல்.
அங்ஙன் அன்றிக்கே, அவர்களுக்கு இவள்படி இல்லாமையாலே அவர்கள் ஒப்பு அல்லர்;
உலகமெல்லாம் வாழுகைக்கு இவள் ஒருத்தி – பிறந்தாளோ? என்றுமாம்.
“வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர்” விஷ்ணு நா ஸத்ருசோ லீர்யே ஸோமவத் ப்ரிய தர்சந:”- என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.
என்றாற்போலே, நாய்ச்சிமார் பக்கலிலேயும் ஒவ்வொரு வகைக்கு ஒப்புச் சொல்லலாயிருக்கையாலே கதிர் பொறுக்குகிறாள்.
“எல்லாச் சாதுக்களுக்கும் உபமானமாக யாதொரு பிரஹ்லாதன் இருந்தானோ”-
“உபமாநம் அஸேஷாணாம் ஸாதூநாம் யஸ்ஸதாபவத்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1, 15 : 156.-என்கிறபடியே,
இவரை எல்லார்க்கும் ஒப்புச்சொல்லலாம், இவர்க்கு ஒப்பாவார் இலர் காணும்.

என்ன மாயம் கொலோ –
பகவத் விபூதியில் கூடாதது இல்லையாகாதே! இது என்ன ஆச்சரியம்தான்!
இவள் நெடுமால் என்றே நின்று கூவும் –
தன்பிச்சினைக் காற்கடைக்கொண்டு அவன் பிச்சினைச்சொல்லிக் கூப்பிடாநின்றாள்.
ஆல் – ஆச்சரியத்தைக் காட்டும் இடைச்சொல்.
அவன் முன்னி வந்து நின்று இருந்து உறையும் –
தன்னுடைய வியாமோகத்துக்கும் அவன் கிருஷி செய்தபடி.
முற்பாடனாய் வந்து அவன் நிற்பது இருப்பதாய்க் கொண்டு -தேவபிரானாய் நின்றும் அரவிந்த லோசனாய் இருந்தும் -நித்தியவாசம் செய்கிற ஊர்.
பசியன், சோறு தாழ்த்தால் படுமாறுபோலே.
சென்னியால் வணங்கும் –
தன்கரங்கள் கூப்பித் தொழுகையும் வேண்டத் தக்கதானபடி.
இருந்த இடத்தே இருந்து தலைசாய்க்கும்படி ஆனாள். –கை தூக்கும் பலமுமிழந்து
அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே –
அவ்வூர்த் திருநாமம் கேட்கச் செவிதாழ்க்கையிலே இவளுக்கு மநோரதம்.
இவள் ‘அவ்வூர்’ என்றது, பெண்பிள்ளை சொன்னாற்போலே இராமையாலே.
ஆயின், ஒருகால் சொன்னாளே என்னில், ‘அது வறைமுறுகல் ஆயினமையால் அன்றோ பின்பு தவிர்ந்தது’ என்று அருளிச்செய்வர்.

—————————————————————————–

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-

ஸ்ரீ யபதிக்கு நித்ய கைங்கர்ய பரர் ஆவார்கள்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே-கரண த்ரயத்தாலும் -ஆஸ்ரயித்த
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்-ஹிதம் பிரியம் -அன்னையாய் அத்தனாய்-என்று தன்னைப் பற்றி இருக்கும்
மதுர கவி பிரக்ருதிகள் வாழும் குருகூர் -குரு கூரார்க்கு அவர் -சகல வித பந்து வானவர்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன-பழைய வேதார்த்தம் பிரகாசகம் -இவர் வாயினவாக -திவ்ய தேசம் பற்றி
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–அர்த்த பிரகாசம் ஆர்ஜவம் உடைய தமிழ் -ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்யப் பெறுவார்

தேவபிரானையே தந்தை என்றும் தாய் என்றும் மனத்தாலும் வாக்காலும் சரீரத்தாலும் அடைந்த வளப்பம் பொருந்திய திருக்குருகூரிலேயுள்ளவர்கட்குத்
தலைவரான ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த பழைமை பொருந்திய ஆயிரம் திருப்பாசுரங்களுள், திருத்தொலை வில்லிமங்கலம் என்னும் திவ்வியதேசத்தைப்
பற்றிச் செந்தமிழால் அருளிச்செய்த இவை பத்துப் பாசுரங்களையும் வல்லவர் திருமாலுக்கு அடிமை செய்வார்கள்.
தேவபிரானையே தந்தை தாய் என்று சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் அடைந்த சடகோபர் என்க-சொன்ன செந்தமிழ் இவைபத்தும் என்க.

முடிவில் இத்திருவாய்மொழியின் கருத்தை விளக்கிக் கூறுவதாய்க் கொண்டு, இதனைக் கற்றவர்கள்
இதற்குத் தகுதியான கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர்கள் என்கிறார்.

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் –
மனம் வாக்குக் காயங்கள் மூன்றும் ஒருபடிப்பட அவன் பக்கலிலே ஈடுபட்டனவாய் இருக்கிறபடி.
“இரங்கி” என்றும், “மணிவண்ணவோ” என்றும், “தன் கரங்கள் கூப்பித் தொழும்” என்றும் என்னும்
இம்மூன்றாலும் இவர்க்கு உண்டான ஈடுபாட்டின் மிகுதியன்றோ இத் திருவாய் மொழியிற்சொல்லிற்று.
கரணங்கள் -கரணங்கள் வியாபாரம் கீழே சொல்லி லஷணையால் இவற்றை யும் சொன்னபடி –
தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்த –
அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாயிருந்து வைத்துத் தொலைவில்லி மங்கலத்திலே சுலபனாயிருந்தவனே
எல்லாவிதமான உறவும் என்று அறுதியிட்டபடியே பற்றுவதும், செய்தவர்.
’வண்குருகூரவர் சடகோபன் –
அவனே இவர்க்கு எல்லாவித உறவும் ஆனாற்போன்று அவ்வூரிலுள்ளார் ஆழ்வாரையே எல்லா உறவு முறையாகப் பற்றியாயிற்று இருப்பது.
“அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்” என்றும்,
“தாயும் தமப்பனும் மனைவியும் குழந்தைகளும் செல்வமும் மற்றும் எல்லாம் வகுளாபரணர் திருவடிகளே”
மாதாபிதா யுவதய: தநயா விபூதி: ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதே: வகுளாபிராமம்ஸ்ரீ மத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா”–என்றும் சொல்லுகிறபடியே இருப்பர்கள்.
முந்தை ஆயிரத்துள் –
பழையதான வேதார்த்தத்தை அருளிச்செய்கையாலே. சர்வேசுவரன் இதர சஜாதீயனாய் அவதரித்தாற் போல,
வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்தபடி என்னுதல்.
இவை தொலைவில்லி மங்கலத்தைச் சொன்ன செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலுக்கு அடிமைசெய்வார் –
இதனைக்கற்கவல்லவர்கள் திருமகள் கேள்வனுக்கு அடிமைசெய்யப் பெறுவர்.
செந்தமிழ் –
செவ்விய தமிழ்; பசுந்தமிழ்; அர்த்தத்தைத் தெளிவாகக்காட்டுவது.
பெருமாளும் பிராட்டியும் சேர இருக்க இளையபெருமாள் அடிமை செய்தாற்போலே,
சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர் என்பார் திருமாலுக்கு அடிமை செய்வார்’ என்கிறார்.

அன்யாபதேச பதிகம் மேலும் தொடங்கும் -மாலுக்கு – –
ஆண் பாவனை -மகள் பாவனை தொடரலாம் –
இது அபூர்வம் -தோழி பாசுர பதிகம் -தானான தன்மை மாறாமல் திருத் தாயார் பதிகம்-

————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அச்யுதே அதி ப்ராவண்யம் சக
ஆத்மா அனுரத்த ஜனம்
ஆத்மனி நிர் ஸ்பர்சிகத்வம்
தஸ்யாபி மானசாதயா அனுபவதச்ய
பாக்ய சம்ச்லேஷ திபி
சித்த மனஸ் சரீர -முக் கரணங்கள்
பூர்வர் நிர்வாகம்-மானச சம்ச்லேஷம் -பாஹ்ய
ரசாந்திர அனுபவம் விபவம் -6-4- அர்ச்சை 6-5 பட்டர் நிர்வாகம் பார்த்தோம்

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –
சங்காது சக்ராது
ததாக த்ரிதச ஸூ ரயா
சிந்து சாயித்வ பூம்நா
தத்வஜ உதார பாவாத்
அருண சரசிஜ அஷயத்வா
சின்நேன தேவ -சின்னமும் திரு நாமமும் -மணி வண்ணன் நாமம்
தேவிபி சேவ்ய பாவாத் –
அதி ஸூ லபதயா-
ச்வேஷூ அதி ஸ்நிக்த பாவாத்
விகடிப்பிய்யா நின்றான்
விகட நா பாந்த்வம் -திருக் குணம் -நெருக்கமான உறவைக் காட்டி ஔபாதிக உறவை அறுத்து

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 54-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் -துவளறவே
முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னு முவப்பால் வந்த மால்————55-

—————————————————————————————-

அவதாரிகை –

இதில்
பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தை அருளிச் செய்த படியை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ்
தம்முடைய த்ருஷ்ணையாலே
கிருஷ்ண குண சேஷ்டிதங்களை மண்டி அனுபவிக்க புக்க இடத்தில்
குடிக்கின்ற தண்ணீர் விக்கிப் பாரவச்யத்தை விளைவிக்குமா போலே
அவை சைதில்யத்தை விலைக்க
அத்தாலே கலங்கி
அடியே பிடித்து
தமக்கு பகவத் விஷயத்தில் கரண த்ரயத்திலும் யுண்டான
பிராவண்ய அதிசயத்தை
அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற
துவளில் மா மணி மாடத்தில் அர்த்தத்தை
துவளறு சீர் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

—————————————————————————

வியாக்யானம்–

துவளறவே முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன்
மன்னு முவப்பால் வந்த மால்
துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்-
என்று அந்வயம்

துவளறவே –
மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே –
என்னுதல்
அந்ய பரதை யாகிற குற்றம் அறுகையாலே
என்னுதல் –

முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் -மன்னு முவப்பால் வந்த மால்
முந்துற முன்னம்
பொய் நின்ற ஞானம் தொடங்கி
இவ்வளவும் அனுபவத்தில் அவஹாகித்த ஆழ்வார் –
அதாவது –
நிகரிலவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே -என்றும்
பரமன் பவித்திரன் சீர் செடியார் நோய்கள் கெட படிந்து குடைந்தாடி அடியேன்
வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -என்றும்
சீரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று இராப் பகல் வாய் வெரீஇ -என்றும்
துயரமில் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் -என்றும்
வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன் -என்றும்
தக்க கீர்த்தி குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் -என்றும்
புகர்கொள் சோதிப்பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர வைகல் வைக்கப் பெற்றேன் -என்றும்
இப்படி யாயிற்று
அந்நாள் தொடங்கி இந்நாள் தோறும்
இணை அடிக்கே அன்பு சூட்டி
அன்பு பாலே போல் சீரில் பழுத்த படி –
இப்படி குண அனுபவத்தாலே தமக்கு
மாறும் நிகரும் இன்றி
நித்ய மத முதிதராய்
மால் ஏறி

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் –
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யம் ஆகையாலே
குற்றம் அற்று
ஹேய பிரத்ய நீகனான
கல்யாண குண யுக்தனான சர்வேஸ்வரன் விஷயத்திலே
ஸ்வாபாவிக பக்தியாலே –

நாளும் துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்-
நாள் தோறும் தாம் அவ விஷயத்தில் பிராவண்யத்தை
உற்று இருக்கிற
தம்முடைய ஸ்வபாவம் எல்லாம் அருளிச் செய்தார் –
ராமேதி ராமேதி சதைவ புத்யா விசிந்தய வாசா ப்ருவதீ -என்றும்
ஏகச்த ஹ்ருதயா நூநம் ராமமேவா நுபச்யதி -என்றும்
சொல்லுமா போலே

தாமரைத் தடம் கண் என்றும் குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமிறுமே -என்றும்
தேவ தேவ பிரான் என்றே நிமியும் வாயோடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே -என்றும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்ணீர் மல்க கிற்குமே -என்றும்
கண்ணபிரான் என்றே ஒற்கம் ஒன்றுமிலள் உகந்து உகந்து உண் மகிழ்ந்து குழையுமே -என்றும்
அன்று தொட்டு மையாந்திவள் நுழையும் சிந்தையள் அன்னைமீர்
தொழும் அத்திசை நோக்கியே -என்றும்
வைகல் நாடொறும் வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர் –என்றும்
அவள் சின்னமும் திரு நாமமும் இவள் வாயன்கள் திருந்தவே -என்றும்
இருந்து இருந்து அரவிந்தலோசன் என்று என்றே நைந்து இரங்குமே -என்றும்
துலை வில்லி மங்கலம் என்று தன் கரங்கள் கூப்பி தொழும்அவ் ஊர் திரு நாமம் கற்றதர் பின்னையே -என்றும்
துலை வில்லி மங்கலம் சென்னியால் வணங்கும் அவ் ஊர் திரு நாமம் கேட்பது சிந்தையே -என்றும்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும்தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூரவர் சடகோபன் -என்றும்
இப்படி இவருக்கு த்ரிவித கரணத்தாலும் யுண்டான
பிராவண்யா ஸ்வபாவத்தை எல்லாம்
அருளிச் செய்தார் -என்கை –

இத் திருவாய்மொழி ஆழ்வார் பிரகிருதி சொல்கிறது என்று
நம் முதலிகள் எல்லாரும்
போர விரும்பி இருப்பார்கள் –என்று இறே
ஈட்டிலே அருளிச் செய்தது –

——————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: