பகவத் விஷயம் காலஷேபம் -133- திருவாய்மொழி – -6-5–1….6-5–5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

இத் திருவாய்மொழிக்கு முன்னும் பின்னும் எல்லாம் எம்பெருமானைக் கவிபாடினார்;
இத் திருவாய்மொழியில் தம்முடைய படி சொல்லுகிறார்.
சிம்ஹாவலோகந நியாயத்தாலே “பொய்ந்நின்ற” என்னும் பாசுரம் தொடங்கி இவ்வளவும் வரத் தமக்குப் பகவத் விஷயத்தில்
உண்டான பிராவண்யத்தின் மிகுதியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார்.
“இத்திருவாய்மொழி, ஆழ்வார் தன்மை சொல்லுகிறது” என்று நம் முதலிகள் எல்லாரும் போர விரும்பி இருப்பர்கள்.
பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தினையுடையவராய்,
“வேதவாக்குக்கள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்பின” என்கிற விஷயத்தை மறுபாடு உருவப் பேசினதாமே வேணுமாகாதே தம்படி பேசும்போதும்.

ஸ்ரீஜனகராஜன் திருமகள் பிறந்த சமயத்திலே சோதிடர்களை அழைத்து, ‘இவள் ஜீவிக்கும்படிகள் என்?’ என்று கேட்க,
‘இவள் ஜீவிக்கும்படிகளில் ஒரு குறை இல்லை, எல்லாவுலகங்களையுமுடைய ஒருவனைக் கைப்பிடிக்கவும் கடவள்;
இங்ஙனே இருக்கச் செய்தேயும் வனவாச ரசம் அநுபவிக்கக் கடவள்’ என்றார்கள்;
வனவாச க்ருத உத்ஸாகம்-கொண்டு இருந்தேன் -சீதை பெருமாள் இடம் -கச்ச ராம மயா ஸகா-
அப்படியே, இப் பெண்பிள்ளை பிறந்தபோது இவள் திருத்தாயார் உள்ளிட்டார், காரணம் அறிந்தவர்களை அழைத்து,
‘இவள் ஜீவிக்கும்படிகள் எங்ஙனே?’ என்று கேட்க, ‘எல்லாம் நன்றாகத் தலைக்கட்டக்கடவன;
ஆனாலும், இவளுக்கு ஓர் அகால மரணம் உண்டு; அது தப்பினாளாகில் சுகமே ஜீவிக்கும்.
அதாவது, திருத் தொலை வில்லி மங்கலத்திற் கொடுபோகாதே ஒழியப் பெறில் இவளைப் பெறலாம்’ என்றார்கள்.

1-இவள் மரணத்தையே அடையினும் திருத்தொலை வில்லிமங்கலத்தில் கொடுபோகாது ஒழியவல்ல குடி அன்றே;
‘இவள் அங்கேபுக்கு இறப்பினும் அமையும்’ என்று இருப்பார் சிலர் அன்றோ.
பிராட்டி வனவாச ரசம் அநுபவியாத அன்றே அன்றோ இவள் திருத் தொலை வில்லி மங்கலத்தில் புகாதொழிய வல்லளாவது.
ஸ்ரீநளர் வார்த்தையை நினைப்பது. பெருமாள் சோகிக்கை-மட்டும் சம்பவிக்கலாமோ –நான் தொட்ட மலையும் மிதக்கும் –
கல்பிதம்-அதிக்ரமம்-நளன் நீலன் சொன்ன வார்த்தை-கர்ம பலனும் கிருபா பலனும் அனுபவித்தே தீரும்
விதிவாய்கின்ற்து காப்பார் யார் -விஸ்வகர்மா மகன் -பிது ஸாமர்த்யம்-நளன்-சேது பந்தம் செய்ய வல்லன்-கல்பிதம்-
தேஹாத்மாபிமாநிகளாய் இருப்பார்க்கு எத்தனையேனும் அறிவு பிறந்தாலும்
‘நான் பருத்தவன், நான் இளைத்தவன்’ என்கிற நிலைமாற்றப் போகாதவாறுபோலே,
2-இவரையும் எல்லா வகையாலும் உகந்தருளின நிலங்களிலே நின்றும் திருஷ்டத்தில் குறைசொல்லி மீட்கப் போகாது.
சிற்றின்பத்திலே ஈடுபாடு உடையராயிருப்பார் ‘அதர்மம்’ என்றும், ‘பழி’ என்றும், ‘மேல் நரகம்’ என்றும் சொன்னால்
சிற்றின்பத்தில் நின்றும் மீளார்களே அன்றோ.
3-இங்குக் குணாதிக விஷயமாகையாலே ஒரு குறை சொல்லி மீட்கப்போகாதே. –கடியன் –ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்
‘குறை சொல்லுவோம்’ என்று நினைக்கிலும் குணங்களின் மிகுதியைச் சொல்லுமத்தனை அன்றோ.
அது பின்னை ஈடுபாட்டுக்குக் காரணமாமத்தனை அன்றோ.
4-பழியும் உண்டாயிடுக, மதிப்புக்கேடும் வருக; ஆனாலும், அது கண்டு மீளமாட்டாத உறுதியன்றோ இவளது. -அத்தியாவசாயம் –

அங்ஙனேயாகிலும், இவர்கள் இவ்விஷயத்தில் நின்றும் இவளை மீட்கப் பார்க்கிறது என்? என்னில்,
1-‘பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் நம்மளவு அல்லாத அளவு கடந்த ஈடுபாடு இவளுக்கு விளையா நின்றது;
அது இவளை இழக்க வரின் செய்வது என்?’ என்னும்அச்சமாயிற்று இவர்களுக்கு ஓடுகிறது.
2-இனித்தான், அளவு கடந்த ஈடுபாடு சாதனத்தை அநுஷ்டிப்பார் கையிலே கிடக்கக் காண்கையாலே
‘இவள் சாதன புத்தியால் இழியின் செய்வது என்?’ என்னும் அச்சத்தாலே மீட்கவும் பார்ப்பரே.
‘இந்த ஈடுபாடு சொரூபத்திற்கு விரோதமானாலன்றோ சாதனத்தில் சேர்வது என்றே அன்றோ இருப்பது இவள்.
‘சொரூபபேதத்துக்கு இசைந்தால் சொரூபத்திற்குத் தகுதியான காரியங்களுக்கு இசைய வேண்டாவோ?’ என்று காணும் இவள் கருத்து.
சேஷிக்கு உபாயமாயிருத்தல் சொரூபத்திற்குச் சேர்ந்தது ஆனபின்பு, சேஷனாயிருப்பவனுக்கும் பிராவண்யம் சொரூபத்தில் கட்டுப்பட்டதாகக் கடவதன்றோ.

இனித்தான், மேல் திருவாய்மொழியோடு இத் திருவாய்மொழி சேர்ந்திருக்கும்படி என்? என்னில்,
கிருஷ்ணனுடைய குணங்களை அநுபவியாநிற்கச்செய்தே, குடிக்கிற தண்ணீர் விக்கி அதுதானே பரவசமாந் தன்மையை விளைப்பிக்குமாறு போலே,
அந்த அநுபவம்தானே வேறு ரசத்திலே மூட்டத் தமக்குப் பிறந்த துன்பத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார்.-ராசாந்தாரம் -அர்ச்சாவதாரம் -தாய் பேச்சாககவும்
அதாவது, “பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர, பகவத் விஷயத்தில் பூர்ண அநுபவம் இன்றிக்கே இருக்கையாலே,
தமக்குப் பிறந்த பிராவண்யத்தின் மிகுதியை அருளிச்செய்கிறார். –பட்டர் நிர்வாகம் இது –
அன்றிக்கே, மேலே அநுபவித்த அநுபவம்தான் மானச அநுபவமாத்திரமாய், புறத்திலேயும் அநுபவிக்கவேண்டும் என்ற அபேக்ஷை பிறந்து,
அது பெறாமையால் வந்த கலக்கத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் என்னலுமாம். –பூர்வர் நிர்வாகம்
-இப்பெண்பிள்ளையின் தன்மையை அறியச் செய்தேயும் தாய்மார் விழுக்காடு அறியாமையாலே
திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொடுபுக, அவள் “அரவிந்தலோசந” என்பது, “தேவபிரான்” என்பது:
நீர்மையைச் சொல்லுவது, மேன்மையைச் சொல்லுவது,ஒப்பனை வாசி அறிந்தமை தோற்றச் சொல்லுவதாய் வாய்வெருவ,
இவள் நிலை இருந்தபடியால் ‘இவள் கிடைக்கமாட்டாளே அன்றோ’ என்று தாய்மார் வெறுத்துத் தோழிபாடே வந்து,
‘இவள்படி உனக்குத் தெரியாமை இல்லை; இவளை மீட்கலாம் விரகு சொல்லவேண்டும்’ என்ன, தோழி,
‘நீங்களே இவளுக்குப் பிராவண்யத்தை உண்டாக்கி இப்போதாக இவளை மீட்க ஆசைப்படுகிற இதனால் பிரயோஜனம் என்?
முன்னரே விலக்கப் பெற்றிலீர்; இனி, இவள் பக்கல் நசை அறுங்கோள்;
இவளைத் தடைசெய்யப் பாராமல் நீங்களும் துணையாக இருந்து இவள் உஜ்ஜீவிக்கும்படி பண்ணப் பாருங்கோள்’ என்கிறாள்.
தாய்மார் கேட்கத் தோழி அன்றோ சொல்லுகிறாள்;
பகவத் விஷயத்துக்குப் “பழையார், புதியார்” என்று இலர்; தேசிகர் சொல்ல ஆதரமுடையார் கேட்குமித்தனை.
ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந:” என்று இளையபெருமாள் படியை ஸ்ரீ பரதாழ்வானுக்கு ஸ்ரீ குகப்பெருமாளன்றோ சொல்லுகிறார்.
ஆசசக்ஷே – வாக்கு இந்திரியத்திற்கு நில மல்லாததையும் சொல்லலாமாகாதே
“ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந:
பரதாய அப்ரமேயாய குஹோ கஹன கோசர:”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 86 : 1.
சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘வாக்கு இந்திரியத்திற்கு’ என்று தொடங்கி.
“மஹாத்மந:”என்கையாலே, நிலமல்லாமை தோற்றுகிறது. ‘சொல்லலாமாகாதே’ என்றது,சிறிது சொன்னான் என்றபடி.
அத – ஸ்ரீ பரதாழ்வான் தன்மை அறிந்தபின்பு.
ஸத்பாவம் – “இளமைப் பருவம் தொடங்கியே அதிக அன்புள்ளவராயிருந்தார்”
“பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்ட நித்யஸ:”- என்பது, ஸ்ரீராமா. பால. 18, 27.என்றும்,
“பரதந்திரனாக இருக்கிறேன்” “பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.என்றும்
சத்தையோடு கூடியதாயிருக்கின்ற தன்மையைச் சொன்னான்.
லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: – கடலைக் கையாலே இறைக்கத் தொடங்கினான்.
பரதாய அப்ரமேயாய – ‘இன்னார் இன்னார்க்கு உபதேசிக்க’ என்று இல்லை ஆகாதே.
குஹோ கஹந கோசர: காட்டில் மரங்களின் வாசி அறியுமவர் இவர்கள்நிலை அறியும்படி நிலவரானார்.
அன்றிக்கே, இராம விரஹத்தாலே ஒரு தூற்றடியிலே கிடந்தவன், தேசிகரைப் பெற்றவாறே தலையெடுத்துப் புறப்பட்டான் என்னலுமாம்.

பிராப்ய த்வரை-முறுகி -அதி மாத்ர பிராவண்யம் -ஆச்ராயம் அழியும் படி வருதல் -உபாயத்திலே முதல் இடுதல் -செய்யுமாகில் அவத்யகரமாய் முடியுமே
உபாய அத்யவசாய அனுகுணமாக -காட்டாற்று வெள்ளத்தை -வகைப்படுத்தி —சம்பந்த ஞானத் உடன் சேர்ந்த உபாய அத்யவசாயம்
சம்பந்த ஞானம் தோழி உபாய அத்யவசாயம் தாய் -பிராப்ய த்வரை பதற்றம் -தலைமகள் -பிரணவம் நமஸ்-சேர்ந்து தோழி தாய் இருவரும்
முதலில் பிராப்ய த்வரை சஹிதமாக -பகவத் பிரசாத லாபத துடிப்பு -குணாதிக வஸ்துவில் ஆழ்ந்து -குணா அனுபவம் தூண்ட
-உபாயத்தில் சேராதே -இவ்வஸ்தாபன்ன நிலை இதனால் -உபாய அத்யாவச்யத்தில் கீழ் இத்தை அடக்க முடியாதே -தாயார் கீழ் இவள் அடங்க மாட்டாள் –
பிராப்த விஷய பிராவண்யம் ஸ்வரூபம் -சேஷத்வ பாரதந்த்ர்யம் -அவத்யம் இல்லை ஸ்லாக்கியம் என்று அனுசந்தித்து அருளினாள் –
சம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற பிரஜ்ஞ்ஞா அவஸ்தைகளுக்கு தோழி தாயார் மகள் என்று பேர் –133-
பஹூ வசனம் –
தோழிமார் அன்னையர் என்கிற பன்மை ரஷகத்வாதி பந்த வாத்சல்யாதி வ்யவஸாய புத்தி பேதத்தால் –135-
ரஷ்ய ரஷக பாவம் -அவ ரஷனே -ரஷகத்வம் காரணத்வம்-சேஷத்வம் -சரீராத்மா பாவம் -நான்கு வித தோழிகள் உண்டே –
ஸ்வாமித்வம் சௌசீல்ய- சௌலப்ய வாத்சல்யம் -ஆஸ்ரய ஆஸ்ரையண சௌகர்ய ஆபாதாக குணங்கள் -அன்னையர் -பலர் –
சகி வெறி விலக்கி –ஆசையறுத்து-அறத்தொடு நின்ற மூன்றில் அனந்யார்ஹத்வமும்–134
தீர்ப்பாரை -சகி வெறி விலக்குதல் பதிகம் பார்த்தோம் –
இதில் ஆசை அறுத்து –
தர்மத்தோடு நின்று -குட்ட நாட்டுத் திருப்புலியூர் -கரு மாணிக்க மலை –8-9-
மூன்றுமே திவ்ய தேச பாசுரங்கள் -அதனாலே மா முனிகள் மன்னார்குடி ராஜகோபாலனுக்கு சமர்ப்பித்ததால் –

வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டிழந்து கன்று சார்வதே வலித்தமை சாதனம் ஆமாமோ வென்று மாதா அஞ்சி
முறைப்பட்டு முறையிடுகிற ஏழில் அத்யாவசாயமும்

கரும் தடம் கண்ணி நாச்சியார்-தேவ பிரான் -அரவிந்த லோசனான் -இரட்டைத் திருப்பதி
கடித கடக விகடனா பாந்த்வம் அவ்வூரிலே த்வி குணம்
அன்னையாரும் தோழிமாரும்-
சிந்தை யாலும் –இத்யாதி –தேவபிரானையே தாய் தந்தையாக அடைந்த சடகோபன்
சர்வ வித பந்து அவனே –
நவ திருப்பதி-இரண்டு-திவ்ய தேசம் திவ்ய தேச கணக்கில் ஒரே திவ்ய தேசம் –
துலை வில்லி -தராசு வில் கதைகள் -சூபிரபவர் யஜ்ஞ்ஞம் -கலப்பை நிற்க வில்லும் தராசு தட்டும் –
தேவ தத்தை -குபேரன் வணங்காமல் – சாபம் வில்லாகவும் தராசும் –
ஹவிர்பாகம் வாங்க -தேவாதி தேவன் வந்தால் தான் கொடுப்பதாக -சேவை சாதித்து -தேவ பிரான் -கொடுத்ததால் உகந்தோம் –
திருக்கண் மலர்ந்து உகப்பைக் காட்ட -அரவிந்த லோசனன் -இரட்டைத் திருப்பதி –
இருவருக்கும் மங்கலம் கொடுத்த திவ்ய தேசம் -திருக்குல திவ்ய தேசம் ஆழ்வாருக்கு

தஸ்ய உதித நாம –உயர்வற -பிறந்தார் உயர்ந்தே -உத் –
பிரதாந்யம்-உபதேசம் பெற்று ஆர்த்தமாக ஜீவனுக்கு -சப்தமாக பரமாத்மா -அனன்யார்ஹ சேஷத்வம் எளிதில் புரியாதே –
சேஷி சேஷன் வாதம் பண்ண வேண்டாம் -அனன்யார்ஹ சேஷத்வம் புரிய வைப்பதே கஷ்டம் –
அதனால் உகாரம் சொல்லி மகாரம் சொல்லி அகாரம் சொல்லி முதல் பாசுரம் –
27 -திருமந்தரம் -மணி வல்லி பேச்சு வந்தேறி இல்லையே –
நாயகி பாவம் -வெற்பு என்று வேங்கடம் பாடினேன் –சங்கை -ஆன் பாவம் தான் -முன்னும் பின்னும் ரீதி பங்கம் கூடாதே
பூர்ண -நாயகி பாவ த்ரயம் -நம் ஆழ்வார் இடம் மட்டுமே -தோழி பாவம் ஆர்த்தமாக திருமங்கை ஆழ்வார்

மூன்றில் ஏழில் பதினேழில் -தோழி / தாயார் /தலைமகள் –
அனன்யார்ஹத்வத்வம் –அத்யவசாயம் -த்வரை –

———————————————————————————————–

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-

அசாதாரண சிஹ்னங்களில் அகப்பட்டு -தோற்றவளை நீங்கள் ஆசைப்பட வேண்டாம் –பெற்றும் பேற்றை இழந்தால் போலே
உடைய நங்கையார் -அடியார் பேறு பெற்று போனோம்
துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்-தோஷம் இல்லாத -மஹார்க்கம்– தொழா நிற்கும்
முக்த ஜீவன் நித்ய ஜீவன் போலே — -துவளில் மணி மாடம் –தூ மா மணி மாடம்-
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;-அடியிலே கொண்டு போய்க் காட்டி -அதி மாத்ர பிராவண்யம்
-அன்னை என்பதால் மட்டும் கேட்க மாட்டாள் -ஸ்வரூப க்ருதம் ஆகாதே -நியமனத்தில் -ஆசை விட்டு -விதேயை இல்லை –
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்-வெளுத்த நிறத்தை உடைய தார்ச நீயமான -சக்கரம் வாசா மகோசரம்
-அடை மொழி சொல்லாமல் -விசாலமான திருக் கண்கள்
இவை பெண் வார்த்தைகள் -சேர்த்தி -அழகில் ஈடுபட்டு உக்தி மாத்ரத்தால்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே-நெய்தல் புஷ்பம் —அவனது தாமரைக் கண் -தளர்த்தியால் நின்று நின்று
-பிரதி ஷணம் ஆத்மா தாரணம் பண்ணி நெஞ்சில் ஆர்த்தி சொல்ல முடியாமல் கனைத்து குமுறி -கண்ணீர்
உகும் -இரும் பதம் பிரித்து த்ரவ்ய த்ரவ்யமாய் -தளர்ந்து விழா நின்றாள்
வெளுப்பு அழகு -சங்குக்கும் சக்கரத்துக்கும் அடை மொழி யாகவுமாம்

குற்றம் இல்லாத பெரிய மாணிக்கங்கள் பதித்த மாடங்கள் உயர்ந்து விளங்குகின்ற திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்தைத்
தொழுகின்ற இவளிடத்தில், அன்னைமீர்! உங்களுக்கு இனி ஆசைவேண்டா; நீங்கள் ஆசையை விடுங்கோள்;
வெண்ணிறத்தையுடைய பிரகாசம் பொருந்திய சங்கு என்றும் சக்கரம் என்றும் தாமரை போன்ற விசாலமான திருக்கண்கள் என்றும்
சொல்லிக்கொண்டு அழகிய குவளைமலர் போன்ற கண்களிலே தண்ணீர் தேங்கும்படி நின்று நின்று குமுறுவாள்.
அன்னைமீர்! தொழும் இவளை உமக்கு ஆசை இல்லை; இனி நீர் விடுமின் என்றும், கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறும் என்றும் கூட்டுக.
இவளை, வேற்றுமை மயக்கம். ‘இவளை விடுமின்’ என்று கூட்டி நேரே பொருள் கோடலுமாம்.
இத்திருவாய்மொழி, எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்

இவள் தன்மை அறியாதே திருத்தொலை வில்லிமங்கலத்தைக் காட்டின பின்பு
உங்கள் நல்வார்த்தைக்கு இவள் மீளுவாளோ? என்கிறாள்.

துவள் இல் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் இவளை உமக்கு ஆசை இல்லை இனி நீர் விடுமின் –
‘உனக்கு இப்போது உதவாதபடி தூரத்திலேயுள்ளவை’ என்னுதல்,
‘சென்ற காலத்தில் அவதாரங்கள்’ என்னுதல்,
உகந்தருளின நிலங்களிலே உள்ளே நிற்கிறவனளவிலே ஈடுபட்டவளாதல் செய்தாளாய் மீட்க நினைக்கிறீர்கோளோ?
அசலிட்டுத் திருத் தொலை வில்லிமங்கலத்தை விரும்புகிற இவளை எங்ஙனே மீட்கும்படி?
சரமாவதியிலே நிற்கிற இவளைப் பிரதமாவதியிலே நிற்பார் மீட்கவோ?
அவ்வூர்ச் சரக்கிலே குற்றமுண்டாகிலன்றோ இவளை மீட்கலாவது?
குற்றமுண்டாகிக் கழிந்தது அன்று. ஜீவன் பரன் என்னும் இருவர்க்கும் பாபம் இல்லாமை முதலானவைகள் உண்டாயிருக்கச்செய்தே,
ஜீவாத்மாவுக்குக் குற்றம் உண்டாகிப் பகவானுடைய திருவருளாலே அது கழியும்;
பரமாத்மா குற்றங்கள் சேரத் தகுதி இல்லாதவனாகவே இருப்பான்; அப்படியேயாயிற்று, அவ்வூரில் மாடங்களில் இரத்தினங்களும்.
துவள்-குற்றம். இல் – அது இன்றிக்கே இருக்கை. மா மணி – ஒளியே அன்று; பெருவிலையனுமாயிருக்கும்.
ஓங்கு – அவ்வூரில் மாடங்களின் நிழலீடு திருநகரியளவும் வந்து காணும் இருப்பது.
‘இடமணித்து’ என்று போலே காணும் நாயகன் பிரிந்தது. மாளிகையின் நிழற்கீழே இட்டு வைத்துக் காணும் பிரிந்தது.
அவன் பிரிந்தபோது தொடங்கி அவ்வூரையும் அவ்வூரில் மாடங்களையும் அவற்றில் மாணிக்கங்களையும் பார்த்து,
வைத்த கண் வாங்கமாட்டாதே இருந்தாள்போலே காணும்.
5உத்சவம் கருட சேவை 6 உத்சவம் பிரியா விடை -இரண்டு பல்லக்கு போகும் வரை -வைத்த கண் வாங்காமல்
இன்றும் பார்த்துக் கொண்டே ஆழ்வார் இருப்பார்
துருப்புக்கூடு போலே அவ்வூரை அன்றோ இவள் விரும்பியது என்பாள் ‘தொலை வில்லிமங்கலம் தொழும்’ என்கிறாள்.
துருப்புக்கூடு–தூற்றாப் –இன்னார் இனியார் என்னாமல் அனைவரையும் விரும்பி –
‘கறுத்திருக்கும், வெளுத்திருக்கும்’ என்னுமாறு போலே, தொழுகையே நிரூபகமாகவுடையவள் என்பாள் ‘தொழு மிவளை’ என்கிறாள்.
“கை கூப்பினவனும் வணங்கினவனும் உட்கார்ந்திருக்கிறவனுமானவனைப் பார்த்துச் சொன்னார்”
இதி ஏவம் உக்த: மாத்ரா இதம் ராமோ ப்ராதரம் அப்ரவீத்
ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வமாஸீநம் அபிவீக்ஷ்ய ஸ்மயந்நிவ”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 4 : 42.என்னுமாறு போலே;
சிந்தனை முகத்தில் -தேக்கி -போயினை -என்ன பொழுது புகழினை -ஓர் ஆயிரம் ராமன் நின் கேழ் ஒப்பாரோ
நம்பியும் நாயகனை ஒக்கின்றான் -அயல் நின்றான் தம்பியையும் ஒக்கின்றான் -விம்மி பொருமி நின்றான் –
அழும் தொழும்-இளைய பெருமாளுக்கு சாம்யம் -நாயனார்
“கணபுரம் கை தொழும் பிள்ளை” –பெரிய திருமொழி, 8. 2 : 9.-என்னுமாறு போலே.
யாரே இருவர் கன புரம் பேச அந்த சொல்லைக் கேட்டே கை தொழும் -முக்கோட்டை அவருக்கு அது இவருக்கு இது –
இவளை மீட்கப் பார்ப்பதே, இவள் படியைப் புத்திபண்ணியன்றோ மீட்பது!
இவள்படி கைமேலே காணாநிற்கச்செய்தே நீங்கள் மீட்கத் தேடுகிறபடி எங்ஙனே?
பழி சொல்லப் பணைக்கிறவள் இவள், பழியை நீக்குவதற்குப் பார்க்கிறீர்கோள் நீங்கள் என்பாள் ‘இவளை நீர்’ என்கிறாள்.
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாள் –

தொழுகை தேகயாத்திரை யாதற்கு முன்னே யன்றோ மீட்கப் பார்க்கவேண்டும் என்பாள்
‘இனி’ என்கிறாள்.
பகவத்விஷயத்தில் மூழ்குதல் என்று ஒன்று இல்லையோ? நியமித்தல் நியமிக்கப்படுதல் என்ற தன்மையேயோ வேண்டுவது;
பெற்றவர்கள் என்னா, பொருத்தமில்லாத காரியங்களில் இழியக்கடவதோ? என்பாள் ‘அன்னைமீர்!’ என்கிறாள்.
தக்க பருவத்தினையுடையவர்களானார் பக்கல் பெற்றவர்களுக்குச் சம்பந்தம் உண்டோ?
புக்க இடத்தே ஈடுபட்டவர்களாகாநிற்க, பெற்ற சம்பந்தம் கொண்டு மீட்கவோ என்பாள் ‘உமக்கு ஆசை இல்லை’ என்கிறாள்.
விடுமினோ – இவ்வளவில் நீங்கள் கைவாங்க அமையும்.பெற்ற தாய்மார் ‘விடுமின்’ என்ற அளவிலே விடார்களே அன்றோ;
பின்னையும் நிர்ப்பந்திக்க வேண்டா, இவளுக்கு ஓடுகிற ரசத்தைக் கண்டுகொடு நிற்கப்பாருங்கோள் என்கிறாள் என்றது,
இவளுடைய அனுபவத்திற்குத் தண்ணீர்த் துரும்பு ஆகாதே இதனைக் கண்டு கொடு நிற்க அமையும் என்கிறாள் என்றபடி.
‘எங்களை ‘ஆசைப்படவேண்டா, விடுங்கோள்’ என்கிறது என்? என்னில், இவள் பேச்சிலும் நினைவிலும் நீங்களாதல் நானாதல் உண்டோ?
“புத்திரர்களையும் மனைவியையும் துறந்து” என்னும் நிலையன்றோ இவளது!
“த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் ஸரணம் கத:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 14.

தவளம் ஒண் சங்கு –
கரியநிறமுடைய திருமேனிக்குப் பரபாகமான வெண்மையையுடைத்தாய்,
“உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்” என்கிற அழகையுடைத்தான சங்கு.
சக்கரம் –
அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாத அழகையுடைய சக்கரம்.
என்றும் –
‘இவற்றைக்காணவேணும்’ என்னுதல்;
‘இவற்றோடே வரவேணும்’ என்னுதல் சொல்லமாட்டுகின்றிலள் பலக்குறைவாலே.
தாமரைத்தடம் கண் என்றும் –
அந்த ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற திருக்கண்கள்.
சங்கோடு சக்கரம்ஏந்தும் தடக்கையன் சொன்னதும் பங்கயக்கண்ணன் -ஆங்கு அலரும் குவியும் -சூர்யா சந்த்ரர்கள் அன்றோ இவர்கள் –
தாமரையை ஒருவகைக்கு ஒப்பாகச் சொல்லலாய், அநுபவிக்கின்றவர்கள் அளவன்றிக்கே இருக்கின்ற திருக்கண்கள் ஆதலின் ‘தடம்கண்’ என்கிறாள்.
ஒருமலை எடுத்தாற் போலே சொல்லுக்குச் சொல்லு தளர்ந்து நடு நடுவே விட்டு விட்டுச் சொல்லுகிறாள் என்பாள் ‘என்றும் என்றும்’ என்கிறாள்.
திவ்வியாயுதங்களையும் கண்ணழகையும் காட்டியாயிற்று இவளைத் தோற்பித்தது.
குவளை ஒண்மலர் கண்கள் நீர்மல்க –
இந்தக் கண்களைக்கண்டால் தாமரைத் தடங்கண்கள் அன்றோ நீர்மல்க அடுப்பது?
கண்ணும் கண்ணீருமாய் இவள் இருக்கிற இருப்பைக் கண்டுகொண்டு இருக்க அன்றோ உங்களுக்கு அடுப்பது?
“பகவத் அநுபவத்தால் உண்டான சந்தோஷத்தாலே குளிர்ந்தகண்ணீரையுடையவனாய்,
மயிர்கூச்சு எறிகின்ற சரீரத்தையுடையவனாய், பரமாத்மாவின் குணங்களால் எப்போதும் ஆவேசமடைந்தவனாய்,
மக்களால் பார்க்கத்தகுந்தவனாய் இருப்பான் ஞானி” என்பது விஷ்ணுதத்வம்.
“ஆஹ்லாத சீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான் ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:”-என்பது, ஸ்ரீ விஷ்ணு தத்வம்

இதனால், எப்பொழுதும் தரிசனம் செய்துகொண்டு இருப்பதற்கு ஒருதேசம் தேடிப்போக வேண்டாகாணும் என்பதனைத் தெரிவித்தபடி.
குவளைப்பூப்போலே அழகிய கண்கள் நீர்மல்க.
அவள் தன்னுடைய பெண் தன்மையைக் காற்கடைக்கொள்ள, நீங்கள் எங்ஙனே மீட்கப் பார்க்கும்படி?
கண்ணநீர் பாய்கையாவது, பெண்தன்மை அழிதலே அன்றோ.
நின்று நின்று குமுறும் –
பேச்சுப்போய்க் கண்ணநீராய், கண்ணநீர்போய்த் தடுமாறுகிறநிலையிலே மீட்கப்போமோ?

இராஜகோஷ்டியிலே “உகும், இறும்” என்று சிலர்பொருள் சொல்ல, விக்கிரமசிங்கன் என்பான் ஒருவன்,
‘அங்ஙன் அன்று,கன்றைக் கடக்கக் கட்டிவைத்தால் முலைக்கண் கடுத்துப் பசு அலமந்து படுமாறுபோலே,
உள்ளோடுகிற கிலேசம் வாய்விடமாட்டாதே நோவுபடுகிற இவளுக்கு இது வார்த்தையோ?’ என்றான்.
பெருவெள்ளத்தில் சுழிக்குமாறுபோலே, அகவாயில் உள்ளது வெளியிடமாட்டாள்; உள்ளே நின்று சுழிக்கிறபடி.
கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி -கஜேந்த்திரன் -பெரிய திருவடி வேகம் போகாமல் அவன் கனைத்தால் போலே –

தொலை வில்லிமங்கலம் தொழும்’ என்கையாலே, சரீரத்தின் செயல் சொல்லிற்று;
‘தவள ஒண்சங்கு சக்கரம் என்றும், தாமரைத் தடங்கண் என்றும்’ என்று சொல்லுகையாலே, வாக்கின் செயல் சொல்லிற்று;
‘குமுறும்’ என்கையாலே, மனத்தின்செயல் சொல்லிற்று.

பதிகம் நிகமத்திலும் சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் -முக் கரணங்களின் வியாபாரம் -தேவபிரானையே தந்தை தாயாக அடைந்தாள்

தம்படிகளைத் தாமேசொன்னால், தற்புகழ்ச்சி ஆகாதோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பகவானுடைய’ என்று தொடங்கி. என்றது,
ஆப்தியின் பொருட்டுச் சொல்லுகிறாராகையாலே குற்றமில்லை என்றபடி.

மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்
தன்னுடை யாற்றல் உணரா ரிடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே.–என்பது நன்னூல்.

திருவடி தன்னைப் புகழ்ந்து பேசுதலையும் ஈண்டு ஒப்பு நோக்கத்தகும்.

5-3- இனி எனக்கு ஆசை இல்லை -என்று தானே தாய் இடம் சொல்கிறாள் -இதில் தோழி தாயாருக்கு சொல்வதாக அமைத்து இருக்கிறாள் –

——————————————————————————————————————-

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-

நித்ய சூ ரிகளுக்கு அனுபாவ்யமான தேவ பிரான் எழுந்து அருளி -மகோத்சவம் அன்று கொண்டு சென்று –
குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு-கம்பீரமான -நாநா வித ஓசை உத்சவ கோலாகலம் –
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்-அமிர்தம் போலே சரசமாய் பரம போக்யத்வம் -நித்யத்வம் இரண்டும் மிருதுவான
-பாஷணம்-இனிமை அறிந்த நீங்கள் –
இந்த மென் மொழியில் ஆசை இல்லாமையால் -உங்கள் உடன் உறவு இல்லாமல் பண்ணினீர்கள் -லௌகிகராய் இருந்து அவள் வழி போகாமல் -விபரீதமாக –
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே-கணிசிக்காமல் -ச்தப்தோஸ்தி-நித்ய சூரிகள் -விஸ்வக்சேனர்
அனுபவம் கொடுக்கும் பெரிய உபகாரன் -அர்த்த உக்தி மாதரம் -நினைக்க சக்தை இல்லாமல்
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.-நெழியும் வாய் -விம்மல் பொருமல் -கரைந்து -நீர் பண்டம் -கட்டுக் குலைந்து தளர்ந்து –

ஒலிக்கின்ற ஒசையையுடைய திருவிழாவின் ஒலி பொருந்திய திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்வியதேசத்திற்குக்கொண்டு சென்று,
அமுதம் போன்ற இனிய மெல்லிய சொற்களையுடைய இவளை உங்களுக்கு ஆசையில்லாமல் அகலும்படி நீங்கள் செய்தீர்கோள்;
இவள், திமிர் கொண்டாற் போன்று நிற்கிறாள்; தேவ தேவபிரான் என்றே நெளிகின்ற வாயோடு கண்களில் நீர்பெருகி
நிற்கும் படியாகக் கட்டுக் குலைந்து தளர்ந்து கரையாநிற்கின்றாள்.
ஓசைவேறு, ஒலிவேறு; “ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே” என்பது தேவாரம். கொண்டுபுக்கு அகற்றினீர் என்க, நிமிதல் – நெளிதல்.

அவ்வூரில் கொடுபுக வேண்டினால், திருநாளிலே கொடுபுகுவார் உளரோ? என்கிறாள்.

குமுறும் ஓசை விழவு ஒலித் தொலை வில்லிமங்கலம் கொண்டு புக்கு –
“பின்பு அந்தப் பிராமணர்களுடைய கம்பீரமாயும் மதுரமாயுமிருக்கிற சப்தத்தையுடையதும் தூரியம் என்னும் வாத்தியத்தின்
ஒலியோடு கூடியதுமான புண்யாகவாசன சப்தமானது அயோத்தியா நகரம் முழுவதும் பரந்தது”
தேஷாம் புண்யாஹ கோஷோத கம்பீர மதுரஸ்வந:
அயோத்யாம் பூரயாமாஸ துர்யநாதாநுநாதித:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 8.
என்கிறபடியே, ஓத்துச்சொல்லுவார், சங்கீர்த்தனம் பண்ணுவார், பாடுவார், இயல் விண்ணப்பம் செய்வாராய்,
எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக்கொண்டு எழுகின்ற ஒலியையுடைய திருநாளில் ஆரவாரம்.
பாவியேன்! இந்த ஒலி செவிப்பட்டால் கொண்டு மீள அன்றோ அடுப்பது!
‘இவ்விடம் பிள்ளை கொல்லி’ என்று கூப்பிடுமாறுபோலே காணும் ஒலி இருக்கிறது.
அவ் வூரும் திருநாளும் அங்குள்ளார் படுகிறதும் கண்டுவைத்து இவளைக்கொண்டு புகுவார் உளரோ?
கொண்டு புக்கு –
இவள் அறியாதிருக்க நீங்களே கொண்டுபுக்கு.
அமுதமென் மொழியாளை –
இவள்மொழி, கேட்டார்க்கு அழியாத தன்மையைக் கொடுக்குமே!
இந்த இனிய பேச்சைக்கேளாதபடி புண்ணியம்இல்லாதவர்கள் ஆவதே நீங்கள்.
அதாவது, அவ்வூரில் புக்க பின்பு இவர்களுடன் வார்த்தை சொல்லத் தவிர்ந்தாளாயிற்று என்றபடி.
“அழகானவளும் இனிய வார்த்தை பேசுகின்றவளும்” என்னும்படி காணும் இருப்பது.
“மதுரா மதுராலாபா கிமாஹ மம பாமிநீ மத்விஹீநா வராரோஹா ஹநுமந் கதயஸ்வமே”- என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 15.
இது கேட்க ஆசைப்பட்டிருக்குமவன் பெற்றுப் போனான்.
அமுதத்தினின்றும் வேறுபாடுதோற்ற ‘மென்மொழி’ என்கிறார்கள். கேட்பதற்குத் தக்கதாய் இராதே அமுதம்:
வேணுமாகில் இனிமைக்கு ஒரு சொல்லுக்கு நிற்கிறது, மிருதுத்தன்மை இதற்கே உளதாமித்தனை.
கோபத்திலும் அவன் இடம் உள்ள பக்தி பிராவண்யம் -சீதைக்கு மதுர பாஷணம் மட்டுமே -இவளுக்கு அமுத மென் மொழி —

நீர் உமக்கு ஆசைஇன்றி அகற்றினீர் –
இவள் பேச்சினைக் கேட்டுப்போகிற நீங்களே உங்களுக்கு இவள் வழிபடாதபடி செய்தீர் கோள்.
திமிர்கொண்டால் ஒத்துநிற்கும் –
“செயல் அற்றவன் ஆகிறாய்” என்னுமாறுபோலே, அநுபவிக்கக்கூடிய விஷயத்தை அநுபவிக்கவும் மாட்டாதே செயல் அற்றவளாய் நில்லாநின்றான்.
அன்றிக்கே, “செயல்அற்றவன் ஆகிறாய்” என்கிறபடியே, பரிபூரண ஞானிகளைப் போலே இராநின்றாள் என்னலுமாம்.

மற்று ஒன்றைக் காணா-என்னுமா போலே -ஸ்வேதகேது-உத்தாலகர் தந்தை கேட்க -ஆதேசம் -ப்ரஹ்மம் அறிந்தாயோ -கேட்டதும் ஸ்ப்தோச்மி-
கார்யம் அறிந்து காரணம் அறியலாம் –நன்கு அனுபவித்து கண்ணும் காதும் வேறு எங்கும் போகாமல் –
ஸ்ருதி உபஜீவாந்தரம் -அனுபவத்தால் -ஞான பூர்த்தியால் -ச்தப்தை -வெறித்து -பதட்டம் இல்லாமல் ஆழ் கடல் போலே -இரண்டும்

மற்று இவள்-
இவள் இதற்குமேலே வார்த்தை சொல்லில்.
தேவதேவபிரான்என்றே –
இங்கே கண்டாலும் அயர்வறும் அமரர்கள் அதிபதி இங்கே வந்து சுலபனானான் என்றாயிற்று இவள் புத்திபண்ணுவது.
நாயகனுடைய மேன்மைக்குத் தோற்று வார்த்தை சொல்லுகிற இவளை மீட்கப்போமோ?
என்றே நிமியும் –
‘அப்பெரியவன் இப்படிச் சுலபனாய்ச் சீலவானாவதே!’ என்று அந்தச் சீலகுணத்தைச் சொல்லப்புக்குத் தலைக்கட்ட மாட்டாதே,
உதடு நெளிக்கும்.
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க-
உதடு நெளிக்கிற வாயோடே கண்கள் நீர் மல்க.
நெக்கு –
கட்டுக்குலைந்தவளுமாய்.
ஒசிந்து –
பரவசப்பட்டவளாய்.
கரையும் – நீராகாநின்றாள்.
நெக்கு ஒசிந்து கரையும்-
பெருவெள்ளத்தில் கரையானது நெகிழ்ந்து ஒட்டுவிட்டு ஒசிந்து பொசிந்து அவயவி ஆகாதபடி கரைந்து போமாறுபோலே,
ஓர் அவயவியாக்கிக் காண ஒண்ணாதபடி கரைந்து போகாநின்றாள்.

——————————————————————————————-

கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும்திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.–6-5-3-

இயற்க்கை அழகு உள்ள திவ்ய தேசம் -ரஷணம் அர்த்தமாக பிரவ்ருத்தி உள்ள அவன் –
கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு-திருப் பொருநல் கரை விழுங்கும் படி பரந்த பொழில் -குளிர்ந்த நீர் நிலம்
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்-லோகம் கொண்டாடும் -திருவாய்மொழி -சொல்ல பெரிய திரு மண்டபம்
-கீதை ரெங்க விலாஸ் மண்டபம் -வாசி அறிந்தே நீங்கள் -ஆசை இல்லாமல் அகற்ற -தூரஸ்தமாக-அவள் போனதாக சொல்லாமல் தாய் விலக்கினதாக
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும்திசை ஞாலம் தாவி அளந்ததும்-அர்த்திகள் கூக்குரல் -ஸ்பர்சத்தால்-திரை -ஷீராப்தி நாதன் –
அளந்து கொண்டு ஆனந்யார்ஹன் ஆக்கி -பசுக்கள் மேய்த்த பவ்யன்-
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.- -அவன் சேஷ்டிதங்களையே பரவசமாக பேசி நீர் மல்க ஸ்தப்தையாக இருக்கிறாள்

தாமிரபரணி ஆற்றின்கரையைத் தன்னகப்படுத்திக் கொண்டிருக்கிற பசுமைநிறம்பொருந்திய சோலைகளாற் சூழப்பட்ட குளிர்ந்த மருத நிலங்களையுடைய திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்திலே கொண்டுபுக்கு, உலகத்தாரால் கொண்டாடப்படுகின்ற இனிய சொற்களையுடைய இவளை
நீங்கள் உங்களுக்கு ஆசையில்லாமல் அகற்றிவிட்டீர்கள்; அலைகளையுடைய திருப்பாற்கடலிலே சயனித்திருப்பதையும் திசைகளோடு கூடிய உலகத்தை
எல்லாம் தாவி அளந்ததையும் பசுக்களை மேய்த்ததையும் ஆகிய இவைகளையே பிதற்றிக்கொண்டு பெரிய கண்களிலே நீர்பெருக்கு எடுக்கும்படி நிற்கின்றாள்.
கொண்டுபுக்கு அகற்றினீர் என்க. பௌவம் – கடல், பிதற்றி நிற்கும் – பிதற்றிக்கொண்டு நிற்கின்றாள்.

திருநாளிலேதான் கொண்டுபோக வேண்டினால், திருச்சோலை உள்ளிட்டுக் கொடுபுகுவார் உளரோ? என்கிறாள்.

கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு –
திருப்பொருநல்கரையைப் பொழில் விழுங்கி இருக்கை.
கரையைப்பொழில் கொண்டாற்போலே, இவளைக் குணம் கொண்டபடி.
அன்றிக்கே, அந்தத்திருச்சோலையை உங்களுடைய நல்வார்த்தைகளால் பேர்த்துக் கொடுப்போம் அன்றன்றோ
இவள் நிலையை உங்களால் பேர்க்கலாவது! என்னுதல்.
பரந்த பொழிலையும் குளிர்ந்த நீர்நிலங்களையுமுடைய திருத்தொலைவில்லி மங்கலத்திலே கொடுபுக்கு.
உரைகொள் இன்மொழியாளை –
“படிப்பதிலும் இசையுடன் பாடுவதிலும் இனிமையோடு கூடியதும்” என்னும் ஸ்ரீராமாயணம் குத்துண்ணும்படியான பேச்சு என்னுதல்;
“பாட்யே கேயே ச மதுரம் பிரமாணை: த்ரிபி: அந்விதம்”-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 8.
அன்றிக்கே, பொருளில் இழியவேண்டாமல் ‘உரையே அமையும்’ என்னும்படியான பேச்சு என்னுதல்;
அன்றிக்கே, ‘இது ஓர் உரையே! பேச்சே!’ என்று உலகத்தார் கொண்டாடும்படியான பேச்சு என்னுதல்;
அன்றிக்கே, மாற்றும் உரையும் அற்ற பேச்சு என்னுதல்;
அன்றிக்கே, உரை – அடைவு சொல் என்னுதல்.
நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் –
அந்தப்பேச்சில் வாசிஅறிந்து அநுபவிக்கமாட்டாமல், நீங்களே ஆசையின்றி அகற்றினீர்கோள்.
அவ்வூரிலே கொடுபுகுகையும், இவள்பக்கல் நசை அறுகை என்பதும் பரியாயம்.
ஆயிட்டு ‘இவள் வேண்டா’ என்று அன்றோ கொடுபுக்கது என்கிறாள்.

திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் –
தன் சந்நிதானத்தாலே கிளராநின்றுள்ள திரைகளையுடைத்தான திருப்பாற்கடலிலே பிரமன் முதலாயினாருடைய
கூக்குரல் கேட்கும்படியாகக் கண்வளர்ந்தருளினதுவும்;
இவர்கள் துன்பம் கேட்டபின்பு இந்திரன் முதலானோர்கட்குக் குடியிருப்புப் பண்ணிக்கொடுக்க அடியிட்டபடியும்.
திசை ஞாலம் தாவி அளந்ததும் –
திக்குக்களோடே கூடின பூமியை இரப்பாளனாயிருந்து வருத்தமின்றி வளர்ந்து அளந்தபடியும்.
திசைஞாலம் தாவி அளந்ததும் –
‘இந்திரன் முதலானோர்களை ரக்ஷிக்கவேணும்’ என்ற ஆசையோடே காணும் பூமியை அளந்தது. ஆசை – திக்கு.
‘இவன் திருவடிகளாலே நம்மைத் தீண்டவேணும்’ என்று ஆசைப்பட்டுக் காணும் கிடக்கிறது பூமி. படுகை – உடைத்தாகை.
பூமியினுடைய ஆசையாவது, திக்குப்பட்டு அன்றோ இருப்பது.
நிரைகள் மேய்த்ததும் –
அவ்வளவன்றிக்கே, அறிவு கேட்டுக்குத் தலையான பசுக்களோடே சேர்ந்து வாழ்ந்தபடியும்.
பிதற்றி –
இவற்றையே அடைவுகெடக் கூப்பிட்டு.
நெடும் கண் நீர்மல்க –
இக்கண்ணில் பரப்பு அடங்கலும் பரப்பு மாறத் தண்ணீர் உண்டாவதே!
நிற்குமே –
பிதற்றவும் சக்தியில்லாமல், கண்ணீர் மல்குகை ‘தன்னுடைய குண நிலை’ என்னும்படி செயலற்று நில்லா நின்றாள்.

————————————————————————————————

நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான்என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.–6-5-4-

ததீய விஷய அனுபவம் வந்தாலே மகிழ்வு தானே -மேவினேன் -இன்பம் எய்தினேன் -இறந்த காலம் -ஒரு நாள் காண வாராய் -சங்கை அங்கு –
உகந்து உகந்து மகிழ்கிறாள் -விலஷணபுருஷர்கள் வாசஸ்தானம் -கண்டு கை விஞ்சி
நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்-நிர்வாகர் -பகவத் அனுபவத்தால் வாழும் –
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!-அடங்குதல் இல்லை -கை கழிய போனாள்-பெற்று வளர்த்த
-இப்படியாம் படி நிலைக்கு நீரே காரணம்
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான்என்றே-அப்யசிக்கும் வார்த்தை எல்லாம் -மகா உபகாரகன் -என்றே
-இத்தையே திரும்பி திரும்பி -கடல் வண்ணன் கண்ணபிரான் -என்றே சொல்லி -ஆஸ்ரிதற்கு அடங்கி -காட்டித்தந்த -ரூப வைலஷண்யம் ஆத்மகுணம் சொல்லி –
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.-ஒடுங்குதல் -ஒரு பிரகாரத்தாலும் ஒடுங்காமல் -குணா அனுசந்தானத்தாலே
உகந்து ஆஹ்லாதம் மிக்கு சிதிலையாகா நிற்கும் -குளிர்ச்சியால் சிதிலை இங்கு –

நித்தியமான நான்கு வேதங்களிலும் வல்லவர்களான அந்தணர்கள் வாழ்கின்ற திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்தைப் பார்த்த
பின்னர் இவள் அடக்கம் என்னுமது ஒன்றனை அடியோடு விட்டாள்; நம்மை மீறினாள்; தாய்மார்களே! கற்கப்படுகின்ற கல்வி முழுதும் கரிய கடல்போன்ற நிறத்தையுடையவனான கண்ணபிரான் என்று சொல்லிக்கொண்டே தளர்ச்சி சிறிதும் இல்லாதவளாயிருக்கின்றாள்; மகிழ்ந்து மகிழ்ந்து மனம் களித்துக் குழையாநின்றாள்.
அன்னைமீர்! இவள் தொலைவில்லி மங்கலம் கண்டபின் அறவுறாள் மலிந்தாள் என்க. அற்கம் – அடக்கம். ஒற்கம் – தளர்ச்சி.

அந்த ஊரினையும் அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களையும் யாதொருநாள் கண்டாள்,
அன்று தொடங்கித் தடை நிற்கை தவிர்ந்தாள் என்கிறாள்.

நிற்கும் நான்மறை-
நித்தியமான நான்கு வேதங்கள்.
நித்தியத்வமாவது, பூர்வ பூர்வ உச்சாரண கிரமத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சார்யமாணத்வம்.
ஆகையாலே, நித்தியமான வேதம். புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே குற்றமற்ற தாயிருக்குமன்றோ.
வாணர் –
வியாசபதம் செலுத்தவல்லராயிருப்பவர்கள்.
வாழ் –
வேதப் பொருளாய் விளங்குமவனைக் கண்ணாலே கண்டு வாழாநிற்பர்கள்.
வாழ் தொலைவில்லி மங்கலம் –
வேத தாத்பரியனானவனைக்கண்டு நித்தியாநுபவம் பண்ணுகிற ஊர்.
“வேதத்தை அத்யயனம் செய்வதனால் அவ்வேதத்தில் சொல்லப்படுகின்ற
பரமாத்மாவின் தியானத்தைச் செய்யக்கடவன்” என்னுமளவன்றியே,-ஓதுவார் ஒத்து எல்லாம் –நின் புகழே-
ஸ்வாத்யாயாத் யோகமாஸீத யோகாத் ஸ்வாத்யாயம் ஆமநேத்” என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 6 : 2.
ஆரூடயோகர் – சித்தித்தயோகத்தையுடையவர்.
“அந்த யோகத்தினால் தன்னால் அத்யயனம் செய்யப்படாத வேதபாகங்களின் பொருள்களைக் கண்டு
மனனம் செய்யவேண்டும்” என்று ஆரூட யோகராயிருக்குமவர்கள்.
கண்டபின் –
அவ்வூரில் வைஷ்ணவர்களும் அவனுமான சேர்த்தியைக் காட்டிக் கொடுத்துக் கெடுத்தீர்கோள்.
கதாசித் -கேசவ பக்தி -பக்த பக்தி -இரண்டையும் சேர்த்து காட்டிய பின்பு –
அற்கம் ஒன்றும் அற உறாள் –
நம்சொல்வழி வந்திருக்கும் இருப்புத் தவிர்ந்தாள்.
அற்கம் – அல்குதல். அதாவது, அடக்கம்.
மலிந்தாள் –
நம்மால் ஹிதம்சொல்லி மீட்க ஒண்ணாதபடி மிக்காள். என்றது, மீட்கைக்குத் தகுதியுமில்லாதபடி ஆனால் என்றபடி.
அன்றிக்கே, எனக்கும் தெரியாதபடி இவள் பகவானிடத்தில் ஈடுபட்டிருத்தலில் விஞ்சினாள் கண்டீர் என்னுதல்.

அன்னைமீர் –
மீட்கத் தேடுகிற உங்களோடு இவள் கருத்து அறிந்தேனாகச் சொல்லுகிற என்னோடு வாசி இல்லை தெரியாமைக்கு.
நித்தியசூரிகள் யாத்திரை சம்சாரிகளுக்குத் தெரியிலன்றோ நமக்கு இவள் அளவு தெரிவது.
கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல்வண்ணன் கண்ணபிரான் என்றே –
சொல்லும் சொல்லெல்லாம் திருநாமமேயாய், அவற்றிலும் வடிவழகிற்கும் அடியார்கட்குப் பரதந்திரப்பட்டிருத்தற்கும்
வாசகங்களான திருநாமங்களையே சொல்லா நின்றாள்.
“கிருஷ்ணனாகில் அடியார்கட்குப் பவ்யன்” என்பது பிரசித்தமன்றோ.
அவ்வடிவழகைத் தாழ நின்று இவளை அநுபவிப்பித்த உபகாரகனாதலின் ‘பிரான்’ என்கிறது.
திருநாமங்களை இடைவிடாதே சொல்லா நின்றால் இளைப்பு ஒன்றும் இன்றிக்கே இராநின்றாள் என்பாள்.
‘என்றே ஒற்கம் ஒன்றும் இலள்’ என்கிறாள்.
‘விரஹத்தால் வலியற்று இருத்தலாலே திருநாமத்தை முட்டச்சொல்லமாட்டாள்’ என்று இராநிற்கச்செய்தே, வருத்தம் அறச்சொல்லா நின்றாள்.
திருநாமந்தான் தரிப்பினைக் கொடுத்துச்சொல்லுவிக்கும்போலே காணும்;
“பாடி இளைப்பிலம்” –திருவாய்மொழி, 1. 7 : 10.-என்றாரே யன்றோ முன்னம்.
ஒற்கம் – மிடி. என்றது, இளைப்பின்றிக்கே என்னுதல்;
அன்றிக்கே, ஒற்கமாவது, ஒடுக்கமாய், தாய்மார் முன்பே ‘இப்படிச் சொல்லாநின்றோமே’ என்னும் நாணம் இன்றிக்கே என்னுதல்.
உகந்து உகந்து –
திருநாமங்களைச் சொல்லுதல் மூலமாக அவனுடைய அழகு சீலம் முதலிய குணங்களை நினைத்து
மேன்மேல் எனப் பிரீதியுடையவள் ஆகாநின்றாள்.
உள்மகிழ்ந்து குழையும் –
மனத்திலே உண்டான பிரீதியின் மிகுதியாலே உடல் அழியாநிற்பாள்.

துன்பமொரு முடிவில்லைத் திசைநோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான்”-என்றார் கம்பநாட்டாழ்வார்.

——————————————————————————————

குழையும் வாண்முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5-

அரவிந்த லோசனனின் ஒப்பனை அழகு வேஷ பூசம்
-32 சேவை பூரி -ஜகன்னாதன் – ஒரே நாளில் 8 சோனா வேஷ் -திருமேனி முழுவதும் எல்லா ஆபாரணங்கள்-
அன்று தொடக்கமாக விகாரம்
குழையும் வாண்முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு-ஸ்வா பாவிகமான மார்த்வம் -ஒளி விடும் முகம் -அனுபூவ்ய விஷயத்தில் சாபல்யம் –
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்- -திவ்ய ஆபரண அங்கீ காரத்தால் -நகை இட்டுக் கொண்டு
-ஏற்றுக் கொண்டு -சோதி -ஔஜ்வல்யம் -அழகாய் ஆஸ்ரிதற்கு கொடுக்கும் உபகரகன்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்-மையாந்து மயங்கி
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.-அவன் இருந்த திசையை செறிய -நோக்கி அஞ்சலி பண்ணா நிற்கும்

தாய்மார்களே! வருந்துகின்ற ஒளிபொருந்திய முகத்தையுடைய ஏழையாகிய இவளைத் திருத்தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,
வேறு ஆபரணம் வேண்டாமல் தானே ஆபரணமாக விளங்குகின்ற பிரகாசத்தையுடைய செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடைய பிரான்
வீற்றிருத்தலைக் காட்டினீர்கள்; அன்று தொடங்கி மயங்கி மழைபெய்தாற்போலேஇருக்கின்ற கண்ணீரோடு பகவானுடைய குணங்களிலே
உட்புகாநின்ற மனத்தையுடையவளாகி அந்தத் திசையையே உற்று நோக்கித் தொழா நிற்பாள்.
அன்னைமீர்! ஏழையைக் கொண்டுபுக்குப் பிரான் இருந்தமை காட்டினீர்; அன்றுதொட்டு மையாந்து நீரினொடு சிந்தையாளாகி
உற்று நோக்கித் தொழும் என்க. ஏழை – ஆசையுடையவள். சிந்தையள் : வினையெச்சமுற்று.

இவள் தன்மையை அறிந்து வைத்து, தேவபிரானுடைய அழகினைக் காட்டிக் கெடுத்தீர்கோள் என்கிறாள்.
அன்றியே, அவ்வூரில் வாழ்கின்றவர்கள் படியைக் காட்டினால், அவர்கள் ஜீவனத்தையும்
இவளுக்குக் காட்டிக் கொடுக்கவேணுமோ? என்கிறாள் என்னுதல்.
அரவிந்த லோசன் இருபத்தினாயிரப்படி -இங்கு -செங்கண் பிரான் -தேவ பிரான் –

குழையும் வாள்முகத்து ஏழையை –
ஒரு கலவி வேண்டாமலே இயல்பிலே அமைந்த மிருதுத்தன்மையாலே நையும் தன்மையளாய்,
“உகந்து உகந்து உள்மகிழ்ந்து குழையும்” என்கிற பகவானுடைய அநுபவத்தாலே ஒளியையுடைத்தான முகத்தையுடையளாய்,
‘கிடையாது’ என்றாலும் மீளமாட்டாத சாபலத்தையுடையவளை.
தொலைவில்லி மங்கலம் கொண்டுபுக்கு –
பகவானாலே விரும்பப்படுகின்ற தேசத்திலே கொடுபுகத் தவிராத பின்பு,
ஸ்ரீ வைகுண்டத்திலே மேன்மையைக் காட்ட அன்றோ அடுப்பது! நீர்மைக்கு எல்லை நிலமான இடத்தே கொடு புகுவார் உளரோ?
வாள் –
ஒளி.
இழைகொள் சோதி –
ஆபரணங்களினுடைய ஒளியையுடைத்தாயிருக்கும் என்னுதல்;
வேறு ஓர் ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமான ஒளி என்னுதல்;
அன்றிக்கே, ஆபரண ஒளி தன்னுள்ளே அடங்கும்படியான இயல்பாகவே அமைந்த ஒளி என்னுதல்.
செந்தாமரைக் கண் பிரான் –
மலர்த்தி முதலானவைகளுக்குத் தாமரையை ஒப்பாகச் சொல்லலாயிருக்கிற திருக்கண்கள்.
அகவாயில் தண்ணளிக்குப் பிரகாசகமான திருக்கண்கள். பிரான் – “பக்தர்களுக்காகவே” என்கிற வடிவு,
இருந்தமை காட்டினீர் –
நீங்கள் கெடுத்தீர்கோள். இவள் அறியாத விஷயங்களையும் நீங்களே காட்டிக் கொடுத்துக் கெடுத்தீர் கோள்.
இரூந்தமை –
இருப்பில் வீறு அங்கே முடிந்து நிற்றல்போலே.
நின்றானாகில், நிலையாரநின்றான்” பெரிய திருமொழி, 6. 9 : 8.-என்பர்கள்;
இருந்தானாகில், “இருந்தமை காட்டினீர்” என்பர்கள்;
கிடந்தானாகில், “கிடந்ததோர் கிடக்கை” –திருமாலை, செய். 23.-என்பர்கள்.
அன்றிக்கே, அவன் தன்மையைக் காட்டினீர்கோள் என்றுமாம்.
நோக்கு இருந்தபடி கண்டாயே, முறுவல் இருந்தபடி கண்டாயே என்று தனித்தனியே காட்டினீர் என்பாள் ‘காட்டினீர்’ என்கிறாள்.

நன்று; இப்போது அதற்கு வந்தது என்? என்னில்,
மழை பெய்தால் ஒக்கும் கண்ணநீரினொடு –
கண்டவுடனே வருஷ தாரை போலே கண்ணநீர் வெள்ளம் இடுகிறபடி பாரீர்கோள்.
ஆளவந்தார் மணக்கால் நம்பி பக்கல் எம்பெருமானைக் கேட்டவுடனே,
“உபாயம் இதற்குமேல் இல்லை; இவ்விஷயத்தை இப்போதே நேரே காண்டற்கு விரகு இல்லையோ?” என்றாராம்.
அப்படிக் கண்டவுடனே கண்ணநீர் வெள்ளமிடப்புகுந்த தத்தனை.
சரம ஸ்லோகம் கேட்டதும் -எம்பெருமானை -கேட்டது போலேவே நினைத்து –
‘ஏழை’ என்ற இடத்தை மூதலிக்கிறாள்:
அன்று தொட்டும் –
நீங்கள் காட்டின அன்று தொடங்கி.
மையாந்து –
மயங்கி. ‘குழையும்’ என்ற இடத்தை மூதலிக்கிறாள்:
இவள் நுழையும் சிந்தையள் –
அவன் குணங்களிலே உட்புகாநின்ற நெஞ்சினை யுடையள்.
சொரூபத்தையும் ஆத்ம குணத்தையும் ஒழிய வடிவழகிலே இடம்கொள்ளா நின்றாள்.
அங்கே சுழித்து நின்று, ‘இது ஒரு வடிவழகே! இது ஓர் ஒப்பனையே! இது ஒரு கண்ணழகே!’ என்று இடம் கொள்ளா நின்றாள்
அன்னை மீர் –
இவளை மீட்கப் பார்க்கிற அளவே அன்றோ உங்களது.
தொழும் – “ஒரே இடத்தில் நிறுத்திய மனத்தையுடையவளாய் ஸ்ரீ ராமபிரானையே நிச்சயமாகப் பார்க்கிறாள்”
ந ஏஷா பஸ்யதி ராக்ஷஸ்ய: ந இமாந் புஷ்பபல த்ருமாந் ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமம் ஏவ அநுபஸ்யதி”-என்பது, ஸ்ரீராமா. சுந் 16 : 25.
என்கிறபடியே, அந்தத் திக்கை மறுபாடு உருவப் பார்த்துத் தொழாநிற்கும். இவள் தொழிலும் ஒரு திக்குப்பட்டல்லது இராது காணும்.

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: