பகவத் விஷயம் காலஷேபம்- 132- திருவாய்மொழி – -6-4–6….6-4-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல
அகல்கொள்வைய மளந்த மாயன் என்னப்பன்தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே.–6-4-6-

பூர்வ அவதாரத்தில் -அந்ய அபிமான நிவர்த்தகமான -உலகைத் தொட்ட அவதாரம் -ஊரைத் தொட்ட அவதாரம் -கிருஷ்ணாவதாரத்துக்கு
அடிக்கால் இட்ட அவதாரம் -மந்தி பாய் வட வேங்கட மா மலை -அங்கு இருந்து வடக்கு வாசல் வழியே வந்த அரங்கன் -போலே –
த்ரைவிக்ரமம் பண்ணிய கிருஷ்ணன் உடைய -மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ போலே
அனுபவிக்கப்பெற்ற னக்கு என்ன மனத்துக்கம் –
இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்-பகாசுர வாயைப் பிளந்ததும் -செருக்கு அடியான -திமிர் திமில் -ஏறு களை
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல-விரோதி நிரசன-பல பல
அகல்கொள்வைய மளந்த மாயன் என்னப்பன்தன் மாயங்களே-வையம் அளந்த மாயன் கண்ணன் -ஓன்று -ஐக்கியம் -என்று காட்டிக் கொடுத்த உபகாரகம் –
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே-வாசி அற ஸ்துதிக்கப் பெற்றேன் -பகவத் அனுபவ காலம் பழுதே போனால் அன்றோ துக்கம்

பகைமை கொண்ட பகாசுரன் என்னும் பறவையின் வாயினைப் பிளந்ததும், திமில்களையுடைய இடபங்கள் ஏழனையும் அழித்ததும்,
உயர்ந்து ஓங்கித் தழைத்த குருந்த மரத்தினை முறித்ததும் முதலாக வேறும் இத்தன்மையவான, அகன்ற பூலோகத்தை அளந்த மாயப் பிரானாகிய
என்னப்பனுடைய ஆச்சரியமான செயல்களையே பகலும் இரவும் துதிக்கப் பெற்றேன்; எனக்கு மனத்தின்கண் துக்கம் என்ன இருக்கிறது?
இகல்-வலிமையுமாம். மற்றும் பலவாகிய மாயங்கள் என்க. பரிவு – பரிப்பு – துக்கம்.

கிருஷ்ணனுடைய பிரதிகூலர்களின் நிரசன பரம்பரையை அநுபவிக்கப்பெற்ற எனக்கு
ஒரு மனோதுக்கம் இல்லை என்கிறார்.

இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் –
கேவலம் புள் மாத்திரமாய் வந்து தோற்றுகை அன்றிக்கே போரினை மேற்கொண்டு எதிரிட்ட புள்ளினை அழித்ததும்.
அசுராவேசத்தோடு வரச்செய்தேயும்
‘பாதிக்க வருகிறது’ –பெரியாழ்வார் திருமொழி, 2. 5 : 4.-என்று பிறர் அஞ்சாத வடிவு கொண்டு வந்தபடி.
பள்ளத்திலே மேயும் பறவை உருக்கொண்டு வந்தது.
இமில் ஏறுகள் செற்றதுவும், திமிலையுடைத்தான இடபங்களைச் செற்றதுவும்.
உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் –
ஓக்கத்தை யுடைத்தாய்ச் சோலை செய்து நின்ற குருந்த மரத்தை முறித்ததும்.
‘இளைஞராயிருப்பார்க்குக் கவர்ச்சி கரமாயிருக்கும்’ என்று தழைத்து நின்றது;
இனி, இதனை முறித்துக் காரியம் கொள்ளுவோம் என்று பொடி படுத்தினான்.
உட்பட மற்றும் பல –
இப் புடையிலே பகைவர்களை அழித்தல் பலவே அன்றோ.
அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே –
பரப்பை யுடைத்தான பூமியடங்கலும் வருத்தம் இன்றி வளர்ந்து அளந்த ஆச்சரியத்தையுடையனான
உபகாரகனுடைய ஆச்சரியமான செயல்களையே.
பகல் இராப்பரவப் பெற்றேன் –
நாட்டார் அபிமத விஷயங்களை அநுபவிப்பதற்குப் ‘பகல் இரா’ என்று கூறிட்ட காலம் இரண்டும்
இந்த விஷயத்திலே அநுபவிக்கப்பெற்ற எனக்கு,
இரவு பகல் புறம்பே விஷயங்களை அனுபவிப்பாருடைய மனோ துக்கம் உண்டோ?
பரிவு – துக்கம். அதிலே ஒரு ஒற்றெழுத்து ஏறினாலும் அந்தப் பொருளையே காட்டக்கடவது.

————————————————————————————————–

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-

அதிசயித போக்யதா ஆகாரனான -அஜன் அபிசன் –குறைவு அற்ற திரு மேனி -ஆஸ்ரித விரோதி நிரசன அவதார வைலஷ்ணயம்
மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து-வியசநேஷூ மானுஷ்ய -பெருமாள் -நாட்டார் சுகம் துக்கம் தன் படி
-பர துக்க அசஹிஷ்ணுத்த்வம் -குண பிரகரணம் -மனத்துக்கம் இதனால் -ஹேய ப்ரத்ய நீகன்-சஜாதீயனாக பிறந்த இடத்திலும்
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்–அபிமத விக்ரகங்களை பரிகரித்து -ஆஸ்ரித விரோதி நிரசனம் –
புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே-தன்னிலம் நின்றால் போலே செவ்வி பெற்ற திருத் துழாய்
-திருமுடி -புனத்துழாய்முடி -புனத்துழாய் மாலை மார்பன்-
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே-நினைத்து கொண்டே இருப்பதால் ஒப்பார் யாரும் இல்லையே

மனத்தில் துக்கத்தோடே தாழ்ந்த மனித வர்க்கத்தில் தனக்கு வேண்டிய உருவினைக்கொண்டு தான் அவதரித்து, தான் தனது
சீற்றத்தினை முடிக்கும், புனத்துழாயினை முடியிலே தரித்த மாலை பொருந்திய மார்பினையுடையவனான என் அப்பனுடைய
ஆச்சரியமான செயல்களையே நினைக்கின்ற மனத்தினையுடையேன்; இனி நீண்ட பெரிய உலகத்தில் எனக்கு ஒப்பாவார் யாவர்?
அழுக்கு மானிடச் சாதியில் தனக்கு வேண்டுருக்கொண்டு தான் மனப்பரிப்போடு பிறந்து என்க.
புனம் துழாய்மாலை முடிமார்பன் எனக் கூட்டலுமாம், சீற்றத்தினை முடிக்கும் என்னப்பன் என்க.

தன்னை அடைந்த அடியார்களைப் பிரதிகூலர் நலியுமதனைப் பொறுக்கமாட்டாமல் அவதரித்து அவர்களை
அழியச்செய்யும் செயல்களை நினைக்கும் நெஞ்சுடைய எனக்கு பூமியின் நிகர் இல்லை என்கிறார்.

மனப் பரிப்போடு அழுக்கு மானிடசாதியில் தான் பிறந்து –
நாட்டாரை அழுக்கு உடம்பு கழிக்குமவன்தான் கண்டீர் அழுக்கு மானிடச் சாதியில் வந்து பிறந்தான்;
குழந்தை கிணற்றிலே விழுந்தால் எடுக்க வரும் தாய் நெஞ்சு நொந்து வந்து எடுக்குமாறு போலே

கூவத்தில் வீழும் குழவி யுடன்குதித்தவ்
வாபத்தை நீக்குமந்த அன்னைபோல் – பாபத்தால்
யான்பிறப்ப னேலுமினி எந்தை எதிராசன்
தான்பிறக்கும் என்னையுய்ப்பதா.-என்பது, ஆர்த்திப் பிரபந்தம். 9.

‘இவற்றிற்கு உதவப் பெற்றிலோம்’ என்னும் திருவுள்ளத்தில் தளர்த்தியோடே வந்து பிறந்தவனாதலின்
‘மனப் பரிப்போடு பிறந்து’ என்கிறது.
குற்றங்களுக்கெல்லாம் எதிர்த்தட்டான தான் பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்ய திருமேனியோடே
கர்ப்பத்தில் வாசம் செய்து அவதரித்தானாதலின் ‘தான்பிறந்து’ என்கிறது.
அன்றிக்கே, பிறப்பதற்குக் கர்மம்செய்து வைத்தவரும்கூட அருவருக்கும் பிறவியிலே கண்டீர்
கர்மத்துக்கு வசப்படாத தான் பிறந்தது என்பார் ‘தான் பிறந்து’ என்கிறார் என்னுதல்.
இதற்கு அடி பரம கிருபை அன்றோ.
தனக்கு வேண்டு உருக்கொண்டு –
பிரகிருதி சம்பந்தமில்லாத திவ்ய திருமேனியையுடையனாய்க்கொண்டு.
அன்றிக்கே, அப்படிப் பிறந்தால் ஒருபடிப் பட்டிருக்கப் பெற்றோமோ! என்னுதல்.
இரண்டு தோள்களுடையவனா? நான்குதோள்களுடையவனா?” என்னும்படியன்றோ பட்ட படி.
த்விபுஜோ வா சதுர்புஜோவா” என்பது.
தான்வேண்டிய உருவம் அப்ராக்ருத சமஸ்தான விக்ரகம் -அடியார்கள் வேண்டிய உருவம் என்றுமாம் –

ஈசுவரத் தன்மையைக் கைகழிய விட்ட பின்பு அன்றோ இவனுக்கு இங்கு இடம் கொடுத்தது.
இவைதாம் அடியார்களுக்காக ஆகையாலே தனக்கே விரும்பத் தக்கனவாயிருக்கும்.
அன்றிக்கே, இச்சையால் எடுத்தவை என்றுமாம்.நாற்றோளன் இருதோளன் ஆகைக்குக் காரணம் என்? என்ன,
‘சம்சாரத்தினுடைய கொடுமை’ என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘ஈசுவரத்தன்மை’ என்று தொடங்கி. ‘கை கழியவிட்ட’ என்பதற்கு, கைகளைகழியவிட்ட என்றும். கை கழியும்படி விட்ட என்றும் பொருள்.
இதற்கு நோக்கு, “உபஸம்ஹர ஸர்வாத்மந் ரூப மேதத் சதுர்புஜம்-எல்லாருக்கும்அ ந்தராத்மாவாக இருப்பவனே!
நான்கு தோள்களோடு கூடின இந்த உருவத்தை மறைத்துக் கொள்” என்பது. இது, ஸ்ரீவிஷ்ணுபு. 5. 3 : 13.

தான் தன சீற்றத்தினை முடிக்கும் –
அடியார்களுடைய விரோதியைப் போக்கினானாய் இருக்கையன்றிக்கே, தன் சினம் தீர்ந்தானாய் இருக்கை;
தாயானவள், குழந்தையை நலிந்தவர்களைத் தான் நலிந்து தன்சினம் தீருமாறுபோலே.
“இராவணனால் உண்டாக்கப்பட்ட புண்களோடு கூடின வானர சிரேஷ்டனான அநுமாரைப் பார்த்து,
பிறகு மஹாபராக்கிரமமுடைய ஸ்ரீ ராமர் கோபத்தின் வசப்பட்டவரானார்” என்பது
“ததோ ராமோ மஹாதேஜே ராவணேன க்ருத வ்ரணம் த்ருஷ்ட்வா ப்லவகசார்தூலம் கோபஸ்ய வஸமேயிவாந்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 50 : 136.

புனம் துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன்-
அடியார்களுடைய விரோதிகளைப் போக்கித் திருமஞ்சனம்செய்து ஒப்பித்து,
திருமேனியின் பரிசத்தாலே தன்நிலத்தில் நின்றாற்போலே செவ்வி பெற்று இருக்கின்ற
திருத்துழாய் மாலையினைத் திருமுடியிலும் திருமார்பிலுமுடையவனாய், அந்த ஒப்பனையாலே என்னை எழுதிக்கொண்டவன்.
தன்மாயங்களே நினைக்கும்நெஞ்சுடையேன்-
“மனம் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணமாக நிற்கிறது” என்று
“மநஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:”- என்பது, ஸ்ரீ விஷ்னு புரா. 6. 7 : 28.
பொதுவாகையன்றிக்கே, அவனுடைய ஆச்சரியமான செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சையுடையேன்.
எனக்கு நீள் நிலத்தில் யார் நிகர்-
பூமி பரப்பையுடைத்து என்னா, எனக்கு ஒப்பாவார் உளரோ?
பரமபதத்தை ஒன்றாக நினைக்கின்றிலர்; தம்மைப்போலே கவி பாடி அடிமை செய்வார் இல்லாமையாலே,
சம்சாரத்தே இருந்து கவிபாடி அடிமை செய்யப்பெற்ற எனக்கு, பூமியில் ஓர் எதிர் உண்டோ? என்கிறார்.

————————————————————————

நீணிலத்தொடு வான்வியப்ப நிறை பெரும் போர்கள்செய்து
வாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பல
மாணியாய்நிலம் கொண்ட மாயன் என்னப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

வாமனன் கிருஷ்ணன் சமானமாக -பின் நின்று தாய் இரப்ப கேளான் -இரண்டாம் திருவந்தாதி ராம வாமனர் –
அர்த்தியாயும் அபேஷிதம் தலைக் கட்டிக் கொள்ளுமவன் -சேஷ்டிதங்கள்-பாண யுத்த முதலானவை –
நீணிலத்தொடு வான்வியப்ப நிறை பெரும் போர்கள்செய்து-விஸ்மயப்படும் படி -கார்த்திகையானும் -கரிமுகத்தானும் -ஸ்கந்தர்
-நிறைந்த படைத்துணை -மகா யுத்தங்கள்
வாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பல-யுத்த கண்டூதி தினவு எடுத்த -பல சேஷ்டிதங்கள்
மாணியாய்நிலம் கொண்ட மாயன் என்னப்பன்தன் மாயங்களே-அர்த்தியாய் -கிருத்ரிமினாய் -எனக்கு பிரகாசிப்பித்த -உபகாரகன்
-ஆச்சர்ய சேஷ்டிதங்கள் அபரோஷித்து கண் முன்னே –காட்டவே கண்ட -திவ்யம் ததாமி சஷூஸ் –
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே-இனி கலக்கம் இல்லை -அவிதேய மனஸ் தானே
-ஸ்வ ரஷணம் ஸ்வ அநவயம் -அந்ய ரஷணம் -இங்கு கலக்கம் இல்லை மனஸ் விதயம் இருப்பதால் –

பெரிய உலகத்திலேயுள்ள மக்களோடு தெய்வலோகத்திலேயுள்ள தேவர்களும் கண்டு ஆச்சரியப்படும்படியாக, குறைவில்லாத பெரிய போரைச் செய்து
வாணாசுரனுடைய ஆயிரம் தோள்களைத் துணித்ததும் முதலான மற்றும் பலவான, பிரமசாரியாய் நிலத்தை வாங்கின மாயனாகிய என்னப்பனுடைய
ஆச்சரியம் பொருந்திய செயல்களையே காண்கின்ற நெஞ்சினையுடையேன்; ஆதலால், எனக்கு இனி என்ன கலக்கம் இருக்கின்றது?
வியப்பப் போர்கள் செய்து துணித்ததும் என்க. மற்றும் பலவான மாயங்கள் என்க. மாணி – பிரமசாரி.

வாணனை வெற்றிகொண்டது முதலான கிருஷ்ணன் செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சினையுடைய
எனக்கு ஒரு கலக்கம் இல்லை என்கிறார்.

நீள்நிலத்தொடு வான்வியப்ப –
பூமியிலுள்ளாரோடு சுவர்க்கத்திலுள்ளாரோடு வாசிஅற ஆச்சரியப்பட.
கண்டவற்றுக்கெல்லாம் ஆச்சரியப்படும் மனிதர்களோடு ஒக்க,
ஒன்றற்கும் வேறுபட்டவராகாதே தந்தாமைப் போரப் பொலிய நினைத்திருக்கும் தேவர்களும் ஆச்சரியப்படும்படி.
கும்பிடுவாரோடு கும்பீடு கொள்வாரோடு வாசி அறும்படியாக என்றபடி.
‘வியப்ப’ என்று மேலே வருகையினாலே, ‘கட்டில்கள் கூப்பிடுகின்றன’ என்பது போன்று, ‘நிலம், வான்’ என்பன ஆகுபெயர்கள்.
நிறை பெரும் போர்கள் செய்து-
குறைவற்ற மஹாயுத்தத்தைச் செய்து. அதாவது,
ஈசுவர அபிமானிகளான சிவன் முதலாயினோர்களும் கெட்டு ஓடும்படியான போரைச் செய்து என்றபடி.
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் –
சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றின தோள்களைக் கழித்தபடி.
‘இவன் கரபாதை ஆற்ற மாட்டாமல் கண்டார்கால்களில் எல்லாம் குனிந்து திரியா நின்றான்’ என்று அந்தக் கரத்தைக் கழித்துவிட்டான்.
‘கை கழியப் போய்ச் சிவனை அடைந்தான், இவன் கரபாதை ஆற்றாமை’ என்று அதனைப் படைக்கு அடைத்துவிட்டான்.
வாணன் வேறு தெய்வத்தை பஜனம் பண்ணுகையன்றோ, அவனுக்கு இங்ஙனம் கை பிழைபாடு வந்தது என்று
வகாத விஷயம் -அப்ராப்த விஷயம் -யுத்த கண்டூதியால் வந்த செருக்கு -வகுத்த விஷயம் பற்றாதவன் –
கரம் இறையும்- கையும் -கப்பம் -கரத்தை கழித்தது திவ்ய ஆயுதங்களால் -கை கழிய பொய் ருத்ர சமாஸ்ரயணம்
-கை தினவு எடுத்ததால் போனான் -இவர் கை சக்கரம் கழிய போய் அவன் கைகளை கழித்தான் என்றவாறு
நாட்டார் கைவந்தபடி செய்கைக்காகச்செய்தான்.
“ஈசுவரனை வணங்கும் பொருட்டு” என்றேயன்றோ சரீர சம்பத்தைக் கொடுத்தது.
ஈசுவரன், கை வந்தபடி -அஞ்சலி -செய்யாதவர்களைக் கைமேலே தண்டிக்கை தக்கதே அன்றோ.
சர்வேசுவரன் தன்னைப் பற்றுகைக்காக இவனோடே கைசெய்தன்றோ அடியிலே விட்டது.
‘அதனை மதித்திலன், இவன் அறக் கை விஞ்சினான்’ என்று தண்டித்துவிட்டான்.
வேறு தெய்வத்தைப் பற்றிக் கையிலே பலம் பெற்றுவிட்டான்.
பகவானைப் பற்றுவதற்குக் கைம்முதல் இல்லாமை விட்டான் அன்றே.
உட்பட மற்றும் பல –
அவனுக்கும் பெருநிலை நின்றாரையும் முதுகுகாட்டும்படி செய்தபடி.
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ” என்று
க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாநம் அநாதி நிதனம் பரம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.
பின்பு அன்றோ அவன் இவனை உள்ளபடி அறிந்தது.-சுந்தரத் தோளை நம்பி ஸ்தோத்ரம் –

மாணியாய் நிலம் கொண்ட மாயன் –
பெறில் ஜீவிப்பானாய்ப் பெறாவிடில் முடிவானாய், இரப்பிலே தழும்பு ஏறின வடிவைக்கொண்டு.
இவர் அந்த அவதாரத்திலே கால்வாங்குகிறார் அல்லர்;
கண்ணழிவற்ற அழகாலும், வரையாதே எல்லாரையும் தீண்டுகையாலும், அடியார்கள் விஷயத்தில் ஓரத்தாலும்,
செய்யும் ஆனைத்தொழில்களாலும் கிருஷ்ணாவதாரத்தோடு ஒத்திருக்கையாலே, ஸ்ரீ வாமனாவதாரத்தை அநுபவிக்கிறார்.
நிலம் கொண்ட மாயன் என் அப்பன் –
‘திருஉலகு அளக்க’ என்று ஒரு வியாஜத்தை இட்டு அளந்துகொண்டது தம்மை என்று இருக்கிறார்.
மநோ வாக் காயங்கள் -சிந்தை சொல் செயல் மூன்றையும் கொண்டானே –
அப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் –
“‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கரணங்களையுடைய ஆழ்வார் ஆகையாலே,
நெஞ்சுதானே நினைக்கவும் வற்றாய்க் காணவும் வற்றாயிருக்கும் என்று பிள்ளான் பணிப்பர்” என்று அருளிச்செய்வர்.
அன்றிக்கே, ‘கட்கண்’ என்றும், ‘உட்கண்’ என்றும் சொல்லுகிறபடியே, நெஞ்சு தன்னையும் கண்ணாகச் சொல்லக்கடவதன்றோ; அது ஆகவுமாம்.
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து”-(பெரிய திருவந். 28.)– என்பது, ஈண்டு அநுசந்தேயம்–

எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே –
‘இந்த விஷயத்தைக் காணப்பெற்றிலோம்’ என்கிற கலக்கம் எனக்கு உண்டோ?
அன்றிக்கே, வேறு தெய்வங்கள் ‘ரக்ஷகர்’ என்று இருக்கிற கலக்கமும், ஈசுவரனுடைய ரக்ஷணத்திலே ஐயப்படும் கலக்கமும்,
‘தானே தனக்குக் கடவன்’ என்னும் கலக்கமும் இல்லை என்னலுமாம்.
என் நான் செய்கேன் -யாரே களை கண்என்னை என் செய்கின்றாய் போலே –
உபாய அம்சத்தில் கண் வைக்காமல் பிராப்ய அம்சத்தில் கண் வைத்து கைங்கர்யமே யாத்ரையாக போக வேண்டும் –

—————————————————————————-

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-

தேர் கடாவிய -ஒட்டி -ஏழு லோகம் கடல் மலை கடந்து -உடலோடும் கொண்டு கொடுத்தான் –
பரத்வ அசாதாராண சிஹ்னங்கள் -வைதிக புத்திரன் -அதி மானுஷ சேஷ்டிதங்கள்
கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்-ஜல ஸ்தல விபாகம் இல்லாமல் -பொருந்தும் படி அண்ட கபாலம் தாண்டி
நடாத்தி -காரணமான அவயகதம் பர்யந்தமாக –கார்யத்தில் ஏக தேசமான தேர் -கடாவி –
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல-ஆச்சார்யா -சரீர ஆனயன அவிளம்ப -முதலிய பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை -பரத்வ சிஹ்னங்கள்மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே-தன்னிலை இழந்து -ஈஸ்வரனுக்கு மநோ ஹாரி வாக் சாதுர்யம் வேறு யார் உளர் –

ஏழ்கடலும் ஏழ்மலையும் உலகு ஏழும் ஒக்கக் கழியச் செலுத்தி, முடியத் தேரைக் கொண்டு சென்ற ஆச்சரியமும் முதலான மற்றும் பலவான
ஆச்சரியமான செயல்களையுடைய, சக்கரம் சங்கு இவற்றை வலக்கையிலும் இடக்கையிலுமாகவுடைய மால் வண்ணனை வேறுபடும்படி செய்கிற
பாசுரங்களைப் பாடுகின்ற நாக்கினையுடைய எனக்கு இந்த மண்ணின்மேல் ஒப்பாவார் உளரோ?
மால்வண்ணன் – கரிய நிறத்தை யுடையவன். மலக்குதல் – கலங்கச் செய்தல்.

வைதிக புத்திரர்களைக் கொண்டு வந்து தருதல் முதலான வெற்றிச் செயல்களையுடைய சர்வேசுவரனை
மலக்கும் நாவீறுடைய என்னோடு ஒப்பார் உளரோ? என்கிறார்.

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகுஎழும் கழியக் கடாய்-
ஏழ்கடல் ஏழ்மலை உலகுஏழும் கலக்கக் கழியக் கடாய். கலக்க-ஒக்க:
அதாவது, தேரை நடத்துகிறபோது நீரோடு மலையோடு தறையோடு வாசி அற ஒக்க நடத்தினபடி.
அன்றிக்கே, கலக்க என்பதனைக் கடலுக்கு அடைமொழியாக்கி, கலங்குதலையுடைய கடல் என்று பொருள் கூறலுமாம்.
அங்ஙன மன்றிக்கே, ஏழ்கடல் ஏழ்மலை உலகு ஏழையும் கழிய நடத்துகிறபோது அதிர நடத்தி என்றுமாம்.
கலக்க-
அதிர.
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் –
காரியமான தேரினைக் காரணமான மூலப்பகுதியிலே நடத்துகிற இடத்தில் அழியாதபடி நடத்தின ஆச்சரியமும்.
உலக்க
-முடிய.
உட்பட மற்றும் பல-
வைதிக புத்திரர்களை இந்தத் தேசத்தினின்று கொண்டுபோருகையும்,
போன செவ்வியிலே கொடுவந்து கொடுக்கையும்,
காலையில் செய்யவேண்டிய யாக காரியங்களைச் செய்து முடித்த பின்பு மத்தியானத்தில் செய்ய வேண்டிய
காரியங்களைச் செய்வதற்கு முன்பு இவை அடங்கலும் செய்கையும்.
வலம் கை ஆழி இடம் கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு –
இவ்விடத்தைப் பட்டர்அருளிச்செய்யா நிற்கச்செய்தே கஞ்சனூரில் இருந்தவரான வண்டு வரைப்பெருமாள் என்பவர்,
மால்வண்ணனை ‘மலக்கு நாவுடையேன்’ என்ன அமையாதோ?
‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை’ என்று விசேடித்ததற்குக் கருத்து என்? என்ன,
“சோளேந்திரசிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன் என்கிறார் காணும்” என்று அருளிச்செய்தார்.
‘சோளேந்திர சிங்கன்’ என்பது, நம் பெருமாளுடைய யானை. உளுக்காக்க – இருக்கும்படி. என்றது
சர்வேசுவரனாகிற மத்த யானையானது பணிந்து கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.
அறப் பெரியவனுக்கு லக்ஷணம் அன்றோ சங்க சக்கரங்கள்.
“ஒன்றிலும் ஆசை இல்லாதவன், மௌனமாக இருப்பவன்”
“அவாக்யநாதர:” என்பது, சாந்தோக்யம். 3 : 14.-என்கிற சர்வாதிக வஸ்துவைக் கலங்கச் செய்யும் நாவீறுடையேன் என்கிறார்.
மால்வண்ணனை – கறுத்த நிறத்தையுடைய சர்வேசுவரனை.
மலக்கும் நாவுடையேன் – இவர் வார்த்தையில் கலங்குமவனன்றோ அவன்தான்.
இவர் கலங்கிச் சொல்லச் சமைந்தாற் போலேயன்றோ அவனும் கலங்கிக் கேட்கச் சமைந்தபடி.
இம் மண்ணின்மிசை மாறு உளதோ –
பரமபதத்தில் அநுபவம் வாய்புகுநீர் ஆகையாலே அதனை ஒன்றாக நினைத்திருக்கின்றிலர்.
இனி, உண்டாகில் பூமியிலே; அதிலும் இல்லை என்கிறார்.
அன்றிக்கே, ‘ஒப்பு உண்டு, இல்லை’ என்று ஐயங்கொள்ளுகைக்குத் தான் விஷயமுள்ளது நித்திய விபூதியிலே யன்றோ?
ஆதலால், ‘இம் மண்ணின்மிசை மாறுளதோ?’ என்கிறார் என்னுதல்.

—————————————————————————————–
மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-

பிறந்த வாறும் -போன மாயங்களும் -இங்கு விண் மிசை தாமமே புக –தரித்து நின்று அனுபவிக்க பிரார்த்தித்த படி அருளினான்
கற்பார் -நடந்த கால்கள் அறிய -வேறு யார் கற்பார் என்றது போலே
பூமி பாரம் போக்க பாரத போர் -பரஞ்சோதி -ஸ்வேதரூபேண –அனுபவிக்கப் பெற்றேன்
மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்-விஸ்வம் பரா வுக்குவே பாரம் –பொறுக்க முடியாத -பெரிய யுத்தம் உண்டாக்கி
– -இவர் தானே -சகா தேவன் சொன்னது –
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்-சங்கல்பம் குலைந்து ஆயுதம் எடுக்கை -போன்ற பல மாயங்கள்
-சூழ்ந்து கொண்டு முடித்து –
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்-வந்த கார்யம் சமைந்த பின்பு தன்னுடைச் சோதி -அடைந்து பிரவேசித்த
நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-சேஷ வ்ருத்தி பண்ணப் பெற்றேன் –
ஸ்வராட் தனக்கு தானே ராஜா -அஷர பரம ஸ்வராட்- முக்தன் கர்மங்களில் இருந்து ஸ்வதந்த்ரம் –
கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு அரசன் என்றபடி -நான் அனந்யாதிபதி அன்றோ -என்று கருத்து

பூமியின்மேலே பெரிய பாரம் நீங்கும்படி ஒப்பற்ற மிகப் பெரிய பாரதமாகிய போரைச்செய்து ஆச்சரியமான காரியங்களைச் செய்து சேனைகள்
பாழ்படும்படியாக மந்திரித்துப் போய்ப் பரமாகாசமான தன்னுடைய வைகுண்டலோகத்தைச் சென்று அடைந்த பரஞ்சோதியினுடைய
திருவடிகளைச் சேர்ந்து நான் வணங்கப்பெற்றேன்; எனக்குத் தலைவர் வேறுயாவர் உளர்?
நீங்கப் பண்ணிச் செய்து நூற்றிட்டுப் போய்த் தனதாமமே மேவிய சோதி என்க. நூற்றிட்டு – சாம்பலாக்கி என்னலுமாம். நூறுதல் – கொல்லுதல்.

அபாயங்களே மிகுதியாகவுடைய சம்சாரத்திலே வந்து அவதரித்து யாதொரு அபாயமும் இல்லாமல் பரமபதத்திற் போய்ப் புக்க படியை
அனுபவிக்கப்பெற்ற எனக்கு வேறே சிலர் நிர்வாஹகர் வேண்டும்படி குறையுடையவனோ நான்? என்கிறார்.

மண்மிசைப் பெரும் பாரம் நீங்க –
‘விஸ்வம்பரை’ என்றும், ‘க்ஷமை, பொறை’ என்றும் பெயர்களையுடைத்தாய்த் தாங்கக்கூடிய தான பூமியாலும்
பொறுக்க ஒண்ணாதபடி அன்றோ துர்வர்க்கம்தி ரண்டபடி, பரமபதத்தில்
“எந்தப் பரமபதத்திலே பழையர்களான சாத்தியர் என்கிற தேவர்கள் வசிக்கிறார்களோ” என்கிறபடியே,
கனத்தார் உண்டாயிருக்கச் செய்தேயும், பாரம் இல்லை அன்றோ அகங்கார சம்பந்தமுடையார் இல்லாமையாலே.
“யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:” என்பது, புருஷசூக்தம்.
இங்குப் பாரம் என்கிறது, மக்கள் பாரம் அன்று; யான் எனது என்னும் செருக்கே பாரம் என்றபடி.
தங்கள் பாரத்தினை அவன் தலையிலே வைத்திருக்குமவர்களன்றோ அவர்கள்
ஓர் மாபெரும் பாரதப்போர் பண்ணி –
ஒப்பற்றதான மஹாபாரதமாகிற மஹா யுத்தத்தைச் செய்து.
மாயங்கள் செய்து –
பகலை இரவாக்குவது, ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுப்பது, எதிரிகளுடைய மாமத்தைக் காட்டிக்கொடுப்பது ஆனவை
தொடக்கமானவற்றைச் செய்து.
சேனையைப் பாழ்பட நூற்றிட்டு –
சேனை வெறுந்தறையாம் படி மந்திரித்து.
“எவனுக்கு, மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனார்த்தனனுமான கண்ணன் மந்திரியாயும் ரக்ஷகனாயும் சிநேகிதனாயும் இருந்தானோ,
அந்தத் தர்ம்புத்திரனுக்கு ஜெயிக்கப்படக் கூடாதது யாதுளது” என்னக்கடவதன்றோ–த்ருத்ராஷ்டன் சொன்னது
.“யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸுஹ்ருச்சைவ ஜநார்தந:
ஹரிஸ் த்ரைலோக்ய நாதஸ்ஸ: கிந்து தஸ்ய ந நிர்ஜிதம்”-என்பது, பாரதம் ஆரண்யபர்வம், 49 : 20.
‘ஆயுதம் எடுக்க ஒட்டோம், என்கையாலே சூழ்ச்சியாலே அழித்தான்.

போய் விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள் –
பகைவர்களை அழித்ததற்குமேலே அன்றோ இவர்கள் இருந்த நிலத்தில் இராமல் பரமபதத்திலே போய்ப் புகப்பெற்றபடி என்று உகக்கிறார்.
பொய்யாசனம் இடுவார், பரிபவிப்பவர் இவர்களையுடைய இந்த நிலத்தை விட்டுப் பரிவரேயான பரமபதத்து ஏறப் போகப் பெறுவதே!
“ப்ருது லோசந: ப்ருதிவ்யா: பாராவதரணம் க்ருத்வா – நீண்ட கண்களையுடைய கண்ணன் பூமியினுடைய பாரத்தைக் கழித்து,
மோஹயித்வா ஜகத்சர்வம் – ப்ரதிகூலரை அடங்கலும் உழவு கோலாலே விழவிட்டு,
அநுகூலரை யடங்கலும் கண்களாலே விழவிட்டுப் போனான்;
கத: ஸ்வம் ஸ்தானம் உத்தமம் – விண்மிசைத் தன தாமமே புக்கான்.
உத்தமம் – கம்சன் முதலானோர் துரியோதனன் முதலானோர் இவர்களால் வரும் அச்சம் இன்றியே
, தனக்குப் பரிவரானவர்கள் இருக்கிற நிலத்திலே போய்ப் புகப் பெற்றபடி
பூமியின் பாரத்தைப் போக்கித் தன் தாமத்தை அடைந்ததற்குப் பிரமாணம்காட்டுகிறார் ‘பிருது லோசந:’ என்று தொடங்கி.
“க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருது லோசந:
மோஹயித்வா ஜதத்ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநம் உத்தமம்”- என்பது, பாரதம் மௌசலபர்வம்.

ஒரு தீர்த்தத்தின் அன்று நாயிறு -அஸ்தமன காலம் -போது ஆண்டானும் எம்பாரும் தங்களிலே சந்தித்து,
“யான் எனது என்னும் செருக்கினால் மலினமாக்கப் பட்டவராயிருப்பார் பத்துக்கோடி பேர் நடுவே,
அதி சுகுமாரமான திருமேனியைக்கொண்டு பத்துநாள் எழுந்தருளி, அபாயம் இல்லாமல் புக்கருளப் பெற்றபடி கண்டதே!” என்று
ஒருவரை ஒருவர் தண்டன் இட்டுத் தழுவிக்கொள்ளா நிற்கக் கண்டேன் என்று சீயர் அருளிச்செய்வர்.
நண்ணி நான் வணங்கப்பெற்றேன் –
காலயவனன், ஜராசந்தன் தொடக்கமானாரைப்போலே, எதிரிட்டுக் கிட்டுகை அன்றிக்கே, முறையாலே கிட்டப்பெற்றேன்.
எனக்கு நாயகர் பிறர் ஆர் –
அவனுடைய அவதாரம் தொடக்கமாக, நடுவுள்ள அபாயங்களைத் தப்பி அடியார்களை வாழ்வித்துத் தனக்கு
அமர்ந்த நிலத்தே போய்ப் புக்கபடி யளவும் அநுபவிக்கப்பெற்ற எனக்கு ஆர் தான் நியமிக்கின்றவர்கள் என்கிறார்.
“பயிலும் திருவுடையார்யவரேலும்” என்றதனை மறந்தார்போலே இருந்தது.
அன்றிக்கே, அவர்களைப் பிறராக நினையாரே யன்றோ என்னலுமாம்.

—————————————————————-

நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11-

துவட்சி இல்லாமல் -பகவத் அநந்ய பக்தி உக்தர் ஆவார்
நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்-நிர்வாஹகன் -சப்த லோகங்களுக்கும் –
வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்-சப்த லோகங்களையும் விழுங்கி -வெளி நாடு காண உமிழ்ந்து
-அந்தராத்மாவாகக் கொண்டு அவையாய்-நியத பிரகாரமாய் -அப்ருதக் சித்த விசேஷணம்–வ்யாப்த்கத தோஷம் தட்டாமல் –
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன-கேசி ஹந்தா கிருஷ்ணன் விஷயமாக
தூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே-தூய ஆயிரம் -இந்த பத்தால் தூய்மை -இதுவே தூய்மை -அவதார சரித்திர பிரகாசகம்
அநந்ய பிரயோஜன பக்தி உக்தர் ஆவார் -குற்றம் இல்லாமல்

எல்லா உலகங்கட்கும் நாயகனாய், எல்லா உலகங்களையும் பிரளயகாலத்தில் தன் வயிற்றினுள் வைத்துப் பிரளயம் நீங்கினவுடனே அவற்றை
உமிழ்ந்தவனாய், சராசரங்கள் அனைத்துமாய், அவற்றின் தோஷங்கள் ஒன்றும் தன்பக்கல் தட்டாதவனுமாய் இருக்கின்ற கண்ணபிரானுடைய
திருவடிகளின்மேலே, திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட பரிசுத்தமான ஆயிரம் திருப்பாசுரங்களுள்
இந்தப் பத்துத் திருப்பாசுரங்களால் குற்றமின்றிப் பக்தர் ஆவார்கள்.
வாயகம் – வாயிடம். புகவைத்தல் – செலுத்தல்; உண்டு என்றபடி, தூய – பரிசுத்தமான. துவள் – குற்றம்.

முடிவில், கிருஷ்ணனுடைய செயல்களைப் பேசின இப்பத்தும் கற்றார், தம்மைப் போன்றே கிருஷ்ணபக்தராவர் என்கிறார்.

முழு ஏழ் உலகுக்கும் நாயகன் ஆய் –
சேதந அசேதநங்கள் எல்லாவற்றையும் நியமிக்கின்றவனாய்.
முழு ஏழ் உலகும் தன்வாயகம் புக வைத்து உமிழ்ந்து –
பிரளயாபத்தில் திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்து, உள்ளிருந்து நெருக்குப் படாமல் வெளிநாடு காணப் புறப்பட விட்டு.
அவையாய் –
எல்லாப் பொருள்களும் ‘தான்’ என்கிற சொல்லிலே அடங்கும்படி அவற்றைப் பிரகாரதயா சரீரமாகவுடையனாய் –
புஷ்பம் மணம்-மாம்பழ ரசம் -பிரகாரம் -சரீரங்கள் எல்லாம் பிரகாரம் -பிரகாரம் எல்லாம் சரீரம் ஆகாதே
அவை அல்லனுமாய் –
இப்படி இருக்கச்செய்தே அவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாதவனாயிருக்கின்ற.
கேசவன் அடியிணைமிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
கேசி என்னும் அசுரனைக்கொன்ற சர்வேசுவரன் திருவடிகளிலே.
“மேல் திருவாய் மொழியிற் சொன்ன சர்வேசுவரத்வத்தையும், -இத்திருவாய்மொழியிலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணனுடைய
அவதாரத்தையும் அநுபாஷித்துத் தலைக்கட்டுகிறது” என்று சொல்லுவர்.–நாயகன் —6-3 சுருக்கம் -கேசவன் -6-4- சுருக்கம்-
அன்றிக்கே, எல்லா உலகங்கட்கும் காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,

கிருஷ்ணாவதாரத்தைச் சொல்லுகிற இத்திருவாய்மொழியில், சர்வேசுவரனாந்தன்மையைச் சொல்லுவான் என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘மேல் திருவாய்மொழியில்’ என்று தொடங்கி. என்றது, ‘நாயகன் முழுவேழ்உலகுக்குமாய்” என்றது முதல் “அவையல்லனுமாய்” என்றது முடிய,
“நல்குரவும்” என்ற திருவாய்மொழியிற் கூறிய சர்வேசுவரத்தையும், “கேசவன்” என்றதனால், இந்தத் திருவாய்மொழியிற் கூறிய
கிருஷ்ணனுடைய செயல்களையும் அநுவதித்துத் தலைக்கட்டுகிறார்என்றபடி. மேலதற்கே, வேறும் ஒருவகையில் விடை அருளிச்செய்கிறார்
‘எல்லா வுலகங்கட்கும்’ என்று தொடங்கி. என்றது, உலகத்தைப் படைத்தல்கா த்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்கிறவன்
கண்ணபிரானே என்று சொல்லுகையாலே, இத்திருவாய்மொழியிற் கூறிய கிருஷ்ணன் செயல்களையே, இப்பாசுரத்திலே அநுபாஷித்துத்
தலைக்கட்டுகிறார் என்றபடி. ‘கிருஷ்ணவிஷயமே சொல்லுகிறது’ என்றது, இப்பாசுரம் முழுதும், கிருஷ்ணனுடைய செயல்களையே கூறுகிறது என்றபடி.

“க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய: க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்”
என்பது, மஹாபாரதம் சபாபர். 38 : 23.

தூய ஆயிரத்து இப்பத்தால் துவள் இன்றிப் பத்தர் ஆவர் –
இப்பத்தினையும் கற்றவர்கள் ஆழ்வாரைப் போலே ஆவர்.
இப்பத்தினை யுடைத்தாகையாலே தூய்மையையுடைத்தான ஆயிரம் என்னுதல்;
அன்றிக்கே, ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு, கிருஷ்ணனுடைய செயல்களைச் சொல்லுகையாலே தூய்மையை யுடைத்தான இப்பத்து என்னுதல்.
துவள் இன்றியே பத்தர் ஆவர் – துவள் – குற்றம்.
குற்றம் இல்லாமையாவது, வேறு அவதாரங்களில் போகாமல் கிருஷ்ணனுடைய செயல்களிலே தாழ்தல்.

——————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆனந்த ஸீதலித வாக் அநுஸந்தேஸ்ய
ஆதாரேனே
கிருஷ்ண்ச்ய வீரிய சரித்ரான்
அஹம் ஆதாரேனே -ஸந்கல்பித்து
இத்தம்
புரா ஸ்வயம் அபேஷிதாவான்
முனி
தல் லப்த்வா
சமோஸ்தி

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ராஸக் கிரீடாதி க்ருத்யை
விவித முரளிகா வாதனை
மல்ல பங்கை
கோபீ பந்தார்க பாவாத்
விரஜ ஜனன முகைகி
கம்ஸ தைத்யாதி பங்ககைகி
பிராதிர் பாவை விஹிநேஷூ
அசுர புஜ வன சேதம் முக்யையி
மநோ ஹாரி சேஷ்டித்ங்கள்-பிரகாஸிப்பித்து

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 54-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிகில திவ்ய சேஷ்டிதங்களை அனுபவித்து
அருளிச் செய்த படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மாசறு சோதி
மானேய் நோக்கு
பிறந்தவாறு-என்கிற திருவாய் மொழிகளிலே
சேணுயர் வானத்து இருக்கும் –
நாராயணன் நாமங்களே தொல் அருள் நல் வினையால் சொலக் கூடும் கோல் –
உருக்கி உண்டிடுகின்ற உன் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய்–என்று
தூரஸ்தன் என்றும்
நா நீர வரத் திரு நாமம் சொல்லக் கூடவற்றே -என்றும்
தரித்து நின்று குண அனுபவம் பண்ண வல்லேனாம் படி பண்ண வேண்டும் என்றும்
தாம் ஆசைப் பட்ட வகைகள் எல்லாம் சித்திக்கும் படி தான் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திரு வவதரித்து
செய்து அருளின நிகில சேஷ்டிதங்களையும்-தத் ஹேதுவான திவ்ய குணங்களையும்
அனுபவ விஷயமாக காட்டிக் கொடுக்க-அவற்றைக் கட்டடங்க தரித்து நின்று மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற குரவை ஆய்ச்சியில் அர்த்தத்தை
குரவை முதலாம் இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————-

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே துவள் —54-

———————————————————

வியாக்யானம்–

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் –
அதாவது –
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் -என்றும்
கேயத் தீங்குழல் ஊதிற்றும் -என்றும்
நிகரில் மல்லரைச் செற்றதும் -என்றும்
நோவ ஆய்ச்சி உரலொடு ஆர்க்க இரங்கிற்றும் -என்றும்
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் -என்றும்
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் -என்றும்
மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில்தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டதும் -என்றும்
நீணிலத் தொடுவான் வியப்ப நிறை பெரும் போர்கல் செய்து வாணனை ஆயிரம் தோள் துணித்ததும் -என்றும்
கலக்க ஏழ் கடல் ஏழ் மலை உலகு ஏழும் கழியக் கடாயுலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் -என்றும்
மண் மிசை பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாய பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்தது
முதலாக எல்லா வற்றையும் நினைக்கிறது
குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் -என்று

முந்துற குரவை முதலாகக் காட்டினது திருக் குரவையில்
ஆரவாரத்தை அனுபவித்து தரிக்கைக்காக –
வேண்டித் தேவர் இரக்க -வந்து பிறந்த வ்ருத்தாந்தத்தை
முந்துற முன்னம் காட்டாது ஒழிந்தது
பிறந்த வாற்றில் ஆழம் கால் பட்டு ஆறு மாசம் மோஹித்தால் போலே மோஹிப்பர் -என்று –

கண்ணன் கோலச் செயல்கள் –
ஸ்ரீ வால்மீகி -காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம்-என்று ஸ்ரீ ரகுவர சரித்ரத்தையே
முழுதும் அனுபவித்தால் போலே
இவரும் ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிகில -சேஷ்டிதங்களை அனுபவித்த படி –
ஸ்ரீ தேவக் கோலப் பிரான் -செய்கை -இறே-

இரவு பகல் என்னாமல் –
ராத்திரி பகல் என்னாமல்-கால நியதி இன்றிக்கே

என்றும் பரவு மனம் பெற்றேன் என்றே களித்துப் பேசும் –
சர்வ காலத்திலும் ஸ்துதிக்கும் படியான-மனசைப் பெற்றேன் என்று ஹர்ஷ பாரவச்யத்தாலே கர்வித்துப் பேசும் –
அதாவது
மாய வினைகளையே அலற்றி இரவும் நன் பகலும் தவிர்கிலம் என்ன குறை எனக்கே -என்றும்
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே -என்றும்
நுகர வைகல் வைக்கப் பெற்றேன் எனக்கு இனி நோவதுவே -என்றும்
மேவக் காலங்கள் கூடின எனக்கு என் இனி வேண்டுவதே -என்றும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உள்ளதே -என்றும்
பகல் இராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப்பரிப்பே -என்றும்
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே -என்றும்
என் அப்பன் தன் மாயங்களே காணு நெஞ்சுடையேன் இனி என்ன கலக்கம் உண்டே -என்றும்
மால் வண்ணனை மலைக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே -என்றும்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே -என்றும்–பேசின இவை -என்கை –

உருகாமல் தரித்ததும்-நண்ணி வணங்கப் பலித்தவாறே என்று இறே ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது-

களித்துப் பேசும் பராங்குசன் தன் –
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவையுடை மால் வண்ணனை மலைக்கு நா யுடையேன் -என்கையாலே
சர்வ ஸ்மாத் பரனை வசீகரிக்கும் அங்குசமாய் யுள்ளவர் என்கிறதைப் பற்றச் சொல்கிறது –
கவீசம் சக்ர ஹஸ்தேப சக்ரம் -என்றது இறே
ஸ்ரீ திரு நா வீறுடைய பிரான் தாசர் குமாரர் ஆகையாலே அடி அறிந்து ஸ்ரீ பராங்குசன் -என்கிறார் –

பராங்குசன் தன் சொல் தேனில் நெஞ்சே துவள் –
வால்மீகேர்வாத நாரவிந்த களிதம் ராமாணாக்யம் மது -என்றும்
ஸூ கமுகாதம்ருதத்ரவசம் யுதம்பிபாத பாகவதம் ரசம் -என்றும் சொல்லுமா போலே-
அமுத மென்மொழி யாகையாலும்- தேனே இன்னமுதே -என்று பேசப் படுமவன் விஷயம் ஆகையாலும்
தேன் போலே இனிதாய் இறே இத் திருவாய்மொழி தான் இருப்பது

மனசே
அல்ப சாரமானவற்றில் புக்கு அலமாவாதே-சார க்ராஹியாய்-சார தமமான இதில் சக்தமாய்ப் போரு
என் நெஞ்சம் என் பொன் வண்டு -என்னக் கடவது இறே-

———————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: