பகவத் விஷயம் காலஷேபம் -131- திருவாய்மொழி – -6-4–1….6-4–5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

இத்திருவாய்மொழியில் ஆழ்வார் ஸ்ரீ வால்மீகி பகவானோடு ஒப்பர்.
அவனும் இராமாவதாரமல்லது போக்கி அறியான்; அவனுடைய பிரபந்தமும் அப்படியே.
இவரும் கிருஷ்ணாவதாரம் அல்லது அறியார்;
இத் திருவாய்மொழி கிருஷ்ணனுடைய சரிதை ஒழிய வேறு ஒன்றைச் சொல்லாது.
அன்றிருக்கே, “சூரனே! என் எண்ணமானது வேறு இடத்தில் செல்வது இல்லை” என்று கொண்டு
‘பரநிலையும் கூட வேண்டேன்’ –
“ஸநேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி”- என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.
என்ற திருவடியைப் போலே யாயிற்று இவரும் கிருஷ்ணாவதாரம் ஒழிய வேறு ஒன்று அறியாதபடி என்னுதல்.
“சேணுயர் வானத்திருக்கும் தேவபிரான்” -5-3-என்கிறபடியே, கிட்டி நின்று அநுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு தீர,
பூமியிலே ஆகப் பெற்றது;-அவதரித்து என்றபடி –
“தொல்லருள் நல்வினையால் சொலக்கூடுங்கொல்?” -5-9-10-என்றே யன்றோ இவர் ஆசைப்பட்டது.
அதாவது, நா நீர் வந்து திருநாமம் சொல்லுகையாகிறது புண்ணியத்தின் பலமே அன்றோ.
“பிறந்தவாறும்”-5-10- என்ற திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான இழவு எல்லாம் தீரும்படி ஸ்ரீ பிருந்தாவனத்தில் நடந்த
செயல்களைக் காட்டிக் கொடுக்கக் கண்டு, அவை இறந்தகாலத்தில் நடந்த செயல்கள் போலத் தோற்றுகை அன்றிக்கே,
சமகாலத்தில் நடக்கும் செயல்போலே தோற்றக் கிட்டி நின்று அனுபவிக்கிறார்.

“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, ‘அல்லோம்’ என்று அகன்று முடிந்து போகப் புக்க தம்மை
‘ஆவோம்’ என்னச் செய்து சேரவிட்டுக் கொண்டபடியை நினைத்து,
இப்படி வல்லார் இவன் அல்லது இலர்கண்டீர் என்று தலைக்கட்டுகிறாராயிருக்கிறது.
“சன்மம் பலபல” என்ற திருவாய்மொழியிலும் இப்படி இருப்பது ஓர் உவகை உண்டே;
அதற்கும் இதற்கும் வாசி என்? என்னில்,
அங்கு, இதர வியாவிருத்தி மாத்திரத்தால் உண்டான ஞான லாபத்தால் உண்டான உவகை;
இங்கு, அவன், தன் குணங்களை நேரே இவரை நெருங்கி அநுபவிப்பிக்க,
தம்வசப்பட்டவர் அல்லாதபடி அநுபவித்து உவகையராய் வாய்விடுகிறார்.

3-10-அவதார சேஷ்டிதங்கள் சன்மம் பல
5-10 பிறந்தவாறும்
6-2/6-4- நேரே சங்கதி -6-3- பிராசங்கிகம்-சேர மாட்டேன் என்றவரை சேர்த்த வ்ருத்த கடநா சாமர்த்தியம் இடைச் சேர்க்கை
4-10-/5-2—நேரே சங்கதி –5-1- போலே – உபகார பரம்பரை சொல்லி அருளியது போலே –
சேஷத்வம் பாரதந்த்ர்யம் மறந்து -இருப்பதே ஆழ்வார் தம் வசம் இல்லை -எனக்கு நிகர் யார் -ஸ்வாதந்த்ர்யம் தோன்ற அருளிச் செய்கிறார்
கிருஷ்ணானுபவம் இப்படி பண்ண வைக்கிறதே –

————————————————————————————————————

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

அவதார கந்தம் -அநந்த சாயித்வம் -உடைய -கிருஷ்ணன் உடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை ப்ரீதி ப்ரேரிதராய் -அவிச்சின்னமாகப் பெற்றோமே
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்-திருக்குரவையில் -வகை மாலை போலே இடை இடையே தன்னைக் கலந்தும் –
முகம் அறிந்து பொன் கோத்தால் போலே -ரசத்துக்கு இடையூறு -மழையை தடுக்க -அநாயாசேன
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல-முதிர்ந்த நீர் -முனிந்து நியமித்த பிரகாரம் -காய்ச்சின வேந்தன் -மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி-நாக பர்யங்க உத்ஸ்ருஷ்ஜ்ய -க்யாகதோம் மதுராம் புரிம் -அவதாரார்தமாக பள்ளி கொண்ட —
கிருஷ்ணன் உடைய ஆச்சர்யமான சேஷ்டிதங்களை ப்ரீதி பரவசனாகக் கொண்டு
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே-இரவும் பகலும் வாசி இல்லாமல் -மத்யம மணி நியாயம் நல் இரவு நல் பகல்
-குண கதனத்துக்கு உறுப்பான நன்மை
அனுபாவ்ய சங்கோசம் இல்லாத குறை இல்லையே –
அனுபவ விச்சேத குறையும் இல்லை –
காலத்தாலும் குறை இல்லை –
தவிர்கிலம் -பன்மை பாட பேதம்

ஆய்ச்சியரோடு குரவைக்கூத்தினைக்கோத்து விளையாடியதும், கோவர்த்தனம் என்னும் மலையை ஏந்திக் குடையாகப் பிடித்ததும்,
வலிய தண்ணீரையுடைய பொய்கையிலே கிடந்த காளிங்கன் என்னும்பாம்பினை ஓட்டினதும், இவை முதலான மற்றும் பலவான,
ஆதிசேட சயனத்தையுடைய பெருமானது ஆச்சரியமான செயல்களையே சொல்லிக் கொண்டு
நல்ல இராப்பொழுதும் நல்ல பகற்பொழுதும் தவிரேன்; எனக்கு வேறு என்ன குறை உளது?
மற்றும் பல மாய வினைகளை என்று கூட்டுக. அலற்றித் தவிர்கிலன் என்க.
இத் திருவாய்மொழி, அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்.

பகலும் இரவும் கிருஷ்ணனுடைய குணங்களைப் பிரீதி முன்னாக அநுபவிக்கப் பெற்ற எனக்கு,
இனி ஒரு குறை இல்லை என்கிறார்.

ஆய்ச்சியரோடு குரவை கோத்ததும்-
“பிறந்தவாறும்” என்றாற்போலே தொடங்கி ஓர் அவதாரம் முன்னாக இழியாமல், இதிலே இழிவான் என்? என்னில்,
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் உண்டான தம்முடைய பிரணய ரோஷத்தினைப் போக்கித் தம்மைச் சேரவிட்டுக் கொண்டபடி,
திருக்குரவைக் கூத்தில் பெண்களோடே கலந்து அவர்களை அநுபவிப்பித்தாற் போலே இருக்கையாலே,
அது முன்னாகப் பேசுகிறார்.
அன்றிக்கே, நாம் அநுசந்திக்கில் அன்றோ ஓர் அடைவாக இழிவது!
அவன் அநுபவிப்பித்தபடியே பேசுகிறாராகையாலே திருக் குரவைக்கூத்தினை முதல் முன்னம் பேசுகிறார் என்னுதல்,
திருக்குரவையில் பெண்களோடு உண்டான கலவியையாயிற்று இவர்க்கு முதலிலே காட்டிக் கொடுத்தது.
ஐந்து லக்ஷம் குடிகளிலுள்ள பெண்கள் எல்லாரோடும் கலந்த பிரீதி உண்டாயிற்று, இவர் ஒருவரோடு கலந்து பிரீதி.
தன் செல்லாமையாலே ஆயர் பெண்களுடைய மாலையிலே தன்னைமுதன்மை இல்லாதவனாகச் செய்து கொண்டு கோத்ததும்.
“குரவை பிணைந்த குழகும்” என்று ஆசைப்பட்டபடியே அநுபவிக்கிறார்.
பெண்களுடைய மாலையிலே இடையீடாகத் தன்னைக் கோக்கிறபோது, ‘விஜாதீயன் ஒருவன் கலந்தான்’ என்று தோற்றாதபடி
அவர்களோடே ஒரு நீராகக் கலந்தபடி. -ஒரு காதில் குண்டலம் தோடு சாத்திக் கொண்டு நீராக கலந்தானே –
பெண்களும் பெண்களும் அல்லவோ கைகளைக்கோத்து விளையாடுவார்.
திருக்குரவையில் இவனை ஒழியப் பெண்களுக்குச் செல்லாததுபோலே காணும் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில்,
ஆழ்வாரை ஒழிய இவனுக்குச் செல்லாமை விளைந்தபடி,
கோக்கை – தொடுத்தல். கை கோத்துக் கொண்டு ஆடும் கூத்து அன்றோ, குரவைக் கூத்து ஆகிறது.

குன்றம் ஒன்று ஏந்தியதும் –
சுவர்க்கம் என்று கொண்டு ஒரு போக பூமியாய், அங்கே தேவமாதர்களோடே கழகம் இருந்து
புண்ணியத்தின் பலத்தை அநுபவம் பண்ணி மிக்க சுகத்தோடு இருப்பான் இந்திரன் ஒருவன் உளன் அன்றோ;
அந்த அநுபவத்தைப் பூமியிலே ஒரு பருவத்திற் பெண்களோடேகூடப் பூர்ணமாக அநுபவித்திருக்கிற இருப்பைக் கண்டு
அது பொறுக்கமாட்டாமையால் பொறாமை மிக்கு, ‘நமக்கு இட்ட சோற்றை உண்டான்’ என்று ஒரு வியாஜமாகக் கல்மழையைப் பெய்வித்தான்;
அப்போது கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்துத் தரித்துக்கொண்டு நின்றபடி.
ஒருவன் இங்கே ஒருநாள் மூக்குப் புதைக்குங் காட்டில் ‘நம்முடைய போகம் பகுந்து போகப் புகாநின்றது’ என்று அஞ்சி
அவரை உவரை வரவிட்டுக் கலக்குமவன் அன்றோ.
‘இப்படி அநுபவிக்கிறான் சர்வேசுவரன்’ என்று அறியான் அன்றோ;
இவன், தன்னை மனித சஜாதீயன் ஆக்கிக்கொண்டு இருக்கையாலே.
அன்றைய தினத்தில் கல்மழையில் பசுக்களுக்கும் இடையர்க்கும் வந்த ஆபத்தைத் தீர்த்தாற்போலே யாகாதே,
இவர்க்கும் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் வந்த ஆபத்தைத் தீர்த்தபடியும்.
ஏந்தியதும்-
பிறர்பொருட்டு ஆகையாலே கைக்கு ஓர் ஆபரணம் போலே ஆயிற்று.
அது தான் வருத்தமற்று இருந்தபடி. பூ ஏந்தினாற் போலே இருந்தது.
ஏழு வயதிலே ஏழுநாள் ஒருபடிப்பட தரித்துக்கொண்டு அன்றோ நின்றது!
‘இப்படி ஏழு வயதிலே ஏழு நாள் தரித்ததற்கு என் செய்வோம் நாம்’ என்று ஒருவர் நெஞ்சாறல் படாதபடி
சகோத்திரியாய் நின்றே அன்றோ இவன் இவற்றை ரக்ஷித்தது.

உரவு நீர்-
தறை காண ஒண்ணாமையால் உண்டான ஆழத்தையுடைத்தான மிடுக்கையுடைய நீர் என்னுதல்.
அன்றியே, காளியனுடைய விஷத்தால் ஒருவர்க்கும் கிட்ட ஒண்ணாத வலியையுடைய நீர் என்னுதல்.
அன்றிக்கே, முதுநீர் ஆகையாலே வலிய நீர் என்னுதல். .உரவு -ஆழம் -விஷம்
நாகம் காய்ந்ததும் –
நாகத்தை ஓட்டியதும்.
பாம்பு அடித்து மேலிட்டுக் காணும் பெண்களோடே ஜலக்கிரீடை பண்ணிற்று.
உள்பட மற்றும் பல –
இவை முதலான செயல்களுக்கு ஓர் எண் இல்லை.
“பிறந்தவாறும்” என்ற திருவாய்மொழியில், வலிமைக் குறைவாலே சொல்ல மாட்டிற்றிலர்;
இங்கு, உகப்புத்தலை மண்டையிட்டுச் சொல்ல மாட்டுகிறிலர்.
மற்றும், இப்படிப் பெண்களுடைய கலவிக்குத் தண்ணீர்த்துரும்பு அறுத்தவை பலவாம்.

அரவில் பள்ளிப் பிரான் –
நாட்டார் உறக்கம், தமோ குணத்தால் மறைக்கப்பட்டதாய்த் தங்கள் பொருட்டேயாய் இருக்கும்;
இவன் உறக்கம் பிறருடைய ரக்ஷணத்தின் பொருட்டு இருக்கும்.
உறங்குவான்போல் யோகு செய்த பெருமான் அல்லனோ.-திருவாய். 5. 4 : 11.–
உறங்கினானாகில் பிறருடைய ரக்ஷணத்துக்கு உடலாயிருக்கும்; உணர்ந்திருந்தானாகிலும் அப்படியே; இது என்ன உபகாரந்தான்!
அரவில் பள்ளிப்பிரான் –
மேலே, ஒரு பாம்போடு உண்டான சேராமை சொல்லிற்று; இங்கு, ஒரு பாம்போடு உண்டான சேர்த்தி சொல்லுகிறது.
அங்கு, போகத்தைக் காற்கடைக் கொண்டமை சொல்லிற்று; இங்கு, போகப் பிராவண்யம் சொல்லுகிறது. போகம் -பாம்பு -இனிமை
பிரதிகூலனான காளியனைப் பறக்க ஓட்டினான்; அநுகூலனானவனைப் படுக்கையாகக் கொண்டான்.
இவன்தான் -அநந்த முகமாக -பலபல முகமாக அநுகூலிக்கும்; அவனும்-அநந்த முகமாக – பலபல முகமாக அடிமை கொள்ளும்.
ஆயிரம் பைந்தலை அனந்தன் அல்லனோ.-பெரியாழ்வார் திருமொழி, 4. 3 : 10.
அரவில் பள்ளிப் பிரான் –
அவதாரங்களுக்கு அடி திருப்பாற் கடலாகையாலே அதனைச் சொல்லுதல்;
அன்றியே, “நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்” –திருவாய். 5. 10 : 11.என்றதனை நினைக்கிறாராதல்.
தன்மாய வினைகளையே அலற்றி –
அவனுடைய ஆச்சரியமான செயல்களையே வாய்விட்டுத் துதிசெய்து. இரவும் நன்பகலும் தவிர்கிலன்-
பகவானுடைய அநுபவத்திற்கு உறுப்பாகாத அன்றே அன்றோ
சுடர்கொள் இராப் பகலாக இருப்பது; – திருவாய். 2. 1 : 4.-அநுபவத்திற்குத் தக்கதான காலமாகையாலே, நல்ல இரவும் நல்ல பகலும் என்கிறார்.
பிரிந்த காலத்திலே அன்றோ நெருப்பை உருக்கி ஏறட்டினாற் போலே இருப்பது,
என்ன குறைவு எனக்கே –
“அங்குக் காலம் பிரபுவாய் இல்லை” என்றுகொண்டு பகலும் இரவும் நடையாடாதது ஒரு தேசவிசேடம் தேடி
அநுபவிக்கைக்குப் பட்டைப் பொதிசோறு கட்ட வேண்டும்படி குறைவாளனாயிருந்தேனோ?
ஒரே தன்மையதான அநுபவம் அன்றோ அங்கு உள்ளது;
“காலம் ஸபசதே தத்ர ந கால: தத்ரவை ப்ரபு:” என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. பட்டைப்பொதி சோறு – பாக்குப் பட்டையில் கட்டுகிற சோறு.
பல இருதுக்களில் விளையாடினார்” –“விஜஹார பஹூந் ருதூந்”- என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 25. என்கிறபடியே,
அந்த அந்தக் காலங்கள் தோறும் உண்டான அநுபவ விசேடங்களை அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு குறை உண்டோ?
அன்றிக்கே, பரத்துவ அநுபவமே அன்றோ அங்கு உள்ளது;
சீலகுண அநுபவமுள்ளது இங்கே அன்றோ. ஆதலின் “என்ன குறைவு எனக்கே” என்கிறார் என்னுதல்.

————————————————————————————————–

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–6-4-2-

ஆச்சர்யமான ஆகாரம் -நினைத்தார் நெஞ்சம் நெகிழப் பண்ணும் -அன்பு கனிவு ஆசை ச்நேஹம் –
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்-பெண்கள் நெஞ்சை -கானம் -கேயம் -வசீகரித்து -தாழ்ச்சி தோற்றிய
-மூங்கில் -இனிதாம் படி -அக்குழல் வழியே பெண்கள் பசுக்கள் வர –
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல-நப்பின்னை சம்ச்லேஷித்த இதுவும் -பக ஹிருத்யமாய்
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து-ஆச்சர்ய ரூபம் -கிருஷ்ணன் அனுபாவ்ய சேஷ்டிதங்கள் -குண அனுபவம் பண்ணி
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே-ஒப்பிலா அப்பன் -முன் பரமபதம் தான் ஒப்போ –

வேய்ங்குழலிலே இனிய பாட்டுக்களை வைத்து ஊதியதும் பசுக்களை மேய்த்ததும், கெண்டைமீன் போன்ற பிரகாசம் பொருந்திய
கண்களையும் வாசனைபொருந்திய பூக்களை யணிந்த கூந்தலையுமுடைய நப்பின்னைப் பிராட்டியினுடைய தோள்களைக் கூடியதும்,
மற்றும் பலவான, அழகிய மாயப்பிரானுடைய செயல்களை நினைந்து மனம் குழைய அன்போடு காலங்கள் கழிகின்றன;
ஆதலால் எனக்கு எந்த உலகம்தான் ஒப்பாகும்.
மற்றும் பல செய்கை என்க. நினைந்து மனம் குழைந்து போது நேயத்தோடு கழிந்த என்க. குழைந்து – குழைய; எச்சத்திரிபு. கேயம் – பாட்டு.
கழிந்த – கழிகின்றன; காலமயக்கம். மாற்றிக் கூட்டாமல், கழிந்தபோது – கழிந்த காலத்தில் என நேரே பொருள் கூறலுமாம். உலகம் : ஆகுபெயர்.

“தொல்லருள் நல்வினையால் சொலக் கூடுங்கொல்” என்று பிரார்த்தித்த படியே பெறுகையாலே,
திருநாட்டிலேதான் என்னோடு ஒப்பார் உளரோ? என்கிறார்.

கேயம் தீம்குழல் ஊதிற்றும் –
தான் நினைத்த பெண்களுடைய பெயரை வைத்துப் புணர்த்துச் சுவைப் பாட்டாக வைத்து ஊதிற்றும்.
கேயம் – பாட்டு. தீம் – இனிமை. இனிமையையுடைய பாட்டு என்றபடி.
நிரை மேய்த்ததும் – இதுக்கும் பசுமேய்க்கைக்கும் ஒன்றே பரிகரம்.
குழலை ஊதவே பசுக்கள் வயிறு நிறையும்.
சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில் கைவந்திருக்குமாறுபோலே யாயிற்று, கிருஷ்ணனுக்குக் குழல் கைவந்திருக்கும்படி.
வேற வியாபாரம் இல்லையே கிருஷ்ணனுக்கு -குழல் வைத்தே சம்ச்லேஷம் -கோதண்டம் வைத்து பெருமாள் வியாபரிப்பது போலே
இது வைஸ்ய வர்ண தர்மம் -அது ஷத்ரியன் வர்ண தர்மம்-
கெண்டை ஒண் கண்வாசம் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் –
கரனைக் கொன்ற அன்று, பிராட்டி “கணவனை ஆலிங்கனம் செய்தாள்”
–“தம் த்ருஷ்டவா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்
பபூவ ஹ்ருக்ஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.
என்னும்படி அணைத்தாற் போலே யாயிற்று,
பசுமேய்த்து வந்த சிரமம் எல்லாம் போகும்படி நப்பின்னைப் பிராட்டி இளமை பொருந்திய அழகிய திருக்கண்களாலே
குளிர நோக்கி அழகிய திருக்குழலின் பரிமளத்தாலே திருமேனியை வாசனையுடைய தாம்படி ஆக்கித் தன் தோள்களோடே அணைத்ததுவும்.
கெண்டை ஒண்கண் –
கெண்டை போலே மிக இளமையினையுடையனவாய், அமிருதத்தைப் பெய்தாற்போலே குளிர நோக்குகிற திருக்கண்கள்.
வாசம் பூங் குழல் –
வாசம் செய் பூங்குழலிற் காட்டிலும் –திருவாய். 10. 10 : 2.-பொலிவை யுடைத்தான தன்னே்ற்றமுடைய குழலையுடையவள்.
வாசப் பூம் குழல் வாசனையே இவளது குழல் -கந்தம் கமழும் குழலி
பின்னை தோள்கள் மணந்ததும் –
அவளுடைய தோள்களுடனே கலந்ததுவும். மணத்தல் – கலத்தல்.
“தோளி” –இது, திருவாய். 4. 2 : 5.-என்கிறபடியே, இவளுக்கு அழகு கை விஞ்சி யிருக்குமே.

பெண்களை அழைக்கைக் மற்றும் பல-
மற்றைப் பிராட்டிமாரோடு கலந்தபடி.
சக்கரவர்த்தித் திருமகனுக்கு அத்யயநம், ஆசாரிய சேவை, அஸ்திர சாஸ்திரப் பயிற்சிகள் உண்டாமாறுபோலே,
இவனுக்கு, எல்லாம் இவையே அல்லவோ.
மாயம் கோலம் பிரான்-
நப்பின்னைப் பிராட்டியோடே கலந்த ஒற்று மஞ்சளும் தானுமான மிக்க ஆச்சரியமான ஒப்பனையுடைய உபகாரகன்.
அன்றிக்கே, நப்பின்னைப் பிராட்டியோடு கலந்தாற் போலே,
அல்லாத பிராட்டிமார் “கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள்,
தங்குமேல் என் ஆவி தங்கும்” –நாய்ச்சியார் திருமொழி, 8 : 7.என்று இருக்குமவர்களுடைய
திருமுலைத்தடத்தில் குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாய் நின்ற அழகினைச் சொல்லவுமாம்.
தன் செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது –
அவன் செயல்களை நினைத்தவாறே நெஞ்சு தன்வசம் இன்றி அழியும்படி.
“நினைதொறும், நெஞ்சு இடிந்துகும்” –. 9. 6 : 2.என்றே அன்றோ இருப்பது.
நேயத்தோடு கழிந்தபோது –
நினைக்கப்படுகின்ற பொருளினுடைய இனிமையாலே நினைவு தான் இனிதாய்க் கழிந்தபோது. நேயம் – நேசம்.
எனக்கு எவ்வுலகம் நிகர் –
ஒரு தேச விசேடத்தில்தான் எனக்கு ஒப்பாவார் உளரோ?
அநுபவ வேளை போலே நினைக்கின்ற காலத்திலும் இனிமையோடே செல்லக்கடவதானால் எனக்கு எங்கே ஒப்பு?
ஆகாசவாயர் எனக்கு எதிரோ!
வாய் – இடம். பரமாகாசம் என்கிற பரமபதமாகிற இடத்திலுள்ளார்தாம் எனக்கு ஒப்பாரோ!!
உலகம் என்பது, உயர்ந்தோராகையாலே நித்திய சூரிகள் என்றபடி.
பிரார்த்தித படி பெற்றதால் பரம பதத்திலும் சமம் தனக்கு இல்லை என்கிறார்-

————————————————————————————-

நிகரில் மல்லரைச்செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே?–6-4-3-

நிரதிசய ஔஜ்வல்யன் -நித்ய அனுபாவ்யமான சேஷ்டிதங்களை -அனுபவிக்க காலம் பெருகப் பெற்றேன் -இனி எதுக்கு நோவு பட வேண்டும்
நிகரில் மல்லரைச்செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்-பிருந்தாவன பண்டிதர் -தாண்டவம் தயிர் கடையும் ஓசையாலே –
10 வயசில் மதுரை வந்து -மல்லர்களை -கோகுலம் -ஆநிரை -மேய்த்து -தப்பாக கணிசிக்க ஆகாரம்
சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்-நீண்ட தும்பிக்கை -நீள் நெடும் கை -மலை போன்ற பெருத்த குவலையா பீடம்
-மா ஆகாரத்து சிறப்பு –அனுபாவ்யமான பல
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்-தேஜோ மய–நினைந்து அடைவு கெட பேசி
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே?-நீண்ட -பொழுது -கழிந்த பொழுது -மிகவும் நெடுக -இனி எதற்காக நோவு
அனுபாவ்ய காலம் இல்லாமல் நோவுகிறேனோ
அனுபவ சரசம் இல்லாமல் நோவுகிறேனோ

ஒப்பு இல்லாத மல்லர்களைக் கொன்றதும், பசுக்களை மேய்த்ததும், நீண்ட நெடிய கையையுடைய மலைபோன்ற பெரிய குவலயாபீடம்
என்னும் யானையைக் கொன்றதும், இவற்றைப் போன்றவையும் பிற செயல்களுமான, பேரொளிப்பிழம்பின் மயமான திருமேனியையுடைய
கண்ணபிரானது செயல்களை நினைந்து, புலம்பி என்றும் அநுபவிக்கும்படியாக நாள்கள் கழியப்பெற்றேன்; யான் இனி எதற்கு வருந்தவேண்டும்?
போல்வனவும் பிறவுமான செய்கை என்க. நினைந்து புலம்பி என்றும் நுகர வைகல் வைகப் பெற்றேன் என்க. வைகப்பெற்றேன் – கழியப் பெற்றேன்.

கிருஷ்ணனுடைய செயல்களையே அநுபவித்துக்கொண்டு காலம் போக்கப்பெற்ற எனக்கு
‘இன்னது பெற்றிலேன்’ என்று நோவ வேண்டுவது இல்லை என்கிறார்.

நிகர் இல் மல்லரைச் செற்றதும் –
மிடுக்குக்கு ஒப்பு இன்றிக்கே இருக்கும் மல்லரைச் செற்றதும்.
பால் வெண்ணெய் இவற்றை உண்கையாலே மிருதுத் தன்மையராய் இருப்பார் இரண்டு பிள்ளைகள் அல்லரோ;
மாமிச பக்ஷணங்களாலும் சஸ்திர அஸ்திர சிக்ஷைகளாலும் மலைகள்போலே திண்ணியவான
தோள்களையுடைய மல்லரைப் பொடிபடுத்தினார்கள்;
புழுக்குறித்தது எழுத்தானாற்போலே இங்ஙனே வாய்த்துக்கொண்டு நிற்கக்கண்ட தித்தனைமானத்து
வண்டல் உழ ஓர் எழுத்தின்வடிவுற்ற சீர்மான” என்பது, திருவரங்கத்தந்தாதி.
இல்லையாகில், இளைஞர் சிலருடைய செயல்களாக மாட்டாதே அன்றோ.
“ஒவ்வாத போர் என்று கூறினர்” – “ந ஸமம் யுத்தம் இத்யாஹு:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 103 : 6.–
என்கிறபடியே எல்லாரும் அஞ்சும்படி அன்றோ அற்றைச் செயல்.
‘ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரை’ பெரியாழ்வார் திருமொழி, 4. 2 : 6.-–
தாமாகவே வந்து மேல்விழுந்தால் அன்றோ ‘முடியாது’ என்று வாங்கலாவது?
கம்சனுக்குப் பரதந்திரர்களாய் வருகையாலே இங்குத் தோற்றார்களாகில் அவன் அங்கே தோள்களைக் கழிக்குமாயிற்று;
ஆனபின்பு, ‘கோழைகளாய்க் கொலையுண்பதில் புகழோடே முடிய அமையும்’ என்று மேலிட்டார்கள்.
‘சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன்’ – கூனி சாத்திவிட்ட சாந்து குறியழியாமலே காணும் அவர்களோடு போர்த் தொழில் செய்தது.
மல்லரோடே கூட எல்லா அவயவங்களும் பொருந்தி போர்த் தொழில் செய்ய நிற்கச்செய்தே,
சாத்தின சாந்து குறி அழிந்தது இல்லை காணும்.
கூனி சாத்திவிட்ட உடனே பெண்கள் கண்களாலே இலச்சினை இட்டு விடுகையினாலே இவனால் அழிக்கவும் போகாதே அன்றோ.
இவர்கள் கண்களாலே இலச்சினை இடுகையாவது, அவன் தோள்களிலே சேலும் கயலும் இடுகை அன்றோ.
இவன் மல்லரோடே சேர்ந்து அழித்தானாகிலும், ‘மற்று எங்கேனும் அழித்தான்’ என்றே அன்றோ அவர்கள் இருப்பார்கள்.
இதனை அழித்துப் போனானாகில், பின்பு பெண்கள் கோஷ்டிக்கு ஆளாகானே.
ஏன்று எதிர்ந்து வருகையாவது, பொரக்கடவோம் என்று நெஞ்சிலே துணிந்து வருகை.

நிரை மேய்த்ததும் –
முதற் பிறவிக்கு ஈடாகச் செய்த செயலும். இரண்டாம் பிறவிக்கு ஈடாகச் செய்த செயலும்:
க்ஷத்திரியப் பிறவிக்கு ஈடாம்படி மல்லரோடே போர் செய்தான்; ஆயர் பிறவிக்கு ஈடாம்படி பசுக்களை மேய்த்தான்.
அன்றிக்கே, பசுக்களை மேய்த்த போதை ஆயாச மாகாதே, மல்லரோடு பொருதபோதும் உள்ளது என்னலுமாம். -கோபால வேஷம் —
நீள் நெடும் கைச் சிகரம் மா களிறு அட்டதும் –
மல்லர்க்குத் தப்பிலும் தப்ப ஒண்ணாது கண்டீர் இதற்கு.
தூரப்போய்த் தப்ப ஒண்ணாதபடி கையாலே வளைத்துக் கொள்ளவற்றாயிருத்தலின் ‘நீள் நெடும்கை’ என்கிறது.
‘நெடுங்கை’ என்னாநிற்கச் செய்தே ‘நீள் நெடுங்கை’ என்கிறதன்றோ, அதன் பெருமை இருக்கிறபடி.
ஒரு கை தான் வேண்டுமோ? இது தன்னைக் காணவே அமையுமாதலின் ‘சிகர மா களிறு’ என்கிறது.
“ஆனை மா மலை” –8. 4 : 1.-என்னக் கடவதன்றோ. மலைச் சிகரம் போலே யாயிற்றுப் பெருத்து இருக்கிறபடி. அட்டதும் – முடித்ததும்.
இவை போல்வனவும் பிறவும் –
இவை தொடக்கமான கேசியைக் கொன்ற செயல் முதலானவைகளும்.
புகர் கொள் சோதி –
குவலயாபீடத்தைக் கொன்ற பின்னர் வடிவிற் பிறந்த ஒளிபெற்ற தேஜஸ்ஸு. பிரான் – உபகாரகன்.
“வெயர்வைத் துளிகள் நிறைந்த கிருஷ்ணனுடைய திருமுகமண்டலத்தைத் தோழிகாள் பாருங்கள்”
“ஸக்ய: பஸ்யத கிருஷ்ணஸ்ய முகம்அத்யருணேக்ஷணம்
கஜயுத்த க்ருத ஆயாஸ ஸ்வேதாம்பு கணிகாசிதம்”-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 54
என்னும்படி இருக்குமன்றோ. யானையோடே பொருதாலும் இங்ஙனேயோ வேர்ப்பது?
முலையாகிற மலையோடு பொருததோடு யானையாகிற மலையோடு பொருததோடு வாசி இல்லை காணும் இவனுக்கு.

தன் செய்கை நினைந்து புலம்பி –
உபகாரம் செய்தலையே இயல்பாகவுடையவனுடைய செயல்களை நினைத்து, அது உள்ளடங்காமை புலம்பி.
என்றும் நுகர வைகல் வைகப்பெற்றேன் –
நாடோறும் அநுபவித்துக்கொண்டு, வைகலானது வைகப்பெற்றேன்-வைகல் வைகப்பெற்றேன்-காலமானது கழியப்பெற்றேன். வைகல்-கழிதல்.
அன்றிக்கே, அநுபவிக்கைக்குப் போரும்படி காலமானது நெடுகப்பெற்றேன் என்றுமாம். அப்போது, வைகுதலாவது – நெடுகுகை.
எனக்கு என் இனி நோவதுவே –
‘காலம் நெடுகுவதுகுறுகுவது ஆகாத இடந்தேடி அநுபவிக்கப் பெற்றிலேன்’ என்கிற அதிருப்தியுண்டோ எனக்கு என்கிறார்.
அன்றிக்கே, அவனுக்கு வரும் நோவன்றோ, இவர்க்கு நோவாவது; அது கழியப் பெற்ற தன்றோ என்னுதல்.
இவர் நோவு போக்கும் அவனுக்கு வரும் நோவன்றோ,-சம்சார ரஷண்ம் -பலிக்காததே அவனது நோவு -ரஷிக்க இசைவதே அவன் நோய்க்கு பரிகாரம் –
இவர்க்கு நோவாவது: அது போகவே இவர்க்கு நோவு போயிற்றதாமன்றோ. உயிருக்கு வரும் நோவு உடம்புக்கு வரும் நோவாமன்றோ.

———————————————————————-

நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-

அப்ராக்ருத விக்ரகன் -கிருஷ்ணன்உடைய பால சேஷ்டிதங்கள் அனுபவிக்கைக்கு காலம் கூடப் பெற்றேன்
நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணை–வலிக்கும் படி இறுகக் கட்ட -அதுக்கு ஈடுபட்டு -இரங்கிற்று -வருந்தினான் இல்லை
-பூதனையை சாவப் பாலுண்டதும் ஊர் சகடமிறச் சாடியதும்-அமுது செய்து -அசுர வேசத்துடன் வந்த -கொல்ல எண்ணத்துடன் திருட புத்தி உடன் –
தேவக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனங்குழைந்து-அப்ராக்ருத திவ்ய விக்ரக உக்தன் -மனம் உருகி பொருந்தி
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?-குண அனுபவத்தால் நெருங்கி -காலங்கள் வாய்க்கப் பெற்றதே –
எந்நாள் அந்நாள் -அவன் திருவடி பெற்று அனுபவிப்பதே -இனி வேறே ஒரு அபேஷிதம் இல்லை -நித்ய அனுபவமே புருஷார்த்தம்
குண அனுபவம் -முனிவர்கள் யோகிகள் -அமரர் முனிவர் -கைங்கர்ய குண அனுபவ நிஷ்டர்கள் -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம்

யசோதைப் பிராட்டி நோவும்படி உரலோடு இழுத்துக் கட்ட அச்சத்தால் அழுததும், வஞ்சனை பொருந்திய பூதனையானவள் இறக்கும்படி
பாலினை உண்டதும், ஊர்ந்து வந்த சகடாசுரன் இறக்கும்படி உதைத்ததுமான, அழகிய தேவப்பிரானுடைய செயல்களை நினைந்து
மனம் குழைந்து இச்செயல்களோடே மனம் பொருந்தும்படி காலங்கள் கூடப் பெற்றேன்; இனி, எனக்கு வேண்டுவது என்?
நோவ ஆர்க்க இரங்கிற்று என்க. பெண்ணை : வேற்றுமை மயக்கம். பெண்ணானவள் என்பது பொருள். சாடியதுமான செய்கை என்க.

தன்னை அடைந்தவர்கட்குத் தான் பவ்யனாயிருக்கும் இருப்பிலே பிரதிகூலரை மாய்த்த கிருஷ்ணனை
அநுபவிக்கப்பெற்ற எனக்கு அடையத்தக்கது ஒன்று உண்டோ என்கிறார்.
அவாப்த சமஸ்த காமன் -அடைவதற்கு எனக்கு ஒன்றும் இல்லை -ஆஸ்ரிதர்களுக்கு அடைய வேண்டியது இல்லையே
-கிருஷ்ணன் -ஸ்ரீ ருக்மிணி பிராட்டி பேசிக் கொண்டது

ஆய்ச்சி உரலோடு நோவ ஆர்க்க இரங்கிற்றும் –
சீயர், இத் திருப்பாசுரத்தை இயல் அருளிச்செய்ய புக்கால் “நோவ”என்று அருளிச்செய்யும் அழகு காணும்.
‘நோவ என்கிறார் காணும் ஆழ்வார், தம் திருமேனியிலே கயிறு உறுத்தினாற்போலே.’
ஒரு துவேஷம் உண்டாய்க் கட்டுகிறாள் அல்லளே, சிநேக காரியமான கோபமாகையாலே சிநேகமுள்ள அளவும் இடைநிற்கும் -சத்ருசமாக -அன்றோ கோபமும்.
தாய் எடுத்த சிறுகோலுக்கு -8-3-5-உளைந்து ஓடியன்றோ, விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான்;
வாய்விட்டு அழமாட்டாதது அன்றோ இவரை வருத்துகிறது.
“தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனிமல்கும் தன்மையானை” என்கிறபடியே,
ஒரு மத்தயானையைத் தறியோடே சேர்த்தாற்போலே காணும் இவன் கட்டுண்டு நின்ற நிலை.
ஓர் அபலை கட்டின கட்டு அவிழ்த்துக்கொண்டு போகமாட்டாதே, நின்று அழுகையே இயல்பாய் இருந்தபடி.
“வல்லையாகில் போய்க் காணாய்” என்றாள் அன்றோ.
உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் –
உரலோடே கட்ட இரங்கிற்றும். துரியோதனாதியர்களுடைய கட்டாகில் அன்றோ அறுக்க விரகு சிந்திப்பது.
இரங்கிற்றும் – மானசபீடையை அநுசந்தித்தபடி. இரக்கம் – ஈடுபாடு.

வஞ்சப் பெண்ணைச் சாவப் பால் உண்டதும் –
கெட்டேன்! பேய்த்தாய்பக்கலிலும் அங்ஙன் அருந்தானாகில் என்படக் கடவது தான்?
சூர்ப்பணகியைப் போலே அங்கத்தைக் குறைத்துப் பூசலை விளைப்பியாதே முடித்துவிட்டானாதலின் ‘சாவ’ என்கிறார்.
யசோதைப்பிராட்டியின் முலை உண்ணும்போதும் தான் உயிர்பெற உண்ணுமாறுபோலே காணும்,
இவள் முலை உண்கிறபோதும் தான் உயிர்பெற முலையுண்டபடி; ஆதலின், ‘உண்டதும்’ என்கிறார்.
பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி உண்ட வாயான் அன்றோ-பெரிய திரு. 1, 3 : 1.-;
இவன் பிள்ளையாயே முலை உண்டானத்தனை;
“புகர்கொள் வானவர்கள் புகலிடந் தன்னை அசுரர் வன்கையர் வெங்கூற்றை”–(திருவாய். 8. 4. 8.)–என்பது, ஈண்டு அநுசந்தேயம்.–
பொருளின் இயல்பாலே பிரதிகூலர் முடிந்ததித்தனையன்றோ.
ஊர் சகடம் இறச்சாடியதும் –
தூண்டுகின்றவர்கள் வேண்டாதபடி தானே வந்து நலிந்தபடி.
ஒரு மனிதவடிவு கொண்டு வந்து நலியிலன்றோ தடுக்கலாவது. இத்தால் சொல்லிற்றாயிற்று
, வேறு துணை வேண்டாமலே பாதகமாகும் தன்மையில் உறைப்புச் சொன்னபடி.
சஹாயாந்தர நிரபேஷமாக அவன் ரஷகன் ஆவது போலே இவை சஹாயாந்தர நிரபேஷமாக பாதகத்தில் உறைப்பு –
இறச்சாடியதும் – “தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப் பிளந்து” -திருவாய். 6. 9 : 4.-என்று சொல்லக்கடவதன்றோ.
வருத்தமில்லாமல் திருவடிகளை நிமிர்க்கச் செய்தேயும், ஓர் இளைஞனுடைய செயலாகையாலே போரப் பொலியச் சொல்லுகிறார்.
“பேர்ந்தோர் சாடிறச், செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்”-‘, திருவாய். 5. 10 : 3.– என்னக்கடவதன்றோ.
தேவக் கோலப் பிரான் –
மனிதர்களை ஒத்து நின்று செய்யவும் பெற்றதில்லையே.
அதிபால்யத்திலே செய்த செயலாகையாலே அப்ராகிருதமாய் இருப்பதோர் ஒப்பனைபோலே இருக்கிறபடி.
தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் –
அவனுடைய செயல்களை நினைத்து அகவாய் உடை குலைப்பட்டு வேறு பிரயோஜனம் இல்லாதவனாய்க்கொண்டு காலம் போக்கப்பெற்றேன்.
நெஞ்சு நெகிழ்ந்து செயல்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன்.
எனக்கு என் இனி வேண்டுவது – இனி அடையத்தக்கது ஒன்று இல்லை என்கிறார்.

—————————————————————————–

வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம்புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல்உளதே?–6-4-5-

அந்தர்யாமி பட்டது பட்டானே -அர்த்தித்த அர்த்தகரனான -வேண்டுபவர் வேண்டுதல்களை நிறைவேற்றும் அவதார தொடக்கமான –
பிரமுக கம்ச வத பரிந்த சேஷ்டிதங்களை அனுபவிக்கப் பெற்றானே
வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
வேண்டி -இரக்க-இருவர் பிரார்த்தனை -தான் தாய் தந்தை வேண்டி -தன இச்சையாலே –
ஷீரார்ணவம் இருந்து வந்து -ஏஷ நாராயணன் -திருவவதரித்ததுவும்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய்அங்கொர் ஆய்க்குலம்புக்கதும்-பிறந்த அன்றே -அப்போதே -பிறந்த இரவிலே -கம்ச பயத்தால்
எடுத்து அணைத்து-இருள் அன்ன மா மேனி -பின் நின்று தாய் இரப்ப கேளான் -ராமர் அங்கும் –
கம்ச விஷயமான தேசம் சென்று -கண்ணனை மறைத்த -பய நிவர்த்தக ஸ்தானம் -திருவடிக்கும் பய நிவர்த்தாக ஸ்தானம் -இடைக் குலம்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்-வஞ்சனை செய்ததுவும் -அன்றும் நான் இல்லை -அங்கும் இல்லை இன்று இங்கு
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல்உளதே?-வாய் விட்டுச் சொல்லப் பெற்ற பாக்கியம் -எனக்கு விரோதி இல்லையே –
உண்டாகில் கம்சன் பட்டது படும்

தேவர்கள் வேண்டி இரக்க வந்து பிறந்ததும், அற்றைய நாளில் செறிந்த இருட்டிலே தாயாகிய தேவகிப்பிராட்டியானவள் திருவடிகளைப்
பிடித்துக்கொண்டு புலம்ப, அந்நிலையிலே சென்று ஒப்பற்றதான ஆயர்பாடியிலே புக்கதும், கம்சனுடைய ஆட்கள் காணாதபடி வளர்ந்து
கம்சன் இறக்கும்படியாக வஞ்சனை செய்ததுமான செயல்களை இப்போது இருந்து சொல்லப்பெற்றேன்; எனக்கு என்ன விரோதம் உளது?
கஞ்சனை – கம்சனானவன். மயக்கமாகக்கொள்ளாது, நேரே பொருள் கோடலுமாம். துஞ்சுதல் – இறத்தல்.

அவதரித்து, கம்சன் அறியாதபடி வளர்ந்து கம்சனை மாய்த்தபடியை இன்று இருந்து அநுபவிக்கப் பெற்ற
எனக்கு ஓர் எதிர் இல்லை என்கிறார்.

தேவர் இரக்க வேண்டி வந்து பிறந்ததும் –
‘எங்கள் அளவு அறியாதே ஒருவனுக்கு வரம் கொடுத்து அவனை உயரப் பார்த்தோம்: எங்களுக்குக் குடி இருப்பு அரிதாயிற்று’ என்று
தேவசாதி கப்படம் கட்டிக்கொண்டு -கழுத்தில் ஓலை கட்டிக் கொண்டு -செல்ல “தந்தையாக அடையவேண்டும் என்று விரும்பினார்” என்கிறபடியே
தத: பத்மபலாசாக்ஷ: க்ருத்வா ஆத்மாநம் சதுரவிதம்
பிதரம் ரோசயா மாஸ ததா தசரதம் ந்ருபம்”-என்பது, ஸ்ரீராமா. பால. 15 : 30 1/2.
தான் விருப்பமுள்ளவனாய், வந்து பிறந்ததுவும்,
அன்றிக்கே, “என்னுடைய மாயையாலே” –ப்ரகிருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”என்பது, ஸ்ரீ கீதை, 4 : 6.
என்னும் படி அன்றோ என்னுதல். என்றது, என்னுடைய இச்சையாலே என்றபடி.
‘மாயா வயுனம் ஞானம்’ என்பது நிகண்டு.
இரக்கிறவர்கள் அளவு பார்த்தல், தன்னளவு பார்த்தல் செய்கையன்றிக்கே வந்து பிறந்தபடி காணும் இவரை வருத்துகிறது.
தான் இரப்பாளனாய்க் காரியம் செய்யுமவன், பிறர் இரந்தால் பொறுக்கமாட்டானேயன்றோ.
பிறந்ததும் வீங்கு இருள்வாய் –
“எல்லா உலகங்கட்கும் ஆதாரனான ஸ்ரீ கிருஷ்ணன் நடு இரவில் அவதரித்தார்” என்னும் படி அன்றோ.
“மத்யராத்ரே அகிலாதாரே ஜாயமாநே ஜநார்தநே
மந்தம் ஜகர்ஜு: ஜலதா: புஷ்பங்ருஷ்டி முசோ த்விஜ”-என்பது, ஸ்ரீ விக்ஷ்ணுபுரா. 5. 3 : 7.
‘இவனும் விழுக்காடு அறியாதே அகப்பட்டுக் கொடு நின்றான், கம்ச பயமும் ஏற்பட்டதாயிரா நின்றது, இருளாலே அன்றோ நாம் பிழைத்தது.
இனி, இந்த இருளைச் சரணம்புகுமித்தனை அன்றோ’ என்று பிள்ளை யுறங்கா வில்லி தாசர் பணிப்பாராம்.
“ஊர் எல்லாம் துஞ்சி” என்ற திருவாய்மொழியில், கூற்றமான இருள், இப்போது இவர்க்கு ஆதாரத்துக்கு விஷயமாயிற்று அன்றோ.
வீங்கு இருள்வாய்ப் பூண்டு அன்று அன்னை புலம்பப்போய் என்று கூட்டுக.
“மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள்” –பெரியாழ்வார்திருமொழி, 5. 3 : 1. -என்கிறபடியே,
பெற்றுப் பெற்று இழந்தவள் ஆகையாலே, இவனையும் இழக்கிறோமோ! என்று விரகபயத்தாலே,
காலைப் பூண்டு கிடந்து கூப்பிடப்போய். பிள்ளை பக்கல் அன்பினாலே இவள் கூப்பிட, இவன் முலைச்சுவடு அறியாமையாலே போனபடி.
வீங்கு இருள் –
வளர்கிற இருள்
அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
அந்த நிலையிலே இடையிலே வளருகைக்கு ஓர் அஞ்சினான் புகலிடம் உண்டாவதே!
ஆய்க்குலம் – ‘கம்சன் பாதகன்’ என்று பயப்பட அறியாதவர்கள்.
‘குடிவாய் உடன்பட இருந்தானாகில் இருக்கிறான், இல்லையாகில் உழக்கோலாலே தகர்க்கிறோம்’ என்று இருப்பர்கள்.
காண்டல் இன்றி வளர்ந்து –
கம்சனும் அவன் வரக்காட்டின தீயோர் கூட்டமும் காணாதபடி வளரப்பெறுவதே!
கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்-
ஸ்ரீ நாரத பகவான் அறிவித்தபின்பு ஒருபோது தாழாதே வந்து, அவன்தான் நினைத்த வஞ்சனையை அவன் தன்னோடே போக்கினதும்.
கம்சன் முடியும்படியாக வஞ்சனை செய்தது,
இராமாவதாரம் போலே ‘செவ்வைப்பூசல் அல்லது அறியேன்’ என்று இராமை அன்றோ.
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் –
“அயர்த்திலன் முடிவு மஃதே யாயினும் அறிஞ ராய்ந்த
நயத்துறை நூலின் நீதி நாம் துறந் தமைதல் நன்றோ.”
“நின்றவன் னிலை நோக்கிய நெடுந்தகை இவனைக்
கொன்றல்உன்னிலன் வெறுங்கை நின் றானெனக் கொள்ளா.”-என்பன, கம்பராமாயணம்.
ஊராண்மை, உபகாரியாந்தன்மை: அஃதாவது, இலங்கையர் வேந்தன்போரிடைத் தன் தானை முழுதும் படத் தமியனாய் அகப்பட்டானது
நிலைமை நோக்கி அயோத்தியர் இறை மேற் செல்லாது
‘இன்றுபோய்நாளை நின் தானையோடு வா’ என விட்டாற் போல்வது” என்பது,பரிமேலழகருரை. திருக்குறள், 773.

தேவகியாரைப் போலே சமகாலத்தே இருந்து பயப்படாதே, இப்போது பயம் கெட்டு இருந்து அநுபவிக்கப் பெற்றேன்.
ஈண்டு –
இப்போது.
எனக்கு என்ன இகல் உளதே
-கம்சன் பட்டபின்பு எனக்குப் பகைவர்கள் உண்டோ? இகல் – பகை.
அன்றிக்கே, கம்சனை முடித்தபடியை இன்று இருந்து அநுபவிக்கப்பெற்ற எனக்கு இனி ஒரு மிடி இல்லை என்கிறாராகவுமாம்.

அயர்த்திலன் முடிவு மஃதே யாயினும் அறிஞராய்ந்த நயத்துறை நூலின் நீதி நாம் துறந் தமைதல் நன்றோ.”

“நின்றவன்னிலை நோக்கிய நெடுந்தகை இவனைக்கொன்றல்உன்னிலன் வெறுங்கை நின்றானெனக் கொள்ளா.”-என்பன, கம்பராமாயணம்.

—————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: