பகவத் விஷயம் காலஷேபம் -130- திருவாய்மொழி – -6-3–1….6-3–11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

இப்படித் தாழநின்றவன் சர்வேசுவரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச்செய்வர்.
அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய சர்வேசுவரத்வத்தை அருளிச்செய்கிறார் என்றபடி.
‘இதிலே ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச்செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர்.–பரத்வனே வ்ருத்த விபூதிகன் – அதாவது,
“சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேரவிட்டுக்கொண்ட ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்.
சேரவிட்டுக்கொண்ட படிதாம் பலவாக இருக்குமன்றோ:
முதல் தன்னிலே-1-1- தம்மையும் அறியாதே அவனையும் அறியாதே இருக்க, தன்படிகளை அறிவித்துக் கூட்டுவித்துக் கொண்டான்.
உள்ளே புகுர நின்று தம்முடைய தாழ்வினையும் அவனுடைய உயர்வினையும் அநுசந்தித்து
‘நாம் அங்குத்தைக்குத் தக்கவர் அல்லோம்’ என்று அகல,-1-5- தன்செல்லாமையைக் காட்டிப் பொருந்தவிட்டுக் கொண்டான்.
இனி, அவைபோன்றது அன்றே இது; ஒன்றால் போக்கக் கூடியது அன்றே.
அகலில் குற்றம், அணுகில் குற்றமாய் இருப்பது ஒன்றேயன்றோ!
ஜாதி சண்டாளனை நோக்கினால் பிராயச்சித்தம் உண்டு;
பிரணயத்தால் உண்டாகிய கோபம் ஆகிற காரணத்தால் சண்டாளர் ஆனவர்க்கு அதுவும் இல்லை.
ஆக, இந்தப்படிகளாலே தன்செல்லாமையைக் காட்டி அவன்பொருந்தவிட்டுக்கொண்ட படியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்றபடி.

பாவியேன் மனத்தே -கடாஷித்து -ஜாதி சண்டாளன் -என்கிறார் –
ஈஸ்வரன் மேல் விழா நிற்க -சேராமல் விலக்கிய பிராயச்சித்தம் இல்லாத பாபம்
சந்த்யா வந்தனம் பண்ணா விடில் பிராயச்சித்தம் தேடலாம் -பகவத் அனுபவம் இல்லாததுக்கு இல்லையே -கூரத் ஆழ்வான்
நாயக விஷயத்தில் நாயகிக்கு ஏற்பட்ட பிரணய ரோஷத்துக்கு பரிகாரம் இல்லை
பிரணயத்தால் பிறந்த கோபம் ஆகிற அபராதத்தால் -வந்த பாபிஷ்டருக்கு பிராயச்சித்தம் இல்லையே
ஈஸ்வரனை சொல்லாமல் -பிரணய கோபத்தையே சொல்கிறார் –

அங்ஙனம் ஆச்சரியப்படுகிற இவர்க்கு, ‘இவ்வளவு அல்ல காணும் நம்முடைய ஆச்சரியங்கள் இருக்கும்படி.
உலகத்தில் தம்மில் தாம் சேராத மாறுபட்ட பொருள்களும் எல்லாம் நம்மோடே சேர்ந்திருக்கிறபடி பாரீர்!
ஆன பின்னர், நம்மோடு சேராதார் இலர்காணும்!’ என்று தன்னுடைய விருத்த விபூதிகத்வத்தைக் காட்டிக்கொடுக்க இவரும் கண்டார்.
கண்ட இவர் ‘இவை இருந்தபடி என்!’ கொடுத்த அறிவைக் கொண்டு அகலுகைக்குக் காரணமாயிருக்கிற இவற்றை
எல்லாம் கூட விட்டுக்கொடு நிற்கிற படிகளும்,
இனி, நிமித்தகாரணமானது உபாதான காரணமாக மாட்டாது; உபாதான காரணமானது நிமித்த காரணமாக மாட்டாது;
இங்ஙனே இருக்க, இவை எல்லாம் தானேயாயிருக்கிற படியையும்,
இவற்றோடே கூடி இருக்கச் செய்தேயும் இவற்றின் குற்றங்கள் தன்னைத் தீண்டாமல் இருக்கிற படியையும்,-பரஞ்சுடர் –
குற்றம் தீண்டாமல் கடக்க இருக்கை மாத்திரமன்றிக்கே நியமிக்கின்றவனாய் இருக்கிற படியையும்,-
இனி, நாட்டில், பிராப்யமானது பிராபகம் ஆகமாட்டாது; பிராபகமானது பிராப்யம் ஆகமாட்டாது; இங்ஙனே இருக்க,
பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் தானேயாக இருக்கிற படியையும்,–என் சரண் என்னை ஆளுடை –
மற்றும், இவனுடைய அழகு சீலம் முதலானவைகளையும் அநுசந்தித்து, -பொன்னப்பன் -தந்தனன் தன் தாள் நிழல்-
‘இப்படி உபகார சீலனான சர்வேசுவரன் திருவிண்ணகரிலே வந்து அண்மையில் இருப்பவனானான்;
இவன் அல்லது நமக்குப் பரம பந்துக்கள் இலர்’ என்று அறுதியிட்டு,
‘இவன் திருவடிகள் அல்லது பற்று இல்லை’ என்று பேசுகிறாராயிருக்கிறது.

முதல் திருவாய்மொழியிலே பரத்துவ அநுபவம்பண்ணி,
மூன்றாந் திருவாய்மொழியிலே சௌலப்யத்தை அநுசந்தித்து “எத்திறம்” என்று கிடந்தார்.
இங்கு, “போகுநம்பி” என்று தள்ளச்செய்தேயும் கால்வாங்கமாட்டாதே நின்ற நீர்மையை அநுசந்தித்து,
அதற்கு எதிர்த்தட்டான பரத்துவத்தை அநுசந்திக்கிறார்.
இப்படிக் கிரமம் இல்லாமல் அருளிச்செய்கிறதற்குக் காரணம் யாது? என்னில்,
மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் அலரோ; மேன்மையை அநுசந்திப்பது, நீர்மையை அநுசந்திப்பதாமத்தனை அன்றோ!

இத்திருவாய்மொழியிற் கூறப்படுகின்ற பொருளோடு
“தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம்நீ கல்லினுள் மணியும்நீ சொல்லினுள் வாய்மைநீ
அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ வேதத்து மறைநீ பூதத்து முதலுநீ
வெஞ்சுடர் ஒளியும்நீ திங்களுள் அளியும்நீ அனைத்தும்நீ அனைத்தினுட் பொருளும்நீ”-என்ற பரிபாடற் பகுதி ஒப்பு நோக்கத் தகும்.

வைகுண்ட விண்ணகரம்
பரமேஸ்வர விண்ணகரம்
காளிச்சீராம விண்ணகரம்
நந்திபுர விண்ணகரம்
ஸ்ரீ வைகுண்டம் -நவ திருப்பதி நின்ற திருக்கோலம்
திரு விண்ணகர் -அடை மொழி இல்லாமல்
உத்சவ மூர்த்தி பொன்னப்பன் –
மிகுநர் இலன் -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
சமாப்யதிக ராகித்யன்
விளம்ப விரோதம் அழிக்கும் அகடிகடநா சாமர்த்தியம் -நன்னகரிலே விஸ்தீரணம்

———————————————————————————————-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

வ்ருத்த -விபூதிகள் -குணங்கள் -பொருள்கள் -பாசுரம் தோறும் -மிகப் பெரியவன் -ப்ரீத்தி அப்ரீதி ஹேதுவான
-வ்ருத்த அர்த்தங்களை விபூதியாக கொண்ட சர்வ வியாபகன் –
அனைத்தையும் சரீரமாகக் கொண்டவன் -பிரகாரம் -விசேஷணம்
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்-பதார்த்த சங்கோச ரூப தாரித்ர்யம் –கீழே பகவத் அனுபவ தாரித்ர்யம்
-தத் விகாச ரூபமான சம்பத் துக்க ஸ்தானம் சுக ஸ்தானம்
ஆய்-ஒவ் ஒரு இரட்டையிலும் சேர்த்துக் கொண்டு
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்-எதிர்த்தலையைச் சாய்க்கும் -சாத்ரமும் பகைமை -குணம் இங்கு -குணம் ஸ்தானம் பொருள் –
முடிக்கும் விஷம் உஜ்ஜீவிக்கும் அமிர்தம்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்-வியாப்தன் -என்னை இந்த ஆகாரத்தை பிரகாசிப்பித்தது -காட்டி –
-இது தானே விபூதி அத்யாயம் -அடுத்த அத்யாயம் சங்கதி –
ஸ்ரீ மத் எனபது எல்லாம் தேஜஸ் உடைய திவலை -விபூதி மானை சேவிக்க விஸ்வ ரூபம் காட்டி அருளினான் –
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே-இது தான் 11 அத்யாயம் போலே -கண்டேனே என்கிறார் –
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் அன்றோ -ஸ்ரீ கீதார்த்தமே விரவிக் கிடக்குமே
பகவத் அனுபவ ஐஸ்வர்யம் எதிர் பொங்கி வரும் -சத் ஜனம் வாழும் -திவ்ய தேசம் -அபரோஷிக்கப் பெற்றேன் -பிரத்யஷமாக கண்டேன் –

வறுமையும் செல்வமுமாகி, நரகமும் சுவர்க்கமுமாகி, வெல்லக்கூடிய பகையும் நட்புமாகி, விஷமும் அமுதமுமாகி, பலவகையாகவும் பரந்து
பெருமானாகி என்னை ஆள்கின்றவனைச் செல்வம் நிறைந்திருக்கின்ற மக்களையுடைய திருவிண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில் பார்த்தேன்.
ஆகி ஆகிப் பரந்த பெருமான் என்க. என்னை ஆள்வானைத் திருவிண்ணகர்க் கண்டேன் என்க. இந்தத் திவ்யதேசம்,
உப்பிலியப்பன் சந்நிதி என்றும், ஒப்பிலியப்பன் சந்நிதி என்றும் இப்பொழுது வழங்கப் படுகிறது. செல்வு – செல்வம்.
இத்திருவாய்மொழி, கலிவிருத்தம்.

விருத்த விபூதிகனான சர்வேசுவரனைத் திருவிண்ணகரிலே காணப்பெற்றேன் என்கிறார்.

நல்குரவும் செல்வும் –
வறுமையும், அதற்கு எதிர்த்தட்டான செல்வமும்,
நரகும் சுவர்க்கமும் –
துக்கத்திற்கே இருப்பிடமான நரகமும், சுகத்திற்கே இருப்பிடமான சுவர்க்கமும்.
வெல்பகையும் நட்பும் –
சமாதானத்தாலே மீளுமதன்றிக்கே வென்றே விடவேண்டும் பகையும், அதற்கு எதிர்த்தட்டான உறவும்.
விடமும் அமுதமுமாய் –
முடித்தே விடுவதான விஷமும், போன உயிரை மீட்கவற்றான அமுதமுமாய்.
போன உயிரை மீட்டுத் தான் போக்கியமுமாய் அன்றோ அமிருதம் இருப்பது.
விருப்பம் இல்லாத வறுமை முதலானவற்றோடு விரும்பக்கூடிய செல்வம் முதலானவற்றோடு வாசியறத் ததீயத்வ
ஆகாரத்தாலே இவர்க்கு உத்தேசியமாய் இருக்குமன்றோ.

பல்வகையும் பரந்த பெருமான் –
ஞானதிகனான தானும்கூட விபூதியைப் பேசப் புக்கு “என்னுடைய விபூதியின் பரப்பிற்கு முடிவு இல்லை” –
ஹந்த தே கதயிஷ்யாமி விபூதீராத்மநஸ்ஸுபா:
ப்ராதாந்யத: குருசிரேஷ்ட நாஸ்தி அந்த: விஸ்தரஸ்ய மே”-என்பது, ஸ்ரீ கீதை, 10 : 19.
என்று இளைத்துக் கைவாங்கினத்தை, இவ்வளவு அன்பிலே கனத்த இவரால் சொல்லப் போகாது அன்றோ.
ஆனாலும் சிறிது பேசினாராகவும் வேணும் அன்றோ.
வஸ்துவுக்கு விசேடணத்தை ஒழியத்தோன்றுதல் இல்லை யன்றோ.
“வஸ்து விசேடணம் இல்லாதது” என்று விசேடணம் இல்லாததாக மாயாவாதம் சொல்லுகிறார் அலரே.
அங்ஙனேயாகில் மோக்ஷ சாஸ்திரந்தான் வேண்டாவே.
வஸ்துவின் உண்மையைக் கொள்ளும் போது விசேடணம் வேறுபடுத்துவதாயல்லது இராது.
ஒன்றற்கு ஒன்று விசேடணமாகும்போது அந்யயோக வியவச்சேதம் பண்ணிக்கொண்டல்லது விசேடணம் ஆகமாட்டாது.
இங்கு, இவனுக்கு, தன்னினின்றும் வேறுபட்ட பொருள்களடங்கலும் விசேடணமாயிருக்கையாலே அந்யயோக வியவச்சேதம் பண்ண ஒண்ணாது.
ஆனால், மாறுபட்ட விசேடணங்கள் ஒரு பொருளிலே சேருகிறபடி எங்ஙனே? என்னில், அயோக வியவச்சேதம் பண்ணிக்கொண்டு சேருகிறது.

பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தம் -ஆய் -சப்தம் தானே அனைத்தையும் சேர்த்து -சரீரம் பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம்
கடிகாரம் இருக்கிறது என்றதும் மற்றதை வேறுபடுத்திக் காட்டுமே -அந்ய யோக வியச்சேதம் ராமனே வில்லாளி –
ராமன் வில்லாளியே -அயோக விவச்சேதம்-யோகம் சேர்த்தி –
இவை எல்லாம் சர்வேஸ்வரன் இடம் உண்டு -அயோக விவச்சேதம்
வேறு யார் இடம் இல்லை -அன்யோக விவச்சேதம் –
அனைவரும் இவருக்கு விசேஷணம் -ஆதலால் அன்யயோக விவச்சேதம் பண்ண வழி இல்லையே
அவனுக்கே விசேஷணம் தானே எல்லா குணங்களும் பொருள்களும் -அன்யோக விவச்சேதம் சொல்லவே முடியாதே
விசேஷணம் -கொண்டே ப்ரஹ்மம் இருக்கும் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -அடைந்து சோஸ்நுதே சர்வான் காமான்
-ஆனந்தமாக அனுபவிக்கிறார் -மோஷ சாஸ்திரம் -விசேஷணம் இல்லை என்றாள் இது சொல்ல வேண்டாவே என்றவாறு –

இவர்தாம் அவனை அநுபவிக்கவன்றோ இழிகிறது,
இந்த மாறுபட்ட விசேடணங்களைச் சொல்லுகிற இவற்றால் பிரயோஜனம் என்? என்னில்,
அவனை உள்ளபடி கண்டு அநுபவிக்கவேணுமே. இராஜபுத்திரனுக்கு, இராஜாவினுடைய இன்பத்திற் கிடமான ஓலக்கத்தோடு
சிறைக்கூடத்தோடு வாசி அற ‘என் தமப்பனுடைய செல்வம், என்று தோன்றுமன்றோ.
இவர்தமக்கு இங்கு உண்டான அநுசந்தானம், முக்தனுக்கு லீலாவிபூதி அநுசந்தானம் போலே அன்றோ.
“ஜனங்களின் நடுவில் இருந்துள்ள இந்தச் சரீரத்தை நினையாதவனாகிறான்”
“நோபஜநம்ஸ்மரந் இதம் சரீரம்” (சாந்தோக்யம், 8. 12 : 3:) -என்னா நிற்கச்செய்தே,
முக்தனுக்கு லீலாவிபூதி ததீயத்வ ஆகாரத்தாலே உத்தேசியமாகா நின்றதன்றோ.
இவர்க்கும் அப்படி முக்தரோடு ஒக்கத் ததீயத்வ ஆகாரம் ஒழிய, வேறு ஆகாரமாக நினைவு இல்லாதபடி
இங்கே இருக்கச் செய்தே மயர்வு அறுத்துக் கொடுத்தான்.
தம்முடைய சம்பந்தத்தாலே பார்த்த போது கால்வாங்கியல்லது நிற்க ஒண்ணாதபடி தியாஜ்யமாகத் தோற்றும்.
அன்றிக்கே, ஞான அஜ்ஞானங்களுக்குப் பொதுவான இந்த இருப்பைக் கழித்து,
அதற்குக் கலக்கமில்லாத தேசத்திலே போகையிலே விரையக்கடவன் எனப்படுதலால் என்னுதல்.

பல்வகையும் பரந்த பெருமான் –
இப்படி உலக முகத்தாலே பலபடியாக விரிந்திருப்பவனானவன்.
பரந்த பெருமான் என்னை ஆள்வானை –
இங்ஙனம் பரந்து இருத்தல் எல்லாம் தம்மை அகப்படுத்த என்று இருக்கிறார்;
ஒருவனை அகப்படுத்த நினைத்தார் ஊரை வளையுமாறு போலே.
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேன்-
மருபூமியிலே -மருபூமி – நீரும் நிழலும் அற்ற பாலை நிலம்.-பொய்கை கண்டாற்போலே இருக்கிறபடி.
மிக்க செல்வத்தை யுடைத்தான குடிகளையுடைய திருவிண்ணகர் என்பார் ‘செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்’ என்கிறார்.

“இலக்குமணன் செல்வத்தால் நிறைந்தவன்”
– ஸர்வ ப்ரியகர: தஸ்ய ராமஸ்ய அபி ஸரீரத:
லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: பஹி: ப்ராண இவாபர:-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 28.-என்னுமாறுபோலே,
சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே, கடக்கக் கிடந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போலன்றிக்கே,
கிட்ட நின்று அடிமை செய்யும் இளையபெருமாளைப் போலே.
‘காணவேண்டும்’ என்னும் ஆசையோடே இருந்து வேறு சரீரத்தை அடைந்து வேறு தேசத்திலே போய்க் காண்கை யன்றிக்கே,
பசித்த இடத்தே சோறு பெறுமாறு போலே, -தேசாந்தரம் தேகாந்த்ரம் காலாந்த்ரம் இல்லாமல்
ஆசைப்பட்ட இடத்தே அநுபவிக்கப் பெறுதலின் ‘திருவிண்ணகர்க் கண்டேன்’ என்கிறார்;
“நான் சென்று நாடி நறையூரிற் கண்டேனே”- பெரிய திருமொழி, 6. 8 : 1.– என்னுமாறு போலே.

——————————————————————————————-

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

ப்ரீதி அப்ரீதிகங்கள் -அனுபந்தித்து வரும் பதார்த்தங்கள் விபூதி -மானாகவும் இருந்து -சஜாதீயர் இல்லாமல் -விஜாதீயன் –
அனைத்தையும் சரீரம் பிரகாரம் -உள்ளும் இருப்பார்
கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்-விபூதியாக இருந்தும் -லோகத்தில் பார்க்கும் -துக்கம் -வந்தால் மனக்கலக்கம்
-சுகம் -மனப் பிரசாதம் -தெளிவு தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்-கலக்கத்தால் வரும்கோபமும் -தெளிவால் வரும் பிரசாதமும் –
அக்னியும் அவனது நிழலும் அவனது –
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்-ஸூ சஜாதீயமாக காண அரியவன் சர்வேஸ்வரன் -என்னை அடிமை கொண்டவன்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே-நன்னகரிலே விஸ்தீரணம் -அலை நீர் வாய்ப்பு

அநுபவிக்கின்ற இன்பமும் துன்பமுமாகி, கலக்கமும் தேற்றமுமாகி, சீற்றமும் அருளுமாகி. நெருப்பும் நிழலுமாகிக் கண்டு கொள்வதற்கு
அரியவனாகிய பெருமானாகி, என்னை ஆள்கின்றவனுடைய ஊரானது, தெளிந்த அலைகளையுடைய புனலால் சூழப்பட்ட
திருவிண்ணகரம் என்னும் நல்ல நகரமேயாகும்.
ஆய் ஆய் கண்டுகோடற்கு அரிய பெருமான். ஊர் திருவிண்ணகராகிய நல் நகர் என்க. தண்டம் – கோபம். தழல் – நெருப்பு.

தங்கள் முயற்சியாலே ஒருவர்க்கும் காண ஒண்ணாத பெருமையையுடையனாய் வைத்து என்னை
அடிமை கொண்டவனுடைய ஊரான திருவிண்ணகரம் எல்லா நன்மைகளும் பொருந்திய நகரம் என்கிறார்.

கண்ட இன்பம் –
“ஐங்கருவி கண்ட இன்பம்”-திருவாய். 4. 9 : 10.- என்னுமாறு போலே, அளவிற்கு உட்பட்ட சுகம்.
துன்பம் –
பெயர் வேறுபாடு மாத்திரமேயாய் அதனோடு ஒத்த துக்கம்.
கலக்கங்களும் தோற்றமுமாய் –
இதர விஷயங்களைப் பெறாமையால் வரும் கலக்கமும், அவற்றைப் பெற்றால் வரும் தேற்றமும்.
தண்டமும் தண்மையும் –
கோபமும் அருளும்.
தழலும் நிழலுமாய் –
வெப்பத்தைச் செய்யக்கூடிய நெருப்பும், குளிர்ச்சியைச் செய்யக்கூடியதான நிழலுமாய்,
கண்டுகோடற்கு அரியபெருமான் –
இவை எல்லாவற்றாலும் அவனுடைய அளவு இடற்கு அரிய தன்மையைச் சொன்னபடி. –அபரிச்சேத்யம்-
இவருடைய ஞானத்தின் தெளிவு இருந்தபடி என்தான்!
இங்கே சில விசேடணங்களை சொல்லா, “கண்டு கோடற்கு அரிய பெருமான்” என்று அவனைச் சொல்லாநின்றார்;
மேலே சிலவற்றைச் சொல்லா, “பல்வகையும் பரந்த பெருமான்” என்னாநின்றார்;
இது என்ன அநுசந்தான முறைதான்! இவனை ஒழிந்தது ஒரு வஸ்துவுக்கு சத்பாவம் இன்றிக்கே இருக்கிறபடி அன்றோ.
இதுவும் ஒரு வ்ருத்த ஸ்வ பாவம் என்றவாறு -அப்ரஹ்மாத்மக வஸ்துவே இல்லையே –

நல்லாரும், நம்பி ஸ்ரீசேநாபதிதாசரும் கூடத் திருமலைக்குப் போகாநிற்க,
ஸ்ரீசேநாபதிதாசர் ஒரு கோலையிட்டுத் தூற்றை அடிக்க,
நல்லார் ‘அர்த்தகாம நிமித்தமான துவேஷம் இதனோடு இன்றிக்கே இருக்க,
ஒரு காரணமும் இல்லாமல் ஈசுவரனுடைய விபூதியை நலிவதே!’ என்ற வார்த்தையை நினைப்பது.
என்னை ஆள்வான் ஊர் –
என்னை இழக்கமாட்டாமல் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் மிறுக்கு எல்லாம் பட்டு
என்னை அடிமை கொண்டவனுடைய ஊர்.
தெண் திரைப் புனல்சூழ் திருவிண்ணகர் நல்நகரே –
தெளிந்த திரைகளையுடைத்தான புனலாலே சூழப்பட்ட திருவிண்ணகராகிற நன்னகர்.
திவ்விய நதியான விரஜைக்குப் போலியான ஆறும் உண்டாகப்பெற்றது என்பார் ‘தெண்திரைப் புனல் சூழ்’ என்கிறார்.
அங்கு இருக்கிறவன் இங்கே வந்து நின்றால் அங்கு உள்ளவை எல்லாம் இங்கு உண்டாகத் தட்டுஇல்லையே.
அன்றிக்கே, இவ்வளவில் முகங்காட்டாத ஸ்ரீ வைகுண்டமும் ஒரு தேசமாயிற்றதோ?
அவன் விரும்பின இடம் பிராப்பிய பூமியாமித்தனையன்றோ.

———————————————————————————-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்தி அல்லால்இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

ஞான அஜ்ஞ்ஞான அனுபந்தி பதார்த்தங்கள் விபூதி சர்வேஸ்வரன் உஜ்ஜ்வலமான குணங்களே உத்தாரகம் –
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்-விசேஷஜ்ஞ்ஞர் உள்ள இடம் நகர் -அவிசேஷஜ்ஞ்ஞர் உள்ள இடம் நாடு –
தத் தத் ஆகார ஞானம் மூடமும்
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்-ஒப்பு இல்லாத -பிரகாசம் -இருட்டுமாய் -இருளுக்கு ஸ்தானம்பூமியுமாய்
-பிரகாச ஸ்தானம் ஆகாயம் சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-பொருந்தி வர்த்திக்கும்
புகர்கொள் கீர்த்தி அல்லால்இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-ஔஜ்ஜ்வல்யம் உடைய குணப்ரதை
யாவர்க்கும் உஜ்ஜீவன ஹேதுவான ஸூஹ்ருதம் இல்லை

நகரத்திலுள்ளவர்களும் நாட்டிலுள்ளவர்களுமாகி, அறிவும் அறியாமையுமாகி, ஒப்பு இல்லாமல் பரந்திருக்கின்ற ஒளியாகி இருளாகி,
நிலமாகி ஆகாசமாகி, சிகரங்களையுடைய மாடங்கள் நிறைந்துள்ள திருவிண்ணகர் என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற
எம்பெருமானுடைய ஒளிபொருந்திய கீர்த்தியேயல்லாமல் எத்தகையார்க்கும் உய்வு பெறுதற்குரிய புண்ணியம் வேறு இல்லை.

ஆய் ஆய் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் என்க. பிரானுடைய கீர்த்தியல்லால் யாவர்க்கும் புண்ணியம் இல்லை என்க. புகர் – ஒளி.

திருவிண்ணகர் அப்பனுடைய கல்யாணகுணங்களை ஒழிய
ஒருவர்க்கும் பிழைத்தற்குரிய வேறு வழி இல்லை என்கிறார்.

நகரமும் நாடுகளும் –
போகமே மிக்கிருப்பாராய் இன்பம் நுகர்ந்திருக்கும் நகரத்திலுள்ளார்,
பயிர்த்தொழில் செய்துகொண்டு தேகயாத்திரையை நடத்திக்கொண்டிருக்கும் நாட்டிலேயுள்ளார்.
அன்றிக்கே, அளவிற்கு உட்பட்டனவாயுள்ளவையும், அளவிற்கு உட்படாதனவாயுள்ளவையும் என்னலுமாம்.
ஞானமும் மூடமுமாய் –
பொருள்களின் தன்மைகளை உள்ளபடியே அறியக்கடவதான ஞானமும்,
அதனை மாறுபாடாக எண்ணக்கூடியதான அறியாமையும்.
நிகர் இல் சூழ் சுடராய் இருளாய் –
உபமானம் இல்லாததாய்க்கொண்டு எங்கும் பரந்து நிற்கிற ஒளியாய்,
அதற்கு எதிர்த்தட்டான இருட்டாய்.
நிலனாய் விசும்பாய் –
உருவத்தோடு கூடிய பூமியாய், உருவம் இல்லாத ஆகாசமுமாய்.
அன்றிக்கே, கடினத் தன்மையையுடைய பூமியும், இலேசான ஆகாசமும் என்னலுமாம்.
சிகரமாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் –
மலைகளின் சிகரங்களைக் கொண்டு வந்து வைத்தாற்போலே இருக்கிற மாடங்களாலே சூழப்பட்ட திருவிண்ணகரிலே பொருந்தி நிற்கிற உபகாரகன்.

புகர் கொள் கீர்த்தி யல்லால் –
பரமபதத்தில் புகழ் மழுங்கியாகாதே கிடப்பது.
அங்கு உள்ளாரில் தன்னில் குறைந்தார் இலரே!
-மம ஸாதர்மியம் ஆகதா:” என்பது. ஸ்ரீ கீதை, 14 : 2.-4“
என்னுடைய உருவம் முதலானவற்றிற்குச் சமானமான உருவம் முதலானவற்றை அடைந்தவர்கள்” என்றும்
“பூர்ண சாம்யத்தை அடைகிறான்”-நிரஞ்ஜன: பரமம் ஸாம்யம் உபைதி” இது, முண்டகோபநிடதம்.- என்றும்,
“தம்மையே ஒக்க அருள் செய்வார்” -பெரிய திருமொழி, 11. 3 : 5.-என்றும் சொல்லுகிறபடியே,
தனக்குச் சமானமாயுள்ளவர்களாய் அன்றோ அங்குள்ளார் இருப்பது.
குறைவாளர்க்கு முகங் கொடுத்தால் அன்றோ புகழ் நிறம் பெறுவது.
யாவர்க்கும் புண்ணியம் இல்லை –
எல்லார்க்கும் உய்வு பெறுதற்கு வழி அது வல்லது இல்லை.
தாம்தாம் தேடிக்கொள்ளுமவை எல்லாம் கழுத்துக் கட்டியாமத்தனை.
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில்அவன் வர, ‘வேண்டா’ என்று முடிந்து போகப் புக்காரன்றோ.
இவன் பார்க்கும் உபாயம் இவனுக்கும் கழுத்துக்கட்டியாம்.
அவன் காட்டும் உபாயம் அவனுக்கும் காற்காட்டாம். -போகு நம்பி சொன்னாலும் போக முடியாத கால் கட்டு அன்றோ
இதுவன்றோ உபாயத்தில் அடிப்பாடு.-பரகத ச்வீகார பெருமை

—————————————————————————————–

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-

புகர் கொள் கீர்த்தி -புண்ய பாப அனுபந்தி பதார்த்திக விபூதிமான் -அவன் அனுக்ரகத்தால்
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்-தத் தத் சம்ச்லேஷ விச்லேஷங்கள்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்-மற்றவை இரட்டை -உள்ளனாய் இல்லை
புண்யம் சம்ச்லேஷம் -நினைவு -சத்பாவம் -இன்மை அசத்பாவம் -உளது இலது -அல்லனாய் -தத் தத் கர்ம வச்யனாய் இல்லாமல் இருப்பதால் –
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-ஸ்திரமான மாடங்கள்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.-கிரித்ரமம் இல்லை பிரிநிலை எவகாரம் -அதிசயித போக்யதமான
அருள் கிருபையையே -கீழ் சொன்ன உத்தார கீர்த்தி -பரமார்த்தம் இதுவே

புண்ணியம் என்ன, பாவம் என்ன; புணர்ச்சி என்ன, பிரிவு என்ன; ஆகிய இவையாகியும், நினைவு ஆகியும், மறப்பு ஆகியும்,
உண்மையாகியும், இன்மையாகியும், கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாகியும், திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திருவிண்ணகரம் என்னும்
திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற பிரானாகிய ஸ்ரீ கிருஷ்ணனுடைய இனிய திருவருளையே உய்வு பெறுதற்குரிய
புண்ணியமாகக் கண்டு கொள்ளுங்கள்; யான் கூறும் இது கைதவம் அன்று.
ஆய் ஆய் ஆய் ஆய் ஆய் ஆய் சேர்ந்த பிரான் இன்னருளே கண்டுகொண்மின் என்க.
‘கைதவமே’ என்றதிலுள்ள ஏகாரம், எதிர்மறைக்கண் வந்தது. கைதவம் – வஞ்சனை. ஈண்டு, பொய்யைக் காட்டுகிறது.

புண்ணியம் பாவம் முதலானவைகளாய் எம்பெருமானுக்கு விசேடணமாகத் தோற்றுகிற விபூதிகள்
எல்லாம் அவன் கிருபையாலே உண்டாயின என்கிறார்.

புண்ணியம் பாவம் –
இன்பத்திற்குக் காரணமான புண்ணியம், துன்பத்திற்குக் காரணமான பாவம்.
புணர்ச்சி பிரிவு –
புண்ணியத்தின் பலமான கலவி, பாவத்தின் பலமான பிரிவு.
எண்ணமாய் மறப்பாய் –
விருப்பமுள்ள பொருளில் நினைவு, விருப்பம் இல்லாத பொருளில் மறதி.
உண்மையாய் இன்மையாய் –
உள்ளது என்ற சொல்லின் பொருளுமாய், இல்லது என்ற சொல்லின் பொருளுமாய். என்றது,
சேதன அசேதனங்களுமாய் என்றபடி.
அன்றிக்கே, உண்மை இன்மை என்னுதல். அல்லனாய் – புண்ணிய பாவங்கட்கு நியாமகனாய்,
அவற்றுக்குக் கட்டுப்பட்டவன் அன்றிக்கே இருப்பவனாய்.
திண்ண பாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் –
“ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய திருமாளிகை ஒன்றனை மாத்திரம் கடல் அழிக்கவில்லை” –
“வாசுதேவக்ருஹம் து ஏகம் நப்லாவயதி ஸாகர.”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 38 : 9.-என்கிறபடியே,
பிரளயகாலத்துக்கும் அழியாதபடி திண்ணிதான மாடங்களாலே சூழப்பட்ட திருவிண்ணகரிலே சேர்ந்து நிற்கிற உபகாரகனான ஸ்ரீகிருஷ்ணன்.
இன்னருளே –
புண்ணியம் பாவம் முதலாயினவைகளாய்க் கொண்டு அவனுக்கு விபூதிகளாகத் தோற்றுகிறவை யெல்லாம்
அவனுடைய கிருபையாலே உண்டாயின. பாவமும் அவன் கிருபையாலேயோ? என்னில், அதுவும் அப்படியே.
சேதனனுடைய முற்பிறவியின் கர்மங்களுக்குத் தகுதியாக நடத்துவிக்கின்ற காரணத்தாலே -சாபேஷ்த்வாத் -கர்மம் எதிர்பார்த்தே செய்பவன்
அதுவும் அவன் கிருபையாலேயாமத்தனை. நன்று; எல்லாம் செய்தாலும் தீமை அவன் கிருபையாலே வரக்கூடுமோ? என்னில்,
தீயதனைக் காட்டி வெதுப்பி நல்வழி போக்கு கையினாலே கூடும் அன்றோ.-அதுவும் அவனது இன்னருளே –
இன் அருள் –
காரணம் இல்லாமலே செய்யப்படுகின்ற அருள்.
கைதவமே –
நான் சொல்லுகிற இதில்அர்த்தவாதம் இல்லை.
கண்டுகொண்மின்கள் –
நீங்களும் எல்லாம் சாஸ்திரங்களிலே கண்டுகொள்ளுங்கோள்.
அன்றிக்கே, கைதவமே – என்பதற்கு, செய்யப்பட்டவை என்றபடியாய், செய்யப்பட்டவை அடங்கலும்
அவனுடைய காரணமில்லாமலே செய்யப்படுகின்ற இனிய திருவருளாலே உண்டாயின என்னுதல்.
மூன்று லோகங்கள் -க்ருதகம் -அவன் இன் அருளால் படைக்கப் பட்டன என்றபடி

——————————————————————————–

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-

பிரகாரம் -சகல ஜகத்தும் லீலா உத்த்யானம் தோட்டம்
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்-தாழ்ந்த உத்க்ருஷ்ட -அதன் நிறமும் –
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்-சத்யா அசத்திய -யுவான -அபி நவம் -புதியவை ஜீரணம் பழைமை
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-நித்ய வாசம்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.-ப்ரஹ்மாதி உயர்ந்த தெய்வங்கள் உள்ள லோகங்களும் பெரிய தோட்டம் -லீலைக்காக

வஞ்சனையும் நேர்மையுமாகி, கருமையும் வெண்மையுமாகி, மெய்யும் பொய்யுமாகி, இளமையும் முதுமையுமாகி, புதுமையும் பழமையுமாகி,
செய்யப்பட்ட திண்ணிய மதிள்களாற் சூழப்பட்ட திருவிண்ணகரம் என்னும் திவ்வியதேசத்தில் நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற
எம்பெருமான் வைத்து வளர்க்கின்ற சோலை காண்மின்; பெரிய தெய்வங்களையுடைய இந்த மூன்று உலகங்களும்.
பெருந்தேவுடை மூவுலகு, ஆய், சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் என்க. கா – சோலை.

சிறியார் பெரியார் என்னாதே எல்லார்க்கும் ரக்ஷகன் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் என்கிறார்.

கைதவம் செம்மை –
வஞ்சனை நேர்மைகள்.
கருமை வெளுமை –
கருப்பு வெளுப்பு.
மெய் பொய் –
உண்மை இன்மை.
இளமை முதுமை –
இளமை கிழத்தனம்.
புதுமை பழமை –
புதுமையும் பழமையும்.
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் –
காலம் செல்லச் செய்தேயும் இப்பொழுது செய்தாற்போலே இருக்கிற தொழிலின் புதுமையைச் சொல்லுகிறது.
பெய்த காவு கண்டீர் –
வைத்து ஆக்கினசோலைகண்டீர்.
பெரும்தேவுடைமூஉலகே –
ஈசுவர அபிமானிகளான தேவர்களையுடைத்தான மூன்று உலகங்களும்.
இத்தால், என் சொல்லியவாறோ? எனின், சோலையானது தனக்கு வேண்டும் பாதுகாவலை அறிவிக்கமாட்டாது அன்றோ;
நின்ற இடத்தே நின்று வாடிக் காட்டுகையும்,
பின்னர், வைத்து ஆக்கினவனே அதற்கு வேண்டும் காவலைச் செய்யவேண்டுகையும்
முதலாயினவற்றை யுடைத்தாயிருக்கையாய் இருக்குமன்றோ.
அப்படியே, நியமிக்கின்றவர்கள் நியமிக்கப்படுகின்ற பொருள்கள் என்னும் வேற்றுமை அற எல்லாம்
அவன் புத்தியதீனமாக இருப்பதனைத் தெரிவித்தபடி.
அம்ருதம் பிந்து கடாஷம் முன்பு நஷ்டம் வாடிக் காட்டும் -சதுச்லோஹி
மின்னிடை மடவாரில் சேர மாட்டேன் என்றதும் அவன் அதீனம்-

—————————————————————————————————

மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–6-3-6-

விலஷண அவிலஷண பதார்த்தங்கள் -விபூதியாக உடைய சர்வேஸ்வரன் -ஆஸ்ரிதற்கு
மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்-ஸ்ருஜ்யத்வ -கர்ம வச்யத்வ -குண த்ரயாத்மகத்வ பெருமை இல்லாத
-தத் பிரதிப்பட நித்ய விபூதி ராக த்வேஷங்கள்-குணம் இங்கு கீழே த்ரவ்யம்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்-ஸ்ரீ லஷ்மி -சேஷ்டை சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து –
தத் தத் கார்யமான புகழுமாய் பழியுமாய் -பிரகாரம்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-இந்த விபூதி யோகம் -நீர்மையை அனுபவிக்க
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.-மின்னிடை மடவாரில் விலகிய பாவி -சேர்ந்ததால் வந்த ஔஜ்வல்யம்

மூன்று உலகங்களையுடையனாயும் அல்லாத பரமபதத்தையுடையனாகியும், மகிழ்ச்சியாகியும் சீற்றமாகியும், தாமரைப்பூவில் வசிக்கின்ற
திருமகளாகியும் மூதேவியாகியும், புகழாகியும் பழிப்பாகியும், தேவர்கள் மனம் மகிழ்ந்து தொழுகின்ற திருவிண்ணகர் என்னும் திவ்வியதேசத்தில்
எழுந்தருளியிருக்கின்ற உபகாரகன், பாவியேனாகிய என்னுடைய மனத்தின் கண்ணே நித்தியவாசம் செய்கின்ற மேலான ஒளியுருவன் ஆவான்.
ஆய், சேர்ந்த பிரான் உறைகின்ற பரஞ்சுடர் என்க. தவ்வை – தமக்கை; மூதேவி.

‘நான் அல்லேன்’ என்னச் செய்தே தன்குணங்களையும் செயல்களையும் காட்டி மறக்க ஒண்ணாதபடி கலந்து அதனாலே
பேரொளிப் பிழம்பாயிருக்கிறவன் திருவிண்ணகரிலே நின்றருளின சர்வேசுவரன் கண்டீர் என்கிறார்.

மூன்று உலகங்களுமாய் –
மூன்று உலகங்கட்கும் நிர்வாஹகனாய்.
அன்றிக்கே, கிருதகம் அகிருதகம் கிருதாகிருதகம் என்னும் மூன்று வகைப்பட்ட உலகங்களுமாய் என்னுதல்.

க்ருதகம் -அவாந்தர பிரளயம் -அழிந்து -கீழ் ஏழு லோகங்கள் மேல் மூன்றும்
மேல் உள்ள மக -க்ருதக்ருதகம் -ஆள் இல்லை -லோகம் இருக்கும் -மேல் லோகம் போவார்கள் -க்ருஹங்களுக்கு ஸ்வரூப நாசம் இல்லையே
ஜன தப சத்யம் -அக்ருதகம் –

அல்லனாய் –
அல்லாதமேலேயுள்ள உலகங்கட்கும் நிர்வாஹகனாய்.
அன்றிக்கே, இந்த உலகங்களைச் சொல்லி ‘அல்லனாய்’ என்கையாலே,
இவ்வளவு அன்றிக்கே அசாதாரணமான நித்திய விபூதியையுடையவன் என்னுதல்.
உகப்பாய் முனிவாய் –
மகிழ்ச்சியும் முனிவுமாய்.
பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய் –
திருமகளும் திருமகள் அல்லாதவளுமாய். தவ்வை – திருமகள் அல்லாதவள்.
புகழாய்ப் பழியாய் –
திருமகளினுடைய கடாக்ஷ முடையார்க்கு வரும் புகழ், தவ்வையினுடைய கடாக்ஷமுடையார்க்கு வரும் பழி.
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் –
இந்திரன் முதலான தேவர்கள் இங்குள்ளாரால் கொடுக்கப்படுகின்ற ஹவிஸ்ஸினைக் கொள்ளும் போது
மூன்று யோஜனை தூரம் அவ்வருகே நின்று முகத்தைத் திரிய வைத்து வாங்கி வாந்தி பண்ணியாயிற்றுப் போவது;
அப்படி இருக்கிறவர்களுடைய வாசனையும் பொறுக்கமாட்டாத நித்திய சூரிகள்,
திரிவிண்ணகர் பூமியிலே ஆகையாலே இங்கே வந்து பொருந்தி வசிப்பர்கள்.
அப்படிப்பட்ட திருவிண்ணகரிலே நித்திய வாசம் செய்கிற உபகாரகன்.
பாவியேன்-
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே அவன் மேல் விழத் தாம் இறாய்த்த படியை நினைத்துப் ‘பாவியேன்’ என்கிறார்.
நித்தியசூரிகள் தன் பக்கலிலே வந்து மேல் விழ, அதனைத் தள்ளித் தான் என் பக்கலிலே வந்து
மேல் விழாநிற்கக்கண்டீர்நான் ‘அல்லேன்’ என்றது.
மனத்தே உறைகின்ற-
இப்போது, நித்தியசூரிகளும் அந்த இருப்பும் கிடக்கக் கண்டீர் என் நெஞ்சிலே புகுந்து நித்தியவாசம் செய்யாநின்றான்.
பரஞ்சுடரே –
தனக்குப் புறம்பே உண்டான வசிக்கும் இடங்கள் கிடக்க, என் நெஞ்சிலே புகுந்து நின்றது
எனக்குக் காரியம் செய்தானாய் இருக்கையன்றிக்கே ‘தன்பேறு’ என்று தோற்றும்படி பேர்ஒளியன்ஆனான். என்றது,
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, ‘இவரை இழக்கிறோமோ?’ என்று வந்த உறாவுதல் தீர,
இவரைப் பெற்ற பின்பு அதனாலே
“நின்றிலங்கு முடியினாய்!” –திருவாய். 6. 2 : 8.-என்கிறபடியே வடிவிலே பிறந்த வேறுபாடு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.

——————————————————————————–

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–6-3-7-

ஆஸ்ரித அநாஸ்ரிதர் விஷயமான ஆகார பேதம் -உடைய சர்வேஸ்வரன்திருவடிகளே சர்வருக்கும் பிரபல ஆஸ்ரயம்
பொது நின்ற பொன் அம் கழல்
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்-அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரகம் -அழுக்கு-பதிந்த ஜகதாகாரம்
-மரத்தை கடலை வணங்கி -இயற்க்கை -என்பர் அநாஸ்ரிதர் -பத்ம நாப அமரப் பிரபு –
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்-மறைந்தும் -அநாஸ்ரிதர் விஷயத்தில் -ஆஸ்ரிதர் விஷயத்தில் தோன்றியும் –
பிரகாசிக்கும் விஷயத்தில் ஸ்திரமாக -இதர விஷயத்தில் அஸ்திரமாகவும் –
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-ப்ரஹ்மாதிகள் தங்கள் அபேஷிதம் பெற வணங்கும்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே-அவனே சரண்யன் -சமாப்திக தாரித்ர்யம் பெருமை உடைய திருவடிகள் ஒழிய பிரபல ஸ்தலம் இல்லை

பிரகிருதி சம்பந்தம் இல்லாத திருமேனியையுடையவனாயும், உலகத்தையே உருவமாகவுடையவனாயும், கண்களுக்கு வெளிப்படாது மறைந்தவனாயும்,
இராம கிருஷ்ணாதி அவதாரங்களைச் செய்து கண்களுக்குத் தோன்றுகின்றவனாயும், அந்த அந்த அவதாரங்களில் பல ஆண்டுகள் நிலை பெற்று
நிற்கின்றவனாயும், வஞ்சனையான காரியங்களைச் செய்கின்றவனாயும் இருந்து, தேவர்கள் தலைகளால் வணங்குகின்ற திருவிண்ணகரம்
என்னும்திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய சிறப்பையுடைத்தான திருவடிகள் அல்லாமல் எத்தகையார்க்கும் வலிய உபாயம் வேறு ஒன்றுஇல்லை.
உடம்பாய் உடம்பாய்க் கரந்தும் தோன்றியும் நின்றும் செய்தும் சேர்ந்த பிரான் என்க. பிரான் பாதம் அல்லால் வன்சரண் யாவர்க்கும் இல்லை என்க.

எத்தனையேனும் ஞானமுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார்.

பரஞ்சுடர்உடம்பாய்-
“திருமேனி ஒளிகளின்கூட்டம்” -தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்”-இது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 67.
என்கிறபடியே, சுத்த சத்துவ மயமான அசாதாரண திவ்வியவிக்கிரகத்தையுடையனாய்.
அழுக்குப் பதித்த உடம்பாய் –
முக்குணங்களுக்கு வசப்பட்ட உலகத்தையே உருவமாகவுடையனாய். -நீராய் நிலனே -ஜகதாகாரமாய் –
கரந்தும் –
இவற்றுக்கு அந்தராத்மாவாய்ப் புக்கு நிற்கச்செய்தே
“எந்தப் பரமாத்மாவை ஆத்மா அறிகிறான்இல்லை” -“யம் ஆத்மா ந வேத”-என்பது, பிருஹதாரண்யக உப.-என்கிறபடியே,
இவற்றுக்குத் தோன்றாத படி நின்று, இவற்றின் சத்தையை நோக்கியும்.
தோன்றியும் –
காண வாராய் -திருவாய். 8. 5 : 2.-என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்திருப்பார்க்குக் காணலாம்படி
இராம கிருஷ்ணாதி அவதாரங்களைச் செய்தும்.
நின்றும் –
நூறு ஆண்டுகள், பதினோராயிரம் ஆண்டுகள் நின்றும். அவ்விடங்களிலே,
கைதவங்கள் செய்தும் –
வஞ்சனைகள் பொருந்திய காரியங்களைச் செய்தும்.
அதாவது, அவதரித்து நிற்கச்செய்தே தன்படிகள் சிசுபாலன் முதலாயினார்கட்குத் தோற்றாதபடி செய்தும்
, தன்னை அடைந்தவர்கட்குத் தோன்றும்படி செய்தும் போந்தமையைத் தெரிவித்தபடி.
விண்ணோர் சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்-
‘பிரமன்முதலாயினோர்’ தலைபடைத்த பிரயோஜனம் பெற்றோம்’ என்று வணங்கும்படி திருவிண்ணகரிலே நிற்கிற உபகாரகன்
வரம் கொள் பாதம் அல்லால் –
எத்தனையேனும் தண்ணியாரும் கிட்டலாம்படியான சிறப்புப் பொருந்திய திருவடிகள் அல்லது.-வர -சிறந்த –
யாவர்க்கும் வன்சரண் இல்லை –
எத்தனையேனும் கிழார் கிழார்க்கும் வலிய புகல் இல்லை.
அவனை ஒழிந்த சரண்யர் அனைவரும் இவனைக் கொண்டு முழுகும் பேர்.
இவனைக்கொண்டு கரை ஏறுதற்குத் தக்க வலிய புகல் அவன் திருவடிகள் அல்லது இல்லை.
அடியே பிடித்து ஜீவிக்கில் ஜீவிக்குமத்தனை.

——————————————————————————–

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-

அனுகூல பிரதிகூல விஷயங்களான ஸ்வ பாவங்கள் -சர்வேஸ்வரன் -ஆஸ்ரித பவ்யனான கிருஷ்ணன் -எனக்கு அசாதாராண புகழ் இடம்
வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்-தேவர்களுக்கு -திண்ணிய சரண் -அசுரர்களுக்கு யமன் போலே
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்-தாத்ருச வேறுபாட்டை உடைய லௌகிகரை-இங்கும் தேவர் அசுரர் உண்டே
-பாதச்சாயையில் வைத்தும் வைக்காமலும் –
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-தெற்குத் திக்குக்கு புகலிடம் –
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே-என் சுவாமி -சர்வ பிரகாரத்தாலும் சாதாரணமான புகல் இடம் –

தேவர்கட்குச் சிறந்த புகலிடமாகியும், அசுரர்கட்குக் கொடிய யமனாகியும், பெரியோர்களைத் தன்திருவடிகளின் நிழலிலேவைத்துக் காப்பாற்றியும்,
பெரியோர் அல்லாதாரை அங்ஙனம் வைத்துக்காப்பாற்றாமலும், தெற்குத் திசைக்குப் புகலிடமான திருவிண்ணகரம் என்னும் திவ்விய தேசத்திலே
எழுந்தருளியிருக்கிற பிரான் என் கண்ணன் என்னை ஆளுடைய என்னப்பன் எம்பெருமான் எனக்குப் புகலிடமாவான்.
சுரர்க்கு வன்சரண் ஆய் என்க. ஆய் வைத்தும் வையாதும் சேர்ந்த பிரானாகிய கண்ணன் என்க.
கண்ணனாகிய என்னப்பன் என் சரண் என்க. என்சரண் – எனக்குச் சரண்.

எனக்குப் புகலான மாத்திரமன்றிக்கே, மற்றும் எல்லாமும் திருவிண்ணகர் சேர்ந்த பிரானே என்கிறார்.
எனக்கு விசேஷணமான புகல் என்கிறார் –

சுரர்க்கு வன்சரண் ஆய் –
தேவர்களுக்காகத் தன்னை அம்புக்கு இலக்கு ஆக்கி அவர்களை வலிய ரக்ஷகனாய். -முப்பத்து மூவர் முன் சென்று –
அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் –
அசுரத்தன்மை வாய்ந்தவர்களுக்கு ‘அந்தகன் தண்ணீர்’ என்னும்படி வெவ்விய கூற்றமுமாய் -யமன் -தண் கூற்றம்
வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்து -அடித்த அடியே போதுமே —
தன்சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும் –
தன்னுடைய பாதங்களின் நிழலிலே, அநுகூலரான அருச்சுனன் முதலாயினோர்களை இட்டுக்கொண்டும்.
சம்பந்தம் ஒத்திருக்கச்செய்தே, பிரதிகூலரான துரியோதனன் முதலாயினோர்களைப் புறம்பே இட்டும்.
உலகம் -அர்ஜுனன் -கண்ணனுக்கு அந்த அளவு சஹ்யம் -உயர்ந்தோர் மாட்டே உலகம் -திருவடி பற்றினவர்

தென் திசைக்குச் சரண் திருவிண்ணகர்சேர்ந்தபிரான் –
“புண்ணிய சரித்திரங்களையுடைய எந்த அகத்தியராலே தெற்குத் திக்கானது புகலிடமாகச் செய்யப்பட்டதோ”
“தஷிணாதிக் கிருதா யேந ஸண்யா புண்ய கர்மணா”- என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 82.
பத்திக்கு வரம்பாகிய பார்த்தன் பலதீர்த்தம்
அத்திக்கினும் எத்திக்கினும் ஆம் என்றவை ஆடிச்
சித்திக்கொரு விதையாகிய தென்னாட்டினை அணுகித்
தத்திச்சொரி அருவித்தட அரவக்கிரி சார்ந்தான்.-என்பது, வில்லிபாரதம்.
என்கிறபடியே, தெற்குத் திக்கிற்குப் புகலிடமான திருவிண்ணகரிலே கிட்டின உபகாரகன்.
அவர் குரு முனிவர் இவர் குருகை முனிவர் -தென் திசை இருவருக்காக வணங்குகிறோம் –
என் சரண் –
எனக்குப் புகலிடம்.
என் கண்ணன் –
எனக்குப் பவ்யனானவன்.
என்னை ஆளுடை என் அப்பன் –
என்னை அடிமைகொள்ளுதற்கு உரியவன், எனக்கு உபகாரகன். ‘உலகம்’ என்பது, உயர்ந்தோர் மாட்டு.

——————————————————————————————-

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9-

நிதானப் பாசுரம் இது -பரஸ்பர வ்ருத்த ஆகாரம் பந்து வர்க்கம் -ச்ப்ருஹ நீய வஸ்து -பிரகாரம் -உபகாரத்வத்துக்கு ஒப்பு இல்லாத
சர்வேஸ்வரன் பாதச்சாயை தந்து அருளினான்
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்-சத்திக்கு ஹேது இவன் -இகுள் -வளர்த்த தாய் -ஸ்த்ரீத்வம்
-செவிலித்தாய் -பெற்றவள் நல் தாய் -பந்து வர்க்கத்தில் வேறுபாடு
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்-பொன் போலே ச்ப்ருஹ நீயத்வம் பிரகாசிப்பித்தும் –
அதில் காட்டில் ஔஜ்வல்யத்தால் மிக்கு மஹார்கதை-ரத்னம் போலே தேஜஸ் பிரகாசிப்பித்தும்
அதில் காட்டில் நீர்மை குளிர்த்தியாலும் வியார்வர்தமான நீர்மையை பிரகாசப்படுத்தி -பஹு முக உபகாரகன்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்-சர்வ சுவாமி -மதில்களும் பொன் மணி முத்து
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே–உபகாரத்தில் ஒப்பார் இல்லாத -திருவடி நிழல் தந்து அருளினான்

எனக்கு என் அப்பனாகியும், எனக்குச் செவிலித்தாயாகியும், என்னைப் பெற்ற தாயாகியும், பொன்னைப்போன்றவனும் மணியைப் போன்றவனும்
முத்தைப்போன்றவனும் என்அப்பனும் ஆகியும், பிரகாசிக்கின்ற அழகிய மதிள்களாற் சூழப்பட்ட திருவிண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில்
எழுந்தருளியிருக்கின்ற அப்பன், தனக்குச் சமானமானவர்கள் இல்லாத அப்பன் தன்னுடைய திருவடிகளின் நிழலைத் தந்தான்.
எனக்கு என்னப்பன் ஆய் என்று மாற்றுக. இகுளை – தோழி. ஆய் ஆய் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல் அப்பன் அவன்தன தாள் நிழல் தந்தனன் என்க.

எனக்குச் சரணமான மாத்திரமே யன்று, மற்றும் எல்லாமும் அவனே என்கிறார்.
அன்றிக்கே, எனக்கு எல்லாவகையாலும் உபகாரகனாம் தன் திருவடி நிழலை, ‘அல்லேன்’ என்ன,
வலிய எனக்குத் தந்தான் என்கிறார் என்னுதல்.

எனக்கு என் அப்பன் ஆய் –
எனக்கு அசாதாரணனாய்ச்சத்தைக்குக் காரணமாயுள்ள பிதாவாய்.
பஞ்சகாலத்திலே குழந்தைகளைவிற்று உண்ணும் தமப்பனைப்போல் அன்றியிலே,
தன்னை அழிய மாறியும் என்னை நோக்கக்கடவ தமப்பனாய்.
இகுளாய் –
எனக்கு நடந்த செயலைப்பற்றிச் சொல்லுவதற்குரிய தோழியுமாய்.
இகுளை என்று தோழிக்குப் பெயர். அது கடைக்குறைந்து ‘இகுள்’ என நிற்கிறது.
என்னைப் பெற்றவளாய் –
வளர்த்துக் கொள்ளியான தாயைப்போல் அன்றியே, பத்து மாசம் வயிற்றிலேவைத்து நோக்கிப் பெற்ற தாயாய்.
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பன் –
வேறே இனிய பொருள்களாய்க் கொண்டு உபகாரகம் ஆவன சில பொருள்கள் உள;
எனக்கு அப்பொருள்கள் எல்லாம் தானாய் நின்று உபகரித்தவன்.
மின்னப் பொன் மதிள்சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் –
மின்னாநின்றுள்ள பொன்மதிளாலே சூழப்பட்ட திருவிண்ணகரிலே நின்ற உபகாரகன்.
தன் ஒப்பார் இல் அப்பன் –
சிலர்க்கு ஒன்றைக் கொடுக்குமிடத்தில், தன்னோடு ஒக்கக் கொடுக்கவல்லார் இல்லாதபடியான மஹோபகாரகன்.
இதற்கு, ‘மின்னிடை மடவார்’ என்ற திருவாய்மொழியிலே, அவன் மேல் வந்து விழ,
‘நீ எனக்கு வேண்டா’ என்று நான் தள்ளத் தள்ள,
‘நீ உனக்கு ஹிதம் அறிந்தாயோ? நான் உனக்கு வேணுங்காண் என்று தன்னை எனக்குத் தந்தவன்’ என்று சீயர் அருளிச்செய்வர்.
தன தாள் நிழல் தந்தனன் –
‘உன்னை ஒழிந்த வெய்யிலே எனக்கு அமையும்’ என்று நான் அகலப் புக,
“அழித்தாய் உன் திருவடியால்” என்று தன்னுடைய திருவடிகளாலே என் செருக்கைப்-மமதையைப்- போக்கி,
திருவடிநிழலை எனக்குத் தந்தான்.
அடிபட்டவாறே, ‘எனக்கு’ என்று வைத்தவற்றையும் பொகடுவர்களே.

திருவடிகளாலே என் செருக்கைப் போக்கினான்’ என்றதனை ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘அடிபட்டவாறே’ என்று தொடங்கி.
திருவடிகள் என்றும்- தண்டனை என்றும் பொருள்.

———————————————————————————————–

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-

பரஸ்பர வ்ருத்த ஆகாரமான -சகல சராசரங்கள் -விபூதி -சர்வேஸ்வரன் திருவடிகளைத் தவிர வேறு ரஷகம் இல்லை நீங்களே நிரூபித்திக் கொள்ளலாம்
நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்-அணு மஹத்-எல்லை -நடுவில் குறுமை நெடுமை -அனைத்துமாய்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்-சரம் ஜங்கமம் அசரம் ஸ்தாவரம் -சர்வ சரீரி -ஸ்வ பாவம் இல்லாதவன் –
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்-முக்தமான வாய் வியாபாரம் -பாடும் -போக்யத லாபத்தாலே வண்டுகள் வாழும் நித்ய வாசம்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.-வேறே ரஷகத்வம் இல்லையே -மனசால் காண்மின்கள்-

நிழலும் வெய்யிலுமாகி, சிறுமையும் பெருமையுமாகி, குறுமையும் நெடுமையுமாகி, திரிகின்றவையும் நிற்கின்றவையுமாகி, மற்றுமாகி,
அவை அல்லனுமாகி, இசைபாடுகின்ற இளமைபொருந்திய வண்டுகள் வாழ்கின்ற திருவிண்ணகரில் எழுந்தருளியிருக்கின்ற பிரானுடைய
திருவடிகளே அல்லாமல் மற்றும் ஒரு பற்றுக்கோடு இலோம்; நீங்களே காணுங்கோள்.
அல்லனுமாய் மன்னு பிரான் என்க. களைகண் – பற்றுக்கோடு.

அவன் திருவடிகள் அல்லாமல் வேறு ஒரு ரக்ஷகம் இல்லை என்னுமிடத்தைப் புத்திபண்ணுங்கோள் என்கிறார்.

நிழல் வெய்யில் –
குளிர்ச்சிக்குக் காரணமான நிழலும். உஷ்ணத்திற்குக் காரணமான வெய்யிலும்.
சிறுமை பெருமை – சிறுமைக்கு எல்லையான அணுத்வமும், பெருமைக்கு எல்லையான மகத்வமும்
குறுமை நெடுமை மத்திம அளவிலுண்டான குறுகுதல் நீளுதல்கள்.
சுழல்வன நிற்பன –
ஜங்கமங்களும், தாவரங்களும்.
மற்றுமாய் –
சொல்லப்படாதன எல்லாமாய். ‘மற்றும்’ என்றது சொல்லப்படாதனவற்றைத் தழுவுகின்றது.-அநுக்த சமுச்சயம்-
அவை அல்லனுமாய் –
அவற்றுக்கு அந்தர்யாமியாய் நிற்கச்செய்தே அவற்றின் தோஷங்கள் தட்டாதபடி நிற்பான் என்று மேலே சொல்லப்பட்டதே அன்றோ;
இனி, இங்கு என்? என்னில், அவற்றிற்கு வரும் அவஸ்தைகளையுமுடையனல்லனாய் நிற்பன் என்பதனைத் தெரிவித்தபடி.
அவை: சேதனனிடத்தே உள்ள சுகதுக்கங்களும், அசேதனத் திடத்தேயுள்ள வளர்தல் முதலானவைகளுமாம்.
அகர்ம வச்யத்வம் அங்கே சொல்லி -அவற்றுக்கு வரும் அவஸ்தைகள் -பாப புண்ய ரூப கர்மங்களுக்கு வரும் சுக துக்கங்களும் அல்லன் என்கிறார் இங்கே
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னுபிரான் –
பருவத்தின் இளமையாலே இனிய பேச்சுக்களையுடைத்தான வண்டுகள் வாழாநின்றுள்ள திருவிண்ணகரிலே
நித்தியவாசம் செய்கிற உபகாரகன்.
கழல்கள் அன்றி மற்று ஓர் களைகண் இலம் –
அவன் திருவடிகளை ஒழிய வேறு ரக்ஷகத்தையுடையோம் அல்லோம்.
“என்னையே சரணமாகப் பற்று” என்னுமவன் அன்றிக்கே, திருவடிகள்தாமே தஞ்சம் என்பார் ‘கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம்’ என்கிறார்.
“மாமேகம் சரணம் வ்ரஜ”-என்பது, ஸ்ரீ கீதை, 18 : 66.
“மறுபிறப் பறுக்கும் மாசில் சேவடி”- என்பது, பரிபாடல்.
காண்மின்களே –
இது அர்த்தவாதம் சொல்லுகிறேன் அல்லேன்; நீங்களும் பாருங்கோள் என்கிறார்.அர்த்தவாதம் – புனைந்துரை.

சமன் கொள் வீடு கொடுக்கும் தடம் குன்றம் போலே திருவடியே சரண் –ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகள் –
அவன் விட்டாலும் அவள் விட மாட்டாள் -இருவரும் விட்டாலும் விடாத திண் கழல் -ததீய சேஷத்வமே திண்மை என்றபடி

———————————————————————————-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-

ஸூ ரிகளுக்கு நித்ய கௌரவ்யர்கள் ஆவார்கள்
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த-திருவிக்ரமன் திருவடிகள் -செப்பிடு வித்தை போலே
-குனிந்து இருக்க அறியாமல் தீண்டி -சின்ன திருவடியைக் காட்டி -நிமிர்ந்த -பரஸ்பர வ்ருத்தரானவர்கள் உலகீர் –
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன-அபதானம் போலே -பல வகைகளிலும் பரந்த -சர்வேஸ்வரன் -திரு நகரிக்கு நிர்வாகர்
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்-நியமன ரூபம் -பகவத் ஆஜ்ஞ்ஞை ரூபம் –
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே-கௌரவர் -மதிக்கத் தக்கவர்கள்
கோனை மிருக்கு குற்றம் -பொருந்தாமை இல்லாமல் -நித்ய சூரிகளுக்கு என்றும் கௌரவர் ஆவார்கள்

உலகத்தீர்! இதனைக் காணுங்கோள் என்று கண்களுக்கு எதிரே வளர்ந்த திருவடிகளையுடைய சர்வேசுவரன் விஷயமாக, திருக்குருகூரிலே அவதரித்த
ஸ்ரீ சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட, பகவானுடைய ஆணை உருவமாக இருக்கிற, ஆயிரம் திருப்பாசுரங்களுள் திருவிண்ணகரம் என்ற
திவ்விய தேசத்தைப் பற்றிய இப்பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள் ஒரு குற்றமும் இன்றி நித்தியசூரிகளுக்கு என்றும் கௌரவிக்கத் தக்கவர்கள் ஆவர்கள்.
சடகோபன் சொன்ன திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார் விண்ணோர்க்கு என்றும் கோணை இன்றிக் குரவர்கள் ஆவர் என்க.

முடிவில், இத்திருவாய்மொழி 3வல்லார் நித்தியசூரிகளுக்கு நாள்தோறும் கௌரவிக்கத் தக்கவராவர் என்கிறார்.

காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த தாள் இணையன் தன்னை –
‘உங்கள் தலைகளிலே நான் காலைவைக்கக்கொடு வாருங்கோள்’ என்றால், இசையார் என்று பார்த்து,
நான் காட்டப் புகுவது ஓர் ஆச்சரியத்தைப் பாருங்கோள் என்பாரைப் போலே
இவர்கள் கண்முகப்பே நிமிர்ந்த திருவடித் தாமரைகளையுடையவனை.
காண்மின்கள் – இது ஓர் ஆச்சரியம் என்ன வேண்டிற்றுக்காணும் ‘தலைகளிலே அடிபடப் புக்கவாறே இறாய்ப்பர்கள்’ என்று.
அவன் காட்டியதும் வியப்பு -ஆழ்வார் இப்படி பொருந்தாததை பொருந்த விட்டாரே என்று வியந்து அருளிச் செய்ததார் என்றுமாம் –
அவனாக தீண்டியதை இறாய்த்து இருப்பார்களும் உண்டே என்ற ஆச்சர்யமுமாம் –
குருகூர்ச் சடகோபன் சொன்ன –
இந்தச் சௌலப்யத்தை அநுபவித்தவர் சொன்ன வார்த்தையாகையாலே ஆப்தம் என்கை.
ஆயிரத்து ஆணை திருவிண்ணகர் இப்பத்தும் வல்லார் –
ஈசுவரனுடைய உலக நியமனத்தைச் சொன்ன இத் திருவாய்மொழி வல்லார்.
ஆணை -ஐஸ்வர்யம் -நியமனம் -அர்ஜுனன் வேண்ட கீதாச்சார்யன் காட்டி அருளினான் -அதே போலே இங்கும்
விண்ணோர்க்கு என்றும் கோணை இன்றிக் குரவர்கள் ஆவர் –
நித்தியசூரிகளுக்குக் காலம் என்னும் ஒருபொருள் உள்ள வரையிலும் கௌரவிக்கத் தக்கவராவர்.
இதில் கோணை இல்லை – ஒருமிறுக்கு இல்லை. என்றது, என் சொல்லியவாறோ? எனின்,
சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத நித்தியசூரிகளுக்கு, நித்திய சம்சாரியானவன் இதனைக் கற்ற அளவிலே
கௌரவிக்கத் தக்கவராதல் எங்ஙனே? என்னில்,
அங்கே இருந்து வைத்தே ததீயத்வ ஆகாரத்தாலே லீலாவிபூதியை நினைத்து உவகையராம் நிலையுள்ளது முக்தர்க்கு ஆகையாலே,
இங்கே இருந்தே, அவர்கள் அநுசந்தானத்தைச் செய்கிற இவனை,
‘சம்சாரத்தே இருந்து வைத்தே நம்படி ஒருவனுக்கு உண்டாவதே!’ என்று கொண்டாடி இருப்பார்கள் என்பதனைத் தெரிவித்தபடி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.- என்ற திருக்குறளையும், அதன் பரிமேலழகர் உரையையும் இங்கே நோக்குக.

——————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

கோபம் மம ப்ரணயஜம்
பிரசமைய
கிருஷ்ண
ச்வாதீனதாம் அத நுத இதி விஸ்மயதயா
ஸ்ரீ யாம் வ்ருத்த ஜகத் ஆக்ருதிதா
தேன சந்தர்சிதாம்
அனுபவபூவ
முனி திருதிய

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சம்பத்து தாரித்ர்யம் பாவாத்
அசூக சூக க்ருதே
பட்டண கிராம பாவாத்
புண்ய அபுண்ய பாவாத்
கபட ருஜூ தயா
சர்வ லோகாதி பாவாத்
திவ்ய அதிவ்ய அங்கவத்வாத்
சூரா திதிஜா கண ஸ்நிக்த சத்ரு -திதி பிள்ளைகள் அசுரர்கள்
சாயா அச்சாயா ஆதி பாவாத் -அர்த்தாத் பிரிய ஹிதம்
வ்ருத்த விபூதிகன் அகடி கட நம்

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 53-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர் ——————–53-

————————————————————————-

அவதாரிகை –

இதில்
விருத்த விபூதி உக்தனாய் இருக்கிற படியைப்
பேசின பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழே
அல்லோம் -என்று இருந்த தம்மை ஆவோம் -என்னப் பண்ணின வனுடைய
அகடிகதடநா சாமர்த்தியத்தை அனுசந்தித்து
விஸ்மிதரான இவருக்கு
இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மிதர் ஆகிறது
நாட்டில் தன்னில் தான் சேராத பதார்த்தங்கள் எல்லாவற்றையும்
நம்முடனே சேர்த்துக் கொண்டு
திரு விண்ணகரிலே நிற்கிற படி பாரீர்
என்று அவன் தன் வ்ருத்த விபூதி யோகத்தைக் காட்ட
அத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டராய்ச் செல்லுகிற
நல் குரவும் செல்வமும் – அர்த்தத்தை
நல்ல வலத்தால் இத்யாதியால் அருளிச் செய்கிறார் –

——————————————————————————–

வியாக்யானம்–

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் –
அதாவது
லீலா உபகரணங்களை எடுத்தும்
பறித்தும்
கழகம் எறியும்
வழி மறித்தும்
சிற்றில் அழித்தும்
முற்றத்தூடு புகுந்து முறுவல் செய்து வார்த்தை சொல்லியும்-சங்கேத ஸ்தானம் இவள் முற்றம்
கிட்டே வந்து முகம் காட்டி -முறுவல் செய்து -சாவிக்கும் அந்தராத்மா -கட்டி முடித்த பின்பு அழித்த-
லோகவத்து லீலா கைவல்யம் -வீட்டைப் பண்ணி விளையாடும் -விமலன் தன்னை குற்றம் இல்லாதவன்
-வைஷம்யம் நைர்குண்யம் இல்லாதவன் -அநாயாசேனே மோஷம் அளிப்பான் -இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்
பிரயோஜ நாந்தரம் போகக் கூடாதே என்றே அழித்தான்
இப்படி யாயிற்று
இவர் ஊடலைத் தீர்த்து
கூட விட்டது –
இவர்
இது ஓர் அகடிதகடநா சாமர்த்திய சக்தி இருந்தபடி என்-என்று பார்த்து
முன்- நண்ணாரை வெல்லும் -என்று -அத்தை மூதலிக்கிறார்
அதாவது
பும்ஸாம் சித்த திருஷ்டி அபஹாரியாய் –
சாஷான் மன்மத மன்மதனான தன் சந்நிதியிலே
கிட்டோம் -என்றிருந்த தம்மை
ஸ்த்ரீத்வ அபிமானத்தைக் குலைத்து
ஊடுகையைத் தவிர்த்து
கூடப் பண்ணின படி -என்கை-
முன் நண்ணா தாராய் -கிட்டா தாராய் இருக்கிற நம்மை
நல்ல வலத்தால் சேர்த்தோன் -என்று அந்வயம் ஆகவுமாம்

அன்றிக்கே
முன் நண்ணாரை வெல்லும்- -என்று
பூர்வ சத்ருக்களாய்
அவர்களை நின்று இலங்கு முடியனா -இத்யாதிப் படியே வென்றால் போலே
நம்மை நல்ல வலத்தால் சேர்த்தது -என்றாகவுமாம்-

இப்படி சேராததைச் சேர்ப்பதே -என்று இவர் ஈடுபட
இது ஓன்று கண்டோ நீர் ஆச்சர்யப் படுகிறீர்
லோகத்தில் பரஸ்பர விருத்தங்களாய் இருக்கிற விபூதியைச் சேர்த்துக் கொண்டு
திரு விண்ணகரிலே நிற்கிற படியைப் பாரீர் -என்று
விருத்த விபூதி உக்தனாய் இருக்கிற படியைக் காட்ட –
விருத்த விபூதியன் என்று –
அதாவது –
நல் குரவும் செல்வும் –
கண்ட வின்பம் துன்பம் –
நகரமும் நாடுகளும் –
புண்ணியம் பாவம் –
கைதவம் செம்மை –
மூவுலகங்களும் அல்லனாய்-
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய் –
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் –
நிழல் வெய்யில் –
இத்யாதி பாட்டுக்களிலே
அக்னி கோப பிரசாதஸ்தே சோம -என்னும் படியான
விருத்த விபூதிகத்வத்தைப் பரக்கப் பேசி-

எல்லை யறத் தான் இருந்து வாழ்த்தும் –
அதாவது –
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை -என்றும்
கண்டு கொள்வதற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் -என்றும்
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் புகர்கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியம் -என்றும்
கண்ண நின்னருளே கண்டு கொண்மின்கள் -என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் வரன் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரண்-என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பன் -என்றும்
என் அப்பன் எனக்காய் -என்று தொடங்கி –திரு விண்ணகர் சேர்ந்த என் அப்பன் தன் ஒப்பாரில் அப்பன்
தந்தனன் தான தாள் நிழல் -என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலோம் -என்றும்
இப்படி இதுக்கு என்று சமைந்து இருந்து
நிரவதிக ஸ்தோத்ரங்களால் ஸ்துதித்து அருளும் –
தமிழ் மாறன் சொல் வல்லார் –
சர்வ ஸூலபமான
திராவிட பாஷைக்கு தேசிகரான
ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய்மொழியை
அப்யசிக்க வல்லார் –

வானவர்க்கு வாய்த்த குரவர்
அவனுடைய விபூதியை
ததீயத் ஆகாரண அனுபவிக்கிற நித்ய சூரிகளுக்கு
அவ் வநுபவ விஷயமான இத் திருவாய்மொழியை
இவர்கள் இங்கேயே இருந்து அனுசந்திக்கையாலே
அவர்களுக்கு அனுரூபமான ஆதரணீயர் ஆவார் –
திரு விண்ணகர் பத்தும் வல்லார் கோணை இன்றி
விண்ணோர்க்கு என்றும் ஆவார் குரவர்கள் -என்றத்தை
அருளிச் செய்த படி –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: