பகவத் விஷயம் காலஷேபம் -128- திருவாய்மொழி – -6-2–1….6-2–5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

இவ் வாழ்வாராகிறார் சம்சார பயத்தாலும், பகவானிடத்துள்ள ஈடுபாட்டினாலும், கைங்கர்ய ருசியாலும்,
பிரிவில் தரியாமையாலும் பகவத் விஷயத்தில் கைவைத்தார் எல்லாருடைய படிகளையுமுடையராயிருப்பர்.
“பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாஒழுக்கும் அழுக்குடம்பும்” என்கையாலே பத்தர்படி உண்டு என்னவுமாயிருந்தது;
“இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை” என்று கொண்டு, அது பொருந்தாதபடி இருக்கையாலே முமுக்ஷூக்கள் படியுமாயிருந்தது;
17 இனி திருவாய்மொழியில் 3 திரு விருத்தத்தில் இருபதின் கால் இனி என்றாரே –
“வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்று, கைங்கர்யத்தால் அல்லது தேகயாத்திரை செல்லாமையாலே முத்தர்படி உண்டு

என்னலாயிருந்தது; “நின்னலால் இலேன்காண்” –திருவாய். 2. 3 : 7.-என்று, அதுதான் ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி -சத்யா பிரயுக்தம் –
வந்ததாயிருக்கையாலே நித்தியரோடு ஒக்கச் சொல்லலாயிருந்தது;
பிரணயரோஷத்தாலே ஊடுகையாலே பிராட்டிமாரோடு ஒக்கச் சொல்லலாயிருந்தது.
“ஆற்றலில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்”
“விஷ்ணுநா ஸத்ரிஸோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஸந:”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.-என்று,
பெருமாளுடைய ஒவ்வொரு தன்மைக்கு ஒவ்வொரு பொருளை ஒப்பாகச்சொல்லுமாறு போலே,
அல்லாதார்படி அடங்கலும் இவருடைய ஒவ்வொரு நிலைக்கு ஒப்பாமத்தனை.
இதுதான் இவர்க்கு இளமை தொடங்கியே இருப்பது -பால்யாத் ப்ரவ்ருத்தி -ஒன்றே யன்றோ.
“முலையோ முழு முற்றும் போந்தில. . . . . .பெருமான் மலையோ திருவேங்கடமென்று கற்கின்ற வாசகமே” -திருவிருத்தம், பா. 60-என்றும்,
“அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து”-திருவாய். 2. 3: 3.-என்றும் சொல்லுகிறபடியே யன்றோ
இவர் பருவம் நிரம்புவதற்கு முன்னும் இருக்கிறபடி.

இனி, “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியிலே, அவன் வேண்டாத நானும் என்னுடைமையும் வேண்டா என்றார்;
“மாசறு சோதி” என்ற திருவாய்மொழியிலே, எனக்கு உறுப்பு அல்லாத அவனும் அவன் விபூதியும் வேண்டா என்று அழிக்கப்பார்த்தார்;
“பிறந்தவாறும்” என்ற திருவாய்மொழியிலே, தரித்து நின்று குணாநுசந்தானம் பண்ணவல்லேனாம்படி செய்தருளவேண்டும் என்று சரணம் புக்கார்;
“வைகல் பூங்கழிவாய்” என்ற திருவாய்மொழியிலே, அப் பெரிய துயரத்தோடே கூடத் தூதுவிட்டார்;
விட்ட ஆள் சென்று அத்தலைப்பட்டு அவனுக்கு அறிவிக்க, அவனும் இழவாளனாய்,
யானைக்கு அருள்செய்ய வந்து தோற்றினாற் போலே பதறி நடந்து வராநிற்க,
அவ்வளவு பற்றாமே கிடந்து துடித்து அலமந்து, ‘இனி இவ்வளவில் நாம் செய்ய அடுப்பது என்?’ என்று பார்த்து,
‘முடிந்து போவதற்கு மேற்பட்ட பரிஹாரம் இல்லை’ என்று அறுதியிட்டு முடியப் பார்க்கிறாள்.
அது இவள் நினைத்த போதாக முடியும்படி இராதே யன்றோ. அங்ஙன் செய்யலாமன்று,
இவள் “ஏறாளுமிறையோனும்” என்ற திருவாய்மொழியில் ‘வேண்டா’ என்றபோதே போமேயன்றோ.
இனி, போகத்துக்கு அவன் வரவு வேண்டினதைப்போன்று, முடிவுக்கும் அவன் வரவுவேண்டியிருந்தது.
பிரிவில் குணாநுசந்தானம் பண்ணித் தரிக்கலாம்; அவன் சந்நிதியில் அவனை ஒழிய
அரைக்கணம் முகம் மாறியிருக்குமதற்கு மேற்பட முடிவு உண்டோ.
அன்றிக்கே, அவன் பெயரநின்று இத்தலையைப் பண்ணின மிறுக்கு அடங்கலும், அவன் சந்நிதியிலே
தான் முடிந்து அவனையே நோவுபடுத்தப் பார்க்கிறாள் என்னுதல்.

அவன், வரவிலே சிறிது தாழ்க்க, பிரணயரோஷம் தலையெடுத்து, ‘இனி இருந்து ஜீவிக்கும் ஜீவனம்வேண்டா’ என்று
முடியப் பார்க்கிறாள் பிரிவு பொறுக்க மாட்டாமையாலே.
“மிக்க அன்பினாலுண்டாகிய கலவியாலும் என்னுடையவன் என்ற அபிமானத்தாலும்” என்கிறபடியே,
அவரோடு உண்டான பலநாள் பழக்கத்தாலும், கலவியாலும், “என்னுடையவரன்றோ” என்கிற வேண்டப்பாட்டாலும்,
பெருமாளை மேலிட்டு வார்த்தை சொன்னாள் அன்றோ பிராட்டி.

இப்படிப் பிரணயரோஷத்தாலே ஊடின பேர் உளரோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘மிக்க அன்பினால்’ என்று தொடங்கி.

“ப்ரணயாச்ச அபிமாநாச்ச பரிசிக்ஷேப ராகவம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 2. எடுத்த சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்
‘அவரோடு உண்டான’ என்று தொடங்கி. வேண்டப்பாடு – பெருமை. பலகாலம் பழகினவன் விட்டுப் போகப் புக்கால்
கோபமாமேயன்றோ. மேலும், ஒரேபொருள் என்னலாம்படி கலந்தவன் விட்டுப் போகப் புக்கால் கோபமாமேயன்றோ. ஆதலால், பலகாலம்
பழகுதலும், கலவியும் மேலிட்டு வார்த்தை சொல்லுகைக்குக் காரணங்களாம் என்க.
தனக்குப் பரதந்திரராயிருந்தவர் விட்டுப் போகப் புக்கால் கோபமாம் ஆதலாலும்,
‘என்னுடையவரன்றோ என்கிற வேண்டப்பாடும்’-வேண்டற்பாடு-மேன்மை பெருமை -அபிமானம் – மேலிட்டு வார்த்தை சொல்லுகைக்குக் காரணமாகும் என்க.
மேலிட்டு வார்த்தை சொல்லுகையாவது,- வீரனானவனை வீரன் அல்லாதவனாக்கி வார்த்தை சொல்லுதல்.

என் சொன்னாள்? என்னில், ‘வாரீர்! ஒருவனுக்கு ஆற்றா ஒருத்தி உண்டோ?
என் ஒருத்தியையும் நோக்க மாட்டாமையே வைத்துப் போகப் புகுகிறது! இதுதன்னை எங்கள் ஐயர் கேட்டால் போரவெறுப்பர்;
’ “ஒருபெண்பெண்டாட்டி ஆண் உடை உடுத்து என்மகளைக் கைப்பிடித்துக் கொண்டுபோன இத்தனையாகாதே என்று
இராமே கடுகக் கொண்டு போகப் பாரும்.”‘ஒரு பெண் பெண்டாட்டி’ என்று தொடங்கிச் சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.
“கிம்த்வாம் அந்யத வைதேஹ: பிதா மே மிதிலாதிப:
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்திரியம் புருஷ விக்ரஹம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 3.
“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்கிருத்ய – பிறர் உயர்த்தி கண்டால் பொறுக்கவேண்டாவோ?
நான் ‘உம்மோடு கூடப்போர’ என்றுறப்பட்டு நாலடி இட்டால், எனக்கு அதனால் வரும் ஏற்றம் கண்டு
பொறுக்கமாட்டாமையால் உண்டான கோபம் பொறாமை இவற்றைப் பொகடும்.-வைதேகி நடந்திலளே – சிறிய திருமடல்
“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்க்ருத்ய புக்தஸேஷம் இவோதகம்
நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 6.
புக்த ஸேஷம் இவ் உதகம்-
குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; இவையும் -ஈர்ஷயம் ரோஷம் -அப்படி யாகாதேதான்.
பிரணயிகள் கோஷ்டியில் இங்ஙனே காணும் பரிமாற்றம். காதலிக்கு உண்டான தன்னேற்றம் தன்ன தாயிருக்க வேண்டாவோ?
பொறாமை -கோபம் -விட்டு விட்டு -காதல் சித்திக்கும் அவள் பெருமையை கண்டு இவன் உகப்பது –இவள் பெருமையைக் கண்டு உகப்பது வேண்டுமே
நய மாம் வீர –
என்னை அறியாதது போன்று உம்மையும் அறிந்திலீராகில், நான் சொல்லக் கேளும்.
உமக்கு ஒரு குறையும் இல்லைகாணும்; என்னைக் கொடு போகப் பாரும்.
விஸ்ரப்த: –
தங்கள் தங்களை அறியாவிட்டால் ஆப்தர் வாயிலே கேட்டு அறியவேண்டும் காணும்.
பாபம் மயி ந வித்யதே –
பொகடும்; இங்ஙன் அன்றாகில், நீர் என்னை இங்கே நிறுத்திப் போனால், நீர் மீண்டு வருந்தனையும்
தரித்திருக்கைக்கு வேண்டும் காரணம்எனக்கு இல்லை காணும்.” இப்படியே யன்றோ பிரணய ரோஷம் தலை எடுத்தால் இருக்கும்படி.

இவ்வளவேயோ? இன்னம், இவர்தாம் இலக்காகச் சொன்னவையன்றோ இவை!
இவர் வரவிட்ட ஆளின் முன்பேயும், “ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத்
தீயினைப் போன்று புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ
“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.
காகுத்ஸ்த:-
பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது;
‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனையல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ?
கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி –
‘நீர்ப்பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ?
கடலில் நீரே நெய்யாக எரிக்கவல்ல அம்பையுடையவரன்றோ. -அம்பு இல்லாததால் வரமால் இல்லை அன்பு இல்லையே உன் தலைவருக்கு –
ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரேயன்றோ; -பூமியை சமுத்ரம் பேணி இருக்க வைத்தாரே –
இராஜாக்களுக்குப் பூமியும் பெண்போலே யன்றோ; ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண்சிவக்குமளவுமாகாதே என்றும்
“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தைவிட்டவரும், என்னையும் கால்நடையாகக் காட்டில்
அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே,
பித்ருவசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனையன்றோ என்றும்
தர்மாபதேஸாத் த்யஜ்த: ச ராஜ்யம்
மாம் ச அபி அரண்யம் நயத: பதாதிம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 29.
இப்புடைகளிலே சொன்னவை பலவே யன்றோ.

இவளும் “மாசறுசோதி” என்னும் திருவாய்மொழி தொடங்கிப் போர நோவுபட்டு,
அதுதன்னை “வைகல் பூங்கழிவாய்” என்னும் திருவாய்மொழியளவும் வரப் பாடு ஆற்றி,
அவ்வளவிலும் வரக் காணாமையாலே தூது விட்டு, தூதுவர்களுடைய வார்த்தை அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்னே பற்றாதபடி பதறி,
‘இனி, அவன் தான் வந்தாலும் கலவியாய் அது பிரிவினை முடிவாகவுடைத்தாயல்லது இராது;
ஆனபின்பு, அவன் வந்து கலந்து பிரிந்த கோள்வாய் பொறுக்க அரிதாயிருக்கும்;
பின்பு, பிரிவாகிற புதுக்கோமுற்றவன்-புது அரசன் – வந்து முதன்மை கொண்டாடுமதில், முகம் பழகின துன்பமே அமையும்’ என்று
ஆற்றாமைதோற்ற இருந்தாள். எங்ஙனே இருந்தாளோ? என்னில், ‘ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா –

“ஹிமஹத நளிநீவ நஷ்டஸோபா வ்யஸநபரம்பரயா அதிபீட்யமாநா
ஸஹசர ரஹிதேவ சக்ரவாகீ ஜநகஸு தா கிருபணாம் தஸாம் ப்ரபந்நா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 30.
பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து போந்த இவளுக்கு வந்தேறியான பிரிவு அன்றோ;
அதனாலே அழகு அழிந்திருந்தாள்.
வ்யஸந பரம்பரயா –
பிரிவினைப் போன்று கலவியும் வந்து கழியப் பெற்றதில்லை.
அதிபீட்யமாநா-
இடத்தின் அளவல்லாத படியாயிருக்கை.
ஸஹசரரஹிதேவ சக்ரவாகீ-
வருமளவும் உணர்ந்து பொறுக்க மாட்டாதிருக்கை. அவற்றின்படி அங்ஙனே அன்றோ;
ஜனகஸு தா –
‘இவைவரும்’ என்று வளரப் பெற்றது இல்லை.
க்ருபணாம் தஸாம் ப்ரபந்நா –
மேலே கூறியவை ஒன்றும் ஒப்பாக மாட்டாது; சில சொல்லப்பட்டவாம் இத்தனை.
இவளும் அப்படியே ‘முகம்பழகின ஆற்றாமையோடே இருந்து முடிய அமையும்; இனி அவன் வரவு நமக்கு வேண்டா’ என்று இருக்கிறாள்.
இவள்தான் இப்படிப் பாரிக்கைக்கு அவன்தான் வாரா நின்றானோ? என்னில்,
இவர் எதிர்பார்-ப்பதற்கு மாறாகவே தானே நடக்கும் -அதனால் வருவான் -இவள் வர வேண்டாம் என்று அன்றோ நினைக்கிறாள் –
அவன்தான் வாராநின்றானோ? என்கிற ஐயத்துக்கு, ஐந்து வகையாக விடை அருளிச்செய்கிறார் ‘அவன் வரவுக்கு’ என்று தொடங்கி.
அவன் வரவுக்குச் சூசகமான நன்னிமித்தங்கள்பல உளவாயிருந்தன:
“பக்ஷீச – பறவையானது சிறகினை விரித்தது.
ஸாகா நிலய: – உலர்ந்த கொம்பிலன்றிக்கே, பசுமையையுடைத்தான பணையிலே இருந்தது.
மரத்தை வலமாக வந்து, தழைத்த பணையிலே நற்றரிக்க இருந்தது என்றபடி.

“பக்ஷீச ஸாகாநிலய: ப்ரஹ்ருஷ்ட: புன:புனஸ்சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸு ஸ்வாகதாம் வாசம் உதீரயாந: புன:புன: சோதயதீவ ஹ்ருஷ்ட:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 27 ; 51.

ப்ரஹ்ருஷ்ட: –
அங்குள்ள பழம் முதலானவற்றை உண்பதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி இருந்தது.
புந: புந: ச உத்தம ஸாந்த்வ வாதீ –
மேன் மேலென நல்வார்த்தைகள் சொல்லத் தொடங்கிற்று அதற்குமேலே,
ஸுஸ்வாகதாம் வாசம் உதீரயாந: –
இவ்வளவு அல்ல கண்டீர் அத்தலைப்பட்டது என்று சொல்லுமாறுபோலே இருந்தது.
புந:புந: சோத யதீவ-
வரவு நிச்சயமான பின்பு, குளித்தல் ஒப்பித்தல் செய்யாதிருக்கிறது என்? என்று சொல்லுமாறுபோலே இருந்தது.
உலகு அளந்தான் வரப் போகிறார் போலே கூவிற்றே
ஹ்ருஷ்ட: –
வந்தால் பிறக்கும் வேறுபாடு தோற்ற உடம்பு மயிர் எறிந்திருந்தது.
ததாகதாம் – “ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச – இரகசியச் செயல்களும் வெளிப்படைச் செயல்களும்”
“ததாகதாம் தாம்வ்யதிதாம் அநிந்திதாம் வ்யபேதஹர்ஷாம் பரி தீநமாநஸாம்
சுபாம் நிமித்தாநி சுபாநி பேஜிரே நரம் ஸ்ரியா ஜுஷ்டமிவ உபஜீவிந:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 29 : 1.
“ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச யத்விருத்தம் தஸ்ய தீமத:
ராமஸ்ய ஸஹ ஸௌமித்ரே ராக்ஷஸாநாம் ச ஸர்வஸ:”-என்பது, ஸ்ரீராமா. பால. 2 : 33.
என்று கொண்டு பிரமனுடைய திருவருளாலே உள்ளபடி எல்லாம் தோற்றக்கடவதாகப் பெற்றுடையனான
வால்மீகி முனிவருக்கும் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இருக்கிறபடி.
தாம்-தர்மிக்கு மேற்பட அவ்வருகு ஒன்று இன்றிக்கே இருக்கை.
வ்யதிதாம் – முற்கூறியவை எல்லாம் இயற்கையாய், வியசனமுள்ளது மேலே என்று தோற்றும்படியாயிருந்தாள்.
‘ஸமா த்வாதஸ தத்ராஹம்-ஸ்ரீராமா. சுந். 33 : 17.-என்று பன்னிரன்டு ஆண்டு கலந்து பிரிந்த இவளுக்கு
அது ஒன்றும் தோற்றாதே துக்கத்தை இட்டு நிரூபிக்க வேண்டும்படியா யிருந்தாள்.’
அநிந்திதாம்-அத்தலையைப் பிரிந்தால் இருக்கக்கடவபடியே இருந்தாள். இப்படி இராத அன்று பழிக்கத்தக்கவள் ஆவளே,
வ்யபேத ஹர்ஷாம்-‘உவகை குடிபுகுந்து போயிற்று’ என்று தெரியாதாய் இருக்கை.
பரிதீந மாநஸாம்-உவகை வந்தாலும் தங்கும் இடமும் இன்றிக்கே இருக்கை.
ஸுபாம் – மண் தின்று வந்த நகடுபோல் அன்றே குணாதிகவிஷயத்தைப் பிரிந்தால் இருக்கும்படி;
கடலேறி வடிந்தாற்போலே இருக்கிற அவ்விருப்பு தனக்கே ஆலத்தி வழிக்கவேண்டும்படி இருக்கை.
பெருமாளை பிரிந்து வெளுத்து இருப்பது உத்தேச்யம் என்பதால் ஸூ பாம் –
ஸுபாநி நிமித்தாநி பேஜிரே-நிமித்தங்களானவை இத்தலைக்கு நன்மை சொல்லித் தாம்தாம் சொரூபம் பெற்றன. என்றது,
சாக்ஷாத் லக்ஷ்மிக்குக் கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்றன என்றபடி. என்போலே என்னில்,
நரம் ஸ்ரியாஜு ஷ்டம் இவ உபஜீவந:- அர்த்திகளாயிருப்பார் உதாரர்பக்கலிலே சென்று தங்கள் தங்கள்
பிரயோஜனம்பெற்று உவகையினராமாறுபோலே. இப்படியாயிருந்தன நிமித்தங்களின் அளவு.

இனி, அவன் அளவு பார்த்தால்,
அருள் மா கடல் அமுது அன்றோ கிருபா சமுத்ரம் -ஆகவே வந்தே தீருவார்
“ஆர்த்தோவா யதிவாதிருப்த:-ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்;
“ஆர்த்தோவா யதிவா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:
அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 28.
ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்’ என்றது முதல்,
‘இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி’ என்றது முடிய, “ஆர்த்தோவா” என்ற சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.
சுலோகத்திலுள்ள “த்ருப்த:” என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘நாம் திருநாமங்களை’ என்று தொடங்கி.
திருப்தனாவான், சம்சாரதோஷ ஞானமும் பகவத்வைலக்ஷண்ய ஞானமுமுடையவனாய், நல்லாசிரியனை அடைதலை
முன்னாகக்கொண்டு ஈசுவரனே உபாயோபேயம் என்று அறுதியிட்டு, இனிவரும் பிறவியினைப் பொறுக்காதவனாய், இப்பிறவி முடியுமளவும்
ஆறியிருக்குமவனாய் இருக்க, ‘சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறுபோலே’ என்று, அவனை எளிமைப் படுத்துதல் என்? எனின்,
சரண்யனுடைய வைபவத்தைச் சொல்லும் இடமாகையாலே நஹிநிந்தா நியாயத்தாலே எளிமைப்படுத்துகிறார் என்று அருளிச்செய்வர்.
அன்றிக்கே, நாம் திருநாமங்களைச் சொன்னால் சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறுபோலே செருக்காலே சொல்லவுமாம்.
இங்ஙனம் விகல்பிப்பான் என்? ஆர்த்தனுக்கு அன்றோ பலத்தை அடைதல் உள்ளது?
மற்றையோனுக்கு உண்டாகச் சொல்லுகிறஇடம் பிரசித்தம் அன்றே? என்னில், இந்தச் சுலோகம் சரணாகதத்தின் லக்ஷணம் சொல்லுகிறதன்று;
சரண்யனுடைய லக்ஷணம் சொல்லுகிறது. இவனுடைய ஆர்த்தி தானும் உபாயத்தில் சேராதேயன்றே;
ஆனபின்பு, அவனோடு இவனோடு வாசி இல்லை.
அன்றிக்கே, தன்நிலை அறிந்து, ‘நமக்கு ஒரு கைம்முதல் இல்லையாய் இருந்தது’ என்று
தன்குறையை அறிவிக்கவும் மாட்டாதபடியாயிருந்தான்; ஆனபின்பு, இவனுக்கு நாமே யன்றோ உளோம் என்று
திருவுள்ளம் இவன்பக்கல் ஊன்றியிருக்கும்.
பரேஷாம் சரணாகத: அரி:-பகைவர்களில் வைத்துக்கொண்டு சரணம் அடைந்தவனான பகைவனாயிற்று இவன். அது என்? என்னில்
‘சரணம்’ என்ற வார்த்தையைச் சொல்லுகையாலே, ‘சரணாகதன்’ என்னவுமாய், அகவாயில் இல்லாமையாலே
‘பகைவன்’ என்னவுமாயிருக்கை.
அன்றிக்கே, முன்பு செய்தனவற்றிற்கு அநுதாபம் இல்லாமையாலும், இப்போது ‘சரணம்’ என்கிற சொல்லைச் சொல்லுகையாலும்,
இரண்டும் சொல்லலாயிருக்கை.
அன்றிக்கே, கொன்றேன். . .அன்றே வந்தடைந்தேன்’ என்னுமாறுபோலே என்னுதல்.

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனு மிரந்தார்க் கினிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாமலை வேங்கடவா!
அன்றே வந்தடைந்தேன் அடியேனைஆட் கொண்டருளே.-, பெரிய திருமொழி, 1. 9 : 3. என்றது,
“பரேஷாம் அரிஸ்ஸந் ஸரணாகத:” என்று கூட்டி, பிறர்க்கும் பகைவனாய்க்கொண்டு பிராயச்சித்தம் முதலியன செய்யாது சரணம் அடைந்தவன்
என்று வேறும் ஒரு கருத்து அருளிச்செய்தபடி. உதிரக் கை கழுவாமல் உடனே வந்து அடைந்தேன் என்பது பொருள்.
பிராணாந் பரித்யஜ்ய – பிராணன்களை ஒருதலையாகவிட்டு.
‘பிராணா நபி-பிராணன்களையும்’ என்னவேண்டாவோ? என்னில், அவன் சொன்ன சொலவுக்கு இது
ஒன்றும் போராமையாலே அதுவேண்டாவாயிற்று.
பிராணனையும் விட்டாவது சொல்லாமல் -சரணம் சொல்லே உயர்ந்தது — பிராணனை விட என்பதால் பிராணான் பரித்யஜ்ய என்கிறார் –
ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா-திருந்திய மனத்தையுடையவனாயிருக்குமவனால் இத்தனையும் செய்யப்படும். என்றது,
அறிவுடையார்க்கு இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி. இதுவன்றோ அவன்படி.

இப்படி, களித்துச் ‘சரணம்’ –த்ருப்தனாய் -என்றாலும் பொறுக்கமாட்டாதவன், ‘மாசறுசோதி’ என்ற திருவாய்மொழி தொடங்கிப்
போர மிறுக்குப்பட்டு நான்கு முறைகள் அடுத்துச் சரணம் புக்கு, அவ்வளவிலும் முகம்காட்டாதொழியச்செய்தேயும் தூதுவிட்டு,
‘இப்படி இம் மிறுக்குகள் எல்லாம் பட்டது நம்மை எண்ணி அன்றோ’ என்றிருப்பான்” என்று இருக்கையாலும்;
இவ்வளவும் வர இவள் தான் முடியாதே கிடக்கையாலும்,
அவன் இயல்பினை நம்பியிருக்கையினாலும்,
அவன் வரவுக்கு அறிகுறியான நன்னிமித்தங்கள் பல உண்டாகையினாலும்;
இவையெல்லாம் கிடக்க, ‘நம்முடைய பாக்கிய ஹாநிதான் அவனை நம்முன்னேகொண்டுவந்து நிறுத்தும்’ என்று இருக்கையினாலும்;
‘பிரிவு விரும்பப்படாத நிலையிலே முன்னே வந்து நிற்கவும் வல்லன்’ என்று இருக்கையினாலும்,
‘இன்னமும் ஒருகால் கலந்து பிரிந்து நம்மை முடிக்கவேண்டும்’ என்று இருப்பவனாதலானும்
‘வரவுதப்பாது’ என்று அவன் வரவை நிச்சயித்தாள்.

அங்ஙனம் நிச்சயித்தவள், தானும் தோழிமாருமாக ‘இனி, அவன் வந்தாலும் அவனுக்கு முகங்கொடுத்தல்,
அவனோடு வார்த்தை சொல்லுதல் செய்யக்கடவோமல்லோம்’ என்று அறுதியிட்டுக்கொண்டு,
-உம்மைத் தொகை -வரும் போது என்னாமல் வந்தாலும் -கர்ம பலம் பெரியதே அத்தை தாண்டி வந்தாலும் -என்றவாறு –
‘அவன் அறியாதது ஓர் இடத்தே போய் இருக்க வேண்டும்’ என்று பார்த்து,-சர்வஜ்ஞ்ஞன் அறியாத இடம் உண்டோ –
காயாம்பொழிலாய் அதிலே விளையாடு சூழலாய் அதன்நடுவே அதிமநோகரமாய் இருப்பதொரு மண்டபமாய்,
அம் மண்டபத்திலே கழகமாக இருந்து, வந்தாலும் அவனுக்கு இட்டீடுகொள்ளுகைக்குப் -வார்த்தை பேசி கேட்டு -பற்றாசு இல்லாதபடி
பூவை கிளி பந்து தொடக்கமான சேதனமாயும் அசேதனமாயுமுள்ள விளையாட்டுக் கருவிகளை
ஊரழி பூசலில் அரண் உள்ள கோட்டைகளிலே சரக்கு வாங்குவாரைப் போலே ஓரிடத்தே திரள வாங்கி,
‘இனி, இவர்கள் மறந்தவை எவையேனும் உளவாகில் அவைபெற்று அவனுக்குச் சத்தை உண்டாகவேண்டும்படியாய்,
இப்படிச் சமயமிட்டு, வந்தாலும் அவனுக்குப் புகுர ஒண்ணாதபடி ஆதரம் இன்மையாகிற கன்மதிளை உரக்கவிட்டு,
அவனுடைய முற்றறிவினைக்கொண்டு காரியங்கொள்ளுகைக்கு ஒருவழி இல்லாதபடியாகவும்
வரம்பில் ஆற்றலைக்கொண்டு காரியம் செய்ய ஒண்ணாதபடியாகவும் அறுதியிட்டிருந்து,
“கிருஷ்ணன் சுகமாக இருக்கிறாரா? என்று கிருஷ்ண விருத்தாந்தம் சொல்லுவார்,
“கச்சித் ஸு குஸலீ க்ருஷ்ண: சல ப்ரேம லவாத்மக:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 24 : 12.
அவ்வார்த்தைகளால் பயன் என்” என்று இப் பிதற்றுத் தான் என்? என்பாராய்,
அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் உகவாத இரணியன் முதலானோர் கோஷ்டிகளில்
திருநாமம் சொல்லுகை பொறுக்கமுடியாதவாறு இருப்பது போன்று, இவர்கள்கோஷ்டியிலும் உகவை தலை மண்டையிட்டு,
திருநாமம் சொல்லில் நெஞ்சு சிவிட்கு என்னும்படியாய்க் கொண்டு இருந்தார்கள் இவர்கள். இது இத்தலை இருந்தபடி.

இனி, அத்தலை இருந்தபடி என்? என்றால், “வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்” என்கிற துயர ஒலி செவிப்பட்டது.
ஸு சி ஸ்ரவா:-“நல்லது செவிப்படுமவன்” அன்றோ.இங்கே இருந்து கூப்பிட்டால் கேட்குமோ? என்ன,
‘நல்லது செவிப்படுமவன்’என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
“ருத்ரோ பஹு ஸிரா பப்ரு: விஸ்வயோநி: ஸு சி ஸ்ரவா:”-என்பது, ஸஹஸ்ரநாமம்.

இவ்வளவில் ஆறியிருக்குமவன் அன்றே. “பெரிய ஆபத்தை அடைந்தது” என்று கொண்டு
ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய துயரஒலி செவிப்பட்டபோது, திருவடிநிலை கோத்து எழுந்தருளப்பற்றாமை
வெறும் தரையிலே பத்து எட்டு அடி இட்டும், உலகத்தைச் சிருஷ்டித்தல் முதலான செயல்களினும்
நினைவுக்கு மேற்பட ஒன்றும் காணாமையாலே, இப் பதற்றம் இருந்த படியால்
‘இது இவ் வளவுகளில் அன்று; இதற்கு அடி என்?’ என்று திவ்ய அந்தப்புரம் கை நெருக்கும்படியாய்,
கருத்து அறிந்து நடப்பவனான பெரியதிருவடியைப் பண் செய்து ஏறப் பெறாதே வெறும்புறத்தே மேற்கொண்டு
“பகவானுடைய விரைவுக்கு வணக்கம்” என்று அறிவுடையார் ஈடுபடும்படி வந்து தோற்றினாற்போலேயும்;
திரௌபதியைத் துச்சாதனன் நலிகிறபோது ரக்ஷகராகப் பிரசித்தரான கணவன்மார் ஐவர் இருக்க, -வேடிக்கை பார்த்து இருக்க –
“கோவிந்தா! என்று அழைத்தாள் என்பது யாது ஒன்று உண்டோ?” என்கிற படியே,
“பரமாபதம் ஆபந்ந: மநஸா சிந்தயத்தரிம்
ஸது நாகவர: ஸ்ரீமான் நாராயண பராயண:”-என்பது, மஹாபாரதம்.
“அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் அஸ்லீக்ருத
ப்ரணீத மணிபாதுகம் கிமிதிச ஆகுலாந்த:புரம்,
அவாஹந பரிஷ்க்ரியம் பதகராஜம் ஆரோஹத:
கரிப்ரவர ப்ரும்ஹிதே பகவத: த்வராயை நம:”- என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம் உத்தர சதகம், 57.

நம்மை ரக்ஷகராக நினைத்துக் கூப்பிட, “வெகுதூரத்தில் வசிக்கிற என்னை” என்கிறபடியே.
நான் அண்மையில் இருப்பவனாய் உதவப் பெற்றிலேன் அவள் ஆபத்துக்கு என்று நொந்து
‘அவள் தனக்கு அடுக்கும்படி செய்தாள், நான் அவதரித்தே அவதாரப் பிரயோஜனம் ஒன்றும் பெற்றிலேன்’
“கோவிந்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணாமாம் துரவாஹிநம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் ந அபஸர்பதி”-என்பது, பாரதம் உத். 58 : 22.
என்று இழவாளனாய், தர்மபுத்திரன் தலையிலே முடியையும் வைத்து, இவள்குழலையும், முடிப்பித்துப்
பகைவர்கள் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துப் பொகட்டுத் தன்னுடைச்சோதி ஏற எழுந்தருளும்போதும்
“மிக்க வருத்தத்தை யடைந்த மனத்தினனாய்” என்கிறபடியே, திருவுள்ளம் புண்பட்டாற் போலேயும்;

“ஆடவர்களில் ஏறுபோன்றவரான வீடுமர் அம்புகளாகிய படுக்கையில் படுத்தவராய்க்கொண்டு
அணையும் நெருப்புப் போன்றவராய் என்னைத் தியானித்தார், பின்னர் என் மனம் அவரிடம் சென்றது” என்கிறபடியே,
அம்புப்படுக்கையில் படுத்திருப்பவரான ஸ்ரீவீடுமர்க்கு முற்பட்டவராய் உதவவேண்டியிருக்கப் பிற்பாடரானோம் என்று
நோவுபட்டாற்போலேயும் பிற்பாட்டுக்கு நோவுபடுமவன் அன்றோ.
“தர்ம ஸ்வரூபியான பெருமாள் எல்லா மக்களுக்கும் கருணையைச் செய்கிறார்;
அதனால், அம்மக்கள் பெருமாளைப் பின் தொடர்ந்தார்கள்”
“ஸர்வேஷாம் ஹி ஸதர்மாத்மா வர்ணாநாம் குருதே தயாம்
சதுர்ணாம் ஸமயஸ்தாநாம் தேநதே தமநுவ்ரதா:- என்பது, ஸ்ரீராமா. அயோத். 17 : 15.
என்று, என்முற்பாடு கண்டு பின்தொடர வேண்டியவர்கள் முற்பாடராம்படி நாம் பிற்படுவதே! என்று இருக்கும் அவன் அன்றோ.
“நானே வந்து அடையத்தக்க இப்படிப்பட்ட பிராமணர்களாகிற உங்களால் கிட்டப் பெற்றேன்,
இது எனக்கு மிக்க நாணத்தைத் தருகின்றது, நீங்கள் என் குற்றத்தைப் பொறுக்கவேண்டும்”
ப்ரஸீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷா ஹி மமாதுலா
யத் ஈ ருஸை: அஹம் விப்ரை: உபஸ்தேயை: உபஸ்தித:”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 10 : 9.
என்கிறபடியே, தண்டகாரண்யத்தில் வசிக்கின்ற இருடிகளுடைய துன்பத்திற்கு முற்பாடராய் உதவப் பெற்றிலோம் என்னும்
இழவாலே நாணங்கொண்டு, அவர்கள் கால்களைக் கட்டிப் பொறுப்பித்துக் கொள்ளுமவன் அலனோ.
இனி, “மனிதர்களுக்குத் துக்கம் வருகின்ற காலத்தில் அவர்கள் துக்கத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு
அதிகமான துக்கத்தைத் தான் அடைகின்றான்”
“வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித:
உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 40.
என்று பொதுவிலே இருக்கும் படி கண்டால், காதலி ஒருதலையானால் சொல்லவேண்டா அன்றோ.

இப்படிகளாலே திருவுள்ளம் போர இரங்கி, ‘நாம் கிட்டி நின்று கையைக் காலைப் பிடிக்க வேண்டும்படியான
விஷயம் பறவைகளின் கால்களிலே விழும்படி நாம் பிற்படுவதே!
நமக்கு இனி ஒரு ஆண்தன்மையாவது என்? அங்கு நாம் இனிப் போய்ச் செய்வது என்? இங்கிருந்து செய்வது என்?’ என்று கொண்டு தடுமாறி,
இத்தலையோடே கலந்தல்லது தரிக்கமாட்டாதானாய், இவர்கள் இருந்த இடத்துக்கு அண்மையில் வந்து,
பிரணயகோபத்தாலே அணுக ஒண்ணாதபடி இருக்கிற இருப்பைக் கண்டு,
இத்தலையில் எண்ணத்தைக் குலைத்து நாம் கூடினோம் ஆம் படி என்? என்று சிந்தித்தான்:
சிந்தித்து ‘அழகு கொண்டு வெல்வோம்’ என்று பார்க்கில் அழகினைக் கொண்டு தண்ணீர் வார்ப்பார் இலர் இக் கோஷ்டியில்;
“கருமை நிறம் பொருந்திய கண்களையுடையவள்” என்கிற தன்னேற்றம் உண்டேயன்றோ இத் தலைக்கு.
“ராகவோர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸிதேக்ஷணா” என்பது,-ஸ்ரீராமா. சுந். 16 : 5.

இனி, ‘மேன்மைகொண்டு வெல்வோம்’ என்று பார்க்கில், அந்தப்புரத்தை யானைக்கால்இட்டுத் துகைப்பித்து உண்ண ஒண்ணாதே.
இனி, இவ் விஷயத்தைப்பெறுகைக்குத் தாழ்ச்சியேயன்றோ பரிகரம்;
அது இத் தலையின் கடாக்ஷம் பெறாதிருக்கச் செய்வதற்குத் தொடங்கும்போது பயன் அற்றதாய் விடு மன்றோ.
இனி இத்தனையும் செய்தால், ஆசையற்றுப் போகைக்குத் திருவடிகள் பெயராவே.
இசைவின்றிக்கே இருக்க மேல் விழமாட்டானே. இனி, விழுக்காடு பாராதே மேல் விழுமன்று,
மிருதுத் தன்மையளாகையாலே இழக்க வரிலும் வருமே.
இனி, சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் அண்மையிலிருக்க, பெருவிடாயனானவன் அழிஞ்சுக்காடு ஏறப்போகமாட்டானே. என்றது,
‘இவன் சிறிது தாழ்த்தான்’ என்று வெறுத்து, ‘புகுருவான் அல்லன் நம் கோஷ்டியில்’ என்று இருக்கிற
இவர்களைவிட்டு நாட்டாரோடு உறவு செய்யப்போவான் அல்லனே என்றபடி.
இனி, ‘ஒருபடி பொருந்தினோமாம் விரகு என்?’ என்று, கடல் கடந்த திருவடி பட்டன எல்லாம் பட்டுத்
“தசரதன் என்ற பெயரையுடைய சக்கரவர்த்தி” என்னும் அளவு அன்றே.
திருவடியைப்போலே திருநாம சங்கீர்த்தனம் செய்தாலோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘தசரதன்’ என்று தொடங்கி.
“ராஜா தசரதோ நாம ரத குஞ்சர வாஜிமாந்
புண்ய ஸீலோ மஹாகீர்த்தி: ருஜு: ஆஸீத் மஹாயஸா:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 2.
“தசரதன் என்ற பெயரையுடைய சக்கரவர்த்தி” என்னுமளவன்றே’
என்றது, பிராட்டியைப்போலே திருநாமம் கேட்டு மீளும் அளவு அன்று என்றபடி.
இனிச் செய்யஅடுப்பது என்? என்று, “இப்படிப் பலவகையாக எண்ணி” என்கிறபடியே எண்ணி,
‘நம் தலையும் அவள் காலும் கிடந்ததாகில் காலைக் கட்டிப் பொருத்திக்கொள்ளுகிறோம்’ என்று அறுதியிட்டான்
ஏவம் பஹு விதாம் சிந்தாம் சிந்தயித்வா மஹாகபி:
ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம் வைதேஹ்யா வ்யர்ஜஹார ஹ”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 1.
தலையான உபாயம் இதனைக் காட்டிலும் இல்லையே. இதுதான் அடியிலே கண்டது ஒன்றே யன்றோ.

ஆக, இப்படி அறுதி யிட்டு, தன் நிறத்தோடு ஒக்க விகல்பிக்கலாவது ஒரு சோலை உள்ளிட்டு,
அவளுக்கும் தோழிமார்க்கும் தெரியாதபடி கிட்டச்சென்று, அவர்களைக் காணப்பெறாதே விடாய்த்தவன் கண்கள்
ஆரளவும் நின்று விளைநீர் அடைத்துக்கொண்டு கிருதார்த்தனாய் நின்றான்.
ஆலோகத்தின்பின் ஆலாபம் முதலியவைகளிலே சிரத்தை இருக்குமன்றோ, அதுவும் பெற்றிலன்.
அவ்வளவிலும் தன்னுடைய பிராணனுக்குத் தாரகமாக இருக்கின்ற இவர்களுடைய பூவை, கிளி தொடக்கமானவற்றினுடைய
இனிய பேச்சுக்களைக் கேட்கப் பெறாமையாலும் மிகவும் தளர்ந்து,
‘தானும் அவளுமாகச் சேர்ந்திருக்கும்போது அவளிடத்திற் காட்டிலும் தன் பக்கல் அன்பு இரட்டித்தன்றோ தோழிமார்களுக்கு இருப்பது;
பிரிவிலும் அப்படியே’ என்று இருந்தான். அவர்கள் அங்ஙனம் அன்றிக்கே அவளைக் காட்டிலும் கோபம் மிக்கு இருந்தார்கள்.

இளையபெருமாள் தமையனாருடைய இரண்டு திருவடிகளையும் நெருங்கப் பிடித்து”
-“ஸப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகுநந்தந:
ஸீதாம் உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவ்ரதம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 2
என்று புருஷகாரம் முன்னாகத் தன்பக்கல் புகுந்தார்க்குத் தன் திருவுள்ளம் இரங்கும்படி தான் அறிவான் அன்றோ,
இங்கு அப்படியே அவர்கள் புருஷகாரமாகவும் பெற்றது இல்லை.
இனி, இத் தலையில் இசைவு உண்டானாலும் அவர்கள் இசையாத அன்று அழைக்கவும் போகாதே;
“இவனுக்கு அபயம் கொடுக்கப்பட்டது” என்றாலும், “கொல்லத் தக்கவன்” என்றவர் தம்மையிட்டே “அழைத்துக் கொண்டு வா” என்ன வேண்டிற்று
“ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யாபயம் மயா
விபீஷ்ணோவா ஸுக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்”- என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 34.
அன்றோ. அவ் வழிகளாலும் ஒரு முகம் பெற்றிலன்.
“கணநேரமும் உயிர்பிழைத்திருக்கக் கூடியவனல்லேன்” ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10
என்றும், “உனக்கும் கணநேரமும் பிரிவின் துன்பம் பொறுக்கமுடியாததாக இருக்கிறதோ”-
“க்ஷணேபி தே யத்விரஹ: அதிதுஸ்ஸஹ:”- என்பது, ஸ்தோத்திர ரத்நம். 56.
என்றும் சொல்லுகிறபடியே ஒருகணமும் பிரிவினைப் பொறுக்கமாட்டாதவன், அவர்கள் அண்மையில் பெறாமலே நின்று முகம் பிழைக்க மாட்டானே.
இனி, இவன் அங்கு வந்து சேர்ந்த காரணத்தாலே அவ்விடம் அடங்கலும்
“தண்டகாரண்யமுழுதும் நீல நிறமாக ஆக்கிக் கொண்டு”
“ஸோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 14.
என்கிறபடியே மயிற்கழுத்துச் சாயலாக, இவனுடைய நிரந்தரமான கடாக்ஷத்தாலே புளகாங்கிதம் கொண்ட சரீரத்தையுடையவர்களாக,
இவனுடைய கடாக்ஷத்தாலுண்டான குளிர்ச்சி இவர்களுடைய பிரணயரோஷத்தால் வந்த கோபாக்நியும் விரஹாக்நியும் அன்றாகில்
பொறுப்பதற்கும் அரிதாம்படியாய்க் கோபந்தான் அவன் சந்நிதியில் மிகைத்துவாராநிற்க,
இவ்வகைப்பட்ட தன்மைகளைக் கொண்டு இவன் வந்தமையை நிச்சயித்துத் தங்களிலே ஒருமித்து முகம் மாறி யிருந்தார்கள்.
இவனும் அந்த இருப்பைக் கண்டு, எதிரிகள் இட்ட மதிள் ஆகிலன்றோ முறித்துப் புகலாவது.
கிட்டப் பெறாமையாலும் அண்மையிலிருப்பதாலும் ஆற்றாமை கரைபுரண்டு கால் தரையில் பாவாதபடியாய்க்கொண்டு
தடுமாறி வருகிற சமயத்திலே, இவனுடைய ஜீவன அதிருஷ்டத்தாலே
இவர்கள் மறந்து போன பந்தும் கழலும் இவன் காலிலே தாக்கின.
தாக்கவே, இருட்டு அறைகளிலே தடவிக்கொண்டு வாராநின்றால் உறியும் வெண்ணெயும் கையிலே தாக்கினால் உவகையனாமாறுபோலே,
பெரிய உவகையோடு விழுந்து அவற்றை எடுத்துக்கொண்டான்.
எடுத்துக் கொண்டு, அத்தலையில் செய்த வியாமோகம் அடங்கலும் அவற்றிலே தோற்றும்படி
கண்களிலே ஒற்றிக்கொள்வது தலையிலே வைத்துக் கொள்வதாய், பிராட்டி திருவாழி மோதிரங் கண்டு பட்டனவெல்லாம் பட்டான்.
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா – ‘இராவணன் மாயையாலே வந்ததோ’ என்னும் பயத்தாலே முற்படக் கண்வைக்கமாட்டாதே இருந்தாள்;
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர் து: கர விபூஷணம்
பர்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 4.
‘அத் தலையாலே வந்தது’ என்று தெளிந்த பின்பு கண் மாறவைக்க அரிதாம்படி இருந்தாள்.
ஸா – ப்ரேக்ஷமாணா – “பஸ்யதேவி – தேவியே! பார்க்க்”
“வாநரோஹம் மஹாபாகே தூதோ ராமஸ்ய தீமத:
ராம நாமாங்கிதம் சேதம் பஸ்யதேவி அங்குளீயகம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36. 2.
என்றுகொண்டு முன்பு பார்வைக்குக் கிருஷி பண்ணவேண்டும்படி இருந்தவள் தானே,
கண் மாற வைக்கைக்குக் கிருஷி பண்ணவேண்டும்படியாய் இருந்தாள்.
பர்த்து: கரவிபூஷணம் – முதல் கைப்பிடிக்கிறபோது உறுத்தினபடியை நினைத்தாள்.
கரவிபூஷணம் – அணி மிகு தாமரைக்கை யன்றோ. ஆபரணத்துக்கு ஆபரணங் காணும்.
பர்த்தாரம் இவ-இவன் இத்தைத் திருக்கையில் கொடுத்தவாறே, இதனோடே சேர்ந்த விரலையும் தோளையும் நினைத்தாள்;
அந் நினைவுதான், தான் இக்கரையில் ஆளாகவும், அவர் அக்கரையில் ஆளாகவும், கடல் இடையிலே கிடக்கிறதாகவும் அறிந்திலள்;
ஒருபடுக்கையிலே கூட இருந்ததாக நினைத்தாள்;
பார்த்தாராம் ஏவ என்னாமல் இவ அவனைப் -போலே இல்லை அவனையே என்றவாறு
ஒரு சூது சதுரங்கங்களிலே தோற்றுத் தன்கையில் இருந்ததாக நினைத்தாள்.
“இவ” என்கிறான் இருடி, உலகமாதா என்ற கருத்தாலே. இவள் உணர்ந்தால் என்படக் கடவள் என்று.
ஜாநகீ-இன்ப துன்பங்களுக்கு இளையாத குடியிலே பிறந்தவள்.
முதிதாபவத்- உவகையளானாள். அப்படியேயாயிற்று இவனும் இவைபெற்ற பின்பு.
சம்சாரி முக்தனானால் அவனுடைய லீலோபகரணமும் போகோபகரணமும் சமமாகத் தோற்றக் கடவது.
வேறு ஆகாரமான நினைவு இல்லையே. ததீயத்வ ஆகாரத்தாலே நித்தியவிபூதியோடு ஒக்கத் தோற்றுமித்தனை.
அப்படியே இவளுடைய லீலோபகரணமும் போகோபகரணமுமாகத் தோற்றக்கடவது.

அவற்றிலே அவன்செய்யும் வியாமோகத்தைக் கண்டார்கள்.
‘நம்மைப் பிரிந்தபின்பு சத்தையோடே குறியழியாதிருக்கக்கடவ இவன், இவையெல்லாம் நம்மை உத்தேசித்துச் செய்கிறானாகக் கூடாவாம்;
இங்ஙனேயாகவேணும்: நம்மைப் பிரிந்த பின்பு சென்று சிலரோடே கலந்தான்; அவர்களையும் பிரிந்தான்;
அவ் வாற்றாமையோடே இங்கு வந்தான்; இவற்றை அவர்களுடைய விளையாட்டுப் பொருள்களாக மயங்கினானித்தனை;
இது நம்பக்கல் ஆசையுடையனாய்ச் செய்கிறானல்லன்’ என்று கொண்டு இவர்கள் இருக்க,
அவனும் தன்னழகாலும் குணங்களாலும் தன்செல்லாமையாலும் தாழ்ச்சிகளாலும்
இத்தலையில் ஊடலைத் தீர்த்துக் கலந்தபடி சொல்லுகிறது இத்திருவாய்மொழி.

இனி, இத்திருவாய்மொழி தன்னை, பூர்வாசாரியர்கள்,
‘பகவத் விஷயத்தில் பிரணயரோஷம் தோற்ற வார்த்தை சொல்லுகை சேஷத்வ லக்ஷணமன்று;
“வளவேழ் உலகு” என்ற திருவாய்மொழியைப் போன்று தம் தாழ்ச்சியை அருளிச்செய்கிறார்’ என்று நிர்வஹிப்பர்கள்
இதனைப் பட்டர் கேட்டு ‘என் சொன்னாரானார்கள்! இவர்க்குப் பகவத்விஷயத்தில் உண்டான ருசிக்குப் பிரகாசம்
இத்திருவாய்மொழியாயிருக்கும்; இதற்கு வேறே ஒருவழி இடுவதே! ஆனபின்பு இதுவே பொருளாமித்தனை’ என்று அருளிச்செய்தார்.
“சத்தியத்தினின்றும் பிறழ்ந்த உன்னையோ உறவினர்களுடன் கொன்றுவிடுவேன்”
“ஏக ஏவ ரணே வாலீ ஸரேண நிஹதோ மயா
த்வாம் து ஸத்யாத் அதிக்ராந்தம் ஹநிஷ்யாமி ஸபாந்தவம்”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 30 : 82.
என்று மஹாராஜரோடே பெருமாளுக்குக் கிலாய்க்கைக்கும் உறவு உண்டாயிற்று அன்றோ.

இத்திருவாய் மொழியில் வருகின்ற “தாமரை புரை கண்ணிணை” என்பது போன்றவைகளைத் திருவுள்ளம்பற்றித் ‘தன்னழகாலும்’ என்றும்,
“நம்பி” என்றதனைத் திருவுள்ளம்பற்றிக் ‘குணங்களாலும்’ என்றும்,
“எம்குழறு பூவையொடும்”, “கையிற்பாவை பறிப்பது” என்பவைகளைத்திருவுள்ளம்பற்றித் ‘தன் செல்லாமையாலும்’ என்றும்,
“உணக்கி நீ வளைத்தால்” என்றதனைத் திருவுள்ளம்பற்றித் ‘தாழ்ச்சிகளாலும்’ என்றும் அருளிச் செய்கிறார்

“புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்க லத்தல் உறுவது கண்டு”

“ஊடற்கட் சென்றேன்மன் தோழி யதுமறந்து கூடற்கட் சென்றதென் னெஞ்சு”- என்ற குறட்பாக்களும்,

“புலப்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே அவர்காணின்க லப்பேன் என்னுமிக் கையறு நெஞ்சே”

“ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவர்காணின்கூடுவேன் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே”- என்ற கலித்தொகைப் பகுதியும்
இத்திருவாய்மொழியின் முன்னுரையின்கருத்தோடு ஒருபுடை ஒப்பு நோக்கத்தக்கன.

பங்குனி உத்தரம் பிரணய கலக்கம் உத்சவம் -ஆழ்வார் தீர்த்து வைப்பார் -இங்கு பராங்குச நாயகி பிரணய ரோஷம்
-பெருமாளே தீர்த்து சேர்த்திக் கொண்டான்

———————————————————————————————

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

லீலா உபகரணங்களையும் மறைய வைத்து -தோழி மாற்களையும் விமுகராம் படி
இவனது பாக்ய விசேஷத்தால் -இவள் விஸ்மரித்து-அசேதனம் ஆகையாலே தானே போக மாட்டாத பந்தையும்
கழலையும் எடுத்துக் கொண்டு அவற்றில் அத்யந்த ஆதாரம் –
முன்பு பெண் பிள்ளைக்கு தாம் செய்த -உண்ணாது உறங்காது ஒலி கடலை -விரோதி நிரசன்னா ஆகாரத்தை ஆவிஷ்கரித்து
அபிமுக்யையாக நினைத்து -சொல்லி இவள் இடம் நீயே அவள் -ஈடுபடுத்த திரு உள்ளம் பற்ற
இவள் அவன் திரு உள்ளக் கருத்தை அறிந்து -இது எம்மது -நீ நினைக்கும் அவர்களது அல்ல உறவு அற வார்த்தை சொல்கிறாள்
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்-மின்னல் போன்ற இடை -கண்ணனையும் மயக்கும் -அபிநிவேசிக்கும் படி –
உருவ குணம் ஆத்மகுணம் இரண்டும் உண்டாக இருக்கச் செய்தே -நின் அருள் பாத்ரம் ஆகி -தலைக் கொண்டு இருக்கும் அவர்கள்
சந்நிதியிலே அதைப் பற்றி நினைத்து அஞ்சுவன் -உன் வியாபாரம் -அறிந்து முகம் காட்டாமல் வெறுப்பார்கள் என்று
அவர்கள் பந்து என்று நீ நினைத்து இருக்க -அவர்களுக்கும் பொய்யன் தானே நீ -எங்களைப் போலே அவர்களும் -முகம் திருப்புவார்கள்
நீ அவமானம் பட்டு தலை குனிவை என்று அஞ்சுவன் -அதிக்ரமங்கள் -அறிந்து நீ சிதிலன் ஆகும் படி வெறுப்பார்கள்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!-உன்னுடைய சுண்டாயம் நானறிவன் -உள்ளுவார் ய்ள்ளத்து இல்லாம்
உடன் இருந்து அவன் அறிவதைப் போலே இவன் திரு உள்ளம் அறிந்து
ராவணன் அளித்து -இலங்கை அளித்த -மாயவனே -ராமனே மாயவனே -சேர்த்து அருளுகிறாள் -ஒரு சீதைக்கு செய்தது என் போன்ற பெண்களை ஏமாற்றி அழிக்க
உன்னை ஒழிய வேறு சிலர் இல்லை -ஏக தார வ்ரதன் -இடையூறு கழித்துக் கொடுத்தமை கேட்டு அறியாயோ என்ன மாயவனே என்கிறாள்
இளகிய நெஞ்சு கொண்டார் மயங்குவார் -ஸ்வார்த்த பரதை உன் கார்யம் -பரார்த்தம் இல்லை -சுண்டாயம் –
நான் வால்மீகி -இல்லை -கொடுத்து வார்த்தை எழுத வைத்தாய்
அகற்ற நீ வைத்த மாய வல் வினைகள் நான் நன்கு அறிவன்
இனியது கொண்டு செய்வதென்?-என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!பரி பூரணன் -இத்தசையிலும் -மின்னிடை மடவார்களால் பூரணன் –
பதினாறாயிரம் தேவிமார் பார்த்து இருக்கும் பூரணன் -அவர்கள் வெறாத படி நீ போவது பிராப்தம்
போகும் பொழுது கையில் உள்ள பந்தும் கழலும் -மமதா அந்தர்பூதமான -கொடுத்துப் போ –
விமுகர் உடைய மமதா விஷயம் த்யாஜ்யம் என்று இருந்தால் இவள்
இவள் வைமுக்யம் பிரணய கருத்தியம் என்பதால் இவள் சம்பந்தம் உடையவை உத்தேச்யம் என்று இருந்தான் அவன்
செந்நூல் வெண்ணூல் கறும் நூல் -ஐந்து கழலை யும் ஆதரித்தது இவளுடைய குண த்ரயாத்மாக சரீரம் இந்த்ரியங்கள் தன விஷயம் ஆக்க நினைத்து
உன்னைக் கிடையா விட்டால் பழைய -ஏறாளும் இறையோனும் -சரீரம் அழுது அலற்ற -வேண்டுமே
முடிந்து பிழைக்க முடியாதே -இதற்கும் அவன் வேண்டுமே

உன்னுடைய அருளைப் பெறுதற்குரியவர்களான மின்னல் போன்ற இடையையுடைய பெண்களுக்கு முன்னே நீ படுகின்ற துன்பத்திற்கு நான் அஞ்சுவேன்;
இராவணனுடைய காவல் அமைந்த இலங்கையை நீறாகச் செய்த மாயவனே! உன்னுடைய சுண்டாயத்தை நான் அறிவேன்;
இனி, அதனால் பெறக்கூடிய பயன் யாது? நம்பீ! என்னுடைய பந்தினையும் கழலையும் கொடுத்துவிட்டுச் செல்வாய் என்கிறாள்.
அம்மானே! நம்பி! மடவார்கள் முன்பு நான் அது அஞ்சுவன், சுண்டாயம் நான் அறிவன், அதுகொண்டு செய்வது என்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு என்க. சுண்டாயம் – தன் காரியத்திலே நோக்குடைமை. விளையாட்டுமாம்.
கழல் – அம்மானை ஆடும் காய். போகு – போவாய்.
இத்திருவாய்மொழி, ஆசிரியத்துறை.

இப்படி வரவு தாழ்த்ததும் இத்தலையை ஒழியச் செல்லுவதாய் அன்று,- ஈடுபாட்டினை விளைக்கைக்காக.
அது -பிராவண்யம் -விளைந்தவாறே, கடுக வந்து கொண்டு நின்றான். வந்து பந்தையும் கழலையும் எடுத்துக்கொண்டான்.
அலாப்யலாபம் -பெறாப்பேறு என்று தோன்றும்படி நின்றான். இத்தலையில் செய்யக்கடவ காதல் அடங்கலும் இவற்றின் பக்கலிலே பண்ணினான்.
இவன் படுகிற அலமாப்பைக் கண்டு, ‘இவையெல்லாம் நம்மைக் குறித்துச் செய்கிறான் அல்லன்,
தான் கலந்து பிரிந்தவர்களுடைய உபகரணங்களாகக் கொண்டு செய்கிறானித்தனை.
இவனுடன் வார்த்தை சொல்லாதே இருக்கிறது என்?’ என்று,
‘வாராய்! நீ நினைக்கின்றவர்களுடைய பொருள்கள் அல்ல காண் இவை;
உனக்கு உபேக்ஷாவிஷயமான எங்களுடைய பொருள்கள் காண் இவை.
இவற்றைத் தந்து அவர்கள்பக்கலில் ஏறப் போ’ என்ன,
‘ஓம், அது செய்கிறேன்; இங்ஙனே, காரைச் சுமந்தது ஒரு மின் நிற்கின்றதே!’ என்ன,
ஆழ்வார் திருக்குழல் பார்த்து -காரைச் சுமந்தத மின்னிடை இருந்ததே என்றானாம் –அவன் பேசியதை வைத்து வெட்டிச் சொல்கிறாள்
‘மின்னிடை மடவார்கள்’ என்கிறார்கள்.
‘அவர்கள்பாடு ஏறப்போகிறவன் இடையிலே–நடுவிலே -இடை பற்றி வார்த்தை – இது ஒன்றைச் சொன்னான், அதுதான் நிலைநில்லாது’ என்று
பார்த்து‘வாராய்! நீ உபேக்ஷித்தவர்களிடத்திலே இத்துணை கால்தாழ்ந்தால்,
உன்னை விரும்பியிருப்பார் பலராகையாலே போர நெருக்குண்புதி கண்டாய்.
அவர்கள் தம்படி இருந்தபடி என்தான்? இது ஒரு தேககுணமும் ஆத்மகுணமும் இருக்கும்படியே!
‘மின்னிடை’ என்றது, மற்றைய தேக குணங்கட்கும் உபலக்ஷணம்.
மடம் – என்றது, நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு முதலான ஆத்தும குணங்களுக்கும் உபலக்ஷணம்.
‘மடவார்’ என்ற பன்மையாலே, ஒருவர்க்கும் உற்றானாயிராமை சொல்லுகிறது.

நீ ஒன்றை ஒன்றாக நினைக்கும்படி பண்ணுவிப்பதே அவர்கள் சிலர்.
இவனுடைய அலமாப்பைக் கொண்டே அவர்களுடைய வைலக்ஷண்யத்தை அநுமிக்கிறார்கள் அன்றோ.
அதஸ்மின் தத் புத்தி -ரஜஸ் பார்த்து சர்ப்பம் -சர்வஜ்ஞ்னையும் பிரமிக்கும் படியான இடை அழகு –
பாவியேன், உன்னை இங்ஙனே இடையிலே பிச்சுஏறித் துடிக்கப்பண்ணினார் யாரோ?
“மின்னிடை மடவார்கள்” என்று இவனோடு சம்பந்தமுடையாருடைய தேக குணங்களையும் ஆத்மகுணங்களையும்
சுபாஸ்ரயமாக -சிறந்த பற்றுக் கோடாக நினைத்திருந்தபடி தோற்ற வார்த்தை சொன்னபடி என்தான்!
பிரணயரோஷம் புறவாயிலே செல்லாநிற்கச் செய்தேயும், அகவாயில்நினைவு இதுவன்றோ.
அகவாயிலும் துவேஷமேயானாலும் வஸ்து இருந்தபடி சொல்லவேணுமே.
துவேஷத்தாலே சொல்லுமன்றும் -கிமர்த்தம் புண்டரீகாஷம் -விதுரன் க்ருஹத்தில் அன்னம் –
“யௌவனப் பருவமுள்ளவர்கள், மிக்க வனப்புள்ளவர்கள், மிருதுத் தன்மை வாய்ந்தவர்கள்,
நல்ல பலமுள்ளவர்கள், தாமரைபோன்ற அகன்ற திருக்கண்களையுடையவர்கள்” என்று
“தருணௌ ரூபஸம்பந்நௌ ஸு குமாரௌ மஹபலௌ
புண்டரீக விஸாலாகௌ சீர க்ருஷ்ணாஜ்நாம்பரௌ”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 19 : 14. இது, கரனைப் பார்த்துச் சூர்ப்பணகை கூறியது.
இருவர் மானுடர் தாபதர் ஏந்திய வரிவில் வாட்கையர் மன்மதன் மேனியர்
தரும நீரர் தயரதன் காதலர்செருவின் நேரு நிருதரைத் தேடுவார்.-என்பது, கம்பராமாயணம் கரன் வதைப்படலம், செய். 4.
அல்லது சொல்ல ஒண்ணாதே.

மின்னிடை மடவார்கள்-
தங்கள்பாடு கிட்டினால், ‘இது ஓர் இடையே! இது ஒரு குணமே!’ என்று அவன் ஆழங்கால்படும் துறை அறிவார்களே யன்றோ;
‘அப்படியேயன்றோ இவன் போன இடத்திலும்’ என்று இருக்கிறார்கள்.
இங்ஙன் அன்றாகில், எதிர்த்தலையைக் கண்டு சொல்லுகிறார்கள் அன்றே.
இப்படி இருப்பாரும் உண்டோ புறம்பே! என்ன,
நின் அருள் சூடுவார் –
உன்னுடைய திருவருளைப் பெறுவதற்குஉரியவர்களாய் இருப்பவர்கள்.
இவ்வளவிலே ‘உன்தலையிலே கால் வைக்கப் பிறந்தவர்கள்’ என்று சொல்ல அன்றோ அடுப்பது;
உறவுதோற்றாமல் இருக்கிறவள் அங்ஙனம் சொல்லாளே அன்றோ;
அங்ஙன் சொல்லுமன்று, அது அவனுக்கு இடமாமே.-அவனுக்குப் பிடித்தது -அத்தையே இங்கும் செய்யத் தொடங்குவான் -இடம் கொடுத்தது ஆகுமே –
அதாவது, இவள்காலைத் தன் தலையிலே எடுத்துவைத்துக்கொள்ளும் என்கை.
பாவபந்தம் அடியாக வந்த கலவியாகையாலும், நினைவும் அத்தலையாலே வந்ததாகையாலும்,
அவன் வார்த்தையாக நடுவில் ஒன்று இல்லையேயாகிலும் இடையீடு பொறுக்கக்கடவது.
ஆனால், என்? அவர்கள் இங்கு இல்லையே? என்றான். முன்பு – எங்களை அவர்களாக நினை. என்றது,
நாங்கள்காண் அவர்கள் என்கிறார்கள் என்றபடி.
‘அவையெல்லாம் இங்கேயன்றோ’ என்னவேண்டி யிருக்க, தனக்கு வேறே சிலர் உளராகச் சொல்லுவான் என்? என்னில்,
பல வார்த்தைகளைக் கேட்க நினைத்திருக்கிறவன் ஒரு வார்த்தையோடே தலைக்காட்டானே:
இட்டீடு கொள்ளுகையன்றோ இவன் தனக்குத் தாரகம். முன்பு –
நீ செய்யுமவையெல்லாம் மறைக்கப் போகாது காண். நீ அங்குச் செய்தவையெல்லாம் கண்டாயே நாங்கள் அறிந்தபடி.
இப்படியே, நீ இங்குச் செய்யுமவையெல்லாம் அவர்கள் அறிவர்கள்காண்.
உன்னைப்போலே அவர்களுக்கு வேறு பொருள்களில் நோக்கு இல்லை காண்.
உன்னைப்போலே நினையாதே கொள் அவர்களை.
உன்னைக்கலந்து பிரிந்தார் உன்னை அறிந்தபடியே இருப்பர்கள்காண்; -பிரயோஜ நாந்தர பரர்கள் இல்லையே -திருமுக பட்டயம் -face book
“பிரிந்து ஒன்று நோக்காது தம்முடைய பின்னே திரிந்துழலும் சிந்தனையார்” என்றே யன்றோ இருப்பது.

பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே திரிந்துழலும் சிந்தனையார் தம்மை – புரிந்தொருகால்
ஆ ஆ! என இரங்கார் அந்தோ! வலிதே கொல்? மாவாய் பிளந்தார் மனம்.-என்பது, பெரிய திருவந். 50.

அவர்களுக்கு வேறு விஷயம் இல்லாமையாலே எல்லாக் காலங்களிலும் நினைவிற்கு விஷயம் நீயேகாண்.
ஆனால், என்? உங்களுக்கு என்னோடு ஒருசம்பந்தம் இல்லை;
ஆனபின்னர், அத்தால் வருவது ஒன்று இல்லையே? என்றான்.
நான் அது அஞ்சுவன் –
நீ இங்கே சிறிதுபோழ்து கால் தாழ்த்துப் போனால், அவர்கள் உன்னை அரைக்கணம் முகம் மாறினால்,
நீ பொறுக்க மாட்டாமல் கிடந்து துடிக்கும் துடிப்பு நாங்கள் காணமாட்டோம்;
உன்னைப்போல் அல்லோம் காண் நாங்கள். கலந்து பிரியவல்லாயும் துடிப்புக் காண வல்லாயும் நீயே காண்;
பிறர் துன்பம் கண்டால்பொறுக்கமாட்டோம் நாங்கள்.
உன்னோடு உறவு இல்லையேயாகிலும் நீ படும் அலமாப்புக் கண்டால் பொறுக்கமாட்டோம்;
சிலர் கிணற்றில் விழுந்தால் ஒருகுரல் கூப்பிடும்போது உறவுவேணுமோ?
அவர்கள் பக்கல் முகம்பெறாதே நிற்கும் தடுமாற்றத்தை ‘ஆற்றோம்’ என்கிறார்கள்.

மின் போலே நுடங்கும் இடை ஆத்மகுணம் -உடையவராய் -உன் அருளை சிரசா வஹிக்கும் அவர்கள் சந்நிதியில்
நீ பண்ணின வியாபாரம் அறிந்து இருக்கும் நான்
நீ இங்கு பண்ணும் அதிக்ரமங்கள் அவர்கள் அறிந்து நீ சிதிலம் ஆகும் படி முகம் காட்டாமல் இருப்பார்கள் என்று நான் அஞ்சுவன் என்றபடி

அரைக்கணம் இத் தலையை ஒழிய ஜீவிக்கமாட்டாதே செல்லாமையையுடைய என்னைப்
பொய்யனாக்கிப் புறம்பாக்கி வார்த்தை சொல்லுவதே! என்றான்.
மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே –
‘என்தான்? நீ பொய்யன் அல்லையோ?’ என்றார்கள்.
‘நான் என்னோடு கலந்து பழகினவர்களில் இதற்கு முன்பு யார்க்குப் பொய்செய்தேன்?’ என்றான்.
‘நீ யார்க்குத்தான் மெய்செய்தாய்’ என்றார்கள். ‘என்தான்? “உண்ணாது உறங்காது ஒலிகடலையூடு அறுத்து” என்று
ஏகதாரவிரதனாய்க்கொண்டு நான் பட்டனஎல்லாம் பொய்யோ? என்றான்.
‘அதுதான் நீ வேண்டிச்செய்தாயோ? ஒரு துறையிலே ஒருமெய் பரிமாறாவிடில் மேல் உள்ளன எல்லாம் நமக்கு
ஒரு தொகையில் அகப்படா என்று செய்தாய் அத்தனையன்றோ!
அபலைகளை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு இட்ட வழியன்றோ?’
மன்னுடை இலங்கை அரண் காய்ந்த –
நிலமிதிதான் எதிரிகள் மண்ணுண்ணும்படியாய்,
அதற்குமேலே “இராவணனாலே காப்பாற்றப்படுகின்ற இலங்கை”
“லங்காம் ராவண பாலிதாம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 1 : 39.
என்று கொண்டு, சிங்கம் கிடந்த முழஞ்சு போலே பையல் உணர்ந்து நோக்குகிற ஊரை அழியச்செய்த,
மாயவன்-
வஞ்சனை பொருந்திய செயல்களையுடையவன். ‘மன்னுடை’ என்றது, மன்னனையுடைய என்றபடி.
‘அழகிது: ஒருமெய்யும் உண்டாகச் சொன்னீர்களே? அதனை இங்கே செய்தேனானாலோ? மேலுள்ளனவெல்லாம் ஆகைக்காக’ என்றான்.

உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் –
அது உனக்குச் செய்யலாவது செவ்வே பரிமாறும் அவர்களோடு காண்;
நீ செய்கிறவையெல்லாம் பண்டே எங்களால் அறியப்பட்டவை காண்;
நீ செய்கிறவையெல்லாம் ‘மெய்’ என்று இருப்பாள் ஸ்ரீஜனகராஜன் திருமகள்காண்;
உன்னுடைய வஞ்சனையான விளையாட்டுக்களெல்லாம் நாங்கள் அறிவோம். சுண்டாயம்-தன் காரியத்தில் நோக்குடைமை.
‘அறிந்து என்? அறியாவிடில் என்? பிரவிருத்தமாயிற்றே’ என்றான். என்றது, ‘சாத்தியமாயிற்று அதுவன்றோ’ என்றான் என்றபடி.
இனி அது கொண்டு செய்வது என் – ‘சாத்தியாம்சத்துக்கு ஒரு பிரயோஜனம் கண்டிலோமே’ என்கிறார்கள்.
அவனும் ஒன்றை –பந்து கழல் -நினைத்து, ‘ஆகில் எனக்குச் ‘சாத்தியாம்சம்தான் இல்லையோ?’ என்று
கைப்பட்ட பந்தையும் கழலையும் போர விரும்பப் புக்கான்-

என்னுடைய பந்தும் கழலும் –
‘பாவியேன், நீ எங்கே செய்யவேண்டியனவற்றை எங்கே செய்கிறாய்?
அவை நீ நினைக்கின்றவர்களுடைய பொருள்கள் அல்ல காண்; அவை எங்களுடைமைகாண்’ என்றார்கள்.
‘அதுதான் மெய்யே’ என்றான். இவன் விருப்பத்துக்கு அதுதானேயன்றோ வேண்டுவது;
“அரசனே! மனைவி வேலைக்காரன் மகன் ஆகிய இவர்கள் ஒருவனுக்கு அடிமைப்பட்டவர்களே;
இவர்கள் எவருக்கு அடிமைப் பட்டவர்களோ அவருக்கு இவர்களுடைய பொருள்களும் அடிமைப்பட்டனவாம்” என்கிறபடியே,
மற்றையது உடனே வரும் அன்றோ.
யஸ்ய ஏதே தஸ்ய தத் தனம் -மற்றையது அநந்தரம் வரும் -ஸ்வரூப ஞானம் -அனன்யார்ஹத்வம் அறிந்து -சொன்னால்
அவர்கள் தனம் அவனுக்கு ஆகுமே -மாம் மதீயஞ்ச அகிலம் சேதன அசேதனம் உன்
கைங்கர்யத்துக்கு கொள்ள வேண்டும் -என்னையும் என் உடைமையையும் -தேசிகன் –

இனி, இத்திருவாய்மொழியினுடைய முன்னுரையிலே, ‘முடியப் பார்க்கிறாள்’ என்று சொல்லிற்று ஒன்று உண்டு.
அது, இப்பதத்திலே –என்னுடைய -தோற்றுகிறது. அவன் சந்நிதியிலே ‘என்னது’ என்று சொல்லுகைக்கு மேற்பட்டது ஒரு முடிவு இல்லை அன்றோ.
“மம என்ற இரண்டு எழுத்துக்கள் நாசத்துக்குக் காரணமாகின்றன”
“த்வ்யக்ஷரஸ்து பவேத் ம்ருத்யு: த்ர்யக்ஷரம் ப்ரஹ்மண: பதம்
மமேதி த்வ்யக்ஷர: ம்ருத்யு: நமமேதி ச சாஸ்வதம்”- என்பது, பாஞ்சராத்திரம்.

யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். -என்பது, திருக்குறள்.-என்பது அன்றோ சாஸ்திரம்.
“என்னுடைய புத்திரர்களான துரியோதனன் முதலியோர்களும், பாண்டவர்களும்”
“தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யயுத்ஸவ: மாமகா: பாண்டவாஸ்சைவ கிம் அகுர்வத ஸஞ்ஜய” என்பது, ஸ்ரீ கீதை. 1 : 1.
என்கிறவிடத்துச் சிறியாத்தான் சொல்லும்படி: “என்னுடையவர்கள் என்றும், பாண்டவர்கள் என்றும் பிரித்தான்,
அதுவன்றோ விநாசபர்யந்தம் ஆகிவிட்டது” என்று.
இதுதான் உண்மை நிலையை மாத்திரம் பற்றிய வார்த்தை அன்று,
பிரணய கோஷ்டியிலும் கலவியிலே வந்தால் ‘உன்னது, என்னது’ என்கை யன்றோ உறவு அறுகையாவது.
என்னுடைய பந்தும் கழலும்-“தான் என்றே பரமாத்மாவைத் தியாநிக்கக் கடவன்” என்கிறபடியே,
ஒன்றை ஒன்று –ப்ரஹ்மத்தை ஜீவன் -உபாசியாநிற்கச்செய்தே, தன்னை உபாசித்தது என்று சொல்லலாம்படி அன்றோ
இரண்டு வஸ்துக்களுக்கும் தொடர்பு இருக்கிறபடி. -சொரூபம் தெளிவானால் ‘நான்’ என்னவுமாய், ‘அடியேன்’ என்னவுமாய்க் காணும் இருப்பது.

அன்யாபதேசத்திலும் விநாச்யம் -பிரணய ரோஷத்திலும் -என்னது -உறவு அறுகை
ஆத்மேத்யவது க்ருஹநீயத்வாத் -ஆத்மா என்றே பற்ற வேண்டும் –உபாசனை -சரீராத்மா பாவம் -அறிந்து அபிமானத்தில் அந்தர்பூதன்
-பிரத்யாசக்தி நெருக்கம் உண்டே -உறவு அறாமை-அபிமானத்தில் உள் அடங்கி இருப்பது
நான் சரீரம் என்பதே அழிவுக்கும் உஜ்ஜீவனத்துக்கும் -முதலில் தேகாத்மாபிமானம் -அடுத்து -அவனுக்கு சரீரம் என்றபடி –
அடியேன் உடைய பந்தும் கழலும் தந்து போ நம்பி -சொல்ல வில்லையே -என்னுடைய -ஆழ்வார் என்னுடைய என்றால்
அர்த்தம் அடியேன் -நாம் அடியேன் சொன்னாலும் நான் அர்த்தம் உண்டே –

தந்துபோகு நம்பி-
நீ இங்கே கால் தாழாநின்றாய்; இதற்கு ஒரு கருத்து அறியாதே உன்னை உபேக்ஷிக்கத் தொடங்குவர்கள்;
அதற்கு முன்னே போ. முகப்பழக்கமும் இன்றிக்கே இருந்தது; முதலியாருமாய் இராநின்றீர்; கடுகப் போகப் பாரும் என்பாள் ‘நம்பி’ என்கிறாள்.
“கண்ட காட்சி புல்லெழுந்து போனபடியன்றோ இவள் இங்ஙன் சொல்லுகிறது” என்று பெரியமுதலியார் -ஆளவந்தார் -பணிப்பர்.
‘என்னுடைய பந்தும் கழலும்’ என்ற இடம், அவன் பொகடுகைக்குச் சொன்ன வார்த்தை.
‘தந்துபோகு’ என்றதனால், அவன் விரும்பினவை ஒழியத் தனக்குச் செல்லாது என்னுமிடம் தோற்றுகிறது.
நம்பி – “பதினாறாயிரம் பெண்களையும் அதற்குமேலே ஒரு நூறு பெண்களையும் ஸ்ரீகிருஷ்ணபகவான் விவாகம்செய்துகொண்டார்”
ஷோடசஸ்திரீ ஸஹஸ்ராணி சதமேகம் ததோதிகம்
தாவந்தி சக்ரே ரூபாணி பகவாந் தேவகீஸுத:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 31 : 17.
என்கிறபடியே, உமக்குப் போனவிடம் எங்கும் கொண்டாட்டத்தால் குறை இல்லை;
எங்களுக்கு உம்மை ஒழிய வேறு கதி இல்லை;
இனி, உம்முடைய திருக்கரங்களின் சம்பந்தமுண்டாய்ப் பொகட்டவை கொண்டாகிலும் எங்களுக்கு ஜீவித்துக் கிடக்கவேணும்;
ஆனபின்னர், அவற்றை எங்களுக்குத் தந்துபோம்.
அன்றிக்கே உம்-“உயிரை வைத்துப்போம்” என்பாரைப்போலே ‘தந்துபோகு’ என்கிறாள் என்னுதல். என்றது,
இவன் இவற்றைக் கைவிட்டுப் போகமாட்டான் என்று அறிந்து அவன் மனக்கருத்தை அறிந்தவர்கள் ஆகையாலே ‘தந்துபோகு’ என்கிறார்கள் என்றபடி.

———————————————————————-

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-

போகாமல் -மந்த ஸ்மிதம் பண்ணி -அதிலே சிதிலையாகி-
போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்-ஸ்மிதம் பண்ணி -ஆழ்வார் ஒருவரையே நோக்கி –
எங்கும் பக்க நோக்கு அறியான் -தர்ச நீயமான
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;-கண்டு உகக்கும் பாக்கியம் பண்ணாத -நின்ற நிலையை குலைத்து துக்கப் படவே
-நோன்பு நோற்று பிறந்தோம் -உங்களை அழிக்கவோ நான் வந்தேன் உங்கள் தலை முடி பார்த்து ஈடு பட்டு வந்தோம் என்றான்
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
மயில் போலே அலைந்த குழல் -நாங்கள் இழக்க -அவர்கள் அருள் சூடி -அவர்கள் அசந்நிகதர் அல்லையோ
உன் அருகில் வரும் படி நீ குழல் ஊதுவாயே-நாட்டார் அறியாதபடி
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே-ஜாதி தர்மம் தானே -ஆ மேய்ப்பதும் குழலூதுவதும் -பெண்கள் மனத்தை அபஹரிக்கவே
உண்மையான காரணம் -அதுவும் இங்கே ஆகாதோ -குழலாவது இங்கே கூடாதோ -என்ன கூடாது என்கிறாள்

நம்பீ! போ; தாமரையை ஒத்த உன்னுடைய இரண்டு கண்களும் சிவந்த திருவாயிலே தோன்றுகின்ற புன்முறுவலும் துயரத்தைச் செய்ய,
அதனால் அழிவதற்கே யாம் தவம் செய்துள்ளோம்; தோகையையுடைய சிறந்த மயில்போன்ற பெண்கள் நினது திருவருளைப் பெறுதற்குரியவர்கள்,
ஒலியைக் காதுகளால் கேட்டு, அங்கிருந்து எழுந்து வரும்படியாக, பசுக்களைத் தூரத்தே போகவிட்டு, அவற்றை அழைப்பதைப் போன்று,
அங்கே சென்று இருந்து உனது வேய்ங்குழலை ஊதுவாய்.
நம்பி! போகு, கண்ணிணையும் முறுவலும் ஆகுலங்கள் செய்ய யாம் அழிதற்கே நோற்றோம்; நின்னருள் சூடுவாராகிய தோகை மாமயிலார்கள்,
ஓசை செவி வைத்து எழ, ஆக்களைப் போகவிட்டுப் போய் இருந்து குழல் ஊது என்க. ஆகுலம் – துன்பம். எழ ஊது என்க.

நோக்குப் பெறாதவன் முகம் பார்க்கப் பெற்றான்; வார்த்தை கேட்கப் பெறாதவன் ‘போ’ என்னவும் பெற்றான்;
இனி, இதற்கும் மேற்படக் கிருதார்த்தனாகை இல்லையன்றோ.
‘போ’ என்றாஅவன் அலனோ’.
“இன்னம் என் கையகத்து ஈங்கு ஒருநாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே” –பெருமாள் திருமொழி, 6 : 8.-என்று,
இதனை உய்ந்தபிள்ளை பாடா நிற்கச்செய்தே, காலாலே உதைப்பது கையாலே தள்ளுவதாய் அபிநயித்துக் காட்டினார்.
இதனை எம்பார் கேட்டருளி, ‘அங்ஙன் அன்று, அது, பின்னைப்பெற்றானாகில் அவன் நெடுநாள் பிரார்த்தித்துக்கிடந்தது அன்றோ;
ஆன பின்னர், அதுவன்று பொருள்’ என்று முகத்தைத் திரிய வைத்துக் காட்டினார்.
“நீ அகல நின்று செய்தவை எல்லாம் உன் சந்நிதியிலே உன்னைச் செய்வேன் என்கிறாள்’ என்று அருளிச்செய்தார்.
எம்பார், புறம்பான விஷயங்களிலே ருசி இல்லாமையாலே பதார்த்த ஞானம் இன்றிக்கே இருப்பர்.
இப்படி இருக்கையாலே ‘பெண்களுக்கு அசாதாரணமான சிந்நங்கள் எங்ஙனே இருக்கும்படி?’ என்று,
சிங்கப்பிரானைக் கேட்டருளினார் என்பது பிரசித்தம்.
இப்படி இருக்கிறவர் தாம் “மின்னிடை மடவார்” என்ற இத்திருவாய்மொழி அருளிச்செய்யப்புக்கால்,
‘இந்தச் சந்நியாசி பிரட்டுப் பாடத் தொடங்கினார்’ என்பாராம் பிள்ளையுறங்கா வில்லிதாசர்.
பக்வத் விஷயத்தில் இவருடைய உட்புகுவு இருக்கும்படி.
ஒரு க்ஷுத்ர விஷயத்திலே நான்கு நாள்கள் வாசனை பண்ணினவர்கள் போர விதக்தராய் இராநின்றார்கள்;
அவ்வளவு அல்ல அன்றோ சமஸ்த கல்யாணகுணாத்மகனோடே நெடுநாள் வாசனை பண்ணினார்க்கு இருக்கும்படி.
எம்பார் ‘ஈசுவரன் முன்னே வந்து நின்றாலும் ‘வா’ என்பாரையும் கிடையாத சம்சாரத்திலே,
அவன் சிறிது தாழ்த்தான் என்னா ‘போ’ என்பாரைப் பெறுவதே! என்பர்.

போகு நம்பி-
“போகு நம்பி” என்று முன்பு சொல்லச் செய்தே, மீண்டும் சொல்லும்போது ஒன்று இரண்டு அடிகள்
வரவிட்டுக் கிட்ட நின்றானாக வேணுமன்றோ.
வாரீர்! எத்தனை பேரைத் தீண்டி வந்தீர் என்று தெரியாது; புடைவை படாமே கடக்க நில்லும் என்றார்கள்.
‘போ’ என்ன, அருகில் வந்து நிற்கிறவன், ‘தீண்டாதே கொள்ளும்’ என்றால், என்படுமோ?
நம்பி –
எளியார் செய்வதனை நீர் செய்யக் கடவீரோ?
நீர் குறைவற்றவர் அல்லீரோ?
நம்பி –
எங்கள்பக்கலிலே இப்படிக் கால் தாழ்க்க நீர் ஏதேனும் குறைவாளரோ?
நாங்கள் வேண்டியிருந்ததோ உமக்கு?
“உயிரினாற் குறையிலம்” என்று, “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியில், தம்மை அழிக்கப் பார்த்தார்;
அது அவன் உளனாகையாலே அழிந்தது இல்லை.
“மாசறுசோதி” என்ற திருவாய்மொழியில், அதற்கு அடியான அவனையே அழிக்கப் பார்த்தார்.
இங்கு அவன் வரக்கொள்ள, ‘போ’ என்னாநின்றார். இதற்குக் காரணம் என் என்று அறிகிலோம்.
இவர்கள் இப்படி ‘நம்பி’என்று சொல்லி இருக்கையாவது, இவர்கள் கோஷ்டிக்குத் தக்கான் அல்லன் ஆகையாலே அன்றோ.
தாழ்ச்சியே மேன்மையாமிடத்தில் முதன்மை கொண்டாடுவது போராதே.
உன் தாமரை புரை கண் இணையும் செவ்வாய் முறுவலும் –
காணப்பெறாத காரணத்தால் விடாய்த்து உறாவின கண்களும், கண்டு செவ்விபெற்றுக் குளிர்ந்தன;
அகவாயில் உவகைக்குப் போக்குவீடாகப் புன்முறுவல் பூக்கவும் பெற்றான்.
இவர்களுடைய ‘போ’ என்று விலக்குகிற வார்த்தையாகிற அமிருத பானத்தாலே அவனுக்குப் பிறந்த வேறுபாடு இருக்கிறபடி.
‘வா’ என்பாரைக்கூடக் கிடையாத சம்சாரத்திலே ‘போ’ என்பாரைக் கிடையாதன்றோ. என்றது,
ஒரு பிரயோஜனத்துக்காகவும் தன்னை வேண்டுவார் இன்றிக்கே இருக்கிற இடத்தே,
தன்னையே பிரயோஜனமாகப் பற்றி இப்படிப் படுவாரைக் கிடையாதன்றோ என்றபடி.

ஆகுலங்கள் செய்ய –
காரணம் இரண்டாக இருக்கச் செய்தே, எல்லாக் கரணங்களும் அழியாநின்றன.
அவனுக்கு ஒன்று இரண்டு ஆயிற்று வேறுபட்டன; இவர்களுக்கு எல்லா அவயவங்களும் வேறுபட்டன.
அணு அழிக்குமாறுபோல் அன்றே விபு அழிப்பது. ஆகுலம் – பூசலும், வருத்தமும், துக்கமும்.
வாரீர்கோள்! உங்களுக்கு என்னோடு ஒன்று இல்லை என்னாநின்றீர்கோள்;
மனப்பற்றுடையாரைப் போன்று வார்த்தை சொல்லாநின்றீர்கோள்; முரண்பட்டனவாயிருக்கின்றனவே!
‘போகு நம்பி’ என்னா நின்றீர்கோள்; ‘ஆகுலங்கள் செய்ய’ என்னாநின்றீர்கோள்; இதற்கு அடி என்?’ என்றான்.
வாராய்! நாங்கள்தாம் மனப்பற்று உண்டாய்ச் செய்கிறோம் என்று இருக்கிறாயோ?
சந்திரனைக் கண்ட அளவிலே சந்திர காந்தம் உருகுகிறது என்ன பாவபந்தம் உண்டாய்?
“அவசியம் அநுபவித்தே அறவேண்டும்” என்கிற விதியைத் தப்ப ஒண்ணுமோ?
“அவஸ்யம் அநுபோக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம்
நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்பகோடி சதைரபி”-என்பது, பிரமாணம்.

அழிதற்கே நோற்றோமே யாம் –
எங்களுக்கு இது இயல்புகாண். இளையபெருமாள் காடு ஏறப்போகாத அன்று அன்றோ
எங்களால் அழியாதிருக்கலாவது? “காட்டில் வசிப்பதற்கே நீ படைக்கப்பட்டாய்”
“ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாஸாய ஸ்வநுரக்தஸ்ஸு ஹ்ருஜ்ஜநே
ராமே ப்ரமாதம் ஆகார்ஷீ: புத்ர ப்ராதரி கச்சதி”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 40 : 5.
என்ப தன்றோ சுமத்திரையின் வார்த்தை.
நோன்பாவது முற்பிறவியில் உள்ளது அன்றோ.
இவர்கள் இப்படிச் சொன்னவாறே, ‘அவ்வழிவு கலவியின் பொருட்டு அன்றோ’ என்று பார்த்து, அவன்,
‘நம்மைக் கண்ட அளவிலே இத்தனை-கரண சைதில்யம்- வேறுபாடுஉண்டான பின்பு மேல் உள்ளவை எல்லாம் செய்து கொள்ளீர்களோ!’ என்றான்.
அதுவோ உன் நினைவு! நாங்கள் அவர்கள் அல்லோம் காண்! நாங்கள் இங்ஙனே அழிந்தே போக நோற்றோம்காண்!
உன்னைப் பிரிந்தால் கலத்தற்கு நோற்றார் வேறே சிலர்காண் என்பார் ‘யாம் அழிதற்கே நோற்றோம்’ என்கிறார்கள்.

நெடும்போது இவர்கள் பேச்சுக்களைக் கேட்கையால் உண்டான உவகை தோற்றப் பார்த்துக்கொடு நின்றான்.
‘நம்மைக் காணுதல் இவனுக்குத் தரித்திருக்கைக்குக் காரணமாக இருந்ததே’ என்னா,-தர்சனம் ஆஸ்வாச ஹேதுவாக இருந்ததே –
முகத்தை மாறிப் பின்னோக்கி இருந்தார்கள்; அவ்வளவிலே அவன் நெஞ்சிலே மயிர் பாடு-ரோம ஹர்ஷம் உண்டாயிற்று;
‘தோகை மாமயிலார்கள்’ என்கிறான்.
அன்றிக்கே, ‘நமது வைவர்ணியமும் கண்ணநீரும் இவன் காண்பான் அல்லன்;
தெய்வயோகத்தால் காணுமவற்றை நம்மால் செய்யலாவது இல்லை யன்றோ என்னாத் திரிய இருந்தார்கள்;
அதுதானே இவனுக்குக் காரியமாயிற்று;
‘தோகை மாமயிலார்கள்’ என்கிறான் என்னுதல். என்றது, முறுவலுக்கும் கண்களுக்கும் இலக்காய் அழிந்து போகாமல் திரிய இருந்தும்,
நின்று அநுபவிக்கைக்கு உடலாயிற்று என்றபடி. மைவண்ண நறும் குஞ்சி –குழல் பின் தாள -திரும்பி பார்த்தானே -அதனாலே அங்கே –
‘நம் காரியம் தலையாகப் போயிற்று’ என்று இருக்கிறான் அன்றோ அவன்.
“கற்புக்கரசியாகிய சீதாபிராட்டி, துடைகளால் வயிற்றையும் திருககரங்களால் தனங்களையும் மறைத்தவளாய்
அழுதுகொண்டு வீற்றிருந்தாள்” என்று கொண்டு
“ஊருப்யாம் உதரம் சாத்ய பாஹும்யாப்ச பயோதரௌ
உபவிஷ்டா விசாலாக்ஷீ ருதந்தீ வர வர்ணிநீ”-என்பது, ஸ்ரீராமா. சுந். 19 : 3.
அவன் உடைமையினை அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் காண ஒண்ணாது’ என்று மறைக்கக் கடவ அவள்,
‘அவன்தான் காண ஒண்ணாது’ என்று மறைக்கும்படி காணும் பிரணயகோபம் தலை மண்டை இட்டபடி.
தோகை மா மயிலார்கள்-
தோகை விரித்த நல்ல மயில் போலே அலைந்த குழலையுடையவர்கள்.
“நிதம்ப பாகத்தையடைந்த கிருஷ்ணசர்ப்பம் போன்ற சடையாலே”-
நீலநாகாபயா வேண்யா ஜகநம் கதயைகயா
நீலயா நீரதாபாயே வநராஜ்யா மஹீமிவ”-என்பது, ஸ்ரீராமா. சுந். 15 : 25.
என்கிறபடியே பேணாத குழல் இருக்கிறபடியைக் கண்டான்;
‘நீங்கள் முன்னம் ஆனார் ஆகிடுக; இது ஒரு மயிர்முடி இருந்தபடி என்தான்!’ என்றான்.
இவள்தான் ஓதி நல்லளாய் இருக்குமே. இவன் கூழை ஆகையாலே கொண்டாடுமே. “குழல் கூழை ஒதி” என்பது நிகண்டு.
எங்கள் மயிர்முடியைக் கண்டு தந்தாம் மயிர் முடி என்று மயங்கும்படி செய்வதே அவர்கள் சிலர்!
அபிமதவிஷயத்தைப் பிரிந்தால் கண்டவை யெல்லாம் அதுவாகத் தோற்றுமன்றோ என்றார்கள்.

செந்தாமரைக் கண்ணொடும் செங்கனி வாயினோடும்
சந்தார் தடந் தோளொடும் தாழ் தடக் கைகளோடும்
அந்தார் அகலத்தொடும் அஞ்சனக் குன்றமென்ன
வந்தான் இவனாகும் அவ்வல்வில் இராமன் என்றாள்.-என்பது, நினைவுகூர்க. கம்பராமாயணம்.

“காடும் செடியும் அவளாகத் தோன்றுமென் கண்களுக்கே” என்றார் பிறரும்.

‘அங்ஙனே சிலர் உளரோ’ என்றான்.
நின்அருள் சூடுவார் –
உன்னோடு கலந்து பிரிவிலே இப்படிப் பிச்சுஏறும்படிசெய்தவர்கள், அவர்களைப் பிரிந்து நோவுபடாமல்
அவர்களோடே கலந்து பரிமாறுவாய். ‘ஆனால் அதற்கு என்? அவர்களைப் பெறுகைக்கு ஒரு விரகு பெறுந்தனையும்
நான் இங்ஙனே சிறிது போது இருந்து போகிறேன்’ என்றான்.
உனக்கு இங்ஙன் விரகு பெற்றுப் போக வேண்டுமோ? நீ கைகண்டதைப் பிரயோகம் செய்வாய்.
கைகண்டது – அநுபவமானது என்றும், கையிலே இருந்த குழல் என்றும் சிலேடை.
‘அது யாது?’ என்றான்.
செவி ஓசை வைத்து எழக் குழல் ஊது –
“எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத உன் குழல் இன்னிசை போதராதே” என்று இருக்குமவர்கள்,
நீ குழல் ஊதினால் சென்று செவிப்படும், உடனே வருவர்கள்காண்.
சர்ப்பயாகத்தில் சர்ப்பங்கள் வந்து விழுமாறு போலே, நீ குழல் ஊதவே பெண்கள் அடங்கலும் உன்காற்கீழே வந்து விழுவார்கள் காண்.
‘குழல் ஓசை கேட்பது எப்போது?’ என்று செவிகொடுத்துக்கொடு காண் அவர்கள் இருப்பது.
உன்னைப் பிரிந்தார் எல்லாக் கரணங்களையும் உன்மேலே வைத்திருப்பர்காண்
“தூவலம்புரியுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே, கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப
உடலுள் அவிழ்ந்து எங்கும், காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனர்”-பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 1.- என்கிறபடியே,
நீ குழல்ஊதப் புக்கால் நிற்பார் உளரோ? உன்காற்கீழே வந்து விழுவர்காண், அதனைச்செய்என்றார்கள்.

“அது எனக்கு ஒரு விரகு அன்று;
‘கொங்கு நறுங்குழலார்களோடு குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்’-பெருமாள் திருமொழி, 6 : 9.– என்று
ஒத்த தரத்தில் பெண்களும் தானும் கலக்கைக்காக அவர்களை அழைப்பதற்குக் குழல் ஊதாநின்றான் என்பர்கள்;
நான் குழல் ஊதுகை பெண்களை அழைக்கை என்று பிரசித்தம்; அது எனக்கு ஈடுஅன்று” என்றான்.

ஆகில், உனக்கு ஒரு நல்விரகு சொல்லக் கேள்:
ஆகள் போகவிட்டு –
பசுக்களைக் கைகழிய விடுவது, உடனே குழலை ஊதுவது. ‘அறியாதார் பசுக்களை மறிக்க ஊதினான் என்று இருப்பர்கள்;
அதனை அறிந்து போரும் பெண்கள் உன்பக்கலிலே வந்து கிட்டுவர்கள்.
இதுதான் உனக்குச் சாதிக்கு ஏற்ற தொழிலும் அன்றோ.
‘தீங்குழல்ஊதிற்றும் நிரைமேய்த்ததும்’ -திருவாய்.-6. 4 : 2.-என்பரேயன்றோ.
ஆனபின்னர் அதனைச் செய்வாய்’ என்றார்கள்.
‘அநுஷ்டிக்கவேண்டிய உபாய சொரூபம் இருக்கும்படி அறிந்தோம். அநுஷ்டிக்க வேண்டியதற்குத் தகுதியான உபதேசம் பெற்றோம்.
இனி, உபேய அம்சத்தில் கைப்படாதன இல்லை. இனி, நமக்கு ஒருகுறை இல்லை’ என்று பார்த்து,
அவ்விடத்திலே இருந்து ஊதுவதற்குப் புக்கான்.
இனி, தான் விதிகளை மீறி ஒருகாரியத்தைச் செய்யுமவன் அலனே; -குழல் ஊதுகை –விதி -உடனே செய்தான் —
‘தோகை மா மயிலார்கள், செவி ஓசை வைத்து எழ’ என்று அன்றோ இவர்கள் சொல்லியது;
‘இன்ன இடத்தே’ என்று சொன்னார்கள் இலரே? இங்கே இருந்து ஊதத் தொடங்கினான்.
‘அதுவோ பார்த்தபடி? நீதுடியாமைக்கு ஒரு விரகு சொன்னோமாகில் அதனை இங்கே கொள்ளப் பார்த்தாயோ?’
குழல் ஊது போய் இருந்தே-உனக்குப் பெண்கள் படும் வாய்ப்புள்ள இடத்தே போய் இருந்து ஊதப் பாராய்.

தோகை மா மயிலார்கள் –
இவன் ஓதி உணர்ந்தவன் ஆகையாலே கொண்டாடத் தொடங்கினான்.
‘இவன் ஓதி உணராமல் அன்றோ நம் குழலை இப்படிக் கொண்டாடுகிறது’ என்று,
‘இதுமயங்கினவன் வார்த்தை’ என்று அவர்கள் வேறுபடுத்துகிறார்கள்.
தலையான பேச்சினை அன்றோ இவர்கள் வேறு படுத்துகிறது.
செவி ஓசை வைத்து எழ –
குழல்ஓசையைச் செவியாலே வைத்துக்கொண்டு வர.
ஆகள் போக விட்டுக் குழல் ஊது –
பசுக்களைப் போகவிட்டுக் குழல் ஊது.
ஊதவே, உன்நினைவும் முடிந்து பசுக்களின் வயிறும் நிறையும்.
‘செவி ஓசை வைத்து எழுகை பலமாய், குழல் ஊதுகை உபாயமாய் இருந்தது;
அதுதான் அபிமதவிஷயத்தைப் பற்றி யன்றோ செய்வது; இங்கே இருந்து ஊதுகிறேன்’ என்று குழலைவாங்கி ஊதினான்.
போய் இருந்தே குழல் ஊது –
ஒன்றைச் சொல்ல, ஒன்றைச் செய்யாதே; உனக்கு விருப்பமுள்ளவர்கள் திரளுகைக்கு நீர்வாய்ப்புள்ள நிலங்களிலே போயிருந்து ஊதாய்.

——————————————————————————

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின்செய்ய
வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள்;
வேயிருந் தடந்தோளினார் இத் திருவருள்பெறுவார் எவர்கொல்,
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?–6-2-3-

புகுர இருந்து -வந்தான் -ஊதச் சொன்னவாறே பேசினான் -ஹஸ்த சேஷ்டிதைகளைக் கொண்டாடினான் -அஷோப்யமான கடலையும்
ஷுபிதமாம் படி பண்ணின -தோள்களால் கலக்கினார் யாரோ
வேறு யார் உள்ளார் உம்மை விட்டு -வாசு தேவ சர்வம் மகாத்மா ஸூ துர்லப –
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின்செய்ய-உங்களை விட வேறு யார் -வேறு என்ன போக்கிடம்
-ஆசன்னமான இந்த இருப்பைத் தவிர்ந்து
தள்ளிப் போகாததற்கு இந்த வார்த்தை -களவால் பூரணன் -அசூயை பிரசப பூ -போலே கள்ளத்தனத்துக்கு இவன்
களவு அறியாதவர்கள் இடம் சொல்லு -வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள்;-பாதகமாக -முன்பு ஆகர்ஷகம் –
வேயிருந் தடந்தோளினார் இத் திருவருள்பெறுவார் எவர்கொல்,-நிஷேக்கிக்கும் எங்கள் தோள்கள் கொண்டாடாதே -உனது திருவருள் -பெற அவர்கள் தோள்கள் அழகே காரணம் -யார் என்று அறிந்தால் நாங்களும் கொண்டாடுவோம் -மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?-அதிசயித சக்தன் –

எல்லாம் நிறைந்தவனே! போயிருந்து, உனது களவுகளை அறியாதவர்களுக்குச் சொல்லுவாய்; பெரிய கோவைக்கனி போன்ற திருவதரமும்
திருக்கண்களும் இப்போது தீமையைப் பயப்பனவாம்; பெரிய விரிந்த கடலைக் கடைந்த பெருமானாகிய இவனால் இந்தத் திருவருளைப்
பெற்றிருப்பவர்களான, மூங்கில்போன்ற பெரிய நீண்டதோள்களையுடைய பெண்கள் யாவர்?
நம்பீ! போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை; இருங் கனிவாயும் கண்களும் இந்நாள் விபரீதம்;
பெருமானால் திருவருள் பெறுவார் தோளினார் எவர்கொல்? என்க புள்ளுவம் – களவு. அல்லது, வஞ்சனை. பெறுவார்: காலமயக்கம்.

‘குழல் ஊது போய் இருந்தே’ என்றே யன்றோ என்னைச் சொல்லுகிறது;
கூறியது ஒன்றனைச் செய்ய வேண்டுமத்தனை அன்றோ.
இனித்தான், ‘உனக்குப் பெண்கள்படும் நீர்வாய்ப்புள்ள இடங்களிலே போயிருந்து ஊது’ என்றே யன்றோ நீங்கள் சொன்னீர்கள்;
அழகிது, இத்தனையன்றோ. நீர்வாய்ப்புள்ள இடந்தான் எது? அதனைச் சொல்லலாகாதோ?” என்று
இரண்டு அடி உட்புகுரவிட்டு, நற்றரிக்க இருந்து, குழலில் இனிய பேச்சிலே கை வைத்தான்.
குழல்ஓசை போல் அன்றே பேச்சில் இனிமை இருக்கும்படி.
“நான் செய்தபடி செய்கின்றேன், ‘செவி ஓசை வைத்து எழ குழல் ஊது போய் இருந்து’ என்று
நீங்கள் சொன்ன இதற்குக் கருத்து எனக்குத் தெரிந்ததில்லை; இது எனக்குச் சாதிக்கு ஏற்ற தொழில் அன்றோ?” என்றான்.

போய் இருந்து நின் புள்ளுவம் அறியாவர்க்கு உரை நம்பீ –
உன் பொய்களிலே பழகின எங்கள்பக்கல் உன்பொய் விலை செல்லாது;
இங்கு நின்றும் போய் உன்பொய் அறியாதவர்கள் கோஷ்டியிலே இருந்து சொல்லு.
நினைவு ஒன்றும் சொலவு ஒன்றுமான உன்னை அறியாதாரும் கிடைப்பர்கள் அன்றோ;
ஐந்துலக்ஷங் குடிகளில் பெண்கள் உளராகையாலே. உன்பொய்யை ‘மெய்’ என்று இருக்கும் அவர்களுக்கு
அன்றோ இவைஎல்லாம் சொல்லுவது? “பொய் கேட்டிருந்தேன்” என்று இருப்பாரும் உளர் அன்றோ.

வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்
எல்லாரும் என்தன்னை ஏசிலும் பேசிடினும்புல்லாணி எம்பெருமான் பொய்கேட்டிருந்தேனே.-என்பது, பெரிய திரு. 9. 4 : 5.

நம்பீ –
நிறைந்தவர் அல்லீரோ! நீர் எங்களைப் பெறாமல் குறைவாளராக இருந்தீரோ?
தன்னைக் குறித்து இவர்கள் சொல்லுகிற அமிருதத்திற்குச் சமமான விலக்குகிற வார்த்தைகளைக் கேட்டவாறே
அவன் முகத்திலே ஒரு மகிழ்ச்சி பிறந்தது.
இந் நாள் நின் செய்ய வாய் இரும் கனியும்கண்களும் விபரீதம் –
நாங்கள் இதற்கு முன்னர் இச் செவ்வியும் வேறுபாடும் ஒருநாளும் கண்டு அறியோம்:
இவை இருந்தபடி என்? என்றார்கள்.
‘கழுத்துக்கு மேலே ஒன்றைச் சொல்லுகிறீர்கோளித்தனை அன்றோ! அதனை விடுங்கோள்; இது ஒரு தோள் அழகு இருந்தபடி என்? என்றான்.

வேய் இரும் தடம் தோளினார் இத் திருஅருள் பெறுவார் எவர் கொல் –
வேறு ஒருவருடைய தோள் அழகைக்கண்டு, தந்தாம் தோள் அழகு என்று மயங்கும்படிக்குத் தகுதியான
தோள் அழகு உடையார் யாரோ? என்றது, நீ கிடந்து இப்படித் துடிக்கும்படி செய்யவல்லராவதே
அவர்கள் சிலவர் என்பதனைத் தெரிவித்தபடி.
‘இத் திருஅருள் பெறுவார் எவர்கொல்’ என்பதனால், ‘செய்ய வாய்இரும் கனியும் கண்களும்’ என்ற இடம்,
அவன்பக்கல் இவர்களுக்கு உண்டான பாவபந்தம் சொல்லுகிறது.
‘வேய்இரும் தடம் தோளினார்’ என்ற இடம், இவனுக்கு அவர்கள்பக்கல் உண்டான பாவபந்தம் சொல்லுகிறது.
இவர்களுக்குத் தன்பக்கல் பாவபந்தம் தன் முகத்தால் அறிந்தான் அவன்.
தங்கள்பக்கல் இவனுக்கு உண்டான பாவபந்தம் கைமேலே கண்டுவிட்டார்கள் அவர்கள்.
உனக்கு இப்படி விரும்பத் தக்கவர்களாய் இருக்குமவர்கள் யாரோ? என்பார் ‘எவர் கொல்’ என்கிறார்கள்.
இவன்பக்கல் பிரணயரோஷத்தாலே சொல்லுகிறார்களத்தனை போக்கி,
இவனோடு கலந்தாரைத் தனக்கு உத்தேசியராகவன்றோ இவர்கள் இருப்பது.
மா இரும் கடலைக் கடைந்த பெருமானாலே இத் திருவருள் பெறுவார் எவர்கொல் –
‘மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ் சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்’ -நாய்ச்சியார் திருமொழி, 9 : 1.-என்று
சொல்லுகிற தோள் அழகினையுடையவன் விரும்பும்படியான தோள் அழகு படைப்பதே!
தன்தோள் அழகு கண்டு பெண்பிறந்தார் அடங்கலும் படும் பாட்டை யடங்கலும் இவனைப் படுத்தும்படியான தோள் அழகுடையார் உண்டாவதே!
பெரியவன் கையிலே பெரியது பட்ட பாடு அடங்கலும் தங்கள் கையிலே இவன் படும்படி செய்ய வல்லர் ஆவதே!
“வைகுந்தனுடைய தோள்களால் சுழலப்பட்ட மந்தரத்தின் ஒலி வீழ்ச்சி” என்று கொண்டு
அது ஊமைக் கூறனாகப் -அநஷரமாக-பட்டவெல்லாம் படுகை அன்றோ.
அன்றிக்கே, மந்தரத்தை நட்டுக் கடலை நெருக்கிக் கடைந்து பெரிய பிராட்டியாரைப் பெற்ற அன்றும்
இந்த வேறுபாடு கண்டோம் இல்லையே! பழையாரைப் பெற்றாற்போல் அன்றே புதியாரைப் பெற்றால் இருக்கும்படி.

—————————————————————————————–

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-

ஜாதி உசிதமாக -பசுக்களை மேய்ப்பத்தில் சிறிது கால தாமசம் -அந்ய பரனாக போக வில்லை -அகடிகட நா சாமர்த்தியம்
இதுவே உனக்கு வியாபாரம் -பேச்சு மட்டும் கூடுமோ –
ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்-சமஸ்த லோகங்களையும் –உண்டு -ஆலின் நீள் இலையில் நீ கிடந்தாய்
-முகிழ்வு இருந்து விரியும் -மொட்டு விட்டு விரியும் -என்றபடி -நீண்ட இலை இல்லை -பிரளயம் கொண்ட அன்று -மௌக்த்யம் உள்ள நீ
மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?-கிருத்ரீம சேஷ்டிதங்கள்-நித்ய சூரிகள் -அச்ப்ருஷ்ட சம்சாரகந்த -அறியார்
ஒரு மாயையினால் –ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்த –இத்யாதி -அறியார்கள் -உம்மைத் தொகை -யாராலும் அறிய முடியாது
-எங்களுக்கு தெரியும் -நீ நினைத்து இருக்கும் அந்த பெண்களுக்கு தெரியாது
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று-வேல் போலே அழிக்கும் கூர்மை -கண் வட்டம் விட மாட்டாமையாலே
-அவர்கள் விளையாடும் மணல் குன்றை சூழும் படி
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே-வெட்டிமை பேச்சு பேச வேண்டாம் -வயிறு நிறைய மேய்க்கும் படி இதுவும் அகடிகட நா சாமர்த்தியம் –
இந்த கிருத்ரிமம் அறிந்த எங்களை –எதிர்த்து மேலிட்டு வார்த்தை கொள்ளாதே கொள்

பிரளயகாலத்தில் ஏழ் உலகங்களையும் உண்டு, முகிழ் விரிந்து நீளுமளவான ஆல்இலையிலே நீ சயனித்திருந்தாய்;
உன்னுடைய ஆச்சரியமான செயல்களை நித்தியசூரிகளும் அறியமாட்டார்கள்; இனி எங்களால் சொல்லக் கூடியதாமோ?
வேலை ஒத்த விசாலமான கண்களையுடைய பெண்கள் விளையாடுகின்ற இடங்களைச் சூழ்ந்து நின்றுகொண்டு
பசுக்களை மேய்க்க வல்லவனே! எங்களை நீ மேலிட்டு வார்த்தை சொல்லாதே.
வி-கு :- அன்று ஏழ்உலகும் உண்டு ஆலின் நீள் இலை கிடந்தாய் என்க. ‘வேலின்’ என்பதில் இன் சாரியைஇடைச்சொல்.
சூழல் – இடம். காலி – பசுக்கள். கழறுதல் – இடித்துச் சொல்லுதல்.

‘நாம் சொன்னவற்றை எல்லாம் இவர்கள் வேறாக நினைப்பது, நம்மை ஒழியச் செல்லாமை பிறந்து,
நாம் அரைக்கணம் தாழ்த்தது பொறுக்கமாட்டாமை யன்றோ’ என்று பார்த்து,
‘நீங்கள் என்னை இங்ஙனே சொல்லலாமோ? நான் தாய் தந்தையர்கட்குப் பரதந்திரப்பட்டவன் அன்றோ?
அவர்கள் என்கையிலே கோலைத் தந்து, நீ சென்று பசு மேய்த்து வா என்றால், நான் மாட்டேன் என்னப் போமோ?’ என்றான்;
தாய்தந்தையர்கட்குப் பரதந்திரராய்க்கொண்டு பசுமேய்ப்பார் மேய்க்கும்படி இதுவோ?
நீ செய்யும் செயல் சேர்ந்திருக்கில் அன்றோ நீ சொல்லும் சொலவும் சேர்ந்திருப்பது.

நீர் தானே அன்னை சொல் கேட்காமல் -பால் குடிக்காமல் மாறி இருந்தீர் -பெண்கள்கண் வட்டத்தில் தான் மேய்க்கச் சொன்னார்களோ –
நல்ல லஷணம்–இதற்காகவே நெறிஞ்சி முள்ளாக இருந்ததை ப்ருந்தாவனமாக மாற்றி அருளினாய்

ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு அன்று நீ கிடந்தாய்-
ஓர் ஆலிலையாவது, அதுதான் முகிழ் விரியாத அளவாய் இருப்பது;
அதிலே ஏழ் உலகங்களையும் வயிற்றிலே வைத்து, ஒரு யசோதை முதலாயினோர்களுங்கூட
உதவாத நிலையிலே திருக்கண்வளர்ந்தருளினாய்.
உலக முழுதினையும் வயிற்றிலே வைத்து, சிறு வடிவைக் கொண்டு பிரளயத்தில் தனியே கிடக்க வல்லவன் அன்றோ நீ!
பொருத்த மற்றன வற்றையும் பொருத்த முள்ளனவாகச் செய்யவல்ல ஆற்றலையுடைய உனக்கு இவை எல்லாம்
பொருந்தச்சொல்லுகை பொருளோ? நீ சொல்லுகிறவை காதலர்கள் கோஷ்டியில் பரிமாறுவன அல்லகாண்;
“தந்தை யென்பான் வடிவு கொண்ட தலைநோய்” –
“பிதா நாம மூர்த்த: ஸ்ரோ ரோக:” என்பது, பிரமாணம்.-என்றும்,
“பெரியோர்கள் நம்மை என்ன செய்வார்கள்” என்றும் காண் இங்குப் பரிமாறுமவை.
“குரூணாம் அக்ரதோ வக்தும் கிம் ப்ரவீஷி ந ந: க்ஷமம்
குரவ: கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 22.

“அன்னை என்செய்யில் என்? ஊர் என்சொல்லில் என்?” -திருவாய்மொழி, 5. 3 : 6.-என்றே யன்றோ இங்கு இருப்பது.
“விரகாக்நியினாலே தகிக்கப்பட்ட” இதற்கு, நீர் சொரியவல்லவர்களோ அவர்கள்?
அவர்களை மறைத்து வந்து கிட்டக்கடவ எங்களுக்கு இவை வார்த்தை யல்ல காண்.
உன் மாயங்கள் மேலை வானவரும் அறியார் –
உன்னுடைய வஞ்சனை பொருந்திய காரியங்களை, உண்டாக்கப்பட்ட இந்திரன் முதலானோர் அன்றிக்கே நித்தியசூரிகளும் அறியார்கள்.
“பிரமனும் சர்வேசுவரனான ஸ்ரீமந்நாராயணனை அறியான்”-
“பிரஹ்மாபி ந வேத நாராயணம் ப்ரபும்” என்பது, பிரமாணம்.- என்கிறபடியே,
அறியாமைக்கு அவர்களும் ஒத்திருக்கச் செய்தே, உகந்தாரைக் காற்கடைக்கொள்ளுதலைச் சொல்லும் இடமாகையாலே
நித்திய சூரிகளை எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறார்கள்
“சூட்டு நான்மாலைகள் தூயன ஏந்தி”-திருவிருத்.செய். 21.-என்றுகொண்டு அவர்கள் சமாராதனத்துக்கு வேண்டுவன கொண்டு நிற்க
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்தான் அன்றோ. அதுதன்னையும் விட்டு அன்றோ
அடல் ஆயர்தம் கொம்பினுக்குக் கோட்டிடை ஆடினான்.
பழையாரை எல்லாம் காற்கடைக் கொள்ளுகிற இடமாய் இருக்கிறதன்றோ. நவப்பிரியைகளை விரும்புவாரைப் போலே காணும்.
நித்ய சூரிகள் – -பழையார் -நவ பிரியை -இன்று ஈன்ற கன்று – / ஆழ்வார் -மின்னிடை மடவார் என்றுமாம்

இனி எம் பரமே –
நித்தியசூரிகளோடு ஒக்கத் தங்களையும் ஒன்றுபடுத்திப் பேசுகிறார்கள்.
அவர்களுக்கு நிலம் அல்லாதது எங்களால் அளவிடப் போமோ?
அவை யெல்லாவற்றையும் எங்களை ஒழியச் சொல்லாய்.
‘என்தான்’ நான் பசுமேய்த்தமை இல்லை என்கிறீர்கோளோ? அறிந்திலோம் என்கிறீர்கோளோ?
நான் சொன்னது பொய்தான் என்கிறீர்கோளோ? என்றான்.-விகல்பம் பண்ணி கேட்கிறான் – வார்த்தை கேட்பதில் தானே இவனுக்கு அபேஷிதம் –
அவையெல்லாம் அப்படியே யானாலும் நீதான் பசுக்கள் மேய்க்கும்படி இப்படியேயோ?
வேலின் நேர் தடங் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று காலி மேய்க்க வல்லாய் –
அநுபவிக்கின்றவர்களுடைய அளவு அல்லாதபடி பரப்பையுடைத்தாய்,
ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேரான கண்களையுடையராயிருக்கிற பெண்களினுடைய கண்களிலே துவக்குப்பட்டு
அவ்வருகு போகமாட்டாதே நின்றுபோலே காணும் பசுக்களை மேய்ப்பது! என்றது,
“கார்த்தண் கமலக் கண்என்னும் நெடுங்கயிறு படுத்தி என்னை, ஈர்த்துக்கொண்டு
விளையாடும் ஈசன்தன்னைக் கண்டீரே”-நாய்ச்சியார் திரு. 14 : 4.- என்று,
தன் கண்ணழகைக் கண்ட பெண்கள் படும்பாடு எல்லாம் இவனை அவர்கள் படுத்த வல்லவர்கள் என்பதனைத் தெரிவித்தபடி.
விளையாடு சூழலைச் சூழவே நின்று காலிமேய்க்க வல்லாய்-
‘உன் வயிற்றையும் நிறைத்துப் பசுக்களின் வயிறுகளையும் நிறைத்து அல்லது வாராதேகொள்’ என்று அன்றோ,
தாய்தந்தையர்கள் உன்னைச் சொல்லிவிட்டது?
‘இன்ன இடத்தே நின்று பசுக்களை மேய்க்க’ என்று ஓர் இடத்தை வரையறைசெய்து விட்டார்களோ?
அவர்கள் சொல்லாதனவற்றையும் செய்யும்போது அதனை இங்குச் செய்யலாகாதோ?
எங்கள் கண் வட்டத்தில் கூடாதோ -சீக்கிரம் மேய்த்து இங்கே வந்து இருக்கக் கூடாதோ -என்றுமாம்
கண்ணுக்கு இட ஒரு துரும்பும் இல்லாத, அவர்கள் விளையாடுகின்ற மணற்குன்றுகளைச் சூழ நின்று மேய்க்கவேணும் போலே காணும்.
அன்றிக்கே, “பசுக்களை மேய்க்கைக்கு நினைக்கத் தகுதி இல்லாத இடங்களிலே இவற்றின் வயிறுகளை
நிறைத்துக் கொடு போகையினாலே, மேலே கூறிய அகடிதகடநா சாமர்த்தியம் போலே இதுவும்
ஓர் ஆச்சரியம் சொல்லுகிறதாகவுமாம்.
‘வல்லாய்’என்றதனால், உன்னை யாரேனும் ஒன்றிலே நியமித்தாலும் நீ நினைத்தது
செய்து தலைக்கட்ட வல்லாய் ஒருவன் என்பதனைத் தெரிவித்தபடி.

இவர்கள், நாம் சொன்ன மர்மம் புத்திபண்ணாதே, ‘நம்முடைய சாமர்த்தியம் தோற்றச் சொல்லாநின்றார்கள்’ என்று,
தன் மேன்மை தோற்றச் சில சொல்லப் புக்கான்.
‘இவன் அழியும்படி நெடும் போது சிலவார்த்தை சொன்னோம்; இவனும் சில சொல்லக் கடவன்’ என்று இருந்தார்கள்.
“இதீவ-மேலே நெடும்போது சில பாசுரமிட்டுச் சொல்லிக்கொடு போந்தான்;
பிரணயதாரையில் ஓடுமது இருடிகளாயிருப்பார்க்கு நிலம் அன்றே? இப் புடைகளிலே என்கிறான்

“இதீவ தேவீ வசநம் மஹார்த்தம்த ம்வாநரேந்த்ரம் மதுரார்த்தம் உக்த்வா
ஸிரோதும் புநஸ் தஸ்ய வசோபிராமம்ரா மார்த்தயுக்தம் விரராம ராமா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 31.

தேவீ – வல்லபைகளுடைய பரிமாற்றம் கடக்க நிற்பார்க்குத் தெரியாதே அன்றோ.
வசனம் மஹார்த்தம் – கடக்க நிற்பார்க்கே அன்று; தேசிகரானவர் தங்களுக்கும் தெரியாதிருக்கை.
தம் வாநரேந்திரம் – இவனோடு ஒக்கக்கடவார் ஒருவரும் இலர்.
சேஷத்துவத்திற்கு முடிசூட்டப்பட்டார் மஹாராஜரேயாகிலும், பாரதந்திரியத்தின் எல்லையிலே நின்றான் இவன் என்கை.
இவ்வளவிலே இவள் முகம் பார்த்து வார்த்தை சொல்லப் பெற்றிலர் அன்றோ அவர்.
மதுரார்த்தம் – நிலம் அன்று என்னாக் கைவாங்க ஒண்ணாதபடிஇருக்கை.
உக்த்வா – அவனும் அவன் உடையவர்களும் வாழும்படி வார்த்தை சொன்னாள்.
ஸ்ரோதும் புநஸ் தஸ்ய வசோபிராமம் – ‘அழிந்தாரை ஆக்கவல்லன்’ என்னுமிடம் கண்டாள்;
தான் அழித்த தலை உண்டாம்படி வார்த்தை சொல்லவல்லமை கேட்க வேணும் என்று இருந்தாள்.
நிர்த்தயர் சவார்த்தர் -வார்த்தை சொல்லி அழித்தது -அவை இல்லாமை வார்த்தை சொல்லுவான் என்று
எதிர்பார்த்து இருந்தது போலே இங்கும் பராங்குச நாயகி
ராமார்த்தயுக்தம் – இராமபிரானாகிற பிரயோஜனத்தோடு கூடியது;- தன் காரியம் செய்து தலைக்கட்ட வல்லான் ஒருத்தன்.
விரராம – நெடும்போது தான் வார்த்தை சொல்லுகையினாலும், ஸ்வாமி வார்த்தை சொல்லும்போது
மேலிட்டு வார்த்தை சொல்ல ஒண்ணாமையினாலும் பேசாதே இருந்து அவனுக்கு இடம்கொடுத்தாள்.
ராமா – இவ்விட்டு நீட்டுகை ஒழிய வார்த்தை சொல்லாதே இருக்கிறபோதை அழகை
அவர்தாம் காணப்பெற்றிலோம்,” இவனும் அடர்த்து வார்த்தைசொன்னான்.
இவ்விட்டு நீட்டுகை ஒழிய-இவள் வார்த்தை நேராக பெருமாள் கேட்காமல் திருவடி மூலம் தானே கேட்கப் பெற்றார்

எம்மை நீ கழறேலே –
வாராய்! நோவுபடுத்தி நலிந்தார் முடிக்கவும் தேடுவார்களோ?
எம்மை – உன்னைப் பிரிந்து ஆற்றாமல் நோவுபடுகிற எங்களை.
நீ – ஒருகாலமும் பிரியாத நீ. என்றது, பிரிவால் வரும் நோவு இன்றிக்கே இருக்கிற நீ என்றபடி.
கழறேலே –
விசாய்ந்து வார்த்தை சொல்லாதேகொள். என்றது, நீ இங்ஙன் மேலிட்டு வார்த்தை சொல்லப்பெறாய் காண் என்கிறார்கள் என்றபடி.
நீயும் நாங்களுமானால் எங்களை நீ அடர்த்து வார்த்தை சொல்ல என்ன சம்பந்தம் உண்டு?
சேதநரைப் போலே வந்து வார்த்தை சொல்லுவதே!
அதிலே வைத்து மிகைத்து வார்த்தை சொல்லுவதே!
ஆற்றாமைக்கு உதவினார்க்கு அன்றோ வாய் உள்ளது!-சாபராதன் -நீ -துக்கிகள் நாங்கள் -என்றபடி

——————————————————————————–

கழறேல் நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண்சக்கர
நிழறு தொல்படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5-

உன் பொய்க்கு பெரு நிலை நிற்கும் -சகாயம் கொண்டு -அஹ்ருதயமாக எங்கள் பேச்சைக் கொண்டாடுவது –
கழறேல் நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண்சக்கர-பொய்யாலே பூர்ணன் -பொய் செய்கேன் எனபது என்ன
–பகலை இரவாக்க சகாயம் செய்த -பெரு நிலை -திண்மை -அசையாமல் பொய் சொல்லும் திறம்
நிழறு தொல்படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்-தேஜஸ் உமிழ்ந்து -கிருத்ரீமா சேஷ்டிதங்கள்-மகா பாரதத்தில் கூடியவர்களும் –
வியாசர் எழுதி வைத்து நன்கு அறிவோம்
எங்கள் வார்த்தை இனிமையைக் கொண்டாடாதே -நாங்கள் அவர்கள் அல்லோம் -உனது அருளுக்கு சூட இட்டுப் பிறந்தவர்கள்
மழறு மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்-புதுத் தேன் உண்டு பேசும் இனிய மொழி -மனம் செவ்வி அழிந்து விஷன்னர் ஆகும் படி
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.-பூவை கிளி -உடன் பேச தொடங்கினான் –அவர்களது இல்லை -எங்களுடையஇவற்றுடன்
–லீலா ரசம் கொண்டாடாதே கொள் ஹரி பத்மநாபா சொல்லுகிறதே -ஸ்வா பாவிக வார்த்தைக்கு அர்த்தம் கண்டு பிடிக்காதே
ஆஸ்ரிதற்கு உசாத் துணை -பேச பேச ஆனந்தம் -சிஷ்யர் வர்க்கம் -ஆச்சார் களாலே ரஷிக்கப்படுபார்களே

நம்பீ! மேலிட்டு வார்த்தை சொல்லாதே; உனது வஞ்சனையை மண்ணுலகமும் விண்ணுலகமும் நன்றாகத் தெரிந்துகொண்டிருக்கிறது.
திண்மை பொருந்திய பிரகாசத்தையுடைய இயல்பிலே அமைந்த சக்கரப் படையையுடையவனே! நான் உனக்கு ஒன்று உணர்த்துகின்றேன்;
இளந்தேன் போன்ற சொற்களைப் பேசுகின்றவர்களாய் நின்னருளைப் பெற்றவர்களான பெண்கள் மனம் வாடி நிற்க,
நீ இங்கே நின்றுகொண்டு, எங்களுடைய குழறுகின்ற பூவையோடும் கிளியோடும் சேர்ந்து விளையாடாதே என்கிறாள்.
நின்னருள் சூடுவாராகிய மழறு தேன்மொழியார்கள் என்க. மழறுதல் – மென்மையவாதல். குழறுதல் – தெளிவில்லாமல் பேசுதல். நிழறுதல் – ஒளிவிடுதல்.

‘அன்புள்ளவர்களுக்குக் குற்றத்தைக் குணமாகக் கொள்ளவுமாம்;
அன்பில்லாதவர்களுக்குக் குணந்தன்னையே குற்றமாகக் கொள்ளவுமாம்;
விஷயத்துக்குத் தகுதியாக அன்றோ குணதோஷங்கள் இருப்பன.
ஆகையாலே, நான் சொன்னவை எல்லாம் இப்போது இத்தலைக்குக் குறையாய்த் தோற்றும் அன்றோ.
ஆனாலும், மத்தியஸ்த்தர் சொன்னதன்றோ அர்த்தமாகத் தலைக்கட்டுவது’ என்றான்.

கைதவம் மண்ணும் விண்ணும் -என்றத்தை சொன்னதும் –மத்தியஸ்தர் வேணும் அவன் வார்த்தை என்று கருதி
அந்தரங்கர் நாங்கள் போதாதோ -வேறு மத்தியஸ்தர் வேணுமோ -நாங்கள் தானே உன்னை அறிவோம் –
ச்நேஹம் இருக்கும் பொழுது ஒரு வார்த்தை -உண்ணும் பொழுது உண்ணாத பொழுது ஒரு வார்த்தை பேசுவீர்
மதுரகவி போல்வார் வேண்டும் என்றானே –

கழறேல் நம்பி –
அது முன்னம் செய்தபடி செய்ய: நீர் தாம் முதன்மை கொண்டாடி மேலிட்டு வார்த்தை சொல்லாதே கொள்ளும் எங்களை.
‘நம்பி’ என்றதனால், பிரபாவம் கொண்டு விருப்பத்தைச் சாதிக்க ஒண்ணாது காணும் என்பதனைத் தெரிவித்தபடி.
நெஞ்சில் வெறுப்புடையார் சொல்லுமது வார்த்தை அன்று;
‘நான் வஞ்சகன்’என்பதற்கு உங்களை ஒழியச் சான்று வேறு உண்டோ? என்ன,
உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் –
உன் வஞ்சனை எங்கள் அளவன்று; எல்லாவுலகங்களிலும் பிரசித்தங்காண்.
“வாயும் திரையுகளும்” என்ற திருவாய்மொழியின் வாசனையாலே
“தம்மைப் போலே உலகமெல்லாம் நினைத்திருக்கும்” என்று இருக்கிறார்.
சம்பந்தம் பொதுவானால் அங்ஙன் நினைத்திருக்க ஒரு தட்டு இல்லை அன்றோ.
அன்றிக்கே, சேஷி ஒருவன் ஆனால் சேஷமான பொருள்கள் எல்லாம் ஒருமிடறாய் இருக்கும் அன்றோ;
ஒருவனுக்குப் பல அடிமை உண்டானால் தங்களுக்குள் எல்லாரும் கிருதசங்கேதர்களாய் ஒத்திருப்பர்கள் அன்றோ.
மண்ணிலுள்ளாரும் விண்ணிலுள்ளாரும் அழகிதாக அறிவர்கள்.
விசேஷஜ்ஞரோடு விசேஷஜ்ஞர் அல்லாதாரோடு வாசி அற அறிவர்கள்.
‘இவ்விடையாட்டம் இரண்டும் அறியாதாரையோ சான்றாகச் சொல்லுவது?
அறிவினால் குறையில்லாத அகல் ஞாலம் அன்றோ இது!’-திருவாய். 4. 8 : 6.-என்றான்.
‘விண்ணும் நன்கு அறியும்’ என்கிறார்கள். ‘ஆனாலும், அவர்களிலே ஒருவரைச் சொல்லச் சொல்லுங்கோள் பொய் என்று’ என்றான்.
ஆனால், உன்னிடத்தில்அன்பு வைத்திருக்கும் அவர்களிலே ஏற்றுகிறோம் கைம்மேலே என்கிறார்கள் மேல்:

திண் சக்கர நிழறு தொல் படையாய் –
குற்றத்தையே குணமாகக் கொள்ளுவாரைக் கேள்.
உன் வஞ்சனைகட்குப் பெருநிலை நிற்பார்க்கு அன்றோ தெரிவது.
உன் நினைவு அறிந்து கையிலே வந்திருப்பது,
“பகலை இரவு ஆக்கவல்லையோ?” என்று கேட்டால் “ஓம்” என்று கொண்டு சூரியனை மறைப்பது;
இப்படியே அன்றோ அவனுடைய செயல்.
அப்பொய்யில் அவனைப் பேதிக்கிலும் இவனைப் பேதிக்க ஒண்ணா தாயிருத்தலின் ‘திண்சக்கரம்’ என்கிறார்கள்.
சுதந்திரனாகையாலே காரியத்துக்குத் தகுதியாக ஏறிட்டுக் கொள்ளுவான் அவன்;
இவனுக்கு அது இல்லை அன்றோ.
பொய்யனா யிருக்கச் செய்தே மெய்யனானால் பிறக்கும் காரியத்தைப் பிறப்பித்துக் கொடுக்க வற்ற தாதலின் ‘நிழறு படை’ என்கிறார்கள்.
நிழறுகையாவது, –நடத்துகை.
அன்றிக்கே, நிழறுகையாவது, நிறம் கொடுக்கையாய், பொய்யனா யிருக்கச் செய்தே,
மெய்யனானால் பிறப்பிக்கும் காரியத்தைப் பிறப்பித்துக் கொடுத்தலையுடைய என்னுதல்.
நிழலில் வேலை பார்த்து -சத்ய பிரதிஜ்ஞ்ஞன் நினைக்கும் கார்யம் தலைக் கட்டிக் கொடுக்கை –
இப்படிகட்குப் பழையனாய்ப் போருமவனாதலின் ‘தொல் படை’ என்கிறார்கள்.
இவர்கள் இப்படிச் சொன்னவாறே ‘நம்பக்கலிலே சிலர் இப்படி நமக்கு உண்டாவதே?’ என்று,-self goal –
சொல்லலாவது காணாமல் கவிழ்தலையிட்டான்.
உனக்கு ஒன்று உணர்த்துவன் நான் –
வாராய்! நீ சொலவு அற்று இருக்கவேண்டா; உனக்கு நாங்கள் நல்லது ஒரு ஹிதம் சொல்லுகிறோம் வா என்றார்கள்.
இது செவிகொடுத்துக் கேட்டானாகில், இதற்குச் சொல்லலாவது ஒரு மறுமாற்றம் இல்லை;
தனக்கு மேல் வார்த்தை சொல்லுகைக்கு ஒரு போக்கடியும் இல்லை.

கிருத்ரிமம் பண்ணாதே அங்கு ஏறப் போ -என்கை யாதல் –கிருத்ரமமே பண்ணாதே போன்ற நல் வார்த்தைகள்
நான் ஸ்வ தந்த்ரன் என்பதே அவன் சொல்லலாவது -அத்தை சொல்லவில்லை –

இவை எல்லாம் கிடக்கச்செய்தே பேசாதே புகா ‘இது ஒரு பேச்சின் இனிமை இருந்தபடி என்ன?’ என்றான்
மழறு தேன்மொழியார்கள் –
பாவியேன், நீ யாருடைய பேச்சுக்களை யாருடைய பேச்சுக்கள் என்று மயங்குகிறாய்!
மழறுதேன் – மழலைத் தேன்.
அன்றிக்கே, கலங்கின தேன்போலே இனிய பேச்சுக்களையுடையராயிருப்பவர்கள் என்னுதல்.
இவன் சந்நிதி மாறாமையாலே கலக்கமும் மாறாதே இருக்குமேயன்றோ.
‘அவை எல்லாம் இங்கே யன்றோ’ என்பானே அவன்.
மொழியார்கள்-எத்தனைபேர் உனக்கு?
நின் அருள் சூடுவார்-வேறு ஒருவருடைய பேச்சுக்களைக் கேட்டாலும் தங்கள் பேச்சுக்கள் என்று மயங்கும்படி செய்யவல்லவர்கள். என்றது,
ஒரு வார்த்தையாலே “மனம் நிலை பெற்றது, சந்தேகங்களும் நீங்கின” என்னும்படி வார்த்தை சொல்ல வல்ல உன்னை
“நஷ்டோ மோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரஸாதாத் மயாச்யுத
ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ”-என்பது, ஸ்ரீ கீதை, 18 : 73.
ஒருவார்த்தையாலே கலங்கப் பண்ணுமவர்கள் என்றபடி.
‘அதற்கு என்?’ என்றான். அவர்கள் எங்களைப்போல் அல்லர்காண்.
நீ பிரயோஜனம் இல்லாமல் இங்கே நிற்கச் செய்தேயும், இதனை அறிந்துவைத்தும்
கணநேரமும் பிரிவு பொறுக்கமாட்டாமையாலே அவர்கள் மனங்கள் வாடுங்காண்.
கொம்பை இழந்த தளிர்போலேகாண் அவர்கள் நெஞ்சுகள் வாடும்படி.
‘கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள், தங்குமேல் என் ஆவி தங்கும்’-நாய்ச்சியார் திரு. 8 : 7.- என்று
இருக்குமவர்கள் அலரோ அவர்கள். அவ்வளவில் நீ உதவப் பெறாமையாலே போர நோவுபடுவர்கள்;
அதுகண்டால், நீ பொறுக்க வல்லையோ என்று சொல்லிப் பேசாதே இருந்தார்கள்.

‘உங்கள் பேச்சைக் காட்டிலும் எனக்குத் தாரகம் இவற்றின் பேச்சுக்கள் அன்றோ!’ என்று,
அவர்களை விட்டுப் பூவையையும் கிளியையும் கொண்டாடப் புக்கான்;
சிலரை ஆதரிக்கையாவது, அவர்கள் உடைமையை ஆதரிக்கை அன்றோ.
அவற்றை ஆதரித்து வார்த்தைகொள்ளப்புக்கவாறே,
வாராய்! அவைதாம் யார் உடைமைகள் என்றிருக்கின்றாய்? அவை நீ நினைக்கிறவர்களுடைய உடைமைகள் அல்லகாண்!
எம் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே –
அவை உனக்கு வார்த்தை சொல்லுகிறன அல்லகாண்!
அவற்றிற்கு அது இயல்புகாண்.
குழகேலே-
நாங்கள் வேறாகவார்த்தை சொல்லச்செய்தேயும் கண்டாயே,
நீ வேறு கதி இல்லாமை தோற்ற வார்த்தை சொல்லுகிறபடி.
அப்படியே அவற்றின் பேச்சும் வேறு பொருள்காண்.
குழறுதல் – எழுத்துக்கள் தோன்றாதவாறு பேசுதல். குழகுதல் – லீலாரசம் கொண்டாடுகை.

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: