பகவத் விஷயம் காலஷேபம்- 127- திருவாய்மொழி – -6-1–6….6-1-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6-

போக்யதா பிரகர்ஷத்தாலே ஸூரி சேவ்யன் -ரசகனமான பெருமான் -குயில்களை
போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!-பசுத்த நிறம் -நாநா வர்ணம் பூக்கள் -சுபாஸ்ரய விஷயம்
பற்றி இருப்பாரைப் போலே நித்ய வாசம் செய்யும் குயில்கள்
நிவாச வ்ருஷ சாதூனாம் -தாரை வாலிக்கு -பெருமாளை அண்டை கொண்ட பலம் கொண்ட சுக்ரீவன் -ஆபன்னாம் பராம் கதி -போலே
உஜ்ஜ்வலம் -அத்தாலே -தர்ச நீயதைக்கும் -நிவாச வ்ருஷ ஆஸ்ரயநீயத்துக்கும்-மங்களா சாசனம் பண்ணி
உங்கள் வாயது வாழ் நாளாக இருக்கும் அடியேன் -சத்தையே உங்கள் வாய் வார்த்தையாலே –
அனந்யகதி உள்ளார் செய்யும் பிரார்த்தனை பண்ணுகிறேன் -ஆச்சார்யர் திருவடிகளே சரணம் அன்றோ
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்-தன்னிலம் இருப்பதால் ஹர்ஷித்து வர்த்திக்கும் -துள்ளா நிற்கும் -நீர் செழிப்பு
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு-பெரு மிடுக்கல்-அழகிய திருக்கை -இத்தனாலே
அமரர்களை நிர்வகிக்கும் சர்வாதிகன் -ஆற்றல் மதிப்பு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.-என்னுடைய பிரமம் தீரூம் படி -பதில் கொண்டு அருளுவீர் –
கடகர் உடைய உக்தி மாதுர்யமும் -அர்த்த நியதியும் -பொருள் பட பேசுவது -தோற்றுகிறது

புன்னை மரத்தின் மேல் தங்கி யிருக்கின்ற அழகிய குயில்களே! யான் போற்றி இரந்தேன்; சேற்றிலே வாளை மீன்கள் துள்ளி விளையாடுகின்ற
திருவண்வண்டூர் என்னும் திவ்விய தேசத்தில் நித்திய வாசம் செய்கின்ற பெரு மிடுக்கினை யுடைய சக்கரத்தை அழகிய கையிலே தரித்திருக்கின்ற,
நித்திய சூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானைக் கண்டு, என் மயக்கம் நீங்குவதற்கு உரியது ஒரு தன்மையாக மறு மாற்றத்தைக் கொண்டு வாருங்கோள்.
பூங்குயில்காள்! யான் போற்றி இரந்தேன், உறையும் பெருமானைக் கண்டு மையல் தீர்வதொரு வண்ணம் மாற்றம் கொண்டருளீர் என்க.
‘ஆற்றல்’ என்பதனை, பெருமானுக்கு விசேடணமாக்கலுமாம் மையல் – மயக்கம்.

சில குயில்களைக் குறித்து என் நிலையை அவனுக்கு அறிவித்து அங்குநின்றும் ஒரு மறு மாற்றம்
கொண்டு வந்து அருளிச் செய்ய வேண்டும் என்கிறாள்.

போற்றி –
சம்சார வெக்காயம் தட்டாதபடி, வைமாநிகர் விமானங்களிலே உயர இருக்குமாறு போலே,
புன்னை மரத்திலே உயர இருந்தன சில குயில்கள்; -கூஜந்தம் ராம ராமேதி மதுர அஷரம் –
அவற்றின் செவிகளிலே தன் துயரத்தைக் காட்டுகின்ற ஒலி படும்படி உயர ‘போற்றி’ என்கிறாள்.
முகம் பார்க்கைக்குச் சொல்லுகிற பாசுரம் இது போலே காணும்.
இந்த ஒலி செவிப்பட்டால் காரியம் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றிருக்கிறாள் காணும்.

யான் இரந்தேன் –
அவன் தான் இரக்க இருக்கக் கடவ வேண்டப்பாடுடைய நான் இரந்தேன்;
ஆள்விடுவானும் இரப்பானும் எல்லாம் தானே அன்றோ.
அன்றிக்கே,
“இரகு வம்சத்தை மகிழச் செய்கின்ற இளைய பெருமாள், தமையனுடைய இரண்டு திருவடிகளையும் நெருங்கப் பிடித்துக் கொண்டு
பிராட்டியைக் குறித்துச் சொன்னார், சத்திய விரதரான பெருமாளைப் பார்த்தும் சொன்னார்” என்கிறபடியே
ஸ ப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகுநந்தந:
ஸீதாம் உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவிரதம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 12.
புருஷகாரத்திற்கு வழியாக எல்லாராலும் இரக்கப்படும் யான் இரந்தேன் என்னுதல்.
வாலப்யத்தால் அவனைக் கட்டுப் படுத்தி ஈஸ்வரி -நம் அனைவருக்கும் ஈஸ்வரி அன்றோ –

இரந்தேன் –
நியமிக்கிறேன் அல்லேன், இரக்கின்றேன். இரப்பார் காரியம் செய்தறவேணும் என்னும் நினைவாலே ‘இரந்தேன்’ என்கிறாள்.
இரந்தேன் என்று அவற்றின் நெஞ்சிலே புண்படுத்துகிறாள்.

புன்னை மேல் உறை பூங்குயில்காள் –
வைமாநிகரைப் போலே மனிதர்களுடைய வாசனை நடையாடாதபடி உயர்ந்த இடத்தில் வாழ்கின்ற,
கலவியினாலே விளங்குகின்ற குயில்காள்!
உங்களைப் போக விடுதல் தரும ஹாநியாய் இருக்கின்றது;
ஆகிலும், என் செல்லாமையாலே செய்கின்றேன் என்பாள் ‘உறை’ என்கிறாள்.

போற்றி –
பெருமாளும் பிராட்டியுமாகக் காட்டிற்கு ஏகாந்த போகத்துக்குப் போகா நிற்கச் செய்தே நடுவே இராவணன் வந்தாற்போலே,
உங்கள் போகத்துக்குப் பிரிவு உண்டாக்க நான் தோற்றினேன் போலே இருந்தது.
இத்தால் ஒரு வியசனம் இன்றிக்கே ஒழிந்திடுக உங்கள் போகத்துக்கு என்கிறாள் என்றபடி.

பிள்ளை யமுதனார், திரு விருத்த வரை மார்வனை, ‘புன்னை மேல் என்னும் இப் பதங்கட்குப் பட்டர் அருளிச் செய்தது என்?’ என்ன,
‘தன் துன்ப ஒலி அவற்றின் செவியிலே படும்படி உயரச் சொல்லுகிறாள் என்று அருளிச் செய்தார்’ என்ன,
“வானார் வண் கமுகு”,
“சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல்” என்றபடியே, அங்குள்ள புன்னைகளும் உயர்ந்து ஓங்கி இருக்கும் என்கிறபடி.
‘நெய்தல் நிலத்திலே புன்னை படர்ந்தன்றோ கிடப்பது, இங்ஙனே சொல்லக் கூடுமோ?’ என்ன,
அவன் பட்டர் பாடே வந்து, ‘இங்ஙனே பணித்தார்’ என்ன,
‘இவ் வர்த்தத்துக்கு நிர்ணாயகம், இசையாயிற்று; -உச்ச ஸ்வரம் –
அது, ‘போற்றி’ என்று, உயரச் சொல்லி யிருக்குமோ? தாழச் சொல்லி இருக்குமோ’ என்று அருளிச் செய்தார்.

சேற்றில் வாளை துள்ளும் –
பிரளயத்திலே கொண்டு போய் விட்டாலும் யானைக் கன்று போலே செறுக்கிச் சேறு ஆக்குமாயிற்று வாளைகள்.
‘அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி அகல்வான் உரிஞ்ச முதுகில்,
மலைகளை மீது கொண்டு வரு மீனை’ -பெரிய திருமொழி, 11. 4 : 1.-என்னுமாறு போலே.
துள்ளல் ஓசை அர்த்தம் இந்த பாசுரம் போலே கூரத் தாழ்வான் ஸ்லோகம் மத்ஸ்ய அவதாரம் பற்றி அருளிச் செய்து உள்ளார்
சேதனம் அசேதனம் என்னும் வேறுபாடு இல்லாமல் களித்து வாழ்கின்ற தேசமாயிற்று.
அவ்வூரில் பொருள்கள் செருக்கி வாழா நிற்கச் செய்தே கண்டீர் நான் பிரிந்திருந்து தூது விடுகிறது.

ஆற்றல் ஆழி அம் கை அமரர் பெருமானைக் கண்டு –
அடியார்கள் விஷயத்தில் எல்லாம் செய்தாலும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்று நோவு பட்டு இருப்பான் ஒருவனுமாய்,
அவர்கள் இரக்ஷணத்துக்குக் கருவியான திருவாழியைக் கையிலே யுடையனாய்,
நான் காண ஆசைப்பட்ட கையும் திருவாழியுமான அழகை விருப்பமில்லாதார்க்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்குமவனை.
அன்றிக்கே,
‘ஆற்றல்’ என்பதனைத் திருவாழிக்கு அடைமொழியாகக் கொண்டு,
அடியார்களைக் காப்பாற்றுவதில் அவனைக் காட்டிலும் கிருபையை யுடைய திருவாழியைக் கையிலே யுடையவனை என்னுதல்.
அன்றியே,
‘ஆற்றல்’ என்பதனை, அவன் தனக்கே அடையாகக் கொண்டு,
பிரிவுக்குச் சிளையாதே ஆறியிருப்பானாய்க் கையும் திருவாழியுமான சர்வேசுவரனை என்று பட்டர் அருளிச் செய்வர்.

மாற்றம் கொண்டருளீர்-
ஒரு வார்த்தை கொண்டு வந்தருள வேண்டும். எப்படிப்பட்ட வார்த்தை கொண்டு வர எனின்,
என் நிலை இருந்தபடி கண்டீர்கோளே,
இது தீர்வது ஒருவழி நீங்களே தேடிக் கொண்டு வந்து சொல்லுங்கோள்.
“காணப் பட்டாள் சீதை” என்றாற்போலே.
“ஸ: அபிகம்ய மஹாத்மாநம் க்ருத்வா ராமம் ப்ரதக்ஷிணம்
ந்யவேதயத் அமேயாத்மா த்ருஷ்டா ஸீதேதி தத்வத:”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 78.

கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்; தெண்டிரை யலை கடல் இலங்கைத் தென்னகர்
அண்டர் நாயக! இனித் துறத்தி; ஐயமும் பண்டுள துயரும் என்று அநுமன் பன்னுவான்.-என்பது, கம்பராமாயணம்.

மையல் தீர்வது ஒருவண்ணம் மாற்றம் கொண்டருளீர் –
என் கிலேசம் தீர்வது ஒருபிரகாரம் வார்த்தைகொண்டு வந்தருளிச்செய்யவேண்டும்.
தூதுவிடுகிற தான் ஜனகராஜன் திருமகளாகவுமாம், விடப்படுகிறவை திர்யக்குகளையாகவுமாம்,
பகவத் விஷயத்தில் சேர்க்கின்றவர்களாயிருப்பாரை இங்ஙன் அல்லது சொல்லொண்ணாது காணும்.–அருளீர் -பூஜ்ய உக்தி –

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரி கமல உந்தி யுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!
கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே!-என்பது, சிலப்பதிகாரம்.

——————————————————————————————–

ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண் கிளியே!
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண் வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.–6-1-7-

அசாதாரண தர்ச நீயன் -அடையாளங்கள் -ஒரு கிளியைப் போக விடுகிறாள்
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண் கிளியே!-அழகிய -கிளி வெட்கம் அடைந்ததாம் -குரல் இனிமைக்கு சொல்ல வில்லை
பரபாக வர்ணம் -நாயகன் போலவே உள்ளதே -எல்லே இளம் கிளி -மென் கிளி போலே -மடக்கிளியை கை கூப்பி வணங்கி –
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண் வண்டூர்-பரஸ்பர -இசலி -பிசலி மாறு பட்ட பூக்கள் சண்டை -பொழில் -சிவந்த பொழுது
காலை மாலை -வேலை -பொழுது-கடல் என்றுமாம் -தொடு வானத்தால் சிவந்து என்றுமாம் –
பொழில் உடைய போக்யதையில் அகப்படாதே -ஒரு வண்ணம் சென்று புக்கு
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் –வண்ணம் மட்டும் கறுத்து -சிவந்த திரு அவயவங்கள்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.-அடையாளம் -சுக்ரீவன் பிரட்டி திரு ஆபரணங்களை காட்ட பெருமாள் காண வில்லை
இளைய பெருமாள் நூபுரம் -மட்டுமே கண்டார் -திருவடி தானே திருந்தக் கண்டார் –திருந்தக் காண்–பின்பே உரை என்றவாறு
போரில் உத்யுத்தமாக இருக்கும் -ஆஸ்ரித விரோதிகள் -இடம் அபரோஷித்து -கண்ணால் கண்டு -ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் –
கடகர் உடைய பகவத் சமான ஆகாரத்தை தோற்றுகிறது

ஒண் கிளியே! ஒன்றோடு ஒன்று மாறுபட்டுப் பூக்களைச் சொரிகின்ற அழகிய சோலைகளாற் சூழப்பட்ட, செந்நிறம் பொருந்திய கடற்கரையிலுள்ள
திருவண் வண்டூர் என்னும் திவ்விய தேசத்திலே ஒரு வகையாகச் சென்று புக்கு, கரிய நிறத்தையும் சிவந்த திரு வாயினையும் சிவந்த திருக் கண்களையும்
சிவந்த திருக் கைகளையும் சிவந்த திருவடிகளையும் போரைச் செய்கின்ற ஒளி பொருந்திய சக்கரத்தையும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கையும்
அடையாளமாக நன்கு பார்த்து, நான் சொல்லும் ஒரு வார்த்தையைச் சொல்லுவாய் என்கிறாள்.
கிளியே! திருவண் வண்டூர் சென்று புக்குத் திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரை என்க. செரு – போர்; இங்கே, மாறுபாடு.
செக்கர் – செந்நிறம். வேலை-கரை. திருவண் வண்டூர், மேலைக் கடற்கரையிலே உள்ளது.

கிளிகள் சிலவற்றைப் பார்த்து, அவன் அடையாளங்களைச் சொல்லி, இவ் வடையாளங்களின் படியே கண்டு
எனக்காக ஒரு வார்த்தை சொல்லுங்கோள் என்கிறாள்.

ஒரு வண்ணம் சென்று புக்கு –
இதற்கு இரண்டு படியாக அருளிச்செய்வர்கள்.
இத் தலையில் தனிமை நினையாதே போய் நிற்கையாலே, போர முதலிகளாய் இருப்பர்;
மேன்மேலெனப் பிரம்புகள் விழும்; அதனைப் பொறுத்துப் போய்ப் புகுங்கோள் என்று அருளிச் செய்வர் பட்டர்.
அன்றிக்கே,
செல்லும் வழி, நெஞ்சினைக் கொள்ளை கொள்ளும்படியான இனிமை நிறைந்திருக்கும்;
அதிலே கால் தாழாதே வருந்தி ஒருபடி சென்று புகுங்கோள் என்பது முன்புள்ள முதலிகள் நிர்வாஹம்.
“பழைய தன்மைகளை அறிந்த சுமந்திரன் ஜனங்கள் நிறைந்திருக்கின்ற அந்தப்புர வழியைக் கடந்து” என்றும்,
“பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு” என்றும் கூறுமாறு போலே.
இனிமையாலே கடந்து போக ஒண்ணாமைக்குப் பிரமாணங்கள் மூன்று காட்டுகிறார்
‘பழைய தன்மைகளை’ என்று தொடங்கி.

“ஸ: ததந்த:புரத்வாரம் ஸம தீத்ய ஜநாகுலம்
ப்ரவி விக்தாம் தத: கக்ஷ்யாம் ஆஜ காம புராணவித்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 19 : 1.
“பொன்னியலும்”மாடம் கவாடம் கடந்து புக்கு — என்பது, பெரிய திருமடல்.
சுலோகத்தில் “அதீத்ய” என்னாமல், “ஸமதீத்ய” என்கையாலும்,பாசுரத்தில் “கடந்து” என்கையாலும்,
இனிமையாலே, கடந்து போகையில் உண்டான அருமை தோற்றுகிறது.
நன்றாக மலர்ந்த மலர்களை யுடைய தடாகங்களையும் தெள்ளிய தண்ணீர் நிறைந்த ஆறுகளையும் பார்த்துக் கொண்டு
காரியத்திலே நோக்குடையவர்களாய் விரைந்து போனார்கள்.” என்றது,
ஸராம்ஸி ச ஸூபுல்லாநி ந்தீஸ்ச விமலோதகா:
நிரீக்ஷமாணா ஜக்மு: தே தூதா: கார்யவஸாத் த்ருதம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 68 : 14.
வழியின் அழகில் கண் வைக்காமல் போனார்கள் என்கை. என்றது,
“கார்யவஸாத். . .ஜக்மு:-காரியத்திற்கு வசப்பட்டவர்களாய்க் கொண்டு போனார்கள்” என்றபடி.
அப்படியே, இனிமை அளவிறந்திருக்கையாலே, இவற்றிலே கால் தாழாமல் போய்ப் புகுகை சாலப் பணியாயிருக்கும்.

எனக்கு –
பரிபவத்துக்காக உங்களுக்கு இறாய்க்கலாம்படியே நான் இருக்கிறது!
“காட்டில் அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட முனிவர்கள் பலரும், ஸ்ரீராமபிரானைப் பார்த்து எங்கள்
சரீரங்களைப் பார்க்க வேண்டும், எழுந்தருள வேண்டும்” என்றது போன்றும்
“ஏஹி பஸ்ய ஸரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்
ஹதாநாம் ராக்ஷஸை: கோரை: பஹூநாம் பஹூதா வநே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 6 : 16.
விபீஷணன் “என்னைப் பெருமாளுக்கு அறிவியுங்கோள்” என்றது போன்றும்,
“ஸர்வ லோக ஸரண்யாய ராகவாய மஹாத்மநே
நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17.
விரஹ நோயால் தின்னப்பட்ட தன்வடிவினைக் காட்டுகிறாள்.
என்னைக் கண்ட உங்களுக்கு இனிமையிலே நெஞ்சு செல்லுதல்,
பரிபவம் கண்டு இறாய்த்தல் செய்யலாம்படியோ இருக்கிறது. –
பிறர் காரியம் செய்வார்க்கு அவை பார்க்க ஒண்ணுமோ?
எனக்கு –
வேஷம் கண்ட போதே ஆர்த்தியும் தெரியுமே

ஒன்று உரை –
ஒரு வார்த்தை சொல்வாய்.
அன்றியே,
என்னாற்றாமையாலே சொல்லுகிறே னித்தனை,
இருகால் மட்டுச் சொல்லுகை மிகையாம்படி யன்றோ அவன் இருப்பது என்றுமாம்.
இனிமையாலே கால் கட்டுப்பட்டு நின்றானத்தனை; துன்புறுகின்றவர்கள் ஒருதலையானால்,
இனிமையிலே நெஞ்சு செல்லுதல், மறுத்துச் சொல்லப் பொறுத்தல் செய்யும் விஷயமன்று கண்டாய்.
எனக்கு ஒன்று உரை –
என் இடையாட்டம் ஒன்று சொல்லுங்கோள்.

ஒண் கிளியே –
இளமையும் பேச்சும் வாயில் பழுப்பும் வடிவில் பசுமையும் அவனோடே போலியாயிருக்கையாலே உன்னைக் கண்டு
கொண்டிருக்க அமைந்திருக்க, கைப் புகுந்த உன்னையும் இழக்கப் புகுகின்றேனித்தனை யன்றோ.

செரு ஒண் பூம் பொழில் சூழ் –
செருவினை விளைவிப்பதாய் அழகிதான பூம் பொழிலாலே சூழப் பட்டிருக்கை.
அங்கு இருவராய் வாழ்கின்றவர்க்கெல்லாம் எப்பொழுதும் மாறுபட்ட எண்ணங்களாய்ச் செல்லா நிற்குமத்தனை. என்றது,
என்னைப் பாராதே பூவை அமைந்திருக்கப் பார்த்தாய், நான் பறிக்க நினைத்த பூவைப் பறித்தாய்,
அணைப்பதற்கு முன்னே உன் உடம்பு பூ நாறிற்று’ என்று இப்படிச் சீறு பாறு என்று செல்லா நிற்குமத்தனை.
அன்றிக்கே,
‘சலங்கொண்டு மலர் சொரியும்’ என்கிறபடியே,-பெரிய திருமொழி, 3. 9 : 1.
இசலி – மாறுபட்டு–என்கிறபடியே, இசலிப் பூக்கும் என்றுமாம்.

செக்கர் வேலைத் திருவண் வண்டூர்-
இள மணல் எக்கர்களிலே விழுந்த மலர்களின் தாதுக்களாலும் சுண்ணங்களாலும் சிவந்த இடங்களை யுடைத்தாயிருக்கை.
அன்றிக்கே,
கடற்கரை யாகையாலே சிவந்த மணலீட்டை யுடைத்தாயிருக்கும் என்னுதல்.
இவை எல்லாவற்றாலும் போகத்திற்குத் தகுதியான தேசம் என்பதனைத் தெரிவித்தபடி.

கரு வண்ணம் –
இத் தலையைத் தனக்கே உரியதாக எழுதிக் கொண்ட வடிவு இருக்கிறபடி.
செய்ய வாய்-
அதுதான் மிகையாம்படி ‘நான் உனக்கு’ என்றாற் போலே சொல்லப் புக்கு விக்கின திருப் பவளம்.
செய்ய கண் –
அது சொல்லளவே அன்று, அக வாயிலும் உண்டு’ என்று தோற்றுகிற திருக் கண்கள்.
அக வாயில் உள்ளன வற்றிற்கெல்லாம் ஆனைத் தாள் அன்றோ திருக் கண்கள்.
செய்ய கை –
அக வாயில் உண்டான சிநேகத்தினைச் செயல் அளவாகச் செய்து காட்டுகின்ற திருக் கைகள்.
செய்ய கால் –
அவை யனைத்திற்கும் தோற்று விழும் துறை; திருவடிகள்.

செரு ஒண் சக்கரம் சங்கு –
இவ் வடிவழகை யெல்லாம் காத்து ஊட்டவற்றனவுமாய், அஸ்தாநே பயசங்கை பண்ணி யுத்தோந்முகமாய்,
கை கழியப் போய் நின்று ரக்ஷிப்பதும், கை விடாதே வாய்க் கரையிலே நின்று ரக்ஷிப்பதுமான திவ்விய ஆயுதங்கள்.
கிட்டினாரை ‘இன்னார் என்று அறியேன்’ என்று மதி மயங்கப் பண்ணுவிக்கும் திவ்விய ஆயுதங்கள் ஆதலின் ‘ஒண்’ என்கிறாள்.

இன்னார் என்றறியேன் அன்னே! ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்றறியேன்.-என்பது, பெரிய திருமொழி, 10. 10 : 9.

அடையாளம்-
திவ்விய அவயவங்களைப் போன்று திவ்விய ஆயுதங்களும் அவனுக்கே யுரிய அடையாளமாயிருக்கை.
“பெருமாளுடையவும் இளைய பெருமாளுடையவுமான அடையாளங்கள் எவையோ அவை என்னால் நன்றாகப் பார்க்கப்பட்டன;
அவற்றைக் கேட்பாயாக” என்றான் திருவடி.
“யாநி ராமஸ்ய சிஸ்நாநி லக்ஷ்மணஸ்ய ச வாநர’-என்பது, ஸ்ரீராமா. சுந். 34 : 3.

திருந்தக் கண்டு –
என்னைப் போன்று மனத்தால் அன்றிக்கே வெளிப்படையாகப் புறக் கண்களால் கண்டு.
இவ் விஷயத்தில் காட்சி யன்றோ பிரயோஜனம், அது உங்களுக்கு முற்படப் பெற்றதே என்பாள் ‘கண்டு’ என்கிறாள்.
ச்ரோதவ்யா –இத்யாதி -காண்கை தானே பிரயோஜனம்
பிராட்டியினுடைய காரியம் செய்தால், அவளுக்கு முன்னே பேறு இவனுக்கு முற்பட்டிருக்குமன்றோ.
“திருவடியை ஆலிங்கனம் செய்து கொண்டார்” என்பது ஸ்ரீராமாயணம்.
“பரிஷ்வங்கோ ஹநூமத:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 1 : 13.

அன்றிக்கே, திருந்தக் கண்டே –
இத் தலையில் பசலை நிறத்தைக் கண்ட நெஞ்சாறல் எல்லாம் தீரும்படி,
கலவியிலும் பிரிவிலும் ஒருபடியாயிருக்கும் வடிவைக் காணப் போகிறாய் அன்றோ என்னுதல்.
எப்பொழுதும் ஒருபடிப்பட்டதான திவ்விய மங்கள விக்கிரஹத்தை யுடையவன்” என்று சொல்லளவேயாய்ப் போகை யன்றிக்கே
அதனை அநுஷ்டான பர்யந்தமாக்கிக் கொண்டிருக்கிற வடிவைக் காண்பாய் என்றபடி

—————————————————————————

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8-

ஆதிக்ய ஸூசக லஷணங்கள்–பூவை
திருமேனி அடிகளையே-மகா மேகம் போலே -சர்வ ஸ்வாமி-நினைவை -திருவடி தன் நாமம்
திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!-வடிவில் சிறாம்பி அனுபவிக்கும் படி
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்-நாநா வித புஷ்பங்கள் -ஸ்ரமஹரமான -ஞாழல் பச்சை நிற பூ
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்-விஸ்வ அதிராஜ்ய ஸூ சகம் -பணித்த திருத் தோள்கள்
கருந் திண் மா முகில் போல்
மறந்தும் புறம்தொழா மாந்தர் -அவர் அபிப்ராயம் ஆசைப் பட்டு உள்ள எனக்கு ஒரு வார்த்தை
கடகர் வடிவில் ஸூஹ்ருதத்வத்தையும் யதா திருஷ்ட அர்த்தவாதித்வமும் உத்தேச்யம்

அழகிய சிறிய பூவையே! செருந்தி ஞாழல் மகிழ் புன்னை இவைகளால் சூழப்பட்டுக் குளிர்ந்திருக்கின்ற திருவண் வண்டூர் என்னும்
திவ்விய தேசத்தில் எழுந்தருளி யிருக்கின்ற பெரிய குளிர்ந்த தாமரை போன்ற திருக் கண்களையும், பெரிய நீண்ட திருமுடியினையும்,
விசாலமான நான்கு திருத் தோள்களையும், திண்ணிய கரிய பெரிய மேகம்போன்ற திருமேனியினையுமுடைய சுவாமிகளை
நன்றாகக் கண்டு மீண்டு வந்து எனக்கு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.
பூவாய்! அடிகளைத் திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய் என்க. செருந்தி – வாட்கோரை. ஞாழல் – புலிநகக் கொன்றை.
மகிழ் – வகுளம். திண்ணிய கரிய முகில் என்க.

பூவைகள் சிலவற்றைக் குறித்து, மீண்டு வந்து எனக்குச் சொல்லலாம்படி நன்றாகக் கண்டு, ஒரு மறுமாற்றம் கேட்டுவந்து
சொல்ல வேண்டும் என்கிறாள். காண ஒண்ணாமைக்கு வேண்டும் காரணங்களைத் திரியவும் சொல்லி வைத்துத்
திருந்தக் காணுங்கோள் என்கிறாள் அன்றோ.

திருந்தக் கண்டு –
நான் சொன்ன அடையாளத்தில் ஒன்றும் குறையாமல் காணுங்கோள்.
உங்களுக்கு என்று காணாதே, பிறர்க்குச் சொல்லலாம்படி காணுங்கோள்.

எனக்கு –
உங்கள் சொற்கேட்டுத் தரிக்க இருக்கிற எனக்கு.

ஒன்று உரையாய் –
எனக்கு அவன் படிகள் எல்லாம் சொல்ல வேண்டா; ஒன்று சொல்ல அமையும்.
போகத்துக்கு அன்று இவள் தேடுகிறது, சத்தையை நோக்குகைக்கன்றோ பார்க்கிறது.

ஒண் –
“எவை பெருமாளுடைய அடையாளங்கள்” என்றால், உள்ளபடி யெல்லாம் சொல்ல வற்றாயிருக்கை.
“யாநி ராமஸ்ய சிஹ்நாநி லக்ஷ்மணஸ்ய ச வாநர”-என்பது, ஸ்ரீராமா. சுந். 34 : 3. என்றது,
“பெருமாளுடைய அடையாளங்கள் எவை?” என்று கேட்டால்,
“ராம: கமல பத்ராக்ஷ:” என்று தொடங்கித் திருவடி சொன்னாற் போன்று, இதுவும் சொல்லவற்றா யிருக்கையைத் தெரிவித்தபடி.
அத் தலையைத் திருந்தக் கண்டு எனக்கு ஒன்று சொல் என்னவுமாம்.
எனக்காக ஒன்று சொல் என்னவுமாம்.
ஓன்று உரை –
மறுமாற்றம் ஓன்று சொல் /அடையாளம் ஓன்று சொல் /அவன் இடம் என் விஷயமாக ஓன்று சொல் -மூன்றும் சொன்னவாறு –
ஆக, இந்த இரண்டாலும் ஆசாரியன் வார்த்தை கேட்டுத் தரித்தல், அவன் அபிமானத்தாலே தரித்தல் ஒழிய,
வேறு ஒன்று இல்லை என்றபடி.

ஒண் சிறு பூவாய் –
உங்கள் ஒருப்பாடு கண்டேனுக்கு நான் அபேக்ஷிப்பது மிகையாயிருந்ததே!
பிறர் காரியம் செய்ய வடிவு கொண்டாற்போலே இரா நின்றதே உங்கள் முயற்சி!
கடல் கடக்கும் போது ஒரு வடிவாய், எதிரிகள் படை வீட்டில் புகும் போது ஒரு வடிவாய், இருக்க வேண்டாதபடி காணும்
இதனுடைய வடிவின் சிறுமை-லாகவம்- இருக்கிறபடி என்பாள் ‘சிறு பூவாய்’ என்கிறாள்.
ஒண்மை – கண்டுகொண்டிருக்க வேண்டும் அழகு.

செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண் வண்டூர்-
அவன் பாடு செல்ல வேண்டாதே, போகஸ்த்தானமே அமைந்திருக்கை–
செருந்தி -கோங்கு மரம்/ஞாழல் பசுமையான ஒரு நாள விசேஷம்
அன்றிக்கே,
வாராமை அவன் குற்றம் அன்று, நிலப் பண்பு கண்டீர் கோள் என்னுதல். என்றது,
காற்கட்டு ஒன்று இரண்டாகில் அன்றோ வரலாவது, அவை நாலு பாடும் சூழ்ந்து நிற்க அவனாலே வரப் போமோ என்றபடி.
ஒரு திக்குக்கு ஒன்றே அமைந்திருக்கிறது காணும்.

பெருந் தண் தாமரைக் கண் –
அநுபவிக்கின்றவர்கள் அளவல்லாதபடி பெருத்துச் சிரமஹரமாய், மலர்த்தி, செவ்வி, குளிர்த்தி, வாசனை
தொடக்கமானவற்றை யுடைத்தாயிருக்கை.

பெரு நீண் முடி –
உபயவிபூதிகட்கும் கவித்த முடியையுடையவன் என்னுதல்.
அன்றிக்கே,
உபய விபூதிகட்கு முடையவனாயிருத்தலுக்கு மேலே அன்றோ, அவ் வூர்க்குக் கடவனாயிருத்தல் என்னுதல்.
அன்றிக்கே,
“எந்த இராமனுக்கு அந்த ஜானகி மனைவியாக இருக்கிறாளோ அந்த இராமன் பெருமை அளவிட இயலாது” என்று கொண்டு
“அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா
நத்வம் ஸமர்தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம் வநே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 37 : 108.
இவள் தன்னைத் தோற்பித்துச் சூடின முடி என்னுதல்.

பெரு நீள் –
பெரிய வளர்த்தி.

நால் தடம் தோள் –
அவளை அணைந்து அத்தாலே கல்பக தரு பணைத்தாற் போலே இருக்கிற திருத் தோள்கள்.
அன்றிக்கே,
நாலாய்ச் சுற்றுடைத்தாயிருக்கிற திருத் தோள்கள் என்னலுமாம்.

கரும் திண் மா முகில் போல் திருமேனி –
கறுத்துத் திண்ணியதாயிருப்பதொரு மஹா மேகம் போலே யாயிற்று வடிவு இருப்பது.
அன்றிக்கே,
சிரமத்தைப் போக்கக் கூடிய நிறத்தை யுடைத்தாய், நிலைத்திருப்பதாய் அளவிடற் கரியதான மேகம் போலே இருக்கும் வடிவு என்னுதல்.
அன்றிக்கே,
நிறமித்தனையும் கண்டீர் மேகத்துக்கு ஒப்பு, அகவாயில் திண்மை இவர்க்குத் தன்னேற்றம்.
கறுத்து அகவாய் திண்ணியதா யிருப்பதொரு மேகம் பெறலாயிற்று இவர்க்கு நேரே ஒப்பாவது என்று அருளிச் செய்வர் பட்டர்.

திருமேனி அடிகளையே –
வேறு ஒன்று சொல்ல வேண்டாதபடி வடிவு கண்ட போதே ‘இவனே இவற்றிற்கெல்லாம் கடவன்’ என்று தோற்றும்படி இருக்கை.
அன்றிக்கே,
அவ் வடிவினைப் படைத்துத் தமக்கு என்றிருக்கிற ஸ்வாமிகளை என்று பட்டர் அருளிச் செய்வர்.

—————————————————————————————-

அடிகள் கை தொழுது, அலர் மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறு கொண்டே.–6-1-9-

கண்ணனை நெடுமாலை-ஆஸ்ரித விஷயத்தில் அத்யந்த வ்யாமோஹம்-விலஷணமான அன்னங்காள்
அடிகள் கை தொழுது, அலர்மேல் அசையும் அன்னங்காள்!-பூக்கள் மேலே போகுமே -நித்யர் பூமியைத் தொடாதது போலே –
தூங்கு மெத்தை போலே காற்று வாக்கில்-வசத்திலே – அசையும்
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்-விடுவுக்கு பிரகாசம் -சங்கு ஒழி -இங்கு விடிவே இல்லை -இரவே நீண்டு
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு-நினைத்த கார்யத்தில் -வேகமாக செய்து -எதிர் தலையிலும் முற்பாடன்-
எதிர் தலையும் அகப்படுத்தும் ஆச்சார்ய சேஷ்டிதங்கள் -பவ்யன் கண்ணன்
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறு கொண்டே.-அதி பிரபல பிராவண்யம் -கொடிய வினை -என் கார்யம்
கூட்டமாக சொல்லாமல் ஏகாந்த ஸ்தலம் பிராட்டி உடன் இருக்கும் பொழுது
கடகர் ஜன்ம உத்கர்ஷம் -விலஷண ஸூ மனச-சம்ச்லேஷத்தால் வந்த செருக்கு -தோற்றும்

தாமரைப் பூவின் மேல் தங்கி யிருக்கின்ற அன்னங்களே! விடியலைக் குறிக்கின்ற சங்குகள் ஒலிக்கின்ற திருவண்வண்டூர் என்னும்
திவ்விய தேசத்தில் எழுந்தருளி யிருக்கின்ற கடிய மாயனைக் கண்ணனை நெடிய திருமாலைக் கண்டு, அவன் திருவடிகளைக் கைகூப்பி
வணங்கி, கொடிய வல்வினையேனாகிய என்னுடைய தன்மையைத் தனியே இருந்து கொண்டு கூறுங்கோள்.
அன்னங்காள்! உறையும் மாலைக் கண்டு அடிகள் கைதொழுது வினையேன் திறத்தை வேறு கொண்டு கூறுமின் என்க.
விடிவை சங்கு ஒலிக்கும் – விடியற்காலத்தைக் குறிப்பதற்காகச் சங்குகள் ஒலிக்கின்ற. அடிகள் – திருவடிகளை.

அன்னங்கள் சிலவற்றைக் குறித்து,-ந கச்சின் ந அபராத்யதி “குற்றம் செய்யாதார் யாவர்” என்பார் முன்பாகத் தனி யிடத்திலே
என் இடையாட்டத்தை அறிவியுங்கோள் என்கிறாள்

அடிகள் கைதொழுது –
திருவடிகளைக் கையாலே தொழுது. என்றது, அவனுக்கு மறுக்க ஒண்ணாத செயலைச் செய்து என்றபடி.
அடிகள் கை தொழுது கூறுமின் –
நீங்களும் பரக்கச் சொன்னீர் கோளாய், அவனும் பராக்கடித்து இருந்தானாகை யன்றிக்கே,
செவிப்படும்படி செய்து சொல்லுங்கோள்.
வரவு தாழ்த்தது என்னா, –வஸ்து வஸ்துவந்தரம்-பொருள் வேறு ஒரு பொருள் ஆகாதே யன்றோ.
வந்தேறியான காதல் குணத்திலே யன்றோ சிறிது நழுவ நிற்கலாவது, ஸ்வரூபத்தோடு சேர்ந்திருக்கிற கிருபைக்கு அழிவில்லை யன்றோ,
அது சத்தை யுள்ளதனையும் விலை செல்லுமன்றோ.

அலர் மேல் அசையும் அன்னங்காள் –
கலவியினாலே பூவிலே அசையா நின்றுள்ள அன்னங்களே!
நான் பூவினைக் காண இறாய்க்கும்படி யாயிருக்க, உங்களுக்குப் பூவிலே கால் பொருந்துகை போருமோ!
நான் தரைக் கிடை கிடக்க, உங்களுக்கு இது போகமாய்த் தலைக் கட்டுமோ?
என்னையும் மென்மலர்ப் பள்ளி பொறுப்பித்தாலன்றோ உங்களுக்கு இது போகமாவது என்பாள் ‘அலர் மேல் அசையும்’ என்கிறாள்.
உங்கள் செயலுக்கு அவனால் வாராதொழிய ஒண்ணாது. உங்களுக்குச் சேர்த்தல்லது ஸ்வரூப சித்தியில்லை.
ஆன பின்பு, நான் இக் கிடை கிடக்கப் பிராப்தி உண்டோ? என்பாள். ‘அன்னங்காள்’ என்கிறாள்

விடிவை சங்கு ஒலிக்கும் திருவண் வண்டூர் –
புறப்பட்டவாறே சங்கின் ஒலி செவிப்படுகிறது அன்றோ. இங்குப் போலே கிடக்கிறது அன்றே அங்கு.
அங்கும் இங்குப் போலேயாகில் வாரானோ. விடிவை-விடிவுகள் தோறும்.
பகலும் இரவுமாய்க் காணும் அவ்வூர் செல்லுகிறது என்பாள் ‘விடிவை சங்கு ஒலிக்கும் திருவண் வண்டூர்’ என்கிறாள்.
“ருதூந் பஹூந் – பல ருதுக்களை” என்கிறபடியே, காலம் கூறிட்டு அவ்வக் காலத்துக்கு அடைத்த
உபகரணங்களைக் கொண்டு காணும் அவன் அநுபவிக்கிறது;
“ராமஸ்து ஸீதயா ஸார்தம் விஜஹார பஹூந் ருதூந்
மநஸ்வீ தத் கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:”-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 26.
இல்லையாகில் “ருதுக்களை” என்ன வேண்டாவன்றோ, “வத்ஸராந் – வருடங்களை” என்ன அமையுமன்றோ,

விடிவை சங்கு ஒலிக்கும் –
விடியாத இரவு அன்றோ இவள் இருக்கிற இடம்.

திருவண் வண்டூர் உறையும் –
விடியாத ஊரிலே என்னை வைத்தான், விடியும் ஊரிலே தான் இருந்தான்.
அவன் எந்த விடத்தில் நின்றாலும் அவ்விடம் விடியுமத்தனை அன்றோ.
“பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன்” -இரண்டாந்திருவந். 81.-அன்றோ. கடிய மாயன் தன்னை –
அடியார்கட்கு விரோதிகளை அழியச் செய்யுமிடத்தில் கண்பாராத ஆச்சரியத்தை யுடையவனை.

கண்ணனை-
அடியார்கட்குத் தான் கையாளாக நின்று தன்னைக் கொடுக்குமவனை.

நெடுமாலை –
இத்தனையும் செய்தாலும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்னும் வியாமோகத்தை யுடையவனை.
அன்றிக்கே,
கடிய மாயன் – தன்னைப் பிரிந்தார் படும் நோவறியாத கொடுமையை யுடையவனை.

கண்ணனை நெடுமாலை –
எளிமை-காதா சித்தம்- ஒரு கால விசேஷத்தில் உள்ளது, முதன்மையே கண்டீர் பெருத்திருப்பது
இனி, எளியனானதுவும் வேண்டிச் செய்தான் அல்லன், இத்தலையை நலிகைக்காகச் செய்த
செயல் கண்டீர் என்று அருளிச் செய்வர் பட்டர்.

கொடிய வல் வினையேன் –
நாட்டார் படி அல்லாத பாபத்தைச் செய்தேன். அல்லாதாருடைய பாபங்கள் பகவானை அடைதலாலே போமன்றோ,
அடைதல் தான் பாதகமாம்படியான பாவத்தைச் செய்தேன்.

திறம் –
ஒரு மஹாபாரதம் அன்றோ.

வேறு கொண்டு கூறுமின் –
செவிப்படாதபடி ஓலக்கத்திலே சொல்லாமல் ஏகாந்தத்திலே சொல்லுங்கோள்.
அதாவது, அவனும் அவளுமாயிருந்த இடத்திலே சொல்லுங்கோள் என்றபடி. என்றது,
‘என் திருமார்வற்கு என்னை’-திருவாய்மொழி, 6. 8 : 10.- என்றும்,
‘திருமாலார்க்கு என் பிழைத்தாள்’ -திருவாய். 1. 4 : 7.-என்றும்,
‘மாதரைத்தம் மார்வகத்தே வைத்தார்க்கு’ என்றும்-திருவாய். 9. 7 : 6.-அன்றோ இவர் தமக்குப் பாசுரம்.
தூது அனுப்பிய மற்ற திருவாய்மொழி களிலும் பிராட்டி முன்னாகத் தானே என்பதால் இங்கும் அதே போலே என்றவாறு

வேறு கொண்டே கூறுமின் –
“இளைய பெருமாள், கை கூப்பினவராய்ப் பிராட்டியின் முன்னிலையில் பெருமாளைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்” என்கிறபடியே
,ஏவம் உக்தஸ்து ராமேண லக்ஷ்மண: ஸம்யதாஞ்ஜலி:
ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் அதம் வசநம் அப்ரவீத்”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.
அதனைப் பயனுடையதாகச் செய்கின்ற அவள் சந்நிதியிலே சொல்லுங்கோள்.
நல் வார்த்தை சொல்லுவாரும் அவனுமான இடத்தே சொல்லுங்கோள்.

——————————————————————————————————–

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-

ஆஸ்ரித வ்யாமோஹ கார்யம் -விரோதி நிரசன சாமர்த்தியம் உடையவன் – தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் –
பிராட்டிக்காக செய்தது -கடி மா மலர் பாவை உடன் சாம்ய ஷட்கம் உண்டே நமக்கும் –
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!-ஆறு கால்கள் -வேகமாக சென்று வியாபாரம் செய்யுமே –
அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை -பறக்குமே -கடகர் -பத்னி -புத்ரர் -திருவடிகள் நம் தலையில் முழுவதும் கொள்ளலாமே –
தூது விடுவதில் இது தானே கடைசி பாசுரம் -தூது விடுவதில் இது தானே கடைசி பாசுரம் –
வெறி -வாசனை -முக்தனுக்கு ப்ரஹ்ம கந்த பிராப்தி போலே -வெறியை உடைய இல்லை வாசனையே வண்டானதே-
ப்ரஹ்ம கந்த ப்ரவசதி -அமரர் சென்னிப் பூ -திருவடித் தாமரைகள் -அப்ராக்ருதமான -சர்வ கந்தம் -அபரிமித கல்யாண குணங்கள்
இவனுக்கும் உண்டே -கந்தமே புது உரு போலே திவ்ய மங்கள விக்ரகம் கொள்வானே –
அப்ருதக் சித்த விசேஷணம் தானே -அதே போலே இங்கும் பரிமளம் சேர்த்து பிடித்த வண்டு

உம்மை வேறு கொண்டு -கொக்கு பூவை போலே இல்லாமல் -இதர சஜாதீய புத்தி பண்ணாமல்-
விஜாதீயன் என்று அறிந்து -70 வெள்ளம் வானர முதலிகள் திருவடி இடம் கனையாழி போலே
வேறு கொண்டு-10 அர்த்தங்கள் ஈட்டில் உண்டே -உத்தேச்யன் பக்கல் பண்ணும் பிரார்த்தனையை அவனை சேர்த்து தரும் உங்கள் இடம்
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண் வண்டூர்-விரஜை நீர் பரம பதம் போலே -ரஜஸ் தமஸ் -வி ரஜஸ் போலே தேர்ச்சி உள்ள நீர் -வடகரையில்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த-எதிரே இல்லாத -கொண்டாட்டம் ராவணன் -நினைவே தானே அழிவுக்கு காரணம்
ராஷச ஜன்மம் -சதுர மா மதிள் சூழ் -அரணாக -கிரி துர்க்கம்-அழித்து -அத்தாலே கிருத கிருத்யனாக உகந்து
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே-உளன் என்றும் பாட பேதம் –
அனுகூல பிரதி கூல விபாகம் இல்லாத -செழிப்பு -அங்கதன் வாலி சுக்ரீவன் -சம்பிரதிபன்னன் -பராக்கிரமம் -சேவகம் –
வீர தீர பராக்கிரமம் -கீர்த்திமை பாடிப் போய்-செல்வமும் சேவகமும் -பல்லாண்டு பாடும் படியும்
உளள்-அடையப் படாமல் பராங்குச நாயகியும் -என்னையும் -சீதை உளள் என்று கிருத க்ருத்யராய் இருப்பார்க்கு – இவளும் ஒருத்தி –
இதுக்கு முன்பு சத்தை யுடன் -உளள் பூர்வ பஷம் இளள் -சத்தை உடன் -அவர் இருப்பதால் இவள் இருப்பாள் -மாயா சிரஸ்-
இன்றியாமை காரணம் -ஸ்வா பாவம் -ரஷிக்க வேண்டியவர்களில் ஒருத்தி உண்டே -இரண்டு நிர்வாகங்கள் –
கடகர் பகவத் அனுபவ பிரதையால்-யஜஸ் – சௌரப்யம் வாசனை வெறி தேஜஸ் அறிவிக்கிறார்

வாசனை மிக்க கூட்டமான வண்டுகளே! உங்களைத் தனியாக அழைத்து யான் இரக்கின்றேன்; தெளிந்த தண்ணீரை யுடைய பம்பை நதியின்
வடகரையிலே யுள்ள திருவண் வண்டூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி யிருக்கின்ற, போரைச் செய்கின்ற எதிர் இல்லாத அரக்கனாகிய
இராவணனுடைய மதிள்கள் தூசி பரக்கும்படியாக அழித்து மனமகிழ்ந்த ஏறு சேவகனார்க்கு ‘யானும் இருக்கின்றேன்’ என்றாள் என்று சொல்லுங்கோள்.
வண்டினங்காள்! யான் உம்மை வேறு கொண்டு இரந்தேன், செற்று உகந்த திருவண் வண்டூர் ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்கள் என்க.
வெறி – வாசனை. சேவகன் – வீரன்.

“சில வண்டுகளைக் குறித்து, அவர் இத்தலையில் சத்தையும் இல்லை என்று இருப்பர்,
அவளும் உளள் என்று சொல்லுங்கோள் என்று சொல்லுகிறாள்” என்று ஆள வந்தார் அருளிச் செய்வர்.
“இத் தலை இல்லையாகில் அத்தலை உண்டாகக் கூடாது; ‘பெண் பிறந்தார் காரியம் எல்லாம் செய்தோம்’ என்று
கிருதக் கிருத்யராயிருக்குமவர்க்கு, ரக்ஷ்ய வர்க்கத்திலே நானும் ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள்” என்று
எம்பெருமானார் அருளிச் செய்வர்.

பின்னை கொல் நிலா மா மகள் கொல் -இத்யாதி அன்றோ இவள் -உண்டாய் இருக்கிறாள் -வெறுமனே சொல்லக் கூடாதே
இல்லை என்று நினைத்து இருப்பான் -என்னையும் -உம்மைத் தொகை –
மணி மாமை குறையிலனே-நிறம் தொடக்கமானவை இல்லாதவோ பாதி
சத்தையும் இல்லை என்று நினைத்து இருப்பான் –உளள் வார்த்தைக்கு சுவாரஸ்யம் பிள்ளான் நிர்வாகம்
ஏறு சேவகனார்க்கு-வார்த்தைகளுக்கும் சுவாரஸ்யம் -வைத்து எம்பெருமானார் நிர்வாகம் –

வேறு கொண்டு –
திக்குகள் தோறும் முதலிகளைப் போக விடா நிற்கச் செய்தே திருவடி கையில் திருவாழி மோதிரம் கொடுத்து விட்டது போலே காணும்.
வேறு கொண்டு –
வேறாகக் கொண்டு. அதாவது, மற்றைய பறவைகளைக் காட்டிலும், வண்டுகள் காரியம் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவை
என்று நிச்சயித்து என்றபடி.
அதனைத் திருஷ்டாந்த மூலம் அருளிச்செய்கிறார் ‘திக்குகள் தோறும்’ என்று தொடங்கி.

ஆண்டு கடந்தப் புறத்து மெப்புறத்து மொரு திங்கள் அவதி யாகத்
தேண்டி இவண் வந்தடைதிர் விடைகோடிர் கடிதென்னச் செப்பும் வேலை
நீண்டவனு மாருதியை நிறை யருளால் முகநோக்கி நீதி வல்லோய்!
காண்டி எனிற் குறிகேட்டி என வேறு கொண்டிருந்து கழற லுற்றான்.

இனைய வாறுரை செயா இனிதின் ஏகுதி எனா
வனையுமா மணி நன்மோதிர மளித் தறிஞ!நின்
வினையெலா முடிகெனா விடை கொடுத் துதவலும்
புனையும் வார் கழலினான் அருளொடும் போயினான்.-என்பன, கம். கிட். நாட. 32. 71.

சுக்கிரீவ மஹாராஜர் அநுமாரிடத்தில் விசேஷமாகச் சமாசாரத்தைச் சொன்னார்”
“விசேஷேண து ஸூக்ரீவோ ஹநூமதி அர்த்தம் உக்தவாந்”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 44 : 1. என்றாற்போலே.

உம்மை-
இரந்தார்களுடைய காரியங்களைச் செய்தன்றி நிற்க மாட்டாத உங்களை.

யான் –
அவனுடைய முதல் இரப்புப் போலே காணும் இவளதும்.
அன்றிக்கே,
யான் இரந்தேன் –
அவன் தான் இரக்க இருக்குமவளன்றோ இரக்கிறாள் என்னுதல்.
இவள் பக்கலிலே தாழ நிற்பான் அவனாயிற்று.
லோக நாதன் சுக்ரீவன் நாதன் இச்சதி போலே-

நன்று; இவற்றை
வேறு கொண்டு இரக்க வேண்டுவான் என்? என்னில்,
அவற்றினும் இவை பல கால்களை யுடையன ஆகையாலே. இன்னம் ஒன்று,
சபைக்கு அஞ்ச வேண்டாதே வளையத்தே இருந்து வார்த்தை சொல்லவும் வல்லனவே யன்றோ –
சதஸ் கண்டு பயம் இல்லை -மாலை புஷ்பம் தேனை உண்டே பேசலாமே -அந்தரங்க பூதை போலே –
வண்டே கரியாக வந்தானே திருப் புல்லாணி –
அன்றிக்கே.
“தேன் உண்ணும் வண்டே போல் பங்கிகள்”-பெரியாழ்வார் திருமொழி,-1. 8 : 2- என்றும்
அவனுக்குத் தலையான திருஷ்டாந்தமாகவும் சொல்லுவது இவற்றை அன்றோ.

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன் –
நம் ஆசாரியர்கள் வியாபக மந்திரங்கள் மூன்றிலும் -(சார தமமான திருமந்திர விவரணமான)-துவயத்தையே ஆதரிக்குமாறு போலே.
இவை தாம் ஆறு பதங்களை யுடையன வன்றோ.
வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில் முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கித்
தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் -திரு மந்திர விவரணம் தானே த்வயம் –
அதனால் இத்தையே ஆதரிப்பார்கள் என்றபடி –

வெறி வண்டு இனங்காள் –
உங்களுக்கு என் காரியம் செய்தல்லது நிற்க ஒண்ணாதா யிருந்தது.
கலவியால் உண்டான வேறுபாடு அடங்கலும் வடிவிலே தோன்றும்படி யாயிருந்தது.
வெறி –
வாசனை. வாசனையை யுடைத்தா யிருக்கை.
தனித்துப் போனாலும் வழிக்குப் பாதேயம் போந்திருந்ததே! என்றது, உடம்பை மோந்து கொண்டு போக
அமைந்து காணும் இருக்கிறது என்றபடி.
இவை தமக்குப் பிரிவு இல்லை என்பாள் ‘இனங்காள்’ என்கிறாள்.
“ஸர்வ கந்த:” என்ற விஷயத்தோடே அணைந்த இவளுக்கு இவற்றின் பரிமளம் கண்டு ஆச்சரியப் படும்படி காணும்
வாசனையும் கூட மறந்தபடி.

தேறு நீர்ப் பம்பை –
இவ்வூரின் எல்லையைக் கழிந்தவாறே தெளிந்த பொருள்களையும் காண்கின்றீர்கோள் அன்றோ.
இவள் இருந்த இடத்தில் அடையக் கலங்கியன்றோ கிடக்கிறது.
உபதப்தோதகா: நத்ய: பல்வலாநி ஸராம்ஸி ச
பரிஸு ஷ்க பலாஸாநி வநாநி உபவநாநி ச”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 5.
“உபதப்தோதகாநத்ய: – மிகுந்த கொதிப்பை யடைந்தன நதிகள்”.
‘தாபார்த்தனுக்கு நீரிலே விழுந்தால் தாபம் ஆறும்’ என்னும்
இவ் வாசனையைக் கொண்டு, ‘இராமனைப் பிரிந்த பிரிவிற்கும் இது பரிஹாரமாமோ’ என்று
தண்ணீரிலே விழுவதாகக் கொண்டு செல்ல, கரையிலுங்கூடக் கிட்ட அரிதாயிருந்தது.
நிலை நீர்கள் தாம் குளிரவற்றோ என்று பார்த்தார்கள், அவையும் அப்படியே இருந்தன.
“பல்வலாநி ஸராம்ஸிச – சிறு குழிகளோடு பெருங்குளங்களும்”.
தப்த குண்டம் போலே சரயுவும் பம்பை ஆறும் கொதித்து அன்றோ உள்ளது -கரையும் கொதிக்க –
வடபாலையும் -திவ்ய தேசமும் -சின்ன குளங்களும் கொதிக்க என்றவாறு -விரஹ தாபம் –
மரங்களோடு வசிஷ்டர் முதலானவர்களோடு வாசியற அழியுமாறு போலே இப்படியே யன்றோ இவள் இருக்கிற இடம்.

வடபாலைத் திருவண் வண்டூர் –
ஊரும் ஆறும் இன்ன இடத்திலே என்னுமிடம் நெஞ்சிலே பட்டுக் கிடக்கிறது காணும் இவளுக்கு.
வடபால் – வடதிசை. கடலுக்குத் தென்பால் இருக்கிற பிராட்டியைப் போலே யாயிற்று இவள் இருக்கிற இருப்பு.

மாறு இல் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்று உகந்த –
அறிவிப்பார் தாழ்வே; பின்பு விரோதி என்று கிடப்பது ஒன்று இல்லை.
வீரப்பாட்டுக்குத் தலையான சக்கரவர்த்தித் திருமகனார் ‘நமக்கு இவன் எதிரியாகப் போரும்’ என்று
மதிக்கும்படியாகப் பிறந்த பையல்
வரத்தின் வலிமை தோள் வலிமை இவைகளாலே எதிர் இல்லாத போரை யுடைய இராவணனையும்,
அவனுக்கு அரணாக இட்ட மதிளையும் துகளாம்படி அழியச் செய்து மகிழ்ச்சி கொண்டவராய் இருக்கிற.

ஏறு சேவகனார்க்கு –
வரவு சிறிது தாழ்த்தது என்னா, எதிரிகள் மதித்து மேலெழுத்திட்ட வீரப்பாட்டுக்குக் குறை சொல்ல ஒண்ணாதே அன்றோ.
“தேரிலிருந்து அதனை ஓட்டுவதிலும் பகைவர்கள் புகழும்படியான வீரத்தையுடையவர்” என்று

“கஜஸ்கந்தே அஸ்வ ப்ருஷ்டேச ரதசர்யாஸு ஸம்மத:
தநுர் வேதேச நிரத: பித்ரு ஸுச்ரூஷணேரத:”- என்பது, ஸ்ரீராம. பால. 18 : 26. வீரர்கள் கொண்டாடின வீரம் அன்றோ.

என்னையும் உளள் என்மின்கள் –
இன்னமும் நோவு படுகிறார் உண்டு என்று சொல்லுங்கோள்.
இதற்கு, “‘இத்தலையைப் பிரிந்தாரில் இருப்பார் இல்லை’ என்று இருக்கையாலே வாராது ஒழிந்தார் அத்தனை;
இத்தலையில் சத்தை உள்ளமையை அறிவியுங்கோள்” என்று ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பணிப்பர்.
இதனை, எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது ஆகிலும், இன்றியமையாமை என்று தமிழரது ஒரு பிரவாதம் உண்டு;
அதாகிறது, ஒரு தலை உண்டானால் ஒரு தலை இன்றிக்கே இராது;
இரண்டு தலையும் உண்டாதல், இரண்டு தலையும் இன்றிக்கே ஒழிதல் இத்தனை யாயிற்று.
அதில், தாம் உளராகையால் இத் தலையும் உண்டு என்கை நிச்சிதம்;
ஆன பின்பு, பிரதி கூலித்தாரைக் கிழங்கு எடுத்துப் பொகட்டு அநுகூலித்தார் தலையிலே முடியை வைத்துக் கிருதக்கிருத்யராய்,
‘இனிச் செய்ய வேண்டிய குறை ஒன்றும் இல்லையே –

வண்டுகள் குறித்து இத்தலையில் சத்தை இன்றி இருப்பார் உளள் ஒருத்தி நானும்
ஒருத்தி என்று சொல்ல -பிள்ளான் நிர்வாஹம்
இத்தலை இல்லை என்றால் அத்தலையும் இல்லையே யாகில் ரஷய வர்க்கத்தில்
நானும் உண்டு எம்பெருமானார் நிர்வாஹம்

——————————————————————————————

மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11-

ஸ்புரது ஸ்வ பாவர் -ஔஜ்வல்யம் உள்ள -பாகவதர் உகப்புக்கு ஆளாவார் -பலம்
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட-வாமன அவதாரம் சொல்லி -பூணல் –
மின்னிடை மடவார் வரப் போவதை பொசிந்து காட்டுகிறார் -தேஜஸ் மிக்கு -அனந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட
வன் கள்வனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன-வன்மை -கொடுப்பார் மகாபலி –வாங்கிக் கொண்ட இந்த்ரன் –
நாட்டார் வாசி அற -இசையும் படி -கள்வன் மேல் ஆதாரம் -பண்ணும் படி –திருவடிகள் விஷயமாக
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
பண்கள் இயலை தனக்குள் ஆக்கிக் கொள்ளும் படி -இசை தான் வெளியில் இருக்கும் படி –
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே-காமினி காமுகர் விரும்புவது போலே
ஸ்ரீ வைஷ்ணவர்களால் ஆதரிக்கப் படுவர் –
இனிமையான பாடலை அப்யசிக்க வல்லார் -மதன ஹேது ஆவார் –
பிரமாண சரீரத்தில் திரு மந்த்ரம் -மத்யம அவஸ்தை நமஸ் -அனன்யார்ஹ சரணத்வம் அறிந்த வைஷ்ணவர்கள் ஔஜ்வல்யம் –

ஒளி பொருந்திய பூணுநூல் சேர்ந்த வாமனனாகி, அகன்ற உலகத்தை யெல்லாம் கொண்ட கொடிய கள்வனாகிய
சர்வேசுவரனுடைய திருவடிகளின் மேலே, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபராலே அருளிச் செய்யப்பட்ட
பண்களோடு கூடிய ஆயிரம் திருப் பாசுரங்களுள், இனிமையைக் கொண்ட பாசுரங்களாகிய இவை பத்தும் திருவண் வண்டூர்க்கு ஆம்;
இவற்றை வல்லார் மின்னல் போன்ற இடையை யுடைய பெண்களுக்கு மன்மதனைப் போன்றவர் ஆவர்.
சடகோபன் சொன்ன இன் கொள் பாடல் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு; (இவை) வல்லார் மின்னிடை மடவார்க்கு மதனர் என்க.
குறளாய் ஞாலம் கொண்ட கள்வன் என்க.
பிராமண சரீரத்தில் மத்யம நமஸ் -அநந்யார்ஹத்வம் அறிந்த தேஜஸ் -மிக்கவர்களை -இடையவர்கள் இது தான் மின்னல் –
அவர்களுக்கு -ஹர்ஷ ஹேதுவாய் -ஆனந்தம் கொடுப்பவர்கள் ஆவோம் -பலம்

இத் திருவாய்மொழி வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகர் இனிய பொருளாயிருக்குமாறு போலே,
சர்வேசுவரனுக்கு விரும்பத் தக்க பொருளாவர் என்கிறார்.

மின் கொள் சேர் புரி நூல் குறளாய்-
மின்னை வென்று, நீல நிறம் பொருந்திய திருமேனிக்குப் பரபாகமான சேர்த்தியை யுடைய பூணுநூலைத் தரித்த ஸ்ரீவாமனனாய்.
இப்போது இது சொல்லுகிறது, மஹாபலி எல்லாச் செல்வத்தையும் கொடுக்கும்படி பணிவுள்ள
வேஷத்தோடே போய்ப் புக்க படியைத் தெரிவிப்பதற்கு.
“பகற்கண்டேன்” என்கிற தோற்றரவுக்குக் கிழக்கு வெளுக்கிறபடி. -அருணோதயம் -வந்த பின்பு தானே சூர்யோதயம் —
தூது விடுகைக்குக் கூடச் சக்தன் அல்லாமை தோற்ற இரப்பாளனாய்,
இத் தலையைப் பிரிந்து வந்த சிறாம்புதல் எல்லாம் வடிவிலே தோற்ற நின்றபடி. -த்ரௌபதி -ஸ்ரீ கிருஷ்ணன் நிலைகள் போலே
கதவு அடைத்து தள்ளின நிலையிலும் தூது விட சக்தன் இல்லாமல் தானே வருந்தி வடிவில் சிறுத்து என்றபடி –

அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன் அடி மேல்-
பூமிப் பரப்பு அடங்கலும் அவனுக்கு ஒன்றும் தொங்காதபடி அபஹரித்த மஹாவஞ்சகன் திருவடிகளிலே.

மின்னிடை மடவார்க்குக் கிழக்கு வெளுக்கிறபடி. –அருணோதயம் -வந்த பின்பு தானே சூர்யோதயம் –
அதாவது மஹாபலியினுடைய செருக்கினைப் போக்கி ஒன்று ஒழியாமல் கைக் கொண்டாற்போலே,
பிரணய ரோஷத்தாலே வந்த இவளுடைய அபிமானத்தைப் போக்கிச் சேர விட்டுக் கொண்டபடி.
எதிரியாய் வந்தவனுடைய செருக்கினைப் போக்கினாற் போலே அன்று, காதலியுடைய மானம்.
அது அழிக்கலாம், இது அழிக்க ஒண்ணாதே.
விஷயமில்லாமலே கோபிக்கின்றவர்கள் இலக்குப் பெற்றால் மிகைப்பர்களத்தனை யன்றோ.
அவன் சந்நிதியிலும் அழியாதது ஒன்றே யன்றோ இது.

பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண் வண்டூர்க்கு –
‘ஈழம் பிரம்பு கொண்டது’ என்னுமாறு போலே பண்ணே மிக்கிருத்தலின் ‘பண் கொள் ஆயிரம்’ என்கிறது.
தீப விசேஷங்கள் முழுவதும் தென்ன மரம் போலே -பண்கள் இயலை தங்களுக்கு உள்ளே கொண்டதே –
‘ஈழம் பிரம்பு கொண்டது–தீப விசேஷம் -நிறைய தென்னை மரம் வளர்ந்து மறைத்தது போலே என்றவாறு –

இன் கொள் பாடல் வல்லார் –
இனிதான பாடல் வல்லார். இதற்குப் பலம் சொல்ல வேண்டா காணும்; இதனையே இனிதாகச் சொல்ல அமையும்.

மின்னிடை மடவார்க்கு மதனர் –
காமினிகளுக்குக் காமுகர் எவ்வளவு, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவ்வளவு ஆவர் இதனைக் கற்க வல்லவர்கள்.
இங்ஙன் அன்றாகில், “பல நீ காட்டிப் படுப்பாயோ”-திருவாய். 6. 9 : 9.-,
“புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ” -திருவாய். 6. 9 : 8.-என்று சொல்லுகிற இவர்
பெண்களுக்கு இனியராவர் என்கிறாரன்றே. ஆதலால், காமினிகளுக்குக் காமுகரைப் போலே
அபிமத விஷயத்திற்கு இனியராவர் என்கிறார்.
திருவடியைச் சொல்லப் புக்குத் தாமரையைச் சொல்லா நின்றதன்றோ.
“தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே” (6. 9 : 9.)
ஸர்வதா சத்ருசம்-எல்லா வகையிலும் ஒத்திருப்பனவற்றிற்கு உபமானத்தையே சொல்லக் கடவது.-
தாமரை யன்ன பொன்னார் அடி –
‘அது போல’ என்றும், ‘அது தான்’ என்றும் சொல்லக் கடவதாயிருக்கும்.

———————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தீஷை -விரதம் கொண்ட பெருமாள்
ஆதிதி ஷட்ஷ்ட சாதக –ஆறாம் பத்து முதலில்
ஆர்த்தி -அதீத ஆர்த்தி –
நாரீ சமாதி அதிகம்ய -நாயிகா பாவனை பெற்று
நிஜா அவஸ்தாம் -மணி வல்லி பேச்சு வந்தேறி அல்ல
அர்ச்சா ஹரிம் -திருவண்வண்டூர் பெருமாள்
கம பஷி ஆபன்ன ரஷன அபோதயத் -ஆபத்து ரஷக தீக்ஷை உணர்த்தத் சொல்லி தூது

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சடஜித்
தேசிகத் த்வார கம்யம் –ஆச்சார்யர் மூலமாக பற்ற
சக்ரித்வாத் -கை கொள் சக்கரம்
ஸ்வாமி பாவாத் விபூதி சஹிதயா –ஞானம் உண்ட சர்வேஸ்வரன் -நண்பன்
பிம்ப த்ருச்யாத்வதாத் -கனிவாய் பெருமான்
அதி ச்யாமாத்யா காமாத் கடலில் மேனி பெருமான்
த்ருதர் துளசிதயா
நிர் ஜரை ஈச பாவாத் -அமரர் பெருமானைக் கண்டு
ரக்த ஆசாபாத் அங்கரி பாத் -செய்ய வாய் இத்யாதி
திருமுடி உடையவன்
ஆச்சர்ய சர்யா விசேஷம் -சேஷ்டிதங்கள்
லங்காத் த்வம்சாத் –
—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 51-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்-ஆற்றாமையாலே தூது விடுகிற ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அடி விடாமல்-நோற்ற நாலிலும் அமோகமாய் இருக்கிற சரண வரணம் ஆகிற ப்ரஹ்மாஸ்திரம் பண்ணி இருக்கச் செய்தேயும்
அவன் ஜகத் ரஷண ஹேதுவாக கார்யம் செய்யாது ஒழிய
அத்தாலே-தம் அபேஷிதம் கிடையாமையாலே
மிகவும் தளர்ந்து-ஆர்த்த ரஷணத்தில் தீஷித்து இருக்கிறவன் ஆகையாலே நம் ஆர்த்தியை அறிவிக்கவே தப்பாமல் நம் கார்யம் செய்யும்
ஸ்ரீ திரு வண் வண்டூரில் ஐஸ்வர்யத்தில் கால் தாழ்ந்து நம்மை மறந்தான் இத்தனை -என்று அனுசந்தித்து
கடகரை இட்டு
நத்யஜேயம் -என்ற ஸ்ரீ தசரதாத் மஜனுக்கு தம் தசையை அறிவித்துச் சொல்லுகிறபடியை
ஸ்ரீ நாயகன் வரும் அளவும் கண்டு ஆறி இருக்க மாட்டாமல் ஆற்றாமையாலே ஸ்ரீ நாயகனைக் குறித்து
தூது விடுகிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
வைகல் பூம் கழி வாயில் அர்த்தத்தை-வைகல் திரு வண் வண்டூர் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————–

வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு என்
செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் -கை கழிந்த
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின் —51-

————————————————-

வியாக்யானம்–

வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு –
தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -என்றத்தை நினைக்கிறது
இரண்டாம் தூதுக்கு விஷயம் ஸ்ரீ விபவம் இறே
வ்யவசாயஞ்ஞர் ரஷணச்தைர்யம் பம்போத்தர தேசச்தம் –என்றார் இறே
ஸ்ரீ திரு வண் வண்டூரிலே பிற்பட்டாரை ரஷிக்கைக்கு சர்வ காலமும் நித்ய வாசம் பண்ணுகிற
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கு
ஜனக குல சுந்தரி ஜீவந்தீம் -என்று ஆள் விட்டதும்
பம்பா பரிசர பர்வதத்திலே வர்த்திக்கிறவரைக் குறித்து ஆயிற்று –
(கிஷ்கிந்தை -மால்யவான் பம்பை வடபாலை தானே)
ஸ்தைர்யம் ஹிமவான் போலே -ஸ்ரீ ராமன் – உத்தர -கிஷ்கந்தை -அங்கு ஸ்ரீ சீதை ஆள் விட்டாள்

என் செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் –
என் தசையைப் பஷ பாதம் உடையவர்களே தாழாமல் சொல்லும் என
(சிஷ்யர் மேல் பக்ஷபாதிக்கும் ஆச்சார்யர்கள் )
அதாவது –
குருகினங்காள் -வினையாட்டியேன் காதன்மையைக் கைகள் கூப்பிச் சொல்லீர் -என்றும்
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே -என்றும்
திறங்களாகி எங்கும் செய்கலூடு ழல் புள்ளினங்காள் -அடியேன் இடரை இறங்கி நீர் தொழுது பணியீர் -என்றும்
மட வன்னங்காள் உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே -என்றும்
உடன் மேயு மட வன்னங்காள் -அடியேனுக்கும் போற்றுமினே -என்றும்
புன்னை மேலுறை பூங்குயில்காள் மாற்றம் கொண்டு அருளி உரையீர் மையல் தீர்வது ஒரு வண்ணமே -என்றும்
அடையாளம் திருந்தக் கண்டு எனக்கு ஓன்று யுரை ஒண் கிளியே -என்றும்
கரும் திண் மா முகில் போல் திருவடிகளை –திருந்தக் கண்டு எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய் -என்றும்
அடிகள் கை தொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள் கொடிய வல் வினையேன் திறம் கூறுமின் வேறு கொண்டே -என்றும்
இப் புடைகளிலே அத்யார்த்தியை அனைவருக்கும் அறிவித்தவை -என்கை –

கை கழிந்த காதலுடன் தூது விடும் –
என்னையும் உளன் என்மின்களே -என்று தாம் வந்து நோக்கா விடில் சத்தை இல்லை –
இப்போது வந்து நோக்குகைக்கு ஈடான சத்தா மாதரமும் கிடக்கிறது என்னுங்கோள் என்கையாலே
கை கழிந்த காதல் உடன் தூது விட்ட படி இது வாயிற்று —

காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே மேதினியீர் நீர் வணங்குமின் –
ஆற்றாமையோடு தம் பேற்றுக்கு கடகரை அர்த்திக்கிற ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை
உங்கள் பேற்றுக்கு பூமியில் உண்டானவர்களே நீங்கள் வணங்கி வழி படுங்கோள்
அவர் -மாநிலத்து எவ் உயர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் –என்னுமா போலே
இவரும் இருந்ததே குடியாக உபதேசிக்கிறார் –

———————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: