பகவத் விஷயம் காலஷேபம் -126- திருவாய்மொழி – -6-1–1….6-1–5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

முதற்பத்தால், பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம்பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களையறுத்தார்;
மூன்றாம்பத்தால், களையறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது பாகவதசேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்;
நான்காம்பத்தால், இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐசுவர்ய கைவல்யங்கள் என்றார்;
ஐந்தாம்பத்தால், அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்;
விரோதிகளை அழிக்கும் இயல்பினனான சர்வேசுவரன் திருவடிகளிலே சரண்புகுகிறார் இந்த ஆறாம்பத்தால்.

மேல் “நோற்றநோன்பு” என்ற திருவாய்மொழி தொடங்கி நான்கு முறை சரணம்புக்க இடத்திலும் தம் அபேக்ஷிதம் பெற்றிலர்.
பலத்தோடு சம்பந்திப்பிக்கிறதாய் விரைவில் பலத்தைக் கொடுக்கக் கூடியதான உபாயத்தைப் பற்றி யிருக்கச் செய்தேயும்
அபேக்ஷிதம் கிட்டாது ஒழிவான் என்? என்னில், ஆழ்வாருடைய ஹிதத்தைப்போன்று உலகத்தினுடைய ஹிதத்துக்கும்
கடவனாகையாலே ஈசுவர புத்தியாலே தலைக்கட்டிற்று இல்லை.

உகந்தருளின நிலங்கள்தோறும் புக்குத் தட்டித் திரிந்தார், அங்குத் தாம் நினைத்தபடி பரிமாறப் பெற்றிலர்;
நினைத்தபடி பரிமாறக்கூடிய அவதாரத்து ஏறப்போனார், அது சென்ற காலமாகையாலே கிட்டப்பெற்றிலர்;
அதுதானே தளர்த்திக்குக் காரணமாயிற்று.
இனி, எப்பொழுதும் அண்மையிலிருப்பதாய், முகப்பழக்கத்தாலும் குறையற்று, சக்தி குறைவுமின்றிக்கே இருக்கிற
இவ்விடமே அமையும் என்று மீண்டார்;
அந்த அநுசந்தானந்தான் கால்நடை தந்து போகாதபடி ஈடுபடுத்திற்று; கால்நடை தருவார் காலிலே விழுந்து தூது விடுகிறார்.
தாம் மேலே அநுசந்தித்த அவதாரம் தூதுவர்க்குச் சென்று அறிவிக்க ஒண்ணாதபடி யாயிருந்தது;
‘இனி அறிவிக்கலாம் படி அண்மையில் நின்றானாகில் திருவண்வண்டூரிலே அறிவிப்போம்’ என்று அங்கே ஆள்விடுகிறார்.
இவர்க்குப் பிறந்தது ஞானத்தாலும்ர்மத்தாலும் உண்டான பக்தி அன்றே! ஒருவன் திருவருள் அடியாக வந்ததன்றோ.
தம் தலையிலேயும் ஒன்று உண்டாய் ‘அது நிரம்பிப் பெறவேணும்’ என்று இருக்கிலன்றோ விளம்பம் பொறுக்கலாவது,
அங்ஙன் சொல்லலாவது ஒன்று இன்றிக்கே இருந்தது. இவர்தாம் பற்றின சாதனந்தான் காலதாமதத்தைச் சகிக்கக்கூடிய தன்றே!
வேறு உபாயங்களைக் காட்டிலும் கால்வாசி ஏற்றம் உண்டே! இங்ஙனே அடிப்பட்ட உபாயத்தைப் பற்றினவர்
ஆறியிருக்கமாட்டார் அன்றோ, ஆகையாலே, ஆற்றாமை கரைபுரண்டு ஆள் இட்டு அறிவிக்கிறார்.

‘சரணம் புக்கோமாகில் அத்தலையாலே பேறு ஆகுமளவும் ஆறியிருப்போம்’ என்று தரித்திருக்கவல்ல தன்மையரன்றே.
பிரஹ்மாஸ்திரம் வாய்மடியச் செய்தேயும் இவர் தூதுவிடுகிற இது,ஞானகாரியமோ சாபலகாரியமோ தெரிகிறது இல்லை;
சுருதிகளும் கூட “அந்த ஆனந்த குணத்தினின்றும் வேதவாக்குகள் மீண்டன” என்று பேச்சுக்கு நிலம்அன்று என்று –
“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸாஸஹ”-என்பது, தைத்திரீய ஆன. 9 : 1.-
மீண்ட விஷயத்தை மறுபாடு உருவப் பாசுரமிட்டுச் சொல்லவல்ல இவர்க்கு ‘அறிவில்லை’ என்ன ஒண்ணாது;
பறவைகளின் காலிலே விழுகிற இவர்க்கு ‘அறிவுண்டு’ என்னவும் ஒண்ணாது. ஆனால், என்னாவது? ஏது? என்னில்,
ஞானகாரியமான சாபலமன்றோ இவரது. இதர விஷயங்களில் விரக்தியன்றோ ஞானத்திற்குப் பிரயோஜனமாகச் சொல்லுகிறது,
சாபலம் ஞானகாரியம் என்று சொல்லுகிறபடி யாங்ஙனம்? எனின்,
அந்த ஞானபலமாயன்றோ இவ்விஷயத்தில் சாபலம் இருப்பது. ஞானத்துக்கும் வைராக்கியத்துக்கும் சேர்விடமாய் இருப்பவர் அன்றோ இவர்.
ஞான வைராக்ய ராசயே-ஞான வைராக்ய –உலக விஷய -ஞான -அனுராக -பகவத் விஷய –என்பதால் சாபல்யமும் ஞான கார்யம் தானே
இனி, தூதுவிடப் பார்த்தால் ஒரு ஐந்திர வியாகரண பண்டிதனைத் தூதுவிடுகிறது மன்றே.
இத்தால் சொல்லுகிறது, பிராட்டியில் உண்டான ஏற்றமோ? என்னில், அதுவும் உண்டு அன்றோ,
அவர் ஒருவரையும் அநுபவிக்கையால் வந்ததன்றோ அவளுக்கு உள்ளது,
இருவரையும்கூட அதுபவிக்கக் கோலுகிற ஏற்றம் உண்டன்றோ இவளுக்கு.
விஷயத்துக்குத் தகுதியாகவன்றோ கலக்கம் இருப்பது.
இனித்தான், அத்தலையில் நின்றும் வந்தார்க்கே வார்த்தை சொல்லிவிடவேண்டும் என்னும் நிர்ப்பந்தம் இல்லையே இவளுக்கு;
இராவண சங்கை இல்லாமையாலே. ஆகையாலே, கண்களால் கண்டாரையடங்கலும் போகவிடுகிறாள்.

பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலேயன்றோ; திருவல்லவாழ், திருவண்வண்டூர் என்பவை எல்லாம் அந்நிலங்கள் அலவோ.
தூதுவிடுவார், நாயகன் பக்கலிலே சிலகுணங்கள் கண்டன்றோ விடுவது. என்றது,

போக்கெல்லாம் பாலை, புணர்தல் நறுங்குறிஞ்சி, ஆக்கம்சேர் ஊடல் அணிமருதம் – நோக்குங்கால்
இல்லிருக்கை முல்லை, இரங்கல் நறுநெய்தல் சொல்விரிந்த நூலின் தொகை.-என்னும் பழம்பாடல் இங்கு நினைவு கூர்க.

இத்தலையில் துயரத்தை யறியுந்துணை அறிவையுமுடையனாய், அறிந்தால் வருகைக்குத் தகுதியான
சக்தியுமுடையனாயிருக்க வேண்டுமன்றோ என்றபடி. அவையெல்லாம் இவள் தூதுவிடுகிற விஷயத்தில் குறைஇல்லை.
அறிவில் வந்தால் – -“ஞான சம்பந்ந:” என்கிறபடியே,-வசிஷ்டர் இடம் கற்று -மேகம் மழை கடலில் பொழிந்தது போலே ராமர்
“யஸஸ்வீ ஜ்ஞாநஸம்பந்ந: சுசி: வஸ்ய: ஸமாதிமாந்”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 12.
அறிவு கொடுத்த வசிஷ்டர் முதலானோர்கட்கும் கொடுக்கவல்லனாம்படி இருப்பான் ஒருவன்.

நீர்மையில் வந்தால் “பகைவர்களிடத்தும் அன்புள்ளவன்” என்றால்
“தேவகல்பம் ருஜும் தாந்தம் ரிபூணாமபிவத்ஸலம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 21 : 6.
“கண்ணீரோடு கூடினவர்” என்னும்படியன்றோ
“ஸம்ஜாத பாஷ்ப: பரவீரஹந்தா ராமோ முஹூர்த்தம் விமநா பபூவ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 23 : 24.
அது இருப்பது. சக்தியில்வந்தால் “பராக்கிரமத்தாலே மகிழச்செய்கின்றவனுக்கு” என்று எதிரிகள்பக்கலிலே கேட்கவேண்டுமத்தனை.
“ஸத்ரோ: ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்ஜநீயஸ்ய விக்ரமை:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 6.

இனித்தான், நாயகனாவான் –அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி –என்று மிக் குணங்களையுடையவன் அன்றோ,
இத்தகைய குணங்களையுடையவன் வாராமைக்குக் காரணம், அவ்விடங்களிலே துன்புறுவார் பலர் உளராகையாலே
அவர்கள் ரக்ஷணத்திலே ஒருப்பட்டு இத்தலையை மறந்தானித்தனை; –இதுவே சிறந்த செல்வம் பெருமாளுக்கு –
காத்தலைச்செய்ய ஒருப்பட்டால் “மறைந்து போன மற்றை எண்ணங்களையுடையதாய்” என்னும்படியன்றோ இருப்பது;
ஆனபின்பு, துயரத்தை அறிவிக்க வருவான் என்று பார்த்தாள்.
இனி, அறிவித்தால் ஆர்த்திக்கு இத்தலையில் மேற்பட்டார் இன்றிக்கே இருக்குமன்றோ.
அறிவிக்குமிடத்தில், தான் கால்நடை தந்து போகமாட்டாள், தன் பந்து வர்க்கம் தனக்கு முன்னே நோவு பட்டாரன்றோ.
இனி, கால்நடை தந்து போகவல்லார் வேண்டுமே;
“யாமுடைத் துணையென்னும் தோழி மாரும் எம்மின்முன் அவனுக்கு மாய்வ ராலோ”-என்பது, ஈண்டு அநுசந்தேயம். (9. 9 : 5.)
தன்பக்கத்தில் வாழ்கிற பறவைகளை, ‘ஒரே இடத்தில் வசிப்பதால் வந்த சம்பந்தமே நம் காரியம் செய்து
தலைக்கட்டுகைக்கு உறுப்பு’ என்று பார்த்து, அவற்றின் கால்களிலே விழுந்து போக விடுகிறாள்.

சீயர், இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கவாறே, உருத்தோறும் அருளிச்செய்யும் வார்த்தை:
‘பாண்டவர்கள் காரியத்துக்காகத் தன்னை ஓக்கி அவர்கள் கழுத்தைக் கட்டிக்கொண்டு கூடத் திரியச்செய்தேயும்
அவர்கள் பட்ட வியசனமெல்லாம் படுகிறார் காணும் இவரும்.
அவர்கள்தாம் ஒரு தர்ம ஆபாசம் -உபாயாந்தரம்-உண்டு என்று இருக்கையாலே வியசனப்பட்டார்கள்;
இவர்க்கு அதுவுமின்றிக்கே இருக்க என்செய்யப்படுகிறார்’ என்று அருளிச்செய்வர்.
ஏ பிரபுவான கிருஷ்ணனே! நீர் ஜீவித்திருக்கும்போதும், அத்தகைய நான் ஒருவனால் மயிர் பிடித்து இழுக்கப்பட்டவளாய்
பெருந்துன்பத்தை அடைந்து பாண்டு புத்திரர்கள் இருக்கும் சபையை அடைந்தேனே!”-என்றவள் நிலையன்றோ இவளது.
“பெரிய ஆபத்து நேர்ந்த காலத்தில் பகவானாகிய ஹரி நினைக்கத் தகுந்தவர் என்று மஹாத்மாவான வசிஷ்டர்
கூறியது என்னால் அறியப்பட்டது” போலி ரக்ஷகரான கணவன்மார்களாலும் தன்னாலும் நோக்கிக்கொள்ள ஒண்ணாதபடி
அவ்வருகுபட்ட ஆபத்து அன்றோ. பகவான்-பூர்ணரன்றோ!
அபூர்ணர் காரியம் செய்யவல்லார் என்று காணும் அவன் நினைவு.
‘ஹரி:’ – அடியார்களுடைய பகைவர்களை அழித்தலையே இயல்பாகவுடையவனைப் பற்றினாள்.
பகவான் -ஆறு குணங்களையும் சொல்லி அத்தாலே -ஞானம் முதலான குணங்களால் சொன்ன பூர்த்தியிலே சக்தியுமுண்டாயிருக்கச்செய்தே,
ஹரி: என்று விசேடிக்கவேண்டிற்று, அல்லாதார்க்கும் இக் குணம் ஓர் ஒருகால் உண்டாகையாலே;
இவனுக்கு அங்ஙன் அன்று; இது இயல்பு என்கைக்காக எடுத்தது.–

பரத்வம் -காரணத்வம் -வியாபகத்வம் -நியந்த்ருத்வம் -முதல் நான்கில்
காருணிகத்வம் -ஐந்தாம் பத்தில் –
பரத்வ சௌலப்யம் -சேர்ந்து -இருந்தால் சரண்யத்வம் கூடுமே -அதுவே ஆறாம் பத்தில்
ராகவாயா மகாத்ம்யாய சர்வ லோக சரண்யா -சௌலப்ய பரத்வம் அங்கும் –
குணங்களைச் சொல்லி நாராயண அர்த்தம் -திருவடி -6-10 ஒன்பது பாட்டுக்களில் -அகலகில்லேன் சரணம் அடைகிறார் –
வேதம் வல்லார்களைக் கொண்டு -விண்ணோர் பெருமான் -பாதம் பணிய –அவரைவிதை கொழு கொம்பு பந்தல் போலே –
பஷிகள்-வேதம் வல்லார்கள் -பின்பு பிராட்டி பற்றி -பெருமானைப் பற்றுகிறார்
இரண்டாம் தூது இது –ராமாவதாரத்துக்கு தூது -ஏறு சேவகனார் -பம்பை வட பால் –
-1-4 -முதல் தூது –
தம் பிழையும் –சிறந்த செல்வமும் –படைத்த பரப்பும் –தமரோட்டை வாசமும்
மறப்பித்த
ஷமா –தீஷா –சாரச்ய — சௌந்தர்யங்களை
உணர்த்தும்
வ்யூஹ –விபவ –பரத்ய்வ த்வய -அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம் –சூர்ணிகை –156-

பரத்வ -காரணத்வ -வ்யாபகத்வ -நியந்த்ருத்வ –
காருணிகத்வ -சரண்யத்வ -சக்தத்வ
சத்ய காமத்வ -ஆபத் சகத்வ -ஆர்த்தி ஹரத்வ
விசிஷ்டன்
மயர்வை அறுக்க -தத்தவ வேதன மறப்பற்று
ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து
மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து
-புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து
விரக்தி பல ராகம் கழிய மிக்கு
பிரேம பல உபாயத்தே புகுந்து
சாதனா பல உபகாரக் கைம்மாறின்றி
க்ருதஜ்ஞாத பல பிரதி க்ருதமானத்தை யுணர்ந்து
ஆத்மா தர்சன பல பிராப்தி மரண அவதியாகப் பெற்று
கால அசத்தி பல கதிக்குத் துணை கூட்டின தம் பேற்றைப்
பிறர் அறியப் பத்துத் தோறும் வெளியிடுகிறார் –சூர்ணிகை –218

இதில் சிறந்த செல்வமும் -தீஷை -மம வ்ரதம் என்றாரே பெருமாள் -அத்தை உணர்த்தும் -விபவ -தூது
நாராதீய பக்தி சாஸ்திரங்கள் இங்கே இருந்து அருளினார் என்பர் –
சர்வ பூதேப்யோ -என் மூலம் வந்த ஆபத்தையும் தவிர்த்துக் கொடுப்பவன் -தானே கண் காட்டாத ஆபத்து –
தீஷை நினைவு படுத்தினால் வருவானே -இதுவே சிறந்த செல்வம் நினைப்பூட்டுகை –

————————————————————————————————

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-

நம்மை தன் அழகைக் காட்டி அனன்யார்ஹன் ஆக்கிய சேஷி -சந்நிஹிதனாகி இருக்க –சம்ருத்தியால் -சிறந்த செல்வத்தால் –
அந்ய பரனாய் இருக்க கூடும் -என்ற நினைப்பால் -எப்பொழுதும் அருகில் உள்ள பேடை உடன் உள்ள சேவலை –
வராவிடில் வேற காரணங்கள் படைத்த பரப்பு போல்வன மேல் சொல்வாள் –
வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!-கண் முகப்பே வந்து மேயும் -கூடி உள்ளீர் -நானோ தனியன் –
கோபம் வெறுப்பு தோற்ற பாட்டுக்கள் தோறும் -என்பர் – பட்டர் / 10 பாசுரம் தான் கோபம் -பூர்வர் நிர்வாகம்
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்-செந்நெல் ஒன்றே வயலை மறைக்கும் படி வளர்ந்து
-நித்ய வாசம் செய்து ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யம் /அவதார பரமபத வியாவ்ருத்தி –
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு-திவ்யாயுதம் கொண்டு அந்த அழகாலே வசீகரித்து
-என் பெருமான் -என் கனிவாய்ப் பெருமான் -ரஷகத்வ போக்யத்வ -இரண்டும் கொண்டு என்னை எழுதிக் கொண்டவன்
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே–பரம சேஷி -ரஷகன் -சர்வாதிகன் -சேஷத்வ அநுரூப வ்ருத்தியைப் பண்ணி –
சிறகுகளை கை கூப்புவது போலே -செய்யச் சொல்கிறார் -கை கூப்புதல் சேஷத்வ சிஹ்னம் கை கொள் சக்கரம் சேஷிக்கு அடையாளம்
சொல்ல வேண்டிய விஷயம் -கொஞ்சம் -அறிவிப்பே அமையும் -வினையாட்டியேன் -காதன்மையே –
சொல்லீர் இவைகள் இடம் சொன்னததனாலேயே வருமவன் அன்றோ
பிரிவுக்கு ஹேதுவான வினை -அபி நிவேசம் ஆதிக்யம் சொல்ல அமையும் –
கடகர் உடைய சமான தேச வர்த்தித்வம் -வந்து மேயும் -ஆழ்வார் கண் பட -தேசாந்தரம் போக மாட்டானே சிஷ்யன் -மா முனிகள்
உத்தேச்ய விஷய அனுவ்ருத்தனம் -காட்டி அருளுகிறார் -பகவான் உத்தேச்யம் பறவைகளுக்கு -ஆழ்வாருக்கு பறவைகள் உத்தேச்யம் –

அழகிய உப்பங்கழிகளிலே நாடோறும் வந்து மேய்கின்ற கூட்டமான குருகுகளே! வயல்களிலே நிறைந்திருக்கின்ற செந்நெற் பயிர்கள்
ஓங்கி வளர்கின்ற திருவண்வண்டூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற, திருக்கரத்திலே கொண்டிருக்கின்ற சக்கரத்தையும்
கோவைக்கனிபோன்ற வாயினையுமுடைய எம்பெருமானைக் கண்டு வினையேனுடைய காதலின் தன்மையைக் கைகளைக்கூப்பி வணங்கிச் சொல்லுங்கோள்.
குருகினங்காள்! திருவண்வண்டூர் உறையும் பெருமானைக் கண்டு கைகூப்பி வினையாட்டியேன் காதன்மை சொல்லீர் என்க. வைகல் – நாள். செய் – வயல்.
இத்திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

சில குருகுகளை நோக்கி, திருவண்வண்டூரிலே சென்று எம்பெருமானுக்கு என் நிலையை அறிவியுங்கோள் என்கிறாள்.

வைகல்-
நாடோறும். உங்கள் அளவு நீர்மையுடையார் சிலரோடே கலக்கப் பெறாமையன்றோ எனக்கு இப் பிரிவு விளைந்தது;
அவ்விழவு எல்லாம் உங்களைக்கொண்டு தீரலாம்படியாயன்றோ எனக்கு இருக்கிறது.
ஒருகால் கலந்து பொகட்டுப் போன அவனைப்போல் அன்றிக்கே நீங்கள் எப்போதும் இங்கே வசிக்கும்படியாகப் பெற்றேனே!
உங்கள் நீர்மையில் ஏற்றம் இருந்தபடி என்!–ஆச்சார்யர் எப்பொழுதுமே சந்நிஹிதன் -கூட இருந்து திருத்துவார் -அவன் இருந்தும் உதாசீனனாய் –
பூங் கழிவாய்-
அழகிய கழியிடத்து. அன்றிக்கே, பூத்த கழியிடத்து என்னவுமாம்.
ரக்ஷகனானவன் கைவிடுவது, பாதகக்கூட்டங்களானவை மிகைக்கின்ற இவ்வளவிலே நீங்கள் முகங்காட்டுவதே!
அழகியசோலை, குளிர்ந்த தென்றல், இனியவாசனை தொடக்கமான இவையுமுளவன்றோ.
பிரிந்தவனே பாதகனாகை அன்றிக்கே, இருந்த தேசமும் பாதகமாகை.
வந்து –
“பம்பையின் கரையிலே அநுமானோடு கூடினார்” என்பதுபோலே,
“பம்பாதீரே ஹநூமதா ஸங்கத: வாநரேண ஹ”- என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 8.
ஆள்இட்டு அறிவிக்கவேண்டிய நிலையிலே நீங்களே வந்து.
நாயகனை போலே உங்களை ஆள் இட்டு அழைக்க வேண்டாதபடி -நீங்களே வந்து –
-திருவடியை இளைய பெருமாளை இட்டு பெருமாள் அழைத்தால் போலே இல்லாமல் நீங்களே வந்து –
வழி பறி உண்டவிடத்தே தாய் முகம் காட்டினாற்போலே காணும் பிராட்டியைப் பிரிந்து நோவுபடுகிற சமயத்திலே திருவடி வந்து முகங்காட்டினபடி.
ஹநூமதா-
தளர்ந்து, –“ஆவாரார்துணை” -திருவாய். 5. 1 : 9.-என்று தடுமாறுகிற சமயத்திலே,
வெற்றித் தழும்பு சுமந்த ஆண்பிள்ளையோடே கூடப்பெற்றது என்கிறது.
வாநரேண-
சந்நியாசி வேடம்கொண்டு வந்து பிரிவை விளைத்து நலிவு பண்ணுமவனைப் போலன்றிக்கே,
செவ்வியான் ஒருவனோடே சேரப் பெறுவதே.
ஹ –
ருஷி கொண்டாடுகிறான். போகத்துக்குச் சேர்த்துக்கொள்ளுகிறோம்,
சத்தைநோக்குவாரைப் பெற்றோமன்றோ! என்று உவகை கொண்டவனாகிறான்.
வந்து மேயும்-
அவனைப்போலே தூதர்க்கும் ஆள் இட்டு அழைக்கவேண்டாதொழியப் பெற்றோமே!
ஆள் இட்டு அழைக்கவேண்டுகிறதன்றோ அவனை.
ஒருகலத்திலே ஒக்க உண்டு ஒருபடுக்கையிலே கிடந்து தூது போவாரைப்போலே காணும் இவற்றின்படி.
அர்ஜுனன் -கிருஷ்ணன் போலே -ஸ்வா தீனமாக வந்து மேயும் –
ஆச்சார்யர்களுக்கு அர்த்தம் சரீரம் பிராணன் எல்லாம் சமர்ப்பிக்க வேண்டுமே
சீர்பெற் றொளிர்பூண் அஞ்சனை தன் சிறுவன்தன்னை முகநோக்கிக்
கூர்பற் றியஎன் குலிசத்தால் கூறு படுபுண் வடுத்தீர்க
ஆர்பெற் றார் நீ பெற்றதுநின் அநுவற் றிடலால் அநுமனெனும்
பேர்பெற் றுலக முள்ளளவும் பெறுதி பெயராப் புகழ்என்றான்.-என்ற செய்யுள் இங்கு நினைவுகூர்தல் தகும்.(கம். உத்தரகாண். அநுமப் பட. 34.)
மேயும்-
“வீட்டில் கூசுதல் இன்றி உணவு உண்ணப்பட்டது” என்னும்படி இருக்கை.
கதிதாநி ரஹஸ்யாநி க்ருஹேபுக்தம் அசங்கிதம் தர்சிதாநி களத்ராணி ஸௌஹார்தம் கிமத: பரம்”-என்பது, பாரதம் உத்யோகபர்.
இது, கிருஷ்ணனைப் பார்த்துக் கர்ணன் கூறியது.

குருகு இனங்காள்-
“மனைவிகள் காண்பிக்கப் பட்டார்கள்.” என்கிறபடியே, இது ஒரு சேர்த்தி இருந்தபடி என்.
வந்து மேயும் இனங்காள்-
நிருபாதிக பாந்தவமுடையார் பக்கலிலே மனைவி மக்களோடே சென்று ‘சோறுஇடும்’ என்று உண்பாரைப் போலே காணும் இவற்றின்படி.
குருகினங்காள்!
கைகள் கூப்பிச் சொல்லீர் என்று கூட்டுக.
பண்டை முதலிகள், ‘பத்தாம் பாசுரத்திலே, பிரணய ரோஷம் தோற்றச் சொல்லுகிறாள்’ என்று நிர்வஹிப்பர்கள்.
‘பாசுரந்தோறும், கிலாம் தோற்றச் சொல்லுகிறாள்’ என்று பட்டர் அருளிச்செய்யும்படி.
வந்து மேயும் குருகினங்காள்! கைகள் கூப்பிச் சொல்லீர்-
என்றும் பிறர்க்கு உதவிசெய்யவே தேடித் திரியுமித்தினையோ, உங்கள் காரியமும் செய்யவேண்டாவோ!
உபவாசத்தினால் மெலிந்திருக்கிற என் காரியத்தை நிறைவுற்றிருக்கிற உங்களுக்குச் செய்யவேண்டாவோ.
பிறருக்கு உபகாரம் -ஆழ்வாருக்கு -இவரை விட்டுப் போகாமல் இருப்பது -தங்களுக்கு உபகாரம் -அவன் இடம் போவது -என்றவாறு –
கடகர் சிஷ்யர் ஆத்மாவை பேணி -அவன் இடம் எப்பொழுது திருவடி சேர்த்து கொள்ள வேண்டும் என்று கேட்க வேண்டுமே –
தளைப் பண்ணினவனை விடுவிக்க ரெங்க ராஜன் இடம் கூரத் ஆழ்வான் விண்ணப்பம் செய்தால் போலே -நண்பர் குழந்தைகளை போய் பார்க்காமல்

செய்கொள் செந்நெல்-
ஒரு முதலே செய்யை விழுங்கும்படியாயிருக்கை. இதனால், இத்தலையை நினைக்கலாம்படியோ
அங்குத்தை இனிமை இருக்கிறபடி என்பதனைத் தெரிவித்தபடி.
ஸ்ரீ வைகுந்தம் ஏற்றம் சொல்லி ஆசை வளர்ப்பதை போலே திவ்ய தேச பெருமை -சொல்லி –
இத்தலையை நினைக்கும் படியோ அங்குள்ள போக்யதை -அவன் மேல் குற்றம் இல்லை என்று குருகுகளுக்கு சொல்வதற்காகவும் –
செழிப்பு உள்ளவர் என் மணவாளன் -என்றவாறு –
“கண்ணன் மதுரையை அடைந்து கோகுலத்திற்கு எப்படி வருவார்,
மதுரையிலுள்ள பெண்களின் இனிமை பொருந்திய பாட்டுக்களாகிய தேனைக் காதுகளாலே பருகுவார்” என்பதன்றோ அவன்படி.
“மதுராம் ப்ராப்ய கோவிந்த: கதம் கோகுலம் ஏஷ்யதி
நகரஸ்திரீ கலாலாபமது ச்ரோத்ரேண பாஸ்யதி”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 18 : 15.
அந்தத் தேசத்தின் இனிமையில் அகப்பட்டிருக்குமவன் நம்மை நினைக்கப் புகாநின்றானோ.
உயர் –
அங்கு வரம்பு இல்லாமையாலே முடிய உயரா நிற்குமத்தனை.
“அஹமந்நம்-நான் உணவாக இருக்கிறேன்” என்பாரளவும் செல்லத் தான் உயரா நிற்குமத்தனை.
திருவண்வண்டூர் உறையும் –
“செய்துபோன மாயங்களும்” -திருவாய். 5. 10 : 1.-என்று கூப்பிட வேண்டாதபடி யாயிருக்கை. என்றது,
அவதாரத்தினின்றும் வேறுபடுத்தியபடி. -இது நிற்கும் மாயம் –
கைகொள் சக்கரத்து-
செந்நெலின்படியாயிருக்கை. கைக்கெல்லாம் தானே ஆபரணமாயிருக்கை.
நெல் வயலை மறைத்து உயர்ந்து இருப்பது போலே திருக்கையை இடமாக கொண்ட திருச் சக்கரம்
என் கனிவாய்-
முறுவலை எனக்கு முற்றூட்டு ஆக்கினவன்.
பெருமான் –
வாய்க்கரையிலே எனக்கு ஜீவனத்தை இட்டு என்னை எழுதிக்கொண்டவன்.-வாய் அழகையே -என்றுமாம் -சேஷத்வம் –உணர்த்தி —
கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமான் –
இராஜபுத்திரர்கள் கையில் இடைச்செறி கடைச்செறிகட்குத் தோற்றிருக்குமாறு போலே,
திருவதரத்தில் பழுப்புக்கும் கையும் திருவாழியுமான சேர்த்திக்குமாயிற்று இவள் எழுதிக்கொடுத்தது.
சேர்த்தியே உத்தேச்யம் ஆழ்வாருக்கு -மிதுனம் -தான் சேர்ந்து மிதுனத்தில் கைங்கர்யம் –

கண்டு –
நான் அநுபவிக்கப் பாரித்த துறைகள் எல்லாம் நீங்கள் காணவன்றோ புகுகிறது.
இவளைப் பற்றினார்க்கு இவளைக்காட்டிலும் பேறு முற்பட்டிருக்குமன்றோ, ஸ்ரீவிபீஷ்ணாழ்வான் முதலியோர் பக்கலிலே கண்டுகொள்வது.
திருவடி பெருமா ள்உடைய லிங்கனம் முதலிலே பெற்றாரே –
கைகள் கூப்பி-
இத்தலையில் இராஜ குலங்கொண்டு மேன்மை யடித்திராதீர்கள்; அவர் பழையர் அல்லர், பெருமதிப்பர் கண்டீர்,
தொழுதுகொடு நில்லுங்கோள். “தலையில் வணங்கவுமாங்கோலோ” -திருவாய். 5. 3 : 7.-என்று இருக்குமவளன்றோ இவள்தான்;
இவள் பரிகரமும் அப்படியே அன்றோ.
சொல்லீர் –
தொழுத பின்னர் முகம் பார்த்துக்கொடு நிற்பர், பின்னர் உங்களுக்கு வேண்டினபடி சொல்லுங்கோள்.
கனிவாய் -கை கொள் சக்கரம் பார்ப்பீர்கள் -பார்த்து திகைக்காமல் சொல்லீர் –
காதல் குணத்திலே கொத்தை சிறிது உண்டானாலும், தானான தன்மை போகாதே.
அஞ்சலி பரவசன் -இது தானே தானான தன்மை -பரத்வம் இல்லையே -கிருபா பரதந்த்ரன்
ஒரு பாசுரமிட்டுச் சொல்ல வேண்டாவோ? என்னில்,
காதன்மை சொல்லீர்-
இத்தலையில் பசலை நிறம் தொடக்கமான ஆற்றாமை யடங்கலும் உங்கள் பாசுரத்தில் அவன் அறியும்படி சொல்லுங்கோள்.
காதன்மை என்றவாறே, தம் மளவிலே இத்தலைக்கும் உள்ளது என்று இருப்பர்;
“ஒத்த விஷயமானால், விளையுமதுவும் ஒத்ததாய் இருப்பது” என்றன்றோ அவர் இருப்பது.
அல்லாத ஏற்றங்களைப் போன்றதே அன்றோ ஆற்றாமையில் வந்தால் இருக்கும்படியும் இத்தலைக்கு.
வினையாட்டியேன் காதன்மை சொல்லீர் –
அவர் ‘இவ்வூர்க்கு அவ்வூர் காதம்’ என்றிருந்தால், அப்படியே, ‘இவ்வூர்க்கு அவ்வூர் காதம்’ என்றிருக்க மாட்டாத
பாபத்தைச்செய்த என்னுடைய காதல்.-ந ஜீவேயம் -சொன்னது அவனுக்கு தெரியுமே -என்னுடைய காதன்மை வாசி அறிவான் –
விசதுர்சமான விஷயம் -அகர்ம வச்யன் அவன் கர்ம வச்யள் நான் -காதன்மை வாசி உண்டே -துடிப்பு எனக்குத் தானே இருக்கும் –
தமக்கு இத்தலையை ஒழியச் செல்லும்படியாயிருந்தாலும், எனக்கு அத்தலையை ஒழியச் செல்லாதபடியான பாபத்தைச் செய்தேன்.
வன்னெஞ்சர் காதல் போன்றதன்றே மென்னெஞ்சர் காதல்;
மெல்லியலார் காதல் அளவல்லாத என் காதல் சொல்லீர்.
அங்கு நின்றும் வந்தார்க்கு வார்த்தை சொல்லிவிடவும் பெற்றிலேன்.
சொல்லுவார் தாழ்வே; வரவு தப்பாது என்று இருக்கிறாள்.

பெருமாள் காதல் போலே அல்ல சீதை காதல் -ஆழ்வார் காதல் மிதுனத்தை பற்றியதால் அதிலும் மேன்மை -மென்மை உண்டே

————————————————————————————————

காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கருநாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2-

ஆபத் சகன் -ஞாலமெல்லாம் உண்ட நம்பெருமானை–சேஷி யைக்குறித்து-
காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கருநாராய்!-நாரை -பேடை விட்டு பிரியாமல் வெளுக்க வில்லை -பிராவண்யா அதிசயம் –
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்-வேத கோஷம் வைதிக க்ரியா கோலாகலம் -சாம்சாரிக தாபம் தட்டாத –
இந்த செல்வம் தானே அவன் மறந்து அங்கே உள்ளான் -இவற்றை அறியாத உங்களை அனுப்புகிறேன்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு-ஆபத் சகத்வ குணம் பிரகாசிப்பித்த உபகாரகன்
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே-பறவைக்கு அடியேன் -அங்கும் ஆச்சார்யருக்கு அடியேன் –
அஞ்சலி பண்ணி சேஷ பூதன் என் இடையாட்டம் விஷயம் சொல்ல வேண்டும் –

காதலுக்குரிய மெல்லிய பேடையோடு உடன் சேர்ந்து மேய்கின்ற அழகிய நாரையே! வேதவேள்விகளின் ஒலி மாறாமல் முழங்கிக் கொண்டிருக்கின்ற
குளிர்ந்த திருவண்வண்டூரில் எழுந்தருளியிருக்கின்ற நாதனும், உலகத்தை எல்லாம் புசித்த நம்பெருமானுமான சர்வேசுவரனைக் கண்டு,
திருவடிகளைக் கைகளால் தொழுது, அடியேனுடைய தன்மையைச் சொல்லியருளாய் என்கிறாள்.
வி-கு :- நாராய்! பெருமானைக் கண்டு தொழுது அடியேன் திறம் பணியீர் என்க. பெடை – பெண்நாரை. கரு – என்றது, புணர்ச்சியால் உண்டாகும் அழகினை.

துயர்உறுகின்றவர்களைப் பாதுகாப்பதில் உறுதி பூண்டிருப்பவனுக்கு என் ஆற்றாமையை அறிவி என்று ஒரு நாரையை இரக்கிறாள்.
‘முன்பு போகவிட்டவர்கள் கொண்டு வருவார்கள்’ என்று கொண்டு ஆறியிருக்கலாம் விஷயமன்றே!
அங்ஙனேயாகுமன்று முன்பு செய்த பிரபத்தியே அமையுமே.

காதல் மென் பெடையோடு உடன் மேயும் கரு நாராய் –
“நான் ஒருமாதத்திற்குமேல் ஜீவித்திருக்கமாட்டேன்” என்றால், “கண நேரத்திற்குமேல் நான் ஜீவித்திருக்கமாட்டேன்” என்பாரும் உண்டு
“ஜீவிதம் தாரயிஷ்யாமி மாஸம் தசரதாத்மஜ ஊர்த்வம் மாஸாத் ந ஜீவிஷ்யே ஸத்யேந அஹம் ப்ரலீமி தே”- என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 68.
இன்னம் ஈண்டொரு திங்கள் இருப்பல் யான் நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அந்த மன்னனாணை இதனை மனக்கொள் நீ.- – கம்பராமாயணம்.
“ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10. ‘
ஆகாதே. கடக்க நின்று சொல்லளவேயாய்ப் போகாமல், அது தன்னை அநுஷ்டான பர்யந்தமாக்கித் தலைக்கட்டுவாரையும் கிடைப்பதே.
மோஷம் போகலாம் சொல்லிக் கொண்டே பகவான் மோஷ பந்த இரண்டுக்கும் -ஹேது அவன்மோ -ஷமே ஹேது ஆச்சார்யர் என்றவாறு
முற்றறிவினர்களோடு கலவாதொழியும்படியான புண்ணியத்தைச்செய்வதே நீங்கள் முன்னம்.
‘பின்பு கூடுதல் தவிராதாகில் இப்போது பிரிந்தால் என்செய்யவேணும்’ என்று இருப்பர்கள் அன்றோ அவர்கள்;
அத்தனை காரியப்பாடு இல்லையன்றோ இவற்றுக்கு.
நிரூபித்துப் பார்த்தால் காதலுக்கு அவ்வருகு ஒன்று இன்றிக்கே யிருத்தலின் ‘காதல்பெடை’ என்கிறாள். என்றது,
காதலை வடிவாகவுடைத்தாயிருக்கை. கலக்கவும் கூடப் பொறாத மிருதுத் தன்மையையுடைத்தாயிருத்தலின் ‘மென்படை’ என்கிறாள்
காதல் உடைய மென் பெடை இல்லை –காதல் மென் பெடை அன்றோ -காதலே ஸ்வரூப நிரூபக தர்மம் காதல் என்றவாறு –
“புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு”-என்ற திருக்குறள் நினைவு கூர்தல் தகும்.
கலக்கவும் பொறாதார்க்குப் பிரியப் பொறாது என்னுமிடம் சொல்லவேண்டாவே;
அத்தாலே கூடத் திரியாநின்றது என்பாள் ‘உடன்மேயும்’ என்கிறாள்.
பேடையின் காதல் அறிந்து கூடத்திரியும் சேவலும் உண்டாகாதே. அன்றிக்கே,
“இது பரிசுத்தமானது, இது ருசியுள்ளது, இது நன்றாக அலர்ந்திருக்கிறது” என்கிறபடியே காணும் இது திரிகிறது.
“இதம் மேத்யம் இதம் ஸ்வாது ப்ரபுல்லம் இதம் இத்யபி மதுலுப்த: மதுகர: பம்பாதீரத்ருமேஷூ அஸௌ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்கிந். 1 : 88.
அது வாய் அலகாலே கோத்து எடுத்துக்கொடுத்தால், பின்பு ஆராய வேண்டாதே மிடற்றுக்குக்கீழே இழித்துமித்தனை இது செய்வது.
பேடையின் நினைவு அறிந்து உண்பிக்கும் சேவலும் உண்டாகாதே!
உடன்மேயும் கருநாராய் –
அதற்கு ஒரு குற்றம் தேடிச் சொல்லுவாரைப்போலே சொல்லுகிறாள் தன் காரியம் செய்கைக்காக.
அடுகு வளத்தைத் -போனகப்பெட்டி -தடுப்பாரைப்போலே. தன் துயர் ஒலி செவிப்பட்டால் அவற்றுக்கு மிடற்றுக்குக் கீழ் இழியாது என்று இருக்கிறாள் காணும்.
கூடத்திரிகையாலே நரை திரை நீங்கி வடிவு புகர் பெற்றிருத்தலின் ‘கருநாராய்’ என்கிறாள்.
பிரியாதார்க்கு உடம்பு வௌாதாகாதே. தான் உடம்பு வெளுத்துக்கிடக்கிறாள் அன்றோ.

வேதம் வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் –
இவற்றின் அறிவுகேடு பலித்தபடி சொல்லுகிறது. அங்கு உண்டான வேத ஒலி, வைதிகக்கிரியை, இவற்றைக் கண்டு
கால்தாழ வேண்டாவேயன்றோ இவற்றுக்கு. தன் நாயகன் அவை கண்டன்றோவரமாட்டாதே நிற்கிறது.
“தாந யஜ்ஞ-தானங்கள் செய்யுமிடத்தே எழுந்தருளியிருப்பாராயிற்று;
“தாந யஜ்ஞ விவாஹேஷூ ஸமாஜேஷூ மஹத்ஸூச ந த்ரக்ஷ்யாம: புநர்ஜாது தார்மிகம் ராமமந்தரா”- என்பது, ஸ்ரீராமா. அயோத்.
தேசத்திலே காலத்திலே பிராப்த விஷயங்களிலே இடுவிக்கைக்காக யாகங்களிலே எழுந்தருளியிருப்பாராயிற்று.
நியாயமாக ஈட்டிய பொருள்கொண்டு செய்விக்கைக்காகவும், சடங்குகளில் தப்பினவை உண்டாகில் அவற்றை எடுத்துக் கொடுக்கைக்காகவும்.
விவாஹேஷூ-
இரண்டு தலையையும் பொருந்தவிட்டு, பொருந்தாதார்க்கு வேண்டுவன செய்து,
ஹோமம் பண்ணுவித்துத் தலைக்கட்டிக் கொடுக்கைக்காக, விவாகம் செய்யுமிடங்களில் எழுந்தருளியிருப்பர்.
ஸமாஜேஷூ மஹத்ஸூச –
தீர்க்கசத்திரங்களிலேயாதல், உத்ஸவங்களிலேயாதல்.
ச –
யாவன் ஒருவன் ஓர் இடத்தே அத்ருஷ்ட காரியங்கள் செய்யும் அங்கே இருப்பர் என்கிறது.
ந த்ரக்ஷ்யாம:
புனர்ஜாது – அவரை அவ்வவ்விடங்களிலே இருக்கக் காண்கின்றிலோம். தார்மிகம்
ராம மந்தரா –
என் தான்? இவர் இவ்விடங்களிலே இருப்பது என்? என்னில்,
தர்மங்களிலே வருகிற ஐயங்களை அறுத்துக்கொடுக்கைக்கும், அவை தப்பாதே அநுஷ்டிப்பிக்கைக்குமாக.
இப்படியேயன்றோ அவன்படிகள்.
திருவண்வண்டூர் நாதன் –
‘ஸ்ரீவைகுண்டநாதன்’ என்னுமதிற் காட்டில் உண்டான ஏற்றம் சொல்லுகிறது.
எளியாரை வலியார் பறிக்க, அங்கே கோயிற் சாந்து பூசியிருக்குமது ஓர் ஏற்றம் அன்று.
வேத ஒலியும் யாகங்களில் சாஸ்திரங்களைப் பேசுகின்ற ஒலியும் கடல் ஒலி போலே இருக்கிற,
சிரமத்தைப் போக்குகிற ஊர்.
ஞாலம் எல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு –
அம்முதன்மையோடேகூட வந்தானாகில் அங்குத்தை உதவாமையும் கிடக்குமோ? என்னில்,
அங்ஙனன்று; தளர்ந்தார் தாவளம் -ரஷகம் -என்கிறது. ஆபத்திற்குத் துணைவன் அன்றோ.
ஆபத் ரக்ஷகனான செயலைக்காட்டி என்னைத் தனக்கே உரியவனாக எழுதிக்கொண்டவன் என்பாள் ‘ஞாலம் எல்லாம் உண்ட நம்பெருமான்’ என்கிறாள்.

பாதம் கைதொழுது –
கண்டு, திருவடிகளிலே தண்டன் இட்டு.
“‘கைகள் கூப்பி’ என்றதே; தொழுதார்க்கு நிற்க ஒண்ணாதே யன்றோ.
உண்ணாநிற்க, மிடற்றைப் பிடித்தாற் போலே இருப்பது ஒன்று அன்றோ தொழுதுவைத்து விழாதே ஒழியுமது” என்று பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள்.
“மதித்தான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் ஸ்ரீபாதத்தே தலைபடத் தண்டன் இட்ட அன்று,
எனக்கு உண்டு பசி கெட்டாற்போலே இருக்கும்” என்று அருளிச்செய்வர் சீயர்.
அன்றிக்கே, கிலாம்தோற்றும்படி அவர் திருவடிகளிலே கைசென்று தாக்கும்படி விழுந்து கிடவுங்கோள் என்னுதல்; என்றது,
தீர்க்கப் பிரணாமம் பண்ணுங்கோள் என்றபடி.
பணியீர் –
அவனைக்கிட்டி நின்று, பிரணயரோஷத்தாலே ‘நீ, நான்’
சொல்லீர் என்னாமல், “பணியீர்” என்றதன் பாவத்தை அருளிச் செய்கிறார் ‘அவனைக்கிட்டி’ என்று தொடங்கி. என்றது, நாயகனைப் பிரணய
ரோஷத்தாலே ‘நீ, நான்’ என்று சொல்லுவது போன்று, உத்தேசியரான ததீயரைச் சொல்லலாகாது என்றபடி.
“மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியுள் உரிய”-என்பது, இலக்கணம்.
என்று சொல்லுமவையெல்லாம் சொல்ல ஒண்ணாதன்றோ இவர்கள் முன்பு இவர்கள்பக்கல் உபசாரத்தில் குறையாமற்சொல்லுகிறபடி
அடியேன் –
உங்களைக் கொண்டு அழைப்பித்துக் கொள்ள இருக்கிறவனுக்கு அன்று;
அத்தலையால் வந்த இழவு நீக்கி அவனோடே சேர்க்க இருக்கிற உங்களுக்கு அடியேன் என்கிறாள்.
“எந்த நாதமுனிகளுடைய திருவடிகளானவை இம்மை மறுமை இரண்டிலும் எப்போதும்
என்னைக் காப்பாற்றும் பொருளாக இருக்கின்றனவோ” என்கிறபடியே.
“நாதாய நாதமுநயே அத்ர பரத்ரசாபி நித்யம் யதீய சரணௌ சரணம் மதீயம்”-என்பது, ஸ்தோத்திர ரத்நம் 2.
அடியேன் திறமே
அவன் திறம்போல் அன்று. என் இடையாட்டத்தைச் சொல்லுங்கோள்; சொல்லில் ஒரு மஹாபாரதத்துக்குப் போருமாகாதே.

———————————————————————————————

திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்
கறங்கு சக்கரக்கை க் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3-

ரஷகத்வ போக்யத்வங்களால்-சர்வாதிகன் -கூட்டமாக உள்ள பஷிகள்
திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!-விலை நிலங்களில் நடுவே சஞ்சரிக்கும் பஷி சங்கங்கள்
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்-சிறந்த செல்வம் -தானே இப்பதிகம் -இது தான் இவனை மறைப்பித்தது -நித்ய வாசம் செய்து அருளும்
கறங்கு சக்கரக்கை க் கனி வாய்ப் பெருமானைக் கண்டு-பகவத் அனுபவ ஆனந்தம் -ஆஸ்ரித விரோதி நிரசனத்தாலும் -வந்த பெருமை -சுழன்று கொண்டே வரும் –
நிரதிசய போக்யமான அதர சோபை -ரஷகத்வ போக்யத்வம் கொண்ட சர்வாதிகத்வம்
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே-அவன் மேன்மைக்கு ஈடாக தாழ்ந்து -சாஷ்டாங்க பிரணாமம்-என் கார்யம் நீங்கள்
இட்ட வழக்கு -பஷி பாரதந்த்ர்யம் -விஸ்லேஷ துக்கம் -கடகர் உடைய சமவாயம் கூட்டம் சங்கம் உத்தேச்யம் என்றவாறு

திறம் திறமாக எல்லா இடங்களிலும் வயல்களின் மத்தியிலே சஞ்சரிக்கின்ற கூட்டமான பறவைகளே! சிறந்த செல்வம் மிகுந்திருக்கின்ற
திருவண்வண்டூரிலே எழுந்தருளியிருக்கின்ற, சுழலுகின்ற சக்கரத்தைத் தரித்த திருக்கரத்தையும் கோவைக்கனி போன்ற
திருவாயினையுமுடைய பெருமானைக் கண்டு தாழ்ந்து தொழுது அடியேனுடைய துன்பத்தைச் சொல்லுங்கோள்.
செய்கள் ஊடு எங்கும் திறங்களாகி உழல் புள் என்க. புள்ளினங்காள்: திருவண்வண்டூர் உறையும் பெருமானைக் கண்டு இறங்கித் தொழுது
அடியேன் இடரைப் பணியீர் என்க. ஊடு – உள்ளுமாம். கறங்கு – சுழலுகின்ற. இறங்கி – தாழ்ந்து

திறம் திறமாகச் சஞ்சரிக்கின்ற புள்ளினங்களைக் கண்டு, என் வியசனத்தை அறிவியுங்கோள் என்கிறாள்.

திறங்களாகி –
கூட்டம் கூட்டமாக. இவை, திரள் திரளாகத் திரிதல் நம் காரியம் செய்து தலைக்கட்ட என்றிருக்கிறாள்.
“வாயுந் திரையுகளும்” என்ற திருவாய்மொழியில் வாசனையாலே, தன் துன்பம் கண்டு பொறுக்கமாட்டாமல்
படுகின்றனவாகக்கொண்டு நினைத்திருக்கிறாள்.
அங்கு, தாம்தாம் விரும்பிய பொருள் பெறாமையாலே நோவுபடுகின்றன என்று இருந்தாள்;
இங்கு, தன் இழவு கண்டு பொறுக்கமாட்டாமையாலே நோவுபடுகின்றன என்று இருக்கிறாள். இங்ஙன் கூடுமோ? என்னில்,
“இவை பறவைகள், நம் காரியம் செய்து தலைக்கட்டமாட்டா” என்னும் அறிவு இன்றிக்கே ஒழிந்த பின்பு,
இதுவும் கூடத் தட்டு இல்லை.
திறங்களாகி எங்கும் –
பிராட்டியைப் பிரிந்து பெருமாள் நோவுபடுகிற சமயத்திலே முதலிகள் அடங்கலும் நாலு திக்குகளிலும் புகுந்து
அங்கும் இங்கும் திரிந்தாற் போலே காணும் இவையும் திரிகிறபடி,
தேடினால் காண்கைக்குச் சம்பாவனை இல்லாத இடமெங்கும் புக்குத் தேடாநின்றனவாதலின் ‘எங்கும்’ என்கிறாள்.
சுயம் பிரபையுடைய பிலம் அகப்படப் புக்குத் தேடினார்கள் அன்றோ முதலிகள்.
உழல் புள் இனங்காள் –
காணுவதற்குச் சம்பாவனை இல்லாத இடம் எங்கும் புக்குத் தேடுவது, காணப்பெறாதொழிவது,
உண்ணாவிரதத்தை மேற்கொள்வதாய்க்கொண்டு பட்ட பாடு எல்லாம் படுகின்றன வாயிற்று.
இராமாவதாரத்துக்குப் பின்பு பிரிந்தாரைச் சேரவிடுகை திரியக்குகளுக்குப் பணி என்று காணும் வாசனை.

சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும்-
வாராமை அவன் குற்றம் அன்று கண்டீர், அவ்வூரின் நிறைவு வேறேயும் சிலரை நினைக்க ஒட்டுமோ.
“முக்தன் ஜனங்களுடன் கூடியுள்ள இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை”
“ந உபஜனம் ஸ்மரந் இதம் சரீரம்”-என்பது, சாந்தோக்யம். 8. 12 : 3. என்னுமாறுபோலே,
இங்குத்தை ஐசுவரியமும் இவனை மறக்கப் பண்ணிற்று அன்றோ. மிக்க ஐசுவரியம் கரைபுரளும்படியான ஊர்.
அன்றிக்கே, சிறந்த செல்வம் – தகுதியான ஐசுவரியம் என்னுதல்.
கலந்து கூட இருக்கிறபோது ‘நீயே எனக்கு எல்லாச் செல்வங்களும்’ என்று சொல்லிவைத்து,
இப்போது தனக்கு என்ன ஒரு சம்பத்து உண்டாயிருக்கிறபடி எங்ஙனே என்று இருக்கிறாள்.
‘திருவண்வண்டூர்’ என்கையாலே, பரமபதத்தில் வேறுபாடு.
‘உறையும்’ என்கையாலே, அவதாரத்தில் வேறுபாடு.

கறங்கு சக்கரம் கை –
பகைவர்களை அழிக்கும் விரைவாலே சுழன்று வாராநின்றுள்ள திருவாழியைக் கையிலேயுடையனான சர்வேசுவரனை. -பூர்வர் நிர்வாகப்படி –
அன்றிக்கே,–பட்டர் நிர்வாகப்படி –
இத்தலையைத் தோற்பித்துக் கொண்டோம் என்னும் மேன்மை தோற்ற, ஆயுதத்தைச் சுழற்றிப் புன்முறுவல்செய்து இருக்கிறபடியாகவுமாம்.
பொங்கு இள வாடை அரையில் சாத்திப் பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து
குழலில் இனிதூதி வந்தாய் -பெருமாள் திருமொழி -6-9-
கனி வாய்ப் பெருமானைக் கண்டு –
அகவாயில் உவகைதோன்றப் புன்முறுவல்செய்து அதனாலே என்னை எழுதிக்கொண்டவனைக் கண்டு.
அவர்க்குப் புறம்பே ஐசுவரியம் உண்டானாலும் எங்களுக்குத் தம்மை ஒழிந்த ஐசுவரியம் இல்லைகாணும்.
திருவுக்கும் திருவாகிய செல்வன் -பெரிய திருமொழி, 7. 7 : 1.-அன்றோ.

இறங்கி நீர் தொழுது பணியீர் –
தொழுங்கோள் என்கிறாள்; தொழுத அளவிலே நில்லாதே, முதலியார் கண்டீர்கோள்;
பிரம்புகள் படாமே கடுக விழுந்துகொடு நில்லுங்கோள் என்கிறாள்.
விழாநின்றாலும் அகவாயைச் சோதியாநிற்பர், அபிமானத்தைப் பொகட்டுக்கொண்டு விழுங்கோள் என்கிறாள்.
“அந்த அநுமான் கைகூப்பினவராய்ச் சாஷ்டாங்க பிரணாமமுடையவராய் மானச பிரணாமமுடையவராய்
“நிப்ருத: ப்ரணத: ப்ரஹவ: ஸ: அபிகம்ய அபிவாத்யச” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 3.
இச்சுலோகத்திலுள்ள நிப்ருத: என்பது, ஒடுக்கமாய், அஞ்சலியையும்,
ப்ரணத: என்பது, சாஷ்டாங்க பிரணாமத்தையும்,
ப்ரஹவ: என்பது, மானச பிரணாமத்தையும் சொல்லுகின்றன.–அருகில்சென்று வணங்கினார்” என்னுமாறுபோலே.
பணியீர் –
இத்தலையில் நின்றும் சென்றாரை அவன் சொல்லும்படியே யாகிலும் சொல்லவேண்டுமே.
தன்னை ஒழிந்தார் அடங்கலும் தன்னைச் சொல்லும்படியை, இத்தலையில் நின்றும் சென்றாரைச் சொல்லா நிற்கும் அவன்.
சொரூபத்தால் சொல்லுமவை இவையானால், காதலால் வருமவை சொல்லவேண்டா அன்றோ.
அடியேன் இடர் பணியீர் –
அவன் அறியாதனவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமே!
அறிந்தானாகில், ஆள் விடப் பார்த்திருப்பானோ. இரண்டுதலைக்கும் கலவி ஒத்திருக்க,
இத்தலைக்கு வந்த இடரை அறிவியுங்கோள் என்பாள் ‘அடியேன் இடர் பணியீர்’ என்கிறாள்.

——————————————————————————-

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–6-1-4-

அபி ரூபனாய் -ஆஸ்ரித பவ்யனாய் -அண்ணன்களை தூது விடுகிறார்கள் -சஜாதீயம் -அன்னமாய் நூல் பயின்றான்
இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?-விஸ்லேஷ பிரசங்கமே இல்லாத -போகத்தில் அவஹாகித்து
இணைந்து -பரஸ்பர பவ்யமான –
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்-விச்சேதம் இல்லாத வேத கோஷம் -குளிர்ந்த ஸ்ரமஹரமான
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு-மநோ ஹராமான -திருமேனி -அழகை உபகரித்து
-நான் இட்ட வழக்கு எனக்கு பவ்யன் -கண்ணன் பவ்யதைக்கு எல்லை காண முடியாத படி வ்யாமோஹம்
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.-அத்விதீயை -இவள் தானே -சரீரம் நைந்து சிதிலை ஆனாள் என்று சொல்லுமின்
அணைந்து ஆடும் -கடகர் உடைய பரஸ்பர பகவத் அனுபவ சௌக்யம் -அந்யோந்ய பவ்யதையும் -உத்தேச்யம்
அடியேன் என்று ஒவ் ஒருவரும் -பரஸ்பர நீச பாவம் -மடப்பம் –

பிரிவு இல்லாத போகத்திலே மூழ்கிச் சேர்ந்து அநுபவிக்கின்ற இளமை பொருந்திய அன்னங்களே! பிரிதல் இல்லாத வேதத்தின் ஒலியானது
ஒலித்துக்கொண்டிருக்கின்ற குளிர்ந்த திருவண்வண்டூரில் எழுந்தருளியிருக்கின்ற கடல்போன்ற நிறத்தையுடைய உபகாரகனும்
கண்ணபிரானுமான நெடிய திருமாலைக் கண்டு, ஒருபெண்ணானவள் சரீரம் நிலைகுலைந்து உருகுகின்றாள் என்று உணர்த்துங்கோள்.
வி-கு :- அன்னங்காள்! திருவண்வண்டூர் நெடுமாலைக் கண்டு ஒருத்தி நைந்து உருகும் என்று உணர்த்துமின் என்க.
மூழ்கி ஆடும் அன்னம் என்க. கடலின் – கடலைப்போன்ற.

சில அன்னங்களைக் குறித்துச் சரீரம் கட்டுக் குலைந்து உருகாநின்றாள் என்று சொல்லுங்கோள் என்கிறாள்.

இடர் இல் போகம் மூழ்கி –
பிரிவு சிறிதும் இல்லாத கலவி இன்பத்திலே மூழ்கி.
நான் செய்தபடி செய்ய, இப்படியே இருப்பாரையும் காணப்பெற்றோம் அன்றோ உலகத்திலே. -சுக்ரீவன் துக்கம் போக்கி பெருமாள் –
போகத்தின் தொடக்கத்திலே பிரிவு பிறந்ததே யன்றோ தனக்கு வீட்டில் ஆய்ச்சிக்கும் ஐயர்க்கும் பரதந்திரராக வேணும்,
நாடுகேட்கவேணும் என்கிற அந்யபரதை எல்லாம் தீரும்படி தனிஇடம் தேடி அனுபவிக்கப்போக,
அங்கே இராவணன் வந்து தோற்றினான் அன்றோ தனக்கு; அது இல்லையன்றோ இவற்றுக்கு.
சீதை யாகவே பராங்குச நாயகி பேசுகிறாள் –
இடர்இல் போகம் மூழ்கி –
புணர்ச்சிக்குப் பாரித்துக்கொண்டிருந்து பிரிவோடே தலைக்கட்டும் என்னைப் போலே ஆகாது ஒழியப் பெறுவதே!
இன்னம் தறை காண்கின்றன இல்லை என்பாள் ‘மூழ்கி’ என்கிறாள்.
இணைந்து ஆடும் மடம் அன்னங்காள் –
ஒருதலை களிக்க ஒருதலை துடிக்க வேண்டாதபடி இருக்கை.
அன்றிக்கே, ஒன்றன் நினைவுக்கு ஒன்று கால்எடுக்க அமைந்திருக்கை என்னுதல்.
ஒன்றற்குச் சொல்லுகிற தன்மை இரண்டற்கும் உண்டாயிருத்தலின் ‘மட அன்னங்காள்’ என்கிறாள்.
மடப்பம் உள்ளது பேடைக்கேயாயிருக்க, இரண்டற்கும் ஒக்கச் சொல்லுகிறது, கலவியால் வந்த துவட்சி இரண்டற்கும் ஒத்திருத்தல்பற்றி.

விடல் இல் வேத ஒலி முழங்கும் –
அத்யயனம் மறுத்தன்றோ இவ்வூர் கிடக்கிறது. ஜனககுலம் அன்றோ ஓதுவார் இன்றிக்கே கிடக்கிறது.
“கர்மத்தால் சித்திபெற்றவர்கள் ஜனக குலத்திலுள்ளவர்கள்” என்கிறதன்றோ.

“கர்மணைவஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜனகாதய: லோக ஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந் கர்தும் அர்ஹஸி.-என்பது, ஸ்ரீ கீதை. 3 : 20.

மற்றோர் அடையாளம் சொல்ல வேண்டுமோ, புறப்பட்டவாறே வேத ஒலி வழிகாட்டுகிறதன்றோ என்பாள் ‘முழங்கும்’ என்கிறாள். என்றது,
வேதமார்க்க அநுசாரிகள் அன்றோ நீங்கள் என்றபடி. -மதுகைடபர் -தேடித் திரியும் ஹம்சரூபி சஜாதீயர் அன்றோ நீங்கள்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலை –
கடல்போலே சிரமத்தைப் போக்கக் கூடிய தான வடிவையுடையனாய், அவ் வடிவைத் தாழ நின்று இத்தலைக்கு முற்றூட்டாக உண்பித்து,
பின்னையும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்னும் வியாமோகத்தையுடையவன்.
அன்றிக்கே, குளிர்ந்த வடிவை பவ்யரைப் போலே நின்று உண்பித்து, இப்போது எட்டாதபடி இருக்கிறவன் என்னுதல்.
அன்று தானும் தனக்கு -ஆழ்வாருக்கு -வேண்டுவதாகச் செய்தானல்லன், இத்தலையை அழிக்கைக்காகச் செய்தானித்தனை;
அன்று வேண்டியிருந்தானாகில் இன்றும் வேண்டி இரானோ.
உடலம் நைந்து –
‘நெஞ்சிலே சிறிது நோவு பிறந்த அளவேயாகில், சரீரத்தை ஒருவாட்டம் வருவதற்கு முன்னே சென்று கைக்கொள்ளுகிறோம்’ என்று இருக்கவேண்டா.
தனித்தனியே அறிவுபெற்று அழியவல்ல உடம்பே அன்றோ.
அவ் வுடம்போடே அணைந்து பிரிந்த இவ் வுடம்புகொண்டு பிழைக்க ஒண்ணாது என்னுமிடம் தாமே அறிவாரே அன்று.
ஒருத்தி –
‘இன்ன காட்டிலே மான்பேடை கிடந்து உழற்றாநின்றது’ என்றால், எய்தவன் கை உணருமன்றோ.
ஒருத்தி உருகும் –
எதிர்த்தலைக்கு இது இல்லை என்னுமிடம் அறிவியுங்கோள். -அணைக்கும் பொழுது இருவர் உருகுபவள் ஒருத்தியே –
உணர்த்துமினே –
தாம் இத்தலையை மறந்தமையை நினைவூட்டுங்கோள். உணர்த்தி அற்றாரை உணர்த்த வேணுமே.
அறியாதாரை அறிவித்தல் அன்னத்துக்கே பணியன்றோ;
பண்டும் பிறங்கு இருள் நிறம் கெட அன்னமாயன்றோ அருமறை பயந்தது.-பெரிய திருமொழி, 5. 7 : 3.- அன்றிக்கே,
ஒருத்தி படும்பாடே என்று சொல்லுங்கோள் என்பாள் ‘ஒருத்தி உருகும் என்று உணர்த்துமின்’ என்கிறாள் என்னுதல்

——————————————————————————————————-

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள்மேல் சங்குசேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5-

போக்யத்வ சேஷித்வ பூரணன் -சர்வேஸ்வரன் -புணர்த்த பூந்தண் துழாய்முடி -சர்வாதிகனைக் குறித்து பின்னும் சில ஹம்சங்கள்
உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!-மூன்றுமே காமத்தின் பால் -உணர்த்தல் -ஊடல் -புணர்த்தல் மூன்றும்
-கிலேசம் இல்லாத புணர்த்தல் மட்டுமே இந்த மட அன்னங்களுக்கு
திணர்த்த வண்டல்கள்மேல் சங்குசேரும் திருவண்வண்டூர்-
கதிப்பை உடைத்தான திரண்டு -வண்டல் மணல்கள் மேல் -சங்கு சேர்ந்த –
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு-தொடுக்கப் பட்ட அழகிய செவ்வித் திருத் துழாய்
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே -பக்த அஞ்சலி ஹஸ்தராய்-நீங்கள் அவன் போலே செல்வத்தில் ஈடுபட்டு
-மறக்காமல் என்பதால் -அடியேனுக்கும் -உம்மை –சேர்க்கப் பட்ட -கை திருத் துழாய் -சங்குகள் -அடியேன் மட்டும் பிரிந்து
உங்களுக்கு சேஷ பூதை-உங்களுக்கும் அடியேனுக்கும் மோஷம் பெற்று கொடுக்க வேண்டுமே என்றுமாம் -ஸ்தோத்ர ரூபமான
கடகர் உடைய பரஸ்பர விஸ்லேஷ பீருத்வம் உத்தேச்யம் -பீத ராக பய குரோதம் இல்லாதவன் தானே -கீதை –
இந்த விஷயத்தில் பயமும் உத்தேச்யம் –

உணர்த்தலின் அருமையையும் ஊடலின் அருமையையும் உணர்ந்து பிரியாமல் சேர்ந்தே மேய்கின்ற இளமைபொருந்திய அன்னங்காள்!
திணுங்கின வண்டல்களிலே மேலே சங்குகள் சேர்ந்திருக்கின்ற திருவண்வண்டூரிலே எழுந்தருளியிருக்கின்ற, தொடுக்கப்பட்ட பூக்கயுடைய
குளிர்ந்த திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடைய நம்பெருமானைக் கண்டு குவித்த கைகளையுடையீராகி அடியேனுக்கும் துதியுங்கோள்.
அன்னங்காள்! திருவண்வண்டூர் நம்பெருமானைக் கண்டு புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமின் என்க. திணர்த்த – கனமாகப் படிந்திருக்கின்ற.

திரியவும் சில அன்னங்களைக் குறித்து, அந்தத் தேசம் புக்காரை மறப்பிக்கும்,
நீங்கள் புக்கால் என்னையும் நினையுங்கோள் என்கிறாள்.

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன்மேயும் மட அன்னங்காள் –
ஊடலையும் உணர்த்தலையும் உணர்ந்து உடனே திரிகிற அன்னங்காள்!
பிரிந்தால் பின்பு வரும் துக்கங்கள் எல்லாவற்றையும் நினைத்துக் கூடத் திரிகின்றன வாதலின், ‘உடன்மேயும்’ என்கிறாள்.
என்றது, பிரியவல்லார் ஆர், பின்பு நோவுபடவல்லார் ஆர், பின்பு நெய்யிலே கையிட வல்லார் ஆர்? என்று கூடத் திரியாநிற்கும் என்றபடி.
‘குற்றவாளராகிலன்றோ பின்பு பொறுப்பித்துக்கொள்ள வேண்டுவது’ என்று காணும் இவற்றினுடைய சித்தாந்தம்.
ஊடல் உணர்தல் புணர்தல் என்கிற மூன்றிலும், இவற்றுக்குப் புணர்தலேயாய்ச் செல்லுகிறபடி.
ஒரு கலத்திலே ஒக்க உண்டு திரிவாரைப் போலே. இனித்தான் போகப் பிரகாரந்தான் மூன்று வகைப்பட்டாயிற்று இருப்பது.
அவை : ஊடல், உணர்தல், புணர்தல் என்பனவாம்.
“ஊடல் உணர்தல் புணர்தல் என்கிறமூன்றிலும், இவற்றுக்குப் புணர்தலேயாய்ச் செல்லுகிறபடி.
ஒரு கலத்திலே ஒக்க உண்டு திரிவாரைப்போலே.
இனித்தான் போகப் பிரகாரந்தான் மூன்று வகைப்பட்டாயிற்று இருப்பது. அவை : ஊடல், உணர்தல், புணர்தல் என்பனவாம்.
“ஊடல் உணர்தல் புணர்தல் இவை மூன்றும், காமத்தாற்பெற்ற பயன்” என்று மூன்றனையும்
பிரயோஜனமாகச் சொன்னார்கள் தமிழர்கள். இவற்றுள், ஊடலாவது, எதிர்த்தலையோடு கூடினால் காரணமில்லாமல் வருவது ஒன்று.
அதுதான், ‘என்னை ஒழியக் குளித்தாய், என்னை ஒழியப் பூவைப் பார்த்தாய், உன் உடம்பு பூ நாறிற்று’ என்றாற்போலே கூறுமவை.-பிரணய ரோஷம் –
உணர்த்தலாவது, ‘உனக்கு என்று குளித்தேன்’, ‘உனக்கு ஆம்’ என்று பார்த்தேன், ‘உன் வரவுக்கு ஒப்பித்தேன்’ என்றாற் போலே கூறுமவை.
இவை இரண்டற்கும் பின்னே நிகழ்வது கலவி.
இவை எல்லாமுண்டன்றோ இவளை உடையவனுக்கும்.
அன்றிக்கே, உடன்மேயும் என்பதற்கு,
“இது பரிசுத்தமானது, இது ருசியுள்ளது, இது நெருப்பினால் நன்றாகப் பக்குவப் படுத்தப் பட்டது” என்னாநின்றன என்னுதல்.

“இதம் மேத்யம் இதம் ஸ்வாது நிஷ்டப்தம் இதம் அக்நிநா ஏவம் ஆஸ்தே ஸதர்மாத்மா ஸீதயா ஹைராகவ:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 96 : 2.
என்றது, ஒன்றை ஒன்று அகன்று இரண்டுங் கூடப் பட்டினிகிடக்கை யன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.
விழுக்காட்டில் உணரப்பெறாமை கெட்டோம் என்கிறாள். என்றது, ‘கலவியை அதிகரிக்கச் செய்வதுகாண்இந்தப் பிரிவு என்றால்,
‘அவ்வளவும் ஆறியிருக்கவல்லார்க்கு அன்றோ பின்பு போகத்தின் நிறைவுவேண்டுவது’ என்னப் பெற்றிலேன் என்கிறாள் என்றபடி.
அறிவில்லாத இவை அறிவின் பலத்தை அடைந்தன; அதனையுடைய நான் பெற்றிலேன் என்பாள் ‘அன்னங்காள்!’ என்கிறாள்.
போகத்தால் துவட்சியடங்கலும் வடிவிலே தோற்ற இருக்கின்றனவாதலின் ‘மட அன்னங்காள்’ என்கிறாள்.
வருவனவற்றை அறிந்து நீக்கிக்கொண்டிருப்பவர்கள், விழுக்காடு அறியாதே அகப்பட்டாருடைய காரியத்தைச்செய்து
தலைக்கட்டவேண்டாவோ என்பாள். ‘உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன்மேயும் அன்னங்காள்’ என்கிறாள்.
இந் நிர்த்தேசத்தாலும் இத்திருவாய்மொழியடங்கலும் ஊடல் அடங்கியிருத்தல் தோற்றுகிறது.

திணர்த்த வண்டல்கள்மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர் –
அழுக்குக்கு இறாய்க்கக்கடவ சங்குகளானவை நீர் உறுத்தினவாறே கொழுத்த வண்டல்களிலே சேராநிற்கும் திருவண்வண்டூர்.
திணர்த்த வண்டல்-
செருமின வண்டல்கள். அறிவில்லாத பொருள்களுங்கூடக் கால்வாங்கமாட்டாத தேசங்கண்டீர் என்பாள் ‘சங்குசேரும்’ என்கிறாள்.
இதனால், பிரமாணங்கட்குக் கட்டுப்பட்டவர் அல்லாதாரையும் மீள ஒட்டாத தேசங் கண்டீர் என்பதனைத் தெரிவித்தபடி.
வேறு போக்கிடம் இன்றிக்கேயிருத்தலின் ‘சேரும்’ என்கிறாள். என்றது, “மீண்டு வருதல் இல்லாதது” என்னும்படியே,
மீட்சியின்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.
மிருதுத்தன்மையாலும் குளிர்ச்சியாலும் வேறு ஒன்றனை நினைக்க ஒட்டாதிருக்கை.
வெள்ளைகளையும் கூடக் காற்கட்டுகிறதன்றோ மண்பாடு. –சாத்விகர்களை போக ஒட்டாத திவ்ய தேசம் –
ஆக, இரண்டாம் அடியால் வாராது ஒழிந்த இடம் அவன் குற்றம் அன்று கண்டீர் என்பதனைத் தெரிவித்தபடி.

புணர்த்த பூந்தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு –
தொடுக்கப்பட்டு அழகியதாய்ச் சிரமத்தைப் போக்கக்கூடியதான திருத்துழாயினைத் திருமுடியிலேயுடையவனாய்,
அதனாலே என்னைத் தனக்கே உரிமையாக்கினவனைக் கண்டு. என்றது,
நீங்கள் சென்று அறிவிக்குமித்தனையே வேண்டுவது; இங்குத்தைக்கு வருகைக்கு ஒப்பித்தபடியே இருக்கிறவன் என்பதனைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே, இத்தலையைத் தோற்பித்த வேண்டப்பாடு தோற்றும்படி வளையம் வைத்து முதன்மை கொண்டாடி
இருக்கின்றவனைக் கண்டு என்று பணிப்பர் பட்டர். என்றது,
தம் ஒப்பனையையும் முதன்மையையும் நம்மோடே காட்டியிருக்கிறவனைக் கண்டு என்றபடி.
புணர்த்த கையினராய் –
அங்கே சென்றால் தொழப் பார்த்திராமல், கைஒத்துச் செல்லுங்கோள்கண்டீர். என்றது, வழியே பிடித்துத் தொழுது கொடு போங்கோள்;
“துன்பமொரு முடிவில்லை; திசைநோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான்-என்பது, கம்பராமாயணம்.

இல்லையாகில், “பரவசப்பட்டவர்களாய் நமஸ்காரம் முதலான காரியங்களைச் செய்தார்கள்” என்கிற கண்ணழிவிலே
செலவு எழுதுவர் கண்டீர் என்றபடி.
அடியேனுக்கும் போற்றுமினே –
நீங்களும் அவனைப்போலே செய்யாதீர்கள், அங்கே புக்கால் என்னையும் நினைக்கவேண்டும்.
அதாவது, புக்காரை எல்லாம் தத்தமது பிரயோஜனத்திலே மூளப் பண்ணவல்ல தேசமாகையாலே,
இத் தலையை நினைக்க விரகு இல்லையன்றோ; “முக்தன் இச்சரீரத்தை நினைப்பதில்லை” என்னும்படியன்றோ இருப்பது.
“நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்”-என்பது, சாந்தோக்யம். 3. 12 : 3.
அடியேனுக்கும் போற்றுமின் – அடியேன் இடையாட்டத்தையும் அத்தலைக்கு அறிவிக்கவேண்டும்.

———————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: