பகவத் விஷயம் காலஷேபம்- 125- திருவாய்மொழி – -5-10–6….5-10-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே!–5-10-6-

ஸ்திதி ஆசன சயநாதி -பிரகாரங்கள் -நினைக்க அறிய
நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன-நின்றது எந்தை –பாடகம் இத்யாதி -ஆஸ்ரித ஹிருதயங்களில் –
ஆஸ்தே–பிரமாண சித்தம் –தொட்டிலில் நின்று அமர்ந்து சாய்ந்தது என்றுமாம் -நினைக்க முடியாமல் பல பிரகாரங்கள்
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்-ஒருபடி ஆகாரம் இல்லாமல் -சகஸ்ர -அனுபவிக்க உருத்தெரியாத மாயங்கள் –
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் -சிதிலமான நெஞ்சை -தரித்து நினைக்க முயல்கின்றேன்
நினைகிற்பன்? பாவியேற்கு-சைதில்யம் அடைய வைக்கும் உன் சேஷ்டிதங்கள் -ஸ்திர சிந்தை இல்லாத பாவியேன்
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே!-பிரளய ஆபத்தில் -உண்ட -ஸ்திதோச்மி சொல்லும் படி மாஸூச சொல்லி அருள வேண்டும்

பிரளய காலத்தில் உலகத்தைப் புசித்த ஒண்சுடரே! நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைத்தற்கு அரியனவாய் இருக்கின்றன;
ஒருபடித்தாகாத உருவத்தையுடையையாய் அநுபவித்தற்கு உருத்தெரியாதவனாயிருக்கின்ற உன்னுடைய செயல்களை நின்று
நினைக்கின்றேனாகிய நான் உன்னை எப்படி நினைப்பேன்? பாவத்தைச் செய்த எனக்குச் சிறந்தது ஓர் உபாயத்தைச் சொல்லுவாய்.
நிற்றல், இருத்தல், கிடத்தல் – திவ்விய தேசங்களில். மாயங்கள்-ஆச்சரியமான செயல்கள்.
நினைகின்றேன்: வினையாலணையும் பெயர். நன்கு ஒன்று உரையாய் என்க.

உன்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் காண விடாய்ப்பட்ட நான் நினைக்கவும் முடியாதவனாக இருக்கிறேன்;
பிரளய ஆபத்தில் உலகத்தைக் காத்தாற்போன்று, நினைக்க வல்லேனாம்படி பண்ணி என்னைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார்.

நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன நின் மாயங்கள் –
இவர் இவ்விஷயத்தில் படுகிறபாடு எல்லாம் நமக்கு இதர விஷயங்களிலே அநுபவ சித்தமன்றோ.
இவ்விஷயத்தில் இன்றிக்கே ஒழிகிறதித்தனை.

பர வ்யூஹாதி பஞ்ச பிரகாரங்கள்
பர வாசூதேவன் -வ்யூஹ வாசுதேவன் -கேசவாதி மூன்றும் இந்த நால்வருக்கும்
அந்தர்யாமி -லஷ்மி விசிஷ்டன் -யோகிகள்
விபவம் –முக்கிய -ஆவேச -ஸ்வரூபம் சக்தி –
அர்ச்சாதி -வடக்கு -இத்யாதி –நின்ற இத்யாதி -வித வித ஹஸ்தம்
புஜங்க சயனம் வீர சயனம் -தர்ப்ப சயனம் இத்யாதி

போரப் பாட வல்லாராய் இருப்பார் ஒருத்தர்,வடக்கு நின்றும் பெருமாளைத் திருவடி தொழ வேண்டும் என்று வர,
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் தீர்த்தத்தின் அன்று இருந்து திருமாலையைப் பாடிச் சமைந்துப் பெருமாளை
மத்தகஜங்களை ஏத்துமாறு போலே ஏத்தி வசமாக்கிக் கணிசம் கொண்டு,
“நாயன்தே! தேவர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருத்தன், எழுநூற்றுக் காதம் ஆறு உண்டு
தேவரைத் திருவடி தொழ வேண்டும் என்று வருகிறது; இவனை அழைத்துக்கொண்டு சம்பாவனை செய்தருள வேண்டும்” என்ன
பெருமாளும் ‘அப்படியே செய்கிறோம்’ என்று திருவுள்ளமாய் அருளப் பாடிட்டு,
திருப்புன்னைக்கீழ் நின்றும் அவர் நின்றவிடத்தளவும் செல்ல நாலு கோல் தறை திருக்கைத்தலத்திலே எழுந்தருளி
விண்ணப்பஞ் செய்வார்களை எல்லாம் அருளப் பாடிட்டு,
‘வாரீர்கோள், இவன் வந்த தூரத்துக்கெல்லாம் போருமோ நாம் இவனுக்குச் செய்த தரம்’ என்று திருவுள்ளமானார்.
இப்படியேயன்றோ நம்மிழவுகளும் திருவுள்ளத்திலே பட்டவையெல்லாம் ஆறும்படிக்கு ஈடாக முகம் தந்தருள வல்லபடியும்.
இதுவே யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசு –
ஒருநாள் ஸ்ரீ வைஷ்ணவ வண்ணாத்தான் திருப்பரிவட்டங்களை அழகிதாக வாட்டி எம்பெருமானார்க்குக் கொண்டு வந்து காட்ட,
போரத் திருவுள்ளமுகந்தாராய் இவனையும் கூடக்கொண்டு பெருமாள்பாடே புக்கு,
‘நாயன்தே! இவன், திருவரைக்குத் தகுதியாகும்படி இவற்றைத் தொட்டபடி பார்த்தருள வேண்டும்’ என்று காட்ட,
கண்டு போர உகந்தருளி எம்பெருமானாரை அருளப் பாடிட்டு,
‘இவனுக்காக, கம்சனுடைய ஈரங்கொல்லி நம் திறத்திற்செய்த குற்றம் பொறுத்தோம்’ என்று திருவுள்ளமானார்.
நின்ற வாறும் –
இலங்கையின் வாசலிலே கையும் வில்லுமாய் நின்றபடியாதல், வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய் நின்றபடியாதல்;
“கம்பீரமான வில்லைப் பிடித்துக்கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராமபிரானையும் இளையபெருமாளையும் தன்
கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்”
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ் சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்காந். 19 : 25.
வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய்க்கொண்டு வென்றி புனைந்து நின்ற பெருமாளையும்,
அவரை இடுவித்துக் கொல்லுவித்த தம்பியாரையும், இருவரையும் தொடர்ந்து பின்பற்றி முடிசூட இருக்கிற
மஹாராஜரையும் கண்ட இவள் ‘நமக்குப் பகைவர்கள்’ என்றிராமல், நல்ல மனமுடையவளானாள் அவர் பக்கல் சாங்கத்தாலே.
இனித்தான், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே கல்லைக் கட்டிக்கொண்டு விழுந்து முடிந்து போவாரைப் போலே
கொடிய தன்மையனானவாறே முடிந்துபோனான் வாலி; இவர் செய்த குற்றமுண்டோ? என்று இருந்தாள்.
அவர் தம் உயிர் நிலையிலே நலிந்தாரை விட்டு வைப்பரோ.

இருந்தவாறும்-
“பர்ணசாலையில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமனை” என்று இருந்த இருப்பும்,-கபில நதி கோதாவரி நதி சங்கமம் பஞ்சவடி
“உடஜே ராமம் ஆஸீநம் ஜடாமண்டல தாரிணம்”– ஸ்ரீராமா. அயோத். 99 : 25.
கிடந்தவாறும்-
“ஸ்ரீ ராமன் கடற்கரையில் கடலை நோக்கிக் கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு படுத்தார்” என்கிறபடியே,
“அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:”– ஸ்ரீராமா. யுத். 21 : 1.

தருண மங்கையை மீட்பதோர் நெறி தரு கென்னும் பொருள் நயந்து நன்னூல் நெறி யடுக்கிய புல்லில்
கருணை யங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி வருண மந்திரம் எண்ணினன் விதிமுறை வணங்கி. -கம்பராமாயணம், வருணனை வழிவேண்டு படலம், 5.

கடற்கரையிலே கிடந்த கிடையும்.
“ப்ரதிஸிஸ்யே-எதிர்நோக்கிப் படுத்தார்” என்கிறதன்றோ,
ஒரு கடலோடே ஒருகடல் பொறாமைகொண்டு கிடந்தாற்போலே இருக்கையாலே;
“கருணையங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி” என்றான் அன்றோ. என்றது,
பின்பு விடக்கடவதாகத் தொடுத்த அம்பு முன்பு விடமாட்டாமை இல்லை அன்றோ;
அப்படிப்பட்ட அம்பு இருக்க, தம் தோள்வலி கிடக்க, தரம் போராதார் முகங்காட்டாதே இருக்கப் பொறுத்துக் கிடந்த கிடையைச் சொல்லுகிறது.
‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ என்று திரளச்சொல்ல அமையுமாயிருக்க,
‘நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்’ என்கிறார் அன்றோ, தனித்தனியே உளுக்கினபடி.

நின்றானாகில் ‘நிலையார நின்றான்’-நிலையார நின்றான் தன் நீள்கழலே அடைநெஞ்சே”– பெரியதிருமொழி. 6. 9 : 8.– என்பார்கள்;
‘நின்றவன், இருத்தல் சாய்தல் செய்யிற் செய்வது என்?’ என்று வயிறு பிடிக்க வேண்டும்படியன்றோ அது இருப்பது;
இருந்தானாகில், “பிரான் இருந்தமை காட்டினீர்” என்னும்படி இருக்கும்
குழையும் வாண்முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்ண பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தாலொக்கும் கண்ண நீரொடு அன்று தொட்டும் மையாந்திவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத்திசை யுற்றுநோக்கியே.– திருவாய். 6. 5 : 5.

கிடந்தானாகில், 1“கிடந்ததோர் கிடக்கை” என்பர்கள்.
“எங்கள்மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே.”– திருமாலை. 23.

அங்ஙன் அன்றிக்கே,
கோவர்த்தன மலையைத் தூக்கிப் பிடித்துநின்ற நிலையாதல்,
திருக்குரவைக்கு முற்சாமமாகப் பெண்களோடே கழகம் இருந்த இருப்பாதல்,
ஓரொருத்தர் மடியிலே சாய்ந்தபடியாதல்.
அன்றிக்கே “நிற்பதும் ஒர் வெற்பகத் திருப்பும் விண் கிடப்பதும், நற்பெருந் திரைக்கடலுள்” என்கிறபடியே,
திருமலையிலே நின்றபடியும், பரமபதத்திலே இருந்தபடியும், திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளினபடியுமாகவுமாம்.
அன்றிக்கே, “நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என்நெஞ்சுளே” என்கிறபடியே,
நிற்பதும் ஒர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெருந் திரைக் கடலுள் நானிலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பது மிருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே.– திருச்சந்த விருத். 65.
இவர் திருவுள்ளத்திலே திகழுமணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றபடியும்
“திகழு மணிக்குன்ற மொன்றே ஒத்து நின்றான் புகழும் புகழ் மற்றெனக்கும் ஓர் பொருளே.”–, திருவாய். 8. 7 : 5.
“செவ்வாய் முறுவலொடு எனதுள்ளத்திருந்த அவ்வாய் அன்றி யான்அறியேன்” என்னும்படி இருந்தபடியும்

“செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத் திருந்த அவ்வா யன்றி யானறியேன் மற்றருளே.”–, திருவாய். 8. 7 : 7.

“நின்றும் இருந்தும் கிடந்தும்” என்கிறபடியே, தம் திருவுள்ளத்திலே கிடந்தபடியும் என்னுதல்.

நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும் ஒன்றுமோ ஆற்றான்என் நெஞ்சகலான்.”-என்பது, பெரிய திருவந். 35.
அன்றிக்கே, திருவூரகத்திலே நின்றபடியும், திருப்பாடகத்திலே இருந்தபடியும், திருவெஃகாவிலே கிடந்தபடியும் என்னுதல்.
வைகுந்தத்தில் நின்று -போகய பாகத்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம்
நம் பெருமாள் நிற்க -பெரிய பெருமாள் கிடக்க -நம் பெருமாள் -நாச்சியார் திருக்கோலம் இருந்து
திருவல்லிக்கேணி -நின்றும் இருந்தும் கிடந்தும் -பரந்தும் -நடந்தும் -செவிகலாமே
திரு நீர் மலையிலும் நின்றான் இருந்தான் நடந்தான் கிடந்தான் –

ஆடவர்கள் எவ்வாறு அகன்றொழிவார் வெஃகாவும் பாடகமும் ஊரகமும் பஞ்சரமா – நீடியமால்
நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ மன்றார் மதிற்கச்சி மாண்பு.-என்னும் பழம்பாடல் இங்கு நினைவு கூர்தல் தகும்.

‘நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்’ என்று ‘ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பாடாநிற்க,
‘இவையெல்லாம் தொட்டிலிலே’ என்று அருளிச்செய்தார் எம்பெருமானார்.
தொட்டிற் பழுவைப் பிடித்துக்கொண்டு நிற்கும்படியும்,
தரித்து நிற்க மாட்டாமை விழுந்திருக்கும்படியும்,
அது தான் பொறுக்க மாட்டாமை சாய்ந்து கிடக்கும்படியும் சொல்லுகிறது.
அன்றிக்கே, போரார் வேற்கண் மடவாள் போந்தனையும் பொய்யுறங்கி-சிறிய திருமடல். கண்ணி. 31.
– அவள் போனவாறே எழுந்திருந்து நின்றவாறும்,
அடி ஓசை பட்டவாறே வந்து இருந்தபடியும்,
நிழல் ஆடினவாறே முன்கிடந்த தானத்தே ஓராதவன்போல் கிடந்தவாறும் என்றுமாம்.

நினைப்பரியன-
அவை ஒருகால் செய்து போகச்செய்தேயும் இவர்க்கு இன்றுங்கூட நினைக்கவும் அரிதாயிராநின்றன.
“இமையோர் தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும்
ஈனச்சொல்” -திருவிருத்தம். 98-ஆம் பாசுரம்.-என்றார் அன்றோ முன்பே.
ஒன்று அலா உருவாய் –
இவர்தமக்கு ஒன்றே போருமாகாதே உள்ளதனையும் நோவுபடுகைக்கு.ஏக –ஓன்று -ந ஏக -ஓன்று அலா -சகஸ்ர நாம திரு நாமங்கள் –
ஒன்று அல்லாத பிரகாரங்களையுடையவாய்
அருவாய நின் மாயங்கள்-
கண்களால் பார்க்க முடியாமலிருக்கிற உன்னுடைய ஆச்சரியமான செயல்களை.

நின்று நின்று நினைகின்றேன்
நினைத்துத் தலைக்கட்ட மாட்டார், நினையாதிருக்க மாட்டார்.
வருந்தி உன்னை நினைக்கப்புகுவன், நினைக்க மாட்டுகின்றிலேன்.
அன்றிக்கே, நினைக்கை தான் தேட்டமாய் நினைக்கலாவதொரு வழி ஏதோ என்று ஆராயா நின்றேன்.
உன்னை எங்ஙனம் நினைகிற்பன் –
முற்றறிவினனும் வரம்பில் ஆற்றலையுடையவனுமான நீ, நான் உன்னை நினைக்கலாவது ஒருவழியிட்டுத் தர வல்லையே.
‘தொண்டு எல்லாம் நின்னடியே தொழுது உய்யுமாகண்டு’ –
தொண்டெலாம் நின்னடியே தொழிதுய்யுமா கண்டு தான் கணபுரம் தொழப் போயினாள்
வண்டுலாம் கோதை என் பேதை மணி நிறம் கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே.– பெரிய திருமொழி, 8. 2 : 8.
அடியார்கள் அனைவரும் –
ஐஸ்வர்யார்த்திகள், ஆத்மபிராப்திகாமர், பகவத் பிராப்திகாமர் இவர்கள் முழுவதும் சென்று கிட்டித் தங்கள் தங்கட்குரிய
பிரயோஜனங்களைப் பெற்று மீளுகிறபடியைக் கண்டு, ‘தான் கணபுரம் தொழப்போயினாள்’-
தானும் கலந்து பரிமாறி மீளலாம் என்று போனாள்;
‘தான்’-
விஷயத்தையே பார்க்குமித்தனையோ, தந்தாமையும் பார்க்க வேண்டாவோ.
ஒரு பிரயோஜனத்துக்காகப் போவார்க்கன்றோ அது கொண்டு மீளலாவது,
தன்னையே பிரயோஜனமாகப் பற்றிப் போவார்க்கு மீள விரகு உண்டோ. இப்படியே அன்றோ பகவத் பிராவண்யமுடையார்படி.

பாவியேற்கு-
என்னை ஒழிந்தாரடங்கலும் நினைப்பாரும் நினைத்தவற்றைப் பெறுவாருமாய்க் கண்டீர் செல்லுகிறது!
“நினைப்பவர்கட்கு மங்களத்தைக் கொடுக்கிறார்” என்கிறபடியே யன்றோ நாடு அடங்கலும். ஒன்று நன்கு உரையாய்
ஆயாஸ: ஸ்மரணே க: அஸ்ய ஸ்ம்ருதோ யச்சதி ஸோபநம் பாபக்ஷய: ச பவதி ஸ்மரதாம் தம் அஹர்நிஸம்- – ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 17 : 78.
ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் கூறியது.
அருச்சுனனுக்குச் சொன்னாற்போலே எனக்கும் ஒரு நல்வார்த்தை சொல்லவல்லையே.
அவ்வளவாகாதே இவர் தம்மதும். ‘இனி, பேற்றிற்கும் விரோதி போகைக்கும் கடவேன் நான்’ என்றான் அன்றோ.
அவ்வளவேயன்றோ வேண்டுவது, பின்பு வருமது தன்னடையே வருமதன்றோ.
ஆத்ம ஸ்வரூபத்தின் சித்தியன்றோ பேறு ஆகிறது. பேற்றின் பலமான கைங்கரியம் சொல்ல வேண்டாவே,
பேற்றின் அளவுமன்றோ பிரமாணம் சொல்லுவது. அதற்கு அப்பாலுள்ளது பிரமாணத்துக்கு விஷயம் அன்றே.
அப்படியே ‘உனக்கும் நானே கடவேன்’ என்று ஒரு வார்த்தை சொல்லவல்லையே.
உலகம் உண்ட ஒண்சுடரே!
உண்டி உடல் காட்டுமே. நினைக்கை குற்றமாய்விட்டதோ. நினைவுங்கூடத் தேட்டமானால் நீயே செய்து தலைக்கட்ட வேண்டாவோ.
இவை, ஆபத்துங்கூட அறிவிக்க மாட்டாத சமயத்திலே நீயே அறிந்து வயிற்றிலே வைத்து நோக்கி,
இந்த உபகாரத்தை இவை அறியாதொழிய ‘இது உன்பேறு’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற இருப்பான் ஒருவன் அல்லையோ.
‘உன் பேறாக ரக்ஷித்தாய்’ என்பதனை மெய்யே யன்றோ சொல்லுகிறது-
இங்கிதம் தாவகம் -உன் செயல் எல்லாம் நைவிக்கும் –
————————————————————————————————

ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.–5-10-7-

பாஹ்ய சம்ச்லேஷம் பண்ணி நினைத்த படி பண்ணப் பெறாமல் -மானஸ அனுபவம் மாதரம் -காணுமாறு அருளுவாய்
ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை -ஒண் சுடரோடு -உண்மையாக -வருகிறாய் -இருளுமாய் இன்மையாய்-வந்து
யோடின்மையாய் வந்து என்-புறவாயில் பிரகாசம் இல்லாமல் –உள்ளத்தில் ஒளியாய் -தேஜஸ் -உண்மைக்கு -பிரகாசத்துக்கு
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன-உன்னை அனுபவியாதபடி -உள்ளே கரந்து-படுத்தும் பாடு
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்-நினைத்துப் பார்க்கும் நெஞ்சு சிதிலம் ஆகா நின்றேன்
உனது வடிவ காரணம் இந்த சைதில்யத்துக்கு ஹேது
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே-பிராப்யமான உருவை திண்மையாக கண்களுக்கு காணும் படி
நிரந்தரமாக -அருள வேண்டும் -நீ கலசி எனைச் செய்கின்றன-என்றுமாம்

உண்மையோடு வந்து ஒண்சுடராய் நின்றவாறும், இன்மையோடு வந்து இருளுமாய் நின்றவாறும், என் கண்களால் காண முடியாதவாறு உள்ளே மறைந்து நின்று நீ செய்கின்றவற்றையும் எண்ண வேண்டும் என்று கொண்ட மனத்தோடு வருந்தாநின்றேன்; என் கரிய மாணிக்கமே! உன் திரு உருவினை என் கண்களால் நன்கு காணும்படி ஒருநாள் திருவருள் புரிதல் வேண்டும்.
உண்மை – மனத்தில் உளனாந்தன்மை. இன்மை – வெளிப்புறத்தில் காணப்படாத தன்மை. நின்றவாற்றையும் செய்கின்றவாற்றையும்
எண்ணுதல்கொள் சிந்தை என்க. என்கண்கட்கு ஒருநாள் திருவுருவைத் திண்கொள்ள அருள வேண்டும் என்கிறார்.

மானச அனுசந்தானமேயாய் நிலை குலைந்து போகாமல், கண்களால் கண்டு அநுபவிக்க
வல்லேனாம்படி செய்தருள வேண்டும் என்கிறார்.

உண்மையோடு இன்மையாய் வந்து ஒண்சுடரோடு இருளுமாய் நின்றவாறும் –
எனக்கு உண்மையோடே ஒண்சுடராய் நிற்கும் மனத்தின் கண்ணே;
இன்மையோடு இருளாய் நிற்கும் புறத்திலே காண்கையில்.
அன்றிக்கே, அடியார்கட்குத் தன் படிகளில் ஒன்றும் குறையாதபடி காட்டிக் கொடுத்து,
அவர்கட்கு ‘இவ்வளவு’ என்று அளவிட்டு அறியும்படி பிரகாசித்து நின்றபடியும்,
அடியரல்லாதார்கட்குத் தன் படிகளில் ஒன்றும் தெரியாதபடி செய்து, அதனாலே அவர்களுக்கு ‘இல்லை’ என்னும்படி
இருளச் செய்து கொண்டு நின்றபடியும் என்னுதல்;
அடியார்கட்கு ஒண்சுடரோடு உண்மையாய் நின்றும், அடியரல்லாதார்க்கு இருளோடு இன்மையாய் நின்றும் என்க.
வந்து என்கண் கொளாவகை நீ கரந்து என்னைச் செய்கின்றன –
இவையெல்லாம் தவிர, என்பக்கல் பரிமாறுகிற வேறுபாடும்.
ஒண்சுடராதல், இருளாதல் இரண்டத்தில் ஒன்றாகப்பெற்றிலேன்; நடுவே நின்று கிலேசியாநின்றேன்.
முத்தர்க்குக் கூட்டு அல்லர், சம்சாரிகளுக்குக் கூட்டு அல்லர்; அந்தரப்பட்டு நிற்கிறாரன்றோ இவர்தாம்.
என் நெஞ்சிலே வந்து புகுந்து கண்களுக்கு விஷயமாகாமல் மறைய நின்று நீ என்னை நலிகிறவற்றையும்.
கண்கொளாவகை –
கண்பார்க்காதபடி. எண்கொள் சிந்தையுள் நைகின்றேன்
எண்ணப்புக்கு,
மனோரத மாத்திரத்திலே நையாநின்றேன்.
பெற்ற அம்சம்கொண்டு காரியம் கொள்ள மாட்டுகின்றிலேன்.
கைப்புகுந்ததுகொண்டு மேல் உள்ளது பெற விரகு பார்க்க மாட்டுகின்றிலேன்.

என் கரிய மாணிக்கமே –
கண்களுக்கு விஷயமாகிற பொருள்களைக்கொண்டு நான் காலம் போக்கமாட்டாதபடி,
உன் வடிவின் சுவட்டினை அறிவித்தாயே. ‘இவ்வடிவினைப் பிரிந்தார்க்கு ஜீவிக்கவுமாம்’ என்று தோற்றியிருந்ததோ.
என் கண்கட்கு –
இவற்றின் விடாய் உனக்குத் தெரியுமன்றோ? ‘நான் பெற்றேன்’ என்றாலும் ஆறியிராதவை யன்றோ?
வேறொன்று இட்டு மறைக்கலாமவை அன்றே.
திண்கொள்ள –
‘மானசாநுபவத்தைப் பிரத்யக்ஷ சமாநாகாரமாகப் பண்ணினோமே’ என்று நீ சொல்லுமது எனக்கு வார்த்தை யன்று காண்.
கனாவில்கண்ட காட்சி போன்று மானசாநுபவம் ஆக ஒண்ணாது;
நன்கு கண்கூடாகக் காண வேண்டும். இங்ஙன் செய்யப் போமோ? என்னில்

“கண்ட கனாவின் பொருள்போல யாவும்பொய்; காலனென்னும்
கண்ட கனாவி கவர்வதுவே மெய்”-என்பது, திருவரங்கத்தந்தாதி.

சிலர்க்கு எப்பொழுதும் காணக்கூடியவனாக இருக்கிறாயே.
ஒருநாள் அருளாய் –
ஒரு நாள் அமையும் என்கிறாரல்லர், விடாயின் பெருமை சொல்லுகிறார்;
விடாய்கொண்டவன் ‘ஒருகால் நாக்கு நனைக்க அமையும்’ என்றாற்போலே.
‘கிட்டினால் பின்னை விடும்படி சொல்லுகிறோம் என்று.
உன் திரு உருவே –
இது ஏதேனும் உன்னதோ! நோக்கிக்கொண்டு கிடக்கைக்கு;
“உன் திருமேனி உனக்காக அன்று, உன் அடியார்கட்காகவே” அன்றோ

—————————————————————————————

திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோருங் கண்ணீர் என்செய்கேன் அடியேனே.–5-10-8-

சர்வாதிகத்வ ஸூ சகம் சிருஷ்டி யாதி வியாபாரங்களைக் கேட்கும் பொழுது எல்லாம் நெஞ்சு உருகி கண்ணீர் சோர நின்றது –
திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து -சர்வாதிகத்வம் -திசைமுகன் ஆகிய கரு –
அந்தராத்மா -நியாமகன் -சரீர ஆத்மா பாவம் படைத்திட்ட கருமங்களும்-ஒன்றி உள்ளே இருந்த
பொருவிலுன் தனி நாயக மவை -ஒத்தார் மிக்கார் இல்லாமல் -பொருத்தம் இல்லாதவன் -அத்விதீய நாயக பிரகாசகம்
கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின்று நெக்கு-கேட்கும் -பிரமாண முகத்தால் -நெஞ்சு கட்டுக் குலைந்து நெகிழ்ந்து
அருவி சோருங் கண்ணீர் என்செய்கேன் அடியேனே-கண்ணீர் அருவி போலே விழா நின்றது
நீ இட்ட வழக்கு பரதந்த்ரன் -அடியேன் செய்ய வேண்டுவது ஒன்றும் இல்லை -சம்பந்தம் உள்ளதால் விட மாட்டிகிறிலேன்
சைதில்யம் பிரயத்தனமும் பண்ண முடியாதே அடியேன் -ஆண்டான் தானே பண்ண வேண்டும்

அழகிய வடிவத்தோடு மஹாப்பிரளயத்தில் திருக்கண் வளர்ந்தருளினபடியும், திருவுந்தித் தாமரையிலே பிரமனாகிய சரீரத்திலே
அந்தராத்மாவாக எழுந்தருளியிருந்து எல்லாவற்றையும் உண்டாக்கின செயல்களுமாகிய, ஒப்பு இல்லாத உன்னுடைய தனித்த தலைமை
பொருந்திய செயல்களைக் கேட்குந்தோறும் என்நெஞ்சமானது ஒருபடிப்பட நின்று நிலைகுலைந்து கண்ணீரானது அருவி போன்று விழா நின்றது;
அடியேன் என்ன செய்வேன்?
கரு – சரீரம். வீற்றிருத்தல் – வேறு ஒன்றற்கில்லாத சிறப்போடு எழுந்தருளியிருத்தல். நாயகம் – தலைமை. நெக்கு – நிலை குலைந்து

உன் குணங்களையும் செயல்களையும் கேட்ட கேட்ட போதுதோறும் நையா நின்றேன், என்செய்கேன் என்கிறார்.

திரு உருவு கிடந்தவாறும் –
காந்தி மிக்க வடிவோடே சமுத்திரத்திலே திருக்கண் வளர்ந்தருளினபடியும்.
காணத்தக்க வடிவத்தோடே சமுத்திரத்திலே திருக்கண் வளர்ந்தருளினபடியும்.
கொப்பூழ்ச் செந்தாமரைமேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் –
ஏகார்ணவத்திலே படைத்தலிலே நோக்குள்ளவனாய்த் திருக்கண் வளர்ந்தருளிப் பின்பு அக்காலம் வந்தவாறே
எழுந்திருந்து இவற்றை எல்லாம் உண்டாக்கினான்,
பிரஹ்ம சிருஷ்டியளவும் செல்ல அதற்கு மேலே உள்ளனவற்றையெல்லாம் தானே உண்டாக்கிப் பின்பு
திருநாபியிலே உண்டான தாமரைப்பூவில் பிரமனுடைய பிறப்பிற்குத் தான் ஆதாரமாய்,
பின்பு அவன் தன்னைத் தனக்கு ஆதாரமாகக்கொண்டு இவ்வருகு உண்டான காரிய வர்க்கங்களை அடங்கலும் உண்டாக்கினபடியும்.
அந்தர்யாமியாக இருந்தாலும் அவனே ஆதாரம் –லௌகிக திருஷ்டியில் அருளிச் செய்கிறார் –
“பிரமனே! உன்னுள் பிரவேசித்து நான் பின்பு படைப்புத் தொழில் செய்வேன்” என்றும்,
“இந்தப் பிரமனும் உருத்திரனும் தேவர்களில் சிறந்தவர்கள்” என்றும் வருகிறபடியே, சதுர்முகனாகிற சரீரத்தைப் பெற்றுநின்று செய்கிறான் என்பதாம்.

“ஸ்ருஷ்டிம் தத: கரிஷ்யாமி த்வாம் ஆவிஸ்ய”-என்பது, விஷ்ணுதர்மம்.

“ஏதௌ த்வௌ விபுதஸ்ரேஷ்டௌ”-என்பது, நாராயணீயம் நாமநிர்வசன அத்.
பிரசாத க்ரொதஜௌ-அனுக்ரகத்தால் நான்முகனும் குரோதத்தால் ருத்ரனும் –

இன்ன ஆசனத்தையுடையனாய்க் கொண்டு’ என்றாற்போலே,
‘கருவுள் வீற்றிருந்து’ என்கிறார்.
வீற்றிருத்தலாவது, தன் ஐஸ்வர்யத்தால் உள்ள மேன்மை தோன்ற இருத்தல்.
பொற்குப்பியில் மாணிக்கம் போலே.
படைத்திட்ட கருமங்களும் –
உண்டாக்கின வியாபாரங்களும்.
பொருவில் உன் தனி நாயகம் அவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு அருவி சோரும் கண்ணீர்
-ஒப்பின்றிக்கே அத்விதீயமாய் ஐஸ்வர்யப் பிரகாசமான உன் குணங்களையும் செயல்களையும் கேட்குந்தோறும்
என் நெஞ்சமானது மலை நெகிழ்ந்தாற்போன்று நெகிழ்ந்து, கண்ண நீர் அருவியாய்ப் பாயா நின்றது.
என் செய்கேன் அடியேனே –
பர தந்திரனான நான் காரியம் செய்து கொள்ளப் பார்த்திருக்கிறாயோ, வேறு ஒன்றாலே போது போக்கித் தரித்திருக்கவோ, நான் எதனைச் செய்வேன்?

—————————————————————————————-

அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்தனக்கே கரைந்துகும்
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.–5-10-9-

அர்த்தியாய் இருந்து அபேஷிதம் தலைக் கட்டிக் கொண்ட -அகலம் குறைந்து நீளம் நீண்ட வீடுகள் வரவு அதிகம் செலவு குறைவு ஆகுமே
ஈரடியாலே முடித்துக் கொண்டான் -ஸ்திர சித்தனாக உன்னைக் கூடுவது என்றோ
அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்-அடி நகராமல் வளர்ந்தான் -நின்ற இடத்திலே -கேட்ட இடத்திலே –
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்-தர வேண்டும் என்றவன் மறுக்காமல் -யஜ்ஞ்க்ன வாதம் தன்னிலே நின்றே
பிரம்மா லோகம் பர்யந்தம் ஆகாசம் வரை -பிரதாண்யம் மேன்மை சாமர்த்தியம்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்தனக்கே கரைந்துகும்-சொல்லும் தோறும் கேட்கும் தோறும் –
அவாப்த சமஸ்த காமனாய் இருந்து ஆஸ்ரிதர் களுக்காக இரந்து கார்யம் செய்தாயே
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.பிராயாச்சித்தம் பண்ணிக் கழிக்க முடியாதே
பிரேம ரூபம் காமம் -கண்ணனுக்கே -உடை குலைப் படாத படி என்று கூடுவேன்

மூன்று அடிகளை யாசித்த விதமும், யாசித்த அவ்விடத்திலேயே நின்றுகொண்டு ஆழ்ந்த கடல்களையும் பூலோகத்தையும் தெய்வலோகத்தையும்
இரண்டு அடிகளிலே முடியும்படியாக அளந்து முடித்துக்கொண்ட முக்கியமும், அவற்றைச் சொல்லும்விதம் கேட்குந் தோறும் என் நெஞ்சமானது
உன்னுடைய சீலகுணத்திலேயே கரைந்து உருகாநின்றது; மிகக் கொடிய பாவியேனான யான் தேவரீரைக் கூடுவது என்றுகொல்?
மூன்று அடியை இரந்தவாறும் என்க. நொடியுமாறு – சொல்லும் வகை. உன்னைக் கூடுவது என்றுகொல் என்க.

திரிவிக்கிரம அவதாரத்திற் செய்த செயலை அநுசந்தித்து அதனாலே உருக்குலைகின்ற நான்
தரித்துநின்று உன்னை அநுபவிப்பது என்று என்கிறார்.

அடியை மூன்றை இரந்தவாறும் –
இவை அபேக்ஷிக்க மாட்டாத அன்றும் இவற்றின் ஹிதத்தைச் சிந்தனை செய்யுமளவேயோ-படைத்திட்ட கருமங்களும்-
இவை உண்டானாலும் சிறியதைப் பெரியது நலியாதபடி நோக்குவான் அவன் என்கிறது.
நேராய்ப் போகாமே மூன்று அடியை இரந்தானாதலின் ‘அடியை மூன்றை’ என்கிறார்.
இரண்டு அடி இரந்தானாகில் அவனைச் சிறை செய்ய விரகு இல்லையே.
அங்கே நின்று –
கடக்க நான்கு அடி போனானாகில், ‘வஞ்சனை செய்தான்’ என்று அவன் வழக்குப் பேசலாமன்றோ.
ஆழ்கடலும் மண்ணும் விண்ணும் ஈரடியால் முடிய முடித்துக்கொண்ட முக்கியமும் –
இவருடைய நெஞ்சினைக் கரைக்க அடி இட்டபடி.
பூமி ஆகாசம் முதலியவைகள் அடங்கலும் இரண்டு அடிகளிலே அடங்கும்படிக்குத் தகுதியாக அளந்து தலைக்கட்டிக் கொண்டபடியும்.
முக்கியம் –
வேண்டற்பாடு. அதாவது, அடியார்கட்காகச் செய்த வஞ்சனையால் வந்த வேண்டற்பாடு இருக்கிறபடி.
அன்றிக்கே, தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தன் திருவடிகளின் கீழே அகப்படுகையாலே வந்த வேண்டற்பாடு என்னலுமாம்.
நொடியுமாறு அவை கேட்குந்தோறும் –
திருவுலகு அளந்தருளின சரிதையை வியாசர் முதலானார் சொல்லாநிற்பர்கள்,
அவர்கள் சொல்லும் பிரகாரங்களைக் கேட்குந்தோறும். இதனால்,தாம் சொல்லவேண்டா என்றபடி.
நொடிதல்-சொல்லுதல்.
என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும் –
மஹாபலியைப் போலே ஒளதார்யம் கொண்டாடுகிறேன் அல்லேன்,
இந்திரனைப் போலே இராஜ்யம் ஆளுகிறேன் அல்லேன்,
என்னுடைய மனமானது உன் பக்கலிலே உருக்குலைந்து மங்கா நின்றது.
கொடிய வல்வினையேன் –
“எவனுடைய திருநாமங்களைச் சொல்லுதலால் ஒரு மனிதன் பெரிய பயத்தில் நின்றும் விடுபடுகிறானோ” என்கிறபடியே,
“யந்நாம ஸங்கீர்த்தநதோ மஹாபயாத் விமோக்ஷ மாப்நோதி”-என்பது, விஷ்ணு தர்மம்.
திருநாம சங்கீர்த்தனம் மஹா பாதகங்களையும் போக்கும் என்று சொல்லாநிற்க,
அதுதானே நிலை குலைவதற்குக் காரணமாம்படி மஹாபாவத்தைச் செய்தேன்.
உன்னை என்று கொல் கூடுவதே –
நான் தரித்து நின்று உன்னை அநுபவிப்பது என்றோ? அநுபவிப்பதற்கு வந்து கிட்டுவது என்றோ?

——————————————————————————

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10-

ஆஸ்ரித அர்த்தமாக அரும் தொழில் செய்து உபகரித்த அமிருத மர்த்தன விருத்தாந்தம் -கேட்டு தளர்கிறேன் –
நிலை நின்று சரித்ரம் கேட்கும் படி அருள வேணும்
கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை-தேவர்களும் அசுரர்களும் கூடி நின்று –
ஓய்ந்து போக தானும் கூடி நின்று -மத்து கயிறு கூர்ம -சம்விதாங்களைப் பண்ணி
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்-அசுரர் கலை விடுவிக்க ஸ்திரீ வேஷ பரிக்ரகம் மோகன புரி -திரு மோகூர்
-திருக் கோலம் எடுத்துக் கொண்டு -மயக்கி –
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை-விசமாய நீய ஆகாரம் -வடிவும் -ஆத்மாவை உருக்கி
-அனுபவ விரோதிகளை நிரசனம் -நித்ய சம்ச்லிஷ்டம்
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே-அதே போலே நானும் ஆக வேண்டுமே

தேவர்கள் என்ன, அசுரர்கள் என்ன, இவர்களோடுகூடித் திருப்பாற்கடலைக் கடைந்த விதமும், அதினின்றும் தோன்றிய அமுதத்தைத்
தேவர்களே உண்ணும்படி அசுரர்கள் அதனை விடக்கூடிய காரியங்களையே செய்துபோன ஆச்சரியமும் என் சரீரத்திற்குள் நுழைந்து
என் உயிரை உருக்கி உண்டிடுகின்றின; நச்சு நாகணையானே! உன்னை அறியும் தன்மையைச் சொல்லாய்.
விடு என்பது, வீடு என நீண்டது; நீட்டல் விகாரம். வீடும் வண்ணம் – அழியும்படி என்றுமாம். வித்தகம் – ஆச்சரியம். நச்சு – நஞ்சு.

சமுத்திரத்தைக் கடைந்த ஆச்சரியமான செயலை நினைத்து நிலைகுலையாநின்றேன், தரித்து நின்று
உன்னை அநுசந்திக்க வல்லேனாம்படி விரகு சொல்ல வேண்டும் என்கிறார்.

கூடி நீரைக் கடைந்தவாறும் –
‘நாம் சமமாகப் பிரித்துக்கொண்டு உண்ணக் கடவோம்’ என்று அசுரர்களோடு கூடிச் சமுத்திரத்தைக் கடைந்தபடியும்.
கடைந்து பிடித்துக் காணும் இவருடைய ஆவியை உருக்கிற்று.
அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் –
பல வேளையில் வந்தவாறே பிரயோஜன ரூபமான அமுதத்தை அநுகூல வர்க்கமான தேவஜாதியே உண்டு,
ஆசுரப் பிரகிருதிகள் ‘அமுதத்தை நாய்க்கு இடு’ என்று அதனை விட்டு அவர்கள் பின் தொடரும்படிக்குத் தகுதியாக,
காணத்தக்க பெண்வடிவினைக் கொண்டுபோன ஆச்சரியமான செயலும்.
“விஷ்ணுவானவர் மாயையினால் அசுரர்களை மயங்கச் செய்து பெண்வடிவைக் கொண்டவராய்” என்கிறபடியே,
“மாயயா மோஹயித்வா தாந் விஷ்ணு: ஸ்திரீரூபமாஸ்த்தித:”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா.
நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு வானவரைப்
பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார் மருவினிய
தண்ணார்ந்த கடன்மல்லைத் தலசயனத் துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே.-என்பது, பெரிய திருமொழி. 2. 6 : 1.

வானவரைப் பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார் கடைந்தவாற்றாலும் வித்தகத்தாலும். ஊடு புக்கு-
தோற்புரையே போகாமல் மர்மத்திலே புக்கு.
எனது ஆவியை-
“சேதிக்க முடியாதது, தகிக்க முடியாதது” என்கிற ஆத்மவஸ்துவை.
உருக்கி உண்டிடுகின்ற நின்தன்னை –
நீர்ப்பண்டமாக்கி, முடித்துவிடாதே ஒழிகிற உன்னை.
புருஷோத்தமன் ‘இப்படிச் செய்வதே’! என்று இக்குணத்தைச் சொன்னவளவிலே உருக் குலையாநின்றேன்
தரித்து அநுபவிக்கும்படி நல்விரகு சொல்ல வேண்டும்.
உம்மைத் தரிப்பிக்கப் போமோ நம்மால் என்ன, ‘நச்சு நாகணையானே’ என்கிறார். என்றது,
ஒருவன் பரம போகியாய் நின்று தரித்து உன்னை அநுபவிக்கப் பண்ணிக் கொடுத்திலையோ;
அப்படியே நானும் தரித்து உன்னை அநுபவிக்கும்படி செய்தருள வேண்டும் என்றபடி.

———————————————————————————

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-

பரமபதம் ஆனந்த பிராப்தி பலம் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்-திரு வனந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளும் நம் ஸ்வாமி-
ஏகாரம் -மாம் ஏகம்- பற்றும் எண்ணமும் உபாயம் இல்லை -ச்வீகாரத்தில் உபாய புத்தி தவிர்க்கிறது
என்றும் ஒக்க மநோ ரதம் உடையராய்க் கொண்டு -ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்-ஆக -சட கோபன் தரிக்கப் பெற -அவராக உளராகும் படி
-வாசிக கைங்கர்யம் பெற்று அனுபவிக்க வல்லவர்கள்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே–பெரிய பரம ஆகாசம் -மா கம் -பொதுப் பெயர் -சிறப்பித்து -வைகுந்தம் –
ஆறு –எனக்கு -நின் பாதமே -சரணாக தந்து ஒழிந்தாய் போலே -யாவதாத்மாபவி நித்யமாக ஆனந்த நிர்பரராய்
நூற்கை -பண்ணுகை பாடுகை

திருவனந்தாழ்வானாகிற படுக்கையின்மேலே சயனித்திருக்கின்ற நம்பெருமானுடைய திருவடிகளே உபாயம் என்று, திருக்குருகூரில் அவதரித்த
மாறனான ஸ்ரீ சடகோபர் எப்பொழுதும் ஒரே எண்ணத்தையுடையவராய்த் தாம் உளராதற்பொருட்டு அருளிச்செய்த அந்தாதியாகிய ஆயிரம்
திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் கற்க வல்லவர்கள் பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்தையடைந்து
எப்பொழுதும் ஆனந்தத்தையுடையவராயிருப்பர்.
குருகூர்ச் சடகோபன் மாறன் நமக்குப் பிரான் சரணே சரண் என்று நாடொறும் ஏக சிந்தையனாய் ஆக நூற்ற அந்தாதி என்க.
வல்லார் வைகலும் மகிழ்வெய்துவர். மாகம்-ஆகாசம்.

முடிவில். -இப்பத்தும் கற்றார் பரமபதத்திலே சென்று நித்தியாநுபவம் பண்ணப் பெறுவர் என்கிறார்.

நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று
-திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய சர்வேச்வரன் திருவடிகளே நமக்கு உபாயம் என்று.
ஆதிசேடனைப் படுக்கையாகவுடைத்தாயிருத்தல் அறப்பெரியவனுக்கு லக்ஷணமாகையாலே, சர்வாதிகனே சரண்யன் என்கிறது.
இவனுடைய உபாய பாவத்தில் புருஷகாரமாக வல்லார் அவள் பரிகரத்திலுள்ளாராகாதே.
பிராட்டி சம்பந்தம் ஆர்த்தமாக -இங்கு உண்டே -திருமந்தரம் சரம ஸ்லோகம் போலே –
சப்தத்தில் த்வயத்திலே தானே -அதுவே உலகம் உண்ட பெரு வாயா–வில் தானே
படுக்கை கிடப்பது அந்தப்புரத்திலன்றோ. அடியார்கள் விஷயத்தில் உபகார சீலனாதலின் ‘நம்பிரான்’ என்கிறது.
‘சரணே சரண்’ என்ற ஏகாரத்தாலே, வேறு உபாயத்தை விரும்பாத உபாயம் என்கிறது.
இத்தால் ‘ஏக’ பதத்தில் அர்த்தம் சொல்லுகிறது.–ஈஸ்வர நைரபேஷ்யம் -பல பிரபத்தி என்றும் சொல்வார்கள் –
உபாய எதிர்பார்க்க மாட்டார் -அதிகாரி ஸ்வரூபம் வேண்டுமே -ஆகிஞ்சன்யம் அனந்யகதி மகா விஸ்வாசாதிகள் எல்லாம் இதுவே –
அன்றிக்கே, சம்சார சம்பந்தப்பட்ட ஸ்வபாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படி அடிக்கழிவு செய்வார் ஒருவரல்லரே இவர்.
மஹா விஸ்வாசமாகிறது, இஃது ஒழிய வேறொன்றில் கால் தாழாதொழிகை ஆம்.
நாடொறும் ஏக சிந்தையனாய் –
புறம்பு உண்டான சிந்தனை போய், இவ்விஷயத்திலே ஒரே தன்மையான எண்ணத்தை யுடையராய்,
பொருள் ஈட்டுதற்குச் செல்வார் ஒருவர் ஒரு சிராயை -மரக்கலம் -நம்பி நாலாண்டு பதிற்றாண்டு இழியாநின்றார்களன்றோ,
பேற்றின் சீர்மையைப் பார்த்தால் அவ்வளவாகிலும் வேண்டாவோ இவ்விஷயத்தில்.
சம்சாரத்தின் இயல்பால் வியசனங்கள் தொடர்ந்து வந்தாலும் உறுதி குலையாமே போருமதன்றோ ஸ்வரூபமாவது.
மித்ர பாவேனே –ஸூ சகம் -தொழுது எழு மிகை என்பான் என் என்னில் -மகா விஸ்வாசம் இதில் வைப்பது சுலபம் தானே –
குருகூர்ச் சடகோபன் மாறன்-
அவையெல்லாவற்றிற்கும் அடியான பிறப்பு இருக்கிறபடி.
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் –
தாம் உளராகைக்காகச் சொன்ன அந்தாதி ஆயிரத்திலும் இப்பத்தினைக் கற்க வல்லவர்கள்.
குருகூர்ச் சடகோபன் மாறன்–காரி மாறன் நம்மாழ்வார் ஆக இப்பத்து -சத்தை இத்தாலே தான் பெற்றார் –
மாக வைகுந்தத்து –
மஹாகாசம் என்று பேரையுடைய ஸ்ரீவைகுண்டத்திலே.
வைகலும் மகிழ்வு எய்துவர்-
காலம் என்னும் ஒருபொருள் உள்ளவரையிலும் நித்திய அநுபவம் பண்ணப் பெறுவர்.
‘அநுசந்தானத்துக்குத் தடை வாராதபடி பண்ணியருள வேண்டும்’ என்று பிரார்த்திக்க வேண்டும்படியான சம்சாரத்தை விட்டு,
பகவானுடைய அநுபவத்துக்கு நழுவுதல் ஒரு நாளும் இல்லாத பரமபதத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர் என்றபடி.
‘மா’ என்றது, மஹத் என்னும் தத்துவத்தினை. ‘கம்’ என்றது ஆகாசம்.

————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அந்த்யே
அர்ச்சாஞ்ச மௌன நியதாம்
சௌரே அபஹாய
ஆலாப யோக்ய விபவே புன ஆகத சௌ
சிச்ச்தச்ய நிஜச்ச்ய தத் குண காண ஸ்மரணே
சைதில்ய விக்னம் சமணம் தம் மயானத்த அயாசதே
சதி பத பரதத்வம் -குணம் -ஸூ அனுபவ யோக்யதைக்கு சக்தி அருளுவார் –

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ப்ராதுர் பாவாதி வ்ருத்தை
ரிஷப கண கமணாத்
பூதனாதி நிரசனம்
மோஹார்த்தம் புத்தியா க்ருதியை
கிரி வர பஜன ஸூ க்ருதே
ஸ்தான பேதைகை-நின்றவாறும் இத்யாதி
தேஜஸ் த்வாந்தம்
ஜல நிதி சயநாத்
பிஷணாத் த்ரிபாதம்
பீயூஷம் ஸ்பர்சநீயாத்
ஆஸ்ரித ஹிருதயம் சிதிலை யாக்கி

இத்தம் காருண்யம் நிக்னம் -காருண்யா கடல்
துரித ஹர ஜனம் -பொலிக பொலிக போயிற்று வல் உயர் சாபம்
பிரேம தீவரம் துகாராம்
லோகானாம் ரஷிதானாம்
ஸ்ம்ருதி விஷயம் -உருவ வெளிப்பாடு
அஹம் பாவனா கோசரஞ்ச
தீனானாம் சச் சரணம்
ஸுவ ரச க்ரித நிஷா ப்ரேஷயதா வாஞ்சம் ஊசே
ப்ராப்தம் சக்தி பதம்
ஸ்ரீ பத மிக ஸ்ரேயசே -காருணிகத்வம்-ஐந்தாம் பத்தில் -பேர் அருள் கண்ணா -மா முனிகள்
பரத்வம் காரணத்வம் வியாபகத்வம் நியந்த்ருத்வம் -முதல் நான்கும் பரத்ப பரம்

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 50-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா உன்
சிறந்த குணத்தால் உருகும் சீலத் -திறம் தவிர்ந்து
சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே வைகு——————50-

—————————————————————————-

அவதாரிகை –

இதில்
அவதார சேஷ்டிதங்களை தரித்து நின்று அனுபவிக்கும் படி
பண்ணி அருள வேணும்
என்று பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
ஸ்தான த்ரயத்திலும் தம் அபேஷிதம் கிடையாமையாலே
அர்ச்சா ஸ்தலங்களிலே
ஆஸ்ரிதர் நினைவுக்கு ஈடாக – ஆலோக ஆலாப ஆலிங்கநாதிகளான
அனுபவ விசேஷங்களை வுபகரித்து அருளக் கடவோம் அல்லோம் -என்று
அவன் சங்கல்ப்பித்து அருளுகையாலேயாய் இருக்கும்
நம் அபிமதம் சித்தியாது ஒழிந்தது
அவன் சங்கல்பம் குலையும்படி அங்கு நிர்பந்திக்கக் கடவோம் அல்லோம் –
ஆஸ்ரிதர் நினைவு அறிந்து முகம் கொடுத்த
அவதாரத்தில் செல்லுவோம் -என்று
கிருஷ்ண அவதாரத்திலே அனுபவிப்பதாகச் செல்ல
அதுவும் கை கழிந்து தாம் பிற்பாடராய் அத்தாலே நொந்து
அவ்வவதார குண சேஷ்டிதங்களை யாகிலும்
அனுசந்தித்து தரிப்போம் என்று பார்த்த இடத்தில்
அதுவும் விஸ்லேஷ தசையில் அனுசந்திக்கையாலே
சைதில்யத்தை விளைக்க
நான் தரித்து நின்று உன் குண சேஷ்டிதங்களை
அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று
சரணம் புகுகிற -பிறந்த வாற்றில் அர்த்தத்தை
பிறந்து உலகம் காத்து அளிக்கும் -என்று அருளிச் செய்கிறார் -என்கை-

————————————————————————————–

வியாக்யானம்–

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா –
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்த பிறவியை
பிறந்தவாறும் -என்று ஈடுபடும்படி அவதரித்ததும்
மற்றும் —
கள்ள வேடத்தை கொண்டு போய்ப் புரம்புக்க வாறும் -என்றும்
சீரால் பிறந்து சிறப்பால் வளராதே அன்றே பிறந்து அன்றே வளர்ந்து
அடியை மூன்றை இரந்த வாறும் –
அம்ருத மதன அர்த்தமாக ஆவிர்பவித்து
கூடி நீரைக் கடைந்த வாறும் –
என்று இப்படி
பூ பார நிர்ஹரண அர்த்தமாகவும்
திரிபுர தஹன அர்த்தமாகவும்
த்ரைலோக்ய அபஹரண அர்த்தமாகவும்
அம்ருத மதன அர்த்தமாகவும்
திருவவதரித்து
ஜகத்தை ரஷித்து
நோக்கிப் போரும் நிரவதிக கிருபணா வானனான கிருஷ்ணனே

கீழே
நல்லருள் நம்பெருமான் -என்றார் இறே
அப்படியே
நிரவதிக தயாவானவன் –
உன் சிறந்த குணத்தால் உருகும் சீலத் -திறம் தவிர்ந்து –
உனக்கு அனுரூபமான
கல்யாண குண அனுசந்தானத்தாலே த்ரவி பூதானாம்
ஸ்வபாவ பிரகாரம் நிவ்ருத்தமாய் –

சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் –
உன்னைக் கிட்டி
அனுபவிக்கும் படியாக
ச்தைர்யத்தைச் செய்து அருள வேணும் –
அதாவது –
பிறந்தவாறு -என்று தொடங்கி -நிறந்தனூடு புக்கென தாவியை நின்று நின்று உருக்கி உண்கின்றன -என்றும்
என்னை யுன் செய்கை நைவிக்கும் -என்றும் –
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே-என்றும்
வெள்ள நீர் சடையானும் -என்று தொடங்கி -என்னுயிரை உருக்கி உண்ணுமே -என்றும்
உண்ண வானவர் கோனுக்கு -என்று தொடங்கி –என் நெஞ்சு எரி வாய் மெழுகு ஒக்கு நின்றே -என்றும்
திஷ்டந்தம் –
ஆஸி நம் –
பிரதிசிச்யே –
என்னும்படி நின்றவாறு -இத்யாதி
எங்கனம் மறந்து வாழ்கேன் என் செய்வேன் உலகத்தீரே -இத விஷயத்தில் நம்மைத் தானே கேட்க வேணும் –
நின்று நின்று நினைகின்றேன் உன்னை எங்கனம் நினைகிற்பன் -என்றும்
ஒண் சுடரோடு -என்று தொடங்கி -எண் கொள் சிந்தையுள் நைக்கின்றேன் -என்றும்
திருவுருவு கிடந்த வாறும் -என்று தொடங்கி–என் நெஞ்சம் நின்று நெக்கருவி சோறும் கண்ணீர் -என்றும்
அடியை மூன்றை இரந்த வாறும் -என்று தொடங்கி –
என் நெஞ்சம் நின்றனக்கே கரைந்து உகும் -என்றும்
கூடி நீரைக் கடைந்த வாறும் -என்று தொடங்கி -ஊடு புக்கு எனதாவியை உருக்கி யுண்டிடுகின்றன-என்றும்
சொல்லப் படுகிற இவை நிவ்ருத்தமாய்
உன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
உன்னை என்று தலைப் பெய்வனே -என்றும்
பாவியேற்கு ஓன்று நன்கு உரையாய் -என்றும்
என் செய்கேன் அடியேனே -என்றும்
கொடிய வல்வினையேன் உன்னை என்று கொல் கூடுவதே -என்றும்
நின் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே-என்று
தரித்து நின்று உன்னை அனுபவிக்கப் பெறுவேன் -என்றவை என்கை –

சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று
தாம் தரித்து நின்று அனுபவிக்கும் பிரகாரம் பண்ணி அருள வேணும் என்று
அர்த்தித்த
ஞானாதி குணங்களை யுடையரான
ஆழ்வார் உடைய –

வாய்ந்த பதத்தே –
பரஸ்பர
சத்ருசமாய்
பொருந்தி இருக்கிற திருவடிகளிலே –

மனமே வைகு –
மனசே தங்கிப் போரு-

அவருக்கு
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஆனாப் போலே
உனக்கும் ஆழ்வார் திருவடிகளே பிராப்தம் என்று
சென்று
அங்கேயே
தங்கிப்
போரு-

———————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: