பகவத் விஷயம் காலஷேபம் -124- திருவாய்மொழி – -5-10-1….5-10-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்திலே சென்று புக்கு அங்கு நிற்கின்றவனோடே பரிமாற வேண்டும் என்று
மநோரதித்துக் கொண்டு போக, கால்நடை தாராமல் நடுவழியிலே விழுந்து கிடந்து கூப்பிட்டார்;
இனி, “இவ்வளவில் குணாநுபவம் பண்ணியாகிலும் தரிப்போம்” என்று பார்க்க,
அதுதானும் பேற்றினைப் போன்று அரிது என்னலாம்படி சைதில்யத்தை விளைப்பிக்க;
எல்லா அவஸ்தைகளிலும், உன்னைப் பிரிந்து நின்றாலும் தரித்து நின்று
குணாநுபவம் பண்ண வல்லேனாம்படி செய்தருள வேணும் என்று திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
மோஷத்துக்கு சரணாகதி பண்ண வில்லை -தரிக்கவே -இது -வேற நான்கும் வேற ரீதியில் –

கூரத்தாழ்வானுடைய நிர்வாஹத்தைச் சுருங்க அருளிச்செய்கிறார். ‘குணாநுபவம் பண்ணியாகிலும்’
என்ற இவ்விடத்திலே “கோவிந்தன் குணம் பாடி —- ஆவி காத்திருப்பேனே” என்னும் நாய்ச்சியார் திருமொழி அநுசந்தேயம். 8. 3.

இருடிகளுக்குண்டான சம்சார பயத்தை ஒத்ததாயிற்று ஆழ்வார்களுக்குப் பகவானைப் பிரிந்த விரஹத்தால் வரும் கிலேசம்;
அவர்கள், தங்கள் தங்கள் பேற்றிற்குத் தாங்கள் தாங்கள் சில முயற்சிகள் செய்யாநிற்பர்கள்,
இவர்கள் அத்தலையாலே பேறாகுமளவும் அசோகவனத்திலே பிராட்டியைப் போன்று துடியாநிற்பர்கள்;
அவர்களுக்குத் தங்கள் தலையிலேயும் சில கிடக்கையாலே விளம்பம் பொறுக்கலாம்,
இவர்களுக்கு அங்ஙன் சொல்லலாவது ஒன்று இல்லையாகையாலே கிடந்து அலமாப்பார்கள்.
‘அவன் அடியாலே நம் பேறு’ என்றிருக்குமவர்களுக்கு ஒரு கண்ணழிவு இல்லையே சொல்லலாவது.
“இரகு வம்சத்தில் அவதரித்தவரே! உம்மை நீங்கினால் சீதா பிராட்டி உயிர் வாழாதது போன்று, நானும் உயிர் வாழ மாட்டேன்” என்கிறபடியே,

“நச ஸீதா த்வயா ஹீநா நச அஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவ: ஜலாந்மத்ஸ்யாவிவ உத்ருதௌ:-என்பது, ஸ்ரீராமா. அயோத், 53 : 31.

லாபாலாபங்களில் பிராட்டியையும் தம்மையும் ஒரு தன்மையராகச் சொன்னாரன்றோ இளையபெருமாள்.
“சுவாமியே! சிறந்த பிரீதியானது எப்பொழுதும் தேவரீரிடத்திலேயே நிலைத்து விட்டது, பக்தியும் நியதமாக இருக்கிறது,
என் எண்ணமும் வேறிடத்தில் எனக்குச் செல்வது இல்லை” என்று, திருவடி ஸ்ரீராமாவதாரம் ஒன்றிலும் சக்தனாயிருக்குமாறு போன்று,

“ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:பக்திஸ்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி”-என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.

இவர் எல்லா அவதாரங்களிலும் எல்லாச் செயல்களிலும் அகப்பட்டிருப்பார் ஒருவர்.
அர்ச்சாவதாரத்தில் தம் அபேக்ஷிதம் பெற ஆசைப்பட்டவர், அது கிடையாமையாலே அவதாரங்களிலே போகிறார்;
‘விபவம் உள்ள இடத்தே சென்றால் சிறிது அபேக்ஷிதம் கிடைக்கும்’ என்று இருப்பரே.
நன்று; அவதாரங்களிலே இழந்தார்க்கும் இழவு தீர்க்கிற இடம் அர்ச்சாவதாரமாயிருக்க, இதனை விட்டு,
‘பெறலாம்’ என்று அவதாரமுள்ள இடம் தேடிப் போகையாவது என்? என்னில்,
அர்ச்சாவதாரத்தில், கண்களால் காண முடியாதவனான தன்னை, சம்சாரிகள் கண்களுக்கு விஷயமாக்குகையும்
விரும்பினவை அனைத்தையும் கொடுக்கையும் ஒழிய, குளிர நோக்குதல், வினவுதல், அணைத்தல் செய்யக்
கடவோம் அல்லோம் என்று சங்கல்பித்திருக்கையாலே,
‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி அதி நிர்ப்பந்தம் செய்யக் கடவோமல்லோம்’

‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி’ என்ற இவ்விடத்திலே, “கூரத்தாழ்வான் ஆர்த்தராய்ச் சரணம் புக,
பெருமாளும் இரங்கி ‘மூன்றாம் நாளைக்கு வீடு தந்தோம்’ என்ன, ‘ஆழ்வான் திருமதிளுக்குப் புறம்பானார்’ என்னக் கேட்டு
உடையவர் ஓடிச்சென்று, ‘ஆழ்வான் நாம் இங்கே இருக்க உமக்குப் பரமபதத்தே போக வேண்டிற்றோ’ என்ன,
அடியேன் சம்சாரத்திலே அடிக்கொதிப்பாலே மறந்தேன்’ என்ன, ‘ஆகில் நாமும் சரணம் புக்கால் இன்னம் சிலநாள்
ஆழ்வானை இங்கே வைக்க இரங்குவர்’ என்று திருவாசலளவும் சென்று, ‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பத்தைக்
குலைக்க வேண்டா’ என்று மீண்டு எழுந்தருளினார்” என்ற சரிதம் அநுசந்திக்கத் தகும். என்றது,
நான் ஒருவன் தோன்றிப் பெருமாளை இரண்டு வார்த்தை சொல்லுவாராகச் செய்யலாமோ என்றபடி.
‘அதி நிர்ப்பந்தம் செய்யக்கடவோம் அல்லோம்’ என்கையாலே, நிர்ப்பந்தித்தால் செய்வர் என்பது கருத்து.

என்று, “அந்தக் கிருஷ்ணனும் துவஜம், வஜ்ஜிரம், தாமரை என்னும் இந்த ரேகைகளை அடையாளமாகவுடைய
கைகளாலே நன்றாகத் தொட்டு இழுத்து அன்போடு கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்” என்னும்

“ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா
ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 2.

கிருஷ்ணாவதாரத்திலே போந்தார் அண்மைக் காலமாகையாலே.
‘இவ்வாழ்வார்கள் கிருஷ்ணாவதாரம் என்றவாறே போர மண்டியிருப்பர்கள், இதற்குக் காரணம் என்’ என்று பட்டரைக் கேட்க,
‘ஒருவனுக்கு உண்டான துக்கம் சில நாள்கள் கழிந்தால் பொறுக்கலாம், அணித்தானால் ஆறியிருக்கப் போகாதே அன்றோ;
அப்படியே, அல்லாத அவதாரங்களைப் போல அன்றிக்கே, சம காலமாகையாலே,
‘ஒரு செவ்வாய்க்கிழமை முற்படப் பெற்றிலோம், பாவியேம்! பல்லிலே பட்டுத் தெறிப்பதே’ என்னும் இழவாலே
வயிறு எரிதலாலேயாயிருக்கும்’ என்று அருளிச்செய்தார்.
இனித்தான், இராமவதாரத்தில், தமப்பன் சம்பரனைக் கொன்றவனாய் ஏகவீரனாய் இருப்பான் ஒருவன்;
பிள்ளைகள்தாம் ஆண்புலிகள், குடிதானே வன்னியம் அறுத்திருப்பதொரு குடி; இவை எல்லாம் மிகையாம்படி,
குணத்தாலே நாடுகளையெல்லாம் ஒருமார்வு எழுத்தாக்கிக்கொண்டிருப்பர்கள்,
ஆகையால் எதிரிகள் என்கிற சொல்லும் இல்லை; இங்கு அங்ஙன் அன்றிக்கே,
தமப்பன் ஒரு சாது விருத்தன்; பிறந்தது கம்சன் சிறைக்கூடத்திலே, வளர்ந்ததும் அவனகத்து அருகே;
ஸ்ரீ பிருந்தாவனத்திலே எழும் பூண்டுகளகப்பட அசுர மயமாயிருக்கும்;
ரக்ஷகரானவர்கள் ஓர் அடி தாழ நிற்கில் பாம்பின் வாயிலே விழும்படியாயிற்று இவன்தன் படிகள் இருப்பன;
அப்படியானால் வயிறு எரியாதே செய்வது என் இவர்கள்; அக்காலத்திலே உணர்ந்து நோக்கப் பெற்றிலர்கள்,
அவ்விழாவுக்கு இன்று இருந்து நோவு படுகிறார்கள்.
அவர்களிலே ஒருவரான இவர் சொல்லுகிறபடியன்றோ இது, ‘தெரிந்துணர்வு’ என்ற திருப்பாசுரம்;

தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன் வாளா
இருந்தொழிந்தேன் கீழ்நாள்க ளெல்லாம் – கரந்துருவின்
அம்மானை அந்நான்று பின்தொடர்ந்த ஆழியங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து.-என்பது, பெரிய திருவந்தாதி. 82.

புலையாம் பிறவிபிறந் தென்செய்தோம் பொன்னி பொன் கொழிக்கும்
அலையார் திருவரங்கத் தெம்பிரான் நம தன்னையொடும்
தொலையாத கானம் கடந்த அந்நாள் தடந்தோறும் புல்லாய்ச்
சிலையாய்க் கிடந்திலமே நெஞ்சமே கழல் தீண்டுகைக்கே.-என்னும் திருப்பாசுரம் ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.

மாயாமிருகத்தின் பின்னே சென்று இளைத்து மீண்டு எழுந்தருளின போது அடிசுட்டுப் பொறுக்கமாட்டாமையாலே
தழைகளை முறித்துப்பொகட்டு அவற்றிலே நின்று ஆறி எழுந்தருளினார் என்று கேட்டு,
‘பாவியேன்! அன்று உதவி அத்திருவடிகளிலே என் தலையை மடுக்கப்பெற்றிலேன்,
ஒரு பயனுமின்றியே கழிந்தனவேயன்றோ அநாதி காலம் எல்லாம் என்று நொந்தாரன்றோ.
இப்படியன்றோ கழிந்தனவற்றிற்கு இவர்கள் வயிறு எரியும்படி.
‘திருநீல மணியார் மேனியோடு என்மனம் சூழ வருவாரே’ என்றும் வயிறு பிடித்தாரன்றோ இவர்.
“தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல மணியார் மேனியோடு என்மனம் சூழ வருவாரே.”- என்பது, திருவாய். 8. 3 : 6.

சங்கர மங்கலம் -பெண்மணி திரு வல்ல வாழ் வந்து -ஏகாதசி விரதம் -இருந்து த்வாதசி -சேவிக்க வருவாளாம்
-தொலகாசுரன் தடுக்க -பிரமச்சாரி -வேஷம் கொண்டு அழித்து-மூன்று கூறாக்கி
தலைப்பகுதி – -தலையாறு -இடைப்பகுதி -கால் பகுதி -வெவேற இடங்களில் போக -இவன்
அங்கி அவிழ -பெண் மணி -திருமார்பில் பிராட்டியைக் கண்டு -திருமார்பை மறைத்து –
திரு இருப்பைக் காட்ட -திரு வல்ல வாழ் -திரு வாழ் மார்பன் –திருவல்லா –என்றே இங்கே பழக்கம்

‘இவர் அவனுடைய அவதாரங்களையும் உலகைப்படைத்தல் முதலான வியாபாரங்களையும்,
“தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர் நடை நடந்த” – பெரியாழ்வார் திருமொழி, 1. 7 : 11.-என்கிறபடியே,
அடியார்களை வாழ்விக்கவும், பகைவர்களை அழியச் செய்யவும் அடியிட்டு அப்படி வளர்ந்தருளின
கிருஷ்ணாவதாரத்தையும் அநுசந்தித்து மிகவும் சிதிலரான இவர்,–தரித்து நின்று உன்னை அநுசந்திக்க
வல்லேனாம்படி செய்தருள வேணும் என்று அவனைச் சரணம் புகுகிறார்” என்று ஆழ்வான் பணிக்கும். -1–தரித்து நின்று மானஸ அனுபவம்
அன்றியே, ‘பிரிந்திருக்கும் சமயத்திலே உன் குணங்கள் மனத்திலே நிலைபெற்று மிகவும் நலிய,
அதனாலே நெருக்குண்டு நோவுபடுகை தவிர்ந்து, உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக்கிட்டி
அநுபவிக்கும்படி செய்தருள வேண்டுமென்று அவனைக் குறித்து அருளிச்செய்கிறார்’ என்று எம்பார் அருளிச்செய்வர்.–2-காயிக அனுபவம்
அங்ஙனம் அன்றிக்கே, “சர்வேச்வரன் கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்துத் திருவாய்ப்பாடியிலே வளர்ந்தருளாநின்றான்’ என்று கேட்டு,
‘அங்கே மநோரதித்தபடியே நாம் கலந்து பரிமாறலாம்’ என்று தெற்குத் திருவாசலாலே சென்று புக,
‘இப்போது இங்ஙனே வடக்குத் திருவாசலாலே புறப்பட்டுத் தன்னுடைச் சோதியேற எழுந்தருளினான்’ என்று
கேட்டு விழுந்து கிடந்து கூப்பிடுகிறார்” என்று பிள்ளான் பணிப்பர் என்று அருளிச்செய்வர்.3-பாவியேன் பல்லில் பட்டுத் தெறிப்பதே -வருத்தம் —

“நின்று நின்று நினைகின்றேன்” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து எழுகின்றது ஆழ்வான் நிர்வாகம்.
எம்பார் நிர்வாகம், “என் கண்கட்குத் திண்கொள்ள” என்பது போன்றவைகளிலே நோக்காக எழுந்தது.
“செய்துபோன மாயங்களும்” என்றதிலே நோக்கு, பிள்ளான் நிர்வாகம்.

கோ கோபிரளர் மக ரிஷிகள் –வாசு தேவர் மூலவர் -சேவை ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் உத்சவ சேவை –
இருந்த இடமே சேவை பெற்றார்களே -மன்னார்குடி சேவை

————————————————————————————

பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1-

அவதாராதி சேஷ்டிதங்கள் சங்க்ரஹேண அருளிச் செய்கிறார்
பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்-பிரகாரங்கள் -இரண்டாவது ஆறு மோசம் மோகித்த –
அஜாயமானோ பஹூதா விஜாயதே –அவனே தோன்றி -அஜோபிசன் -பிறப்பிலி -நாராயணாத் பிரம்மா ஜாயதே
இதர சஜாதீயனாய்ப் பிறந்த -அஜகத் ஸ்வ ஸ்வபாவனாய் -பெருமைகளை குறைக்காமல் -ஆஸ்ரித சம்ரஷண அர்த்தம்
அகர்ம வச்யன் -இச்சை அடியாக -கைக் கீழ் விரோதி கால் கீழ் விரோதி -சகடாசுரன் -ஆஸ்ரிதர் அபிமானித்த த்ரவ்யமே தாரகம்
60 வயசில் -படையை வகுத்து வ்யூஹம் –
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்-விஜய உபாய பிரகாரங்கள் காட்டி -அவதார கார்யம் சமைந்து மண்ணின் பாரம் குறைத்து
தன்னுடைச் சோதி எழுந்த மாயங்கள் -தனித்து இருந்தே பழக்கம் இல்லாதவன் -தனியாக போக
பெருமாள் புல் வாசி இல்லாமல் அனைத்துக்கும் கூட்டிச் சென்றாரே –தாருகன் இடம் செய்தி சொல்லி விட்டு -தனித்துப் போன மாயம் –
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்-மர்மமான ஹிருதாயப் பிரவேசம் புக்கு –
ஆத்மாவை ஷணம் தோறும் த்ரவ்யம் ஆக்கி -உண்கின்ற க்ரஹிசியா நிற்கும்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?-சுட்டுப் பொருள் நித்ய சந்நிஹிதன் -தேஜஸ் உடையவன் -வானைப் போலே அளவிடமுடியாத
ஸ்வபாவங்களை சிதிலம் ஆகாமல் அனுபவிக்கும் படி -உன்னை என்று சேர்வது

பிறந்த விதமும் வளர்ந்த விதமும் மஹாபாரதயுத்தத்திலே அணிகளை வகுத்துப் பாண்டவர்கட்குப் பல திறங்களையும் காட்டிக்
காரியங்களைச் செய்து தன்னுடைச்சோதிக்கு எழுந்தருளிய ஆச்சரியமான காரியங்களும் மார்பினுள்ளே நுழைந்து என்னுடைய
உயிரை உருக்கி நின்று நின்று உண்கின்றன; இந்தச் சிறந்த வான் சுடரே! உன்னையடைவது என்றுகொல்?
கைசெய்து-அணி வகுத்து. காட்டியிட்டு: ஒருசொல், ஆறும் ஆறும் மாயங்களும் புக்கு நின்று நின்று உருக்கி உண்கின்ற என்க.
நின்று நின்று: அடுக்குத்தொடர். உண்கின்ற: முற்று. உண்கின்ற சுடரே என எச்சமாகக் கோடலுமாம்.
இத்திருவாய்மொழி ஆசிரியத்துறை.

இத்திருவாய்மொழியில் சொல்லப்படுகின்ற அர்த்தத்தைச் சுருக்கமாக அருளிச்செய்யா நின்று கொண்டு;
உன்னுடைய அவதாரம் முதலானவைகள் என்னை மர்மத்திலே தொட்டு நைவிக்கின்றன.
இந்த நையுந்தன்மை நீங்கி உன்னைத் தரித்து நின்று நான் அநுசந்திப்பது எப்போது? என்கிறார்.

பிறந்தவாறும் –
தாய் தந்தையர்கட்குக் காற்கட்டு அறும்படி யன்றோ பிறந்தது. -பாசம் அறுத்து —
தன்னைப் பெற்றவர்களுடைய பந்தத்தை அறுத்துக்கொண்டு வந்து பிறப்பாரும் உளரோ.
‘இவன் அன்றோ நமக்குக் காற்கட்டு ஆனான்’ என்றிருந்தார்கள் அவர்கள்;
அது பொறுக்கமாட்டாமல், ‘உங்களுடைய கட்டு நான் பொறுக்கமாட்டேன்’ என்று விட்டான்.
தந்தை காலில் விலங்கு அற அன்றோ வந்து தோன்றிற்று,-பெரிய திருமொழி 8. 5 : 1.-
பிறக்கிற போதே தாய் தந்தையர்கள் காலில் கிரந்தியை அறுத்துக்கொண்டு காணும் பிறந்தது.
நானும் பிறந்து அர்ஜுனா நீயும் பிறக்க வேண்டுமோ –
பிறந்தவாறும் –
பிள்ளாய்! பிறக்கிறபோதும் ஒரு விளக்கு எரிந்தால் ஆகாதோ, தானே விளக்காக அன்றோ பிறந்தது.
ஆயர் குலத்தினில் தோன்று மணி விளக்கன்றோ.
பிறந்தவாறும்-
கர்மங்கட்குக் கட்டுப்படாதவனான தான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவரோடு ஒக்கப் பிறப்பது,
பிறந்தால் அடியார்களைப் பாதுகாத்தலே தனக்குப் பிரயோஜனமாக இருப்பது,
அவர்கள் ஆபத்துப் படுங்காலமே தனக்குப் பிறக்கைக்கும் காலமாவது,
பிறவா நின்றால் தன் ஐச்வர்யத்தில் ஒன்றும் குறையாமற்பிறப்பது,
பிரகிருதி சம்பந்தமில்லாத திருமேனியை இதர சஜாதீயமாக்கா நிற்பது,
தன் பிறப்பை அநுசந்தித்தாருடைய பிறவிகள் போகும்படியாக இருப்பது, இவையெல்லாவற்றையும் நினைக்கிறது. –

‘நமக்காக இவர்கள் பிணைபட்டுச் சிறையிருக்கும்படி இவர்களுக்கு இங்ஙனே பிறப்பதே!’ என்று
ஈடுபடா நிற்பனவான படிகளையெல்லாம் நினைக்கிறது.
ஜன்மம் கர்மம் எனக்கே திவ்யமாக உள்ளம் உருகும் படி உள்ளதே -சிலர் தான் உண்மை அறிவார்
-அறிந்தார் ஜன்மம் அதே சரீரத்திலே போகும் –
நியாய சாஸ்திரம் தலை குனியும் -எதோ உபாசனம் ததோ பலம் பொய்யானதே –
பிறந்தார் பால் குடித்தார் நினைத்தால் பிறக்காமல் பால் குடிக்க வேண்டாமல் போவதே –
அவதார ரகசியம் நான்கு ஸ்லோகங்கள் -ஆறு விஷயங்கள் -1-மெய் 2-பெருமைகள் குறையாமல் -3-சுத்த சத்வ மயம்
4-இச்சையால் பிறக்கிறான் -5- சாது ரஷனம் -தர்ம சம்ச்தாபனம் -6-துஷ்ட நிக்ரகம் –

பிறந்தவாறும் – “ஆவிர்பூதம்” – தோன்றுதல் என்றதனைக்கொண்டு, தோன்றினவாறும் என்னாதொழிவான் என்? என்னில்,
சம்சாரிகள் பத்து மாதங்கள் கருவிலே தங்கியிருப்பார்களேயாகில்
“பிறகு பன்னிரண்டாவது மாதமான சித்திரை மாதத்தில் நவமிதிதியில்” என்கிறபடியே,
பன்னிரண்டு மாதங்கள் கர்ப்பத்திலே தங்கியிருக்கையாலும்,
“ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ”என்பது, ஸ்ரீராமா.பால. 18 : 8.
“பன்னிரு திங்கள் வயிற்றில்கொண்ட வப்பாங்கினால்-வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்
என் இளங்கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்”-என்பது, பெரியாழ்வார் திருமொழி. 3. 2 : 8.
ஒருத்தி மகனாய் பிறந்து -வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும்

அவளுக்கு முலை சுரக்கையாலும், முலை பெறாவிடில் இவன் தான் நோவு படுகையாலும்,
தன்னைக் கட்டவும் அடிக்கவுமாம்படி எளியனாக்கி வைக்கையாலும் பிறந்தவாறும் என்கிறார்.
பகல் கண்ட குழியிலே இரவிலே விழுவாரைப் போன்று, பருவம் முற்றினவளவிலே “எத்திறம்” என்று மோஹித்து விழக்கடவ இவர்,
அதற்கும் அவ்வருகே சென்று இழிகிறாரன்றோ, கலக்கம் இருக்கிறபடி.
‘எத்திறம்’ என்று அங்கே ஆறு மாதங்களும், ‘பிறந்தவாறும்’ என்று இங்கே ஆறு மாதங்களும் மோஹித்துக் கிடந்தார் என்று பிரசித்தமன்றோ!
ஸ்ரீபரதாழ்வான் ஸ்ரீராமபிரானுடைய பிரிவாலே மோஹித்துத் தறைப்பட்டுக் கிடக்க,
தாய்மார் அடங்கலும் சுற்றும் பார்த்து நிற்க, “சத்ருக்நாழ்வான் செயலற்று நின்றான்” என்கிறபடியே,
ஸ்ரீ சத்துருக்நாழ்வான் கிட்டவுங்கூடப் பயப்பட்டுச் செயலற்றவனாய் நின்றானன்றோ

மோஹித்துக் கிடந்த தசையில் இவரை நோக்கினார் இன்னார் என்பதனைத்
திருஷ்டாந்தத்தோடு அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீபரதாழ்வான்’ என்று தொடங்கி.

“ததவஸ்தம் து பரதம் ஸத்ருக்ந: அநந்தரஸ்தித:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 87 : 4.

அப்படியே, நல்லார் நவில்-திருவிருத்தம்.-குருகூரன்றோ,
உலகத்தில் அறிவுடையாரங்கடலும் திரண்டு இவர் படிகளைக்கண்டு அறிவு கெடும்படி அன்றோ இவர் கலங்கிக் கிடந்த கிடை.

வளர்ந்தவாறும் –
வளர்ந்தபடியை அநுசந்தித்தால் பிறந்தவாற்றிலே கால்வாங்கி இளைப்பாற வேண்டும்படி யன்றோ இருப்பது.
பிறக்கிற போது சிறைக்கூடத்திலே தான் பிறந்தால், வளருகிறபோது நாட்டாரைப் போன்று வளரத்தான் பெற்றதோ.
விபவத்தில் ஓர் அந்தர்யாமி பட்டது அன்றோ பட்டான் –
வளர்ந்தவாறும் –
பூதனை முதலாயினோர்கள் உயிர்கள் மாளவும், யசோதை முதலானவர்களுடைய சிநேகம் வளரவுமன்றோ வளர்ந்தது.
“தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர் நடை நடந்து” –பெரியாழ்வார் திருமொழி,-1. 7 : 11.-என்கிறபடியே,
மிடறுமெழு மெழுத்தோடே வெண்ணெய் விழுங்கிப் போய்ப் படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரிய அன்றோ அவர்கள் உகந்திருப்பது.
வளர்ந்தவாறும் –
தீம்புகளாலே தாய்க்குச் சிநேகம் வளருமாற்றினைக் காட்டுகிறார் ‘மிடறு மெழு’ என்று தொடங்கி.

மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப்போய்ப்
படிறு பலசெய்து இப்பாடி யெங்கும் திரியாமே
கடிறு பலதிரி கானதரிடைக் கன்றின்பின்
இடற என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே!-என்பது, பெரியாழ்வார் திருமொழி.

இவன் கால் நெடுக நெடுக, பகைவர் உடலும் மாண்டது, அநுகூலர் உடலும் மாண்டது;
பொட்டத் துற்றி’ –பெரியாழ்வார் திருமொழி, 3. 5 : 1.-என்றும்,
‘வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு’ -பெரியாழ்வார் திருமொழி, 2. 9 : 1.-என்றும் அநுகூலர் உடல் அன்றோ மாண்டது.
இப்படிப் பகைவர் மண்ணுண்ணவும், தான் நெய்யுண்ணவும், அநுகூலர் கண்ணுண்ணவுமன்றோ-சேவிக்க – வளர்ந்தருளிற்று.-உடல் -ஐஸ்வர்யம் –

பெரிய பாரதம் – ‘மஹா பாரதம்’ என்றன்றோ பிரசித்தி.
கைசெய்து –
கையும் அணியுமாக வகுக்கை தொடக்கமான பூசல் உள்ளனவற்றையெல்லாம் நினைக்கிறது.
ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டு –
அறிவு பிறப்பதற்கு முன்பு சத்தையே பகைவர் அழிவதற்கு உடலாயிற்று,
இருள் ஒளிகள் ஓர் இடத்தில் சேர்ந்திருத்தல் இல்லை அன்றோ; -சஹ அவஸ்தானம் கிடையாதே –
பருவம் நிரம்பின பின்பு அநுகூலர்க்குக் கையாளான படி.
‘திறங்கள்’ என்றது, தூது சென்றும், தேரை ஓட்டியும், ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுத்தும், பகலை இரவாக்கியும்,
எதிர்கள் உயிர்நிலைகளைக் காட்டிக் கொடுக்கை தொடக்கமானவற்றையெல்லாம் சொல்லுகிறது.
செய்து –
இப்படிச் செய்து. போன மாயங்களும் – அடியார்களைக் காப்பாற்றுவதற்காக வந்து பிறந்து அவர்களுடைய
ஆபத்துக்களைப் போக்கி உபகரித்தால், ‘இது நமக்காகச் செய்தானன்றோ’ என்று இருக்கையன்றிக்கே,

“க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந: மோஹியித்வா ஜகத்ஸர்வம் கத:ஸ்வம் ஸ்தாநமுத்தமம்”-என்பது, பாரதம்.

இவன் தன்னோடே எதிரிடும் படியான சம்சாரத்திலே இராமல், ஓரவசரத்திலே இங்கு நின்றும் போன ஆச்சரியமான செயல்களும். என்றது,
“நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணன், பூமியின் பாரத்தை நீக்கி உலகத்தையெல்லாம் மோஹிக்கச் செய்து
மேலான இடமான தன் பரமபதத்தை அடைந்தார்” என்று, வந்து திருவவதாரம் செய்து,
அநுகூலர் காரியங்கள் அடையத் தலைக்கட்டி, பிரதிகூலரையடைய முட்கோலுக்கு இரையாக்கி,
அனுகூலரையடையக் கண்களாலே விழவிட்டு, இரு திறத்தாரையும் நோவுபடுத்தி, இங்கு நின்றும் போய்த் தப்பப் பெறுவதே! என்கிறது.
“ஸ்வம் ஸ்தாநம் உத்தமம் – தன்னுடைய உத்தமமான ஸ்தானத்தை” என்கிறபடியே,
இங்குள்ளாரடங்கலும் எதிரம்பு கோக்குமாறு போலேயன்றோ அங்குள்ளாரடங்கலும் எதிர் ஏற்கப் போனபடி.
நிறந்தனூடு புக்கு-
தோல்புரையே போமதன்று, மர்மத்திலே நலிகிறபடி.
எனது ஆவியை –
அல்லாதார் அடங்கலும் இவற்றைக் கேட்டு உண்டு உடுத்துக் காலம் போக்கித் திரியா நின்றார்களன்றோ.
ஆவியை நின்றுநின்று உருக்கி-
வெட்ட முடியாததும் எரிக்க முடியாததுமாயிருக்கிற ஆத்மாவை இடைவிடாதே நையும்படி செய்யாநின்ற.
நின்று நின்று உருக்கி உண்கின்ற –
அவை -அவன் சேஷ்டிதங்கள் -ஒருகால் போகச் செய்தேயும், இவை உருவ நின்று நலியாநின்றன.
இச்சிறந்த வான்சுடரே!
தகுதியாய் அளவிட முடியாததான இவ்வழகையுடையவனே!
அவன் பிறக்கப் பிறக்கவாயிற்று ஒளி மிக்குப் பொலிவது.
இறந்த காலமாயிருக்கச் செய்தேயும், இவர்க்குச் சமகாலம் போலேயும் கண்களுக்கு விஷயமாயிருத்தலின், ‘இச்சிறந்த’ என்று சுட்டுகிறார்.
வான்சுடர் இங்கே வந்த பின்பு –சிறந்த வான்சுடரே-சிறந்தது என்றுமாம்.
பிறந்தவாற்றாலும், வளர்ந்தவாற்றாலும், பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களாலும்,
நிறந்தன் ஊடு புக்கு எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற இச்சிறந்த வான்சுடரே! என்று,
அவன் தனக்கு விசேடணமாக்குதல். உருக்கி உண்கின்ற என்று, குண பரமாக்குதல்; என்றது,
‘பிறந்தவாறு’ என்று தொடங்கி, மாயங்களும் உருக்கி உண்கின்றன என்றபடி. -இதுவே நிர்வஹித்துப் போருமது.
உன்னை என்றுகொல் சேர்வதுவே –
நான் தரித்து நின்று அநுசந்திக்க வல்லேனாம்படி செய்தருள வேண்டும்.என்கிறார். -மானஸ -கூரத் ஆழ்வான் நிர்வாகம் –
அன்றிக்கே, சேருகையாவது இரண்டு தலையும் சேருகையாய், நான் அநுசந்தித்து நைகின்றவனாதல் தவிர்ந்து
உன்னைப் பிரியாதபடி கிட்டப்பெறுவது என்று? என்கிறாராகவுமாம்.–காயிக -எம்பார் நிர்வாகம் –

—————————————————————————-

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்ன லாவன அல்ல என்னைஉன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனைஎன்று தலைப்பெய்வனே?–5-10-2-

அபிமத விஷயத்தில் உன் வியாபாரங்கள் என்னை சிதிலை யாக்கின
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்-வது -நப்பின்னை -வார்த்தை காதில் பிறந்த உடனே மேல் விழுந்து -கொன்றது
அசூர ஆவிஷ்டமான கிருத்ரீமா -கேசி -கோபிமார் அஞ்சாத படி வாய் பிளந்தது
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்-மது பிரவஹிக்கும் குழல் -குரவை கூத்து ராசக்ரீடை இனிய வியாபாரங்கள்
அது இது உது என்ன லாவன அல்ல என்னைஉன் செய்கை நைவிக்கும்-நப்பின்னை -பரிணமயம்-இது கேசி நிரசனம் –
அது -ராசக்ரீடை உது -விசேஷித்து சொல்லலாவது இல்லை –
அனைத்தும் உருக்குமே -அதி பிரவணன் ஆனேன் -நிரதிசய போக்யன்-உன் செயல்கள் என்னை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனைஎன்று தலைப்பெய்வனே?-பிரதான காரண பூதன் -உன்னை என்று கிட்டுவேன்
அழிந்த ஜகத்தை உண்டாக்கிய நீ சிதிலையான அடியேனை இல்லை பெறச் செய்வது பெரிய செயலோ

கல்யாண வார்த்தைகள் பிறந்த அளவிலே இடபங்களின்மேல் வீழ்ந்து அவற்றைக் கொன்றதும், வஞ்சனை பொருந்திய கேசி என்பவனுடைய
வாயினைப் பிளந்ததும், தேன் சிந்துகிற கூந்தலையுடைய பெண்களோடு குரவைக் கூத்தினைக் கோத்து ஆடிய குழகும், அது இது உது
என்னலாவன அல்ல; உன் செய்கைகள் என்னை நைவிக்கும்; பழமையான உலகங்கட்கெல்லாம் முதல்வனே! உன்னை என்று வந்து சேர்வேன்?
வதுவை-திருமணம். மாவினை என்பதில், இன்: சாரியை; ஐ: இரண்டனுருபு. மா-குதிரை. மதுவை என்பதில், ஐ: இடைச்சொல்.
குரவை-ஒருகூத்து விசேடம். குழகு-சாமர்த்தியம்.

ஏறு அடர்க்கை தொடக்கமான உன் செயல்கள் என்னை நைவிக்கின்றன;
நான் தரித்து நின்று அநுபவிக்கும்படி செய்ய வேண்டும் என்கிறார்.
இனி அல்லாத அவதாரங்களையும் ஆராய்ந்தால் இத்தன்மையனவாய் இருக்குமன்றோ,
ஆகையாலே அவ்வருகு போக மாட்டார், அடியில் இழிய மாட்டார், இனி வளர்ந்த வாற்றிலே ஏறப் போமித்தனை யன்றோ.
“சீராற் பிறந்து” என்ற திருப்பாசுரம் அநுசந்தேயம்.

சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாகாக்கால் பேராளா! – மார்பாரப்
புல்கிநீ உண்டுமிழ்ந்த பூமிநீர் ஏற்பரிதே? சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து.-என்பது, பெரிய திருவந்தாதி, 16.

சீரால் பிறந்து -சீர்மை உடன் பிறந்து -உபலானத்துடன் வளராமல் –
காச்யபர் -அதிதி -நீல நிறத்துடன் -நெடும் தொகை -ஆலமர் வித்தின் —
சக்கரவர்த்தி அஸ்வமேத யாகம் -பண்ணி -சிநேக உத்தரமாக -வா போகு -என்று வளர்த்தால் போலே இல்லாமல் –
பேர் வாமனன் -ஸ்ரீ யபதி இல்லாமல் சிறுமைக்கு வாசகம் -நெடும் தகை பேர் போனதே –
மார்பாலே புல்கி -நீர் அளந்த நீர் உமிழ்ந்த -இரந்து –கொடுத்து கை நீண்ட உன் கையால் –
பேராளா -ஜகத் ரஷனத்தில் பேர் அன்பு கொண்டவனே ஆராய்ந்து அறிவி -மோகித்தத்தால் அடியில் இழிய மாட்டார்
பிறந்தவாறு அவனே செய்தததால் இச்சாதீனம் . – இவரால் சொல்லலாவது இல்லை
இனி, அநுகூலர்க்குக் கண்டு பரிவதற்கும் விஷயமுள்ளது வளர்ந்தவாற்றிலே யன்றோ, அவ்வளர்ந்தவாறு தான் இருக்கிறபடி சொல்லுகிறார்.

வதுவை வார்த்தையுள் –
‘எருதுகள் ஏழனையும் கொன்றவர்க்கு இவளைக் கொடுக்கக்கடவோம்’ என்று பிறந்த பிரசித்தி. வதுவை-விவாகம்.
ஏறு பாய்ந்ததும்-
ஏறுகளின்மேல் விழுந்த படியையும். இவர்க்கு யமன் வாயிலே விழுந்தாற்போலேயாயிற்று இருக்கிறது,
பொய்கையிலே பாய்ந்தாற்போலே இரா நின்றதாயிற்று
அவனுக்கு. கருமாரி பாய்ந்தால் ஆகாதோ என்னும்படி அன்றோ -காமாஷி ஆலயம் சங்கு த்வயம் மத்யம் விழுகை -அவளுடைய இன்பம்.
மாய மாவினை வாய் பிளந்தும்-
கம்சனாலே தூண்டப்பெற்றதாய் வஞ்சனை பொருந்திய வேடம் கொண்டு வந்ததாயிற்று.
வஞ்சனையாகக் குதிரை வடிவங்கொண்டு வாயினை அங்காந்து கொண்டு ஓர் அசுரன் வந்து தோன்ற,
சிறு பிள்ளைகள் துவாரங்கண்ட இடத்தில் கை நீட்டும் வாசனையாலே அதன் வாயிலே கையை நீட்டினான்.
முன்பு கண்டறியாதது ஒன்றைக் கண்ட காட்சியாலே கை விம்மிற்று, பூரித்தவாறே இரண்டு கூறாய் விழுந்தான்.
ஸ்ரீநாரத பகவான் “உலகம் அழிந்தது” என்று வந்து விழுந்தாற்போலே இவர்க்கு இப்போது இருக்கிறது.
“நன்கு திறந்த வாயையுடையவனும் மஹா பயங்கரமானவனுமான அந்த அசுரன் இடியினாலே பிளக்கப்பட்ட மரம்
போலே கிருஷ்ணனுடைய திருக்கையாலே இரண்டு கூறு செய்யப்பட்டவனாய்க் கீழே விழுந்தான்” என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம்.

“வ்யாதிதாஸ்ய: மஹாரௌத்ர: ஸ: அஸுர: கிருஷ்ணபாஹுநா
நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:”-என்பது ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 16 : 7.
இத்தால்,-கேசி -தானே இறுதி விரோதி – ஸ்ரீ பிருந்தாவனத்துக்கு வழி இசங்கும்படி பெண்களுக்கு வன்னியம் அறுத்துக் கொடுத்தபடி.

மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்-
தேன் பெருக்கு எடுக்கின்ற கூந்தலையுடைய பெண்களோடு குரவையின் கோப்பிலே தன்னையும் ஒருவனாக்கித் தொடுத்தபடி.
அவர்கள் நினைவினைக் குலைத்து அபிமானம் நீங்கினவர்களாகச் செய்து, அவர்களோடு ஒக்கத் தான் கலந்தான்.
அதாவது, வேற்றாள் என்ன ஒண்ணாதபடி இவர்களிலே ஒருவன் என்னலாம்படி புக்கு நின்றானாயிற்று என்றபடி.
மதுவை வார்குழலார் என்றது, மதுவார்குழலார் என்றபடி. சொற்பாடு.
அது இது உது என்னலாவன அல்ல –
அதுவாகவுமாம், இதுவாகவுமாம், உதுவாகவுமாம், எனக்கு இதில் ஒரு நிர்ப்பந்தம் இல்லை.
என்னை உன்செய்கை நைவிக்கும் –
அச்செயலாகவுமாம், இச்செயலாகவுமாம், உச்செயலாகவுமாம், அவற்றில் எனக்கு ஒரு தாத்பர்யம் இல்லை;
உன்னுடைய செயல்களாகையும், நானாகையுமே எனக்கு நோவு படுகைக்கு வேண்டுவது.
“இத்தால் சொல்லிற்றாயிற்று, இப்பாசுரத்தில் மூன்று பொருள்கள் சொல்லப்படுகின்றன.
அவை யாவன: அனுகூல சம்ஸ்லேஷமும், பிரதிகூல நிரசனமும், மத்தியஸ்த ரக்ஷணமும்;
இவற்றையே, ‘அது இது உது’ என்கிறது” என்று பிள்ளான் பணிக்கும்.
முதுவையம் முதல்வா –
பழையதான பூமிக்குக் காரணமானவனே! என்னுதல்;
பூமிக்குப் பழைய காரணமானவனே! என்னுதல்.
இவர் தம்மதும் அவ்வளவாகாதேதான். பிரளயம் கொண்ட உலகம் போலே யாகாதே இவரும் அழிந்தபடி.
இத்தோடு ஒக்க இவரையும் அடிதொட்டும் உண்டாக்க வேண்டி இருக்கிறபடி.
உன்னை என்று தலைப்பெய்வனே –
உன்னை நினைத்து நிலைகுலைந்தவனாகாதே தரித்து நின்று அநுசந்திக்கும்படி செய்ய வேண்டும்.
அன்றிக்கே, உன்னை வந்து கிட்டப்பெறுவது என்றோ என்றுமாம். தலைப்பெய்கை-கிட்டுகை–

இத்திருவாய்மொழியில், கிட்டுகைக்கு வாசகங்களான சொற்களெல்லாம், ஆழ்வான் நிர்வாஹத்திலே மானசாநுசந்தான பரங்கள் என்றும்
எம்பார் நிர்வாஹத்திலே சரீரத்தாலே கிட்டுதல் என்றும் கொள்க.

—————————————————————————————————

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

நவ நீத சௌர்ய-வ்ருத்தாந்தம் -வந்தே பிருந்தாவனம் சரம் -168 மைல் விரஜா -வல்லவீ ஜன வல்லபன் ஜெயந்தி சாம்பவி தாம –
பிறந்த அன்றே -வைஜயந்தீ விபூஷணம் -ஹர்த்தும் கும்பே விநிதிகர ஸ்வாது ஹையங்கவீனம் புத்துருக்கும் வெண்ணெய்-
இளம் பச்சை நிறம் நீர்த்து -த்ருஷ்ட்வா தாம –தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான் -வாய் வாய் -அளவும் முடியாதே -கால் கால் -ஓடவும் முடியாமல்
நாப கச்சயன்-வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை -வெண்ணெய் யையும் பெண்களையும் ஒழித்து விடுவார்கள் மித்யா கோபத்துடன்
தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்-
பால சேஷ்டிதங்கள் என் நெஞ்சை உருகப் பண்ணா நிற்கின்றன -மதுரகவி ஆழ்வாரையும் கண்ணி –என் அப்பன் சொல்ல வைத்ததே
பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்-யசோதை போலே அலங்கரித்து
-பித்தர் என பிறர் எச நின்றாயே -வேற்று முலையை அறிந்து உண்ட தெளிவும் -பிள்ளை தெரியாமல் தேற்றம் தெரியாமல் -கேச பாசம் இருவருக்கும் –
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்-சகடாசுரன் -அசுரா விஷ்டமாய் -சாடு -சக்கரம்
-சிவந்த பாதம் ஒன்றால் -உதைத்ததா சிவந்ததா -சிவந்தது உதைத்ததா -பால பராக்ரமும் –
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்-அமுது செய்த வார்த்தை பிறந்த அளவிலே
-நெய் வைத்தேனே காணோமே -சொன்னதும்
மூடன் சத்திரம் பெருக்குவான் வார்த்தை கேட்டதும் என்னால் முடியாது என்றவன் போலே
களவு காண வேண்டும் என்றே இருந்தானே -பரிவாலே கையிலே கோல் கொள்ள -பயப்படுத்த தான் -அடிக்க இல்லை –
வெண்ணெய் பிள்ளைக்கு நிறைய உண்டால் என்ன ஆகுமோ என்கிற பரிவு –
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனை கோல் கொண்டு பயப்படுத்த
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே-பீதனாய் கொண்டு ஒடுங்க -வெண்ணெய் உண்ட பிள்ளை –
திருக்கால் வெளியில் தொங்க யமுனை தொட பார்த்து தூய யமுனை ஆனதே -ததிபாண்டன் கஷ்டப்பட்டு உள்ளே வைத்தானே
தாமரைக் கண்கள் நீர் மல்க -முன் காலத்தில் செய்து போனவை இன்று ஆழ்வார் கண் முன் வந்து நையுமே
300 தேவமான வருஷம் கழித்து தானே நம்மாழ்வார் -யுக சந்தி நடுவில் உண்டே –

பூக்கள் வைத்த கூந்தலையுடைய பூதனையினது பாலை உண்ட பிள்ளைத்தனத்திலே தெளிவும், வஞ்சனையினால் ஒப்பற்றவனான
சகடாசுரன் இடம் விட்டுப் பெயர்ந்து சென்று அழியும்படி சிவந்த ஒரு திருவடியினால் உதைத்துத் தள்ளிய நின் சிறிய வீரமும்,
நெய்யை உண்ட வார்த்தை பிறந்தவளவிலே தாயானவள் கோலினைக் கையிலேஎடுக்க நீ உன் தாமரை போன்ற திருக்கண்களில்
நீர் மிகும்படி அச்சங்கொண்டு நின்ற நிலையும் வந்து என்னுடைய மனத்தினை உருக்காநின்றன.
“பெய்யும் பூங்குழல்” என்பதனை, “பிள்ளை”க்கு அடையாக்கலுமாம். சாடு பேர்ந்து இறச் செய்த சிறுச்சேவகம் என்க. சாடு-சகடம்.
கோல்கொள்ள கண்கள் நீர் மல்க நின்ற நிலை என்க. உருக்குங்கள்: கள், அசைநிலை.

நீ இளமைப் பருவத்தில் செய்த உன்னுடைய செயல்கள் என்னை நலியா நின்றன என்கிறார்.

பெய்யும் பூங்குழல் பேய்முலை உண்ட பிள்ளை-
பிரதிகூலருடைய பிராணன்களும் அடியார்கள் சம்பந்தமுடைய திரவியமுமே தாரகமாக வளர்ந்தான் என்று
‘வளர்ந்தவாறு’ என்று சொன்ன இடத்தை விவரிக்கிறது இங்கு.
பிள்ளையைத் திருமஞ்சனம் செய்து ஒப்பித்துக் கண்வளரப் பண்ணிக் கடக்க நின்றாள் யசோதைப் பிராட்டி,-அகாரம் கட்டி வைத்து ஆகாரம் கட்டப் போனாள் –
அவ்வளவிலே வந்து கிட்டினாள் பூதனை. இங்கு, ‘பெய்யும் பூங்குழல்’ என்பது, பிள்ளைக்கு அடைமொழி.
பெய்யும் பூங்குழலையுடைய பிள்ளை பேய் முலையுண்ட தேற்றம் என்று கூட்டுக.
அன்றிக்கே, ‘பெய்யும் பூங்குழல்’ என்பதனை, ‘பேய்’க்கு அடைமொழி யாக்கலுமாம்; என்றது,
‘பிள்ளை அனுங்க ஒண்ணாது’ என்று தாய்மார் எப்போதும் ஒப்பித்தபடியே இருப்பர்களாயிற்று,
இவளும் அப்படியே வந்தாளாயிற்று என்றபடி. பிணக் கோலமாக ஒப்பித்து வந்தாள் காணும் என்கிறார் என்றபடி.
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சியன்றோ. வைத்த பூக்களையுடைய மயிர் முடியையுடைய பேய்.
பிள்ளைத்தேற்றம் –
ஐஸ்வர்யமான ஞானம் இன்றிக்கே, ‘தாய் முலை’ என்றும், ‘வேற்று முலை’ என்றும் அறியும் தெளிவு.
மிகச் சிறிய இளமைப் பருவத்திலும் பிள்ளைகள் முலைவாசி அறிவர்கள் அன்றோ.
இவனும் ‘தாய்’ என்றே நினைத்து உண்டான் காணும். பால்யத்தில் தெளிவு இருக்கிறபடி. என்றது,
யசோதைப்பிராட்டி முலை கொடுக்கும்போது பிரீதியினாலே செய்யும் மழலைச்சொற்களை இவள் பக்கலிலே செய்தானாயிற்று.
‘பாதகர்’ என்று அறியவுமாம், அறியாதிருக்கவுமாம், பகைவர்கள் கிட்டினால் முடியக்கடவதான பொருளின் ஸ்வபாவம் இருக்கிறபடி.

பேர்ந்து –
அதற்கு மேலே
ஒர் சாடு இற –
தீமை செய்வதில் இதனோடு ஒப்பது இல்லை கண்டீர்.
‘பிரதி கூலம்’ என்று சங்கிக்கவும் ஒண்ணாது கண்டீர்.
பூதனையை, ‘இன்னாள்’ என்று ஆராய்கைக்காகிலும் விஷயம் உண்டு,
யசோதையைக் கண்டவாறே ‘இவள் யார்’ என்று ஆராய்ச்சிப்படுமன்றோ,
இது ரக்ஷகமாக வைத்தது கண்டீர். இற – ‘தளர்ந்தும் முறிந்தும்’ என்கிறபடியே முறிய.
செய்ய பாதம் –
சிவந்த திருவடிகள். என்னுடைய ஜீவனத்தைக்கொண்டு கண்டீர் விரோதியைப்போக்கிற்று என்கிறார்.
இவர்க்கு ஜீவனம் அடியிலே கல்பித் தன்றோ கிடப்பது.
ஒன்றால் –
‘இன்ன திருவடி’ என்று நியதி இல்லையன்றோ; கறுவிச் செய்கின்றான் அன்றே.
செய்த நின் சிறுச்சேவகமும் –
நீ சேவகம் செய்ய அடியிட்டபடியும். என்றது, அரச குமாரனாய்ப் பிறந்து, பருவம் நிரம்பி, ஆயுதப்பயிற்சி செய்து,
வசிஷ்டர் முதலியவர்களைப் பின்சென்று, விஸ்வாமித்திரர் முதலியோர் பக்கலிலே அத்திரங்களைப் பெற்றுப்
பின்பே யன்றோ தாடகை மாரீசன் சுபாகு முதலியவர்களைக் கொன்றது;
அவையெல்லாம் பருவம் நிரம்புவதற்கு முன்பே, வாயாலும் காலாலுமாயிருக்கிறபடி இங்கு. -முலை உண்டதும் சகடாசுர நிரசனமும்
வாயால் வலியார்க்குத் தாயாரும் வேண்டாவாயிற்றுக் காணும்.
இவனைப் போன்று கால் கடியார் இலர், ஆகையாலே யன்றோ காலிலே கொடிகட்டி வைக்கிறது.
“எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்து உதவி செய்தவனே!
சங்கு சக்கரம் கொடி தாமரைப்பூ மாவட்டி வச்சிரம் முதலிய ரேகைகளாலே அலங்கரிக்கப் பட்டிருக்கிற உன் இரண்டு திருவடித்தாமரைகளும்
காலிலே கொடி இருப்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘எல்லார் தலைகளிலும்’ என்று தொடங்கி.
“கதாபுந: ஸங்கரதாங்க கல்பகத்வஜ அரவிந்தாங்குஸ வஜ்ரலாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வச்சரணாம்புஜ த்வயம் மதீயமூர்தாநம் அலங்கரிஷ்யநி”-என்பது தோத்திர ரத்நம், 31.
என்தலையை எப்போது அலங்காரம் செய்யப்போகின்றன” என்பது ஸ்தோத்திர ரத்நம்.
பருப்பயத்து –திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் –
ஒண் மிதியில் — அப்போதும் அவுணன் உள்ளத்து எண்மதியும் கடந்து அண்டமீது போயிற்றதும் கடுகித் திருவடிகள் அன்றோ.

நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரைக்கண்கள் நீர் மல்க பையவே நிலையும் –
பருவம் நிரம்புவதற்கு முன்பு, தான் பிரதிகூலரை அஞ்சப் பண்ணுமாறு போலே காணும்
பருவம் நிரம்ப நிரம்ப அநுகூலர்க்குத் தான் அஞ்சும்படியும்.
நெய் உண் வார்த்தையுள்-
நெய்யைக் குறியிட்டுக் கடக்க வைத்துப் போய்ப் பின்னர் வந்து பார்த்தாள்
குறி அழிந்து கிடக்கையாலே ‘நெய் களவு போயிற்று’ என்றாள்;
அவ்வளவிலே பையாக்க விழிக்கத் தொடங்கினான்.
அன்னை கோல் கொள்ள –
‘மாதா அன்றோ எடுத்தாள்’ என்னும் வேறுபாடு அறிகின்றிலன்.
அவள் வார்த்தை அன்றோ ‘உந்தம் அடிகள் முனிவர் – வாரீர் பிள்ளாய், உங்கள் தமப்பனார் கேட்பராகில் உம்மைப் பொடிவர்.
உன்னை நான் என் கையிற்கோலால் நொந்திட மோதவும் கில்லேன்’ இதுதான் இருக்கிறபடி கண்டீரே;
இதனைக் கொண்டு இனி, நீர் ஒன்றும் செய்யாதபடி பண்ணிக் கொள்ளலாமன்றோ வல்லார்க்கு, நான் அதற்குச் சக்தை ஆகின்றிலேன்.

அன்னை கோல்கொண்டபின் இவள் கண்ணநீர் விழவிட்டது மயக்கத்தின் காரியம் என்கிறார் ‘மாதா அன்றோ’ என்று தொடங்கி. ஆயின், அவள்
அடியாளோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அவள் வார்த்தை’என்று தொடங்கி. “உந்தம் அடிகள்” என்ற பாசுரத்திற்குப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘வாரீர்’ என்று தொடங்கி.
உந்த மடிகள் முனிவர் உன்னை நான் என்கையில் கோலால்
நொந்திட மோதவுங் கில்லேன் நுங்கள்தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம் போதுஅங்கு நில்லேல் ஆழியங் கையனே வாராய்.-என்பது, பெரிய திருமொழி, 10. 5 : 8.

தாய் எடுத்த சிறுகோலுக்கு உளைந்து-
“தாயெடுத்த சிறுகோலுக்கு உளைந்தோடித் தயிருண்ட
வாய்துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரிவளையே”-என்பது, பெரிய திருமொழி, 8. 3 : 5.

ஓடி அன்றோ. ‘அச்சம் உறுத்துகிறபடி இது, பட்டாலும் நோவாது’ என்று அறிகின்றிலன்.
தமப்பனார் எடுத்தாராகிலும் சிறிது ஆறலாம் காணும், ஹிதத்தை விரும்புகிறவராகையாலே அது தக்க தன்றோ;
உகப்பே பின் செல்லக்கடவ இவள் பொடிந்தால் பின்னைப் பொறுக்கப் போகாதன்றோ.
இவள்தான் இப்படிச் செய்வான் என்? என்னில், சிநேகம் இன்றிக்கே ஒழிந்தால் இன்னார் என்று
உண்டோ கல்லும் தடியும் கொள்ளுகைக்கு.
நீ உன் தாமரைக்கண்கள் நீர் மல்க –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கிற நீ, அதற்கு மேலே கண்களும் கோட்புக்கால் பொறுக்கப்போமோ.
வன் தாம்புகளால் புடைக்க அலந்தான் அலர்ந்தான் -பட்டர் நஞ்சீயர் சம்வாதம் –
“பிராட்டிக்குத் தகுந்தவர் பெருமாள்” என்கிறபடியே அவனுக்குத் தகுதியான கண்கள் ஆதலின் ‘உன் தாமரைக் கண்கள்’ என்கிறது.
“துல்யஸில வயோவ்ருத்தாம் துல்யாபிஜனலக்ஷணாம்
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேய மஸிதேக்ஷணா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 15.

‘தக்க தாமரைக் கண்’ என்னக் கடவதன்றோ. பையவே நிலையும்-‘அடிக்க’ என்று அவள் கோலை எடுத்தாள்;
அவளைப் பார்த்து நின்று கண்ண நீரை விழ விடாநிற்பது, உடம்பு வெளுப்பதாய்ப் பேகணித்து நின்ற நிலையும்:
அன்றிக்கே அஞ்சி அவள் முகத்தைப் பார்த்து நிற்கச் செய்தே பின்பே கால் வாங்கக் கணிசித்து மாட்டாதொழிவது,
ஊன்ற நிற்க மாட்டாதொழிவதாய்த் துறையில் கால் பாவாதபடி பொய்க்க அடியிட்டுக்கொண்டு நின்ற நிலைகாணும் என்னுதல்.
இதுவே வெண்ணெய் க்கு ஆடும் பிள்ளை திருக் கோலம் -சதங்கை அழகியார் -இன்றும் எல்லார் கிருஹங்களிலும் சேவை சாதிக்கின்றானே
பைய – மெள்ள.
வந்து என் நெஞ்சை உருக்குங்களே –
அச் செயல்கள் என்னை நலியாநின்றன. உனக்காகில் தப்பியாகிலும் போகலாம்,
அதுவும் ஒண்ணாதபடி புக்க இடம் புக்கு வடிம்பிட்டு நலியாநின்றன.
பையவே வந்து என் நெஞ்சை உருக்கும் –
என்னை ஓர் அடி போக ஒட்டாதே காற் கட்டாநின்றன என்கிறார்.
நெஞ்சை உருக்கும்-இவர் நெஞ்சிலே அடியிட்டபடி. உருக்கும்-முதல் நெஞ்சினை உருக்க அடியிட்டது.

————————————————————————————-

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-

திரி புர வாசிகள் -அசுரர்களை -அந்தர்பேதம் செய்து -சாம தான பேத தண்டம் -பிரகாரம் என் ஆத்மாவை சிதிலம் ஆக்கி
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை -பொருந்தாத வேஷம் -வேத வேத்யன் –
ஏறிட்டுக் கொண்டு கிருத்ரிம வேஷம் -அழகாலும் -பேச்சாலும் –
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்-அங்குத்த அச்ய்ரர்கள் இடம் உள்புக்கு கலந்து உள்ளம் பேதம் செய்து -உபாச்யன் ருத்ரனைக் கொண்டே
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்-கங்கை நீர் -கங்காதரன் -விஷ்ணுராத்மா பகவதோ
-சரீரி சரீர ஆத்மபாவம் அப்ருதக் சித்த பிரகாரம் பிரமாண சித்தம்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.-நெஞ்சுக்குள்ளே -ஞான வ்ருத்திகள் தோறும் அவஹாகித்து உருக்கும்

வஞ்சனை பொருந்திய வேடத்தைக்கொண்டு சென்று திரிபுரத்திலே புகுந்த விதமும், அங்குள்ள அசுரர்களோடு கலந்து அவர்களுடைய
மனங்களை வேறுபடுத்தி உயிர்களைப் போக்கிய உபாயங்களும், கங்கையைத் தரித்த சடையையுடைய சிவபிரானும் உன் பக்கல் வேறு
அல்லாதபடி விளங்க நின்றதும், என் மனத்திற்குள்ளே புக்கு என் உயிரை உருக்கி முடிக்கின்றன.
கள்ள வேடம் – புத்த வேடம். அசுரர் – திரிபுரவாசிகள். உள்-ஞானம். புக்கவாறும் உபாயங்களும் விளங்க நின்றதும்
உள் குடைந்து உயிரை உருக்கி உண்ணும் என்க.

பௌத்தாவதாரச்செயல் மிகவும் என்னை நலியா நின்றது என்கிறார்.
அநுகூலர் விஷயத்தில் களவு சொல்லிற்று மேற்பாசுரத்தில்;
பிரதி கூலர் விஷயத்தில் களவு கண்டபடி சொல்லுகிறது இப்பாசுரத்தில்.

கள்ள வேடத்தைக் கொண்டு –
“திருடன் எப்படி ஊரை விட்டுத் துரத்தத் தகுந்தவனோ வேத பாஹ்யனாய்ப் பிரசித்தனாயிருப்பவனும் அப்படியே துரத்தத் தக்கவன்,
“யதாஹி சோர: ஸ ததாஹி புத்த: ததாஆகதம் நாஸ்திகம் அத்ரவித்தி தஸ்மாத்திய: சங்க்யதம: ப்ரஜாநாம் ந நாஸ்திகேந
ஸ்யாத்” என்பது, ஸ்ரீராமா. அயோத். 109 : 34.
இவ்வுலகில் நாஸ்திக்யமானது புத்தனுக்குச் சமானம் என்று அறிந்துகொள்ளவும்;
ஆகையினால், எவன் மனிதர்களுக்குள் அவைதிகன் என்று சந்தேகப்படத்தக்கவனோ
அந்த நாஸ்திகனோடு எதிர்முகமாக இருக்கக் கூடாது” என்கிறபடியே,
வஞ்சனை பொருந்திய வேடத்தைக் கொண்டு
“எல்லா வேதங்களாலும் அறியப்படுமவனும் நானே” என்று வேதப்பொருளாய் விளங்கும் சர்வேச்வரன்,
வேத அப்ராமாணிக வேடத்தைக் கொண்டு. கண்டார் மனங்கள் அடங்கலும் கொள்ளை கொள்ளும்படி
கறுத்து நெய்த்த வடிவும் வடிந்த காதும் இடுக்கின புத்தகமுமாய் நின்ற நிலையைக் காணும் நினைக்கிறது.
‘இவன் சொன்னதற்கு மேற்பட அர்த்தம் இல்லை’ என்று கேட்டார் நெஞ்சிலே தேறும்படியன்றோ வடிவை இட்டு மயக்கினபடி.
போய் –
‘காலுக்குட்பட்ட அற்பப் பிராணிகள் நோவுபடுகின்றன’ என்னும் அச்சம் தோன்றப் பொய்க்க
அடியிட்டுக்கொண்டு போனபடி. என்றது, அவர்கள்தாம் சாஸ்திரங்கட்கு விரோதமானவற்றில் நடக்கச் செய்தேயும்,
முகப்பில் நின்று ஒன்று போலே இருக்க, ‘பரஹிம்சை செய்யலாகாது, கள் உண்ணலாகாது, பொய் பேசலாகாது,
சிற்றின்பத்தில் ஆசை கூடாது’ என்றாற்போலே சில சொல்லுவர்களாயிற்று,
அவையெல்லாம் தோற்றும்படிக்குத் தகுதியாகப் போனபடி.
பெருமாள் ‘வனத்திற்கு எழுந்தருள’ என்று புறப்பட, ஜாபாலிகன் மீண்டு புகுரும்படிக்குத் தகுதியாகச் சில வார்த்தைகளைச் சொல்ல,
பெருமாள் சிவிட்கு என்று செவியைப் புதைத்து, ‘வாராய், என்முன்னே நின்று தர்மத்தில் ருசி குலையும் படிக்குத் தகுதியாக
நாஸ்திக வாதம் செய்வதே, உன்னை வெறுக்கிறது என், உன்னைக்கொண்டு காரியம் கொண்ட ஐயரையன்றோ வெறுப்பது’ என்ன,
‘நாயன்தே! நீர் மீண்டு எழுந்தருளித் திருவபிடேகம் பண்ணியருளி, ஸ்ரீ பரதாழ்வான் கண்களிலே கண்ணநீரை மாற்றினவாறே,
நான் நாஸ்திகனாகை தவிர்ந்து ஆஸ்திகனாம்படி பாரீர்’ என்ன, அவ்வளவிலே இவனை “ஜாபாலி பிராஹ்மணோத்தமன்” என்றார்கள் அன்றோ.

“ஆஸ்வாஸயந்தம் பரதம் ஜாபாலி: ப்ராம்மணோத்தம: உவாச ராமம் தர்மஜ்ஞம் தர்மாபேதம் இதம் வச:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 108 : 1.

நாங்களும் எல்லாம் நூல் இட்டு இருக்கையாலே, பிராஹ்மணர்கள் என்று கொள்ளுகிறோம் இத்தனை.
பிராஹ்மணனாகிறான் பிரஹ்ம சம்பந்தியானவன் அன்றே; அது உள்ளது இவனுக்கே அன்றோ,
இவ்வளவிலே உலோகாயதமதத்தை உபந்யசித்தான் ஒருவன் அன்றோ.
புரம்புக்கவாறும்-
ஊரைக் கிட்டினவாறே செய்த நியதிகளையெல்லாம் நினைக்கிறது. என்றது,
விதித்த ஹிம்சையையும் சாமான்ய ஹிம்சையைப் போன்று ஆக்கப் புகுகிறவனாகையாலே,
பசும்புல்லும் சாவமிதியாதே கூசி அடியிட்டுப் புக்கபடி.
கலந்து-
இவர்களிலே ஒருவனாய்ப் புக்கு நின்று இவ்வர்த்தத்தை உபந்யசித்தபடி.
தன் வார்த்தையை நம்புகைக்காக இவர்களோடே ஒரு நீராகக் கலந்து பரிமாறினபடி.
அசுரரை உள்ளம் பேதம் செய்திட்டு –
அசுரத்தன்மை வாய்ந்தவர்களான இவர்களுக்கு அவைதிக மதத்தை உபந்யசித்து வைதிக சிரத்தையைப் போக்கினானாயிற்று.
ஆயின், இவர்களுக்கு வைதிக சிரத்தை உண்டோ? என்னில்,
“இராக்கதர்களுடைய வீடுகள்தோறும் அக்நிஹோத்ரங்களும் வேதாத்யயனங்களும் இருக்கின்றன.
கருணை சத்தியம் ஆசாரம் இவைகள் இராக்கதர்களுக்குக் கிடையாது” என்கிறபடியே,
“அக்நிஹோத்ரா: ச வேதா: ச ராக்ஷஸாநாம் க்ருஹேக்ருஹ தயா ஸத்யம் ச ஸௌசம்ச ராக்ஷஸாநாம் நவித்யதே”-என்பது.

எல்லார்க்கும் சில உண்டாகை தவிரா. தர்ம ருசியுள்ளவையுண்டாகிலும் குலைந்து போம்படி மதி பேதங்களைச் செய்தானாயிற்று.
உயிர் உண்ட உபாயங்களும் –
இவர்களுடைய உயிர்களைப் போக்கின உபாயங்களும். என்றது,
இவர்களுடைய வைதிக சிரத்தையைப் போக்கிப் பிணத்தினைப் போன்றவராகும்படி பண்ணி,
நின்றான் ஒரு பிக்ஷுகனுக்குங்கூட மேல்விழலாம்படி அவர்களை அடி அறுத்து,
‘நான் செய்தேன்’ என்று கவிபாடுவித்துக்கொள்ளலாம்படி செய்தபடி.
‘அவன் செய்தான்’ என்று சொல்லாநிற்கச் செய்தேயும் இந்தச் செயல் ஒன்றும் அவன் தலையிலே
சேராதபடி சொன்னபடி பாரீர்;
“அளவிட முடியாத பராக்கிரமத்தையுடையவனும் பூஜ்யனுமாயிருக்கிற சிவனுக்கு, சர்வ வியாபியான விஷ்ணுவானவர்
அந்தர்யாமியாக இருக்கிறார்;
“விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய அமித தேஜஸ: தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸ விஷேஹே மஹேஸ்வர:-என்பது, பாரதம் கர்ண பர்வம்.

“மலை போற் பொறுத்தாரும் தாஅம், பணிவில் சீர்ச் செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித் தொல் புகழ் தந்தாரும் தாம்”-என்பது, பரிபாடல்.

அப்படி இருப்பதனாலே, அந்தச் சிவன், திரிபுரங்களை அழிக்குங்காலத்தில் வில்லை வளைத்து
நாணை ஏற்றுதலாகிற அந்தக் காரியத்தை மிகவும் பொறுத்துக்கொண்டான்” என்கிறபடியேயன்றோ.
சேதனனைக் கொண்டு காரியங் கொண்டதோடு, அசேதனத்தைக்கொண்டு காரியங் கொண்டதோடு வாசி இல்லை இவனுக்கு.
சிவன் தன்னோடு அவன் கையில் வில்லோடு வாசியில்லை இவனுக்கு.
காரண நிலையில் சித்து அசித்துக்களைக் கொண்டு காரியங்கொண்டதைப் போன்றதாயிற்று.
முன்பு அவன்தானே செய்வானாகக்கொண்டு எடுத்துப்பார்த்தான் அன்றோ;
அது முடியாதொழிய, பின்னர் இவன் உள்ளீடாய் நிற்கையாலன்றோ செய்து தலைக்கட்டவல்லனாயிற்று.
பண்டு ஓர் அரசன் “சிவனே பரம்பொருள்” என்று எழுதி, ‘எழுத்திட்டுத் தாருங்கோள்’ என்ன,
அப்படிப் பலரும் எழுதி எழுத்திடா நிற்கச்செய்தே, ஒருவர் வாராய், நீ இந்த ஓலை கெடாமே நோக்கி வைத்தால் அன்றோ
இவனுடைய பரத்துவம் சாதிக்கலாவது; நீ நினைக்கிற தேவதைக்கு உண்டாவ உயர்வுகள்
‘சர்வேச்வரனாலே’ என்று பிரமாணங்கள் சொல்லா நின்றன; ஆனபின்னர், இன்று, நீ சொல்ல நான் எழுந்திட்டுப் போகிறேன்;
நாளை ஒரு விவக்ஷிதன் தோன்றி ‘இவன் அறிவீனனாயிருந்தானே!’ என்னக் கேட்பதில்
இன்று நீ நினைத்ததைச் செய்துகொள்ள மாட்டாயோ” என்றார்.
உபாயங்களும் –
அப்போது இருந்து சிந்தித்தவற்றையெல்லாம் நினைக்கிறது.

‘சர்வேச்வரன் அந்தராத்மாவாய் நிற்கையாலே செய்தான்’ என்றதனால் பலிதமான சிவனுடைய உயர்வு பகவானுக்கு அதீனப்பட்டது என்றதற்கு
ஐதிஹ்யம் காட்டுகிறார் ‘பண்டு ஓர் அரசன்’ என்று தொடங்கி. ‘ஒருவர்’என்றது, கூரத்தாழ்வானை. விவக்ஷிதன்-அறிவுடையவன். இங்கு
அவத்தப்புன் சமயச்சொற் பொய்யை மெய்யென்று அணிமிடறு புழுத்தான்தன் னவையின் மேவிச்
சிவத்துக்கு மேற்பதக்குண் டென்று தீட்டும் திருக்கூர வேதியர்கோன் செவ்வி பாடப்
பவத்துக்கம் பிணிநீங்க நரகந் தூரப் பரமபதம் குடிமலியப் பள்ளி கொள்ளும்
நவத்துப்புச் செங்கனிவாய்க் கரிய மேனி நம்பெருமாள் அரங்கேசர் ஆடி ரூசல்.-என்ற திருப்பாசுரம் நினைத்தல் தகும்.

வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் –
“பிரஹ்ம ருத்திரர்கள் நடுவே நின்றது ஒரு முதல் களவு உண்டு, அதனைச் சொல்லுகிறது” என்று
ஆளவந்தார் அருளிச்செய்ததாகத் திருமாலையாண்டாள் பணிப்பர். என்றது, -மத்யே விரிஞ்சக்ரீசம் பிரதம -விஷ்ணு அவதாரம் –
சிவனையும் தன்னையும் சமமாகச் சொல்லலாம்படி திரிமூர்த்தி மத்தியநிலையைச் சொல்லுகிறது என்றபடி.
இதனை எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது, அத்தனை தூரம் தேடிப் போக வேணுமோ,
இவன் தன் விஷயத்திலே, முன்பு செய்த உபகாரத்துக்கு ஓர் அளவு உண்டோ, இதுதானே அமையாதோ” என்று அருளிச்செய்தார்.
கங்கையைத் தன் சடையில் ஏகதேசத்திலே தரித்த பிரபாவத்தையுடைய சிவனும் உன் பக்கல் வேறு அல்லாதபடி தோற்ற நின்றமையும். என்றது,
‘சரீரமாக இருப்பவன்’ என்னுமிடம் தோன்ற நின்றபடி.
இங்ஙன் சொல்லுகிறது என்? இதனை ஐக்கியமாகக் கொண்டாலோ? என்னில்,
அங்ஙன் கொள்ளுமன்று “விஷ்ணு: ஆத்மா – விஷ்ணு அந்தர்யாமியாக இருந்தார்” என்கிற பிரமாணத்திற்கு விஷயமின்றிக்கே ஒழியுமே.
“நலந்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும், கலந்திழிபுனலால் புகர்படுகங்கை”-பெரியாழ்வார் திருமொழி. 4. 7 : 2.
-அவனுடைய சேஷத்வத்துக்கும் இவனுடைய சேஷித்வத்துக்கும் பிரமாணம் ஒரு வெள்ளம் என்கிறார் காணும்.
சிவன் சடையில் கொன்றையும் சர்வேச்வரன் அடியில் திருத்துழாயும் கூடிவந்து இழிகிறபடி.
அலகனந்தா பாகீரதி இரண்டும் கலக்கும் -முடி மலரும் திருவடி துழாயும் கலந்து இரண்டு நிறங்களில் வரும் கண்டம் என்னும் கடி நகரே பிரமாணம்
அண்டகோளகைக் கப்புறத்ததா யகிலமன் றளந்த-புண்ட ரீகமென் பதத்திடைப் பிறந்துபூ மகனார்
கொண்ட தீர்த்தமாய் அரன்கொளப் பகிரதன் கொணர-மண்ட லத்துவந் தடைந்த திம்மாநதி மைந்த.-கம்பராமாயணச் செய்யுள் இங்கு ஒப்பு நோக்குதல் தகும்.

உள்ளம்உள் குடைந்து –
என் மனத்திலே புக்கு மூழ்கி. என் உயிரை உருக்கி உண்ணும் –
“சேதிக்க முடியாதது, எரிக்க முடியாதது” –ஸ்ரீ கீதை. 2 : 24.-என்கிற ஆத்மாவைப் புக்கு அழித்து நோவுபடுத்தாநின்றன.
ஞானத்திற்கு வழியாக இருக்கின்ற மனத்திலே புகுந்து ஆத்மாவை நீராக்கி முடியா நின்றன.

சில அசுரர்கள் ருத்ரனை நோக்கி தபஸ் பண்ணி -மூன்று பட்டணங்கள் -பெற்று -சஞ்சரிக்கும் -தன்மை –
மூன்றும் கூடினால் பேர் ஆபத்து வரும் என்றான் –
யஜூர் வேதம் -அயஸ்மை-இரும்பால் – ரஜத-பொன் கோட்டை -வெள்ளிக் கோட்டை –
தேவர்களை அந்தணர்களை அழித்து -யாகாதிகள் நடக்காமல் தேவர்களுக்கு பல ஷயம் பிறந்தது –
பட்டணங்கள் -கிட்டவும் போக முடியாமல் -தேவார்கள் ருத்ரன் இடம் பிரார்த்திக்க -நச்சு மரம் ஆகிலும் நட்ட மரங்களை வெட்டுவார் உண்டோ
எனக்கு செய்யப் போகாது என்ன -கூப்பீடு இடம் சென்று விண்ணப்பம் செய்ய
பெரிய திருவடி மேல் ஆரோஹித்து –அசுரர்கள் தர்ம சரத்தை கொண்டு இருப்பதால் தேவர்கள் தங்களால் அழிக்கப் போகாது என்ன
ஒரு அம்சம் மட்டும் கைக் கொண்டு -அசுரர்கள் பலம் பெற்று இருக்க -வருத்த புத்தனாகக் கொண்டு புறப்பட்டுஎட்டையும் இடுக்கி கையில் புல்லையும் -தர்பம்
தர்ம நிஷ்டன் வார்த்தை சொல்லி -அவர்கள்இவனை விஸ்வசித்து யாகம் பண்ண -என்ன பலன்
சமித்து எதற்கு -ஹோமம் பண்ண -என்ன -தத்வரம் காஷ்டம் தின்ன பிறக்கும் -புல்லை தின்னும் பசுவே தேவலை -ஹவுஸ் எதுக்கு கேட்டு
-தேவர்களுக்கு -கட்டிப் போகும் சோற்றை அங்கு உள்ளார்க்கு கொடுக்க -அவர்கள் உன்ன நம் பசி தீருமோ
எங்கோ ஆஹூதி கொடுத்து அவர்கள் திருப்தி பெற்று உங்களுக்கு பலன்
ஆடுகள் எதுக்கு -ஹோமம் -ஆட்டு வாணிகன் பரம தார்மிகன் காணும் என்று
இப்படி கிருத்ரிம உக்திகளால் பிரமிக்கப் பண்ணி -வார்த்தையை விஸ்வசித்து யாகம் பண்ணினதை விட்டு தர்ம சிந்தனை விட்டு ருத்ரனை சபிக்க
அவன் இடம் இவர்கள் உன்னை தூஷிக்கிறார்கள் -பூமி தேர் -மேரு வில் சர்வேஸ்வரன் அம்பு -சம்ஹரித்தான் –
கள்ள வேடம் கொண்டு பொய் புறம் புக்கவாறும் -கதையை அரும் பதத்தில் அருளிச் செய்கிறார்

——————————————————————————–

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-

அதி மானுஷ சேஷ்டிதங்களை அனுசந்திக்கும் -சீல வ்ருத்திகள் -அக்னி சகாயம் மெழுகு போலே நெஞ்சு உருகா நின்றது
உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்-அட்டு குவி சோற்று -அன்னகூட உத்சவம் -மலைக்கு திரை
-உங்கள் கண்ணை மூடுவதே -அஹம் கோவர்த்தநோச்மி
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்-ஏழு நாள்கள் -ஆயர் அஞ்ச அஞ்சா முன் -கல் மாரி-ரஷிக்கும் கோவர்த்தனம் என்று காட்டி –
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்-விசேஷ உபகாரம் முன்பு சொல்லி -மேல்
உலகத்துக்காக சாமான்யமான -உபகார பரம்பரைகள் -அன்யாபிமானம் தீரும் படி அளந்து -அவாந்தர பிரளயத்தில் இடந்து
-நைமித்திக்க பிரளயம் -மூன்று லோகங்கள் -அழிந்த -ஆச்சார்யமான குண சேஷ்டிதங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.-நினைக்கும் தோறும் மனஸ் அழியா நின்றதே

தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் உண்ணுவதற்கு ஆயர்கள் சித்தம் செய்த உணவினைப் புசித்ததும், பல நிறங்களையுடைய
பெரிய கோவர்த்தன மலையை எடுத்து மழையைக் காத்ததும், பூலோகத்தை முன்னே உண்டாக்கிப் பிரளய காலத்தில் புசித்து
மீண்டு உமிழ்ந்ததும், திரிவிக்கிரமனாய் அளந்ததும், வராகமாகி இடந்து சேர்ந்ததுமான ஆச்சரியம் பொருந்திய செயல்களை
நினைக்குந்தோறும் என் மனம் அவற்றிலே நிலைபெற்று நெருப்பில் அகப்பட்ட மெழுகினைப் போன்று உருகாநிற்கும்.
வானவர்கோன் உண்ணற்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் என்க. வண்ணம்-வர்ணம். மணந்த-பூமிப்பிராட்டியோடுங்கூடிய:
நெஞ்சு நின்று எண்ணுந்தோறும் எரிவாய் மெழுகு ஒக்கும் என்க.

அடியார்களுக்காகவும் பொதுமையில் எல்லார்க்குமாகவும் செய்த செயல்களை நினைக்குந்தோறும்
என் மனமானது மிகவும் அழியா நின்றது என்கிறார்.

வானவர்கோனுக்கு உண்ண ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்-
தான் பிறந்து வளருகிற ஊரிலே சிலர் மழையின்பொருட்டு இந்திரனுக்குச் சமைத்த அடிசிலைத் தான் புகுந்து உண்ட அதுவும்.
“நாம் பிறந்து வளருகிற ஊரிலே வேறேயும் ஓர் அடையத்தக்க பொருள் உண்டாகையாவது என்?” என்று,
பொறாமையாலே “வாரீர் கோள், இந்திரனாகிறான் எவன், கண்டறியாதான் ஒருவனோ நமக்கு உதவி செய்யப் புகுகின்றான்;
ஆன பின்பு, மேகங்களும் வந்து பணியும்படிக்குத் தக்கதாய்ப் புல்லும் தண்ணீருமுடைத்தாய்
, பசுக்களுக்கும் இடம் கொடுத்து நிற்கிற மலையன்றோ நமக்கு எல்லாம் கடவது!’ என்று சொல்ல,
ஆயர்கள் ஆகையாலே சொல்லிற்றுக் கேட்பார் சிலரே; இனி இவன்தானே சொன்னவை மறுக்க ஒண்ணாதபடியாயிருக்குமே;
இம்மலையின் முன்னே இடுங்கோள்” என்ன, அங்கே கொடுவந்து குவித்தார்கள்;
அதனைத் தான் புக்கிருந்து அமுது செய்தான். தனக்கே உரியராயிருப்பாருடைய பொருளை வேறே சிலர்க்குக் கொடுக்கையாவது,
மஹிஷீ ஸ்வேதத்தைப் பிறர்க்குக் கொடுத்த அளவேயன்றோ. அவன் தன் பரிகரத்தோடுங்கூட இதனைக்கொண்டு
திருப்தனாக இருக்க, இதனைத்தான் கைக்கொண்டானாயிற்று.
அவன் குரோதத்தாலே மழை பெய்யும்படி செய்தான்.
வண்ணமால் வரையை எடுத்து மழைகாத்ததும் –
அடை கொண்டு பாழ் போக்குவான் ஒருவன் அன்றே.
“நாம் விரும்பிய பொருளைப் பெற்றோமாகில் என் செய்தால் நல்லது” என்று பொகட்டுப் போகாதே,
பலவிதமான தாதுக்களையுடைத்தாய், ஒருவரால் கணிசிக்க ஒண்ணாத பெரிய மலையை,
சுகுமாரமான கையைக்கொண்டு ஏழு நாள் ஒருபடியே தரித்து,
ஒரு பசுவின் மேலேயாதல் ஓர் ஆயன் மேலேயாதல் ஒருதுளி விழாதபடி காத்தும்.
அவனைக் கொல்ல வேண்டியதாய் இருக்கச்செய்தேயும், ‘தேவ சாதியினனான இவனை நலிகிறது என்,
பசிக்கோவத்தாலே செய்தானாகில் தானே கை ஓய்ந்து விடுகிறான், அவ்வளவும்
நம்முடைய பொருளை நாம் கடகிட்டு நோக்குவோம்’ என்று கருணை காரணமாக அவனைக் கொல்லாதே விட்டான்.
‘நம் விபூதியை இவன் நோக்க வல்லன், இவன் கண்ணுடையன்,’ என்றேயன்றோ இவனைத் தான் இங்குத்தைக்கு இட்டது;
இப்படி இருக்கச் செய்தேயும் இவன் கண்ணறையர் -கண் இல்லாதவன் -செய்வதனைச் செய்தான்.
21 மைல் பரிக்ரமம் துரோணாச்சலம் பிள்ளை கிரி ராஜம் கோவர்த்தன கிரி – கீழே வைக்காமல் போக வேண்டும்
-அனுபவித்து உள்ளம் கனக்க கீழே வைக்க -இங்கேயே இருந்தது என்பர் –ஒவ் ஒரு வருஷமும் குறைந்து வருமாம் –

மண்ணை முன்படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள்
– ‘வேண்டா’ என்றாலும் வேறு தெய்வங்களை வணங்குதல் தவிராதார் ஓர் ஊரார் அளவன்றிக்கே,
இருக்கிற பூலோகத்திலுள்ளார் விஷயத்திற்செய்யுமவற்றைச் சொல்லுகிறது.
விரும்பாமல் இருக்கவே இவற்றை உண்டாக்கி, பிரளய ஆபத்துக்கள் வர இவை நோவுபடாதபடி வயிற்றிலே வைத்து நோக்கி,
‘உள்ளே கிடந்து மறைந்து போக ஒண்ணாது’ என்று பார்த்து வெளிநாடு காணப் புறப்பட விட்டு,
பின்பு மஹாபலி போல்வார் கவர்ந்து கொள்ள எல்லை நடந்து மீட்டுக்கொடுத்து, பின்பு
அவாந்தர பிரளயங்கொண்ட பூமியை மஹாவராஹமாய் எடுத்துக்கொண்டு ஏறி, இவையெல்லாம்
பிராட்டிப் படுக்கைப் பற்றாகையாலே அவளுக்குப் பிரியமாகச் செய்து அவளோடே கலந்த ஆச்சரியமான செயல்களை. மணத்தல்-கலத்தல்.

எண்ணுந்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே –
அவனுடைய ரக்ஷணத்திலும் பரப்பு உண்டாகாதே இவருடைய பாரிப்பு.
எண்ண மாட்டார், எண்ணாதிருக்க மாட்டார்; ரக்ஷணத்திற்கு அவன் சமைந்தாற்போலே காணும் அழிகைக்கு இவர் சமைந்தபடி.
தரிக்க எண்ணுவார் -எண்ண சிதிலம் ஆவாரே அதனால் எண்ண மாட்டார் -மாறி மாறி அன்றோ இவர் நிலை –
இதனை நினைத்தே நாட்டார் உண்டு உடுத்துக் காலம் போக்கா நின்றார்களாதலின் ‘என் நெஞ்சு’ என்கிறார்.
நெருப்பின் அருகில் இருக்கும் மெழுகு போலே உருகா நின்றது என்பார் ‘எரிவாய் மெழுகு ஒக்கும்’ என்கிறார்.
அது ஒருகாலே உருகுதல் கரிதல் செய்யுமன்றோ, இது உருகினபடியே இரா நின்றதாதலின் ‘நின்றே’ என்கிறார்.

———————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: