பகவத் விஷயம் காலஷேபம்- 123- திருவாய்மொழி – -5-9–6….5-9-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-

பாடுகிற வண்டும் -ஆழ்வார் போலே -புத்துத் தென்றல் -கடலும் கடல் சார்ந்த -ஆஸ்ரித அர்த்தமாக இரந்து-வாமனன் கழல்
காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!காண்பது என்றோ –
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்-உயர்ந்த பணைத்து-மரங்கள் -கடல் கரை சோலை
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.-பிராமச்சர்யம் வாமனத்வம் -கொண்டதார்ச நீயா விக்ரகம் –
மகோ உபகாரகன் -அழகைக் காட்டி ஆட்கொண்ட உபகாரகன் -மலர்த் தாமரைப் பாதங்களை
காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!-அதர சோபை –விதேயமான -அபிமதம் படி பரிமாறப் பெறாத பாபம்-

கோவைக் கனி போன்ற வாயினையுடைய பெண்களே! எல்லாவிடங்களிலும் வண்டுகளினுடைய பாண்குரலும் இளந்தென்றலுமாக,
மிக உயர்ந்திருக்கின்ற கிளைகளையுடைய மரங்கள் நெருங்கியிருக்கின்ற வளப்பம் பொருந்திய கானலையுடைய திருவல்லவாழ்
என்ற திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற மாட்சிமை அமைந்த அழகிய பிரானாகிய வாமனனுடைய
தாமரை மலர்போன்ற திருவடிகளை, வினையேன் காண்பது எந்நாளோ? என்கிறாள்.
மடவீர்! மலர்த்தாமரைப் பாதங்கள் வினையேன் காண்பது எஞ்ஞான்றுகொலோ? என்க. பண் என்பது, பாண் என வந்தது, விகாரம்.
பாண் – இசை. எங்கும் வண்டின் குரலும் பசுந்தென்றலுமாக, மரம் ஓங்கு செழுங்கானல் என்க. சேண் ஓங்கு சினைமரம் என்க.
அன்றி, சேண் என்பதனைச் சினைக்கும், ஓங்கு என்பதனை மரத்திற்கும் அடை ஆக்கலுமாம். கானல்-கடற்கரைச்சோலை.

திருவல்லவாழிலே நின்றருளின ஸ்ரீ வாமனனுடைய இனிமையையுடையதான திருவடிகளை நான் காண்பது என்றோ? என்கிறாள்.

வினையேன் காண்பது எஞ்ஞான்று கொலோ-
குழந்தைகள் செய்தபடி செய்ய, நான் முன்னம் என் பசி தீர்த்துக்கொள்வது என்றோ.
உலகநடைக்கு ஒத்ததல்லாத பாவத்தைச் செய்தேன் என்பாள், தன்னை ‘வினையேன்’ என்கிறாள். என்றது,

“கனிவாய் மடவீர்” என்றதனை இப்பொழுதுள்ள நிலைக்கு விசேஷணமாக்காமல் ‘பண்டு போலே காண்பது’ என்று இறந்த
காலமாக்கிப் பொருள் அருளிச்செய்வதற்குக் காரணம் என்? என்ன, இவள் அதரம் வெளுத்திருக்க, அவர்கள் அதரம் செவ்வி பெற்றிருக்கக்
கூடாமையாலே என்று கூறத் திருவுள்ளம்பற்றி, இவள் விஷயத்தில் அவர்களுக்கு உண்டான சிநேகத்தைத் திருஷ்டாந்த மூலமாகக் காட்டுகிறார்
‘ஞானிகளுக்கு’ என்று தொடங்கி.
“ப்ரியோஹி ஜ்ஞாநிந: அத்யர்தம் அஹம் ஸச மம ப்ரிய:”-என்பது, ஸ்ரீகீதை. 7 : 17. என்றது, ஞானி விஷயத்தில் ஸர்வேச்வரன் மிகவும்
சிநேகித்திருக்குமாறு போன்று, இவர்களும் இவள் விஷயத்திலே மிகவும் சிநேகித்தவர்களாயிருப்பார்கள் என்றபடி.
காணாமைக்குப் பாவம் பண்ணினாரும் கூடக் காணும்படியான விஷயத்தை,
காண்கைக்கு யோக்கியதை உண்டாய் வைத்தே காணாதபடியான பாவத்தைப் பண்ணினேன் என்றபடி.
காமரு சீர் அவுணன் -கொண்டாடி -காணப் பெற்றானே -வாமனன் கோலத்தையும் விஸ்வரூப திரிவிக்ரமன் -கண்டு
அதற்கு மேலே திருவடியையும் சென்னியிலே ஏறப் பெற்றானே
மாண் குறள் கோலப்பிரானே யன்றோ. இனி,
‘காண்பது எஞ்ஞான்று கொலோ வினையேன்’
என்பதற்கு, நீங்கள் காட்டுகைக்கு விரைய ஆறி யிருக்கக்கூடிய நான், இன்று ‘காண்பது எஞ்ஞான்று கொலோ’ என்னும்படியான
பாவத்தைப் பண்ணினேன் என்னுதலுமாம்.
கனி வாய் மடவீர்-உங்களை நான் பண்டு போலே காண்பது என்றோ.
“ஞானிகளுக்கு நான் மிகவும் பிரியமுள்ளவன், அவர்களும் எனக்குப் பிரியமுள்ளவர்களே” என்னும்படியன்றோ அவர்கள் இருப்பது.
இவள் மாசுடை உடம்பொடு தலை உலறி வாய்ப்புறம் வெளுத்திருக்க, அவர்கள் தங்களைப் பேணி இரார்களே.
அவர்கள் பண்டு போலே இருக்கக் காண்கையும் இவளுக்கு விருப்பமானபடி.

பாண்குரல் வண்டினொடு-
இவற்றின் குரல் ஓசையில் வெள்ளோசையாய்க் கழியுண்பது இல்லை, பரப்பு அடங்கலும் பாட்டாக இருக்கும். என்றது,
இயல் கற்று இசையோடு கூட்டிற்று அன்று அவற்றுக்கு, பேச்சே தொடங்கி இசை என்றபடி.
‘தேன் போலே இனிய பாட்டு’ என்னுமது போய், வடிவே தேனாய் அதற்கு மேலே பாட்டும் ஆனால் மிகவும் இனியதாயிருக்குமன்றோ.
அன்றிக்கே, பாண் குரல் – இசை ரூபமான மிடற்றோசை என்னுதல்.
பசுந்தென்றலுமாகி எங்கும் –
கலப்பு அற்ற தென்றலுமாயிருக்கை. என்றது, பலவிடங்களிலே காலிட்டு வாராதே தாய்தலைத் தென்றலாயிருக்கையைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே, பசுந்தென்றல்-இளந்தென்றல் என்றுமாம்.
சேண் சினை ஓங்கு மரம் செழுங்கானல் –
கவடுகளானவை -கிளைகள் -சுற்றிலே பணைத்திருப்பனவாய் மேலோக்கத்தை உடைத்தான மரங்களையுடைத்தாகையாலே
அழகிய சோலையையுடைய.
அன்றிக்கே, செழுங்கானல் என்பதற்கு, காண்பதற்கு இனிய கானல் என்னுதல்
கானல்-கடற்கரைச் சோலையாதல், நெய்தல் நிலமாதல்.
சினைக்கு ஓக்கம், சுற்றிலே வளர்தல். மரத்துக்கு ஓக்கம், மேலே உயர்தல்.
மாண் குறள் கோலப்பிரான் மலர்த்தாமரைப் பாதங்கள் காண்பது எஞ்ஞான்றுகொலோ-
தன்னுடைமை பெறுகைக்குத் தான் இரப்பாளனாய், பெருவிலையனான வடிவினைச் சிறுகவிட்டு
மிக்க அழகையுடையவனாய், சௌலப்யத்தையும் அழகையும் ( ‘சௌலப்யத்தையும் அழகையும்’ என்றது, “மாண்”, “கோலம்” என்ற
சொற்களைத் திருவுள்ளம்பற்றி. )
திருவல்லவாழில் அடியார்களை அநுபவித்துக்கொண்டு நிற்கிறவனுடைய தனக்குமேல் ஒன்றில்லாததான
இனிமையையுடையதானதிருவடிகளைக் காண்பது எஞ்ஞான்றுகொலோ?
அப்போது அலர்ந்த தாமரை போலே எல்லையற்ற போக்யமான திருவடிகள் என்பாள் ‘மலர்த்தாமரைப் பாதங்கள்’ என்கிறாள்.
அடியிலே இவர்க்குத் தானே அன்றோ ருசியை உண்டாக்கினான்.
வாமனனைச் சொன்னதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அடியிலே’ என்று தொடங்கி. தமக்குத் திருவடிகளிலே ருசி பிறந்தது
வாமனன் திருவருளாலே-என்பது கருத்து.-‘அடிகள் அடிகள்’ என்று வாய்புலற்றும்படி அன்றோ திருவடிகளில் இனிமை இருப்பது.

———————————————————————————–

பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.–5-9-7-

தர்ச நீய தடாகங்கள் உடைய –நிர்வாகன் -ஆபத் சகன் -திருவடிக்கு மேலே உள்ள
பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
பூவையாவது அணிந்து நித்யமாக தொழ முடியுமோ என்றவாறு –
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்-சமுத்ரம் போலே தடாகம்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்-முகம் கண் அழகு -இவை எல்லாம் ஏந்தி -தடாகத்தில் தாமரை செங்கழு நீர்
மாதர்கள் கண் -முகம் -அழகுகள் ஒன்றும் இல்லாத படி -ஏந்தும் -கழிக்கும் படி -என்றவாறு –
ஒவ் ஒரு அழகுக்கு திருஷ்டாந்தம் -என்றுமாம் –
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.-ஸ்வாமி –பிரளயம் கொள்ளாத படி
திரு வயிற்றில் வைத்து நோக்கி -சம்சாரம் பிரளயம் கொள்ளாதபடி ரஷகன்

பாவை போன்ற பெண்களே! தண்ணீர் நிறைந்த பெரிய குளங்களானவை, உயர்ந்த தாமரை மலர்களையும் செங்கழுநீர் மலர்களையும்,
பெண்களினுடைய ஒளி பொருந்திய முகத்தையும் கண்களையும் போன்று ஏந்திக்கொண்டிருக்கின்ற திருவல்லவாழ் என்ற திவ்விய தேசத்திலே
எழுந்தருளியிருக்கின்ற நாதனும் இவ்வுலகங்களை எல்லாம் உண்ட நம்பிரானுமான சர்வேச்வரனுடைய மலர்களால் மேலே
அலங்கரிக்கப்பட்ட திருவடிகளை நாடோறும் தொழுவதற்குக் கூடுமோ? என்கிறாள்.
மேல் பூ அணி பாதங்கள் தொழக் கூடுங்கொல் என மாற்றுக. தாமரையை முகத்துக்கும், செங்கழுநீரைக் கண்ணுக்கும் முறை நிரல் நிறையாகக்கொள்க.
தடம் ஏந்தும் திருவல்லவாழ் என்க. அன்றி, தடத்துள் இருக்கின்ற தாமரையும் செங்கழுநீரும் முகத்தையும் கண்ணையும் போன்று
உயர்ந்து பொலிகின்ற திருவல்லவாழ் என்னுதல்.

அவன் திருவடிகளிலே நித்யமாகப் பூவை அணிந்து தொழ வல்லோமே! என்கிறாள்.

பாதங்கள்மேல் பூ அணி தொழக் கூடுங்கொல்-
திருவடிகளின்மேலே மலர்களை அணிந்து நமக்குத் தொழக் கூடவற்றோ.
பாவை நல்லீர் –
இவளை விலக்குவதற்கு ஆற்றல் இல்லாதவர்களாய் மரப்பாவைகளைப் போன்று இருந்தபடி.
அன்றிக்கே, எழுதின பாவை போன்று இருந்தார்கள் என்னுதல்.
அன்றிக்கே, விலக்காமையாலே மகிழ்ந்து பெண்களில் நல்லரானவர்களே! என்று விளிக்கிறாள் என்னுதல்.

“பாவை” என்பதற்கு, மரப்பாவை என்றும், கொல்லிப்பாவை என்றும், பிரதிமை என்றும் மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்
‘இவளை விலக்குவதற்கு’ என்று தொடங்கி. முதற்பொருள், விலக்குதற்கு ஆற்றல் இல்லாமையைக் குறித்தது. இரண்டாவது பொருள், அழகிய
உறுப்புகளையுடையவர்கள் என்பதனைக் குறித்தது. மூன்றாவது பொருள்,ஸ்வாதந்திரியம் இல்லாதவர்கள் என்பதனைக் குறித்தது.
குவளை அம் கண்ணி கொல்லி யம் பாவை -நின் தாள் நயந்து இருந்த என் பாவை -செழும் கடலில் அமுதினில் பிறந்த
அவளை விட என் மகள் அழகு என்கிறார் பரகால நாயகி திருத் தாயார்

ஓதம் நெடுந்தடுத்துள் உயர்தாமரை செங்கழுநீர் –
கடல் போலே பெருத்திருந்துள்ள தடாகங்களினுள்ளே ஓக்கத்தையுடைத்தான தாமரை செங்கழுநீரானவை.
மாதர்கள் வாண்முகமும் கண்ணும் ஏந்தும்-
அவ்வூரில் பெண்களினுடைய ஒளியையுடைத்தான முகத்தையும் கண்களையும் தரியா நின்றன. என்றது,
ஊருக்கும் வயலுக்கும் வாசி தெரிந்து கோடல் அரிதாயிருக்கையைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே, திருவோலக்கத்திற்படியே அவற்றைத் தள்ளும்படியாயிருக்கை என்னுதல்.
திருவல்லவாழ் நாதன் –
ஸ்ரீவைகுண்ட நாதனைக்காட்டிலும் ஏற்றம். என்றது,
ஸ்ரீ வைகுண்டத்துக்குக் கடவனாய் இருக்கிறது, அந்தப்புரத்துக்குக் கடவன் என்கிற அளவே அன்றோ,
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப இருக்கிற இடமே -திருவாய். 4. 9 : 10.-அன்றோ;
இது அங்ஙன் அன்றிக்கே, ஒருவர் கூறையை எழுவர் உடுக்கிற தேசத்திலே தரிசு அற இருக்கிற இடமே அன்றோ என்றபடி.
இஞ்ஞாலம் உண்ட-
ஆபத்தே செப்பேடாக வயிற்றிலே வைத்து நோக்கும். என்றது, மேன்மை பாராதே தளர்ந்தார் தாவளமாயிருக்கும் என்றபடி.
தளர்ந்தார் தாவளம்-தளர்ந்தவர்கட்கு ஆதாரமாயிருப்பவன்.-தாவளம் க்ருஹம் –
அது கதையில் கேட்க வேண்டி இருந்ததோ? எனின்,
நம்பிரான் தன்னை –
சம்சாரப் பிரளயங்கொண்ட என்னை எடுத்து இவ்வளவாக்கி உபகரித்தவன்.
நாடொறும் பாதங்கள் மேல் அணி பூந்தொழக் கூடுங்கொல்?

————————————————————————————–

நாடொறும் வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.–5-9-8-

அழகிய விலை நிலங்கள் -நித்ய சந்நிஹிதன் -சம்ச்லேஷ ஸ்வ பாவமாக -திருவடிகளை -நிரந்தர அனுபவம்
நாடொறும் வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!-தர்ச நீயமான -திருவடி தூளிகள் பொருந்திய திரு நெற்றி
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்-ஆலையில் -இனிய கரும்பு -விளைந்த செந்நெல்
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்-பரிசரம் -பூத்த தடாகங்கள் -வயல் -சூழ்ந்த திவ்ய தேசம் –
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.–நிரந்தர வாசம் -மகோபாகரகன்

நல்ல நெற்றியையுடைய பெண்களே! எல்லாவிடங்களிலும் அரைக்கப்படுகின்ற மதுரம் பொருந்திய கரும்புகளும் வளைந்திருக்கின்ற
செந்நெற்பயிர்களுமாக, பக்கங்களில் பொருந்தியிருக்கின்ற அழகிய குளங்களையும் அவற்றைச் சார்ந்து சூழ்ந்திருக்கின்ற
வயல்களையுமுடைத்தாயிருக்கின்ற குளிர்ந்த திருவல்லவாழ் என்ற திவ்விய தேசத்தில் நித்தியமாக எழுந்தருளியிருக்கின்ற பிரானுடைய நிலம்
தாவிய நீண்ட திருவடிகளை, நாள்தோறும் இடையீடு இல்லாமல் தொழுவதற்குக் கூடுமோ? என்கிறாள்.
எங்கும் கரும்பும் செந்நெலும் ஆக தடம் சேர்ந்து வயல் சூழ்ந்த திருவல்லவாழ் என்க. பிரானுடைய நீள்கழலைத் தொழக்கூடுங்கொல்? என்க. மாடு-பக்கம்.

சர்வ சுலபனானவன் திருவடிகளிலே சர்வ காலமும் இடைவிடாதே அடிமை செய்யக் கூடவற்றே! என்கிறாள்.

நாடொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல்-
‘நாடொறும்’ என்று, ஒவ்வொரு பக்ஷத்திலும் செய்யும் யாகங்களைப் பிரிக்கிறது.
‘வீடு இன்றியே’ என்று நித்திய அக்நிஹோத்ரத்தைப் பிரிக்கிறது.
“ஒழிவில் காலமெல்லாம்” என்கிறபடியேயன்றோ இவர் பிரார்த்திப்பது.
ஆசாரிய உபதேசத்தை நம்பி விரும்புகிற நம்மைப்போல் அன்றியே, அடிமை ரசித்து ஆசையாலே விரும்புகிறாரே அன்றோ.
நல்லுதலீர் –
அவன் வந்த உபகாரத்துக்கு அவன் திருவடிகளிலே விழுந்து வணங்கிய வணக்கத்தினால்
புழுதி படிந்த நெற்றியுடையவர்களாக உங்களைக் காண வல்லேனோ.
“தலையில் வணங்கவுமாங்கொலோ”-திருவாய். 5. 3 : 7.– என்று தொழக்கடவளே, அப்போது இவர்களும் தொழுவர்களே;
இவளுக்குக் கைங்கர்யத்தில் உகப்புப்போலே, இவள் பேறே தங்களுக்கு உகப்பாயிருக்குமவர்களே.
ஆடு உறு தீங்கரும்பும் விளைசெந்நெலுமாகி எங்கும்-
கரும்புகள் எப்போதும் ஆடுகையிலே உற்றிருக்கை, -காற்றிலே அசைந்து -ஆலையிலே இடும் என்றுமாம்
செந்நெலும் எப்போதும் அறுக்கைக்குப் பக்குவமாய் விளைந்து கிடக்கை. என்றது,
அங்குள்ளவை முழுதும் பக்குவமாய்க் காணும் இருப்பது என்றபடி.
மாடு உறு பூந் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ் –
மருங்கே யுற்றிருப்பதாய்ப் பூக்களையுடைத்தான தடாகங்களைச் சேர்ந்த வயல்களாலே சூழப்பட்டிருப்பதாய்ச் சிரமஹரமான திருவல்லவாழிலே.
ஊரைத் தடாகங்கள் சூழ்ந்து,தடாகங்களை வயல்கள் சூழ்ந்திருக்க, இப்படிகளாலே குளிர்ந்து காணும் ஊர்தான் இருப்பது.
நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே –
குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலைகள் மேலும் பொருந்தும்படி சுலபமான திருவடிகளைக் கொண்டு,
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாமல் நித்தியவாசம் செய்கிற உபகாரமே இங்குத்தைக்குத் தன்னேற்றம்.
நிலம் தாவிய நீள்கழல் நாடொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல்? என்க.

‘குணாகுண நிரூபணம் பண்ணாதே’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து, சௌலப்யம். ஸ்ரீ வாமனனுக்கும் இவனுக்கும் ஒக்கும்,
நீடுறைகின்றதே இவனுக்குத் தன்னேற்றம் என்பது. இங்குத்தை – இவ்விடம்.

——————————————————————————————————–

கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9-

மதுபான மத்தமான வண்டுகள் –அவனை அடைந்தவளாக பெறுவோமோ
கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?-கையில் கழலும் வளைகள் -காரணப் பெயர்
-கழலாமல்-பூரித்து சம்ச்லேஷத்தில் -எப்போது தொழுவோம் -கண்டு கை தொழுது கிட்ட -உபகாரம் -கைம்மாறாக கை தொழக் கூடுமோ –
அவன் அருள் கூடும் படி கை தொழுவோமா -என்றுமாம்
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி-குளிர்ந்த சோலைகள் -தேனைப் பானம் பண்ணி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்-சிறிய பிராயம் -இசை பாடும்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே-கையும் திருவாழியுமான எம்பெருமான் கிருபை -அறியவும் -ஞான தர்சன பிராப்தி -மூன்றுக்கும்
தேஜஸ் -மிக்கு சுழன்று -அதனாலே தேஜஸ் -தேஜஸே சுழலும் என்றுமாம் -ஸ்வா பாவிக கிருபை -ஸ்ரீ வல்லபன் கோலப் பிரான்

இளமை பொருந்திய அழகிய வண்டுகளானவை, குளிர்ந்த சோலையிலே தேனைக் குடித்துக் குழலைப் போலவும் யாழைப் போலவும்
இசையைப் பாடுகின்ற திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற சுழலின் மலி ‘சக்கரப் பெருமானுடைய தொல்’ அருளால்,
சுழலுகின்ற வளையல்கள் தங்கும்படியாக நாம் கண்டு தொழுவதற்குக் கூடுமோ? என்கிறாள்.
வண்டுகள் தேன் அருந்தி குழல் என்ன யாழும் என்ன இசை பாடும் திருவல்லவாழ் என்க. தொல் அருளால் கண்டு தொழக்கூடுங்கொல்? என்க.
குழல், யாழ் என்பன: ஆகுபெயர். மழலை-இளமை. வரி-கீற்றுமாம். சுழலின் மலி-சுழலுதலில் மிகுந்த. இது, சக்கரத்திற்கு அடை.

நம்முடைய கழலுகிற வளைகள் பூரிக்க அவனைக் கண்டு தொழும்படி அவன் அருள் கூடவற்றே! என்கிறாள்.

கழல்வளை பூரிப்ப
“வெள்வளை” – திருவாய்– 10. 3 : 7– என்னுமாறு போலே.
‘கழல்வளை’ என்று, வளைக்கு விசேடணமாய் விட்டது காணும்.
இவளைக் கைவிடுகையாலே அன்றோ இது விசேடணமாக வேண்டிற்று. பூரிப்ப – பூர்ணமாக.
அவன் வரில் கைமேலே காணலாமே இவற்றை. ‘பூரிப்ப’ என்பதனை,
மேலே வருகின்ற ‘நாம் கண்டு கைதொழக் கூடுங்கொலோ’ என்றதனோடு முடிக்க.
பிரிவில் வளை கழலுவது தனக்கே யானாலும் காட்சி எல்லார்க்கும் ஒக்குமாதலின் ‘நாம்’ என்கிறாள்
குழல் என்ன யாழும் என்ன
குழல் என்னவுமாய் யாழ் என்னவுமாய் இருக்கை.
நாட்டில் இனியவற்றை எல்லாம் சேரக் கேட்டாற்போலே இருக்கை.
“வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்” என்னுமாறு போலே.
ஒன்றற்குப் பல பொருள்களை உவமை கூறுதற்கு மேற்கோள் காட்டுகிறார்‘வீதியத்தில்’ என்று தொடங்கி.
“விஷ்ணுநா ஸத்ருஸோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஸந:”-என்பது, ஸ்ரீ ராமா. பால. 1 : 18.

குளிர் சோலையுள் தேன் அருந்தி –
சிரமஹரமான சோலையிலே குளிருக்குப் பரிஹாரமாகத் தேனைக் குடித்து. அருந்தி – குடித்து.
மழலை வரி வண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ் –
இளமையோடு கூடியதாய்க் காண்பதற்கு இனியதாயிருக்கின்ற வண்டுகள்,
பிரீதிக்குப் போக்குவிட்டுப் பாடாநின்றுள்ள திருவல்லவாழ்.
செருக்கருமாய் ஸுகுமாரருமாயிருப்பார், ‘மரம்’ என்று சந்தனத்தைக் கழித்துப் புழுகு நெய்யை ஏறிட்டுக்கொண்டு திரியுமாறுபோலே,
இவையும் இயலைவிட்டு இசையையே பாடுகின்றனவாதலின் ‘இசை பாடும்’ என்கிறது.
சுழலின் மலி சக்கரப் பெருமானது –
பகைவர்களை அழிக்க வேண்டும் என்னும் விரைவாலே மிகவும் சுழன்று வாரா நின்றுள்ள திருவாழியையுடைய சர்வேச்வரன்.
அன்றிக்கே, சுழலின் மலி சக்கரம் என்பதற்கு, சுழல்வது போலத் துளங்கா நின்றுள்ள சக்கரம் என்னுதல்.
தொல் அருள் –
இயல்பாகவே அமைந்த அருள்.
அருளாலே, கழல்வளை பூரிப்ப நாம் கண்டு கைதொழக் கூடவற்றே என்க.

—————————————————————–

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-

ஆராட்டு உத்சவம் -தீர்த்தவாரி போலே -மூலவர் தான் சேர நாட்டில் முக்யத்வம் -பலி பேரரை எழுந்து அருளி உத்சவம் –
விலஷண புருஷா வாசஸ்த்தானமான -நிருபாதிக சம்பந்த உக்தன்
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?-ஸ்வா வாபிகா உபகாரத்வன் –
திருமாலே நானும் உனக்கு பல அடியேன் -அனுக்ரகம் பழைமை
சம்சாரம் பரமபதம் -வாசி இல்லாமல் அவன் அருளால் அனுபவித்து தொழும் படி
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்-நல அருள் -ஸூஹ்ருதம் -அடியாக -சத்கர்மா -பகவான் அனுக்ரகமே ஸூ ஹ்ருதம்
இவனும் அறியாமல் -சாஸ்திரமும் அறியாமல் -ஈஸ்வரன் திரு உள்ளத்தாலே -பகவத் காருண்யத்தால் கட்டிய புண்ணியத்தால் தொழக் கூடுமோ
அவன் சந்நிஹித ஸ்ரீ செல்வம் உடைய –
த்ரிபாத் -விபூதியில் -மடி மாங்காய் -ஓன்று பத்தாக்கிக் கொண்டு நடாத்திப் போகுமே -யாத்ருச்சிகாதி –
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்-அவனிலும் விஞ்சின அருளை -அவனுக்கு தொல் அருள் இவர்களுக்கு நல்லருள் –
பகவத் ஞானம் ப்ரேமாதி -ரூபமான -ஆதி கைங்கர்யம் –கல்யாண குணங்கள் தரித்து -நலமான மங்களா சாசானம் பண்ணும் என்றுமாம்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.-நம்மை அனுபவிப்பிக்கும் பெருமான் -சமஸ்த குண விபூதி உக்
ஸ்வரூப ரூபம் குணம் விபூதி நான்குக்கும் வாசகங்கள் திரு நாமங்கள் -உகந்து இருக்கும் தோழி மீர்காள் –
உதாசீனன் -பாபத்துக்கு –ஆத்ய பிரவ்ருத்தி முதல் முயற்சி உதாசீனன் -இரண்டாவது -பிரவ்ருத்தியில் அனுமதி
மூன்றாவது பிரவ்ருதியில் தூண்டி -என்பர் -ஆதிக்யத்துக்கு உட்பட்டே செயல் -என்பதால் –உதாசீனனாக இருப்பது அவன் சங்கல்பம் –

தோழிமீர்காள்! எம்பெருமானுடைய தொல் அருளை மண்ணுலகும் விண்ணுலகமும் அநுபவித்துத் தொழும்படி நின்ற திருநகரம்,
எம்பெருமானுடைய கல்யாண குணங்களைக் கொண்டாடிப் பேசுகின்ற நல்ல அருளையுடைய ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கியிருக்கின்ற
திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற நல்லருளையுடைய நம்பெருமான் நாராயணனுடைய திருநாமங்களை,
எம்பெருமானுடைய தொல்லருளால் உண்டான புண்ணியத்தாலே சொல்லுவதற்குக் கூடுமோ? என்கிறாள்.
தொல் அருள் – இயல்பாகவே உள்ள அருள். தொல் அருளைத் தொழ நின்ற திருநகரமாகிய திருவல்லவாழ் என்க.
நலனேந்தும் நல் அருள் ஆயிரவர் தங்கியிருக்கின்ற திருவல்லவாழ் என்க. நாராயணனுடைய நாமங்களை நல்வினையால்
சொலக் கூடுங்கொல்? என்க. தொல்லருளால் உண்டாய நல்வினை என்க.

இயல்பாகவே அமைந்துள்ள அவனுடைய கிருபையாலே அவனைக் காணப்பெற்று,
பிரீதியாலே இனியதாய்க்கொண்டு திருநாமங்களைச் சொல்லக் கூடவற்றே என்கிறாள்.

தொல் அருள் நல்வினையால் சொலக் கூடும் கொல்-
அவனுடைய ஸ்வாபாவிகமான அருளாலே அவனைக் காணப் பெற்று, அதனால் வந்த பிரீதியாலே
உகந்து கொண்டு திருநாமத்தைச் சொல்லக்கூடவற்றோ என்னுதல்; நல்வினை – உகப்பு.
அன்றிக்கே, ஸ்வாபாவிகமான கிருபையால் உண்டான புண்ணியத்தாலே அவனைக் கண்டு
திருநாமங்களைச் சொல்லக் கூடவற்றோ என்னுதல்.
“நா, நீர் அற்று இருக்கை பாபத்தின் பலம் அன்றோ. நாக்கிலே நீர் உண்டாய்த் திருநாமம் சொல்ல வல்லோமே என்கிறாள்’
என்று அம்மங்கி அம்மாள் வாக்கியார்த்தமாக அருளிச்செய்வர் என்று அருளிச்செய்வர்.

நா, நீர் அற்றிருக்கை’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து, நாநீர் அற்றிருக்கை பாபத்தின் பலமானால், நாக்கில் நீர் வருதல்
புண்ணியத்தின் பலமாகையாலே, அவனுடைய கிருபையாகிற புண்ணியத்தாலே நாக்கிலே நீர் உண்டாய்த் திருநாமம் சொல்ல வல்லோமே என்கிறாள் என்பது

தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
தன்னுடைய கண்ணழிவற்ற கிருபையை இவ்வுலகத்திலுள்ளாரும் நித்திய விபூதியிலுள்ளாரும் தொழநின்ற மஹா நகரம்.
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ் –
மக்களைக் காப்பாற்றுவதில் எம்பெருமானைக்காட்டிலும் அநுக்கிரஹ சீலர்களாயிருக்குமவர்கள்.
“நலன் ஏந்தும்” என்பதற்கு இரண்டு பொருள்: ஒன்று, அவனுடைய கல்யாண குணங்களைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்ற ஊர் என்பது.
பிரேமத்தாலே அவனுடைய ரக்ஷகத்வத்தைத் தாங்கள் ஏறிட்டுக்கொண்டு அவனுக்கு மங்களாசாசனம் செய்கிற ஊர் என்பது மற்றொரு பொருள்.
நலன்-அன்பு. இவ்விரு பொருள்களையும் முறையே அருளிச்செய்கிறார் அவனுடைய’ என்று தொடங்கியும், ‘அன்பாலே’ என்று தொடங்கியும்.
அவனுடைய கல்யாணகுணங்களைக் கொண்டாடி வசிக்கின்ற ஊர் என்னுதல்.
அன்றிக்கே, அன்பாலே மங்களாசாசனம் செய்து வசித்துக்கொண்டிருக்கும் ஊர் என்னுதல்.
நல் அருள் நம்பெருமான் –
நல்ல அருளையுடையவனாய் நமக்கு ஸ்வாமியாயிருக்குமவன்.
நல்லருளாவது, வாத்சல்யம். வாத்சல்ய ஸ்வாமித்வங்கள், நாராயண சப்தார்த்தமாகும்.
அர்த்தத்தை அருளிச்செய்து பின்பு சப்தத்தை அருளிச்செய்கிறார்:
நாராயணன் நாமங்களே –
நாராயண சப்தம், தர்மி நிர்த்தேசம்.-
நாராயண சப்தமும் சர்வேச்வரனுடைய திருநாமம் அன்றோ, இதனைப் பிரதானமாகச் சொல்லுவான் என்? என்ன,
‘நாராயண சப்தம்’ என்றுதொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘தர்மி நிர்த்தேசம்’ என்றது, ஸ்வரூப நிரூபகம் என்றபடி.
‘இந்த ஸ்வபாவங்களாலே’ என்றது, வாத்சஸ்ய ஸ்வாமித்வங்களாலே என்றபடி. குணங்களில் வைத்துக்கொண்டு
ஞானஆனந்த அமலத்வ ஆதி குணங்கள் நிரூபகங்களாய், அல்லாத குணங்கள்
இவற்றாலே நிரூபிதமான ஸ்வரூபத்திற்கு விசேஷணமானாற்போலே, திருநாமங்களிலும் நாராயண சப்தம்
ஸ்வரூப நிரூபகமாய், அல்லாத திருப்பெயர்கள் இந்தத் திருநாமத்தாலே நிரூபிதமான வஸ்துக்கு உண்டான
குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமாயிருக்கும் என்றபடி.
இந்த ஸ்வபாவங்களாலே நிரூபிதமான வஸ்துவுக்கு உண்டான குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகங்கள் மற்றைத் திருநாமங்கள்.

———————————————————————————–

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11-

பகவத் அனுபவ யோக்யதை ஜன்மம் பெறுவார்கள் -பலம் –
நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்-பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையவன் -பிரதானம் நாராயணன் -நாமம் –
தேவோ நாம சகஸ்ரவான் -நம் ஸ்வாமி என்று சர்வரும் பற்றும் படி சர்வேஸ்வரன் -திருவடி மேல் -நினைத்தபடி பரிமாற்றம் பெறாத நிலையிலும் ஷேமம்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த-ஷேமகரத்வ புத்தி -ரூப வியவசாயம் முயற்சி –சடகோபனுக்கும் -திருக் குருகூருக்கும் -ஷேமம் கொள் –
தவிப்பையே பகிர்ந்து -நமக்கு ஷேமம் கொடுத்து அருளும் –திருவடிகளே ரஷகம் என்று விஸ்வசித்து ஆராய்ந்து உரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்-பாடல்கள் ஆயிரம் என்னாமல் -குணம் சொல்ல வந்த பாசுரங்கள் தானே
-யானி நாமானி கௌனானி-ஆயிரம் பாசுரங்கள் -குணங்கள் திருநாமங்கள்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.-ரஷாயுக்தமான அழகிய திவ்ய தேசம் -சரீர சம்பந்தம் உடன் இருந்து வைத்தும்
பகவத் அனுபவம் சிறப்பை பெறுவார் -மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம் –

ஆயிரம் திருநாமங்களையுடைய நம்பெருமானது திருவடிகளையே தமக்குக் காவலாகப் பற்றின தென்குருகூர்ச் சடகோபராலே ஆராய்ந்து
அருளிச்செய்யப்பட்ட திருநாமங்களைப் போன்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள், இவை பத்துத் திருப்பாசுரங்களும் சேமத்தைக் கொண்டிருக்கின்ற
அழகிய திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தின் மேலனவாம்; இவற்றைச் சொன்னவர்கள் இந்தச் சரீர சம்பந்தத்தோடே
இருந்தும் பகவானுடைய அநுபவமாகிற சிறப்பினையுடையவராவர்கள் என்றவாறு.
அடிமேல் – திருவடிகளை. திருவடிகளிலே என்னலுமாம். சேமம்-காவல். தென்-அழகு. தெற்குத் திசையுமாம்.
செப்புவார் பிறந்தே சிறந்தார் என மாற்றுக. செப்புவார்: வினையாலணையும் பெயர்.

இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்து வைத்தே பகவானுடைய
குணாநுபவத்தாலே எல்லாரிலும் சிறந்தவர்கள் என்கிறார்.

நாமங்கள் ஆயிரமுடைய நம் பெருமான் –
“ஸ்வயம் பிரகாசகனான சர்வேச்வரன் ஆயிரம் திருப்பெயர்களை யுடையவனாயிருக்கிறான்” என்கிறபடியே,
குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமான திருப்பெயர்களை யுடையவனாகையாலே சர்வேச்வரனாகப் பிரசித்தனானவன்.
“ஸஹஸ்ரபாஹு: ஸர்வஜ்ஞோ தேவோ நாமஸஹஸ்ரவாந்”-என்பது, பாரதம்.
‘நம்’ என்பது, பிரசித்தியைக் காட்டும். பெருமான்-சர்வேச்வரன்.
“நம் பெருமாள் நம் மாழ்வார் நஞ்சீயர் நம் பிள்ளை என்பர் அவரவர்தம் ஏற்றத்தால்”-என்றது உபதேச ரத்தினமாலை.
‘ந என்பது, சிறப்புப் பொருள் உணர்த்தும்; நக்கீரன், நச்செள்ளை என்றாற்போல’ என்பர் நச்சினார்க்கினியர்.

அடிமேல் சேமம்கொள் தென்குருகூர்ச் சடகோபன் –
புறம்புள்ள காற்கட்டுக்களை விட்டு, அவன் திருவடிகளையே தமக்கு ரக்ஷகமாகப் பற்றின ஆழ்வார்.
தெரிந்து உரைத்த நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் –
அவனுடைய திருநாமங்கள் போலே, குணங்களையும் செயல்களையும் தெரிவிக்கின்ற ஆயிரத்திலும் ஆய்ந்து உரைத்த.
ஆயிரம் திருப்பெயர்களைச் சொன்னால் அவன் குணங்கள் தோற்றுமாறு போலேயன்றோ,
இவற்றாலும் அவன் குணங்களும் செயல்களும் தோற்றும்படி.

‘ஆயிரம் பாசுரங்களில் இவை பத்து’ என்னாமல், “நாமங்களாயிரத்துள் இவை பத்தும்” என்பான் என்? என்ன, “நாமங்களாயிரமுடைய”
என்றதனைத் திருவுளத்தே கொண்டு, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஆயிரம் திருப்பெயர்களை’ என்று தொடங்கி. தோற்றும்படி ஆகையாலே
திருநாமங்களான ஆயிரம் என்னக் குறை இல்லை என்பது எஞ்சி நிற்கிறது.

தென் நகர் –
அழகிய நகரி.
சிறந்தார் பிறந்தே –
ஒருவனுக்குப் பிறக்கை போக்கித் தாழ்ச்சி இன்றிக்கே இருக்க, அவனுக்குப் பல பிறப்பாய் ஒளி வருமாறு போலே,
இவர்களும் இங்கே பகவானுடைய குணங்களை அநுபவம் பண்ணுகையாலே சீரியர்கள்.

பிறந்தே சிறந்தார் என்று கூட்டுக.
பிறவியினையுடையராயிருந்தும் சிலாக்கியராயிருப்பார். பிறவியில் சிலாக்யதை கூடாது என்னுமதனையும்;
இத்தகைய பிறவியினை யுடையராயிருந்தும், சர்வேச்வரனுக்குப் பிறக்கப் பிறக்கக் குணங்கள் புகர் பெற்று வருமாறு போன்று, இவர்களும்
பகவதநுபவம் பண்ணுகையாலே சிலாக்கியராயிருப்பார்கள் என்னுமதனையும் அருளிச்செய்கிறார் ‘ஒருவனுக்கு’ என்று தொடங்கி.
ஒருவனுக்கு – சம்சாரி சேதனனுக்கு. பிறக்கை போக்கி-பிறக்கையைப் பற்ற; என்றது, பிறவியைக்காட்டிலும், வேறு ஒன்று தாழ்ச்சியின்றிக்கே
இருக்கையைத் தெரிவித்தபடி.
“சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்”- திருவிருத்தம். 79.– என்னக் கடவதன்றோ.

இந்தப் பத்தினைக் கற்க வல்லவர்கள்; என்னைப் போலே அவன் இருந்த தேசத்திலே போகப் புக்கு
பலக் குறைவின் காரணமாக நடுவழியிலே விழுந்து நோவு படாதே உகந்தருளின தேசத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர்கள்.
இவர்களுடைய ஜன்மங்கள் கர்மங்காரணமாக இருக்கச் செய்தே அவனுக்கு உறுப்பாகை யாலே முக்தர்களுடைய
சரீரத்தைக்காட்டிலும் சிலாக்கியம். அடியார்களின் பொருட்டு அவதரித்த பகவானுடைய அவதாரம் போலே சிலாக்கியம்.

———————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அன்யம் முனி பிரதிகத
கேதாத் அன்யம் திவ்ய தேசம் கந்தும் பிரவ்ருத்தர் மநஸா
அபிது திவ்ய தேசம்
தத் போக்யதாம்
தது ஈச -தத் அதீச -பாதௌ யாயம் கதா –
இத்யகதயத்
நவமே சைதைன்யம்

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

காரேஸ் தனுஜா
பவதி ஹரி
ச்வாமித்வாத் கோனார்
சம்ஸ்ருதானாம் உபகரண ரசாத்
ஸ்வ இஷ்ட சம்ச்லேஷகத்வாத் –
சர்வா ஆச்வாச்கத்வத்
கபட வடுதயா
காருணா
திவ்ய ஸ்தான
பிரமதரி பரணாத்
நாராயணத்வாத்-சர்வ ஆதாரத்வ – சர்வ நியந்த்ருத்வ
ஆர்த்தி தீரும் படி அத்யாசன்ன ஸ்ரீதானாம் –

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 49-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

மா நலத்தால் மாறன் திரு வல்ல வாழ் புகழ் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித்
துன்புற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற————-49-

————————————————————————

அவதாரிகை –

இதில்
திரு வல்ல வாழ் ஏறச் செல்ல
புறச் சோலையில் போக்யதையால் நலிவு பட்டுப் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்-
பெரிய ஆற்றாமையோடு திருக் குடந்தையிலே புக்க இடத்திலும்
தம்முடைய அபேஷிதம் கிடைக்கப் பெறாமையாலே
அங்கு நின்றும் புறப்பட்டு
திருவடிகளே உபாயம் –என்று துணிந்த துணிவு கை கொடுத்து நடத்த
திரு வல்ல வாழ் ஏறப் போய்
முட்டப் போக மாட்டாமல் மிகவும் தளர்ந்து
ஊரில் புறச் சோலையில் கிடந்தது
அங்கு உண்டான வாத்திய கோஷ
வைதிக கிரியா கோலாகலம் செவிப்பட
மது மல்லிகை தொடக்கமான போக்யதை அனுசந்திக்கையாலும்
உள்ளுப்புக்கு அனுபவிக்க பெறாமையலும்
தமக்கு உண்டான ஈடுபாட்டை
நாயகன் இருப்பிடத்தே செல்லுவதாக புபுறப்பட்டுப் போய்
கிட்டி அனுபவிக்கப் பெறாமையாலே
நடுவே கிடந்தது நோவு பட்டு
அங்கே புக்கு அவனைக் கண்டு ஸ்தோத்ரம் பண்ண பெறுவது என்றோ நாம் -என்று
தன தளர்த்தியை பாங்கிமாருக்கு உரைக்கிற
நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
மானேய் நோக்கில் அர்த்தத்தை
மா நலத்தால் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்-என்கை –

——————————————————————————–

வியாக்யானம்–

மா நலத்தால் மாறன்-
பெரிய பிரேமத்தாலே ஆழ்வார் –

திரு வல்ல வாழ் புகழ் போய் –
பிரேம ப்ரேரிதராய் பிரவேசிக்கைக்காக போய் –

தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் —
அவ் ஊர் தன் அருகில் -தான் இளைத்து -வீழ்ந்து
உள்ளே புக்கு அனுபவிக்க பெறாமால்
ஊரின் புறச் சோலையிலே
பல ஹானியாலும்
அங்குத்தை போக்யதையாலும்
நகர சம்ப்ரமங்களாலும்
கால் நடை தாராமல்
தளர்ந்து வீழ்ந்து –
மேல் நலங்கித்-
அதுக்கு மேலே
தோழி மார் நிஷேத வசனங்களாலும் கலங்கி –

துன்புற்றுச் –
பகவத் அலாபத்தாலே
மாறுபாடு உருவின
துக்கத்தை யுடையராய் –

சொன்ன சொலவு –
அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள்-
அதாவது
பத்ம சௌ கந்திகவஹம் -என்றும்
பத்ம கேசர சம்ஸ்ருஷ்ட -என்றும் -இத்யாதிப் படியே
வைகலும் வினையேன் மெலிய வானார் வண் கமுகும்
மது மல்லிகை கமழும் தேனார் சோலைகள் சூழ் -என்றும்
பொன்றிதழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவித் தென்றல் மனம் கமழும் -என்றும்
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் -என்றும்
பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழும் கானல் -என்றும்
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர் -என்றும்
மாடுறு பூம் தடம் -என்றும்
மழலை வரி வண்டுகள் இசை பாடும் -என்றும்
விஸ்லேஷ தசையில் அங்குத்தையில் பரிமளம் அசஹ்யமாய்
கால் கட்டுகிறபடியையும்
மற்றும் உண்டான போக்யதைகளும் அப்படியே யாகியும்
வினையேன் மெலியப் பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க என்றும்
மாடுயர்ந்த ஓமப் புகை கமழும் என்றும்
நல்ல அந்தணர் வேள்விப் புகை மை நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் -என்றும்
வேத வைத்திய க்ரியா கோலாஹலங்களுக்கும்
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம் -என்றும்
நரக சம்ப்ரமங்களும்
நாயகன் வேத பிரதிபாத்யன் ஆகையாலும் வைதிக கர்ம சாமாராத்யன் ஆகையாலும்
ச்மாரகத்வேன பாதகம் ஆயிற்று
நகர சம்ப்ரமம் தானும் சம்ப்ரமத்துடனே புகப் பெறாமையாலே பாதகம் ஆயிற்று

அதுக்கு மேலே
என்று கொல் தோழிமீர் காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ-என்றும்
நிச்சலும் தோழிமீர் காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ-என்றும் –
பிரிய பரைகள் ஹித பரைகளாய் நிஷேதிக்கை யாலும்
தனக்கு ஓடுகிற த்வரையாலே அதுவும் சைதில்ய ஜனகம் ஆயிற்று –
கோனாரை அடியேன் கூடுவது என்று கொலோ -என்றும்
நின்ற பிரான் அடி நீர் அடியோம் கொண்டு சூடுவது என்று கொல் -என்றும்
நீடுறைகின்ற பிரான் கழல் காண்டும் கொல் நிச்சலுமே -என்றும்
நம்பிரானது நன்நலமே -என்றும் –
எந்நலம் கொல் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே -என்றும்
மாண் குறள் கோலப் பிரான் மலர் தாமரைப் பாதங்கள் காண்பது எஞ்ஞான்று கொலோ -என்றும்
நிலம் தாவிய நீள் கழலை -நாடொறும் வீடின்றியே தொழக் கூடும் கொல் -என்றும்
யாம் கண்டு கை தொழக் கூடும் கொலோ -என்றும்
நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்கள்
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடும் கொல் -என்றும்
இப்படி திருவடிகளை தொழுகையும்
திரு நாமத்தாலே ஸ்துதிக்கையும்
பிரார்த்யம் ஆகையாலே சைதில்யம் மிக்கு இருக்கும் இறே-
இப்படி ஆகையாலே
மேல் நலங்கி
துன்பமுற்று சொன்ன சொல் இவை யாயிற்று –
இத்தசையிலும் -அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -என்று இறே
இவர் அத்யாவசியம் குலையாது இருக்கும் படி –

துன்பமுற்று சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு –
இப்படி விஸ்லேஷ வ்யசன உக்தராய்
அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தியான
இத் திருவாய் மொழியை
அப்யசிக்க வல்லாருக்கு –

பின் பிறக்க வேண்டா –
இதன் அப்யாச அநந்தரம்
ஜன்மம் பரிக்ரஹம் பண்ண வேண்டா
ஜென்மத்தை முடித்தே விடும்
பிற -என்று அவ்யயம்
அன்றிக்கே
திருவடிகளுக்கு அசலான ஜன்மம் எடுக்க வேண்டா -என்றாகவுமாம் –

பின்பு கற்க வேண்டா பிற -என்ற பாடம் ஆன போது
இத்தை ஒழிய
வேறு ஒன்றை
அப்யசிக்க வேண்டா
என்றபடி –

———————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: