பகவத் விஷயம் காலஷேபம் -122- திருவாய்மொழி – -5-9-1….5-9-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

திருக்குடந்தையிலே சென்று புக்கவிடத்திலும் தம் எண்ணம் நிறைவேறாமையாலே திருவல்லவாழ் ஏறப்போக ஒருப்பட்டார்;
திருக்குடந்தையிலே சென்று புக்கவிடத்தில் தம் எண்ணம் சித்தியாதது போன்று, திருவல்லவாழிலே முட்டப் போகவுங் கூட அரிதாயிற்று;
அங்ஙனம் அரிதாம்படி தமக்குப் பிறந்த துன்பத்தை அந்யாபதேசத்தாலே அருளிச்செய்கிறார்.
“மாசறு சோதி” என்ற திருவாய்மொழியில், இவர்தாம் மடல் எடுக்கப் புக்கு, ‘அவனுக்குத் தாழ்வாம்’ என்று தவிர்ந்தார்;

ஸ்வாபதேசத்திலே சங்கித்துப் பரிஹரிக்கிறார் ‘மாசறு சோதி’ என்று தொடங்கி. ‘அவனுக்குத் தாழ்வாம்’ என்றது,
அவனுடைய ரக்ஷகத்வத்துக்குத்தாழ்வாம் என்றபடி. “ஊரெல்லாம்” என்ற திருவாய்மொழியின் முன்னுரையில்
‘சூரியன் மறைகையாலே மடல் எடுக்கை தவிர்ந்தார்’ என்றுஅருளிச்செய்தாரேயாகிலும், இங்கு,
‘அவனுக்குத் தாழ்வாம் என்று தவிந்தார்’ என்று அருளிச்செய்கையாலே, இதுவும் ஒரு காரணமாகக் கோடல் தகும்.

இங்கு, ஆற்றாமை தோற்றக் கண்ட திருப்பதிகள் தோறும் புக்குத் திரியா நின்றார்;
இதற்கு அடி யாதும் தெரிகிறதில்லை. அங்கு, அவன் ஸ்வரூபம் பரிஹரித்தார், இங்கு, தம்முடைய ஸ்வரூபம் நோக்கப் பார்க்கிறார்;

‘இதற்கு அடி யாதும் தெரிகிறதில்லை’ என்று சங்கையை இரண்டு விதமாகப் பரிஹரிக்கிறார் ‘அங்கு அவன்’ என்று தொடங்கியும், ‘அங்கு
வடிவிலே’ என்று தொடங்கியும். ‘அவன் ஸ்வரூபம் பரிஹரித்தார்’ என்றது, அவனுடைய நிருபாதிக ரக்ஷகத்வத்துக்குத் தம்முடைய முயற்சி
விரோதமாகையாலே, தம்முடைய முயற்சியை விட்டார் என்றபடி. ‘இங்கு, தம்முடைய ஸ்வரூபம் நோக்கப் பார்க்கிறார்’ என்றது, அநுபவம்
இல்லாதபோது சத்தை கிடவாமையாலே, திருப்பதிகள் தோறும் புக்காகிலும் அவனை அநுபவித்துச் சத்தையை நோக்கப் பார்க்கிறார் என்றபடி.
இதனால், தம்முடைய சத்தையை உண்டாக்கியே அத்தலையை நோக்க வேண்டுகையாலே தம்முடைய சத்தையைச் சித்திக்கும் பொருட்டுத்
திருப்பதிகள்தோறும் புக்கு அநுபவிக்கப் பார்க்கிறார் என்று பரிஹரித்தாராயிற்று.

அங்கு வடிவிலே அணையவேணும் என்று ஆசைப்பட்டார்;

அங்கு, வடிவிலே அணையவேணும் என்று ஆசைப்பட்டார்’ என்றது, “மாசறுசோதி என்செய்யவாய் மணிக்குன்றத்தை” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி. ‘ஆசைப்பட்டார்’ என்றது, ஆசைப்பட்ட மாத்திரமாகையாலே “தத் தஸ்ய சத்ருஸம் பவேத் – அச்செயல்
அவருக்கு ஒத்ததாகும்” என்றிருக்கலாம் என்றபடி.

பின்பு இவ்வளவும் வர அந்த வடிவிலே இறங்கி மூழ்கினபடியாலே ஆற்றாமை முறுகி,
“கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்” என்கிறபடியே,

“கொம்மை முலைகள் இடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தான் என்”-என்பது, நாய்ச்சியார் திரு. 13 : 9.

அடிமைசெய்ய ஆசைப்படுகிறார். ‘அடிமை செய்ய ஆசைப்படுகிறார்’ என்றது, “அடி கூடுவது என்று கொலோ” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.

இனி, இவர் தமக்குக் கலவியாவது, மானச அநுபவம் என்றே யன்றோ திருவாய்மொழியின் முன்னுரையிலே அடியிலே சொல்லிற்று;

‘திருவாய்மொழியின் முன்னுரையிலே’ என்றது, முதற்பத்திலே ‘திருமகள் கேள்வன் ஒன்றிலே’ என்றபடி.

இங்ஙனேயிருக்க, திருவல்ல வாழ் ஏறப் புறப்பட்டுப் போகையாவது என்? உறவினர்கள் விலக்குதலாவது என்? என்னில்,

‘புறப்பட்டுப் போகையாவது என்?’ என்றதன் பின், ‘முடியப் போகமாட்டாமல் புறச்சோலையிலே விழுந்து கிடக்கையாவது என்’ என்பது
எஞ்சி நின்றது; அதனைக் கூட்டிக்கொள்க.

அந்த மானச அநுபவத்திற்கு ஒரு கலக்கம் வர அமையுமன்றோ.

இரண்டற்கும் விடை அருளிச்செய்கிறார் ‘அந்த’ என்று தொடங்கி. ‘அந்த மானச அநுபவத்திற்கு ஒரு கலக்கம் வர அமையும் அன்றோ’ என்றது,
திருவல்லவாழ் ஏறப் போகிறது, மானச அநுபவமாய், முடியப் போகமாட்டாமல் புறச்சோலையிலே விழுந்து கிடக்கை, மானச அநுபவ
அபாவத்தால் வந்த கலக்கம் என்றபடி. “உறவினர்கள்” என்றது, சுவாபதேசத்தில், சம்பந்த ஞான உபாய அத்யவஸாய நிலைகளை.
‘அவர்கள் விலக்குதல்’ என்றது, சம்பந்த ஞான உபாய அத்யவஸாய நிலைகளோடு கூடினவராய் நிரூபிக்குமளவில், தம் முயற்சி, அவனையே
ரக்ஷகனாகக் கொண்டிருத்தல் அவனுக்கே பரதந்திரப்பட்டிருத்தல் ஆகிற ஸ்வரூபத்திற்கு முரண்பட்டதாகத் தோன்றுதலைக் குறித்தபடி.

நான்கு வீதிகளில் நான்கு பிரகரணங்கள் -ஆச்சார்ய ஹிருதயம் -சாதித்து அருளி நாயனார் –
சம்பந்தம்-ஞானம் -தோழி பாசுரம் -பிரணவார்த்தம்
உபாயஅத்யவசாயம் -தாயார் -நமஸ் சப்தார்த்தம்
பேற்றுக்கு த்வரிக்கை -தலைமகள் -நாராயணாயார்த்தம் –

எம்பெருமானோடே கலந்து பிரிந்து பிரிவாற்றாமையாலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி, தன்னுடைய குடிப்பிறப்பு முதலானவற்றையும் பாராமல்,
(பிராசங்கிகமாகச் சங்கித்துப் பரிகாரம் செய்து, பின், இத்திருவாய்மொழியில் அருளிச்செய்யப்பட்ட பொருளை விரித்து அருளிச்செய்கிறார்
‘எம்பெருமானோடே’ என்று தொடங்கி. ‘குடிப்பிறப்பு முதலானவற்றையும்’ என்ற உம்மை, அவனுடைய ரக்ஷகத்வம் முதலான குணங்களைத் தழுவுகிறது.)
திருவல்லவாழ் ஏறப் புறப்பட்டுப் போகப்புக, இதனை அறியும் தோழிமார் வந்து
‘இது கார்யம் அன்று, நம் தலைமைக்குப் போராது காண்’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க,
‘இனி, நீங்கள் சொல்லுகிறவற்றால் நான் பெற்றது என்; 1-அவ்வூரில் திருச்சோலையும், 2-அங்குண்டான பரிமளத்தைக் கொய்துகொண்டு
புறப்படுகிற தென்றலும், 3-அங்கே தேனைக் குடித்துக் களித்துப் பாடாநின்றுள்ள வண்டுகளினுடைய இனிதான மிடற்றோசையும்,
4-ஊரிலுண்டான வைதிகக் கிரியைகளின் கோலாஹலங்களும், 5-நகர சம்பிரமங்களும், இவையெல்லாம், -இந்த ஐந்தும் –
நீங்கள் என்னை மீட்க நினைப்பதைப் போன்று ‘அங்கே போரு போரு’ என்று-ஒரே திசை நோக்கி -அழையாநின்றன;
ஆன பின்பு, நீங்கள் சொல்லுகிறவற்றால் பெற்றது என்’ என்று தன் துன்பத்தை அவர்களுக்கு அறிவுறுத்தி
அவர்களை வேண்டிக்கொண்டு;
திருவல்லவாழிலே நான் நினைத்தபடியே போய்ப் புக்குப் பரிமாற வல்லேனே என்று அவர்களுக்குச் சொல்லுகிறாளாயிருக்கிறது.
இத்திருவாய்மொழியில் வருகின்ற “தேனார் சோலைகள்”, “தென்றல் மணம் கமழும்”, “பாண்குரல் வண்டு”, “பாடு நல் வேத ஒலி”, “மண்ணும்
விண்ணும் தொழநின்ற” என்ற பாசுரப் பகுதிகளைத் திருவுள்ளம்பற்றி “அவ்வூரில் திருச்சோலையும்” என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
“மானேய் நோக்கு நல்லீர்”, “நன்னலத் தோழிமீர்காள்” என்பனவற்றைத் திருவுள்ளம்பற்றி ‘அவர்களை வேண்டிக்கொண்டு’ என்கிறார்.

‘இதுதான் நான் அநுபவித்தேன்’ என்று சீயர் அருளிச்செய்வர்.
பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்துப் பின்பு ஒருகால் மேல்நாட்டுக்கு எழுந்தருளி மீண்டு
பெரிய விரைவோடே ‘திருநாளுக்கு உதவ வேணும்’ என்று வர,
திருக்கரம்பன் துறையளவிலே வந்தவாறே நினைவின்றிக்கே காவிரி பெருகிக் கிடக்க;
இராத் திருநாள் எழுந்தருளி இங்குண்டான சம்பிரமங்களெல்லாம் செவிப்படுவது,
வந்து புகுரப் பெறாதொழிவதாய்க்கொண்டு ‘போரநோவு பட்டோம்’ என்று அருளிச்செய்வர்.
ஏகதத்விதத்ரிதர்கள் -மானச புத்ரர்கள் சனகாதிகள் -சுவேதத்தீபத்தைச் சென்று கிட்டி, உள்ளுப் புகுகைக்குத்
தகுதியில்லாமையாலே புறம்பே நின்று, அங்குள்ளார் எம்பெருமானைக் கண்டு படுகிற சம்பிரமத்தைச் செவியாலே கேட்டு நிற்பது,
கண்ணாலே காணப் போகாதொழிவதாய்க் கிடந்து- பட்டாற்போலே கிடந்து கூப்பிடுகிறாராயிற்று இவரும்.

அங்குத்தை வியாபாரங்களும் செவிப்படாநிற்கக் கிட்டப்பெறாமல் சமீபத்தில் நின்று நோவு பட்டமைக்கு இரண்டு திருஷ்டாந்தங்கள்
காட்டுகிறார் ‘இதுதான்’ என்றும், ‘ஏகதத்விதத்ரீதர்கள்’ என்றும் தொடங்கி. ‘திருநாள்’ என்றது, மார்கழி மாதத்து அத்யயன உத்ஸவத்தை.
‘ஏகதத்விதத்ரிதர்கள்’ என்றது, பிரஹ்மாவினுடைய மானச புத்திரர்களான இருடிகளை.

ஸ்ரீ வல்லபன் — கோலப்பிரான் -ஆறு திவ்ய தேசங்கள் நடுவில் நடு நாயகமாய் —
நோற்ற நாலும் 5 சரணாகதி -10 தடவை -திருமங்கை -அசக்ருத் சரணாகதி –
இது மட்டும் நாயகி பாவம் சரணாகதி –
வேத சதுஷ்டயம் -அங்கம் -17 வித பொருத்தம் -தூது நாயகி -அநுகரிக்க -மடல் -ஊடல் போல்வன -அசக்ருத் பிரபத்தி கரணம்
-திரு இந்தளூரில் ஆணாக ஊடி –
பிராட்டி சம்பந்தம் உலகம் உண்ட -ஒன்றிலும்
அர்ச்சையில் நான்கும் விபவத்தில் ஒன்றும் என்றுமாம் –
ஐந்தும் -ஐந்து விதம் -பாண்டிய -சோழ –சேர -வட நாட்டு திவ்ய தேசம்
-விபவம் ஒன்றும் -இவர் துறை -தேர் கடாவிய கனை கழல் மேலே பிராவண்யம்

—————————————————————————————–

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-

நாயகி -பிரேம தசையில் இருந்தாலும் ஸ்வாமி தாஸ பாவம் மாறாதவர் -அடிச்சியோம் என்பாரே –
நிரதிசய போக்யமான சோலைகளை உடைய -திவ்ய தேசம் -நிருபாதிக ஸ்வாமி திருவடிகளை
என்று கிட்டுவேன் -தடுக்க வந்த தோழிகளைக் குறித்து தலைமகள்
மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய-மான் விழி போன்ற மருண்ட கண்கள் -என் பக்கல் நலமே நிரூபகம் –
நினைத்த படி கிட்டி பரிமாற்ற ஒண்ணாத -எப்பொழுதும் மெலியும் படியாக
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்-மெலிய மெலிய கமுகு வளருகின்றன -இதுவே தாரகம் -நல்ல திவ்யதேசம் நல்ல ஸ்வாமி என்கிறாள்
ஆகாசம் முழுவதும் -மல்லிகைக்கு உடம்பைக் கொடுக்கும் கமுகு -வண்மை
இவனுக்கு தெரிய வில்லையே -என்றவாறு -அத்துடன் செர்த்தியாலே மது பெருகும் -பரிமளத்துடன்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்-மதுவும் பரிமளம் ஆக்ருஷ்டம் வண்டுகள்
எண்ணிறந்த யானைகள் -புறப்பாடு இங்கே உண்டே -மெலிய வானார் -மெலிய கோனார் -இவரும்-ஸ்வாமி ஆனார் –
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?
மேன்மைக்கு தோற்ற அடியேன் -திருவடிகளில் என்று சேர்வேன் -என்றவாறு

மான் பார்வை போன்ற பார்வையையுடைய பெண்களே! வினையேன் நாள்தோறும் மெலியும்படியாக, ஆகாயம் வரையிலும் உயர்ந்திருக்கிற
வளவிய பாக்குமரங்களும், தேன் பொருந்திய மல்லிகையும் வாசனை வீசுகின்ற தேன்பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவல்லவாழ்
என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற சர்வேச்வரனுடைய திருவடிகளிலே அடியேன் சேர்வது என்றுகொல்? என்கிறாள்.
“மானேய்” என்பதில், ஏய்: உவம உருபு. நோக்கு – கண்கள். பார்வையுமாம். கமுகு-பாக்கு மரம். மல்லிகை – முல்லை விசேடம்.
கோனார் என்பதில், கோ என்பதற்கு, தலைவன் என்பது பொருள்; னகர ஒற்று, சாரியை; ஆர், உயர்வுப்பொருளைக் காட்ட வந்த விகுதி.
இத்திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

தோழிமாரைக் குறித்து, திருவல்லவாழிலே நின்றருளின சர்வேச்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவது என்றோ? என்கிறாள்.

மான் ஏய் நோக்கு நல்லீர் –
“நான் திருவல்லவாழிலே போய்ப் புகும்படி உங்கள் கண்களாலே குளிர நோக்கித்
திருவருள் புரிய வேணும் என்கிறாள்” என்று பிள்ளான் பணிப்பர்.–நோக்கு -கடாஷம் கண்
மான் ஏய் நோக்கு நல்லீர் –
மானை ஒத்த நோக்கினை யுடையீராய் எனக்கு நல்லவர்களே!
அன்றிக்கே, ‘பிரிவாற்றாமையாலே நோவுபட்டும், சோலையழகிலே ஈடுபட்டும், நம்முடைய ஹித வசனத்தாலே தளர்ந்தும் இருக்கின்ற இவளுக்கு,
‘போகலாகாது’ என்று விலக்கும் நம்முடைய வார்த்தைகள் செவிப்படுமாகில், இவள் மோஹிக்கும் என்று
விலக்குகிற காரியம் தோற்றும்படி காதரேக்ஷணைகளாய்க் கொண்டிருக்க, ‘மான் ஏய் நோக்கு நல்லீர்’ என்கிறாள் என்னுதல்.
முதலிகள் பெருமாள் திரு முகம் கன்னி விடும் என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வானை குற்றம் சொல்லாமல் இருந்தது போலே இவர்களும் –
இவள் தனக்கு “அசூயையில்லாத” என்னும் இவ்வளவே அன்றோ வேண்டுவது.
“இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாமி – -வைப்பாக வைத்ததையுமெல்லாம் சொல்லா நின்றேன் கேள். அநஸூயவே –
“இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாமி அநஸூயவே ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யத்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஸூபாத்”-என்பது, ஸ்ரீ கீதை. 9 : 1.
அத்தலை குறைவற்ற பின்பு இத்தலை கிடக்குமோ.”–அத்தலை -அர்ஜுனன் -இத்தலை -ஸ்ரீ கிருஷ்ணன்
பக்தி யோகம் விரிவாக அருளிச் செய்வதற்கு முன்பு -பொறாமை இல்லாததே அதிகாரம் -என்றவாறு –
நிஷேதிக்காமல் இருந்ததே நன்மை என்றவாறு –

வைகலும் வினையேன் மெலிய –
ஒருகால் மெலிந்து தரித்திருப்பார்க்கன்றோ பிரிவாற்றலாவது.
வைகலும் மெலிய –
காலம் கழியக் கழியக் காதல் கழியும்படி யன்றோ சிற்றின்பத்தை விரும்பியிருப்பார்க்கு இருப்பது;
மனனம் பண்ணி, பாவனையாய், பின்பு தரிசனமாய், பிரத்தியக்ஷ சமான ஆகாரமாய்,
பின்பு சரீரம் நீங்குங் காலத்தைப் பார்த்திருப்பார்படி அன்றோ இது.
“தஸ்ய-எனக்கு, அத ஸம்பத்ஸ்யே-பின்பு சம்பந்நனாகக் கடவேன் என மேலே வருகின்ற தன்மை ஒருமை வினைமுற்றோடு கூடவேண்டுமே.
யாவந்ந விமோக்ஷயே – எத்துணைக்காலம் சரீரத்தினின்றும் விடுபடாமல் இருக்கிறேனோ,
தாவ தேவ சிரம் – எனக்கு அவ்வளவே கண்டாய் விளம்பம்.
அத ஸம்பத்ஸ்யே – பின்பு சம்பந்நனாகக் கடவேன்.” என்றது,
“தஸ்ய தாவ தேவ சிரம் யாவந் நவிமோக்ஷ்யே அத ஸம்பத்ஸ்யே” என்பது, சாந்தோக்யம்.
எத்துணைக்காலம் சரீரத்தினின்றும் விடுபடாமலிருக்கிறேனோ, அத்துணைக்காலந்தான் எனக்குத் தாமதம் அவனைப் பெறுவதற்கு;
சரீரம் விடுபட்ட பின், அவனை நான் பெறுவேன் என்பது இவ்வுபநிடத வாக்கியத்தின் பொழிப்புரையாகும்.
“இந்த ஆத்மா இந்தச் சரீரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைந்து தானான நிலையைப் பெறுகிறான்” என்றபடி.
எஷ ஸம்பிரஸாத: அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்ஜ்யோதி: உபசம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யேத’-என்பது, சாந்தோக்யம்.
இப்படிச் சரீரம் விட்டு நீங்கும் தினத்தைப் பார்த்திருப்பார் படி அன்றோ இது.
வைகலும் வினையேன் மெலிய –
தன்னைப் பிரியும்படி மஹாபாவத்தைப் பண்ணின நான், நாடோறும் தொடர்ந்து வருகிற வியசனத்தாலே மெலிவினையுடையவளாக.
ஒரு நாள் மெலியப் பொறுக்கமாட்டாத தன்மையினை யுடையவள் காண்!- நெடுநாள் நோவு படுகிறாள்.
திருவடி கண்டு போந்த பின்பு பிராட்டி படுவனவெல்லாம் படுகிறாளாயிற்று இவளும்.
ஓர் இரவின் வியசனத்தைத் திருவடி-நம்மாழ்வார் – பொறுக்க மாட்டிற்றிலன் அன்றோ;
இவள் நாள்தோறும் மெலிவதற்குப் பிராட்டியின் மெலிவினைத் திருஷ்டாந்தம் காட்டுவதற்குத் திருவுள்ளம்பற்றி அதற்கு அவதாரிகை
அருளிச்செய்கிறார் ‘ஒருநாள் மெலிய’ என்று தொடங்கி. ‘திருவடி கண்டு போந்த பின்பு’ என்றது, இலங்கையிலே போந்து பிராட்டியைக் கண்ட
பின்பு என்றபடி. பிரிவுற்ற நிலையிலே பிராட்டி பட்ட படிக்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘இமாம்’ என்று தொடங்கி.
“இமாம் அஸித கேசாந்தாம் ஸதபத்ர நிபேக்ஷணாம் ஸு கார்ஹாம் துக்கிதாம் த்ருஷ்ட்வா மமாபி வ்யதிதம் மந:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16.
“இமாம் அஸித கேஸாந்தாம்-
மை வண்ண நறுங்குஞ்சியையுடையவர்க்கும் பேணத் தகும் குழலையுடையவள்காண்.
இங்கே திருநெடுந்தாண்டகம் 21-ஆம் திருப்பாசுரம் அதுசந்தேயம்
ஸதபத்ர நிபேக்ஷணாம் –
‘கமலக்கண்ணன்’ என்கிற கண்களாலே கண்டுகொண்டிருக்கத் தக்க கருங்கண்களையுடையவள் காண்.
ஸுகார்ஹாம்-
அவர் மடியிலே இருக்கத் தகுமவள்.
துக்கிதாம் த்ருஷ்ட்வா-
இந்த இருப்பு இருக்கத் தகாதவளைக் கண்டு.
மமாபி வ்யதிதம் மந:-
இன்ப துன்பங்களுக்கு அழியாத என்னுடைய நெஞ்சுங்கூட வருந்திற்றுக் காண்.” இப்படியே காணும் இவளுக்கும் இருக்கிறபடி.
வினையேன் –நாள்செல்ல நாள்செல்ல ஆசை கழியாதபடியான பாவத்தைச் செய்தேன்
மெலிய, திருவல்லவாழ் உறையும் என்னுதல். மெலிய-நீர்ப்பண்டமாய் அழிகிறபடி.

வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும் தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை –
இதனால், இத்தலை மெலிய மெலிய அத்தலை மல்கா நின்றது என்பதனைத் தெரிவித்தபடி.
அவ்வூரிற் சோலைக்கு நீர் இத்தலையில் மெலிவு போலே காணும்.
ஆகாயத்தைக் கண்செறி இட்டாற் போல் இருத்தலின் ‘வானார்’ என்கிறது.
இவள் இருக்கிற இடம், “மரங்கள் எல்லாம் உலர்ந்து விட்டன” என்னும்படியாக இருக்கும்.
அவன் இருக்கிற இடம், “காலம் அல்லாத காலத்திலும் மரங்கள் பலத்தைக் கொடுக்கக்கூடியனவாக இருக்கும்.”
“அபி விருக்ஷா: பரிம்லாநா:”, “அகாலபலி நோவ்ருக்ஷா:” என்பன, ஸ்ரீராமா.
காட்சிக்கு இனியதாக இருத்தலின் ‘வண்கமுகு” என்கிறது.
“குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளை முத்தும், தலையார்ந்த இளங்கமுகு” இது, பெரிய திருமொழி, 6. 9 : 8.
என்னுமாறு போலே இருத்தல்.
அன்றிக்கே, கொடி தொடர வேண்டாதே, தானே கொடிக்கு உடம்பு கொடுத்து நிற்கிற ஒளதார்யம் எனலுமாம்.
மெய்யே கொடுக்கிற ஒளதார்யம் அன்றோ இது.
மதுவையுடைத்தான மல்லிகைகளின் பரிமளம் இவள் இருந்த இடத்தே வந்து அலை எறிதலின், ‘மல்லிகை கமழும்’ என்கிறாள்.
மலட்டுக் கொடியாயிராமல் பூகத்தோடே அணைந்து பரப்பும் பூவாயிருத்தலின், ‘மது மல்லிகை’ என்கிறாள்.
இதற்கு முன்பு சொன்னவை எல்லாம் ஆஸ்ரயமாத்திரமேயாய்த் தேனே மிக்கிருத்தலின்,தேனார் சோலைகள்’ என்கிறாள்.
ஆக, வானார் வண் கமுகுகள் தேன் வெள்ளத்திலே அலைந்து, பிரளய காலத்தில் மார்க்கண்டேயன் பட்டவெல்லம் படாநின்றன என்றபடி.
இருவரும் கூட இருந்து மதுபானம் பண்ணிக் களிக்க வேண்டியிருக்க, நான் மெலியத் தாமே மதுபானம் பண்ணி வாழ்கின்றவர் என்பாள்,
‘தேன் வெள்ளமிடுகிற சோலைகள் சூழ்ந்த திருவல்லவாழ் உறையும் கோனாரை’ என்கிறாள்.
பாவியேன், இவ்வளவிலே “மதுவையும் குடிப்பது இல்லை” என்ன வேண்டாவோ.
“ந மாம்ஸம் ராகவோ புங்க்தே ந சாபி மது ஸேவதே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 42. திருவடி கூறியது.
இவர், இவ்வாற்றாமையோடே இருந்து சோலையைக் கவி பாடுகிறது, உள்ளே நிற்கின்றவனைப் போன்று இவையும்
இனிய பொருளாக இருக்கையால் அன்றோ. மனத்தினை உள் முகமாக்கி அநுபவிக்க மாட்டாதார்க்கு,
தன்னை அவர்கள் கண்களுக்கு இலக்காக்கிக்கொண்டு உபாயவஸ்து நிற்கிறாப் போலே காணும் இவையும்.
யாவர்க்கும் தொழுகுலமான சர்வேச்வரனுடைய உபாய பாவத்தில் நிலை போலே.
நித்தியப் பிராப்பியனாய்க் கொண்டு அங்கே இருக்கிறவன், அடியார்கள் உகந்தது ஒருபொருளைத் திருமேனியாகக்கொண்டு
முகங்கொடுத்துக் கொண்டு நிற்பது போலே, அங்குள்ளாரும் இங்கே போந்து
தாவரங்களையும் ஜங்கமங்களாயும் விலங்குகளாயும் அவனை விடமாட்டாதே நிற்கிறபடி.
நித்தியரும், முக்தரும், சம்சாரிகளில் ருசியுடையாரும் உகந்தருளின நிலங்களைப் பற்றியன்றோ கிடப்பது.
“இயல்பாயமைந்த சேஷத்வத்தையுடைய நித்தியசூரிகளும், சம்சார சம்பந்தம் நீங்கப்பெற்ற முக்தர்களும்,
பாவங்கள் எல்லாம் நீங்கி இனிமேல் சரீர சம்பந்தம் இல்லை என்னும்படி முடிவான சரீரமுடையவர்களான முமுக்ஷு க்களும் ஆகிய இவர்கள்,
மனிதப்பிறவியையும் விலங்கின் பிறவியையும் தாவரப் பிறவியையும் விரும்பினவர்களாய்க் கொண்டு
ஸ்ரீரங்கத்தை எப்போதும் பற்றியிருக்கிறார்கள் என்று பௌராணிகர்கள் சொல்லிவைத்தார்கள்;

நித்திய சூரிகள், தாவரம் முதலானவைகளாக இங்கே தங்கியிருப்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘இயல்பாயமைந்த’ என்று தொடங்கி.

“அஹ்ருத ஸஹஜ தாஸ்யா: ஸூரய: ஸ்ரஸ்தபந்தா: விமல சரம தேஹா இத்யமீ ரங்கதாம”
மஹித மநுஜதிர்யக் ஸ்தாவரத்வா: ஸரயந்தே ஸுநியதம் இதி ஹஸ்ம ப்ராஹு: எப்யோ நம: ஸ்தாத்”-என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்.

இப்படிப்பட்ட மனித விலங்கு தாவரங்களின்பொருட்டு நமஸ்காரம் ஆகுக” என்றார் பட்டர்.
இராமாவதாரத்திலும் ஒரு இலக்குமணன் முதலியோர்கள், வானரங்களின் உருவத்தை அடைந்தார்கள்,

‘சர்வேச்வரன் அவதரித்த இடத்திலே நித்தியசூரிகள் முதலானோர்களும் அவதரிப்பர்கள்’ என்பதற்கு அநுஷ்டானமும் காட்டுகிறார்
‘இராமாவதாரத்திலும்’ என்று தொடங்கி. இலக்குமணன் முதலியோர்கள்-நித்தியர்கள். வானரங்களின் உருவத்தையடைந்தவர்கள்
-தேவர்கள். விபீஷணன் முதலியோர்-முமுக்ஷு க்கள்.

வானுளோ ரனைவரும் வான ரங்களாக் கானினும் வரையினும் கடித டத்தினும்
சேனையோ டவதரித் திடுமின் சென்றென ஆனன மலர்ந்தனன் அருளின் ஆழியான்.
வளையொடு திகிரியும் வடவை தீதர விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்
இளைஞர்கள் எனவடி பரவவேகி நாம் வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன்.- என்பன, கம்பராமாயணம்.

விபீஷணன் முதலியோர் பற்றிக் கிடந்தார்கள். அது போன்று. அதிலும் நடையாடித் திரிகின்றவர்கட்குப் போகைக்கும் தகுதி
உண்டேயன்றோ, அதுவும் இல்லையே அன்றோ தாவரங்களுக்கு.

ஜனநாதப் பிரஹ்மராயர் திருமுடிக்குறையிலே ஒரு மரம் வெட்டப்புக,
(திருமுடிக்குறை – பெருமாளுடைய திருமுடிப் பிரதேசமான உபய காவேரியின் மத்தியப் பிரதேசம். )
அதனை எம்பார் கேட்டு ‘அல்லாளப் பெருமாளே! ஈச்வர விபூதியை அழிக்கப் பார்த்தாயோ’ என்ன,
இவர் சொல்லும் வார்த்தையைக் கேட்கைக்காக, ‘ஈச்வர விபூதி அல்லாத இடம் உண்டோ’ என்ன,
‘அவை போல் அல்ல காண் இவை; சார்வபௌமனான ராஜாவும் தேவியுமாக முற்றூட்டாகக்
குடநீர் வார்த்து ஆக்கும் சோலை போலே, பெருமாளும் பெரிய பிராட்டியாருங்கூடக் கைதொட்டு ஆக்குமவைகாண்’ என்று அருளிச்செய்தார்.
உகந்தருளின நிலங்களிலே மெய்யே பிரதிபத்தி விளைந்தார்க்கு அங்குள்ளவை எல்லாம் உத்தேஸ்யமாகத் தோன்றுமன்றோ.
கால் வாங்கியல்லது நிற்க ஒண்ணாத சம்சாரம் அவனுக்குரியது என்னும் தன்மையாலே ஒருகால் உத்தேஸ்யமாகா நின்றதன்றோ.
பிரமாணத்தில் பிறக்கும் எண்ணம் போலன்று கண்களுக்கு இலக்கானால் இருப்பது,
முக்தரைப் போன்று பிரத்தியக்ஷ சமானமன்றோ ஆழ்வார்க்குத் ததீயத்வ ஆகாரம்.
பிரமாணத்தை நம்பினவனுக்கு இங்ஙனமல்லது எண்ணம் இல்லையன்றோ.
நல்லான், பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்து நெடுங்காலம் சேவித்து, பின்பு மரணதசையிலே பட்டர் எழுந்தருளி,
‘என் நினைத்திருந்தாய்’ என்ன, “ஒரு சர்வசக்தி உபகரிக்கும்போது ‘இங்ஙனம் கனக்கவாகாதே உபகரிப்பது’ என்று நினைத்திருந்தேன்” என்ன,
‘அது என், உன் தேசத்தைவிட்டு உறவினர்களை விட்டு நெடுந்தூரம் போந்து இங்ஙனம் நோவுபட்டுத்
திருவடி சேரக் கிடந்தாயாகில் இங்கு உபகாரம் என்?’ என்ன,
‘வேறு தேசத்திலே இருந்து பொருள் அல்லாதவனாய் விழுந்து போகக் கடவ என்னை இவ்வளவும் அழைப்பித்து,
உம்முடைய திருவடிகளை அடையச்செய்து ருசியை விளைப்பித்து, இத்தேசத்திலே
உம்முடைய கண் வட்டத்திலே சரீரம் நீங்கும்படி செய்தானே’ என்ன,
‘ஆனாலும் தானாக அபிமானித்த சரீரம் போகாநிற்க, நீ இங்ஙனம் நினைத்திருந்தது என்கொண்டு?’ என்ன,
‘பிரமாணம்கொண்டு நினைத்திருந்தேன்’ என்றான்.
“ஈச்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸு க்ருதம் ததா விஷ்ணோ: ப்ரஸாதம் அத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்விகை:
ஸம்பாஷணம் ஸதாசார்ய ப்ராப்திம் ச”–என்பது, அநுசந்தேயம்.–இதற்கே ஆறு படிகள் ஸ்ரீ ரங்கத்தில்
“ஆசாரிய லாபம் பகவானாலே” என்ற ஸ்ரீ வசன பூஷண-ஸ்ரீ சூக்தி

கண்ணழிவற்ற வெளிச் சிறப்புடையார்க்கு இங்ஙனமன்றோ இருப்பது.
இருவராய்க்கொண்டு பரிமாற வேண்டும் தேசத்திலே தனியே நிற்கின்றான் காண் என்பாள்
‘தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை’ -என்கிறாள்.
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதித்தொழியாது தங்கியிருத்தலின் ‘உறையும் கோனாரை’ என்கிறாள்.
நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும் போலே, ‘கோனாரை அடியேன்’ என்கிறாள்.
அவனைச் சொல்லும் போது தம்மையிட்டல்லது சொல்லப் போகாது; தம்மைச் சொல்லும்போதும் அவனையிட்டல்லது சொல்லப்போகாது.
‘கோனாரை’ என்ற இடம், நாராயண சப்தார்த்தம்; ‘அடியேன்’ என்ற இடம், பிரணவார்த்தம்.
பிரணவம், ஜீவப்பிரதானம்; நாராயண பதம், ஈச்வரப் பிரதானம்.

‘நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும்’ என்று மேலே கூறியதனை விவரிக்கிறார் ‘கோனாரை’ என்று தொடங்கி.
‘நான்காம் வேற்றுமை’என்றது, ‘நாராயணாய’ என்ற பதத்திலேயுள்ள ‘ஆய’ என்னும் உருபினை.

‘அடி கூடுவது என்று கொலோ’ என்ற இடம்,
நான்காம் வேற்றுமையின் பொருள்; ‘என்று கொலோ’ என்று பிரார்த்தனையோடு தலைக்கட்டுகிறதன்றோ.
கோனாரை அடியேன் – நாயகன் தைரியத்தையுடைய நாயகன்–இவள் தைரியம் இல்லாதவள்.
அடியேன் அடிகூடுவது என்று கொலோ – ஸ்வரூபத்துக்குத் தகுதியாக வேற்றுமையின் பொருளோடே-விபக்தி உடன் – தலைக்கட்டுகிறபடி.
எல்லா அளவிலும் சொரூபம் அழியாதன்றோ. தாமாகவுமாம், பிராட்டிமார் தசையை அடைந்தவராகவுமாம்,
அதற்கும் அவ்வருகே சில அவஸ்தைகளையுடையராகவுமாம், எல்லாக் காலத்திலும் ஸ்வரூபம் மாறாது;
பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்களாகிற நிலை வேறுபாடுகளை அடைந்தாலும் மண்ணான வடிவுக்கு அழிவில்லையன்றோ.
தாமான தன்மையில் “அடி தொழுது எழு”-திருவாய். 1. 1 : 1.-என்பர்;
பரோப தேசத்தில் “திண்கழல் சேர்” – திருவாய். 1. 2 : 10.-என்பர்;
தூதுவிடப்புக்கால் “திருவடிக்கீழ்க் குற்றேவல்”- திருவாய். 1. 4 : 2.– என்பர்;
பிறரைச் சொல்லப் புக்கால் “தாட்பட்ட தண்துழாய்த் தாமம் காமிற்றாயே” திருவாய். 2. 1 : 2.-என்பர்;
கலங்கி மடல் எடுக்குமளவானாலும் “தலையில் வணங்கவுமாங்கொலோ” –திருவாய். 5. 3 : 7.-என்பர்;
பித்தேறிச் சொல்லும்போதும் 1“கண்ணன் கழல்கள் விரும்புமே” – திருவாய். 4. 4 : 8.-என்னுதல்,
“ஏறிய பித்தினொடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு” -திருவாய். 4. 4 : 7.-என்னுதல் சொல்வார் இத்தனை.

—————————————————————————————

என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்
தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.–5-9-2-

ஸ்ரீ வல்லபன் கோலப்பிரான் -நிஷேத முகத்தாலே தன்னை நலிகிறவர்கள் தங்களையே பார்த்து –
பரிமளம் பிரவகிக்கும் -திவ்ய தேச -எம்பெருமான் -திருப்பாத தூளை சிரஸா வகிப்பது என்றோ
என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!-சமான சுக துக்கம் -அபிமதம் பெற துணை என்று நம்பிய எம்மை ஆத்மனி பஹூ வசனம்
தடுத்ததால் என்ன பலன் -உங்களுக்கும் ஸ்வரூப நாசம் -கார்ய கரமும் இல்லை –
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்-பொன் போலே –தாதுக்கள் -மகரந்தம் -குருக்கத்திப் பூ -மேலில் பூவுடன்
தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள்-சுகுமாரம் -உள்ளே போனால் வெக்கை தட்டுமே –
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.-உபகாரகன் -அடிப்பொடி -உபகரிக்க வில்லையே -இருந்தும் -சந்நிஹிதனான உபகாரம் உண்டே –
இதுவே பெரிய உதவி -இதற்குத் தோற்று அடியோம் -சேஷத்வ அனுரூபமாக சுவீகரித்து -தோழிகளைக் கூட்டிக் கொண்டு -சேர்த்து –

தோழிமீர்காள்! என்னை வருத்தி என்ன காரியத்தைச் செய்தீர்கள்? பொன்னைப் போன்று விளங்குகின்ற புன்னை என்ன, மகிழ் என்ன,
புதிய மாதவி என்ன, இவற்றின் மேலே பொருந்தித் தென்றலானது வாசனை வீசுகின்ற திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில் நின்ற
திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற பிரானுடைய திருவடிகளில் பொருந்திய நீற்றினை அடியோங்கள் கொண்டு சூடுவது என்றுகொல்? என்கிறாள்.
தோழிமீர்காள்! பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவது என்றுகொல்! எம்மை: தனித்தன்மைப் பன்மை. மகிழ்-வகுளம்.
மாதவி-குருக்கத்தி. நீறு-புழுதி. அடியோம்: உளப்பாட்டுத்தன்மைப் பன்மை.

விலக்குகிற தோழிமார் தங்களைப் பார்த்தே, அவன் பாதரேணுவை நான் சூடுவது என்று? என்கிறாள்.

என்று கொல் தோழிமீர்காள் –
‘எல்லை கடந்த பிராவண்யம் ஆகாது’ என்று விலக்குகிறவர்களையே, தன்பேற்றுக்கு நாள் அறுதியிட்டுத்
தருமவர்களாகக் கேட்கிறாளேயன்றோ. அவர்கள் உலக அபவாதத்தைப் பற்றி விலக்குகிறார்கள்;
இவள், தனது பேற்றினை, அவர்கள் தங்கள் பேறாக நினைத்திருக்கும் ஜக கண்ட்யத்தாலே கேட்கிறாள்.
தோழிமாரே யன்றோ; இவளுடைய லாபாலாபமே யன்றோ அவர்களுக்கும் பேறு இழவு.
தோழிமீர்காள் என்றுகொல் –
உங்களுக்கு நான் பெறும் நாள் ஆராய்கையிலே யன்றோ அதிகாரம்.
எம்மை-
உங்களுடைய கையாலும் காலாலும் துகையுண்கிற என்னை. -ஹிதப்பேச்சாலும் காற்றாலும்
அன்றிக்கே, அவ்வூரிலே புக்கல்லது தரிக்கமாட்டாத என்னை என்னுதல்.
நீர் –
என்னுடைய உஜ்ஜீவனத்தையே எண்ணுவதற்குரிய நீங்கள்.
அன்றிக்கே, எனக்குப் பிரியமே செய்துபோந்த நீங்கள் என்னுதல்.
நலிந்து என்செய்தீரோ –
எனது தன்மையை அறியும் நீங்கள் என்வழியே போக வேண்டாவோ.
அன்றிக்கே, உங்கள் தன்மைக்கு இது சேர்ந்ததோ, என் தன்மைக்கு இது சேர்ந்ததோ? என்னுதல்.
சம்பந்த ஞானம் உணர்த்துவதில் சேர்ந்ததோ -பேற்றில் த்வரிக்கும் என் ஸ்வ பாவத்துக்கும் சேராதே
அன்றிக்கே, தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ என்பதற்கு, உங்களுக்கு அவசியம் நலிய வேண்டினால்
தென்றலயன்றோ நலிய அடுப்பது என்னுதலுமாம். -என்ன மீளவொட்டாமல் காற்கட்டா நிற்க, நான் மீளும்படி என்?

செல்லுகிற உன்னை நலியாமல், தென்றலை நலிவான் என்? என்ன, அதற்கு விடை கூறுகிறாள் ‘என்னை மீளவொட்டாமல்’ என்று தொடங்கி.
‘காற்கட்டா நிற்க’ என்றது, சிலேடை: காற்று வருத்தா நிற்க என்பது பொருள். பந்தமாக நிற்க என்பது தொனி.

பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி –
புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும்” – பெரிய திருமொழி, 5. 1 : 6.-என்கிறபடியே,
பொன்னைப் போன்று பிரகாசிக்கின்ற புன்னை, அப்படியே இருக்கிற மகிழ், அப்போது அலர்ந்த குருக்கத்தி.
இதனால், நலிகைக்கு இவை அமையாதோ, ‘கடினமான ஸ்வபாவத்தை யுடையராயிருப்பார்-மரங்கள் – செய்வதை மிருதுத்தன்மை
வாய்ந்தவர்களாயிருக்கிற நீங்கள் செய்யவோ என்கிறாள் என்றபடி.
மீது அணவித் தென்றல் மணம் கமழும்-
இவற்றின்மேலே தென்றலானது வந்து அணைந்து பரிமளத்தைக் கொண்டுபோந்து கமழாநின்றது.
‘ஆழ இழியில் பூவில் வெக்கை தட்டும்’ என்று மேலெழத் தீண்டி, அங்குள்ளன வெல்லாம் கொண்டு போந்து கமழா நின்றது
என்பாள் ‘மீது அணவி’ என்கிறாள். என்றது, “தாமரைப் பூக்களின் தாதுக்களோடு சேர்ந்தது” என்னுமாறு போலே,
பூவில் கால் படாமே மேல் எழுந்த பரிமளத்தைக் கொண்டு போருகிறது என்றபடி.

வெக்கை தட்டாமல் மேலே ஸ்பர்சித்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘தாமரை’ என்று தொடங்கி.
“பத்மகேஸர ஸம்ஸ்ப்ருஷ்டோ வ்ருக்ஷாந்தர விநிஸ்ஸ்ருத:” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 1 : 71 என்றது,
மகரந்தங்களிலே மேலே ஸ்பர்சித்து வந்தாற்போன்று, இந்தத் தென்றலும் மீது அணவி வந்தது என்றபடி

அத்தலையில் உள்ளவை அடங்கக்கொண்டு –தந்தாமது ஒன்றும் கொடாதே போருகை —
அந்நிலத்துள்ள பொருள்கட்கெல்லாம் ஸ்வபாவம் கண்டீர்.
கலம்பகன் அல்லது சூடப்பொறாத சுகுமாரரைப் போலே காணும் தென்றலின் ஸ்வபாவம் என்பாள்.
‘பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித் தென்றல் மணம் கமழும்’ என்கிறாள்
இதனால், பூவில் பரிமளத்தைத் தேடுவாரைப் போலே காணும் இது பரிமளத்தில் கலம்பகன் தேடுகிறபடி என்பதனைத் தெரிவித்தபடி.
செருக்கராயிருக்கும் இராஜபுத்திரர்கள் முலை சரிந்தாரைப் ‘போகத்திற்குத் தகுதியுள்ளவரல்லர்’ என்று கழிக்குமாறு போன்று,
கழிய அலர்ந்தவற்றைப் பாராமல் போருகிறது என்பாள் ‘புது மாதவி மீதணவும்’ என்கிறாள்.
கண்களுக்குத் தோற்ற நின்று நலியாமையாலே காணும் ‘நோவில்லை’ என்றிருக்கிறது. -ரூப ரஹித ஸ்பர்சவான் காற்று –
இவர்களுக்கு லாபாலாபம் ஒத்திருக்கச் செய்தேயும், ஹித புத்தி தொடர்ந்து நிற்பதனாலே இவை நெஞ்சிற் படாதேயன்றோ.
‘இவர்கள்தாம் அந்வயத்தில் கூடாவிட்டால் வியதிரேகத்திலும் கூடலாகாதோ’ என்று காணும் இவள் நினைத்திருக்கிறது.
இவர்களுக்குப் பேறும் இழவும் ஒத்திருந்தாலும் இவர்கள் இவள்தான் ஆக மாட்டார்களே, இவளுக்கே வருமவை யன்றோ இவையெல்லாம்.
‘பொன்திகழ் புன்னை மகிழ்’ என்றதனால், கண் இந்திரியத்திற்குக் கவர்ச்சிகரமாயிருப்பதனைத் தெரிவித்தபடி.
‘தென்றல் மணம் கமழும்’ என்றதனால், சரீரத்திற்கும் மூக்கிற்கும் அங்ஙனம் இருப்பதனைத் தெரிவித்தபடி.

திருவல்லவாழ் நகருள் நின்ற பிரான் –
அவன் அத்தனை விடுவதும் செய்திலன். நான் நோவுபடாநிற்க, இவ்வளவிலே ஸ்ரீவைகுண்டத்திலே இருக்கையன்றிக்கே.
திருவல்லவாழிலே புகுந்து கிட்டவிருக்கு மிதற்கு மேற்பட உபகாரம் உண்டோ.
“இது பல” என்னுமாறு போலே காணும் இவ்வளவில் ஆஸ்வாசம். “ஒரே பூமியில் இருக்கிறோம்” என்று சொல்லப்பட்டதன்றோ.

புணர்ச்சி யின்றிக்கே இருக்க, இங்ஙனம் இருத்தலை மாத்திரம் உபகாரமாகக் கொள்ளலாமோ? என்ன, பெருமாள் பிராட்டியைப்
பிரிந்திருக்கச் செய்தேயும் தாம் இருந்த பூமியிலே அவள் இருத்தல்காரணமாக ஆஸ்வாசித்தாற்போலே என்கிறார் ‘இது பல’ என்று-தொடங்கி.

“பஹு ஏதத் காமயாநஸ்ய ஸக்யம் ஏதேந ஜீவிதும் யத் அஹம் ஸா ச வாமோரூ: ஏகாம் தரணிம் ஆஸ்ரிதௌ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 10.
“காற்றே வீசுக” என்று, –வாஹி வாத யத: காந்தா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 6.-
இவர் கையாலே தொட வேண்டாதபடி இடைச்சுவரான கடல் கிடந்தேயாகிலும், ஒரு படுக்கையிலே இருப்பாரைப் போலே
அவள் இருந்த பூமியிலே இருக்கப் பெற்றோமே என்றாரே யன்றோ பெருமாள்.
காலைப் பிடித்து ‘நீ இப்படிச் செய்ய வேணும்’ என்று வேண்டிக்கொள்ளுகிறாரே யன்றோ இவருடைய செல்லாமை.
“வாஹி வாத – காற்றே வீசுக” என்றதனை, ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘காலைப்பிடித்து’ என்று தொடங்கி. காலை – காற்றை.

நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவது என்றுகொல்
பூவில் சுண்ணம் பெறுவது என்றோ. மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலக் காணும்.
இவர்கள், இப்போது பிரிய நின்றார்களேயாகிலும் கலக்கும்போது அநுபவம் இவர்களுக்கும் ஒத்திருக்குமாதலின் ‘அடியோம்’ என்கிறாள்.
அவன் வந்தாலும் இவளுக்கு முன்னே கொண்டாடுவது இவர்களையன்றோ.
சீதை பெருமாள் திரு உள்ளம் நினைவையே நோக்கி இருக்க -பெருமாள் மக்கள் நலத்திலே திரு உள்ளம் இருக்க –
அத்தாலே மகிழ்வாள் இறே சீதா பிராட்டியும்
ஸ்ரீ பரதாழ்வானை, ‘பிள்ளாய்’ உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போது?” என்ன,
“பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடி, இருவரும் முறை தப்பாமே கூறு ஒக்க நின்ற அன்று” என்றான்;
அது போன்று, இவளும் ‘அடியோம் கொண்டு சூடுவது என்று’ என்கிறாள்.
கால் கூறு விஞ்சப் பெற்றானே ஸ்ரீ பரத ஆழ்வான் -மாலடி மேல் -அரசு அமர்ந்தான் அடி -குலசேகரன் —
பிராதா திருவடி -சேஷித்வ லஷணம் -இவனுக்கு தலை ஓட்டில் பொறி -சென்னியில் பொரித்துக் கொண்டானே
“கோலமாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே”-இது, திருவாய். 4. 3 : 6.– என்னுமவர் அலரோ.

இப்படிப் பிரார்த்தித்த பேர் உண்டோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீ பரதாழ்வானை’ என்று தொடங்கி.
“யாவந்ந சரணௌ ப்ராது: பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதௌ ஸிரஸா தாரயிஷ்யாமி ந மே ஸாந்தி: பவிஷ்யதி”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 98 : 8.

——————————————————————————————

சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.–5-9-3-

வேத கோஷமும் வைதிக கிரியா தூமமும் –நித்ய வாசம் செய்து அருளும் நிரந்த உபகாரகன் -நித்ய அனுபவம் திருவடிகளில் பண்ணப் போமோ
சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்-விஸ்லேஷ துயர் -மெலியும் படி -வேத ஒலி-எல்லாம் அவனையே சொல்லுமே –
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க-மெலியும் படிக்கு பாடுகிறார்கள் -விஸ்லேஷ துக்கிதையான இவள்
சர்வேஸ்வரனுக்கு திருமேனி போல நன்மை –
சமுத்திர அலைகள் போலே முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்-எல்லா பரிசரங்களிலும் -ஹவிஸ் கந்தம் பரப்ப –
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே-நிரந்தர வாசம் -நித்ய அனுபவம் பண்ணக் கூடுமோ -என்கிறார் –
திரு விருத்தம் ஐந்து வியாக்யானங்கள் -வெளிப்படை ஸ்வா பதேசம் கிழவித்துரை -பல அர்த்தங்கள் உண்டே இங்கும் அதே போலே

மலர்களைச் சூடிக்கொண்டிருக்கின்ற கூந்தலையுடைய தோழிமீர்காள்! பிரிவின் துன்பத்தால் வருந்துகின்ற யான், மேலும் மேலும்
மெலியும்படியாகப் பாடுகின்ற சிறந்த வேதங்களின் ஒலியானது கடலில் அலைகள் முழங்குமாறு போன்று முழங்க,
பக்கங்களில் உயர்ந்து எழுகின்ற ஓமப்புகையானது வாசனை வீசுகின்ற தண்ணிய திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில்
நித்தியவாசம் செய்கின்ற எம்பெருமானுடைய திருவடிகளை நாள்தோறும் காண்போம் கொல்லோ?
துயராட்டியேன் மெலியப் பாடும் வேத ஒலி திரைபோல் முழங்க, ஓமப்புகை கமழும் திருவல்லவாழ் என்க.
காண்டும்: உளப்பாட்டுத் தன்மைப்பன்மை வினைமுற்று. கொல்: ஐயத்தின்கண் வந்தது.

தோழிமாரைப் பார்த்து, நான் அவனை நித்தியாநுபவம் பண்ணப்பெறும் நாள் என்று? என்கிறாள்.

சூடு மலர்க் குழலீர்-
‘உங்களைச் சூடு மலர்க் குழலாராக நான் காண்பது என்றோ’ என்று பிள்ளான் பணிப்பர்.என்றது,
இவள் பூவுக்கு இறாய்க்க, அவர்கள் மலர்களைச் சூடி இரார்களேயன்றோ என்றாயிற்று அபிப்பிராயம்.
அங்ஙன் அன்றிக்கே, அவன்தான் வந்து இவள் பக்கல் பாவபந்தம் உறைக்க உறைக்கக் கொண்டாடுவது இவர்களை யாகையாலே,
பெரிய திருநாள் சேவித்தார் இரட்டைகள் அழுக்கானாலும் மடி குலையாமல் வைக்குமாறு போன்று, இவர்களும் அவன் கொடுத்த
மாலையின் செவ்வி யழிந்ததே யாகிலும் மாறாதே வைத்துக்கொண்டிருப்பர்களே அன்றோ;
அது இவளுக்கு நினைவூட்டுவதாய் நலியாநின்றதாதலின் ‘சூடு மலர்க் குழலீர்’ என்கிறாள் என்னுதல்.
தென்றலுக்குப் பிழைக்கிலும் இவர்களுடைய தரிசனத்திற்குப் பிழைக்கப் போகிறதில்லை.
கால் ஒரு கையும் மயிர் ஒரு கையுமாகப் பிடித்து நலிகின்றது காணும்.
அவன்தான் வந்தாலும் இவளுக்கு முன்னே விரும்புவது இவள் சம்பந்தமுடையார்களை அன்றோ.
“தத்ர காஷாயிந:- அங்குக் காவி உடையணிந்தவர்களை;” தங்கள் தங்களைப் பேணுமவர்கள் அல்லாமையாலே அழுக்குச் சட்டையும் தாங்களுமாயன்றோ இருப்பது.
ஒரு சம்வாதம் காட்டுவதற்காக, மேலே கூறியதனை அநுவதிக்கிறார் ‘அவன்தான்’ என்று தொடங்கி. சொல்லப்போகும் அர்த்தத்திற்குப்
பிரமாணம் காட்டுகிறார் ‘தத்ர’ என்று தொடங்கி.
“தத்ர காஷாயிந: வ்ருத்தாந் வேத்ரபாணீந் ஸ்வலங்க்ருதாந் ததர்ஸ விஷ்டிதாந் த்வாரி ஸ்த்ர்யத்யக்ஷாந் ஸு ஸமாஹிதாந்”–ஸ்ரீராமா. அயோத். 16 : 3.
இந்தச் சுலோகத்தில் “ஸு அலங்கிருதாந்” என்பதுவே இங்கு வேண்டுவது. “ஸு அலங்கிருதாந்” என்றதிலுள்ள “ஸு ” என்ற பதத்துக்குப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘பெருமாளுடையவும்’ என்று தொடங்கி.

“விருத்தாந் – முதிர்த்தவர்களை;” தொண்ணூற்றைந்து வயதுக்கு மேலாய் ஆசையற்றவர்களாய் இருப்பாரை அன்றோ அந்தப்புரங்களுக்கு வைப்பது.
“வேத்ர பாணீந்-பிரம்பைக் கையிலுடையவர்களை;” பெருமாள் விற் பிடித்தாற்போல அவர்கள் பிரம்பு பிடித்தபடி.
விற்பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் பிரம்பு பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் காணும்.
“ஸுஅலங்க்ருதாந் – தங்களை அலங்கரித்தவர்களை;” பேணாத பரிவட்டங்களையுடையராய் விருத்தருமாய் இருந்தார்களாகில்
இவர்களுக்கு அலங்காரமாவது என்? என்னில், பெருமாள் சக்கரவர்த்தி மாளிகையிலே போய்த் திருமஞ்சனம் ஆடி அமுது செய்து
மீண்டு திவ்ய அந்தப்புரத்துக்கு எழுந்தருளும்போது, சக்கரவர்த்தியைப் போன்று, பழையராகையாலும் தங்கள் பரிவாலுமாக
இவரை மடியிலே வைத்து அணைத்து உச்சியை மோந்துவிடுவர்கள்; அதனாலே, குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாக இருப்பர்கள்.
பெருமாளுடையவும் பிராட்டியுடையவும் ஒப்பனை போலன்று இவர்கள் ஒப்பனை. அப்படியே இவர்களும் ‘சூடுமலர் குழலீர்” என்னும்படியாயிருக்கிறபடி.

துயராட்டியேனை மெலியப் பாடு நல்வேத ஒலி-
எனக்குத் துயரை விளைத்தற்காகவேயன்றி, பிராஹ்மணர் வேண்டிச் செய்கிறார்களன்றே.
பிராஹ்மணராகில் தார்மிகராயிருக்க வேண்டாவோ? பெண் கொலை செய்யலாமோ?
துயராட்டியேன் – நலிவார்க்கு ஆஸ்ரயம் வேண்டாவோ? நலிகைக்குத் தென்றலே அமையாதோ?
திருவடி நடு இரவில் சென்று பிராட்டியைக் கண்டு சிலவார்த்தை விண்ணப்பம் செய்ய, அவள் இவனை ‘இன்னான்’ என்று அறுதியிட மாட்டாதே,
‘முன்பு சந்யாசி வேடம் கொண்டு அவர் பக்கல் நின்றும் என்னைப் பிரித்தாய்,
இப்போது வானர வேடம்கொண்டு சில வார்த்தைகளைச் சொல்லி நலியாநின்றாய்,
ஸ்வம் பரித்யஜ்ய ரூபம் ய: பரிவ்ராஜக ரூபவாந் ஜநஸ்தாநே மயா த்ருஷ்ட: த்வம் ஸ ஏவ அஸி ராவண:”
“உபவாஸ க்ருஸாம் தீநாம் காமரூப நிஸாசர ஸந்தாபயஸி மாம் பூய: ஸந்தாபம் தந்ந ஸோபனம்”–ஸ்ரீராமா. சுந். 34 : 15, 16.
திருவடியை இராவணனாக நினைத்துப் பிராட்டி கூறியது.-ராஷச ஜாதியில் ராவணன் துன்புறுத்தியது போலே என்கிறாள்-

இவையெல்லாம் உனக்கு ஆகாதுகாண்.’ வருத்துதல் அழகன்று – வாராய், நீயும் உன்னை உகந்தாரைப் பிரிந்து
நோவுபடுகிறாயன்றோ என்றாள் பிராட்டி. செய்யத் தக்கனவானாலும் சிலர்க்கு நலிவானால் தவிர வேண்டாவோ? என்பாள் ‘மெலியப் பாடும்’ என்கிறாள்.
அவர்கள், எல்லாம் சமைந்தாலல்லது குருகுலத்தை விட்டு நீங்கார்களாதலின் ‘பாடும்’ என்கிறாள்.
இவள் தனக்கு வேத ஒலியைக் கேட்டவாறே, நாயகன் பேர் வைத்துப் புணர்த்த புணர்ப்பினைக் கேட்டாற்போலே காணும் அஸஹ்யமாயிருக்கிறபடி.
இருவரும்கூட இருந்து கேட்கக்கூடியதனைத் தனியிருந்து கேட்கப் புக்கால் பொறுக்க ஒண்ணாதேயன்றோ.
அவன் பெயர் வைத்துப் புணர்த்தாலும் “சீதையினுடைய மஹத்தான சரிதம்” என்றே யன்றோ புணர்ப்புத்தான் இருப்பது.

“காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயா: சரிதம் மஹத்” என்பது,- ஸ்ரீராமா. பால. 4 : 7.

நடையினின் றுயர் நாயகன் தோற்றத்தின் இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பியதோ மறுமாக் கதை சடையன் வெண்ணெய் நல்லூர் வயிற்றந்ததே.- என்பது, கம்பராமாயணம்.

இனித்தான், “தேவரீருக்குப் பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியும் தேவிகளாக இருக்கிறார்கள்”,–“ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ” என்பது, புருஷ சூக்தம்.

“எல்லா ஆத்மாக்களுக்கு நியமிக்கின்றவளாயிருப்பவள்”,–“ஈஸ்வரீம் ஸர்வபூதாநாம்”-என்பது, ஸ்ரீ சூக்தம்.

“விஷ்ணு பத்னியானவள் இந்த உலகத்திற்குத் தலைவி” என்று அவன் விரும்பிக் கேட்பது.-“அஸ்ய ஈஸாநா ஜகதோ விஷ்ணுபத்நீ”- என்பது, ய. 4. 4. 37.

ஈச்வரனைப் பாடுகிற பழம் புணர்ப்பான வேதம் ஆதலின் ‘பாடு நல்வேதம்’ – “வேதாநாம் ஸாமவேதோஸ்மி தேவாநாம் அஸ்மி வாஸவ:”-என்பது, ஸ்ரீ கீதை. 10 : 22.

அன்றிக்கே, இசையையுடைத்தான சாமவேதம் என்னுதல்
“உளன் சுடர் மிகு சுருதியுள்” என்று மற்றைப் பிரமாணங்களைக்காட்டிலும் உயர்ந்த பிரமாணமாதலின், ‘நல்வேதம்’ என்கிறது.
அன்றிக்கே, “வேதங்களுக்குள் சாமவேதம் நான் ஆகிறேன்” என்கிற உயர்வினைச் சொல்லுகிறதாதல்.
ஆக, ஸ்வரத்திலே குற்றமுண்டாதல்; “வேதங்களுக்குள்ளே சாமவேதம் நான் ஆகின்றேன்” என்கிறபடியே
அந்தரங்கமான வேதமன்றிக்கே ஒழில்தல் தான் செய்ததாகில் நான் ஆறி யிருக்கலாயிற்றே என்கிறாள் என்றபடி.
வேத ஒலி பரவைத் திரைபோல் முழங்க-
ஓதம் கிளர்ந்த கடல் போலே காணும் சாமவேதத்தின் ஒலி இருக்கிறபடி.
அதில் பருவம் ஒழிந்த நாட்களும் பகலும் ஆறியிருக்கலாமே என்பாள் ‘முழங்க’ என்கிறாள்.
எல்லா வளவிலும் இவர்க்கு வேதத்திற்கிடக்கிற பிராவண்யம் பாரீர்,

பிராட்டியான நிலையிலும் வேதத்தைச் சொல்லுகிற ஸ்ரீ சூக்தியை அநுசந்தித்து வியாக்யாதாவின் ஈடுபாடு, ‘எல்லாவளவிலும்’ என்று
தொடங்குவது. ‘எல்லாவளவிலும்’ என்றது, தாமான தன்மையோடு பிராட்டியான தன்மையோடு வாசியற எல்லா அவஸ்தைகளிலும் என்றபடி.

முதல் வார்த்தைதான் “உளன் சுடர்மிகு சுருதியுள்” –திருவாய்.-1. 1 : 7.-என்பதேயன்றோ.
“யாதொருவனுடைய ஸ்வரூபத்தை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ” என்றும்,-
“ஸர்வே வேதா: யத் பதமாமநந்தி” என்பது.— “ஸர்வே வேதா: யத்ரைகம் பவந்நி” என்பது.
“எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ” என்றும்,
“எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் யானே” என்றும் –. அன்றோ பிரமாணங்கள் கூறுகின்றன.

மாடு உயர்ந்து ஓமப்புகை கமழும்
“ஓத்துச்சொல்லிச் சொல்லாத விடமெல்லாம் -அத்யயன காலங்களிலும்-வைதிகக் கிரியைகளே யாய்க் கிடக்குமித்தனை. மாடு – பக்கம்.
ஆகாசமடங்கலும் இடமடைத்து, வைமானிகரை முகம்பார்த்து அநுபவிக்க வொட்டாதபடி எழா நின்றது.
“கர்மங்களைச் செய்து அவற்றாலே சித்திபெற்றவர்கள் ஜனகன் முதலானவர்கள்”
பலம் கிடைத்தபின், கர்மங்களைச் செய்வதில் நின்றும் நீங்கியிரார்களோ, “கமழும்” என்று நிகழ்காலமாகச் சொல்லுவான் என்? என்ன,
ஞானாதிகர் ஆகையாலே பலத்தில் நினைவு இல்லை என்கிறார் ‘கர்மங்களை’ என்று தொடங்கி.
“கர்மணைவ ஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜனகாதய: லோக ஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந் கர்தும் அர்ஹஸி”- என்பது ஸ்ரீகீதை. 3 : 20.
என்கிறபடியே, ஞானத்தில் நிலைநின்றவர்களே அன்றோ.
இனி, பலத்தை நினைத்துக் கர்மங்களைச் செய்து பலம் கிட்டினவாறே மீளுமவர்கள் அன்றே
ஹோமப்புகையும், ஹவிஸ்ஸினைக் கொள்ள வந்து நிற்கிற எம்பெருமானுடைய மாளிகைச் சாந்துமாகக் கமழுகின்றன ஆதலின் ‘கமழும்’ என்கிறாள்.
திருவல்லவாழ் நீடு உறைகின்ற பிரான் –
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே பிற்பாடர்க்கு உதவும்படி சிரமஹரமான திருவல்லவாழிலே நித்தியவாசம் செய்கிற உபகாரகன்.
கழல் காண்டும் கொல் நிச்சலுமே-
அவன் இங்கே நித்தியவாசம் செய்யா நின்றால், நாமும் நித்தியவாசம் செய்யும் தேசத்தில் போய்ப் பெறக்கூடிய
பேற்றினைப் பெறவல்லோமே. அங்கும் போனால் எப்பொழுதும் பார்த்துக்கொண்டேயிருத்தலன்றோ.
காண்டல் மாத்திரம் போதியதாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அங்கும் போனால்’ என்று தொடங்கி. அங்கும் -பரமபதமும்.

மேல் திருப்பாசுரம், “மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி – என்னுடைய தலையை எப்பொழுது அலங்கரிக்கப் போகிறது” (தோத்திர ரத்நம். 31.)
என்றதன் பொருள். “கதா நு ஸாக்ஷாத்கர வாணி சக்ஷு ஷா – என் கண்களால் உன் திருவடிகளை எப்பொழுது காணப் போகிறேன்”
(தோத்திர ரத்நம். 30.) என்றதன் பொருள் இத்திருப்பாசுரம்.

——————————————————————————————–

நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே.–5-9-4-

சோலைகள் உடன் கூடிய மாடங்கள் -ஆஸ்ரித நித்ய சம்ச்லேஷன் -நித்ய சந்நிஹிதன் உபகாரகன் -இடம் என் ஆத்மா சென்ற பின்பு -நலிந்து என்ன பயன்
நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ?-ஹிதம் சொல்வபரே தோழன் -பிரியம் -பரத்வமே ஸ்வரூபம்
உங்கள் அபிமதம் நிஷேதித்து போக முடியாமல் இருக்கச் சொல்லும் -நலிந்து என்ன கார்யம்
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்-சோலை வாய்ப்பு
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்-மாடிகள் பல உடைய மாடங்கள் -நிழல் கொடுக்கும்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே-ஆத்மாவே அவனதாக போன பின்பு -அநாஸ்ரிதற்கு நணுக ஒண்ணாத
-அழல் உமிழும் -நமக்கு பிரகாசிப்பித்த உபகாரகன் நற்சீவன் அவன் பக்கம் -அவன் ச்நேஹம் என்னிடம் என்றுமாம்

தோழிமீர்காள்! எம்மை நீங்கள் நாள்தோறும் வருத்தி என்ன காரியத்தைச் செய்தீர்கள்? பசிய இலைகளையுடைய நீண்ட பாக்கு மரங்களும்,
பலா மரங்களும், வாழைகளும், மச்சினையுடைய அழகிய மாடங்களின்மேலே புல்லிக்கொண்டிருக்கின்ற குளிர்ந்த திருவல்லவாழ் என்னும்
திவ்விய தேசத்தில் ஆதிசேட சயனத்தின்மேலே எழுந்தருளியிருக்கின்ற நம் பெருமானிடத்திலே யுள்ளதாம் எனது உயிரானது.

நன்னலம் நம்பிரானது; ஆதலால், எம்மை நீர் நலிந்து என்செய்தீர் என்க. நஞ்சு அரவு – நச்சரவு. அரவு – பாம்பு.

‘இங்ஙனம் மநோரதித்தல் ஈடு அன்று’ என்று விலக்குகிற தோழிமாரைக் குறித்து, என்னுடைய நல்ல உயிரானது
அவன் பக்கலது, உங்களுடைய வார்த்தைகள் பயன் அற்றவை என்கிறாள்.

நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ –
தோழிமார் ‘உனக்கு இத்தனை யாகாது காண்’ என்று பலகாலும் சொல்லுவர்களே, அது பலியாதிருக்கச் செய்தேயும்,
இவளை இழக்க ஒண்ணாது என்று பார்த்து மீண்டும் சொல்லத் தொடங்கினார்கள்;
நீங்கள் நலிதல் தவிரமாட்டீர்கோளாகில் நான் இருந்த இடத்தே போய் நலியுங்கோள் என்கிறாள்.
என்னுடைய நல்ல உயிரானது அவன் பக்கலிலேயான பின்பு நீங்கள் சொல்லுகிறவற்றால் என்ன பிரயோஜனம் உண்டு.
எனக்கு ‘அவனைக் காண வேண்டும்’ என்னும் ஆசை எப்பொழுதும் செல்லுகிறாப் போலே,
உங்களுக்கும் ‘என்னை மீட்க வேண்டும்’ என்கிற இந்த நினைவு மாறாதே செல்லுகிறபடி.
நீங்கள் நீங்களாய்ச் சொல்லுகிறீர்களோ, தாய்மாராகச் சொல்லுகிறீர்களோ, இத்தனை பேர் ஸ்வரூப ஞானமில்லாதார் உளர் ஆனீர்களே.
ஒன்று சொல்லுவார் சொல்லும்போது தம்மை அறிந்தன்றோ சொல்லுவது.-
சம்பந்தம் உணர்த்த வேண்டிய நீங்கள் உபாய அத்யவசாயம் சொல்லும் தாய் பேச்சு பேசவா –
நீர் எம்மை-
உங்களை அழியமாறியும் என்னுடைய ஜீவனமே எண்ணக்கூடிய நீங்கள், உங்களுடைய நல் வார்த்தை நெஞ்சிற்பட்டால் ஜீவியாத என்னை.
தாங்கள் தாங்கள் நலிவு பட்டும் பிறரை நோக்குவார், தாங்களே பிறரை நலியவும் பார்ப்பாரோ என்பாள் ‘நீர் நலிந்து’ என்கிறாள்.
நான் ஜீவிப்பேன் என்று நினைத்தோ! உங்கள் ஸ்வரூபத்தோடு சேர்ந்ததாக நினைத்தோ என்பாள் 2‘என் செய்தீரோ’ என்கிறாள்.
அன்றிக்கே, என் செய்தீரோ என்பதற்கு, ஒன்று செய்வது ஒரு பிரயோஜனத்தளவுமன்றோ, லாபாலாபம் அறிந்தாலும் கைவாங்க வேண்டாவோ என்னுதல்.
எம்மை நீர் நலிந்து என்செய்தீரோ –
பிராவண்யத்தை விளைப்பதற்கு முற்பாடரானால் பேற்றிற்கு முற்பாடராக வேண்டாவோ. -சம்பந்த ஞானம் கொடுத்தவர்களே பிராப்தியை விலக்கவோ-
நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ என்பதற்கு,
“மாசறு சோதி” என்ற திருவாய்மொழி தொடங்கி இவ்வளவும் வர ஹிதம் சொல்லுகிற நீங்கள்
என்ன பிரயோஜனம் பெற்றீர்கோள்’ என்று பிள்ளான் பணிப்பர்.

பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
-அந்நிலத்திலே அகப்பட்டாரையும் சிலர் மீட்க நினைப்பாரோ.
ஹிதம் சொல்லுவார் பசுமையுள்ள விடத்தேயன்றோ சொல்லுவது, இங்குப் பசலை பூத்தன்றோ கிடக்கிறது.
பிரியாதிருப்பார்க்குப் பசுமை மாறாதேயன்றோ.
“பச்சிலை நீள்கமுகு என்றாற்போலே, பலவும் தெங்கும் வாழைகளும்’ என்று
உய்ந்த பிள்ளை கூட்டி அருளிச் செய்வர்காணும்” என்று சீயர் அருளிச்செய்வர்.

‘பச்சிலை நீள்கமுகு’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து என்? என்னில், “பச்சிலைநீள்” என்ற அடைமொழிகளை, பலா தெங்கு
வாழைகளுக்கும் தனித்தனியே கூட்டிக்கொண்டு பொருள் அருளிச்செய்ய வேண்டும் என்று ‘உய்ந்த பிள்ளை’ என்ற பெரியார் அருளிச்செய்வர்
என்று நஞ்சீயர் அருளிச்செய்வர் என்பது.
பச்சிலை நீள் பலவும், பச்சிலைநீள் தெங்கும், பச்சிலைநீள் வாழைகளும் என்று கூட்டுக.

மச்சு அணி மாடங்கள் –
பல நிலங்களையுடைத்தாகையாலே அலங்காரத்தையுடைத்தான மாடங்கள்.
மச்சு-மேல்தளம். மீது அணவும் – செல்வப் பிள்ளைகளுக்கு அணுக்கன் இட்டாற்போலே காணும் கவிந்துகொண்டு நிற்கிறபடி.
தண் திருவல்லவாழ் –
சிரமம் நீங்கும்படி சோலைசெய்த ஊர். ஆக, பசுமை மாறாத இலைகளையுடைத்தாய் நீண்ட கமுகும்,
அப்படிப்பட்ட பலவும், தெங்கும், வாழைகளும், மச்சுக்களின் நிரையை யுடைத்தான மாடங்களின் மேலே,
அவ்வந்நிலங்களுக்கு நிழல் செய்யும்படி அணவின குளிர்ந்த திருவல்லவாழிலே என்றபடி.
நஞ்சு அரவின் அணை மேல் –
மேலும் சுற்றும் சோலையுண்டானால் கீழும் சோலையுண்டாக வேண்டுமோ.
இங்கும் குளிர்ச்சி, வாசனை, மென்மைகளால் குறை இல்லையே.
நஞ்சு அரவின் அணை-
படுக்கையும் தானேயாய்க் காத்து ஊட்டவும் வற்றாயிருக்கை.
பின் மூன்று அடிகட்குக் கருத்து, போகிகளாய் இருப்பார் விடாமல் வசிக்கக்கூடிய தேசம் என்பது.
இளையபெருமாள் கையும் வில்லுமாய் வெளிக்காவல் நிற்க, பெருமாளும் பிராட்டியுமாய்க் காட்டிலே இன்பம் அநுபவித்தாற்போலே.
மூவரும் காட்டிலே இன்பத்தை அநுபவித்தார்களேயன்றோ, அப்படியே இங்கும் காவல் உண்டாயிருக்கிறபடி.
அநந்த முகமான காவலேயன்றோ.

பெருமாளும் இளையபெருமாளும் பிராட்டியும் சிருங்கி பேர புரத்திலே தங்கியிருந்த அன்று ஸ்ரீ குகப்பெருமாள் இளையபெருமாளைப் பார்த்து,
‘பெருமாளும் பிராட்டியும் திருக்கண் வளராநின்றார்கள், உமக்குத் தகுதியாம்படி திருவடிகளிலே தலையாம்படி படுக்கை படுத்தேன்;
நாங்கள் காடராய் அங்கே இங்கே திரிகையாலே எங்களுக்கு உறக்கம் வராது. நீர் இராஜபுத்திரராகையாலே சுகுமாரர்;
‘பரதன் முதலானோர் வருவர்கள்’ என்று அஞ்ச வேண்டா, நானும் என் பரிகரமும் உண்டு, நீர் திருக்கண் வளர்ந்தருளும்’ என்ன,
‘தாசரதி சீதையோடு கூடப் பூமியில் உறங்கும்பொழுது என்னால் நித்திரை அடைய எவ்வாறு முடியும்?’
“கதா தாஸரதௌ பூமௌ ஸயாநே ஸஹ ஸீதயா ஸக்யா நித்ரா மயா லப்தும் ஜீவிதம் வா ஸு காநி வா”– ஸ்ரீராமா. அயோத். 9.

வாரீர், மஹாராஜனானசக்ரவர்த்தி அறுபதினாயிரம் ஆண்டு குழந்தையில்லாதவனாய் வருந்திப் பெற்ற சுகுமாரரான பெருமாள்
தரைக்கிடை கிடக்க எனக்குக் கண்ணுறங்குமோ? அவர் தாம் வசிஷ்டர் முதலான முனிவர்கள் கீழே தறையிலே இருந்தும் அறிவர்.
அதுவுமின்றிக்கே இருக்கிற பிராட்டியோடேகூடக் கிடக்கிறபடி பாரீர்; ஆனபின்பு, எனக்கு உறக்கம் உண்டாய்
அதுபோகைக்கு நினைவுபண்ணி இருக்கிறேன் அல்லேன் காணும், உறக்கம் தேட்டமாய்க் கிடையாமையாலே இருக்கிறேன்.
நம் பிரானது நன்னலமே-
“இந்தச் சீதாபிராட்டியினுடைய மனமானது அந்தப் பெருமாளிடத்தும், அவருடைய மனமானது
இந்தப் பிராட்டியிடத்தும் நிலைபெற்றிருக்கிறது” என்னும்படியே, இருந்ததாகில் நான் ஆறியிரேனோ.

“அஸ்யா தேவ்யா மந: தஸ்மிந் தஸ்யச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம் தேந இயம் ஸ ச தர்மாத்மா முஹூர்த்தமபி ஜீவதி”–ஸ்ரீராமா. சுந். 15 : 52.
என்றது, பிராட்டிக்கு மனம் பெருமாள் பக்கலிலேயாய், உயிர் தன் பக்கலிலேயாய்க் கிடந்தது; எனக்கு அங்ஙன் அன்றிக்கே,
உயிரும் மனமும் பெருமாள் பக்கலிலேயான பின்பு ஆறியிருக்கப் போமோ என்கிறார் என்றபடி.
இரண்டும் அங்கே ஒரு தலைத்த பின்பு நான் எங்ஙனே ஆறி யிருக்கும்படி.
‘இரண்டும் அங்கே ஒருதலைத்த பின்பு’ என்றது, பிராட்டியைப் போன்று மனம் மாத்திரமின்றிக்கே, உயிரும் மனமும் அங்கே ஒரு தலைத்த பின்பு
என்றபடி. “நன்னலம் நம் பிரானது” என்றபோதே, மனமும் அங்கே ஈடுபட்டு விட்டது என்பதும் தானே போதரும். நலம்-உயிர்.
நஞ்சு அரவின் அணைமேல் நம் பிரானது நன்னலம்-
திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்த வடிவழகைக் காட்டி என்னை அநந்யார்ஹமாக்கினவன் பாடது என்னுடைய நற்சீவன்.
அன்றிக்கே, திருவனந்தாழ்வானைப் போலே என்னை அநந்யார்ஹமாக்கினவன் என்னலுமாம்.
நற்சீவன் அவன் பக்கலிலேயாயிருக்க, கேவலம் சரீரத்துக்கு ஹிதம் சொல்லுகிற இதனால் பிரயோஜனம் என்?
அவன் பக்கலிலே சென்று ஹிதம் சொல்லுங்கோள் வேணுமாகில்.
“நம் பிரானது நன்னலம் எம்மை நீர் நலிந்து என்செய்தீர்” என்று கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார் ‘நற்சீவன்’ என்று தொடங்கி.

———————————————————————————————————————–

நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ்
கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே.–5-9-5-

விலஷணர் -அக்னி ஹோத்ர தூமம் ஆகாசம் மறைக்கும் -திவ்ய தேசம் நிரதிசய போக்ய பூதன் -என்று காண்பேன்
நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை-நல்ல -என்னிலும் மிக நல்ல -தோழிகள் -அநந்ய பிரயோஜனர் –
அதி பிரவணர் நல்ல அந்தணர்கள் -பகவத் ஆராதனா ரூபம்
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ்-த்ரவ்யங்கள் -கொண்டு ஹோமம் -கறுத்த புகை
உயர்ந்த ஆகாசம் -தன்னிறமாகும் படி மறைத்து நிழல் -கொடுத்து குளிர்ந்த திவ்ய தேசம்
கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை-கரும்பின் கோதற்ற கட்டி -பிரபத்யே பிரணாவாகாரம்
-ஸ்ரீநிவாச அனுகம்ப்யா -தயா உருகி அருவியாக -கட்டியே திருமலை -தயா சதகம் -ஸ்ரீ தேசிகன் -நித்யம் சுலபம் இனிமை –
பாஹ்ய ஆப்யந்திர விபாகம் இல்லாமல் -எங்குமே இனிமை -உணர் முழு நலம் -எங்கும் ஞான ஆனந்த மயம் போலே
அப்பொழுதே நுகர வேண்டிய பக்குவ பலம் -கனி -இனிமைக்கு மேலே இழந்த சத்தையை உண்டாக்கும் அமுதமாகவும் இருப்பானே
-ஆத்மா ஷேமம் -சம்ச்லேஷித்த காலத்தில் என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே.
நலத்தை பறித்துக் கொண்டு -புஜித்து-அனுபவித்து -ஆழ்வார் உடைய -ரூப குணம் ஸ்வரூப குணம் அனைத்தையும் கொண்டு
அத்தாலே தேஜஸ் மிக்கு -ஆத்ம குணம் சமம் தமம் பக்தி வைராக்கியம் -ரூப குணம் -அழகு
என்னிலும் பெரு விடாய் கொண்ட கண்கள் பார்க்க வேண்டுமே -என்று அவற்றுக்காக பிரார்த்திக்கிறார் –
ஆழ்வார்களும் இந்த்ரியங்களும் தனித்தனியாக விரும்புமே முந்துற்ற நெஞ்சம் –

சிறந்த அன்பினையுடைய தோழிமீர்காள்! சிறந்த பிராமணர்களாலே செய்யப்படுகின்ற யாகங்களினின்றும் மேல் எழுகின்ற புகையானது,
கரிய நிறத்தைக்கொண்டு உயர்ந்த ஆகாசத்தை மறைக்கின்ற குளிர்ந்த திருவல்லவாழ் என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற
வெல்லக்கட்டியை பழத்தை இனிய அமுதத்தை என் நலத்தை எல்லாம் கொண்ட சுடரை என் கண்கள் காண்பது என்று கொல்? என்கிறாள்.
வேள்விப்புகை விண்மறைக்கும் திருவல்லவாழ் என்க. கன்னல்-கரும்பு.

நான் செய்தபடி செய்ய, இக்கண்கள் விடாய் தீரக் காணப்பெறுவது என்று? என்கிறாள்.

நல் நலம் தோழிமீர்காள்-
நலமாவது, இவள் பக்கல் இவர்களுக்கு உண்டான அன்பு.
நன்னலமாவது, தங்கள் காரியம் தலைக்கட்டிக் கொள்ளுகையன்றிக்கே இருக்கை.
ஆனபின்பு, ‘தாய்மார்கள் பழி சொல்லுவர்கள்’ என்று அஞ்சி என்வழியே உங்களுக்கு ஒழுகாதிருக்கப் போமோ.
“குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சேர்க்கை எப்படி தோழிமார்களுக்கும் இவளுக்கும் உண்டான சிநேகத்துக்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார் ‘-இருவரும் பிறர் நலம் விரும்பி அன்றோ நண்பர்கள் ஆனார்கள்
“வாநராணாம் நராணாம் ச கதம் ஆஸீத் ஸமாகம:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 2.
உண்டாயிற்று?” என்றது, குருகுலத்தில் வாசம் செய்யாத விலங்குகளுக்கும் வசிஷ்ட சிஷ்யர்களான இராஜபுத்திரர்களுக்கும்
இது ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே; சாஸ்திரங்களை அறிந்தவர்கள் அலரோ குரு குல வாசத்திற்குத் தக்கவர்;
என்ன, மேல் இதற்குக் காரணம் சொல்லுகிறான். “இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் இந்த விதமாகச் சிநேகமானது உண்டாயிற்று;”
“ராம சுக்ரீவயோ: ஐக்யம் தேவி ஏவம் ஸமஜாயத” — ஸ்ரீராமா. சுந். 35 : 32.-என்றது, நிர்ஹேதுகத்வம் என்றபடி.
தங்களையும் அறியாதே எங்களையும் –இஷ்வாகு குலக் கொழுந்து -குரங்கு ஜாதி – அறியாதே இங்ஙனே விழுந்து கொடு நிற்கக் கண்டோமித்தனை.
அதாவது, இளையபெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்துகொண்டு நின்று நோக்கக்கூடிய அந்தப்புரக் காரியத்துக்கு
அடியேன் வரும்படி யன்றோ அவர்கள் ஒருங்கு சேர்ந்தபடி.
இளைய பெருமாள் அடிமையில் தப்பி நின்ற அளவுக்கும் திருவடியைக் கொண்டு இழையிட வேண்டும்படியாக அன்றோ
அவர் நிலவரானபடி; இளையபெருமாள் பேர நிற்கையன்றோ பிரிய வேண்டிற்று. “ஏவம் ஸமஜாயத –

“ஏவம் ஸமஜாயத – இந்த விதமாக உண்டாயிற்று” என்றதற்கு, மூன்று வகையாகப் பாவம் அருளிச்செய்கிறார். அவற்றுள்,
முதலது, ‘தங்களையும்’ என்றது முதல் ‘ஒருங்கு சேர்ந்தபடி’ என்றது முடிய. என்றது, அந்தப்புரக் காரியத்திற்கு அடியேன்
வரும்படியன்றோ அவர்கள் சேர்ந்தது என்று கருத்து. ‘தங்களையும்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து,
தங்கள் பெருமையையும் எங்கள் சிறுமையையும் பாராமல் நினைவின்றிக்கே சேர விழுந்தது என்பது.
இரண்டாவது பாவத்தை அருளிச்செய்கிறார் ‘இளையபெருமாள் அடிமையில்’ என்று தொடங்கி. என்றது,
தம்பியான இளையபெருமாளுடைய அபராதத்தையும் நான் பொறுப்பிக்கும்படி என்பது கருத்து. நிலவர்-அந்த ரங்கர்,
இளையபெருமாள் அடிமையில் தப்ப நின்றாரோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இளையபெருமாள் பேர நிற்கை’ என்று தொடங்கி.
மூன்றாவது கருத்தை அருளிச்செய்கிறார் ‘தங்கள் அளவிலும்’ என்று தொடங்கி. ‘தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள்’ என்றது,
தங்களுடைய ஐஸ்வர்யத்தைக்காட்டிலும், அதிகமான ஜஸ்வர்யத்தை யுடையராகும்படி பார்த்தார்கள் என்றபடி. மேல் வாக்யத்தை
விவரணம் செய்கிறார் ‘ஐச்வரியம்’ என்று தொடங்கி. ‘காடுபடும்படி’ என்றது, நிறைவுற்றதாம்படி என்னுதல்; காட்டுக்கெல்லாம் தலைவனாகும்படி என்னுதல்.
இவ்வாறு உண்டாயிற்று”- தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள். ஐச்வரியம் அவனுக்குக் காடு படும்படியன்றோ பார்த்தது.
இப்படியன்றோ நட்பு இருப்பது; இவர்களும் தோழிமார்கள் அன்றோ.

நல்ல அந்தணர் வேள்விப்புகை மைந்நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் –
வேறு பிரயோஜனங்களை நினைக்காதவர்களான பிராமணர்களுடைய யாகங்களில் உண்டான ஹோமப் புகையானது,
வெளிறு கழித்துக் கொண்டு ஆகாயத்தளவன்றியே உயர்ந்த சுவர்க்க லோகத்தை மறைக்கும். என்றது,
கருமை நிறம்கொண்டு எழுகிற புகைகள், இங்கே கண்ணழிவறப் புண்ணியங்களைச் செய்து
சம்சார வெக்காயம் தட்டாதபடி சென்று தேவ மாதரோடே அநுபவிக்கிற
வைமாநிகரை முகத்தோடு முகம் பார்க்க ஒட்டாமல் மறைக்கிறபடியைத் தெரிவித்தபடி.
இருவராய்க் கலப்பாரை முகத்தோடு முகம் பார்க்க ஒட்டாமை அந்நிலத்திலுள்ளார்க்கு
ஸ்வபாவம் போலே காணும் அவர்கள் புகைத்தல் இருக்கிறபடி.
நல்ல அந்தணர் – வேறு பிரயோஜனங்களைக் கருதாதவரான பிராமணர்கள்,
இதனால், அவர்கள் கண்டீர்கோள் அத்தலைக்குத் தகுதியாகப் பரிமாறுகிறபடி;
ஆன பின்பு, நீங்களும் அப்படியாயிருக்க வேண்டாவோ என்பதனைத் தெரிவித்தபடி.
தண் திருவல்லவாழ் கன்னல் அம் கட்டிதன்னை –
கரும்பினுடைய கோது அற்ற கட்டியை. ‘இன்னமலையின் கட்டி’ என்னுமாறு போலே, ‘திருவல்லவாழ் கட்டி’ என்கிறாள்.
கனியை – அவ்வளவும் பார்த்திருக்க வேண்டாதபடி பக்குவமான பழமாயிருக்கை.
இன் அமுதந்தன்னை –
உடம்பைப் பூண்கட்டிக் கொடுக்க வற்றாயிருக்கை. என்றது, அநுபவிப்பதற்குத் தக்க ஆற்றலைக் கொடுக்கையைத் தெரிவித்தபடி.
தேவர்களுடைய உப்புச்சாறு போலன்றிக்கே, ஆத்ம உஜ்ஜீவனம் பண்ணிக் கொடுக்கவற்றதாயிருத்தலின் ‘இன்னமுதம்’ என்கிறாள்.
சரீர ஜீவனம் -அது -இது ஆத்மா உஜ்ஜீவனம் கொடுக்குமே

என் நலம் கொள் சுடரை –
என்னுடைய அழகையெல்லாம் கொள்ளை கொண்டு, அதனாலே ஒளி யுருவனாயிருக்கிறவனை. என்றது,
இவளுடைய அழகையெல்லாம் கொள்ளை கொண்டது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோற்றும்படி இருக்கையைத் தெரிவித்தபடி.
அனுபவித்து பிரயோஜனம் பெற்றது அவன் தானே -அதனால் அவனே போக்தா -தான் போக்கியம் என்றபடி
போக்த்ருத்வம் விட போக்யமாகும் தன்மை சிறந்ததே -பாரதந்த்ர்யம் விட சேஷத்வம் சிறந்ததே
அன்றிக்கே, என்னை எழுதிக் கொண்ட அழகையுடையவனை என்றுமாம்.
என்றுகொல் கண்கள் காண்பதுவே-
‘நான் பட்டதுபட, குழந்தை ஜீவிக்கப்பெறுவது காண்’ என்பாரைப் போலே, என் கண்களின் விடாய் தீர்வது என்றோ? என்கிறார்
“முடியானே” என்கிற திருவாய்மொழியிற்கூறிய கரணங்களை யுடையவர் அன்றோ.
இந்திரியங்களும் தாமும் தனித்தனியே சேதன சமாதியாலே விடாய் கொள்ளுகின்றவர் அன்றோ.

கரணங்கள் விடாய்க்கக் கூடுமோ? என்னுமதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘துக்கத்தால்’ என்று தொடங்கி.

“யதா தம் புருஷவ்யாக்ரம் காத்ரை: ஸோகாபி கர்ஸிதை: ஸம்ஸ்ப்ருஸேயம் ஸகாமாஹம் ததா குரு தயாம் மயி”
என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
“துக்கத்தால் மிக அதிகமாக இளைத்திருக்கிற என் உறுப்புக்களால் புருஷ சிரேஷ்டரான அந்தப் பெருமாளை
நான் தொடக் கூடியவாறு திருவருள் புரிய வேண்டும்” என்றாள் பிராட்டி.
குழந்தைகள் ஜீவித்தால் பசி கெடுவார் அபிமாநிகள் அன்றோ.

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: