பகவத் விஷயம் காலஷேபம்- 121- திருவாய்மொழி – -5-8–6….5-8-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6-

நித்ய ஸூ ரி சேவ்யன் -நிரதிசய போக்யன் -என் விரோதிகளைப் போக்கி உன் திருவடிகளில் சேர்த்து கொள்ள வேண்டும்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!-பகவத் அனுபவம் -ஸ்வா பாவிக புகழ் -அனுபாவ்யனாய் கண் வளர்ந்து அருளி
நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹன்
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!-மிடறு போலே போது செய்யாதே -கபம் -நேரம் கடந்து -இசை போலே சரவண போக்யமாய் –
கீழே கண்ணால் – போக்கியம் -நித்ய போக்கியம் நாக்குக்கு இனியன் -வாயார பாடலாம் ஸ்துதிக்கு -இனியன்
ஞானப் பலம் -ஆகையால் மனசுக்கு போக்கியம் -மனசு வழியாக புலன்களுக்கு -த்வாரம் -ஞானத்துக்கு –
பாக்ய அப்யந்தர சர்வ இந்த்ரி யங்களாலும் அனுபவியா நின்றாலும் மிக சிறந்த சிங்கம் -மேணானித்து-அனுபவித்து முடிக்க முடியாதே
சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்–உன்னுடைய திருவடிகளுக்கே ஆட்பட்டு அனன்யார்ஹன்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்-துஷ் பூரம் -ஸ்வா பாவிக தொடர்பு இருந்தாலும் துராசை ஆகிய குழியை துரத்து
எத்தனை நாள் அகன்று இருக்க வேண்டும்
இதுக்கு அடியான என் அநாதி கால கர்மங்களை அறுத்து ஸ்வரூப பிராப்தம் உன் திருவடிகளை சேரும் படி சூழ்ந்து அருள வேண்டும்

இயல்பாக அமைந்த புகழையுடைய பெரியோர்கள் நித்தியவாசம் செய்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் திருக்கண் வளர்கின்றவனே!
நித்திய சூரிகளுக்குத் தலைவனே! யாழினிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே! என்னுடைய பழைமையான இரு வினைகளையும் அறுத்து
உனது திருவடிகளைச் சேர்வதற்குரிய முறையை யான் அறிந்திருந்தும், தூர்க்க முடியாத இந்திரியங்களாகிற குழியை நிறைத்துக்கொண்டு
எத்தனை காலம் உன்னை நீங்கி இருப்பேன்? உன்னைச் சேர்வதற்குரிய உபாயத்தைச் செய்தருள வேண்டும்.
ஊழ்-முறைமை, தூரா-நிறைதல் இல்லாத. தூர்த்து-நிறைத்து. எனை-எத்தனை. அரியேறே! சூழ்கண்டாய் என்க, அரி ஏறு-ஆண் சிங்கம்.

உன் இனிமையை அநுபவிக்கிற எனக்கு ஒரு பிரிவு வாராதபடி உன்னை அடைவதற்குத் தடையாகவுள்ள விரோதிகளையும் போக்கி,
உன்னைப் பெறுவது ஒரு விரகு பார்த்தருள வேண்டும் என்கிறார்

என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும் சூழ் கண்டாய் –
என்னுடைய பழமையான கர்மங்களை வாசனையோடே போக்கி,
உன் திருவடிகளை நான் வந்து கிட்டுவது ஒரு வழியை நீயே பார்த்தருள வேண்டும்.
கிரமத்திலே செய்கிறோம் என்ன, அதற்கு எல்லை என்? என்கிறார்.
உன் அடி சேரும் ஊழ் கண்டிருந்தே –
உன் திருவடிகளைக் கிட்டும் முறையை அறிந்து கொண்டிருந்தே.
நாட்டாரைப் போன்று உன்னை அறியாது ஒழியப் பெற்றிலேன் என்பார் ‘இருந்தே’ என்கிறார்.
“உன்னடி சேரும்” என்பதனை, “உன்னடி சேரும்படி சூழ்கண்டாய்” என்றும்,
“உன்னடி சேரும் ஊழ் கண்டிருந்தே” என்றும் முன்னும் பின்னும் கூட்டுக. “ஊழ்” என்றது, சேஷ சேஷிபாவ முறையினை.
தூராக் குழி தூர்த்து-
நிறைக்க இயலாத இந்திரியங்களுக்கு இரை இட்டு
எனை நாள் அகன்று இருப்பன் –
இன்னம் எத்தனை நாள் இங்ஙனே இருக்கக் கடவேன்?
ஸ்ரீபரதாழ்வான் போல்வார்க்கோ ஒரு நாள் இட்டுக் கொடுக்கலாவது என்றபடி.
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் –
‘பிரிந்திருக்கும் நாள் எத்துணை’ என்று கேட்க வேண்டாதவர்கள், அவன் கண்வட்டத்தில் வசித்து
வாழப் பெறுகையாலே வந்த சிலாக்யமான புகழையுடையவர்கள்.
அன்றிக்கே, தொல்புகழ் என்பதற்கு, பழைய புகழ் என்னலுமாம்.
விஷய சந்நிதி தமக்கும் அவர்களுக்கும் ஒத்திருக்க, அவர்கள் வாழ்கிறபடி எங்ஙனே? என்னில்
தம்மைப் போன்று கூப்பிடாமையாலே நினைத்த பரிமாற்றம் பெற்றார்கள் என்று இருக்கிறார்.

வானோர் கோமானே –
அவர்கள் சிலவர் நாள் நடையாடாத தேசத்திலே வசிக்கிறவர்கள் காணும்
யாழின் இசையே –
மி்டற்று ஓசை போன்று கர்மத்துக்குத் தகுதியாகப் போது செய்கை அன்றிக்கே இருத்தல்.
போது செய்கை -கண்ட த்வனி -சொல்லாமல் -ச்லேஷ்மாதிகளால் கபம் -வாதம் பித்தம் கபம் மூன்றும் உண்டே –
“யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே” –திருவாய்மொழி. 2. 3 : 7.-என்னக் கடவதன்றோ.
அமுதே – ‘செவிக்கு அதுவாய்,-யாழின் இசையாய் – நாவிற்கு வேறு ஒன்று தேட வேண்டாதபடி இனிய பொருளாயிருக்கை.
அறிவின் பயனே –
ஞானத்துக்குப் பிரயோஜன ரூபமான சுகம். மனத்திற்கு இனிய பொருளாயிருக்கிறபடி.
அரி ஏறே –
எல்லாப் பொருள்கட்கும் வேறுபட்ட தன்மையை யுடையவனாயிருத்தலால் வந்த மேனாணிப்பையுடையவனே!
விசஜாதீயத்வம் -ச்வேதர சமஸ்த வஸ்து விலஷணம் -சர்வ சேஷி -நியந்தா -வியாப்தா –
அன்றிக்கே. கண்களுக்கு முகக்கொள்ள ஒண்ணாத இனிமையையுடையவன் என்றுமாம்.
இங்குள்ளார்க்கும் அங்குள்ளார்க்கும் உன்னை அநுபவிக்கக் கொடுத்து நிரதிசய போக்கியனாயிருக்க,
நான் இந்திரியங்களுக்கு இரை இட்டு எத்தனை காலம் அகன்றிருக்கக் கடவேன் என்கிறார்.

————————————————————————————————

அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7-

விக்ரக வை லஷண்யம் காட்டி அடிமை கொண்ட பின்பு திருவடியைக் கொடுத்து அருள வேண்டும்
அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!-ஸ்வ தந்த்ரம் மட்டும் இல்லாமல் ச்பருஹநீயம் -திருமேனி ஒளி-வாத்சல்யம் அமிருத வர்ஷி
நீல தோயாத மத்யஸ்தா -கரு நீல மேகம் -தண்ணீர் நிரம்பிய -வித்யுத் லேகா இவ பாஸ்வரா -தஸ்யா சிகையா மத்யே பரமாத்மா விவஸ்திதயா-
நெருப்பு ஜ்வாலை- ஜ்வாலைக்குள் கருத்த மேகமா –
சிகைக்கு நடுவில் பெருமாள் -வெளியில் இருள் -மின்னல் -நடுவில் சிகை -நடுவில் கருத்த மேகம் -அழகா திகைப்பா பயமா -அனைத்தும் கலந்து –
கிரணங்கள் வீச –பொன் ஒளிக்கு ஆஸ்ரயமான கறுத்த திரு மேனி
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
ஜ்யேஷ்டா நஷத்ரம் கேட்டை நஷத்ரம் -அக்னி போல சிவந்து
ஆஸ்ரித விரோதிகளுக்கு -பவளமே மலை -எரிகின்ற பவளக் குன்றம் என்றுமாம்
ஸ்த்ரிமான வடிவு உடையவனாய் -நான்கு தோள்களையும் காட்டி என்னை எழுதிக் கொண்டவனே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
வாசிகாதி கைங்கர்யம் கொண்டே -அடிமைக்கு பிரதி சம்பந்தி மிதுனம் -லஷ்மி சஹிதன் கோமளவல்லி தாயார் உடன் சந்நிஹிதன்
பிராப்யமான உன் திருவடிகளைத் தந்து அருள வேண்டும் –
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.
திருமந்தரம் சரம ஸ்லோகம் போலே -நோற்ற நான்கும் –ரகஸ்ய த்வயம் போலே என்பர் திருமாலே -உண்டே இங்கே –
த்வய பிரக்ரியை -அடிமை கொள்வதை -உத்தர வாக்யார்த்தம் தானே -வாக்ய த்வயம் போலே அகலகில்லேன்

அரியேறே! அழகிய பொன்னின் சுடரே! சிவந்த கண்களையுடைய கரிய முகிலே! நெருப்புப் பொருந்திய பவளக்குன்றே!
நான்கு திருத்தோள்களையுடைய எந்தையே! உன்னுடைய திருவருளாலே என்னைப் பிரிதல் இல்லாத அடிமை கொண்டவனே!
திருக்குடந்தையில் திருக்கண் வளர்கின்ற திருமாலே! இனி, தரித்திரேன், உன்னுடைய திருவடிகளைத் தந்து என் பிறவியை நீக்குவாய்.
வியாக்கியானத்துக்குப் பொருந்த “எரியேய் பவளக் குன்றே!” என்று திருத்தப்பட்டது. இப்பொழுதுள்ள பாடம், ‘எரியே பவளக்குன்றே’ என்பது.
‘அடிமை கொண்டாய்!’ என்பதனை விளிப்பெயராகக் கொள்ளாது, அடிமை கொண்டாய், ஆகையாலே,
சரணம் தந்து சன்மம் களையாய் எனக் கோடலுமாம். களையாய் என்றது, களைய வேண்டும் என்றபடி. உடன்பாட்டு முற்று.

உன் கிருபையாலே உன் வைலக்ஷண்யத்தைக் காட்டி அடிமையாதல் அல்லது செல்லாதபடி ஆக்கின பின்பு,
உன் திருவடிகளைத் தந்து பிறகு சம்சாரத்தை அறுக்க வேண்டும் என்கிறார்.

அரியேறே-
தன்னினின்றும் வேறுபட்ட பொருள்களுக்கெல்லாம் தானே கடவனாகையாலே வந்த மேனாணிப்பு.
சர்வ வஸ்து விசஜாதீயன் முன்பு -இங்கு சர்வ வஸ்து நிர்வாஹன் –
என் அம்பொன் சுடரே –
அம்மேன்மைக்குச் சிறிது உள்ளாகப் பார்த்தவாறே பிரகாசித்துத் தோற்றுகிற ஒளியாலே விலக்ஷணமான
பொன் போலே விரும்பத்தக்கதான ஒளியையுடையவனே!
அவ்வடிவில் வாசியைத் தமக்கு அறிவித்தவனாதலின் ‘என் அம்பொன் சுடரே’ என்கிறார்.
செங்கண் கருமுகிலே –
அதற்கும் -மேன்மைக்கும் ஒளிக்கும் -அடியான திருக்கண்களும் திருமேனியும் இருக்கிறபடி.
எரி ஏய் பவளக் குன்றே –
நக்ஷத்திர மண்டலம் வரையிலும் ஓங்கிய பவளக்குன்றே! சமுதாய சோபை இருக்கிறபடி. எரி-கேட்டை நக்ஷத்திரம்.
அன்றிக்கே, எரி ஏய்ந்த பவளக்குன்று போலே இருக்கை என்னுதல். என்றது, அக்நி போலேயுள்ள ஒளியையுடைய பவளக்குன்றே! என்றபடி.
இதனால் ஒளியையும், விரும்பப்படுகின்ற தன்மையையும் நினைக்கிறது.–
உகவாதார்க்கு நெருங்கவும் கூடாத தன்மையனாய், அநுகூலர்க்கு ஒளியால் விருப்பத்திற்கு விஷயமாய் இருக்கையைத் தெரிவித்தபடி.
அளவிடற்கு அரியவன் என்பார் ‘குன்றே’ என்கிறார்.
நால்தோள் எந்தாய் –
கல்பக தரு பணைத்தாற்போலே இருக்கிற திருத்தோள்களைக் காட்டி என்னைத் தனக்கே உரியவனாக எழுதிக்கொண்டவனே!
‘திருவடி தோற்ற துறையிலே ஆயிற்று இவரும் தோற்றது.

உனது அருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய்-
உன்னுடைய கேவல கிருபையாலே என்னை நித்திய கைங்கரியத்தைக் கொண்டாய்.
அருள் – அருளாலே.
குடந்தைத் திருமாலே-
அடிமை கொள்ளுகைக்காகப் பெரிய பிராட்டியாரோடேகூடத் திருக்குடந்தையிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறவனே!
‘ஒரு தேச விசேடத்தே’ என்னாதபடி தேசத்தில் குறை இல்லை, திருமகள் கேள்வனாகையாலே பேற்றிற் குறை இல்லை.
“சீதாபிராட்டியாரோடுகூட நீர் மலைத்தாழ் வரைகளில் உலாவும்பொழுது நான் எல்லாவித கைங்கர்யங்களையும்
எப்பொழுதும் பண்ணுவேனாக” என்ற இளையபெருமாளைப் போலே பற்றுகிறார் இவரும்.

“பவாஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்கிரத: ஸ்வபதச்ச தே”-ஸ்ரீராமா. அயோத். 31 : 25.
பெருமாளைப் பார்த்து இளையபெருமாள் கூறியது.

இனி தரியேன்-
அந்தச் சேர்த்தியைக் கண்டபின்பு என்னால் பிரிந்து தரித்திருக்கப் போகாது.
தாய் தந்தையர்கள் அண்மையிலிருப்பாருமாய் ஸ்ரீமான்களுமாய் உதாரருமாய் இருக்க,
குழந்தை பசித்துத் தரித்துக் கிடக்கவற்றோ. தரியாமை எவ்வளவு போரும் என்ன,
கோமள வல்லித் தாயார் திருக் கோலம் -அவனுக்கும் ஆராவமுத ஆழ்வார் திருக் கோலம் அவளுக்கும் மாற்றி
குத்து விளக்கு பாசுரம் சாத்தி சேவை இன்றும் உண்டே
உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே –
முலை கொடுத்துச் சிகித்சிப்பாரைப் போலே, முற்படத் திருவடிகளைத் தந்து,
பின்பு பிறவியின் சம்பந்தத்தை அறுக்க வேண்டும். -‘புண்ணார் ஆக்கையின் புணர்வினை அன்றோ அறுக்கப் புகுகிறது;

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம் புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந் தெய்த் தொழிந்தேன்
விண்ணார் நீள்சிகர விரையார் திரு வேங்கடவா! அண்ணா! வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே.– பெரிய திருமொழி.

அதற்கு அடியிலே தரிப்பித்துக் கொண்டு, பின்னை அறுக்க வேண்டும் என்கிறார்.
ராஜ புத்திரன் சிறையில் இருந்தால் முடி வைத்து சிறை விடுவிப்பாரைப் போலே-
திருப்பாவை அனுசந்தானம் செய்து கொண்டே சிகிச்சை பண்ணுவார்களாம் பட்டரை-

———————————————————————–

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-

ஹேம மகரிஷி திருக்குமாரியாக – கோமள வல்லி தாயார் -பொற்றாமரையில் –ஹேமா புஷ்கரணி –
ப்ருகு மகரிஷி தான் செய்த தவற்றுக்கு தபஸ் -அவரே ஹேமா மகரிஷி –
திருக் கல்யாணம் -வேகவதி -தாயாரே துரத்தி வர -ஒழிந்த ஸ்ரீநிவாசன் -பாதாள ஸ்ரீநிவாசன் —
பிரணவம் -பிரணவாராக விமானம் ஸ்ரீ ரெங்கம் -அதன் விரிவான -வைதிக விமானம் –
ஸ்ரீ ராமரே இங்கே பிரதிஷ்டை -செய்து அருளினார் –தேர் உடன் வந்து -மகர சங்கராந்தி அன்று –
அதனாலே ஸ்ரீ -சாரங்க பாணி -வந்து தாயாரை திருக் கல்யாணம் –உபாயமும் பரம போக்யமும் அவனே –
களை கண் அற்றாரை யுருக்கும் மாதுர்யம் குடமூக்கிலே ப்ரவஹிக்கும் –இனிமை —காவேரி -போலே –
விபரீதமே பலிக்கிலும் -அநந்ய கதி -திருவடிகளை விடாமல் இருக்க அருள் செய்ய வேண்டும் -சரம தசையிலும் –
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்-அனுபவிக்கப் பெறாத துன்பத்தை போக்கு -போக்காமாலும் -உன் முடிவு -துக்க நிரசக வஸ்து வேறு இல்லேன் –
அறிவிப்பு போலே அருளிச் செய்கிறாய்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
துக்க நிவர்த்தாக பரிகரம் உண்டே -ஆஸ்ரித அர்த்தமாக -சக்கரம் ஏந்தி இங்கே கண் வளர்ந்து அருளும் -அத்யாச்சர்ய
சௌந்தர்ய உக்தன் -அழகே ஆச்சர்யப்படுத்தும் உன்னை அனுபவிக்கப் பெறாத ஆர்த்தி யாலே
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது-எப்போதோ ஏதோ வேணும் என்கிற பயம் உள்ளதே -உடலம் தளர்ந்து -உன்னை அனுபவிக்கப் பெறாமல்
உடலம் தளர்ந்து என் ஆவியும் சரிந்து போம் -நிலை நுழைந்து போகும் பொழுது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே-சித்த தௌர்பல்யம் -பெறவாதே-உன் திருவடிகலையை ஒருங்க
-பிராப்யம் பிரபாகமாக பிடித்துப் போம் படி அருள வேண்டும்

வளைந்த வாயையுடைய சக்கரத்தைப் படையாக வுடையவனே! திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகின்றவனே! மாமாயனே!
என் துன்பத்தைப் போக்குவாய்; போக்காதொழிவாய்; துணையாவார் வேறு ஒருவரையுமுடையேன் அல்லேன்; சரீரம் தளர்ந்து என் உயிரும்
இந்த உடலை விட்டு நீங்கிப்போகின்ற காலமாயிற்று; தளராமல் உன் திருவடிகளை ஒருபடிப்படப் பிடித்துக்கொண்டு போவதற்கு நீ சம்மதிக்க வேண்டும்.
“துன்பம் என்பதனை இடைநிலைத் தீவகமாக முன்னும் பின்னும் கூட்டுக. களைகண் – துணை. இளைத்தல் – நெகிழ்தல்.

“தரியேன்” என்ற பின்பும் முகங்கிடையாமையாலே கலங்கி; அநுபவம் பெற்றிலேனேயாகிலும்,
‘உன் திருவடிகளே தஞ்சம்’ என்று பிறந்த விசுவாசம் குலைகிறதோ என்று அஞ்சா நின்றேன்;
அது குலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார்.
விஸ்வாசம் குலையாது போக வேண்டும் என்கைக்கு பிரசக்தி ஏது என்னில் -தரியேன் -பல தடவை சொல்லியும் -பேறு கிட்டாமல் இருக்கவே –

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –
நீ உன் காரியத்தைச் செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய், நான் குறைவற்றேன், -ரஷணம்-அவன் கார்யம் தானே
“நீயே உபாயமாக எனக்கு ஆவாய்” என்கிற அம்சத்தில் குறையில்லை;
அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”என்றது,
சரமஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில் குறை இல்லை என்றபடி.–அறிவிப்பே அமையும் –
சர்வ பாபேப்யோ-மோஷயிஷ்யாமி-“எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்” என்னும் உன் கூறு செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய்.
பூர்வ கூறு நமது கர்த்தவ்யம் -உத்தர கூறு உன்னுடையது அன்றோ –
அப்படிச் செய்கிறோம் என்னாமையாலே, என்னுடைய ரக்ஷணத்துக்காக அன்றோ இக்கிடை என்கிறார் மேல்:
வளைவாய் நேமிப்படையாய்-
பார்த்த இடம் எங்கும் வாயான திருவாழியை ஆயுதமாகவுடையவனே!
களையாதொழிகைக்குச் சொல்லலாம் கண்ணழிவு உண்டோ? என்பார் ‘நேமிப்படையாய்’ என்கிறார்.
என்றது, ‘பரிகரம் இல்லை என்னப் போமோ; கைகழிந்து போயிற்று, இனிப் படை திரட்ட வேண்டும்’ என்னும் கண்ணழிவு உண்டோ? என்றபடி.
தொழுவித்துக் கொள்ளும் கைக்கு பரிகரம் உண்டு -சங்கு சக்கரம் ஏந்தும் கையான் -தொழும் கைக்கு அஞ்சலி பரிகரம் உண்டே
வில் கை வீரன் வெறும் கை வீரன் -அகிஞ்சனன் -நம-என்பதே முமுஷுக்கு வீரத்தனம் –
உன் கையில் ஆயுதத்துக்கு வாய் இல்லாத இடம் உண்டோ, அது வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டாவோ? என்பார் ‘வளைவாய்’ என்கிறார்.
மா ஸூ ச சொல்ல வேண்டாமோ -வாய் படைத்த பிரயோஜனம் இது அன்றோ –
நேமிப் படையாய் களைகண் மற்றிலேன் –
அப்படி இருப்பது என் கையில் ஓர் ஆயுதம் உண்டோ, பிறர் கையில் ஓர் ஆயுதம் உண்டோ, உன் கையில் ஆயுதம் இல்லையோ.
அநந்ய கதித்வத்தை மீண்டும் ஆவிஷ்கரிக்கிறார் –
குடந்தைக் கிடந்தாய் மா மாயா –
திருக் குடந்தையிலே வந்து ஆச்சரியமான அழகோடே திருக்கண் வளர்ந்தருளுகிறது அடியார்களுக்காக அன்றோ.
நீ “மாம்” என்றதன் பின் இவ்வருகுள்ள ஏற்றமெல்லாம் பாராய். இதனால், அவதார தசையிலும் அர்ச்சாவதாரம் சுலபம் என்றபடி.
38 வருஷம் -காந்தாரி சாபம் -மா ஸூ சா சொல்லி பின்பு 38 வருஷத்துக்கு பின்பே தன்னுடைச் சோதி எழுந்து அருளினான் –
“குடந்தைக் கிடந்தாய்” என்று அர்ச்சாவதார சௌலப்யம் சொல்லுகையாலே, ‘நீ, “மாம்” என்றதன்பின்’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார். “மாம்” என்பது, சரமஸ்லோகத்திலுள்ள ஒரு பதம்.
‘நீ மாம் என்றதன்பின்’ என்றது, கிருஷ்ணாவதார சௌலப்யத்தைத் திருவுள்ளம்பற்றி.
ஏற்றமெல்லாம் என்றது, அர்ச்சக பராதீனனாயிருக்கிற ஏற்றம் எல்லாம் என்றபடி.
நேமிப் படையாய்-சக்தி வைகல்யம் சொல்ல ஒண்ணாது,
குடந்தைக் கிடந்தாய் – ‘சுலபன் அல்லன்’ என்ன ஒண்ணாது,
மா மாயா-‘ருசியை உண்டாக்குமவன் அல்லன்’ என்ன ஒண்ணாது என்றபடி.

உடலம் தளரா –
சரீரம் கட்டுக் குலைந்து. தளரா-தளர.
எனது ஆவி சரிந்து போம்போது –
என் உயிரானது முடிந்து போகுமளவாயிற்றுக் கண்டாய். ‘போம்போது’ என்றது, போகும் அளவாயிற்று என்றபடி.
நன்று; இதுதான் அந்திம ஸ்மிருதி ஆனாலோ? என்னில், “கட்டைபோன்றவனை, கல் போன்றவனை” என்றும்,
“நான் நினைக்கிறேன்” என்றும் சொல்லுகிறதை இவர் அறியாதவர் அன்றே;
-“ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாணசந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்”என்பது, வராஹசரமம். ‘
இவர்தாம் அவ்வதிகாரிகளும் – ‘உபாசகர்களும்’ -அலரே.

ஆதலால், பிரிவுத் துன்பத்தாலே சரீரமும் தளர, உயிரும் சரீரத்தை விட்டுப் போகும் தசையாயிற்று என்கை
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத நீ இசை –
அபேக்ஷிதம் பெற்றிலேனேயாகிலும், நான் விரும்பியது சித்திக்கும்படி உன் திருவடிகளைப் பற்றின பற்று நெகிழாமற் பண்ணி அருளவேண்டும்.
அநுபவம் கிடையாமையாலே, ‘அதற்கு அடியான உபாய அத்யவசாயமும் குலைகிறதோ’ என்று அஞ்சி,
இது குலையாமல் பார்த்தருள வேண்டும் என்கிறார். ஒருங்க – ஒரு படிப்பட.

———————————————————————————————————————-

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9-

எனது அனுமதியைப் பிறப்பித்து -கிடை அழகு -சேவித்த பின்பு நடை அழகு காண வேண்டுமே
இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!-அநாதி காலம் -விமுகனான என்னை -நம் பாட்டுக்கு ஆழ்வார் அருளிச் செய்கிறார் –
பட்ட பாட்டைப் பகிர்ந்து கொள்கிறார் -ஓம் என்று இசைவித்து
அநந்ய பரனாகும் படி இதுவே பிராப்யம் பிராபகம்
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!-இப்படி ஸ்வரூப ஞானம் பிறந்தார்க்கு பிராப்யன் ஆகும் படி பிராப்ய அனுபவம் விச்சேதம் இல்லாத –
இந்த்ராதிகள் அசையுடைய அமரர்கள் -கல்பம் தானே இருப்பார்கள் -அனுபவத்திலும் -நித்யம் இல்லையே இவர்களுக்கு
அநந்த கருட விஸ்வக்சேனர் -போன்றார்களுக்கு -தலைவர்களுக்கு தலைவன்
சமஸ்த த்ரிவித காரணன் -சர்வாதிகன் -விக்ரகம் உடையவன் -ஐஸ்வர்யம் -என்றுமாம் –
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை-ஆஸ்ரிதர் அனுபவ அர்த்தமாக -திருமழிசை ஆழ்வார் நம்மாழ்வார் போன்றோர் மணிகள்
தார்ச நீயமான பெரு விலையனான ரத்னங்கள்
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண -உலகத்தில் பரந்து -பகர ஸ்தோத்ரம் பண்ண என்றுமாம்
கிட்டுவானா இல்லையோ -என்று உலகோர் -இடம் உள்ள அசைவு -இந்த சங்கை உன்னால் அன்றோ போனது
துர்லப சங்கையால் வந்த அலைச்சல் தீர்ந்ததே நீ கிடந்ததால்
-நம்முடைய ஆராவமுதன் அன்றோ -வாராயே.சாரங்கபாணி தளர் நடை -நடவாயே – வருக வருக வாமன நம்பி –
நடந்த கால்கள் நொந்தவோ -ஸ்தோத்ரம் பண்ணும் படி -நடை அழகு காணும் படி
துக்க சாகரத்தில் -இல் இல்லம் வீடு -அமிழ்ந்து போகும் லோகம் என்றுமாம்
அசைவு இல்லா லோகம் நித்ய விபூதி -ஸ்தோத்ரம் பண்ணும் படி என்றுமாம் –
அமர்ந்த அழகைத் தான் அங்கே சேவை -இங்கு தானே கிடந்த அழகு -இத்தை அங்கே இருந்து ஸ்தோத்ரம்
இடம் வலம் கொள்ளும் -விஷய சப்தமி -பெருமாள் அசையும் அசைவிலே ஈடுபட்டு உலகம் ஸ்தோத்ரம் பண்ணும் என்றுமாம் –

என்னை உடன்படச் செய்து உனது திருவடிகளிலே சேரச்செய்த அம்மானே! அழிதல் இல்லாத நித்தியசூரிகளுக்குத் தலைவரான
சேனைமுதலியாருக்குத் தலைவனே! திசைகளில் எல்லாம் ஒளியை வீசுகின்ற செழுமைபொருந்திய சிறந்த இரத்தினங்கள் சேர்ந்திருக்கின்ற
திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்திலே, வருத்தம் இல்லாதவாறு உலகமானது பரவும்படி திருக்கண் வளர்கின்றவனே! நான் காணும்படி வர வேண்டும்.
இசைவித்து இருத்தும் அம்மான் என்க. வில் – ஒளி. வாராய்; உடன்பாடு; வரவேண்டும் என்றபடி.

சர்வேச்வரனாய் வைத்து எல்லாராலும் பற்றப்படுமவனாகைக்காக இங்கே வந்து அண்மையில் இருப்பவனாய் எனக்கு
அடிமையால் அல்லது செல்லாதபடி செய்த நீ, கண்களால் நான் காணும்படி வர வேணும் என்கிறார்.

என்னை இசைவித்து –
நெடுநாள் விமுகனாய் நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாயிருக்கிற என்னை அடிமையிலே இசைவித்து.
இசையாத என்னை இசைவித்த அருமை வேணுமோ இசைந்திருந்த நீ காரியம் செய்கைக்கு.-
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சினை வஞ்சித்து -எதிர் சூழல் புக்கு -ஒருவனை வளைக்க ஊரை வளைப்பாரைப் போலே –
உன் தாள் இணைக்கீழ் இருத்தும் –
நித்தியசூரிகள் அடிமை செய்கின்ற உன் திருவடிகளிலே இருத்தினவனே!
சாக்கியம் கற்றோம் -இத்யாதி -பரகு பரகு என்று திரியாதபடி தன் திருவடிகளிலே விஷயமாம்படி செய்யுமவன் என்கை.
“நிழலும் அடிதாறும் ஆனோம்” என்கிறபடியே, மிதி அடியாம்படி ஸ்ரீசடகோபன் ஆக்கி.

அழகு மறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான் நிழலும் அடிதாறு மானோம் – சுழலக்
குடங்கடலை மீதெடுத்துக் கொண்டாடி அன்றத் தடங்கடலை மேயார் தமக்கு.- பெரிய திருவந்தாதி.

பெருங்காற்றில் பூளை போலே யாதானும் பற்றி நீங்கும் விரதமாய் அன்றோ முன்பு போந்தது.
ஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த பூளை யாயின கண்டனை இன்று போய்ப் போர்க்கு
நாளை வாவென நவின்றனன் நாகிளங் கமுகின் வாளை தாவுறு கோசலை நாடுடை வள்ளல்.-என்பது, கம்பராமாயணம்.
அம்மானே-
பேறு இவரதாயிருக்க, அவன் இசைவிக்க வேண்டின சம்பந்தம் சொல்லுகிறது.
அசைவு இல் அமரர் தலைவா –
நித்தியசூரிகளுக்குத் தலைவனான ஸ்ரீசேனாபதியாழ்வானுடைய காரியமும் இவன் புத்தியதீனமாய் இருக்கிறபடி.
அசைவில்லாத அமரர் – நித்தியசூரிகள். அசைவில்லாமையாவது, பிரமன் முதலியோருடைய அழியாமை போலே ஆபேக்ஷகமன்று.
கல்ப காலத்தை எல்லையாக உடையது அன்று என்றபடி.
அன்றிக்கே, குறைதல் விரிதல் இல்லாமல் எப்பொழுதும் ஒரே தன்மைத்தான ஞானத்தை யுடையவர்கள் என்னுதல்.
ஆதிப் பெருமூர்த்தி-
இவ்வருகுள்ளாருடையவும் சத்தைக்குக் காரணமாக இருப்பவனே! என்றது,
உலகத்திற்கெல்லாம் காரணமாயிருக்கின்ற சர்வாதிகனே! என்றபடி. மூர்த்தி – ஐஸ்வர்யம் உடைய ஸ்வாமி.

திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
– திசைகளிலே ஒளி பரவாநின்றதாய், காட்சிக்கு இனியதாய், பெருவிலையனான இரத்தினங்கள் சேராநிற்கிற திருக்குடந்தையிலே.
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய் –
உலகமானது வருத்தம் அற்று அடையும்படி கிடந்தாய்.
வருத்தம் அறுதலாவது, கண்களால் காண முடியாதவனை நாம் எங்கே அடையப் போகிறோம் என்கிற வருத்தம் தீர்தல்.
அன்றிக்கே, அசைவில்லாத உலகமான நித்திய விபூதியிலுள்ள நித்தியசூரிகளும் வந்து அடையும்படி கிடந்தாய் என்னுதல்.
அன்றிக்கே, அசைவுண்டு – இடம் வலம் கொள்ளுகை, அதனைக் கண்டு உலகமானது பரவும் படி கிடந்தாய் என்னுதல்.
ஆக சத்தையை நோக்கி, மேலுள்ளனவற்றை இவர்கள் தாமே நிர்வஹித்துக் கொள்ள இருக்கை அன்றிக்கே,
மேலுள்ளனவற்றையும் தானே செய்வானாக நினைத்து வந்து கிடக்கிறபடியைத் தெரிவித்தபடி
கிடந்தாய் காண வாராய் –
திருக்கண் வளர்ந்தருளுகின்ற அழகினைக் கண்டு அநுபவித்தேன், இனி நடையழகு கண்டு நான் வாழும்படி வரவேணும்.
செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை என்பதற்கு, -புருஷ ரத்னங்கள் – -‘ஆராவமுதாழ்வார், திருமழிசைப்பிரான் போல்வார்
புருஷரத்நங்கள் சேரும் திருக்குடந்தை’ என்று நிர்வஹிப்பர்கள்.

——————————————————————————————–

வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-

கண்டு அனுபவிக்க ஒண்ணாத படி -அகவாயில் நின்று -அந்தர்யாமியாக இருந்து -உருவாய் வராமல் -அருவாக வந்து -அந்தர்யாமி என்றுமாம் –
நிரதிசய சாரச்யதையை விளைவிக்கும் உன்னை -அர்ச்சாவதார அடிமை புகுந்து -பின்னும் -கண்ணிட்டு கொண்டு நடை அழகை காட்டாமல்
வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!-அபஷய விநாசம் இல்லாமல் -என் மாயா -தேய்தல் அளித்தால் இல்லா நித்ய மங்கள விக்ரகம்
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!-போகய பூதன் -சேஷ பூதன் -நிரதிசய சாரச்யத்தை விளைவித்து -ஆவி அகம் -மனஸ்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை-பிரதி பந்தகங்கள் போகும் படி வாசா கைங்கர்யம் கொண்டு –
கண்ணால் கண்டு அனுபவிக்க அசாதாராண திவ்ய தேசம் சந்ந்ஹிதனாகி-சௌலப்யம் சௌந்தர்யம்
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?—அனன்யார்ஹன் அநந்ய கதி -இன்னமும்
-உகந்து அருளின நிலங்களில் முகம் காட்டி -எத்தனை திவ்ய தேசங்களில் வாசல் தோறும் உழல்வேனோ -ஆட்பட்டவர்கள் -ஆர்த்தி வந்த பின்பும் —

புறத்தில் காணும்படி வாராமல் அருவாய் மனத்தின் கண் தோன்றிக் காட்சி அளிக்கின்றவனே! அழிதல் இல்லாத திருமேனியையுடையவனே!
ஆராவமுதம் போன்று அடியேனுடைய நெஞ்சுக்குள்ளே தித்திக்கின்றவனே! தீராத வினைகள் எல்லாம் தீரும்படியாக என்னை அடிமை கொண்டவனே!
திருக்குடந்தையாகிய திவ்விய தேசத்தையுடையவனே! உனக்கு அடிமைப்பட்டும் இன்னமும் இங்கே அடியேன் அலைந்து திரிவேனோ?

சரீரத்தையுடையவன். ஆவியகம் – ஆவியில்; அகம்: ஏழாம் வேற்றுமையுருபு. தீர ஆண்டாய் என்க. உழலுதல்- அலைந்து திரிதல்.

‘திருக்குடந்தையிலே புக, நம் மனோரதம் எல்லாம் சித்திக்கும்’ என்று செல்ல, நினைத்தபடி தாம் பெறாமையாலே,
இன்னமும் எத்தனை திருவாசல் தட்டித் திரியக் கடவேன் என்கிறார்.

வாராஅருவாய்-
வாராத அருவாய். என்றது, புறத்திலே கண்களாலே கண்டு அநுபவிக்கலாம்படி வாராத அரூபிப் பொருளாய் என்றபடி.
ரூபமுமுண்டு அரூபனும் உண்டு நம் சம்ப்ரதாயம் -அரூபமும் ஒரு வகை ரூபம் தானே -சர்வசக்தன்
அருவாய் வரும் என் மாயா –
மறந்து பிழைக்க ஒண்ணாதபடி அகவாயிலே அருவாய்க் கொண்டு பிரகாசிக்கின்ற ஆச்சரியத்தையுடையவனே!
‘அருவாய்’ என்ற பதத்தை இங்கேயும் கூட்டிக்கொள்வது.
அகவாயிலே அருவாய்க்கொண்டு’ என்றது, அரு என்று ஆத்மாவாய், அகவாயிலே தாரகனாய்க்கொண்டு என்றபடி.
மாயா மூர்த்தியாய் – நித்தியமான திவ்விய மங்கள விக்கிரஹத்தையுடையவனே! -அபஷய விநாசம் இல்லாத-
நித்ய திவ்ய சமஸ்தானம் -அப்ராக்ருதம் அன்றோ –
“அல்லாதாருடைய சரீரங்கள் முழுதும் பிறத்தல் இறத்தல்களை யுடையனவாயன்றோ இருப்பன.
ஆராவமுதாய்-
நிரதிசய இனியனாய்க்கொண்டு எனக்கு மறக்க ஒண்ணாதபடி இருக்கின்றவனே!
அடியேன் ஆவி யகமே தித்திப்பாய்
-என்றும் உனக்குச் சொத்தாகவுள்ள என் நெஞ்சினுள்ளே உன் இனிமையைத் தோற்றுவித்து அநுபவிப்பித்தவனே!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்-
அநுபவித்தே போகக் கூடியனவாய், உன்னை ஒழிய வேறு ஒருவரால் போக்க ஒண்ணாத,-ஈஸ்வர அனுக்ரக விநாசம் –
உன்னை அநுபவிப்பதற்குத் தடையாகவுள்ள கருமங்களைப் போக்குவித்து,
‘அடியேன் ஆவியகமே தித்திப்பாய்’ என்னும்படி புகுர நிறுத்தினவனே!
அன்றிக்கே, “பிணியும் ஒழிகின்றதில்லை பெருகுமிதுவல்லால்” என்கிறபடியே,
“தீர்ப்பாரை யாம் இனி” என்று திருவாய்மொழியில் கூறிய வினைகள் தொடக்கமானவற்றைப் போக்கி
என்னை அடிமை கொண்டாய் என்றுமாம்.
திருக்குடந்தை ஊராய் –
என்னை அடிமை கொள்ளுகைக்குத் திருக்குடந்தையிலே வந்து அண்மையில் இருப்பவனே! என்றது,
நான் கிட்டாத அம்சத்துக்கு நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி.
நீ இருக்கிற பரமபதத்தே நான் கிட்டவேண்டும்படியாயிருக்க, நான் இருக்கிற இடத்திலே நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி

ஒரு நத்தம் இல்லாதான் ஒருவனையோ நான் பற்றிற்று. இதனால், பரத்துவம் வியூகம் விபவம் என்னுமிவற்றைக்காட்டிலும்
இதற்கு உண்டான வேறுபாட்டினைத் தெரிவிக்கிறார்.
உனக்கு ஆட்பட்டும் –
சம்சாரிகளை அநுபவிப்பிக்க வந்து கிடக்கிற உனக்கு ஆட்பட்டும்.
அடியேன் –
யாருடைய வஸ்து இங்ஙனே அலமந்து திரிகிறது.
இன்னம் உழல்வேனோ-
என்னுடைய முயற்சிகள் எல்லாவற்றையும் உன் திருவடிகளிலே பொகட்டு, நீ செய்து தலைக்கட்டக் கடவையாக
நினைத்திருக்கிற நான், இன்னம் எத்தனை திருப்பதிகள் புக்குத் தட்டித் திரியக்கடவேன் என்கிறார்.

——————————————————————————-

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-

மௌக்த்யம் தீர்ந்து -அறியாமை தீர்ந்து -அப்யசிக்க வல்லார்கள் பகவதீயர்களுக்கு கம நீயர்கள் ஆவார் —
காமர்களுக்கு -மான் போன்ற அழகிய கண் -கொண்ட பெண்கள் போலே
முற்றுவமை -உபமானம் தருவித்து -தாவி வையம் கொண்ட தடம் தாமரை -போலே திருவடி தருவித்துக் கொள்ளுவது போலே
நித்ய சூரிகள் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் விரும்புவார்கள்
உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்-பூதனை -விரோதி நிரசன ஸ்வ பாவன் –
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்-உபாயமாக முன்பு பிரகாசிப்பித்த -அவையே –
ஆறு எனக்கு நின் பாதமே -தந்து ஒழிந்தான் -அதே கழல்கள் -என்பதால் அவையே என்கிறார்
அபிமத சித்திக்கு இவையே உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்-சப்த ஸ்வரத்துக்கும் உத்பாதியான -குழலைக் காட்டிலும் மிக்க இனிமை
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.-மௌக்த்யம் அறியாமை தீர -ஆந்தர பாவம் அநந்ய கதித்வம் அறிந்து
மானைப் போலே இருக்கும் திவ்ய மகிஷிகளுக்கு -அப்சரஸ் மதி முக மடந்தையர்
காமரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு த்ருஷ்டாந்தமாகவும் கொள்ளலாம்

உழலை கோத்தாற்போலே இருக்கின்ற எலும்புகளையுடைய பூதனையினது முலை வழியே அவளுடைய உயிரையும் உண்டவனான
கண்ணபிரானுடைய திருவடிகளையே உபாயமாகக் கொண்ட குருகூர்ச் சடகோபராலே வேய்ங்குழலின் இசையைக்காட்டிலும் இசை மிகும்படியாக
அருளிச் செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் இளமை தீரும்படி வல்லவர்கள்
மானைப் போன்ற பார்வையையுடைய பெண்களுக்கு மன்மதனைப் போன்றவரேயாவர்.
உழலை – தடைமரம், “பெண்ணெனும் உழலை பாயும் பெருவனப்புடைய நம்பி” என்பது, சிந். 713.
பேய்ச்சி – பூதனை.‘அவளை’ என்பது உருபு மயக்கம்.
‘குழலின்’ என்பதில், இன் என்பது, ஐந்தாம் வேற்றுமையுருபு; ஒப்புப்பொருளில் வந்தது.
உறழ்பொருவுமாம். ‘ஏய்’ என்பது, உவமை உருபு. நோக்கியர்க்குக் காமர் என்க.

இப்பத்தைப் பழுது அறக் கற்க வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகரைப்போலே
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனியர் ஆவர் என்கிறார்.

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான் –
உழலை -தடை மரம் -கோத்தாற்போலே இருக்கிற எலும்புகளையுடைய பூதனை முலைவழியே அவளுடைய உயிரை உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் –
விரோதிகளை அழிக்கின்ற ஸ்வபாவத்தையுடைய கண்ணபிரானது திருவடிகளையே,
விருப்பமில்லாதவைகள் நீங்குவதற்கும் விருப்பமுள்ளவைகளை அடைவதற்கும் உபாயம் என்று அறுதியிட்ட ஆழ்வார்.
விரோதிகளைப் போக்குவதும் அவனைத் தருவதும் திருவடிகளேயாம் என்பார் ‘அவையே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகிறார்
பலியாவிட்டாலும் தம்மடி விடாதவரே அன்றோ இவர்; ஆதலின், ‘கொண்ட’ என்கிறார்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் –

கருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து கட்டிநன் குடுத்த பீதக வாடை
அருங்கல வுருவின் ஆயர் பெருமான் அவனொரு வன் குழலூதின போது
மரங்கள் நின்றுமது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள்தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே.– பெரியாழ்வார் திருமொழி.

“இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும்வகை மணிவண்ணவோ என்று கூவுமால்”– திருவாய், 6, 5 : 9.

திருக்குழல் ஓசையிற்காட்டிலும் விஞ்சி, கேட்டார் நோவுபடும்படியாக இருக்கிற ஒப்பற்ற
ஆயிரம் திருவாய் மொழியில் இப்பத்தையும், மரங்கள் நின்று மதுதாரைகள் பாய்தல் அன்றோ அங்கு,
மரங்களும் இரங்கும் வகை இங்கு; இனி, நாம் இரங்குகிற இது தன்னேற்றமே அன்றோ இங்குத்தைக்கு;
ஆதலின், ‘குழலின் மலிய’ என்கிறது.
மழலை தீர வல்லார் –
இளமை தீர வல்லார். என்றது, ‘வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றிக்கே,
இவர் சொன்ன ஆற்றாமையோடே சொல்ல வல்லார் என்றபடி.
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்” என்பதே அன்றோ இவர் ஆற்றாமை.
மான் ஏய் நோக்கியர்க்குக் காமர் –
மானை ஏய்ந்த நோக்கையுடைய பெண்களுக்குக் காமுகரைப் போலே ஆவர். ஆவது என்? என்னில்,
“தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்றிருப்பன்” என்ற இவர் இது பலமாகச் சொல்லும் போது
மேற்கூறியதோடு முரண்பட்டதாம்; ‘ஆனால், சொல்லிற்றாயிற்று என்? என்றால்,
மேல் கொடிதான நரகம்” என்னா நிற்கச் செய்தேயும், விஷயத்தில் ஈடுபாடுடையவர்கள் அது பாராதே மேல் விழுமாறு போலே,
இது கற்றாரை எம்பெருமானும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மேல் விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள் என்றபடியாம்.
இங்ஙன் அன்றாகில் –விப்ரலம்பகர் -வஞ்சனை யுள்ளவர் வார்த்தையாமே அன்றோ.
இவர் பிராமாணிகர் அன்றிக்கே ஒழிவரே. பிரகரணத்துக்குத் தகுதியாக அன்றோ தலைக்கட்டி இருப்பதும்.
‘அவர்களுக்குப் போல்’ என்ற ஒரு தொடர் இங்குக் கண்டிலோமே! என்னில்,
முற்றுவமை என்ற ஒரு இலக்கணம் இருக்கிறபடி.
உவமை புக்க இடத்தே உபமேயமும் வரக்கடவது. “தாவி வையங்கொண்ட தடந் தாமரைகள்” என்னாநின்றதே அன்றோ.

——————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆஸ்வாச லப்த த்ருதினா
சஹா முனி அஷ்டமேன
மநஸா சமீபத்திய
ஸ்ரீ கும்ப கோணம் அப்ரதிம ஆபிரூப்யம்
ஆலோக்ய சாந்த்ய வாசக -பரிரம்பனாத -அப்ராப்தவான் –
மாதுர்யம் -கல்யாண குணம் கரைய உருக்கும்-

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஆராவமுதே நிஸ் சமுத் அம்ருத்யத்வாத்
ஸ்வ வச ஜநிதய்யா
அநந்ய பாவப் பிரதாதாநாத்
மர்யாதா அதீத கீர்த்த்யா
நளின நயன
நாயகத்வாத் ஸூ ரானாம்
சர்வ ஸ்ரேஷ்ட்யாதி யோகாத் –நிரதிசய தீப்தி
ச்ப்ருஹநீயமான திவ்ய விக்ரகம் திருமாலே –
அநீதர கதிதாதி ஆவஹ -ஆதி -இசைவித்து -அநந்ய பிரயோஜனத்வம் சங்க்ரஹம்
ஆசன்ன பாவாத்

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 48-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக -தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான் ———–48-

ஆராவமுதன் -ஆழ்வார் ஆதரித்த -என்று பிரித்தும் பொருள் உரைப்பார் உண்டு

—————————————————————————-
அவதாரிகை –
அகிஞ்சனராய்
ஆர்த்தியோடே பிரபத்தி பண்ணி இருக்கச் செய்தேயும்
ஆராவமுதாழ்வார்
இவர் நம்மாழ்வார் -என்று அபிமானித்து அபேஷிதம் செய்யாமையாலே
அலமந்து ஆர்த்தராய் அருளிச் செய்த
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்ரீவர மங்கை வாணன் திருவடிகளிலே சரண் புக்க விதத்திலும்
அங்கே தம் அபேஷிதம் கிடையாமையாலே
ஆஸ்ரித ரஷண தீஷிதனான சர்வேஸ்வரன் நம் கார்யம் செய்யாமை இல்லை –
எங்கே கார்யம் செய்ய நினைத்து இருக்கிறான் என்று தெரியாது
என்று திருக் குடந்தையிலே ஆராவமுதாழ்வார்
திருவடிகளிலே செல்லவே
நம் அபிமதம் சித்திக்கும் என்று மநோ ரதித்து சென்ற இடத்தில்
அவர் எழுந்து இருத்தல்
இருத்தல்
உலாவி அருளுதல்
இன் சொல்லுச் சொல்லுதல்
குளிர நோக்குதல்
அரவணைத்தல்
செய்து அருளக் காணாமையாலே
பிராட்டியும் அவனுமான சேர்த்தியும் யுண்டாய்
நமக்கு அபேஷையும் யுண்டாய் இருக்க
அபிமதம் பெறாது ஒழிவோமோ-என்று துடித்து
இவ்வளவிலும் திருவடிகளே உபாயம் என்னும் துணிவு
குலையாது ஒழியப் பெற்றோமே
என்று வருந்தி தரித்தாராய் தலைக் கட்டுகிற
ஆராவமுதத்தில் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்
ஆராவமுதாழ்வார் -என்று தொடங்கி -என்கை –

———————————————————————————-

வியாக்யானம்–

ஆராவமுதாழ்வார் –
சஹபத்ன்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -என்று ‘கூட்டித் தேடி அனுபவிக்கும் படி
நிரதிசய போக்யராய் –
ஸ்ரீ மான் ஸூக ஸூபத -என்னும்படி
ஏரார் கோலம் திகழக் கிடந்த ஆராவமுதாழ்வார் –

ஆதரித்த பேறுகளை -தாராமையாலே-
இவர் அபேஷித்த
புருஷார்த்தங்களை –
அதாவது –
கிடந்தாய் கண்டேன் -என்றும்
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே -என்றும்
காண வாராயே -என்றும்
அருளிச் செய்யும் இடங்களிலே
அபேஷிதம் ஆனததை-
குடந்தையுள் கிடந்த வாறு எழுந்து இருந்து -என்கிறபடியே
எழுந்து இருக்க வேணும் -என்றும்
குடந்தை திரு மாலான தேவர்
தாமரை மங்கையும் நீயும் -என்னும்படி
இருவரும் கூட இருந்து அருள வேணும் -என்றும்
தாமரைக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்றும்
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வர வேணும் -என்றும்
சில பரிமாற்றங்களை அபேஷிக்க
அப்போதே அது பெறாமையாலே –

தளர்ந்து மிக –
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவன் -என்னும்படி
அத்யவசன்னராய்-
தீராத ஆசையுடன் –
அபி நிவேசம் போவது அனுபவத்தாலே ஆகையாலே
அனுபவம் பேராமல் முடியாத வபி நிவேசத்தோடே –

ஆற்றாமை பேசி யலமந்தான் –
அதாவது –
அடியேன் உடலம் நீராய் யலைந்து கரைய உருக்குகின்ற -என்றும்
என்னான் செய்கேன் -என்றும்
உன்னைக் காண்பான் நான் அலப்பாய் -என்றும்
தூராக்குழி தூரத்து எனை எத்தனை நாள் அகன்றிருப்பன் -என்றும்
தரியேன் இனி -என்றும்
உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -என்றும்
பேசினவை என்கை –
இத்தசையிலும்
உன்தாள் பிடித்தே செலக் காணே -என்றும்
களை கண் மற்றிலேன் -என்றும்
இவர்க்கு அடியில் இப்படி அத்யாவசியம் இருக்கும்படி இது வாயிற்று –
மாசறு சீர் மாறன் எம்மான் –
இவ்வளவான தசையிலும்
உபாயாந்தரங்களில் கண் வைக்கை யாகிற மாசு இன்றிக்கே இருக்கிற
அத்யாவச்ய
ஞானாதி குணங்களை யுடையரான
ஆழ்வார் தம்மை அடைந்து
பிரபன்ன ஜனமான நமக்கு ஸ்வாமி-

அன்றிக்கே
ஆற்றாமை பேசி அலமந்தான் -என்று க்ரியை-

————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: