பகவத் விஷயம் காலஷேபம் -120- திருவாய்மொழி – -5-8-1….5-8-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

சிரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே வீழ்ந்து
வேறு கதி இல்லாதவராய்க் கொண்டு சரணம் புக்கார்;
இவர் அப்படிப் பெரிய ஆர்த்தியோடே சரணம் புகச் செய்தேயும் வந்து முகங்காட்டாதிருக்க;
கடலில் அமிழ்ந்துவார் அங்கே ஒரு மிதப்புப் பெற்றுத் தரிக்குமாறு போலே, “இவ்வளவிலும் ‘வேறு ஒன்றாலே பேறு’ என்றிருத்தல்,
மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல் என்னும் மயக்கத்தைத் தவிர்த்தானே அன்றோ” என்று கொண்டு தரித்தார்;
தரித்த இதுதான் திருக் குடந்தையளவும் கால்நடை தந்து போகைக்கு உடலாயிற்று.

“ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்றதனைக் கடாக்ஷித்து, ‘இவ்வளவிலும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
இங்கே, ‘வேறு ஒன்றாலே பேறு என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல்’ என்றிருக்கையாலே,
“ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்பதற்கு, மேல் அருளிச்செய்த மூன்று யோசனைகளையும் தவிர,
இன்னமும் ஒரு யோசனை உண்டு என்று தோற்றுகிறது. அதாவது,
எனக்கு உன் பாதமே உபாயமாகவும், ரக்ஷகமாகவும் தந்தாய் என்பது.
“நின் பாதமே ஆறாக” என்கையாலே வேறு ரக்ஷகங்களை நீக்குகிறது;
“நின் பாதமே சரணாக” என்கையாலே வேறு உபாயங்களை நீக்குகிறது;
ஆக, “ஆறு” என்றதனால், ஆகிஞ்சந்யமும், “சரண்” என்கையாலே, அநந்யகதித்வமும் போதரும்.
ஆகிஞ்சந்யமாவது, வேறு உபாயம் இன்மை. அநந்யகதித்வமாவது, வேறு இரக்ஷகரில்லாமை.

தரித்த இதுதான் திருக் குடந்தையளவும் கால்நடை தந்து போகைக்கு உடலாயிற்று.
என் தான்? இங்கு, தம் விருப்பம் கிட்டா தொழியவும் அங்கு ஏறப் போக வேண்டுவான் என்? என்னில்,
வஸ்து ஐக்கியம் உண்டே -பிரபத்தி ஒருதடவை தானே பண்ண வேண்டும் -விசுவாசம் குலையாதோ என்னில் –
‘ஒரு கால் சரணாகதி செய்தோம், அது பலித்தது இல்லை’ என்னா, நாஸ்திக புத்தியாலே விசுவாசம் குலைந்து ருசியும் நெகிழுமவரன்றே;
“அடியார்களுக்காக எழுந்தருளி யிருக்கிறவன் நம் காரியம் செய்து தலைக்கட்டாமை இல்லை,
‘இன்ன இடங்களிலே செய்யக் கடவோம்’ என்று அறுதி யிடப்பட்டதா யிருக்குமே அன்றோ,
ஆன பின்பு, இங்குச் செய்யப் பார்த்திலனாகில் மற்றோர் இடத்தில் செய்கிறான்;
-ஸ்ரீ ரெங்கம் போன்ற இடங்களில் சரண் அடைந்த கலியன் திருக் குருங்குடியிலே பேறு பெற்றாரே –
இனித்தான், ஸ்ரீபரதாழ்வான் ‘பெருமாளை மீட்டுக்கொண்டு வந்து திருமுடி சூட்ட வேண்டும்’ என்று பாரித்துக் கொண்டு செல்ல.
‘பதினான்கு ஆண்டும் கழித்தல்லது மீளோம்’ என்ற ஸ்வதந்திரனே அன்றோ;
ஆகையாலே, நமக்கு நான்கு நாள் தாழ்த்ததேயாகிலும் நம் காரியம் செய்யாமை இல்லை” என்று பார்த்து,
‘திருக் குடந்தையிலே சென்று புகவே நாம் விரும்பினவை அனைத்தும் கிட்டும், நமக்கு ஒரு குறையும் இல்லை’ என்று திருக்குடந்தையை அடைந்தார்.

அவ்வாறு அடைய, ஸ்ரீபரதாழ்வான் ‘இராச்சியத்துக்கு நிமித்தமானவனானேன்’ என்றதாலே ஒருபுண்பாடும்,
தாயைக்கொண்டு இராச்சியத்தை வாங்கிப் பெருமாளைக் காடேறப் போகவிட்டான்’ என்று நாட்டார் சீறுபாறு என்றிருப்பார்கள்”
என்றத்தாலே வந்ததொரு அச்சத்தையுமுடையவனாய்க்கொண்டு; நான் திருவடிகளிலே சென்று கிட்டினால்,
ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா
பிராது: ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்துமர்ஹஸி”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 101 : 12.
உடன் பிறந்தவன் அல்லனோ! சிஷ்யன் அல்லனோ! தாசன் அல்லனோ!
என்பக்கல் மலர்ந்த முகத்தராய்த் திரு அருள் செய்யாதொழிவரோ! என்று பார்த்து;
அம்பு எய்வார் படை திரட்டிக்கொண்டு போமாறு போல, திரு வயோத்தியிலுள்ளாரில் மரங்கள் அகப்பட ஆர்த்தியில்
தன்னில் குறைந்த பொருள்கள் இல்லை அன்றே, நம் ஆர்த்தி கண்டு மீண்டிலராகிலும் ஆர்த்தர் பலரையும் கண்டால்
மீளாமை இல்லை என்று பார்த்து “இந்த மந்திரிமார்களோடுங்கூட என்னால் தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட தேவரீர்,
பின் பிறந்தவனும் சிஷ்யனும் தாசனுமான அடியேனுக்குத் திருவருள செய்ய வேண்டும்” என்கிறபடியே,
இவன் செல்ல; பெருமாளும் “இராச்சிய தந்திரங்களில் குறைவு படாமல் நடத்தா நின்றாயே?
காரியங்கள் செய்யுமிடத்தில் மந்திரிகளோடு கூடிச் செய்யா நின்றாயே? என்பன போலே இவனுக்கு இடம் அற வார்த்தைகள் கேட்டாற்போலே;

இவர் அடைந்த இடத்தில் திருக்கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி யருளுதல்,
திருப்பவளத்தைத் திறந்து ஒரு வார்த்தை அருளிச்செய்தல், அணைத்தல் செய்யக் கண்டிலர்.
“அந்தக் கிருஷ்ணன், என்னை அக்ரூரனே! என்று அருளிச்செய்வர்” என்றாற்போலே
பகைவன் சோறு உண்டு வளர்ந்தவன் மனோ ரதம் பெற்றானே அன்றோ;
அப்படியே தம்மையும் கிட்ட வந்து அணைக்கப் பெறாமையாலே மிகவும் துக்கித்தவராய்,
இனிமையாலும் ஈடுபட்டு, அழகு முதலாயினவற்றாலும் போர நொந்து, பால் குடிக்கும் குழந்தை தாய் பக்கலிலே கிட்ட முகம் பெறாவிட்டால்
அலமந்து நோவு படுமாறு போலே, அவன் சந்நிதியிலே தளர்ந்து கிடந்து கூப்பிட்டு,
இன்னம் எத்தனைத் திருவாசல் தட்டித் திரியக்கடவேன் என்னும் ஆர்த்தியோடே தலைக்கட்டுகிறார்.

823- நாதமுனிகள் திருவவதாரம் -ஸ்ரீ கீதாச்சார்யன் தானே மனுவுக்கு அருளிச் செய்ததை மீண்டும் வெளியிட்டால் போலே அன்றோ –
திராவிட ஸ்ருதி தர்சகாய நம-திருநாமம் ஆராவமுத ஆழ்வாருக்கு -அகதிகளுக்கு ஒரே சரண் அன்றோ இவன் –
மகர சங்கராந்தி– பொற்றாமரை -திருக்கல்யாணம் -ஆராவமுத ஆழ்வார் -திரு மழிசை பிரான்

————————————————————————————————————–

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

உன்னுடைய நிருபாதிக சம்பந்தம் அடியாக –நிரதிசய போக்யமான -அழகில் ஈடுபட்டு —சிதிலம் ஆக்கும் படி பண்ணி –
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே–நிரந்தரம் அனுபவம் செய்தாலும் குறைடாத திகட்டாத –
போக்யதைக்கு தோற்று அடிமை புகுந்த -சரீரம் -அன்பு தானே தனக்கு வேஷமாகக் கொண்டு –
பகவத் ஸ்வரூப திரோதானமான சரீரமே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!-அந்த அன்பு உருகி ஜலமயமாம் படி -ஆஸ்ரயம் தெரியாதபடி -அபரிச்சின்ன
போக்யதா வ்யாமோஹம் உடையவன் கிடந்தவாறு எழுந்து இருந்து பேசின கேசவன் அன்றோ –
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை-கனத்தாலே -விஞ்சின செந்நெல் கதிர்கள் -கவெரி வீசும் -அதுக்கு அடியான நீர் வாய்ப்பு -திருக் குடந்தையில்
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே-அழகு வளர்ந்து –கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -என்னாமல்-கண்டதுடன் சரி –
உச்சி முகர்ந்து -தழுவி -நினைத்த படி பரிமாற்றம் பண்ண வில்லையே

எம்மானே! தெவிட்டாத அமுதே! அடியேனுடைய சரீரமானது, உன் விஷயத்தில் அன்புதானே தனக்கு உருவமாகிப் பின்பு தண்ணீராகி
ஒரு நிலையில் நில்லாமல் கரையும்படி உருக்குகின்ற நெடுமாலே! சிறப்புப் பொருந்திய செந்நெற்பயிர்கள் சாமரையைப் போன்று
வீசுகின்ற செழுமை பொருந்திய நீரையுடைய திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் அழகு பொருந்திய ஒப்பனையானது
விளங்கும்படியாகச் சயனித்திருக்கின்றவனே! என் கண்களாலே கண்டு அநுபவிக்கப் பெற்றேன் என்கிறார்.
உடலமானது அன்பாகி நீராகி அலைந்து கரையும்படியாக உருக்குகின்ற நெடுமாலே என்க. வீசும் திருக்குடந்தை என்க.
இத்திருவாய்மொழி, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

உன் அழகாலே என்னை உருக்குகின்ற நீ கண்வளர்ந்தருளக் கண்டேன்;
குளிரநோக்குதல், அணைத்தருளுதல், செய்யக் காண்கின்றிலேன் என்கிறார்.

ஆரா அமுதே-
அநுபவியாநின்றாலும் கிரமப்பிராப்தி பற்றாத விஷயத்தைப் பிரிந்தார் எங்ஙனே ஆறி இருக்கும்படி.
என்றது, முற்படக் காட்சியாய், அதன் பின்னர் அணுகி, பின்னர் ஸ்பரிசமாய், இப்படியே அன்றோ அநுபவப் பிரகாரங்கள் இருக்கின்றன;
அத்துணைக் கிரமங்களைப் பார்த்திருக்க ஒண்ணாதபடி இருக்கையைத் தெரிவித்தபடி.
ஆரா அமுதே –
கடலில் உப்புச்சாறு குடிப்பார்க்குத் தேவயோனியிலே பிறக்கவேணும், பிரஹ்மசரியம் அநுஷ்டிக்க வேணும்,
இத்தனையும் இருந்தால் ஒரு தடவை உண்ணக் கூடியதாக இருக்கும்;
இது அங்ஙன் அன்றிக்கே, சர்வாதிகாரமுமாய், எப்பொழுதும் உண்ணக்கூடியதாய், பிரஹ்மசரியம் முதலான வற்றினின்றும்
நழுவுதலால் வரும் குற்றங்களையும் தானே போக்கக் கூடியதாயிருக்கும்.
வடதேசத்திலே லோக சாரங்க மஹாமுனிகள் வசித்துக்கொண்டிருக்க, இங்கேயுள்ள ஒருவன் அங்கு ஏறச்செல்ல,
‘பிள்ளாய்! தென்தேசத்தில் விசேஷம் என்?’ என்று கேட்க, ‘திருவாய்மொழி என்ற ஒரு பிரபந்தம் அவதரிக்க,
அதனைச் சிஷ்டர்கள் மேற்கொண்டு போரக் கொண்டாடிக் கொடு போகா நின்றார்கள்’ என்ன,
‘அதிலே உனக்குப் போவது ஒரு பாசுரத்தைச் சொல்லிக் காணாய்’ என்ன,‘“ஆராவமுதே’” என்கிற இத்துணையே எனக்கும் போம்” என்ன,
‘நாராயணன் முதலான நாமங்கள் கிடக்க, இங்ஙனேயும் ஒரு பெயர் உண்டாவதே’ என்று அதனைக் காண மிக்க ஆவலுடையவராய்,
‘இச்சொல் நடையாடுகிற தேசத்து ஏறப்போவோம்’ என்று அப்பொழுதே புறப்பட்டுப் போந்தார்.

ஆராஅமுதே –
“கதே புரோஹிதே ராம: ஸ்நாத: நியத்மானஸ: ஸஹபத்நியா விஸாலாக்ஷ்யா நாராயணம் உபாகமத்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 1.
“ஸஹபத்நியா –
பத்திநியோடு கூட” ஆழங்காலிலே இழிவார் ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு
இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக் கைப்பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே,
பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக்கூடக் கொண்டாயிற்று இழிவது.
“விசாலாக்ஷ்யா –
பரந்த கண்களையுடையவளோடு” இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கல் உண்டான பிரேமத்தின் மிகுதியைக் கண்டு,
தன்னை அணைக்கும் போதையிற் காட்டிலும் உடம்பு முழுதும் கண்களானபடி.
“நாராயணம் உபாகமத் –
நாராயணனை அடைந்தார்”
இவர் நியதி -ஜிதேந்த்ரியத்வம் -இருக்கிறபடி. இக்கண்களுக்கு இலக்காய் ஆழங்காற்படாதே அவ்வருகுபட்டார்.
இதனால் என் சொல்லியவாறோ? எனின், தான் தன்னை அநுபவிக்கும்போதும் கூட்டுத் தேடவேண்டும்படியாயிற்று
ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம்.
ஆரா அமுதே –
இத்திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான ஆற்றாமைக்கெல்லாம் வித்து இச்சொல்லே ஆயிற்று.
அடியேன் –
மயர்வு அற மதிநலம் அருளப் பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர், இனிமைக்குத் தோற்றுப் புற்கவ்விச் சொல்லுகிறார்.
தோல்விக்கு -சூ சகம் -புல் கவ்விச் சொல்கிறார்
ஸ்வரூப பிரயுக்தம் -கூடுமோ என்ன -இளைய பெருமாள் சொன்னது போலே -குணங்கள் தானே ஈர்க்கும்
“பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே ஸ்வயந்து ருசிரே தேஸே க்ரியதாமிதி மாம் வத”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.
அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத: கிருதஞ்ஜஸ்ய பஹுஞ்ஜஸ்ய லக்ஷ்மணோ நாமநாமத:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 12.
“பரவாநஸ்மி – அடியவன் ஆகிறேன்” என்றவர் “அவர் குணங்களால் கைங்கர்யம் செய்துகொண்டிருக்கிறேன்” என்றாற்போலே.

உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைய உருக்குகின்ற நெடுமாலே –
சேஷத்வம் ஆத்மாவுக்கு ஸ்வரூபமானால் சரீரம் அதற்கு விரோதியாய் நிற்கும் நிலை குலைந்தது.
‘நான்’ என்று இருக்கக்கூடிய இவர்தாம் ‘அடியேன்’ என்கிறது, விஷயத்தினுடைய இனிமையின் மிகுதியே அன்றோ;
அப்படியே சரீரமும் விஷயத்திற்கு வசப்பட்டதாய் அழிந்தபடி. சேஷத்வமே உருவமான ஆத்மாவைத் தன்வழியே இழுக்கை தவிர்ந்து
அதன் வழியே தான் ஒழுகும்படியாயிற்று விஷயத்தினுடைய இனிமை. -ஞானியை விக்ரகத்துடன் ஆராதிக்கும் -திருமேனி ஆத்மா தத்வம் ஆனதே –
அன்றிக்கே, ஞான ஆனந்த ஸ்வரூபனான ஆத்மாவாதல், அதற்குத் தோள் தீண்டியான ஞானம் செல்லுதற்கு வழியான மனமாதல் அன்றிக்கே
இவற்றுக்கு அவ்வருகான தோல் சதை நிணம் எலும்பு வடிவமான சரீரமும் அழியும்படியாயிற்று என்னுதல்.
சேதனம் என்றும் அசேதனம் என்றும் கூறப்படுகின்ற வேற்றுமை அற அழிக்கவல்ல உன் பக்கலிலே அன்புக்கு இருப்பிடமாகை
தவிர்ந்து அன்புதான் ஒரு வடிவு கொண்டாற்போலே இரா நின்றது என்பார் ‘நின்பால் அன்பாயே’ என்கிறார்.-கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் அன்றோ
உடலம் அன்பாய், அன்பு தான் நீராய்க் கொண்டு அலையாநின்றது என்பார் ‘உடலம் அன்பாய் நீராய் அலைந்து’ என்கிறார்.
முதல் முன்னம் கேள்வியாய், அதன் பின் மனனமாய், பின்னை பாவனையாய், அது பிரத்யக்ஷ ஸமாநாகாரமாய்க் கொண்டு
அவ்வடைவிலே வருகிறதன்றே, விஷயம்-ஆராவமுத ஆழ்வார் – அழிக்க அழிகிறதித்தனை அன்றோ.
நீர் தன்பக்கலிலே அகப்பட்டதனைக் கரைத்துத் தான் கரையாதிருக்குமாயிற்று;
இங்கு அங்ஙன் அன்று, நீர்தானாயிற்றுக் கரைகிறது என்பார் ‘நீராய் அலைந்து கரைய’ என்கிறார்.
அன்பு நீரானால், நீர் தான் கரையத் தட்டு இல்லையே. இத்தனை அளவு இது ஆனால், அத்தலை செய்கிறது என்? என்னில்,
‘உருக்குகின்ற’
என்கிறார்; என்றது, அழிக்கைக்கு அடி இட்ட இத்தனையாயிற்று என்கிறார் என்றபடி.
அழிக்கிறவன் ‘ஆபரணங்கள்’ என்று பாராதே உருக்கி அழிக்குமாறு போலே காணும் இவனும் உருக்கி அழிக்கிறபடி.
தேசமான அணிகலனும் இவர் கைகூப்புச் செய்கையே அன்றோ.
பூசுஞ் சாந்தென் னெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய வாசகஞ் செய் மாலையே வான் பட்டாடையு மஃதே
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே ஈசன் ஞால முண்டு மிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.-என்பது, திருவாய். 4. 3 : 2.
ஆழ்வார்க்கு உள்ள உடலை உருக்கி அழிக்குமித்தனையேயோ? இவன் தனக்கு ஓர் அழிவில்லையோ? எனின்,
‘நெடுமாலே’
என்கிறார். என்றது, எதிர்த்தலையில் அழிவுகண்ட பின்பே அன்றோ இத்தலையில் அழிவு என்றபடி.
அவனுடைய வியாமோகத்தைப் பார்த்தால் இது ஒன்றும் போராதபடியாயிருக்கும்.
அவனுடைய அழிவு சொல்லும்போது இனி இவ்வடைவில் சொற்களைக் கொண்டு சொல்ல ஒண்ணாது.
‘நெடுமால்’ என்னில் என்னுமித்தனை. மால் – வியாமோகம். நெடுமால் – மிக்க வியாமோகத்தையுடையவனாயிருக்கை.
அன்றிக்கே, மால் என்று பெரியோன் என்றபடியாய், அதுதானும் பிரமன் சிவன் முதலானவர்கள் அளவோ? என்னில்,
அன்று, நெடுமால் – மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் என்கிறது என்னுதல்-சர்வேச்வரன் என்றபடி.
அவனுடைய பெருமையும் இவரை அழிக்கைக்குக் காரணமாம் இத்தனை அன்றோ.-பரத்வமும் நீர்மையும் உருக வைக்கிறது -என்றவாறு
ருக்மிணி பிராட்டி சந்தேசம் -ஆண்டாள் 26 பாசுரம் -மாலே –என்னில் முன்னம் பாரித்து தான் முற்றப் பருகினான் –

ஆருயி ரேயோ! அகலிட முழுதும் படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்த
பேருயி ரேயோ! பெரியநீர் படைத்து அங் குறைந்தது கடைந்தடைத் துடைத்த
சீருயி ரேயோ! மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ!
ஓருயி ரேயோ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்குவந் துறுகோ.-என்பது, திருவாய். 8. 4 : 5.;

சீர் ஆல் செந்நெல் கவரி வீசும் –
மிக்க கனத்தையுடைத்தான செந்நெற் கதிர்களானவை திருக்கண் வளர்ந்தருளுகிற அழகைக் கண்டு
கைங்கர்யம் செய்வாரைப்போலே அசையாநிற்கும். சீர் – கனமும், அழகும். ‘கவரி வீசும்’ என்றது, கவி போலே வீச என்றபடி. கவரி – சாமரை.
அன்றிக்கே, ஆராவமுதாழ்வாருக்கு அமுதுபடியாகிற சீர்மையையுடையதாதலின் ‘சீரார் செந்நெல்’ என்கிறார் என்னுதல்
அப்போது “நான் சர்வேச்வரனுக்கு போக்யன்” என்கிற சீர்மை.
“மரங்கள் எல்லாம் காலம் அல்லாத காலத்திலும் பயன் அளிக்கக் கடவன” என்னுமாறு போலே,
எம்பொழுதும் செந்நெற்கள் உள்ளன என்பார் ‘வீசும்’ என நிகழ் காலத்தாற் கூறுகிறார்.என்றது,
அறுத்து நடவேண்டா போலே காணும் இருப்பது என்றபடி.
கருத்து அறிந்து அடிமை செய்வாரைப் போலே. அன்றிக்கே, சேஷ வஸ்துக்களின் தொழில்கள் முழுதினையும் சேஷி தனக்கு
அடிமையாக நினைத்திருக்கிறபடியால் ‘கவரி வீசும்’ என்கிறார் என்னுதல்.
செழு நீர்த் திருக்குடந்தை –
திருக்கண் வளர்ந்தருளுகிற சௌகுமார்யத்துக்குப் போரும்படி அழகிதான தண்ணீர் நிறைந்திருக்கின்ற திருக்குடந்தையிலே.
செழுநீர் –
பெருநீர் என்றுமாம்.
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் –
அழகு சமைந்த ஒப்பனை நிறம் பெறும்படி திருக்கண் வளர்ந்தருளுகின்றாய்.
நாட்டார் உலாவித் திரியும்போது அவயவங்களிலுண்டான பொல்லாங்குகள் மறைந்து ஒன்று போல இருக்கும்,
ஓர் இடத்தில் இருத்தல் கிடத்தல் செய்தவாறே அழகற்ற தன்மை தோற்றிக் கண் கொண்டு பார்க்க ஒண்ணாதபடி இருப்பர்;
இங்கு அங்ஙன் அன்றிக்கே, பகைவர்களைத் தபிக்கச் செய்கின்ற ஸ்ரீராமனான அந்தப் பெருமாள் என்னால் உறக்கத்தினின்றும் உணர்த்தப்பட்டார்” என்கிறபடியே,

வாயஸேந தத: தேந பலவத்க்லிச்யமாநயா ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 24.
திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது. சுலோகத்திலுள்ள “ஸ்ரீமாந்” என்ற சொல்லுக்கு, பாவம், ‘இவன் உணரில்’ என்று தொடங்கும் வாக்கியம்.

கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருத்தலின் ‘ஏரார் கோலம் திகழ’ என்கிறார்.
‘இவன் உணரில் செய்வது என்’ என்றுவயிறு பிடிக்க வேண்டி இருக்கை.
கிடந்தாய் கண்டேன் –
“சுகமாகத் தூங்குகிறவன்” என்கிறபடியே, கிடை அழகினைக் கண்களாலே காணப்பெற்றேன்,
நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன். என்றது, எழுந்திருத்தல், இருத்தல், உலாவுதல், ‘என் செய்தாய்’ என்று வினவுதல்,
அணைத்தல் செய்யப் பெற்றிலேன் என்றபடி.
எம்மானே-
இது நம்மது’ என்று இரா தொழியப் பெற்றேனாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே. என்றது,
சம்பந்தத்தைக் கொண்டு என்னை இப்படி நலியலாமோ என்கிறார் என்றபடி.
அன்றிக்கே, வடிவினைப் போன்றே சம்பந்தமும் என்னை நலியாநின்றது என்கிறார் என்னுதல்.

————————————————————————————————-

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2-

ஆஸ்ரித அர்த்தமாக அநேக அவதாரங்களை -எம்மா உருவும் -செய்து அருளின நீ –
எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே-என் கார்யம் நீ இட்ட வழக்கு -என் ஸ்வாமி -எனக்கு சத்வ உத்தோரம் பிறக்கும் படி –
மற்ற தேவதைகள் ரஜஸ் தமஸ் கலந்தே இருக்குமே -பரிசுத்த ஸ்வரூபம் ரூபம் குணம் -காட்டி என்னை அனுபவிப்பித்துக் கொண்டு
சத்தையை இத்தாலே இருத்தி -ஆள் படுத்திக் கொண்டு
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!-தேவாதி எல்லா வகைகளிலும் -ஏ-எல்லா சுட்டி சுருக்கம் -குப்ஜா மரமாகவும் உண்டே -மா ஸ்லாக்கியம் –
இச்சா பிரகாரமாக அபிமத ஆசைப்பட்ட -அவ்வோ விக்ரகங்களில் அழகால் பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணாம் -பண்ணி
செறுக்கு-காளை போலே -அழகுடன் சேர்ந்து
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் -சிவந்து பருத்த -எங்கும் ஒக்க மலரும் -திவ்ய தேச அழகு
திருக் குடந்தை-அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?-அந்த விலஷண தாமரைப் பூ போலே
எங்கும் தாமரை -கர்ப்ப க்ருஹத்திலும் தாமரை -கண்கள்
வளரும்படி -நல்ல – நித்தரை -கண்கள் வளர்ந்து அனைவரையும் கொள்ள என்றுமாம்
அபிமான துங்கன் செல்வன் -அபிமான பங்கம் -அழகிய பெரிய மலர் -அம் மா -என்றுமாம் –

எம்மானே! பரிசுத்தமான சொரூபத்தையுடையவனே! என்னை ஆள்கின்றவனே! எத்தகைய பெருமை பொருந்திய உருவங்களையும்
விரும்பும் வகையிலே மேற்கொள்கின்றவனே! அழகிய ஏறே! சிவந்த பெரிய தாமரை மலர்கள் செழுமை பொருந்திய தண்ணீர்
மேலே கண்கள் போன்று மலர்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் அந்த அழகிய தாமரை போன்ற
திருக்கண்களை மூடிக்கொண்டு உறங்குகின்றானே! நான் என் செய்வேன்? என்கிறார்.
மூர்த்தி – ஸ்வபாவம், வடிவுமாம்; ஏறு – இடபம். மிசைக்கண் என்றவிடத்தில் ‘கண்’ இடமுமாம். ‘வளர்கின்றானே’ என்பது,
கண்களைத் திறந்து என்னை வினவுதல் செய்யாது உறங்குகின்றானே, என் செய்வேன்! என்கிறார் என்றபடி

இப்படிக் கூப்பிடச் செய்தேயும் மறுமாற்றம் தாராமையாலே, ‘உம்முடைய கார்யம் நீரே செய்யுமித்தனை அன்றோ’
என்று இருந்தானாகக் கொண்டு முன்பு செய்த உபகாரங்களைக் கூப்பிடுகிறார்.

எம்மானே! என் நான் செய்கேன் –
உடைமையோ! உடையவனோ உடைமையை நிர்வஹிப்பார்.
‘நீயே உன் காரியத்தைச் செய்து தலைக்கட்டிக்கொள்’ என்கைக்கு வெறும் நானேயாய் இருந்தேனோ.
என் நாதனே! எம்மானே என் வெள்ளைமூர்த்தி –
“உலகத்திற்கெல்லாம் தலைவன்”, “அந்தச் சர்வேச்வரனுக்கு அடியவனாய் இருக்கிறேன்”
“பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவம் அச்யுதம்.” “யஸ்ய அஸ்மி தம் நாந்தரேமி.” என்கிற பிரமாணங்கொண்டு அறிந்தேனோ.
பின்னர் எங்ஙனே செய்தபடி? என்னில், சுத்த ஸ்வரூபனாகையாலே தன் படிகளில் ஒன்றும் குறையாதபடி
எனக்குத் தன் பேறாகத் தானே காட்டக் கண்டேன்.- சிறிது மயர்வு கிடக்க நீ அருளினாயாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே.-

சாத்விகி -பலராமன் இடம் -நாதன் உள்ளவர்கள் லோகே -தி -தங்கள் செயலில் தாங்கள் ஈடுபட மாட்டார்கள் -நாதர்கள் செய்வார்கள் –
-பாண்டர்வகளுக்காக கிருஷ்ணன் தான் செய்ய வேண்டும் –யயாதி பெண் பிள்ளைகள் –சைப்யன் போல்வார் -தங்கள் ஸூ ஹுருதங்கள்
கொடுத்து மீண்டும் ஸ்வர்க்கம் ஏற்றினார்கள் போலே என்றான் -ஸ்வா தந்த்ரம் லேசமும் இல்லை என்பதால் சாதனம் செய்ய பிராப்தனும் இல்லையே

என்னை ஆள்வானே –
காட்டுகிறபோது தெரியக் காட்டி, பின்னர் என் வழியே யாக்கி என்னைக் கைவிட்டாயோ. என்றது,
“அஞ்சிறைமடநாராய்”, “மாசறு சோதி” தொடக்கமான திருவாய்மொழிகளிலுண்டான வியசனங்களையும் போக்கி,
குண ஞானத்தாலே தம்மைத் தரிப்பித்துக்கொண்டு போந்த படியைத் தெரிவித்தபடி.
எம் மா உருவும் ஆவாய் –
எனக்காகவும் அடியார்கட்காகவும் நீ படும்பாடு அறிவுதியே.
அன்றிக்கே, ‘எ மா உருவும் ஆவாய்’ என்று கொண்டு, எவ்வகையாலும் விலக்ஷணமான விக்கிரஹங்களை மேற்கொள்ளுகின்றவனே! என்னுதல்.
என்றது, “என்னுடையதான ஸ்வபாவத்தை ஏற்றுக்கொண்டு” என்கிறபடியே,
அவதார விக்ரஹங்களுக்கு வைலக்ஷண்யம் உண்டோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘என்னுடையதான’ என்று தொடங்கி.
“அஜோபிஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந் ப்ரகிருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”- என்பது, ஸ்ரீ கீதை, 4 : 6.
பிரகிருதி சம்பந்தமில்லாத தெய்வத்தன்மை பொருந்திய -அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம்-திருமேனியாக இருக்கை.

அஜகா அபிசன் – -பிறவாமை பெருமை விட்டுக் கொடுக்காமல் பிறக்கிறான் /தேயாமை இல்லாமல்
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம் -அவன் திருமேனி -பஞ்ச சக்தி மயம் -வெள்ளை மூர்த்தி /பிரக்ருதிம் ஸ்வாம்
-பெருமை குறையாமல் -/இச்சையால் பிறக்கிறேன் -மித்யா அத்வைதிகள்-

வேண்டுமாற்றால் –
“தனக்கு வேண்டு உருக்கொண்டு” என்கிறபடியே, இச்சையாலே என்னுதல்.
அடியார்கள் வேண்டுமாற்றால் என்னுதல்;
“தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே” -முதல் திருவந். 44.-என்னக்கடவதன்றோ.
அன்றிக்கே, ‘எ மா உருவும் ஆவாய்’ என்று கொண்டு “எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்கிறபடியே,
அடியார்களைக் காக்கும்பொருட்டு நீ கொள்ளாத வடிவு உண்டோ என்னுதல்.
எல்லா வடிவங்களும் அவன் கொண்டவையாகையாலே சிலாக்கியமாயிருக்கிறபடி;
ஆதலால், “மா உரு” என்கிறது. என்றது, –ஆவிர்பூதம்-தோன்றுதல்” என்கிறபடியே,
தத : அகில ஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநா தேவகீ பூர்வசந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 2.
பிரகிருதி சம்பந்தம் இல்லாத தெய்வத் திருமேனியை இதர சஜாதீயமாக்குமித்தனை என்றபடி.
“பகவானுடைய மகத்தான அந்தத் திவ்ய மங்கள விக்கிரஹமானது வேறுபட்டது” என்னுமித்தனை அன்றோ.
“ஸமஸ்தா: ஸக்தய: ச ஏதா: ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா: தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபம் அந்யத் ஹரே: மஹத்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 70
இது, அவனுடைய விக்ரஹம் அப்ராக்ருதம் என்பதற்குப் பிரமாணம். ‘வேறுபட்டது’ என்றது, அப்ராக்ருதமாயிருக்கும் என்றபடி.
கர்மம் அடியாக இவன் பிறக்குமாறு போலே அன்றோ அநுக்கிரஹம் அடியாக அவன் பிறக்கும்படி என்பார் “வேண்டுமாற்றால் ஆவாய்” என்கிறார்.
இருவர்க்கும் பிறவி ஒக்கும். இவனுக்குக் கர்மங்கள் அழியப் பிறவி நீங்கும்,
இவன் கர்மங்கள் அவன் காலிலே குனியப் போம்; அவனுக்கு நித்தியமாகச் செல்லா நிற்கும்.
இனி, அவனுக்குக் கர்மம் என்னப் பார்க்கிறது, அநுக்கிரஹத்தை அன்றோ, அதுதானும் நித்தியமே அன்றோ அவனுக்கு.
இவனுக்கு இவன் தன் அளவிலே பிறக்க அமையும், அவனுக்கு எல்லார்க்குமாகப் பிறக்க வேணுமே.
இவனுக்குக் கர்மங்காரணமாக வந்ததாகையாலே தன் பொருட்டேயாயிருக்கும், அவனுக்கு அநுக்கிரஹம் காரணமாக வந்ததாகையாலே பிறர் பொருட்டேயாயிருக்கும். “அருச்சுனா! உன்னுடைய பிறவிகளைப் போலவே என்னுடைய பல பிறவிகளும் கழிந்து போயின” என்றான் அன்றோ.
“பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி தவச அர்ஜு ந தாந்யஹம் வேத ஸர்வாணி நத்வம் வேத்த பரந்தப”- என்பது, ஸ்ரீகீதை, 4 : 5.
“தவச – உனக்கும்” என்கிறது, உன்னுடைய பிறவி மெய்யாய் இருக்குமாறு போன்று, என்னுடைய பிறவி ஐந்திர ஜாலிகம் அன்று காண் என்பதற்கு.
இப்படி இராத அன்று இவனுக்கு மார்விலே கையை வைத்து உறங்க ஒண்ணாதே.
இப்படி இராத அன்று’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து,-அவதாரங்கள் உண்மை யல்லவானால், அவ்வவதாரங்களில் சொல்லப்பட்ட
“ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம”- என்பது போன்ற சுலோகங்களும் உண்மை யல்லவாம்
ஆகையாலே, அவ்வார்த்தைகளை நம்பிப் பயம் அற்றவனாயிருக்கக் கூடாதே என்பதாம்.
அன்றிக்கே, இப்படி, அவன் அனுக்ரஹத்தாலே அவதாரங்களைச் செய்யாதபோது, இவனுக்கு ‘அவனே ரக்ஷகன்’ என்று
நம்பிப் பயமற்றவனாயிருக்க விரகு இல்லையே என்னுதல்.

எழில் ஏறே –
இப்படி அடியார்கட்காகப் பிறவாநின்றால் பழைய புகரில் குறைந்து வருமோ? என்னில்,
பண்டு இல்லாத எழிலும் உண்டாயிருக்கை.
கர்மத்தால் பிறக்கில் அன்றோ நிறக்கேடாவது. பல பிறப்பாய் ஒளி வரும் முழுநலமே அன்றோ.
“அவதரித்த பின்பு அந்தப் பரமாத்மா மிகுந்த ஒளியையுடையவனாகிறான்” என்பது சுருதி.
எல்லார்க்கும் பிறக்கப் பிறக்கப் புகர் அழிந்து வரும், இவன் ஒருவனுக்கும் பிறவா நின்றால் புகர் உண்டாகா நிற்கும்.
தேசம் அறியப் புகர் உண்டாய் நெஞ்சு வெறுத்திருக்குமோ? என்னில்,
பட்டி மேய்ந்த ஓர் காரேறு – என்கிறபடியே, ‘பிறக்கப் பெற்றோம்’ என்னும் மேனாணிப்பை யுடையவனாயிருக்கும்.
“வானிளவரசு” என்கிறபடியே, பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 3. “வானிளவரசு’ என்பதற்குப் பொருள்,
முதியோர்களான அமைச்சர்களின்கீழே இளவரசன் இருப்பது போன்று, நித்தியசூரிகள் தங்கியிருக்கின்ற பரமபதத்தில் இளவரசாக உள்ளவன் என்பதாம்
அகம்படி வைத்த அரசாய் இருக்கும் அங்கு, அச்செறுப்புத் தீர, தான் விரும்பினபடி சஞ்சரிக்கப்போந்த இடமே அன்றோ இது.
ஆகையாலே, அங்கு நின்றும் போந்து பிறந்த பின்பாயிற்று ‘எழில் ஏறு’ ஆயிற்று.
அடி அறிவார், தேவரீர், பிராட்டியோடு கூடியவரும் சக்கரத்தைத் தரித்தவரும் எங்கும் நிறைந்திருப்பவருமான நாராயணன் என்னும் தெய்வம் ஆவீர்;
தேவரீர் ஒற்றைக் கொம்புள்ள வராக அவதாரம் செய்தவர், சென்றவர்களும் வருகின்றவர்களுமான பகைவர்களை அழித்தவர்” என்றால்,
அது பொறாதவனாய்
“பவாந் நாராயணோ தேவ: ஸ்ரீமாந் சக்ராயுதோ விபு: ஏக ஸ்ருங்கோ வராஹ: த்வம் பூத பவ்ய ஸபத்நஜித்”
என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 13. ஸ்ரீராமபிரானைப் பார்த்துப் பிரமன் துதித்தது.
“என்னை மனிதனாகவும் இராமன் என்கிற பெயரையுடையவனாகவும் தசரத சக்கரவர்த்திக்குப் புத்திரனாகவும் எண்ணுகிறேன்” என்றும்,
ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் யோஹம் யஸ்ய யதஸ்சாஹம் பகவாந் தத் ப்ரவீது மே” என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 11.
“நான் தேவனும் அலன், கந்தருவனும் அலன், இயக்கனும் அலன், அசுரனும்அலன், நான் உங்களுக்கு உறவினனாகத் தோன்றி இருக்கிறேன்” என்றும்
சூழ்த்துக் கொடுக்கும்படி அன்றோ அவதாரத்தில் மெய்ப்பாடு இருக்கும்படி.

செம் மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக்குடந்தை அம் மா மலர்க்கண் வளர்கின்றானே –
அவதாரகாலத்தில் உதவாதார்க்கும் இழக்க வேண்டாதபடி அன்றோ கோயில்களிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறது.
கோயில்களிலே’ என்ற இவ்விடத்தில்
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத் தணையரங்கம் பேரன்பில் –
நாகத் தணைப்பாற் கடல்கிடக்கும் ஆதி நெடுமால் அணைப்பார் கருத்தனாவான்.-நான்முகன் திருவந்தாதி என்ற திருப்பாசுரம் அநுசந்தேயம்.
பரிமளம் முகத்தே வந்து அலை எறிய அதுதானே துடை குத்தக் கிடந்து உறங்குகிறபடி.
அன்றிக்கே, –சிவந்த பெரிய தாமரைகளானவை, காட்சிக்கு இனியதான நீரை அமுக்கி மேலே அலருகிறபோது,
கடல்நிறமான வடிவையும் அங்குத்தை அவயவங்களையும் காட்டாநின்றன ஆதலின் ‘செம் மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும்’ என்கிறார் என்னுதல்
அரைக்கணத்திலே செவ்வி மாறுகிற தாமரை அங்குத்தைக்கு ஒப்பாகாதே அன்றோ, வருந்திச் சொல்லும்போதும் இத்தனை
ஏறிட்டுச் சொல்ல வேணுங்காணும் என்பார் ‘செம்மா கமலம்’ என்கிறார்.
அழகிய தாமரைப்பூப் போலே இருக்கிற திருக்கண்கள் அலரக் காண்கின்றிலேன் என்பார் ‘அம் மா மலர்க்கண் வளர்கின்றானே’ என்கிறார்.
நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யக்ஷோ நச தாநவ: அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதச் சிந்த்ய மதோந்யதா”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 12.
இது கோவர்த்தந கிரியை எடுத்துக் குடையாகப் பிடித்து நிற்கும் கோபாலன், ஆயர்களைப் பார்த்துக் கூறியது, சூழ்த்துக் கொடுக்கும்படி – ஆணையிட்டுக் கொடுக்கும்படி.
அன்றிக்கே, அவற்றோடே ஒரே சாதியினவான இரண்டு பூக்கள் அலரக் காண்கின்றிலேன் என்கிறார் என்னுதல்.
என் நான் செய்கேனே –
இவை இரண்டும் மலர்ந்தால் அல்லது தரியாதிருக்கிற நான் என்செய்கேன்?
திருக்குடந்தையிலே தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக்கூடிய வண்டுகள் தேனைக் குடித்துக் களியா நின்றன,
இத்தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக் கூடிய வண்டு இங்ஙனே பட்டினி கிடந்து போமித்தனையோ! -தெய்வ வண்டு அன்றோ
‘இக்கூப்பீடு உருவச் செல்லும்’ என்று இருக்கிறாயோ, சென்றற்றது கண்டாய்.
‘இவை ஒழிய -திருக்கண்கள் கடாஷம் ஒழிய -மதுபானம் செய்யோம்’ என்கை யன்றோ இவர்க்கு இங்ஙன் படவேண்டுகிறது.
இனி, இவை அலர்தலாவது, விசேஷ கடாக்ஷம் பண்ணுகை காணும். அவன் கண் விழியாத போது இவர் கண் விழிக்க மாட்டாரே.

—————————————————————-

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் -அஜ்ஞ்ஞரும் -ஜ்ஞானாதிகரும் பக்தி பரவசரும் -அஜ்ஞ்ஞானத்தாலே பிரபன்னர் அஸ்மாதாதிகள்-
ஜ்ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாச்சார்யர்கள் -பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –
இப்படிச் சொல்லுகிறதும் ஊற்றத்தைப் பற்ற -இம்மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் -அசித் -சித் -பரமாத்மா தத்வம் –
அசித் தத்வம் பற்றி நாம் -ஆத்மா யாதாம்ய ஞானத்தால் ஆச்சார்யர்கள் -பரமாத்மா தத்வம் பற்றி ஆழ்வார்கள்-
என்னான் செய்கேன் -என்கிற இடத்தில் இம்மூன்றும் உண்டு –என்னான் செய்கேன்-சுரத்தில் மூன்று அர்த்தங்கள் -மா முனிகள்
-நான் என்னத்தை பண்ணுவேன் -நான் என்னத்துக்காக பண்ணுவேன் -நான் என்னவாக செய்வேன் -அங்கு ஒன்றைப் பற்றி இருக்கும் -முக்யமும் அதுவே –
அகிஞ்சனான நான் -உன்னை ஒழிய வேறு யார் இடமும் அபேஷை இல்லை -உம்மால் அடையும் மற்ற ஒன்றும் வேண்டாம்
எம்மாலும் பிறராலும் அடியும் நீயும் வேண்டாம்-உம்மால் அடையும் உம்மையே வேண்டுவேன்
என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்-கர்த்ருத்வம் எனது அதீனம் இல்லையே -ரஷிக்கை என்ன பிரவ்ருத்தி செய்வேன் –
நீயே ரஷகன் -வேறே யாரும் இல்லையே –என்னை என் கையில் காட்டிக் கொடுக்கிறாயோ -என்னை பிறர் கையில் காட்டிக் கொடுக்கிறாயோ
நீயே நாளை செய்யலாம் என்று இருக்கிறாயோ -இப்பொழுது நீயே உன்னைக் கொடுத்து அருள வேண்டும்
வேத அபகார குரு பாதக தைத்ய பீடாதி -அசக்தன் நான் -துச் சஹ உபாயங்களில் மூட்ட நினைக்கிறாயோ
உனக்கு பரமாக ஏறிட்டு கொள்வாயோ -இன்னம் கெடுப்பாயோ -பல நீ காட்டி
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-அசக்தர் அப்ராப்தர் அரஷகர் -பிறர் -ஒரு குறையும் அவர்களால் நிவர்த்திக்க வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்-உனக்கு அடியேன் -அருமையான சூ சமம் ஆத்மவஸ்து வாழும் நாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.-உனது திருவடிகளை அவலம்பித்து வாழும் படி அருள வேண்டும் –
பிராப்யமும் உபாயமும் உன் திருவடி தான்
நான் என்ன காரியத்தைச் செய்வேன், துணையாவார் வேறு யாவர், என்னை என்செய்ய இருக்கின்றாய், உன்னால் அல்லாமல்
மற்றையோரால் ஒரு குறையும் விரும்பேன், வேலைப்பாடு அமைந்த மதில்களாற் சூழப்பட்ட திருக்குடந்தையில் திருக்கண் வளர்கின்றவனே!
அடியேனுடைய ஆத்மா இந்தச் சரீரத்தோடு சேர்ந்து வாழ்ந்திருக்கும் நாள், தொடர்ந்து செல்லுகின்ற நாட்கள் எத்துணை உண்டோ
அத்துணை நாட்கள் எல்லாம் உன் திருவடிகளைப் பிடித்துக்கொண்டே நடக்கும்படி திருவருள் புரிய வேண்டும்.
கண் – தொழில்; வேலைப்பாடு. முதனிலைத் தொழிற்பெயர். அரு – ஆத்மா. வாழ்நாள் என்பது, வாணாள் என மரீயது.

இப்படி நசை அற்றாற்போலே துடித்துக் கிடந்து கூப்பிட்ட இடத்திலும், குளிர நோக்குதல் வினவுதல் செய்யாமையாலே,
பேறு தம்மதானால் பெறுவார்க்கும் சில செய்ய வேணும் என்று இருந்தானாகக் கொண்டு, நான் என் காரியம் செய்கை
என்று ஒன்று உண்டோ, நீ செய்து தலைக்கட்டித் தரவேணும் என்கிறார்.

என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய் –
என்மேலே விட்டிருக்கிறாயோ? பிறர் மேலே விட்டிருக்கிறாயோ? நீயே செய்யக்கடவதாக நினைத்திருக்கிறாயோ?

என் நான் செய்கேன்” என்று, தம்முடைய செயல் அறுதியும், “யாரே களைகண்” என்று, பிறர் ரக்ஷகர் அல்லாமையும், “என்னை என்
செய்கின்றாய்” என்று, அவனைக் கேட்கிறதுமான இம்மூன்றாலும் இவர்க்குண்டான மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘என்மேலே’
என்று தொடங்கி. ‘என்மேலே விட்டிருக்கிறாயோ’ என்றது, ‘இவனே சாதநாநுஷ்டானம் பண்ணுகிறான், நாம் என்’ என்று என் மேலேயாக்கி
முகங்காட்டாதிருக்கிறாயோ? அதற்கு நான் க்ஷமன் அல்லேன் என்கிறார் என்றபடி.

‘பிறர்மேலே விட்டிருக்கிறாயோ’ என்றது, பிறர் இவனை ரக்ஷிக்கின்றார்கள் என்று அவர்கள் மேலேயாக்கி முகங்காட்டாதிருக்கிறாயோ?
அவர்கள் ரக்ஷிக்க மாட்டார்கள் என்றபடி.-‘நீயே செய்யக்கடவதாக நினைத்திருக்கிறாயோ’ என்றது, இவர் நிலையும் பிறர் நிலையும்
இப்படியான பின்பு நாமே யன்றோ உளோம் என்று நீயே ரக்ஷிக்கப் பார்க்கிறாயோ என்றபடி.

‘என் நான் செய்கேன்’ என்றதனால் ‘நான் செய்வது எது’ என்று கேட்கிறார் அல்லர்,என் நான் செய்கேன்” என்றது, அநுவாதமன்று, வினாவுமன்று;
க்ஷேபோக்தியாய், அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன நான் செய்து தலைக்கட்டுவதாக நினைத்திருக்கின்றவற்றுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு என்கிறார். சாதநாநுஷ்டானம் செய்வேன் என்கிறார் என்றபடி. இதனைக் காட்டுகிறார் ‘நான் செய்வது எது’ என்று தொடங்கி. இங்கே, “என் நான் செய்கேன்’
என்றவிடத்தில் இம்மூன்றும் உண்டு” என்ற ஸ்ரீவசனபூஷண ஸ்ரீ சூக்தி அநுசந்தேயம்

‘யாரே களைகண்’ என்றதனால், அமிழ்ந்துகிறார் அமிழ்ந்துகிறாரை எடுக்கவோ? ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொள்வதற்கும் ஆள் அல்லாதவர்கள்
என் காரியம் செய்யவோ? என்கிறார். நெறி காட்டி நீக்குதியோ,-பெரிய திருவந்தாதி, 6 “நெறி” என்பது வேறு உபாயங்களை.
நின்பால் கரு மாமுறி மேனி காட்டுதியோ, நீ நினைத்திருக்கிறது என்? என்பார் ‘என்னை என் செய்கின்றாய்’ என்கிறார்.

ஆர்த்தி கண்டு -இரங்காமல்-அஜ்ஞ்ஞன் அசக்தன் நான் என் செய்கேன் -ஞானம் தந்தோமே என்னில் –
நீ தந்த ஞானத்தால் தான் -ஞானாதிக்யத்தால் பிராப்தன் அல்லேன் என்று உணர்ந்தேன் -ஸ்வரூப பாரதந்த்ர்யம் உணர்ந்து – –
கிடப்பது நான் என்றால் ஸ்வரூபம் விட்டாவது -தூது மடல் போலே செய்யலாகாதோ -வழி அல்லா வழி போனீரே –
ஞானம் மாதரம் கொடுக்க வில்லையே -பக்தி ரூபாபன்ன -ஞானம் -நலமே மிக்கு -அன்றோ கொடுத்தாய்
ஒன்றையும் அடைவு பட அனுஷ்டிக்க முடியாதே பக்தி பரவசன் ஆனேன்

என் நான்செய்கேன் யாரே களைகண் என்னை என்செய்கின்றாய் –
என்னை அறியாயோ! பிறரை அறியாயோ! உன்னை அறியாயோ என்னை நானாகவன்றோ புத்தி பண்ணி இருக்கிறது.

ஆக, “என் நான் செய்கேன், யாரே களைகண், என்னை என் செய்கின்றாய்” என்ற இம் மூன்றாலும், உன் அபேக்ஷை ஒழிய,
முகங்காட்டாமைக்கு வேறு காரணம் இல்லை என்பது இவர்க்குத் திருவுள்ளம் என்னுமிடம் தோன்ற அருளிச்செய்கிறார் ‘என்னை அறியாயோ’ என்று தொடங்கி.

‘அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன சாதநாநுஷ்டானம் பண்ணுவேன்’ என்னுமதனைக் குறிப்பாக அருளிச்செய்கிறார் ‘என்னை’ என்று தொடங்கி.
‘என்னை நானாகவன்றோ புத்தி பண்ணி இருக்கிறது’ என்றது, நான் என்னை ‘அஜ்ஞன், அசக்தன், அப்ராப்தன்’ என்று
புத்தி பண்ணியிருக்கவில்லையோ, சர்வஜ்ஞனாய், சர்வ சக்தியான தேவரீரைப் போன்று எண்ணிவிட்டதோ என்றபடி.

யாரே களைகண்-
என்னளவு கிட்டாதார் எனக்கு ரக்ஷகர் ஆகவோ.
‘என்னளவு கிட்டாதார்’ என்றது, உன் திருவருளுக்கு என்னைப் போன்று இலக்கு ஆகாதவர்கள் என்றபடி.
அன்றிக்கே, என்னளவு ஞான பக்தி இல்லாதவர் என்னுதல்.
என்னை என்செய்கின்றாய்-
நீ செய்து தலைக்கட்டப் பார்த்தாயோ?
அன்றிக்கே, ‘சாதநாநுஷ்டானம் செய்து வாரும்’ என்று நளன் தமயந்திக்கு வழி காட்டினாற்போலே-காட்டில் உபேஷிப்பதாக நினைத்து குழப்பினான்
போகாத இடத்துக்கு வழி –கைவிடப் பார்த்தாயோ?
என் நான் செய்கேன்-
தாம் கைவாங்கின படி.

யாரே களைகண்-
பிறர்பக்கல் நின்றும் கைவாங்கினபடி.
என்னை என்செய்கின்றாய்-
“என்னை ஆராதிக்கின்றவன் ஆவாய், என்னை நமஸ்காரம் செய்வாய்” என்னப் பார்த்தாயோ? “துக்கப்படாதே” என்னப் பார்த்தாயோ?
“என் நான் செய்கேன், ‘யாரே களைகண், என்னை என்செய்கின்றாய்” என்னும் இம்மூன்றாலும், ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களும், அவனே
ரக்ஷகன் என்னுமதுவும் சொல்லப்படுகின்றன என்னுமிடம் தோற்ற அருளிச்செய்கிறார் ‘தாம்’ என்று தொடங்கி. ‘தாம் கைவாங்கினபடி’
என்றது, ஆகிஞ்சந்யத்வம்; ‘பிறர் பக்கல் நின்றும் கை வாங்கின படி’ என்றது, அநந்யகதித்வம்; ‘அவனே ரக்ஷகன்’ என்னுமிடம் கூறுவது.

இதுகாறும் அநப்யுபகம்யவாதத்தாலே அருளிச்செய்தார்; இனி, அப்யுபகம்யவாதத்தாலே அருளிச்செய்கிறார் ‘உன்னால் அல்லால்’ என்று
தொடங்கி. என்றது, வேறு உபாயங்களிலே தமக்கு ஞானசக்திகளும் உண்டாய், வேறு தெய்வங்கட்கு மோக்ஷத்தைக் கொடுக்கும்
சக்தியுமுண்டாகிலும், ஸ்வரூபத்திற்கு விரோதமாகையாலே தமக்கு வேண்டா என்கிறார் என்றபடி.
அநப்யுபகம்யவாதம் – உடன்படாமலே பேசுகின்ற வாதம். அப்யுபகம்யவாதம் – உடன்பட்டுப் பேசுகின்ற வாதம்

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-
“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”- ஸ்ரீகீதை. 9. 34.
“என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய்.
ஓதி நாம் குளித்து -நமக்கே நலம் ஆதலால் -திருப் புல்லாணி-நமக்கு நலம் தேடும் -உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –
உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –
‘யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாயபாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே.
அன்றிக்கே, பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன்,
என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்.
மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.
கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது,
இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்.
அன்றிக்கே, ‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி,
‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர்.

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்.
அவற்றுள், முதலது, “என் நான் செய்கேன்” என்றதனை மாத்திரம் கடாக்ஷித்து அருளிச்செய்வது.
என்றது, உன்னால் வரும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களால் வரும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி.
இதனையே அருளிச்செய்கிறார் ‘என்னை நமஸ்காரம் செய்’ என்று தொடங்கி.
அங்ஙனமாயின், ‘யாவையாலும்’ என்னாது, “யாவராலும்” என்றது என்னை? எனின்,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘யாவையாலும்’ என்று தொடங்கி.

இரண்டாவது பொருள். “என் நான் செய்கேன், யாரே களை கண்” என்னும் இரண்டனையும் கடாக்ஷித்து அருளிச்செய்வது. என்றது,
உன்னாலே பெறும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் பெறும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி.
இதனையே, ‘பெறுவது உன்னையேயாகிலும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
பெறுவது நம்மையானால், வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் நம்மைப் பெற்றால் விரோதம் என்? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘மற்றையவற்றிற்கும்’ என்று தொடங்கி. காலன் கொண்டு – காலபுருஷதானம் வாங்கி.
அப்படி வேண்டாம் என்று இருந்த பேர் உளரோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கடல் கடத்த’ என்று தொடங்கி.
‘கடல் கடத்த’ என்றது, திருவடியினால் கடல் கடத்தப்பட்ட என்றபடி. ‘சபித்துப் பெற’ என்றது, பிராட்டியாகிய தான் சபித்து என்றபடி.
அப்படிச் செய்தால், அவனுடைய ரக்ஷகத்வத்துக்கும் தன்னுடைய பாரதந்திரியத்திற்கும் சேராது என்கிறார் ‘என்றது’ என்று தொடங்கி.

மூன்றாவது பொருள்: உம்மாலும் பிறராலும் சாத்யம் அல்லாத என்னை விட்டு, உபயசாத்யமான ஐஸ்வர்யாதிகளைப் பெற்றுப்போம் என்ன,
‘உன்னால் அல்லால்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘உன்னை ஒழிய மற்றொன்றால்’ என்றது,
பிராப்யனான உன்னை ஒழிய வேறோர் ஐஸ்வர்யாதிகளால் என்றபடி.அசேதனமான ஐஸ்வர்யாதிகளை “யாவராலும்” என்றது,
‘பிராப்பியம் ஒரு பரமசேதனம்’ என்கிற வாசனையாலே என்க. ‘சொல்லுவாருமுளர்’ என்கையாலே,
இப்பொருள் அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது போதரும்.

கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்-
இவருடைய உபாயம் அரண் செய்து கிடக்கிறபடி. ‘அவனே உபாயமும் உபேயமும்’ என்று அறுதியிட்டவர்கள்
அத்தலையில் உண்டான பரிவாலே அவனைக் காக்கை பணியே அன்றோ.
“செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்றாரே அன்றோ.
கண் ஆர் மதிள்-
தொழில் மிக்க மதிள் என்னுதல். செம்பாலே செய்யப்பட்ட மதில் என்னுதல்.
‘கன்’ என்பது, தொழிலும், செம்பும், சிக்கெனவும் எனப் பல பொருள்படும் ஒருசொல்.

அடியேன் அரு
-உனக்கு அநந்யார்ஹமாய்த் தனக்கு உரித்தல்லாத இந்த ஆத்மவஸ்து.
வாழ்நாள் செல்நாள் எந்நாள்-
ஜீவித்துக்கொண்டு செல்லும்நாள் யாதொருநாள்.
அந்நாள்-
அந்த நாட்கள் முழுதும்.
உன தாள் பிடித்தே செலக்காணே-
உன் திருவடிகளையே பெற்றுச் செல்லும்படி பார்த்தருள வேண்டும்.
காற்கூறும் விடாதபடி பார்த்தருள வேண்டும். ‘ஒன்றும் குறை வேண்டேன்’ என்ற பின்னர், வந்து குறை நிரப்பக் கண்டிலர்;
இனி அநுபவம் பெற்றபோது பெற, ‘உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்’ என்கிற இந்த உறுதி
குலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார்.
அடிவிடில் உறுதி குலையுமே, அடியே பிடித்து ஜீவித்தவர் அதனை விடாரே இப்போதாக. அத்யவசாயம் இது,
ருசியில் வந்தால் பரபக்தியையுடையவர், விளம்பத்துக்குக் காரணம் என்? என்னில்,
பக்தி விபாகத்துக்காகவும், இவருடைய பிரேமம் வழிந்த சொல்லால் நாட்டினைத் திருத்துகைக்காகவும்.

———————————————————————————————-

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-

அபரிச்சின்ன மாகாத்ம்யம் உடைய சர்வேஸ்வரன் அர்ச்சாவதார தசையில் -நினைத்த படி அனுபவிக்க
ஆசைப்பட்டு கிடையாமல் அலமந்து கிலேசப் படுகிறேன் –
செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!-மேலே போக காண வல்ல சக்தர் காணும் அளவும் –
அவவருக்கு மேலே செல்லும் வைபவம் உடையவர் –
குண விபூதி ப்ரதை புகழ் உடையவன்
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!-என்ன முடியாத -நெஞ்சாலும் -எண்ணிக்கையாலும் -முடிவு இன்றிக்கே
ஸ்வா பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய -அனுபூத அம்சத்தில் குறை இல்லை —
சர்வ உலகங்களும் -ஸ்வாமி-ஒரு குடைக் கீழ் -பிராப்ய விக்ரகம் உண்டே மூர்த்தி -அடைந்து அனுபவிக்க
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்-உன் பக்கல் பிராவண்யம் விஞ்சி இருப்பார் -நலத்தால் மிக்கார்
அனுபாவ்யனாகக் கொண்டு கண் வளர்ந்து அருளி -சர்வாதிகன் சர்வ சுலபன் -உலப்பிலானே -குடந்தைக் கிடந்தாய் -உன்னை
-அத்யந்த அபி நிவிஷ்டையான நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே-தமர் உகந்த படி -கிடந்தவாறு வாழி கேசனே சேவை சாதித்தாயே
அலமந்து -நீ வர சம்பாவனை உள்ள ஆகாசம் நோக்கி -பக்தி பரவசரைப் போல அழுது -பிரபன்னர் படி தொழுது –
என்ன பண்ணுகிறேன் தெரியாமல் பிராவண்யம் -எத்தைப் பண்ணி பித்தம் தெளியும் -பாலரைப் போலே அழுது பக்வரைப் போலே தொழுதும்

மேலே போகக் காணவல்ல சக்தியையுடையவர்கள் காண வல்ல அளவுக்கும் அப்பால் போகும்படியான கீர்த்தியையுடையவனே! முடிவு இல்லாதவனே!
எல்லா உலகங்களையுமுடைய ஒப்பற்ற மூர்த்தியே! பக்தியினால் மேம்பட்டவர்கள் தங்கியிருக்கிற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்திலே
திருக்கண் வளர்கின்றவனே! உன்னைக் காணும்பொருட்டு நான் அலமந்து ஆகாசத்தை நோக்கி அழுவேன், தொழுவேன்.
காண்கிற்பார்: வினையாலணையும் பெயர். உலப்பு-முடிவு. நலம்-பக்தி. அலத்தல் – அலமருதல்; சுழலுதல்.

சர்வேச்வரனாயிருந்து வைத்து அடியார்கட்காகத் திருக்குடைந்தையிலே அண்மையிலிருப்பவனாக இருக்க,
நினைத்த கைங்கரியத்தைப் பெறாமையாலே நோவுபடாநின்றேன் என்கிறார்.

செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் –
உன்னுடைய குணங்களால் வந்த பிரசித்தி அடங்கலும் அழியப் புகாநின்றது கண்டாய்.
எத்தனையேனும் அளவுடையாரும் தாங்கள் நின்ற அளவுகளைக் கழித்து அவ்வருகே காணப்புக்கால், அவ்வளவுகளை யுடையனாயிருக்கும்.
“பேசுவார் எவ்வளவு பேசுவர்-இது மூன்றாம் திருவந். 21.–
அவ்வளவே, வக்கரனைக் கொன்றான் வடிவு”-
திவ்விய மங்கள விக்கிரஹத்தின் வைலக்ஷண்யத்தைப் பற்றிப் பேசுமவர்கள் யாதோர் அளவு சொல்லுவார்கள், அவ்வளவாயிருக்குமத்தனை.
ஸ்வரூபம் ரூபம் குணங்கள் எல்லாம் உப லஷனையால் சொல்லுவது போலே

உலப்பிலானே
-ஸ்வரூப குணங்கள் புருஷர்களுடைய புத்திக்கு உட்பட்டவல்லாத அளவாய், தான் ஓர் எல்லையிலே இருக்குமோ? என்னில்,
உலப்பிலானே-
இயல்பிலே எல்லை காண ஒண்ணாதபடியாயிருக்கை. தனக்கும் தன் தன்மை அறிவரியானே யன்றோ.
எல்லா உலகுமுடைய ஒரு மூர்த்தி- திருவாய்மொழி, 8. 4. 6.—
வடிவழகைக் காட்டி எல்லா உயிர்களையும் காற்கீழே இட்டுக்கொள்ளக் கூடியவனே!
அன்றிக்கே, வடிவு கண்டபோதே, ‘இவனே இவற்றிற்கெல்லாம் கடவன்’ என்று தோன்றும்படியாய் இருப்பவனே! என்னுதல்.
அன்றிக்கே, ‘மூர்த்தி’ என்ற சொல்லானது, விக்கிரஹத்துக்கும் பெயராய், ஐஸ்வரியத்துக்கும் பெயராய் இருக்கும்.-செல்வந்தர் என்றபடி
அப்போது, எல்லா உலகங்கட்கும் நிர்வாஹகனாய் –ஒப்பற்றவனான –சர்வேச்வரன் என்றபடி.–எல்லாவுலகுமுடைய -ஒரு -மூர்த்தி
கண்டவாற்றால் உலகே தனது என்று நின்றான் -அழகு பரமாயும் ஐஸ்வர்ய பரமாயும்
இதனால், இவர்க்குப் பேறு என்? என்னில், உன் பெருமையை அழிக்க அன்றோ புகுகிறாய் என்பது.
நீர் நோவுபடுகிற இடம் என் எல்லைக்குள் அன்று என்ன ஒண்ணாதே உனக்கு.-நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால் –

“எல்லாவுலகுமுடைய ஒரு மூர்த்தி” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார், “மூர்த்தி” என்பது விக்கிரஹமாய்,
அதனாலே அழகினை விவக்ஷித்து, விக்கிரஹ சௌந்தர்யத்தாலே எல்லா உலகங்களையும் சேஷமாகக்கொண்டவன் என்பது, முதற்பொருள்.
“மூர்த்தி” என்பது விக்கிரஹமாய், விக்கிரஹத்தைக் கண்டவாறே ‘இவனே எல்லா உலகங்களுக்கும் சேஷி’ என்று தோற்றும்படியாயிருப்பவன்
என்பது, இரண்டாவது பொருள்.
“மூர்த்தி” என்ற சொல்லானது, விக்கிரஹத்தைக் காட்டுமோ? என்ற சங்கையையும் பரிஹரித்துக்கொண்டு, மூன்றாவது பொருளினை
அருளிச்செய்கிறார் ‘மூர்த்தி என்ற சொல்லானது’ என்று தொடங்கி. ‘அப்போது’ என்றது, செல்வத்திற்கு வாசகமான போது என்றபடி.

நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்-
நீ ஸ்வரூபங்களால் வேறுபட்டவனாய்க் கொண்டு அங்கே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ,
உன்னால் அல்லது செல்லாதாருடைய தேசத்தை விரும்பிப் படுகாடு கிடவாநின்றாய்,
கிரமப் பிராப்தி பற்றாதபடி அன்பு செலுத்தியிருப்பவர்களாதலின் ‘நலத்தால் மிக்கார்’ என்கிறது.
உன்னைக் காண்பான் நான்-
‘ஸ்ரீவைகுண்டம் கலவிருக்கையாக இருக்க, அடியார்களை விடமாட்டாதே திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகிற உன்னை,
மிக்க காதலையுடைய நான், அத்தலை இத்தலையாய்க் காண ஆசைப்பட்டு அலமாவாநின்றேன்.
உன்னைக் காண்பான் நான்-
காண்கிறவன் நான் அன்றோ, காண்கிறது உன்னை அன்றோ; ஆன பின்னர், எங்ஙனே ஆறியிருக்கும்படி.
உன்னை –
மேலே கூறிய இனிமையையுடைய உன்னை என்றுமாம்.
அலப்பாய்-
அலமந்து. காணும்போது ‘கண்டு கொள்ளுகிறோம்’ என்று, சூது சதுரங்கம் பொருது ஆறியிருக்கும் விஷயமன்றே,
காணப்பெறாமையாலே வந்த துடிப்பு.
ஆகாசத்தை நோக்கி-
திருவடியினுடைய சப்தம் ஒரு திக்கிலேயாயிருக்கச் செய்தே “அந்தப் பிராட்டி குறுக்கும் மேலும் அப்படியே கீழும் பார்க்கிறவளாய்க்கொண்டு
வாயுபுத்திரனான அநுமானை உதயபர்வத்தில் தோன்றுகிற சூரியனைப் போலப் பார்த்தாள்” என்கிறபடியே,
பிராட்டி எங்கும் ஒக்கப்பார்த்தாளே அன்றோ.
“ஸா திர்யக் ஊர்த்வஞ்ச ததாபி அதஸ்தாந் நிரீக்ஷமாணா தம் அசிந்த்ய புத்திம்
ததர்ஸ பிங்காதிபதே: அமாத்யம் வாதாத்மஜம் ஸூர்யமிவ உதயஸ்தம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 19.

‘உன்னை’ என்னா நிற்கச்செய்தே ‘ஆகாசத்தை நோக்கி’ என்பான் என்? என்னில், ‘அலப்பாய்’ என்றாரே அன்றோ,
கலக்கத்தின் காரியம் இருக்கிறபடி. விஷயம் அண்மையில் இருக்கச்செய்தே ஆகாசத்தைப் பார்க்கிறது. நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே.
‘ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாற் போலே தம் தசையைப் பார்த்துத் தோற்றுகிறானோ’ என்று பார்த்து.
அன்றிக்கே, ஆகாசத்தை நோக்கி என்பதற்கு, என்னுடைய நிராலம்பநதையைப் பார்த்து” என்று ஆண்டான் அருளிச்செய்வர்.
அன்றிக்கே, “வயோதிகரான தசரத சக்கரவர்த்தி அப்படியே வெம்மை தோன்ற பெருமூச்சுவிட்டு ஆகாசத்தை நோக்கிய
கண்களையுடையவராய்த் துக்கத்தால் பீடிக்கப்பட்டவன் போலக் கதறினார்” என்று கொண்டு,
கண்கள் இலக்கில் தைக்க மாட்டாதபடியாயிற்றுச் சென்றற்றபடி என்னுதல்
“ததைவ உஷ்ணம் விநிஸ்வஸ்ய விருத்தோ தசரதோ ந்ருப: விலலாப ஆர்த்தவத் துக்காத் ககநாஸக்தலோசந:”-ஸ்ரீராமா. அயோத். 13 : 16.
இது, கைகேசின் வார்த்தையைக் கேட்ட தசரதனது துக்கம்.

அழுவன் தொழுவன்-உபாசகர்கள் செய்யுமதனையும் செய்யாநின்றேன்,
பிரபந்நர்கள் செய்யுமதனையும் செய்யா நின்றேன்.
சபலர் செய்யுமதனையும் செய்யாநின்றேன்,
விரக்தர் செய்யுமதனையும் செய்யாநின்றேன்.

————————————————————————————–

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உனதாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.–5-7-5-

உன் கண் அழகாலே ஈடுபட்டு நாநா வித தய நீயா வ்ருத்தி
பண்ணும் நான் உன் திருவடிகளில் சேரும் வகை செய்து அருள்
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்-கலங்கி அழுது -தெளிந்து வணங்கி -பிரமத்தால் ஆடி
குண பாரவச்யத்தால் பாடி ஆர்த்தியால் பிரலாபித்து புலம்பி
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்-தழுவி -காதல் பிரபல பாபம் -நான் உன்னை தழுவ
நினைக்க வினைகள் என்னை தழுவுகின்றனவேஇவ்வஸ்தையில் வாராது இருக்கவே நீ வாராமல் உள்ளாய்
பக்தி காதலே பாபம் -இஷ்டம் கிடைக்காமல் பண்ணுவதே பாபம் -வர சம்பாவனை உடைய பக்கங்கள் நோக்கி
காணாமையாலே ஸ்வரூபம் பெற்றிலோம் அபிமதம் பெற்றிலோம் உரிமை அன்பு ஆசை போனதே வெட்கி கவிழ்ந்தேன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!-ஆஸ்ரித அர்த்தமாக கண் வளர்ந்து -ரஷகம் போக்கியம் திருக் கண்கள்
தொழுவனேனை உனதாள் சேரும் வகையே சூழ்கண்டாய்-சூழ்ச்சி -தெரியாத உபாயம் நீ பண்ணி அருள் -தெரிந்தால் பண்ண விட மாட்டோமே –
கைமுதல் இல்லாத என்னை பிராப்தனான நீ போக்யமான திருவடிகளில் சேர்த்து கொள்வாய்

கலக்கத்தாலே அழுவேன், தெளிவாலே தொழுவேன், மயக்கத்தால் ஆடுவேன், குணங்களுக்குப் பரவசப்பட்டுப் பாடுவேன், துன்பத்தால் அலற்றுவேன்,
என்னைத் தழுவி நிற்கின்ற காதலாகிற கொடிய பாவங்களால் நீ வருவதற்குச் சம்பாவனையுள்ள பக்கத்தை நோக்குவேன், வரக் காணாமையாலே
நாணங்கொண்டு தலை குனிந்திருப்பேன், செழுமை பொருந்திய அழகிய வயல்களாற்சூழப்பட்ட திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் திருக்கண்
வளர்கின்றவனே! செந்தாமரைக் கண்ணா! வேறு கதி இல்லாதவனாய்த் தொழுகின்ற என்னை உன் திருவடிகளைச் சேரும்படி ஒரு நல் விரகு பார்க்க வேண்டும்.
ஆடிக் காண்பன் : ஒருசொல். ஆடுவேன் என்பது பொருளாம். தொழுவனேன்: வினையாலணையும் பெயர். கண்டாய்: முன்னிலை அசைச் சொல்

உன்னைக் காண வேண்டும் என்னும் ஆசையாலே இரங்குதற்குரிய செயல்கள் பலவும் செய்த இடத்திலும் காணப்பெற்றிலேன்,
உன் திருவடிகளை நான் பெறும்படி பார்த்தருள வேண்டும் என்கிறார்.

அழுவன் –
குழந்தைகள் செய்வதனையும் செய்யாநின்றேன். “மற்றவள் தன் அருள் நினைந்து அழுங்குழவியதுவே போன்றிருந்தேன்” என்னக் கடவதன்றோ.

குழந்தைகள் அழுவதற்குப் பிரமாணம் காட்டுகிறார் “மற்றவள் தன்” என்று தொடங்கி.
தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை விரைகுழுவும் மலர்ப்பொழில்சூழ் விற்றுவக் கோட்டம்மானே!
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்நினைந்தே அழுங்குழவி யதுவேபோன் றிருந்தேனே– பெருமாள் திருமொழி. 5 : 1.

தொழுவன் –
வேதாந்த ஞானமுடையார் செய்வதனையும் செய்யா நின்றேன்
.“அஞ்சலி: பரமா முத்ரா” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து,‘வேதாந்த ஞானமுடையார்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.-

ஆடிக் காண்பன் –
‘இத்தனை சோறு இடுகிறோம், ஆட வல்லையோ’ என்றால், கலியர் ஆடுமாறு போலே ஆடியும் பார்ப்பன்.கலியர்-பசியர்
‘என்பட்டால் பெறலாம்’ என்று அறியாரே.
பாடி அலற்றுவன் –
காதலால் வழிந்த சொல் பாட்டாய், அதுதானும் அடைவு கெடக் கூப்பிடுகை, அலற்றுகை.
தழு வல் வினையால் –
இப்படிப்பட்டாலும் காண ஒண்ணாதே அன்றோ
‘உடன் வந்தியான வல்வினை. என்னைத் தழுவி விடாதே நிற்கிற காதலாகிற பிரபலமான பாவத்தாலே.
பக்தியை, பாவம் என்கிறது,வேண்டாததைக் கொடுப்பது பாபம் ஆகையாலே.
வாராயோ -சென்றேன் என் வல்வினையால் –போலே -சத்ருக்னன் அநக போலே –
பக்கம் நோக்கி –
‘துன்பமே செப்பேடாக வரும்’ என்றிருக்கையாலே, வருவதற்குச் சம்பாவனையுள்ள திக்கைப் பார்த்து.
நாணிக் கவிழ்ந்திருப்பன் –
அங்கு வந்து தோற்றக் காணாமையாலே, ‘ஆசைப்பட்டு 1அழகிதாக உண்டோம்’ என்று நாணமுற்றுக் கவிழ்தலை இட்டிருப்பன்.
அன்றிக்கே, பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன் என்பதற்கு, ‘அருகு நின்றார் இவளை என் சொல்லுவர்களோ’ என்றதற்கு
நாண முற்றுக் கவிழ்தலை இட்டிருப்பன் என்னலுமாம்.

செழு ஒண் பழனம் குடந்தைக் கிடந்தாய்-
பெருத்து அழகிதான நீர்நிலைகளையுடைய திருக்குடந்தையிலே திருக்கண் வளர்ந்தருளுகிறவனே!
செந்தாமரைக்கண்ணா-
கையிலே நிதி உண்டாயிருக்க வறியர்க்கு இடாதாரைப் போலே.
வேறு முகத்தாலே என் ஜீவனமாய்க் கிடக்கிறாய் இல்லை, என் ஜீவனம் ஒருமுகம் செய்து கிடக்கிற தன்றோ.
முகாந்தரம் -சம்பந்தம் -செந்தாமரைக் கண் தானே எனக்கு ஜீவனம் –சத்தை -ஒரு முகம் -ஒரு லஷ்யம் -செந்தாமரைக் கண் தானே
தொழுவனேனை –
புறம்பு புகல் அற்று உன்னால் அல்லது செல்லாதபடி கிருபணனான என்னை.
அன்றிக்கே, புறம்புள்ள விஷயங்களிலே ஈடுபட்டவனாய்த் தாழ்ந்தவனான என்னை என்னுதல்.
தொழுவன்-கிருபணன் என்னுதல். தாழ்ந்தவன் என்னுதல்.
உன தாள் சேரும் வகையே சூழ்கண்டாய் –
உன் திருவடிகளைக் கிட்டுவது ஒரு விரகு, நான் அறியாதபடி நீயே பார்த்தருளவேண்டும்.
தம்முடைய ஆற்றாமை பேற்றுக்குக் காரணம் அன்றிக்கே, அது பிரகிருதியாய்,-ஸ்வரூபம் – ‘அவனாலே பேறு’ என்று இருக்கிறபடி.
என்றது, வேறு பிரயோஜனங்களை விரும்பாதார் திறத்தில் காரிய சிந்தையும் அவனதாக இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.
தேக யாத்ரை கர்மாதீனம் -ஆத்மா யாத்ரை கிருபாதீனம் –த்ருஷ்டம் அத்ருஷ்டம் இரண்டுக்கும் நமக்கு பொறுப்பு இல்லையே
கைங்கர்யத்திலே நாம் கண் வைக்க வேண்டும் –

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: