பகவத் விஷயம் காலஷேபம்- 119- திருவாய்மொழி – -5-7–6….5-7-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6-

ஆஸ்ரித உபகாரத்வத்தால் அதுஜ்ஜ்வலமாய் -இருக்கும் நீர் -என்னிடம் கைங்கர்யம் கொண்டு அருள வேண்டும் –
அனுபவித்து சேஷ வ்ருத்தி-பூமிப் பிராட்டிக்கு உதவினால் போலே எனக்கு உதவி அருள வேண்டும்
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் -பிரளய ஆபத்துக்கு நிலவன் -பூமியைக் கீண்டு எடுத்த அவதானத்தால்
இவருக்கு பண்ணின உபகாரம் -சர்வ விஷய உபகாரகன் ஸ்ரீ கிருஷ்ணன் -சௌலப்யாதி குணா பிரகாசத்தால் –
எனை ஆளுடை வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!-எப்பொழுதும் எனது சத்தை அழியாமல் அடிமை கொண்டு
-கைங்கர்யம் கொண்டு -பரம பதம் லோகம் போலே வாசிக கைங்கர்யம் -கொண்டது போலே – -ஹாவு ஹாவு போலே –
வி லஷனம் மாணிக்க அத்யுஜ்ஜ்வலமான தேஜஸ் -ஆழ்வார் கைங்கர்யம் பெறப் பெற்றோமே என்று
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ -தேன் பொழியும் மா மரங்கள் -குளிர்ந்த ஸ்ரமஹரமான -சோலைகள் –
இங்கு வாழுபவர் சேஷ வ்ருத்திகள் செய்யும்படி
உறை வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே-அவனையே விளிக்கிறார் -நித்ய வாசம் பண்ணா நிற்பானாய்-வைகுண்ட வாசிகளுக்கு
அனுபாவ்யமானாய் அபரிச்சேத்யமான-அசைக்க மாட்டாத பெரிய வடிவு -வான -மா மலை -போன்று –
ஸூ ஸ்திரமான வடிவு -நான் கைங்கர்யம் செய்யும் படி ஸ்ரீ வைகுண்டம் -அவ்விருப்பு குலைந்து வந்து -இங்கே வந்து நித்ய சந்நிஹிதன் ஆனாயே –
ஆகாசம் கிட்டி அஞ்சன மா மலை போன்றவனே என்றுமாம் –

பிரளயம் கொண்ட நிலத்தை வராகமாகி எடுத்த என் அப்பனே! கண்ணபிரானே! எப்பொழுதும் என்னை அடிமையாக ஆளுகின்ற தெய்வ நாயகனே!
அழகிய மாணிக்கத்தினது சுடரே! தேனையுடைய மாமரச் சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த ஸ்ரீவரமங்கலத்திலிருப்பவர்கள் கைகூப்பி வணங்கும்படியாக
எழுந்தருளியிருக்கின்ற வானமாமலையே! அடியேன் வணங்கும்படி வந்தருள்வாயாக என்கிறார்.
வி-கு :- ஏனம் – பன்றி, தேன – தேனையுடைய, அ: ஆறாம் வேற்றுமையுருபு. மாம்பொழில் – மாமரச் சோலை. உறை – வசிக்கின்ற.

மேற்பாசுரத்தில் அவாய் நிலையாற் போந்த கைங்கரியத்தை விரும்புகிறார் இப்பாசுரத்தில்.

ஏனமாய் நிலம் கீண்ட –
ஆபத்தை அடைந்தவர்கள் அறிவிக்கையும் மிகையாம்படி அன்றோ உன்படி இருப்பது.
காத்தல் ஒருதலையானால் உன்னைப் பேணாதவன் அன்றோ என்றபடி.
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா-
பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாகி எடுத்தாய்,
சம்சார பிரளயம் கொண்ட என்னை ஸ்ரீ கிருஷ்ணனாய் எடுத்தாய்.
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே-
பிரளயத்தாற் கொள்ளப்பட்ட பூமிக்கு உதவி செய்தது தமக்கு உதவி செய்ததாயிருக்கிறபடி.
என் அப்பனே கண்ணா –
என்னைக் காப்பாற்றுவதற்கு ஏதேனும் முகம் பண்ண வேண்டுமோ?-அலங்கோலம் -கோல வராகம் –
என்னைக் காப்பாற்றுவதற்கு ஏதேனும் ஒரு கோலம் கொள்ள வேண்டுமோ?
வெறுப்பிலே நோக்காகச் சிலேடையில் வைத்து,முகம் – வேறொரு பிரகாரமும், வராகத்தினது முகமும். கோலம் – வராகமும், அலங்காரமும்.
கண்ணன் கோள் இழை வான்முகமே -திருவாய்மொழி, 7. 7 : 8.-அன்றோ இவர்க்கு இரக்ஷகம்.
என்றும் என்னை ஆளுடை வான நாயகனே –
தனக்குத் தகுதியானவரோடு இருக்கும்போதும் இவர் இடையாட்டமாயிற்று ஆராய்ந்து போருவது.
இவர் சத்தையே தொடங்கிக் கை தொட்டு நோக்கிக் கொண்டாயிற்றுப் போந்தது.
மணி மாணிக்கச் சுடரே –
உளரான பின்பு ஓர் ஏற்றம் செய்து கொடுத்தலன்றிக்கே, அடியே பிடித்து நோக்கிக் கொண்டு போந்து,
இச்சை பிறந்தவாறே, அவ்வளவிலே நித்தியசூரிகளுக்கு விடும் படியையும் இவர்க்கு விட்டான்.
மணி மாணிக்கச் சுடர் –
இரத்தினங்களுக்குள்ளே சிரேஷ்டமான இரத்தினம் என்னுதல்.ஸ்ரேஷ்டமான ரத்னம் -மணி மாணிக்கம் -சுடர் -தேஜஸ்
மணியினுடையவும் மாணிக்கத்தினுடையவும் ஒளியையுடைத்தாயிருப்பவன் என்னுதல்.-மணி -நீல மாணிக்கம் -பத்ம- ராகம் –
சுடர் -லஷ்மி சமேதத்வாத் -தேஜஸ் -ஸ்வா பாவிக தேஜஸ் –ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் ஔதார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் –

தேன மாம் பொழில் தண் சிரீவரமங்கலத்தவர் கைதொழ உறை –
தேனை யுடைத்தான மாம்பொழிலை யுடைத்தாகையாலே சிரமஹரமான சிரீவரமங்கல நகரத்திலுள்ளார்,
ஸ்வரூபத்திற்குத் தகுதியான கைங்கரியத்தைச் செய்யும்படி இருக்கிற.
வானமாமலையே-
நித்தியசூரிகளை அடிமை கொண்டிருக்கும் வேண்டற்பாடு போலே காணும் இங்குள்ளார் அடிமை செய்ய இருக்கிற இருப்பும்.
அடியேன் தொழ வந்தருளே –
நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக வந்து தோற்றவேண்டும்.
நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக என் முன்னே நடந்து வரவேணும் என்பார் ‘வந்தருளே’ என்கிறார்.
என் கண் வட்டத்திலே உலாவி நின்று நீ அடிமை கொள்ள வேண்டும் என்றபடி.
அடிமை செய்கையாவது, “அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி” என்னுமாறு போலே, அந்த நடை அழகுக்கு மங்களாசாசனம் செய்தல்.
தோற்ற வேண்டும் படி சொல்லுமோ -வந்தருளி -நடக்கும் பொழுது -மங்களா சாசனம் செய்வதே கைங்கர்யம் -வாசிகம்
-நடந்து ஓர் இடத்தில் நின்றால் இளைப்பாற சிசிரோபசாரம் பண்ண வேண்டும் –

——————————————————————-

வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.–5-7-7-

சகல சத்தா ஹேதுவான நீ -என்னை விச்லேஷித்திப்பித்து சத்தை அழியாமல் -மாயா சிரஸ்-கண்டு மயங்காமல் -நோக்கி அருள வேணும்
வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
பரமபதம் ஷீராப்தி -அங்கே இருந்துஇங்கே வந்து -விமுகனாய் தாழ்ந்த -என் நெஞ்சை வாசஸ் ஸ்தானம்
பரமபத வாசிகள் சத்தையை அபிவிருத்தம் செய்பவன் -கொழுந்தே -அவர்கள் சத்தையே உன்னாலே –
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!-உலகுக்கு சத்தா ஹேது அத்விதீயன் -ஆதி காரணம் பிரதமபாவி –
பிரளய ஆர்னவத்தில் அழுந்தாதபடி சத்தையை நோக்கி திரு வயிற்றில் காத்து அருளி
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்-அநந்ய பிரயோஜனர் -கைங்கர்ய ரூபம் தொழில் -ஆர்ஜவம் –
வ்ருத்தி விசேஷம் -பகவத் ஆராதனம் -வேள்வி -இதுவே பிராப்தம்
தஸ்மான் தபஸ் சிறந்தது ந்யாசம் தானே -நிவ்ருத்தி மார்க்கம் -விடாமல் நடத்தி அருளும்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே-முடிவு இல்லா குண ப்ரதை- அகற்ற நினைத்தாலும் முடியாதே –
அனன்யார்ஹ ஸ்வரூபன் நியத பிரகாரம் -அப்ருதக் சித்தம் அன்றோ -புத்தியாலே அகற்றாதே –

பரமபதத்தில் நின்றும் வந்து என் நெஞ்சினை இடமாகக் கொண்ட வானவர் கொழுந்தே! இந்த உலகங்கட்கு ஒப்பற்ற பழைமையான
தாயும் தந்தையுமானவனே! எல்லா உலகங்களையும் பிரளயகாலத்தில் உண்டவனே! பயன் கருதாத கைங்கர்யத்தையுடைய
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய வேத ஒலியும் யாகங்களும் நீங்காமல் இருக்கிற சிரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற எல்லை இல்லாத
புகழையுடையவனே! உனக்கு அடிமைப்பட்டுள்ள அடியேனை நீக்காமல் இருக்க வேண்டும்.
வந்தருளி: ஒருசொல், வந்தருளி கொண்ட கொழுந்தே! என்க. அகற்றேல்: எதிர்மறை.

“அடியேன் தொழ வந்தருளே” என்கிற சொல்லோடே வரக் காணாமையாலே ‘உபேக்ஷித்தானோ’ என்று அஞ்சி,
என்னை அகற்றாது ஒழிய வேண்டும் என்கிறார்.

‘வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே’ என்பதற்கு, –சுரத்தாலே அறியும் பொருள் உண்டே –
“பட்டர், ஸ்ரீ புஷ்பயாகம் அணித்தானவாறே, நஞ்சீயரைப் பலகாலும் இயல் கேட்டருளுவர்;
ஒரு கோடையிலே திருவீதியிலே நீரை விட்டு எழுந்தருளியிருந்து இப்பாட்டை இயல் சொல்லும் என்று சீயரை அருளிச்செய்து,
தாம் இதனை அநுசந்தித்திருந்து பின்பு தாமும் இப்பாசுரத்தை இயல்சொல்லி, -சந்நிதியில் உபன்யாச உபயுக்தமாக திருப் பாசுரம் கேட்டு அருளுவாராம் –
‘இயமம் நியமம் முதலிய கிரமத்தாலே தியானம் செய்யத்தக்க சர்வேச்வரனை மனனம் செய்து புறம்புள்ள பராக்கை அறுத்து
அநுசந்திக்கப் புக்காலும் சுக்கான் பரல் போன்று இருக்கக்கூடிய நெஞ்சுகளைப் பதம் செய்யும்படி, தார்மிகராயிருப்பார்
இவை சில ஈரச்சொற்களைப் பொகட்டுப் போவதே!’ என்று அருளிச்செய்தார்;
நஞ்சீயர், இவ்வார்த்தையை உருத்தோறும் அருளிச்செய்வர்” என்று நம்பிள்ளை அருளிச்செய்வர்.

1-யம -இதரங்களில் ஓடும் இந்த்ரியங்களை மடை மாற்றுகை
ப்ரஹ்மசர்ய -அஹிம்சை -அசதேய திருடாமல் -அபரிக்ரக -சத்யம் –
காமுகன் இல்லாமல் சாஸ்திரம் சொன்னபடியே -சுசி ஸ்தானம் -பண்ணிய ஸூ பார்யை பக்கல் -நிரதனாகை
த்ரிவித கரணங்கள் அஹிம்சை -திருடாமை ஆத்மா அபஹாரம் பண்ணாமை -ராஜ மகேந்தரன் -சம்சாரத்தில் ஓன்று வேணும் என்று கொளாமை
உண்மை பிரியம் ஹிதம் -பேச வேண்டும்
2-நியம -இந்த்ரியங்கள் வசப்படுத்த -ச்வாத்யாயம் திரு நாம -வேதம் –சௌசம் பாஹ்ய ஆந்தர சுசி -சந்தோஷம்இருப்பது வைத்து திருப்தி
– -தபஸ் உபவாசம் ப்ரஹ்ம பிராவண்யம்
3-ஆசன -மனச் இதர விஷயங்களில் ஓடாமல் -யோகம் அனுகுணமாக அமர்ந்து -பத்மாசானம் கூர்மம் -பல -சக்ராசனம் -வந்ததோர் ஆசனம் சலியாமல்
4-பிரணாயாம -வாயு விசேஷம் -உச்வாச நிசவாச -ரேசக -பூரகாதிகள் -கும்பகம் உள்ளே நிறுத்தி
5-பிரத்யாகாரம் -விஷய தோஷங்கள் காட்டி -அபஹரித்து உள்ளே திருப்புதல் -ப்ரஹ்மம் இடம் –
6-தாரணை -வைராக்கியம் -விஷய தோஷம் அடியாக -சுபாஸ்ரயம் பழகி வைலஷண்யம் அறிந்து தரித்து இருக்கை
7-த்யானம் -வித்யா விசேஷம் -நிரந்தரம் -இடையூறு இல்லாமல் யோகாந்தராயம் வராமல் -குணம் உள்ள ப்ரஹ்மம் -பல வித்யைகள்-குண உபசம்ஹாரம்
8-சமாதி தியான அப்யாச வசத்தால் -இந்த விஷயமே தோன்றும் படி சித்தம் தெளிந்து -உத்தான அவஸ்தையிலும்

வந்தருளி –
நான் விரும்பாதிருக்க வந்தருளி. வெவ்வேறு தீவுகளிலுள்ள வஸ்துக்கள் இரண்டே அன்றோ சேர்கின்றன.
பரமபத நிலையனானவனும், சம்சாரத்தை இருப்பிடமாகவுடையவரும். இந்த இருவருமே அன்றோ கூடுகின்றார்கள்.
வட துருவம் தென் துருவம் சேர்ந்தால் போலே –
உத்தேஸ்ய வஸ்து இருந்த இடத்து ஏற இவன் தான் போக வேண்டியவனாக இருக்க,
அது பெறாவிட்டால் இருவரும் பாதிப்பாதி வழிதான் வரப்பெற்றார்களோ.
‘வந்தருளி’ என்று நெஞ்சுளுக்கிச் சொல்லுகிறாரன்றோ. -நெஞ்சு உருகி தாழ்ந்த குரலில் —
ஆப்பான் திருவழுந்தூர் அரையர் கையிலே தாளத்தை வாங்கி ‘வந்தருளி, வந்தருளி’ என்று மேல் போகமாட்டாதே படுவராம்.
என் நெஞ்சு-
அவனை ஒழிந்த வேறு விஷயங்களை உகந்து போந்த நெஞ்சு அன்றோ.
இடம் கொண்ட –
வந்தாலும் ‘நெஞ்சுக்கு விஷயம் வேறு உண்டு’ என்பரே.
“அஹம் ஏவ ஆஹரிஷ்யாமி ஸ்வயம் லோகாந் மஹாமுநே ஆவாஸம்து அஹம் இச்சாமி ப்ரதிஷ்டம் இஹ காநநே”
என்பது, ஸ்ரீராமா. ஆரண். 5. 32, 33. சரபங்க முனிவரைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது.
“தேவரீரால் காண்பிக்கப்பட்ட வாசத்தையே நான் விரும்புகிறேன்” என்னா நின்றான்.
ஆக ‘நெஞ்சிடம் கொண்ட’ என்றதனால் திரவிய குணங்கள் போலே சேர்ந்தான் என்பதனைத் தெரிவித்தபடி.
திரவியமாக இருக்கச்செய்தேயும் குணங்களைப் போன்று சிலபொருள்கள் சேரக் காணாநின்றோமேயன்றோ.

வியக்தி ஜாதி -பசுமாடு –குணம் த்ரவ்யம் வெளுப்பு வேஷ்டி -வந்து அருளி -இரண்டு த்ரவ்யங்களா -த்ரவ்யமும் குணமும் போலேயோ –
த்ரவ்யமும் த்ரவ்யமும் சேர்ந்தால் இடை வெளி இருக்குமே -த்ரவ்ய குணங்கள் சேர்ந்தால் போலே சேர்ந்தார்கள் –த்ரவ்யமாக இருந்தாலும் –
ஆத்மா சரீரம் இரண்டும் த்ரவ்யம் ஞானமும் த்ரவ்யம் -போக்கு வரத்து உண்டே –
இருந்தாலும் கூடி இருக்கிறதே -கெட்டியாக -ஜீவாத்மாவும் பரமாத்மாவும் -குண வத் அப்ருதக் சித்தம் -விட்டுப் பிரியாமல் சார்ந்தே இருக்கும் –

என் நெஞ்சு இடம்கொண்ட வானவர் கொழுந்தே-
ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாகவுடையவன் என் நெஞ்சு பெறுகைக்குக் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன் ஆவதே! என்றது,
நித்திய சூரிகளுக்குத் தலையானவன் அன்றோ நித்திய சம்சாரிகளுக்குத் தலையான என் நெஞ்சு பெறுகைக்குப் பிரார்த்திக்கிறான் என்றபடி.
உலகுக்கு ஓர் முந்தைத் தாய் தந்தையே –
உலகத்துக்கு அத்விதீயனாய்ப் பழையனான தாயும் தமப்பனுமானவன்.
அங்கு இரண்டு தலையும் கூடி வருமே அன்றோ, இங்கு வெறும் ஒரு தலையேயாயிருக்கிறபடியைத் தெரிவித்தவாறு.
சேஷ சேஷி சம்பந்த ஞானம் இருவருக்கும் உண்டே -வானவர்களுக்கு –அவன் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக அன்றோ வந்து அருளுகிறான்
“உயிர்களுக்கு எவன் அழியாத தந்தையோ” என்கிறபடியே, நாலு நாட்கள் மணற் கொட்டகம் இட்டு விளையாடுமாறு போலே
அழியும் தாயும் தமப்பனும் அன்றோ அவர்கள், ஒருநாளும் அழியாத மாதா பிதாக்கள் அன்றோ இவர்கள்.
“சர்வேஷாம் ஏவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ: கச்சத்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:”
“மனிதர்களில் சிறந்தவர்களே! உலகங்களில் இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும் திருமாலானாவர்
தாயும் தந்தையுமாக இருக்கிறார்; காப்பாற்றுகின்றவரான இவரை உபாயமாக அடைமின்” என்றார் மார்க்கண்டேயரும் பாண்டவர்களைப் பார்த்து
“கச்சத்வம் – ஒருதலையாகாமே நீங்களும் அவனைப் பற்றப் பாருங்கோள்.”-நமஸ் கரித்தார்கள் ஜனார்த்தனம் –
இத்தால் சரணாகதி நமஸ்காரம் என்றதாயிற்று என்பர் -ஆபி முக்கியம் பண்ணி போகச் சொன்னான் -இங்கே அவனாக வந்து அருளினான் –

முழு ஏழு உலகம் உண்டாய் –
மாதாவானவள் பத்து மாதங்கள் வயிற்றிலே வைத்துத் தரிப்பது,
‘பிறந்து வளர்ந்தால் பின்னை நம்மைப் பாதுகாப்பவனாவான்’ என்னும் பிரயோஜனத்தைப் பற்றவே அன்றோ;
இவன் அங்ஙன் அன்றிக்கே, ‘இவைதாம் நோவு படாதொழியப் பெற்றோமே’ என்று இதனைத் தன் பேறாக நினைத்திருப்பான்.
செந்தொழிலவர் –
வேறு பிரயோஜனத்தைக் கருதாத நேர்மையையுடைய தொழில் விசேடத்தையுடையவர்களுடைய. என்றது,
தேஹி மே ததாமி தே – “எனக்கு ஒன்று கொடு, உனக்கு ஒன்று தருகிறேன்” என்னாதவர்கள் என்றபடி.
அன்றிக்கே, அவன் ரக்ஷணம் செய்வதைப் போலே இவர்களும் கைங்கரியம் செய்கின்றவர்கள் ஆதலின் ‘செந்தொழிலவர்’ என்கிறார் என்னுதல்.
இங்ஙன் அன்றாகில், வியர்த்தம் ஆமே.
வேத வேள்வி அறா –
வேத ஒலியும் வைதிக கார்யங்களின் கோலாகலமும் மாறாதே செல்லுகை.
பிராப்பிய விரோதியாதல் பிராபக விரோதியாதல் இல்லாமையாலே, நாய்ச்சிமாருடைய கலவியைப் போன்று நித்தியமாய்ச் செல்லாநிற்கும்.
காதலியை அணைக்கிறதற்கு வேறு ஒரு பலம் உண்டாகில் அன்றோ இதற்கு வேறு ஒரு பலம் உண்டாய் அவ்வளவிலே தலைக்கட்டுவது.
சிரீவர மங்கலநகர் அந்தம் இல் புகழாய் –
ஸ்ரீவைகுண்டத்திலே இருந்தானாகில் புகழுக்கு முடிவு உண்டு போலே காணும்
அடியேனை அகற்றேலே –
ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்குச் சென்று நீ படைத்த புகழை,
‘வேறு ஒரு கதியும் இல்லாதவனைக் கைவிட்டான்’ என்ற பழி ஆக்கித் தலைக்கட்டுவித்துக் கொள்ளப் பாராதே கொள்ளாய்.
’அகற்றேல்’ என்பது, அரைக்கணம் தாழ்க்கப் பொறுக்க மாட்டாமை சொல்லுகிற வார்த்தை.
விளம்பம் பொறாதார் சொல்லப் பெறுவர் போலே காணும்.
இறுக்கி அணைக்க கை நெகிழ அத்தையும் பொறுக்க மாட்டாமல் சொல்லும் வார்த்தை அன்றோ –
இதனுடைய இரக்ஷணத்தில் உன்னை ஒழிய வேறு ஒரு சம்பந்தம் உண்டாய்த் தான் அகற்றுகிறாயோ என்பார் ‘அடியேனை’ என்கிறார்.

————————————————————————————-

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8-

அகலுகைக்கு ஹேதுவான இந்த்ரியங்கள் -சம்சாரத்தில் -வசப்படுத்தி இருத்தி -அடியேனை அகற்றேலே -இத்தையே முன்பு சொல்லி –
சொன்னதையே தானே செய்வேன் -இந்த கார்யம் செய்து இருந்தால் நீர் சொல்லி இருக்க வேண்டுமே -கதை போலே
உனக்கு விதேயமாக இருக்க -இங்கு வைத்து அகற்றப் பார்க்கிறாயோ
அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்-உன் பக்கல் விமுகரை அகற்ற நீ உண்டாக்கி வைத்த -ஓன்று உடன் ஓன்று சேரா மாய –
குதிரை -இந்த்ரியங்கள் -கடிவாளம் மனஸ்-இத்தையும் இழுத்து போகும் -லோலாயமானம் -இந்த்ரிய ஹயைதி-
கெடுக்க மட்டும் ஒத்துப் போகும் -வலிய -ஆனால் ஒன்றுக்கு ஓன்று வேற தேடும் – மாய –
அஞ்சி இருக்கும் என்னையும் -விதேயமான என்னையும் -எலி பொறி -தூண்டில் மீன் -போலே -மயர்வற மதி நலம் அருளி இத்தை அறிந்தேன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்-உம்மைத் தொகை -என்னையும் -அறிவு பிறந்து அஞ்சி இருக்கும் என்னையும்
கால் வாங்கி கரை ஏற அரியதான -விஷயங்கள் சேற்றிலே தள்ளுது என்று அறிந்தேன் அஞ்சினேன்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்-விளங்கும் ஒளி-புகர் பாட பேதம் -மாடங்கள் ஓங்கி -நிர்வாகன்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே-நீ சங்கல்பம் வைக்கா விடில் அடைய அரிய-என் சுவாமி –
கோபிமார்க்கு-உன்னைக் கொடுக்க விரோதி பகாசுரன் வாயைப் பிளந்த சக்தன்
விரோதியைப் போக்காது ஒழிந்தது -அகற்ற நினைத்து -அழுத்த நினைப்போ –
கிணற்றில் விழுந்த குழந்தை தாய் வாங்கா விடில் -குற்றம் போலே –

உன் பக்கல் அன்பு இல்லாதாரை அகற்றுவதற்காக உன்னாலே உண்டாக்கி வைக்கப்பட்ட வஞ்சனைபொருந்திய கொடிய ஐந்து இந்திரியங்களான
அவற்றை உள்ளவாறே அறிந்தேன்; அவற்றின் தன்மையை அறிந்திருக்கிற என்னையும் நீக்கி, கரை ஏற அரிதான விஷயங்களாகிற சேற்றிலே
தள்ளிவிடுவாயோ என்று அஞ்சுகிறேன்; மிக்க ஒளியையுடைய மாணிக்கங்கள் பதித்த உயர்ந்த மாடங்களையுடைய ஸ்ரீவரமங்கை என்னும்
திவ்விய தேசத்தில் நித்திய வாசம் செய்கின்றவனே! என்றும் பேசுதற்கு அரிய எந்தையே! பகாசுரனுடைய வாயினைப் பிளந்தவனே!
வாணனே! எந்தாய்! பிளந்தானே! என்னையும் அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் என்க. வாழ்நன் என்பது, வாணன் என மரீஇயது.
கண்டாய்: முன்னிலை அசைச்சொல். பகர் – சொல்லப்படுகின்ற எனலுமாம். ‘பகற்கதிர்’ என்ற பாடம் சிறக்கும்.
புகற்கு அரிய – அன்பில்லாதார் அடைவதற்கு அரிய என்னலுமாம்.

உம்மை அகற்றுவதற்குக் காரணம் என்? இங்கு வந்து அண்மையினேனாய் நின்றது உமக்காக அன்றோ? என்ன,
அடிமைக்குப் பகையாக இருக்கின்ற ஐம்புல இன்பங்கள் நடையாடுகிற சம்சாரத்திலே வைத்த போதே
என்னை அகற்றினாய் அல்லையோ என்கிறார்.

அகற்ற நீ வைத்த –
சர்வசக்தியான நீ, உன்னை உகவாதார் அகன்று போம்படிக்குத் தகுதியாக,
“தைவீஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே” – ஸ்ரீகீதை, 7:14.
“என்னுடைய மாயை தாண்ட முடியாதது” என்று கொண்டு வைத்த.
மாயம் வல் ஐம்புலன்களாம் அவை –
ஆச்சரியமான செயல்களைச் செய்யக் கூடியனவாய்த் தப்ப ஒண்ணாதபடியாய் இருக்கிற ஐந்து இந்திரியங்களாகிறவை,
உன்னை விரும்பாதார் அகன்று போம்படிக்குத் தகுதியாகச் சர்வேச்வரனான நீ வைத்தவை.
நீர் எங்ஙனே இது அறிந்தபடி? என்ன,
நன்கு அறிந்தனன் –
மயர் வற மதி நலம் பெறுகையாலே நான் அழகிதாக அறிந்தனன்.
உகவாதார் அகன்று போகைக்கு வைத்தோமாகில், அதனால் உமக்கு என்? என்ன,
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் –
உன்னால் அல்லது செல்லாதபடியாயிருக்கிற என்னையும் உன்பக்கல் நின்றும் நீ பிரித்து,
கால்வாங்க ஒண்ணாதபடியான ஐம்புல இன்பங்களிலே தள்ளப் புகாநின்றாய்.
இந்த உடம்போடு எனக்கு ஒரு சம்பந்தம் அற்றிருக்க, நீ பொதுவான இதிலே வைக்கிறது கைவிடப் பார்த்தன்றோ?
நன்று; அவன்பக்கல் காரியம் கொள்ள நினைக்கிறவர், அருளில்லாதவர்களைச் சொல்லுமாறு போன்று கொடிதாகச் சொல்லுவான் என்? என்ன,
‘நமக்கே பழியாய் வந்து விளையப் புகாநின்றது’ என்று நீர்மையுடையார் காரியம் செய்து தலைக்கட்டுவர்கள் என்று நினைத்துச் சொல்லுகிறார்.

பகர்க் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை வாணனே –
மிக்க ஒளியை யுடைத்தாய், மணி மயமான மாடங்களின் ஓக்கத்தை யுடைத்தான சிரீவரமங்கைக்குப் பிரதானனானவனே!
பகர் என்பதும், கதிர் என்பதும் ஒருபொருட்சொற்கள்; மிக்க ஒளி என்பது பொருளாம்.
‘பகற்கதிர்’ என்று பாடமான போது, சூரியலோகம் வரையிலும் செல்ல உயர்ந்து ஒளியையுடைய மணி மாடங்கள் என்று பொருள் கூறுக. பகல் – சூரியன்.
என்றும் புகற்கு அரிய எந்தாய் – நீ, கிட்டாமல் செய்யுமதுவும் அழியச்செய்வதும் உகவாதாரை அன்றோ.
உனக்கே உரியனான என் விஷயத்திலும் அதனைச் செய்யவோ என்பார் ‘எந்தாய்’ என்கிறார்.
புள்ளின் வாய் பிளந்தானே –
உமக்குக் கிட்டுதற்குத் தட்டு என்? என்ன, பகாசுரனை அழித்தாற்போலே, என் சரீர சம்பந்தத்தைப் போக்கியருளாய் நான் வந்து கிட்டும்படி என்கிறார்.

——————————————————————————-

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.–5-7-9-

மிளகாய் சேர்க்காமல் மிளகு சேர்த்தே -நித்யமாக எண்ணெய் காப்பு என்பதால் –
ஆஸ்ரித விரோதி நிரசனத்தாலே -அத்யுஜ்ஜ்வல ஸ்வ பாவனாய்- கிருபை பண்ணி அடியேன் விரோதிகளை பிரகிருதி சம்பந்தம் அறுத்து அருள வேண்டும்
புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்!-விரோதிகளை போக்கி -இரட்டைகளை -மருது-ஸூ சகம்
-சுகம் துக்கம் -விருப்பு வெறுப்பு -குபேர மக்கள் சாப வசத்தால் நிற்க – நிர்த்த்வந்தம்
எருதேழ் அடர்த்த -அவஸ்தா சப்தகங்கள் -ஸூ சகம் -இது -கர்ப்பம் -தொடங்கி மரணம் -சுக துக்கம் -கொம்புகள் -ஔ ஒரு அவஸ்தையிலும் -14 -மர்த்திப்பவன் -அடக்கி
என்- கள்ள மாயவனே!-அரிய முடியாத கூட ஸ்வ பாவன் -ஸூ சகங்கள் பல உண்டே -பிரயத்தனத்தால் அரிய முடியாதே -எனக்கு பிரகாசிப்பித்த மாயவன்
கருமாணிக்கச் சுடரே!-ஆஸ்ரித விரோதிகளைப் போக்கி பெற்ற தேஜஸ்
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை-அநந்ய -ரஷ்யமாம் படி -தெளிவு உடையார் -அவனே ரஷகன் –
தெளிவுக்கு ஊற்று திவ்ய தேச வாசம் -பகவத் ஸ்வரூபாதி-
பிரதிபாதன்கள் உடைய -வேதங்கள் இவர்கள் இட்ட வழக்கு -வேத தாத்பர்யம் அறிந்து
திரு -வேதனத்தின் உண்மையான பாகம் -வேதாந்த தாத்பர்ய யாதாம்ய பாகம்
அவன் திருவடிகளே உபாயம் -அவன் திருவடிகளுக்கே கைங்கர்யம் -நாம் அநந்ய பிரயோஜனர் -ஸ்ரீ சம்பத் –
நெருங்கி வர்த்திக்கும் -குளிர்ந்த -சாம்சாரிக தாப பிரசங்கம் இல்லாத படி
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே-அனுபவிப்பைக்காக சந்நிஹிதன் ஆனாய்
-அநந்ய கதி -எனக்கு உன் திருவடிகளில் கைங்கர்யம் கொடுத்து அருள வேணும்

பகாசுரனுடைய வாயினைப் பிளந்தவனே! மருத மரங்களின் நடுவே போனவனே! இடபங்கள் ஏழனையும் கொன்ற என் கள்ள மாயவனே!
கரிய மாணிக்கத்தின் சுடரே! திருநான்மறைகளிலும் வல்லவர்களான தெளிந்த ஞானமுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் நிறைந்து வசிக்கின்ற
குளிர்ந்த ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்திற்குள் எழுந்தருளியிருக்கின்ற எந்தையே! எனக்கு உஜ்ஜிவிக்கும் வகையை அருள வேண்டும்.
வல்லார் : முற்றெச்சம். வல்லாராகிய தெள்ளியார் என்க. மலிதல் – மிகுதல். இருந்த: கால மயக்கம்.

“அருஞ்சேற்றில் வீழ்த்திகண்டாய்” என்று அஞ்சுகின்ற உமக்கு நான் செய்ய வேண்டுவது என்? என்ன,
சக்தனாய் அண்மையிலிருப்பவனாயிருக்கிற நீ என் விரோதியைப் போக்கி,
உன் திருவடிகளிலே கைங்கரியத்தைத் தந்தருள வேணும் என்கிறார்.

புள்ளின்வாய் பிளந்தாய் மருதிடை போயினாய் எருது ஏழ் அடர்த்த –
கலியர் சோறு இட்ட நாட்களை எண்ணுமாறு போன்று, பண்டு உபகரித்த படிகளைச் சொல்லுகிறார்.
பகாசுரனை அழித்தாய், இரட்டை மருதமரங்களைப் பொடிபடுத்தினாய், இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக நெரித்தாய்.
என் கள்ள மாயவனே –
ஒருவர்க்கும் தெரியாத ஆச்சரியமான செயல்களையுடையையாய், அவை எல்லாம் எனக்குத் தெரியும்படி செய்து,
என்னை அகப்படுத்திக் கொண்டவனே! -மற்றவர்க்கு கள்ளன் –மாயவன் -எனக்கு கள்ள மாயவன்
கரு மாணிக்கச் சுடரே –
நப்பின்னைப் பிராட்டியுடைய தடைகளைப் போக்கி, அவளுக்குக் கொடுத்த உடம்பின் வாசியை எனக்கும் அறிவித்தவனே!
தெள்ளியார் –
தங்கள் தங்களுக்கும் சில உண்டேயாகிலும், அவற்றைப் பொகட்டு அவன் கைபார்த்திருக்குமவர்கள்.
இவர்கள் ஞானத்துக்கு விநியோகம் இதுவே அன்றோ. என்றது,
“ராமஸ்ய வ்யவஸாயஜ்ஞா லக்ஷ்மணஸ்ய ச தீமத:
ந அத்யர்த்தம் க்ஷு ப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 4.
“இராமபிரானுடையவும் அறிவிற் சிறந்தவனான இலக்ஷ்மணனுடையவும் அபிப்பிராயத்தை அறிந்த சீதை கலங்கவில்லை” என்கிறபடியே,
தெய்வ நாயகனுக்கும் தெளிவு -பெருமாள் தனியாக ஸ்ரீ தண்ட காரண்யம் போக எதிர்த்து திருத்தின இளைய பெருமாள் சீதா பிராட்டி போலே என்றவாறு
அசோக வனத்திலே தனியிருப்பில் பிராட்டியின் தெளிவினைப் போன்ற தெளிவினையுடையவர்கள் என்றபடி.
அன்றிக்கே,
“உவாச ச மஹாபிராஜ்ஞ: ஸ்வரேண மஹதா மஹாந்
ஸுக்ரீவம் தாந் ச ஸம்ப்ரேக்ஷ்ய கஸ்தஏவ விபீஷண:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 9.
“சுக்கிரீவ மஹாராஜரையும் மற்றைய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துப் பெரிய சப்தத்தோடு சொன்னான்”என்கிறபடியே’
நலியா நின்றாலும் தாய் முகமே பார்த்துக் கிடக்கும் குழந்தையைப் போலே,
“வத்யதாம் – கொல்லுதற்குரியவன்” என்கிற மஹாராஜரையும், அவரிலும் கொடிய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துக் கொண்டிருந்த
ஸ்ரீ விபீஷணாழ்வான் தெளிவு போன்ற தெளிவினை யுடையவர்கள் என்னுதல்.
தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரண் இல்லை விரைகுழுவும் மலர்ப்பொழில்சூழ் விற்றுவக் கோட்டம்மானே
அரிசினத்தால் ஈன்றதாய அகற்றிடினும் மற்றவள்தன் அருள் நினைந்தே அழுங்குழவி யதுவே போன் றிருந்தேனே.–பெருமாள் திருமொழி.
“குழவி அலைப்பினும் அன்னே யென் றோடும்”-என்பது, நான்மணிக்கடிகை.

திருநான்மறைகள் வல்லார் –
நூறாயிரம் வரி எழுதியிருந்தாலும் அவற்றிற் போகாமல், தாத்பரியத்தைக் கிரகிக்குமவர்கள். என்றது,
ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே உத்தமன்பேர் ஏத்தும் திறமறிமின் ஏழைகாள் – ஓத்ததனை
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன்பேர் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.– இரண்டாம் திருவந். 39.- என்றிருக்குமவர்கள் என்றபடி.
மலி தண் சிரீவரமங்கையுள் இருந்த எந்தாய் –
அவர்கள் நெருங்கி வசிக்கின்ற சிரமஹரமான சிரீவரமங்கையிலே அவர்களைப் போன்று இருக்கின்ற என் நாதனே!
எனக்கு உய்யுமாறு அருளாய் அறச்சென்றற்றது கண்டாய்,–ஏஹி பஸ்யாமி சரீராணி போலே -விரஹ தாபம் தின்ற இவர் திருமேனியைக் காட்டுகிறார்
உன் திருவடிகளில் கைங்கர்யத்தைத் தந்தருள வேணும். -கைங்கரியம் என்றும், உய்கை என்றும் இரண்டு இல்லை இவர்க்கு.
விரைந்திலராகில் அவன் வைலக்ஷண்யத்தில் ஞானம் இல்லையாகக் கடவது,
இங்கே கால் பாவிற்றாகில் சம்சாரத்தின் தண்மையில் ஞானம் இல்லையாகக் கடவது.

———————————————————————————–

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-

ருசி காரயமாக அடையத் துடித்தாள் -பாதமே சரண் ஆக்கும் ஔதார்யம் -இங்கே கொழுந்து விடுமே
சரணங்களே தானே நம்மை பெற உபாயம் -என்று காட்டி அருளினான் -பிரகாசிப்பித்த இந்த உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையே
நான்கு நிவாகங்கள் -மூன்று இதிலும் மேலே ஒன்றும் -உபாயம் க்ருஹம் திருவடி ரஷணம்-நான்கு அர்த்தங்கள்
ஆராவமுது -அநந்ய கதித்வம் -அவதாரிகையில் -ரஷித்தா அர்த்தம் அங்கே வைத்தார் –
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் -பிராப்திக்கு வழி-புகலிடமான உபாயமாக -தந்து விட்டாய்
உனக் கோர் கைம்மாறு நான் ஒன்றிலேன்-பிரத்யுபகாரமாவது -அகிஞ்சனன்-நான் -ஒன்றும் இன்றிக்கே இருந்தேன்
என தாவியும் உனதே-ஆத்மாவும் பண்டே உன்னதே இருந்தது -திருமாலே நான் உனக்கு பழ வடியேன் 0அடிமைத் தனம் -அநாதி
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
சேற்றில் இடம் கொண்ட கரும்பும் செந்நெலும் -ஸ்ரமஹரமான திவ்ய தேசம்
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!-பரிமளம் மிக்கு -திரு அபிஷேகம் -தரித்து -நித்ய சூரிகள் நிர்வாகன்
சேஷி யாகையாலும் -போக்யதை -யாகையாலும் -விபூதி பூர்த்தியாலும் -பிரத்யுபகாரத்துக்கு யோக்யதை இல்லையே
கைங்கர்யம் தானே செய்ய முடியும் -ஸ்வாமிக்கு சேஷ பூதர்-

எனக்கு உபாயம் தருமிடத்தில் உனது திருவடிகளையே உபாயமாகத் தந்தாய்; அவ்வாறு தந்த உனக்குக் கொடுப்பதற்குரிய பிரதியுபகாரம்
நான் ஒன்றனையுடையேனல்லேன்; என்னுடைய உயிரும் உன்னுடையதே; சேற்றையுடைத்தான கரும்பும் பெரிய செந்நெற்பயிர்களும்
மிகுந்திருக்கின்ற குளிர்ந்த ஸ்ரீ வரமங்கை என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற வாசனை வீசுகின்ற பூக்கள் பொருந்திய
குளிர்ந்த திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடையவனே! தெய்வங்கட்குத் தலைவனே!
துழாய் முடியாய்! தெய்வநாயகனே! எனக்கு ஆறு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்குக் கைம்மாறு ஒன்று இலேன்;
எனது ஆவியும் உனதே என்க. ஆறு – வழி. சரண் – உபாயம். தந்தொழிந்தாய் – ஒருசொல்.

“அருளாய் உய்யுமாறு எனக்கு” என்றார், அப்போதே வந்து அருளக் கண்டிலர்; ஏதேனும் நிலையிலும்
‘உன் திருவடிகளே சரணம்” என்றிருக்கும்படி என்னைச் செய்தருளின மகோபகாரத்துக்குப் பிரதி உபகாரம் இல்லை என்கிறார்.
மகா விசுவாசம் அன்றோ ஆழ்வாருக்கு -எத்தனை கூப்பாடு போட்டாலும் இத்தே நிமை தானே இவருக்கு –
பண்ணினவற்றுக்கு குறை இல்லை -உண்டாய் உண்டு ஒழியாய் என்று இருந்தாலும் அதற்கும் உன் திருவடிகளே உபாயம் –

ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் –
1–உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம்படிசெய்து தந்தாயே என்று பிள்ளான் பணிப்பர்.
ஆறு – வழி. வழி – உபாயம்.
எவ்வாறு நடந்தனை? எம்மிராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே?” என்பது, பெருமாள் திருமொழி, 9 : 2.
“இப்பொய்கைக்கு”என்பது, நாய்ச்சியார் திருமொழி, 3 : 2.– என்னக்கடவதன்றோ. சரண் – உபேயம்.
சரண் –வீடு -புகலிடம் -பிராப்யம் ஆறு உபாயம் -நின் பாதங்களே உபாய உபேயம் என்றவாறு -ஏவகாரம்-சரண் ஆகிற நின் பாதமே எனக்கு ஆறு –
கரு முகைப் பூ மாலை சும்மாடு போலே -புருஷார்த்தமாக அனுபவிப்பதை புகல் இல்லாமல் உபாயம் ஆக்குகிறோம்
2-அன்றிக்கே. “இவை இரண்டாலும் உபாயத்தையே சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச்செய்வர்.
ஆறு – உபாயம். -நெடுமாற்கு அடிமை -ஒழிவில் காலம் எல்லாம் தானே உபேயம் –
“உபாயே க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த: ஸரணம் இதி அயம் வர்த்ததே ஸாம்ப்ரதம் ச ஏஷ: உபாயார்த்தைகவாசக:” என்பது, பாஞ்சராத்திரம்.
“சரணம் என்கிற இந்தச் சொல்லானது உபாயம், வீடு, காப்பவன் என்ற இம்மூன்று பொருள்களைக் காட்டும்;
இப்போது இந்தச் சரணம் என்ற சொல் உபாயத்தையே சொல்லாநின்றது” என்கையாலே ‘சரண்’ என்பதும் உபாயம்.
ஆக, எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றபடி.
பட்டர் நிர்வாஹத்துக்கு “எனக்கு ஆறு தருமிடத்தில், நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று
சொற்களைக் கூட்டிக் கோடல் தகும். எனக்கு – வேறு கைம்முதல் இல்லாத எனக்கு.
வேறு உபாயங்களை அநுஷ்டிக்கிறவர்களைக் காட்டிலும் தமக்கு உண்டான வேறுபாட்டினைச் சொல்லுகிறார் ‘எனக்கு’ என்ற சொல்லால்.
“நோற்ற நோன்பிலேன்”என்று தொடங்கி, வேறு உபாயம் இன்மையை முன்னிட்டுக்கொண்டு
உபாயத்தை அறுதியிடுகிற திருவாய்மொழி ஆகையாலே அதனையே நிகமிக்கிறது.
ஆறு எனக்கு -18-65 வரை சொன்னவற்றை நினைத்து -நின் பாதமே -உபாயாந்தரன்களை தள்ளி சரண் -உபாயமாக தந்து அருளினாய் –

‘நின்பாதமே’ என்ற ஏகாரத்தாலே–மாம் ஏகம் – ஏக பதத்தை நினைக்கிறது. -இத்தால் ச்வீகாரத்தில் உபாய புத்தியைத் தவிர்க்கிறது –
ஈச்வரனைப் பற்றின ஊற்றத்தாலே வேறு உபாயங்களை நெகிழுகை ஒழிய,
நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது வேறு விஷயங்களிலே ஈடுபாட்டிற்குக் காரணமாம்.
மருந்தினை யுண்டவன் ஒரு பாம்பின் வாயிலே கையினைக் கொடுத்தால் அது தீங்கினை விளையாதாம்,
மருந்து இல்லாதவன் அதனைச் செய்தால் அது மரணத்திற்குக் காரணமாம்.
இந்தத் தெளிவினைப் பிறப்பித்த உனக்கு ஒத்ததான பிரதி யுபகாரம் காணாத மாத்திரம் அன்றிக்கே,
கைம் முதல் இல்லாத நான் போலியா யிருப்பது ஒரு பிரதி யுபகாரமும் காண்கின்றிலேன்.
ஏன் வருந்துகிறீர், உம்முடைய ஆத்மாவைத் தந்தாலோ? என்ன,
எனது ஆவியும் உனதே –
அதுவும் செய்து நெஞ்சாறல் கெட்டிருப்பன் அன்றோ, நீ மயர்வற மதிநலம் அருளிற்றிலையாகில்.
ஆத்ம சமர்ப்பணம் செய்கையாவது, இராஜ மகேந்திரன் படியை எடுத்து ‘என்னது’ என்று கொண்டு
பெருமாளுக்குக் கொடுப்பாரைப் போன்று களவு வெளிப்படுதலே அன்றோ.
3-“சரண்-திருவடிகளை; ஆறாக எனக்குத் தந்தொழிந்தாய்; நின் பாதமே, எனது ஆவியும் உனதே” என்று கூட்டி
நின் பாதமே’ என்பதனைச் சபதமாக்கி நிர்வஹிப்பர் ஆப்பான் திருவழுந்தூர் அரையர்.
நின் பாதமே -உன் திருவடிகளில் ஆணை இட்டு சொல்கிறேன் -எனது ஆவியும் உனதே -என்கிறார் என்றபடி –
ரஷித்தா-அர்த்தம் மேலே அருளிச் செய்வார் –

ஹ்ருத் புண்டரீகத்தில்-எப்போதும் ஒளி விட்டு இருக்க சந்த்யா வந்தனம் –பண்ணாதவர் போலே
எம்பார்மனைவி உடன் கூடாமல் -இருள் தேடித் பார்த்தும் கிடைக்க வில்லை என்றார் –

சேறுகொள் கரும்பும் பெரும்செந்நெலும் மலி தண்சிரீவர மங்கை –
மிக்க சேற்றையுடைத்தான கரும்பும், அதற்கு நிழல் செய்யும்படியான செந்நெலும் மிக்குக் குளிர்ந்த சிரீவர மங்கை.
நாறு பூந் தண் துழாய் முடியாய்-
இதற்கெல்லாம் முதலியாக வைத்த வளையத்தை யுடையையாய்.
தெய்வ நாயகனே-
நித்திய சூரிகளுக்கு அதிபதியானவனே! தெய்வம்-தேவர்கள்.
எத்தனை யேனும் ஞானமுடையார்க்கும் நிர்வாஹகனாயிரா நின்றாய், ஆனபின்னர் நான் உனக்கு என்ன பிரதி யுபகாரம் பண்ணுவது.
நீயோ கனக்க உபகரித்துக்கொண்டு நின்றாய், நான் அறிவிலனாகப் பெற்றிலேன், இங்ஙனேயானாலும் நான்
சில செய்து தலைக்கட்டினேனாக ஒண்ணாதபடி நீ பரிபூர்ணனானாய். உபகாரம் கொள்ளாதார் உண்டு உடுத்துத் திரியா நின்றார்கள்,
அறிவு கேடரானவர்கள் ‘சில பிரதியுபகாரம் செய்தோம்’ என்றிரா நின்றார்கள்;
நீ நிறைவில்லாதவனாகில் இவை எல்லாம் சில செய்தனவாக நினைத்திருக்கலாமே அன்றோ,
நீயோ நிறைந்தவனாயிரா நின்றாய்; ஆனபின்னர், ஒன்று செய்து தலைக்கட்டப் போமோ.

———————————————————————————–

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11-

நித்ய ஸூ ரிகளுக்கு நிரந்தர போக்யர் ஆவார்கள்
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்-நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாகன் -நிருபாதிக ஒழிக்க ஒழியாத சம்பந்தம் -வாத்சல்யன் –
ஸூ சேஷ வஸ்துவுக்கு அந்ய அபிமானம் வாராதபடி அளந்து கொண்டவன்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்-கொய்து கொள்ள -பூக்கள் சம்ருதம்
செய்க ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்-ஸ்ரமஹரமான -மேவிய -உடன் -அர்த்தத்துடன் உடன்பட்டு
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே-பரமபத வாசிகளுக்கு எப்பொழுதும் பரம போக்யம்
7 சீர் இரண்டு அடிகள் -4 சீர் இரண்டு அடிகள்

நித்தியசூரிகளுக்குத் தலைவனும் நாராயணனும் திரி விக்கிரமனுமான சர்வேச்வரனுடைய திருவடிகளின்மேலே, பறித்துக் கொள்ளப்படுகின்ற
பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த ஆயிரம் திருப்பாசுரங்களுள், குளிர்ந்த
ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்தைப் பற்றிய இவை பத்துப் பாசுரங்களையும் அர்த்த ஞானத்தோடு பாட வல்லவர்கள்
நித்தியசூரிகளுக்கு எப்பொழுதும் தெவிட்டாத அமுதத்தைப் போன்றவராவர்.
ஆயிரத்துள் தண் சிரீவரமங்கை மேய இவை பத்தையும் உடன் பாட வல்லார் வானோர்க்கு வைகல் ஆராவமுது என்க. வைகல்-நாள்.

இத்திருவாய்மொழியைப் பொருள் அறிவோடு கற்குமவர்கள், நித்தியசூரிகளுக்கு என்றும் இனிய பொருளாவர் என்கிறார்.

தெய்வநாயகன் –
சர்வேச்வரன்.
நாரணன் –
தன்னுடைமை இழக்கவிடாத வத்சலன்.
திரிவிக்கிரமன் –
தன்னை இரந்தார்க்குத் தன்னை அழிய மாறியும் காரியத்தைச் செய்து தலைக்கட்டிக் கொடுக்குமவன்.
அடி இணைமிசை –
திருவடிகளிலே.
கொய்கொள் பூம்பொழில் –
நித்திய வசந்தமான சோலை என்றது, எப்போதும் கொய்கைக்குப் பக்குவமாயிருக்கை.
குருகூர்ச் சடகோபன் –
ஸ்ரீகீதையில் வேறுபாடு. செய்தஆயிரம் –
அர்த்தம் வேதார்த்தமே யாகிலும், வேதம் போலே தான் தோன்றியன்று ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது.
பரத்துவம் போலே வேதம், அவதாரம் போலே இதிகாச புராணங்கள், அர்ச்சாவதாரம் போலே திருவாய்மொழி. -செய்த ஆயிரம் அன்றோ.
அன்றிக்கே, தமப்பன் இல்லாத இழவு தீரச் சக்கரவர்த்திக்குப் பிள்ளையானாற் போன்று,
வேதமும் இவர் பக்கல் வந்து பிறந்தது ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது என்னுதல்.

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே – செய்யா
வதற்குரியர் அந்தணரே யாராயின் ஏனை இதற்குரியர் அல்லாதார் இல்.-என்பது, இங்கு ஒப்பு நோக்குதல் தகும். திருவள்ளுவமாலை, 23.

உடன்பாட வல்லார் –
அபிப்பிராயத்தோடு பாட வல்லார். என்றது, இவருடைய உபாய சூந்யதையை நினைத்துப் பாடவல்லார் என்றபடி.
வைகலும் வானோர்க்கு ஆராவமுதே –
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்தியசூரிகளுக்கு இனியபொருளாகப் பெறுவர்.
தேவசாதிகள் அமுதம் பெற்றுக் கிருதார்த்தராமாறு போலே, நித்தியசூரிகள் ‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘அமுதே’ என்கிறார்.
வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய அவர்கள்,
வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே,
வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள் நித்தியசூரிகளுக்கு அமுதாவர்.

———————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆஸ்வச்தவான் அத முனி
தஸ்மை நிவேத்ய
தத் உபாய தீ யைவ
கிஞ்சித் ஆஸ்வச்தவான்
ஏவஞ்ச சக
பரீத் அப்ரீத் சமமாக நாடாவாக இருக்க அனுகரித்து தரிக்கப் பார்த்தாரே –
அநவதிக அதிசய -அபிமதம் அடையாமல்
தத் ஆப்தௌ
இதர சாதன சூன்யதாம் –

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சர்பாத் அதிசேயதாத்
அதிரத பரணாத்
சா அநு கம்ப
சத் சாஹாயத்யாத்
அசேஷா அந்தர நிலதயத்
பூ சமுத்ருத
சர்வேஷாம் தாத பாவாத்
இதர ஜன துராதர்ஷன் ஆதி -ஆச்சர்ய சேஷ்டிதம்
சரண்யம் தீநாநாம் –

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 47-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

நோற்ற நோன்பாதி யிலேன்  உன் தனை விட்டாற்ற கில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே -சாற்றுகின்றேன்
இங்கு என்னிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது——————47-

—————————————————————————
அவதாரிகை –

இதில்
வானமாமலை திருவடிகளிலே வணங்கி
பிரவணராய்
சரணம் புக்க படியைப் பேசின பாசுரத்தை
அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அப்ரீதியாலே அனுகரித்து தரிக்க வேண்டும்படி அபிநிவேசம்
அதிசயித்து செல்லா நிற்கச் செய்தேயும்
ஸ்வ அபிமதம் பெறாமையாலே அவசன்னராய்
இப்படி அனுபவ ருசி ரூபமான
தம் அபிநிவேசத்தை சாதனமாகக் கருதி
அது முற்றினவாறே கார்யம் செகிறோம் என்று
ஈஸ்வரன் நினைத்து இருந்தானாகா கொண்டு
பேற்றுக்கு உறுப்பாக சாஸ்திர சித்தமான
கர்மாத் யுபாயங்களிலே
தமக்கு மறந்தும் அந்வயம் இல்லாமையை சொல்லிக் கொண்டு
அவன் அடியிலே காட்டின உபாயம் ஒழிய
வேறு ஒரு உபாயம் இல்லை -என்று
சம்சாரி சம்ரஷண அர்த்தமாக
பிராட்டிமாரோடும்
நித்ய பரிகரத்தோடும்
கூட ஸ்ரீவர மங்கையிலே வந்து எழுந்து அருளி இருக்கிற
வான மா மலை திருவடிகளிலே
வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிற
நோற்ற நோன்பில் – அர்த்தத்தை
அருளிச் செய்கிறார்
நோற்ற நோன்பாதியிலேன்-என்று தொடங்கி -என்கை-

————————————————————————————————————————————————–

வியாக்யானம்–

நோற்ற நோன்பாதியிலேன் –
இத்தால்
மோஷ சாதனமாக
சாஸ்திர சித்தமான
கர்மாதி உபாயங்களில் எனக்கு அந்வயம் இல்லை —
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராஷஸோ ராஷசேஸ்வரா
தச்யாஹம் அனுஜோ ப்ராதா விபீஷண இதி ஸ்ருத -இத்யாதிகளாலே
முன்னிட்டு சரணம் அடைந்தால் போலே
நோற்ற நோன்பிலேன் -என்கிற
பாட்டை கடாஷித்து அருளிச் செய்தபடி –

உன்தனை விட்டாற்ற கில்லேன் –
தாரகனுமாய்
போக்யனுமாய்
இருக்கிற உன்னை விட்டு
தரிக்க மாட்டு கிறிலேன்-
இவ் வாற்றாமை எனக்கு ஸ்வரூபம் இத்தனை —

ஆனால் பேற்றுக்கு சாதனம் என் என்னில் –
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே –
மோஷ உபாயம்
அரவின் அணை ஏறி வீற்று இருந்து -என்றும் –
சீவர மங்கை வாணனாய்-என்றும்
கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாடனாய்-
இப்படி அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற
தேவர்
அடியிலே அருளின நிர்ஹேதுக கிருபையே –
அதாவது –
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்றும்
தமியேனுக்கு அருளாய் -என்றும்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட -என்றும்
அருளாய் உய்யுமாறு -எனக்கு -என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -என்றும் –
அருளிச் செய்தவை-என்கை –
மற்றும் உண்டான பாட்டுக்கள் –
அருளுக்கு அடியான அவன் படிகளையும்
அதுக்கு உடலாகத் தம் படிகளையும்
அருளிச் செய்தவையாய் இருக்கும் –
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே சாற்றுகின்றேன் –
ஆகையாலே அவன் நிர்ஹேதுக கிருபையே சாதனம் –
என்னுமது எல்லாரும் அறியும்படி
பறை அறைந்து சாற்றுகின்றேன் -என்கிறார் –

இங்கு என்னிலை என்னும் –
இவ்விடத்தில்
இவ்வர்த்த விஷயத்தில் –
என்னுடைய நிஷ்டை இது என்னும்
அத்தலையில் பூர்த்தியாலே
இத்தலையில் ஆகிஞ்சன்யத்தை முன்னிடுகை இறே
பரதந்த்ரனான ஆத்மாவுக்கு
ஸ்வரூபம் என்னும் –

எழில் மாறன் -சொல் வல்லார்
சேஷத்வ
பாரதந்த்ர்யங்கள்
ஆகிற
ஆத்ம பூஷணத்தாலே
அபிராமராய் இருக்கிற ஆழ்வார் உடைய
வுபாய நிஷ்கர்ஷகமான இத் திருவாய் மொழியை
அப்யசிக்க வல்லார் –
அங்கு அமரர்க்கு ஆராவமுது –
அவ்விடத்தில்
அளப்பரிய ஆராமுதை அனுபவிக்கிற
நித்ய சூரிகளுக்கு நித்ய அபூர்வமான அம்ருதமாகப் பெறுவார்
சிரீவர மங்கை மேய பத்துடன் வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆரா வமுதே -என்றத்தை
அருளிச் செய்தபடி –

————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: