பகவத் விஷயம் காலஷேபம் -118- திருவாய்மொழி – -5-7-1….5-7-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

மேல் திருவாய்மொழியில் அநுகரித்துத் தரிக்கப்பார்த்தார்;
‘அநுகரித்துத் தரிக்க வேண்டும்படியான கலக்கம் பிறந்த இடத்திலும் வந்து முகங்காட்டிற்றிலன்; இதற்குக் காரணம் என்?
தன்பக்கல் ஆசை சிறிதுடையார்க்குத் தானே வந்து முகங்காட்டிக் காப்பாற்றக்கூடிய சர்வேச்வரன்
நம்பக்கல் ஆறி இருக்கைக்கு நிபந்தனம் என்?’ என்று பார்த்தார்;
‘இனி இங்ஙனேயாமித்தனை; நம் பிரகிருதி ஸ்வபாவத்தாலே தன்னால் அல்லது செல்லாதபடியாயிருப்பதோர் ஆற்றாமை உண்டாயிருந்தது;
‘அது நமக்கு ஸ்வரூபம்’ என்று அறியாதே ‘உபாயம்’ என்றிருந்தானாக வேணும் என்று பார்த்து,
தம் கையில் ஒன்று இல்லாமையை அறிவித்து அவன் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.

“ஆற்றகிற்கின்றிலேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘உபாயம் என்றிருந்தானாக வேணும்’ என்றது,
ஆற்றாமையாவது சிநேகமாய், சிநேகத்தை முன்னாகக் கொண்ட தியானம் பக்தி யாகையாலே,
இது உபாயமாகவேணும் என்றிருந்தானாகவேணும் என்றபடி.–பிரசக்தி -தஸ்ய பிரதி நிஷேதம் -இருந்தால் தானே சொல்ல வேண்டும் –

கடற்கரையின் வெளியில் மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும், லக்ஷ்மணம் புண்ய லக்ஷ்மணம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:7.-
“புண்ணியத்தையே இலக்ஷணமாகவுடைய இளையபெருமாள்” என்கிற தம்பியோடுங்கூட எழுந்தருளியிருக்க,
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர: தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத:” என்பது, ஸ்ரீராமா. யுத். 17:10.
ஸ்ரீவிபீஷணாழ்வான் “கெட்ட ஒழுக்கத்தையுடையவன், இராவணன் என்று பிரசித்தி பெற்றவன், அரக்கர்களுக்கெல்லாம் அரசனான
அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; விபீஷணன் என்று பிரசித்தி பெற்றவன்” என்று தன்னுடைய தாழ்ச்சியை
முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே, இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர,
பிராட்டிமாரோடும் நித்திய பரிகரத்தோடுங் கூடச் சிரீவரமங்கல நகரிலே திருவனந்தாழ்வான் மேலே எழுந்தருளியிருக்கின்ற
வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார்.
இவர் தாம் என் கொண்டு அவனை வடிம்பிடப் பார்க்கிறது என்னில், அவன் காத்தற்குரிய பொருள்களை விரும்பியுள்ளான்,
காவலனை விரும்புதல் தமக்கு உண்டாயிருந்தது; ஆன பின்னர், இதற்கு மேற்பட சம்பந்தம் உண்டோ? என்று.

நோற்ற நோன்பு -நாலிலும் சரணாகதி -ரகஸ்ய த்வயம் படி-திருமந்தரம் -சரம ஸ்லோகம்
-5-7 முதல் 6-10 நாராயணா –சராணாகதி பூர்வாக கல்யாண குணங்கள் அனுபவம்
6-10- வாக்ய த்வயம் பிரக்ரியை படி சரணாகதி –
ஸ்ரீ வைகுண்ட இருப்பு போலே -சேவை -அமர்ந்த திருக் கோலம் -கூந்தல் –கேள்வன் -வைகுண்ட நாதன் -ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம்
-தோத்தாத்ரி -தெற்கு கோடி வடக்குக் கோடி அமர்ந்த திருக் கோலம் -பத்ரி -சிசால் -நாராயணன் -நடுவில் நின்றது -திருவேங்கடம் -கிடந்தது ஸ்ரீ ரெங்கம் மட்டுமே
நாச்சியார் அனுக்ரகம் -பொன்னடிக்கால் ஜீயர் -பெண்ணாகப் பாவித்து -கனுப்பொடிக்கு இன்றும் ஸ்வாமி திருமடத்துக்கு -உத்சவம் கண்டு அனுபவிக்கிறார் –
ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் ஔதார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் -சூர்ணிகை -163-

——————————————————————————————————–

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-

உன்னை லபிக்கைக்கு -சாஸ்திர உக்தமான உபாயங்கள் இல்லை -உன்னை ஒழிய செல்லாதபடி அபி நிவிஷ்டனான நான் –
விட்டுப் பிரிந்து இருக்க முடியாத நான் –ஆஸ்ரித சம்ச்லேஷத்தால் உபகாரகன் நீ -மித்ரா பாவேன-அத்வேஷம் மாத்ரமே பற்றாசாக
-அவசர பிரதீஷனான உனக்குப் புறம்போ சாஸ்திர உக்த உபாயம் இல்லை -உனக்கு நான் புறம்போ -நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்
உம்மை ஒழிய செல்லாமை அபி நிவிஷமமும் இருக்கு -ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன்–உனக்கு நான் புறம்போ
நீரும் உபகாரகன் -உனக்கு நான் புறம்போ -அரவின் அணை அம்மானே!
ரஷகன் தேடி அவசர பிரதீஷன் -உனக்கு நான் புறம்போ -சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்!
நான்கு காரணங்கள்
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்
பல வியாப்தமாம் படி அனுஷ்டிதமாம் படி நோன்பு –
நோற்ற அடை மொழி -பலத்துடன் சேர வேண்டுமே -கர்ம யோகம் உடையேன் அல்லேன்
ஆகையாலே -நுண் அறிவும் இல்லை -சுதர்ம -கர்ம யோகம் -ஞான வைராக்கியம் உடன் செய்ய -த்ரிவித பரித்யாகம் –
சமதா அசலா புத்தி -மனசில் தெளிவு பிறந்து -ஞான யோகம் அமரும் –
ஜன்மாந்திர சகஸ்ரேஷூ -கிருஷ்ண பக்தி -பக்தி ஆரம்ப விரோதிகளை எரிக்க கர்ம ஞான யோகங்கள் –
மோஷ விரோதி பாபங்கள் போன பின்பே -உபாசன மகாத்ம்யத்தால் அழித்து
பிராரப்ய கர்மாக்கள் தொலைத்து –
ஞான யோகத்தால் மட்டும் -புலன்களை அடக்கின உத்தம அதிகாரிகளுக்கு -ஒரு சிலருக்கு -யோக்யதை இருந்தாலும் கர்ம யோகம் தான் பண்ண வேண்டும்
நம்மைப் பார்த்து பிறர் பின்பற்றும்படி இருப்பதால்
கர்ம யோகம் இல்லாமல் ஞான யோகம் வர பிரசக்தி இல்லை -ஸூ ஷ்மம் நுண் அறிவு
ஆகிலும்-பக்தி யோகம் இல்லை தெளிவாக சொல்லாமல் -பகவத் பிராப்திக்கு -இது வேண்டுமே -கர்ம ஞான யோகம் ஆத்மா சாஷாத்காரம் தான் கொடுக்கும் –
பக்திஸ்ஸ ஞான விசேஷம் -மற்றவர் -சொல்லி இருக்க -அறிவு ஒன்றும் இல்லாத மூன்றையும் –
அறிவு -அறிவு ஓன்று -அறிவு ஒன்றும் – ந பக்திமான் -நின் கண் பக்தன் அல்லன் -உபய சாத்தியமான பக்தி இன்றிக்கே இருக்கச் செய்தேயும் –
3 அத்யாயம் -கர்ம யோகம் -நேராக ஆத்மா சாஷாத்காரம் –
ஞான யோகம் தான் வேண்டாம் -கர்மத்திலே ஞான பாகம் உண்டே -அது வேணும் -ஞான பாகமே ஏற்றம் –
அதுவே ஞான யோகம் பண்ணும் கார்யம் -பலமும் கொடுக்கும் -இத்தை 4 அத்யாயத்தில் விளக்கி -ஆகிலும் இதனால் –
இனி உன்னை விட்டொன்று-ஆற்ற கிற்கின்றிலேன் -இனி -உன்னுடைய குண அனுசந்தானம் பிறந்த பின்பு -ரஷணைக சீலனான உன்னை
ஒரு வினாடி பொழுதிலும் விட்டு இருக்க வல்லேன்
அரவின் அணை அம்மானே!ஆஸ்ரித சேஷனுக்கு திருமேனி உபகரித்த அசாதாராண ஸ்வாமி -ஸ்பர்சத்தால் விகஸித்த-
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
சேற்று நிலத்தில் தாமரை -புஷ்கரணி -பெயர் -செந்நெல் உடன் கலந்து -தர்ச நீயமான -நெல் குடை போலே தாமரைக்கு இருக்குமே –
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.-ஆஸ்ரித சம் ரஷணத்துக்கு -இத்தால் அடியேனுக்கு உபகாரம்
ரஷண சீலனான உனக்கு ரஷ்ய பஹிர் பூதன் அல்லேன்

செய்த கர்மயோகத்தையுடையேனல்லேன், ஞான யோகத்தையுடையேனல்லேன், அப்படியானாலும், இனி உன்னைப் பிரியச் சிறிதுபொழுதும்
பொறுக்கமாட்டுகின்றிலேன்; ஆதிசேஷசயனத்தையுடைய அம்மானே! சேற்று நிலங்களிலே தாமரைகள் செந்நெற்பயிர்களுக்கு மத்தியில்
மலர்கின்ற ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்தில் வீற்றிருக்கின்ற எந்தையே! காப்பாற்றுகின்ற உனக்கு அங்கே புறம்பு அல்லேன்.
அம்மானே! எந்தாய்! நோன்பிலேன், நுண்ணறிவிலேன், ஆகிலும் உன்னை விட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்,
உனக்கு அங்குமிகை அல்லேன் என்க. ஒன்றும் – சிறிதும். கில்: ஆற்றலையுணர்த்தும் இடைச்சொல்.
கிற்கின்றிலேன் – ஆற்றலையுடையேனல்லேன். வீற்றிருந்த : காலமயக்கம்.
இத்திருவாய்மொழி ஆசிரியத்துறை.

என்னுடைய பேற்றுக்குக் காரணமாயிருப்பதொரு கைம்முதல் என்னிடத்தில் இல்லை,
இல்லாமையாலே ரக்ஷகன் வேண்டும் என்ற விருப்பம் உண்டு;
பரிபூர்ணரான தேவர், காத்தற்குரிய பொருள்களை விரும்புகின்றவராய் இருந்தீர்;
ஆகையாலே, தேவரே என் விருப்பத்தை முடித்தருள வேண்டும் என்கிறார்.

“நோற்ற நோன்பிலேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘என்னுடைய’ என்று தொடங்கியும்,
“ஆற்றகிற்கின்றிலேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘ரக்ஷகன் வேண்டும்’ என்று தொடங்கியும்,
“சிரீவரமங்கலநகர் வீற்றிருந்த” என்றதனைத் திருவுள்ளம்பற்றிக் ‘காத்தற்குரிய பொருள்களை’ என்று தொடங்கியும் அருளிச்செய்கிறார்.
மேல் திருப்பாசுரத்திலே “அருளாய்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘என் விருப்பத்தை முடித்தருள வேண்டும்’ என்கிறார்.

நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் –
கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேன் அல்லேன், ஞானயோகத்தையுடையேன் அல்லேன்,
உன்னுடைய திருவடிகளில் பக்தியுடையேன் அல்லேன்” என்கிறார்.
“ந தர்மநிஷ்டோஸ்மி நச ஆத்மவேதீ ந பக்திமான் த்வத் சரணாரவிந்தே
அகிஞ்சந : அநந்யகதி : ஸரண்ய த்வத் பாதமூலம் ஸரணம் ப்ரபத்யே”.
“ந தர்ம நிஷ்டோஸ்மி –
கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேனல்லேன்” என்றது, நாட்டார் ‘இவன் சில செய்யா நின்றான்’ என்றிருக்கைக்கும்,
அது கண்டு நான் ‘நமக்குச் சில உண்டு ஆகாதே’ என்று மயங்குவதற்கும், நீ கை விடுகைக்கும் வேண்டுவது உண்டு;
ஆனால் பலத்தோடே கூடியிருப்பது ஒன்று இல்லை என்றபடி.-ந தர்மவான் அஸ்மி சொல்லாமல் நிஷ்டை இல்லை என்கிறார்-
“ந ச ஆத்மவேதீ-
ஞானயோகமுடையேனல்லேன்” என்றது, தாச்சீல் யந் –தத் ஸ்வ பாவம் -தோன்ற இருப்பன், எனக்கு அதுதானும் இல்லை.ஆத்மா வேதன ஸ்வ பாவமும் இல்லை
“தத் ஞானம்; அஜ்ஞானம் அத: அந்யத்உக்தம்”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 5 : 57.
“அந்தப் பரமனைப் பற்றிய ஞானம்தான் ஞானம் என்ற சொல்லால் சொல்லக்கூடியது; ஆகையால், மேற்சொல்லிய ஞானத்திற்கு வேறானது
அஜ்ஞானமாகச் சொல்லப்பட்டது” என்கிறபடியே,அல்ப ஞானம் இருந்தாலும் லௌகிக ஞானத்துடன் கூடி இருக்குமே
ஆத்மாவைப் பற்றிய உண்மையான ஞானத்தை முன்னாகக் கொண்ட ஈச்வர ஞானம் எனக்கு இல்லை என்றபடி.
“ந பக்திமான்-
பக்தியுடையேனல்லேன்”பக்தி இல்லை என்று சொல்ல வேண்டாவே அன்றோ,
மேற்சொல்லிய அவை இரண்டும் உண்டானால் வருமதுவே அன்றோ அது. அவை இரண்டும் இல்லாமையாலே, பக்தியும் இல்லை என்கிறார் என்றபடி.
‘நோன்பிலேன்’ என்ன அமையாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்ன வேண்டுமோ? என்ன
சாதனங்களைச் சமைய அநுஷ்டித்து, பலத்தோடே கூடியிருப்பதாகப் பார்த்திருக்கலாவது ஒன்று இல்லை என்கைக்காகச் சொல்லுகிறார்.
என்றது, சக்கர்வர்த்தி, ஸ்ரீ வசுதேவரைப் போலே பேற்றுக்கு அடியாக நினைத்திருக்கலாவது ஒன்றில்லை என்றபடி.
“ந தர்மநிஷ்டோஸ்மி –
கர்மயோகத்தில் நிஷ்டையுடையேனல்லேன்” என்கிற இடத்தில், ‘தர்மம் இல்லை’ என்னாமல், தர்மநிஷ்டனாகப் பெறுகின்றிலேன் என்றாற்போலே,
‘அறிவிலேன்’ என்னாமல், ‘நுண்ணறிவிலேன்’ என்கிறார். என்றது,
ஆத்ம ஞானம் முன்னாகப் பரம்பொருளின் சொரூபத்தைக் காணும் அளவாக அறியும் அறிவை யுடையேனல்லேன் என்றபடி.

“ந பக்திமான்” என்றும், “நின்கணும் பக்தன் அல்லேன்” என்றும் எடுத்துக் கழித்த அளவு
இங்கும் எடுத்துக்கழியாது ஒழிவான் என்? என்னில்,
குளித்து மூன்றனலை யோம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன் என் கணில்லை; நின் கணும் பத்தனல்லேன்;
களிப்ப தென் கொண்டு? நம்பி! கடல்வண்ணா! கதறுகின்றேன்; அளித்தெனக் கருள்செய் கண்டாய் அரங்கமா நகருளானே.– திருமாலை, 25.
“கரும ஞானங்களால் அலங்காரம் பண்ணப்பட்ட மனத்தையுடையவனுக்கு” என்கிறபடியே,
அவை இரண்டும் உண்டானால் வருமதுவே யன்றோ பக்தி; அவை இல்லாமையாலே எடுத்துக் கழிக்கவும் வேண்டாவே அன்றோ.
ஆனால், இதைப் போன்று, ‘கர்மம் இல்லை’ என்ற போதே, ‘ஞானம் இல்லை’ என்பது போதருமே அன்றோ,
அதனை எடுத்துக் கழிக்க வேண்டுவது என்? என்னில், முற்பிறவியில் கர்மங்கள் முடிந்த அளவிலே மரணம் உண்டானால்
அடுத்த பிறவியிலே ஞானம் உண்டாகக் கடவது. ஆயின், பக்தியும் அப்படி ஆனாலோ? என்னில்,
ஞான கர்மங்கள் இரண்டும் உண்டானால்
பக்திஸ்ச ஞான விஸேஷ:” என்றும், “ஞானம் கனிந்த நலம்” என்றும் சொல்லுகிறபடியே,
பக்தி கூடி அல்லது நில்லாது, ஆன பின்பு, இங்கு அப்படி ஆக ஒண்ணாது.
‘உன்னைவிட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்’ என்று இவர் சொல்லுகிற இது, பக்தி அன்றோ,
“உபய பரிகர்மித ஸ்வ அந்தஸ்ய ஏகாந்தி காத்யந்திக பக்தியோ கைகலப்ய:”-என்பது, — ஏகாந்திக அத்யந்திக -அவனைப் பற்றியே இடைவிடாமல் –
ஆத்மசித்தி“சிநேகத்தை முன்னிட்ட தியானமானது பக்தி” அன்றோ; ஆனபின்பு, இது உபாயம் ஆனாலோ? என்ன,
அங்ஙனம் ஒண்ணாது அன்றோ,
கரும ஞானங்களோடு கூடியுள்ள மனத்தை யுடையவனுக்கு உண்டாகும் பரபக்தி அன்றோ சாஸ்திரங்களில் சாதனமாகச் சொல்லிப் போருகிறது;
“ஸ்நேஹ பூர்வம் அநுத்யானம் பக்தி: இதி அபிதீயதே பஜ இதி ஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித:
தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி ஸப்தேந பூயஸீ”
இது, அங்ஙன் அன்றிக்கே, அவனுடைய திருவருள் காரணமாக வந்தது ஆகையாலே இது ஸ்வரூபமாமித்தனை.
அங்ஙன் அன்றிக்கே, புராணங்களிலே தனித்தனியே கர்ம ஞானங்களைச் சாதனமாகச் சொல்லுகையாலே சொல்லிற்றாகவுமாம்.
“ஜ்ஞான பக்தி அந்விதம் கர்ம ஜனகாதிஷு த்ருஸ்யதே கர்ம பக்தி அந்விதம் ஜ்ஞானம் ப்ராயேண பரதாதிஷு
கர்ம ஜ்ஞாநாந் விதா பக்தி: ப்ரஹ்லாத ப்ரமுகாஸ்ரயா”-என்ற சுலோகம் இங்கே நோக்கல் தகும்.
கர்ம ஞான ரஹித்யம் -பக்தி ராஹித்தியம் உப லஷணம் -சாதனம் இல்லை என்றால் சாத்தியம் இருக்காதே

அவை இல்லையாகில், முதல் இல்லாதார் பலிசை இழக்குமத்தனை அன்றோ? என்ன,
ஆகிலும் –
இங்ஙனம்இருந்தேயாகிலும்.
‘ஆற்றகிற்கின்றிலேன்’
என்னுமிதனை, ‘உபாயம்’ என்றிருந்தாராகில், ‘ஆகிலும்’ என்கைக்கு இடம் இல்லை. ஆனால், நீர் இந்நாள்வரை ஆறி இருந்தீரே? என்ன,
இனி-உன்னையும் அறியாதே என்னையும் அறியாதே இருந்த அன்று இழக்க அமையாதோ,
உன் நிறைவும் என்குறைவும் அறிந்த இன்றும் இழக்க வேண்டுமோ? ஒருவன் கையிலே சோறும் உண்டாய் அவன் இடுவானுமானால்,
ஒருவனுக்குச் சோறும் இன்றிக்கே பசியனும் ஆனால் இழக்க வேணுமோ?
இனி – என் கையிலேயும் ஒன்று உண்டாய் அது சமையும் தனையும் ஆறி இருக்கிறேனோ.
ஸ்வரூபத்தை உபாயத்திலே செலவு எழுதிக் கைவிடப் பார்க்கில் பார்க்குமித்தனை.
அநாதி காலம் மெய்மறந்து இழந்த காலம் போராதோ, நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேண்டுமோ?
உன்னைவிட்டு
– நீயும் என்னைப் போலே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ, நானும் சிறிது செய்து வரவேண்டும்படியோ நீ இருக்கிறது.
அன்றிக்கே, உயிரை விட்டு உடல் தரிக்கவற்றோ என்னலுமாம்.
ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன் –
உன்னுடைய ஸ்வரூபஞானம் என்னுடைய தாரணத்துக்குக் காரணமாய் இருக்கிறதில்லை.
“அங்ஙனம் அழைத்துக்கொண்டு செல்லும் செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று ஆறி இருக்கைக்கும் ஒருவழி உண்டே அன்றோ அவளுக்கு.
கடலை அணை செய்யவும் இராவணனை அழியச் செய்யவும் வேண்டாவே அன்றோ இவளுக்கு.
இதுகாறும் தம்முடைய நிறைவின்மையைச் சொன்னார்; இனி, அவனுடைய பூர்த்தியைச் சொல்லுகிறார்:
அரவின் அணைஅம்மானே –
அரவினை அணையாகவுடைய சர்வேச்வரனே!
பாம்பினைப் படுக்கையாகவுடைமை, அறப் பெரியவனாந் தன்மைக்கு இலக்கணமே அன்றோ.
உன்னுடைய போகப் பிராவண்யம் என்னால் ஆறி இருக்கலாயிருக்கிறதோ? நீ பரமபோகியாயிருக்க, என்னால் ஆறியிருக்கப்போமோ?

சேற்றுத் தாமரை செந்நெலூடு வளர் சிரீவரமங்கல நகர் –
சேறுகளிலே தாமரைகளானவை செந்நெலூடே அவற்றுக்கு அணுக்கன் இட்டாற்போலே அலரா நிற்கின்ற தேசம்.
“நித்தியஸூரிகளுடைய நகரம் அயோத்தி என்னும் பரமபதம்” என்னும்படியான பரமபதத்திற் காட்டில் தனக்கு நகரமாக விரும்பி வாழ்கின்ற தேசம்.
சம்சாரிகளுடைய இரக்ஷணத்துக்காக நித்தியவாசம் செய்யும் தேசம். பரமபதத்தையும் மறக்கச் செய்யும் தேசம் என்பார்
‘சேற்றுத்தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கல நகர்’ என்கிறார்.
அன்றிக்கே, அரசர்கள் எடுத்துவிட்ட இடத்தே பரிகரமும் புகுமித்தனை யன்றோ என்னுதல்.

வீற்றிருந்த-
‘அங்கே இருக்கக்கூடிய நமக்கு, இவ்விருப்பு இருக்க வேண்டாநின்றதே!’ என்னும் வெறுப்போடு அன்றிக்கே,
தட்டியிலிருந்தவன் முடி சூடினாற்போலே தன் வேறுபாடு தோற்ற இருக்கை
எந்தாய் –
அங்குத்தை இருப்பு நித்தியசூரிகளுக்கு ஆனாற்போலே, இவ்விருப்பு எனக்காக அன்றோ இருக்கிறது.
சிரீவரமங்கல நகரான அங்கே வீற்றிருந்த எந்தாய்! என்க.
உனக்கு மிகை அல்லேன் –
பரமபதத்திலே நெடுங்கை நீட்டாக இருந்தாயாகில் நான் தரித்திருக்கலாயிற்றே, எனக்காக வந்த இடத்தை நான் இழக்கவோ.
அங்கே வீற்றிருந்த உனக்கு மிகை அல்லேன் –
காக்கும் பொருள்களைத் தேடிக்கொண்டிருக்கின்ற உனக்குப் புறம்பு அல்லேன்.
அன்றிக்கே, உனக்கு மிகை அல்லேன் –
“குருஷ்வ மாம் அநுசரம் வைதர்மம் நேஹ வித்யதே க்ருதார்த்த : அஹம் பவிஷ்யாமி தவச அர்த்த: ப்ரகல்பதே”-என்பது,
ஸ்ரீராமா. அயோத். 31 : 32. பெருமாளைப் பார்த்து இளையபெருமாள் கூறியது.
“என்னை அடியவனாகக் கொள்வதில் சேவ்ய சேவக பாவம் மாறாடிக் கிடக்கிறது இல்லை” என்று,
மற்றைப் போதைக்கு நான் இரேன். என்றது, உனக்கு மிகையானபோது அல்லேனாய் விடுவேன் என்றவாறு.
இத்தால் தமக்கு இலாபம் என்? என்ன, அங்கே “தேவரீருக்கே பிரயோஜனம் கிடைக்கப் போகிறது” என்கிறபடியே,
இத்தால் வரும் பிரயோஜனமும் தேவரீருடையதே.
பால்குடிக்கும் குழந்தையை, பால்குடித்து வயிறு நிறையக்கண்டு உகக்கும் தாயைப் போலே, அடிமையாக இருப்பவன்
ஸ்வரூபம் பெற்று அடிமைசெய்கை சேஷிக்குப் பேறே அன்றோ.

தமேவ சரணம் கச்ச -தம் சப்தம் மாம் என்று தன்னையே காட்டுகிறான் -சர்வ தர்மான்-சரம ஸ்லோகம் -சரணாகதி
ஸ்வா தந்திர லேசம் உள்ளவனுக்கு புரியாதே -பிரவ்ருத்தி மார்க்க நிஷ்டன் -ஷத்ரியன் அன்றோ
18-65 மீண்டும் 9 அத்யாயம் ஸ்லோகம் மன்மனாபவ சொல்லி -பக்தி ஆரம்ப விரோதி பாபங்களைப் போக்க
தன்னைப் பற்ற அருளிச் செய்து பக்தி மார்க்கம்
ரகஸ்ய த்ரயத்தில் தான் இது பிரபன்னனுக்கு –ஸ்வ தந்திர பிரபத்தி -ஸ்ரீ கீதையில் அங்க பிரபத்தி –
சர்வ தர்மான் – -தர்மம் -பிராயச்சித்த தர்மங்களை விட்டு -அந்த ஸ்தானத்தில் இவனைப் பற்றி -சர்வ பாபேப்யோ பக்தி
ஆரம்ப விரோதிகளைப் போக்க –தன்னைக் குறைத்து இப்படி அருளிச் செய்கிறானே -சர்வேஸ்வரன் –
மோஷ உபாயமாக பற்றச் சொல்லி ரகஸ்ய த்ரயத்தில் –
கை முதல் இல்லை -ஆகிஞ்சன்யம் / போக்கிடம் இல்லை -அநந்ய கதித்வம் -நாலு பேர் உடன் விபீஷணன் இவற்றைக் காட்ட –
ஆகிஞ்சன்யம் நோற்ற நோன்பு திருவாய்மொழி –அநந்ய கதித்வம் -ஆராவமுது திருவாய்மொழி –
த்வயார்த்தம் தீர்க்க சரணாகதி என்பது சார சங்க்ரஹத்தில் அருளிச் செய்தார் –
அபாய பிரதான சாரமான ஸ்ரீ ராமாயணமும் தீர்க்க சரணாகதியான திருவாய் மொழியும் தானே சம்ப்ரதாயத்துக்கு அரண்கள் –

————————————————————————————–

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-

அநந்தரம் -என்னை அங்கீ கரிக்கைக்கு அநிஷ்டம் பிரதிபந்தங்கள் உண்டானாலும் -நிவர்த்தகன் நீ ஆகையாலே -செய்து அருள வேண்டும்
அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் -சித்த சாதன நிஷ்டன் முடிந்து ஆனந்திப்பதோ ஆரம்பித்து அலமாந்து இருப்பதோ இல்லை
-நித்ய சூரிகள் நித்ய சம்சாரிகள் இரண்டிலும் இல்லை –
நிஷ்பன்ன உபாயனாய்க் கொண்டு -செய்த வேள்வியர் -க்ருத க்ருத்யர் -நீ இருக்கும் பிராப்ய பூமியில் இல்லை
உபாய ஸூநயமாய் ஆறி இருக்கை அன்றோ உள்ளது -நிர பேஷனாய் இங்கும் இல்லை
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான் -அள்ள அள்ள குறை அற்ற போக்யன் -அடைய துடிப்பு அபி நிவேசம் மிக்கு
அந்ய பரரான லௌகிகர் -நிலைகள் ஒன்றிலும் அல்லேன் எங்குற்றேனுமலேன்
இலங்கை செற்ற அம்மானே!-ஆஸ்ரித விஷயத்தில் பிரதி பந்தகமான இலங்கையை அழித்து சீதையை கொண்டாயே
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை-சந்தரன் பதம் அளவும் உயர்ந்த மாடங்கள் -பிற்பாடர் இழக்காத படி
நித்ய வாசம் -செய்து அருளும்
சங்கு சக்கரத்தாய்! -ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு பரிகரம் உண்டே -போக்யமாயும் உள்ள திவ்யாயுதங்கள்-உண்டே
தமியேனுக்கு அருளாயே.-தனியேனுக்கு-உன்னை ஒழிய துணை இல்லாத -லோகத்தில் யார் உடனும் பொருந்தாத –
நித்ய முக்தர் பத்தர் முமுஷுக்கள் ஈஸ்வரன் -விலஷணர் அன்றோ ஆழ்வார் -கிருபை பண்ண வேண்டும் –

ஒரு சாதனத்தைச் செய்து முக்தியை அடைந்தவனாயிருக்கிறேன் அல்லேன், சாதனத்தைச் செய்கின்றவர்களில் ஒருவனாயிருக்கிறேன் அல்லேன்,
உன்னைக் காண வேண்டும் என்கிற ஆசையிலே அகப்பட்டு நான் உபாயங்களைச் செய்வதற்கு ஆற்றலுடையேனும் அல்லேன்;
இலங்கையை அழித்த அம்மானே! சந்திரமண்டலம் வரையிலும் பொருந்தும்படி மாணிக்கங்கள் பதித்த மாடங்கள் உயர்ந்திருக்கின்ற ஸ்ரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற சங்கினையும் சக்கரத்தினையுமுடையவனே! வேறு துணை இல்லாத எனக்குக் கிருபை செய்தருள வேண்டும்.
அம்மானே! சங்குசக்கரத்தாய்! அங்குற்றேனல்லேன், இங்குற்றேனல்லேன், ஆசையில் வீழ்ந்து எங்குற்றேனுமல்லேன், தமியேனுக்கு அருளாய் என்கிறார்.
திங்கள்சேர் என்பதற்கு, சந்திரன் வந்து தங்கியிருக்கும்படியாக என்று பொருள் கூறலுமாம். மணி – அழகுமாம்.

“ஆற்றேன்” என்றால் பெற்றது என், தடைகள் இன்னம் உண்டே? என்ன, பிராட்டிக்கு வந்த தடைகளைப் போக்கியது போன்று,
அடியேனுடைய விரோதியையும் போக்கியருள வேண்டும் என்கிறார்.

அங்குற்றேன் அல்லேன் –
முக்தர் இந்தச் சம்சாரத்திலே – -உலாவினாற் போன்று சித்த சாதனனாய்த் -பேறு நிச்சயம் என்று உணர்ந்து -திரிகிறேன் அல்லேன்.
இங்குற்றேன் அல்லேன் –
இங்கே இருந்து சாதனங்களைச் செய்கின்றவர்களிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன்.

உபாசகர், ஆரப்தயோகர் என்றும், ஆரூடயோகர் என்றும் இரு வகையர்.-அவர்களில் ஆரூடயோகர் படி தமக்கு இல்லை என்கிறார் என்று கூறத்
திருவுள்ளம்பற்றி அதனை அருளிச்செய்கிறார் ‘முக்தர்’ என்று தொடங்கி.‘சித்தசாதனனாய்’ என்றது, சாதனங்கள் எல்லாம் அநுஷ்டித்துப் பலத்தினை
அநுபவிப்பதற்காக அங்கே செல்ல இருக்கிற ஆரூடயோகனாய் என்றபடி.
ஆரப்தயோகர் படி தமக்கு இல்லை என்கிறார் என்று கூறத் திருவுள்ளம்பற்றி அதனை அருளிச்செய்கிறார் ‘இங்கே இருந்து’ என்று
தொடங்கி. ‘சாதனங்களைச் செய்கின்றவர்களிலே’ என்றது, சாதன அநுஷ்டானம் செய்ய ஆரம்பித்த ஆரப்தயோகரிலே என்றபடி. ஆக, மேல்
திருப்பாசுரத்தில் “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்று சொன்ன உபாயம் இன்மையை, இத்திருப்பாசுரத்தில்
“அங்குற்றேன்அல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்று வேறு வகையாக அநுபாஷிக்கிறார் என்பதாம்.

அன்றிக்கே,
“ஸஉத்தம : புருஷ : ஸதத்ர பர்யேதி ஜக்ஷத்கிரீடந் ரமமாண:
ஸ்திரீபிர்வா யாநைர்வா ஜ்ஞாதிபிர்வா ந உபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்” என்பது, சாந்தோக்யம், 8. 12 : 3.
“சனங்களுடன் இந்தச் சரீரத்தை நினையாதவனாகிறான்” என்கிறபடியே,-உன்னை அநுபவித்துச் சம்சாரத்தை நினையாதிருக்கிறேன் அல்லேன்.
இங்குற்றேன் அல்லேன் –
“மறந்தேன் உன்னை முன்னம்” -பெரிய திருமொழி, 6. 2 : 2. என்கிறபடியே, உன்னை மறந்து,
“அவர் தரும் கலவியே கருதி” -பெரிய திருமொழி- 1. 1 : 1.என்கிறபடியே, அதுவே பேறாக இருக்கிறேன் அல்லேன் என்னுதல்.
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை -திருவிருத்தம், 95-நல்வீடு செய்கையாலே அப்படி இருக்கமாட்டாரே.
இவ்வுலக இன்பங்களில் ஏதேனும் ஒன்றனைப் பற்றிப் பகவத் விஷயத்தை விட்டே போம்படியான இந்தச் சம்சாரி சேதனனுடைய நினைவானது
மீண்டும் தொடராதபடி அதனை நன்றாக விடுவிக்கையாலே என்றபடி.
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து யான் எங்குற்றேனும் அல்லேன்-
ஆனால், ஒரு காலத்திலாகிலும் சில செய்ய வல்லீரோ? என்னில்,
‘ஆனால்’ என்றது, ஆருடயோகரும் ஆரப்தயோகரும் அல்லீராகில் என்றபடி.
‘செய்ய வல்லீரோ’ என்றது சாதனங்களை அநுஷ்டிப்பதற்கு யோக்கியதைதான் உமக்கு உண்டோ? என்றபடி
அது, முன்பே தானே உன்னைவிட்டு ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்” என்று சொன்னேனே அன்றோ.
ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியவர்கள் அதற்கு ஆற்றல் உள்ளவராய் இருக்க வேண்டும் அன்றோ.
‘உன்னைக் காண வேணும்’ என்னும் ஆசையாலே வலிமை குன்றினவனாய்த் தளர்ந்தேன்.-
ஆதலால் சாதனங்களைச் செய்வதற்கு ஆற்றலுடையவன் அல்லேன். இது, பூர்வர்கள் நிர்வாஹம்.
அங்குற்றேன் அல்லேன் – நித்தியசூரிகளோடுகூட அங்கே இருக்கிறேன் அல்லேன்.
இங்குற்றேன் அல்லேன்-சம்சாரிகளைப் போன்று இங்கே உண்டு உடுத்துப் போருகிறேன் அல்லேன்.
இங்ஙனே ஆனால்,-பக்தி பாரவச்யத்தால் -நிரதிசய பக்தியால் – நீ வந்து முகங்காட்டுமளவும் நடு ஓர் இடத்தில் நிற்கப் பொறாதவனாக இருக்கிறேன்.
பிரபந்நர் ஆர்த்தப் பிரபந்நர் என்றும், திருப்தப் பிரபந்நர் என்றும் இரு வகையர்; அவர்களுள், திருப்தப் பிரபந்நனல்லேன் என்கிறார்
உன்னைக் காணும் அவாவில் -நிரதிசய பக்தியால் -வீழ்ந்து யான் எங்குற்றேனுமல்லேன் –
“காலாழும்”(பெரிய திருவந்.) என்றபடியே, பக்திபாரவஸ்யத்தாலே அசக்தனான நான், மேலும் சாதந அநுஷ்டானத்துக்குத் தக்கவனல்லேன் என்றபடி.
“ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம்” -பெரிய திருமொழி, 4 : 9 : 3-என்கிறபடியே, அந்த ஆசையிலே வீழ்ந்து
கரையேறமாட்டாதே தடுமாறா நின்றேன்.–உம்மைத் தொகை -நடுவிலும் இல்லாமல் –
பக்திபாரவஸ்யத்தாலே, “சேஷிசெய்தபடி கண்டிருக்கிறோம்” என்று ஆறியிருக்கப் பொறுமையுடையவனல்லேன் என்றபடி.
இதனால், திருப்தப் பிரபந்நன் அல்லேன் என்றபடி.

இலங்கை செற்ற அம்மானே-
தம் தலையில் ஒன்றும் இல்லாமையைக் கண்டார், ஒன்றும் இல்லாதார் பெற்ற இடத்தைப் பார்க்கிறார்;
கைம்முதல் அற்றவன் முன்பு ஈட்டி வைத்த செல்வத்தை வாங்கிப் பார்க்குமாறு போலே.
தன் பேறாகக் கொள்ளுமவன் என்பார் ‘அம்மானே!’ என்கிறார்.
இலங்கையில் இருந்து அங்கு உற்றார்கள் இடம் பொருந்தாமல் உம்முடனும் சேராமல் இருக்க -இலங்கை செற்ற அம்மானே-
அன்றிக்கே, ஸ்வரூபம் பிரகாசித்தால், அவன் தலையிலே தள்ளி வைக்கவுங்கடவதாய், அவனும் பிராட்டிமாரைப் போன்று
மேல் விழுந்து விரோதிகளையும் போக்கி அணைக்கைக்கு வேண்டும் சம்பந்தம் உண்டாய்க் காணும் இருப்பது என்னுதல்.
நன்று; அவை எல்லாம் செய்தமை உண்டு, ஆனாலும், அதற்குப் பிற்பட்டதே? என்ன, அக்கண்ணழிவு அறுத்துவைத்தாய் அன்றோ என்கிறார் மேல்:

திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவரமங்கலநகர் உறை-
சந்திரமண்டலம்வரை செல்ல உயர்ந்து இரத்தினமயமான மாடங்களையுடைய சிரீவரமங்கல நகரிலே,
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்தியவாசம் செய்கின்றாயில்லையோ?
நீடுகை –
நீட்சியையுடைத்தாயிருக்கை. அன்றிக்கே, திங்கள் சேர் மணிமாடம் நீடு என்பதற்கு,
சந்திரனோடே சேரும்படி மாணிக்க மயமான மாடங்கள் வளர்கின்ற என்னுதல்.
அது அப்படியேயானாலும் பரிகரம் இல்லையே? என்ன,
சங்கு சக்கரத்தாய் –
அங்ஙன் கண்ணழிவு சொல்லலாமோ? ஒரோ கைக்குப் படை அன்றோ கூட நிற்கிறது என்கிறார்.
இங்கு, “இலக்குமணனே! வில்லைக் கொண்டு வா” என்னவேண்டும் குறை உண்டோ.
பிறர் கை பார்த்திருக்கவேண்டும் குறை உண்டோ இங்கு. பரிகரங்களை அழைத்துக் காரியம் கொள்ளவேண்டும்படியோ உனக்கு இருக்கிறது.
நீ அண்மையிலிருப்பவன் அல்லாமையோ,-நீ சந்நிஹிதன் — நீ ஆற்றலுடையவன் அல்லாமையோ, உனக்குப் பரிகரம் இல்லாமையோ,
பரிகரம்தான் கைகழிய நின்றோ,-சங்கு சக்கரத்தாய் -இதுவே நிரூபகம் – எதனாலேதான் இழக்கிறது? என்ன, அவை எல்லாம் அப்படியே,
இத்தலை இப்படிக் குறைவற்றிருந்தாலும் பிரயோஜனம் இல்லையே, அத்தலையும் குறைவற்றிருக்க வேணுமே? –ருசி உள்ளதா -என்ன,

தமியேனுக்கு –
1- இத்தலையும் குறைவற்றது என்கிறார். ருசி உள்ளதே –
அங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன், -அங்கே சதா பஸ்யந்தி அன்றோ
இங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன். -இங்குள்ளார்க்கு இவ்விஷயத்தை அறியாமையாலே பிரிவு இல்லையே.
தமியேனுக்கு-
2-உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு. ஸ்வரூபத்தைச்‘சாதனம்’ என்று செலவு எழுதிக் கழிக்கில் கழிக்குமித்தனை. -சாதநாந்தர சூன்யன்
அவாவில் வீழ்ந்து -பக்தி -சிநேக பூர்வம் உபாயம் ஆகாதோ -என்னில் இது ஸ்வரூபம் தானே
நீ உபாயம் ஆனாலும் உபாயத்தைப் பிரதிபத்தி பண்ணுவார் வேண்டாவோ.-பிரபன்ன ஜன கூடஸ்தர் என்னை அன்றோ சொல்கிறார்கள் –
தமியேன்-
3-பிராட்டியில் வேறுபாடு அங்காகில் ஒரு திரிசடையாகிலும் உண்டே அன்றோ,
இங்கு “ஆவார் ஆர் துணை” என்னும்படி அன்றோ தனிமை. ஆயின், செய்யவேண்டுவது என்? என்ன,
அருளாயே –
என் வெறுமையும் உன்நிறைவும் அறிகைக்கு, நீ அடியில் தந்த அருள் இன்று குடி போயிற்றோ,
அன்று நான் விரும்பாதிருக்க அருளின நீ, விரும்புவதற்குத் தகுதியைப் பிறப்பித்துப் பொகடவோ.
ருசியை உண்டாக்குவார் ஒருவரும், உபாயத்தை அநுஷ்டிக்கிறவர் ஒருவருமாயோ இருப்பது.
நின்னருளே புரிந்திருக்கிற எனக்கு அருளாயாகில் பின்னை யார்க்கு வேறு அருள இருக்கிறாய்.

————————————————————————————-

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

இதில் பிரத்யுபகாரம் இல்லை -ஆகிஞ்சன்யம் முதல் பாசுரம் -அடுத்த பாசுரம் –பிரதி பந்தக நிரசனம்
அதிசயித பரத்வ ஸூ சக ஆகாரம் -அங்கீ கரித்து அருளிய உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் செய்ய ஒன்றும் இல்லையே
கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா -சர்வேஸ்வர -அடையாளம் -நானும் அனுபவிக்கும் படி கொடுத்து அருளி
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -வஸ்து என்று சொல்லவும் கூடாத -புத்தியும் பண்ணவும் முடியாத -வஸ்துதாம் உபதாயோகம் –
அசந்நேவ-ப்ரஹ்மம் தெரியாமல் அசத்தாக -லப்த ஸ்வரூபன் ஆக்கி சந்தமேனம் என்னும் படி
வாசிகமான கைங்கர்யமும் கொண்டாய்-அத்தை முழுவதும் நடக்க
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு -ஞானாதிசயம் உடையார் -நான்கு வகை
வேதம் வல்லவர்கள் -பகவத் சம்பந்தம் -அறிவார்கள் என்பதால் வாழ்கிறவர்கள்
தெருள் கொள் -வேதத்துக்கும் விசேஷணம்
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே -நிரவதிக கிருபை பண்ணி -இந்த திவ்ய தேசத்தில் பண்ணியது தமக்கு செய்தால் போலே
என்னை அடிமை கொள்ளவே அங்கு நித்ய வாசம் செய்து அருளுகிறாய்-
இதற்கு பிரத்யுபகாரம் பண்ணியதாக அறியேன் -அதனால் நீயே அருள வேண்டும் -தமியேனுக்கு அருளாய் -கீழ் உடன் அந்வயம்

ஸ்ரீ சடாரியிலே நம்மாழ்வார் -அதனால் சடாரி சாதிக்கும் பொழுதும் இங்கே கொஞ்ச நேரங்கள் தான் –
அருளாய் என்றீர் -அருளக் கடவோம் -அதில் ஒரு தட்டில்லை -சாஸ்திர பலம் -பிரயோக்தா– அருள் பெறுவார் இடம் சிறிது வேண்டுமே
கர்த்தா சாஸ்த்ரார்த்வத்-கர்த்ருத்வம் -ஜீவாத்மா -சாஸ்திரம் உபதேசிப்பதும் கர்த்தாவா இடம்
சேதனன் பிரயோக்தாவாக இருக்கும் பொழுது தானே சாஸ்திரம் பலம் கொடுக்கும்
மேல் உற்றக் கிட்ட -மேட்டுக் குடி மக்களுக்கா -கீழ் உற்றவனுக்கு ஏதேனும் உண்டோ என்ன –
இத்தலையில் கிஞ்சித் காரம் விட்டு -உபாய பாவத்தை விட்டு -உன் கிருபையாலே செய்து அருளாய்
இவ்வளவும் வர -முன் மயர்வற மதி நலம் அருளின பின்பு -விதி வாய்க்கின்றது சொல்ல வைத்த பின்பு –
மேலும் நீயே செய்து அருள வேண்டும் -உன் பெருமையையும் ஏன் சிறுமையையும் பாராதே நிர் ஹே துகமாக -பிராப்தியையும் நீயே செய்து அருள வேணும்
கறை அணி மூக்கு போலே கருடப்புள் -கறுத்த திரு முகம்

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட
உன்னை அறிந்தோ
மேலும் சொல்ல வேண்டுமோ உன் உயர்த்தி
த்வஜமாக -அருளாழிப் புள் -ஆஸ்ரிதர் இடம் கூட்டி வர
பெருமைக்கு நிரபேஷ சாதகம்
மேலே சொல்வது மிகை -நீர்மைக்கு -அருளாழிப் புள்
சக்கரப்படை -அதுவும் வர வேண்டும் படியோ இது இருப்பது
அருளார் திருச் சக்கரம் -இதுவும் நீர்மைக்கு –
வான நாட -ஓன்று எடுக்கவும் ஓன்று பிடிக்கவும் வேண்டுமோ
இருந்தாலே போதுமே -இருப்பிடமே அமையும்
வாசச் ஸ்தானம் -சர்வாதிக லஷணம் -மூன்றும் -இவை ஓர் ஒன்றே அமைந்து இருக்க -சர்வ பிரகார பரி பூர்ணன்
கருள் -கறுப்பாய்-சீற்றமாய் -பிரதிபஷம் மேல் சீற்றம்
கருள் உடைய பொழில் மருது -பெரியாழ்வார்
என் கார் முகில் வண்ணா –
பெருமை பார்க்காமல் அனுக்ரஹித்தாயே
வர்ஷிக்கும் ஸ்தலம் தான் பார்த்தாயோ –
நீசன் என்றும் பார்க்காமல் ஔதார்யம் -செய்து அருளி -பிரயோஜன நிரபேஷமாய்
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
அவஸ்துவாக- இருக்க –வஸ்து முன்பு உண்டாய் அதுக்கு உத்கர்ஷம் செய்து அருளினாயோ
அசந்நேவ -விஷயீ காரத்துக்கு முன்பு -நஷ்டம் பராக் -திருக் கண் கடாஷம் முன்பு –
சந்தேமேனம் என்று உஜ்ஜீவிக்கும் படி செய்து அருளி -அடிமையில் ருசியைப் பிறப்பித்து அடிமையும் கொண்டாய்
பெரு மக்கள் உள்ளார் போலே நித்ய சூரிகள் போலே -உண்டாக்கி மட்டும் இல்லாமல் ஜீவனம் கொடுத்தாய்
கார் முகில் என்றது பலித்த படி –
சர்வாதிகன் -தாழ்ச்சி பாராமல் -அருளி -அடிமை கொண்டு –
என்-முன்பு பண்ணின உபகாரங்கள் -அனுபூய அம்சம் உண்டு போராது
அடி தொழுது எழப் பண்ணினீர்
-ஸூ நிஷ்கர்ஷகம் சொல்வது ஞான கார்யம் -ஈச்வரோஹம் என்று இருப்பது அஜ்ஞ்ஞான கார்யம்

தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ்
ஞானம் சொல்லி -வாழ் -தனியாக -அனுபவம் சொல்வது எதனால்
இருப்பதே தானே சிறப்பு -வேத தாத்பர்யம் -செழும் பொருள் கை வந்தவர்கள் -அவனாலே அவனை அடைவது
நான்கு வேதங்களையும் நிர்வகிக்கும் சக்தர் -நிறைந்து பலர் -வேத அர்த்த பூதனைக் கண்டு அனுபவிப்பவர்கள்
-கைங்கர்யம் செய்வதே கற்றதன் பலன் -கற்றபின் நிற்க அதற்குத் தக
வள்ளுவர் இடைக்காதர் ஔவையார் குரு முனி வாய் மொழி -கொண்டே பாடினேன் -என்பார்
வேதார்த்தம் தெய்வ நாதனை அனுபவிப்பது
கங்கையில் உள்ள மீன்கள் -அங்கே வாசம் செய்தாலும் ஞானம் இல்லையே –தேவாலாய பஷிகள் -தீர்த்தானி புண்ய ஆயதன-மட்டும் போதாதே
ஞானமும் அத்துடன் சேர்த்த வ்ருத்தியும் வேண்டுமே -வாழ் -கைங்கர்யம் செய்து வாழ்கிறது
சிரீவர மங்கல நகர்க்கு அருள் செய்து அங்கு இருந்தாய்
நகரில் உள்ளாருக்கு தன்னைக் கொடுக்கும் இருப்பு தனக்கு செய்தால் போலே -தன் பேறாக அவன் நினைக்க -இவரும் தன் பேறாக
என்னை அடிமை கொள்ள அங்கு வந்து இருந்தாய் -என்றுமாம்
கைங்கர்யம் விச்சேதம் வரக் கூடாது என்று இங்கே நித்ய வாசம் செய்து அருளுகிறாய் -மீதி பாசுரங்களும் முடிக்க வேண்டுமே
அறியேன் ஒரு கைம்மாறே-
நீ இவ்வளவாக செய்த உபகார பரம்பரைகளுக்கு நான் ஒன்றும் செய்ததாக அறியேன் -பண்ணுவதற்கு ஏதும் இல்லை
ஏதும் இல்லை முன்னும் பின்னும் -குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய் போலே
முன்பு உபகரித்ததுக்கு ஹேது என் பக்கல் கிஞ்சித் உள்ளது என்று சொல்ல முடியாதே
ஆகவே நீயும் மேலும் நிர்ஹேதுகமாக அருள வேண்டும்
ஹேது இல்லை -ஆனால் -வாங்கிக் கொள்ள நீர் இருந்தீரே -என்றும் சொல்ல முடியாதே
வஸ்துவாகவே நான் இல்லையே -நீர் தான் வஸ்து ஆக்கி அருளினீர்

——————————————————————————-

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–5-7-4-

கேவலம் -கிருபையாலே ரஷித்து அருள வேணும் -மதியை ஏவ தயையால் ஏவ –
ஆஸ்ரித சம் ரஷன ஸ்வ பாவன் -என் அபேஷை சாதனம் ஆவது எங்கே
உமது இரக்கமும் -ஆஸ்ரிதருக்கு இரங்கி அல்லது தரியாத உன் ஸ்வ பாவம் -பாண்டியர்களுக்கு அருளியது போல் –
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி-தனித் தனி விரோதம் -மாறு சேர் படை
-சல்யன் -மாமா -உபசாரத்தில் மயங்கி -கர்ணனுக்கு சாரதி –
பாண்டவர்கள் -தனியரான ஐவர் -கையாளாய்-சகாய பூதன்
பீடிதரான அன்று -மாயப்போர் பண்ணி –
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!-இரு நிலம் அவித்த -சமஸ்த சேனைகளையும் பூ பாரம் தவிர்த்து –
மகோ உபகாரகன் -கேவலம் கிருபையாலேயே ரஷித்த இடம் அன்றோ இது –
வியாபார ஷமையும் அல்லாத -பிரளயம் கொண்ட பூமி -வராக கோபாலர் வம்ச பூமிகளை –
இடந்து எடுத்து -ஸ்வாமி -பாண்டவர் என்னையே -கொண்டவர்கள் -பூமி -வியாபரிக்காத -என்னைப் போலே
பிற்பாடர் ஆனீர் -என்ன
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்! -இழக்காமல் தானே -பிராப்ய பிராபக ஞானம் உணர்ந்த –
வைதிக பகவத் சமாராதனம் இடை விடாமல் நடக்கக் கூடிய -அவர்கள் உடன் ஒக்க கலந்து -ஏறி ஆராத்யனாய் -வீற்று இருந்து
உனை எங்கு எய்தக் கூவுவனே?-அபேஷா நிரபேஷனாக ஸ்வயம் ஏவ -அநந்ய சாத்யனான-உன்னை
எங்கே பிராபித்தாக கூவுவேன் -நீயே தானே வர வேண்டும் –
உம்மை மற்று ஒன்றால் அடைய முடியாது -நீர் எழுதின சாஸ்திரம் அறிவித்த பின்பு –
நீ வரித்து திருமேனி காட்டினால் தானே காண முடியும் -நீ கூவுதல் வருதல் செய்ய வேண்டுமே –உன் திருவடிகளை கொடு வினையேனும் பிடிக்க

பகைவர்களாகச் சேர்ந்த சேனையையுடைய துரியோதனன் முதலிய நூறு பேர்களும் அழியும்படி, தனியரான பஞ்சபாண்டவர்களுக்காக
வஞ்சனையையுடைய போரைச் செய்து சாம்பலாகச் செய்த என் தந்தையே! பிரளயம் கொண்ட பூமியை எடுத்து வந்த அம்மானே!
தெளிந்த ஞானத்தையுடையவர்களுடைய வேத ஒலியும் யாகங்களும் நீங்காமல் இருக்கின்ற ஸ்ரீவரமங்கல நகரிலே சூடி ஏறி வீற்றிருந்தவனே!
உன்னை அடைவதற்கு எந்த விதமான முயற்சியைச் செய்வேன்?
மாயப் போர் பண்ணி நூற்றுவர் மங்க நீறுசெய்த எந்தாய் என்க. ஞானத்தாருடைய வேதமும் வேள்வியும் என்க.
உன்னை எய்த எங்குக் கூவுவன்? ஓர் என்பது, வேறு துணை இன்மையைக் காட்ட வந்தது.

‘வெறும் உன் கிருபையாலே காத்தருள வேண்டும்’ என்னாநின்றீர், நாம் இதற்கு முன்னர் அங்ஙனம் செய்த இடம் உண்டோ? என்ன,
ஒன்று இரண்டு உதாஹரணங்களை எடுத்துக்காட்டி. இங்ஙனே செய்தது இல்லையோ, எனக்கும் செய்தருள வேண்டும் என்கிறார்.

மாறு சேர் படை நூற்றுவர் –
பகைவர்களாய்க் கொண்டு வந்து சேர்ந்த படையையுடைய நூற்றுவர்.
துரியோதனாதியர்கட்குத் துணையாளராய் வருகை அன்றிக்கே, தனித்தனியே பகைவர்களாய் வந்து கிட்டினார்களாதலின், ‘மாறுசேர்’ என்கிறது.
அன்றிக்கே, படையோடு கூடிப் பகைவர்களாய்ச் சேர்ந்த நூற்றுவர் என்றுமாம்.
த்விஷதந்நம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத் பாண்டவாந் த்விஷஸே ராஜந் மம பிராணாஹி பாண்டவா:”
“பகைவனுடைய சோற்றைப் புசிக்கலாகாது” என்கிறபடியே, தனக்குப் பகைவர்களாக நினைத்திருக்கிறபடி.
மங்க –
மாள -விளக்குப்பிணம் போலே காண ஒண்ணாதவாறு செய்தபடி.
ஓர் ஐவர்க்காய் –
இரண்டு பக்கங்களும் ஒத்திருக்க, ஒரு தலையிலே நின்றாயத்தனை அன்றோ.
கேவலம் கிருபையாலே தாழ்ந்த தலையிலே நின்றாயே –
உளனான ஒரு சாரதியும்கூட முதன்மை யற்றவனாம்படி தனியரான ஐவர் ஆதலின் ‘ஓர் ஐவர்’ என்கிறது.
ஐவர்க்காய் –
அவர்களுக்குத் தன்னை வேண்டியவாறு உபயோகப்படுத்திக் கொள்ள வைத்தபடி.
அன்று –
போரிலே நோக்குள்ளவர்களாய் வந்த அன்று.
மாயம் போர் பண்ணி –
ஆச்சரியமான போரைச் செய்து. அன்றிக்கே, வஞ்சகமான போரைச் செய்து என்னுதல். என்றது,
பகலை இரவாக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுத்தும்,
பகைவர்களுடைய உயிர்நிலையைக் காட்டிக் கொடுத்தும் செய்தமையைத் தெரிவித்தபடி.-மாயப்போர் தேர்ப்பாகு-
நீறு செய்த –
“கூறாய் நீறாய் நிலனாகி” -திருவாய். 6. 10 : 2.-என்கிறபடியே, சாம்பல் ஆக்கின.
எந்தாய் –
எந்தையே! பாண்டவர்களுக்காகத் துரியோதனாதியர்களை அழித்ததும் தம் பேறாக இருக்கிறபடி.
நீர் சொல்லுகிறவை எல்லாம் செய்தமை உண்டு ஆனாலும், அவர்கள் எனக்குப் பவ்யர் அலரோ? என்ன,
ஆயின், அதுவும் பாராதே அன்றோ நீ பூமியைக் காப்பாற்றியது என்கிறார் மேல்:

நிலம் கீண்ட அம்மானே-
அது கிடக்கிடு வேணுமாகில், அதற்கு ஒன்று சொல்லுகிறாய்;
பிரளயம் கொண்ட இப்பூமிக்கு என்ன தக்கோர்மை இருந்தது நீ செய்வதற்கு?
‘எடுக்க வேணும்’ என்ற விருப்பமும் இல்லாமல், செய்ந்நன்றி யறிதலும் இல்லாமல் இருக்கிற இந்தப் பூமிக்கு
உதவி செய்தாயில்லையோ? இங்கு ஒருதலையே அன்றோ உள்ளது.-வராஹ நாயனார் மட்டுமே ச்நேஹித்தார் பூமி சொத்து என்பதால்
அம்மானே –
‘உடைமை இழக்க ஒண்ணாது’ என்று, வெறும் உன் கிருபையாலே செய்த இத்தனை அன்றோ.
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறா –
அநுஷ்டானத்தையும் அநநுஷ்டானத்தையும் விகல்பிக்கலாம்படி தெளிந்திருக்குமவர்கள்.
அநநுஷ்டானம் சாதனம் ஆகாதே அன்றோ. ‘விலக்கிய ஒழுக்கங்கள் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமாறு போன்று,
‘விதித்த ஒழுக்கங்களும் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமவர்கள். ஆனால், இவற்றைச் செய்வது என்?என்னில்,
சர்வேச்வரனுடைய ஆணையைச் செய்தவன் ஆகிறான்.
அன்றியும், விலக்கிய ஒழுக்கங்கள் இராசத தாமத குணங்களை வளர்ப்பிக்குமாறு போலே,
விதித்த ஒழுக்கங்களும் சத்துவ குணத்தை வளர்ப்பிக்கக்கூடியனவாய் இருப்பனவே அன்றோ.-ஞான யோகம் வளர இது வேணுமே
அன்றியும், சேதனன் ஆகையாலே ஒருதொழிலைச் செய்தன்றி நில்லானே.
“ஸத்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோபஏவச ப்ரமாத மோஹௌ தமஸோ பவத: அஜ்ஞாநமேவச”- ஸ்ரீ கீதை, 14 : 17.
“சத்துவ குணத்தினின்றும் ஞானம் உண்டாகின்றது” என்கிறபடியே, ஞானத்துக்கும் காரணமாக இருக்குமே அன்றோ, ஆகையாலே,
அநுஷ்டிக்கத் தக்கனவாகக் கடவனவேயாம். சிரீவரமங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்-4இவனும் அவர்களிலே ஒருவனாய்
ஒரு சேரக் குடி ஏறி இருக்கிறபடி. ‘இவர்கள் நடுவே இருக்கப் பெற்றோமே’ என்று பெறாப்பேறு பெற்றனாய் இருக்கிறபடி.
உன்னை-
வேறு உபாயங்களாலே அடைய முடியாதவனான உன்னை.
எங்கு எய்தக் கூவுவன் –
நீ இவ்விருப்பு இருக்கைக்கு நான் செய்தது ஏதேனும் சாதனம் உண்டாகில் அன்றோ என்பேற்றுக்கு நான் ஏதேனும் செய்வது. என்றது,
இவ்வளவாகச் செய்த நீ இனியும் உன் கிருபையாலே செய்தருள வேணும் என்றபடி.

—————————————————————————————-

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5-

காரார் திருமேனி காணும் அளவும் போய்-நிறைய அருளினாய் -திரு மந்த்ரார்த்தம் போல்வன -மேலும் வேண்டுமே –
அதே போலே இவரும் நீ நிறைய அருளி உள்ளே இன்னும் வேண்டும் என்கிறார் இதில்
ஆஸ்ரித விரோதிகள் -ஆசூர பிரக்ருதிகளை அந்தர் பேதம் பண்ணி அழிக்கும் -ஸ்வ பாவன்
ஆஸ்ரிதர்க்கு என்று நித்ய வாசம் -அனுபாவ்யனாய் -இப்படி இருக்கிற நீர் -நான் பிரவர்த்திக்க வேண்டுமோ
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று-புருஷார்த்த பிராப்திக்கு பிரார்திக்கை அனுரூபமோ
அனன்யார்ஹ சேஷ பூதன் பர தந்த்ரன்
திருக் கமல பாதம் தானே வந்தது
அசுரர்கள் -எவ்வ தெவ்வத்துள் புத்தாதி விக்ரகம் கொண்டு
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!-கறுத்த காது நீண்ட பெரிய வயிறு தலை மொட்டை புத்த அவதாரம்
நெஞ்சை கலக்கும் சியாமள திரு மேனி -மயக்கி வேத ஸ்ரத்தை விட வைத்து
தன் பால் ஆதாரம் பெருக வைத்த -ஐயம் அறுத்த அழகு இங்கு வேதம் ஆதரவு அழித்த அழகு
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்-க்ருதக்ருத்யர் -பூமியிலே சூரி சாமான்யர் ஞானாதி ஐஸ்வர்யம் -பூ சுரர்கள்
கை விடாமல் வர்த்திக்கும் திவ்ய தேசம்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!-அவர்களால் சேஷ வ்ருத்தி -பண்ணும் படி -இருந்தாய்
நானும் -அவர்கள் போலே சேஷத்வ ஞானம் உடைய நானும் கண்டேன்
ஆனபின்பு என் விரோதியையும் பேதித்து -உன்னை அனுபவிப்பிக்கவும் நீயே செய்து அருள வேணும்

பேற்றினைப் பெறுதற்கு நான் உன்னை அழைத்தல் எனக்குத் தகுதியாகுமோ? எவ்வகைப்பட்ட பகைவர் கூட்டத்துள் நீயும்
ஒருவனாகச் சேர்ந்து புத்தமுனியாய் நின்று வஞ்சகமாகக் காரியங்களைச் செய்த கரிய மேனியையுடைய அம்மானே!
ஐவகையான யாகங்களைச் செய்தவர்களும் பூதேவர்களுமான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
நீங்காமல் எழுந்தருளியிருக்கின்ற ஸ்ரீ வரமங்கல நகரிலே எல்லாரும் கைகூப்பி வணங்கும்படியாக எழுந்தருளியிருக்கின்றாய்;
அதனை அடியேனும் கண்டேன்.
எய்தக் கூவுதல் எனக்கு ஆவதே என்க. தெவ்வத்துள்: தெவ் – பகை. அத்து: சாரியை. உள்: ஏழாம் வேற்றுமை உருபு.
நின்று செய்யும் அம்மான் என்க. வையத்தேவர் – நிலத்தேவர்; ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

அடியார்கள் பக்கலிலே நாம் வைத்திருக்கும் பக்ஷபாதத்தையும் சிரீவரமங்கல நகரில் இருப்பையும் உமக்குக் காட்டினோமே,
“எங்கு எய்தக் கூவுவன்” என்று ஒன்றும் பெறாதாரைப் போன்று, கூப்பிடாநின்றீரே? என்ன,
செய்த அம்சத்தை அறிந்தேன், அதனாலே நிறைவுபெற்றவன் ஆகின்றிலேன் என்கிறார்.

இதே போலே கலியனும் -செய்த அம்சங்கள் உண்டு —வாழ்ந்தே போம் -இந்தளூரீரே–
சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே -போதாதே -தழுவி முழுசி பரிமாற்ற வேண்டும்

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு –
பொகடு, அதுகிடக்கிடாய், இந்தத் திருமகள் கேள்வனைக் கண்ட உனக்கு -விபரீத லஷ்ணையால் –
‘இவன் சாதன அநுஷ்டானம் பண்ணுவான்’ என்று தோற்றி இராதோ.
உன்னிலும் என்னை நான் அறிவேனே அன்றோ! என்னால் செய்யலாவது உண்டோ என்று கேட்கிறார்,
‘அவனாலே பேறு என்றிருக்குமவர் ஆகையாலே’; நீ கைவிட்ட அன்று நான் அநுஷ்டிக்கும்படி,
திருமகள் கேள்வனான உன்னோடு ஒக்க விகல்பிக்கலாம்படி இருந்தேனோ என்கிறார்.
எய்தக் கூவுதல் ஆவதே –
நீ எனக்குக் கைப்படும்படியாக விரும்புதல் ஆவதே.
எனக்கு-
வலி இல்லாதான் ஒருவன் தலையிலே ஒரு மலையை வைத்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு.
“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவ ஏஷ்யஸி யுக்தா ஏவம் ஆத்மானம் மத் பராயண:” என்பது, ஸ்ரீ கீதை, 9: 34
“என்னை வணங்குவாய்” என்றால்,உபாயாந்தர பக்தி யோகம் விதித்தால் – பின்னர் இல்லை யாவரே அன்றோதான்.
இனி, பிரபலனாயிருப்பான் ஒருவன் அதனைத் தள்ளி ‘அஞ்சாதே கொள்’ என்ன வேண்டுமே அன்றோ,
ஆகையாலே, அவன், பகைவர்களை அழித்த தன்மையை அருளிச்செய்கிறார் மேல்:
எவ்வ தெவ்வத்துளாயும் ஆய் நின்று கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே –
அடியர் அல்லாதார் பக்கல் செய்வதனை, வேறு கதியற்ற வற்றவர்களாயிருக்கின்ற அடியார் பக்கலிலும் செய்யப்புக்கதோ இப்போது.
அங்கு வைதிக ஸ்ரத்தை குலைத்தீர் -இங்கு நீயே உபாய அதயவசாய ஸ்ரத்தை குலைக்கப் பார்க்கிறீர் –
எவ்வ தெவ்வத்துளாயும் ஆய் நின்று –
எவ்வகைப்பட்ட பகைவர்கள் கூட்டங்களினுள்ளே புக்கு.
தெவ்வர் – பகைவர். தெவ்வம்-பகைவர் கூட்டம். “தெவ்வர் அஞ்சு” என்னக்கடவதன்றோ.
கைதவங்கள் செய்யும்-
வஞ்சகங்களைச் செய்கின்ற. என்றது, புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்கு நின்று அவர்களுக்குண்டான
வைதிக சிரத்தையைப் போக்கினமையைத் தெரிவித்தபடி.
கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே –
வசனங்களாலும் யுக்திகளாலும் வஞ்சகங்களைச் செய்து வைதிக சிரத்தையைப் போக்கி,
அவ்வளவிலும் கேளாதார்க்கு வடிவைக்காட்டி வாய்மாளப் பண்ணினபடி.என்றது,
தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராயராக்கி, ஒருவன் அம்புக்கு இலக்காம்படி செய்து வைத்தமையைத் தெரிவித்தபடி.
அம்மானே-
சம்பந்தம் ஒருத்திருக்கச் செய்தே, நீ அவர்களை அழியச்செய்தது அடியார்களுக்காக அன்றோ?
உன்னை ஒழிய -ஒரு தெய்வம் உண்டு’ என்று இருக்கின்றவர்களை அழித்ததைப் போன்றதே அன்றோ.
உன்னை ஒழிய -‘ஒரு தெய்வம் இல்லை’ என்றிருக்கிற என்னை ஒன்று செய்யச் சொல்லுகையாவது.
“ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே” -திருவாசிரியம், 7.-என்றாரே அன்றோ இவர்.
அவர்களுடைய வைதிக சிரத்தையை அழித்தாற்போலே இருக்கிறதாயிற்று,
சித்த சாதனத்தைப் பற்றி இருக்கின்ற தன்மையினின்றும் நெகிழ்த்துச் சாதனத்திலே மூட்டுகிற இது.

செய்த வேள்வியர் –
சித்தோபாய நிஷ்டர்கள்.
“ஸர்வே வேதா: ஸர்வ வித்யா: ஸசாஸ்த்ரா: ஸர்வே யஜ்ஞா: ஸர்வ இஜ்யஸ்ச கிருஷ்ண:
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணா: தத்த்வத: யே தேஷாம் ராஜன் ஸர்வயஜ்ஞா: ஸமாப்தர்:”-என்பது, பாரதம்.
“அரசனே! எந்தப் பிராஹ்மணர்கள், கிருஷ்ணனை உள்ளபடிஅறிகின்றார்களோ அந்தப் பிராஹ்மணர்களுக்கு எல்லா
யாகங்களும் முடிந்தவைகள் ஆகின்றன” என்றாரே அன்றோ.
வேறு ஒன்று செய்யுமவனுக்குக் குறை கிடப்பதும் ஓர் அம்சம் உண்டே அன்றோ.
சித்தோபாய நிஷ்டர்கள் செய்ய வேண்டுமவற்றை எல்லாம் செய்து முடித்தவர்கள் அலரோ.
வையத் தேவர் –
பூசுரர்.
அறாச் சிரீவரமங்கல நகர் கைதொழ இருந்தாய் –
அவர்கள் நித்தியவாசம் செய்கிற ஸ்ரீ வரமங்கல நகரிலே அங்குள்ளவர்கள் அடிமை செய்ய,
அதுவே தாரகமாக இருந்தாய்.
அது நானும் கண்டேன் –
ஸ்ரீவைகுண்டத்தைக் கல விருக்கையாகவுடைய நாம் இங்கே வந்து உமக்காக இருக்க, ஒன்றும் செய்திலோமாகச் சொன்னீரே? என்ன,
இருந்தாய், அதில் தடை இல்லை, நான் அநுபவித்த அம்சத்தை இல்லை செய்கிறேன் அல்லேன்;
அநுபவித்த அம்சம் போராமல் படுகிறேன். என்றது, தேவர் செய்தருளின அம்சம் இவ்வளவு உண்டு,
அதில் குறை இல்லை, எனக்கு அவ்வளவால் போராது என்கிறார் என்றபடி.
திருவடிகளில் கைங்கரியமே யாத்திரையாகப் பெற வேண்டும் என்பது அவாய் நிலை.

———————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: