பகவத் விஷயம் காலஷேபம்- 117- திருவாய்மொழி – -5-6–6….5-6-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–5-6-6-

கிருஷ்ண சேஷ்டிதங்கள் செய்தேனும் யானே
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்-மூங்கில்கள் உள்ள கோவர்த்தன கிரி
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்-திரள வந்த எருதுகள்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்-சிறிய வயசில் கன்றுகளை -வான் கன்று –
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்-திரளான பசுக்களை -வயசு வந்ததும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்-இடைப் பிள்ளைகளுக்கு தலைவன் -தனக்கு நேரான தன்னேராயிரம் பிள்ளைகள் -வாரணம் ஆயிரம் –
பரமம் சாம்யம் -தன் இனத்தவர் -இவர்கள் இனத்தவர் அவன் அன்றோ
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?-சங்கமான கூட்டமான ஸூ ரிகள்
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?-தன்னில் தான் செறிந்த வேல்
இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே–அதே கண் அழகு பெற்ற –

கூட்டம் கூட்டமான மூங்கில்களையுடைய கோவர்த்தனம் என்னும் மலையைத் தூக்கினவனும் நானே என்னும், ஒத்த இடபங்களைக் கொன்றவனும்
யானே என்னும், ஒத்த பசுவின் கன்றுகளை மேய்த்தேனும் யானே என்னும், ஒத்த ஆயர்களுக்குத் தலைவனும் யானே என்னும்,
கூட்டம் கூட்டமான நித்தியசூரிகளுக்குத் தலைவனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? வேலை ஒத்த கண்களையுடைய நல்லவர்களான
உங்களுக்கு, வேலை ஒத்த கண்களையுடையவளான என் மகள் அடைந்தனவற்றை என்சொல்லுவேன்?

கோவர்த்தன மலையைத் தூக்கித் தரித்திருத்தல் முதலான, கிருஷ்ணனுடைய செயல்களை எல்லாம் செய்தேன் நான் என்னா நின்றாள்.

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்-
அணுக்கனைக்-குடையை- கவிழ்த்துப் பிடித்தாற்போலே, திரள்திரளான மூங்கிலையுடைத்தான மலையை வருத்தம் இன்றியே
தரித்தேன் நான் என்னாநின்றாள்.
இனம் ஏறுகள் செற்றேனும் யானே என்னும் –
ஒன்று இரண்டு அன்றிக்கே யமனுக்கு ஒத்தனவாக இருக்கிற இடபங்கள் ஏழனையும் ஒருகாலே ஊட்டியாக-கழுத்தாக –ஊண் – என்றுமாம்
நெரித்துப் போகட்டேன் நான் என்னும்.
இன ஆன்கன்று மேய்த்தேனும் யானே என்னும் –
வத்ஸ மத்யகதம் பாலம் நீலோத்பல தளச்சவிம்” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா.- 5. 17 : 19.
“கன்றுகளின் நடுவில் உள்ளவனும் இளமைப்பருவமுடையவனும்” என்கிறபடியே, என்னோடு ஒத்த பருவமுள்ள
கன்றுகளை மேய்த்தேனும் நான் என்னும்.
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும் –
முன்பு பிரஹ்மசர்யம் அநுஷ்டித்துப் பின்பு இல்லற தர்மம் அநுஷ்டிப்பாரைப் போலே, இளமைப் பருவத்தில்
கன்றுகளை மேய்த்து, பருவம் நிரம்பின பின்பு பசுக்களை மேய்த்தேனும் நான் என்னும்.
இன ஆயர் தலைவனும் யானே என்னும் –
“ “தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடை இட்டு வருவான்” -பெரியாழ்வார் திருமொழி. என்கிறபடியே
என்னோடு ஒத்த பருவத்தில் பிள்ளைகளும் நானுமாகத் தீம்பு செய்து திரிகிற இடத்தில் அவர்களில் என்னளவு தீம்பு செய்கின்றவர்கள் இலர் என்னும்.
இனத்தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ-
வேறு ஒன்றிலும் விருப்பம் இல்லாதிருத்தலுக்குத் தன்னோடு ஒத்திருக்கிற நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனான
சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
அன்றிக்கே, இனத்தேவர் என்பதற்கு, தனியே அநுபவிக்க ஒண்ணாமையாலே திரள்திரளாக இருக்கிற நித்தியசூரிகள் என்னுதல்.
“அடியார்கள் குழாங்கள்” என்னக்கடவதன்றோ.
இனம் வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் –
இவள் நிலை எவ்வளவாய்த் தலைக்கட்டுகிறது என்று, வேல் ஒழுங்கு போலே கூர்க்கப் பார்த்துக்கொண்டிருக்கிற
உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவேன்? ஏன் தான், சொல்ல அருமை என்? என்ன,
இனம் வேல் கண்ணி என்மகள் உற்றன-
தன் கண்களுக்கு இலக்கானார் படுமதனைத் தான் படுகிறபடியைச் சொல்லப் போமோ?
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதனசெங்கோல்”
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே”- திருவிருத்தம் – என்பதே அன்றோ இவள் கண்களுக்கு இலக்கானார் படுவது.

———————————————————————————-

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7-

ஜகத்தில் பந்துக்கள் அளவில் அவன் படி எல்லாம் -அவன் நடக்கும் படிகள் -தானாக சொல்லிக் கொள்கிறாள்
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்-ந த்வேஷி -ந பிரிய -கர்மங்கள் போன்ற உபாதியாலே கிட்டுதல் இல்லை –
உள்ளபடி அறிந்து கிட்டுதல் -யாரும் இல்லை -ஏக வசனம் யாரும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்-இந்த ஜகத்தில் நிருபாதிக சம்பந்தம் -தாரதம்யம் இல்லாமல் அனைவருக்கும்
உண்டே -சமோஹம் சர்வ பூதேஷு -சோபாதிக உறவினர் இல்லை -பஹு வசனம் எல்லாரும் –
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்-உற்றாராம் படி ஆக்குபவனும் நான் –
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்-பிரயோஜ நாந்தரம் கேட்டு பெற்று போவார்கள் -அதில் சிக்கி
என்னை இழப்பார்கள் -அவற்றைக் கொடுத்து உறவு அறுத்து கொள்வான்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்-அநந்ய பிரயோஜனராய் கிட்டினார்களுக்கு நெருங்கிய உறவு ஆவேன் –
உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?-எத்தனை அளவுடையார்கள் ஆனாலும் உற்றார் இல்லாதவன் முட்டக் கண்டு கிட்டினார் இல்லை –
ஸூ பிரயத்தனத்தால் லபித்தார் யாரும் இல்லை -பந்துக்கள் உங்களுக்கு
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே-ஸூ பிரயத்தனத்தால் -இல்லாமல் -மயர்வற மதி நலம் அருளப் பெற்று
அவன் பிரசாதத்தால் உற்றவள் -பேசினதை என் பிரயத்தனமும் இல்லாமல் அவன் பிரசாதமும் இல்லாமல் நான் என்ன சொல்வேன் –

எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பாள், இங்கு எல்லாரும் எனக்கு உறவினர்களே என்பாள், உறவினர்களை உண்டாக்குகின்றவனும்
யானே என்பாள், உறவினர்களை அழிக்கின்றவனும் யானே என்பாள், உறவினர்களுக்குப் பொருந்தியவனும் யானே என்பாள்,
உறவினர்கள் ஒருவரும் இல்லாத மாயனாகிய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? இங்கு வந்து சேர்ந்திருக்கின்ற உங்களுக்கு,
என்னுடைய பேதைப்பருவத்தையுடைய மகள் பொருந்தி உரைக்கின்ற வார்த்தைகளை எதனைச் சொல்லுவேன்?

எம்பெருமான் அடியார்கள் விஷயத்தில் இருக்கிற இருப்பைத் தன் படியாகப் பேசா நின்றாள் என்கிறாள்.

எனக்கு உற்றார்கள் யாரும் இல்லை என்னும்-
எனக்கு ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்கள் ஒருவரும் இலர் என்னும்.
அன்றிக்கே, என்னுடைய சம்பந்தம் அறிந்து என்னோடு சிநேகிக்கக் கூடியவர் ஒருவரும் இலர் என்னும் என்னுதல்.
“பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸவம் அச்யுதம்” என்பது,-தைத்திரீய நாரா.
“உலகங்கட்கு எல்லாம் தலைவன்” என்று இதனை ஓதி வைத்தே வேறு தெய்வங்களை வணங்குதல் அன்றோ செய்வது.
எனக்கு உற்றார்கள் இங்கு எல்லாரும் என்னும்-
எனக்கு, காரணம் இல்லாமல் வந்த பந்துக்கள் அல்லாதார் இலர் என்னும்.
அவர்கள் இப்படி -தப்பாக -இருக்கச் செய்தே காரணமில்லாமல் வந்து பந்துவாய் எல்லாரிடத்திலும் அன்புடையனாயிருப்பன் என்னுதல்.
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்-
அவர்களிலே சிலர் வந்து என்னை அடையும்படி செய்கின்றேனும் யானே என்னும்.
தேஷாம் சத்த யுக்தாநாம் —பஜனம் ப்ரீதி பூர்வகம் –ததாமி புத்தி யோகம் – நான் பேர் அன்புடன் கொடுக்கிறேன் -என்றபடி
ப்ரீதியையே உபாயமாக கொண்டு அவனை அடைகிறான் -இரக்கமே உபாயம் என்றபடி –
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்-
அவர்களுக்கு வேறு பிரயோஜனங்களிலே ருசி உண்டானால், அந்தப் பிரயோஜனங்களைக் கொடுத்து
என் பக்கல் நின்றும் அகற்றுவேனும் யானே என்னும்.
அன்றிக்கே, அவர்களை அழகு முதலியவைகளாலே அழிப்பேனும் யானே என்னா நின்றாள் என்று ஆண்டான் பணித்தானாக இளையபெருமாள் பணிப்பர்.
அநந்ய பிரயோஜனர்களை -பிரபன்னர்களுக்கு அழகைக் காட்டி துடிக்க வைக்கிறேன் -ஏழையர் ஆவி உண்ணும் -இணைக் கூற்றங்கள் –

உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் –
என் பக்கல் வேறு பிரயோஜனங்களை விரும்பாதவர்களாய் என்னை அடைகின்றவர்கட்கு, என்னளவு வேறு
பிரயோஜனங்களை விரும்பாதவர் இலர் என்னுதல்.
த்ரிவித பரிச்சேத ரஹிதன் என்பதால் அவனும் அநந்ய பிரயோஜனர் அனைவருக்கும் அனந்யராக அனுபவிப்பான் –
இளைய பெருமாள் -பிராதா பிதா -சொன்னான் -பெருமாளும் அவரையே பிதா சர்வம் என்றாரே –
அன்றிக்கே, என்னையே எல்லா உறவு முறையுமாகப் பற்றினவர்கட்கு, நானும் அவர்களையே எல்லா உறவு முறையுமாக இருப்பேன் என்னுதல்.
உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ –
இற்றைக்கு முன்பு தம் முயற்சியால் கிட்டினவர்கள் ஒருவரும் இல்லாதபடி இருக்கிற ஆச்சரியத்தையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்-
இங்ஙனம் சந்தேகிக்கலாமோ, உறவினர்களுக்கு அறுதியிட்டுச் சொல்லவேணுங் காண் என்ன,
உறவு முறையராமித்தனையோ வேண்டுவது, சொல்ல வேண்டுவன இருந்து சொல்ல வேண்டாவோ,
என்ன பாசுரத்தைச் சொல்லிச் சொல்லுவேன்? ஏன்தான், சொல்ல ஒண்ணாமைக்கு வந்தது என்? என்னில்,
என்னுடைப் பேதை உற்று உரைக்கின்றவே-
பருவம் நிரம்பாத என் பெண், மறுபாடுருவத் தைத்துச் சொல்லுகிறவற்றை, கரையிலே நிற்கிற நான் எதனைச் சொல்லுவது?
திருத்தாயாரான நிலையும் இவர்க்கே உள்ளது ஒன்றாகில் இங்குச் சொல்ல ஒண்ணாதபடி கலங்குகையாவது என்? என்னில்,
“தனக்கும் தன்தன்மை அறிவரியான்” என்கிறபடியே, சர்வேச்வரனை, தன்படி தானும் அறியான் என்று
சொல்லுமாறு போலே, தம்நிலை தமக்குங் கூடப் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறது.

—————————————————————————

உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.–5-6-8-

ஜகத் பிரதானர் -பரமன் ருத்ரர் முனிவர்கள் இவள் ஆதீனம்
உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்-ருத்ரன் ஈஸ்வரன் என்ற பிரசித்தன் -வேதத்தால் சொல்லப்படும் ருத்ரன் -எனக்கு பிரகார பூதன்
பரன் திறம் அன்றி தேவர் இல்லையே
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்-ச பிரம்மா-நான் முகன் -ச சிவா சேந்திர-ச ஹரி சேர்த்து சொல்லி -சந்தசுக்கு சேராதே பஞ்சாதிக்கு –
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்-தச பிரஜாபதிகள் -இவர்களைக் கொண்டு மேலே நான் முகன் சிருஷ்டி
உரைக்கின்ற அமரர்கோன் யானே என்னும்-இந்த்ரனும் -முப்பத்து முக்கோடி தேவர் தலைவன்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்-தேவ ரிஷிகளுக்குள் நான் நாரதர்
உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?-சப்தம் போடும் முகில் நீல தோயதம்-வித்யுத் மின்னல் -தாயார் –
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?-சொல்லு சொல்லு விடாமல் சொல்லும் உங்களுக்கு
உரைக்கின்ற என்கோமள ஒண் கொடிக்கே.-லோக மரியாதை அல்லாத இவள் -சுகுமாரம் -தர்ச நீயம் –
ஆஸ்ரய வியதி ரேகத்தில் தரைப்படும் கொடி -கொள் கொம்பு வேண்டுமே -சிதிலை யாவாள் –சிந்தா சமுத்ரம் -ஜனகன் -கவலைக் கடல் —

தாமத புராணங்களிலே சொல்லப்படுகின்ற சிவபிரானும் யானே என்பாள், அவனுக்கும் தமப்பனாகச் சொல்லப்படுகின்ற பிரமனும் யானே என்பாள்,
சொல்லப்படுகின்ற தேவர்களும் யானே என்பாள், சொல்லப்படுகின்ற தேவர்கள் தலைவனான இந்திரனும் யானே என்பாள், உரைக்கின்ற
முனிவர்களும் யானே என்பாள், வேதங்களிலே பிரசித்தமாகச் சொல்லப்படுகின்ற மேகம் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
சொல்லு சொல்லு என்று பேசுகின்ற உங்களுக்கு, உலக விஷயத்தைக் கடந்து பேசுகின்ற அழகிய கொடி போன்ற என் பெண் விஷயத்தில் எதனைச் சொல்லுகேன்?

உலகத்திற்குப் பிரதாநரான பிரமன் முதலான தேவர்கள் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்கிறாள்.

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும் –
வேதத்திலே பகவானுடைய செல்வங்கள் பரக்கச் சொல்லப்படுகின்ற இடங்களிலே யாதல், புனைந்துரையாகப் பேசப்படுகின்ற இடங்களிலே யாதல்
சொல்லப்படுமவனாய், தன்னுடைய கோஷ்டிக்கு உபகாரகனான சிவன் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்.
அன்றிக்கே,
“ருத்ராணாம் ஸங்கர: ச அஸ்மி வித்தேஸ: யக்ஷரக்ஷஸாம் வஸூநாம் பாவக: ச அஸ்மி மேரு: ஸிகரிணாம் அஹம்”- என்பது, ஸ்ரீ கீதை. 10 : 23.
“பதினோர் உருத்திரர்களுக்குள்ளே சங்கரன் நான் ஆகின்றேன்” என்கிறபடியே, சர்வேச்வரனுக்குப் பிரகாரமாகச்
சொல்லப்பட்டவனாதலின் ‘உரைக்கின்ற’ என்கிறார் என்னுதல்.
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் –
“விரூபாக்ஷாய பிரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்டாய ச்ரேஷ்டாய”- என்பது, சாமவேதம்.
பிரமர்கள் பதின்மர் :- மரீசி, அத்திரி, அங்கிரசு, புலஸ்தியர், புலகர், கிரது, வசிஷ்டர், தக்ஷர், பிருகு, நாரதர் என்பவர்கள்.
“விரூபாக்ஷனும் பிரமனுக்கு ஜ்யேஷ்ட புத்திரனுமான சிவன்” என்கிறபடியே, அந்தச் சிவனுக்கும் தமப்பனாகப் பிரமாணப்
பிரசித்தனாயிருக்கின்ற பிரமனும் நான் இட்ட வழக்கு என்கிறாள்.
உரைக்கின்ற அமரரும் யானே என்னும் –
பிரமனாலே படைக்கப்பட்டவர்களாய், நித்திய சிருஷ்டிக்கு உரியவர்களாகச் சாஸ்திரங்களிலே சொல்லப்படுகின்ற பிரமர்கள்
பதின்மர்களும் நான் இட்ட வழக்கு என்னும்.
“ப்ரஹ்மா தக்ஷாதய: கால: ததைவ அகில ஜந்தவ: விபூதய: ஹரே: ஏதா ஜகத: ஸ்ருஷ்டி ஹேதவ:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 22 : 31.
“நகிரிந்த்ர த்வத் உத்தர:” என்பது, ருக்வேதம்.
அன்றிக்கே, “பிரமன் என்ன, தக்ஷர் முதலான பிரஜாபதிகள் என்ன, இவர்கள் முதலானவர்கள் சர்வேச்வரனால் நியமிக்கப்படுகின்ற
பொருள்கள்; உலகத்தைப் படைப்பதற்குக் காரணர்களாக இருக்கிறார்கள்” என்கிறபடியே,
பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவர்களாதலின் ‘உரைக்கின்ற அமரர்’ என்கிறாள் என்னுதல்.

உரைக்கின்ற அமரர்கோன் யானே என்னும்-
“இந்திரனே! உன்னைக்காட்டிலும் உயர்ந்தவர் ஒருவருமிலர்” என்று சொல்லப்படுகின்ற இந்திரனும் யானே என்னும்.
“வேதாநாம் ஸாமவேத: அஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:” என்பது, ஸ்ரீ கீதை. 10 : 22.
அன்றிக்கே, “வேதங்களில் சாமவேதம் நானாக இருக்கிறேன், தேவர்களில் இந்திரன் நானாக இருக்கிறேன்” என்கிறபடியே,
பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவன் ஆதலின், ‘உரைக்கின்ற’ என்கிறாள் என்னுதல்.
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் –
வேதத்தின் அர்த்தங்களை நினைத்து, உலகத்திற்குச் செய்ய வேண்டியனவற்றைச் சொல்லும்
மனு முதலான முனிவர்களும் நான் இட்ட வழக்கு என்னும்.
உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக் கொலோ –
வார்த்தை சொல்லுவதாய், கழுத்தே கட்டளையாக நீரை முகந்து, மின்னி, முழங்கி, வில்லிட்டு வருவதொருமேகம் போலே
வடிவழகையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
அன்றிக்கே, உரைக்கின்ற -“நீலதோயத மத்யஸ்த்தா” என்பது, தைத்திரீய நாராயண உப. 11
“கருமை நிறத்தையுடைய மேகத்தின் நடுவில் இருப்பதான மின்னல் போலே” என்கிறபடியே,
நீருண்ட மேகம் போலே என்று சொல்லப்படுகிற என்னுதல்.
உரைக்கின்ற உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் –
சிலவற்றைச் சொல்லுமித்தனையேயாய், ‘சொல்லலாம், சொல்ல ஒண்ணாது’ என்று பாராதே,
சொல்லு சொல்லு என்று வருத்துகின்ற உலகத்தீரான உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது?
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே –
அதுவும் சொல்லி ஒழிவேனே அன்றோ வார்த்தை சொல்லிற்றிலள் ஆகில். ‘கோமளம்’ என்கையாலே, சௌகுமார்யத்தைச் சொல்லிற்று.
‘கொடி’ என்கையாலே,
“பதி ஸம்யோக ஸு லபம் வய: த்ருஷ்டவா ச மே பிதா” என்பது, ஸ்ரீராமா.அயோத். 118 : 36. அநசூயைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
“கணவனை அடைதற்குரிய வயதினையுடையவள்” என்கிறபடியே,
ஒருகொள் கொம்போடே சேராத போது தறைப்படும் பருவம் என்பதனைச் சொல்லிற்று.

———————————————————————————

கொடிய வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–5-6-9-

குரூரமான கர்ம பிரகாரங்கள் எல்லாம் இவள் இட்ட வழக்கு
கொடிய வினை யாதும் இலனே என்னும்-கர்ம சம்பந்தம் இல்லை –கர்மம் இவனை தீண்டாது -பலனும் இல்லையே
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்-வினைகளும் நான் -நிக்ரஹ ரூபம் -தானே பாபங்கள் -அனுக்ரஹம் -ப்ரீதி ரூபம் புண்ணியம் –
தன்னடையே போவதால் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-இஷ் சப்தம் இதனால் தான் –
ராஜ குமாரன் -சிறை -அதிகாரி அறிந்ததும் –
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்-பிரதி கூலரை செய்விப்பவனும் நானே -ஷிபாமி ஆசூர யோநிஷூ தள்ளி –
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்-ததாமி புத்தி யோகம் –
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்-பெருமாள் ராவணனை கொடியான் சொல்ல மாட்டாரே -தாயார் வார்த்தை -பராங்குச நாயகி தானே சீதை
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?-ஆஸ்ரித விரோதிகளுக்கு மிருத்யு சமன் பெரிய திருவடி -கொடியிலே ஆன்புள் -என்றுமாம்
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?-உலகத்தீர் -அதி நிர்பந்தம் பண்ணும் -நமக்கு நிலம் இல்லை என்று விடாமல்
பராங்குச நாயகி நிலை பேச முடியாது சொல்லியும்
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.-தன்னை இதில் கொடியேன் என்று சொல்லிக் கொள்கிறாள்
உங்களுக்கு சொல்ல முடியாமல் இவள் நோய்க்கு மருந்தும் அறியாமல் –
கோலங்கள் தர்ச நீயமான சேஷ்டிதங்கள் -ஒருப்பாட்டுடன் செய்பவை

கொடுமை பொருந்திய கர்மங்கள் ஒரு சிறிதும் எனக்கு இல்லை என்னும், கொடிய கர்மங்கள் ஆவேனும் யானே என்னும்,
கொடிய பாவங்களைச் செய்விப்பவனும் யானே என்னும், கொடிய பாவங்களைத் தீர்க்கின்றவனும் யானே என்னும்,
கொடியவனான இராவணனுடைய இலங்காபுரத்தை அழித்தேனே என்னும், பகைவர்களுக்குக் கொடுமையை விளைவிக்கின்ற
கருடப்பறவையை வாகனமாகவுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? கொடுமையையுடைய உலகத்தீர்க்கு, மஹாபாவியேனான
என்னுடைய கொடி போன்ற பெண்ணானவள் செய்கின்ற அழகிய காரியங்களைப் பற்றி என் சொல்லுவேன்?

கர்மங்களுக்குக் கட்டுப்படாமை முதலான, பகவானுடைய வார்த்தைகளைத் தன்னுடையனவாகப் பேசாநின்றாள் என்கிறாள்.

கொடிய வினை யாதும் இலனே என்னும் –
கர்மங்களுக்குக் கட்டுப்பட்டவர்களை அருளின்றி நலியும் கர்மங்கள் எனக்கு ஒன்றும் இல்லை என்னும்.
“தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி அநஸ்நந் அந்ய: அபிசாக ஸுதி”-என்பது, உருக்கு வேதம்.
“ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா”-என்பது. ஸ்ரீ கீதை. 4.14.
“ஜீவாத்மாவுக்கு வேறுபட்ட சர்வேச்வரன் கர்மபலத்தை அநுபவியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்” என்றும்,
ஸூ பர்ணா -கதி சாதனம் -ஞானம் கர்மம் –சோபன ஞானம் படித்தவை -ச யுஜவௌ-சாம்யா பத்தி உண்டே இரண்டுக்கும்-சமானம் வ்ருஷம் –
“என்னைக் கர்மங்கள் ஒட்டுவன இல்லை, கர்ம பலத்தில் எனக்கு ஆசை இல்லை” என்றும் சொல்லப்படுகிற அவன்
படிகளைத் தான் சொல்லாநின்றாள். “நாட்டிற் பிறந்து படாதன பட்டு” என்கிற இடம், இச்சையால் வருவனவே அன்றோ.
கொடிய வினை ஆவேனும் யானே என்னும் –
நான் இவற்றால் தொடப்படாத மாத்திரமேயாய், அவைதாம் எனக்குப் புறம்பாய் இருக்கின்றனவோ;
அந்தப் பாவங்கள் தாம் என்னுடைய நிக்கிரஹமே யன்றோ என்னும்.
கொடிய வினை செய்வேனும் யானே என்னும் –
அடியார்களுடைய பகைவர்களுக்குக் கொடியதான பாவத்தை விளைப்பேனும் யானே என்னும்.
ஈண்டுச் ‘செய்வேன்’ என்றது அடியார்களுடைய பகைவர்களைப் பாவங்களிலே மூட்டுகையைக் குறித்தபடி.
“என்னைப் பகைக்கின்ற அத்தகையரும் கொடுந்தன்மையரும் இழிந்தவருமான பாவிகளை எப்பொழுதும்
பிறப்பு இறப்பு பரம்பரைகளில் அவற்றிலும் அசுரப்பிறவிகளில் தள்ளுகிறேன்” என்பது ஸ்ரீ கீதை.

கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்-
என்னை வந்து அடைந்தவர்கட்கு அவை வந்து கிட்டாதபடி- “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:”-என்பது, ஸ்ரீ கீதை. 18. 66
“எல்லாப் பாவங்களில் நின்றும் விடுவிக்கிறேன்” என்பேனும் யானே என்னும்.
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்-
சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையுடையவனாதலின் ‘-பெரிய திருமொழி, 5. 7 : 7.-கொடியான்’ என்கிறது.
இவ்விடத்தில் ‘கொடியான்’ என்றது, திருத் தாயார் வார்த்தை காண்’ என்று அருளிச்செய்வர் சீயர்,
எதிரிகளை இவன் ஒன்றாக மதித்திருந்தானாகாமைக்கு; அவனாலே ஆவேசிக்கப்பட்டவள் அன்றோ இவள்.
கொடிய புள்ளுடையவன் ஏறக்கொலோ –
“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந் க்ஷிபாமி அஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”- என்பது, ஸ்ரீ கீதை. 16. 19.
அடியார்களுடைய பகைவர்களுக்கு யமனை ஒத்தவனான பெரிய திருவடியை வாஹனமாகவுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் –
‘கேட்க வேணும்’ என்று திரண்டு கிடக்கிற உலகத்தீர்க்கு என்னுதல். ‘இது கூடும்; கூடாது’ என்று பாராமல்
‘சொல்லு சொல்லு’ என்று நிர்ப்பந்தித்து ஸ்வகாரியத்தில் நோக்குள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு எதனைச் சொல்லுவது என்னுதல்.
கொடியேன் கொடி என்மகள் கோலங்களே –
இவள் அநுகரித்துச் சொல்லுகிற பாசுரங்களைக் கேட்க வேண்டும்படியான பாவத்தைச் செய்த என்னுடைய மகள்
செய்கிற காணத்தக்க இனியவான செயல்களை. அன்றிக்கே, ஒருப்பாடுகளை என்னுதல்.

———————————————————————————————-

கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோல மில் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.–5-6-10-

ஸ்வர்க்க நரகாதிகள் -சகல பலன்களும் -இவற்றை தேடித் போகும் ஆத்மாக்களும் -நான் இட்ட வழக்கு –
கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்-தர்ச நீயம் -மோஷ விரோதி இதுவும் -பரமபத வாசல் -ஸ்வர்க்க வாசல் –
கோல மில் நரகமும் யானே என்னும்-வை லஷண்யம் இல்லா துக்கோத்தரமான நரகம்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்-நிரதிசய ஆனந்த ரூப வைலஷண்யம் -விளங்கும் பரம பதமும் நானே
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்-பலன்களை பற்றுக் கொள்ளும் ஒருப்பாடு -ஏக மனசாக முயலும் -நரகத்துக்கும் முயல்கிறார்களே –
ஸ்வா பாவிக அநவதிக அதிசய -பண்ணுவது எல்லாம் இதற்காகவே –
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்-தன் நினைவில் வைத்து சகல காரண வஸ்து -சஹாயாந்தர –
பிரகிருதி /சங்கல்ப ரூப ஞானம் /சர்வேஸ்வரன் மூன்றையும் முதல் என்பதால்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?-இந்திர தனுஸ் பசுத்த வடிவு ச்புரிக்கிற மின்னும் நாநா வர்ணம் –
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?-ஒருப்பட்டு நிற்கும் -கேட்டு அல்லது போவோம் -தர்ணா -இருந்து —
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.-கோதை -அழகிய மாலை கூந்தல் -கூந்தல் உடைய பெண் -என்ன வென்று சொல்ல இயலும் –

அழகினைக் கொண்டுள்ளதான சுவர்க்கமும் யானே என்பாள், அழகு இல்லாத நரகமும் யானே என்பாள், அழகோடு விளங்குகிற பரமபதமும் யானே என்பாள்,
அழகினைக் கொண்ட உயிர்களும் யானே என்பாள், அழகினைக் கொண்டிருக்கின்ற ஒப்பற்ற மூலப்பகுதியும் யானே என்பாள், அலங்காரத்தைக் கொண்ட
மேகம் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? அலங்காரத்தைச் செய்துகொண்டு வந்து நிற்கிற உலகத்தீர்க்கு,
அழகோடு விளங்குகிற மாலையைத் தரித்த கூந்தலையுடைய என் மகளுக்கு உண்டான நிலைகளைப் பற்றி எதனைச் சொல்லுவேன்?

சுவர்க்கம் முதலான பொருள்கள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள் என்கிறாள்.

கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் –
சுகரூபமான சுவர்க்கமும் யானே என்னும். நிலை நில்லாமையாலே, முகப்பில் காட்சிக்கினியதாந் தன்மையைப் பற்ற,‘கோலம் கொள்’ என்கிறது.
‘நரகத்தோடு ஒத்திருக்கச் செய்தே, வாசலிலே கழஞ்சு செம்மண் பூசி இருக்குமாறு போலே காண்’ என்று அருளிச்செய்வர் சீயர்.
கோலம் இல் நரகமும் யானே என்னும் –
மேல் எழப் பார்க்கையில் அங்ஙனமும் ஒன்று இன்றியிலே இருக்கிற நரகமும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள்.
கோலம் கொள் மோக்கமும் யானே என்னும் –
மீண்டு வருந்தன்மை இல்லாததாய்ச் சுகத்திற்கே இருப்பிடமானதான மோக்ஷமும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள்.
“கடல் ஞாலம் செய்தேன்” என்று, படைப்புத் தொடங்கி, “மோக்கமும் யானே”என்று மோக்ஷம் முடிவாகத் தன்னுடைய காரியம் என்கிறாள்.
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்-
நாடகம் கட்டி ஆடுவாரைப் போலே தேவனாகவும், மனிதனாகவும், இப்படிப் பல வகையான சரீரங்களை
மேற்கொள்ளுகிற ஆத்மாக்களும் யானே என்னும்.
அன்றிக்கே, கோலம் கொள் உயிர்கள் – ஞான ஆனந்த லக்ஷணமான உயிர்கள் என்னுதல்.
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும் –
இவற்றிற்கெல்லாம் காரணமான மூலப்பகுதியும் யானே என்னும்.
அன்றிக்கே, சங்கல்ப ரூப ஞானத்தைச் சொல்லுதல்.
அன்றிக்கே, விசித்திர காரிய காரிணியான மூலப்பகுதியையும் சங்கல்பரூப ஞானத்தையும் பிரகாரமாக வுடையனாய்,
எல்லா நற்குணங்களையுமுடையனான சர்வேச்வரன் என்னுதல்.
கோலம் கொள் முகில்வண்ணன் –
திருமேனிக்கு மேகத்தை ஒப்பாகச் சொல்லும்போது அலங்கரித்துச் சொல்லவேணுமாதலின் ‘கோலம் கொள் முகில்’ என்கிறது.
மின்னி முழங்கி வில்லிட்டு வந்து தோற்றின போதாயிற்று ஒப்பாகச் சொல்லலாவது.
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் –
‘கேட்கவேணும்’ என்று ஒருப்பட்டிருக்கிற உலகத்தீர்க்கு நான் எதனைச் சொல்லுவது.
அன்றிக்கே, மயிரும் உகிரும் பேணி, உடம்பு பேணி வந்து அலங்கரித்துக்கொண்டு நிற்கிற உங்களுக்கு என்னுதல்.
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கு-
அழகிய மாலையையும் மயிர்முடியையுமுடைய என் மகளுக்குப் பிறந்த அவஸ்தைகளை. என்றது,
இவள் மாலையையும் மயிர் முடியையும் கண்டார் படுகிற பாட்டைத் தான் பட்டு அநுகரித்துச் சொல்லுகிறவற்றை நான் எதனைச் சொல்லுவது என்றபடி.

——————————————————————————————–

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-

சர்வாதிகன் -ஸ்ரீ மன் நாராராயணன் -சர்வேஸ்வரனை அனுகரித்து -சர்வ லோக சம்பாவநீயராய் -போற்றப் படுபவர் ஆவார் –
பகவத் கிஞ்சித் காரம் -பாகவத கிஞ்சித் காரம் -பலன் கிட்டும்
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை-வாசம் செய் பூம் குழலாள் -விலஷண -இயற்க்கை மனம்
குற்றம் குற்றமே -கதை அறிவோம் -நிரதிசய போக்ய போதை -நித்ய யௌவன சோபை –
ரூப வை லஷண்யம் உடைய பூமிப் பிராட்டி -அபிஜாதர் -இவளுக்கு மட்டும் -கும்பன் திரு மகள் -கண்ணன் விரும்பின குலம்
என்பதால் -கொழுந்து சிரோ பூஷணர் போலே -கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே –
யசோதை போலே நப்பின்னை பிராட்டியாரும் -அபிமத சர்வேஸ்வரன் -ஆசைக் காதலன் -தன்னை -ஹ்ரீச்ச லஷ்மி ச -பத்னீ த்ரயம் புருஷோத்தமன் –
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு-பாவனா பிரகர்ஷம் -உகளிக்க –
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து-நிர்வாககர் -குருகூர் ஜகத்த்ல் மன்னி -இங்கே சடகோபன் மன்னி என்றுமாம் -அந்தரங்க வ்ருத்தி
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்-ஆராய்ந்து அருளிச் செய்த
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்-விலஷணம் -அநு கரித்து அருளிச் செய்தது -பாவ வ்ருத்தி உடன் அப்யசிக்க வல்லார்கள்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்-சிரசா வஹிக்கும் படி -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கைங்கர்யம் செய்யும் பலன் கிட்டும் –
ஆராதிக்க பாக்கியம் பெற்றவர்கள் -ஏய்ந்த -பொருந்திய என்றுமாம் -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ -செல்வம் நித்யமாக இருக்கும் –

மயிர் முடியையுடைய பெரிய பிராட்டியார்க்கும் பூமிப்பிராட்டிக்கும் ஆயர்குலத்துக்குக் கொழுந்து போன்ற நப்பின்னைப் பிராட்டிக்கும்
கணவனான சர்வேச்வரனை, பொருந்திய வளப்பத்தையுடைய வழுதி நாடரும், நிலைபெற்ற திருக்குருகூரில் அவதரித்த சடகோபருமான
நம்மாழ்வாரால் குற்றேவல் செய்து ஆராய்ந்து சொல்லப்பட்ட தமிழ்ப் பாசுரங்கள் ஆயிரத்துள் இப்பத்துப் பாசுரங்களையும் வல்லவர்கள்,
தரித்த பெரிய செல்வத்தையுடையவர்களாகிச் சர்வேச்வரனுடைய அடியார்களைப் பூசிப்பதற்குப் புண்ணியம் செய்தவர்கள் ஆவார்கள்.

இத் திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப்பெறுவர்கள் என்கிறார்.

கூந்தல் மலர்மங்கைக்கும் –
சர்வேச்வரனுடைய ஐச்வரியத்துக்கும் காரணமாயிருக்கிற பெரிய பிராட்டியார். -திருவுக்கும் திருவாகிய செல்வா –
அன்றிக்கே,
“நித்யைவ ஏஷா ஜகந்மாதா விஷ்ணோ : ஸ்ரீ : அநபாயிநீ யதா ஸர்வகதோ விஷ்ணு : ததைவ இயம் த்விஜோத்தம”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுராணம், 1. 8 : 17.
த்விஜோத்தம-அந்தணர் குல மைத்ரேயரைப் பார்த்து பராசரர் -இவளும் சர்வ வியாபகை
எங்கள் ஆழ்வான் விஷ்ணு சித்தம் -வியாக்யானம் -அவன் விபு -இவள் அணு-ஜீவாத்மா
அவன் ஸ்வரூபத்தால் வியாப்தி -இவள் தர்ம பத்னி -விட்டுப் பிரியாமல் இருப்பதால் -இதனால் பெற்ற சக்தியால் வியாப்தி –
சேஷ பூதை-சொல்லிக் கொள்வாள் –
இயற்கையில் பெருமை உண்டு -பத்னியான படியால் அடங்கி குறைத்து கொண்டு ஜீவாத்மா கோஷ்டியில் இருப்பதாக சொல்லிக் கொள்வாள் தேசிக சம்ப்ரதாயம் –
“சர்வேச்வரனுடைய செல்வமாக இருப்பவள்” என்கிறபடியே, சர்வேச்வரனுடைய செல்வமாயிருக்கிற பெரிய பிராட்டியார் என்னுதல்.
மண் மடந்தைக்கும் –
அந்தச் செல்வத்திற்கு விளை பூமியாயிருக்கிற ஸ்ரீ பூமிப்பிராட்டி.
குல ஆயர் கொழுந்துக்கும் –
அதனுடைய பல உருவமாயிருக்கும் நப்பின்னைப் பிராட்டி.
கேள்வன் தன்னை –
“உலகங்கட்குத் தலைவனாகிய இறைவன் இலக்குமியோடு கூடி எழுந்தருளியுள்ளான்” என்கிறபடியே,
இவர்களுக்குப் பதியாயுள்ளவனை. இதனால், ஓர் அவதார மாத்திரமன்றிக்கே, உபய விபூதிநாதனான பூர்ண விஷயத்திலே
அநுகரிக்கிறார் என்று தோற்றி இருக்கிறபடி.
வாய்ந்த –
வாய்க்கையாவது, கிட்டுகை. அநுகாரத்தாலே கிட்டின படியை நினைக்கிறது.
குற்றேவல் செய்து-
ஆழ்வார், திருவடிகளில் அந்தரங்க அடிமைகள் செய்தபடியாயிற்று இவைதாம். என்றது, வாசிகமாக அடிமை செய்தபடியாயிற்று என்றபடி.
நன்று; அநுகாரம் அடிமையானபடி எங்ஙனே? என்னில், அப்படியாகத் தட்டு என்? கொள்ளுகிறவன் கருத்தாலே.
அவன் உகப்பே அன்றோ அடிமையாலும் புருஷார்த்தம்.-இளைய புன் கவிதை — எம்பிராற்கு இனிய வாறே –
‘நம்முடைய பிரிவில் அநுகரித்துத் தரிக்க வேண்டும்படி சம்சாரத்திலே இப்படி உண்டாவதே!’ என்று திருவுள்ளம் போர உகக்கும்,
அது அடிமையாய்த் தலைக்கட்டுமித்தனை.
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர்பத்தும் வல்லார் –
ஆராய்ந்து சொன்ன தமிழ்த் தொடை ஆயிரத்திலும் இப்பத்தைக் கற்க வல்லவர்கள்.
உலகில் ஏந்து பெரும் செல்வத்தராய் –
இந்த உலகத்தில் எல்லாரும் கொண்டாடும்படி ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை யுடையராய்.
அன்றிக்கே.
நின்னையே தான் வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி வித்துவக் கோட்டம்மா! நின்னையே தான்வேண்டி நிற்பன் அடியேனே.- பெருமாள் திருமொழி.-என்கிறபடியே,
உலகத்திலே முகந்தெழு பானையான எல்லை யில்லாத செல்வத்தையுடையராய்க் கொண்டு என்னுதல்.
திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே –
ஸ்ரீமத் புத்திரர்களை ஆராதிக்கப் பெறுவர்கள். திருமால் அடியாரை ஆராதிக்கையாவது, இவர் அநுகாரத்தாலே
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியமுள்ளவராக ஆனாற்போலே, இது கற்றார்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியத்தைக்
கொடுக்கக் கூடிய கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர் என்கை. என்றது, இவர் அநுகரித்த இப்பாசுரங்களைச் சொல்லுகை.
“தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்”- 9. 4 : 9. என்னக் கடவதன்றோ.

———————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சோகஞ்ச தம் –காதல் மிக்கு -சோகம் விஞ்ச
பரி சௌரெ அகிலானாம்
சர்க்காதி கர்து அநுகார ரசேன
தத் பாவ பாவித மனா
தஸ்ய பிரவ்ருத்தி அகிலா மயா சரிதா

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்ரஷ்ட்ருத்வாதி
சகல வித கலா வர்த்தகத்வேன
பூத அந்தராத்மத்வேன
க்ருதி உத்தரணம்
பூ பர நிராகத
சைலேந்திர உத்தாரண-கிரி ராஜ்
வ்ருஷ காண மர்த்த
ஸூ யஜன ஹிததையா
ஆஸ்ரித ஹித
துஷ் கர்ம உன்மூலஆத்யைகி -நிவாராணம்
ஆதி -சுப அசுப சங்க்ரஹனம் –

தன்மைய பிரதத்வம் -தன்னைப் போலே பேச வைக்கும் திருக்குணம் –

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 46-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே
உடனா வனுகரிக்கலுற்று திடமாக
வாய்ந்து அவனாய்த்தான் பேசும் மாறன் உரையதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார் ———-46-

5-2- உறுதி இருந்தது -5-3/5-4/5-5–தளர்ந்து போனாரே -மீண்டும் அவனை அனுகரித்து -அதனால் பெற்ற –
கொஞ்சம் உறுதி -தானாக பேசாமல் -திருத் தாயார் பேச்சாக –

——————————————————————————-
அவதாரிகை-

இதில்
அனுகாரத்தாலே தரிக்கப் பார்க்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
எங்கனயோ -வில் பிரீதி அபரீதி சமமாய் சென்ற இடத்தில்
ப்ரீத்யம்சம் தலை எடுத்து தரிக்கைக்கு யோக்யதை உண்டாய் இருக்க
பாஹ்ய ஹானியாலே அப்ரீதியம்சமே தலை எடுத்து
பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி
ஆற்றாமை கரை புரண்டு
கோபிமார் கிருஷ்ணனை அனுகரித்து தரித்தால் போலே
இவரும் உபய விபூதி நாதனை அனுகரித்து
தரிக்கப் பார்க்கிற படியைக் கண்டு
கண் கலங்கின பரிவர்
சந்நிஹிதர்க்கு விலஷணராய் சொல்லிச் செல்லுகிற க்ரமத்தை
நாயகனைப் பிரிந்த ஆற்றாமையாலே
தத் பிரகாரங்களை அனுகரித்து தரிக்கப் பார்க்கிற
தலைவி நிலையை வினவ வந்தவர்களுக்கு
திருத் தாயார் -சர்வேஸ்வரன் ஆவிஷ்டன் ஆனானோ -என்று
க்லேசத்தாலே சொல்லுகிற துறையிலே வைத்து
அருளிச் செய்கிற -கடல் ஞாலத்தில் அர்த்தத்தை
கடல் ஞாலத்து ஈசனை -என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

————————————————————————————–

வியாக்யானம்–

கடல் ஞாலத்து ஈசனை –
கடல் சூழ்ந்த பூமியில் உள்ளோர்க்கு நியந்தாவாய்
அத்தாலே
சர்வ நிர்வாஹகனான சர்வேஸ்வரனை

முன் காணாமல் நொந்தே –
பிரத்யஷ சாஷாத் காரம் பண்ணாமல் நொந்து –
அதாவது –
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் -என்றும்
அறிவரிய பிரானை -என்றும்
அருளிச் செய்த மானஸ சாஷாத்கார மாத்ரம் ஒழிய
பிரத்யஷ சாஷாத்காரம் இல்லை -என்றபடி –
அத்தாலே அவசன்னராய் –

உடனா வனுகரிக்கலுற்று –
அனந்தரமாக
கோபிமார் கிருஷ்ணனை அனுகரித்து
தரித்த படியை ஆராய்ந்து
தாமும் அனுகரித்து தரிப்பதாக
திரு உள்ளத்திலே உற்று –
திடமாக வாய்ந்து –
திருட அத்யாவச்ய யுக்தராய்
வாழ்ந்த வழுதி வள நாடன் -என்னும்படி
பாவ பந்தத்தோடு கிட்டி –

அவனாய்த்தான் பேசும் –
அதாவது –
கடல் ஞாலம் -என்றும்
கற்கும் கல்வி என்றும்
காண்கின்ற -என்றும்
செய்கின்ற -என்றும்
திறம்பாமல் -என்றும்
இனவேய்-என்றும்
உற்றார்கள் என்றும்
உறைக்கின்ற -என்றும்
கொடிய வினை -என்றும்
கொலங்கொள் -என்றும்
கூந்தல் -என்றும்
என்கிற இவை ஆதியாக -பத்தும் பத்தாக –
ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்கள்
சகல வித்யா வேதனமும்
வித்யா ப்ரவர்தகத்வாதிகளும்
காரணமான பூத பஞ்சகங்களும்
கால த்ரயத்தால் உண்டான க்ரியா ஜாதங்களும்
ஜகத் ரஷண பிரமுகமான சேஷ்டிதங்களும்
கோவர்த்தன உத்தரணம் முதலான கிருஷ்ண சேஷ்டிதங்களும்
எம்பெருமான் ஆஸ்ரித நாஸ்ரித விஷயங்களில் இருக்கும் இருப்பையும்
ஜகத் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதி பிரகாரித்வமும்
அகர்ம வச்யத்வ பிரமுகமானவை ஸ்வர்க்க ப்ரமுகவானவையாய்
இப்படி உக்தங்கள் ஆனவை எல்லாம் நான் இட்ட வழக்கு என்று
யானே என்னை ஆய்ந்து ஏறப் பேசி –ஆச்சார்ய ஹிருதயம் –என்றபடி
அவனாகவே அனுகரித்த பிரகாரத்தை அருளிச் செய்யும்-
மாறன் உரையதனை –
ஆழ்வார் அருளிச் செய்த
திவ்ய ஸூக்தியானத்தை –

ஆய்ந்துரைப்பார் –
ஆய்ந்த தமிழ் மாலை யாயிரத்து இவையும் ஓர் பத்து என்று
இதன் வைபவத்தை ஆராய்ந்து அனுசந்திப்பார் –

ஆட்செய்ய நோற்றார் –
திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்கள் -என்னும்படி
ஆழ்வாருக்கு அடிமை செய்ய நோற்றார் ஆவார்
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே-என்று இறே அவர் இருப்பது
அஹத்வா ராவணம் சங்க்யேச புத்ரம் சஹ பாந்தவம்–
கொடியான் இலங்கை செற்றேனே -என்னக் கடவது இறே-

——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: