பகவத் விஷயம் காலஷேபம் -116- திருவாய்மொழி – -5-6-1….5-6-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

மேல் திருவாய்மொழியிலே பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாக அன்றோ சென்றன;
இரண்டுமாய்க் கலந்து சென்றால் பிரீதியாலே தலை எடுக்கவும் ஆம் அன்றோ, அது செய்யாதே,
புண்ணியத்தின் குறைவால் பிரீதி இன்மை ஒன்றே தலை எடுத்தது;
ஆகையாலே, மேல் உருவெளிப்பாட்டாலே அவனை நினைத்துத் தரித்தது ஒரு நிலையும் போய்,
அலாபத்தால் வரும் துவட்சியே ஆயிற்று;
இப்படித் துவண்ட இவள், பிரிவாற்றாமையாலே அவனை அநுகரித்துத் தரிக்கப் பார்க்கிறாள் இத்திருவாய் மொழியில்.

ஒவ்வோர் அர்த்தத்தைப்பற்றி உபந்யாசங்கள் செய்ய இருப்பாரைப் போலே ஞான முத்திரையும் தானுமாய்க்
கீதோபநிடத ஆசாரியனைப் போலே இருந்தாள்; இதனைக் கண்ட திருத்தாயார்,
‘இது ஏதேனும் மணிமந்திர ஒளஷதம் முதலியவைகளாலே வந்த விகாரமோ’ என்று ஐயங்கொண்டு,
அத்தன்மைகள் காணாமையாலே ‘அவை அல்ல’ என்று அறிந்தாள்.
இனி, ‘அவனைப் பிரிகையாலே வந்த ஆற்றாமையாலே அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று தெளிய மாட்டுகின்றிலள் தன் கலக்கத்தாலே.
தனக்கும் தன தன்மை அறிவரியான் போலே ஸுய வைபவம் அறியார் அன்றோ -உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான் -என்கிறாள் -7 பாசுரத்தில்
இவ்வளவிலே புகுந்து ‘இதுதான் என்?’ என்று வினவப் புகுந்த உறவினவர்களைப் பார்த்துத் திருத்தாயார்,
அவனுடைய வார்த்தைகளைப் பேசுகையால் வந்த ஒற்றுமையாலும், ஞானமுத்திரை பார்வை முதலியவைகள் இருந்தபடியாலும்,
சர்வேச்வரன் இவள்பக்கல் ஆவேசித்தானாக வேணும் என்று சொல்லுகிறாள், ‘அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று அறியமாட்டாமையாலே.
பிரிவாற்றாமை உண்டானால் அநுகரித்துத் தரிக்கக்கடவதன்றோ. ஸ்ரீகிருஷ்ணனை அநுகரித்தார்களே அன்றோ திருவாய்ப்பாடியில் பெண்கள்;
“கிருஷ்ணே நிபத்த ஹ்ருதயா இதமூசு: பரஸ்பரம் க்ருஷ்ண: அஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்யதாம்கதி:”
“அந்யா ப்ரவீதி க்ருஷ்ணஸ்ய மம கீதி: நிஸம்யதாம் துஷ்டகாளீய திஷ்ட அத்ர க்ருஷ்ண: அஹம் இதி ச அபரா”-என்பன, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 13 : 26, 27.
“கிருஷ்ணோஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்ய தாம்கதி: –
நான் கிருஷ்ணன், நடைச் சக்ரவத்துப் பிடிக்க வேண்டும்படியாக இங்ஙனம் நடக்கப் புகுகின்றேன்;
கண் படைத்தார் முழுதும் கண்டு கொள்ளுங்கோள் என்றாளே அன்றோ.
துஷ்ட காளீய திஷ்ட அத்ர – ஒருத்தி காளியனாய்க் கிடக்க, ஒருத்தி கிருஷ்ணனாய் ஏறி ஆடினாளே அன்றோ;”
பிரதி கூலனான காளியன் ஆனால் ஆகாதோ கிருஷ்ணனாகத் தன்னை அநுகரிக்கிற பெண்ணின் பொடிபடப்பெறில் என்று இருந்தாள்;
கிருஷ்ணனானவள் தானும் இவளைக் ‘காளியன்’ என்றே நினைத்துக் கண்ணறத் துகைத்தாளே அன்றோ அநுகாரத்தின் மெய்ப்பட்டாலே.
அவர்கள் ஓர் அவதாரத்திலே அநுபவிக்கையாலே அங்குள்ள செயல்களை அநுகரித்தார்கள்;
இவள் மயர்வறமதிநலம் அருளப்பெற்றவள் ஆகையாலே -கூந்தல் மலர்மங்கைக்கும்” என்ற பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றி-உபயவிபூதிகளையுமுடையவனை அநுகரிக்கிறாள்
இங்கு, கால், நடைதாராமையாலே அங்குப்போலே சரீரத்தால் செய்யப்படுகின்ற அநுகாரம் அன்று, வாசிக மாத்திரத்தாலே ஆயிற்று அநுகரிக்கிறது.

ஆக, ‘பிறப்பே பரதந்திர ஜன்மத்திலே பிறந்தவள், பிறப்பே ஸ்வதந்திரனானவன் வார்த்தையும் சொல்லா நின்றாள்,
பெண் தன்மைக்கு எல்லையான இவள், புருஷோத்தமன் சொல்லும் வார்த்தைகளையும் சொல்லா நின்றாள்,
அறிவிற்கு விஷயம் வியவஸ்திதமாக இருக்க, சர்வஜ்ஞன் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லா நின்றாள்’ -அஹம் க்ருத்ஸ்நஸ் ஜகத: பிரபவ:” என்று கொண்டு,
இவள் செய்கிறபடிகளைத் திருத்தாயார், வினவப் புகுந்தவர்களுக்குச் சொல்லுகிறாள்.

மேல் திருவாய்மொழியிலே, உருவெளிப்பாட்டாலே அநுபவித்தது விக்கிரஹ வைலக்ஷண்யத்தை அன்றோ,
அந்த விக்கரஹமே அன்றோ பற்றத் தகுந்தது;
இதில், அங்ஙனம் பற்றத் தகுந்த விக்கிரஹத்துக்கும் உள்ளான ஸ்வரூப வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது;அதனை அன்றோ பாவித்தது.
பாவனையின் மிகுதியாலே, அவனாகப் பாவித்தால் பின்னை அவன் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லலாய் இருக்குமே அன்றோ.
அப்படியே, விபூதி அத்தியாயத்தில் அவன் சொன்னபடிகளைப் பெரும்பாலும் அநுகரிக்கிறாள்.
அதர்வ சிரஸ்ஸிலே, சிவன் தன் வைபவத்தைப் பரக்க நின்று பேசினான், தனக்கு அடங்காத ஐஸ்வர்யமாயிருந்தது,
இவன் இப்படிப் பேசுகைக்கு அடி என்? என்று சுருதி தானே சங்கித்து, “ஸோந்தராத் அந்தரம் பிராவிசத்” என்று,
பரமாத்ம பிரவேசத்தாலே சொன்னான் என்னா நின்றதே அன்றோ. அந்தப் பாவம் வந்தால் அப்படியே சொல்லலாய் இருக்குமே.

தேகாத்மா அபிமானி -ஒன்றாக -சொல்லுவது போலே நான் -ஆத்மாவே பரமாத்வுக்கு தேகம் -இந்த அபிமானம் முற்றி ப்ரஹ்மமே நான்
-பிரகாரி அவன் அளவும் செல்ல -பர்யவசனாய விதி -பாவனா பிரகர்ஷத்தாலே அவனாகவே பேசுகிறாள் –
“தத்பாவ பாவம் ஆபந்ந: ததாஸௌ பரமாத்மநா பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா ஜ்ஞாந க்ருதோபவேத்”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 6. 7:95.
“சர்வேச்வரனுடைய குணங்களைப் போன்ற குணங்களை அடைந்த ஒரு சேதனன் முக்திதசையில் பரமாத்மாவோடு பேதம் அற்றவனாகிறான்” என்றும்,
“தத் ஹிதத் பஸ்யந் ருஷி: வாமதேவ: ப்ரதிபேதே அஹம் மநுரபவம் ஸூர்ய: ச”-என்பது, பிரு. உபநிட. 3 : 4.
“மத்தஸ் ஸர்வம் அஹம்ஸர்வம் மயி ஸர்வம் ஸநாதநே அஹமேவ அவ்யய; அநந்த: பரமாத்ம ஆத்ம ஸம்ஸ்ரய:”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1, 19 : 85.
“பிரஹ்மத்தைச் சாக்ஷாத்கரித்த வாமதேவ ருஷியானவர், நான் மநுவாக ஆனேன், சூரியனாகவும் ஆனேன் என்று எண்ணினார்” என்றும்,
“என்னிடத்திலிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாயின, அநாதியான என்னிடத்திலேயே எல்லாம் லயம் அடைகின்றன” என்றும்,

“தத்பாவ பாவம் ஆபந்ந: ததாஸௌ பரமாத்மநா பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா ஜ்ஞாந க்ருதோபவேத்”-
“தத்பாவ பாவம் ஆபந்ந–தத் ஸ்வ பாவம் உடையவன் ஆகையாலே —
ததா -மோஷ தசையில்
அசௌ பரமாத்மநா பவத்யபேதீ -பரமாத்மா உடன் அபேதம் -ஏகி பூதம் -பிரகாரத்வேன
அத்வைதி வாதம் இல்லை –தேவாதி பேதம் கர்மம் அடியாக வந்தது
ப்ரஹ்மத்துக்கு அஜ்ஞ்ஞானம் பலவாக தோன்றும் -பூர்வ பாஷம் -அவன் பாவம் இவன் அடைகிறான் என்று இவர்களால் -சொல்ல முடியாதே
பாவ -அபஹத பாப்மாதி -அஷ்ட கல்யாண குணங்களில் சாம்யம் -பரம சாம்யாபத்தி அடைந்து
பாவ -சப்தம் -பாவனா பிரகர்ஷம் -நினைவே உகளித்து -நிரந்தர தியான உக்தம் -பின்னத்வேன-அனுசந்தானம் உண்டாகுமே -நஞ்சீயர் அருளிச் செய்வாராம் –
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே –

ஆக, ‘இப்படிப் பிரிவாற்றாமையாலே அவனை அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று அறியமாட்டாமல்,
‘சர்வேச்வரன் ஆவேசித்தாற்போலே இராநின்றது’ என்று, திருத்தாயார் வினவ வந்தவர்களுக்குச் சொல்லுகிறாள்.

———————————————————————————

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?
கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-

ஜகத் சிருஷ்டி யாதிகள் எல்லாம் நானே செய்தேன் என்று சர்வேஸ்வரன் ஆவிஷ்டை யானால் போலே சொல்கிறாள்
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்-சஹாயாந்தர நிரபேஷமாக சிருஷ்டித்தவன் நானே -ஏகாரத்தால் –
உபாதான – -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம்
நிமித்த -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம்
-சஹகாரி-ஞானாதி கல்யாண குண விசிஷ்ட ப்ரஹ்மம்
காரண கார்ய ஸூ ஷ்ம ப்ரஹ்மம் -ஸ்தூல ப்ரஹ்மம் –
விசேஷணங்கள் மட்டும் மாறும் –
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்-சிருஷ்டிக்கு அனந்தரம் -அநு பிரவேசித்து -உபாதான கார்யமாகவும் –
தது தது சப்த வாச்யம் -சத்தைக்கு உள் புக வேண்டுமே –
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்-அர்த்தியாய் இரந்து அளந்து கொண்டேன்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்-அவாந்தர பிரளயத்தில் -நைமித்திகக -நான்முகனின் இரவில் 1000 சதுர யுகம் ஆனதும் மகா வராஹமாய்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்-உப சம்ஹரித்து -பெரும் பிரளயத்தில் -வட தள சாயி என்றுமாம் –
கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?-சகல ஜகத்துக்கும் நியந்தா -ஆவேசமோ -ஆவேச சங்கை இல்லை -நிர்த்தாரணம்
ருத்ரன் அதர்வத சிரசில் சொன்னாரே -இவள் ருத்ரனை த்யானித்து இருந்தால் சொல்லி இருப்பாள்
கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?-அவிசேஷஜஞராய்-வைகுந்தத்து அமரர் முனிவர்-எதிர் தட்டு நாம் -இத்தேசத்தில்
கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே-இங்கேயே இருந்து -அப்ராக்ருத ஸ்வ பாவை யாக இருக்கும் என் மகள்
அப்யசிக்கின்றனவாய் உள்ள -பேசுகிற -என்ன என்று எடுத்துச் சொல்வேன்

கடலோடு கூடின உலகத்தைப் படைத்தவனும் யானே என்பாள், இந்த உலகமாக இருப்பவனும் யானே என்பாள், இந்த உலகத்தை
அளந்துகொண்டவனும் யானே என்பாள், இந்த உலகத்தைப் பிரளயத்தினின்றும் ஒட்டு விடுவித்து மேலே கொண்டு வந்தவனும் யானே என்பாள்,
இந்த உலகத்தை எல்லாம் பிரளய காலத்தில் புசித்தவனும் யானே என்பாள், உலகத்திற்கெல்லாம் தலைவனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
இந்த உலகத்திலே என்மகள் சொல்லுகின்றவற்றை, இந்த உலகத்தீரான உங்களுக்கு எதனைச் சொல்லுவேன்? என்கிறாள்.
‘கடல்ஞாலம் செய்தேன்’ என்பதில், ஞாலம் என்பது, ஆகுபெயர். ஏறுதல்-ஆவேசித்தல். கொலோ என்பது, ஐயப்பொருள்.
‘கொலோ’ என்பது, ‘சம்சய உக்தி அன்று, காணுங்கோள் என்று நிர்ணயித்துச் சொல்லுகிறாள்’ என்பர் வியாக்யாதா. “கொல்லே ஐயம்” என்பது, தொல்காப்பியம்.
இத்திருவாய்மொழி, எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.

என்மகள், உலகத்தைப் படைத்தல் முதலான செயல்களை எல்லாம் செய்தேன் நானே என்னா நின்றாள்;
எம்பெருமான் தன்பக்கல் ஆவேசித்துச் சொல்லுகிறாள் போலே இராநின்றது என்கிறாள்

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: பிரபவ: பிரளய ஸ்ததா” என்பது, ஸ்ரீ கீதை. 7 : 6.
“நான் உலகம் அனைத்துக்கும் காரணபூதன்” என்னா நின்றாள்.
கடலோடு கூடின உலகத்திலே எல்லாப்பொருள்களும், கண்களுக்கு இட ஒரு துரும்பு இல்லாதபடி அழிந்து,
“சதேவ – சத்து ஒன்றே இருந்தது” என்கிறபடியே, தனக்கு என்ன ஒரு பெயரும் உருவமும் இல்லாதபடி அழிந்த அன்று
இதனை உண்டாக்கினேன் நான் என்னாநின்றாள். சூக்ஷ்மமான சித்து அசித்துக்களோடு கூடின பிரஹ்மமே காரணமாய்,
அதுதானே ஸ்தூல அவஸ்தையை அடைதலே அன்றோ காரியமாகிறது.
சித்து அசித்துக்களோடு கூடிய பொருளே காரணமுமாய் இருக்கையாலே, புறம்பு ஒரு காரணம் இல்லாமையாலே,
தானே முதற் காரணமும் நிமித்த காரணமும் துணைக் காரணமுமாய் அன்றோ இருப்பது.
இப்படி மூன்றுவித காரணங்களும் தானேயாய் இதனை உண்டாக்கினேன் நான் என்னாநின்றாள்.
‘யானே’ என்ற பிரிநிலை ஏகாரத்தால், வேறு காரணம் இல்லை என்பதனைத் தெரிவித்தபடி.

கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் –
தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநுப்ராவிஸத் தத் அநுப்ரவிஸ்ய ஸச்சத்யச்ச அபவத்”-என்பது, தைத்திரீய ஆன. 6.
“அவற்றைப் படைத்து அவற்றுள் பிரவேசித்து நின்றான், அவற்றுள் பிரவேசித்து உயிர்ப்பொருளும் உயிரல்பொருளும் ஆனான்” என்கிறபடியே,
இவற்றை உண்டாக்கி, இவை பொருளாதல் பெயரடைதல் முதலியவைகளுக்காக அநுப்பிரவேசித்து,
இவற்றைச் சொல்லும் சொற்கள் தன்னளவும் வரும்படி இவையாகி நிற்கிறேன் நான் என்னா நின்றாள்.
வாசகமாயாதல் போதகமாயாதல் அவனைக் காட்டக்கடவன அன்றோ; தோற்றுகிற இதனைச் சொல்லிக் கொண்டு
அபர்யவசான விருத்தியாலே அவனளவும் வருதல், இக்கூட்டத்துக்கே வாசகமாயாதல் இருக்குமேயன்றோ.
“ஸச்சத்யச்சாபவத் – சேதனமும் அசேதனமும் ஆனார்” என்கிற இது, ஸ்வரூப ஐக்யம் அன்று,
“தத்அநுப்ர விஸ்ய-அவற்றுள் அநுப்பிரவேசித்து” என்றதனால், அநுப்பிரவேசத்தின் காரியம் என்னுமிடத்தைச் சொல்லுகிறது.
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்-
மஹாபலி போல்வார், பருந்து இறாஞ்சினாற்போன்று இதனை அபஹரித்து ‘என்னது’ என்னும் அன்று,
இதனை எல்லை நடந்து மீட்டுக்கொண்டேன் நான் என்னாநின்றாள். என்றது,
இவற்றைப் படைத்து, ‘மேல் உள்ளன தாமே நடக்கின்றன’ என்று விடுகை அன்றிக்கே, இவற்றை அடி ஒற்றிக்கொண்டு சென்று காத்தலைத் தெரிவித்தபடி.
‘அசுரத்தன்மை வாய்ந்தவர்கள் இவன் முன்பு நில்லார்களே யன்றோ’ என்னுமதனாலே,
‘இராச்சியத்தை வாங்கித்தரவேணும்’ என்று விரும்பிக் கேட்ட அளவே அன்றோ இந்திரன் பக்கல் உள்ளது;
அவனுடைய ஒளதார்யத்துக்குத் தகுதியாகத் தன்னை இரப்பாளனாக்கி, அவன் தரும் விரகு அறிந்து வாங்கினான் தானே யாதலின் ‘யானே’ என்கிறது.

கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும் –
அசுரத்தன்மை வாய்ந்தவர்களாயிருப்பார் இதனை அழித்தல் அன்றிக்கே, பூமிக்குக் காவலாக வைத்த கடல்தானே இதனை அழிக்க,
அண்டபித்தியிலே புக்குச் சேர்ந்த இதனை இடந்து எடுத்தேனும் யானே என்னா நின்றாள்.
அமிழ்ந்து கிடக்கிற பூமி, ‘என்னை எடுக்கவேணும்’ என்று விரும்பியது இல்லையே அன்றோ;
தானே செய்தானாதலின் ‘யானே’ என்கிறது.
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும் –
சிலர் இருத்தல் சிலர் அழிதல் அன்றிக்கே, படைக்கின்றவர்களோடு அழிக்கின்றவர்களோடு வேற்றுமை அற
எல்லாரையும் ஒக்கப் பிரளயம் கொள்ளப் புக, இவ்வுலகம் முழுதினையும் வயிற்றிலே வைத்துக் காப்பாற்றினேன் நான் என்னாநின்றாள்.
அப்போது வேறு சிலர் காத்தார்கள்’ என்பதற்கு, மற்று ஒருவர் உண்டாகைக்குச் சம்பாவனையும் இல்லையாதலின் ‘யானே’ என்கிறது.

கடல் ஞாலத்து ஈசன் வந்து ஏறக் கொலோ –
எல்லாப் பொருள்களையும் படைத்தவனாய் -எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் -எல்லாருக்கும் வந்த
ஆபத்துகளுக்குத் துணைவனான- சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? அறிகின்றிலேன்.
‘கொலோ’ என்பது, ஐயத்தின் கண் வந்தது அன்று, காணுங்கோள் என்று அறுதியிட்டுச் சொல்லுகிற வார்த்தை.
‘உன்னைக் கேட்டு அறுதியிட வந்தோம், நீயும் எங்களைப் போன்று ஆராயாநின்றாயே!நாங்கள் பின்னர் நிர்ணயிக்கும்படி என்?
நாங்கள் தெளியும்படி நீயே சொல்லாய்’ என்ன,
கடல் ஞாலத்தீர்க்கு இவை என்சொல்லுகேன் –
“வைகுந்தத்து அமரர்” என்னுமாறு போன்று, நித்திய சம்சாரிகளாய், பகவத்விஷயம் புதியது உண்டறியாதே போருகிற
உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவேன்?
கடல் ஞாலத்து என்மகள் கற்கின்றவே-
நித்தியசூரிகள் சொல்லக்கூடிய வார்த்தைகளை என் மகள் சம்சாரத்திலே இருந்து சொல்லுகிற இதற்கு நான் எதனைச் சொல்லுவது?
இவை தாம், நித்தியசூரிகள் சொல்லக்கூடிய வார்த்தைகள் ஆதலின், ‘ஞாலத்து என்மகள் கற்கின்றவே’ என்கிறாள்.

—————————————————————————————-

கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வி யீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–5-6-2-

வேத வேத்யன் -வேத பிரதிபாத்யன் -சகல வேத வித்யைகளும்-தத் பிரவர்த்தனாதிகளும் -நான் இட்ட வழக்கு
124 பரவாசுதேவன் திரு நாமங்கள் -மேல் வ்யூஹ மூர்த்தி -சாஸ்திரம் கொடுத்து – தர்மம் பிரவர்த்தனம் -பலம் கொடுப்பார் –
கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்-புஸ்தக -நிரீஷனாதிகள் இல்லாமல் ஆச்சார்யா முகேன -அநந்தா வேதா –
வேதங்களுக்கு எல்லை இல்லை -வேதங்களும் சொல்லி முடிக்காதே -என்றுமாம் –
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்-வித்யைகள் பிரகாரம் -சப்தங்கள் ப்ரஹ்மாத்மகம் -சப்தங்கள் ப்ரஹ்மம் -ஒலியும் சொல்லும் அபிநயமும் ப்ரஹ்மமே
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்-சிருஷ்டி காலத்தில் யதா பூர்வே உண்டாக்கி
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்-சம்ஹ்ருதி சமயத்தில் உப சம்ஹரித்து நெஞ்சில் வைத்து -ஸூ ஷ்ம ரூபமாக
சந்கைகளை தீர்ப்பதும் நானே என்பார் ஈட்டில்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்-வித்யா சாரம் -மூல மந்த்ரம் -ஓங்காராம் -அஷ்டாஷரம் -சாரம் -நானே
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?சகல வேத பிரதிபாத்யன் -ஆவேசித்து இருக்கிறான்
கற்கும் கல்வி யீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?இது என் பக்கல் கற்கும் படி –
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.-வார்த்தை கற்கும் பருவம் -சப்த ராசி க்ரஹணமும் இல்லாதவள் அன்றோ இவற்றை சொல்லுகிறாள்
வேதம் வித்யா ஸ்தானம் என்றுமாம்

கற்கப்படுகின்ற கல்விக்கு எல்லையை உடையேனல்லேன் என்னா நின்றாள், கற்கும் கல்வியாக இருப்பேனும் யானே என்பாள்,
கற்கும் கல்வியை உண்டாக்குகின்றவனும் யானே என்பாள், கற்கும் கல்வியினுடைய தாத்பர்ய அர்த்தத்தை அறுதியிடுகின்றவனும் யானே என்பாள்,
கற்கும் கல்வியினுடைய சாரமாகிய மந்திரங்களும் யானே என்பாள், கற்கும் கல்வியினாலே சொல்லப்படுகின்ற சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
பகவத்விஷயம் என்றால் இன்று கற்க வேண்டியிருக்கிற உங்களுக்கு, இன்று வார்த்தை கற்கும்படியான பருவத்தையுடைய
என்மகள் கண்டு சொல்லுகின்றவற்றை என் சொல்லுவேன்?

எல்லாக் கல்விகளால் அறியப்படுதலும் அக்கல்விகளைப் பரப்புதல் முதலான செயல்களும் நான் இட்ட வழக்கு என்கிறாள்.

கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் –
அல்ப காலத்துக்குள்ளே -64 நாள்கள் -சாந்தீபனியோடே நான் கற்ற பரப்புக்கு ஓர் எல்லை இல்லை என்னா நின்றாள்.
அன்றிக்கே,“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ”-என்பது, தைத்திரீய, ஆனந். 9 : 1.
“ஆனந்த குணத்தைக் கூறமுடியாமல் அவனிடமிருந்து வேத வாக்குக்கள் மீண்டன” என்கிற சுருதிக்கு
நிலம் அன்றிக்கே இருக்கிறேன் நான் என்னாநின்றாள் என்னுதல். என்றது,
கற்கும் கல்வியினுடைய எல்லைக்குள்ளே நிற்கிறேன் அல்லேன் நான் என்கிறாள் என்றபடி.
அன்றிக்கே, “வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை” என்கிறபடியே,
வேதாந்தங்களாலே அறியப்படுமவன் நான் என்கிறாள் என்னுதல்.-வேதாந்த – இல்லமாக உடையவன் –
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும் –
அவற்றால் அறியப்படாமல் இருக்கிற அளவேயோ,
மாலிருஞ் சோலையென்னும் மலையையுடைய மலையை நாலிரு மூர்த்தி தன்னை நால்வேதக் கடலமுதை
மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப்பொருளின் கற்கும் கல்வி ஆகிறவன் இவனே என்னுமதற்குப் பிரமாணம் காட்டுகிறார்-‘நீரே கல்வி’ என்று.
“நீரே கல்வி” என்கிறபடியே, அவை தாம் என் அதீநம் அலவோ என்னா நின்றாள்.
“த்வமேவ மாதாச பிதா த்வமேவ த்வமேவ பந்துஸ்ச குரு: த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதேவ”-என்பது, சுலோகம்.
“கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்.- மூன்றாவது பொருளில்
எல்லை என்பது, வேதாந்தமாய், இல் என்று இருப்பிடமாய், வேதாந்தத்தை இருப்பிடமாக உடையவன் என்பது, சொற்பொருள். வேதாந்த வேத்யன் என்றபடி.
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்-
அந்தக் கல்விகளை அவ்வக்காலங்களில் உண்டாக்குவேனும் நான் என்னாநின்றாள்.
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் –
அவற்றின் சந்தேகங்களைத் தீர்த்துத் தாத்பர்ய நிர்ணயம் செய்வேனும் நான் என்னாநின்றாள்.
பரக்கக் கற்றுவைத்தே “சூந்யமே தத்துவம்” என்கிறார் உளரே அன்றோ.
அன்றிக்கே, கற்கின்றவர்களும் கற்பிக்கின்றவர்களும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்னுதல்.
‘தீர்ப்பேன்’ என்ற சொல், இப்பொருளைக் காட்டுமோ? என்னில், தீர்க்கையாவது, அவற்றினுடைய எல்லை காண்கை அன்றோ.
ஆச்சார்ய சிஷ்ய பாவம் -தீர்ப்பது -அவற்றின் எல்லை -நானே சிஷ்யன் நானே ஆச்சார்யாராய் -நர நாரணனாய்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும் –
அக்கல்வியினுடைய சாரமான பிரயோஜனமும் நான் என்னாநின்றாள்.-பயன் -பிரயோஜனம் நானே –
கற்கும் கல்விநாதன் வந்து ஏறக்கொலோ –
எல்லாக் கல்விகளாலும் அறியப்படுகின்ற சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
கற்கும் கல்வி உலகத்தீர்க்கு இவை என்சொல்லுகேன் –
இப்போது கற்று அறியவேண்டும்படி, பகவத் விஷயத்தில் ஒவ்வோக் குழியிடாதே இருக்கிற உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது?
பாலர் எழுதும் குறி போலே -பகவத் விஷயத்தில் நீங்கள் ஆரம்ப பாடம் படிக்கிறீர்கள் என்றவாறு –
கற்கும் கல்வி என்மகள் காண்கின்றவே –
சொன்ன வார்த்தையைச் சொல்லுமித்தனை போக்கி, தானாக ஒரு வார்த்தை சொல்லமாட்டாத அளவாயிருக்கிற இவள்,
இவ்விஷயத்திலே இறங்குகிற எல்லையை, நான் எதனைச் சொல்லுவது?

——————————————————————————–

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீஎல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என்காரிகை செய்கின்றவே.–5-6-3-

பிரமாண சித்தம் -ஜகத்துக்கு -பிரதான காரணம் -பஞ்ச பூதங்கள் நான் இட்ட வழக்கு
காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்-சரம பூதமான பிருத்வி எல்லாம் -அருகில் சந்நிஹிதம் –
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்-பிரதம பூதம் –
காண்கின்ற வெம் தீஎல்லாம் யானே என்னும்-தேஜோ பன்னங்களில் பிரதானம் -உஷ்ணம் -ஸ்பர்சம் நெருப்பு
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்-தத் பூர்வ பாவி -நெருப்புக்கு -இ -தாரகத்வாதி சந்நிஹிதம் என்பதால் சுட்டுப் பொருள்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்-தத் அனந்தர பாவி -நெருப்புக்கு அப்புறம் தண்ணீர் –
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?-தர்ச நீயம் -அபரிச்சின்னம் -வடிவை உடைய சர்வேஸ்வரன்
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?-லோகம் ஒழிய அறியாத உங்களுக்கு
காண்கின்ற என்காரிகை செய்கின்றவே-அபி ரூபை -யாராலும் காண முடியாதவற்றை காணும் இவள் -என் என்பதாகச் சொல்லுவேன் –

பார்க்கப்படுகின்ற பூமி முழுதும் யானே என்பாள், பார்க்கப்படுகின்ற ஆகாய முழுதும் யானே என்பாள், பார்க்கப்படுகின்ற கொடிய நெருப்பு
முழுதும் யானே என்பாள், பார்க்கப்படுகின்ற இந்தக் காற்று முழுதும் யானே என்பாள், பார்க்கப்படுகின்ற கடல் எல்லாம் யானே என்பாள்,
காட்சிக்கு இனியதான கடல் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரன் ஆவேசித்தானோ? எல்லாவற்றையும் காணவல்ல என்மகள் செய்கின்றவற்றை,
காண்கின்ற உலகத்தை ஒழிய வேறு ஒன்றனையும் அறியாத உங்களுக்கு எதைச் சொல்லுவேன்?

காரணமான மண் முதலான பூதங்கள் ஐந்தும் நான் இட்ட வழக்கு என்கிறாள்.

காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்-
காணப்புக்கால் கண்டதாய்த் தலைக்கட்ட முடியாதபடியான பரப்பை யுடைத்தான பூமி எல்லாம் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்.
இப்படி இருக்கிற இதுதான் காரிய உருவமாக இருக்கின்ற மண்ணே அன்றோ, கண்களுக்குத் தோற்றுகிற இது-இதுவே – இவ்வளவானால்
இதற்குங்கூடக் காரணமாய்த் தான் சாஸ்திரம் கொண்டு அறிய வேண்டும்படி இருக்குமது இவ்வளவு அல்லவே அன்றோ.
ஸூஷ்மம் நாமம் ரூபம் அர்ஹம் அன்றோ -அதனால் அவற்றையும் காண முடியாதே –
காணப் படாத நிலம் எல்லாம் நானே -இத்தை சொன்னது அதற்கும் உப லஷனம் -சாஸ்திரம் கொண்டே அறிய வேண்டுமே இத்தை –
காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்-
காணப்புக்கால் கண்டதாய்த் தலைக்கட்ட முடிய ஒண்ணாதபடியாய், இது தனக்குங் கூட இடத்தைக் கொடுக்கிற ஆகாயமும்
நான் இட்ட வழக்கு என்னாநின்றாள்.
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் –
அப்படிப்பட்ட ஒளியுள்ள பொருளும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள்.
காண்கின்ற இக்காற்று எல்லாம் யானே என்னும் –
பரிசம் கொண்டு அறியும்படி இருக்கிற காற்றும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்.-காற்றுக்கு பூத ஸூ ஷ்மம் ஸ்பர்சம் அன்றோ-
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்-
காண்பார்க்குக் கண்டதாகத் தலைக்கட்ட முடியாதபடியான கடல் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள்.
காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ-
காணப்புக்கால் கண்டதாக மீள ஒண்ணாதபடியான கடல் போலே சிரமஹரமான வடிவையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் –
நீங்களும் என்னைப் போன்று காணாநின்றீர் கோளாகில், உங்களுக்கு நான் என்ன பாசுரமிட்டுச் சொல்லுவது;
சொல்ல ஒண்ணாமைக்கு உங்களோடு என்னோடு வாசி உண்டோ?
காண்கின்ற என் காரிகை செய்கின்றவே –
“வேத வாக்குகள் மனத்தாலுங்கூட நினைக்க முடியாதபடி எந்தப் பரம்பொருளிடமிருந்து திரும்புகின்றனவோ” என்கின்ற
அளவிட்டு அறிய முடியாத விஷயத்தை உட்புக்குப் பேசுகின்ற என் பெண்பிள்ளை செய்கிற இதனை நான் சொல்லுவது என்?

————————————————————————————————-

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–5-6-4-

சர்வ கிரியைகளும் நான் இட்ட வழக்கு என்கிறாள் -கிரியை கர்த்தா கர்ம பலன்கள் எல்லாம்
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்-வர்த்தமான -கர்மங்கள் –
செய்வான் நின்றனகளும் யானே என்னும்-வருங்கால கிரியைகள் –
செய்து முன் இறந்தவும் யானே என்னும்-கழிந்த கால கர்மங்கள்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்-பலத்துக்கு போக்தாவும் நானே
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்-அனுஷ்டாதக்களை உண்டாக்கி -கர்ம ஞான -சாஸ்திரம் சொல்லிய
அனைத்துக்கும் செய்ய அதிகாரிகளை உண்டாக்கி
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?-சிவந்த தாமரைக் கண்ணன் தான்
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?-செவ்வி ஒழிய அறியாத லோகத்தீர் -நேர்மை -பெண் வருத்தம் தாய் அறிவாள்-என்று கேட்கிறீர்கள்
இங்கு நடப்பதை யார் அறிவார்கள்
செய்ய கனிவாய் இளமான் திறத்தே -பிரிந்த தசையிலும் வை வர்ண்யம் இல்லை -அநு கார தசையில் வாய் சிவந்து உள்ளதே –
அவனாகவே நினைந்து அவன் திரு வாய் வர்ணம் பெற்றாள்-
இளமை முக்தமான மான் போலே பேதை இவள் இடையாட்டத்துக்கு என்ன சொல்லுவேன்

செய்துகொண்டிருக்கின்ற காரியங்கள் எல்லாம் யானே என்னும், இனிமேல் செய்யப்படுவனவாக நிற்கின்ற காரியங்களும் யானே என்னும்,
முன் செய்து கழிந்து போன காரியங்களும் யானே என்னும், காரியங்களின் பயன்களை அனுபவிக்கின்றவனும் யானே என்னும்,
அந்தக் காரியங்களைச் செய்கின்றவர்களைப் படைக்கின்றவனும் யானே என்னும், செந்நிறம் பொருந்திய தாமரை போன்ற திருக்கண்களையுடைய
சர்வேச்வரன் ஆவேசித்தானோ? நன்மை அல்லது அறியாத இந்த உலகத்தார்க்கு, சிவந்த கோவைக்கனி போன்ற இளமை பொருந்திய மான்
போன்ற இப்பெண் விஷயத்தில் எதனைச் சொல்லுவேன்?

முக்காலத்திலும் உண்டான காரியங்களின் கூட்டம் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்.

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும், செய்வான் நின்றனகளும் யானே என்னும், செய்து முன் இறந்தவும் யானே என்னும்
– நிகழ்காலத்தில் நடக்கும் காரியக்கூட்டம், செய்யக் கடவதாய் நிற்கிற காரியக்கூட்டம், முன்பு செய்துபோன காரியக்கூட்டம் இவை அடைய
நான் இட்ட வழக்கு என்னாநின்றாள்.
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் –
“அஹம் ஹி ஸர்வயஜ்ஞானாம் போக்தாச ப்ரபுவே ச நது மாம் அபிஜாநந்தி தத்வேந அத: ச்யவந்தி தே”-என்பது, ஸ்ரீகீதை. 10 : 25.
“நானே பஞ்ச மஹா யஜ்ஞம் முதலிய எல்லா நித்திய கர்மங்களின் பயனைப் புசிப்பவனும்” என்னாநின்றாள்.
அன்றிக்கே, கிரியைகளின் பலன்களை அநுபவிக்கின்றவர்களும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்னுதல்.
அன்றிக்கே, செய்கையாகிற கிரியையும், பலத்தை அநுபவிக்கின்றவனும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்னுதல்.

யாகத்தில் பிரயோஜன ரூபமான ஹவிஸ் பெற்று உண்பது நானே
ஸ்வர்க்காதி -பலன்களுக்கு போக்தாவும் நானே
செய்கை உடைய பலம் -செய்கையும் பலன் உண்பேனும்-கிரியை பலம் இரண்டும் -கிரியை அனுஷ்டாதா பலம் பலம் அனுபவிப்பனும் யானே

செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும் –
கிரியைகளின் கர்த்தாக்களை இடுவித்து அவற்றைச் செய்விக்கின்றவனும் யானே என்னும்.
அன்றிக்கே, அவர்கள் இவற்றைக் கொண்டு என்னை அடையும்படி செய்வேனும் யானே என்னும் என்னுதல்.
செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ –
அஸி தேஷிணா -கரிய கண்ணையுடையவளான தன்மை நீங்கி, புண்டரீகாக்ஷன் படியாய் விட்டது. என்றது,
-மையக் கண்ணாளான தன்மை போய், செய்யகோலத் தடங்கண்ணன் படியாய் விட்டது என்றபடி.
கரும் தடம் கண்ணி -தாயார் -திரு நாமம் -திருத் தொலை வில்லி மங்கலம் –
செய்ய உலகத்தீர்க்கு இவை என்சொல்லுகேன் –
சொல்ல முடியும், முடியாது என்று அறியாதே, சொல்லு, சொல்லு என்று என்னை அலைக்கிற படுபாடரான உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே-
அநுகாரத்தாலே புணர்ச்சி சமயத்திற் போலே இருக்கிற இவள், உதடு செவ்வி பெற்று வரும்படி வேறுபட்டவளாய்,
மிக இளையளாய் இருக்கிறபடி நான் எதனைச் சொல்லுவது.
பிரிவில் வெளுத்திருக்கை தக்கதாக இருக்க, இவள் உதடு செவ்விபெற்று வருகின்றதே அன்றோ அநுகாரத்தால் வந்த தரிப்பாலே.
சிவந்த கனி போலே இருக்கிற உதட்டினையுடையளாய், இளையமான் போலே பேதையான இவள் இடையாட்டத்தே.

———————————————————————————————–

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
திறம்பாது என் திருமகள் எய்தினவே.–5-6-5-

கிருஷ்ணாவதார சேஷ்டிதங்கள்-ஜகத் ரஷணாதி வியாபாரங்கள் நானே
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்-ஆஜ்ஞ்ஞையை அதி லங்கணம்எல்லை தாண்டாத படி
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்-கோ ரஷணம் அர்த்தமாக அசங்காமல் -கோவர்த்தனம் -சலியாமல்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்-தப்பாத படி மிச்சம் இல்லாமல் பூதனை -கேசி -வந்தவர் மீள வில்லையே -அரிஷ்ட தேனுகாசுராதிகள்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்-திறமை -விஜய ஹேது உபாய பிராகாரங்களைக் காட்டி
சிகண்டி வைத்து பீஷ்மரை /அஸ்வத்தாமா ஹத போல்வன
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்-நினைவு தப்பாமல் -உப்புச்ச்சாறு -அசுரர்களுக்கு கொடுக்காமல் –
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?-ஆஸ்ரித ரஷணத்தில்-பின் வாங்காமல் திரும்பாத கை விடாத –
கடல் கரையைக் கடக்காத என்றுமாம்
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?-அறிய வேணும் என்னும் நினைவு தப்பாமல் உள்ள லோகத்தீர்
திறம்பாது என் திருமகள் எய்தினவே-லஷ்மி சமானையான தப்பாமல் பிராபித்த ஸ்வ பாவங்கள் -ஒன்றும் விடாமல் அவனது அனைத்தையும் –

நன்னெறியினின்றும் ஒருவரும் பிறழாதவாறு உலகத்தை எல்லாம் காக்கின்றவன் யானே என்னும், தளர்ச்சி இல்லாமலே கோவர்த்தனம் என்னும்
மலையை எடுத்தேன் என்னும், தப்பாதபடி அசுரர்களைக் கொன்றேன் என்னும், திறமைகளைக் காட்டி அக்காலத்தில் பாண்டவர்களைக் காப்பாற்றினேன் என்னும்
தப்பாமல் சமுத்திரத்தைக் கடைந்தேன் என்னும், தன்விதிகளை ஒருவரும் தப்ப ஒண்ணாதவாறு இருக்கின்ற கடல்வண்ணனாகிய சர்வேச்வரன் ஆவேசித்தானோ? பகவானுடைய குணங்களில் நின்றும் மீளாதவாறு என்மகள் எய்தியவற்றை, கேட்டு அல்லது மீளாத உலகத்தார்க்கு எதனைச் சொல்வேன்?

உலகத்தைப் பாதுகாத்தல் தொடக்கமான செயல்களை எல்லாம் செய்தேன் நான் என்னாநின்றாள் என்கிறாள்.

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்-
ஒருவர் கூறை எழுவர் உடாதபடி, “இந்தப் பரமாத்மாவினிடமிருந்து பயந்து காற்று வீசுகிறது” என்கிறபடியே,
பூமியை நோக்குகிறேன் நான் என்னும்.
ஒருவர் கூறை எழுவர் உடுக்கையாவது, ஒருவன் கையில் உள்ள புடைவையை ஒருவன், அவன் கையிலுள்ள அதனை வேறு ஒருவன் பறிக்க,
இப்படியே ஏழு பேராகப் பறித்து உடுத்தல். இது, எளியாரை வலியார் வருத்துவதற்குத் திருஷ்டாந்தம்.
இப்படி, எளியாரை வலியார் வருத்தாதபடி அவர் அவர்கள் மரியாதைகளிலே நிறுத்திப் பூமியைக் காக்கிறேன் என்றபடி.
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் –
ஒரு பசுவின் மேலாதல், ஓர் ஆயன் மேலாதல் ஒரு துளிபடாதபடி கோவர்த்தனகிரியைத் தரித்துப் பாதுகாத்தேனும் நான் என்னாநின்றாள்.
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும் –
அசுரர்களுடைய கூட்டத்தைத் தப்பாதபடி அறுத்துப் போகட்டேன் என்னும்.
திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும் –
உலகத்தில் என் படிகளைக் காட்டி,-ஆஸ்ரித பஷபாத குணம் -பகலை இரவாக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுத்தும்,
பகைவர்களுடைய உயிர்நிலையைக் காட்டியும் இப்படி அன்று பாண்டவர்கள்மேல் அன்பு வைத்து அவர்களைக் காப்பாற்றினேனும்- நான் என்னா நின்றாள்.
நகாங்க்ஷே விஜயம் க்ருஷ்ண நச ராஜ்யம் ஸுகாநிச கிம்நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகை: ஜீவிதேநவா”
“நஷ்டோ மோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரசாதாத் மயாஅச்யுத ஸ்திதிஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசனம் தவ”-என்பன, ஸ்ரீகீதை. 1 : 32, 18 : 73.
“கிருஷ்ணா! வெற்றியையாவது இராச்சியத்தையாவது நான் விரும்பவில்லை” என்ற அருச்சுனனை,
“இப்போதே போரைச் செய்ய வேணும் என்கிற உன்னுடைய வார்த்தையை நிறைவேற்றி விடுகிறேன்” என்னச் செய்தானே அன்றோ.
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்-
ஒருதாழிக்கு உட்பட்ட தயிரை ஒன்றும் பிரி கதிர்ப்படாதபடி கடைவாரைப் போலே, சமுத்திரம் என்கிற மஹா தத்துவத்தின் நடுவே
மந்தரத்தை நட்டுக் கடைகிற இடத்துக் கீே்ழ விழுதல் மேலே கொந்தளித்தல் செய்யாதபடி கடலைக் கடைந்தேனும் நான் என்னும்.
திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ –
தன் சாசனத்தை ஒருவரால் தப்ப ஒண்ணாதபடியாயிருக்கிற, அளவிட்டு அறிய ஒண்ணாத தன்மையனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என்சொல்லுகேன் –
கேட்டு அல்லது கால் வாங்கோம் என்று இருக்கிற உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது.
திறம்பாது என் திருமகள் எய்தின –
திருமகளை ஒத்த என் மகள், ஹிதம் சொல்லி மீட்க ஒண்ணாதபடி அடைந்தவற்றை நான் எதனைச் சொல்லுவது?
ஆழங்காலிலே இழிந்தார் படியைக் கரையிலே நின்றாராலே சொல்லப்போமோ.

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: