பகவத் விஷயம் காலஷேபம்- 115- திருவாய்மொழி – -5-5–6….5-5-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6-

வைஷ்ணவ வாமனத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் –
அறிய கற்று வல்லவர் வைஷ்ணவர் -பலம் -வடுக நம்பி -போலே -வைஷ்ணவ நம்பி –
ரூப வைலஷண்யம் -அவயவ சமுதாய சோபைகள்-திருமுக சோபை -ரூப பூஜ வைலஷண்யம் இவள் நெஞ்சில் பூர்ணமானதே
மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்-ஆறி இருக்க வேண்டிய நாம் -உபாய அத்யாவசியம் நமக்கு கர்த்த்வயம்
இவள் பிராப்ய த்வரித்து -பழியே வடிவாக கொண்டவள் -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் அன்றோ
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பலி புகலாம் படியான பிராவண்யம் -அபாகவதர் வைத்தால் ஸ்தோத்ரம் தானே
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்-அழகு -அபி ரூபமாய் -கற்பகக் கோடி போன்ற மூக்கும் –
அதிலே பூ என்னலாம் படி திருக் கண்கள் -கனி -பழுத்த வாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.-அதுக்கு பரபாகமான நீல மேனி -பச்சிலை பணைத்தால் போன்ற நான்கு தோள்களும் நிறைந்தன

இவள், மேலும் நம் குடிக்குக் கொடிய பழியை உண்டாக்குமவள் என்று சொல்லிக்கொண்டு தாயானவள் நம்பியைக் காணுதற்கு இடம் தருகின்றிலள்,
சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின், அழகோடு மிகவும் நீண்டிருக்கின்ற திருமூக்கும் தாமரை போன்ற
திருக்கண்களும் கோவைக்கனி போன்ற திருவாயும் கரிய திருமேனியும் நான்கு திருத்தோள்களும் என் நெஞ்சத்தினிடத்தில் நிறைந்து விட்டன என்கிறாள்.
நீள்கொடி : ஒருபொருட்பன்மொழி.

நம்பியுடைய திவ்விய அவயவ சோபைகள் என்நெஞ்சு நிறையப் புகுந்து நலியாநின்றன என்கிறாள்.

மேலும் நம் குடிக்கு வன் பழி இவள் என்று-
இப்போது சிலர் நான்கு வார்த்தைகள் சொல்லி விடுகை அன்றிக்கே, மேலும் இக்குடிக்கு உருவ நிலைநின்ற பழியை விளைக்குமவள் இவள் என்று.
அன்னை காணக் கொடாள்-
தன்னோடு ஒத்தவர்கள் சொல்லுகை அன்றிக்கே, அடியிலே என்னைப் பெறுகைக்கு நோன்பு நோற்ற இவளும் இப்படிச் சொல்லாநின்றாள்.
முன்பு அன்னைமீர் -வளர்த்த தாய்கள் இவள் உடன் சாம்யம் உண்டே -இதில் பெற்ற தாய் –
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை –
சிரமஹரமான சோலைகள் சூழ்ந்ததிருக்குறுங்குடி நம்பியை.
நான் கண்டபின் –
பழி புகழாம்படி இவ்விஷயத்திலே மூழ்கிய நான் கண்டபின். என்றது, ‘பழி’ என்று அச்சம் உறுத்தி
மீட்க ஒண்ணாதபடி மூழ்கிய நான் கண்டபின் என்றபடி.
கோல நீள் கொடி மூக்கும் –
அழகு மிக்க கொடி போலே இருக்கிற திருமூக்கும்,
தாமரைக் கண்ணும் –
அதன்படியேயாய் இருக்கிற தாமரை போன்ற திருக்கண்களும், அந்தக் கொடி பூத்தாற் போலே யாயிற்றுத் திருக்கண்கள் இருப்பது.
கனிவாயும் –
அது ஒரு பலத்தை உண்டாக்கினாற்போலே இருக்கிற கனிவாயும்,
நீல மேனியும் –
அத்தாமரையின் இலைபோலே நீலமாய் இருக்கிற திருமேனியும்,
நான்குதோளும் –
ஒரு பெருவெள்ளம் போலே ஆயிற்றுத் திருமேனி, அதனை நீந்துகைக்குச் சில தெப்பங்கள் போலே இருக்கிற திருத்தோள்கள் நான்கும்,
என் நெஞ்சம் நிறைந்தனவே-
உங்கள் ஹித வசனங்கட்கெல்லாம் என் நெஞ்சில் இடம் இல்லை.

———————————————————————————————

நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7-

நிரதிசய தேஜோ விசிஷ்டன் -உத்துங்கமான ஸ்ப்ருஹநீய விக்ரகத்துடன் நம்பி திருக்கையில் திரு ஆழி உடன் நின்றார்
நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்-மேலும் பழி-நிறைந்த வன் பழி –
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-சிறப்பை உடைய கீர்த்தி -அந்த கீர்த்தி அதிசயத்துக்கு அகப்பட்ட நான் –
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்-பூர்ணமான தேஜோ ராசியாலே உத்துங்க ஸ்ப்ருஹநீய திரு மேனி
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே-நிறைந்தான் -அழகிய திருக்கையில்
திரு ஆழி ஆழ்வான்- உடன் சேர்ந்து -சேர்த்தி அழகிலே -ஈடுபட்டேன்

இவள் செய்கின்ற காரியம் நம் குடிக்கு நிறைந்த கொடிய பழியைத் தருவதாகும் என்று தாயானவள் நம்பியை நான் காண்பதற்கு விடுகின்றிலள்:
சிறந்த கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின், நிறைந்த பிரகாசத்தின் கூட்டத்தாலே சூழப்பட்ட நீண்ட அழகிய
திருமேனியோடும் என் மனத்துக்குள்ளே நிறைந்து நின்றுவிட்டான்; திருச்சக்கரமும் அழகிய கையிலே இருக்கின்றது.
சூழ்ந்த மேனி என்க நின்றொழிந்தான்: ஒருசொல்.

நம்பியுடைய திருமேனியில் அழகு வெள்ளம் என் நெஞ்சிலே வேர் வீழ்ந்தது என்கிறாள்.

நிறைந்த வன்பழிநம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் –
ஆண்டாள், ஒருநாள் பட்டரையும் சீராமப்பிள்ளையையும் காட்டி, ‘இவர்கள் விவாகத்தைச் செய்வதற்குரிய பருவத்தை அடைந்தார்கள்,
பேசாதே இருக்கிறது என்?’ என்ன, ‘ஆகில், நாளைப் பெருமாள் பாடே போனவாறே வரக்காட்டு’ என்ன,
அவர்களையும் கொண்டு திருமுன்பே நிற்கச் செய்தே, பெருமாள் அருளப் பாடிட்டு, ‘ஒன்று சொல்வாய் போலே இருந்தாயே!’ என்று திருவுள்ளமாக,
“இவர்கள் விவாகத்தைச் செய்வதற்குரிய பருவத்தினர் ஆனார்கள் என்று சொல்லா நின்றார்கள்” என்ன,
‘நாமே ஒத்ததான இடத்தில் சம்பந்தம் செய்து தருகிறோம்’ என்று அருளிச்செய்ய,
பிற்றை நாள் மன்னியைக் -கன்னிகையைக் -கொடு வந்து நீர் வார்த்தார்கள்.
ஆக, ‘அத்தலையாலே வருமது ஒழிய, தாம் தாம் ஒன்றை ஆசைப்படுகையும் கூடப் பழி’ என்று இருக்குங் குடி -பிரபன்ன குடி-காணும்.
“அதபாதகபீத: த்வம் ஸர்வபாவேந பாரத விமுக்தாந்ய ஸமாரம்ப: நாராயண பரோபவ”-என்பது, பாரதம் விஷ்ணுதர்மம்.
தர்மபுத்திரனைப் பார்த்துத் தரும தேவதை கூறியது.
“அதபாதக பீத: த்வம் –
‘தருமபுத்திரன் ஓர் ஆபாசமான பொய்யினைச் சொல்லி, அதற்கு நரக தரிசனம் செய்தான்’ என்பது பிரசித்தமே அன்றோ.
அடுத்து அடுத்து ராஜசூயங்களைச் செய்தானித்தனை போக்கி ‘விலக்கிய காரியங்களைச் செய்தான்’ என்று பிரமாணப் பிரசித்தி இல்லை.
“அதபாதக பீத: த்வம் –
மேலே செய்து போந்தவை பாதகம் என்று தோற்றி அச்சத்தை அடைந்தவனானாயாகில், -பாதகம் -நிஷித்த அனுஷ்டானம் –
அகங்கார மமகாரங்களை மூலமாகக் கொண்ட கிரியாகலாபமடைய,-ராஜ சூயை யாகங்கள்- ‘கிருஷ்ணனே நம் கார்யத்துக் கடவன்’ என்று அறிந்த பின்பு
பாதகத்திற்கு ஒத்தனவாய்த் தோற்றின ஆயிற்று.
வி முக்தாந்ய சமாரம்ப: சர்வபாவேன நாராயண பர: பவ-
உப்பைத் தொட்டுப் புளியைத்தொட்டு -கர்ம ஞான யோகங்கள் -நீ நின்று சிலவற்றைச் செய்யாமல், புறம்புள்ளவற்றை முழுதையும் போகட்டு,
‘உடையவனே நம் காரியத்துக்குக் கடவன்’ என்று அவன் பக்கலிலே பாரத்தைப் போகட்டிருக்கப்பார்.”
இப்போது ‘பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிறது நம்பியிடத்துள்ள பிராவண்யத்தை அன்றோ;
“பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற திருத்தாயாராயும், ‘பழி என்று மீளேன்’ என்கிற பிராட்டியாயும் ஓடுகிற
இந்த இரண்டு நிலைகளும் ஆழ்வார் தமக்குப் பிறந்த அவஸ்தா விசேடங்களே அன்றோ;
பழி என்று பரிஹரிக்கப் பார்க்கிற திருத்தாயார் வார்த்தையான இடம்,
சரமஸ்லோகத்துக்கு மேலுள்ளவற்றை அநுபாஷித்தாற்போலே இருக்கிறதாயிற்று.
விடு பகுதியை தாயார் –பற்று பகுதியை மகள் -இரண்டும் ஆழ்வார் நிலை -தானே -விடுகை வேற இடத்தில் பற்றுகை வேற இடத்தில் –
‘பழி என்று மீளேன்’ என்கிற இவள் வார்த்தையான இடம், சரமஸ்லோகத்தில் நிஷ்கர்ஷம் போலே இருக்கிறதாயிற்று.
‘பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற இது, உபாயத்தில் கொத்தை அறுக்கிறது;
பழி என்று மீளேன், என்கிற இது, உபேயத்தில் கொத்தை அறுக்கிறது;
ஆக, உபாயத்தினுடைய நைரபேக்ஷ்யத்தை (வேறு ஒன்றினையும் விரும்பாமையைப்) பார்த்தால், தங்களுடைய முயற்சிகள் அனைத்தும்
குற்றமாயிருக்கும்; உபேய வைலக்ஷண்யத்தைப் பார்த்தால், விரையாமல் ஆறியிருத்தல் குற்றமாயிருக்கும்;
ஆகையால், இரண்டு குற்றங்களையும் அறுக்கிறது என்றபடி. கொத்தை-குற்றம்.
ஸ்வரூபமாய் அந்வயித்ததில் மிகுதியாய்க் கழிவது ஒன்று உண்டோ? என்றபடி;
“பரஞ்ஜ்யோதி: உபஸம்பத்ய ஸ்வேந ரூபணே அபிநிஷ்பத்யதே”என்பது, சாந்தோக்யம். 8:12.
இங்கு, ‘தன் அசாதாரண ஆகாரத்தைப் பெறுகிறான்’ என்றது, அபஹத பாப்மத்வாதிகள், சேஷத்வ பாரதந்திரியாதிகள்,
பரபக்திகள் இவற்றைப் பெறுகிறான் என்றபடி.
ஸ்வரூப ஆவீர் பாவம் -ஸ்வேன ரூபேண-அபஹத பாப்மாதி -குணங்கள் -பரம பக்த்தாதிகள்
-சேஷத்வ பாரதந்திர ஸ்வரூபம் –இவை மூன்றுமே -ஸ்வரூப அந்தர்கதம் -உபாயம் ஆகாது -மடல் தூது அநுகாரம் -ஸ்வரூபத்துக்குள் சேரும் –
அஹங்காரம் மமகாரம் இல்லாத கைங்கர்யங்கள் வேண்டுமே-
சர்வம் பரித்யஜ்ய -சொல்லைக் கேட்டேயும் சர்வம் கரிஷ்யாமி என்றாரே -கைங்கர்யம் அனைத்தையும் செய்ய வேண்டும்
-உபாயமாக எல்லா வற்றையும் சவாசனமாக விட வேண்டுமே
“தன் அசாதாரண ஆகாரத்தைப் பெறுகிறான்” என்கிற இதில், மிகுதியாய்த் தியாஜ்யமாய் இருப்பது ஒன்று இல்லை அன்றோ.
உபாய அம்சத்தில் வந்தால் ‘செய்தே தீர வேண்டும்படியான காரியங்களிலேயும் உபாய புத்தி பிறக்கிறதோ’ என்று
அச்சம் கொள்ள வேண்டும்படியாயிருக்கும்; உபேயத்தைப் பார்த்தால், “நான் எல்லா அடிமைகளையும் செய்வேன்” என்கிறபடியே,
விடத் தக்கது ஒன்று இல்லையாயிருக்கும்.
பழைய நாஸ்திக்யத்தாலே செய்யவேண்டிய காரியங்களில் சோம்பிக் கை வாங்கினதை
‘உபாய விரோதியான ஆகாரத்தாலே விட்டேன்’ என்னு மதுவும் வார்த்தை அன்று;
உபேய ருசியாலே செய்யுமவற்றை, ‘இவை உபேயமாகச் சேரின் செய்வது என்?’ என்று விடுமதுவும் வார்த்தை அன்று.
உலகத்தாரைப் போன்று செய்ய வேண்டிய காரியங்கள் முழுதினையும் செய்து கொண்டிருக்கச் செய்தே,
அவற்றில் உபாய புத்தி பண்ணாமலே போரும் நம் முதலிகளுடைய அநுஷ்டானமாய் இருக்கும்படி அன்றோ இது.
ஆக, ‘இது பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற இடம், சரம ஸ்லோகத்தில் முன்பாகத்தில் நிஷ்கர்ஷம் இருந்தபடி.
‘இது பழி’ என்று மீளாது ஒழிகிற இடம், சரம ஸ்லோகத்தில் பின்பாகத்தில் நிஷ்கர்ஷம் இருந்தபடி.

உபாயம் நைரபேஷ்யம் பார்த்தால் ஸூ பிரவ்ருத்திகள் -பிரயயத்னங்கள் கொத்தை ஆகுமே
உபேய வைலஷண்யம் பார்த்தால் த்வரியாமல் இருப்பது கொத்தையாக இருக்குமே –
இரண்டு கொத்தையும் அறுக்க -அத்தனையும் உபாய புத்தி தவிர்ந்து கைங்கர்ய புத்தியாக பண்ண வேண்டும் என்றதாயிற்று –

சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை –
தகுதியாயிருந்துள்ள கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை.
நான் கண்டபின் –
அக்கீர்த்தியைப் போன்று அங்குத்தைக்குச் சிறந்த நான் கண்டபின்.
“யாவரொருவருக்கு அந்தச் சானகி மனைவியாக இருக்கிறாளோ அந்த இராமபிரானுடைய பராக்கிரமம்
அளவிட்டு அறியக்கூடாததாய் இருக்கிறது அன்றோ” என்கிறபடியே, அவனுக்கு அக்கீர்த்தியைப் போன்று,
தன்னுடைய சம்பந்தமும் ஏற்றமாம்படி இருக்குமவளே அன்றோ.
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்-
கங்கையின் அலைகளின் நடுவே வசிப்பாரைப் போலே ஒளிகளாகிய அலைகளின் நடுவே ஆயிற்று இருப்பது.
ஒளிகளின் நடுவே வடிவு ஊகிக்கப்படுவதாயாயிற்று இருப்பது.
அவ்வடிவுதான் எவ்வளவு போரும் என்னில், அளவிட்டு அறிதற்கு அரியதாய்ச் சிலாக்கியமாய் இருக்கும்.

நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் –
ஒருநாள், சீயர் கோயிலுக்கு எழுந்தருளாநிற்க, வழியிலே பிள்ளானைக் கண்டு, ‘ஈச்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ உள்ளது,
விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, ‘சர்வ விஷயமாக ஸ்வரூப வியாப்தியே உள்ளது;
உபாசக விஷயத்தில், அவர்கள் பக்கல் அநுக்ரஹத்தாலே, அவர்கள் பற்றுக்கோடாகப் பாவித்த விக்கிரஹத்தோடே எழுந்தருளியிருக்கும்;
இனி, ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் சாமான்ய விஷயமாகிறது,
விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் விசேஷ விஷயமாகிறது’ என்று பணித்தானாம்.
ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம்:
“யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா அந்தர் பஹிஸ்ச தத்சர்வம் வியாப்ய நாராயண : ஸ்தித:”-என்பது,
இது, தைத்திரீய நாராயண உபநிடதம். 11 : 8.
விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம்: “நீலதோயத” என்பது. இது, தைத்திரீய நாராயண உபநிடதம். 11.
நேமி அம் கை உளதே-
வடிவழகு எல்லாம் ஒரு தட்டும், கையுந் திருவாழியுமான அழகு ஒரு தட்டுமாயாயிற்று இருப்பது. என்றது,
அவன் கையில் திருவாழி பிடித்திலனாகில் நான் பழி பரிஹரித்து மீளேனோ?
அவன் கையில் திருவாழி இருக்க, என்னாலே பழிக்கு அஞ்சி மீளப்போமோ? என்றபடி.
உங்கள் ஹித வசனங்களைக் கேட்கைக்கு உள்ளே இடம் இல்லாதபடி நிறைந்து நின்றான் என்பாள்,
நிறைந்து என் உள் நின்றொழிந்தான்’ என்கிறாள்
. இனி, போக்கிடம் இல்லையாம்படி அவன் வந்து உள்ளே நிற்க, எனக்கு ஒரு போக்கிடம் உண்டோ என்பாள்,
‘நின்றொழிந்தான்’ என்கிறாள் என்னுதல்.
அவனை என் மனத்தினின்றும் புறப்படச் சொல்ல மாட்டீர்களோ நான் என் பழி நீக்குவதற்கு.
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான கையிலே திருவாழியுமானால் மீளப்போமோ,
அவனுடைய நிறைவினைக் குறைக்கவோ, என் பழி நிறைவினைக் குறைக்கவோ.

——————————————————————————————

கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8-

பாவனா பிரத்யஷம் –திருஷ்டி -உருவ வெளிப்பாடு -நம்பி உடைய சர்வ அவயவ சோபைகளும் கண் முன்னால் நிற்கிறதே
கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்-ஆற்றாமையால் முகத்தை கையிலே வைத்து -மேலே சிதிலையாகா நிற்கும் –
கன்னத்தில் கை வைக்கக் கூடாதே தாயார் -கிருஷி பண்ணின நீங்களும் -பிரேம பிராவண்யம் வளர்த்தவர்கள் –
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்-நம்பி உடைய நிழலீட்டால்-மைப்படி மேனி அன்றோ -மாடங்கள் உடைய திவ்ய தேசம் –
நொந்து போவதே ஸ்வ பாவமாக உடைய நான் –
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்-சிவந்த திருக் கண்கள் -அனுபாவ்யமான கடி பிரதேசம்
-முஷ்டி க்ராஹ்யமான சிறிய இடை -அவயவ சபைக்கு ஆஸ்ரயமான வடிவு -சமுதாய சோபை
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.-செறிந்த -அடர்ந்த -நீண்ட திருக் குழல் தாழ்ந்து உள்ள திருத் தோள்கள் –
கரண குண்டலங்கள் -தோளுக்கா குழலுக்கா காதுக்கா -இது -மூன்றுக்கும் இல்லை மனசுக்கு சாத்தப் பட்ட ஆபரணம்
அனுபவிக்கப் பெறாத பாவி முன்னே நிற்கின்றன –

மிருதுத்தன்மை பொருந்திய முகத்தைக் கையுள்ளே வைப்பாள், வருந்துவாள் என்று தாய்மாராகிய நீங்களும் முனியா நின்றீர்கள்;
மேகங்கள் தங்கியிருக்கின்ற மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை நான் கண்டபின், செந்தாமரை போன்ற
திருக்கண்களும் அல்குலும் சிறிய இடையும் வடிவும் செறிந்த நீண்ட குழல் தாழ்ந்திருக்கின்ற தோள்களும் பாவியேனாகிய என்முன்னே நிற்கின்றன.
மை-கருமையுமாம். அல்குல்-அரையின் கீழே இருப்பதோர் உறுப்பு; இருபாலார்க்கும் பொதுவானது.
“அடியும் கையும் கண்ணும் வாயும், தொடியும் உந்தியும் தோளணி வலயமும், தாளும் தோளும் எருத்தொடு பெரியை, மார்பும் அல்குலும்
மனத்தொடு பரியை” என்பது, பரிபாடல் 13. 51-54. மொய்ய நீள் குழலும் தாழ்ந்த தோள்களும் என உம்மைத் தொகையாகக் கோடலுமாம்.

எல்லா இடத்திலும் உள்ள அங்க சோபை என்முன்னே நின்று நலியா நின்றது என்கிறாள்.

கையுள் நன்முகம் வைக்கும் –
அவனைப் பிரிகையால் வந்த தளர்த்தியாலே கையிலே முகத்தை வையாநின்றாள்.
இத்தனை சாகசத்திலே துணியும்படி ஆவதே இவள். தன்முகத்தின் வாசி தான் அறியாது ஒழிய வேணுமோ.
உபதாய புஜம் தஸ்ய லோகநாதஸ்ய சத்க்ருதம் கதம் நாம உபதாஸ்யாமி புஜம் அந்யஸ்ய கஸ்யசித்”- ஸ்ரீராமா. சுந். 21:19.
இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
“உலகநாதனான அந்த ஸ்ரீராமனுக்குத் தலைக்கு அணையாகக் கொடுத்து உதவப்பட்டது இக்கை.
இதனை மற்றொருவனுக்குத் தலைக்கு அணையாக எங்ஙனம் கொடுப்பேன்” என்னக் கடவதன்றோ.
கணவனுடைய கரத்தின் பரிசமே யாயிற்றுப் பொறுப்பது. இதனால், தன்னோடு தனக்குச் சம்பந்தமில்லாத பாரதந்திரியத்தைச் சொல்லுகிறது.
அதுவே அன்றோ “நம:” என்ற சொல்லின் அர்த்தமாகிறது.
இதனுடைய சுருக்கமாக இருக்கின்ற உகாரத்திலேயும் இது உண்டாயிருக்கச் செய்தே இங்கேயும் -நமஸ்-சொல்லும்போது இதுவே அர்த்தமாக வேணுமே அன்றோ.
நையும்-தன் கையும் கூடப் பொறாமையாலே வருந்துவாள்
என்று அன்னையரும் முனிதிர்-
ஊரவர் கவ்வைக்கு நான் வெறுக்கிறது என்?
மை கொள் மாடம்-
பழைமையாலே யாதல்;
ஸோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 15.
“ஸ்ரீராமபிரான் தன்னுடைய திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு’ என்னுமாறு போன்று
உள்ளே நிற்கின்றவனுடைய நிழலீட்டாலேயாதல்.
நான் கண்டபின்-
அம்மாடத்தைப் போன்று நைவுக்குப் பழையேனான நான் கண்டபின்;
“நைவாய எம்மேபோல்” என்னக் கடவதன்றோ.
செய்ய தாமரைக் கண்ணும்-
தனக்கே உரிமையாக்குகின்ற திருக்கண்களும்,
அல்குலும் –
அந்த நோக்குக்குத் தோற்றார் தரித்து இளைப்பாறும் அல்குலும்,
சிற்றிடையும் –
இரண்டும் ஒரு தொடையாயிருக்கையாலே ஊஹிக்கப்படும் இடையும்,
வடிவும்-
என்னை மீள ஒட்டாத வடிவும், மெய்யே மீள ஒட்டுகிறது இல்லை காணும் இவளை.
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் –
காட்சிக்கு இனியதாய், கண்டார்க்கு ஒரு காலும் மறக்க ஒண்ணாதபடி இருக்கிற திருக் குழலானவை தாழ்ந்து,
அணைக்கைக்குத் தகுதியான திருத்தோள்களும்,
பாவியேன் முன்நிற்குமே –
அநுபவத்திற்குத் தகுதியில்லாதவை முன்னே நிற்கையாகிறது மிகுந்த கிலேசத்திற்குக் காரணமாய் இருப்பது ஒன்றே அன்றோ.
‘முன் நிற்கும்’ என்னா நிற்கச்செய்தே அன்றோ ‘பாவியேன்’ என்கிறது.
கண்களுக்குத் தோற்றா நிற்கச்செய்தே யானைக்குக் குதிரை வையா நின்றது.

———————————————————————-

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9-

நம்பி -அசங்க்யேத ஆபரண சோபா விசிஷ்டத்வத்தாலே அதிசயித போக்யனாக கொண்டு நெஞ்சை விட்டு போகான்
ஸ்தாவர பிரதிஷ்டை யாக நிற்கிறான்
முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்-சூரியனே பார்க்காத உன்னை முன் பார்க்கும் படி நிற்கிறாய் –
சமான துக்கைகளான தோழி -ஹித பரர் அன்னையரும் முனியும்படி
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-ஸூ ஸ்திரமான -ஸ்த்ரீத்வம் பேணாமல் புறம்பு புறப்படும் நான் –
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்-உத்தமாங்கம் -தலை -திரு அபிஷேகம் -ஆதி -முதலாக
உலப்பில் -எண்ணிக்கை இல்லாத -ஆபரணங்கள் தரித்து –
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.-கன்னலும் –நிரதிசய போக்யன்-

முன்னே வந்து நிற்கின்றாய் என்று தோழிமார்களும் தாய்மார்களும் முனியாநின்றீர்கள்; நிலைபெற்ற மாடங்களையுடைய திருக்குறுங்குடியில்
எழுந்தருளியிருக்கின்ற நம்பியை நான் கண்டபின், தலையில் அணிந்திருக்கின்ற நீண்ட திருமுடி முதலான எண்ணில்லாத ஆபரணங்களையுடைய
எம்பெருமான், கன்னலாகிப் பாலாகி அமுதாகி வந்து என்நெஞ்சத்தை விட்டு நீங்கமாட்டுகின்றிலன்.
மன்னுதல்-நிலைபெறுதல், பொருந்துதலுமாம். உலப்பு கணக்கு: முடிவு. அணிகலம்-அணிந்திருக்கிற ஆபரணம்; அழகிய ஆபரணமுமாம். கன்னல்-கரும்பு.

நம்பி, இனிமைகள் எல்லா வற்றோடுங் கூட என்நெஞ்சிலே புகுந்து விடுகின்றிலன் என்கிறாள்.

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் –
தோழிமார் முன்புங்கூட நின்று அறியாள் போலே காணும் இவள்தான்.
“யா நஸக்யா புரா த்ரஷ்டும் பூதை ராகாஸகை ரபி
டதாமத்ய ஸீ தாம் பஸ்யந்தி ராஜ மார்க்க கதா ஜநா:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 33 : 8.
“எந்தச் சீதாபிராட்டி முன்பு ஆகாயத்தில் வசிக்கின்ற பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ” என்று
சொல்லப்பட்ட பிராட்டியைப் போலே இருக்குமவள் அன்றோ இவள்தான்.
இவள் துணிவைக் கண்டவாறே உகப்பாரோடு, பொடிவாரோடு வேற்றுமை அறப் பொடியத் தொடங்கினார்கள்.
மன்னுமாடம் –
“ப்லாவயாமாஸ தாம் ஸூந்யாம் த்வாரகாம்ச மஹோததி:
வாசுதேவ க்ருஹம் து ஏகம் ந ப்லாவயதி ஸாகர:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5.38:9.
“கண்ணபிரானுடைய திருமாளிகை ஒன்றனை மட்டும் சமுத்திர ராஜன் அழிக்க இல்லை” என்கிறபடியே,
பிரளயம் முதலானவற்றிலுங் கூட அழியாது என்றிருக்கிறாள்.
வஜ்ர நாபர் -அநிருத்திரன் திருக் குமாரர் -ஸ்தாபித்த வட நாட்டுக் கோயில்கள் –
நான் கண்டபின் –
பிற்காலியாத படியான நான் கண்டபின். என்றது, நாணம் நீங்கப் பெற்ற நான் கண்டபின் என்றபடி.
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பு இல் அணி கலத்தன் –
தலையான முடி தொடக்கமான முடிவில்லாத ஆபரணங்களை யுடையவன்.
அன்றிக்கே, சென்னியில் தரித்திருக்கிற ஆதி ராஜ்ய சூசகமான திருமுடி தொடக்கமான எண்ணிறந்த
திவ்விய ஆபரணங்களை யுடையவன் என்னுதல். சேர்த்தி இருக்கிற படியைத் தெரிவிப்பாள் ‘அணிகலத்தன்’ என்கிறாள்.
பார் அளந்த விசும்பு அரசே —எம்மை வஞ்சித்த ஓர் அரசே -மூன்று வித கிரீடங்கள் –
செல்லப்பிள்ளை ராஜ முடி -வைர முடி -கிருஷ்ண ராஜ முடி -மூன்று நாள்கள் உத்சவங்கள்
மூன்று பாகங்கள் –கிரீட மகுட சூடாவதம்ச —-ஆதி ராஜ்ய ஜல்பிகா –தத்வ த்ரய சம்ப்ரதாயம்
கன்னல் பால் அமுதாகி –
இவை, எல்லா ரசங்களுக்கும் உபலக்ஷணம்.
வந்து என் நெஞ்சம் கழியானே –
வந்து என் நெஞ்சில் நின்றும் போகின்றிலன்.
முன்னே நிறுத்தினவனைப் பொடிய மாட்டார்கள்; ‘பெற்றோம், பிழைத்தோம்’ என்று,
‘முன்னின்றாய்’ என்று என்னைப் பொடியுமித்தனை காணும் இவர்கள் வல்லது.
எனக்கு மறக்கை தேட்டம், முடியாமை இருக்கிறேனத்தனை.
நம்பி புகுந்து விடுகின்றிலன்

————————————————————————————-

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-

நித்ய ஸூ ரி போக்யன் –அதுஜ்ஜ்வலமான பிராப்ய விக்ரகம் -அகவாயில் பிரகாசியா நின்றது -அநந்ய கோசரமாகும் படி
கழிய மிக்கதொர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்-இவள் கை கழிய -மூன்றாவது காதல் –
பேரமர் காதல் -பின் நின்ற காதல் –
மூவர் முதல் ஆழ்வார்கள் –
பிரேமதாயித்வம் -அதிக்ரம ப்ரேமம் -அனுயாயி பிரேமம் -ஸ்மாரக பிரேமம் –
சேவை பண்ணி வைத்தவள் -அன்னை
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-ஆஸ்ரிதரை ஆனந்யார்கார் ஆக்கும் -அபி நிவேச அதிசயம் உடைய நான்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே-ஸூரி சங்கங்கள் பரஸ்பரம் கூடி இருந்து குளிர்ந்து -சேஷ வ்ருத்தி பண்ணி –
கை தொழுவது -அநு கூல சேஷ வ்ருத்தி செய்வதை -சேஷ பூதர் ஆவதற்கு கைங்கர்யம் செய்ய வேண்டுமே முக்கரணங்கள் சமர்ப்பித்து
-தேஜோ ராசி மத்யத்திலே எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே-சுழன்று கெட்டிப் பட்டு செறிந்த தேஜஸ் -உயர்ந்து அத்விதீயமான
பிராப்ய விக்ரகம் நெஞ்சுக்குள் தோன்றா நிற்க யாருக்கும் -ஸூய யத்னத்தால் அறிய முடியாதே -பர அனுக்ரகத்தால் காணலாம்

மிக அதிகமானதொரு காதலையுடையவள் இவள் என்று, தாயானவள், காண்பதற்கு என்னை விடுகின்றிலள்; குற்றம் இல்லாத கீர்த்தியையுடைய
திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பிறகு, நித்தியசூரிகள் கூட்டங்கூட்டமாகக் கூடிக் கைகூப்பித் தொழுது வணங்கச் சோதி வெள்ளத்தின் நடுவில்
தோற்றுகிற ஒப்பற்ற வடிவம் எனது மனத்துக்குள்ளே தோன்றுகிறது; இதனை, எத்தனையேனும் ஞானமுடையராயிருப்பினும் அறிந்து கோடல் அரிது.
கழி: உரிச்சொல்; மிகுதிப் பொருளைக் காட்டும். வழு-குற்றம். தேவர்-நித்தியசூரிகள்.

நம்பியுடைய திருமேனி என் நெஞ்சிலே பிரகாசிக்கிறபடி ஒருவர்க்கும் அறிய ஒண்ணாது என்கிறாள்

கழிய மிக்கது ஓர் காதலள் இவள் –
எல்லாருடைய காதலைக் காட்டிலும் வேறுபட்ட காதல்;
அன்றிக்கே, நாள் கழியக் கழியப் பெருகி வருகிற காதல் என்னுதல்.
“ஸோகஸ்ச கில காலேந கச்சதாஹி அபகச்சதி
மமச அபஸ்யத: காந்தாம் அஹந்யஹநி வர்ததே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 4.
நாட்டார், “நாள் செல்லச் செல்லச் சோகத்தை மறந்து போகா நிற்பர்கள்;
எனக்கு, அங்ஙன் அன்றிக்கே, நாள் செல்லச் செல்லச் சோகம் பெருகி வாராநின்றது” என்னக் கடவதன்றோ.
அன்னை காணக் கொடாள்-
‘இவள் ஒரு விஷயத்திலே காதலைச் செய்யக் கண்டேனாக வல்லேனே’ என்றிருக்குமவளும் காண வேண்டுகின்றிலள்.
ஆனால், இப்போது இங்ஙனம் படுகிறது என்? என்னில், தர்மி லோபம் வரும்படிப் பிராவண்யத்திலே மூழ்கினவளாக ஒட்டாளே,
சரீரம் உண்டாய் மேல் நடக்கவேணும் என்று இருப்பவள் அன்றோ.
காண்கையாவது – அநுசந்தித்தல்.
அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம் இன்றே நாம் காணா திருப்பதுவும்-என்றேனும்
கட் கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட் கண்ணேல் காணும் உணர்ந்து.-என்றது, பெரிய திருவந். 28.
“நெஞ்சு என்னும் உட்கண்” என்னக் கடவதன்றோ. நெஞ்சையுங் கூட வாய்கட்டா நின்றாள்.
வழு இல் கீர்த்தி –
குறைவற்ற கீர்த்தியையுடைய. நான்-அக் கீர்த்திக்குப் பிரிந்து நிலைபெறுதல் இல்லாதது போன்று,
அவனை ஒழியத் தனித்து நிலை பெறுதல் இல்லாத நான்.
கண்ட பின் –
இவர்க்கு இப்போது காட்சியாவது தான் ஏது? என்னில்,
அடியில், ‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கி ‘முனியே நான்முகனே’ என்ற பாசுரம் அளவும் செல்ல ஒரே வாக்கியமே அன்றோ,
நடுவில் உள்ளவை அநுபவப் பிரகாரங்களாலே பிறக்கிற விசேடங்களே அன்றோ.
குழுமித் தேவர் குழாங்கள் கைதொழ –
திரள் திரளான நித்தியசூரிகள், கிண்ணகத்தில் இழிவாரைப் போலே கை கோத்துக் கொண்டு இழியும்படி.
சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு-
தேஜஸாம் ராஸிமூர்ஜிதம்”-இது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 9:67.-“ஒளிகளின் திரள்” என்கிறபடியே,
தேஜஸ்ஸின் நடுவே ஊகிக்கப்படுவதா யன்றோ வடிவு இருப்பது.
என் நெஞ்சுள் எழும் –
நித்திய சூரிகள் நடுவே தோன்றுமாறு போலே என் நெஞ்சுக்குள்ளே பிரகாசியா நின்றது.
ஆர்க்கும் அறிவு அரிது –
எனக்கு மறக்க ஒண்ணாதாப் போல ஆயிற்று, தம் முயற்சியால் அறிவார்க்கும் அறிய ஒண்ணாதிருக்கிறபடியும்.

———————————————————————–

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-

பகவத் சேஷத்வம் ஸ்வரூப லாபம் கிட்டும் –
அறிவரிய பிரானை ஆழி அம்கையனையே அலற்றி-ஸூ வ பிரயத்தனத்தால் -அறிய முடியாதவன் பிரான் –
தானே தன்னைக் காட்டும் ஆஸ்ரிதர்க்கு -ஸூசகம் திரு ஆழி திருக்கையில்
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன-ஸ்லாக்கியமான புஷ்பங்கள் –நன்மை -அனுபவ யோக்யதையான
ஞானாதி -விஷய வைலஷண்யம் -கர்மம் கைங்கர்யத்தில் புகும் –
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்-ஆயுத அவயவ ஆபரண ரூப-சிஹ்னங்கள் உடைய -திருக் குறுங்குடி
அறியக் கற்றுவல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே-ஞான பிரகாசம் பிறக்கும் படி அர்த்தானுசந்தானம்
பகவத் அசாதாராண சம்பந்தம் -அனுபவ -தத்பரராய் ஈடுபட்டு வர்த்திப்பார் –

தங்கள் தங்கள் முயற்சியால் அறிய ஒண்ணாத பிரானும், சக்கரத்தை அழகிய கையிலே தரித்திருக்கின்றவனுமான சர்வேச்வரனையே பேசி,
வாசனை பொருந்திய சிறந்த மலர்களைத் தேடி, நல்ல திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட ஆயிரம்
திருப்பாசுரங்களுள் திருக்குறுங்குடியதன்மேல் சொன்ன குறிகளைக்கொண்ட இப்பத்துப் பாசுரங்களையும் அறியக் கற்று வல்லவர்கள்
ஆழ்ந்த கடலால் சூழப்பட்ட இந்தப் பூலோகத்திலே வைஷ்ணவர்கள் ஆவார்கள்.
அலற்றி நாடி சொன்ன இவை பத்து என்க. வல்லார் ஞாலத்துள்ளே வைட்ணவர் என்க.

இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்தே வைஷ்ணவர்கள் என்கிறார்.

அறிவு அரிய பிரானை-
நாம் பெறுதல் இழத்தல் செய்கிறோம், தம் முயற்சியால் சாதித்துக் கொள்ளப்படுவது அன்றிக்கே ஒழியப் பெற்றோமே முன்னம்.
வஸ்து தான் உண்டானால் நினைத்தபோது பெற்று அநுபவிக்கலாமே அன்றோ.
இவர்கள் தாய்மார்கள் -பின்னைத் தங்கள் முயற்சியாலே அறியுமவர்களோ? என்னில்,
ஆக வேணுமே அன்றோ, ‘மீட்கலாம்’ என்று இருந்தபோதே, ‘தங்கள் தங்களாலே அறியவுமாம்’ என்று இருந்தார்களாக வேணுமே அன்றோ.
ஆழி அம் கையனையே அலற்றி –
“சங்கினோடும் நேமியோடும்” என்று, தொடங்கினபடியே தலைக்கட்டுகிறார்.
அவனைக் கைவிடாமல் -இடைவிடாமல் -அநுபவித்ததித்தனை இதற்கு முன்பெல்லாம்;
இதில், கையும் திருவாழியுமான அழகையாயிற்று உருவச் சொல்லிக் கூப்பிட்டது.
நறிய நன் மலர் நாடி-
பரிமளத்தை யுடைத்தாய் நன்றாயிருக்கிற மலர்களைத் தேடிக்கொண்டு,
“அடி சூட்டலாகும் அந்தாமம்” -இது, திருவாய்.-2. 4 : 11.-என்னக் கடவதன்றோ.
நன் குருகூர்ச் சடகோபன்-
இந்தக் காதல் உண்டாகைக்கு அடி அவ்வூரில் பிறப்பாயிற்று.
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்-
ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு, நம்பியுடைய அழகினை மெய்காட்டுக் கொண்ட இப்பத்தும் திருக்குறுங்குடி விஷயம்.
அன்றிக்கே, திவ்விய ஆயுதங்களும் திவ்விய ஆபரணங்களும் சேர்ந்த சேர்த்தியாலுண்டான நம்பியுடைய
அழகைத் திரளச் சொன்ன பத்தும் என்னுதல்.
அறியக் கற்று வல்லார்-
இதனைக் கற்று அறிய வல்லவர். அறியக் கற்கையாவது, ‘ஸ்ரீவைகுண்டத்தில் நித்தியசூரிகள் நடுவே இருக்கிற இருப்பைக் காட்டிலும்,
திருக்குறுங்குடியில் நிற்கிற நிலையிலே குணாதிக்யம் உள்ளது என்னுமிடத்தை அறிந்து கற்க வல்லவர்கள்.
வஸ்துவுக்குக் குணத்தாலே அன்றோ உயர்வு; அந்தக் குணாதிக்யம்-சௌலப்யாதிகள் எங்கே உண்டு, அங்கே அன்றோ ஏற்றம்.
ஆழ் கடல் ஞாலத்துள்ளே வைட்ணவர் –
மருபூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே நித்தியசூரிகளோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆவர்கள் உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்.

————————————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சதி பாவநாயா பூம்நா பிரத்யஷதக
ஹரே அவயவ ஆபரணாதி த்ருஷ்ட்யா
தத் அனுபூத் அவாப்தி தஸ்ய ப்ரீத்யா ஸூ ஸா
முனி –

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சங்காத்யை
யஜ்ஞ சூத்ராபி
ததா சார்ங்கம் முகைபி
துளச்யா
பிம்ப உஷ்டாத்யை
ஸூ நாசா
நிரவதிக ஜோதி ஊர்ஜ்வச்ய
நேத்ராப்ஜாதி
நிதம்ப
அசேஷ ஆபரண ஸூசமையா
ஸ்வச்யை பக்தைர்
ஸ்மாரகமான ப்ரேமம் -கழிய மிக்கதோர் காதல் –

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 45-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

எங்கனே நீர் முனிவது என்னை யினி நம்பி அழகு
இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன்
உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்———–45-

————————————————–

அவதாரிகை –
இதில்
உரு வெளிப்பாட்டாலே பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் -என்று
ரஷகனுடைய குண ஞானத்தாலே
மீளவும் தெளிவு குடி புகுந்து
நம்பியைத் தென்குருங்குடி நின்ற -என்று
முன்பு அனுபூதமான நம்பி உடைய வடிவு அழகு
நெஞ்சிலே ஒருபடிப்பட பிரகாசிப்பிக்கையாலும்
யதா மநோ ரதம் அவ் வடிவு அழகைக் கண்ணால் கண்டு
அனுபவிக்கப் பெறாமையாலும்
ப்ரீத்ய அப்ரீத்ய சமமாய் செலுகிற தம் தசையை
நாயகனோடு கலந்து
பிரிந்து
உரு வெளிப்பாட்டாலே
உருவ நோவுபட்டு செல்லுகிற
பிராட்டி பேச்சாலே அருளிச் செய்கிற
எங்கனயோ – வில் அர்த்தத்தை
எங்கனே நீர் முனிவது -என்று தொடக்கி அருளிச் செய்கிறார் -என்கை —
அது ஆண் தன்மையான அனுபவம் -இது பெண் தன்மையான அனுபவம் -உரு வெளிப்பாடு
-முன்பு அனுபூத அனுபவம் இருக்க ரசாந்த்ரம் தேடுவது அன்றோ –

——————————————————————————–

வியாக்யானம்–

எங்கனே நீர் முனிவது என்னை –
இவ் வாற்றாமைக்கு ஊற்றுவாயான நீங்கள்
இவ் வபிநிவேசம் உடைய என்னை பொடிவது எங்கனே –
எங்கனயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்
என்றத்தை பின் சென்றபடி –

இனி -எங்கனே நீர் முனிவது –
திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் –
இனி முனியக் கூடுமோ –
அதுக்கு முன்னே அன்றோ முனிய வேண்டுவது –
அதுக்கு மேலே
சந்திர காந்தாநனம் ராமம் அதிவ்ய பிரிய தர்சனம் -என்னும்படி
ருசி ஜனக லாவண்ய விபவமானது
அசௌ புருஷ ரிஷப ராம -என்னும் படி
உருவ வெளிப்பாடாய் –

நம்பி அழகு இங்கனே தோன்றுகின்றது என் முன்னே –
குண விக்ரஹ சௌந்தர்யாதிகளால் பூரணரான நம்பி யுடைய
ஆயுத
ஆபரண
அவயவ
சோபைகள் ஆனது
அது கண்டு உகக்கிற என் முன்னே
பிரத்யஷமாகத் தோன்றா நின்றது –
அதாவது –
சங்கினோடும் நேமியோடும் -என்றும்
மின்னு நூலும் குண்டலமும் -என்றும்
வென்றி வில்லும் தண்டும் வாளும் -என்றும்
பூம் தண் மாலை தண் துழாய் பொன் முடியும் வடிவும் -என்றும்
தொக்க சோதித் தொண்டை வாயும் -என்றும்
கோல நீள் கொடி மூக்கும் -என்றும்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும் -என்றும்
செய்ய தாமரைக் கண்ணும் -என்றும்
சென்னி நீண் முடி யாதியாய உலப்பில் அணி கலத்தன் -என்றும்
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் -என்றும்
இப்படி அடி தொடங்கி முடி அளவும் அனுபவித்த பிரகாரத்தை
அங்கன் உரு வெளிப்பாடா வுரைத்த –
அப்படியே
உரு வெளிப்பாடு என்கிற துறையிலே
வைத்து அருளிச் செய்த –

தமிழ் மாறன் –
திராவிட ப்ரஹ்ம தர்சியான
ஆழ்வார் –
நம்பி விஷயமாக எங்கனயோ -அருளிச் செய்த
ஆழ்வார் -என்றபடி –

கருதும் அவர்க்கு இன்பக் கடல் –
அபிநிவேசத்துடன் அனுபவிப்பார்க்கு
ஆனந்த சிந்துவாய் இருப்பார் –
சென்னி நீண் முடி யாதியாய வுலப்பில் அணி கலத்தன்
கன்னல் பாலமுதாகி
வந்து என்நெஞ்சம் கழியான்-என்று
ஆழ்வார் தமக்கு அவ் வாகாரம் இனிதாய் இருக்குமா போலே
அவர் சம்பந்திகள் ஆனவர்களுக்கும் ஆழ்வார் அப்படியே இருப்பார் -என்றபடி –

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: