பகவத் விஷயம் காலஷேபம் -114- திருவாய்மொழி – -5-5-1….5-5-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

மாசறு சோதி” என்ற திருவாய்மொழியில் “நாடும் இரைக்கவே, யாம் மடல் ஊர்ந்தும்” என்று மடல் ஊரப் பாரித்தாள்;
பாரித்தபடியே தலைக்கட்டப் பெறாமையாலே “ஊரெல்லாம் துஞ்சி” என்ற திருவாய்மொழியில்
1- ‘ஊரெல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள் இருளாய் என்று முதலிலே மடல் ஊருகைக்கு விஷயந்தான் -பழிச் சொற்கள் -இல்லாதபடி
பழி சொல்லுவாருங்கூட உறங்கினார்கள்’ என்று வெறுத்தாள்; -ஏசிப் பேசினால் தானே அவனைப் பற்றி ஸ்மரணம் வரும் –
2-“அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்” என்று, ‘சூரியோதயத்திற்குச் சூசகமும் கூட இல்லையாயிற்று’ என்று வெறுத்தாள்;
3- “நீயும் பாங்கு அல்லைகாண் நெஞ்சமே” என்று-வேறு – ‘ஒன்றை நினைத்துத் தரிக்கைக்கு விரகு அற்றது’ என்றும் வெறுத்தாள்.

“மாசறுசோதி” என்ற திருவாய்மொழியில், பிராப்பியத்தைப் பெற வேண்டும் என்னும் மனோவேகத்தாலே உபாய அத்யவசாயம் கலங்கினபடி;
“ஊரெல்லாம்” என்ற திருவாய்மொழியில், அந்த மனோ வேகமுங் கூடக் கலங்கினபடி; -எரு நீர் இல்லாமல் பயிர் விளையாதே –
இத் திருவாய்மொழியில், ‘ரக்ஷகன் அவன்’ என்னும் தெளிவும் செல்லா நிற்க, பிராப்பிய ருசி நலிகிறபடி.
மடல் -பிராப்ய த்வரை -காள ராத்ரி வியசனம் -இழந்த உபாய அத்யவசாயமும் பிராப்ய த்வரையும் மீண்டதே –
மூன்று ஹேதுக்களும் போனத்தை அருளிச் செய்கிறார் மேலே

இந்தக் குறைகள் -மூன்று வெறுப்புகள்- எல்லாம் தீரும்படி போதும் விடியப்பெற்று, “அன்னையரும் தோழியரும் துஞ்சுவர்” என்கிற இழவு தீர
உகப்பாளும் பொடிவாரும் ஹிதம் சொல்லுவாருமாகப் பெற்றது இத்திருவாய்மொழியில்.
என்றது, பின்னர், உறவினர்கள் அனைவரும் உணர்ந்து, 1-“தீர்ந்த என் தோழி” என்ன வேணும்படி இவளுடைய துணிவு கண்டு உகப்பாளும்,
2- “எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்” என்ன வேண்டும்படி பொடிவாரும்,
3-“தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்ன வேண்டும்படி ஹிதம் சொல்லி அலைப்பாருமாகப் பெற்றது;
அவ்வழியாலே அவர்கள்தாம் இவ் விஷயத்தினை நினைப்பூட்டுகின்றவர்கள் ஆவர்களே அன்றோ.
சூரியனும் உதித்துப் பொருள்களைக் காணவும் பெறுகையாலே வியசனமும் பாலி பாயப் பெற்றது.
இவ்வளவு ஆஸ்வாசம் உண்டானவாறே, நெஞ்சு நினைத்துத் தரிக்கைக்கும் துணையாயிற்று என்றபடி.
இப்படி இரவு வியசனம் போம்படி போது விடியப்பெறுகையாலே ஒரு தரிப்பும் உண்டாய், அவனை அநுபவிக்கப் பெறாமையாலே
ஆற்றாமைக்கும் காரணமாய் நோவுபட்டுச் செல்லாநிற்க, உணர்ந்த உறவினர்கள் அனைவரும்,
‘நீ இப்படி இவ்விஷயத்தில் எல்லை இல்லாத காதலையுடையவளாயிருத்தலாகிற இது உனக்குக் குடிப்பழி,
உன்னுடைய பெண் தன்மைக்குப் போராது, அவன் தலைமைக்கும் போராது’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க,
‘இவர்கள் உகந்தருளின நிலங்களின் வாசி அறியார்கள்’ என்று இருந்தாள் இவள்,
‘நீங்கள், சிலர் காட்டக் கண்டீர் கோள் அல்லாமையாலே இவ்விஷயத்தை உள்ளபடி அறிந்திலீர்கோள்;
நான் அங்ஙன் அன்றிக்கே, அவன் தானே மயர்வு அற மதிநலம் அருளித் தன்னைக் காட்டக் காண்கையாலே உள்ளபடி கண்டேன்;
ஆகையாலே, நம்பியுடைய வடிவழகிலும் ஒப்பனை அழகிலும் ஆபரணச் சேர்த்தியிலும் பெருமையிலும்
நீல மேனி -வடிவு அழகு /பூம் தண் மாலை -ஒப்பனை அழகு /மின்னு நூலும் குண்டலும் -ஆபரண அழகு /பொன் முடி வேண்டற்பாடு
நான் உங்கள் ஹித வசனத்துக்கு மீளாதபடி அகப்பட்டேன்’ என்று இங்ஙனம் தம் படிகளைச் சொல்லாநிற்கச் செய்தே;
‘தம் முயற்சிகொண்டு அறிவார்க்கு அறிய ஒண்ணாதபடி பெற்றோமே அன்றோ,
இவ்வஸ்துதான் உண்டாகப் பெற்றால் நாம் பெற்ற போது பெறுகிறோம், பிறர் அறியாது
ஒழியப் பெற்றோமேயன்றோ’ என்னும் பிரீதியோடே தலைக்கட்டுகிறது.

ஸூ யத்னத்தால் காண்பார் -அறிவரிய பிரான் -அறிவுக்கு அரிய -பிரான் -உபகாரகன் -தன்னால் காட்டக் கொடுப்பவன் -ஆழி யங்கை பிரானை அலற்றி –
சுவகத ச்வீகார நிஷ்டர்களுக்கும் உபாசகர்களுக்கும் கிட்ட அரியவன் -பரகத ச்வீகார நிஷ்டர் களுக்கு அவன் காட்டக் காண்கையாலே-காணலாம் என்றபடி

ஆக, போதும் விடிந்து ஹிதம் சொல்லி அலைப்பாரும் உண்டாகப் பெறுகையாலே ஒரு தரிப்பும்,
அதுதான் நினைத்த விடியலாகப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையும்; அவனை நினைக்கப் பெறுகையாலே ஒரு பிரீதியும்,
அதுதான் அநுபவமாகப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையும்; சூரியன் உதித்துப் பொருள்களைப் பார்க்கப் பெறுகையாலே ஒரு பிரீதியும்,
அதுதான் அவனைக் காணப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையுமாய்; பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாகச் செல்லுகின்றன.

நன்று; “ஏழையராவி” -7-7-என்ற திருவாய்மொழியும், ‘உருவெளிப்பாடு’ சொல்லாநின்றதே,
அதற்கும் இத்திருவாய்மொழிக்கும் வேற்றுமை என்? என்னில்,
அதில், “இணைக் கூற்றங்கொலோ” என்றும், “உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அர்க்கர்கட்கும் எவ்விடம்” என்றும்
பாதகத்தன்மை உறைத்திருக்கும்; இதில், மேலே உண்டான துக்கம் நீங்குதல் உண்டாம்படி நினைத்துத் தரிக்கவும் பெற்று,
அதுதான் அநுபவமாகப் பெறாமையாலே வந்த பிரீதி இன்மையுமாய், -இப்படிப் பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாகச் செல்லுகிறதாக இருக்கும்.

1-ஜாபாலி பகவானும் வார்த்தை சொல்லி, ‘ஸ்ரீ வசிஷ்ட பகவானும் இக்குடியில் போந்த படிகள் எல்லாவற்றையும் சொல்லி,
இனி மீண்டு திருவபிடேகம் செய்துகொள்ள அமையும் என்ன, பெருமாள் ‘அங்ஙனம் செய்வது இல்லை’ என்று
முடிய நின்றபடியைக் கண்டவாறே, நகரத்து ஜனங்கள் எல்லாம் உகப்பது செய்தார்கள், வெறுப்பதும் செய்தார்கள்;
‘ரக்ஷகனானவன் தொடங்கின காரியத்திலே இப்படி முடிய நின்ற இடம் நம்முடைய ரக்ஷணத்துக்கும் உண்டே அன்றோ’ என்று
உகப்பதும் செய்தார்கள்; ‘அதனாலே நாம் பெற்றது என்? இப்போது பதினான்காண்டு இழந்திருக்கும்படி வேண்டி இருந்ததே!’ என்று
வெறுப்பதும் செய்தார்களே அன்றோ.
2-பிராட்டியைத் திருவடி தொழுதபோது, ‘நாம் இலங்கையை அடைவதற்குரிய ஆற்றல் உண்டாகப்பெற்றோமே அன்றோ’ என்று உகப்பதும்
செய்தான், ‘இவள் அவரைப் பிரிந்து இந்த நிலையில் இருப்பதே!’ என்று வெறுப்பதும் செய்தான்.
3-பிராட்டி, திருவடி வார்த்தையைக் கேட்டபோது “வாநர! உன்னால் சொல்லப்பட்ட பெருமாள் என்னை அல்லது அறியார்,
பிரிவாலே தளர்கின்றார் என்ற இரண்டு வார்த்தைகளும் விஷத்தோடு கூடின அமுதம் போல் இருக்கிறது” என்று,
பெருமாள் என்னைப் பிரிந்த இடத்தில் என்னை அல்லது அறிந்திலர் என்று சொன்னது எனக்கு இனியதாயிருந்தது,
அவர் பிரிவாலே தளர்கின்றார் என்று சொன்னபடியாலே வெறுப்பாய் இருந்தது என்றாளே அன்றோ.
அப்படியே, இவர்க்கும் பிரீதி அப்ரீதிகள் சமமாகச் செல்லுகின்றன.

திரு மங்கை ஆழ்வாரால் கடைசியில் பேசப்பெற்ற திவ்ய தேசம் –
சுந்தர பரி பூரணன் -நின்ற இருந்த கிடந்த நம்பிகள் திருக் கோலம் -ஆழ்வாராகவே திருவதரித்த எம்பெருமான் -அன்றோ –
நம் ஆழ்வார் விக்ரகம் தனியாக இங்கு இல்லை –
வைஷ்ணவ நம்பி -குருகியவன் -குறுங்குடி -நெடும் தகை -கரண்ட மாடு பொய்கை –உருவ வெளிப்பாடு -மானஸ பிரத்யஷம்
-3-3-/3-4/3-5- மூன்று காதல் தசைகள் -பேரமர் காதல் -பின் நின்ற காதல் கழிய மிக்கதோர் காதல்
நான்கு நாயகி பாவம் தொடர்ந்து -3/3 –3/4 –/3-5 தலைமகள் -3-6 தாயார் -அடுத்த நான்கும் நோற்ற நான்கு –
பிரத்யஷமாக தோற்றுவதே உருவ வெளிப்பாடு –ப்ரீதி அப்ரீதி -முனியே நான் முகனும் வரை மானஸ அனுபவம் தானே –
பூர்வ அனுபூத ரசத்தை மறந்து — ரசாந்தரமாகச் செல்லுவதே மானஸ அனுபவம் -பரத்வம் பஜநீயத்வம் இத்யாதி -பராங்குச பக்தி கடல் தழும்பி இருக்கும்
இக்கரை அக்கரை தொட்டு காவேரி போவது போலே நடுவிலும் உண்டே -எல்லா மநோ பாவமும் உண்டே பூர்த்தியாக
அனுபூத ரசம் அனுபவியா நிற்கச் செய்தே -ரசாந்தரம் தேடிச் செல்வதே உருவ வெளிப்பாடு –
வ்ருஷே வ்ருஷே -பயத்தாலே மாரீசன் -உருவ வெளிப்பாட்டால் பயந்தான் -இங்கு பிராவண்யத்தால் உருவ வெளிப்பாடு இவளுக்கு

—————————————————————————————————

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1-

நம்பி உடைய அசாதாராண சிஹ்னம் -ஆழ்வார்கள் உடனும் -பிரதான அவயவ சோபை -நெஞ்சு ஈடுபட்டது என்கிறாள்
எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!-நீங்கள் பிரியம் செய்யாதே -நல்லது கண்டு உகக்கும் என்னை
ஒ -உக்கப் பிராப்தமாய் இருக்க முனிவது எங்கனே ஒ
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-நாங்கள் குடிக்கு அசாதாராண பூதராக -கோல வடிவு அழகிய நம்பி
திவ்ய தேசத்துக்கும் அழகு என்றுமாம் -கல்யாண குண பரி பூர்ணர் -அனுபவித்த பின்பு
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்-பிராப்ய பூதர் என்பதற்கு அடையாளம் -விரோதி நிரசனம் நேமி -அனுபவம் கொடுக்க பாஞ்ச ஜன்யம்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.-அத்விதீயமான -திவ்ய அவயவங்களில் நெஞ்சு ஈடுபட்டதே

தாய்மார்களே! நீங்கள் என்னைக் கோவித்துக்கொள்வது எப்படி? நம்முடைய அழகிய திருக்குறுங்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை
நான் பார்த்த பிறகு, என்னுடைய நெஞ்சமானது, நம்பியின் திருக்கைகளிலே உள்ள சங்கோடும் சக்கரத்தோடும் தாமரை போன்ற திருக்கண்களோடும்
சிவந்த கோவைக்கனி போன்ற ஒப்பற்றதாயிருக்கிற திரு அதரத்தோடும் செல்கின்றது. நான் என் செய்வேன்?
நங்கள் என்பதில் ‘கள்’ அசைநிலை. “திங்களும் மறுவுமெனச் சேர்ந்தது, நங்கள் அன்பென நாட்டி வலிப்புறீஇ” என்றவிடத்து
‘நங்கள்:கள், அசை’ என்றார் நச்சினார்க்கினியர். (சிந். 1334.) நம்பி-பூர்ணன்.
இத்திருவாய்மொழி, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

திருக்கைகளில் ஆழ்வார்களோடே சேர்ந்த நம்பி திருமுகத்தின் அழகிலே, என் நெஞ்சமானது மிகவும் ஈடுபடாநின்றது என்கிறாள்.

அன்னைமீர்காள் முனிவது எங்ஙனேயோ –
ஹிதம் சொல்லத் தொடங்கினவாறே தந்தாமை மறக்குமித்தனையோ.–பிரான் இருந்தமை காட்டினீர் –
என்னை முனிவது எங்ஙனேயோ –
ஒன்றை நீக்குவதற்குப் பார்த்தால் அதனுடைய நிதானம் அறிந்து நீக்க வேண்டாவோ. என்றது,
என்னுடைய பிராவண்யத்தை நீக்குதற்குப் பார்த்தால், எனக்கு இவ்வளவான பிராவண்யத்தை விளைத்த
நம்பியுடைய அழகினை அறிந்து அதனை அன்றோ பொடிவது என்றபடி.
என்னை நீர் முனிவது எங்ஙனேயோ –
என்னுடைய நிலைக்கும் உங்களுடைய ஹிதவசனத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு.
நீர் என்னை முனிவது எங்ஙனேயோ –
நம்பியுடைய அழகினை அறிந்து அநுபவிக்கிற நீங்கள், அதிலே துவக்குண்டு இருக்கிற என்னை மீட்கப் பார்க்கிறபடி எங்ஙனேயோ?
அன்னை மீர்காள் நம்பியை நான் கண்டபின் –
இந்தக் குல தர்மத்துக்கு நான் ஏதேனும் தப்பநின்றது உண்டோ.
“பேராளன் பேரோதும் பெரியோரை”-பெரிய திருமொழி, 7. 4 : 4- என்றும்,
“எவரேலும் அவர்”-திருவாய்மொழி, 3. 7 : 1. என்றும் நீங்கள் சொல்லுகிற வார்த்தைகளைக்கேட்டு
வளர்ந்தவள் அன்றோ நான்.
தாம்தாம் செய்வனவற்றை வயிற்றிற் பிறந்தார் செய்தவாறே குற்றமாமித்தனையேயோ.
புத்திரர்களாகவுமாம், சிஷ்யர்களாகவுமாம், பகவத் விஷயத்தில் ஓர் அடி வர நின்றவர்கள் சிலாகிக்கத் தக்கவர்களத்தனை அன்றோ;
கூரத்தாழ்வார் ஓரளவிலே நங்கையார் திருவடி சார்ந்தவாறே, ‘இன்னமும் ஒரு விவாகம் செய்து கொள்வேமோ’ என்று ஆராய்ந்து,
‘இதுதான் கிரமத்திலே வந்து ஆழ்வானுக்கு விரோதமாகத் தலைக்கட்டும்;
இனித்தான் -ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்தோ வா வானப்பிரஸ்தோத பிக்ஷுக: அநாஸ்ரமீந திஷ்டேத்து தினம்ஏகம் அநாபதி”-சாமான்ய தர்மம்-
“பிரஹ்மசாரியாகவாவது இல்லறத்தானாகவாவது வானப்பிரஸ்தனாகவாவது சந்நியாசியாகவாவது ஒருவன் இருக்கவேண்டும்;
ஆபத்து இல்லாத சமயத்தில் ஒருநாள்கூட ஓர் ஆச்ரமத்திலும் சேராதவனாக இருக்கக் கூடாது” என்று சாஸ்திரம் சொல்லாநின்றது;
இந்தச் சாஸ்திரத்தின் அர்த்தத்தை அநுஷ்டிப்போமோ! பாகவத பரிசர்யையைச் செய்வோமோ! என்று ஆராய்ந்து,
‘அந்தச் சாமான்ய தர்மத்திற்காட்டில் இந்த விசேஷ தர்மமே பிரபலம்’ என்று அதனைத் தவிர்ந்தார்.

நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் –
கடகர் களான -உங்களை அறியாவிட்டால் அவ்விஷயத்தையும் அறியாது ஒழிய வேணுமோ என்கிறாள்.
இக்குடிக்கு -ஏக போகம் -முற்றூட்டுப் போலே காணும் நம்பியுடைய அழகு என்பாள்‘நங்கள் நம்பி’ என்கிறாள்.
சர்வேச்வரனை நோக்கிப் பல விரதங்களை நோற்றுப் பெற்றவர்களைப் போலன்றிக்கே, நம்பியை அடைந்தாயிற்று இவரைப் பெற்றது.
‘உடைய நங்கையார் நம்பியை அடைந்து ஆழ்வாரைத் திருவயிறு வாய்த்தார்’ என்பது பிரசித்தமே அன்றோ.
“நெடுங்காலமும் கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவி” அன்றோ பெற்றது.
‘கோலம்’ என்கிற இது, நகரத்துக்கு வேண்டும் அலங்காரங்களையுடைத்தாயிருக்கும் என்று, திருக்குறுங்குடிக்கு விசேடணம் ஆதல்;
அன்றிக்கே, நம்பியினுடைய அழகினைச் சொல்லுதல்.
தாம் அகப்படுவதற்கு வேண்டிய கல்யாண குணங்களால் நிறைவுற்று இருப்பவன் என்பாள் ‘நம்பியை’ என்கிறாள்.
அகப்படுத்துகைக்கு அழகு சீலம் முதலிய குணங்களால் அத்தலை குறைவற்றிருக்குமாறு போலே ஆயிற்று,
அகப்படுக்கைக்குரிய ஆசையால் இத்தலை குறைவற்றிருக்கிறபடி என்பாள் ‘நம்பியை நான்’ என்கிறாள்.
நீங்களும் நம்பியைக் கண்டன்றோ ஹிதம் சொல்லுகிறது என்பாள் ‘கண்ட’ என்கிறாள்.
காண்பதற்கு முன்னே மீட்டீர் அல்லீர்கோளே, இனி மீட்கப்போமோ? என்பாள் ‘கண்ட பின்’ என்கிறாள்.
தண்ணீர் போன பின்னர் அணையைக் கட்டுதல் அன்றோ நீங்கள் செய்கிறது என்றபடி.

மீட்கப் போகாதேபடி இப்போது வந்தது என்? என்ன, கை மேலே ஒரு முகத்தாலே தான் அகப்பட்டபடியைச் சொல்லுகிறாள் மேல்:
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே –
இதனால், நீங்கள் ஹிதம் சொல்லுவது நெஞ்சுடையார்க்கன்றோ என்கிறாள் என்றபடி.
சங்கினோடும் –
“செங்கமல நாண்மலர்மேல் தேன் நுகரும் அன்னம்போல்” என்கிறபடியே, கருநிறமான திருமேனிக்குப் பரபாகமான
வெளுத்த நிறத்தையுடைத்தான ஸ்ரீ பாஞ்சசன்யத்தோடும்,
நேமியோடும் –
இந்தக் கைக்கு இது ஆபரணமானால், வேறு ஒன்று வேண்டாதே தானே ஆபரணமாகப் போரும்படி இருக்கிற திருச்சக்கரத்தோடும்,
தாமரைக்கண்களோடும் –
மலர்ச்சி முதலியவைகளால் தாமரை போன்று இருக்கிற திருக்கண்களோடும்,– இதனால், கண் காணக் கைவிட்டுப் போயிற்றுக் காணும்.
செம்கனிவாய் –
கண்டபோது, நான் உன் சரக்கு அன்றோ, “தவாஸ்மி-உன்னுடையவன் ஆகிறேன்” என்ற முறுவலோடும்,
ஒன்றினோடும் –
சம்சார யாத்திரையை முக்தன் மறக்குமாறு போலே, இவ்வருகுண்டானவற்றோடு அவ்வருகுள்ளவற்றோடு வேற்றுமை அற
எல்லாவற்றையும் மறக்கும்படி செய்ய வல்லதான திரு அதரத்தோடும். -இதற்கு மட்டும் ஒன்றினோடு என்பதற்கு அர்த்தம் காட்டி அருளுகிறார் –
அன்றிக்கே, சாதி, பொருள்கள்தோறும் நிறைந்து இருக்குமாறு போலே, நெஞ்சு அழகுதோறும் சொல்லா நின்றது என்னுதல்.
சர்வேச்வரனோடு சாம்யம் பெற்றதாகிலும் தெரிகிறது இல்லை. அவன் எங்கும் பரந்திருக்கச் செய்தே ஆகாசத்தினது பரப்புப் போலன்றிக்கே
பொருள்கள் தோறும் நிறைந்து இருக்குமாறு போலே, இதுவும் அழகுகள் தோறும் நிறைந்து இராநின்றது.-உம்மைத் தொகை ஒவ் ஒன்றுக்கும் –
செல்கின்றது-
இன்னமும் தறை கண்டது இல்லை. நாங்களும் எல்லாம் நம்பியுடைய அழகினை அநுபவித்திருக்கிறோம் அன்றோ,
எங்கள் சொற்களை மறுக்கலாகாதுகாண்; என்ன, உங்கள் சொற்களை மறுத்தேனே யாகிலும் நம்பியுடைய திருமுகம் மறுக்க ஒண்ணாது என்கிறாள்.
எங்களுக்கு இப்படி இராமல் ஒழிவான் என்? என்ன,
என் நெஞ்சமே –
உங்களைப் போலன்றிக்கே, அவன் தானே காட்டப் பெறுகையாலே முழுக்க அநுபவித்த என் நெஞ்சமானது.

மீண்டும் இப்போதாக ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வர அருளிச் செய்கிறார்
எங்ஙனேயோ என்னை முனிவது நீர் –
பிராவண்யமே ஸ்வபாவமாம்படி வளர்த்து வைத்து, இப்போதாகப் பொடிகிறபடி எங்ஙனேயோ?
முன்பு நீங்கள் கற்பித்துப் போந்து, அது பயன்பட்டவாறே பொடியுமத்தனையோ?
கோலம்-
உங்கள் ஹித வசனத்துக்கும் மீளாதபடியான அழகு.
திருக்குறுங்குடி நம்பியை-
பரத்துவத்தில் முதன்மையிலேயோ அகப்பட்டது மீளுகைக்கு.
நம்பியை-
குணங்களில் நிறைவின்மை உண்டாய்த்தான் மீளுகிறதோ
நான் கண்டபின்-
இவ்விஷயத்தில் ஆசை இல்லாமல் மீளுகிறேனோ.
சங்கினோடும்-ஸ்ரீ பாஞ்ச சன்யத்தோடே விசேடித்து ஒரு சம்பந்தம் உண்டு காணும் இவளுக்கு;
திருவாயின் அமிர்த இனிமையை அறிந்திருக்கையாலே; ஒரு கலத்திலே ஜீவிப்பாரைப் போலே.

——————————————————————————————

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2-

நம்பியுடைய ஒப்பனை அழகையும் -திருத் தோள்களையும் -சர்வ தேசத்தில் வந்து நின்று அனுபவ விஷயங்கள் ஆனதே என்கிறார்
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே-என் கோணத்தில் பாருமின் -என்னை நியமித்து வார்த்தை சொல்லாமல்
பாவ உக்தமான என் நெஞ்சால் -அனுபவித்தாலும் குறி அழியாமல் இருக்கும் உங்கள் நெஞ்சு –
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-தெற்குத் திக்கில் -அவன் அருள் அடியாக நான் கண்ட பின்
-நீங்கள் உங்கள் பிரயத்தனத்தால் கண்டீர்கள்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்-வடிவுக்கு பரபாகமான -வர்ண கலாப திரு மேனி நின்ற நம்பி –
ப்ரஹ்ம வர்ச்சஸ் -இருபாடும் இலங்கும் மகர குண்டலங்கள்
கழற்றாத ஸ்ரீ வத்சம் -கூரத் ஆழ்வான் -ஸ்ரீ வத்சம் அம்சம்
மூல பிரகிருதி பிரதிநிதி -அஸ்த்ர பூஷணம் –
மன்னு பூணும் நான்குதோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–கழற்றாத
ஆபரண வர்க்கமும் -நான்கு புருஷார்தங்களுக்கு நான்கு தோள்கள்
ஸ்வரூப வியாப்தி மட்டும் இல்லாமல் ரூபத்தாலும் வியாபித்து -நண்ணுவார் சிந்தையுள் -யோகி ஹிருத் த்யான கம்யன்

என்னை முனிந்துகொள்ளாமல் என் நெஞ்சினாலே அநுபவித்துக் காண்பீராக; தெற்குத் திக்கிலேயுள்ள சிறந்த சோலைகள் சூழ்ந்த திருக்குறுங்குடி
என்னும் திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை நான் பார்த்த பின்னர், மின்னுகின்ற பூணுநூலும் குண்டலங்களும் திருமார்பில்
எழுந்தருளியிருக்கின்ற பெரியபிராட்டியாரும் ஸ்ரீவத்சமும் நிலைபெற்ற ஆபரணங்களும் நான்கு திருத்தோள்களும் அங்கு அங்கே வந்து நிற்கின்றன.
நோக்கிக் காணீர்: நோக்கல் நோக்கம். அநுபவித்து அறிமின் என்பது பொருள். முனியாதே காணீர் என்க.
கண்டபின் எங்கும் நின்றிடும் என்க. திருமறு – அழகிய மறுவுமாம்.

நம்பியுடைய தோள் அழகும் ஆபரணங்களின் அழகும் எல்லாத் திக்குகளிலும் நின்று நலிகின்றன என்கிறாள்.

நாங்களும் நம்பியை அநுபவித்தே பெண் தன்மை கெடாமல் இருக்கின்றிலேமோ? என்ன,
என் நெஞ்சினால்நோக்கிக் காணீர் –
நீங்கள் என்னைப் பொடியாதே உங்களையே பொடிந்து கொள்ளும்படி,
என் நெஞ்சை இரவலாக வாங்கிப் பார்க்க வல்லீர்கோளே. என்றது, ‘இவளை யன்றோ நாம் இத்தனை சொல்லிற்று’ என்று
பின்னை உங்களை நீங்களே பொடிந்து கொள்வீர்கோள் என்றபடி.
என்னை முனியாதே –
முள்ளெயிறு ஏய்ந்தில கூழை முடிகொடா தெள்ளியள் என்பதோர் தேசிலள் என்செய்கேன்?
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கைதொழும் பிள்ளையைப் பிள்ளை என்றெண்ணப் பெறுவரே. – பெரிய திருமொழி, 8. 2: 9.
“கணபுரம் கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே’ என்னக் கூடியதாக இருக்க,
நம் வயிற்றிற் பிறந்த இதுவே காரணமாக, இவள் நின்றநிலை பாராமல் நாம் பொடிந்தோமித்தனை அன்றோ” என்று
பின்னையும் உங்களை நீங்களே பொடிந்து கொள்ளுவீர்கோள்.
‘என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்’ என்கையாலே உங்களுக்குப் பக்தி இல்லை என்கிறாள் என்றபடி.
ஆயின், பக்தியினால் அன்றிச் சாஸ்திரங்களின் அறிவைக்கொண்டு அவனை அறியப்போகாதோ? என்ன,
“பக்தியா சாஸ்திராத் வேத்மி ஜனார்த்தநம்– பாரதம் உத்யோக பர். 68:5-பக்தியுடன் சாஸ்திரத்தால் கண்ணனை அறிகிறேன்” என்கிறபடியே,
சஞ்சயனை நோக்கித் திருதராட்டிரன், நீயும் நானும் ஒருசேர சாஸ்திர வாசனைகள் செய்து போந்தோம்.
இங்ஙனமிருக்கவும், நான் உன்பக்கலிலே கேட்டு அறியவேண்டும்படி உனக்கு இவ்வர்த்தத்தில் தெளிவு உண்டானபடி எங்ஙனே? என்ன,
எனக்குள்ள வாசி கேளாய்,
மாயாம் ந சேவே –
நான் வஞ்சனைகள் செய்ய மாட்டேன். அரசனுக்கு ஒரு தாழ்ச்சியும் தனக்கு ஓர் உயர்வும் சொல்லுகிறான் ஆகையாலே,
பத்ரந்தே –
உனக்கு மங்களம் உண்டாகுக என்கின்றான்.
நவ்ரு தா தர்ம மாசரே-
நான் வீண் தர்மங்களை ஒருநாளும் செய்தறியேன்.
சுத்த பாவம் கத:-
நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப்பட்டிருப்பவன்.
பக்த்யா-
வரி அடைவே கற்று அவனை அறிந்தவன் அல்லேன், பக்தியோடு கூடிய சாஸ்திரத்தாலே அவனை அறிந்தவன்” என்றானே அன்றோ.
“வித்யா ராஜந் ந தே வித்யா மம வித்யா நஹீயதே
வித்யா ஹீந: தமோத்வஸ்த: நாபிஜாநாஸி கேஸவம்”-என்பது, பாரதம் உத்யோக பர். 68:2.
“திருதராட்டிரரே! உமது வித்யையானது வித்யை அன்று, என்னுடைய வித்யையானது அழயாதிருக்கின்றது,
வித்யை அற்றவரும் இருளில் தள்ளப்பட்டவருமான நீர் கேசவனை அறிய மாட்டீர்” என்று,-வணக்குடை தவ நெறி -பவ்யதயா-பக்தி
தங்கள் தங்களுக்கு என்னவும் ஒரு கைம் முதலுடையார்க்கு அவனை அறியப் போகாது என்றதே அன்றோ.
அப்படியே, நீங்களும் என் நெஞ்சினையுடையீராய்க் கொண்டு அறியப் பாருங்கோள் என்கிறாள்.-பக்தி சித்தாஞ்சனம்-

தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை –
நம்பியுடைய வடிவிற்கு ஆபரணம் போலே யாயிற்று ஊருக்குச் சோலை.
தெற்குத் திக்கிலேயுள்ள நன்றான சோலை என்னுதல்.
அன்றிக்கே, “தென்னன் கொண்டும்” என்னுமாறு போலே, பாண்டியனால் கொண்டாடப்படுகின்ற திருக்குறுங்குடி என்னுதல்.
“கொன்னவில் கூர்வேல் கோன்நெடு மாறன் தென்கூடற்கோன்
தென்னன் கொண்டாடும் தென் திரு மாலிருஞ் சோலையே”- என்பது, பெரியாழ்வார் திருமொழி. 4. 2 : 7.
நான் கண்ட பின் –
மின்னு நூலும் –
மேகத்தில் மின்னியது போன்றிருக்கின்ற திரு யஜ்ஞோபவீதமும்.
குண்டலமும்-
பரந்த மின் ஓரிடத்திலே சுழித்தாற் போலே இருக்கிற திருமகர குண்டலமும்.
மார்பில் திருமறுவும்-
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கிற ஸ்ரீவத்சமும்.
மன்னு பூணும் –
நாய்ச்சிமாரோடு கலக்கும் போதும் கழற்ற வேண்டாதபடி இருக்கிற ஆபரணங்களும். என்றது
மிகுந்த சுகத்தைக் கொடுக்கக்கூடியதாயிருத்தலைக் குறித்தபடி.
நான்கு தோளும்-
“ஸர்வபூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 3: 15.
“எல்லா ஆபரணங்கட்கும் அழகினைக் கொடுக்கக் கூடியதான” என்கிறபடியே, ஆபரணங்கட்கு ஆபரணமாய்க்
கல்பகதரு பணைத்தாற் போலே இருக்கிற திருத்தோள்கள் நான்கும்.
வந்து எங்கும் நின்றிடும் –
‘உங்கள் ஹிதவசனத்தின்படியே செய்ய வேணும்’ என்று நான் கடக்க நிற்கவும், அங்கேயும் பலவகையாக வாராநின்றன.
“வ்ருக்ஷே வ்ருக்ஷேச பஸ்யாமி சீர கிருஷ்ணாஜிநாம்பரம் க்ருஹீத தநுஷம் ராமம் பாஸ ஹஸ்தம் இவஅந்தகம்”
என்பது, ஸ்ரீராமா. ஆரண். 39 : 14. இராவணனைப் பார்த்து மாரீசன் கூறியது.
“மரவுரி, மான்தோல் இவற்றை உடுத்திருப்பவரும், வில்லைத் தரித்திருப்பவருமான ஸ்ரீ ராமபிரானை,
பாசக்கயிற்றைக் கையிலேயுடைய யமனைப்போன்று ஒவ்வொரு மரத்திலும் பார்க்கிறேன்” என்பது போலே,
உகப்பார்க்கும் உகவாதார்க்கும் பலம் ஒன்றாய்விட்டது. நான் எங்கே ஒதுங்குவேன், சொல்லிக் காணீர்கோள்.

———————————————————————

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–5-5-3-

இவ் வழகைக் காத்தூட்டும் -பஹிகா அந்தகா பிரகாசிக்கும் -போகாமல் நின்றிடும்
நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்-வியாபார சாமை இல்லாமல் ச்பதையாய் நிற்கும்
அறிவு அழியாமல் இருக்கும் -சிதிலை யாகா நிற்கும் -அடியிலே பரிதியிலே பிரவர்த்திப்பித்த அன்னையும் முனிந்தால்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-தம் த்ருஷ்ட்வா -சத்ரு ஹன்தாராம் -பார்த்தாராம் -வீர வேஷம் கண்டு உகக்கும் -சீதை போலே
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்-பஞ்ச ஆயுதங்களும் -கள் அழகர் இன்றும் சேவை இவற்றுடன் –
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே-ஒரு படிப்பட நின்று -நீங்காமல் –
நெஞ்சுக்கு உள்ளும் கண்ணுக்கும் -உள்ளும் புறமும் பிரகாசிக்கின்றனவே

செயல் அற்று நிற்பாள், பின் அறிவு கலங்குவாள், பின் வருந்துவாள் என்று தாய்மாராகிய நீங்களும் முனியாநின்றீர்கள்;
மலைகளைப்போன்று மாடங்கள் உயர்ந்து காணப்படுகின்ற திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்னர், வெற்றி பொருந்திய வில்லும்
தண்டமும் வாளும் சக்கரமும் சங்கமும் ஒருபடிப்பட நின்று கண்களுள் தோன்றி நீங்குகின்றன இல்லை;
நெஞ்சுக்குள்ளேயும் நீங்குகின்றன இல்லை. என் செய்வேன்?
என்று முனிதிர்: கண்டபின் கண்ணுள் நீங்கா, நெஞ்சுளும் நீங்கா என்க.

நம்பியுடைய திவ்விய ஆயுதங்களின் சேர்த்தி அழகு, உள்ளும் புறம்பும் ஒக்க எப்பொழுதும் தோன்றாநின்றது என்கிறாள்.

நின்றிடும் திசைக்கும் நையும் –
“சிந்நம்பிந்நம் ஸரை: தத்தம் ப்ரபக்நம் ஸஸ்த்ரபீடிதம் பலம் ராமேண தத்ருஸு: ந ராமம் ஸீக்ர கர்ரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.
“ஸ்ரீராமபிரானுடைய பாணங்களால் அரக்கர் சேனை அறுக்கப்பட்டதாகவும் பிளக்கப்பட்டதாகவும்
கொளுத்தப்பட்டதாகவும் முறியடிக்கப்பட்டதாகவும் கண்டார்கள்” என்கிறபடியே,
இராமபாணங்கள் ஒன்று செய்தது மற்றொன்று செய்யாதாப் போலே ஆயிற்று, நம்பியுடைய அழகுகளும்-சேர்த்தி அழகு முக பேதத்தாலே நையும்
ஒன்றுசெயல் அறுதலைப் பண்ணும், ஒன்று அறிவைக் குடிபோக்கும், ஒன்று அறிவைக்கொடுத்து வருந்தப் பண்ணும். செயல் அற்றவள் ஆகா நின்றாள்,
அறிவுகெடா நின்றாள், வருந்தா நின்றாள் என்று என் குற்றமாக நினைத்துப் பொடியா நின்றீர்கோள்.
அன்னையரும் முனிதிர் –
தெளிந்திருப்பார் தாம் பொடியப்பெற்றதோ. இவற்றிற்கெல்லாம் தாயாயிருக்கிற இப்படிச் செய்யக் கடவதோ.
தெளிவது கலங்குவதாய் இவை தாமே யாத்திரையாகப் போந்த நீங்களும் முனியா நின்றீர்கோள்.
“ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்றறியேன்”-பெரிய திரு. 10. 10 : 9. என்னுமவர்கள் அலரோ.
இது, பெண்பிள்ளை வார்த்தையானாலும், இங்கு, “அன்னையர்” என்றது,
அத்யவசாயநிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆகையாலே, அவர்களுக்கும்
தெளிவதும் கலங்குவதும் உண்டு ஆகையாலே, இங்குப் பிரமாணமாகக் குறை இல்லை.
யௌவனத்தில் நீங்கள் செய்து போந்தவற்றை அப்பருவத்தில் நான் செய்தவாறே குற்றமாயினவோ.
இந்தக் குடிக்காகப் பகவத் பிராவண்யமே யாத்திரைபோலே காணும்.
குன்றம் மாடம் திருக்குறுங்குடி-
மலைகளை நெருங்க வைத்தாற் போலே இருக்கிற மாடங்களையுடைத்தான திருக்குறுங்குடி.
நான் கண்ட பின் –
ஆயுதம் பிடித்த பிடியில் வாசி அறியும் நான் கண்ட பின். வீரபத்தினி ஆகையாலே வாசி அறிவாளே அன்றோ!
பெருமாளுக்கு வில் எடுத்துக் கொடுப்பவள் பிராட்டி அன்றோ.
பெருமாள் ‘வில்லைத் தா’ என்ன, கொடுத்து, அவர் கையும் வில்லுமாய் நின்ற நிலையைக் கண்டவாறே,
‘நீர் இப்படி வில்லைத் தரித்தவராய்த் திரியப் புக்கால் உம்மை இருடிகள் வந்து சரணம் புகுவார்கள்;
அவர்களுக்குப் பகைவர்களான இராக்கதர்களோடு எதிரிட வேண்டிவரும்; அது பின்னை சாதிப் பகையாம்,
பின்னை நீரும் நானும் இரண்டு இடத்திலே இருக்க வேண்டிவரும்.
ஆன பின்னர், வில்லைப் பொகட்டுத் தாபத வேடத்தோடே திரிய அமையும்’ என்றாளே அன்றோ.
பெருமாள்பக்கல் சாங்கமே -பஷ பாதம் -சார்ங்கம் -சாடு -அன்றோ இப்படிச் சொல்லுவித்தது.
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும் நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா –
திவ்விய ஆயுதங்களுக்கு, ஆயுதங்கள் ஆபரணங்கள் என்னும் இரண்டு இடங்களிலும் மெய்க்காட்டு உண்டு காணும்.
போர்த் தலையில் ஆயிற்று ஆயுதம் என்று அறியலாவது.
“இந்திரன் வில்லுக்கு ஒப்பானவையும் பகைவர்களைக் கொல்லக்கூடியனவுமான விற்களைப் பிடித்துக்கொண்டு நிற்கின்ற நீங்கள்” என்கிறபடியே,
அநுகூலர் கண்டு ஜீவிக்கைக்கும், பகைவர்களுக்குப் பிடித்த பிடியிலே முடிகைக்கும் காரணமாக இருக்குமன்றோ.
வென்றி வில்லும்
உகப்பாரோடு உகவாதாரோடு வாசி அற வெற்றியே இயல்பாக இருக்கின்ற திரு வில்லும்.
தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்-
அந்த வில்லின் ஸ்வபாவத்தையுடைத்தான மற்றைய திவ்ய ஆயுதங்களும்.
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா-
கண்வட்டத்தை விடாதே நின்று தோன்றாநின்றன. இவை கண் முகப்பே நின்று நலியப் புக்கவாறே,
அஞ்சிக் கண்களைச் செம்பளித்தவாறே நெஞ்சுக்குள்ளே நின்று பிரகாசிக்கத் தொடங்கின.
நெஞ்சுள்ளும் நீங்கா –
மேலே “வந்து எங்கும் நின்றிடுமே” என்றாள்; இங்கு உள்ளும் புறம்பும் ஒக்க நலியா நின்றன என்கிறாள்.
இவற்றிற்கு வாசி என்? என்னில், நம்பியுடைய அழகுக்கு உள்ளன எல்லாம் உண்டாயிற்று இவளுக்கும்.
அவ்வழகு எங்கும் ஒக்க நலிகிறாப்போலே ஆயிற்று, இவளும் கட்கண்ணாலும் உட்கண்ணாலும் அநுபவிக்கிறபடியும்.
பக்தி பெருக்காலே இவள் வியாபகத்வம் –

——————————————————————————

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4-

சோனா வேஷம் -பூரி ஜகன்னாதர் -ஏகாதசி ஸ்வர்ண ஆபரணம் சாத்தி -சேவை -வறுமை வருஷம் முழுவதும் தாக்காதே
-32 வேஷங்கள் -5 நாள்களில் சாத்துவார்கள்
பரத்வ பிரகாசகம் -இவள் பக்கல் நிற்கின்றன
நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்-கண்ண நீர் பேராமல்-அன்னையரும் கோபிக்க
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-அவன் மேன்மை கண்டு உகக்கும் நான் -அனுபவித்த பொன்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்-அநு பாவ்யம் -செவ்வித் திருத் துழாய் -ஆதி ராஜ்ய ஸூசகம் ஸ்ப்ருஹநீயம் -திருமேனி
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே-திரு அரைக்குப் பாங்காய் -மேல் ஆபரணம் விடு நாண்-உள்ளே பிரகாசியா நிற்க
கிட்டி அனுபவிக்க பெறாமல் பாவி –

கண்களிலே தண்ணீர் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கின்றன என்று அன்னையரும் முனிகின்றீர்கள்;
தேனைக் கொண்டிருக்கின்ற சோலைகளால் சூழப்பட்ட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்,
அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையும் பொன் முடியும் திருமேனியும் அழகாகத் தோன்றுகிற பட்டாடையும்
அரைநாணும் பாவியேனாகிய என்னுடைய பக்கங்களிலேயே இருக்கின்றன.
நீர்கள் நில்லா என்க. பாங்கு – தகுதி. நாண் – அரை ஞாண்.

காத்தலுக்குக் கவித்தமுடியும், தனி மாலையும், பரிவட்டப் பண்பும் முதலானவை
பக்கங்களிலே நின்று என்னை நலியாநின்றன என்கிறாள்.

நீங்க நில்லா கண்ண நீர்கள் –
அவன் நீங்க, கண்களில் நீர் நீங்குகின்றது இல்லை.
அன்றிக்கே, நீங்க நில்லா பேரநில்லா என்னுதல்.
அன்றிக்கே நீங்க நில்லா என்பதனை மெலித்தல் விகாரமாகக் கொண்டு நீக்க நிற்கின்றன இல்லை என்னுதல்.
நீக்க – நீங்க என வல்லொற்று மெல்லொற்றாகத் திரிந்தது.
அன்னையரும் முனிதிர்-
உங்கள் கண்கள் ஆனந்த பாஷ்பமும் பாய்ந்து அறியாவோ.
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி-
அந்தச் சோலையில் தேனை வற்றச் செய்யமாட்டீர்களோ நான் என் கண்ண நீரையும் மாற்ற.
இந்தக் கண்ண நீர்க்கு ஸஹ்யம் அவ்வூரில் இனிமை போலே காணும்.
நான் கண்ட பின்-
அவனுடைய ஸ்வாபாவிகமான மேன்மையை அறியும் நான் கண்டபின்.
பூந் தண் மாலைத் தண் துழாயும் –
இரண்டு உலகங்களுக்குமாக முதலியாக விட்ட, காட்சிக்கு இனிதாய்க் குளிர்ந்த செவ்வித் திருத்துழாய்த் தனி மாலையும்,
பொன்முடியும் –
இரண்டு உலகங்களும் தன்முடியிலே செல்லும்படி கவித்த திருமுடியும்.
வடிவும் –
அம்மாலைக்கும் முடிக்கும் இசைந்த வடிவும் – ‘இவனே மாலைக்கும் முடிக்கும் உரியான்’ என்று படி எடுத்துக் காட்டலாமே.
‘வடிவும்’ என்பதே!” என்று ஈடுபட்டவராய் இருப்பர் நஞ்சீயர் –
மூன்றுக்கும் உம்மைத் தொகை -இவற்றை உடைய வடிவு சொல்லாமல் -வடிவும் ஆபரண கோஷ்டியில் சேர்த்து அருளிச் செய்து உள்ளார் –
பாங்கு தோன்றும் பட்டும்-
திரு அரை பூத்தாற் போலே அங்குத்தைக்குப் பாங்காத் தோற்றுகிற திருப் பீதாம்பரமும்,
நாணும் –
விடு நாணும்,
பாவியேன் பக்கத்தவே-
அநுபவிக்கத் தருதல், உரு வெளிப்பாடாய்த் தோன்றாதே ஒழிதல் செய்யாத படியான மஹா பாவத்தைச் செய்தேன்.
அருகே நின்று பிரகாசித்துக் கொண்டு நின்றன; அநுபவ யோக்கியமாகப் பெறுகின்றன இல்லை.
அணைக்கத் தருதல், அகல நிற்றல் செய்கின்றன இல்லை.
புருஷோத்தமனுக்கு யஜ்ஞ்ஞாபவீதம் ஒரு நூல் மட்டும் தனியாக இருக்குமாம் -சில்ப சாஸ்திரம்

————————————————————————

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5-

நம்பி உடைய திரு முக -அவயவ சோபை ஆத்மகதமாக தோன்றுகிறது
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்-அவன் வரும் சம்பாவனை உள்ள பார்ச்வங்களை பார்த்து
-வரக் காணாமையாலே சிதிலை யாகா நிற்கும் -ச்நேஹம் பிறப்பித்த நீங்களும் கோபிக்க
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-பூர்த்திக்கு தகுதியான கீர்த்தியில் அகப்பட்ட நான் -அனுபவித்த பின்பு
தொக்க சோதித் தொண்டைவாயும் நீண்ட புருவங்களும்-திரண்ட –திரு வவதரமும்
தக்க தாமரைக்கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே-நீண்ட புருவங்களுக்குத் தக்க நீண்ட திருக் கண்கள் -ஆத்மா அளவுக்கு வந்தனவே

அவன் வருவதற்குரிய பக்கத்தையே நோக்கிக் கொண்டு நிற்பாள், வருந்துவாள் என்று அன்னையராகிய நீங்களும் முனியாநின்றீர்கள்;
தக்க கீர்த்தி நிறைந்த திருக்குறுங்குடியிலேயுள்ள நம்பியை நான் பார்த்தபிறகு, கோவைக்கனி போன்ற பிரகாசம் திரண்டிருக்கிற
திரு அதரமும் நீண்ட புருவங்களும் தக்கனவான தாமரை போன்ற திருக்கண்களும் பாவியேனாகிய என்னுடைய உயிரிடத்திலே தங்கி நலியாநின்றன.
ஆவியின்மேலன: என்பதில், மேல் என்பது, ஏழாம் வேற்றுமையுருபு. ஆவியினிடத்தன என்பது பொருள்.

ஒன்றற்கொன்று தகுதியான நம்பியுடைய திருமுகத்தில் அழகுகள் என் உயிர்நிலையிலே நலியாநின்றன என்கிறாள்.

பக்கம் நோக்கி நிற்கும் –
அவன் வருகைக்குச் சம்பாவனையுள்ள பக்கத்தைப் பார்த்துக்கொண்டு நிற்குமாயிற்று.
“ந ஏஷா பஸ்யதி ராக்ஷஸ்யோ நேமாந் புஷ்பபல த்ருமாந்
ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமம்ஏவ அநுபஸ்யதி”- என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 25.
“இந்தச் சீதை, அரக்கிமார்களையும் பார்ப்பது இல்லை, இந்தப் பூவும் பழமுமுள்ள மரங்களையும் பார்க்கிறது இல்லை,
ஒரே இடத்தில் நிறுத்திய மனத்தையுடையவளாய் இராமனையே நிச்சயமாகப் பார்க்கிறாள்.” என்றது,
அரக்கியர்களைப் பார்ப்பதோடு புஷ்பங்களையும்
நையும்-
அந்தத் திக்கில் வந்து தோற்றாமையாலே வருந்துவாள்.
என்று அன்னையரும் முனிதிர் –
“அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்”-என்பது, திருவாய். 3. 3 : 3.
செய்வித்தபடியை அறியும் நீங்களும் முனியா நின்றீர்கோள்
“பால்யாத் ப்ரப்ருதி ஸு ஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷமிவர்த்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ:”-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 27.
“இளமைப் பருவமே தொடங்கி சிநேகிதராய் இருந்தார்” என்னும்படி அன்றோ இவள் தன்படி.
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் –
சொன்னபடி எல்லாம் தகும்படி இருக்கிற கீர்த்தியையுடைய -செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்
தொக்க சோதித் தொண்டை வாயும் –
-“கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங்கொலோ அறியேன்?” -திருவாய். 7. 7 : 3. என்னுமாறு போன்று,
ஒளிப்பொருளே திரண்டாற் போலே இருக்கிற தொண்டை போன்ற திருவாயும்.
தொண்டை – கோவை. இதனை, அதரத்துக்கு ஒப்பாகச் சொல்லக் கடவதன்றோ.
நீண்ட புருவங்களும் –
உபமானம் அற்றதாய், தனக்கு ஓர் அவதி இல்லாமையாலே தன்னேற்றமே சொல்லும்படியிருக்கிற திருப்புருவங்களும்.
தக்க தாமரைக் கண்ணும் –
அதனுடைய நெடுமைக்கு எல்லை இல்லாதது போன்று அளவிட்டு அறிய முடியாததாய்,
அப்புருவங்களுக்குத் தகுதியாயிருக்கிற தாமரைக் கண்களும்.
பாவியேன் ஆவியின் மேலனவே-
உயிர் நிலையிலே நலியாநின்றன. அகவாயில் வெளிச்சிறப்பு அழகிது.
அப்படியே புறம்பேயும் தோற்றப் பெறுகிறது இல்லை என்பாள், தன்னைப் ‘பாவியேன்’ என்கிறாள்.

——————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: