பகவத் விஷயம் காலஷேபம்- 113- திருவாய்மொழி – -5-4–6….5-4-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–5-4-6-

அபி நிவேசமும் இரவும் நலியா நிற்க -ஸ்திரமான ரஷண உபகரணம் கொண்டவனும் வர வில்லையே -ஜீவனை யார் ரஷிப்பார்
பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்-பேரமர் காதல் 5-3–முன்பு -கழிய மிக்கதோர் காதல் -5-5-அடுத்து –
பிறப்பிடமான நெஞ்சையே அழிக்கின்றதே-
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்-இரவு கல்பம் பேரைப் பெற்று -வந்த வாழ்வு பார்த்தீர்களே
கண் மூடும் படி மறைக்க -பின்னும் முன்னும் விரோதி இப்படி ஆனபின்பு –
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்-ஆஸ்ரிதர் வினைகளை கடிய நித்ய சந்நிஹிதன் -ஆச்சர்ய குண சேஷ்டிதங்கள் -நம் போல்வாருக்கு சொத்து
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?-நிரந்தர துக்க அனுபவம் பண்ணி நின்றாலும் சளையாமல் -ஆத்மா வஸ்துவை யார் காப்பார்கள்
இந்த நித்ய வஸ்து என்றுமாம் -நித்யத்வமும் துக்கத்துக்கு ஹேதுவானதே-

விடாது பின்தொடர்ந்து நிற்கின்ற காதலாகிய நோயானது என் மனத்தினை மிகவும் வருத்தாநிற்கின்றது, இரவாகிய ஊழிக்காலமானது
முன்னே நின்று கண்களின் ஒளி மறையும்படி மூடிவிட்டது. நிலைத்து நிற்கின்ற சக்கரத்தையுடைய எம் மாயவனும் வருகின்றிலன்;
இந்த நிலையில் நிற்கின்ற நீண்ட உயிரை இவ்விடத்திலே காப்பவர்கள் யாவர்? என்கிறாள்.
இரா ஊழி முன்நின்று புதைய மூடிற்று என்க. இவ்விடத்து நீள் ஆவியைக் காப்பவர் ஆர்? என்க.

விரஹத் துன்பமும் செல்லா நிற்க,– இரவும் ஆய் — ரக்ஷகனானவனும் வாராது ஒழிந்தால் -முடியப் பெறாத உயிரைக் காப்பார் ஆர்? -என்கிறாள்.

பின் நின்ற காதல் நோய் –
புக்க இடம் புக்கு வடிம்பிட்டு நலிகிற காதல் நோயானது. இடைந்து ஒதுங்குகைக்கு ஒரு நிழல் இல்லாதபடி இருக்கை.
நெஞ்சம் பெரிது அடும் –
நெஞ்சினை மிகவும் நோவுபடுத்தா நின்றது.
நெருப்பானது சுருணையை வேகச் செய்து, பின்பே அன்றோ புறம்பே சென்று சுடுவது;
அப்படியே, தான் கிடக்கும் இடத்தை மிகவும் நலியா நின்றதாயிற்று
இரா ஊழி முன் நின்று கண் புதைய மூடிற்று –
காதல் நோயும் இரவாகிய கல்பமும் தம்மிலே சங்கேதித்துக்கொண்டு வந்தாற் போலே இராநின்றது.
‘நான் பின்னிட்டு வருகிறேன், நீ முன்னே தப்பாமல் சூழ்ந்துகொள்’ என்று வருவாரைப் போன்று வந்தன என்றபடி.
எதிரிகள் எளியரானால் அவர்கள் கைகளில் விற்களைப் பறிப்பது பரிகசிப்பதாய்க் கொண்டு பரிபவம் செய்வாரைப் போன்று
இத்தலையில் எளிமை கண்டு இரவாகிய ஊழி, முன்னே நின்று கண்களை மறையா நின்றது.
உட்கண்ணினைக் காதல் மறையா நின்றது, கட்கண்ணை இரவு மறைத்தது.
அறிகின்றதுமாய்ப் பிரகாசமுமாய் இருக்கின்ற கண் இந்திரியத்தை, அறியப்படுகின்ற பொருளான இருள் வந்து
மூடா நின்றது என்பாள் ‘கண் புதைய மூடிற்றால்’ என்கிறாள்.
அன்றிக்கே, இருளினை ஒத்த நிறத்தினையுடையவன் வந்து முன்னே நின்றாலும் காண ஒண்ணாதபடி
இரவாகிற ஊழி கண்களை மறையாநின்றது என்னலுமாம்.

மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்-
“எப்போதும் கைகழலா நேமியான்” என்கிறபடியே, அடியார்கட்குப் பகைவர்கள் உண்டான போதாக ஆயுதம் எடுக்கப் பார்த்திராமல்,
எப்போதும் ஒக்கக் கையிலே விடாதே கொண்டிருப்பவனாதலின், ‘மன் நின்ற சக்கரம்’ என்கிறது.
பிரகாசத்தையுடைய பொருளை இட்டு இருளை அழைக்க வல்ல ஆச்சரியத்தை உடையவனாதலின், ‘மாயவன்’ என்கிறது.
இதனால், போக்குகின்ற பொருளைக் கொண்டு, போக்கப்படுகின்ற பொருளை அழைக்குமவனுக்கு,
போக்குகின்ற பொருளைக் கொண்டு போக்கப்படுகின்ற பொருளைப் போக்குவிக்கத் தடை உண்டோ? என்பதனைத் தெரிவித்தபடி.
நிவர்த்தகம் சக்கரம் நிவர்த்தத்தை அந்தகாரம் அழிப்பவன்–பிரகாச த்ரவ்யம் -இருளை கூட்டி வந்ததே
இங்குச் சங்கல்பம் அழியவேண்டா; வருவதாக நினைக்க அமையும்.
அஜோபிஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபி ஸந் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”-என்பது, ஸ்ரீ கீதை. 4 : 6.
“என்னுடைய இச்சையினாலே அவதரிக்கிறேன்” என்கிறபடியே, வருவதாக நினைக்க அமையும் என்றபடி.
‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுக்கையும், பிரகாசத்தையுடைய பொருளை இட்டு இருளைப் போக்கக் கடவது என்கிற
மர்யாதையைக் குலைக்கையுமாகிற இவை வேண்டா, தான் வர அமையும்;
போக்குகின்ற பொருளின் தன்மையினாலே போகின்ற பொருள் தன்னடையே போகும்.
இவ்விடத்தே இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் – முடிய வேண்டுமளவிலே நூறே பிராயமாக இருக்கிற
இவ்வாத்மாவை முடித்து நோக்குவார் ஆர்?
“அச்சேத்ய: அயம் அதாஹ்ய: அயம் அக்லேத்ய: அஸோஷ்ய ஏவச நித்ய: ஸர்வகத: ஸ்தாணு: அசல: அயம் ஸநாதந:”-இது, ஸ்ரீ கீதை. 2 : 24.
“இவன் வெட்டத் தகாதவன், இவன் கொளுத்தத் தகாதவன், நினைக்கத் தகாதவன், வாட்டத் தகாதவன்” என்கிற வசனத்தைக்கொண்டு
நின்று வழக்குப் பேசா நின்றதாயிற்று ஆத்ம வஸ்து.
இதனை முடித்து நம்மை நோக்குவார் ஆர்? என்கிறது என்று இப்படி முறுகச் சொன்னது தன்னை,
இச்சொல்லுக்குக் கருத்துரையாக ஒரு தமிழ்ப் புலவன் இட்டு வைக்கிறான்
‘பிரிவிலும் முடியாத என் உயிர்ப் பகையை நீக்கி, என்னை நோக்குவார் ஆர்’ என்று.
இவ்விடத்தே-சர்வ ரக்ஷகனானவனும் உதவாத இந்த நிலையிலே இனி முடிந்து பிழைத்தலே அன்றோ சுகம்.

————————————————————————————

காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?–5-4-7-

தர்ச ஆங்கஷா ஜநகர்-தேவர்களை
காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்-ரஷகன் உதாவத இடந்தில்
கங்கு எல்லையாக அடர்ந்த இருள் -பனி -நுண்ணிய
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்-அதி தூரமான
கல்ப காலம் போலே நீண்ட இரவு
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்-ஆளுக்கு அற்ற ஸ்வ பாவம் -திவ்ய ஆயுதங்கள்
கோல -நீலா நன் நெடும் குன்றம் ஒப்பான் -பன்னெடும் சூரிய -சந்த்ரர் பிடித்து –
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?-அநிமிஷர்களை கூப்பிடுகிறார் -சஜாதீயர் என்று
அக்னி போலே தாஹத ஸ்வ பாவம் பிரபல பாபங்கள்
துக்கம் கண்டு இமைக்காமல் பார்த்து இருக்கும் தேவர்கள் –
எத்தை செய்வேன் -ரஷ்யம் தன்னையே ரஷிக்க முடியாதே –

இந்தச் சமயத்தில் காப்பவர்கள் யார்தாம்? செறிந்த இருளோடும் நுண்ணிய துளிகளோடும் நெடுமையினையே இயல்பாகவுடைய
ஊழிக்காலமாகிச் செல்கின்ற இந்த இரவுக்காலத்தில், பரிசுத்தமான தன்மையுடைய வெண்மை நிறம் பொருந்திய சங்கையும் சக்கரத்தையுமுடைய
என் தலைவன் தோன்றானால்; தீயின் தன்மையையுடைய கொடிய வினைகளைச் செய்த என்னுடைய தெய்வங்களே! நான் என் செய்வேன்? என்கிறாள்.
கங்கு – கரை. இருளோடும் பனித்துளியோடும் ஊழியாகச் செல்கின்ற கங்குல் என்க. தூ – பரிசுத்தம். தீ – நெருப்பு. பால – தன்மையையுடைய. பால் – தன்மை.

இரவுப்பொழுதாகிற யுகம் செல்லா நிற்க அவன் வந்து தோற்றாமையாலே, கண் மூடாதவர்கள் ஆகையாலே
உறங்காத தெய்வங்களைக் குறித்து, நான் என் செய்வேன்? என்கிறாள்.

இவ்விடத்துக் காப்பார் ஆர் –
எல்லாரையும் காக்கின்றவனானவன் காவாதிருக்க, இவ்வளவில் பாதகர் ஆனார் காக்கின்றவர் ஆகவோ.
பாதுகாக்கின்றவன் வரவு தாழ்த்தாலும் இப்புத்தி பிறவாதிருக்கக்கூடிய இவள் இப்போது ‘காப்பார் ஆர்’ என்று
இவ்வார்த்தை சொல்லும்படி காணும் இவளுக்குப் பிறந்த நிலை வேறுபாடு, -த்ருட விஸ்வாசம் –
ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபுரார்த்தந:
மாம் நயேத் யதி காகுஸ்த்த: தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
“சரைஸ்து ஸங்குலாம் கிருத்வாலங்காம் –
திருவடி, பிராட்டியைப் பார்த்து ‘பெருமாள்பக்கல் இனி எழுந்தருள அமையாதோ?’ என்ன,
இராக்ஷசர்கள் நெருங்கியிருக்கிற இதனை இராம சரம் நிறைவுற்றதாக்கிக்காண் நாம் போவது, வேற்று மனிதர் முகத்தில் விழித்துப் போகவோ?
பரபுரார்த்தந:-
அவரோடே பகைகொண்டு இதற்கு முன்னர் உய்ந்து போனதும் ஒரு படைவீடு உண்டோ?
மாம் நயேத் யதி –
‘நயாமி பரமாம் கதிம்-மேல்கதிக்குக் கொண்டு போகிறேன்’ என்கிறவர் இரண்டு வார்த்தை சொல்லுவரோ?
காகுஸ்த்த :-
இந்திரனுடைய பகைவர்களையும் போக்குங்குடியிலே பிறந்தவர் தம் காரியத்தில் சோர நிற்பரோ?
தத் தஸ்ய சத்ருசம் பவேத்-
அவர்க்குத் தகுதியாகவுள்ளவற்றைச் செய்து போக வேண்டிய நாம், நம்முடைய ஆற்றாமையை நீக்குவதற்காக அவர்க்கு நிறக் கேடானவற்றைச் செய்யவோ?”
‘இராமன் தேவியை ஓர் அரக்கன் பிரிக்க, அவள் சபித்துப் போனாள்’ என்னுதல்,
‘ஒரு குரங்கு மீட்டது’ என்னுதல் செய்கையாகிற இது, அவர் வில்வலிக்கு வசையாம் காண்;
அவர் வம்சத்துக்குக் கொத்தையாம் காண்;-வம்சம் -மூங்கில் –வில் -காகுஸ்தன் -சாடு – -வம்சி புல்லாங்குழல் – அவர் விஷயத்தில் இராவணன் செய்ததனை நாமும் செய்யவோ?
இராம தனத்தை ‘என்னது’ என்றாரோடு ஒப்பர்கள் ஆவரே அன்றோ அவருடைய காத்தலைத் தம் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமவர்கள்.

அல்லன் மாக்கள் இலங்கை யதாகுமோ எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினாற் சுடுவேன் அது தூயவன் வில்லினாற்றற்கு மாசு என்று வீசினேன்.

அன்றியும் பிறிதுள்ள தொன் றாரியன் வென்றி வெஞ்சிலை மாசுணும் வேறினி
நன்றி என்பதம் வஞ்சித்த நாய்களின் நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ.

வேறு முண்டுரை கேளது மெய்ம்மையோய்! ஏறு சேவகன் மேனி யல்லால் இடை
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் எனக் கூறு மிவ்வுருத் தீண்டுதல் கூடுமோ?- என்ற கம்பராமாயணச் செய்யுள்கள்

எவையேனும் அச்சத்திற்குக் காரணங்கள் உள ஆனாலும் அஞ்சாதே இருக்கக்கூடிய இவள் பிரிவாற்றாமைக்கு அஞ்சினபடியாலே அன்றோ
‘காப்பார் ஆர்’ என்ற இவ்வார்த்தை சொல்லியது.
“கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா வியாக்ரம் வா வனம் ஆஸ்ரிதா
நாஹாரயதி ஸந்த்ராஸம் பாஹூராமஸ்ய ஸம்ஸ்ரிதா”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 60 : 20.
“ஸ்ரீ ராமபிரானுடைய திருக்கைகளை அடைந்திருந்தாளாகையாலே யானைக்கூட்டங்களையும் சிங்கக்கூட்டங்களையும்
புலிக்கூட்டங்களையும் கண்டு அச்சத்தை அடையவில்லை;” ஸ்வரூபத்தோடு கூடியிருக்கின்ற பெண்தன்மை போயிற்று,
கணையத்துக்குள் இருப்பவர்கள் அச்சத்திற்குக் காரணமான பொருள்களைக் கண்டு அஞ்சமாட்டார்கள் என்றபடி.
யானைக்கூட்டங்கள் சிங்கக் கூட்டங்கள் அல்லவே அன்றோ இது.
காப்பார் ஆர் இவ்விடத்து-
‘காக்கப்படுகின்ற பொருள் இவை, காக்கின்றவன் அவன்’ என்று தெளிந்து அறுதியிட்டு,
‘அம்ம’ என்று அப்புத்தட்டி -வம்சம் -மூங்கில் –வில் -காகுஸ்தன் -சாடு – -வம்சி புல்லாங்குழல் -இருந்தவளே அன்றோ, இப்போது காப்பார் ஆர்’ என்கிறாள்;
பிறந்த ஆற்றாமையின் மிகுதியாலே. அவனுடைய சர்வ ரக்ஷகத்வம் ஓர் அச்சாய் அன்றோ இருப்பது.
இவர் அல்லிலே கிடந்து நோவு படுகிறாரே அன்றோ. அவன் உண்டாயிருக்க, முதலிலே ஒருவர்க்கும் வருத்தம் இல்லையே அன்றோ.

அவ ரஷணே தாது அச்சு எழுத்து அகாரம்
அல் ஹல்லில் எழுத்தில் மகாரம் -அல்லில் இரவில் -ரஷ்யத்வம் -ரஷ்யகத்வம் அறிந்து ஆனந்தப்படாமல் –
நிர்பரரராய் இருக்க வேண்டும் -மகார நினைத்து நோவு பட வேண்டுமோ
முதலிலே அவன் உண்டாய் இருக்க கிலேசம் இல்லை -அகாரம் முதலில்
‘ஓர் அச்சாய்’ என்றது, சிலேடை: அச்சிலே அந்தர்ப்பூதமான அகாரத்தாலே சொல்லப்படுகின்ற பொருளாய் என்பது நேர்பொருள்
ஏக ரூபமாய் என்பது வேறும் ஒரு பொருள். ‘அல்லிலே’ என்றதும், சிலேடை: ஹல்லான மகாரத்தால் சொல்லப்படுகின்ற ஆத்ம
ஸ்வரூபத்தை நினைத்து என்பது நேர்பொருள். இரவிலே என்பது வேறும் ஒருபொருள்.
ஆக, ‘ஓர் அச்சாயன்றோ’ என்று தொடங்கும் வாக்கியத்திற்கு, அகாரவாச்சியனான சர்வேச்வரனை நினைத்து, பாரம் அற்றவளாய் இருக்க
வேண்டியவளாக இருக்க, மகாரவாச்சியனான ஆத்மாவை அநுசந்தித்து, ‘நம்மை நாம் எங்கே காத்துக்கொள்ளப் போகிறோம்’ என்று
நோவுபடுகிறாள் என்பது கருத்து. அச்சு-உயிர். அல்-மெய்.
அம்ம,

ம காரம் இரண்டும் காட்டி –
பிரணவத்தில், அகாரத்திலே சொல்லுகிற அவனுடைய ரக்ஷகத்வத்தையும், மகாரத்தில் சொல்லுகிற தன்னுடைய ரக்ஷ்யத்வத்தையும் நினைத்து
அச்சம் அற்று இருக்குமவள் கண்டீர் கலங்கினாள் என்று சுவாப தேசத்திலே அருளிச்செய்கிறார் ‘காக்கப்படுகின்ற பொருள்கள்’ என்று தொடங்கி.
‘அம்ம’ என்பது, சிலேடை: அம்மா என்று மகிழ்ச்சியினால் சொல்லும் வார்த்தை என்றும், அகாரவாச்சியனான சர்வேச்வரனுக்கு மகாரவாச்சியனான
ஆத்மா காக்கப்படுகின்ற பொருள் என்றும் பொருளாம். அப்புத்தட்டி-துடை தட்டி என்றும், நினைத்து என்றும் பொருளாம்

கங்கு இருளில் –
எல்லையான இருள் என்னுதல்; தடித்த இருள் என்றபடி. கங்கு-எல்லை.
அன்றிக்கே, கங்குலில் இருள் என்னுதல்;
‘தச ராத்ரம், சப்த ராத்ரம்’ என்றால், பத்துநாள், ஏழுநாள் என்று நாள்களைக் காட்டுவது போன்று
இங்குக் ‘கங்குல்’ என்பதும் இரவாகிற காலத்தைக் காட்டுகிறது. இரவிடத்தில் என்பது பொருள்.
‘மருங்குல்’ என்பது ‘மருங்கு’ என வருமாறு போன்று, கங்குல் என்பது, கங்கு எனக் கடைக்குறைந்து வந்த விகாரம்.
நுண் துளியாய் –
நுண்ணிய துளியுமாய்.
சேண்பாலது ஊழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய் –
மிக்க நெடுமையை ஸ்வபாவமாக உடைத்தான கல்பமாய்க்கொண்டு செல்லுகிற இரவிடத்து.
தமிழர்க்கு அகத்தியரைப் போன்று இருப்பான் தமிழாசிரியன் ஒருவன்,
செல்கின்ற கங்குல் வாய் என்பதற்குச் செல்கின்ற நாளகத்து என்று உரை எழுதி வைத்தான்.
தூப் பால வெண்சங்கு சக்கரத்தன் தோன்றானால் –
இருளைப் போக்கும்போது சந்திர சூரியர்கள் சேர உதித்தாற்போன்று இருக்கின்ற திவ்விய ஆயுதங்களையுடையவன் வருகின்றிலன்.
அந்தச் சந்திர சூரியர்கள் வேணுங்காணும் இந்த இருளைப் போக்கும் போது.

“ஆங்கத் திகிரி சுடரென்றும் வெண்சங்கம் வானில் பகரும் மதி என்றும் பார்த்து” -மூன்றாந் திருவந். 67.-என்று சொல்லக் கடவதன்றோ.
பண்டே இவள் கைகண்டு வைத்தமையன்றோ இவைதாம்.
இருளோடே சீறுபாறு என்று போக்குவான் ஒருவனும், இருளோடே கண்கலந்து நின்று போக்குவான் ஒருவனுமாயிற்று.
தூய்மையை ஸ்வபாவமாகவுடைத்தான வெண்சங்கு ஆதலின் ‘தூப்பால வெண்சங்கு’ என்கிறாள்.
அன்றிக்கே, பால் என்பது, இடமாய், குறைவற்ற இடத்தை யுடைத்தான வெண்சங்கு என்னுதல்;
“பெரு முழக்கு” என்றும், “நன்றாக நிரம்பின மத்தியினின்றும் வெளிக்கிளம்பின ஒலியையுடைய ஸ்ரீபாஞ்சசன்னியம்” என்றும் சொல்லப்படுவது அன்றோ.
ஆயின், ‘தூய்மை’ என்ற சொல் குறைவறுதல் என்றபொருளைக் காட்டுமோ? எனின்,
‘அவன் இவ்வர்த்தத்தில் குறைவற்றவன்’ என்று சொல்ல வேண்டுவதனை ‘அவன் இவ்வர்த்தத்திலே தூயன்காண்’ என்று
வழங்கும் வழக்கு உண்டே அன்றோ. இலக்ஷணை இருக்கிறபடி.
அன்றிக்கே, தூய்மையாலும் வெண்மையாலும், வெளுப்பின் மிகுதியைச் சொல்லுகிறதாகவுமாம்;
அப்போது வேறுசொல் இடையில் வரலாகா. வந்திருப்பதனால், அவ்வாறு பொருள் கூறுதல் பொருத்தம் அன்று.

தீப் பால வல்வினையேன்-
தீய தன்மையையுடைத்தாய்ப் பேர்க்கப் பேராதபடி மிகுந்த பாவத்தைச் செய்த நான். என்றது,
காப்பாற்றுதலையே தனக்குச் சங்கல்பமாகக் கொண்டு, காப்பாற்றுதற்குச் சம்பந்தமுள்ளவனாய்,
அதற்காகவே கருவி பிடித்திருக்கிறவனுங் கூட உதவாதபடியான பாபம் என்றதனைத் தெரிவித்தபடி.
தெய்வங்காள் என் செய்கேனோ-
1-தெய்வங்களோடு இவளுக்கு ஓர் ஒப்புமை உண்டு; அவர்கள் பிறப்புத் தொடங்கியே உறங்காதவர்கள்;
இவளோ எனின், “உண்டோ கண்கள் துஞ்சுதல்” என்றிருப்பவள். அதற்குமேல் இப்போது இருளுக்கு அஞ்சியும் உறங்காள்.
2-தன் நிலையைக் கண்டு அதற்கு அவர்கள் உறங்காதே இருக்கிறார்களாகக் கொண்டு, அவர்களைத் தஞ்சமாக நினைத்துக் கேட்கிறாள்,
சிறை உறவு போன்று. தோழிமாருங்கூட உறங்கா நிற்கச் செய்தே அவர்கள் உறங்காதிருக்கையாலே,
அவர்களைக்காட்டிலும் இவர்களை அன்னிய உறவாக நினைத்துச் சொல்லுகிறாள்.
3-“ஆயும் அமருலகுந் துஞ்சிலும்” என்று தாய்மாரோடு ஒரு சேர எடுத்துப் பேசப்படுகிறதே அன்றோ தேவர்களையும்.
துன்பம் மிக்கால் ‘அம்மே! என் செய்வேன்’ என்றாற் போலே இருக்கிறது காணும்.

———————————————————————-

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–5-4-8-

ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் ஆயுதம் எடுத்து ரஷிக்கும் கண்ணனும் வாராமல் தென்றலும் சுட என் செய்வேன்
தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்-பிரவ்ருத்தி ஷமை அல்லாத நான் என் செய்வேன்
இரவு ஒன்றே ஏழு கல்பங்கள் போலே புத்தி பூர்வகமாக என் முன்னே நின்று -தெரிந்தே வந்து –
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்-கிரிசமாக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்-பகலை இரவாக்க நினைவு அறிந்து செய்து அருளும் சக்கரத் தாழ்வான்
எதிர்பார்க்காமல் எத்தை செய்ய நினைத்தாலும் செய்து தலைக் கட்ட வல்லவன் -விதேயமான
வந்தாலே இருள் போகும் -ஸ்வா பாவி-கை கொள்ளுதல் -நினைவு அறிந்து கார்யம் செய்தல்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே-தடவும் தென்றலும் சுடுகிறதே -தை மாச தென்றலும் அவன் திரு உள்ளம் அறிந்து சுடுகிறதே
நலிய வந்தாரைப் போலே தடவுகிற -குளிர்ந்த தென்றல் -வெவ்விய அக்னியைக் காட்டிலும் -போலே என்றுமாம் -சூடா நின்றது –

தெய்வங்களே! என்ன செய்வேன்? ஓர் இரவானது ஏழு ஊழிக்காலமாக நீண்டு மெய்யாகவே என்முன்னே வந்து நின்று என்னுடைய
உயிரை வருத்துகின்றது; கையிலே வந்திருக்கின்ற சக்கரத்தையுடைய என் கண்ணபிரானும் வருகின்றான் இலன்;
தடவுகின்ற குளிர்ந்த தென்றலானது கொடிய நெருப்பைக்காட்டிலும் கொடிதாக வருந்தாநின்றது.
இரவு மெலிவிக்கும் என்க. கைவருதல் – கையிலே வந்திருத்தல். அன்றிக்கே, அடக்கமான என்னலுமாம். தைவந்த-தை மாதத்தில் வந்த.
அன்றிக்கே, தடவுதலுமாம். சுடரில்: ஐந்தாம் வேற்றுமை உறழ்பொரு. ஒப்புப்பொருவுமாம்.

ஓர் இரவே பல யுகமாய் மிகவும் நலியாநின்றது, எம்பெருமானும் வருகின்றிலன், அதற்கு மேலே தென்றலும் நலியாநின்றது என்கிறாள்.

தெய்வங்காள் என் செய்கேன் –
மற்றும் உறங்காதிருப்பவர்கள் உளராகில் அன்றோ அவர்களைப் பார்த்துச் சொல்லலாவது.
ஓர் இரவு ஏழ் ஊழியாய் –
மேலே, ‘ஊழியாய்’ என்றது, இராத்திரி மாத்திரமேயாய் நின்று நலிந்தது என்னும்படி, இது பல கல்பமாக நலியாநின்றது.
சௌபரி, இன்பத்தை அனுபவிப்பதற்குப் பல வடிவுகள் கொண்டாற்போன்று, இதுவும் துன்புறுத்துவதற்குப் பல வடிவுகள் கொள்ளாநின்றது என்றபடி.
மெய் வந்து நின்று-
ஈச்வரன் கட்டின மர்யாதை குலைக்க ஒண்ணாமை வந்தது மாத்திரம் அன்றிக்கே, தனக்கே சீற்றமுடையாரைப் போலே
மெய்யே முன்னே வந்து நின்று. இராவணன் இடம் பார்த்து வந்தாற் போன்று,
விரகநிலை என்று அறிந்து நலியாநின்றது என்பாள் ‘வந்து நின்று’ என்கிறாள்.
எனது ஆவி மெலிவிக்கும் –
மோர்க்குழம்பு கொடுத்துத் தேற்றி விடு நகம் கட்டி நலிவாரைப் போன்று, ‘சென்றற்றது’ என்னும்படி இருக்கிற
என்னுடைய உயிரை உண்டாக்கி நலியாநின்றது. என்றது, போன உயிரை மீளக்கொடுத்து நலியா நின்றது என்றபடி.

கைவந்த சக்கரத்து-
இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல்தான் இருக்கிறானோ?
அழையாதிருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும் திருவாழியை யுடையவன்.
கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தை யுடையவன் என்றபடி.
“பாவஜ்ஞேந –
இளைய பெருமாள் பர்ணசாலை சமைக்கும்போது, இருடிகளுக்கு ஓலக்கம் கொடுத்திருக்குமிடம் செய்யும்படியும்,
அக்நிசாலை சமைக்குமிடமும், இவையே யன்றோ பெருமாள் அருளிச்செய்தது;
பிராட்டியும் தாமும் ஏகாந்தமாக இருப்பதற்குரிய இடத்தைச் சமைக்கும்படியை இவருடன் தாம் அருளிச்செய்யாரே,
அவை முழுதும் கருத்து அறிந்து செய்தாராயிற்று.
அவர் தூதுசெய் கண்கள் கொண்டு ஒன்று பேசினால், இவரும் செவி கண்ணாகக் கேட்டுச் சமைப்பாரித்தனை. -சஷூஸ் ச்ரவா கட்செவி –
கிருதஜ்ஞேந –
வருந்தி இவர் நினைவைப் பின்சென்ற மாத்திரம் அன்றிக்கே, அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பிள்ளை பெற்ற சக்கரவர்த்தி,
பெருமாளுக்குப் பொருந்துமிடம் பார்த்து மாளிகை சமைத்து முன்பு செய்து போந்த கட்டளைகள் அறிந்து, அப்படியே செய்தாராயிற்று.
தர்மஜ்ஞேந-
இதுதான் ‘தம்பியாய் இருந்து இப்படிச் செய்தார்’ என்று குணமாகை அன்றிக்கே, இது செய்யத்தக்கது’ என்று செய்தார்.
என்றது, உஜ்ஜீவனத்திற்குக் காரணமாகச் செய்ய வேண்டிய தர்மம் இது’ என்று செய்தார் என்றபடி.
த்வயா புத்ரேண-
போன ஐயர்க்கு நரகத்தைப் போக்குதற்குரிய புத்திரர் நீரே ஆவீர். என்றது,
‘நாம் உள்ளதனையும் இவருடைய ரக்ஷணம் இப்படிச் செல்லுகிறது, நமக்குப் பின்னர் இவர்க்கு
ரக்ஷகர் யார்? என் செய்யக் கடவது’ என்று இதுவே ஆயிற்று ஐயர்க்கு எப்போதும் நெஞ்சாறல்;
ஐயர் செய்யுமவற்றை நீர் செய்கையாலே அவர்க்குத் துக்கத்தைப் போக்கினவர் நீரே அன்றோ.
தர்மாத்மா-
ஐயரும் ஒருவரே! தாம் பரமதார்மிகர் கண்டீர்; தாம் இருந்த நாளும் நமக்கு வேண்டும் ரக்ஷணங்களைச் செய்து,
தாம்சென்ற பின்னரும் தண்ணீர்ப் பந்தலை வைப்பாரைப் போன்று உம்மை வைத்துப் போவதே!
ந ஸம்விருத்த: பிதா மம – நாம் ஐயரை இழந்தோம் அல்லோம், நீர் இழந்தீரானீரித்தனை அன்றோ.”

ஸ்ரீவீடுமரைத் தொடருகிறபோது கையிலே வந்திருந்ததே அன்றோ திருவாழி.
ஸ்ரீவீடுமர் நெடும்போது பொருதபடியால் அருச்சுனன் இளைத்தான், அவன் இளைத்தவாறே சர்வேச்வரன் தன் சூளுறவை மறந்தான்,
தேரில் நின்றும் குதித்துத் திருவாழியைக் கொண்டு தொடர்ந்தான், வந்து கொன்றருளீர் என்கிறான்.
“ஏஹி ஏஹி புல்லாம்புஜ பத்ர நேத்ர-என்றும் ஆணை மறுத்தாலும் சேதம் இல்லையே!
இச்சீறிச் சிவந்த கண்ணழகை அநுபவிக்கப்பெற்றால்,ப்ரஸஹ்ய-தேவர்க்கும் வீரத்துக்கும் தோலேன்,
என் கையில் ஆயுதத்தைப் போகடச் சொல்லித் தலையை அறுத்தருளீர்.
லோகநாத-
வீரத்துக்குத் தோலேனாகிலும் முதன்மைக்குத் தோற்பனே அன்றோ.
அன்றிக்கே, கைவந்த சக்கரத்து என்பதற்கு, அற விதேயமான சாதனத்தையுடையவன் என்னலுமாம்.
“ஸ்ரீ ராமபிரானுக்கு வலக்கை போன்றவர்” என்கிறபடியே, விதேயமாய்க் காரியம் செய்யும் சாதனத்தையுடையவர் என்றபடி.

என் கண்ணன்-
அடியார்கட்காகத் தன் சூளுறவையும் அழிய மாறுமவன் அலனோ.
அடியார்களுள் ஒருவர்க்குச் செய்தது எல்லார்க்குமாக இருக்குமே.
‘அடியார்கட்காகத் தன் சூளுறவை அழியமாறும்’ என்னுமிது தஞ்சமாக அன்றோ இவனைப் பற்றுகிறார் பற்றுவது.
தனக்கு என்னவும் நியதமாயிருப்பன சில உளவாகில் இவனைப் பற்றுவார்க்குப் பலம் இல்லை.
தை வந்த தண் தென்றல் –
குளிர்ந்த காலத்திலே வந்த குளிர்ந்த தென்றல் என்னுதல். தடவிக் கொண்டு வருகின்ற குளிர்ந்த தென்றல் என்னுதல்;
என்றது, கணவன் கைகளால் தன்னைத் தீண்டுவதனை நினைப்பூட்டுவதாய் இரா நின்றதாயிற்றுக் குளிர்ந்த தென்றல் என்றபடி.
“தான் சென்று மண்மகளைத் தைவந்தான்” என்ற இடத்துத் தைவருதல் என்பது, தடவுதல் என்ற பொருளதாதல் காண்க.
வெம் சுடரில் தான் அடுமே –
வெவ்விய சுடரைக்காட்டிலும் அடும் என்னுதல். சுடரைப் போன்று நலியாநின்றது என்னுதல்.
உலகத்திலே உள்ள நெருப்பைக்காட்டிலும் நரகாக்நிக்குள்ள வாசி போருமே அன்றோ,
நரக அக்நியைக்காட்டிலும் பிரிந்த சமயத்தில், அநுகூலமான பொருள்களுக்கு.

—————————————————————————

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

அதிசயித அந்தகாரம் -அழியா செல்வன் -புண்டரீகாஷன்
வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்-தடித்த செறிந்த இருள் -நுண்ணிய பனித்துளி -மூவரும் சேர்ந்து -இருள் குளிர் பனி தென்றல் –
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்-தனது தோற்ற அரவால் இருளைப் போக்கும் -அழகிய உத்துங்க தேர் தோன்ற வில்லையே
பெண் படும் துக்கம் பார்க்க சஹியாமல்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்-அதிசயித ஐஸ்வர்யா ஸூ சகம் -தாமரைக் கண்ணே செல்வம் -அழியாத ஐஸ்வர்யம்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.-மநோ துக்கம் யார் தீர்ப்பார் –

இந்த இரவானது, செறிந்த இருளோடும் நுண்ணிய துளிகளோடும் சேர்ந்து கொடிய நெருப்பினைக்காட்டிலும் மிக அதிகமாக எரித்து
வருத்தா நின்றது, அழகிய பிரகாசத்தையுடைய சூரியனது அழகிய பெரிய தேரும் தோன்றுகிறதில்லை;
சிவந்த பிரகாசம் பொருந்திய தாமரைபோன்ற கண்களையுடைய செல்வனும் வருகின்றான் இலன்;
நிலைபெற்று உருகிக்கொண்டிருக்கின்ற என்னுடைய மனத்துன்பத்தை நீக்குகின்றவர்கள் யார்? என்கிறாள்.
சுடரில்: ஐந்தாம் வேற்றுமை உறழ்பொரு. ஒப்புப் பொருளுமாம். தான் – இரவு. உருகுகின்றேன் – வினையாலணையும் பெயர்.

இரவும் நலியாநின்றது, சூரியோதயமும் ‘நமக்கு’ என்றவாறே வேண்டத்தக்கதாய் விட்டது,
காக்கின்றவனும் தோன்றுகின்றிலன், என் மனத்தின் துன்பத்தை இனிப் போக்குவார் யார்? என்கிறாள்.

வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளியாய் –
இராவணன் மாரீசனைத் துணையாகக் கொண்டு வந்து தோற்றினாற் போலே ஆயிற்று,
நுண்ணிய துளியோடே செறித்த இருள் வந்து தோன்றினபடி. இரண்டும் இன்பத்திற்கு ஏகாந்தமாய் இருப்பன அன்றோ,
முழுதிவ் வையகம் முறைகெட மறைதலும் முனிவனும் முனிவெய்தி
மழுவினால் மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய பேடையை அடங்க அம் சிறைகோலித்
தழுவு நள்ளிருள் தனிமையின் கடியதொர் கொடுவினை அறியேனே– பெரிய திருமொழி 8. 5 : 8.
“ஒழுகு நுண் பனி” என்கிறபடியே, கார்காலத்தில் கைக்குள்ளே அடங்க அணைக்க வேணும்.
இருள்தானே போகத்தை வளர்ப்பதே அன்றோ. அதற்குமேலே, வளர்ந்த இருளும்
நுண்ணிய பனியும், வெவ்விய சுடரிற் காட்டில் அடா நின்றது என்னுதல்.
வெவ்விய சுடர் போலே அடா நின்றது என்னுதல். இவற்றில் பிரதானம் யாது? என்னில், அது வேணுமோ,
‘பாதகங்கள் இரண்டு உண்டு’ என்ன அமையாதோ. இனி, இத்திருவாய்மொழியில் சொல்லுவது,
இரவின் துன்பமே அன்றோ; ஆன பின்னர், இருளுக்கே முதன்மை சொல்லிற்றாகக் கோடலும் அமையும்.
அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்-
தன்னுடைய தோற்றரவிலே துன்பங்களை எல்லாம் போக்குதலையுடைய அழகிய சுடர் பொருந்திய சூரியனும் வருகின்றிலன்.
இது, இளைய பெருமாள் அகல நின்றாற்போலே ஆயிற்று. பிரளயத்தில் சிறிது தூரம் எஞ்சி இருக்க நீந்தி
‘கரையைக் கிட்டினோமோ, கிட்டினோமோ!’ என்று பார்ப்பாரைப் போலே காணும்,
இரவு முழுவதும் நோவுபட்டு, ‘விடிந்ததோ, விடிந்ததோ, என்று பார்க்கிறபடி.

செம்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்-
சிவந்த சுடரையுடைய தாமரை போன்ற திருக்கண்களையுடைய செல்வத் திருமாலும் வருகின்றிலன்.
சூரியன் வந்தாலும் இருள் வருவதற்குச் சம்பாவனை உண்டே அன்றோ, மறையாத சூரியனும் வருகின்றிலன் என்னுதல்.
அந்தச் சூரியனுடைய பிரகாசமும் எல்லா இடங்களிலும் இராதே அன்றோ, உபய விபூதிகட்கும் பிரகாசத்தைச் செய்யுமவன் அன்றோ இவன்.
“பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன்”-இரண்டாம் திருவந். 81.-என்னக்கடவதன்றோ.
“தஸ்யயதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ”-என்பது, சாந்தோக்யம். 1 : 6.
“காலையில் சூரியனுடைய ஒளியால் மலர்ந்த தாமரைமலர் எவ்வண்ணம் இருக்குமோ அவ்வண்ணமே
அந்தப் பரப்பிரஹ்மமான ஸ்ரீமந் நாராயணனுடைய திருக்கண்களும்” என்கிறபடியே,
சூரிய மண்டலத்திலே எழுந்தருளியிருக்கிறவனும் வருகின்றிலன். என்றது,
சூரியனுடைய வரவுக்கு அருணோதயம் போலே இருப்பது ஒன்றே அன்றோ,
அந்தச் செல்வத் திருமாலுடைய வரவுக்குச் சூரியனுடைய தோற்றரவு என்றபடி.
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார் –
மனத்திலே உள்ள துன்ப இருளைப் போக்குவார் யார்? புற இருளைப் போக்குமவனன்றோ அந்தச் சூரியன்;
மனத்திலே உள்ள இருளானது வயிரம் பற்றின இடரே அன்றோ; அதனைப் போக்கும்போது நிலவனுமாய் அந்தரங்கமானவனுமே வேணுமே.
ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீதுபோய் வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்தென் நெஞ்சமே!
ஞானமாகி ஞாயிறாகி ஞால முற்றும் ஓர்எயிற்று ஏனமா யிடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே.- திருச்சந். 114.- என்னக் கடவதன்றோ.
ஞான ஸ்வரூபன் -இவனுக்கு ஞானம் கொடுத்து ஆந்தரமான அந்தகாரம் போக்குவானே –
நின்று உருகுகின்றேனே –
விலக்ஷண விஷயத்தில் உண்டான பிரிவானது, உருகிற்றாய் தர்மிலோபம் பிறக்கவும் ஒட்டாது, தரிக்கவும் ஒட்டாது,
முடிய உருகினபடியே நிற்குமித்தனை. ‘இன்னம் ஒருகால் காணலாமோ’ என்னும் நசை முடிய ஒட்டாது, அப்போதைய இழவு பிழைத்திருக்க ஒட்டாது.

————————————————————————————————————————

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10-

சொன்னால் போதும் -வருவான் வர மாட்டான் என்று –
இரவில் நான் ஈடுபடாமல் இருக்க பூமியை அனந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவன் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லாமல்
நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்-தன்னையே திருஷ்டாந்தம் -நெடு வானம் உருகி பனியாக கொட்ட –
தான் உருகி வெவ்வி -சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்-இரவு பொழுதில் -பனி துளி பெருக -கூடி இருக்கும் இரவு
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று-மகா பலி அபஹரித்த அன்று -உலகுக்கு உபகரித்த -இன்று நமக்கு வருவானோ
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.-ஒரு வார்த்தை ஒரு தடவை யாவது ஒரு வார்த்தை சொல்லக் கூடாதோ –

நின்று உருகுகின்றவளான என்னைப் போன்று, பரந்த ஆகாசமானது தேய்ந்து சென்று உருகி நுண்ணிய துளியாகிச் செல்கின்ற இந்த இரவிடத்து,
மஹாபலி பூமியைக் கவர்ந்த அக்காலத்தில் ஒரு தடவை பூலோகத்தைத் தன் திருவடிகளால் அளந்த உபகாரகன் வாரான் என்று
ஒரு வார்த்தையை ஒரு தடவை சொல்லாமல் இந்த உலகமானது உறங்காநிற்கும்; இது என்னே! என்கிறாள்.
வானம் சென்று உருகித் துளியாகிச் செல்கின்ற கங்குல் என்க. என்று ஒருகால் சொல்லாது உலகு உறங்கும் என்க.

இந்த இரவில் என்னுடைய துன்பத்தைக் கண்டுவைத்து அவன் திறமாக ஒரு வார்த்தை சொல்லாதே உலகமாக உறங்குவதே! என்கிறாள்.

நெடுவானம் சென்று உருகி நுண் துளியாய்ச் செல்கின்ற-
எல்லாப் பொருள்கட்கும் இடம் கொடுக்கின்ற பரப்பையுடைய ஆகாசமானது,
சென்றற்று நுண்ணிய துளியாய் இற்று விழாநின்றது. யாரைப் போன்று எனின்,
நின்று உருகுகின்றேனே போலே –
கண்கூடாகக் கண்டதனை அன்றோ உபமானமாகச் சொல்லுவது, ஆதலால்,தன்னையே சொல்லுகிறாள்.
“அப்ரமேயம் ஹி தத்தேஜ: யஸ்ய ஸா ஜநகாத்மஜா நத்வம் ஸமர்த: தாம் ஹர்த்தும் ராமசாபாஸ்ரயாம் வநே”-என்பது, ஸ்ரீராமா-ஆரண். 37 : 18.
“எவருக்கு, ஜனக குலத்தில் பிறந்த அந்தப் பிராட்டி மனைவியாக இருக்கின்றாளோ அந்தப் புருஷோத்தமனுடைய பராக்கிரமம்
அளவிட்டு அறிய முடியாததாக இருக்கிறது” என்கிறபடியே, பெரியவர்களுடைய பெருமையும் தன் சம்பந்தத்தாலேயாம்படி இருக்குமவளன்றோ.
‘திருமகள் கேள்வனாகையாலே சர்வாதிகன்’ என்னக் கடவதன்றோ.
மகா தத்வம் ஆகாசத்துக்கு அணு வான தன்னைச் சொல்லலாமோ என்னில்
சீதை தேஜஸ் அளவிட முடியாமல் என்றால் போலே பராங்குச நாயகி சொல்லலாமே என்றவாறு

கங்குல்வாய்-
இப்படிச் செல்லுகிற இரவிடத்து.
அன்று ஒருகால் வையம் அளந்தபிரான் வாரான் என்று சொல்லாது-
“பிரிவாற்றாமையிலும் பிழைத்திருத்தலுக்கு நிமித்தம் அவனுடைய அடிப்பாடு. என்றது,
வரையாதே எல்லாரையும் ஒருசேரக் காப்பாற்றியவன், தன்னாலே வந்த ஆற்றாமையைப் போக்காது இருப்பானா’ என்னுமதே அன்றோ
ஜீவித்திருக்கைக்குக் காரணம், அதுவும் அவனுக்கு, புழுக்குறியிட்டது எழுத்தானாற் போன்று எதுவோ ஒருகாலத்தில் வந்தது ஒன்று,
அது அவனுக்கு என்றைக்கும் உள்ளது ஒரு தன்மை அன்றுகாண்” என்று சொல்லுகிறார் இலர்.

மானத்து வண்டலுழ வோரெழுத்தின் வடிவுற்ற சீர் மானத்து வண்ட வினையாளராயினும் மால் வளர்வி
மானத்து வண்டலமாமரங்கம் வழி யாவரினும் மானத்து வண்டமர் தாரண்டராம் பதம் வாய்க்குமங்கே.-என்ற திவ்வியகவி திருவாக்கு

‘அன்று ஒருகால்’ என்றது, அன்று அங்ஙனே ஒருகால் செய்தானித்தனை,
அவனுக்கு எற்றைக்கும் நியதமாய் இருப்பது ஒரு தன்மை அன்றுகாண் என்கிறார் இலர்.
‘பிரான்’ என்னா நிற்கச்செய்தே அன்றோ ‘வாரான்’ என்கிறது. என்றது,
“உலக முழுதினையும் அளந்துகொண்ட உபகாரகன் அன்றோ என்று நினைக்கிறாயாகில், பெருக்காறு பெருகினாற்போலே
அது அங்ஙனே ஒருகால் செய்து போன இத்தனை, வாராமையே காண் ஸ்வபாவம்” என்கிறார் இலர் என்றபடி.
ஒன்று-‘வரும்’ என்ன வேண்டா, ‘வாரான்’ என்ன அமையும்.
‘இன்னம் வருவான்’ என்னும் நசைகொண்டு ஜீவிக்க இருப்பார்க்கே அன்றோ ‘வரும்’ என்றே சொல்ல வேண்டுவது.
‘வரும்’ என்னவுமாம், ‘வாரான்’ என்னவுமாம்.
ஒருகால் – ஒருகால் சொன்னால் பின்னையும் ஜீவிப்பார்க்கே அன்றோ இருகால் மட்டுச் சொல்ல வேண்டுவது.
‘அவன் இனி வாரான்’ என்று அறிந்த போதே மூச்சு அடங்குமே அன்றோ.

உன்னோடும் தோழமை கொள்ள வரக் கூவாய் -உலகு அளந்தான் வரக் கூவாய் -ஆண்டாள்
இங்கு வாரான் சொன்னாலும் -என்கிறாள் பராங்குச நாயகி –அன்று ஒருகால் வையம் அளந்தபிரான் வாரான் என்று ஒரு கால் சொல்லுவார் இல்லை
ரஷிக்கத் தான் அவன் வர வில்லை -சொல்லுவாரும் இல்லை –திரிவிக்ரமன் என்று சொல்லவும் மாட்டாமல் தூங்கி கொண்டு இருக்கிறார்கள்
அன்று ஒரு கால் -ஒரு தடவை -ஒரு திருவடியால் -வையம் அளந்தான் -இது நியத ஸ்வ பாவம் இல்லை-என்று சொல்லுவாரும் இல்லையே
பிரான் -லோகத்துக்கு உபகாரகன் -நானும் லோகத்தில் ஒருத்தி -பெருக்காறு போலே அது ஒரு கால் -நடந்து அளந்து காட்டிய சேஷ்டிதம்
-வாராமையே ஸ்வ பாவம் என்று சொல்லவும் ஆள் இல்லையே –
உலகு ஓ உறங்குமே –
“அன்னையரும் தோழியரும் துஞ்சுவர்” என்று எனக்கு ஆறுதல் சொல்லாமல்
அவனையும் வரச் சொல்லாமல் அனைவரும் உறங்க
உலகோ ஒ உறங்குமே
லோகத்தை அடைய இன்னார்
அன்னையர் தோழியர் முன்பு சொல்லி இங்கே உலகம் அனைத்தையும் கடிந்து கொள்கிறார்
ஒ -வையம் -அளந்த எம்பெருமான் வரவில்லையே

————————————————————————————————

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-

பரமபத பிராப்தி பலமாக அருளிச் செய்கிறார் –
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்-படுக்கை வாய்ப்புப் பெற்று -ஷீரார்ணவம் -ஜகத் ரஷணம் யோகம்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்-சம்ருத்தமான பொழில் –
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்-பண் ராகம் கிளர்ந்த விஞ்சின
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ-சரீர விச்லேஷம் பிறந்து -நிச்சயம் -அத்தேசம் புகுவார் –

உறங்குவான் போன்று யோகு செய்த பெருமானை, சிறந்த சோலைகளாற்சூழப்பட்ட திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே
அருளிச்செய்யப்பட்ட பண்ணோடு விளங்குகின்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்துப் பாசுரங்களால் இச்சரீரத்தைவிட்டு நீங்கி
அர்ச்சிராதி மார்க்கமாகச் சென்று பரமபதத்தில் சேராமல் இருப்பது எப்படி? என்கிறாள்.

இவர் பாசுரம் கேட்டார், இவர் தசையை அநுசந்தித்தார்-ஆகவே பிழையார்கள் என்கிறார்.
முடிந்தார் புகலிடம் அதுவாகையாலே சொன்ன இத்தனை.

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை –
அவன் வரவு தாழ்க்கையாலே ‘நம்மை மறந்து உறங்குகிறானோ’ என்று சொன்ன இத்தனை,
அவன் உறங்குகின்றிலன்; நம்மைக் காப்பதற்குரிய விதத்தைச் சிந்தனை செய்கிறானித்தனை.
“ஸ்ரீரங்கதாமநி. . . . . ஆர்த்ரயந் (த்வம்) விச்வத்ராண விமர்சன் ஸ்கலி தயா
நித்ராஸி ஜாகர்யயா” இது, ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், உத்தர சதகம், 75.
“உலகத்தை எல்லாம் காத்தல் வேண்டும் என்ற சிந்தனையோடு கூடின ஜாகரண ரூபமாகத் திருக்கண் வளர்ந்தருளுகின்றீர்” என்கிறபடியே,
வேறு ஒன்றிலும் நோக்கு இல்லாமல் நம்முடைய ரக்ஷண சிந்தனை செய்கிறானித்தனையல்லது,
மறந்து உறங்குகின்றானல்லன் என்பார் ‘உறங்குவான் போல்’ என்கிறார்.
மேல் உஜ்ஜீவிப்பிக்க இருக்கிற சர்வேச்வரன், இவ்வளவிலே தன்படிகளை நினைப்பித்தான்.
சிறந்த பொழில் குருகூர் –
சர்வேச்வரன் ரக்ஷண சிந்தை செய்துகொண்டு கண் வளர்ந்தருளுகிறபடியை நினைத்து இவர் தரித்தவாறே ஊரும் தரித்தது,
ஆதலின், ‘சிறந்த பொழில் குருகூர்’ என்கிறது.
“விஷயே தே மஹாராஜ ராமவ்யஸன கர்ஸதா: அபிவ்ருக்ஷா: பரிம்லாநா: ஸ்புஷ்பாங்குர கோரகா:”– , ஸ்ரீராமா. அயோத். 59 : 4.

“அகால பலிநோ வ்ருக்ஷா: ஸர்வே சாபி மதுஸ்ரவா: பவந்து மார்க்கே பகவந் அயோத்யாம் ப்ரதி கச்சத:”- ஸ்ரீராமா. யுத். 127 : 19.

அரி இனம் சென்ற சென்ற அடவி களனைத்தும் வானம் சொரி தரு பருவம் போன்று கிழங்கொடு கனிகாய் துன்றி
விரி புனன் செழிந்தேன் மிக்கு விளங்கென விளம்பு கென்றான் புரியுமா தவனு மஃதேயாகெனப் புகன்றிட்டானால்.-என்பது, கம்பராமாயணம்.

பிரிந்த விரஹதாபத்தால் “மரங்களும் ஸ்ரீ ராமபிரானுடைய பிரிவினாலே உண்டான சோகத்தால் பீடிக்கப்பட்டனவாகி,
மலர் அரும்பு இவைகளோடு கருகி உலர்ந்தன” என்றும்,
ஸ்ரீ ராமபிரானுடைய வரவு அணித்தாயினவாறே “வழியில் உள்ள எல்லா மரங்களும் காலமல்லாத காலத்திலும் பழங்களையுடையனவாகவும்
தேன்களைச் சிந்துகின்றனவாகவும் ஆயின” என்றும் சொல்லலாம்படி அன்றோ இருப்பது.
நிறம் கிளர்ந்த அந்தாதி –
பண்களிலே கிளர்ந்த அந்தாதி.
இப் பத்தால் இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ-
இப் பத்தையும் சொன்னவர்களுக்குப் பகவானைப் பிரிந்த விரகத்தாலே இவரைப் போன்று,
“பேர் என்னை மாயாதால்” என்று முடிவு தேட்டமாய் நோவுபடுமது வேண்டா;
இதனைச் சொன்னவர்கள் பிழையார்கள். இப் பாசுரங்களைக் கேட்டு பிழைக்க மாட்டாதவர்கள் புகும் தேசம் பரமபதம் ஆகையாலே
‘வைகுந்தம் சேராவாறு எங்ஙனயோ’ என்று சொன்ன இத்தனை இவ்விடம்.
இத் திருப்பாசுரத்தால் ஒரு பலம் சொல்லிற்றாகவும் வேணுமே அன்றோ, இது என் சொல்லிற்று? என்னில்,
பகவத் விஷயத்தில் மூழ்கினவர்களுடைய பாசுரம் கேட்டவர்களுக்குச், சரீரம் நீங்கிய பின்னர்,
அவர்கள் பேறாக நினைத்திருக்கும் தேசத்தின் சம்பந்தம் தப்பாது என்கை.
பகவானிடத்தில் ஈடுபாடுடையவர்களுடைய பாசுரம் கேட்டுப் பொறுக்கமாட்டாதே ஈடுபட்டு இந்தச் சரீரம் நீங்கப் பெற்
“நீள் இரவாய் நீண்டதால்”, “ஒண்சுடரோன் வாராது ஒளித்தான்” என்று இந்த உலகத்தில் இருந்து வருந்தாமல்
மறைதலில்லாத சூரியனும் மறைதலில்லாத பகலுமான தேசத்திலே புகப்பெறுவர் என்பார் ‘வைகுந்தம் சேராவாறு’ என்கிறார்.

————————————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தாம் சத் த்வரா
சகல இந்த்ரிய ஆச்சாதிக
அப்யதுதிதா –மோஹம் ரஜனி
வி சம்ஜ்ஞ்ஞாத்யந்தி
வேலாயதிகா
விரஹனீத்வம்
முநிஸ்து –

———————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஆபத் பந்துத்வ கீர்த்த்யா
யது குல சந்தாத்
தீர வீரத்வ கீர்த்த்யா
லோகானாம் விக்ரமாந்தாஞ்ச
ஆஸ்ரித துரித க்ருகே
அத்புத ஐஸ்வர்ய சேஷ்டிதை
சக்ராத்
கமலா நயனதா சஞ்சுதா
வாமனத்வாத்

———————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 44-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

ஊர நினைந்த மடலூரவும் ஒண்ணாத படி
கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல்
தீது செய்ய மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்கனயோ———–44-

—————————————————————————-

அவதாரிகை –

இதில்
இரவு நெடுமையாலே நோவுபடுகிற நாயகி
பாசுரத்தாலே பேசுகிறபடியை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
இது எங்கனே என்னில்
ஸ்வ பர ஸ்வரூபங்களை அந்யாகரித்து
வழி அல்லா வழியிலே இழிந்தும் அவனைப் பெற வேணும் என்னும்படி

முடுக வடியிடுகிற பிராப்ய த்வரையும் கலங்கி-அவன் பேற்றுக்குத் தான் த்வரிக்க வேண்டும் -நம் பேற்றுக்குத் த்வரிக்கக் கூடாதே
ஸ்வ யத்ன ரூபமான உபாயாந்தரங்களிலே மூழுகைக்கு
உறுப்பான தெளிவை அமுக்கி
கிளருகிற அஞ்ஞானம் ஆகிற வல்லிருளிலே போக்கிட
மற்றுத் தெகுடாடுகிற தம் தசையை
பிரிவாற்றாளாய் மடல் எடுக்கையில் உத்யோகித்த அளவிலே

தைவ யோகத்தாலே சூர்யன் அஸ்தமித்து மத்திய ராத்ரியாய்
சப்தாதிகளிலே நெஞ்சு பாலிபாயாமையாலே
விஸ்லேஷ வ்யசனம் ஒருமடை செய்ய காலமும் விடியாது ஒழிய
மடல் எடுக்கை போய் –முடிகை தேட்டமான அளவிலே
அதுவும் கிடையாமையால்
இப்படி இரவு நெடுமையால் ஈடுபட்டுப் பேசுகிற
பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
ஊரெல்லாம் துஞ்சி -யில் அர்த்தத்தை
ஊர நினைந்த மடல் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் என்கை –

———————————————————————————-

வியாக்யானம்–

ஊர நினைந்த மடலூரவும் –
குதிரியாய் மடலூர்த்தும் என்று
ஊர நினைந்த மடல் —

ஊரவும் ஒண்ணாத படி –
ஆதித்யனும் அஸ்தமித்து
பிரியம் சொல்லுவார்
ஹிதம் சொல்லுவார்
பழி சொல்லுவார்
எல்லாரும் உறங்குகையாலும்
இருள் வந்து மூடுகையாலும்
மடலூர்வதும் கூடாத படியாக –

கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல் தீது செய்ய –
அதுக்கு மேலே
அத்யந்த அந்தகாரத்தோடே
ராத்ரியானது
கூட்டுப்படையோடு கூடி நின்று
இட்ட அடி பேராமல்
தீது செய்ய -பொல்லாங்கை உண்டாக்க –
அதாவது
ராவண மாயைக்கு அஞ்சி
சீதாதா வேண்யுத் க்ரதநம் க்ருஹீத்வா –என்றும்
விஷய தாதா நஹி மேஸ்தி கச்சிச் ச சத்ரச்ய வரவேஸ் நிராஷசய -என்றும் சொல்லுகிறபடியே
ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள்ளிரவாய்
நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால் -என்றும்
மா விகாரமாயோர் வல்லிரவாய் நீண்டதால் -என்றும்
ஓயும் பொழுது இன்று ஊழியாய் நீண்டதால் -என்றும்
ஒண சுடரோன் வாராது ஒளித்தான் -என்றும்
முன்னிற்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் -என்றும்
கங்கிருளின் நுண் துளியாய் சேட்பால் அது ஊழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய் -என்றும்
ஓர் இரவேழு ஊழியாய் -என்றும்
வீங்கிருளின் உண்டுளியாய்-என்றும்
செல்கின்ற கங்குல் வாய் -என்றும் –
இப்படி தமஸ் உடன் கூடின ராத்திரி பேராமல் நின்று
துக்கத்தை யுண்டாக்க -என்றபடி

இப்படி ஆகையாலே –
மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர் ஓதுவது இங்கு எங்கனயோ -என்கிறார் –

மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர்-ஆவது –
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே -என்றும்
ஆவி காப்பார் இனி யார் -என்றும்
நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே –மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தேன் -என்றும்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் யார் என்னையே -என்றும்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே -என்றும்
இந்நின்ற நீளாவி காப்பார் யார் இவ்விடத்தே -என்றும்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ -என்றும்
எனதாவி மெலிவிக்கும் -என்றும்
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார் நின்று உருகுகின்றேனே -என்றும்
அருளிச் செய்தவை ஆயிற்று –
ஆழ்வார் திரு உள்ளத்திலே அனுவர்த்தித்த துக்கம்
அது தான் அவரே பேசி அல்லது அந்யருக்கு பேசி முடியாது இறே
அது தான் வாசோ மகோசரமாய் யாயிற்று இருப்பது
ஆகையால் பேசி முடியாததை
எங்கனே பேசுவது என்று
ஈடுபடுகிறார்
எங்கனயோ -என்று வார்த்தைப் பாடு ஆதல் –

————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: