பகவத் விஷயம் காலஷேபம் -112- திருவாய்மொழி – -5-4-1….5-4-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

நாடும் இரைக்கவே-யாம் மடல் ஊர்ந்தும்” என்று பெரியதொரு மனோவேக ரசமாய் அன்றோ மேலே சென்றது,
மடல் ஊரப் பெறுகைதான் அவனைப் பெறுவதைப் போன்று தேட்டமாம்படி பலக்குறைவு அதிகரித்தது;
இனித்தான், மடல் ஊரும்போது தன்னால் காதலிக்கப்பட்ட பொருளைப் படத்திலே எழுதவேணுமே,
அதற்கு நேரம் இல்லாதபடி “ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப” என்கிறபடியே, சூரியனை மறைத்தானாதல்,
இயல்பாகவே சூரியன் மறைந்ததாதல் செய்ய, அதனால் இராத்திரியாய், அதுதான் மாலை நேரம் அளவு அன்றிக்கே
சராசரங்கள் முற்றும் அடங்கிய நடு இரவாய், பழி சொல்லுவாரோடு, அநுகூலராய் ஹிதம் சொல்லி விலக்குவாரோடு வாசி அற,
எல்லாரும் ஒருசேர உறங்குகையாலே ஓர் உசாத் துணையும் இன்றிக்கே, இவ்வளவிலே, பிரளய ஆபத்திலே உதவும் தன்மையனுமாய்
எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான புருஷோத்தமனுடைய குணங்களை நினைக்க,
அவைதாம் பிரிவிலே நினைக்கையாலே மிகவும் ஆற்றாமைக்கு உறுப்பாய், சடையினால் தூக்கிட்டுக் கொள்ளுதல் முதலியவைகளிலே
ஒருப்பட்டவரைப் போன்று முடிந்து பிழைக்கவேண்டுமளவாய், அது தன்னைப் பெறுகை மடல் ஊரப் பெறுகையைப் போன்று தேட்டமாய்;
“விஷஸ்யதாதா-
இத்தனை நற்சரக்குத் தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ?
மே-
கிடைத்தால் தான் எனக்கு இது சம்பவிக்குமோ?
சஸ்த்ரஸ்ய வா-
விஷம் போன்று சிறிது போது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத்தான் தருவார் உண்டோ?
வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-
பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற் கொலைக்குச் சாதனமானதைத் தான் தருவார் உண்டோ?”

“ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம் விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி கஸ்சித் சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி
ராக்ஷஸஸ்ய” என்பது, ஸ்ரீராமா. சுந். 28 : 25.

வி்ஷஸ்ய தாதா –
விஷத்தையாவது கொடுப்பவர். ‘கிடைத்தால் தான்எனக்கு இது சம்பவிக்குமோ’ என்றது, உதாரர் இருந்தாலும் பாபியான
எனக்குத் தரமாட்டார் என்றபடி. அன்றி, எனக்குப் பலியாது என்னுதல்.
சஸ்த்ரஸ்ய வா –
ஆயுதத்தையாவது.
வேஸ்மநி ராக்ஷஸஸ்ய-
இராக்ஷசனுடைய வீட்டில்.
இப்படி முடிகை தேட்டமாம்பாடி இருக்கிற அளவிலே, ‘நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாகத்
திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தோம், உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சியுள்ளவராய் இருந்தோம்;
கிராமப் பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க;
அவன் சர்வ ரக்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சியுள்ளவனாகில், கிரமப் பிராப்தி பற்றாமல் பதறுகிறோமித்தனை,
நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று அவன் குண ஞானத்தாலே தரித்தாராகச் செல்லுகிறது இத்திருவாய்மொழி.

அனுபவ யோக்யமான காலம் -இரவில் -சந்நிஹிதமாக இருக்கச் செய்தேயும் -அவன் அசந்நிஹிதன் -பிரவ்ருத்திக்கு ஷமர் இல்லாமல்
அவசன்னராய் விளம்பம் அசஹ்யமாக ரஷிக்கும் அவன் குணங்களைச் சொல்லி கூப்பிடுகிறார் -ஆற்றாமையால் இரவு நெடுமைக்கு இரங்கி –
சூர்யன் இந்த பெண் ஆற்றாமையை பார்க்க முடியாதே என்று இருக்க –நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார்

———————————————————————————-

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.–5-4-1-

ஏக ராத்ரியாக -உலகம் எல்லாம் இருளாய் நீண்டதே -சர்வ ரஷகம் சர்வேஸ்வரன் ரஷிக்க வில்லை -இனி யார் ரஷகர் ஆவார்
பழி சொல்லும் அயலார் -ஹிதம் சொல்லும் தாய் -உசாத் துணை தோழிமார் -அனைவரும் முகம் பார்க்க முடியாமல்
ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்-செறிந்த சாரமான இருள்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால்-ஜலம் சர மீன் சப்தம் இல்லாமல் சலனம் இல்லாமல் -அலை அடங்கி தெளிந்து
அஹோராத்ரா விபாகம் அற்று –
பகரல்ல -திரு வேங்கடம் இரவு எல்லாம் பகல் ஆவது போலே
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்-பிரளய ஆபத்தில் ரஷித்த -வடிவு கொடுத்து ரஷிக்கிறான் ஆஸ்ரிதர்க்கு
இரண்டும் இல்லாமல் என்னை விட்டானே
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே-இனி ரஷகன் உதவாத பின்பு -அனுபவ விநாச்யம் இல்லாத வலிய
உறங்கும் ஊரரார் காக்கவோ
ஓர் இருள் விழுங்கின லோகம் காக்கவோ
ஜடம் ஜல தத்வம் காக்கவோ
பாதகமான தீர்க்க இரவு காக்கவோ
எல்லே -விஷாய ஸூ சசகம் தோழி விளிக்கிறாள் என்றுமாம்

ஊரிலேயுள்ள மக்கள் எல்லாரும் உறங்கி, உலகம் எல்லாம் செறிந்த இருளாகி, நீர் என்று பேர் பெற்றவை எல்லாம் தெளிந்து ஒரே நீண்ட
இரவாகி நீண்டு விட்டது; உலகங்கள் எல்லாவற்றையும் பிரளய காலத்தில் புசித்த நம் பாம்பணையான் வருகின்றான் இலன்;
தோழீ! வலிய வினைகளைச் செய்த என்னுடைய உயிரை இனிக்காப்பவர்கள் யார்? என்கிறாள்.
துஞ்சவும் இருளாகவும் தேறவும் இக்காலம் நீள் இரவாக நீண்டது என்க. துஞ்சுதல் – உறங்குதல்.
ஆல் – அசைநிலை. அன்றி, ஆகையாலே என்று பொருள் கோடலுமாம்.
இத்திருவாய்மொழி, தரவு கொச்சகக் கலிப்பா.

பிரளய ஆபத்திலே வந்து உதவினவன், என்னை விரஹ நோயாகிய பிரளயம் கோக்க, வந்து உதவாத பின்னர்,
இனி, நான் பிழைத்திருத்தல் என்பது ஒரு பொருள் உண்டோ? என்று தன் ஜீவனத்திலே நசை அறுகிறாள்.

ஊர் எல்லாம் துஞ்சி-
ஊரவர் கவ்வை தாரகமாக மடல் ஊர இருந்தோம், இனி யார் பழி தாரகமாக நாம் மடல் ஊர்வது என்கிறாள்.
சிலர் உறங்கச் சிலர் உணர்ந்திருக்கை அன்றிக்கே, எல்லோரும் ஒரு சேர உறங்கினார்கள்.
திருவடி செல்லுகிற கணத்திலே அரக்கியர்கள் முழுதும் உறங்கினாற் போன்று பழிசொல்லுவார் முழுதும் உறங்கினார்களாயிற்று.
அன்றிக்கே, இவள் பிறந்த ஊர் ஆகையாலே இவள் நிலையைக்கண்டு சோகித்து, கோரை சாய்ந்தாற் போன்று
எல்லோரும் ஒரு சேர உறங்கினபடியைச் சொல்லிற்று ஆகவுமாம். நாக பாசத்தால் கட்டுண்ட அன்று
ஒரு ஜாம்பவான், மஹாராஜர், திருவடி தொடக்கமானார் தாம் உணர்ந்திருந்தமை உண்டே அன்றோ;
இங்கு அங்ஙனம் ஒருவர் இலராயிற்று. ஆக, பழி சொல்லுவாரோடு ஹிதம் சொல்லுவாரோடு உசாத் துணையாவாரோடு வாசி அற,
எல்லோரும் ஒருசேர உறங்கினார்கள் என்கை. இதனால், என் சொல்லியவாறோ? எனின்,
பழி சொல்லி அலைப்பாருங்கூட இல்லாதபடி எல்லோரும் கூட உறங்குகையாலே, சிலருடன் உசாவிக் காலத்தைக் கழிக்க
ஒண்ணாதபடியான நிலை பிறந்தபடி சொல்லுகிறது. ஊர் எல்லாம் உறங்கிற்றாகில், புறம்பே யுள்ள உலகத்திலே சென்றாகிலும்
உசாத் துணையாவார் உளராகில் பார்த்தாலோ? என்னில்,
உலகு எல்லாம் நள் இருளாய் –
பிரளயம் கோத்தாற் போலே உலகமடைய இருளே ஆயிற்று. நள் என்று, நடுவாதல், செறிவாதல்; நடுவான இருள், செறிவான இருள் என்றபடி.
அன்றிக்கே, எல்லாப் பொருள்களினுடையவும் ஒலி அடங்கில் இராத்திரி தனக்கெனவே ஓர் ஒலி உண்டு; அதனைச் சொல்லுகிறதாதல்.
ஆக, கண்களுக்குப் புலப்படுவது ஒன்றும் இல்லாதபடி ஆயிற்று என்றபடி.

நீர் எல்லாம் தேறி-
தண்ணீரில் வசிக்கும் பிராணிகள் முழுதும் ஆழ இழிந்து, அங்குள்ள ஒலியும் அடங்கிற்று.
‘ஊர் எல்லாம் துஞ்சி’ என்கையாலே, சிலர் வார்த்தை கேட்டுப் போது போக்குமது இல்லை என்கை.
‘உலகெல்லாம் நள்ளிருளாய்’ என்கையாலே, கண்களுக்குப் புலப்படும் பொருள் ஒன்று இல்லாமையாலே
ஒன்றைக் கண்டு போது போக்குமது இல்லை என்கை. ‘நீர் எல்லாம் தேறி’ என்கையாலே, முதலிலே காதுக்கு விஷயம் இல்லை என்கை.
இவைதாம் மற்றைய இந்திரியங்களின் காரியங்கட்கும் உபலக்ஷணமாய் இருக்கின்றன.
பகலிலே ஆனால் இந்திரியங்கள் தனது தனது விஷயங்களிலே பல்லி பற்றுகையாலே ஆற்றாமை அரையாறு பட்டு இருக்கும்,
இராத்திரியில் எல்லா இந்திரியங்களுக்கும் பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்கு ஆகையாலே, ஆற்றாமை கரை புரண்டு இருக்கும்.
ஓர் நீள் இரவாய் நீண்டதால்-
பண்டும் இராத்திரி நெடுகாநிற்கச் செய்தே பகலும் இரவுமாக வருமே அன்றோ, இப்பொழுது பகல் விரவாத இரவு ஆயிற்று.
மனிதர்களுடைய இரவினைக் காட்டிலும் தேவர்களுடைய இரவு நீண்டிருக்குமானால் அதற்கு எல்லை உண்டு,
அங்ஙனமும் ஓர் எல்லை இல்லையாயிருந்தது என்பாள் ‘நீண்டதால்’ என்கிறாள்.
பார் எல்லாம் உண்ட-
பிரளய ஆபத்திலே இன்னார் இனியார் என்னாதே எல்லாரையும் ஒருசேரக் காப்பாற்றியவன்.
பிரளய ஆபத்தில் அகப்பட்டார் எல்லார்க்கும் உண்டான ஆபத்து இவள் ஒருத்திக்கும் அகப்பட்டார் எல்லார்க்கும் உண்டான
ஆபத்து இவள் ஒருத்திக்கும்உண்டு போலே காணும்; பிரளயத்தில் சிலர் மடல் எடுக்கப் புக்கு அதுவும் மாட்டாத நிலை உண்டாகி,
அன்று உதவி செய்தது. என்றது, தங்கள் தங்களால் போக்கிக் கொள்ள ஒண்ணாதபடியான ஆபத்து வந்தால் உதவுமவன் என்றபடி.
நம் பாம்பு அணையான் –
திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவன். என்றது, உகந்தார்க்கு உடம்பு கொடுக்குமவன் என்றபடி.
ஆக, சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்தியசூரிகள் படியும் இல்லையாயிற்று,
சம்சாரிகள் படியும் இல்லையாயிற்றே நமக்கு! என்கிறாள்.
நித்தியசூரிகளை நித்திய அநுபவம் செய்விக்கும்; சம்சாரிகளுக்கு விருப்பம் இல்லாதிருக்கவும் தான் அறிந்ததாக
ஆபத்தையுடையரானவாறே வந்து ஆபத்தைப் போக்குவான் தன்னுடைய சம்பந்தத்தாலே.
தன்னோடு கலந்து, கூப்பிடுகைக்கு வேண்டுவது கொடுத்தபடியாலே ‘நம்’ என்கிறாள்.

வாரானால் –
வயிற்றிலே வைத்துக் காக்க வேண்டா, உடம்போடே அணைய வேண்டா, வந்து முகம் காட்ட அமையுமே அன்றோ.
“த்ருஷ்ட ஏவஹி நஸ்ஸோகம் அபநேஷ்யதி ராகவ:
தமஸ் ஸர்வஸ்ய லோகஸ்ய சமுத்யந் இவ பாஸ்கர:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 83 : 9.
“உதிக்கின்ற சூரியன் ஆனவன், உலகம் எல்லாவற்றிலும் உள்ள இருளைப் போக்குவதைப் போன்று,
பெருமாள் பார்க்கப்பட்டவுடனேயே நமது வருத்தத்தைப் போக்குவார்” என்னக் கடவதன்றோ. இனி-இவ்வளவில்,
ஆவி காப்பார் ஆர் –
பிரளய ஆபத்தில் அகப்பட்டாரைப் போன்று ஆபத்தோடு கூடி இருக்கிற நான் காக்கவோ?
“எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ” என்கிறபடியே, ‘இவளுக்கு அவன் வேணும்’ என்று என் பேற்றுக்கு
எனக்கு முன்னே நோவுபடுகிற தோழி காக்கவோ, ஹிதம் சொல்லுகிற தாயார் காக்கவோ, பழி சொல்லுகிற ஊரார் காக்கவோ?
எல்லே –
என்ன ஆச்சரியம்! அன்றிக்கே, ‘எல்லே’ என்று தோழியை விளிக்கிறாள் ஆதல்.
மேலே, “அன்னையரும் தோழியரும்” என்று அவர்களும் உறங்கினார்கள் என்னாநிற்கச் செய்தேயும்,
தன் ஆபத்தே செப்பேடாக ‘இவ்வளவில் அவள் உணர்ந்திருக்கச் சம்பாவனை உண்டு’ என்று நினைத்து ‘எல்லே’ என்கிறாள்.
வல் வினையேன் –
எல்லாரையும் காப்பாற்றுகின்றவனுமாய், உடம்போடு அணைந்தாரைப் பிரியாதவனுமாய் இருக்கிற அவன் வந்து
உதவாதபடியாய் இருக்கிற மஹாபாவத்தைச் செய்தேன்.
வல்வினையேன் ஆவி-
பிரிவே காரணமாக நூறே பிராயமாயிருக்கிற என்னுடைய உயிரை.
‘பிரிவிற்குச் சளையாத இது இனி முடியப் புகுகிறதோ’ என்று இருக்கிறாள். ரக்ஷகனானவன் வந்திலன்,
எனக்கு முன்னே தோழி நோவுபட்டுக் கிடந்தாள், இனி வேண்டாதவர்கள் ரக்ஷகர் ஆகவோ.

——————————————————————————–

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2-

ஆபி ரூப்யம் பிரகாசிப்பித்தது -ஆஸ்ரித பவ்யனான கிருஷ்ணன் வர வில்லை -நெஞ்சே நீயும் விதயம் இல்லை -இனி பிராண ரஷகர் யார்
ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி-இருட்டு வளர -கடலை மண் விண் அனைத்தையும் மூடி
வியாப்ய பதார்த்தம் -தமஸ் -காரணம் வியாபகம் -கார்ய பதார்த்தம் இங்கே காரணங்களை மூட -ஆச்சர்யம்
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்-அவ்வளவும் நிற்காமல் மேலே மேலே மூட வளர்ந்து -ஜகத் அளவும் –
அநேகம் ஆதித்யர்களாலும் பதிக்க முடியாத இரவு -வலிமை -தமோ மய ராத்ரியேயாய்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்-கரு நெய்தல் பூ போன்ற நிறம் -நிறம் எனக்கு ஸ்வம் மான கண்ணன்
பவ்யனும் அபவ்யனுமாகும் படி செய்த பாபங்கள்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே-நீயும் கை விட்டாயே -கண்ணன் போலேவே -பாங்கு -பவ்யம் -உதவி
அநு கூலிக்க வில்லை -ரஷகன் -உசாத் துணை இருவரும் இல்லை

ஆழ்ந்த கடலையும் பூமியையும் ஆகாயத்தையும் மூடிக்கொண்டு பெரிய விகாரத்தையுடையதாய் ஒப்பற்ற வலிய இருள் மயமான இரவாயே நீண்டுவிட்டது;
நீலோற்பல மலர்போன்ற நிறத்தை யுடையவனாகிய என் கண்ணபிரானும் வருகின்றான் இலன்; பாவியேனாகிய என்னுடைய நெஞ்சமே!
நீயும் அநுகூலமாய் இருக்கின்றாய் இல்லை; ஆதலால், இனி என் உயிரைக் காப்பவர் யார்? என்கிறாள்.
காலம் மூடி விகாரமாகி இரவாய் நீண்டது என்க. வண்ணனாகிய கண்ணன் என்க.

இந்நிலையில் ஸ்ரீ கிருஷ்ணனும் வருகின்றிலன்; நெஞ்சமே! என்னுடைய சம்பந்தத்தாலே, நீயும்
அவனைப் போன்று பாங்கு அன்றிக்கே ஒழிந்தாய் என்கிறாள்.
இருள் அன்ன மா மேனி — சஜாதீயன் -கிருஷ்ணன் சொல்லுக்கு தானே கறுப்பு அர்த்தம் என்பதால் கண்ணன் சொல்லாமல் கிருஷ்ணன் என்கிறார் –

கண்ணனும் வாரான், நெஞ்சமே! நீயும் பாங்கு அல்லை ஆவி காப்பார் இனி யார் –
உதவுமவன் உதவிற்றிலன், நெஞ்சும் பாங்கு அன்றிக்கே ஒழிந்தது, இனி, காப்பவர் யார்?
ஆழ்கடல் மண் விண் மூடி –
அளவிட முடியாததான கடல், எல்லாப் பொருள்களுக்கும் இடம் கொடுக்கக் கூடியதான பூமி,
அந்தப் பூமிக்கும் இடம் கொடுக்கக்கூடியதான ஆகாசம் இவற்றை முழுதும் மறைத்து.
காரணப் பொருள்களைக் காரியப் பொருள்களிலே ஒன்று மறைத்தது.
மா விகாரமாய் –
பின்னரும் அவ்வளவில் முடிவு பெறுவதாய் இருக்கிறது இல்லை, மஹா விகாரத்தை யுடைத்தாய்ப் பரமபதத்தையும்
கணிசிக்கிறாப் போலே இரா நின்றது. விஸ்வரூபத்தைக் காட்டின சர்வசக்தி செய்வன எல்லாம் செய்யா நின்றது என்றபடி.
ஓர் வல் இரவாய்-
திருவாழியை இட்டுத் துண்டித்து உதவவரிலும் வர ஒண்ணாதபடி செறிந்திருக்கை.
இரவுக்கும் இருளுக்கும் வேற்றுமையை நினையாமையாலே, இருளை ‘இரவு’ என்கிறாள்.
நீண்டதால் –
ஒரு முடிவு காண ஒண்ணாது.
காவி சேர் வண்ணன் – “அலர்ந்த கருநெய்தல் இதழ் போன்ற நிறத்தையுடையவர்” என்கிறபடியான நிறத்தையுடையவன்.
என்றது, இருளோடு ஒரு கோவையான நிறம் என்றபடி.
“புல்லேந்தீவர பத்ராபம் சதுர்பாஹும் உதீக்ஷ்யதம் ஸ்ரீவத்ஸவக்ஷ ஸம்ஜாதம் துஷ்டாவ ஆநகதுந்துபி:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 8.
ஆநகதுந்துபி-வ ஸூ தேவர் –
இருள் அன்ன மா மேனி அன்றோ. கறுப்பு உடுத்து வருவாரைப் போன்று வரலாமே அன்றோ.
யானும்என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் வல்வினையைக் கானும் மலையும் புகக்கடிவான் – தானோர்
இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த அருளென்னும் தண்டால் அடித்து.–என்பது, பெரிய திருவந். 26
என் கண்ணன்-
கம்சன் காவலாக வைத்த தீயோர் கண்படாதபடி இருளிலே வந்து உதவினவன்.
நள்ளிருட்கண் வந்த எந்தை பெருமானாரே அன்றோ.
தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ நள்ளிருட்கண் வந்த எந்தை பெருமானார் மருவிநின்ற ஊர்போலும்
முந்தி வானம் மழைபொழியும் மூவாஉருவின் மறையாளர் அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார்வீதி அழுந்தூரே.-பெரிய திருமொழி.
வாரானால்-
கம்சன் போன்ற தாமசப் பிரகிருதிகளை அழிக்க வருமவன் தம்ஸ்ஸீதன்னையே அழிக்க வந்தால் ஆகாதோ?
“வந்தானாகில் அப்போதே விடியும் இவளுக்கு; பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன் என்பதன்றோ பெரியார் திருவாக்கு.
பாவியேன் நெஞ்சமே
-உனக்கும் அவனோடு ஒத்த சம்பந்தமே அன்றோ. அவன் உதவும் தன்மையன் அல்லாதவனாயன்றே உதவாது விட்டது,
என்னுடைய சம்பந்தமே அன்றோ. என் மார்விலே அணைக்கை அன்றோ அவன் உதவாது ஒழிகிறது, அது உனக்கும் ஒக்குமே அன்றோ.
நீயும் பாங்கு அல்லையே-
ஒரு தன்மையாலே ஒற்றுமை உண்டானால் வேறு ஒரு தன்மையாலே வேறுபாடு உண்டானால் ஆகாதோ?
ஸ்வந்திரனாய்ப் பரதந்திரனான அவனைப் போன்று ஆக வேணுமோ பாரதந்திரியமே ஸ்வரூபமான நீயும்.
அவனுக்குக் காதலனாம் தன்மை தவிர்ந்தது என்றால் ஸ்வாதந்திரியமே ஜீவிக்கும்; உனக்கு அங்ஙன் ஒன்று இல்லையே.
அவனுக்குக் காதலனாம் தன்மை தவிர்ந்தது -பாரதந்த்ர்யம் போகும் -நிபந்தனம் -இது ஸ்வரூபம் -ஸ்வாதந்திரியமே ஜீவிக்கும்;
இருவர் பவ்யராக இருந்தால், அவர்களிலே ஒருவன் பவ்யன் அன்றிக்கே ஒழியில் மற்றையவனும் பவ்யனாகாது ஒழிய வேணுமோ.
‘என் கண்ணனும் வாரானால்’, ‘என் நெஞ்சமே’ என்று -இருவர் பவ்யராக-இருப்பதால் -ஒரு சேரச் சொல்லலாய் இருக்கிறதே அன்றோ.
பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை சேவிப்பார் –

—————————————————————————————

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3-

அநிஷ்ட நிவர்த்த சீலன் சக்கரவர்த்தி திருமகன் -வர வில்லை -பராதீனை -முடியவும் பெற வில்லை –
நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்-சர்வ கார்யத்துக்கும் பிரதான காரணம் நெஞ்சு
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்-இதுவே கல்ப காலமாக நீண்டதே –
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்-ஆஸ்ரித விரோதிகளை சுட்டுப் பொகடும்-கடிய ஸ்ரீ சார்ங்கம் –
ககுஸ்த வம்சம் -இந்த்ரன் காளை மாடு -அதன் மேலே அமர்ந்து அசுரர்களை வென்றவன் –
பெயர் மட்டும் அப்படி போலே -பர உபகார சீலக் குடி -ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளை ரஷித்தான் -எனது பாபமே காரணம் -உதவாமைக்கு அடி
ஸ்வா தந்த்ரம் இல்லாத பெண் பிறவி -முடியவும் விரகு அறியேன்

நெஞ்சமே! நீயும் அநுகூலமாய் இருக்கின்றாய் இல்லை, நீண்ட இரவும் குறையும் காலமாயிராமல் கல்பமாக நீண்டுவிட்டது;
பகைவர்களை வருத்துகின்ற கொடிய வில்லையுடைய என் காகுத்தனும் வருகின்றான் இலன்;
வில்வினையேனாகிய யான் பெண்ணாகப் பிறந்ததனால் இறப்பதற்குரிய வகையை அறிகின்றிலேன் என்கிறாள்.
நெஞ்சமே பாங்கு அல்லை, இரவும் நீண்டது, காகுத்தன் வாரான், வல்வினையேன் பெண் பிறந்து மாயும் வகை அறியேன் என்க.
பிறந்து – பிறந்ததனால். காகுத்தன் – ஸ்ரீ ராமபிரான்; ககுத்தன் வமிசத்தில் பிறந்தவன்.

எல்லாத் துக்கங்களையும் போக்கும் தன்மையனான ஸ்ரீ ராமபிரானும் வருகின்றிலன்,
பரதந்திரப்பட்டவள் ஆகையாலே முடியவும் விரகு அறிகின்றிலேன் என்கிறாள்.

நெஞ்சமே! நீயும் பாங்கு அல்லை காண் –
கங்கையின் அக்கரையைச் சேர்ந்த அன்று, இளையபெருமாளைப் பார்த்து, ‘பிள்ளையாய், நீயும் படைவீடு ஏறப் போ’ என்றாரே அன்றோ
‘வனவாசம் இவரை ஒழியவும் தலைக்கட்டலாம் என்று மயங்கி;’ அப்படியே, இவரும் தம் திருவுள்ளத்தைப் பார்த்து,
‘நீயும் பாங்கல்லை காண்’ என்கிறார்.
மனஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ:பந்தாய விஷயாஸங்கி முக்த்யை நிர்விஷயம் மந:”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 28.
“இம்மை மறுமைகளுக்குக் காரணம் மனமே” என்கிறபடியே, நெஞ்சைக்கொண்டே அன்றோ எல்லாம் பெற இருக்கிறது,
அப்படி இருக்கச் செய்தேயும், இன்னாப்பாலே சொல்லுகிறார்.
நீள் இரவும் ஓயும்பொழுது இன்றி ஊழியாய் நீண்டது-
முதலிலே நெடிதான இரவானது, அதற்குமேலே, ஒரு முடிவு காண ஒண்ணாதபடி இராநின்றது. என்றது,
அடி காண ஒண்ணாதபடியுமாய், முடிவுக்கும் ஓர் எல்லை காண ஒண்ணாதபடி இரா நின்றது.
முடிவு காண ஒண்ணாதிருக்கச் செய்தேயும் அடியற்று இருப்பன உண்டே அன்றோ, இது அப்படி இருக்கிறது இல்லை.
பிரத்வம்சாபாவம் -முதலில் இருந்து பின்பு இல்லாமல் /பிராகபாவம் -முதலில் இல்லாமல் அப்புறம் /இது அடி முடி காணாமல் –
நின்றவிடத்தில் நின்றும் கால் வாங்கக் கூடிய தன்றிக்கே இருத்தலின் ‘ஓயும் பொழுதின்றி’ என்கிறாள்.
‘சாத்தன், கூத்தன்’ என்பது போன்று சில பெயர்களையுடையவர்களாய், அவர்கள் தாங்கள் ஜீவிக்கப் புக்கவாறே
சிறுபேர் தவிர்ந்து ‘சோழக்கோனார்’, ‘தொண்டைமானார்’ என்று பட்டப் பெயர் பெற்று வாழுமாறு போன்று,
இரவு என்ற பெயர் நீங்கிக் ‘கல்பம்’ என்னும் பெயரையுடைத்தாகா நின்றது என்பாள் ‘ஊழியாய்’ என்கிறாள்.
அது தனக்கும் ஓர் முடிவு உண்டே அன்றோ, அதுவும் இல்லையாயிற்று இதற்கு என்பாள் ‘நீண்டதால்’ என்கிறாள்.

காயும் கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால்-
ஒருத்தியுடைய நெடிதானே இரவைப் -சீதை உடைய வியசனம் – போக்குவதற்காக-வில்லை வளைத்துப் பிடித்த வில்வலியை யுடையவனும் வருகின்றிலன்.
பகைவர்கள்மேல் காயா நிற்பதாய், பகைவர் பக்கல் பெருமாள் கண் பார்க்கிலும் தான் கண் பாராத படியான வில் ஆதலின்
‘காயும் கடும் சிலை’ என்கிறாள். அவனது சாங்கம் என்னளவிற் கண்டிலேன்.-அன்பு -சார்ங்கம் -சாடு –
பிராட்டிக்கு உதவினதும் ‘தனக்கு உதவிற்று’ என்றிருக்கிறாளாதலின் ‘என் காகுத்தன்’ என்கிறாள்.
“தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்று இலேன் தஞ்சம் என்று நான் தஞ்சமாக நினைத்திருக்குமவனும் வருகின்றிலன்.
“சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்” என்கிறபடியே,
பிராட்டியுடைய விராதியைப் போக்கியது அவளுக்குக் காரியம் செய்தானாக நினைத்திருக்கை அன்றிக்கே,
தன் சினம் தீர்ந்தானாயிருக்குமவன்.-உம்மிடம் சினம் தீர்க்க வர வேண்டாமே யாரும் எதிர்க்க வில்லை –
மேலே, “கண்ணனும் வாரானால்” என்றாள்;
முடி சூடிய அரச புத்திரர் அல்லாதார் தாம் தவிருகிறார்கள், முடிசூடி நோக்கும் குடியிலே பிறந்தவனுக்கு வரத் தட்டு என்?
ககுஸ்த குலத்தில் பிறந்தவனும் வாராது ஒழிவதே! என்பாள் ‘காகுத்தன் வாரானால்’ என்கிறாள்.
அன்றிக்கே, பகைவர்கள் வரப் போர் செய்ய இருக்கை அன்றிக்கே, தானே எடுத்துவிட்டுச் சென்று
பொருமவனும் வருகின்றிலன் என்பாள் ‘காகுத்தன் வாரானால்’ என்கிறாள் என்னலுமாம்.
செற்றார் -திறல் அழிய -சென்று செருச் செய்யும் குற்றம் ஒன்றும் இல்லாத கோவலன் –தானே செல்பவன் அன்றோ இவன் –
“அபியாதா பிரஹர்தா ச ஸோநாநய விஸாரத:”-என்பது, ஸ்ரீராமா. அயோத், 1 : 29.
“அபியாதா – முன் செல்பவர்” – பகைவர்கள் வரப் பொர இருக்கை அன்றிக்கே, எடுத்துவிட்டுப் பொருகையும் தமக்கே பணியாயிருக்கும்.
“பிரஹர்த்தாச-அடிப்பவர்” –
தூசித்தலையில் நின்று, ‘முதல் வெட்டு யாரது’ என்றால், அதில் முற்பாடும் தம்மதாயிருக்கும்.
“சேநாநய விசாரத:-
சேனையை நடத்துவதில் சமர்த்தர்”-தாம் போகாமல், தூசியும் அணியும் பேரணியுமாக வகுத்துவிட்டால்,
இட அணி வல அணி பேர் அணி பின் அணி -ஒருசேர நின்று பொருவித்தாற் போலே வென்று மீளும்படி படைகோக்க வல்லவர்.
மாயும் வகை அறியேன்-
இவன் வாராமை அறிந்தால் இனி முடிந்துபோதல் அன்றோ சுகம், முடியும் விரகு அறிகின்றிலேன்.
வல்வினையேன்-முடிந்துபோதல் சுகமாய்த் தேட்டமானால் அதுவும் கிடையாதபடியான பாவத்தைச் செய்தேன். என்றது,
பாபமானது, அழிவிற்குக் காரணமாகை அன்றிக்கே ஜீவித்தற்குக் காரணம் ஆவதே! என்றபடி.
ஜீவிக்கை தேட்டமானபோது அரிதாம், முடிந்துபோதல் தேட்டமான போது அரிதாம்,
ஏதேனுமாக வேண்டாததைக் கொடுப்பது பாபமாமித்தனை அன்றோ.
புண்யம் தானே ஜீவன ஹேது -இங்கு பாபம் செய்து ஜீவிக்கிறேனே என்கிறாள் -வி நாசத்துக்கு ஹேதுவான –
பாபம் -அநிஷ்டம் நடத்திக் கொடுக்குமே -இவளுக்கு அநிஷ்டம் ஜீவனம் –அசஹ்யம் இப்பொழுது
பெண் பிறந்தே –
பரதந்திர ஜன்மத்திலே பிறந்தார்க்கு நினைத்தபோது முடியப்போமோ. பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பரதந்திரமான பிறவியிலே
பிறத்தற்குத் தகுதியான மஹாபாவத்தைச் செய்தேன்.
“நாஸாநாம் ஆகர: க்ரோத: ஆஸா பரிபவாகர:
வியாதீநாம் ஆகர: தோயம் பாபாநாம் ஆகர: ஸ்திரிய:”-என்பது, மஹாபாரதம்.
“பெண்கள் பாவங்களுக்குக் காரணமானவர்கள், பாவத்தால் வந்தவர்கள்” என்னக் கடவதன்றோ.
“ந ச அஸ்ய மாதா ந பிதா நச அந்ய: ஸ்நேஹாத் விஸஷ்டோஸ்தி மயா ஸமோ வா
தாவத் ஹி அஹம் தூத ஜிஜீவிஷேயம் யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 30.
“நசாஸ்ய மாதா” – பிராட்டி திருவடியைக் கண்ட பின்னர், பெருமாள் பக்கல் பிரணய ரோஷத்தாலே
‘இவன்அவர் வரவிட்ட ஆள்’ என்று சீறிச் சில வார்த்தைகள் அருளிச்செய்ய,
‘தேவரீர் எழுந்தருளி இருந்த இடம் அறியாமல் இருந்தாரித்தனை அல்லது அன்பின் திறத்தில் ஊற்றம் போராமையோ,
அறிந்த பின்பு இனித் தாழ்த்தாராகிலன்றோ குற்றமாவது’ என்று, அந்தச் சிவிட்கு ஆறும்படி சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து,
பின்னையுந்தான், ‘அவரைப் பிரிந்து பத்து மாதங்கள் ஆயினவே, இவ்வளவும் முடிந்து போகாமல் தரித்திருந்ததன்றோ தேவரும்’ என்பது
தனக்குக் கருத்து என்னுமிடம் தோற்ற இருந்தான் திருவடி;
அதுவோ உனக்கு நினைவு! வாராய், நாட்டார்க்கு, மாதா என்றும் பிதா என்றும் உடன் பிறந்தார் என்றும் பந்துக்கள் என்றும்
பல தலையாக இருக்கையாலே அன்பானது எங்கும் பாலி பாய்ந்திருக்கும்;
பெருமாள் அங்ஙன் அன்றிக்கே, எல்லார் பக்கல் செய்யும் அன்பையும் என்பக்கலிலே ஒரு மடையாகச் செய்து வைக்கையாலே,
எல்லாம் செய்தாலும், கடலை அணை செய்து பகைவர் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துத் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று வருகை தவிரார்;
தாபத்தாலே வருந்தினவன் விடாய்ப்பட்டுப் பந்தல் ஏற வரக்கொண்டு தண்ணீர்ச்சால் உருண்டு கிடந்தால் பிழையாதாமாறு போன்று,
அவர் இப்படி வரக்கொண்டு நான் இன்றிக்கே இருப்பேனாகில் பின்னை அவரைக் கிடையாது என்று,
அவருக்காக என்னை நோக்கிக் கொண்டிருந்தேன்; அவரைக் கண்ட பிற்றைநாள்-அநாதரித்து உபேஷித்தான் என்று அறிந்த பின்பு –
நான் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது என்றாளே அன்றோ.
“தூத” – முன்பு, “வாநர” என்பது போன்று சொல்லிப்போந்தவள், இப்போது அவர்பக்கல் உண்டான சிவிட்கு இவ்வளவும் ஏறிப் பாய்ந்து,
அவர் வரவிட வந்தவன் அன்றோ நீயும் என்றாளே அன்றோ–அவர் சம்பந்தம் சொல்லி தூத என்கிறாள்

வல் வினையேன் பெண் பிறந்தே மாயும் வகை அறியேன் –
தன் இச்சைக்கு வசப்பட்ட மரணமாம் போது ஆண் பிறந்த சக்கரவர்த்தி வீடுமன் முதலானோர்களாக வேணுமாகாதே:
ஞானமுடையவர்களாதல் சுவதந்திரர்களாதல் செய்ய வேணும். அறிவிலிகளான பெண் பிறந்தார்க்கு நினைத்தபடி முடியப் போமோ.

———————————————————————————————

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4-

அபேஷித்த பூமியை அளந்து கொண்ட ப்ரீதியாலே புதுக் கணித்த அவயவாதி சோபையாலே செருக்கனான -திரிவிக்ரமனும் வர வில்லையே
பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று ஒண் சுடரோன் வாரா தொளித்தான் –
அளவிட முடியாத சிந்தா ரோகம் -மநோ வியாதி –பரதந்த்ரைகள் மிருது ஸ்வ பாவம் -பெண் -துஸ் சஹமான துக்கம் காண மாட்டாமல் -சூரியன்
தர்ச நீயமான தேஜஸ் -ஈஸ்வரன் ஆஜ்ஞ்ஞைப் படி செய்ய வேண்டியவன் -ஆராய்ந்தாலும் அறிய ஒண்ணாத படி ஒழிந்தான்
இம் மண்ணளந்த-சுட்டுச் சொல் -இ -தனக்கே என்று கொண்ட ப்ரீதி –
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்-பரந்த திருக் கண்கள் -சிவந்த திருவாய் –
எம் போல்வாரையும் அனந்யார்ஹை ஆக்கி -இந்த அவயவ சோபையாலே அடிமை கொண்டவன்
ஏறு -ரிஷபம் போலே செருக்கி -மேணானிப்பு -சிங்கம் தேஜஸ் புலி கோபம் யானை பெருமிதம் –
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?-நினைவுக்கு பெரிய அவாங்மநோ கோசரமான -மநோ வியாதி யார் தவிர்ப்பார் –

பெண்ணாகப் பிறந்தவர்கள் அடைகின்ற பெரிய துன்பத்தைக் காண மாட்டேன் என்று சூரியன் வராமல் ஒளித்துக் கொண்டான்;
இந்த மூவுலகத்தைத் தன் திருவடியால் அளவிட்ட, பெரிய கண்களையும் சிவந்த வாயினையுமுடைய நம் கார் ஏறு வருகின்றானிலன்;
எண்ணுதற்கும் மிக்கதாயுள்ள மனத்தின் நோயை என்னைத் தீர்ப்பார் யார்? என்கிறாள்.
என்று ஒளித்தான் என்க. அளந்த காரேறு என்க. பசுவைப் பாலைக் கறந்தான் என்பது போன்று, நோயை என்னைத் தீர்ப்பார் யார் என
இரண்டு செயப்படுபொருள் வந்தது. அன்றி, என்னுடைய நோயைத் தீர்ப்பார் யார்? என வேற்றுமை மயக்கமாகக் கோடலுமாம்.

கண்டார்க்குப் பொறுக்க ஒண்ணாதபடி வியசனம் செல்லாநிற்க, வரையாதே காப்பாற்றும் ஸ்ரீ வாமநனும் வருகின்றிலன்;
என்னுடைய மனத்தின் துன்பத்தைப் போக்குவார் யார்? என்கிறாள்.-கண்டார் -ஒண் சுடர் ஆதித்யனும் –

பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று –
பரதந்திர ஜன்மம் ஆகையாலே முடிந்து போகவும் பெறாமல், மிருதுத் தன்மையை யுடையவர்களாகையால்
பிரிவும் பொறுக்க மாட்டாமல் இருக்கிற பெண்கள் அநுபவிக்கிற மஹா துக்கத்தைக் காண்கின்றிலேன் என்று.
சர்வ ரக்ஷகன் பொறுக்குமித்தனை போக்கிப் பாதுகாத்தலிலே ஏகதேசம் சேர்ந்தவர்களுக்குப் பொறுக்கப்போமோ?
புருஷோத்தமன் பொறுக்குமித்தனை போக்கிப் புருஷர்களால் பொறுக்கப் போமோ?
ஒண்சுடரோன் வாராது ஒளித்தான் –
தன் தோற்றரவிலே எல்லாக் கிலேசங்களும் போகும்படியான பிரகாசத்தையுடையவனும் வாராதே மறைந்தான்.
பீஷா அஸ்மாத் வாத: பவதே”-என்பது, தைத்திரீயகோபநிடதம். 8.
நெடுங்கடல் நிற்பதும் ஞாயிறு காய்வதும் நிற்றலுங் கால் ஒடுங்கி நடப்பதும் தண்கார் பொழிவதும் ஊழிதனில்
சுடுங்கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து அடுங்கன லாழி அரங்கேசர் தம்திரு ஆணையினே.- என்பது, திருவரங்கத்து மாலை.
“அந்தப் பரம்பொருளிடமிருந்து உண்டான ஆணைக்குப் பயந்து காற்றானது வீசுகிறது” என்கிறபடியே,
பகவானுடைய கட்டளையாலே முப்பது வட்டம் வரவேணுமேயன்றோ, அதுவும் செய்திலன் என்பாள் ‘வாராதே’ என்கிறாள்.
இங்ஙனமிருப்பவன் ‘ஈச்வரன் ஆணையை மறுத்தால் வேணுமாகில் தலையை அறுத்து வைக்குமித்தனை அன்றோ,
இக்கொடுமை என் கண்களால் காணப்போகாது’ என்று ஈசுவரபடர் தேடி வந்தாலும் காணாதபடி மறைந்தான் என்பாள் ‘ஒளித்தான்’ என்கிறாள்.
“ஒளியவன் விசும்பு இயங்கும் தேரும் போயிற்று” என்னக் கடவதன்றோ.
அன்றிக்கே, “சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான்”, –பெரிய திருமொழி, 8. 5 : 2
தாரின் ஆசையில் பரகால நாயகி நெஞ்சு போனதே -அங்கேயே -தாழ்ந்ததே –உசாவவும் துணை இல்லையே
“அந்தத் தூசியும் காணப்படவில்லை” என்பன போன்று,
வரவுக்கு அறிகுறியும் காண ஒண்ணாதபடி மறைந்தான் என்னுதல்.

இம் மண் அளந்த –
இந்தப் பூமிக்கு என்ன துயர் உண்டாக அளந்து கொண்டான்.
பூமிக்கு மஹாபலியால் உண்டான இடரினளவோ எனக்கு இரவால் உண்டான இடர்?
வரையாமல் எல்லாரையும் காக்குமவன். கண் பெரிய செவ்வாய் நம் கார் ஏறு வாரானால்-
கிருபையால் பெரியனாய்ப் பூமியை அளந்து, பூமியிலுள்ளார் இடர் போகும்படி குளிரக் கடாக்ஷித்து,
அதனால் உண்டான பிரீதியின் மிகுதி தோற்றப் புன்முறுவல் செய்கையாலே சிவந்த அதரத்தை உடையவனான நம் கார் ஏறு வருகின்றிலன்.
எல்லார் விஷயமாகச் செய்யும் ரக்ஷணத்தையே இயல்பாகவுடையவன் என்பாள் “நம்” என்கிறாள்
சர்வ ரக்ஷகனுடைய காக்கப்படும் பொருள்களில் தானும் சேர்ந்தவள் ஆகையாலே ‘நம்’ என்கிறாள் என்பது கருத்து.
இவற்றைக் காப்பாற்றுகையாலே தன் நிறம் பெற்றிருப்பவன் என்பாள் ‘கார்’ என்கிறாள்.
‘அது தன் பேறு’ என்னுமிடம் தோற்ற மேனாணித்திருப்பவனாதலின் ‘ஏறு’ என்கிறாள்.
இரக்க வேண்டா, அளக்க வேண்டா, வடிவைக் காட்ட அமையம் என்பாள், “வாரானால்” என்கிறாள்.
இனி, ‘என் கார் ஏறு’ என்று பாடமானபோது, பண்டு என்னோடே கலந்ததனாலே தன் நிறம்பெற்று மேனாணித்திருந்தவன் என்று பொருள் கூறுக.
எண் பெரிய சிந்தை நோய் –
“எவன் அறியாதவனாக எண்ணுகிறானோ அவன் அறிந்தவன், எவன் அறிந்தவனாக எண்ணுகிறானோ அவன் அறியாதவன்” என்கிறபடியே,
வேதாந்தங்கள், நிலம் அன்று என்று மீண்ட பகவத் விஷயத்தை, இத்தனை போதும் பேசினார்;
தம்முடைய சிந்தையின் வியாகுலம் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஞானத்துக்கும் அறிய முடியாததாயிருந்தது.
‘எண் பெரியது’ என்னுமித்தனை, ‘இவ்வளவு’ என்னப் போகாது. -எண்ணுவதற்கு அரியதான –
பிரிந்த விஷயத்துக்குத் தக்கதாய் அன்றோ சிந்தையின் வியாகுலம்தான் இருப்பது, அதற்கு ஒரு முடிவு இல்லையே.
“தச்சித்த விமலாஹ்லாத க்ஷீண புண்ய சயா ததா ததப்ராப்தி மஹாதுக்க விலீநா ஸேஷ பாதகா.”
“சிந்தயந்தீ ஜகத்ஸூதிம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம் நிருச்வாஸதயா முக்திம் கதா அந்யா கோபகந்யகா.”-என்பன, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 21-22.
“கண்ணனை அடையப் பெறாமையால் பெருந்துன்பத்தை அடைந்தவளாய் எல்லாப்
பாவங்களினின்றும் நீங்கினவள்” என்றாற் போலே
சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் –
மனத்தின் துன்பம் போமித்தனையே வேண்டுவது, அவனை மறக்கவும் அமையும்.
“ஏது செய்தால் மறக்கேன்” என்னுமவர்கள் அலரோ இவர்கள்தாம். அவனை மறக்கவுமாம் நினைக்கவுமாம்,
துன்பம் போமித்தனையே வேண்டுவது. இப்போது ‘மறக்கவும் அமையும்’ என்றது, மறத்தல் உத்தேஸ்யமாகச் சொன்ன வார்த்தை அன்று;
ஓடுகிற துன்பத்தின் மிகுதியைச் சொன்னபடியேயாம்.
பிரிவு நிலையில் நினைவுதான் மிகுந்த ஆற்றாமைக்குக் காரணமாய் இருக்குமே அன்றோ;
“கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்” “காட்டேன்மின் நும்முரு என் உயிர்க்கு அது காலன்” என்னக்கடவ வன்றோ.
என்னையே – இவள் ஒருத்திக்குமே உள்ளது ஒரு வியசனமாயிற்று; ஆதலின், ‘என்னையே’ என்கிறாள்.
நாட்டார் நினைத்துத் துக்கங்களைப் போக்கிக் கொண்டு போகாநின்றார்களே அன்றோ,
சாதன புத்தியாக இழிந்தவர்கட்கு அது செய்யலாமிறே, “தியானிக்கக்கடவன்” என்ற நினைவு தன்னையே விதியா நின்றதேஅன்றோ;
அவனுடைய படியிலே இழிந்தார்க்கே அன்றோ இது உள்ளது.-

——————————————————————————————————

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–5-4-5-

உபகார சீலன் கண்ணனும் வர வில்லை -நாம அவசேஷை யானேன்
ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்-பிரியம் சௌஹார்த்தம் -இருவரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்-நீர்மை என்னே ஆச்சர்யம் -சொல்லாமல் -தீர்க்கையான இரவில் உறங்கா நின்றார்கள்
நீர் என் செய்தீர் என்றுமாம் –
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்-அவர்கள் ஆராய தசையிலும் ஆராயும் உபகார சீலன் –நமக்கு பவ்யன்-
இப்படி ஔதார்ய பவ்யனாக இருந்தும் வர வில்லை
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.-பேர் மட்டும் உள்ளது -தெற்கு நோக்கி கை கூப்புகிறோம் இன்றும்
ஆழ்வார் பட்ட பாடு எல்லாம் பட்டர் -சமாக்யா பந்தத்தி -தேசிகன்
பிரபல பாவம் -பிராப்யர்கள் வராமல் இருக்கும் படி -முடிய ஒட்டாமல் பெயர் மட்டும் உள்ளதே
சத்பாவாக சூசகம் -அத்யந்த அவசாத அளவிலும் -பெயர் மட்டும் –

தாய்மார்களும் தோழிமார்களும் இவள் தன்மையாதாக இருக்கின்றது என்று ஆராயாமல், நீண்ட இரவு முழுதும் தூங்குகின்றார்கள்;
மேகம் போன்ற நிறத்தையுடைய நம் கண்ணபிரானும் வருகின்றான் இலன்; என்னை ஆராய்கின்றவர்கள் யாவர்?
கொடிய தீவினையேனாகிய எனக்குப் பின்னே நின்று பெயரானது என்னை முடிய ஒட்டுகின்றது இல்லை என்கிறாள்.
நீர் – நீர்மை. துஞ்சுவர் வாரான் ஆதலால், என்னை ஆராய்வார் ஆர்? என்க. வல்வினையேன் பின் நின்று பேர் என்னை மாயாது என்க. மாய்தல்-மறைதல், அழிதல்.

ஆபத்தில் உதவும் அன்னையரும் தோழியரும் ஆராயகின்றிலர்கள்; அவர்கள் உதவாதபோது உதவும்
கிருஷ்ணனும் வருகின்றிலன்; பெயரளவில் நிற்கின்றவள் ஆனேன் என்கிறாள்.

என்னை ஆராய்வார் ஆர் –
“பிராப்தவ்யம் து தஸாயோகம் மயாஏதத் இதி நிஸ்சிதம்
தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ தூர்பலா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 40.
“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கிறேன்” என்கிறபடியே,
திருவடி சென்று அரக்கியர்களை நலியப் புக, இவர்கள் இராவணன் சோறுண்டு வாழ்ந்து பரதந்திரப்பட்டவர்களாகையாலே
என்னை நலிந்தார்களாகில், தங்களாலே வந்தது ஒன்று அன்றாகில்,
அதுதனக்கு நாமும் ‘பொறுத்தோம்’ என்று நேர்த்தரவு கொடுத்த பின்பு இனி இவர்களை நலிகிறது என்? என்ன
, ‘இராவணனும் பட்டானாகில் நம்மைப் பல நாட்கள் நலிந்துபோந்த இப் பெண்பையல்களை இப்போது பொறுக்க வேண்டுகிறது என்?’ என்ன,
“துர்பலா – ‘சிலர் நம்மை நலிந்தார்கள்’ என்று நாம் அவர்களை நலியப்புக்கால், அப்போதே அவர்கள்
கண்குழிவு காணமாட்டாதார் பின்பு செய்வது என் பொறுக்காமல்.”
இராவணனும் பட்டு, பெருமாளும் வெற்றியினையுடையரான பின்பு, இனி இது ஒழிய வேறு ஒரு தௌர்பல்யம் இல்லையே அன்றோ.
ஆக, இப்படித் தன்னை நலிந்த அரக்கியர்களையும், நீங்கள் அஞ்சாதே கொள்ளுங்கோள் என்று
“தத:ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்து: விஜயஹர்ஷிதா
அவோசத் யதி தத்தத்யம் பவேயம் ஸரணம் ஹி வ:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 58 : 90.
“உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்னக்கூடிய அவள், இப்போது, தன்னை ஆராய்வார் தேட்டமாய், ‘ஆர் என்னை ஆராய்வார்’ என்கிறாளே அன்றோ.

அன்னையரும் தோழியரும் –
என் நிலையைக் கண்டு என்னைப் போன்றே உறக்கத்தைத் துறந்தவர்களோடு,
‘உறக்கம் துறக்கக் கூடாது’ என்று விலக்குகின்றவர்களோடு வாசி அற ஒக்க எடுக்கும்படியாய் வந்து விழுந்தது. என்றது,
என் நினைவே நினைவாய் இருக்குமவர்களோடு தங்களுக்கு என்ன ஒரு நினைவுண்டாய் நியமிக்கத் தக்கவர்களோடு வாசி அற்றது என்றபடி.
அன்னையரும் தோழியரும் நீர் என்னை என்னாதே நீள் இரவும் துஞ்சுவர் –
அன்னையரும் தோழியருமான நீங்கள், என்பட்டாய் என்னாதே, நீள் இரவும் துஞ்சுதிர் என்று சொல்லுவாரும் உளர்.
அன்றிக்கே, அன்னையரும் தோழியரும் இது ஒரு நீர்மை இருக்கும்படியே! என்னே! என்னாமல்,
நீள் இரவும் துஞ்சுவார்கள் என்னுதல். என்றது, அவன், தன்னைப் போகட்டுப் போய் வேறு சிலவற்றால்
போது போக்தித் தன்னை நினையாமலே இருக்கச் செய்தேயும், தான் அவனை ஒழியப் போது போக்கமாட்டாதே இருப்பதே!
இது ஒரு நீர்மையே! என்னே ஆச்சரியம்! என்று இப்படிச் சொல்லாமல் தூங்குவர்கள் என்றபடி.
முன்னிலைப் பெயர் பண்புப் பெயர் இரண்டு அர்த்தங்களில் –
“நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு” என்புழிப் போன்று, ஈண்டும் ‘நீர்’ என்பது,
நீர்மை என்ற பொருளில் வந்தது. எனக்கு உறங்காமையே தன்மையாம்படி,
நெடிதான இரவு முழுதும் அவர்களுக்கு உறங்குகையே தன்மையாய் விட்டது என்பாள் ‘நீள் இரவும் துஞ்சுவர்’ என்கிறாள்.

கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் –
ஒரு நீர்ச் சாவியிலே ஒரு பாட்டம் மழை பெய்தாற்போலே குளிரும்படியான வடிவையுடையனுமாய்,
“அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் வந்து தோன்றினான்” என்கிறபடியே, முன்பு உதவிப்போந்தவனும் வருகின்றிலன்.
“தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமான முகாம்புஜ:
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத:”-என்பது, ஸ்ரீ பாகவதம், 10 : 32.
“தாஸாம்-அந்தப் பெண்களுக்கு.” என்றது, அவர்கள் பூர்வ அவஸ்தையைப் பற்றியே அன்றோ.
பெண்களுக்கு உதவிப் போந்தவனும் வருகின்றிலன் என்பாள் ‘நம் கண்ணனும் வாரானால்’ என்கிறாள்.
பேர் என்னை மாயாதால் –
அவனோடு ஒத்திருக்கின்றதே! பேரும். அவன் வருகின்றிலன், இது போகிறதில்லை.
நான் காரியத்திலே முடிந்தேனாயிருக்கச் செய்தேயும் ‘இன்னாள், இன்னாள்’ என்கிற இப் பெயர் என்னை முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை.
ஆழ்வாருடைய திருநாமம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குச் சத்தைக்குக் காரணமாக இருப்பது போன்று
அவர் தமக்கும் சத்தைக்கு ஏதுவானபடி. அடியுடைய பெயர் -பகவத் கடாஷம் -உடையவர் -சடாரி என்றுமாம் -ஆகையாலே எல்லார்க்கும் தாரகமாக இருக்குமே.
இதனுடைய அடியுடைமையே அன்றோ எல்லாரும் தலை மேல் தாங்குவது.
பேர் என்னை மாயாதால் –
பெயர் அளவில் நிற்கின்றவள் ஆனேன் என்றபடி
வல்வினையேன் –
நான் முடியச்செய்தேயும் என்னை முடித்தேன் ஆகாதபடி செய்யும்படியான பெயரைப் படைக்கக்கூடிய மஹாபாவத்தைச் செய்தேன்
பின்நின்று –
நான் முடியச் செய்தேயும் இப் பெயரானது எனக்குப் பின்னும் நின்று முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை.
வருகிற போது ஒருசேர வந்தால், போகிற போதும் ஒரு சேரப் போக வேண்டாவோ.
“அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகர வாணி” என்பது, சாந்தோக். 6:3.
“நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்
வேத ஸப்தேப்ய ஏவ ஆதௌ தேவாதீநாம் சகார ஸ:”-என்பது. ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 5 : 63.
“பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணக் கடவேன்” என்றும்,
“தேவர்கள் முதலான எல்லாப் பிராணிகளுக்கும் பெயர்களையும் உருவங்களையும் அந்தப் பரமாத்மா முதலில் செய்தருளினார்” என்றும்
ஒக்கச் சொல்லக்கடவதன்றோ. முற்பட வந்தார்க்கு முற்படப் போகவேண்டி இருக்க, பிற்படவும் போகலாகாதோ?
நாமம் ரூபத்துக்கு முற்பட வந்தும் பிற்பட போக வில்லையே -என்கிறார்

————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: